கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அன்னம்மா சபா.ஆனந்தர் (நினைவு மலர்)

Page 1

D 6) st
மா சபா. ஆனந்தர்

Page 2

திருமதி அன்னம்மா - சபா. ஆனந்தர்
நினைவு மஞ்சரி
வெளியீடு: "பூரீசாலினி' காங்கேசன்துறை வீதி, இணுவில். 6 - 1997

Page 3
வெளியீட்டுரை
--ᎮᏠᎯᏛᏉᏡᎯᏈᎴ *ᏖᏪᏙᏡᏪᏙᏛᏙᏁ4ᏡᏗᏠᏪ--
எங்கள் குடும்பத் தலைவி திருமதி அன்னம்மா சபா. ஆனந்தர் அவர்கள் இவ்வளவு விரைவில் எம்மை விட்டுப் பிரிவார் என்று நாம் எதிர்பார்த்திருக்க வில்லை.
காலையிலும் மாலையிலும் திருமுறைகளை ஒதி வந்தவரான அம்மையார் தாமும் மகிழ்ந்து எம்மை யும் மகிழ வைத்தார். எங்கள் குடும்பத்துக்குச் சிறந்த வழிகாட்டியாக எம்முடன் கூடி நீண்டகாலம் வாழ் வார் என்றே எதிர்பார்த்திருந்தோம்.
17-10-97 வெள்ளி நண்பகல் திடீரென அவர்கள் இயற்கை எய்தி விட்டார்கள். அவரின் பிரிவு எமக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னவரின் நினைவாக வெளிவரும் இம்மஞ்சரி யில் வாழ்க்கை வரலாறு, திருமுறைப் பாடல்கள், கந்த சஷ்டி கவசம், விநாயகர் அகவல் என்பன அடங்கியுள்ளன. படிப்பவர்கள் பயன் பெறுவார்கள் என்பது எமது நம்பிக்கை.
குறித்த மஞ்சரியை அழகாக அச்சிட்டு உதவிய இணுவில் அம்மா அச்சகத்தினருக்கும் எமது உள மார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.
"பூரீசாலினி' மக்கள்,
காங்கேசன்துறை வீதி, LD(586ñf, 16-11-1997 பேரர்.

திருமதி அன்னம்மா சபா. ஆனந்தர்
தோற்றம் : மறைவு : O - 4 - 92 | 7 1997 = {10 سے
திதிநிர்ணயப் பாடல் ஆனந்தர் திருமனையாள் அறிவுடையாள் அன்னம்மா ஞானமுடை ஈஸ்வரசேர் தற்*கன்னித் திங்களிலே தான மிகு வெள்ளியொடு தனியபரத் துதியையினில் வானமதி திருச்சடையோன் வளர் பாதம் நண்ணினளே.
* கன்னித்திங்கள் - புரட்டாசி மாசம்

Page 4

பஞ்சபுராணத் திரட்டு
திருச்சிற்றம்பலம் தேவாரம்
எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார்
எம்மாடு சும்மாடாம் ஏவர்நல்லார் செத்தால்வந் துதவுவார் ஒருவரில்லைச்
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லாநிற்பர் சித்தாய வேடத்தாய் நீடுபொன்னித்
திருவானைக் காவுடைய செல்வா என்றன் அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என் செய்கேனே.
திருவாசகம் சிரிப்பார் களிப்பார் தேனிப்பார்
திரண்டு திரண்டுன் திருவார்த்தை விரிப்பார் கேட்பார் மெச்சுவார்
வெவ்வே றிருந்துன் திருநாமந் தரிப்பார் பொன்னம் பலத்தாடுந்
தலைவா என்பாய் அவர்முன்னே நரிப்பாய் நாயேன் இருப்பேனோ
நம்பி இனித்தான் நல்காயே.
திருவிசைப்பா புவன நாயகனே அகவுயிர்க் கமுதே பூரணவாரணம் பொழியும் பவளவாய் மணியே பணிசெய்வார்க் கிரங்கும்
பசுபதீபன்ன காபரணா அவனி ஞாயிறு போன்றருள் புரிந்தடியே னகத்திலும் முகத்தலை மூதூர்த் தவள மாமணிப் பூங்கோயலு மமர்ந்தாய்
தனியனேன் தனிமை நீங்குதற்கே.

Page 5
திருப்பல்லாண்டு சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த
தூய்மனத் தொண்டருள்ளீர் சில்லாண்டிற் சிதையுஞ் சிலதேவர்
சிறுநெறி சேராமே வில்லாண்ட கனகத் திரண்மேரு
விடங்கன் விடைப்பாகன் பல்லாண்டென்னும் பதங்கடந் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே,
புராணம் வானுலகு மண்ணுலகும் வாழமறை வாழப் பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய் ஆனைமுக னைப்பரவி யஞ்சலி செய்கிற்பாம்.
திருப்புகழ்
அகரமுமாகி அதிபனுமாகி
அதிகமுமாகி Sygs LDrr6) அயனெனவாகி அரியெனவாகி
அரனெனவாகி அவர் மேலாய் இகரமுமாகி எவைகளுமாகி
இனிமையுமாகி வருவோனே இருநிலமீதில் எளியனும்வாழ
எனதுமுனோடி வரவேணும் மகபதியாகி மருவும்வலாரி
மகிழ்களிகூரும் வடிவேலா வனமுறைவேடன் அருளியயூசை
மகிழ்கதிர் காமம் உறைவோனே செககணசேகு தகுமிகுதோதி
திமியென ஆடும் மயிலோனே திருமலிவான பழமுதிர்சோலை
மலைமிசைமேவு பெருமாளே.
திருச்சிற்றம்பலம்

.ெ திருமதி அன்னம்மா - சபா. ஆனந்தர் அவர் க ளின்
வாழ்க்கை வரலாறு
சைவத் தமிழ்ப் பாரம்பரியத்தை இற்றைவரை பேணிவரும் பழம்பதி, இணுவையம்பதி, நீர்வளம், நிலவளம் நிரம்பிய இவ்வூரின் தொல்குடியினர் அனைவரும் சைவப் பெருமக்கள். ஒரு நாளில் ஒரு தரமாவது கடவுளைக் கும்பிடுதல் இங்கிருப்போரின் நீண்ட காலப்பழக்கம். இறுக்கமான சைவப் பற்று இவ்வூரில் ஆழமாகப் பதிந்துள்ளமைக்கு இங்கு நாற்றிசையிலும் அமைந்துள்ள சைவா லயங்களே சான்றாகும். அதிகாலையில் ஒலிக்கும் கோயில் மணி ஒசையுடன் துயில் எழும் மக்கள் சிவசிந்தனை நிரம்பியவர்கள் என்பதில் வியப்பொன்றும் இல்லை.
இந்த வகையிலே இறை பக்தியோடு செய்யும் தொழிலைத் தெய்வமாய் மதித்து நடந்தவர்கள் இணுவில் மேற்கில் வாழ்ந்த கந்தையா குடும்பத்தினர். இக்குடும்பத்தாருக்கு ஆண்டவன் அரு ளால் கிடைக்கப்பெற்ற பிள்ளைகள் மூவர், மூவரும் ஆண்கள். அவருள் தலைமகன் செல்லையா ஆவர். அவரும் தமது தந்தை யாரைப் போல் இறை அன்பு பூண்டவர். விவசாயத்தை வாழ்க் கைத் தொழிலாகக் கொண்டவர். செல்லையாவின் குணநலன் கண்டு இணுவில் மத்தியில் வாழ்ந்த சின்னையா - செல்லம்மா குடும்பத்தினர் தமது பிள்ளைகள் எழுவருள், மூன்றாவதான அருமை மகள் ஆனந்தியாரை மணம் முடித்து வைத்தனர்.
திரு. செல்லையா - ஆனந்தியார் தம்பதியினர் அண்டினோரை ஆதரிக்கும் நல்ல குடும்பமாய் வாழ்ந்தனர். தெய்வ வழிபாட்டில் பெருமளவு நாட்டம் கொண்ட இவர்கள் இணுவில் பரராச சேகரப் பிள்ளையார், நொச்சியம்பதி முருகன், சுதுமலை வடக்கு ஈஞ்சடி வயிரவர் ஆகியவற்றைத் தமது குலதெய்வங்களாகப் போற்றி வழி பட்டனர். அதற்கும் மேலாகக் கதிர்காமம் உட்படத் தென்னிந்திய திருத்தல யாத்திரை செய்வதிலும் செல்லையா அவர்கள் பெரு விருப்புடையவர். அவர் செய்த யாத்திரைகளுள் தலையாயது காசி யாத்திரை எனக் கூறுவார்.

Page 6
- 6 -
தெய்வ நம்பிக்கையுடன் வாழ்ந்த செல்லையா குடும்பத்தின ருக்குத் திருவருளால் கிடைக்கப்பெற்ற பிள்ளைகள் மூவர் பெண்கள். தலைமகளான அன்னம்மா 01-04-1920 அன்று பிறந்தார். அவரை அடுத்துப் பிறந்தவர்கள் இரத்தினம்மா, பரமேஸ்வரியுமாவர்.
பிள்ளைகள் மூவரையும் அன்போடு வளர்த்து, அவர்களுக்கு ஏற்ற வாழ் க்  ைக த் துணைவர்களைத் தேடிக் கொடுப்பதிலும் பெற்றார் கருத்தாய் இருந்தனர். தலைமகள் அன்னம்மா அவர்கள் மணப்பருவம் எய்தியதும் இணுவில் கிழக்கைச் சேர்ந்த பண்டிதர் க. சபா. ஆனந்தர் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.
பண்டிதர் க. சபா. ஆனந்தர் ஒரு பேர் போன கல்விமானும் நல்லாசிரியரும் ஆவார். கல்விப் புலத்தில் அவர் காட்டிய ஆர்வம் திருமணத்தின் பின்பு மேலும் மேம்பாடுற்றது. மனைத்தக்க மான புடையளான அன்னம்மாவின் முகராசி ஆனந்தரை அறிஞர் உலகில் பீடு நடைபோ டச் செய்தது. அவர்களின் திருமணம் நிறைவுற்ற அண்மைக் காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகப் புலமைப் பரிசில் ஆனந்தருக்குக் கிடைத்தது.
உயர் கல்வியின் பொருட்டுத் தென்னகம் சென்ற கணவருடன் மனைவி அன்னம்மாவும் கூடச் சென்றார். அங்கு தமிழ் மொழி பற்றிய ஆய்வினை மேற்கொண்டு B, O, L என்ற பட்டப் படிப்பை 1942 - 1943 காலப் பகுதியில் ஆனந்தர் மேற்கொண்டார். அந்நாளில் கணவருக்கு வேண்டிய பணிகளை அன்னம்மா அம்மையார் செய்து மகிழ்ந்தார்.
புலமைப் பரிசில் காலம் முடிந்து தாயகம் திரும்பிய ஆனந்தர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிற் சிறப்புத்தர ஆசிரியராகச் சில காலம் பணியாற்றினார். பின்னர் பதவி உயர்வுடன் நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரிக்கு அதிபராக ஆனந்தர் சென்றபொழுது அன்னம் மாவும் கூடச்சென்று அங்கிருந்து மனையறம் நடத்தினார்.
நாவலப்பிட்டிக் கதிரேசன் கல்லூரி அதிபராய் ஆனந்தர் இருந்த காலத்தில் பல்வேறு பணிகளிலும் அவர் ஈடுபட்டு உழைத்தார். அவற்றுக்கெல்லாம் அம்மையாரும் உறுதுணையாய் இருந்து உதவி னார்.
பின்பு நயினாதீவு ம கா வித்தியாலயத்துக்கு இடமாற்றம் கிடைத்தது. அங்கு அவர் வந்தபோதும் சொந்த ஊரான இணுவிலில் இருப்பதைவிடக் கணவன் இருக்கும் இடத்தில் தாமும் இருப்பதையே

- 7 -
பெரிதென அன்னம்மா விரும்பினார். கணவர் செல்லும் இட மெல்லாம் தாமும்சென்று வாழ விரும்பிய அன்னம்மாவின் செயலை நினைக்கும் பொழுது -
* வெள்ளி விதைக்கப் பொன்னே விளையினும்
வேண்டேன் பிறந்தகத்து ஈண்டிய வாழ்வே' என்று சங்க காலப் பெண்ணொருத்தி கூறியதாகச் செப்பும் சங்கப் பாடலின் வரிகள் நினைவுக்கு வரும்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வலிகாமம் இடப் பெயர்வின் போது, க ண வர் நோயுற்றுத் தளர்ந்த வேளையில் அவரையும் அழைத்துச் சென்று கைதடி - நுணாவிலில் இவர் தங்கி இருந்தார். நூறாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய ஆயுள் பலம் இருப்பதாக நம்பி இருந்த ஆனந்தர், இடம் பெயர்ந்திருந்த காலத்தில் அமரராக நேர்ந்தமை துர்ப்பாக்கியமாகும். அவ்வேளையில் அவரின் அருகில் இருந்து கடமை செய்யும் பேறு தமக்குக் கிடைத்ததையிட்டு அம்மை யார் பெரிதும் மன நிறைவு பெற்றிருந்தார்.
ஆனந்தர் - அன்னம்மா தம்பதியரின் மணவாழ்வின் பேறாகப் பெற்ற பிள்ளைகள் எழுவராகும். அவருள் பெண்கள் இருவர். அனைவரும் திருமணமாகிவிட்டதால் மக்கள், மருமக்கள், பேரப் பிள்ளைகள் என்று எல்லோரினதும் சீர், சிறப்புக்களைக் கண்டு திருமதி அன்னம்மா - சபா. ஆனந்தர் களிப்படைந்தார். பெண்களில் ஒருவரான திருமதி காயத்திரி ஆனந்தரமணி தர்மசோதி (விஞ்ஞான ஆசிரியை) காலமாகிவிட்டார்.
தெய்வ நம்பிக்கையும் சிவத்தியானமும் நிரம்பிய திருமதி அன்னம்மா அம்மையார் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் விநாயகர் அகவல், கந்தசஷ்டிக் கவசம், சிவபுராணம் என்பவற்றைப் படித்துப் பாராயணம் செய்வார். செவ்வாய், வெள்ளிக்கிழமை களில் மருதனார்மடத்துக் காவல் தெய்வமான பல்லப்ப வயிரவர் கோயிலுக்குப் பூ எடுத்துக் கொண்டு போய்க் கொடுப்பது அவரது வழக்கம். ஒய்வு நேரங்களில் சமூக நாவல்கள், வரலாற்று நாவல்கள், செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் போன்ற பல்வேறு நூல்களை வேறு பாடின்றி வாசித்து மகிழ்வார்.
ஏறத்தாழ ஒராண்டுக்கு முன் நரம்புக் கொப்பளிப்பான் நோய் இவரைப் பீடித்தது; பின்னர் குணமாகிவிட்டார். கடந்த ஆவணி யில் தனது அருமைப் பேர்த்தி புராதனியின் பூப்புனித நீராட்டு

Page 7
- 8 -
விழாவைக் கண்டு களிக்கும் வாய்ப்பு அம்மையாருக்குக் கிடைத்தது ஒரு நற்பேறாகும். மன வாட்டம் சிறிதுமின்றித் தன்னுணர்வுடன் இருந்த அம்மையார், தனது வழமையான கடமைகளை முடித்துக் கொண்டு கோயிலுக்குப் புறப்படும் வேளையில், அவரது நெஞ்சில் வலி ஏற்பட்டது. உடனடியாக யாழ் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்று அங்கு அனுமதிக்கப் பெற்றபின், மாரடைப் பினால் அவரது உயிர் பிரியலாயிற்று.
ஈசுர ஆண்டு புரட்டாதி மாதம் 31ஆம் திகதி (17 - 10 - 97) வெள்ளிக்கிழமை பிற்பல் 1-30 மணியளவில் பரணி நட்சத்திரமும் அபர பக்கத்துத் துதியைத் திதியும் சேர்ந்த வேளையில் அம்மையார் சிவபதம் அடைந்தார். அன்னவரின் ஆன்ம சாந்திக்குப் பிரார்த்திப் போ மாக.
go i UD
"இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்' என்பது நாவலர் பெரு மான் வாக்கு. இவ்வசனத்தில் கிடைத்தது” என்ற வார்த்தை மிக்க கருத்துள்ளது. சரீரம் இறைவனிடமிருந்து கிடைத்த தென்பது கருத்து.
இறைவனிடமிருந்து கிடைத்த சரீரத்தை இறைவன் கருத் தறிந்தே பயன்படுத்த வேண்டும்.
திருமூலர், 'உடம்பை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே' என்கின்றார்.
உயிரை வளர்த்தலாவது உயிர் தன்னோடு அத்துவிதப் பட்டிருக்கும் இறையோடு உயிராகிய தானும் அத்துவிதப்படு தற்கு வழி செய்தலாம்.
"இந்தச் சரீரம்" என்ற வசனத்தை மீண்டும் நினைவு கூர்ந்து, திருமூலர் கருத்தை அவ்வசனத்திலுங் காண்க.
- பண்டிதமணி

ஒளவையார் அருளிய விநாயகர் அகவல்
سی۔سی۔سی۔سی۔۔۔۔۔۔
சீதக் களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பல இசை பாடப் பொன் அரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்ன மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்துTரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நால்இரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும் திரண்ட முப்புரி நூல் திகழ்ஒளி மார்பும் சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே ! முப்பழம் நுகரும் மூஷிக வாகன இப்பொழுது என்னை யாட்கொள்ள வேண்டித் தாயாய் எனக்குத் தான் எழுந்து அருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே திருந்திய முதல் ஐந்து எழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்து என் உளந்தணில் புகுந்து

Page 8
குருவடிவு ஆகிக் குவலயம் தன்னில் திருஅடி வைத்துத் திறம் இது பொருள் என வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி, ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்பு உறு கருணையின் இனிது எனக்கு அருளிக், கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறுவித்து இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து
தலம் ஒரு நான்கும் தந்து எனக்கு அருளி மலம்ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே, ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே, இடை பிங்கலையின் எழுத்து அறிவித்துக், கடையில் சுழுமுனைக் கபாலமும் காட்டி, மூன்று மண்டலத்தில் முட்டிய தூணின் நான்று எழு பாம்பின் நாவில் உணர்த்திக்,
குண்டலி அதனில் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து, மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்புங் கருத்து அறிவித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி இடைச் சக்கரத்தின் ஈர் எட்டு நிலையும் உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச், சண்முக தூலமும் சதுர்முகச் சூட்சமும் எண்முகம் ஆக இனிது எனக்கு அருளிப்

حساس H I سسسس
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசனப்படுத்திக், கருத்தினில் கபால வாயில் காட்டி, இருத்தி முத்தி இனிது எனக்கு அருளி என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து இருள்வெளி இரண்டிற்கு ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி, என்செவியில்
எல்லை இல்லா ஆனந்தம் அளித்து அல்லல் களைந்தே, அருள்வழி காட்டிச் சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி, அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்பு உள்ளே காட்டி, வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடும்மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி, அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கரத்தின் நிலை அறிவித்துத் தத்துவ நிலையைத் தந்து எனை ஆண்ட வித்தக ! விநாயகா 1 விரைகழல் சரனே.

Page 9
கந்தர் சஷ்டி கவசம்
-*\^^/v^/v-C)^^\^n =
காப்பு துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்(து) ஒங்கும் நிட்டையும் கைகூடும் நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.
குறள் வெண்பா
அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.
நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மைய நடஞ்செயும் மயில்வா கணனார் கையில்வே லால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோ ன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
 

- 13 -
சரவண பவனார் சடுதியில் வருக ரவன பவச ரரரர ரரர
விணபவ சரவண வீரா நமோ நம நிபவ சரவண நிறநிற நிறென வசர வணப வருக வருக அசுரர்குடி கெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசஅங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொழி செளவும் உயிரையுங் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொலி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்நெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி பார்பும் செப்பழ குடைய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீராவும் இருதொடை அழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககன செககன செககன செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகு குண டி குன
エア エT エア女 アエア ffffffff ffffffff ffffffff? Iffffff? டுடுடு(டு டுடு(டுடு டுடு(டுடு டுடு(டு

Page 10
- 14 -
ட குடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து எந்தனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோதனென்று உன்திரு வடியை உறுதியென் றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் சுாக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவேல் காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பனைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க கைகள் இரண்டும் கருணைவேல் காக்க முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க

- 15 -
பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடைறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரம ராக்ஷதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத் துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டா ளர்களும் என் பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை யடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைக ளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டிய பாவையும் ஒட்டிய செருக்கும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

Page 11
- 16 -
காலது தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோடப் படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில்செதி லாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தனலெரி தனலெரி தணலெரி தணலது வாக விடுவிடு வேலை வெருண்டது வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பருஅரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீயெனக் கருள் வாய் ஈரேழ் உலகமும் எனக்குறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன்திரு நாமம் சரவன பவனே சையொளி பவனே திரிபுர பவனே திகளொளி பவனே பரிபுர பவனே பவமொளி பவனே அரிதிரு மருக அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே

-س- 17 سضسسه
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பாலகுமரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யானுனைப் பாட எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவச மாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன் பதம் பெறவே உன்னரு ளாக அன்புடன் இரகதி அன்னமுஞ் சொன்னமும் மெத்தமெத் தாக வேலா யுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்கனன் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செய்யினும் பெற்றவன் நீகுரு பொறுப்பதுன் கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி நேச முடனொரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டி கவச மிதனைச்

Page 12
- 18 -
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஒதியே செபித்து உகந்துநீ றணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர் கிரி கனக சபைக்கோ ரரசே மயில் நட மிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவண பவலும் சரணம் சரணம் சண்முகா சரணம்.
கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று.
هلاكه "

எங்கள் பாட்டி
எமது எதிர்கால வாழ்வுக்குப் பாட்டா நல்ல அன்பு வழிகாட் டினார். தொலைநோக்கு மிகுந்த அவர் எமது பாதுகாப்பிற்கும் வருங்கால வளர்ச்சிக்கும் ஏற்ற நன்னெறிகளை வகுத்துவிட்டுச் சென்றுள்ளார். பாட்டாவின் வழியில் நின்றவரல்லவா பாட்டி. எந்த ஒர் இடத்திலும் அவர் குறைந்து போய் விடவில்லை. வேண்டிய வழிமுறைகள் ப ல வ ற்  ைற வாழ்ந்து காட்டிச் சொல்லாமற் சொல்லித் தந்துள்ளார். 0 காலை, மாலை கடவுளைப் பிரார்த்திப்பது. O வயோதிப காலத்திலும் தவறாது ஆலயம் செல்வது. O எந்த நேரமும் வாசித்தபடி இருப்பது. 0 எதுவானாலும் வாசித்து நல்லனவற்றை எம்மை வற்புறுத்தி
வாசிக்க வைப்பது. பொருள் பண்டம் வீணாகாது பாதுகாப்பது. யாருடைய பொருளிற்கும் ஆசைப்படாது இருப்பது. O உறவினர்களோடு அன்பாக இருப்பது. வரவேற்பது, மற்ற
வர்களுக்குக் கொடுப்பது. o சமைப்பதில் தெரியாதவற்றைக் கற்றுத் தருவது. எனப்
பற்பல. இவை எல்லாவற்றிற்கும் மேலாகப் பாட்டி ஒன்று செய்த துண்டு, தமது மகளின் - அஃதாவது எமது அன்னையின் நம் பிக்கையைப் பல ப் படுத் தி விட்டுப் போயிருக்கிறார்கள். எம்மைக் கண்ணிமைபோற் காக்கும் பெரிய தாயாரோ அல்லது கண்டிப்புடன் கண்காணிக்கும் பெரிய தந்தையாரோ அன்றேல் எமது பாசமுள்ள தந்தையார் எவராயிருப்பினும் எம்மைத் தண்டிக்கப் பாட்டாவும், பாட்டியும் அநுமதித்ததில்லை.
எம்மைச் சுற்றி எமது அன்னை கட்டிச் சென்ற பாதுகாப்புக் கோட்டையைச் சூழப் பாட்டா பாட்டி ஒர் அகழி வெட்டிச் சென்றுள்ளனர். அந்த அன்புக் கோட்டைக்குள்ளே அவர்கள் வெட்டிய பாதுகாப்பு அகழியின் காவலாய் இருக்க எமது நீண்டவழிப் பயணத்தில் நாம் பண்பு, பக்தி, கல்வி மூன்றையும் தேடிப் புகழ்பெற வேண்டும் என உறிது பூணுகிறோம்.
பாட்டா, பாட்டியின் அசையாத நம்பிக்கையை நாம் நிலை நிறுத்தி, எமது அன்னையின் ஆத்ம சாந்திக்கும். எமது தந்தை, பெரிய தந்தையின் பெருமைக்கும் வழிகோல ஆண்டவனின் அருள்பெற்று எம்மை ஆசீர்வதிக்கும் வண்ணம் பாட்டியின் ஆத்ம சாந்தியை வேண்டிப் பிரார்த்திக்கிறோம்.
த. கோகுலன், த. கஸ்தூரி, த, புராதனி

Page 13
திருமதி அன்னம்மா
சபா. ஆனந்தரின்
வம்சாவளி
தகப்பன் : க. செல்லையா
தாய் : செ. ஆனந்தியார்
சகோதரிகள் : திருமதி இரத்தினம்மா அம்பலவாணர்
திருமதி பரமேஸ்வரி தங்கராசா கணவன் : பண்டிதர் க. சபா. ஆனந்தர், B, A, B, O, L.
(ஒய்வுபெற்ற அதிபர்)
மக்கள் : சபாபதி பாலகங்காதரன் (கனடா)
இரகுபதி பாலழரீதரன் (இலங்கை வங்கி, கொழும்பு)
திருமதி அருந்ததி ஆனந்தகெளரி தேவராசா
பூபதி பாலவடிவேற்கரன் (ஜேர்மனி) திருமதி காயத்திரி ஆனந்தரமணி தர்மசோதி (காலஞ்சென்ற விஞ், ஆசிரியை) அமரசேனாபதி பாலகார்த்திகைக்
குமரன் (கனடா)
பூரீபதி பாலமுரளிதரன் (கனடா)
மருமக்கள் :
திருமதி ச. சிவமதி (கனடா) திருமதி இ. சுமதி (மஸ்கெலியா பிளான்டேசன் லிமிட்டெட், கொழும்பு) திரு. த. தேவராசா (பிரதி அதிபர், யா/கொக்குவில்
இந்துக் கல்லூரி) திருமதி பூ. சூரியகுமாரி (ஜேர்மனி)
திரு. த. தர்மசோதி (அதிபர், யாமானிப்பாய் விவேகானந்த வித்தியாலயம்)
திருமதி பூரீ கலாநிதி (கனடா)
பேரப் பிள்ளைகள் :
ச. அபர்ணா (இந்தியா) ச, கர்ச்சனா அமேந்திரன் (கனடா)
ச. அர்ப்பனா (இந்தியா)
இ. வாமலோசன் (பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி)
இ. திருச்செந்தூரன் 3 y இ. தவமயூரன் 2 is பூ, காயத்திரி (ஜேர்மனி)
த. கோகுலன் (யாழ். இந்துக் கல்லூரி) த. கஸ்தூரி (யாழ். வேம்படி மகளிர் கல்லூரி)
த புராதணி a 9 பூரீ. வாருணி (கனடா)

சநதனக கடடை
எமது தாயாரைப் பார்ப்பதற்குக் கொழும்பில் ஆயத்தங்களைச் செய்தோம். ஆண்டவனின் நியதி வேறு விதமாய் இருந்து விட்டது. தாயார் எமது தந்தையாரையும், சகோதரி ரமணியையும் சந்திக்க இறைவனடி சேர்ந்து விட்டார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தோம்.
பிள்ளைகளின் நல்வாழ்வுக்காகத் தினமும் மலர் களினால் இறைவனுக்கு அர்ச்சனை செய்து எமது நினைவாகவே வாழ்ந்து வந்தார். இறுதிக் காலத் தில் கிடந்து உழலாமல் மன உறுதியோடு இறை பதம் எய்திவிட்டார்.
எமது அன்னையை நினைக்கும் போது அவர் எமக்காகச் சந்தனக் கட்டையாய்த் தேய்ந்து போன நினைவு எம்மனதில் நீங்கா மணம் பரப்புகின்றது. அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த் திப்போமாக.
அனைவரின் சார்பில்
ஆ. இரகுபதி பாலழறீதரன் (மகன்)
*

Page 14
எமது குடும்பத் தலைவி திருமதி அன்னம்மா சபா. ஆனந்தர் அவர்கள் நோயுற்றகாலை வைத்திய சேவை புரிந்தவர்களுக்கும், இன்னும் பல்வேறு வழி களில் உதவியவர்களுக்கும் -
17-10-97 வெள்ளி நண்பகல் அன்னவரின் மரணச் செய்தி அறிந்து வந்து உதவியவர்களுக்கும் -
மரணச் சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும் -
அநுதாபந் தெரிவித்தவர்களுக்கும் - அந்தியேட்டி, சபிண்டிக் கிரியைகளில் பங்குபற்றிய வர்களுக்கும் - இம்மலரின் ஆக்கத்திற்கு உதவிய திரு. சோ. பரமசாமி அவர்களுக்கும் - எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
"பூரீசாலினி' மக்கள், காங்கேசன்துறை வீதி, மருகர், 16- 1 - 1997 பேரர்.
அம்மா, இணுவில் - மருதனார் மடம்
 


Page 15

*)-