கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெண்சங்கு

Page 1


Page 2

வெண்சங்கு

Page 3
வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் தமிழமூலசக்கல் அமைச்சு, யாழ் இலக்கிய வட்டத்திற்கு நால் வெளியீடுகளுக்காக வழங்கிய ஊக்குவிப்பு நிதியையும் பயன்படுத்தி இந்தால்
அச்சிடப்பட்டுள்ளது.)

வெண் சங்கு
இரசிகமணி
கனக. செந்திநாதன்

Page 4
யாழ். இலக்கிய வட்ட வெளியீடு: 7. முதற் பதிப்பு: அக்டோபர். 1967 இரண்டாம் பதிப்பு: டிசம்பர் 2001,
 ேவிலை ரூபா - 150/=
VENN CHANGU
(A Collection of Short - Stories)
Author: RASIKAMANI KA NAGA - SENTHIN ATHAN
Kurumbasiddy, Tellippalai.
Publisher: YAL HILAKKİYA V/AIDDAM.
First Edition: October 1967,
Second Edition: December 200l.
Price : Rs. 50 /=
விற்பனையாளர் : பூபாலசிங்கம் புத்தகசாலை, யாழ்ப்பாணம் : கொழும்பு.
நீலங்கா புத்தகசாலை :
யாழ்ப்பாணம் : கொழும்பு.
- 02 -

வெண்சங்கு
e o O 9 o a
e.
d Go O " GFDJ i GGOOTLD ".. O e
அன்னைத் தமிழுக் கணிசெய்யும் 6
ஆர்வம் உளத்தில் மிகப் பொங்க முன்னைப் பெரியோன் காப்பியன்செய்
முழுநூலதற்கும் உரைவிளக்கம் தன்னை அழகாய்ப் பதிப்பித்தும்
தகைசேர் பாட நூல்கள்பல பின்னைப் புதுமை ஒளிவீசப்
பிறரும் போற்ற வெளியிட்டும்
கன்னல் போன்ற கவிதைகளும்
கவினார் கதையும் கட்டுரையும்
அண்ணல் காந்தி வழி நிற்கும்
அரசிய லோடு சமயமுமாய்
எண்ணம் விரிய இந்நாட்டில்
எழிலார் ஈழ கேசரியை
0 வண்ணம் படவே நடத்தியநம்
வள்ளல் பொன்னையாவுக் கர்ப்பணமே,
= 03 =

Page 5
வெர்ை சங்கு
முகவுரை
fழத்து இலக்கிய உலகிலே சிறுகதைகள் முக்கிய இடத்தைப் பெற்று வரும் இக்கால கட்டத்தில், வெண்சங்கு என்னும் சிறுகதைத் தொகுதியைப் பணிவாக வாசகப் பெருமக்களின் முன் உலவ விட்டிருக்கிறேன். , ' ' : '',
ஈழத்தில் விமர்சனத்துறையில் ஓரளவு பணியாற்றிய நான். இக்கதைத் தொகுதியை வெளியிடுவதற்கு, விமர்சனத் துறையில் உள்ளோர் ஆக்க இலக்கியத் துறைக்கும் தம்மாலியன்ற பணியைச் ச்ெய்தல் வேண்டும்' என்னும் மன விருப்பமும் ஒரு காரணமாகும். இக்கதைத் தொகுதி மற்றைய தொகுதிகளிலும் பார்க்க ஓரளவு வித்தியாசப் பட்டிருப்பதை வாசகர்கள் உணரலாம். வெண்சங்கு தூய்மையினதும், புனிதத்தினதும், வெண்மையினதும், நாதத்தினதும் உருவகம். நான் இவற்றைப் பெரிதும் நேசித்து மதிப்பவன்.
எந்த இலக்கியக் கோட்பாடுகளுக்குள்ளும் என்னைச் சிக்க வைக்காமல், நான் நல்லவை என்று எண்ணியவற்றைச் சித்திரித்துக் கதைகள் புனைந்திருக்கிறேன். அன்பு, முயற்சி, கலை, போலித் தன்மையில் வெறுப்பு விதியின் பிடி, பண ஆசை என்ற நிலைத்து நிற்கும் கருப் பொருள்களை வைத்து ஓரளவு பன்ழமையுடனும், சமயச் சூழலுடனும் சித்திரிக்க முயன்றிருக்கிறேன். பழைய யாழ்ப்பாணக் கலாசாரம் இப்புதிய சிறுகதைகளுக்கு வலுவான பகைப்புலமாக அமைந்திருக்கிறது.
புராணப் படிப்பு, தாளக்காவடி, அன்னதானம், நாட்டுக்கூத்து, சரமகவி பாடல், காணிப்பற்று என்பனவற்றிலே துடிக்கும் யாழ்ப்பாணக் கலாசாரம், இக்காலப் போலித் தன்மையோடு யாழ்ப்பாணத்தில் வேரோடியிருக்கிறது. இக்கலாசாரத்தைப் படம் பிடித்து. கதையாக்கிக் காட்ட வேண்டும் என்ற என் நெடு நாளைய அவாவினை இத்தொகுதி
*
பிரதிபலிக்கிறது:
வெறும் நாட்டுப்புறச் சொற்களால். பாமர வார்த்தைகளால் மாத்திரம் "மண்வாசனை’யைக் காட்ட முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. அந்த அந்தப் பிராந்தியத்தின் சிறப்புற்ற கருவை அந்த அந்தப் பிராந்தியத்தின் நடையில் எழுதல் வேண்டும் என்பதிலும்
- 04 - " ،

வெண்சங்கு கிராமியக் கொச்சை மொழி கதையை வாசித்து விளங்க இடைஞ்சலாக இருத்தல் கூடாது என்பதிலும் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையை நிலை நாட்டும் வகையில் இத்தொகுதியின் வசன நடை அமைந்துள்ளது.
கருநாடக சங்கீதம் ஒன்றாக இருப்பினும் பாடுவோரது தனித்துவச் சிறப்பினால் அவரவர்க்கான ஒவ்வொரு பாணி கைவந்து விடுகிறது. அது போலச் சிறுகதைத் துறையிலும் அவற்றின் தனித்துவம் எழுதுவோரின் புத்தி பூர்வமான சுயபோக்கினால் இனம் கண்டு கொள்ளப்படுகிறது.
யாழ்ப்பாணப் பழைமை சமயச்சூழல். பழைமைய ன கதை சொல்லும் உத்தி என்ற என் தனித்துவத்)ை நான் இழந்து விடத் தயாராக இல்லை. என் கதைகளை நோக்குவோர் என் தனித்துவம் என்னும் அச்சாளரத்தினுTடு பார்த்தல் நல்லது. தாம் தாம் வைத்திருக்கும் கொள்கை, அரசியற் பிடிப்பு, மேனாட்டு உத்திமுறை என்னும் இவற்றை அளவு கோலாகக் கொண்டு அளந்து சிரமப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். -
இந்தப் பத்துக் கதைகளும் ஈழத்திலுள்ள பத்து வெவ்வேறு பத்திரிகைகளில் வெளி வந்தவை. அந்தப் பத்திரிகைகள் என் மீது காட்டி வரும் ஆரா அன்புக்கு என் நன்றி.
இரு வேறு துருவங்களில் கதைகளைப் படைத்து வரும் நானும். எஸ்.பொன்னுத்துரையும் இலக்கிய இரசனையில், நோக்கில், படைப்பிலக்கியத்தில் வேறுபட்டவர்கள். எனினும், இலக்கியத்தை நேசிப்பதிலே அதற்காக நேரத்தை. பணத்தைச் செலவு செய்வதிலே ஒன்றுபட்டவர்கள். அந்த ஒற்றுமைக்காகவும், சிறுகதைத் துறையில் அவரீட்டியுள்ள வெற்றியை நான் நன்கு மதிப்பவனாதலாலும் இத்தொகுதிக்கு அவரே சிறப்புரை எழுத வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அருமையான சிறப்புரையை, இக்கதைகளுக்கு வழிகாட்டும் முகமாக அவர் எழுதியுள்ளார் அன்னாருக்கு என் பணிவான நன்றி. இந் நூலை வெளியிட்ட யாழ் இலக் கசிய வட்டத்தாருக்கும். குறுகிய காலத்தில் அச்சிட்டுதவிய என்னருமை நண்பர் எம்.ஏ.ரஹற்மான் அவர்களுக்கும், சகல விடயங்களிலும் ஆலோசனை கூறி, தலைப்புகள் எழுதி உதவிய ஓவியர் கே.கே.வி.செல்லையா. ஒவியம் அமைத்த திரு. ஆதம்பித்துரை. திரு. வி.கனகலிங்கம் ஆகியோருக்கும் இதயங்கனிந்த நன்றி.
கனக. செந்திநாதன் குரும்பசிட்டி,
0.4.67.

Page 6
வெண்சங்கு
முன்னீடு
சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரையுஞ் சேர்த்துக் கொள்ளுதல் சம்பிரதாயமான காரியமாக நிலைத்துவிட்டது. அப்படி ஒரு முன்னுரை எழுதுபவர் அந்தத் துறையிலே தமக்குள்ள புலமையை. அன்றேல் புலமை இன்மையை ஓரளவிற்கு விண்டு காட்டி, தமது நூலின் சில பக்கங்களை நமது சுய வித்துவ 'அளப்பலுக்கும் ஒதுக்கித் தந்து விட்டாரே என்ற மனச்சாட்சியின் முள் உறுத்த, கதாசிரியரைப் பற்றி நான்கு வரிகளும், கதைகளைப்பற்றி இரண்டு வரிகளும் எழுதும் திருக்கூத்தாகவே இக்கைங்கரியம் ஈழத்தில் நிலைபெற்று வருகின்றது. இந்த முன்னீடு அத்தகைய வாய்பாட்டில் அமைய மாட்டாது; அரைத்த மாவையே அரைக்கும் விவகாரத்தில் எனக்கும் ஈடுபாடு கிடையாது.
"வெண் சங்கு சிறுகதைத் தொகுதியை அனுப்பிவைத்து. அதற்கு ஒரு முன்னிடு நல்கும் வண்ணம் எழுதிய கடிதத்தில் இரசிகமணி கனக - செந்திநாதன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
“.இவ்வாண்டில் எனக்கு ஐம்பது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அதன் நினைவாக என் நூல்கள் மூன்று இவ்வாண்டில் வெளிவருமென நினைக்கின்றேன். அவற்றுள் இச்சிறுகதைத் தொகுதியும் ஒன்று. இதற்குத் தக்கார் ஒருவரிடம் முன்னுரை பெறல் வேண்டுமென நினைத்த பொழுது உங்கள் நினைவே மேலோங்கி வந்தது. என்னுடைய இலக்கிய வாழ்க்கையில் அண்மைக் கால ஐந்து ஆண்டுகளும் முக்கியமானவை, அந்த முக்கியத்துவத்தில் உங்களுக்கும் பங்கிருக்கிறது. அந்த உரிமையினால் முன்னுரை கேட்கவில்லை. உங்களுடைய சிறுகதைத் தொகுதியான வீக்கு நான் முன்னுரை
-- 06 ہے

வெண்சங்கு எழுதினேன். நன்றிக் கடனுக்காக என் நூலைப் பற்றி நான்கு வார்த்தைகள் புழுகுதல் நின்கடன் என்ற வகையிலும் நான் முன்னுரை கேட்கவில்லை. ஈழத்து இலக்கிய முயற்சிகளில் முக்கியமாகச் சிறுகதைத் துறையில் தங்களுடைய வெற்றியை மதிப்பவன் நான். அந்த மதிப்பின் காரணமாகத்தான் இத்தொகுதிக்கு நீங்கள் முன்னுரை எழுத வேண்டுமென்று கேட்கிறேன். சிறுகதை பற்றி உங்களுடைய பார்வையும் என்னுடைய பார்வையும் வேறுபட்டவை. என்றாலும், என்னுடைய சிறுகதைகளைப் பற்றி தங்களுடைய அபிப்பிராயங்களை முன்னுரையாக எழுதி உதவவும்.”
இவ்வாறு நெஞ்சிலே கரவு எதுவுமின்றி, தம் மனதிற் படுபனவற்றை ஒளிவு மறைவின்றிப் பேசவும் எழுதவும் வல்ல பெற்றியரே இரசிகமணி. அவர் எதிலும் பழைமையையும், பழைமையின் தூய்மை நிலையையும் பாதுகாக்க முந்துபவர். இதில் விசேடமென்ன வென்றால், பழைமையின் தூய்மை நிலையைப் பாதுகாக்கும் பயணமே இரசிகமணியின் புதுமை அனுபவமாகவும் பொலிவுற்று மிளிர்வதுதான். பழைய எழுத்து அனுபவத்திற்கும், புதிய எழுத்து முயற்சிகளுக்கும் நேர்த்தியான பாலமாக மேடைகளிலே ஆற்றும் ஒவ்வோர் இரசனைப் பிரசங்கமும் ஒவ்வொரு நூலாக வெளிவரத்தக்க தரத்தைச் சார்ந்தது. கவிஞனின் சொந்த வாழ்க்கை - சார்நத கட்சி - சேர்ந்த வட்டாரம் ஆகியவற்றை மனதிற் கொள்ளாது, அவனுடைய ஆக்கத்திற்கு மட்டுமே மதிப்புக் கொடுத்து, அதிலே படித்தவர்களுக்கும் பாமரர்களுக்கும் சுவைப்புத் தோன்றுமாறு உண்மையான இரசனையை வளர்த்து, ஈழந்தந்த ஒரேயொரு இரசிகமணியாக அவர் உயர்ந்து நிற்கின்றார். இரசனையின் மூலம் வாசகர் வட்டத்தை விரிவு படுத்தலாம். அதுவே பயனாக அமைந்து விடாது. இன்னொரு வழியிற் சொல்வதானால், பயனை அடைய அது ஒரு மார்க்கம்' என்று இரசனையைப் பற்றி அடக்கமாகக் கூறுவார், உண்மைதான். வீணையின் தந்திகளை மீட்டி அதன் கானத்திலே இன்பம் அனுபவிக்கச் செய்வதைப் போல்வது இரசனை, இரசனையிலே திளைத்தவர்களால் ஆழமான விமர்சனஞ் செய்ய இயலாது என்று சிலர் எழுந்த மேனியாகக் கூறி வருகிறார்கள். இந்தப் பொறுப்பற்ற கூற்றினைப் பொய்ப் பித்தவரும் இரசிகமணி அவர்களேயாவர், பல அரிய நூல்களை வாசித்தும், சேகரித்தும் "நடமாடும் வாசிகசாலை’ என்று அவர் ஈழத்து மக்களாற் கொண்டாடப்படுகின்றார். இந்தப் பழுத்த அனுபவத்தின் தளத்திலே நின்று, பண்பான முறையில் இலக்கிய விமர்சனஞ் செய்கின்றார்.
- 07 -

Page 7
வெர்ை சங்கு விமர்சனம் என்று வந்து விட்டால் ஓர் இலக்கியப் படைப்புத் தோன்றிய காலம், அந்தக் காலத்திற்குரிய அரசியல் பொருளாதார - சமுதாயப் பகைப் புலம் ஆகியன பற்றியும் முழுமையாக விசாரணை செய்பவர்.
இப்படைப்புடன் ஒத்த சாயலுடைய வேறு இலக்கியப் படைப்புகளைச் சுட்டிக்காட்டி, அவற்றிலிருந்து இப்படைப்பு எவ்வகையில் மாறுபட்டிருக்கிறது. உயர்ந்திருக்கிறது. சோடை போயிருக்கிறது என்பவற்றை விளக்கும் பொழுது அவருடைய தர்க்கத் திறமையும் ஞாபக சக்தியும் நம்மைத் கைக்க வைக்கின்றன. மேனாட்டு விமர்சகர் சிலர் காட்டும் போலி மதிப்பீடுகளை உரைகல்லாகக் கொள்ளாமல், தமிழ் மரபு ஒன்றினையே இவர் விமர்சன உரை கல்லாகக் கொண்டுள்ளார். அத்துடன், எந்த இடத்திலும் செந்திநாதன் என்ற சுயத்தின் முக்கியத்துவத்தைப் புகுத்தாது பாதுகாத்துக் கொள்ளுதல் இவர் விமர்துனத்திலுள்ள பிறிதொரு சிறப்பம்சமாகும். இவருடைய விமர்சனப் பார்வைக்கும் என்னுடைய விமர்சனப் பார்வைக்கும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் விமர்சனப் பார்வையே சரியென்பது என் கட்சி: என் தர்மம். இருப்பினும், அவருடைய விமர்சனப் பார்வை தமிழிற் காலூன்றித் தூய்மை சார்ந்து துலங்குவதினால் அதனை மதிப்பதும் என் சுபாவம்.
ஹிலழறி ஆறுமுகநாவலர் காலத்திற்குப் பிற்பட்ட காலத் தமிழிலக்கிய வரலாற்றிலே இரசிகமணிக்குப் பழுத்த புலமை இருக்கின்றது. இதன் சான்றாக அவர் ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற இலக்கிய வரலாற்று நூலை வெளியிட்டுள்ளார். இந்நூல்தான் இற்றைவரை இத்துறையில் வெளிவந்த நூல்களுள் அதிகார பூர்வமான நூலாக உயர்ந்து நிற்கின்றது.
இத்தகைய ஒர் இரசிகமணியினதும், விமர்சகரினதும் சிறுகதைகளை மதிப்பீடு செய்யும் பொழுது, பிறிதொரு சிரமங் குறுக்கிடுகிறது. புதிய கதைக் கரு. நூதனமான தொனிப் பொருள். நவமான உத்தி, புரட்சிகரமான உருவம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவங் கொடுத்து எழுதுபவன் நான் என் தளம் வேறு: இரசிகமணியின் தளம் வேறு. எனவே, அவருடைய தளமான பழைமைக் கதைக் கரு என்ற தளத்திற்குத் தாவி, இக்கதைகளைப் பல முறைகள் வாசித்தேன். அப்பொழுது என் எண்ணத்திலே ஏற்பட்ட உணர்ச்சிகளை வாசகர்களுடன் நேர்மையாகப் பங்கிட்டுக் கொள்ளுதல் வேண்டுமென்ற அக்கறையும் என் உள்ளத்திற் கனிந்தது.
== 08 حے

வெர்ைசங்கு
ப்ெபடிப் பழைமையின் துய்மை நிலையைப் பாதுகாக்கும் பயண மே இர சி க ம ணிuரின் புதுமை அனுபவமாகவும் பொலிவுறுகின்றதோ, அப்படியே அவருடைய இரசனை - விமர்சனப் பயண்மே சிருஷ்டி இலக்கிய ஆக்கமுமாகப் பொலிவு பெறுகின்றது. வெளிப்பார்வைக்கு இது முரண்பட்ட கூற்றாகப் படலாம். இருப்பினும், இத்தொகுதியில் இடம்பெறும் அத்தனை கதைகளையும் ஊன்றிப் படிப்பவர்கள் இவை அனைத்திலும் அவர் கற்பித்திருக்கும் யாழ்ப்பாணக் கலாசாரத்தைப் பற்றிய விமர்சன விசாரணை என்ற பொற்சரடு ஒன்று இணைந்து செல்வதைக் கண்டின்புற்லாம். இந்தத் தனித்துவத்தை இன்றைய ஈழத்தின் எழுத்தாளர் வேறு எவரிடமுந் தரிசிக்க முடியாது.
தனித்துவத்திற்குத் தனித்துவமான விளக்கம் ஒன்றுந் தேவை. ஈழத்திலுள்ள சிறுகதை எழுத்தாளர் சிலர் ஏதோ ஒரு கதையைச் சரிக்கட்டி விட்டு, அக்கதை தனித்துவமானது எனச் சுய முதுகுதட்டி மகிழ்கிறார்கள். "மண்வாசனைத் தனித்துவம். யதார்த்தத் தனித்துவம், சோஷலிஸ் யதார்த்தத் தனித்துவம், கொச்சைத் தமிழ்த் தனித்துவம். விளங்குதில்லைத் தனித்துவம் என இத் தனித்துவங்களின் தனித்துவமும் பல வகைத்து எனப் பம்மாத்தும் காட்டுகிறார்கள். இது தனித்துவம் பற்றிய பூரண படிமானம் இல்லாத்தினாலேற்பட்ட அவலம் காலஞ் சென்ற நாதஸ்வரச் சக்கரவர்த்தி இராஜரத்தினம் பிள்ளையிடங் கலையின் தனித்துவம் கண்டு வியந்தார்கள். அவர் புதிய இராகங்களைக் கற்பித்து வாசித்ததினால் இந்தத் தனித்துவம் ஏற்பட்டு விடவில்லை. பழைய இராகங்களை, மரபு நிலை பிறழாது, ஆனாலுந்த தனக்கே உரிய சுத்தமான பாணியில் வாசித்ததினால் இத்தனித்துவம் முற்றி விளைந்தது. இத்தகைய தனித்துவம் இலக்கியத்திற்கும் பொருந்தும். கதா சம்பவ வித்தும். தொனிப் பொருளும் பழையனவாக இருக்கலாம். அவற்றைப் பரிவர்த்தனை செய்ய உபயோகிக்கப்படும் சொற்கள் எல்லோருக்கும் பொதுவானவையாக இருக்கலாம். ஆனால், இவற்றை நேர்த்தியாக இசைக்கும் கலைப் பணியிலே தான் தனித்துவம் குதிருகின்றது. தேர்ந்த எழுத்தாளன் இத்தனித்துவத்தைப் புத்தி பூர்வமாகவும். சலியாத முயற்சியினாலும் வனைந்தெடுக்கின்றான். அத்தகையதொரு தனித்துவத்தை வெண்சங்கு என்னும் இச் சிறுகதைத் தொகுதியிலே. அனுபவித்து இன்புற முடிகின்றது.
ஈழத்து இலக்கிய உலகில் மண்வாசனை என்ற கோஷம் சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் சிலரால் முன் வைக்கப்பட்டது. 09 -

Page 8
வெர்ை சங்கு பிராந்தியங்களிற் பயிலப்படும் கொச்சைச் சொற்கள் சிலவற்றைக் கோவை செப்தால், அ.து இயல்பாகவே ‘மண் வாசனை’ இலக்கியமாகிவிடும் என்ற தப்பித எண்ணத்தைக் காமித்து. அத்தகைய கதைகளை எழுதிச் சலித்தவர்களும் நம்மத்தியில் வாழ்கின்றார்கள். ஒரு பகுதியான மண்ணிற்கே உரித்தான கலாசாரத்திலே பிறக்கும் கதைக் கருவை. அந்த மண் தனித்துவமாக ஒலிக்கும் தொனிப் பொருளைப் பிரசவிக்கும் வண்ணம் கலவி நெறியிற் பொருத்துவதே மண்வாசனை இலக்கியத்திற்கான சிறப்பம்சமாகும். இந்த உண்மையின் மூல விக்கிரகத்தைத் தரிசித்தே இரசிகமணி எழுதுகின்றார் என்பதற்கு இத்தொகுதியில் இடம்பெற்று பல கதைகள் தக்க சான்றுகளாக அமைந்துள்ளன.
புராணபடனமும், பிட்டவித்துக் கொடுக்கும் திருவிழாவும்: சன்னதிக் கோவிலுக்கு எடுக்கும் ஆட்டக் காவடியும், அங்கு நடைபெறும் அன்னதானமும்; சரமகவி பாடுதலும், கொட்டகைக் கூத்தும் - இவை அனைத்தும் யாழ்ப்பான வாழ்க்கையின் தனித்துவச் சடங்குகள். இவற்றை யாழ்ப்பாண மண்ணிலே பிறந்து. அதன் கலாசாரம் "கிடுகு வேலிகளால் அமைத்துக் கொடுத்துள்ள கட்டுப்பாடுகளையும். அதனால் ஏற்படும் அவசங்களையும், அந்த அவசங்களிலேயே ஏற்படும் சுருதி பேதங்களையும் கூர்ந்து அனுபவித்து. கால ஓட்டத்திலே அவை அடையும் மாற்றங்களை அவதானிக்கும் அதேவேளையில் , பழையனவற்றை அசை மீட்டிப் பார்க்கவல்ல ஒருவனாலே தான், இக்கதைத் தொகுதியிற் காணப்படும் கதைக் கருக்களை நேர்த்தியான சிறுகதைகளாக்கித் தர முடியும். இக்கலைப் பணியினைச் செவ்வையாக இயற்ற ஓர் இரசிகமணியினாற்றான் முடியும் என்ற எண்ணத்தின் நிறைவே இச் சிறுகதைத் தொகுதியை வாசித்து முடிந்ததும் ஏற்படுகின்றது. இருப்பினும், இக்கதைகள் யாழ்ப்பாண கலாசாரத்தைப் பற்றிய இரசிகமணியினுடைய பார்வை மட்டுந்தான். ஒரு பக்கத்தின் முழுமைக்காட்சி. இக்காட்சியைச் சித்திரிப்பதற்கு அவர் தமது சுய எழுத்து நடையை மாற்றவுமில்லை. தத்தல் நடை', 'மணிப் பிரவாள நடை', 'பிராந்திய நடை', "ஊமைக் குழல் நடை' என்ற விவகாரங்களுக்கே அவருடைய எழுத்தில் இடமில்லை. கதைகளின் பழைமை சான்ற உள்ளடக்கத்திற்கு ஏற்ப, பழைமை சான்ற நடையையே கையாளுகின்றார். பழைமையின் பண்பினைக் காக்கும் பணியில், பிராந்தியச் சொற்களை மிகவும் ஒறுப்பாகக் கையாளுகின்றார். இந்தப் பொதுவான எழுத்துப் பண்பிற்குப் புற நடையாக "தொந்தம்'.
= 10 س"

வெண்சங்கு - SS SS
தரிசனம் ஆகிய இரு கதைகள் எகிறி நிற்கின்றன. இந்தப் புறநடை கூடப் பொதுப் பண்பினை நிலை நாட்டவ்ே- உதவுகின்றது.
பழைமையையும் தூய்மையையும் பாதுகாத்துப் புதியன புனைதல் வேண்டும் என்ற இரசிகமணியின் உள்ளக் கிடக்கை வெண் சங்கு என்ற மகுடமே அச்சாவாக வெளிப்படுத்துகின்றது. மாதங்களில் மிகவும் புனிதமானது மார்கழி மாதம் என்பது நமது மரபு. அந்த மாதத்தில் வரும் திருவெம்பாவைக் காலத்தில் குளிரும் வைகறை இருளில், யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கெங்கும்' என்ற திருவாசகப் பாடலோடு வெண்சங்கும் ஊதப்படும் ஓசை நம் செவிகளிலே விழுந்தும் நம் மெய் சிலிர்க்கின்றது. அப்படித்தான் இந்த வெண்சங்கின் ஒசைக்குத் தனித்துவமான மகத்துவம் இருப்பதாகவே எனக்குப் படுகின்றது. .
இனி, இத்தொகுதியிலே இடம்பெறுங் கதைகளின் குணநலன்களைப் பார்ப்போம்.
முகப்புக் கதையான பிட்டு. தலைப்பிற்கு ஏற்ப, திருவெம்பாவை காலத்தில் வாசிக்கப்படும் திருவாதவூரடிகள் புராணத்தோடு ஆரம்பமாகின்றது. யாழ்ப்பான,க் கலாசாரம் புராண கலாசாரம் என்று கூறுவர். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் அதனைக் கந்தபுராண கலாசாரமென வலியுறுத்துவார். பண்டிதமணியின் நல் மாணாக்கரான இரசிகமணி புராண படனத்திற்கு இங்கு சிறுகதை அமைப்பில உயிரூட்டியுள்ளார். இந்தக் கதையிலே வரும் பொன்னம்மாக் கிழவி மறக்க முடியாத பாத்தி
ரமாகும். அவள் செம்மனச் செல்வியின் யாழ்ப்பான 'அவதாரம்' "நேற்று இரண்டு மூன்று பேர்தான் கேட்டார்கள். இன்று பத்துப் பதினைந்து பெரியவர்களும், பதினெட்டு இருபது குழந்தைகளும் இருக்கிறார்கள்." (பக்.19) என்று கூறுமிடத்தில், மறைந்து கொண்டு வரும் புராணப் படிப்பு இன்னும் எத்தனை காலத்திற்கு இருக்கப் போகிறது? எனக் கேட்காமற் கேட்கிறார். அவருடைய கருத்துப்படி யாழ்ப்பாணக் கலாசாரத்தின் அடிநாதமான புராணமும் அதன் வாசிப்பும் அருகி வருகின்றது என்ற மன அவசத்திலே போலும், புரானபடனக் காட்சியை மிக வரிவாக எழுதியுள்ளார். இலங்கை வானொலி நிலையத்தார் 1965ஆம் ஆண்டில் சிறுகதைப் போட்டியொன்று நடாத்தினார். அப்போட்டியிலே தெரிவு
- 11 -

Page 9
வெர்ைசங்கு செய்யப்பட்ட கதைகளுள் முதலாவது ஒளி பரப்பான பெருமை பிட்டு என்ற கதைக்கு உண்டு. வானொலி நேயர்களை மனதிற் கொண்டுதான் அதிகமான பாடல்கள் இக் கதையிற் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகின்றது. செம்மணச்செல்வி சிவபெருமானுக்கு பிட்டவித்துக் கொடுத்த புராணக்கதை பொன்னம்மாக்கிழவி வெள்ளையனுக்கு பிட்டு அவித்துக் கொடுத்த பழைய நிகழ்ச்சி: இன்று அவள் குழந்தைக்குப் பிட்டவித்துக் கொடுக்கும் சம்பவம்: . இம்மூன்று இழைகளையும் பிரிகள் சிலிம்பாமல் ஒரே முழுமையான கதையாக முறுக்கியுள்ளார். செம்மணச் செல்வி சிவபெருமானுக்குப் பிட்டவித்துக் கொடுத்துவிட்டு, அந்தி வா அளிப்பன் நின் கூலி என்றாள். ஆனால் பொன்னம்மாக்கிழவி, “காசை ஆரடா கேட்டா? நீ என்றால் வேலை செய்தாய். நானோ பிட்டுத் தந்தேன். காசைப் பத்தி இரண்டு பேருமே பேசக்கூடாது.” (பக்.25) என்று வெள்ளையனுக்குக் கூறுகிறாள். இந்த அன்பு தொழிலாளி - முதலாளி பிரச்சினைகளுக்கு அப்பால், கிராமத்தின் செழுமையிலே வளர்ந்தோங்கி நிற்கின்றது! இந்த அன்புப் பிணைப்பினால் இவ்விரு பாத்திரங்களும் புராணிகப் பாத்திரங்களுக்குச் சமதையான தெய்வீகம் பெறுகின்றன.
"கலைகளெல்லாம் கடவுளுக்காகச் சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என்ற ஒரு கொள் கைக் கும் , 'கலைகள் பொதுமக்களின் இரசனைக்குத்தான்’ என்ற பிறிதொரு கொள்கைக்கு மிடையில் நடைபெறும் மோதலை சமர்ப்பணம் என்ற கதையிலே காண முடிகிறது. முன்னைய கொள்கையை மனமார ஆதரிக்கும் ஆசிரியர், பின்னையதைப் பிரசாரத் தொனி மீற எதிர்க்கவுமில்லை. இக்கருத்துக்களைப் பாத்திரங்களின் இயல்புகளோடு இணைத்து விட்டு, இரசிகமணி ஒதுங்கி நிற்கிறார். காவடித் தாளத்திற்கு ஏற்றதாக அவர் சேர்த்துள்ள பாடல்கள் அவருடைய இரசனை வளத்திற்குச் சான்று. “ஏராஞ் சலாபமும்.” என்று தொடங்கும் பொழுது, மெளனமாக வாசித்துக் கொண்டிருக்கும் நமக்கு வாய் விட்டுப் பாட வேண்டும் என்ற உணர்வு மேலிடுகிறது. ஆயிரம் கட்டுரைகளால் நிலைநாட்டப் பட வேண்டிய தாளக் காவடிக் கலையின் மகத்துவத்தை ஒரு கதை மூலஞ் சித்திரித்து. இரசிகமணி வெற்றியும் பெறுகின்றார்.
"அறத்தாற்றின் இல்வாழ்க்கையாற்றின் புறத்தாற்றில் போய்ப் பெறுவதெவன்’ என்பது வள்ளுவர் வாக்கு, குடும்ப பாரத்தைக் கண்டு பயந்து துறவு தேடி ஒடுபவனை வள்ளுவர் நிறுத்தி, போய்ப் பெறுவது
ہے۔ 12 سے

வெண்சங்கு வென்? என்று கேட்கிறார். இந்தக் கருத்தைத் தொனிப் பொருளாகக் கொண்டது தொந்தம். 'ஊழிற் பெருவலியாவுள' என்ற குறளின் கருத்தும் அந்தச் சுருதியிலே தொற்றிக் கொள்ளுகிறது. இக்கதையின் பிரகரணம் 'உலகமளாவியது. முற்றிலும் வேறுபட்ட உவமைகள் விரவிய நடையைத் "தொந்தத்திலே காம்பீர்யமுடன் கையாளுகிறார். 'குலைநெரி தேங்காயாகக் கஷ்டப்பட்ட சாம்பசிவம் துறவியாகிச் சாரங்கனாக வாழ்ந்து மீண்டும் உலகத்திற்குள் பிரவேசிக்கும் பொழுது, அவனுக்கு அகப்படும் பெண் குழந்தையோடு ஆச்சிரமத்திற்குத் திரும்புகின்றான். தான் தூக்கி வந்திருக்காவிட்டால் குழந்தை இறந்திருக்கும் என்பது சாரங்கனின் விளக்கம். “.குழந்தை சாவதும் பிழைப்பதும் உன் கையிலா இருக்கிறது? அப்படியானால் அந்தத் தாயைப் பிழைக்க வைத்திருப்பாயே. நீ இந்தக் குழந்தையைத் தூக்கி வராதிருந்தால், அந்த வழியால் வரும் ஒரு செல்வச் சீமானின் கண்ணிற் பட்டு இராச போகத்தை இது அனுபவித்திருக்குமல்லவா? குருநாதரின் வினாக்களைக் கேட்டுச் சாரங்கன் அதிர்ச்சியுற்றான். சாத்திரங்களில் படித்தும் விளங்காத எத்தனையோ விடயங்களின் பொருள் அப்பொழுதுதான் புலப்படுவது போல் இருந்தது.’ (பக் 54) இந்த அதிர்ச்சிக்கு விLைபோல மேதை டால்ஸ்டாயின் ஒரு செருப்புக் கட்டியின் கதை அமைந்திருககிறது. நல்லார்வம் என்பது என்ன? தரமம் என்றால் என்ன? புரை தீர்ந்த நன்மையின் பொருள் என்ன? - இவை போன்ற பல பிரச்சினைகளை இக்கதை உள்ளடக்கியுள்ளது. பிரச்சினைக கதைகளைத் தமிழ் நாட்டிலேதான் எழுதுகிறார்கள் என்று மன மயக்கத்தில் உள்ளவர்களை. இக்கதை எழுப்பும் பிரச்சினையின் புதிரைக் கட்டவிழ்த்துப் பார்க்கும்படி சிபார்சு செய்கின்றேன்.
இத்தொகுதியிலே இடம்பெறும் மிகச் சிறிய கதையான தரிசனம் ஆழமான கருத்தொன்றினைப் பரிவர்த்தனை செய்கின்றது. உள்ளக்கோயில்' என்ற நல்லிலக்கியத்திற்கும். பருவமங்கையின் படுகொலை' என்ற போலியிலக்கியத்துக்குமிடையிற் போர. எது காலத்தை வெல்லவல்லது? பூசலார் கட்டிய உள்ளக் கோவிலா. காடவர்கோன் கட்டிய சிற்பக்கோவிலா மேன்மை மிக்கது என்றெழுந்த மோதல்! இதனைத் தீர்க்க நடராசப் பெருமானே கனவிலே தோன்ற வேண்டியவரானார். தரமறிந்து தமிழ்த் தொண்டியற்றும் பதிப்பாளருக்கும். நூற்பிரசுரத்தை வணிகமாக்கிக் கொண்ட பிறிதொருவனுக்கும் போட்டி! போட்டியைத் தீர்த்து வைக்கின்றார் சிவப்பிரகாசண்ார். போலிக்கும் உண்மைக்கும் நடக்கும் சத்திய யுத்தம் என்ற பிரகரண ஒலியே மேலோங்கி நிற்க வேண்டுமென்ற அவாவிலே. இக்கதையில்
- 178 -

Page 10
வெர்ை சங்கு உருவகக் கதை அமைப்பும் புகுந்து கொள்ள இரசிகமணி அனுமதிக்கின்றார். அத்துடன், அவர் பதினெட்டுப் பாடல்களினாற் சேக்கிழார். எனத் தொடங்கி, "..எனப் பல கோணங்களிலே, பல விமர்சகர்கள் உள்ளக் கோவிலின் சிறப்பை மக்கள் முன்வைத்தார்கள் (பக் 59 - 61) என்ற பந்தியை எழுதும் பொழுது இரசிகமணி இரசிகமணியேயாகி விட்டார். “பழைமையிற் காலூன்றிப் புதுமையைச் செய்து பார்த்தேன். புதுமை விரும்பிகள் புராணக் குப்பை என்கிறார்கள். வைதீகங்கள் "சேக்கிழார் பாடிய தெய்வ மாக் கதையைப பாட இவனுக்கு அருகதை உண்டா என்று கேட்கிறார்கள்.’ (பக் 58) என்ற இடத்திலே, இரண்டு வேறுபட்ட சக்திகள் எவ்வாறு ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தடை கற்களாக இருக்கின்றன எனச் சுட்டிக்காட்டும் வகை அற்புதம். இந்தக் கதையை வாசிக்கும் பொழுது சிவப்பிரகாசனார் என்ற பாத்திரத்தில் இரசிகமணி அவர்களுடைய உள்ளத்தையும், மனோதைரியத்தையும் என்னால் தரிசிக்க முடிந்தது. - ܝܪܬܘ
தரிசனத்தில் இலக்கியப் போலியை நம்முன் நிறுத்திய இரசிகமணி. சமுதாயத்தில் வெள்ளை வேட்டிக்காரராக வாழும் போலிகளை இனங்கண்டு அலை ஓய்ந்ததுவில் அறிமுகப்படுத்துகின்றார். சிவசுந்தரம்பிள்ளையின் எரியும் உள்ளத்திற்கு, வேலைக்காரச் சொக்கன் நாசூக்காக எண்ணெய் ஊற்றும் பகுதிகள் கலைத்துவமாக அமைந்துள்ளன. இக்கதையில் இரசிகமணியின் நகைச் சுவையும் இலேசாகப் புரையோடிக் கிடக்கிறது. சிவசுந்தரத்தின் உள்ளத்தில் அலை ஓய்ந்ததோ என்னவோ, போலியான இயந்திர வாழ்க்கைக்குள் கிராமங்களின் புனித பண்புகள் நசுக் கப்படுகின்றன என்று அங்கலாய்க் கும் இரசிகமணியின் உள்ளத்தின் அலைகள் ஒயவேயில்லை.
கூத்து என்னுங் கதை நனவோடை உத்தி முறையில் எழுதப்பட்டிருக்கிறது. பழைய கதை ஒன்றை புதிய உத்தியிலே எழுதுவதிற் கணிசமான வெற்றியும் பெற்றுள்ளார். கொட்டகைக் கூத்தின் ஆசாரம் முழுவதையும் இக்கதை விரிவாக அறிமுகப்படுத்துகின்றது. கலை ஆர்வம் பாராட்டத்தக்கதேயாயினும், வாழ்க்கையின் செழுமைக்குத் தேவையான முயற்சியை அந்த ஆர்வம் விழுங்கிவிடக் கூடாது என்பது இரசிகமணியின் கருத்தாகும். இதனை அடுத்த கதையான செம்மண்ணிலும் வலியுறுத்துகின்றார். உழுதுண்டு வாழும் கமக் காரனைக் கனம் பண்ணும் இரசிகமணியின் பண் பு
- 1蠱 -

வெண்சங்கு இக்கதைகளிலே துலங்குகின்றது. செம்மண் என்னும் படுதாவிலே பசுபதிக் கிழவன் என்ற அற்புத ஒவியத்தைத் தீட்டியுள்ளார். இக்கதை ஒப்சேவர்' பத்திரிகை அறிமுகப்படுத்திய கதைகளுள் ஒன்றாக ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. "..எனக்கு அது (பூவக்கல்லி என்னும் செம்மண் நிலத்துண்டு: எஸ்.பொ.) என் பிள்ளையளிலும் பெரிசடா அது என் ரை உயிரடா என் ரை சாம்பலைக்கூட அதுக்குள்ளைதான் புதைக்க வேணும்’ (பக்.95) என்று பசுபதிக் கிழவன் வேலுவிடம் கூறுகின்றான். இந்தக்கதை பத்திரிகையிலே பிரசுரமான காலத்தில், இந்தப் பகுதி யதார்த்தத்திற்கு முரணானது, ரசக் குறைவானது என்று சில முற்போக்கு விமர்சகர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை நான் அறிவேன். இரசிகமணியின் சிந்தனைச் செழுமையையும், பிறந்த இடமான செம்மண் மீது அழுங்குப்பிடியான பற்றுதலையும் அறிவதற்கு அந்த விமர்சகர்களுக்குப் பல்லாண்டு காலம் எடுத்தது. செம்மண் பிரசுரமாகிப் பல்லாண்டு காலத்திற்குப் பின்னரே பாரதரத்தினம் ஜவஹர்லால் நேரு காலமானார். அவர் தமது சாம்பல் வயல் வெளிகளிலே தூவப்பட வேண்டுமென்ற விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். நேருவின் விருப்பத்தை முற்கூட்டியே தன் பாத்திரமான பசுபதிக் கிழவனிடம் புகுத்தி, தன் மேதைமையை இரசிகமணி நிலை நாட்டியுள்ளார். வெறுந் தொழிலாளர் பிரச்சினைகளைப் பிரசாரஞ் செய்வதிலும் பார்க்க, மனிதத் தன்மை - மனித முயற்சி முதலியவற்றிற்கு உரிய மதிப்புக் கொடுத்து எழுதப்படுவதுதான் மக்கள் இலக்கியம்' என்ற புதிய விளக்கம் ஒன்று கூத்து, செம்மண ஆகிய கதைகளிலே படர்ந்து கிடப்பதைக் காண முடிகிறது.
கண் திறந்தது போன்ற கதையை இரசிகமணியைப் போன்று வேறு எழுத்தாளர் எவராலும் எழுத முடியாது என்பது என் கெட்டியான அபிப்பிராயமாகும். காலை எட்டு மணியளவில் தொடங்கி மத்தியானம் இரண்டு மணிக்குள் கதையை முடிக்கும் அழகே தனி, அந்தியேட்டிக் காட்சியை மிக நுட்பமாக வர்ணித்துள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் யாழ்ப்பாணத்தில் ஆதிக்கம் செலுத்திய புலவர்களை இக்கதையில் நேர்த்தியாக நையாண்டி செய்கிறார். பழைய சரமகவி ஒன்றை வைத்துப் பெயர் மாற்றஞ் செய்யத் தெரிந்ததுதான் இவர்களுடைய வித்துவம், ஆசிரியத் தொழில் பார்க்கும் இரசிகமணி, ஆசிரியர் வர்க்கத்தின் அவலங்களையும் இக்கதையிலே சித்திரித்துள்ளார்.
-- 15 سے

Page 11
வெண்சங்கு
ஒரு பிடி சோறு ஈழத்துச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றது. பின்னர் ருஷிய மொழியில் வெளிவந்த இலங்கைச் சிறுகதைத் தொகுதியிலும் இடம்பெற்றது. இப்பொழுது இந்தக் கதையை வாசிக்கும் பொழுது, Uலழரீ ஆறுமுக நாவலர் நான்காம் பால பாடத்தில் எழுதிய பகுதி ஒன்று என் ஞாபகத்திற்கு வந்தது. அந்தப் பகுதி வருமாறு:
"தொழில் செய்து சீவனஞ் செய்யச் சக்தியில்லாதவர்களாகிய குருடர் முடவர் சிறு குழந்தைகள் வியாதியாளர்கள் வயோதிகர்கள் என்னும் இவர்களுக்கும். ஆபத்துக் காலத்தில் வந்த அதிதிகளுக்கும் கஞ் சியாயினும் காய் ச் சி வார் ப் பியாது, அவர் களைத் துர்வார்த்தைகளினாலே வைதும். கழுத்தைப் பிடித்துத் தள்ளியும். அடித்தும் ஒட்டிவிடும் வன் கண்ணர்கள் சிலர். தொழில் செய்து சீவனஞ் செய்ய வல்லவர்களாகியும். சரீர புஷ்டியுடையவர்களாகியும் வியபிசாரம் பொய்ச்சான்று சொல்லல் சூது முதலிய பாதகங்களிலே காலம் போக்குபவர்களாயும் உள்ள சோம்பேறிகளுக்கு முகமலர்ச்சி காட்டிக் கும்பிட்டு. இன் சொற்சொல்லி, நெய், வடை, பாயசம், தயிர் முதலியவற்றோடு அன்னங் கொடுத்துப் பணமுங் கொடுக்கின்றார்கள்.”
ஆறுமுகநாவலர் வழிவந்த தமிழ் மரபில் நின்று. போலிச் சயாசாரங்களைச் சாடுகிறார். ஏழ்மை நிலையிலும் தன்மான உணர்ச்சி மரிப்பது கிடையாது; அந்த உணர்ச்சியிலே தான் மானுஷிகம் வாழ்கின்றது. அதனை இந்தக் கதையிலே காட்டுகிறார்.
இக்கதைத் தொகுதியின் மகுடக்கதை வெண்சங்கு. என்னை மிகவும் கவர்ந்த கதையும் இதுவேதான். எனவே, அந்தக் கதையின் சிறப்பினை அறியும் அலுவலை வாசகரின் சுய விசாரணைக்கு விட்டு விடுகின்றேன்.
இரசிகமணியின் வசன நடைக்கும். என் வசன நடைக்கும் எவ்வளவோ வேறுபாடுகள் உண்டென்பதைத் தமிழ் அன்பர்கள் அறிவார்கள். அவருடைய வசன நடை பற்றிய என் விமர்சனத்தைப் புத்தி பூர்வமாகத் தவிர்த்துள்ளேன். இருப்பினும், அவருடைய வசன நடைபற்றி 'தீபம்' ஆசிரியர் நா.பார்த்தசாரதி 1963ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரையின் பகுதியை வாசகர் அறிந்து கொள்வது நல்லது. அரு ருெமாறு:
- 16 -

வெண்சங்கு
"கனக. செந்திநாதன் அலட்சியமாகவும் - இணையில்லாத தைரியத்துடனும் ஒரு கதையை எடுப்பாகத் தொடங்கும் முறை எனக்கு மிகம் பிடிக்கும். அவருடைய அந்த Audacity போற்றத்தகுந்த முரட்டுத் தனத்தை நான் மிகவும் இரசித்துப் படிப்பேன். புதுமைப்பித்தன். அழகிரிசாமி, இரகுநாதன், ஜெயகாந்தன் போன்ற தமிழகத்து எழுத்தாளர்களிடம் இந்த Audacity எப்படி இலக்கியத்துக்கு வலுவளிக்கிறதோ, அநுகூலமாக இருக்கிறதோ அப்படியே கனக. செந்திநாதனிடமும் வய்த்திருக்கிறது. ஒரு பிடி சோறு என்ற தமது சிறந்த கதையை அவர் தொடங்குகிற அழகைப் பாருங்கள்:
யாழ்ப்பாண மாதா பலடி என்று பெயர் கேளாமல் - சத்திர சிகிச்சையோடு பெற்றெடுத்த நொண்டிக் குழந்தை தொண்டைமானாறு. கடலிலேயிருந்து வெட்டப்பட்ட அந்த உப்புக்கழிக்கு 'ஆறு என்று பெரிட்டதே விசித்திரம். அதனிலும் விசித்திரம் அந்தக் கழிக்கரையிலே முருகப் பெருமான் இருக்க எண்ணங் கொண்டது என்று ஆசிரியர் கதையைத் தொடங்குகிறார். ஆசிரியர் தொண்டைமான் ஆற்றைப்பற்றி வருணிக்கும் இடத்தில் ஆசிரியருடைய குத்தலும் - குறும்புத்தனமும் - நகைச் சுவையும் - துணிவும் மிக நன்றாக வாய்த்திருக்கின்றன.”
இரசிகமணி கனக - செந்திநாதன் இத்தொகுதியின் மூலம் ஈழத்துச் சிறுகதை முயற்சிகளில் மரபு நிலையில் ஒலிக்கும் இனிய நாதத்தை வரவேற்கத் தகுந்த நாதத்தை - சேர்க்கிறார். ஈழத்தில் இதுவரை வெளிவந்துள்ள நாற்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகளுள் நம் நாட்டின் நல் முயற்சிகளைப் பிரதி பலிக்கும் ஐந்து சிறந்த சிறுகதைத் தொகுதிகளைத் தெரிவு செய்வதானால், அவற்றுள் வெண் சங்கும் நிச்சயமாக ஓர் இடத்தைப் பெறும்.
எல். டெரன்னுத்துரை
LD Lasas61T). 20.10.1967.
= 147 مت

Page 12
வெண்சங்கு
உள்ளே.
பக்கம்
guojiju600TLD 03 முகவுரை 04 - 05 முன்னீடு a 06 - 17 பதிப்புரை ബ 19 பிட்டு 21 - 31 aLDju600TLb 32 - 39 தொந்தம் 40 - 49 தரிசனம் 50 - 53 அலை ●リ 54 - 62 கூத்து 63 - 70 செம்மண் 71 - 77 கண் திறந்தது 78 - 87 வெண் சங்கு 88 - 98 ஒரு பிடி சோறு 99 - 110
- 18 -

வெண்சங்கு
பதிப்புரை
U lsp. இலக்கிய வட்டத்தின் பிதாமகர் இரசிகமணி கனக. செந்திநாதன் ஆவார். அவருடைய சிறுகதைத் தொகுதியான "வெண்சங்கு யாழ் இலக்கிய வட்டத்தின் ஏழாவது நூலாக வெளிவந்தது. இன்று இரண்டாம் பதிப்பாக மீளவும் வெளியிடப்படுகின்றது. வடக்கின் அபிவிருத்தி, புனர் வாழ்வு, புனரமைப்பு மற்றும் தமிழமுலாக் கல் அமைச் சர் கெளரவ டக்ளஸ் தேவானந்தா யாழ் இலக்கிய வட்டத்திற்கு வழங்கிய நூல் வெளியீட்டு ஊக்குவிப்பு நிதியையும் பயன்படுத்தி இந்நூல் வெளிவருகின்றது. அமைச்சர் நன்றிக்குரியவர். அவ்வாறு வெளிவருகின்ற பதினொரு நூல்களில் வெண்சங்கு ஒன்றாகும்.
படைப்பிலக்கியத்திலும் விமர்சனத்துறையிலும் கனதியான பங்களிப்பினைத் தந்திருப்பவர் கனக. செந்திநாதனாவார். சிறுகதைத்துறையில் அன்னாரின் இடத்தினை எவரும் மறுப்பதற்கில்லை. யாழ்ப்பாண கலாசாரத்தைத் தன் சிறுகதைகளில் ஆவணமாக்கிய பெருமகன் அவர் . அவருடைய 6J 60D 60T LU சிறுகதைகளையும் தேடிப் பெற்று அச்சு வாகனமேற்ற யாழ் இலக்கிய வட்டம் முயலும்,
புத்தொளி ந.சிவபாதம் பொருளாளர், யாழ். இலக்கியவட்டம்.
ஆனைக்கோட்டை
O. 2.2OO
- 19 سے

Page 13
ܣ 20 -
வெண்சங்கு

வெண்சங்கு
Lii(b
புராண படனம் ஆரம்பமாயிற்று. இந்தப் புராண படனம் மார்கழி மாதத்துத் திருவெம்பாவைக் காலத்தில் உச்சக் கட்டத்தை அடையும். சாதாரண கோவில்களிற் கூடத் திருவாதவூரடிகள் புராணம் Luig.d585 JU(Std.
மாஞ்சோலைக் கிராமத்து அம்பாள் ஆலயமும் இதற்கு விதிவிலக்கல்ல.
கிழக்கு வாயிலையுடைய அந்தக் கோவிலில் பலிபீடத்துக்கும் தேவசபைக்கும் நடுவே உள்ள சிறிய மண்டபத்தில் புராண வாசிப்பு நடைபெறப்போகிறது.
சிங்கப்பூர் பென்சன்காரர் - பொன்னம்பலம் - குத்துவிளக்குக்குப் பக்கத்தில் தென்திசையில் உட்கார்ந்து புத்தகத்தை விரிக்கிறார். உள்ளுர்ப் பாடசாலையின் உபாத்தியார் - சிற்றம்பலம் - வடக்குப் பக்கத்திலே கிழக்குப் பார்த்த முகமாக இருந்து கர்ப்பூரத்தைக் கொளுத்துகிறார்.
தேங்காய் உடைக்கப்படுகிறது; காப்புப் பாடல் ஆரம்பமாகிறது.
"பவளமால் வரையி னிலவெறிப் பதுபோற்
பரந்தநீற் றழகுபச் டம்பிற்
றிவழமா துடணின் றாடிய பரமன்
சிறுவனைப் பாரதப் பெரும் போர்
- 21 -

Page 14
வெண்சங்கு தவளமா மருப்பொன் றொடித்தொரு கரத்திற்
றரித்துயர் கிரிப்புறத் தெழுதுங் கவளமா களிற்றின் றிருமுகம் படைத்த
கடவுளை நினைந்துகை தொழுவாம்”
பாடுகிறவரதும் உரைகாரரதும் குரல்கள் ஒன்றாய் இணைந்து கேட்போரது சிந்தையை ஒரு முகப்படுத்தி வேறோர் உலகத்துக்கு அழைத்தச் செல்கிறது.
அப்போதுதான் பொன்னம்மாக் கிழவி அங்கு வந்து சேர்ந்தாள்.
ஒட்டகத்தின் முதுகு போல் வளைந்த கூனல் முதுகைச் சாத்தி இருப்பதற்கு வசதியாகச் சுவர்ப் பக்கத்திலே வந்து, ஊன்றி வந்த பொல்லைப் பக்கத்திலே வைத்து விட்டுக் குந்துகிறாள். அவள் வாய், அம்மாளாச்சி தாயே! என்று முணுமுணுக்கிறது.
சிங்கப்பூர் பென்சன்காரர் முதல் நாள் விட்ட இடத்திலிருந்து வாசிப்பைத் தொடங்குகிறார். -
"இரும்பசியுடையேள் அன்னே இனிய பிட்டளிப்பை
யாகில் குரம்பை கொண்டடைப்பன் யானே கோலறை முழுதும் என்ன” என்ற பாடலை ஏற்ற இராகத்தில் வாசிக்கிறார்.
பொன்னம்மாக் கிழவி பாட்டைக் கிரகித்தபடியே சுற்றுமுற்றும் பார்க்கிறாள். நேற்றைய நாளிலும் பார்க்க இன்று பெண்களும் குழந்தைகளும் அதிகமாகத் தென்படுகிறார்கள். அதிகமாக என்றால் நூறோ இரு நூறோ அல்ல. நேற்று இரண்டு மூன்று பேர் தான் கேட்டார்கள். இன்று பத்துப்பதினைந்து பெரியவர்களும் பதினெட்டு இருபது குழந்தைகளும் இருக்கிறார்கள். அவ்வளவுதான்!
அவளுக்குக் கண்ணில் நீர் துளிர்த்தது.
அவள் இருபத்தைந்து வயதுக் கட்டழகியாய் இருந்த காலத்தில் "அவரோடு கூடி வந்து பிட்டவித்துக் கொடுத்து. ஜாம், ஜாம்' என்று இந்தப் பிட்டுத் திருவிழாவ்ை நடாத்திய காட்சி அவள் மனக்கண்முன் விரிகிறது.
ܚ ܲ22 ܣ

வெண்சங்கு
ஆசிரியர் சிற்றம்பலம் உரைசொல்லத் தொடங்கி விட்டார்.
"கூலியாளராக வந்த எம்பெருமான், பிட்டு விற்றுச் சீவிப்பவளாகிய அந்தச் செம்மனச் செல்வியென்னும் நரை மூதாட்டியைப் பார்த்து, தாயே! நானோ அதிக பசியுடையவனாக இருக்கிறேன். நீ அவித்த பிட்டினை எனக்கு உண்ண அளித்தாயானால்?."
உரை சொன்னவர். வாசித்த வரிக்கேற்ற பொருளை விரித்துக் கூறி அவ்வளவில் நிறுத்துகிறார்.
வாசித்தவர், குரம்பை கொண்டடைப்பன் யானே' என்று ஏற்ற இராகத்திலே பாடி நிறுத்துகிறார்.
பொன்னம்மாக் கிழவி பழைய காட்சியை மறந்து கதையில் ஒன்றி விடுகிறாள்.
அவள் மனக்கண் முன் வைகை ஆறு பெருகுகிறது. சனங்கள் அல்லோலப்பட்டு அரண்மனையை நோக்கி ஓடுகிறார்கள். அரிமர்த்தன பாண்டியன் வாதவூரரை அழைத்து, இருக்கை நல்கி, செய்த பிழையைப் பொறுத்து வைகை ஊர் கொளாமல் காக்க வேண்டுகிறான். வாதவூரரே தலைமை தாங்கி ஏவலாளர்களை ஏவி அரச கட்டளையை நிறைவேற்றுகிறார். வைகைக் கரை பங்கு கொடுக்கப்படுவதையும் அவள் அதை அடைக்க முடியாமல் தவிப்பதையும் அகக் கண்ணால் நோக்குகிறாள்.
கிழவியின் கண்களில் இருந்து நீர் தாரைதாரையாக ஒழுகுகிறது. ஆம்; அவள் செம்மனச் செல்வியேயாகிவிட்டாள்.
பென்சன்காரர் அடுத்த பாடலுக்குப் போய்விட்டார். ஆனால் பொன்னம்மாக் கிழவிக்கோ? தன் வாழ்க்கையோடு பிணைந்து விட்ட சோக நிகழ்ச்சி.
"கூற்றடுங்கமலபாதர் குறுந்துணிக்கரியசீரை ஏற்றி டும் பிட்டு வாங்கி” என்ற அடுத்த பாட்டு வாசித்து நிறுத்தப்படுகிறது.
- 28 =

Page 15
வெண்சங்கு மணிகள் ஒலிக்கின்றன. மேளம் முழங்குகிறது. சங்கு ஊதப்படுகிறது.
மூலஸ்தானத்திலும் 'உற்சவமூர்த்தி இருக்கும் இடத்திலும் பிட்டு வைத்து நைவேத்தியம் செய்கிறார் குருக்கள். கூடியிருந்த சிறு கும்பல் 'அம்மாளாச்சி அரோகரா’ என்று ஏக காலத்தில் கத்துகிறது ஒன்பது வயதுப் பையன் ஒருவன் அழுகிற தன் தம்பியிடம், "இனி ஐயர் பிட்டுத் தருவார், வாங்கிக் கொண்டு வீட்டை போவோம்" என்று அரவணைப்பது சிறிது உரத்த தொனியிற் கேட்கிறது. பொன்னம்மாக் கிழவி எழும்பவுமில்லை; அரோகராப் போடவுமில்லை. அவள் கனவு நிலையிலிருந்து விடுபடவேயில்லை. அவள் தேகம் நடுங்குகிறது. "ஐயோ, வெள்ளம் வருகிறதே. அடைப்பார் யாருமில்லையே” என்று கத்துவது சிலருக்குக் கேட்கிறது. "பாவம் கிழவி தன் மகளைப் பிரிந்ததிலிருந்து இப்படித்தான் ஏதாவது அலட்டுகிறது என்கிறாள் ஒருத்தி மற்றொருத்தியிடம்.
கிழவி செம்மனச்செல்வியின் துயரம் போன்ற ஒரு துயரக் கனவில் மூழ்கிவிட்டாள். சென்ற வருடம் மார்கழி மாதத்தில் நடந்த சம்பவம் அது. அதுவும், வெள்ளம் வந்த சம்பவந்தான்.
வானநாயகன் பூமாதேவியை நெடுநாட் பிரிந்திருந்து திடீரென்று ஒரு நாள் தன் கரம் நீட்டித்தழுவியது போல மழை காற்றோடு சேர்ந்து சோனா வாரியாகப் பெய்கிறது. கறிமுருங்கைகள் எல்லாம் "படார், படார்” என்று முறிகின்றன. தொழுவத்தில் நிற்கும் மாடும் கன்றும் குளிரினால் கொடுகுகின்றன. வாழைகள் தசை சாய்ந்து பூமாதேவியை முத்தமிடுகின்றன. காவோலைகளும் பனைமட்டைகளும் யுத்தகளப்பூமி போல வளவுக்குள்ளே காட்சி கொடுக்கின்றன.
பொன்னம்மாக் கிழவியின் குடிசை தெருவோரத்தில் சிறிய மேட்டு நிலத்தில் இருந்தது. அவளுக்குத் தொலைவில் வெள்ளம் வந்தாலும் தன் குடிசையை ஒன்றுஞ் செய்யாது என்று எண்ணம் ஆனால், அப்போது பெய்த "பேய்மழை அவளது எண்ணத்தில் மண்ணைப் போட்டுவிட்டது. தெருக்கானில் ஓடிய வெள்ளம் எங்கேயோ தடை பட்டுத் தேங்கி அவள் குடிசையின் வாயிலில் தளம்பி "இப்பவோ பின்னையோ’ என்று உட்புகக் காத்துக் கிடப்பது போலக் காட்சியளித்தது. w
= 24 =

வெர்ைசங்கு .
அவள் கத்தத் தொடங்கி விட்டாள். அவளுக்கு இருக்கிற உடைமைகளையெல்லாம் அந்தக் குடிசை ஒன்று தான். அதிலும் வெள்ளம் புகுந்து சேதப்படுத்துவதென்றால்? "ஐயோ! வெள்ளம்! வெள்ளம்! என் சட்டி போகப்போகிறதே! பிட்டவிக்கும் பானை நீத்துப்பெட்டி, குண்டான் எல்லாம் வெள்ளத்தால் அள்ளுப்படப் போகின்றனவே, ஐயோ! தெய்வமே! இதற்கு நான் என்ன செய்யப்போகிறேன்." என்று கத்தினாள்.
அப்போது தான் அவன் வந்தான் கண் கண்ட தெய்வம் போல வந்தான். வெள்ளையன் என்ற பெயர் கொண்ட அவனைக் கண்டதும் கிழவிக்கு உச்சி குளிர்ந்தது. அவன் எதுவும் பேசவில்லை. தான் கொண்டு வந்த பிக்கர்னால் தெருவைக் கொத்தி தேங்கி நின்ற வெள்ளத்தை மறுபக்கம் விடப்பெருமுயற்சி செய்தான். அவன் கூலி பேசி நேரத்தைப் போக்கவில்லை. ஆருமற்றவருக்குத் தான் செய்ய வேண்டிய உதவி - தன் கடமை - என்று எண்ணிச் செய்யத் தொடங்கி விட்டான். வைரம் பாய்ந்த அவனது தேகத்தில் மழைத்தண்ணி பட்டுச்" சிதறுகிறது. அவன் குளிரால் நடுங்கவோ கொடுகவோ இல்லை. பொன்னம்மாக் கிழவி அவன் வயிற்றைப் பார்க்கிறாள். அவளுக்கு விட்யம் புரிகிறது. தாயில்லாத் தன் குழந்தைக்கு ஏதாவது வாங்கிச் சாப்பிடக் கொடுக்கவோ. ஒவ்வொரு நாளும் தான் அவித்துக் கொடுக்கும் பிட்டை வாங்கிக் கொண்டு போகவோ அல்லது தன் பசிக்கு ஏதாவது வாங்கவோ தான் அவன் வந்திருக்க வேண்டும். ஆனால், பிக்கானும் கையுமாக வந்த நிற்கிறானே எதுவாயிருந்தாலும் அவ்னுக்குப் பசி -
அந்தக் காற்றிலும் மழையிலும் நடுங்குங்கரங்களால் அவள் பிட்டவிக்கத் தொடங்கிவிட்டாள். பெரும் போராட்டத்திற்குப் பிறகு அடுப்புப் புக்ைகிறது. இனி என்ன? பிட்டு அவித்து முடிந்த மாதிரிதான்.கிழவிக்கு அது ஒரு நிமிட வேலை. ஆண்டாண்டாய்ப் பழகிய கை. வேலை பரபரவென்று நடக்கிறது.
வெள்ளையனும் கற்களைப் பெயர்த்து, தடைகளை எல்லாவற்றையும் நீக்கி, சிறிய பூண்டுகளைக் கூடக் கொத்தி எறிந்து. வெள்ளம் ஓடுகின்ற அழகை இரசித்து கிழவியின் குடிசையின் ஒதுக்குப் புறத்திலே வந்திருந்து கொண்டே “கமக்காறிச்சி எப்படி வேலை?" என்று கேட்டான்.
- 25 -

Page 16
வெண்சங்கு "பொடியா, உன் வேலைக் கென்ன? இன்னும் அஞ்சு நிமிடத்திலை என் வேலையையும் பாரன்" என்கிறாள் கிழவி.
“எனக்குத் தெரியும் கமக்காறிச்சி? நீ பிட்டுத்தான் அவிப்பாயென்று. இந்தக் குளிரிலை பிட்டுத் தின்றால் எப்படி இருக்கும் தெரியுமே?”
கிழவிக்கு ஒரு நிமிடம் ஒரு யுகம் போலப்படுகிறது. அவன் பசிக்கு உடனே பிட்டைக் கொடுத்து விட வேண்டும் என்பது அவள் பரபரப்பு. பானையில் தண்ணிர் வடிகிறதா என்று அவள் வைத்த சண் வாங்காமல் பார்த்துக்கொண்டேயிருக்கிறாள்.
அவன் பேச்சுத் தொடருகின்றது.
"ஒருக்காலும் இல்லாத மழை கமக்காறிச்சி. விடும் விடும் எண்டு பார்த்தன். விடவில்லை. தோட்டத்துக்குப் போய் மாடு கண்டுகளை அவிழ்த்துக் கொண்டு வந்து எங்கடை அண்ணன்மார் கோயிலுக்கை விட்டு விட்டேன். பாவம். வாயில்லாச் சீவன்களை முதலிலை பார்க்க வேண்டும். வீட்டை போனேன். என்ரை ஆத்தை கத்தத் தொடங்கிவிட்டுது. கமக்காறிச்சியின்ரை வீடு என்ன பாடோ ஒடடா, ஒடடா எண்டு. அதுதான் பிக்கானையும் எடுத்துக்கொண்டு ஓடி வந்தனான்."
தன்னுடைய பேரக் குழந்தை பசியினர்ல் கத்துவதையும். தனக்கு நல்லாகப் பசி பிடுங்குவதையும் அவன் சொல்லவில்லை. கிராமத்துத் தொழிலாளியின் தன்மானம் அப்படிப்பட்டது.
கிழவி குண் டானை வெளியே எடுக்கிறாள். நீத்துப் பெட்டியிலிருந்து ஆவி பறக்கிறது. பிட்டின் வாசனை மூக்கைத் துளைக்கிறது.
அவள் ஓர் ஒலைப் பெட்டியில் பிட்டைப் போட்டு அவனுக்குக் கொடுக்கிறாள். "நீ தின்றுவிட்டு அந்தக் குஞ்சுப் பொடியனுக்கும் கொண்டு போ” என்கிறாள்.
ஆனால், அவன் உண்ணவில்லை. "நான் வீட்டிலை கொண்டு போய் தின்னுகிறன், கமக்காறிச்சி. இந்தப் பிட்டுக்கு காசு நாளைக்குத் தாறேன்."
سے 36ھ میں،

வெண்சங்கு
"காசை ஆரடா கேட்டா? காசுக்காகவா இந்த மழையிலையும் குளிரிலையும் பிட்டவித்தேன். இந்த மழையிலை வேலை செய்து என்"ை குடிசையைக் காப்பாத்தி விட்டியே சிவபெருமான் கூட பிட்டுத் தின்றுவிட்டுத்தான் வேலை செய்தார். அவராலை கூடப் பசி பொறுக்க முடியவில்லை. நீ என்றால் வேலை செய்தாய். நானோ பிட்டுத் தந்தேன். காசைப் பத்தி இரண்டு பேருமே பேசக்கூடாது."
கனவு நினைவில் இருந்து கிழவி கண்ணை விழிக்கிறாள். அப்போது "பேத்தி! இந்தா நைவேத்தியம்” என்று குருக்கள் நீட்டுகிறார். பொன்னம்மாக் கிழவி பக்கத்தில் கிடந்த வாழையிலையைக் கிழித்து சிறிது பிட்டை தன் அருகில் வைத்துக் கொள்ளுகிறாள். பிட்டை வாங்கிய கையோடு பலர் அவசரம் அவசரமாக வீட்டுக்குப் போகப் புறப்படுகிறார்கள். வாசிப்பவரும் உரை சொல்பவரும் நாலைந்து 'கிழடுகட்டைகளும், மூலஸ்தானத்து 'அம்மாளும், தூண்களும், குத்துவிளக்கும் தான் மிச்சம்.
பொன்னம்மாக் கிழவிக்கு வீட்டு வேலை ஒன்றுமில்லை. 'போறவழிக்குப் புண்ணியமாக புராணத்தையாவது கேட்போம் என்று வந்தவள் அவள் இருப்பிடத்தை விட்டு அவள் அசையவேயில்லை.
பென்சன்காரர் முன் வாசித்த பாடலையே மறுபடியும் ரவாசிக்கிறார்.
"கூற்றாடுங் கமலமலர் குறுந்துணிக்கரிய சீரை ஏற்றிடும் பிட்டு வாங்கி இன்புற அமுது செய்து மாற்றாரும் பசியை யன்னே மாற்றினை இனிப்போய் வைகை ஆற்றில்நின் கூற்றிலுண்டாம் அருங்கரை அடைப்பன் என்றார்"
வாசிப்பு முடிகிறது. பாடலைப் பொருளுக்கேற்பப் பிரிக்கிறார். 'கூற்றடுங் கமலபாதர்' என்று சிங்கப்பூர்ப் பென்சன்காரர் இராகத்தோடு நிறுத்தியதும், ஆசிரியர் சிற்றம்பலம் அதே இராகத்தில் "மார்க்கண்டேய முனிவரின் பொருட்டு இயமனை உ ைதி தருளியவராகிய அழகரிய திருவடிகளையுடைய சிவபிரானென்னுங் கூலியாளர்" என்று பொருள் கூறுகிறார். அருமையாக அவள் கூறிய பொருள் கிழவியின் செவிகளில் அரைகுறையாகவே விழுகிறது.
- 27 ܗ

Page 17
வெண்சங்கு வெளியே கூக்குரல் பெருஞ்சத்தம் குழந்தைகளின் "அடிபிடி!
Tagu JT, எனக்குப் பிட்டுத்தரவில்லை. அவன் வாங்கினவன். பிறகும் வாங்குகிறான்" - ஒரு குழந்தையின் முறையீடு இது.
- “இவன் என் தலைக்கு மேலாலை கையை நீட்டி என்ரை பிட்டை வாங்கிப் போட்டான்". கட்டைப் பையனின் புகார் இப்படி
”நெடுக அவனுக்குத்தான் கொடுக்கிறீர்? எங்களுக்கும் கொஞ்சமாவது பிட்டுத் தாருங்கள்’ பிறிதொரு குரலின் கெஞ்சல்.
"எல்லாம் முடிந்து விட்டது. நாளைக்கு வாருங்கள். கடலையும் வாழைப்பழமும் தருகிறேன்” என்று சொல்லியபடியே அவசரம் அவசரமாகத் தட்டத்தில் இருந்த சிறிது பிட்டை யாரோ ஒரு குழந்தையின் கையிலே தட்டிக் கொட்டிவிட்டு, கிழவி ஒருத்தி நீட்டிய அர்ச்சனைப் பணத்தில் குறியாகத் திரும்புகிறார் குருக்கள்.
**6JFTIT, (BLITT (85 JITLD.”
"இல்லை. எனக்குப் பிட்டு வேணும்."
"வீட்டை வாடா அவிச்சுத் தாறேன்."
“எனக்கு இப்ப இங்கே பிட்டு வேணும்."
படார், படார்’ என்று குழந்தைக்கு அடி விழுகிறது. அதன் அலறல் கோவில் முழுவதும் துல்லியமாகக் கேட்கிறது.
"ஆத்தை எனக்குப் பிட்டு வேனும் சலிப்பு பின்பும் அதே குழந்தையின் கதறல்.
கதையிலே இலயித்திருந்த டொன்னம்மாக் கிழவிக்கு கதறல் கேட்கிறது அவளுக்கு அது கேட்டுப் பழகிய குரலாகப்படுகிறது. அவள் பிட்டையும் பொல்லையும் எடுத்துக் கொண்டு புறப்படுகிறாள்.
நன்று நன்றின்னுமன்னே நயந்து பிட்டளிப்பையாகில் என்ற அடுத்த பாடலைப் பென்சன்காரர் பாடுவது அவள் காதிலே பட்டதும்
صے 28 سے

வெலும் சங்கு படாததுமாக விழுகிறது. அவன் கோவில் முகப்பிலே வந்து பார்கிறாள். வெள்ளையனின் அந்தக் குஞ் சுப் பையன் தான் அழுது கொண்டிருக்கிறான். அவனுக்கும் ஐந்தாறு பையன்களுக்கும் பிட்டுக் ଅର୍ଚ ଶ0) l ଅନ୍ତି 85 ରf ଗଠି କ୍ଷେ) ର0. விபரம் தெரிந்த சிறுவர் கள் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால் விபரம் தெரியாத பிஞ்சு. குழநதை தன் மழலைமொழியால் பிட்டுக் கேட்டதற்கு வெள்ளையனின் தாய்- கறுப்பி - அடித்துக் கொண்டிருக்கிறாள். கிழவிக்குத் தன் பேரக்குழந்தையை யாரோ அடிப்பது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறது. அவள் தன் முழுப்பலத்தையும் சேர்த்து “கறுப்பி! அடியாததையடி குழந்தைக்கு” என்று உரப்புகிறாள்.
குழந்தை திரும்பிப் பார்க்கிறது.
"பாட்டி, பாட்டி பிட்டு பிட்டு" என்று கத்திக் கத்திக் குழந்தை ஓடிவருகிறது.
"உனக்குத்தானே மேனே கொண்டு வந்தனான்? இந்தா தின், புட்டு' என்று ஆதரவோடு கொடுக்கிறாள்.
குழந்தை ஆசையோடு தின்னுகிறது. சிறிது தின்ற பின்பு துப்புகிறது.
“ஏண்டா. துப்புகிறாய்?”
“இது கூடாது பாட்டி,” என்கிறது கொச்சை மொழியில் குழந்தை பொன்னம்மாக்கிழவியும் மென்று பார்க்கிறாள். பாதி அவிந்தும் பாதி அவியாததுமாகப் பிட்டு இருக்கிறது.
சுவாமிக்கு நைவேத்தியம் செய்யும் பிட்டைக் கொஞ்சம் கவனமாக அவிக்கக் கூடாதா? ஆனாலும், "சுவாமிக்கு வைத்த பிட்டை கூடாதென்று சொல்லக் கூடாது' என்று குழந்தைக்குச் சொல்கிறாள். குழந்தை மறுபடியும் ”பாட்டி. பிட்டுவேனும்" உன்ற சிணுங்குகிறது.
"வாடா, வீட்டை போவோம். வீட்டிலை நல்ல பிட்டாய் அவித்துத்
தாறேன்’ என்கிறாள் அவள். குழந்தையின் கையைப்பிடித்தபடி பொன்னம்மாக்கிழவி நடக்க ஆயத்தமாகிறாள். கறுப்பி ஓடி வந்து
குழந்தையைத் துாக்குகிறாள்.
- 29 - -

Page 18
வெண்சங்கு "கமக்காறிச்சி செல்லம் குடுத்து இது கெட்டுப் போச்சு. எந்த நாள் பார்த்தாலும் எழும்பின நேரந்தொட்டு "புட்டு, புட்டு என்ற கத்தியபடி. நான் ஆரட்டைப் போறது? இண்டைக்குக் கோயிலிலை குடுக்கினம் என்று கேள்விப்பட்டு இங்கை வந்தேன். இங்கையும் தந்தால் தானே? இந்தக் கூப்பன் காலத்திலை அவையையும் ஏன் தான் குறைசொல்லுவான்?”
"ஏன்ரி கறுப்பி புறுபுறுக்கிறாய்? நான்தான் இவனுக்கு எப்போதும் பிட்டுக் கொடுக்கிறேனே? நீயும் வெள்ளையனும் கல்லடிக்கப் போய் விடுவியள். இவனை யார் வளர்த்தது? இவன்ரை தாயும் பெத்த வீட்டுக்கை செத்துப் போய்விட்டாளே. பாவம் தாயில் லாப் பிள்ளையென்று கொஞ்சம் செல்லம் கொடுத்திட்டேன்."
"என்ன கமக்காறிச்சி எனக்கு இது தெரியாத கதைபோலப் புதிதாய்ச் சொல்லுது எண்டாலும் இனிமேல் அடிச்சுப் பயப்படுத்தி வளக்கவேணும். குழந்தைகளுக்கு செல்லம் கூடாது. பணக்கார வீட்டுப் பிள்ளையஸ் எப்படி யெண்டாலும் வளரலாம். எங்கடை பொடியள் அப்பிடி வளரலாமோ? கமக்காறிச்சி, இன்றுமேற்பட்டு இவனை உங்கடை வீட்டை விடேன். கல்லடிக்கிற இடத்துக்கு நானே கொண்டு போவேன். நீங்க குடுக்கிற செல்லத்தைப் பார்த்து ஊரான் எல்லாம் சிரிக்கினம். கமக்காறிச்சிக்கு விசள் என்று கூடச் சொல்லகினம்.'
பொன்னம்மாக்கிழவிக்கு கறுப்பியின் இந்த வார்த்தைககள் ஆவேசத்தைக் கிளப்பி விட்டன அவள் உருத்திரமூர்தியானாள். "என்னடி சொன்னாய் நீ? வெள்ளையன் செய்த உதவிக்கு இந்தக் குழந்தைக்கும் பிட்டுக் கொடுத்து வளர்க்கிறேன் என்று நினைக்கிறாய் நீ இல்லைடி இல்லை. எனக்கும் ஒரு பெம்பிளைப்பிள்ளை இருந்து இருபத்தொரு வயதிலை செத்துப் போச்சே அதுவும் கலியாணம் செய்து ஒரு பிள்ளையும் பெத்தால் ஆசையாய் வளர்ப்பேன் என்று நினைத்தேன. முடியவில்லை. இந்தத் குஞ்சுப் பொடியனைக் காணும் போதெல்லாம் அந்த நினப்புத்தான். வருகுது. அந்த நினைப்பிலதான் பிட்டுக் கொடுக்கிறேன். வளாக்கிறேன். ஊரில் ஆட்கள் விசர் என்று சிரிக்கினம் எண்டியே சிரிக்கட்டும்; சிரிக்கட்டும். எனக்கென்ன? உவையே என்னைத் துாக்கிச் சுடப்போகினம்? எனக்காக அழப்போகினம்? என்னுடைய கையாலை பிட்டுத்தின்ற நீங்கள்தானே சுடப்போறியள் உண்மையாய் அப்போறியள் ஏன்டா உன் ஆத்தை உன்னை இனிமேல் என்ன ட்டை
ܚ 809 ܣܘ

வெண்சங்கு விடமாட்டாளாம். நீயும் அப்படியே அவள் சொல்லைக் கேட்டு நின்று விடுவாயா? நிண்டா அவ்வளவுதான். பிட்டுக்காரக் கிழவி அடுத்த நாள் செத்தே போய்விடுவாளடா."
கறுப்பியின் கண்கள் கலங்கின. இப்படியும் ஒரு மனுஷப்பிறவி இருக்க முடியுமோ? என்று உருகுகிறாள்.
வீடு வந்து விட்டது. கிழவி பரபரவென்ற அடுப்பை மூட்டினாள். மாவைக் குழைத்து நீத்துப் பெட்டியில் வைத்துக் குண்டானால் மூடினல்
அந்தச் சிறு ‘குஞ்சுப் பொடியனும் முற்றத்தில் கிடந்த சிறு சுள்ளிகளை எடுத்து வந்து கிழவிக்கு நீட்டுகிறது.
கறுப்பி சிரிக்கிறாள். பொன்னம்மாக் கிழவியோ, "அடே! சின்னப்பயலே, வெள்ளையனும் வேலை செய்துபோட்டுத்தான் பிட்டுத் தின்னுவான். அதிலும் ஒழுங்காச் செய்வான். அவன் நல்ல பெனடியன், நீயும் வேலை செய்கிறாயா? செய். செய். வேலை செய்தால் தான் வாழமுடியும்" என்கிறாள்.
பானையில் தண்ணின் வடிகிறது. கிழவி பிட்டைக் கீழே இறக்குகிறள். வழமை போல ஒருகை பிட்டை தட்டில் செருகியிருக்கும் 'அம்மன் படத்தின் முன் படைக்கிறாள். பின்பு குழந்தைக்குச் சிறிய அழகிய சிரட்டை ஒன்றில் போட்டுக் கொடுக்கிறாள்.
குழந்தை பிட்டைத்தின்ற படியே, "பாட்டி, பாட்டி இது நல்ல பிட்டு" என்கிறது. உள்ளத்தில் கிளர்ந்த இன்ப உணர்ச்சியின் பேறாக, பொக்கு வாய் தென்னம்பாளை போல் வெடித்துக் கொள்ள அவளது. கொடுப்புப்பற்கள் இரண்டும் வெளியே தெரிகின்றன.
அப்போது கோவிலில் நடைபெறும் புராண படனத்தில் "கட்டு மரைத்துணிச்சீரை' என்ற பாட்டு வாசிக்கப்படுகிறது.
= 81 =

Page 19
  

Page 20
வெண்சங்கு "தா அருளைத் தருணமின் றடியவர்க்கு."
என்ற அடியுடன் முதல் ஆட்டம் தொடங்கியது. வைரவன் அதை உச்சரிக்கும் மாதிரியில் அது என்ன பாட்டென்றே விளங்கவில்லை. ஆனால், நல்ல தாளக் கட்டுள்ள பாடல்தான். அதை இருபத இருபத்தைந்து தடவை பல விதமாகப்பாடி, பையன்களை நான்கைந்து விதமாக ஆடச் செய்தான். பிறகு,
"செல்வச் சன்னதியிலே யமரும் பன்னிருகை வேலவனே தா அருளைத் தருணமின்றடியவர்க்கு"
என்ற அடுத்த அடியுடன் ஆட்டம் களை கட்டத் தொடங்கி விட்டது. அந்த அடிகளை எத்தனை விதமாக அவன் பாடினான்? எத்தனை விதமாகப் பையன்களை ஆட்டினான்? 'ஆஹா, ஆஹா என்று பார்த்திருந்திருந்தோர் தம்மையுமறியாமலே வாய் விட்டரற்றினர். ஒன்றரை மாதங்களுக்கிடையில் பையன்களைக் கசக்கிப் பிழிந்து விட்டார் அண்ணாவியார் என்றே எல்லோரும் ஒரு முகமாகக் கூறினர்.
வைரவன் துரித கதியில் பாடலைப் பாடிப் பையன்களைப் பம்பரம் போல் சுழல வைத்தான். மத்தளக்காரர் நன்றாக ஒத்துழைத்தார். பிற் பாட்டுக்காரர் தொடர்ந்தார். சலங்கைகள் சப்தித்தன. ஆர்மோனியம் அலறியது. அப்போது கும்பலில் ஒரே உற்சாகம், வைரவன் முத்தாய்ப்பு வைத்து முடிக்கும் நோக்கத்தோடு, பன்னிருகை வேலவனே, தத்தோம் தகநீ நீதில்லில் லான சம்தரிதெய்யா" என்று உரப்பி, கைத்தாளத்தால் கால்களுக்கு மிதி காட்டி முடிக்கும் நேரம் அட! சை! அவன் பேரன் தாளத்துக்குப் பிசகியே விட்டான் வைரவன் பேரனென்றும் பாராமல் வந்த கோபத்தில் பக்கத்தில் இருந்த பூவரசங் கேட்டி யாலே ஒரு இழுவை இழுத்துவிட்டான் ஐம்பதும் பத்தும் கடந்த அவன்தானே ஆடிக் காட்டத் தொடங்கி விட்டான். பாருங்கடா சிறிசுகள' என்ற கூறிவிட்டு. "செல்வச் சன்னதியிலேயமரும் பன்னிருகை வேலவனே என்று பாடிய படி அதற்குப் போடும் ஒவ்வொரு தாளத்துக்கும் அவன் மிதித்த மிதி. தத்தோம் என அவன் எகிறிக் குதித்த குதி தநீ என அவன் கால் இடந்து நின்ற நிலை. நீதில்லில் லான சந்தரிதெய்யா என அவன் சுழன்று வந்து இருந்தமாதிரி. இந்த வயதிலும் கிழவனின் குதிப்ப்ை பாரடி என்று பொக்கை வாய் வள்ளிக் கிழவியையே சொல்லவைத்து விட்டது ஏன் நீயும் கிழவனோடு சேர்ந்து ஒரு குதி குதியேன் என்று ஒரு வாய்க்களி சொல்ல பெண்கள் பகுதியிலே விக்காளம்
سے 34 =

வெண்சங்கு
திரும்பத் திரும்ப அதே வரியையும். அதே மிதியையும் கேட்டும் கண்டும் சனங்களுக்கு அலுத்து விட்டது. சிறிசுகளுக்கு ஒய்வும் வேண்டும். ஆண்கள் கூட்டத்திலிருந்த நறுக்கு மீசைக்கார வாலிபன் பின் பாட்டுக்காரரே. ஏதேனும் பாடுமேன் கேட்போம் என்று அன்புக் கட்டளையை விடுகிறான். சங்கீத மாரி பொழியத் தொடங்கி விட்டது. 'காயா முன்மரமீது பூபிஞ் சறுத்தேனோ” என்று தொடங்கி, "மானாடா மதியாட மயிலாடட் புனலாட” என்ற பாடலை ராகமாலிகையில் வெளுத்து வாங்கி, "சுருளி மலை மீது லாவும் சீலா - உன்னைத் தோத்தரித்தேன் சுப்ரமண்யவேலா" உன்ற பாடலிற்சஞ்சாரஞ் செய்து "வள்ளி கணவன் பேரில் உள்ளங் குளிர்வித்து, "டியோ டேயன்னா டேயன்னா டையன்னா' என்ற இடைச்சி பாடலில் முத்தாய்ப்பு வைத்து.
சபாஷ் பட்டம் பெற்றுக் கொண்டார் அவன்.
வைரவன் தாளத்தை வைத்து விட்டுப் பாக்கை வெட்டத் தொடங்கினான். ஆனால் அவன் கை அதை வெட்டுகிறதே யொழிய D6OT Îb புதிதாக வந்திருக்கும் கற்றுக் குட்டியைப் பற்றியே எண்ணுகிறது. "புதிய புதிய சரக்குகளைச் சனங்கள் விரும்புவது இயல்பு இளந் தலைமுறைகளும் அதையே விரும்பும். ஊர் விட்டு ஊர் வந்தவனான படியால் சற்று மிடுக்கனாகத்தான் இருக்க வேண்டும். சரி, சரி. பார்ப்போம். அச்சு வேலிச் சந்தியில் அக்கமும் பக்கமுமாக ஆட்டி என் அண்ணாவிப் புகழை நிலை நாட்டாவிட்டால். உம்." இந்தத் தடத்தில் அவன் சிந்தனை நீண்டது.
அப்போது, ”அண்ணாவியாரே, ஏமாந்து போனோம். பக்கத்துாரான் தன் ஊர்ப் புத்தியைக் காட்டி விட்டான்' என்று சொல்லியபடி, குழப்படி முருகன் வருவதைக் கண்டதும், “கற்றுக்குட்டியின் ஆட்டத்தில் ஏதோ நடந்திருக்கிறது”என்று வைரவன் ஊகித்தான். அவன் ஊகித்தது சரி. அங்கே ஆடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்களும் காலிற் சலங்கைகளோடு வந்து கொண்டிருந்தாள்கள். கூட்டத்திலிருந்தவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. அண்ணாவி வைரவனை மதியாமாற் போன 'கிழக்குத் திக்கு ஆட்கள் பழையபடி அவனை நாடி, சரணடைந்து விட்டார்களே என்பதினால் சில துடுக்கான வாலிபர்கள் வாய்க்குள் விரலை வைத்து சீழ்க்கை வலிக்கத் தொடங்கி விட்டார்கள்.
குழப்படி முருகனை ஆற அமரப் பார்த்தான் வைரவன். ஒன்றரை மாதத்துக்கு முன் புதுப் பணத்திமிரில் "பாள். பார் நாங்களும் காவடி
ܣܘ 85 ܣ

Page 21
வெண்சங்கு பழக்கி ஆடத்தான் போகிறோம்; நெடுக மேற்குத்திக்கு வைரவ கோயிலில் வைத்துக் காவடி எடுத்து அந்ததப் பக்கத்தில் உள்ள வெள்ளாம் வீடுகளுக் கெல்லாம் போய் பிறகு எங்கடை பக்கத்து வெள்ளாம் வீடுகளுக்கு வர நாங்கள் என்ன பெட்டையளோ?” என்று யாரோ பெரிய வீட்டுக்காரர் கொடுத்த உசாரில், ஊரை தன் சாதியை இரண்டாக்கிப் பேசியவன் அவன். பெட்டிப்பாம்பு போல அடங்கி ஒடுங்கி வந்து பக்கத்தில் உட்கார்ந்து பொருமும் அவனை, "என்ன தம்பி சங்கதி?” என்ற வெற்றிலையைக் குதப்பிய படியே அமைதியாகக் கேட்டான் வைரவன். "மோசம் போய் விட்டோம் அண்ணாவியாரே, அந்தக் கிட்டினன் என்ன சொல்கிறான் தெரியுமோ? இங்கே காவடி ஆட்டம் பழக்கினாலும் சன்னதி கோயில் ஆற்றங்கரையில் வைத்துத்தான் எடுக்க வேணுமாம். பெரிய மனிதர் வீடுகளிலோ, சந்தி தெருக்களிலோ இம்முறை ஆடவிட மாட்டானாம். முதற் காணிக்கையாம், சன்னிதி முருகனுக்குப் பக்தி பூர்வமாக நேராகச் செலுத்த வேண்டுமாம். நாம் பணஞ் செலவழித்து ஆர்மோனியம், பிற்பாட்டு , மத்தாளம் எல்லாம் பிடித்து விடிய விடியப் பழக்குவது, ஊரிலுள்ள சனங்கள் டாராமல், இரவோடிரவாக் கோயிலை போய் ஆடவா? இதுதான் ஞாயமா?" என்று பொரிந்து தள்ளினான் முருகன்.
வைரவன் நிதானித்து பதில் சொல்ல வாயயெடுத்தான். "பெரியவரே." என்ற குரல் கேட்டது. திரும்பி, வைத்த கண் வாங்காமற் பார்த்தான். 'கற்றுக் குட்டி என்று தன்னால் ஏளனமாகப் பேசப் பட்ட் கட்டுமஸ்தான தேகக் கட்டையுடைய, கிட்டினன் அவன் முன் தாளங்களை வைக்கக் குனிவதைக் கண்டான். அவன் பணிவு வைரவன் உள்ளத்தை உருக்கியே விட்டது. 'தம்பி! இது என்ன வேலை? எழுந்திரப்பா. நீ தான் ஒரு மனுஷன்” என்று துாக்கி நிறுத்தினான்; தழுவிக் கொண்டான். -
நியாயம் கேட்க வந்த 'குழப்படி முருகனுக்கு அண்ணாவி வைரவன் செய்கை விளங்கவேயில்லை.
சுற்றி யிருந்த சனங்களுக்கும் இது புதிராகவே இருந்தது.
"பெரியவரே, நான் முதல் முதல் எடுத்த தாளக் காவடியை என் குருநாதர் - என்னைப் பழக்கிய அண்ணாவியார் - சன்னதி
கோயிலிலேயே எடுப்பித்துப் பக்தி பூர்வமாகச் செய்தார். அவரிடம்
- 鹦邨 -

வெண்சங்கு பழகிய எனக்கும் ஒரு ஆசை. முதற் பழக்கும் காவடியை சன்னதி அப்பனின் சந்நிதியில் வைத்து எடுக்க வேணும் என்பதாக இந்த ஆசை பிழையானதல்ல. வரும் சந்ததிகளும் இதைப் பின் பற்றினால் நல்லது தானே? ஒரு வருடம் தானே இப்படி எடுக்கப் போகிறோம்? பிறகு வருடா வருடம் ஆடத்தானே போகிறோம்? சனங்கள் எங்கே போய் விடப் போகிறார்கள்? மதிப்பு - மரியாதை இவைகள் வேண்டு மென்ப துண்மை. அதற்கு முன் பக்தி வேண்டாமா? தாளக் காவடி வெறுங் கேளிக்கை மாத்திரந் தானா? இதைச் சொல்லிப் பார்த்தேன். இவர்களுக்கு விளங்கவேயில் லை. ஆனபடியால், இந்தப் பொறுப்பிலிருந்து நான் விலகவதாய்த் தீர்மானித்து விட்டேன். தாளத்தை உங்கள் காலடியில் சமர்ப்பித்தும் விட்டேன். என்னுடைய ஆசை நிறைவேறாத வரை அண்ணாவித் தொழிலை ஏற்பதிலலை என்ற முடிவுக்கும் வந்து விட்டேன்’ என்றான் கிட்டினன்.
"விஷயத்தை ஏன் தம்பி வளர்த்துகிறாய்? எனக்கு விளங்காதா? நீ தான் ஒரு மனுஷன் என்று சொல்லி விட்டேனே. ஏதோ இந்தத் தாளக் காவடி ஆட்டத்தில் பல புதுமைகளைச் செய்து ஆட்டு விக்கிறாயாம் என்று கேள்விப்பட்டு பயந்து கொண்டிருந்தேன். ஆனால், குரு செய்த மாதிரி மரபு தவறாமல் முதற் காவடி யாட்டத்தைக் கோயிலிலே பக்தி பூர்வமாகச் செய்ய வேண்டும் என்ற உன் சொல் என் நெஞ்சில் பாலை வார்த்த மாதிரியிருக்கிறது. இந்தக் காலத்திலும் இப்படிச் சொல்ல - செய்ய நீ ஒரு மனுஷன் இருக்கிறாயே நீ புதுமையாகப் பழக்கலாம். ஆட்டிவிக்கலாம். பழைமை எண்ணத்தோடு புதுமை செய்பவன் தான் மனுஷன். நீ வாழுவாய். வாழத்தான் போகிறாய். தம்பி, நாங்கள் இந்தத் தாளக் காவடியைப் பொது சனத் திருப்திக்கு ஆளாக்கி விட்டோம் போகட்டும். நீயாவது சரியாகச் செய்” என்று நாத்தழு தழுக்க ஆசிர்வததித்தான் வைரவன்.
“அதற்கு - என்னுடைய எண்ணத்துக்கு - யார் தான் பையன்களை விடப்போகிறார்கள்? என் கனவு கனவாகவே போக வேண்டியதுதான்' என்றான் கிட்டினன்.
'உம், உவன்தான் ஆட வேண்டும். அல்லது கிழவனார் ஆட
உவன் தாளம் போட வேண்டும். வேறு யாரும் பையன்களை விடமாட்ட்ார்கள்" என்றான் குழப்படி முருகன் குத்தலாக,
ܘܗ 87 -

Page 22
வெண்சங்கு சனக்கூட்டம் கெக்கட்டம் விட்டுச் சிரித்தது.
"விட மாட்டார்களா? ஒரு நல்ல காரியம் நிறைவேற ஒரு பையனைவிட முடியாதவர்கள்தான் இந்த மருதஞ்சேரிக் கிராமத்து மக்களா? பயப்படாதே. தம்பி, இதோ என் பேரப்பிள்ளை இருக்கிறானே, இவனை உன் கையில் ஒப்புவிக்கிறேன். நீ உனக்குத் தெரிந்த ஆட்டம் எல்லாவற்றையும் பழக்கி உன் எண்ணப்படியே கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு போய் அங்கேயே வைத்துக் காவடியை எடுப்பி. மிச்சத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றான் வைரவன்.
சிரித்தவர்கள் எல்லோரும் வாயடைத்து நின்றனர்.
ஆவணி மாத்துப் பூரனை நிலவிலே குன்ற மெறிந்து, குரை கடலிற் சூர்தடிந்த குமரவேளின் கை வேல் வீதி வலம் வந்து கொண்டிருக்கிறது. "வீர வேல், வெற்றி வேல்' என்று பக்தர் குழாம் ஆடிப் பாடுகின்றது.
சிறிது துாரத்திலே தொண்டைமானாற்றங் கரையில், மத்தளம் வார் கொம்பு வாழ் குழல் கின்னரம் வாழத்தெடுப்ப என்ற சந்நதி முருகனின் திருவிருத்தத்தை இராகமாலிகையில், பக்தி ப்ரவசமாகப் பாடி, "சித்தி பெற்றாய் மனமே செல்வச் சந்நிதித் தேவனுக்கே என்ற கடைசி வரியை உரக்கமாக அழுத்தி, 'கந்தா வந்தேன் கடைக்கண் நீ பார் என்ற இடத்தில் முதல் தாளத்தைச் 'சல்' என்று போடுகிறான் கிட்டினன்.
வைரவனின் பேரண் தனியே பக் தியோடு ஆடிக் கொண்டிருக்கிறான். அவன் காவடியைச் சுற்றி ஐம்பது பேர் யாதொரு ஆரவாரமுமின்றி அமைதியே உருவாக இருக்கிறர்கள்.
அந்த நேரத்தில், சந்நிதி முருகனின் கோவிலுக்குத் தெற்கே மூன்று மைல் துாரத்தில், அச்சு வேலிச் சந்தியில், அரை வெறியிலே கூடியிருக்கும் அறுநூற்றுக்கும் மேற்பட்ட சனங்கள் மத்தியில் ஏலையலோ தத்தெய்யாம்.ஏலையம்மா’ என்ற கப்பலாட்டத்தின் பல்லவியைத் தொடர்ந்து.
an 38 سے

"ஏராஞ் சலாபமும் மன்னரும் கண்டு எழில் மேவும் பாம்பான் வாய்க்காலும் தாண்டி சீரான புத்தளம் கற்பிட்டி முனையும் திகழ்நீர் கொழும்பு பலநகள் தாண்டி “ஏலையலோ தத்தெய்யாம்.ஏலையம்மா”
என்ற அடிகளைத் துரித கதியிற் பாடி ஆட் டிக் கொண்டிருந்தான் வைரவன். சிறுவர்கள் மிதிக்கும் மிதியைக் கண்டும். அவர்கள் கப்பல் ஆடுவது போல ஆடும் ஆட்டத்தைக் கண்டும், உற்சாக மிகுதியினால் சீழ்க்கை அடித்தார்கள். பலர் தாளம் போட்டார்கள். "அண்ணாவி வைரவனின் ஆட்டமென்றால் அது ஒரு தனிதான்” என்ற வாயாரப் புகழந்தார்கள்.
ஆனால், வைரவனின் வாய்ப்பாடுகிறதே யொழிய அவன் மனம்?
அது கிட்டினன் பழக்கி எடுத்த தன் பேரக் குழந்தையின் துள்ளலிலேதான் மேய்ந்து கொண்டிருந்தது.
- 39 ܗ

Page 23
வெர்ைசங்கு
தொந்தம்
(ObTனகுருவின் திருவடி தீசை பெற்றதும் சீட்னின் மனமாககளெல்லாம் அழந்தொழிவதைப் போலக் கீழ்த் திசையின் அடி விளிம்பில் வெடித்துக் கிளர்ந்து வரும் பரிதியின் ஒளிப் பிழம்பில் இருள் என்னும் திரை விலகத் தொடங்கியது. அதனை வரவேற்று அந்தக் காட்டிலிருந்த புள்ளினங்கள் பண்ணிசைத்தன. பூக்களாகிய கரங்களை ஆட்டி மரங்கள் வாழ்த்தொலி கூறும் மயல்.
இயற்கையின் அழகுக் கோலங்களிலே மனஞ் செலுத்தாது. தாமரையிலை வாழ் நீரின் பக்குவத்துடன், காட்டின் ஒற்றையடிப் பாதை வழியாக அம்மனிதன் நடந்து கொண்டிருந்தான்.
அவனது நினைவு விளிம்பில், "ஆண்டவன் படைத்த உலகில் - அவனன்றி ஒரணுவும் அசையாத உலகில் - மலர்களே, சிரியுங்கள்; தேனைச் சிந்துங்கள்; வர்ணசாலங்களைக் காட்டி வண்டுகளை மயக் குங்கள் . ஆனால், உங்கள் வாழ்வு? ஒரு பகலோ? ஒரிரவோ?.அவ்வளவுதானே! நீங்கள் மாத்திரமா? அவன் படைத்துவிட்ட அண்டசராங்கள் அனைத்தும் ஒரு நாள் அழியத்தானே போகின்றன. என்ற தத்துவ ஒளிக்கிஙற்றின் நெளியல்.
அவன் வாய், "கூவின் பூங்குயில் கூவின கோழி" என்ற திருவாசகத்தை - திருப்பள்ளியெழுச்சியை - முணு முணுத்துக் கொண்டிருந்தது.
நேற்றுவரை குருவின் ஆணைக்குக் கட்டுப்பட்டுச் சேவை செய்த ஆச்சிரமமும் காட்டுக் கோவிலும் கட்புலனுக்கு எட்டப்போய்
- 40 -
ܓܦ

வெண்சங்கு நெடு வெளிகளுக்கும் காடுகளுக்குமப்பால் மறைந் தொழிந்தன. பற்றைகளும் முட் புதர்களும் நிறைந்த காட்டுப் பாதை பட்டினத்துக்குச் செல்லும் பிரதான வீதியுடன் இணைந்தது. பாம்புரித்த சட்டையைப் போல் விளங்கிய அந்த ஆம்பல் வர்ண வீதியின் இருமருங்கிலும் உயர்ந்த விருட்சங்கள் சூரிய ஒளி நிலத்திற் படாதவாறு செழுங்கிளை பரப்பிக் குடைவிரிந்து நின்றன.
"ஒம் சிவாய நம” என்று கூறியவாறு பட்டுப் பைக்குள் இருந்த விபூதியை நெற்றிலே தரித்துக் கொண்டு. நடந்து வந்த திக்கை நோக்கி ஒருமுறை நமஸ்கரித்து பிரதான வீதியிற் காலடி எடுத்து வைத்தான். 'தேகம் புல்லரித்தது. பத்து வருடங்களுக்கு முன் இலட்சியத்தை நாடி ஒற்றையடிப் பாதைக்குள் இறங்கிய அவன், இன்றுதான் மீண்டும் நாகரிக உலக்த்துள் திரும்பவும் காலெடுத்து வைக்கிறான். -
முண்டிதம் செய்யப்படாது சிங்கத்தின் பிடரிமயின் போல் முதுகில் தொங்கும் சிகை; மார்புவரையில் தொங்கும்தாடி, முதுமை என்ற கீறல்விழாத முகத்தில் ஒளி வீசும் விழிகள் சதை வடிந்து இடையிடையே எலும்பு தெரியும் உடல், அந்தக் கட்டையைக் குருதேவர் சாரங்கன் என்றுதான் அழைத்தார்.
பத்து வருடங்களுக்கு முன் அவனுடைய பெயர் அதுவன்று. 3. Tubuda), b. 'LDL (96).T வளங்கள் பெறு குட்டி புரப்பதி" என்று அட்டதிக்கெலாம் புகழ அருந்தமிழ்க் கவிவாணர்கள் போற்றிப் பரவா நின்ற குட்டிபுரக் கிராமத்துச் சட்டம்பியார் அம்பலவாணரின் தவக் கொழுந்து. நான்கு பெண்களுக்கு நடுவாகப் பிறந்தவன். -
அரிச்சுவடியும், ஆத்தி சூடியும், நிகண்டும், புராணமும் கற்றுக் கொடுத்து, அரிசியும் காய்கறிகளும் சன்மானமாகப் பெற்ற அம்பலவாணர், "சட்டம்பியார் மதிப்பை உயர்த்திக் கொண்டாலும், வறுமையின் பிடியிலேயே வாழந்தார். தன் மகனைச் சமய சாஸ்திர பண்டிதனாக்கக் கருதி இளமையிலிருந்தே தேவார திருவாசகங்கள், மெய்கண்ட சாஸ்திரங்கள், புராண இதிகாசங்கள் ஆகியவற்றைப் போதித்துவந்தார். ஒரு நாள் மூத்த மகளுக்கு விவாகம் பேசி, துாரத்திலுள்ள கிராமமொன்றக்குச் சென்று, நடுச் சாமத்தில் கொடும் பணியில் வந்த அவர் காய்ச்சல் என்று படுத்தார். சாதாரணக் காய்ச்சல் என்ற எண்ணிய அவர் மீது காலதேவனின் பாசம் விழுந்தது!
- 41 -

Page 24
வெண்சங்கு
குருவின் தலையிற் பனங் காய் ! குடும்பப் பொறுப்பு
முழுவதையும் சாம்பசிவனே ஏற்க வேண்டியவனானான். மெல்ல நழுவ விட்டு விட்டு எங்கேயாவது ஒடி விடலாமா என்று யோசித்தான்.
மணப்பருவத்தை அடைந்துவிட்ட இரு சகோதரிகளின் வாடிய முகங்களும். மணப்பருவத்தை எட்டிப்பிடிக்க வளர்ந்து வரும் இரு தங்கைகளின் மலர்நத விழிகளும், தன்னையே கதியென எண்ணிக் கவலைக் குள்ளாகியிருக்கும் அன்னையின் பாசமும் அவனை அப்படிச் செய்ய விடாது தடுத்தன. தகப்பனார் தனக்கு விட்டுச் சென்ற முதுசொத்தாகிய திண்ணைப பள்ளிக்கூடத்துச் சட்டம்பியார் வேலையை தன் கடமையாகக் கொண்டு குடும்ப பாரத்தை இழுத்துச் சென்றான். பல ஊர்களுக்கும் சென்று புண்ணிய கைங்கரியமாகப் புராணங்களுக்குப் பயன் சொன்னான். பத்து வருடங்களாக, நல்குரவென்னும் தொல்விடம் அவனை வருத்தினாலும் அவன் அதை வெற்றியே கண்டான்.
பஞ்சு பாடாப்பாடு என்ற சொல்காவிங்களிலும், புராணங்களிலும் வருமிடங்களி லெல்லாம் சாம்பசிவன் தன்னையே நினைத்துக் கொள்வான். தாயாரின் மரணம், சகோதரிகளின் திருமணம் எல்லாவற்றுக்கும் அவன் ஈடு கொடுத்து விட்டான். முயற்சி செய்து ஒவ்வொரு விடயத்தையும் நிறை வேற்றும் பொழுது அடுத்த விடயம் அவனைப் பயமுறுத்தியது: உண்மை. அவன் சளைக்கவில்லை; பின் வாங்கவில்லை. அவன் மனிதன்!
கடைசித் தங்கையின் விவாக விடயம் முடிந்ததும், அவன் தன் கடமைகளை நிறைவேற்றி விட்டதாக உணர்ந்தான். அவனை இல்லற வாழ்க்கையில் புகுத்த சகோதரிகள் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. கணவன் என்ற ஊன்று கோல் கிடைத்ததும் சகோதரனை உதறி எறிந்து விட்டு உடன் பிறந்தோர் போனதும். 'குலை நெரி தேங்காய் போல இருந்து தான் பட்ட பாடுகளை மனத்திரைக்குக் கொண்டு வந்து, இனியும் மனைவி - பிள்ளை, பாசம் - பந்தம் என்பவற்றுள் மூழ்கி வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்தான். அவனுடைய மனத்துள் எங்கோ ஒரு மூலையில் பதுங்கியிருந்த துறவு ஒரு நாள், திண்ணைப் பள்ளிக்கூடத்திதிை திரஸ்கரித்து ஊரை விட்டே ஓடச் செய்தது.
மனித மூச்சே படாத ஏகாந்தமான ஓரிடத்தில். பக்குவமடைந்த ஒரு குருவுக்குத் தொண்டு செய்து, அவர் நயன தீசைஷ பெற்று,
- 42 to

- من مسسها
யோகத்தில் ஆழந்து ஞானம் பெற்று. நிட்டைகூட வேண்டும் என்ற தனியாத வேட்கையின் உந்துதல்.
இதனை அடைவதற்காக ஓர் ஆச்சிரமத்தைத் தேடி அலைந்தான், இறுதியில் சச்சிதானந்தர் என்னும் குரு மகானால் நடாத்தப்பட்ட 'சாந்தி ஆச்சிரமம்' அவனுக்குத் தஞ்ச மளித்தது. சாம்பசிவன் சாரங்கனானான்.
பழைய நடைமுறை வாழ்கை மங்கிக் கனவாகிவிட, ஆச்சிரமத்து நியம நிடடைகளில் அவன் ஊறித் திளைத்தான் காலதேவன் தன் ஏட்டிலே பத்து வருடங்களைப் புரட்டி விட்டான். சாரங்கன் பக்குவ நிலை எட்டிப் பிடிக்கும் சமயம் ஒரு நாள்.
"சாரங்கா ஆசாபாசச் சூறாவளியின் வேகம் தாங்காது ஒரு நாள் இந்த ஆச்சிரமத்தை நீ அடைந்தாய். உலகின் கன்மிச எண்ணங்களினின்றும் நீ விலகி விட்டாய் இதயத்தை இறுக வைத்து வைராக்கியத்தைக் கடைப்பிடித்து. பூரண ஞானி என்னும் உயர்ந்த ஸ்தானத்துக்கு உன்னை உயர்த்திக் கொள்ள முயன்றாய். அதித சாதனைகளிலே தேறிய உன்னால் எதனையும் எதிர்த்து நிற்க முடியும் என்பதையும் நான் அறிவேன்' என்று கூறிய குருதேவர் எதையோ உணர்ந்தவர் போல். "ஆனால்” என்று நிறுத்தினார்.
"ஆனால் என்ன சுவாமி?"
"நடுக் காட்டில் தனிமையில் இருந்து செய்யும் சாதனைகளில் நாம் வெற்றி பெறலாம். சமய சாஸ்திரங்களை ஐயந்திரிபறக் கற்கலாம். "ஊழ் என்பதும் ஒன்றித்திருக்கிறதல்லவா? 'தொல்லை வல்வினைத் தொந்தம்தான் என் செய்யும்' என்று நாயன்மார் போல நம்மாற் கேட்க முடியுமா?"
"சுவாமி, குடும்பமாகிய சஞ்சலச் சாகரத்துள் முக்குளித்து என் கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய பின்பே இங்கே வந்தேன். ஊழையும் வென்று உயர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இங்கே பல வகைப் பயிற்சிகளை நீங்கள் அளித்தீர்கள். இரும்பைக் கறையான் அரிக்க முடியுமா?"
- 43 -

Page 25
  

Page 26
வெண்சங்கு புண்ணியவான் சமைப்பித்த கினறும் சுமைதாங்கியும். சிறிது நேரம் தங்கி அப்புறம் தன் பிரயாணத்தைத் தொடங்கலாம் என எண்ணியவனாய்த் தன்கோணிப் பையை வைத்து விட்டுக் கால் முகம் கழுவினான். பட்டுப் பையை அவிழ்த்த, “ஓம் சிவாய நம” என்று கூறி விபூதியைப் பூசினான்.
அப்போது, "ஆ.ஆ” என்ற சத்தம் கேட்டது.
ஏகாந்தமான அந்த இடத்தில், இரவின் பேரமைதியைக் கிழித்துக் கொண்டு கிளம்பும் அந்தச் சத்தத்தை அவன் கூர்மையாகக் (as LT6i.
அது குழந்தையின் குரல் என்பது நிச்சயம்.
வளர்ந்து பருவமடைந்து மனிதன் தன்னுடைய சிற்றின்பத்தை அடக்க முடியாமல் கால் கட்டாக விட்டுச் செல்லும் சின்னம். குழந்தை. இன்னடிசில் புக்களையும் தாமரைக்கை பூ நாறும் செய்ய வாய் என்று புலவர்கள் புகழ்ந்துரைத்தாலும் குழந்தைகளைப் பெற்று. வளர்த்து, படிக்க வைத்து நோயனுகாமல் பாதுகாத்து ஆளாக்க மனிதர்கள் படும்பாடு - அப்பப்பா! நினைக்கவும் முடியாத காரியமாயிற்றே. நான்கு சகோதரிகளோடு நான்பட்ட துன்பம் இந்தத் தலைமுறைக்குப் போதும் ஏகாந்தமான இந்த இடத்தில் இரவு நேரத்தில் குழந்தை! யார் கொண்டு வந்து போட்டார்களோ? யார் பெற்ற பாவச் சின்னமோ?. அதை நான் ஏன் பார்க்க வேண்டும்?. அதைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்? கல்லினுட் தேரைக்கும் கருப்பையுள் முட்டைக்கும் விருப்புற்றமுதளிக்கும் மெய்யன் இதை ஊட்டி வளர்க்கானோ? நான் எனது பாதையிலே போக வேண்டியதுதான் இவ்வாறு பல எண்ணச் சுழல்கள் அவன் மனத்தை ஆட்டின.
அவன் போவதற்கு அடியெடுத்து வைத்தான். அப்போது -
"ஐயோ! அம்மா!"
தினமான அலறல். பெருமூச்சு. அதைத் தொடர்ந்து மீண்டும் குழந்தையின் ஒலம். அப்படியே பதுமையாக நின்று விட்டான் அவன்.
- 懿 - ܠܐ

வெர்ை சங்கு
பின்பு அவன் என்ன செய்தானென்று அவனுக்கே தெரியாது. அவசரமாகக் கோணிப் பைக்குள் இருந்த அகல் விளக்கைக் கொளுத்திப் பார்த்தான். செத்துக் கொண்டிருக்கும் - இந்த உலகத்தின் தொந்தங்களை விட்டுப் பிரிய இருக்கும் - பெண்: அவள் பக்கத்தே குழந்தை. அதுவும் பெண்குழந்தை.
”அம்மா! தாயே!.நீங்கள்” என்ற சொல்லியபடி கொஞ்சத் தண்ணிரை வாய்க்குள் விட்டான்.
“என் குழந்தை. என் குழந்தை.அதைக் காப்பா.” அவள் சொல்லி முடிக்கவில்லை. பிணமானாள். குழந்தை அவன் காலடியிற் கிடந்து அலறியது.
காலத் தச்சன் முறித்த பட்டமரத்துக்குப் பக்கத்திலே இளஞ்செடி.
இது என்ன சங்கடம்' என அவன் வாய் முணுமுணுத்தது. போயொருகால் மீளும் புகுந்தொரு கால் மீண்டேகும் என நளனது நிலையைப் புகழேந்தி வர்ணித்தானே அதே நிலைதான் சாரங்கனுக்கு.
இறுதியில் முடிவு.குழந்தையைக் கையில் ஏந்திய படியே வந்த வழியே மீண்டான்.
ஒரிரவும் ஒரு பகலும் நடந்து முடித்தான். காட்டுக் கோவிலும் பழைய ஆச்சிரமமும் அவன் கட்புலனுக்குத் தெரிந்தன.
காலைப் பூசையை முடித்துக் கொண்டு சச்சிதானந்தள் நிட்டையில் ஆழ்ந்திருந்தார்.
அவரது நிட்டையைக் கலைக்க மனமில்லாதவனாக, ஒதுங்கி ஒரு புறத்தில் ஒன்றும் பேசாதவனாக நின்றான் சாரங்கன். அவன் கையில் நிம்மதியாக உறங்கியது குழந்தை. கன்திறந்த குருவின்
இதழ்க் கடையில் புன் முறுவல் மின்னியது.
"குருதேவா!'
ܒܗ 47 -

Page 27
வெண்சங்கு "சாரங்கா விரைவில் ஏன் திரும்பி விட்டாய்? அதற்குள் உலகத்தை அறிந்து விட்டாயா?"
"இல்லை”
"பின் ஏன் இவ்வளவு விரைவில்.?"
"இதோ இந்தக் குழந்தை தாயை இழந்து அனாதையாகத் தவித்தது.இதனை”
"இதனை என்ன செய்யப்போகிறாய்?
"தங்கள் ஆச்சிரமத்திலே விட்டு விட்டுப் போகப் போகிறேன். மனித மூச்சே படாத இந்த இடத்தில் இதுவும் வளர்ந்து.'
"ஒரு சகுந்தலையாகட்டும் என்று நினைக்கிறாயா? அப்பனே, அது முடியாத காரியம்."
“ஏன் சுவாமி?”
"சாரங்கா! இந்தக் குழந்தையை நீ ஏன் துாக்கி வந்தாய்?.வராதிருந்தால்.”
"இறந்திருக்கும்!
"ஏன் அப்படி நினைக்கிறாய்?, குழந்தை சாவதும் பிழைப்பதும் உன் கையிலா இருக்கிறது? அப்படியானால் அந்தத் தாயைப் பிழைக்க வைத்திருப்பாயே. நீ இந்தக் குழந்தையத் துாக்கி வராதிருந்தால், அந்த வழியால் வரும் ஒரு செல்வச் சீமானின் கண்ணிற் ப்ட்டு இராச போகத்தை இது அனுபவித்திருக்கலாமல்லவா?” குருநாதரின் வினாக்களைக் கேட்டுச் சாரங்கன் அதிர்ச்சியுற்றான். சாத்திரங்களில் படித்தும் விளங்காத எத்தனையோ விடயங்களின் பொருள் அப்போதுதான் புலப்படுவது போல் இருந்தது.
”சுவாமி என்னுடைய நல்லார்வத்தில் சிறிது அவசரப்பட்டு விட்டேன் போலிருக்கிறது. ஊழ்வினையை மாற்ற நம் போன்றாரால் முடியாது என்பதையும் உணர்கிறேன்.”
سے 48 =

வெண்சங்கு
குருநாதன் சிறிது நேரம் மெளனத்தில் ஆழ்ந்தர். பின்னர். "சாரங்கா! நாம் எவ்வளவு சாதனைகள் புரிந்து விட்டாலும். பழவினையாகிய தொந்தம் எம்மை விட்டு நீங்குவதில்லை. உன் வினைப் பயனால் நீயாகச் சுமந்த பளுவை நீ தான் இறக்க வேண்டும்" என்றார்.
"நானா சுமப்பது சுவாமி! பத்து வருடத்துக்கு முன் நான்கு சகோதரிகளின் பளுவைச் சுமந்து அலுத்தவன் நான். இன்னும் இதைச் சுமக்கச் சொல்கிறீர்களே' என்றானவன். அவனது குரலிலே வேதனை இழைந்தது. -
"சாரங்கா குழந்தையை எடுத்துக் கொள். அதன் வளர்ச்சியின் மலர்ச்சியில் ஆண்டவனைக் காண். அதுவும் ஒரு தவம்தான். அதுதான் வருங்காலத்தில் உனது சாதனையாக அமையட்டும்.”
"இதுதான் தங்களின் முடிந்த முடியா?”
"என்னுடைய முடிபல்ல. குழந்தையின் முடியும் உனது பழவினையின் முடியும் அதுவாகக் தானிருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.”
"சரி. சுவாமி! எங்க ைஆசிர்வதித்து அனுப்புங்கள்.” சச்சிதானந்தர் ஆசீர்வதிக்கக் கைகளைத் துாக்கினார்.
சாரங்கன் குழந்தையுடன் வணங்கி எழுந்தான். “ஓம் சிவாய நம" என்று கூறிப் பட்டுப் பையில் இருந்த விபூதியை எடுத்து, தன் நெற்றியிலும் குழந்தையின் நெற்றியிலும் பூசினான்.
மனிதனாக இருந்து ஞானியாக வந்த அவன் மனிதனாகவே புறப்பட்டான்.
அவன் நடையில் கம்பீரந் தெறித்தது.
- 48 -

Page 28
வெண்சங்கு
தரிசனம்
ஒரே வாரத்தில் இரு நூல்கள் வெளியாயின. ஒன்று உள்ளக் கோவில்; மற்றது பருவமங்ககையின் படுகொலை.
"சீர்பெருகு மானியூர் சிவபிரானடி நிற்கும் செஞ்சொல்மலி கவிஞரேறு' சிவபிரகாசனார் பாடிய காவியந்தான் உள்ளக் கோவில். துப்பறியும் கதை உலகின் துாண்’ என்று புகழப்பட்ட கோதண்டம் அசுர வேகத்திற் படைத்த மர்ம நாவல்தான் பருவமங்கையின் படுகொலை.
சேக்கிழார் பாடிய தெய்வப் பொக்கிஷமாம்'பெரிய புராணத்துப் பூசலார் கதை காலப் புதுமைக் குழம்பிலே தோய்ந்து பக்தி ஒளியிலே மெருகு பெற்று உள்ளக் கோவிலாக உருவெடுத்தது. மூன்றாந்தர ஆங்கில மர்ம நாவல் ஒன்றின் தமிழ் 'முழிபெயர்ப்புத்தான் பருவமங்கையின் படுகொலையாகப் பவனி வந்தது.
பருவமங்கையின் படுகொலைக்கு நல்ல 'மார்க்கெட். அதன் பிரதிகள் சுடச் சுட விலைபோயின. உள்ளக் கோவிலின் பிரதிகள் கடையின் அலமாரிகளில் நித்திய சயன சுகம் அனுபவிக்கலாயின.
'பிழைக்கத் தெரிய வேண்டுமையா முதலில், தமிழ் இலக்கியத
தொண்டு எல்லாம் பின்னர் தான். ழகர ளகரம் பிழையாக வந்தால்
'குடி முழுகி விடாது. அலெக்ஸாண்டரை அம்பலவாணராகவும்,
மேரியை மோகனாங்கி என்றும் மாற்றத் தெரிய வேண்டும். மர்மக்
கதையில் இந்த மண்ணாங் கட்டியும் இல் இrட்டாலும், பருவ
tங்கையின் கவர்ச்சியான மூவர்ண அட்டை கட்டாயம் தேவை. அந்தப்
}; അ

வெண்சங்கு பருவ அழகியின் ஒவ்வொரு அங்கத்தைப் பற்றியும் வாங்கு என்று வாங்கிவாசகர்இேளச் சுண்டியிழுக்கவேண்டும் வெளிப்பு பூச்சுத்தான் தேவை. உள்ளடக்கத்தை நீர் கவனிக்கப் போகிறார்கள்? - கோதாண்டம் விவரித்துள்ள இலக்கியக் கோட்பாட்டின்சாரம்
. — ' '), ' 41+1 171: ܠܵܐ ܝܵܪT_1 ി.ൂ !!! :) பழமையிற் கோலுன்றிப்புேதுமைய்ைச்சி செய்து பார்த்தேன். புதுமை விரும்பிகள் 'புராணக்குப்பை என்கிறார்கள் வைதீகங்கள் சேக்கிழார் பாடிய தெய்வமாக்கதையைப் பாடி இவனுக்கு அருகதை உண்ட்ா என்று கேட்கிறார்கள். ஐயா. அதைப் பாம் நீான் பட்ட பாடு?. காடவள்கோன் பூசலாரை வணங்கும் காட்சி இந்திய் ஓவியப் பாணியில் அமைந்து அட்டையைத் தூய்மையாக் அலங்கரித்தது. அதற்கு வெளிப்பகட்டு இல்லையாம். பருவ மங்கையின் கவர்ச்சிப் படம் போட்டிருந்தால் பிரதிகள் விற்பனையாகியிருக்கும் என்கிற்ார்கள். அந்தக் காவியத்தில் ஒரு பெண் பாத்திரங்கூடி இல்லையே. பெண்ணுக்கு எங்கே போவது? . சிவப்பிரகாசனாரது நொந்த உள்ளத்தின் விசார சாரம், ! : .ே
இருப்பினும், 'என் படைப்பின் தரத்தை அறியும் ஒரு வாசிகன் என்றாவது ஒரு நாள்தோன்றத்தான் செய்வான்' என்று அேவர் மனந்தேறினார். அந்த வாசகனுக்காக அவர் நீண்ட காலந் தவமிருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. பத்து வருடத்தில் ஒரு மாற்றம். மரபிலே காலுான்றி இலக்கியம் படைத்தல் வேண்டும்' என்ற இலக்கிய விழிப்பு: இந்த விழிப்பின நிறைவான திருட்டாந்தமாக உள்ளக்கோவில் அமைந்திருப்பதை ஒரு விமர்சகன் இனம்கண்டான். அவன் காட்டிய தடத்திலே சென்று இன்னும் பல விமர்சகர்கள் அந்தக்காவியத்தின் சுவையிலே தோய்ந்து உள்ளக்கோவிலின் உயிர்நிலையைப்பெல கோணங்களிலே வாசகர்களைத் தரிசிக்கும்படி செய்தார்கள்..ே
பேதினெட்டுப்பாடல்கிளினாற் சேக்கிழார் பாடிய ஒரு கதையில் வரும்.அன்பை அடித்தளமாக்கி, அந்த அடித்தளத்தில் சிவப்பிரகாசனார் உள்ளக் கோவில்' என்ற உன்னத காவிய மாளிகை சமைத்துள்ளார். தொண்டை நாட்டின் சிறப்பு, திருநின்ற ஊரின் வர்ணனை, பூசலாரின் குணநலங்கள் ஆகியன புதுமை கலந்த கற்பனைவளத்திற்கு அணியாக அமைந்துள்ளன: பூசலார்கோவில்கேட்ட எண்ணியும், அதற்கு அவர் வறுமை தடையாக இருக்க, ஈற்றில் உள்ளக் கோவில் சமைத்து, 'துராபியும் நட்டு மிக்க சுதையும் நல்வினையும்செய்து. கூவலும் அமைத்து மாடு கோயில் சூழ் மதிலும் போக்கி, வாவியும்
51 -

Page 29
வெண்சங்கு தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து பிரதிட்டை நாளை நிச்சயித்ததை சேக்கிழார் பிரானின் ஆத்ம நோக்கினைப் பிழிந்து தருவதாகச் சிவப்பிரகாசனார் தம் காவியத்தை அமைத்துள்ளார். இங்கு பழைமையின் பக்தியும், புதுமையின் கற்பனையும் சீர்மையுடன் இணைகின்றன. காடவர்கோமான் கச்சிக் கற்றளியெடுத்து என்று மிகச் சுருக்கமாகக் கூறிய காடவர் கோமான் காஞ்சிமா நகரத்திலே கல்லிலே சமைத்த கோவிலின் துண்கள் - கற்சிலைகள் - மண்டபங்கள் - ஒவியங்கள் - துTபிகள் ஆகியனவற்றை நெஞ்சை அள்ளும் விதத்தில் சிவப்பிரகாசனார்வர்ணித்து. உள்ளகக் கோவிலைத் தரிசிப்பதற்கு அதனையே கோபுர வாசலாகச் சேர்த்துள்ள சுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அரசன் கட்டிய கோவில் சன்ங்கள் பார்க்கக்கூடிய கற்கோவில். பூசலார் கட்டிய கோவில் யாரும் காண முடியாத உள்ளக் கோவில். இரண்டு கோவில்களும் பிரதிட்டை விழாக்கள் ஒரே காலத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. எந்தக்கோவில் உயர்வானது: எல்லாம் வல்ல இறைவனைக் கவர்ந்தது? இதனை நடராசப் பெருமானே தீர்மானிக்கின்றார். அவர் நள்ளிரவில் காடவர் கோனின் கனவிலே தோன்றி, பூசலார் கட்டிய கோவிலில் பிரதிட்டை நாளும், நீ கட்டிய கோவிலின் பிரதிட்டை நாளும் ஒன்றாகலின் நீ நிச்சயித்த நாளை மாற்றுக’ எனச் சொல்லுகிறார். எனவே, காடவர் கோமான் பூசலார் கட்டிய கோவிலைப் பார்க்கப் புறப்படுகின்றான். விடிகிறது. காலைக் காட்சியை சமயத்தை உள்ளுறை உவமமாக வைத்து ஆசிரியர் வர்ணித்துள்ள சிறப்பு தனித்துவமானது. புழுதிப்படலத்தின் ஊடாக அரசன் தேர் திரு நின்ற ஊர்வந்த காட்சி. சனங்களின் வியப்பு. பூசலார் கட்டிய கோவிலைப் பற்றிய அரசனின் விசாரனை. பூசலாரின் பெருமையை அறிந்த அரசன் அவரை நேரிற்கான வந்த பெருந்தன்மை. சிவபிரான் கனவில் சொன்னதை அறிந்த பூசலார் கொண்ட உள்ள நெகிழ்வு. எல்லாவற்றிற்கும் மேலாக அகக் கோவில் கொண்ட அன்பரை அரசன் விழுந்து வணங்கும் காட்சி. உங்கள் அகக் கோவிலுக்கு முன் எனது கற்கோவில் வெறுங்கோவில்தான் என அரசன் உதிர்க்கும் சொற்கள் மூலம் பக்தியினதும், கலையினதும், இலக்கியத்தினதும் உண்மையான தரிசனப் பயன் பெறும் வாய்ப்பினை சிவப்பிரகாசனார் சமைத்துள்ளார்.' எனப் பல கோணங்களிலே, பல விமர்சகர்கள் உள்ளக் கோவிலின் சிறப்பை மக்கள் முன்வைத்தார்கள்.
கவிஞர் சிவப்பிரக சனாரையும் அவரது உள்ளக் கோவிலையுந் தேடி இலக்கிய இரசிகர் கூட்டம் மொய்க்கலாயிற்று.
- 52 --

பருவ மங்கையில் படுகொலை என்ற ஒரு புத்தகம் வெளி வந்ததை மக்கள் மறந்தே போனார்கள்.
உள்ளக் கோவிலின் இரண்டாம் பதிப்பின் பிரதி ஒன்றாவது கிடைக்காதா என மக்கள் தவித்தார்கள். இதனை உணர்ந்த ஒரு புத்தகப் பதிப்பாளர் இரண்டாம் பதிப்பை வெளியிட ஓடோடியும் வந்தார். கவிஞர் சிவப்பிரகாசனார் கூறிய பதில் அவரைத் திகைக்க
வைத்தது.
“உள்ளக் கோவிலை வெளியிடும்படி உம்மை எத்தனை முறை மன்றாடினேன்? நீர் இரங்கவேயில்லை. நீர் சரக்கு உப்பு, புளி வியாபாரம் பண்ணுபவனைப் போல இலக்கியத்தையும் வியாபாரம் செய்பவர். தமிழ் - இலக்கியத் தொண்டு என்றெல்லாம் நீர் பேசுவது வெளிப்பூச்சு. இப்போது பணத்தைக் காட்டி என்னை மயக்கப்பார்க்கின்றீர். இந்தப் பணத்துடன் சென்று பருவ மங்கைகளைத் தேடிப்பாரும். அவர்கள் பணம் குவித்துத் தருவார்கள். பண நட்டத்தைப்பற்றி யோசிக்காது உள்ளக் கோவிலின் முதற் பதிப்பை வெளியிட்டானே ஒரு தமிழ்த் தொண்டன். அவனிடம் தான் நான் இரண்டாம் பதிப்பு மூன்றாம் பதிப்பு உரிமைகள் எல்லாவற்றையுங் கொடுக்கப் போகின்றேன்" என்று சிவப்பிரகாசனார் மிக அமைதியாகக் கூறினார்.
“வாற சீதேவியைத் தள்ளாதையுங்கோ. தாறதைப் பெற்றுக்கொண்டு பாட்டுக்களைக் கொடுங்கோ." என்று மனைவி குறுக்கிட்டு ஆலோசனை கூற முந்தினாள்.
“மக்கள் உண்மையான கவிஞனைத் தரிசித்து விட்டார்கள்.
வெளிப் பூச்சில் மயங்கி அவர்களை நான் ஏமாற்ற மாட்டேன். நீ உள்ளே போ!' - சிவப்பிரகாசனார் குரலில் உறுதி தொனித்தது.
っ
- 58 – -

Page 30
வெண்சங்கு
அலை ஓய்ந்தது
G
கேளும் ஜெனமே ஜெய மகாராசனே என்று வைசம்பாயணர் சொல்லத் தொடங்கினார்’ என்று வாசிக்கும் பெரிய எழுத்து மகாபாரதம் எல்லாம் மறைந்துவிடும், கிராமங்களிலே கூட
அந்த இடத்தைப் புதினப் பத்திரிகைகள் ஆக்கிரமித்துக் கொண்டன.
அதற்கு மாரனூர்க் கிராமம் விதிவிலக்கல்ல. பட்டினத்தை அடுத்து கிராம நாகரிகமும், பட்டினத்துக் கலவை நாகரிகமும் எட்டிப்ப்ார்க்கும் மாரனூர் ஒட்டி உருண்டு கொண்டிருந்தது. விடியற்காலையில் எழுந்து துலாவோடு தூங்கிப் பழைய சாதமும் குரக்கன் பிட்டும் தின்ற, கமக்காரர் கூட வேண்டா வெறுப்பாக ‘எஞ்சினைச் சுற்றிவிட்டு, கடைகளிலே கிடைக்கும் இடியப்பத்தையும் தேநீரையும் நாடத் தொடங்கி விட்டனர். அரும்பு மீசை வாலிபர்கள், அடுப்படியில் பூனை தூங்கினாலும் அழகாகச் சிகரெட்டை ஊதி ஊரை அழகு படுத்தினார்கள். மாரனூர் பிள்ளையாரும் நாகரிகம் அடைந்தார். அழகாக எரிந்த சட்ட விளக்குகளை அநாகரிகம் என்று ஒதுக்கிவிட்டு, மின்சார டியூப்' விளக்கை தமதாக்கிக் கொண்டார். கூடமும் வீடுமாய், சாணகம் மெழுகிக் கோலம் போட்ட அந்தக் காலத்துக் குடிசைகள் நூதன சாலைப் பொருள்களாகிவிட, புழுங்கி அவியும் படி சீமெந்து போட்ட கல் வீடுகள் முழுக்கிராமத்தையுமே ஆக்கிரமித்து விட்டன. கன்னங்கரிய தார்ப் பீப்பாத் தகரங்களும், தோளளவு உயர்ந்த சுண்ணர்ம்பு மதில்களும் வேலிகளாக ஊருக்கு நடுவே உல்லாசமாகக் காட்சியளித்தன. வாயாற் பேசப்படாத சுவரிலக்கியங்களுக்கும், வால் நோட்டீஸ்களுக்கும் அவை இருப்பிடம் அளித்து விழி விருந்து படைத்தன. தன அழகி, கொண்டை அழகி, பல் அழகி, புருவ அழகி, இடை அழகி, கன்னடத்துப் பைங்கிளி, கேரளத்துப் புள்ளி மான், ஆந்திரத்து ஆடல் மயில்

வெண்சங்கு
ஆகிய சினிமா ஸ்டார்களின் கவர்ச்சிப்படப் போஸ்டர்கள் ரவிவர்மாவின் சுவாமிப் படங்களை எல்லாம் பாபர் சலூன் - தேனீர்க்கடை - லாண்டரி - சரக்குக்கடை முதலிய இடங்களிலிருந்து ஓட ஓட விரட்டியடித்தனர். "போஸ்ட்காட்’ அளவு சிவாஜிகணேசன் படம் உண்மையான தொந்திக் கணபதியின் படத்தை உதைத்துத் தள்ளிவிட்டு, அவரது தீப அலங்காரத்தையும் ஊதுபத்திப் புகையையும் தனதாக்கி அதற்குள் ஒளி விட்டுக் கொண்டுடிருந்தது. சந்தனமும் சண்பகமும் தேக்கும் பாக்கும், சாமை தினைப் பயிர் வகைகள் தலையைத் தூக்கும்; தொந்தளவு மாங்கனியும் தீம்பலாவும் குளிர் நறவத்தொடு குளைந்து மதுக் குலாவும்' என்று கிழவர்கள் வர்ணித்த மாரனூர், இப்படியாகக் கால ஓட்டத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டது. “பண்ணில் தோயப் பொருள் முடிப்புக் கட்டிப் பாடும் பாவலர்க்கிந்திடவென்ற எண்ணிப் பொன் முடிப்புக் கட்டி வைத்திடும்” மாந்தர் என்று பறாளைப் பள்ளுக் கூறுகிறதே; அது எங்களுரைப் பற்றித்தான் என்று ஒரு காலத்தில் மாரனூர்க் கிராமம் பெருமைப்பட்ட சங்கதி இன்று பலருக்குத் தெரியாதிருக்கலாம். அது ஒரு காலம். பல வீடுகளில் தண்டிக் கொண்டு வந்த கதிர்காமத்தையன் திருப்பணிப் பொருளை - ஆறு கொத்து அரிசியை - அரை மீசைக்கார அண்ணாச்சாமி தட்டிப் பறித்த கதை, மாரனுர் நாற்சந்தியிலே பல கோணங்களிலே அலசப்படுகின்றது. இன்று, கரகமும் - காவடியும், கொட்டகைக் கூத்தும் காணாத பண்டங்களாகி, சிறுவர் வாயிலே கூட டப்பா பாட்டுகளும், காதல் டூயட்டுகளும் கரை புரண்டு வழிகின்றன.
இத்தகைய மகா கீர்த்தி பெற்று விளங்கும் மாரனுார்க் கிராமத்திலே ஒரு நாள் - சரியாகச் சொன்னால், ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்தொன்பதாம் ஆண்டு கார்த்திகை மாதம் பத்தாம் நாள் - ஒரு விசயம், சந்தி - தெரு - வீடு - தோட்டம் - "கடை எங்கும் பேசப்பட்டது. ‘கிராமச் சங்கத்திற்குப் போட்டியிடுவோர் கார்த்திகை மாதம் இருபத்தெட்டாம் திகதி நியமனப் பத்திரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்' என்ற தேர்தல் அதிகாரியின் விளம்பரம் தான் இந்தப் பரபரப்பிற்கு வித்தாய் அமைந்தது. ؟جسم..
புதினப் பத்திரிகையை அட்சரம் தவறாமல் - விளம்பரத்தைக் கூட விடாமல் - வாசித்து வரும் சிவசுந்தரம்பிள்ளையின் கண்ணில் இது தட்டுப்பட்டது வியப்பன்று. அந்த விளம்பரத்தை அவர் பல தடவை திரும்பத் திரும்ப வாசித்தார். “உம். சரி, பார்த்துக்

Page 31
வெண்சங்கு கொள்ளலாம் என்று அவர் வாய் முணுமுணுத்தது. அதை அடுத்து. "அட சொக்கா பொயிலையையும் நெருப்புப் பெட்டியையும் கொண்டு வா’ என்று அதட்டினார். வேலைக்காரச் சொக்கன் இவை இரண்டையும் கொண்டு வந்தபடியே, 'ஐயா, பேப்பரை நெடுநேரம் வாசிக்கிறியள். ஏதேன் புதினம் போட்டிருக்கா? என்று விநயமுடன் கேட்டான்.
"ஓமடா ஓம் மாரனூர்க் கிராமச் சங்க எலெக்ஷனுக்கு நொமினேஷன் டே இருபத்தெட்டாம் திகதியாம்' என்று கலப்புத் தமிழிற் சொல்லி, பொயிலையை "சுத்தத் தொடங்கினார்.
வந்தது வினை என்று வெளி வந்த சொற்களுடன் நாக்கையுங் கடித்து வைத்தான் சொக்கான்.
சிவசுந்தரப்பிள்ளை யுத்த தேவதையின் அனுக்கிரகத்தினால் பணக்காரரானவர். பெட்டிக் கடையில் சுருட்டு விற்று வந்த பிள்ளையவர்கள் முதல் யப்பான் குண்டு கொழும்பில் விழுந்ததும், மற்றவர்களைப் போல பிறந்த பொன் கிராமத்தை நோக்கி ஓடி வரவில்லை. அப்படி ஓடி வர வேண்டிய தேவையும் இருக்கவில்லை. ஐந்து வயதுக் குழந்தை ஒன்றைக் கையில் கொடுத்துவிட்டு, அவர் மனைவி இறந்து ஒரு வருடமாகி விட்டது. குழந்தையின் வளர்ப்பைச் சகோதரியிடம் ஒப்படைத்துவிட்டு, கொழும்புக்கு வந்து அப்பொழுதுதான் பெட்டிக் கடையைத் தொடங்கியிருந்தார். யாழ்ப்பாணத்து மகா சனங்களெல்லாம் கோட்டைப் புகையிரத நிலையத்தை முற்றுகையிட்டுச் சொந்த ஊர்களுக்குப் பரபரப்புடன் டிக்கற் எடுத்த அந்த நாளில், சிவசுந்தரம் காலியாக விட்டுப் போன கடைகளுள் எது தனக்கு வியாபாரஞ் செய்ய வசதியாக இருக்கும் என்று நோட்டம் போட்டுக் கொண்டிருந்தார். இந்தச் சிறு துணிவில், "சுந்தரம் அண்ட்கோ' உருவாகிப் பல லகரங்களைத் தாண்டி வளர்ந்தோங்கியது. மாரனூரிலும் தன் அந்தஸ்துக் கேற்ப வீடு - தோட்டம் - நிலபுலம் என்பனவற்றை வாங்கி வைத்தார்.
சென்ற வகுப்புக் கலவரத்தில் பொருளை இழந்தவர்களுள் சிவசுந்தரம்பிள்ளையும் ஒருவர் என்று பேசிக் கொள்ளுகிறார்கள். ஆனால், அதற்குப் பின்னர் அவர் கொழும்பு வியாபாரத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு, ஊரிலேயே தங்கிவிட்டார். "அடைவு பிடிக்கத் தத்துவம் பெற்றவர்’ என்ற விளம்பரப் பலகையை வீட்டு முகப்பிலே
- 56 -

வெண்சங்கு தொங்க விட்டார். அந்தத் தொழில் தன் பாட்டிலே நடைபெறுகின்றது. அத்துடன் புகையிலை உலர்த்தி விற்றல். சந்தை குத்தகைக்கு எடுத்தல், மரவியாபாரஞ் செய்தல் முதலிய பல்வேறு தொழில்களையும் மேற்கொண்டார். என்னதான் பொருள் குவிந்தாலும். மாரனூர் மக்களுக்கு அவரைப் பற்றிய மதிப்பு உயரவில்லை. 'என்ன? எங்கடை கண்கானா சச்சுப் பொயிலை வாங்கிச் சுத்தி. தலையிலை சுருட்டுக் கொனடுபோய் வித்தவன் தானே? இப்ப நாலு பணம் வந்தாப் போலை துள்ளுகிறார் என்று அவர் காதில் விழும்படியாகவே பேசினார்கள். பணத்தின் அருமை, அதைச் சேர்க்கத் தான் பட்டபாடு. வட்டிக்குக் குட்டி வட்டி வாங்குஞ் சாமர்த்தியம். கைக்கூலியின் பெருமை. பணம் பாதாளம்வரை பாயும் திறன் ஆகியவற்றை அவரே நன்கறிந்தவர்.
ஒரு விஷயத்தில் சிவசுந்தரம் தோற்றுவிட்டார். அந்தத் தோல்வியை அவரால் மறக்கவும் முடியவில்லை. சென்ற வருடம் மாரனுTருக்கும் முள்ளியனோடைக்கும் நடுவேயுள்ள சந்தை குத்தகைக்கு வந்தது. அதிலே அவருடைய கண்ணும் விழுந்தது. ஐந்து ஆயிரம் பெறாத அந்தக் குத்தகை விஷயமாக ஐந்து நூறு ரூபாக்கள் அநியாயமாகக் கழன்றதும் உண்மை. ஆனால், கிராமச் சங்கம் சந்தைக் குத்தகையை முள்ளியனோடை முருகேசுவுக்குக் கொடுப்பது என்று தீர்மானித்துவிட்டது. ‘கிராமச் சங்கத் தலைவர் மாரனுTர் மாரிமுத்தா பிள்ளையாயிருந்தும் குத் தகை முள்ளியனோடைக்குப் போய்விட்டதே' என்று வாலிபர் சிலர் கிராமப்பற்றில் முனு முனுத்தார்கள். ஆனால், சிவசுந்தரத்தின் கொதிப்புக்குக் காரணம் வேறு. அந்தக் குத்தகையினால் இரண்டாயிரத்துக்கு மேல் ஆதாயம் பெறலாம் என்பது அவருக்குத்தான் தெரியும்!
கிராம சங்கம் தனக்கு எதிராகத் தீர்மானித்ததை அவராலே தாங்க முடியவில்லை. அன்றிரவே தலைவர் மாரி முத்துவைச் சந்தித்து. “என்ன காணும் கடைசியில் இப்படிக் காலை வாரிவிட்டீரே! அநியாயமாக ஆண்டாண்டாய் நாம் நாட்டாண்மை செலுத்தி வந்த சந்தையை முள்ளியனோடைக் காரனுக்கு அடைவு வைத்து விட்டீரே. எனக்காகச் சொல்லவில்லை. இந்த ஊருக்காகவாவது செய்திருக்கப்படாதா? நீர் பெரிய நீதியைக் கண்டவர். மனுச்சோழன் பரம்பரை. இந்த ஊர் மக்கள் உன் முகத்தில் காறித் துப்பாமற் பார்த்துக் கொள்ளும். இதைச் செய்து முடிக்க முருகேசு உனக்கு என்ன காணும் கொடுத்தான்?" என்று ஆவேசமாகப் பேசினார்.
- 57 -

Page 32
வெண்கங்கு ப. சிவசுந்தரம் அண்மிதியாகிவிஷயத்தைப் பேசுவதற்கு தகளிைக்கொட்டுகிறீர்? பிணத்தைக் கொட்டினால் பொறுக்கி
ர்த்தைகளைக் கொட்டினால்: நீராகிராமப் பற்றுடன் எனக்குப் புதினமாகி இருக்கின்றது.நீர் செய்விக்கின்றல் தொழிலுக்கும் உள்ளுர்க்கார்ன் யாரையாவது, சிருக்கிறீர்?குேறைஞ்சிசம்பளம் எண்டுவெளியாலைபபுெடிக்க்க வாரீர் என்னைபிபார்த்து என்னிகாணும் முருகேசு:கொடுத்தான். என்று கேட்கிறீர் என்ர்ை நாய் கூப்அடுத்த வீட்டுச் சோத்தைத் தின்னாது தெரிஞ்சு கொள்ளும் தம்மைச் சிவன்கோயில் மனேச்சராகத் தெரிவு செய்தார்கள்ே என்ன் செய்தீர்?உள்ளுர் சைவக்குருக்களை விட்டு விட்டு வெளியூர்அேந்ாச்ாரப் பிராம்ணனை வைத்திரேம்பிரமணன் அதற்காக வெள்ளிக்கிழமைகளில் மோதகமும் புக்கையும் உமக்கு அனுப்பி வைப்பது உள்ளுக்குத்தெரியாவிட்டாலும் எனக்குத்தெரியும்" என்று"மாரிமுத்தாபிள்ள்ைபதில்டிங்கொடுத்தார்ாடி பார்ப்ாகுதி ெே) ப்ரூ க்ரூாரு 1
சிவசுந்தரம் இதனைச் சற்றும் எதிர்பார்க்க்வில்லைஒைற்: இந்தத் தலைவர் வேலை ஏதோ கேவ்னர்ேேவலைேெபாலிஎண்ணித் நுள்ளாதிை காணும்."நீரின் நினைத்தால் அது என்ாகாலுக்கைவந்து ཀ , விழும்: பார்ப்ப அடுத்த எலெக்ஷ்னிலை.எேன்று சபதஞ் செய்துவிட்ட்ர் க்ருட்டுப் புகையுடன் ஐக்கியப்பட்டு தன்து சபதத்தைச் செயலாக்குங் காலம்வந்துவிட்டதென்று நீண்டந்ேரமாக யோசித்தார்.
iuiS0SLLLLS uku u S SuM SSLLLLSM LLLt t S M u SSS GL GtStSMSM uSMS 'இரவும் வந்து வானத்திலே வெள்ளி அள்ளிச் சொரிந்திருந்த பொழுது பஞ்சாங்கத்தைப் புரட்டிப் பார்த்துத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தி சுப் வேளையொன்றில்ேவ்ேனிலக்காரச் சொக்கனுடன், ஊரிலே தமக்கிருக்கக் கூடிய ஆதரவை நோட்டமிடும் முகம்ாகச் சிவகந்தரம் புறப்பட்டார். சொக்கனின் ஆலோசனைப்படி, முதலில்
ப்தியைப் பார்ப்பது என்ப்து ஏற்பாடு. அவன் இவருடைய
"தோட்டத்தை அன்று முதல்"இன்றுவரை குத்தகைக்கு எடுத்துச் "செய்பவன் நாணயமானவன்"என்று'ஊரிலே பேசிக் கொண்டார்கள். கீறிய கோட்ட்ைத் தாண்டாமல் அடங்கி நடக்கக் கூடியவர்களுமிருக்கின்றார்களாம். பார்
- الفار . ܘ ܫܝܗ݈ܽܘ܂ வே ஆகோகே 1ಿ :...!
.கணபதி தன் மகனுக்குப்பாடஞ் சொல்லிக் கொண்டிருந்தான் ܝ ܬܐܝ ܓܒ݂ܒ݂ܘ ܙܬܬܐܘ மனைவி அந்தக் காட்சியைப் பூரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"சொக்கா, சகுனம் நல்லாத்தான் இருக்குது என்று முணுமுணுத்து,
:"ീ",';
- 58 -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெண்சங்கு தொண்டையைச் செருமிக் கொண்டு நடந்தார். வேலைக்காரனுடன் வருகை தந்த கமக்காரனைக் கண்டவுடன் கணபதி எழுந்து, “என்ன, இவ்வளவு தூரம் வந்திருக்கிறியள்? சொக்கனிடம் சொல்லி அனுப்பியிருந்தால் நான் நேரே வீட்டுக்கு வந்து பார்த்திருக்கமாட்டேனா?” என்று மரியாதை செய்தான்.
“இல்லைக் கணபதி. எங்கடை அலுவலெண்டால் நாங்கள் தானே செய்ய வேணும்?. உந்தக் கிராமச் சங்கத்துக்கு எலெக்ஷனும் வருகுது இந்தக் கோசு நானும் நிண்டு பார்க்கலாமெண்டு ஒரு யோசினை. அது தான்.” என இழுத்தார்.
“நீங்கள் நிண்டால், வேறை ஆர் வெல்ல முடியும்? இஞ்சாலைப் பக்கம் ஒரு ஐம்பது வோட்டுக்கள் எண்டாலும் தேறும். ஆனாலும், கொஞ்சத் தண்ணிச் சிலவுதான் நடக்கும். தெரியாதே.”
“உந்தச் சிலவு தெரியுந்தானே. நீ என்ரை பக்கம் நிண்டால் போதும். அப்ப வாறன், இண்டைக்கு நல்ல நாள். இரண்டொரு தலையளைப் பாத்திட்டுப் போகலாமெண்டுதான்.”
மனத்திருப்தியுடன், சிவசுந்தரம் படலைக்கு வந்தார். அப்பொழுது கணபதியும், மனைவியும் பேசிக் கொண்டிருக்கும் குரல் கேட்கின்றது.
“என்ன முகத்தோடை இவர் எங்களிட்டை வந்து வோட்டுக் கேக்கிறார்? வெட்டிய பொயிலை வெயிலிலை வாட, காசு முழுவதையும் கட்டிப் போட்டுத்தான் வண்டிலிலை ஏத்த வேணுமெண்டு சொன்ன கருணா மூர்த்தியல்லோ. என்ரை கழுத்து வெறும் கழுத்தா இருக்குது. அதுக்கிடையிலை எல்லாம் வெட்டிப் புடுங்கிறன் எண்டு வாக்குக் குடுத்திட்டியள்.”
“எலெக் ஷ னிலை குடுக் கிற வாக் குறுதியளுக்கு நாணயமில்லைக் கண்டியோ. வட்டி எண்டு ஊரை வறுகி வைச்சிருக்கிறார். எலெக்ஷனெண்டாவது கொஞ்சம் சில வழிக்கட்டுமன். நானெண்டால் உவருக்கு எதிராக ஒரு கழுதை போட்டியிட்டாலும் அந்தக் கழுதைக்குத்தான் என்ரை வோட்டைப் போடுவன்.”
ܣ ܛ5 -

Page 33
வெண்சங்கு தன்னுடைய காதுகளை நம்பாது, சிவசுந்தரம்பிள்ளை அப்படியே மலைத்துப் போய் நின்றார். “குத்தகைக் காசுக்கு நீங்கள் அப்பிடி அட்டகாசம் பண்ணியதைத் தான் இப்படிச் சொல்லுறான். எலெக்ஷனுக்கு நிக்கிறவை கொஞ்சம் இந்த விஷயங்களிலை விட்டுக் கொடுத்துத்தான் நடக்க வேணும். உவை போடாட்டிக்கு என்ன? ராமலிங்கம் படிச்சவர். அவரைப் பாப்பம்’ என்று சொக்கன் இரகசியம் பேசும் குரலிற் சொன்னான். தரை மட்டமான ஆசையிலே. நம்பிக்கையின் கீறல்.
“ராமலிங்கத்துக்குப் படித்த பொடியனும் இருக்கிறான். அவன் என்ன சொல்லுவானோ?”
“அதுக்குத்தான் இராமலிங்கத்தைப் பார்க்க வேணும். பொடியனைப் பிடிச்சால் இள வட்டங்களைச் சரிபண்ணலாம். ஏன், ராமலிங்கமும் பய பக்திமான்’ என்று சொக்கன் உற்சாகமாகவே சொன்னான்.
உண்மையிலே இராமலிங்கம் பயபக்திமான்தான். இப்பொழுதும் பாரதம் இராமாயணம் வாசிக்கும் வழக்கமுள்ளவர். பிச்சை புகினும் கற்கை நன்றே என்னுங் கோட்பாடுடையவர். தன்னுடைய பையனை வ்ெகு பிரயாசைப்பட்டு. பல்கலைக் கழகத்திற்கு அனுப்பிப் படிப்பித்து மனிதனாக்கியவர். நாலு பேர் சொன்னதையும் செவியிற் போட்டுக் கொள்ளாது. கிளறிக்கல் அது இது என்றவற்றைத் தட்டியெறிந்து, ஒரேயொரு தாயாதிக் காணியையும் ஈடுவைத்துப் படிப்பித்தவர். அந்தக் காணி சிவசுந்தரம் பிள்ளையிடம் வேகமாகக் குட்டி போட்டு ஏலத்திற்கு வருமளவிற்கு நின்றது. மகனுக்கு வேலை கிடைத்ததும் வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி, இரண்டு பேரிடம் நாலுபத்தை மாறி, போன மாதந்தான் காணியை மீட்டார். அதற்கிடையிற் பட்ட பாடுகள் ஏழேழு தலைமுறைக் கும் போதும். ஆனால், நிறைகுடம் எதையும் வெளிக்காட்டாத இனிய சுபாவத்தினர். மனைவி நேர்மாறு. எதையும் வெட்டொன்று துண்டு இரண்டாகப் பேசுபவள்.
இராமலிங்கம் தம்பதிகள் சிவசுந்தரத்தை இன்முகங் காட்டியே வரவேற்றனர். அவர், முற்றத்தில் நின்றே பேசித் திரும்ப விரும்பினாலும், அவர்களுடைய வற்புறுத்தலின் மேல் உட்கார்ந்தார். தமது உள்ளக்கிடக்கையைத் தொட்டந் தொட்டமாக வெளியிட்டார்.
-- 60 -

வெண்சங்கு
இராமலிங்கம், “அதற்கென்ன? எலெக்ஷனுக்கு நிக்கக்கூடிய பண பலம் உங்களுக்கிருக்கின்றது. பணம் பாதாளம் வரையில் பாயும் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். ஒரு தடவை நின்று தோற்றாலும் ஒரு பெருமைதானே? என்னைப் பொறுத்தமட்டில், மகனுடைய அபிப்பிராயப்படிதான் நடப்பேன்.”
“இதென்ன புது நாணயக் கதை. தலையிருக்க வாலே ஆடுறது.” -
“அவன் படிச்சவன். நாலு படித்தவர்களுடன் பழகியவன். இந்த விஷயங்களிலை நாங்கள் வயதை வைத்துக் கொண்டு வற்புறுத்தக் கூடாது." இராமலிங்கம் மனதிலொன்றும் வைக்காமற் சொன்னார்.
சிவசுந்தரத்திற்குச் சமீபமாகத் தூணுடன் நின்ற சொக்கன், “தம்பிக்கு ஐயாவை நல்லாத் தெரியும். பாத்துச் செய்யுமெண்டுதான் நினைக்கிறன்” என்றான்.
தம்பியை நன்றாக அறிந்த சிவசுந்தரம், “ஏதோ, பாத்துச் செய்யுங்கோ’ என்று அரை குறையாகச் சொல்லிக் கொண்டு வெளியேறினார்.
“நான் என்ரை வயித்திலை சுமந்த பொடியனை எனக்குத் தெரியாதே. காணி அலுவலிலை, உந்தாள் எங்கடை உறுதியையும் வைச்சுக் கொண்டு பேய்க் காட்டினதை அவன் மறந்து போனான் எண்டு நினைக்கிறியளோ?” என்று இராமலிங்கத்தின் மனைவி தன் கணவனைக் கேட்டது. சிவசுந்தரத்தின் காதில் வெகு துல்லியமாகவே விழுந்தது.
அதைக் கேட்காதவன் போல சொக்கன், “அடுத்தாப் போலை செல்லத்துரை வீட்டுக்குப் போவம்” என்றான்.
“இனி ஆறுதலாகப் பாப்பம். இப்ப வீட்டை போவம்.”
இருவரும் வீட்டை அடைந்தார்கள்.
ஐந்து நிமிடங்களுக்கு மேல் சுருட்டைக் கடித்துக் கொண்டிருந்த சிவசுந்தரம்பிள்ளை. “சொக்கா! நெருப்புப் பெட்டியை எடுத்தா” என்று
குரல் கொடுத்தார்.
- 61 -

Page 34
வெர்ை சங்கு
சுருட்டுப் புகை மூக்கிலே ஏறாதபடி தலையை ஒரு புறஞ் சரித்துக் கொண்டு பற்ற வைக்கும் சிவசுந்தரம்பிள்ளையைப் பார்த்து. "ஐயாவுக்கு இண்டைக்கு மனஞ் சரியில்லைப் போல கிடக்குது” என்றான் சொக்கன்.
“இல்லைச் சொக்கா. ஐயாயிரம் ரூபாய்க் குத்தகைக்கு ஐநூறைப் பாராமல் சிலவழிச்சும் மூக்குடைஞ்சு போனன். அதை நினைச் சுக் கொண்டு. பிறகு ösö சில வழிச் சு மொக்கையீனப்படுகிறதோ?’ என வெகு நிதானமாகச் சொல்லிச் சுருட்டுப் புகையை உறிஞ்சத் தொடங்கினார்.
责 禽 禽
سے 32ھ ۔ صے

வெண்சங்கு
Ön g5g).
நான் என் சாய்வு நாற்காலியிற் படுத்துக் கிடக்கின்றேன். எழுபது ஆண்டுகளாக வாழ்ந்து விட்ட என் தளர்ந்த உடலுக்கு இந்தப் படுக்கையிலே ஒரு சுகம். அடுக்களையில் குரல் கேட்கின்றது. அது என் பேரன் சச்சியின் குரல்தான். அவனுடைய குரல் எப்பொழுதும் எடுப்பானதாகத்தான் இருக்கும். இரண்டு நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஒரு நாடகம் இடம் பெற்றதாம். பனியும் அதுவும். நான் போய்ப் பார்க்கவில்லை. நல்ல வடிவாகச் சச்சி நடித்தான் என்று பலர் புகழ்ந்தார்களாம். அதைப் பற்றிப் பத்திரிகையிலே புதினம் வந்திருக்கிறது. அந்தப் புதினத்தைத் தன் தாய்க்கு உரத்துப் படித்துக் காட்டிப் புழுகிக் கொண்டிருக்கிறான்.
பாவாடை தாவணி அணிந்த ஒருத்தி. படலையைத் திறந்து, பத்திரிகையும் கையுமாக வருகின்றாள். என் கண் கொஞ்சம் புகைச்சல்' யார்? அவள் திலகவதிதான். 'பெரிய பிள்ளை'யாகி மூன்று வருடங்களாகின்றன. அந்தக் காலத்தில் 'சாமத்தியப் பட்ட பிறகு ஒரு குமர்ப் பெண்ணுடைய முக தரிசனம் கிடைக்கத் தவமிருக்க வேண்டும். காலம் மாறிப் போச்சு. என்னைக் கவனிக்காதவளைப் போல அவள் அடுக்களைப் பக்கம் விரைகிறாள். முகம் மலர்ச்சியிலே பொங்க, “அத்தான் அத்தான்’ என்று அழைத்தபடி ஓடுகிறாள். “என்ன, திலகவதி? உள்ளேயிருந்து சச்சியின் குரல் கேட்கிறது.
“நான் சொன்னேனே அத்தான். நீங்கள் நல்லா நடிச்சியள். பேப்பரிலே வருமெண்டு. பார்த்தியளே இந்தப் பேப்பரை.”
- 63 -

Page 35
வெர்ைசங்கு சச்சியின் நடிப்புத்திறன் வழி வழியாக வந்த சொத்து என்று நினைத்துப் பார்ப்பதில் என் மனம் மகிழ்ச்சி கொள்ளுகின்றது. சச்சியின் தகப்பன் - என் தகப்பன் - ஒரு காலத்தில் நாடகம் ஆடினவன் தான். சிறுத் தொண்டனாக, நந்தனாராக அவன் ஆடிய கூத்துக்களை நான் பார்த்திருக்கின்றேன். அப்பொழுது பத்திரிகைகளில் இதைப்பற்றி எழுதுவதுமில்லை; எந்த மச்சாளும் புழுக ஓடி வருவதுமில்லை.
என் மகனுடைய நடிப்பிலே தொற்றி, என் நினைவுகள் வேறொரு கிளையிலே தாவுகின்றன. தளர்ந்து போயிருக்கும் என்னுடைய உடலை இப்பொழுது பார்ப்பவர்கள் நானும் ஒரு காலத்தில் கூத்தாடியவன் என்பதை நம்பப் பஞ்சிப்படுவார்கள்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் என்று நினைக்கிறேன். ஓம்: வள்ளிசாக ஐம்பது ஆண்டுகள் இருக்கும். நான் ஆடிய கூத்தைக் கண்டு “சபாஷ்” போட்டவர்கள் ஆயிரமாயிரம். கொட்டைகைக் கூத்தில் நான் உக்கிர சேனனாக நடித்த காட்சி இப்பொழுதும் என் கண் முன்னே நிற்கிறது. தூக்க முடியாத பெரிய கிரீடத்தை தலையில் வைத்துக் கொண்டு, வில் உடுப்புக்கள் போட்டு, பெரிய செங்கோலுக்குக் கீழே எறி வெடிகளை வைத்து படார், படார்’ என வெடித்து முழக்கி, "அண்டமெலாம் கிடு கிடுத்து நடுங்கிடாதோ இயமனும் நடுங்கிடானோ” என நான் பாடினால், தூங்கிக் கொண்டிருக்கும் சிறு குழந்தைகள் கூட எழுந்து உட்கார்ந்துவிடும். ஒரு மைலுக்கு அப்பால் உள்ளவர்கள் கூட, "உக்கிர சேனன் களரிக்கு வந்துவிட்டான்’ என்று ஓடோடி வருவார்கள்.
அண்ணாவி கந்தப்பிள்ளை என்பவர் அந்தக் காலத்தில் பெரிய அண்ணாவியார். 'வருதோத்திரங்களை’ அவர் பாடி, கூத்தில் வரும் ராசா ராணிகளை - நடிப்பவர்களை - அறிமுகப்படுத்தும் அழகிற்கு நிகரே கிடையாது என்பது எல்லோருக்கும் தெரியும்.
"அத்தான் கதாநாயகன் வேஷம் போட்டுக் கொண்டு மேடையில் நின்ற அழகைப் பார்க்க வேணும் அத்தை. உடனே ஆளை அடையாளம் தெரியலை” அடுக்களையில் திலகவதியின் குரல் கேட்கிறது.
ஒரு தடவை பள்ளிக்கூடத்து மேடையில் ஆடியதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்.நாங்கள் பத்துக் கிழமைகளாகத் தொடர்ந்து கூத்தாடி - 64 -

வெண் சங்கு இருக்கிறோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு எட்டு மணிக்கு கூத்துத் தொடங்கும். எட்டு மணியானதும் பார்த்தால் அந்த இலுப்பையடி’ வெளியிலே ஒரே சன சமுத்திரம். கண்ணெட்டு மட்டும் மனிதத் தலைகள். என்னுடைய காட்சி விடிய நாலு மணிக்குத்தான். ஒரு பெண்ணை வலோற்காரஞ் செய்யும் அரக்கனைக் கொன்றொழிக்கும் வீரமிக்க அரசனாக நான் நடித்தேன். என் நடிப்பைப் பார்த்து என் இரசிகர்கள் சால்வைகளில் பணம் முடிந்து எறிவார்கள். அதை எடுத்து அண்ணாவியார் வாழ்த்துவார். “இந்த நாடகத்திலே இன்னாரின் நடிப்பிற்காக செல்வச் சீமான் பொன்னம்பலம் போட்ட கொள்ளே கொள்ளை இன்றும் போடுவார் இன்னும் போடுவார்” என அவர் வாழ்த்தும் காட்சி அருமையிலும் அருமை. இரவு பத்து மணிக்குத் தூக்கம் போட்டவர்கள் கூட உக்கிரசேனனாக நான் வந்ததும் எழுந்து விடுவார்கள். என் தடல் புடல் நடிப்பு அப்படிப்பட்டது. அந்தப் பத்து வாரங்களும் நான் இந்த ஊரில் இராசா மாதிரித்தான் தலை நிமிர்ந்து நடந்தேன்.
என் தலை நிமிர்வுக்கு கூத்திலே விழுந்த சால்வைகளும் மாலைகளும் காரணம் என்றாலும், ஒரேயொரு சால்வையும் அதில் முடிந்து போட்ட ஒரு வெள்ளி ரூபாவும்தான் முக்கிய காரணம். அந்தச் சால்வையை வைத்துக் கொண்டு அண்ணாவியார் வாழ்த்தத் தொடங்கும்போது என் மனம் கிளு கிளுக்கும். அதைப் போடுபவர் என் மாமா சங்கரப்பிள்ளை. அந்தச் சால்வை முடிச்சிலுள்ள வெள்ளி ருபாவில் என் மச்சாள் சின்னம்மையினுடைய இதயம் ஒளிந்து கொண்டிருப்பதான நினைவே நிறைவு.
"அத்தான் மேலுள்ள ஆசையில் இவள் புழுகுகிறாள்.” அடுக்களையில் சச்சியின் தாய் பேசும் குரல்.
இந்தக் காலத்துச் சிறுசுகளின் காதல். இந்தக் கிழவன் அந்தக்காலத்தில் காதலித்தான் என்று சொன்னால் இவர்கள் சிரிப்பார்கள். இவர்களுக்கு காதல் என்பது இந்தக் காலத்திற்குரிய பண்டம் என்ற நினைப்பு. அது எந்தக் காலத்திற்கும் உரியது. அந்தக்காலத்தில் ஓர் ஒழுங்குமுறை இருந்தது.
பத்தாவது வார முடிவில் அண்ணாவியார் கூத்து
உடுப்புக்களுடனேயே எங்களை எல்லாம் கூட்டிக் கொண்டு பெரிய
பணக் காரப் புள்ளிகளின் வீடுகளுக்கும், கூத்தாடியவர்களின் سے 65 -

Page 36
வெர்ை சங்கு உறவுமுறையானவர்களின் வீடுகளுக்கும் போய்ச் சிறிய ஆட்டம் காட்டிச் சன்மானம் பெறுவார்.
சில பெரிய புள்ளிகளின் வீடுகளைத் தரிசித்து விட்டு, என் மாமா சங்கரப்பிள்ளையின் வீட்டுப் படலையைத் தாண்டி முற்றத்திற்கு வருகின்றோம். காதல் எத்தகைய விந்தையான உணர்ச்சி என்பதை அன்றைக்குத்தான் உணர முடிந்தது எப்பொழுது இந்த முற்றத்திற்கு வருவோம் என்று என் மனம் உதைத்துக் கொண்டிருந்தது. வந்தாகிவிட்டது. நெஞ்சத்தின் உதைப்பு. கூச்சம என்ற வேறு உருவம் தாங்கிவிட்டது. ஒரு பக்கமாக ஒதுங்கி நடிகர்களுக்குப் பின்னால் மறைந்தும் மறையாததுமாக நின்றேன். அண்ணாவியார் கூத்தில் நடந்த ஒரு சிறு பகுதியாகிய 'பால பார்ட் நிகழ்ச்சியைக் காட்டி விட்டு நிறுத்தினார். என் மாமா வெற்றிலைத் தட்டத்திலே ஐந்து வெள்ளி ரூபாக்களை வைத்து அண்ணாவியாரிடம் நீட்ட அவரும் வாழ்த்தி முடித்தார். நாங்கள் போகத் தயாரானோம்.
مصر
அப்பொழுது “என்ன மருமகப்பிள்ளை, பின்னுக்குப் பதுங்கி நிற்காமல் முன்னுக்கு வந்து நில்லேன்” என்று என் மாமா அழைத்தார். கூத்தாடுவது சுகம். இப்படிப்பட்ட நேரத்தில் எல்லோர் முன்னாலும் போய் நிற்பதுதான் வலு வில்லங்கம் என்று தோன்றியது. சிறிது துணிவுடன் முன்னால் போய் நின்றேன். தன் மகளுக்கு என் முழு வேஷத்தைக் காட்ட நினைத்திருக்கலாம் என்று என்னுள் எழுந்த நினைவு அலை ஒன்றே எனக்கு அந்தத் துணிச்சலைத் தந்தது. கதவுக்குப் பின்னால் இருந்த வளைகரம் கதவைச் சிறிது நீக்கியதையும், கழுகாக அரைந்த என் கண்கள் பார்த்தன. என்னுள் ஒரு சிலிர்ப்பு.
மாமா தன் மனைவியான பாக்கியம் மாமியை அழைத்து, “மருமகப்பிள்ளை இநதக் கூத்திலே உக்கிர சேனனாக நன்றாக ஆடி சபாஷ் வாங்கினார். கண்திட்டி நாத்திட்டிப் படப்போகுது. ஒரு கறுப்புப் பொட்டு வைத்துவிடு’ என்று சொன்னார். பாக்கியம் மாமி என் நெற்றியில் பெரியதாக ஒரு கறுப்புப் பொட்டு வைத்துவிட்டு திரும்பினாள். அந்தக் கணத்தில் என் நெஞ்சிலே விரிந்த மகிழ்ச்சியை விபரிக்க வார்த்தைகளே கிடையாது.
“ஓம், பிள்ளை இப்பவே உன்ரை கொத்தானிலை வலு கரிசனைதான். பொழுது படையுக்கை மிளகாய் தடவி கடத்தான்
- 66 -

வெண்சங்கு வேணும்” சச்சியின் அம்மாதான் பேசுகிறாள். அடுப்படியில் நடக்கும் 'சமா' இன்னமும் கலையவில்லைப் போலும்.
பாக்கியம் மாமி இட்ட அந்தப் பெரிய கறுப்புப் பொட்டில் எல்லாத் திருஷ்டிகளும் அழிந்துவிட்டன என்ற நினைவு என் மனதிலே பொங்கிய அதேநேரத்தில், ஒருவன் காறித் துப்புவது என் காதில் விழுந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். எல்லோருமே திரும்பிப் பார்த்தார்கள். அங்கே சண்முகம் நின்றான். எல்லோர் முகங்களிலும் எழுந்து நின்ற கேள்விக்குறிக்குப் பதில் சொல்லுபவனைப் போல. "குத்தகை கொடுக்க வக்கில்லாதவனுக்கு இராச கூத்து எதற்கு? கறுப்புப் பொட்டு எதற்கு? அவரைப் பார்த்துக் கண் திருஷ்டிபடப் போகுதாமெல்லோ?” என்று எல்லோர் செவிகளிலும் விழும்படியாகக் கூறினான். அந்த நாராசம் கலந்த வார்த்தைகள் என் செவிகளில் விழுந்ததுமே, சண்முகத்தின் கழுத்தைத் திருகிக் கொன்று விட என் கரங்கள் துடித்தன. மாமாவின் முகத்தைப் பார்த்தேன். அவர் முகத்திலும் கோபம் கொப்புளித்தது. கை கலப்பு எழும் சூழல். அண்ணாவியார். ஒரு நல்ல காரியம் நடக்கும்போது விபரீதம் விளையக்கூடாது என்று தடுத்துவிட்டார்.
"நாடகம் வடிவா ஆடினது போதும். சோதினை முடிவு வந்தாலல்லவோ தம்பியின்ரை வண்டவாளம் தெரியப் போகுது?”
“அத்தை, அத்தான் இந்தத் தடவை கட்டாயம் பாஸ் பண்ணுவார்’ திலகவதி தன் அத்தானுக்காகப் பரிந்து பேசுகிறாள்.
“உப்பிடித்தான் நீ போன முறையும் சொன்னனி.”
அடுக்களையில் பேச்சு வேறு திசையிலே திரும்புகின்றது.
என் மாமா முன்னிலையில், என் மச்சாள் அறியும் வண்ணம், நான் மானபங்கப் படுத்தப்பட்ட அந்த நிகழ்ச்சி என் மனத்தை அரித்தது. இரவு முழுவதும் தூக்கம் இல்லை. பொழுது விடிந்தது. என்னுள் ஒரு தெளிவு ஏற்பட்டது.
தோட்டம் குத்தகைக்கு எடுத்துப் பயிரிட்டிருந்தேன்.
புகையிலைக் கன்றுகளை விட, சாமை, குரக்கன், பயறு முதலியனவும்
பயிரிட்டேன். இவை சாப்பாட்டிற்கு புகையிலை அந்தக்காலத்தில் -- 67 -

Page 37
வெண்சங்கு பவுண் கணக்கில் விற்பதில்லை. என்றாலும், புகையிலை விற்ற காசு மிஞ்சும். கூத்து முசுப்பாத்தியில் காசை வேறு வழிகளில் தாராளமாகச் செலவு செய்தேன். குத்தகைப் பணத்தை இரண்டு வருடங்களாகக் கொடுக்கவில்லை. நான் சோம்பேறியுமல்ல. இரண்டாயிரங்கன்று புகையிலைக்கு ஏழு மணித்தியாலம் துலாவை விட்டு இறங்காமல் உழக்கக்கூடிய வாலிபன் என்று ஊரில் எனக்குப் பெயர். இதனால் என்னுள் இருந்த மான உணர்ச்சி வீறு கொண்டு எழுந்தது.
கூத்துப் பழகத் தொடங்கி விட்டோம். இந்தச் சண்முகம் தொடக்கத்தில் இராசா வேஷத்துக்குச் சேர்க்கப்பட்டான். “தொண்டை சரியில்லை” என்று அண்ணாவியார் கூறி, அந்தப் பகுதியை என்னையே ஆடச் சொன்னார். கூத்தாடிய எல்லோருக்கும் என் மீது ஒருவிதப் பொறாமை. இதனால் என்னை வெல்லக் கூடியதாக உடுப்புகள் தேட ஆரம்பித்தார்கள். இந்தப் போட்டியில் நானா விட்டுக் கொடுப்பவன்? என் முடிக்காக, வில் உடுப்புக்காக, புஜ கிரீடங்களுக்காக, கையிலே சுழற்றும் பட்டு இலேஞ்சிக்காக, நீண்ட செங்கோலுக்காக எவ்வளவோ செலவழித்தேன், அத்துடன் வெள்ளுடுப்பு, மேடையேற்றம் என்பவற்றுக்கெல்லாம் பார்த்துப் பார்க்காமல் என் கையால் பணம் விட்டேன்.
நான் ஆடிய கூத்தின் பலன்? குத்தகைப் பணம் கொடாமல் - விட்டதற்காகக் காறி உமிழ்கிறான் சண்முகம்! " -
“உப்பிடி நடிப்புத் திறமையோடை இந்தியாவில் பிறந்திருந்தால் நாளைக்கே சினிமா ஸ்டார்” -
“உந்த வசுக்கோப்புப் பைத்தியம் குறுக்கிட்டுத்தான் படிப்புகளை நாசமாக்குது; திலகவதி உன்னை வீட்டிலை தேடப் போகினம்; நீ போயிட்டு வா பிள்ளை.” சச்சியின் தாயின் குரலில் கண்டிப்பும் சற்றே ஏறியிருக்கின்றது.
அடுத்தநாள் மாமா என்னை ஆள் விட்டுக் கூப்பிடுவித்தார். குத்தகைக் காசு முப்பது ரூபாவையும் என் முன்னால் எடுத்து வைத்தார். சண்முகத்தின் முகத்திலே வீசி எறிந்துவிட்டு, தன் தோட்டத்திலே வேலை செய்யும்படி கூறினார். கோப்பி கொண்டு வந்து தந்த பாக்கியம் மாமி இன்னொரு புதினத்தையும் சொன்னார். “இருக்கிற காணி பூமிகளை வித்தாவது அத்தான் இன்னும் இரண்டொரு கூத்து ஆட = 88 =

வெண்சங்கு வேணும். சண்முகம் போன்ற ஆட்கள் எரிச்சலிலை சாக வேணும்” என்று இரவு முழுவதும் என் மச்சாள் சின்னம்மை வாய் பொருமினாளாம்.
அப்பொழுது நான் நிதானத்தை இழக்காமல் யோசித்தேன். என் கையில் உரமிருக்கிறது. தோளில் வலு இருக்கிறது. சண்முகம் கூறிய வடு இருக்கிறது. இரக்கமும் பரோபகாரமும் தேவையில்லை. என் சொந்தக் காணியிலை செழிப்பாகப் பயிர் செய்யும் வரைக்கும் கூத்தைப் பற்றியும் விவாகத்தைப் பற்றியும் எண்ணிப் பார்ப்பதேயில்லை என்று என் மனதிற்குள் நான் சபதம் ஏற்றேன். “பணத்திற்கு வேறு ஏற்பாடு செய்துவிட்டேன்’ என்று மாமா தந்த பணத்தைத் தட்டிக் கழித்து விட்டு வீடு திரும்பினேன்.
கூத்துக்காக நான் செய்வித்த இராச முடி, வில்லுடுப்பு. செங்கோல், முத்துமாலை எல்லாம் என்னைப் பார்த்துச் சிரிப்பது போலத் தோன்றின. மின்னல் போல ஒரு யோசனை. அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு கூத்து நடப்பித்த மனேஜர் நல்லதம்பியிடம் சென்றேன். அங்கே அண்ணாவி கந்தப்பிள்ளையும் இருந்தார். என் கூத்துடுப்புகளை நல்லதம்பி அவர்களின் பாதத்தின் அடியில் வைத்து. அவற்றை அடமானமாக வைத்துக் கொண்டு நூறு ரூபா தரும்படி கேட்டேன். என்னுடைய மனோ நிலையை அவர் புரிந்து கொண்டார். பணத்தை எடுத்து வருவதற்காக உள்ளே போக ஆயத்தமானார்.
அப்பொழுது அண்ணாவியார் தன் கைலேஞ்சியில் முடிந்து வைத்திருந்த பணத்தில் நூறு ரூபாவை எடுத்து என்னிடம் நீட்டி “முருகேசு, இந்தா இதைப் பிடி. சும்மா தலையை ஆட்டாதே. உன் குருவான நான் உனக்கு - உன் நடிப்புக்கு - தரும் சன்மானம் என்று வைத்துக்கொள்’ என்றார்.
“குருவுக்குத்தான் சீஷன் தட்சணையாக ஏதாவது கொடுக்க வேணும். அதைவிட்டுத் தங்களிடம் கை நீட்டி வாங்க” என்று நான் சொல்லி முடிப்பதற்குள் "பரவாயில்லை. முருகேசு எடுத்துக் கொள். நீ நல்லாக வந்த பின் இரண்டு மடங்காகத்தாவேன்’ என்று அவர் சொன்னார். அப்படிச் சொல்லியும் நான் கை நீட்டவேயில்லை. இந்தக் காட்சியை நல்லதம்பி மனேஜரும் பார்த்துக் கொண்டு நின்றார்.
“இந்தா, முருகேசு! நான் சொல்வதைக் கேள். இந்த உடுப்புகளை நான் அண்ணாவியாரிடமே கொடுக்கிறேன். அவருக்கு
- 69 -

Page 38
வெண்சங்கு வேறு கூத்துகளுக்கும் உதவும். அதற்காக அவரிடமிருந்து நூறு ரூபாவைப் பெற்றுக் கொள். அடமானம் என்ற கதையே வேண்டாம்” என்றார் மனேஜர்.
விஷயம் அவ்வளவோடு முடிந்தது. நான் பணத்தைப் பெற்றுக் கொண்டு. கண்களிலே துளிர்த்த நீரை மறைத்துத் திரும்பும் பொழுது, “முருகேசு, இதை நீயே கொண்டு போ உன் நடிப்புத் திறமைக்காக நான் தரும்பரிசு” என்று கூறி அண்ணாவியார் செங்கோலை என்னிடம் நீட்டினார். அதைப் பெற்று நான் கண்களிலே ஒற்றிக் கொண்டேன்.
இந்தக் காலத்தில் ஒரு பரப்புக் காணி என்ன விலை விற்குது? அந்தக்காலத்தில் எழுபது ரூபாவுக்கும் ஏழு பரப்புக் கலட்டி நிலம் வாங்கினேன். என் சலியாத உழைப்பும் முயற்சியுமே அதைத் தோட்டமாக்கியது. -- --
"அப்ப நான் போட்டியிட்டு வாறேன் அத்தை. திலகவதி என்னைத் தாண்டி, படலையைத் திறந்து செல்கிறாள்.
நான் என் கலட்டி நிலத்தைப் பண்படுத்தப் பெரு முயற்சி செய்து கொண்டிருக்க, தன் காணியை விற்றாவது நான் கூத்தாட வேண்டுமென்று ஆசை காட்டிய என் மச்சாள் சின்னம்மை அந்தக் காணியையே சீதனமாகக் கொண்டு இன்னொருவனுக்கு வாழ்க்கைப்பட்டு விட்டாள். எல்லாம் அளந்தபடியே நடக்கும். நான் கூத்தாடி புகழையும் இகழையும் பெற்றேன். விதி தன் கூத்தை. உம். உலகமாகிய மேடையில், ஆடி விட்டது விதியாகிய அண்ணாவி நடத்தும் கூத்தும். நாங்களும். பல பேரப்பிள்ளைகளைக் கண்டு விட்டேன் நான்.
சச்சி தன் கையில் பத்திரிகையுடன் நான் இருக்கும் இடத்துக்கு வருகின்றான். அந்தப் புதினத்தை எனக்கும் வாசித்துக் காட்ட அவனுக்கு விருப்பம் போலும், பெரிய அறையில் பெட்டகத்துக்குப் பின்னால் இன்னும் நான் பத்திப்படுத்தி வைத்திருக்கும் செங்கோலைப் பார்க்கும் ஆசை என் உள்ளத்தில் எழுகிறது.
- 70 ܣ

வெண்சங்கு
செம்மண்
605தேர்ந்த ஓவியன் ஒருவன். தூரிகையிலே அகப்பட்ட வர்ணத்தை அங்குமிங்கும் அள்ளித் தெளித்தாற் போல அந்தி வானம்” காட்சியளித்தது. பூவக்கல்லித் தோட்டத்தின் தென்னை மர உச்சியின் மீது தோன்றும் மஞ்சள் நிறத்தின் காந்தி அடுத்துவரும் கருக்கல் ' இருளிற் கரைய ஆரம்பித்தது.
பூவக்கல்லி, குட்டியப்புலமென்ற கிராமத்தின் மத்தியிற் பார்ப்போர் மனத்தைப் பறித்திழுக்கும் செம்மண் செறிந்த தோட்டம். சில வருடங்களாகத்தான் அத்தோட்டம் இளங்குமரி போல மேனி மினுக்கிக் கொண்டிருக்கிறது. வானம் பார்த்த பூமியாகிய குட்டியப்புலத்தில் ஆளப்பதிந்த இருபத்தைந்து முழக் கிணற்று நீரினால் அதை வளப்படுத்தியவன் பசுபதி. இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும்' என்பதற்குப் படித்தவர்கள் வியாக்கியானம் செய்ய, சோம்பேறிகள் திண்ணை தூங்க, பசுபதி மாத்திரம் வாயாற் பேசாது கையால் உழைத்துப் பூமித்தாயின் கடைக்கண் பார்வையைப் பெற்றான்.
எதிரே வரும் குரக்கன் நடுகைக்காக அந்தச் செம்மன் நிலம் உழுது பண்படுத்தப்பட்டிருந்தது. அதன் இனிய வாசனை, நிலத்தின் சுகந்தம் போவோர் வருவோரைப் புளகாங்கிதம் அடையச் செய்தது. பூவக்கல்லி தன் செந்நிற வாயாற் சிரித்துக் கொண்டிருந்தாள்.
கண்ணுக்கு இனிமையும், கருத்துக்குப் புதுமையும் ஊட்டும்
அந்தச் சூழலை இரசிக்கத் திராணியற்றவராய் தன் நிலத்தில்
உண்டாக்கிய “தட்டையன்” புகையிலையை நடுங்கும் கைகளாலே - 71 -

Page 39
வெண்சங்கு சுருட்டிக் கொண்டிருந்தார் பசுபதி. இன்று அவர் கிழவனாகி விட்டார். அவரது விழி வட்டத்தின் அந்தத்திலே நிலைத்து நிற்கும் நினைவலைகள் மனத்திலே சுருள் அவிழ, அவர் தன் கைகளை ஒரு முறை வருடிக் கொண்டார்.
இரண்டு கைகள் இருபது பரப்புப் பொட்டல் நிலத்தைக் கொத்தியும், உழுதும், கிண்டியும் பொன் கொழிக்கச் செய்து விட்டனர். பாட்டன், முப்பாட்டன் காலத்தில் அம்மை வடுக்கள் உள்ள முகம் போல குண்டும் குழியுமாக ஒப்பமற்றுக் கிடந்த பூவக்கல்லி தன் கைவண்ணத்தின் செயலிலே, உழைப்பின் சக்தியிலே மெருகு பெற்றுக் காட்சியளிப்பதை நிமிர்ந்து பார்த்தார். கிணற்றடியில் துலா நீண்டு நிமிர்ந்து வானத்தை முட்டுவதைப் போலத் தெரிந்தது. வாலிப வயதிலே, நடுச்சாமத்தில் அந்தத் துலாவில் தான் பாடிய, தேடி வந்தேனே வள்ளி மானே’ என்ற நாடகப் பாட்டு நினைவுக்கு வந்தது. ஒரு முறை தன்னை அறியாமலே சிரித்துக் கொண்டார். முதுமையிலே இளமைக்கால நினைவு தரும் இன்பம் இழையோடியது.
காகங்கள் கூடுகளை நோக்கித் திரும்பின. பசுக்கூட்டங்கள் பட்டிகளை நோக்கி விரைந்தன. கிளித்தட்டு விளையாடிய மொட்டைத் தலைச் சிறாரும் பெருஞ் சத்தமிட்டபடி வீடுகளுக்குச் சென்றனர். கோவில் மணி டாண் டாண்’ என ஒலித்தது. “முருகா” என்றது அவர் வாய். கடைசி முறையாக தனது தோற்றத்தை ஆவலோடு பார்த்தார் அவர் பக்கத்திலே நின்ற கதலி வாழைக்குட்டியின் குருத்தைத் தன் கையால் வருடினார். பேரக் குழந்தையின் அன்புடன் தரும் இதத்தைக் கண்ட அவர் கண்களில் நீர் முத்துக்கள் சுரந்தன.
பசுபதிக் கிழவனார் முரட்டுப் பசுபதி என்ற பெயர் கேட்ட காலத்தில் - அதாவது ஐம்பது வருடங்களுக்கு முன் - பூவக்கல்லித் தரையில் கிணறு வெட்டிவித்துப் பொங்கல் பொங்கிய அன்று நட்ட ஞாபகச் சின்னமான வாழைக்குலை தந்து வீழ. அதன் அடியிலே முளைத்த வாழையடி வாழையாக வந்த சந்ததியின் குட்டி அது. அதனைத் தடவும் போது தன் சந்ததியின் - பிள்ளைகளின் நினைவு எழவே அவரது கண்கள் நீரை உகுத்தன.
அவருக்கென்று ஆண் குழந்தைகள் பிறக்கவில்லை.
பிறந்தவை இரண்டும் பெண்கள். மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திட வேண்டும் அம்மா’ என்று யாரும் பாடலாம். ஆனால், - 72 =

வெண்சங்கு நிதர்சன வாழ்க்கையில். கணவன் என்ற காவற்காரனின் அடிமை அவள். பொன் விலங்கு பூட்டப்பட்டு, அவனால் ஆட்டப்படும் சூத்திரப் பாவை. பசுபதிக் கிழவனாரின் பெண்களும் ஆடினார்கள், ஆட்டப்பட்டார்கள். வகுப்புக்கலவரத்தின் பின் ஆட்டம் பேயாட்டமாக மாறியது. .
புழுதி மண் புரள மண் கிண்டும் வேலையை ஏளனமாக உதறித்தள்ளி, கண்டிப்பகுதியில் சுருட்டுக்கடை வைத்துப் பிழைக்கப் போன மூத்த மருமகன் கணபதிப்பிள்ளை, பெட்டிக்கடையிலிருந்து "இரும்புக்கடை முதலாளியாக விலாசம் போட ஆரம்பமாகும்போது, வகுப்புக் கலவரம் வந்து சகலரையும் வாரிச்சுருட்டிக் கொண்டு போய்விட்டது. -
இளைய மருமகன் இளையதம்பி, "நானென்ன மூத்த மருமகனுக்குக் குறைந்தவனா’ என்ற இறுமாப்பில் களுத்துறைப் பகுதியைச் சரணடைந்து, 'வழி வியாபாரஞ் செய்து - சுருட்டு விற்று. - இனி ஒரு கடை எடுத்து நடத்தலாம் என்ற நம்பிக்கை துளிர்க்கும் போது அவன் பிழைப்பிலும் மண் விழுந்தது. பிறந்த ஊரே சதம் என எண்ணி வந்தும் நிலத்தை நாடவில்லை. டிறைவர் வேலை பழகி வருகிறான். - -
பசுபதிக் கிழவனாருக்கு இவையெல்லாம் வேதனையை விளைவித்த சங்கதிகள்தாம். நிலத்தாயை ஏளனம் செய்ததால் வந்த வினை என்ற எண்ணம் மிக மிக, அதுவே அவரைப் படுக்கையில் விழச் செய்துவிட்டது. உள்நாட்டு வைத்தியர்களின் குடி நீரும் குளிகைகளும் பழைய காலத்துப் பெட்டகத்தின் மீது அவரை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.
வாழ்க்கையோடு இணைந்து - கண்கள் இரண்டும் ஒன்று போலக் கண்டு - இன்று அவர் போலாகிவிட்ட கண்ணாத்தைக் கிழவி உரைத்துச் சிரட்டையிலுற்றிய மருந்தைக்கூட இன்று சாயந்தரம் அவர் குடிக்கவில்லை. அவரைக் குடிக்கவிடாமல் வெளியே விரட்டியடித்த அந்தக் காரசாரமான பேச்சுக்கள். ,
“சரி சரி. உன்னால் முடியுமானால் பூவக்கல்லிக்குள் காலை வை பார்ப்போம்” - இது மூத்த மருமகனின் சவால்.
ہے 78 -

Page 40
வெண் சங்கு “என்ன இப்பவும் முதலாளி என்ற எண்ணமோ? நான் வைக்கத்தான் போறேன். எனக்குத்தான் தருவதாகக் கலியாணக் காலத்தில் சொன்னார்கள். நீயும் கூடத்தானே ஓம் என்று தலையாட்டினாய்! இப்ப உன்ரை கடையெல்லாம் அடிபட்டதற்காக என்ரை காணியைப் பிடுங்கப் பார்க்கிறியோ? இது இவரட்டை முடியாது” இளைய மருமகனின் எதிர்பார்ப்பு.
அவர்கள் தான் அப்படிக் கதைத்துக் கொண்டார்கள். அதற்குப் பெண்களும் ஒத்துதினார்கள். அக்கா, தங்கை என்ற உறவு, நீரில் எழுதிய எழுத்தாய்ப் போய்விட்டது. சண்டை பிடிக்கும் சேவல்களாய் அல்லவா மாறிவிட்டார்கள்?
கண்ணாத்தைக் கிழவி. ‘அடியே, நீ கொஞ்சம் பொறு. ஏனடி சண்டை? பூவக்கல்லியை இப்ப யாருக்குக் கொடுத்து விட்டம்? இருங்களேன். ஆறுதலாய்ப் பார்ப்பம்” என்று சமாதானப்படுத்தினாள்.
கிழவியின் எண்ணம் எதுவென்று பசுபதிக்குப் புரிந்துவிட்டது. அந்தச் செம்மண் தரையைத் துண்டாடிப் போட்டு இரண்டு மருமக்களுக்கும் பங்கிடுவதுதான். பிள்ளை போல் வளர்த்துப் பாதுகாத்துப் பண்படுத்திய அந்த நிலத்தை இரண்டு துண்டாக்குவதற்கு. பெற்ற பிள்ளையை வெட்டிப் புதைப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாக அவருக்குப்படவில்லை. காலக் கண்ணில் அவர் கருத்தோடு கண்காணித்தவந்து நிலம் முடிவில் துண்டாடப்படுவதை அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. நினைவு கூடத் தொடர முடியாத வேதனை.
அந்தக் கிராமத்தின் விவசாயிகளுக்கே அவர் ஒரு முன்னோடி. தொட்டதெல்லாம் பொன்னாக விளையும் என்ற ஐதீகம் வேறு. அதை உறுதிப்படுத்துவது போலப் பூவக்கல்லி பசுமை கொழித்துச் சாட்சியாய் நின்றது. ஆயுள்வரை அதில் பாடுபட வேண்டுமென்று ஒரேயொரு இலட்சியக் கோட்டில் நின்ற அவரை அந்த நோய் இப்படிக் கண் முன்னாலே கருகவிடச் செய்வதாகத் தோன்றியது. பழுத்த இலை மரத்தில் ஒட்டிக் கொண்டிருந்தாலும், காலக் காற்றுக்கு முன் எம்மாத்திரம்?
“அப்பு. நீங்கள் தான் இப்ப ஒண்டும் செய்ய முடியாமல் இருக்கிறியளே. அவர் கொஞ்ச நாளைக்குத் தோட்டத்தைப் - 74 -

வெர்ை சங்கு
பார்க்கட்டும்” என்றாள் மூத்த மகள். 'சரி என்றதின் பலன் எப்படிப்பட்ட காரசாரமான வாக்குவாதம்? e
ஆந்திச் சூரியன் இருள் என்ற கருந் துணியால் தன்னை மூட முயன்று கொண்டிருந்தான். கிழவர் மெதுவாகக் பொல்லை ஊன்றிக் கொண்டு நடந்தார்.
கோவில் மணி மறுபடியும் ஒலித்தது. முருகா. இதுக்கொரு வழிகாட்டு என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.
கோவிலைத் தாண்டி நடந்து கொண்டிருக்கும் போது, கணிங், கணிங் என்ற வெண்டய ஒலி பின்னே கேட்கத் திரும்பிப் பார்த்தார்.
“கமக்காரன் இன்னும் வீட்டை போகலையா?” என்று கேட்டபடியே மாடுகளை ஒரு பக்கம் ஒதுக்கித் தானும் ஒதுங்கினான் வேலு.
வேலு அவருடன் கூடமாடத் தோட்ட வேலை செய்த குடிமகன். அந்த மம்மல் பொழுதிலும் அவனது பதவிசான அடக்க ஒடுக்கம் கிழவனுக்குத் தெரிந்தது.
“இப்பதான் போறேன். நீயும் வீட்டை தானே? வாவேன் பேசிக்கொண்டு போவம்’ என்று சொல்லிக் கொண்டே நடந்தார். அவரது சிந்தையில் சிறு ஒளி. அது வேலவனைப்பற்றி வளைந்தது. “விவசாயத்தின் நுட்பங்களை, அதன் கடுமைகளை உணர்ந்தவன் இவன். நல்ல உழைப்பாளி. தோட்ட வேலையில் ஊறியவன். இவனுடைய வெயர்வை கூடப் பூவக் கல்லியின் செழுமைக்கு உதவியுள்ளது. ஏன் இவனுக்கே.”
“என்ன. கமக்காரன் உங்களுக்குள்ளை கதைக்கிறியள்?”
“இல்லை வேலு. என்ரை காணியைப் பற்றித்தான் எனக்குக் கவலை. அதை.”
“அதை என்ன செய்யலாம் என்று பார்க்கிறியள்?”
ہے 75 ہے

Page 41
வெண்சங்கு “வேலு, உனக்குத் தருவன், உந்தச் செம்பாட்டுக் காணியை உப்பிடிக் கொண்டுவர நான் பட்ட பாட்டை”
“எனக்குத் தெரியாதே கமக்காரன்? உந்தக்காணி இருந்த இருப்பு. பசி பாராமல், நித்திரை கொள்ளாமல் இராவாய்ப் பகலாப் பாடுபட்டியள். இனிமேல் காலம் உப்பிடியெல்லாம் பாடுபட யார் இருக்கினம்?”
“ஓமடா மோனை. அதுதான் எனக்கும் கவலையாய் இருக்கு. என்ரை மருமக்களிலை எனக்கு நம்பிக்கையில்லை. அதுதான் இதை உன்னட்டைத் தரலாம் என்று யோசிக்கிறேன். நீ பாடுபட்டுச் செய்து வருசா வருசம் குத்தகைப் பணத்தை மாத்திரம் பாதி பாதியாய் இரண்டு மக்களிடமும் கொடேன்.”
“சே, எனக்கேன் கமக்காரன் இந்தச் சங்கடம் எல்லாம்? உங்கடை மருமக்களுக்கிட்ையிலே போட்டி. அதுக்கிடையில் நான்
و •
வந்து. مصر
“அந்தப் போட்டியால் தான் கேட்கிறேன்.”
“நீங்கள் ஒரே குடும்பம் மாமன் மருமக்கள். இண்டைக்குச் சண்டை பிடிப்பியள். நாளைக்கு ஒன்றாக் கூடுவியள். நான் இடையில் வந்தால் கரைச்சல் தானே?”
“வேலு, அவர்களுக்கு உந்தக் காணியைக் கொடுக்கில் இரண்டாகப் பகிர்ந்துதான் கொடுக்க வேணும். பூவக்கல்வியைப் பகிர்ந்து இரண்டாக்குவது என்று நினைக்கவே என்ரை உயிர் போகும்போல இருக்கடா. காணிகளைப் பகிர்ந்து சிறு சிறு துண்டுகளாக்கி, பிறகு அதையும், கமம் செய்யாமல் விட்டு அதுக்குள்ளை வீடுகளையும் கட்டித்தான் எங்கடை கிராமம் அழிஞ்ச நிலைக்கு வந்திட்டுது. பூவக்கல்லிக்கு அந்த நிலை வரவே கூடாதப்பா.”
“அவையள் முயற்சியை எல்லாம் கைவிட்டு ஓடி வந்து
கரைச்சல் பட்டுக் கொண்டு இருக்கையுக்கை, உப்பிடியெல்லாம் பேசப்படாது கமக்காரன்.”
ܘܗ 76 ܗܝ.

வெண்சங்கு -
"இப்ப அவையள் படுகிற கரைச்சல் எனக்குத் தெரிஞ்ச படியால்தான் சொல்லுறன் மூத்த மருமகனுக்கு பகிர்ந்து கொடுத்தால் தோட்டம் செய்வான் என்று நினைக்கிறியே? ஆரேன் பணக்காரக்கனுக்கு கண்ட காசுக்கு வித்துப் போட்டு. நெல்லுக் குத்துகிற மெசின் போட இருக்கிறான். இளைய மருமகன் கார் பழுகுகிறாரல்லே? அவரும் தன்ரை பங்கை வித்துப் போட்டு, “கார் வாங்க எண்ணுகிறார். அவையளுக்கு பூவக்கல்லி ஒரு விளையாட்டுப் பண்டம். வித்துச் சுடுகிற பொருள். எனக்கு அது என் பிள்ளையளிலும் பெரிசடா. அது என்ரை உயிரடா, என்ரை சாம்பலைக்கூட அதுக்குள்ளைதான் புதைக்க வேணும். உதை அவையள் செய்யாயினம். நீயாவது உயிரோடை இருந்தால் செய்.”
இருவரும் நடந்தனர். வீட்டு வாசலில் கண்ணாத்தைக் கிழவி, “எங்கை போயிட்டு வாறியள். இவ்வளவு நேரமாக? உங்களுக்கு இந்த வருத்தத்திலும் ஒருக்கா அந்தச் செம்பாட்டுத் தரையை பாராட்டி நித்திரை வராது. மருந்தைக்கூட குடிக்காமல் அங்கை என்ன போக்கு? என்று புறுபுறுத்த படி அவரைக் கூட்டிக் கொண்டு உள் நுழைந்தாள்.
Tெழ்வு என்ற மரத்தில் பசுமையாக இருந்து, காலத்தின் செலவினால் பழுத்த இலையின் எண்ணம் எதுவுமே நடக்கும் முன் அது கருகி வீழ்ந்தது. மூன்றாவது நாள். எரிந்த உடலின் சாம்பலை உலக ஒப்பாசாரத்திற்காக எடுத்துச் சென்று கடலிற் கரைத்தார்கள் இரு மருமக்களும்.
அந்திவேளை, ஒருவரும் அறியாமல் வேலன் அந்தச் சடலம் எரிந்த இடத்தில் இருந்த துகளில் ஒரு பிடியை அள்ளிச் சென்றான். வளர் கோட்டு இளம்பிறையின் துல்லிய ஒளியில், பூவக்கல்லி எழில் கொண்டு விளங்கியது. கிணற்றடிக்குத் தெற்கே வாழைகளின் இடையே ஒரு குழி. கமக்காரனின் கடைசி வேண்டுகோளை பூர்த்தி செய்யச் சாம்பலை இட்டு மூடினான் வேலு. அவனது நெஞ்சிலே முட்டி வந்த வேதனை இப்போதுதான் சாந்தம் அடைந்தது.
- 77 -

Page 42
வெண்சங்கு
கண் திறந்தது
lெண்டிகள் - பன்னிரண்டு வண்டிகள் - பூட்டப்படுகின்றன. வேற்று முகமும் வினை முகமும் தோயுனர்க்கு மாற்று நகுல மலை வான் புனலில் - கீரிமலையில் - நீராடி, அந்தியேட்டி செய்வதற்கான ஆயத்தம் இறந்து போனவர் பெரிய மனிதர். மங்காப் புகழ் பெற்ற மயிலையம்பதியில் மார்க்கண்ட முதலியார் வழிவந்த மயில்வாகனம் பிள்ளை பெரிய புள்ளி. கிராமச் சங்கத் தலைவராகவும், பாடசாலை முகாமையாளராகவும், கோவில் மனேஜராகவும் சீருடன் வாழ்ந்தவர். ஊரே திரண்டிருந்தது. -
இரவு பன்னிரண்டு மணிக்குத் துலாவில் ஏறி, பனியில் நனைந்து குளிரில் கொடுகி, இறைத்த அலுப்புத் தீர பழையதை உண்டு, குரக்கன் பிட்டையும் மரவள்ளிக் கிழங்கையும் ஒரு பிடி பிடித்து ஒரு செம்பு பாலைக் கறந்து கொண்டு எட்டு மணிக்கு வீடு திரும்பும் கமக்காரர்கள் இன்று விடியும் முன் எழுந்து மயிலைக் காளை, கூடு கொம்பன், கொடிச்சி வாலன், நெற்றியிற் சுட்டியன், கள்ளக் கறுவல் சகிதம் வந்து வண்டி பூட்டத் தயாராகி விட்டார்கள். மயில்வாகனம் பிள்ளை இருந்த காலத்திலும் பெரிய மனிதர்; இறந்த பிறகும் பெரிய மனிதர்.
ஒரு மோட்டார் வண்டியில் ஐந்தாறு பேர் போய், அகப்பட்ட குருக்களுக்கு ஐந்து ரூபாவைக் கொடுத்து அந்தியேட்டி மடத்தில் யாருக்கோ நடக்கும் அந்தியேட்டியில் தர்ப்பையைச் சுட்டு, முட்டியை உடைத்து, கீரிமலைக் கேணியில் 'காக முழுக்கை அவசரமாக முடித்துக் கொண்டு வரும் கடமைக்கான அந்தியேட்டியல்ல இது. அந்தஸ்துக்கேற்ற அந்தியேட்டி -
- 78 -

வெண்சங்கு
பன்னிரண்டு வண்டிகள். பார்க்கப் பசி தரும் பருவக் காளை மாடுகள். ஒரு ஒற்றைத் திருக்கல், அதன் அழகே தனி அதிற் பூட்ட ஆயத்தமாகப் பூவரச மரத்திற் கட்டியிருக்கும் மயிலைக் காளை. அதன் ஏரியின் திரட்சி. கழுத்திற் கட்டியிருக்கும் வெண்டையத்தின் அழகு. அந்தியேட்டி நடாத்த வரும் சைவக் குருக்கள் அந்த வண்டில்தான் ஏறப் போகிறார்கள் என்பதற்கு அடையாளமாக மான் தோல் விரிக்கப்பட்டிருக்கிறது.
ஒற்றைத் திருக்கலில் மயிலைக்காளை பூட்டப்படுகிறது. குருக்களையா ஏறுகிறார். பெண்களின் ஒப்பாரி கேட்கிறது. அதைத் தொடர்ந்து அந்தியேட்டிக்கு வேண்டிய சாமான்கள் ஒரு வண்டியில் ஏற்றப்படுகின்றன.
சிறுவர்கள் கும்மாளமடித்தபடி இரண்டு மூன்று வண்டிகளில் தொற்றுகிறார்கள். `கிருதா மீசைக்கார முருகையா தன் வண்டியில் ஏற வந்த இரண்டு சிறுவர்களை, அந்த வண்டிக்குப் போங்கோ, இது குறுக்கை இழுக்கிற கொடிச்சி வாலன்' என்று கூறி ஏற விடாமல் தடுக்கிறான்.
“உபாத்தியார். அந்தக் கணபதிப்பிள்ளையின் வண்டியில் போய் ஏறுங்கோ’ என்று என்னைப் பார்த்துக் கூறுகிறான் கந்தசாமி. அந்த வண்டியில் ஏறி ஆசனத்தட்டின் பக்கம் அமரச் சென்ற என்னை, "சாணி பட்டாலும் படும். பின் வண்டியில் இருந்தால், நல்லது எனக் கணபதிப்பிள்ளை பெளவியமாகக் கூற, நான் பின் வண்டியில் உட்காருகிறேன்.
மேள வாத்தியம் முழங்குகிறது. நாதஸ்வரக்காரன் பூபாள இராகத்தை அள்ளிப் பொலிகிறான். காலை வேளையில் அந்த இராகம் எழும்பும் ஆனந்தமயமான காட்சி.
வண்டிகள் நகருகின்றன. முதலில் ஒற்றைத் திருக்கல். ஐயர் வண்டி, அதைத் தொடர்ந்து எறும்புச்சாரல் போல வண்டிகள். வண்டியிற் பூட்டியதும் அடங்காது குதிக்கும் காளைகளை அடக்கிப் பிடித்தபடி வாலிபர்கள் நடக்கிறார்கள். சிறுவர்களும், கிழவர்களிற் சிலரும், நானும் ஐயரும் தான் வண்டிகளில் உட்கார்ந்திருக்கிறோம். ஐம்பது பேருக்குமேல் நடந்து வருகிறார்கள். அந்தக் காட்சியை எண்ணி என் மனம் கவிதையே பாடத் தொடங்கிவிட்டது.
- 79 -

Page 43
வெண்சங்கு மயிலையம்பதியின் சந்திவரை அப்படிப் போக வேண்டுமாம். இறந்தவரது தம்பியின் கட்டளை இது. 'நாலு மனிதர் பார்த்து இதைப்பற்றிப் பேசாவிட்டால் இவ்வளவு செலவழித்து நடத்தி என்ன பயன் என்பது அவர் கருத்தாக இருந்திருக்கலாம்.
மயில்வாகனம் பிள்ளை இருந்த காலத்திலும் பெரிய மனிதர்: இறந்த பிறகும் பெரிய மனிதர் தான் என் மனம் கவிதையிலே இலயித்திருக்க, என் கையில், “சட்டம்பியார்! இது கல்வெட்டு. கவனமாக வைத்திருங்கோ’ என்று புத்தகக்கட்டை நீட்டுகிறான் கந்தசாமி.
“இதிலே வைத்துவிட்டுப் போ” என்றேன் நான். அதைத் தொடக்கூடக் கூச்சமாய் இருந்தது. என்னுள் ஒர் அவாக்கிள்ளல். "இந்தக் கல்வெட்டை - சரம கவியை - யார் பாடியது?. பண்டிதர் சின்னத்தம்பி பாடியிருப்பானோ? சே. சே அவன் பாடியிருக்க மாட்டான். மானஸ்தன். கெளரவத்தை விட்டுப் பாடுவானா? மயிர் நீப்பின் வாழாக் கவரிமானைப் போன்றவன். புலவர் சுப்பிரமணியம்? ஆம். அவன் பாடியிருப்பான். புழுகுணிச்சுப்பு புழுகவென்றே பிறந்தவனாயிற்றே? புலவர் பட்டத்தை தனக்குத் தானே இட்டுக் கொண்டவன் ஆயிற்றே. பாவி, அவன் என்னுடைய மாணாக்கன் என்று சொல்லித் திரிகிறானாம். வெட்கக்கேடு. படித்தவன் எல்லாம் மாணாக்கனாய் விடுவானா? என்னுடைய குணம். நடை நேர்மை, செருக்கு எல்லாம் அவனுக்கு
* வருமா? அவனைச் சொல்லி என்ன? காலம் 'உண்டிருந்து வாழ்வதற்கு
உரைக்கின்ற காலம். ஏன்? நானே இந்த அந்தியேட்டிக்கு வந்தது உலக ஒப்பனைக்காக அல்லாமல் வேறெதற்கு?.
வண்டிகள் போய்க் கொண்டிருக்கின்றன. வெண்டையங்களின் “கலீர், கலீர் சப்தம். சக்கரச் சுழற்சியின் 'கடா முடா ஓசை முன் வண்டியிற் செல்லும் சிறுவர்களின் பாட்டு வண்டிகள் சந்தியின் வளைவில் திரும்புகின்றன.
என் ஆசிரியத் தொழிலை - உபாத்தியாயர் வேலையை - இந்த மயில்வாகனம்பிள்ளையின் தகப்பனார் காலத்தில் தொடங்கினேன். அவர் எவ்வளவு நல்ல மனிதர் சைவம் வளர, தமிழ் வளர மயிலையம்பதியில் ஒரு நாமகள் வித்தியாசாலையைத் தொடங்கினார். நிகண்டும் இலக்கணமும் புராணங்களும் படித்த என்னை என் வீட்டுக்கு வந்து அழைத்து. பாடசாலைத் தொடக்க விழா நடாத்தும்படியும்
- 80 -

வெண்சங்கு கேட்டுக் கொண்டார். "சேட்டிவிக்கற் எதுகும் இல்லாத என்னையும் ஆசிரியராக நியமித்தார். ஐந்தரை ரூபாவில் தொடங்கி, இருபது ரூபாவரை சம்பளம் எடுத்தே அந்தச் சொற்ப சம்பளத்திற்காகவா. படிப்பித்தேன்? நான் பிறந்த சமயம், என்னுடைய தாய்மொழி - தமிழ் - வளர வேண்டும் - என்பதற்காகவே படிப்பித்தேன். அத்துடன் ஊரில் ஒரு கெளரவம். சபையில் நல்ல மதிப்பு வீட்டு அடுப்பில் பூனை தூங்கினாலும் என் மன நிறைவு என்னை வளர்த்தது.
நான் சம்பளத்தை வாங்கும் நாள். அதை வசனத்தில் வர்ணிக்க முடியாது. கவிதையிலே தான் பாட வேண்டும். அந்த மனேஜர் எழுந்து நின்று. அன்போடு, "இது உங்களது வேலைக்குத் தரும் சம்பளமல்ல. ஏதோ கைச் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்” என்று பணத்தை தரும் அழகு. அது ஒரு காவியம். அவர் பெரிய மனிதர். இங்கிதம் தெரிந்த மனிதர். மனிதருள் மாணிக்கம்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலைக் கடந்து முதலாம் ஏற்றத்தில் வண்டிகள் மெதுவாக ஏறி இறங்குகின்றன. இறக்கத்தில் இறங்கும்போது வண்டிக்காரர்கள் நாணயக் கயிறுகளைச் சுண்டிப் பிடிக்க, ஒவ்வொரு வண்டியும் முன் வண்டியுடன் மோதி விடுமோ என்று வண்டியிலுள்ளோர் விழி பிதுங்க, நுகத் தடிகள் மாடுகளின் பிடரிகளையும் கொம்புகளையும் உரச, வண்டிகள் மீண்டும் சீராகத் தொடருகின்றன.
அந்தப் பெரிய மனிதர் இறந்து விட்டார். அவருடைய மகன் மயில்வானம் பிள்ளை பாடசாலையின் முகாமையாளரானார்.
தமிழ், சைவம் எல்லாம் பணம் என்ற கல்லில் உடைபடும் தேங்காய் போல் ஆகிவிட்டன. பணம். பணம், பணம். இதுவே அவரது இலக்காகிவிட்டது. ஆசிரியர் வேலை ஏலத்தில் விடப்படும் சரக்காகியது. யார் கூடப் பணம் கொடுக்கிறாரோ அவர் பஞ்சமா பாதகரானாலும் நியமனம் பெற்றார். சேட்டிவிக்கற் இல்லாத என்னை எப்படியாவது வேலையை விட்டு நீக்கிவிட்டு, அதை வேறொருவருக்கு கொடுத்துப் பணம் சம்பாதிக்க எண்ணினார். அதை அவர் வெளிப்படையாக என்னிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் நானாகவே வேலையை விட்டிருப்பேன். அவமானப்படுத்தத் தொடங்கிவிட்டார். சம்பளத்திற்காக நான் மூன்று முறை போனபோது அவர் படுத்துத் தூங்குகிறார் என்று
- 81 -

Page 44
வெண்சங்கு வேலைக்காரனைக் கொண்டு சொல்லிவித்தார். என்னிடம் படித்தே தலைமையாசிரியனாகிய புலவர் புழுகுணி சுப்பிரமணியத்தைக் கொண்டு என்னுடைய வேலை சரியில்லை என்று எழுதி வாங்கி வைத்துக் கொண்டார். மானம் இழந்தபின்? உத்தியோகம் ஒரு கேடா? நானாகவே வேலையை விட்டுவிட்டேன். அதற்காக ஒரு பிரியா விடைக் கூட்டம் நடாத்தி என்னைக் கெளரவிக்க வேண்டுமென இந்த மயில் வானம்பிள்ளை பெரிய மனிதத் தன்மையுடன் பரபரப்புக் காட்டினார். -
வண்டிகள் இரண்டாம் ஏற்றத்தைக் கடந்து மூன்றாம் ஏற்றத்தில் மெதுவாக ஏறத் தொடங்கி விட்டன. அந்த வண்டிகளின் சில்லுகள் உருள்வதைப் போலவே என் வாழ்க்கையும் மேலும் கீழுமாக. வறுமையும் செல்வமுமாக உருண்டதை நினைக்கிறேன்.
என்னுடைய மகன் ஆசிரியர் கலாசாலையில் படித்து வெளியேறி உத்தியோகம் தேடும் படலத்தில் இறங்கினான். அவன் ஆசிரியனாக மாதா மாதம் உழைக்கத் தொடங்கிவிட்டால், என் வாழ்வு ஓரளவு நிம்மதியாகும். ஒரு நாள் திடீரென்று மனேஜர் மயில்வாகனம் பிள்ளை புலவர் புழுகுணி அவர்களோடு என் வீட்டுக்கு வந்தார். வீடு தேடி வந்தவரை மரியாதைக் குறைவாக நடத்தக்கூடாது அல்லவா? நானே எழுந்து போய் உபசரித்துக் கதிரை கொடுத்து இருக்கச் செய்தேன். அவர் மிகவும் பணிவாக எனது மகனுக்குத் தமது பாடசாலையிலேயே உபாத்தியார் உத்தியோகம் கொடுப்பதாகவும், நான் செய்த கல்விப் பணிக்குத் தமது நன்றி அறிவித்தலாய் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். புலவர் சுப்பிரமணியமோ பாகாய் உருகி ஒத்துதினார். ஆலகால விஷம் அமுதமாய் மாறிவிட்டதா? வெப்பம் மிகுந்த பாலைவனம் குளிர் சோலையாகச் சீதளம் பெற்றதா? என் மனைவி என்னைக் கண் சாடையாகக் கூப்பிட்டு, 'ஓம் என்று சொல்லுங்கள் என்று காதுக்குள் குசுகுசுத்தாள். வரிக்கு வரி தன் கோடுகளை மாற்றினாலும் இந்த மனிதனின் குணம் மாறுதலடையாது என்பதைக் கண்டவன் நான். "யோசிக்கலாம்' என்பதோடு நிறுத்திவிட்டேன். அடுத்தநாள் என் மகனை அவர் வீட்டுக்கு அனுப்பினேன். அவன் சொன்ன செய்தி என்னைத் தூக்கி வாரிப் போட்டது. தனது கால் நொண்டியான மகளை விவாகஞ் செய்கிறாயா? அப்படியானால் ஆசிரியர் உத்தியோகத்தோடு இந்தப் பாடசாலையையே சீதனமாகத் தருகிறேன்"
",

வெண்சங்கு என்று ஆசை காட்டினாராம். சீ! என்னிடம் நேரடியாகக் கேட்டிருக்கலாமே? வாலிப வயதுள்ள - உத்தியோகத்துக்கு அலையும் - ஒரு பையனிடம் கேட்கக்கூடிய கேள்வியா இது? -
வண்டிகள் கீரிமலையை அடைந்து விட்டன. கடலலைகள் குமுறிக் கொண்டிருந்தன. அந்தியேட்டி மடத்தை அடைந்த வண்டியிலிருந்து சாமான்கள் இறக்கப்பட்டன. சைவக்குருக்கள் பரபரப்பாக கோலம் போட்டுக் கும்பம் வைத்துக் கிரியைகளை ஆரம்பித்துவிட்டார்.
மயில்வாகனம் பிள்ளையின் புத்திரசிகாமணி - ஓர் அரைப் பைத்தியம் - நூல் போட்டுத் தர்ப்பை சுட்டு, சுண்ணம் இடித்து, முட்டி உடைத்துக் கிரியைகளை செய்து கொண்டிருந்தான். இவ்வளவும் நடைபெறும்போதும் எனக்குச் சரம கவியைப் பற்றியே எண்ணம். "அதை யார் பாடியிருப்பார்கள்? எப்படி எப்படியெல்லாம் புழுகியிருப்பார்கள்? என்ற நினைவலைகளில் நான் மிதந்திருக்கும் சமயம், ஒரு சரம சவிப் புத்தகம் என் கையிற் கிடைத்தது.
பார்த்தேன். என் தலை கிறு கிறுத்தது. அட. பாவி!” என்று என் வாய் என்னை அறியாமலே முணு முணுத்தது.
அதற்குள் பண்டிதர் சின்னத்தம்பி, "சீரேறு இலங்கையின் வடபாலமைந்திடும் என, தன் இனிய குரலிலே பாடத் தொடங்கி விட்டான். பாடல்கள் அருமையானவை. அவன் வாசிப்பே தனியழகு. அந்தியேட்டி மடத்திலிருந்த அத்தனை பேரும் வாய் பிளக்க அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் எனக்கு.? எரியும் சுவாலையின் மேல் இருந்து வெதும்புகிற நிலை.
வம்சாவளி, சுற்றமித்திரர், அவரவர் உத்தியோகம், இறந்து போனவரது பிரபாவம், வள்ளண்மை, இரக்கம் எல்லாம் - இல்லாதவை எல்லாம் - சரம கவி மாமூல்படி பாடப்பட்டிருந்தன. பக்கத்திலிருந்த கிழவனார் ஒருவர், "பாட்டு நல்ல பாட்டு' என்று மற்றொருவருக்குச் சொன்னது என் காதிலும் விழுந்தது. இறுதியாக,
- 88 -

Page 45
வெண்சங்கு ”கற்றவர்கள் மெச்சிடும் மயில்வாகனம்பிள்ளை - கல்விச் செல்வம் வளர்த்தே கருதரிய முனிவர்கள் உறைகயிலை மலையில் அமர்
கடவுள் பதம் மேவினனரே”
என, மயில்வாகனம்பிள்ளைக்குச் சாயுச்ச பதவி கொடுக்கப்பட்டிருந்த வரி வந்ததும் நான் எழுந்து விட்டேன். இந்தப் பாவச் சொற்களைக் கேட்ட காதுகளை எத்தனை புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கிப் புனிதமாக்குவது?
புலவர் சுப்பிரமணியம் என்னைத் தொடர்ந்து பின்னே வந்தபடி “ஐயாவின் பாடல்கள் ருமையாக இருக்கின்றன. எங்களுடைய மனேஜருக்கு மனம் வைத்துத்தான் பாடியிருக்கிறீர்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் மற்றவர்களால் இப்படிப் பாடவே முடியாது” என்றான்.
வெந்த புண்ணில் வேல் கொண்டு நுழைத்தது போல இருந்தன அவன் வார்த்தைகள். என் கோபம் உச்ச நிலைக்குப் போய்விட்டது.
“நாசமாய்ப் போகிறவனே, போ. கேலியா செய்கிறாய்? ன்னைப் படிப்பித்து ஆளாக்கிய என்னையா கேலி செய்கிறாய்?
'கோபிக்க வேண்டாம். ஐயா, சரமகவிப் புத்தகத்தில் இயற்றியது நீங்கள் என்று உங்களது பெயர்தானே போடப்பட்டிருக்கிறது. அதனால்தான்.”
4.-- . . . . . -
“போட்டவன் யார் என்று எனக்குத் தெரியும். அவன் நாசமாயப் போவான். இவனுக்கு இந்த மனேஜருக்கு. பஞ்சமா பாதகனுக்கு நானா சரமகவி பாடுவேன்? அவ்வளவுக்கு இன்னும் நான் மானத்தை இழந்துவிடவில்லை. கிழவனாகப் போய்விட்டால், வறுமை வந்துவிட்டால். மானமும் போய்விடுமா என்ன?”
“இப்படி திருகுதாள வேலையை நான்தான் செய்திருப்பேன்
என்று மனதில் நினைத்துக் கொண்டு சொல்லுகிறீர்கள் போலிருக்கிறது.
6] ଧୈ। மனச்சாட்சிக்கு விரோதமாக சில வேலைகளை நான்
செய்திருக்கலாம். என க்திரையில். எனது நிலையில், குடும்ப பாரத்தில் - 84 -

வெண்சங்கு இருந்தால் நீங்களும் அப்படித்தான் செய்திருப்பீர்கள். ஆனால், இப்படியான பெயர்மாற்றும் வேலையை, யாரோ புழுகு புழுகு என்று. புழுகிவிட்டு உங்களின் பெயரைப் போடும் திருகுதாள வேலையை, நான் செய்யவே மாட்டேன். என்னை நம்புங்கள். உண்மையாகவே இதை நான் செய்யவில்லை.”
“டே, சுப்பு, நீ சொல்வதால் நான் நம்புகிறேன். அதைச் செய்யக்கூடிய புத்தி, துணிவு உனக்கில்லை என்பதும் எனக்குத் தெரியும். இன்னொரு சங்கதியைக் கேட்டால் நீ ஆச்சரியப்படுவாய். இந்தப் பாடல்கள் என்னுடைய பாடல்களே. சில இடங்களில் ஒரு சில மாற்றங்களைத்தான் யாரோ ஒரு புத்திசாலி செய்திருக்கிறான். இந்தப் பாடல்கள் மயில்வாகனம்பிள்ளை மீது பாடியது அன்று. இவனது தகப்பன், அந்த மனிதருள் மாணிக்கம் அவர் மறைந்தபோது நான் பாடியவை. என்ன அநியாயம்? அந்த உயர்குணம் படைத்த மனிதர் எங்கே? இவன் எங்கே?
“கற்றவர்கள் மெச்சிடும் பூபால னிப்புவியில் கல்விச் செல்வம் வளர்த்தே
கருதரிய முனிவர்கள் உறைகயிலை மலையில் அமர்
கடவுள் பதம் மேவினனரே”
என, அந்த மனிதரை நான் பாடினேன். அது எப்படி மாறியிருக்கிறது பார். 'கற்றவர்கள் மெச் சிடும் மயில் வாகனம்பிள்ளையாய் மாறியிருக்கிறது. இவன் கயிலையங்கிரிக்கா போவான்? கண்டவர் நடுங்கிடும் நரக லோகத்தின் வாசலல்லவா இவனுக் குத் திறந்திருக்கிறது?”
என் உணர்ச்சி சாந்தமடைந்தது. தடையுை மீறி ஓடிய வெள்ளம் சம தரையை அடைந்தது போல இருந்தது வரும்போது குமுறிய கீரிமலைக் கடலலைகளும் அமைதியாக ஆடிக் கொண்டிருந்தன.
"ஐயா, இந்த வேலையைச் செய்யக்கூடியவர் பண்டிதர்தான். அவரிடம்தான் நீங்கள் முன்னே பாடிய சரமகவியும் இருக்கும். அவர் தமது தம்பிக்கு மனேஜருடைய மகளை விவாகம் செய்யவும் கோகிறாராம். ஏன் தெரியுமா? என்னைக் கவிழ்த்துவிட்டுத் தான்
- 85 -

Page 46
வெண்சங்கு தலைமையாசிரியராக வரப்போகிறாராம். அவர்தான் இந்தத் திருகு தாளம் செய்திருக்க முடியும். புழுகுபுழுகென்று புழுகமுடியும். பார்ப்போம். இந்த இரகசியத்தை அறிந்து இரண்டு மூன்று நாளில் உங்களிடம் சொல்லாவிட்டால் நான் சுப்பிரமணியம் அல்ல."
'எனக்கு. அவன் சொன்ன செய்தி தேள் கொட்டியதுபோல இருந்தது. என்னுடைய அருமை மாண்வன், குணக்குன்று என நினைத்த சின்னத்தம்பியா இப்படிச் செய்வான்? இருக்காது; ஒருக்காலும் இருக்காது.
மனம் இந்த முடிவுக் கு வர முன் னமே என் முன் சின்னத்தம்பியே நின்றான்.
“டே. சின்னத்தம்பி, நீ இந்த வேலையைச் செய்வாயென்று நான் எண்ணவில்லை. இந்தச் 'சரமகவி'யைப் பாடி என் பெயரில் வெளிப்படுத்தியது யார்?”
"ஏன்? அது உங்களின் பாடல்கள் தானே.”
எனக்கு அப்போதுதான் விளங்கியது. இவன்தான் இந்த வேலையைச் செய்துவிட்டு மழுப்புகிறான்.
“ஆம். என்னுடைய பாடல்கள்தான். உறவுமுறை உத்தியோகம் போன்ற இடங்களிற் தான் சிறிது மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. போகட்டும். அந்த மகானைப் பற்றிய பாடலை இந்த மட்டிக்கு மாற்றலாமா? அதுவும் என் பெயரில் சொல்ல வைக்கலாமா? நீ இதைச் செய்திருந்தால் மயில்வாகனம் பிள்ளைக்குச் சரமகவி பாடவில்லை. என் வாழ்வுக்கே சரமகவி பாடி விட்டாய்” என்றேன்.
“ஐயையோ, அப்படிச் சொல்லாதீர்கள்; சொல்லாதீர்கள்’ என்றான் அவன்.
“பின்னை எப்படிச் சொல்வது? சுப்பிரமணியம் அந்த மனேஜரோடு சேர்ந்து என் உத்தியோகத்துக்கே உலைவைத்து விட்டான். நான் துக்கப்படவில்லை. நீ என் மானம், மரியாதை, நேர்மை முதலியவற்றிற்கே உலைவைத்து விட்டாய், சரமகவி பாடி விட்டாய்.
- 88 -

வெர்ை சங்கு போ! உன்னை என் மாணாக்கன் . உத்தமன் என்ற உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருந்தேன். அந்த எண்ணத்துக்கும் சரமகவி பாடி விட்டாய் போ. போ” என்றேன்.
"ஐயா, நான் என்ன செய்வேன்? மனேஜரின் மனைவி என்னைக் கூப்பிட்டுத் தங்களைக் கொண்டு சரமகவி பாடுவித்து தரும்படி கேட்டார். நீங்கள் பாட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். இதைச் செய்யாது விட்டால் என்னைப்பற்றி அவர் என்ன நினைப்பார்? என்ற பயமும் தொற்றிக் கொண்டது. எனவே. நானே பாடிப் பார்த்தேன். பாடிப் பழக்க மில்லாத படியால் சரியாக வரவில்லை. நான் என்ன செய்வேன்? நீங்கள் முன்பு பெரிய மானேஜர் அவர்களுக்குப் பாடிய சரமகவி கைவசம் இருந்தது. சரமகவி எல்லாம் ஒரே மாதிரித்தானே? அந்தப் பாடல்களைச் சிறிது மாற்றினேன். தங்கள் பாடல்களை என் பெயரில் வெளியிட மனம் ஒப்பவில்லை. தங்கள் பெயரை உபயோகித்துக் கொண்டேன். குற்றமென்றால் மன்னிக்க வேண்டும்” என்று குழைந்தான் 366.
“உந்த நியாயங்களைச் சொல்லி என்னைச் சமாதானப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறாய் நீ. அது சரி. உனது தம்பிக்கும் இந்த மனேஜரின் மகளுக்கும் விவாகப் பேச்சு நடக்குதாம்; உண்மை தானோ?” என்று நான் கேட்டதும், அவன் அரண்டு விட்டான்.
அவன் பேசாது மெளனமாய் நின்றான். கீரிமலைக்கரை மணலைக் காலாலே கிளறினான்.
“சரி. நீ போ. நான் எத்தனை காலம் வாழப் போகிறேன். ஆனால் ஒன்று சொல்லுகிறேன். உண்டிருந்து வாழ்வதற்கே உரைக்கின்றீர்; உரையீரே என்று ஒரு தொடரை நான் உனக்குப் படிப்பித்த காலத்தில் அடிக்கடி சொல்லியிருப்பேன். உலகம் அந்தத் திசையிலேதான் போய்க் கொண்டிருக்கிறது. நான் இறந்து போனால் நீ என்னை மெச்சி சரமகவி பாடாதே. அதுதான் நீ எனக்குச் செய்யும் குரு தட்சினை” என்றேன்.
**(شه
- 87 -

Page 47
வெண்சங்கு
வெண் சங்கு
66
LDருதப்பு எழும்பு இங்கே வா!! ஏன் கணக்குப் புத்தகம் வாங்கவில்லை?”
பதிலில்லை.
كبير "ஏன் வாங்கவில்லை? உன் வாய்க்குள் கொழுக்கட்டையா? வாயைத் திறந்து சொல்”
வாய் பேச மறுக்கிறது; கால் நடுங்குகிறது: கண்ணிர் மல்குகிறது.
ஒரு நிமிடம்.
அவன் உள்ளுணர்ச்சி பேசுகிறது.
புத்தகம் வாங்க எனக்கு மனமில்லையா? அதற்குப் பணம்? ஒரு ரூபாவா? இரண்டு ரூபாவா?. எட்டு ரூபா. அசஷர, கேத்திர, பாடிகணிதம் மூன்றும் வாங்க எட்டு ரூபா. எட்டு ரூபாவுக்கு ஆச்சி எங்கே போவாள்? யாரிடம் போவாள்? நாங்கள் என்ன பணக்காரரோ?
“கணக்குப் புத்தகங்கள் இல்லாவிட்டால் நாளைக்குப் பள்ளிக்கூடம் வர வேண்டாம்” கீரனூர் என்ற கிராமத்தில் உள்ள மகேஸ்வரி வித்தியாசாலையில் 'கிளிமுக்கு வாத்தியார்' என்று பிள்ளைகளால் வர்ணிக்கப்படும் மருதநாயகம் கட்டளையிட்டு விட்டார். அவர் சொன்னால் சொன்னதுதான். அதற்கு அப்பீலே கிடையாது.
-- 88 س

வெர்ை சங்கு
பக்கத்து விறாந்தையால் ஏழாம் வகுப்பைக் கடந்து போன
தலைமையாசிரியர் கூட. அவர் குரலைக் கேட்டு ஒரு கணம் நிற்கிறார்.
அவருக்குக் கேட்க மருதநாயகம் 'புறுபுறுக்கிறார்.
“தமிழ்ப் பள்ளிக்கூடமென்றால் இந்தப் பெற்றோர்களுக்கு எவ்வளவு அலட்சியம்? புத்தகம் இல்லை. பென்சில் இல்லை. பேனா இல்லை. கொப்பிகளும் இல்லை. இவர்களுக்குப் படிப்பிப்பதுதான் எப்படி? ஆனால், இங்கிலிசுப் பள்ளிக்கு விடுகிறதென்றால் காற்சட்டை மேற்சட்டை தொப்பி, சப்பாத்து. பென்சில், பெளண்டின் பேனா எல்லாம் வாங்கி ஒழுங்காய்க் கொடுப்பார்கள். இனிமேற் பொறுக்க முடியாது."
புறுபுறுப்பு முடிகிறது. தன் முன்னால் நிற்கும் ருதப்புவை ஏற இறங்கப் பார்க்கிறார். “ஏன் மாடு போல நிற்கிறாய்? போய் இரு. இன்றைக்கு மாத்திரம் இருக்க விடுகிறேன். இனிமேல் இந்த ஊமைப்பாஷை எல்லாம் பலிக்காது. உன்னைப்போல உள்ளவர்கள் ஏன்தான் படிக்க வாறியளோ தெரியாது. படிக்க வந்தால் அதற்கு ஏற்ற மாதிரி வரவேண்டும். அல்லாது விட்டால் ஆடு மாட்டை மேய்க்கப் போக வேணும்; அல்லது "வால்ச்சுத்துக் கட்டப் போக வேணும்.”
கடைசி வசனத்தை ஆசிரியர் சொன்னதும். பிள்ளைகளிற் சிலர் சிரிக்கிறார்கள்.
மருதப்புவின் உடல் கூனிக் குறுகி ஒரு சாண் ஆகிறது. வெட்கத்தால் தலை கவிழுகிறது. தனக்குள்ள வால்ச்சுத்து என்ற பட்டத்தை எண்ணிப் பிள்ளைகள் சிரிக்கிறார்கள் என்பது அவனுக்குத்தான் தெரியும்.
ஆசிரியர் சாதாரணமாகவே அந்த வார்த்தையைச் சொன்னார். மாணவர்கள் வேறொரு அர்தத்தைக் கற்பித்து விட்டார்கள். அவன் ஒரு சுருட்டுக்காரனின் மகன். அதனோடு யாரோ அவன் சின்ன வயதில் சுருட்டுக் குடிப்பவன் என்ற கதையையும் கட்டி விட்டார்கள். அதனால், அவனுக்கு "வால்ச்சுத்து என்று Iட்டம் நிலைத்து விட்டது.
ஆசிரியர் தெரிந்து கொண்டுதான் தன் பட்டத்தைக் குத்திக் காட்டுகிறார் என்பது அவன் எண்ணம். அந்த எண்ணத்தின் பின் அவனுக்குப் பாடத்தில் மனமே செல்லவில்லை. அடுத்து வந்த இலக்கிய பாடத்தில் மன்னர் பெருமை மடையர் அறிவரோ? என்ற
- 89 -

Page 48
வெண்சங்கு நளவெண்பாப் பாடலை - நன்றாகத் தெரிந்த கரைஞ்ச பாடமான அந்தப் பாடலை - அவன் தப்புந் தவறுமாகத்தான் சொன்னான்.
மத்தியானம் கொடுத்த பானை அவன் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. தண்ணிர் கூடக் குடிக்கவில்லை.
அப்பாலும் எத்தனையோ பாடங்கள் நடந்தன. ஆசிரியர் வந்தனர். போயினர். ஆனால், அவன் மனதில் மட்டும். சுருட்டுக்காரன் பெற்ற பையா. நீயும் சுருட்டுக் கட்டப் போடா' என்ற வார்த்தைகளே எதிரொலித்துக் கொண்டிருந்தன.
பாடசாலை விடும் கடைசி மணி அடித்தது. தேவாரம் புராணம் எல்லாம் பாடி அரகர மகா தேவா’ கேட்டதோ இல்லையோ செம்மறிப்பட்டியிலிருந்து விடுபடும் ஆட்டுக்கூட்டம் போலப் பிள்ளைகள் நெரிந்தும், உழக்கியும், வெளிப்பட்டு ஓடினார்கள்.
மருதப்புவும் ஒடித்தான் போனான் தன் மன அவஸ்தையைத் தன் தாயாரிடம் கூறி அழ வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
கிட்டிப்புள் அடிக்க வருகிறாயா? என்று கேட்ட கிருஷ்ணனுக்கு அவன் பதிலே சொல்லவில்லை.
ஓடினான்.
‘மணி என்ன தம்பி இருக்கும்? என்று வினவிய கிழவர் ஒருவருக்கு அவன் விடை பகர வில்லை.
அவன் விரைந்தான்.
மாடு ஒன்று குறுக்கே வந்தது விலத்தினான். மர வேரில் தட்டுப்பட இருந்தான். தப்பி விட்டான்.
"ஆச்சி! ஆச்சி! எணை!”
"ஆச்சி' என்ற அவலக் குரலைக் கேட்டு நாகம்மா திடுக்கிட்டாள். மகனின் ஏக்கத்தை ஒரு நொடியில் உணர்ந்து கொண்டாள்.
- 90 -

வெண்சங்கு
"என்னடா மருதப்பு யார் அடிச்சது?
ஏழைப் பையன்களுக்கு பணக்கார வீட்டுச் செல்வங்கள் எப்போதும் "நொட்டும்' என்பதும், அதற்குப் பள்ளிக்கூடங்களிற் கூடக் கேள்வி முறையில்லை என்பதும் அவள் சித்தாந்தம்.
“வாத்தியார் ஏசிப் போட்டார். கணக்குப் புத்தகம் வாங்க வில்லையாம். பள்ளிக்கூடத்துக்கு இனிமேல் வர வேண்டாமாம்”
விக்கல் முனகல்களிடையே திக்கித், திணறி இவற்றை அவன் வாய் குழறியது.
“போடா! போ!! இதுக்கெல்லாம் அழுகிறியோ நீ? சின்ன வயசிலை அவரை இழந்து கைம் பெண்ணாகி நான் அழுத அழுகை எவ்வளவு? ஒவ்வொரு நாளும் உன்னை வளர்க்க நான் படும்பாடு எவ்வளவு? ஏழைகள் என்ன செய்கிறது? உந்தக் கண்டறியாற பள்ளிக்கூடம் இல்லாவிட்டால் இன்னொண்டு”
அவள் இந்த விஷயத்தைச் சாதாரணமாக எண்ணிச் சமாதானம் கூறினாள்.
“இல்லை, ஆச்சி. 'வால்ச்சுத்துக் கட்டினவன் உன் தகப்பன். நீயும் போய் வால்ச்சுத்துக் கட்டிப் பிழைக்காமல் இங்கை வந்து ஏன் என் கழுத்தை அறுக்கிறாய்' என்று குத்திக் காட்டுகிறார் அந்தக் "கிளிமூக்கு வாத்தியார் பிள்ளைகளுக்கு முன்னாலை சொல்ல எனக்கு வெட்கமாயிருக்கு” என்று மருதப்பு சொன்ன போது நாகம்மா தீயில் மிதித்தவள் போலானாள்.
“யாரடா சொன்னவன் அப்பிடி? வாத்தியார் சொன்னானா? ஏன் சுருட்டுத் தொழில் அப்படி என்ன பவிசு கெட்ட தொழிலா? தன்ரை கையை நம்பிக் பிழைத்தார் அவர் களவெடுத்தாரா? பொய் சொன்னாரா? கொள்ளை அடிச்சாரா? கோடேறினாரா? நாலு ரூபாய்க்குச் சுத்தினாலும் என்னை ராசாத்தி போலை வைச்சிருந்தார். வீடு வீடாகப் போய் பொடியளைப்பிடிச்சு, மனேஜருக்குப் பல்லைக் காட்டி, மானங் கெட்ட வாழ்வு நடாத்திறதை என்ரை வாயாலை கேட்கப் போறாராக்கும் அந்த வாத்தியார்? நாளைக்கு நான் அவரைக் கேட்கிறேன். நீ போய்ச் சோத்தைத் தின்’
- 9 -

Page 49
வெண்சங்கு “நான் இனிமேல் உந்தப் பள்ளிக் கூடத்துக்குப் போக மாட்டேன்.”
"அப்ப என்ன செய்யப் போறாய் நீ? அந்த வாத்தியார் சொன்ன மாதிரி சுருட்டுக் கட்டத்தான் போறியோ?”
“இல்லை. நான் பெரியையாவின் கடையிலை போய் நிற்கப் போகிறேன்”
“என்னடா சொன்னாய் நீ”
நாகம்மா நெருப்புச் சட்டியிலிருந்து பெரும் அக்கினிக் குண்டத்துள் விழுந்தவள் போலானாள். ’கிளிமூக்கு வாத்தியாரும் அவர் வாய்ச் சொல்லும் எங்கோ ஓடி மறைந்து கொண்டன. மகன் எறிந்த அதிர் வெடியில் வெடித்த, பெரியையா என்ற ஓசை மாத்திரம் அவளை ஆக்கிரமித்துக் கொண்டது.
பெரியையாவின் பெயர் ஆறுமுகம். வாய் நிறைந்த பெயர். ஆனால் அவளுக்கு அந்தப் பெயர் கசப்பான சொல். புண்ணிடைக் கோல் கொண்டு குத்தும் வார்த்தை.
தன் கணவனாகிய செல்லத்துரைக்கு மூத்தவனாகப் பிறந்து, அவரோடு தான் சுருட்டுக் கொட்டிலில் சுருட்டி, தம்பியின் உழைப்பால் தகப்பன் தாயாரை வாழ்வித்து, தன் உழைப்பைக் கொண்டு தட்டிக்கடை வைத்து. தகரக் கடையாக்கி, மளிகை ஸ்ரோர் வரை பெரும் புள்ளி ஆகிவிட்டவர் அவர். உறவு முறையெல்லாம் செத்த வீடு கல்யாண வைபவங்களோடு நின்றது. அப்படிப்பட்ட ஆத்மாவின் பெயரைத் தன் மகன் உச்சரிக்கவா? ஆத்திரம் பொங்கி வழிந்தது.
“படார்” - கன்னம் சிவக்க அடித்து விட்டாள். ஐந்து விரல்களும் அப்படியே அவன் கன்னத்தில் பதிந்து விட்டன. மருதப்பு "ஐயோ!' என அலறிப் பக்கத்துப் பூவரச மரத்தைக் கட்டிப் பிடித்தான்.
“நாயே! என்ன சொன்னாய்? பெரியையாவாம் பெரியையா? எப்ப வந்த முறை? என்ரை கையை நம்பி, தோசை சுட்டு இடியப்பம் அவித்துப் பிழைக்கிறேன் நான். உனக்குச் சோறும் உடுப்பும் தர என் கையில் வலு இருக்கிறது. போடா. போ போய்ச் சோத்தைத் தின்.” -
- 92 - f

வெண்சங்கு
சனங்கள் கூடி விட்டார்கள். சிலர் வேலிக்கு மேலால் எட்டியும் பார்த்தார்கள். நாகம்மாவின் "தொண்டைப்பலம் எல்லோரையும் வரவழைத்து விட்டது.
e|ഖണ് தள் மகனை அனைத்துக் கொண்டு வீட்டினுள்ளே சென்றான். கன்னத்தைப் பார்த்தாள். ஒரே வீக்கமாய் இருந்தது. நல்லெண்ணை எடுத்து வந்து அவ்விடத்துக்குத் தேய்த்தாள். ஒரு நாளும் சிறு ஈர்க்குக் குச்சியால் கூடி அடியாத அவள். இன்று கோப வெறியில் மூடத்தனமாக இப்படி அடித்து விட்டதை எலன் விக் 'கோ'வென்று கதறினாள் முகத்தோடு முகம் வைத்து அழுதாள்.
கோபித்துச் சிறிய தாய் இப்போது 'கோ' வென்று அழும் காரணம் என்னவென்று மருதப்புவுக்குப் புரிந்தும் புரியாமலும் இருந்தது. "ஆச்சி. ஆச்சி! நீ அழாதை. நான் பெரியையாவின் கடைக்குப் போயயில்லை. இது சத்தியம்” என்று கூறிவிட்டு. சோறு தின்னும் கோப்பையை எடுத்தான்.
அன்று இரவு மருதப்பு தூங்கவில்லை. கண்ணை மூடினனோ இல்லையோ பிள்ளைகளின் கேலிச் சிரிப்பும், "கிளிமூக்கு வாத்தியாரின் சுடு சொல்லும் தாயாரின் அழுகை ஒலியும் மாறி மாறித் திரைப் படத்தில் வரும் காட்சிகள் போல மனத்திரையில் வந்தன. இமைகள் மூடியிருந்தனவே யொழிய நித்திரை வரவேயில்லை.
பெட்டை நாய் உறுமும் சத்தம் கேட்டது. அதையடுத்து. செருப்பின் "கிறீச் கிறீச் ஒசை, மா அரித்துக் கொண்டிருந்த நாகம்மா யாரது? என்று கேட்கிறாள். பதிலில்லை. அவள் விளக்கை எடுத்துக் கொண்டு வீட்டுத் தட்டிப் படலையைத் திறந்து வாசலுக்கு வருகிறாள். இரு உருவங்கள் வருவது தெரிகிறது யார் அவர்கள்? ஏன் வருகிறார்கள்? அவளுக்கு இரத்தமே உறைந்து விடும் நிலை.
“யாரது? உரத்த தொனியில், பயத்தில் கேட்கிறாள்.
"அது நாங்கள். உஷ்! பலத்துப் பேசாதே."
குரலிலிருந்தும் உருவத்திலிருந்தும் மட்டிடுகிறாள். மருதநாயக ஆசிரியரும் ஆறுமுகத்தாரும்!
- 93 -

Page 50
வெர்ைசங்கு
மனம் சிந்தனையிலே ஆழ்ந்திருக்க, கை தன் வேலையைச் செய்கிறது. வீட்டுக்குள் போய் நல்ல ஓலைப் பாயொன்றைக் கொண்டு வந்து விரிக்கிறாள்.
இருவரும் உட்காருகின்றனர். ஆசிரியரே பேச்சைத் தொடக்குகிறார்.
"இங்கை பார் நாகம்மா, நாங்கள் இப்போது இங்கே ஏன் வந்திருக்கிறோம் என்று உனக்குத் தெரியுமா? இன்று பின்னேரம் நீ இவரையும் என்னையும் ஏசியதாகக் கேள்விப்பட்டோம். அதுதான்.”
'அவர் வார்த்தையை முடிக்கவில்லை அவள் பதில் சொல்லத் தொடங்கி விட்டாள். அதில் ஆத்திரம் தொனிக்கவில்லை. அமைதி இருந்தது. வீடு தேடி வந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மனம் புண்படும் படி பேசுதல் அவள் சுபாவமன்று.
“அதுதான். என்ன காரணமத்துக்காக ஏசினாய் என்று கேட்க வந்திருக்கிறியளாக்கும். என்றாலும் காலமல்லாத காலத்தில் வந்திருக்க வேண் டாம் . நீங்கள் மருதப் புவைப் புத் தகம் இல் லாமல் பள்ளிக்கூடத்துக்கு வர வேண்டாம் எண்டியளாம். ஏழைகள் என்ன செய்கிறது? ஏதோ நாலெழுத்துப் படிச்சு கெளரவமாக என்ரை மகனும் வாழுவான் என்று நினைச்சேன். அது நடவாது போலையிருக்கு. அது போகட்டும். சுருட்டுச் சுத்தியவன்ரை பொடியா, போய் வால்ச்சுத்தைக் கட்டேன் என்றியளாம். அதுதான் மருதப்புவுக்குப் பெரிய துக்கம். அப்பிடியெல்லாம் சொல்லலாமோ? தொழிலிலை பெருமை சிறுமை இருக்கோ அதுதான் எனக்கு ஆத்திரமாய் வந்தது. ஏசிப்போட்டேன்.”
மருதநாயகம் பெருமூச்சு விட்டார். “இந்த உபாத்திமார் வேலையே ஏச்சுக் கேட்கிற தொழிலாய்ப் போய்விட்டது நாகம்மா. நீயா ஏசுகிறாய்? இந்த ஊரிலே இருக்கின்ற எல்லாரும்தான் ஏசுகிறார்கள். அதற்காக நான் துக்கப்படுவதில்லை. பறவாய் பண்ணுவதுமில்லை. ஆனால் நீ உனது மகனை பள்ளிக்கூடத்திற்கு விடாமல் நிறுத்தி விடாதே. வாழ்க்கைக்கு கல்வி கண். அதைக் குருடாக்கி விடாதே. அதுதான் ஆறுமுகத்தாரையும் கூட்டிக் கொண்டு வந்தனான். அவருக்குப் பெரிய துக்கம். அவரைக்கூட ஏசிப் போட்டியாம்” என்றார். -
- 94 -

வெணர் சங்கு
“ஏசாமல் என்ன செய்யிறது வாத்தியாரே. என்ரை பொடியன் படிக்க வேணும். அதுதான் எனது ஆசை. நான் எப்பாடு பட்டும் படிப்பிக்க ஆசை கொண்டிருக்கிறேன். ஆனால் அவனோ கடையிலை நிற்கப் போகிறேன் என்றாலே. இந்த விஷ முளையை உடனே கிள்ளிப் போட வேணும். ஒரேயொரு பிள்ளை. அதுகூட இப்படிச் சொன்னால் என்ன செய்கிறது? பாருங்கள். நாங்கள் எவ்வளவு கஷரப்படுகிறோம். இவர்களும் பெரியையா என்று இருக்கினமே. தம்பியின்ரை மகன் என்று எப்பவாவது நினைக்கினமோ?”
“அவர் உதவி செய்ய நினைத்துத்தானே வந்திருக்கிறார்’ என்றார் மருதநாயகம்.
ஒரு கணம் மெளனம். அவள் திரி தூண்டியைத் தூண்டி விளக்கைப் பிரகாசமாக எரியவிட்டாள். தன் மனத்தில் கொழுந்துவிட்டு எரியும் மன உளைச்சலைக் கொட்டித் தீர்த்தாள்.
“அவர் கச நோயால் கஷ்ரப்படும்போது உதவி செய்யவில்லை. அவர் என்னையும் குழந்தையையும் தவிக்க விட்டுச் செத்த போதும் உதவி செய்யவில்லை. அவர் செத்துப் பத்து வருடமாச்சு. ஏன் என்று கேட்கவில்லை. இனித்தான் உதவி செய்யப் போகிறாராமே உவர்? அவன் வளர்ந்து விட்டான். இனி யாருக்கு உதவி தேவை? உவாத்தியார். சொல்கிறேன் என்று குறைநினைக்க வேண்டாம். இதில் ஏதோ சூது இருக்குது.”
“என்ன சூது நாகம்மா? எதற்கெடுத்தாலும் விபரீதமாக நினைக்கிற சுபாவம் பெண்களோடு கூடப் பிறந்த குணம். சும்மா இரு. அவர் கொஞ்ச நஞ்சமல்ல. ஆறாயிரம் ரூபாவை உனது மகனுக்குத தரப் போவதாக என்னிடம் சொன்னார். உங்களுடைய கஷ்ட்டகாலம் பறக்கப் போகுது. தர வரும்போது வாங்கி மகனைப் படிப்பி. அதுதான் உனக்கு நல்லது.”
"வாத்தியார். அறுநூறோ ஆயிரமோ எதைத் தந்தாலும் எனக்கு வேண்டபம், ஊரவை நாலுவிதமாய்ப் பேசுவினம். வாழையிலை போய் முருக்கம் முள்ளில் குத்தினாலும் வாழையிலைக்குத்தான் நட்டம். முருக்கம் முள் போல் வாழையிலையிலை குத்தினாலும் வாழையிலைக்குத்தான் நட்டம், தயவு செய்து நீங்கள் போய்விடுங்கள். ஆசைகாட்டி மோசம் செய்யாதீர்கள்.”
- 95 -

Page 51
வெண்சங்கு “இப்ப என்ன மோசம் செய்துவிட்டார் ஆறுமுகம்? ஆறாயிரம் ரூபா பணத்தைத் தருவது மோசமா?. மருதநாயகத்தின் குரலில் கடுமை தொனித்தது.
அப்போதுதான் ஆறுமுகம் வாயைத் திறந்தார்.
“என்னுடைய மனதில் கல்மிசம் ஒன்றுமில்லை. நான் ஆறாயிரம் ரூபாவைச் சும்மா கொடுக்கக்கூடிய இலட்சப் பிரவுமல்ல. இந்தப் பணம் என்னுடையதல்ல. தம்பியினுடையது.”. அவர் சொல்லி வாய் மூடுமுன்,
"அப்படியெண்டால் நாம் கஷ்டப்படும்போது எப்பவோ தந்திருக்க வேண்டுமே” என்றாள் அவள்.
“அதைத்தான் சொல்ல வருகிறேன். ஆறுதலாகக் கேள்” என்று ஆறுமுகம் தொடர்ந்தார். "என் தம்பி என்னிடம் பணமாகத் தந்ததல்ல இது. அவன் பதினைந்து வயசில் சுருட்டப் பழகி விட்டான். இருபத்தைந்து வயது வரையும் தகப்பினை, தாயை, என்னைப் பாதுகாத்தான். நான் அப்போதுதான் சிறிய கடையொன்று தொடங்கியிருந்தேன். அதில் வந்த இலாபமோ சொற்பம். எனவே நான் ஒரு ரூபாவைத்தானும் வீட்டுச் செலவுக்குக் கொடுக்கவில்லை.”
“உந்தச் சங்கதிகள் தான் ஊரறிந்த விசயமாச்சே அவரைப் பலர் இதற்காக ஏசினது கூட எனக்குத் தெரியும். அவரை நீங்கள் நல்லாக ஏமாற்றிப் போட்டீர்கள். அவரும் அண்ணன், அண்ணன் என்று பேசாமல் இருந்து விட்டார். அதுதான் உங்கள் பணத்தில்கூட ஏதோ மோசம்..” என்று நாகம்மா படபடப்புடன் கூறினாள்.
“சும்மா அலட்டாதை நாகம்மா. அவரைப் பேசவிடு’ என்றார் உபாத்தியார்.
“அவன் இருபத்தைந்தாவது வயதில் உன்னைக் கலியாணம் செய்தான். ஐந்து வருசம் தான் உன்னோடு சீவியம் நடத்தினான். அதற்குள் அந்தப் பொல்லாத நோய் அவனைப் பற்றிக் கொண்டது. என் உடன் பிறவிக்கு நான் உதவி செய்ய முன் வந்தேன். ஆனால், அவனோ, ‘அண்ணா! இது மாறக் கூடிய நோயாக எனக்குத்
- 96 -

வெண்சங்கு தோன்றவில்லை. எப்படிச் செலவழித்தாலும் சாவது நிச்சயம். என் மகனைப் பற்றித்தான் யோசிக்கிறேன். அவனுக்காக உங்களை ஒன்று கேட்கிறேன். செய்கிறீர்களா?" என்று கேட்டான். அவனுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்களித்தேன். அப்பொழுது, நான் இறந்து பத்து ஆண்டுகளின் பின்பு ஆறாயிரம் ரூபா என் மகனுக்கு கொடுக்க வேணும் என்றான். அவனுடைய கோரிக்கையின் காரணம் எனக்கு விளங்கவில்லை. அவன் முகத்தைப் பார்த்தேன். அவன் சொன்னான்: ‘அண்ணா! பத்து வருடம் மாதம் ஐம்பது ருபாயாக உழைத்துத் தாய் தந்தையரைக் காப்பாற்றினேன். நீ அப்பொழுது ஒன்றும் தரவில்லை. அந்தக் கடமையை நீ என் மகனுக்குச் செய். நான் செத்தவுடன் செய்யாதே. நாகம்மா சும்மா இருந்து சாப்பிட்டால் இந்த இள வயதில் விபரீத எண்ணங்களில் முனைந்துவிடவும் கூடும். அவள் பாடுபட்டுக் கஷ்டப்படட்டும் அவள் திட்டுவாள்; ஊரவர்கள் திட்டுவார்கள். எல்லாவற்றையும் பொறுத்துக் கொள். அவள் கஷ்டப்படுகிறாளே என்று நீ மாதா மாதம் உதவி செய்தால், ஊரவர் நூறுவிதமாகக் கதைப்பார்கள். தம்பி பெண்சாதிக்கு படி சம்பளம் அளக்கிறானே. காரணம் என்னவாய் இருக்கலாம் என்று பழி சுமத்துவார்கள். மகன் வளரட்டும். படிப்பை நிறுத்தவிடாது பார்த்துக்கொள். அவன் போய்விட்டான். என் மனதை இரும்பாக்கிக் கொண்டேன். காதுகளைச் செவிடாக்கிக் கொண்டேன். எல்லாவற்றையும் பொறுத்தேன். என் தம்பிக்குக் கொடுத்த வாக்குக்காக, அவன் மகனுக்காக. இன்று நீ பேசிய பேச்சைப் பற்றிப் பலர் வந்து சொன்னார்கள். நான் பொறுத்தது போதும். தம்பி போய் பத்து வருடங்கள் முடிந்துவிட்டன. நாளைக்கு நீ என் வீட்டுக்கு வா - இல்லை, உபாத்தியார் வீட்டுக்கு வா, பணம் தருகிறேன். உனக்கு வாங்கப் பிரியம் இல்லாவிட்டால், ஏதாவது வங்கியில் போட்டு வைத்திருக்கிறேன். என்றார் ஆறுமுகம்.
நாகம்மாவால் ஒன்றும் பேச முடியவில்லை. தன் கணவன் மகனுக்காகச் செய்த முன்னேற்பாட்டையும். பெரியையா ஆறுமுகத்தின் நேர்மை - பொறுமை - பண்பாடு ஆகியவற்றையும் தெய்வீக நிறைவுடன் நினைத்துப் பார்த்தாள்.
"அப்ப, நாங்கள் வருகிறோம்.” என்று எழ முனைந்தார் ஆறுமுகம்.
- 97 -

Page 52
வெண்சங்கு "தேநீர்த் தண்ணிர் வைக் கிறேன். குடித்துவிட்டுப் போங்கோவேன்” என்றாள் நாகம்மா.
ஆறுமுகமும், ஆசிரியரும் மீண்டும் பாயில் அமர்ந்தனர்.
'சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்ற வாக்கியத்திற்கு புதியதோர் அர்த்தம் ஆறுமுகத்தின் உருவத்தில் இருப்பதாக, மருதநாயகத்தின் உள்ளத்திலே தோன்றியது.
தட்டி மறைவிலே படுத்திருந்த மருதப்பு நிம்மதியாகத் தூங்குகிறான்.
- 98 -

வெர்ை சங்கு
ஒடுபிடி சோறு
U Iழ்ப்பாண மாதா மலடி என்று பெயர் கேளாமல் சத்திர சிகிச்சையோடு பெற்றெடுத்த நொண்டிக் குழந்தை தொண்டைமான் ஆறு. கடலிலே இருந்து வெட்டப்பட்ட அந்த உப்பங்கழிக்கு ஆறு என்று பெயரிட்டதே விசித்திரம். அதனிலும் விசித்திரம் அந்தக் கழிக்கரையில் முருகப் பெருமான் இருக்க எண்ணங் கொண்ட கதை.
இந்த விசித்திரமான முருகன் பல திருவிளையாடல்களைப் புரிய, சாதி பேதமில்லாமல் எல்லா நோயாளரும் அவனைத் தஞ்சமடைந்தனர். இப் படித் தஞ்சமடைந்த பல பேருக்கும் அன்னமளிக்கும் புண்ணியத்தை பல பணக்காரப் புள்ளிகளுக்கு நோய் கொடுப்பதனால் தீர்த்து வைத்தான்!
வெள்ளிக்கிழமை மடம். இந்த மடத்திற்கொரு கெளரவ ஸ்தானம் அந்தக் கோவிலில் உண்டு. எவர் அன்னதானம் பெரிதாக நடாத்தினாலும் அந்தப் பெருமையை அடைவது அந்த மடம்தான்.
இன்று மடத்திலே புகை கிளம்பிக் கொண்டிருக்கிறது. பக்கத்திலே இரண்டு வண்டிகள் பொருள்களை இறக்கிய வண்ணம் நிற்கின்றன. ஆமாம்! சனங்களின் ஊகம் சரி. யாரோ பெரிய இடத்து 'அவியல்' குதூகலம்! பிச்சைக்காரர் - கஷாயம் தரித்தவர். தீரா நோயாளர் - சோம்பேறித் தடியர்கள் எல்லோருக்கும் குதூகலந்தான்!
அரிசனங்களின் மடம் அந்த வெள்ளிக்கிழமை மடத்திற்கு வெகு தொலைவில் பற்றைகளுக்கு மத்தியில். மனிதர்கள் எட்டப்
- 99 -

Page 53
வெர்ை சங்கு போ, எட்டப்போ’ என்று சொல்லாத அந்தக் கோவிலில் மடம் மாத்திரம் ஏன் அப்படித் தீண்டத்தகாததாகக் கட்டப்பட்டுள்ளது என்று ஒருவருக்கும் விளங்கவில்லை.
புண் ணியம் சம்பாதிக்க அந்த மடத்தைக் கட்டிய புண் ணியவானைத் திட்டிக் கொண்டே ஒரு கிழவி வந்து கொண்டிருந்தாள். கட்டையிலே போறவன் ஏன் இவ்வளவு துலையிலே இதைக் கட்டினான்? நான் என்னமாய் நடக்கிறது? என்பது அவள் வாழ்த்தின் ஒரு பாகம்,
'உம் - உம் - உம் - ஆ - அப்பனே - முருகா! என்னைக் கெதியாகக் கொண்டு போ’ என்ற முனகலைக் கேட்டு கிழவி திட்டுவதை நிறுத்திவிட்டு விரைவாக மடத்தினுள் புகுந்தாள்.
“ஆத்தை. தண்ணிர் தா’ என்றது அந்த எலும்புந் தோலுமாய்க் கிடந்து முனகிய உருவம், கிழவியும் அடுப்பில் இருந்த, சிறிது கொதித்த நீரை பேணியுள் வாத்து அந்த உருவத்தின் வாயுள் ஊற்றினாள். கை நடுங்கியது: தண்ணீர் கழுத்து. தோள் எங்கும் சிதறியது.
கொடுத்து முடிந்ததும், ”மோனே. காய்ச்சல் கடுமையா? அப்பிடி எண்டால் வீட்டை போவோமா?’ என்று அவுள் கேட்டாள். "வீடா? எங்கே கிடக்குது அது?. உம் பேசாமைப் போய் ஏதாவது காய்ச்சு” என்றது அந்த உருவம்.
“எனக்குக் கொஞ்சம் பழஞ்சோறு இருக்குது. உனக்குக் காய்ச்ச அரிசியும் இல்லை. காய்கறியும் இல்லை. அந்தக் கட்டையிலே போறவள் இண்டைக்குக் கொண்டு வாறன் எண்டாள். அவளையும்
காணவில்லை. பொழுதும் ஏறிவிட்டது. நான் என்ன செய்ய?’ என்று அவள் முனு முணுத்தாள்.
"அப்ப என்னைப் பட்டினியாய்க் கிடக்கச் சொல்லுறியோ’ என்றான் சின்னான். ஆம். அவன்தான் அந்தக் குடும்பத்தின் கடைசிப்பிள்ளை. கறுப்பியின் கடுந் தவத்தினால் நான்கு பெண் குழந்தைகளுக்குப் பின் சந்நிதி முருகன் கொடுத்த வரப் பிரசாதம்.
- 100 -

வெண்சங்கு
“வெள்ளிக்கிழமை மடத்திலை யாரோ அவிச்சுப் போடுகினமாம். நான் போய் வாங்கிக் கொண்டு வாறேன். ஒரு பிடி சோறு உனக்குப் போதுமே” என்றாள் கறுப்பி. -
“உம். போடுவார்கள். உனக்காக? கோவிலிலே சுற்றித் திரிகிற சோம்பேறிகள். தடியர்கள் சாமிகள் இவர்களுக்கு இடிபட்டு, மிதிபட்டு வாங்குகிறவர்களுக்கல்லோ ஒருபிடியாவது கிடைக்கும்? நீ காலைக் கையை உடைச்சுக் கொண்டுதான் வருவாய். ஒன்றும் வாங்க மாட்டாய். போ. சோத்தைக் காச்சு” என்று உபதேசித்தான் அவன்.
மத்தியானத்து மணியோசை கேட்டது. "மோனே. மணியோசை கேட்குது. வாறியா கோயிலடிக்கு” என்று கறுப்பி ஆதராவாகக் கேட்டாள். “இன்றைக்கு என்னாலை வர ஏலாது. காய்ச்சல். இருமல் தலையிடி எல்லாம். நீ போய்க் கும்பிட்டு விட்டுத் திருநீறு. தீர்த்தம், சந்தனம் எல்லாம் வாங்கி வா. நான் இங்கேயே படுத்திருக்கிறேன்” என்ற அவனது பதில் ஈனஸ்வரத்தில் கேட்டது.
கிழவி ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு தடியை ஊன்றிய படியே கோவிலுக்கு வந்து கொண்டிருந்தாள்.
மனித கூட்டத்தின் அவசரம் ஒருவரை ஒருவர் மிதித்துத்தள்ளி ஓடிக் கொண்டிருந்தார்கள் கிழவி பொல்லை ஆட்டியபடி காலை எட்டி வைத்து நடந்தாள்.
பறை மேளத்தின் ஓசை படீர் படீர் எனக் கேட்க ஆலய மணிகளின் கல கல ஓசை அதற்குள் அமுங்கியும் மிதந்தும் ஒலித்தது.
கிழவியின் அவசரம் பையன் எறிந்த வாழைப்பழத் தோலுக்குத் தெரியுமா? தடியை ஊன்றும் போது அந்தத் தோல் சறுக்கிவிட்டது. "ஐயோ! முருகா!” என்ற சப்தத்தோடு கிழவி விழுந்தாள். “தடக்” என்ற ஓசையோடு தடி கற்களின் மேல் உருண்டது. பின் பக்கத்தில் அவசரமாய் வந்த மோட்டாரில் இருந்த கனவான் திட்டிய படியே “கோனை அமுக்கினார் “பெத்தா விழுந்தா போனாய்? எழும்பு. எழும்பு” என்று பக்கத்தில் ஒடிக் கொண்டிருந்த பையன் தூக்கி நிறுத்தி தடியையும் எடுத்துக் கொடுத்தான். “நீ நல்லாய் இருக்க
- 101 -

Page 54
வெண் சங்கு வேணும்” என்று வாழ்த்துரை கூறிவிட்டு நடந்தாள் கிழவி. "கிழடு கட்டைகளுக்கு ஒரு கோயில் வரத்து” என்று காரில் போகும் கனவான் கூறியது அவளுக்குக் கேட்கவில்லை.
“குன்ற மெறிந்தாய்’ என்று ஒரு பக்தர் பாடும் பாட்டு. “முருகா! வேலா’ என்று இரண்டு கைகளையும் நீட்டிப் பிள்ளை வரம் வாங்கும் பெண்ணின் ஒலம், “புன்னெறி அதனில் செல்லும்” என்று புராணத்துடன் நிலத்தில் விழுந்து கிடக்கும் அடியவர் புலம்பல். “பாராயோ என்னை முகம்” என்று பஞ்சத்துக்கு ஆண்டி பாடும் ஒலி. சங்குகளின் நாதம். பறை மேளத்தின் ஓசை தவில் காரனின் கிருதா. நாதஸ்வரத்தின் அழுகை, எல்லாம் ஒன்றாய்த் திரண்டு ஒரே ஆராவாரம்.
இவ்வளவிற்கும் மத்தியில் “முருகா! நீ தந்த சின்னான் உன்னை நம்பி வந்து கிடக்கிறான். நீ தான் காப்பாத்த வேணும்.” என்ற அழுகை கேட்டது. அது கறுப்பியின் வேண்டுகோள் அல்லாமல் வேறு யாருடையது? அவளுக்கு தேவாரமோ புராணமோ தெரியாது.
பிள்ளையார் வாசல் - வள்ளியம்மன் இருப்பிடம் - நாகதம்பிரான் புற்று - முருகனின் மூலஸ்தானம் - எல்லாம் சுற்றி வந்து ஒவ்வொரு இடத்திலும் தன் வேண்டுகோளைக் கேட்டு முடித்தாள் கறுப்பி.
பூசை முடிந்தது. அதிசயம்! இத்தனை பக்த கோடிகளில் பத்தில் ஒரு பங்கு பேர் கூட அவ்விடம் இல்லை. அவர்கள் வயிற்றுப் பூசைக்காக மடத்துக்கு ஓடும் சாட்சியைக் கண்டு கறுப்பி சிரித்தாள். ஆமாம்! முருகப் பெருமானும் சிரித்திருக்க வேண்டும்! அவ்வளவு பேருக்கும் வயிற்றுப் பூசை தேவையாக இருந்ததோ என்னவோ? ஆனால் அவளுக்கு - இல்லை - அவள் பெற்ற அருமைச் செல்வன் சின்னானுக்கு ஒருபிடி சோறு தேவையாகத்தான் இருந்தது. எல்லாரும் மடத்தை நோக்கி ஓடிய போது “தலை சுற்றுது. போ. சோத்தைக் காச்சு” என்று கேட்ட, தன் மகனின் ஞாபகம் அவள் மனக்கண் முன் நின்றது.
விபூதி, சந்தனம் எல்லாம் வாங்கி இலையில் வைத்து மடித்துத் தன் சீலைத் தலைப்பில் முடிந்தாள். ஒரு சிரட்டையில் கொஞ்சம் தீர்த்தம் வாங்கினாள். பெட்டியையும் பொல்லையும் எடுத்துக் கொண்டு மடத்துக்கு வந்து கொண்டிருந்தாள்.
ܗ 102 ܗ

வெண்சங்கு
அங்கே ஒரே ஆரவாரம் ஒருவரோடு ஒருவர் இடிபட்டுக் கொண்டு ஏறி விழுந்து கொண்டும் இருந்தார்கள் உள்ளே போவோரையும் வெளியே வருவோரையும் "அவியல் முடிந்ததா?’ என்று ஆவலாகக் கேட்கும் கேள்வியும் திண்ணையிலிருந்து பண்டாரங்கள் அரட்டை அடிக்கும் ஓசையும் வானைப் பிளந்தன.
அந்நேரத்தில் கறுப்பி மடத்தைக் கடந்து கொண்டிருந்தாள். விபூதியை மகனுக்குக் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்து சோறு வாங்கலாம் என்று ஒரு கணம் யோசித்தாள். ஆனால் நேரம் போய்விட்டால் ஒருபிடி சோறும் வாங்க முடியாதே என்று மறுபடி நினைத்தாள்.
"இருதலைக் கொள்ளி எறும்பு போல” என்று புலவர்கள் வர்ணிக்கிறார்களே அதே நிலை அவளுக்கு. தங்கள் மடத்தை ஒருமுறை பார்த்தாள். "ஐயோ! போயிட்டு வர ஒரு மனியாவது செல்லுமே" என்று அவள் மனம் திக்கிட்டது.
"இந்த அளவுக்கும் பொறுத்த பொடியன் எப்பன் நேரம் பொறுக்க மாட்டானா?” என்று அவள் முனு முணுத்தாள். தீர்த்தச் சிரட்டையை மனிதப் பிராணிகளின் காலடி படாத ஒரு பற்றை மறைவில் வைத்துவிட்டுத் திரும்பினாள். ஒரு நிமிஷம். கூட்டத்தின் மத்தியிலே நடுங்கிய கையோடு ஒரு பெட்டி மேலெழுந்து நின்றது.
“சரி எல்லோரும் வரலாம்” என்ற உத்தரவு பிறந்தது. ஒவ்வொரு மனித மிருகமும் பலப் பரீட்சை செய்தபடி உள்ளே போனது.
"ஐயோ! ஆறு நாளாய்ப் பட்டினி மவராசா!" என்று கதறும் ஒரு கிழவனின் தினக்குரல்.
"ஐயோ! சாகிறேன்” என்று கூட்டத்தின் மத்தியில் இடிபடும் குழந்தையின் அலறல்.
"அடா! உனக்குக் கண் பொட்டையா? காலில் புண் இருப்பது தெரியேலையோ” என்று கோபிக்கும் தடியனின் உறுமல்.
s - 108 ܣܗ

Page 55
வெண்சங்கு "சம்போ சங்கரா! மகாதேவா!!!” என்று இழுக்கும் தாடிச் சாமியின் கூப்பாடு.
“சாமி! கொஞ்சம் வழி விடுங்களேன்!” என்று மன்றாடும்
சிறுமியின் அழுகை, நாய்களின் குரைப்பு. காகத்தின் கொறிப்பு
எவ்வளவோ ஆரவாரம்!
இவ்வளவுக்கும் மத்தியில் “ஒரு பிடி சோறு” “ஒரு பிடி - சோறு” என்ற சத்தம். அந்தக் கிழட்டுப் பிணத்தின் சத்தத்தை யார்
கவனிக்கப் போகிறார்கள்? -
முதலாவது பந்தி நிரம்பியது. கதவு மூடும் சத்தம் கிழவிக்குக் கேட்டது. "ஐயா! ஒரு பிடி சோறு’ என்று பலமாகக் கத்தினாள். கடைசி முறையாக, அதுவும் பிரயோசனமற்ற வெறுங் கூச்சலாய் முடிந்தது.
இனி அடுத்த முறைக்கு எவ்வளவு நேரமோ? அதுவும் இப்படி முடிந்து போனால் அடுத்த முறை. ஐயோ! என் மகன் சின்னான். “அவன் சொன்னது. சரியாய்ப் போச்சு தடியன்கள். சாமிகள். சோம்பேறிகளுக்கு போடுவான்கள். நமக்கா? கையைக் காலை உடைச்சுக் கொண்டுதான் வருவாய் என்றானே அது சரி. மெத்தச் சரி” என்று அவள் மனத்துள்ளே புகைந்தாள்.
நெடுநேரம் தாமதிக்க முடியாது என்பது அவளுக்குத் தெரியும். ஒவ்வொரு நிமிடமும் சின்னானின் பசி - பசி என்ற ஓசை கேட்ட வண்ணமாய் இருந்தது அவள் மனதில். இனி வெறுங்கையோடு திரும்ப வேண்டியது தான் என்பதை நினைக்கையில் ஏதோ குற்றம் செய்தவள் போல் அவள் துடித்தாள். 'குற்றமில்லாமல் வேறென்ன?. இந்த விபூதி சந்தனத்தையாவது கொடுத்து விட்டு வந்தோமில்லையே! என்ற நினைப்பு முள் போலக் குத்திக் கொண்டிருந்தது. இடையிடையே அந்த முடிச்சைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.
திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. மறுபக்கம் போய்ப் பார்த்தால் 'ஒரு வேளை கிடைக்கலாம். அங்கு பெண்கள் இருப்பார்கள். அவர்களிடம் பல்லைக் காட்டினால் ஒரு பிடி சோறு போட மாட்டார்களா? என்பது தான் அது.
- 104 -

வெணர் சங்கு -
இந்த எண்ணம் பிடர் பிடித்து உந்த, பொல் லையும்
பெட்டியையும் எடுத்துக் கொண்டு சமையற் பக்கம் போனாள். "அம்மா
ஒரு பிடி சோறு” என்று அவள் பலம் கொண்ட மட்டும் கத்தினாள்.
ஒரே சமயத்தில் இரண்டு கதவுகள் திறந்தன. ஒன்று வெள்ளிக்கிழமை மடத்துச் சமையற் பக்கத்துக் கதவு மற்றது பள்ளர் இருக்கும் மடத்துப் பெரிய அறையின் கதவு.
அதைத் திறந்தவள் பூதாகாரமான ஒரு சீமாட்டி இதைத் திறந்தவன் எலும்பும் தோலுமான சின்னான். ܠ ܢ -
மலேரியாக் காய்ச்சலின் உக்கிரத்திலே டாக்டர்களுக்குப் பணங் கொடுக்க முடியாத நிலைமையிலே சந்நிதி முருகனைத் தஞ்சமடைந்த அந்தச் சின்னான் தனக்குத் துணை செய்ய வந்த ஆத்தையின் வரவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் வந்த பாடில்லை. காய்ச்சல் உதறியது. தலை சுழன்றது. நாவறண்டது. தண்ணிர் விடாய். பசி. எல்லாம். பக்கத்தில் இருந்த முட்டியை எடுத்துப் பார்த்தான். ஒரு துளி தன்னிர் கூட இல்லை. விசி எறிந்தான்.
“படீர்’ என்று முட்டி சுக்கல் சுக்கலாய் உடைந்து விட்டது. அவன் ஆத்திரம் அவ்வளவு!
இவ்வளவு நேரமாய் எங்கே போனாள். பாழ் பட்ட கிழவி' என்று பல தடவை திட்டினான் அவன். என்ன பிரயோசனம்? எல்லாம் பாழையபடிதான்.பசி. தண்ணிர்!!
கம்பளியை எடுத்து மூடிக் கொண்டு சிறிது நேரம் படுத்தான். கண்களைக் கெட்டியாக மூடிப் பார்த்தான். ஒன்றாலும் திருப்தி எற்படவில்லை. வயிற்றில் பசி மிகுந்தது. தண்ணிர் விடாய் கூடியது.
"தண்ணீர் தண்ணி.ர்.தண்.ணிர’ என்று அவன் அலறினான். வெறும் சொற் கூட்டந்தான். தொண்டை கூட அடைத்து விட்டது. எழுந்திருந்து யோசித்தான். கிழவியோ வந்த பாடில்லை. “அவள் சோறு வாங்கப் போனாள். சோறு கொடுப்பார்கள். நமக்கா? தடியர்கள்
-܂ 10:5 -

Page 56
வெர்ை சங்கு சோம்பேறிகள் சன்னாசிகளுக்கு. ஏழைகளுக்கா? இந்தக் கசப்பான உண்மையைப் பல தடவை திருப்பித் திருப்பிப் பைத்தியக்காரன் மாதிரிச் சொன்னான். கண்ணை முடி.ொன் ஒரு கணம். எலும்புந் தோலுமான அவன் 'ஆத்தை கறுப்பி - சனக் கூட்டத்தின் மத்தியிலே நசுக்கப்பட்டு "ஐயோ! ஐயோ!!’ என்று கதறும் காட்சி அவன் மனத் திரையில் தோன்றியது. “எனக்குச் சோறு வேண்டாம்.வா. ஆத்தை.” என்று பலமாகவும் பரிதாபமாகவும் கூப்பிட்டான்.
கண்ணைத் திறந்தான். செத்தல் நாயொன்று மடத்தின் வாயிலை எட்டிப் பார்த்தது.
“உம், உனக்கும் பசியா? வெள்ளிக்கிழமை மடத்துக்குப் போகாதையேன். எச்சில் இலைச் சோறாவது கிடைக்கும். ஒ, அங்கையும் கொழுத்த நாய்கள் உனக்கு எங்கே விடப் போகுதுகள்? எங்கேயும் போட்டி பொறாமை, மெலிந்தவனுக்கு வலியவன் விடாத
அக்கிரமம். இங்கை ஒன்றும் இல்லை.”
“இல்லையா. இருக்கிறது’ என்று ஏதேதோ சொன்னான்
நாயைப் பார்த்து.
“இருக்கிறது. இருக்கிறது’ என்றான் மெளனமாக “ஓம் அங்கை பழஞ்சோறு இருக்குது என்று சொன்னாளே ஆத்தை அட. இவ்வளவும் என் மூளைக்குப் படவில்லையே! நில் நில். உனக்கும் தாறேன்’ என்று முனு முனுத்தான். தெளிவு. மகிழ்ச்சி - எல்லாம் அவன் முகத்தில் தேர்ன்றின.
மெல்ல எழுந்து சுவரைப் பிடித்துப் பிடித்து வாயிலுக்குப் போய்ச் சேர்ந்தான். கதவைத் தள்ளினான். அது மெல்லத் திறந்தது. பைத்தியம் மாதிரி இருந்தவன் அதிக மகிழ்ச்சியில் அசல் பைத்தியமாய் விட்டான்.
“சோறு தண்ணீர் எல்லாம். தண்ணிர். சோறு எல்லாம்” எனறு பல முறை கூவினான். "பாவம் கிழவி ஒரு பிடி சோத்துக்கு அலையுதே. இங்கை எத்தனை பிடி சோறு. போதும் போது மென்ன இருக்கே என்று பலதரம் தன்னுள்தானே கூறினான்.
- 106 -

வெர்ை சங்கு
இருந்த சோறு அவ்வளவையும் சட்டியிற் போட்டுப் பிசைந்தான். ஒவ்வொரு கவளமாய் வாய் மென்று விழுங்கியது. "ஓ! அச்சா’ என்று ஆனந்த மிகுதியில் பிதற்றினான். வந்த நாயும் அப்போது ஆவலாகக் கிட்ட வந்தது. "பாவம் நீயும் தின் என்று ஒரு கவளத்தை எடுத்து இருந்த படியே எறிந்தான்.
சாப்பிட்டு முடிந்தது. குளிர். நடுக்கம். உதறல். எழுந்திருக்கவே முடியவில்லை. கைகூடக் கழுவவில்லை. பானை சட்டி எல்லாம் வைத்தது வைத்த படிதான்.
எழுந்ததும் விழுந்து விடுவான் போல் இருந்தது. மார்பால் தவழ்ந்து பாய்க்குப் போய்ச் சேர்வதே சங்கடமாகி விட்டது.
"ஐயோ! முருகா. என்னைக் கொண்டு போ” என்று அலறினான். கம்பளியால் இழுத்துப் போர்த்தான். தேகம் "ஜில்" என்று குளிர்ந்து விட்டது. ஒரே விறைப்பு. பிதற்றல். “ஆத்தை. ஆத்தை. 6.
அவன் போட்ட சத்தம் அவளுக்குக் கேட்க முடியாது. என்றாலும் அவள் தன் பலங் கொண்ட மட்டும் விரைவாகத்தான் வந்து கொண்டிருந்தாள். தான் வாங்கிய சோற்றைக் கொடுப்பதற்கல்ல. இனிமேலாவது சமைத்துக் கொடுக்கலாம் என்பதற்காகத்தான்.
ஒரு பிடி சோறும் அவளுக்குக் கிடைக்க வில்லையா? கிடைக்கும் தருணத்தில் இருந்தது. ஆனால் அவளுக்கு வாங்கப் பிரியமில்லை. ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!
"ஒரு பிடி சோறு. ஒரு பிடி சோறு என்று அலறிய அந்தக் கறுப்பிக்குச் சோறு போடுவதற்கு அந்தச் சீமாட்டி திரும்ப வந்து பார்க்கும் போது அவள் தூரத்தே போய்க் கொண்டிருப்பதைக் கண்டாள். ஏனோ? "நமக்கு மானம் ரோசம் இல்லையா? கறுமி. மலடி. சண்டாளி. இவள் கையால் ஒரு பிடி சோறா? வேண்டாம். வேண்டாம்” என்று அலட்டியபடி போகும் கிழவியின் கருத்தென்ன?
"இன்னும் அவள் செருக்கு மாறவில்லை. இங்கையும் வந்து தன் சாதிப்புத்தியைக் காட்டி விட்டாளே” என்று இந்தச் சீமாட்டி பொருமுவதன் மரமமென்ன?
-۔ 1107 -۔

Page 57
வெண்சங்கு இருவருக்கும் முன் அறிமுகம் உண்டா?. உண்டு. அறிமுகம் அல்ல; பெரும்பகை. அவர்களைச் சீமான் சீமாட்டி ஆக்கியதெல்லாம் தன்னுடைய மீகனின் உழைப்பு என்பது கிழவியின் எண்ணம். இதில் உண்மை இல்லாமல் இல்லை.
வற்றாத ஊற்றைக் கொண்ட 'நிலாவரைக் கேணி இருந்தும் நவக்கிரி' என்னும் அந்த ஊரை - இயற்கைத் தேவி தன் திருக்கண்ணால் பார்க்கவில்லை. ஒரே கல்லும் முள்ளும், பற்றைக் காட்டில் முயல் பிடிக்கும் கெளமீன கோலச் சிறுவர் வேட்டை நாயுடன் திரிவர். அந்த ஊரை விட்டு வன்னித் தாயைச் சரணடைந்த கந்தர் - கந்த வனம் - கந்தப்பிள்ளை - வட்டிக்கடை முதலாளி ஆகியது பெரும் புதினம். -
அந்தக் கந்தப்பிள்ளையின் வீட்டு வாயிலில் நகை அடைவு பிடிக்கத் தத்துவம் பெற்றவர்’ என்ற விளம்பரப் பலகை ஏறிய அன்றைக்கே அவரின் கீழ் வன்னி நாட்டில் கமத்தொழில் செய்து வந்த சின்னானுக்கு மலேரியா ஏறியது.
மூன்றாம் நாள் அவன் வன்னி நாட்டை விட்டுத் தன் தாய்த் திரு நாட்டுக்கு மலேரியாக் காய்ச்சலோடு வந்து சேர்ந்தான்.
ஏமாற்றம். ஒரு வருடத்துக்குப் போதுமான நெல்லோடு வந்திறங்குவான் எனக் கற்பனை பண்ணிக் கொண்டிருந்த கறுப்பிக்கு இது எப்படி இருக்கும்? பெரிய ஏமாற்றம். தங்கள் முதலாளி கந்தப்பிள்ளையின் வீட்டை அடைந்து அடுக்களைப் பக்கம் போன கறுப்பியோடு அந்த வீட்டுச் சீமாட்டி முகங் கொடுத்துப் பேசவே இல்லை.
এখােজ,
சீமாட்டிக்குப் பிள்ளைப் பேற்றிற்காக அந்தத் தாடிக்காரச் சாமியார் சொல்லிய முறைப்படி வருகிற வெள்ளிக்கிழமை 'அவிச்சுப்போட எத்தனை ரூபா பணம் - பவுண் தேவை என்ற செலவைப் பற்றிய எண்ண்ம்.
கறுப்பிக்குத் தன் மகனை எப்படியாவது உயிர் பிழைக்கச் செய்ய வேண்டும் என்ற நினைப்பு.
- 08 -

வெர்ை சங்கு
"இந்த நினைப்பில் ஒரு மூடை நெல்லு: ஒரு பறை நெல்லு: ஒரு கொத்து நெல்லு, பத்து ரூபாய் - ஐந்து ரூபாய் - ஒரு ரூபாய் என்று கண்ண பிரான் துரியோதனனைக் கேட்ட ரீதியாகக் கேட்டுப் பார்த்தாள் - மன்றாடினாள் - அழுதாள் - கத்தினாள்.
சீமாட்டி ஒன்றுக்கும் மசிவதாயில்லை. கடைசியில் கறுப்பியின் ஆத்திரம், மலடிகளுக்குப் பிள்ளையின் அருமையைப் பற்றித் தெரியுமா? என்ற பெரு நெருப்பாக வெளிவந்தது.
இந்த நாவினாற் சுட்டவடு சீமாட்டியை ஒரு குலுக்கு குலுக்கிற்று.
“போடி வெளியே. பள்ளுப்பறைகளுக்கு இந்தக் காலம் தலைக்கு மிஞ்சின செருக்கு. உன் மகன் எங்களுக்கு அள்ளி அள்ளிச் சும்மாதான் கொடுத்தானோ? வேலை செய்தான். கூலி கொடுத்தோம். அதுக்கு வேறு பேச்சென்னடி? மலடி. மலடி என்கிறாயே, கடவுள் கண் திறந்தால் இனியும் பிள்ளைப் பாக்கியம் வராதா?” என்று ஆத்திரத்தைத் தீர்த்தாள் சீமாட்டி
“கடவுள் கண் திறப்பார்! உங்களுக்கா?’ என்று அநாயாசமாகச் சிரித்து விட்டு வெளியேறிய கறுப்பி தன் மகனின் உழைப்பால் தின்று கொழுத்து ஊராருக்கு அன்னதானம் செய்து புண்ணியம் சம்பாதிக்க வந்த சீமாட்டியிடம் இன்றும் ஒரு பிடி சோறு வாங்கச் சம்மதிக்காதது அதிசயமன்று.
கிழவி மடத்துக்கு வந்து சேர்ந்தாள். நாய் அவளைக் கண்டு வெளியே போயிற்று. தீர்த்தத்தை வாயில் விட மகனை எழுப்பினாள். அவன் அசையவே இல்லை. முக்கடியில் கை வைத்துப் பார்த்தாள். ஏமாற்றந்தான்!
"அவள் சாகக் கொன்று விட்டாள். சீமாட்டி கொன்றே விட்டாள். என் மகனைப் பட்டினி போட்டுக் கொன்று விட்டாள்” என்று அலறினாள். “சந்நதி முருகா! நீயும் பணக்காரர் பக்கமாய் நின்று ஏழைகளைக் காப்பாற்றாமல் கைவிட்டு விட்டாயே” என்று கதறினாள்.
சீமாட்டியின் ஆட்கள் செல்லும் வண்டிகளின் ”கடமுடாச் சத்தமும் வெண்டையங்களின் ஒசையும் தூரத்தே கேட்டன.
- 109 -

Page 58
வெர்ை சங்கு
"புண்ணியம் சம்பாதிச்சியா?. போ போ” என்று அவள் பல்லை நெருடினாள். -
உடைந்த முட்டியும். “ஒரு பிடி சோறு' வாங்கச் சென்ற ஒலைப் பெட்டியும் தவிர இந்தச் சொற்களைக் கேட்க அங்கு வேறு மனிதர்களாக யார் இருக்கிறார்கள்?
ہے 110 =


Page 59