கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முஸ்லிம் பெண்களும் அரசியல் தலைமைத்துவமும்

Page 1
முஸ்லிம் ')Jslu lóð Jó
ஃபாதி
 

பெண்களும்
லமைத்துவமும்

Page 2


Page 3

முஸ்லிம் பெண்களும் அரசியல் தலைமைத்துவமும்
ஃபாதிமா மெர்னிஸ்ஸி
தமிழாக்கம்
எம். ஏ. நுஃமான்
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி,
செயல் முன்னணி

Page 4
முஸ்லிம் பெண்களும் அரசியல் தலைமைத்துவமும்
ஆசிரியை
தமிழாக்கம்
வெளியீடு
முதல் பதிப்பு
ISBN
ஃபாதிமா மெர்னிஸ்ஸி
எம். ஏ. நுஃமான்
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி, செயல் முன்னணி 21/25 பொல்ஹேன் கொட கார்டன்
கொழும்பு - 05, இலங்கை
ஒக்டோபர், 1999
955-625-006-9
Muslim Penkalum Araciyal Talaimaituwamum
Translation of
Can We Women Head A Muslim State By Fatima Mernissi - 1991.
Translated by :
Published by
Printed at
First Edition
M. A. Nuhman
Muslim Women's Research and Action Forum 21/25 Polhengoda Garden, Colombo - 5, Sri Lanka
Unie Arts (Pvt) Ltd, 48B, Bloemendhal Road, Colombo - 13
October - 1999

பெண்களாகிய நாம் ஒரு முஸ்லிம் அரசைத் தலைமை தாங்கி நடத்த முடியுமா ?
இந்த வினா தொடர்பான விவாதம் இஸ்லாத்தின் அளவு பழைமையானது. சில உலமாக்கள் இதற்கு ஆம் என்று பதில் சொல்கின்றனர். ஏனெனில் பால் அல்லது இன வேறுபாடுகளுக்கு அப்பால் இஸ்லாம் நமக்குச் சம உரிமைகளை வழங்கியுள்ளது. பெண்கள் என்ற வகையில் நமக்குப் பூரண அரசியல் உரிமை உண்டு. நாம் ஒரு தேசத்தைத் தலைமை தாங்கி நடத்த முடியும். வேறு சில உலமாக்கள் இதற்கு இல்லை என்று பதில் சொல்கின்றனர். நாம் அவ்வாறு தலைமை தாங்க முடியாது. பெண்களுக்குத் தலைமைப் பதவியைக் கொடுப்பது தொடர்பான ஒரு ஹதீதை அவர்கள் இதற்கு ஆதாரமாகச் சுட்டிக் காட்டுகின்றனர்.
இப்பிரச்சினைக்கு அடிப்படையாக இருக்கும் மூலக்கோட்பாடு தொடர்பாக மத அதிகார பீடத்தினர் பிளவுபட்டுள்ளனர் என்பது வெளிப்படை. இவ்விடயம் தொடர்பாக, இவ்விரண்டு சிந்தனைப் பிரிவினரில் ஏதாவது ஒரு பிரிவினரைச் சார்ந்து நிற்பதே அன்று முதல் இன்று வரை நமது நடை முறையாக உள்ளது.
மறுபுறத்தில், முஸ்லிம்களின் வரலாற்றைப் பொறுத்தவரை இந்த விடயம் தொடர்பாக எவ்வித ஐயப்பாடுகளும் இல்லை. முஸ்லிம் நாடுகளைப் பெண்கள் தலைமைதாங்கி நடத்தியிருக்கிறார்கள். வெள்ளிக்கிழமைத் தொழுகையின் போது பள்ளி வாயில்களில் அவர்களின் பெயரால் குத்பாப் பிரசங்கங்கள் வாசிக்கப் பட்டுள்ளன. அவர்களது உருவங்களையும் பட்டங்களையும் தாங்கிய நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
1. உலமா - ஆலிம் என்பதன் பன்மை வடிவம்; அறிஞர், 'இல்ம்' அதாவது அறிவைச் சேர்த்து வைத்திருப்பவர் என்ற பொருள் தரும், சொல்லின் நேர் பொருளின் படி'ஆலிம் என்பது பொதுவாக அறிஞர் எவரையும் குறிக்கும். சமூகத்தின் இருத்தலுக்கு அவசியமான தகவல்களை யெல்லாம் பெற்றிருப்பவர் யாரையும் இது குறிக்கும். அவ்வகையில் இன்றைய அணு விஞ்ஞானிகளும், ஏனைய நிபுணர்களும் தங்கள் தங்கள் துறைகளில் 'ஆலிம்களாக இருப்பதனால் அவர்களும் இச்சொல்லால் அழைக்கப்படலாம். ஆயினும், இஸ்லாமியச் சூழலில் 'ஆலிம் என்ற சொல் எல்லாவற்றுக்கும் மேலாக மதஅறிவியல் துறை நிபுணரை அல்லது அறிஞரைச் சுட்டவே பெரிதும் வழங்கப்படுகின்றது. இவ்வகையில் 'ஆலிம் என்பது 'ஃபகிஹ் (பின்மை புகாஹா) என்பதற்கு ஒத்த பொருள் உடையது. இது அறிவைப் பெறுதல் என்னும் பொருளுடைய'ஃபகஹா'என்னும் சொல்லடியாகப் பிறந்தது. சமய அறிவியலான'ஃபிக்ஹாவின் வளர்ச்சியுடன் இச்சொல் அடிப்படையில் சமய அறிவியல் அறிஞரையே சுட்டத் தொடங்கியது. 1990களில், பெண்களின் அரச தலைமைத்துவப் பிரச்சினை தொடர்பான விவாதம், ஒரு சமூக முறைமையான நவீன ஜனநாயகத்தின் சிக்கல்கள் பற்றிய அறிவுடன் அதன் நடைமுறைகளில் பங்குகொண்ட மதத் துறைசார் அறிஞர்களால் ஆர்வத்துடன் தூண்டப்பட்டதனால் ஆலிம் என்ற சொல்லை இங்கு ஒரு பரந்த அர்த்தத்திலேயே நான் பயன்படுத்துகின்றேன்.

Page 5
மத விவகாரங்கள் தொடர்பாக, உணர்ச்சி கரமான விவாதங்களில் ஈடுபடும் பெரும்பாலான நம் முஸ்லிம் சகோதரர்கள், சர்ச்சைக்குரிய குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பாக, எதிர்எதிர்க் குழுக்களினால் அல்லது சிந்தனைப் பிரிவினரால் ஒரு மேல் நிலைக்கு வளர்த்துச் செல்லப்பட்ட விவாதங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முயலாமலே அவ்வாறு விவாதத்தில் ஈடுபடுவது துர்அதிர்ஷ்ட வசமானது. இச் சிறுநூல் இதனைக் கருத்திற் கொண்டே எழுதப்பட்டுள்ளது. இஸ்லாமியப் பெண் அரச தலைவர்களைப் பற்றி ஒரு நீண்ட ஆய்வுரையைத் தருவது இந்நூலின் நோக்கம் அல்ல. அது ஏற்கனவே எனது 'மறக்கப்பட்ட சுல்தானாக்கள்” என்ற நூலில் செய்யப்பட்டுள்ளது. இந்நூலில் எனது நோக்கம் எளிமையானது; பெரிதும் போதனை நோக்கம் கொண்டது.
ஒரு முஸ்லிம் நாட்டைத் தலைமை தாங்கி நடத்துவதற்கான பெண்களின் உரிமை பற்றிய ஆம் அல்லது இல்லை என்ற விவாதம் தொடர்பான அடிப்படை உண்மைகளை, இதுபற்றி ஏதும் அறியாத இளம் வாசகர்களுக்கு அறிவியல் ரீதியில் முன்வைக்கவே இந்நூல் முயல்கின்றது.
இப்பிரச்சினையை அறிவு பூர்வமாகவும், உணர்ச்சி பூர்வம் அற்றும் ஆராய்வதற்காக, நாம் முதலில் ஒரு முஸ்லிம் நாட்டின் அரசை அல்லது அரசாங்கத்தை ஒரு பெண் தலைமை தாங்கி நடத்த முடியுமா? என்பது பற்றிய கொள்கை தொடர்பாக உலமாக்கள் மத்தியில் உள்ள இரு வேறுபட்ட சிந்தனைப் பிரிவினர்களுக்கிடையே நிகழ்ந்து கொண்டிருக்கும் விவாதத்தை நோக்குவோம். அதன்பின், முஸ்லிம் நாடுகளைப் பெண்கள் தலைமைதாங்கி நடாத்தி யிருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக அமையும் வரலாற்று ஆவணங்கள் சிலவற்றைப் பரிசீலிப்போம்.
பெண்களின் அரசியல் உரிமைகள் பற்றிய விவாதம், அடிப்படையில் சில குர்ஆன் வசனங்களையும், ஒரு ஹதீதையும் சுற்றியே சுழல்கிறது. இவ்வுரிமைகளுள் மையமாக அமைவது அவர்களின் தலைமைத்துவ உரிமையாகும். இதனுடன் அவர்களின் சுய வெளிப்பாட்டு உரிமை, சட்டத்தின் முன் நீதியாகவும் சமத்துவமாகவும் நடத்தப் படுவதற்கான உரிமை என்பனவும் அடங்கும்.
இப்பிரச்சினையை மையமாகக் கொண்டு பூதாகரமாக வளர்ந்துள்ள விவாதத்தின் அடிப்படையான அம்சங்களை இனங்காணவும் பரிசீலிக்கவும் பின்வரும் வினாக்களை நாம் முதலில் எழுப்ப வேண்டியுள்ளது.
2. Fatima Mernissi, 'Sultanas' Oublie'es, Femmes Chefd' Etat en Islam
(Editions lefennec)

இப்பிரச்சினை தொடர்பான குர்ஆன் வசனங்கள் எவை? ஒரு முஸ்லிம் பெண்ணான பெனாசிர் பூட்டோ பாக்கிஸ்தானில் அதிகாரத்திற்கு வந்தபோது மிகத் தீவிரமாகப் பிரச்சாரப் படுத்தப்பட்டதும் பெண்களின் அரச தலைமைத்துவத்தைத் தடை செய்வதுமான அந்தப் பிரசித்தி பெற்ற ஹதீத் எது?
இந்த ஹதீதை அறிவித்தவர் யார் ? எப்போது, எந்தச் சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த ஹதீதைச் சொன்னார்கள் ?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்தின் பின் எத்தகைய சந்தர்ப்பத்தில் இந்த அறிவிப்பாளர் இந்த ஹதீதைப் பயன்படுத்தினார் ?
இவை எல்லாவற்றிலும் முக்கியமாக, இஸ்லாத்தின் அடியாதாரமாக அமையும் அடிப்படையான சமத்துவக் கொள்கையுடன் ஒரு ஹதீத் முரண்படும்போது என்ன நிகழ்கிறது ?
1989 ல் இந்த விவாதம் திடீரென மேற்கிளம்பியதற்குக் காரணம் என்ன ?
பாகிஸ்தானில் பதினொரு ஆண்டு கால சர்வாதிகார ஆட்சியின் பின்னர் 1988ல், சர்வசன வாக்குரிமையின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டு ஒரு பெண் - பெனாசிர் பூட்டோ - அந்நாட்டின் பிரதம மந்திரியாகத் தெரிவு செய்யப்பட்டார். இச்சம்பவம், பெரும்பாலான மத அதிகார பீடத்தினரால் மறக்கப்பட்டு, மறைக்கப்பட விரும்பிய ஒரு பிரச்சினையைக் கிளறவும் அதை விவாதிக்கவும் முஸ்லிம் உலகினை நிர்ப்பந்தப்படுத்தியது.
இந்த நிகழ்ச்சி இன்று மத அதிகார பீடத்தினர் மத்தியில் இந்த அளவு முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது என்றால், இந்த அளவு உணர்ச்சி வேகத்தை, இந்த அளவு கோபத்தை, இந்த அளவு கருத்து வேற்றுமைகளைக் கிளறி விட்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் என்ன? இன்று முஸ்லிம் சமூகங்களில் பிரச்சினையின் போராட்ட மையமாக இருப்பது உண்மையில் அரசியல் வாதிகளின் பால் அல்ல. பதிலாக அவர்களின் அதிகாரத்தின் தன்மையேயாகும் என்பதையே இது காட்டுகின்றது.
இந்த அதிகாரம் ஜனநாயக பூர்வமானதா? சர்வாதிகாரமானதா? இன்று முஸ்லிம் உலகைப் பிளவுபடுத்தும் மையப் பிரச்சினை, அரசியல் முகாமைத்துவ வடிவம் ஜனநாயக ரீதியானதாக அமைய வேண்டுமா, அல்லது அதற்கு எதிரானதாக அமைய வேண்டுமா என்பதேயாகும்.

Page 6
தொடரும் இந்த விவாதத்தின் ஒரே ஒரு புதுமையான அம்சம் என்னவென்றால், 'றியஸ்ஸ அல்லது அரசுத் தலைமை உட்பட பொதுத் துறையின் உயர்பதவியை வகிப்பதற்கான பெண்களின் உரிமை, 1989 ஜனவரி முதல் ஒரு முக்கியமான மதத் தலைவரால் ஆதரிக்கப்படுவதாகும். இவர் இச் சர்ச்சையில் குதித்துள்ள ஒரு சாதாரண ஆலிம் அல்ல. கெய்ரோவின் மதிப்புயர்ந்த அல் - அஷ்ஹர் பல்கலைக் கழகத்தின் புலமையாளரான மதிப்புக்குரிய ஷெய்க் கஸ்ஸாலி அவர்களேயாவார். இவருடைய தகைமை இதுமட்டுமல்ல. அல்-அஷ்ஹர் பல்கலைக் கழகத்தில் 1941ல் தனது டிப்ளோமா பட்டத்தைப் பெற்றபின், ஷெய்க் கஸ்ஸாலி கெய்ரோவில் உள்ள அல்-உத்பா அல்கத்றா பள்ளிவாசலின் இமாமாகவும், கதீபாகவும் 1943ல் நியமிக்கப்பட்டார். 1971ஜூலையில் அல்ஜியர்ஸில் உள்ள அமிர் அப்துல் காதிர் பல்கலைக் கழகத்தின் சமய ஆட்சிக்குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
இவர்தான் தனது தகர்த்தெறியும் தன்மை வாய்ந்த அஸ் சுன்னா அன் நபவ்வியா (நபி(ஸஸ்) அவர்களின் வழிமுறைகள்)" என்ற நூலின் மூலம் முஸ்லிம் உலகில் உறங்கிக் கிடந்த பழமை வாதத்தைத் தகர்த்தெறிந்தார். இந்தப் புத்தகத்துக்கு ஒரு வெடிகுண்டின் தாக்கம் இருந்தது. இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் அநீதிக்கு எதிராகவும், சீர்திருத்த மறுப்புக் கொடுங்கோன்மைக்கு எதிராகவும் மதத் தலைவர்கள் எதிர்ப்புக் காட்டி வந்த பாரம்பரியம் அரிதாகவே நிகழும் இன்றையப் பின்னணியில் இவரது நூல் முக்கியமானது.
இன்று ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவது மேற்கத்தைய மயமாக்கப்பட்ட, குழம்பிப் போன ஆய்வாளர்களின் இறக்குமதி செய்யப்பட்ட கெட்ட பழக்கம் என்றே கருதப்படுகிறது. இஸ்லாமிய மரபில் ஊறிப்போன மதத்தலைவர்கள் பெண்களுக்கும் அவர்களது உரிமைகளுக்கும் எதிரானவர்கள் என்றே கருதப்படுகின்றனர். ஆகவே, ஒரு பெண்ணின் அரச தலைமைத்துவத்துக்கான உரிமையை அங்கீகரிக்கும் ஷெய்க் கஸ்ஸாலியின் நூல் ஷெய்க்குகளையும், பழமைவாதிகளின் பிராந்தியங்களையும் அதிர்ச்சியடையச் செய்ததில் ஆச்சரியம் இல்லை. இவர்கள் அல் கஸ்ஸாலிக்கு எதிராகப் பத்திரிகைகளிலும் பொது மேடைகளிலும் பிரச்சாரம் செய்தார்கள். அவரது நூலை, அவரது சிந்தனையை, குர்ஆன், ஃபிக்ஹ், ஹதீத் என்பன பற்றிய அவரது புரிதலைத் தாக்கிபுத்தகங்களும் கட்டுரைகளும் வெளிவந்தன; பத்திரிகைகள் கொந்தளித்தன.
3. Sheikh Ghazali, As Sunna an Nabawiya: Bayna Ahl al figh waahl al Hadith.
Dar achchourou, Seventh Edition, January 1990.

میده م= الش کاتالک
älgilii Iuli
بين أهل الفقه..وأهل الحديث
دار الشروقـ

Page 7
ஷெய்க் கஸ்ஸாலியின் நூலும், அராபிய முஸ்லிம் உலகில் அது கிளறி விட்ட விவாதங்களும் மேற்கத்தைய தொடர்பு சாதனங்களில் மிகக் குறைந்த கவனத்தைப் பெற்றமை முக்கியத்துவம் உடையது. இம் மேற்கத்தைய தொடர்பு சாதனங்கள், எல்லா முஸ்லிம் மதத் தலைவர்களும் பிற்போக்கு வாதிகள், சீர் திருத்தங்களுக்கு எதிரானவர்கள் என்ற இனவாதக் கருத்தை விடாப்பிடியாகப் பற்றி நிற்பவை என்பதும் இங்கு மனங்கொள்ளத்தக்கது. இது எவ்வாறு இருப்பினும் பெண்களாகிய நம்மைப் பொறுத்தவரை, பின்வரும் காரணங்களுக்காக, அப்புத்தகத்தின் முக்கியத்துவம் குறைத்து மதிப்பிட முடியாததாகும்.
(1) . முஸ்லிம் சமூகங்களில் மனித உரிமைக்கான நடவடிக்கையை ஆதரிக்கும் மதத் தலைவர்களைத் தேடுவதும் அவர்கள் பற்றி அறிந்து கொள்வதும் நமது கடமையாகும்.
(2) முன் எப்போதையும் விட இன்று, குர்ஆன், ஹதீத், இஸ்லாமிய வரலாறு ஆகியவற்றில் புலமை பெறுவதன் மூலம் இஸ்லாம் பற்றிய நமது அறிவை வளர்த்துக் கொள்வது அத்தியாவசியமாகியுள்ளது. இன்று நமது உரிமைகளை நம்மிடம் இருந்து பறிப்பதற்காக, பழைமை வாத அதிகாரத்துவத்தினால் இஸ்லாம் பயன்படுத்தப்படுவது ஒன்றே நாம் இவ்வாறு செய்வதற்குரிய காரணமாகவும் அமைகின்றது.
இத்தகைய சூழ் நிலைகளில், ஆண்கள் தமது இஸ்லாமியப் பாரம்பரியத்தை அறியாதிருப்பதால் அவர்களுக்குப் பெரிய பாதிப்புகள் இல்லை. ஆனால், பெண்களாகிய நாம் அவற்றைப் பற்றி அறியாதிருப்பது நமக்குப் பேரிழப்பாகவே முடியும்.
நமது பாரம்பரியம் பற்றிய அறிவைத் தேடுவது என்பது, நமது உலகப் பொதுப் பண்பாட்டில் இருந்தும், விஞ்ஞானம், பண்பாடு ஆகிய இரு துறைகளிலும் இதுவரை திரட்டப்பட்டுள்ள மேலைத்தேய மற்றும் இஸ்லாமிய அறிவைப் பெறுவதற்கான நமது உரிமையில் இருந்தும் நம்மைத் துண்டித்துக் கொண்டு நம்மை நாமே முடமாக்கிக் கொள்வது என்று பொருளாகாது. மனித குலத்துக்குக் கிடைக்கக் கூடிய எல்லா அறிவுகளிலும் தேர்ச்சி பெறுவதற்கான நமது உரிமையைத் தணிக்கை செய்வது கேலிக்குரிய ஒன்றாகவே அமையும். முஸ்லிம் பெண்களுக்கு இரு உலகங்களின் அறிவையும் பெறுவதற்குரிய தன்னாதிக்க உரிமை உண்டு. நமது மானுட சிறப்புரிமைகளை மறுத்து, நம்மை முடமாக்க முயல்பவர் யாராயிருப்பினும் உண்மையில் அவர்கள் ஒரு படுபாதகச் செயலையே புரிகின்றனர் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

"அங்கு, அவர்களை ஆட்சி செய்கின்ற ஒரு பெண்ணை நிச்சயமாக நான் கண்டேன். அவள் (அரசுக்குத் தேவையான) எல்லாப் பொருள்களும் கொடுக்கப் பட்டிருக்கிறாள். ஒரு மகத்தான சிம்மாசனமும் அவளுக்கு இருக்கிறது"
அத் 27. வ 23. (அப்துல் வஹாப்)

Page 8
ஆம் அல்லது இல்லை ?
ஷெய்க் முகம்மத் அல் கஸ்ஸாலியின் வெடிகுண்டு நிகர்த்த அஸ்சுன்னா அன்நபவ்வியா" என்ற புத்தகம் 1989ல் பிரசுரிக்கப்பட்டதுடன், முஸ்லிம் உலகில் அதிக கொந்தளிப்புக்குக் காரணமான, பொதுத் துறையில் உயர் பதவி வகிப்பதற்குரிய ஒரு பெண்ணின் உரிமை தொடர்பான விவாதம், இன்று அல்அஷ்ஹர் பல்கலைக் கழகத்தின் மையத்துக்கே கொண்டு வரப்பட்டது. அரச தலைமைத்துவம் வகிப்பதில் இருந்து பெண்களைத் தடுக்கும் பிரசித்தி பெற்ற ஹதீதை பாரதூரமான முறையில் நிராகரித்து, தன்னாதிக்கத்துக்கான பெண்களின் உரிமையை குர்ஆனிலேயே வேரூன்றச் செய்ததன் மூலம் இல்லை என்று மறுக்கும் எதிர்முகாமை அல் கஸ்ஸாலி நொறுக்கி விடுகிறார்.
அல் கஸ்ஸாலி தன் வாதத்திற்கு, திருக்குர்ஆனின் எறும்பு என்னும் 27ஆம் அத்தியாயத்தின் 23ஆவது வசனத்தை ஆதாரமாகக் கொள்கிறார். இவ்வசனம் ஸபா நாட்டு அரசியைப்பற்றி பின்வருமாறு விபரிக்கின்றது.
"அங்கு அவர்களை ஆட்சி செய்கிற ஒரு பெண்ணை நிச்சயமாக நான் கண்டேன். அவள் (அரசுக்குத் தேவையான) எல்லாப் பொருள்களும் கொடுக்கப்பட்டிருக்கிறாள். ஒரு மகத்தான சிம்மாசனமும் அவளுக்கு இருக்கிறது’ (அத். 27வ:33 (அப்துல் வஹாப்)
குர் ஆன் அருளப்பட்ட நூல் என்றும், அதனால் ஹதீதை விட உயர் தகைமை உடையது என்றும், ஹதீத் மனிதர்களின் கூற்றுகளை, அதாவது நபி (ஸல்) அவர்களின் சொற்களையும், செயல்களையும் பற்றி அறிவித்த அவர்களின் தோழர்களின் கூற்றுக்களைக் கொண்டது என்றும் அல்கஸ்ஸாலி கூறுகிறார். மேலும், குர்ஆன் ஸபா நாட்டு அரசியை, தனது அதிகாரத்தை சிறப்பான முறையில் பயன்படுத்தி, தனது மக்களை மன்னர் சுலைமானுக்கு (சுலைமான் நபி (ஸல்) அவர்களுக்குப்) பணிந்து நடக்க வழிப்படுத்தியவளாகக் காட்டுகின்றது என்றும், அவ்வகையில் ஒரு அரச தலைவியின் சாதகமான ஒரு முன்மாதிரியாக அவள் விபரிக்கப்படுகிறாள் என்றும் கூறுகின்றார்.
குர்ஆன், தெய்வீக வார்த்தை என்ற வகையில் எந்த ஹதீதையும் விட உயர் தகைமை உடையது என்று அல்கஸ்ஸாலி தன் வாதத்தை முன் எடுத்துச் செல்கிறார். ஆகவே, இரண்டுக்கும் இடையில் ஏதாவது முரண்பாடு தோன்றும் பட்சத்தில், தெய்வீக வார்த்தைகளுக்கு முதன்மை கொடுத்து அது தீர்க்கப்பட
4. Sheikh Al Ghazali, op cit.
5. குர்ஆன் தர்ஜமா அரபு மூலமும், திருக்குர்ஆன் கருத்தின் தமிழ்மொழி பெயர்ப்பும், மொழிபெயர்ப்பு மெளலானா எம். அப்துல் வஹ்ஹாப் முதலியோர். திரீயெம் பிரிண்டர்ஸ், சென்னை - 1992.

ها-ولكن أثينا كاؤك وشلبنوك علما" کٹانک انجنئی تو اتنین نکلتا غزل کیئر قریب اوڈو النووینیزO
KNK * (* イイ/ ۱۹- و وریتش انکلنمر دازد.
金 <_る公Wくポ鼻 ." をVVリイ/W%ベ وقال يائها التايلنت منطق الكلير
*3. 罗 My و او تیناوین گل شین ۶ إرت هذا الهوالفضل الليبيئO
بھنوؤن میری انھی قاتلانیں بالکلابر
Oప్రత
ملحق إذا أتوا على واي التمل قالشئ نتلقائياً لتلك الأهلوا من
وهؤلايشعرؤركO 14- فتتشكضلجة قرن قولها وقال
يختلك الة أكملك عن کیخلیٰ کالی کل آکنلکل ضابھگا توضسهٔ واک خلی پی خیلی
في عبارك الخيليجين O

Page 9
O陷父g临纪
e ه ۴- و تالي لك أتى الهن هذة اُڑتان میریخ التکویتo ۲ - گعز بکهٔ عتاب اشرایگا ان کیکانتھک کاؤنی آئینیتی پشلظر نیپئر؟
ઈદ * 

Page 10
باس- قلاجیآی شکیل نڈال
اٹھانے کیڑھی آشکڑ“ بل أنثق بهاييتكرتفخؤركO
بمبئی و کیقبلن که پها % s وَلتو جنھیقیناآئینی
قوهٔ خرطضویورک O
۳۸- تالیاییها الکلی یکی یاتیقی يعزيه أقبل أن يأتوفي مُشيليينO
۳۹۔قال ہیئت يُكتملك أجرت الثانيكيه قبل أنك تقوم من عقليك" كلفي عليّولقوي أميركO ۳۰. قال الزی چند جلو قریب الکتیب أن أتيكيه قيل أكثيزنزاليك طريك"
قال هذا من فضل مع تفعة ليتلقفين عاشكو أتراك *
அ - ) { قانقی کی تغنی کیرئینO
 
 

የኅ - قال تكاليا سکڑتا
آبزیگوریور البنانی لایه تئوریO
۳۲۔ یکتاب آئوٹقت أهلكنا
t? G12 ም ኅ፫ረ
ڈال لیجیۓف وأوتيناً ليلة عن قبلها وكناشئيلييك O ۳۳- و ضمن ها مایاک تکنون ذلأن الثو
ረፋ /* 6- صمام و تھا لیخانن شمر قوی کیریبo
۳۳-قبیل لها اخل الضایی
ޤާ0{&' ތަތުށް
این قواریزهٔ
وأسكتك مع شليمن لوكية الغليينة
அத். 27வ. 15-44.
5

Page 11
15.
16.
17.
18.
19.
அத்தியாயம் 27. எறும்பு
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் கல்வியறிவைத் திட்டமாக நாம் கொடுத்தோம். 'முஃமீனான தன் அடியார்களில் பெரும்பாலோரைவிட எங்களை மேன்மையாக்கி வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று இருவரும் கூறினர். ஸுலைமான், தாவூதுக்கு வாரிசாக ஆனார். இன்னும் “மனிதர்களே ! பறவைகளின் மொழி நாம் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளோம். இன்னும் (அரசுக்குத் தேவையான) ஒவ்வொரு பொருளிலிருந்தும் நாம் வழங்கப்பட்டுள்ளோம். நிச்சயமாக இது - இதுதான் (அல்லாஹ்வின்) பிரத்தியட்சமான கருணையாகும்.” என்று அவர் கூறினார். மேலும், ஸுலைமானுக்கு, ஜின்கள், மனிதர்கள், பறவைகள் முதலியவற்றிலிருந்து, அவருடைய படைகள் திரட்டப்பட்டன. பிறகு அவை (இனவாரியாக ; அணியணியாய்ப்) பிரிக்கப்பட்டன. இறுதியில் - எறும்புகளின் ஒரு பள்ளத்தாக்கின் அருகில் அப்பட்ைகள் வந்த பொழுது, (தலைமை வகிக்கும்) ஓர் எறும்பு, ‘எறும்புகளே ! நீங்கள் உங்களுடிைய வீடுகளுக்குள் புகுந்து கொள்ளுங்கள். ஸுலைமானும், அவருடைய படையினரும் - தாம் அறியாமலேயே - உங்களைத் திண்ணமாக மிதித்துவிட வேண்டாம்” என்று (மற்ற எறும்புகளிடம்) கூறிய போது. அதனுடைய சொல்லினால் சிரித்தவராக அவர் புன்னகை செய்தார்."என்னுடைய ரப்பே என்மீதும் என் தந்தை மீதும் நீ அருள் செய்த உன்னுடைய அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், எதனை நீ பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயலை நான் செய்வதற்கும் எனக்கு நீ நல்லுதவி செய்வாயாக 1 இன்னும் உன்னருளினால் உன்னுடைய நல்லடியார் (அணி) களில் என்னைப் புகச் செய்வாயாக!” என்று அவர் கூறினார்.
20.பின், பறவைகளைப் (பற்றிப்) பரிசீலனை செய்தார்.
21.
“எனக்கென்ன ஆயிற்று? 'ஹுத்ஹுதை நான் காணவில்லையே ! அல்லது அது மறைந்தவற்றில் (ஒன்றாய்) ஆகிவிட்டதா?’ என்று கூறினார். அதனைக் கடினமான வேதனையாகத் திண்ணமாக நான் வேதனை செய்வேன். அல்லது திண்ணமாக நான் அதனை அறுத்துவிடுவேன், அல்லது (தான் வராமலிருப்பதற்குத்) தெளிவான காரணத்தை என்னிடம் திண்ணமாக அது கொண்டு வரவேண்டும்” (என்றுங் கூறினார்.)
6
 
 

22. (இவ்வாறு கூறி) சொற்ப நேரமே அவர் தாமதித்தார். (அதற்குள் அங்கு வந்து) "எதைப் பற்றி நீங்கள் அறியாதிருக்கிறீர்களோ அதுபற்றி நான் அறிந்து (வந்து)ள்ளேன். ஸபாவிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்திருக்கிறேன்” என்று அது (ஹத்ஹது) கூறிற்று. 23. அங்கு "அவர்களை ஆட்சி செய்கின்ற ஒரு பெண்ணை நிச்சயமாக நான் கண்டேன், அவள் (அரசுக்குத் தேவையான) எல்லாப் பொருள்களும் கொடுக்கப்பட்டிருக்கிறாள் -ஒரு மகத்தான சிம்மாசனமும் அவளுக்கு இருக்கிறது" 24.'அவளையும், அவளுடைய கூட்டத்தினரையும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜது செய்கிறவர்களாக நான் கண்டேன், ஷைத்தான் அவர்களுக்கு அவர்களுடைய (இத்தகைய) செயல்களை அலங்காரமாக்கி, அவர்களை நேரான பாதையை விட்டும் தடுத்து விட்டான். எனவே அவர்கள் நேர்வழி பெறவில்லை. 25. (இதுதான்) வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்; நீங்கள் மறைத்து " வைத்திருப்பவற்றையும், நீங்கள் பகிரங்கமாக்குபவற்றையும் அறிகிறவனுமான அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸிஜுது செய்யமலிருப்பதற்குக் காரணமாகும்” (என்று கூறிற்று) 26. அல்லாஹு - அவனைத் தவிர (வணக்கத்துக்குரிய) வேறு எந்த நாயனும் இல்லை- (அவன்) மகத்தான அர்ஷின் ரப்பாக இருக்கிறான். 27. (அப்பொழுது, ஹுத்ஹுதே!)"நீ உண்மை சொல்கிறாயா? அல்லது பொய்யர்களில் உள்ளதாய் ஆகிவிட்டாயா? என்று விரைவில் நாம் கவனிப்போம்” என்று அவர் கூறினார். 28.'இந்த என்னுடைய கடிதத்தை நீ கொண்டுபோய், அவர்களிடம் அதனை நீ போடு, பிறகு அவர்களை விட்டு நீ விலகி இரு; அப்பால் அவர்கள் என்ன மறுமொழி சொல்கிறார்கள் என்பதைக் கவனிப்பாயாக ” (என்று கூறினார்.) 29.'பிரமுகர்களே ! நிச்சயமாக சர்ச்சைக்குரிய ஒரு கடிதம் என்பக்கம் போடப்பட்டுள்ளது” என்று (ஸபா நாட்டு அரசியான) அவள் கூறினாள். 30."நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்தள்ளது. இன்னும் நிச்சயமாக இது, பிஸ்மில்லா, ஹிர்ரஹ்மானிர்ரஹீம் (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று துவங்குகிறது.)

Page 12
31. “எனக்கெதிராக நீங்கள் பெருமையடிக்க வேண்டாம். நீங்கள் முஸ்லிம்களாக (அல்லாஹ்வுக்கு வழிபட்டவர்களாக) என்னிடம் வாருங்கள்” (என்று இதில் எழுதப்பட்டுள்ளது என்று கூறினாள்.) 32.பிரமுகர்களே! என்னுடைய (இவ்) விஷயத்தில் மறுமொழி சொல்லுங்கள். நீங்கள் என்முன்னிலையில் எனக்கு ஆலோசனை சொல்லும்வரை எவ்விஷயத்தையும் நான் முடிவெடுப்பதில்லை” என்று கூறினாள். 33.(அதற்கு) “நாம் பலசாலிகள்; இன்னும் கடினமாகப் போர் செய்பவர்கள். (ஆனால்) கட்டளையிடுவது உங்களிடமுள்ளது; எனவே நீங்கள் எதனைக் கட்டளையிடுகிறீர்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்” என்று அவர்கள் கூறினார்கள். 34.(அதற்கு) "நிச்சயமாக அரசர்கள் ஏதேனும் ஓர் ஊரில் (வெற்றியாளர்களாகப்) புகுந்தால் அதனைப் பாழாக்கி, அதிலுள்ள கண்ணியமானவர்களைக் கேவலமான வர்களாய் ஆக்கிவிடுவார்கள்; இவ்வாறே இவர்களும் செய்திடுவார்கள்” என்று அவள் கூறினாள். 35.'எனவே, நிச்சயமாக நான் அவர்களுக்கு ஒரு காணிக்கையை அனுப்பி வைப்பவளாயிருக்கிறேன்; (அதைக் கொண்டுபோகும்) தூதர்கள் எப்படித் திரும்புகிறார்கள் என்று கவனிக்கிறேன் ” (என்றும் கூறினாள்.) 36. பின்னர் ஸஉலைமானிடம் (அரசியின் தூதரான) அவர் வந்த பொழுது “நீங்கள் பொருளின் மூலம் எனக்கு உதவி செய்கிறீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்துள்ளது உங்களுக்கு அவன் கொடுத்துள்ளதைவிட மிகச் சிறந்ததாகும். எனினும் நீங்கள் உங்களுடைய வெகுமதியைக் கொண்டு மகிழ்ச்சியடைகிறீர்கள்!” என்று கூறினார். 37. அவர்களிடமே (நீர் கொண்டு வந்த வெகுமதியுடன்) திரும்பிச் செல்வீராக! அவர்களிடம் படைகளைத் திண்ணமாக நாம் கொண்டு வருவோம். அவற்றை எதிர்க்க அவர்களுக்குச் சக்தி கிடையாது. இன்னும் அவர்கள் சிறுமையடைந்தவர்களாக இருக்கும் நிலையில் கேவலமானவர்களாக அ (வர்களின் நகரத்)தை விட்டும் அவர்களைத் திண்ணமாக நாம் வெளியேற்றுவோம் (என்றுங் கூறினார்.) 38. (பிறகு ஸுலைமான் தம் அவையோரிடம்) "பிரமுகர்களே ! கீழ்ப்படிந்தவர்களாக என்னிடம் அவர்கள் வருவதற்குமுன், உங்களில் யார் அவளுடைய சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் ? என்று கேட்டார்.
 
 

39. (அப்பொழுது) ஜின்களிலிருந்து இஃப்ரீத் (என்ற சக்திவாய்ந்த ஒரு ஜின்னு) "உங்களுடைய இடத்திலிருந்து நீங்கள் எழுந்திருப்பதற்கு முன், அதனை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நிச்சயமாக நான் அதன்மீது சக்தி பெற்றவன்; நம்பிக்கைக்குரியவன்" என்று கூறிற்று 40. வேதத்தின் ஞானத்தைத் தம்மிடம் கொண்டிருந்த ஒருவர்" உங்களுடைய பார்வை உங்கள் பக்கம் திரும்புவதற்கு முன் (கண்மூடித்திறப்பதற்குமுன்)அச் சிம்மாசனத்தை நான் உங்களிடம் கொண்டுவருகிறேன்’ என்று கூறினார் (அவ்வாறே அது வந்து சேர்ந்தது); எனவே தம்ழிடம் தரிபாடாக அது இருப்ப்) தை அவர் கண்டபோது, "இது என்னுடைய ரப்பின் கருணையினால் உள்ளதாகும் - நான் (இதற்கு) நன்றி செலுத்துகிறேனா? என்று என்னை அவன் சோதிப்பதற்காக (இவ்வாறெல்லாம் நடந்துள்ளது); எவர் நன்றி செலுத்துகிறாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் அவருக்கே (நற் பயனுள்ளதாக) ஆகும்; எவன் நன்றி மறக்கிறானோ (அது அவனுக்கே கேடாகும்; ஏனெனில்) நிச்சயமாக என்னுடைய ரப்பு (எவருடையவும்) தேவையற்றவன், கண்ணியமுள்ளவன்” என்று கூறினார். 41. “அவளுடைய சிம்மாசனத்தை அவளுக்கு நான் ஒரு சோதனை ஏற்படுதுவதற்காக மாற்றியமையுங்கள்; (அதை) அவள் விளங்கிக் கொள்கிறாளா? அல்லது விளங்கிக் கொள்ளாதவர்களில் உள்ளவளாகி விடுகிறாளா? என்று கவனிப்போம்”என்று கூறினார். 42. எனவே அவள் வந்த பொழுது,"உன்னுடைய சிம்மாசனம் இது போன்றுதான் இருக்குமா?" என்று கேட்கப்பட்டது (அதற்கு) "நிச்சய்ம்ாக இது அதுபோன்றுதான் இருக்கிறது; மேலும் இதற்கு முன்னமே (உங்கள் வலிமையையும், நபித்துவத்தையும் பற்றிய) அறிவு நாங்கள் கொடுக்கப்பட்டுள்ளோம். நாங்கள் முஸ்லிம்களாக (-அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்களாக) ஆகிவிட்டோம்" என்று அவள் கூறினாள். 43. அல்லாஹ்வையன்றி அவள் வணங்கிக் கொண்டிருந்தது (ஈமான் கொள்வதை விட்டும்) அவளை (முன்னர்) தடுத்துவிட்டது. (அப்போது) நிச்சயமாக அவள் காபிர்களின் கூட்டத்தில் உள்ளவள்ாக இருந்தாள். 44."இந்த மாளிகையினுள் பிரவேசிப்பாயாக’ என்று அவளுக்குக் கூறப்பட்டது. அதை அவள் பார்த்தபோது அதைத் தண்ணிர்த் தடாகம் என்று எண்ணி (தன் ஆடை நனையாமலிருக்க) தன் இரு கெண்டைக் கால்கள்ையும் வெளியாக்கினாள். (இதைப் பார்த்த ஸஸுலைமான், இது தண்ணீரல்ல) “நிச்சயமாக இது பளிங்குகளினால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகை’ என்று அவர் கூறினார். (அப்போது) "என்னுடைய ரப்பே நிச்சயமாக நான் எனக்கே அநியாயம் செய்துவிட்டேன், ஸுலைமானுடன் ரப்புல் னாகிய அல்லாஹ்வுக்கு நான் வழிபட்டு (முஸ்லிமாகி) ட்டேன்" என்று அவள் கூறினாள்
(அப்துல்வஹஹாப்)

Page 13
வேண்டும் என்பது அவரது வாதம். அவ்வகையில், இப்பிரச்சினையைப் பொறுத்த வரை, ஆட்சி புரிவதற்குரிய பெண்ணின் உரிமைக்கு எதிராக வாதிக்கும் எந்த ஒரு ஹதீதும் ஸபா நாட்டு அரசியின் ஞானம் பற்றி விபரிக்கும் குர்ஆன் வசனத்தின் மூலம் வழக்கு அற்றதாக ஆக்கப்படுகின்றது என்பது அவர் கருத்து. அவர் மேலும் கூறுகிறார், "நான் மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புவது என்னவென்றால், நான் பெண்களுக்கு அதி உயர் பதவிகளை வழங்க வேண்டும் என்ற ஆர்வம் உடையவன் அல்ல. நான் அக்கறை கொண்டிருப்பதெல்லாம், ஹதீதுக் கிரந்தத்தில் இடம் பெற்றுள்ள, குர்ஆனுடன் முற்றிலும் முரண்படுகின்ற ஒரு ஹதீதின் விளக்கம் தொடர்பாகத்தான். இந்த முரண்பாடு கருத்தில் கொள்ளப்பட்டுத் தீர்க்கப்பட வேண்டும்”
ஆகவே, உயர்பதவிக்கான பெண்களின் உரிமையைத் தடை செய்யும் பிரசித்தி பெற்ற ஹதீதைப் பரிசீலிப்பதற்கு முன், இக் குர்ஆன் வசனங்களை நாம் சற்றுக் கூர்ந்து கவனிப்போம்.
"அங்கு அவர்களை ஆட்சி செய்கிற ஒரு பெண்ணை நிச்சயமாக நான் கண்டேன். அவள் (அரசுக்குத் தேவையான) எல்லாப் பொருள்களும் கொடுக்கப்பட்டிருக்கிறாள். ஒரு மகத்தான சிம்மாசனமும் அவளுக்கு இருக்கிறது.”
முதலில் இந்த வாக்கியத்தை அது இடம்பெறும் குர்ஆனியச் சந்தர்ப்பத்தில் வைத்துப் பார்ப்போம். சுலைமான் நபி (ஸல்) அவர்களின் அற்புதமான வரலாற்றை, அவரது பெருமைகளையும் ஆற்றல்கள்ையும், பலமும் ஞானமும் பெற்ற ஸபா நாட்டு அரசியுடன் அவருக்கு ஏற்பட்ட மோதல் தொடர்பினையும் விபரிக்கும் சந்தர்ப்பத்திலேயே இவ்வசனம் இடம் பெற்றுள்ளது.
மக்காவில் குழுமிய மக்களுக்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எறும்பு என்ற தலைப்புடைய இந்த அத்தியாயத்தை ஒதினார் என கஸ்ஸாலி கூறுகிறார். இதில் அவர்களுக்கு ஸபா நாட்டு அரசியின் கதையை, தன் ஞானத்தின் மூலம் அவள் எப்படித் தன் மக்களை வெற்றியையும், TOTs வாழ்வையும் அடையும் வகையில் சரியான நம்பிக்கையின் பால், நேரான வழியின்பால் திருப்பினாள் என்பதை பற்றி அவர் கூறினார். ஆகவே, இத்தெய்வீக வெளிப்பாட்டின் தர்க்கத்துக்கு எதிரான ஒரு ஹதீதை சரி என்று கொள்வது சாத்தியமல்ல என கஸ்ஸாலி வாதிக்கின்றார்."
Al Ghazali,op. cit P58. Ibid. P. 57. Fatima Mernissi, Women and Islam. A Historical and Theological inquiry.
English translation of le Harem Politique by Mary Jo Lakeland. (Basil Blackwell edition 1990) pp. 49-52.
20

ஷெய்க் கஸ்ஸாலியின் நூல் உலகம் முழுவதிலும் பழைமைவாத முஸ்லிம் சமூகங்களை அதிர்ச்சியடையச் செய்தது. அரியணையில் இருந்த ஒரு பெண்ணைப் பற்றி விபரிக்கும் குர்ஆன் வசனங்கள், ஒரு பெண் ஒரு முஸ்லிம் நாட்டைத் தலைமை தாங்கி நடத்துவதைத் தடை செய்யும் ஹதீதைப் பயனற்றதாக்கி விடுகின்றது என்ற கஸ்ஸாலியின் வாதம் பத்திரிகைத் துறையிலும் ஒரு தீவிர விவாதத்தைத் தோற்றுவித்தது. 1989 ஜனவரிக்கும் 1990 ஜனவரிக்கும் இடைப்பட்ட ஓராண்டு காலத்துள் அஸ் சுன்னா அன்நபவ்வியா ஏழு முறை மறுபதிப்புச் செய்யப்பட்டது. அவரது நூலைத் தாக்கி நான்கு நூல்கள் வெளிவந்தன. அதேவேளை, அறபுப் பத்திரிகைகள் கஸ்ஸாலிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அவரது எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற கருத்து மோதல்களுக்கு முன்பக்க முக்கியத்துவம் கொடுத்து வந்தன.
ஷெய்க் கஸ்ஸாலிக்கும் அவரை எதிர்த்தவர்களுக்கும் இடையில் நடைபெற்ற விவாதம் பற்றி மேலும் கவனம் செலுத்துவதற்கு முன், தலைமை தாங்குவதில் இருந்து பெண்களைத் தடுக்கும் அந்தப் பிரசித்தி பெற்ற ஹதீதைக் கவனத்தில் எடுத்துக் கொள்வோம்.
2

Page 14
அரசியல் தலைமைத்துவத்தில் இருந்து பெண்களைத் தடுக்கும் ஹதீத்
அந்த ஹதீத் என்ன சொல்லுகிறது? அதன் ஆசிரியர் யார்?
イ %アふ لنینلح قوم ولوا امره و امرا به
“பெண்களிடம் தங்கள் பொறுப்புகளை ஒப்படைக்கும் ஒரு சமூகத்தினர் ஒரு போதும் வெற்றி பெற மாட்டார்கள்”*
இந்த ஹதீதைக் கூறிய நபிதோழர் அபூபக்றாவின் வாழ்க்கைப் பின்னணி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சொல்லப்பட்டதாகக் கருதப்படும் இந்த ஹதீதினை பல தசாப்தங்களுக்குப் பின்னர் தனது ஞாபகத்தின் மறைவிடங்களில் இருந்து கிளறி எடுத்து வருவதற்கு அபூபக்றா அவர்களைத் தூண்டியது எது என்று ஒருவர் வியப்படையலாம். இதைச் சொல்வதற்கு அவருக்குத் தனிப்பட்ட காரணங்கள் ஏதும் இருந்தனவா ? அல்லது அது முற்றிலும் நபிகள் (ஸல்) பற்றிய ஒரு ஆன்மீக நினைவுச் செயற்பாடுதானா ?
வெற்றிபெற்ற பிரிவின்ருக்குத் தனது விசுவாசத்தைக் காட்டும் முகமாகவே அபூபக்றா இந்த ஹதீதை பயன்படுத்தினார் என்பது தெளிவு. ஒட்டகை யுத்தம் பற்றிய வரலாற்று விபரங்களை நுணுக்கமாக நோக்குவோருக்கு அபூ பக்றாவின் சந்தர்ப்பவாதம் மிகத் தெளிவாகத் தெரியவரும்.
ஹசறத் அலி (றலி) அவர்களுக்கும், பீபி ஆயிஷா (றலி) அவர்களுக்கும் இடையே நடைபெற்ற ஒட்டகை யுத்தத்தின் போது அநேக நபிதோழர்கள் அதில் பங்கு பற்றாது தவிர்த்துக் கொண்டார்கள். அது ஒரு உள்நாட்டு யுத்தம் என்ற வகையில் அது சமூகத்தைப் பிளவுபடுத்தி ஒருவருக்கொருவர் எதிரியாக மாற்றிவிடும் என்பதே அதற்குக் காரணமாகும். அவர்கள் கொள்கை அடிப்படையில், அதாவது, சமூகத்தின் மத்தியில் உள்ளக முரண்பாட்டைத் தோற்றுவிக்கக் கூடிய மோதலில் பங்குபற்றுவது நபி (ஸல்) அவர்களின் போதனைக்கு எதிரானது என்ற வகையில், யுத்தத்தில் பங்கு பற்றாது விலகி இருந்த போது, அபூபக்றா மட்டுமே எதிராளிகளில் ஒருவரின் பால் காரணமாகவே தான் அந்த யுத்தத்தில் பங்கு கொள்ளவில்லை என பீபி ஆயிஷா (றலி) அவர்களின் தோல்வியின் பின்னர் கருத்துத் தெரிவித்தார்.
8. Sahih Imam al Bukhari (Collection of Authentic Hadith) with commentary by
Al - Sindi, Dar al Marifa, Beirut, 1978, edition, Vol : 4p 226. இமாம் புகாரி பிறந்தது ஹிஜ்ரி 256 / கிபி 10ஆம் நூற்றாண்டு.
22

இமாம்புஹாரியின் அபிப்பிராயப்படி “பெண்களிடம் தங்கள் பொறுப்புகளை ஒப்படைக்கும் ஒரு சமூகத்தினர் ஒரு போதும் வெற்றி பெறமாட்டார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டவர் அபூ பக்றா அவர்களே எனக் கருதப்படுகின்றது. யார், யாருக்கு, எங்கே, எப்போது, ஏன் சொன்னார் என்ற விபரங்களுடன் ஆயிரக் கணக்கான அதிகார பூர்வமான ஹதீதுகளைத் தனது சஹீஹ் கிரந்தத்தில் சேர்த்துக் கொண்ட, நுணுகி நோக்கும் திறனுடைய இமாம் அல் புஹாரி அவர்கள், அபூ பக்றா கூறியதாகவே இந்த ஹதீதையும் தனது கிரந்தத்தில் சேர்த்துக் கொண்டுள்ளார்.
அபூபக்றா ஒரு நபிதோழர். நபி (ஸல்) அவர்களைத் தன் வாழ்நாளிலேயே அறிந்தவர். அவருடன் போதிய காலம் உடன் இருந்தவர் என்ற வகையில் அவர் கூறியதாகக் கருதப்படும் ஹதீதை அறிவிக்கக் கூடிய தகைமை உடையவர். அபூ பக்றாவின் கூற்றுப்படி, பாரசீகர்கள் ஒரு பெண்ணை ஆட்சியாளராகத் தேர்ந்தெடுத்தமை பற்றிக் கேள்விப்பட்டபோதே நபி(ஸல்) அவர்கள் இந்த ஹதீதைக் கூறினார். இந்தச் செய்தியினால் ஆர்வம் தூண்டப்பட்ட நபியவர்கள் “கிஸ்றா எப்போது இறந்தார் ? அவரின் இடத்துக்கு யார் நியமிக்கப்பட்டுள்ளார் ?” என்று வினவினார். இதற்கு “ அவர்கள் அதிகாரத்தை அவரது மகளுக்குப் பாரம் கொடுத்துள்ளனர்” எனக் கூறப்பட்டது." அபூ பக்றாவின் கருத்துப்படி இச் சந்தர்ப்பத்திலேயே நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் பற்றிய அந்த அபிப்பிராயத்தைத் தெரிவித்ததாகக் கருதப்படுகின்றது.
ரோமர்களுக்கும் பாரசீகர்களுக்கும் இடையே போர் நடை பெற்றுக் கொண்டிருந்த அச்சமயத்தில் கி.பி 628ல் ரோம சக்கரவர்த்தி பாரசீகத்தின் பிரதேசத்தை ஆக்கிரமித்து, சசானிய தலைநகருக்கு அண்மையில் இருந்த ரெசிஃப் சொன்னைக் கைப்பற்றினான். பாரசீக மன்னர் குஸ்றாப் பாவிஸ் கொலை செய்யப்பட்டார். இச் சம்பவத்தையே பக்றா குறிப்பிட்டிருக்கக் கூடும். உண்மையில் குஸ்றாவின் மகன் இறந்தபின்னர் கி.பி. 629க்கும் 632க்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு ஸ்திரமற்ற தன்மை நிலவியது. சசானிய சாம்ராச்சியத்தின் அரியணைக்கு இரண்டு பெண்கள் உட்பட உரிமை கோருவோர் பலர் தோன்றினர்." பெண்களுக்கு எதிரான ஒரு ஹதீதைக் கூறுவதற்கு நபி (ஸல்) அவர்களைத் தூண்டிய நிகழ்ச்சி இதுவாக இருக்க முடியுமா ? இமாம் புஹாரி அவர்கள் இவ்வளவு தூரம் செல்லவில்லை. அவர் அபூ பக்றாவின் வார்த்தைகளை மட்டுமே
9. Bukhari. Sahih Vol. 4., p.226. see also edition published by Al - Matba'al Bahiya al misriya, 1928 vol 13. p. 48. and the edition published by Moktaba Mustafa al - Babi al Halabi bi Mist. 1909. vol. 16 p. 166.
10. Asqalani, Fath al Bari (Cairo : Al Matba'aal Bahiya al Misriya n.d) Vol 13. P46.
ll. See Hadyson. Venture of Islam. vol. i. p. 199
23

Page 15
அறிவித்திருக்கிறார். அதாவது, அந்த ஹதீதின் உள்ளடக்கத்தையும், பாரசீகர் மத்தியில் ஒரு பெண் அதிகாரத்துக்கு வந்துள்ளார் என்ற குறிப்பையும் மட்டுமே அவர் பதிவுசெய்துள்ளார். அபூபக்றா பற்றி இன்னும் அதிக தகவல்களை அறிந்து கொள்வதற்கு இப்னு ஹஜர் அல் அஸ்கலானியின் பாரிய நூலின் பக்கங்களை நாம் புரட்ட வேண்டும்.
தனது ஃபத் அல் பாரி என்ற 17 தொகுதிகளைக் கொண்ட பாரிய நூலில் அஸ்கலானி சஹீஹ் புகாரிக்கு வரிக்குவரி விரிவுரை எழுதியுள்ளார். சஹீஹ் கிரந்தத்தில் உள்ள ஒவ்வொரு ஹதீதுக்கும் அஸ்கலானி நமக்கு வரலாற்று விளக்கம் தருகிறார். அதற்குப் பின்னணியாக உள்ள அரசியல் நிகழ்வுகள், யுத்தங்கள் பற்றிய ஒரு விபவரணம், மோதலில் ஈடுபட்ட தரப்பினரின் அடையாளம், ஹதீதை அறிவிப்பவர்களின் அடையாளம், அவர்களது அபிப்பிராயம், இறுதியாக அவர்களின் நம்பகத்தன்மை தொடர்பான விவாதங்கள், இவ்வாறு ஒரு ஆராய்ச்சியாளனின் விடுப்பார்வத்தைத் திருப்தி செய்வதற்குத் தேவையான அனைத்து விபரங்களையும் அவர் தருகிறார்.
அபூ பக்றா எந்தச் சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்களின் இந்த வார்த்தைகளை நினைவுகூர்கிறார்? அவற்றை மீட்டுரைக்க வேண்டியது அவசியம் என அவர் ஏன் உணர்ந்தார் ? அபூபக்றாவுக்கு வியக்கத்தக்க அளவு ஞாபக சக்தி இருந்திருக்க வேண்டும். ஏனெனில், நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குக் கால் நூற்றாண்டுக்குப்பின்னர், கலீபா ஹசறத் அலி (ரலி), அவர்கள் ஒட்டகை யுத்தத்தில் ஆயிஷா (ரலி) அவர்களைத் தோற்கடித்து. பஸ்ராவைக் கைப்பற்றிய சந்தர்ப்பத்திலேயே அவர் இதனை நினைவு கூர்ந்தார்."
பஸ்ராவைக் கைப்பற்றுவதற்கு முன்னர் பீவி ஆயிஷா (ரலி) அவர்கள் புனித யாத்திரையின் பொருட்டு மக்காவுக்குச் சென்றிருந்தார். அங்குதான், மதீனாவில் கலிபா ஹசறத் உதுமான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டதையும், நான்காவது கலீபாவாக ஹசறத் அலி (ரலி) அவர்கள் தெரிவு செய்யப்பட்டதையும் கேள்விப்பட்டார். மக்காவில் இருக்கும் போதுதான் ஹசறத் அலி (ரலி) அவர்களின் தெரிவை எதிர்க்கும் ராணுவத்துக்குத் தலைமை தாங்கத் தீர்மானித்தார். நிச்சயமற்ற நாட்கள் அதனைத் தொடர்ந்தன. அவர் கூபாவுக்குப் போவதா ? பஸ்ராவுக்குப் போவதா ? போதிய அளவு கிளர்ச்சி ஆதரவாளர்களைக் கொண்ட ஒரு முக்கிய நகர் அவருக்குத் தேவைப்பட்டது; அங்கேயே அவரது தலைமையகத்தை நிறுவவேண்டியிருந்தது. ஏராளமான தொடர்புகள், பேரங்கள், கலந்துரையாடல் களுக்குப் பின்னர் அவர் பஸ்ராவைத் தேர்ந்தெடுத்தார்.
12. அடிக்குறிப்பு 10ஐப் பார்க்கவும்.
24

அபூ பக்றா அந்நகரின் முக்கியஸ்தர்களுள் ஒருவராக இருந்தார். மற்ற எல்லோரையும் போலவே அவரும் ஒரு சிக்கலான நிலையில் இருந்தார். நபி (ஸல்) அவர்களின் மருமகனும், எதிர்ப்புக்குள்ளான, ஆயினும் சட்டபூர்வமான கலிபாவுமான ஹசரத் அலி (ரலி) க்கு எதிராக தான் ஆயுதம் தூக்குவதா? அல்லது இறைவனின் அபிமானத்துக் குரியவரின் நேசரும், “பூமியிலும் சுவர்க்கத்திலும் நபிகளின் மனைவியுமான” ஹசறத் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எதிராக தான் ஆயுதம் தூக்குவதா? மேலும், தனது சொந்த நகரம் அல்லாத அந்த ஈராக் நகரத்தில் அவர் ஒரு முக்கியஸ்தராக உயர்ந்தவர் என்பதையும் மனம் கொண்டால் அவருடைய மனக் கலக்கத்தின் அளவை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.
இஸ்லாமே அல் பக்றாவுக்கு நல்வாழ்வைக் கொண்டு வந்தது எனக் கூறமுடியும். இஸ்லாத்தைத் தழுவ முன்னர் அவர் தாயிஃப் நகரில் ஒரு அடிமையாக இருந்தார். அவரது வாழ்வு கடினமானதாக, துன்புறுத்துவதாக இருந்தது. தாயிஃப் நகரில் பிரபுத்துவ வர்க்கத்தினரே உயர் பதவி வகிக்கும் உரிமை பெற்றிருந்தனர். ஹிஜ்ரி 8ஆம் ஆண்டில் (கி.பி. 630) நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரை வெற்றி கொள்வதற்கு அதுவே ஏற்ற தருணம் எனத் தீர்மானித்தார். அப்போதுதான் மக்கா நகருக்குள் வெற்றிகரமாகப் பிரவேசித்து அந் நகரை வெற்றி கொண்டிருந்தார். இஸ்லாத்தை எதிர்த்துக் கொண்டிருந்த தாயிஃப் வாசிகளை வெற்றி கொள்வதற்குப் போதிய பலம் தன்னிடம் இருப்பதாக அவர் உணர்ந்தார். ஆனால், அவர்கள் பலமான பாதுகாப்பரணை ஏற்படுத்தியிருந்தனர். நபிகள், நகருக்கு வெளியே முகாம் அமைத்து 18 நாட்கள் காப்பரணை முற்றுகையிட்டார். நகரத்தைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பனுதாமிம் என்ற பிரதான இனக் குழுவினர் கோட்டைக்குள் தங்களைப் பலப்படுத்திக் கொண்டு அம்பு வில் கொண்டு தாக்கித் தங்களைத் தாக்க வந்தவர்களுக்குச் சேதத்தை ஏற்படுத்தினர். நபி (ஸல்) அவர்களின் ராணுவத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர். இழப்புகள் இன்றி வெற்றி பெறலாம் என்று நம்பிய நபியவர்கள் இதனால் மிகுந்த இடர் உற்றனர். ஒவ்வொரு போர் வீரனும் அவரது தோழன்; அவருக்கு அவர்களின் குடும்பங்களை நன்கு தெரியும். இது ஒரு அனாமதேய ராணுவம் அல்ல. அவர் முற்றுகையைக் கைவிட்டுப் புறப்படத் தீர்மானித்தார். ஆயினும், அதைச் செய்ய முன்னர், தூதுவர்களை அனுப்பி காப்பரணை விட்டு நீங்கி தங்கள் படை அணியைச் சேர்ந்து கொள்ளும் அடிமைகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று கோட்டையைச் சுற்றியும், முற்றுகையிடப்பட்ட நகரத்திலும் அறிவிக்கச் செய்தார்." பன்னிரண்டு அடிமைகள்
13. இந்தச் சிக்கலான தடுமாற்ற நிலைபற்றி அறியப் பார்க்கவும், ASqalani, thalBuivol. 1349 ஒட்கை புத்தம் பற்றிய தத்துவார்த்த விவாதங்கள், அதன் அரசியல் உட்கிடைகள் தொடர்பாகப் பார்க்கவும் தபாரியின் Tarikh vol 5, pp. 156 - 255. 14. Ibn Sa'd, Al Tabagat, vol 3. p. 159.
25

Page 16
அவரது அழைப்புக்குச் செவிமடுத்தனர். அவர்களுள் அபூபக்றாவும் ஒருவர். நபி (ஸல்) அவர்கள், அவ் அடிமைகளின் எஜமானர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது அவர்கள் சுதந்திரமானவர்கள் என அறிவித்தார். அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்ட பின்னர் சகோதரர்களாகவும் எல்லாருக்கும் சமமானவர்களாகவும் மாறினர்." இவ்வாறுதான் அபூ பக்றா இஸ்லாத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுக் கொண்டார்.
உலகின் துன்புற்ற எல்லா ஏழை மக்களும் அதிகாரத்தையும் செல்வத்தையும் பெறக்கூடியவர்களாக வேண்டும் என்ற முகம்மது நபி (ஸல்) அவர்களின் கனவின் நிதர்சனமாக, சில ஆண்டுகளின் பின் ஒரு ஈராக்கிய நகரில் அபூபக்றாவை ஒரு பிரமுகராக நாம் காண்கிறோம். இந்த நபிதோழரின் விரைவான எழுச்சி, அபூபக்றா போன்ற ஒருவருக்கு இஸ்லாம் எத்தகைய பொருள் உடையதாய் இருந்தது என்பதை இரத்தினச் சுருக்கமாய் உணர்த்துகின்றது. இத் தொடர்பு இல்லாவிட்டால் அபூ பக்றா ஒரு போதும் தன் சொந்தக் கிராமத்தில் இருந்து ஒரு சுதந்திர மனிதனாக வெளியேறுவதையோ, இவ்வளவு விரைவாகத் தனது சமூக அந்தஸ்த்தை மாற்றிக் கொள்வதையோ கற்பனை செய்திருக்க முடியாது. "அராபியர்களாகிய நீங்கள் சொல்ல முடியாத ஒரு தாழ்நிலையிலும், அதிகாரம் அற்ற நிலையிலும் ஒழுக்கக் கேட்டிலும் இருந்தீர்கள். அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாமும், முகம்மது நபி(ஸல்) அவர்களும் உங்களைக் காப்பாற்றி நீங்கள் இன்று இருக்கும் இடத்துக்கு உங்களைக் கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.”*உண்மையில் அபூபக்றாமதம் மாறியதில் இருந்து சமூக ஏணியில் அதிவேகத்தில் ஏறிச் சென்றார். "அபூபக்றா மிகுந்த மதப்பற்று உடையவராக இருந்தார். தனது வாழ்க்கை முழுவதும் அவர் அவ்வாறே இருந்தார். அவரது பிள்ளைகள் அவர்களது அதிர்ஷ்டம் காரணமாகவும், கல்வியறிவு காரணமாகவும் பஸ்ராவின் பிரபலமானவர்களுள் இடம் பிடித்திருந்தனர்.”
நபி(ஸல்) அவர்கள் 25 வருடங்களுக்கு முன் கூறியதாகக் கருதப்படும் வார்த்தைகளை தன் நினைவைக் கிண்டிக் கிளறி மீண்டும் நினைவூட்டிக் கொள்ள அவர் பெருமுயற்சி மேற்கொண்டது ஏன்? கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முதல் விடயம் - அது எவ்வகையிலும் புறக்கணிக்கப்பட முடியாதது - அபூபக்றா ஒட்டகை யுத்தத்தின் பின்னரே இந்த ஹதீதை நினைவுகூர்ந்தார் என்பதாகும். அச்சமயத்தில் ஆயிஷா (ரலி) அவர்களின் நிலைமை பொறாமைப்படத் தக்கதாய் இருக்கவில்லை.
l5. Ibn Sa'd.
16. Asqalani Fath al Bari vol. 13. p. 622.
7. Ibn. al - Athir. Use al - ghaba fitanniyiz al sahaba (c. p. Dar -al- fik li al- Tiba'a
wa al Tawzi, n.d.) Vol 5. p. 38.
26

அரசியல்ரீதியில் அவர் துடைத்தெறியப்பட்டிருந்தார். அவரது ஆதரவாளர்களில் 13000 பேர் யுத்த களத்தில் வீழ்ச்சியுற்றிருந்தனர்.*ஹசறத் அலி(ரலி) அவர்களின் அணியில் சேரத் தவறியவர்கள் தமது நடத்தையை நியாயப்படுத்த வேண்டியவர்களாக இருந்தனர். அபூ பக்றா போன்ற ஒருவர் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற ஒரு ஹதீதை நினைவுகூர வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்பதை இது தெளிவுபடுத்த முடியும். உள்நாட்டு யுத்தத்தில் பங்குபற்ற மறுத்தவர் என்ற வகையில் அவரது நடத்தை திருப்திகரமானதாக அமைந்திருக்கவில்லை என்பதும் கருத்தில் கொள்ளத் தக்கது."
ஷெய்க் கஸ்ஸாலியின் நூல் ஏன் அபாயகரமானதாகக் கருதப்படுகின்றது ?
பழமைவாத மதத் தலைமைத்துவம் ஷெய்க் கஸ்ஸாலியின் நூலை நிராகரிப்பதற்குக் காரணம் அது பெண்களின் பிரச்சினையை அதற்குரிய இடத்தில் வைப்பதாகும். அதாவது, மனித உரிமைகள் பற்றிய விவாதத்தின் மையத்தில் அதனை வைக்கின்றது. இந்த நூல் ஏன் அபாயகரமானதெனில், அரசியல் உரிமைக்கான பெண்களின் கோரிக்கை இதுவரை கூறப்பட்டதுபோல் இனியும் ஒரு பொய்யான விவாதத்தின் பகுதியல்ல - சீர்கெட்ட மேற்கத்தைய மயமான, பூர்ஷாவா வர்க்கப் பெண்களின் பொழுது போக்கான கோரிக்கையல்ல. பதிலாக, எல்லா மனிதர்களினதும் சமத்துவத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தின் மெய்ப் பொருளுக்கு மையமான ஒன்றாகும் என அது காட்டுவதாகும்.
இதனாலேயே கஸ்ஸாலியின் நூல் பழைமைவாத மதத் தலைவர்களின் தீவிரமான தாக்குதல்களுக்கு ஆளானது. இவர்கள் உள்நாட்டில் கொடுங்கோல் ஆட்சியைச் சார்ந்து இருந்தனர். நமது சமூகங்களில் மனித உரிமைப் பிரச்சினைகளை உதாசீனம் செய்தமைதான் இன்றைய முஸ்லிம் உலகின் வீழ்ச்சிக்கும், முன்னேற்றம் இன்மைக்கும் பிரதான காரணமாகும் என்ற உண்மையை கஸ்ஸாலி இனங்கண்டதுபோல் இவர்கள் இனங்காணத் தவறினர்.
'ஸபா நாட்டு அரசியால் ஆளப்பட்ட மக்கள் (குர் ஆனில் கூறப்பட்டதுபோல்) தங்கள் அலுவல்களை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்ததனால் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லப்பட்டனரா ?” என்று தனது நூலில் கஸ்ஸாலி கேள்வி எழுப்புகிறார். "சுலைமான் நபி (ஸல்) அவர்களின் அணியைச் சாருமாறும், அவரது மதத்தைப் பின்பற்றுமாறும், அவரது நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளுமாறும் அவள்
18. Ibid vol 4. p. 578.
19. அபூபக்றா பொய்ச்சாட்சி சொன்ன குற்றத்திற்காக இரண்டாவது கலீபா ஹசறத் உமர் (ரலி) அவர்களினால் கசையடித் தண்டனை வழங்கப்பட்டவர் என்ற தகவல் அவரது நம்பிக்கைக்குரிய தன்மையை மேலும் சந்தேகத்துக்குரிய தாக்குகின்றது. பார்க்கவும் முன்குறிப்பிட்ட நூல். Ibnal - Athir, UsedGil Glictlyct, vol. 5. P8
27

Page 17
t A . بالاخا لانذکر قول ایران تیمیة، إن الته- قد ينصر الدولة الكافة -يحدخل. على الدولة المسلسة بما يقع فيهامن مظالم، முஸ்லிம்கள் நீதியற்றவர்களாகவும் முஸ்லிம் அல்லாதவர்கள் நீதியுள்ளவர்களாகவும் இருக்கும் பட்சத்தில் அல்லாஹ் முஸ்லிம் அல்லாதவர்களை முஸ்லிம்கள் மீது வெற்றிகொள்ளச் செய்கிறான்.
இமாம் இப்னு தப்மியா
28
 

தனது மக்களுக்கு ஆலோசனை கூறியதாக தெய்வீக நூல் (குர்ஆன்) விபரிப்பதனால். அது ஒரு தவறான ஆலோசனையாகக் கருதப்பட முடியாது” என அவர் மேலும் விவாதிக்கின்றார்.
ஸபா நாட்டு அரசி பற்றிய குர்ஆன் வசனங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக் கூடிய பாடங்கள் என்ன? அவள் ஒரு அற்புதமான பெண். அவளுடைய மக்கள் மத்தியில் அவளுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்களை மதம் மாறத் தூண்டுமாறு" ஹசரத் சுலைமான் (ரலி) அவர்கள் அவளிடம் கேட்டபோது அவள் முற்றிலும் இறுமாப்பும் திமிரும் வெளிக்காட்டி இருக்க முடியும். அவருடைய கோரிக்கைக்குச் செவிசாய்க்க மறுத்து, தன் மக்களுக்குப்பிழையான ஆலோசனை வழங்கியிருக்க முடியும். ஆனால் அவள் அவ்வாறு செய்யவில்லை. தான் இதுவரை தவறான பாதையில் இருந்திருக்கிறேன் என்பதை ஏற்றுக் கொண்டு இப்போதிருந்தே ஹசறத் சுலைமானுடைய மதத்தைப் பின்பற்றி ஒரு முஸ்லிம் ஆகவேண்டும் என்று தீர்மானிக்கும் அளவுக்கு அவளிடம் உயர்பண்பும், ஆழ்ந்த ஞானமும் இருந்தது என்று கஸ்ஸாலி வாதிக்கிறார்.
தனது நியாய சிந்தனையைச் சரியான முறையில் பயன்படுத்தி, புத்தி சாதுரியத்துடன் தன் மக்களை வழிநடத்தி, அவர்களை வெற்றிக்கு இட்டுச் சென்ற ஒரு பெண் ஆட்சியாளரைப் பற்றி தெய்வீக நூலாகிய குர்ஆனில் இடம் பெற்றுள்ள இந்த அற்புதமன உதாரணத்தைத் தொடர்ந்தும் அறியாதவர்கள் போல் இருக்க முயலும் மதத்தலைவர்களின் குருட்டுத் தனத்தையிட்டு கஸ்ஸாலி ஆச்சரியப்படுகின்றார். இந்த விடயத்தில் குர்ஆன்மிகத் தெளிவாக இருக்கும்போது, மதத்தலைவர்களும் கற்றறிந்த முஸ்லிம்களும் எவ்வாறு ஒரு ஹதீதை அதற்கு எதிராகப் பற்றிப்பிடித்துக் கொண்டு இருக்க முடியும் என அவர் வியப்படைகின்றார்.
ஆகவே, இங்கு பிரச்சினை பால் பற்றியதல்ல என அவர் தொடர்ந்து வாதிக்கின்றார். ஒரு அரச தலைவர் ஆணா அல்லது பெண்ணா என்பதல்ல இங்கு பிரச்சினை. ஸபா நாட்டு அரசியின் கதை நமக்குக் காட்டுவது போல அவர் திறமையும், நன்னடத்தையும், நாற்பேறும் கொண்ட ஒருவரா இல்லையா என்பதே பிரச்சினையாகும்.
"முஸ்லிம்கள் நீதியற்றவர்களாகவும் முஸ்லிம் அல்லாதவர்கள் நீதியானவர்களாவும் இருக்கும் பட்சத்தில் அல்லாஹ் முஸ்லிம் அல்லாதவர்களை முஸ்லிம்கள் மீது வெற்றி கொள்ளச் செய்கிறான்” எனக் கூறும் இமாம் இப்னு தய்மியாவை நாம் நினைவுபடுத்திக் கொள்வோமாக என கஸ்ஸாலி கூறுகிறார்.
20. அவர்கள் சூரிய வழிபாடு செய்வோர். 21. Ghazali - As Sun na dan Nabavviya P.59.
29

Page 18
وإذا ارتضوا ان ككون المرأة حاكمة
أوقاضية أفيونية أوسفيرة ، فلمـعـ ماشاء واله ولدينا وجهات نظرفقهية تجيز ذلك كله . فلم الإكراه على رأى حقا؟ إن متلافقه لهم يجب أن يخلقوا
افوامهم لئلا يستيوا الى الإسلام بحديث لم يتهموه أو فهموه وكان ظاهر القوات
خصہبال • • . . .
பெண்கள், ஹக்கீமா (அரசுத் தலைவர்), காழி (நீதிபதி), சஃபீறா (அரச தூதுவர்), அமைச்சர் போன்ற உயர் பதவிகளை வகிப்பதை எதிர்க்கும் முஸ்லிம்களுக்கு தங்கள் அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கும் உரிமை உண்டு. ஆனால், அவர்களது அபிப்பிராயம் நமது அபிப்பிராயத்துடன் ஒத்திருக்கவில்லை. நமது அபிப்பிராயம் ஃபிக்ஹ் (மத அறிவியல்) சார்ந்தது. ஆகவே, ஏன் அவர்கள் தங்கள் அபிப்பிராயத்தை மற்றவர்கள் மேல் திணிக்க வேண்டும்? ஃபிக்ஹை உதாசீனம் செய்பவர்கள் தங்கள் வாய்களை மூடிக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் தங்களுக்குப் புரியாத ஒரு ஹதீதைப் பயன்படுத்தி இஸ்லாத்துக்கு ஊறுவிளைவிக்காது இருக்கலாம். அல்லது, அவர்கள் அதைப் புரிந்து கொண்ட போதும், குர்ஆனின் வெளிப்படையான கருத்து அதற்கு முற்றிலும் நேர்மாறாக அமைந்திருப்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
30
 
 

சவூதி அரேபியாவில் இருந்து வெளிவரும் அல் முஸ்லிமூன் பத்திரிகையில் நிகழ்ந்த விவாதத் தலைப்புகள்
"ஆம் ஒரு பெண் அரசுத் தலைவியாக இருக்கத் தகுதி உடையவள்"
سدوة السنة النبسويسة
نعم .. المرأة تصلح رئيسة دولة
واصلت ندوة « المسلمونه بالقاهرة مناقشاتها حول السنة النبوية بين التنقية وإعادة الفهم). تناولت الندوة وضع المرأة
على أن شهادة
في اطار التنقية وما أتير حول وجود أحاديث صحيحة تعيق التشريعات الجنائية. جدد الشيخ الغزالى تأكيده
المرأة تقبل في الحدود والاعراض والقصاص، وان ولايتها تقبل في الوظائف الفنية. وانها تعمل دون كلام في الوظائف الادارية.
عدة احاديث لانها تخالف الصبسولا فقهية لا يسمى بهذا منكسر للسنة ولنفرض ان البخارى قيد * * ٢V حديث أو أقل من هذا أو أكثر كثيرا وأيا كان العدد، لسور نقينساه من بخسع أحاديث صـساذا سیجری سواء کان هذا ن البخاری آو مسلم؛ و عقب الد کتور جمال الدين محمود قانالا ان الاحاديث النى وقف عندها الشيخ الغزالى في الدية وتشهادة المرأة في النصاص كل هذا كان من أشد الأسوار عناء في التشريع، اضاف ان هذه الأحاديث وغيرها تثير
قال الغزالى لقد تابعت قسول ابن حزم بأنها من المعسكر ان
تكون في أى منصب ماعدا الامارة العامة، وأولت حديث فارس خاسب قوم ونوا أمرهم امرأة، وقلت ان نظام فارس نظسام وثنى "فر دی استبدادی. و قلت ایضا ان دیة المرأة کد بة الرجلی، و مضی للفن الى يقول اننى متبع للأنمة الكبار والسست بمبتدع، أنا افعلى ما تمليه مالك وابو حنيفة وابن حزم وابن تيمية، وليس في كتابى ينسين. إلا وأنا مسبوق به، حتى عندما قلت ان المرأة يمكن ان
அல் முஸ்லிமூன், 29 ஷவ்வால், 1410/ மே 24,1990.
ل الحلقة السابقة تناولت ندرة والمسلمونز، بالقامرة فضية السنة النبوبة بين إعادة الفهد والتنفية، وسلطت الضره على مفهوم التنقية رمل تشمل التنقبة كتب الصحاج خاصة سحبح البخارى. وعرضت للراى الداعبة الإسلامى الشيخ محمد الغزالى قد رد حديث الأحاد ما دام هناك نصب يقيسى يعارضه مثل حديث قتل السلم بالكافر، رحديد خيانة حسواء وخنز اللحم. وحسيبث سحر النبي صلى الله علبه S رسالم، والآراء التي التقت معه لـ ذلك والأراه الشى عارضته Y
محســــــــــــــــــسسسسسسســـــــــــــــــــــــــــسببسummمصس
تنقية السنة.. هل هى دعوى لرفع الحصانة عنها ؟
السشيخ الغزالى المرأة تتولى رئاسة الدولة وإن خالف ذلك ما في الصحيح - جمال الدين محمود هنساك أحساديث صحيحة تعيق التشريعسات الجسنسانيسة
سيدي السنة النبوية " 2 مم بين التنقية .
الساعی وإعادة الة
3.

Page 19
ஷெய்க் கஸ்ஸாலிக்கு எதிராக 1990 ல் வெளிவந்த புத்தகங்களின் அட்டைகள்.
மத உரையாடலில் நெருக்கடி, ஷெய்க் முகம்மது அல் கஸ்ஸாலியின் “அஸ் சுன்னா அன் நபவிய்யா” நூல் பற்றிய விமர்சனம் - ஜமால் சுல்தான்
தார் அன் - ஸஃபா, கெய்ரோ, ஜனவரி - 1990.
بگوان کرسٹلطا6
ازوۂ احواللینیشیا
التنة التون بہت اضلالتزئ وَاھل لحمیات , المولفۂ مجلسہلیالیترالی
کازالے فا
32

முகம்மது கஸ்ஸாலியுடன் ஒரு உரையாடல்
அவரது “அஸ் சுன்னா அன் நபவிய்யா" நூல் பற்றிய சில நிலைப்பாடுகள்
சல்மான் ஃபஹ்த்
சவூதி அரேபியா, 9/11/1409 ஹிஜ்ரி
0
క్ర్మనీ g(6e느인 3g=
@"乒垒邺
وقفات مع کتاب السنة النبوية بين أهل الفقه وأهل الحديث
الناشسر دار الهجرة للنشر والتوزيع المملكة العربية السعودية ص. ب : ۹۷ ه ۲۰ - الثقبة - ۲ ه ۳۱۹ ریاض : هه ۷۹۲۰ (۱ ) الشمسیر : به ۸۹۸۳۰ (۳ )
33

Page 20
ஷெய்க் கஸ்ஸாலியின் நூல்
ஜனவரி 1989 க்கும் ஜனவரி 1990 க்கும் இடையில் ஏழு மறு மதிப்புகள்
الطبيعكسة الأولمكتب
یسانسای سحر ۹۹۸۹
الطيمة المكانيكية
جسسایر ۱۹۸۹
السلمينعكسة الثكالكة
مسمسارس ۱۹۸۹
الطبيعتة الرابعكسة
ابسیریل ۱۹۸۹
الطبيعية الحناينكسة
مسس ایسور ۱۹۸۹
الطبيعية السكاي ستة اکتوبر ۱۹۸۹
با ردود و تعقیبات جدیدة
الطبيعة السبايعة
یسنایسر ۱۹۹۰
لیست یع جسشقوق العظتیجه تحصنات
88 d O حلوالشووقـ VRTKAMI -rrukamA : Ahe -u- ser Aå NY o alla
an are ud بھی دسیہ - کسس نیست . مصر به : ۹ م - منصفه : ۹ همه w۹س سپاه - ۱۷۶۷۱۳ هم
رالیا : مهابیل به کسی : eool airst
34

இவ்வகையில், ஒரு தேசத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் முக்கிய காரணிகள் நீதியும், மனித உரிமைகளும், ஜனநாயகமுமே தவிர, அதன் அரச தலைவரின் பால் அல்ல. பெண்தன்மை அல்லது ஆண்தன்மைக்கும் இப் பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம் என அவர் கேட்கிறார்.
கஸ்ஸாலியைப் பொறுத்தவரை, “பெண்கள் ஹகீமா (அரச தலைவர்), காழி (நீதிபதி), ஸபீறா (ஸ்தானிகர்) போன்ற உயர்பதவிகளை வகிப்தை எதிர்க்கும் முஸ்லிம்களுக்கு அவர்களது அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கும் உரிமை உண்டு. ஆனால், அவர்களது அபிப்பிராயம் எங்களது அபிப்பிராயத்துடன் ஒருபோதும் பொருந்திப் போகாது. எமது அபிப்பிராயம் ஃபிக்ஹ் (சமய அறிவியல்) உடன் சம்பந்தப்பட்டதாகும். ஆகவே, ஏன் அவர்கள் தங்கள் அபிப்பிராயங்ளைப் பிறர்மீது திணிக்க வேண்டும்? ஃபிக்ஹை புறக்கணிப்பவர்கள் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தாங்கள் புரிந்து கொள்ளாத ஹதீதைப் பயன்படுத்துவதன் மூலம் இஸ்லாத்துக்கு ஊறு செய்யாமலாவது இருக்க முடியும்'
கஸ்ஸாலியின் நூல்பற்றி இங்கு தரப்பட்ட விபரங்கள் மூலம் அது ஏற்படுத்திய கொந்தளிப்பினை நாம் ஒரளவு புரிந்துகொள்ள முடியும். அபூ பக்றாவின் ஹதீதைப்பற்றி அவர் அவநம்பிக்கைப்படுவது மட்டுமன்றி, அது குர் ஆனுடன் முற்றிலும் முரண்படுகின்றது என்பதை உணர்ந்து கொள்ளாது அதனைப் பயன்படுத்தும் எல்லா மதவாதிகளின் தகுதியையும் அறிவையும் அவர் சந்தேகிக்கிறார்.
கஸ்ஸாலியின் நூல் மத விற்பன்னர்களின் சமூகத்தை மிகுந்த கலக்கத்துக்குள்ளாக்கியது. சிலர் அவரைத் தாக்கினர். அதேவேளை, வேறு சிலர் இது குர்ஆன் மற்றும் ஹதீத் துறையில் புலமை உடையோரால் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் அதுபற்றிய வாதங்கள் பொது மேடைகளில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானித்தார்கள். இதன் விளைவாக 1990ல் கெய்ரோவில் இவ்விடயம் தொடர்பாகத் தொடர்ச்சியான கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
இந்த விவாதம் 1989ல் திடீரென வெடித்ததற்குக் காரணம் என்ன?
காரணம் வெளிப்படையானது. சர்வாதிகார ஆட்சி நிலைகுலைந்து அதன் சட்டபூர்வமான தன்மை கேள்விக்கிடமாக்கப்பட்டமை இதன் காரணமாகும்.
22. அதே நூல் பக் 60.
35

Page 21
அதலா அல்லது சமூகநீதி பற்றிய பிரச்சினை முதன்மை பெறும் போதெல்லாம் முஸ்லிம் உலகில் பெண்களின் உரிமைகள் பற்றிய விவாதமும் சீறிக் கிளம்புகின்றது. அரச முகாமைத்துவத்தின் தோல்வி உறுதிபெற்று, தணிக்கைமுறை - அது எந்த அளவு கொடூரமானதாக இருப்பினும் - சவாலுடன் எதிர்கொள்ளப்படும் ஆழ்ந்த நெருக்கடிகள் தோன்றும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இந்த விவாதம் சீறிக் கிளம்புகின்றது.
(ஹிஜாப் அல்லது முகத்திரை, றிஅஸ்ஸா அல்லது அரசுத் தலைமைத்துவம் ஆகிய முன்னணியில் நிற்கின்ற தவிர்க்க முடியாத பிரச்சினைகள் ஊடாக) இன்று முஸ்லிம் சமூகங்களில் பெண்கள் அரசியல் விவாதங்களில் முன்னணியில் இருக்கிறார்கள் என்றால் அது இன்று ‘ஹகுக் என்னும் மனித உரிமைகள் ஆபத்துக்குள்ளாகி இருப்பதன் அடையாளமேயாகும். பெண்களைப் பற்றிப் பேசாது இஸ்லாத்தில் நீதி, உரிமைகள் என்பன பற்றிப் பேசமுடியாது என்பதே இதன் காரணமாகும். பாரம்பரியமாக, குடும்பத்தினுள் உறவுகளை ஒழுங்கமைக்கும் தனியார் சட்டத்தின் (Domestic law) அடிப்படையில் பெண்கள் தாழ்ந்தவர்களாகக் கருதப்படுவதையும் இங்கு நாம் விசேடமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். இது 'முஸவ்வத் அல்லது மனிதர்களுக்கிடையே சமத்துவம் என்ற தெய்வீக மூலக் கோட்பாட்டை வெளிப்படையாக மீறும் ஒரு நிலைமையாகும். இதன் விளைவாக மனித உரிமைகள் பற்றிய எந்த ஒரு கலந்துரையாடலும் தவிர்க்க முடியாமல் பெண்களின் உரிமை சம்பந்தமான கலந்துரையாடலாகவும் மாறுகின்றது.
'றிஅஸ்ஸா’ அல்லது அரசுத் தலைமைத்துவத்துக்கான பெண்களின் உரிமை தொடர்பாக மத அறிஞர்கள் ஒரு போதும் கருத்து உடன்பாட்டுக்கு வர முடியவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. அவர்கள் எப்போதும் மூர்க்கமாக எதிர்க்கும் இரண்டு எதிர் எதிர் முகாம்களாகப் பிளவுபட்டுள்ளனர். ஒரு சாரார் ஆம் முஸ்லிம் பெண்களாகிய நாம் அரசுத் தலைமைத்துவம் பெறமுடியும் என்கிறார்கள். எதிர் முகாமினர் இல்லை, நாம் அவ்வாறு பெறமுடியாது என்று கூறுகின்றனர்.
இஸ்லாத்தின் உன்னத காலகட்டங்களில் மட்டுமே இந்த விவாதமும் எழுகின்றது என்பது கவனிக்கத்தக்கது. முஸ்லிம் வரலாற்றின் பின்னடைவுக் காலகட்டங்களில் இல்லை’ என்று கூறும் முகாமினர் மட்டுமே உயிர்ப்புடன் இயங்குகின்றனர். ஈவிரக்கம் அற்ற தணிக்கை காரணமாக "ஆம்" என்று கூறும் முகாமினர் காணாமல் போய்விடுகின்றனர்.
இதுஎன்? வர்க்கம், பால் ஆகிய இரட்டை ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்படும் பாதிக்கப்பட்டவர்களான பெண்கள், அதிகார அமைப்பில் ஒரம்
36

கட்டப்பட்டவர்களாக, மெளனமான, மெளனமாக்கப்பட்ட பெரும்பான்மையினராக இருக்கிறார்கள் என்ற உண்மையிலேயே இதற்குரிய விடை உள்ளது. தலைமைத் துவத்துக்கான - குறிப்பிட்ட சமூக அமைப்புக்குள் அதிகாரப் பதவிகளுக்கான - அவர்களின் உரிமை பற்றிய பிரச்சினை, அரச கொடுங்கோன்மை நிலைகுலைக்கப்படும்போது மட்டுமே எழுகின்றது. இன்றைய முஸ்லிம் உலகின் நிலை இதுவே என்று தோன்றுகின்றது.
இஸ்லாத்தின் உன்னத காலகட்டம் என்ற தொடரை நான் இங்கு பயன்படுத்தி இருக்கிறேன். இதற்கு ஒரு எளிமையான காரணம் உண்டு. முஸ்லிம் அரசு சீர்மை கெட்டு கொடுங்கோன்மையில் மூழ்கிக் கிடக்கும் காலகட்டங்களில் இக்கேள்வி ஒருபோதும் எழுவதில்லை. இக் கொடுங்கோல் அரசுகள் இப்போது நாம் மனித உரிமைகள் என அழைக்கும் அல்-ஹக் அல்லது அல்-அதலா ஆகிய இரு அடிப்படைக் கருத்தாக்கங்கள் பற்றித் துணிவுடன் பேசும் மதத் தலவர்களையும் பிறரையும் சிறையில் அடைத்தோ அல்லது பகிரங்கமாகக் கொலைசெய்தோ தண்டிப்பதன்மூலம் மேலும் மேலும் சீர்கேட்டில் மூழ்கிவிடுகின்றன. எல்லாப் பிரஜைகளும் - ஆட்சியாளரும் - ஆளப்படுவோரும் - ஒரே சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக நீதியாக நிருவகிக்கப்படும் ஒரு சமூகத்துக்கான வேட்கை, இஸ்லாத்தின் பின்னடைவுக் கால கட்டங்களில் ஒரு வெறும் கனவாகவும் கானல் நீராகவுமே மிஞ்சுகின்றது.
நான் ஏற்கனவே கூறியது போல, அரச கொடுங்கோல் நிலைகுலைக்கப்பட்டு, நிலைநிறுத்தப்பட்ட அதிகார அமைப்புக்கள் சவாலுக்கு உள்ளாக்கப்படும்போதே பெண்களின் அரசியல் உரிமைபற்றிய விவாதமும் மேற்கிளம்புகின்றது. இந்த நிலைகுலைவு பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இராணுவ ஆக்கிரமிப்பு அல்லது புரட்சிகரமான தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், அல்லது இன்று உலகெங்கும் காணப்படுவது போல மூலதனத்தின் பூகோளமயமாக்கலும், தொடர்பு சாதனங்கள் மூலம் தேசிய எல்லைகள் அழிபடுதலும் போன்ற புறக்காரணிகளால் இந்த நிலைகுலைவு ஏற்படலாம். அல்லது தெய்வ கடாட்சம் பெற்ற அரச வம்சங்களை மாற்றியமைக்கும் தொடர்ச்சியான வரட்சி, பஞ்சம் அல்லது சமூக வர்க்க அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற அகக்காரணிகளாலும் இந்த நிலைகுலைவு ஏற்படலாம். காரணம் எதுவாக இருந்தாலும் அதன் விளைவாக ஏற்படும் சர்வாதிகார அமைப்புகளின் நிலைகுலைவு, மதத் தலைவர்கள் உட்பட அக்கறை உள்ள பிரஜைகள் - பெண்கள், ஆண்கள் அனைவரும்-தங்கள் தலைகள் வெட்டுப்படாமலே 'ஹக்' அல்லது எது சரி என்பது பற்றியும் அதலா அல்லது நீதி பற்றியும் பேசக்கூடிய ஒரு சூழ்நிலையைத் தோற்றுவிக்கின்றது.
பிரபலமான மதத் தலைவர்களான இமாம் மாலிக், இமாம் அபூ ஹனிபா, இமாம் புஹாரி, இமாம் தபாரி போன்றோரின் புகழ் பெற்ற வாழ்க்கை வரலாறுகள்
37

Page 22
அனைத்தும் கொடுங்கோல் அரசுகளின் குரூரமான தணிக்கை, காரணமற்ற சிறைத்தண்டனை ஆகியவற்றை எதிர்த்த வீரம் செறிந்த எதிர்ப்போராட்டங்களின் வரலாறேயாகும்.
பெண்களின் அரசியல் உரிமை பற்றிய விவாதம் தன்னளவில் முஸ்லிம் அரசுகள் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைச் சுட்டி நிற்கின்றது. அவை பின்னடைவில் மூழ்கிக் கிடக்கின்றனவா அல்லது உன்னதத்தை நோக்கிச் செல்கின்றனவா என்பதை அது சுட்டிநிற்கின்றது. ஏனெனில் இஸ்லாத்தைப் பொறுத்தவரை, ஆரம்பகாலத்தில் இருந்தே பின்னடைவு என்பது மெளனமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கொடுங்கோல் ஆட்சியாகவே இருந்தது. அதேவேளை, மக்களும் மதத் தலைவர்களும் அதாலா, நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கு அழைப்புவிடுத்து வான் உயரக் குரல் எழுப்பிய போதே உன்னதத்துக்கான பாதை திறக்கப்பட்டது. அக்கறை கொண்ட ஆண்களும் பெண்களும் இதில் இணைந்திருந்தனர்.
ஆண் பெண் சமத்துவத்தை மிகத் தெளிவாக வலியுறுத்தும் குர்ஆன் வசனங்களைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக பெண்களின் தாழ்வு பற்றிப் பேசும் ஐயத்துக்குரிய ஒரு ஹதிதை மேற்கோள் காட்டுவதில் நன்னோக்கம் உடைய முஸ்லிம் ஆண்கள் ஏன் அதிக அவசரப்படுகிறார்கள் என ஷெய்க் கஸ்ஸாலி தன் நூலில் ஆச்சரியப்படுகிறார்.
பால் சமத்துவம் பற்றிய குர்ஆன் வசனங்கள்
ஆண்பெண் சமத்துவம் பற்றிய தன் வாதத்தில் ஷெய்க் கஸ்ஸாலியால் மேற்கோள் காட்டப்படும் சில குர்ஆன் வசனங்கள் இங்கு தரப்படுகின்றன.
'எனவே, அவர்களுடைய றப்பு அவர்களுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். அதாவது, “நிச்சயமாக நான் உங்களிலிருந்து ஆணோ அல்லது பெண்ணோ (யாராயினும் நல்ல) அமல் செய்பவர்களின் அமலை வீணாக்கமாட்டேன். (ஏனெனில், ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) உங்களில் சிலர் சிலரில் நின்றும் உள்ளவர்கள்தான்” (அத் 3.வ195 ஆல இம்றான்) (அப்துல் வஹ்ஹாப்)
இந்த வாக்கியங்களின் விளக்கவுரைகள்
தபாரிஸ் தனது தஃப்சீரில் இந்த வசனத்தின் பின்னணியைத் தருகிறார்.' நபிகள் (ஸல்) அவர்களின் மனைவியரான உம்மு சல்மா (ரலி) அவர்கள்
23. Tabari : "Tafsir" (Explanntion of the Quran) Dar al fikir, Beirut. Vol 14. p. 214.
38

۹۵ - اشتی آب لیثمر رهیز کیض عمل عامل
ويکنڑ شر ککر توانائی“ بَعْطل کی قوت بائیں ڈالئین لکھنؤ
愛鳥 /
وأخرجوان ويروز وأولأؤا في سيئإلى
وقت زاوئة
ثواتین پیئر التو'
ه ) ۶ و
Z. ؤ اتنے چائنات حُشر التواپO
ஆதலால், அவர்களுடைய இரட்சகன், அவர்களுடைய இந்தப் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொண்டான். (காரணம்) “உங்களில் ஆண்பெண் (இருபாலாரிலும்) எவர் நன்மை செய்த போதிலும்,நிச்சயமாக நான் அதை வீணாக்கிவிட மாட்டேன். (ஏனென்றால்) உங்களில் (ஆணாகவோ பெண்ணாகவோ இருந்த போதிலும்) சிலர் மற்றவரில் உள்ளவர்தான்.
அத் - 3. வா.195.
39

Page 23
இறைவனின் தூதரிடம் ஒருநாள் பின்வருமாறு கேட்டார்."ஆண்கள் ஹிஜ்ராபூர்த்தி செய்தவர்களாகவும் பெண்கள் அவ்வாறு பூர்த்தி செய்வில்லை என்றும் குறிப்பிடப்படுவது எவ்வாறு?’ உண்மையில் இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்டமைக்காக இருமுறை புலம் பெயர்ந்த பெண்களுள் உம்மு சல்மா (ரலி) அவர்களும் ஒருவர். முதலில் மக்காவில் இருந்து எதியோப்பியாவுக்கும், பின்னர் மக்காவில் இருந்து மதீனாவுக்கும் அவர் புலம்பெயர்ந்தவர். இறைவன் அவருடைய வினாவைச் செவிமடுத்து தனது புதிய மதத்தின் இலட்சியத்தைத் தெளிவுபடுத்தும் வகையிலேயே பின்வரும் குர்ஆன் வாக்கியத்தை அருளினான்.
“நிச்சயமாக நான், உங்களிலிருந்து ஆணோ அல்லது பெண்ணோ (யாராயினும் நல்ல) அமல் செய்பவர்களின் அமலை வீணாக்கமாட்டேன்’
(ஆல இம்றான். 195)
இவ்வாறு, உம்மு சல்மா தன் வினாவுக்குரிய விடையைப் பெற்றுக் கொண்டார். அவருக்குப்பல நூற்றாண்டுகளுக்குப்பின்னர் வாழும் நாம் புதிய சமயம் வழங்கிய பூரணமான பால் சமத்துவத்தை அவரைப் போலவே ஐயம் இன்றி அனுபவிக்க முடியும். 'ஹிஜ்றா’ஒரு அரசியல் நடவடிக்கையாகவே அமைந்தது என்ற வகையில், சமூக நடவடிக்கைகளில் பெண்களும் கலந்து கொள்ளும் கடப்பாடு உடையவர்கள் என்ற செய்தி இங்கு தெளிவாக உள்ளது. ஒரு நல்ல சமூகத்தை உருவாக்குவதற்காகப் போராடுவது பெண்களினதும் கடமையாகும். அவ்வாறு செய்வதற்குரிய வெகுமதி அவர்களுக்கு வழங்கப்படும்.
2-ld(Lp FGvLDT
பெண்களுக்கு குர்ஆன் வழங்கும் அந்தஸ்த்து தொடர்பாக விளக்கம்பெறும் வகையில் உறுதியான முறையில் வினாத் தொடுத்தமைக்காக உம்மு சல்மா (ரலி) அவர்களுக்கு முஸ்லிம் பெண்களாகிய நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். நபி (ஸல்) அவர்கள் உம்மு சல்மா (ரலி) அவர்களை மணம் முடித்த போது அவர் நன்கு முதிர்ச்சி பெற்ற பெண்ணாக, பல பிள்ளைகளுக்குத் தாயான விதவையாக இருந்தார்.
நபி (ஸல்) அவர்களை மணம் முடித்த போது மிகவும் இளம் வயதினராக இருந்த பீவி ஆயிஷா (ரலி) அவர்களைப் போல் அன்றி, ஒரு முஸ்லிம் முஹாஜிரா (புலம்பெயர்ந்தவர்) என்ற வகையில் உம்மு சல்மா (ரலி) அவர்கள் மிகுந்த கஷ்ட சீவியம் நடத்தியர். *
24. "Alleaba fi Tayiz Ac, -c, ahaba. Umm Salma's biography among the disciples in
1206 l. (Dar an Mahda, Cairo, DNl) vol. 8. p. 222.
40

ad gb و تکوی آنه- قیل لایول اقه ضلاللهگ علیه وسیله : " ما بال الجال یدکولن و لا SY た تذكر الضاً في الهجرة أو فأنزل الته تبارك وقالى في ذلك هذه الآية - . நபி (ஸல்) அவர்களின் மனைவியாரான உம்மு சல்மா (ரலி) அவர்கள் ஒரு நாள் இறைவனின் தூதரிடத்தில் கேட்டார்: "ஆண்கள் ஹிஜ்றத்தை நிறை வேற்றியவர்களாகவும் பெண்கள்
அவ்வாறு நிறை வேற்றாதவர்களாகவும் கூறப்படுவது எவ்வாறு?
(தபாரி)
4

Page 24
இஸ்லாத்தின் மிக ஆரம்ப காலத்திலேயே உம்மு சல்மா (ரலி) அவர்கள் மக்காவில் தன் முதலாவது கணவனுடன் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார். இஸ்லாத்துக்குத் தீவிரமான எதிர்ப்பு ஏற்பட்ட போது நிகழ்ந்த முதலாவது ஹிஜ்ரா (அல் ஹிஜ்ரா அல் அவ்லா) வின் போது எதியோப்பியாவுக்குப் புலம் பெயர்ந்தவர்களுள் அவரும் ஒருவர். நிலைமை ஓரளவு சீரடைந்தபோது அவர் தன் கணவனுடன் மக்காவுக்குத் திரும்பி வந்தார். ஆயினும், மீண்டும் அவர் புலம்பெயர்ந்து செல்ல நேர்ந்தது. இம்முறை அவர் மக்காவில் இருந்து மதீனா சென்றார். இந்த நீண்டகாலப் புலப் பெயர்வின் போது அவர் நான்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். அவருடைய கணவர் இறந்தபோது நபி (ஸல்) அவர்கள் அவரை மணம் செய்து கொண்டார். உம்மு சல்மா (ரலி) அவர்களின் மகனே இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். *
இவ்வகையில், பால் சமத்துவம் பற்றியும், புதிய சமயம் பெண்களின் வாழ்வில் கொண்டு வரவிருந்த மாற்றங்கள் பற்றியும் தொடர்ச்சியான வினாக்களை உம்மு சல்மா (ரலி) அவர்கள் எழுப்பியதில் ஆச்சரியம் இல்லை. வன்முறையும், அடிமைத் தனமும் பெண்களின் தலைவிதியாக இருந்த அறியாமைக் காலகட்ட ஜாஹிலியா நடைமுறைகளில் இருந்து இஸ்லாம் எந்த அளவுக்கு, என்ன வகையில் விலகி வேறுபடுகின்றது என்பதை அறிவது அவரைப் பொறுத்தவரை முக்கியமானதாக இருந்தது.
இதனால்தான் மக்காவில் இருந்து மதீனாவுக்கு புலம் பெயர்ந்த பெண்களின் அந்தஸ்த்துப் பற்றிய வினாவை எழுப்பி, புதிய மதத்துக்கு ஆதரவு அளிக்கும் முயற்சியை அவர் மேற்கொண்டார். முஸ்லிமாக மதம் மாறியமை உம்மு சல்மா (ரலி) அவர்களின் வாழ்வை நிச்சயமாக மாற்றியமைத்தது. ஒரு முதிர்ச்சியுள்ள பெண் என்ற நிலையில் இருந்தே அவர் இஸ்லாத்தையும் அதன் தூதரான நபி (ஸல்) அவர்களையும் தோர்ந்து கொண்டார். புதிய சமயம் நல்லதே என்றும், அது அடிமைத்தனம், வன்முறை ஆகியவற்றின் முடிவையும், பால் சமத்துவத்தின் புதுயுகம் ஒன்றின் தொடக்கத்தையும் குறிக்கிறது என்றும் அவர் நிச்சயமாக நம்பினார். மிக முக்கியமான இந்தப் பிரச்சினையைத் தெளிவுபடுத்தும் வகையிலேயே அவர் நபி (ஸல்) அவர்களிடம் பின்வரும் அடிப்படையான வினாவினையும் கேட்டார். “குர் ஆன் ஆண்களுக்கு மட்டும் அருளப்பட்டதா ? அல்லது பெண்களும் சமமாகக் கருத்தில் கொள்ளப்பட்டார்களா ?” உம்மு சல்மா (ரலி) அவர்களின் இந்த வினாவுக்கு விடையாகவே அத்தியாயம் 33 அல்- அசப் வாக்கியம் 35 அருளப்பட்டது.
25. Op. cit 223.
42

ஆம்' அல்லது இல்லை. நாம் சமமானவர்களா ?
இன்று முஸ்லிம் உலகில் இத்தகைய கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பதே நமது பாரம்பரியம் பற்றி நாம் எவ்வளவு அறியாமையில் உள்ளோம் என்பதைக் காட்டுகின்றது. ஆமா, இல்லையா என்ற விவாதத்துக்குரிய விடை“ஆம் நாம் சமமானவர்கள் தான்” என்பதேயாகும். மேலும், இச்சமத்துவம் குர்ஆனிலேயே எவ்வித ஐயத்துக்கும் இடமின்றி மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 1990 ல் இச் சமத்துவம் பற்றிப் பேசும்போது நாம் மேற்குலகை அப்படியே பிரதி செய்கிறோம் என்றோ, அன்னிய கலாசாரங்களிலிருந்து கடன் வாங்குகின்றோம் என்றோ ஆகாது. உண்மையில் ஏற்கனவே நம்முடையதாக இருந்த ஒன்றையே நாம் மீண்டும் கோருகின்றோம்.
எல்லாத் துறைகளிலும் சம அந்தஸ்த்தைக் கோருவதன் மூலம், இன்றையப் பெண்களாகிய நாம் நமது பாரம்பரியத்துக்கு உண்மையானவர்களாக இருக்கிறோம். இவ்வகையில், முக்கியமான பெண்நிலைவாத வினாக்களை எழுப்பிய நபிகள் (ஸல்) அவர்களின் மனைவியாரான உம்மு சல்மா (ரலி) அவர்கள் முன்வைத்த பெண்களுக்குரிய முன்மாதிரியையே நாம் பின்பற்றுகின்றோம். நமது பாரம்பரியத்தைப் பற்றி ஒன்றும் அறியாதவர்களே, இவை தற்கால மேற்கத்தையப் பெண்களின் சிறப்புரிமைகள் எனக் கருதுகின்றனர்.
மதீனாவில், நபிகள் (ஸல்) அவர்கள் முன்னிலையில் பால் சமத்துவம் பற்றிய இத்தகைய வினாக்கள் எழுப்பப்பட்டது மட்டுமன்றி, பெண்கள் தங்கள் வினாக்களுக்குச் சாதகமான விடைகளையும் பெற்றனர். இவ்விடயத்தில், புதிய மதம் உண்மையிலேயே புரட்சிகரமானதுதான் என்பதை தெய்வீக அருள் வாக்குகள் (குர்ஆன் வசனங்கள்) அவர்களுக்கு உறுதிப்படுத்தின. பெண்கள் மீது அடிமைத்தனத்தையும் வன்முறையையும் திணித்த அறியாமைக்காலம் (ஜாஹிலியா) முடிந்தது என்பதை அது அறிவித்தது.
புதிய இஸ்லாமிய யுகம் பெண்களுக்கு ஒரு புதிய அந்தஸ்தினை வழங்கியது. ஸபா நாட்டு அரசி பற்றிய குர்ஆன் வசனங்கள் ஒரு அரசின் தலைவியாக ஒரு பெண் வகித்த பாத்திரம் பற்றிய சித்திரத்தைத் தருவதன் மூலம் பெண்களும் அதி உயர்ந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. முஸ்லிம்களின் வரலாற்றில் அநேக பெண்கள் அத்தகைய உயர் பதவிகளைப் பெற்றிருந்தனர். அப்பணிகளை மிகுந்த வெற்றிகரமாகவும் நிறைவேற்றினர் என்பதையும் நாம் காண்கின்றோம்.
43

Page 25
۳۵- ارق الملیینی المللی و الیایی ڈالنؤیٹتِ وَاللینی والئیٹیتِ و الضیقینی والضرتیتِ وَ الطسپینشن و الطياري كالخشبيين والخيطية التضيّقين والتضيّاشي والكتانيين والقائلي والخفظي نيجيو اطفاظتِ وَالت کی بھیجائے کینیڈاؤالت کہت
ヘク・乙 %”イ%%/:2くタケイ。いく^イ اعت نے مبعومة ق. أجر کھیلتان நிச்சயமாக, முஸ்லிமான ஆண்களும், முஸ்லிமான பெண்களும், முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் (அல்லாஹ்வுக்கு) வழிபடும் ஆண்களும் வழிபடும் பெண்களும் உண்மை பேசும் ஆண்களும் உண்மை பேசும் ப்ெண்களும் பொறுமையுள்ள ஆண்களும் பொறுமையுள்ள ப்ெண்களும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சிநடக்கும் ஆண்களும் அஞ்சி நடக்கும் பெண்களும் தர்மம் செய்யும் ஆண்களும் தர்மம் செய்யும் பெண்களும் நோன்பு வைக்கும் ஆண்களும் நோன்பு வைக்கும் பெண்களும்
தம் மறைவிடங்களை பாதுகாத்துக் கொள்ளும் ஆண்களும் பாதுகாத்துக் கொள்ளும் பெண்களும் அல்லாஹ்வை அதிகம் திக்ருசெய்யும் ஆண்களும் திக்ரு செய்யும் பெண்களும் -இவர்களுக்கு மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும்அல்லாஹ் சித்தம் செய்து வைத்துள்ளான்.
அத் - 33. வா. 35. (அப்துல் வஹ்ஹால்)
44
 

முஸ்லிம் வரலாற்றில் அரசுக்குத் தலைமை தாங்கிய 16 பெண்கள்
அரபு நூல்களில் மட்டும் அரசுத் தலைவிகளாக இருந்த 16 பெண்கள் பற்றிக் கூறப்படுகின்றது. இவர்கள் பெயரில் குத்பாப் பிரசங்கங்கள் (வெள்ளிக்கிழமை கூட்டுத் தொழுகையின் பொது பள்ளி வாயில்களில் நிகழ்த்தப்படும் உரை) நிகழ்த்தப்பட்டதோடு அவர்கள் பெயரில் நாணயங்களும் வெளியிடப்பட்டன. அவர்களது விபரங்கள் பின்வருமாறு
1. றாசியா சுல்தான் 634/1236டில்லி
சஜறத் அத்தூர் 648/1250கெய்றோ குத்லுக் துர்கான் 655/1257 - 681/1282
மங்கோலிய அரசவம்சம் 4. பதிஷா கதூன் 691/1292 - 694/1295
மங்கோலிய அரசவம்சம் 5. அப்ஷ் கதூன் 662/1263 - 686/1287
மங்கோலிய அரசவம்சம் 6. தவ்லத் கதூன் 716/1316 (சுமார் கால்நூற்றாண்டு காலம்)
மங்கோலிய அரச வம்சம் சதி பெக் 739/1339 மங்கோலிய அரசவம்சம் சுல்தானா திண்டு 714 - 814 பக்தாத் சுல்தானா பாத்திமா பேகம் 1679 - 1681 மத்திய ஆசியா 10. சுல்தானா கதீஜா 1347 - 1379 மாலைதீவு 11. சுல்தனா மரியம் 1379 - 1381 மாலைதீவு 12. சுல்தானா பாதிமா 785 1383 - 790, 1388 மாலைதீவு
13. தாஜ் அல் ஆலம் சபீயத் அத்தீன் ஷா 1641 - 1675
இந்தோனேசியா (சுமாத்ரா) 14. நூர் அல் ஆலம் நகீயாத் அத் தீன் ஷா 1675 - 1678
இந்தோனேசியா (சுமாத்ரா) 15. இனாயத் ஷா சக்கியத்துத் தீன் ஷா 1678 1688 -س
இந்தோனேசியா (சுமாத்ரா) 16. கமலத் ஷா 1688 - 1699 இந்தோனேசியா (சுமாத்ரா)
45

Page 26
முஸ்லிம் சுல்தானாக்களின் பெயரில் பள்ளிவாயில்களில் மொழியப்பட்ட பிரார்த்தனைகளுக்கு சில உதாரணங்கள் :
சஜறத் அத்தூரின் பிரார்த்தனை வடிவம்
இவர் ஒரு பேரழகி. நீதியும், நுண்மதியும் உடையவர். இவர் எகிப்தின் சுல்தானாவாக ஆகிய பின்னர் பள்ளிவாயில் மிம்பர்களில் இவரது பெயரில் குத்பாப் பிரசங்கம் செய்யப்பட்டது. கலீபாவுக்குப்பிரார்த்தனை செய்யப்பட்ட பின்னர் இவை நிகழ்ந்தன.
واحفظ اللهم المية الصالحة. ملكة الصسلمیه اتمة الدنیا والدین، اخلیل المستعصية صاحبة الشلطان الملك الصالح
இறைவா, இப்பூவுலகினதும் 6 மார்க்கத்தினதும் அருட்கொடையும், சுல்தான் மலிக் அஸ்ஸாலிஹ் அவர்களின் துணைவியாரும், கலில் அல் முஸ்தஃஸமிய்யா அவர்களின் தாயாருமான முஸ்லிம்களின் மாண்புடை அரசியை நீ பாதுகாத்தருள்வாயாக.
(ஜலாலுத்தீன் அஸ்ஸியுதி : ஆல் முஸ்மறப் மின் அக்பர் அல் ஜவாரி, பெய்ருத், லண்டன்) பக் 23)
46
 
 

மாலைதீவு சுல்தானா கதீஜாவுக்கான பிரார்த்தனை வடிவம்
فيقول اللهم انشز أمتلك التي اخترنتا على علم على العالمين، وحجلتها رحمة لكافة المسلسلي، ألاوعي السلطانة خديجية بمستشف السلطان حبلال الدیب ابدح العلظاه صلاح البین
வெள்ளிக் கிழமையிலோ அல்லது வேறு எந்த நாளிலோ கதீப் அவருடைய பெயரை விழித்து பின்வருமாறு கூறுவார். “அல்லா அவருக்கு, உனது அடிமைக்கு, வெற்றியை அளிப்பாயாக. முழு உலகில் இருந்தும் நீ அறிந்தே சுல்தான் சலாஹுத்தினின் மகன் சுல்தான் ஜலானுத்தீனின் மகள் சுல்தானா கதீஜாவைத் தேர்ந்தெடுத்தாய். எல்லா முஸ்லிம்களுக்கும் இவரை ஒரு அருட்கொடையாக ஆக்கினாய்.
“றிஹ்லா" இபின் பதூதா, தார் பெய்ரூத், பெய்ரூத் 1985 பதிப்பு, பக் - 580.
47

Page 27
இதுவரை கூறப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் முஸ்லிம் பெண்களாகிய நாம் 2000 ஆண்டைத் தீவிரமாகக் கருத்தில் கொண்டு மிக உயர்ந்த குறிக்கோள்களை வகுத்துக் கொள்வோமாக. இந்த உலகம் நமக்கும் சொந்தமானது. நமது கடந்த காலத்தைப் போலவே நமது எதிர்காலமும் சமத்துவமானதாக அமைய வேண்டும். அதைக் கோருவதன் மூலம் நமது மத வரலாற்று வேர்களையே நாம் மீட்டெடுக்கின்றோம்.
நபி (ஸல்) அவர்களின் மனைவியார் உம்மு சல்மா (ரலி) அவர்கள் மத அடிப்படையிலேயே "இஸ்லாத்தில் நாம் பங்காளிகளா?” என்ற அடிப்படையான கேள்வியைக் கேட்டார். இஸ்லாத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம அந்தஸ்த்து உண்டு. அதாவது, நல உரிமைகளைப் பொறுத்தவரையிலும் அபிலாஷைகளைப் பொறுத்தவரையிலும் அவர்கள் சம பங்காளிகள் என்பதை இஸ்லாமும், தெய்வீக அருள்வாக்குகளும் (குர்ஆனும்) அவருக்கும், பல நூற்றாண்டுகளாக கோடிக்கணக்கான பெண்களுக்கும் LS 6m வலியுறுத்தியுள்ளன.
ஆகவே, உம்மு சல்மா (ரலி) அவர்களைப் போல் ஒரு பெண் தனது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவள் எதிர்நோக்கும் ஒரு சிறிய துன்புறுத்தலில் இருந்தும் விடுதலையும் சமத்துவமும் பெறுவதற்கான தனது உரிமையைக் கோருவது உயர்ந்த இஸ்லாமி நடவடிக்கையேயாகும். மனித உரிமைகளுக்கும் மனித நாகரீகத்துக்கும் இஸ்லாம் வழங்கிய மிகுந்த அர்த்தமுள்ள பங்களிப்புகளுள் பெண்களுக்கு அது வழங்கியுள்ள கெளரவமும் சுயமரியாதையும் அடங்கும்.
வரலாற்றைப் பொறுத்தவரை நமது மூதாதையரான அநேக பெண்கள் தமது அரசியல் கடப்பாடுகளைத் தீவிரமாகக் கருத்தில் கொண்டு அரசுத் தலைவிகளாக வரும் அளவுக்கு உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்டிருந்தனர். குர்ஆன் காட்டும் ஸபா நாட்டு அரசியின் சாதகமான முன் உதாரணம் நமக்கு வழிகாட்டுகின்றது. இது 21ஆம் நூற்றாண்டின் கோரிக்கைகளுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.
ஆகவே, அடுத்த தேர்தலுக்கு நாம் நம்மைத் தயார்படுத்துவோமாக.


Page 28


Page 29
நூல் ஆசிரிய
ஃபாதிமா மெர்னிஸ்ஸி (1941) மொறோக்கே ஊரான ஃபெஸ் மொறோக்கோ தேசிய வி மையமாகத் திகழ்ந்தது. றபாத் பல்கலைக்கழகத் பட்டம் பெற்ற இவர், அமெரிக்காவில் சமூகவி பட்டமும் பெற்றவர். 1973 முதல் 1980 வரை இவர் சமூகவியல் பேராசிரியராகப் பணிபுரிந்த பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத்தின் உறுப்பி
முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் நிலை பற்றி இவர், இத்துறை தொடர்பான பல நூல்கள், முஸ்லிம் சமூகத்தில் பெண் உரிமை, பெண்களின் ஆதரவாக இஸ்லாமிய மூல நூல்களுக்கு ப இஸ்லாமிய பெண்நிலை வாதச் சிந்தனையாளர்
Beyond the veil. Male-Female Dynamics in a
Islam: A Theological Inquiry ஆகியன இவரது
ISBN 955-625-006-9
Printed by: Unie Arts (Pvt) Ltd.
 
 

ா நாட்டவர். இவர் பிறந்த டுதலைப் போராட்டத்தின் தில் அரசறிவியல் துறையில் வியல் துறையில் கலாநிதிப் றபாத் பல்கலைக்கழகத்தில் ார். அதுமுதல் றபாத் னராக இருந்து வருகிறார்.
சிறப்பாக ஆராய்ந்து வரும் கட்டுரைகளின் ஆசிரியர். சமத்துவம் என்பவற்றுக்கு றுவிளக்கம் கொடுக்கும் களுள் முக்கியமானவர்.
Muslim Society, Women in
புகழ் பெற்ற நூல்கள்.
oloihilipoj — 13.