கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சத்திய தரிசனம்

Page 1


Page 2

யாழ் இலக்கிய வட்டம், யாழ்ப்பாணம் இலங்கை

Page 3
(bibi) சத்திய தரிசனம்
(சிறுகதைத் தொகுதி)
ஆசிரியர் சிற்பி
2 sold திரு. சி. சிவசரவணபவன்
கந்தரோடை, சுன்னாகம்
பக்கங்கள் και 118 + XIV
3)60)L LILLD ரமணி
ിഖണിu് யாழ் இலக்கியவட்டம்,
யாழ்ப்பாணம், இலங்கை
அச்சுப்பதிவு : கங்கை பிறின்டேர்ஸ் (ஒவ்செற்)
166/1 நாவலர் றோட் (பிறவுண் வீதிக்கு அருகாமையில்) யாழ்ப்பாணம்.
விலை 150 ரூபா
தமிழ் நூல் வெளியீட்டை ஊக்குவிக்கும் வகையில், வடக்குப் புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சு, யாழ் இலக்கிய வட்டத்துக்கு வழங்கிய நிதியின் பகுதியையும் பயன்படுத்தி இந்நூல் அச்சிடப்பட்டுள்ளது.
Title : Sathiyatharsanam
Collection of short stories
Author : Chitpi
Rights : Mr. S. Sivasaravanabawan,
KanderOdai, Chunnakam.
Page . 118 + XIV
Cover Design : Ramani
Publishers : Yari lakkiya Waddam,
Jaffna, Sri Lanka.
Printers : Gangai Printers (Offset)
166/1 Navalar Road,
(Near Brown Road) Jafna. Price : 150 -
I

சிவபூர் சு. சிவசுப்பிரமணிய ஐயர் ழறிமதி சி. செளந்தராம்பாள்
(1906 - 1984) (1909 - 2001)
“மைந்தரைத் தம் நெஞ்சில் மட்டும்” என்பதற்கமைய, தம் நெஞ்சார்ந்த முகமலர்ச்சியால் எண் இலக்கியப் பணிகளை அங்கீகரித்து
உற்சாகமுட்டிய எண் அருமைத் தாய் தந்தையர்க்கு இந்நூலைக் காணிக்கை ஆக்குகின்றேன்

Page 4
ழத்து நவீன இலக்கியம் பற்றிச் சிந்தித்து வருகின்ற மூத்த
அமைப்புக்களுள் ஒன்றான யாழ் இலக்கிய வட்டம் 1965ஆம்
ஆண்டில் உருவாக்கப்பட்டத. நமது நாட்டிலுள்ள
நால்வெளியீட்டாளர்கள் இங்குள்ளவர்களின் ஆக்க இலக்கியங்களை
நாலுருவாக்குவதில் அதிக அக்கறை எடுக்காதிருந்த நிலையில், எமது யாழ்
இலக்கிய வட்டம் இதுவரை 68 நால்களை வெளியிட்டுள்ளது. “சத்திய தரிசனம் என்ற இந்தச் சிறுகதைத் தொகுதி 69ஆவது வெளியீடாகும்.
நாலாசிரியர் “சிற்பி’, நாடறிந்த நல்ல தமிழ் எழுத்தாளர்; “கலைச்செல்வி’ என்ற இலக்கியச் சஞ்சிகை மூலம் நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக உழைத்தவர்; புதிய எழுத்தாளர்கள் பலரை இனங்கண்டு உற்சாகமூட்டி, வழிகாட்டிக் “கலைச்செல்வி”யில் எழுதவைத்தவர்; யாழ் இலக்கிய வட்டத்தின் ஆரம்ப கால உறுப்பினருள் ஒருவர்; வைத்தீஸ்வராக் கல்லூரியின் அதிபராக இருந்து ஓய்வு பெற்றிருப்பவர்.
உண்மை, அன்பு, நேர்மை, தியாகம், இனப்பற்று, மொழிப்பற்று, நாட்டுப்பற்று போன்ற விழுமியங்களைப் பிரதிபலிக்கும் பல சிறுகதைகளை அவர் ஆக்கியுள்ளார். அவற்றுட் பதினொரு சிறுகதைகள் இத் தொகுதியில் இடம் பெறுகின்றன.
தமிழ் நால் வெளியீட்டை ஊக்குவிக்கும் வகையில், வடக்குப் புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சு, எமத யாழ் இலக்கிய வட்டத்துக்கு வழங்கிய நிதியின் பகுதியையும் பயன்படுத்தி இந்நால் அச்சிடப்பட்டுள்ளத.
யாழ். இலக்கியவட்டம் ந. சிவபாதம்
யாழ்ப்பாணம். செயலாளர்
IV

ற்பி சிவசரவணபவன் அவர்களின் சத்திய தரிசனம் என்ற 引 இச்சிறுகதைத் தொகுதிக்கு ஓர் அணிந்துரை எழுதக் கிடைத்த
வாய்ப்பு எனக்கு மனநிறைவையும் பெருமையையும் ஒருங்கே தருகின்றது. சிற்பி ஐயா அவர்களின் வழிகாட்டலிலும் அவர் நடத்திய இலக்கிய ஏடான “கலைச்செல்வி’யின் அரவணைப்பிலும் உருவாகிய நான், குருத்தானத்தில் வீற்றிருக்கும் ஒரு பெருமகனுக்குச் செலுத்துகின்ற சமர்ப்பணவுரையாகவே இதனைக் கருதகின்றேன். அவர் என் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்.
சிவ சரவணபவன் என்ற சராசரி மானிடன், “சிற்பி’ என்ற படைப்பாளியாகத் தோற்றம் பெற்ற நிகழ்ச்சி தற்செயலாக உருவானதன்று. தமிழ் ஆசிரியராக விளங்கிய அவரது தந்தையார் சிறுவயதிலிருந்தே அவருக்கு ஊட்டிய வாசிப்புப் பழக்கமும் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் கல்வி கற்றதனால் ஏற்பட்ட கல்வியாளர்களின் வழிகாட்டலும் அவரை ஈழத்துப்படைப்பாளிகளில் ஒருவராக மிளிர வைத்துள்ளன. 1933இல் காரைநகரில் பிறந்த சிற்பி, தனத ஆரம்பக் கல்வியைக் கந்தரோடைத் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், தனது இடைநிலைக் கல்வியை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் பெற்றார். சிரேஷ்ட தராதரப் பத்திரப் பரீட்சையில் (எஸ். எஸ்.சி) சித்தி பெற்றதும் கொழும்பு சுப்பிறீம் கோட்டில் அரச எழுதவினைஞராகக் கடமையேற்றுப் பணிபுரிந்த காலத்தில் லண்டன் இன்ரர் பரீட்சையில் சித்திபெற்றார். உயர்கல்வி பெற்றுப் பட்டதாரியாக வரவேண்டுமென்ற ஆவலை அவரால் தணிக்க முடியவில்லை. அதனால் 1953ல் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்து, பட்டதாரியாக வெளிவந்தார். தமிழில் இலக்கியச் சஞ்சிகையொன்றினை நடாத்தல் வேண்டுமென்ற எண்ணத்தை அவருக்குத்தந்தத சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரிதான். அக்கல்லூரியின் சேலையூர் மண்டபத் தமிழ்மன்றம் வருடாவருடம் வெளியிட்ட இளந்தமிழன் என்ற கையெழுத்துச் சஞ்சிகைக்கு அதன் ஆசிரியராகச் சிற்பி பொறுப்பேற்ற வருடத்தில்தான் முதன்முதல் அது அச்சுவாகனமேறி

Page 5
வெளிவந்தர், சாதனைபடைத்தது. அதில் வெவ்வேறு புனைபெயர்களில் மூன்று ஆக்கங்களைச் சிற்பியே படைத்தள்ளார்.
ஈழத்த இலக்கிய வரலாற்றில் சிற்பிக்குரிய முக்கிய இடம் மூன்று அம்சங்களினடிப்படையாக அமையும்.
1. ஈழத்துச் சிறுகதைப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். 2. ஈழத்து நாவலாசிரியர்களில் ஒருவர். 3. ஈழத்து இதழியலுக்கு மிக முதன்மையான பங்களிப்புச் செய்த
ஒருவா.
ஈழத்துச் சிறுகதை இலக்கியத்தில் சிற்பி சிவசரவணபவனின் பங்கினைக் குறைவாக மதிப்பிடுவதற்கில்லை. பாடசாலை நாட்களிலேயே நிறைய வாசிக்கின்ற பழக்கம் அவரிடமிருந்தது. கலைமகள், கல்கி, ஆனந்தவிகடன் முதலான சஞ்சிகைகள் அவரது வாசிப்புக்கு ஆரம்பத்தில் இலக்காகின. கல்கி, தேவன், லகஷ்மி, அகிலன், மு.வரதராசன் ஆகியோர் அவரைத் தம் எழுத்துக்களால் கவர்ந்தனர்.
*அகிலனின் சிறுகதைகள் சற்று அதிகமாகவே எண்ணுள்ளத்தைக் கவர்கின்றன. அன்பும், பண்பும், பரிவும், பரோபகாரமும், தியாகமும், தாய்மையும் நிறைந்த இன்பமயமான இலட்சிய உலகை அகிலனின் கதைகளில் நான் காண்கிறேன்’ என்கிறார் சிற்பி. இன்பமயமான இலட்சிய உலகம் சிற்பியின் கனவாகிறது. இப்படித்தான் வாழவேண்டும் என்ற ஓர் உலகைக் கற்பனையிலாவது காணச் செய்தால் ஒரு சிலராவது அந்த இலட்சிய உலகை நோக்கி ஏறநடை போடமாட்டர்களா, எனச் சிற்பி எண்ணினார். ‘ஒவ்வொரு மனித இதயத்தையும் தனித்தனியாக அணுகி, நெகிழச் செய்து படிப்படியாகப் பண்படுத்துவதுதான் இலக்கியத்தின் பணி” எண்பது சிற்பியின் கருத்து. பண்பை வளர்க்கும் இலக்கியந்தான் நமக்குத் தேவை என அடிக்கடி கூறுவார்.
சிற்பியின் கதைகளில் காதலுறவுகளும், மனித முரண்பாட்டு உணர்வுகளும் தாக்கலாகவே காணப்படும் எனச் சொல்லப்படுவதுண்டு. அவரது முதற் சிறுகதையான் 'மலர்ந்த காதல்’ 1952இல் சுதந்திரனில் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து மரணவாயிலில், ஏழையின் முடிவு, மனமாற்றம், அவசரமுடிவு, அமுதைப் பொழியும் நிலவு, கோயில் ്യഞങ്ങ്,
VI

பிறந்தமண், திருட்டுப்பணம், மகாவலியின் மடியில், பட்டுச்சட்டை, வெறிமுறிந்தது, சோறும் மானமும், முதலான சிறுகதைகளைச் சுதந்திரனிலும், பழக்கமில்லை, மக்கள் தொண்டு, யார்செய்த தவறு ஆகிய சிறுகதைகளை ஈழகேசரியிலும் எழுதியுள்ளார். ஏன் படைத்தாய், நிறைவு, பிஞ்சின் ஏக்கம், நீலப்பட்டு, மறுமணம், அப்பன் அருள், நிறைவு, காதல் பலி, உயிரோவியம் முதலான சிறுகதைகளைப் பல்வேறு பத்திரிகைகளில் படைத்துள்ளார். பிஞ்சின் ஏக்கம், கலைமகளிலும், அப்பண் அருள், சிந்தாமணி, மஞ்சரி ஆகியவற்றிலும் வெளியாகின. உதயம் சஞ்சிகை நடாத்திய (1955) சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற சிறுகதை மறுமணம் ஆகும். காதல் பலி கல்கியிலும், உயிரோவியம் வீரகேசரி, தீபம் ஆகியவற்றிலும் வெளியாகின.
‘இனிய எளிய நடையில் கதைசொல்லும் கைவண்ணம் இவரிடம் இருக்கிறது. கற்பனை மனதையும் பாத்திர உருவாக்கத்தையும் நிகழ்ச்சிக் கோவையையும் இவர் கதைகளிற் சுவைத்து இன்புற முடிகிறது’ என இவரது சிறுகதைகள் குறித்த அகிலன் கூறியுள்ளார். சிற்பியின் சிறுகதைகளில் கோயில் பூனை, பிறந்தமண் ஆகிய சிறுகதைகள் மிகச் சிறப்பானவை. ஈழத்தின் மிகத் தரமான சிறுகதைகளில் ஒன்று கோயில் பூனையாகும். சமூகத்தின் சாதிக் கொடுமையைக் கலைநயத்துடன் கோயில் பூனை சித்திரிக்கின்றது. அதே போல பிறந்தமண்ணில், இனப்பற்றையும் பிறந்த மண்பற்றையும் தன்பியல் பாணியில் தத்ரூபமாகச் சிற்பி சித்திரித்துள்ளார். சிற்பியின் கூற்றுப்படி அப்பன் அருள், உயிரோவியம், ஒரேஒருத்திக்கு, தெய்விகம் என்பனவே அவரின் சிறந்த படைப்புக்களாம். ‘நிலவும் நினைவும், சிற்பியின் முதலாவத சிறுகதைத் தொகுதியாகும். சத்திய தரிசனம் இரண்டாவத தொகுதி. மூன்றாவது தொகுதியொன்றினை கொழும்பு குணசேனா கம்பனியினர் வெளியிடவுள்ளனர். சிற்பியின் சிறுகதைகளை வாசிக்கும்போத ஏற்படுகின்ற படிப்படியான வளர்ச்சிநிலை, கதையின் இறுதியில் ஏற்படுத்துகின்ற உணர்வுநிலையில் உச்சம் பெறுகின்றது. எஞ்சிநிற்கின்ற நெகிழ்ச்சியான உணர்ச்சி மனதை நெருடி சிந்திக்க வைக்கின்றத, சமூகத்தின் இழிநிலைக்கான சாட்டையடிபோல அந்த முடிவுகள் அமைந்தள்ளன.
சிற்பி அவர்களை ஒரு நாவலாசிரியராக அவரது மூன்று நாவல்கள் இனங்காண வைக்கின்றன. உனக்காக கண்ணே, சிந்தனைக் கண்ணீர்,
VII

Page 6
அன்பின் குரல் ஆகிய மூன்று நாவல்களில் உனக்காகக் கண்ணே நாலுருப் பெற்றுள்ளத. சிறுகதையில் அவர் செலுத்திய கவனத்தை நாவல் தறையில் அவர் செலுத்தவில்லையெனப்படுகின்றது. குடும்ப உறவுகளின் உணர்வுச்சிக்கல்களையும், பண்பாட்டு விழுமியங்களையும் அவரது நாவல்கள் பேசுகின்றன. படைப்பனுபவத்தினை இவரது நாவல்களில் தரிசிக்க முடிவத பெரும் சிறப்பாகும்.
“கலைச்செல்வி’ சஞ்சிகை மூலம் ஈழத்து இதழியலுக்குச் சிற்பி ஆற்றிய பணி அளப்பரியது. 1958ஆம் ஆண்டு ஆடிமாதம் கலைச்செல்வி இலக்கியச் சஞ்சிகை வெளிவந்த போது ஈழத்து இலக்கியப் போக்கின் மறுபுறத்திற்கான தளம் திறக்கப்பட்டது. ஈழத்தின் தனித்தவம் மிளிரும் தமிழ் இலக்கிய மலராகக் கலைச்செல்வியை வெளிவரச் செய்வதில் சிற்பி கண்ணுங் கருத்தமாக இருந்துள்ளார். ‘தமிழர்களின் மொழி, கலை, கலாசாரம் ஆகியவற்றிற்கு அவற்றின் தொண்மை மணம் குன்றாது புதுமை மெருகேற்ற வேண்டுமென்பதையும் கலைச்செல்வி நோக்கமாகக் கொண்டி~ ருந்தத, எனச் சிற்பி குறிப்பிட்டுள்ளார். தரம் வாய்ந்த பிரபல்யம் மிக்க அனைத்து எழுத்தாளர்களுடன் கலைச்செல்வி நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தது. ‘ஆக்கபூர்வமான கருத்துக்களைக் கொண்ட கலைநயம் மிக்க ஆக்கங்களால் ஈழத்துத் தமிழிலக்கியத் தறையைச் செழுமைப்படுத்திவரும் செங்கைஆழியான், செம்பியன் செல்வன், செ. யோகநாதன், யாழ்நங்கை, ச.வே.பஞ்சாட்சரம், பெனடிக்ற்பாலன், சாந்தன், வேகுமாரசாமி, மயிலன், பொ.சண்முகநாதன், மு. பொன்னம்பலம், தி. ஞானசேகரம், மு. கனகராஜன், பா.சத்தியசீலன், தெணியான், மட்டுவிலான், கவிதா, பாமாராஜகோபால், கானமயில்நாதன், த.வைத்திலிங்கம், வி.க. ரட்ணசபாபதி, இளையவன், செ. கதிர்காமநாதன், முனியப்பதாசன், க. பரராஜசிங்கம், மணியம், முகிலன், பெரி. சண்முகநாதன் என்பவர்கள் கலைச் செல்விப் பண்ணையில் வளர்ந்தவர்களே’ என்ற சிற்பியின் கூற்றும் ஏற்புடையதே. 1950 - 1960 காலகட்டத்த ஈழத்துச் சிறுகதை இலக்கியத்திற்குக் கலைச்செல்வி ஆரோக்கியமான பங்களிப்பினைச் செய்துள்ளது. ‘விளக்கு’ என்ற கல்வியிதழ் ஒன்றின் ஆசிரியராகவும் சிற்பி விளங்கியுள்ளார். கல்வியாளர்களால் நன்கு மதிக்கப்பட்ட ஏடு விளக்காகும்.
VIII

சிற்பி சிவசரவணபவன் தொழிலில் ஆசிரியராகவ்ம் (1953 ~ 1981), பாடசாலை அதிபராகவும் (1981 - 1993) கடமையாற்றியுள்ள போதிலும், படைப்பாளியாகவும் சஞ்சிகை ஒன்றின் ஆசிரியராகவும் விளங்கியமை மக்களது நினைவில் என்றும் நிறைந்திருக்கும் பணிகளாம். அனைத்திற்கும் மேலாக ஈழத்து எழுத்தாளர் பன்னிருவரின் சிறுகதைகளைத் தொகுத்து அவரால் முதன்முதல் வெளியிடப்பட்ட ஈழத்துச் சிறுகதைகள் என்ற நாலாற்றிய இலக்கியப் பங்களிப்பு பாரியதாகும். நா. பார்த்தசாரதியின் ‘தீபம்’ சஞ்சிகையில் ஒவ்வொரு மாதமும் ‘இலங்கைக்கடிதம்’ என்ற தகவல் பகுதியை “யாழ்வாசி” என்ற புனை பெயரில் எழுதியவர் சிற்பிதான். அவ்வேளையில் பரபரப்பாகப் பேசப்பட்ட பகுதியாக இது விளங்கியது.
“கல்லில் கலைவடிவம் படைப்பவன் சிற்பி. சொல்லில் கலை வண்ணம் காணும் விழைவால் நான் சிற்பியானேன்’ எனப்பகரும் சிவசரவணபவனின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி “சத்திய தரிசனம்’. இத் தொகுதியில் பதினொரு சிறகதைகள் அடங்கியுள்ளன. 1956 இலிருந்து 2001 வரையான நான்கு தசாப்தங்களில் எழுதிய சிறுகதைகளாக இவை விளங்குகின்றன. ஒவ்வொரு சிறுகதையிலும் அது எழுதப்பட்ட காலம் குறிக்கப்பட்டிருப்பதால், சிற்பியின் படைப்பிலக்கியச் சூழலை உணர்ந்து கொள்ள முடிகின்றது. சிற்பியின் படைப்பனுபவம் மிக நீண்டது. ஈழத்துச் சிறுகதை வரலாற்றின் எல்லாக் காலகட்டங்களிலும் எழுதி வருபவர். தனது பேனாவை என்றும் எழுதத் தயார் நிலையில் வைத்திருப்பவர். யதார்த்தப் பண்பும் கற்பனாவாதப் பண்பும் கலைத்துவமாக அவரத படைப்புகளில் காணப்படுகின்றன. ஒரு சில படைப்பாளிகளைப்போல் ஒரே கருவைப் பல்வேறு களங்களில் வைத்துச் சித்த வேலை செய்யத் தெரியாதவர்; பல்வேறு கருக்களைப் பல்வேறு களங்களில் வைத்த எழுதத் தெரிந்தவர். இளைஞர்களது போராட்டத்தின் தர்மத்தை விமர்சித்து வரவேற்கவும் (மறத்திற்கும் அன்பே தணை), பிறந்த மண் மீது கொண்ட தீராக் காதலின் விளைவால், அந்த மண்ணே இல்லையென்றாகிவிட்ட நிலையில், தீர்க்கமான முடிவு எடுக்கும் ஒரு வயோதிபரின் மனவுணர்வுகளைப் படம் பிடிக்கவும் (சொந்தமண்) சிற்பியால் முடிந்திருக்கின்றது. இன்றைய இலக்கிய வாதிகள் சிலரின் போலித்தனங்களையும், அதேவேளை பண்பை வளர்க்கும் இலக்கியத்தின் அவசியத்தையும் வலியுறுத்தம் சிறுகதைகளாக பணத்துக்காக, சத்தியதரிசனம்
ΙΧ

Page 7
இரண்டுமுள்ளன. காதலுணர்வின் வாத்சல்யமான பிரேமையை உயிரோவியம், ஒரே ஒருத்திக்கு, மகாவலியின் மடியில் ஆகிய மூன்று சிறுகதைகளிலும் ஆழமாக தரிசிக்க முடியும். போலித்தனமான பெரிய மனிதர்களின் முகமூடிகளை மக்கள் தொண்டு கிழித்தெறிகின்றது. சமூகத்தில் நாம் நித்தம் சந்திக்கின்ற பல்வேறு குணாம்சங்களைக் கொண்ட மானிடர்களை அவர்களின் பலத்தோடும் பலவீனத்தோடும் புரைதீர்ந்த நன்மை, ஒரு திருட்டின் கதை, இழப்பு ஆகிய சிறுகதைகளில் சந்திக்க முடிகின்றது “சிற்பியும் அவர் சார்ந்தோரும் வெறும் காதல் கதைகளையே எழுதி வருகின்றனர்”, என 1960களில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு மாறாக அதற்குமப்பால் ஒரு சமூகத்தேடலோடு பல்வேறு சமூகத்தளங்கள்ையும் அவர்தம் பிரச்சினைகளையும் சிற்பி தம் படைப்புகளில் சித்திரித்தள்ளார் எண்பதற்கு இத் தொகுதி சான்று பகரும். கூர்மையான அவதானிப்போடு, முரண்பாடற்ற பாத்திர வார்ப்புக்களைப் பயன்படுத்தி, எளிமையான நடையில், உன்னதமான பண்பான ஒரு சமூகத்தை உருவாக்கும் அவா சிற்பியின் இச்சிறுகதைகளிலுள்ளது. ஈழத்துச் சிறுகதையணங்கினை அலங்களிக்கும் ஆரமாக இத் தொகுதி அமைகின்றத.
சிற்பி எறும் என் குருவுக்கு விந்தனங்கள்
பிறவுண் வீதி, செங்கை ஆழியான் க. குணராசா 75/10A, SyT65ulq, யாழ்ப்பாணம். 10.12.2001
 

முன்னுஇழி {5ાલ્પ- இலட்சியம் - கற்பனை - இலக்கியம்.
ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடைய இவை மனிதர்க்கே உரியவை; மனித வாழ்க்கையின் போக்கை நிர்ணயிப்பவை; அதன் தரத்தைப் பிரதிபலிப்பவை.
மனிதர்க்குத் தாக்கத்திலே கனவு ‘தோன்றுகின்றது; விழிப்பில் அவர்கள் கனவு காண்கின்றார்கள்’.
தாக்கத்திலே தோன்றும் கனவுகளுட் பெரும்பாலானவை, நடந்து முடிந்த நிகழ்ச்சிகளின் ~ அடக்கி வைக்கப்பட்ட ஆசைகளின் ஏக்கங்களின் - மீள்காட்சி; விழிப்பிலே காணும் கனவு, நடக்க வேண்டும் என்று விரும்புகின்ற நிகழ்ச்சிகளின் மனக்காட்சி.
இந்த மனக்காட்சியையே “கனவு’ என இங்கே குறிப்பிட்டுள்ளேன்.
விழிப்பு நிலையில் எல்லோருந் தாம் கனவு காண்கின்றனர். பலருக்கு அத ஒரு பொழுது போக்காகவே அமைந்துவிடுகின்றது; கனவுகளைக் காண்பதில் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைவதடன் இவர்கள் நின்றுவிடுகின்றனர். இத்தகையோரின் கனவுகளால் இவர்களுக்கோ சமுதாயத்துக்கோ ஆக்கபூர்வமான பலன் ஏதம் ஏற்படுவதில்லை. மாறாக, பலர் சோம்பேறிகளா~ வதற்கும் தவறான வழிகளிற் செல்வதற்கும் இவை உடந்தையாக இருப்பதமுண்டு.
சிறுமை கண்டு பொங்கும் போக்கு, சமகால நிலைபற்றிய அதிருப்தி, அந்த நிலையை மாற்றி எல்லோரையும் இன்புற்றிருக்கச் செய்ய வேண்டும் என்ற ஆவல் - போன்றவற்றின் உந்துதலால், விழிப்பு நிலையிற் சிலர் காணும் கனவுகள், அவர்களின் “இலட்சியம்’ ஆகின்றன.
ΧΙ

Page 8
இலட்சியங்கள், நடைமுறை நிகழ்ச்சிகளாவதற்கு மக்கட் சமுதாயத்~ தின் உதவியும் அனுசரணையும் இன்றியமையாதவை என்ற உணர்வில், அவற்றை அந்த மக்களுக்கும் சொல்லிவிட வேண்டும் என்ற தடிப்பை அடக்க முடியாத நிலையில், “இவை தாம் இலட்சியங்கள்’ என வெளிப்படையாகச் சொல்லாமல், மக்கள் அவற்றை உய்த்துணர்ந்து செயற்படும் வகையில் உருவாக்கப்படும் கதைகள், காவியங்கள் - தாம் காண்கின்ற, காண விரும்புகின்ற மனிதர்களைப் “பாத்திரங்களாக்கி’ அப்பாத்~ திரங்களை, உண்மையும் அதற்கு இசைவான கற்பனையும் விரவிய சம்பவங்களின் கர்த்தாக்காளக்கி, சொல்லும் முறையாலும், சொல்லாற்றலாலும் வாசகர்களை நம்ப வைத்த, சிந்திக்கச் செய்து, அவர்களுக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஊட்டும் வகையில் உருவாக்கப்படும் கதைகள், காவியங்கள்,
“இலக்கியம்’ ஆகின்றன.
எத இலக்கியம்? அத யாருக்காக? என்ற கேள்விகள் சம்பந்தமாக என்னுள்ளே விரிந்த சில சிந்தனைகள் இவை.
இவற்றின் அடிப்படையில், வாசகர்களின் மனத்திரையிலே சில காட்சிகள் இடம் பெறுதற்கு, ஏனைய எழுத்தாளர்களைப்போல், நானும் மேற்கொண்ட முயற்சியின் விளைவே எண் சிறுகதைகள்.
வாசித்தப் பாருங்கள்! As a to
என்னுடைய சிறுகதைகளுட் பெரும்பாலானவை இடம்பெற்ற “சுதந்திரன்’ வார இதழிலேயே, என்னுடைய முதற் சிறுகதையான “மலர்ந்த காதல்’ 1952ஆம் ஆண்டில் வெளியானது. தொடர்ந்து, ஈழகேசரி, வீரகேசரி, உதயன், தினகரன், அல்லி சிந்தாமணி, கலைக்கண், ஈழமுரசு, முரசொலி, மத்தியதீபம், சஞ்சீவி, அமிர்த கங்கை, வளர்மதி ஆகிய இலங்கைப் பத்திரிகைகள் ~ சஞ்சிகைகளிலும், கல்கி, கலைமகள், மஞ்சரி, புதுமை, தீம் ஆகிய இந்தியத் தமிழ்நாட்டுச் சஞ்சிகைளிலும் என் சிறுகதைகள் வெளியாகியுள்ளன. 1952ஆம் ஆண்டில் “மாணிக்கம்” என்ற சிறுகதை இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டத; கதையை நானே வாசித்தேன்.
ΧIΙ

"மறுமணம்” என்ற சிறுகதை, “ஈழத்துப் பரிசுக் கதைகள்’ என்ற தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து, “வெள்ளிப் பாதசரம்” என்ற தலைப்பிலே செ.யோகநாதன், சென்னையில் வெளியிட்ட நாலில் எண் “கோயில் பூனை” இடம்பெற்றுள்ளது. செங்கை ஆழியான் தொகுத்து வெளியிட்டுள்ள “ஈழகேசரிச் சிறுகதைகள்’ என்ற நாலில் “பழக்கமில்லை”என்ற என் சிறுகதையும், “சுதந்திரன் சிறுகதைகள்’ என்ற நாலில் “பிறந்த மண்”ணும் சேர்க்கப்பட்டுள்ளன. ‘நிலவும் நினைவும்” என்ற என்னுடைய முதலாவது சிறுகதைத் தொகுதி 1958ஆம் ஆண்டில் சென்னை ~ பாரி நிலையத்தால் வெளியிடப்பட்டது.
நல்ல சிறுகதை ஒன்றை எழுதி முடிக்கும் போது, - பத்திரிகையில் அத வெளியாகும் போத ~ நேரிலும் கடிதம் மூலமும் அதைப் பற்றிய விமர்சனமும் பாராட்டும் கிடைக்கும் போது ~ நான் அடையும் மகிழ்ச்சியும் திருப்தியும் பெரிது. எனினும், ஏனைய எழுத்தாளர்கள் எழுதுகின்ற தரமான கதைகளை வாசிக்கும் போது ஏற்படுகின்ற ‘சுகத்தையும் பயனையும் நான் இழக்க விரும்புவதில்லை. அதனால், “நாற்றுக்கு மேற்பட்ட கதைகளை எழுதிய” எழுத்தாளர்களின் பட்டியலில் இடம் பெறும் வாய்ப்பு எனக்கு இல்லை!
a
என்னுடைய முதலாவத சிறுகதைத் தொகுதி வெளியாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டபடியால், இப்போது ஒரு தொகுதியை வெளியிட்டே ஆகவேண்டும் என்பதில் விடாப்பீடியாக நின்ற எண்னை உற்சாகப்படுத்தியவர் செங்கை ஆழியான். நான் நடத்திய “கலைச்செல்வி’ மூலம் எழுத்துலகிற்கு வந்த, தரமான சிறுகதை எழுத்தாளர், ஈழத்தின் தலை சிறந்த நாவலாசிரியர், பொறப்புவாய்ந்த தொகுப்பாசிரியர், நல்ல விமர்சகர் என மிக விரைவிலேயே உயர்ந்துள்ள அவர் - “கலைச்செல்வி’யின் தலைமகன். நான் கோரிய அணிந்துரைக்குப் பதிலாக, தான் விரும்பிய “சம்ர்ப்பண உரை”யை அவர் எழுதியுள்ளார்.
XIII

Page 9
அழகான அட்டைப்படத்தை மிகக் குறுகிய காலத்தில் வரைந்ததவியவர் சிறந்த ஓவியரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான ரமணி அவர்கள்.
ஒவியத்தின் கலை நயம் குன்றாது அட்டையில் ஒளிவிடச் செய்தவர்கள், திருநெல்வேலி குரு சில்க்ஸ்கிறீன் பிறிண்டேர்ஸ்.
கவர்ச்சிகரமான முறையில் அச்சிற் பதித்து இந்நூலை உருவாக்கியவர்கள் கங்கை பிறிண்டேர்ஸ் (ஒவ்செற்), சிறுகதை, நால்கள், கவிதைகள், கட்டுரைகள் என ஈழத்த எழுத்தாளர்கள் பலரின் ஆக்கங்களை நால்களாக வெளியிட்ட யாழ் ~ இலக்கிய வட்டம், தனது 69 ஆவது நாலாக இந்தத் தொகுதியை வெளிக் கொணர்கின்றது.
இவர்கள் அனைவர்க்கும் நான் என்றும் கடன்மைப்பட்டுள்ளேன்.
சி. சிவசரவணபவன், - சிற்பி - கந்தரோடை,
சுன்னாகம் (இலங்கை).
24.12.2001
XIV
 

சத்திய தரிசனம்
Grå DAML-III IDTór SI5)IIDTør5– துக்கு நாண் கொடுத்த முக்கியத்துவம், மற்றவர்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களைப் பற்றிச் சிந்திப்பதைக் கூடத் தடுத்து விட்டதே!
புரை தீர்ந்த நன்மை
ஈழகேசரி - 1958
ழா மண்டபம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருந்தனர் மக்கள். அதேவேளை எவ்வித கூச்சல் குழப்பமின்றி, அங்கே அமைதியும் நிலவியது.
குறள் அமிர்தத்தை வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்தார் பண்டிதர் பரமசாமி. திருக்குறளை நுணுகி ஆராய்ந்து மீண்டும் மீண்டும் கற்ற வேளைகளிலே தோன்றிய நயமான கருத்துக்களை இனிமையான தமிழில் இந்தக் காலத்துக்குப் பொருத்தமான உதாரணங்களையுஞ் சொல்லிச் சபையினரை மகிழ்வித்துக் கொண்டிருந்தார் அவர். அவருடைய கருத்துக்களை வரவேற்றுச் சபையினர் அடிக்கடி எழுப்பிய கரகோஷம் அவரை உற்சாகப்படுத்தியது.
எனினும், தன்னை இழக்காத பண்டிதர், கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஒன்பதாகிவிட்டது.
பேச்சை நிறுத்தினார்.
“அருமையான பேச்சு. இன்னும் கொஞ்சநேரம் நீங்கள்
பேசியிருக்கலாம். திடீரென்று நிறுத்திப் போட்டீங்கள்’ என்றார் விழா அமைப்பாளர்களில் ஒருவர்.
“குறித்த நேரத்துக்குட் பேச்சை முடிப்பதுதான் நல்லது. இப்ப நான் போனால்தான் கடைசி பஸ்ஸைப் பிடிக்கலாம்”
l

Page 10
சிற்பி
“பஸ்ஸிலை போய் ஏன் கஷ்டப்பட வேணும்? இந்த விழாவுக்கென்றே நாங்கள் ஒரு காரை ஒழுங்கு செய்திருக்கிறம். நீங்கள் அதிலை போகலாம்”.
“பரவாயில்லை, பஸ்ஸிலை போவது சிரமமில்லை வீட்டு வாசலிலேயே இறங்கிக் கொள்ளலாம். தனி ஒருவருக்காக ஏன் g5ाj?”
“அப்படியானால், பஸ் நிலையம் வரையாவது காரிலே கொண்டு (31 jTu 66683 Lo”.
பஸ் நிலையத்தில் அவருடைய ஊருக்குப் போகக் கூடியதாக ஒரே ஒரு பஸ் மட்டும் நின்றது. அதுதான் கடைசி பஸ் - பட பஸ். பிரபல நடிகர்கள் நடித்த புதிய படமொன்று அன்றுதான் முதன் முதலாகத் திரையிடப்பட்டிருந்தது. அதனால் பஸ் நிலையத்திலும் சனக் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது.
அந்த பஸ்ஸைத் தவறவிட்டால், ஊருக்குப் போவதற்கு வேறு வசதியே இல்லை. இடிபட்டுக் கொண்டிருந்த சனக் கும்பலுள் பண்டிதரும் ஒருவரானார்.
பஸ்ஸின் நுழைவாயில், பண்டிதரைப் பலதடவை ஏமாற்றி விட்டது.
கிட்ட வந்துவிட்டேன். இதோ.. ஏறியே விட்டேன்’ என நினைத்து வாயிற் பகுதியை எட்டிப் பிடிக்க முயலும் வேளையில் யாராவது இடையிலே புகுந்து அவருடைய முயற்சியை முறியடித்து விடுவார்கள். அடுத்த நிமிடம், பஸ்ஸிற்கு வெகு தொலைவிலே அவர் தள்ளப்பட்டு விடுவார். கூட்டத்தின் அமுக்கம், பஸ்ஸிற்குச் சமீபமாக அவரைக் கொண்டு செல்லும், அதே அமுக்கம், திசை மாறி, அவரை அப்பாலே தள்ளியும் விடும். இப்படி முன்னும் பின்னும் தள்ளுப்பட்டு அலைக்கழியும் நாடகம் சில நிமிடங்கள் தொடர்ந்தன.
‘தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருந்தக் கூலி தரும்’ என்ற நம்பிக்கையுடன் அந்தக் கும்பலில் நின்று கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார் அவர். முதுகும் கால்களும் அவரிடம் ‘உயிர்ப் பிச்சை’ கேட்டுக் கொண்டிருந்தன.
2

சத்திய தரிசனம்
‘காரிலே நிம்மதியாகப் போயிருக்கலாமோ என நினைக்காமலிருக்க அவரால் முடியவில்லை.
“இப்போது அதைப்பற்றி நினைத்து என்ன பிரயோசனம்? எனத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு தன்முயற்சியைத் தொடர்ந்த வேளையில், சற்றுத் துரத்திலே நின்ற பலசாலி ஒருவன், பஸ்ஸில் ஏறுவதற்குத் தன் பலம் முழுவதையும் உபயோகிக்கத் தொடங்கினான். ஏற்கெனவே நொந்து போயிருந்த பண்டிதருடைய உடல், முயற்சியைக் கைவிடும்படி பண்டிதரைக் கேட்கத் தொடங்கியது.
ஆனால், அந்த வேண்டுகோளுக்குச் செவி சாய்ப்பதற்கிடையில், பண்டிதர் பஸ்ஸிற்குள்ளே தான் நிற்பதை உணர்ந்தார். கடைசியாக அவர் வாங்கிய "இடி அவரைப் பஸ்ஸிற்குள்ளேயே தள்ளி விட்டது!
இருப்பதற்கு இடமில்லை. அங்கிங்கு திரும்பவே முடியாதபடி ஒரே இடத்திலேயே நிற்கவேண்டிய நிர்ப்பந்தம். பஸ்ஸிற்கு வெளியே நின்று இடிபட்டதனால் ஏற்பட்ட உடல் நோவும் களைப்பும் இப்போது அதிகரித்து விட்டன. உடம்பில் ஊறிய வேர்வை ஒருவித சங்கடத்தைக் கொடுக்கத் தொடங்கியது. பஸ் ஓடத் தொடங்கியதும் எல்லாம் சரியாகிவிடும் என மனதைத் தேற்றிக் கொண்டார்.
ஐம்பதுபேர் மட்டும் பிரயாணம் செய்யக்கூடிய அந்த பஸ்ஸில் அதைவிடப் பலமடங்கு பிரயாணிகளை “அடைத்த’ பின்னர்தான் கொண்டக்டர், பிரயாணச் சீட்டு விநியோகிக்கும் கடமையைத் தொடங்கினான்.
“எல்லாரும் காசைக் கையிலே எடுத்து வைத்திருக்க வேணும்.”
மிகவும் கஷ்டப்பட்டு, தன்னுடைய உடம்பைத் தானே ‘ஒடுக்கி’க் கொண்டு, சட்டைப் பையினுள் கையை விட்டபோது, பகீர்’ என்றது பண்டிதருக்கு.
சட்டைப் பை கிழிந்திருந்தது. பணத்தைக் காணவில்லை!
*காசில்லாமல் இப்ப என்ன செய்யிறது? அவர் பதற்றப்பட்டதையும் முகம் பேயறைந்ததைப் போன்று மாறியதையும் யாருமே கவனிக்கவில்லை.
3

Page 11
sijî
எனினும் அங்கே நிற்பதற்கு அவருக்கு என்னவோ போல் இருந்தது.
ஆபத்தில் உதவக்கூடிய அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் யாராவது இருக்கின்றார்களா எனப் பார்ப்பதற்கும் முடியவில்லை.
“நீங்கள் எங்கை போறியள்.?” “ஆர் இரண்டு பேர்? நீங்களும் அவவுமோ?” “சில்லறை இல்லையோ?” கொண்டக்டரின் குரல் பண்டிதருக்குத் தெளிவாகவே கேட்டது. இன்னும் சில நொடிகளில் அவரிடமே அவன் வந்து விடுவான். வந்தால்..?
“இறங்கி விடுவோமா?”
“எத்தனை பேரை இடித்து நெருக்கிக் கொண்டு. கால்களை மிதித்துக் கொண்டு. அவையளிட்டை திட்டு வாங்கிக் கொண்டு. இறங்கித் தான் என்ன செய்வது.”
‘வெட்கத்தைப் பார்க்காமல், இரகசியமாக ஆரிட்டையேன் கொஞ்சக் காசைக் கடனாகக் கேட்கலாமோ.’
“இது கடன் அல்ல. ஒருவித “நாகரிகப் பிச்சை” எண்டு நினைச்சு. வேண்டாம்.”
“கொண்டக்டரிட்டை உண்மையைச் சொன்னால்.’
“இந்த நெரிசலுக்கை நிண்டு, எரிச்சல் பட்டுக் கொண்டு தன்ரை தொழிலைச் செய்யிறவன், ஆரெண்டும் பாராமல் என்னை ஏசத் துடங்கினானெண்டால்.’
என்ன செய்யலாம் என்பதே அவருக்குத் தெரியவில்லை.
சிறிது நேரத்திற்கு முன்னர், விழா மண்டபத்திலே தனக்குக் கிடைத்த மதிப்பையும் பாராட்டையும் நினைவுபடுத்திக் கொண்டார் பண்டிதர்.

சத்தியதரிசனம்
“இப்ப இப்பிடி ஒரு சங்கடத்துக்குள்ளை மாட்டிக்கொண்டு நிக்கிறன்’
“நீங்கள் எங்கை?”
கொண்டக்டரின் கேள்விதான்.
“இணுவில்” - அனுங்கினார் பண்டிதர்.
ஒரே தடவையில் ஏழு எட்டுப் பேருக்குச் சீட்டைக் கொடுத்து
விட்டு, பின்னர் அவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்கும் வழமையைத்தான் அன்றும் அவன் பின்பற்றினான்.
பஸ்ஸிலிருந்த மங்கிய வெளிச்சத்தில், நின்றவர்களின் தலை நிழல் மறைப்பில், அந்த வேலையைச் செய்வது, சற்றுக் குள்ளமான அவனுக்கு, மிகவும் கஷ்டமானதாகவே இருந்தது.
இரண்டொருவரிடமிருந்து பண்டிதரே பணத்தை வாங்கிக் கொடுத்து உதவி செய்தார்.
“நீங்கள் குடுத்திட்டியள் போலை கிடக்கு?” என்றான் பண்டிதரிடம்.
GG. 99
கேள்வியே சாதகமாக அமைய “ம்.” என்றார், தலையைக்
குனிந்து கொண்டே!
ஒரு பெரிய இக்கட்டான நிலையிலிருந்து தப்பிவிட்ட திருப்தி ஏற்பட்டாலும், நிமிர்ந்து யாரையும் பார்க்கும் துணிவு அவருக்கு வரவில்லை.
‘நான் செய்தது சரியோ. ஏசினாலும் பறுவாயில்லையெண்டு, உண்மையைச் சொல்லியிருக்கலாமோ. நான் தப்பிறதுக்காகப் பொய்யைச் சொல்லி, ஏமாற்றி விட்டனோ? அவனும் பாவம். நான் சொன்னதை அப்பிடியே நம்பிவிட்டான்.’
கூனிக் குறுகிப் போனார் அவர்.
மீதிப் பணத்தைக் கொண்டக்டர் திருப்பிக் கொடுக்கவில்லை எனச் சிலர் முணுமுணுப்பதும் அவருக்குக் கேட்டது.
அவருடைய சிந்தனைப் போக்கு சற்று மாறியது.
5

Page 12
fi}ı'î
“இப்படி மேலதிகமாக அவன் எத்தினை பேரிடம் வாங்கியிருப்பான்.? நான் கொடுக்காமல் விட்டதாலை அவனுக்கு ஒரு நட்டமும் வராது.
இந்த நேரத்திலேதான், அவரை உள்ளிட்ட பலர் அடிக்கடி சொல்லும் குறளொன்று அவருடைய நினைவுக்கு வந்தது.
“பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்.” தீங்கு விளைவிக்காத பொய், உண்மையை விடச் சிறந்தது! ‘வள்ளுவர் உண்மையிலேயே மகத்தான் ஒரு கவிஞர்தான்! எங்கள் வாழ்க்கைக்குத் தேவையான, நடைமுறைச் சாத்தியமான
எத்தனை உண்மைகளை அவர் கூறியிருக்கிறார், அதுவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு!
அவரிடமிருந்த சோர்வும் மன உளைச்சலும் நீங்கி விட்டன.
“காசு குடுக்காதவை ஆராவது இருந்தால், இறங்கேக்கை குடுத்துப் போகவேனும்” என்ற கொண்டக்டரின் அறிவிப்பு, பண்டிதருடைய மனதில் இப்போது எவ்வித சலனத்தையும் ஏற்படுத்த6il6b6006Ꭰ.
வீட்டு வாசலில் இறங்கும்போது, பணத்தை எடுத்து வந்து, கொண்டக்டரிடம் கொடுத்துவிட வேண்டும் எனச் செய்த முடிவையும் அவர் கைவிட்டுவிட்டார். தான் ஏற்றிப் போற்றும் திருக்குறள், தன் செய்கையை ஆதரித்து அங்கீகரிக்கின்றது என்ற திருப்தி அவருக்கு.
a
அடுத்த நாள்
பட்டணம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது பண்டிதருக்கு. உரிய நேரத்தில் பஸ் கிடைத்தது. சன நெருக்கடியே இல்லை.
“கந்தசாமியை நினைக்கப் பரிதாபமாகக் கிடக்குதண்ணை. நேற்று இராத்திரி கடைசி பஸ்ஸிலை அவன்தான் “ட்யூற்றி’. காசுக்
6

சத்திய தரிசனம்
கணக்கிலை ஏதோ பிழை விட்டீட்டானாம். கொஞ்ச நாளைக்கு வேலைக்கு வரவேண்டாம் எண்டு முதலாளி சொல்லிப் போட்டாராம்”.
பஸ் சாரதியும் கொண்டக்டரும் கதைத்தது பண்டிதருக்குத் தெளிவாகவே கேட்டது.
தலை சுற்றியது அவருக்கு.
முந்திய இரவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நினைவுபடுத்திக் கொண்டார்.
தான் பணம் கொடுக்காமல் விட்டதுதான் அவனுடைய வேலை நீக்கத்துக்குக் காரணமோ?
ஆயிரமாயிரம் ஊசிகள் தன்னைக் குத்துவதைப் போன்ற வேதனை
‘என்னுடைய மான, அவமானத்துக்கு நான் கொடுத்த முக்கியத்துவம், மற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைப் பற்றிச் சிந்திப்பதைத் தடுத்து விட்டதே!”
நேற்றிரவு ‘நன்மை தரும் பொய்” என்ற அளவிற்குக் குறுகி அவருடைய நெஞ்சை வருடி ஆசுவாசப்படுத்திய “புரை தீர்ந்த நன்மை”, இப்போது, “யாருக்கும் எவ்வேளையிலும் எவ்வித தீமையையும் விளைவிக்காத பொய்’ என விரிந்து விஸ்வருபமெடுத்து, அதே நெஞ்சை நெருடத் தொடங்கியது.
essa-4 as

Page 13
சிற்பி
“உங்கள் உப்பைத் திண்டு வளந் தவன் நான். இண்டைக்கு மட்டும் அரைக் கொத்தரிசி குடுங்கோ, போதும். என்ரை காய்ச்சல் மாறி னாப் பிறகு உழைச்சு உங்கடை கடனை அடைப்பன் ஐயா!’
மக்கள் தொண்டு
ஈழகேசரி - 1958
ர்? சின்னத்தம்பியே? கனகாலமாய் வராமல் விட்டீட்டாய். கொஞ்ச நேரம் இதிலை இரு. வாறன்’
சட்டைக்குள் மறைந்திருந்த தன் தங்கச் சங்கிலியை வெளியில் எடுத்து விட்டபடி வரவேற்றார் கனகசபை.
’கனவு காண்கின்றேனா?’ என்ற சந்தேகம் சின்னத்தம்பிக்கு! கொண்டு வந்த பனை ஓலைப் பெட்டியைக் கீழே வைத்துவிட்டு, கனகசபையின் வரவேற்பு அறைக்குட் பார்வையைச் செலுத்தினான்.
யாரோ புதிய மனிதரெல்லாம் அங்கிருந்தனர். ஒவ்வொருவருக்கும் முன்னால், பற்பல வண்ணத் திராவகங்கள். அவற்றை அடிக்கடி சுவைத்துக் கொண்டும், சிகரட்புகையை ஊதிக் கொண்டும் கனகசபையுடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.
“முகாந்திரம் பட்டத்தை ஏன் துறக்கின்றீர்கள்?’ வந்திருந்த ஒருவர் கேட்டார்.
“மக்களுக்குச் சேவை செய்பவர்களுக்கு இத்தகைய பட்டமெதுவும் தேவையில்லை. தொண்டு செய்வதில் நான் அடையும் மகிழ்ச்சியையும் திருப்தியையும், அன்னிய ஏகாதிபத்தியத்தின் எச்ச சொச்சமான இந்தப் பட்டம் குலைத்து விடுகின்றது. வேண்டுமென்றே என்மீது சுமத்தப்பட்ட இந்தப் பட்டத்திலிருந்து விடுபட்டு, உண்மையான சுதந்திர புருஷனாக வாழ்வதற்கு நான் ஆசைப்படுகின்றேன்’.
8

சத்திய தரிசனம்
“எங்கள் நாடு மிக விரைவிலே குடியரசாகப் போகின்றது. இந்தச் சந்தர்ப்பத்திலே, நீங்கள் இந்தப் பட்டத்தைத் துறப்பது பொருத்தமானது தான். மக்களின் தொண்டன் என்ற முறையிலே ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?”
“தொண்டு. தொண்டு. தொண்டு. மக்கள் தொண்டே மகேஸ்வரன் தொண்டு. இதைத்தான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்”.
“உங்களைப் போன்ற பெரியவர்கள், செல்வந்தர்கள் பலர், மக்களைப் பற்றியே நினைப்பதில்லை. உங்களுடைய தொண்டு மனப்பான்மை பாராட்டிற்குரியது”.
“ஒருநேர உணவின்றி எத்தனையோ ஏழைகள் இந்த நாட்டில் வாடி வதங்கிச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். குடியரசு தினத்திலாவது அந்த மக்கள் வயிறார உண்ண வேண்டும். பதினாயிரம் ஏழை மக்களுக்கு அன்றைய தினம் அன்னதானம் அளிக்கத் தீர்மானித்திருக்கின்றேன். தலைநகரில் இதற்கான ஏற்பாடுகளெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. லங்கா மாதாவுக்குச் சிறியேன் செய்யும் சின்னத் தொண்டு இது”.
இன்னும் விரிவாகச் சொல்லக் கூச்சப்படுபவரைப் போல் மெல்லிய குரலிற் சொன்னார் மாஜி முகாந்திரம்.
bábá
பூங்குடிக் கிராமத்திலுள்ள ஒரே ஒரு பணக்காரக் குடும்பத்தின் ஒரே ஒரு வாரிசு கனகசபைப்பிள்ளை. ஊர் மக்களின் வறுமையையும் அறியாமையையும் பயன்படுத்தித் தன் சொத்துக்களைப் பெருக்கிக் கொள்வதே அவருடைய தொழில். அதனால், ஊரிலுள்ள வயல்களெல்லாம் வெகு விரைவில் அவருக்குச் சொந்தமாகிவிட்டன.
கிராமத்து ஏழை மக்களெல்லாம் அவருடைய தயவிலேயே வாழ வ்ேண்டிய நிர்ப்பந்தம்.
தலை நகரிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் பிரமுகர்கள் பலர் அவரை நாடி அடிக்கடி வருவதுண்டு. அவரவர்க்கு ஏற்றபடி நடந்து, நல்ல பெயரைச் சம்பாதித்து விடுவதில் அவர் கைதேர்ந்தவர்.
9

Page 14
சிற்பி
அவர்கள் மத்தியில், அவர் ஒரு தர்மப் பிரபு என்ற அபிப்பிராயமே நிலவியது.
“எங்கள் கர்மவினை, இந்தக் கருமியின் தயவிலே வாழ வேண்டியிருக்கிறது” என்ற ஊர்மக்களின் அபிப்பிராயம் அந்தப் பிரமுகர்களின் காதுகளுக்கு என்றுமே எட்டவில்லை.
“டேய். சின்னான்.”
கனகசபை கர்ச்சித்தார்.
பசிக்களையாற் சோர்ந்துபோய் அரைத் தூக்கத்திலிருந்த சின்னத் தம்பி, திடுக்குற்று விழித்தான்.
சற்றுமுன்னர் மகிழ்ச்சியுடன் அவனை வரவேற்றவர் திடீரென்று இப்படி மாறிவிட்டாரே!
நடுங்கும் கரங்களால், அருகிலிருந்த தூணைப் பிடித்தபடி உள்ளே பார்த்தான்.
கனகசபைப் பிள்ளையைப் பேட்டி காண வந்திருந்த பத்திரிகை நிருபர்கள் எவருமே இப்போது அங்கில்லை!
“இவ்வளவு நாளும் எங்கையடா போனனி? உன்ரை குஞ்சியப்பனே உனக்குச் சம்பளம் தாறவர்?’
கனகசபையின் கர்ச்சனை தொடர்ந்தது.
“ஒண்டரை மாசமாய்க் காய்ச்சல்லை கிடந்தனான் ஐயா. பொன்னி, இப்பவுந்தான் கிடையாய்க் கிடக்கிறாள் ஐயா. கஞ்சித் தண்ணி வைக்கிறதுக்குக்கூட வீட்டிலை அரிசி இல்லை. அதுதான். உங்களை ஒருக்காப் பாத்திட்டுப் போகலாமெண்டு வந்தன் ஐயா’
அவருடைய குரல் அடித்து விரட்டிய நம்பிக்கையை ஒருவாறு இழுத்துப் பிடித்துக் கொண்டு தன் கீச்சுக் குரலிலே கெஞ்சினான் சின்னத்தம்பி.
10

சத்திய தரிசனம்
ஒன்றும் பேசாமல், அவர் அவனைப் பார்த்த பார்வை அவனை நடுங்க வைத்தது.
சிறிது நேரம் செல்ல கணக்குப் பிள்ளையைக் கூப்பிட்டார்
அவர்.
அவனுடைய உள்ளம் குளிர்ந்தது.
‘பார்வையிலும் பேச்சிலும் கொடூரம் இருந்தாலும், உள்ளே அவரிடம் இரக்கம் இருக்கின்றது.
உடம்பின் நடுக்கம் சிறிதுசிறிதாகக் குறையத் தொடங்கியது.
“இவன்ரை கணக்கெல்லாத்தையும் சரியாகப் பாத்துச் சொல்லும்”.
ஓடோடி வந்த கணக்குப்பிள்ளைக்கு உத்தரவிட்டார் கனகசபை,
எள் என்பதற்கு முன் எண்ணெயாய் நிற்கும் கணக்குப் பிள்ளை, கையிலே தயாராக வைத்திருந்த கணக்குப் புத்தகத்தைத் திறந்தார்.
“சம்பளப் பணம் ஒரு சதமும் பாக்கியில்லை. ஒன்றரை மாதமாக வேலைக்கு வராமலே, எங்கள் தோட்டத்தைச் சேர்ந்த குடிசையில் வாழ்ந்திருக்கிறான். அதனால், அவன்தான் பதினைந்து ரூபா எங்களுக்குக் கொடுக்க வேண்டும்.”
முதலாளிக்கு ஏற்ற முறையான கணக்குப்பிள்ளை தன் நிர்வாகத் திறமையை வெளிக்காட்டினார்.
“சின்னான்! கேட்டியோ?”
“உங்கள் உப்பைத் திண்டு வளந்தவன் நான் இண்டைக்கு மட்டும் அரைக் கொத்தரிசி குடுங்கோ, போதும். என்ரை காய்ச்சல்
மாறினாப் பிறகு உழைச்சு, உங்கடை கடனை அடைப்பன் ஐயா!”
அவனுடைய வேண்டுகோள் கனகசபையின் காதுகளில் விழுந்ததாகவே தெரியவில்லை.

Page 15
சிற்பி
“உன்ரை காய்ச்சல் எப்ப மாறப்போகுது? எப்பிடி உழைக்கப் போறாய்? இன்னும் பதினைஞ்சு நாள் நான் தவணை தாறன். எங்கடை தோட்டக் குடிசையை விட்டு வெளியேறிவிட வேணும்.”
“அப்பிடிச் சொல்லாதேயுங்கோ ஐயா! இந்த நிலையிலை நான் எங்கை போறது? இவ்வளவு காலமும் நான் உங்களுக்காகத்தான் உழைச்சனான். இனி நான் ஆரிட்டைப் போறது? இந்த நிலையிலை என்னாலை எப்பிடி ஐயா வேலை செய்ய ஏலும்?”
கனகசபை மசியவில்லை.
நடக்கவிருக்கும் அன்னதானத்தைப் பற்றிக் கணக்குப் பிள்ளையை விசாரிக்கத் தொடங்கிவிட்டார்.
கொண்டுவந்த ஒலைப் பெட்டியை அங்கேயே போட்டுவிட்டு, நடக்க முடியாமல் நடந்தான் சின்னத்தம்பி.
to
தலைநகரிலுள்ள பிரபல ஹோட்டலொன்றிலே சொகுசாகத்
தூங்கிய கனகசபையை ஆலய மணிகளும் பீரங்கி வெடிகளும் எழுப்பின.
அன்றுதான் நாடு பூரண சுதந்திரம் கொண்ட குடியரசாக LD6) bgbg5l.
சோம்பலை முறித்துக்கொண்டு எழும்பினார் கனகசபை. காலைத் தேநீரும் அன்றைய பத்திரிகைகளும் அவரை வரவேற்றன.
அன்னிய அரசாங்கம் அளித்த பட்டத்தைத் துறந்த அவரைப் பாராட்டிப் பத்திரிகைகள் எல்லாம் பந்தி பந்தியாக எழுதியிருந்தன. வெவ்வேறு கோணங்களிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பிரசுரிக்கப் பட்டிருந்தன.
"ஐயா! இண்டைக்கு அன்னதானம் செய்யிறது கஷ்டமாயிருக்கும் போலை கிடக்குது”.
பத்திரிகைகளுக்குட் புதைந்திருந்த அவரை இவ்வுலகிற்கு மீட்டான் அவருடைய வேலையாள் ஒருவன்.
அவருடைய மீசை துடித்தது.
12

“ஏன்? இன்னும் ஆயித்தமொண்டும்
“அப்படி ஒண்டும் இல்லை ஐயா. குடியரசு விழாவுக்காக வெளநாடுகளிலையிருந்து பெரிய பெரிய ஆக்களெல்லாம் இஞ்சை வந்திருக்கினமாம். இஞ்சையுள்ள பிச்சைக்காரரையும் ஏழையளையும் வேறை எங்கையோ கொண்டு போய் வைச்சிருக்கினமாம்"
கனகசபையின் கோபம் சட்டென்று தணிந்தது.
மூளை மீண்டும் சுறுசுறுப்படைந்தது.
“அன்னதானம்” அவருடைய மனத்தை விட்டகல, அந்த இடத்தில் “குடியரசு தின விருந்து” வந்து அமர்ந்து கொண்டது.
தன் பணப் பையை அவிழ்த்தார். நகரத்தின் விதிகளிலே, அவருடைய நாணயங்கள் உருண்டு சென்று பலதரப்பட்ட பிரமுகர்களை விருந்துக்கு அழைத்தன.
கனகசபைப்பிள்ளை அளிக்கும் விருந்து என்றால், அதில் விரும்பிய தெல்லாம் கிடைக்கும் என்பது பலரின் இனிய அனுபவம்
ஆகவே, அழைக்கப்பட்ட விருந்தினர் அனைவருமே, தங்களுக்கிருந்த ஏனைய வேலைகள், கடமைகள் எல்லாவற்றையும் தள்ளிப் போட்டனர்.
மாலை வந்தது. தலைநகரின் வீதிகளெல்லாம் கனகசபையின் விருந்து நடக்கும் ஹோட்டலுக்கே அனைவரையும் கொண்டு சென்றன.
தனது குறுகிய கால அழைப்பைக் கெளரவித்து, அமைச்சர்கள், திணைக்களத் தலைவர்கள், கம்பனி முதலாளிகள் எனப் பலர் வந்ததைக் கண்டு பெருமைப்பட்டுக் கொண்டார்.
மாலைத் தினசரிகளில் வந்த விசேட செய்தியொன்று மகிழ்ச்சியின் உச்சிக்கே அவரை இட்டுச் சென்று விட்டது.
அவருடைய நீண்ட காலப் பொதுச் சேவையைக் கருத்திற் கொண்ட சுதந்திர அரசாங்கம், “லங்கா ரத்னம்’ என்ற பட்டத்தின் மூலம் அவரைக் கெளரவிக்கத் தீர்மானித்து விட்டதாம்
விருந்து வைபவம் இரவு முழுவதும் நீடித்தது. மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார் கனகசபை, வந்திருந்தவர்களின் பாராட்டுக்களால் திக்குமுக்காடிப் போனார்.
13

Page 16
சிற்பி
“நீங்கள் கட்டாயம் அரசியலுக்கு வரவேண்டும். நாடு முழுவதிலும் உங்களின் சேவையைப் பரவலாக்க வேண்டும்” என அமைச்சர் ஒருவர் சொன்னது கனகசபையின் கற்பனைகளை வெகுவாகத் தூண்டி விட்டது.
ஊருக்குப் போய், நிலைமையை ஆராய்ந்து பார்க்க அவர் உள்ளம் துடித்தது.
முன்பே அறிவித்தபடி, ஊரின் எல்லையில் ஊர் மக்களும் பிரமுகர்களும் அவரின் வருகைக்காகக் காத்திருந்தனர். காரில் வந்து இறங்கிய அவர், அலங்கரிக்கப்பட்ட “ஜீப்” ஒன்றில் ஏறினார்.
மலர் மாலைகள் மலையெனக் குவிந்தன.
அவருடைய பங்களாவை நோக்கி ஊர்வலம் புறப்பட்டது. நாதஸ்வர வித்துவான்கள் கான மழை பொழிய, வாண வேடிக்கைகள் தொடர, வீதியின் இருமருங்கிலும் பூரண கும்பங்களுடன் மக்கள் வரவேற்க, “ஜீப்”பில் நின்றபடியே நன்றியும் வணக்கமும் தெரிவித்துக் கொண்டார் அவர்.
மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்த ஊர்வலம் திடீரென ஓரிடத்தில் நிறுத்தப்பட்டது.
மங்கல வாத்தியம், வாண வேடிக்கை எல்லாமே நிறுத்தப்பட்டன.
எதிரே யாரோ சிலர், எவ்வித ஆரவாரமும் இன்றிப் பாடை ஒன்றைச் சுமந்தபடி வந்து கொண்டிருந்தனர்.
அனைவரின் கண்களும் கனகசபையையே நோக்கின.
என்றுமே இறுமாப்புடன் தலைநிமிர்ந்து நிற்கும் கனகசபைப்பிள்ளை, தலையைக் குனிந்தபடி வேறொருவனுக்கு வழி விடுவது அன்றுதான் முதல் தடவை!
வேறு எவராலும் செய்ய முடியாத ஒன்றைத் தான் சாதித்து
விட்டதை அறிய முடியாமலே “சின்னத்தம்பி’ மெல்ல மெல்லச் சென்று கொண்டிருந்தான் அந்த பாடைக்குள் கிடந்தபடி!
GRS-4ణశివ
14

சத்திய தரிசனம்
அன்பினாலான ஓர் புதிய உலகைச் சிருஷ்டிப்போம். அதில் நீயும் நானும் முதற் பிரஜைகள்.
LDLņuíssò
சுதந்திரன் - 1959
பெருக்கெடுத்தது. காற்றுடன் போட்டியிடுவதைப் போல் நீரைச்
சுழித்துக் கொண்டு ஓடியது. எங்கோ பெய்து என்றோ முடிந்து விட்ட மழை, அந்தக் கிராமத்திலுள்ள ஒரேயொரு பாலத்தை அரித்துச் சிதைக்கும் வேகத்துடன் ஆறாகப் பாய்ந்தது. ஆடுகள், மாடுகள், பயிர், பச்சை மரத்துண்டுகள் எல்லாம் ஆற்றின் வேகத்துடன் கடலை நோக்கிப் பிரயாணஞ் செய்தன. இயற்கையின் சீற்றத்தை ஏக்கமுடன் பார்த்துக்கொண்டு நின்ற ஓர் உருவம், கண் இமைக்கும் நேரத்தில் ஆற்றின் அரவணைப்பில் ஆனந்தம் கண்டது.
மெ: மெல்ல அசைந்து சென்ற மகாவலி கங்கை திடீரெனப்
சிந்தனைச் சிக்கலில் கலங்கிப்போயிருந்த வேலாயுதம் திடுக்
குற்று விழித்தான். ஆற்றிலே மிதந்தது ஒரு பெண்ணின் உடல்! உலகை வெறுத்த வேலாயுதத்தின் முன்னால் உலகைத்துறந்து சென்று கொண்டிருந்தது அந்த உருவம்.
'தவறி விழுந்ததா? அல்லது தானாகவே குதித்ததா?, ஒன்றும் நிச்சயமாகச் சொல்வதற்கில்லை.
“முயன்று பார்ப்போம். முடியுமானால் ஓர் உயிரைக் காப்பாற்றலாம். அல்லாவிடில். நான் இவ்வுலகிலிருந்துதான் என்ன ஆக வேண்டும்?” வேலாயுதத்தின் மனதில் தோன்றிய இந்த எண்ணம் அவனைப் பிடரியில் பிடித்து ஆற்றில் தள்ளியது.
அப்பப்பா! இத்தனை வலிமையுடையதா வெள்ளம்? பெயர் பெற்ற நீச்சல் வீரனான வேலாயுதத்தையே திணற வைத்துவிட்டது அது. நீரினுள் முங்கினான். மூச்சுவிட முடியாது தவித்தான், பொங்கியெழுந்த நுரை அவன் பார்வையை மறைத்தது. மரக்கட்டைகள் தலையில் வந்து மோதின. குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த ஆடு,
15

Page 17
சிற்பி
மாடுகள் ‘அவனைப் பிடித்துவிடலாமா? என்று பார்த்துக் கொண்டே மிதந்தன. எல்லாவற்றையும் சமாளித்து, அந்தப் பெண்ணுருவத்தை நோக்கி நீந்திச் சென்றான் வேலாயுதம்.
கடைசியில்..! அப்பாடா! அப்பெண்ணின் கூந்தல் வேலாயுதத்தின் கைக்குள் சிக்கியது. தன் பலமெல்லாவற்றையும் சேர்த்து அவளைத் தூக்கிக் கொண்டு கரையை அடைந்தான்.
பெண்ணின் முகத்தைப் பார்த்த வேலாயுதம் திகைத்தான். அவள் முகத்தில் அவன் கண்கள் குத்திட்டு நின்றன.
“இவள் எப்படி இங்கு வந்தாள்? ஏன் ஆற்றில் விழவேண்டும்?” ஏற்கனவே கலங்கியிருந்த அவன் மூளை மேலும் குழம்பியது.
கண் விழித்த அவள் வேலாயுதத்தைக் கண்டதும் வீரிட்டல
றினாள். பேய்க்கூச்சல், காட்டுக் கதறல் அது. வேலாயுதத்தின் தேகம் நடுங்கியது.
“நீங். நீங்களா?”திக்கித் திக்கிப் பேசினாள் அவள்.
“ஆமாம் நவமணி! நான் தான். உன் வேலுதான்” பாசம்
கரைபுரண்டோடியது அவன் பேச்சில், சந்தோஷ மிகுதியில் கண்கள் ஒளிவிட்டன.
சீறினாள் அவள், சினந்தாள். ஆற்றில் விழுந்து மூர்ச்சையுற்றவளாகவே தெரியவில்லை, “சீ! வெட்கமில்லை.? மானம் கெட்டவர். உன் வேலுவாம்?”
"நீயா இப்படிப் பேசுகின்றாய்?
“நான்தான், நானேதான் ஒரு காலத்திலே ‘கண்ணே மணியே! கற்கண்டே!’ என்றீர்களே, அதே நவமணிதான் பேசுகின்றேன்”
גלן
“இன்றும் கூட நீ என் கண்ணுதான் நவமணி
“நரம்பில்லாத நாக்கால் வேறு என்னதான் பேசமாட்டீர்கள்?. ஏன், உங்கள் வீட்டிற்குள்ளேயே வைத்துக் கொஞ்சிக் குலாவினிகளே ஒருத்தியை, அவள் இப்போது புளித்துப் போனாளாக்கும்?”
16

“என்ன நவமணி! ஏதோவெல்லாம பிதற்றுகிறாயே!”
“மறுபடியும் என்னைப் பெயர் சொல்லி அழைக்காதிகள், நான் கூறுவது உங்களுக்கு வெறும் பிதலற்றலாகத்தான் தோன்றும்?. காதால் கேட்டும் நான் நம்பவில்லை, பிறகு என் கண்களாலேே கண்டேன் உங்கள் சல்லாபத்தை”. அவள் வெதும்பினாள் வேகம் குறைந்த குரல், இப்போது குளறத் தொடங்கியது. "உங்களை என் தெய்வமாகப் போற்றினேன். உங்கள் உருவத்தைக் கண்ணுள் வைத்து இமையால் மூடிக் காப்பாற்றினேன். கடைசியில் கயவின் என்பதை உணர்த்திவிட்டீர்கள்.” நவமணியின் கண்கள் நீரைக் கக்கின. நெஞ்சு விம்மியது.
Eart
வேலாயுதம் மெளனமாக நின்றான்.
“வாழத்தான் விடவில்லை. சாகவாவது விட்டீர்களா?”கோபமும் குரோதமும் கொப்பளித்தன அவள் பேச்சில்.
வேலாயுதம் பதிலளிக்கவில்லை.
நவமணி எழுந்தாள், நடக்கவே முடியவில்லை. கால்கள் தள்ளாடின. ஆற்றை நோக்கி அரைந்து சென்றாள்.
முடுக்கி விடப்பட்ட யந்திரம் போன்று தாவிப்பாய்ந்து தடுத்தான்
வேலாயுதம். அவனுடைய இரும்புப் பிடியிலிருந்து அவளால் தப்ப முடியவில்லை.
“இத்தனை வருடமும் உன்னை எண்ணி, ஏங்கி, உனக்காகத் தவங்கிடந்தேனே, நீயா இப்போது என்னைச் i:GRAIKAAN KAÉNaziIINIRIML? சொல்லடி நவமணி சொல்லு” அவளைப்பிடித்து அவன் உலுக்கி
"See
“அப்படியானால் நான் கண்ணால் கண்டவற்றைக் கனவு என்று நினைத்து மறக்கச் சொல்லுகிறீர்களா?”
“என்ன அதிசயத்தைக் கண்பாய்? அதையாவது சொல்லேன்"
“எதைத்தான் சொல்வது.? என்னை யாரெல்லாமோ பெண்
பார்க்க வந்திருந்தார்கள். அவர்களுக்காகவே அலங்காரஞ் செய்து
கொள்வதாகப் பாசாங்கு செய்து விட்டு, பின்புறக் கதவால் ஓடி ஓடி
வந்தேன். உங்களைக் காண்பதற்கு, அங்கே நான் கண்டதென்னட
வயசுப் பெண் ஒருத்தியுடன் வாய் நிறையப் பேசிக் கொண்டிருந்திகள்,
17

Page 18
சிற்பி
கொடுத்த தேநீரைக் கூடக் கையில் வாங்காது, வாய்க்குள் விடட்டுமென்று பேசாது நின்றீர்கள். ’ நவமணியால் மேலே பேச முடியவில்லை. விம்மலும் விசும்பலும் அவளை உலுக்கியெடுத்தன.
“உலகம்தான் அப்படி நினைத்தது. என்னை நன்றாக அறிந்த நீ கூடவா அப்படி நினைத்தாய்? அவள் என் தங்கை பத்மா’, கண்களில் மின்னிய நீரைக் துடைத்த படி கேட்டான் வேலாயுதம்.
“சாவின் விளிம்பிலே நின்று கொண்டு நான் கேட்கிறேன். இந்த நேரத்திலுமா நீங்கள் பொய் பேச வேண்டும்? உங்களுடன் கூடப் பிறந்தவர்கள்தான் ஒருவருமில்லையே!” -
“உண்மைதான் நவமணி! பத்மா என்னுடன் சேர்ந்து பிறக்காத சகோதரி”
“இவை எல்லாவற்றையும் நான் நம்பவேண்டுமென்றுதானே விரும்புகிறீர்கள்?”
“பத்மாவையும் என்னையும் தவிர, இதற்கு வேறு சாட்சிகிடையாது என் சொல்லை நம்ப விரும்பினால் நம்பு. சொந்தத் தாயையும் சேர்ந்து பிறந்த சகோதரிகளையும் தவிர உலகிலுள்ள மற்றைய பெண்கள் அனைவரும் ஓர் ஆணின் காதலிகள், அல்லது மனைவிகள்! இப்படித்தானே நீ நினைக்கிறாய் நவமணி? வேறு எதுவிதமான பந்தமும் அவர்கட்கிடையில் இருக்க முடியாதா?”
நவமணியால் பதில் கூற முடியவில்லை.
வேலாயுதம் கேட்டான், “உன் பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவரும் உன்.”
“அபாண்டம் வேலு வீண்பழி சுமத்தாதீர்கள்’
“பழி சுமத்தவில்லை நவமணி கலங்கிய உன் உள்ளம் எழுப்பிய அதே கேள்வியை உன்மீது திருப்பினேன். அவ்வளவுதான்”
“அப்படியானால் ஏன் பத்மாவைப் பற்றி என்னிடம் ஒன்றுமே கூறாது மறைத்தீர்கள்?”
18

த்திய துரிசனம்
“மறைக்கப்பட வேண்டிய விஷயம் அது. அதனாற்றான் உன்னிடமிருந்து மறைத்தேன். என்னால் அவள் வாழ்க்கையே பாழாகிவிட்டது. சகல விபரங்களையும் சமயம் வரும்போது சொல்லலாமென்றிருந்தேன்”.
“இப்பொழுதாவது சொல்லுங்கள் அந்தக் கதையை சாகும்போது சந்தோஷமாகச் செத்துவிடுவேன்”
“மறுபடியும் சாவைப்பற்றியே பேசுகிறாயே! இனி ஆற்றில் விழமாட்டேன் என்று வாக்குக் கொடு. நான் கதையைக் கூறுகின்றேன்"
“மன்னியுங்கள் வேலு முதலில் கதையைக் கூறுங்கள் என் வாக்குறுதியைப் பற்றிப் பின்பு யோசிக்கலாம்” பணிவுடனும் பச்சாத்தாபத்துடனும் கூறினாள் நவமணி.
அந்த ஆற்றங்கரையிலே இருவரும் அமர்ந்தாள்கள். வேலாயுதம் கதையைத் தொடங்கினான். “மனிதன் தன்னைக் கொண்டே உலகத்தை அளக்கின்றான். உள்ளத்தில் கள்ளமில்லாது வாழ்பவன் உலகிலுள்ளோர் அனைவருமே அப்படித்தான் வாழ்கின்றார்கள் என்று நினைத்துவிடுகின்றான். ஆனால் கடைசியில்.”
“இந்தத் தத்துவஞானத்தைப்பற்றிப் பிரசங்கம் செய்வதற்குத்தானா என்னைத் தப்புவித்திகள்?
“உன் அவசரந்தானே எல்லாவற்றையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டது கொஞ்சம் பொறுமையோடு கேள் நவம்”
வேலாயுத்தின் ஆணைக்குப் பணிந்தாள் நவமணி, வாயை மூடிக்கொண்டு காதுகளைக் கூர்மையாக்கினாள்.
வேலாயுதம் தொடர்ந்தான்.
(2)
நான் மூன்றாண்டுக் குழந்தையாக இருந்த போது எனக்கு ஒரு தங்கை பிறந்தாள், அவளில் எனக்கு அளவுகடந்த பிரியம்.
19

Page 19
சிற்பி
இரட்டைக் குழந்தைகள் போல் நாங்கள் வாழ்ந்தோம். ஆனால் அவள் பிறந்து இரண்டு ஆண்டுகள் முடிவதற்குள் இறந்துவிட்டாள். அவளுடைய பிரிவைச் சகிக்க முடியாது நான் அழுதேனாம். சாப்பிடுவது ஒன்றைத் தவிர வேறொன்றும் செய்யாது பித்துப் பிடித்தவனைப்போல நான் இருந்தேனாம். பெற்றோர்கள் என் நிலையைக் கண்டு மிகவும் பயந்து போனார்களாம்.
அம்மா இவையெல்லாவற்றையும் எனக்குச் சொன்னா.
காலம் இப்படியே கழிந்து கொண்டிருந்தது.
என் பத்தாவது வயதிலே நான் பள்ளியிற் படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் பள்ளிக் கூடத்துக்குப் புதிதாக ஓர் ஆசிரியர் வந்து சேர்ந்தார். தன் மனைவியுடனும் ஒரே மகளுடனும் அவர் எங்கள் கிராமத்திலேயே குடியேறிவிட்டார்.
அவருடைய மகளைக் கண்டதும் என் பெற்றோரும் நானும் அசந்து போய்விட்டோம்.
அவள்தான் பத்மா.
இறந்து போன என் தங்கையை “உரிச்சுப் படைச்சதைப்’ போன்றிருந்தாள் அவள்.
எங்கோ சென்றுவிட்ட என் தங்கை இப்போதுதான் திரும்பி வந்திருக்கிறாள் என்ற நினைவுடன் நான் பத்மாவுடன் ஒன்றிப் பழகினேன். என் பெற்றோர்களும் அவளைத் தம் சொந்தப் பிள்ளையைப் போலவே நடத்தினார்கள்.
நீண்ட காலத்திற்குப் பின்னர் எங்கள் வீட்டில் மகிழ்ச்சியும் கலகலப்பும் ஏற்படத் தொடங்கின, எனது சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. “சின்னச் சின்ன வீடு கட்டி, சிங்கார வீடுகட்டி’ விளையாடுவதற்கு மற்றப் பையன்களின் ஆதரவை நான் எதிர்பார்த்துக் காத்திருக்கத்தேவையில்லை. எனக்குத்தான் அருமைத் தங்கை ஒருத்தி கிடைத்துவிட்டாளே!. -
என் உயிரின் ஒரு பகுதியானாள் பத்மா. “அண்ணா, அண்ணா” என்று அவள் வாய் நிறைய அழைக்கும் போதெல்லாம், மறைந்த என் தங்கைச்சியே என்னை அழைப்பதாக நினைத்து மகிழ்வேன்.
20

சத்தி தரிசனம்
வருடங்கள் ஓடி மறைந்தன. சிறியவளாக இருந்த அவள், “பெரியவ’ளாகிய பின்னர், எங்கள் வீட்டிற்கு வருவதைக் குறைத்துக் கொண்டாள்; பள்ளிப் படிப்பையும் நிறுத்தினாள்.
நான் அவள் வீட்டிற்குச் செல்லத் தொடங்கினேன். ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது என் அம்மாவும் அங்கே போகாமல் விடமாட்டாள். பத்மாவைப் பார்க்காமலிருக்க அம்மாவாலும் முடியாது.
bad
ஒரு நாள் நான் அங்கே போனபோது பத்மாவின் தாயான் சொன்ன செய்தி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டது பத்மாவுக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டதாம்.
மாப்பிள்ளை அரசாங்க உத்தியோகத்தள். நல்ல அழகன். பத்மாவுக்கு ஏற்ற ஜோடிதான்.
கல்யாணத்தின் போது என்னாலான உதவிகள் எல்லாவற்றையும் செய்தேன்; கோபமுண்டாகும்படி குறும்பு செய்தேன்; அவளுடைய மனம் குளிரும்படி மாப்பிள்ளையைப் பற்றிப் புகழ்ந்து பேசினேன்.
கல்யாண வைபவம் முடிந்து மாப்பிள்ளை விட்டிற்குப் புறப்பட வேண்டிய நேரம் வந்ததும் அவள் அழுதாள். பெற்றோரையும் உற்றோரையும் விட்டுப் போகவேண்டியிருக்கிறதே என்று அழுதாள் தன் பிரிய அண்ணாவை விட்டுப்பிரிய வேண்டியிருக்கிறதே என்றும் அழுதாள.
அம்மா அவளைத் தேற்றினார். பல புத்திமதிகளை நானும் அவளுக்குச் சொன்னேன். ஆனால், அவள் வீட்டை விட்டுப் புறப்படும் நேரம் நெருங்க நெருங்க என் நெஞ்சு வேகமாய் அடிக்கத் தொடங்கியது.
அந்த நேரந்தான் பேரிடி போன்ற செய்தி ஒன்று வந்தது!
“நடத்தை கெட்ட பெண்ணை அழைத்துப்போக நாங்கள் விரும்பவில்லை. வீட்டிற்குள் ஒரு மாப்பிள்ளை; வெளியில் வேறொரு
மாப்பிள்ளையா?” என்று கேட்டுவிட்டு மகனையும் அழைத்துக் கொண்டு போய்விட்டார்களாம் மாப்பிள்ளையின் பெற்றோள்!
2

Page 20
சிற்பி
நெஞ்சில் யாரோ ஊசி ஏற்றியதைப் போன்றிருந்தது எனக்கு.
பத்மாவைப் பார்த்தேன். தன் தாயின் மார்பில் முகத்தைப் புதைத்தபடி அழுதுகொண்டிருந்தாள்.
எங்களைப் பிரிந்து மாப்பிள்ளையுடன் போக வேண்டியிருக்கிறதே என்று அழுதவள் இப்போது, அப்படிப் போகமுடியவில்லையே என்பதற்காக அழுதாள்.
‘பத்மா நடத்தை கெட்டவளா?’ என்னை நானே கேட்டுக் கொண்டேன்.
‘மற்றவர்கள் அப்படி நினைக்கும்படி நடந்துவிட்டேனோ?
சோகச் சித்திரமாக உலவிய பத்மாவின் முகத்தில் விழிக்கவே நான் அஞ்சினேன்.
‘அண்ணா! இதுக்காக நீ ஏன் கவலைப்படுகிறாய்,? உண்மையை உணர்ந்து அவர் என்னிடம் வரும்வரை நான் அவருக்காகக் காத்திருப்பேன்’ என்றாள் பத்மா.
என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
எனக்குத்தான் உலகம் தெரியவில்லை என்றால், அவளும் அப்படித்தானே இருக்கிறாள்.!
காலமென்னும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்துக் கரையேற முடியாது மாண்டார்கள் பத்மாவின் பெற்றோர்கள். தனியாளான பத்மா என் வீட்டிற்கே வந்துவிட்டாள். சில நாட்கள் கண்ணை மூடியிருந்த உலகம் மறுபடியும் விழித்துக் கொண்டது. நானும் பத்மாவும் ஒரே வீட்டிலேயே வசிப்பதைக் கண்டது!
“என் செயல் சரியானதுதானா? அவள் வாழ்க்கையைப் பொசுக்குகின்ற மாதிரியல்லவா நான் நடந்து கொள்கின்றேன்?” என்று என்னையே நான் கேட்டேன்.
‘அண்ணா! உலகத்தில் உயர்ந்தவர்கள் மாத்திரம் வாழ்ந்தால், அந்த உலகத்திற்கு நாம் கட்டுப்பட்டுத்தான் வாழ வேண்டும். கயவர்களும், பித்தள்களும், பொய்யர்களும் கூறுபவற்றை நாம் ஏன் சட்டை செய்ய வேண்டும்? எங்கள் அன்பிற்கு மாசு கற்பிப்பவர்களைக்
22

சத்திய தரிசனம்
கண்டு நான் பயப்படவில்லை; அவர்களுக்காகப் பரிதாபப்படுகின்றேன்.” பேடி போல் பதுங்கிப் பின் வாங்க நினைத்த என் காதுகளில் விழுந்த பத்மாவின் போதனைகள் இவை.
என் உள்ளத்திலே ஓர் இலட்சியம் உருவாகியது. எப்படியாவது பத்மாவின் கணவனைக் கண்டு பிடித்துப் பிரிந்த இருவரையும் பிணைத்துவிட வேண்டும். பத்மா மறுபடியும் சந்தோஷமாக வாழ வேண்டும்.
கண்டியில் எனக்கு உத்தியோகம் கிடைத்தது. பத்மாவையும் கூட்டிக்கொண்டு கண்டிக்குச் சென்றேன். அங்கேதான் பத்மாவின் கணவனும் வேலை பார்த்து வந்தான்.
வேலை நேரந் தவிர்ந்த மற்றைய வேளைகளில் அவனைத் தேடினேன். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரிடமும் அவனைப் பற்றிக் கேட்டேன். மூலை முடுக்குளிலெல்லாம் அவனைத் தேடி அலைந்தேன்.
as a de
“அந்த வேளையில் தான் நான் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டு, உங்கள் இலட்சியம் நிறைவேறாது இடையூறுகள் செய்துவிட்டேன்.” இப்போது தான் வாய் திறந்தாள் நவமணி. வேலாயுதம் கூறிய கதை அவளுடைய இதயத்தைக் கசிந்துருகச் செய்தது.
“நீ மாத்திரம் அதற்குப் பொறுப்பல்ல, நவமணி! என் இலட்சியத்தை நான் என்றுமே மறந்ததில்லை. உன்னுடன் பழகிய சந்தர்ப்பங்கள் என்னை உனது அடிமையாக்கின. பத்மாவிற்கு வாழ்வளித்தால் அதுவே நம் இருவரது இன்ப வாழ்வின் திறவுகோலாக அமையும் என்று கனவு கண்டேன்’
“நெஞ்சிலே புதைத்து நிம்மதியிழக்கச் செய்த இந்த விபரங்களை அன்றே நீங்கள் வீண்டு சொல்லியிருந்தால், நானும் உங்களுடன் சேர்ந்து உங்கள் வேலையை இலகுவாக்கியிருப்பேன்’. வேலாயுதம் செய்த தவறைச் சுட்டிக் காட்டினாள் நவமணி.
“உன்னிலும் பார்க்கப் பெண்கள் உள்ளத்தை நன்கு புரிந்து கொண்டிருப்பவன் நான். பத்மாவைப் பற்றி நான் கூறவில்லையே
23

Page 21
சிற்பி
என்று இன்று வருந்துகின்றாய். ஆனால் அப்படி நான் கூறியிருந்தால் உன் இதயமே வெடித்திருக்கும். என்னைப் பற்றி உன் காதுகளில் விழுந்த செய்திகள் அனைத்தும் எனக்குத் தெரியும், ஏற்கெனவே உன் மனதில் தோன்றிய சந்தேகப் புயலை, பத்மாவின் கதை சூறாவளியாக்கியிருக்கும்.”
நவமணியின் கண்கள் விரிந்தன. அவள் எண்ணிய எண்ணங்கள் அவனுடைய வாயின் வழியாக வெளிப்படுகின்றனவே!
நவமணியின் கண்ணும் காதும் வேலாயுத்தின் வாயிலேயே பதிந்தன.
வேலாயுதம் தொடர்ந்து கூறினான்.
to do to
வழக்கம்போல் இருட்டிய பின்பு வீடு வந்து சேர்ந்தேன் ஒரு நாள். ஊரிலிருந்து தந்தி ஒன்று வந்திருந்தது. - எங்கள் இருவரையும் உடனே வரும்படி. பத்மா, பதறினாள். அன்றிரவே யாழ்ப்பாணம சென்றுவிட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள். என் தாய் தந்தையரில் யாருக்கோ உடம்பு சரியில்லை என்பது அவள் ஊகம்.
நான் நினைத்தது வேறு. மாப்பிளை வேட்டையாடுபவர்கள்
சிலர் அவர்களுக்குத் தகுந்த முறையில் தூபம் போட்டிருக்கலாம். அதன் பலன் அந்த அவசரத் தந்தியாக இருக்கலாம்.
பத்மா இதை ஏற்கவில்லை. பிடிவாதத்தைத் தளர்த்தவுமில்லை.
எனக்காக அவள் தயாரித்து வந்த சூடான தேநீரையே வாங்காது என் முடிவான தீர்மானத்தை அவளிடம் தெரிவித்தேன். *பத்மா உன் வாழ்க்கையைச் செப்பனிடாது ஒரு அடிகூட நகரப்போவதில்லை.” −
மெளனமாக வேலாயுதத்தின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த நவமணியின் நெஞ்சு ‘திக் கென்றது. பொங்கி எழுந்த அழுகையை அடக்கிக் கொண்டாள் சிந்திய பாலை எண்ணி நொந்து என்ன பயன்?
வேலாயுதம் தொடர்ந்தான்.
24

சத்திய தரிசனம்
பத்மா அழுதாள், என்னையே பார்க்கப் பிடிக்காதவளைப் போன்று அப்பால் நகள்ந்தாள். ஒவ்வொரு விம்மலும் அவளுடைய இதய வேதனையைத் தெளிவாக எடுத்துக் காட்டியது. பெற்றவர்களிலும் பார்க்க அதிக பிரியமுடன் அவளை வளர்த்தவர்கள் அவசரத் தந்தி கொடுத்திருக்கின்றார்கள். அதை அலட்சியம் செய்கின்றானே அவளுர்டைய அண்ணா, பெற்றோரையும் பிள்ளையையும் பிரித்த பழி அவளைச் சேர வேண்டுமா?
இவற்றை நினைத்துப் போலும் பத்மா அழுதாள். அவள் படும் வேதனையைக் காணச் சகியாது அவளை ஊருக்கு அழைத்துச் சென்றேன். கல்லுப்பிளையார் மாதிரி இருந்தார்கள் பெற்றோர்கள். பத்மாவின் வாழ்வைப்பற்றிய நினைவில் நான் விட்டிற்குக் கடிதமே எழுதவில்லை. என்னவோ ஏதோ என்று பயந்து விட்டார்களம் அவர்கள். ஒருதடவை எங்கள் இருவரையும் பார்க்க வேண்டுமென்று தோன்றியதாம். உடனே அனுப்பிவிட்டார்கள் அவசரத் தந்தியொன்றை.
ஊரில் இரண்டு வாரம் தங்கியிருந்தோம் லீவு முடிய மறுபடியும் கண்டிக்கு வந்தோம். அங்கு சென்றவுடனே, என் மனதில் ஏதோ ஓர் ஆவேசம் புகுந்துகொண்டது. நவமணி நித்தமும் ஓடிவருகிற உன்னைக்கூட மறந்து என் “பழைய மாப்பிள்ளை வேட்யிைல் முன்னிலும் பார்க்க அதிக தீவிரமுடன் இறங்கினேன்.
பட்ட பாட்டிற்கெல்லாம் பலனாக, உழைத்த உழைப்புக்குப் பரிசாக, அடைந்த கஷ்டங்களுக்கு ஈடாக, கடைசியில் பத்மாவின் கண்வன் என் கண்ணில் பட்டான். அவன் வாயைத் திறந்து "வ" என்று அழைக்க முன்பே, நடந்த நிகழ்ச்சிகளை ஒளிவுமறைவின்றி ஒன்றுவிடாமல் கூறினேன். பத்மாவின் மாசற்ற நிலையை விளக்கினேன். அவளுக்கு வாழ்வளிக்கும் படி மன்றாடினேன். காலில் விழாத குறையாகக் கெஞ்சினேன்.
என் வேண்டுகோளின் முடிவில் அவன் கூறிய செய்தி என்னைப் பைத்தியமாக்கியது.
dodd
பத்மாவைக் கண்டவுடனே மனதைப் பறிகொடுத்துவிட்டான் அவன். அவளுடைய குழந்தையுள்ளத்தை எடுத்துக் காட்டியது அவள் மதிவதனம். கல்யாணத்தின் போது யாரோ அவன் பெற்றோர்களுக்கு
25

Page 22
சிற்பி
என்னைப்பற்றி எடுத்தோதியிருக்கிறார்கள். நான் நடந்து கொண்ட முறை, அவர்கள் கேள்விப்பட்டதற்குச் சாட்சியாயிருந்தது. உடனேயே புறப்பட்டுவிட்டார்கள். அவர்களை எதிர்த்துப் பேசியே அறியாத அவனும் அவர்களைப் பின்தொடர்ந்தான். ஆனால் பத்மாவிடம் பறிகொடுத்த இதயத்தை மட்டும் அவனால் திருப்பிப் பெற முடியவில்லை.
வேறு எத்தனையோ பேர் அவனுக்குப் பெண் கொடுக்க முன்வந்தனர்! அவன் ஒரேயடியாக மறுத்துவிட்டான்.
நாட்கள் கழிந்தன. எப்படித்தான் எடுத்துச் சொன்னாலும் பத்மா குற்றமற்றவள் என்பதை, அவன் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. நினைவை மாத்திரம் நெஞ்சில் நிறுத்தி எத்தனை நாட்களுக்கு வாழ முடியும்?
பெற்றோரின் வற்புறுத்தலுக்காகவும், நண்பர்களின் கிண்டல் கலந்த பேச்சைக் கேட்டுப் பொறுக்காமலும், மறுபடியும் மணஞ் செய்வதற்கு உடன்பட்டான், அரை மனத்துடன் கல்யாணம் நடைபெற்றது.
a
நவம்! பித்துப்பிடித்த என் பெற்றோர்கள் அந்த அவசரத் தந்தியை கொடுக்காதிருந்திருந்தால் அவனுடைய இரண்டாவது கல்யாணத்திற்கு முன்னேயே அவனைச் சந்தித்திருப்பேன். நான் ஊரிலிருந்த அந்த நாட்களிலேதான் அவன் கல்யாணம் நடை பெற்றதாம்.
கல்யாணம் நடந்தது உண்மைதான், ஆனால் அவன் எதிர்பார்த்த இன்பம் கிட்டவில்லை. பெயரளவிலேதான் அவர்கள் கணவன் மனைவி. வேண்டா வெறுப்புடன் நடந்துகொண்டாளாம் அந்தப் புது மனைவி!
பாவம் அவன். இரண்டு தடவை ஏற்பட்ட ஏமாற்றத்தை அவனால் தாங்கவே முடியவில்லை; வெறியனாகிவிட்டான். தானாகக் கனியாத பழத்தை அடித்துக் கணிய வைக்க நினைத்தான். மணம் கொடுக்க மறுத்த மலரைக் கசக்கி முகர முயன்றான்.
அந்தப் பிடிவாதக்காரி அவனை ஏமாற்றியேவிட்டாள்.
26

சத்திய தரிசனம்
ஒரு நாள் இரவு ஏதோவெல்லாம் புலம்பினாளாம். அவன் கட்டிய தாலியைக் கழற்றி அவனுடைய பாதங்களில் வைத்துவிட்டு எங்கோ சென்றவள், சென்றவள்தான், திரும்பிவரவே இல்லையாம்.
அவனைத் தேடி அலைந்த எனக்கு அவளைத் தேடி அலுத்த அவன் சொன்னவைதான் இவையெல்லாம்.
as a de
வெடிக்கவிருந்த தன் இதயத்தை அழுத்திப் பிடித்தபடி இருந்த நவமணியை நன்கு கவனிக்க முடியாதபடி வேலாயுதத்தின் பார்வைக்குக் கண்ணிர் திரையிட்டது. அவளிடமிருந்து வெளிப்பட்ட அனற்காற்றையும் உணராது, தூக்கத்திற் பிதற்றுபவனைப்போல் வேலாயுதம் பேசினான்.
நான் இந்த உலகிற் பிறந்து எத்தனை பேருக்குக் கஷடத்தைக் கொடுத்துவிட்டேன். பத்மா. அவள் கணவன். அவனுடைய புதுமனைவி. பத்மாவின் வாழ்க்கையில் இனி ஒளி
ஏற்றவே முடியாது. என் இலட்சியக் கனவு சிதைந்துவிட்டது.
என் மூளை வேலை செய்ய மறுத்தது. பத்மா என் நினைவிலிருந்து மறைந்தாள், நீ என் நினைவிலிருந்து மறைந்தாய், என் பெற்றோர்களை மறந்தேன், உத்தியோகத்தைத் துறந்தேன்.
எல்லாவற்றையும் துறந்துவிட்டு ஓடினேன். கால் போன திசையில் ஓடினேன்.
கடைசியில்.
இந்த ஆற்றின் மடியிலே கிடந்து கடைசி மூச்சை விடுவோமா என்று நினைத்தபோதுதான் நீ மறுபடியும் என்னிடம் சிக்கினாய். a
பிடித்து வைத்த பொம்மை போன்று அசையாதிருந்த
நவமணியின் கண்களிலிருந்து பெருகிய கண்ணிர், அந்தப் பேராறுடன் சங்கமமாகிக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்தின் பின் அவள் சொன்னாள்.
“தேநீரும் கையுமாக நின்ற பத்மாவையும் அருகில் நின்று அவளையே பார்த்த உங்களையும் கண்டு நான் சந்தேகம் கொண்டுவிட்டேன். ஆத்திரமும் அவசரமும் என் அறிவுக்குத் திரையிட்டுவிட்டன. காதால் கேட்டவற்றைக் கண்ணாலேயே கண்ட பின் என்னால்
27

Page 23
சிற்பி
வேறு எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. உணர்ச்சியற்ற மரக்கடடையானேன். என் பெற்றோர்களைத் திருப்திப் படுத்துவதற்காக, அவர்கள் பார்த்து வைத்திருந்த ஒருவருக்குக் கழுத்தை நீட்டினேன். ஆனால் அந்த அவர்தான் பத்மாவின் கணவர் என்பதை இப்போதுதான் உணர்கிறேன். நான் தான் அவருடைய “புது மனைவி.”
துள்ளி எழுந்தான் வேலாயுதம். உடல் படபடத்தது.
“அப்படியானால் நீ மணமானவளா? நீயா என் பத்மாவின் வாழ்க்கைக்கு எதிராக முளைத்தாய்?
வேலாயுதத்தின் இராட்சதக் குரல் அந்தப் பிராந்தியத்தையே அதிர வைத்தது.
“உண்மை தெரிந்திருந்தால் நான் கல்யாணத்திற்குச் சம்மதித்திருக்கவே மாட்டேன். உங்களால் ஏற்பட்ட ஏமாற்றம் என்னைக் கல்லாக ஆக்கிவிட்டது. என்னால் ஒன்றையும் ஆராய முடியவில்லை”
சூடுபட்டுத் தப்பிய வேங்கையின் முன் நிற்கும் இளம்மான் போன்று, நின்றாள் நவமணி,
இப்போது அவன் ஒன்றும் பேசவில்லை; அவளும் ஒன்றும் பேசவில்லை.
அசையாத பொற்சிலை போல் அமர்ந்திருந்த நவமணியையே பார்த்துக் கொண்டிருந்தான் வேலாயுதம், சற்றுமுன் ஏற்பட்ட வெறி மாறியது. பார்வையில் கொடுரம் குறைந்தது. தண்மைமேவியது. அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆத்திரம், அவமானம், ஏக்கம் எல்லாம் மாறிப் பச்சாத்தாபமே ஏற்பட்டது. அவளுடைய உடல் நடுங்கியபடிதான் இருந்தது. அவளுடைய அவசர புத்தி இன்று எத்தனை விபரீதங்களை ஏற்படுத்திவிட்டது?
அமைதி விளைவித்த பயங்கரத்தைப் பொறுக்க முடியாது, வேலாயுதம் கேட்டான், “ஒன்று சொல்லுகிறேன் நவமணி கேட்பாயா?”
“ஏன் என்னை வெறித்துப் பார்க்கிறாய் நான் பேசுவது பிடிக்க66.606) is
28

சத்திய தரிசனம்
“அதெல்லாமில்லை. சொல்லுங்கள்” பெருமூச்சுடன் அவள் கூறினாள்.
“பத்மாவை “உன்’ கணவனுடன் இணைத்து வைத்துவிடுவேன். அன்று அவனுடன் பேசியதிலிருந்து, பத்மாவிற்காக அவன் ஏங்கும் ஏக்கத்தைக் கண்டு கொண்டேன். பத்மா நிச்சயம் மகிழ்ச்சியுடன் வாழ்வாள், உன்னால்தான் அவனுடன் வாழ முடியவில்லையே, என் வாழ்க்கையை மலர வைப்பாயா? அவளுடைய பொற்கரங்களைப் பிடித்து அழுத்தினான் வேலாயுதம்.
உதறிவிட்டெழுந்தாள் நவமணி, பொங்கிய இதயம் கண்ணுள் புகுந்து கண்ணிராகக் கரைந்தது.
“என்னை மறந்து விடுங்கள் வேலு நான். வெறொருவரின்.”
அவளை இடைமறித்தான் வேலாயுதம். “உலகிலுள்ள எல்லோருமே இப்படித்தான் வாழ வேண்டுமென்று நான் கூறவில்லை. எங்கள் இருவரது நிலையும் வேறு, மற்றவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. நானே உன்னை ஏற்றுக்கொள்ளத் தயாராகும் போது, நீ ஏன் தயங்குகின்றாய்?”
“உணர்ச்சி வேகத்திலே உறுதி மொழிகளைக் கொட்டாதீர்கள். உங்கள் வாழ்க்கையை நீங்களே பாழடிக்காதீர்கள்.” எங்கோ பார்த்தபடி பேசினாள் நவமணி.
வேலாயுதத்தின் முகத்தைப் பார்க்க அவளால் முடியவில்லை. எரிமலை வெடிக்கும் முன்பே தண்ணிருக்குள் புதைந்துவிட விரும்பினாள். எழுந்து ஓடினாள் ஆற்றை நோக்கி.
எட்டிப் பிடித்தான் அவன், அவனையும் இழுத்துக்கொண்டு விழுந்தாள் ஆற்றினுள். மகாவலியின் மடியில் மறுபடியும் இருவரும் கட்டிப் புரண்டனர். அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளத் துடித்தாள். திமிறினாள். பிடித்த பிடியை அவனும் தளரவிடவில்லை.
பரிதாபமாகப் பார்த்தாள் அவனை.
வேலாயுதம் கேட்டான். “நவம் நிதான் உணாச்சிவசப்பட்டு உயிரை மாய்க்க முயல்கின்றாய். நீ அநியாயமாகச் சாவதிலே
S S S S S S S S S S S S S SLS S SL S S S S S S S S S S S S S S SSS S S SS S S U JII(béi5(g5 என்ன இலாபம் ஏற்படப்போகிறது?. கொஞ்சம் சிந்தித்துப் பார் நவமணி! நீ வேறொருவனுக்கு
29

Page 24
சிற்பி
மாலையிட்டது உண்மைதான். ஆனால் மனைவியாக வாழவில்லையே! எனக்கும் நெஞ்சு உண்டு. நீதி எது, நியாயம் எது, ஒழுக்கம் எது என்பவற்றை உணரும் சக்தியும் அதற்குண்டு. நவமணி! அன்புதான் உலகில் நிலையானது, அன்பினால் கட்டுண்ட எங்களை ஒருவராலும் ஒன்றும் செய்துவிட முடியாது. அன்பினாலேயான புதிய உலகம் ஒன்றைச் சிருஷ்டிப்போம். அதிலே நீயும் நானும் முதல் பிரஜைகள்.” பிச்சைக்காரனின் குரலில் இருக்கும் பணிவு அவன் குரலில் இருந்தது. அவனும் பிச்சைக்காரன் தான், அன்புப் பிச்சை கேட்டான்.
அவனுடைய உள்ளத்தின் ஒளி, அவளைத் தன்பால் இழுத்தது. சாகும் முயற்சியில் களைத்துப்போன அவள், அவனுடைய முகத்தை அண்ணாந்து பார்த்தாள்.
“நவமணி! இனி உன்னைத் தடுக்க வில்லை. நீ செத்துவிடு. ஆனால் கூடவே என்னையும் அழைத்துச் செல், வாழ்வின் இன்பத்தில் பங்கு கொள்ள முடியவில்லை. சாவின் அணைப்பிலேயாவது சாந்தியடைவோம். பத்மா எக்கேடாவது கெட்டுப் போகட்டும், அவளுடைய கணவனைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. உலகமே அழிந்து போகட்டும்.” வேலாயுதம் வாயைத் திறந்து ஒன்றும் பேசவில்லை. ஆனால் அவனுடைய முகத்தில் இவற்றைத்தான் கண்டாள் நவமணி. அவனுடைய இதயக் குமுறலை அவள் நெஞ்சு உணர்ந்தது.
வாழவேண்டுமென்ற ஆசை அவளுக்கும் ஏற்படத் தொடங்கியது. யாருக்காக இல்லாவிட்டாலும், வேலாயுதத்திற்காகவாவது வாழத்தான் வேண்டும்!
வேலாயுதத்தின் கைகள் தன்னைச் சுமந்து கொண்டிருப்பதை இப்போதுதான் உணர்ந்தாள். அவள் உடம்பு புல்லரித்தது. புதுமணப் பெண்ணின் நாணம் அவளைக் கெளவியது.
“வேலு”
ஆற்றின் சலசலப்பின் பின்னணியுடன் வேலாயுதத்தின் இதய வீணையை மீட்டினாள் நவமணி. எமனின் பாசக்கயிறாக வளைந்த மகாவலி, இப்போது இன்பப்படகின் துடுப்பாக மாறியது. அந்த இன்பபுரியிலே அவர்களை வரவேற்பதற்குப் பத்மாவும் அவள் கணவனும் காத்துக்கொண்டு நிற்கின்றார்களோ?
G-4ణశివ
30

சத்திய தரிசனம்
ஆசையும் அன்பும் துளிர்க்க அவள் கெத்சிக்கேட்ட போதெல்லாம் மனோகரனால் வரைய முடியாதிருந்த அவளின் ஓவியத்தை இப்போது அவன் வரைந்துதான் விட்டான்! தன் உயிரைக் கொய்தெடுத்து உதிரத்துடன் கலந்து வரைந்த அந்த அற்புத ஒவியத்தில் உயிர்க்களை சொட்டியது. கலை ஒளி சுடர்விட்டது. அழகு ஒழுகியது.
வீரகேசரி - 1961
9ਮ அப்பனே முருகா. கலியுக வரதா. கந்தப்பா.” சற்று முன்புவரை அந்த மலையின் உச்சியில் ஓங்கி ஒலித்த அந்த ஒலிகள் இப்பொழுது மலைச்சரிவிலே கேட்டுக் கொண்டிருந்தன. உச்சியில் நின்ற முருக பக்தர்கள் அடிவாரத்தை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தனர்.
இடையிலே ஓரிடத்தில் இரண்டே இரண்டு உருவங்கள், உலகை மறந்து, வெயிலை மறந்து உணர்ச்சிச் சுழியில் அகப்பட்டுத் தவித்துக் கொண்டிருந்தன.
உருக்கை உருக்கி வார்த்ததைப் போன்றிருந்தான் அவன் மனோகரன். உறுதிவாய்ந்த அவனுடைய கரங்களின் பிடியிற் கிடந்தது ஒரு தங்கப் பூங்கொடி - ஜானகி.
மனோகரன் எங்கிருந்து வந்தான் என்பது ஜானகிக்குத் தெரியாது. அவள் எப்படி வந்தாள் என்பது அவனுக்கும் தெரியாது. மலையில் ஏறும்போது ஒன்றாகவே ஏறவில்லை. இறங்கு பாதையில் அருகருகே வந்தபோதும் ஒருவரையொருவர் அடையாளங்காணவில்லை.
அவளுடைய கால் ஓரிடத்தில் வழுக்கியது. விழவிருந்தவளை ஆபத்துக்குப் பாவமில்லை என்ற நிலையில் எட்டிப் பிடித்துக் காட்டாற்றினான் அவன்.
3

Page 25
சிற்பி
ஆளையாள் 960)Lu Islatio கண்டபோது, ஆச்சரியமும் அதிர்ச்சியும் அவர்களிடையே மெளனத்தைத் திணித்துவிட்டன.
அவர்களை விட்டு எத்தனையோ பேர் சென்றுவிட்ட போதிலும் அவர்கள் அங்கிங்கு அசையவில்லை.
“மனோகர்’
நீண்ட நேரத்தின் பின் அவளுடைய குரல் ஒலித்தது. நெஞ்சில் நிறைந்திருந்த ஆசையும் பாசமும் அவள் குரலாய் ஒலித்தன.
“ஜானகி”
விபரிக்க முடியாத ஒருவித ஏக்கம், தணியாத தாபம் அவன் குரலானது.
தொடர்ந்து அவர்களால் எதையுமே பேச முடியவில்லை.
விரிந்து சுடர்விட்ட அவனுடைய விழிகளுக்குள்ளே, விசாலமான அவன் மார்பின் நடுவே, வெட்டி ஒட்டிவிட்டாற் போன்ற உதட்டின் விளிம்பிலே அவள் எதையெதையோ தேடிக்கொண்டிருந்தாள்.
அவனுடைய நெஞ்சப் பறவையோ நீண்ட சிறகுகளை அடித்துக் கொண்டு மலையையும் காட்டையும் மாதங்களையும் வருடங்களையும் கடந்து கற்பனைக்கெட்டாத கடு வேகத்துடன் கண்ணிற் கெட்டாத நெடுந்துாரத்துக்குச் சென்றது.
யாருமே தேடாது அமைதியாகக் கிடந்த ஒரு குளத்தின் படிக்கட்டில் இருந்த அதன் நுண்ணிய செவிகளில் அன்பும் ஆசையும் ஒழுக இன்பமும் இனிமையும் இழையோட இரண்டு குரல்கள், ஒன்றன் பின் ஒன்றாய், ஒன்றுடன் ஒன்றாய் இணைந்தும் பிணைந்தும், பிரிந்தும் பொருந்தியும், வெகு தொலைவில் இசைக்கப்படும் வீணையும் வேங்குழலும் காற்றில் கலந்து வந்து காதில் இனிட்டதைப் போல் இலேசாக, மிக மெல்லியதாகக் கேட்டன.
குரல்களுக்குரிய குமரனையும் குமரியையும் அதன் கண்கள் அள்ளிப் பருகின.
“ஆர் என்ன சொன்னாலும் என்னைக் கைவிடமாட்டீர்கள்தானே?”
32

சத்திய தரிசனம்
“ஆண்டவனே வந்து “ஜானகியை மறந்துவிடு’ என்று ஆணையிட்டாற்கூட உன்னை நான் மறக்கப்போவதில்லை; உன்னை மறந்து வேறொருத்தியை மணக்கப் போவதுமில்லை”
“பணத்தில் மிதப்பவர் நீங்கள்; படிப்பில் உயர்ந்தவள்; எந்த விதத்திலும் உங்களுக்குத் தகுதியில்லாதவள் நான் அன்பு என்ற ஒன்றைத் தவிர எதுவுமே இல்லாத ஏழை. உங்கள் பெற்றோரும் உற்றாரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புகின்றிர்களா?
“என் விருப்பத்தை அவர்களிடம் தெரிவிப்பேன். மறுக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன். மறுத்தால், அவர்களுக்காக நான் கவலைப்படப் போவதில்லை. என் இதயத்திற்கு இதமளிக்கும் இந்த ஓவியக் கலைக்காக என் பதவியையே உதறியதுபோல், என் உள்ளத்துடன் கலந்துவிட்ட உனக்காக நான் எதையுமே செய்வேன்.”
“அப்படியானால். என் உருவை ஒவியத்திலே வரைவதற்கு ஏன் மறுத்து வருகிறீர்கள்? யாராவது பார்த்தால் ஏதாவது நினைத்துவிடுவார்கள் என்று பயப்படுகின்றீர்களா?”
“பயமா? எனக்கா? நீ சொல்வதைக் கேட்கச் சிரிப்புத்தான் வருகிறது. ஆனால்.”
“சொல்லுங்கோ”
“உன்னையே உரித்து வைத்தாற் போன்ற ஓர் ஓவியத்தை வரைவதற்குப் பல தடவை நான் முயன்றிருக்கின்றேன். முடியவில்லை. என் முன்னால் நீ இருக்கின்ற வேளைகளில் உன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர என்னால் வேறெதுவும் செய்ய முடியவில்லை”
*மனோகர்”
என் உள்ளத்து உணர்ச்சிகளை ஒருவாறு அடக்கி, உன் உருவத்தை மட்டும் மனக்கண்ணில் நிறுத்தி என் தூரிகையை எடுப்பேன். அந்த வேளையில் என் தூரிகையின் நுனியிலே நீ தோன்றி உன் துடியிடை அசைத்து நர்த்தனமிடுவாய். அந்த அழகு நடனத்தால் என்னை மயக்கி, என் நெஞ்சையும் நினைவையும் கொய்தெடுத்து, ஆகாச ஊஞ்சலில் வைத்து என்னைத் தாலாட்டுவாய், அந்த மானசீக உலகிலே நான் மயங்கிக் கிடப்பேன்.
33

Page 26
சிற்பி
“அத்தான்”
“மயக்கம் நீங்க, உன்னை மகிழ்விக்க வேண்டும் என்ற ஒரே இலட்சியத்துடன் உன் உருவத்தை வரைய ஆரம்பித்தால். பூர்த்தியாக்கப்படாத உன் அங்கங்கள் - தங்கத் துண்டுகள் அங்கங்கே கிடந்து சித்திரவதையா செய்கின்றாய்?’ என்று கேட்டு என்னைச் சித்திரவதை செய்யும். ஒவியத்தைப் பூரணமாக்க முடியாத ஆற்றாமையால் நான் கண்ணி சிந்த என் வண்ண மை கரைய அந்த வெள்ளத்தில் மூழ்கி நான் மூச்சு விட முடியாமல் தவிப்பேன்’.
அவள் சற்று நெருங்கி வந்தாள். தன் மெல்லிய சேலைத் தலைப்பினால் அவனுடைய கண் மடல்களை ஒற்றினாள். அந்த ஸ்பரிசம் காரணமாக, தன்னைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில். அவளை அள்ளி அணைத்து, அவளுடைய பட்டுக் கன்னங்களில் தன் முகத்தை ஒட்டப் பதித்து. ஆசை நினைவுகளுடன் தன் அகன்ற கரங்களுள் அவளை அடிமையாக்குவதற்கிடையில். அவள் மறைந்து விட்டாள்.
לל
“ஜானகி. ஜானகி.
a
“ஜானகி. ஜானகி. இப்போதைய ஜானகி திடுக்குற்றாள்.
திடீரென்று ஏன் இப்படிக் கத்துகின்றார்?” மனோகரனின் உருக்குத் தேகத்தை உலுக்கினாள்
“பேய் பிடித்தவனைப் போலக் கத்தினிர்கள். நான் பயந்துவிட்டேன்”
“பேயல்ல. பேயைப் போல வந்த . (36.606LTlib. ஏதோ ஒரு கனவு.” விருப்பு வெறுப்பற்ற குரலிலே பதிலளித்த அவன் இப்போது அவளிடமிருந்து சற்று விலகி நின்றான்.
சூழ்நிலை மாறிவிட்டது.
34

த்தி ரிசனம்
மனமொத்த நண்பள்களாய் அந்த மலைச்சரிவிலே நிற்பதற்கு அவர்களால் முடியவிலலை.
உச்சிவெயில் இப்போதுதான் சுட்டது. தனிமை இப்போதுதான் தன் பயங்கரத்தை உணர்த்தியது.
இருவரும் இறங்கத் தொடங்கினார்கள். பழைய நினைவுகள். பாச அலைகள், பாரமாக அழுத்தத் தொடங்கின. தள்ளாடித் தள்ளாடியபடியே இறங்கினர்கள். அவனும் பேசவில்லை. அவளும் பேசவில்லை.
மலையடிவாரத்தில் மூன்று வயதுக் குழந்தை ஒருத்” ஜானகியுடன் சேர்ந்து கொண்டாள்.
“இவள்தான் என் மகள், அன்பரசி” - புதிதாக வந்தவளை அறிமுகப்படுத்தினாள் ஜானகி. குழந்தையை வாரித் துக்கினான் அவன். அவனுடைய முகத்தின் பயங்கர மாற்றத்தைக் கண்ட குழந்தை அழுதது. சமாதானப்படுத்தினாள் தாய்.
“நான் இதுவரை எந்தக் குழந்தையையும் என் கைகளாற் தொட்டதில்லை. இன்றைய முதல் முயற்சியே முழுத்தோல்வியடைந்து விட்டது” - விரக்தியுடன் சிரித்தான் மனோகரன்.
மெளனக் கண்ணின் சிந்தியபடி மகளை அனைத்துக் கொண்டாள் ஜானகி.
கோவில் சமீபித்துவிட்டது. ஆண்களும் பெண்களும், கிழவர்களும், குழந்தைகளுமாக ஆயிரமாயிரம் பக்தர்கள் அங்கே குழுமியிருந்தனர். அத்தனை பேரின் மத்தியிலும் மனோகரனும் ஜானகியும் தனித்து நின்றனர்.
“இந்தச் சன சமுத்திரத்தினுள், உன் குழந்தையுடன் என்ன செய்யப் போகின்றாய்?” - அவன் கேட்டான்.
“இப்படி நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்து நான் பழகிவிட்டேன். என் கனவள் காலமானதன்பிறகு, கோவிலும் குளமும் தான் என்னைக் காத்து வருகின்றன.”
மனோகரன் அவளைப் பார்த்த பார்வை, ஆயிரம் கேள்விகளை அள்ளி வீசியது.
35

Page 27
சிற்பி
அவளுக்கு என்ன தோன்றியதோ, ஒரே மூச்சில் எல்லாவற்றையும் சொல்லியழுதாள்.
to
“கடும் நோயினால் நான் கஷ்டப்பட்டுக் கதறிய நேரத்தில் கைகொடுத்துதவினார் உங்கள் அன்னை. பணத்தை மருந்தாக்கி, பாசத்தைப் பத்தியமாக்கிப் பக்குவமாகப் பராமரித்தார் அவர். அந்த இலட்சியப் பெண்ணின் பின்னால் உங்களுடைய எழில் உருவத்தைக் கண்டேன். உடல் நோயினால் வாட, உள்ளம் உங்களின் நினைவால் துள்ளிக் குதித்தது. வாடியிழந்த மேனியுடன், உருமாறிய உடம்புடன், உங்கள் முன் தோன்றக் கூடாது என்பதற்காக, சில காலம் என் ஆசையை அடக்கி அமைதியாக இருந்தேன்.
என் நோய் மாறியது. உங்கள் தாய் பேயாக மாறினார். உங்களை மறந்துவிடும்படி பணிவுடன் வேண்டினார்; அன்புடன் கேட்டார்; ஆத்திரத்துடன் அதிகாரமிட்டார்.
அதிர்ச்சியினால் என் வாயடைத்துவிட்டது.
உங்கள் அன்னை உங்களின் விருப்பத்தின்படி, உங்களின் வேண்டுகோளின்படி தான் எனக்குப் பணிவிடை செய்தார் என்று நான் நினைத்தது தவறு என்பது, அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது.
உங்களுக்குச் செய்தியனுப்ப நினைத்தேன். ஒவியக் கலைக்குள்ளே உங்கள் உயிரைக் கலந்து வாழ்ந்தீர்கள். உங்களை இந்த உலகிற்குக் கொண்டுவர வேண்டுமானால், நானே நேரில் வந்தாற்றான் முடியும்! ஆனால் அங்கிங்கு அசைவதற்கு கூட உங்கள் அன்னை என்னை அனுமதிக்கவில்லை.
எனக்கு உயிர் கொடுத்தவர் அவர், பணத்தைப் பணமென்று பாராமல் செலவு செய்து பணிவிடை செய்தவர் அவர். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைப் பெற்று இப் பூவுலகிற்களித்த புண்ணியம் செய்தவர் அவர். அவருடைய அன்பிற்கும் ஆத்திரத்திற்கும் அதிகாரத்திற்கும் அடிபணிய வேண்டியவள்தானே நான்!
உங்களை மறக்க நினைத்தேன்; முடியவில்லை.
மனத்தை மரமாக்கி, இதயத்தை இரும்பாக்கி, என் சொந்த மச்சானுக்கு மாலையிட்டேன்.
36

சத்திய தரிசனம்
உங்களை மறக்க முடியவில்லை.
என் மகளுக்குத் தந்தையான மறுமாதமே மரணத்தின் பிடியிற் சிக்கினார் என் கணவர். என் வாழ்வு போய்விட்டது.
உங்களை மறக்க முடியவில்லை.
இத்தனை நாட்களுக்குப் பிறகு இன்றுதான் உங்களின் தரிசனம் கிடைத்தது.”
ad
ஜானகியின் பேச்சு முடிந்தது.
பேச முடியாத பெருந் துயரத்துடன் பெரு மூச்சுவிட்டான் மனோகரன். அவளுடைய சோகக்கதைக்காக அவன் அனுதாயம் தெரிவிக்கவுமில்லை; ஆறுதல் கூறவுமில்லை. சிறிது நேரம் எதையோ நினைத்தபடி எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.
சன சமுத்திரத்தின் , ତ୍ରି யும் ங்கடத்தில் ஆழ்த்தியது. பக்தி வெறியில் பரபரப்புடன் ஒடியாடித் திரிந்த சிலர், அவர்களை இடித்து நெருக்கினார்கள், முட்டித் தள்ளினர்கள். குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு அவள் கஷ்டப்படுவதை அவனால் சகிக்க முடியவில்லை.
“இங்கே நின்று கஷ்டப்பட உன்னால் முடியாது. என் வீட்டிற்கு வா. ஆறுதலாகப் பேசிக் கொள்ளலாம்". அவனுடைய அழைப்பில் தனிப்பட்ட அன்போ, பரிவோ காணப்படவில்லை.
“உங்கள் வீடா? இங்கேயா?", சந்தேகத்துடனும் கலவரத் துடனும் அவள் கேட்டாள். திருவிழாக் காலம் தவிர்ந்த மற்றைய நாட்களில் ஈ, காக்கை கூடப் பறக்காத அந்தக் காட்டுப் பிரதேசத்தில், அவன் வீடுகட்டி வாழ்கின்றான் என்பதை அவளால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.
பதில் கூறாது அவன் நடந்தான், பதிலை எதிர்பார்க்காது அவள் தொடர்ந்தாள்.
dead
37

Page 28
சிற்பி
ஜனசந்தடியற்ற, ஒதுக்குப்புறமான ஓரிடம். பர்ணசாலையைப்
போன்று "சின்னஞ்சிறு வீடு அங்கே அவனுடைய வீடு அதுதான். அவளை உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைததான்.
“பயங்கரமான இந்த இடத்தில், நீங்கள் தனியாகவா வாழ்கின்றீர்கள்? அவளுடைய கேள்வியின் ஒவ்வொரு அட்சரத்திலும் அனுதாபம் துளிர்த்தது.
பதில் சொல்ல வாயைத் திறந்தான் மனோகரன். ஆனால் வார்த்தைகள் வெளிவரவில்லை.பதிலாக் கண்களை உருட்டி விழித்து அவளை உக்கிரமாகப் பார்த்தான்.
பார்வையின் வேகத்தை தாங்க முடியாது பயந்து நடுங்கினாள் e6) 6i.
நிமிடங்கள் நீண்டன.
நெஞ்சை உலுக்கும் இந்தப் பயங்கர நிகழ்ச்சி, அந்தப் பச்சைக் குழந்தையைப் பயமுறுத்தியது. குழந்தை அலறியது.
மனோகரன் மீண்டும் மனிதனானான்.
“இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது ஜானகி. தனிமைதான் என் போக்கிற்கு ஏற்றது”. - முன்போல் அன்பாக, அமைதியாக, அடக்கமாகப் பேசினான்.
அவளுக்கு இப்போது சற்றுத் தெம்பு வந்தது.
“வெறிகொண்ட வேங்கையைப் போல், விழியினால் மிரட்டியதைக் கண்டு, நானே வெலவெலத்துவிட்டேன்” குறைகாணும் குரல் அவனுடைய உள்ளத்தைச் குடைந்தெடுத்தது.
“எனக்கு வெறிதான் வந்துவிட்டது, ஜானகி இன்றல்ல என்றுமே ஒருவித வெறியுணர்ச்சியுடன், பித்த மயக்கததுடனதான நான் வாழ்கிறேன். வெறியனாக நான் வாழும்போது இந்த உலகத்தின் மேடு பள்ளங்களை நான் மதிப்பதில்லை; உயர்வு தாழ்வுகளை உணர்வதில்லை; நயவஞ்சகத்தையும் நம்பிக்கைத் துரோகத்தையும் நினைப்பதில்லை. இவைகள் இல்லாத ஒர் உன்னத உலகத்தில் என்னால் வாழ முடிகின்றது.”
38

சத்திய தரிசனம்
இதைச் சொல்லி முடித்தவுடன், “விறுக் கென்று எழுந்து சமையலறைக்குச் சென்றான். “பத்து நிமிடத்தில் உணவு பரிமாறுவேன்” என்ற அவனுடைய குரல் உள்ளிலிருந்து கேட்டது.
உட்கார்ந்திருந்தபடியே அறை முழுவதையும் சுற்றிக் கண்ணோட்டம் விட்டாள் ஜானகி வெறும் அறையாக அது காட்சியளிக்க வில்லை. பார்ப்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் கலைக்கூடமாக அது திகழ்ந்தது. வாழ்க்கையையே வண்ண ஓவியமாக வரைந்திருந்தான் மனோகரன்.
பாச மயக்கத்தால் ஜானகியின் கண்கள் கசிந்தன. பசி மயக்கத்தால் குழந்தை அழுதது. அங்கிருந்த ஓவியங்களைக் காட்டிக் குழந்தையைச் சமாதானப்படுத்த முயன்றாள் ஜானகி.
பக்கத்திலே ஓர் அறை திறந்தும் திறவாமலும் இருந்தது. அங்கே சென்றால், மேலும் சில நல்ல ஒவியங்களைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை அவளுக்கு.
உள்ளே சென்றாள். எங்குமில்லாத புனிதமான அமைதி அங்கே ஆட்சி புரிந்தது. அவள் என்றும் கண்டிராத கலை, அங்கே கொலு வீற்றிருந்தது. அழகு ஒளிவிடும் ஒவியங்களைப் பார்த்தபடி, இன்னும் சற்று உள்ளே சென்றாள்.
யாருமே இல்லை என்ற நினைவுடன், அங்கே சென்ற அவளை அன்புடன் வரவேற்கும் பார்வையுடன், புன்னகை பூத்துப் புதுமலராக நின்றாள் ஒரு பெண்
தன்னுடைய மறுபதிப்பைப் போன்றிருந்த அவளைக் கண்டு அசந்துவிட்டாள் ஜானகி. மங்கி மறைந்துபோன அந்த இளமைக் காலத்தில் அவளிடம் / குடிகொண்டிருந்த அங்க அழகை, ஆசை கொட்ட மனோகரன் வர்ணித்தது, அவளுடைய நினைவிற்கு வந்தது. அந்த வர்ணனையில் அணுவளவும் தவறாது, அச்சிட்டது போல், அப்படியே இருந்தாள் அந்தப் பெண்!
ஜானகி எதையோ நினைத்துக் கொண்டாள். குழந்தையைத் "தொப்'பென்று கீழே போட்டாள்.
"அக்கா! நீங்கள் பாக்கியசாலி. இவரைக் கணவராக அடைந்த நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டக்காரிதான்!” என்று
39

Page 29
சிற்பி
கூறிக்கொண்டே அந்தப் பெண்ணின் கால்களில் விழுந்து அவற்றைத் தன் கண்ணிரால் கழுவினாள். அந்த கால்கள் கரைந்தன சிவந்த பாதங்களிலிருந்து செந்நீர் பாய்ந்தது.!
அப்பொழுதுதான் அவளுக்கு உண்மை புலப்பட்டது அங்கே நின்றவள் வேறு யாருமல்ல; அவளேதான்!
ஆசையும் அன்பும் துளிர்க்க ஆயிரம் தடவைக்கு மேல் அவள் கெஞ்சிக் கேட்ட போதெல்லாம் மனோகரனால் வரைய முடியாதிருந்த இவளின் ஓவியத்தை இப்போது அவன் வரைந்து தான் விட்டான்! தன் உயிரைக் கொய்தெடுத்து உதிரத்துடன் கலந்து வரைந்த அந்த அற்புத ஒவியத்தில் உயிர்க்களை சொட்டியது, கலை ஒளி சுடர்விட்டது; அழகு ஒழுகியது.
தன்மீது அவன் கொண்டிருந்த அன்பின் தீவிரத்தை அவள் உணர்ந்து கொண்ட போது, அவள் வாய்விட்டு அலறினாள்.
சமையல் அறையினுள்ளிருந்து அவஸ்தைப்பட்ட மனோகரனை அவளுடைய அலறல் வர வழைத்தது.
ஜானகியின் செயலைக் கண்ட அவன், தன்னை மறந்தான்; மீண்டும் வெறியனானான்.
“ஜானகி..!” கோபத்தினால் அவனுடைய குரல் கேரியது.
பரிதாபமாக அவனைப் பார்த்தாள் அவள்.
“என் மனைவியின் மாளிகைக்குள் உன்னை நுழையச் சொன்னது யார்? அந்த அழகுத் தெய்வத்தின் முன், அழுது அழுது,
அசுத்தப்படுத்தச் சொன்னது யார்? மாசு படிந்த உன் தோற்றத்தினால் என் மாணிக்கத்தின் ஒளியை ஏன் மங்கச் செய்தாய்?”
சொல்லுக்குச் சொல், வார்த்தைக்கு வார்த்தை மனோகரனின் கோபம் அதிகரித்தது.
“அவளுக்கு முன்னால் நிற்பதற்கு நீ தகுதியற்றவள்” என்று சொல்லி ஜானகியின் தலைமயிரைப் பற்றி வெளியே இழுத்து வந்தான் மனோகரன்.
“அத்தான்!” கண்களில் நீர் மல்க, அவனை நிமிர்ந்து பார்த்தாள் ஜானகி.
40

சத்திய தரிசனம்
“அத்தான் என்று என்னை அழைக்கும் உரிமை, அந்த அறைக்குள்ளிருக்கும் ஒரே ஒருத்திக்குத்தான் உண்டு”. மேலே பேசாதபடி துக்கம் அவனுடைய தொண்டையை அடைத்தது.
என்றாலும் விக்கி விக்கி பேசினான். “ஐந்து வருடங்களுக்கு முன் என் காதலியாக இருந்த ஜானகியை, எளிமையும் அழகும் ஒளிவிடும் அந்த மாசற்ற ஜோதியை நான் பிரதிட்டை செய்திருக்கின்றேன். முன்பு சொரிந்த அதேயளவு அன்பை இன்றும் அவள் சொரிகிறாள். அன்பு மொழிகளை உதிர்த்து என் இதயத்துடன் உறவாடுகிறாள். ஜானகி நீ வேறு, அவள் வேறு. அவளுக்கு முன்னால் நீ நிற்பதற்கு அருகதையற்றவள். நீயும் அவளும் சேர்ந்து ஒரிடத்தில் வாழ முடியாது. தயவு செய்து இங்கிருந்து போய்விடு.!
கனவுவெறி, கலைவெறி, காதல்வெறி ஆகியவற்றின் கூட்டுத் தொகையாக நின்ற மனோகரனின் கண்களிலிருந்து கண்ணி சொட்டியது.
பரிதாபத்துடன் அவனைப் பார்த்தபடி சிறிது நேரம் நின்றாள் ஜானகி. பிறகு, அவனுடைய பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு வெளியே வந்தாள்.
தோளில் கிடந்த குழந்தை துடிதுடித்தது. அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. கோவிலைச் சுற்றிச் சூழ்ந்து நிற்கும் மனிதக் கும்பலுக்குள் மறைவதற்காக அவள் நடந்துகொண்டிருந்தாள்.
நீண்ட நேரத்திற்குப் பிறகு, மனேகரனுக்கு இவ்வுலக நினைவு மீண்டது. கண்களைத் துடைத்துவிட்டு, வெளியே பார்வையைச்
செலுத்தினான்.
வெகு தொலைவிலே தள்ளாடியபடி நடந்து செல்வது ஜானகியா?
பொறுக்க முடியாத துக்கத்துடன், உள்ளே சென்று, அவளுக்கு முன் - ஒவியத்திலிருக்கும் அவனுடைய ஜானகிக்கு முன் விழுந்தான்.
“அன்பே என்னை உன்னிடமிருந்து பிரித்து விடாதே. நீ நான் வரைந்த உயிரோவியம் மட்டுமல்ல; நீ கைப்படாத முல்லைப் பூ என் காதலி, என் மனைவி!”.

Page 30
சிற்பி
இதுவரை அன்பினால் ஆண்ட நான், இனிமேல் அதிகாரத்தினால் தான் அடக்க வேண்டும். ஒழுக்கம் தவறினால்தான், உயர் பதவியை அடையலாம் என்ற தவறான Graisornia, I-a deo IDraprsli களுக்கு ஏற்படலாம். இந்த நிலையை நான் விரும்பவில்லை.
SԱնւ
வீரகேசரி - 1972
gf றிதும் எதிர்பாராத ஒன்று திடீரெனச் சம்பவிக்கும்போது மனிதன்
ஆனந்த மிகுதியால் துள்ளுவான்; அல்லது அதிர்ச்சியடைந்து செயலிழப்பான்.
எங்களுர்ப் பாடசாலை சம்பந்தமாகக் கொழும்பிலுள்ள கல்வி அதிகாரிகள் சிலரைச் சந்தித்துவிட்டு, பத்து நாள் இடைவெளியின் பின் நான் ஊருக்குத் திரும்பிய போது அதிர்ச்சியூட்டும் செய்திகள் என்னை எதிர் கொண்டன.
எல்லாமே எங்கள் பாடசாலை அதிபர் செல்வி சந்தானலட்சுமியைப் பற்றியவைதான்.
“நடத்தை கெட்டவள்’.
“அவளுடைய கெட்ட நடத்தையால் எத்தனையோ நல்ல குடும்பங்கள் பிரிந்து சீரழிந்து விட்டன”.
“இன்றுவரை கல்யாணம் செய்யாமல் “மிஸ்” ஆக இருப்பதன் காரணம், தனி ஒருவனுக்குக் கட்டுப்பட்டு நடக்க விரும்பாத அடங்காப் பிடாரித்தனம் தான்’
இப்படியும், எழுத்தில் வடிக்க முடியாத விதத்திலும் அதிபரைப் பற்றிய கதைகள் செட்டை கட்டிப் பறந்து கொண்டிருந்தன.
42
 
 

சத்திய தரிசனம்
வீட்டுத் திண்ணைகளில், வீதிகளில், கடைகளில், கோயில்களில்
எங்கெல்லாம் இரண்டு பேராவது கூடுகின்றார்களோ அங்கெல்லாம் இதே பேச்சுத்தான்.
மிக விரைவில், “உள்ளதை உள்ளபடி உரைக்கும்” பத்திரிகை ஒன்றில், புகைப்படத்துடன் இடம்பெறும் தகுதியையும் அவள் பெற்று விட்டாள்.
ஆரம்பத்தில் வெறும் குற்றச் சாட்டுடன் திருப்தியடைந்த ஊர் மக்கள், பத்திரிகைச் செய்தியின் பின், பதவியிலிருந்து அவளை நீக்கி விட வேண்டும் என வலியுறுத்தத் தொடங்கி விட்டனர்.
“இவளை நம்பி எங்கள் பிள்ளைகளை எப்படிப் பாடசாலைக்கு அனுப்புவது?”
“இவளைப் பார்த்து எங்கடை பிள்ளையஞம் பழுதாகிப் போய் விடுவினம்’
“இந்தத் தேவடியாள் இருக்கும்வரை எங்கள் பிள்ளையளை இந்தப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப மாட்டம்”
வாய்ப் பேச்சுடன் அவர்கள் நிற்கவில்லை. அவளை உடனடியாக நீக்கிவிட வேண்டும் எனக் கோரி, பெற்றோர்களிடம் கையொப்பம் பெற்று மகஜர் ஒன்றை என்னிடம் கொடுத்தனர்.
பாடசாலை நலன்புரிச் சங்கத் தலைவன் நான். மனைவி, குடும்பம் என்ற ஒன்றுமில்லாத தனிக்கட்டை வாலிப வயதில், காந்தியடிகளுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டதால், அந்தப் பெரியவரின் வாக்கையும் வாழ்க்கையையும் அவதானித்து, சமூக சேவையை என் முழு நேரக் கடமையாக வரித்துக் கொண்டவன்.
அதிபரைப் பற்றிய கதைகள் அதிர்ச்சியூட்டிய போதிலும், நான் அவசரப்பட்டு ஒரு நடவடிக்கையையும் எடுக்க விரும்பவில்லை.
செல்வி சந்தானலட்சுமி எங்கள் பாடசாலையின் அதிபராகப் பதவி ஏற்றதற்கு நானே காரணம் என்றுகூடச் சொல்லலாம்.
43

Page 31
சிற்பி
முன்பிருந்த அதிபர் ஓய்வு பெற்றபோது, புதிய ஒருவரை வேறிடத்திலே தேட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பொறுப்பு வாய்ந்த அந்தப் பதவியை வகிக்கக்கூடிய தகுதியோ திறமையோ பாடசாலையிலுள்ள ஏனைய ஆசிரியைகளிடம் இல்லை.
பொருத்தமான ஒருவர், விரைவிலே கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் தீவிர முயற்சிகளை நான் மேற்கொண்டபோது, என் பழைய நண்பர் நல்லதம்பியைச் சந்தித்தேன்.
சிறுவயதிலே ஒன்றாகச் சேர்ந்து பட்டணத்திலுள்ள கல்லூரி ஒன்றிலே நாங்கள் படித்தோம். பணக் கஷடம் காரணமாக, இடையிலே படிப்பை முடித்துக் கொண்டு, செல்வம் கொழிக்கும் சிங்கப்பூருக்குக் கப்பலேறினார் நல்லதம்பி. நீண்ட காலம் அங்கே வாழ்ந்து ஏராளமாகப் பணம் சம்பாதித்தபின், பிறந்த மண்ணின் வாசனைக்காக ஏங்கி யாழ்ப்பாணத்திற்குத் திரும்பினார்.
பட்டணத்தில், அரண்மனை போன்ற வீடொன்றைக் கட்டிக் கொண்டு வசதியாக வாழ்ந்தார்.
மின்விளக்குகள் அனைத்தையும் ஏற்றி விட்டால், வீடு தேவலோகம் போன்றே இருக்கும். அவருக்கும் மகளுக்கும் தனித் தனியாக இரண்டு கார்கள் இருந்தன. எள் என்பதன் முன் எண்ணெயாய் நிற்கும் வேலைக் காரர்கள் பலர் வீட்டில் இருந்தனர். வீட்டின் முன்னால், நறுமணம் பரப்பும் ஒரு பூந்தோட்டமும், ஒரு பக்கத்தில் நீச்சல் தடாகமும் இருந்தன.
பணத்திலும் பகட்டிலும் பற்றில்லாத நானே ஒரு கணம் தடுமாறி விட்டேன். வாழ்ந்தால் நல்லதம்பியைப் போலல்லவா வாழ வேண்டும்!
அந்த நல்லதம்பியின் ஒரே மகள்தான் சந்தானலட்சுமி. வீட்டுக்கு அண்மையிலுள்ள கல்லூரி ஒன்றிலே ஆசிரியையாக இருந்தாள்.
அவரிடமும், தீராத குறையொன்று இருந்து வாட்டியதை, அவரைச் சந்தித்த போது உணர்ந்தேன்.
“சிவா! உன்னிடம்தான் மனம் விட்டுச் சொல்கிறேன். இவ்வளவு வசதியாக வாழ்ந்த போதிலும் என்னிடம் மன நிம்மதி இல்லை. என் மகள், கல்யாண செய்வதற்குச் சம்மதிக்க மாட்டேனென்கிறாள்.
44

சத்திய தரிசனம்
நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன். அவளை இணங்க வைக்கவும் முடியவில்லை; மறுப்பதற்கான காரணத்தை அறியவும் முடியவில்லை. அவள் மட்டும் சம்மதித்தாளானால். என் எஞ்சிய காலத்தையும் நிம்மதியாகக் கழித்து விடுவேன்".
ஒரு தந்தையின் விருப்பத்தையும் பாசத்தையும் காண உண்மையிலேயே வருத்தமாக இருந்தது. அதே வேளையில் எனது பாடசாலையை நின்ைத்த போது மகிழ்ச்சியாகவும் இருந்தது
“இப்படியான ஒருத்திதான் எங்கள் பாடசாலைக்கு வேண்டும். கணவன், பிள்ளைகள், குடும்பம் என்ற பிச்சுப் பிடுங்கல் இல்லாமல், தன் கவனம் முழுவதையும் பாடசாலைக்குச் செலுத்தக்கூடிய ஒருத்தி வந்தால், சகல துறைகளிலும் பாடசாலை முன்னேறிவிடும்
நான் சொன்னேன், “நல்லதம்பி கல்யான விஷயமாகச் சந்தான லட்சுமியைச் சம்மதிக்க வைக்க முடியுமா என்பதை நானும் முயன்று பார்ப்பேன். என் ஊரிலுள்ள பெண்கள் பாடசாலையைப் பற்றி உனக்குத் தெரியுந்தானே? அந்தப் பாடசாலைக்கு அதிபர் ஒருவர் தேவை. அந்தப் பதவியை ஏற்பதற்கு உன் மகளை இணங்கச் செய்தால், அவள் அங்கு வந்த பின் மெல்ல மெல்ல உன் விருப்பத்தைத் தெரிவித்து, அவளைச் சம்மதிக்க வைப்பேன்.”
bas de
மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள் சந்தானலட்சுமி.
நான் எதிர்பார்த்தது வின் போகவில்லை.
அவள் அதிபராக வந்த பின்னர் படிப்படியாகப் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன.
மாணவிகளின் சீருடை தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்ற முறையில் உருவாக்கப்பட்டது. நெற்றியில் திருநீறும் கருஞ்சாந்துப் பொட்டும் இட்டே அவர்கள் பாடசாலைக்கு வந்தனர். பாடசாலை மண்டபத்தில் காலையில் நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனையையடுத்து, நால்வர். நாவலர், திருவள்ளுவர், காந்தியடிகள் போன்ற சான்றோரின் வாழ்வும் வாக்கும் பற்றிய விளக்கம் நடைபெறும். இதன் பின்னரே பாடங்கள் 3.JDLILD (5l D.
45

Page 32
சிற்பி
வகுப்பறைகளிலே கல்விச் செயற்பாடுகளைத் தவிர வேறு எதுவும் நடைபெறாவண்ணம் கண்காணித்து வந்தாள் சந்தானலட்சுமி. விளையாட்டு மைதானத்திலே தேகப் பயிற்சிகளுக்கும் விளையாட்டுக்களுக்குமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
மாணவிகளின் நல்லொழுக்கத்திலும் அவள் கண்டிப்பாக இருந்தாள். ஏனைய ஆசிரியர்களின் பூரண ஒத்துழைப்புடன், மாணவிகளை நல்வழியில் இட்டுச் சென்றாள். பாடசாலை தவிர்ந்த வேறு இடங்கட்கு மாணவிகள் செல்வதாக இருந்தால், பெற்றோருடன் மட்டுமே அவர்கள் செல்ல வேண்டும்! இந்த விடயத்திலும் பெற்றோரின் பூரண ஒத்துழைப்பு அவளுக்குக் கிடைத்தது.
மாணவிகளுடன் கண்டிப்பும் கடுமையுமாக இருந்தவள், தக்க சமயங்களில் தன் அன்பையும் கரிசனையையும் காட்டியும் வந்தாள். அதிபரின் ஏச்சையும் தண்டனையையும் பெற்ற மாணவர்கள், அவளுடைய நன்றியையும் பாராட்டையும் பெற்றுமிருக்கிறார்கள்.
எங்கள் பாடசாலைக்குத் தனி மதிப்பு ஏற்படத் தொடங்கியது. பரீட்சைகளில் - கலை - இலக்கிய - விளையாட்டுப் போட்டிகளில் மாணவிகள் சாதனை படைத்தார்கள்.
புதிதாகப் பாடசாலையிற் சேருவோரின் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்தது.
சந்தானலட்சுமியின் கடமை உணர்வை, நிர்வாகத் திறமையை, கண்டிப்பான போக்கை, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகப்
போற்றிப் புகழ்ந்தவர்களா, இப்போது வாய்க்கு வந்தபடி அவளைத் துாற்றித் திரிகின்றார்கள்?
சந்தானலட்சுமி நடத்தை கெட்டவள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதே வேளை, பரம சாதுவான என் ஊர்மக்கள் “ஒன்றுமில்லாததற்காக’ இப்படி வெகுண்டெழுவார்கள் என்பதையும் நம்ப முடியவில்லை.
நான் நம்பவில்லை என்பதற்காக யாரும் சும்மா இருக்கவுமில்லை.
நலன்புரிச் சங்கத்தைக் கூட்டவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது.
அதற்கு முன் அவளைச் சந்திக்கத் தீர்மானித்தேன்.
46

சத்திய தரிசனம் பாடசாலை விடுதியிலேயே அவள் தங்கியிருந்தாள்.
என்னைக் கண்டதும் வழமைபோல் முகமலர்ச்சியுடன் வரவேற்றாள்.
சந்திப்பின் காரணத்தைச் சற்று விளக்கமாகவே சொன்னேன்.
“இந்த வதந்திகளை நான் கொஞ்சமும் நம்பவில்லை. பொறாமையும் எரிச்சலும் கொண்டவர்கள் எந்த ஊரில்தான் இல்லை? அப்படியானவர் யாரோ உன்னைப்பற்றி இப்படியான வதந்திகளைப் பரப்பித் திரிகிறார்கள். அப்பாவி மக்கள் அவற்றை அப்படியே நம்பி விட்டார்கள். கூட்டத்தில் உன் சார்பாக நான்தான் பதிலளிக்கவேண்டி வரும். இந்த வதந்திகள் எல்லாமே வெறும் பொய்கள் என்பதை உன் வாயிலிருந்து கேட்டேனானாற் போதும், குற்றம் சாட்டியுள்ளோரை
எதிர்த்துப் பேசும் துணிவும் தைரியமும் எனக்கு வந்துவிடும்.”
சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
என் நம்பிக்கை சிறிது ஆட்டங்கானத் தொடங்கியது.
நான்தான் மீண்டும் பேசினேன்.
“சந்தானலட்சுமி! நீ என் நெருங்கிய நண்பரின் மகள். எனக்கும் நீ மகள்தான். உன் கெளரவத்தையும் மானத்தையும் காப்பாற்ற வேண்டியது என் கடமை’.
என்னை ஊடுருவுவதுபோற் பார்த்துவிட்டுத் தலையைக் குனிந்தபடி, மெல்லிய - நடுங்குங் குரலில் அவள் சொன்னாள்.
“நீங்கள் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான். சரியாகச் சொல்வதானால், சீர்கெட்ட என் வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டுந்தான் நீங்கள் கேள்விப்பட்டிருக்கின்றீர்கள்’ எனத் தொடங்கியவள் தன் வாழ்க்கையின் கறை படிந்த அத்தியாயங்களை விளக்கமாகக் கூறிக் கொண்டிருந்தாள்.
கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதைப் போன்றிருந்தது எனக்கு.
நான் இவளிடம் இதையா எதிர்பார்த்தேன்?
47

Page 33
சிற்பி
என் இரத்தம் கொதித்தது. மானம் ரோஷம் இல்லாம் இப்படிச் சொல்கின்றாளே! ஓர் ஆண்மகனுடன் பேசுகின்றோமென்ற உணர்வுகூடவா அவளிடம் இல்லாமற் போய்விட்டது?
என் உணர்ச்சி மாற்றத்தையோ முகபாவத்தையோ சிறிதும் இலட்சியம் பண்ணாமல் பேசிக் கொண்டிருந்தவள், சற்று உறுதியான குரலிலே தொடர்ந்தாள்.
“எந்த உண்மையையும் மறைக்காமல், திரிக்காமல் சொன்ன நான் இன்னும் ஒன்றையும் சொல்லி விடுகின்றேன். நான் கற்பிழந்தவள்தான்; ஒழுக்கந் தவறியவள்தான். ஆனால் இந்தப் பாடசாலையின் தலைமைப் பொறுப்பை ஏற்றதும் நான் முற்றிலும் திருந்திவிட்டேன். ஒன்றை இழந்தவளுக்குத்தான் அதன் அருமை நன்கு தெரியும். ஒழுக்கத்தின் அருமையை நன்கு உணர்ந்துவிட்டவள் நான். இந்தப் பிள்ளைகளும் என்னைப் போல் தறிகெட்டு, நெறிகெட்டு தலைகீழாகப் போய் விடக் கூடாதே என்பதற்காகத் தான் கண்டிப்புடனும் கட்டுப்பாட்டுடனும் அவர்களை உருவாக்கி வருகின்றேன். இந்தப் புனிதமான கடமையில் என்னை நான் மறக்க முயன்றாலும், பழைய நினைவுகள் என்னைச் சித்தரவதை செய்யத் தவறுவதேயில்லை”
“ஒரு தந்தையிடம் சொல்ல முடியாதவற்றை, தந்தையைப் போன்ற உங்களிடம் சொல்லிவிட்டேன். இந்த உண்மைகள் உங்கள் மனத்தைப் புண்படுத்தினால், என்னை மன்னித்து விடுங்கள்’.
திடீரென்று எழுந்தவள், தன் பிரத்தியேக அறைக்குட் சென்று தாளிட்டுக்கொண்டாள். அவள் குமுறிக் குமுறி அழுவது எனக்குத் தெளிவாகவே கேட்டது.
a
கூட்டத்திற்குப் பெற்றோர்கள் அனைவருமே வந்திருந்தனர். அனைவரும் உணர்ச்சிவசப்பட்டிருந்தனர் என்பதும் நன்கு தெரிந்தது. அசம்பாவிதம் எதுவுமின்றிக் கூட்டத்தை நடத்தி முடித்தால், அதுவே ஒரு சாதனையாக இருக்கும்.
பேச விரும்பிய அத்தனை பேருக்கும் சந்தர்ப்பம் அளித்தேன். ஒரே விஷயத்தையே மீண்டும் மீண்டும் அவர்கள் வலியுறுத்திச்
48

சத்திய தரிசனம்
சொன்னார்கள் சந்தானலட்சுமிக்கு இனி அந்தப் பாடசாலையில் இடமே இல்லை!
அவர்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளாவிட்டால், சந்தான லட்சுமியுடன் என் பெயரையும்கூட பிணைத்துப் பேசிவிடுவார்கள் போலவுமிருந்தது.
இடையிலே குறுக்கிடாமல், நான் மெளனம் காத்தது சிலருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியதை என்னால் உணர முடிந்தது.
என் முடிவை எதிர்பார்த்துச் சபையினர் காத்திருந்தனர்.
சந்தானலட்சுமி இறுதியாகக் கூறிய வார்த்தைகள் என் இதயத்தில் எதிரொலிக்க, நான் அமைதியாகவும் தெளிவாகவும் பேசினேன்.
“அதிபர் ஒருவரைப் பதவியிலிருந்து நீக்குவது சாதாரணமான விஷயம் அல்ல. நாங்கள ஒவ்வொருவரும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் பாடசாலையில் அவர் கடமையாற்றி வருகின்றார். எப்போதாவது அவர் தவறிழைத்திருக்கிறாரா? மாணவிகளின் கல்வியில், விளையாட்டில், எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் ஒழுக்கத்தில் அவர் காட்டிவரும் அக்கறையை, கண்டிப்பைப் பாராட்டி ஒவ்வோராண்டும் நாம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றோம். யாரோ ஒருவன் எங்கிருந்தோ ஒரு மொட்டைக் கடிதம் எழுதிவிட்டான் என்பதற்காக, இவையெல்லாவற்றையும் மறந்து நாம் செயற்பட வேண்டுமா? மக்களின் ஒழுக்கத்திற் கொஞ்சங்கூட அக்கறை இல்லாமல், பரபரப்பூட்டும் செய்திகளினால அவர்களின் வாழ்க்கையைப் பாழடிக்கும் அந்தப் பத்திரிகையில் வெளியான செய்திகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கத்தான் வேண்டுமா? எங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்திற் கண்ணும் கருத்துமாக இருந்த ஒருவருக்கு இப்படியொரு அபவாதஞ் சூட்டி அனுப்பினால், வேறு யார் இங்கு வந்து பணியாற்றத் துணிவார்கள்? அந்த மொட்டைக் கடிதம் வரத் தாமதமாகியிருந்தால், இன்றுங்கூட, எம்அதிபரைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றியிருப்போம், இல்லையா? உங்கள் அனைவரின் உணர்ச்சியையும் கருத்துக்களையும் நான் மறுதலிப்பதாக நீங்கள் கருதக்கூடும். அப்படியல்ல. உணர்ச்சிக்கு ஆளாகி, உண்மைகளை மறந்துவிடக் கூடாது. நான் சொன்னவற்றையும் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் முடிவுதான் என் முடிவு”
49

Page 34
சிற்பி
தொடர்ந்து யாருமே பேசவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சிறு சிறு குழுக்களாகப் பலர் வெளியே செல்வதும் உள்ளே வருவதுமாக இருந்தனர்.
எல்லோரும் வந்து அமர்ந்த பின், பெற்றோர்களுள் ஒருவர் எழுந்து மேடைக்கு வந்தார்.
செல்வி சந்தானலட்சுமியே தொடர்ந்தும் அதிபராகப் பணியாற்ற வேண்டும் என முன்மொழிந்தார். அதை வழிமொழிவதற்குப் போட்டி போட்டுக் கொண்டு பலர் மேடைக்கு வந்தனர். தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது.
மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்திய பெருமையுடன், தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு அவற்றுக்காக உண்மையாகவே
மனம் வருந்தி, சீர்திருந்திய ஒருத்தியின் நற்பெயரைக் காத்த திருப்தியுடன் நான் வீடு திரும்பினேன்.
a
சந்தானலட்சுமியின் வேலைக்காரி பொன்னம்மா என்னைத் தேடி வந்தாள். கையிலே கடிதம் ஒன்றிருந்தது.
நன்றி தெரிவிப்பதற்கு சந்தானலட்சுமி இவ்வளவு அவசரப்படத் தேவையில்லை. b6örgOu எதிர்பார்த்து நான் அவளுக்காக வாதாடவுமில்லை. காந்தீய நோக்கில் நல்ல இலட்சியம் ஒன்றிற்காகப் போராடினேன் என்ற திருப்தியே எனக்குப் பெரிது.
கடிதத்தைக் கொடுத்து விட்டுப் பொன்னம்மா போய்விட்டாள்.
சந்தானலட்சுமிதான் எழுதியிருந்தாள்.
“உங்கள் வாதத் திறனால் என்னைக் காப்பாற்றி விட்டீர்கள். என் மனப்பூர்வமான நன்றி.
அன்று உங்களிடம் நான் கூறியவை அனைத்தும் உண்மையே. நான் தவறியதும் உண்மை என் தவறுகளை உணர்ந்து, வருந்தி நான் திருந்தி விட்டதும் உண்மை.
50

சத்திய தரிசனம்
இப்பொழுது வேறோர் உண்மையை உங்களுக்கு உணர்த்த விரும்புகின்றேன்.
நான் தூய்மையானவள், களங்கமற்றவள் என்று பாடசாலையிலுள்ள அனைவரும் முற்றுமுழுதாக நம்பிக் கொண்டிருந்த வரைக்கும் என்னால் எல்லாவிதச் சீர்திருத்தங்களையும் செய்ய முடிந்தது; முன்னேற்றங்களைச் சாத்தியமாக்க முடிந்தது. என் வாக்கைத் தேவ வாக்காகவே எல்லோரும் மதித்தார்கள்.
ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.
நான் தவறியவள் என்ற செய்தி எப்படியோ மாணவிகள் மத்தியிற் பரவிவிட்டது. இத்தகைய செய்திகளை நம்புவதற்கு ஆதாரங்களைத் தேடி யாரும் காத்திருக்க மாட்டார்கள்.
தன்உயிரைத் தூசாக மதித்து, தன் பலமெல்லாவற்றையும் சேர்த்து, அஞ்சா நெஞ்சுடன் எதிரியைத் தாக்கி அழிக்கத் தயாராக நிற்கின்றான் போர்வீரன் ஒருவன். வெகுதூரத்துக்கு அப்பால், பாம்பொன்று ஊர்ந்து செல்கின்றது. அந்தப் பாம்பினால், அவனுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட மாட்டாது. ஆனால், அவனுடைய காதில் விழும்படி "பாம்பு. பாம்பு’ என்று யாராவது அவலக் குரல் எழுப்பினால் போதும், அவனுடைய பலம் எல்லாம் அவனை விட்டு நீங்க, கால் போன திசையிலே ஓடத் தலைப்படுவான் அவன்.
இந்தப் போர்வீரனின் நிலையிலேதான் என் மாணவிகள் இப்போது இருக்கின்றார்கள்.
இதுவரை அன்பினால் ஆண்ட நான், இனிமேல் அதிகாரத்தினால் தான் அடக்க வேண்டும்.
ஒழுக்கம் தவறினால் தான், உயர் பதவிகளை அடையலாம் என்ற தவறான எண்ணங்கூடச் சில மாணவிகளுக்கு ஏற்படலாம்.
இந்த நிலையை நான் விரும்பவில்லை. ஆகவே நானாகவே பாடசாலையிலிருந்து விலகுகின்றேன்.”
泛本爱><莓3
51

Page 35
சிற்பி
உன்னைப் பார்க்கக்கூடிய இடத் தில் இருந்து கொண்டும் பார்க்கா மலிருக்கவும், உன்னுடன் பேசக் கூடிய துரத்தில் இருந்து கொண் டும் பேசாமலிருக்கவும் என்னால் முடியாது போலத் தோன்றியது.
தீபம் - 1974
யங்கரமான இந்த இரவில் கூட உன்னைத்தான் நான் | L] နှီးနှီ கொண்டிருக்கிறேன். சுழன்றடிக்கின்றது சூறாவளி,
கடலையும் வானத்தையும் இணைத்துப் பிணைக்கும் முயற்சியில் மூர்க்கத்தனமாக ஈடுபட்டிருக்கின்றது மழைக் கயிறு. கடலைக் கிழித்துக் கொண்டு கனவேகத்தில், சென்ற எங்கள் கப்பல், இப்பொழுது கதி கலங்கி நிலைகுலைந்து தடுமாறித் தத்தளிக்கின்றது. எந்த நேரத்திலும் எதுவும் நடந்துவிடலாம் என்ற இறுதி எச்சரிக்கையையும் தந்துவிட்டான் கப்பற்றளபதி. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அப்படி அப்படியே நின்று துடிக்கின்றார்கள் மற்றைய பிரயாணிகள்.
ஆனால், நான் மட்டும் உன்னைச்சுற்றி என் எண்ணக் கொடிகளைப் படரவிட்டபடி இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
என் கண்ணீர் வெள்ளத்தில் மிதந்து மிதந்து மறைகின்றாய் நீ!
முதன் முதலாக நான் உன்னைக் கண்டபோது உன் முத்துப்பல் தெரிய நீ முறுவலித்தது, உன் கருவண்டு விழியால் என்னைக் கட்டியணைத்தது, கொடியான உடல் நடுங்கக் கனிவான முகம் காட்டி என்னைக் கவர்ந்திழுத்தது எல்லாமே நேற்று நடந்ததைப் போலல்லவா இருக்கின்றது? நான்தான் எவ்வளவு பாக்கியசாலி, இறக்கவிருக்கும் இந்த இறுதி நேரத்திலும் உந்தன் இனிய நினைவுகள் துணைக்கிருக்கின்றனவே!
52
 

சத்திய தரிசனம் அவற்றை மீண்டும் நினைத்துப் பார்க்கின்றேன்.
a
நான் அப்போது மலை நாட்டில், கண்டியிலுள்ள அஞ்சல் நிலையத்தில் வேலை பார்த்தேன். கண்டி நகர எல்லைக்குள்ளே தனி அறை ஒன்றில் வசித்து வந்தேன். இருபது வயதில் என் இதயத்தில் விழுந்த இடி காரணமாக, அந்த இடியின் காரணமான யாழ்ப்பாணத்து மண்ணையே மிதிப்பதில்லை என்ற தீர்மானத்துடன், அந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திய பெண் குலத்தை ஏறெடுத்துப் பார்ப்பதில்லை என்ற விரதத்துடன், அந்த விரதத்தை என்றுமே விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற பிடிவாதத்துடன் இருந்தேன்.
மலைபோல் குவிந்து கிடந்த வேலை என்னை மறைத்தது. நான் என்னை மறந்தேன். இரவிலும், பகலிலும் வேலை செய்தேன்; ஆசை அருமையாக, அஞ்சலகத்து வேலைகள் எப்போதாவது ஒழிந்த வேளைகளில் என் இதயத்து எழுச்சிகளை எழுத்துக்களாக வடித்தேன், புனை பெயரொன்றில் என் எழுத்துக்கள் அச்சு வாகனமேறி அழகாகப் பவனி வருகின்ற அந்த வேளைகளில் மட்டும் என் மனம் சற்று மகிழ்ச்சியடையும்; நிம்மதியடையும். மீண்டும் வேலை, வேலை, வேலைதான்!
உழைத்து உழைத்துக் களைத்துப் போன உடம்பையும், ஓய்விற்காக ஏங்கிய உள்ளத்தையும் சட்டை செய்யாது சதா வேலை, வேலை என்று திரிந்த என் திறமையை மெச்சிய கடவுள் விதி என்ற கைச்சாத்துடன் பரிசொன்றை அனுப்பி வைத்தார். அந்தப் பரிசு - நெருப்புக் காய்ச்சல்!
ஒரே கிடையாகக் கிடந்து பார்த்தேன். முடியவில்லை. எழும்ப நினைத்தேன்; அதுவும் முடியவில்லை. தூங்க முயன்றேன், முடியவில்லை. விழித்திருக்க விரும்பினேன், அதுவும் முடியவில்லை. இப்படி எதையுமே செய்ய முடியாது தனியாகக் கிடந்து நான் தவித்த வேளையில்தான், இதுவரையும் பூட்டப்பட்டு அமைதியாகக் கிடந்த அடுத்த வீட்டினுள் ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டது.
நோயின் கடுமையையும் வேதனையையும் பொறுக்க முடியாது அழுதேன்; குழறினேன், அதற்கு மேல் நடந்தவை ஒன்றும் எனக்குத் தெரியாது.
53

Page 36
fiî
நான் கண் விழித்துப் பார்த்தபோது, வைத்தியர் வந்தார்: மருந்து தந்தார். அடுத்த வீட்டுக்காரர் வந்தார்; ஆறுதல் தந்தார். அவர் மனைவி வந்தார்; ஒவல் தந்தார். நாட்கள் வந்து போக, இந்த மூவரும் ஒழுங்காக வந்து வந்து போக, வந்திருந்த நோயும் ஒரேயடியாகப் போய்விட்டது.
கொழும்பில் வேலை பார்த்து, கண்டிக்கு மாற்றலாகி என் அறைக்கு அடுத்த வீட்டில் குடியிருக்க வந்தவர் உன் அப்பா என்றும், அந்தப் பெண் உன் அம்மா என்றும், கொழும்பு நாகரிகத்தை ஒட்டி என்னை எட்டியும் பார்க்க மறுத்த அவர்களைத் திட்டி விரட்டி என் அறைக்கு வரச் செய்து ஆகவேண்டியவற்றைக் கவனிக்கும்படி கட்டளை இட்டவள் நீதான் என்றும் பின்னால் அறிந்து கொண்டேன். எழுந்து நடக்கச் சக்தி கிடைத்ததும் முதன் முதலாக உன்னைப் பார்ப்பதற்காகத்தான் வந்தேன்.
‘குஞ்சு, குஞ்சு” என்று உன்னை அழைத்தார் உன் அப்பா. வண்ணச் சட்டை போடும் ஒரு சின்னப் பிள்ளையை எதிர்பார்த்து வாசலில் நின்றேன். என்னை ஏமாற்றி விட்டு, குஞ்சு என்ற பெயர் படைத்த குமரியாய் வந்து குறும்புச் சிரிப்புடன் கும்பிட்டாய்!
பதிலுக்கு நான் உன்னைப் பார்த்துக் கும்பிட்டுவிட்டுத் தலையைக் குனிந்து கொண்டேன். விரதம் எவருமே எதிர்பாராத முறையில் ‘திடு, திப்’ என்று குலைந்து விட்டது! என்னிடம் நன்றியுணர்ச்சி நிறைந்திருந்தது. அதை உனக்கு வெளிக்காட்டும் வழிதான் எனக்குத் தெரியவில்லை.
உன் அப்பாவும், அம்மாவும் வந்து பேச்சில் கலந்து கொண்டார்கள். நீண்ட உரையாடலின் பின் விடை பெறுவதற்காக மீண்டும் உன்னைப் பார்த்தேன். மெளனமாக என்னையே பார்த்தபடி நீ நின்றாய்!
“யாழ்ப்பாணத்தை விட்டுப் பிழைப்புக்காக இங்கு வந்திருக்கிறோம் தம்பி. ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். ஏதாவது உங்களுக்குத் தேவை என்றால் கூச்சமில்லாமல் என்னைக் கேட்கலாம்’ என்றார் உன் அப்பா. இதையே திருப்பிச் சொன்னாள் உன் அம்மா. நீயும் உன் கண்களால் இதைத்தான் சொன்னாயோ?
எவர் சொல்லையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. முன்போல் ஒதுங்கி வாழத் தொடங்கி விட்டேன். வேலை நேரங்களில்
54

சத்திய தரிசனம்
கந்தோருக்குச் செல்வதிலும், வேறு நேரங்களில் அறையின் உள்ளே அடைந்து கிடப்பதிலும் காலம் கழிந்துகொண்டே போனது.
உன் குடும்பத்திற்கு நான் எவ்வளவோ கடமைப்பட்டவன். “ஆபத்தில் உதவியவர்கள்’ என்ற நன்றியுணர்ச்சி என்னைவிட்டு நீங்கவில்லை. அடிக்கடி உன் வீட்டுக்கு வந்து, 'சுகம்’ விசாரிப்பதால் மட்டும் அந்த நன்றிக் கடன் தீர்ந்து விடுமா? இத்தகைய போலி உபசாரம் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் உன் குடும்பத்திற்கு எப்போதாவது ஏதாவது உதவி தேவைப்பட்டால் அதை உடனேயே செய்து விட வேண்டுமென்று என்னுள்ளேயே தீர்மானித்துக் கொண்டு அதற்குரிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. கந்தோர் விஷயமாக உன் அப்பா கொழும்பிற்குச் செல்ல வேண்டி ஏற்பட்டது. என்னிடம் வந்து, தான் கொழும்பிலிருந்து திரும்பும் வரைக்கும் உங்களுக்குத் துணையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். நான் ஒப்புக் கொண்டேன்.
அன்று பின்னேரம் என் அலுவலகத்திலிருந்து நேரே உன் வீட்டிற்கு வந்தேன், ஏதாவது தேவையிருந்தால் அதைக் கவனித்துவிட்டு அப்புறம் என் அறைக்குச் செல்லலாம் என்ற நோக்கத்துடன்.
உன் அம்மா உள்ளே எங்கோ இருந்தாள். நான் குரல் கொடுத்ததும் நிதான் வந்து கதவைத் திறந்தாய். பல நாட்களுக்குப் பிறகு அன்று தான் உன்னைப் பார்த்தேன். முன்னிலும் பார்க்க உன் அழகு அதிகரித்திருந்தது. பருவத்தின் பூரிப்புப் பொங்கி வழிந்தது. பெண்களைப் பொறுத்த வரையில், வளர்ச்சி என்பதை நாடி, விநாடிக் கணக்கில் தான் கணிக்க வேண்டுமோ? அலைபாயும் என் மனத்தை அடக்க முயன்றாலும், உன்னை நிமிர்ந்து பார்க்காமலிருக்க மட்டும் என்னால் முடியவில்லை. பார்த்தேன். விசேட நோக்கம் எதுவுமின்றிச் சர்வ சாதாரணமாகத்தான் பார்த்தேன். நீயும் உன் முகத்தை நிமிர்த்தினாய்.
உன் கண்களில் மின்னியது கண்ணிரா? திடுக்குற்றேன் நான்.
‘ஏன் அழுகின்றீர்கள்’ - அன்று நான் முதல் கேட்ட கேள்வி அதுதான்.
நீ சிரித்தாய். என் கேள்விக்குப் பதில் கூறாமலே நீ சிரித்தாய்.
55

Page 37
சிற்பி
நினைத்தவுடன் அழுவதற்கும், அடுத்த கணம் சிரிப்பதற்கும் நீ எங்குதான் கற்றுக் கொண்டாயோ?
திகைத்து நின்ற என்னை உள்ளே அழைத்து உட்கார வைத்தாய். “அம்மா அடுக்களையுள் இருக்கின்றா. வந்து விடுவா’ என்று சொல்லி விட்டு ஏதோ ஒரு பத்திரிகையுள் நீ மூழ்கி விட்டாய்.
அம்மாவை எதிர்பார்த்துக் கொண்டு நான் இருந்தேன். விசும்பல் ஒலி கேட்டது. மீண்டும் நீ அழுதாய். நான் திரும்பி உன்னைப் பார்த்தேன்.
“உங்களுக்கு என்ன வருத்தம்? ஒருவருக்கும் சொல்லாமல் ஏன் இப்படி உங்களுக்குள்ளேயே அடக்கிக் கொண்டு கஷ்டப்படுகின்றீர்கள்? டொக்டரை நான் அழைத்து வரட்டுமா? கர்மசிரத்தையுடன் நான் கேட்டேன்.
“நீங்கள் இருப்பதையே நான் மறந்து விட்டேன்’ என்று சொல்லி எழுந்தாய். அழுததற்காக வெட்கப்படுவது போலிருந்தது உன் தொனி.
“இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள். நீங்களும் கட்டாயம் அழுவீர்கள்’ என்று சொல்லி அந்தப் பத்திரிகையை என்னிடம் கொடுத்தாய்.
குஞ்சு தான் ஈன்றோன் சான்றோன் எனக்கேட்ட ஒரு தாயின் சந்தோஷத்தை உன்னால் வர்ணிக்கமுடியுமா? முடியாவிட்டால், நான் அப்போது அடைந்த சந்தோஷத்தையும் எவராலுமே வர்ணிக்க முடியாது. ஏனென்றால், அந்தக் கதையை எழுதியவன் நான். என் கதையைப் படித்து ரசித்த ஓரிளம் பெண் தன் நெஞ்சம் கனிந்து அழுவதைக் காணும் பாக்கியம் பெற்றவன் நான். படைத்தவனுக்கு இதைவிடச் சிறந்தபரிசு வேறு வேண்டுமா?
அடுத்த வீட்டுக்காரி என்ற நினைவிலும் பார்க்க, ஆபத்தில் உதவியவள் என்ற உணர்விலும் பார்க்க, என் எழுத்தின் ரசிகை என்ற இனிய உறவு எனக்கு உற்சாகத்தை ஊட்டியது. இருவருமாகக் கதையுலகிலும், கற்பனையுலகிலும் சஞ்சரித்தோம். என் கதைகளில் நான் படைத்த கதாநாயகர்களையும், நாயகிகளையும் கட்டியிழுத்து வந்தாய். அவர்களின் குணநலன்களை வர்ணித்தாய்; கதைகளைப் பற்றி விமர்சித்தாய்.
56

சத்திய தரிசனம்
அந்த நேரத்தில் நான் என்னை மறந்து, உண்மையை உளறி விட்டேன்.
அதைக் கேட்டதும் நீ துள்ளினாய், குதித்தாய், அத்தனை மகிழ்ச்சி உனக்கு ஓர் அவதார புருஷனைப் பார்ப்பதுபோல என்னைப் பார்த்தாய்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நான் தடுத்தும் கேளாது, அடிக்கடி என் அறைக்கு வந்தாய், என்னிடமிருந்த கதைப் புத்தகங்களை அள்ளிக் கொண்டு போய்ப் படித்தாய் - இது முதலாவது கட்டம்.
குப்பையாகக் கிடந்த என் அறையைக் கூட்டிச் சுத்தமாக்கினாய். அலங்கோலமாக ஆங்காங்கே மேசையிற் கிடந்த புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்தாய். - இது இரண்டாவது கட்டம்.
அவசரத்தில் கதைகள் எழுதும்போது என்னால் அழகாகவும், தெளவாகவும் எழுத முடியாது. கீறிக் கிளறி வெட்டிக் கொத்தி வைப்பேன். அந்தக் கதைகளை என்னைக் கேளாமலே எடுத்து உன் முத்து முத்தான எழுத்துக்களில் அழகாகப் பிரதி செய்து வைத்தாய். என் கதைகளைப் படித்து, “இந்த இடம் மிக, மிக நன்றாக இருக்கிறது. அந்தச் சம்பாஷணையை இன்னும் உயிருள்ளதாக ஆக்க வேண்டும்’ என்றெல்லாம் உன் கருத்துக்களைக் கூறினாய். என் எழுத்துக்கள் அச்சேறும்போது எல்லோரது ஏகோபித்த மதிப்பையும் பெற வேண்டும் என்பதில் அத்தனை அக்கறை உனக்கு! - இது மூன்றாவது கட்டம்.
குஞ்சு இந்த மூன்று கட்டங்களையும் தாண்டி வெகு வேகமாக நீ முன்னேறிக் கொண்டிருக்கும்போது உன் வரவையும், போக்கையும், சிரிப்பையும், செயலையும், பார்வையையும், நடத்தையையும் கூட்டிப் பெருக்கிப் பிரித்துக் கழித்து என் மனத் தராசில் எடைபோட்டுப் பார்த்தபோது - நீ என்னைக் காதலிப்பதை உணர்ந்தேன்!
நான் உணர்ச்சியற்ற மரக்கட்டையல்ல; ஆனால் சூடு கண்ட பூனை, ஏற்கெனவே, இளம் பெண் ஒருத்தியிடம் எக்கச்சக்கமாக என் நெஞ்சைப் பறி கொடுத்து, பிறகு இதே குற்றத்திற்காகச் சமுதாயத்தின் கொடுந் தண்டனைக்கு ஆளாகி, விதியின் கோரப் பிடிக்குள் சிக்கித் தவிப்பவன். மீண்டும் அப்படியான அன்புச் சுழலுள் அகப்பட்டு, நானும் கஷ்டப்பட்டு, என்னைச் சேர்ந்தவர்களுக்கும் இடர் விளைவிக்கக் கூடாது என்ற திட வைராக்கியத்துடன் வாழ்பவன்
57

Page 38
சிற்பி
நான். அப்படிப்பட்ட என்னைத்தான் நீ காதலித்தாய்! உன் உணர்ச்சியைப் பொருட்படுத்தாதவனைப் போல் நான் உன்னுடன் பழக முயன்றேன். என் உதாசீனத்தைப் பொருட்படுத்தாது நீயும் தொடர்ந்து அன்பு செலுத்தினாய்.
என் மன நிலையை உனக்கு எப்படித் தெரிய வைப்பது என்று தெரியாமல் தவித்தேன். உன்னையறியாமல் நீயாகவே ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தாய்.
“எந்நேரமும் சிரித்துக் கதைக்கும் உங்களால் சோகரஸம் சொட்டும் கதைகளை எவ்வாறு எழுத முடிகின்றது?’ என்று ஒருநாள் கேட்டாயே நினைவிருக்கிறதா?
சந்தர்ப்பத்தை நழுவவிட விரும்பாத நான் என் பழைய வாழ்க்கையைப் பற்றி விஸ்தாரமாகக் கூறினேன். இள வயதில் ஏற்பட்ட காதலையும், சமுதாய அந்தஸ்தின் காரணமாக அது கருக்கப்பட்ட வரலாற்றையும் கூறி, என்னில் கருத்தை நாட்டியவள் வேறொருவனுக்கு கழுத்தை நீட்டிவிட்டாள் என்ற உண்மையைச் சொன்னபோது என் இதயம் உருகி உருகிக் கண்ணிராகக் கரைந்தது. உன்னையும், என்னையும் மறந்து, அவளை மட்டும் நினைத்து அழுதேன்.
திடீரென்று நீ ஒன்று செய்தாய். உன் சேலைத் தலைப்பை எடுத்து என் கண்ணிரை ஒற்றி எடுத்தாய்!
குஞ்சு! நீ துணிச்சல்காரி மகா துணிச்சல்காரி! உன்னைத் தவிர வேறு எவரால் அந்தச் சமயத்தில் அப்படி நடந்திருக்க முடியும்?
நீ என்னை மறந்து விடுவாய் என்று நினைத்துத்தான் என் பழைய கதையைச் சொன்னேன். என்னை மணந்துகொள்ள முடிவு செய்வாய் என்று எதிர்பார்க்கவேயில்லை!
காதல் இழப்பினால் ஏற்படும் மனமடிவை அனுபவ ரீதியாக உணர்ந்த நான் அப்படியான ஒரு துயரக் கடலுள் உன்னை ஆழ்த்த விரும்ப வில்லை. என்னை உன்னிடம் ஒப்படைக்க முடிவு செய்தேன்! நீ நல்லவள்! வேறொரு பெண்ணைக் காதலித்தவன் நான் என்ற உண்மையை என்னிடமிருந்தே அறிந்த பின்பும் என்னைக் காதலித்தவள்!
58

சத்திய தரிசனம்
ஆமாம், குஞ்சு வழக்கமான நேரத்தில் நீ வராவிட்டால் என் மனம் படும்பாடு எனக்குத் தான் தெரியும். நான் எழுதும் கதைகளை நீ படிக்கா விட்டால் என்னுள்ளத்தில் நிறைவு ஏற்படாது. என் உடல் நலத்தைப் பற்றி நீ விசாரிக்காவிட்டால், எதையோ பறி கொடுத்தவனைப் போன்று பரிதவிப்பேன் நான்.
என் வாழ்வில் மீண்டும் மலர்ச்சி ஏற்பட்டது. என் உள்ளத்தில் மீண்டும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
‘குஞ்சு நான் உன்னை மனதார நேசிக்கின்றேன்” - என் நெஞ்சிலிருந்த ஆசை, பாசம், அன்பு, காதல், அத்தனையையும் ஒன்றாக்கி உன் சிவந்த நாடியை அன்பு கனிந்த விரல்களால் பிடித்து நிமிர்த்தி நான் சொன்ன போது -
கோடி சூரியப் பிரகாசம் என்று சொல்வார்களே. அத்தனை பிரகாசத்தையும் உன் அழகு வதனத்தில் கண்டேன்.
அலுவலகத்திலிருந்து நேரே என் அறைக்குத்தான் ஓடி வருவேன். நீயும் என்னைத் தேடி வருவாய். உன் கனிவான பேச்சு என் களைப்பை மாற்றும். உன் பணிவான போக்கு என் உற்சாகத்தைக் கூட்டும். ஆவி பறக்கும் தேநீரை அன்புடனே அளிப்பாய். ஆளுக்கு அரைப் பங்காக அமுதமெனக் குடிப்போம். என் உடம்பைக் கவனிக்க வேண்டும் என்று உபதேசம் செய்வாய். உடைகளை அடுக்கி வைத்து உதவி செய்வாய். கலைந்திருக்கும் கேசத்தை கவனித்து வாரிவிட்டு அழகுபடுத்துவாய். ‘எழுதுங்கள், எழுதுங்கள்’ என்று என்னை உற்சாகப்படுத்துவாய். அதே நேரத்தில் கண்ணியமாகவும், கவனமாகவும் நடந்து உன்னைக் காத்துக் கொண்டாய்.
உணர்ச்சி வேகத்தில் உதிர்ந்த என் முதற் காதல்தான் உருப்படியாகாமற் போய்விட்டது. உன் மேற்கொண்ட காதலாவது நிலைத்து நிற்க வேண்டும். வாழ்க்கை என்னும் பெருங்கடலில் உன்னுடன் கை கோத்துக் கொண்டு தான் நான் நீந்த வேண்டும். எந்தவித சக்தியும் எம்மைப் பிரிக்காது நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - இப்படி எல்லாம் நான் மனத்திற்குள் தீர்மானம் செய்து கொண்டேன்.
உனக்குத் தெரியாமலே உன் அப்பாவிடம் நமது கல்யாணத்தைப் பற்றிப் பேசி, நாளும் குறிப்பிட வேண்டும்; அந்தக்
59

Page 39
சிற்பி
கற்கண்டுச் செய்தியை உன் காதிற் போட்டு ஆனந்த அதிர்ச்சியில் உன்னை ஆழ்த்த வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு உன் அப்பாவிடம் ஒரு நாள் சென்றேன்.
என் கல்யாணத்தைப் பற்றி நானே பேசுவதா, என்பதை நினைத்த போது, வெட்கம் பிடுங்கித் தின்றது. ஊரிலே எனக்கு வேண்டியவர்களுக்கு எழுதி வரவழைத்து, “பெரிய மனிதத் தரத்தில் இந்தப் பேச்சு வார்த்தைகளை நடத்தலாமென்றால், அது முடியாத காரியமாக இருந்தது. நான் எந்த நல்ல முடிவை எடுத்தாலும், அதை முற்றாக முறியடித்து விட்டுத் தாம் பார்த்து வைத்திருக்கும் பெண்ணின் கழுத்திலே ஒரு சுபயோக சுப தினத்திலே மூன்று முடிச்சைப் போடவேண்டுமென்பதுதான் என்னைச் சேர்ந்தவர்களின் ஆசை. ஆகவே வெட்கத்தை ஒரு பக்கத்தில் வைத்து விட்டு அவர் வேலை செய்யும் கந்தோருக்குச் சென்றேன்.
அவர் முகத்தில் முன் எப்போதுமே கண்டிராத பூரிப்பையும் மகிழ்ச்சியையும் அன்று நான் கண்டேன். நான் சென்ற காரணத்தை அவர் முன் கூட்டியே அறிந்து கொண்டாரோ!
வாரும் தம்பி ஒரு சந்தோஷமான செய்தியைச் சொல்வதற்காக நான் இன்று பின்னேரம் உம்மைச் சந்திப்பதாக இருந்தேன் அதற்குள்ளே நீரே வந்துவிட்டீர்.” அவருக்கு முன்னாலிருந்த நாற்காலியில் நான் உட்கார்ந்தேன்.
‘அடுத்த பத்தாந் திகதி குஞ்சுவின் கல்யாணம். நீர் மனம் வைத்தால் மிகவும் விமரிசையாக அதை நடத்திவைக்கலாம்.? சந்தோஷ மிகுதியினால் அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.
அவர் தான் மேலும் பேசினார். ‘ஒரு சில முக்கியமான காரணங்களுக்காக இந்தச் செய்தியை நீர் இரகசியமாக வைத்திருக்க வேண்டும். கல்யாணத்தையும் இங்கேயே நடத்தி விடத் தீர்மானித்திருக்கிறேன்.’
“இங்கே கண்டியில் உதவி அரசாங்க அதிபராக இருக்கின்றாரே, விஜய குமார்! அவர் என்னுடைய அக்காவின் மகன்தான் தம்பி! பண விஷயமாக அவர்களுக்கும் எங்களுக்குமிடையே பலநாட்களாக மனக்கஷடம் இருந்து வந்தது. பேச்சு வ:த்தைகூட இல்லை. நேற்று
60

சத்திய தரிசனம்
அந்தப் பையன், தானாகவே என்னிடம் வந்து குஞ்சுவைக் கல்யாணம் செய்து கொடுக்கும்படி கேட்டான். நானும் பழைய விஷயங்களையெல்லாம் மறந்து விட்டு வாக்குக் கொடுத்து விட்டேன். பழைய கோபங்கள் இருந்தாலும் இப்படியான வேளைகளில் அவற்றைச் சாதிப்பது அவ்வளவு நல்லதல்ல. நீர் என்ன நினைக்கிறீர் தம்பி.?
என் கண்கள் இருண்டன. நெஞ்சில் ஏதோ “சுரீர்” என்றது. அப்படியே சாய்ந்து விட்டேன்.
தானே கடை வீதிக்குச் சென்று தானாகவே எலுமிச்சம் பழம் கரைத்துத் தன் கையினாலேயே எனக்குப் பருக்கினார் உன் அப்பா!
கனவில் நடப்பதைப் போன்றிருந்தது எனக்கு.
சிறிது நேரத்தில் என் மயக்கம் நீங்கியது.
*கார் ஒன்று ஒழுங்கு படுத்துகின்றேன். நேரே என் வீட்டிற்குப் போகலாம் தம்பி. இனிக் கந்தோருக்குப் போக வேண்டாம்’ என்றார் உன் அப்பா.
“வீண் சிரமம் வேண்டாம். எனக்கு இப்படி அடிக்கடி வருவது வழக்கம். கந்தோருக்குப் போய் வேலை செய்யத் தொடங்கினால் எல்லாம் சரியாகிவிடும்” - என்றேன் நான்.
நான் என்ன சொல்லியும் கேளாது கார் ஒன்று ஏற்பாடு செய்து என்னை என் அலுவலகத்திற்குக் கொண்டு சென்று சேர்த்துவிட்டுத் தான் போனார் அந்த நல்லவர்.
அப்பா சொன்ன செய்தி. மீண்டும் மீண்டும் என் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
எனக்கு வேலை ஒடவில்லை. மயிர்க் கால்கள் ஒவ்வொன்:
றிலும் ஊசியைக் காய்ச்சி உள்ளே நுழைப்பது போன்ற வேதனையால் துடித்துக் கொண்டிருந்தேன்.
வெகு நேரம் கழித்து என் அறைக்குத் திரும்பியபோது அது வெறித்துச் சூனியமாய்க் கிடந்தது. அதைத் திறந்தேன்.
6

Page 40
சிற்பி
உன் வீட்டிலிருந்து உன் அழுகைக் குரலும் உன் அப்பாவின் அதட்டல் குரலும் முட்டி மோதிக் கொண்டு என் காதில் விழுந்தன. அழுது குளறிக் கொண்டு நீ ஒன்றைத் தான் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தாய், “என்னால் விஜய குமாரைக் கல்யாணம் செய்ய முடியாது” என்று! அதட்டி உருட்டிக் கொண்டு அவரும் ஒரே கேள்வியைத்தான் திருப்பித் திருப்பிக் கேட்டுக் கொண்டிருந்தார்; “ஏன் அவரைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாது” என்று.
குஞ்சு! இக்கட்டான அந்த நேரத்தில் கூட எத்துணை அடக்கத்-துடன், எத்துணை சகிப்புத் தன்மையுடன் எத்துணை தீர்க்க திருஷ்டியுடன் நீ நடந்து கொண்டாய்! கோபத்தில் தன்னையே மறந்திருந்த உன் அப்பாவின் காதுகளில் என்னைப் பற்றிய செய்தியைப் போட்டிருந்தாயானால் என்னென்ன விபரீதங்கள் நடந்திருக்குமோ! தன் பார்வையால் உன்னைச் சுட்டெரித்துக் கொண்டிருந்தார் அவர்! அடிக்காத குறையாக உன்னை முறுக்கிப் பிழிந்து கொண்டிருந்தார். ஒன்றுஞ் செய்வதறியாது மூலையொன்றினுள் நின்று விம்மி விம்மிக் கண்ணிர் வடித்தாய் நீ அதைப் பார்க்கவும் கேட்கவும் பார்த்துக் கொண்டு மெளனமாக நிற்கவும் என்னால் முடியவில்லை. என் அறைக் கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டு கால் போன திசையில் நடந்தேன்.
மகாவலிக் கரையை அடைந்தேன்; மணலில் தனிமையில் உட்கார்ந்தேன்.
நேரம் போகப் போக என் இதயத்து உணர்ச்சிகளை ஒரு பக்கத்தில் ஒதுக்கி எறிந்து விட்டு என் மூளையின் அறிவைக் கொண்டு எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கும் நிலை சித்தித்தது.
‘தம்பி! சிறுவயதிலே குஞ்சுவிற்கு ஏற்பட்ட கொடிய நோய் காரணமாக நான் என் சொத்தெல்லாவற்றையுமே இழந்தேன். மேலும் பணம் (8560)6)||ULUQuJT6) 6T6óI சகோதரியின் கணவரிடம் கடன்பட்டேன். எந்தவித நிபந்தனையுமின்றித்தான் கடன் கொடுத்தார் அவர். ஆனால் சில ஆண்டுகள் செல்ல தன் மகனை இங்கிலாந்திற்கு அனுப்பிப் படிப்பிப்பதற்கு பணந் தேவைப்படவே என்னை நெருக்கினார். என்னால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.
கையை விரித்தேன். வாய்க்கு வந்தபடி ஏசினார். அத்துடன் எங்கள் குடும்பங்கட்கிடையே பேச்சு வார்த்தையும் நின்றுவிட்டது.
62

சத்திய தரிசனம்
ஆனால் அவர் மகனுக்கு என் மேல் அதிக பற்றுண்டு. தாய் தந்தையர்க்குத் தெரியாது எங்கள் வீட்டிற்கு வந்து போவான். அவன் இங்கிலாந்தில் இருந்தபோது என் கையிலும் பணம் புழங்கத் தொடங்கியது. நானும் என்னாலானவரை முயன்று அவ்வப்போது ஒரு சிறு தொகையை அனுப்பி வைத்தேன். இதை ஏதோ விதமாக அறிந்த என் மைத்துனர் மீண்டும் என்னுடன் சண்டைக்கு வந்தார். தன் மகனை நான் வசியப்படுத்தி விட்டேன் என்று குற்றஞ் சாட்டினார். நான் ஒன்றும் பேசாது ஒதுங்கி விட்டேன். இத்னைக்கும் பிறகு சென்ற வாரம் என் மருமகன் வீட்டிற்கு வந்தான். தனக்குக் கிடைத்த உத்தியோக உயர்வைப் பற்றி கூறிவிட்டு குஞ்சுவை மணஞ் செய்ய விரும்புவதாகவும் கூறினான். பெற்றோர்கள் எதிர்த்தாலும் தான் எங்கள் வீட்டிலேயே கல்யாணஞ் செய்து கொள்ளத் தீர்மானித்துள்ளதைச் சொன்னான் தம்பி. அதனாற்றான் கண்டியிலேயே கல்யாணத்தை நடத்துவதற்கு நான் முடிவு செய்தேன். உள் வீட்டுப் பிள்ளை போல் நின்று நீர் தான் சகல உதவிகளையும் எனக்குச் செய்ய வேண்டும்.’
காரில் என் அலுவலகத்திற்கு என்னை அழைத்துச் சென்ற போது உன் அப்பா கூறியவற்றை மீண்டும் என் நினைவிற்குக் கொண்டு வந்தேன்.
குஞ்சு உன்னை மனப்பூர்வமாக அடைய விரும்பியவர் உன் சொந்த அத்தான்; உயர்ந்த உத்தியோகத்திலிருப்பவர். நான் கூட ஒரு தடவை அவரைப் பார்த்திருக்கின்றேன். நல்ல அழகர், பண்பும் கண்ணியமும் நிறைந்தவர். உன் அப்பாவும், அம்மாவும் கூட அவரைத்தான் விரும்புகின்றார்கள். அவரை நீ மணந்து கொண்டால் காலப் போக்கில் கடனாளி’ என்ற அவச்சொல் உன் அப்பாவை விட்டு நீங்க வழியண்டு. எந்தவிதமாகப் பார்த்தாலும் என்னைவிட எத்தனையோ மடங்கு சிறந்தவர் உன் அத்தான். நீயும், அவரும் மிக மிகப் பொருத்தமான ஜோடிகள்!
குஞ்சு! நீ என்னைக் கல்யாணம் செய்வதானால் கடன்பட்ட நெஞ்சைத்தான் கல்யாணஞ் செய்வாய், காதலில் வெற்றி கல்யாணம் செய்தாற்றான் ஏற்படும் என்பதில்லை. ஒருவரையொருவர் முற்று முழுதாக உணர்வது தான் உண்மையான வெற்றி. குஞ்சு உன்னை நான் அணு அணுவாக உணர்ந்து விட்டேன். நீயும் என்னை அப்படியே உணர்ந்து கொண்டாய். நாமிருவரும் கல்யாணம் செய்து கொண்டோமானால் வாழ்க்கைப் பிரச்சினைகள் தலைதூக்கும் போது
63

Page 41
சிற்பி
நம் காதலின் தூய்மை கெட்டு விடும். புனிதமான முறையிலேயே போற்றிப் புனிதமான முறையில் நாம் வளர்த்த காதலைப் பாதுகாக்க வேண்டும். ஆற்றங்கரையிலிருந்து அன்று நான் திரும்பிய போது இத்தகைய உயர்ந்த எண்ணங்கள் என் உள்ளத்தில் உதித்தன.
இதற்குப் பிறகு நான் என் போக்கையே முற்றாக மாற்றிக் கொண்டேன். உன்னைப் பார்ப்பதில்லை; உன்னுடன் பேசுவதில்லை; உன் வீட்டிற்கும் வருவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டேன்.
நேருக்கு நேர் ஒரு நாள் உன்னைச் சந்தித்த போது நீ கேட்டாய் “இப்பொழுது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? என் (8D6D (85'TUL DIT?”
என் வாயை ஊமையாக்கிக் கொண்டேன்.
‘அத்தான்’ என்று அலறினாய். காதுகளைச் செவிடாக்கிக் கொண்டேன்.
தொடர்ந்து என் அறையில் என்னால் இருக்க முடியவில்லை; முடியவேயில்லை; அலுவலகத்தில் வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் நேரம் முழுவதையுமே அங்கே கழித்தேன். இதை அறிந்த நீ கடிதம் எழுதினாய். முத்து முத்தான எழுத்துக்களில் உன் உணர்ச்சி முழுவதையும் கொட்டியிருந்தாய். அவற்றை நான் படித்தேன்; பத்திரப்படுத்தினேன். ஆனால் பதில் எழுதவில்லை. உன் நினைவு தோன்றும் போதெல்லாம் அதைப் படித்து அழுதேன்.
கடைசியில் நீயே நேரில் வந்தாய், ‘என்னுடன் பேச மாட்டீர்களா?’ என்று கெஞ்சினாய்.
இரக்கமற்ற இராட்சதனைப் போல் இருதயத்தை இரும்பாக்கிக் கொண்டு “இப்பொழுது நேரமில்லை’ என்றேன். அலுவலகத்திற்கு வரும் எத்தனையோ பேருள் ஒருத்தியாக உன்னைப் பாவித்து உபசாரத்திற்காகக்கூட ‘இரு’ என்று சொல்லாமல் உன்னை திருப்பியனுப்பினேன். என்னைப் பற்றி நீ என்ன நினைத்தாயோ!
கண்ணிர சொட்ட நீ போனாய். பிணம் ஒன்று நடந்ததை அன்று தான் நான் கண்டேன்.
64

சத்திய தரிசனம்
கல்லாய், கடினமாகி விட்ட என் இதயம் கதறித் துடித்தது. அறிவைக் கொண்டு நான் எடுத்த தீர்மானத்தை என் இதயத்து உணர்ச்சிகள் சிதறடித்து விட்டன. உடனே ஓடி வந்து உன் அப்பாவின் கால்களில் விழுந்து உண்மையைச் சொல்லி விடுவோமோ என்று தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினேன்.
டெலிபோன் மணி கிணு கிணுத்தது. நான் அதைக் கையிலெடுத்தேன். உன் அப்பா தான் பேசினார். ‘தம்பி! இன்றிரவு திருமணப் பதிவு, நீர் கட்டாயம் வர வேண்டும்.’
என் நாடி விழுந்து விட்டது. விஷயம் இவ்வளவு தூரம் முற்றி விட்டபின், நான் எல்லாவற்றையும் உளறிக் கொட்டுவது நல்லதா?
நீ வேறொருவனுக்குச் சொந்தமாகப் போகின்றாய் என்ற நிைைவயே என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என் உள்ளம் கலங்கியது எதிர்காலம் இருண்டு சூனியமாகிப் போன உணர்ச்சி என்னைப் பற்றியது.
தொடர்ந்து கண்டியிலிருக்க நான் விரும்பவில்லை. உன்னைப் பார்க்கக் கூடிய இடத்திலிருந்து கொண்டும் பார்க்காமலிருக்கவும் உன்னுடன் பேசக் கூடிய தூரத்திலிருந்து கொண்டும் பேசாமல் இருக்கவும், என்னால் முடியாது போலத் தோன்றியது. கொஞ்ச நாட்களுக்காவது எங்காவது ஓடிப் போய் ஒளிந்து விட நினைத்தேன். நான் கப்பலேறினேன். என்னை மலேஷியாவிற்கு வரும்படி நீண்ட நாட்களாகவே அழைத்துக் கொண்டிருந்த என் நண்பனின் அழைப்பிற்கு மதிப்புக் கொடுக்கின்றேன் என்ற கண் துடைப்புக் காரணத்துடன்.
கப்பல் புறப்பட்டது. நேரம் போகப் போக, நானும் உன்னிடமிருந்து தூரத் தூரப் போய்க் கொண்டிருந்தேன். ஆனால் நீ மட்டும் என் இதயத்திற்குக் கிட்டக் கிட்ட வந்துவிட்டாய். உன் நினைவைக் கிள்ளித் துார எறிந்து விட முயன்றேன். கிள்ளி எறிந்தவுடன் மறுபடியும் துள்ளி ஓடி வருகின்றாய் நீ!
என் ஆசைக் குஞ்சுவுடன் வாழ நான் எண்ணினேன். என் முட்டாள்தனத்தினால் அந்த இனிய எண்ணத்தில் நானே மண்ணை வாரிப் போட்டு விட்டேன். நான் கட்டிய இன்பக் கோட்டைகள் சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டன.
65

Page 42
சிற்பி
குஞ்சு! இப்பொழுது நீ உன் சொந்த அத்தானின் மனைவியாயிருப்பாய்.
நிமிஷத்திற்கு நிமிஷம் என் நெஞ்சைப் பிழிகின்ற இந்த நிதர்சன உண்மையை நான் இனி ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். உன்னை நினைப்பதற்குக் கூட எனக்கினி உரிமை இல்லை.
குஞ்சு வெளியில் அடித்த மழையும், புயலும் இப்போது ஒய்ந்து விட்டன. எங்கு பார்த்தாலும் இப்போது ஒரே அமைதி, கப்பலுக்கு நேரவிருந்த ஆபத்தும் நீங்கி விட்டது. இன்னும் சில மணி நேரத்தில் கப்பல் மலேஷியாக் கரையை அடைந்துவிடுமாம்.
நான் நினைத்தபடி வாழத்தான் நான் கொடுத்து வைக்கவில்லை. உன்னை நினைத்துக் கொண்டு இறந்துவிடலாமென்றால், அதுவும் முடியாது போலத் தெரிகின்றதே?
மலேஷியாவில் சில நாட்களைக் கழித்துவிட்டு மீண்டும் நான் கண்டிக்கு வந்தேயாக வேண்டும். உன்னை நேருக்கு நேர் சந்திக்க நேரிட்டால், எந்த முகத்துடன் உன்னைப் பார்ப்பது? என்ன உறவுடன் உன்னிடம் பழகுவது?
பவித்திரமான முறையில் எமக்கிடையே வளர்ந்த அன்பை, நான் பாழாக்க விரும்பவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் உன்னிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
நான் அங்கே வந்தால்.
என்னுடன் நீ பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை; பழக வேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை.
ஆனால், துரோகி என்று என்னைத் துரத்தாமல், எதிரியென்று என்னை ஏசாமல், மனத்தளவில் என்னை மன்னித்து அதை ஏதோ ஒரு வகையில் எனக்கு உணர்த்த முடியுமென்றால். கரைந்துருகும் என் இதயத்திற்கு அது மருந்தாக அமையும்.
நான் இங்கிருந்து உடனே வருவேன்; ஓடி வருவேன்; பாய்ந்து வருவேன்; பறந்து வருவேன்.
66

சத்திய தரிசனம்
நாட்டின் ஆட்சி மாற்றத்துடன் நடைமுறைக்கு வந்த திறந்த பொருளாதார முறை உள்ளூர் உற்பத்தியாளர்களின் வயிற்றை எரித்து, வெளிநாட்டு முதலாளிகலுநக்கு விருந்து படைக்கத் தொடங்கியது.
ஈழமுரசு ஆண்டு மலர்
ல்லிபுர ஆழ்வாருக்கு விளக்கமறியல், கடையிலே திருடிய பொருளைக் கையிலே வைத்திருந்தாராம்”,
வீட்டுச் சிந்தனையில் மூழ்கியிருந்த என்னை, பத்திரிகை விற்கும் பையனின் குரல் திடுக்குறச் செய்தது.
*வல்லிபுர ஆழ்வார். அவனாக இருக்குமோ?”
பத்திரிகையை வாங்குவதற்காகப் பணத்தை எடுத்துக்கொண்டு நிமிர்வதற்கிடையில், பையன் வேறொரு பஸ்ஸை நோக்கிச் சென்று
விட்டான்.
“வல்லிபுர ஆழ்வாருக்கு விளக்க மறியல்.” பையனின் குரல், சற்றுத் தொலைவிற் கேட்டுக் கொண்டிருந்தது.
de
“பாத்தியே மச்சான், கடவுளைக் கூடக் கம்பி எண்ண வைச்சிட்டினம்’.
“அந்தக் காலத்திலையே வெண்ணையைக் களவாடித் திண்டு, கையும் மெய்யுமாகப் பிடிபட்டவர்தானே.”
67

Page 43
சிற்பி
“இனி அந்தக் கோயில்ப் பக்கம் போறதிலையும் பிரயோசனமில்லை.”
சக பிரயாணிகள் இரண்டொருவரின் விமர்சனங்களும் கிண்டல்களும் பஸ்ஸிற்குள்ளே சிரிப்பலைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.
அவர்களுக்கு அது வித்தியாசமான - விசித்திரமான புதினம். ஆனால்..?
அவர்களைப் போல், அதை நகைச் சுவையாக இரசிக்க என்னால் முடியவில்லை.
பத்திரிகையை வாங்கி, செய்தியை விபரமாக வாசித்தறிவதற்கு மனம் துடித்தது.
‘பையன் மீண்டும் வரமாட்டானா?” என நான் ஏங்கிக் கொண்டிருக்க, பஸ் புறப்பட்டு விட்டது!
என்னுடைய சிந்தனை அந்தச் செய்தியைச் சுற்றியே மீண்டும் மீண்டும் வட்டமிட்டுக் கொண்டிருந்தது!
சக பிரயாணிகளிடம் ‘பத்திரிகை இருக்கின்றதா?’ எனப் பல தடவை சிலருக்கு எரிச்சல் உண்டாகும்வரை - விசாரித்து விட்டேன். யாருமே பத்திரிகையை வாங்கியிருக்கவில்லை. பத்திரிகை விற்கும் பையன்களின் இத்தகைய ‘தலைப்புச் செய்தி ஒலிபரப்புக்களே அவர்களுக்குப் போதும்!
அடுத்த இடத்தில் பஸ் நிற்கும்போது பத்திரிகையை வாங்கிவிட வேண்டும் எனத் தீர்மானித்து, என்னைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டிருந்தேன்.
நீண்ட நேரத்தின் பின் பஸ் நின்றது. ஆனால் பத்திரிகை அங்கே கிடைக்கவில்லை.
மனம் அமைதியை இழந்துவிட்டது.
ஏனைய பயணிகளைப் பார்த்தேன். கொடுத்து வைத்தவர்கள்! பல்வேறு கோலங்களில், நித்திராதேவியின் அன்புப் பிடிக்குள் சொகுசாகச் சாய்ந்து கொண்டிருந்தார்கள்.
68

சத்திய தரிசனம்
கொழும்பு பஸ்நிலையத்திற் கேட்ட பத்திரிகைப் பையனின் குரலும் அந்தக் குரல் கிளறிய நினைவுகளும், நித்திராதேவி என்னை அண்டுவதைத் தடுத்துக் கொண்டிருந்தன.
ded
எனக்கொரு நண்பன் இருக்கின்றான்; என்ஊரவன்; என்னுடன் கூடப் படித்தவன்.
படிப்பிலோ விளையாட்டிலோ அவன் திறமைசாலியல்லன். என்றாலும் பாடசாலையில் அவன் மிகவும் பிரபலமான ஒருவனாக இருந்தான்.
காரணம்.?
அவனுடைய பெயர் - வல்லிபுர ஆழ்வார்!
“கடவுளுக்குரிய ஏதாவதொரு பெயரைத்தான் எல்லோரும் தங்களின்ரை பிள்ளைகளுக்கு வைக்கிறவை. உன்ரை கொப்பர் உனக்கு இப்படியொரு பேரை வைச்சீட்டார். இப்பிடியான பேர் வேறை ஆருக்கும் இருக்குமெண்டு நான் நினைக்கேல்லை’ என்பார் எங்கள் வகுப்பாசிரியர்.
“என்ரை பேரை எழுதி, இலங்கை எண்டும் போட்டு, உலகத்திலை எந்த மூலையிலிருந்து தபால் போட்டாலும் என்ரை கையிலை அது கிடைச்சுடும்” என்பான் அவனும்,
பத்திரிகையில் வந்த செய்தி இவனைப் பற்றியதாக இருக்குமோ?
‘அப்படி நினைப்பதே பிழை; பாவம்!’
என்னுள்ளே இருந்த ஏதோ ஒன்று என்னைக் கண்டித்து எச்சரிப்பதைப் போன்றிருந்தது.
ஆனால், அந்தப் பெயர்?
நான் அறிந்தவரை, அவன் ஒருவனுக்கு மட்டுந்தானே அப்படியான பெயர் இருக்கின்றது!
69

Page 44
சிற்பி
நெருங்கிப் பழகுபவன், நல்லநண்பன் என்ற முறையில் அவனுடைய நேர்மையும், நல்ல பல பண்புகளும் எனக்குத் தெரியும். பாடசாலை நாள்களில், பரீட்சை வேளைகளில், வேறு சில மாணவர்களைப் போல், தவறான வழிகளை அவன் பின்பற்றியிருந்தால், அவன் எல்லாவற்றிலும் சித்தியடைந்திருப்பான். ஆசிரியர்களின் ஏச்சுப் பேச்சுக்கும் பிரம்படிகளுக்கும் இலக்காகி இருக்க மாட்டான்; அடி அகோரத்தைத் தாங்க முடியாமல், பாடசாலையை விட்டு ஓடியிருக்கவும் LDT-Lf60.
“என்ரை கையெல்லாம் காய்ச்சுப் போட்டுது. இனி, பயமில்லாமல் மண்வெட்டியைப் பிடிக்கலாம். உன் தரவளி ஆக்கள் நிழல்லை நிக்கத்தான் சரி. வெய்யில்லையும் மழையிலையும் நிண்டு என்னாலை வேலை செய்ய முடியும்.”
வயலில் இறங்கியவன் வஞ்சகமின்றி உழைத்தான், உழைப்புக்கேற்ற பலனையும் பெற்றான்.
வசதியான, திருப்தியான வாழ்க்கை வாழ்ந்தான்.
காற்சட்டை போடும் கண்ணியமான உத்தியோகம் எனக்குக் கிடைத்திருந்த போதிலும், பணமாகவும் பொருள் பண்டங்களாகவும் அவன் அடிக்கடி எனக்கு உதவி செய்திராவிட்டால், என் வாழ்க்கை எப்படி எப்படியெல்லாமோ மாறியிருக்கும்.
எனக்கு மட்டுமல்லாமல், வேறும் பலருக்கு, தேவையும் நேரமும் அறிந்து அவன் உதவியது எனக்குத் தெரியும். .
“இப்படிப்பட்டவன், திருடியிருப்பானா?
*வல்லிபுர ஆழ்வாருக்கு விளக்க மறியல்’ - பத்திரிகைப் பையனின் குரல், என்னுள்ளே மீண்டும் எதிரொலித்து நெஞ்சைக் குடையத் தொடங்கியது.
ஊருக்குப் போகும்வரை உண்மையை அறியும் வாய்ப்பு
இல்லை.
பஸ் நிலையத்திலிருந்து வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தேன். தெரிந்தவர் பலர் வழியில் எதிர்ப்பட்டன்ர்
70

சத்திய தரிசனம்
தலையாட்டல்கள், மெல்லியசிரிப்புக்கள்; “லிவு போலை கிடக்குது” என்ற விசாரிப்புக்கள்!
நான் அறியத் துடித்த - வெளிப்படையாக விசாரிக்க விரும்பாத - அந்த விஷயத்தை யாருமே “தொடவில்லை!
நிம்மதியாக வீட்டை அடைந்தேன்.
அவசர அவசரமாகக் குளித்து முடித்ததையும் தேநீரை ஒரே மிடறில் ஊற்றிக் கொண்டதையும் கவனித்த மனைவி சொன்னாள், “உங்கை இப்ப ஒருத்தரும் இல்லை. மனிசிக்காறியும் தன்ரை வீட்டுக்குப் (8 JT LT6TTLD. மறியல்ச்சாலைக்குப் போனால்தான் உங்கடை அருமைச் சிநேகிதனைப் பாக்கலாம்”.
எனது இதயத்தைக் குத்தியெடுப்பதற்கென்றே சில வார்த்தைகளைக் கூர்மையாக்கி வைத்திருந்ததைப் போல் தெரிந்தது.
எனக்குவந்த ஆத்திரத்தில், நானும் எதையாவது சொன்னால், சண்டைதான் மிஞ்சும்!
“அங்கை போனால், அந்தக் கள்ளர் கூட்டத்திலை நீங்களும் சேர்மதி எண்டுதான் ஊர் சொல்லும்”.
எதையுமே தீர விசாரிக்காமல், ஒன்றைப் பத்தாக்கி, கள்ளன் என்ற பட்டத்தையும் சூட்டி, அவனுக்காக அனுதாபப்படுவதே பாவம் என்ற மாதிரி நினைப்பவர்களைப் போன்று நடக்க என்னால் முடியாது.
மற்றவர்களின் கதைகளை நம்புவதைவிட என் நண்பனின்
வார்த்தைகளை நம்பலாம். என்னிடம் அவன் உண்மையை மறைக்க LDITLT61.
“என்னைச் சந்திக்க வரும் முதலாவது ஆள் நீதானப்பா. கொழும்பிலிருந்து 6TCU வந்தனி?” வேதனையும் விரக்தியும் ஆழ்வாரின் குரலைக் கரகரக்கச் செய்தன.
“சும்மா சந்திச்சுப் போட்டுப் போறதுக்கு நான் வரேல்லை.
உன்னை இப்பிடி மாட்டி வைச்சது ஆர்.”
7

Page 45
என்னைப் பார்த்தபடி, ஒன்றுமே பேசாமல் நின்றான் அவன்.
“நடந்ததைச் சொன்னாத்தான், உன்னை எப்பிடி வெளியிலை கொண்டரலாம் எண்டதைப் பற்றி யோசிக்கலாம்.”
“மலையோடை மோதினால், எங்கடை மண்டைதான் உடையும். நான் திருட்டுக் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டன்’
“என்ன..” - நான் கத்தினேன்.
வயலில் அவன் நன்றாக உழைத்தான். அவனுடைய வஞ்சகமற்ற உழைப்பையும் வழிந்தோடிய வியர்வையையும் ஏற்றுச் சுவறிய பூமித்தாய், தனது பூரிப்பை வெங்காயக் கட்டுக்களாகவும் மிளகாய்க் குவியல்களாகவும் வெளியிட்டாள்.
காலப் போக்கில் மேலும் சில தோட்டக் காணிகளை வாங்கினான். வீட்டைத் திருத்திச் சற்றுப் பெரிதாகக் கட்டினான்.
ஆனால் அவன் தன்னை இழக்கவில்லை; தான் ஒரு தோட்டக்காரன் என்பதை மறக்கவில்லை; தன்னுடன் சேர்ந்து வேலை செய்த தொழிலாளர்களையும் மறக்கவில்லை. எவ்வித குறையுமில்லாமல் அவர்கள் வாழ்வதற்கு வழி செய்தான்.
வாழ வழியின்றி, உண்மையாகவே கஷ்டப்படுபவர்களுக்கு அவன் தாராளமாகவே உதவி செய்தான்.
அவனுடைய பரந்த உள்ளமும் சேவை மனப்பான்மையும் அதிக அளவிற் பணத்தைச் சேமிப்பதற்கு விடவில்லை. என்றாலும் நாலு இலக்கச் சம்பளம் வாங்கும் உத்தியோகத்தர்களை விட, வசதியாகவும் திருப்தியாகவும் சுதந்திரமாகவும் அவன் வாழ்ந்தான்.
நாட்டின் ஆட்சி மாற்றத்துடன் நடைமுறைக்கு வந்த திறந்த பொருளாதார முறை, உள்ளுர் உற்பத்தியாளர்களின் வயிற்றை எரித்து, வெளிநாட்டு முதலாளிகளுக்கு விருந்து படைக்கத் தொடங்கியது.
72

சத்திய தரிசனம்
"இம்போட்டெட்” என்ற சொல்லின் மந்திரசக்தி, அப்பாவி மக்களை மயக்கி, அவர்களின் பணத்தைக் கறந்து கொண்டிருந்தது. உள்ளுர் உற்பத்திகள் தேடுவாரற்றுத் தேங்கத் தொடங்கின.
இலட்சாதிபதிகள், கோடீஸ்வரர்களாக, ஏழைகள் எலும்பும் தோலுமாகத் தொடங்கினர்.
விவசாயிகள் பெருமளவிற் பாதிக்கப்பட்டனர். வல்லிபுர ஆழ்வார் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டான்.
திட்டமிடப்படாத இறக்குமதி காரணமாக, உள்ளுர் வெங்காயம், மிளகாய் முதலியவற்றின் விலை சரிய அவனுடைய வாழ்க்கையும் சரியத் தொடங்கியது.
உற்பத்திக்குச் செலவிட்ட பணத்தைக் கூட, திருப்பி எடுக்க முடியாத நிலை. அடுத்த முறை சரிக்கட்டலாம் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்து விட்டது.
ஒவ்வொரு போகமும் அவனுடைய நம்பிக்கையை மட்டுமல்லாமல், கொஞ்ச நஞ்சமிருந்த பணத்தையும் பறித்துக் கொண்டு போனது.
காணியின் பெரும்பகுதியை விற்றால்தான், இனி வாழமுடியும் என்ற நிலை!
நகரிலுள்ள, ‘தவிச்ச முயல் அடிக்கும் முதலாளி ஒருவர், அவனுடைய கஷ்ட நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார். தான் நிர்ணயித்த விலைக்கே அவனுடைய காணியை வாங்கினார்.
காணி உடனடியாகவே கை மாறியது; ஆனால், காசு கைமாறத் தாமதித்தது!
முதலாளியின் வீட்டிற்கும் கடைக்கும் நாயாக அலைந்தான் ஆழ்வார்.
a
73

Page 46
சிற்பி
“காணி சரியில்லை ஆழ்வார். தண்ணீர் வசதியும் போதாது. அதைப்பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறன்’ என்றார் முதலாளி ஒருநாள்.
“என்ரை காணியைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும் ஐயா. நான் புளுகேல்லை. எவ்வளவோ உழைச்சுத் தந்த காணி அது. ஒரு கொஞ்சக் கையிருப்பு மட்டும் இருந்தாலே போதும். அதை விக்கிறதைப் பற்றி நான் நினைச்சிருக்கவே மாட்டன்’
“எண்டாலும் காணி இப்ப பழுதாய்ப் போச்சுது”.
“என்ரை காணியை வாங்கச் சொல்லி நான் உங்களிட்டை வந்து கெஞ்சினனானோ? நீங்கள் தான் வலியத் தேடி வந்தனிங்கள்.”
“இப்படிக் கதைச்சுக் கதைச்சு நேரத்தை இழுக்காமல், விஷயத்துக்கு வருவம். நான் முந்திச் சொன்ன தொகைக்கு காணி பெறுமதியில்லை. பரப்புக்கு இரண்டாயிரம் குறைச்சுத்தான் தருவன். சம்மதமெண்டாச் சொல்லு. இல்லாட்டா, இதுவரை என்னட்டை வாங்கின காசைத் திருப்பித் தா. காணியை உன்ரை பேருக்கே மாத்தி எழுதி விடுவம். கடையைப் பெருப்பிக்கிறதுக்கு எனக்கும் காசு தேவையாய்க் கிடக்குது”.
ஒவ்வொரு தடவை வந்தபோதும் நூறு, இருநூறு என்று மட்டும் கொடுத்துப் போட்டு, இப்போது எல்லாவற்றையும் ஒரேயடியாகத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்கின்றார்!
ஆழ்வாரால் பொறுக்க முடியவில்லை.
“சந்திக்க வேண்டிய இடத்திலைதான் இனி நான் சந்திப்பன். எல்லாத்தையும் அங்கை பேசிக்கொள்ளுவம்”.
மிகுந்த ஏக்கத்துடன் கடையிலுள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருந்த தன் குழந்தையைத் தூக்கித் தோளிலே போட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான் ஆழ்வார்.
பஸ்ஸிற்காக அவன் காத்துக் கொண்டு நின்றபோது பொலீஸ் ஜீப் ஒன்று அவனருகே வந்து நின்றது பொலிஸ்காரர் இருவர் இறங்கி வந்தனர். கூடவே கடை முதலாளியும் வந்தார்.
74

சத்திய தரிசனம்
“இவன்தான் ஆள்’ அவனைச் சுட்டிக் காட்டியபடி பொலிஸ் காரரிடம் சொன்னார் முதலாளி.
பொலிஸ்காரரை முறைப்பாகப் பார்த்தான் ஆழ்வார்.
முதலாளியின் பணத்தைக் கண்டு, அவர்கள் பல்லிழிக்கலாம், அவர்களின் வெருட்டிற்கு அவன் ஏன் மசிய வேண்டும்?
“ஏய்! நீதானே இதைக் களவெடுத்தனி?” - குழந்தையின் கையிலிருந்த வெளிநாட்டுப் பொம்மை ஒன்றைப் பறித்தபடி, ஆழ்வாரைப் பார்த்துக் கேட்டான் ஒரு பொலிஸ்காரன்.
‘என்ரை குழந்தையிடம் இந்தப் பொம்மை எப்படி வந்தது?
ஆழ்வாருக்கு எல்லாமே இருண்டு கொண்டு வந்தது, நிற்கும் நிலம் நழுவி எங்கோ ஓடுவதைப் போன்றிருந்தது. திடீர் அதிர்ச்சியால் வாயைத் திறக்கவே முடியவில்லை!
என்றாலும், சற்று நேரத்தில், ஒருவாறு சமாளித்துக் கொண்டு குழந்தையைப் பார்த்தான்.
பொலிஸ்காரனின் கையிலிருந்த அந்தப் பொம்மையை மிகுந்த ஏக்கத்துடன் அது பார்த்துக் கொண்டிருந்தது.
ஆழ்வாருக்கு எல்லாமே புரிந்து விட்டது!
dh të th
ஆழ்வாருடன் கடைகளுக்குச் செல்லும் வேளைகளிலே, கண்ணைக் கவரும் வகையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விதம் விதமான விளையாட்டுப் பொம்மைகளைக் கண்டு அந்தப் பிஞ்சுக் குழந்தை ஏங்கியதுண்டு; அவை எல்லாவற்றையும் தனக்கு வாங்கிக் கொடுக்கும்படி அடம் பிடித்ததுமுண்டு.
தன்னுடைய ஒரே செல்லக் குழந்தையிடம் ஆழ்வார் அதிக பாசம் வைத்திருந்தாலும், அதனுடைய ஆசைகளை நிறைவேற்றி வைப்பதற்கு அவனுடைய இப்போதைய பொருளாதார நிலை சிறிதும்
75

Page 47
சிற்பி
இடம் கொடுக்க வில்லை. ஐம்பது, அறுபது ரூபா என்றாற் பரவாயில்லை. எழுநூறு, எண்ணுாறு ரூபாவுக்கு அவன் எங்கே போவான்? குழந்தைக்கு ஏதேதோ சாக்குச் சொல்லிக் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தான்.
ஆழ்வாரிடம் தாராளமாகப் பணம் புழங்கிய காலத்தில் இப்படியான கவர்ச்சிப்பொருட்கள் நாட்டில் இருக்கவில்லை. அவனைப் போன்ற பலரின் பொருளாதாரம் அநியாயமாக முடக்கப்பட்ட இந்த நேரத்திலேதான் அந்தப் பொருட்களும் கடைக்குக் கடை ஏராளமாகக் குவிந்து கொண்டு ஏழைக் குழந்தைகளை ஏங்கச் செய்து கொண்டிருந்தன.
அன்று காலையில், குழந்தையின் நச்சரிப்பைத் தாங்க முடியாமல், ஆழ்வாரின் மனைவி சொன்னாள், “எங்கடை கஷ்டம் குழந்தைக்குத் தெரியுமோ? இரண்டு மூன்று நாளைக்குச் சாப்பிடாமல் நாங்கள் பட்டினி கிடந்தாலும் பறுவாயில்லை. அது கேக்கிற சாமான்களை வாங்கிக் குடுங்கோ’.
காணிக்குரிய மீதிப்பணம் கிடைத்தால், விளையாட்டுச் சாமான்களை வாங்குவது, அல்லது முதலாளியிடம் கேட்டு, அவருடைய கடையிலேயே கடனாக வாங்குவது என்ற முடிவுடன்தான் குழந்தையுடன் அன்று புறப்பட்டான் அவன்.
முதலாளியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவனுக்கு எல்லாமே மறந்துவிட்டது.
ஆனால், குழந்தை மறக்கவில்லை. தான்விரும்பிய பொம்மையைத் தானாகவே அது எடுத்துக் கொண்டது. பண்ம் கொடுக்காமல், அனுமதி இல்லாமல் அப்படி எடுப்பது தவறு - திருடுவதற்குச் சமம் என்பது அந்தக் குழந்தைக்குத் தெரிந்திருக்கவில்லை!
முதலாளியின் மேல் ஆழ்வாருக்கு ஏற்பட்ட ஆத்திரத்தாலும் வெறுப்பினாலும், குழந்தையின் செயலை அவன் கவனிக்கவே இல்லை; கையிலிருந்த பொம்மையைக் காணவுமில்லை!
இப்போது பொலிஸ்காரன்தான் காட்டினான்.
‘என்ரை குழந்தை செய்தது. திருட்டா? என்ரை பச்சைப் பாலனுக்குத் திருடத் தெரியுமா? என்ரை பிஞ்சுக் குழந்தையைப்
76

சத்திய தரிசனம்
பொலிஸார் சும்மா விடுவார்களா? அவங்களின்ரை இரும்புக் கையாற் பிடித்தால், குழந்தை துடிச்சுப் போய் விடுமே!
did
“என்னடா முழிசிறாய். நீதானே களவெடுத்தனி?”
பொலிஸ்காரன் மீண்டும் அதட்டினான்.
பரிதாபமாக அவனைப் பார்த்துவிட்டுத் தலையைக் குனிந்து கொண்டான் ஆழ்வார்.
அதே ஜிப்பில், குழந்தை கதறக் கதற, வீட்டிற்குக் கொண்டு போய் விட்டார்கள். ஆழ்வார் பொலிஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு செல்லப்பட்டான்.
உரிய நடைமுறைகளின்படி, அங்கிருந்து விளக்க மறியற்
சாலைக்கு இடமாற்றம்.
é. Is é is é le
“நான் ‘திருடன்’ ஆன கதை இதுதான். தன்ரை கடையிலை வைத்து, தன்ரை வேலையாட்களுக்கு முன்னாலை தன்னைப் பேசி, நான் அவமானப்படுத்தி விட்டேனாம். ஆறு மாதமாவது என்னை மறியலுக்கை தள்ளப் போவதாகச் சவால் விட்டிருக்கிறார் முதலாளி. காசைத் தண்ணியாகச் செலவு செய்கிறார். அவரைப் போலை செலவளிக்க உன்னாலையோ என்னாலையோ முடியுமே?”
“உண்மையை மறைக்க முடியாது. ஆழ்வார். சந்தர்ப்ப சூழ்நிலைகளைச் சரியாக விளக்கி, நீ குற்றம் அற்றவன் என்பதை நிரூபிக்கலாம்.”
“திறமையான சட்டத்தரணியை நியமிக்கவேணும். அதுக்கெல்லாம் எவ்வளவு காசு வேணும் தெரியுமே. என்னிட்டை ஒரு சதமும் இல்லை”.
“அதைப்பற்றி நீ கவலைப்படாதை. உனக்காக எவ்வளவு செலவழிக்கவும் நான் தயார்.”
77

Page 48
fibi
ஆழ்வாரின் முகம் திடீரென்று பிரகாசித்தது.
“காசிருந்தால், முதல்லை எனக்கு ஒரு உதவி செய்ய வேணும்”.
“பிணை எடுக்கிறதுதானே. இரண்டொரு நாளிலை அது சரி வரும். கவலைப்படாதை”.
“பிணை எடுக்கிறதைப் பற்றிப் பிறகு யோசிக்கலாம். இப்ப அவசரமில்லை. நேரை என்ரை வீட்டுக்குப் போ. குழந்தை கேக்கிற விளையாட்டுச் சாமான்கள் எல்லாத்தையும் வாங்கிக்குடு. என்னையும் காணாமல். விளையாட்டுச் சாமான்களையும் வாங்க முடியாமல். ஏங்கிப் போய்க் கிடக்கிறானெண்டு.”
சொல்லி முடிக்க முன்னரே அழத் தொடங்கிய ஆழ்வார், தான் அங்கே நிற்கும்வரை நான் அவ்விடத்தை விட்டு விலக
மாட்டேன் என நினைத்தானோ என்னவோ, என்னைத் திரும்பியும் பார்க்காமல், விடுவிடென்று உள்ளே சென்று கொண்டிருந்தான்.
e SÈN N4ấ23
78

சத்திய தரிசனம்
மூளையும் அறிவும் மட்டுமல்லாமல் உள்ளமும் உணர்ச்சியும் ஆன்மாவும் உடைய தனி மனிதர்கள் சேர்ந்ததுதான் சமுதாயம். ஒவ்வொரு மனித இதயத்தையும் தனித்தனியாக அணுகி, நெகிழ்ச் செய்து படிப்படியாகப் பண்படுத்துவதுதான் இலக்கியத்தின் LJef.
சத்திய தரிசனம்
அமிர்த கங்கை - 1986
திய சிந்தனையும் பரந்த மனப்பான்மையும் உள்ளவர்களுக்கு
| 내 படம் நிச்சயமாகப் பிடிக்கும். உன்னுடைய நண்பன் குமாரதாசனிடம் இவை இருப்பதாகத் தெரியவில்லை.
இன்றைக்கு இங்கு வருவாரா என்பது சந்தேகந்தான்”
படமாளிகையின் வாசலில் வைத்து என்னிடம் சொன்னான் நடேசன்.
எதுவுமே பேசாது அவனைப் பார்த்துவிட்டு, மீண்டும் என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன்.
படம் தொடங்குவதற்கு இன்னமும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருந்தன.
நீண்டு கிடந்த வீதியைப் பார்த்தேன். குமாரதாசனின் உருவம் தென்படவேயில்லை.
“உழைக்கும் கரங்களும் ஒட்டிய வயிறும்” என்ற வண்ணப்படம் “குமரன்’ படமாளிகையிற் திரையிடப்பட்டிருந்தது. சர்வதேசப் பரிசுகள் பலவற்றைப் பெற்றிருந்த அந்தப் படத்தைக் குமாரதாசன், நடேசன், நான் ஆகிய மூவரும் ஒன்றாகச் சேர்ந்து பார்ப்பது என முடிவு செய்திருந்தோம்.
படமாளிகை வாசலில் ஒருவரை ஒருவர் சந்திப்பதாக ஏற்பாடு.
79

Page 49
சிறபி
நடேசனும் நானும் சற்று முன்பின்னாக வந்துவிட்டோம். குமாரதாசனை இன்னமும் காணவில்லை.
முதலாவது மணி அடித்தது.
“இனி, உங்களுடைய ஆசனங்களிலை போய் இருங்கோ. படம் துடங்கினாப் பிறகு, ஆசனங்கள் வெறுமையாக இருந்தால், புதிதாக யாரையாவது கொண்டுவந்து இருத்திவிடுவோம்” என ஒரு வகையான எச்சரிக்கை விடுத்தான் கடமையில் நின்ற ஊழியன் ஒருவன்.
நான் நடேசனைப் பார்த்தேன்.
“இனிக் காத்திருப்பதிற் பயனில்லை. வா, நாங்கள் ரெண்டு பேருமாவது படத்தைப் பார்ப்போம்” என்றான் அவன். குமாரதாசனைப் பற்றிய சில விபரங்களைச் சொல்லி, அவன் வந்தால், உள்ளே அழைத்து வரும்படி அந்த ஊழியனிடம் கூறிவிட்டு, நடேசனைப் பின்தொடர்ந்து ஆசனத்தில் அமர்ந்தேன்.
“அவர் வருவார் என்று இன்னமும் நீ நம்புகிறாயா?” நடேசன் கேட்டான்.
“ஓம்’ என்று சொல்ல எனக்குத் துணிவு வரவில்லை.
“இல்லை” என்று சொல்ல உள்ளம் இடம் கொடுக்கவில்லை.
a
குமாரதாசன் ஓர் எழுத்தாளன், சிறுகதைகள் எழுதி வருபவன். அவனுடைய கதைகள் எனக்குப் பிடிக்கும்; மிக நன்றாகவே பிடிக்கும்.
என்னைப் போல், இன்னும் பல இரசிகள்கள் அவனுக்கு உண்டு.
அவனுடைய சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கினாற் போதும்; அவற்றை வாசித்து முடித்துவிட வேண்டும் என்ற ஆர்வம் வரவர அதிகரித்துக் கொண்டே போகும்.
80

சத்திய தரிசனம்
பிரச்சினைகளை நோக்கும் புதிய கோணம், உண்மையா, கற்பனையா எனப் பிரித்துப் பார்க்க முடியாதவண்ணம் தொகுக்கப்படும் சம்பவக் கோவை; எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் எழுத்துக்களுடன் இசைக்கும் சத்திய இழை எல்லாம் அளவான முறையிற் கலந்து நின்று, அவனுடைய கதைகளுக்கு ஒருவித எழிலை, கவர்ச்சியை, கம்பீர்யத்தை அளித்து வருகின்றன என்று சொல்லலாம்.
வாசிக்கும் போது உன்னதமான உணர்ச்சிகள் கிளர்ந்தெழுவதும், வாசித்து முடித்த பின்னர், ஒருவித நிறைவு, ‘ஒருபடி உயர்த்துவிட்டோம்” என்ற உள்ளப் பூரிப்பு ஏற்படுவதும் பலர் சந்திக்கும் சத்தியமான அனுபவங்கள்!.
ஆனால் நடேசன் விதி விலக்காக இருந்தான்.
“குடும்பம், கோவில், தர்மம் - இவைகளை விட்டால் எழுதுவதற்கு அவருக்கு வேறு ஒன்றுமே இல்லை. அவருடைய ஒரு கதையை வாசித்தால், மற்றக் கதைகளை வாசிக்கத் தேவையில்லை. ஒரே மாதிரியான கருத்துக்களை வெவ்வேறு சூழ்நிலைகளில் வைத்துச் சொல்லுகிறார். அவ்வளவுதான்” - குமாரதாசனைப் பற்றிய நடேசனின் கணிப்பீடு இது.
இலக்கிய விமர்சனத்தில் அவனுக்கு நாட்டம் அதிகம். மேல் நாடுகளில் உள்ளதைப்போல், தமிழில் இலக்கிய விமர்சனம் வளரவில்லையே என்ற கவலையும், அந்தக் குறையைத் தன்னால் நீக்க முடியும் என்ற நம்பிக்கையும் அவனிடம் நிறைய உண்டு. ஆங்கிலத்தில் உள்ள விமாசன நூல்களை ஆழ்ந்து கற்று, அந்த அளவு கோலை வைத்துத் தமிழ் இலக்கிய ஆக்கங்களை விமர்சிப்பவன்.
‘விஞ்ஞான வளர்ச்சியுடன் புதிய கருத்துக்கள், புதிய உத்திகள், புதிய பார்வைகள் என மேலை நாடுகளில் இலக்கியம் வீறுநடை போடுகின்றது. ஆனால், அன்றிலிருந்து இன்றுவரை எங்களுடைய எழுத்தாளர்களால், தாம் செல்லும் தடத்தை மாற்ற முடியவில்லை” என அலுத்துக்கொள்ளும் நடேசனுக்குக் குமாரதாசனின் கதைகள், கதைகளாகவே தெரிவதில்லை.
“ஒரு நாட்டின் பண்பாட்டைப் பிரதிபலிப்பதும் - அதை மேலும் செழுமைப்படுத்துவதும் அந்நாட்டின் இலக்கியம். வெளிநாட்டு அளவு
8

Page 50
சிற்பி
கோலைக்கொண்டு எங்கள் இலக்கியத்தை விமர்சனம் செய்வது அவ்வளவு பொருத்தமில்லை” என்பான் குமாரதாசன்.
இருவரும் என் நண்பர்கள். இருவரின் திறமைகளையும் நான் நன்குணர்ந்தவன்.
இருவரையும் சந்திக்க வைத்து, மனம்விட்டுப் பேசச் செய்து நெருக்கமான உறவினை ஏற்படுத்த வேண்டும் என்பது என் விருப்பம். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வது அவர்களுக்கு மட்டுமல்லாமல் இலக்கியத்திற்கும் பெரும் பயன் விளைவிப்பதாகவும் அமையக் கூடும்.
ஆனால், அவர்களைச் சந்திக்க வைப்பது இலகுவானதாகத் தெரியவில்லை.
நடேசனைச் சந்திப்பதற்கு குமாரதாசனுக்கு நாட்டமே இல்லை. “புதிய தத்துவங்கள், சிந்தனைகள் என்று எதையெதையோ சொல்லிக் கொண்டிருப்பது சிலருடையய பொழுதுபோக்கு. ஏழை எளியவர்களுக்காக இரக்கப்படுவதாகச் சொல்லிக் கொள்வதில் ஒரு திருப்தி”
“நடேசன் அப்படியானவர்தான் என நீ நினைக்கிறாயோ?”
“வேறு மாதிரி நினைக்க என்னால் முடியவில்லை. தன்னுடைய ஆடம்பரத்தையும் சொகுசு வாழ்க்கையையும் அவர் இன்னமும் மாற்றிக்கொள்ளவில்லை. தான் சொல்லும் கருத்துக்கள் தன் வாழ்க்கைக்குப் பொருத்தமில்லை என்று நினைக்கிறார் போலை கிடக்கு. முதலில் மற்றவர்கள் திருந்தட்டும் என்று எதிர்பார்க்கிறாரோ?
“நேரிலே சந்தித்து இதைப் பற்றியெல்லாம் பேசினாலென்ன? ஒருவரையொருவர் சரியாக விளங்கிக்கொள்ள வழி ஏற்படும். என் வீட்டிலேயே சந்திக்கலாம். நான் ஏற்பாடு செய்கின்றேன்.”
நீண்ட மெளனத்தின் பின் குமாரதாசன் சம்மதித்தான்.
a
படம் தொடங்குவதற்கான இரண்டாவது மணியும் அடித்துவிட்டது. விளக்குகள் அணைக்கப்பட்டன.
82

சத்திய தரிசனம்
செய்திச் சுருள் என்ற பெயரில் அமைச்சர்களும் அரசியல் பிரமுகர்களும் “நடிக்கும்” காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாய் விரிந்து எரிச்சலூட்டிக் கொண்டிருந்தன.
அன்று காலையில் என் வீட்டில் நடைபெற்ற அந்த இலக்கியச் சந்திப்பு என் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தது.
a
“நீங்கள் இரண்டு பேருமே இலக்கியத்துறையில் இருந்தாலும், எப்போதும் எதிர் எதிராகவே நிற்பதைப்போல எனக்குத் தெரிகிறது’ என நான் ஆரம்பித்தேன்.
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” எனச் சமாளிக்க முயன்றான் நடேசன்.
“கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அவை ஆழமானவை என்பதை முதலில் ஒப்புக்கொள்வோம்” என்ற குமாரதாசன் நடேசனைப் பார்த்துச் சொன்னான், “மேல் நாட்டிலுள்ளவைதான் இலக்கியம். அவற்றைப் பின்பற்றித்தான் நாங்களும் இலக்கியங்களை ஆக்க வேண்டும் என்கிறீர்கள். செழிப்பான ஓர் இலக்கியப் பாரம்பரியம் எங்கள் நாட்டிலும் இருக்கின்றது என்பதை மறந்துவிட்டீர்களோ?”
“மறக்கத்தான் விரும்புகிறேன். ஆனால், இன்னமும் மறக்கவில்லை. தமிழ் இலக்கியங்கள் எல்லாமே உணர்ச்சிக் கோளங்கள். அன்பு, காதல். இரக்கம், பக்தி, தன்மானம், தியாகம், வீரம் என்ற பெயன்களில் ஒருவித வெறியை உண்டாக்குகின்ற இலக்கியங்கள்”
“மனிதனை மனிதனாக வாழ வைக்கும் புனிதமான உணர்ச்சிகள் இவை. வெறியூட்டுபவை என்று சொல்லி அவற்றின் மதிப்பைக் குறைக்கக்கூடாது’.
“சங்க காலம் தொடக்கம் எங்கள் காலம் வரை இந்தப் ‘புனித உணர்ச்சிகள் எங்களை ஒருவித அடிமை நிலைக்குத் தள்ளிவிட்டன என்பதை மறுப்பீர்களா?”
83

Page 51
சிற்பி
“அடிமை நிலைக்கா? - விளக்கம் கோரினான் குமாரதாசன்.
“ஓம் நாங்கள் குடும்பத்துக்கு அடிமை, சமயத்துக்கு அடிமை, சம்பிரதாயங்களுக்கு அடிமை, சமூகத்துக்கு அடிமை”
“அடிமை என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது’
“வேறு எப்படி அதைச் சொல்லுவது? விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாங்கள் இவையெல்லாவற்றிற்கும் கட்டுப்படத்தான் ஆக வேண்டும். மேல் நாட்டான் சந்திரமண்டலத்திற்குப் போகும் அளவுக்கு முன்னேறிவிட்டான். ஆனால், நாங்கள், குடும்பம், கோயில், பாவம், புண்ணியம் என்று ஒரே தடத்திலேயே சுற்றிவந்து கொண்டிருக்கிறோம்.”
“சந்திரமண்டலத்திற்குப் போவதுதான் முன்னேற்றமா?’ குமாரதாசன் கேட்டான்.
“அதை மறுப்பதென்றால், அறிவின் வளர்ச்சியை, விஞ்ஞானத்தின் சாதனைகளை எதிர்க்கின்றீர்கள் என்றுதான் சொல்வேன்.”
குமாரதாசன் விளக்கினான், “அறிவு வளரத்தான் வேணடும்; விஞ்ஞானம் வளரத்தான் வேண்டும். அதே வேளையில் மனிதனிடமுள்ள நல்லுணர்ச்சிகள் தூண்டப்பட்டு அவையும் பக்குவமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். உலகின் பல பாகங்களிலே கோடிக் கணக்கான மக்கள் வாழவே வழியின்றிப் பட்டினிச் சாவின் விளிம்பில் பரிதாபமாக நிற்கும் போது அவர்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், சந்திரமண்டல ஆராய்ச்சிக்காகக் கோடி கோடியாகக் கொட்டிக்குவிப்பது சரியானதாக எனக்குத் தெரியவில்லை”.
“அப்படியானால், முன்னேற்றம் என்று எதைக் கருதுகிறீர்கள்? நடேசனின் கேள்வி.
“மனிதன், மனிதத்தன்மையுடன் வாழ்வதுதான் முன்னேற்றம். யாரையும் புண்படுத்தாமல், யாருக்கும் தொல்லை கொடுக்காமல், மற்றவர்களின் துன்ப துயரங்களில் அனுதாபத்துடன் கலந்துகொண்டு, தியாக மனப்பான்மையுடன் வாழவேண்டும். இத்தகைய வாழ்க்கையைச் சாத்தியமாக்குவதுதான் முன்னேற்றம்’
84

சத்திய தரிசனம்
“துன்பங்களும் துயரங்களும் ஒருவருக்கு ஏற்பட்டால் தானே மற்றவர்கள் அவற்றிலே அனுதாபத்துடன் கலந்து கொண்டு ஆறுதல் சொல்லலாம்? சமநிலை என்பது இல்லாவிட்டால் தானே தியாகம் என்பதற்குத் தேவை ஏற்படும்? ஏற்றத் தாழ்வு அற்ற, துன்பம் என்பது என்ன என்றே அறியாத ஒரு சமுதாயம் உருவாகினால்..?”
“அது ஓர் இலட்சியக் கனவு. ஆனால்.”
“தயங்காமல் சொல்லுங்கள்”
“அந்தக் கனவை நனவாக்குவது இலகுவான காரியம் அல்ல. அதற்காக அந்த இலட்சியத்தை விட்டுவிடவேண்டும் என்று சொல்வதாக நினைக்கக்கூடாது. மனிதனின் துன்பதுயரங்களைக் குறைக்கலாம். அறவே இல்லாதொழிக்க முடியாது. ஏனெனில் முளையும் அறிவும் மட்டுமல்லாமல் உள்ளமும் உணர்ச்சியும் கூட அவனிடம் உண்டு. ஏற்றத் தாழ்வுகளும் ஏதோ ஓர் உருவில் சிறிய அளவிலாவது இருக்கும்."
“இருக்கும் என்றால்?”
“மனித இயல்பை வைத்துக்கொண்டு பார்க்கும் போது, அவை இருக்கும் என்றுதான் சொல்கிறேன். அதே வேளையில், மனிதப் பண்பு வளர்க்கப்பட்டால், அவற்றின் கொடுமைகள் குறையும். இந்தப் பண்பை வளர்க்கும் இலக்கியந்தான் எமக்குத் தேவை"
“எங்களுக்கிடையேயுள்ள வேறுபாட்டின் அடிப்படைக்கே வந்து விட்டோம். எந்த வகையிலும் ஏற்றத் தாழ்வற்ற, சமத்துவமான சமுதாயத்தை, துன்ப துயரங்களே இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது சாத்தியம் என்பது என்னுடைய நம்பிக்கை. திட்டமிடப்பட்ட இலக்கியம் மூலம் அதைச் சாதிக்கலாம்.”
“திட்டமிடப்பட்ட இலக்கியம் என்றால்..?” குமாரதாசன் கேட்டான்.
“வர்க்க பேதமற்ற, சுரண்டலற்ற, சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவதற்கு மக்களைத் தயாரிக்க வேண்டும். அடக்கு முறைக்கு எதிராக மக்களைப் போர்க்கொடி தூக்கச் செய்ய வேண்டும். இந்த நோக்கங்களுடன் இலக்கியம் திட்டமிடப்படல் வேண்டும்."
85

Page 52
சிற்பி
“அடக்குமுறைக்கு எதிராக என்றால்.”
“முதலாளிகளுக்கு எதிராக, உயர்சாதியினருக்கு எதிராக, சமயத் தலைவர்களுக்கு எதிராக. பாமர மக்களைத் தலையெடுக்க விடாது நசுக்கி வருபவர்கள் இவர்கள்’.
“அத்தனை பேருமே அப்படியானவர்களா? பரந்த மனம் படைத்தவர்கள், நல்ல மனம் உடையவர்கள், இரக்க சிந்தனை கொண்டவர்கள் அவர்களிடையே இல்லையா?”
“இரண்டொருவர் இருக்கலாம். நான் மறுக்க வில்லை. ஆனால், பெரும்பாலானவர்கள் கொடுமைக்காரர்கள்தான். அவர்களுடன் சேர்த்துச் சிறுபான்மை நல்லவர்களும் அழிக்கப்படத்தான் வேண்டும்”.
“சமுதாயப் பார்வை என்று சொல்லிக்கொண்டு சமுதாயத்தின் ஒரு பகுதியினரை அழிக்க முயலலாமா?
“அது தவிர்க்க முடியாது. மயிலே மயிலே இறகு போடு என்றால் அது போடாது.”
“தான் விரும்புபவற்றைச் சட்டங்களாக்கி, துப்பாக்கிமுனையில் அவற்றை அமுல்படுத்தும் சர்வாதிகாரியைப் போல் இலக்கியகள்த்தாவும் செயற்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். சமுதாயம் என்பது கல்லாலும் சிமென்ராலும் கட்டப்பட்ட கட்டடமல்ல, நாம் விரும்பியபடி இடிப்பதற்கும், பின்னர் கட்டுவதற்கும்! மூளையும் அறிவும் மட்டுமல்ல உள்ளமும் உணர்ச்சியும் ஆன்மாவும் உடைய தனி மனிதர்கள் சேர்ந்ததுதான் சமுதாயம். ஒவ்வொரு மனித இதயத்தையும் தனித்தனியாக அணுகி, நெகிழச் செய்து, படிப்படியாகப் பணபடுத்துவதுதான் இலக்கியத்தின் பணி நிர்ப்பந்தம் காரணமாக அல்லாமல். இதயபூர்வமாக ஏற்படும் மாற்றம் நிரந்தரமானதாக, உறுதியானதாக இருக்கும்.”
“ஜெற் விமானங்களின் காலத்தில் இருந்து கொண்டு, நீங்கள் மாட்டு வண்டிலிற் பிரயாணம் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் கருதும் மாற்றம் வரும்வரை காத்திருப்பதற்குப் புதிய தலைமுறைக்குப் பொறுமையில்லை”.
86

சத்திய தரிசனம்
“அவர்கள் அவசரப்படுகின்றார்கள் என்பதற்காக இலக்கியம் தடம் புரள வேண்டுமா? பலாத்காரப் புரட்சி வேண்டும் என்போர் அரசியலில் இறங்கட்டும். பொருளியல் வாழ்வு மட்டுந்தான் பெரிது என்போர் உற்பத்தித் துறைக்குச் செல்லட்டும். இலக்கியகன்த்தா மனிதாபிமானத்தை வளர்க்கட்டும்”.
“இவ்வளவு நேரமும் கலந்து பேசியதன் பிறகும் நாங்கள் இருவேறு துருவங்களிலேதான் நிற்கிறோம். “குமரன்” தியேட்டரில் புதிய படம் ஒன்று ஓடுகிறது. அதைப் போய்ப் பார்ப்போம். பார்த்த பின்னர், என்னுடைய நிலைப்பாடு சரிதான் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்” என்று சொல்லிக் கொண்டே எழுந்தான் நடேசன்.
படம் பார்ப்பதற்குக் குமாரதாசனும் இசைந்தான்.
a
செய்திகள் முடிந்து படம் ஆரம்பமானது.
குமாரதாசன் வந்துவிட்டானா என்பதை அறியும் ஆவலில் அங்குமிங்கும் பார்த்தேன்.
“உன் நண்பனையே நினைத்துக் கொண்டிருந்தால் படத்தின் மையக் கருத்தைப் புரிய முடியாமற் போய்விடும். அரைமணி நேர நித்திரைக்குப் பிறகும் கதையின் ஓட்டத்தைப் பிடித்துக்கொள்வதற்கு இது தமிழ் சினிமா அல்ல” என்றான் நடேசன்.
பரந்த ஒரு பிரதேசத்தின் வயல் நிலங்களைத் தன் உடைமையாக்கிய பண்ணையார் ஒருவர் செய்யும் அட்டூழியங்கள், அடக்கு முறைகள், அந்தரங்க வாழ்க்கையின் அலங்கோலங்கள், அவருடைய பண்ணையில் வேலை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளன ஏழைத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள், வேதனைகள், தொழிற்சங்கத் தலைவன் ஒருவனால் உருவாக்கப்பட்ட ஒற்றுமை காரணமாக அந்தத் தொழிலாளர்கள் மேற்கொள்ளும் எதின்ப்பு நடவடிக்கைகள், ஈட்டும் வெற்றிகள் சம்பந்தமான படம் அது.
நடிப்பு, படப்பிடிப்பு போன்றவை நன்றாகவே இருந்தன.
87

Page 53
சிற்பி
வயலில் வேலை செய்யும் பெண்கள், தம் பிஞ்சுக் குழந்தைகளை வயல் வரப்பிற் கிடத்தி விடுவதும், குழந்தைகள் பசியால் கத்தும் வேளை, அருகே செல்லவிடாமல், பண்ணயாரால் அவர்கள் தடுக்கப்படுவதும் உருக்கமான காட்சிகளாக இருந்தன.
பண்ணையாரின் தடையை மீறி, தன் குழந்தைக்கு ஒருத்தி பால் கொடுத்ததைக் கண்ட அவர், இருவரையும் பிரித்து வைக்கும் முறை அருவருப்பையும் ஆத்திரத்தையும் ஊட்டியது. ஆனால் நம்பத்தக்கதாக அமையவில்லை.
ஒவ்வொரு நிகழ்ச்சியின் பின்னணியையும் முக்கியத்துவத்தையும் நடேசன் எனக்கு விளக்கிக் கொண்டிருந்தான்.
பண்ணையாரின் அட்டுழியங்கள் மிகைப்படுத்தப்பட்டு, வேண்டு. மென்றே திணிக்கப்பட்டவை போல் தோன்றின.
தொழிற்சங்கத் தலைவனின் பேச்சுக்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளில் நேரடியாகக் கலந்து கொள்வதைத் தவிர்த்த தந்திரமும், நடேசனைப் பற்றிக் குமாரதாசன் முன்னர் சொன்ன சில கருத்துக்களை நினைவூட்டிக்கொண்டிருந்தன.
ஒன்றும் பேசாமல், நடேசனின் விளக்கங்களைக் கேட்டுக் கொண்டிருந்த நான், குமாரதாசன் அங்கில்லாத குறையை நன்றாக உணர்ந்தேன்.
தாயிடம் பால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தையை அப்படி முரட்டுத் தனமாகப் பறித்து எடுப்பவன், ஒன்றில், பைத்தியக்காரனாக இருக்கவேண்டும், அல்லது மிதமிஞ்சிய குடிவெறியனாக இருக்க வேண்டும். சாதாரண மனிதன், எவ்வளவுதான் இரக்கமற்றவனாக இருந்தாலும், இப்படி அரக்கத்தனமாக நடக்க மாட்டான் - என அடித்துச் சொல்லியிருப்பான் குமாரதாசன்.
அப்படித்தான் ஒருவன் இருந்தாலும் இலட்சத்தில் ஒருவனாக கோடியில் ஒருவனாகத்தான் இருப்பான். அந்த ஒருவனை வைத்துக்கொண்டு, அத்தனை பேருமே இரக்கமற்ற அரக்கள்கள் எனக் கொள்ள முடியாது. - என உரத்துச் சொல்லியிருப்பான்.
தொழிலாளர்களின் கஷ்டங்களை அவல வாழ்க்கையைப் பண்ணையாருக்கு எடுத்துச் சொல்வதிலோ அவர்களின் கோரிக்கைகள் எவை என்பதை விளக்குவதிலோ நாட்டமில்லாமல் அவரை எதிர்க்கும்படி தூண்டுவதிலேதான் தொழிற் சங்கத் தலைவன் குறியாக இருக்கின்றான்.
88

த்திய துரிசனம்
குமுறியெழும் மக்களும் அவன் சொற்படி நடப்பதற்குத் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். முன்னர் பண்ணையாருக்கு அடிமையாக இருந்து அவஸ்தைப்பட்டவர்கள், இனி அந்தத் தலைவனுக்கு அடிமையாகப் போவது எந்த அளவுக்குப் புதிய சிந்தைைனயின் பிரதிபலிப்பாக இருக்கும்? எந்த வகையில் முன்னேற்றத்தைக் குறிக்கின்றது? என்றும் நிச்சயமாகக் கேட்டிருப்பான்.
நடேசன்.சொன்னான், “படம் திரையிடப்பட்டுப் பல வாரமாகியும் கூட்டம் குறையவில்லை. மக்களின் ரசனையும் சிந்தனையும் புதிய திசையிற் செல்லத் தொடங்கிவிட்டன.”
அதற்கு நான் ஒன்றும் பேசவில்லை.
“ஆட்களின் தொகையை மட்டும் வைத்துக் கொண்டு எதையும் தீர்மானிக்கக்கூடாது” என முன்பு ஒரு தடவை இதே நடேசன்தான் எனக்குக் கூறியிருந்தான்.
a de
அடுத்த நாள்
ஓர் அலுவலாக நான் பட்டனத்துக்குச் சென்ற போது, ஓட்டமும் நடையுமாகக் குமாரதாசன் போய்க்கொண்டிருந்ததைக் கண்டேன்!.
முதனாள் வருவதாக ஒப்புக்கொண்டவன் கடைசிவரை வரவேயில்லை. இப்போது அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் எங்கோ சென்று கொண்டிருக்கிறான்.
அவன் எங்களை ஏமாற்றவில்லை; அவமானப்படுத்திவிட்டான். கோபத்துடன் அவனைக் கைதட்டி அழைத்தேன்.
“நின்று கதைப்பதற்கு நேரமில்லை. அவசரமான அலுவல். வா, சொல்லுகிறேன்” என்றபடி அதே வேகத்துடன் நடந்தான்.
நானும் அவனைத் தொடர்ந்தேன்.
வேதனைக் கோடுகள் அவன் முகத்தில் வெளிப்படையாகத்
தெரிந்தன. முதனாள் நடந்த நிகழ்ச்சியை அவன் சுருக்கமாகச் சொன்னான்.
89

Page 54
சிற்பி
ஒப்புக்கொண்டபடி அவன் படம் பார்ப்பதற்கு வந்து கொண்டிருந்தான். படுவேகமாக அவனைத் தாண்டிச் சென்ற காரொன்று சற்றுத் தொலைவில், குழந்தையுடன் சென்று கொண்டிருந்த பெண். ணொருத்தியை மோதிவிட்டு, நிற்காமலே சென்றுவிட்டது. ஓடோடிச் சென்றான் குமாரதாசன். தாயும் குழந்தையும் இரத்த வெள்ளத்திற் கிடந்தனர். என்ன செய்வது எனத் தெரியாமல், கூடி நின்றவர்கள் பதற்றப்பட்டுக் கொண்டிருந்தனர். வீதியால் வந்த வேறொரு காரை மறித்து, துடித்துக் கொண்டிருந்த அந்த ஜீவன்களை ஆஸ்பத்திரியிற் சேர்த்தான் குமாரதாசன். அவசரசிகிச்சை மேற்கொண்ட டாக்டர் உடனடியாக ஆபத்து ஏதும் இல்லயென்றாலும் அடுத்த நாள் மாலைக்குப் பின்னர்தான் எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியும் எனக் கூறிவிட்டார். இரவு முழுவதும் குமாரதாசனும் மனைவியும் ஆஸ்பத்திரியிலேயே விழித்திருந்து, வேண்டிய உதவிகளைச் செய்தனர்.
இரத்தம் செலுத்தினால் நம்பிக்கைக்கு இடமுண்டு எனச் சற்றுமுன்னர்தான் டாக்டர் சொல்லியிருக்கிறார். குமாரதாசனிடம் செலவுக்குப் பணமில்லை. மனைவியின் தாலிக்கொடியை அடகு வைப்பதற்காகத்தான் இப்போது அவன் போய்க் கொண்டிருக்கிறான்.
“அப் பெண்ணின் சொந்தக்காரர் யார் என்பதை விசாரித்தாயா? விபத்தைப் பற்றிப் பொலீசுக்கு அறிவித்து விட்டாயா?”
“அந்த வேலைகளை ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கவனிப்பார்கள். எப்படியாவது அந்த இரண்டு உயிர்களையும் காப்பாற்றிவிட வேண்டும். அதுதான் முக்கியம்’.
தெய்வத்தின் நிழலிற் செல்வதைப் போல் நான் அவனுடன் சென்றேன்.
“வழியில் ஒரு சின்ன அக்சிடென்ற். ஒரு மாதிரிச் சமாளித்துப் போட்டு இஞ்சை வந்திட்டன். எனக்கு நேரம் தான் முக்கியம்” எனத்
தியேட்டரில் நடேசன் சொன்னது என் காதில் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது.
కొత్తని-తిణిచే
90

சத்திய தரிசனம்
இரவில் நாம் விழிப்பதென்னம் உங்கள் நிம்மதியான உறக்கத்திற்காக பட்டினிய நம்பத்திரிIJIrisasi suasai aulig dagவதற்காக சாவுடன் நம் சன்னபிக்கின் -- W MP 49 KM கையை உறுதிப்படுத்த
சஞ்சீவி - 1987
துணையாகி இருந்த அந்த இரவிலேதான் வேலுப்பிள்ளையரின்
மனத்தைப் பயம் பிடிக்கத் தொடங்கியது.
கடந்த இரண்டு மணித்தியாலமாக அன்றைய மாலைப் பொழுது முழுவதும் வருவோரும் போவோருமாக வீடு ஒரே கலகலப்பாக, இல்லை, பரபரப்பாக இருந்தது. வந்திருந்த அத்தனைபேரும், வேலுப்பிள்ளையர் நடந்து கொண்ட முறை பிழைதான் என்பதை வெளிப்படை யாகவே அவரிடம் சுட்டிக் காட்டினர்.
“என்னெண்டாலும் பாருங்கோ, நீங்கள் அப்பிடிப்பேசியிருக்கக் கூடாது. உங்களுடைய வருத்தம், உங்களுக்கிருக்கிற பிரச்சினையெல்லாம் எங்களுக்குத் தெரியும். ஆனால், வந்த பொடியளுக்கு அவற்றைப் பற்றி ஒண்டும் தெரியாது தானே?. தன்மையாக எல்லாத்தையும் நீங்கள் விளங்கப்படுத்தியிருக்கலாம். இல்லாவிட்டா, ஒரு தவணையைச் சொல்லியிருக்கலாம். நீங்கள் பேசினது பிழைதான்”
ஒருவர் மாறி ஒருவராக இதைத்தான் அவர்கள் சொன்னார்கள். தன்னுடைய செயலை நியாயப்படுத்தி வேலுப்பிள்ளையன் அவர்களுக்குப் பதில் சொன்ன போதிலும் நேரம் செல்லச் செல்ல அவருக்கே அவருடைய பதிலின் பலவீனம் தெரியத் தொடங்கியது.
6)। எல்லோரும் போனதன் பின்னர். தனிமையே
“ஐயாயிரம் கேட்டவை எண்டு சொல்லுறியள் ஒரு ஐந்நூறையாவது குடுத்துச் சமாளித்திருக்கலாம். அடிச்சுக்கலைக்கிற மாதிரி
9

Page 55
சிற்பி
யெல்லே நீங்கள் நடந்திருக்கிறீர்கள். ஊரிலை உலகத்திலை நடக்கிற விஷயங்களை யோசிச்சுப் பாத்தா, இனி அவங்கள் இஞ்சை வந்து என்ன செய்யிறாங்களோ ஆருக்குத் தெரியும்?” என அவருடன் சற்று நெருக்கமாகப் பழகும் பரமலிங்கத்தார் சொன்னது வேறு அவருக்குள்ளே பயங்கரக் கற்பனைகளை உருவாக்கிக் கொண்டிருந்தது.
வீட்டு விளக்குகளையெல்லாம் யாரோ திடீரென்று அணைப்பதைப் போல.
துப்பாக்கியாற் சுட்டுக் கொண்டே உள்நுைைழந்த சிலர் அவரைப் பிடித்துத் தூணுடன் கட்டுவதைப் போல.
அவருடைய வாய்க்குள் துணியை அடைத்துவிட்டு, ஒருவன் துப்பாக்கியுடன் அவருக்குப் பக்கத்தில் நிற்க, ஏனையோர் வீட்டிலுள்ள அத்தனை சாமான்களையும் எடுத்துக் கொண்டு ஓடுவதைப் போல.
இப்படி நடந்தால்..? இப்போதே நடந்தால்..? நித்திரையும் நிம்மதியும் அவரிடமிருந்து விடைபெற்று விட்டன. அன்று பிற்பகலில் நடந்ததை அவர்மீண்டும் நினைத்துப் பார்க்கிறார்.
இரவில் வீசிய பணியாலும் பகலிற் காய்ந்த வெய்யிலாலும் மட்டுமல்லாமல், இந்த நேரத்திலை என்ரை பாபு என்னோடேயே இருந்தால். என்ற ஏக்கமும் சேர்ந்து அவருடைய “ஆஸ்த்மா” வியா-தியை அதிகரித்துக் கொண்டிருக்க, அதன் வேகத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும் மருந்தொன்றைக் குடித்துவிட்டு, சற்றுக் கண்ணுறங்க விரும்பிக் கதிரைக்குட் சாய்ந்த வேளையில் தான் அவர்கள் வந்தார்கள்.
எல்லோரும் இளைஞர்கள், கதவைத் தட்டி விட்டுப் பதிலை எதிர்பார்க்காமல், தாங்களாகவே திறந்துகொண்டு உள்ளே வந்து, வேலுப்பிள்ளையருக்கு அருகிலிருந்த கதிரைகளில் உட்கார்ந்தார்கள்.
சற்றுச் சிரமத்துடன் தலையை நிமிர்த்தி அவர்களைப் பார்த்தார் வேலுப்பிள்ளையர். முன் பின் தெரியாத முகங்கள்.
92

- flagFIGHä
அவர் விசாரிப்பதற்கு முன், அவர்களே தங்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
“நாங்கள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எங்களுடைய - போராட்டத்துக்கு ஆயுதம் தேவை, அதற்கு நிதி சேகரிக்க வந்திருக்கிறோம்.”
“மக்களுடைய உதவியும் ஒத்துழைப்பும் எங்களுக்குக் கட்டாயம் வேண்டும் ஒவ்வொருவரும் உதவி செய்தால்தான் நாங்கள் வெற்றியடையலாம்.”
“இந்த வட்டாரத்துக்கு நாங்கள்தான் பொறுப்பு உங்களைப் போன்றவை ஐயாயிரமாவது எங்களுக்குத் தரவேணும்.”
கதவைத் தள்ளித்திறந்து கொண்டு அவர்கள் உள்ளே வந்தது, தான் சொல்ல முன்னரே கதிரைகளில் உட்கார்ந்தது. தன்னுடைய நிலையைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கவலைப்படாமல் எடுத்த எடுப்பிலேயே நிதியுதவியைப் பற்றிச் சொன்னது, அவன் கொடுக்க வேண்டிய தொகையை அவர்களாகவே நிர்ணயித்தது - எல்லாவற்றையும் பார்க்கப் பற்றிக்கொண்டு வந்தது அவருக்கு,
“ஊர் உலகத்திலை கொள்ளையடிச்சது போதாதெண்டு இப்ப வீடு வீடாய்க் காசு கேக்க வந்திட்டியள். பாங்குகள்ளை அடிச்ச காசெல்லாம் எங்கை? முதலாளி மாரிட்டைப் பறிச்ச காககளெல்லாம் எங்கை? கண்ட நிண்டபடி ஜிப்புகளிலை திரியிறதுக்கும் நினைச்ச நினைச்சபடி இந்தியாவுக்குப் போய் வாறதுக்கும் நாங்கள் காசு தரவேணுமோ?
“பெரியவர்! எல்லா இயக்கங்களையும் நீங்கள் ஒரே மாதிரியாய் நினைச்சிட்டீங்கள். எங்கடை இயக்கம் புனிதமான
இயக்கம்! கட்டுப்பாடான இயக்கம்”
“கட்டுப்பாடும் மண்ணாங்கட்டியும். இனிக்கக் கதை சொல்லி இளம் பொடியளை மயக்கி இயக்கத்திலை சேர்த்துப் போட்டு, புனிதம், கட்டுப்பாடு எண்டு இப்ப பேகறியள். ஒரு பிள்ளையைப் பெத்து வளர்க்கிறது எவ்வளவு கஷ்டமெண்டிறது உங்களுக்குத் தெரியுமோ? ஒவ்வொரு தாயும் தேப்பனும் எவ்வளவு பாசத்தோடை தங்கடை பிள்ளையளை வளக்கினம். தங்களுக்குச் சாப்பாடில்லா
93

Page 56
சிற்பி விட்டாலும் பிள்ளைகளுக்குச் சாப்பாட்டைக் கொடுத்து. பிள்ளையஸ் நல்லாய் இருக்கவேணுமெண்டு விரதம் பிடிச்சு. கோயில்களுக்கு நேத்திக்கடன் வைச்சு. என்ரை பொடியனையும் இப்படித்தான்ே நான் வளத்தனான். ஆனா நாசமாய்ப் போனவங்கள் அவனையுமெல்லே கூட்டிக்கொண்டு போட்டாங்கள்.”
ஆத்திரத்தோடு துள்ளி எழுந்தவரைப் பிள்ளைப் பாசம் தடதடக்க வைத்தது. கீழே விழாமல் அவரைத் தாங்கிப் பிடித்தார்கள் இளைஞர்கள்.
“இத்தனை வயசுக்குப் பிறகும் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டிட் டீங்கள்.”
“இப்போதைக்கு ஓய்வு எடுங்கோ. ஆறுதலாக நாங்கள் இன்னொரு நாளைக்கு வாறம்’.
அவருடைய கட்டிலில் அவரை வசதியாகப் படுக்க வைத்துவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்.
to do to
*சாய். நான் கொஞ்சம் மோசமாய்த்தான் பேசிப் போட்டன். முருகா! இசக்குப் பிசகாய் ஒண்டையும் நடக்க விடாதையப்பா!”
G
Lőb ..... L5
கதவில் யாரோ தட்டினார்கள். ஆனால் அந்த மெல்லிய சத்தம், பயங்கரக் கற்பனைகளில் மூழ்கியிருந்த அவரின் செவிப்பறையை ‘ஷெக் லோ சையாய் அதிர வைத்தது.
‘நான் துலைஞ்சன்’ என அனுங்கின அவருக்கு மீண்டும் மகனின் நினைவு வர ‘தம்பி.’ என்று குளறத் தொடங்கினார்.
“பயப்பிடாதேங்கோ அப்பா. நான்தான் வந்திருக்கிறன். கதவைத் துறவுங்கோ’
காதுகளை நம்பாத போதிலும் வேலுப்பிள்ளையருடைய கைகள் கதவைத் திறந்தன.
94

சத்திய தரிசனம்
இப்போது கண்களையும் நம்பமுடியாமல் தவித்தார் அவர். அங்கே வந்து நின்றவன் அவருடைய மகன் பாபுதான்.
வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார் வேலுப்பிள்ளையர். மகிழ்ச்சியால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவரால் ஒன்றுமே பேச முடியவில்லை.
“சுகயினம் எண்டபடியால் உங்களைக் கவனிக்கச் சொல்லி என்னை அனுப்பியிருக்கினம்’- அவரை அழைத்துக் கொண்டு உள்ள சென்றான் பாபு.
அன்று பகலில், தான் ஆத்திரப்பட்டுப் பேசிய பின்னரும்கூடத் தன்னைப் பரிவுடன் கட்டிலிற் படுக்க வைத்த அந்த இளைஞர்களின் செயல் அவருடைய நினைவில் மீண்டும் ‘பளிச்சிட்டது. கடும் போக்கு உடையவர்களென்றாலும் அவர்கள் கருணை நிறைந்தவர்கள் தான்!
சட்டைப் பையிலிருந்து சில குளிசைகளை எடுத்தான் பாபு.
“ஆஸ்துமாவுக்குச் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புது மருந்து இது. ஒரு நாளைக்கு ஒண்டு பாவிச்சாப் போதும். வருத்தம் ஓரளவுக்கு குறைஞ்சதுக்குப் பிறகு மூச்சைச் சீராக்கும் பயிற்சி செய்யவேணும். சாப்பாட்டு விஷயத்திலும் கொஞ்சம் கவனமாக இருந்தா, ஆஸ்த்மா வராமல் தடுக்கலாமப்பா”
“இனி நீ இஞ்சைதானே இருப்பாய்.” வேலுப்பிள்ளையரின்
கேள்வியில் நம்பிக்கை துளிர்த்தது.
பதிலேதும் சொல்லாமற் குசினிக்குச் சென்ற பாபு, வெந்நீர் கொண்டு வந்து அவருக்கு மருந்தைக் கொடுத்தான். படுக்கையைத் தட்டிப் போட்டுப் படுக்க வைத்தான்.
“உன்ரை கட்டிலையும் எனக்குப் பக்கத்திலை கொண்டுவந்து போடன்”
G.
நான் இப்போது கட்டிலிற்படுப்பதில்லையப்பா. வெறும் நிலத்திலை கிடந்தால்தான் எனக்கு நித்திரைவரும்”. சிரித்துக் கொண்டே சொன்னான் பாபு.
“வெறும் நிலத்திலையோ..? அவனிடமிருந்து மேலும் பல விபரங்களை அறியும் ஆவலில் அவர் கேட்டார்.
95

Page 57
சிற்பி
“இப்ப ஒரு மணிக்கு மேலையாய்ப் போச்சு. உங்களுக்கு நித்திரை முக்கியம். நித்திரையைக் குழப்பக்கூடாது நாளைக்குக் கதைப்பம்” சாதாரண சொற்கள்தான்! ஆனால் ஒருவித கண்டிப்புத் தொனி இருந்தது.
ck to
அவர் உயிருக்குயிராய் நேசித்த அன்பு மனைவியையும் ஏராளமான சொத்துக்களையும் தென்னிலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் இழந்து அகதிக் கப்பலில் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வந்தபோது ஒரே மகன் பாபுவை அனாதையாக்கக் கூடாது என்ற எண்ணமே அவரை வாழ வைத்தது. R
முதுசக் காணியில் ஒரு பகுதியை விற்று ஊரிலேயே ஒரு பெரிய கடையைப் போட்டு மீண்டும் பொருளிட்ட அவர் தொடங்கியது கூட பாபுவை வளமாக வாழ வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
அவர் மீண்டும் திருமணம் செய்ய வேண்டும் எனச் சிலர் வற்புறுத்திய போது, ஒரேயடியாக மறுத்தது, தன்னுடைய பாசத்தைப் பங்குபோட அவர் சிறிதும் விரும்பாத படியால் தான்.
‘அப்பா அப்பா’ என்று பாபுவும் அவர் மேல் உயிரையே வைத்திருந்தான். ஒவ்வொரு சிறிய விஷயத்துக்கும் அவனுக்கு அப்பாவே வேண்டும்.
இப்படித் தந்தையின் பாசத்தில் நனைந்து, தந்தைமேல் பாசத்தைச் சொரிந்து வளர்ந்த பாபு, சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று பிரிந்து போய் அவரை நிலைகுலையச் செய்துவிட்டு, இப்போது "திடுதிப் பென்று வந்து அவருக்கு இன்ப அதிர்ச்சியை ஊட்டுகிறான்!
“முருகா! என்ரை பொடியனை இனி என்னோடயே இருக்கச் GolaFui Juu LDT LÍTuuT!”
de
விடிய அவர் எழும்பிய போது, வீடு முழுவதும் சுத்தமாகக் கூட்டப்பட்டிருந்தது. அவருடைய காலைச் சாப்பாட்டையும் பாபு தயாரித்திருந்தான்.
96

சத்திய தரிசனம்
அவரில்லாமல் எதையுமே செய்யமுடியாதிருந்த பாபுவிடமா இன்று இத்தனை சுறுசுறுப்பும், பொறுப்புணர்ச்சியும்.
இன விடுதலைக்கான இளைஞர்களின் திட்டங்கள், இரகசியப் போர்ப் பயிற்சிகள், உயிரைத் திரணமாகக் கருதி அவர்கள் ஈடுபடும் ஆயுதப் போராட்டங்கள், எதிர்பாராத இழப்புக்கள், வியப்பூட்டும் வெற்றிகள் இவற்றையெல்லாம் அவன் விபரமாகக் கூறிய போது கனவுபோல் இனிமையாகவும் இருந்தன; கதையைப் போல் நம்ப முடியாதவையாகவும் இருந்தன.
தான் மேற்கொண்ட கடினமான பயிற்சிகளைப் பற்றி மிக நுணுக்கமாகப் பாபு வர்ணித்துக் கொண்டிருக்கையில் வேலுப்பிள்ளையின் கண்கள் நீரைச் சொரிந்து கொண்டிருந்தன.
“எல்லாருக்கும் எல்லாவிதமான பயிற்சிகளும் முக்கியம்தான். ஆனால் ஒவ்வொருத்தருடைய திறமையையும் மனப் போக்கையும் பொறுத்துத்தான் அவரவர்களுக்குரிய வேலைகளைத் தீர்மானிப்பினம். எனக்கு மருத்துவப் பிரிவிலை வேலை. கொல்லுறது சுகம். ஆனால் உயிரைக் காப்பாத்திறதுதான் கஷ்டம். நித்திரையையும் சாப்பாட்டையும் நினைக்காமல் செய்ய வேண்டிய கடமை. கவிழ்டப்பட்டாலும் சந்தோஷமான வேலை”.
ஆஸ்த்மாவிலிருந்து குணமடைந்து பழைய படி தெம்புடன் அவர் நடமாடத் தொடங்கிய பின்னரும், பாபு சொன்ன அந்த விபரங்கள் அவருடைய காதுகளில் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தன.
பள்ளிக்கூடம் செல்வதாகப் போக்குக்காட்டி படமாளிகைக்குச் சென்று "அடல்ற்ஸ்ஒன்லி’ படங்களை ரசிக்கின்ற வயதில், மறைவிடங்களைத் தேடிப் போய்க் களவாகச் "சிகரட் புகைத்துக் காசைக் கரியாக்குகின்ற வயதில், உருப்படியாக எதையுமே செய்யாமல் தெருத்தெருவாகச் சுற்றித் திரிவதிலே பெரும் பொழுதைக் கழிக்கின்ற வயதில், பள்ளி மாணவிகளுடன் "சேட்டை விடுவதிற் தனி இன்பம் காண்கின்ற வயதில், இந்த இயல்புகள் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு இலட்சியத் தியில் அந்த இளைஞர்கள் குதித்துள்ளார்கள் என்றால் அதன் காரணம் என்ன?
கொட்டும் பணியின் கூதலையோ, கொளுத்தும் வெயிலின் கொடுமையையோ சிறிதும் தாங்க முடியாமல் அவரைப் போன்ற
97

Page 58
சிற்பி
எத்தனையோ பேர் அல்லற்பட்டு ஆற்றாது அழுதுகொண்டிருக்கும் போது, வெயிலையும், பனியையும், மழையையும், புயலையும், தம் விளையாட்டுத் தோழர்களாக்கிய வீரத்தின் அடிப்படை என்ன?
இரத்தம், கொலை, மரணம் போன்றவற்றை வேலுப்பிள்யைர் முற்றுமுழுதாக வெறுத்த போதிலும் சத்தியாக்கிரகம் பேச்சு வார்த்தை, உடன்படிக்கை முதலியவை தந்திரமாகத் தோற்கடிக்கப்பட்ட நிலையில், “பொடியள் மேற்கொண்ட ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாததே என்பதை மெல்ல மெல்ல உணருகிறார்.
இரவில் நாம் விழிப்பதெல்லாம் உங்கள் நிம்மதியான உறக்கத்திற்காக பட்டினியை நம் பத்தினியாக்குவது உங்கள் வயிறு நிறைந்திடுவதற்காக சாவுடன் நாம் சல்லாபிக்கின்றோம் உங்கள் வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்காக!
சில நாட்களின் முன்னர் சுவரொன்றில் யாரோ கிறுக்கி வைத்த வரிகள், இப்போது உயிர்த்துடிப்புப் பெற்று அவருடைய உள்ளத்தை ‘உசுப் பிக் கொண்டிருக்கின்றன.
“அப்பா, பிராணாயாமத்தை ஒவ்வொரு நாளும் விடாது செய்யவேணும் நான் சொன்னதைப்போல் சாப்பாட்டிலும் கவனமாக இருங்கோ. உங்களுக்கு ஏதும் கஷ்டமெண்டால் நான் கட்டாயம் வருவன் அப்பா’.
பாபு திரும்பி வந்த அந்த இரவில் ஆவலுடன் அவர் கேட்ட கேள்விக்குக் கிடைக்காத பதில் இப்போது அவருக்குத் தெளிவாகி விட்டது.
“வெறுங்கையுடன் போகக் கூடாது தம்பி’ என்று சொல்லி இரும்புப் பெட்டியின் சாவியை அவனிடம் நீட்டிய வேலுப்பிள்ளையரைப் பார்த்து, “நிதிக்குப் பொறுப்பானவர்கள் பிறகு வருவினம்’ என்று சொல்லிக் கொண்டே அந்த இருளிலும் கம்பீரமாக நடந்து செல்கின்றான்
UML
 

சத்திய தரிசனம்
சனங்கள் விரும்புகினம் என்டதை மட்டும் வைச்சுக்கொண்டு, நல்லது கெட்டதைத் தீர்மானிக்கக் கூடாது. ஆபாசமான அட்டைப்படம் கிளுகிளுப்பைக் குடுக்குது; இரட்டைக் கருத்துள்ள புத்தகங்களின்ரை பேர்கள் இளவயதுக் காரரை மயக்குது. வயகக்குரிய பலவினத்தைப் பயன்படுத்திப் பணத்தைப் பறிப்பது சமூகத்தCyrsb
பணத்துக்காக
மறுமலர்ச்சி - 1999
துதான் என்ரை தொழில் இருபத்தைஞ்சு வருஷ அனுபவத்திலை இ இதை எப்பிடிச் செய்யவேணும் எண்டு எனக்கு நல்லாய்த் தெரியும். கெளரவமான ஒரு தொழிலாய்த்தான் இதைச் செய்து கொண்டுவாறன். இப்ப இதைக் கைவிட்டால் என்ரை குடும்பம். இந்தக் கடையிலை வேலை செய்யிற ஏழெட்டுப் பேருடைய குடும்பம் எல்லாம் நடுத்தெருவிலை நிக்க வேண்டி வரும்.”
“உங்கடை தொழிலைச் செய்யவேண்டாம் எண்டு நாங்கள் தடுக்கேல்லையே ஐயா!”.
“வெளிப்படையாக அப்பிடி நீங்கள் கேட்கேல்லைத்தான். ஆனால் இப்பிடியான புத்தகங்களை விக்கக் கூடாது. அப்பிடியான புத்தகங்களை விக்கக்கூடாது எண்டால் தான் என்னத்தைத்தான் விக்கலாம்? கடையை இழுத்து மூடவேண்டியதுதான்”
“நாங்கள் சொல்றது உங்களுக்குச் சரியாக விளங்கேல்லைப் போலை கிடக்குது”
“சொல்லுங்கோ”
“புத்தகம் எண்ட பெயரிலை அச்சடிச்சுவாற எல்லாத்தையும் நல்லதெண்டு சொல்ல முடியாது. அதுகளுக்குள்ளை நல்லதும் இருக்குது கூடாத குப்பையஞம் இருக்குது”
99

Page 59
சிற்பி
“நல்ல புத்தங்கள் எண்டு நீங்கள் நினைக்கிறவை நல்லவை. மற்றவையெல்லாம் குப்பையள். நீங்கள் சொல்லிற புத்தகங்களைத்தான் நான் விக்கவேணும் எண்டிறியளோ?”
அவருடைய குரலிற் சூடேறியது. அந்த இளைஞர்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அமைதியாகவே சொன்னார்கள்.
“மக்களுடைய அறிவை வளர்த்து, சிந்தனையை வளப்படுத்தும் புத்தகங்கள் தான் நல்ல புத்தகங்கள். மக்களுடைய பண்பாட்டைப் புத்தகங்கள் வளர்க்கவேணும். அழிக்கக் கூடாது”
“அப்படியான நல்ல புத்தகங்கள் இஞ்சை என்ரை கடையிலே இல்லையெண்டு சொல்லுறியளோ?”
ஓம் என்பதற்கு அடையாளமாக இருவரும் மெளனம் சாதித்தனர்.
“நீங்கள் அப்பிடி நினைக்கலாம். ஆனால் சனங்கள் நினைக்கேல்லை. இந்தப் புத்தகங்களை வாசிக்கிறதினாலை ஆக்கள் கெட்டுப்போகினம் என்பதையும் ஏற்றுக்கொள்ளமாட்டன். என்ரை பிள்ளையும் இதுகளை வாசிக்கிறாள் தான். அவளைப் பற்றி ஒருத்தரும் ஒரு குறை சொன்னது கிடையாது. மனம் சரியாக இருந்தால் ஆருமே கெடமாட்டினம்.”
“திரும்பத் திரும்ப வாசிச்சால் மனமும் பழுதாகி விடும்”. “அப்பிடியெண்டால், இந்தப் புத்தகங்களை வாசித்துக் கெட்டுப் போன ஒரு ஆளையாவது காட்டுங்கோ பாப்பம்’
“இதெல்லாம் வெட்டு ஒண்டு துண்டு இரண்டு எண்டு சொல்லுற விஷயங்களல்ல.”
“நீங்கள் சமாளிக்கிறியள். உங்களாற் காட்ட முடியாது. என்ரை கடையிலை சுறுசுறுப்பாக யாபாரம் நடப்பது உங்கடை கண்ணைக்குத்துது. அதனாலைதான்.” ♔ഖif முடிப்பதற்குள் குறுக்கிட்டார்கள் அவர்கள்.
“உங்களிலை பொறாமைப்பட்டு நாங்கள் இஞ்சை வரேல்லை. சமுதாயச் சீரழிவைப் பற்றியும் ஒழுக்கக் கேட்டைப் பற்றியும் பெரியவர்களேடையும் கல்விமான்களோடையும் நாங்கள் கலந்து
100

சத்திய தரிசனம்
ரையாடியிருக்கிறம். அடிப்படை எது எண்டு அவை விளக்கியிருக்கினம். அதுக்குப் பிறகுதான் நேரிலை உங்களோடை பேச வந்திருக்கிறம்’
“தம்பியவை! இது என்ரை தொழில் எண்டு முதல்லையே நான் சொல்லிப்போட்டன். அதிலை நீங்கள் வீணாய்க் குறுக்கிடப் பாக்கிறியள். என்னட்டைக் கிடக்கிற புத்தகங்களை வந்து வாங்குங்கோ எண்டு ஒருத்தரையும் நான் வெத்திலை வைச்சு அழைக்கிறேல்லை. என்ரை கடையைத்தேடிக் கனபேர் வருகினம். விருப்பமான புத்தகங்களை அவையே தெரிவு செய்கினம்.”
“விபசார விடுதிக்கும் கனபேர் போகினம். கள்ளுக் கொட்டிலுக்கும் கனபேர் போகினம்.”
அவருடைய முகத்தில் கடுகடுப்பு ஏற்பட்டதைக் கவனிக்காமலே அவர்கள் தொடர்ந்தார்கள்.
“சனங்கள் விரும்புகினம் எண்டதை மட்டும் வைச்சுக்கொண்டு நல்லது கெட்டதைத் தீர்மானிக்கக் கூடாது. ஆபாசமான அட்டைப் படங்கள் கிளுகிளுப்பைக் குடுக்குது. இரட்டைக் கருத்துள்ள புத்தகங்களின்ரை பேர்கள் இளவயசுக்காரரை மயக்குது. அந்த வயசுக்குரிய பலவீனத்தைப் பயன்படுத்தி பணத்தைப் பறிப்பது சமூகத்துரோகம் ஐயா! என்ன தொழிலைச் செய்தாலும் பொறுப்புணர்ச்சி கட்டாயம் இருக்கவேணும்”.
“கொஞ்சம் ஒவராகப் போகிறியள் தம்பியவை. ஆரோ எழுதுகிறான். ஆரோ அதைப் புத்தகமாக வெளியிடுகிறான். அவையள் சமூகத்துரோகியில்லை. புத்தகத்தை விக்கிற நான் மட்டும் சமூகத் துரோகியோ?” கண்களால் அவர்களை எரிப்பவரைப் போல் பார்த்துக் கொண்டே அவர் பொரிந்து தள்ளினார்.
“இப்பிடிப்பட்ட புத்தகங்களை எழுதவேண்டாம் எண்டு எழுத்தாளர்களிட்டைச் சொல்லுங்கோ. வெளியிட வேண்டாம் எண்டு வெளியீட்டாளர்களிட்டைச் சொல்லுங்கோ. இளம் பிள்ளைகளிட்டையும் போய்ச் சொல்லுங்கோ காசைக் குடுத்து இப்படியான புத்தகங்களை வாங்க வேண்டாம். என்று. இப்பிடிச் செய்யிறதை விட்டிட்டு, என்னோடை வந்து ஏன் மல்லுக்கட்டுறீங்கள்?.”
அவருடைய கொதிப்புஅவர்களைப்பாதித்தாகத் தெரியவில்லை.
10

Page 60
சிற்பி
“அவையள் எல்லோரிடமும் நாங்கள் போகத் தான் போறம். எங்கடை கருத்தைச் சொல்லத்தான் போறம். உங்களை மாதிரி விற்பனையாளற்றை ஒத்துழைப்பும் தேவை எண்டபடியால்தான் இஞ்சை வந்தனாங்கள்.”
அவர் ஒன்றும் பேசவில்லை.
கடைக்குரிய கணக்குப் புத்தகத்தை விரித்துத் தன் கவனத்தை அதிலே செலுத்தத் தொடங்கிவிட்டார்.
தொடர்ந்து அங்கே நிற்பதிற் பிரயோசனம் இல்லை என்பதை உணர்ந்த அந்த இளைஞர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள், சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்ட திருப்தியுடன்.
a de
“பணம் மட்டுந்தான் வாழ்க்கைக்கு முக்கியம், எந்த வழியைக் கையாண்டேனும் அதைக் குவித்துவிட வேணும் எண்ட அவா கனபேரிட்டை இருக்குது. தர்மம், நீதி, பண்பாடு என்பதெல்லாம் வாயளவில் தான்.”
“நான் நினைச்சதை நீ சொல்லிப்போட்டாய். அதை ஒரு வெறி எண்டுகூடச் சொல்லாம்.”
பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்த போது அவர்கள் பேசிக்கொண்டார்கள்.
இருவருமே இளவயசுக்காரர்கள் தான். ஆனால் மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவர்கள். சமுதாயத்தின் இப்போதைய வக்கிரமான போக்குடன் ஒத்துப்போக முடியாமற் சங்கடப்படுபவர்கள். நல்ல பழக்கங்கள் எனச் சிறு வயதில் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டவையெல்லாம் இப்போது புறக்கணிக்கப்படுவது அவர்களை உறுத்தியது. அறம் செய்வதும் ஆலயத்துக்குச் செல்வதும் விளம்பரமாகவும் வியாபாரமாகவும் மாறிக்கொண்டிருந்தன. பணம் மட்டும் ஒருவனிடம் இருந்தாற் போதும். அவன்தான் பெரியவன். அவன்தான் அறிவாளி. அவன்தான் தலைவன்.
102

சத்திய தரிசனம்
உயர் மட்டத்து ஊழல்கள் மறைக்கப்படுவதும் அற்ப விஷயங்களுக்காக ஏழை எளிய மக்கள் பழி வாங்கப்படுவதும் அவர்கள் நெஞ்சைக் குமுறச் செய்தன.
சிறுமைகளைக் கண்டு பொங்காமலிருக்க அவர்களால் முடியவில்லை.
சிலர் அவர்களை விசித்திரமாகப் பார்த்தார்கள். சிலர் கேலியுஞ் செய்தனர்.
“நீங்கள்தான் காந்தி எண்ட நினைப்போ?”
“எத்தனையோ பேர் இப்பிடித் திருத்த வெளிக்கிட்டுக் களைச்சுப் போச்சினம். இப்ப நீங்கள் துவங்கியிருக்கிறியள்.”
“இது சீர்திருத்தம் பேசிற வயது தான். போகப் போகச் gfu JFruisi(Sib.”
அந்த இளைஞர்கள் மனம் தளரவில்லை.
“ஊதிற சங்கை ஊதிக்கொண்டேயிருப்பம். விடியிறபோது 6tgu Go'.
“நீங்கள் ஊதிக்கொண்டிருக்கலாம். ஆனால் நித்திரையைக் குழப்புகிறியள் எண்டு சனங்கள் உங்களுக்கு மேலைதான் பாய்வினம்"
de de b
புத்தகக் கடை முதலாளியைப் பற்றி நன்கு விசாரித்துத்
தெரிந்து கொண்ட பிறகுதான் அவரைப் போய்ச் சத்தித்தார்கள்.
அவருடைய போக்கை மாற்றுவது கடினம் என்பதும் அவள்களுக்குத்
தெரிந்து தான் இருந்தது.
பக்குவமாகப் பேசிப் பார்த்தால் ஏதாவது சாதிக்கலாமோ
என்ற நப்பாசை
அவள் வெறும் விற்பனையாளர் மட்டுமல்ல, கதைகளை
எழுதுவிப்பவரும் அவர்தான்; புத்தகங்களை வெளியிடுவதும் அவர்தான்.
03

Page 61
சிற்பி
சில மூன்றாந்தர எழுத்தாளர்களைத் தேடிப் பிடித்து, எப்படியான கதைகளை எழுதினால் விரைவிலே விற்பனையாகும் என்பதை விளக்கமாகச் சொல்லிக் கதைகளையும் நாவல்களையும் எழுதுவிப்பவர் அவர்தான். காதல் என்ற புனிதமான உணர்ச்சியை வெறும் போதைப் பொருளாகக் கொச்சைப்படுத்தி கீழ்த்தரமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கிளர்ந்தெழச் செய்யும் கதைகள் அவை. ஆண், பெண் உறவை விரசமாக்கும் ஆபாசப் படங்களை அட்டையில் போட்டு, ஒழுங்கான முகவரியில்லாத பதிப்பகம் ஒன்றின் மூலம் அந்தப் புத்தகங்களை வெளியிடுபவரும் அவர்தான். மக்களின் மதிப்பைப் பெற்ற பிரபலமான சில எழுத்தாளர்கள்கூட அவர் கொடுக்கும் பெருந்தொகையில் மயங்கி புதுப் புதுப் புனை பெயர்களில் அவள் விரும்பும் கதைகளை எழுதிக்கொடுத்துத் தங்களையும் விற்றுக்கொண்டிருந்தார்கள்.
தன்னுடைய புத்தகங்களை வாங்கும்படி தான் யாரையும் தூண்டுவதில்லை என்று அவர் சொன்னதிலும் உண்மை சிறிதும் இல்லை.
அவருடைய கடை அமைந்திருக்கின்ற அந்தச் சிறிய நகரத்துக்குச் செல்பவர்களை வரவேற்பதே, புத்தகம் பத்திரிகைகளை விற்கும் பையன்களின் விளம்பர விமர்சனக் குரல்கள்தான்.
“நள்ளிரவில் நடுத்தெருவில் நின்ற நாகரிக மங்கை எங்கே?”
“பள்ளி மாணவியைக் காணவில்லை; பக்கத்துவீட்டுப் பையனையும் காணவில்லை.”
“ஐம்பதிலும் ஆசை வரும், எண்பதிலும் ஏக்கம் வரும்”
பத்திரிகையில் வேறு செய்திகளே இல்லையோ என்று நினைக்கும் அளவிற்கு இத்தகையவற்றையே உச்சஸ்தாயியில் அவர்கள் முழங்குவாள்கள்.
இவை பத்திரிகைச் செய்திகளா அல்லது புத்தகங்களின் தலைப்புக்களா என்பது தெரியாமற் சிலர் தடுமாறுவதுண்டு.
பெண்கள் தலையைக் குனிந்து கொள்வார்கள். வயது வந்த பிள்ளைகளுடன் செல்லும் பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பார்கள்.
04

சத்திய தரிசனம்
இவர்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் பத்திரிகைகளுடன் சேர்த்துப் புத்தகங்களையும் வாங்கும்படி தூண்டிக் கொண்டிருப்பார்கள் பையன்கள்.
இப்படி முழங்கும் வழக்கத்தைநிறுத்துவதற்குக் கூட அவர் சம்மதிக்காதது அவர்களுக்கு வேதனையையளித்தது.
“வியாபாரம் என்று சொன்னால் அதற்கு ஒரு விளம்பரமும் தேவைதான். விற்பனையாளரைப் பொறுத்த வரையில் ஒரு தினசரிப் பத்திரிகையின் ஆயுள் அரை நாள் தான். ஆறு மணிக்குக் கிடைக்கும் பத்திரிகையைப் பன்னிரண்டு மணிக்கு முன்னர் விற்று முடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் நட்டந்தான். பையன்கள் எப்படியாவது விற்று முடித்துவிடுவார்கள். உரிய கொமிஷனை அண்டண்டைக்கே நான் குடுத்து விடுவேன். இப்படி உரத்துக் கூவி விற்க ெேவண்டாம் எண்டால் அவங்களுக்குத்தான் நட்டம். அவங்களின்ரை வருமானந்தான் குறையும். இஞ்சை கடைக்கு வர நேரமில்லாதவைக்கு அந்தப் பையன்கள் புத்தகம் வைச்சு விக்கிறது ஒருவசதி” என அதற்கும் ஒரு நியாயம் கற்பித்தார் அவர்.
அவர்களுக்கு மனவருத்தந்தான். என்றாலும் தங்களுடைய முயற்சியைக் கைவிட அவர்கள் விரும்பவில்லை.
de dis
சில நாள்களின் பின் இலக்கிய மகாநாடு ஒன்றிற் கலந்து கொள்வதற்காக அந்த நகரத்துக்கு இருவரும் சென்றார்கள்.
பஸ் நிலையத்தில் வழமையாகக் கேட்கும் பையன்களின் குரல் கேட்கவில்லை. பத்திரிகை விற்பவர்களையும் காணவில்லை.
அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனந்தமாகவும் இருந்தது.
தாங்கள் சொன்ன ஒவ்வொன்றுக்கும் எதிராகத் துள்ளி எழுந்தவர், ஆறுதலாக யோசித்துப் பார்த்துத் திருந்திவிட்டாரோ? தன் தவறுகளை உணர்ந்து விட்டாரோ?
தாங்கள் மேற்கொண்டுள்ள நச்சு இலக்கிய எதிர்ப்பியக்கம் பலனைத் தரத் தொடங்கிவிட்டது என்ற நினைவு அவர்களுக்கு உற்சாக மூட்டியது.
05

Page 62
சிற்பி
நிலைமையைச் சரியாகக் கணிப்பீடு செய்வதற்காக அவரை நேரிற் சந்தித்துத் தம் பாராட்டைத் தெரிவித்து விட வேண்டும் என்ற
ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அவருடைய கடைக்குச் சென்றார்கள்.
கடை பூட்டிக் கிடந்தது.
பக்கத்துக் கடைக்காரனை விசாரித்தார்கள்.
“உங்களுக்கு விஷயமே தெரியாதா? போன வெள்ளிக்கிழமை வெளியான “தினவெடி”யை வாசிக்கேல்லையா?” என்று கேட்டுவிட்டுக் குரலைச் சற்று தாழ்த்திக் கொண்டு சொன்னான்.
“அவருடைய ஒரே மகள் பத்திரிகை விற்கும் பையன் ஒருவனுடன் ஓடிப்போய்விட்டாள். மற்றப் பையன்களும் யோசிக்காமல் ஒரு மோட்டு வேலையைச் செய்து போட்டாங்கள். பத்திரிகை முழுவதையும் வித்துக் காசாக்கிப் போட வேணும் எண்ட அவசரத்திலை இந்தச் செய்தியைச் சொல்லித்தான் அந்தப் பேப்பரை வித்தாங்கள். மனிசன் பாவம் இடிஞ்சு போய் விட்டார். வீட்டுக்கு வெளியாலை இப்ப தலை காட்டிறதே இல்லை."
SeSalvaar
106

எவர்டெல்லாம் சொன்னவர் இந்த முருகேசு வாத்தியார்தானே?
Su esas 2001 ଭରା ଓ தூரத்தில் பயங்கரச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. "இடி முழக்கமோ. அல்லது.? கன காலமாய் நிம்மதியாக இருக்க விட்டாங்கள். இப்ப பழையபடி துடங்கிவிட்டினமோ?
கவலைக் கோடுகள் முகத்திற் படர, மெளனமாகச் செல்லப் பரைப் பார்த்தார் இரத்தினம்.
“இந்தக் காட்டு ஊருக்கை வந்தாப் பிறகு, என்ன நடக்குதெண்டு ஒண்டுமே தெரியேல்லை. மாரியும் இப்ப துடங்கிவிட்டுது. உது இடி முழக்கமாய்த்தான் இருக்கும். பயப்பிடாதை” என்றார் செல்லப்பர்.
“உவங்களின்ரை "ஷெல்" அடியைப் பார்த்து, கொஞ்ச நேரம், விட்டு விட்டு ஒழுங்காக முழங்கிறதுக்கு இடியும் பழகிவிட்டுது எண்டு சொல்லுறியோ?”
சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் நின்றுவிட்டு, செல்லப்பர் சொன்னார், “நீ சொன்னாப் பிறகு எனக்கும் கொஞ்சம் ஐமிச்சமாகத்தான் கிடக்குது. எண்டாலும் துரத்திலை தானே.?
“தூரவோ கிட்டவோ. "ஷெல்" என்டால் சனியன் பிடிச்ச மாதிரித் தான். வாத்தியாரைக் காத்துக்கொண்டு இஞ்சை இனி நிக்கேலாது. நிண்டு போட்டு இந்தக் காட்டுக்கை சாகவேண்டியதுதான்.”
07

Page 63
சிற்பி
“ஏன், இரத்தினம்! அவர் எங்களோடை சேர்ந்து வரமாட்டார் எண்டு முடிவு கட்டிப் போட்டியோ?”
“வருவார் என்று உன்னால் நிச்சயமாகச் சொல்ல முடியுமோ? இப்ப கொஞ்சக் காலமாக அவற்றை கதையளைக் கவனிச்சுக் கொண்டுதான் வாறன். எனக்கு நம்பிக்கை இல்லை.”
அகதி முகாமாக மாற்றப்பட்டிருந்த அந்தப் பாடசாலையில் தங்கியிருந்த வாத்தியாரைச் சந்தித்துவிட்டு, சற்று முன்னர்தான் அவர்கள் திரும்பியிருந்தார்கள்.
to
“திரும்பி, யாழ்ப்பாணத்துக்கு எல்லோருமே போகலாம் போலை கிடக்குது வாத்தியார். கொஞ்சம் கொஞ்சமாக அங்கை எல்லாம்
திருந்தி வருகுதாம். பள்ளிக்கூடங்களும் நடக்குதாம்.”
“பிள்ளையன் கட்டாயமாகப் படிக்கத்தானே வேணும்? அதுகும் இல்லாட்டா, அவைக்கு என்ன மிஞ்சப் போகுது? ஆனால், ஒழுங்கான முறை-யிலே புத்தகங்களைக் கொடுக்கினமில்லையாம். தேவையான வாத்திமாரும் இல்லை. கொழும்புப் பத்திரிகைகளிலை இதெல்லாத்தையும் தெளிவாக எழுதி வைச்சிருக்கினம்.” என்றார் வாத்தியார்.
“என்ரை மேள் எனக்கு எழுதினதைத்தான் நான் உங்களுக்குச் சொன்னனான். வேறை ஒண்டும் எனக்குத் தெரியாது.”
“கோயில் திருவிழாக்கள், கலியாணங்கள் எல்லாம் முந்தியைப் போலக் கலகலப்பாக நடக்குதாம் வாத்தியார். வீடியோப் படம் எடுக்காத கல்யாணமே இப்ப இல்லை” - தன்னுடைய தம்பியின் கடிதத்திற் கண்டவற்றை இரத்தினம் சொன்னார்.
“அடுப்புப் பத்த வைக்கிற நெருப்புப் பெட்டி வாங்கிறதுக்குக் காசு சிலவளிக்க மாட்டினம். இப்பிடியான விஷயங்களுக்குத் தாராளமாக விசுக்குவினம். அப்பதானே நாலு பேர் அவையை மதிப்பினம்?
வாத்தியாரின் குரலில் தொனித்த மாற்றத்தைக் கவனியாமல் அவர்கள் உற்சாகத்துடன் தொடர்ந்தார்கள்.
108

சத்திய தரிசனம்
“எல்லா ஊருக்கும் இப்ப ‘கறன்ட்’ குடுத்திருக்கிறாங்கள். ரீவி, றேடியோ இல்லாத வீடு இப்ப யாழ்ப்பாணத்திலை இல்லை”
“முந்தியெல்லாம் வெய்யிலுக்கையும் மழேக்கையும் நிண்டு இடிபட்டு நெருக்குப்பட்டு ‘ரிக்கெற்’ எடுத்துப் படம் பாத்தனாங்கள். இப்ப வீட்டுக்குள்ளை குஷாலாக இருந்தபடி, ஒரு நாளைக்கு ரெண்டு மூண்டு படங்களும் பாக்கினமாம்.”
“இந்தியாப் படங்களை அங்கை இருக்கிறவை பாக்கிறதுக்கு முதல், யாழ்ப்பாணத்திலை பாக்கலாமாம்.”
“அவங்கள் தாற நிவாரணத்தை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு, படங்களையும் பாத்துக் கொண்டிருந்தால் போதும் எண்டிறியளோ? வேறை ஒண்டும் வேண்டாமோ? நான் கேக்கிறனெண்டு குறைநினைக்கக் கூடாது. உதுகளெல்லாம் முந்தி இல்லை எண்டதுக்காகத்தான் ஊரை விட்டீட்டு இஞ்சை ஓடிவந்தனாங்களோ?”
“சாய். அப்பிடி ஆர் சொன்னது? தபால்லை எழுதியிருக்கிறதைச் சொன்னம். நீங்கள் சந்தோஷப்படுவியள் எண்டு நினைச்சம்.”
“ஆமி இருக்குதோ, இல்லையோ?”
“இருக்குதாம். ஆனால் அதாலை ஒரு பிரச்சினையுமில்லைu III to!”
“ஆமி இருக்கிறதே ஒரு பெரிய பிரச்சினைதானே? முழத்துக்கு முழம் அவங்களின்ரை “சென்றி இருக்குது. எந்தப் பெரிய மனிச. ரெண்டாலும், ‘சென்றி பொயின்ற்றிலை வாகனத்திலிருந்து இறங்கி நடந்துதான் போக வேணும். ஊருக்குள்ளை திடீர் திடீரென்று சுற்றி வளைப்பும் தேடுதலும் நடக்குது. விசாரணைக்கெண்டு இளம் பெடியளைப் பிடிச்சுக்கொண்டு போகினம். அவை திரும்பி வந்தப் பிறகுதான், உயிரோடை இருக்கினம் எண்டதை நிச்சயப்படுத்தலாம். பொம்பிளைப்பிள்ளையளெண்டால், சொல்லத் தேவையில்லை. கிருஷாந்தி, சாரதாம்பாள் எண்டு எத்தினை பேரைக் கெடுத்துப் போட்டுச் சாக்காட்டியிருக்கிறாங்கள்.”
109

Page 64
சிற்பி
“உதெல்லாம் பழங்கதைகள் வாத்தியார். இப்ப உப்பிடி
ஒண்டும் நடக்கிறேல்லையாம். பொலீஸ் ஸ்ரேஷன் கோடு எல்லாம் இருக்குதாம்.”
“அவங்களின்ரை பொலீசும் அவங்களின்ரை சட்டமுந்தானே..? ஆனால், ஒண்டு மட்டும் எனக்கு இப்ப நல்லா விளங்குது.”
செல்லப்பரும் இரத்தினமும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“அங்கை போய்ச் சேந்துவிடவேணுமெண்ட ஆசை உங்களுக்கு வந்தீட்டுது.”
அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். வாத்தியார் சரியாகத்தான் ஊகித்திருக்கிறார்!
*ஆனால், அப்படியான ஒரு ஆசை அவரிட்டை இல்லையோ? அல்லது, வேண்டுமென்றே மறைக்கிறாரோ? பிடி கொடாமல் கதைக்கிறாரே!”
ஒரே குழப்பமாக இருந்தது. செல்லப்பர் தைரியமூட்டினார்.
“கணக்க யோசியாதை ரத்தினம். எல்லாம் சரி வரும். நாங்கள் முந்திக் கொண்டு எதையாவது சொன்னால், மறுத்தான் போட்டுக் கதைக்கிறதுதானே அவற்றை வழக்கம். கொஞ்ச நாளைக்குப் பிறகு, தான்தான் புதுசாகச் சொல்லிறமாதிரி அதே விஷயத்தை எங்களுக்குச் சொல்லுவார். வாத்தியாற்றை குணம் தெரியுந்தானே?
“தெரியுமண்ணை. ஆனா, இஞ்சை வந்தாப் பிறகு அவற்றை போக்குவாக்கு மாறிப் போய்ச்சுது.”
“எனக்கு அப்பிடித் தெரியேல்லை. இருந்து பார். கட்டாயம் எங்களோடை அவர் வருவார். இப்ப இஞ்சையுள்ள நிலவரம் அவருக்குந் தெரியுந்தானே?”
“எனக்கு என்னவோ நம்பிக்கையில்லை.”
1 10

சத்திய தரிசனம்
வாத்தியார் என்று அவர்கள் குறிப்பிட்டது முருகேசரைத்தான். மூவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அக்கம் பக்கத்தில் வாழ்ந்தவர்கள் - ஒரே தொழிலைச் செய்தவர்கள் - தோட்டக்காரர்கள்.
முருகேசர் படித்தவர்; நாலு பேருடன் பழகத் தெரிந்தவர்; நாட்டு நடப்பை அறிந்து வைத்தவர். எவ்வித குறையும் கேளாமல், பாடசாலைக் கடமைகளைச் செய்து கொண்டே தன் தோட்டத்தையும் கவனித்தவர்.
ஒரே பாடசாலையில் நீண்ட காலம் படிப்பித்ததைக் காரணமாகக் காட்டி, யாழ்ப்பாணத்துக்கு வெளியே அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அரசாங்க உத்தியோகத்துக்கே முழுக்குப் போட்டுவிட்டார் அவர்.
“பின்னடிக்கு வாற பென்ஷனையும் யோசிக்காமல். பேய்த்தனம் பண்ணிப் போட்டியள்.”
“நான் யோசிக்காமல் விடேல்லை. நான் பிறந்து வளர்ந்த இந்தச் செம்பாட்டு மண்ணை விட்டுப்போட்டு என்னாலை வேறை
இடத்துக்குப் போக முடியாது.”
கண்களில் துளிர்த்த கண்ணிரைத் துடைத்துக் கொண்டு அவர் தொடர்ந்தார், “மாவிட்டபுரத்தான்ரை கோயில் மணி ஒவ்வொரு நாளும் என்ரை காதிலை விழவேணும். இல்லாட்டால், எனக்கு விசர் பிடிச்சிடும்.”
சற்றுப் பொறுத்து, அவரே மீண்டும் சொன்னார்.
“இவ்வளவு காலமாக நானும் கவனிச்சுக் கொண்டு தான் வாறன். எங்கடை இந்தப் பள்ளிக்கூடத்துக்கு எத்தினை வாத்திமார் வந்து வந்து போட்டினம். ஆராவது நிலைச்சு நிண்டவையே? இப்பிடியான சின்னப் பள்ளிக்கூடத்திலை படிப்பிக்கிறது மரியாதை இல்லையாம். அரசாங்கமும் கெதியிலை பெரிய பள்ளிக்கூடங்களுக்கு அவையை அனுப்பி, அவேன்ரை மரியாதையைக் காப்பாத்துது. இப்ப, என்னையும் மாத்திப் போட்டு, இந்தப் பிள்ளையளை நடுத்தெருவிலை விடப்போகுது. அரசாங்கத்தின்ரை ஆட்டத்துக்கு என்னாலை ஆட முடியாது. ஆனால் எங்கடை பிள்ளையளை நான் கைவிட மாட்டன்.
1

Page 65
சிற்பி
வீட்டிலை கூப்பிட்டுப் படிப்பிக்கப் போறன். எனக்கு ஒருத்தரும் சம்பளம் தர வேண்டாம்”
“இப்படியெல்லாம் சொல்லி - சொன்னபடி நடந்தும் காட்டிய வாத்தியார் இப்ப ஏன் பின்னடிக்கிறார்?
a
மாரி மழையாய், ‘வெடில்லுக்கு மேல் ஷெல்’ அடித்துக் கொண்டு பலாலியிலிருந்து மேற்கு நோக்கி இராணுவம் புறப்பட்டபோது.
பரம்பரை பரம்பரையாகத் தாம் வாழ்ந்த வீடுகள், சோலை போன்ற வளவுகள், அவர்களை வாழவைத்த வாழைத்தோட்டங்கள், காய்கறித் தோட்டங்கள், சொந்தப் பிள்ளைகளைப் போல் ஆசையுடனும் பாசத்துடனும் வளர்த்த ஆடு மாடுகள் எல்லாவற்றையும் அப்படி அப்படியே விட்டுப் போட்டு.
ஆபத்து அந்தரத்துக்கு உதவும் என்று நினைத்து எப்போதும் தயாராகக் கட்டி வைத்திருந்த சின்னச் சின்ன மூட்டைகளுடன், எங்கே போகின்றோம் என்று தெரியாமலே, ஊரிலுள்ளவர்களுடன் சேர்ந்து ஓடத் தொடங்கியவர்கள் தான்.
மல்லாகம், கந்தரோடை, கோண்டாவில், சாவகச்சேரி, உசன் என்று தெரிந்தவர்கள், தெரியாதவர்களின் வீடுகள், கோயில் மடங்கள், பள்ளிக் கூடங்களில் இருந்துவிட்டு, கடைசியில் கிளாலியைக் கடந்து கிளிநொச்சிக்கு வரும் வரை அவர்கள் ஓயவில்லை.
கிளிநொச்சி ஒருவித தெம்பை அவர்களுக்குக் கொடுத்தது.
வசதிகள் குறைவுதான், என்றாலும் "ஷெல்லடிக்குப் பயப்படாமல், நிம்மதியாக இருக்கலாம் என்று திருப்திப்பட்டவர்களுக்கு அவர்கள் எதிர் பார்த்ததைவிட மிக அதிகமாகவே கொடுத்தது அது.
“இனி எங்கடை சீவியம் இஞ்சை போலைதான் கிடக்குது. முந்தி என்னோடை கொஞ்சக் காலம் படிப்பிச்ச செல்லையா மாஸ்டர், தன்ரை குடும்பத்தோடை வெளிநாட்டுக்குப் போகப் போகிறாராம். அவற்றை கமம் இஞ்சை இருக்குது. என்னைப் பொறுப்பெடுக்கச் சொல்லிக் கேட்டார். ஓம் எண்டு சொல்லிப் போட்டன்’ என்றார் முருகேசர்.
12

சத்திய தரிசனம் கொண்டு வந்த பணம் பெருமளவிற் செலவழிந்துவிட்டது. ஊருக்குத் திரும்பிப் போவதை நினைத்துப் பார்க்கவே முடியாத நிலை! இந்த வேளையில் இப்படியும் ஓர் அதிர்ஷ்டம்
நல்ல செழிப்பான காணி. தண்ணிர் வசதி தாராளமாக இருந்தது. பழக்கப்பட்ட தொழில். வஞ்சகமின்றி உழைத்தார்கள். பூமித்தாயும் வஞ்சனை செய்யவில்லை. தன்னை வெட்டிக் கொத்தியவர்களுக்கு அவளும் தாராளமாகவே கொட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“ஆமிக்காறற்றை ஆட்டங்கள் இஞ்சை சரிவராது. எங்கடை பொடியள் எதுக்கும் தயாராய்த்தான் இருக்கிறார்கள்.”
முருகேசர் ஒருநாள் சொன்னதை மற்றவர்கள் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
“நாங்கள் அண்ணை கன தூரத்துக்குப் போகத் தேவையில்லை. கிட்டடியிலை எங்கையாவது இருப்பம். இரண்டொரு நாளைக்குள்ளை எங்கடை பொடியள் ஆமியை அடிச்சுக் கலைச்சுப் போடுவாங்கள். கெதியிலை எங்கடை வீடுகளுக்குப் போகலாம்”.
தற்காலிகமாகத் தங்கியிருந்த ஒவ்வொரு இடத்தையும் விட்டு
ஒட வேண்டியநிலை ஏற்பட்டபோது வாத்தியார் கிளிப்பிள்ளை போலச் சொன்னது அவர்களின் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும்!
de
நீண்ட ஒரு இடைவெளியின் பின்.
வாத்தியார் சொன்னது சரியாக இருக்குமோ என அவர்கள் சிந்திக்கத் தொடங்கிய வேளையில், "ஷெல்’ சத்தங்கள் மீண்டும் கேட்கத் தொடங்கின.
போர் அரக்கனும் கிளாலியைத் தாண்டி வந்து விட்டான்
அவர்கள் கிளிநொச்சிக்கும் பிரியாவிடை சொல்லவேண்டிய நிர்ப்பந்தம். வேறு வழியில்லை. பாவற்குளம், விசுவமடு, நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் என முன்னர் காதளவில் மட்டும் அறிமுகமாயிருந்த இடங்களிலெல்லாம் கால் பதித்தார்கள். வீதி ஓரங்களில் உலை வைத்தார்கள்; மர நிழல்களில் உடம்பைக் கிடத்தினார்கள்.
13

Page 66
சிற்பி
நரியும் குரங்கும் பாம்பும் பன்றியும் அவர்களின் கண்களுக்குப் படாத நாளே இல்லை.
“எங்கடை ஊருக்கு வந்திட்டியள் இஞ்சை ஒரு பயமும் இல்லை. உங்கடை சொந்த ஊர் எண்டு நினைச்சுக்கொண்டு இருங்கோ. வேறை எங்கையும் நீங்கள் போக வேண்டாம். நாங்கள் 6LLDIT'Lib.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் தங்கியிருக்கும் துணுக்காய்க்கு வந்த வேளையில் அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்ற முறை அவர்களை நெகிழச் செய்துவிட்டது.
அவை, வெறும் உபசார வார்த்தைகளாக இருக்கவில்லை.
“இனி என்ன நடந்தாலும் நாங்களும் இந்த இடத்தை விட்டுப் போக மாட்டம். எங்கடை நன்மை தின்மை எல்லாம் இனி இஞ்சைதான்.”
ஆனால், யாழ்ப்பாணத்துக் கடிதங்கள் அவர்களை அங்கலாய்க்க வைத்தன.
சொந்த இடத்துக்குப் போகலாமாம். முன்னையைவிட அதிக வசதிகளுடன் வாழலாமாம்.
பிறந்து வளர்ந்து. தொழில் பார்த்து. கல்யாணம் கட்டி. பிள்ளைகளைப் பெற்று. வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்த அந்த மண்ணின் மணம் அவர்களை “இழுக்கத்” தொடங்கியது.
‘போகத்தான் வேணும். போகத்தான் போறம்’
ஆனால், வாத்தியார்?
பிறந்து வளர்ந்த காலம் தொடக்கம். ஒன்றாகப் படித்து. ஒன்றாக விளையாடி. ஒன்றாகத் தோட்டஞ் செய்து. வாத்தியார் இல்லாமல், அந்த ஊரில். அவர்களுடைய குடும்பங்களில் எந்த நல்ல காரியமும் நடந்ததில்லை. அவர் அவர்களுக்கு இன்றியமையாதவர்.
14

சத்திய தரிசனம்
போகிற வழியில். போனதன் பின்னர். பிரச்சினை ஏதாவது ஏற்பட்டால். வாத்தியார் இருந்தால், சமாளித்துக் கொள்வார். நாலு பேரோடை கதைக்கத் தெரிந்தவர்.
அந்த மனிசனை இந்தக் காட்டுக்கை விட்டுப்போட்டு.
*சாய். எப்பிடியாவது அந்த மனிசனையும் இழுத்துக் கொண்டுதான் போகவேனும்’
a do de
இரவு முழுவதும் ஒரே ‘ஷெல்’ சத்தம்; இருட்டில், பயங்கரமான கற்பனைகளை அது உருவாக்கிக் கொண்டிருந்தது.
வர வரக் கிட்டக் கேட்குதோ?
செல்லப்பருக்கும் இரத்தினத்திற்கும் நித்திரையே வரவில்லை. வாத்தியார் மீது சில சமயம் ஆத்திரந்தான் வந்தது.
விடிந்தபோது, வழக்கத்திற்கு மாறாக றோட்டில் அதிக சனநடமாட்டம் காணப்பட்டது. சிலர் மூட்டை முடிச்சுக்களுடன் போய்க் கொண்டிருந்தனர்.
“என்ன பெரிசா யோசிச்சுக் கொண்டிருக்கிறியள்? அங்கை போறது நல்லது போலைதான் கிடக்குது’.
அந்த வேளையில் முருகேசர் அங்கே வருவார் என்பதையோ, அப்படியான ஒரு கருத்தைச் சொல்வார் என்பதையோ அவர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
பெரிய ஆறுதலாக இருந்தது.
“என்னோடை பள்ளிக்கூடத்திலை இருக்கிற இரண்டு மூன்று குடும்பங்கள் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிப் போக ஆயத்தப்படுத்துகினம். இஞ்சை யிருந்து பூனகரிக்கு ‘வானிலை போக வேணுமாம். அங்கையிருந்து வள்ளத்திலை போகலாமாம். ஆனால், பூனகரியிலை கொஞ்ச நாளைக்குக் காத்துக் கொண்டு நிக்க வேணும். கிழமையிலை இரண்டு நாட்களுக்குத்தான் வள்ளம் ஒடுமாம். இராப் பயணம். ஆனால் கரை வரையும் போகமுடியாது. நெஞ்சளவு தண்ணிரிலை இறக்கிவிட்டு விடுகினமாம். தண்ணீருக்குள்ாலை
15

Page 67
சிற்பி
நடந்து போக வேணும். குருநகரிலை முகாமிலை தங்கி நிக்க வேணுமாம். விதானைமார் வந்து பொறுப்பு எடுக்கும்வரை, எங்கையும் அசையேலாது. எல்லா விஷயங்களையும் நல்லாய் விசாரிச்சுப் போட்டன்.”
விளக்கமாகச் சொன்னார் வாத்தியார்.
செல்லப்பரும் இரத்தினமும் ஆளை ஆள் பார்த்துக் கண்சிமிட்டிக் கொண்டனர்.
தான் சொன்னது சரியாகிவிட்டதில் செல்லப்பருக்குச் சிறிது பெருமையாகவும் இருந்தது.
“யாழ்ப்பாணத்துக்குப் போக வேண்டாம் என்று பொடியள் தடுக்கிறாங்களாம்” என்றார் அவர்.
“நான் அப்பிடிக் கேள்விப்படேல்லை. அங்கை போனால், இப்ப இல்லாவிட்டாலும், பிறகு கஷ்டப்படவேண்டி வரும் எண்டுதான் அவை சொல்லினம். கேளாமல், போறவையை அவங்கள் ஒண்டும் செய்யிறேல்லை. கண்சாடையா விட்டிடுறாங்கள்’
“நடுக் கடலிலை இறக்கிவிட மாட்டினம்தானே!” மனைவி, பிள்ளைகளுடன் கஷ்டப்பட வேண்டி வருமோ என்ற பயம் இரத்தினத்துக்கு!
“ச்சாய். அப்பிடிச் செய்யமாட்டான்கள். நடக்கக் கூடிய ஆழத்திலை தான் இறக்கி விடுறான்களாம். வற்றாப்பளைக் கோயிலிலை கொஞ்சக் காலம் பூசை பண்ணின குருக்களை எனக்குத் தெரியும். ஐஞ்சு பிள்ளைகள் சின்னன்கள். எல்லாரும் யாழ்ப்பாணத்துக்குப் போட்டினம். மல்லாகம் கந்தையாண்ணையைத் தெரியுமெல்லே. எல்லாம் பொம்பிளைப் பிள்ளையன். அவையும் போட்டினம். இப்பிடி எத்தினையோ சனம் போய்ச் சேர்ந்திட்டுது”
“வானுக்கும் வள்ளத்துக்கும் எவ்வளவு எடுக்கிறாங்களாம்?”
“அறுநூறும் ஆயிரமும் எண்டு கேள்வி”
“ஒராளுக்கோ?”
116

சத்திய தரிசனம்
“பின்னையென்ன, குடும்பத்துக்கே? டீசல், மண்ணெண்ணையெல்லாம் அவன்கள் களவிலைதான வாங்கவேண்டிக் கிடக்குது?”
t
மேற்கொண்டு எதையும் கேளாமல், இரத்தினம் மெளனமாக இருந்தார்.
“காசைப் பற்றி யோசிக்கிறியோ? தேவை எண்டால் நான் தாறன். கவலைப்படாதை. இஞ்சை நானும் மனிசியுந்தானே. சமாளிச்சுக் கொள்ளுவம்”.
“அப்ப, நீங்கள் எங்களோடை வரமாட்டியளோ? இரத்தினத்தின் குரலில் உயிரே இல்லை.
செல்லப்பரும் திகைத்துப் போனார்.
“என்ரை வீட்டுக்குப் போகேலாதாம். பிறகேன் அங்கை?
வாத்தியாரின் குரல் கம்மியதைச் செல்லப்பர் கவனித்தார்.
“மல்லாகம், தெல்லிப்பளையிலை ஆக்கள் இல்லாமல், கன வீடுகள் சும்மா கிடக்குதாம். எங்களுக்கு வசதியான வீடுகளிலை நாங்கள் போய் இருக்கலாம். ஒருத்தரும் ஒண்டும் சொல்ல மாட்டினமாம்"
“நான் கட்டின சொந்த வீடொண்டு இருக்கேக்கை, இன்னொருத்தற்றை வீட்டிலை போய் அடாத்தாய் இருக்கிறதோ? என்னாலை முடியாது. எனக்கு என்ரை சொந்த வீடுதான் வேணும்.”
“எங்கடை குருக்களையாவும் மல்லாகத்திலைதான் இருக்கிறாராம். கோயிலுக்கு ஒவ்வொரு நாளும் போய்ப் பூசை பண்ணிப் போட்டு வாறதுக்கு ஆமிக்காரன் “பாஸ்’ குடுத்திருக்கிறானாம். எங்களின்ரை அடையாள அட்டையை ஆமியிட்டைக் குடுத்து, அவை தாற துண்டோடை நாங்களும் கோயிலுக்குப் போகலாம். எங்கடை வீடுகளையும் பாத்துக் கொண்டு வரலாம். அவையள் சொல்லிற நேரத்துக்குள்ளை திரும்பி வந்தால் சரி”.
“எங்கடை கோயிலுக்குப் போய் எங்கடை சாமியைக் கும்பிடுறதுக்கு இன்னொருத்தனிட்டை உத்தரவு கேட்க வேணும்.
117

Page 68
சிற்பி
எங்கடை சொந்த வீடுகளைப் பாக்கிறதுக்கும் அவையிட்டைக் கேட்க வேணும். அந்த அளவுக்கு நாங்கள் அடிமையாகி விட்டமோ?”
பொங்கி எழுந்த ஆத்திரத்தையும் அழுகையையும் அடக்குவதற்கு அவர் கஷ்டப்பட்டது தெரிந்தது.
சிறிது நேர மெளனத்தின் பின் வாத்தியார் தொடர்ந்தார்.
“நான் இப்ப வரமாட்டன். என்னாலை முடியாது. அவையளின்ரை சொல்லுக்கு ஆட என்னாலை முடியாது. இஞ்சை இருக்கிற சந்தோசம் அங்கை வராது. ஆனால் உங்களை நான் தடுக்க மாட்டன். நீங்கள் போங்கோ. நான் போய்க் காசை எடுத்துக் கொண்டு வாறன்.”
தான் தங்கிருந்த பாடசாலையை நோக்கிப் புறப்பட்டார் வாத்தியார்.
“ஷெல்’ சத்தம் முன்னரைவிடப் பயங்கரமாகக் கேட்கத் தொடங்கியது.
G-4ఊశివ
18


Page 69
ஆழமான இல சிவசரவணபவ: இலக்கியத்
Cover
 
 
 

அமைதியாக இருந்து க்கியப் பணி ஆற்றிவரும் ர் என்ற சிற்பரி, தமிழ் துக்குப் புதிய பரிமாணம் ஈழத்தவருள் ஒருவர். அவர் ப "கலைச்செல்வி" என்ற கபுதியதொரு "மணிக்கொடி"க் தெத் தோற்றுவித்தது. இந்த ரில் வீறார்ந்த இலக்கிய ாக் களாகத் தகழ் கணிற யாகநாதன , செமீ பரியன ர், சாந்தன், அமரர் முனியப்ப பான்ற பலரை முதன் முதலில் "கலைச் செல்வி மூலம் ச் செய்தவர் அவர். "கலைச் பண்ணையில் முகிழ்த்தவன் ருமை எனக்கும் உண்டு. அவர் வெளியிட்ட "ஈழத்துச் கள்", எனிற பனி னரிரு பாசிரியர்களின் சிறுகதைத் ஈழத்து ஆக்க இலக்கியத்தை முதலில் வெளியுலகிற்கு படுத்தியது. தேவையை மீறாத இனிமையும் சிக்கனமும் வார்த்தைகள், முரண்படாத வார்ப்பு, கதைக் கருவை தாத கதைப்போக்கு, படித்து /ம் எஞ்சி நிற்கின்ற நல்ல |கள் என்பன அவருடைய தைகளினி சறப் புக்கள். ாலி, ஈழத்துக்குப் பெருமை! லக்கியத்துக்குச் சிறப்பு.
கை ஆழியான்
Printed GURU PRINTERS 8 NG