கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரசறிவியலாளன் 2004

Page 1
* யாழ்ப்பாணப்
 


Page 2


Page 3

அரசறிவியலாளன்
இதழ்-1 2004
24a ( Seé
அரசறிவியல் ஒன்றியம் அரசறிவியல்துறை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்

Page 4
அரசறிவியலாளன்
வெளியீடு
இதழாசிரியர்
அச்சுப்பதிப்பு
பதிப்புரிமை
பக்கங்கள்
முகவரி
2004 டிசம்பர்
என்.கரன்
முத்து பிறின்டேர்ஸ்,
38 1/1, கே.கே.எஸ் வீதி,
சுன்னாகம்.
அரசறிவியல் ஒன்றியத்திற்கு
212 + XI
அரசறிவியலாளன்,
அரசறிவியல் ஒன்றியம்,
அரசறிவியல் துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி,
இலங்கை.
(அரசறிவியலாளன்

பாதிவழியில் எம்மைப் பிரிந்த உறவுக்கு இந்நூல் சமர்ப்பணம்.
2.O.O.4.1979 O8.12.2 OOB
பிலிப் நல்லையா சாள்ஸ் சாள்ஸ் இந்திரன் விமலேந்திரா (இந்திரன்)

Page 5

||- |-
TT*WW一
|
WW
毛
| TTT|-s',
■|-||-]]]||)| || .
|-
「| |-
| |||-
‘buffs so siųsươ quae "(±(√(/z/ €0.02) àɔntɔlɔS spojillo, fo juoukiwdod 'uolupyoossy opuɔjɔɛ jɔɔŋŋo. I fo ɔɔŋyuuoo ois)

Page 6

'(maanspəu L uopump)KųospÁųnosso(HuJW '(uƏquəW əə11ņuuuuoo)upApdoutpupųSoyous, '(101|po) upupH’N MJW (Kup13.1925)updəəųıpuț¢I'N'ayw '(uoupa uțop)upų sodnyy uJW pupųsmųL'OTW ssıs (Kuplaudas əə1A) pÁųų.A. O ssiys'(13quoW əə1ņuuuoo) pụuun’N ssiys (H - T) ĝuspuens
apổpsmaņupWA’yfouq (uəunspəu Iuoțu2S) uppəəspÁpųoç:S '($1uy ‘upƏGI) upunpupųɔpaņSoy fou.1'(1ưəpssouci) upupųıɔɔspy Wouw'(1011əɔupųO əɔ1A) SpisipupųOWS:/oua ‘upųıpunopy youq (uoŋpouolinsuo.O) up8uņpsəupo I y ups (H - T) suņųS
buļļeľ Jo ÁųSJəAĮun Þ00z - oouələS IboņIIoa. Jo suauniedəq ‘uoņepossy əəuəps leopuso, joəəļļļuuuuoƆ əųL

Page 7

편력T테T편TT 言| 1 || |||『W-|-三
_
疆|
:
|-||||||||||||-s.|-|-|||||||||||||||| |-|- ( )| || ssssss|||||||||||||||ssssssssssss||||||||||||『』
sis
|-||『』||-
oooo - (1007/000z 000z/ 6661) - poida ɔɔuɔsɔS 1pɔŋŋod so nuou updəa osjuopmış apos pusi

Page 8

pềuțTS SSIIV ‘saluad 1312W əîntoa ssuw supųıpuɔɔųoq:Loup, suņ8paçoçSS1W 1U9sqV
upų pupunẤoswoyous
‘upfouţų/uploq:Sous ‘įpsosu01s113'Tuso, oupapyrus: Louw ‘upupos q:Loups‘upųsədny’yuj, ‘upupH’N’aw‘upados pqəəTW'uw ‘upųıupųsupoyous,‘puțųquasi AA'...JW ‘KųospÁųıpç:0'H'://W (H - T) supueņS Aos pug
Kutų, uponSoa ssiys oppəəuparaq ssyW ‘spx?quptpuțA A sss, 'pųwoul/A’S ssiys
‘KuņpuțN səuổyyssyys‘pīļ1țApX'N SS1W ‘Kaappuəpusy ssıp,‘KuţųıupupațS 'N sssss‘KuņņupNoS ssự, 'wpA’9 sssss 'pituun’N ssiys 'uoquoT supAT ssiw ‘pųņapyry ssiys oppuokųçyssijų (H - T) supueņS NAONI puz 'to!!!tupilinS'8 SS1W ‘pīļuupųS's ssw suxnpiyopas I ssiys suņowy ssiry
‘Kųofbųıupuy A sss, suxmfpapų. Lyssyys'Kısır Apulsipas I sss, ‘pÁțuq. I ssuw ‘pupųsnųL'arp,SS1W out1oțON KıpVW3 SS1W osalųoụɔpd KopəGI Kupu sporç ssiys‘pų1p1pdsmæsy ssąj, oppuəupuuKoupra ssuw
(H - T) supueņS AoYI Įs I
spanųıpổpĪVA (JW 'uploaspÁpụpsos'uw ‘upupų,ɔəspyrywray's‘upuipupųopaņs" (Ifomas ‘spųıpupooyw:sfou.s
'upổpspațupWA’yfouq ‘upųıpunŝoy youq'upổuț1psəupÐ:L'yuw ‘upųıppopularyaj,
(? - T) suņņIS †007-(000Z/6661) qɔɲɛɛ əouəgəS IboņHoa. Jo quəuņuedəGI “squæpngs reak Ieup!

Page 9

அரசறிவியல் ஒன்றியம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - 2004
காப்பாளர்:-
பெரும்பொருளாளர்:-
தலைவர்:-
உபதலைவர்:-
6&uuso TGTj:-
இணைச் செயலாளர்:-
பொருளாளர்:-
இதழாசிரிய ஆலோசகர்:-
இதழாசிரியர்:-
ஒன்றிய உறுப்பினர்கள்:-
பேராசிரியர் ஏ.வி.மணிவாசகர் (தலைவர், அரசறிவியல்துறை)
திரு.எஸ்.சகாயசீலன்
(சிரேஷ்ட விரிவுரையாளர்)
திரு.எம்.ரசீதரன்
செலவி.எம்.டி.துவழாரா
திரு.என்.பிரதீபன்
செல்வி.ஜி.வித்தியா
திரு.எவ்.சி.சத்தியசோதி
திரு.கே.ரி.கணேசலிங்கம்
(விரிவுரையாளர்)
திரு.என்.கரன்
செல்வி என்.ஊர்மிளா திரு எஸ்.சந்திரபவான்
(அரசறிவியலாளன்
I

Page 10
துணைவேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸ் அவர்களின்
வாழ்த்துச் செய்தி
யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியத்தினால் வெளியிடப்படும் "அரசறிவியலாளன் இதழ்-O1" எனும் சஞ்சிகைக்கு ஆசிச் செய்திவழங்குவதில் பெருமையடைகின்றேன்.
அரசறிவியல் ஒன்றியத்தின் கன்னி முயற்சியாத அமையும் இச் சஞ் சிகைக்காக உழைத்த துறைத்தலைவர், மற்றும் விரிவுரையாளர்கள், மாணவர்கள் யாவரும்பாராட்டுக்குரியவர்கள்.
ஒரு தேசிய இனம் அதன் வரலாறு அரசியல் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டிய கடப்பாடு உண்டு. இன்றைய சமூகம் குறிப்பாக மாணவர்கள் அரசியல் பற்றிய பரந்த அறிவைக் கொண்டிருப்பது தேவையான ஒன்றாகும். எனவே மாணவர்கள் மத்தியில் சிந்திக்கும் ஆற்றல் மென்மேலும் வளரவேண்டும் - வளர்க்கப்படவேண்டும். மாணவர்கள் மத்தியில் அறிவை வளர்த்துதிறமைகளை வெளிக்கொணரவும் அவற்றை மேம்படுத்தவும் இது போன்ற சஞ்சிகைகள் பெரிதும் உதவும்.
மற்றும் மாணவர்களின் முதன் முயற்சியான ஆக்கங்களைக் கொண்ட இவ்வாறான சஞ்சிகைகள் சிறந்த ஆக்கங்களைக் கொண்டதாக வலுப்பெறுமி புத்து எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த படைப்பாளிகளாகவும், எழுத்தாற்றல் உடையவர்களாகவும் திகழ்வதற்கும் அதன் மூலம் சிறந்த ஆக்கங்களை, நூல்களை வெளிப்படுத்துவதற்கும்வழிவகுக்கும் என்பது எனதுநம்பிக்கை.
எனவே அரசறிவியலாளன் இதழ்தொடர்ச்சியாக வரவும் மாணவர்களின்
அறிவுத் தேடலுக்கு ஏற்றதொரு கருவூலமாக அரசறிவியலாளன் அமையவும் ஆசிவழங்குகின்றேன்.
பேராசிரியர் சு.மோகனதாஸ்
துணைவேந்தர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
(அரசறிவியலாளன் III
 

கலைப்பீடாதிபதி பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் அவர்களின்
வாழ்த்துச் செய்தி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசிறிவியல் சமூகவியல் துறையைச் சேர்ந்த அரசறிவியற் கல்வி பயிலும் மாணவர்களின் அயராத முயற்சியின் பெறுபேறாக அரசறிவியலாளன் என்னும் சஞ்சிகை வெளிவருவதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். துறைசார் புலமை சான்றோரின் ஆக்கங்களுடன் மாணவர்களின் ஆக்கங்களும் இதில் இடம்பெறுவது வரவேற்கத்தக்கது. பல்கலைக்கழகத்தின் பணி கற்றல், கற்பித்தல், ஆய்வு செய்தல் (அறிவை உருவாக்குதல், அறிவைப் பரப்புதல் என்பனவாக அமைகின்றது. கல்வி கற்று ஆற்றல் கொள்வதன் மூலம் அறிவை உருவாக்கி அதனைப் பரப்பும் பணி நூல்கள், சஞ்சிகைகள் ஊடாகவே இடம்பெறுகின்றது. அந்த வகையில் அரசறிவியலாளன், இவ்விதழுடன் தன் காற்சுவட்டைப் பதித்து, நீண்ட பயணத்தைத் தொடரவுள்ளது. சஞ்சிகையின் கனதியும் அழகும் பயணம் பயனுள்ள இலக்கினை அடையும் என்பதனை உணர்த்துகின்றது.
அரசறிவியல் பற்றிய தெளிவு அத்துறைசார்ந்தோருக்கு மாத்திரமன்றி அனைத்து மனிதர்களுக்கும் பொதுவாக வேண்டப்படுவதே. சாதாரண பொதுமக்களையும் இது சென்றடைய வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழ கத்தில் அரசிறிவியல் துறை தனித்துறையாக மாற்றப்பட்டு உன்னத வளர்ச்சி பெறும் நிலையினை அண்மித்துள்ளது. அதற்கு கட்டியம் கூறுவது போல் அரசிறிவியலாளன் சஞ்சிகையும் வெளிவருகின்றது.
இச்சஞ்சிகை வெளியீட்டுக்கு அயராது உழைத்த மாணவர்கள் விரிவுரையாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். சஞ்சிகை வளர்க தொடர்ந்தும் அறிவுப்பணிஆற்றுக.
பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் கலைப்பீடாதிபதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
(அரசறிவியலாளன் IV

Page 11
துறைத்தலைவர் பேராசிரியர் ஆ.வே.மணிவாசகர் அவர்களின்
வாழ்த்துச் செய்தி
1999ல் உதயமாகிய அரசறிவியல் ஒன்றியம் அரசறிவியல் கற்கை நெறியையும் அதனைப் பயிலும் மாணவ மாணவிகளையும் பொறுத்தவரையில் மட்டுமன்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்த வரையிலும் ஒரு மைல் கல்லாகும். “இருளைப் பழியாதீர்; ஒளியை ஏற்றுவீர்” என்ற மகுட வாசகத்திற்கு ஏற்ப அது மேற்கொண்டுவரும் அறிவுசார் பணிகளில் தலைசிறந்ததாக அரசறிவியலாளன் என்ற சஞ்சிகையின் வரவு அமைகின்றது. அரசிறிவியலாளன் சஞ்சிகைக்கான நிதியினை சேகரிப்பதற்காக 1994/1995 வருடத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டனர் அம்முயற்சியை மேலும் முன்னெடுத்த 1999/2000, 2000/2001 வருடங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் அரசறிவியலாளன் சஞ்சிகையை வெளிக்கொணர்ந்து நீண்டகாலக் கனவை நனவாக்கியுள்ளனர். இச்சீரிய முயற்சிக்கு ஆரம்பம் முதல் இன்றுவரை அயராது முயன்ற அனைவரும் நன்றியுடன்நினைவுகூரப்படவேண்டியவர்களாவர்.
அரசறிவியலை சிறப்புப் பாடமாக கற்கின்ற மாணவர்களில் 18 மாணவ மாணவிகளின் கட்டுரைகளையும் இரு ஆசிரியர்களின் கட்டுரைகளையும் உள்ளடக்கி அரசிறிவிலாளனின் முதலாவது இதழ் வெளிவருகின்றது. இக்கட்டுரைகள் அரசறிவியலை கற்போருக்குமட்டுமன்றி அரசியல் விடயங்களில் ஆர்வம் உள்ளோருக்கும் பயன்படத்தக்கவையாகும்.
அரசறிவியலாளன் முதலாவது இதழை மனதார வாழ்த்தி வரவேற்கும் அதேவேளையில் அது அரசறிவியலுக்கு நல்லதோர் தளமாக அமைந்து தொடர்ச்சியாக அறிவுத்துறைக்கு வளம்சேர்க்கவேண்டும் என்று ஆசி கூறுகின் றேன்.
பேராசிரியர் ஆ.வே.மணிவாசகர் துறைத்தலைவர் அரசறிவியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
(அரசறிவியலாளன் V
 

பெரும் பொருளாளரின் உள்ளத்திலிருந்து.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் சமூகவியற்துறையில் அரசறிவியல் கற்கை நெறி மாணவர்களுக்கான “அரசறிவியல் ஒன்றியத்தினால்" முதன் முறையாக வெளியிடப்படும் “அரசறிவியலாளன்” என்ற சஞ்சிகைக்கு வாழ்த்துக்களையும் இச்சஞ்சிகையை வெளிக்கொணர அயராது பாடுபட்ட மாணவர் களுக்குபாராட்டுக்களையும் தெரிவிப்பதில்நான் பெருமகிழ்ச்சிஅடைகிறேன்.
அரசறிவியல் ஒன்றியம் உருவாக்கப்பட்டு சில ஆண்டுகள் அதன் செயற்பாடுகள் மந்தநிலையில் காணப்பட்டது. இந்த அசாதாரணநிலையில் இருந்து ஒன்றியத்தை உயிர்த்துடிப்புள்ளதாக்கிய பெருமை இறுதிவருட மாணவர்களுக்கும் அவர்களோடு கடினமாக உழைத்த ஏனைய மாணவர்களுக்கும் உரியது. பல்கலைக் கழகத்தில் கற்கும் போது தனித்து கல்வியில் மட்டுமன்றி ஏனைய துறைகளிலும் தங்களது ஆர்வத்தைக் காட்ட வேண்டும் என்றாலும் குறிப்பாக ஆராய்ச்சி முயற்சிகளுக்கும் எழுத்தாக்கங்களை ஊக்குவிக்குமுகமாக காலத்திற்கு காலம் சஞ்சிகைகள் வெளியிடப்படுகின்றன. இந்த வகையில் அரசறிவியலை கற்கும் மாணவர்களின் பரந்தறிவு, மேலதிக வாசிப்பு, எழுத்தாக்கம், முற்போக்குச் சிந்தனைகள், விமர்சன நோக்கு, போன்றவைகளை ஒருங்கிணைத்து வெளிக்கொணரும் நோக்கோடு இந்த சஞ்சிகை வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது. இந்த நூலை கனிஷ்ட மாணவர்கள் மட்டுமல்லாமல், அரசறிவியல் ஆர்வலர்களுக்கும் அரசறிவியல் கற்கை நெறியை வெளிவாரியாகவும் கற்கும் மாணவர்களுக்கும் இதுபெரும்வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
எனவே இவ்வாறான முயற்சிகள் தொடர்ந்தும் நடைபெறும், இன்னும் மாணவர்களுக்கும், தமிழ் சமூகத்திற்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
அரசறிவியல் துறை, எஸ்.சகாயசிலன் யாழபாணப பலகலைககழகம. பெரும்பொருளாளர்
(அரசறிவியலாளன் VI

Page 12
இதழாசிரியரின் உள்ளத்திலிருந்து.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் ஒன்றியத்தினால் முதன் முதலாக வெளியிடப்படும் “அரசறிவியலாளன்” இதழ் உங்கள் கைகளில் தவழ்வதில் எனது உள்ளம் பூரிப்படைகின்றது. அரசியல் பற்றி அறிய விரும்பும் மாணவர்க ளுக்கும், ஆசிரியர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஏற்றவிதத்தில் சர்வதேச அரசியல் பற்றிய விடயங்களை இவ் இதழ் உள்ளடக்கியுள்ளது. அரசறிவியல் துறையில் இருந்து கொண்டு ஏனைய துறைகளையும் கற்கும் மாணவர்களுக்கும், ஏனைய துறைகளில் இருந்து கொண்டு அரசறிவியலைக் கற்க விரும்பும் மாணவர்களுக்கும் ஏற்றவிதத்தில் இக்கட்டுரைகள் அமைகின்றன.
ஒவ்வொரு வருடமும் “அரசறிவியலாளன்” இதழ் வெளிவருவதற்கு மாண வர்கள் உற்சாகத்துடனும் விவேகமாகவும் செயற்பட வேண்டும். அதற்கு எமது துறை வழிகாட்டிகள் உரிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். இதில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் கட்டுரைகள் இறுதிவருட மாணவர்களால் ஆக்கப்பட்டவை. ஆனால் இனிவரும் இதழ்களில் ஏனைய வருட மாணவர்களின் சிந்தனைகளை தாங்கிவர வேண்டும் என்பது எனது விருப்பம்.
இவ் அரசறிவியலாளன் இதழுக்கு ஆக்கங்களைத்தந்துதவிய விரிவுரையா ளர்களுக்கும், மாணவர்களுக்கும் நன்றியைத் தெரிவிப்பதுடன் தேவையான ஆலோசனைகளை வழங்கிய அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஏ.வி.மணிக்கவாசகர் அவர்களுக்கும் இதழாசிரிய ஆலோசகர் கே.ரி.கணேசலிங்கம் அவர்களுக்கும், ஏனைய விரிவுரையாளர்களுக்கும் என்னோடு இணைந்து பணி யாற்றிய நண்பர்களுக்கும் பெரியோர்களுக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
அரசறிவியல் ஒன்றியம், நகரன் அரசறிவியல் துறை, இதழாசிரியர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.
(அரசறிவியலாளன் VIII
 

தலைவரின் உள்ளத்திலிருந்து.
அரசறிவியல் ஒன்றியத்தின் கன்னி முயற்சியாக அரசறிவியலாளன் இதழ்-01 அமைகின்றது.
அரசியல் அறிவு என்பது மாணவர்களுடனோ அல்லது கல்வி நிறுவ னங்களுடனோ மட்டும் கட்டுண்ட ஒன்று அல்ல மாறாக ஒட்டு மொத்த சமூகத்திற்கும், அதன் இருப்பு பற்றிய வழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒன்றாக அமைகின்றது. இதனால் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்துவத்திற்கும் அவசியமான அறிவியலாக அரசியலறிவு விளங்குகின்றது. எனவே எமது இவ்வாக்கம் மாணவர்களுக்கு மட்டுமன்றிசமூகத்திற்கும் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.
எமது ஒன்றியத்தின் கடும் முயற்சியினால் பல சிரமங்களிற்கும் செல்லண்ணா இடர்களிற்கு மத்தியிலும் இச் சஞ்சிகை உங்கள் கைகளிற்கு வருவதற்கு வந்து சேர்கிறது. இது எமது ஒன்றியத்தினதும், மாணவர்களினதும் விடா முயற்சிக்கு தக்க சான்றாக அமைகின்றது. எமது துறைசார், துறைசாரா அனைவரும் பயன்பெறும் வகையில், நாம் கற்றவற்றினதும், ஆழச்சிந்தித்துஉணர்ந்தவற்றினதும் தொகுப்பாக இச்சஞ்சிகைவெளிவருகின்றது.
எம்மையும், எமது ஒன்றியத்தையும் வழிநடத்துபவரும் ஒன்றியக் காப்பாளரு மான அரசறிவியல்துறைதலைவர் பேராசிரியர் ஆ.வே.மணிவாசகர் அவர்களுக்கும் அரசறிவியலாளன் சஞ்சிகை வெளிவர காரண கர்த்தாவாக இருந்த பெரும் பொருளாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.சகாயசீலன் அவர்களுக்கும். எமது சஞ்சிகை வெளியீட்டுக்கு உறுதுணையாக இருந்து ஆலோசனைகளை வழங்கும் இதழாசிரிய ஆலோசகர் கே.ரி.கணேசலிங்கம் அவர்களுக்கும் எமது ஒன்றிய வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் ஆலோசனைகளையும் ஊக்கத்தையும் தரும் கலாநிதிக.இரகுநாதன் அவர்களுக்கும்நாம்நன்றிகூறக்கடமைப்பட்டுள்ளோம்.
இவ் "அரசறிவியலாளன்”ஆண்டுதோறும் உங்கள் கரங்களை வந்தடைவான் எமதுகனிஷ்டமாணவர்கள் அதைமுன்னெடுப்பார்கள்எனநான்நம்புகின்றேன்.
அரசறிவியல் ஒன்றியம், எம்.ரசீதரன்
அரசறிவியல் துறை, தலைவர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.
(அரசறிவியலாளன் VIII

Page 13
செயலாளரின் உள்ளத்திலிருந்து.
யாழ்பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் ஒன்றியத்தினால் வெளியிடப்படும் முதலாவது இதழாக இவ் அரசறிவியலாளன் அமைகிறது. இன்று அரசறிவியல் துறையானது மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இவ்வளர்ச்சி காரண மாக பெறப்படும் பல தகவல்களை தமிழில் தருவதில் பெருமை அடைகின்றேன். எமது செயற்குழுவிடம் மிகவும் காலதாமதமாக பொறுப்புக்கள் ஒப்படைத்தாலும் எமது செயற்பாடுகள் ஒவ்வொன்றையும் சிறந்த முறையில் முன்னெடுக்க உறுதுணையாக இருந்தமன்றக்காப்பாளர் ஆ.வே.மணிவாசகர் அவர்களுக்கும் பெரும் பொருளாளர் சகாயசீலன் அவர்களுக்கும் எமது துறைசார்ந்த ஏனைய விரிவுரையாளர்களுக்கும் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் ஆக்கங்களைத் தந்து உதவிய மாணவர்கள் அனைவருக்கும் நிதி சேகரிப்பில்உதவியஅனைவருக்கும் இந்நூலினைபதிப்புசெய்தமுத்துபிறின்டேர்ஸ் நிறுவனத்தினருக்கும்எமதுநன்றியைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும் இனிவரும் காலங்களில் அரசறிவியல் ஒன்றியத்தை பொறுப்பேற்கும் செயற்குழுவினர் ஒன்றியத்தை வளர்த்தெடுப்பதற்கு தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் க்ேட்பதோடு இத்தகைய இதழ்கள் மென்மேலும் வெளிவந்து ஒன்றியம்வளரவேண்டும் எனவாழ்த்துகிறேன்.
அரசறிவியல் ஒன்றியம், என்.பிரதீபன் அரசறிவியல் துறை, செயலாளர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.
(அரசறிவியலாளன் IX
 

பொருளாளர் உள்ளத்திலிருந்து.
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட அரசறிவியல் துறையினரால் வெளியிடப் படும் 'அரசறிவியலாளன்' சஞ்சிகையானது முதன்முதலாக இவ் ஆண்டு வெளிவரு வதையிட்டு பெருமகிழ்வடைகின்றேன். இச் சஞ்சிகை தன்னகத்தே சிறப்பான ஆக்கங்களை கொண்டுள்ளது. எனவே கல்விச் சமூகத்திற்கு அரசறிவியலாளன் பயன்நிறைந்தமலராக வெளிவருகின்றது.
இம் மலரினை வெளியிட எமது அரசறிவியல் ஒன்றியம் எண்ணிய போது, இதற்குப் பெரும் தொகை நிதி தேவைப்பட்டது. எனவே படக்காட்சி ஒன்றை நடத்து வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம், இத்தகைய எம் ஆக்கபூர்வமான செயற் பாட்டிற்குப்பக்கபலமாகநின்றுஎமது துறைவிரிவுரையாளர்கள் வழிகாட்டினர்.
அத்துடன் எமது துறையின் அனைத்து வருட மாணவர்களும், இம் முயற்சிக்குப் பெரும் ஆதரவு நல்கியதுடன் எமது செயற்பாடு வெற்றி பெற தமது ஒத்துழைப்பை வழங்கினர். இந்த வகையில் பல வழிகளிலும் அரசறிவியல் ஒன்றிய வளர்ச்சிக்கும், சஞ்சிகை வெளியீட்டுக்கும் ஊக்கமளித்த அனைவரும் எம் நன்றிக்குரியவராகின்றனர்.
இனிவரும் ஆண்டுகளிலும் அரசறிவியல் ஒன்றியம் தனது செயற்பாடு களை விரிவுபடுத்தி வளர்ச்சியடைவதுடன், ஆண்டுதோறும் இம்மலர் வெளிவர ஆவன செய்ய வேண்டும். இதற்கு அரசறிவியல் துறை அனைத்து மாணவர்களும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எமது ஒன்றியத்தின் விருப்பமும், வேண்டுகோளும் ஆகும்.
அரசறிவியல் ஒன்றியம், எவ்.சி.சத்தியசோதி அரசறிவியல் துறை, பொருளாளர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.
(அரசறிவியலாளன் X }

Page 14
அரசறிவியலாளனில்.
பக்கம்
01. இலங்கையில்தோல்விகண்டுவரும்ஜனநாயகம் O1 02. இலங்கையில்பயங்கரவாததடைச்சட்டமும், மனிதஉரிமைகளும் 08 03. மனிதஉரிமைகளும், அதன் அபிவிருத்திகளும் 22 04. இந்தியாவின் வளர்ச்சிப்போக்கில்அணுவாயுதம்பெறும்
முக்கியத்துவம் 30 05. சீனாவின் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய ஒரு நோக்கு 42 06. சீனா - ஹொங் ஹொங் இணைவு, ஒர் அரசியல் வரலாற்றுக் குறிப்பு 50 07. ஈராக் மீதான போர்கள் (1991, 2003) ஒர் ஒப்பீட்டு நோக்கு 58 08. சுயநிர்ணய உரிமைக்கோட்பாடு ஓர் அறிமுகம் 73 09. தென்னாபிரிக்க விடுதலைப்போரில் நெல்சன் மண்டேலாவின் பங்கு 85 10. சூடானிய சிவில் யுத்தம் 98 11. பெண்ணியக் கோட்பாடும், அது எதிர்நோக்கும் சவால்களும் 110 12. உலகமயமாக்கலும் அதன் சாதக, பாதக விளைவுகளும் 120 13. ஐரோப்பிய யூனியனின் உலகப்பரிமாணம் 131 14. பின்நவீனத்துவம் சில குறிப்புக்கள் 145 15. புதிய உலக ஒழுங்கு எதிர்நோக்கும் சவால்கள் ஒரு கண்ணோட்டம் 155 16. ஒஸாமா பின்லேடன் ஒரு வரலாற்றுநோக்கு 166 17. மாக்கியவெல்லியின் இராஜதந்திர மணிமொழிகள் 177 18. தேர்ந்தெடுக்கப்பட்ட சில விடுதலைப் போராட்டங்களும்,
அவை எதிர்நோக்கும் அரசியல் பிரச்சனைகளும் 182 19. இறைமையும் பன்மைவாதமும் 188 20. அரசியல்-சமூக-பொருளாதார பின்புலத்தில் சுதேச அரசியல்
யாப்புக்களுக்கான அவசியம் 197
(அரசறிவியலாளன் XIII

இலங்கையில் தோல்விகண்ருவரும் ஜனநாயகம்
Democracy on the verge of Defeat in Sri Lanka
- M.D.-gapi DTT - 99/A/35
இலங்கையில் ஜனநாயகம் தோல்விகண்டுள்ளது என்ற கருத்
தானது அண்மைக் காலத்தில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட
ஒன்றாகக் காணப்படுகின்றது. இதற்கான பிரதான காரணிகளாக இன்
நாட்டின் அரசியல் யாப்பு, அதன் பிரயோகம், இரு பிரதான கட்சிகளின்
கொள்கைப் போக்குகள், இன முரண்பாடுகள், குடியேற்றவாத தாக்கங் கள் போன்ற அம்சங்கள் விளங்குகின்றன.
ஜனநாயகம் என்பது அபிரகாம்லிங்கன் அவர்களின் கருத்துப் படி "மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்களின் ஆட்சி ஜனநாய கம்” என்று குறிப்பிடுகின்றார். இக்கருத்து ஜனநாயகம் பற்றிய தெளி வான விளக்கத்தைத் தருவதாகவும், பெரும்பான்மை யானவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவும் இருக்கின்றது இவ்வாறு வரைவிலக் கணப் படுத்தப்பட்ட ஜனநாயகமானது ஆரம்பகாலச் சமூகங்களில் கிரேக்க நகரங்களில் ஒன்றான ஏதேன்ஸ்சில் அவதானிக்கப்பட்டதாக இருப்பதுடன் அதனுடைய வளர்ச்சிப் பாதையில் நேரடி, ஜனநாயகம், மறைமுக சனநாயகம் என்ற இரு வழிகளில் பிரையோகிக்கப்பட்டு வந்துள்ளது. நேரடி ஜனநாயகம் என்பது ம்க்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடி தமக்கான அரசாங்கத்தை அமைத்தல் எனப்படுகின்றது. இதை இன்று சுவிற்சலாந்தின் சிறிய கன்ரன்களில் அவதானிக்கலாம். மறைமுக ஜனநாயகம் மக்கள் தமது பிரதிநிதிகளின் மூலம் அரசாங் கத்தை அமைத்தல் எனப்படுகின்றது. இன்று இவை அனேகநாடுகளில் காணப்படுகின்றன. உதாரணமாக அமெரிக்கா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் இம் முறையே பின்பற்றப்படுகின்றது. இதை விட
அரசறிவியலாளன் 1 M.D.துஷாரா )

Page 15
இன்று ஜனநாயகம், மேலைத்தேய ஜனநாயகம், கீழைத்தேய ஜனநாய கம் என்றும் நோக்கப்படுகின்றது.
ஒரு நாட்டில் ஜனநாயகம் காணப்படுகின்றது என்பதை உறுதிப் படுத்திக் கொள்வதற்கு இங்கு அடிப்படை உரிமைகள், பொருளாதார உரிமை, சமூக உரிமைகள், அரசியல் உரிமைகள், நீதி உரிமைகள் என்பன காணப்பட வேண்டும். இவ்வுரிமைகள் இலங்கையில் கேள்விக் குள்ளாகி வருகின்றமையே ஜனநாயகம் தோல்வி கண்டு வருகின்றது. என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. ஆசிய நாடுகளின் ஜனநாயகம் பற் றிய ஆய்வாளர் Weimer இலங்கையின் ஜனநாயகத்தின் தோல்விபற் றிக் கூறும்போது "இலங்கையில் சனநாயகத்தின் தோல்வி புதுமையான விதத்தில் அரசியல் யாப்பு அடிப்படையில் ஏற்பட்டது” எனக் குறிப்படு கின்றார். இவ்வாறான எண்ணப்பாடுகளின் அடிப்படையில் இலங்கையில் ஜனநாயகத்தின் தோல்வியை ஜனநாயகத்தைத் தாங்கிநிற்கும் தூண்க ளான மக்களின் திறைமை, ஆளப்படுவோரின் சம்மதத்தில் தங்கியிருக் கும் அரசாங்கம், பெரும்பான்மை ஆட்சி, சிறுபான்மையினரின் உரிமை களும் அடிப்படை மனித உரிமைகளும் பற்றிய உத்தரவாதம், சட்டத் தின் முன் சமத்துவமும் தடையற்ற சட்ட செயல்முறையும், பொருளா தார சமத்துவமும், சுதந்திரமான தேர்தல்கள், அரசாங்கத்தின் மீதான அரசியலமைப்புக் கட்டுப்பாடுகள், புரிந்துணர்வு, ஒத்துழைப்பு, விட்டுக் கொடுத்தல் சகிப்புத்தன்மை ஆகிய விழுமியங்கள் ஊடாக நோக்கும் போது இது தெளிவாகும்.
1978ம் ஆண்டு யாப்பில் மக்கள் இறைமை என்ற பகுதி உள்ள டக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கை சுதந்திரமும், இறைமையும், தன்னாதிக்கமும் கொண்ட சோசலிச சனநாயகக் குடியரசு என்றும் ஒற்றை ஆட்சியை உடையதுடன் இந்நாட்டின் இறைமை மக்களுக்கு உரியதென்றும், பாரதீனப்படுத்த முடியாது என்றும் குறிப்பிடப்பட்டிருப் பதுடன் 18 வயதிற்கு மேற்பட்ட இரு பாலாருக்கும் வாக்குரிமை அளிக் கப்பட்டுள்ளது. இவற்றுடன் இலங்கைக் குடியரசின் ஆள்புலமானது 25 மாவட்டங்களைக் கொண்டிருக்கும் என்று பாராளுமன்றம் ஒரு தீர்மானத் தின் மூலம், நிர்வாக மாவட்டங்களை உபபிரிவுகளாகப் பிரிக்கலாம்
(அரசறிவியலாளன் 2 M.D.gsang

எனவும் தேசியகொடி சிங்கக்கொடி, போன்றனவும் உள்ளடக்கப்பட்டி ருந்தது. இதன் மூலம் மக்களின் இறைமை கேள்விக்குள்ளாகி விட்டது. இன ஒடுக்கலை தீவிரப்படுத்தும் ஒன்றாகவும் அமைந்துள்ளது. சிங் கக்கொடி சிங்கள பெளத்தரை முதன்மைப்படுத்துவதாகவும், நிர்வாக மாவட்டப்பிரிப்பு தமிழ்ப் பிரதேசங்களைக் கூறுபோடுவதற்கான வாய்ப்பா கவும் அமைந்துள்ளது. இவை இன முரண்பாட்டை ஏற்படுத்தியதுடன் அந்நிய தலையீட்டுக்கும் காலாகியது. உதாரணமாக இந்திய இராணுவ வருகை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு வருகை, என்பவற்றைக் குறிப்பிடலாம். இவை இலங்கையில் இறைமை பாதிப்படைந்துள்ளது. என்பதைக் காட்டுகின்றது.
ஆளப்படுவோரின் சம்மதத்தில் தங்கியிருக்கும் அரசாங்கம் என்பது ஜனநாயக இயல்பாகும். இதை நிறைவு செய்யும் ஓர் அம்சமா கவே "மக்கள் தீர்ப்பு” என்பது சுவிற்சலாந்திலிருந்து இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் மக்கள் தீர்ப்புக்கு விடவேண்டிய அம் சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை அமைச்சரவை மக்கள் தீர்ப்புக்கு விடவேண்டும். எனக்கோரும் அம்சங்கள், உயர்நீதி மன்றம், மக்கள் தீர்ப்புக்கு விட வேண்டும் என்ற தீர்ப்பளித்த விடயங்கள், ஜனாதிபதி விரும்பும் விடையங்கள், அரசியலமைப்புத் திருத்தங்கள் என்பனவா கும். இங்கு 25% மட்டுமே சிறுபான்மை யினராகக் காணப்படுவதினால். சிறுபாண்மையினருக்கு எதிரான சட்டங்கள் மக்கள் தீர்ப்பு என்ற பெயரில் நிறை வேற்றப்பட வாய்ப்புள்ளது. அத்துடன் இவ் மக்கள் தீர்ப்பில் கட்சி அடிப்படையில் வாக்களிக்கும் போது அதன் நோக்கம் நிறைவேறாமல் போகின்றது. ஜனாதிபதி விரும்பும் விடையங்களை மக்கள் தீர்ப்புக்கு அனுப்பலாம் என்பது அவரின் உயர் அதிகாரத்தை வெளிப்படுத்துகின்றது.
ஜனநாயகத்தில் பெரும்பான்மையே எத்தீர்மானத்தையும் தீர்மா னிக்க வேண்டும் ஆனால் இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தின் கீழ் பெரும்பான்மைப் பலத்தை ஒரு கட்சி பெறுவது சாத்தியமற்ற தாக உள்ளதுடன் கூட்டுக் கட்சி அமைக்கும் நிலை தோன்றுகின்றது. இவ்வாறு பெரும்பான்மையைத் திரட்டிக் கொள்ளும் கட்சி அரசாங்
(அரசறிவியலாளன் 3 M.D.துஷாரா )

Page 16
கத்தை அமைக்கும் போது அவ் அரசாங்கம் தனது மீள் தெரி விற்கான வாய்ப்பை அதிகரிக்கும் நோக்குடன் அரசியல் உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்துகின்றது. தான் நினைத்த நேரத்தில் தேர்தலை நடத்துதல். தேர்தல் மாவட்டங்களைப் பிரித்தல், தொடர்பு சாத னங்களை அதிகநேரம் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. 1978ம் ஆண்டு பெரும்பான்மை பெற்ற அரசாங்கமே விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை அறிமுகப்படுத்தியது அத்துடன் பாராளுமன்றப் பெரும்பான்மையானது குடித்தொகையின் பெரும்பான் மையை தடுத்து நிறுத்த வல்லதாகவும் உள்ளது. அவசர காலச் சட்டங்கள் நீண்ட காலம் நடைமுறைப்படுத்தப்பட்டது பாராளுமன்றப் பெரும்பான்மையால் தான். இது பற்றி அமெரிக்க யாப்பை வரைந்தவர் களில் ஒருவரான "மெடிசன்” பெரும்பான்மையானது பொது அக்கறையி னால் அல்லது உணர்வூக்கத்தினால் ஒன்றுபடும் போதுஎல்லாம் சிறு பான்மையின் உரிமைகள் பாதிப்புக்குள்ளாகியே தீரும்” என்றார் இவ் அடிப்படையிலேயே 1956ல் தனிச்சிங்களச் சட்டம், அவசரகாலச் சட் டம், போன்றன சுயநிர்ணயம், மரபுவழித் தாயம், தமிழ் தேசியம் இவற்றை ஏற்றுக் கொள்ளாமையால் இடம் பெற்றன.
இலங்கையில் சோல்பரி யாப்பின் கீழ் சிறு பான்மையினருக் கான காப்பீடுகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இவை சிறுபான்மை யினருக்கான சுயஆட்சி ஏற்பாட்டை அல்லது சமபிரதிநிதித்துவத்தின் மீதான அதிகாரப்பகிர்வை கருத்தில் கொண்டிருக்கவில்லை. வழங்கப் பட்டவை ஓர் கவசங்கள் போலவே அமைந்திருந்தன. 29ம் பிரிவு நடை முறையில் இருக்கும் போதுதான் 1948 பிரஜா உரிமைச்சட்டம், 1956 தனிச் சிங்களச் சட்டம், 1967 பூரீமாசாஸ்த்திரி ஒப்பந்தம் மகா தேசாதி பதியின் சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்டது. 1972ம் ஆண்டு யாப்பில் அடிப்படை உரிமைகள் ஒரே உறுபுரையின் கீழ் திணிக்கப்பட்டிருந்தது. இதில் 2ம் பகுதி இவ்வுரிமைகள் கட்டுப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களைக் கூறுகின்றது. "சட்ட ஆக்க சபையானது பரந்த அளவிலான நலன்களை அடைவதற்காக இவ் உரிமைகளைக் கட்டுப் படுத்தலாம். 3ம் பந்தி இவ் உறுப்புரிமைக்கு ஒவ்வாத விதத்தில் உள்ள சட்டங்கள் ஏற்கனவே ஆக்கப்பட்டிருந்தால் தொடர்ந்தும் வலுவில் இருக்கும் எனப்பட்டது. இது
(அரசறிவியலாளன் 4 M.D.gogun

யாப்பு ரீதியாகவே ஜனநாயகம் தோல்விகண்டுள்ளதை தெளிவுபடுத்து கின்றது.
ஜனநாயகத்தில் சுதந்திரமான சமசந்தர்ப்பம் வழங்கும் தேர்தல் கள் இடம் பெறுவது அவசியம். "ஜீன் கர்க் பற்றிக்” என்பவர் தேர்தல் களை வரைவிலக்கணப்படுத்தும் போது” ஜனநாயகத் தேர்தல்கள் வெறும் அடையாளச் சின்னம் அல்ல போட்டித்தன்மையும், கிரமமும், நிச்சயமும், கொண்டவை அரசாங்கத்தின் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்பவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றார்கள். இவ் பிரஜைகளுக்கு அரசை விமர்சனம் செய்யவும், அவற்றை பிரசுரிக்கவும். மாற்று வழிகளை வழங்கவும் பாரிய சுதந்திரம் உண்டு” எனக் கூறுகின் றார். இலங்கைத் தேர்தல்களை எடுத்து நோக்கும் போது வன்முறை நிறைந்ததாகவும், நிச்சயமற்ற தன்மையுடையதாகவும் காணப்படுகின் றது. சுயநல அடிப்படையிலும், கட்சி அடிப்படையிலும் தேசத்தின் அபிவிருத்தியைக் கருத்தில் கொள்ளாது அடிக்கடி தேர்தல்கள் இடம் பெறுகின்றன. இன்றைய தேர்தலானது (2004) நான்கு வருடத்தில் இடம் பெறும் மூன்றாவது தேர்தலாகும். அடிக்கடி தேர்தல் இடம் பெறுவதால் மக்கள் சலிப்படைந்து அக்கறையின்றி உள்ளனர். அத்துடன் கள்ள வாக்களித்தல், எதிர்த்தரப்பை தாக்குதல், லஞ்சம் வழங்கல், சொந்த இடத்தில் வாக்களிக்க உரிமை மறுக்கப்படுதல், வாக்களிக்க இராணு வம் அனுமதிக்காமை என்பன கடந்தகால தேர்தல் பதிவுகளாக உள்
6T6.
சட்டத்தின் முன் சமத்துவமும் தடையற்ற சட்டச் செயல்முறை யும் என்ற ஜனநாயகத்தை வெளிப்படுத்தும் அம்சமானது பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம் (155 உறுப்புரை) மூலம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இச் சட்டத்தின் மூலம் சனாதிபதிக்கு அதிகளவு அதிகாரம் வழங்கப்பட் டுள்ளது. அதாவது ஜனாதிபதி அறிவிக்கும் சட்டங்கள் பாராளுமன்றத் தில் ஆரம்பிக்கப்படாததாகவும், அரசியல் அமைப்பிற்கு முரணானது என உயர் நீதி மன்றத்தில் முறையிட முடியாததாகவும் காணப்பட்டது. அடிப்படை உரிமைகள் சுதந்திரங்களை அனுபவிப்பதற்குக் கூட சட்டப் பாரபட்சம் இருக்கின்றது. வேலை வாய்ப்பில் கட்சிச் செல்வாக்குச், மத செல்வாக்கு காணப்படுகின்றது. தரப்படுத்தலால் கல்வியில் சமத்துவ
(அரசறிவியலாளன் 5 M.D.gogun

Page 17
மின்மை, வடக்கு கிழக்கல் பொருளாதாரத் தடைகள் என்பன சட்டத் தின்முன் சமத்துவம் என்ற ஜனநாயகக் கோட்பாட்டை நிராகரிக்கின் றன. இனமுரண்பாடும் போர்க்கால சூழ்நிலையும் வடகிழக்கில் அரசின் தடையற்ற சட்ட செயன்முறையை கேள்விக்குட்படுத்தியுள்ளன.
தேசிய இன ஒடுக்கலானது ஈழத்தேசிய இனத்தின் பொருளா தாரத்தை நெரித்து நிற்கின்றது. சுதந்திரத்தின் பின் தமிழ்ப் பிரதேசத் தின் ஒரு சில தொழிற்சாலைகளே காணப்பட்டன. இதனால் தெற்கு செழித் தோங்க வடக்கு இழப்பின் எல்லையை அடைந்தது. மாகாணச பைத் திட்டத்தின் மூலம் அபிவிருத்திக்கான சகல அதிகாரமும் மத்திய அரசிடமே விடப்பட்டது. இதனால் வடக்கு கிழக்கின் தொழிற்சாலைக ளின் வருமானம் மத்திய அரசுக்கே போகும் நிலை காணப்பட்டது. அதிகலாபம் தரும் சீமெந்து, இல்மனைற், காகிதத் தொழிற்சாலைகள் மூடியே கிடக்கின்றன. இதனால் தமிழ் மக்களின் அபிவிருத்திக்கு உதவப்போகும் அவர்களின் சொத்துக்களை அவர்களே பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன். பலர் வேலை வாய்ப்பையும் இழந் துள்ளனர். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கைத்தொழில் தொடர்பான அதிகாரங்கள் மானில அரசிடமே வழங்கப் பட்டுள்ளன அத்துடன் இன்று இலங்கையில் படித்த இளைஞர்களுக் கான வேலைவாய்ப்பின்மை, உயர் பாதுகாப்பு வலையம் என்ற வடிவில் தமிழரின் வளமான பிரதேசங்கள், கடற்பிரதேசங்கள் பயன்படுத்த முடி யாமை, குடியேற்ற திட்டத்தின் மூலம் தமிழரின் நிலப்பறிப்புக்கள் திட்ட மிட்ட பொருளாதார நடவடிக்கையின்மை என்பன இலங்கையில் பொரு ளாதார சமத்துவம் காணப்படவில்லை என்பதை தெளிவாக்குகின்றது.
ஒரு நாட்டில் மக்களிடையே ஜனநாயகம் நிகழ்வதற்கு அடிப் படை உளவியல் காரணம் புரிந்துணர்வாகும். இலங்கையில் இவ் அம்சம் தம்பதிபக் கோட்பாட்டிப்படையிலும். பிரித்தானியரின் பிரித்தா ளும் தந்திரத்தினாலும் சிதைக்கப்பட்டுள்ளது. இது 1944இல் சிங்கள மொழிச் சட்டத்துடன் தமிழ் மொழியும் அங்கிகரிக்கப்படும் எனக் கூறி 1956ல் நிறைவேற்றாமை இதை நிரந்தரமாக்கிவிட்டது. விட்டுக்கொடுத் தல் இன்மையால் பல பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் சகிப்புத்தன்மை இன்மையின்
(அரசறிவியலாளன் 6 M.D.gisgrum

விளைவுகளே 1983ம் ஆண்டு கறுப்பு யூலை மறக்கப்பட முடியாத வடுவாகப் பதிந்துவிட்டது. குடியேற்றத்திட்டங்கள், ஒப்பந்தங்களுக்கி டையே 3ம் தரப்பு மத்தியஸ்தம் இவை எல்லாம் நம்பிக்கையின்மை களை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு ஒருவருக் கொருவர் முரண் படும் தேசத்தில் ஜனநாயகம் உயரிவாழ்வது சாத்தியமற்ற விடையமே
எனவே இலங்கையில் ஜனநாயகத்தின் தோல்வி என்பது அரசி யல் யாப்பின் அடிப்படையிலும், இலங்கையில் கூர்மை அடைந்துள்ள இன முரண்பாட்டின் அடிப்படையில் அடிப்படை உரிமை, பொருளாதார உரிமை, சட்டத்தின் முன் சமத்துவமற்ற நிலை, நீதி உரிமை, சமூக உரிமை, அரசியல் உரிமை என்பன மறுக்கப்பட்ட சூழலில் தோற்றுவிக் கப்பட்டுள்ளது; என்பதை அவதானிக்கலாம். இன் நிலமைகள் சீர்செய் யப்படும் பட்சத்திலேயே இலங்கையில் ஜனநாயகத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க முடியும்.
References 1. S.அன்ரனி றோபேட், சனநாயகம் என்றால் என்ன?,
மார்க்கா நிறுவன வெளியீடு, 1994.
2. S.அன்ரனி றோபேட், சனநாயகச் சிந்தனைகள்,
மார்க்கா நிறுவன வெளியீடு, 1995.
3. விரி தமிழ்மாறன், அரசியல் அமைப்பாக்கச் சிந்தனைகள்,
யுனி ஆட்ஸ் பிறைவேற் லிமிரெட், கொழும்பு, 1999.
4. அ.சிவராஜா, இலங்கை அரசியல்,
சிவா பிறின்டேர்ஸ், 1989.
5. சி.அ.ஜோதிலிங்கம், இலங்கையில் இனக்குழும அரசியல்
மூன்றாவது மனிதன் வெளியீட்டகம், 2000.
(அரசறிவியலாளன் 7 M.D.gisgrum

Page 18
இலங்கையில் பயங்கரவாதத்தடைச்சட்டமும் மனித உரிமைகளும்
Prevention of Terrorism Act and Human Rights in Sri Lanka
- T.சிறிகரண் - 2000/A/273
இலங்கையில் இன முரண்பாடு கூர்மையடைந்து வந்த பொழுது தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நிராகரித்து ஒடுக்கவும் அடக் குமுறைக் கலாச்சாரத்தின் ஊடாக இலங்கையில் சனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் படுகொலை செய்வதற்கும் இரண்டு வகையான ஒடுக்கு முறைச் சட்டங்களை இலங்கையில் மாறிமாறி ஆட்சிசெய்த பேரினவாத அரசுகள் நன்கு திட்டமிட்டுப் பயன்படுத்தி வந்திருக்கின் B60T. s.6 gigsoo 66iro sold Jassroo& FL 6ig5856ir Emergency regulati ons (ERs) LDsö60)spuugby UuurÉ185J6hHT55 g56OLäf &FL Lub Prevention of Terrorism ACT (P.T.A) 6T6tu6076) T(5b. 5(5.J.R.Geguoji,560TT தலைமையிலான பேரினவாத ஐக்கியக் தேசியக் கட்சி (UNP) அரசாங் கம் பாராளுமன்றில் தனது அரசிற்கிருந்த அறுதிப் பெரும்பான்மை பிரதிநிதித்துவ பலத்தை நன்கு பயன்படுத்தி சிறுபான்மையினரைக் கொடுமைப்படுத்தும் நோக்கோடு 1979 ஜூலை 19ல் பாராளுமன்றில் கொண்டு வந்த 48ம் இலக்க பயங்கரவாதத் தடைச்சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தப்பட்டவாறான 1982ம் ஆண்டு 10ம் இலக்கப் பயங்கரவாத தடைச்சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) என்பன பயங்கரவா தத் தடைச்சட்டம் எனப்படும். J.R. தலைமையிலான அரசாங்கத்தினால் ஒரு சுயநல அரசியல்த் தேவைப்பாட்டின் பொருட்டு வேண்டுமென்றே கொண்டுவரப்பட்ட இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் தென்னாபிரிக் காவில் இனஒதுக்கல் கொள்கைகளிற்குப் பெருமளவிற்கு துணைபோன 1967ம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு ஒப்பானதாகவும்.
(அரசறிவியலாளன் 8 Tசிறீகரன்)

அரசபயங்கரவாதத்தை இலங்கையில் பரவலாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டதாகவும் கருதப்படுகிறது:
சர்வதேச சட்டங்களையும் (International Law) மனித உரிமை களையும் (Human Rights) தூக்கி வீசிவிட்டு அரசியலமைப்பின் அடிப் படை மனித உரிமைகளையும் மீறி சிறுபான்மையினரது குறிப்பாக தமிழ் மக்களின் நலன்களிற்கும் பாதுகாப்பிற்கும் எதிராக வன்முறைக ளைப் பிரயோகித்து தமது சிங்கள பெளத்த பேரினவாத ஆதிக்கத்தை நிலை நிறுத்த இராணுவ மற்றும் பொலிஸாரின் அத்துமீறல்களிற்குச் சட்ட அங்கீகாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டே இச்சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. மனித உரிமை அமைப்புக்கள் இடது சாரிக் கொள்கையுடையோர். மற்றும் அரசியல் வன்முறைகளிற்கு எதி ரான தன்மை கொண்டோரைத் தவிர பெரும்பாலான சிங்களவரின் ஆசீர் வாதத்துடனேயே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் கொண்டு வரப்பட்ட காலத்திலிருந்தே நீக்கப்பட வேண்டிய கொடுமையானசட்டக் கோவையென சர்வதேச மற்றும் உள்ளூர் மனித உரிமை அமைப்புக் களும் நீதிபதிகளும் விமர்சித்து வந்திருக்கிறார்கள். இனப்பிரச்சனை யை அரசியல்ரீதியாகத் தீர்ப்பதற்குப் பதிலாக இராணுவத்தைக் கொண்டு சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்குவதற்கான முதலாவது கட்ட நடவடிக்கையாகவே இந்த PTA கொண்டுவரப் பட்டது. அரசிய லமைப்புச் சட்டகத்திற்குள் நின்று தமது உரிமைகளை வென்றெடுப் பதில் தோற்றுப் போன தமிழ்ச்சிறுபான்மையினர் ஆயுதப்போராட் டத்தை நாடினர். இவ்வாயுதப்போராட்டத்தை நசுக்கும் நோக்கோடு இராணுவத்தினர்க்கும் பொலிஸாரிற்கும் இச்சட்டத்தின் மூலம் வழங்கப் பட்ட பரவலான அதிகாரங்களினால் தமிழின விரோதப்போக்குகளும் தமிழர்களிற்கு எதிரான வன்முறைகளும் பெருமளவு தமிழர்கள் காணா மல் போதல்களும் அதிகரிக்கலாயின. இச்சட்டத்தினை தற்காலிக எற்பாடுகளாக பாராளுமன்றில் கொண்டுவந்த பேரினவாதிகள் அதை ஒருவருடத்தில் நீக்கிவிடுவோம் இருவருடத்தில் நீக்கிவிடுவோம் என ஏமாற்றி மூன்று வருடங்கள் முடியும் முன்னரே அதனை நிரந்தர சட்ட மாக்கிவிட்டார்கள்.
(அரசறிவியலாளன் 9 Tசிறீகரன்)

Page 19
சர்வதேச ரீதியில் குற்றவியல் நடவடிக்கைகளில் பின்பற்றப் படும் நியமங்களை மீறும் இப்பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டிருக் கின்ற மனித உரிமைகளிற்கு எதிரான விடயங்களை நோக்கின். இச் சட்டத்தின் கீழ் உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர் Assistant Superin tendent of Police (A.S.P) g5J55ñ(355 (5603uUTg5 GLITGölomö 915)assif முன்னிலையில் பெறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றில் முக்கியசான்றாக ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாக இருக்கின்றது. சாதாரண சட்டங்களின்படி ஒரு நபரைக் குற்றவாளியென நிரூபிக்கும் பொறுப்பு (Burden of Proof) குற்றம் சுமத்துபவரையே சார்ந்ததாகும். அது மட்டுமன்றி தடுப்புக் காவலில் இருக்கும் ஒரு சந்தேக நபரிடமி ருந்து பெறப்படும் வாக்குமூலத்தை அவரிற்கு எதிரான சாட்சியமாகப் பயன்படுத்த முடியாது. மனிதர்களைத் தமக்குத்தாமே சாட்சியம் வழங்கி தன்னைத்தானே குற்றவாளியாக்குவது உலகில் உறுதியாகத் தடை செய்யப்பட்ட விடயமாகும். ஆனால் PTA யின் படி கைது செய் யப்பட்ட நபரொருவர் A.S.P முன்னிலையில் வழங்கிய வாக்குமூலம் சித்திரவதைகள் மூலமாகத்தான் பெறப்பட்டது என ஐயந்திரிபுபெற நிரூ பிக்கும் பொறுப்பு அந்த கைது செய்யப்பட்ட நபரைச் சார்ந்தாகும். இல் லாவிடில் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்ட குற்றங்கள் அவரால் செய் யப்பட்டவையாகக் கணிக்கப்படும் எனவே இந்த PTA பலவந்தமாகப் பெறப்பட்ட வாக்குமூலத்தை முக்கிய சான்றாதாரமாக ஏற்குமாறு நீதி மன்றை வழிநடத்துகின்றது. கொடுமையான சித்திர வதைகளினாலும் பொலிஸாரின் வற்புறுத்தல்களினாலும் தடுப்புக்காவலில் உள்ள நபர் பொலிஸார் கூறியபடி வாக்கு மூலத்தை அளிப்பர். இத்தகைய சித்திர வதைகள் மூலம் பலவந்தமாக ஒன்றரை வருட (18 மாதகால) தடுப்புக் காவல் காலத்தில் என்றோ ஒரு நாள் பெறப்பட்ட வாக்குமூலத்தை சந் தேக நபரிற்கெதிரான முக்கிய சாட்சியமாக ஏற்குமாறு நீதி மன்றை இச்சட்டம் வழிநடத்துகின்றது. தமிழ்க்கைதிகளிடமிருந்து பெரும்பா லான வாக்கு மூலங்கள் மொழி பெயர்ப்பாளர் இன்றி சிங்கள மொழியில் பதிவு செய்யப்பட்டு சந்தேக நபரிடம் கையொப்பம் வாங்கப்பட்டு வந்தி ருக்கின்றது. எனவே வாக்குமூலம் தவறானது என்பதை நிரூபிக்கும் பொறுப்பை சந்தேகநபர் மீது திணிப்பதன் மூலம் இந்தப் பயங்கரவாதத்
(அரசறிவியலாளன் 10 Tசிறீகரன்

தடைச்சட்டம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளிற்கான சர்வதேச L5)J85L6O1535/L6öt International Convenant on civil and political rights (I.C.C.P.R) முரண்படுகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரிவு 31 (I) சட்டவிரோதமான செயற்பாடு (Unlawfulactivity) எனும் பதத்தின் கருத்தை வரையறுக் கிறது. இலங்கைக்கு உள்ளும் இலங்கைக்கு வெளியிலும் இச்சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்பே இச்சட்டத்தினால் குற்றமென விபரிக் கப்படும் செயல்களினை யாரேனும் ஒருவர் செய்திருந்தால் அந்த நப ரைக் கைதுசெய்து இச்சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடி யும். சுருங்கக் கூறின் இச்சட்டம் அழுலுக்கு வருவதற்கு முன்பே செய் யப்படும் செயலினை குற்றமெனக் கணிக்கிறது. மேலும் இப்பொருள் கோடல்' என்பது தெளிவாக வரையறுக்கப்படாமையினால் பொலிஸா ரின் கற்பனைக் கெட்டியளவு தோன்றும் நடவடிக்கைகளிற்காக ஒருவ ரைக் கைது செய்து இச்சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடி யும். P.TA யின் இப்பிரிவு சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கும் இலங்கையின் அரசியலமைப்பிற்கும் முரணானது. அரசியலமைப்பின் 13 (6) பிரிவு "புரியப்பட்ட நேரத்தில் தவறொன்றாக விருந்திராத ஏதேனும் செயல் அல்லது செய்யாமை காரணமாக ஆளெவரும் தவறொன்றுக் குக் குற்றவாளியாதலாகாது என்பதுடன் அத்தவறு புரியப்பட்ட நேரத் தில் வலுவிலிருந்தது தண்டத்திலும் பார்க்க கடுமையான தண்டமெது வும் அத்தகைய ஏதேனும் தவறுக்கு விதிக்கப்படுதலுமாகாது" எனக் கூறப்படுகின்றது. இலங்கை கைச்சாத்திட்டுள்ள குடியியல் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்பாடு (I.C.C.PR) பிரிவு 15 (1) "தவறொன்றும் புரியப்படும் நேரத்தில் தேசியச் சட்டத்தின் கீழ் அல்லது சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு குற்றவியல் தவறொன்றாக அமையாத ஏதேனும் செய்ல் அல்லது செய்யாமை காரணமாக ஆளெவரும் ஏதெ னும் குற்றவியல் தவறுக்கு குற்றவாளியாக கொள்ளப்படுதல் ஆகாது அல்லது குற்றவியல் தவறு புரியப்பட்ட நேரத்தில் ஏற்புடையதாயிருந்த தண்டனையை விடக்கடுமையான தண்டனை விதிக்கப்படுதலுமாகாது” எனக் கூறப்படுகின்றது இவ்வாறு மனித உரிமைகளுடன் பயங்கர வாதத் தடைச்சட்டம் பலமாக முரண்பாடுகின்றது. (அரசறிவியலாளன் 11 Tசிறீகரன்)

Page 20
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரகாரம் வாய் மொழிச் சொற் கள் மூலம் அல்லது சைகைகள் மூலம் வன்முறைகளிற்கு உடந்தை யாவதற்கு உளக்கருத்துக் கொள்ளுதல் குற்றமாகும். உதாரணமாக சோதனை நடவடிக்கைகளின் போது நபரொருவர் பொலிஸாரிற்கு விரும்பத்தகாத விதத்தில் சிரித்தாலோ அல்லது புன்னகை செய்தாலோ அவரைக் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த பொலிஸாரிற்கு அதிகாரமுண்டு. அதுமட்டுமன்றி தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் அல் லது அதனுடன் தொடர்புடையவர்கள் அல்லது ஒருவர் ஒரு குற்றத் தைச் செய்ய முயற்சிக்கின்றார் என நம்புவதற்கான காரணங்கள் இருப் பின் அவை தொடர்பான தகவல்களைத் தெரிந்தவர்கள் தாமாகவே அத்தகவல்களை பொலிஸாரிற்கோ அல்லது இராணுவத்தினர்க்கோ அறிவித்தல் வேண்டும். அவ்வாறு தெரிவிக்காமல் இருப்பின் PTA யின் படி குற்றமாகும். இக்குற்றத்திற்கு ஆகக்கூடியது 7 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இது தனிமனிதர்களது மனச் சாட் சிக்கான உரிமையை மீறுகிறது.
இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப் படும் நபரொருவரை A.S.P தரத்திற்கு குறையாத பொலிஸ் அதிகா ரியின் சம்மதமின்றி நீதிமன்றினால் விடுதலை செய்ய முடியாது. அது மட்டுமன்றி அக்கைதியின் விசாரணை முடியும் வரை தொடர்ந்தும் தடுப் புக்காவலில் வைத்திருப்பதற்கு பொலிஸார் நீதிமன்றிடம் எழுத்து மூலம் கேட்பின் அதற்கு ஆதரவாக நீதிமன்று செயற்பட வேண்டிய நிலையுள்ளது. சுருங்கக்கூறின் தடுப்புக்காவல் ஆணையை இரத்துச் செய்யும் அதிகாரத்தை இச்சட்டம் நீதிமன்றத்திற்கு இல்லாமல் செய்கி றது. இது சுயாதீன நீதித்துறை தொடர்பான முதன்நிலைக் கோட்பாடுக ளிற்கு முரணானதாக உள்ளது. PTA யின் பிடியில் சிக்கித் தவிக்கும் மனித உரிமைகளை நீதிமன்றினால் காப்பாற்ற முடியாத அளவிற்கு நீதித்துறையின் கரங்களை இச்சட்டம் கட்டி வந்திருக்கிறது. இலங்கை அரசியலமைப்பின் 4வது பிரிவு "மக்களின் நீதித்துறை இறைமையை நீதி மன்றங்கள் மூலம் மக்கள் பிரயோகிப்பர்” எனக் கூறுகின்றது. ஆயி னும் PTA யின் கீழ் ஒரு பொலிஸ் அதிகாரி நீதிமன்றின் இறைமை யை மட்டுப்படுத்தும் வாய்ப்புள்ளது. சிவில் அரசியல் உரிமைகள்
(அரசறிவியலாளன் 12 Tசிறீகரன்)

பற்றிய சர்வதேச உடன்பாடு (I.C.C.P.R) பிரிவு (3) படி "கைதுசெய்யப் படுபவர் விரைவாக நீதிபதியின் முன்னால் ஆஜர்படுத்தப்பட வேண்டுமெ னவும் கைது செய்யப்பட்டவரை விடுவிப்பது அல்லது விளக்கமறியலில் வைப்பது தொடர்பாக நீதிபதியே தீர்மானிக்க வேண்டுமெனவும் விசா ரணை நியாயமான காலத்தில் முடிவடைய வேண்டும் அல்லது சிறையி லிருந்து விடுவிக்கப்படவேண்டும்” என கூறப்படுகின்றது. ஆயினும் இச்ச ரத்திற்கு எதிரான தன்மை கொண்ட PTA இன் கீழ் கைது செய்யப்பட் டவர்கள் விசாரணைகள் எதுவுமின்றி நீண்டகாலத்திற்கு தடுத்துவைக் கப்பட்டார்கள். அதுமட்டுமன்றி இவர்களது வழக்கு விசாரணைகள் நீண் டகாலத்திற்கு இழுத்தடிக்கப்பட்டு வந்தமையால் நீண்டகால சிறைவா சத்தையும் அதன் மூலம் சித்திரவதைகளை எதிர்கொள்ளும் சாத்தி யப்பாட்டையும் உருவாக்கியது.
தனிமனிதர்களது நடமாடும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவும் ஒரு ஸ்தாபனத்தில் அங்கத்தவராக இருக்கவோ அல்லது பொதுக் கூட்டங்களில் பேசவோ அல்லது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவ தையோ தடைசெய்யும் கட்டளைகள் இச்சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்ப டலாம். இது அடிப்படை மனித உரிமைகளை மீறுகிறது. பொலிஸார் நினைத்தால் ஒரு வழக்கை பயங்கரவாதத் தடைத்ச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யலாம். அதற்குரிய காரணங்களை அவர்கள் கூறத்தே வையில்லை A.S.P தரத்திற்கு குறையாத ஒரு பொலிஸ் உத்தியோ கஸ்தர் நபரொருவரை வேறு எந்தச்சட்டத்திற்கும் முரணானதாக இருப் பினும் பிடியாணை இன்றிக் கைதுசெய்யப்படுவதற்கு இச்சட்டம் அனும திக்கிறது. அது மட்டுமன்றி PTA யின் 7வது பிரிவு கைது செய்யப் படுபவர்கள் 3 நாட்களிற்கு பொலிஸாரின் கட்டுப்பாட்டில் வைத்திருப் பதற்கு அனுமதியளிக்கிறது. இங்கே நபரொருவர் சித்திரவதை மற்றும் கொடுரமான இழிவுபடுத்தல்களிற்கு உட்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக் கள் அதிகமாகும். இலங்கை அரசியலமைப்பு அடிப்படை உரிமைகள் பகுதியில் உள்ள 13 (1) பிரிவு சட்டத்தினால் அமைக்கப்பட்ட நடை முறைகளிற்குகிணங்கவே ஒருவரைக் கைது செய்யமுடியும் எனவும் கைது செய்யப்படுவதற்கான காரணத்தை அவரிற்கு தெரிவிக்கவேண் டுமெனவும் கூறப்படுகிறது. குற்றவியல் கோவையின் 36, 37, 38 ம் பிரிவு
(அரசறிவியலாளன் 13 Tágsgeir

Page 21
கள் ஒருவரைக் கைதுசெய்யும் முறைகளையும் கைது செய்யப்பட்ட பின்பு அவரை எவ்வாறு நடாத்த வேண்டுமெனவும் தெளிவுபடுத்துகிறது. அரசியலமைப்பின் 13 (2) பிரிவு "கைது செய்யப்பட்ட நபரொருவர் தகுதிவாய்ந்த நீதிமன்றின் முன்னர் கொண்டுவரப்படவேண்டும் எனவும் நீதிபதியின் கட்டளைப்படியன்றி தடுப்புக்காவலில் வைக்கப்டுதலோ அல்லது கட்டுக்காவலில் வைக்கப்படுதலோ அல்லது சொந்த சுதந் திரம் பறிக்கப்படுதலோ ஆகாது" என கூறுகிறது. குற்றவியல் கோவை யில் விபரிக்கப்பட்ட பிரிவுகளின்படி கைது செய்யப்பட்டவர் 24 மணித்தி யாலத்திற்குள் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட வேண்டுமென கூறப்படு கின்றது. ஆயினும் மேற்சொன்ன சட்ட ஏற்பாடுகளிற்கு முரணானதாக காரணமின்றி கைது செய்யப்படவும் விசாரணை எதுவுமின்றி தடுத்து வைக்கப்படவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அனுமதியளிக் கப்பட்டுள்ளது. எனவே இந்த PTA அரசியலமைப்பை கடுமையாக மீறு கின்றது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்கள் 18 மாதகாலத்திற்குத் தடுப்புக்காவலில் வைக்கப்படலாம். இந்த உத்த ரவை எந்த நீதிமன்றத்திலும் எம்முறையிலும் கேள்வியெழுப்ப முடி யாது. அது மட்டுமன்றி இச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர் கள் சாதாரண சிறைகளில் மட்டுமன்றி சட்டபூர்வமான நிலையங்கள் சட்டபூர் வமற்ற இரகசிய இடங்கள் பொலிஸ் மற்றும் இராணுவமுகாம் களில் தடுத்து வைக்கப்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. விசாரணை, புலனாய்வு என்கின்ற பெயரில் சித்திரவதைகளை அனுமதிக்கும் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் தடுத்து வைக்கப்பட்ட நபரொருவரை விசாரணை நோக்கங்களிற்காக இடத்திற்கிடம் அழைத்துச் செல்வதற்கு பொலிஸாரிற்கு அனுமதியை வழங்குகின்றது. அது மட்டுமன்றி 3 மாதத் திற்கு மேற்படாத தடுப்புக்காவல் உத்தரவை பிறப்பிக்கும் அதிகா ரத்தை பாதுகாப்பமைசரிற்கு வழங்குகின்றது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 6ம் பிரிவு உட்செல்லல் சோத னையிடல், கைப்பற்றுதல் தொடர்பான விபரங்களைத் தெளிவு படுத்து கின்றது. சாதாரண சட்டங்களின் படி நீதிமன்றின் அனுமதியைப் பெற்றே பொலிஸார் ஒரு இடத்தைப் பரிசோதனைக்குட்படுத்த முடியும்
(அரசறிவியலாளன் 14 Tசிறீகரன்)

ஆனால் PTA யின் படி எந்த ஒரு இடத்தைழம் நீதிமன்றின் அனுமதி யின்றி பரிசோதனைக்குடபடுத்தும் அதிகாரம் பொலிஸாரிற்கு வழங்கப் பட்டுள்ளது. அது மட்டுமன்றி பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட இடத்திலி ருந்து பெறப்பட்ட எந்த ஒரு தடயமோ அல்லது ஆவணமோ சந்தேக நபரிற்கெதிரான சான்றாதாரமாக பயன்படுத்த அதிகாரமளிக்கப்பட்டுள் ளது. சாதாரண குறறவியல் சட்டத்தினடிப்படையில் குற்றம் சுமத்தபட இருக்கும் நபரொருவர் ஜூரிகளின் முன்னிலையில் ஆரம்பகட்ட விசார ணைகளிற்கு உட்படுத்தப்பட்டு அவர்களின் தீர்ப்பின் அடிப்படையி லேயே குற்றப்பத்திரிகை கையளிக்கப்படும். ஆனால் PTA யின் கீழான வழக்குகள் ஜூரிகள் இல்லாமலேயே நடாத்தப்படுகின்றன. சாதா ரண சட்டங்களின் படி குற்றம் சாட்டப்பட்டவரிற்கு ஒரு சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன ஆனால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் வருகை யினால் இருந்த உரிமைகளும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன.
மனித உரிமைகளை பாரதூரமாக மீறும் இப்பயங்கரவாதத் தடைச்சட்டம் இலங்கையில் சிறுபான்மையினரை கடுமையாகக் கொடு மைப்படுத்தி வந்திருக்கிறது. 1979ல் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் 1989, 1990 களில் நாட்டு மக்களைப் பாதிப்பிற்குள்ளாக்கும் வரை அதைப்பற் றியாரும் பெரிதாக அக்கறைப்படவில்லை. இனப்பிரச்சனை தீவிரம டைந்து வந்ததைத் தொடர்ந்து இதன் பிரயோகமும் தீவிரமடைந்து வந்திருக்கிறது. உலகில் சனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பேணும் எந்த ஒரு நட்டிலும் இல்லாத கொடுமையான சரத்துக்களைக் கொண்ட சட்டக் கோவையென விமர்சிக்கப்படும் இச்சட்டத்தை ஆட்சி யில் இருக்கின்ற பேரினவாத அரசுகள் தமது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவே பயன்படுத்தி வந்திருக்கின்றன. அவசரகாலச் சட்டம் (ERS) அமுலில் இல்லாத காலங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மேற்கு நாடுகளில் காணப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டங்களை விட மிகவும் மோசமானதாகக் காணப்படும் இச்சட்டம் இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டிருப்பது, இலங் கையின் மனித உரிமைகளிற்குப் பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலு மாகவுமே இருந்து வருகிறது.
அரசறிவியலாளன் 15 Tசிறீகரன்

Page 22
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கொடுமையினை வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்ச் சிறுபான்மையினரே அதிகமாக அனுபவித்து வந்திருக்கிறார்கள். வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் யுத்த நிலமை களில் பயங்கரவாதத்தடைச் சட்டம் பிரயோகிக்கப்படும் போது நிலை மை பாரிய அளவில் மோசமடைந்திருக்கிறது. மேலும் விடுதலைப் புலி களின் கட்டுப்பாட்டிலிந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுடன் இராணுவம் நேரடியாகத் தொடர்புகளைக் கொண்டிருக்கின் றது. இந்நிலைமையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் செயற்படும்போது பல ஆபத்தான விளைவுகளைத் தோற்றுவித்திருக்கின்றது. மக்களை யும் விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்தி பார்க்க முடியாத நிலையில் இராணுவம் இருந்தமையினால் பெருமளவு தமிழ்மக்கள் எவ்வித ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயங்களும் இன்றி கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். அங்கே கொடுமையான சித்திரவதைகளையும் துன்புறுத்தல்களையும் அவர்கள் அனுபவிக்கவேண்டியிருந்தது. சாதா ரன சந்தேகநபர்களும் பாரிய குற்றங்களைச் செய்தவர்களைப் போல நடாத்தப்பட்டார்கள் அதுமட்டுமன்றி பெருமளவு தமிழ்க்கைதிகள் சுகா தாரச் சீர்கேடுடைய சிறைச்சாலைகளில் விசாரணைகள் எதுவுமின்றி நீண்டகாலமாக அடைக்கப்பட்டார்கள். இவ்வித துன்புறுத்தல்களும் கொடுமைப்படுத்தல்களுமே மக்கள் மத்தியில் பயங்கரவாத உணர்வை வளர்ப்பதற்காககூட அமைந்துவிட்டது. சாதாரண சந்தேக நபர்களிற்கும் பயங்கரவாதிப் பட்டம் சூட்டிய இச்சட்டத்தினால் இலங்கைத் தமிழர்கள் அனுபவித்த துன்பங்களும் துயரங்களும் கொடுமைகளும் ஏராளமாகும்.
ஒரு நாட்டின் பாராளுமன்றம் உருவாக்குகின்ற எந்தச் சட்டமும் அந்நாட்டில் வாழும் ஒரு தனிமனிதனையோ அல்லது ஒரு இனத்தை யோ அல்லது ஒரு குழுவையோ கடுமையாகத் தண்டித்து பாதிப்பிற்குள் ளாக்குமாயின் அச்சட்டம் தனக்குள்ளேயே பயங்கரவாதத்திற்கான அடிப்படைகளை உள்ளடக்கியிருப்பதாகவே கருதமுடியும். நாட்டில் ஏற் படும் பாரிய குழப்பங்கள் வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக கடுமை யான சட்டங்களைப் பிரயோகிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத் திற்கு எழக்கூடும் ஆயினும் அவை தற்காலிக ஏற்பாடுகளாகவே இருத் தல் வேண்டும். வடக்குக் கிழக்கில் இன அழிப்பிற்கும் தெற்கில் சன நாய மரபுகளைச் சிதைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு இருபத்தைந்து (அரசறிவியலாளன் 16 Tசிறீகரன்)

வருடங்களைக் கடந்து நிற்கும் இப்பயங்கரவாதத் தடைச்சட்டத்தினால் எத்தனையோ மனித உயிர்கள் துன்புறுத்தப்பட்டும் காணாமல்போயும் உடல் உளரீதியான காயங்களிற்கு உள்ளாக்கப்பட்டும் விட்டார்கள். இச்சட்டத்தின் கொடுமையான தாக்குதல்களினால் நாட்டின் அரசியல், சமூக பொருளாதாரக் கொள்கைகள் கூட அதிகமாக பாதிப்படைந்து வந்திருக்கின்றன. இச்சட்டத்தின் கொடுமையினை நன்கு உணர்ந்த சர்வதேச மன்னிப்புச்சபை, உலக மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு மனித உரிமை அமைப்புக்கள் இச்சட் டத்தை நீக்குமாறும் அல்லது மீளாய்வு செய்யுமாறும் சித்திரவதைக ளைச் செய்தோரை நீதியின் முன் நிறுத்துமாறும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோரை பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுவிக்குமா றும் பலமான கோரிக்கைகளை முன்வைத்து வந்திருக்கின்றன. அது மட்டுமன்றி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அண்மையில் வழங் கப்பட்ட தீர்ப்பு ஒன்றை ஐ.நா.மனித உரிமைகள் குழு நிராகரித்திருக் கிறது. மேற்சொன்ன கோரிக்கைகளிற்கும் நிராகரிப்பிற்கும் சிங்களப் பேரினவாதிகள் செவிசாய்த்ததாகத் தெரியவில்லை. 2002ம் ஆண்டு அர சாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளிற்கும் இடையில் செய்து கொள் ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் படி PTA யின் கீழான கைதுகள் தடுக்கப்பட்டுள்ளன. ஆயினும் முன்னர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் உள்ளோரின் வழக்கு நிலுவைகள் இன்னும் உள்
6T6.
தமிழர்களிற்கு பயங்கரவாதிகள்’ பட்டம் சூட்டி அவர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒரு பயங்கரவாதப் பிரச்சனையாக சர்வதே சத்திற்குப் படம்பிடித்துக் காட்டவே இச்சட்டத்தை சிங்களத் தலைமை கள் பயன்படுத்தி வந்திருக்கின்றன. பயங்கரவாதம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளாமல் அவற்றிற்கான காரணங்களை அறிந்து கொள்ளாமல் ஒரு விடுதலை அமைப்பைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துக் கொண்டதன் மூலம் அவ்வமைப்பின் விடுதலைக் கான நடவ டிக்கைகளை பயங்கரவாத நடவடிக்கைகளாக இனங்காட்டிக் கொள் வது அன்று சிங்களப் பேரினவாதிகளிற்கு இலகுவானதாக இருந் திருக் கலாம். ஆயினும் எந்தப் பயங்கரவாதத்தை தாம் எதிர்ப்பதாக பேரின
(அரசறிவியலாளன் 17 Tசிறீகரன்)

Page 23
வாதிகள் கூறிக்கொண்டார்களோ அதே பயங்கரவாதத்தை அவர்களே தூண்டி வளர்த்து வந்திருக்கின்றார்கள். தமிழர்களைக் கொத்தடி மைகாக்குவதற்கு அரசபயங்கரவாதத்தை ஒரு யுக்தியாகக் கையாண்ட பேரினவாதிகள் அவ் அரசபயங்கரவாதச் செயல்களை மூடிமறைப்ப தற்கு அவசரகாலச்சட்ட விதிகளை (ERS) நன்கு பயன்படுத்தி வந்தி ருக்கிறார்கள்
சிங்களத் தலைமைகள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத் தைப் பயன்படுத்தி தமிழ்ச் சிறுபான்மையினரை மட்டுமன்றி தெற்கில் DË56it 65 65606) (up660760ofusai Janatha Vimukthi Peramuna (J.V.P) கிளர்ச்சியுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் பெரும ளவு சிங்களவர்களையும் நீண்டகாலம் சிறையிலடைத்தும், சித்திர வதை செய்தும், கொன்றொழித்ததையும் தவிர இச்சட்டத்தின் மூலம் அடைந்து கொள்ள வேண்டிய இலக்குகள் எதனையும் அடைந்து விட முடியவில்லை. பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டவெனக் கூறிக் கொண் டுவரப்பட்ட இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அமுல்ப்படுத்தல் களின் போது இனங்களிற்கிடையேயும் இயக்கங்களிற்கிடையேயும் வன் முறைகளும் நாட்டில் பயங்கரவாதச் செயல்களுமே அதிகரித்துச் சென் றன. சுருங்கக்கூறின் இனப்பிரச்சனையை மேலும் சிக்கலாக்குவ தற்கே இச்சட்டம் வழியேற்படுத்திவிட்டது. நாட்டின் சனநாயக கலாச்சாரத்தை சாகடித்து வன்முறைக் கலாச்சாரத்தை தோற்றுவித்து விட்ட இச்சட்டம் தனிநபர்களது நாளாந்த வாழ்வைச் சிதைத்து அவர்கள் அச்சத்துடன் வாழவும் பயப்பீதியுடன் நடமாடுவதற்கும் ஆட்கள் காணாமல் போவதற் குமே வழியேற்படுத்திவிட்டது. ஒட்டு மொத்தமாக இலங்கையின் சகல இனத்தவரும் இச்சட்டத்தினால் அழிவையும் அவலத்தையும் அனுப வித்து வந்திருக்கிறார்கள். எனவே அரசபயங்கரவாதத்தின் மொத்தவடி வமாக கருதப்படும் இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்ப டுத்தி தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்க முனைந்த எந்தச் சிங்களப் பேரினவாதத் தலைவர்களாலும் வெற்றி பெறமுடியவில்லை. அதுமட்டுமன்றி இச்சட்டத்தினைப் பயன்படுத்தி நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை அப்புறப்படுத்தவும் முடியவில்லை. ஆகவே நாட்டிற்குப் பொருத்தமற்ற இக் கொடிய சட்டம் விரைந்து
(அரசறிவியலாளன் 18 Tசிறீகரன்)

நீக்கப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்து இலங்கையில் நீடித்திருக்குமாயின் இலங்கையை சனநாயகப் பாரம்பரியங்களையும் மனித கெளரவத்தையும் போற்றிப் பாதுகாக்கின்ற நாடொன்றோ அல்லது மனிதமாண்பை மதிப்பதிலும் மனித உரிமைகளைப் பேணுவதிலும் அக்கறை கொண்ட அரசென்றோ ஒரு போதும் கூறிவிட முடியாது.
References 01) Asia Watch Committee, "Cycles of Violence, Human Rights in Srin Lanka since the indo - Sri Lanka Agreement," Asia Watch,
739 Eighth Street, Se Washington, December 1987, P23-40
02) Sri Lanka Parliment of the Demo cratic socialist Republic of Sri Lanka. Prevention of Terrorism (Temporary Provisions) Act No.480f 1979, Sri Lanka: Dept of GovermentPrinting, 1979.
03) அமர்தீன்.வி, "மனித உரிமைகள் ஓர் அறிமுகம்", தகவல் நலன்புரி
அமைப்பு, பேராதனை, 2003, பக் 64 - 93.
04) இக்பால்.எம்.சி.எம், சமாதான நோக்கு, "இலங்கையில் காணாமல் போதல்களின் தோற்றப்பாடு" மாற்றுக் கொள்கைகளிற்கான நிலை யம், 32/3, பிளவர் வீதி, கொழும்பு - 7, நவம்பர் - டிசம்பர், 2003, Uds 40 - 53.
05) சமாதான நோக்கு, "சிவில் சமுதாயக குழுவினரிடமிருந்து பாரிஸ் உதவிக் கழுவினர்க்கு ஒரு கடிதம்", மாற்று கொள்கைகளிற்கான நிலையம், 32/3, பிளவர் வீதி, கொழும்பு - 7, பக் 53 - 55
06) ராதிகா குமாரசாமி, சவுந்தரி டேவிட், “சுருக்க நோக்கு” இலங்கை மனித உரிமைகள் நிலை 2002, சட்டத்துக்கும் சமூகத்திற்குமான அறநிலையம் 3, கின்சி ரெறஸ், கொழும்பு - 8, இலங்கை, ஐப்பசி 2002, Luis 11 - 14.
Segesgesuusomoms 19 Tசிறீகரன்)

Page 24
07) விவேகானந்தன்.வை, "சர்வதேச மனித உரிமைகள் பற்றிய சட்டங் களும் சட்ட அபிவிருத்தியும்", ம.சிவநேசம், சிவாபவனம், செட்டிப் UT6oo6Tuub, 2002, Luis 71 - 80.
08) மனித உரிமைகளிற்கான பல்கலைக்கழ ஆசிரியர்கள், (யாழ்ப்பா
ணம்) "முறிந்த பனை", 1996, பக் 27 - 32.
09) ஈழநாடு, "வெள்ளிவிழாக்காணும் பயங்கரவாதத் தடைச்சட்டம்"
21.07.2004, Luis 9.
10) உதயன், "நீதியின் பெயரால் பயங்கரவாதம்", நியூ உதயன் பப்பி ளிக்கேஷன் (பிறைவேட்) நிறுவனம், கஸ்தூரியார் வீதி, யாழ்ப் UITGROOTLb, 19.07.2004, Lu 5.
11) சரிநிகர், "பயங்கரவாதத் தடைச்சட்டமும் அதன் விளைவுகளும்,"
ஜனவரி 27 - பெப்ரவரி 09, 2000, பக் 10.
12) சரிநிகர், "பயங்கரவாதத் தடைச்சட்டம் எனும் பயங்கரம்",
ஓகஸ்ட் 10 - ஒகஸ்ட் 23, 1995, பக் 8,
13) பாலகிருஷ்ணன், "இரத்தம் பெருகிய ஆண்டுகள்” ஆகஸ்ட், 11 - 24,
1994, U5 111.
14) பாலகிருஷ்ணன்.ச. "17 வருட பயங்கரம்", ஓகஸ்ட் 4, 1994, பக் 2.
15) சுந்தரலிங்கம்.எஸ், "இலங்கை அரசியல் யாப்புச் சீர்திருத்தற்திற் கான ஓர் உருவ வரைபு” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்த ரங்கொன்றின் 2வது அமர்வு பற்றிய குறிப்புக்கள். மார்ச் 24 - ஏப்ரல் 06, 1994, Luis 5,
16) தினகரன், "பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் இருபத்தைந்து ஆண்
டுகள்” 19.07.2004, பக் 6.
17) தினகரன், "பயங்கரவாதத் தடைச்சட்டம் தோற்றுவிக்கப்பட்டது”
20.07.2004, பக் 6.
(அரசறிவியலாளன் 20 Tசிறீகரன்)

18) தினக்குரல், "கால் நூற்றாண்டு காலக் கறை”
18 ஆடி 2004, பக் 4.
19) வீரகேசரி, நடேசன்.ஜி, "பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குள்
சிக்குண்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்” 22.04.2001, பக் 43.
20) நடேசன்.ஜி, "இன்றைய தினத்தை (ஜூன் 26) சித்திரவதைக்கு எதி ரான நாளாகப் பிரகடனப்படுத்த ஐநா அமைப்பு இலங்கை அரசிற்கு கோரிக்கை வீரகோரிக்கை” 26.06.1998, பக் 2.
21) விவேகானந்தன்.சி.வி, "பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினால் சின்னா
பின்னமாகும் தமிழர்கள்" 24.08.2003, 31.08.2003. பக் 56.
(அரசறிவியலாளன் 21 Tசிறீகரன்)

Page 25
மனித உரிமைகளும் அதன் அபிவிருத்திகளும்
Human Rights and Its Developments
- K.புஸ்பலதா - 2000/A/195
வரலாற்று நோக்கில் மனித உரிமைகளும் அதன் மறு அரசியல் வடிவங்களும்
மனித உரிமைகள் எனும் பதமானது ஒரு மனிதன் கெளரவமாக வாழ்வதையே சுட்டி நிற்கின்றது. மனிதன் பூரணமாக தனது தேவைகளை பெற்றுக் கொள்ளும் வகையே மனித உரிமை என்ற பதம் வளர்ச்சி யடைவதற்கான பிரதான காரணமாக அமைந்தது. மனித சமுதாயம் இதற்கான தேடுதலிலே ஆதிகாலம் தொட்டு இன்றுவரை தனது காலத்தை செலவழித்து வந்தது. இதன் வடிவங்கள் பலதாக மாறிய போதும் நோக்கு அல்லதுஇலக்கு ஒன்றாகவே இருந்தது மனித சமுதாய வளர்ச்சிக்கேற்ப தேவைகள் அதிகரித்தது. அத்தேவைகளை நிறைவு செய்யக் கூடிய வகை யில் பெளதீக வளங்களும் பெளதீக வளங்களை மனித அறிவு திறன் கொண்டு மாற்றியமைத்த பண்பாட்டு வளத்தாலும் ஈடுசெய்ய முடியாது போகவே மனித உரிமைக்கான சவாலாக அமைந்தது. குழுக்களிடையே, சமூகங்களிடையே, தேசங்களிடையே, பிராந்தியங்களிடையே, உலகம் பூராகவும் முரண்பாடுகளும் மோதல்களும் தோன்றக்காரணமாகவும் அமைந்தது.
மனிதஉரிமைகள் பற்றியபுராதன அரசியல்வடிவங்கள்
காட்டுமிராண்டி தனத்திலிருந்து விடுபட்டு மக்கள் சமுதாயம்
நிலையான இடத்தில் விவசாய செய்கை ஆரம்பித்ததிலிருந்து மனித
உரிமை என்ற கருத்தியலும் தோற்றம் பெற்றுவிட்டது என்றே குறிப்பிட
(அரசறிவியலாளன் 22 Kபுஸ்பலதா)

லாம். நிலத்தின் அளவிலும் கால்நடை ஏனைய வளங்களுக்கு இடையி லான போட்டி மனித குழுக்களுக்கு இடையே மோதல்களை ஏற்படுத்தியது இது ஒரு வகையில் எல்லாவகையிலும் அதிகாரம் கூடிய ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து அவன் கீழ் இன்னொரு குழுக்களை அடக்கி சொத்துக் களை பறிக்கவும் ஒரு தலைவன் வழி ஒழுங்கமைப்பாக இயங்கி ஒரு குறிப்பிட்ட அமைப்பு தனது குழுவில் எல்லோரும் அனுபவிக்க தக்க வகை யிலும் ஒருவரோடு ஒருவர் முரண்படாத வகையிலும் சில ஒழுங்குகளை செய்து ஒரு தலைவனே அதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பவனை யும் அதனை அமுல்படுத்துவோனுமாகக் காணப்பட்டதுடன் இது பின்னர் சமூகங்களாக அரசுகளாகவும், சாம்பிராச்சியங்களாகவும் விரிவடைந்தது தலைவனிடம் கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் ஒரு காலகட்டத்தில் சனத் தொகை வளர்ச்சி வேகத்தால் ஒரு தலைவன் சார்ந்த வட்டத்தினர் அக் குழு அனுபவிக்கும் உரிமைகளைவிட அதிகமாக அனுபவித்தனர் தலைவ ணும் அவன் சார்ந்த உறவுகளும் காலகதியில் விரிவடைந்து அரசு என்ற வடிவத்தை எய்தியது.
அரசன் இட்ட சட்டங்கள் மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற போக்கு நாளடையில் உச்ச கட்டத்தை அடைந்தது. இதன் ஒரு கட்டமாகவே அரசனுக்கும் மக்களுக்கும் இடையில் இடைவெளி அதிகரித் ததுடன் மக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசன் அடக்கு முறை வடிவங்களை பிரயோகிக்கத் தொடங்கினான். அதனை நியாயப்ப டுத்த தன்னை மண்ணுலகை ஆளவந்த கடவுளின் பிரதிநிதி என மக்கள் நம்ப வைக்கும் பல்வேறு காரியங்களைச் செய்தான். மக்கள் ஒர் ஒழுங்குள் செயற்பட அமைத்த அரசு மக்களை ஒரு கட்டத்தில் வேறுபடுத்தி அவர்களை மிக மோசமாக அடக்கியாளும் நடவடிக்கையில் ஈடுபட்டது.
மனித உரிமைகளும்வரைவிலக்கணங்களும்
மனித உரிமைகளை அரசுகள் தங்கள் நலனுக்காக எடுத்துக் கொண்டவேளை அதனை எதிர்த்து குரல் கொடுத்த அரசாக கிரேக்க நகர அரசு எதென்ஸ் காணப்படுகிறது. ஏதென்சின் ஜனநாயகத்தின் தந்தை யான சோக்கிரட்டீஸ் மனித உரிமைகள் பற்றி தெளிவுபடுத்தியதால் அரசுக்கு கொடுரம் செய்துள்ளார் என தீர்பளித்து அவருக்கு மரண தண்ட னை விதிக்கப்பட்டது. ஆனால் உண்மையை வெளிப்படுத்துவதில் அவரு டைய மாணாக்கர்களான பிளட்டோ, அரிஸ்ரோட்டில் என்போர்கள் அயராது
(அரசறிவியலாளன் 23 Kபுஸ்பலதா

Page 26
உழைத்ததன் விளைவாக பின்னர் வந்த காலப்பகுதியில் மனித உரிமை கள் என்ற சிந்தனை மறுவடிவம் பெறத்தொடங்கியது.
தொழில் ரீதியாக மக்கள் குழுக்களாக வாழ்ந்த நிலையில் ஒரு கட்டத்தில் கடின உழைப்பை மேற்கொண்ட மக்கள் அரசின் தேவை காரணமாக அடிமைகள் என்ற நிலைக்கு கொண்டு வரப்பட்டு மனிதர்களில் மிகக் குறைவான தகுதியடையவர்கள் என்ற ரீதியில் உரிமைகள் அற்ற அடிமைகளாக ஆக்கப்பட்டார்கள். இது கிரேக்க நகர அரசுகள் தொடக்கம் உரோம சாம்ராச்சியம் வரை நீடித்தது. வெற்றி கொள்ளப்பட்ட அரசுகள் தோல்வியடைந்த நாட்டு மக்களை அடிமைகளாகவே கொண்டு சென்றனர். எனவே மனிதர்களுக்கு பொதுவான உரிமைகள் காலப்போக்கில் வலிமை கூடியவர்களுக்கு உரியதாக மாற்றப்பட்டது.
மனிதஉரிமைகள்பற்றிகருத்துத் தெரிவித்த அறிஞர்கள்
எதென்ஸ் நகர அரசுகளில் மனித உரிமைக்காக குரல் கொடுத்த சோக்கிரட்டீஸ் தொடக்கம் உரோம சாம்ராச்சியத்தில் மனித உரிமைகள் பற்றிய கருத்து தெரிவித்தவர்களில் "அக்வெனங்" முக்கிய மாணவர்களாக இடம்பெறுகின்றனர். இயற்கை விதிகள் என்ற பெயரில் முதன்மை பெற்றி ருந்த மனித உரிமைகளும் அடங்கும். தேசங்களுக்கு ஏற்றதாவும் ஆட்சி யாளர்களுக்கு ஒத்ததாகவும் மனித உரிமைகள் வரையப்பட்டன. அவ் வகையில் கீழைத்தேச மனித உரிமை பற்றி கூறிய அறிஞர்களுள் கெளடில்யர், மனு, "கொன்வூஸ்" மற்றும் திருவள்ளுவர், நாலடி புலவர்க ளும், விளங்கினார்கள்.
வரலாற்றுக்கால ஓட்டத்தில் மதவாத நெருக்கடிகள், சிலுவைப் போர்கள், புதிய பாதை கண்டுபிடிப்புக்கள் குடியேற்றங்கள், புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை மற்றும் வளக்குவிப்பு என்பன பிரித்தானியாவில் கைத்தொழில் புரட்சிக்கு வழிவகுத்தது. இது ஒரு பொருளாதார அரசியல் புரட்சியாக இருந்தாலும் மனித உரிமைகள் விடயத்தில் புதியபரிணா மத்தை ஏற்படுத்தியது. இதுவரை இயற்கை விதிகள் என்ற அமைப்புக்குள் காணப்பட்ட கொடுரமாக வீதிகளை மாற்றியமைக்க உதவியது. கலிலியோ கலிலி, நியூட்டன், ஜோன் லொக், மொன்ரெஸ்கியூ வோல்ரயர், ரூஸோ போன்ற அறிஞர்கள் இதற்கு கணிசமான பங்களிப்பை ஆற்றினார்கள்.
(அரசறிவியலாளன் 24 Kபுஸ்பலதா

மனிதஉரிமைகளும் அரசியலும்
அறிவியல் புரட்சிக்கு கைத்தொழில் வளர்ச்சி வளக்குவிப்பு என்பன மேற்கு ஐரோப்பாவில் குறிப்பாக பிரித்தானியாவில் நிலமானிய சமூக முறையை உடைத்தெறிந்தது இதனால் நகரங்களில் மக்கள் குவி யத்தொடங்கியதால் பல்வேறுபட்ட கருத்துக்கள் ஒன்று திரண்டு அடங்கு முறையாளர்மீது போராடத் தூண்டியது. இதன் வடிவங்களாகவே பிரித் தானியாவில் மன்னனின் சர்வாதிகார போக்கை கட்டுப்படுத்தும் வகையில் பிரித்தானியா மக்களால் எழுதப்பட்ட "மக்னா காட்டா” ஒப்பந்தம் (கி.பி 1215) அதனை தொடர்ந்து கி.பி 1628ல் கொண்டு வரப்பட்ட உரிமைகள் மனு உரிமைகள் மசோதா (கி.பி 1689) என்பன பிரித்தானியாவில் மனித உரிமைகளைப்பெற மக்கள் நடத்திய போராட்டங்களும் அதனை வெற்றி கொண்டதையும் கூறுகிறது.
கி.பி 1787ல் இடம்பெற்ற பிரான்சிய புரட்சியை நவீன மனித உரிமைகளின் பிறப்பிடமாக உள்ளது. மனிதர்கள் யாவரும் பிறப்பால் சம மானவர்கள் அவர்கள் உரிமைகள் பறிக்கப்பட முடியாது எனவும் ஆணித் தரமாக எடுத்துக் கூறி நடைமுறைப்படுத்திக் காட்டியது. அதனை தொடர்ந்து 1776ல் அமெரிக்காவில் இடம்பெற்ற புரட்சியும் மனித உரிமை கள் விடயத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
மனித உரிமைகளுக்காக பல்வேறு தியாகங்கள் செய்யப்பட்ட போதும் அது இன்றுவரை பூரண வடிவத்தை எய்த தவறியதால் அதற்கான காவல்கள் அதிகார வர்க்கத்தால் எழுந்த வண்ணமே உள்ளது. உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய இரு உலக மகா யுத்தங்களும் மனித உரிமை யில் அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பியதுடன் அதனை அமுல் படுத்தி பூரண மனித உரிமையை வளர்க்க நிறுவன அமைப்பை உரு வாக்க வேண்டிய தேவையும் எழுந்தது. சர்வதேச சங்கத்தின் தோல்வியை கருத்தில் கொண்டு கூடுதலான அதிகாரங்களை வழங்கும் வகையில் 1948ம் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. இச்சபை பின்வரும் 3 தரங்களின் ஊடாக மனித உரிமையை வளர்த்து வருகின்றது.
அ) குடியியல் அரசியல் உரிமைகள் ஆ) பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் இ) Solidarty உரிமைகள் என்பனவாகும்.
(அரசறிவியலாளன் 25 K.புஸ்பலதா)

Page 27
1966ம் ஆண்டு மேலதிகமாக இரு இணைப்புகள் உருவாக்கப்பட்ட இதனை விட இவ் அமைப்போடு இணைந்து பல அமைப்புகள் இன்று மனித உரிமைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றது.
அ) மனித உரிமைகள் இயக்கங்கள் ஆ) சர்வதேச வழக்கறிஞர்கள் ஆணைக்குழு இ) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஈ) சர்வதேச மனித உரிமைகள் சங்கம் இவற்றில் சர்வதேச செஞ் சிலுவை சங்கம் கணிசமானளவு பணியை ஆற்றி
வருகின்றது.
ஐநா சபை மனித உரிமைகளில் சிவில், பெர்ருளாதார, கலாசார உரிமைகளில் ஒன்றை தவிர 140 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளது. அடிப் படை தொழில் உரிமைகள் 7ல் ஒன்றைத் தவிர ஏனையவற்றை 125 நாடு கள் ஏற்றுக் கொண்டுள்ளன இவ்வாறு 1990 வரை பல மனித உரிமைகள் சட்டம் ஐநாவில் கொண்டு வரப்பட்டன அரசியல் உரிமைகள், பொருளா தார உரிமைகள், பெண்கள் சிறுவர்கள் உரிமைகள், குற்றவியல் தண் டணை சட்டங்கள் என்பன கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் றுவாண்டா, பூக்கோசெலாக்கியா, டோக்கியோ வழக்கு என்பனவற்றை ஐ.நா சபை ஆராய்ந்து தக்க நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளது. தனிநபர் மீதான வழக்கை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரித்தால் என்பன உள்ளடங்கும்
மனிதஉரிமைநடவடிக்கைகள்
பொதுவாக எல்லா நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பாக காணப்படுவது ஐக்கிய நாடுகள் சபை ஆகும். முஸ்லிம் நாடுகள், கீழைத்தேச நாடுகள், சோசலிச நாடுகள் என்பன பல முரண்பாடுகளைத் தோற்றுவித்த போதும் உலக அரங்கில் பொதுவாக இதனது சட்டங்களே அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றது.
மனித உரிமைகள் பல்வேறுபட்ட சுதந்திரங்களின் கூட்டு என வர்ணிக்கப்பட்டபோதும் ஐநா சபை 7 வகைக்குள் உட்படுத்தி அதனை நடைமுறைப்படுத்துகின்றது. அவையவன.
(அரசறிவியலாளன் 26 Kபுஸ்பலதா

பராபட்சத்திலிருந்து விடுதலை
அச்சத்திலிருந்து விடுதலை சிந்தனை, தீர்மானம், பங்கு பற்றல் சுதந்திரம் மற்றும் சங்கங்களை அமைப்பதற்கான சுதந்திரம். கெளரவமான வாழ்க்கை தரத்தை அனுபவிக்கும் சுதந்திரம் அநீதி சட்ட ஆட்சியிலிருந்து விடுதலை சுரண்டலற்ற கெளரவமான வேலைக்கான சுதந்திரம். என்பனவாகும்
உலக நாடுகள் பல தரப்பட்ட நிலையிலும் பொருளாதார பண் பாட்டு வேறுபாடுகளும் ஆட்சி அதிகார வேறுபாடுகள் காணப்படுவதால் எல்லா நாடுகளும் ஒரே மாதிரியான உரிமைகளை அனுபவிக்க முடியாது உள்ளது. பொருளாதார வளர்ச்சி, கல்வி வளர்ச்சி என்பன உள்ள நாடுகளில் மனித உரிமைகள் ஓரளவு கடைப்பிடிக்கப்டுகிறது. மாறாக இவை இல்லாத அல்லது மிக குறைந்த நிலையிலுள்ள அரசுகளில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அதுவும் ஒரு நாட்டில் பல இன மக்கள் உள் ளதாயின் அதிகாரத்தில் உள்ள இனம் மற்றைய இனங்களின் உரிமை களை மீறுகின்றன. மனித உரிமைகளை அனுபவிக்கும் நாடுகள் மனித உரிமைகளை அனுபவிக்க முயற்சிக்கும் நாடுகள் மீது மனித உரிமை மீறல்களை மேற்கொள்கின்றது. அத்துடன் மனித உரிமைகளை பேணும் ஸ்தாபனமாக சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஐ.நா நிறுவனம் கூட வலிமை கூடிய செல்வந்த நாடுகளால் உருவாக்கப்பட்டமையால் அவற்றின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கூடிய வலு காணப்பட வில்லை. இதனால் எனைய நாடுகளால் ஐநாவின் நடவடிக்கையை சந்தே கத்துடன் பார்க்கும் அதேவேளை அதனை எற்றுக் கொள்ளாத தன்மையும் காண்ப்டுகின்றது. உதாரணமாக ஆப்கானிஸ்தான், ஈராக், செச்சினியா, விவகாரங்களை ஐநா சபை கையாளும் போக்கை நோக்கினால் புரிந்து கொள்ளலாம்.
இலங்கையில் எவ்வாறான மனித உரிமைகள் பிரயோகம் காணப் படுகின்றது என்பதை நோக்கின் அந்நிய ஆதிக்ககால மனித உரிமைகள் சுதந்திரத்திற்கு பின்னால்தான் மனித உரிமை என இருபக்கப்படுத்தி னாலும் முதலாவது பொதுவாக மனித உரிமைகளும் அதனை மீறும் செயலாகவும் காணப்படுகின்றது. அதிகார இனம் சிறுபான்மை இனங்களை
(அரசறிவியலாளன் 27 Klarust

Page 28
அடக்கி ஒடுக்கி அதற்கு நியாயமான காரணங்களை முன்வைக்கும் போக் கும் அதனை ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளும் போக்கும் காணப்படுகின்றது.
பிரித்தாளும் கொள்கையால் இலங்கையிடையே முரண்பாட்டை தூண்டிய ஏகாதிபத்தியம் சுதந்திரத்திற்கு பின்னர் தனது நலனை பேண மறைமுகமாகச் செயுற்பட்டதனால் சிங்கள, தமிழ் இனங்களுக்கு இடையி லான முரண்பாடுகள் இன அழிப்பு என்ற கொடூர மனித உரிமை மீறலை 1983ம் ஆண்டு அரசாங்க ஒத்துழைப்போடு சிறுபான்மை தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது. ஐ.நா சபையில் அங்கத்துவ நாடாக இணைந்த இலங்கை தனது மக்களை பாதுகாக்கும் நிலையிலிருந்து விலகி அதன் உரிமை மீறல்களை செய்தது. எனவே இன்றைய உலகில் மனித உரிமை என்பது அதிகம் வலுவுள்ள சமூகத்தாலேயே பேணிக்கொள்ள முடியும் என்பதை தெளிவுபடுத்துகின்றது.
இலங்கையில் மனித உரிமை மீறல்களை தடுக்க 1987ல் வந்த இந்திய இராணுவம் தனது உள்நோக்கம் நிறைவேறாததால் வெளியேறி யது. இது துலாம்பரமாக வெளிக்காட்டுவது எந்த அரசும் தனது நலனை பேண மனித உரிமை என்ற காரணியை இலகுவாக கையாள்வது என்பது புலனாகின்றது.
இலங்கையில் தமிழ் பிரதிநிதிகள் ஐநா சபையில் அங்கம் வகித்தபோதும் இவர்கள் இன தனித்துவங்களை பேணும் ஒரு மேற்குத் தேச பாணிக்குட்பட்படவர்கள். இவர்கள் கூறிய கருத்துக்களை வைத்து உலகின் சகல விடயங்களிலும் மனித உரிமைகளை வேணுவோம் என உருவாகிய ஸ்தாபனம் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை
இலங்கையில் சமாதான காலத்தில் கூட தமிழ் மக்கள் மீதான மனித உரிமைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. தமிழ் மக்களை பாதுகாக்கும் ஒர் அமைப்பை பல்வேறு குற்றங்களைச் சுமத்தி அதனை பல வீனப்படுத்தி அதனுாடாக தமிழ் மக்களை ஒழிக்கலாம் என்ற தோரணை யில் ஐ.நா சபையில் அதிகாரங்களை வலுவாக பிரயோகிக்க அமெரிக்கா போன்ற நாடுகளின் கருத்துக்கள் மனித உரிமை மீறல்கள் செய்த இலங்கை அரசை கண்டிக்காது அதற்கு பாராட்டு தெரிவிப்பதிலிருந்து அது தனது நலனை முதன்மையாக கொண்டு செயற்படுகின்றது என்பது தெளிவு
படுகிறது. (அரசறிவியலாளன் 28 K.புஸ்பலதா)

இலங்கையில் மனித உரிமைகள் பணிகளை போர்க் காலங்களி லும் சேவையாற்றிய நடுநிலை அமைப்புக்க்ளில் செஞ்சிலுவை சங்கம் ஒன்றின் பணிகளே போற்றத்தக்கதாக உள்ளது. இதில் சில குறைபாடுகள் காணப்பட்டாலும் அதன் பணிகள் ஏனைய மனித உரிமைகளை பேணும் அமைப்பின் பணிகளை விட முதன்மையானதாக உள்ளது.
மனித உரிமைகள் என்ற பதம் இன்னும் அதிகார வர்க்கம் தன் நலனை அடைந்து கொள்வதற்கு பயன்படுத்தும் இராஜதந்திர பொறி என்றே குறிப்பிடலாம். பொது ஸ்தாபனம் என்றாலும் சரி, அரசுகள் என்றாலும் சரி, அரசியல் அதிகாரம் பிரதானமாக உள்ள இக்கால கட்டத் தில் வலுவுள்ள ஓர் இனம், அரசு, பிராந்தியம், தனது வலிமையான அதி காரத்தில் உள்ளபோது சாத்தியப்படும் இல்லையேல் வலிமையுடைய பிரிவுகள் அதனை அடக்கியாளும் இதனையே "வலிமை உள்ளது தப்பி பிழைக்கும்” என்ற டார்வின் கருத்து” பிரதிபலிக்கின்றது.
References 1. “மனித உரிமைகள்"
"அறவழி வெளியீடு” 1985 பங்குனி, பக் 15 - 17,
2. "இலங்கையின் சமாதான முன்னெடுப்புகள் இடர்மிக்க திருப்பு
முனையில்", தை 2004, பக் 11 - 13, 28 - 30
3. "ஊடக நோக்கு" மாற்றுக் கொள்ளை நிலையம்
2000 ஜூன் பக் - 11
4. "யுனெஸ்கோ கூரியர்”
2000 ஜனவரி பக் - 11 - 30
5. சுருக்கம்
"மனித அபிவிருத்தி அறிக்கை” 2000, பக் - 5 - 16
6. மனித உரிமைகளை பாதுகாத்தாலும் மீளிணக்க செயற்பாடும் முரண்பாட்டு கற்கை நெறிக்கான நிறுவனம் தை 2000, பக்11 - 20
(அரசறிவியலாளன் 29 кцөйшөтып)

Page 29
இந்தியாவின் வளர்ச்சிப் போக்கில் அணுவாயுதம் பெறும் முக்கியத்துவம் The Significance of the role of a Atomic weapon
in the growth trend of India
- S.K.மயூறநாதன் - 2000/A/146
இந்தியா தனது முதலாவது அணுகுண்டு வெடிப்புப் பரிசோத னையை 1974ம் ஆண்டு நடாத்தி தனது அணு ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தியது. இன்று முப்பது ஆண்டு கால இடைவெளியின் பின்னர் அணு ஆயுதத்தடை ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டு உலகில் அணு ஆயுதங்களைத் தடைசெய்யும் அவசியம் உணரப்பட்டுள்ள இவ் வேளையில் இந்தியா நடாத்திய அணு வெடிப்புப் பரிசோதனைகள் அல்லது நடாத்தி வருகின்ற பரிசோதனைகள் உலகைப் பெரும் பரபரப்பில் ஆழ்த்தி விட்டிருக்கின்றது. இந்தியாவின் அயல் நாடுகளான பாகிஸ்தான், சீனா இந்த அணு வெடிப்பு பரிசோதனைகள் தொடர்வது குறித்துக் கவலை வெளியிட்டுள்ளன. இதன் நோக்கம் உலக வல்லரசு களினது இராணுவத் திட்டங்களையும் அவர்களது திட்டங்களைத் தந்தி ரோபாய ரீதியில் முறியடிக்க ஏற்படுத்திய முயற்சிகளும் ஆகும். இதன் விளைவாக பூகோள ஆதிக்க அணு ஆயுத வளர்ச்சிப் பிரயோகத்தில் இந்தியாவும் அதன் அணு ஆயுத வளர்ச்சி பற்றியும் நோக்குவதே இக்
கட்டுரையின் குறிக்கோள் ஆகும்.
எவ்விதத்திலும் சாதாரண குண்டுகள் என்றால் என்ன? அணு குண்டுகள் என்றால் என்ன? நியூக்கிளியர் குண்டுகள் என்றால் என்ன? என்பன தொடர்பான விளக்கங்கள் அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டு மக்களிடையே குறைவாக இருந்து வருகின்றது. மேலும் ஆயுதங்கள்
(அரசறிவியலாளன் 30 Kமயூறநாதன்)

பற்றிய அடிப்படை விளக்கமற்ற நிலையிலும் இராணுவத் தந்திரோபா யங்கள் தொடர்பான விளக்கங்களை ஏற்படுத்திக் கொள்வதும் சற்றுக் கடினமாகவே இருக்கும் எனவே அணு ஆயுதங்கள், குண்டுகள் என்பன பற்றி சுருக்கமாக விளக்கங்கள் ஏற்படுத்திக் கொள்வது பொருத்தமா னது.
எதிரிகள் தமது குறிக்கோளை அடைவதற்குப் பயன்படுத்து பவை அல்லது எதிரியின் குறிக்கோளை அடைய முடியாமல் தடுப்பவை களை ஆயுதங்கள் எனக் கூறலாம். ஒரு போரின் போது எதிரியையும் எதிரி தனது குறிக்கோளை அடையப் பயன்படுத்துபவைகளையும் அழிக்க பயன்படுத்துபவைகளையும் நாம் பொது வாக ஆயுதங்கள் (Weapons) என்று அழைப்போம் அந்த வகையில் அணு ஆயுத வளர்ச்சியின் பயனாக அணு குண்டுகள், நியூகிளியர் குண்டுகள் உருவாக்குவதற்கான அடிப்படைகளைச் சுருக்கமாக நோக்கு வோம்.
இரசாயனப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் குண்டுக ளைப் போல பல்லாயிரம் தொன் நிறையுள்ள இரசாயனப் பொருட்க ளைப் பயன்படுத்தி பெரும் வெடிப்பு சக்திகளை உடைய குண்டுகளை உருவாக்க முடியும். இவைகள் அணுப் பிரிப்பின் மூலமும் அணு சேர்க்கையின் மூலமும் உற்பத்தி செய்ய முடியும்.
ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாஹி மீது 1945 ஆவணி 06, ஆவணி 09 திகதிகளில் போடப்பட்ட குண்டுகள் உண்மையில் யுரேனி யம் (Uranium), புளுட்டோனியம் (Piutonium) என்ற பாரமான உலோ கங்களின் அணுக்களைப் பிரிப்பதன் மூலம் அழிப்பு சக்தியை ஏற்படுத் தும் குண்டுகள் ஆகும். இவ்வாறான குண்டுகளை நாம் அணு குண்டுகள் (Atomic Bombes) என்று பொதுவாக அழைப்போம். அணு குண்டு வெடிப்பினை நாம் Atomic Explosion என்றும் அழைப்போம். ஜப்பான் மீது வீசப்பட்ட குண்டு வெடிப்புக்கள் மூலம் சாதாரண குண்டுகளிலி ருந்து பாதுகாப்பை ஏற்படுத்தத் தத்தளிக்கும் மக்கள் அணுச் குண்டுக ளிலிருந்து பாதுகாப்பினை ஏற்படுத்த முடியாது.
(அரசறிவியலாளன் 31 Kமயூறநாதன்)

Page 30
அனுப்பிரிப்பினால் மாத்திரம் பாரிய அழிப்பு சக்தியைப் பெற முடியும் என்பதைப் போல இலேசான பொருட்களால் அணுச்சேர்க்கை நடாத்தும் போது மிகவும் பாரியளவு சக்தி வெளிவிடுவதுடன் பாரியளவு அழிவுகளையும் எற்படுத்தக் கூடியதாக உள்ளது. அணு சேர்க்கையில் ஐதரசன், லிதியம் போன்ற இலேசான மூலகங்களில் ஐசோடாப்புக்க ளில் (Isotopes) நடாத்த முடியும் அணுச்சேர்க்கை மூலம் அழிப்பு சக்தி களைப் பெறும் குண்டுகளைப் பொதுவாக Nucler Bombs என்று அழைக்கப்படுகின்றது.
இன்று உலகில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், வடகொரியா மற்றும் இந்தியா போன்றன அணுகுண்டுகளை வைத்தி ருக்கின்ற நாடுகளாகக் காணப்படுகின்றன. அந்த வகையில் இந்தியாவி னது அணு ஆயுத வளர்ச்சிபற்றி நோக்கும்போது ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் தமக்குள்ளே அணு ஆயுத தொழில் நுட்பம் பற்றிப் பகிர்ந்து கொண்டன. பின்னர் சீனாவிற்கும் இந்தியாவிற் கும் இடையில் ஏற்பட்ட உறவின் மூலம் இந்தியா அணுப் பரிசோத னைக்கான தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொண்டது. அதற்குப் பின் னரே சீனாவிடமிருந்து பாகிஸ்தானும் பெற முடிந்தது.
சீனா - இந்திய உறவே இந்தியாவினுடைய அணுகுண்டு வெடிப்பு வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. சீனா 1962ம் ஆண்டு அணுகுண்டு தயாரிப்பினை ஆரம்பித்தது 1964ம் ஆண்டு முதன் முதலில் பரிசோதித்தது. இதன் பின்பே சீன - இந்திய உறவேற்பட்டு, இந்தியா வில் முதன் முதலாக 1974ம் ஆண்டு தனது சொந்த தயாரிப்பில் அணு குண்டுகளைத் தயாரிக்கும் சிந்தனைக்குத் தூபமிட்டது. பின்பு இந்தியா - சீனா முரண்பாட்டினால் சீனா பாகிஸ்தான் உறவைப் புதுப்பித்தது அதன் பயனாக பாகிஸ்தானும் இந்தியாவும் அடுத்த படியாகவும் எதிரா கவும் அணு வெடிப்பு பரிசோதனையை ஆரம்பித்தது.
இந்தியாவின் அணுவாயுதத்திட்டம் 1971ம் ஆண்டே தீர்மானிக் கப்பட்டது. இதை அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியாலேயே தீர்மானிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இந்தியாவின் அணு
(அரசறிவியலாளன் 32 K.LDل المقاتلإقليلا

6) Tugs g5'LlfL6b Gafulfil ITI (6 5.g36.j60TLDIFBs "Bhabha Atomic Reach Center" (BARC) காணப்பட்டது. இந்தியாவினுடைய முதலாவது அணு குண்டு பரிசோதனை 1974 மே 18ம் திகதி இராஜஸ்தான் மாநிலத்தில் "ஹொக்ரான் பாலைவனப் பகுதியில் "ஸ்மைலிங் புட்கா" (Amiling Bud dha) என்ற பெயருடன் நிலத்திற்கு கீழே (107 மீற்றருக்கு கீழே) பரிசோ திக்கப்பட்டது.
எனினும் இந்தியாவின் இவ் அணுவெடிப்பு பரிசோதனை பற்றிய எந்த விடயமும் உலகிற்கு தெரியாது. இரகசியமாகவே இருந்து வந் தது. உலகத்தின் கண்களுக்கு இந்தியாவால் அனுப்பரிசோதனை செய்ய முடியாது என்ற மாயக்கருத்தே தோற்றுவிக்கப்பட்டது மட்டு மல்ல அவ்வாறு தோன்றியும் இருந்தது. மேலும் இந்தியாவால் அணுப் பரி சோதனை பரிசோதிக்கப்பட்டுள்ளது என கசிந்த செய்திகளையும் கூட ரஷ்யா போன்ற நாடுகள் இலகுவில் நம்ப மறுத்ததுடன் அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகள் மோசமாக குழப்பமடைந்தும் இருந்தன. அத்துடன் கண்டன அறிக்கைகளையும் வெளியிட்டன. இந் தியா இவற்றை கவனத்திலெடுக்காது இரகசியமாக அணுவாயுத தயா ரிப்பு தொடர்பான எதிர்நடவடிக்கைகளைக் கொண்டு மீண்டும் அணுவா யுத தயாரிப்பை செய்ய முனைந்தது.
6Jsbat560TG86 “Nuclear non prollferation Treaty” (NPT) 6T6IOTÚLu டும். அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தத்திலும் மற்றும் Comprehen sive Test Ban Treaty (CTBT) 6T6OTUGb (p(g e6T6 hourtó0T sig6. T யுத தடை ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திட மறுத்து வந்தது. அத்துடன் அமெரிக்காவும் ஏனைய வல்லரசுகளும் அணு ஆற்றல் துறையில் போதிய வளர்ச்சியடைந்து விட்டன என்றும் உலகில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்துடன் பிற நாடுகளை கட்டுப் படுத்த முயலுகின்றன என்றும் இந்தியா குற்றம் சாட்டியது. இவ் ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திடப் போவதில்லை என்று 1996ல் நடைபெற்ற “ஜெனிவா ஆயுத மாநாட்டில்” இந்திய பிரதிநிதியான
(அரசறிவியலாளன் 33 Kமயூறநாதன்)

Page 31
“அருந்ததி கோஸ்" தெளிவாக தெரிவித்திருந்தார் NPT எனப்படும். அணுவாயுத பரவல் தடையொப்பந்தத்தில் இந்தியா 1996ல் கையெழுத் திடாவிடில் 1999ல் இந்த ஒப்பந்தம் அமுலுக்கு வரமுடியாத நிலை இருந்தது. ஒப்பந்தம் அமுலுக்கு வரவதற்கு கையெழுத்திட வேண்டிய 42 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
எது எப்படியாயினும் அனுப்பரிசோதனை என்பது இந்தியாவால் நேரடியாக பரிசோதிக்க சாத்தியமில்லை என்றே பல நாடுகள் கணித் தன. குறிப்பாக ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் சாத்தியமில்லையென்றே கணித்து வந்தன. ஆனால் 1993ம் ஆண்டு சந்தேகத்திற்கு இடமற்று அமெரிக்கா தாம் நம்பிக்கை கொண்டிருப்ப தாக அறிவித்தது. இதற்கு பதிலாக இந்தியா உத்தியோக பூர்வமாக அணுவாயுத பரிசோதனையை தான் நேரடியாக தயாரிக்கவில்லை என்றும் அத்துடன் தமக்கு தேவை ஏற்படின் தம்மால் அணுவாயுதத்தை தயாரித்து பரிசோதிக்க முடியும் என்றும் அறிவித்தது. இது இந்தியா வின் அணுஆயுதப் பரிசோதனையின் புதுப்பரிமாணமாகவும் புதிய வளர்ச்சி யாகவுமே எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
பின்னர் மீண்டும் 1995ல் அணுவாயுத தயாரிப்பிற்கான செயற் பாடுகள் சாத்தியக்கூறுகள் இந்தியாவில் இருப்பதாக அமெரிக்காவின் “சற்லைட்" ஊடாக அமெரிக்கா உறுதி செய்தது. 1989 பின்பே உல கிற்கு தெரியக்கூடியதாக இந்தியாவிடம் அணுவாயுத உற்பத்திக்கான சாத்தியக் கூறுகள் இருப்பதற்கான கசிவுகள் தென்பட்டன 1989 பின்னர் இந்தியா அணுவாயுத தயாரிப்பினை முன்னெடுத்த போதே இந்தியா விடம் அணுவாயுதம் இருப்பதனை உலகிற்கு தெளிவாக உறுதிப் படுத்தியது.
அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியரான "நிக்கொலஸ் ஜோன் 6ü60LudbLD6öı” (Nicholas John Spykman) 616öTU6ıf6öı 85(böğü uç “g9(5 நாட்டின் பலம் அந்த நாட்டின் எல்லைகளின் தன்மைகளை, நாட்டின் சனத்தொகை, மூலப்பொருட்களிருப்பதும், இல்லாதிருப்பதும், பொருளா தார தொழில்துறை முன்னேற்றம், மனச் செல்வாக்கு நாட்டில் இனரீதி
(அரசறிவியலாளன் 34 KLDupbngsi

யில் ஒரு மித்த இனத்தன்மை, அந்த நாட்டின் அரசியல் உறுதி, மக்க ளுக்கு தேசிய உணர்வு தன்மை, போன்ற பலவிடயங்களில் தங்கியுள் ளது எனக்கருதினார். அந்த அடிப்படையில் வெவ்வேறு நாடுகளின் பலங்கள் ஒப்பிடப்பட்டு ஒவ்வொரு நாடும் தனது வெளிநாட்டு கொள்கை களை வகுத்து செயற்படுவதன் மூலம் அதன் குறிக்கோளை அது அடைய முடியும் என அவர் கருத்து தெரிவித்தார்.
இந்தியாவுக்கு அணுஆயுதத்தின் தேவை
இந்தியா ஏன் அணுவாயுத தயாரிப்பு தனக்கு அவசியமான தென்று கருதுகின்றது என நோக்குவோம். வல்லரசுகளினது ஆதிக்க விஸ்தரிப்பு (இராணுவ மற்றும் தந்திரோபாயங்களில்) போட்டிகள் ஏற்படும் போது ஒன்றை மற்றொன்றை வென்று தனது ஆதிக்கத்தினை உலகம் முழுவதும் நிலைநாட்டிக் கொள்வதாயின் மூன்று தந்திரோ பாயங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒன்று வல்லரசு மற்றைய நாடுகளிலும் பார்க்க தன்னை பலமுள்ளதாக ஆக்குவதற்கு திட்டங் களை வகுத்து செயற்படுவது. அடுத்து ஒரு வல்லரசு தன்னை பல முள்ளதாக்காது அதே வேளை மற்றய வல்லரசின் பலம் அதிகரிக்கப் படாது தடுப்பதற்கான திட்டங்களை வகுத்து செயற்படுவது. அடுத்து ஒரு வல்லரசு தன்னை பலமுள்ள தாக்க திட்டங்களை வகுத்து செயற் படும் அதே வேளையில் மற்றய வல்லரசுகளின் பலம் செயற்படுவ தாகும.
அந்த வகையிலே இந்தியா உலக வல்லரசு நாடுகளுக்குள் அமெரிக்காவின் போக்கும் உலக பொலிஸ்காரனாக நடக்க முற்படு கின்ற தன்மையும் அதே போல உலகளாவிய ரீதியிலான மாறிவந்த புதிய உலக ஒழுங்கினுடைய போக்கும் பிராந்தியரீதியிலான அதிகாரப் பலப்பிரச்சினை போன்ற காரணங்களினால் இந்தியாவுக்கு அணுவாயு தத்தின் அவசியத்தை உணர்த்தியதோடு உலக நாடுகளின் ஆயுதப லத்தின் உலக போக்கிற்கு ஏற்ப தீர்மானிக்க வேண்டிய அவசியத்தை யும் இது உயர்த்தியதே காரணமாகும். எனினும் இது உபகண்டத்தில் ஆயுத போட்டியை உருவாக்கும் ஆபத்தையும் ஏற்படுத்த தவற
(அரசறிவியலாளன் 35 Kமயூறநாதன்)

Page 32
வில்லை அணுவாயுத குறைப்பை துரிதமாக அமுல் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தாலும் முதலில் இந்தியாவின் பாதுகாப்பே முக்கியமான தென்று கருதுகின்றது.
இந்தியாவினுடைய அணுவாயுத திட்டமானது பாரதீய "ஜனதா கட்சி” (BP) யினுாடாக உச்சக்கட்ட நம்பிக்கையாக தொடர்ந்திருந்து வந்தது. 1996ல் வாச்பாய் அரசு அணுவாயுத பிரிசோதனைக்கு அனுமதி வழங்கியது. ஆனால் இப்பரிசோதகை நடத்துவதற்கு முன்பே அவ் அரசு வீழ்ச்சி கண்டது. பின்பு வந்த தேவகெளடாவின் அரசினாலும் இழுத்தடிக்கப்பட்டது. தேவகெளடாவின் அரசு 1996ல் செப்ரெம்பரில் "தாம் அணுவாயுதம் தொடர்பாக எந்த திட்டத்தினையும் கொண்டிருக்க வில்லை” என தெரிவித்தது. அதாவது பாதுகாப்பு நிலவரம் சாதகமாக மாறும் வரைதான் இதைத் தாம் கடைப்பிடிப்போமென மறுபக்கமாகவும் கூறியிருந்தார். "தற்போதிருக்கின்ற திடடம் போதுமான தென்றும் மேல திகமானது எதுவும் தேவையில்லை” என அறிவித்தார் இந்தியாவின் இத்தகைய மென்மையான மாற்றத்துக்கு 1996 செப்ரெம்பரில் ஐநாவின் CTBT இனால் முன் வைக்கப்பட்ட வரையறைகள் மிகவும் காத்திரமாக இருந்ததினால் ஒருவிதமான பயத்துடனேயே இந்தியாவினுடைய கொள் ளையின் நெகிழ்ச்சிப் போக்கிற்கு காரணமாக இருந்தது.
1997ல் CTBT உடைய பதினான்காவது ஆய்வு அறிக்கையில் இந்தியா தன்னுடைய அரசியலமைப்பு அதிகாரங்களையும் மீறி கைச் சாத்திட்டுக் கொண்டது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பு வெளிவிவ கார அமச்சராக இருந்த "குச்ரால்" இதை எதிர்த்ததுடன் தனது பதவி யையும் துறந்தார். இதற்கு இந்தியா சாதகமான நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் நம்பினார் அதே வேளை CTBT உடைய தனித்து வத்தில் 1996ம் ஆண்டு வாக்கெடுப்பில் சரிவு நிலை அல்லது தோல்வி ஏற்பட்டது. இதனால் 1996ம் ஆண்டு இந்தியாவின் தற்காலிக இணை வையே கொண்டிருந்ததால் அது இந்தியாவிற்கு சாதகமாகவும் மாறியி (55955).
(அரசறிவியலாளன் 36 Kமயூறநாதன்

1998ம் ஆண்டு பாகிஸ்தானின் “கேர்ரி” ஏவுகணைப் பரிசோத னை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அதே ஆண்டு அடல் பிகாரி வாச்பேய் அணுசக்தி தலைவர் சிதம்பரம் பாதுகாப்பு மற்றும் அபிவி ருத்திதலைவர் அப்துல்கலாமையும் சந்தித்து அணுவாயுத பரிசோ தனை தொடர்பான முன்னெடுப்புகளுக்கு அனுமதி வழங்கினார் (மீண் டும்) 1998 மே 11ம், 13ம் திகதிகளில் ஐந்து ஆணுகுண்டு பிரிசோதனை களை இந்தியா செய்தது அதனை தொடர்ந்து பாகிஸ்தானும் அதே ஆண்டு மே 28ம், 30ம் திகதிகளில் அறு ஆணுகுண்டுகளை "கோரிஇரண்டு (V)” என்ற பெயரில் பரிசோதித்தது. இதுவே பாகிஸ்தானுடைய முதலாவது அனுப்பரிசோதனையாகவும் இருந்தது. அத்துடன் இது இந் திய பாகிஸ்தான் Thresh Hold என அழைக்கப்பட்டது. 1991ல் வளை குடா யுத்தத்திலிருந்து வந்த அணுவாயுத பலப்பரீட்சையினால் தென் னாசிய நாடுகளின் அனுப்பல பரீட்சையானது 1998ல் தென்னாசிய நாடுகளின் அணுப்பல பரீட்சையினால் உலகத்தில் அணுவாயுத முக் கியத்துவத்தை குறைத்தது.
இந்தியாவின் அணு வெடிப்பு பரிசோதனைகளால் அமெரிக்கா ஏற்கனவே குழப்பமடைந்திருந்த வேளையிலும் வாச்பாய் அரசு அமெ ரிக்க உளவு நிறுவனத்திற்கும் மறைத்து செய்த அணுவெடிப்பு பரிசோ தனை அமெரிக்க நிர்வாகத்திற்கு மிகுந்த எரிச்சலை ஊட்டியது. இதனால் அமெரிக்கா கடைப்பிடித்து வந்த நிதானமான கபடப்போக்கு தீவிரமான கபடப்போக்காக மாறியது. இது அமெரிக்க இந்திய நாட்டின் அணுகுமுறையில் மாற்றத்தை உருவாக்கியது.
அமெரிக்கா இந்தியாவை முதன்மையாக கொண்டு தென்னாசி யாவை புத்திசாதுரியமாக அணுகத் தொடங்கியது. அமெரிக்கா இந்திய மீது பொருளாதார, இராணுவ, தொழிநுட்ப பரிமாணங்களில் தடைகளை போட்டது. இது இரு நாடுகளினதும் உறவு நிலைகளை கீழ் நிலைக்கு தள்ளியது. எனினும் இது இந்தியாவிற்கு பெரும் பாதிப்பாக இருக்க வில்லை. மாறாக அமெரிக்காவிற்க்கு அதனது சந்தை வாய்ப்பை இழந்துவிட்ட பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் அமெரிக்காவின் பங்க ளிப்பு இல்லாமல் சுயமாக பலமான ஒரு இந்தியா உருவாகின்ற நிலை
(அரசறிவியலாளன் 乔 Kமயூறநாதன்)

Page 33
ஏற்பட்டுவிடுமென அமெரிக்கா அச்சங் கொண்டிருந்ததினால். இந்தியா மீதான பொருளாதார தடைகளை தளர்த்தியது. அதேவேளை எனைய தடைகளை நீக்காது அமெரிக்கா மறைமுக அரசியலை (Underground politics) பயன்படுத்தி பாகிஸ்தானை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்தது. அமெரிக்கா இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத் தினை தடுத்து நிறுத்தவும் அதேவேளை, அதற்கு சமநிலையாக பாகிஸ்தானை வளர்த்தும் பிராந்தியத்திற்குள் முரண்பாட்டை வளர்த்து இந்தியாவின் பலத்தை பலவீனப்படுத்துகின்ற உத்தியையும் மறைமுக மாக கையாண்டு வந்தது. எடுத்துக்காட்டாக கார்கில் யுத்தமும் இந்தி யாவினது வெற்றி தோல்வியும், பாகிஸ்தான் "நிவாசெரிப்" பிரச்சி னையை கையாண்ட விதம் போன்வற்றை கூறிக்கொள்ளலாம். பாகிஸ் தானின் தோல்வி முழுமையான தோல்வியாக அமையக் கூடாது என்ப தற்காக அமெரிக்கா பாகிஸ்தானை இந்தியாவிற்கு போட்டியாக வளர்த் தது அத்துடன் “நவாசெரிப்பை” வீழ்த்தி "முசராப்" ஆட்சியை கைப் பற்றுவதற்கும் பக்கபலமாக அமெரிக்காவே செயற்பட்டு வந்தது.
பின்னர் "ஆக்ரா உச்சி மாநாடு” நடத்தப்பட்ட பொது அதில் அமெரிக்கா இல்லது நடைபெற்றது. இச்செயல் அமெரிக்காவிற்கு மீண்டும் மிக கோபத்தை ஊட்டுகின்ற செயற்பாடாக அமைந்த இதனால் அமெரிக்கா முஷராப்பின் பதவி ஜனநாயக அரசியலுக்கு உட்படாதது என்பதனாலும் அரசியலுக்கு உட்பட்ட ஜனநாயக பதவிக்கு அது நுளைவதனாலும் தனது கண்டனத்தை பாகிஸ்தானுக்கு எதிராகவும் வெளிப்படுத்த தவறவில்லை.
அதேவேளை மறுபறமாக இந்தியா NMD ஆதரித்தது. இதனு டாகத் தான் தென்னாசிய பிராந்திய வல்லரசு என்பதனை நிலை நிறுத்துதல் இந்து சமுத்திர பிராந்தியத்தை ஆழுதல், நிறைவாக இருக்கின்ற இந்திய பாகிஸ்தான் போர் (1971) இதற்கு இந்தியாவின் "GSLV”Power உதவியாக விளங்குகின்றது. என எண்ணி கனவுகாண முற்பட்டது. இக் கனவினை நியாயமாக்க இந்திய இராணுவ, பொரு ளாதார ரீதியில் வளர்ச்சி மிக வேகமாக முன்னெடுத்து வருகின்றது.
(அரசறிவியலாளன் 38 Kமயூறநாதன்)

இன்னும் பல தடைகளை இந்தியா தாண்ட வேண்டியுள்ளது. (இதற்கு அமெரிக்கா Nicholas John Spykman s 60Lu BOB560)g5 BTb (35|Tisas முடியும்). இதனை உலக வல்லரசுகளுடன் பொருளாதார வளர்ச்சியி லும், சர்வதேச அரசியலிலும் வலுவினையும் பெறுவதனூடாக சாத்திய மாக்க முனைந்து நிற்கிறது.
1970ல் சீனா, இராணுவ, பொருளாதார தொழில்நுட்ப வளர்ச்சியி னைக் கண்டது. இந்தியா சீனாவிற்கு சமமாக தன்னை உயர்த்துவது அதன் கபட நோக்கங்களில் ஒரு திட்டமாகும். இதற்கு குறுந்துர நெடுந்துார ஏவுகணைகள், ஆளில்லாத விமானங்கள் போன்றவற்றை தயாரித்தல், கடல் படையை கட்டியெழுப்புதல் அணுவாயுத தயாரிப் பினை தொடர்ந்து மேற்கொள்ளுதல் சுயமான இராணுவ தளபாட உற்பத்திகளை செய்தல், போன்ற திட்டங்களை மேற்கொள்வதாகும். எடுத்துக் காட்டாக ஐரோப்பாவிடம் இருந்து பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளின் தொழில் நுட்பங்களை பெறுதல் இஸ்ரேலுடன் இணைந்து இராணுவ உறவை இந்தியா தொடர்ந்தும் வளர்ப்பது. இதன் முன்னேற்ற பாடாகவே இஸ்ரேல் "IAT" நிறுவனத்த்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டமையாகும். இந்தியாவும், ரஷ்யாவும் கூட்டாக இணைந்து ஏவுகளை தயாரிப்பு முயற்சிகளை மேற்கொள்வது இந்தியா தந்திரமான முறையினை கையாண்டு வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதார இராணுவ தொழில் நுட்பங்களை பெற்றுக் கொள்வ தையும் நோக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதனுடாக சீனாவின் பலத்தை எதிர்காலத்தில் இந்தியா தான் எட்டுவதுடன் ஐ.நா வின் அங்கத்துவத்தினை பெற்றுக் கொள்ளுதல் என்பதும் இதன் இலக்
காகும.
எனவே இவற்றை நாம் ஒட்டுமொத்தமாக நோக்கும் போது இந்தியாவின் அணுவாயுத வளர்ச்சியென்பது இந்தியாவை பொறுத்த வரை மிக அவசியமான ஒன்றாக காணப்படுகிறது. தற்போதுள்ள புதிய உலக ஒழுங்கில் தென்னாசிய பிராந்தியத்தில் பலம் பொருந்திய ஒரு நாடாக இந்தியாவால் நிலைநிறுத்துவதற்கும், உலக வல்லரசுகளுடன் இந்தியாவும் ஒரு வல்லமையுடைய அரசை நிலைநிறுத்திக் கொள்வ
(அரசறிவியலாளன் 39 KLDuprig6ör )

Page 34
தென்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது. நீண்ட காலத்துக்கு பின் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கின்ற காங்கிரசின் பலம், பலவீனம் எதிர்கால இந்தியாவை தீர்மானிக்கும் என கருதலாம் இதனை “2010இல் இந்தியா” என்ற இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் நூலி லிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. இவற்றை விட இந்தியாவின் "றோ" (RAW) வின் செயலாளராக இருந்த "ரவீந்திரசிங்" என்பவர் அமெரிக்காவின் முகவராக இருந்து இந்தியாவின் தகவல்க ளையும் இரகசியங்களையும் கொடுத்ததோடு மட்டுமல்லாது தப்பித்துச் சென்று அமெரிக்காவின் பாதுகாப்பிலிருந்து வருவதனால் இந்தியாவின் எதிர்கால திட்டமிடல்களுக்கும், வளர்ச்சிக்கும் அமெரிக்காவால் பல சிக்கல்களை எதிர் நோக்க வேண்டி வரலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எனினும் இந்தியா தனது முன்னேற்றப் பாதையால். கூடிய அளவு பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்ப தோடு, அதேயளவு முக்கியத்தவத்தை இராணுவ தொழில்நுட்பரீதியில் முன்னெடுத்து செல்வதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதென கூறிக்கொள்ள லாம்.
Indian Nuclear Power View
சக்தி I முதலாவது பரிசோதனை Fission Device 18 May 1974 அணு சக்தி - ஒன்று Thermonuclear device 11 May 1998 ஆயதப் சக்தி - இரண்டு Fission Device 11 May 1998 பரிசோ சக்தி - மூன்று Low yield device 11 May 1998 தனை | சக்தி - நான்கு Low yield device 13 May 1998 சக்தி - ஐந்து Low yield device 13 May 1998
Indian Missile Program Missil km (aó.Lổ) Kg (aśl.a6 Date Operational பிருதுவி 150km 1000kg 25 Feb 1988 1995 சகாரிகா 1250km 800kg - -
L66ro 250km -300km 500kg 300km - 350km 500kg
அக்கினி-1 2500km 1000kg May 1989 2000 அக்கினி-III . May 1998 1998 சூரியா 1200km
(அரசறிவியலாளன் 40 Kமயூறநாதன்)

References
1) அ.சி.உதயகுமார், பூகோள ஆதிக்க விஸ்தரிப்பில் ஆயுத உருவாக்கங்களும் தந்திரோபாய தந்திரோபாயக்கல்விக்கான தமிழ் நிறுவனம், யாழ்ப்பாணம் 1991
2) கே.ரி.கணேசலிங்கம். மாறிவரும் புதிய உலக ஒழுங்கு,
தயாளன், றுகடல் ஹேமன்ற், பிரான்ஸ், 2002
3) மனோரமா இயர்புக், இந்தியா, 2004
4) http://www.indiannuclear.com
(அரசறிவியலாளன் 41 Kமயூறநாதன்)

Page 35
சீனாவின் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய ஒரு நோக்கு
A Review of Chinese Foreign Policy
- Kதவலக்சுமி - 2000/A/316
நிலப்பரப்பில் பெரிதும், நிர்வாகச் சிறப்பைக் கொண்டதுமான சீனா 9596960 சதுர கிலோமீற்றர் பரப்பைக் கொண்டது. இன்று 1.3 Billion மக்களைக் கொண்டு உலகின் முதலாவது சனத்தொகையுள்ள நாடாக காணப்படுகின்றது. ஹான்சைனிஸ், கொரியன், மொங்கோலி யன், மஞ்சூரி ஆகிய இனப்பிரிவுகளை உள்ளடக்கியதுடன் 1949ல் குடியரசான சீனா 1954ல் ஒரு அரசியல் அமைப்பு ஒன்றையும் உருவாக் கியது. 1950 பின்னர் அரசியல் பொருளாதார, இராணுவ, தொழில்நுட்பத் துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது 1978ல் சீர்திருத்தம் ஒன்றையும், 2003ல் மீள் சீர்திருத்தம் ஒன்றையும் ஏற்படுத்தியது.
சீனாவின் இன்றைய உயர்வுக்கு காரணமாக அம்சங்களை வரலாற்றாசிரியர்கள் வரிசைப்படுத்தும் போது புதிய தொழில்நுட்ப மேம்பாடு, தொழிலாக்க வளம், சீரான விவசாயம், பரவலான கல்விச் செறிவு, சிறப்பான அரசியல் நிர்வாகம், மதம், கருத்தியல், சகிப்புத்தன்மை போன்றவற்றைக் கூறுகின்றனர்.
சீனாவின் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இரா ணுவ தொழில்நுட்ப வலு வளர்ச்சி அடைந்து வருகின்றது. இன்று மூன்றுவகையான பொருளாதார அமைப்புக்கள் காணப்படுகின்றது.
(அரசறிவியலாளன் 42 Kissisosas

* 18ம் நூற்றாண்டுக்குரிய நாடுதளுவிய மாபெரும் விவசாய அமைப்பு
* 20ம் நூற்றாண்டுக்குரிய நாடுதளுவிய மாபெரும் விவசாய அமைப்பு
* 21ம் நூற்றாண்டுக்குரிய தகவல்புரட்சி, தொழில்நுட்பம் போன்றன
வாகும்.
சீனாவின் வெளிநாட்டுக் கொள்கையினை நாம் மூன்று அடிப்ப டைகளில் நோக்க முடியும் * அரசியல்,
* இராணுவம், * பொருளாதாரம், ஆகியவற்றின் அடிப்படையில் நோக்க முடியும்
சீனாவின் வெளிநாட்டுக் கொள்கையில் அரசியல் ரீதியானதும், இராணுவரீதியானதுமான விடயங்கள் முக்கியம் பெறுகின்றது. இதற் காக மேற்கு நாடுகளுடன் இறுக்கமான தொடர்புகளைக் கொண்டுள் ளது. அதாவது 1972ற்கு பின்னர் ஜப்பான் தனது சிறந்த பொருளாதார கூட்டாளியாக சீனாவைக் கொண்டிருந்தது. அதுவும் குறிப்பாக தொழில் நுட்பம் சார்ந்ததான அரசியலைக் கொண்டிருக்கிறது. மேலும் 1972ன் பின்னர் சீனா ஒரு சோசலிச நாடாக இருக்கவில்லை. காள்மார்க்ஸ் எவ் வாறு தனது சிந்தனையை கொண்டிருந்தாரோ அதேபோல ஒரு நிலை யான தன்மையை சீனா கொண்டிருந்தது. அதாவது சீனர்கள் தங்கள் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு சித்தாந்தத்தினைக் கொண்டிருக் கின்றனர் என்பது முதன்மையானது.
சீனாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் இன்று பொருளாதார ரீதியிலும், தொழில்நுட்ப ரீதியிலும் தொடர்பு பேணப்படுகிறது. இது முழு வதும் முதலாளித்துவம் சார்ந்த மேற்குலகுடன் தொடர்புடைய வெளி நாட்டுக் கொள்கையைக் கொண்டிருந்தது. அத்துடன் 1989ல் இடம் பெற்ற படுகொலையும் மனித உரிமையைப் பேணமுடியாது போனமை யும் அவர்களின் வெளிநாட்டுக் கொள்கையில் பிரச்சினைக்குரியதான ஒன்றாக இருக்கின்றது.
உலகிலுள்ள நாடுகள் ஒவ்வொன்றுடனும் சீனா கொண்டுள்ள தொடர்பினை நோக்கின் முதலில் அமெரிக்காவுடனான உறவு நிலை
(அரசறிவியலாளன் 43 көзөмөoëаш5 }

Page 36
பற்றி நோக்கினால், 1970களின் பின்னர் அமெரிக்காவுடன் சீனா தந்தி ரோபாயமான உறவைப் பேணியது. குறிப்பாக அமெரிக்கா - சீனா ஒப் பந்தத்தில் பின்வரும் அம்சங்கள் குறிப்பிடத்தக்கன.
விவசாய அபிவிருத்தியை தொழில்நுட்ப ரீதியாக மாற்ற வேண்டும் என சீனா கோரியது. சீனாவினது இராணுவத்தை தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சி அடை யச் செய்ய வேண்டும். விஞ்ஞான தொழில்நுட்ப அம்சங்களை கைத்தொழிலிலும், சேவைத்துறையிலும் ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக சீனர்கள் அமெரிக்காவில் கல்விகற்க அனுமதிக்க வேண்டும். உள்நாட்டில் ஏற்படுத்தப்படும் விலைப்பொறிமுறைகளால் அன்னிய நாடுகள் முதலீடு செய்யப்படுதல். சீனாவே உலகில் மிக அதிகமான இராணுவ உறுப்பினர்களைக் கொண்ட நாடாகும். அவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என சீனா கோரியது.
அமெரிக்க ஆளும் வர்க்கத்தினரிடையே சீனா உறவுகள் குறித்து அபிப்பிராயங்கள் இருந்து வந்துள்ளது. ஆனால் சீனாவின் உற வை பலவீனமாக சிலர் கருதியதும் உண்டு. நவீன மயப்படுத்தலுக்கு மேலைத்தேய தொழில்நுட்பமும், உதவியும் சீனாவுக்கு அவசியமானது. இதனால் அமெரிக்கா சீனாவை ஆட்டிப்படைக்கலாம் என எண்ணுகிறது. ஆனால் சீனா தனது தந்திரோபாயமான வெளிநாட்டுக் கொள்கையை வழிநடத்துவதைக் காணலாம். தைவான் விடயத்தில் சீனா யதார்த்த நோக்கில் பரஸ்பரம் புரிந்துகொண்டு நடக்க கூடிய விதத்தில் செயற் படுவதைக் காணலாம். அமைதியான முறையில் தைவானை தாயகத் துடன் இணைக்க முடியும் என்று கூறியது. கடந்த காலங்களுக்கு முன்பு பகிரங்கமாகவே கருத் துக்களை தெரிவித்தது. மேலும் யுத்த தளபா டங்களுக்கு இடம் இல்லாதவாறு தைவான் பிரச்சினையை தீர்ப்ப தற்கான உபாயங்களையும் முன் மொழிந்தது.
(அரசறிவியலாளன் 44 Kaasuisits

சிறுபான்மை மக்கள் வாழும் இடங்களுக்கு வழங்கப்படும் உரி மைகள், சலுகைகள் போல தைவானுக்கும் வழங்கும் என சீனா கூறி யது. அதாவது தைவான் பற்றிய வெளிநாட்டுக் கொள்கை அரசியல் ரீதியாக இருந்தாலும் அது பொருளாதார, இராணுவ நலன்களையும் விருத்திசெய்வதை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா சீனாவுடன் தந்திரோபாய ரீதியான உறவுகளைக் கொண்டிருக்கிறது. கருத்து வேறு பாடுகள் இருந்த போதும், சீனா இந்தியாவுடன் பரஸ்பரம் நல்லுறவை யும், இராஜதந்திர உறவையும் கடைப்பிடித்து வந்துள்ளது. இந்தியா உண்மையாக நடுநிலையிலுள்ள நாடாக இருந்து அணிசேரா இயக் கத்தை பலப்படுத்த வேண்டும் என்பதே சீனா அரசாங்கத்தினதும், சீனா மக்களினதும் விருப்பமாகும். காலம் தாழ்த்தியேனும் இந்திய அரசாங் கம் அதனை உணர்ந்து செயற்படுமானால் இந்திய சீனா உறவுகள் வலுப்பெறுவதற்கு தடையாக இருக்க முடியாது.
சீனாவின் அரசியல் ரீதியான நடவடிக்கையில் ஹொங்ஹொங் உறவு குறிப்பிடத்தக்கது. “ஒரு நாடு இரு அரசாங்க முறைமை” என்ற கோசத்திற்கு இணங்க சீனா - ஹொங் ஹொங் உறவும், இணைவும் 21ம் நூற்றாண்டின் புதிய திருப்பமாகும். இதனால் சீனாவின் எதிர்கால இரா ணுவ, அரசியல் வளர்ச்சி வெளிநாட்டுக் கொள்ளையின் முக்கிய திருப் LLD.T(5b.
இராணுவ ரீதியான விஸ்தரிப்புக்கு சீனாவின் வெளிநாட்டு உற வில் பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்காவின் உறவுகளைக் குறிப்பிட லாம். அது மட்டுமன்றி இம்மூன்று வல்லரசுகளையும் எதிர்த்துப் போராட வேண்டிய தேவை சீனாவுக்கு உள்ளது. இரண்டாம் உலகத்திற்கு சார் பான கொள்கையை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது கொள்கைக் கும் அமுல் படுத்தலுக்கும் இடையே நெருங்கிய தொடர்புண்டு இதன் அடிப்படையில் சீனாவின் வெளிநாட்டுக் கொள்கை அமைகிறது. உலகி லுள்ள எல்லா அரச தலைவர்களின் செல்வாக்கையும் தான் பெற வேண்டும் என்பது சீனாவின் வெளிநாட்டுக் கொள்கையில் முதன்மை யான அவாவாகும். அதாவது 1970கள் வரை உள்நாட்டில் பல நெருக்க டிகளையும் கொந்தளிப்புக்களையும் சீனா கொண்டிருந்தது.
(அரசறிவியலாளன் 45 Ksaloosals

Page 37
* சோசலிசம் சார்பான வெளிநாட்டுக் கொள்கை * கிழக்கு சார்பான வெளிநாட்டுக் கொள்கை
(1972ல் செய்து கொண்ட ஒரு மாற்றம்) * மேற்கு சார்பான வெளிநாட்டுக் கொள்கை போன்று மூன்று வகை யாக அதனை நோக்க முடியும்.
சீனா அரசாங்கம் விண்கலங்களை விண்ணுக்கு செலுத்தி அதன் மூலம் தமது விஞ்ஞான தொழில்நுட்ப இராணுவ நடவடிக்கை களை விஸ்தரித்து வருகின்றது. 2020ம் ஆண்டில் அமெரிக்காவின் 7வது கடற்படைக்கு சவாலாக கூடிய எண்ணிக்கையை கொண்ட கடற்படையை கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டமிடல் களை மேற்கொண்டு அதற்கேற்ற வெளிநாட்டு கொள்கைகளை வகுத்து வருகின்றது.
சீனாவின் வெளிநாட்டுக் கொள்கையில் பொருளாதாரம் மிக
முக்கியமானதாகும். தமது பரந்த எல்லைகளைப் பாதுகாப்பதற்கு நவீன ஆயுதபலம் தேவை என்பதனை நவசினா உணர்கின்றது. 900 வருடங்களுக்கு முன்பு விட்ட தவற்றை நவசினா மீண்டும் விடத்த யாரில்லை எனபது போல் அது அணுஆயுதம், ஏவுகணை மற்றும், தொழில் நுட்பத்தைப் பெருக்குகின்றது. இதற்கும் மேலாக சீனாவின் பொருளதார பலம் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உயர்ந் துள்ளது. உலகின் சக்திமையம் 1985ம் ஆண்டளவில் அத்திலாந்திக் கடலோர அமெரிக்க, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பசுபிக் பிராந்தியத்திற்கு மாறிவிடும் என எதிர்வு கூறப்படுகின்றது. இதனை மேலும் உறுதிப்படுத்துவதாக 1990ம் ஆண்டு தொடக்கம் சீனாவின் பொருளாதார வளர்ச்சி வருடாவருடம் சராசரி 10% - 13% வரை உயர்ந்து வருகின்றது. மனித வர்க்கத்தின் பொருளாதார வளர்ச்சி நான்கு முக்கிய கட்டங்கள் உள்ளடக்கியதாக ஆய்வாளர்கள் இனங் கண்டுள்ளனர் அவையாவன
* கால்நடை வளர்ப்பு
yr 66.8FITuulb
* கைத்தொழில் வளம்
* தகல் தொழில்நுட்பம் என்பனவாகும் (அரசறிவியலாளன் 46 Kதவலக்சுமி

தற்போது சீனா மூன்றாவது கட்டமான கைத்தொழில் வளம் பற்றிய நிலையில் நிற்கின்றது. ஆனால் மேற்கு நாடுகள் குறிப்பாக அமெரிக்கா தகவல் புரட்சியின் அனுகூலங்ககளை அறுவடைசெய்யும் நிலைக்கு வந்துவிட்டது. இவ்வாறான வளர்ச்சியை சீனா காணமுடியுமா னால் 21ம் நூற்றாண்டு சீனாவுக்கு சொந்தம் எனக்கூறலாம். ஏனெனின் சீனாவின் வளர்ச்சி வேகம் அமெரிக்காவினாலும் பார்க்க மிகவும் கூடுதலானது. இதற்கு ஏற்றால் போல தனது வெளிநாட்டு உறவுகளை யும் பராமரித்து வருகின்றது.
சீனா கிழக்காசிய நாடுகளோடு மட்டுமன்றி மேற்காசிய நாடுக ளோடும் தனது வர்த்தகத்தையும், பொருளாதார உறவுகளையும் விருத்தி செய்து வருகின்றது. அமெரிக்காவின் பொருளாதார மந்த நிலை, WTO இல் சீனாவின் வளர்ச்சி நிலை என்பவற்றினால் அமெ ரிக்க பொருளாதாரம் மேலும் ஆபத்தை அடையும் என நம்பப்படுகின் றது. அத்துடன் சீனா 2000ம் ஆண்டில் 80 Billion அமெரிக்க டொலரை வர்த்தக மீதியாக பெற்றமையும் குறிப்பிடத் கூடியதாகும். இது சீனாவின் கைகளில் மூலதனம் திரட்சியடைவதைக் காட்டுகிறது.
சீனாவின் வெளிநாட்டுக் கொள்கை குறிப்பாக பொருளா தாரத்தை வலுப்படுத்துவதற்காக செயற்படுத்தப்படுகின்றது என்பதில் மாற்றமில்லை. ஆனாலும் சீனாவின் பொருளாதாரம் பல்முனைப் போட் டிக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. ஏன் எனின் தற்போது உருவாகி யுள்ள யுரோலாந்து பொருளாதார பிரதேசத்தையும் ஏற்கனவே எதிர் கொண்டுவரும் அமெரிக்க போட்டியையும் தனித்து சமாளிக்க வேண்டி யுள்ளது. யூரோலாந்தும் அமெரிக்காவும் தனது பிரதேசங்களில் முரண் பாட்டைக் கொண்டிருந்தாலும், தமக்கு அப்பாலுள்ள பிராந்தியங்களில் ஒரே விதமான தாக்கத்தினையும் விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடி யன. ஆயினும் இப்போட்டிக்கு மத்தியிலும் சீனா பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்து வருவதனை 21ம் நூற்றாண்டில் நாம் காணக்கூடிய தாக உள்ளது.
(அரசறிவியலாளன் 47 Kதவலக்சுமி)

Page 38
சமகால உலகத்தின் குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளை சீனா கணக்கில் வைத்துக் கொண்டு ஒரு கொள்கையை உருவாக்கி யுள்ளது. அதாவது எதிர்ப்பிலும் ஒருங்கிணையக்கூடியதும் அனைவ ரோடும் உறவைப் பேணக்கூடியதும் ஆகும். அதன் பிரதான நோக்கம் பொருளாதார அபிவிருத்தியாகும். அமெரிக்கா உரத்தகுரலில் உலகத் தின் பலபகுதிகளில் பிரச்சாரம் செய்வதபோல கடந்த சில காலத்தில் அமெரிக்க வர்த்தகத்தினால் சீனா மிகப்பெரிய பயன்எதுவும் பெற வில்லை. தொழில்நுட்பத் தினைப் பரிமாற்றுவதில் அமெரிக்கா தயக்கம் காட்டியே வந்துள்ளது எனவும் கூறியது. உதாரணமாக சீனாவில் குடி சன மதிப்புப் புள்ளி விபரம் தயாரிப்புக்கு கம்பியூட்டிர்களை அமெரிக்கா விற்பனை செய்யத்தயாராகியது. உயர்தரமான தொழில்நுட்பம் பற்றி பேசவேண்டாம் என்றும் அமெரிக்கா கூறியது. இவ்வாறு அமெரிக்கா பல நெருக்கடிகளைக் கொடுத்த போதும் சீனா தனது உறவைப் பாதிக் காது தொடர்ச்சியாகப் பேணிவருவதைக் அவதானிக்கலாம்.
சீனாவின் வெளிநாட்டுக் கொள்கையும், பொருளாதார வளர்ச்சி யும், 21ம் நூற்றாண்டில் அது தனக்கென ஒரு தனியான இடத்தை அமைக்கப் போவதனை கண்கூடாக காணமுடியும். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் நந்திரோபாய நடவடிக்கை களைக் கையாண்டாலும் சீனா அரசாங்கம் அவர்களுடன் சமுகமான உறவைப் பேண விரும்பு கின்றது என்று கூறலாம்.
இவ்வாறாக சீனாவின் வெளிநாட்டுக் கொள்கை ஆரம்ப காலத் தில் சோவியத்யூனியனுடன் உறவைப் பேணினாலும் அது தமக்கு சாத மாக இருக்காது என்பதை உணர்ந்து 1970 பின்னர் மேற்கு நாடுகளோடு அதன் உறவும் 1990 பின்னர் கிழக்கு, மேற்கு ஆசிய நாடுகளோடும் அரசியல், இராணுவ, பொருளாதார உறவுகளையும், கலாசாரமயமாக் கல் உறவை ஓரளவு வரவேற்பதாகவும் அமைந்துள்ளது.
(அரசறிவியலாளன் 48 Kgഖയ്ക്കേ }

References 1) கே.ரீ கணேசலிங்கம், மாறிவரும் புதிய உலக ஒழுங்கு,
தயாளன் றுாடெவ் கேமென்ற், பிரான்ஸ், 2002 ஒக்ரோபர்.
2) சீஹோகான், நவசீனப்புரட்சியின் வரலாறு,
சென்னை புக்ஸ் வெளியீடு, 1985.
3) முதிருநாவுக்கரசு - புதிய சர்வதேச அரசியல் ஒழுங்கு,
தமிழ்தாய் வெளியீடு, 1991.
4) சீனாவின் ஜனநாயகமும் எதிர்காலமும், சவுத் ஏசியன் புக் அன்ட்,
புதிய பூமி வெளியீட்டகம், ஐப்பசி, 1992.
5) பொருளியல் நோக்கு, மக்கள் வங்கி வெளியீடு, கார்த்திகை, 1989.
(அரசறிவியலாளன் 49 Kதவலக்சுமி)

Page 39
சீனா-ஹொங்ஹொங் இணைவு ஓர் அரசியல் வரலாற்றுக் குறிப்பு
China - Hong Kong Integration A Political Historical Note
- G.நளினி - 2000/A/153
சீனா நீண்ட வரலாற்றையும், பெருமையும் உலகின் புகழ் பெற்ற நாகரீகங்களைக் கொண்டதுமான ஆசிய நாடாகும். உலகின் சனத் தொகை ரீதியில் பெரிய நாடாக காணப்படுவதுடன் ஐந்து பெரும் வல்லரசுகளில் ஒன்றாகவும், சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின் உலகின் வல்லரசாகவும், கம்யூனிச நாடாகவும், அமெரிக்காவுக்கு ஆபத்து மிக்க ஒன்றாகவும், இன்று வளர்ந்து வருகிறது. மேலும் சீனா கிழக்காசியா, தென்கிழக்காசியா பிராந்தியங்களுடன் சுமூகமான அரசி யல் உறவைப் பேணுவதுடன் பொருளாதார ஒத்துழைப்புக்களினூடாக அவற்றை இணைத்துக் கொள்ள முயலுகிறது.
பிரித்தானியருடைய பிரித்தாளும் தந்திரம் காரணமாக ஹொங் ஹொங், மக்கோ, தாய்வான் ஆகிய பிரதேசங்கள் சீனாவை விட்டு விலகிச் சென்றன, 1840ம் ஆண்டு (அபின் வர்த்தகத்தின்” போது பிரித்தானியா சீனாவை அளவீடு செய்து கொண்டது) அபின் வர்த்தகத் தால் இரு நாடுகளிடமும் காணப்பட்ட வர்த்தக உறவின்பின் அரசியல் உரிமைகள் கடன் தொகைகள் ஆங்கிலேயரின் தனி உரிமைகள் பற்றிய பிரச்சனைகளால் இரு நாடுகளிடையேயும் காணப்பட்ட உறவு முறிந்து சண்டையிட்டுக் கொண்டன. இறுதியில் இரண்டு முக்கிய உடன் படிக்கைகளை இரு நாடுகளும் செய்து கொண்டன. இந்த உடன்படிக்கையிலுள்ள முக்கிய அம்சங்களாவன.
(அரசறிவியலாளன் 50 Gநளினி

* ஹொங்ஹொங் தீவும் துறைமுகமும் ஆங்கிலேயருக்கு கொடுக்கப் பட்டன. அத்துடன் காண்டன், பூசெள, நிங்போ, அமாய், ஷங்காய், என்ற 5 துறைமுகங்கள் ஐரோப்பிய வர்த்தகத்திற்காக திறந்து விடப்பட்டன. ஹொங்ஹொங் ஆங்கிலேயப் பேரரசுடன் இணைக்கப் பட்டது. ஆங்கில வர்த்தகர் கட்டுப்பாடற்ற வர்த்தக உரிமையை பெற்றனர். இந்த 5 துறைமுகங்களும் ஆங்கில சீனா வர்த்தக உற வின் வளர்ச்சியினால் முக்கியம் பெற்றன.
* சுங்கவரி விதிப்பு முறைகள் ஒழுங்கு படுத்தப்பட்டன அரச சுங்கவரி விதிப்புக்களை பற்றிய ஆய்வுகளையும் அறிவிப்புக்களையும் வெளியிடுதல்.
* KOW - TOW என்ற மண்டியிட்டு வணங்கும் முறை ஒழிக்கப்பட்டு
ஆங்கில அதிகாரிகள் சம உரிமையுடன் நடத்தப்படல்.
சீனா 21 மில்லியன் $ போர் இழப்பீடாக கொடுக்க சம்மதித்தது
சீனா வர்த்தக நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த வர்த்தக முன்னுரிமைகள் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டன.
* கள்ளக் கடத்தலை ஒழிக்க சீனா அரசுக்கு அங்கிலேயர்கள் தங்
கள் ஒத்துழைப்பைத் தரவேண்டும்.
இவ் உடன்படிக்கைக் கேற்ப பிரித்தரியாவின் தொடர்ச்சியான காலணித்துவ மனோபாவத்தால் 1842ல் ஹொங்ஹொங் தீவில் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்தத்தொடங்கியது. எனினும் 1895ல் தான் ஹொங்ஹொங்கை தனது காலணித்துவ நாடாக மாற்றி அமைத்துக் கொண்டது.
மாசேதுங் தன் தலைமையிலான கலாசாரப் புரட்சியின் போதும் அதன் இறுதி வெற்றியின் போதும் ஹொங்ஹொங்கையும் தாய்வானையும் தம்மிடம் பிரித்தானியா மீண்டும் தரவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார். தொடர்ச்சியாக டெங்சியா-ஓ-பிங் தலைமை
(அரசறிவியலாளன் 51 Gristics

Page 40
யிலான சீன மத்திய கம்யூனிஸ்ட் கட்சி 1978 டிசெம்பர் நடாத்திய மத்திய குழு கூட்டத்தில் ஹொங்ஹொங்கைப் பிரித்தானியாவிடமிருந்து மீளப்பெற்றுக் கொள்ளுதல் என்ற தீர்மானத்தினை நிறைவேற்றிக் கொண்டது. இதற்கமைய 1984 ஜூலை 23ம் திகதி டெங்சியா-ஓ-பிங் தலைமையிலான சீனக்குழு - ஹொங்ஹொங் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறையுடன் இணைந்து சில நிபந்தனைகளின் அடிப்படையில் மீள இணைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் இடம்பெற்றது. ஆனால் சீனா ஹொங்ஹொங் இடையே உள்ள பிரதிநிதிகள் ஒரு இணக்கப்பாட்டுக்குவர சீனா பின்வருமாறு ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தது அதாவது.
"Weare pursuingapolicy of- one Country, two systems more specifficeally, this means that within the people's republic of china the mainland with its one billion, people will maintain the socialist system, while Hongkong and Taiwan
continue under the capitalist system"
(ஈழநாடு 2003, ஆகஸ்ட் 08)
என்ற அடிப்படையிலான சுயாட்சி அதிகாரத்தினை நிர்வாக ரீதியாக வழங்கி வருவதாக அதாவது சீனா தொடர்ந்தும் சோசலிச பொருளுரதாரத்தினை அடிப்படையாகக் கொண்டு காணப்படும் என வாக் குறுதி அளித்தது. இந் நிபந்தனைகளின் அடிப்படையில் 1984 ஜூலை 31ம் திகதி டெங்சியா-ஓ-பிங்கும், அன்றைய பிரித்தானிய பிரதமர் மாகிரட் தச்சரும் பேச்சு வார்த்தைகளில் (கிட்டத்தட்ட 22 தடவைகள்) ஈடுபட்டதன் பயனாக பிரித்தானியா ஹொங்ஹொங் தீவினை சீனாவிடம் கொடுக்க தீர்மானித்தது. ஹொங் ஹொங்கைப் பொறுப்பெடுக்க விழைந்த சீனா, ஹொங்ஹொங்கிற்கு ஏனைய தனது பிரதேசங்களை விட மிகக்கூடுதலான அதிகாரங்களை வழங்கி சமச்சீரற்ற முறையில் அதிகாரங்களை ஹொங்ஹொங்கிற்கு கொடுத்துள்ளது.
(அரசறிவியலாளன் 52 Gநளினி)

@5606OT (Special Administrative, Region) SAR saj,85, அதாவது விசேட நிர்வாக பிராந்தியமாக சீனா ஹொங்கொங்கினை வரையறுத்துக் கொண்டு வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புத் தவிர்ந்த அனைத்து சுயாதீக்கத்தினையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது. இந்த SAR திட்டத்தின் அடிப்படையில் ஹொங்ஹொங் அதன் பிரதேசத்திற்குள் நிறைவேற்றதிகாரம், சட்டவாக்க அதிகாரம், நீதி யாட்சி அதிகாரம், நிதியியல் அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டது.
சீனாவின் விசேட நிர்வாகப் பிராந்தியமாகிய ஹொங்ஹொங் அதன் மக்களாலேயே ஆளப்படுகிறது. ஆனால் சீனாவின் பிரதி நிதியாக ஹொங் ஹொங்கில் விசேட ஆளுனர் இருக்கிறார். ஐந்து விசேட அம்சங்களின் அடிப்படையில் SAR விசேட நிர்வாகப் பிராந்தி யமாக ஹொங்ஹொங் இயங்குகிறது.
* ஹொங்கொங்கின் வெளியுறவும் பாதுகாப்புக் கொள்கையும் தவிர
அனைத்திற்கும் SARபொதுவாகும். SAR முற்று முழுதாக ஹொங்ஹொங் பிரஜைகளால் நிர்வாகிக்கப் படுவதாக இருக்கும். பிரித்தானியா குடியேற்ற காலத்திலிருந்த குடியியல் மற்றும் குற்ற வியல் சட்டங்கள் தொடர்ந்தும் அமுல்ப்படுத்தப்படும். சீனாவிற்கும் - ஹொங்ஹொங்கிற்கும் இடையில் புதிய வர்த்தக பொருளாதார, கலாச்சார, நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படும். ஹொங்ஹொங், சீனா விசேட நிர்வாகப் பிராந்தியமாக மாறியதன் பின்னரும், ஹொங்ஹொங்கிலிருக்கும் பிரித்தானிய நலன்கள் பாதிப் படையாது என்ற உத்தரவாதம்.
இவ்வாறு சீனா, ஹொங்ஹொங்கிற்கு இடையிலான அதிகாரப் பகிர்வு "One State two systems" இரண்டு முறைகளை உள்ளடக்கிய ஒரு நாடு என்ற அடிப்படையிலேயே தாய்வானையும் சீனாவுடன் இணைக்கவும் சமாசத்தீர்விற்கும் உதவலாம் என எதிர்பார்க்கப்படுகி
Bg5).
(அரசறிவியலாளன் 53 Gross

Page 41
இதற்கு இடையே 1993 டிசெம்பர் 9ம் திகதி சீனா ஹொங் ஹொங் தீவுகளின் (நிர்வாகம்) நிலமை சம்மந்தமான தனது நிலைப் பாட்டை பின்வருமாறு பிரகடனம் செய்தது.
“1997களின் பின் ஹொங்ஹொங் தீவுகளின் நிர்வாகம் அரசியல மைப்பு, ஒழுங்குகள் சம்மந்தமாக ஆராய்வதற்கென அமைக்கப் பட்ட சீனாவின் ஆரம்ப செயற்பாடு தனது (China Preliminary Working Committee) வேலையைத் துரிதப்படுத்தும்”
இது பிரித்தானிய ஆளுநர் திரு பேற்றன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றாலும் இதன் மூலம் சீனா ஒரு தலைப்பட்சமாக இத்தீவுகளை கைப்பற்றத் துணிந்துள்ளது. என்பதை கண்டு கொள்ளலாம். அத்துடன் திரு.பேற்றன் எந்த அரசியலமைப்பு மாற்றங்களைப் புகுத்தினாலும் அவையாவும் 1997ம் ஆண்டிற்குப் பின் மறு பரிசீலனை செய்யப்படும் என்பதும் தெட்டத் தெளிவாகின்றது. இந்தச் சீனாவின் பிரகடனத்தை அடுத்து தீவின் பங்குச் சந்தை முன் எப்போதும் இல்லாதவாறு 5% உயர்ந்தது தொடர்ந்து திரு.பேற்றன் அரசியலமைப்பு மாற்ற பிரேரணையை முன்வைத்த போது பங்குச் சந்தை 6% உயர்ந்தது. இந்த நிலையில் இக்காலப் பகுதியில் ஹொங் ஹொங்கின் எதிர் காலம் சீனாவில் தங்கியிருந்தமையால் இத்தீவின் தலைவர்கள் சீனா ஆரம்ப செயற்குழுவுடன் நேரடியான தொடர்புகளை வைத்திருந்தனர். இதற்கு காரணமாக
* சீன ஆரம்ப செயற்குழுவின் தீர்மானம் தீவுகளின் எதிர்காலத்தை
பாதிக்கும்.
* சீனாவை எதிரியாக கணிப்பது ஆபத்தானது
* பிரிட்டனும், அதன் பிரதிநிதியையும் ஆரம்ப செயற்பாட்டுக் குழு
வை இகழத் தொடங்கியமை
* சீனாவும் தன் பங்கிற்கு இறங்கி வந்து தனது ஆரம்ப செயற்குழு வில் தீவு மக்களுக்கு இடங்கொடுத்து அவர்களின் ஆதரவைப் பெற்றது.
(அரசறிவியலாளன் 54 Gissisi

போன்றவற்றை நாம் சுட்டிக் காட்டிக் கொள்ளலாம் இந்நிலை யில் 1997ம் ஆண்டு ஜூலை மாதம் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயர் சீன அதிபர் ஜியாங்ஜமினிடம் ஹொங்ஹொங் தீவுகளை ஒப்ப டைத்தனர். அவ்வாறே 1999ம் ஆண்டு மார்க்கோவும் சீனாவும் இணைந்து கொண்டது. எனினும் சீனாவுடன் ஹொங்ஹொங் இணைந்து கொண்டமை யால் சீனாவில் பாரியளவு மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த இரு நாடுகளிடையே நிலவும் உறவு காரணமாக சீனா இன்று தனது வருடாந்த பொருளாதார அபிவிருத்தி மற்றும் பொருளா தார வளர்ச்சி வீதம் இரட்டிப்படைந்தமைக்கு ஹெங்ஹொங் இன் தொழில்நுட்ப அறிவும் அனுபவமும் சீனாவின் மூலவளத்துடன் ஒன்றி ணைந்தமையே காரணம் எனப்படுகிறது.
உலகில் மிகப் பெரிய வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளில் 8வது நாடாக ஹொங்ஹொங் காணப்படுவதால் இவ் இணைவா னது சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கும் தொழில்நுட்ப அபிவிருத் திக்கும் பாரிய உந்து சக்தி என்பது வெளிப்படை
இந்நிலையில் சீனாவின் முதலீடு இவ் இணைவிற்குப் பின் வருடத்திற்கு 40 சதவீதத்தால் முன்னைய ஆண்டுகளை விட அதிகரி த்து வந்துள்ளதையும் நாம் இங்கு நோக்க வேண்டும். மேலும் சீனா தனது நிலையை ஸ்திரப்படுத்தி கொள்ளவும் வர்த்தக விஸ்தரிப்பிற்கும் ஏற்ற வகையில் சர்வதேச நிதியை மையமாக ஹொங்ஹொங்கினை செயற்படவைத்துள்ளது. மக்கள் சீனாவிற்கும் ஹொங்ஹொங் நிதி முகாமைத்துவ அதிகாரசபைக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் கூட்டுறவையும் மிக நல்ல முறையில் ஒழுங்கமைக்கப்பட்டதுடன் கொங்கொங் நிதி முகாமைத்துவ அதிகாரசபை தன் துணிவின் அடிப் படையில் செயலாற்ற பூரண சுதந்திரம் வழங்கப்பட்டாலும் மக்கள் சீன வங்கி நிதியில் தொடர்பான விடயங்களில் மேற்பார்வை செய்து வந்
莎@l...
மேலும் சீனா ஹொங்ஹொங்கினை சுதந்திர கப்பல் துறைமுக மாக பிரகடனப்படுத்தியுள்ளதன் மூலம் சந்தை சக்திகளுக்கு சர்வதேச
(அரசறிவியலாளன் 55 Gissists

Page 42
ரீதியில் ஊக்கமளித்து. சீனா தனக்கு வேண்டிய வெளிநாட்டு வர்த்தக் கத்தினை நிறைவேற்றிக் கொள்ளும் அதே வேளையில் ஹொங்ஹொங் சுதந்திர வர்த்தகத்தினையும், துறைமுக வர்த்தகத்தினையும் வசதி னையும் பேணுகிறது. அது மட்டுமன்றி கப்பல் போக்குவரத்து மற்றும் கடல் வாணிபத்தை விட ஆகாய போக்குவரத்திற்கும் அதன் மூலமான வாணிபத்திற்கும் சீனாவிற்கு உதவியளிக்கிறது. இதனால் பாரிய பொரு ளாதார பலத்தை ஹொங்ஹொங் சீனாவிற்கு கொடுத்து வருகிறது.
இதன் காரணமாக சீனாவின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஹொங்ஹொங் மிகவும் காத்திரமான பங்காளி யாக தன்னை சீனாவுடன் இணைத்துள்ளது. இன்ற்ைய சீனா சோசலிசப் பொருளாதார முறைமையும், முதலாலித்துவப் பொருளாதார முறை மையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் இணைந்த வகையிலான பொருளா தார கட்டமைப்பினை கொண்டிருப்பது இன்று காணப்படும் உலகளா விய பொருளாதார மந்தத்திலும் சீனாவின் பொருளாதாரம் இரட்டை இலக்கத்தில் காணப்படுகின்றது எனலாம்.
இன்றைய புதிய ஒழுங்கின் கீழ் நிகழும் வல்லாதிக்கப் போட் டியில் அதனை மாற்றியமைக்கும் வல்லமை சீனாவுக்கே உண்டு என்ப தாலும், கிழக்காசிய, தென்கிழக்காசிய நாடுகள் தம்பிராந்தியங்களின் சமூக ஒருமைப்பாடும், அரசியல் ஐக்கியமும். அமெரிக்க தலையீட்டி னால் துண்டாடப்படக்கூடாது என்ற காரணத்தால் சீனாவின் வளர்ச் சியை விரும்புவதாலும் சீனா இன்று ஒரு வல்லரசாக எழுச்சி அடைந் துள்ளது. இதற்கு சீனா ஹொங்ஹொங் இணைவு உலகிலுள்ள அதிகா ரப் பகிர்வு முறைக்கெல்லாம் புதுமாதிரியாகத் தென்படுகிறது எனலாம்.
(அரசறிவியலாளன் 56 G56ssif

References
01) கே.ரீ.கணேசலிங்கம், மாறிவரும் புதிய உலக ஒழுங்கு,
தயாளன் கேமென்ற் பிரான்ஸ், 2002 ஐப்பசி
02) வி.யசினேவ், இஸ்திபனேவ், சீனாவும் எல்லைத்தகராறும்,
சென்னை, 1981.
03) s 6)85s) 6 IT, 1994.
04) ஏசியா வீக், 1994.
05) The New Encyclopedia, Britannica, Volume - 16, Chicago, 1990.
06) Jean, Chesneaux, The People's Republic (1949-1976).
U.S.A., 1979
(அரசறிவியலாளன் 57 Gநளினி)

Page 43
ஈராக் மீதான போர்கள் (199, 2008) ஓர் ஒப்பீட்டு நோக்கு
War on Iraq (1991,2003); a Comparative View
- N.கரண் - 2000/A/42
அறிமுகம்
வரலாற்றுக்கு முற்பட்ட நாகரீகங்களையும், வரலாற்றுப் பெரு மைகளையும் கொண்ட "மொசப்பத்தேமியா” இன்று ஈராக் என அழைக் கப்படுகிறது. மேற்கு ஆசியாவின் தனித்துவங்களையும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும், இறுக்கமாகப் பேணும் ஈராக் 1638 - 1918 காலப்பகுதிவரை ஒட்டமன் (Ottaman) பேரரசின் பகுதியாகக் காணப்பட் டது. 1918ல் பிரித்தானியா - பிரான்ஸ் மேற்கொண்ட "Sykes-Picot” ஒப்பந்தத்தின் பின்னர் ஈராக்கின் முழுப்பிரதேசங்களும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டில் வந்தது.
அக்காலத்தில் Faisal-Ibn-Hussein ஆட்சியினால் விரக்திய டைந்த பிரித்தானியர் Nuri-Al-Said ஐ ஆட்சியில் அமர்த்தினர். 1933 - 1939 காலப்பகுதியில் Faisan இன் மகனாக Ghazi இன் ஆட்சியும், பின் னர் Rashid Ali யின் ஆட்சியும், 1947 - 1958 வரை பிரித்தானிய ஆதர வாளரான Nuri-Al-Said ன் ஆட்சியும் காணப்பட்டது. 1958ல் ஈராக் சுதந்திர அரசாகி அரசியல் அமைப்பு ஒன்றையும் உருவாக்கிக் கொண் L-35l.
ஈராக்கில் 1963ல் Aref ஜனாதிபதியாக விளங்கினார் 1968 - 1979 BTGuogög6id Hasan-Al-Barr Safu quid 1979 - 2003 660DJ Sadam
Hussein ஆட்சியும் காணப்பட்டது. 1957ம் ஆண்டில் தனது 20ம் வயதில் (அரசறிவியலாளன் 58 Nagar

ஈராக்கின் புவியியல் வரைபடம்
http://www.mapoferaq.com என்ற இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது

Page 44

"Bath” கட்சியில் இணைந்த சதாம் 1968ல் கட்சியில் ஏற்பட்ட அரசியற் புரட்சியினால் தலைமைப்பீடம் மாற்றியமைக்கப்பட்ட வேளை கட்சியின் முக்கிய உறுப்பினராக விளங்கினார். 1979ல் ஜனாதிபதியாகப் பதவி ஏற்கும் வரை உப அதிபராக காணப்பட்டார். கட்சியின் அரசியல் யாப்புக்கு இணங்க 40 வயது நிரம்பாமல் ஜனாதிபதியாக அனுமதிக்க முடியாது எனும் நிலையில் நாட்டின் அதிபராக "அகமட் அசன் அல்வக் கத்” தெரிவு செய்யப்பட்டார். சதாமுக்கு வயது வந்ததும் அகமட் தாமாகவே பதவியில் இருந்து விலகி சதாமுக்கு வழிவிட்டுக் கொடுத் தார் எனவும் கூறப்படுகிறது.
ஈரக்கின் புவியியல் அமைவிடத்தை நோக்கும் போது தரையி னால் எல்லைகளை வரையறுத்த பிரதேசமாக உள்ளது வடக்கே துருக்கியையும், கிழக்கே ஈரானும், தென்கிழக்கே குவைத்தும், தென் மேற்கே ஜோர்டானும் வடமேற்கே சிரியாவும் காணப்படுகின்றது. இதன் பரப்பளவு 438446 k.m? அதன் தலைநகர் பக்தாத் ஆகும். முக்கிய பொருளாதாரமாக பெற்றோலியம் (மத்திய கிழக்கில் இரண்டாவது எண் ணெய்வள நாடு) பேரிஞ்சு (உலக உற்பத்தியில் 80%) நெல், கால் நடை, போன்றனவும் காணப்படுகிறது.
மக்கள் தொகைக் கணிப்பீட்டின் படி பெரும்பான்மையான முஸ்லீம்களைக் கொண்டிருந்தாலும் 5%ற்கு அதிகமான கிறிஸ்தவ, யூத இனத்தவர்கள் வாழ்கின்றனர். “சியா" முஸ்லீம் மக்கள் 60%, குர்திஸ் மக்கள் 20%, சுனி முஸ்லீம்கள் 14% காணப்படுகின்றனர். சிறு பான்மையான சுனி முஸ்லீம்களின் வழித்தோன்றலே Sadam-Hussein ஆவார். 1979ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சதாம் 1980ல் ஈரானுடன் எல் லைப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டும், 1986ம் ஆண்டு குர் திஸ் முஸ்லீம் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கையை நிராகரித் ததும். இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியமையும் 1990ல் குவைத்துடன் ஏற்பட்ட முரண்பாடும் 1991, 2003களில் அமெரிக்காவுடனான போரும் சதாம் ஹ"சைனின் வரலாற்றில் முக்கிய அம்சங்களாகும்.
(அரசறிவியலாளன் 59 Napsi

Page 45
குவைத்மிதான ஈராக்கின் ஆக்கிரமிப்பு
சதாமின் கட்டளைக்கு இணங்க 1990ம் ஆண்டு 12 ஒகஸ்ட் குவைத்தின் எல்லைக்குள் ஈராக்படை காலடி எடுத்துவைத்தது. இதற்கு சிரியா தவிர ஏனைய நாடுகள் மெளனம் சாதித்தன. இதனை அமெ ரிக்கா உட்பட மேற்கு நாடுகள் "அப்பட்டமான ஆக்கிரமிப்பு” எனக் கூறின. ஆனால் குவைத்தைக் கைப்பற்றுவதற்கு ஈராக் கூறிய கார ணங்கள் தனித்துவமானது அவற்றை விரிவாக நோக்குவோம்.
மத்திய கிழக்கின் எண்ணெய் வள நாடுகளின் அமைப்பான ஒபெக் அமைப்பின் கொள்கைகளையும், விதிகளையும் மீறிச் செயற் பட்டது. அதாவது ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய கோட்டாவுக்கு (பங்கு) அதிகமாகப் பெற்றோலியத்தை அமெரிக்க கம்பனிகளினால் உற்பத்தி செய்யப்பட்டது. மேலும் வருடாந்தம் 50 பீப்பாக்களுக்கு அதிகமாக பெற்றோலியத்தை உற்பத்தி செய்கின்றது. இது 1986களின் பின்னர் அதிகமாக உற்பத்தி செய்தமையைக் காணலாம்.
குவைத்தின் ஆளும் வர்க்கத்தின் இவ்வாறான செயலினால் உலக சந்தையில் பெற்றோலியத்தின் கேள்வி வீழ்ச்சி அடைந்தமையி னால் உறுப்பு நாடுகளுக்குப் பாரிய நட்டம் ஏற்பட்டது. ஒரு பீப்பாவின் விலை 7$ (அமெரிக்க டொலரினால்) குறைவடைந்தது. இதன் காரண மாக ஈராக்கிற்கு 16Billion $ நட்டம் ஏற்பட்டது. இவ்வாறான செயற் பாடுகள் மீளவும் நடைபெறாமல் தடுப்பதற்காகவும் குவைத்தினைக் கைப்பற்றியது என ஈராக் கூறுகின்றது.
ஈரானும், ஈராக்கும் எல்லை யுத்தங்களில் ஈடுபட்டுக்கொண்டி ருந்த சமயத்தில் ஈராக் - குவைத் இரு நாடுகளின் எல்லைப் பிரதேசங்க ளில் பஸ்ரா, அபடான் பகுதியில் இருந்து அதிகளவான பொற்றோலி யத்தைக் களவாடியது. எவ்வளவு பெற்றோலியம் எனக் கூற முடியாது போனாலும் 2.5 Billion $ பெறுமதிக்கு (அண்ணளவாக) அதிகளவா கும். எனவும் இதனை "அப்பட்டமான சுவீகரிப்பு” என ஈராக்கூறியது.
(அரசறிவியலாளன் 60 Nausir

சதாம் ஹ"சைன் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து ஈரானுடன் எல்லை முரண்பாட்டைக் கொண்டிருந்தது. இக்காலத்தில் இருந்து சவுதி அராபியா, குவைத், ரஷ்யா போன்றன நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி செய்தது. இவற்றில் குவைத் வழங்கிய 15 Billion$கடனை ஈராக் இரத்துச் செய்யுமாறு வேண்டிய கோரிக்கையை குவைத் நிராகரித்தது மட்டுமன்றி விரைவில் கடனைச் திருப்பிச் செலுத் துமாறு பணித்தமையையும், அதனால் திண்டாடிய ஈராக் குவைத்தை கைப்பற்ற காரணமானது.
குவைத் அரசாங்கம் அமெரிக்காவின் கைப்பொம்மையாகவே நெடுங்காலமாக இருந்து வந்தது. அதுமட்டுமன்றி அமெரிக்க கம்பனிக ளும், அமெரிக்காவின் நிதி நிறுவனங்களின் உதவியாலும் வளர்ச்சி பெற்று வருகின்றமையால் குவைத் அரசாங்கம் இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும், இஸ்லாமிய மதத்தையும், கலை கலாசாரப் பாரம்பரியங் களையும் சிறுகச்சிறுக அடகு வைத்து வருகின்றமையினால் தேசத்தின் துரோகி என்று ஈராக் சினமுற்றமை.
ஆங்கிலேயரின் ஆட்சிக்காலம் வரையும் குவைத் ஈராக்கின் ஒரு பகுதியாகவே காணப்பட்டது. ஆனால் சமீபத்திலே தனிநாடாக பிளவுபடுத்தப்பட்டது. இவ் குவைத் ஈராக்கின் 19வது மாநிலம் ஆகும். அதனை மீளப்பெறும் உரிமை தாய் நாட்டுக்கு உண்டு எனும் வரலாற் றினை ஆதாரப்படுத்தி குவைத் மீது ஆக்கிரமிப்பை மேற்கொண்டது.
இவ்வாறான காரணங்களை ஈராக் கூறினாலும் உண்மையாக குவைத்தின் எண்ணெய் வளத்தினை அபகரிப்பதும் ஈராக்கின் நிலப்பரப் பினை அதிகரிப்பதும், மேலை நாட்டின் செல்வாக்கை குவைத்தில் ஊடுருவுவதை நிறுத்தி மேற்கு ஆசியாவில் ஈராக் பிராந்திய வல்லரசாக் குவதும் சதாம் ஹஉசைன் ஒரு "Super Hero” ஆக மிளிருவதனையும் அடிப்படையாகக் கொண்டே குவைத்தைக் கைப்பற்றியது. அதன் மூலம் ஈரானை தோற்கடிப்பதும் குட்டி சண்டியன் இஸ்ரேலுக்கு பாடம் புகட்டுவதுமே உண்மையான காரணமாகும்.
(அரசறிவியலாளன் 61 N.கரன்)

Page 46
ஈராக் மேலே கூறிய காரணங்களை கூறினாலும் மேற்கு நாடு கள் இவற்றை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. அவை கூறும் காரணங் களோ வேறுமாதிரிக் காணப்பட்டது. ஈரான் - ஈராக் சண்டையின் போது ஈராக்கிற்கு ஏற்பட்ட 90 Billion $ நட்டத்தை ஈடுசெய்வதற்காக எண் ணெய் வளமான குவைத்தைக் கைப்பற்றியதுடன், சவுதி அராபியா வையும், கைப்பற்றினால் உலக எண்ணை வளத்தின் 20% யும் "ஒபெக்” அமைப்பினுடைய 60% எண்ணை வளத்தையும் தமது கட்டுபட் பாட்டில் கொண்டு வருவதனால் ஆசியாவில் பெரும் பணக்கார நாடாக மாறும் எண்ணமும், மத்திய கிழக்கில் அதிகூடிய ஆயுதபலமான நாடாகி ஏனைய நாடுகளை அடிமைப்படுத்தி பிராந்திய வல்லரசாக உருவாகும் எண்ணமும் கொண்டிருப்பதன் விழைவாகவே ஆக்கிரமிப்புச் செய்தது எனக் கூறினர்.
குவைத்தின் மன்னர் "அமீரின்” வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்கா தலைமையிலான NATO படைகளைக் குவிக்க முன்னர் ஈராக்கை குவைத்தில் இருந்து வெளியேறுமாறு பணித்தது. ஆனால் ஈராக் அதற்கு சம்மத்திதாலும் இஸ்ரேல்-பலஸ்தீனப் பிரச்சினையின் உண்மைத்தன்மையை குவைத்-ஈராக்குடன் ஒப்பீடு செய்தது. ஆனாலும் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுப்பதற்கான உண்மைக் காரணங்க ளாக பின்வருமாறு அமைகின்றன.
* குவைத்தின் எண்ணை வளத்தை முழமையாக பெற்றுக் கொடுத்த லும், குவைத் அரசாங்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப் பதும்
* இஸ்லாமிய அடிப்படை வாதத்தை சீர்குலைத்து, ஈராக்கை இஸ்லா மிய பிராந்தியத்தில் இருந்து தனிமைப்படுத்தி சதாமை இராணுவ பொருளாதார ரீதியாக வலுக்குன்றச் செய்தல்.
* இஸ்ரேலுக்கு வரும் ஆபத்தை முன்கூட்டியே தடுத்து நிறுத்துவதும்
புதிய ஆயுதங்களைப் பரிசோதனை செய்யும் களமாக பரீட்சித்தல்.
(அரசறிவியலாளன் 62 Nasusi )

* அமெரிக்க உற்பத்தி பொருளுக்கான பெரிய சந்தைவாய்ப்பினை பெற்றுக் கொள்ளுதல். போன்றவற்றின் அடிப்படையில் யுத்தம் ஒன்றை அமெரிக்கா ஆரம்பித்தது.
1991ண்போரினால் ஏற்பட்டவிளைவுகள்
வளைகுடாப் போர் பல நேரடி விளைவுகளை ஏற்படுத்திய போதும், மறைமுகமாகவும் பல தீய விளைவுகளை ஏற்படுத்தியது. அவ் வாறான விளைவுகளாக.
சதாம் ஹ"சைனின் ஆட்சியின் பின்னர் எல்லைப் பிரச்சினை யில் ஒரு தசாப்தகாலமாக காலத்தினை வீணடித்த "ஈரானும், ஈராக்கும் சுமுகமான உறவை வளர்த்துக் கொண்டது” அதாவது குவைத்துடன் ஏற்பட்ட முறுகல் காரணமாக அமெரிக்காவின் சர்வதிகார ஆக்கிரமிப் பின் போது ஈராக், ஈரானை நோக்கி "அன்புச் சகோதரனே” என கைநீட் டியமை ஈரானுக்கு பேரதிர்ச்சியையும், ஆறுதலையும் வழங்கியது. இத னால் இரு நாடுகளும் நண்பர்களாக முடிந்தது எனலாம்.
"குட்டிச் சண்டியன்," "பக்தாக்தின் கசாப்புக் கடைக்காரன்” என மேற்குலகு பரிகாசம் செய்த முன்னாள் ஈராக்கின் அதிபர் “சதாம் ஹசைன் புகழ் ஆசியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் பரவியது” அதாவது அமெரிக்காவின் சனாதிபதிகளையும் விட பிரபல்யமானவராக மக்கள் மத்தியில் காணப்பட்டார். இது தலைமைத்தவத்தை விளம் பரப்படுத்தும் செயலாகக் காணப்பட்டது.
ஈராக்கின் பொருளாதார வலிமையைக் குறைக்கும் நோக்கில் *UNO” தாபனத்தினால் "பொருளாதார தடை விதிக்கப்பட்டது” அத னால் பொருளாதார, வர்த்தக ஒப்பந்தங்களோ, கூட்டுறவையோ எந்த நாடும் பேண முடியாது தடைசெய்யப்பட்டது. இதற்கு இலங்கை பாரிய எதிர்ப்புக்களை காட்டியது. ஏன் எனில் இலங்கையின் தேயிலையை ஈராக் கொள்வனவு செய்தமையாகும். இத்தடை காரணமாக ஈராக்கிற் குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
அரசறிவியலாளன் 63 Nager

Page 47
"மேற்கு ஆசியாப் பிராந்தியம் ஒரு "கொதிநிலைப் பிராந்திய மாக" மாற்றப்பட்டது. எந்த நேரமும் குண்டு வெடிப்புக்களும், அயல் நாடுகள் சந்தேக கண்ணோடு ஒவ்வொரு நாட்டையும் நோக்கின. அது மட்டுமன்றி யுத்த காலத்தின் போது சம்பந்தப்பட்ட நாடுகளின் "யுத்தச் செலவீனங்கள் அதிகரிக்கப்பட்டது” அதாவது குவைத், ஈராக் ஆகிய இரு நாடுகளதும் சொத்துக்கள் அளிக்கப்பட்டு பொருளாதார மந்தம் ஏற்பட்டது.
சர்வதேச சந்தையில் பெற்றோலியத்தின் விலை அதிகரிக்கப் பட்டமையினால் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்குப் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. ஈராக்கின் எண்ணெய் விற்பனை செய்வ தற்கு தடைவிதிக்கப்பட்டமையினால் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது. அது மட்டுமன்றி எண்ணெய் உற் பத்தி செய்யும் உற்பத்தி நாடுகளுக்கு "ஒபெக் அமைப்பு" மட்டுப்பாடான தடைகளையும் விதித்தது.
அமெரிக்காவினது எண்ணங்கள் மத்திய கிழக்கில் நடைமு றைப்படுத்த முடிந்தமை. அதாவது சவுதி அராபியா, குவைத், துருக்கி, ஈரான் போன்றவற்றின் மீது செல்வாக்குச் செலுத்த முடிந்தமையினால் 9GLDfds35M6 hair us)(35fluids 35lbu66l356ft (Multi Nation Companies) இங்கு முதலீட்டை மேற்கொள்ளவும், இராணுவ வலிமையை அதிகரிக்க வும் முடிந்தது.
அமெரிக்கா இவ்வாறாக பல யுத்தங்களை செய்த வேளையி லும் பல்வேறு நாடுகளின் எதிர்ப்புக்களையும், பல நாட்டு மக்களுடைய அவப்பெயரையும் சம்பாதித்தது. அமெரிக்க எதிர்ப்புவாத கொள் கைக்குச் சார்பாக பயங்கரவாத, தீவிரவாத அமைப்புக்களும் தோற்றம் பெற்றது. இவ்வாறான நீண்டகால விளைவுகளும் போரினால் ஏற்பட்டது. ஆனால் மீண்டும் ஈராக்கின் அதிபராக சதாம் ஹசைனே 2003வரை காணப்பட்டார்.
(அரசறிவியலாளன் 64 Nasus

ஈராக்மீதான இரண்டாவது போர்
ஈராக் மீதான போர் நிகழ்த்தி ஒரு தசாப்தம் கழித்து மீண்டும் இரண்டாவது போரை அமெரிக்கா வலிந்து மேற்கொண்டது. ஈராக் மீது போரைத் திணிப்பதற்காக ஜோர்ஜ் புஷ் போலிக் காரணங்களை முன் வைத்து 2003ம் ஆண்டு 20 மார்ச் ஈராக்கின் எல்லைக்குள் அமெரிக்க கூட்டுப்படைகள் காலடி எடுத்து வைத்தது. இப் போருக்கான நியாயங் களை அமெரிக்கா கூறும் போது பின்வருமாறு காணப்பட்டது.
ஈராக் உயிரியல் இரசாயன ஆயுதங்கள் வைத்திருக் கின்றமை இதனால் அந்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே ஆபத்தானது என்றும், 1986ம் ஆண்டு குர்திஸ் முஸ்லிம் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கையை முறியடிப்பதற்கு இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி அழித்தமையும், 1991ம் ஆண்டு சதாம் ஹசைன் கூறியதா வது "இஸ்ரேல் அணு ஆயுதம் கொண்டு தாக்கினால் இரசாயன ஆயு தங்களைக் கொண்டு அழித்துவிடுவேன்” என மிரட்டியமையும், காரணம் காட்டியது.
சதாம் ஹைைசனுக்கும் உலகின் பயங்கரவாதிகளுக் கும் இடையே நெருக்கமான உறவு உள்ளது. இஸ்லாமிய தீவிர வாத அமைப்புக்கள் பலவற்றுடன் தொடர்பு உள்ளது குறிப்பாக அல்கெய்தா அமைப்பை வளர்ப்பதாகவும் ஒசாமா பின்லேடனுக்கு தஞ்சம் கொடுப்பதாகவும் உலகுக்கு கூறியது. இதனை இன்னும் வலுப்படுத்தும் வகையில் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த வேளை ஒசாமாவின் கருத்துக்களை ஆதாரப்படுத்தியது.
மேற்கு ஆசியாவில் சதாமின் எழுச்சி ஆபத்தானது. சதாம் ஹசைனின் இராணுவ வலிமையால் அயல் நாடுகளை கைப்பற்றும் அபாயம் உள்ளது எனவும், இதனால் அயல்நாடுகளின் இறைமைக்கு ஏற்படும் அச்சுறுத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியது.
(அரசறிவியலாளன் 65 N.கரன்)

Page 48
"ஏவுகணை தொழில்நுட்பத்திற்குப் புத்துயிர் அளித்த மை" ரஷ்யாவின் அணுஆயுத தளபாட தொழில்நுட்ப உதவியினால் குறுந்துார, நெடுந்துார (ஸ்கட்) ஏவுகணைகளை உற்பத்தி செய்வதனால் உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாகக் காணப்படுகின்றது.
ஈராக்கிற்கு ஜனநாயக முறைமை புகுத்தப்பட வேண் டும் உலகில் பெரும்பாலான நாடுகளில் ஜனநாயக முறைமையிலான ஆட்சி நிலவும் போது ஈராக் முதலாக சில நாடுகளில் சர்வாதிகார ஆட்சி காணப்படுகின்றது. அதனால் வாக்குரிமை முறைமை, தேர்தல் முறை, பிரதிநிதித்துவ ஆட்சி முறைமை, மக்களின் அரசியற் பங்க ளிப்பு. கட்சி முறைகளின் வளர்ச்சி போன்றவற்றை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும் அமெரிக்கா கூறியது.
ஈராக் மக்கள் ஏனைய நாட்டு மக்களைப் போல் அல்லாது சர்வாதிகாரியான சதாமின் சர்வாதிகார ஆட்சியில் அடிமையாக வும், பேசா மடந்தைகளாகவும் வாழ்கின்றனர். அவர்கள் அரசிய லில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பையும், சுதந்திரத்தையும் பெற்றுக் கொண்டுக்க வேண்டும் எனக் கூறிய போதிலும் மறைமுகமாகப் பல உள்நோக்கங்கள் அமெரிக்கா கொண்டிருந்தது.
சரிந்துவரும் அமெரிக்கப் பொருளாதாரத்தை சீராக்கு தல். அதாவது 1999ன் பின்னர் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி வீதம் படிப்படியாக குறைவடையத் தொடங்கியது. September 2001 இன் பின்னர் அதன் வளர்ச்சி வீதம் 0.5% ஆகவும் 2003ல் 0.4% ஆகவும் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. இதனால் ஈரர்கின் பிரதேசங்களை கைப்பற்றி அதன் எண்ணெய் வளத்தினைக் கொள்ளையடிப்பதே பிர தான நோக்கமாகும்.
சதாம் ஹைைசனையும் அவரது சந்ததியினரையும் முற்றாகக் கைதுசெய்தல் அல்லது அழித்தல். அதன் மூலம் அவரது ஆட்சியை ஈராக்கில் இருந்து அப்புறப்படுத்தி அமெரிக்காவுக்கு சார்பான ஆட்சி இயந்திரத்தை அமர்த்துதல்.
(அரசறிவியலாளன் 66 Nasgos

குவைத்தில் உள்ள அமெரிக்க கிராமங்களை விஸ் தரிப்பதுடன் ஈராக்கிலும் புதிய அமெரிக்க கிராமங்களை அபிவிருத்தி செய்தல் இதன் மூவம் அமெரிக்க மயமாக்கல் கொள்கையை மேலும் விரிவாக்கு தல்.
இஸ்லாமிய அடிப்படை வாதக் கொள்கையினையும் அதனைக் கட்டி காத்துவரும் சதாம் ஹசைனின் ஆத்மீகப் பலத்தினையும் உடைத்தெறிந்து மக்களில் இருந்து ஓரங்கட்டி கொடியவன் சதாம் என்று பழிசுமத்தி அமெரிக்கா நற்பெயரைப் பெறுதல்.
புதிய உலக ஒழுங்கு அமைப்புக்கு ஈராக்கும் அதன் ஆட்சியாளர்களும் தடையாக இருக்கின்றமையினால் யுத்தம் ஒன்றின் மூலம் அவர்களைத் தோற்கடித்து தனது அதிகாரப் பலத்தை வெளி உலகத்திற்கு காட்டுவதும், தமது நவீன ஆயுதங்களை விளம்பரப்படுத்தும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதும் பிரதான நோக்க மாக இருந்தது.
மேற்கு ஆசியாவில், இராணுவ ரீதியாகவும், ஆயத பலத்திலும் பலமான நாடாக விளங்குவது இஸ்ரேலும், ஈராக்கும் ஆகும். இஸ்ரேலி னால் ஈராக்கின் இராணுவ பலத்தினை முறியடிக்க முடியாது என உணர்ந்தமை. அதன் மூலம் ஈராக் முடிவெடுக்கும் ஏதேச்சை அதிகா ரத்தைக் கட்டுப்படுத்தல்.
யூரோலாந்தின் எழுச்சி காரணமாக அமெரிக்க டொலர் வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. பெரும் சந்தை வாய்ப்பை கொண்ட தேசமாக யூரோலாந்து வளர்ச்சி பெறுவதனால் மூலதனத் திரட்சியும், இராணுவப் பலமும் அதிகரிப்பதனால் அமெரிக்கா எதிர்பார்க்கும் "Unipower Sys tem" குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்துவிடும் என்பதனால் அமெரிக் காவுக்குத் தேவையான சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளுதல்.
அமெரிக்காவின் சார்பு அரசாங்கத்தினை ஏற்படுத்தி மேற்கு ஆசியப் பிராந்தியத்தினையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பத னால் உலகின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல்.
அரசறிவியலாளன் 67 Nausir

Page 49
நவீன ஆயதங்களை விளம்பரப்படுத்துவது மட்டுமன்றி, ஆயுதங் களை பரீட்சித்துப் பார்க்கும் பரிசோதனை நிலையமாக ஈராக்கினை தேர்ந்தெடுத்தமையும் அமெரிக்காவின் மதி நுட்பத்தையும், கபட எண் ணத்தையும் காட்டுகிறது. இவ்வாறான பல உள்நோக்கங்களில் சிலவற்றை அடைந்தாலும் பலவற்றை பூரணமாக எட்டுவதற்குப் பல சவால்களையும் அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஐ.நா சபையின் அறிக்கையையும் மீறி பிரித்தானியவுடன் இணைந்து மே 2003ல் போரை முடிவுக்கு கொண்டுவந்ததாக கூறினா லும் யுத்தத்தின் பின்னரே அதிகளவு சிப்பாய்களை இழந்துள்ளது. 45 நாடுகளின் ஆதரவு இருந்தாலும் பலகோடி மக்களது எதிர்ப்புக்களை அமெரிக்கா சம்பாதித்துக் கொண்டது உண்மையாகும்.
ஈராக்கின் நிர்வாகம் ஈராக்கியரிடம் 2004 ஜூலை முதல் வாரத்தில் ஒப்படைப்பதாக கூறிய போதும் தேர்தல் நடாத்த முடியாத நிலையில் இரகசியமாக நிர்வாகம் 28 ஜூன் 2004ல் ஒப்படைக்கப் பட்டது. ஆனால் மீண்டும் 2005ல் தேர்தல் நிகழ்த்துவதாக கூறப்பட்டது. மேலும் சதாமை ஈராக் நீதிமன்றமே விசாரணை செய்ய வேண்டும் எனும் கபட நாடகம் அமெரிக்கா காட்டுகிறது. ஏனெனில் சதாமை அமெரிக்கா கொலைத்தீர்ப்பு வழங்காது ஈராக் நீதிமன்றம் மூலமாக செயற்படுத்தி அமெரிக்கா தாம் நற்பெயரை பெறுவதே உள் நோக்கமாகும்.
இரண்டாம்கட்டப் போரின் விளைவுகள்
முதலில் நிகழ்ந்த போரின் விளைவுகளையும் விட இரண்டாவது
தடவை அமெரிக்கா மேற்கொண்ட போரினால் சர்ச்சைக்குரிய பல
விளைவுகளையும், நீண்டகால விளைவுகளையும் ஏற்படுத்தியது.
ஐக்கியநாடுகள்தாபனம் காலாவதியாகிவிட்டமை
ஐ.நா. சபையின் உறுப்பு நாடொன்றின் மீது யுத்தம் ஆரம்பிப்ப தாயின் நிரந்தர உறுப்பு நாடுகள் (பாதுகாப்புச் சபையில்) அனைத்தும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஆனால் இச்சட்ட மூலத்தை பிரான்ஸ் கடுமையாக எதிர்த்ததுடன், ரஷ்யா, சீனா ஆகியனவும் எதிர்ப்புக்க
(அரசறிவியலாளன் 68 Nags

ளைக் காட்டியது. ஆனாலும் இதனை மீறி யுத்தம் ஆரம்பித்தமை ஐ.நா தாபனத்தின் சட்டத்தை மீறிய செயலாகும். எனவே ஐ.நா சபையின் எதிர்காலம் நிரந்தர உறுப்பு நாடுகள் மூன்றிலுமே தங்கியுள்ளதைக் அவதானிக்கலாம்.
ஒவ்வொரு தேசியத்தின் இறைமையும் கேள்விக்குறியானது
ஒவ்வொரு நாட்டினதும் தேசிய இறைமையின் மீது வேறுபாடு கள் செல்வாக்குச் செலுத்தக் கூடியதாக அமெரிக்காவினதும், பிரித்தா னியாவினதும் செயற்பாடுகள் காணப்பட்டது. உயிரியல் இரசாயன ஆயுதங்களை வைத்திருந்தமைக்காக ஈராக்கின் இறைமை பறிக்கப்பட்
L-gl.
இதனால் அமெரிக்காவுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட சிரியா, லிபியா, வடகொரியா போன்றவற்றின் இறைமையும் பறிக்கப்பட்டாலும் கூட எதிர்த்துக் குரல் எழுப்ப எந்தநாடும் திராணி அற்றதாகவே உள்ளன. ஆனால் அமெரிக்காவிடம் உள்ள கொடிய ஆயதங்கள் பற்றி கேள்வி எழுப்ப முடியாத புதிய இறைமைக் கோட் பாடு தோன்றியுள்ளது.
நவகாலணித்துவத்தின் சுரண்டல்
ஐரோப்பிய காலணித்துவத்தின் தொடர்ச்சியாக அமெரிக்கா வின் காலணித்துவம் நவகாலணித்தவமாக வளர்ச்சி பெற்றது. 1990களின் பின்னர் உலக ஒழுங்கில் ஏக வல்லரசாக விளங்கி உலக மயமாக்கல் சித்தாந்தத்தின் அடிப்படையில் பொருளாதார காரணிகளி னால் அரசியல் சமூக, கலாசார உறவை வலுவாக்கிய அமெரிக்கா போலிச்சாட்டுக்களை முன்வைத்து தமது குடியேற்றங்களை வலுப் படுத்தி வருகின்றது.
அமெரிக்காவுக்கு எதிரான இஸ்லாமியதீவிரவாதம்
வரலாற்று ரீதியாக கிறிஸ்தவ-இஸ்லாமிய மத பூசல்கள் இன்று
பரிமானம் பெற்று அமெரிக்காவுக்கு எதிரான கலாசாரப் போரில் இஸ்லா
மியர்கள் எதிர்கொள்கின்றனர். முஸ்லீம்களின் அடிப்படைவாத கொள்
(அரசறிவியலாளன் 69 Nausir

Page 50
கையை சீர்குலைக்க அமெரிக்கா ஆரம்பத்தில் இருந்து முயன்று வந்துள்ளது. இந் நூற்றாண்டில் அப்கானிஸ்தானில் மேற்கொள்ளும், சீர ளிவுகளும், ஈராக்கில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளாலும் சினமுற்ற இஸ்லாமிய அமைப்புக்கள் எதிர்ப்புக்களைக் காட்டி வருகின்றது.
ஸ்திரமற்றஅரசியல்பிரதேசமாக ஈராக் உள்ளமை
யுத்தத்தின் பின்னர் ஈராக் மட்டுமல்ல மேற்கு ஆசியாவே கொதி நிலை கொண்ட பிராந்தியமாக மாறியுள்ளது. சாதாரணமாக கடத்தலும், மிரட்டல்களும், கற்பழிப்புக்களும், குண்டு வெடிப்புக்களும், திவிரவாதி களின் தாக்குதலும், தாராளமாக நிகழ்கின்றது. இது அமெரிக்காவின் பொம்மை அரசு இருக்கும் வரைக்கும் குறைவு இருக்காது.
மனிதஉரிமைகள்மதிக்கப்படாததன்மை
நீதிமன்றதீர்ப்புக்களும், நீதி அமைப்புக்களும் நடுநிலை நீங்கி இராணுவ பலத்தின் பக்கமும், பொருளாதார வளர்ச்சியின் பக்கமுமே சாய்துள்ளது. உயிர் பெறுமதியற்ற பொருளாக காட்சியளிக்கின்றது. சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரியான நீதிமுறைகள் இன்று காணப்படு கிறது.
மக்களின் இருப்புதோல்விகண்டுள்ளது
பெரும்பான்மை மக்களின் விருப்பமே ஜனநாயகம் என மேற்கு நாடுகள் கூறுகின்றன. மேற்கு நாடுகளின் விருப்பத்தை மத்திய கிழக் கில் பூரணப்படுத்த முடியாமையினால் யுத்தத்தின் மூலம் அதனை அடைய முயற்சித்துள்ளது. இன்று மக்களுக்காக அரசாங்கம் எனும் நிலைமை மாறி அரசாங்கத்திற்காக மக்கள் என்ற சிந்தனை சில நாடுக ளில் வளர்ச்சி பெற்றுவருகின்றது.
“ஒபெக்*அமைப்பில் அமெரிக்காவின்செல்வாக்கு
மத்திய கிழ்க்கின் எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான
ஒபெக் அமைப்பில் ஈராக்கிற்கு பதிலாக அமெரிக்காவை இணைக்கு
மாறு அமெரிக்காவின் இராஜாங்கத்துறை அமைச்சர் "கொலின் பவல்”
(அரசறிவியலாளன் 70 Nagsir )

முன்வைத்தார். இன்று அமெரிக்காவின் புதிய மாநிலமாக ஈராக் காணப் படுவதால் அமெரிக்காவின் செல்வாக்கு ஒபெக் அமைப்பில் நிலைநிறு த்தப்படுமானால் எதிர்காலத்தில் அமெரிக்காவின் செல்வாக்குக் கட்டுப் பட்டதாக விளங்கினாலும் ஆச்சரியப்படுவதாக இல்லை.
அமெரிக்காவின் உதவிவறியநாடுகளுக்கு இல்லாமல் போதல்
அமெரிக்கப் பொருளாதாரம் 1999ன் பின்னர் வீழ்ச்சி அடைந்து வருவதனால் வறிய நாடுகளுக்கான நன்கொடைகள் குறைக்கப்பட்டன அத்துடன் 2001ன் தாக்குதலின் பின்னர் 0.5% காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி இரண்டு நாடுகளின் யுத்தத்தின் பின்னர் 0.4% சரிவடைந்து வருகின்றது. இதனை அமெரிக்கா பொருளாதார நெருக்கடியைச் சந் திக்க வேண்டியுள்ளது.
இவ்வாறாக அமெரிக்கா ஈராக்கை இராணுவ ரீதியாக அடக்கி ஒருக்கப்படும் அதே வேளை சதாம் ஹ?சைனையும், இடைக்கால நிர்வாக சபையினையும் ஈராக்கிடம் ஒப்படைத்த அதே வேளை ஈராக்கிய இராணுவம் அமெரிக்க துருப்புக்களை நாளுக்கு நாள் அழித்துக்கொண்டு வருகின்றது. இதனால் அமெரிக்கா ஒரு புறம் உலக மக்களின் எதிர்ப்பையும், மறுபுறம் இராணுவரீதியான நெருக்கடியையும் சந்திக்க வேண்டியுள்ளது சதாம் தாமே இன்னும் ஈராக்கின் ஜனாதிபதி என்றும் ஜோஜ் புஷ் ஒரு குற்றவாளி என்றும் ஆவேசத்துடன் கூறியி ருப்பது ஒரு சதாம் “சகலகலா வல்லவர்” என்பதை நிலைநாட்டுகின்றது.
அமெரிக்க இராணுவம் 14 இலட்சம் படைகள் ஈராக்கில் இருந்த போதிலும் சிவில் அரசாங்கத்தை ஏற்படுத்த முடியாது திணறுகின்றன. அதனால் அப்படைகளை அங்கேயே நிலையாக நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் சதாம் ஈராக் மக்களை அமெரிக்காவுக்கு எதிரான புனிதப்போருக்கு ஒற்றுமையாக அணிதி ரண்டு வரவேண்டும் என அண்மையில் அறைகூவல் விடுத்துள்ளார். இது சதாமின் தளராத மனவுறுதியை காட்டுகின்றது.
(அரசறிவியலாளன் 71 Neusă

Page 51
References
01)
02)
03)
04)
05)
06)
07)
08)
09)
10)
11)
The Europa world Yearbook, Volume – 1, 1999. 40th Edition.
Newsweek, International News magazine, March, April, 2003.
Times, International Magazine 22th December 2003.
அ.சி.உதயகுமார், இன்றைய வளைகுடாப் போர், தந்திரோபாய கற்கைகளுக்குரிய தமிழ் நிறுவனம்,1991.
க.நவம், வளைகுடாப் போர் "உண்மைகளின் மெளன ஊர்வலங் கள்” சர்வதேச அரசியற் கட்டுரைகள், 1991.
கே.ரீ.கணேசலிங்கம், "மாறிவரும் புதிய உலக ஒழுங்கு” தயாளன் றுாடல் ஹெமன்ற், பிரான்ஸ், 2002.
வாழ்வியற் களஞ்சியம், தொகுதி - 4, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1972.
மனோரமா இயர்புக், தமிழ்நாடு, இந்தியா, 1999, 2001, 2003, 2004
இந்தியருடே, தமிழ்நாட்டு தேசிய நாளிதள், இந்தியா, சித்திரைவைகாசி, 2003, தை, மாசி, 2004.
தமிழ் உலகம், "அனைத்துலக தமிழ் சஞ்சிகை”, லண்டன் சித்திரை 2003, வைகாசி, 2004.
கே.ரீ.கணேசலிங்கம், ஈராக்போர் உலக அரசியலில் ஏற்படுத்திய தாக்கம். கருத்தரங்குத் தொடர் (சித்திரை 2003)
(அரசறிவியலாளன் 72 Nகரன்)

õj600L 9600õ (3õJ"J(b ஓர் அறிமுகம்
An Introduction to the Theory of Right of Self-Determination
- S.ap LeonT
2000/A/250 ஒரு சமூக அரசியலமைப்பு என்ற ரீதியிலே ஒரு தேசம் தன் இருப்பை நிலைநிறுத்த சுயநிர்ணய உரிமை அவசியமானது. ஒரு தேசத்துக்கு அரசாக அமையவும் பொருத்தமான இடத்தில் பிரிந்து போகவுமான உரிமையை அது குறிக்கிறது. அரச வரம்புக்குள் தேசங் களை ஒன்றிணைக்கவும், தொடர்ந்தும் கூடி வாழவும் சுயநிர்ணயம் அவசியம். "சுய நிர்ணயம்" என்பது "ஒருவர் தனது தலைவிதியை சுய மாகத் தீர்மானித்தல்" என்று பொருள்படும் இங்கு தலைவிதி என்பது எல்லாவற்றிலும் உயர்ந்ததாக உள்ளதும், எல்லா விடயங்களைத் தீர்மானிக்க வல்லதுமான அரசியல் தலைவிதியைக் குறிக்கும். சுயநிர் ணயம் என்பது அனைத்தையும் சுயமாக நிர்மாணிக்கும் ஆற்றலைக் கோருவது. இதில் யார் எந்த நிறத்தான் எந்த மதத்தான், எந்த இனத் தான் ஆள்வது என்பதை குறித்து சுயநிர்ணயத்தை திரிபுபடுத்த முடி
u Tg5.
சுயநிர்ணயத்தை ஒரு நாடு அல்லது ஒரு இனம் கோரும் போது, சொந்த மக்களின் சுயநிர்ணயத்தை தீர்மானிக்கும் வகையில் சொந்தப் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அந்நியனுக்குச் சேவை செய்தல், மற்றும் சிறுபான்மை இனங்களை எதிரியாகக் காட்டுவது சுயநிர்ணயமல்ல. "சுயநிர்ணயம்” என்பது, "சொந்த பொருளா தாரத்தை, சொந்த தேசிய வளத்திலிருந்து நிர்மாணிக்கவும், அதை மக்களிற்கு மட்டும் பகிர்ந்தளிப்பதையும் உள்ளடக்கமாகக் கொண்டது இந்த சொந்த தேசிய வளம் சார்ந்த பொருளாதாரக் கட்டமைப்புக்குள்
(அரசறிவியலாளன் 73 Saggusson

Page 52
ஒரு குறித்த மொழிபேசுகின்ற மக்கள் கூட்டத்தையும். அந்த நிலப்பரப் பின் மேல் நிலவும் ஆட்சி, சொந்தப் பண்பாடு என்பவற்றைக் கொண்டே சுயநிர்ணயம் என்பதைத் தெளிவாக வரையறை செய்யலாம்.
"பேராசிரியர் யாங்ஹாய்” சுயநிர்ணயம் என்பது பற்றிக் குறிப்பிடும் போது சுயநிர்ணயம் என்பது
"மனித உரிமைகளை அனுபவிப்பதற்கு ஓர் அடித்தளமாகும். அது மீறப்பட்டால், மற்ற உரிமைகளும் மீறப்படுகின்றன. என்று பொருளாகும். சுயநிர்ணயம் மீறப்படும் பொழுது அது மனித உரிமை மீறலாகக் கருதப்படும்” என்றார்.
"கிர்கிஸ்” என்பவர், சுயநிர்ணய உரிமையின் பல முகங்களுள் பின்வருவனவற்றைக் கூறுகிறார்.
"கூட்டமைப்புக்களுள் சுயாட்சிப் பிரதேசங்களில் இருப்பது போல, ஆள்புல எல்லைகளால் அல்லது பொதுவான இனக்கு ழும, மத, மொழி அம்சங்களால் பிணைக்கப்பட்ட குழுக்களின் பிரிவினைக்கு குறைந்த வரையறுக்கப்பட்ட சுயாதீன உரிமை உண்டு”
"சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் ஒப்பந்தம் உறுப்புரை 27இலும், தேசிய அல்லது இனத்துவ மதமொழிச் சிறுபான் மையினரின் உரிமைகள் பற்றிய பொதுச் சபையின் 1992ஆம் ஆண்டு பிரகடனத்தினாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டது போல ஒரு பெரிய அரசியல் அலகுக்குள் வாழும் சிறுபான்மையி னரின் உரிமைகளாகும்.
சுயநிர்ணய உரிமை மக்களின் விருப்பு, சம்மதம் என்ற இரண் டிலும் தங்கியுள்ளது. ஏனெனில் மக்கள் விருப்பம் இன்றி சுயநிர்ணயம் என்பது ஓர் உரிமையாகத் தோன்ற முடியாது.
சுயநிர்ணயம் மூன்று வழிகளில் பூரணத்துவம் பெறுகிறது. அவை * நிலைத்திருக்கும் உரிமை: அரசுகள் வெளித்தலையீடு இன்றி சுதந்
திரத்துடனும், இறைமையுடனும் நிலைத்திருத்தல்
(அரசறிவியலாளன் 74 s.ஷர்மிலா )

* அபிவிருத்தி செய்யும் உரிமை: அரசுகள் தன்னை அனைத்து வழியி
லும் அபிவிருத்தி செய்யும் உரிமை
* பாதுகாக்கும் உரிமை: அரசுகள் தாம் மேலாக மதிக்கும் உரிமை கள், மரபுகள், பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாக்கும் உரிமை.
சுயநிர்ணய உரிமையின் தோற்றம்,வளர்ச்சி
எந்த ஒரு சமூகப் பிரச்சினையை ஆராயும் போதும் அதைத் திட்ட வட்டமான வரலாற்று எல்லைகட்குள் ஆராய வேண்டும், என்ற மார்க் ஸிஸ அடிப்படையில் சுயநிர்ணயத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை விளங்கிக் கொள்வதும், அதைப் புரிந்து கொள்ளவும். சரியாகப் பிரயோகிக்கவும் உதவியாயிருக்கும். சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு 18ம் நூற்றாண்டில் மறுமலர்ச்சிக் கால சிந்தனையாளர்களின் சிந்தனை யில் தோன்றிய ஒன்றெனக் கூறப்படுகின்றது. இவர்களது சிந்தனைகள் ஏகாதிபத்திய சின்னங்களான குடியேற்ற வாதத்துக்கும், கொடுங்கோல் முடியாட்சிக்கும் எதிராக அப்போது மேற்குலகில் கிளம்பியிருந்த உணர் வுகட்கு வலுவூட்டுவனவாக அமைந்தன. இதன் விளைவாக அமெரிக்க சுதந்திரப் புரட்சியும், பிரெஞ்சு புரட்சியும் ஏற்பட்டன. அமெரிக்க சுதந் திரப் புரட்சியின் விளைவாய் உருவான அமெரிக்க சுதந்திரப் பிரகட னம், சுயநிர்ணயக் கோட்பாட்டு வளர்ச்சியின் ஒரு மைல்கல் ஆகும்.
தோமஸ் ஜெபர்சனால் வரையப்பட்ட இப் பிரகடனத்தின் முற்பகுதி "மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கும் அதனைப் பெற்றுக் கொள்வதற் காக போராடுவதற்கும் உள்ள உரிமையைக் குறிப்பிடுகிறது. இதன் தாக்கம் பிரெஞ்சிலும் எதிரொலித்ததன் விளைவாக "பிரெஞ்சுப் புரட்சி” ஏற்பட்டது. தொடர்ந்து உருவான "மனிதனதும் குடிமகனதும் உரிமை கள்” என்ற பிரகடனத்தில் "நீதியின் பால் செயற்படாத அரசாங்கத் துக்கு எதிராகப் போராடிப் பிரிந்து செல்வதற்கான உரிமை” என சுயநிர் ணய உரிமையை உள்ளடக்கியிருந்தது.
இவ்வாறு தோற்றம் பெற்ற சுயநிர்ணய கோட்பாட்டை மேலும்

Page 53
வலுப்படுத்தியவர்களாக, மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், ரோசாலக்சம் பெக், ரொஸ்கி போன்ற பலரைக் குறிப்பிடலாம் ஒவ்வொரு தேசிய இன த்துக்கும் சுயநிர்ணத்துக்கான ஜனநாயக உரிமை மறுக்க முடியாதது என்பதே தேசியப் பிரச்சனையில் மார்க்சிச-லெனினிச-ஸ்ராலினிசக் கோட்பாட்டினடிப்படையாகும். லெனின்.
"மார்க்ஸிச கொள்கைத் திட்டப்படி தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையென்பதற்கு அரசியல் சுயநிர்ணயம், தேச சுதந்திரம், புதிய நாடொன்றாக உருப்பெறுதல் தவிர வேறு எத்தகையை அர்த்தம் கிடையாது” என்றார்.
லெனின் “தேசங்களின் சுயநிர்ணய உரிமை” என்ற கட்டுரையிலே பின்வரு மாறு கூறுகின்றார்.
... தேசங்களின் சுயநிர்ணய உரிமை என்றால் அந்நிய தேசிய அமைப்புக்களிலிருந்து இந்த தேசங்கள் அரசியல் ரீதியில் பிரிந்து போவதும், ஒரு சுதந்திர தேசிய அரசு உருவாதல் என்று பொருள்” என்றார். 1917இல் ஒக்டோபர் புரட்சியின் பின்னர் வெளியிடப்பட்ட "ரஷ் யாவினது தேசங்களின் உரிமைகள் பிரகடனம்" சோவியற் அரசின் தேசிய இனக்கொள்கைகளின் கோட்பாடுகளைப் பின்வருமாறு வகுத் ჭნჭ5l.
"எல்லா தேசிய மற்றும் மத சார்பான தனிச் சலுகைகளும் தடைக் கட்டுப்பாடுகளும் ஒழிக்கப்படுதல்; ரஷ்யாவிலுள்ள எல்லா தேசங்களும் சமமானவை; அரசுரிமை வாய்ந்தவை; பிரிந்து சென்று ஓர் சுதந்திர அரசு அமைக்கப்படுவது உள்ளிட்ட சுயநிர்ணய உரிமை அவற்றுக்கு உண்டு;
ஆட்சி மாற்றத்தை வேண்டி நின்றவர்கள் ஏதோ ஒரு விதத்தில் சுயநிர்ணய உரிமை என்ற விடயத்தைத் துணைக்கழைக்க வேண்டி யிருந்தது இவ் வகையித்தான் லெனினும் அமெரிக்க ஜனாதிபதி வுட்றோவில்சனும் சுயநிர்ணய உரிமை பற்றிக் கருத்து தெரிவித்திருந் தனர். காலணித்துவ ஆட்சிக்கும் தேசிய ஒடுக்குதலுக்கும் உட்பட்ட
(அரசறிவியலாளன் 76 S.ஷர்மிலா

நாடுகள் தமது விடுதலைக்காகப் போராடத் தொடங்கிய காலத்தில் ஆளும் வர்க்கத்தின் தேசியவாத உணர்வுகளை முதன்மைப்படுத்திய சமூக ஜனநாயகவாதிகளும் இடது சாரிகளும் சுயநிர்ணயத்தைத் திரிபுபடுத்த முற்பட்டனர். இதையொட்டியே லெனின் "சுயநிர்ணயம் என் றால் பிரிந்து போகும் உரிமையின்றி வேறல்ல" என்றார்.
பிரிந்து போகும் உரிமையின் அங்கீகாரம் பிரிவினையை ஊக்கு விக்கும் நோக்கை உடையதல்ல மாறாக அது ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் சுயவிருப்பின் பேரில் ஒன்றாக வாழும் வாய்ப்பைப் பலப்படுத்துதல் ஆகும். இதன் காரணமாகவே சுயநிர்ணய உரிமை என்பது பிரிவினையே என்று கூறுவோர். சுயநிர்ணய உரிமை என்றதன் கருத்தை திரிக்கிறார்கள் அதாவது ஒன்றை செய்யம் உரிமையை நிர்ப் பந்தமாக மாற்றுகிறார்கள் இது லெனினுடைய அடிப்படை நோக்குக்கு எதிராக விளங்குகிறது.
லெனின் சுயநிர்ணய உரிமை என்பதற்கு சிறந்த கோபாட்டு வடி வம் கொடுத்தாலும் ஸ்டாலினும் அதற்கு தனித்துவமான வரையறை கொடுத்துள்ளார். "தேசமொன்று தனது வாழ்வினை சுயாட்சி வழிகளில் அமைத்துக் கொள்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளது. பிரிந்து போகும் உரிமை கூட அதற்கு உண்டு ஆனாலும் சுயாட்சி அல்லது பிரிவினை என்பது எல்லா இடங்களிலும் எப்பொழுதுமே தேசமொன்றின் மக்கள் கூட்டத்தில் பெரும்பான்மையானவர்களுக்கு அதாவது உழைக் கும் மக்களுக்கு நன்மை பயப்பது என்பதால் எல்லாச் சந்தர்ப்பத்திலும் அது அங்ங்ணம் செய்ய வெண்டுமென்பதும் இல்லை” என்று விளக்கியி ருந்தார். ரொஸ்கி குறிப்பிடும் போது “தேசங்கட்கிடையே சமாதானம் நிலவுவதற்கு தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை இருத்தல் வேண்டும்” என்றார்.
1908ல் லக்சம்பேர்க் எழுதிய தேசிய இனப்பிரச்சினையும் சுயாட்சி யும்” என்ற கட்டுரையில் சுயநிர்ணய உரிமை ஒவ்வொரு தேசிய இனத் தினதும் பிரிந்து செல்லும் தேசிய வாதத்தை ஆதரிப்பதாகும். என்று குறிப்பிட்டார் இவர் 1915இல் எழுதிய ஒரு துண்டுப் பிரசுரத்தில் "மக்கள்
sig யலாளன் 77 saglion

Page 54
தொகுதி ஒவ்வொன்றுக்கும் சுதந்திர உரிமையும் தத்தமது தலைவிதி யைத் தாமே கட்டுப்படுத்தும் சுதந்திரத்தையும் சமவுடமை வாதம் வழங் கிறது” என்றார்.
அமெரிக்க பிரெஞ்சுப் புரட்சியில் ஆரம்பித்த அல்லது தோற்றம் பெற்ற சுயநிர்ணயம் மார்க்சிச அறிஞர்களின் கருத்துக்களால் ഖജ பெற்று பின்னர் சர்வதேச சங்கம், ஐக்கிய நாடுகள் அமையம் போன்ற வற்றில் சட்ட அந்தஸ்தைப் பெற்றது. முதலாம் உலக மகாயுத்தத்தின் முடிவில் அப்போதய அமெரிக்க ஜனாதிபதி வூட்றோ வில்சன் அவர்க ளால் பதினான்கு அம்சத்திட்டமொன்று வகுக்கப்பட்டது. இத்திட்டத்தில் புதிதாக உருவாகிய தேசங்களினது மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டது. ஆயினும் வில்சன் எடுத்த பெருமுயற்சி வெற்றியளிக் காத வகையில் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை அங்கீகரிக்க மறுத்தது. 2ம் உலக மகாயுத்தத்தின் பின் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபை சுயநிர்ணய உரிமையை மேலும் வலுப்படுத்தியது.
சுயநிர்ணயஉரிமையும் சர்வதேச சட்டங்களும்
சர்வதேச சட்டத்தின் மூலங்களில் முக்கியமானது சுயநிர்ணயம் ஐக்கிய நாடுகள் சபை அங்கத்துவ நாடுகளாலும், அதனுடைய பிரதேச வாரியான நிறுவனங்களாலும் உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்கள், உடன் படிக்கைகள், சமவாயங்கள், பிரகடனங்கள் போன்றனவாகும். இத்த கைய சர்வதேச சாதனங்களில் 1966இல் நிறைவேற்றப்பட்டு 1976இல் நடைமுறைக்கு வந்த அரசியல் மற்றும் குடியியல் உரிமைகளுக்கான சர்தேச இணைப்பு ஒப்பந்தம், மற்றும் பொருளாதார சமூக கலாசார உரிமைகட்கான சர்வதேச இணக்க ஒப்பந்தம் என்ற இரண்டும் சுயநிர் ணய கோட்பாட்டைப் பொறுத்தவரை முக்கியமானவை.
மனித உரிமைகள் தொடர்பான இரு சர்வதேச இணக்க ஒப்பந் தங்களும் முதலாவது உறுப்புரையில் சுயநிர்ணய உரிமை பற்றிக் குறிப்பிடுகின்றன. அதாவது.
“சகல மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு அவ் உரிமை
(அரசறிவியலாளன் 78 s.ஷர்மிலா )

யின் தகுதியினால் அவர்கள் தமது அரசியல் நிலையை தீர்மானிப் பதோடு தமது பொருளாதார சமூக கலாசார அபிவிருத்தியை சுய மாக முன்னெடுப்பர்”
என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஐக்கிய நாடுகள் சபை தனது ஆவணங்களில் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை ஒரு மனித உரிமையாகவும் ஒரு சட்டக் கோட் பாடாகவும் வலியுறுத்தியது. ஐக்கிய நாடுகள் சாசனம் பிரிவு 1 (2) மற்றும் பிரிவு 55 ஆகியவற்றில் சுயநிர்ணய உரிமை தொடர்பான விளக்கங்கள் கூறப்படுகின்றன. ஐக்கிய நாடுகளின் நட்புறவு தொடர் பான சர்வதேச சட்ட தத்துவங்கள் பற்றிய பிரகடனத்தில் "சமத்துவ உரிமையும் மக்களின் சுயநிர்ணயமும்” என்ற அத்தியாயத்தில் 7ம் பந்தியில் சுயநிர்ணய உரிமைப் பிரகடனம் பற்றி கூறப்பட்டுள்ளது. அது பின்வருமாறு அமைகிறது. "சமத்துவ உரிமை, சுயநிர்ணய உரிமை, போன்றவற்றை அனுசரித்து நடப்பதன் மூலம் தமது பிரதேசங்களுக்குச் சொந்தமான முழு மக்களையும் இன, மத, நிற வேறுபாடின்றி பிரதிநி தித்துவம் செய்கின்ற சுதந்திரமும் இறைமையும் கொண்ட அரசுகளின் பிரதேச ஒருங்கமைப்பாட்டையும், அரசியல் ஒற்றுமையையும், பகுதி யாகவோ அல்லது முழுவதாகவோ பலவீனப்படுத்தவோ அல்லது கூறுப டுத்தவோ அதிகாரமளிக்கும் அல்லது உற்சாகமூட்டும் வகையில் மேலேயுள்ள கருத்தக்கள் எதுவும் கொள்ளப்பட மாட்டாது.
பொருளாதார சமூகப் பண்பாட்டு உரிமைகள் பற்றிய சர்வ தேச பொருத்தாணையில் பாகம் (1) முதலாவது உறுப்புரையில் சுயநிர் ணய உரிமை பற்றிய தீர்மானம் காணப்படுகின்றது. அதில்,
* எல்லா மக்களுக்கும், சுயநிர்ணய உரிமை பற்றிய அந்த உரிமை யின் பயன்பாட்டைக் கொண்டு அவர்கள் தமது அரசியல் அந் தஸ்தை தீர்மானிப்பதுடன் தமது பொருளாதார சமூக பண்பாட்டு அபிவிருத்தியை சுயமாகப் பின்பற்றுகின்றனர்.
* இந்தப் பொருத்தாணைக்கான நாடாளும் கட்சிகள், சுய ஆளுமை
(அரசறிவியலாளன் 79 S.ஷர்மிலா )

Page 55
யற்ற ஆள் பலன்களையும், நம்பிக்கையற்ற ஆள் பலன்களையும், நிர்வகிப்பதற்கான பொறுப்பை உடையவர்கள் உட்பட சுயநிர் ணத்திற்கான உரிமையை அனுபவிப்பதனை மேம்படுத்தலும் வேண் டும். என குறிப்பிடுகிறது.
சுதந்திரமடைந்த தேசங்களின் ஆட்புல ஒருங்கிணைவு, மற் றும் இறைமையை பாதிக்கும் வகையில் சுயநிர்ணயக் கோட்பாட்டின் பிரயோகத்தை ஐ.நா.வன்மையாகக் கண்டிக்கிறது. காலணியாதிக் கத் திற்கு உட்பட்ட தேசங்களுக்கும், மக்களுக்கும் சுதந்திரத்தை வழங்கு தல் தொடர்பான பிரகடனத்தின் 6 ஆவது உறுப்புரை இதனை பின்வரு மாறு தெளிவுபடுத்துகின்றது.
"ஒரு நாட்டின் தேசிய ஐக்கியம் மற்றும் ஆட்புல ஒருங்கிணை வைப் பாதிக்கும் வகையிலமைந்த எவ்வித முயற்சியும் ஐ.நா.சபை சாச னத்தின் கோட்பாடுகளுக்கும் குறிக்கோள்களுக்கும் இணக்கம் அற் றது” என்கிறது.
"LD6)35lb (369.st 6igjub FI'll sigbij International Law 616örps b|T656)
"சுதந்திர அரசுகளிலிருந்து பிரிநது செல்வதற்கான அனுமதியை வழங்கும் விதியொன்று உருவாவதைத் தவிர்க்கும் வகையில் சுய நிர்ணயமானது ஆட்புல ஒற்றுமைக் கோட்பாட்டோடு இணைத்தே பயன்படுத்தப்படுகின்றது” என்றார்.
சுயநிர்ணய உரிமையானது * தேசிய சுயநிர்ணயம் * சிறுபான்மை மக்களின் சுயநிர்ணயம் என இரு வகைப்பாடுடை
Ug
சிறுபான்மை சுயநிர்ணயமானது * வர்க்க சுயநிர்ணயம் * இனரீதியான சுயநிர்ணயம் * இனத்துவ சுயநிர்ணயம்
என மேலும் மூவகையிலடங்கும். பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்
(அரசறிவியலாளன் 80 s.sgusson

திட்ட எழுத்தாளரில் ஒருவரான De Latayette கூறுகையில், ஒரு தேச மானது சுதந்திரம் பெறுவதற்கு அது அங்ங்ணம் இருப்பதற்கான விரு ப்பைக் கொண்டிருத்தலே போதுமானது என்றார். இப் புரட்சியின் செல் வாக்கால் பெறப்பட்ட வரைவிலக்கணமே தேசிய சுயநிர்ணயம் அதா வது முழு நாடுமே பிரதிநிதித்துவ அரசைப் பெறுதல் சம்பந்தமானது.
முதலாவது உலகப் போரின் பின்னர் ஐரோப்பாவில் முன் வைக்கப்பட்டது சிறுபான்மையினரின் சுயநிர்ணயம். இதனை முன் வைத்தவர் வூட்ரோ வில்சன் ஆவார். இன்னொரு உலகப் போரை தவிர்ப்பதன் மூலம் சிறுபான்மையினரின் சுயநிர்ணய உரிமை அங்கீ கரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
காள்ஸமாக்ஸ், லெனின் போன்றோர் உழைக்கும் வர்க்கத்தினர் இன ரீதியான சுயநிர்ணயம் என்பது குடியேற்ற ஆட்சியிலிருந்து சுதந் திரம் பெறும் போராட்டங்களை ஆதரிக்கும் போக்கில் முன்வைக்கப் பட்டது. அத்தோடு ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் அடையாளம் காணப்பட்டது இது மிகப் பிரதானமாகும். ஏனெனனில் ஐரோப்பிய நாடு கள் ஏனைய நாடுகளை அடிமை கொள்ளுதல் ஒரு வகையில் சட்ட பூர்வமானது, நியாயமானதும் என நம்பப்பட்ட காலமொன்றுமிருந்தது.
இவற்றை விட சுயநிர்ணய உரிமை
* உள்ளக சுயநிர்ணய உரிமை * வெளியக சுயநிர்ணய உரிமை
என மேலும் இரு வகைப்படும். ஒரு மக்கள் குழுவின் சுயநிர் ணய உரிமை சாதாரணமாக உள்ளக சுயநிர்ணயத்தின் மூலம் நிறைவு செய்யப்படுகின்றது. அதாவது அரசியல், பொருளாதார, சமூக பண் பாட்டு அபிவிருத்தியை மேற்கொள்ளுதல் வெளிவாரியான சுயநிர்ணய உரிமை (இது தன்னிச்சையாகப் பிரிந்து செல்வதற்குரிய உறுதிப் பாட்டைக் குறிக்கும்) மிகத் தீவிரமான நிலைமைகளில் மட்டுமே எழுகின்றது. இவ்வாறு "கனடா உயர் நீதி மன்றம்" தனது அபிப்பிரா யத்தை தெளிவாகக் கூறியது. அதில் மேலும் சில விடயங்கள் குறிப் பிடப்படுகிறது.
அரசறிவியலாளன் 81 S.ஷர்மிலா )

Page 56
"கனடா உட்பட நடைமுறையிலுள்ள அரசுகளின் ஆள்புல ஒருமைப் பாட்டைப் பேணுவதற்கும்; ஒருமக்கள் குழு பூரணமான சுயநிர்ணயத் தைப் பெறுவதற்கும் இடையே பொருந்தாமைகள் எதுவுமில்லை. எல்லா மக்களையும் அல்லது தன் ஆள்புலத்துள் வாழும் மக்களை சமத்துவ மான அடிப்படையில் பாகுபாடு இன்றி அதன் உள்ளக ஒழுங்குகளில் சுயநிர்ணயக் கொள்கைக்கு மதிப்பளித்து பிரதிநித்துவப்படுத்தும் அர சாங்கத்தைக் கொண்ட ஒரு நாடு சர்வதேச சட்டத்தின் கீழ் தன் ஆள்புல ஒருமையைப் பாதுகாக்கும் தகைமையைக் கொண்டுள்ளது" எனவும்.
“ஒரு மக்கள் தொகுதி உள்ளக ரீதியில் அர்த்தமுள்ள வகையில் தன் சுயநிர்ணய உரிமையை பயன்படுத்துவதற்கு தடை ஏற்படும் பொழுது சுயநிர்ணய உரிமை ஒரு தலைப்பட்டமான பிரிவினைக்கான உரி மைக்கு வழிகோலலாம் எனப்பலர் இதற்கு விளக்கம் கூறியிருக்கிறார் கள். இத்தகைய பூரணமான தடை பிரிவினைக்கான உரிமைக்கு இட்டுச் செல்லலாம்” என வியன்னா பிரகடனம் அங்கீகாரம் வழங்குகிறது.
1966ஆம் ஆண்டு ஐ.நா வின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில் உள்ளக சுயநிர்ணயத்திற்கான உரிமைக்கு முக்கியத்து வம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சனைக்கு வெற்றிகர மான தீர்வு காணப்பட வேண்டுமாயின் அது உள்ளக சுயநிர்ணய அடிப் படையில்தான் காணப்பட வேண்டும். உள்ளக சுயநிர்ணயம், வெளியக சுயநிர்ணயம் என்ற இரண்டுக்கும் இடையிலுள்ள தொடர்புகள் என்ன வென்று பார்க்க வேண்டியுள்ளது. உள்ளக சுயநிர்ணத்தைப் பெறுவ தற்கு முயற்சிகள் எடுத்தும் அது தோல்வியில் முடிவடைந்தால் வெளி வாரி சுயநிர்ணத்தை அடைவதற்கு அது மக்களிற்கு ஒரு ஆதாரமாக இருக்கும்.
வெளிவாரி சுயநிர்ணயம் என்பது ஒரு முறிவைக் கொண்டு வரும் அதனால் அதை ஆதரிப்பதற்கு முன் அதன் நன்மை தீமை களைப் பார்க்க வேண்டியுள்ளது. அந்த வெளிவாரி சுயநிர்ணயம் மூலம் இந்தியா பாகிஸ்தான் பிரிவு ஏற்பட்டதாயினும் தற்போது முறுகல்
(அரசறிவியலாளன் 82 s.sensor

நிலையே உள்ளது. சர்வதேச சமூகமும் தற்போது வெளிவாரி சுயநிர் ணயத்தை ஆதரிப்பதில்லை.
உள்ளக சுயநிர்ணயம். இது பெருமளவு நெகிழ்ச்சித் தன்மை கள் கொண்டுள்ளது. சுயநிர்ணம் இலங்கையில் பல பரிமாணங்களில் இடம்பெற்று வந்தது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் வெளிவாரி சுயநிர்ணயம் எனவும், திம்புப் பேச்சு வார்த்தையில் உள்ளக சுயநிர்ண யம் பற்றியே கூடுதலாகப் பேசப்பட்டு வருகின்றது.
ஒஸ்லோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், நோர்வே அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் “தமிழீழ விடுதலைப் புலிகள்” இயக்கத்தலைமையின் முன்மொழிவொன்றுக்குப் பதிலளிக் கும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்புகள் தமிழ் பேசும் மக்கள் பூர்வீக மாகவாழும் பிரதேசங்களில் உள்ளக சுயநிர்ணய கோட்பாட்டினை ஆதாரமாகக் கொண்ட தீர்வொன்றை ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி அடிப் படையில் எடுப்பது குறித்து ஆராய இணங்கின.
இவ்வாறு இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகள், உள்ளக சுயநிர்ணய கோட்பாட்டின் பாவ னையானது சிறந்த தீர்வாக விளங்க முடியும். அதாவது சுயாட்சி, மற்றும் சுயநிர்வாக அமைப்பு முறையை ஏற்றுக்கொள்ளுதல், உள்ளக சுயநிர்ணயத்தை வலுப்படுத்தும்; உள்ளக சுயநிர்ணயம் சார்ந்த இத் தகைய ஓர் தீர்வு முறையே இலங்கை இனப்பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வைத் தரவல்லது.
References 1) Helena J.Whall, "The Rights to self Determination"Tamil Centre,
1995.
2) இமயவரம்பன், "சுயநிர்ணயம் பற்றி.”
புதியியூமி வெளியீட்டகம், 2001.
(அரசறிவியலாளன் 83 s.ஷர்மிலா )

Page 57
3)
4)
5)
6)
7)
8)
9)
இமயவரம்பன், "சுயநிர்ணய உரிமையில் முஸ்லீம் மலையக மக்கள்", புதியயூமி வெளியீட்டகம், 1994.
இமயவரம்பன், "தேசிய ஜனநாயகமும் சுயநிர்ணய உரிமையும்” புதிய பூமி, சவுத் ஏசியன் புக்ஸ், 1992.
இராவணா "சுயநிர்ணய உரிமை என்றால் என்ன?” செம்பதாகை இதழ் 4, 5 2000.
இரயாகரன், "இலங்கை யுத்தத்தின் பரிமாணமும் உலக மயமாக்கலின் படையெடுப்பும்" புரட்சிகர இயங்கியல் ஆய்வு வெளியீடு 2002,
கலாநிதி வே.மணிவாசகர், "சர்வதேச அரசியல் சர்ச்சைகளில் சுயநிர்ணய உரிமை", தமிழீழ நோக்கு. 2000.
மைக்கல் லோவி, மார்க்சீச வாதிகளும் தேசிய இனப்பிரச்சினையும், அலை வெளியீடு, 1978.
V1லெனின், தேசிய இனப்பிரச்சினைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும், முன்னேற்ற பதிப்பகம், 1969.
ep
εποχή 84 s.ஷர்மிலா )

தென்னாபிரிக்க விருதலைப் போரில் நெல்சன் மண்டேலாவின் பங்கு The Role of Nelson Mandela in the freedom struggle of South Africa
- M.ஜீபாகரன் - 2000/A/51
பொதுவாக பெரும்பான்மைச் சமூகத்தினர் சிறுபான்மைச் சகோ தர்களை நசுக்கியும் ஒடுக்கியும் ஆட்சி செய்யும் நிலைக்கு உலகில் அனேக உதாரணங்கள் உண்டு ஆனால் இன்நிலைக்கு மாறாகப் பெரும்பான்மையினரை அவர்தம் சொந்த நாட்டிலயே சிறு பான்மை மக்கள் அடக்கி ஆளும் அரசியல் தென்னாபிரிக்காவில் இடம் பெற்
றுள்ளது. அக்கிராமங்களுக்கும்.
மனித உரிமை மீறல்களுக்கும் பெயர் போன நாடாக தென்னாபிரிக்கா உலக அரசியல் அரங்கில் அதிகம் கண்டிக்கப்பட்ட, பிரபலமுடைய ஒரு நாடாக விளங்கியது. இந்த வகையில் மனிதாபிமானமுள்ள எவரும் அருவருக்கத்தக்க அநாகரீக நடவடிக்கைகள் மூலம் தமது அதிகாரத்தினைப் பேணிவந்த தென்னாபி ரிக்க அடக்குமுறையாளர் களுக் கெதிராகக் கிளர்ந்தெழுந்து அடிமைத் தனத்தை உடைத்துப் போராடி சுதந்திரத்தை நிலை நாட்டிய செயல்வீர ராக “நெல்சன் மண்டேலா" விளங்குகின்றார்.
நிறவெறி என்ற வலைக்குள் சுமார் மூன்று தசாப்தங்களாகச் சிக்கியிருந்த தென்னாபிரிக்க கறுப்பின மக்களை அதனின்றும் வெளிக்
(அரசறிவியலாளன் 85 M.ஜீபாகரன்)

Page 58
கொணர்வதற்காக 27 வருட கடுழியச் சிறைவாசம் உட்பட்ட பல துன் பங்களை கறுப்பின மக்களுக்காக நெல்சன் மண்டேலா அனுபவித்தார் இந்த வகையில் தென்னாபிரிக்க விடுதலை என்ற நீண்ட பயணத்தில் நெல்சன் மண்டேலாவின் பங்கை நோக்குவோம்.
தென்னாபிரிக்க விடுதலைப் போரில் நெல்சன் மண்டேலாவின் பங்கு என்கின்ற இந்த கட்டுரையை நான்கு கட்டங்களாக நோக்க முடி யும். தென்னாபிரிக்காவின் புவியியல் பின்னணி, நெல்சன் மண்டேலா வின் தோற்றம், நெல்சன் மண்டேலா விடுதலைப் போராட்டத்தின் பால் ஈர்க்கப்பட்டதன் சமூக, பொருளாதார, அரசியல்ப் பின்னணி, போராட்ட நடவடிக்கைகளும் கறுப்பின மக்களின் சுதந்திர்மும் என்ற வகையில் நோக்கப்படுகின்றது. நடவடிக்கைகளும் கறுப்பின மக்களின் சுதந்தி
UCLypLD
தென்னாபிரிக்காவின் புவியியல்பின்னணி
முதலில் தென்னாபிரிக்காவின் புவியியல் பின்னணியை நோக் குவோம், ஆசியாவிற்கு அடுத்ததாக பரப்பளவில் மிகவும் பெரிய கண்ட மான ஆபிரிக்கக் கண்டத்தின் தென்முனைப் பகுதியில் மூன்று பக்கமும் கடலால்ச் சூழப்பட்ட ஒரு பகுதியே தென்னாபிரிக்கா. இதனது நிர்வா கத் தலைநகரமாக பிரிட்டேரியாவும், அரசுத்துறைத் தலைநகராமாக கேப்டவுனும், நீதித்துறைத் தலைநகரமாக புளெயம்போன்பெயினும் விளங்குகின்றது. வைரம், வைடூரியம், யுரேனியம், இரும்பு போன்ற தாதுப்பொருட்கள் நிறைந்து காணப்படினும் உலக தங்க உற்பத்தியில் 47% மான இடத்தை தென்னாபிரிக்கா வகிக்கின்றது. இதுவே தென் னாபிரிக்காவின் உலகளாவிய முக்கியத்துவத்திற்கு காரணமாகும்.
தென்னாபிரிக்காவின் பூர்வீகக் குடிகள் கறுப்பர்களே யாவர் இவர்கள் மொத்த சனத்தொகையில் 85% மான இடத்தை வகிக்கின்ற னர். ஏனைய வெள்ளை இனத்தவர்களில் ஒரு பகுதியிர் 1762இல் வர்த்கத்தின் பொருட்டு ஐரோப்பிய நாடுகளில் இருந்து இங்கு வந்தவர்களாகவும் ஐரோப்பிய நாடுகளில் வியாபாரக் குற்றங்களைப் புரிந்தமைக்கான நாடு கடத்தப்பட்டவர்களாகவும் காணப்பட்டனர். இவர்
(அரசறிவியலாளன் 86 M.ஜீபாகரன்)

கள் தென்னாபிரிக்காவின் வளங்கள் மற்றும் சாதகமாக சூழ்நிலையைக் கண்டு அங்கேயே தங்கலானார்கள். இவ் வெள்ளையர்கள் தன்மைப் "போயர்கள்” (தென்னாபிரிக்க மொழியில் போயர்கள் என்றால் வியாபாரி கள்) என அழைக்கலானார்கள். இப் போயர்கள் படிப்படியாக நகரப்பகு திக்கு முன்னேறி சுதேசிகள் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.
1975இல் பிரித்தானியர் தென்னாபிரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்தனர். பின்னர் படிப்படியாக போயர்களின் எதிர்ப்புக்க ளுக்கு மத்தியில் தென்னாபிரிக்காவைத் தம்வசமாக்கிக் கொண்டார் கள். பிரித்தானியர் ஆட்சிக் காலப்பகுதியில் 1860ம் ஆண்டு தென்னா பிரிக்காவின் தாதுப் பொருட்களின் வர்த்தகச் செழிப்பையும் அங்கு தேயிலை மற்றும் கரும்பு உற்பத்தி, வர்த்தகம் என்பவற்றுக்கேற்ற கால நிலை, சூழ்நிலை என்பன இருப்பதை உணர்ந்த இந்தியர்கள் தென்னா பிரிக்காவிற் சென்று குடியேறினார்கள்.
பிரித்தானியர்கள் தமக்குவரும் எதிர்ப்புகளை இலகுவாகக் கையாழ்வதற்காக வெள்ளையர்களுக்கு அதிக சலுகைகளை வழங்கி யும் பெரும்பான்மை கறுப்பர்களைப் புறக்கணித்தும். வந்ததோடு, அவர் களை நிற அடிப்படையில் துன்புறுத்தியும் வந்தனர். வர்த்தகத்தின் பொருட்டு தென்னாபிரிக்காவில் தங்கியிருக்கும் இந்தியர்களும் நிற அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் வந்தனர். இந் தியர்கள் இவ்வாறு துன்புறுத்தப்படுவதை அறிந்த மகாத்மா காந்தி 1890இல் தென்னாபிரிக்காவுக்குச் சென்று நியாயம் கேட்டார். ஆனால் காந்தியும் துன்புறுத்தப்பட்டார். இந்நிலையில் இந்தியர்களைப் பாது காக்கும் பொருட்டு காந்தி "இந்திய காங்கிரஸ்" என்ற அமைப்பை 1899இல் உருவாக்கினார். இந்த வெள்ளையரின் துன்புறுத்தல் 1949ம் ஆண்டு வரை நீடித்தது. 1949இல் பிரித்தானியர் வெள்யைர்களிடம் ஆட்சியைக் கையளித்துவிட்டுச் சென்றுவிட்டனர். அதன் பிடியில் வெள் ளையர்கள் கறுப்பர்களை அடக்கி ஆளத் தொடங்கினர்
நெல்சண்மண்டேலாவின் தோற்றம்
இரண்டாவது கட்டமாக நெல்சன் மண்டேலாவின் தோற்றத்தை நோக்கின்ற போது நெல்சன் மண்டேலா 1918ம் ஆண்டு யூலை மாதம்
(அரசறிவியலாளன் 87 M.ஜிபாகரன்)

Page 59
18ம் திகதி தென்னாபிரிக்காவின் "டிரான்ஸ்கோப்” மாநிலத்தில் "அம் தாட்டா” என்ற ஊரில் “கோசா” பழங்குடியினரில் "தெம்பூ” என்ற அரச குடும்பத்தில் பிறந்தார். இவர் "போர்ட்ஹரே” என்ற பல்கலைக் கழகத் தில் கல்வி கற்றார். கல்வி கற்றுக்கொண்டிருந்த வேளை மாணவர் புரட்சி ஒன்றில் ஈடுபட்டிருந்தார் என்ற குற்றச் சாட்டின் பேரில் பல்கலைக் கழகத்தில் இருந்து இடை நிறுத்தப்பட்டார். பின்னர் "தபால்க் கல்வி” மூலம் "இளங்கல்விப் பட்டதாரி” ஆனதோடு சட்டத்துறையிலும் பட்டம் பெற்றார்.
மண்டேலாவின்போராட்டத்திற்கானமின்னணிகள்
மூன்றாவது கட்டமாக நெல்சன் மண்டேலா விடுதலைப் போராட்டத்தின் பால் ஈர்க்கப்பட்டதன் பின்னணியை நோக்குகின்ற போது தென்னாபிரிக்கா டொமினியன் அந்தஸ்தைப் பெற்றதும் நாடாளு மன்ற ஆட்சிமுறை பிரகடனப்படுத்தப்பட்டது. அங்கு வெள்ளையருக்கு மட்டுமே ஏக உரிமை வழங்கப்பட்டது. கறுப்பர்களுக்கு எதிராக நிறவெ றிச் சட்டத்தை இயற்றி 1980கள் வரை அதனைப் பேணி வந்தது 1967ம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. தொழிலா ளர் மத்தியில் வழங்கப்படும் ஊதியத்தில் கூட நிற அடிப்படையிலான வேறுபாடுகள் காணப்பட்டன. 1921இதற்கான சுங்க அதிபர் அறிக்கைப்
9.
"21 ஆயிரம் வெள்ளையர்கள் 1 கோடி 15 லட்சம் ஸ்ரேலிங் பவுனும் 1கோடி 80 கறுப்பர்கள் 55 லட்சம் ஸ்ரேலிங் பவுனும்" ஊதியமாகப்
பெற்றனர்.
"கடவுச் சீட்டுச்சட்டம்” Pass Law என்கின்ற புதிய நடைமு றையை வெள்ளையர்கள் கொண்டுவந்தனர். இதன் பிரகாரம் கறுப்பினத் தவர் ஒருவரது “கைரேகை, பெயர், விலாசம், அவர் எந்த இடத்தில் வசிப்பதற்கு உரிமை உடையவர்? நாட்டை விட்டு வெளியே செல்ல உரிமை உண்டா? எனப்பல விடையங்கள் உள்ளடக்கப்பட்ட கடவுச்சீட் டுக்கள் வழங்கப்பட்டது அதனை வைத்திருக்கத் தவறியவர்கள் கடவுச் சீட்டுச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்படுவார்கள்.
(அரசறிவியலாளன் 88 M.ஜீபாகரன்)

இந்த வகையில் ஒரு வருத்தில் இரண்டு லட்சம் கறுப்பின மக்கள் கைதுசெய்யப்பட்டார்கள்.
பிரித்தானியரின் "பிரித்தாளும் கொள்கைக்குச் சமனான அப தைட் - Apartheid (தென்னாபிரிக்கமொழியில் தனியாகப் பிரித்தல்) என்ற கொள்கையை அமுல்ப்படுத்தி கறுப்பர்களை வளமான பிரதேசங் களில் இருந்த “பண்டுஸ்தான்” (தென்னாபிரிக்க மொழியில் தரிசு நிலம்) எனப்படும் தரிசு நிலங்களுக்கு விரட்டியடித்தனர். தரிசு நிலங்களில் வாழ்ந்த இம்மக்கள் பண்டுஸ்தான்கள் என அழைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நெல்சன் மண்டேலா தனது கல்வியை முடித் துக் கொண்டு 1941இல் "ஜொகனஸ்பேர்க்” நகருக்கு வந்து சுதேசிகள் தமது சொந்த நாட்டிலேயே படும் துன்பங்களைக் கண்டு மனம் வருந்தி அதற்கு மாற்று நடவடிக்கை எடுக்கத் துணிந்தார். மண்டேலாவுடன் கல்வி பயின்ற வோல்ட்டர் சிசிலுவும், ஒலிவர் ரெம்போவும் இணைந்து நிறவெளிச் சட்டத்தாற் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட ரீதியான உத விகள் புரியத்தலைப்பட்டனர்.
மண்டேலா தனது நடவடிக்கையை சிறைக்கூடங்களுக்குச் சென்று கறுப்பின மக்களின் நலமறிதலுடன் ஆரம்பித்தார். சிறையி லுள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்காக வாதாடினார். இதனால் நிறவெறிச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக 1962இல் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டார். நீதி மன்ற விசாரணையின் போது மண்டேலா
"சிந்திக்கும் திறம்படைத்த எவரும் எந்த ஆபிரிக்கரை எடுத்துக் கொண்டாலும் அவரது வாழ்நாளெல்லாம் மனச் சாட்சிக்கும் சட்டத் திற்கும் இடையிலான ஓயாத போராட்டங்களுடனேயே கழிந்துவிடு கின்றது."
s o ao ab in இந்தச் சட்டம் ஒழுக்கக் கேடானது, அநீதியானது, சகிக்க முடி யாதது எனக் கருதுகின்றோம் நாம் இந்தச் சட்டத்தை ஏற்கக் கூடாது, எதிர்க்க வேண்டும், மாற்ற முயலவேண்டும்.” என்றார்.
(அரசறிவியலாளன் 89 M.ஜிபாகரன்)

Page 60
வெள்ளையரின் இனவெறியை மண்டேலா எதிர்த்தார். ஆனால் வெள்ளையரை எதிர்க்கவில்லை 1956இல் மண்டேலா உட்பட்ட 156 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடத்தப்பட்ட போது
"நாங்கள் வெள்ளையரின் ஆதிக்கத்தையே எதிர்க்கின்றோம். வெள் ளையரை எதிர்க்கவில்லை, யார் இனவாதம் பேசினாலும் அதைக் கண்டிக்கின்றோம்” என மண்டேலா கூறினார்.
1961ம் ஆண்டு மண்டேலா வேலை நிறுத்தம் செய்யத் தூண்டி யமை, சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறியமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக நடந்த விசாரணையின் போது மண்டேலா
“எனது காலம் திரும்பிவருமானால் இதுவரை செய்ததையே மீண் டும் செய்வேன், தன்னை மனிதன் என அழைத்துக் கொள்ளும் எவ னும் இப்படித்தான் செய்வான், எனது மக்களுக்கும் தென்னாபிரிக் காவுக்கும் செய்ய வேண்டிய கடமைகளையே செய்தேன். நான் உண்மையில் நிரபராதி. இந்த நீதிமன்றில் கூண்டில் ஏறவேண்டிய குற்றவாளிகள் பிரதமரும் அவரது அமைச்சர்களுமே என்று வருங் காலச் சந்ததி தீர்ப்பளிக்கும் இதில் எந்தவித சந்தேகமும் இல்லை” என்றார்.
அடக்குமுறைகள் தாண்டவமாகும் நிலைமைகளில் மண்டே லாவின் சுதந்திர வேட்கையும் நீதிகேட்கும் உறுதியும் வலுப்பெறவே செய்தன. நாட்டில் ஒடுக்கப்பட்ட, ஊமையாக்கப்பட்ட மக்களுக்கு ஓர் சுபீட்டமான வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்க மண்டேலா முனைப்பு டன் செயற்பட்டார்.
"பணிந்து போகிறவனுக்குக் கிடைக்காத மரியாதை போராடு பவனுக்கு கிடைக்கும்” என்ற நம்பிக்கையில் தனது வாழ்க்கையை யே போராட்டத்திற்காக அர்ப்பணித்தார். மண்டேலாவின் ஒவ்வொரு செயற்பாடும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பதாகவே அமைந்தது. சுதந்திரத்தையே தனது இலட்சியமாகக் கொண்ட மண்டேலாவின் ஒவ் வொரு செயற்பாடும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பதாகவே அமைந்தது. சுதந்திரத்தையே தனது இலட்சியமாகக் கொண்ட மண்
(அரசறிவியலாளன் 90 Mஜீபாகரன்)

டேலா; அவரது வாழ்க்கை முறை, தெரிவித்த கருத்துக்கள், செயற் பாடுகள் என்பன மூலம் அவரது இலட்சியம் பற்றிய தெளிவு, சரியான விளக்கம், உறுதியான கொள்கை என்பவற்றைக் துல்லியமாக விளக்கு
கின்றது. நெல்சன் மண்டேலாவின் போராட்டமும் கறுப்பினத்தவரின் சுதந்திரமும்
நான்காவது கட்டமாக நெல்சன் மண்டேலாவின் போராட்ட நட வடிக்கைகளும் கறுப்பினத்தவரின் சுதந்திரமும் என்கின்ற போது தென்னாபிரிக்காவில் இனவெறியை எதிர்க்கும் முகமாக 1912இல் உரு வாக்கப்பட்ட "ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் (African National Cong ress - ANC) இணைந்தமை மண்டேலாவின் போராட்ட நடவடிக்கையின் முதலாவது படியாகும். காலப் போக்கில் மந்தகதியில் இயங்கிவந்த ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் செயற்பாடுகளை விட மண்டேலாவின் தனிமனித செயற்பாடுகள் உன்னதம் மிக்கதாகவும் காத்திரமான தாகவும் இருந்தது.
1943இல் மண்டேலா, தனது நண்பர்களான வால்ட்டர் சிசலு, ஒலிவர் ரெம்போவையும் ஒன்றிணைத்து "ஆபிரிக்க இளைஞர் காங்கி ரஸ் லீக்” என்ற அமைப்பை உருவாக்கினார். அத்துடன் செயற்பாடு குன்றியிருந்த ஆபிரிக்க தேசிய காங்கிரஸை புரட்சி அமைப்பாக மாற்றி இனவெறிக்கு எதிராகப் போராடத் தூண்டினார்.
நெல்சன்மண்டேலா ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், தொழிற் துறை, வர்த்தகத்துறை சார் சங்கங்கள், கம்யூனிசக் கட்சி என்பவற்றை இணைத்து கடவுச்சீட்டுச் சட்ட எதிர்ப்பு, ஆபிரிக்கர்களுக்கு நிலம் வேண்டுதல், அரசியல் உரிமை, வேலை நிலைமை தொடர்பான மேம் பாடு, நிறப்பாகுபாடு எதிர்ப்புப் போராட்டங்கள் என்பவற்றைத் தீவிர மாக முன்னெடுத்தார் இதனை விட 2ம் உலகப் போரும் தென்னாபிரிக்க கறுப்பினமக்களைப் போராட்டத்தின்பால் அதிதீவிரமாக ஈடுபடத் தூண்டியது.
(அரசறிவியலாளன் 91 M.ஜிபாகரன்)

Page 61
வெள்ளையரை சாத்வீக முறையில் எதிர்ப்பதும், உரிமை வேண்டி வெள்ளையருக்கு மகஜர் கொடுப்பதும் என்கின்ற பழமையான முறையால் சாதிக்கப்போவது எதுவுமில்லை என்பதனை உணர்ந்த மண்டேலா அதற்குப் புதியவடிவத்தைக் கொடுத்தார். இது மண்டேலா வின் போராட்ட நடவடிக்கையின் இரண்டாவது படியாகும் இதனடிப்படை யில் "ஆபிரிக்க தேசியம்" வலுப்பெற்றது. இந்த அமைப்பை ஓர் போர்க்குணம் கொண்ட அமைப்பாக மண்டேலா உருமாற்றினார். இதன் விளைவாக 1942 - 1944 காலப்பகுதியில் 60 வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளப் பட்டன தொடர்ந்து மண்டேலா மற்றும் நண்பர்களின் வழிநடத்தலில் சட்ட மறுப்பு, சட்டமீறல், வேலை நிறுத்தம், புறக்க ணிப்பு, ஒத்துழை யாமை என படிப்படியாக போராட்டங்கள் விஸ்தரிக் கப்பட்டன.
மண்டேலா இதற்கு மேலும் ஒரு படி சென்று இந்திய காங்கிர சையும், ஏனைய வர்ணத்தாரையும், வெள்ளையர்களில் நிறவேற்று மையை எதிர்க்கும் ஜனநாய விரும்பிகளையும் ஒன்றிணைத்து முற்று முழுதாக ஓர் மக்கள் போராட்டமாக நடாத்த விரும்பினார். ஆனால் 1899இல் காந்தியால் உருவாக்கப்பட்ட இந்திய காங்கிரஸ் வர்த்தக ரீதி யான சுரண்டல்களினால் தென்னாபிரிக்க கறுப்பின மக்களுடன் முரண் பாட்டுக்குரிய ஓர் அமைப்பாக மாறியிருந்தது. இதனை இலகுவாகக் கையாழ்வதற்காக மண்டேலாவின் ஏற்பாட்டின் பேரில் இந்திய காங்கி ரஸ் சார்பாக "மொண்டி நாயக்கர்” என்ற வைத்தியருக்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் சார்பாக "யூசூப்டாடு”, “டிரான்ஸ்வால்” என்ற இரு வைத்தியர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று ஒப்பந் தம் கைச்சாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தம் "DOctors Pact" (மருத்துவர் ஒப்பந்தம்) என அழைக்கப்பட்டது. இதன் பலனாக 1950ல் மே தினத் தன்று நாடாளாவிய ரீதியில் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இப் போராட்டம் வெள்ளையினப் பொலிஸாரால் மோசமாக அடக்கப் பட்டதில் 17பேர் பலியாகினர்.
1952இல் "சட்டமறுப்பு இயக்கம்" கொண்டுவரப்பட்டது. இத னைத் தொடர்ந்து வெள்ளையின அரசால் “கம்யூனிச ஒழிப்புச் சட்டம்"
(அரசறிவியலாளன் 92 M.ஜிபாகரன்)

கொண்டுவரப்பட்டதுடன் மண்டேலா உட்பட்ட 20 பேருக்கு 09 மாதச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. "நிறுத்தி வைக்கப்பட்ட சிறைத்தண் டனை" (Suspended Sentence) ஆதலால் உடனே சிறை செல்ல வேண் டிய அவசியம் ஏற்படவில்லை.
1953இல் மண்டேலா ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் டிரான்ஸ் பேர்க் மானிலக்கிளைக்குக் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ் வாண்டில் தேசிய மாநாடு ஒன்றுக்கு தலைமை தாங்க வேண்டிய மண்டேலா வெள்ளை அரசு விதித்த தனிமனிதத் தடையால் அம் மாநாட்டில் இவரது உரைமட்டுமே வாசிக்கபட்டது எனினும் இவரது தொண்டர்களால் மிகவும் சிறப்பாக அம்மாநாடு நடாத்தி முடிக்கப்பட் டது அந்த உரையில் மண்டேலா
"உலக சமாதானம் என்ற குறிக்கோளில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், அமெரிக்காவும் அதனைச் சார்ந்த நாடுகளும் கடைப்பிடிக்கும் போர்க்கொள்கையை எதிர்த்துப் போராடுங்கள்” என்று கூறியதோடு
"கைவீசி நடந்து சென்று சுதந்திரம் பெறுவது எங்கும் நடக்காது. நாம் நமது விருப்பங்களில் மலர்ச்சியடைதற்கு முன்னால் நம்மில் பலர் மரணத்தின் நிழல்கவிந்த பள்ளத்தாக்கை மீண்டும் மீண்டும் கடந்து செல்ல வேண்டியிருக்கும்” என்ற நேருவின் கருத்தையும் முதன்மைப்படுத்தினார்.
நெல்சன் மண்டேலா உட்பட்ட பல தலைவர்களது தனிமனித தடைபற்றி தென்னாபிரிக்க திருச்சபை மன்றத்தில் தலைவரான
மானஸ் புத்தலோபி" கூறுகையில்
"நமது தலைவர்கள் பலரால் தற்போது பேச முடியாது, சிலர் இறந்து விட்டதால் பேச முடியாது. மற்றவர்கள் தடைசெய்யப்பட்டதால் பேச முடியாது. அவர்கள் எவராலும் பேச முடியாது, அவர்கள் பேசு வதை நாம் கேட்கவும் முடியாது" என்றார்.
(அரசறிவியலாளன் 93 Mஜீபாகரன்)

Page 62
வெள்ளையர்கள் கறுப்பின மாணவர்களுக்கெனத் தனியாகப் பாடசாலைகள் அமைத்து "பாண்டு கல்வி முறை” என்ற கல்வியைப் புகட்டினர். இதில் எவ்வித கல்விச் செயற்பாடுகளுமின்றி வெள்ளையின எஜமானர்களுக்கு எவ்வாறு சேவகம் செய்வது என்பது பற்றி புகட்டப்பட் டது. இந்த பாண்டு கல்வி முறையை மண்டேலா முற்றாக எதிர்த்தார்.
1957ம் ஆண்டு பேரூந்து புறக்கணிப்புப் போராட்டம், 1958ல் நாடுதழுவிய வேலைநிறுத்தம், 1959ல் தேசிய மாநாடு என்ற வகையில் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டிருக்கையில் 1960ல் தென்னாபிரிக்கா சுதந்திர நாடாவற்குரிய உலக அங்கீகாரம் கிடைத்தது.
இனி சாத்வீகப் போராட்டங்களால் சாதிக்கப்போவது எதுவு மில்லை என்பதை உணர்ந்த மண்டேலா 1961இல் ஆயுதமேந்திப் போரா டும் தீர்மானத்தை மக்களிடையே கொண்டுவந்தார். மேலும் அவர் கூறும் போது.
"தலைமையானது மழுங்கிப்போன அதன் அரசியல் ஆயுதங்களை தீட்டிக் கூராக்கத் தயங்கினால் அது மக்களுக்கு எதிராகக் குற்றமி ழைக்கும்” என்றார்.
அதனடிப்படையில் "தேசத்தின் ஈட்டி” என்ற இராணுவ அமைப் பை மண்டேலா உருவாக்கினார். இந்த இராணுவத்தின் தளபதியாக ஒப்பற்ற தலைவராக நெல்சன் மண்டேலாவே விளக்கினார். மண்டேலா ஏற்கனவே அயல் நாடுகளில் ஆயுதப்பயிற்சி பெற்றவராகையால் இராணுவத்தை வழிநடத்த அவரால் முடிந்தது ஆனாலும் தேசத்தின் ஈட்டியின் செயற் பாடுகள் ஆரம்பத்தில் மந்தகதியிலேயே இருந்தாலும் பின்னர் சோவியத் யூனியன் அதற்குத் தார்மீக ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் மண்டெலாவை வலை விரித்துத் தேட ஆரம்பித்தார்கள் இதனால் நாட்டை விட்டு எதியோப் பியாவுக்கு தப்பியோடி அங்குள்ள விடுதலை அமைப்புக்களுடன் இணைந்து திரைமறைவில் போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். ஆனால் 1963இல் எல்லைப்பகுதி முகாம் ஒன்றில் தலைவர்களுடன்
(அரசறிவியலாளன் 94 M.eduresgeir

பேசிக்கொண்டிருந்த போது அதனை அறிந்த பொலீஸார் மண்டேலா வைக் கைதுசெய்தனர் 23 வருடகாலம் மண்டேலா வெஞ்சிறையில் வாடிக் கொண்டிருந்த போதும் போராட்டத்தையும் தனது இராணுவத்தை யும் செவ்வனே முன்னெடுத்து வந்தார்.
1970ம் ஆண்டு மண்டேலாவை விடுதலை செய்யக்கோரும் இயக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு தீவிரமாகச் செயற்படத்தொடங்கியது. அப்போதைய வெள்ளை ஜனாதிபதி, மண்டேலா வன்முறையைக் கைவிடுவாராயின் அவரைத் தாம் விடுதலை செய்யத்தயார் எனக் கூறியபோதும் மண்டேலா அதனை மறுத்துவிட்டார். பின்னர் 1990 பெப்ரவரி 11 இல் சிறைவாழ்க்கையின் 10,000 ஆவது நாள் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்டதும் அமெரிக்கா ஜனாதிபதியான "ஜோர்ஜ் புஷ்" மண்டேலாவை அமெரிக்காவுக்கு வருமாறு பணித்தார் அப்போதைய இந்தியப் பிரதமர் "வி.பி.சிங்" மண்டேலாவை வரவேபதற்ான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
மண்டேலா கேப்ரவுண் சிறைச் சாலைக் கதவுகள் திறக்க வெளியில் வந்து 5 இலட்சம் மக்கள் மத்தியில் தனது முதலாவது உரையை நிகழ்த்தும் போது.
"தோழர்களே இங்கு நான் உங்கள் முன்னால் தீர்க்க தரிசியாக நிற்கவில்லை. உங்கள் எளிய ஊழியனாகவே மக்கள் ஊழியனா கவே நிற்கின்றேன், விடுதலைக்காக என்னுடன் உழைத்த அனைவ ருக்கும் உளமார்ந்த நன்றியை அன்போடு உரித்தாக்குகின்றேன்" என்றார்.
1990ல் மண்டலா உலக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் ஒன் றை மேற்கொண்டார். தென்னாபிரிக்காவுக்கு UNOஇல் அங்கீகாரம் பெற முயன்றபோதும் இந்தியா உட்பட்ட சில மூன்றாம் உலக நாடுக ளின் எதிர்பால் அது உடனடியாகச் சாத்தியப்பட வில்லை.
1990மே முதல் வாரத்தில் வெள்ளையின பிரதமர் டெ.கிளார்க் குக்கும், மண்டேலா தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிர
(அரசறிவியலாளன் 95 M.ஜீபாகரன்

Page 63
ஸிற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கி மிக வேகமாக சாதக மான அறிகுறிகளுடன் நடைபெற்றது. இதனிடையே தேர்தல் தொடர் பான கருத்துக்கணிப்பு ஒன்றில் தேசிய காங்கிரஸ் 58% வாக்குகளைப் பெற்றது. 1993ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காக நெல் சன் மண்டேலாவின் பெயர் தெரிவு செய்யப்பட்டது.
1994ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் 57% மான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி யை ஈட்டியது. வெள்ளையரால் காங்கிரஸிற்கு எதிராக திட்ட மிட்டு வளர்க்கப்பட்ட "இன்கதா” என்ற அட்ைபு 07% வாக்குகளைப் பெற்றது. நெல்சன் மண்டேலா சுதந்திர தென்னாபிரிக்காவின் ஜனாதிப தியாக ஏகமனதாகத் தெரிவுசெய்யப் பட்டார் அடக்கு முறையின் சின்னமாக, இனவெறியின் இலட்சினையாக விளங்கிய வெள்ளையினக் கொடி இறக்கப்பட்டு அனைத்துச் சமூகங்களையும் சமமாக மதிக்கும் கறுப்பின் கொடி ஏற்றப்பட்டது.
தொகுத்து நோக்கின் தென்னாபிரிக்க மக்களினால் “கறுப்பு
மலர்” The Black Pimpernel என அன்பாக அழைக்கப்படும் விடுதலை வீரன் நெல்சன் மண்டேலா சிறுபான்மை வெள்ளையின மக்களின் பெரும்பான்மை கறுப்பின மக்கள் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி கறுப்பின மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தார்.
"தென்னாபிரிக்கா என்றால் நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா என்றால் தென்னாபிரிக்கா என மக்கள் அர்த்தம் கூறுமளவுக்கு உன்னதமானவர் இவரது மனைவி வின்னி இவர் பற்றிக் கூறும்போது
“நெல்சனை மக்களில் இருந்து பிரிக்க முடியாது, அவரது போராட் டத்தில் இருந்தும் அவரைப் பிரிக்க முடியாது அவரது போராட்டம் முழுமையானது, தேசத்திற்குத்தான் முதலிடம் மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சமே” என்றார்.
(அரசறிவியலாளன் 96 M.ஜீபாகரன்)

இந்த அளவுக்கு நெல்சன் மண்டேலா போராட்டமே வாழ்க்கை எனக் கொண்டு மிகவும் நேர்த்தியான பாதையில் கொள்ளையில் சற்றும் பிச காது ஏனைய வீரர்களையும் மக்களையும் பிறழ்வுகள் ஏதும் ஏற்படாது சிறந்த முறையில் வழிநடத்தி, போராட்டத்தைப் படிப்படியாக நகர்த்தி, மக்களிடையே சுதந்திர தாகத்தை ஏற்படுத்தி வெற்றிகண்ட செயல் வீரனது பணி தென்னாபிரிக்க கறுப்பின விடுதலையில் அளப்பரியது.
References 01) Basis Dauidson - Apatheid, "the shameful recordunesco courier"
40 years of Aniversary issue, May, June, 1986, (P - 27). 02) Angus Deming and Arlene Getz, "South Africa Lost Generation",
NewsWeek 21 January 1991, (P-30). 03) Susan, H.Greenberg. "Opening the Jail doors" News week 23 Oct
1989, (P-21) 04) Spencer Reiss and Arlene Getz - "The Voice of Aouth Sfrica's
Voteless" Newsweek, 11 Sep 1989, (P-37) 05) க.நவம், "ஒற்றுமையினம் விடுதலையைப் பின்தள்ளிவிடும்" உன் மைகளின் மெளன ஊர்வலங்கள், மொமென்ரம். வெளியீடு, கனடா, 1991, (பக் 19 - 24) 06) விரி தமிழ்மாறன், "தென்னாபிரிக்கா; முன்நூறு வருட இருள் கலைந்தது, ஜனநாயக நிலவு முகிழ்ந்தது", தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டம், கார்த்திகேயன் வெளியீட்டகம், கொழும்பு, 1996, (Luäs 18 - 27).
07) சுமந்திரன் “கறுப்பு மலர் நெல்சன் மண்டலோ"
திசைவார வெளியீடு, 28 ஆடி 1989, 04 ஆவணி 1989.
08) பீற்றர் கேர்த்தோன், "போய் உங்களை தயார்ப்படுத்துங்கள்",
உலக உலா, தை, 1994. 09) தியாகு, நெல்சண்மண்டேலா, சென்னை புக்ஸ் வெளியீடு, 1998.
OgsgôisuusorTSTGör 97 M.ஜீபாகரன்)

Page 64
சூடானிய சிவில் யுத்தம் The Civil war of Sudan
- K.வாகீஸ்வரி
2001/A/177
சூடானில் தற்போது இடம்பெறும் உள்நாட்டுப்போர் சர்வதேச நாடுக ளையும் பொது நிறுவனங்களையும் கொதிப்படைய வைத்துள்ளது. அங்கே வன்முறைகள் கொடுஞ்செயல்கள் அரங்கேறிக் கொண்டிருக் கின்றன. மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்து நாட்டைவிட்டே வெளியேறியுள்ளார். ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர் படுகொலை கள் செய்யப்பட்டுள்ளனர். இன்னமும் படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இத்தனைக்கும் காரணம் அந்நாட்ரசுதான் இதுதான் சர்வதேச நாடுகளும் பொது நிறுவனங்களும் சூடான் மீது கொதிப்படைந்துள்ளமைக்கு காரணம் ஆகும். எகிப்தின் தென்பகுதியில் அமைந்துள்ள சூடான் வட ஆபிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடுமல்ல உலகில் மிகப்பெரியது என வருணிக்கப்படும் நைல்நதியையும் கொண் டுள்ளது. ஆனால் சூடானிய மக்கள் வரட்சி, பாலைநிலம், போன்ற புவியியல் வாய்ப்பின்மையும் சிறந்த அரசியல் தலைமைத்துவமின்மை யும் கொண்டு, சீரழிந்து வருகின்ற இவ்வேளையில் இடம்பெறும் உள் நாட்டு யுத்தம் அவர்களை நிலைகுலையச் செய்துள்ளது.
சூடானிய நாடோடிக்குழுக்களுக்கும் நிலையான குழுக்களுக்கும் இடையிலான சர்ச்சையே முரண்பாடு ஏற்படக் காரணம். நாடோடிக் குழுக்கள் வரட்சிக் காலத்தில் தெற்கு நோக்கி நகர்ந்து நிலையான குழுக்களின் அறுவடையின் பின்னான வயல்களில் தமது மந்தை களை மேப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததனர். அதேசமயம் அவை விவசாயிகளின் நிலங்களுக்கு எருவை இட்டுச் சென்றதால் ஒரு
(அரசறிவியலாளன் 98 Kamie

கடானின் புவியியல் வரைபடம்
http://www.mapofsudan.com என்ற இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது

Page 65

சமநிலை பேணப்பட்டது ஆனால் சனத்தொகைப் பெருக்கமும் வாழ்வு முறை மாற்றமும், இவ் வொழுங்கில் மாற்றத்தை ஏற்படுத்தியது விவ சாயக் குழுக்கள் சொந்தமாக மந்தைகளை மேய்க்கத் தொடங்கியதால் நாடோடிகள் மந்தைகளை மேய்ப்பதை அவர்கள் விரும்பவில்லை அதேபோல நாடோடிகளும் மழைக்காலத்தில் விவசாய நடவடிக்கை களில் ஆர்வம் காட்டினர் அதற்கு நிலம் தேவைப்பட்டது. இதுவே இரு குழுக்களிடையேயும் மோதலை ஏற்படுத்தியது. ஆனாலும் மோதலைத் தவிர்ப்பதற்கு ஆரம்பகாலத்தில் சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டது. உதாரணமாக யாராவது ஒருவர் கொல்லப்பட்டால் அவருடைய குடும்த் துக்கு அல்லது குழுவுக்கு ‘டியா’ என்று சொல்லப்படும் 'இரத்தப்ப ணத்தை கொலை செய்தவரின் குழுவோ, குடும்பமோ வழங்க வேண்டி யிருந்தது. நாளடைவில் இக்ககுழுக் களிலிருந்து தோன்றிய ஆயுதக்கு ழுக்கள் போராட்டத்திலிறங்கின விவசாயிகளிலிருந்து தோற்றம்பெற்ற இரு ஆயுதம் குழுக்கள் "டார்பரின்” எல்லைப்பிரிவு பற்றியும், தமது பாதுகாப்பு பற்றாக்குறையை கருத்திற்கொண்டும் சூடானிய அரசாங்கத் துடன் போரிட்டன. சூடானிய அரசு நாடோடிக்குழுவின் ஆயுதந்தாங்கிய குழுவிற்கு ஆதரவைத் தெரிவித்து, விவசாயக் குழுக்கள் மீது தாக்கு தலை மேற்கொண்டது. இது பாரம்பரிய ஒத்துப்போதல் முறையை செயலிழக்கச் செய்ததுடன் இனரீதியான பிரச்சனைகளுக்கும் பலமூட்
lԳԱ l5l.
அாண்ஜாவிட்
இது நாடோடிக்குழுக்களின் அயுதக்குழு ஆகும். இவர்கள் விவசாயி களைத் தாக்கவரும் போது குதிரைகளிலேயே வருவதால் விவசாயிகள் இக்குழுவிற்கு இட்டபெயரே 'ஜான்ஜாவிட்’ என்பதாகும். குதிரைகள் மீது ஆயுதம்தாங்கிய மனிதர்கள் என்பது இதன் பொருளாகும். இக்குழுவில் அரபுமொழிபேசும் நாடோடிகள், மதகுருமார்கள் உள்ளடங்குகின்றனர். ஆனால் எல்லா அராபியர்களும் ஜான்ஜாவிட்டுடன் இணையவில்லை. இக்குழுக்களில் உள்ளவர்களில் பொரும்பாலானவர் சூடானிலிருதும் ஏனையோர் சாட், மெளடிட்டோனியா, லிபியா போன்ற நாடுகளிலிருந்தும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
(அரசறிவியலாளன் 99 K.வாகீஸ்வரி)

Page 66
கடானியவிடுதலை இராணுவம் (SLA)
இது விவசாயிகளின் நலன்பேனும் ஆயுதக்குழுவாக 2003 பெப்ரவரி மாதம் தோற்றம் பெற்றாலும் அதற்கு முன்னர் 1984ல் இருந்து "டார்பத்” விடுதலை இராணுவமாக இருந்தது. இதன் அங்கத்தவர்கள் பெருமளவில் Fur, Massalit, Zaghawaபோன்ற இனக்குழுகளிடமிருந்து வந்தவர்கள் "டார்பரின்” எல்லைப்பிரிப்பு, விருத்திகுன்றிய நிலை, மனித உரிமை மீறல்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் அரசின் முயற்சி தோல்வி, என்பவற்றுக்கு எதிராக ஆயுதம் தாங்கியதாக அவர்கள் 8in(3JaÉl6ög360Ij. Abdulwahed mohamed nur 9 jib, Miniarkoimina இருவரும் இதன் நிர்வாகிகளாக உள்ளனர்.
நீதிமற்றும்சமத்துவத்திற்கானநகர்வு(EM)
SLA யின் பின் சிறிதுகால இடைவெளியில் தோன்றிய இவ் அமைப்பு SLA யின் கொள்கைகளையே கொண்டுள்ளது. இதன் தலை 6uj Dr.Hassan all Turabi 1989965Agbjöğ5ı 199996ö 65g. "LüLu(Bub 6nu6oJ அரச நிர்வாகக் கொள்கை உருவாக்குபவராக இருந்தவர். அரசியற் asidasoaigoT Popular Congress, Islamist opposition party 6T6óru6)gigail அங்கத்தவர்களும் இந்த அமைப்பில் பங்கெடுத்துள்ளனர்.
ஆனால் ஒரு உண்மை என்னவெனில் டார்பரில் உள்ள எல்லாக் குழுக்களுமே இப்பிராந்திய அபிவிருத்தி, எல்லைப்பிரிவு, என்பவற் றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன.
பெப்ரவரி 2003ற்கு முன் டார்பரின்நிலை
இன்று கொதிநிலையில் உள்ள டார்பர் பிரச்சனையானது பெப்ரவரி 2003 இற்கு முன் விவசாயக்கிராமங்கள் மீது நாடோடிகள் தாக்குதலை மேற்கொண்டமையால் விவசாயிகள் குழுக்களை உருவாக்கிக் கொண் டன. டார்பரின் கொந்தளிப்பு, சிறிய இராணுவக் குழுக்களின் விருத்தி, சமூக பொருளாதாரப் பிரச்சனைகள்யாவும் இம் மாநிலங்களில் கொள் ளைச் சம்பவங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. ஆனால் இப்பிரச்சனை
(அரசறிவியலாளன் 100 Kவாகிஸ்வரி)

யைத் தீர்ப்பதில் பெரும் பொறுப்புள்ள அரசு, குழுக்களின் அங்கத்தவர் களை நியாயமற்ற முறையில் கைதுசெய்வது, விசாரணைகள் எதுவு மின்றி தடுப்புக்காவலில் வைத்திருப்பது, மாநிலங்களில் உள்ள விசேட நீதிமன்றங்களில் மேலெழுந்தவாரியாக விசாரணை செய்வது, அதுவும் இராணுவ நீதிபதிகளுக்கு முன்னால் விசாரணை செய்வது, பிரதிவாதி கள் சட்ட வல்லுனர்களை வைத்து வழக் காட முடியாது, போன்ற கொடூர நடவடிக்கைகளை அரசு பின்பற்றுகி றது. ஒரு சிறிய வாய்ப்பு என்னவெனில் பிரதிவாதிகள் தாங்களே எதிர்த்து வாதாட அனுமதிக்கப் பட்டுள்ளது. சித்திரவதைக்குள்ளாக்கப் பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்படுகிறார்கள். கணிசமான மக்கள் கைது, கொலை, இனமோ தல்கள், போன்றவற்றால் தினமும் பலியாகிக் கொண்டேயிருக் கிறார்கள். 2003 ஜனவரி டார்பருக்கு விஜயம் செய்த Amnestly interna tional இற்கு விவசாயமக்கள் அளித்த முறைப்பாட்டில் அரசு நாடோடிக் குழுக்களிடமிருந்து தங்களை பாதுகாக்க எந்த முயற்சியையும் செய்ய வில்லை. என்றும் அவர்கள் வீடுகளை தீக்கிரையாக்குவதாகவும் பொலி சுடன் இணைந்து கொலை, கொள்ளைச், சம்பவங்களில் ஈடுபடுவதாக வும் தெரிவித்தார்.
பார்பரில்தற்போதைய மோதல் ஆரம்பமானவிதம்
2003 ப்ெபரவரியில் உருவாகிய விவசாயிகளின் SLA ஆனது அரச பாதுகாப்புப் படைகளுடன் குறிப்பாக பொலிஸ், இராணுவம், என்ப வற்றின் மீது தாக்குதலை நடத்தியது. நாடோடிக் குழுக்களிடம் இருந்து தம்மைப் பாதுகாக்காமை குறித்தே இத்தாக்குதல் நிகழ்த்தியதாகக் கூறின. இதனால் அரசு 2003 மார்ச்சில் இருந்து இக்கலவரத்தை அடக்க இராணுவத்தைப் பயன்படுத்தப்போவதாக அறிவித்தது. 2003 ஏப்பிரல் இல் SLA ஆனது டார்பரின் தலைநகரான Al-Fashar விமான நிலையத் தைத் தாக்கியது இத்தாக்குதலால் பல விமானங்கள் சேதமாக்கப்பட் டன என்றும் 70 இராணுவ அலுவலர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அரசு அறிவித்தது. இதனால் அரசு ஜான்ஜாவிற்கு SLA யை அடக்கும் உரிமையை வழங்கியது. இவ்வுரிமை மக்களைக் கொல்லவும், கிராமங் களை எரிக்கவும் வீடுகளிலிருந்து துரத்தவும் என வழங்கப்பட்டது. (அரசறிவியலாளன் 101 көмпёsió6um)

Page 67
முரண்பாட்டின் இனப்பரிமானம்
பெரும்பாலான நாடோடிகள் தம்மை அராபியர் என வரையறுத்து அராபிய மொழியையே பேசுகின்றனர். விவசாயக்குழுக்கள் ஆபிரிக்க மொழியையே தாய் மொழியாகக் கொண்டுள்ளனர். முரண்பாட்டில் இன ரீதியான வடிவம் உள்ளதென்பதை நிராகரிக்க முடியாது. ஏனெனில் விவசாயக் குழுக்களின் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துப்படி “கறுப்பர் கள் (Zurug)” “அடிமைகள் (Abid)" போன்ற இனரீதியான வார்த்தைப் பிரயோகங்களை தாக்குதல் நடத்துபவர்கள் பாவிப்பதாகக் கூறப்படு கின்றது. எப்படியிருந்த போதும் இந்த முரண்பாட்டின் இனப்பரிணாமம் சிக்கலானது. ஏனெனில் பெனிஹசெய்லே போன்ற அராபியக்குழுக்கள் ஜான்ஜாவிட்டுடன் இணைய மறுக்கின்றார்கள் டோளெக் போன்ற குழுக்கள் விவசாயிகளுடன் வசித்துவருகின்றார்கள். அவர்களை வெளியேறுமாறு ஜான்ஜாவிட் நிர்ப்பந்தித்து வருகிறது. “தாமா' இனத்த வர்கள் இருபக்கமும் உள்ளனர். கிராமங்கள் தாக்கப்படும் வேளையில் வெளியேறிய இருசாராரது குழுக்களும் அல்ஜெனெய்னா, அல்-பாஸிர், நையாலா, போன்ற ஆபிரிக்கக் குழுக்களின் நகரங்களுக்கு இடம்பெ யர்ந்து வசித்துவருகின்றனர். ஆனால் ஏனைய சிறிய நகரங்களில் நடைபெறுவதுபோல இடம்பெயர்ந்தவர்களைக் கொல்லும் முயற்சியில் இவர்கள் இறங்கவில்லை.
முரண்பாட்டில்அரசின்பங்களிப்பு
மக்களுக்கெதிரான தாக்குதல்களில் ஜான்ஜாவிட்டுடன் சூடானிய இராணுவமும் பங்குகொள்கின்றது. அரச பாராளுமன்ற இராணுவமான Popular defence force (PDF) s 60Lulu Liggigi Gues fB6OL35036T ஜான்ஜாவிட்டினர் அணிந்துள்ளனர். அரசிடமிருந்தே நிதியுதவியையும் பெறுகின்றனர். இதுமட்டுமன்றி PDF இன் முகாம்களிலேயே இவர்களும் செயற்படுகின்றனர். சூடானிய விமானப்படையுடன் சேர்ந்தே கிராமங்கள் மீது விமானத்தாக்குதல் நிகழ்த்துகின்றன. ஜான்ஜாவிட் அங்கத்தவர் கள் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தும் வேளையில் தாம் அரச கட்டளைக்கு ஏற்பவே தாக்குவதாகக் கூறுகின்றனர். உள்ளூர் மட்டத் தில் இடம்பெயர்ந்தவர்களின் முகாங்களுக்குச் சென்று கொலை, (அரசறிவியலாளன் 102 Komorosass)

கொள்ளை, பாலியல் பலாத்காரம் செய்யும் போது எவ்வித பயமுமின் றியே ஜான்ஜாவிட்டினர் செயற்படுகின்றனர். அரசும் இதைத்தடுக்க எவ்வித முயற்சியையும் செய்யவில்லை ஜூலை 2004 இல் அரசு ஜான்ஜாவிட்டினதை கைதுசெய்வதாகவும் ஆயுதங்களைக் களைவதாக வும் வாக்குறுதி அளித்தது ஆனால் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்பட வில்லை.
அகதிகளின்திலைமை
இங்கே 170, 000 அகதிகள் மேற்கு டார்பரில் Fur, Massalit, Zaghawa போன்ற இனங்களிலிருந்து இடம்பெயர்ந்து போய் சாட் எல்லைப் பகுதியிலும் ஜான்ஜாவிட்னத் தாக்குதல் நடத்தியமையால் சாடிடர்களும் அவர்களது கால்நடைகளும் சிறியளவில் கொல்லப்பட் டன. இதைத்தொடர்ந்து சாடிய இராணுவத்துக்கும் ஜான்ஜாவிட்டினருக் கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது UNHCR ஆனது அகதிகள் முகாம்க ளுக்கு நகர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அகதிகளில் உள்ளூரில் இடம் பெயர்ந்த மக்கள் Internally displaced persons (LDP) என்று சொல்லப் படுகின்ற டார்பத் மக்கள் கணிசமான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்குள் 1.2 மில்லி யன் மக்கள் அகதிமுகாங்களிலும் ஏனையோர் நகர்களிலும் உறவி னர்களுடனும் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு முகாம்களிலும் 5000 இற்கும் மேற்பட்ட மக்களிருப்பதால் அவர்களின் போசாக்கின்மை வீதம் அதிகரித்துச் கொண்டு செல்கின்றது. மனிதாபிமான உதவி எதுவுமின்றி பரிதாபகரமான நிலையில் இவர்கள் உள்ளனர். ஆனாலும் IDP கள் மீளவும் தமது வீடுகளுக்குத் திரும்புவதிலும் விருப்பமற்றவர்களாக உள்ளனர். ஏனெனில் ஜான்ஜாவிட் அவர்களது கிராமங்களை இன்றும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுடன் பெரும்பாலான கிராமங் கள் தீக்கிரியாக்கப்பட்டுள்ளன. கால் நடைகளும் கொல்லப்பட்டு விட்ட நிலையில் முகாம்களில் நிலையான வாழ்கை நடாத்த விரும்புகின்றனர்.
அரசறிவியலாளன் 103 Karasia,

Page 68
பெண்கள் மீதானதாக்குதல்
ஜான்ஜாவிட்டினர் பல நூற்றுக்கணக்கான விவசாயப் பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியுள்ளனர். பெரும்பான பெண் கள் கிராமங்கள் மீதான தாக்குதல்வேளைகளில் கற்பழிக்கப்படுகின்ற னர். ஏனையோர் வேறொரு முகாமுக்குச் செல்லும் போது, (விறகு, நீர் எடுக்கச் செல்லும் போது) இவ்வாறான கொடுரத்திற்குள்ளாக்கப் படுகின்றனர். அதிலும் மிகக்கொடுரம் என்னவெனில் அவர்கள் தமது தந்தையர், கணவர் உறவினர் முன்னிலையில் கற்பழிக்கப்படுவது. Tawila கிராமத்தில் 27 - 29 பெப்ரவரி 2004 இற் கிடையில் இச்செயன் முறைக்குள்ளாக்கப்பட்ட 100 பெண்களில் 6 பேர் தந்தையரின் முன்னா லேயே பாலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். பலாத்காரததிற்கு உள்ளாக் கப்பட்டு இன்றும் உயிர் வாழும் பெண்கள் சிலர் ஜான்ஜாவிட்டுக்குச் சென்று விட்டாலும் பலர் டார்பரிலேயே உள்ளனர். பலாத்காரத்தின் பின் அவர்கள் சொந்த சமூகத்திலேயே "விலக்கிவைத்தல்' (Tatoo) முறைப் படி விலக்கி வைக்கப்படுவதால் பெரும் அபாயத்தை எதிர்நோக்கு கிறார்கள். களங்கம், சமூக விலக்கல் என்பன மட்டுமன்றி தூரநோக்கில் சமூக, பொருளாதார, மருத்துவ, உளவியல், ஆரோக்கியம் எனப் பல்வேறு பலரீதியில் பாதித்துள்ளனர். இக்கற்பழிப்பு பெண்களுடைய நடத்தையில் விளைவுகளை ஏற்படுத்துவ மட்டுமல்ல டார்பரில் யுத்தத் திற்கான ஒரு கருவியாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. அதாவது பெண்களைப் பாதுகாக்க முடியாத ஆண்கள் என்று இழிவுபடுத்தல் தண்டனை முயற்சியாகவே இது கைக்கொள்ளப்படுகின்றது.
டார்பரில் மனிதாபினமான உதவிகள்
மே மாத இறுதிவரை சூடானிய அரசு மனிதாபிமான உதவிகளைத் தடுத்து வைத்திருந்த போதும் U.N இனதும் ஏனைய சர்வதேச சமூகங்களதும் பலத்த அழுத்தங்களால் மனிதநல அமைப்புக்கள் உதவிவழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. "கோபி அனான்” விஜயத்தைத் தொடர்ந்து மக்களுக்கு சைக்கிள். றேடியோ, மருந்துப் பொருட்கள் தாராளமாக வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. டார்பரில் உள்ள 137 முகாம்களில் 72இற்கு உலக உணவுத்திட்டத்தின் கீழ் நிவாரண (அரசறிவியலாளன் 104 K.வாகீஸ்வரி)

உதவிகளை வழங்கியது. பெரும்பாலான SLA, IBM கட்டுப்பாட்டி லுள்ள முகாம்களுக்கு எவ்வித உதவியும் சென்றடையவில்லை. ஹெலி, பிளேன் மூலம் அப்பிரதேசங்களுக்கு உணவு போடப்படுகின் றது. பல நூற்றுக்கணக்காணக்காவர் உணவுப்பற்றாக் குறையாலும், தொற்று நோய்களாலும் இறந்துள்ளனர். இந்த இடம்பெயர்ந்த மக்கள் மழைக்காலத்தில் விவசாயம் செய்தால் ஒழிய அவர்களுடைய வாழ்க் கையை மீளக்கட்டியெழுப்பமுடியாது. முகாம்களிலும் 1.2 மில்லியன் மக்களும் அடுத்த 2005 ஒக்டோபர் மழைக்காலம் மட்டும் உயிர்வாழ உணவு உதவியை எதிர்பார்த்துள்ளனர்.
யுத்தநிறுத்தம்
ஏப்பிரல் 8, 2004 அன்று சூடானிய அரசு ஆயுதக்குழுக்களாகிய IBM, SLA என்பவற்றுடன் ஜான்ஜாட்டில் வைத்து போர்நிறுத்த உடன் படிக்கையில் கைச்சாத்திட்டது. நாற்பத்தைந்து நாட்கள் சுமுகமாக கைக்கொள்ளப்பட்டு மீண்டும் இவ் வொப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. இராணுவ நடவடிக்கையை நிறுத்தல், மனிதநலன்களை முதன்மைப் படுத்தல் என்பன இதில் முக்கியம் பெற்றன இதன் 6வது அத்தியாயம் "சூடானிய அரசு ஜான்ஜாவிட்டினத்தை யுத்தத்தில் ஈடுபடாது செய்ய ஒத்துழைக்கும் என்று கூறுகின்றது. ஆனால் இப்போர்நிறுத்த ஒப்பந்தம் மீளவும் மீறப்பட்டுள்ளது சூடானிய விமானப்படையினர் கிராமங்களைத் தாக்குவதும், SLA யினர் பிணையாளிகளைப் பிடித்துவைத்திருப்பதும் என முரண்பாடு தொடர்கிறது.
போர்நிறுத்தக் கண்காணிப்பாளர்கள்
ஒகஸ்ட் 8, 2004 இல் செய்யப்பட்ட "பச்சாதப" போர்நிறுத்தத்தை அமுதல்படுத்த மிஷன் ஒன்று உருவாக்கப்பட்டது. மே 8ல் USA உம் Europen (Eu) உம் டார்பதின் நிலையை அறிய கண்காணிப்புக் குழு வொன்றை அனுப்பின ஜூன் 9 இல் முதலாவது போர்நிறுத்த கண்கா ணிப்பாளர் டார்பின் தலைநகர் அல்-பாஸத் இற்கு விஜயம் செய்தனர். *பங்கினர் சிவிலியன்கள் எட்டு Eu உறுப்பினர், USA அங்கத்தவர்,
(அரசறிவியலாளன் 105 K.வாகீஸ்வரி)

Page 69
சூடானிய அரச பிரதிநிதிகள், SLA, BM பிரதிநிதிகள் உள்ளடங்க லாக 120 பேர் இதில் அடங்குகின்றனர். அங்கு மக்களைப் பாதுகாக்க இராணுவப் பிரயோகம் ஏற்படுத்த வேண்டும் என இவர்கள் அபிப்பிராயம் தெரிவித்தனர். ஜூலை 6 இல் USA ஆனது 300 இராணுவத்தினரை அகதிகளையும், கண் காணிப் பாளர்களையும் பாதுகாக்க அனுப்பியது UNHCR அலுவலகம் எட்டு மனித உரிமை கண்காணிப்பாளர்களை டார்பருக்கு அனுப்பியது. இருந்தும் அகதிகள், சிவிலியன்களின் பாதுகாப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்றும் தீர்க்கப்படாத பிரச்சனையாகவே உள்ளது.
சர்வதேசநடவடிக்கை
சூடானில் இடம்பெறுவது இன அழிப்பே தவிர உள்நாட்டுப்போரல்ல என்று சர்வதேச பொதுமன்னிபபுச் சபை தெரிவித்திருக்கிறது. ஆனால் சூடானிய மக்களுக்கு இராணுவம் தரப்போகும் சுதந்திர அரசு எனும் பரிசு என்று தனது தாக்குதல்களை அரசு நியாயப்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா.சபை விசேட கூட்டம் ஒன்றை அண்மையில் கூட்டி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இன்னமும் முப்பது நாட்களுக்குள் இந்த அரசு இணைந்து மேற்கொள்ளும் நட வடிக்கையை நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லையேல் சூடான் மீது சர்வதேச நடவடிக்கைகள் தொடரும் என அத்தீர்மானத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றிய சூடானிய அரசின் செய்தித்தொடர் பாளர் இத்தகைய மிரட்டல்களைக் கண்டு சூடானிய அரசு அடிபணியப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார். அரபுலிக்கும் சூடான் மக்களுக்கும் பாதகமான விளைவுகளையே இந்த திட்டங்கள் ஏற்படுத் தும் என அரபுலிக் தெரிவித்தது. சூடானுக்கான ஐ.நா வின் விசேட தூதுவர் "ஜாங்புரெங்’ சூடானிய ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களைந்து டார்பரில் பாதுகாப்பை அதிகரித்தது மனிதாபிமான நெருக்க டியை தீர்ப்பது அவ்வரசாங்கத்தின் கைளிலேயே தங்கியுள்ளதாக” கூறியுள்ளார்.
(அரசறிவியலாளன் 106 Korreforsoĵ

வல்லரசுகளின் பார்வை
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை சூடானிய அரசு அலட்சி யம் செய்திருப்பதானது உலக நாடுகள் அனைத்தினதும் பார்வை தற்போது சூடான் மீது விழுந்திருக்கிறது. சூடானுக்கு தமது படைகளை அனுப்பத்தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்காவும், சூடானும் அறிவித்துள்ளது. இந்நாடுகளின் இம்முடிவுகள் சூடானின் வன்மையான கண்டத்திற்கு ஆளாகியுள்ளது. இந்த கண்டனத்திலும் ஒரு யதார்த்தம் இல்லாமல் இல்லை. இந்த நெருக்கடிகள் மூலம் மேற்கத்தைய நாடுகள் தமது நோக்கங்கள், சதித்திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பது சூடானிய அரசின் வாதம்.
* மத்தியதரைக்கடல், சுயஸ்கால்வாய், இந்துமாகடல் என்பவற்றினுா டாக அமைந்துள்ள கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கடற்பாதைக ளின் பாதுகாப்பிற்கும் அதையொட்டிய ஏனைய அலுவல்களுக்கும் சூடானின் கேந்திர அமைவிடம் இன்றியமையாதது.
* இந்தியாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு மேற்கூறப்பட்ட
பாதைகள் அவசியம்.
* நவீன உலகின் இயக்கத்திற்கு ஒரு மூலப்பொருளாக, எண்ணெய் தோன்றிய பின்னரும் அது செங்கடலின் ஒரு பாதையில் ஒரு கரையில் உள்ள சவுதி அரேபியாவில் பெருமளவு கண்டுபிடிக்கப் பட்ட பின்னரும் சூடானின் கேந்திரமுக்கியத்துவம் மேலும் அதிக ரித்தது.
* இதனிடையே தென்சூடானில் கண்டுபிடிக்கப்பட்ட பெருமளவு எண் ணெய்வளமும் அதனை முகாமை செய்யும் தனியுரிமையை சூடான் சீனாவுக்கு மட்டும் வழங்கியமையும், பிரித்தானியா, அமெரிக்கா வுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. தென் சீனாவின் எண்ணெய் வளத்தை சீனா முழுமையாக கைப்பற்றிக் கொண்டால் அது தமக்கு சவால்விடும் உலக வல்லரசாக வளர்ந்துவரும் என எண் 600fluj60)LD.
(அரசறிவியலாளன் 107 K.வாகீஸ்வரி)

Page 70
* காகிதத்தில் மை அச்சடித்தல், மென்பானங்களில் நிறம் உறைய விடாதிருத்தல், என்பவற்றுக்கும், அழகு சாதனப் பொருட்கள், மருந் துப் பொருட்கள், இனிபுவகைகள் எனப்பல்வேறு உற்பத்திகளுக் கும் அடிப்படையான அரபிப்பசை உற்பத்தியால் 80% இற்கும் அதிகமானவை சூடானிலிருநதே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதன் ஏற்றுமதியில் முழுமையான கட்டுப்பாட்டை பெறும் நோக்கு.
என்பது போன்ற புவியியல் பொருளாதார வாய்ப்புக்களைப் பெற் றுக்கொள்வதற்காக அமைதிகாக்கும் நோக்கில் டார்பர் மாநிலத் திற்கு சர்வதேச அனுமதியுடன் நகர வல்லரசுக்ள் முற்படுகின்றன. சூடானின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரிட்டனும், பிரான்சும் 19ம் நூற்றாண்டிலே வல்லாதிக்கம் செலுத்த முற்பட்டனர். ஆனால் சூடானிய மக்களின் கிளர்ச்சியால் தவிர்க்க முடியாதபடி 1956இல் சூடானுக்கு சுதந்திரம் வழங்கவேண்டிய தேவை யேற்பட்டது. அமெரிக்காவும் சூடானியப் பிரச்சனைகளை தீர்வுகாண்ப தாக ஆயுதக்குழுக்களுக்கும் இடையே செய்துவைத்த "மச்சாக்கோஸ் புரட்டக்கோல்” (Tachakos, protocol) உடன்படிக்கை மூலம் தனது செல்வாக்கை நிலைநாட்ட முயன்றது ஆனால் அது சாத்தியப்படாது போக தற்போதைய கொதிநிலையை சதகமாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் சூடானும் மேற்கத்தைய பாடசாலைகளுக்கு அனுப்புவது விடயத்தில் ஈராக்கைப் போலன்றி சாமர்த்தியமாக செயற் பட வேண்டிய பொறுப்பு ஐ.நா வுக்குண்டு அதே நேரம் சூடானின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் அங்கு இன அழிப்பு கொடுரத்தையும் முடிவுக்கு கொண்டு வரவேண்டிய பொறுப்பும் அதற்கு உண்டு.
இந்த சூடானிய விவகாரத்தின் மூலம் கண்டிங்டனது நாகரிகப் போர் என்ற தீர்க்க தரிசனம் நிதர்சனமான உண்மையாகிக் கொண்டிருக்கி றது. கண்டிங்டனின் படி இன்றைய உலகின் போர்க்களமாக இருப்பது இன நெருக்கடிகளும் மோதல்களும் தான் மனித இனங்கள் ஒவ்வொன் றும் ஏதோ ஒரு நாகரிக மையத்துடன் பின்னிப்பிணைந்திருப்பதால் இனங்களுக்கிடையிலான மோதல் சில சமயம் நாகரிகங்களுக்கு
(அரசறிவியலாளன் 108 Komésrbsolún)

இடையிலான பரிணாமம் பெறும் என்றார். சூடானில் கிறிஸ்தவர்களான கறுப்பர்களுக்கு மேற்குலகம் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது. அராபிய ருக்கு எதிரான ஐ.நா வின் தீர்மானத்தை எதிர்த்து அரபு லீக் உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புக்கள் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளன. இதன் மறைவில் அரபுகளுக்கான ஆதரவுத் தொனி தெரிகிறது. எனவே நாடோடிக் குழுக்களுக்கும் விவசாயக் குழுக்களுக்கும் இடையிலான மோதல் அதாவது இனமோதல் மேற்குலக கிறிஸ்தவ நாகரிகதிற்கும் இஸ்லாமிய நாகரிகத்திற்கும் இடையிலான நாகரிக மோதலுக்கு வழிவ குக்கலாம். ஆனால் ஒரு முக்கிய விடையம் சீனாவும் ஐ.நா வின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது.
கன்டிங்டன் சீன நாகரிகத்தையும் கிறிஸ்தவ நாகரிகத்திற்கு எதி ரான சக்தியாகவே இனங்காண்கின்றார். எனவே இந்த நடவடிக்கை “எதிரிக்கு எதிரி நண்பன்” என்பது போலவே அமைகிறது. அதாவது கிறிஸ்தவர்களுக்கு எதிரான சீன நாகரிகமும், கிறிஸ்தவத்திற்கு எதி ரான இஸ்லாமிய நாகரிகமும் இவ்விடயத்தில் ஒன்றிணைந்துள்ளன. ஆனால் ஏற்கனவே சீனாவையும் மேற்காசியாவையும் இணைவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான போரை அமெரிக்கா திட்டமிட்டது. தற்போது சூடான் விவகாரத்தில் சீனர்களும் இல்லாமியர்களும் இணைந்துள்ளதைத் தடுக்க அமெரிக்கா இன்னொரு போரை தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந் தப் போர் சூடான் போராகக் கூட இருக்கலாம் எனவே ஐ.நா ஈராக் போரில் செயற்பட்டது போலன்றி இந்த விடயத்தில் புத்திசாலித்தன மான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதுடன் சூடானின் இறை மைக்கு பாதிப்பு வராத வகையிலும், நாகரிகப் போருக்கு இடம் கொடுக் காத வகையிலும், சீரழிந்த கொண்டிருக்கும் சூடானிய மக்களுக்கு தீர்வைப் பெற்றுத்தரவேண்டிய கடப்பாட்டில் உள்ளது. எவ்வாறான தீர்வை சூடானுக்கு ஐ.நா வழங்குகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இத்தகவல்கள் அனைத்தும் இணையத் தளத்திலிருந்து பெறப்பட்ட தொகுப்பாக அமைகிறது.
(அரசறிவியலாளன் 109 Kவாகிஸ்வரி)

Page 71
பெண்ணியக் கோட்பாரும்
அது எதிர்நோக்கும் சவால்களும் Feminist Theory and the Challenges that face
- R.குபேசண்
2000/A/123
பெண்ணியம் ஒரு நோக்கு
நவீன கத்தியல் என்ற வகையில் 'பெண்ணியம் முக்கியம் பெற்ற ஒன்றாகக் காணப்படுகின்றது. இது மேலைத்தேசத்தில் தோற்றம் பெற்ற ஒன்றாகக் காணப்படினும் இன்று கீழைத்தேசத்திலும் செல்வாக் கினைச் செலுத்துகின்றது. “பெண்ணியம் கருத்தியலாக மட்டுமன்றி கோட்பாடு தத்துவம் என்ற வகையிலும் நோக்கப்படுகின்றது. பெண்ணி யம் என்பது 20ம் நூற்றாண்டில் முனைப்புப் பெற்றதாகக் காணப்படினும் அதன் தோற்றம் பிரெஞ்சுப் புரட்சியினை அடியொற்றிய தாகவே காணப் படுகின்றது
பெண்ணியம் என்பதைக்குறிக்கும் FEMINISM என்ற ஆங்கி லச் சொல் FEMINA என்ற இலத்தீன் சொல்லில் இருந்து வந்ததாகும் FEMINA என்ற சொல்லுக்கு 'பெண்ணின் குணாதிசயங்களைக் கொண் (66frong' (Having the qualities of female) 6T6örug, GUTCB67TTg5 b. (9& சொல் முதலில் பெண்களின் பாலியல் குணாதிசயங்களைக் குறிப்பி டவே பயன்படுத்தப்பட்டது. பின்னர் இது பெண்களின் உரிமைகளைப் பேசுவதற்காக எடுத்தாளப்பட்டது. 1889 வரை "womanism என்ற சொல் பெண்களின் உரிமைப்பிரச்சினை களையும் அதனடிப்படையிலான போராட்டத்தையும் உணர்த்தப் பயன்பட்டது. 1890ம் ஆண்டு "woma nism என்பதனை feminism என்ற பிரயோகத்திற்குரிய தாக்கினார்.
(அரசறிவியலாளன் 110 Rகுபேசன் )

"பெண்ணியம்' என்ற இயக்கம் ஒரு நீண்ட வரலாற்றினைக் கொண்டது இந்த இயக்கத்தின் வித்து கி.பி 1400க்கு இடைப்பட்ட காலத்தில் உருவாகியதாக கருதப்படுகின்றது. பெண்ணியத்தின் வர லாறு இரு பெரும் நிலைகளில் வளர்ச்சி கண்டமை சுட்டிக்காட்டப்படு கின்றது முதலாவது நிலை 1830 இல் USA இல் தோன்றி ஐரோப்பா விற்கு விரைவாகப்பரவியது இதன் விளைவாக பெண்கள் வாக்குரிமை யினைப் பெற்றனர். இரண்டாவது 1960 களின் தொடக்கத்தில் அமெரிக் காவில் தோன்றி உலகத்தின் பல பாகங்களிற்கும் பரவி மிகப்பெரிய பண்பாட்டுப் பாதிப்பினை ஏற்படுத்தியது 1830களில் முதன்முதலாகப் பெண்கள் ஒன்று சேர்ந்து ஓர் இயக்கத்தினைத் தோற்றுவித்தனர். இது ஆண் ஆதிக்கத்தினை எதிர்த்து பெண்ணியத்தை நிலைநாட்டுவதனை நொக்கமாகக் கொண்டிருந்தது.
1848.96s) USA (S6 bu(SuTjisassi) Seneca Falls 6T6irls இடத்தில் நடத்த மகாநாடு உலகப் பெண்ணிய வரலாற்றில் ஒரு மைல் 8òGOTG5lib. @gól6ð Lacretia Molt, Elizabeth, Cady standon Séluu இருவரும் பெண்களுக்கான இயக்கம் ஒன்றினை தொடக்கி வைத்தனர். 1840களில், ஐம்பதுகளில் USA இல் சோசலிசப் பெண்ணியத்தின் சில கருத்துக்கள் பெண்ணுரிமைக்காக நடத்தப்ட்ட கூட்டங்கள் வலியுறுத் தப்பட்டன. 1869இல் பெண்ணியவாதிகள் ஏனைய உரிமைகளினை அடைய வாக்குரிமை அவசியம் என வாதித்தனர். இதன் விளைவாக USA Gu60iisait The american women Suffrage Association 616ip அமைப்பினைத் தோற்றுவித்தனர். இதனைத் தொடர்ந்து Women's Suff rage ASSociation தோற்றம் பெற்றது. இதன் விளைவுகள் தான் 1920 இல் USA பெண்கள் 19th amendment மூலம் பெண்கள் வாக்குரிமை யைப் பெற்றனர் இது பெண்களின் போராட்டத்தில் ஓர் திருப்புமுனை எனலாம்.
இதேவேளை USA இன் பெண்ணியவாதிகளுக்கு நிகரானவர் களாகவே UK இன் பெண்ணியவாதிகள் காணப்பட்டனர். UK இன்
(அரசறிவியலாளன் 11 R.குபேசன் )

Page 72
பெண்ணியவாதிகள் USA பெண்ணியவாதிகளின் கருத்துக்களினை வரவேற்ற அதேவேளை தாமும் கருத்துக்களினை எடுத்துச் செல்ல முற்பட்டனர். இங்கிலாந்தின் பெண்ணிவாதியான "மேரி வோல்ஸ்டன் கிராப்ட்' எழுதிய "பெண்ணுரிமைக் கொள்கை நிறவீடு (A Vindication of the Right of women) 6T6örg (birg) b, (8gT6ör art)(36).jLías) 6TQg5u "Guó05600TL960LD5560Tib' (The Subjection of womwn) 6T6örgl (brigtb பெண்ணிய வளர்ச்சியில் பெரும் பங்காற்றின. 1918ம் ஆண்டில் பிரித்தா னியப் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டமை UK இன் பெண்ணிய வரலாற்றிற்கு ஓர் உந்துதலாக அமைந்தது.
கீழைத்தேசத்தினைப் பொறுத்தவரையிலும் பெண்ணியம் என்பது சிந்தனைக்குரிய கருத்தியலாக அந்நாடுகளின் சூழ் நிலைக ளுக்கு ஏற்ப காணப்பட்டது. பெண்ணிலைவாதம் என்பது இங்கு பல் வேறு தோற்றப்படுகளில் வேறுபட்ட காலப்பகுதிகளில் சீனா, இந்தியா, ஜப்பான், எகிப்து, இந்தோனேசியா, பொன்ற நாடுகளில் காணப்பட் டுள்ளது. ஆனால் அவை போதுமான அளவில் ஆவணப்படுத்தப்பட வில்லை. இது போன்றே அபிரிக்க நாடுகளிலும் காலணியத்திற்கு முற்பட்ட காலத்தில் பெண்கள் தங்கள் சமூகப் பொருளாதார கட்டமைப் புக்களுக்கு ஏற்ப உரிமைகளினைப் பெற்றிருந்தனர் எனக் கூறப்படு கின்றது. எனினும் இது காலணித்துவத்திற்கு பின்னர் மாற்றியமைக்கப் பட்டதாக விமர்சிக்கப்படுகின்றது.
இதுவரை பெண்ணியத்தின் வளர்ச்சி நிலைகளினைக் கண்ட நாம் அது தொடர்பாக ன்வைக்கப்பட்டுள்ள சுருக்கமான வரைவிலக் கணங்களை நோக்குவோம்.
"Charlotte Bunch"6T6öru6)
"பெண்ணியம் என்பது பெண்களின் எல்லாச் சிக்கல்களையும்
புரிந்து கொண்டு அதனை நீக்கமுயல்வதாகும். அதன் மூலம் உலகள
வில் அரசியலிலும், பண்பாட்டிலும், பொருளாதாரத்திலும், ஆண்மீகத்தி
லும், பெருத்த மாற்றித்தினை ஏற்படுத்த முடியும்' என்கின்றார்.
T66 112 R.குபேசன் )

"Barbara Smith" 6T6öTLuohij
"பெண்ணியம்' என்பது எல்லாப் பெண்களினையும், அரசியல்
மற்றும் பிற அடிமைத்தனையிலிருந்து விடுத்தல் என்ற கொள்கையினை உடையதாகும். இளம் பெண்கள், ஏழைப் பெண்கள், தன்பால் சேர்கை யுடைய பெண்கள், வயதான மூதாட்டிகள், மற்றும் பொருளாதார நிலை யிலும் மரபு மணமுறையிலும் துன்புறம் பெண்கள், இவர் அனைவருக் கும் விடுதலை பெற்றுத்தருவதே இதன் இலக்காகும் என்றார்.
“Rosalint Delmar" 616óTU6hij
"பெண்ணியம் என்பது பெண்களின் நிலையை மாற்றுகின்ற
Suusis85lb. (A movement of change in the position of women)
"கெய்டி கார்ட்மன்” என்பவர்
"பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே நிலவும் பாலியல்
ஏற்றத்தாழ்வு பெண்கள் மீதான ஆண்களின் ஆதிக்கம் ஆகியவற்றிற்
கான காரணங்களை ஆய்வது தான் பெண்ணியம்”
எனவே சுருக்கமாகச் செய்வதனால் பெண்ணியம் என்பது பெண்களின் அடிமை நிலையை மாற்ற முற்படும் கருத்தியல் எனக் கொள்ள முடியும்.
அடுத்து பெண்ணியத்தின் வகைகளினை நோக்குவோமாயின் பெண்ணியம் பிரதானமாக மூன்று வகைப்படுகின்றது. அவையாவன முற்போக்கு பெண்ணிலைவாதம், மார்க்சீய பெண்ணிலைவாதம், தீவிர பெண்ணிலைவாதம் என்பனவே அவையாகும். இவற்றினை விடவும் ஆண்மீகப் பெண்ணியம், கிறிஸ்துவப் பெண்ணியம், கலாச்சாரப் பெண் ணியம், கறுப்பு பெண்ணியம் பொன்ற பிற பெண்ணியவகைகளும் காணப்படுகின்றன. இதில் கறுப்பு பெண்ணியம் என்பது சற்று வித்தியாச மானதாக நோக்கப்படுகின்றது. எனவே பெண்ணியத்தின் பிரதான வகை யினையும் கறுப்புப் பெண்ணியத்தினையும் சற்று விரிவாக ஆராய் G36) ITL b.
(அரசறிவியலாளன் 113 Rescussi

Page 73
UP)(3rrigj Guajiraofaloaparasib (Liberal Feminism)
முற்போக்கு பெண்ணிலைவாதம் என்பது பிரெஞ்சப் புரட்சி காலத்தில் காணப்பட்ட முற்போக்கு கருத்தியலின் நீட்சியாகவே நோக் கப்படுகின்றது. பின்னர் இது பெண்களுக்கு வாக்குரிமை, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றையும் உள்ளடக்கியது. இவ்வியக்கம் தனியொருவரின் விடுதலை, மனமகிழ்ச்சி இவை அரசாங்கத்தினாலும் சமூகத்தினாலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நம்பிக் கையோடு தொடங்கப்பட்டது தாராளப் பெண்ணியமானது ஏற்கனவே இருக்கும் சமூக அமைப்பினை முன்னேற்றத் தேவையான மாறுதல் களைச் செய்தது. அதன் மூலம் பெண்களுக்குத் தேவையான விடுத லையையும், மதிப்பினையும், தகுதியையும் பெற்றுத்தர முயன்றது. தாராளப் பெண்ணியம் புரட்சியின்றி பொருளாதாரத்திலும் சட்டத்திலும் மாறுதல்களைக் கொண்டுவர எண்ணியது.
USA 26ö (35 fu Gu605T856 960)LDLJLib (The national organi sation of women in America ) (Silasoon b56ir FLD6. TujL soo600Ti (5(g (Equal Opporlunities commision in England) easugoT6ub இச்சிந்தனைக்கு உட்பட்டுள்ளன. இது அடிப்படையில் பூஷவாக்களின் கருத்தியலாகவும் பால்ரீதியாகவும் நிலவும் பாரபட்சங்களை நீக்கி பெண்கள் சுதந்திரமாகப் போட்டி இட வழி ஏற்படுத்தியது. கர்ப்பத் தடைக்கான கட்டுப்பாடின்மை, பிரசவ விடுமுறை, கூட்டுப்பிள்ளை UITLDsful, (65 flu Gugoids6ft 60LDL (The National Organisation of Women) போன்றன இப் பெண்ணிலைவாதிகளின் கோரிக்கைகளாகும். ஏனைய பெண்ணியவதிகள் தாராளப் பெண்ணியத்தினை குறைகூறு கின்றனர். இவர்களது செயல் அடிப்படையில் சீர்திருத்தப் போக்கினதே எனினும் புரட்சி இல்லாமல் பெண்விடுதலை கிட்டாது என்பது இவரின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டாகும்.
மார்க்சீயப்பெண்ணிலைவாதம்(MarxistFeminism)
இப் பெண்ணியவாதிகள் தாராளப் பெண்ணியவாதிகளின்
கருத்துக்களை ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் பால்ரீதியான பிரிவிற்
(அரசறிவியலாளன் 114 Rescussi

கும் அங்கு நிலவும் சமத்துவமின்மைக்கும் காரணம் இவை முதலாளித் துவப் போக்காடு தொடர்பு கொண்டிருப்பதே என்பதனை இவர்கள் அழுத்த முற்படுகின்றனர். மார்க்சீயவாதிகளின் பெண்ணிலைவாதம் தொடர்பான மையக் கருத்துக்கள் பூர்வடிவாக் குடும்பத்தில் இருந்தே ஆரம்பமாகின்றது. பெண்களது 'வரலாற்று ரீதியான தோல்வி’ என்பது உயிரியலின்பாற்பட்ட பிரச்சினையல்ல மாறாக மேலதிக உற்பத்தியி னால் சொத்துக்களும், பெண்களும் தனியுரிமை ஆக்கப்பட்டதன் விளைவே. மெலதிக உற்பத்தியினால் பெறப்பட்ட தனிச் சொத்தை தொடர்ந்து பேணவும், தந்தை வழியுரிமையைத் தொடர்ந்த பேணவும் ஆண்கள் பெண்களை தம் உரிமையாக்க விரும்பினர்.
இவர்கள் தாராளாதிகள் குறிப்பிடும் உரிமைகளை கோருதல் மட்டும் பெண்விடுதலைக்கு உத்தரவாதமாகாது. உத்தியோகம் பார்த்த லில் மட்டும் சமவுரிமை என்பது உத்தியோகத்தினையோ. சம ஈடுபாட்டி னையோ தரப்போவதில்லை முற்போக்குக் கோரிக்கைகள் நல்லவை ஆனால் போதுமானவையல்ல. அவற்றால் பூரணசமத்துவத்தினை அடையமுடியாது என்கின்றனர் பெண்கள் பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கும் வாதம் என்னவெனில் குட்டி பூர்ஷஉவா ஸ்தாபனங்களான குடும்பம், தனிச்சொத்து என்பவற்றை அழித்து அவ்விடங்களில் பொது மயப்படுத்தப்பட்ட ஸ்தாபனங்களை அமைக்க வேண்டும் என்பதாகும்.
5ahu Guajiraofaloaparugb(Radical Feminism)
இப் பெண்ணிலைவாதிகள் தம் இயக்கத்தினை புரட்சிகரமான தென்றும் தம்கருத்துக்கள் பொருள் முதல்வாத, இயக்கவியல், மார்க்சீ யத்திலிருந்து வேறுபட்ட ஒன்றாகக் கருதுகின்றனர். இவர்கள் தாராளப் பெண்ணியத்திலிருந்து விலகிவந்த அமைப்பாகக் காணப்படுகின்றனர். தீவிரவாதப் பெண்ணியம் தொடக்கத்தில் பெண்களின் ஒடுக்குமுறைக் கான காரணத்தினையும் அதன்வேரையும் கண்டறிந்து அதை ஒழிப்பத னையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது.
தீவிரவாதப் பெண்ணியவாதிகள் பெண்களின் அடிமைநிலைக் கும் ஒடுக்குமுறைக்கும் குடும்ப அமைப்பு முறையும், பெண்களின் மறு
(அரசறிவியலாளன் 115 R.குபேசன் )

Page 74
உற்பத்தியுமே காரணம் எனக்கூறி அதனை முற்றாக எதிர்க்கவும், ஆண் களினை வெளிப்படையாக எதிர்க்கவும் முற்பட்டனர். அது மட்டுமன்றி பெண்களின் ஒரு பாலியில் சேர்க்கையைக் குறிக்கும் "லெஸ்பி யன்.பெமினிசம்' (Lesbian Feminism) என்ற கிளையையும் நிறுவினர் Lesbian என்பதனை தீவிரவாதப் பெண்ணியர்கள் அரசியல் அளவில் பங்கு பெறவும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தனர். இப் பெண்ணிய வாத அமைப்புக்குள்ளேயே அதிதீவிரவாதப் பெண்ணியம் என்ற அமைப்பு கடும் செயற்பாடு கொண்டதாக ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் தீவிரப் பெண்வாதிகளுடன் ஒப்பிடும் போது கடும் போக்காளர்களாக காணப்பட்டனர். அந்தரங்கம் பகிரங்கம்' (Personalis Political), 'பெண் கள் மட்டுமே" (Women Only), முழுவதும் பெண்ணாட்சியே’ எதிலும் எங்கும் போன்ற கோசங்களும், செயற்பாடுகளும் இப் பெண்ணிவாதிக ளுக்கு உரியதாகக் காணப்பட்டது. தந்தை வழிச் சமூகம், குடும்ப அமைப்பு, பாலியல் பெண்களின் வரலாறு போன்ற கொள்கைகள் தீவிரவாதப் பெண்ணித்தின் முக்கியமான கொள்கைகளாக காணப்படு கின்றது.
abgolf Galajiraofub (Black Feminism)
ஏனைய பெண்ணிய வகைகளுள் சிறப்புடையதாகவும், வித்தி யாசமானதும் மூன்றாம் உலக நாடுகளின் பெண்களின் உரிமைகளி னைப் பிரதிநித்துவப்படுத்தும் பெண்ணியவகையாக கறுப்புப் பெண் ணியத்தினைக் கொள்ளலாம். இதனை விடவும் இக்கருத்தியலானது காலத்தில் பிந்தியதாகவும் காணப்படுகின்றது.
பெண்ணியம் என்பது வெள்ளைமகளிரால் தொடங்கப்பட்டது. அவர்கள் தங்கள் குறைகளினையும், பிரச்சினைகளினையும் முன்னி றுத்தி பெண்ணியத்தினைத் தொடக்கினார்கள் எனவே அவர்களுக்கு கறுப்புப் பெண்களின் பிரச்சினைகளும், குறைகளும் தெரிந்திருக்க நியாயமில்லை என்ற நோக்கில் கறுப்புப் பெண்களின் பிரச்சினைக ளினை முன்னிறுத்தி வைக்கப்பட்ட கருத்திலே இது வாகும்.
(அரசறிவியலாளன் 116 Rகுபேசன் )

கறுப்புப் பெண்களினைப் பொறுத்தவரையிலும் பெண்ணிய ஆய்வுகள் அநீதி அழைத்திருப்பதாகக் கருதுகின்றனர். கறுப்பினப் பெண்களின் ஓர் குறிப்பான ஆய்வுதான் கறுப்பின ஆண்களுக்கும், கறுப்பினப் பெண்களுக்கும் இடையிலான முரண்பாட்டை விளக்கிக் கொள்ள முடியும் என இவர்கள் வாதிடுகின்றனர். கறுப்புப் பெண்கள் இனம் என்ற அடிப்படையிலும், பெண் என்ற அடிப்படையிலும் ஒடுக்கப் படுவதாக இப் பெண்ணியவாதிகள் உணருகின்றனர்.
கறுப்புப் பெண்ணியம் என்பது அவர்களின் பண்பாட்டு தளத் தில் இருந்து தோற்றம் பெற்றது அடிமைகளின் அடிமைகளாக இவர்கள் தங்களை எண்ணிக் கொள்கின்றார்கன். இவர்கள் வெள்ளை இனத்தவர் களால் வெள்ளை இனப் பெண்கள் ஒடுக்கப்படுவதிலும், வித்தியாசமான முறையில் பாலியல் ரீதியிம், மற்றும் உடல் உளரீதியிலும் ஒடுக்கப் படுதாக போராடுகின்றனர். இப் பெண்ணியவாதிகள் 'கறுப்பு அழகானது என்ற தொடரை முன்னிறுத்துகின்றனர் "கறுப்பு மகளிரியல்' என்பது கறுப்புப் பெண்களின் பிரச்சினைகளை மட்டும் பேசுகின்றது Barbara Smith என்பவர் கறுப்புப் பெண்ணியத்தினை வளர்த்வர்களுள் குறிப் படத்தக்க வராவார்.
பெண்ணியம் எதிர்கொள்ளும் சவால்கள்
இன்று பெண்ணியம் என்பது பெண்களுக்கு எதிராகப் பயன் படுத்தும் நிலை காணப்படுகின்றது. குறிப்பாக பெண்களின் மணவி லக்கு வழக்குகளில் பெண்களுக்கு நட்டஈடு தேவையில்லை என சட்ட வாதிகள் வாதிடுகின்றார்கள் இது பெண்ணியவாதிகளுக்கு மறைமுக மான பல விளைவுகளினைத் தொற்றுவிக்கின்றன. இதனால் கீழைத்தே சத்தினைக் காட்டிலும் மெலைத்தேயத்தில் தான் பெண்கள் மத்தியில் பெரும் பாதிப்பினை எற்படுத்தியுள்ளதனைக் காணலாம்.
அடுத்து பெண்ணியம் தொடர்பான கருத்துக்களில் இடதுசாரி கள் இரட்டை மனப்போக்கு கொண்டவர்களாகக் காணப்படுகின்றமை பெண்ணியவாதிகளுக்கு, பெண்ணியக் கருத்துக் களுக்கும் அதரவு கொடுப்பதனால் தங்கள் கொள்கைகளுக்கும், நோக்கங்களுக்கும் எதி
(அரசறிவியலாளன் 117 R.குபேசன் )

Page 75
ரானதாக அல்லது தாமதத்தினை ஏற்படுத்தி விடுமோ என ஐயப்படு கின்றனர். இதனால் இரட்டை நிலைப்பாட்டினை கடைப்பிடிப்பவர்களாக காணப்படுகின்றமை பெண்ணியவாதிகளுக்கு பெரும் நெருக்கடியி னைக் கொடுக்கின்றது.
பெண்ணியவாதிகளில் தீவிரவாதப் பெண்ணியவாதிகள் முன் வைக்கும் கொரிக்கைகள் சிறுபிள்ளைத்தனமான, நிறைவேற்றப்பட முடியாத வெறும் கற்பனாவாதக் கருத்துக்களாக காணப்படுகின்றமை. பெண்ணியவாதிகளினை பெரும் விமர்சனத்துக்குள்ளாக்குகின்றது. இதற்குள்ளும் தீவிரவாதப் பெண்ணியவதிகள் முன்வைககும் தொழில் நுட்பக் குழந்தை என்ற அம்சம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்ற வினாவும் முளிவைக்கப்படுகின்றது.
இன்று மேற்குலகப் பெண்ணியவாதிகள் முன்வைக்கும் சில கருத்துக்களும், கோரிக்கைகளும் கீழைத்தேசப் பெண்ணியவாதிக ளையும், பெண்களையும் நெருக்கடிக்குள்ளாக்குவதனைக் காணலாம். மேற்குலகப் பெண்ணியவாதிகளின் கோரிக்கைகள் கீழைத்தேசத்தில் கலாசார சீரழிவிற்கும், பண்பாட்டுப்புரள்விற்கும், சமூக முரண்பாட்டிற் கும் ஏதுவாகின்றன என கீழைத்தேயத்தவர்கள் விமர்சிக்கின்றனர். இதன் விளைவினால் கீழைத்தேயப் பெண்ணியவாதிகள் பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து இயக்கத்தினை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்டுகின்றது.
இதனைவிடவும் இன்றைய உலகம் எதிர்கொள்ளும் வேலை யின்மை, வறுமை, கொடிய நோய்கள் பொன்ற பொருளாதாரப் பிரச்சி னைகள், மற்றும் பயங்கரவாதப் பிரச்சினைகள், இனமுரண்பாடுகள் பொன்ற அரசியல் சமூகப் பிரச்சினைகளுடனும் ஒப்பிடும் போது இப் பெண்ணியக் கொரிக்கைகள் வீண் காலவிரயத்தையும் நிர்வாகத் தாமதங்களையும் எற்படுத்துகின்றன எனவும். பல கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன இது மட்டுமன்றி சில பெண்ணியக்கருத்துக் கள் நிகழ்காலத்தில் வலியனவாகக் காணப்பட்டாலும் அவை எதிர் காலத்தில் பலவீனமானதாகக் காணப்படும் என எதிர்வு கூறவும் படுகின்
35. sigogosiusortsmoir 118 Rരൂപേണ )

எனவே முடிவாக பெண்ணியம் என்பது அடக்கப்படும் ஒடுக்கப் படும் பெண்களின் உரிமைகளினை வென்றெடுக்க அவசியமானது என்பதில் மேலைத்தேயத்திலும் சரி. கீழைத்தேயத்திலும் சரி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றுதான் ஆனால் அவை காலத்தின் தேவைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப பொருத்தமானதாக சமூக, பொருளாதார அரசியல் நிலைகளில் மாற்றியமைக்க வேண்டிய தேவை காண்ப்படுகின்றது. இல்லையேல் இக்கருத்தியலும் ஏனைய கருத்தியல்கள் பொல் தோற்கும் அல்லது மறக்கப்படும் நிலை ஏற்படும் என்பதில் ஐயமில்லை
References 01) உதயன் - மேற்குலகப் பெண்ணியம் தோல்வி கண்டுள்ளதா?
ஞாயிறு சிறப்பம்சம், 16 வைகசி 2004, தமிழில் கொற்றவை.
02) குளோரியா ஜோசப், "மார்க்சியம் - பெண்ணியம் - இனவாதம் பொருந்தாத முக்கூட்டு” மார்க்கீயம் பெண்ணியம் உறவும் முரணும் விடியல் பதிப்பகம், 1998.
03) பெய்டி கார்ட்மன் - “மார்க்கீயத்திற்கும் பெண்ணியத்திற்கும்
இடையிலான மகிழ்ச்சியற்ற திருமணமா? மார்க்சீயம் - பெண்ணியம் உறவும் முரணும், விடியல் பதிப்பகம், 1998.
04) செல்வி திருச்சந்திரன் “பெண்ணிலைவாதம் கோட்பாட்டு முரண்பாடு களும் ஒரு சமூகவியல் நோக்கு” பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், 1998.
05) கலாநிதி இரா.பிறேமா, பெண்ணியம்.
தமிழ் பத்தகாலயம், சென்னை, 2000.
06) கலாநிதி திருமதி முத்து சிதம்பரம், பெண்ணியம் தோற்றமும்
வளர்ச்சியும், தமிழ் புத்தகாலயம், சென்னை, 1995.
(அரசறிவியலாளன் 119 Rகுபேசன் )

Page 76
உலகமயமாக்கலும் அதன் சாதக, பாதக விளைவுகளும்
Globalization and its Favourable and Unfavourable Consequences
- S.நந்தினி
2000/A/157
அறிமுகம்:
உலக மயமாக்கல் என்பது புதிய விடயமல்ல அது 16ம் நூற் றாண்டில் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி போன்ற வியாபார அமைப்புக் களின் தோற்றத்துடன் ஆரம்பமானது. இது ஏகாதிபத்திய வாதம் காலனித்துவம் போன்றவற்றின் கீழ் புதிய எழுச்சியைப் பெற்றுக் கொண்டது. உலகமயமாக்கம் என்ற பதமானது தற்போது உலக மட்டத்தில் பேசப்பட்டுவரும் ஒரு விடையமாக மாற்றமடைந்துள்ளது. இப்பதமானது பல்வேறு துறைசார்ந்த அறிஞர்களாலும் பல்வேறு நிறுவனங்களாலும் வேறுபட்ட வகையில் வரைவிலக்கணப்படுத்தலுக்கு உட்பட்டாலும் இப்பதத்தின் விரிவு காலநீட்சிக்கேற்ப விரிவுபட்டுச் செல்லும் பதமாகவோ அல்லது மாற்றமடைந்து செல்லும் பதமாகவே உள்ளது. என சொலோன் (Alfread p.Sloan) என்ற அறிஞர் குறிப் பிட்டுள்ளார். உலகமயமாக்கம் என்ற பதமானது தற்காலத்திலேயே அதிகம் பேசப்பட்டு வருகின்ற போதும் 1960 களின் பின்னாலேயே இப்பதம் பிரயோகிக்கப்பட்டிருந்தது. கடந்த நான்கு தசாப்த கால இடை வெளியில் இப்பதத்தின் முக்கியத்துவம் வலுவடைந்து வந்ததெனினும் கடந்த இறுதித்தசாப்தமாகிய 1990 - 1999 காலத்திலேயே அதீத முக்கி யத்துவம் கொடுத்து வழங்கப்பட்டு வந்ததென்பது இங்கு கவனிக்கக் கூடியதாகும். 1995ல் “வோட்டர்ஸ்" (Warders) என்பவர் உலகமய மாக்கம் என்பதனை பினவருமாறு வரைவிலக் கணப்படுத்தினார்.
(அரசறிவியலாளன் 120 såsáî)

"சமூக மற்றும் கலாச்சார செயற்பாடுகள் மீதானதும் சர்வதேச பொருளாதார முறைகளில் ஒன்றான சமவுடமை முறை பின்தள்ளப் பட்டுள்ளன. பொருளாதார நடவடிக்கைகள் மீதானதுமான புவியி யல் ரீதியான இடையூறுகள் மற்றும் இறுக்கங்கள் தளர்வடையும் அல்லது தளர்த்தப்படும் செயற்பாடே உலகமயமாக்கம்” என்று குறிப்பட்டார்.
அதாவது சமவுடமைப் பொருளாதார அமைப்பும் உலக நாடுக ளுக்கு இடையிலான புவியியல்சார் இடர்களும் "உலகமயமாக்கம்” என்ற பதத்திற்கு இடையூறுகளாக விளங்கி வருகின்றன என வேர்ட் டர்ஸ் கருதினார். பரீட்மன் (Breedman) என்பவர் (1999) குறிப்பிடும் போது "உலகளாவிய பொருளாதார அமைப்புக்குள் மூலதனம் மற்றும் தொடர்பாடலுக்காக ஏங்கி நிற்கும் மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கான ஓர் தீர்வே உலயமயமாக்க மாகும்" எனக் குறிப்பிட்டார்.
எனினும் உலகமயமாக்கம் என்பதற்கு சர்வதேச நாடுகள் தம் முடைய தேசிய பொருளாதாரத்தை உலக சந்தைவரை விஸ்தரிக்கும் நடவடிக்கை எனவும், கண்டங்களுக்கும், பிராந்தியங்களுக்கும் இடை யிலான பல்வேறு வலைப்பின்னல் அமைப்புக்களினதும், பாய்ச்சல்களி னதும் வளர்ச்சி எனவும், ஏகபோக முதலாளித்துவத்தின் குழந்தை எனவும் பல்வேறு வரைவிலக்கணங்கள் கூறப்பட்டு வந்துள்ளது. இக் கட்டுரையானது உலகமயமாக்கலிற்கான வரைவிலக்கணங்கள் அதன் வகைகள் சாதக, பாதக விளைவுகள் என்பன பற்றி ஆராயும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
உலகமயமாக்கலின் வகைகள்
இந்த உலகமயமாக்கலானது மூன்று வகைகளில் இடம்பெறு கின்றது.
* காலனித்துவ உலயமயமாக்கம் * நிறுவன ரீதியான உலகமயமாக்கம் * திறந்த பொருளாதார சந்தை மயமாக்கம்
(அரசறிவியலாளன் 121 Spisai

Page 77
காலணித்துவ உலகமயமாக்கம் என்பது ஒரு நாடு பிறநாடு களினைப் பின்பற்றி தமது மதம், மொழி, கலாசாரம், பொருளாதாரம் என்பவற்றினைப் பரப்பவும், நிறுவன ரியான உலகமயமாக்கம் என்பது உலக நாடுகள் தமக்குக் கீழிலிருந்த 3ம் மண்டல நாடுகளினை மதம், மொழி, மற்றும் உற்பத்திப் பொருட்களினை, அவற்றுக்கு அளிப்ப தாகவும், திறந்த பொருளாதார சந்தையினை ஒரு நாட்டின் பொருளா தார எல்லைகளினைத் திறந்துவிட்டு மற்றநாடுகளில் உள்ள மூலவளங் கள் பொருட்கள் என்பன தங்குதடையின்றி பாய்வதைக் குறிப்பதாகும்.
இதனைவிட உலகமயமாக்கல் என்ற பதமானது இலகுவாக ஆராயும் பொருட்டு 1993இல் “வாங் ஹியாகிய்ோங்" என்பவர் நான்கு உபநிகழ்வுப் போக்குகளாகப் பிரிந்து ஆராய்ந்தார்.
* உயிரின ரீதியான உலகமயமாக்கல்
(Biological Globalization) * பொருளாதார ரீதியான உலகமயமாக்கல்
(Economical Globalizathion) * தொழில்நுட்ப ரீதியான உலகமயமாக்கல்
(Technical Globalozation) * சமூக ரீதியான உலகமயமாக்கல்
(Social Globalization)
உயிரினவியல் ரீதியான உலயமயமாக்கல் என்பது வாழ்க்கை அம்சங்களானது பாரிய மாற்றம் கண்டு வருவதையும், மனிதவுயிரினங் களிலும், தாவரப் போர்வைகளிலும் ஏற்படுகின்ற மாற்றங்களையும் இவற்றுடனிணைந்த ஏனைய மாற்றங்களையும் உள்ளடக்குகின்றது. பொருட்கள் சேவைகள் பரவுலானதும் விரைவானதுமான சுற்றோட்டங் கள், சுற்றுலாத்துறையின் என்றுமில்லாத வளர்ச்சி, நேரடித் துணைக் கோள் தொலைக்காட்சி சேவைகளின் வளர்ச்சி, மற்றும் வர்த்தக விருத்தி, விரைந்த சர்வதேச போக்குவரத்து வளர்ச்சி என்பன மனித, மனிதனல்லாத மற்றும் தாவர போர்வைகளில் ஏற்படுத்திவரும் பாரிய மாற்றங்கள் அல்லது உலக ரீதியில் அவற்றுக்கிடையில் ஏற்பட்டு வரும் தொடர்புகள் உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் திருமண நடை முறைகள் உயிரியல் பரிமாற்றநிலையில் ஏற்பட்ட விருத்தி என்பவற்றை (அரசறிவியலாளன் 122 sநந்தினி)

உள்ளடக்கியதாக இவ்வுரினவியல் ரீதியான உலகமயமாக்கல் அமை
கின்றது.
பொருளாதார ரீதியான உலகமயமாக்கல் என்பது சர்வதேச
ரீதியான வர்த்தகத்தை மூலாதாரமாகக் கொண்டு அதனுடன் இணைந்த ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகள் நாணயமாற்று நடவடிக்கைகள் வெளிநாட்டின் நேரடி மறைமுக முதலீட்டு நடவடிக்கைகள் உலக சந்தையை மையப்படுத்திய பொருளாதார நடவடிக்கைகள், வெளி நாட்டு உதவிகள், சர்வதேச ரீதியான பொருளாதாரத் திட்டமிடல்கள், தாராளமயமாக்கல் அல்லது மக்கள் மயமாக்கல் புதிய வன்நாணய
உருவாக்கங்கள் (Hard Currency) போன்ற பொருளாதார அம்சங்களை உள்ளடக்கி நாடுகளை அல்லது பிரதேசங்களை இணைத்தலைக் கருதுகின்றது. அத்துடன் சர்வதேச ரீதியில் செயற்படும் அல்லது பிராந்திய ரீதியில் செயற்படும் பொருளாதாரக் கூட்டுக்களான சர்வதேச நாணயநிதியம் (IMF) பெனெலக்ஸ் (Benelux) உலக வங்கி (IBRD) ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) என்பனவும் பொருளாதார ரீதியான உலகமயமாக்கலுக்கு காரணமாகின்றன. ஏனைய உலகமயமாக்கலின் தாக்கங்களைவிட பொருளாதார ரீதியான உலகமயமாக்கமே அதிக தாக்கத்தினை உலக.ரீதியில் ஏற்படுத்தி வருவதாக "சமீர் அமீன்” என்ப வர் குறிப்பிடுகின்றார்.
தொழில்நுட்ப ரீதியான உலகமயமாதலே ஏனைய எல்லா உலகமயமாதலுக்கும் அடிப்படையாக விளங்குகின்றது. இதற்கு அடிப் படையாக செயற்கைக்கோள் ஊடானதகவல் பரிமாற்றமே காரணமாக அமைகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியப் பல்கலைக் கழத்தைச் சேர்ந்த பீற்றர் "கொஹேரிச்” (Peter Govrevitch) “றோகர் (8LIT6ö“ (Roger Bohn) (3L6ýNl LDäG356ögéä (David Mickendrick) ஆகியோர் குறிப்பிடும் போது தொழில்நுட்ப ரீதியான உலகமயமாக் கலில் எல்லாவற்றையும் விட "ஹாட்டிஸ்க்" உற்பத்தியும் விநியோக (pGuD (Hard Disk Drive industries) S6ögG 9gab 25Tä585lb GläFQ525) கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச வலையமைப்பு மற்றும்
(அரசறிவியலாளன் 123 Sநந்தினி)

Page 78
தற்காலத்தின் பெரும்பாலான தொடர்பாடல் சாதனங்கள் அனைத்திலும் "ஹாட்டிஸ்க்" இன் (Hard Disk) செல்வாக்கு மிகுந்துள்ளது. என அவர் குறிப்பிடுகின்றார். 1970கள் தொடக்கம் தொலைக்காட்சி அலை வரிசைகளும் ராய்ட்டர் போன்ற துணைக் கோள் ஒலி, ஒளி பரப்புக்க ளும் மேலைத்தேச, கீழைத்தேச கலாச்சார மாதிரிகளை உலகமயப் படுத்துவதில் பாரிய பங்கினைச் செலுத்தியிருந்தன. ஆரம்பத்தில் உல கின் பரஸ்பர தங்கியிருத்தல் நிலையைத் தீர்மானிப்பதில் சர்வதேச வர்த்தகம் பிரதான காரணியாக இருந்து வந்தது. ஆனால் இன்றோ உலகளாவிய கலாச்சாரத்தை வடிவமைப் பதில் ஊடகங்களையும், தொடர்பாடல், சாதனங்களையும் உள்ளடக்கிய தொழில் நுட்பமே பிரதான பங்கேற்கின்றன என "மக்கென்றின்” மற்றும் "கிக்கென்” (Hicken) என்போர் குறிப்பிடுகின்றனர்.
சமூக ரீதியான உலகமயமாதல் என்பது ஏனைய வகையான உலகமயமாதலின் விளைவினால் மனிதனது கலாச்சாரங்கள் மற்றும் சமூக விடயங்கள் தமது கட்டுபாடுகளில் இருந்து விடுபட்டு அனைத்து நாட்டுக் கலாச்சார சமூக அம்சங்களையும் ஏற்றுக் கொள்ளும் மன நிலை உருவாவதும், குறிப்பிட்ட வரையறை கொண்ட சமூக கலாசார அம்சங்கள் ஏனைய உலகப் பகுதிகளுக்குப் பரவுவதுமாகும். இந்த அடிப்படையில் தொழில்நுட்ப வளர்ச்சியும் சர்வதேச போக்கு வரத்து விருத்தியும் தொடர்பு சாதனங்களினதும் விளம்பரங்களினதும் செயற் பாடுகளும் அரச குடிப்பெயர்வு கொள்கைகளும் மக்களின் மனநிலை யும் இத்தகைய சமூக ரீதியான உலகயமாதலுக்கு காரணமாக விளங் குகின்றது.
உலகமயமாதலின்சாதக, பாதக விளைவுகள்
உலகமயமாக்கம் என்பது நேரடியாகப் பல துறைகளுடன் தொடர்புபட்டதாக விளங்கி வருகின்றது. இந்த உலகமயமாக்கலால் சாதகமான விளைவுகளும் பாதமான விளைவுகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படுத்துவதாகவே காணப்படுகின்றது.
(அரசறிவியலாளன் 124 sâsî)

சாதகமான விளைவுகள்
* உற்பத்திகளையும், காரணிச்சந்தைகளையும் உலகளாவிய முறை யில் ஒருங்கிணைக்கும் செயற்பாடு புதிய தொன்றல்ல என்பதுடன் பொருளாதார அபிவிருத்தியில் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக வும் மாறியுள்ளது. வர்த்தகப் பெருக்கம், உற்பத்திப் பெருக்கம் வேலை வாய்ப்பு பெருக்கம் ஏற்பட்டுள்ளது.
* இலங்கையின் வரலாற்றின் பெரும்பகுதியில் இது சர்வதேச வர்த் தகவலை அமைப்பில் முக்கியமானதொரு பங்கினைக் கொண்டிரு கிறது.
* உலகளாவிய நுகர்வோர் தளத்தையும், மூலவளங்களையும் அடை வதற்கு அனுமதிப்பதன் மூலம் உலக மயமாக்கல் நாடுகளுக்கு நன்மையளிக்கிறது. அதிகளவு வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெறலாம்.
* இலங்கை போன்ற சிறிய நாடுகள் பாரிய சந்தைகளை அடைவதன் மூலம் உற்பத்திகளில் பொருளாதார அளவுத்திட்டச் சிக்கல்களிலி ருந்து அவை இலாபங்களை அடைகின்றன.
* அதிக நவீன தொழில்நுட்ப அறிவையும் கைத்தொழில் அறிவையும்
பெறக்கூடியதாக உள்ளது.
தரமான பொருட்களை பெறமுடிதல்
பூகோளக்கிராமம் உருவாகும் போது வளர்முக நாடுகளில் உள்ள பின்தங்கிய சமூக நிலைமைகளை ஒழித்துவிடும்.
* இது செயற்திறன் மிக்க பொருளாதார நடவடிக்கைகளை இனங் கண்டு கொள்ளவும் மிகக்கூடியளவு உற்பத்தியாற்றல் மிக்க நடவ டிக்கைகளின் மூலம் அவற்றைப் பதனிடு செய்து கொள்ளவும் முடிகிறது.
(அரசறிவியலாளன் 125 sநந்தினி)

Page 79
* வளர்முக நாடுகள் தமது சேமிப்புக்களையும் கடன் பெறும் வாய்ப்
புக்களையும் அதிகரிக்க முடியும்.
* ஆரம்ப காலங்களில் இருந்து கடந்த சில தசாப்தங்களுக்கு முன் னுள்ள காலம் வரை சர்வதேச வர்த்தகம் வகித்துவந்த செல்வாக் கானது தற்போது உலகமயமாக்கத்தின் விளைவால் தொடர்பாடல் சாதனங்களுக்கு மாற்றமடைந்துள்ளது. அதாவது இன்றுள்ள நாடுக ளின் தங்கியிருத்தல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு என்பன தொடர் பாடல் மற்றும் ஊடகங்களுக்கு மாறியுள்ளது. வானொலி, தொலைக்காட்சி என்ற வகையில் தொடங்கிய தொடர்பூடக வளர்ச் சிப்பாதை செய்மதிகளுடன் இணைந்த சர்வதேச வலையமைப்பு வரை முன்னேறி உச்சத்தைத் தொட்டு நிற்கின்றது. கணிப்பொறிக ளின் பெருக்கம் எந்தவொரு பின்தங்கிய பகுதியும் தனித்துவிடப்ப டும் நிலையில் இருந்து தவிர்க்கப்படுவதற்கு காரணமாகின்றது.
* பெருமளவு மூலவளங்களையும், மூலதனத்தையம் கொண்டிருந்த முதலாம் உலக நாடுகளே தொழில்நுட்பத்தில் ஏகபோகத்தினை கொண்டிருந்தன. இந்நிலை தற்போது உலகமயமாக்கத்தின் விளை வால் மாற்றமடைந்து கொண்டிருப்பதனால் மூன்றாம் உலக நாடுக ளுக்கும் இத்தொழில்நுட்பங்கள் பரவிடும் நிலை காணப்படுகின்றது. நவீன முற்போக்கான தொழில் நுட்ப ஆராச்சிகளானது. இன்று பல்வேறு நாடுகள் இணைந்து ஈடுபடும் நிலைவரை காணப்படுகின் றது. அத்துடன் பல நாட்டு அல்லது பல பிரதேசங்களினதும் மனித வளங்கள் அதாவது ஒவ்வோர் துறையில் முன்னேறிய மனித வளங்களான விஞ்ஞானிகள் தொழில்நுட்ப வல்லுனர்கள் அழைக் கப்பட்டுத்திட்டங்கள் நிறைவேற்றப்படுவதுடன் உதவிகள் என்ற போர்வையில் இத்தகையோர் ஏனைய பகுதித்திட்டமிடல்களிலும் குறிப்பாக மூன்றாம் உலகப் பகுதிகளின் திட்டமிடல்களிலும் பயன் படுத்தப்படுவது இத்துறை மீதான செல்வாக்கையே வெளிப்படுத் துகின்றது.
(அரசறிவியலாளன் 126 Sain)

பாதகமான விளைவுகள்
* பொருளாதாரங்கள் ஒன்றில் ஒன்று தங்கியிருத்தலும் அத னால்
ஏற்படும் பலவீனங்களும்.
* சர்வதேச நிதிச்சந்தைகளின் நிச்சயமற்ற தன்மையினால் ஆபத்துக்
களின் அளவு அதிகரிக்கின்றது.
* குறைந்த தரமுடைய தொழில்நுட்பத்தைக் கொண்ட நாடுகள்
உலக சந்தையை அடைய முடியாதிருத்தல்.
* அண்மையில் பல புதிய நாடுகள் ஆயுத உற்பத்தியில் ஈடு பட்டுவருவதுடன் அதிகளவு நிதியினையும் இவ்வுற்பத்தி மற்றும் ஆராய்ச்சிகளுக்காக ஒதுக்குகின்றது. இதனுாடாக உற்பத்தி செய் யப்படும் அழிவாயுதங்கள் தாழ்வருமான நாடுகளுக்குக் குறைந்த செலவிலும் கடனடிப்படையிலும் உதவியடிப்படையிலும் பரிமாற்றப் படும் நிலை இன்று அவதானிக்கப்பட்டுள்ளது. தமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாத நாடுகளான இந்தியா, பாகிஸ் தான், வடகொரியா, ஈராக் போன்ற பின்தங்கிய நாடுகள்கூட இன்று அணுவாயுத ஆராய்ச்சிகளுடாக அவற்றை உற்பத்தி செய்து வைத் துள்ளன. ஆரம்பத்தில் வளர்ந்த நாடுகள் மட்டில் நின்று அணுவா யுத மூலங்கள் இன்று இந்நாடுகளுக்கும் கைமாறியமை உலகமய மாக்கத்தின் ஒரு வெளிப்பாடாகவே விளங்குகின்றது. மேலும் வளைகுடா யுத்தம், "பால்க்கன்" நெருக்கடி போன்றவற்றில் ஐக்கிய நாட்டுப்படைகள் மற்றும் நேட்டோ படைகளின் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் தெளிவான உலகமயமாக்கத்திற்கு சான்றுகளாகி நிற்கின்றன. இன்று இவ்வாயுதங்களுக்காக மூன்றாம் உலக நாடுகள் முதலாம் உலக மற்றும் இரண்டாம் உலக நாடுகளில் தங்கியிருக்கும் நிலையினைத் தோற்று வித்துள்ளது.
* பல்தேசியக் கம்பனிகளின் ஆதிக்கம், வர்த்தகம், முதலீடு, தொழில் நுட்பம், தகவல் தொடர்பு என்பவற்றை அதிகரித்தல், இவை தேசிய
(அரசறிவியலாளன் 127 Sநந்தினி)

Page 80
பொருளாதாரங்களின் உள்ளார்ந்த விரிவாக்கத்திற்குத் தடையாக உள்ளன.
* வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிக்கின்றது.
* சுதந்திரமான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றுவதற்கு
அமைய நாடுகளில் நிபந்தனைகள் தடையாகவுள்ளன.
* தேசிய அரசின் முக்கியத்துவம் குறைக்கப்படுவது பல்துறைகளில்
அரசின் பங்குப் பணிகளைப் பாதிக்கும்.
* அதிகளவு குறுங்கால மூலதனப் பாய்ச்சல்களின் விளைவாக அந் நியச் செலாவணி வீதங்களில் தொடர்ச்சியான தளம்பல்கள் இடம்பெறும் இது உள்நாட்டு பொருளாதாரம் மூலவளங்களின் அசைவு மற்றும் வெளிநாட்டுக்கு வர்த்தகம் என்பவற்றை மோச மாகப் பாதிக்கும்.
* நாடுகளுக்கிடையிலான சமமின்மையை ஊக்குவிப்பதற்காகவே
உலக மயமாக்கல் செய்முறை நிகழ்கிறது. அத்தகைய ஏற்றத் தாழ்வு பின்வரும் அம்சங்களில் அடையாளம் காணப்படக் கூடியன.
* பல்தேசிய நிறுவனங்களின் மூலதன முதலீடு எல்லா நாடுகளுக் கிடையேயும் சமமாகப் பகிரப்படவில்லை. வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 1980ல் 40,000 Billion ஆக இருந்தது. 1997ல் அது 315 Milion டொலராக பெருகியிருந்தது. அதனால் இவற்றில் * பங்கு உலகின் பத்து பெரிய நாடுகளுக்குச் சென்றது. உலக சனத் தொகையில் 70 சதவீதமான மக்களை கொண்ட 100 சிறிய நாடுக
ளுக்கு க் பங்கு முதலீடு மாத்திரமே சென்றது.
* வளர்முக நாடுகளுக்குரிய முதலீட்டில் 65% ஆசியாவுக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது சில நாடுகளின் முதலீடுகள் சில
(அரசறிவியலாளன் 128 Sநந்தினி)

பிராந்தியங்களில் மாத்திரம் குவியும் ப்ோக்கும் காணப்படுகின்றது. ஆசியாவில் ஜப்பானிய முதலீடுகளும், இலத்தின் அமெரிக்காவில் அமெரிக்க முதலீடுகளும் குவிவதை உதாரணமாகக் குறிப்பிட 6) Tib.
பல்வேறு நாடுகளிலும் வருமானப் பங்கீட்டையும் அது சீராக்க உதவவில்லை மிகவும் குறைந்த வருமான மட்டத்தவரின் வருவாய் களை 8% ல் உயர்த்திய போது மிக உயர்ந்த வருமா னத்தவர் களின் வருவாய்களை 10% னால் அதிகரிக்கச் செய்திருந்தது.
வளர்முக நாடுகளின் பொருளாதார தகைமையை மாற்றும் இறை மை இந்நாடுகளின் அரசாங்கங்களிடமிருந்து பல்தேசிய கூட்டுத் தாபனங்களின் கைகளுக்கு மாற்றப்பட்டு விட்டன.
பிராந்திய ஒத்துழைப்புக்கள் சிலவற்றுடனும் சில நாணயங்களுட னும் தொடர்புகளைப் பலமாக்கிய நாடுகளின் எதிர்காலம் சற்றுக் கடினமாக இருக்கக்கூடும்.
புதிய வர்த்தக விதிகள் மிகவும் பலசாலியான மேற்குலக நாடுகளு டன் நலிவுற்ற வளர்முக நாடுகளைப் போட்டியிட்டு முன்னேறு மாறு வற்புறுத்துகின்றன. இது விரும்பத்தக்கதல்ல
வளர்முக நாடுகளுக்கான உதவி மூலகங்களில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் இவை துரிதமாக போட்டியிடும் வலி மையைப் பெறமுடியாமற் போகும்.
மேற்கூறப்பட்ட விடயங்களை விட உலகரீதியான நிதிச் சந்தைகள் மீதும் சர்வதேச ரீதியான வர்த்தக செயற்பாடுகள் மீதும் பிராந்திய மற்றும் பிரதேச அபிவிருத்திச் செயற்பாடுகள் மீதும் சர்வ தேச நாடுகளுக்கிடையிலான உதவிகளின் பரிமாற்றத்தின் மீதும் இவ்வு லகமயமாக்கம் தாக்கத்தினை ஏற்படுத்தி விடுகின்றது.
(அரசறிவியலாளன் 129 sâsî)

Page 81
இவ்வாறுஉலகமயமாக்கம் என்ற பதத்தின் வரைவிலக்கணங் கள் பல்வேறு விதமாக பல அறிஞர்களாலும் கருத்துக்கள் முன்வைக் கப்பட்டுள்ளது. அரசியல் கட்டுப்பாடுகளை மீறுவதும், சமவுடமை பொருளாதார செல்வாக்கிலிருந்து விடுபடுதலுமே உலகமயமாக்கம் என்ற அடிப்படைப் பண்பு எல்லோரினுடைய வரை விலக்கணங்களிலும் புரையோடிக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வுலக மயமாக்கம் உலகினை சுருக்கியுள்ளதென்று கருதக்கூடியதாக இருப்பதுடன், மூன்றாம் உலகின் கிராமமட்டங்களிலும் இன்று உலகமயமாக்கத்தின் செல்வாக்கு புலப்படத் தொடங்கியுள்ளது. தொழில்நுட்பத்துடன் சார்ந்த ஏனைய வளர்ச்சியே உலகமயமாக்கத்தின் அடிநாதமாக விளங்குகின்
395).
References 1) T.K.கிரிதரன், உலக நாடுகளில் உலகமயமாக்கம், யாழ்ப்பாண
புவியியலாளன் இதழ், 14-15, புவியியற்கழகம், 2000.
2) அபிவிருத்திப் பொருளியல், உலகமயமாக்கல் தொடர்பான விசேட
கட்டுரைகள், இதழ் - 3, 2002.
3) உலகமயமாக்கல், பொருளியல் நோக்கு, மக்கள் வங்கி வெளியீடு,
சித்திரை/வைகாசி, 2000.
4) உலகமயமாக்கலின் மறுபக்கம், யுனஸ்கோ கூரியர்,
கார்த்திகை, 2000.
5) விருட்சம், வணிக மாணவர் மன்றம் இதழ் - 5, 2000.
(அரசறிவியலாளன் 130 Spigots

ஐரோப்பிய யூனியனின் உலகப்பரிமாணம்
The Global Dimension of European Union
- Mரசீதரன்
99/A/354
அழிவுகரமான இரண்டாவது உலகயுத்தம் முடிவுற்ற வேளை யில் போரில் வென்றவர்களும், தோற்றவர்களும் ஒரே நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். யுத்தத்தை நோக்கி பிளவுண்ட ஐரோப்பாவுக்கு பதி லாக சமாதானத்தின் வழியில் ஐக்கிய ஐரோப்பா ஒன்றை உருவாக்குவ தற்கான விருப்பினை அனைத்து தரப்பினருமே கொண்டிருந்தனர். ஐரோப்பிய அரசுகளினுடைய தேறிய அக்கறைகளின் மோதல் காரண மாக இன்னொரு போர் தோன்றுவதை எந்தவிதத்திலாவது சரி தடுத் துக் கொள்ளவேண்டும் என்பதே அவர்களுடைய அபிலாசையாக இருந் 鲈@。
மேற்கூறிய அம்சத்தை சாதித்துக் கொள்ளுவதற்கு தேசிய இறைமை தொடர்பான கண்ணோட்டங்களை நலிவடையச் செய்து ஐரோப்பியவாதம் என்ற உணர்வுக்கு வலுவூட்டுவது அவசியமாக இருந் தது. இதற்கு பொது நிறுவனங்களுக்கூடாகவும், பொது விதிமுறை களுக்கூடாகவும் மேற்கு ஐரோப்பாவை ஒருங்கிணைப்பது அவசியமாக இருந்தது. இவ் அவசியம் ஐரோப்பிய யூனியனின் தோற்றத்திற்கு வித் திட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
ஐரோப்பிய ஒன்றிணைப்புச் செயற்பாட்டிற்கான அத்திவாரம்
ஒரு பொது அதிகார சபையின் கீழ் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய
நாடுகளின் நிலக்கரி மற்றும் உருக்கு கைத்தொழிலை ஒன்றாக
(அரசறிவியலாளன் 131 Mரசீதரன்)

Page 82
இணைத்ததன் மூலம் 1951இல் இடப்பட்டது இதன் பின்னர் ஐரோப்பிய நாடுளிடையேயான இணைப்புக்கள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப் பட்டன.
1958ம் ஆண்டு "ரோம்" உடன்படிக்கை யின் கீழ் ஆறு உறுப்பு நாடுகளுடன் ஐரோப்பிய பொருளாதார சமூகம் உருவாக்கப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் முதலில் பிரான்ஸ், மேற்கு ஜேர்மனி, இத்தாலி, லக்சம் பேர்க், பெல்ஜியம், மற்றும் நெதர்லாந்து அகிய நாடு கள் கைச்சாத்திட்டிருந்தன. இந்நாடுகளுக்கிடையேயான முழுமையான பொருளாதார ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கென கொள்கைகளை உருவாக்குவதே இந்த அமைப்பின் நோக்கமாக இருந்தது.
1967ல் ஐரோப்பிய உருக்கு சமூகம், ஐரோப்பிய பொருளாதார சமூகம் மற்றும் யுரேஷன் எனப்படும் அணு வலு அமைப்பு என்பன ஒருங் கிணைக்கப்பட்டதுடன் ஐரோப்பிய சமூகம் என்ற பதத்தின் மூலம் தனியொரு அமைப்பாக இவை உருவாகியது இதனைத் தொடர்ந்து டென்மார்க், அயர்லாந்து, ஐக்கிய இராட்சியம் ஆகிய நாடுகள் ஐரோப் பிய பொருளாதார சமூகத்தில் இணைந்து கொண்டன.
1979ல் ஐரோப்பிய சமூகம் முழுவதிலும் செலாவணி விகி தங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு உதவும் பொருட்டு ஐரோப் பிய நாணய முறை ஸ்தாபிக்கப்பட்டது. 1980ல் கிறீசும் 1986ல் ஸ்பெ யின் மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளும் பொருளாதார சமூகத் தில் இணைந்து கொண்டன.
1991ல் "மாஸ்ரிச் உடன்படிக்கை” கைச்சாத்திடப்பட்டது. இவ் உடன்படிக்கையின் ஊடாக பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் L6. 1) ஒற்றைச் சந்தையை உருவாக்கல் 2) பொருளாதார நாணயச் சங்கத்தை உருவாக்கல் 3) பின்வரும் விடயங்களை நோக்கி நகருவதற்கான நகல்திட்டம்
வரைதல்
* பொதுவான நாணயக் கொள்கை * ஒற்றை செலாவணி முறை
(அரசறிவியலாளன் 132 Mரசீதரன்)

ஐரோப்பிய சமூகத்தில் அங்கத்துவ நாடுகளில் விலை உறு தியை உருவாக்கும் நோக்கம் கொண்ட ஐரோப்பிய நாணய யாப்பு உருவாக்கப்பட்டது. அங்கத்துவ நாடுகளில் பொருளாதார தராதர நிலமை களை மதிப்பிடுவதற்கு பணவீக்கம், வட்டி வீதம் நாணய மாற்றுவிகித உறுதிப்பாடு, அரசிறை நிலமைகளில் நீடித்திருக்கும் தன்மை போன்ற வற்றை கவனத்தில் கொள்ள முடியும் என்று கருதப்பட்டது. இவற்றில் இணக்கம் காணப்பட்டாற்தான் ஒற்றை சந்தை நாணய சங்கம் போன்ற விடயங்களில் நலன்களை உறுதி செய்ய முடியும் என கருதப்பட்டது.
இவ் மாஸ்ரீச்ரி உடன்படிக்கையின் போது ஐரோப்பியன் நாணய முறையில் இருந்து விலகி நிற்பதற்கான உரிமையை பிரிட்டன் பெற்றுக்கொண்டது ஆனால் பிற்பாடு இன் நாணயத்தில் சேர்ந்து கொள்ள விரும்பும்பட்சத்திலும் சேர்ந்து கொள்:ளும் தெரிவு வழங்கப் பட்டது. அத்தோடு டென்மார்க்கும் இதில் இணைந்து கொள்ளவில்லை.
ஐரோப்பிய யூனியனில் வரலாற்றில் பெரும் அபிலாசைகளு
டன் கூடிய சர்ச்சைக்குரிய ஆவணங்களில் ஒன்றாக காணப்படும். இவ் மாஸ்ரிட்ச் உடன்படிக்கை புதிய ஐரோப்பிய நாணயத்தில் சேர்ந்து கொள்ள விரும்பும் நாடுகள் தொடர்பாக கடுமையான பல முன்நிபந் தனைகளை விதித்தது. 960)6) JuJIT6).j60T * அங்கத்துவம் பெறவிரும்பும் நாட்டில் பணவீக்கம் 2% க்கு கீழ்
இருக்க வேண்டும் பணவீக்கம் 2% க்கு மேற்படக்கூடாது இது நாண
யப் பெறுமதி உறுதிப்பாட்டையும் பொருளாதார உறுதிப்பாட்டை
யும் ஏற்படுத்தும்
* ஒவ்வொரு நாடும் தமது வரவு செலவுத்திட்ட குறைநிலையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3% தாண்டாவண்ணம் பாது காக்க வேண்டும்.
* நீண்ட காலத்தில் வட்டி வீதம் 3% ஐ தாண்டாவண்ணம் இருக்க
வேண்டும். (அரசறிவியலாளன் 133 Mரசீதரன்)

Page 83
* கடன்சேவைகள் அரசின் மொத்த வருவாயில் 60% ஐ தாண்டக்
கூடாது
* வேலையின்மை வீதத்தை 4% க்கு கொண்டுவரவேண்டும்.
பொது நாணயத்தை உருவாக்குவதில் பிரான்சும் ஜேர்மனியும் தீவிரமாக செயற்பட்டன. ஐக்கிய ஐரோப்பாவை மீண்டும் ஒருபோதும் மாற்றியமைக்க முடியாதவிதத்தில் உருவாக்க வேண்டும் என்பதும் இதனை உறுதிப்படுத்துவதற்கான மிகச்சிறந்த வழி பொது நாணயமா (35LD
1993ல் ஐரோப்பிய யூனியன் உறுப்புரிமை தொடர்பாக ஒரு தேர்வு முறையை அறிவித்து ஐரோப்பிய யூனியனில் உறுப்புரிமை கோரும் ஒருநாடு சட்டத்தின் ஆட்சி மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு என்பவற்றிற்கு உத்தரவாதம் அளிக்கும் உறுதியான ஒரு ஜனநாயக முறையைக் கொண்டிருக்க வேண்டும் மேலும் ஐரோப்பிய யூனியனின் வழிமுறைகளையும் பிரமா ணங்களையும் பிரயோகிக்கக் கூடிய விதத்தில் செயற்படும் சந்தைப் பொருளாதாரம் ஒன்றையும் நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றையும் அந்நாடு கொண்டிருத்தல் வேண்டும்.
1999 முதல் யூரோ மூன்று கட்டங்களில் அறிமுகமாகும் என திட்டமிடப்பட்டது.
* 1999 ஜனவரி 1 முதல் வங்கி நடவடிக்கையுடன் மட்டும் யூரோ சம் பந்தப்பட்டிருக்கும் வெளிநாட்டு நாணய மாற்றுவீதங்கள் யூரோவில் இருக்கும். இந்த 11 நாடுகளின் தேசிய நாணயங்களுக்கும் யூரோ வுக்குமிடையிலான நாணய மாற்:று விதத்தை ஐரோப்பிய யூனிய னின் மத்திய வங்கி கட்டுப்படுத்தும்.
* 2000 ஜனவரி 1 முதல் பொதுக்கடன்களை வங்கிகள் யூரோவில் வழங்க ஆரம்பிக்கும் காசோலைகள் உட்பட சகல நடவடிக்கைக ளையும் வங்கிகள் யூரோவில் மேற்கொள்ளும் .
(அரசறிவியலாளன் 134 Mரசீதரன்)

* 2002 யூலை 1 முதல் ஐரோப்பிய யூனியனின் தேசிய நாணயங்கள் உள்ளிர்க்கபட்டு அதற்குப் பதிலாக யூரோ நாணயம் வழங்கப்படும். இதுவே ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளினுடைய தேசிய நாணயங்களின் கடைசிக்கட்டமாகும் இதன் பின் யூரோ அனைத்து அங்கத்துவ நாடுகளினதும் புழக்க நாணயமாக இருக்
(35LD.
2004 மே இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் மேலும் 10 நாடுகள் இணைந்து கொண்டன. முன்னைய சோவியத் குடியரசு நாடுகளான எஸ்தேனியா, லத்வியா, லித்துவேனியா ஆகியவற்றுடன் வார்சோ உடன்படிக்கை நாடுகளான கங்கேரி, போலந்து, செக்குடியரசு, சுலோ வேக்சியா மற்றும் முன்னைய யூகோசிலாவியா குடியரசுகளான சுலவே னியா, மத்தியதரைத்தீவு நாடுகளான சைப்ரஸ், மோல்ட்டா ஆகியவை யும் புதிதாக இணைந்தவையாகும். இவ் இணைவுடன் ஐரோப்பிய யூனி யன் 450 மில்லியன் மக்களைக் கொண்டு ஒரு பிரதேசமாக மாற்றம் பெற்றது.
ஐரோப்பிய யூனியனின் நிறுவனங்கள்
ஆணைக்குழு;-
ஐரோப்பிய யூனியனின் பிரதான அமைப்பாக காணப்படுவது
ஆனைக்குழுவாகும். இதில் நான்கு வருடங்களுக்கு பணியாற்றும் 7
அங்கத்தவர்கள் காணப்படுவர். ஐரோப்பிய சமூகத்தின் விதிகளுக்க
மைய செயற்படாத அங்கத்தவர்கள் மீது ஆணைக்குழு நடவடிக்கை
எடுக்கும் அதிகாரமுடையது இது பின்வரும் கடமைகளை மேற் கொள்
கின்றது.
* கொள்கைப் பிரச்சனை
* சட்ட உருவாக்கம்
* ஐரோப்பிய சமூக நலனை அங்கீகரித்தல்
* கழக முடிவுகளை நடை முறைப்படுத்தல்
* ஐரோப்பிய சமூகத்தின் கொள்கைகளை நாளாந்தம் மேற்பார்வை
செய்தல் என்பனவாகும்.
(அரசறிவியலாளன் 135 Mரசீதரன்)

Page 84
elapLDjairaserflair spasib (The Council Ministers)
தீர்மானங்களை மேற்கொள்ளும் பொறுப்புடைய அமைப்பு இதுவாகும். ஐரோப்பிய சமூக அங்கத்தவர்களான அரசாங்கங்களின் விருப்பங்களோடு ஆணைக்குழு தீர்மானிக்கும் விடயங்களை இணக்க மடையச் செய்வதில் இக்கழகம் அக்கறையுடன் செயற்படும் பிரேரணை, சமரசதிட்டம் என்பன ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும். இவ்வாறே ஆணைக்குழுவிடம் இருந்தும் இக்கழகத்திற்கு வந்து சேரும்.
இக்கழகம் விவசாயம், நிதி, கைத்தொழில், சுற்றுச்சூழல் தொடர்பான கொள்கையை ஆராய்வதில் அதிக கவனம் செலுத்தும் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய பலவிடயங்களில் அதிக கவனம் செலுத்துவதுண்டு. இங்கு ஒற்றை ஐரோப்பியச் சட்டம் தொடர் பாக வளிக்களிப்பு வரிவிதிப்பு, மக்கள் இடம்பெயர்வு, தொழிலாளர் பிணக்குகள், போன்ற விடயங்கள் பற்றியும் இது ஆராய்ந்து வருகின் றது. அரச தலைவர்கள் பங்குபற்றும் இதன் கூட்டம் வருடம் இரு தடவை இடம்பெறும் இதற்கு 6 மாதத்திற்கு ஒரு தடவை தலைவர் தெரிவு செய்யப்படுவார். அங்கத்துவ நாடுகளுக்கிடையேயான உறவு களை சுருக்கமாக பேணுவதில் இக்கழகம் கவனம் செலுத்தும்.
securful unrespairfoib (The European Parliament)
5 வருட பதவிக்காலத்திற்குரியதாக அங்கத்தவ நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்படும் 727 உறுப்பினர்கள் இதில் இடம் பெறு வர். ஐரோப்பிய சமூகத்தின் கொள்கைகளை விவாதித்தல், ஐரோப்பிய சமூகத்தின் பாதிப்பை ஆராய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தும். 1987ல் ஐரோப்பிய சட்டத்துடன் இதன் அதிகாரங்கள் வலுப் பெற்றன. ஆணைக்கு தொடர்பான பிரேரணைகள் தொடர்பான முதல் அபிப்பிரா யத்தைப் பாரளுமன்றம் தெரிவிக்கும் அதன் பின் அமைச்சர்களின் கழகம் முடிவுகளை மேற்கொள்ளும்.
(அரசறிவியலாளன் 136 Mரசீதரன்)

5sudairplb (The Court of Justics)
ஒவ்வொரு நாட்டில் இருந்தும் ஒவ்வொரு உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டு அவர்களில் இருந்து 13 நீதிபதிகள் தெரிவு செய்யப்படு வர். இவர்களின் தவணைக்காலம் ஆறுவருடங்களாகும். உரோம் ஒப்பந் தத்தின் அடிப்படையில் நிர்வாகம் செய்வதற் கும், தனியார் நிறுவ னங்கள் ஐரோப்பிய சமூகத்தின் நிதி நிறுவனங்கள் தொடர்பான குற்றச் சாட்டுக்களை விசாரிப்பதற்கும் இந்நீதிமன்றம் அதி காரம் பெற்றது.
aeGun Ishu Dibabu aurias (The Central Bank of European Union) 1979ல் ஐரோப்பிய நாணய முறைமை உருவாக்கப்பட்டதைத் தொடரந்து ஐரோப்பிய மத்திய வங்கியின் உருவாக்கம் பற்றிய கருத்து 1988 இன் பின் வலுவானது 1998இல் இவ் மத்திய வங்கி நடைமு றைக்கு வரலாயிற்று இதன் பணிகளாக.
ஐரோப்பிய சமூகத்தின் நாணயக் கொள்கைக்கு வரைவிலக்கணம் வழங்கி அதனை அமுல் செய்தல் . அன்னியச் செலாவணி செயற்பாடுகளை மேற்கொள்ளல் உறுப்புக்களின் செலாவணி செயற்பாடுகள் மேற்கொள்ளல் உறுப்பு நாடுகளின் உத்தியோக பூர்வ வெளிநாட்டு ஒழுங்குகளைப் பராமதித்து முகாமை செய்தல் கொடுப்பனவு முறைகளில் தடங்கலற்ற இயத்தினை மேம்படுத்தல் ஐரோப்பிய மத்திய வங்கி அமைப்பு தனது குறிக்கோள்களை சாதித்துக் கொள்வதற்கென ஒரு தொகுதி நாணயக் கொள்கை கருவிகளை தன்வசம் வைத்துள்ளது. திறந்த சந்தை செயற்பாடுகளை நடாத்துகின்றது. நிலையான வசதிகளை வழங்குகின்றது. கொடுகடன் நிறுவனங்கள் ஐரோப்பிய மத்திய வங்கி அமைப்புட னான கணக்குகளில் குறைந்தபட்ச ஒதுக்குகளை வைத்திருக்க வேண்டிய தேவையை வலியுறுத்துகின்றது.
:
(அரசறிவியலாளன் 137 Mரசீதரன்)

Page 85
விசேடநிறுவனங்கள்
* பொருளாதார சமூக சபை * ஐரோப்பிய முதலீட்டு வங்கி
ஐரோப்பியயூனியனின் பொருளாதார நோக்கங்கள்
* கட்டற்ற வர்த்தக பிராந்திய முறையைவிட கூடிய வலுவுடைய சுங்க சங்கம் ஒன்றை நிறுவி அதன் மூலம் உள்ளார்ந்த ரீதியில் கட்டற்ற வர்த்தகம் நடாத்தப்படுகின்ற போதிலும் வெளிநிலையில் தெளிவான தீர்வைகள் விதிப்பதில் கவனம் செலுத்தப்படுகின்றது. வெளிநாடுகளில் இருந்து ஐரோப்பிய சமூக அங்கத்துவ நாடுகளுக் குப் பண்டங்கள் குவிந்துவிடாதவாறு தேவைக்கேற்ப தீர்வைகளை சங்கத்தின் மூலம் விதித்து உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாத்துக் கொள்ளல்
* அங்கத்துவ நாடுகள் அனைத்தையும் ஒன்றினைத்தவகையில் பொதுவான சந்தை அமைப்பை உருவாக்கி அங்கத்துவ நாடுகளின் பொருட்களும் சேவைகளும் இதற்குள் தங்:கு தடையின்றி அசை வதற்கு ஊக்கமளிப்பதன் மூலமாக பேரளவுச் சந்தையின் அனு கூலங்கள் அனைத்தையும் அங்கத்துவ நாடுகள் பெற்றுக் கொள்ளு தல.
* அங்கத்துவ நாடுகள் ஏற்கனவே தமக்கென தனியான வரிகள் சேம நலன்கள், சென்மதி நிலுவைச் சமநிலை உருவாக்கம் தொழில் வாய்ப்புக் கொள்கை போன்ற விடயங்கள் பற்றிய கொள்கைகளை வடிவமைத்துள்ளன. இதனால் பொதுச் சந்தையின் விலைப் பொறி முறையின் தொழிற்பாடு பாதிக்கப்படும் என்பதனால் இவற்றுக்கி டையிலான முரண்பாடுகளை அகற்றும் வகையில் வெளிவாரியான தீர்வைகளை அங்கத்துவ நாடுகள் அனைத்தும் அங்கத்தவர் அல்லாத நாட்டில் இருந்து உள்வரும் இறக்குமதிகள் மீது விதித் தல் பொதுவான விவசாயக் கொள்கையை பின்பற்றச் செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தும்
(அரசறிவியலாளன் ' ' " 138 Mgáfsgså)

இதன் மூலமாக ஒற்றைச் சந்தையை உருவாக்குதல் நோக்க மாகும்.
அங்கத்துவ நாடுகளுக்கிடையே வர்த்தக ரீதியிலான தடைகள் ஆட்கள் மூலதனம் என்பவற்றின் அசைவுக் கெதிரான தடைகள் என்பவற்றை அகற்றுதல்.
வர்த்தகம் தொடர்பான போட்டியினால் எழக்கூடிய சீரழிவுகளை தடுக்கும் வகையில் விலை நிர்ணயம், சந்தைப்பகிர்வு, என்பவற்றை உள்ளடக்கக்கூடிய பொதுவான விதிகளை அறிமுகப்படுத்தல்.
பொதுவான வர்த்தகக் கொள்கையை பின்பற்றச் செய்தல் கப்பற் கட்டணம் அனுமதிப்பத்திரங்களின் வரிவிதிப்பு பணிபுரியும் நிலை மைகள் என்பவற்றை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சமத்துவ அடிப் படையில் போட்டியிடுவதற்குரிய வசதிகளும் அனுமதிக்கப்படுகின்
றன.
வரிவிதிப்பில் பொது முறைமையைப் பின்பற்றல்.
வர்த்தக ரீதியிலான அகற்றும் வகையிலும் எல்லா அங்கத் துவ நாடுகளும் ஒரே மாதிரியாக விதிக்கக்கூடிய மாதிரியிலும் வரிவிதிப்பை கையாள ஊக்கமளித்தல், காட்டிய பெறுமதிவரிமு றையை பின்பற்றச் செய்தல்
நாணய மாற்றுவிகித உறுதியைப் பேணல்
அங்கத்துவ நாடுகள் தனித்தனியாக நாணய மாற்றுவிகிதங் களை வேறுபடுத்துவதன் மூலம் இறக்குமதி, ஏற்றுமதி தொடர்பாக வேறுபட்ட அனுகூலங்கள் பெறுவதை தவிர்க்கும் வகையில் குறு கிய எல்லைக்குள் அங்கத்துவ நாடுகள் நாணய மாற்றுவிகிதங் களைப் பெறுமாறு பார்த்துக் கொள்ளுதல் இதற்கு நாடுகள் இணங்கியுள்ளன. ஐரோப்பிய நாணய முறையூடாக இதனை நடை முறைப்படுத்ததுவதில் ஈடுபட்டுள்ளது.
* பொதுவான பிராந்தியக் கொள்கை
அங்கத்துவ நாடுகளின் வேலையின்மை, உற்பத்தி, சூழல்
(அரசறிவியலாளன் 139 Mgésped

Page 86
பாதுகாப்பு போன்ற விடயங்களில் பாராபட்சமான கொள்கைகளைப் பின்பற்றாது. ஒரே மாதிரிக் கொள்கையைப் பின்வருமாறு செய்தல், நாடுகளிடையே சமத்துவ முன்னேற்றத்திற்கு இவை உதவுமாறு பாதுகாத்துக் கொள்ளுதல்
* பொதுவான சமூகக் கொள்கை
அங்கத்துவ நாடுகளிலான தொழில்வாய்ப்பு, வேலை நிலை கள் மக்கள் சமூகரீதியான வாழ்ககைத் தரத்தைப் பாதிக்கவ்லன இதன் காரணமாக இவற்றைப் பேணுவது தொடர்பான பொதுவான கொள்கையைப் பின்பற்றுவதற்காக சமூக ரீதியில் இருந்து உத விகள் வழங்கப்படுகின்றன.
ஐரோப்பிய யூனியன் ஏற்படுத்தும் அரசியல், சமூக பொருளா
தார ரீதியான தாக்கங்கள்
ஐரோப்பிய யூனியன் உலகின் மிகப் பெரிய பொருளாதாரப் பிரதேசமாகவுள்ளது உலகளாவிய பேரண்டப் பொருளாதாரத்தை வடிவ மைப்பதில் பெரும் பங்கினை வகுக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. யூரோலாந்து உற்பத்தியையும் உற்பத்திக்கான வாய்ப்புக்களை மட்டும் கொண்டிராமல் பெருமளவு சந்தை வலுவையும் கொண்டிருக்கக்கூடிய தாக அமையவுள்ளது. புவிசார்ந்த நிலையில் ஐரோப்பியர் ஆசிரியர்களு டனும், ஆபிரிக்கர்களுடனுமான தொடர்புகளை இலகுவாக பெற முடி யும் என்ற அடிப்படையிலும் சந்தை வாய்ப்பு அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது ஐரோப்பிய யூனியன் பிரதேசத்திற்கு மிக அதிகமாகவேயுள்ளது.
2000 ஆண்டு தகவல்களின் படி யூரோ பிரதேசம் உலகவர்த்த கத்தில் ஆகக்கூடிய பங்கினைக் கொண்டிருப்பதுடன் மொத்த உலக ஏற்றுமதியில் இப்பிரதேசத்தின் ஏற்றுமதியின் விகிதம் (19%) அமெ ரிக்கா (15%) மற்றும் யப்பான் (84%) என்பவற்றின் ஏற்றுமதி விகிதங்க ளிலும் பார்க்க உயர்ந்து காணப்படுகின்றது. இவ்வாறு உயர்வதற்கு ஐரோப்பிய பொருளாதாரத்தில் திறந்து விட்டிருக்கும் அளவு கூடுதலாக காணப்படுவதே காரணமாகும்.
(அரசறிவியலாளன் 140 Mரசீதரன்

இதுவரை காலமும் அமெரிக்க டொலர் உலகின் மிகப்பிரதான ஒதுக்கு நாயணமாக இருந்தது. இந்நிலமையை மாற்றியமைக்கும் நீண்டகால குறிக்கோளை நிறைவேற்றிவைக்கும் யூரோ நாணயத்தின் அறிமுகம் ஒரு மைல் கல்லாகும். நீண்ட காலமாக USA டொலரே உலகின் முதன்மையான ஒதுக்குகளை டொலரிலேயே பராமரித்து வரு கின்றன.
யூரோ நாணயம் உறுதி மிக்கதாக இருந்துவரும் நிலையில் ஐரோப்பிய வணிகத்துறையினர் நம்பகமான ஒரு நீண்டகால அடிப்படை யில் முதலீடுகளைத் திட்டமிடவும், விலைகளை தீர்மானிக்கவும் ஒப்பந் தங்களில் கைச்சாத்திடவும் வாய்ப்பு கிடைக்கின்றது அது பணவீக் கத்தை தடுத்து தேசிய இறைமைக் கொள்கைகளின் ஒத்திசைவை ஊக்குவிக்கும்.
நாணயக் கொள்கைகளும், செலாவணி வீதக் கொள்கைக ளும் தேசிய மட்டத்தில் நிர்ணயிக்கப்படுவந்தால் பொருளாதார சமூகம் ஒன்று செயல்திறனுடனும் கூடிய விதத்தில் இயங்குவது அநேக மாக சாத்தியமில்லை எனவே அது அந்த பொருளாதார பிரதேசத்திற் குள் பொருட்கள், சேவைகள் மூலதனம் என்பனவும் ஆட்களும் சுதந்திரமாக நகர்ந்து செல்வதற்கு வசதி செய்து கொடுக்கும்.
தனியொரு நாணயம், பல்தேசியக் கூட்டுத்தாபனங்கள் தமது குறிப்பிட்ட சில விநியோக அலகுகளை தனியொரு அமைவிடத்தில் வைத்துக் கொள்வதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அது செலவுகளை குறைத்துக் கொள்ளும் பொருட்டும், உற் பத்தி திறனை அதிகரித்துக் கொள்ளும் பொருட்டும் கைத்தொழில்கள் தமது உற்பத்தி வசதிகளை யூனியனைச் சேர்ந்த ஏனைய நாடுகளுக்கு எடுத்துச் செல்லமுடியும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி, பங்குச்சந்தை, கடன் பிணைப்
பத்திரம் சேமித்தல், வங்கிவைப்பு போன்றவற்றில் அமெரிக்காவை விட யூரோலாந்து பிரதேசமே உயர்வாக உள்ளது.
(அரசறிவியலாளன் 141 Mரசீதரன்)

Page 87
யூரோலாந்து ஒரு அமெரிக்க எதிர்ப்பு பிராந்தியமாக வெளிப் படையாக தெரியாது விட்டாலும் உள்ளார்ந்த நோக்கில் அமெரிக்கா மேலாதிக்கத்தை அடைந்து தான் மேலாதிக்கம் பெறமுனையும் ஒன்றா கவே காணப்படுகின்றது. அமெரிக்காவுக்கு சமமான பொருளாதாரப் பலத்தையும், அரசியல் உறுதிப்பாட்டையும் உள்ளடக்கிய அரசுகள் ஒரு பிராந்தியமாக இணையும் போது அது இயல்பாகவே அரசியல் ரீதியிலும் மேலாதிக்கம் பெறும் ஒன்றாகவே மாற்றமடையும்.
இதுவரை காலமும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஏனைய நாடுகளோடும், பிராந்தியங்களோடும் வர்த்கத்தை டொலரின் மூலமே மேற்கொண்டு வந்தன. இன்னிலையினால் அமெரிக்காவின் அரசியல் ஆதிக்கம் டொலர் நாணயத்தின் வாயிலாக மேற்கு ஐரோப் பிய நாடுகளால் ஐரோப்பாவுக்குள்ளும் பிராந்தியங்களுக்குள்ளும் பரப்பப்பட்டது இனி யூரோலாந்து ஆதிக்கமாக பரவலடையலாம்.
இவற்றைவிட ஐரோப்பிய யூனியன் முதன்முதலாக அமெரிக் காவின் பலமான இரண்டு கம்பனிகளை எதிர்த்து தீர்மானம் நிறை வேற்றியமையும் உலகளாவிய உணவுப் பாதுகாப்புத்திட்டத்தை அமுல்ப்படுத்துவ தென்றும் கழிவுப் பொருட்களை கொண்டு மீள் உரு வாக்கத்திட்டத்தை அமுல்ப்படுத்துவதென்றும் கழிவுப் பொருட்களை கொண்டு மீள் உருவாக்கப்படும் பொருட்களை நிராகரிப்பது என முடிவு செய்தமையும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் மேற்கொள்ளும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளேயாகும்.
ஐரோப்பிய யூனியனை ஒரு கட்டுக்கோப்பான ஒன்றாக வளர்ப் பதற்கு அரசியல் அமைப்பு ஒன்றின் தேவை எழுந்துள்ளது. மத்திய கிழக்கு ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடுகள் ஐரோப்பிய யூனியனில் சேரவிரும்பியபோதும் தமது இறைமை, கலாச்சாரம் என்பவற்றை பாது காக்கும் பொருட்டு சில அமைப்பு ரீதியான உறுதி மொழிகளை எதிர் பார்ப்பதும் ஐரோப்பாவில் உள்ள வலுவான நாடான ஜேர்மனியை ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்கவும் ஒரு அரசியலமைப்பின் தேவை யை ஐரோப்பிய யூனியன் நாடுகள் உணர்ந்துள்ளன. இதன் பொருட்டு
(அரசறிவியலாளன் 142 Mரசீதரன்)

ஐரோப்பிய யூனியனுக்கான அரசியலமைப்பு எனப் உருவாக்குவதற் கான ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றது.
ஐரோப்பிய யூனியனின் விரிவாக்கத்தால் அதன் அங்கத்துவ நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என்றும் வேலைவாய்ப்புக் கள் பெருகும் என்றும் கூறப்படுகின்ற போதிலும் இவை யெல்லாம் எந்தளவுக்கு சாத்தியமாகப் போகிறது என்பதே கேள்வியாகும். ஐரோப் பிய யூனியனில் உள்ள மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பல்வேற்பாடான தன்மைகளையும் நெருக் கடிகளையும் எதிர் கொண்டுள்ளன. இவ் ஏற்றத் தாழ்வுகளை செல் வந்த நாடுகள் சமநிலைக்கு கொண்டுவரும் நிலையில் அவைபாரிய நெருக்கடிகளை எதிர் கொள்ளும்.
ஐரோப்பிய யூனியனை வழிநடத்தும் பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் அமெரிக்க விலகளாவிய ரீதியில் மேலாதிக்கமுள்ள ஒன்றாக மாற்றவே கடும் பிராயத்தனங்களை மேற்கொண்டு வருகின் றன. ஆனால் தற்போது யூனியனில் இணைந்துள்ள சில நாடுகள் அமெரிக்க சார்புடையதாக இருப்பதனால் பல நெருக்கடிகளை எதிர் கொள்ளும் நிலை காணப்படுகின்றது. உதாரணமாக ஐரோப்பிய யூனிய னில் உள்ள பிரித்தானியா USA உடன் இணைந்து Suttellite System ஊடாக, ஐரோப்பிய யூனியனில் பொருளாதார நடவடிக் கைகளை கவ னித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவற்றை விட செலாவணி அசைவுகளில் திடீரென ஏற்படும் மாற்றம் இலாபங்கள் அனைத்தையும் அடித்துச் சென்றுவிடும் எனவே யூறோலாந்தின் மேலாதிக்கம் குறுகிய காலத்தில் நிச்சயமான ஒரு தன் மையைக் கொண்டிருந்தாலும் அதன் நீண்டகால மேலாதிக்கப் போக்கு ஆய்வுக்குரியதொன்றாகும்.
எனவே 1957 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உருக்கு மற்றும் நிலக்கரி சமூகத்துடன் உருவாகிய ஐரோப்பிய யூனியன் பல கட்டங்க ளாக வளர்ச்சியடைந்து இன்று ஒரு வலுவான அமைப்பாக நிமிர்ந்து நிற்பதோடு நிறுவனரீதியான விரிவாக்கத்தையும் பெற்றுள்ளது. ஒற்றைச்
sig யலாளன் 143 Mgfggsör)

Page 88
சந்தை, ஒற்றை வெலாவணி என்பவற்றின் தோற்றதுடன் உலகளாவிய மேலாதிக்கப் போக்கை தக்கவைக்கும் ஒன்றாக ஐரோப்பிய யூனியன் வளர்ந்துள்ளது. எனினும் இது பல சவால்களையும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலையில் அவற்றை எல்லாம் கடந்து தனது முன்னோக்கிய பயணத்தை தொடருமா? பனிப்போர்க்காலத்தில் நில விய தன்மைகள் தற்போது அகன்று விட்ட நிலையில் இந்த யூனியனின் விரிவாக்கம் புதிதாக பிரச்சனைகளை தோற்றுவிக்குமா வளர்ச்சி பெற்ற நாடுகள் தற்போது பொருளாதாரத்தில் பின்னடைந்த நாடுகளையும் கைதுக்கி விடுமா என்பதனை பல கேள்விகள் தற்போது எழுகின் றமை தவிர்க்கமுடியாத ஒன்றாகவுள்ளது.
Refrences 01) W.Henderson - Conflict and cooperation at the turn of the 21 Cen
tury, London, 1996.
02) Neill Nugent-The goremnent and Politics of European Union, the
Macmillon press Ltd, London, 1995.
03) கே.ரி.கணேசலிங்கம், மாறிவரும் புதிய உலக ஒழுங்கு,
வெளியீடு, தயாளன், பிரான்ஸ், 2000.
04) மா.சின்னத்தம்பி, பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கள்,
மரீலங்கா புத்தகசாலை வெளியீடு, யாழ்ப்பாணம், 1997
05) http://WWW. historiasiglo 20.org.europe
06) http://WWW.spto.unibo.it/spofo./eulaw/htm
07) பொருளியல் நோக்கு, ஜனவரி/மார்ச், 2000
மக்கள் வங்கி வெளியீடு.
08) Jurgen Habermas, "Why does europe need a constitutation"
Deutschland No–6/2001 December. (அரசறிவியலாளன் 144 Mgéfasů)

பின்நவீனத்துவம் சில குறிப்புக்கள் Post-Modernism, Same Notes
- F.C.சத்தியசோதி
2000/A/234
அறிவொளிக்காலம் தொடக்கம் மேலைத்தேய சிந்தனை மர
பில் கோலோச்சி நின்ற அறிதல் முறையைக் கேள்விக்குள்ளாக்கிய ஒரு அறிவுத்துறைச் செயற்பாடுதான் பின் நவீனத்துவம் இது தனது பார் வையைச் சகல துறைகள் மீதும் தொட்டுச் செல்கின்றது. மேலைத்தேச தத்துவவரலாற்றை கீழ்க்கண்டவாறு காலப்பாகு பாடு செய்வார்கள்.
1) புராதன கிரேக்க உரோம தத்துவம்
2) மத்திய கால தத்துவம்
3) நவீன தத்துவம்
இவற்றில் நவீன தத்துவத்தை மறுமலர்ச்சிக் காலம், அறிவொ ளிக்காலம், பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டு எனப் பிரிப்பது வழக்கம். இவற்றுக்கெல்லாம் மிகப் பிந்தியதாக வந்து நின்று கொண்டு தத்துவத்தின் அடிப்படைகளையே கேள்விக்குள்ளாக்குவது தான் பின்னவீனத்துவம். நவீனத்துவம் முன்வைத்த "கார்ட்டீசிய அறி தல் முறை" என்பது இம்மனுவல் கான்ட் முதல், ஹெய்டெக்கர், நீட்ஷே, வின்கென்ஸ் டெய்ன் போன்றோரால் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. அதன் உச்சக் கட்டமாக பின் நவீனத்துவம் தோற்றம் பெற்றுள்ளது.
நவீனத்துவத்தின் தொடர்ச்சியாகவும். உச்சமாகவும், அதன் ஒரு சில கூறுகளின் நீட்சியாகவும் சிலவற்றின் மறுப்பாகவும் தோற்றம் பெற்றுள்ள பின் நவீனத்துவம் தனக்குள் பல்வேறு விதமான, தனித்துவ மான போக்குக்களைக் கொண்டிருந்தாலும் தன்னிலையை (Subject) முன்னிலைப்படுத்தும் பகுத்தறிவை கேள்விக்குள்ளாக்கும் பண்பையே (அரசறிவியலாளன் 145 F.C. சத்தியசோதி)

Page 89
பொதுவான கூறாகக் கொண்டுள்ளது. இந்த வகையில் மேலைத் தத் துவமரபில் பகுத்தறிவை விமர்சனக் கண்கொண்டு நோக்கிய ஹெய் டெக்கர், நீட்ஷே, கான்ட், ஃபூக்கோ, தெரிதா, மற்றும் மேலைச் சிந்த னையின் இருண்ட மரபாகக் கருதப்பட்ட டிசேட், பதேய்ல், ஆர்த்தோ என்கின்ற வம்சாவழி வரிசையை பின் நவீத்துவம் தனக்குரியதாக அடையாளப்படுத்திக் கொள்கிறது.
அரசியல் வரலாறு போலவே தத்துவ வரலாறும் பல்வேறுபட்ட சிந்தனைப் போக்குகளிற் கிடையேயான முரண்பாடுகளாகவும் மோதல் களாகவுமே இருந்து வந்துள்ளது. அந்த வகையில் கருத்து முதலிய ருக்கும், பொருள் முதலியருக்கும், இடையேயான போராட்டங்களும் அறிவு வாதிகளிற்கும் அனுபவவாதிகளிற்கும் இடையிலான முரண்பாடு களிற்கும், பயனிட்டாளர்களுக்கும் அறக்கோட் பாட்டாளர்களுக்கும் இடையேயான வேறுபாடுகளுமென தத்துவப் போக்குக்களின் பிரச்ச னைக் குவியங்களிலும் மாற்றங்கள் உருவாகின்றன. இந்த வகையில் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில்த் தோன்றியதுதான் பின்நவீனத்துவ சிந்தனையாகும். "பின் நவீனத்துவ சிந்தனை” எதனையும் முற்றுண்மை என்றோ முடிந்த முடிவு என்றோ ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை. பின் நவீனத்துவம் முன்வைக்கும் கருத்துக்களை பின்வருவனவற்றினுா டாக நோக்குதல் பொருத்தப்பாடு உடையது.
* அறிவு என்பது உண்மையைத் தேடும் முயற்சி எனும் கருத்தை எதிர்த்தல், அல்லது மறுத்தல், நடைமுறை அறிவுக்கு முக்கியத்து வம் அளித்தல்.
* மொத்தத்துவம், ஒருமைத் தன்மை, என்ற கருத்தாக்கங்களை எதிர்த்தலும், சிதறுண்டு போதல், விலகல், வேறுபாடு, பன்மைத்தன் மை, ஒருமையின்மை, இரு பொருட் தன்மை ஆகியவற்றை வலியு றுத்தலும். * தர்க்க வகைப்பட்ட அறிதலை எதிர்த்தலும், அதர்க்க வகைப்பட்ட
அழகியலை ஏற்றுக் கொள்ளலும். * நவீனத்துவம் கொண்டிருந்த ஆழங்களை எப்படியாவது எட்டிவிட வேண்டும் எனும் அவஸ்தையை விடுத்து மேற்பரப்பில்த் திளைக் (அரசறிவியலாளன் 146 F.C. சத்தியசோதி

கும் சுகத்தைப் பின் நவீனத்துவம் மகிழ்சியோடு ஏற்றுக் கொள்கி (335). அடித்தள எதிர்ப்புவாதமாகத் தொழிற்படுகிறது.
* கருத்தொருமிப்பை எதிர்தலும் கருத்துமாறுபாட்டை ஏற்றுக் கொள்
ണഇb.
★
★
நீதி, அறம், உண்மை என்பன குறித்த பின் நவீனத்துவப் பார்வை. * நவீனத்துவமும் பின் நவீனத்துவமும் வேறுபடும் இடங்கள். * விடுதலை பற்றிய பின் நவீனத்துவக் கருத்து.
அறிவு என்பது உண்மையைத் தேடும் முயற்சி என்பதை மறுக் கும் பின் நவீனத்துவம் அறிவை ஒரு உரையாடலாகவும், சமூக நடை முறையாகவுமே காணுகின்றது. இவ்வாறு அறிவின் சர்வ வியாபாகத் தன்மை, நிரந்தரத் தன்மை என்பவற்றை பின் நவீனத்துவம் கேள்விக் குள்ளாக்குகின்றது. எல்லா விதமான கோட்பாட்டு உருவாக் கத்தையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் பின் நவீனத்துவம் நடைமுறை அறி விற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. அறிதல் செயற்பாட்டில் தன்நி லையையும், (Subjece), பொருளையும் (Object) தனித்தனியே பிரித்து நிறுத்துவது சாத்தியமில்லை எனக்கருதுவதோடு உலகில் மனிதன் சூழலுடன் பரஸ்பர வினையாக்கத்தில் உள்ளான் என்ற ஹெய் டெக்ர்றின் இருத்தல் இயல்க்கருத்தை எற்றுக் கொள்கிறது. அதாவது எதையும் நாம் உள்ளிருந்தே பார்க்க வேண்டும். வெளியிலிருந்து எதையும் எட்டிப்பார்க்க முடியாது என்கிறது. உதாரணமாக ஒரு நூலை மதிப்பீடு செய்ய வேண்டுமாயின் அதன் ஆசிரியரின் நடைமுறைகளை ஆதாரமாகக் கொள்ளாது அந்நூலின் உள்ளடக்கத்தை வைத்து மதிப் பீடு செய்ய வேண்டும். இங்கு ஆசிரியரின் முக்கியத்துவம் அற்றுப்போய் விடுவதைப் போன்றுதான் கடவுள், வரலாறு, பகுத்தறிவு போன்ற எல்லா அடித்தளங்களும் முக்கியமிழ்ந்து போகின்றது.
மொத்தத்துவம் (Totality) என்பது எதேச்சை அதிகாரத்திற்கே வழி வகுக்கும் என்பதால் சிதறுண்டு போதலை (Fragmentation), ஆத (அரசறிவியலாளன் 147 FC சத்தியசோதி)

Page 90
ரிக்கின்றது ஒருமைத்தன்மை, ஒன்றை நோக்கிய கருத்துக்குவிப்பு என்பதெல்லாம் வன்முறைக்கே இட்டுச் செல்லும் என்பதனால் விலகல், வேறுபாடு, பன்மைத்தன்மை, ஒருமையின்மை, இருபொருட்தன்மை என் பவற்றை வலியுறுத்துகின்றது. மொத்தத்துவம் ஒருமைத் தன்மை என் பவை எல்லாம் தனித்துவ அடையாளங்களை அழித்தொழிக்கும் நடை முறைகள் என்பதனால் சிறு குழுக்கள், தனித்துவங்கள், தல அளவி லான தனி அடையாளங்கள் ஆகியவற்றை வரவேற்கிறது. தர்க்க வகைப்பட்ட அறிதலை வன்முறை என ஒதுக்குகின்ற பின்னவீனத்துவம் அதர்க்க வகைப்பட்ட அறிதலுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் அழகியல் அணுகு முறையைத் தனக்குரிய (p6360)LDu T85 6Jsbusis கொள்கின்றது. தர்க்க வகைப்பட்ட அறிதல் மற்றும் பகுத்தறி வின் பாற்பட்ட சிந்தனை என்பன வெல்லாம் மனிதனது சிந்தனைகளை ஒரு எல்லையுடன் மட்டுப்படுத்தி விடுவதாகக் கூறும் பின் நவீனத்துவம் அவனது சிந்தனையை சிறகடித்து பறக்கவிடக் கூடிய கற்பனை புனைதல் என்பனவற்றை முதன்மைப்படுத்தும் அழகியல் அணுகுமுறை யை ஏற்றுக் கொள்கின்றது. பகுத்தறிவிற்கு எதிரிடையாகவுள்ள விருப்பு, உடல், பைத்தியநிலை பன்மைத்தன்மை, நுண் அரசியல், ஆகியவற்றை முன்வைக்கிறது. இதன் மூலம் அழகியல் என்பதை கலை, இலக்கியம் என்னும் எல்லைகளைத் தாண்டி அறிதல், அரசி யல், அறிவியல் என வெவ்வேறு புலங்களிற்குள்ளும் நுழையவைத் துள்ளது.
நவீனத்துவத்தின் உச்சமாகவே பின் நவீனத்துவம் தோற்றம் பெற்றாலும் இவற்றுக்கிடையிலான வேறுபாடு முக்கியமானது. அறிவின் ஆழங்களை எப்படியாவது எட்டிவிட வேண்டும் என்னும் அவஸ்தையை நவீனத்துவம் கொண்டிருந்ததென்றால் மேற்பரப்பில் திளைக்கும் சுகத் தை பின்னவீனம் ஏற்றுக் கொண்கின்றது. இரண்டாம் உலக யுத்தத் துக்கு முன்னும் பின்னும் இருந்த ஏக்கம், கவலை, முரண்ணிலை, என் பவற்றின் உணர்வுப் பின்புலத்தில் தோற்றம் பெற்ற நவீனத்துவம் எப் படியாவது இந்த முரண்பாடுகளைத் தீர்க்க வேண்டும் என்ற முனைப் புடன் செயற்பட்டது. தூரப்படுத்தல், பிரிந்து நிற்றல், ஆழல், சாரங்களை அறிதல் மனிதனை மையப்படுத்திப் பார்த்தல், ஒப்புமை எனப்பல்வேறு
(அரசறிவியலாளன் 148 FC. சத்தியசோதி )

உத்திகளைத் தீர்வாக முன்வைத்தது. ஒத்திசைவு உறுதித்தன்மை, ஒருமைப்படுத்தல் என்பவற்றின் மூலம் வரையறக்கப்பட்ட ஒழுங்குத்தன் மையை நோக்கிய நகர்வாகவும் ஏக்கமாகவுமே நவீனத்துவம் இருந்த தென்றால் பின் நவீனத்துவம் உயர்முனைப்புத் தொழிற்பாடுகளை உதறித்தள்ளி ஒழுங்குகளின் நிலையான தன்மைக்குப் பதிலாக இயக்கத் தன்மைக்கு இடமளித்தது "Alan Wilde" கருத்தப்படி இழந்து போன சொர்க்கத்திற்காக நவீனத்துவம் ஏங்கிக் கொண்டிருந்த தென் றால் பின் நவீனத்துவம் அதனைப் புறக்கணித்து ஒதுக்கிவிட்டு நடை முறை நிலமைகளை ஏற்றுக்கொள்கிறது. மற்றவற்றிற்கு இடமளித்தல், பன்மைத் தன்மையைத் சகித்துக் கொள்ளல், கருத்து விலகல்களுக்கு மதிப்பளித்தல், தல அளவில் செயற்படுதல் போன்ற அரசியற் செயற் பாடுகளைச் சுட்டி நிற்கின்றது. தர்க்கத்திற்குப் பதிலாக அதர்க்கத் தையும், அதுவா? இதுவா? என்பதற்குப் பதிலாக இரண்டுமே என்ற பதி லையும், பெருங்கதையாடல்களின் சிதைவை முன்னறிவிப்ப தோடு, எல்லா அடித்தளங்களையும் உடைத்தெறிந்த வகையில் “கற்பனா வாதம்” என்னும் புதிய அடித்தளம் ஒன்றை முன்வைத்து புனைவியலில் இருந்தும் பின் நவீனத்துவம் தன்னை வேறுபடுத்திக் கொள்கின்றது.
பெருங்கதையாடல்களின் தகர்வு என்பதை அறிவிக்கும் பின் நவீனத்துவம் உண்மை, அறிவு முதலியனவெல்லாம் கட்டமைக்கப் படு பவைதான் என்று சொல்கிறது. எல்லாவற்றையும் கடந்த புறவய ஜதார்த்தம் என்பதைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. பல்வேறு விதமான அறிவுப் புலங்களை பொதுவான நிலையில் நின்று விமர்சிப்பதற்கான அடித்தளங்கள் மற்றும் பிரபஞ்ச விதிகள் ஆகியவற்றை மறுக்கிறது. இந்த வகையில் பின் நவீனத்துவம் ஒரு அடித்தள எதிர்ப்பு வாதமாக வும் விளங்குகின்றது.
மனிதனுக்கு அவனது மேல் நோக்கிய வளர்ச்சி மற்றும் இறுதிவிடுதலை பற்றிய நம்பிக்கைகளை அளித்து வந்தவைதான் பெருங்கதையாடல்கள். அந்த வகையில் மதம் முன்வைத்த "கடவுள்", அடம்சுமித் முன்வைத்த 'சொத்தின் வளர்ச்சி', ஹெகல் முன் வைத்த "இயங்கியல்", மாக்கிஸிஸம் முன்வைத்த "பாட்டாளிவர்க்கத்தின்
(அரசறிவியலாளன் 149 FC. சத்தியசோதி )

Page 91
மூலமான உலக விடுதலை", நவீனத்துவம் முன்வைத்த பகுத்தறிவின் இறுதி விடுதலை பேன்ற முன்மொழிவுகள் தான் பெருங்கதை யாடல் கள். இப் பெருங்கதையாடல்களின் விளிம்பிற்குள் தன்னை ஆட்படுத் திக் கொண்டு அதற்குரிய தன்னிலையாகத் தம்மை தக்கவைத்துக் கொண்ட மனிதமனம் இவற்றின் தகர்வை ஏக்கத்தோடு பார்க்கிறது. பெருங்கதையாடல்களின் தகர்வென்பதில் எல்லா மக்களிற்குமான விடு தலையை முன்வைக்கின்ற ஒன்றாக அரசியல்திட்டம் சாத்தியம் இல்லை என்பதும் உள்ளடக்கப்படுவதால் பல்வேறுபட்ட திட்டங்களு டன் கூடிய பன்மை அரசியற் செயற்பாடுகளைப் "பின் நவீனத்துவம்" முன்மொழிகிறது. பெருங்கதையாடல்கள் எப்போதும் தமக்கு வெளி யில் ஒரு கோட்பாட்டைத் துணைக்கழைத்துக் கொள்ளும் என்றும், ஆனால் பின் நவீனம் அப்படி எதனையும் தனக்கு ஆதரவாகக் கொள்வ தில்லை எனப்படுகின்றது. குறித்த திட்டமொன்றை முன்வைத்து இயங் கும் எந்தவொரு குழுவும் தனது திட்டத்தை முழுமையாக நியாயப்ப டுத்த முடியாது என்பதோடு அது அவசியம் இல்லை எனவும் கூறுகின் றது. எந்த வொரு குழுவும் தனது மேலான்மையை வற்புறுத்தாத எல் லாக் குழுக்களும் தங்களின் நிறங்களையும் அடையாளங்களையும் பேணிக்கொள்ள வாய்ப்பளிக்கும் வானவில் கூட்டணியின் சாத்தி யத்தை வர வேற்கிறது
அடுத்து கருத்தொருமிப்பென்பது எப்போதும் அதிகாரத்தின் குரலாகத்தான் இருக்க முடியும் இதனால் பின்னவீனத்துவம் கருத் தொருமிப்புக்குப் பதிலாக கருத்துமாறுபாட்டை உயர்த்திப் பிடிக்கிறது. விரிந்த அளவிலான கருத்தொருமிப்பு ஆபத்தானது என்றும், தல அள விலான, குழு அளவிலான கருத்தொருமிப்பே சாத்திய மென்பதோடு விரிந்த நிலையில் கருத்து மாறுபாடுகளின் ஏற்பே வன்முறையின்மை யின் அடையாளமாய் இருக்க முடியும் என்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதாயின் கருத்து வேறுபாடுகளின் கருத்தொருமிப்பே ஜனநாய கமான ஒன்றிணைவாக இருக்க முடியுமென்பதாகும். இந்த ஒன்றினைவு கூட மிகவும் தற்காலிகமானதாகவும், காலம், இடம், என்பவற்றினால் குறுக்கப்பட்டதாகவுமே இருக்கும் என்கிறது.
(அரசறிவியலாளன் 150 FC.šus

அடுத்து உண்மை, நீதி, அறம் என்பவற்றைப் பின் நவீனத் துவம் மறுக்கவில்லை இவற்றை எல்லாம் தீர்மானிப்பதற்கான அடிப்ப டையான பொது ஆதாரம் எதுவுமில்லை என்பதே பின்நவீனத்துவத்தின் நில்ைபாடு. இதன் வழி பேருண்மை, பேரறம், பெருநீதி என எதுவும் இருக்க முடியாதென்கிறது. இவ்வாறு கூறுவதென்பது தன்னிலைக்கும் (Subject) மற்றதுக்கும் (Other) இடையேயான, உண்மை, நீதி, அறம் என்பவற்றை மறுப்பதாக அமைந்துவிடாது. மாறாக அது குறிப்பிட்ட இடம் சார்ந்ததாக குறிப்பிட்ட சம்பவம், மற்றும் குழு சார்ந்ததாக, தற்காலிகமானதாக இருக்கும். அந்த வகையில் அது சிறுநீதியாக சிறு அறமாக, சிறு உண்மையாக விளங்கும் எதிர்கொள்ளும் மற்றதிற்கு, மற்றதாக இருப்பதற்கு உள்ள உரிமையைக் கொண்டுதான் நீதி, உண்மை, அறம் என்பவை தீர்மானிக்கப்பட வேண்டும் என்கிறது. அதா வது மற்றதை நோக்கி நீதியாய் இருப்பதே நீதி, மற்றதற்கு உண்மை யாய் இருப்பதே உண்மை, மற்றதாய் இருக்கும் உரிமையை ஏற்பதே அறம், என்பது பின் நவீனத்துவப் பார்வையாகக் காணப்படுகிறது.
நவீனத்துவமும் பின்நவீனத்துவமும்
தொடர்ச்சியாக நவீனத்துவமும் பின் நவீனத்துவமும் வேறுப டும் புள்ளிகளைச் சுருக்கமாக நோக்குவோம். இணைந்த வடிவம், குறிக்கோள், படிநிலை ஒழுங்கு, குறையற்ற முழுமையான உருவாக் கம், விலகிநிற்றல் ஆகியவற்றை நவீனம் தனது பண்புகளாகக் கொண் டுள்ள தெனில், கலைந்த வடிவம், விளையாட்டுத்தனம், அனார்க்சிசம், உருவாகிக் கொண்டு நிற்கும் தன்மை, பங்கேற்பு முதலியவை பின் நவீனப் பண்புகளாக உள்ளன.
கட்டமைப்பு, தொகுப்பு, இருத்தல், மையம் கொள்ளுதல், இலக்கிய வகையின் இறுக்கமான வடிவம், ஆழத்திற்குச் செல்லுதல் முதலியன நவீனத்துவ அடையாளங்கள் எனில் கட்டுடைப்பு, சிதைவு, இன்மை, பரந்து விரிதல், பிரதியில் சகபிரதியின் ஊடாட்டம், மேற்பரப் பில் திளைத்தல் முதலியன பின் நவீனத்துவக் கூறுகளாகக் காணப்படு கின்றன. உரைவிளக்கம், வாசிப்பு, குறிப்பானுக்கே முதன்மை வாசிப் புக்குரிய பிரதி, பெருங்கதையாடல், மூலாதாரம் முதலியவற்றை நவீ (அரசறிவியலாளன் 151 F.C. சத்தியசோதி)

Page 92
னத்துவம் கொண்டுள்ள தெனில் மறுத்தல், எதிர்வாசிப்பு, குறியீட்டு முதன்மை, எழுத்துக்குரிய பிரதி, சிறுகதையாடல், வேட்கை, வித்தி யாசம் என்பன பின்நவீனத்துவ அடையாளங்களாகும்.
அடுத்து விடுதலை பற்றிய பின் நவீனத்துவக் கருத்து தத்து வமும் அரசியலும் வேறு வேறு இல்லை என்கிறது இது தனக்குத் துணையாக "அல்துவடிாரை” அழைத்துக் கொள்கிறது. அல்துவடிார் "மாக்சிச-லெனினிச அரசியல் சிறந்த புரிதல் எனக்கு கைவந்த பிறகு மாக்சியல், மெய்யியல் குறித்து பற்றுக் கொள்ள ஆரம்பித்தேன் இறுதி யில் மாக்ஸ், லெனின், கிராம்ஸி ஆகியோரின் மாபெரும் கோட் பாட்டைப் புரிந்து கொள்ளத் தொடங்கினேன்" என்கிறார். இவரது அக்கூற்றை ஆதாரமாகக் கொண்டு மெய்யியல் என்பது அடிப்படையில் அரசியலே என்கிறது பின்நவீனம். பின்நவீனம் என்பது அடிப்படையில் தத்துவம் தான் என ஒதுக்கிவிடவேண்டாம் என தான் மேற்கூறிய நியாயப்பாட்டை இங்கே எடுத்தாளவேண்டி ஏற்பட்டது.
முழுமை என்னும் போது ஒற்றை அல்ல ஒன்று என்னும் பொருள் வந்து விடுகிறது. எனவே தொடர்ச்சி, முழுமை என்பவற்றை விடுத்து தொடர்ச்சியின்மை சிதைவு ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் பின்னவீனம் விடுதலை தொடர்பாகவும் அதே நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. எனவே மனிதர்கள் ஒருபோதுமே ஒற்றைத் தன்னிலை யாளர்களாய் உருப்பெறுவதில்லை வர்க்கம், சாதி, பால், இனம், மொழி, நாடு, பதவி மற்றும் அவனுக்கு வழங்கப்படும் நடிபங்கு களைப் (Role) பொறுத்து ஒவ்வொரு மனிதனுள்ளும் பல்வேறு தன்னி லைகள் இயங்குகின்றன. எனவே இந்த அடிப்படையில் சிந்திக்கும் போது விடுதலைக்கான ஒற்றைத்திட்டம் என்பது எல்லா மனிதர்க ளுக்கும் சாத்தியமானதாக இருக்க முடியாதென்கிறது. இனரீதியான விடுதலை பெற்றாலும் வர்க்க ரீதியான விடுதலை கிடைக்காமல் போக லாம். இரண்டுமே கிடைத்தாலும் சாதிரீதியான விடுதலை இல்லாது போகலாம் எனவே மொழியின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, வர்க்கத்தின் பெயராலோ, சாதியின் பெயராலே கிடைக்கும் விடுதலை என்பது முழுமையான விடுதலையாக இருக்க முடியாது. எனவே விடுதலைக்
(அரசறிவியலாளன் 152 F.C. agglucag

கான ஒற்றைத் திட்டம் என்பதைக் காட்டிலும் விடுதலைக் கானதிட் டங்கள் என்பதே பொருத்தப் பாடானது. எனவே விடுதலைக் கான எந்தவெரு திட்டமும் மொத்த மானுட விடுதலைக்கான திட்டமெனத் தன்னை அறிவித்துக்கொள்ளுமாயின் அதைவிடப் பெரிய ஏமாற்று வித்தைவேறில்லை என்கிறது. பின் நவீனம். இதை நாம் மாக்சியத்துக் கும் தேசிய இன விடுதலைகளிற்கும் பொருத்திப் பார்க்க முடியும்.
பெருங்கதையாடல்கள் பறை சாற்றிய உயர்ந்த இலட்சி விடுதலை நோக்கிச் செயற்பட்ட மக்கள் அவை பாறை சாற்றிய விடு தலையை அனுபவிப்பதற்காகக் காத்திருந்தார்கள். ஆனால் விடுதலை யின் பின் மக்கள் எதிர்கொண்டது விடுதலையை அல்ல வன்முறை யையே. அடக்கு முறையின் கரம் மாறியதே ஒழிய விடிவு கிட்டவில்லை இதுவே பெருங்கதைகளின் தகர்வுக்கு அடிப்படை. இவற்றின் விளை வால் உருவான போர் எதிர்ப்பு இயக்கங்கள், சூழல்பாதுகாப்பு, இயக் கங்கள், மனித உரிமை இயக்கங்கள், பெண்ணிய இயக்கங்கள் வேலை இல்லாதோர் இயக்கங்கள், இன உரிமை இயக்கங்கள் என்ப வற்றின் ஜனநாயக இணைவையே பின்நவீனம் முன்மொழிகிறது.
முடிவாக மனிதன் பற்றிக்கொள்ள எதுவுமற்ற ஒருவகையான கையறுநிலையில் தனது பிரக்ஞையைக் கட்டிப்போட நம்பிக்கைகளும் அடித்தளங்களும் இல்லாத நிலையில், மையம் இழந்த மனநிலையா ளனாய் மிதந்து திரியும் பிரக்ஞை உடையவனாய் வாழ்கிறான் அவன் பின்பற்றிய தத்துவங்களெல்லாம் அவனைக் காலைவாரி விட்டதால் அவனுக்கு இந்தநிலை ஏற்பட்டது.
எனவே மிதக்கும் பிரக்ஞையில் நின்று கொண்டு பின்நவீனம் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்க முடியாது. நவீன அறிவியல் தொழில்நுட்பப் பெருக்கத்தின் விளைவால் தேச எல்லைகள் ஆட்டங் காணத் தொடங்கின. துணைக்கோள்களின் தொடர்புகளாலும், விரிந்த உலக சந்தையாலும் தேச எல்லைகள் அழிகின்றன. விரித்த உலகப் பார்வை, ஒருலகக்கலாச்சாரம், ஒரே இலக்கியம் என்பன எல்லாம் இன் றைய ஏகாதிபத்திய நடவடிக்கைகளாக மாறிவிட்டன. தேச எல்லைகள்
(அரசறிவியலாளன் 153 FC சத்தியசோதி )

Page 93
ஆட்டம் காணுவதனால் ஒரே ஐரோப்பா, விரிந்த அமெரிக்கா, ஒருலகப் பார்வை என்பன போன்ற பெருங்கதையாடல் களை ஏகாதிபத்தியங்கள் இன்று உருவாக்குவதைக் காணத்தவறிக் கண்மூடி மெளனிகளாக இருக்க முடியாது.
பின்னவீனத்துவத்தை நலிந்தவர்களை மேலும் நலிந்தவர் களாக உருவாக்கக் கட்டவிழ்ந்து விடப்பட்ட கண்ணாம்பூச்சி விளை யாட்டாகப் பார்க்கத் தோன்றுகிறது. இவர்கள் கூறும் விடுதலை என்பது நடைமுறைச்சாத்தியமற்றது. இது ஒரே அணிதிரள்வை குழுக்களாக உடைத்து ஒரு கொள்கை முன்னெடுப்பை மந்தமடையச் செய்து அழித் துவிடும் முயற்சியே கற்பனை உலகில் நிலைய்ற்ற பிரக்ஞையில் மனிதர்களை உலவவிட்டு அரசையும் அற்றுப் போகச் செய்து, பல் தேசியக் கம்பனிகளும் பெருமுதலாளிகளும் சுகம் காண்பதற்:கு உழைக்கும் ஒரு புதிய கோட்பாடாகவே இதனைக் காணமுடியும் என்றா லும் பல நல்ல விடயங்களையும் பின்னவீனம் கொண்டுள்ளது.
References 01) பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா, பின் நவீனம் ஓர் அறிமுகம்,
மெய்யியற் சங்கம், தென்கிழக்கு பல்கலைக்கழகம், 1999.
02) தி.சு.நடராசன், அ.ராமசாமி, "பின் நவீனத்துவ கோட்பாடுகளும்
தமிழ் சூழலும் - விடியல் பதிப்பகம், 1998.
03) அ.மாக்ஸ், பின் நவீனத்துவம்-இலக்கியம்-அரசியல்,
விடியல் பதிப்பகம், 1996.
04) அ.மாக்ஸ், கலாச்சாரத்தின் வன்முறை,
அடையாளம் வெளியீடு, 2001.
05) எஸ்.வி.ராஜதுறை, எக்சிஸ்டென்ஷியலிசம், Cre-A, 1989.
(அரசறிவியலாளன் 154 Fc säsugsng

புதிய உலக ஒழுங்கு எதிர்நோக்கும் சவால்கள் ஒரு கண்ணோட்டம் A Review of the Challenges that the new world of Faces
- N. கவிதா2000/A/96
உலக அரசியல் வரலாற்றில் 1789ல் பிரான்சில் ஏற்பட்ட புரட்சி சுதந்திரம். சமத்துவம் சகோதரத்துவம் என்ற அம்சங்களின் அடிப்படையில் மனித வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. இப்புரட்சி நடந்து இருநூறு ஆண்டுகளிற்கு பின் 1989ல் கிழக்கு ஐரோப் பாவில் ஒரு புரட்சி உதயமாகியது. இப்புரட்சி சர்வதேச அரசியல் ஒழுங்கை பிரமாண்டமான அளவு மாற்றியமைத்தது. 1789ம் ஆண்டுப் புரட்சி 20ம் நூற்றாண்டில்தான் உலகிற்கும், ஏனைய பாகங்களிற்கும் சென்றடைந்தது. ஆனால் 1989ம் ஆண்டுப் புரட்சி சர்வதேச அரசியல் ஒழுங்கில் ஒரே நேரத்தில் பலமாற்றங்களை ஏற்படுத்தியது.
புதிய உலக ஒழுங்கு என்பது அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒழுங்கு முறையாகும். இது பொருளாதார, கலாசார பரிமாணங்களை உருவாக்குவதாகவும் காணப்படுகின்றது. 1989ம் ஆண்டு சோவியத் யூனியன் வீழ்ச்சி, பேர்ளின் சுவருடைப்பு. கிழக்கு, ஐரோப்பிய நாடுக ளின் சோஷலிச சித்தாந்த தத்துவத்தின் எதிர்ப்பு என்பவை பற்றிய பிரதிபலிப்பதாக ஒப்புவிக்கப்பட்ட ஓர் அம்சமாகும். இப்புதிய உலக ஒழுங்கானது உரோம சாம்ராஜ்யம் பிரித்தானிய சாம்ராஜ்யம் போன்று மீண்டும் உலகில் ஒரு ஏகவல்லரசு (Unipower) முறை வளர்ந்துள் ளதை காட்டுகின்றது.
மேற்குலக ஆய்வாளர்கள், அரசியல் ஆலோசகர்கள் வர லாற்றை இப்புதிய உலக ஒழுங்கின் காரணமாக பொருளாதார பின்
(அரசறிவியலாளன் 155 Nasism

Page 94
தளத்திலிருந்தே மதிப்பீடு செய்கின்றனர். இதன் அடிப்படையில்.
ஹென்றி கீசிகர் குறிப்பிடும்போது.
“பொருளாதாரப் பின்னடைவுகளால் அல்லது நெருக்கடிகளால் அடைந்த தோல்வியே சோஷலிசத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகி யது" என்றார்.
இதே போன்று பேராசிரியர் Joshepney
"அமெரிக்கா என்ற தனியரசு மீண்டும் பேரரசாக எழுச்சி பெறக்கூ டும், பொருளாதாரம், இராணுவம் தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டிருப்பதுடன் பிராந்தியங்களிலும் அச்சுறுத்திய அரசாகவும், இயற்கை அமைவிடமாகவும் அமெரிக்கா விளங்குகின்றது” என்கி
றார.
மேலும் புதிய உலக ஒழுங்கு பற்றி இலங்கை சர்வதேச விவ கார ஆய்வாளரான மேவின் D.சில்வா குறிப்பிடும்போது.
"உலகில் இயக்கம் ஒன்று எழும் நிலையை அடைவதற்காக அமெரிக்காவின் ஏகாதிபத்திய செயற்பாடுகளின் மீள்கட்டு மானத் தினை உணர்த்துவதை குறிப்பது” என்றும்
"பொரின் யொலிசி" என்ற சஞ்சிகையின் ஆசிரியர் குறிப்பிடும் போது
"புதிய உலக ஒழுங்கு என்பது "அமெரிக்கா இல.1" என்ற பழைய ஏகாதிபத்திய கனவின் புனரமைப்பாகவே இருக்க முடியும்” என்கி
றார.
லங்கா கார்டியன் இணை ஆசிரியராக பணிபுரியும் தயான் ஜயதிலக
கூறுகையில்
"ஐக்கிய அமெரிக்கா கருத்தில் வைத்துள்ள புதிய உலக ஒழுங் கின் முக்கிய தூண்களில் ஒன்று சோவியத் யூனியனூடாக அமெ ரிக்காவின் புதுவகை உறவாகும். இந்த நிலையில் குறிப்பாக மூன்றாவது உலகநாடுகள் மீது அமெரிக்கா நலன்களை உறுதி செய்யும் விஷயத்தில் சோவியத் யூனியன் இணங்கிச் செல்வ தாகவும், கூட்டாக இணைந்து செல்வதாகவும் இருக்கின்றது. வளைகுடா இராணுவ நடவடிக்கை மூலம் புஷ் காணவிளையும் புதிய உலக ஒழுங்கின் மைய அம்சம் இந்த உறவு நிலையாகும்.
என்கிறார்.
(அரசறிவியலாளன் 156 Nகவிதா)

கீர்சின் என்பவரின் கருத்துப்படி
"உலகமானது தான் விரும்பியபடி மாறிக் கொண்டு போகும். நிலை மையை மாற்றி முழு உலகத்தையும் அமெரிக்கா தனது விருப்பத் திற்கு மாற்றியமைக்கும் நிலைமை புதிய உலக ஒழுங்கு” என்கிறார்.
அந்தவகையில்
“மாறிவரும் அதிகார இயந்திரத்தன்மைக்கு ஏற்றபடி ஆட்சி அமைப்பு முறைகளும் தலைமைத்துவ போக்கும் மாற்றமடையும் நிலையையே இது குறிக்கின்றது" என புதிய உலக ஒருங்கினை வரையறை செய்யலாம்.
புதிய உலக ஒழுங்கு அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்காக தவிர்க்க முடியாதபடி முதன்மை வாய்ந்ததாக விளங்குகின் றது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தன்மீது இந்த உலகிலுள்ள சகல நாடுகளும் தங்கியிருக்கச் செய்ய வேண்டும் என விரும்புகிறது. சகல நாடுகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக் கும் போது, பல சவால்களை சந்திக்கின்றது. இச் சவால்கள் அரசியல், பொருளாதார பண்பாட்டுரீதியில் ஏற்படுவதை காணலாம். அந்த வகை யில் புதிய உலக ஒழுங்கு எதிர்நோக்கும் சவால்களாக.
பயங்கரவாதம்
உலகமயமாக்கப்படுத்தல்
இஸ்லாமிய வாதம் சர்வதேச ரீதியான கருத்து வேற்றுமை ஆயுதங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை நாடுகளுக்கிடையே காணப்படுகின்ற கூட்டு ஆலோசனை முழு உலகத்திற்குமான பொருளாதார நெருக்கடி அமெரிக்கா - ஈராக் யுத்தம் (1991, 2003)
6)(60) D
தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் பான்றவற்றைக் குறிப்பிடலாம்.
(3
(அரசறிவியலாளன் 157 Nassísm )

Page 95
புதிய உலக ஒழுங்கு எதிர்நோக்கும் முக்கிய சவாலாக பயங் கரவாதப் பிரச்சனை காணப்படுகின்றது. பொதுவாக பயங்கரவாதம் என்பது
"தனிமனிதன் அல்லது சமூகத்தினுடைய அடிப்படை உரிமைகளை
மீறும் செயல்கள் பயங்கரவாதச் செயல்கள் என கூறப்படும்.
பயங்கரவாதம் பற்றி அமெரிக்காவின் நோக்கில்
"அமெரிக்காவின் வாழ்வுரிமையை மீறுபவரும், அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி அவர்களின் சொத்துக்களை அழிப்பவரும் பயங்கரவாதிகள்”
என அமெரிக்காவின் ஆளும் வர்க்கம் கூறுகின்றது. "பயங்கர வாதம்” என்பது இன்று புதிய உலக ஒழுங்கை பேணுவதில் முட்டுக் கட்டையாக இருக்கின்றது. இதற்குச் சான்றாக 2001 செப்ரெம்பர் 11 தாக்குதலை குறிப்பிடலாம். ஆனால் மாறாக அமெரிக்கா விடுதலை இயக்கங்கள். பொருளாதார வளம் மிக்க நாடுகள் போன்றவற்றின் மீது "பயங்கரவாதம்” என்ற பெயரில் சுயலாபம் தேடுவதும் குறிப்பிடத் தக்கது.
புதிய உலக ஒழுங்கு உருவான பின்பு அமெரிக்கா தனது "வீட்டோவை" பயன்படுத்திய சந்தர்ப்பம் யாதெனில் ஹமாஸ் இயக்க ஆத்மீகத் தலைவர் "சேர்க் அகமட் யசீன்" கொல்லப்பட்டதை அமெ ரிக்கா ஆதரித்தது. அதற்காகவே தனது வீட்டோவை பயன்படுத் தியது. இது முழு உலகத்தையும் அமெரிக்கா நிராகரிப்பதுடன் அமெரிக்கா வின் பயங்கரவாதத்தை மீண்டும் ஒரு தடவை அம்பலப்படுத் தியுள்ளது. பயங்கரவாதம் என்பது அமெரிக்காவை பொறுத்தவரை அமெரிக்க மேலாதிக்க கொள்கையை விஸ்தரிப்பதற்கு அமெரிக்காவிற்கு கிடைத்த புதிய ஆயுதமாகும். ஆனால் அண்மையில் ரஷ்யாவின் பாட சாலை ஒன்றில் நிகழ்ந்த சம்பவத்தின் போது ரஷ்ய அதிபர் விளாடிமீர் பூட்டின் எடுத்த நடவடிக்கை பயங்கரவாதத்தை அமெரிக்காவின் பாணியிலேயே முறியடிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதையே காட்டுகின் றது. இது அமெரிக்காவிற்கான முக்கிய சவாலாகவே விளங்குகின்றது.
(அரசறிவியலாளன் 158 Nகவிதா

அமெரிக்கா உலக மயப்படுத்தலை அமெரிக்க மயப்படுத் தலாக முயற்சிக்கும் போது பல சவால்களை எதிர்நோக்குகின்றது. உலகமயப்படுத்தலினால் இன்று ஒரு பொருளின் உற்பத்தியானது ஒரு நாட்டின் எல்லையை தாண்டியதாக மாறி வருகின்றது. நிறுவனங்கின் உலகமயமாக்கல் போக்கிற்கு மூன்றாம் உலக நாடுகள் எவ்வாறு பலி யாகப்போகின்றன இவ் உலக மயமாக்கத்துக்கு ஒரு புறம் எதிர்ப்பு தோன்றியுள்ளது. உலகமய மாக்கத்தை கிழக்காசியாவுக்குள் முழுமை யாக பரவலடையச் செய்வதென்பதில் அமெரிக்கா இதுவரை வெற்றி காணவில்லை. சீனா உலகமயமாக்கத்தை உள்வாங்கியபோதும் தனது கொள்கைக்கு ஏற்பவே அச்சீர் திருத்தங்களை அமுல்ப்படுத்தி வெற்றி கண்டு வருகின்றது. மேலும் பல்வேறு அம்சங்களினால் நாடுகள் ஒன்று டன் ஒன்று பிணைந்திருக்கின்றமையும் புதிய உலக ஒழுங்கிற்கு நெருக்கடியான விடயமாகவே உள்ளது.
இன்று சீனாவின் பொருளாதார வளர்ச்சி 10% - 12% வரை காணப்படுகின்றது. சீனாவினை எப்படியாவது தோற்கடிக்க வேண்டு மென்ற சிந்தனையுடன் அமெரிக்கா செயற்படுகின்றது. சீனாவும் அமெ ரிக்காவிற்கு சவால்விடுவதான நிலையிலைலேயே உள்ளது. அமெரிக்க உப ஜனாதிபதி டிக்செனியின் சீன விஜயத்தின்போது சீனா, அமெ ரிக்கா ஈராக்கிடம் ஒப்படைக்கவுள்ள ஈராக்கின் அதிகாரத்தை ஈராக்கிட மின்றி ஐ.நா சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரியது. இது அமெரிக்கர்கள் ஈராக்கிடம் அதிகாரத்தை கொடுக்க மாட்டார்கள் என் பதை சீனா கோடிட்டு காட்டியதுடன் சீனா கொடுத்த நெருக்கடியாகவும் காணப்படுகின்றது.
அமெரிக்காவை இராணுவ ரீதியில் எதிர்கொள்ளக் கூடிய வல் லமை ரஷ்யாவிற்கு உண்டு. "பெரஸ்ரொய்க்கா" தோல்வியடைந் தமையாலும் ரஷ்யா இராணுவ ரீதியில் தற்போது பெருவளர்ச்சி கண் டுவருகின்றது. ரஷ்யாவில் அண்மையில் இடம்பெற்ற Command and statt training என்ற மிகப்பெரிய ஒப்பறேசன் இதற்குச் சான்றாகும். அத்துடன் ரஷ்யாவின் உளவுத்துறை K.G.B மீண்டும் எழுச்சி பெறுகின்
ep ளன் 159 Nassfism )

Page 96
றமை அமெரிக்காவிற்கான தலைவலியே எனலாம். மேலும் "புட்டின்” காலத்தில் அவர் முன்வைத்த பொருளாதார மற்றும் பாதுகாப்பு கொள் கைகள் சற்று இறுக்கமானதும் வித்தியாசமானவையும் ஆகும். மேலும் கஜகஸ்தானுடன் ரஷ்யா செய்து கொண்ட அண்மைக்கால உடன்பாடு, அதாவது எண்ணெய்வளத்தை பகிர்வதுடன் குழாய் மூலமான எண் ணெய்ப்பரி மாற்றத்திற்கு உதவுவதாக முடிவெடுத்துள்ளது. இவை அமெரிக்கா விற்கு அச்சமான விடயமே, ரஷ்யர்கள் தமது ரஷ்யா வையும் குடியரசு களையும் ஒண்றிணைப்பதிலும் பாதுகாப்பதிலும் வெற் றியடைவார்களேயானால் அமெரிக்கா தலைமையிலான புதிய உலக ஒழுங்கு கேள்விக்குள்ளாகும்.
இந்தியா தனது அரசியல் நெருக்கடி காரணமாக அமெரிக்கா விற்கு போட்டியாக வளரமுடியாதுள்ளது. எனினும் இந்தியா தனக்கு சவாலாக எழுச்சியடையும் எனற எண்ணத்தில் இந்தியாவை நீண்டகால கண்ணோட்டத்தில் நண்பனாக்க வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு உண்டு. அமெரிக்காவின் பொருளாதாரம் பின்தங்கிய நாடுகளிலேயே தங்கியுள்ளது. புதிய இந்திய அரசின் கொள்கைகள் அமெரிக்கப் பொருளாதாரத்தை பாதிக்கும் என கருதப்படுகின்றது. இந்தியச்சந்தை, முதலீடு, உற்பத்தி என்பன பாதிக்குமாயின் அது அமெரிக்காவிற்கு ஆபத்தானது.
ரஷ்யா - இந்தியா - சீனா நெருக்கம் என்பன அமெரிக்காவின் அரசியல், பொருளாதார இராணுவ விஸ்தரிப்பை உலகளாவிய ரீதியில் மட்டுப்படுத்துவதுடன், பிராந்திய அடிப்படையில் எழுந்துள்ள அதிக மான தலையீட்டை தடுக்கும், ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டினின் 2002ல் இந்திய, சீன மூன்றுநாள் விஜயமும் அதனால் ஏற்பட்ட நெருக்கம் அமெரிக்கா உட்பட மேற்குலகத்திற்கே அதிர்ச்சியான விடயமே, வளர்ந்து வரும் இவ்நெருக்கம் அமெரிக்காவை நெருக்கடிக்குள்ளாக்கு கின்றது எனலாம்.
பொருளாதார ரீதியில் உலக ஒழுங்கு எதிர்நோக்குகின்ற சவால்களில் யூரோ நாணய வெளியீடும் ஒன்றாகும். ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் விடாமுயற்சியே யூரோ நாணயத்தின் வருகை, (அரசறிவியலாளன் 160 Nassísm )

இவ்விருநாடுகளும் பொருளாதார ரீதியில் போராடுவதை விடுத்து அமெரிக்காவுடன் போராடுவதை நோக்கமாக கொண்டுள்ளன. இவ்வாறு சீனா, ரஷ்யா, ஜேர்மனி, பிரான்ஸ், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இவ்வாறாக இவை உலகின் முன்னணிக்கு வந்தால் அமெரிக் காவுக்கு எதிராக வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபடக்கூடிய ஒரு நிலை உருவாகும்.
Regional War என்பது இன்று புதிய உலக ஒழுங்கு எதிர்நோக்கும் சவாலாக உள்ளது. அதாவது இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை, இலங்கை இனப்பிரச்சனை போன்றவற்றை குறிப்பிடலாம். இங்கு சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் என்பவற்றினால் தீர்வு கிட்டினால் இன்னும் பல அரசுகளில் இவ்வாறான பிரச்சனை எழுந்து புதிய உலக ஒழுங்கை சீர்குலைக்கும் ஒன்றாக அமையலாம்.
அடிப்படை இஸ்லாமியவாதம் புதிய உலக ஒழுங்கு எதிர் நோக்கும் மிக முக்கிய சவாலாகும். "அமெரிக்காவுக்கு இஸ்லாமியவா தம் பெரும் சவாலாக உள்ளது" என "சாமூவேல் ஹன்ரிங்டன்” குறிப் பிட்டமை நினைவு கூரத்தக்கது. "Anti Americanism" என்ற கொள்கை இஸ்லாமியர்கள் மத்தியில் மிக வேகமாக பரவிவருகின்றது. தற்போது இஸ்லாமிய மக்களிடையே பரவிவரும் "அமெரிக்க பொருள் எதிர்ப்பு" அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்துவதாக அமை கின்றது.
ஈராக்கிய கைதிகள் மீதான பாலியல் துன்புறுத்தலும், கொடு மையான இராணுவத்தனமும் முழு உலகத்திலும் அமெரிக்கா மீது அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியர் ஹன்ரிங்டன் கூறுவது போல
"புதிய உலக ஒழுங்குக்கு பின்னான உலக அரசியலின் முரண்பாடு கள் நாகரிகங்களுக்கிடையிலான மோதலாகவே உள்ளது அதிலும் தற்போதைய நகர்வுகள் இஸ்லாமிய நாகரிகத்துக்கு எதிரானதா கவே விளங்குகின்றது"
(அரசறிவியலாளன் 161 Nassísm )

Page 97
என்கின்றார். இன்று முழு உலகத்திலுமுள்ள இஸ்லாமியர்களில் மிகச் சிறுபகுதியினரே அதிகம் போராடிவருகின்றனர். ஈராக்கிலும், ஆப்கா னிஸ்தானிலும், காஷ்மீரிலும் போராடி வருபவர்கள் எதிர்காலத்தில் கூட்டாக செயற்படுமாயின் முழு உலகமும் அதனை எதிர்கொள்ளுமா? என்பது சந்தேகமானது என்றும் இன்று இஸ்லாமியருக்கு நேரும் அவமா னம் எதிர்காலத்தில் இத்தகைய அணுகுமுறையை சாத்தியப்படுத்தி னால் இது அமெரிக்காவிற்கு சவாலாகவே அமையுமெனவும் கூறப்படு கின்றது.
புதிய உலக ஒழுங்கு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பாகவும் பல சவால்களை எதிர்நோக்குகின்றது. இராணுவ பலவீனங்களோடு புதிய உலக ஒழுங்கை மாற்றலாம் என்ற அச்சம் அமெரிக்காவிற்கு உள்ளது. நேட்டோ மட்டும் தான் இராணுவ ரீதியாக பலம் கொண்டது. இவ் அமைப்பும் இன்று பல நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது. நேட்டோ விற்கு மாறான சிந்தனை ஒன்று ஐரோப்பிய நாடுகளால் உருவாக்கப்படு மாயின் நேட்டோ பலவீனமடைவது சாத்தியமாகும். மேலும் ஐ.நா சபை யில் உள்ள நிரந்தர அங்கம் வகிக்கும் ஐந்து நாடுகளின் கூட்டுப்பலம் பலவீனமடைகின்றது. அத்தோடு ஆயுத உற்பத்தி கட்டுப்பாடு தொடர் UT60T Anti Ballistic Missiles (ABM) s (56JTd55b Start I, II, III தோல்வி கண்டமையும், ரஷ்யா - அமெரிக்கா உடன்படிக்கை என்பன மேற்கொள்ளப்பட்டது ஆயுதக்கட்டுப்பாட்டிற்காக அமெரிக்கா மேற் கொண்ட பல நடவடிக்கை, புதிய உலக ஒழுங்கு எத்தகைய சவால் களை எதிர்நோக்குகின்றது என்பதனை விளங்கிக் கொள்ள முடியும்.
அமெரிக்கா - ஐரோப்பிய முரண்பாடு புதிய ஒழுங்கு எதிர் நோக்கும் பிரதான சவாலாகும் ஐரோப்பிய நாடுகள் யாவும் ஒன்று சேர்ந்து "யூரோலாந்து” எனும் பிராந்தியம் உருவாகி வருகின்றது. இப்பிராந்தியத்தில் 25 நாடுகள் தற்போது இணைந்துள்ளன. இதனால் ஐரோப்பிய யூனியன் தனக்கென நாணயம் பொதுச்சந்தை, பொதுப் பாராளுமன்றம், பொது நீதிமன்றம் போன்றன பிராந்திய ஐக்கியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நீணடகால நோக்கில் அமெரிக்காவுக்கு சவா லாக அமையும் என்பது வெளிப்படையான ஓர் அம்சமாகும்.
(அரசறிவியலாளன் 162 N.sis

சர்வதேச ரீதியான கருத்து வேற்றுமையும் அமெரிக்கா எதிர் நோக்கும் சவாலாகும். உதாரணம்
* உலக வெப்பமயப்படுத்தலை தடுக்கும் உடன்படிக்கையில் ஒப்ப
மிடமறுத்து வருவது. * முழு உலகிற்குமான நிலக்கண்ணி வெடிகள் தடை உடன்படிக்
கையில் இணையத் தயக்கம் காட்டி வருவது. * மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்தி வருவது * AMB ஐ கைவிடப்போவதாக அறிவித்து
தற்காலத்தில் புதிய உலக ஒழுங்குக்கு எதிரான சவாலாக விளங்குவது சர்வதேச சமூகத்தை ஏற்றுக்கொள்ளாத தன்மையாகும் அதாவது சர்வதேச சமூகங்களான ஐக்கிய நாடுகள் தாபனம் போன்ற நிறுவனங்களையும் இஸ்லாம் மத சமூகங்களையும் அமெரிக்கா நிரா கரிக்கும் தன்மையை கொண்டுள்ளது. 1991 வளைகுடா யுத்தத்தை தொடர்ந்து, அமெரிக்கா UNO ஐ மீறி ஈராக் மீதான யுத்தத்தை ஆரம் பித்து ஆக்கிரமித்தது மட்டுமன்றி தனது நலன் பேணும்விதத்தில் அங்கு பல செயற்பாடுகளை மேற்கொண்டு சீனா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற பல நாடுகளின் அதிருப்தியை சம்பாதிக்கின்றமையும் குறிப்பிடத்தக் கது. இன்று அமெரிக்க இராணுவபலம் நெருக்கடியான நிலையில் உள்ளது. ஏ.பி.சி நியூஸ்கொம் உடைய மார்த்தா ராட்டாட்ஸ் யூன் 20ம் திகதி பதிப்பில்
"மனிதத்தேவையை பொறுத்த வரையில் பென்டகன் ஒரு சவாலை சந்திக்கின்றது. ஆள் சேர்தல் குறைவாகியுள்ளது, விமானத் தேசிய பாதுகாப்புதுறையில் ஆபத்தான அளவிற்கு சரிவு ஏற்பட்டுள்ளது.
என்று குறிப்பிடுகின்றார். இருப்பினும் ஆட்சேர்ப்பு கூடுதலாக சரியவில் லை என பொருளாதார காரணிகள் கூறுகின்றன.
மோசடியான அரசியல், பொருளாதார சுரண்டல்கள் (ஈராக்கின் யுரேனியத்தை, எண்ணெய்வளத்தை திருடியது) இராணுவரீதியான சர்
(அரசறிவியலாளன் 163 Nassisi )

Page 98
வாதிகார போக்குகள் அமெரிக்கா மீதான எதிர்ப்புணர்வுகளை மேலும் அதிகரித்ததுடன் வல்லரசுக்கான புதியவரையறைகளும் மேலெழுந்துள் ளன. அமெரிக்காவில் பெருகிவரும் தொழிலாளர் நெருக்கடிகள், பொரு ளாதாரப் பிரச்சனைகள் இவற்றைவிட சர்வதேச பொருளாதார போட்டி, சீனா W.T.0 ல் இணைந்தது என்பன அமெரிக்கா பெரும் ஆபத்தான நிலையில் உள்ளதையே காட்டுகிறது.
வடகொரியா பெருமளவுக்கு சீனா, ரஷ்யாவின் பின்புலத்துடன் அணுவாயுத விருத்தியை அடைந்துள்ளது. இவ்விவகாரம் ஆபத்தான சூழலை அமெரிக்காவுக்கு உணர்த்துவதாகவே அமையும் அமெரிக்கா வடகொரியாவை பயங்கரவாதத்தின் அச்சாணியாக அமையும் நாடுக ளில் ஒன்று என வர்ணித்திருக்கலாம். ஆனால் தென்கொரிய மக்கள் வடகொரியாவை நோக்கும் பார்வை மாறியிருக்கிறது. அமெரிக்கா சுயநலம் கருதியே தமது மண்ணில் அமெரிக்க துருப்புக்களை நிலை நாட்டியிருக்கின்றது. என்றே தென்கொரியாவின் இளைய சமுதாயம் எண்ணத் தலைப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் நோக்கிற்கு மாறான அம்சமாக விளங்குகின்றது.
ஈராக் ஆக்கிரமிப்பின் சுமையை தாங்கமுடியாமல் தத்தளிக் கிறது அமெரிக்கா, ஈராக்கில் நடைபெற்றுவரும் போருக்கு பிந்திய போரில் 300க்கு மேற்பட்ட அமெரிக்கப் படையினர் பலியாகினர். இது போரில் பலியானதைவிட இது அதிகமாகும். துருக்கி தனது படைகளை கூட்டுப்படைகளுடன் சேர்ந்து போரிடுவதற்கு முற்றாக மறுத்தது. சிரியா, ஈரான் போன்ற நாடுகளும் இதே கருத்தையே கொண்டிருந்தன பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இல்லை என்றே ஐ.நா.பரிசோதகர் கூறிய கருத்து புஷ்ற்கு எதிரானது.
ஈராக்கில் இப்பொழுது காணப்படும் எழுச்சி, ஆப்கானிஸ் தானில் புதுப்பிக்கப்பட்டுள்ள அமைதியற்ற நிலை உலகெங்கிலும் மற் றும் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் இவைய னைத்தும் அமெரிக்காவிற்கு வியத்தகு சவால்களை கொடுக்கின்றன. ஈராக் விவகாரம் அமெரிக்காவின் அரசியல் பொருளாதாரத்தை LDL (6
(அரசறிவியலாளன் 164 Nகவிதா)

மல்ல பாதுகாப்பையும் அமைதியையும் பாதிக்கும் விடயமாக மாறிவரு கின்றது. முழு உலகத்திற்குமான வறுமை தீர்க்கப்படாத பல பிரச் சனை இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சனை என்பனவும் புதிய உலக ஒழுங்கிற்கான சவால் விடுவனவாகவே உள்ளது. அமெரிக்காவின் தலைமை புஷ் இன்று தீவிரமான ஆட்சியாளனாக மாறி அமெரிக் காவை பலவீனப்படுத்தும் அமெரிக்கனாக விளங்குகின்றார். மீண்டும் புஷ் தெரிவுசெய்யப்பட்டமையால் அமெரிக்க ஆதிக்கம் வேகமாக அஸ்தமித்து விடும் எனக்கூறப்படுகின்றது. இது புதிய உலக ஒழுங்கு எதிர்நோக்கும் பாரிய சவாலாக காணப்படுகின்றது.
எனவே மேற்கூறிய அம்சங்கள் அடிப்படையில் நோக்கும் போது புதிய உலக ஒழுங்கு என்பது தற்போது அமெரிக்காவால் நிர்ண யிக்கும் ஒன்றாக இருக்கின்றது. ஆதலால் அமெரிக்க பலவீனங்கள் உலகின் புதிய ஒழுங்கிற்கான மாற்று கருத்து பற்றிய எண்ணப்பாட்டை உருவாக்கி விட்டது எனலாம். அமெரிக்காவிற்கு நெருக்கடி என்பது புதிய உலக ஒழுங்கிற்கான சவாலாகவே உள்ளது. அவை சார்ந்த பிராந்தியங்களும் அமெரிக்காவிற்கு நெருக்கடி கொடுக்கும் முதன் நிலை அரசுகளாக விளங்குகின்றன எனலாம்.
References 1) கேரீ கணேசலிங்கம், மாறிவரும் புதிய உலக ஒழுங்கு, தயாளன்
றுாடல் ஹேமன்ற், பிரான்ஸ், ஐப்பசி, 2002.
2) க.கைலாசபதி, சர்வதேச அரசியல் நிகழ்வுகள், புதியயூமி வெளி
யீட்டகத்துடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 1992 மார்கழி.
3) மு.திருநாவுக்கரவு, புதிய சர்வதேச அரசியல் ஒழுங்கு,
தமிழ்தாய் வெளியீடு, 1999.
4) எஸ்.எம் முபாரக், இன்றைய உலகில் ஒசாமா பின்டேலன்,
தானம் வெளியீட்டகம், 2001,
5) பொருளியல் நோக்கு, மக்கள் வங்கி வெளியீடு, ஆவணி, 1990, சித்திரை 2000, ஆனி 1992.
(அரசறிவியலாளன் 165 Nassism

Page 99
ஒஸாமா பின்லேடன் ஒரு வரலாற்று நோக்கு
A Historical Review of Osama Binladen
- A.அக்னஸ் நிமாலினி - 2000/A/01 உலகின் வித்தியாசமான பல நாடுகளிலும் விதவிதமான மனிதர்கள் தோன்றுகின்றனர். சிந்தனையாளர்கள் என்றும் அரசியல் வாதிகள் என்றும், போராட்ட வீரர்கள் என்றும் இவ்வாறு பல துறை களிலும் பலர் மிளிர்வதை காணமுடியும். அந்த வகையில் இன்று உலகின் மூலை முடுக்கிலும் பலரா லும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்ற வரும் அமெரிக்காவின் எதிரி என்று கருதப்படும் நிபுணத்துவ மும், நிதான மும் மிக்க தீவிரவாதி ஒஸாமா பின்டே லன் காணப்படுகின்றார்.
உலகத்தின் மிகப்பெரும் சக்தியான அமெரிக்கா அதற்கு துணையாக இருக்கும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், அரபு நாடு கள் ஆகியவை அனைத்தும் சேர்ந்து இந்த மனிதரைப் பிடிக்க முடிய வில்லை என்றால் அதன் பின்னணி என்ன? இந்த மனிதனால் எப்படி இது சாத்தியமானது? யார் இவர், உலகமே அதிர்ச்சி, கோபம், இலோ சாணபயம் கலந்த ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த மனிதனின் பின்னணி, தோற்றம் வளர்ச்சி ஆகியவை என்ன? இந்த விஷ யங்கள் சுவர்ஷியமானவை மட்டுமல்ல தீவிரவாதியும் தீவிரவாதமும் பின்னிப்பிணைந்தவை என்பதை நிரூபிக்கக் கூடியவை.
(அரசறிவியலாளன் 166 A.அக்னஸ்நிமாலினி)
 

தீவிரவாதிகள் எந்தத் தரப்பை, பிரிவை, கருத்தை சார்ந்தவர் களாக இருந்தாலும் சரி, அவர்கள் அந்த நிலையை அடைவதற்கு அல் லது மாறுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. தாங்கள் ஏற்றுக் கொண்ட கருத்துக்காக போராட முடிவு செய்வது முதற்படி. ஆனால் இதுமட்டுமல்ல பொருளாதார நிலை, சமுதாயத்தில் ஒடுக்கப்படுதல் சாதாரண சராசரி வாழ்வை வாழ முடியாத நிலை உருவாதல் குறி வைத்து தாக்கப்படுதல் போன்ற காரணங்கள் தான் சாதாரண மனி தனை தீவிரவாதியாக்குகின்றது.
ஆனால் இவற்றையெல்லாம் மீறி, தான் பின்பற்றுகின்ற மதம் இதனைத் தான் போதிக்கின்றது என்று மிகத் தீவிரமாக நம்பி அதற் காக தன்னை அர்ப்பணித்து, தனது வசதிகள் சந்தர்ப்பங்கள் அனைத் தையும் துறந்து, பல தீவிரவாதிகளை உருவாக்கும் தீவிரவாதியாக யாராவது ஆகமுடியும் என்றால் அதற்கு ஒஸாமா பின்லேடனைத் தவிர வேறு உதாரணத்தை உலக வரலாறு இதுவரை உருவாக்கவில்லை அமெரிக்க நிருபர் John Miller பின்லேடனைக் கேட்டார்.
கேள்வி- நீங்கள் மிகவும் வசதியான குடும்ப பின்னணியிலிருந்து வந்த வர். ஆனால் போர்முனையில் போராடும் போராளியாக உரு வெடுத்து உள்ளிர்கள் இது எப்படி நடந்தது.
பதில்:- மற்றவர்களால் இதைப் புரிந்து கொள்ளமுடியாதுதான் அது வும் இஸ்லாத்தைப் பற்றி அறியாதவர்களுக்கு இதைப் பற்றியும் தெரிந்திருக்க முடியாது. எங்களது இஸ்லாத்தை பொறுத்தவரையில் அல்லா எங்களைப் படைத்திருப்பது அவரைத் தொழுவதற்காகத்தான் அவர் தான் எங்களைப் படைத்தவர். இந்த மாரக்கத்தை காண்பித்தவர். மற்றவர் களுடன் புனிதப் போர் புரிந்து அவர்களையும் இந்த மார்க்கத்தை, அல்லாவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள் ளச் செய்யவேண்டும் என்பது அல்லாவின் கட்டளை. இதனை நாங்கள் நம்புகின்றோம். அல்லாவின் இந்த அறை கூவலை பணம் படைத்தவர், ஏழை என்ற வித்தியாசமில்லா (அரசறிவியலாளன் 167 A.அக்னஸ்நிமாலினி)

Page 100
மல் அனைவரும் செவிமடுக்க வேண்டும் என்பதையும் நாங் கள் நம்புகின்றோம்.
குடும்பப்பின்னணி
ஜேமனிய வம்சவளி தந்தைக்கும் சிரியாவின் தாய்க்கும் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் 1957ம் ஆண்டு பின்லேடன் பிறந்தார். ஒஸாமா பின்லேடன் என்பதே இவரது முழுப்பெயர். இவரது தகப்பனாரான முஹமது அவாட் பின்லேடனின் 17வது குழந்தை முஹ மது அவாட் பின்டேலனுக்கு பல மனைவிகள் 54 குழந்தைகள் பின்லேட னுக்கு 4 மனைவிகள் பில்லேடனின் தயாரின் பெயர் அலியாகாநெம். மூத்த சகோதரர் பெயர் சலீம் இவர் அமெரிக்க "டெக்சாஸ் மாநிலத்தில் விமான நிறுவனத்தை நடத்தி வந்தார். 1988இல் விமான விபத்தில் அவர் கொல்லப்பட்டார். இன்னொரு சகோதரர் ஹார்வாட் சட்டக்கல் லூரி மற்றும் ஹார்வாட் திட்டங்களிடும் கல்லூரிகளில் புலமைப்பரிசில் ஸ்தாபித்தஹெயிக் பக்கிர் மொகமது பின்லேடன் ஆவார்.
ஒஸாமாவின் தந்தை தென் யேமனிலிருந்து சவுதி அரேபியா வுக்கு தொழில் நிமித்தம் 1930 இல் வந்து சேர்ந்தார். இவர் மிகவும் ஏழ்மையான ஒரு தொழிலாளியாக சவுதி அரேபியாவின் "அவுத் ஜெட்டா” என்ற துறைமுகத்தில் வேலைக்கமர்ந்தார். இவ்வாறு இவர் வேலைக்கு அமர்ந்தாலும் இவர் ஒரு திறமையான கட்டட நிர்மானியாக காணப்பட்டார். அப்போதைய சவுதி அரசின் அரச மாளிகையில் நிர் மாண வேலையை இவர் குறைந்த விலையில் பொறுப்பேற்று கட்டி முடித்ததனால் மகிழ்ந்துபோன மன்னர் செளத் அவரது திறமையை மதித்து அவரை தனது நண்பராக நடத்தினார்.
மன்னர் பைசலுடனும் அவரது குடும்பத்துடனும் மிக நெருங் கிப் பழகினார். 1960களில் மன்னர் பைசலுக்கும் சவுதி மன்னருக்கும் இடையில் ஏற்பட்ட அதிகார போட்டியில் மன்னர் பைசல் சார்பாக பெரும் புரட்சி ஒன்றை நடாத்தி வெற்றியும் பெற்றார். இதனால் மேலும் மன்னர் குடும்பத்துடன் இவரது தொடர்பு அதிகரித்தது. இதன் காரண மாக அனைத்து கட்டட வேலைகளும் இவருக்கே வழங்கப்பட்டது
(அரசறிவியலாளன் | 168 LA.அக்னஸ்நிமாலினி)

மேலும் சில காலம் சவுதி அரசாங்கத்தின் தொழில் அமைச்சராக கட 60) Du JITsibigoTT).
1969இல் சவுதியிலிருந்த மிகப் பெரிய 3 மசூதிகளில் ஒன் றான அல்-அக்ஸா திலீபத்தி சேதமடைந்தது அதை புனர் நிர்மானம் செய்யும் பணியை பின்லாடன் பெறறார் பின்லாடனின் குடும்பத்தினரின் கூற்றுப் படி சவுதியில் உள்ள முஸ்லீம்களின் புனித ஸ்தலங்களான மக்கா மற்றும் மதினா மசூதிகளையும் மிகப் பெரிய அளவில் விரிவு படுத்தியதும் அவர்கள் தான்.
ஒஸாமாவின் தந்தை மிகுந்த மதப்பற்றுடன் விளங்கியவர். கடந்த காலத்தை மறக்காதவர். தான் போர்ட்டராக இருந்தபோதும் உப யோகித்த தோல் பையைக் கடைசி வரையில் போற்றிப் பாதுகாத்தார். அவரது அரண்மனை வரவேற்பறையில் பரிசுப் பொருள் போன்ற அந் தஸ்துடன் அது வைக்கப்பட்டிருந்தது. தான் வளர்ந்தது போலவே பிள் ளைகளும் தங்களை நிரூபித்துத்தான் வளர வேண்டும் என்று உறுதி யாக இருந்தார். அதனால் மகன்மார் தாங்களாகவே சிலவேலைகளை யாவது எடுத்துச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
முகம்மது பின்லேடன் அதிகார தோரணை கொண்டவர். தனது அனைத்து குழந்தைகளும் ஒரே இடத்தில் தான் வளர்க்கப்பட வேண் டும் என்பதை வலியுறுத்தி நடைமுறைப் படுத்தினார். மதரீதியான பழக் கங்களைத் தனது அனைத்துப் பிள்ளைகளும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தினசரி வாழ்க்கையிலும் பல நெறிமுறைகளைப் புகுத்தி அதன்படிதான் அனைவரும் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் வளர்த்தார். அதே சமயம் தனது பிள் ளைகளை வெளியிடங்களுக்கு அழைத்து சென்று மகிழ்விப்பதிலும் குறியாக இருந்தார். தனது பிள்ளைகளை பெரியவர்களைப் போல நடத்தினார். அவர்களது தன்னம்பிக்கையை வெளிப்படுத்துமாறு காரி யங்ளைச் செய்யவேண்டும் என்று வற்புறுத்தி நடக்கச் செய்தார்.
இந்த வகையிலான கட்டுப்பாட்டுக்கு பின்லேடன் சிறுவயதிலி ருந்தே பழகியவர் அவரது தந்தை, பின்லேடனுக்கு 13 வயதாக இருக்
(அரசறிவியலாளன் 169 A.அக்னஸ்நிமாலினி)

Page 101
கும் போது இறந்துபோனார். தனது 17ம் வயதில் சிரியா நாட்டு பெண் ணை அவர் திருமணம் செய்து கொண்டார்.
கல்வி
பின்லேடன் ஒரு சிவில் என்ஜினியர் என்றால் சிலருக்கு வியப்பு வரலாம் அதுதான் உண்மை பெற்றோரின் பராமரிப்பில் வளர்ந்து வந்த இவர் தந்தையின் உதவியுடன் சவுதிஅரேபியாவிலே பிரபல பாடசாலை ஒன்றில் தனது ஆரம்பக்கல்வியை சிறந்த முறையில் கற்றார். இவரது வகுப்பு மாணவர்களில் இவர் சிறந்த விவேகமும் நுணுக்கமும் கொண்ட ஒருவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது. பின்னர் தனது கல்வியை தொடர்வதற்காக சவுதிஅரேபியாவில் உள்ள மன்னர் அஸிஸ் பல் கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார். அங்கே தனது பட்டப்ப டிப்பை பொறியியற் துறையில் மேற்கொண்டார்.
கல்வி வாழ்க்கையில் கற்றல் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது மட்டுமல்லாமல் தனது ஆன்மிக வாழ்விலும் கரிசனை காட்ட தொடங்கினார். அதன் விளைவாக பல இஸ்லாமியப் போராட்ட இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வழி ஏற்பட்டது. இவர் ஒரு மதப்பிரியர். புனித திருக்குரானை அப்படியே மனனம் செய்தவர் வியாபார முகாமைத்துவம் படித்தார்.
சவுதி அரேபியாவில் பொறியியற்றுறையில் தனது பட்டப்ப டிப்பை முடித்துக் கொண்ட போது CIA யின் விசேட பணிப்பின் பேரில் அமெரிக்கா சென்றார். உளவுப் பிரிவின் ஒரு அங்கத்தவராக இருந்து பல வருடங்கள் கற்கை நெறியையும் பயிற்சியையும் பெற்றார். இத னால் சிறந்த நிபுணத்துவம் மிக்க உளவுத்துறை அங்கத்தவராக மாறி னார். அப்போது நடந்த அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரில் C.I.A யின் உளவுப்பிரிவில் பணியாற்றினார். அதன்மூலம் உளவுத்துறையில் அவரது திறன்களை மேலும் வளர்த்துக் கொள்ள வழி ஏற்பட்டது.
(அரசறிவியலாளன் 170 AleiotsiborsSof

தீவிரமதம்பற்றியவேர்கள்
ஒஸாமாவின் தந்தை தான் மட்டுமல்லாமல் தனது பிள்ளைக ளும் மதக் கோட்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் ஒஸாமா தன் சிறு வயதிலே மதப்பற்றுடன் வளர்ந்தார். இவரது அப்பா வருடா வருடம் உலகெங்கிலும் இருந்து வரும் ஹஜ் யாத்திரிகர்களில் நூற்றுக்காணக் கானோருக்கு தங்க இடம் கொடுத்து, வசதிகள் செய்து தரும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதில் முஸ்லீம் மத அறிஞர்களும் இஸ்லாமிய இயக்க தலைவர்களும் இருந்தனர். இந்த வழக்கமானது முகம்மது பின்லேடன் இறந்த பிறகும் கூடத் தொடர்ந்தது இம்மாதியானவர்களு டன் ஒஸாமாவுக்கு ஆரம்பத்திலிருந்தே பரிச்சயமும் பழக்கமும் இருந்து வநதது.
இவரது உயர்நிலைப் பள்ளி மாணவப் பருவத்திலிருந்து பட்டப்படிப்பு வரையிலும், முஸ்லீம் சகோதரத்துவத்துடன் தொடர்பு வைத்திருந்தார். இது அந்தக் காலத்தில் ஏறக்குறைய எல்லா மாணவர் களும் ஏதேனும் ஒரு நேரத்தில் பங்குபெற்ற இயக்கமாக இருந்தது. அவருடைய அணுகுமுறை சண்டையிடும் போக்கில் அமைந்திருக்க வில்லை இன்னும் சொல்லப் போனால் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு 1980இல் மெக்காவின் பெரிய மசூதியில் புகுந்து கலகம் விளைவித்த போது அது பற்றித் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஒஸாமா அந்த இயக்கத்தின் கொள்கைகளும் நடவடிக்கைகளும் அவ ருக்கு பிடித்ததாக இல்லை.
அவர் கல்வி பயின்ற பல்கலைக்கழகத்தில் அவரது ஆசிரியர் கள் இரண்டு பேர் அவரை மிகவும் கவர்ந்தனர். ஒருவர் அப்துல்லா அஸ்லம். இவர் பின்னாளில் ஆப்கானிஸ்தானில் குறிப்பிடத்தகுந்த நப ராக விளங்கியவர் மற்றொருவர் முகம்மது க்யுட்டல். இவர் புகழ்பெற்ற எழுத்தாளரும் இஸ்லாமியத் தத்துவவாதியாகவும் விளங்கினார். இவர் கள் இருவரும் கல்லூரியின் கட்டாய பாடமான இஸ்லாமிய மார்க்கத் தைப் போதிக்கும் பாடத்தின் ஆசிரியர்களாக இருந்தனர்.
spepsiusortsmsir 171 A.அக்னஸ் நிமாலினி)

Page 102
சொத்துக்கள்
தனது ஆரம்ப வாழ்க்கையை கல்வியிலும் ஆன்மீகத் துறையி லும் கரிசனை காட்டிய இவர் சொத்துக்களை சேகரிப்பதிலும் முனைப் பாக நின்று செயற்பட்டு வந்தார். இவர் தனது கல்வியை கற்கும் காலத் திலேயே தந்தையின் சொத்தில் 5 மில்லியன் பெறுமதி வாய்ந்த கம்ப னியை சிறந்த முறையில் நிர்வகித்து செல்வத்தை பெருக்கும் முயற்சி யிலும் ஈடுபாடு காட்டினார். அந்தவகையில் பய்டா (FIDA) எனும் கம்பனியை நிர்மானித்ததன் மூலம் பொருளாதாரத் துறையில் ஆழ்ந்த அனுபவத்தை பெற்றார். எனவே அவருக்கு 30 கோடி டொலர் சொந்த சொத்தாகவும் 250 பில்லியன் டொலர் தனது தந்தையிடமிருந்து பெற்ற வாரிசுச் சொத்தாகவும் இருந்தமையினால் உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவராகத் திகழ்கின்றார்.
இவ்வாறு அவர் தனக்கென சொந்தமாக இருந்த சொத்துக் களை முடக்கி வைக்கவில்லை. மாறாக அவற்றை சிறந்த முறையில் முதலிட்டு பல நிதி நிறுவனங்களை உருவாக்கினார். "குயு ஐ துயு” எனும் கம்பனியையும் நிறுவினார். 1992க்குப் பின் சுவிற்சலாந்து, சுவீ டன், பிரிட்டன் போன்ற நாடுகளில் சில பொருளாதாரச் நிதிக்கம்பனி களை அமைத்தார். இக்கம்பனிகளை நிறுவுவதற்கு அவரது சொந்த கம்பனியான "பய்டா” விலிருந்து பெற்ற வருமானங்கள் துணையாக அமைந்தன இதே காலப்பகுதியில் அவரது பொருளாதார செயற்பாடு கள் ஐரோப்பா முழுவதும் பரவியிருந்தமையினால் லண்டனிலும் பல நிதி நிறுவனங்களை அமைத்தார். இந் நிறுவனங்களுக்குப் பொறுப்பாள ராக அஸ்ஜீரிய ஜமா அத் உறுப்பினராக ரவழித் ராமியை நியமித்தார். மேலும், இத்தாலியிலும் ஏற்றுமதி இறக்குமதி நிலையம் மனிதாபிமான அமைப்புக்கள் என்ற பெயரில் அவரது அலுவலகங்கள் இயங்கிவருகின் றன. குறிபாக நைரோபியில் ஓர் இரகசிய அலுவலகங்கள் இயங்கிவரு கின்றன. குறிப்பாக நைரோபியில் ஓர் இரகசிய அலுவலகம் இயங்கி வருவதாக 'வாஷிங்டன் போஸ்ட்” என்ற பத்திரிகை குறிப்பிட்டிருந்தது அத்தோடு அமெரிக்காவில் உள்ள அவரது சில நிறுவனங்கள் அரசு டைமை யாக்கப்பட்டுள்ளன.
(அரசறிவியலாளன் 172 A.அக்னஸ்நிமாலினி)

இவ்வாறு பெரும் சொத்துக்களுக்கு உடையமையாளராக இருந்த ஒஸாமா பின்லேடன் நிதி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் பெற்ற வருமானங்களை தனது உறவினர்களுக்கும் இஸ்லாமி யப் போராட்ட இயக்கங்களுக்கும் கொடுத்து உதவி வருகின்றமை இவர் ஒரு பெரும் செல்வந்தர் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அண் மைக்கால C.I.A இன் அறிக்கைப்படி ஒஸாமா பின்லேடன் தற்போது செய்மதிகள் பொருத்தப்பட்ட மின்னியல் உபகரணங்களால் அமைக்கப் பட்ட ஓர் அறையில் வாழ்கின்றார். என்றும் இதன் மூலம் உலகில் நடக் கின்ற அனைத்து விடயங்களையும் அறிந்த வண்ணம் தலிபான் இயக்க உறுப்பினர்களான 2700 பேர் மெய்பாதுகாவலரின் பாதுகாப்பில் வாழ்ந்து வருகின்றார். என்று கூறப்படுகின்றது.
எனவே சிறந்த குடும்பப் பின்னணியில் வளர்ந்து கல்வி கற்ற இவர் பெரும் சொத்துடைமையாளராகவும் போராட்ட தலைவராகவும் இருந்து வருகின்றார். இது அமெரிக்காவுக்கு பெரியதோர் தலையிடியாக இன்று மாறியிருக்கிறது.
1970இன் நடுப்பகுதியில் உலகெங்கும் பரவலாக இஸ்லாமியர் களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் தான் 13வது வயதிலேயே பின்லேடனை தீவிரவாதியாக மாற்றியது அமெரிக்கா உள வுத்துறையின் ஒரு முழுமையான வீரராகவும், நவீன ஆயுதங்களைச் சுலபமாக கையாளத் தெரிந்தவராகவும் போராளியாகவும் உருவாக்கி யதே C.I.A தான்
1979இல் ஆப்கானிஸ்தானுக்கு போர் அச்சுறுத்தல் ஏற்பட்ட போது தன்னால் பயிற்றுவிக்கப்பட்ட சிறுபடையுடன் ஆப்கானுக்கு ஆதர வாக 22ஆவது வயதில் முதன்முதலாக போரில் குதித்தவர் பின்லேடன். ரஷ்யா அதிர்ந்து போகுமாறு போரில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற. வெற்றிக்களிப்பில் ஆப்கானிஸ்தானைவிட அதிகம் சந்தோஷப்பட்டவர். ஒசாமா ஆப்கானிஸ்தான் படைகளுக்கு பக்கபலமாக விளங்கி போரில் சாகசங்கள் நிகழ்த்திய பின்லேடனை அமெரிக்காவின் C.I.A அன்று அரவணைத்துக் கொண்டது ஏராளமான ஆயுதங்களையும் தகவல்
(அரசறிவியலாளன் 173 A.அக்னஸ் நிமாலினி)

Page 103
தொடர்பு சாதனங்களையும் அவருக்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல் முறையான ஆயுதப் பயிற்சிகளையும் வழங்கியது. அத்துடன் வெள்ளை மாளிகையின் விசேட விருந்தாளியாகவும் அமெரிக்காவின் அப்போ தைய ஜனாதிபதி றொனால்ட் றீகனின் மிகவும் நெருங்கிய நண்பராக வும் பின்லேடன் இருந்திருக்கிறார்.
ஆப்கானில் களம் இறங்கிய பின்லேடன் அமெரிக்கா, எகிப்து, சவுதி அரேபியா, பாகிஸ்தான் உட்பட 50க்கு மேற்பட்ட நாடுகளிலி ருந்து திரட்டப்பட்ட 30 ஆயிரம் பேருடன் தன் பணியைத் துவக்கினார். பாகிஸ்தானிலுள்ள பெஷாவாரில்தான் இதன் தலைமையிடம் அமைந் தது. அப்துல் அஸ்முடன் இணைந்து இவர் உருவாக்கிய இயக்கம் "மெக்தாப்-அல்-கிடாமட்" (M.A.K) இதனை உருவாக்குவதில் அமெ ரிக்கா பெரும்பங்கு பணம் எப்போதும் பின்லேடனுக்கு பெரும் பிரச் சனையாக இருந்ததிலை உலகெங்கு முள்ள இஸ்லாமிய வர்த்தகர் களும் பெருந்தனக் காரர்களும் அள்ளிக் கொடுத்தனர். அவரிடமும் பெரும் பணம் உண்டு. ஆண்டுக்கு அறுபதாயிரம் டன் நவீன ஆயுதங் களையும் வெடிமருந்து களையும் C.I.Aவழங்கியது.
இதற்கிடையில் கருத்து மாறுபாடுகளால் மெக்தாப்-அல்-கிடா LDL (M.A.K)sGOLD'60)L 6)" (666)85 "அல்கெய்தா" எனும் அமைப்பை உருவாக்கினார். ‘காணாமல் போனவர்களை கண்டு பிடிககும் இயக்கம் என்பதே அல்கெய்தாவின் பொருள் இன்று உலகம் முழுவதும் 40 நாடுகளில் 1 லட்சம் பயிற்சி பெற்ற அல்கெய்தா அமைப்பினர் - பின் லேடன்கள் உள்ளனர்.
சகல இஸ்லாமிய நாடுகளுடனும் பின்லேடனுக்கும் நல்ல உறவுண்டு கிறிஸ்தவர்களின் புனித பூமியான வத்திக்கான் சிறு நகர மாக இருந்தாலும் எப்படி தனிநாடு அந்தஸ்துடன் இருக்கிறதோ அதே மாதிரி இஸ்லாமியர்களின் புனித தலங்களான மக்கா, மதீனாவை சவுதி அரேபியாவிடமிருந்து பிரித்து சுதந்திர புனித தலங்களாக்க வேண்டும் என்பதே பின்லேடனின் லட்சியமாகும்.
(அரசறிவியலாளன் 174 Asiororisdressif

2003ம் ஆண்டு தற்போது தாக்கப்பட்ட உலக வர்த்தக மைய குண்டுவெடிப்பு 1995 ரியாத் நகரில் தாக்குதல், 1996 தெஹற்ரானில் தாக்குதல் என பின்லேடனின் தாக்குதல் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. பின்லேடனின் தாக்குதல்களிலேயே அதி பயங்கரமானதும் அதிக உயிர்களை பலிகொண்டதுமான தாக்குதல் எது என சொல்ல தேவையில்லை எந்த ஹொலிவூட் இயக்குநரும் கற்பனை கூட செய்து பார்க்கமுடியாத வகையில் கட்டடங்களை தகர்க்கும் பயங்கர ஆயுதங் களாக விமானங்களை பயன்படுத்தியிருக்கின்றார். அமெரிக்க மக்கள் செப்ரெம்பர் 11ஐ போல கொடிய அழிவை சந்தித்ததே இல்லை இதனால்த்தான் இச்சம்பவத்தை அமெரிக்கா மீது தொடுக்கப் பட்டிருக் கும் யுத்தம் என அதிபர் புஷ் குறிப்பிட்டார்.
ஒஸாமா பின்லேடனின் செயற்பாடுகளெல்லாம் அவர் மிகவும் தெளிவுபெற்ற உயர்நிலையிலுள்ள அறிவாளி என்பதைக் காட்டுகிறது. மோசமான அல்லது கேவலமான முறையில் கொலைகள் செய்பவரின் செயற்பாடுகளல்ல அவனில் மோசமான கேவலமான எதையும் நம்மால் காணமுடியாது. மக்கள் சமுதாயத்தில் மதிக்கப்படும் தலைவர்களின் செயற்பாடுகள் போல்தான் இவை இருக்கின்றன. அவரின் புத்திக் கூர்மை உணர்ச்சித் திறன் ஆகியவை புலப்படாத வகையில் அமைதி பண்பு, அதிகாரம் செலுத்தாத முறை ஆகியவைகளைக் கொண் டுள்ளார். இருந்தபோதும் உணர்வூட்டும் வளங்கள் தான் ஏற்றுக் கொண் டதிலிருந்து நழுவாத் தன்மை ஆகியவை அவரை ஒத்த மனிதர்களிட மிருந்து அவரை பிரித்துக் காட்டுகின்றது. மற்றவர்களால் செய்ய முடியாத அளவிற்கு தான் வகுத்துக் கொண்ட அபிலாசைகளை எய்து வதற்கான உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்துவார்.
இடதுகையை உயர்த்திய படிதான் ஒஸாமா பின்டேலன் காணப்படுகின்றார். அவர் றைபிளால் சுடும் பொழுது எடுக்கப்பட்ட படம் அவர் இடதுகைப் பழக்கமுள்ளவர் என்பதைக் காட்டுகின்றது.
(அரசறிவியலாளன் 175 A.அக்னஸ்நிமாலினி)

Page 104
References
1) David Johnson, "Who is Osama Binladen? Wealthy saudi exile a
Suspected terroristMastermind. 1990.
2) டி.ஜ.ரவீந்திரன், "ஒஸாமா பின்டேலன்",
பரிவர்த்தனா பதிப்பகம், 2002.
3) எம்.எஸ்.முபாரக், இன்றைய உலகில் ஒஸாமா பின்லேடன்,
தானம் வெளியீட்டகம், 2001.
4) சு.பொ.அகத்தியலிங்கம், ஆப்கான் வரலாறும் அமெரிக்க வல்லு
றும், அலைகள் வெளியீடு, சென்னை. 2003.
5) Hunting Binladen, http://www.pbs.orglwgbh
(அரசறிவியலாளன் 176 Asidororisdressin

மாக்கியவெல்லியின் இராஜதந்திர மணிமொழிகள்
The Epitaph of Machiavelli
- B.சுதந்திரா - 99/A/341
அரசியல் உலகிலே ஒரு பரபரப்பை உண்டு பண்ணிய மாக் கியவெல்லி இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். 1469 மே மாதம் 3ம் திகதி பிளாரன்ஸ் நகரிலே பிறந்தார். இவரது முழுப்பெயர் நிக்கோலோ மாக்கிய வெல்லி தந்தையின் பெயர் பெர்னார்ண்டோ மாக்கிய வெல்லி மேல் நாட்டில் 15ம் நூற்றாண்டிலேயே நிலையான அரசு எப்படி இருக்க வேண்டுமென்ற இராஜதந்திரத்தை முதன்முதலாக சிந்தித்தவர் மாக்கிய வெல்லியே ஆவார்.
மாக்கியவெல்லி என்ற பெயரைக் கேட்டவுடன் அரசியல் வாதி களும் முடி மன்னர்களும் பேய் பிசாசுகளைக் கண்டவர்களைப் போல் அரண்டு போனதுண்டு. மதகுருமார்கள் மாக்கியவெல்லியை பிசாசு என் றும் பிசாசினுடைய விரல்களைக் கொண்டே "இளவரசன்” என்ற நூலை எழுதிக்கொண்டதாகவும் வெறுப்புக் கலந்த வேடிக்கையுடன் கூறுகின் றனர.
இதற்குக் காரணம் மாக்கியவெல்லி அரசர்கள் கொடுங்கோலர் களாக இருக்க வேண்டுமென்று கூறுகின்றார். அரசர்கள் கொலை கொள்ளைகளை அஞ்சாமல் செய்யவேண்டுமென்று கூறுகின்றார். அதா வது ஒரு அரசுநிலைப்பதற்காக ஒரு சிலரைக் கொல்ல வேண்டிய தேவையிருந்தால் கொல்வது தவறல்ல என்பதை துணிச்சலாக கூறி யதே சிலருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகின்றது. அத்துடன் மாக்கி
(அரசறிவியலாளன் 177 Bசுதந்திரா)

Page 105
யவெல்லியினுடைய கருத்துக்களை நடைமுறையிலே பிரயோகித்தவர் களாக சர்வாதிகாரி ஹிட்லரும் முசோலினியும் விளங்குகின்றனர்.
மாக்கியவெல்லியின் சிந்தனையினை அடிப்படையாகக் கொண்டு உலகத்தில் எத்தனையோ அரசாங்கங்கள் எழுந்தன. அவற்றிலே நல்ல னவும் தியனவும் உண்டு. ஆனால் எந்த அரசாங்கமும் நீடித்து நிலைத்து நிற்கவில்லை இது பல சிறந்த சிந்தனைகளை உருவாக்கியதெனலாம். அதாவது அரசாங்கங்கள் அடிக்கடி மாறுவதால் அந்தந்த மக்கள் சமு தாயங்கள் அல்லலுற்று தட் டுத்தடுமாறி ஒரு நிலையான வாழ்வைப் பெறமுடியாமல் இருந்தனர் இந்த அவல நிலை அடிக்கடி ஏற்படாமல் இருக்க நிலையான அரசாங்கம் தேவை அவை குடியரசாயினும் முடிய ரசாயினும் நிலைத்து நிற்கக்கூடிய வழிவகைகள் யாவை என்ற இன் னோரன்ன இராஜதந்திர மணி மொழிகளை கூறியுள்ளார்.
மாக்கியவெல்லியினுடைய இராஜதந்திரங்களை "இளவரசன்" என்ற நூலினூடாக அறிய முடியும். இந்நூலில் அறிவு பூர்வமான கரு த்துக்களை கூறுவதை விட, நடைமுறை அரசியல், சமூக பிரச்சினை களை அராய்வதும் அவற்றுக்கான பரிகாரங்களை முன்வைப்பதுமே இவரது குறிக்கோளாக அமைகின்றன. இந்த வகையிலே மாக்கிய வெல்லியின் கருத்துக்கள் பெருமளவிற்கு சூழ்ச்சிகளையும், தந்திரங் களையும், குறுக்குவழியையுமே கொண்டுள்ளன மாக்கிய வெல்லியின் இராஜதந்திர மணிமொழிகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.
01) அரசியல்: தன் பலத்தை நம்பி வாழாத ஆட்சியாளன் என்றும் பாதுகாப்புடன் இருக்க முடியாது
02) இலட்சியம்: இலட்சிய வேகம் என்பது நாம் எவ்வளவு உய ரத்தை எட்டிப் பிடித்தாலும் திருப்தி ஏற்படாதளவு மனித இருதயத்தில் எழும் அதிவலிமையான ஒரு வேட்கையாகும்.
03) ஆலோசனை: ஆலோசனையாளர்கள் எத்தனை யோசனை சொன் னாலும் ஆட்சியாளனுக்கு புத்தியில்லா விட்டால்
(அரசறிவியலாளன் 178 Bசுதந்திரா)

04) உதவி:
05) s 605taOLD:
06) கஷடம்:
07) காலப்போக்கு:
08) அறிவு:
09) அதிகாரம்:
10) அன்பு:
அத்தனையும் பாழ்.
உனக்குநீயே உதவி செய்துகொள் ஒவ்வொருவரும் உனக்கு உதவி செய்வார்கள்
ஒவ்வொருவரும் உண்மையே சொல்வார்களானால் அந்த உண்மைக்குரிய மதிப்பே போய்விடும்.
ஒரு கஷ்டத்தைச் சமாளிக்க இன்னொரு கஷ்டத் தில் சிக்கிக் கொள்ள நேரிடுவது இயற்கை தான் ஆனால் இரண்டு கஷ்டங்களில் எதில் துயரம்குறை வோ அதை நல்ல வழியாகக் கைக்கொள்ள வேண்
டும்.
காலத்திற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தபடி தன் திட் டங்களையும் செயல் முறைகளையும் வகுத்துக் கொள்கிறவனிடம் அதிஷ்டம் என்றும் மாறாமல் நிலைத்து நிற்கும்.
உலகத்தில் மூன்று விதமான மூளைகள் இருக்கின் றன ஒன்று பிறர் உதவியில்லாமல் தானாகவே எதையும் அறியக்கூடியது. இது நல்ல மூளை இரண் டாவது மற்றவர்கள் எடுத்துக் சொல்லிய பிறகு அறியக்கூடியது இதுவும் நல்லமூளைதான் ஆனால் மூன்றாவது தானாகவும் அறிந்து கொள்வதில்லை பிறர் விளக்கியும் அறிந்து கொள்வதில்லை இது பயனற்றது.
அதிகாரத்தை அடையவர்கள் அதை மேன்மேலும்
அதிகரித்துக் கொள்ளவே ஆசைப்படுகிறார்கள் அத னால் அவர்கள் ஆபத்தானவர்கள்.
அன்பு மனிதர்களின் சுயநலத்தின் அடிப்படையில் எழுகிறது தாங்கள் ஏதாவது நன்மை பெறுகின்ற
(அரசறிவியலாளன்
179 8.சுதந்திரா)

Page 106
11) கோட்டை:
12) செயல்:
13) நடுநிலைமை:
14) நன்மை தீமை:
15) பேராசை:
16) மனித இயற்கை:
17) வெற்றி தோல்வி:
வரையில் அன்பு செலுத்துவார்கள் அது நின்று போனதும் அன்பும் நின்று போகும். குடிமக்கள் அன்பின் மீது எழுப்பப்படுகின்ற கோட் டை தான் உண்மையில் சிறந்த கோட்டை.
காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நடக்கிறவர் கள் தான் செயல்களில் வெற்றி காண்பார்கள்.
தன்னைக் காட்டிலும் வலிமை மிக்கவன் பக்கம் சேர்வதைவிட தன் உதவியை விரும்பி பெறக் கூடியவன் பக்கம் சேர்வதே நன்மை பயக்கும்.
எந்த மனிதனும் எப்பொழுதும் நல்லவனாகவோ அல்லது எப்பொழுதும் தீயவனாகவோ இருக்க முடியாது அவன் தன் தேவைக்கும் சந்தர்ப் பத் திற்கும் ஏற்றபடி நல்லவனாகவோ தீயவனா கவோ மாறிக் கொண்டால் தான் தன் அதிகா ரத்தை நிலைநிறுத்த முடியும்.
மனிதர்கள் தங்கள் தேவைகளுக்காக போராடு கின்ற நிலைமை போன் பிறகு தங்கள் பேராசைக் காக போராடத்தொடங்குகிறார்கள். அந்தப் பேரா சை மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கின் றது. அவர்கள் எவ்வளவு உயரத்திற்கு போன பிறகும் கூட அது அவர்கள் இதயத்தை விட்டுப் போவதில்லை
அடி முட்டாள்களாகவோ அதி புத்திசாலிகளா கவோ பெரும் கொடுமைக்காரர்களாகவோ மிக வும் நல்லவர்களாகவோ யாரும் இல்லை”
ஒருவன் மாபெரும் வெற்றியுடன் பத்துக் காரியங் கைள் கூடச் செய்து முடித்து விடலாம் ஆனால்
அரசறிவியலாளன்
180 Bசுதந்திரா

முக்கியமான தோல்வியே முன்னனைத்தையும் அழித்துவிடப் போதுமானது.
18) ஆட்சி: சட்டத்தை கொண்டு ஆள்வது மனிதத்தன்மை
வாளின் கூர்மையால் ஆள்வது மிருகத்தன்மை
19) புத்திசாலித்தனம்: வெறுப்பையும் பழிப்பையும் உண்டாக்கக் கூடிய
கொள்ளைக்காரன் என்ற பெயரை அடைவதை விட வெறுப்பில்லாத பழிப்பை மட்டும் பெறக்கூ டிய கருமி என்ற பெயரை பெறுவது வரவேற்கத் தக்கதாகும். அதுவே புத்திசாலித் தனம்
20) பாதுகாப்பு: ஓர் அரசன் சதி, சூழ்ச்சி ஆகியவற்றை அறிந்து
கொள்ளும் குள்ளநரியாகவும் ஓநாய்களை அச் சுறுத்தும் சிங்கமாகவும் இருக்க வேண்டும் மிரு கங்களைப்போல் நடந்து கொள்ள விரும்புகின்ற அரசன் குள்ள நரியையும் சிங்கத்தையும் பின் பற்ற வேண்டும். ஏனெனில் சிங்கத்திற்கு வலை களிலிருந்து தப்பிக்கொள்ள தெரியாது. குள்ள நரிக்கு ஓநாய்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளத் தெரியாது.
References
1)
2)
3)
4)
5)
திருவாணன், இராஜதந்திரக்கலை, வாணதி பதிப்பகம், சென்னை, 1978.
நாரா நாச்சியப்பன், சிந்தனையாளர் வரிசை, பிரேமா பிரசுரம், சென்னை, 1961. ஆர்.ஏஜ்.எஸ். குறொஸ்மன், அரசாங்கமும் ஆளப்படுவோரும், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1976.
அம்பலவாணர் சிவராஜா, அரசியல் மூலதத்துவங்கள், குமரன்
புத்தக நிலையம், கொழும்பு, 1987 புதுமைப்பித்தன் சொ.விருத்தாச்சலம், போஸிஸ்ட் ஜடாமுனி, ஐந்திணைப்பதிப்பகம், சென்னை, 1993.
usorated 181 Bசுதந்திரா)

Page 107
தேர்ந்தெருக்கப்பட்ட சில விருதலைப் போராட்டங்களும், அவை எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினைகளும்
அரசறிவியல் சிறப்புக்கலை 1999/2000ம் ஆண்டு மாணவர்களால் 2003ம்
ஆண்டு சர்வதேச அரசியல் என்னும் அலகின் ஒரு பகுதியை பூர்த்தி செய்யும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் சாராம்சத்தை இங்கு தொகுத்து நோக்கப்பட்டுள்ளது.
ΩΦφούι) - G.வித்தியா - 2000/A/354
காஷ்மீர்
இந்தியா பாகிஸ்தானின் சுதந்திரத்தைத் தொடர்ந்து உரு வான தத்துப்பிள்ளையே காஷ்மீர் பிராந்தியமாகும். இவ்விரு நாடுக ளின் எல்லைப் பிராந்தியத்தில் காணப்படுவதனால் முரண்பாடுகொண்ட பிரதேசமாக காணப்படுகிறது ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஆட்சிக் குக் கீழும் அவடிாத் - காஷ்மீர் பாகிஸ்தான் ஆட்சியின் கீழும் உள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மிரின் நிலப்பகுதி தங்களுக்கே உரியது என்பதை நிலை நிறுத்துகின்றார்களே தவிர தீர்க்கமாக முடி வை இரு பகுதியினராலும் எடுக்க முடியவில்லை.
ஐ.நா சபைக்கு சவாலாக விளங்கும் விவகாரத்தில் காஷ்மீர் பிரச்சனையும் ஒன்றாகும். ஆனால் பல்வேறு காலங்களில் பல உடன் படிக்கைகளும் ஒப்பந்தங்களும் மேற்கொண்ட போதிலும் அவற்றால் எந்தப்பயனையும் எட்ட முடியவில்லை. காஷ்மீர் மக்களின் விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்துவதற்கு 50 ஆண்டுகளாகச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. காஷ்மீர் மக்களின் விருப்பத்தை தெரியப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்படாது இந்தியா காலம் கடத்தி வருகின்றது இன்று காஷ்மீர் பிரச்சனை பிராந்திய பிரச்சனையில் இருந்து வளர்ச்சி பெற்று இந்து இஸ்லாம் பிரச்சனையாக உருமாற்றம் பெற்றுள்ளது. (அரசறிவியலாளன் 182 Geissur

அமெரிக்காவின் நிலைப்பாட்டின் படி காஷ்மீர் முரண்பாடு தீர்க் கப்படக்கூடாது என்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளது. இது இந்தி யாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் அதனைக் கண்காணிக்கவும் பொருத்தமான கொள்கைகளை விருப்பத்திற்கும் காஸ்மீர் தக்க சான் றாக அமைந்துள்ளது. காஷ்மீர் மக்களைப் பொறுத்தவரையில் இந்தியா வுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணைவதை விரும்பாமல் தனி இராட்சியமாக வாழவே விரும்புகின்றனர். இதனை அடிப் படையாகக் கொண்டு பல விடுதலைப் போராட்ட அமைப்புக்கள் செயற்பட்டு வரு கின்றன. ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணி (U.KLF) தீவிரமாகப் போராடி காஷ்மீர் மக்களை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வருவதற்குப் பாடுபட்டு வருகின்றது.
இவ்வாறாக காஷ்மீர் பிரச்சினை தீர்வு இல்லாமல் இன்று தொடர்ந்தும் முரண்பாடுகளையும் அழிவுகளையும் சந்தித்து வருவது டன் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான யுத்தகளமாகவும் இருந்து வருகின்றது.
இஸ்ரேல் - பலஸ்தீனம்
மத்திய கிழக்கில் பிரச்சினைக்குரிய தளமாகக் காணப்படுவது இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகும். இது யூதருக்கும் அராபியருக்கும் இடையிலான முரண்பாடாக ஆரம்பித்து இன்று சரவதேச ரீதியில் நோக்கப்படும் அளவுக்கு வளர்ச்சி அடைந்து விட்ட இவ் முரண்பாடு 50 வருடங்களாகியும் ஒரு முழுமையான தீர்வை எட்டமுடியாதுள்ளது. ஜேசுவா தலைமையில் பலஸ்தீனத்தின் கிழக்குப்பதியைக் கைப்பற்றி பல பாலஸ்தீன நகரங்களை அழித்தனர். இதுவே இஸ்ரேல் - பலஸ்தீன பிளவின் முதன்நிலையாகும் இதனைத் தொடர்ந்து பல யுத்தங்கள் இடம்பெற்றதுடன் சில யூத குடியிருப்புக்கள் ஐரோப்பாவிலும் அமெ ரிக்காவிலும் சென்று குடியேறினர்.
ஐரோப்பாவில் குடியேறிய யூதர்கள் பொருளாதார பலமுள்ள வர்களாகவும், கல்வி அறிவுடையவர்களாகவும் மாறினர். இது ஐரோப் பியரின் வருமானத்திலும் பொருளாதாரத்திலும் பெரும் நெருக்கடியை
(அரசறிவியலாளன் 183 G.வித்தியா)

Page 108
உருவாக்கியது. இதுவே 18ம், 19ம் நூற்றாண்டில் யூதர்களுக்கு எதிரான போக்கை ஐரோப்பியர் மத்தியில் ஏற்படுத்தியது இதில் 20ம் நூற்றாண் டில் ஜேர்மனி தீவிரமாக ஈடுபட்டது.
யூதர்கள் தமது தாயக கோட்பாட்டினை வலியுறுத்தி வந்தமை யால் இஸ்ரேலில் மீண்டும் குடியேறுவது தொடர்பாக கோரிக்கைகளை முன்வைத்தனர். இதன் பிரகாரம் 1947ல் யூதர்களது குடியேற்றம் பாலஸ் தீனத்தில் ஏற்பட்டது. அதுமட்டுமன்றி ஐ.நா சபையின் கருத்துக்களை எல்லாம் எதிர்த்து இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும் அதன் விஸ்தரிப்பும், பாலஸ்தீனத்தின் நிலையும் மத்திய கிழக்கின் நிரந்தர பிரச்சினை யாகிவிட்டது.
இஸ்ரேல் - பாலஸ்தீன முரண்பாட்டினால் பல விடுதலை அமைப்புக்கள் பாலஸ்தீனத்தில் உருவாகியது. இவற்றில் பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) கமாஸ், இஸ்லாமிக் ஜிகாந், கிஸ்புல்லா போன்றவற்றைக் குறிப்பிடலாம். எவ்வாறான போராட்டங்கள் மேற்கொள் ளப்பட்டாலும் இஸ்ரேலின் கண்மூடித்தனமான போக்குக்கும், அதன் சர் வாதிகாரத்திற்கும் அமெரிக்கா போன்ற மேற்குநாடுகள் ஆதரவு வழங் கிவருவதைக் காணலாம்.
முரண்பாட்டை தீர்ப்பதற்காக பல்வேறு உடன்படிக்கைகள் காலத்திற்கு காலம் செய்யப்பட்டன அவற்றில் காம் டேவிட், காசா - ஜெரிக்கோ, வைநதி உடன்படிக்கை முக்கியமானவையாகும். காசா - ஜெரிக்கோ உடன்படிக்கையினாலும், வைநதி உடன்படிக்கையினாலும் அதிக நன்மைகளை அமெரிக்காவும் இஸ்ரேலியரும் பெற்றுக் கொண்ட
னர.
இவ்வாறு உடன்படிக்கைகள் யாவும் தோற்றுப்போக "ROAD MAP” என்ற ஒரு தீர்வு யோசனை முன்வைக்கப்பட்டது இது பல நல்ல விடயங்களைக் கொண்டுள்ள போதிலும் பல விமர்சனத்தையும் பெறத் தவறவில்லை ஆனால் மத்திய கிழக்கின் அமைதியையும் சமாதா னத்தையும் அமெரிக்காவின் இராணுவப்பலமே தீர்மானிக்கும் என்பதில் ஐயமில்லை.
spepsiusorator 184 Gவித்தியா)

செச்சினியா
18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தே செச்சினியாவை வலுக்கட்டாயமாக ரஷ்யா தனது பிராந்தியத்தினுள் இணைக்கும் முயற் சியில் தீவிரமாக ஈடுபட்டது. ஆனால் அன்றைய போராட்டம் முடிவுக்கு வராமல் 3 நூற்றாண்டுகளாக தொடர்ந்த வண்ணமே உள்ளது. நீண்ட காலமாக யுத்த களமாக காணப்பட்ட செச்சினியா 1991ம் ஆண்டு "செச்சினிய சுதந்திரப் போராட்டம்” ஒன்றை பிரகடனம் செய்தது. ரஷ்யா வின் உடைவுக்குப் பின்னர் ஏனைய குடியரசுகளைப் போன்று தாமும் பிரிந்து செல்ல முற்பட்டதால் ரஷ்யாவினுடைய சர்வாதிகாரப் போக்கி னால் சுதந்திரத்தை இழந்து போரடிக்கொண்டு இருக்கின்றது.
ஏறத்தாழ 19ஆயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவை கொண்ட செச்சினியாவில் 12 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். இங்கு பெரும்பான் மையாக முஸ்லீம்கள் வாழுகின்ற போதிலும் ரார்ஸ் (TATARS), செசின்ஸ் (Chechens) ஆகிய இரு உள்ளக முரண்பாட்டைக் கொண்ட முஸ்லீம்கள் வாழ்கின்றனர். ரஷ்யாவிற்கு செச்சினியா மிகவும் முக்கிய மான பிரதேசமாக காணப்படுவதற்கு பல காரணங்கள் அடிப்படையாக அமைகின்றன. இயற்கையிலேயே எண்ணெய் வளம் நிரம்பிய பிரதேச மாக காணப்படுவதுடன் மத்திய ஆசியா பகுதியையும் கஸ்பியன் கடல் பகுதியில் உள்ள எண்ணெய் வள பிரதேசங்களையும் இணைக்கும் வீதிகளும் பெரும் குழாய்களும் இப் பகுதியின் ஊடாகவே செல்கின் றன. இதுவே அதன் முக்கியத்துவத்தை மேம்படுத்துகின்றது.
ரஷ்யாவின் எண்ணெய் தேவையின் கூடிய பங்கை செச்சினி யாவே நிரப்பி வருகின்றது அது மட்டுமன்றி வளமான பிரதேசங்களாக வும் பொருளாதார ரீதியில் உயர்ந்த அந்தஸ்தை பெற்ற இடமாகவும் திகழ்கின்றது.
அரசியல் ரீதியில் நோக்கும் பொழுது ரஷ்யாவில் இருந்து செச்சினியா பிரிக்கப்பட்டால் பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி அரசி யல், வெளிவிவகாரம், இராணுவ வளர்ச்சியிலும், கூட பாரிய பின்ன டைவை ஏற்படுத்தும் 1992ம் ஆண்டில் ரஷ்சிய - யெல்சின் அரசால்
(அரசறிவியலாளன் 185 Gவித்தியா)

Page 109
பிரகடனப்பத் தப்பட்ட தற்போதய ரஷ்சிய குடியரசு உடன்படிக் கையை செச்சினியா எதிர்த்தமையால் பிரகடனம் நிறைவேற்ற முடியவில்லை. 1994ம் 1996ம் ஆண்டுகளில் குறோஸ்னியை நோக்கி பெரும் இராணுவ நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டது. இதனால் பெருமளவான மக்கள் அழிக்கப்பட்டதுடன் சொத்துக்களும் நாசமாக்கப்பட்டன.
"ஆஸ்லான் மாஷகமெள்” 2000 ஏப்ரல் 20இல் ஓர் யுத்த நிறுத்தத்தை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 2003இல் மொஸ்கோ தியேட்டர் நாடகமும் நடந்தேறியது. இன்று புதிய உலக ஒழுங்கின் கீழ் எழுந்துள்ள பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் காரணமாகவும் விடுதலைப் போராட்டத்தில் எழுந்துள்ள பலவீன நிலையாலும் எதிர் காலத்தில் ரஷ்யாவின் திட்டத்திற்கே இவை சாதகமாக அமையக் கூடும் என்ற ஐயப்பாடு காணப்படுகிறது.
அயர்லாந்துப்பிரச்சினை
பிரித்தானியத் தீவுகளுக்கு மேற்கே அத்திலாந்திக் கடலில் உள்ள பெருந்தீவு அயர்லாந்து ஆகும். இன்றைக்கு 800 வருடமாக பிரச் சினையைக் கொண்ட பிரதேசமாக வட அயர்லாந்து காணப்படுகின்றது. புரட்டஸ்த்தாந்து மதத்திற்கும் கத்தோலிக்க மதத்திற்கும் இடையிலான முறுகல் நிலையே பிரச்சினைக்குரிய கருவாகும். பிரித்தானியாவில் இருந்து அயர்லாந்து பிரிந்து சென்றதன் பின்னர் பிரித்தானியாவின் பிரித்தாளும் கொள்கையினால் மத கலவரங்களை அயர்லாந்தில் ஊக் குவித்தது ஏனைய ஐரோப்பிய நாடுகளைவிட ஐரிஷ் குடியரசுக்கும் மதத்திற்கும் இடையிலான நெருக்கம் வலுவாகக் காணப்படுகின்றது.
இங்கிலாந்தின் ஆயுதப்படைகளுக்கும் அயர்லாந்தின் தொண் டர்படைகளுக்கும் இடையே பல இடங்களில் ஆயுத மோதல்கள் வலுப் பெற்றன "ஐரிஸ் குடியரசு இராணுவம்” என்ற பெயரில் ஐரிசில் தொண் டர்படை ஒன்று (IRA) உருவானது. இதனை ஒடுக்குவதற்கு பிரித்தானிய அரசாங்கம் பயங்கரவாதக் கொள்கையைக் கடைப்பிடித்ததுடன் IRA க்குள் உள்ளேயும் முரண்பாடுகளை வளர்த்தது.
(அரசறிவியலாளன் 186 Gவித்தியா)

இரண்டு மதங்களுக்குமான தீர்வாக "வெள்ளிக்கிழமை ஒப் பந்தம்” சிறந்த உபாயமாகச் செய்யப்பட்டது. ஆனால் அது தீர்வுகளுக் குப் பதிலாக முரண்பாட்டையே வளர்த்தது இது பிரித்தானியாவின் கபடத்தனம் மிக மென்மையாக மூடிமறைக்கப்பட்டது
வட அயர்லாந்தில் 1968ற்குப் பின்னர் வன்முறைகள் மலிந்து விட்ட போதும் அதனை ஒடுக்குவதற்கு பிரித்தானியா மிகக் கொடுமை யான செயல்களை அங்கு அரங்கேற்றி வந்துள்ளது. வட அயர்லாந்தின் முக்கிய இடங்களில் இருந்து கத்தோலிக்கரை அகற்றுவதை குறிக் கோளாகக் கொண்டு செயற்படுகிறது. இதற்கு எதிராக "ULSTER VOLUNTEERFORCE”எனும்அமைப்புச் செயற்பட்டு வருகின்றது.
இவ்வாறு 800 வருட வரலாற்றைக் கொண்ட அயர்லாந்து பிரச்
சினை சுகந்திரம் பெறமுன்னர் பிரித்தானியாவுக்கும் அயர்லாந்துக்கும் இடையில் காணப்பட்டது. ஆனால் சுதந்திரத்தின் பின்னர் வட அயர் லாந்துப் பிரச்சினையாக மாற்றமடைந்து இன்று அயர்லாந்துப் பிரச் சினையின்மையும் வடஅயர்லாந்து என்ற அளவுக்கு விஸ்தீரணம் பெற் gണ്ണg).
(Ցülւնւլ:-
மேற்குறிப்பிட்ட விடையங்களில் மேலதிக தகவல்களை பெறவிரும் பும் மாணவர்கள் எமது துறையுடன் (Department) தொடர்பு கொள்ள
6|LD
(அரசறிவியலாளன் 187 Gவித்தியா)

Page 110
இறைமையும் பன்மைவாதமும்
Sovereignty and Pluralism
- பேராசிரியர், அ.வே.மணிவாசகர் -
1.ஒருமைவாதமும்பன்மைவாதமும்
மரபுரீதியான இறைமைக் கோட்பாட்டை ஒருமைவாதம் (Monism) என்றும், நவீன இறைமைக் கோட்பாட்டைப் பன்மைவாதம் (Pluralism) என்றும் அழைப்பர். ஒருமைவாதமானது, அரசினையே இறைமையுள்ள ஒரேயொரு அமைப்பாகவும், அதன் இறைமையை எல்லையற்றதாகவும், பிரிக்கமுடியாததாகவும் காண்கிறது. பன்மைவாதமானது, அரசுக்கு முதன்மை வழங்க மறுத்து, அதனைச் சமூகத்தின் ஏனைய சங்கங்கள் போலவே கருதி, அதன் இறைமையை மட்டுப்படுத்தவும், பல்வேறு சங்கங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முற்படுகிறது.
பதினாறாம் நூற்றாண்டில் ஜீன் வோர்டின் என்ற பிரான்சிய அறிஞரின் கருத்துக்களில் தொனித்த ஒருமைவாதம், பின்னர் பல அறி ஞர்களால் முன்னெடுக்கப்பட்டு,இறுதியாகப் பத்தொன்பதாம் நூற் றாண்டில் இங்கிலாந்தின் சட்ட அறிஞராகிய ஜோன் ஒஸ்ரின் என்பவரு டைய ஆக்கங்களில் உச்சக்கட்ட வளர்ச்சியைக் கண்டது. பத்தொன் பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியில் தோன்றி, இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சி கண்ட பன்மைவாதத்தின் சிந்தனையாளர்களில் ஒட்டோ வி. ஹிர்க்கே, எப். டபிள்யூ. மெயிற்லண்ட், ஜே.என்.பிக்கிஸ், எமில் டுர்கிம், போல் வொன்கள், லியோன் டியூகிற், ஹியூகோ கிறவ்வே, ஏ.டி.லிண்ட்சே, ஏர்ணெஸ்ட் பார்க்கள், ஜி. டி. எச். ஹோல், ஹரோல்ட் ஜே. லஸ்கி, ஆர், எம் மைக்ஜவர், றொபேட், ஏ. டால் போன்றோர் குறிப் பிடத்தக்கவர்கள். (அரசறிவியலாளன் 188 பேராசிரியர் ஆ.வே.மணிவாசகர்)

நான்கு நூற்றாண்டு காலமாக நிலைத்திருந்த ஒருமைவாதத் துக்குப் பெரும் சவாலாகப் பன்மைவாதம் அமைந்தது. சட்டமே இறை மையின் ஆணை என்றும், சட்டம் இயற்றி அமுல்படுத்தும் அதிகாரம் இறைமை கொண்ட அரசுக்கு மட்டுமே உண்டு என்றும், சட்டங்கள் அரசினைக் கட்டுப்படுத்துவதில்லை என்றும், ஆனால் சமூகத்திடமி ருந்து சட்டம் பலவந்தமாக அடிபணிவைப் பெற்றுக்கொள்கிறது என்றும், ஒருமைவாதத்தின் சிற்பியான ஒஸ்ரின் முன்வைத்த வாதங்களைப் பன்மைவாதிகள் ஒட்டுமொத்தமாக நிராகரித்தார்கள். ஒஸ்ரினின் கருத் துக்கள் அநாவசியமாக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதா கவும், அரசை வெறும் சட்ட உருவகமாகக் காண்கின்றதேயன்றி அதன் அரசியல், சமூக, பொருளாதாரப் பரிமாணங்களைக் கருத்தில் கொள்ள வில்லையென்றும், சர்வதிகாரத்தை நிலை நாட்டவும், நியாயப்படுத் தவும் துணை போகிறது என்றும், தனி நபர்கள், குழுக்கள், சங்கங்கள் போன்றவற்றின் முக்கியத்துவத்தையும், நலன்களையும் புறக்கணிக் கிறது என்றும் பலமான மறுவாதங்களை முன்வைத்த பன்மைவாதிகள், ஒருமைவாதத்தைத் தவறானதாகவும், தீங்கானதாகவும், காலத்துக் கொவ்வாததாகவும் காட்ட விளைந்தனர். ஒருமை வாதத்தை "வணக் கத்துக்குரிய மாயை” என்று வர்ணித்த பிக்கிஸ், "தெய்வீக உரிமைக் கோட்பாடு போலவே அதுவும் ஓர் வரட்டுத் தத்துவமாக முடிவடையும்" என்றார். லஸ்கி மேலும் ஒருபடி சென்று "முழு இறைமைக் கோட்பாடும் கைவிடப்பட்டால் அரசறிவியலுக்கு நீடித்த நன்மை உண்டாக்கும்” என் றா.
அரசை மையமாகக் கொண்ட ஒருமைவாதத்தை மறுக்கும் பன் மைவாதம், சமூகத்தைத் தனிநபர்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற சுதந்திரமான பல்வேறு குழுக்கள், சங்கங்களைக் கொண்ட ஓர் வலைப் பின்னலமைப்பாகவே விளக்குகிறது. பல்வேறு நோக்குகளுடன் இயங்கி வரும் பல்வேறுவிதமான அரசியல், சமூக, பொருளாதார, கலாசார, தொழில்சார்ந்த குழுக்கள் முழுச்சமூகத்தினதும் கூட்டு மொத் தமான நன்மைகள் பூரணமடையப் பேருதவியாக இருப்பதாகவும், இதனால் அரசைப்போலவே இவ்வமைப்புக்களும் இன்றியமையாத வையாக உள்ளன என்றும், அரசிடம் இறைமை என்ற பேரில் மேலதிகமாகக்
(அரசறிவியலாளன் 189 பேராசிரியர் ஆ.வே.மணிவாசகர்)

Page 111
குவிந்துள்ள அதிகாரங்கள் இவ்வமைப்புக்களுக்குப் பரவலாகப்படும் போதே சமூகத்தின் சமநிலையும், முன்னேற்றமும் உறுதிப்படுத்தப்பட முடியும் என்றும் பன்மைவாதிகள் வாதிட்டனர்.
பெரும்பாலான பன்மைவாதிகளின் சிந்தனைக்கு மூலமாக மத் திய கால ஐரோப்பாவின் "ஹில்ட்" அமைப்புக்களே இருந்த்ன. அரசு வளர்ச்சிடையாத இக்காலப்பகுதியில் முதலீட்டாளர்களையும், கைவி னைஞர்-களையும், வர்த்தகர்களையும் உள்ளடக்கி, உள்ளூரில் சுதந் திரமாக இயங்கிய ஹில்ட் அமைப்புகள், சமூக அபிவிருத்திக்குப் பக்க பலமாக இருந்தன ஹில்ட் அமைப்புக்கள் போன்ற சுதந்திரமும், அதிகாரமும், அந்தஸ்த்தும் கொண்டதாக நவீன சமூக அமைப்புக்க ளையும் காணப்பன்மைவாதிகள் விரும்பினர்.
11. பண்மைவாதத்தின்நிலைப்பாடுகள்
பன்மைவாத அறிஞர்களின் கருத்துக்களிலும், அழுத்தங்களி லும் வேறுபாடுகள் சில உண்டு. இருப்பினும் அரசின் இறைமையைக் கண்டிப்பதிலும், அதனைச் சமூக அமைப்புக்களிடையே பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதிலும் அவர்களிடையே பொதுவான ஒற்றுமை நிலவுகி றது. இவ்வகையில் பன்மைவாதத்தின் முக்கிய நிலைப்பாடுகளைப் பின்வரும் அம்சங்களில் நாம் கண்டு கொள்ளலாம்:
1. சமூக அபிவிருத்தியின் குறிப்பிடப்பட்ட கட்டத்தின் பின்னர் தோன் றியதே அரசு. சமூகம் ஓர் திறந்த அமைப்பாக இருக்கையில் அரசு மூடப்பட்ட அமைப்பாக உள்ளது. இவ்வகையில் சமூகத்துள் அரசு அடங்குமே தவிர அரசுக்குள் சமூகம் அடங்காது என்கின்றனர் பன்மைவாதிகள். மேலும் அரசின் சட்டங்கள் போலவே பல சமூக மரபுகளும், வழமைகளும், வலிமை வாய்ந்தவையாக உள்ளன. ஒரு மைவாதிகள் கூறுவதுபோல அரசின் சட்டங்களுக்குச் சமூகம் அடிப னிவது தண்டனைக்குப் பயந்து அல்லவென்றும், சமூக நன்மையைக் கருதியே அடிபணிவு வழங்கப்படுகிறது என்றும் பன் மைவாதிகள் வலியுறுத்துகின்றனர்.
(அரசறிவியலாளன் 190 பேராசிரியர் ஆ.வே.மணிவாசகர்)

2. சட்ட அடிப்படை கொண்ட ஒருமைவாதத்தில் பல குறைபாடுகளைப் பன்மைவாதிகள் காண்கின்றனர். இறைமை வாய்ந்த அரசு தானே உருவாக்கிய அரசியல் யாப்புச் சட்டங்களுக்கு அடங்கி நடக்கிறது. சர்வதேச சட்டங்களும் அரசுகளைக் கணிசமான அளவு கட்டுப்படுத்துகின்றன. மேலும் அரசின் சட்டங்கள் நீதிமன்றுகளால் நிராகரிக்கப்படுகின்றன. தமக்குத் தேவையான சட்டங்களைத் தாமே இயற்றித் தொழிற்படும் சுதந்திரமான உள்ளுர்ச்சங்கங்களும். அரசின் சட்டங்கள் பற்றி அக்கறைப்படுவதில்லை. சமஷ்டி முறைக ளில் இறைமை மத்தியமாநில அரசுகளிடையே பிரிந்து காணப்படு கின்றது. மாநிலங்கள் பிரிந்து புதிய அரசுகள் உருவாகும்போது இறைமை மேலும் கூறுபட நேரிடுகிறது. எனவே அரசின் இறைமை பற்றிய மீளாய்வு அவசியமாகிறது.
3. பன்மைத்தன்மை கொண்ட நவீன சமூகத்தில் அரசைப் போலவே பல்வேறு குழுக்களும், சங்கங்களும் சேவையாற்றிவருகின்றன. சுதந்திரமான இந்நிறுவனங்கள் அரசின் சட்டங்களினால் உருவாக் கப்படுவதோ, அல்லது கட்டுப்படுத்தப்படுவதோ, அல்லது அரசில் தங்கியிருப்பதோ இல்லை. அதேசமயம் இந்நிறுவனங்கள் தமக்குத் தேவையான சட்டங்களைத் தாமே இயற்றி தமது அங்கத்தவர்கள் வழிப்படுத்துகின்றன. இவ்வகையில், அரசும் சமூகத்தின் சங்கங்க ளில் ஒன்றேயன்றி தனி முதன்மையான சர்வவல்லமை கொண்ட சங்கமாக இருக்கத் தகுதியில்லை என்பது பன்மைவாதிகளின் வாதமாகும்.
4. ஏகபோக அதிகாரம் படைத்த அரசினைப் பரிந்துரைக்கும் ஒருமை வாதம் தனிநபர்களின் உரிமைகள், நலன்களைப் பாதுகாக்க முடி யாது என்பதும் பன்மைவாதத்தின் அபிப்பிராயமாகும். அரசில் அங் கத்தவர்களாக இருப்பது போலவே தனிநபர்கள் சமூகத்தின் சங்கங் களிலும் அங்கத்தவர்களாக உள்ளனர். மேலும் சேய்மையில் உள்ள அரசைவிடத்தமக்கு அண்மையில் உள்ள சங்கங்களுட னேயே மக்கள் நெருக்கமாக இணைந்தும், நன்மைகளைப் பெற்றும் வருகின்றனர். அத்துடன் அரசைப் போல சமூக அமைப்புக்கள் பலவந்தமான அடிபணிவையும் தம் அங்கத்தவர்களிடமிருந்து
(அரசறிவியலாளன் 191 பேராசிரியர் ஆ.வே.மணிவாசகர்)

Page 112
பெற்றுக் கொள்வதில்லை. இக் காரணிகளினால் அரசை விட சமூக அமைப்புக்களே மக்களின் அபிமானத்துக்குரியவையாக இருக்கின்
றன.
5. தேசிய விடயங்களைக் கவனிக்கும் அரசுக்கு இறைமை இருக்க வேண்டியது போல் உள்ளூர் விடயங்களைக் கவனிக்கும் குழுக் கள், சங்கங்களுக்கும் இறைமை இருக்க வேண்டும். இறைமை யென்ற பெயரால் அரசு பெற்றிருக்கும் மிதமிஞ்சிய அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு உள்ளுர் ஜனநாயகஅமைப்புக்கள் பலப்படுத்தப் படல் வேண்டும். அரசு மதிப்படையவும், சமூகம் சிறப்படையவும் அதிகார பரவலாக்கம் ஓர் அரிய சாதனம் என்பது பன்மைவாதத் தின் கருத்தாகும்.
6. பன்மைவாதிகள் தாம் அரசை வெறுக்கவோ, விரோதிக்கவோ, ஒழிக்கவோ முற்படவில்லை என்கின்றனர். மாறாக, அதனைக் கெளரவமானதும் தார்மீக அடிப்படை கொண்டதுமான ஒரு ஸ்தா பனமாக்கவே விரும்புவதாகக் கூறுகின்றனர். அரசானது ஆதிக் கமும், தலையீடும் செய்வதைத் தவிர்த்து, சமூகத்தை ஒழுங்கு படுத்தி வழிநடத்தினால் போதுமானது. இவ்வகையில், அரசின் பணி முழுச்சமூகத்துடனும் தொடர்பு படுவதால், அதனைச் சமூகத்தின் ஏனைய சங்கங்களை விடச்சற்று உயர்வாகக் கருதப்பன்மைவா திகள் பின்னிற்கவில்லை, மேலும் ஏனைய குழுக்கள், சங்கங்களு டன் போட்டியிட்டுக் கொண்டு அரசு சமூகத்துக்கு சிறந்த சேவை யை ஆற்ற முடியும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் கைவிட வில்லை.
I.பண்மைவாதத்தின் பிரச்சினைகள்
ஒருமைவாதத்துக்கு எதிராக கடுமையான கண்டனங்களை வெளியிட்ட பன்மைவாதமும் பிரச்சினைகளைக் கொண்டிருக்காமல் இல்லை. தேசிய அரசுகளின் தோற்றமும், அவை நாளடைவில் நலன்புரி அரசுகளாக மாற்றம் கண்டமையும், சிக்கலடைந்து வரும் தேசிய, சர்வதேசப் பிரச்சினைகளும், அரசுகளிடம் அதிகாரங்கள் குவிந்து
(அரசறிவியலாளன் 192 பேராசிரியர் ஆவே.மணிவாசகர்)

தாகவும், நியாயமான தாகவுமே தென்படி வைக்கிறது. இந்நிலையில் அரசின் இறைமை வெகுவாக மட்டுப்படுத்தப்படல் வேண்டும் என்ற பன்மைவாதிகளின் சிந்தனை வரலாற்று மாற்றங்களையும், நடைமுறை யதார்த்தங்களையும் கருத்திற் கொள்ளாத வெறும் இலட்சியவாதமாக வும், கற்பனைவாதமாகவுமே திரிபடைய வழிபிறக்கிறது. அரசின் இறை மை பலவீனமடையும்போது சமூகத்தின் ஸ்திரத்திற்கும், பாதுகாப்புக் கும் பலத்த சோதனை ஏற்படும் என்றும் கூறப்படுகின்றது. ஒருமைவாதம் சட்டத்துக்குச் சமூகத்தின் அடிபணிவை வேண்டி நின்றபோதிலும் சட் டங்களை விமர்சிக்கவும், எதிர்க்கவும் மக்களுக்குள்ள உரிமையை மறு க்கவில்லை. சில அரசுகளில் மக்களின் அபிப்பிராயத்தை ஜனநாயக முறைகளுடாக அறிந்தே சட்டம் இயற்றப்படுகிறது. இதனால் அரசுகள் இறைமையைத் துஸ்பிரயோகம் செய்யாமல், மக்கள் சக்திக்கு மதிப்ப ளித்து, சமூக ஏற்புடைமையுள்ள சட்டங்களையே இயற்ற முற்படுகின் றன எனலாம்.
பன்மைவாதிகள் அரசைப் பூரணமாக ஏற்கவோ அல்லது பூர ணமாக மறுக்கவோ விரும்பவில்லை. இடைப்பட்ட ஓர் நிலையில் நின்று, ஆகக்கூடுதலான அதிகாரப்பரவலாக்கத்தை அவர்கள் சிபார்சு செய்கின்றனர். ஆனால் அதற்கான அதிகார வரையறைகள், அணுகு முறைகள், உபாயங்கள் எதனையும் அவர்கள் உறுதியாகவும், தெளி வாகவும் முன்வைக்கவில்லை. இது தொடர்பாகப் பன்மைவாதிகளிட மும் ஒத்த கருத்துக்களும் நிலவவில்லை. பன்மைவாதிகளின் ஆய்வின் பலவீனமான அம்சம் இதுவேயென்று எப்.டபிள்யூ ஹோக்கள் குறிப்பிடு கின்றார். அல்பிரட் சிம்மேர்ண் என்ற அறிஞர் பன்மைவாதிகள் அரசினு டைய சர்வதிகாரம் பற்றிப் பேசும்போது, சமூகக்குழுக்கள், சங்கங்க ளின் சர்வதிகாரத்தை மறந்து விட்டார்கள் என்றும், சேய்மையில் உள்ள அரசை விட அண்மையில் உள்ள சமூகக்குழுக்களும், சங்கங்களுமே மக்களை அதிகம் கட்டுப்படுத்திக் கண்காணிப்பதாகவும், பெரிய அர சைவிட சிறிய சமூக நிறுவனங்களே இறுக்கமான அமைப்பைக் கொண் டிருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.
மேலும் பன்மைவாதிகள் வளர்ச்சியடைந்த நவீன சமூகத்தின் பிரச்சினைகளுக்கு, வளர்ச்சி குன்றிய மத்திய கால சமூகத்தின் ஹில்ட்
(அரசறிவியலாளன் 193 பேராசிரியர் ஆவேமணிவாசகர்)

Page 113
அமைப்புக்களிலிருந்து பரிகாரம்தேட முற்படுதலானது பொருத்தமற்ற ஓர் பின்னோக்கிய பாய்ச்சலாகவே கருதப்படுகிறது. பலமான அரசுகள் நிலவாத மத்தியகால சமூகம் அடிக்கடி கண்ட குழப்பங்களையும், ஹில்ட் அமைப்புக்களிடையே காணப்பட்ட சுயநலம், பொறாமை, சச்சர வுகள் போன்றவற்றையும் பன்மைவாதிகள் உணரத் தவறிவிட்டதாகவும் கண்டிக்கப்படுகிறது. நவீனகாலத்தில் பன்மைவாதத்துக்கு வாய்ப்பான களங்களாக சுதந்திரமான குழுக்களும், சங்கங்களும் தொகையிலும், பலத்திலும், முக்கியத்துவத்திலும் மிகுந்து காணப்படுகின்ற - சந்தைப் பொருளாதாரமும், தாராண்மை ஜனநாயகமும் நடைமுறையில் உள்ள - சில மேற்கு நாடுகளே விளங்க முடியும். மூன்றாம் உலக நாடுகளிலும், சோசலிச நாடுகளிலும் காணப்படும் நிலைமைகளில் பன்மைவாதம் சோபிக்க முடியாது
VI.பன்மைவாதத்தின்பங்களிப்பு
பன்மைவாதத்தின் முக்கிய பங்களிப்பு யாதெனில், நவீன சமூ கத்தின் முக்கிய இயல்பான குழுக்கள், சங்கங்களை மையப்படுத்தியும், சட்டக் கட்டுமானத்துள் அடங்கிக் கிடந்த இறைமைக் கோட்பாட்டிற்கு சமூகப் பிரக்ஞையை வழங்கியும், புதிய சிந்தனைகளை வெளியிட்டு அரசியல் கோட்பாட்டை அபிவிருத்தி செய்தமையாகும். கடந்த நூறு ஆண்டுகளில் இறைமையைப் போல அதிகம் விவாதிக்கப்பட்ட வேறு அரசியல் எண்ணக்கரு இல்லை என்று சி. எச். மக்இல்வெயின் குறிப்பிடுவதிலிருந்து பன்மைவாதிகள் முன்னெடுத்த பணியின் தாக்கம் புரிகிறது.
பெரும் இயக்கமாகப் பன்மைவாதம் வளர்ச்சி அடையாத போதிலும், அரசுகளின் சர்வாதிகாரப் போக்கைத் தடுத்து நிறுத்தும் ஓர் சித்தாந்தமாகவும், அதிகாரப் பரவலாக்கத்துக்கான உள்ளுர் இயக்கங் களுக்கு ஓர் உந்து சக்தியாகவும் அது இருந்து வந்துள்ளது. ஒன்றுக் கொன்று முரணான அரசின் அதிகாரமும், மக்களின் சுதந்திரம், உரிமை கள் போன்றவையும் இணங்கிப் போகின்ற மார்க்கத்தைக் கண்டறியும் கடினமான முயற்சியில் பன்மைவாதிகளின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. சமகாலத்தின் முக்கிய பன்மைவாத அறிஞராகிய
(அரசறிவியலாளன் 194 பேராசிரியர் ஆவே.மணிவாசகர்)

றோபேட் ஏ. டால், அமெரிக்க அரசியல் பற்றி எழுதி வரும் புகழ் பெற்ற நூல்கள், பன்மைவாதத்தின் எதிர்காலத்தைப் பிரகாசமாகவே காட்டு கின்றது.
அரசின் விரிவை விரும்புகின்ற அதிதீவிரவாதமாகிய பாசிசத் தின் கருத்துக்களுக்கும், அரசின் மறைவை விரும்பும் தீவிரவாதங்களா கிய அனார்க்கிஸம், சிண்டிக்கலிஸம், கம்யூனிசம் போன்றவற்றின் கருத்துக்களுக்கும் இடையில் ஓர் மிதவாதமாக விளங்கி அரசைச் சீர்ப்படுத்த முற்படுகின்ற பன்மைவாதத்தின் கருத்துக்கள் அரசியல் கோட்பாட்டிற்கு புதியதோர் பரிமாணத்தை வழங்குகின்றன.
பன்மைவாதிகளின் இறைமைக்கு எதிரான கருத்துக்கள் வெவ் வேறு அர்த்தங்களிலும் வடிவங்களிலும் எழத் தவறவில்லை. மார்க்கஸ் முன்வைத்த "பாட்டாளிகளின் சர்வதேசியம்” ஆகக் குறைந்தது கோட் பாட்டளவிலாவது இறைமையின் மூலங்களான தேசியவாதம், தேசிய நலன் போன்றவற்றைப் பலவீனப்படுத்தியது. தாராண்மை வாதிகளின் ஒரு சாராரும் தேசிய அரசுகளின் இறைமையின் அழிவில் உருவாகும் கூட் டாட்சிப் பாணியிலான வலுவான உலக அரசாங்கம் ஒன்றே உலக சமாதானத்துக்கு உத்தரவாதம் வழங்க முடியும் என்கின்றனர். பொரு ளாதார வளர்ச்சியையும் மற்றும் அரசியல் சமூக கலாச்சார இராணுவ நலன்களையும் கருத்திற் கொண்டு உருவாகிவரும் பிராந்திய ரீதியான அமைப்பொழுங்குகளில் அங்கம் வகிக்கும் போதும் தேசிய அரசுகளின் இறைமை ஓரளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. இவ்வாறு பன்மை வாதத்தின் இறைமைக்கு எதிரான நிலைப்பாடுகளை நியாயப்படுத்தும் அல்லது வலுப்படுத்தும் விதத்திலேயே கணிசமான கோட்பாடுகளின தும் நடைமுறைகளினதும் போக்குகள் காணப்படுகின்றன.
(அரசறிவியலாளன் 195 பேராசிரியர் ஆ.வே.மணிவாசகர்)

Page 114
References
H. E. Cohen, Recent Theories of Sovereignty, 4th edition (Chicago: Chicago, University Press, 1980), p. 85-87. F. W Coker, Recent Political Thought, 5th edition, (New York : Appleton Century Crofts, 1974), Chap.XVIII. R. A. Dhal, A Preface to Democratic Theory, (Chicago: Chicago University Press, 1956) pp. 137, 140, 142 & 164.
F. H. Hensley Sovereignty, (London: Cambridge University Press, 1985) pp. 219 & 224.
K.Hsiao, Political Pluralism, 3rd edition, (New York: Harcourt Brace & Co. 1977), pp. 8, 248 249.
S.Kavasner, Sovereignty; Organized Hypocrisy (Princeton: Princeton University Press, 2000), Chap.2
H.Spruyt, The Sovereign state and Its Competitors (Princeton; Princeton University Press, 1994), Chap.1
(அரசறிவியலாளன் 196 பேராசிரியர் ஆவே.மணிவாசகர்)

அரசியல்-சமூக-பொருளாதார பின்புலத்தில் சுதேச அரசியல் யாப்புக்களுக்கான அவசியம்
The Necessity of Indigenous Political Constitutions in the Political, Social and Economic Background
- கே.ரி.கணேசலிங்கம் - விரிவுரையாளர், அரசறிவியல் துறை.
I
இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக, அடிப்படைக ளில் அபிவிருத்தியின்மைகளும், இனரீதியான முரண்பாடுகளும் பாரிய ளவில் விரிசலை நோக்கி நாட்டை நகர்த்தி வருகின்றது. இந்து சமுத்திரத்தின் முத்து என கெளரவப்படுத்தப்பட்ட தீவு தற்போது முரண் பாடுகளாலும், பகை மைகளாலும் அழிந்து போகும் நாடாக மாறிவரு கின்றது. தேசிய ஒருமைப்பாட்டுக்கு பதில் தேசிய பிரிவினை தலை தூக்கி இலங்கையின் எதிர்காலத்தை சிதைத்துவருகின்றது. இவையா வும் இராணுவ ஆட்சிமுறையினாலோ, சர்வாதிகார ஆட்சி நிலுவுவத னாலோ ஏற்படவில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஜனநாயக பூர்வ மான ஆட்சி மாற்றத்தினாலும், ஜனநாயக சாதனங்களான அரசியல் அமைப்பு முறை களாலுமே இத்தகைய தாக்கம் ஏற்பட்டுள்ளது. சுதந் திர இலங்கை உருவாக முன்பே அரசியலமைப்பு மாதிரிகளை பரீட்சாத் தமாக பின் பற்றிய ஆட்சி முறைமைகள் சுதந்திரத்திற்கு பின்பும் நீடித் தன. ஆனால் அரசியல், பொருளாதார, சமூக இன விழுமியங்களின் சாதகமான அபிவிருத்தி மட்டத்தை எட்ட முடியவில்லை அத்தகைய அபிவிருத்தி மட்டம் சாத்தியமாகாதமைக்கு பல்வேறுபட்ட காரணத்தை முன்வைத்தாலும் அரசியலமைப்புக்களுக்கும் அதில் முதன்மைப்படுத் தப்பட்ட சட்ட மாதிரிகளுக்கும் அதிக பங்கு உண்டு
(அரசறிவியலாளன் 197 கே.ரி.கணேசலிங்கம்)

Page 115
III
உலகின் அரசியல் திட்ட வரைபுகளுக்கு வடிவம் கொடுத்த பிரித்தானியர்கள் இலங்கை போன்ற பின்தங்கிய நாடுகளின் அரசியல் திட்டங்களை சட்ட (Law/Legal) கண்கொண்டு விசாரணை செய்யவி ரும்பினார். இதனால் இந்நாடுகளில் அரசியல் திட்டமென்து சூனியத் திலிருந்து உருவானது என்ற எண்ணம் ஏற்பட வழிவகுத்தது. ஆனால் இந்நாடுகளின் அரசியல் தலைவர்களும் அறிஞர்களில் பலரும் சூனி யமே யதார்த்தமென கருதினர். உண்மையில் அரசியல் அமைப்புக் களின் பிரதிவிம்பங்கள் அந்தச் சமூக அமைப்புக்களின் பின்னணி என் பதை புரிந்து கொள்ள வேண்டுமென ஏச்.ஆர்.கிறிவிஸ் என்ற அறிஞர் பிரித்தானிய யாப்பு' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கீறீவ்ஸ் இன் நோக்கில் சமூகத்தின் இயல்பினை நன்கு திட்ட மிட்டு அரசியலமைப்புடன் இணைத்துக் கொள்வதே அபிவிருத்தி நோக் கிய அரசியலமைப்புக்கு சிறப்பானதாகும். சொத்து, தேசிய வருமானம், தேசிய உற்பத்தி, பங்கீடு, உற்பத்தி சாசனத்தின் உரிமம் என்பன வற்றை அடிப்படையாகக் கொண்டே அரசியல் திட்டங்கள் உருவாக்கப் படுதல் வேண்டும். மக்கள் ஒவ்வொருவரது தேவைகளையும், நலன்க ளையும் பூர்த்தி செய்தல், அல்லது அத்தேவைகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றுவதற்கான வழிவகைகளை கண்டறிந்து இணைத்தல் அவ சியமாகும்.
இவ் அம்சங்கள் எல்லாவற்றையும் பிரித்தானிய யாப்பு உள்ள டக்கியுள்ளது. அவ்யாப்பு உயர்தர வர்க்கம், நடுத்தர வர்க்கம், ஆகி யவற்றின் ஆதிக்கத்தின் வாயிலாகவே ஆட்சித் துறையின் சட்டம், நிர் வாகம், நீதிப் பிரிவுகள் செயல்படுவதுடன் வர்த்தகத்துறை, படைத் துறை, பத்திரிகைத்துறை, தொழில்துறை என்பன செயல்படுகின்றது என கீறீவ்ஸ் மேலும் விபரிக்கின்றார். அந்த வகையில் அரசியல் - சமூக - பொருளாதார வல்லமையுடையவர்களுக்கே அரசியல் அதிகாரம் உரி யதென்ற கருத்தை வலியுறுத்துகின்றார். எனவே பிரித்தானிய அரசியல் யாப்பு பிரித்தானிய சமூகத்திலிருந்து உருவாகியதாக மதிப்பீடு செய்து கொள்ளலாம் சமூகம் எது, சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துவர்கள் யார்,
(அரசறிவியலாளன் 198 கேரி.கணேசலிங்கம்)

என்பதை பின்புலமாகக் கொண்டு பிரித்தானிய அரசியலமைப்பு வரை யப்பட்டுள்ளது.
இதே வலுவையும் நீண்டகால நிலைத்திருப்பையும் மக்களின் அபிலாசைகளையும் நிறைவேற்றிவரும் அமெரிக்க அரசியல் திட்டம் பற்றி நோக்குவோம். குறிப்பாக அமெரிக்க அரசாங்கம் என்ற நூலில் றொபேட் ஹாமல் (Robert Hamel) குறிப்பிட்ட விடயங்களை மையப் படுத்தி அமெரிக்க அரசியல் திட்டத்தை அவதானிக்கலாம்.
அமெரிக்க அரசியலமைப்பு காலத்தால் பழமையானது. ஆனா லும் நவீனத்துவ மாற்றங்களை உள்வாங்கும் இலகுத்தன்மைகளைக் கொண்டது அமெரிக்காவை ஐக்கியத்துடனும் ஒருமைப்பாட்டுடனும் ஒன்று சேர்த்ததில் அமெரிக்க அரசியல் திட்டத்துக்கே அதிக பங்குண்ட அமெரிக்க மாநிலங்கள் ஒவ்வொன்றினதும் உற்பத்தியையும், உற்பத்தி சக்திகளையும் ஒன்று சேர்த்து நவீன எழுச்சிமிக்க அமெரிக்காவாக மாற்றுவதில் அது அதிக சாதனைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க சமூகத்தை உலக சமூகத்தின் முன்நிறுத்தவும் தலைமை தாங்கவைப் பதற்கும் வித்திட்டது அமெரிக்க அரசியல் திட்டமே. அமெரிகக அரசி யல் திட்டத்தின் ஒவ்வொரு சரத்திலும் அதன் உலகளாவிய ஆதிக்கப் போக்கையும் அவற்றுக்கான உபாயத்தையும் உள்நாட்டு மட்டத்தில் பேணிவரும் சுமூகத்தன்மையையும் அவ்யாப்பு உள்ளடக்கியுள்ளது. அமெரிக்க யாப்பின் உருவாக்கத்துக்கு வித்திட்டவர்கள் பிரித்தானிய மாதிரியை பின் பற்றினாலும் அமெரிக்க மக்களுக்கு அவர்களின் தனித் துவமான அரசியல் பொருளாதார இராணுவ பாதுகாப்பு மற்றும் இதர தேவைகளையும் நிறைவேற்றக் கூடியதாக உருவாக்கியதுடன் எப்போ தும் நெகிழ்ந்து கொடுக்கக்கூடிய தன்மை பெற்றவகையில் தயார் செய் யப்பட்டுள்ளது.
இவ்வாறு பார்க்கும் போது வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுக ளிலும் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் அரசியல் யாப்புகளில் இலகுத்தன்மையும் அபிவிருத்திக்கான சாதகத்தன்மைகளும் சமூகங்க ளோடு இசையும் பேக்குகளும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ஆனால் இலங்கை போன்ற வறிய நாடுகளில் அரசியல் அமைப்புக்கள் தனித்து
(அரசறிவியலாளன் 199 கேரி கணேசலிங்கம்)

Page 116
ஆட்சியாளரின் நலன்களையும், பாதுகாப்பையும் மட்டுமே கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால் சமூகத்திலிருந்து அந்நியப்பட்டதாக அமைந்துவிடுகிறது. இதற்கு பின்தங்கிய நாடுகளின் உயர்குழாத்தினர் ஒரு காரணமாகக் கொள்ளப்பட்டாலும் அவர்களையும் அவர்கள் சார்ந்த சட்டநுணுக்கத்தையும் அரசியல் யாப்புக்களில் உருவாக்கிய மேற்கு நாட்டவர்களையே சாரும். அவர்களே பிரதான காரணகர்த்தாக்களெனக் கூறலாம். மேற்கு நாடுகளில் பிரபல்யமாக விளங்கிய பேராசிரியர் லக்ஸ் கியோ அல்லது ஏச்.ஆர்.வி.கிறீவிஸ்ன் மாதிரியோ முதன்மை பெறாது ஐவர்ஜென்னிங் மாதிரிகளே இலங்கை போன்ற நாடுகளில் நிலை பெற்றன. இது மேற்குலகத்தவர் கீழைத்தேசத்தில் மேற்கொண்ட கருத் தியல் மாதிரி திணிப்பாகவே கொள்ளப்படுதல் வேண்டும். அரசியல் அமைப்புக்களை தனித்து சட்டமாக பார்க்கும் இயல்பை வளர்த்துவிட்டு அதனால் ஏற்பட்டுவரும் முரண்பாடுகளையும் பாதிப்புகளையும் பயன் படுத்திக் கொண்டு அதிக அனுகூலங்களை அடைய விரும்பியது மேற் குலகம் அதாவது மேற்குலகத்தின் அனுகூலம் கீழைத்தேசத்தின் பிரதி கூலமும் ஒன்றான அம்சங்களாகவே உள்ளன. இதன் நடைமுறை அனுபவத்தை இலங்கையின் அரசியல் யாப்புக்களினதும் அவற்றால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் நோக்குவோம்.
நாட்டவர்களையே சாரும். அவர்களே பிரதான காரணகர்த்தாக்களெனக் கூறலாம். மேற்கு நாடுகளில் பிரபல்யமாக விளங்கிய பேராசிரியர் லக்ஸ் கியோ அல்லது ஏச்.ஆர்.வி.கிறீவிஸ்ன் மாதிரியோ முதன்மை பெறாது ஐவர்ஜென்னிங் மாதிரிகளே இலங்கை போன்ற நாடுகளில் நிலை பெற்றன. இது மேற்குலகத்தவர் கீழைத்தேசத்தில் மேற்கொண்ட கருத் தியல் மாதிரி திணிப்பாகவே கொள்ளப்படுதல் வேண்டும். அரசியல் அமைப்புக்களை தனித்து சட்டமாக பார்க்கும் இயல்பை வளர்த்துவிட்டு அதனால் ஏற்பட்டுவரும் முரண்பாடுகளையும் பாதிப்புகளையும் பயன் படுத்திக் கொண்டு அதிக அனுகூலங்களை அடைய விரும்பியது மேற் குலகம் அதாவது மேற்குலகத்தின் அனுகூலம் கீழைத்தேசத்தின் பிரதி கூலமும் ஒன்றான அம்சங்களாகவே உள்ளன. இதன் நடைமுறை அனுபவத்தை இலங்கையின் அரசியல் யாப்புக்களினதும் அவற்றால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் நோக்குவோம்.
(அரசறிவியலாளன் 200 கேரிகணேசலிங்கம்)

III
பிரித்தானியரால் இலங்கையின் அரசியல் அபிவிருத்திக்காக அறி முகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்களும், சீர்திருத்தங்களும் பிரித்தா னியரின் நலனுக்கானதே அன்றி இலங்கையருக்கானதல்ல குறிப்பாக கோல்புறுாக்கமரன் சிபார்சு முதல் சோல்பரி யாப்புவரை இலங்கையில் நிலவிய அரசியல் சூழலை கையாளுவதற்கான ஆயுதமாக அரசியல் அமைப்புக்களை பிரித்தானியர் பயன்படுத் தினர். கோல்புறுாக் சிபார்சில் அவர்கள் முன்வைத்த அனைத்து பொருளாதார மாதிரிகளும் ஏற்றுமதி இறக்குமதிப் பொருளாதாரத்தையே ஊக்குவிப்பதாக அமைந்திருக் கின்றது. இலங்கையின் பொருளாதார இயங்குவிசையை முறிவடையச் செய்துவிட்டு மேற்குலகுக்கு உகந்தவிதத்திலான பொருளாதார முறை மையை அமுல்ப்படுத்த அரசியல் திட்டத்தை பயன்படுத்திக் கொண்ட
னர.
பிரித்தானியரின் அரசியல் சிபார்சுகளால் நன்மையை இலங்கை மக்கள் அடைந்தாலும் அதன் ஒட்டுமொத்த இலாபம் பிரித்தானியருக் கோ அல்லது மேற்குலகத்துக்கோ உரியதாக அமைந்திருந்தது. குறிப் பாக ராஜகாரிய முறைமையை இல்லாமல் செய்வதன் மூலம் பிரித்தா னியர் பெருந்தோட்டங்களை கொள்வனவு செய்யமுடிந்தது. இதனால் இலங்கையர் நன்மையை அடைந்தாலும் பிரித்தானியரின் நோக்கில் அன்னியருக்கு அடிபணியும் நிலைமையை இலங்கை மக்களிடம் ஏற்ப டுத்தியது அவர்களது பொருளாதார மாதிரிகளை பின்பற்றவும் பேண வும் இலங்கையர் முயன்றதுடன் அதுசார்ந்த வர்க்க அமைப்பு மாதிரி ஒன்று எம்மத்தியில் ஏற்பட்டது. அதுவே இலங்கையின் அரசியல், பொ ருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்திபடைத்த அமைப்பாக மாறியது அதன் வளர்ச்சிப் போக்கிலேயே இலங்கையினதும் அரசியல் வரலாற் றுப் போக்கு நிர்ணயமாகியது. பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் மூலம் இலங்கை மக்களின் சுயசார்ப்புப் பொருளாதாரத்தை அழித்து தங்கிவாழ் பொருளாதாரமாக மாற்றியது. இதனால் பல தனியுடமை அலகுகள் அறிமுகமாயின தரகுவாணிபம், வங்கி அமைப்பு, வர்த்கம், போக்கு வரத்து மற்றும் சேவைகள் என்பனவற்றை நடைமுறைப்படுத் தும் நோக்கிலேயே கோல்புறுாக் சிபார்சு அமுல்படுத்தப்பட்டது இது
(அரசறிவியலாளன் 201 கே.ரி.கணேசலிங்கம்)

Page 117
இலங்கையின் பொருளாதாரத்தை உலகப் பொருளாதாரத்துடன் இணைப்பதில் வெற்றிகண்டது.
இலங்கையர் நன்மையை அடைந்தாலும் பிரித்தானியரின் நோக்கில் அன்னியருக்கு அடிபணியும் நிலைமையை இலங்கை மக்களிடம் ஏற்ப டுத்தியது அவர்களது பொருளாதார மாதிரிகளை பின்பற்றவும் பேண வும் இலங்கையர் முயன்றதுடன் அதுசார்ந்த வர்க்க அமைப்பு மாதிரி ஒன்று எம்மத்தியில் ஏற்பட்டது. அதுவே இலங்கையின் அரசியல், பொ ருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்திபடைத்த அமைப்பாக மாறியது அதன் வளர்ச்சிப் போக்கிலேயே இலங்கையினதும் அரசியல் வரலாற் றுப் போக்கு நிர்ணயமாகியது. பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் மூலம் இலங்கை மக்களின் சுயசார்புப் பொருளாதாரத்தை அழித்து தங்கிவாழ் பொருளாதாரமாக மாற்றியது. இதனால் பல தனியுடமை அலகுகள் அறிமுகமாயின தரகுவாணிபம், வங்கி அமைப்பு, வர்த்தகம், போக்கு வரத்து மற்றும் சேவைகள் என்பனவற்றை நடைமுறைப்படுத் தும் நோக்கிலேயே கோல்புறுாக் சிபார்சு அமுல்படுத்தப்பட்டது இது இலங்கையின் பொருளாதாரத்தை உலகப் பொருளாதாரத்துடன் இணைப்பதில் வெற்றிகண்டது.
இவற்றின் மறுவடிவங்களாகவே ஐக்கிய இலங்கை, தேசிய ஒன்றிணைப்பு ஆங்கிலக்கல்வி, கட்டாயக்கல்வி என்பன அமைந்திருந் தன. இவ்வாறு வளர்ந்துவந்த அரசியலமைபபின் கருத்தியல் செல் வாக்கு 1910, 1920, 1924 அரசியல் சிபார்சுகளிலும் பின் பற்றப்பட்டது இவை ஒவ்வொன்றும் பிரித்தானிய அரசியல் சிபார்சுகளை கையாளு கின்றதற்கான மையமாகவும் இலங்கையை ஒரு பரிசோதனைகளமாக வும் மாற்றுவதற்காகவுமே பிரயோகிக்கப்படுத்தப் பட்டதெனலாம்.
டொனமூர் அரசியல் சிபார்சு அதிகமான தாக்கங்களை ஏற்படுத் திய போதும் தாராளப் பொருளாதாரத்தை மேலுமொரு பாச்சலுக்கூடாக கிராம, நகர, வேறுபாடின்றி நாடு முழுவதும் பரப்புவதில் வெற்றிகண் டது. பிரித்தானியரின் பொருளாதார முற்றுகை அரசியல் அமைப்பு சார்ந்த நாகரீகத்துக்கூடாக வளர்க்க உதவியதில் டொனமூர் யாப்புக்கு பெரியளவான பங்குண்டு எனக்கூறலாம். அரசியல் சட்டங்களை பொரு
(அரசறிவியலாளன் 202 கேரிகணேசலிங்கம்)

ளாதார மாற்றங்களுக்காக பிரயோகப்படுத்தும் போது சுதேசப் பொருளா தாரத்தை கைவிட்டு மேற்குலகப் பொருளாதாரத்தை விஸ்தரிக்க முயன் றனர். எவ்வாறு மேற்கு நாடுகளின் பொருளாதார உற்பத்திகளை மப் புக்களை மேற்கொண்ட ஆளுனர்களது நோக்கங்களில் ஒன்றாக இருந் தது. இலங்கை மக்கள் நுகரக்கூடியவர்களாக மாற்றுவதுவோ அரசியல மைப் புக்களை மேற்கொண்ட ஆளுனர்களது நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
சோல்பரி அரசியல் திட்டம் உற்பத்தியிலும் சொத்துடமையிலும் பாரம்பரிய மரபுக்களை பின்பற்றிய கிராமிய மக்களின் முழுமையான நகர மயப்படுத்தலுக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதாக அமைந் தது. படிப்படியாக பொருளாதாரத்தை தாராளமயவாக்கத்துக்கான திட்ட மிடலைக் கொண்டிருந்த சோல்பரி அரசியல் திட்டம் 1956 ஆண்டு அர சாங்கத்தினால் பெரும் நெருக்கடியை எதிர் கொண்டது. எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டரநாயக்காவின் அரசாங்கம் மூடிய பொருளாதாரக் கொள் கையை கொண்டிருப்பதாக காட்டிக் கொண்டது டன் அரச உடமையாக் கத்தை தீவிரப்படுத்தியது மறுபக்கத்தில் இன முரண்பாட்டு அரசியல் மூலங்களை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பியது. இதனால் அரசியல மைப்பு ரேடியாகவே மீறப்பட்டது. ஒருவகையில் கூறுவதாயின் சோல்பரி அரசியல் அமைப்பு 1956 ஆம் ஆண்டே வலுவற்ற ஒரு யாப்பாக மாறி விட்டது. சமூக வடிவங்களோடு பிணைக்கப்பட்டிருந்த ஒரு சில சரத்துக் களுக்கான வலிமைகளையும் இழந்து சட்ட சூனியமாக மாறியது. சோல்பரி அரசியல் யாப்பின் நிலைத்த தன்மை 1956 ஆண்டு எழுச் சியுடன் முடிவுக்கு வந்தாலும் அதன் சட்டவலு 1972 ஆண்டுவரை நீடித் தது இலங்கை மக்களின் சமூக யதார்த்தத்திற்கும் அரசியல் யாப்புக் கும் தொடர்பில்லாத போக்கை 1956 - 1972 வரை மிகத் தெளிவாக உணர்த்தியது
பண்டாரநாயக்கா அரசாங்கம் சோல்பரி யாப்பின் கீழ் சுயசார்பு, அரச உடமை, முதலாளித்துவ சக்திகளின் வெளியேற்றமென செயல் பட்டாலும் ஐக்கியதேசியக் கட்சி அரசாங்கம் நாணயத்தளர்வுக் கொள்கை, வெளிநாட்டு நாணய மாற்றுக் கொள்கை என்பவற்றை அமுல்படுத்தி தாராளத்தன்மையை சாத்தியமான கொள்கையாக மாற்றி
(அரசறிவியலாளன் 203 கேரி.கணேசலிங்கம்)

Page 118
யது. அதாவது இரண்டு அரசியல் கட்சிகளும் ஒரே யாப்பின் கீழ் ஒரே கொள்கையையே அமுல்ப்படுத்திவந்தன. சித்தாந்தங்கள் வேறுபாடிருந் தனவே அன்றி அமுலாக்கங்கள் ஒன்றாகவே அமைந்திருந்தன.
IV
சுதேச அரசியல் யாப்புக்கள் இரண்டின் பொருளாதார சமூக சார்ந்த சிந்தனைகள் பரவலாக காணப்பட்டன. ஆனால் அவற்றின் 1972ம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பு 1956களில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இனத்தின் தேசமாக இலங்கையை அரசியலமைப்புக்குட்பட்ட நாடாக நிறுவமுயன்றது. அதனால் சிங்கள - பெளத்த நாடாக இலங் கையை மாற்றுவதில் அரசியல் திட்டம் கவனம் செலுத்தியதுடன் பெளத்த சமூகத்தின் அடையாளத்தை மட்டுமே கருத்தில் கொண்ட அரசியல் அமைப்பாக முதலாவது குடியரசு யாப்பு அமைந்தது. சில சந்தர்ப்பத்தில் முதலாவது குடியரசு யாப்பின் உள்ளடங்கலில் காணப் பட்ட அரசின் கொள்கை கோட்பாடுகள், அடிப்படை உரிமைகள், நீதி சேவை ஆணைக்குழுக்கள் தொடர்பான விடயங்கள் அவ்வரசியல் திட்டத்தின் சமூகத்தன்மைக்கமைய காட்டுகின்றன என வாதிடலாம். இது இரண்டாவது குடியரசு யாப்புககும் பொருத்தமானது. ஆனால் அவை எதுவும் அமுலாக்கத்துக்கு சாத்தியமற்ற எழுத்துவடிவிலான சட்டச்சரத்துக்களாவே காணப்பட்டன இதனால் இவற்றின் பிரயோகங்க ளின் வலிமையின்மைகள் சாதகமற்ற அரசியல், பொருளாதார, சூழலை ஏற்படுத்தியது.
சுதேச அரசியல் அமைப்புக்கள் என அரசியல் கட்சி சார்ந்தவர் கள் அவர்கள் சார்ந்த புலமையாளர்கள் கூறினாலும் இரண்டு யாப்புமே மேற்குநாடுகளுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டவையா கவே அமைந்துள்ளன. முதலாவது குடியரசு யாப்பு வெளிப்படையாக பிரித்தானிய மாதிரியை பின்பற்றி சில பெயர்மாற்றங்களுடன் வரையப் பட்டது. இரண்டாவது முழுமையாக மேற்கு நாடுகள் பலவற்றின் மாதிரி களை உட்படுத்தி சாம்பார் அரசியல் திட்டமாக வரையப்பட்டது. பிரித் தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, யப்பான் என பல நாடுகளின் அரசியல் வரைபுகளின் பகுதியை கடன்வாங்கி இலங்கையின் அமுல்ப் படுத்த முயன்றதெனக் கூறலாம். அதாவது உலங்குவானுர்தியின் உதி
(அரசறிவியலாளன் 204 கேரி.கணேசலிங்கம்)

ரிப்பாகங்களை உளவு இயந்திரத்திற்கு பொருத்தியது போன்றதே 1978ஆம் ஆண்டு அரசியல் திட்டம் அமைந்துள்ளது. இலங்கையின் உற்பத்தியுடனோ மக்களுடனோ தொடர்புமேயற்ற வரைபுகளை அமுல்ப்படுத்த முயன்று தோற்றுபோன நிகழ்வையே இது காட்டு கின்றது. முதலாளித்துவ பொருளாதார முறைமைகளுக்கு சாதகமாக வரையப்பட்ட சுதேச அரசியல் திட்டங்கள் தேசிய முதலாளித்துவம் அல்லது சமூக முதலாளித்துவம் என்றோ அல்லது தனியார் முதலாளித் துவம் அல்லது தாராள முதலாளித்துவம் என்றோ வடிவமைக்கப்பட்டி ருந்த தெனக் கூறலாம். எது எவ்வாறாயினும் இரண்டுமே சுதேசியர்கள் விதே சிகளாக இருந்து வரைந்தவையே இலங்கையின் குடியரசு யாப்புக்கள் அவற்றை மாற்றுவது திருத்துவது என்பதெல்லாம் மேட்டுக் குடியின் இயல்புக்குள்ளும் நலன்களுக்குள்ளும் தங்கியிருப்பதுடன் மேற்கின் தேவைகளைப் பொறுத்ததாகவே காணப்படுகின்றது. படுத்த முயன்று தோற்றுபோன நிகழ்வையே இது காட்டுகின்றது. முதலாளித் துவ பொருளாதார முறைமைகளுக்கு சாதகமாக வரை யப்பட்ட சுதேச அரசியல் திட்டங்கள் தேசிய முதலாளித்துவம் அல்லது சமூக முத லாளித்துவம் என்றோ அல்லது தனியார் முதலாளித்துவம் அல்லது தாராள முதலாளித்துவம் என்றோ வடிவமைக்கப்பட்டிருந்த தெனக் கூறலாம். எது எவ்வாறாயினும் இரண்டுமே சுதேசியர்கள் விதே சிகளாக இருந்து வரைந்தவையே இலங்கையின் குடியரசு யாப்புக்கள் அவற்றை மாற்றுவது திருத்துவது என்பதெல்லாம் மேட்டுக்குடியின் இயல்புக் குள்ளும் நலன்களுக்குள்ளும் தங்கியிருப்பதுடன் மேற்கின் தேவைக னைப் பொறுத்ததாகவே காணப்படுகின்றது.
V
எனவே ஒரு நாட்டின் அரசியலமைப்பானது தனித்து சட்ட விபர ணத்தையும் பிரச்சனையையும் மட்டும் கொண்ட விசாரணையாக அமைந்து அந்நாட்டின் அபிவிருத்தியையோ ஒருமைப்பாட்டினையோ சாதகமானதாக மாற்றாது. சட்ட துணுக்கங்களுடன் சமூக பொருத் தப்பாடும், பொருளாதார, இசைவுத்தன்மையும் அமுலாக்கலும் சாத்தி யப்பாடுடைய விசாரணையாக அமைந்திருத்தல் வேண்டும். சூனியத்தி லிருந்து எந்த நாட்டையும் கட்டியெழுப்ப முடியாது யதார்த்தத்தி
(அரசறிவியலாளன் 205 கேரி கணேசலிங்கம்)

Page 119
லிருந்தே ஒரு நாட்டின் வளர்ச்சி சாத்தியப்பாடுடையதாக அமையும். அத்தகைய சூழலில் இன நல்லிணக்கம் ஒருமைப்பாடு அபிவிருத்தி என்பன சாத்தியப்படும் மேற்கு நாடுகளின் திட்டவரைபுகளை இறக்கு மதி செய்வதனைவிட அம்மாதிரிகளை முன்அனுபவமாகக் கொண்டு சுதேச வளங்களையும் அதன் பயன்பாடுகளையும் உள்ளடக்கி வரை யப்படுவதே பொருத்தப்படான அரசியல் திட்டமாக அமையும் இலங்கை யின் யாப்பு மாற்றத்துக்கு தயாராக முன்பு அதற்கான சுதேச அடையா ளங்களை இனங்காணுதல் அவசியம். அதுவே சரியான தெளிவான அரசியலமைப்பு வரைபுக்கு வழியமைக்கும்.
References 01) H.R.V.Greaves: The British Constitution, The Macmillan
Company, Newyork, 1941. 02) Robert Harmal, American Government, Reading on continuity
and change, stimarfin's press, Newyork, 1990 03) Michael Roberts, Elite Formation and elites, 1832 - 1931, michael roberts (Ed). Sri Lanka collective idntities, Revisited, Vol - I marga Institute, 1997. 04) Jani de Silva: Praxis language and silenees, The July 1987
Uprising of JVP in Srilanka, IbidVol-II 05) சஹன்டி பேரின்பநாயகம்; ஆட்சியியல், திருமகள் அழுத்தகம்,
சுன்னாகம், 1962.
06) வி.ரி.தமிழ்மாறன், அரசியலமைப்பாக்கற் சிந்தனைகள், மதுரி,
மல்வகம், 1999.
07) விநித்தியானந்தன், இலங்கை அரசியல் பொளாதார அபிவிருத்தி
1948 - 1956, யாழ் பல்கலைக்கழகம். யாழ்பாணம், 1989.
08) எஸ்.வி.ராஜதுரை, இந்து இந்தி, இந்தியா, சென்னை, 1992.
09) மு.திருநாவுக்கரவு, அரசியலமைப்பு, ஜேயாரால் ஜேயாருக்காக
ஜேயாருடைய, மாறன் பதிப்பகம், யாழ்ப்பாணம். 1994.
(அரசறிவியலாளன் 206 கேரிகணேசலிங்கம்)

இறுதிவருட அரசறிவியல் சிறப்புக்கலை மாணவர்கள்
01. M.D.துசாறா 99/A/35 02. T.ஈஸ்வரன் 99/A/37 03. S.எல்ஸ்மேரி டெல்சி பச்சேக் 99/A/40 04. A.கிரிசாந்தன் 99/A/50 05. K.இந்திராதேவி 99/A/53 06. E.ஜான்சிமிராண்டா 99/A/61 07. வாணிலெம்பேட் 99/A/83 08. E.மேரிநொய்லின் 99/A/149 09. T.LîfuJIT 99/A/186 10. S.சிவாஜினி 99/A/239 11. N.சிவநந்தினி 99/A/242 12. V.விஜேந்திரா 99/A/322 13. V.விமலாம்பிகை 99/A/324 14. P.சுதந்திரா 99/A/341 15. M.Bf5J6 99/A/354 16. P. JuổooT 99/A/367 17. N.961 familt 99/A/368 18. Tudjg56t 99/A1377 19. A.A.BLDIT656f 2000/A/01 20. V.C.s 601b56ag|Tg5 2000/A/O7 21. S.இளந்திரையன் 2000/A/32 22. L.எலிஸ்ரன் சோசை 2000/A/33 23. N.a56ir 2000/A/42 24. M.ஜிவாகரன் 2000/A/51
(அரசறிவியலாளன் 207

Page 120
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
37.
38.
39.
41.
42.
43.
L.யூலிமெல்ஸி பீரிஸ் K.356igb|T N.கவிதா R.குபேசன்
S.லிங்கா
S.K.LDLJBITg56ör Kநளினி S.நந்தினி Tபாக்கியலஷமி 1.பத்மாவதி Kபிரகலாதன் Kust Lugoist F.C. Fg55u (38-fig5. S.gifloor
Aசியாமளா
Tabjeir V.சுகந்தினி Kதவலஷசுமி S.வினோதா Gவித்தியா
2000/A/73
2000/A/94.
2000/A/96
2000/A/123
2000/A/132
2000/A/146
2000/A/153 2000/A/157 2000/A/170
2000/A/178
2000/A/179
2000/A/195
2000/A/234
2000/A/250
2000/A/252
2000/A/273
2000/A/279
2000/A/316
2000/A/341
2000/A/354
(அரசறிவியலாளன் 208

மூன்றாம் வருட அரசறிவியல் சிறப்புக்கலை மாணவர்கள்
01.
02.
O3.
04.
05.
06.
07.
O8.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
K.சந்திரபவன் P.கெளதினி R.ஜேசுதா P.BLD656of B.கிருஷ்ணவேணி 1.குவல்ரினா Mபற்றீசியா தர்சினி M.இம்தியாஸ் ஜெயரஞ்சன் Mபமீலா நிலோசினி N.பிரதீபன் K. GrouGustaffT6of Rரதிதேவி S.செந்தூரன் P.gift Ligos
A.தேவகி Kதிருவேணி Rதுஸ்யந்தி K.வாகீஸ்வரி M.வளர்மதி
200/A/19
2001/A/33
2001/A/44
2001/A/54
2001/A/65
2001/A/69
2001/A/76
2001/A/82
2001/A/91
2001/A/96
2001/A/104
2001/A/113
2001/A/125
2001/A/126
2001/A/165
2001/A/171
2001/A/174
2001/A/177
2001/A/178
(அரசறிவியலாளன் 209

Page 121
இரண்டாம் வருட அரசறிவியல் சிறப்புக்கலை மாணவர்கள்
01.
02.
O3.
04.
05.
06.
07.
08.
O9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
T.பாலமுருகன் J.கவிதா
S.கிருஜா R.பிறேமலஷ்மி Tரஜனிகாந் S.செந்தூரன் T.சிவதர்ஜினி T.சுதாகர் Tதயாபரன் S.வினோதினி N.யசோதினி V.அரவிந்தன் Lபேடினன் ஜெயரால்ரின் Tநாகநந்தினி R.ராஜராஜேந்தினி
Y.FITL560s
P..d6).J856)IT
V.சுதர்சனா Tதவகர்னன் Sதுவடிாளினி
2002/A/13
2002/A/59
2002/A/63
2002/A/111
2002/A/120
2002/A/148
2002/A/163
2002/A/181
2002/A/201
2002/A/222
2002/A/123
2003/A/12
2003/A/35
2003/A/73
2003/A/90
2003/A/117
2003/A/129
2003/A/147
2003/A/159
2003/A/167
(அரசறிவியலாளன் 210

எமது நன்றிக்குரியவர்கள்
அரசறிவியலாளன் சஞ்சிகைக்காக ஆசிச்செய்திகளை வழங்கிய துணைவேந்தர், கலைப்பீடாதிபதி, துறைத்தலைவர் அவர்களுக்கும் வாழ்த்துச் செய்தியை வழங்கிய பெரும்பொருளாளர் அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
எமது கோரிக்கையை ஏற்று ஆக்கங்களைத்தந்துதவிய பேராசிரியர் A.V.மணிவாசகர் அவர்களுக்கும், விரிவுரையாளர் K.T.கணேசலிங்கம், அவர்க ளுக்கும்மாணவர்களுக்கும்நன்றிகூறுகின்றோம்.
இவ் அரசறிவியலாளன் சஞ்சிகையின் வெளியீட்டு நிதிக்காக அயராது உழைத்தமாணவநண்பர்களுக்கும் "ராஜா”திரையரங்கின் உரிமையாளருக்கும், வர்த்தகப்பெருமக்களுக்கும்.நன்றிகூறக்கடமைப்பட்டுள்ளோம்.
எமது சஞ்சிகையை அழகுற கணனியில் வடிவமைத்து அச்சிட்டு தந்த சுன்னாகம் "முத்துபிறின்டேர்ஸ்" அச்சகத்தினருக்கும் இம்முயற்சிக்கு அயராது உழைத்த விரிவுரையாளர்களுக்கும் எமது துறைசார்ந்த நண்பர்களுக்கும், ஏனைய துறைசார்ந்த நண்பர்களுக்கும் பல்வேறு உதவிகளை உரிய நேரத்தில் மேற்கொண்டஅன்புஉள்ளங்களுக்கும் நன்றிகூறக்கடமைப்பட்டுள்ளோம்.
நன்றி
அரசறிவியல் ஒன்றியம், இதழாசிரியர்
அரசறிவியல் துறை, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.
(அரசறிவியலாளன் 211

Page 122


Page 123


Page 124

s. ||
§. s.
藏