கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எண்ணிலாக்குணமுடையோர்

Page 1
| . || │ │ │
.
 


Page 2

எண்னிலாக்குணமுடையோர்
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
ஜீவநதி எவளியீடு
assoo 9as அல்வாய் வடமேற்கு
அல்வாய்

Page 3
அணிந்துரை
திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்கள் பிரபலமான ஓர் எழுத்தாளர். சிறுகதை, கட்டுரை, கவிதை, நாடகம் எனப் பல துறைகள் சார்ந்த இலக்கிய ஆளுமை உடைய ஒருவர். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுதிகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் என்பனவற்றை நூலுருவில் ஆக்கித் தந்துள்ளார். இவர் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதிவந்த தொடர் கட்டுரைகள் இரண்டு பின்னர் நூல்களாக வெளிவந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று “உனக்கொன்றுரைப்பேன்" என்பது. பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை ஆர்ப்பாட்டமின்றி அமைதியாகப் பேசும் அந்நூல், மற்றையது "அரை நிமிட நேரம்", ஆன்மீகம் சார்ந்தது.
“எண்ணிலாக் குணமுடையோர்" என்னும் இந்த நூல் யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்களின் வித்தியாசமான இன்னொரு படைப்பு. மனிதன் ஒருவனிடத்திலே பல வகையான குணவியல்புகள் உண்டு. ஒருவனுக்கு இயல்பாக, அடிப்படையாக இருப்பதாகக் கருதப்படும் குனமும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக மறுதலையாக மாறக்கூடும். இவ்வாறு ஒரு மனிதனுக்கே பல குணங்கள் இருக்குமேயாயின், பல மனிதர்களிடத்தில் எத்தனை குனங்கள் இருக்கும் எண்ணிலாக் குனங்கள் இருக்குமல்லவா! பல வகையான குணவியல்புகள் உள்ள மனிதர்களை, பொதுவான இயல்புகளில் இருந்து வேறுபட்ட குணவியல்புகள் உள்ளவர்களாகச் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை, மிக நுட்பமாக அவதானித்து எண்ணிலாக் குணமுடையோராக எழுத்துருவில் படைத்திருக்கின்றார்.
இந்த நூல் ஒரு கட்டுரைத் தொகுதி தான். ஆயினும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், சராசரி கட்டுரைகள் போன்றவையல்ல. இவைகள் உரைச்சித்திரங்கள் அல்லது விவரணச் சித்திரங்கள் எனலாம். உணர்ச்சிச் சித்திரமாகவும் சில உண்டு. உரைச் சித்திரங்கள் சிறுகதைகள் போன்ற தோற்றப்பாடு உடையவைகள் தான். பாத்திர வார்ப்பு உரையாடல், நகர்வு களம் என்பன எல்லாம் சிறுகதைகளின் பண்புகளை ஒரளவு கொண்டனவாகவே இருக்கும். மிகக் குறைவான பாத்திரங்களுடன், சிறுகதைகளில் இடம்பெறும் மையக்கரு இல்லாது பாத்திரச் சித்திரிப்பாக உரைச்சித்திரங்கள் அமைகின்றன.
உரைச்சித்திரம் அல்லது விவரணச் சித்திரங்களில் ஆசிரியரே பாத்திரங்களை நகர்த்திச் செல்வார். உணர்வுச் சித்திரங்களப் பாத்திரங்களே பேசும் நகரும்.
இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள உரைச்சித்திரங்களின் பொன்னுப்பிள்ளையாச்சி முதல் சந்தோஷ் வரை பிரதான பாத்திரங்கள் பல இடம்பெற்றுள்ளன. இப்பாத்திரங்கள் கிராமங்கள் தோறும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மக்கள் மத்தியில், உறவுகள் மத்தியில் பிரச்சினைகளை உருவாக்குகின்றவர்கள், கோள் கொண்டு திரியும் கொண்டோடிகள், வசை பாடும் வம்பர்கள், தற்புகழ் துக்கிகள், வீம்பே தொழிலாகக் கொண்டவர்கள், சொறியர்கள், தலைமைக்காக அலைகின்றவர்கள். எனப்பலவகையான குணமுடையவர்களை இந்த
iii

உரைச்சித்திரங்களில் தரிசிக்கலாம். அவர்களைக் கண்டு அனுதாபப்படவும், அவதானமாக இருக்கவும், படித்துச் சுவைக்கவும், உங்கள் கிராமங்களில் வாழும் இத்தகையவர்களுடன் ஒப்பிட்டு இரசிக்கவும் இந்த நூல் பயன்படும்.
இந்தத் தொகுப்பினில் இடம்பெற்றுள்ள“சிறைப்பட ஒருப்படேன்” என்னும் ஆக்கம் உரைச்சித்திரத்தினின்றும் சற்று மாறுபட்டதாகத் தோன்றுகின்றது. அதனை உணர்ச்சிச்சித்திரம் எனக் கூறலாம். சிற்பி என்னும் ஆக்கம் உரைச்சித்திரம், உணர்ச்சிச்சித்திரம் ஆகிய இரண்டினது பண்புகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. உரைச்சித்திரங்கள் சிலவற்றுக்கு சூட்டப் பெற்றுள்ள தலைப்பு சிறுகதைக்குரியவைகள் போல, அதே சமயம் சிறப்பாகவும் அமைந்துள்ளன
சிறுகதை எழுத்தாளர்கள் சிலரது சில சிறுகதைகள் உரைச்சித்திரங்களாக உருவாகி விடுவதுண்டு. யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்கள் இலக்கியம் பற்றிய அடிப்படைத் தெளிவுடன் எண்ணிலாக் குணமுடையோரை உரைச்சித்திரமாகத் தீட்டியுள்ளர். இவை போன்ற உரைச்சித்திரங்கள் வெளிவருவது மிகவும் குறைவு. வலிகாமத்து மண்ணின் மாந்தர்கள் என்னும் பொதுத் தலைப்பின் கீழ், தாயகம் சஞ்சிகையில் இவை போன்ற உரைச் சித்திரங்களை மாவை வரோதயன் எழுதி வந்திருக்கின்றார்.
இந்த நூலின் ஆசிரியர் சமூக அக்கறையும், அவதானிப்பும், தெளிந்த எளிமையான மொழிநடையும் தனித்துவமாக உள்ள ஒருவர். இவரது இந்தநூல்ஜீவநதி வெளியீடாக இன்று வெளிவருகின்றது. இந்தத் தொகுப்புநூலில் இடம்பெறும் கட்டுரைகள் ஜீவநதியில் தொடராக மாதந்தோறும் வெளிவந்திருக்கின்றது.
ஜீவநதி வெளியீடாக இதுவரை நான்கு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அவைகள் சிறுகதைகள், கவிதைகளின் தொகுப்புகள். ஒரு நூல் ஜீவநதியில் இதுவரை வெளிவந்திருக்கும் பலரது கவிதைகளை உள்ளடக்கியதான கவிதைத் தொகுப்பு.
திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்கள் ஜீவநதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த நூல் இதுவரை ஜீவநதி வெளியீடு செய்திருக்கும் துறைகள் சாராத கட்டுரைத் தொகுப்பு. அதுவும் உரைச்சித்திரமாக விளங்கும் சிறப்பினை உடையது. இந்நூல் வெளியீட்டின் மூலம் ஜீவநதி இன்னொரு அடி மேலும் முன்னோக்கி வைத்திருக்கின்றது. அதற்கான வாய்ப்பினை இந்நூலாசிரியர் ஜீவநதிக்கு வழங்கி இருக்கின்றார். அருந்தலாக இருக்கும் இலக்கிய வகை சார்ந்த இந்த உரைச்சித்திரத்தினை படைத்து வாசகர்களுக்கு வழங்கும் நூலாசிரியருக்கும். நூலாக்கஞ் செய்திருக்கும் ஜீவநதியின் பிரதம ஆசிரியர் க.பரணிதரனுக்கும் எனது பாராட்டுக்கள். படித்துப் பாருங்கள். பக்கத்தில் இருக்கும் எண்ணிலாக் த்ணமுடையோரை இனி வெகு அவதானமாகத் திரும்பப் பார்க்க வைக்கும் இந்த நூல் என நம்புகின்றேன்.
asapapaugeras? தெணியான கரணவாய் வடக்கு 12. O.2OTO வணிவெட்டித்துறை
iii

Page 4
செர்ணிலாக்குணமுடைMே
C) யோகேஸ்வரி சிவப்பிரகாசமீ முதற் பதிப்பு: 2010 ஆகஸ்ட் விலை: ரூ.100/= நூலாக்கக் குறிப்புகள்: பக்கங்கள் 10 + 44 115 புள்ளி எழுத்துகள் அட்டைப்படம் நன்றி (இணையம்)
வெளியீடு: ஜிவநதி கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய்.
elässFÜLugfüų: Sathapons
ISBN - No. : 978 - 955 - 52786 - 0 - 7

பதிப்புரை
ஜீவநதியின் பதிப்பு முயற்சியில் ஐந்தாவது நூல் இது. ஏற்கனவே இரு சிறுகதைத் தொகுப்புக்களையும் இரு கவிதை நூல்களையும் ஜீவநதி வெளியிட்டு வைத்துள்ளது. ஆனால் எண்ணிலாக்குணமுடையோர் என்னும் இந்நூல் உரைநடைச்சித்திரங்களின் தொகுப்பாகும்.
இந்நூலாசிரியர் திருமதியோகேஸ்வரி சிவப்பிரகாசம் எழுத்துலகில் நன்கு அறியப்பட்டவர். சிறுகதை, கவிதை, நாடகம், விமர்சனம் எனப் பல்துறைசார் எழுத்தனுபவம் உடைய இவர், நம்மிடையே உலாவரும் மனிதர்களை அவதானித்து, அவர்களின் சிறப்பான குணவியல்புகளைச் சொற்சித்திரமாகத் தீட்டியுள்ளார். சாதாரணர்கள் போல எமக்குத் தெரிந்தவர்களின் உணர்வுக் கோலங்களையும் நடத்தைகளையும் ஓவியமாகத் தீட்டி எமது கவனத்திற்குள்ளாக்கியுள்ளார். இந்நூலாசிரியரின் மன விரிவையும் அகத்தின் அழகையுமே இந்நூல் எடுத்துக்காட்டுகின்றது.
இந்நூலில் இடம்பெறும் கட்டுரைகள் 'ஜீவநதி சஞ்சிகையில் தொடராக வெளிவந்தவை. ஜீவநதியை நேசிக்கும் ஒருவரின் நூலை வெளியிடுவதில் நாம் பெரும் மகிழ்ச்சிஅடைகின்றோம். இவ்வாய்ப்பை எமக்குத்தந்த நூலாசிரியருக்கும், அணிந்துரை வழங்கிய எழுத்தாளர் திரு.தெணியான் அவர்களுக்கும், ஆக்க அறிமுகம் எழுதியுள்ள அருட்தந்தை இராசேந்திரம் ஸ்ரலின் அடிகளாருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கைைஅகம், க.பரணிதரனர் அன்வாய் வடமேற்கு, ஆசிரியர் ஜீவநதி 96öalmuű, 2O10-O3-22.

Page 5
ஆக்க அறிமுகம்
உளவியலில் ஆளுமை உளவியல் (Personality Psychology) என்பது தனியான துறையாக மலர்ந்துள்ளது. மனித ஆளுமை என்பது ஒருவரில் ஆழமாகப் பதிந்த (ingrained), அவருக்கேதனித்துவமான சிந்தனைப்போக்கு,நடத்தை, உணர்ச்சிவெளிப்பாடு என்பனவற்றின் ஒருங்கிணைந்த இயங்கியல் தொகுதியேயாகும் என்பது இத்துறையார் முன் வைக்கும் வரைவிலக்கணமாகும். அத்தகைய துறையில் கூறப்படும் பல உளவியல் கருத்துகளுக்கு வாழ்வியல்வடிவம் கொடுப்பதாக அமைகின்றதுயாழ்மண்ணின் பிரபல பெண் எழுத்தாளராகிய யோகேஸ்வரிசிவப்பிரகாசம் அவர்களது எண்ணிலாக் குணமுடையோர். அவற்றைப் படித்து எழுதியுள்ளார் என்ற அர்த்தத்தில் இதனை நான் குறிப்பிடவில்லை. இவரது பதின்நான்கு உரைச்சித்திரங்கள் அனைத்தையும் உளவியல், சமூகநலன் என்ற இருகண்ணோட்டங்களில் படித்தபொழுது ஏற்பட்ட மனப்பதிவுகளை முன்வைக்கின்றேன். இலக்கியவாதியாக உரைச்சித்திரத்தின் இலக்கணங்களின் அடிப்படையில் அமைந்துள்ளதாவென நோக்கவில்லை என்பதையும் முதலில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
ஒவ்வொரு உரைச்சித்திரங்களிலும் வெவ்வேறு ஆளுமைகளை உளவியல் பதங்கள் ஏதுமின்றி சாதாரன மனிதர்களின் வாழ்வைக்கொண்டு அழகாக உருவாக்கியிருக் கின்றார் எழுத்தாளர். எனக்கு தனிப்பட்டமுறையில் மிகவும் பிடித்த கதையாக யாவரும் கேளிர் அமைந்துள்ளது. மகிழ்ச்சியற்றிஎழுதும் உளவியலாளர்களான டான்பேக்கள், கமறோன் ஸ்ராவுத் (Dan Baker & Cameron Stauth. (2003). What Happy people know. 2003) sööůLJip, 5b வாழ்வில் ஏற்பட்டமகிழ்ச்சியான அனுபங்களை மனதில் மீட்டு இரசித்துவாழ்கின்றபோதுமனித வாழ்வு மகிழ்ச்சியானதாகும். அத்தகைய பண்புகொண்ட ஓர் ஆளுமையாக சாயீஸ்வரி விளங்குகின்றார். மேலும் "உன் சூழலைநீயே உருவாக்குகின்றாய்” என்பது முழுமைநோக்கு 26T6lku6oT6TTUTTGOT (Gestalt Psychologist) îJ6Liš (3u66ó (Frederick S. Perls) sööğ. அதாவது உன் சூழலை உருவாக்கும் சிற்பி நீதான். நீ வாழும் சூழல் மகிழ்ச்சியானதாக அமைகின்றதா அல்லதுதுக்கமானதாக அமைகின்றதாஎன்பதில்உன்பங்களிப்பு:உண்டுஎன்பது இவரது கருத்து. அந்தவகையில்சாயிஸ்வரிபாத்திரப்படைப்பு அபாரமானது. மகிழ்ச்சியாகவாழ்வ தற்கு பதவிகள், பணம் தேவையில்லை. மாறாக, அன்பு, நேர்மை என்பவைதான் முக்கியம். மற்றவர்களில் உண்மையான அன்புகொண்டு வாழ்கின்றபோது, கனிவாகப் பேசுகின்றபோது, சூழலில் உள்ளவர்களது வாழ்வும் மகிழ்ச்சி நிறைந்ததாகும். போட்டி, பொறாமை என்பன அண்பை, மகிழ்ச்சியை அழிக்கும் கிருமிகள். பட்டப்படிப்பேதும் அறியாத மரக்கறி விற்கும் சாயீஸ்வரி மகிழ்ச்சியான ஆளுமைகொண்டவர் மாத்திரமல்ல மகிழ்ச்சியான சூழலை உருவாக்குநர், மகிழ்ச்சிபரப்புநர்சாயிஸ்வரிகள் பல தமிழ் சமுதாயத்திற்குநிறையத் தேவை.
சாயிஸ் வரிக்கு மிக அணியித்ததான ஆளுமை கொண்ட நபராக சிற்பி உரைச்சித்திரத்தில் வரும் ஹரன் அமைகின்றார். ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்வுக்கான கட்டடக்கலைஞன் என்பதை பிரடெறிக் பேர்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார். தன் ஆற்றல், திறமைகளைப் பயன்படுத்திச் சொந்தக்காலில் நிற்க முயலும் ஓர் ஆளுமைதான் ஹரன். அரச வேலைக்காகக் காத்திருப்பதையோ, அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகளை நம்பி
jv

வாஸ்பிடித்து ஏமாற்றமடைவதையோ விடுத்து சுயதொழில் முயற்சியில் ஈடுபடக் கற்றுக்கொள்ளுங்கள் என்று வேலையற்றபட்டதாரிகளுக்குக் கூறுவதாக ஹரனின் புத்தாக்கச் சிந்தனைத்திறன், செயற்திட்டம், முயற்சி என்பன அமைகின்றன.
ஹரனின் ஆளுமைக்கு எதிரான ஆளுமையாக அமைகின்றார் "நிறைவில்லாக் குறைவேயில் வரும் இந்திராணி வாழ்வுச்சிலையைப் போட்டுஉடைக்கின்ற ஆளுமை இவரது ஆளுமை. பழஞ்சீலை கிழிஞ்சமாதிரிப்புறுபுறுத்து,"அண்டை அயலெல்லாம் கேட்கக்கூடியதாகக் கத்தித் தன் குடும்ப வாழ்வை நாசப்படுத்தும் எதிர்மயச் “சிற்பியாக விளங்குகின்றார். தன் ஏமாற்றம், வேதனை என்பனவற்றால் இவர் இவ்வாறு நடப்பதாகத் தோன்றினாலும் தன் நிலையைத் தானே மோசப்படுத்திய பொறுப்புஇவருக்கும் உண்டு என்பது உண்மை. மணிசர் கோபம் வந்தாப் பெலத்துத்தானே கதைப்பினம் என்று உறவுகளை அந்நியப்படுத்தும் தன் நடத்தைகளை நியாயப்படுத்துபவராக காட்டப்பட்டுள்ளர். அவ்வாறே உண்மையான அன்பின்றி, பொறுப்புணர்ச்சியின்றி,நன்னெறியின்றிவாழ்ந்துதன் வாழ்வை அழிக்கின்றதாக அமைகின்றது கணவனின் ஆளுமை. அந்தவகையில் இவரும் ஒரு எதிர்மயச்சிற்பிதான். அவர்களின் பிள்ளை வித்தியாசமாகவா இருப்பார்? தாய் கஷ்டப்பட்டு உழைத்துக் கொடுத்த பணத்தில் படித்துத் தன் வாழ்வை மேம்படுத்துவதற்குப் பதிலாகத் தாயையும் ஏன் தன்னையுமே ஏமாற்றித் தன் வாழ்வைப் பாழ்படுத்தும் இன்னொரு எதிர்மயச் சிற்பியாக விளங்குகின்றான் இவர்களின்மகன். முழுக்குடும்பமுமே தனித்துவமான “போட்டுடைக்கும்” ஆளுமை வகைகள்தான்!
உளவியலாளரான எறிக் எறிக்சன் (Eric Erikson) மனிதப் பருவங்களை எட்டாகப் பிரித்து நோக்கினார். வளர்ந்தோர்பருவத்தினை (வயது 25-65) ஆக்கநிலைஎதிர்தேக்கநிலை (Generativity Vs Stagnancy) என்று விளக்கினார். இதில் பிறருக்கு நன்மை செய்பவர்கள், தனக்கென வாழ்வோர்பற்றிக் கூறுகின்றார். மேலும் வாழ்வின் முதுமைப் பருவத்தைப்பற்றிப் (வயது 65க்குமேல்) பேசும்போதுநம்பிக்கை எதிர் அவநம்பிக்கை (Hope Vs Despair) என்ற அனுபவங்கள் பற்றிப் பேசுகின்றார். சமூகத்துக்கு நல்லது செய்பவர்கள், பிறர் வாழ்வுமேம்படப் பங்களிப்புச் செய்கின்றவர்கள், தம் வாழ்வின் இறுதிக்கட்டத்தை நியோடும்திருப்தியோடும் கழிப்பதோடுமறுவுலக வாழ்வுநலமானதாக அமையும்என்றநம்பிக்கையோடும் வாழ்கின்றனர். இவர்கள் மரணத்தைத்துணிச்சலோடுஎதிர்கொள்கின்றனர். ஒருவகையில் இவர்களது சொர்க்கம் வாழ்வின் இறுதி இரு கட்டங்களிலும் ஆரம்பமாகின்றது எனலாம். மாறாகச் சுயநலத்தோடு வாழ்வோர்,சமூகநலச்சிந்தனையின்றிவாழ்வோர். அதிருப்தியோடும்சலிப்போடும்தம் எஞ்சிய காலத்தைக் கழிப்பதோடு மரணத்தை எதிர்கொள்ள அஞ்சுகின்றனர். ஏனெனில் மறுஉலக வாழ்வு பற்றிய நம்பிக்கை இழந்தவர்களாக அவ்வாழ்வு பற்றிய அச்சங்கள் இவர்களை ஆட்கொள்ள ஆரம்பிக்கின்றது. அதாவது இறப்பதற்கு முன்பே இவர்களுக்கு நரகம் இவ்வுலகிலேயே ஆரம்பமாகிவிடுகின்றது.
யோகேஸ்வரி சிவப்பிரகாசத்தின் உரைச்சித்திரங்களில் ஆக்கநிலையில் வாழும் ஆளுமை கொண்டோராகப் பலர் தோன்றுகின்றனர். பிறரின் விமர்சனம் வேதனை தந்தாலும் தன் தள்ளாத வயோதியப் பருவத்திலும் பிறருக்கு உதவும் மனப்பாங்கைக் கைவிடாத கம்ைெறிபடினும் காய்த்து நிற்கும் உரைச்சித்திரத்தின் வரும் தருமலிங்கம், பிறரை மகிழ்ச்சிப்படுத்திப் பிறர் நலனில் உண்மையான அக்கறையும் அன்பும் கொண்ட சாயீஸ்வரி புற்தடக்கினும் புரண்டுவிடும் உரைச்சித்திரத்தில் தோன்றும் இலவச மருத்துவசேவை வழங்கி சமூகநலன் புரியும் சத்தியரமணன், பல்கலைக்கழக மருத்துவத்துறை மாணவன்
அரவிந்தன், பாடசாலை அதிபர் போன்றோரும், உவரைத் தெரியாதோ உரைச்சித்திரத்தில்
V

Page 6
வரும் சமூகத் தொண்டன் சுந்தரமூர்த்தி, அநியாயமாகப் பழிச்சொல்லுக்கு உள்ளக்கப்படுவோருக்காக வாதாடும் மனம்போல நிறம்மாறி யில் வரும் மிருனாளினி
விளங்குகின்றனர்.
ஆசிரியரது பல ஆக்கங்களில் தேக்கநிலையில் வாழ்ந்து அதாவது சுயநலத்தோடு வாழ்ந்து தனக்கும் பிறருக்கும் தீங்கிழைத்துநரகத்தை இவ்வுலகில் உருவாக்கும் ஆளுமை கொண்ட பலர் காட்சி தருகின்றனர். “ஊரவர் செய்திமட்டும்” உரைச்சித்திரத்தில் பிறர் வாழ்வுக்குக் கொள்ளி வைக்கும் பொன்னாச்சிப்பிள்ளை, "உதவிசெய்யும் பாவனையின்" அட்டைபோல் பிறரை உறிஞ்சிக் குடிக்கும் ஆளுமை கொண்ட லீலாதேவி(சின்னத்தங்கச்சி), தாழ்வுச்சிக்கலால், பொறாமையால் சமூகநலப்பணியாளனுக்கு கரிபூசமுயனும் முருகமூர்த்தி, விபரிக்கப்படுகின்றனர். மேலும், மனம்போல நிறம்மாறியில் பிறரைப் பற்றி நல்லது பேசத் தெரியாது ஊத்தை கக்கும் சத்தியட்ைசுமி, தன் பதவி மோகத்தால் பிறர்நேைனாடு சேவையாற்றும் சுந்தரலிங்கத்தின் பதவியைத் தனதாக்கமுயலும் சண்முகநாதன், தான் பட்ட துன்பம் பிறரும்படவேண்டுமென்றவக்கிர உணர்வோடு பிறஉயிர்களைத் துன்புறுத்திஇன்பம் காணும் உளநோய் கொண்ட உள்ளே ஒரு வின் இராகவன். ஏற்ற பொறுப்பைச் செவ்வனே செய்து முடிக்காது பொறுப்பைத் தட்டிக்கழித்துப் பிறரைக் குறைகூறும் புல் தடக்கினும் புரண்டுவிடும் உரைச்சித்தரத்தில் கருணாகரன் ஆகியோர்தேக்கநிலையில் வாழும் ஆளுமை வகையினர். இவர்களால் பிறருக்குச் சந்தோசத்தைக் கொடுக்க முடிவதில்லை மட்டுமின்றிப் பிறருக்கு முட்களாக வாழ்வதே இவர்களின் நடத்தைக் கோலம். உண்மையில் இவர்கள் இவ்வுலகின் நரக உருவாக்குநர்கள்
இவ் எழுத்தாளரது உரைச்சித்திரங்களில் வரும் ஆளுமைகளை இன்னொரு கண்ணோட்டத்தினும் நோக்கமுடியும். உளவியலாளர் ஆபிரகாம் மாஸ்லோ (Abraham LLLLLLCC MLTT TLgTLTTLLLL TTTTTT LLLCMLCLL LLLCLLLLLLLrLS TTTMLMLLLLL ஆராய்ந்தபோது அவர்களில்பலகுனாதிசயங்களை அடையாளம்கண்டார். அதில்முக்கியமான ஒன்று இத்தகையோர் பிறர்நலப்பணியில் ஈடுபடுதலாகும். அந்தவகையில் தருமலிங்கம் சுயமேம்பாடடைந்தவர்தான். பிறருக்கு உதவுவது இவரின் பிறப்போடு ஒட்டிய பண்பு. பெரும் பானும் இவரது பெற்றோர் அத்தகையோராக இருப்பதற்கான சாத்தியம் அதிகம். நாய் ஊளையிடு கின்றதே என்பதற்காக நிலா ஒளி கொடுப்பதை நிறுத்துவதில்லை, கல்லெறி விழுகின்றதே என்பதற்காக மாகனிகொடுக்காதுவிடுவதுமில்லை, இச்சித்திரத்தில் இவருக்குக்கொடுக்கப்பட்ட பெயரும் ஆளுமைக்குப்பொருத்தமானதாக அமைந்ததுநல்ல அம்சம். பிறருக்குநன்மை செய்யப்
தொடரத் தட்டியெழுப்புவதாக அமைகின்றது தர்மலிங்கத்தின் ஆளுமை, இலவச மருத்துவச் சேவை வழங்கி சமூகநலன் புரியும் சத்தியரமணன், பல்கலைக்கழக மருத்துவத்துறை மாணவன் அரவிந்தன். பாடசாலை அதிபர் போன்றோரும், சமூகத் தொண்டன் கந்தரமூர்த்தி, அநியாயமாகப் பழிச்சொல்லுக்கு உள்ளக்கப்படும் தனிநபர்களுக்காக வாதாடும் மிருனாளினி ஆகியோரும் சுயமேம்பாடடைந்தவர்களே. இக்கண்ணோட்டத்தில் நீ சுயமேம்பாடடைய வேண்டுமாயின் பிறர்நலச் சேவையில் ஈடுபடுஎன்பதைசொல்லாமல் சொல்லிநிற்கின்றது.
மனிதாய உளவியலாளரான விக்ரர் பிராங்கிளின் (Wiktor Frank) கருத்துப்படி மனிதனுக்கு சுதந்திரம் என்பது முக்கியமானது. சுதந்திரம் மறுக்கப்படும் சூழலிலும் அதுபற்றிய ஒருநிலைப்பாட்டை எடுக்கின்ற சுதந்திரம் மனிதனுக்கு உண்டு. இதை அவனிடமிருந்து வேறு
《诊
y'

எவரும் எடுத்துவிடமுடியாது. சிறைப்பட ஒருப்படேன் உரைச்சித்திரத்திலுள்ள சிங்கத்தின் சிந்தனை, உணர்வுகளைப் படித்தபோது அவரது சிந்தனைகள் நினைவில் எழுந்தன. உடலியல் தேவையைவிட சுதந்திரத் தேவை மேலானது என்பதைச் சிங்கத்தின் உணர்வுகள், தேவைகளைச் சித்திரிக்கும்போது சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளர் ஆசிரியர். பிறரால் தாம் அடிமைப்படுத்தப்படுவதாக, தம் சுதந்திரம் மதிக்கப்படவில்லையென உணரும் தனிநபர் எவருக்கும் அவை பற்றிய புதிய அகநிலைப்பாடு (inner Stand) எடுக்கவேண்டிய அவசியத்தைச் இது சுட்டிநிற்கின்றது. அவ்வாறே அரசியல்ரீதியாக அடிமைப்படுத்தப்பட்டுள்ளதாக உணரும் தமிழருக்குச் சுதந்திரம் பற்றிய ஒரு அகநிலைப்பாடு எடுப்பதன் அவசியத்தை அழுத்தி நிற்கின்றது. காட்சிப்பொருளாக நடாத்தப்படுவதைச் சுதந்திரம் விரும்பும் எம்மனிதரும் விரும்புவதில்லை. முள்வேலி முகாம்களுள் வாழ்வோர். கப்பலிலும் படகுகளிலும் புகலிடம் தேடுவோர். பெற்றோரை இழந்து அனாதைகளாகத்தவிப்போர், அங்கமிழந்துஆதாரமிழந்ததாக உணர்வோர், ஏன் ஏதுமற்ற ஏழைகள் கூட தாம் பிறரது சுயநலங்களுக்காகக் காட்சிப்பொருளாக்கப்படுவதை விரும்புவதில்லை. பொன்கூட்டில் வாழும் கிளிகளாகத்தானே வெளிநாட்டில் பல வசதிகளோடும் அடையாளம் இழந்து வாழும் நம் தமிழ் சகோதரர்களின் வாழ்வு சொந்தப் பூமியிலிருந்து அடித்துத் துரத்தப்பட்ட மக்கள் தம் சொந்த மண்ணுக்கு திரும்புவதற்கான சுதந்திர ஏக்கத்தின் பிரதிபலிப்பாகவும் சிங்கம் அமைகின்றது. நல்ல ஒரு குறியீட்டு உரைநடையாக உருவாக்கியுள்ளார் ஆசிரியர்.
அல்பிறெட் ஆட்லரின் (Alfred Adler) கருத்துப்படி மனிதனின் ஆளுமையில் செல்வாக்குச்செலுத்தும் முக்கிய அம்சமாக விளங்குபவைதாழ்வுணர்ச்சிரிeelingefiferiority) elebeo e lustensourfróaf (feeling of superiority). Betoshi espeod (Sib slacored DuG86D தாழ்வுணர்ச்சியின் இரு வெவ்வேறு வடிவங்களே. இவற்றைக் கொண்ட சிலர் அதனை ஈடுசெய்வதற்காகச் (to compensate)சாதனை முயற்சிகளில் இறங்கிவாழ்வில் உயர்கின்றனர். இன்னும் சிலர் அதன் அழுத்தத்திற்குமசிந்துதம் வாழ்வை உயர்த்திக்கொள்ளத்தவறுகின்றனர். முருகமூர்த்தியின் ஆளுமை அத்தகையதே. தன் பரம்பரைபற்றிய இவரது புழுகு தாழ்வுணர்ச்சியின் வெளிப்பாடே. இத்தகையோர் தம்மைவிட உயர்ந்தவர்கள்பற்றிக்
உயர முயற்சிக்காததற்கு ஒவ்வொரு சாக்குப் போக்கும் வைத்துக்கொள்கின்றனர். பிரடெறிக் பேர்ள்சின் கருத்துப்படி மனிதன் தன் வாழ்வுக்குத் தான் பொறுப்பேற்காதபோது பல்வேறு விடயங்களைக் குற்றம்சாட்டுகின்றனர். பெற்றோரின் பிள்ளை வளர்ப்பு முறையின் தவறை, சமூகநிலைகளைக்குற்றம்சாட்டுவதில்ஈடுபட்டு வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பாழடிக்கின்றனர். முருகமூர்த்தி தான் நன்றாகத் படிக்காததற்குத் தன் அப்பாவைக் குறைகூறுதல் இப்போக்கே. நல்லவனைப்போல் உயர முயற்சி அவர்களை இழுத்து விழுத்த முயலாதே என்ற செய்தி இச்சித்திரிப்பில் மறைமுகமாக உள்ளது.
மேலும்,அல்பிறெட்ஆட்லரின் இன்னொரு கருத்துப்படி ஆள்வதற்கானதாகம் (willo power) என்பது மனித ஆளுமையை இயக்கும் முக்கிய ஊக்கிகளில் ஒன்று. இதனை மிகையாகக்கொண்ட ஆளுமையினர் தனக்கும், பிறருக்கும், சமூகத்துக்கும் கேடுவிளைவிக்கும் சுயநல ஆளுமையாக (Narcistic personality) அமைந்துவிடுகின்றனர். அத்தகைய ஒரு ஆளுமையைத் தான் தன் வாலைத் தானே உயர்த்தி கதையில் வரும் சண்முகநாதனில் காணுகின்றோம். பதவிமோகம்பிடித்தவர்கள் நன்னெறிகொண்டிருப்பதில்லை, சமூகநலனில்
எணர்ணிாைக்குணமுடையோர் vii

Page 7
அக்கறை கொண்டிருப்பதில்லை. மற்றவரை விழுத்தியாவது தான் கதிரையில் ஏறிவிடத் துடிப்பவர்கள். சமூகத்துக்குத் தமது “சேவை(?)” முக்கியம் தேவைப்படுவதாகக் காட்டிக்கொள்ளவதில் மும்முரமானவர்கள். நாமறிந்த பல அரசியல்வாதிகள் பாணியில்தான் சண்முகநாதனும். ஏன் கல்விக்கூடங்களிலும், சமயநிறுவனங்களிலும் இத்தகைய ஆளுமை கொண்டோரைக் காண்பதில்லையா? மக்களுக்குத் திட்டவட்டமான செயற்திட்டங்களின் அடிப்படையில் சேவையாற்றுவோரே கதிரைக்குத்தகுதியானவர் என்பதை சுந்தரலிங்கத்தின் ஆளுமை வெளிப்படுத்துகின்றது. அத்தகைய நல்ல மனிதர்களுக்கு ஆதரவளிப்பவர்களைப் பிரதிநிதிப்படுத்துவதாக அமைகின்றார் சிவகுமாரன். நமது இனத்துக்கு எத்தனை சுந்தரலிங்கங்கள், சிவகுமாரன்கள் தேவைப்படுகின்றது! தமிழ் அரச பணியாளர்கள், கல்விமான்கள் எல்லோரும் சுந்தரலிங்கங்களானால்தமிழ் சமுதாயத்தின் உயர்ச்சிஇமய உச்சி தெற்கின் குறைகளை நொண்டிச் சாட்டாக வைத்துக்கொண்டு சொந்த மக்களுக்குச் சேவை செய்ய முன்வராது சுயநலத்தோடும், சுளையாகச் சுருட்டியும் வாழ்வோரைப் பார்த்து "என்னைப்போல வாழ்ந்து தமிழ் சமுதாயத்தை மேம்படுத்துங்கள்" என்று கூறுவதாக அமைகின்றது பதவிதேடாச் சுந்தரலிங்கத்தின் ஆளுமை. குருட்டு ஆதரவாளர்களைப் பார்த்து ‘என்னைப்போல தெளிந்த புத்தியோடு உணர்மையான சேவையாளர்களுக்கு ஆதரவாளராயிருக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகின்றது சிவகுமாரனின் ஆளுமை. தமிழர் பலர் தேர்தல் காலத்தில் இச்சித்திரத்தை ஆர்வத்தோடு படித்து மிகஆழமாகச் சிந்தித்து விட்டு வாக்குச் சாவடிக்குச் செல்வது தமிழ் அரசியல்வாதிகளின் சீர்கெட்டபோக்கின் திசையை நிச்சயம் மாற்றும்.
துன்புறுத்தி இன்பம்காணும் ஹரனுக்கு எதிரான ஆளுமையாக வருகின்றார் உயிரோடு உறவாடி”யில் வரும் ரஞ்சினி கருணை என்பது மனிதர்கள்மட்டில் மாத்திரமல்ல அனைத்துஉயிர்களிடத்திலும் பரவிப்பாயவேண்டும் என்ற உயர்ந்தஉண்மையைரஞ்சினியின் ஆளுமை வெளிப்படுத்தி நிற்கின்றது. மனித உயிர்களை அஞ்சாது கொல்லுவதில் ஈடுபடுவோருக்கு நல்ல செய்தி சொல்கிறது ரஞ்சினியின் ஆளுமை. யுத்தத்தில் இறந்தவர்கள், இன்றும் இடம்பெயர்ந்து வாழ்வோர் ஆகியோரது ஆடுமாடுகளைத்திருட்டுத்தனமாகக்கொன்று விற்றுப்பனம் சம்பாதிக்கும் இரக்கமற்ற தமிழ் நபர்களுக்கும், அரசியல் ஆதரவோடு தெற்குக்கு மாடுகளைக் கடத்திச் செல்வோருக்கும் மிருகங்கள் வியாபாரப் பொருட்களல்ல, அவை அன்புக்குரியவை என்ற உயர்கருத்தை ரஞ்சினிசுட்டிக்காட்டுகின்றார்.
உளவியலாளர் பலரது கருத்துப்படி ஒருவர் பிறரால் எவ்வாறு நடாத்தப்படுகின்றாரோ அவ்வாறே பிறரையும் நடாத்துவார். அன்பின்றிப் பாசமின்றிநடாத்தப்பட்டு வேதனைகளுக்கு உள்ளாகி கடினமாகிப்போனதாலே, தான் நடாத்தப்பட்டவாறே பிறருக்கும் செய்ய விளையும் ஆளுமைதான் ரவி, சமூகவிரோத ஆளுமை (anti-socialpersonality) கொண்டோருக்கான குணாம்சங்களை வெளிப்படுத்துகின்றதுரவிபாத்திரம். பிறரைத் துன்புறுத்திஇன்பம் காணும் போக்கு பாலியல் பிறழ்வில் (sexual sadism) மட்டுமல்ல ஏனைய நடத்தைகளிலும் வெளிப்படுகின்றது என்பது உளவியலாளரான சிக்மண்ட் பிராய்ட்டின் (Sigmund Freud) கருத்து. இதற்கான காரணங்களை நோக்கின், இங்கிலாந்து உளவியலாளரான ஜோண்போல்பியும் (John Bowlby) அவர்வழி சிந்தித்த உளவியலாளர்களான ஹொறோவிற்ஸ் (Horowitz), மேரி எயின்ஸ்வேர்த் (Mary Ainsworth) போன்றோரதும் ஆய்வு முடிவுகளின்படி குழந்தைப் பருவத்தில் பராமரிப்பாளரால் வெறுத்து ஒதுக்கப்பட்டு அட்ைசியப்படுத்தப்பட்டுப்
எண்ணிாைக்குணமுடையோர் viii

பராமரிக்கப்படாதவர்களே சமூகவிரோத ஆளுமையாக உருவாகுகின்றனர். குடும்பம் சீர்குலைந்ததாக அமைகின்றபோதும் இத்தகைய ஆளுமை உருவாகுவதாக உளநலமின்மை உளவியலாளர் கூறுகின்றனர். பிள்ளைகள் அன்போடு, அக்கறையோடு பராமரிக்கப்படவேண்டும் என்ற ஆழமான உளவியல் உண்மையைச் சுட்டிக்காட்டி நிற்கின்றது இந்த உரைச்சித்திரம். பாராமரிப்பாளர்களாக விளங்குவோர் தாம் இழைக்கும் தவறுகள் எவ்வாறு உளநலமின்மையாளர்களை உருவாக்குகின்றது என்பதைப் புரிந்துநடக்க இது நல்ல பாடம் கற்பிக்கின்றது. பெற்றோர் மாத்திரமல்ல சிறுவர் இல்லங்களின் பொறுப்பாளர்கள் கருத்தில்கொள்ளவேண்டிய சித்திரிப்பு இது. சிறுவயதில் இந்நலமின்மைக்கான போக்கை அடையாளம் காணும்போது (நாய்க்குக்கல்லால் எறிந்து கால் முறிப்பது) அதை அற்ப விடயமாக எடுக்காது அவர்களை நன்னெறிப்படுத்துவதன் அவசியத்தையும் உரைச் சித்திரம் உணர்த்தி நிற்கின்றது. இத்தகைய உளநலமின்மையான ஆளுமை கொண்டவர்கள்தானே பகிடிவதை என்ற பொருத்தமற்ற பெயரில் குரூரமான முறைகளைப் பயன்படுத்தி புதிய மாணவர்களை வரவேற்கின்றனர். சில சந்தர்ப்பத்தில் கொலையும் செய்துவிடுகின்றனர். பிறரைத் துன்புறுத்தி இன்பம் காண்போர் அனைவரையும் பிரதிநிதிப்படுத்துவதாக ரவியின் ஆளுமை
ஆசிரியரின் ஆக்கங்கள் அனைத்துமே குறியீடு, பிரதிநிதித்துவத்தன்மை கொண்டவை என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும். ஒட்டுமொத்தமாக நோக்கும்போது இங்கு குறிப்பிடப்படும் இவரது ஆக்கங்கள் கொண்டுள்ள ஆளுமைகளை, சமூகநல ஆளுமை, உதவும் ஆளுமை, அன்பு பரப்பும் ஆளுமை, மகிழ்ச்சிபரப்பும் ஆளுமை, சுதந்திரம்நாடும் ஆளுமை என்ற நேர்மய ஆளுமைகளாகவும் சுயநல ஆளுமை, துன்பம் பரப்பும் ஆளுமை, பதவிமோக ஆளுமை, சமூகவிரோத ஆளுமை எனும் எதிர்மய ஆளுமைகளாகவும் வகைப்படுத்தி நோக்கலாம்.
மனிதர்கள், எண்ணிாைக்குணமுடையோர் எனும் வாழ்வியல் யதார்த்தத்தைத்தன் உரைச்சித்திரங்கள் மூலம் உயிர்கொடுத்து உருவாக்குவதில் யோகேஸ்வரி சிவப்பிரகாசம் வெற்றிகண்டுள்ளார்.வாசகர்கள்தம் ஆளுமையிலுள்ளநல்ல அம்சங்களை அடையாளம்கண்டு அவற்றை வளர்க்கவும், தனக்கும் பிறருக்கும் பாதிப்பு விளைவிக்கின்ற ஆளுமை அம்சங்களை நிறுத்தவும் அல்லது குறைக்கவும் இவரது உரைச்சித்திரங்களின் தொகுதிமுக்கிய பங்களிப்புச் செய்யும் என்று உறுதியாக நம்புகின்றேன். ஆசிரியரது புதிய கண்ணோட்டம், முயற்சிக்கு, கூறல் எளிமைக்கு, எண் மனமுவந்த பாராட்டுகள்.
நவிலாயனர் நிலையம் அருள்திரு இராசேந்தரர் எர்ரனினர் வளாக விதி (Msc.- Guidance & Counselling, Manila) திருநெல்வேனி 2OnO3-2OO
67awiwfikuraig60p6.adLGuit ίχ

Page 8
என்னுரை
நாம் நாளும் பொழுதும் சந்திக்கும் மனிதர்களைச் சற்றுக் கூர்ந்து கவனிக்கும்போது, அவர்களது வெவ்வேறுபட்ட குணங்கள் இரசனைக்குரியவையாகவும் சில சமயம் ஆய்வுக்குரியவையாகவும் இருப்பதைக் காணலாம்.
ஒருவரிடம் ஒரு குணந்தான் இருக்கின்றதென நான் கூற வரவில்லை. அவரிடம் உள்ள குணங்களில் ஒன்றோ இரண்டோ சற்றுத் தூக்கலாகத் தோற்றங்காட்டுவதை நாம் அவதானிக்கக்கூடியதாகவிருக்கும். அது அவரை அடையாளங்காட்டுவதாகவும். பலராலும் சுட்டிப் பேசப்படுவதாகவும் பெரும்பாலும் அமைந்துவிடுவதும் வழமை. அவரது முகத்துக்கெதிரிலும், அவரில்லாதபோதும் அவரைக் குறிக்கும் பெயராக அக்குனத்தை மற்றையோர் உபயோகிப்பதுமுண்டு. நம்மிடங்கூட இப்படியொரு குணமிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் அக்குணத்தை நாம் கண்டுகொண்டிருக்கமாட்டோம். மற்றவர்களோ அதுவே நாம்; நாமே அது என்ற அளவிற்கு அதனைத் தம் கவனிப்பில் கொண்டிருப்பார்கள்.
நான் சந்தித்த சிலரது குணநலன்களை எண் சிறுகதைகளிலே கதாபாத்திரங் களக்கியுள்ளேனென்றாலும் தனித்தனியாக உலவவிட்டுப் பார்த்தாலென்ன? என்றோர் எண்ணந்தோன்றியது. ஜீவநதி அதற்குக் களம் அமைத்துத் தந்தது.
'எண்ணிலாக் குணமுடையோர்’ என்ற தலைப்பின் நான் ஜீவநதியில் எழுதியவை, இன்று நூலுருவில் ஜீவநதி வெளியீடாக வெளிவருகிறது.
நான் முன்பு எழுதிப் பாதுகாத்து வைத்திருந்தவை போரினால் அழிந்தபோது நூலுருவில் அவற்றை வெளியிடவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்படி வெளியிட்டவை வீட்டினும் புத்தகசாலைகளிலும் அப்படியே இருக்கும்போது, ஏன் வெளியிட்டோம்?" என்றாகிவிட இப்போதைக்கு நூல் வெளியிடுவதில்லை' என்றொரு முடிவிற்கு வந்திருந்தேன். அதனைத் திரு. பரணிதரன் மாற்றியமைத்துவிட்டார்.
இத்தொகுப்பை வெளியிடும் முழுப் பொறுப்பையும் அவரே ஏற்றுக்கொண்டு மளமளவென ஆகவேண்டியவற்றை அவர் செய்து முடித்ததைப் பார்த்தபோது தான் "ஜீவநதி வெற்றிநடை போடும் இரகசியம் எனக்குத் தெளிவாகியது. சஞ்சிகையாக முளைவிட்ட ஜீவநதி, இன்று பல நூல்களையும் வெளியிடுமளவிற்கு ஒரு குறுகிய காலத்தில் கிளைவிட்டு வளர்ந்திருக்கிறதல்லவா?
இந்நூலுக்கு ஆக்க அறிமுகம் எழுதிய அருள்தந்தை இராசேந்திரம் ஸ்ரலின் அவர்களுக்கும் அணிந்துரை அளித்த மூத்த எழுத்தாளர் திரு. தெணியான் அவர்களுக்கும் நூலை வெளியிடும் ஜீவநதிவெளியீட்டகத்தினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மயூரம், Guitr(asanjapf, alsitti flirasnay Lij கோப்பாய் தெற்கு, 2Of O - O - fes (35մլյաnu1.
光
எண்ணிலாக்குணமுடையோர்

கெர்னிலாக் இனமுடைெேM - 01
ஊரவர் செய்திகள் மட்டும்
படலை திறக்கும் சத்தங் கேட்கிறது. யார் வந்தாலும் இந்தச் சத்தங் கேட்கும். ஆனால் பொன்னுப்பிள்ளையாச்சி வந்தால் கூடவே அவளுடைய குரலுங்கேட்கும். அங்கிருந்தேஏதோவொரு விடயத்தைப் பற்றிச்சொல்லிக்கொண்டுதான் வருவாள்.
"ஊர்க்கோழி முட்டையிருக்குதே மரகதவல்லி? உவள் சுலோசனாவின்ரை பெட்டையெல்லே பெரிசாயிட்டாள்"
அவள் கூறியது அயலிலுள்ள சகல வீடுகளுக்கும் கேட்டிருக்கும்.
தன்நிறங்கள் போய்விட்டதனால் பொலிவையிழந்தசேலையொன்றை எவ்வித அக்கறையுமின்றி உடுத்திருந்தாள். வயது எழுபதைத்தாண்டியிருக்குமெனத்தோற்றம் கூறிக்கொண்டிருந்தது. நரை மயிரிடையே ஆங்காக்கே கருமயிர் கலந்துகிடந்தது. பார்வை இங்குமங்கும் சுற்றித் துழாவிக்கொண்டிருந்தது. விழாது மிகுந்திருந்த முன்வரிசைப் பற்கள் அவள் சிரிக்கும் போதும் பேசும் போதும் எட்டிப்பார்த்தன. வாய் சிரித்தாலும் மலராத அவளுடைய முகம் மனதுள் மலர்ச்சியற்றவளோ என எண்ணவைத்தது.
ஆச்சி தனது வீட்டினுள் புகுவது போனற ஓர் உரிமையுடன் உள்ளே வந்து சமையலறைக்கு முன்னிருந்த வாராந்தாவில் இருந்து கால்களை நீட்டிக் கொண்பாள். தன் கையாலேயே கால்களை அழுத்தித் தேய்த்தாள். W
"சுலோசனாவின்ரை பெட்டை நேற்றுக் காலமை பெரிய பிள்ளையாயிட்டாள். பள்ளிக்கூடம் போன பிறகுதான் தெரியுமாம். சுலோசனாகச்சேரிக்கு வேலைக்குப் போற அவசரத்திலை பெட்டையை எங்கை கவனிச்சிருக்கப் போறாள்?"
மரகதவல்லி எதாவது கூறுவாளென்ற எதிர்பார்ப்போடு பேச்சை நிறுத்தியவளுக்கு சற்று ஏமாற்றந்தான். anfrash viabduoup6dLGuit I

Page 9
"சாமத்தியச் சடங்கு பெரிசாய்ச் செய்வினம் போலை கிடக்கு. மூத்தபிள்ளை யெல்லே."இம்முறையும் பதிலெதுவும் வராதுபோகவே"உங்களுக்குவிசயந்தெரியுமே?” என்று மீண்டும் தொடங்கியபோது குரல் கிசுகிசுத்தது.
"உவன் கந்தசாமியின்ரை பெடியன் ஜேர்மனியிலை வெள்ளைக்காறப் பெட்டை யொண்டைக் கட்டிப்போட்டானாம். இவை விசயத்தை வெளிவிடேல்லை. அமத்திப் போட்டினம். பிள்ளையொண்டுமிருக்காம், அச்சொட்டாய் தாயைப் போலை தானாம்”
மரகதவல்லிஎதுவுமே பேசவில்லை.
"கொம்மா போடுற வெத்திலைபாக்கிலை கொஞ்சம் தா பிள்ளை. எனக்கு ஒரு நாளைக்கு இரண்டு தரமெண்டாலும் வெத்திலை, பாக்குப் போடோனும்."
மரகதவல்லிஎடுத்துவந்தவெற்றிலைத்தட்டைவாங்கிவெற்றிலைபாக்குச்சீவல், சுண்ணாம்பு என ஒவ்வொன்றாக எடுக்கும் போது பேச்சுத் தொடர்கிறது.
"கொம்மா போயிலை போடுறேல்லை, என்ன? அ. என்ரை வெத்திலைப் பையிக்கை போயிலை கிடக்கு. எனக்கு எப்பன் போயிலையும் போபாட்பாபத்தியப்படாது. இரண்டுவெத்திலை எடுக்கிறன் பிள்ளை"
வெற்றிலைத் தட்டில் ஒரு வெற்றிலையை விட்டுவிட்டு, மிகுதி வெற்றிலைகளையும் கணிசமான பாக்குச் சீவலையும் எடுத்துத் தனது வெற்றிலை பாக்குப்பைக்குள் பொன்னுப்பிள்ளை ஆச்சிவைக்கிறாள்.
“என்ன பிள்ளை பேச்சுப்பறைச்சில்லாமலிருக்கிறாய். வீட்டிலை ஏதும் ിഴിഞ്ഞുങ്ങ8ധ?"
"கதைச்சுக் கொண்டிருந்தால் சமையல் முடியாது. பிள்ளையஸ் பள்ளிக்கூடத்தாலை வரப்போகினம்" மரகதவல்லியின் பதில்,
“ஓமோம். பள்ளிக்கூடம் விடுகிற நேரமாகுது. உங்கை பார் உவன் சதீசன் சைக்கிளிலை போறபோக்கை. பள்ளிக்கூடம் விட அவள்சோபிதா வருவள். இப்ப கொஞ்ச நாளப் உவை இரண்டுபேரும் உந்தக் குச்சொழுங்கைக்க நிண்டு கதை. உது பிரச்சினையாகப் போகுது. நான் எங்கையிருந்து சொன்னனானெண்டு பார். அவள் தமக்கைக்காறியைப் பற்றியும் கன கதையள். அதாலைதானே கலியாணம் ஒண்டும்
அண்டைக்கும் ஒருபகுதிஎன்னட்டைப்பெட்டையைப் பற்றிவிசாரிச்சவை நல்ல பெட்டைவேலைவெட்டிநல்லாய்ச்செய்வளெண்டுசொன்னனான்.
அதுசரி உங்கடை பக்கத்துவிட்டு குஞ்சுவும் புருசன்காரனும் அடிக்கடி கதைவழிப்படுகிறமாதிரிக்கிடக்கு. சத்தஞ்சலார் உங்களுக்குக் கேக்குந்தானே. எண்ணிாைக்குணமுடையோர் 2

என்ன பிள்ளை அடுப்படி வேலை முடியேல்லையே? குஞ்சு ஏதும் சொன்னவளே? என்ன பிரச்சினையாம்? உங்களுக்குச்சொல்லியிருப்பள். மச்சாள்காறியின்ரைசம்மந்தப் பேச்சாலை ஏதோ பிடுங்குப்பாடாம்"
மரகதவல்லிவாசலில் வந்துநின்று ஆச்சியுடன் பேசத்தொடங்கினாள்.
"சோபிதாவின்ரைஅக்காவைப்பற்றிக் கேட்டதுசுன்னாகத்திலாக்களோ?
"ஒமோம் உங்களுக்கும் தெரிஞ்சிருக்குப்போலை”
"நீங்கள் வேறையொண்டும் சொல்லேல்லையோ?*
“என்னை நம்பியெல்லே கேட்டவை. எல்லாக்கதையளையும் மறைக்கக் கூடாதுதானே. ஊரிலை தெரியாதே பெடிச்சியைப் பற்றி அப்பிடியிப்பிடிக் கதைப்பினம். ஆனால் பெட்டைநல்ல பெட்டையெண்டுசொன்னனான்."
"நீங்களேதோ சொல்லித்தான் அது குழம்பினதெண்டு உங்கின கதை"
"கடவுளே, இதென்ன கதை சொல்லுறாய் பிள்ளை? நானொண்டும் சொல்லேல்லையணை. உந்த வயிரவரறிய அவளைப் பற்றி நல்லாய்த்தான் சொன்னனான். எந்தக் கோயிலிலையும் கற்பூரமணைச்சுச்சத்தியம் பண்ணுவன்நான் அவளின்ரை கலியானத்தைக் குழப்பேல்லை.”
“என்னவோ கதைக்கினமணை, அதைவிடுநேற்றிரவுஉங்கடைவீட்டுப்பக்கம் சத்தங்கேட்டுது. மகளும் மருமகனும் ஏதோ சண்டையோ?
"அப்பிடியொண்டுமில்லை. வேறையெங்கையும் கேட்டிருக்கும்"
“உங்கடை மகளின் ரை குரல் எனக்குத் தெரியாதே? உங்கடை வீட்டிலையிருந்துதான் கேட்டது."
"அப்பிடியொணர்டும் எனக்குத் தெரியேல்லை. அட நானும் கதைச்சுக்கொண்டிருந்திட்டன். பேரன் பள்ளிக்கூடத்தாலை வந்திருப்பான். தாயைச் சமைக்க விடான். நான் போட்டுவாறன்."
ஆச்சிவேகமாக வெளியேறினாள்.
மார்னணிலாக்குணமுடையோர் 3.

Page 10
செர்விலnங்கனிமுடைAேA - 2
கல்லெறிபடினும் காய்த்து நிற்கும்
"இதென்ன உலகமப்பா? தருமலிங்கம் சலித்துக்கொண்டார். விட்டுமுற்றத் மாமரத்தின் கீழே போடப்பட்டிருந்தசாய்மனைக்கதிரையில் கால்களை நீட்டிப்படுத்திருந்த தருமலிங்கம் எதையோ இழந்துவிட்டவர்போலக் காணப்பட்டார்.
வயது எண்பதைத் தாண்டியிருக்கும். வயோதியம் வயப்படுத்திவிட்ட உருவம், தலைமயிர் மட்டுமல்ல தாடி, மீசை, மார்பினும் கைகால்களிலும் படர்ந்திருந்த உரோமங்கூடநரைகண்ைடிருந்தது. உடலின்தசைப்பிடிப்புவற்றிதோல் சுருக்கமடைந்து, எலும்புகள் துருத்திக்கொண்டிருந்தன. தோல் போர்த்த எண்பு எனலாம். கண்கள் உட்குழிந்துவிட்டாலும் அந்த நேரிய மூக்குமட்டும் தன் அழகை இழுத்துப்பிடித்து வைத்திருந்தது.
“என்னண்னை ஒரு நாளும் கிடவாயஸ். அதிசயமாய்ப் படுத்துக் கிடக்கிறியள். ஏதும் வருத்தமே?”
அவரின் அருகே வந்துநின்ற சோதிசுந்தரம் விசாரித்தார்.
“என்னத்தைச் சொல்லுறது? உவர் பொன்னையர்கனடாவுக்குப்போக அவற்றை வீடு வெறுமனே கிடந்து சீரழிஞ்சுது. இவன் பெடியன் முருகதாசனும் இருக்க இல்லிடமில்லாமல் அந்தரிச்சான். பொன்னையரோடை கதைச்சு அவனுக்கு வீட்டை எடுத்துக் குடுத்தன். எனக்கென்னவன் பிரயோசனமெண்டே செய்தனான்? அந்த எண்ணத்தோடைநான் ஒண்டும் செய்யிறேல்லைத் தம்பி
இப்ப என்னடா வெண்டால் பெடியன் புயலுக்கு விழுந்த இரண்டு வேம்பை வித்துப்போட்டானாம். அதையாரோபொன்னையருக்கு அறிவிச்சுப்போட்டினம். அந்தாள் கனடாவிலையிருந்து எனக்கு போன் எடுத்துது, யெடியனைப்போய்க் கேட்டால், மரங்கள் புயலுக்கு விழுந்துது.குடுத்திட்டன். காசின்னும் வரேல்லை. வந்த உடனை வீட்டுவாடகைக் காசு போடுறபொன்னையற்ரை கணக்கிலை போடுவன் எண்டான்." எண்ணிாைக்குணமுடையோர் 4

"பொன்னையரென்னவாம்?" கதையறியும் ஆவலுடன் சோதிசுந்தரம் கேட்டார்.
“அவள் பெடியனை நம்பமாட்டனெண்டிட்டார். இப்ப உடனை அவனை வீட்டாலை எழுப்பவேனுமாம்."
“அடக்கடவுளே! ஏன்னனை?”
“பெடியன் எழுபத்தைஞ்சுக்கு மரம் வித்ததாய் அவருக்குச் சொல்லியிருக்கினம். அவன் முப்பதுக்குவித்ததெண்டு சொல்லுறான். எழுபத்தைஞ்சுக்குத்தீர்த்ததென்னவோ உண்மைதானாம். பிறகு அரிஞ்சால் இரண்டுமரங்களும் நடுவாலை பழுதாய்ப்போச்சு, பலகை அறுக்கேலாதெண்டு முப்பது தாறதாய்ச் சொன்ன தெண்ணுறான். பொன்னையரோ மரம் விழுந்ததையோ விக்கப்போறதையோ அறிவிக்காதவன் எப்பிடி உண்மை சொல்லுவன் எண்டுகேக்கிறார்?"
"நீங்கள் மரம் வாங்கினவன் ஆரெண்டு அறிஞ்சீங்களே?"
"அறிஞ்சு அவனிட்டைப் போய் விசாரிச்சன். அவன் முப்பதுக்குத்தான் வாங்கினது. காசு உடனை குடுத்திட்டன் எண்டு சொல்லுறான். கொமினிகேஷனுக்கு விடியப் போய் பொன்னையருக்கு போன்போட்டு இதைச் சொன்னால் அந்தாள் என்னிலை ஏறிவிழுகுதுகள்ளனுக்கு வீட்டைக் குடுத்திட்டனாம். நானும் அவனோடை கூட்டாம். என்னை எண்ணெண்டுநம்புறதாம். உதவிசெய்யப்போய் அவளிட்டை வாங்கின பேச்சு மனம் வேகுது.
உனக்குத் தெரியுந்தானே. நான் ஒருசதங்கூட ஒருதரிட்டையும் வாங்கிறேல்லை என்ரை காசைச் செலவழிச்சு கனடாவுக்கு எத்தினை தரம் போன்பன்ைனியிருப்பன் தெரியுமா? மணியத்தாற்ரை மகனுக்கும் உப்பிடித்தான் ரெலிபோனுக்கு மேலை ரெலிபோன் அடிச்சு ஒரு கலியாணம் செய்து வைச்சன் எல்லாம் மணியத்தார், நீதான் அண்ணை நல்லபொம்பிளையாய்ப் பார்த்துப் பெடியனுக்குச் செய்து வைக்க வேணுமெண்டு கனடாவிலையிருந்துகேட்டதாலைதான் உதிலைதலைப்போட்டனன். அவள் கிருஷ்ணவேணி என்ன அருமையான பிள்ளை சந்தோஷமாய்க் கலியானம் முடிஞ்சுது. அவள் அங்கை போகத்தானே பெடியனுக்குக் கனடாப் பொம்பிளை யொண்டிருக்கெண்டு தெரியவந்துது. மணியத்தாரைக் கேட்டால் "இப்பிடி ஒரு கலியானங்கட்டிவைச்சால்தான் அதை டைவேர்ஸ்செய்விக்கலாம் எண்டதுக்காகத்தான் இங்கை ஒரு பெட்டையைப் பார்த்துக் கட்டிவைச்சவராம். அதுக்குப் பொம்பிளை பார்க்க நான் ஒரு இழிச்சவாயன்தான் கிடைச்சன்."
தன் மனக்குமுறலைக் கொட்டிக் கொண்டிருந்தார் தருமலிங்கம்.
"உந்தச்சத்தியசீலன் பெண்சாதியின்ரைநகைஅடைவுவைச்சதிலையும் ஏதோ SpérafiscD6UTCBuurt?"
எண்ணிலாக்குணமுடையோர் 5

Page 11
சோதிசுந்தரம், தருமலிங்கத்தின் பெயரடிபடும் மற்றொரு விஷயம் பற்றியும் குறுக்கிட்டுக்கேட்டார்.
“ஓம் தம்பி, ஒருநாள் பெட்டை வந்து சீலனுக்குச் சுகமில்லை. செலவுக்குக் காசில்லையெண்டு அழுதாள். தன்ரைகையிலை கிடந்த ஒருசோடிகாப்பை அடைவாய் ஆரிட்டையாவது குடுத்துக் காசு வாங்கித்தரச்சொல்லிக் கேட்டாள். உவள் சந்திரலிலா அடைவுபிடிக்கிறவள் தானே கூட்டிக்கொண்டுபோய்க் காசு வாங்கிக் குடுத்தன். கடைசியாய்ச்சீலனும் கான்சரெண்டுமேலை போட்டான். அவளுக்கும் அடைவை மீட்க ஏலேல்லை. சந்திரலிலா அதை விக்கப்போனால் அது பவுண்பூசின நகையாம். சீலன் எங்கையோ ஏலத்திலை வாங்கின நகை எண்டு சொல்லுறாள் அந்தப் பெட்டை என்னைக் கேட்டால் எனக்கு நகையைப் பற்றி என்ன தெரியும்? அடைவு பிடிக்கிறவ பார்த்தெல்லோ வாங்கியிருக்க வேணும்?"
அதுசரி நீங்களேன் இப்பிடிப்பட்ட பிரச்சினையளுக்குள்ளை போறியள்? வயசுபோன காலத்திலை வீண் பிரச்சினையள் வர தேவையில்லாமல் கஷ்டப்படுகிறியளெல்லே?"
"அது என்னவோடாதம்பி என்ரைபிறவிக்குணமாய்ப் போச்சு ஒரு உதவியைச் செய்யேலுமெண்பால் செய்யிறது. அறிஞ்ச தெரிஞ்ச சனங்களும் தருமலிங்கத்திட்டைப் போனா ஏதாவது செய்வனெண்டு வருகுதுகள். அப்பிடி வாறவைக்கு என்னாலை இயண்ட உதவியைத்தானே செய்யிறன்."
“தேவையில்லாத பிரச்சினையளெல்லே வருகுது. பொன்னையர் பேசிப்போட்டாரெண்டு இப்ப இருந்து கவலைப்படுகிறியள். இனிமேலெண்டாலும் இப்பிடிப்பட்ட விசயங்களிலை தலைப்போடாதேங்கோ."
"அதுவும் சரிதான் தம்பி, அவர் பொன்னையர் என்னையும் கள்ளணெண்டு சொன்னது எனக்குச் சரியான கவலை தம்பி திரும்பத்திரும்பச் சொல்லுறன். நான் ஒண்டையும் எதிர்பார்த்துச் செய்யிறேல்லை எண்னை இப்பிடி நினைக்கினமே! கிருஷ்ணவேணி வீட்டுக்காரர் என்னோடை கோவம். இனிப்பேசாமல்தான் இருக்கவேணும். அதுசரிநீயேன் வந்தனி?"
“அதொண்டுமில்லையண்ைணை"
"ஒண்டுமில்லையெண்டு சொல்லுற விதத்திலை தெரியுது ஏதோ விசயத்தோடைதான் வந்திருக்கிறாய் எண்ணெண்டு சொல்லு"
"உங்கடை கவலையளுக்கை இதையுமேன்? அதை விடுங்கோ"
"விசயத்தைச் சொல்லு விடுகிறதோ இல்லையோ எண்டு யோசிப்பம்"
676wiazofumagazolypeoplGuit 6

"நானிப்பவாங்கின காணியைத்திருத்தித்தோட்டஞ்செய்யத் தொடங்கியிட்டன் வங்கியிலை கடனெடுக்கநீங்கள்தானே கூட்டிக்கொண்டுபோய்க்கதைச்சனிங்கள்."
"கடன் ஒழுங்காய்க் கட்டுறாய்தானே?"
“ஓமண்ணை, அதிலை பிழைவிடமாட்டன். காணிக்கு ஒருபக்க எல்லை நேசராசாவின்ரை காணி. அதுக்கை வேலியோடை ஒரு புளி நிக்குது. பயிருக்கு நல்லதில்லை தறிக்கச்சொல்லிக்கேட்பமெண்டால் அவன் ஒருலோக்காறன். எல்லாரும் உங்களைக் கூட்டிக்கொண்டுபோய்க் கதைக்கக் சொல்லிச்சினை."
தருமலிங்கம் சாய்மனைக் கதிரையிலிருந்து எழுந்து நிமிர்ந்து அமர்ந்தார். சால்வையை உதறித் தோளிலே போட்டார்.
"அப்ப வாவன் போய்க் கதைச்சுப் பார்ப்பம்."
"நீங்கள் கவலைப்பட்டுக்கொண்டிருக்கேக்கை." சோதிசுந்தரம் தயக்கத்துடன் இழுத்தார்.
"அதுதான் உன்னட்டை எல்லாத்தையும் சொல்லி ஆறிப்போட்டனே. என்ரை வாழ்நாளிலை உப்பிடி எத்தினை கண்டிட்டன். அந்தநாள் தொடங்கி என்ரை குணம் இதுதான். குறையும் கேக்கிறதுதான், உதவி செய்யிற எல்லாம் பிழைக்கிறேல்லைக் கண்டியோ? நீ கடன் கட்டுறாய்தானே. இப்பிடி கனக்க. நேசராசா ஒரு மாதிரிப் பேர்வழிதான். ஆனாலும் ஒருக்காக் கதைச்சுப் பார்ப்பம். எழும்பு வா.
wahanapagpapLGBunit 7

Page 12
சென்னிலாங் தனிமுடைலோர் - 3
உதவியெனும் பாவனையில்.
“சுமதியக்கா. சுமதியக்கா, இரண்டு கரண்டிகோப்பித்தூள்தாறிங்களே? இவள் சரண்யாவுக்கு வயிற்றால போகுதாம். மல்லிகாக்கா சொல்லி அந்தரப்பட்டா. அதுதான் உங்களிட்டைக் கிடக்கும் வாங்கித்தாறனெண்டு சொல்லிப் போட்டு வந்தனான்”
சின்னத்தங்கச்சி என எல்லோராலும் அழைக்கப்படும் லீலாதேவி, சுமதி வீட்டு முன் வராந்தாவில் வந்திருந்து உரத்த குரலிலே கேட்டாள்.
சுமதியை விட அவள் இளையவளாகத் தெரியவில்லை. நாற்பத்தைந்து வயது மதிக்கலாம். சுமதியை விட இரண்டு மூன்று வயதென்றாலும் கூடவிருக்கும். ஒற்றைப் பின்னல். அரைப்பாவாடைசட்டை தன்னைச்சிறுபெண்ணாகக் கருதிக்கொள்கிறாளே அல்லது மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கிறாளோ என்னவோ அக்காவும் அண்ணையும் அம்மாவும் ஐயாவும் போட்டு அனைவரையும் அழைப்பது அவளுடைய
கையை ஒருமுறை பாவாடையில் தேய்த்துத் துடைத்துவிட்டு சுமதி கொடுத்த கோப்பித்தூளை வாங்கிக்கொண்டாள்.
“எனக்குத் தெரியும் உங்களிட்டைக் கோப்பித் தூளிருக்குமெண்டு. இதைக் குடுத்திட்டு இராசாத்தியக்கா வீட்டை பலகாரச்சூட்டுக்கு உதவிசெய்யப்போகவேணும். புதன் கிழமை அவவின்ரை பேரன்ரை பிறந்த நாள். அவவக்கு என்ன செய்யிற தெண்டாலும் நான் நிண்டு செய்யவேணும். பலகாரச்சூட்டுக்கெண்டு ஆயத்தப்படுத்திக் கொண்டு நிக்கேக்கை தான் மல்லிகாக்கா வந்து சரண்யாவுக்கு வருத்தமெண்டு சொன்ன. அதுசரி. உங்கடைபெறாமகளுக்கும் இப்பதானே பிறந்தநாள்வரவேணும். இராசாத்தியக்காவின்ரைபேரனும் இவவும் கிட்டக்கிட்டத்தானே பிறந்த மாதிரிஞாபகம்"
"அது முந்த நாள் கொண்டாடி முடிஞ்சுது"
67600iao foreig600lpedLGurir 8

"அட, ஒரு சொல்லுப்பறைச்சலில்லாமல் செய்து போட்டியள். சொல்லியிருந்தால் பலகாரச்சூட்டுக்கு வந்திருப்பனே. பல்லுக் கொழுக்கட்டைநான் தானே அவிச்சது"
"ஒமோம். பயித்தம்பருப்பை அவியப்போட்டுட்டுப் போய், கடைசி முறை கொழுக்கட்டை அவிச்சு இறக்கேக்கை வந்தனிங்கள்” சுமதிசிரிப்போடு கூறினாள்.
"எண்ணக்கா செய்யிறது? எல்லாரும் எல்லாத்துக்கும் என்னைத் தானே கூப்பிடுகினம். மாட்டனெண்டு சொல்லேலுமோ? அண்டைக்குக் கந்தசாமி கோயில் தேரெல்லே? இராசாத்தியக்கா தன்ரைமாமியார் தேர்பார்க்க ஆசைப்படுகிறாவெண்டு ஒருக்கா ஆட்போவிலை கூட்டிக்கொண்டுபோய் தேரைக்காட்டிப்போட்டுவரச்சொன்னா. ஆட்டோ தானே. உடனை வந்திடலாமெண்டு போனன். நேரஞ் செண்டு போச்சு. உங்களுக்கென்ன கோவமெண்டு எனக்குத் தெரியும். ஆருக்கோ யாப்பண்டம் செய்யவேணும். உதவிக்கு என்னை வரச்சொன்னனிங்கள். நான்வரேல்லை. வேறை ஒருதரும் உதவிக்கில்லை. என்னைநம்பிததான் தொடங்கிறதெண்டுசொன்னனிங்கள். அண்டைக்கெண்டு எனக்குநல்ல காச்சல்”
"நீ வந்திட்டு அங்கையிங்கையெண்டு திரியேலாதல்லோ? வேறை யாரும் வந்தாத்தானே விட்டிட்டுப்போகலாம். அதோடைஇனி என்னட்டையிருந்து சல்லிக்காசு பேராதெண்டும் தெரியுந்தானே. திவசத்துக்கு அடுத்த நாள் வாங்கின கடனும் முப்பத்தொண்டு முடிஞ்சு மூண்டாம் நாள் வாங்கின கடனும் திருப்பித் தரேல்லை. இனியெப்பிடிக் கடன் தருவன்? சுமதிபொரிந்து தள்ளினாள்.
"அப்பிடியில்லையக்கா, உண்மையாய்க் காச்சலக்கா. பிறந்த நாளெண்டு தெரிஞ்சிருந்தால் கட்டாயம் வந்து உதவி செய்திருப்பன். சரி நான் வரட்டே? அங்கை பயித்தமுருண்டைக்கு மாக் குழைச்சாச்சு. உருட்டிப் போட்டுப் போகச் சொல்லி இராசாத்தியக்கா சொன்னவா. நான்மல்லிகாக்காவை ஒருக்கா உருட்டச்சொல்லிப்போட்டு ஓடி வந்தனான். பிள்ளைக்குச் சுகமில்லை. உதவி செய்ய வரேலாதெண்டு சொல்லத் தான் வந்தவ. இரண்டு பேரும் பேசப் போகினம் நான் வாறன்"
வேலியிலிருந்த பாதை வழியாக அடுத்த வீட்டுக்குப் போகிறாள் லீலாதேவி
"நளினாக்கா, நளினாக்கா, பிள்ளைக்குப் பிறந்தநாள் கொண்டாடினியளாம். அக்கா சொன்னவ. எனக்குத் தெரிஞ்சிருந்தால் உதவி ஒத்தாசைக்கு வந்திருப்பனே. அவள் பிள்ளை என்னிலை நல்ல வாரப்பாடு. நான் வந்தால் எண்ரை மடியை விட்டிறங்காள். பிள்ளையை ஒருக்காப்பாத்திட்டுப்போவமெண்டு வந்தனான். இங்கை வாடா குஞ்சு, அம்மாவோடை இருக்கிறதாலை என்னட்டை வரமாட்டனென்னுறாய். என்ன? எங்கை உண்ரை பிறந்தநாள் பலகாரம்? அது சாப்பிடத் தான் வந்தனான்"
"நான் நினைச்சன் பல்லுக் கொழுக்கட்டைக்கு அடுத்தநாள் மாறின காசு தர ந்தனியாக்கு Artiewfikonaigavoup6.adLGurir 9

Page 13
"வாற கிழமை மட்டில ஒரு காசு வரும். கொண்டு வந்து தாறன். நான் 86ങ്ങബ്
“இது மறக்கேல்லை. காதுகுத்துச்சடங்கோடைவாங்கின கடன்மறந்தாச்சே?" பலகாரத்துடன் தேநீரையும் கொண்டுவந்த நளினா கேட்டாள்.
"நான் மறக்கேல்லை. எல்லாம் கணக்கு வைச்சிருக்கிறன். நான் செய்யிற உதவியளை நீங்கள் மறக்காட்டா சரி. பலகாரம் ஆர் சுட்டது? பயித்தமுருண்டை பதம் பிழைச்சுப் போச்சு. இறுக்கமாயிருக்கவேணும். முறுக்குமா தண்ணிகூடிப் போச்சோ. எண்ணையை இழுத்துப் போட்டுது. பருத்தித்துறைவடைக்கும் முறுமுறுப்புப் பத்தாது. நான் இராசாத்தியக்க வீட்டைபலகாரம் சுடப் போகவேனும், சாப்பிட்டுக்கொண்டிருக்க நேரமில்லை. உதை ஒரு பேப்பரிலை சுத்தித் தாங்கோ அக்கா"
ஒரு தாளிலே உள்ளிருந்தும் பலகாரங்களை எடுத்து வந்து அத்துடன் லீலாதேவிக்கெனக் கொடுத்தவற்றையுஞ்சேர்த்துப் பொதிசெய்து கொடுத்தாள்நளினா. அதை வாங்கிக்கொண்டு புறப்பட்டாள் லீலாதேவி.
"மல்லிகாக்கா, மல்லிகாக்கா, எங்கை மல்லிகாக்கா? அவவக்காகத் தானே கோப்பித் தூள் வாங்கிக்கொண்டு வாறன். அவ எங்கை போட்டா?
“இவ்வளவு நேரமும் வருத்தக்காறப் பிள்ளையை விட்டிட்டிருக்கேலுமே? அவ வீட்டை போட்டா"
"ஐயோ, நானென்ன செய்ய? அங்கை போனா சுமதியக்கா ஒரே குறை. பெறா மகளின்ரை பிறந்த நாளுக்கு அந்தப் பக்கம் வரேல்லையாம். நானில்லாததாலை பலகாரங்கள்அவ்வளவு எழுப்பமில்லையாம். நானென்ன செய்ய? ஆருக்கெண்டுஉதவி செய்யிறது. எல்லாரும் தங்களுக்கு வந்து உதவி செய்யெண்டபடி, நானும் பாத்துப் பாராமல் எல்லாருக்கும் உதவிசெய்யிறன். செய்தாலும் அந்த மாதிரிச் செய்வன். அது தான் எல்லாருங்கேக்கிறது. கூலிவாங்கிச்செய்யிறனானே? இல்லையே. உதவியாய்த் தான் செய்யிறன். இராசாத்தியக்கா, இந்தக் கோப்பித் தூளை மல்லிகாக்காவிட்டைக் குடுத்திட்டு ஒரு ஐஞ்சு நிமிசத்திலை வாறன்"
"நீ ஆறுதலாய் வா. பயித்தமுருண்டை முக்காத் திட்டம் முடிஞ்சுது. முறுக்கு இரண்டு தரத்திலை முடியும்"
"அக்காகோவிக்கிறாபோலை. அந்தச் சின்னக்குஞ்சுக்கு வருத்தமெண்டதாலை தான் ஓடிப்போய் ஓடி வந்தனான். ஒரு உதவி தானே"
எழுந்து செல்கிறாள் லீலாதேவி.
எணர்னிாைக்குணமுடையோர் 10

கெர்னிலாங்கனமுடைMே - 04
சிறைப்பட ஒருப்படேன்
(அண்மையில் வானொலியிலும்பத்திரிகைகளிலும் தெஹிவளைமிருகக்காட்சிச் சாலையில் ஒரு சிங்கம் இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது. சிறிது காலமாக உணவுண்னாமலிருந்த அச்சிங்கத்திற்கு மருத்துவம் செய்தும் பலனில்லாது போய் அது இறந்துவிட்டது. அது என்னிடம் பேசியது)
மனிதர்கள் விதவிதமாகப் பேசுவதை மட்டுந்தான்நீங்கள் கேட்பீர்கள். நாங்கள் பேசுவது எதுவும் உங்களுக்குக் கேட்காது. எங்களுக்கும் விருப்பு வெறுப்புகள், உணர்ச்சிகள் உண்டென்பதையும் எண்ணிப்பார்க்கமாட்டீர்கள்.
மனிதர்கள் கூறுவதையோ அவர்களது மனநிலையையோகூடநிங்கள் புரிந்து கொள்வதில்லை. இப்படிநான் கூறுவதை நீங்கள் ஒப்புக் கொள்ளமாட்டீர்கள். ஆனால் அதுதான் உண்மை. அந்தப்புரிந்துணர்வே இல்லாத உங்களுக்கு எனது உணர்ச்சிகள்
எண்ணங்கள் எல்லாம் எப்படி விளங்கப்போகிறது?
நான் ஒரு வாரத்திற்கு மேலாக உணவைத் தொடவேயில்லை. எனக்கு ஏதோ வியாதியென்று கூறி மருந்துகள் தருகிறார்கள். அவை என் பசியைக் கொழுந்து விட்டெரியச் செய்கின்றன. ஆனாலும் நான் பிடிவாதமாக உண்ணாமலே கிடக்கிறேன். ஓரிருநாட்களில் எனது உயிர் பிரியலாம். உயிரை இந்த உடலிலே வைத்திருப்பதற்காக நான் உணவுண்ணத்தயாரில்லை. இப்படி வாழ்வதைவிட இறப்பது மேலானது என நான்தீர்மானிக்க வைத்துவிட்டீர்கள்.
நான் இறந்துவிடக் கூடாதென்பதற்காகப் பலவித முயற்சிகள் செய்கிறீர்கள். இவற்றிற்குக் காரணம் என்மேலுள்ள அன்பென்று கருத நான் முட்டாளல்ல. உங்களுக்குத்தேவைபனம், அதைப்பெற்றுக்கொள்ள என்னைப்பயன்படுத்துகிறீர்கள். எங்கெங்கோ இருந்து வருபவர்களெல்லாம் என்னை வந்துபார்க்கிறார்கள். எனது பராமரிப்புச் செலவிற்கென்றும் இந்தச் காட்சிச்சாலையின் செலவீனங்களுக்கென்றும் Ariocofoiréeawsup6apLGuit II

Page 14
அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்கிறீர்கள். எனது தேவைகளையெல்லாம் சரிவர நிறைவேற்றுவதாக நீங்கள் காட்டிக்கொண்டால்தான் பணங்கிடைக்கும். அதற்காகத்தான் இந்தநாடகமெல்லாம்.
சிங்கம் என்ற மிருகவர்க்கம் அழிந்து போகாமல் காப்பாற்றுகிறார்களாம். அவர்கள் என்னைப் பரிவோடு பராமரித்ததாலேதான் சிங்கத்தைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறதாம்.
ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் நான்சிங்கமா? இது சிங்கம் என்று என்னைக் காட்டுவது எவ்வளவு தவறு? உருவத்திலோ அல்லது இயல்பிலே நான் சிங்கமாக
நான்சிறுகுட்டியாக இருந்தகாலம் கனவுபோன்று எனதுநினைவிலிருக்கின்றது. என்னை ஆபிரிக்கக்காட்டிலிருந்துகொண்டுவந்ததாக இங்கே கூறக்கேட்டிருக்கின்றேன். அந்தக் காட்டிலிருந்த காலம் எவ்வளவு அருமையானது எனது தாயின் கம்பீரமான தோற்றத்தை நீங்கள் பார்த்திருக்கவேண்டும். அதிலும் ஆண்சிங்கத்தைப் பார்த்தால் வீரத்திற்கும் கம்பீரத்திற்கும் இலக்கணம் என்று சொல்வீர்கள். சிங்கத்தின் கர்ச்சனை காட்டையே அடக்கிஆளும், எல்லாமிருகங்களும் பயந்து நடுங்கும். மிருகங்களுஞ்சளி மனிதர்களும்சரி அருகில் நெருக்க அஞ்சி நடுங்குவர். தானே வேட்டையாடிக் கொண்டுவரும் இறைச்சியைத்தான் எனது அன்னைஎனக்குத்தந்துதானும் உண்பாள்.
இங்கே கம்பிகளுக்கிடையே அடைத்து, என்னைக் காட்சிப் பொருளாக்கியிருக்கிறீர்கள். நான் தான் மனிதரைக் கண்டதும் அஞ்சும் ஜென்மமாக இருக்கிறேன். என் பராமரிப்பிற்கென்று நீங்கள் பெற்றுக்கொள்ளும் பிச்சையில் வாங்கிப்போடும் இறைச்சியைக் கால் வயிற்றிற்கு உண்டுவிட்டு, கம்பீரத்தைத் தொலைத்துவிட்டு, கர்ச்சிப்பதையே மறந்துபோய், என் இனத்துக்குரிய இலட்சணங்கள் எல்லாவற்றையும் இழந்து ஒரு குறியீட்டு மிருகமாக, காட்சிப் பொருளாக வாழவேண்டுமா? இது சிங்கம்' என்று எல்லோரும் பார்ப்பதற்காக ஒரு வாழ்வா?
சிங்கம்’என்றுவாழ்வதானால் சிங்கமாக வாழவேண்டும்.
இந்தக் கம்பிகளுக்குள் வாழக்கூடாது. எனது பிரதேசத்திலே வாழவேண்டும். அங்கே கம்பீரமாகச் சுற்றிவரவேண்டும். காட்டுக்கு அரசன் என்று சிங்கத்தைக் கூறுவார்கள். அப்படி அரசனாக உலவவேண்டும். என் உணவை நான் தேடும் வல்லமை எனக்குண்டு. எனது உணவை நானே வேட்டையாடிப் பெறும் சுதந்திரம் எனக்கு வேண்டும்.
அதை விட்டு, இப்படி எனக்கு உவப்பேயில்லாத உணவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வாழ்க்கையை வாழவேண்டுமா? என்றொரு கேள்விஎனக்குள் குடைந்து கொண்டேயிருந்தது. முடிவில் நான் உணவைத் தவிர்த்தேன். அது தொடர்கிறது.
67otiaafikonašg6orgp6oL(Surit 12

இதனை உங்களல் புரிந்து கொள்ளமுடியவில்லை. எப்படிப் புரியும்? உங்கள் மொழியிலே கூறுவதையே விளங்கிக் கொள்ளமுடியாதுகுதர்க்கம்பேசும் உங்களுக்கு எனது மனவேக்காடுளங்கே விளங்கப்போகிறது?
இந்தக் கம்பிகளுக்குள் அடைப்பட்டிருக்க எனக்கு விருப்பமில்லை’ என்று கூறினால் எண்ணைச் சுதந்திரமாக உலாவ விட்டுவிடுவீர்களா? எங்களைச் சரணாலயத்திலே வாழவிடக்கூட உங்களுக்கு விருப்பமில்லை. சரி நானே இதற்குள்ளிருந்து தப்பியோடினாலும் விட்டுவைப்பீர்களா? இல்லையே. ஒரு சிங்கத்திற்குரிய கம்பீரம் என்னிடமில்லா விட்டாலும் நாயென்றோ, பூனையென்றோ நினைக்கக்கூடியதாகவும் எனதுதோற்றமில்லையே. என்னைப்பார்த்ததுமே ஆபத்தான மிருகமாகத்தான் உங்களுக்குத் தெரியும். ஆகவே இதற்குள்ளேதான் இருந்து அழுந்தவேண்டுமென்பதுதான் எனது விதி. இந்த வாழ்வு எனக்குப்பிடிக்கவில்லை. அதனால் மரணிக்கத்தயாராகிறேன்.
எண்ணிாைக்குணமுடையோர் 13

Page 15
செர்விலAக்தனமுடைெேM - 05
உவரைத் தெரியாதே!
“என்ன எங்கையோ வெளிக்கிடுகிறியள் போல. நான் இடைஞ்சலா வந்திட்டனோ?”
“இல்லையில்லை. ஒரு கூட்டத்துக்குப் போட்டு இப்பதான் வந்தனான். வாருங்கோ. இப்பிடி இருங்கோ”
முருகமூர்த்தியின் கேள்விக்கு சிவசண்முகம் பதில்கூறி அவரை உபசரித்தார்.
"கூட்டமோ? கூத்தோ?”
"கூட்டத்துக்குத்தான் போனனான். கூத்தெங்கை நடக்குது?”
"இண்ைடைக்குத்தானே இவர் சுந்தரமூர்த்திக்கு மணிவிழா எண்டு பத்திரிகைகளெல்லாம் சிறப்பிதழ் போட்டிருக்கினம்."
“ஓமோம் அதுக்குத்தான் போட்டுவாறன்" "நீங்களும் போனநீங்களே? என்னை வரச்சொல்லி உவன் சோமசுந்தரம் கேட்டவன். நான் மாட்டனெண்டன். உவரைப் பற்றி எனக்குத் தெரியாதே. இப்ப எல்லாரும் தூக்கிப்பிடிக்கினம். என்னோடைதான் படிச்சவன். அப்ப சுந்தரமூர்த்தியை விட இந்த முருகமூர்த்திக்குத்தான் கீர்த்திகூட அந்தநாளிலை உவனிருந்த நிலையை நான் சொல்லிக்காட்டிறேல்லை. சொன்னால் எனக்குத்தாழ்வுணர்ச்சி என்கிறாங்கள். உயர்வுதாழ்வு ஆருக்கு விளங்குது?
விழாவுக்குத்தலைமைதாங்கினது எங்கடைகல்லூரிஅதிபராம். அவர் செய்வர். அவரைப்பற்றியுந்தெரியுந்தானே. அவரும் என்னோடைதானே ஓ.எல்.மட்டும்படிச்சவர். "அதுக்குப் பிறகு அவர் வேறை கல்லூரிக்குப் போட்டாரோ?” முருகமூர்த்தியின் பேச்சில் குறுக்கிட்ட சிவசண்முகத்தின் வினாவை அவர் விரும்பவில்லையென்பதை எண்ணிலாக்குனமுடையோர் 14

அவரது முகமே காட்டியது. அந்த இருண்டமுகம் மேலும் விகாரங்காட்டியது.
அறுபது வயதைத் தொட்ட பின்னும் அடர்ந்த கருமுடியுடன் காட்சியளிக்கும் பேற்றினை இறைவன் அவருக்குக் கொடுத்திருந்தார். அகன்ற நெற்றி நிறையத் நிருநீறும் சந்தனப்பொட்டுமாக இருந்த போதும் அகத்தின் வடிவம் தெரிவதனாலோ என்னவோ அவரது முகத்திலே ஓர் இருள்மண்டிக் கிடக்கும். அவரணியும் வெள்ளை வேட்டியும் நஷனலும் தங்களாலும் அவ்விருளைப் போக்கடிக்க முடியாதெனத் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டியநிலையிலேயே நிரந்தரமாக இருக்கின்றன. உருவத்தால் உயர்ந்து நின்ற அவரால் சமூகத்தில் உயர முடியாது போனது உள்ளத்தைக் குள்ளமாக்கிவிட்டதுபோலத் தோன்றும்.
“என்ரை அப்பர் பரம்பரை பரம்பரையாக வைச்சிருந்த காணிபூமியைப் பார்க்கவேணுமெண்டு என்னைப் படிக்கவிடேல்லை. அந்தக் கதையை விடுவம். ளங்கடை பரம்பரை பற்றிச்சொன்னால் என்னைநான் பீத்திறனெண்டு சொல்லுவினம். உவர் அதிபராயிருக்கிறவர் எப்பிடி ஓ.எல். பாஸ் பண்ணினவர் தெரியுமே? குதிரை யோடித்தான்."
"அவர் பல்கலைக்கழகப் பட்டதாரியெல்லே?"
"பல்கலைக்கழகத்திலைபட்டமெடுக்கிறதென்னகஷ்டமே? அவரோடைபடிச்சுவை கனபேர் சொன்னவை. எல்லாம் வால்பிடிதானாம். பேருக்குப் பின்னாலை ஏதோ மூண்டுநாலு நீளமாய்ப் போடுறார். எல்லாம் அப்பிடித்தான் எடுத்ததாம்”
"ஆசியுரை சொல்ல ஒருத்தர் வந்திருப்பர், அவரின்ரைபேரன்ரை ஆட்டங்களைத் தெரியுமே? என்ரைஅப்பள்அவரின்ரைஅந்தக்காலஅட்டகாசங்களைக் கதைகதையாய்ச் சொல்லுவர். சொல்ல நாக்கூசும், இவரைப் பற்றியும் கதையளிருக்குது. இப்ப மகளைப்பற்றி அங்கை கட்டிப்போன இடத்திலை ஊர்நாறுகிறது. இவருக்கு ஆசியுரை சொல்ல என்ன தகுதியிருக்கு?
“எனக்கு நோட்டீசைப் பார்க்கச் சிரிப்பு வந்தது. அவரொருதரைச் சமூகசேவையாளரெண்டு வாழ்த்துரைக்குப் போட்டிருந்தது. அவரென்னசமூகசேவை செய்யிறார்? சொல்லும்பார்ப்பம்?
"அப்படிச்சொல்லாதேங்கோ. அந்தாள் இரவுபகலாய் இந்த ஊருக்கு எவ்வளவு செய்யிறார், சனசமூகநிலையத்தாலை அவர்தான் முன்னுக்குநின்ைடு செய்யிறது. அவர் செய்ததுகளை நாங்கள் மறக்கக்கூடாது. அவர்போலை ஓராள் ஊரிலை இருக்கிறதுக்கு நாங்கள் கொடுத்துவைச்சிருக்க வேணும்"
சிவசண்முகம் துடிதுடித்து உருகிக் கரைந்தார்.
“உந்தக்கதையை நிறுத்துமப்பா. உவை சமூகசேவை செய்யிறம் எண்டு
arrowfundseyevapalgunir 15

Page 16
தங்கடை வயிறு நிரப்புறது தெரியாதே. அந்தக் காலத்திலை கொட்டிலிலைதான் அவற்ரைகுடும்பம்சீவிச்சது. இப்ப அவரின்ரைவீட்டைப் போய்ப்பாரும். இப்பஊடவ்வளவு வசதிஎண்ணெண்டு வந்ததெனிடுசொல்லும், அந்தாள் உழைச்சதெண்டு சொல்லுவியள். அவராலை உவ்வளவு உழைக்க முடிஞ்ச தெண்டதை நான் நம்பமாட்டன். வேலை செய்யேக் கையும் நல்லாய் அடிச்சவராம்"
“பிள்ளையன் இரண்டுபேரும் வெளிநாட்டிலைதானே. அவங்களைக்கொண்டே கஷ்டப்பட்ட குடும்பங்களுக்கு எவ்வளவோ உதவிகள் செய்விக்கிறார்.”
முருகமூர்த்தியின் கதையைக் கேட்கப் பொறுக்காத சிவசண்முகம்,
அனுப்பித்தாங்கள் பேரெடுக்கிறாங்களேயார்கண்டது. அவை வெளிநாட்டிலை என்ன வேலை செய்யினமெண்டு உமக்குத் தெரியுமே? கடை கண்ணியிலை எடுபிடி வேலைக்காறராய்நிக்கிறாங்களோசாப்பாட்டுக்கடையிலை கோப்பை கழுவுறாங்களே”
“எங்களுக்கேண் உந்தக்கதையளை. சரியாய்த் தெரியாமல் ஒண்டும்
5."
"நீர் சொல்லுறதும் சரிதான், ஆனால் உள்ளது எல்லாருக்குந் தெரியவேணும். நீங்கள் நினைப்பியள் இவன் இப்பிடிக் கதைக்கிறானே யெண்டு, நான் ஒருதரைப்பற்றியும் நல்லதாய்க் கதைக்கிறேல்லையாம். எல்லாரைப் பற்றியும் கூடாமல்தான் கதைக் கிறனானாம் எண்டு சிலபேர் உங்கினை சொல்லித்திரியினம். நான் கேள்விப்பட்டனான். நான் உள்ளதைத்தான்கதைக்கிறனான். அதுமற்றவைக்குப் பிடிக்கிறேல்லை. ஆரும் நல்லது செய்யினமோ? எல்லாற்ரை கள்ளமும் எனக்குத் தெரியுது. அதைச் சொல்லுறது பிழையோ?
சோமசுந்தரம் உந்த மணிவிழா நோட்டீசைத் தந்தவன். பார்த்த உடனை எனக்குப் பத்திக்கொண்டு வந்துது. உவங்களின்ரை வண்டவாளங்களை ஒருக்கால் சொல்லிக்காட்டினால்தான்மனதுக்கு ஆறுதலேற்படும். அதுதான் வந்தனான். உங்களை உடுப்பும் மாத்தவிடாமல் இருந்துகதைச்சுப் போட்டன். அப்ப வரட்டே"
67cciaiofaunase60p6.adLGuinn 16

செர்விலAக்குனிமுடைMெ - 06
மனம்போல நிறம்மாறி
"அப்பாடா. சரியான வெயில் வாட்டி எடுக்குது. இருண்டால் குளிதாங்க முடியாம லிருக்கு. பனிகாலமெண்டால் இப்பிடி மனிசரை வாட்டி எடுத்துப்போடும். உங்கடை வீட்டிலைதான் இந்தக்காலத்துக்கு ஏற்றமாதிரிமுத்தத்துவேப்பமரத்துக்குக் கீழே வாங்கு போட்டிருக்கிறியள். இதிலை இருக்க ஒரு இதந்தான்.”
கூறிக்கொண்டே வாங்கிலமர்ந்திருந்த மிருணாளினிக்குப் பக்கத்திலே வந்திருந்தாள் சத்தியட்ைசுமி, குப்பென்று வியர்வை நாற்றமடித்தது. அவள் அணிந்திருந்த சட்டை "நான் தண்ணிரைக் கண்டு பலநாட்களாகின்றன” எனப் பறைசாற்றியது. முன்பு இவள் சேலைதான் கட்டிக்கொண்டு வருவாள். சட்டை அணிபவர்களைக்கேலிசெய்வாள். இப்போதுவிட்டிலே போட்டிருக்கும் சட்டையுடனேயே அயலெங்கும் சென்றுவருகிறாள்.
“இப்ப அக்காவும் சட்டையோடை வெளிக்கிடத் தொடங்கிவிட்டா, ஏன் சேலை உடுத்துறேல்லை?” மிருனாளினிகேட்டாள்.
“உங்கை எல்லாரும் பாவாடை சட்டை. அல்லது சட்டையோடைதானே திரியினம். இது சுகமான உடுப்பு, பிள்ளை நானும் சட்டையோடை வெளிக்கிடத்
“எந்த மைதிலி?"
"அதுதான் உவள் ஒடுகாலிமைதிலிக்கு"
"ஏன் அவளை ஒடுகாலிஎண்டுசொல்லுறியள்? அவள்காதலிச்சவனைக்கட்டினது பிழையே? தாய்தகப்பன் பெடியன்ரை வீட்டுக்காறரோடை இப்ப ஏதோ கோவமெண்ட உடனை அவனை விட்டிட்டுவேறை கலியாணஞ் செய்யச்சொல்லுறியளோ?
sociatofkonieocorypalGurir 17

Page 17
"நீ சொல்லுறதுஞ் சரிதான் பிள்ளை. முந்தி இரண்டு குடும்பங்களும் அந்தமாதிரிக் கொண்டாட்டமாயிருந்தவை. அந்தப் பெடியன்ரை தங்கச்சியாற்ரை சாமத்தியச் சடங்கிலைதான்பிடுங்குப்பட்டவை. மைதிலியும் அவனும் அதுக்கு முதலே விருப்பப்பட்டிருந்தவை. தங்கடை சண்டைக்காக அதுகளைப் பிரிக்கப்படாதுதான். மைதிலிகெட்டிக்காரி, அவ்வளவு பிரச்சினைகளுக்குள்ளையும் விடேன்தொடேனெண்டு நிணடு கலியானங் கட்டிப்போட்டாள். ஒரு நல்ல பிள்ளை. அதுகளைப் பிரிக்க வேணுமெண்டு வலு மும்முரமாய் நினிடது சுலோஜினிதான். அதுதான் உங்கடை மச்சாளைத்தான் சொல்லுறன். என்னென்னவெல்லாம் சொல்லித்திரிஞ்சவதெரியுமே? சொல்லுறணெண்டு குறை நினைக்காதேங்கோ, பாம்புக்குப் பல்லிலை தான் விசம், இவளுக்கு உடம்புமுழுதும்நஞ்சு. அதுவும்மூளை கொடூரமானநஞ்சாலையே செய்தது. இரண்டு தடி ஒண்டாய்க் கிடக்க விடாள் கண்டியோ?”
“ஸ். ஸ். அக்கா, மச்சாள் உள்ளுக்குப் படுத்திருக்கிறா. மிருனாளினி தணிந்த குரலில் இரகசியம் பேசுகிறாள்.
“உள்ளுக்கோ?”
“ஓமோம். பத்துமணிபோலை வீட்டை வந்தா. வந்தநீங்கள் சாப்பிட்டிட்டுப் போங்கோ எண்டன். சாப்பிட்டிட்டு ஒருக்காத்தலை சாஞ்சு போட்டுப் போவமெண்டு படுத்திருக்கிறா”
"நான் அவவைச் சொல்லேல்லை. பெடியன்ரைமாமிக்காறிஒருத்திஇருக்கிறா.
அவவையெல்லோ சொன்னனான். அவவுக்குத்தன்ரைபெட்டையைக் கட்டிக்குடுக்கிற யோசினை கண்டியளோ?
“அவனுக்கு சுலோஜினி எண்ட பேரிலை மாமியிருக்கிறதாய் எனக்குத் தெரியேல்லையே. அவஎனக்கு மச்சாளோ?
மிருனாளினி சத்தியலட்சுமிகுறிப்பிடும் ஆளை அடையாளங்கான முடியாமல் மூளையைக் கசக்கினாள்.
சத்தியலட்சுமியின் சுருண்ட கேசம் பறந்து கொண்டிருக்க கண்ணுக்குத் தோன்றாமல் பின்புறத்தில் ஒட்டிக்கொண்டிருந்த கொட்டைப்பாக்குக் குடுமி கலைந்து கீழே தலை நீட்டிப் பார்க்கவும் அவள் இலாவகமாக அதனைத் தன் சுண்டுவிரலிலே சுற்றி, குடுமியாக்கிமீண்டும் ஒட்டவைத்துக் கொண்டாள்.
“அண்டைக்கு அவவைக்காட்டினவை எனக்குப்பிழையாய்ச்சொல்லிப்போட்டினம் போலை, உங்கடை மச்சாள் சுலோஜினி பத்தரைமாற்றுத்தங்கமெல்லோ? அவவை நான் குறை சொல்லுவனோ? நீங்களும் மாறி விளங்கிப் போட்டியள். நானும் சங்கக்கடைக்குப்போக வேணும். அதுவும் யாரோ அள்ளிவைச்சுப் போட்டினம். முந்தி
எண்ணிாைக்குணமுடையோர் 18

நான் பக்கத்துவிட்டு காயத்திரியிட்டை பங்கீட்டு அட்டையைக் குடுத்து விட்டால், அவகொண்டுபோய்தன்னுடைய அட்டையை அடுக்கேக்கை சேர்த்து அடுக்கிவிட்டிடுவா, நான் சமைச்சுப்போட்டுப் போனால் உடனை எங்கடைவீட்டு பங்கீட்டுச் சாமான்களை
arries (SurrCB66.
இப்பிடிச்செய்யக்கூடாதெண்டு ஆரோ அநியாயப்படுவார் எழுதிப்போட்டினமாம். போய் வரிசையிலை நிண்டுதான் சாமான் வாங்க வேணும். இதுகளுக்கு ஏனிந்த வேலையோ? எழுதத் தெரிஞ்சால் எல்லாத்துக்கும் பெட்டிசன் போடுறதே? உதுகள் கை முறிஞ்சு கிடந்தழுந்தவேணும்"
"ஒழுங்குமுறைப்படி வந்தெடுக்கச்சொல்லுறது பிழையோ?"மிருணாளினியின் குரலிலே கோபந்தெரிந்தது.
“உங்கை எல்லாம் ஒழுங்குமுறைப்படியே நடக்குது. ஆபத்தவசரத்துக்கு வாங்கினால் எண்ன?”
“வரிசையிலை கனநேரம் நிக்கேக்கை ஒரு அவசரமெண்டால் முன்னுக்கு நிக்கிறவையிட்டைக் கேட்டிட்டுப் போய் வாங்கலாம். இது எந்தநாளும் அதிகமானபேர் இப்பிடி முன்னுக்கு நிக்கிறவையிட்டைக் கொடுத்துவைச்சிட்டுநினைத்தநேரம் வந்து வாங்கிக்கொண்டு போகினம். வரிசையிலை ஒழுங்காய்க் காத்துக் கொண்டிருக்கிறவையை விசரரெண்டு நினைக்கினம் போலை. சொல்லிச் சொல்லிப் பார்த்தன். வரவர இந்த விளையாட்டுக் கூடிக்கொண்டு போச்சு, பொறுக்கேலாமல் நான்தான் எழுதிக்கொடுத்தனான்”
மிருனாளினி பொரிந்துதள்ளினாள்.
"நீங்களே எழுதிப்போட்டது?நீங்கள் செய் த்சரிதான். கா பிருந்து வரிசையிலை காவலிருக்க, நடுவிலை வந்து மற்றவை உடனை வாங்கிக்கொண்டு போனால் கோபந்தானே வரும். அப்பிடிச்செய்யிறதும் பிழைதான். இப்ப அவரவர் போய் வ்காய் வரிசையிலைநின்ைடுவாங்குகினம். ஒருதருக்கும் பிரச் பில்லை. அப்ப நான் வரட்டே? இப்ப போய் நிண்டால்தான் வாங்கிக் கொண்டுபோய் உலை
w
சத்தியலட்சுமிஎழுந்து நடக்கிறாள்.
articiaofanaigavoicipal Gurir 19

Page 18
கெர்னிலA இனமுடைலோர் - 07
எல்லோரும் என்னை.
"கணகண்ணை, கணகண்னை, என்ன சாப்பிட்டிட்டும்படுத்திட்டியளே?உண்ட களை தொண்டருக்குமுண்டெண்டது சரிதான்”
முன் வராந்தாவில் போட்டிருந்த சாய்மனைக் கதிரையிலே சாய்ந்திருந்த கனகரத்தினம், பழனிவேலின் குரல் கேட்டுச் சற்றுநிமிர்கின்றார்.
"வாரும், வாரும், இப்பிடிஇரும் என்ன இந்தப் பக்கம்?" மீண்டும் கதிரையிலே சாய்ந்துகொண்டே கனகரத்தினம் பழனிவேலை வரவேற்றார்.
நோஞ்சான்தோற்றத்திற்கும்பட்டுவேட்டி ஒரு மெருகைக்கொடுக்கிறதென அவரது மனம் எண்ணமிட்டது. தோற்றந்தான் அப்படியென்றால் பழனிவேலின் உணரதமும் மட்டுப்படுத்தபட்டுவிட்டது. கண்களும் சிறுத்துத்தோற்றமளித்தன. நெற்றியின் மேற்புறம் சற்றுமுன்தள்ளினாற்போல் அமைந்திருந்ததுதான் அதற்குக் காரணமோ என்னவோ? அவன் சிரித்தபோது முன்தள்ளிக்கொண்டிருந்த பற்கள் முழுமையாக எட்டிப்பார்த்தன. "இண்டைக்குக் குணத்தார் வீட்டிலை நாலாஞ் சடங்கு அதுக்குத்தான் போட்டு வாறன். இப்பிடி உங்களையும் பார்த்திட்டுப் போவமெண்டு வந்தன்” கூறிக்கொண்டே பழனிவேல் கதிரையிலமர்ந்தார்.
"நாலாஞ் சடங்குச் சாப்பாட்டுக்குப் பிறகு பாயசமோ? ஐஸ்கிறீமோ?" வேடிக்கையாகக் கேட்டார் கனகரத்தினம்.
"ஏன் அவை பாயாசங்கொடுக்கலாம்தானே? நானென்ன அவையை ஐஸ்கிறீம் கொடுக்கச்சொன்னனானே? ஐஸ்கிறீம்கடைக்காரன்நல்லபழக்கமெண்டுசொன்னனான் தான். நான் ஏதோ ஐஸ்கிறீம் கொண்டுவந்து கொடுக்கிறதெனன்டு சொன்ன மாதிரிக் கதைக்கிறியள். என்னிலை பிழைபிடிக்கிறதுதான் எல்லாருக்கும் வேலை”
"நானெங்கை உம்மைக்குறைசொன்னான்? சாப்பாட்டுக்குப்பிறகு என்னெண்டு
எண்ணிாைக்குணமுடையோர் 20

சும்மா பகுடியாய்க் கேட்டதுக்குஇப்படிச்சத்தம் போடுறீர்”
பழனிவேலுடன் நீண்டகாலம் பழகியவர் தானென்றாலும் கனகரத்தினத்தின் பொறுமையும் அக்கணத்திலே பலவீனப்பட்டது.
“சத்தம் போடாமல் என்ன செய்யிறது? எல்லாருக்கும்நான் இழப்பபாய்ப்போனன். அவர் சோமரும் அதுதான் குணத்தாரின்ர தம்பியார் ஐஸ்கிறீம் கதை கதைச்சவர்.
க்குச்செமத்தியாய் Bத்தன். அவையள்தி டமாதிரிளங்களி போடுறது, அண்டைக்கு நாலாஞ்சடங்குச் சாப்பாட்டைப் பற்றிக் கதைச்சுக் கொண்டிருக்கேக்கை, எனக்கு உவன்ஐஸ்கிறீம்கடைவைச்சிருக்கிறநாதனைத்தெரியும். சொன்னால் ஐஸ்கிறீம் கொண்டுவந்து தருவன். சாப்பாட்டுக்குப் பிறகு கொடுக்கலாம் எண்டு சொன்னனான். அவை சிரிச்சுக் கொண்டிருந்திட்டு இப்பஐஸ்கிறீம் வருமெண்டு பாயாசமும் வைக்கேல்லை எண்டுசொல்லுகினம்"
“எனக்கு உந்தக்கதையளெண்டும் தெரியாது. சும்மாதான் கேட்டனான். அதை விடுவம். நல்ல மாறுகரைப்பட்டு வேட்டிகட்டியிருக்கிறீர். நல்லாயிருக்குது”
"ஏன் நான் பட்டுவேட்டிகட்டக்கூடாதே? எனக்கென்ன குறைச்சல்?”
“ஆரப்பா கட்டக்கூடாதெண்டது? வேட்டி நல்லாயிருக்கெண்டு தானே சொன்னனான். அதுக்கும் கோபம் வருகுதே? அதுசரி, வயலுகள் எப்படி? நெல்லு அறுவடை தொடங்கிவிட்டினம். உங்கடைவயலும் வெட்டத்தொடங்கியாச்சோ?”
“என்னாலை உந்த வேலைகளொண்டும் செய்யேலாதெண்டு நீங்களும் நினைக்கிறியள் என்ன? இந்த முறை என்னட்டைவிட்டுப் பார்க்கட்டும். செய்யிறனோ இல்லையோ எண்டு. நானும் அப்பரோடை போய் வயல் வேலை செய்தனான் தானே.அண்ணை அந்த வேலைகளெல்லாம் தான்தான் செய்யவேணுமெண்டு செய்யிறார். என்னைக் கேக்கிறேல்லை”
"அப்பிடிச்சொல்லக்கூடாது. அண்ணைக்குக் கூடமாட ஒத்தாசைசெய்யவேணும். நீரும் அவையோடைதானே இருக்கிறீர். சாப்பிடுகிறீர்”
கனகரத்தினம் உணர்வுபூர்வமாக அறிவுரை கூற ஆரம்பிக்கிறார்.
"நான் தண்டச்சோறு சாப்பிடுகிறன் எண்டு சொல்லிக் காட்டுறியள் என்ன? அப்பருக்குநானும் ஒரு பிள்ளைதானே? அவருடைய சொத்திலை எனக்கும்பங்கிருக்கு, நானொண்டும் மற்றவையின்ரை சோத்தைச் சாப்பிடேல்லை. அவையும் சாடைமாடையாய் உப்பிடித்தான் சொல்லுகினம். நானும் விட்டுக்கொடுக்கிறேல்லை”
தம்பி இங்கையே இருக்கிறாய்? எங்கை போட்டாயோ எண்டு தேடிக் கொண்டு வாறன். குணமண்ணை வீட்டைபோனன்.நீவந்திட்டுப்போட்டாயெண்டினம். சுகிர்தா வீட்டை போனன். அங்கை நீவரேல்லை எண்டினம். இங்கை நிக்கிறியோ எண்டு
எணர்ணிலாக்குணமுடையோர் 21

Page 19
எட்டிப் பார்ப்பமெண்டு வந்தன்”
பழனிவேலின் அக்கா அவனைத் தேடியவாறு உள்ளே வந்துநிற்கிறாள். "நானென்ன ஊரளக்கிறன் எண்டு சொல்லுறியளே? கலியான வீட்டை வந்தனான். அப்பிடியே கனகண்ணையையும் எட்டிப்பார்த்தன். உடனை தேடிக்கொண்டு பின்னாலை வந்திட்டா. ஒவ்வொரு விடாய்க்கேட்டுத்திரிஞ்சிருக்கிறா, நான் எந்தநாளும் வீடு வீடாய்ப் போய்க் கதைச்சுக்கொண்டிருக்கிறனான். ஊர் சுத்துறது தான் என்ரை வேலை. வீட்டிலை ஒண்டும் செய்யிறேல்லை எண்டு ஒவ்வொரிடமா..!"
"பொறு பொறு. இப்பிடி எப்பவெண்டாலும் ஆரிட்டையெண்டாலும் நானேதும் சொல்லியிருக்கிறனே? நான் போன வீட்களிலை போய்க்கேட்டுப்பார். நானேதும் உன்னைப் பற்றிக் கூடாமல் கதைச்சானானோ எண்டு. ஏனடா உண்ரை புத்திஇப்பிடிப் போகுது?”
அக்கா அழுதுவிடுவாள் போலிருந்தது. “இப்ப எண்னத்துக்கு என்னைத்தேடி அலைஞ்சனிங்கள்?"
“சோதி மாமா உன்னை அவசரமாய்ச் சந்திக்க வேணுமெண்டு சொல்லிவிட்டிருக்கிறார்"
“என்னைக் காணாமல் சோதி மாமா தவிச்சுப் போட்டாராமே? அவரின்ரை தோட்டத்துக்குள்ளைளங்களின்ரைமாடுகள்போகேல்லை. நான்நான்தான்மாடுகளைச் சரியாகக்கட்டாமல் விட்டிருக்கனெண்டுநினைக்கிறார்போலை. என்னிலைபழிபோட்டுப் பேசட்டும் பார்ப்பம். நானும் சும்மா விடமாட்டன். எல்லாரும் என்னை இழிச்ச
ിഞ്ഞുB| i'r
"கற்பூரம் கொழுத்த முதல் சந்நதம் கொள்ளதையடா, அவர் என்னத்துக்குக் கூப்பிடுகிறாரெண்டு தெரியுமோ?"
எனக்குத் தெரியாதே? அவற்ரை தோட்டத்துப் பயிரை ஆடுமாடு மேய்ஞ்சிட்டுதாம். எங்கடைமாடுகள் மேய்ஞ்சு போட்டுதெண்டு பேசப்போறார்.நான்தான் மாடுகளை விட்டிட்டன் எண்டது அவரின்ரை எண்ணம்”
"எட விசரா, அவரின் ரை மூத்த மகன் கனடாவிலையிருந்து வந்திருக்கிறானெல்லே. ஏதோ பாசல் வைச்சுக்கொண்டுதேடுறார்”
அக்காவுக்குக் கோபம் வந்தது.
"எல்லாருக்கும் கொடுத்தபிறகு ஏதாவது சக்கட்டை சாவட்டையை என்னட்டைத் தின்ன வந்திருப்பர்”
முணுமுணுத்துக்கொண்டு பழனிவேல் எழுந்துநடக்கிறான்.
எண்ணிாைக்குணமுடையோர் 22

னெர்விலாக்குணமுடைMெ - 03
தன் வாலைத் தானேயுயர்த்தி
“என்ன ஸ்கந்தராசா அண்ணை, சந்தைக்குப் போறியளோ? நான், கிராம அபிவிருத்திச்சங்க விசயமாய் உதிலை சிவகுமார் ஐயா வீட்டுக்குப் போறன். வாற கிழமை சங்கத்தின்ரை ஆண்டுப் பொதுக்கூட்டமெல்லே?நீங்களும் அறிஞ்சிருப்பியள் நானே. சகல ஆயத்தங்களும் என்ரை பொறுப்புத்தானெண்டு ஐயா விட்டிட்டார். சங்க அங்கத்தவர்களுக்கு நன்மை தரக்கூடிய மூன்று திட்டங்களை அன்றைக்குச் செயற படுத்தப்போறம். சில விசேஷ நிகழ்ச்சிகளும் கூட்டம் நடக்கிற அன்று நடத்தவெண்டு இழங்கு படுத்திறம்.
உங்களுக்குச் சொன்னாலென்ன இன்ன இன்ன விசயங்களை இப்பிடி இப்பிடிச் செய்யலாமெண்டு ஆலோசனை சொன்னது நான்தான். ஐயா, உடனை பொறுப்பெல்லாத்தையும் என்ரை தலையிலை போட்டிட்டார். என்ன செய்யிறது? எங்களின்ரை ஊர் நன்மைக்காகச் செய்யத்தானேவேணும். இந்த விசயமாய் ஓடித்திரியிறகிலை பாருங்ககோதாடியையும் வளரவிட்டிட்டன். எங்கை இதுக்கெல்லாம் நேரம்?
ஈருருளியில் வந்துகொண்டிருந்த சண்முகநாதனை, தன் ஈருருளியில் இருந்தவாறே ஸ்கந்தராசா திரும்பிப் பார்க்கிறார்.
தாடியை வளரவிட்டிருந்தாலும் சண்முகநாதன் அணிந்திருந்த வேட்டி, மேற்சட்டை, சால்வை எல்லாமே கச்சிதமாக விருந்தன. ஆள் அதிக உயரமென்று கூற முடியாது. மாநிறம். முகத்திலும் தோற்றத்திலும் ஒரு பெரிய மனிதத்தோரனை.
"ஐயா இப்ப நாலு தரம் கோல் போட்டிட்டார். "சண்முகநாதன் ஏனின்னும் வந்துசேரேல்லை எண்டு அரைமணித்தியாலத்துக்கொருக்கால் எடுத்துக் கேட்கிறார். சிவகுமார் ஐயாவுக்கு எந்தநேரமும் நான் பக்கத்திலை இருக்கவேணும். நீ என்ரை வலதுகை மாதிரி எண்டு சொல்லுவர்.
Aviewfikonaigavoup6(dLGuit 23

Page 20
இந்தச் சிவராத்திரி அண்டு பாடசாலைப்பிள்ளைகளுக்குப் போட்டிகள் எல்லாம் வைச்சு பரிசுகளும் கொடுத்தனங்களல்லோ? அந்தப் போட்டிகளெல்லாம் நான்தான் நடத்தி முடிச்சது. விழா அந்த மாதிரிநடத்தினனான். அதோடை அவருக்கு என்னை நல்லாய்ப்பிடிச்சுப்போச்சு.
அண்ணை, கந்தராசா அண்னை, ஒரு விசயம் சொல்லுறன்.
அபிவிருத்திச்சங்கத்தின்ரை ஆண்டுப் பொதுக்கூட்டம் வருகுதெல்லோ? அதிலை புதிய நிர்வாகசபைத் தெரிவு நடக்கும். அடுத்த தலைவராய் என்னைப் போடுற உத்தேசம் அவருக்கிருக்கு. அதைச் சிலபேருக்குச் சொல்லியிருக்கிறாராம்.
சுந்தர மூர்த்தியிலை, அதுதான் இப்ப இருக்கிற தலைவரிலை அவருக்கு அவ்வளவு பிடிப்பில்லை. அங்கத்தவர்கள் அவரைப்பற்றிச் சரியான குறையாம். ஊரவைக்கும் அவரின்ரை நடவடிக்கைகள் திருப்தி யில்லை. இப்ப அங்கத்தவர்களெல்லாம் சேர்ந்து என்னைத் தலைவராய்ப் போட்டால் நல்லதெனிடு
என்ன கந்தராசாண்ணை சிரிக்கிறியள்? நீங்கள் வேணு மெண்டால் ஊருக்குள்ளை கேட்டுப் பாருங்கோ, ஊராக்கள் கணபேருக்கு என்னைப் போடுறதுதான் விருப்பம். நான் சொன்னனான் எனக்கிந்தப் பதவிவேண்டாமெண்டு. எனக்கு உந்தத் தலைப் பாகை கட்டுறதிலை ஆசையில்லை. சனத்துக்குச் சேவை செய்யவேணும். ஊருக்கு உதவிசெய்யிறத்துக்காகத்தான்நான் இதுகளிலை ஈடுபட்டுழைக்கிறது. உந்தப் பதவியாலை என்ன பிரயோசனம் சொல்லுங்கோ. இனன்டைக்கு எங்கடைசனம் கஷ்டப் படுகுது. அவைக்குஉதவிசெய்யவேணும். அப்பிடிச்செய்யேக்கை மனதுக்க ஒரு திருப்தி அதுக்காகத்தான்நான்கஷடப்பட்டு இதுகளைச்செய்யிறது. நீங்கள்என்னசொல்லுறியள்?
சந்தை வந்திட்டுது. நீங்கள் சந்தைப்பக்கந் தானே போறியள்? அப்ப நான் (SuTuit CB 6p3L.
சண்முகநாதன் தனது பயணத்தைத் தொடர்ந்து சிவகுமார் வீட்டிற்குப் போய்ச் &ਸੀp.
"eBut, e3rt
சிவகுமாரின் மனைவிதான் கதவைத்திறக்கிறார்.
"es 666udo G3um”
அம்மாவே? ஐயா, காலையிலேயே வெளியிலை போட்டாரோ? நான் சங்கத்தைப் பற்றி அதுதான் எங்கடை கிராமமுன்னேற்றச் சங்கத்தைப் பற்றிக் கதைக்கவேணுமெண்டு காலமை தொடங்கிமூண்டுநாலுதரம் கோல் எடுத்தனான். எணர்ணிலாக்குணமுடையோர் 24

"நீங்களே கோல் எடுத்தது? அவரில்லையெண்டு சொன்னனான் தானே?"
“வந்திருப்பரெண்டு நினைச்சனம்மா, சங்கத்தின்ரை ஆண்டுப் பொதுக்கூட்டம் நடக்கப்போகுது.”
“உதுகளை அவரோடைகதையுங்கோ. அவரிருக்கேக்கை வாருங்கோ. எனக்கு வேலையிருக்கு."
“இல்லையம்மா. நான் சொல்லுற இந்த ஒரு விசயத்தை மட்டும் கேளுங்கோ. சங்கத்துக்கு இந்தமுறை என்னைத் தலைவராய்ப் போடச் சொல்லி ஐயாவிட்டைச் சொல்லுங்களன். நான் சங்கத்துக்காகநல்லாய்வேலை செய்யிறனான். தெரியுந்தானே. நீங்கள் சொன்னால் ஐயா செய்வர்.”
"நான் உந்த விசயங்களிலை ஈடுபடுகிறேல்லை. அந்தா ஐயா வாறார். அவரோடையே கதையுங்கோ?”
சிவகுமார் உந்துருளியில் வந்திறங்குகிறார்.
“சன்ைமுகநாதனே? என்ன இந்தப் பக்கம்?"
சண்முகநாதன் பணிவே உருவானார்.
“மகளின்ரை பிறந்தநாள். அதுதான் பலகாரம் செய்தனாங்கள். ஐஞ்சாறு LDmbLippup"
"இதுகளெல்லாம் என்னத்துக்குக் கஷ்டப்பட்டுக் கொண்டுவாறிர்?
"இதிலையென்னகஷ்டமையா?
“இப்பிடிஇரும்”
“Lugp6naTulsibGoeso eeu irr”
சண்முகநாதன்நின்றுகொண்டேயிருக்கிறார்.
“என்ன நிற்கிறீர். இருமன். எதாவது அனுவலோ?”
“இந்தச் சங்கத்திண்ரை ஆண்டுக்கூட்டத்தைப் பற்றிக் கதைக்கத்தான் வந்தனானையா”
“எந்தச் சங்கம்?"
“எங்களின்ரை கிராம அபிவிருத்திச் சங்கந்தானையா. இரண்டு மூண்டு நிட்டங்கள் சொன்னனான். பிறகு பார்ப்பமெண்டு சொன்னனிங்கள்."
ண்ைணிாைக்குணமுடையோர் 25

Page 21
“அதுகளைப் பிரேரணைகளப்எழுதித்தாரும். சுந்தரலிங்கமும் கொழும்புக்குப் போனதாலை அதுகளைப் பற்றி அவரோடைகதைக்க முடியேல்லை."
“அதுகள்நல்ல திட்டங்களையா. இவர் சங்கத்திலை அக்கறையில்லாமல் இப்பிடித் திரியிறதாலை அங்கத்தவர்கள் குறை சொல்லுகினம்.”
“ஆரப்பிடிச் சொன்னவை? என்னோடை ஒருதரும் கதைக்கேல்லை.”
“கனபேர் கதைச்சவை நான் சொன்னதிட்டங்களை நடைமுறைப்படுத்தினால் தங்களுக்கு நல்லதெனிடு ஊர்ச்சனம் சொல்லுகினம்.”
“உம்முடைய திட்டங்களை நடைமுறைப்படுத்த நிதிவளம் வேணுமே.”
சிவகுமாரின் குரலிலே படிப்படியாக உஷ்ணம் ஏறுகிறது.
"நீங்கள் என்னைத் தலைவராய் விட்டுப் பாருங்கோ. நான் அதுகளை நடைமுறைப்படுத்திக் காட்டுறன்”
“எப்பிடிச் செய்வீரெண்டு சொல்லுமன்"
“என்னை விடுங்கோ. நான் செய்வன் ஐயா, நான் சுந்தரலிங்கம்
&പ്രrങ്ങബuിങ്ങാണ്
“உமக்கு ஒரு விஷயம் தெரியுமோ? சுந்தரலிங்கம் ஒரு பெரிய திட்டத்துக்கு நிதி ஒழுங்கு செய்யத்தான் கொழும்புக்குப் போனவர். போன காரியம் வெற்றியெண்டு அறிவிச்சிருக்கிறார். இதாலை ஊராக்கள் நூற்றைம்பது இருநூறு பேருக்கு உடனடியாக வேலை வாய்ப்பிருக்கு. பிறகு இன்னும் கூடலாம். அவர் வந்த உடனையே ஆண்டுவிழாவுக்குமுந்தியே, மளமளவெண்டு ஆகவேண்டியதைச் செய்யத்தொடங்கிற தெண்டு உத்தேசித்திருக்கிறார்.”
சுந்தரலிங்கம் வந்த உடனை ஒரு வரவேற்புக் கொடுக்க எங்கடை ஊர்க்காரர் ஆயத்தப்படுத்துகினம். நீர் விஷயம் தெரியாமல் வேறை யென்னவோ சொல்லுறீர்.”
“ளதுக்கும் நான் சொன்னதை ஒருக்கால் யோசியுங்கோ நான் வரட்டே?”
சண்முகநாதன் போவதற்கு ஆயத்தமாகத் தன் ஈருருளியை எடுக்கிறார்.
676osofkonaigav7gpal(Sunit 26

கெர்னிலாங்கணமுடைெேM - 9
யாவரும் கேளிர்
தங்கச்சிபிள்ளை, நல்ல கீரைப்பிடி இருக்கடா. கடைஞ்செடுத்தால் வெண்ணெய் மாதிரி வரும். குழந்தைக்குக் குடுக்க நல்லது. மகன் இப்ப சோறு சாப்பிடத் தொடங்கியிருப்பர் என்ன?
அப்பு, இண்ைடைக்குநல்ல பாவக்காய் வந்திருக்கு, சலரோகத்துக்குநல்லதெனிடு தேடித்திரியிறனிங்களெல்லே?"
சந்தையில் தனக்கு முன் மரக்கறிவகைகளை வகைப்படுத்தி அழகுற அடுக்கி வைத்திருந்த சாயீஸ்வரி, வியாபாரத்தில் மும்முரமாகவிருந்தாள். அவள் முன்னிருந்த எல்லாமரக்கறிகளுமே புதியவையாகவும் தரமானவையாகவும் இருந்ததுடன் அவள் அவற்றைக் கச்சிதமாகக் காட்சிப்படுத்தியிருந்ததும் பார்ப்போரை மிகவுங் கவர்ந்தது.
அவளுக்கு வயது அறுபதைத்தாண்டியிருக்கும். ஆங்காங்கே வெள்ளிக்கம்பிகள் தலையில் தலைகாட்டியிருந்தன. அவளதுநிறம் என்னவோ கருமைதான். முகத்திலே மாறாத சிரிப் பொன்று நிரந்தர வாசஞ்செய்வதால் அந்தக் கருமை மங்கி விடுகிறது. கண்களில் ஒளிரும் அன்பும் அதற்கு மற்றொரு காரணமாயிருக்கலாம். அந்த அன்பு நாவிலும் பிரவகித்துக்கொண்டிருக்கும். அணிவது பழைய சேலைகள்தானென்றாலும் தூய்மையானதாகச் சீராக அணிவது அவளது இயல்பு
"கத்தரிக்காய் வேணுமே?”
கேள்விஅவளைநிமிரவைக்கிறது. கண்கள் ஒரு நோட்டம் விடுகின்றன.
"ஏனப்பு இப்பிடி முத்தவிட்டுக் கொண்டாறி? நிறைக்கு நிற்குமெண்டோ? நான் இதிலை வைச்சிருக்கிறதிலை ஏதாவது முத்தல், கந்த்தை யெண்டு வாங்கி வைச்சிருந்தனென்டால் உதுக்கு விலை சொல்லும்”
இதைக் கூறும்போதுகூட எதுவித கடுப்புமில்லாத பதனமான குரல் எப்படி இவளுக்கு வந்து வாய்க்கிறதோ? எண்ணிலாக்குணமுடையோர் 27

Page 22
இராசாத்தி இங்கை வாரும். ஏன் தங்கச்சி முறைச்சுக் கொண்டிருக்கிறீர்? எல்லாரும்பிழைக்க வந்தனாங்கள். எங்களுக்குள்ளை போட்டி, பொறாமை, கோபதாபம்
கூடாதனை.
நான்சனத்தை வளைச்சுப்போடுறனெண்டு சொன்னனிராம். மற்றவையிட்டைப் போகவிடாமல் நான் ஆரையும் மறிக்கிறனானே? உமக்கு ஐஞ்சாறு வருசம் முந்தியே சந்தைக்கு வந்து வியாபாரஞ்செய்யத் துவங்கினனான். இன்றுவரை ஆருக்கும் போட்டியாய் வியாபாரஞ் செய்யவேணுமெண்டு நினைச்சதில்லை.
if a s க்குஇ ம் கடன்கொடுக்கி ர்தான். ஆனால்
உங்களைவிட விலையைக்குறைச்சுச் சொல்லிப் போட்டிபோடவாறனானோ? வாங்க வாறசனத்துக்கு அள்ளியோகிள்ளியோ கொடுக்கிறனானே?
ஏதோ மந்திரதந்திரஞ் செய்யிறனெண்டு சொன்னிராம். அன்பு நேர்மை இந்த இரண்டு மந்திர தந்திரந்தான் எனக்குத் தெரிஞ்சது.
தம்பி, வாங்கோ உருளைக் கிழக்கு அரைக்கிலோ போடவே அப்பன்? இப்ப S (860? க்கு விருட் Sr. ispi Lu 6 பிற்கேச் - - - அடிக்கடி வாங்கிறவா
உருளைக் கிழங்கை, கைதராசில் போட்டுக்கொண்டிருக்கையில் அவ்வழியே வந்த பொன்னுத்துரைமாஸ்ரரைக் கண்கள் கண்டுவிடுகின்றன.
“வாங்கோ ஐயா இரண்டு கிழமையாய் ஆளைக் காணேல்லை. விசாரிச்சனான், ஆஸ்பத்திரி யிலை இருந்தனிங்களாம். இப்ப வருத்தம் சுகமோ? உடம்புக்கு நல்ல சத்தான சாமான். நல்ல பிஞ்சுவெண்டிக்காய் கிடக்கு. எவ்வளவு போட? அரைக் கிலோ போடட்டே? அரைக்கிலோ கூடிப்போமென்ன? உங்கடை வீட்டுக்கு என்னத்துக்கு அரைக்கிலோ? காக்கிலோ போடுறன். வேறை என்ன வேணுமையா? பொன்னாங்காணிதரவோ? வல்லாரை தரவோ?
வியாபாரம் மளமளவென்று நடந்து பொருட்களும் குறைய சந்தையில் சனநெரிசலும் குறைகிறது.
"இங்கைதம்பிகுனம், உதிலை முகத்தாரின்ரைகடையிலை ஐஞ்சு ஜெலியும், மற்றதுகப்புற இனிப்பு அதுதான் ஐஸ்பழம்மாதிரிகுச்சியிலை பிடிச்சுச் சூப்புற இனிப்பு. தெரியுந்தானே தம்பிக்கு அதிலை ஆறும் வாங்கிக் கொண்டு வாறிரே ராசா? இந்தாருமப்பு காசு, கெதியா ஒடியா ராசா. நான் போகவேனும்,
இண்டைக்குக் குலநாயகத்தின்ரை அந்தியேட்டியெல்லெ? ஒருக்கால் அங்கை போட்டுத்தான் வீட்டை போகவேணும்.
இராஜேஸ், மிச்சமாய்க்கிடக்கிறதுகளை உம்மட்டைத்தரட்டே? வித்துப்போட்டுத் திருற்ணிலாக்குணமுடையோர் 28

குணத்தைக் காணேல்லை, குநைாயகம் வீட்டு ஒழுங்கைப் பக்கம் போனால் இந்தச் சின்னண்கள் வந்து "ஆச்சி எண்ணுங்கள். ‘அம்மம்மா எண்ணுங்கள். என்னோடை வலு வாரப்பாடு. அதுதான் உவர் நாகராசா அண்னையின்ரை பேரப்பிள்ளையளைத்தான் சொல்லுறன். அதுகளுக்கு இந்த "ஜெலியெண்டால் நல்ல விருப்பம், அங்கை போறதெனிடால் எப்பவும் “ஜெலி கொண்டு போறதாலைகையைப் பாக்குங்கள். குழந்தையளெல்லே?
இவன்பெடியை இன்னும் காணேல்லை. என்ரைபேரன்மாருக்கு இந்தச்சூப்புற இனிப்பு ஒவ்வொருநாளும் கொண்டுபோகவேனும், வழமையாய் உவன் சுந்தரத்தை விட்டுத்தான் வாங்கிறனான். இண்ைடைக்கு அவனைக் காணேல்லையெண்டுதான் குணத்தை விட்டது. இவனை இன்னுங்கானேல்லை.
அவனைக்காணேல்லையெண்டுகோவிக்காமல் சிரிச்சமுகமாயிருக்கிறனோ? ஏன் கோவிக்கவேனும்? அந்தப் பிள்ளை எனக்கு உதவிசெய்யவெண்டுதானே போனது? இடையிலை என்னென்ன தடங்கலோ? விசயம் விளங்காமல் எரிந்து விழுந்து என்னத்தைக் கண்டம்?
எந்த நேரமும் சிரிச்சபடியிருந்தானும் எனக்கும் உள்ளுக்குள்ளை எத்தனையோ கவலையளிருக்கு. ஆருக்குப்பாருங்கோ கவலையில்லை? வீட்டுக்கு விடுவாசல்படிதான்.
கவலையளை நினைச்சு அழுதுவடிஞ்சு கொண்டிருந்தெண்ன பிரயோசனம்? வாழ்க்கையிலை சந்தோஷமுமிருக்குத்தானே. அதுகளை நினைச்சுப் பார்த்துச் சந்தோஷமாயிருக்கப் பழகவேணும். தெரிஞ்ச அறிஞ்ச மனிசரைக் கண்டு பழகிறதே ஒரு மகிழ்ச்சிதானே?
அந்தா குணத்தான் வந்திட்டான். பாவம் பிள்ளை அவசரப்பட்டு ஓடி வருகுது. என்ரை குஞ்சு நல்ல பிள்ளையடா. அப்பநான் வரட்டே?
676cciofotaieacockpool Giliir 29

Page 23
விெவிலாக்குணமுடையோர் - 10
உயிரோடு உறவாடி
“செல்லம், செல்லம், குட்டி, செல்லம் எங்கை போட்டாய்? செல்லம், செல்லம், அவளை எங்கை காணேல்லை? இவளோடை பெரிய கரைச்சல். இப்பிடி ஓடித்திரியிறதாலைநானும் கவனிக்காமலிருக்க ஆரும் மெல்லக் கொண்டுபோனாலும் தெரியாது, இப்ப இப்பிடிப் பிடிச்சுக்கொண்டுபோறதும் ஒரு தொழிலாய்ப்போச்சு.
ஏய் ஜூலி, நீஎன்ன செய்யிறாய்? செல்லத்தோடைநிக்க வேணுமென்டெல்லே சொன்னனான். நீஉங்கை படுத்துக்கிடந்திட்டுவாறாய் என்ன? பேசின உடனை கீழை விழுந்து கும்பிட்டுத்தலையைச் சரிச்சு, கண்ணாலை கெஞ்சி நல்லாய்ச் சாலங்கொட்டுவாய். நீஎன்ன செய்தாலும் பிழை பிழைதான். ஒடிப்போய்ச்செல்லத்தைத் தேடிப்பிடிச்சுக் கூட்டிக்கொண்டுவா.”
“க. க. சுக். ஓடு, ரஞ்சினி, ரஞ்சினி, உண்ரை செல்லம் போய், இராசாத்தி அக்காவின்ரை பூஞ்செடி எல்லாஞ் சரியாக்கிப் போட்டுது. எக்கணம் அவ வர என்ன சொல்லப் போறியோ தெரியாது."
"அவளை ஏசிக் கலைக்காதேங்கோ, பாவம், எப்பிடி வெருண்டுபோய் வந்து என்னட்டை அடைக்கலம் தேடுதெண்டு பாருங்கோ."
தன் அக்காவின்தடியடியிலிருந்துதனது ஆட்டுக்குட்டியைக் காப்பதற்காக ரஞ்சினி கீழேகுந்தியிருந்து அதைச்கட்டியணைத்துக்கொள்கிறாள். ஆட்டுக்குட்டிதன் தலையை நிமிர்த்திரஞ்சினியின் நரைவிரவிய கூந்தலை முகர்ந்துவிட்டுப் பின்னர் அவள் மேல் தலையைத் தேய்த்து மெய். மெய். என முணுமுணுக்கிறது.
“ஓமடா என்ரை செல்லத்தை அடிக்கப்பார்த்தவையோ?” என அதற்குப் பதில் கூறினாள் ரஞ்சினி.
முதுமை அவளது முகத்திலே அத்திவாரக் கல்லிட்டிருந்தது. நரையோடி
யிருந்தாலும் சுருள் சுருளான கூந்தலை அள்ளிச் சாதாரணமாக முடிந்திருந்த எண்ணிலாக்குனமுடையோர் 30

கொண்டையே அவளுக்கு ஓர் எழிலைக் கொடுத்தது. சிவந்த நிறம், உயர்ந்த ஒடிசலான தோற்றம், நெற்றியில் ஸ்ரிக்கள் கறுப்புப் பொட்டு.
அவளைத்திட்டித்தீர்க்க வேண்டுமென்னும் கொதிப்போடு போவோருக்குக்கூட அவளுடைய முகத்தை நேரெதிராகப் பார்த்தும் அந்தக் கொதிப்பு அடங்கிஅகன்றுவிடும். அவளது கண்களுள் கனிந்து ஊறும் ஓர் அலாதியான கருணையொளிதான் அதற்குக் காரணம் போலும்.
“என்னவோ நீயும் இராசாத்தி அக்காவும் பட்டதுபாடு"சலிப்போடுகையிலிருந்த தடியை வீசியெறிந்துவிட்டு உள்ளே சென்றாள் அக்கா.
நீ பயப்படாதை செல்லம் அண்டைக்கு சிவப்பனை இறைச்சிக்கு விக்க வெளிக்கிட்டவை. நான் விட்டனானோ? சொல்லடி. சண்டை பிடிச்சு அவனை விக்க விடாமல் நிப்பாட்டிப்போட்டன். நான் உங்களைப் பிள்ளையஸ் மாதிரி வளர்க்கிறன். பிள்ளையளை ஆரும் சாகச்சொல்லுவினமோ? சொல்லடி செல்லம், வேறை யாரும் சொல்லவந்தால் அம்மா விடுவவோ? அதுசரிநீயேன்வேறைவீட்டைபோய்ச்சுப்பிட்டனி நான் தாற சாப்பாடு போதாதே? சொல்லடி. இனிமேல் ஓரிடமும் போகக்கூடாது. தெரியுதோ? உன்னைக் கட்டிவைக்க எனக்கு விருப்பமில்லை. எப்பிடித்துள்ளிக்குதிச்சுத் திரியிறாய். ஓரிடத்திலை கட்டி வைச்சால் பாவந்தானே. கழுத்திலை இப்பிடித் தடி பொட்டுக்குள்ளலை போயிடுவாயெண்டுதானே கட்டி விடுகிறனான். இண்டைக்குப் LL6GdaouirT6D60 (SLT LIT 6T60rsor?
உங்கை பார். கோழிப்பிள்ளையஞக்குச் சோறு போட்டுவிட்டனான். இராசாத்தியக்காவின்ரை கோழியளும் வந்து திண்டு சாப்பிடுகினம், டோய். டோய். ஒடுங்கோ. உங்கடைவீட்டைபோங்கோ. பாருங்கோ எங்கடையாக்கள் நிண்டு சாப்பிட பக்கத்து வீட்டார் மட்டும் தங்கடை வீட்டுக்கு ஓட்டம் பிடிக்கினம், உங்களுக்கு நான் சொல்லுறது விளங்குதுதானே.
ஆனால் நான் உங்களோடைகதைச்சால் எனக்குச் சாடையாய்த்தட்டிப்போட்டு தெண்டெல்லே சொல்லுகினம், பலபேர் நான் கதைக்கிறது இவையஞக்கு விளங்குது எண்டதை நேரை பார்த்து அதிசயிச்சிருக்கினம்.
அண்டைக்கொருநாள் இராசாத்தியக்காவும் இங்கை நினிடவ. இப்பிடித்தான் நான் கோழியளுக்குத் தீண் போட அவவின்ர கோழியளும் வந்து சாப்பிட்டினம், இதேமாதிரி நான் போகச் சொன்ன உடனை போச்சினம், இராசாத்தியக்கா திகைச்சுப்போனா. நான் அடிச்சுக் கலைச்சாலும் போகாததுகள், நீசும்மா வாயாலை சொல்லப் போகுதுகளே. என்னவசியம் போட்டு வைச்சிருக்கிறாய்?" எண்டு கேட்டவ.
மனிதரையெண்டாலும் மிருகங்களையெண்டாலும் வசியப்படுத்திறது அன்புதான். அதுகளும் ஜீவராசிகள் எண்டு உணர்ந்து, அன்புசெலுத்திஅதுகளோடை பழகவேணும். எண்ணிாைக்குணமுடையோர் 31

Page 24
முந்திஅம்மா இருக்கேக்கை சொல்லுவா"நீநாயோடை அன்பாய் பழகிறமாதிரி தாயோடை பழகமாட்டாயாம்” எண்டு நான் அம்மாவிலை சரியான அன்பு, ஆனால் இந்தமிருகங்களோடை மற்றவையைவிடநான் அதிகமான அன்போடைபழகிறதாலை நான் அதுகளிலை கூடப்பாசம் வைச்சிருக்கிறன் எண்டு அவநினைச்சிருந்தவ.
என்ன இருந்தாலும் மிருகங்கள் மணிசர் மாதிரி இல்லை. இந்த வாயாலை கதைச்சு மணிசர் கெட்டுப்போகினம். அதுகள் கண்டபடி கதைக்கிறேல்லை. அதுதான் எனக்கு அதுகளிலை விருப்பம். அக்கா சொல்லுவகலியானங்கட்டி புருசன் பிள்ளையன் எண்டிருந்தால் என்னாலை இப்பிடிஇருக்கமுடியாதாம்.
அது உண்மையோ இல்லையோ தெரியேல்லை. ஆனால் நான் இப்பிடி இருக்கிறதாலை என்னை விசரியெண்டு ஒருதரும் கட்டமாட்டமெண்டிட்டினம் எண்டது மட்டும் உண்மை. அன்புக்கு விசரெண்டுபட்டஞ் சூட்டுறவையை நானென்ன செய்ய?
அ. இராசாத்தியக்கா வாறா, ஒரு போர் நடக்கப்போகுது.
"நாசமாய்ப் போன உந்த ஆட்டைக் கட்டிவைச்சு வளர் அல்லது வளர்க்காதை, என்ன மாதிரிக் கஷ்டப்பட்டு வளர்த்த பூக்கண்டெல்லாத்தையும் திண்டு போட்டுது."
இராசாத்தியக்கா நிசாப்புயல்போல வருகிறாள்.
"அக்கா அது செய்தது பிழைதான். இல்லையெண்டு நான் சொல்லேல்லை. ஆனால் மனிசரை மாதிரி வேணுமெண்டு செய்யேல்லை. எங்கடை வீட்டுப் படலையையும் உங்கடைவீட்டுப்படலையையும் திறந்துவிட்டதாலைதான் அதுவந்து திண்டிட்டுது. பிழைபடலையைத்திறந்துவிட்டவையிலையுமிருக்கு. அவளுக்காகநான்
“நல்ல வடிவாய்ச் சமாளிப்பாய். உதைக் கட்டிவைச்சாலென்ன? ஆடுதானே? DaofessogoboCul."
"ஆட்டுக்கும் மணிசருக்கும் எனக்கு வித்தியாசம் தெரியேல்லை. அதைக் கட்டி வளர்க்கவேண்டிய பிராணியாய் இறைவன் படைத்ததாய்த் தெரியேல்லை. அதின்ரை கழுத்திலை காலிலை ஏதாவது சேர்த்துப்படைச்சிருக்கிறானா."
“மனிசன் வந்து பூஞ்செடியைத்தின்னமாட்டான்”
"ஆடு வந்தால் தன்னுடைய வயிறு கொள்ளக்கூடிய அளவு தான் சாப்பிடக் கூடியதைச் சாப்பிடும். மற்றதைத் தொடாது. மனிசன் அப்பிடியா? ஓட்டை உடைசல் தொடங்கி நகைநட்டு மட்டும் அதுக்காக மனிசனையே கொலைசெய்து. என்னைக் கேட்டால்மனிசனைத்தான் கூண்டிலை அடைச்சுவைக்கவேணும்."
"உன்னோடைகதைச்சால்.”
இராசாத்தியக்கா திரும்பிநடக்கிறாள்.
எண்ணிாைக்குணமுடையோர் 32

னிெலிலAக்குணமுடைவேM -1
உள்ளே ஒரு
என்ன பதுங்கிறனோ? புலி பதுங்கிறது பாய்ச்சலுக்கடையாளமெண்டு சொல்லுறவை தெரியாதே.
பாரடா இப்ப எறியிற எறியிலை அந்த நாய்ப்பிள்ளையற்றை கால் எப்பிடிப் போகுதெண்டு.
பாத்தியாகாலாலை இரத்தஞ்செட்டச்சொட்டஊளையிட்டுக்கொண்டுஓடுறதை எறிஞ்சனென்டால் என்ரை எறிஎறிதான்.
பாவமோ? அதென்னடாபாவமெண்டால்..?நான் அடிவாங்கேக்கைநீர் பாவம் umřtůú(3ym?
அங்கை பார் குமணன் வாறான் என்னைக் கண்பாலே ஆள் தலைதெறிக்க ஒடுவன். நான் மறைவாய் நிற்கிறன். நீபேசாமல் நில்.
போய், குமணன், எங்கையபா போறாய்? இங்கை வா. வாவெண்பால் உடனை வரவேணும். என்ன பதுங்கிறீர்? வாடா இங்கையெண்டால். அ.அ. அப்பிடிவாபா, உண்ரை புத்தக பாக்கிக்கை என்ன இருக்கெண்டு பார்ப்பம், அட நல்ல படம்போட்ட கொப்பியளாய்க் கிடக்கு. அம்மா வாங்கித் தந்ததோ?
இல்லையோ? என்ன தலையைத் தலையை ஆட்டுறாய், உனக்கொங்கையபா அம்மா. நீதானே அம்மாவைச் சாகக்கொண்டனியாம். என்னடா தறத்தறவெண்டு முழுசிக்கொண்டுதலையை ஆட்டுறாய், வாய் பேசாதே?நீஊமையே?நீபிறக்க அம்மா செத்திட்டாவெல்லே? அப்பநீதானே அவவைச்சாகக்கொண்டனிடேய்தாயைத்தின்னி தாயைத் திண்னிசொல்லடா. நான் ஒரு தாயைத்தின்னி, பத்துத்தரம் சொல்லடா.
டேய் சொல்லாட்டா என்ன நடக்குமெண்டு தெரியுமெல்லே?கெதியாய்ச்சொல்லு, என்ன க்கிறாய்?ஒண்டும்கேட்கேல்லை, பலத்து bலுஇப்பவும் எனக்குக் எண்ணிலாக்குணமுடையோர் 33

Page 25
கேட்கேல்லை. அ. இப்பதான் நீசொல்லுறது எனக்குக் கேட்குது. இப்பிடிப்பத்துத்தரம் ബ്ളൂ.
இதென்ன தொண்ணுற்றெட்டு மாக்ளம் வாங்கியிருக்கிறாய்? நூறு வாங்கேலாதே? பிறகேனடா உனக்கு வடிவான கொப்பி கிழிச்செறிஞ்சு போட்டன். டேய் ஏனபாகிழிச்சகொப்பியை எடுக்கப்போறாய்? அதைத்தொடாதை. போய் அப்பாவிட்டைச் சொல்லிப் புதுக்கொப்பிவாங்கு என்ன?
இஞ்சைகிட்டவாபா, கிட்டவாடா ஏனடா பயப்பிடுகிறாய்? வாடாகிட்ட சொன்னால் வா, அ. அப்பிடிவா. நான் சொன்னனானெல்லே வெள்ளை சேட் போடக்கூடாதெண்டு அண்டைக்கு மணர்டி ஒயில் தெளிச்சுவிட்டனானெல்லே. அப்பிடியே போடவேணுமெண்டெல்லே சொன்னனான். பொறு உண்ரை சேட்டுக்குச் செய்யிறன்
ഖങ്ങാണു.
குமணனின் சட்டை முழுவதும் சேற்றுநீரை அள்ளித்தெளிக்கிறான் இராகவன்.
அழுதுகொண்டு போகும் குமணனை இரசிப்பவன் போலப் பார்த்துக்கொண்டு நிற்கிறான் அவன்.
நெடிய உருவம், கருமைநிறமென்றாலும் அழகான முக அமைப்பு. ஆனாலும் எங்கோ எதிலோ ஒரு விகாரம். முகம் முழுவதுமா? இல்லை, அந்தக் கண்களிலேதான் ஒரு வக்கிரம். அதில்லாமல் அந்தக்கண்களிலே அன்பு ததும்பியிருக்குமானால் அந்த முக அழகே அலாதியாக இருந்திருக்கும். முன்னே அலட்சியமாக விழுந்துகிடந்த தலைமுடியும் ஒரு காவாலித்தனத்தைக் காட்டியது. அதை அடிக்கடி புறங்கையால் ஒதுக்குவது தனது தனித்துவ அடையாளம் என்பது போல் அவனுக்கு ஓர் எண்ணம். கைகால்கள் தசைப்பிடிப்பற்ற எலும்புகளகத் தோற்றமளித்தன. கறுப்பு நூலில் ஒரு தாயத்தைக் கோர்த்துக் கழுத்திலே கட்டியிருந்தான்.
“டோய், ரவி வாறான்டா இராகவன் போருக்குத் தயாரானவன் போல் நிற்க, அவனை ஏறஇறங்கப் பார்த்தரவி,
“என்னோடைதனுகுவீரோ? வாரும் பார்ப்பம். இன்டைக்கு உம்முடைய கால் முறிச்சுத் தான் அனுப்புறது என உறுமினான்
“என்ரை காலை முறிக்கப் போறிரோ? வாரும்பார்ப்பம். ஏனுமெண்டால் வாரும் பார்ப்பம், எப்படி என்ரைகராட்டி அடி?”
கேட்டுக்கொண்டே இராகவன் அடித்த அடி பட்டதும் சிலிர்த்துக் கொண்டு பாய்ந்தான் ரவி
“டேய் விடடா. தலைமயிரை விடபா விடாட்டி நடக்கிறது வேறை"
எண்ணிலாக்குணமுடையோர் 34

“66öre6oTLIT 6&fuil6 Tuil?”
"உண்ரை கால் முறிப்பன். டேய் விடடா. காலை. ஐயோ விடயா"
"சொறிநாய்க் குட்டி மாதிரிக்கத்துறார். வாயொண்டு தானிருக்கு. எல்லாம் வாய் வீரந்தான். ரவியிட்டை உது பலிக்காதபா."
“டேய் எந்தக் கொம்பனுக்கும் நான் மசியமாட்டனடா நான் இப்ப போறது உனக்குப்பயந்தெண்டுநினைக்காதையடா. ஒருநாளைக்கு உம்மை ஒருகை பார்ப்பன். சொல்லிப் போட்டன். ஒ."
“சொல்லுறதை இங்கை நிண்டு சொல்ல வேணும். ஓடிப்போறார். ஒடியோடி அவற்ரைகதையைப்பார்."
“எமகிங்கரன் மாதிரிக் காலை நெரிச்சு விட்டிட்டான். இனி வீட்டை போனால் பெரியம்மா "படி படி எண்டு சொல்லுவ எனக்குப் படிப்பெண்டால் செண்மத்துப் பகை, ஆனால் அவமட்டுந்தான் படிக்கச்சொல்லுறது. வீட்டிலை மற்றவையெல்லாம் வேலை தான் சொல்லிச் செய்விப்பினம். அப்பா அம்மா இல்லாத அநாதைதானே. என்னவுஞ் செய்யலாமெண்டயோசனை, என்னத்தைச்செய்தாலும்எவ்வளவைச்செய்தாலும் பிழை பிடிப்பினம் குட்டுவினம். அடிப்பினம், எனக்குக் கோவந்தான் வரும்.
இவைக்கு நல்ல வேலை காட்டவேணுமெண்டு யோசிக்கிறனான். இருந்து பாருங்கோ இவையஞக்கெல்லாம் நல்லாய்ப் படிப்பிக்கப்போறன். நெடுக நான் சின்னப்பிள்ளையே? சொல்லுங்கோ பார்ப்பம்.
எண்ணிலாக்குணமுடையோர் 35

Page 26
வெர்லிலாக்குனிமுடைவோர் -12
புல் தடக்கினும் புரண்டுவிடும்
"திருவிழாவுக்கு மூர்த்தியண்ணையின் ரை மேளக்கச்சேரியை ஒழுங்குபடுத்துறது என்ரை வேலை பாருங்கோ. திருவிழா வாற சனிக்கிழமை தானே. சதா அண்ணை, மேளக்கச்சேரி எண்ரை பொறுப்பு. அதை ஒழுங்குபடுத்தியாச்சு எண்டே வைச்சுக் கொள்ளுங்கோ. எண்ணெண்டு இவ்வளவு திடமாய்ச் சொல்லுறனெண்டு யோசிக்கிறியளோ? எங்கடை சின்னராசாவோடை மூர்த்தியண்ணை ஒட்டெண்டால் ஒட்டு. சின்னராசா கேட்டால் மூர்த்தியண்ணை ஒருநாளும் மறுத்துச் சொல்ாைர். சின்னராசாவைப் பிடிச்சால் எல்லாம் நடக்கும். அந்தத் துணிச்சலிலைதான் சொல்லுறன். அப்ப நான் வரட்டே?” கருணாகரனின் ஈருருளி சின்னராசாவின் வீட்டை நோக்கி வேகங்கொள்கிறது.
“சின்னராசா, சின்னராசா”
சின்னராசாவின் வீட்டின் முன்னே ஈருருளியை நிறுத்திவிட்டு அதிலிருந்தபடியே படலைக்கு மேலால் தலையை நீட்டி கருணாகரன் அழைத்தான். கருணாகரன் சாரமும் சேட்டுந்தான் அணிந்திருந்தாலும் அவ்வுடையில் கவனமெடுத்திருந்தது தெரிந்தது. ஒரு சிறு மீசை அளவாக விட்டிருந்தான். தலைமுடியைப் படிய வாரியிருந்தான். ஒரு பெரிய மனிதத் தோரணை காட்டுவது இயல்பாகி விட்டிருந்தது.
“அவரில்லை” என்ற பதில் முன்வர சின்னராசாவின் மனைவி வாசலிலே காட்சி கொடுத்தாள்.
“எப்ப வந்தால் அவரைச் சந்திக்கலாம்?" "அவர் வெளியிலை போட்டார்”மனைவியின் குரலிலே ஒரு தயக்கம்.
“6 Lu esald56ğr?" கருணாகரனின் கேள்விக்குப் பதிலளிக்காது அவனை ஆராய்வதுபோலப் பார்த்துக்கொண்டு அவள் நின்றாள்.
"மூர்த்தி அண்ணையின்ரை மேளக்கச்சேரி ஒழுங்குபடுத்தவேணும். அதுதான் சின்னராசாவைக் கேப்பமெண்டு வந்தனான். நான் கருணாகரன். வேலுப்பிள்ளை விதானையாற்ரை பேரன். வாற சனிக்கிழமைத் திருவிழாவுக்கு ஒழுங்கு செய்யனும்” எண்ணிலாக்குனமுடையோர் 36

“ஓ. விதானையாற்ரைபேரனோ? அவர் சொல்லுறவர். சனிக்கிழமைக்கெண்டா அவர் ஒழுங்குசெய்து தாறது கஷ்டம்” அவளது பதில் கருணாகரனது உச்சந்தலையில் ஓங்கி அறைந்தது.
"ஏன்?"
"அ. அது. அவர் ஒரு விசயமாய்க் கொழும்புக்குப் போட்டார். ஞாயிறு தான் வருவர்" அவள் தயங்கித் தயங்கிக் கூறினாள்.
"அப்பிடியோ? அப்ப நான் வாறன்” கருணாகரனின் ஈருருளி சதா அன்ைனை வீட்டை நோக்கி வேகமாக ஓடத் தொடங்கியது.
"எனக்குத் தேவையில்லாத வேலை. ஏன் உதுக்கு ஒப்புக்கொண்டனோ தெரியாது. சும்மா இருக்கமாட்டாமல் உதுக்கை போய் மாட்டுப்பட்டிட்டன்”
கருணாகரன் மனதிற்குள் புலம்பிக்கொண்டே சென்றான். வீட்டிற்கு முன்னிருந்த பலா மரத்தில் இருந்த பலாக் காய்களைச் சுண்டிப் பதம் பார்த்துக் கொண்டிருந்த சதா அணிணையைக் கண்டதும் அரக்கப் பரக்க ஈருருளியிலிருந்து இறங்கினான் கருணாகரன். "சதா அண்னை, சதா அண்ணை, அந்த மேளக்கச்சேரி அலுவல் சரிவராது"
"ஏன் சரிவராது? உங்கடை பொறுப்பெண்டீங்கள்"
“என்ரை பொறுப்பெண்டு சொன்னனானெண்டு என்னை மாட்டப் பார்க்கிறியள் என்ன? நானே திருவிழாச் செய்யிறன்? நீங்கள் தானே? அப்ப, நீங்கள் தானே பொறுப்பு?"
கருணாகரனின் உடல் முழுவதும் பதற்றம். குரல் ஓங்கி ஒலிக்கிறது.
"பொறும். பொறும். பொறுமையாய்க் கதையும். மூர்த்தியர் வேறையெங்கேயோ கச்சேரிக்கு ஒப்புக்கொண்டிட்டாரோ?”
சதா அண்னை அவனை ஆசுவாசப்படுத்திக் கேட்கிறார்.
"நான் சின்னராசா மூலந்தானே அவரை ஒழுங்குபடுத்திறனெண்டனான். சின்னராசா கொழும்புக்குப் போட்டுதாம்"
“மூர்த்தியரிட்டை நேரை போய்க் கேட்டு ஒழுங்குபடுத்தலாந்தானே. அவர் ஓரிடமும் போகேல்லைத்தானே"
"அப்பிடியெண்டால் நீங்கள் போய்ப் பாருங்கோ. எனக்கு சின்னராசாவைத்தான் Lipissib"
“சரி. அதை நான் பார்க்கிறன்" சதா அண்ணை விடயத்திற்கு முற்றுப்புள்ளியிடுகிறார்.
“என்ன ரமணன் இந்தப் பக்கம்?" தன்னைத் தேடிவந்த சத்தியரமணனிடம் கருணாகரன் கேட்கிறான்.
எண்ணிாைக்குணமுடையோர் 37

Page 27
“அசத்திப் போட்டீங்களாம அண்ணை" "ஓ, இலவச மருத்துவ முகாம் நடத்தினதைப் பற்றிச் சொல்லுறீரே. வலுதிறமாய் நடந்தது. கேள்விப்பட்டிருப்பீர் தானே. எங்களின்ரை சமூக அபிவிருத்திச் சங்கக் காரியதரிசிதான் ஒழுங்கு செய்வமோ எண்டு கேட்டவர். எங்கடை அரவிந்தனும் இப்ப மருத்துவ மாணவண் தானே. ஒடியோடி எல்லா ஒழுங்குகளும் செய்தான். பள்ளிக்கூடத்திலை நடத்துவமெண்டு நினைச்சன். அதிபரும் எண்னோடை படிச்சவர். போய்க்கேட்ட உடனை ஒத்துக்கொண்டதுமட்டுமில்லை, பள்ளிக்கூடப்பிள்ளையளையும் விட்டு உதவியள் செய்தவர். ஓடியோடி எல்லாம் செய்தது நான் தான். சனத்துக்கு எவ்வளவு பிரயோசனந்தெரியுமே? கண்டவை எல்லாரும் பாராட்டிநன்றிசொல்லுகினம்" "நாங்களும் எங்கடை பக்கம் மருத்துவ முகாமொண்டு நடத்துவமெண்டு யோசிச்சம். உங்களைப் பிடிச்சால் அதே மாதிரி ஒழுங்குபடுத்தித் தருவீங்களெண்டு தான் வந்தனான்.
"ரமணன் கேட்டால் செய்து தரத்தானே வேணும். பொதுமக்களுக்குச் செய்யிற சேவை தானே. நான் அந்த மாதிரி ஒழுங்குபடுத்தித் தாறன். எங்கை நடத்துறது எண்டதையும் முடிவெடுக்கவேணும், மகாவித்தியாலயத்திலை நடத்தலாந்தானே. அந்த அதிபரும் நம்மடை ஆள்தான். எல்லாம் வெண்டுகொண்டு நாளைக்கு வந்து சந்திக்கிறன்"
"அப்ப நான் வரட்டே அணிணை?” சத்தியரமணனும் மகிழ்ச்சியுடன் விடைபெற்றான்.
“இவனுக்குச் சோதினை நடத்த இப்ப தான் நேரம் கிடைச்சிருக்கு. ஏன் ஒரு கிழமை பொறுத்து நடத்தலாந்தானே? புறுபுறுத்துக்கொண்டே வந்த கருணாகரன் முன் வராந்தாவில் பத்திரிகை பார்த்துக் கொண்டிருந்த சத்தியரமணனைக் கண்டதும் ஈருருளியிலிருந்து அவசரமாக இறங்குகிறான்.
சந்தடி கேட்டுத் திரும்பிய ரமணன் மகிழ்ச்சியுடன் “வாங்கோ அண்ணை. இப்ப தான் அரவிந்தன் போறான். தான் எல்லா ஒழுங்கும் செய்து தாறதாம்” எனக் கூறி
முடிக்குமுன்னரே கருணாகரன் ஆவேசமாகத் தொடங்கினான்.
“அவர் எங்கை ஒழுங்குபடுத்துகிறது? மகாவித்தியாலய அதிபர் சோதினை நடக்கப் போகுதாம். இடம் தரோைது எண்டிட்டார். இனி எண்ணெண்டு மருத்துவமுகாம் நடத்திறது. எல்லாத்தையும் நிப்பாட்டுங்கோ"
"ஏனண்ணை, சோதினை முடிய அடுத்த ஞாயிறு நடத்தலாந்தானே. அல்லது வேறை இடம் பார்ப்பம்"
“வேறை இடம் பார்க்க எண்னாலை ஏலாது. வேணுமெண்டால் நீங்கள் போய்ப் பாருங்கோ. என்னை விடுங்கோ. நான் போட்டு வாறன்"
கருணாகரன் ஈருருளியில் ஏறுகிறான்.
எண்ணிாைக்குணமுடையோர் 38

னிெலிலAங்குணமுடைMே -?
நிறைவிலாக் குறைவே.
நானும் பார்க்கிறன் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு என்னத்தைச் செய்தாலும், சாணேறமுழஞ்சறுக்கிற கதையாய்த்தானிருக்கு.
பாருங்கோவன். இந்தப் பெடியைப் படிப்பிச்சு அவனாலை ஒரு பிரயோசனங்காணுவமெண்டு, எவ்வளவோ கனவு கண்டு, அவன் கேட்கிறதெல்லாம் வாங்கிக் குடுத்துப் படிப்பிச்சன். கடைசியாய் என்ன பிரயோசனம்? ஏதோ அங்கைதிறம். அங்கை போய்ப் படிக்கிறன். இங்கை படிச்சாத் தான் திறமாய்ப் பாஸ் பண்ணலாம். இங்கை போய்ப் படிக்கிறன் எண்டேதோ சொல்லிச் சொல்லி காசு காசாய் வாங்கிக்கொண்டு ஓடித் திரிஞ்சான். இப்ப சோதினை மறுமொழியைப் பார்த்தா வயித்தைப் பத்தியெரியது. இனி இவன் படிச்சுத் திரும்பச் சோதினை எடுத்து, அதுவும் என்னவாய்ப் போகுமோ? ஆர்கண்டது?
பிள்ளை இப்பிடியெண்டால்குடும்பவாழ்க்கை அதைவிடமோசம். அவர்ளங்கடை சொந்தந்தான். காதலிச்சுத் தான் கலியானங் கட்டினனான் பாருங்கோ. முதலிரண்டு வரியம் வலு ஒட்டு. அந்த மாதிரியிருந்தம். இவனும் பிறந்தான். பிறகு மூண்டு வரியம் அப்பிடி இப்பிடியெண்டு போச்சுது. பிறகு பிறந்த இரண்டு குஞ்சுகளும் பெட்டையள்.
இரண்டாவது பெட்டையும் பிறந்த பிறகு அவருக்கு என்ன வந்துதோ? என்ன நடந்துதோ? என்னைக் கண்ணிலைகாணக்கூடாது. நான்பழஞ்சீலைகிழிஞ்சமாதிரிப் புறுபுறுக்கிறனாம். புறுபுறுக்காம என்ன செய்யிறது? உழைச்சு ஒரு சதம் கொண்டு வரமாட்டார். மூண்டு பிள்ளையள். அதிலும் இரண்டு பெட்டைக் குஞ்சுகள். வெறுங்கையோடைவாறவருக்கு வெத்திலைபாக்குவைச்சு வரவேற்கிறதே? ஆளைக் காணக் குமுறிக்கொண்டு வரும். பேசாமலிருக்கநானென்ன பொம்மையே?
நானே அங்கையிங்கை போய் உழைச்சு, கறிபுளிவாங்கிச் சமைச்சுவைச்சால் அதுக்கு ஆயிரம் நொட்டை சொல்லிச் சாப்பிடுவர். எனக்குப் பத்திக்கொண்டு வரும்.
67ezzijifeoofkontaigé562opea.DLG3tLumiiT 39

Page 28
திருப்பி நல்லாய் நாலு கேள்வி கேட்பன். வேறை என்ன செய்யலாம் சொல்லுங்கோ. இந்த இந்திராணி என்ன ஊமையே? இவ்வளவு கஷ்டப்பட்டிட்டுப் பேச்சுக் கேட்டுக்கொண்டு வாயைத் திறக்காமலிருக்கேனுமே? தானும் உழைக்கிற நேரம் கொண்டு வந்து தாறது தானே எண்டு சொல்லுவர். இருந்திருந்திட்டு எங்கையாவது போய் வேலை செய்து போட்டு வாங்கிற காசிலை நல்லாய்க் குடிப்பார். மிஞ்சிறதைக் கொண்டு வந்து தந்தால் அதிலை குடும்பம் நடத்தேனுமே?
அண்டை அயலெல்லாம் கேட்கக் கூடியதாகக் கத்திறனானாம். என்ரை குரல் அப்பிடி. மணிசர் கோபம் வந்தாப் பெலத்துத் தானே கதைப்பினம். ஊருகைமெல்லாம் தெரிஞ்சவண்டவாளத்தைக் குசுகுசுக்கவேணுமே?
சட்டையின் வலது கையைத் தனது இடக்கையால் இழுத்து, முகத்தை வலது பக்கம் திருப்பிச் சாய்த்து கண்களையும் மூக்கையும் துடைக்கிறாள். "அடிக்கடி அப்படி அவள் செய்வது வழமை என்று அந்தச் சட்டைக்கை கூறியது.
போட்டிருந்த அரைப்பாவாடையிலும் சட்டையிலும் ஆங்காங்கே தைக்கப்பட்டும் தைக்கப்படாமலும் கிழிசல்கள். வாரப்படாத தலைமுடி பின்னலிடப்பட்டுக் கிடக்கிறது.
குந்தியிருந்து இரு முழங்கைகளையும் இரண்டு முழங்கால்களில் முட்டுக் கொடுத்து இரு கைவிரல்களாலும் நெற்றியை அழுத்திப் பிடித்தவாறு அழுது கொண்டிருந்தவள்ஆவேசம் வந்தவளகதலையில் இருகைகளாலும் அடித்துக்கொண்டு பலத்த ஓலமிட்டு அழுகிறாள்.
"அநியாயப்படுவான், உவன் நல்லாய் வாழுவனே? என்னை விட்டிட்டுப்போய் புதிசாய் ஒருத்தியைக் கட்டியிருக்கிறான். எவ்வளவு காலம் உவை சீர்சிறப்பாய் வாழப் போகினமெண்டு பார்ப்பம், அழிஞ்சுபோவன். நான் இஞ்சை நண்டும் சிண்டுமாய்ப் பிள்ளையளோடை கஷ்டப்படுகிறன். எண்ரை வயிறு பத்தியெரிய உவை
உருப்படுவினமோ?
தான் எவ்வளவு உழைச்சுக்கொடுத்தாலும் எனக்குமனம் நிறையாதாம். எந்த நேரமும் ஏதோ ஆரையோ குறை சொல்லிக் கொண்டிருப்பனாம். என்னோடை வாழமுடியாதாமெண்டு சொல்லிப் போட்டுப் போனவராமெண்டு அம்மா அடிக்கடிப் பேசுறா.
அம்மாவுக்காவது கொஞ்சம் அறிவு வேணும். மூண்டு பிள்ளையளோடை குடும்பம் நடத்துறது லேசுப்பட்ட காரியமே? அதை அவ யோசிக்கவேணும். நான் கத்திறதைப் பற்றித் தான் அவ யோசிக்கிறா. அவ வயசு போனவ. பாவம் பெத்து வளத்தது. ஏதோ சொல்லிப் போட்டிருக்கட்டும். அவவை விடுங்கோ.
இப்ப வந்த புதுப்பெண்டாட்டி என்ன செய்யப் போறாவெண்டு பார்ப்பம். காலம்
எண்ணிாைக்குணமுடையோர் 40

போகப் போகத்தானே எல்லாம் தெரியும். அப்ப அம்மாவுக்கும் விளங்கும். அவையைப் பற்றிக் கதைச்சு எனக்கு என்ன பிரயோசனம்? அவை எனின மாதிரியோ கிடந்தழியட்டும்.
ஆனால் இந்தக் குத்தியன், நான் பாடுபட்டுப் பெத்து வளர்த்த ஆம்பிளைப் பிள்ளை, நான் முழுக்க முழுக்கநம்பியிருக்கிறவன், நான் என்ரை உடம்பை வருத்தி அடிச்சுக் கொண்டந்து அவிச்சுப்போடத்திண்டுபோட்டு, "படிக்கிறன். படிக்கிறன் எண்டு காசுகாசாய்ப்பிடுங்கித்திரிஞ்சவன், இப்ப சோதினையிலை கோட்டை விட்டிட்டு வந்து என்னசொல்லுறான் தெரியுமே?
என்னோடையிருந்து படிக்கேலாதாம். எந்த நேரமும் கறகறத்துக் கொண்டிருக்கிறனாம். நான்மாரித்தவளை மாதிரிக்கத்திக்கொண்டிருக்க என்னண்டு படிக்கிறதாம். ஒரு தேவைக்குக் காசு கேட்டால் ஒரு கிழமை கத்துவனாம், என்ரை வயித்துக்கையும் என்ரைமடியிலையும் வளந்த பிள்ளை இப்பிடிச்சொல்லுது, எல்லாம் எனக்கு இப்பிடி வந்து முடியுதே.
முற்றத்து மாமரத்தடியில் குந்தியிருந்து அவள் அழுதுகொண்டேயிருக்கிறாள்.
எணர்னிாைக்குணமுடையோர் 41

Page 29
செர்விலnக்குணமுடைவேM -14
சிற்பி
“ஹரன். எங்கையோ போக ஆயத்தமோ? நான் இரவிரவாய் யோசிச்சுக்கொண்டிருந்திட்டு வெள்ளனவே வர வெளிக்கிட்டனான். பிறகு அது சரியில்லையெண்டு இப்பவாறன்"
ஈருருளியிலிருந்து இறங்கி உள்ளே வந்தவாறே சந்தோஷ் கூறியதைக் கேட்டு அவன் புறம் திரும்பினான் வீட்டு முற்றத்தில் நின்ற ஹரன்.
வீட்டிலனிந்திருந்த சாரம். கையிலகப்பட்ட சேட் ஒன்றைப் போட்டிருப்பான் போலிருந்தது. தன் தோற்றத்தைப் பற்றி எவ்வித அக்கறையுமின்றி அவன் வந்திருந்தான். சில வாரங்களாகவே சந்தோஷ் தாடி வளர்த்துக்கொண்டிருந்தான். ஏதாவது காதல் தோல்வியோ என்ற ஐயத்துடன் ஹரன் தூண்டித்துருவியபோதுதான் தந்தையுடன் அவனுக்கேற்பட்டிருந்ததகராறைப்புரிந்துகொள்ளமுடிந்தது.
மூன்று முறை க.பொ.த உயர்தரப் பரீட்சை எடுத்தும் அவனுக்குப் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்புக் கிட்டவில்லை. அவனைப் போன்று பரீட்சையில் சித்தியடைந்த நண்பர்கள் வெவ்வேறு பாடநெறிகளைத் தொடர்ந்தனர். சந்தோஷைப் பொறுத்தவரை அதுவும் கஷ்டமாகத் தோன்றியது.
குடும்ப வருமானம் அப்படியிப்படியென்றிருப்பது அவனுக்குத் தெரியும். அவனுக்குப் பின்னே இரு தம்பிகளும் இரு தங்கையரும் படித்தாகவேண்டும். தங்கையரின் திருமணத்தைப் பற்றித்தான் அவர்கள் பிறந்த கணத்திலிருந்து வீட்டிலே திகில். இந்தப் பிரச்சினைகளிடையே படிப்பிற்கென்று பெருந்தொகைப் பனங்கேட்கமுடியாதநிலை. படித்தவுடன் வேலை கிடைத்து பணம் சம்பாதிக்கக்கூடிய ஒரு நெறியிருந்தால் ஏதோ வீட்டிலே கேட்டுப்பார்க்கலாம். அப்படியெதுவும் இல்லையே.
சிலர் வெளிநாடு என்று புறப்பட்டார்கள். அதற்கும் இலட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. எண்ணிலாக்குணமுடையோர் 42

அவன்திக்குத் தெரியாதுதவித்துக்கொண்டிருந்தான். அப்பாவுக்கு அவன் சுipt சுற்றித் திரிவதாகப்பட்டது. அம்மாவுடன் புகைந்துகொண்டிருந்த அப்பா அன்று அவனைச் சுட்டுவிட்டார்.
அப்பாவின்சுமையும் தேவைப்பாடுகளும் அவனுக்குப்புரிந்தது. ஆனால் தனது மன ரணங்களை அப்பா புரிந்துகொள்ளாதது அவனுக்கு வேதனையாகவிருந்தது. பொறியிலகப்பட்ட எலியாக அவனது மூளை துருதுருத்துக்கொண்டிருந்தது. அதன் முயற்சி இரவிலே ஏதாவது வழி கண்டதோ? ஹரனின் எண்ணவோட்டத்தை சந்தோஷின் குரல் தடுத்து நிறுத்தியது.
“நானேதாவது சுயதொழில் தொடங்கப் போறன். நான் சொல்லுறதைப் பொறுமையாய்க் கேட்கிற, என்னைப் புரிந்துகொள்கிற ஒருதன் நீ மட்டுந்தான். அது தான் உன்னைத் தேடிக்கொண்டு வந்தனான்”
“உதுகளை விட்டிட்டுச்சொல்ல வந்ததைச் சொல்லபா"
“இப்ப தென்னிலங்கையிலையிருந்து நிறையப் பேர் இங்கை சுற்றிப் பார்க்க வருகினம். அதை வைச்சு ஏதாவது செய்யலாமெண்டு நினைக்கிறன்"
“சின்னனாய்க் கடையொண்டு போடலாம்"
ஹரன் அபிப்பிராயங்கூறினான்.
"அது தான் எல்லாருஞ்செய்யினம். அடுத்தது வீடு வாடகைக்குக் குடுக்கினம். செய்யலாமடா. என்னட்டை என்ன இருக்கு? வெறுங்கைதானே இருக்கடா. சாப்பிடுகிற சாப்பாடே தண்டச் சோறெண்டு பேர்”
"அப்ப என்ன செய்யப் போறாய்?"
“வித்தியாசமாய் ஏதாவது செய்யத்தான் போறன். அதுக்கு முதலிட இப்ப உழைக்கப் போறன். வாறவை பார்க்காத நல்ல நல்ல இடங்கள் எத்தினை இருக்கு? தெரியுந்தானேயடா. அங்கையெல்லாம் கூட்டிக்கொண்டு போய்க் காட்டலாமெண்டு வாறவைக்கு வழிகாட்டியாய் முதலிலை வேலை தொடங்கப் போறன்.
அவையோடை போய் வந்து பழகப் பழக அவையின்ரை விருப்பங்களையும் தேவைகளையும்புரிஞ்சுகொள்ளலாம். இங்கை உற்பத்தியாகிறபொருட்களிலை அவை விரும்புகிறபொருட்கள் என்னெண்டு அவதானிக்கலாம். உதாரணமாய்ப்பாரடா. அவை கோவிலுக்குப் போகேக்கை நிறையப் பூக்கொண்டு போகினம். அதே போல எங்களுக்கான விசேட உணவுப் பொருட்களிருக்கு. நுங்கு, பனங்கிழங்கு, பனங்கட்டி, பனாட்டு, பதநீர், கள் எல்லாம் எப்படி விலை போகுதென்று நின்று பார்த்தால் தெரியும். முற்திநான் நினைக்கிறனான்கள்ளுமட்டுந்தான்குடிப்பினம். பனங்கிழங்கை விரும்பி வாங்குவினமெண்டு. இப்ப நுங்கு என்ன மாதிரி விற்பனையாகுது தெரியுமே? எண்ணினாக்குணமுடையோர்

Page 30
அதைவிட, நாங்கள் குரங்குகள் மாதிரி எண்டும் சொல்லலாம். மற்றவை பேசிறதைப் பார்த்து அதைப் பேசிறது. மற்றவை போடுற உடைகளைப் பார்த்து அது மாதிரி உடுக்கிறது. எங்கடை தனித்துவத்தைக் கைவிட்டுவிடுகிறது. எங்களுடைய மொழி, கலாசாரம், தேசம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவற்றைக்கைவிட்டிட்டுகண்டதே காட்சி கொண்டதே கோலம் எண்டு தான் பெரும்பாலானவை திரியினம், வெளிநாடு போனவை மட்டுமில்லை. இங்கை இருக்கிறவையுந்தான்.
இதே மாதிரித் தான் எங்களுடைய உற்பத்திப் பொருட்கள் எவ்வளவு திறமாயிருந்தாலும் அதை விட்டிட்டு பிறநாட்டான் எண்டால், பிறநாட்டான் எண்டு ஏன்
வாய்க்கு அப்பிள் பழத்திலை என்ன ருசியிருக்கு. ஆனால் அதைக் குதிரை விலை யானை விலைக்கு வாங்கிச் சாப்பிடுகிறம்.
நான் எதிலையோ தொடங்கி எங்கையோ போறன். மற்றவையைக் குறை சொல்லிக் கொண்டிராமல் நான் ஒரு வித்தியாசமான திசையிலை போகப் போறன். மற்றவை செய்யிறதை நான் செய்யவேணுமெண்டுநினைக்காமல் என்னுடைய வசதி வாய்ப்பு திறமையைப் பயன்படுத்தி முயன்று பார்க்கப் போறன்.
எங்களுடைய பிரதேசத்தில் பயிராகின்ற பொருட்களிருக்கு. இந்தச் சுவாத்தியத்திலை செழித்து வளர்கிற பழமரங்கள் பூமரங்களிருக்கு. ஒரு நல்ல திட்டமிடலோடு நாலு பேர் சேர்ந்து முயற்சி செய்தால் நல்ல வருவாய் வரும்.
உதாரணத்துக்கு இங்கை வளரக்கூடிய பூஞ்செடிகொடிகளை வளர்த்து, பூக்கிற பூக்களை வேறிடங்களுக்கும் கொண்டுபோய்வியாபாரஞ்செய்யலாம். பூங்கன்றுகள், விதைகள் என்றும் விற்பனைக்குக் கொண்டு போகலாம். பழமரங்கள், கொடிகள் வளர்த்தால்பழங்கள் பதனிடுகிறதொழிலிலும் ஈடுபடலாம். பழங்களை வற்றலாக்கிறது, தகரத்திலடைக்கிறது. பானங்கள் செய்கிறது எனவெவ்வேறு தொழில்கள் செய்யலாம். எல்லாத்துக்கும் விளம்பரம் முக்கியம். அது ஒருதனிக்கலை.
சந்தோஷ்தன்திட்டங்களை விவரித்துக்கொண்டிருந்தான்.
"சந்தோஷ் ஒன்றைத் தீர்மானித்துச் செயற்படுத்தத் தொடங்கினால் அதைச் சரியாய்த் திட்டமிட்டு முழுமூச்சாய் உழைப்பான்” ஹரன் தனக்குள் நினைத்துக்கொண்டான்.
எண்ணிாைக்குணமுடையோர் 44


Page 31

iրil, பொறிகளைக் கேஸ்வரி நுட்பமாக நோக்குகிறார் அவற்றுள் தமது உள்ளத்தைப் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் உள்
er, வA எகர் சிறுகதை டைத்திருக்கிறார் என்பதும் நன்கு
N ro Giri
மிகு எதார்த்தமாகக் கண்களுக்கு நிகழ்ந்துகொண்டிருப்பது போன்ற வாசகர்களுக்கு ஏற்படுத்துகின்றன. அவை வாகனப் பார்வையாளன் ருந்து பங்காளன் நிலைக்கு உந்தித் கல்வது தான்.
அமரர் கொக்க
நிகழ்வுகளால் ஏற்பட்ட அருட்டுனர்வு அநுபவங்களை எழுத்திலே வரைய வரலாற்று
தேடி வரும்
தியாசமான தலைப்பில் அப்பர் தேவகுடித் தலைப்பில் தந்த ஆன்மீகம் சார் ஆளுமை ரவிக்கத் இருந்தது. அவருக்குள் ஒரு நல்ல எழுத்தாளர் இருக்கிறார். அதே
isi