கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆறுமுகம் சொர்ணம்மா (நினைவு மலர்)

Page 1
வேலணை கிழக்கு 5"வட்டாரம் ந 160 (184) நாவலர் விதி, யாழ்ப்பா
அமரர் திருமதி ஆறுமு
அவர்களின் சிவபதம்ே
Gamit
8.0
 

ாவலடிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், ணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட
கம் - சொர்ணற்ற மறு குறித்த நினைவு மலர்
ணதீபம் 5.2010
**Şiş

Page 2

வேலணை கிழக்கு 5'வட்டாரம் நாவலடிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், 160 (184) நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட
அமர் திருமதி ஆறுமுகம் ~ சொர்ணம்மா
அவர்களின் சிவபதம்பேறு குறித்த நினைவு மல்ர் 6 சொர்ணதீபம் SN 805200
ఔS్క

Page 3
donjoub
எமது குடும்பத்தின் குலவிளக்காய் தியாகத்தின் முழு வடிவாய் அன்பின் ஊற்றாய் பண்பின் இலக்கணமாய் எல்லோர்க்கும் நல்லவராய் எம்மை நெறிப்படுத்தி எம் எல்லோர்க்கும் நல்வாழ்வு தந்த
6T6T அம்மாவின் பாதக் கமலங்களில் இம்மலரைக் காணிக்கையாக்குகின்றோம்.
இவ்வண்ணம் பிள்ளைகள் மருமககள
பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள்
 
 

வாழ்க வையகம்
வழ்க வளமுடன்
ဒွါရွိ 影 溪發 *Bస్త్ర
2. 匈 క్యో స్క్రీ $镑 缀*
இறைவணக்கம்
ஆதி என்னும் பரம்பொருள் மெய் எழுச்சி பெற்று
அணு என்ற உயிராகி அணுக்கள் கூடி
மோதியிணைந்து இயங்குகின்ற நிலைமைக்கேற்ப
மூலகங்கள் பலவாகி அவையிணைந்து
பேதித்த அண்ட கோடிகளாய் மற்றும்
பிறப்பு இறப்பு இடை உணர்தல் இயக்கமாகி
நீதிநெறியுணர் மாந்தராகி வாழும் நிலையுணர்ந்து
தொண்டாற்றி இன்பம் காண்போம்
அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி (ஞானக் களஞ்சியம்)

Page 4

தாய் மண்ணில் இறைவெளியில் 604, 1929 8.04200
அம்மாவின் பெருமை
'அம்மா என்றழைக்காகு உயிர் இல்லையே அம்மாவை வணங்காது உயர் வில்லையே நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்றதாய் இன்றி வேறொன்று ஏது

Page 5

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 9.
donjLouib
தோத்திரப்பாடல்கள்
திருச்சிற்றம்பலம்
விநாயகர் துதி
வானுலகும் மண்ணுலகும் வாழ மறை வாழப் பான்மைதரு செய்ய தமிழ் பார்மிசை விளங்க ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நாவாய்
ஆனைமுக னைப்பரவி யஞ்சலி செய்விப்பாம்.
தேவாரம்
தாயினும் நல்ல தலைவரென் றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின் றகலா
மாண்பினர் காண்பல வேடர் நோயிலும் பிணியும் தொழிலர்பா னிக்கி
நுழைதரு நுலினர் ஞாலம் கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.
O1

Page 6
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
திருவாசகம்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலயனேன் றனக்குச் செம்மையே யாய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே இம்மையே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கழுந் தருளுவ தினியே.
திருவிசைப்பா
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமாகடலை மற்றவ ரறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனைத்
திருவீழி மிழலை வீற்றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளங்
குளிரவென் கண்குளிர்ந் தனவே.
திருப்பல்லாண்டு
சீருந் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிகீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன்
பெற்றதார் பெறுவார் உலகில் ஊரும் உலகுங் கழற வுழறி உமைமண வாளனுககாட பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம்
பல்லாண்டு கூறுதுமே.
02
 

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் திருப்புராணம்
அருவமும் உருவமாகி அநாதியாய் பலவாய் ஒன்றாய் பிரம்மமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகிக் கருணைகூர் முகங்கள் ஆறுங்கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே ஒருதிருமுருகன் வந்தாங் குதித்தனன் உலகமுய்ய.
திருப்புகழ்
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு சூரனை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும் ஆதி யருணாசல மமர்ந்த பெருமாளே.
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை யறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்
1Seo Dsas
O3

Page 7
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
பட்டினத்தார் பாடல்கள் உடல் கூற்று வண்ணம்
குழிப்புச்சந்தம்
தனதனதான தனதனதான
தந்ததனந்தன தந்ததனந்தன
தனனதனந்தன தனனதனந்த
தானனதானன தானனதநத
தந்தனதான தனதானனா
ஒரு மடமாதும் ஒருவனும் ஆகி இன்பசுகம் தரும் அன்பு பொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து ஊறு சுரோணிதம் மீதுகலந்து பனியில் ஓர்பாதிசிறுதுளிமாது பண்டியில்வந்து புகுந்து திரண்டு பதும அரும்பு கமடம் இதென்று பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்ற உருவமும் ஆகி உயிர்வளர்மாதம் ஒன்பதும் மூன்றும் நிறைந்துமடந்தை உதரம் அகன்று புவியில் விழுந்து யோகமும் வாரமும் நாளும் அறிந்து மகளிர்கள் சேனை தரவணையாடை மண்பட உந்தி உதைந்து கவிழ்ந்து மடமயில் கொங்கை அமுதம் அருந்தி ஓரறிவீரறி வாகி வளர்ந்து ஒளிநகைஊறல் இதழ்மடவாருது வந்து முகந்திட வந்து தவழ்ந்து மடியில் இருந்து மழலை மொழிந்து வா இருபோவென நாமம் விளம்ப உடைமணி ஆடை அரைவடம் ஆட உண்பவர் தின்பவர் தங்களோடு உண்டு தெருவில் இருந்து புழுதி அளைந்து தேடியபாலரொ டோடிநடந்து
அஞ்சுவயதாகி விளையாடியே 1/4
04
 

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
உயர்தருஞான குரு உபதேசம் முத்தமிழின்கலையும் கரைகண்டு வளர்பிறை என்று பலரும் விளம்ப வாழ்பதினாறு பிராயமும் வந்து மயிர்முடிகோதி அறுபத நீல வண்டிமிர் தண்தொடை கொண்டை புனைந்து மணிபொன் இலங்கு பணிகள் அணிந்து மாகதர் போகதர் கூடிவணங்க மதன சொரூபன் இவன் எமன் மோக மங்கையர் கண்டு மருண்டு திரண்டு வரி விழிகொண்டு சுழிய எறிந்து மாமயில் போல் அவர் போவது கண்டு மனது பொறாமல் அவர் பிறகோடி மங்கல செங்கல சந்திகழ் கொங்கை மருவமயங்கி இதழ் அமுதுண்டு தேடி யமாமுதல் சேரவழங்கி ஒரு முதலாகி முதுபொருளாய் இ ருந்த தனங்களும் வம்பில் இழந்து மதனசுகந்த விதனம் இதென்று வாலிப கோமும் வேறு பிரிந்து வளமையும்மாறி இளமையும் மாறி வன்பல் விழுந்து இருகண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரைதிரை வந்து வாதவிரோத குரோதம் அடைந்து -
செங்கையினில் ஓர் தடியுமாகியே - 1/2
வருவதுபோவது ஒருமுதுகூனும் மந்தியெனும்படி குந்தி நடந்து மதியும் அழிந்து செவிதிமிர் வந்து வாயறியாமல் விடாமல் மொழிந்து துயில் வரும் நேரம் இருமல் பொறாது தொண்டையும் நெஞ்சமும உலர்ந்து வறண்டு துகிலும் இழந்து சுணையும் அழிந்து தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு கலியுகமீதில் இவர் மரியாதை கண்டிடும் என்பவர் சஞ்சலம் மிஞ்ச கலகல என்று மலசலம் வந்து கால்வழி மேல்வழி சாரநடந்து தெளிவும் இராமல் உரை தடுமாறி சிந்தையும் நெஞ்சமும் உலைந்து மருண்டு திடமும் உலைந்து மிகவும் அலைந்து தேறிநல் ஆதரவு ஏதெனநொந்து -
O5

Page 8
வாழ்க வளமுடன்
மறையவன் வேதம் எழுதியவாறு வந்தது கண்டமும் என்று தெளிந்து இனி என கண்டம் இனியென தொந்தம் மேதினி வாழ்வு நிலாதினி நின்ற - கடன் முறை பேசும் என உரை நாவு றங்கி விழுந்துகை கொண்டு மொழிந்து கடைவழிகஞ்சி ஒழுகிட வந்து பூதமும் நாலுசு வாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே 3/4
வளர்பிறை போல எயிறும் உரோம மும் சடையும் சிறுகுஞ்சியும் விஞ்ச மனதும் இருண்ட வடிவும் இலங்க மாமலை போல்யம தூதர்கள் வந்து வலைகொடுவீசி உயிர்கொடு போக மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து மடியில் விழுந்து மனைவி புலம்ப மாழ்கினரே இவர் காலம் அறிந்து பழையவர் காணும் எனுமயலார்கள் பஞ்சு பறந்திட நின்றவர் பந்தர் இடுமென வந்து பறையிட முந்த வேபிணம் வேக விசாரியும் என்று பலரையும் ஏவி முதியவர் தாமி ருந்தசவம் கழுவும சிலரென்று
பணிதுகில் தொங்கல் களபமணிந்து பாவகமே செய்து நாறும் உடம்பை வரிசை கெடாமல் எடுமென ஓடி வந்திளமைந்தர் குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து மானிட வாழ்வென வாழ்வென நொந்து விறகிடமூடி அழல்கொடு போட வெந்து விழுந்து முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி ஒர்பிடி நீறும் இலாத உடம்பை
- நம்பும் அடியேனை இனி ஆளுமே 1
1a Seo (ose
O6
 

வாழ்க வையகம் வாழ்க வளமுடன
தாயார்க்குத் தகனக்கிரியை செய்கையிற் பாடியவை Bilfapir GlauanjrUT
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்றபோதே பரிந்தெடுத்துச் செய்ய இரு கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி?
முந்தித்தவம் கிடந்து முந்நூறுநாள்சுமந்தே அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத்-தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல் மூட்டுவேன்?
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகிலிட்டுத் தீ முட்டுவேன்?
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலை தந்து வளர்தெடுத்துத் தாழாமே-அந்திப் பகல் கையிலே, கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ மெய்யில்ே தீமூட்டுவேன்
அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ மானே என அழைத்த வாய்க்கு?
அள்ளியிடுவது அரிசியோ? தாய் தலைமேல் கொள்ளிதனை வைப்பேனோ? கூசாமல் மெள்ள முகமேல் முகம் வைத்து முத்தாடி,என்றன் மகனே. என அழைத்த வாய்க்கு?
கவி விருத்தம்
முன்னை இட்டதீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையிலே அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே யானும் இட்ட தீ மூள்க, மூள்கவே,
O7

Page 9
வழிக வையகம் வாழ்க வளமுடன்
அமரர் திருமதி இருறுமுகம் சொர்ணம்மா இவர்களின் வாழ்க்கைப் பாதையில்.
இலங்கையின் வடமானிலத்தின் தமிழ் மணங்கமழும் தீவகத்தின் மையமாம் வேலணையின் கடைஞ்சிமாலைப் பிறப்பிடமாகக் கொண்ட பெரியார் சரவணமுத்து அவர்கட்கும் நாவலடிப்புலத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்மையார் சின்னாச்சி அவர்கட்கும் அருந்தவப்புதல்வியாகத் தோன்றியவர் தான் மங்கை சொர்ணம்மா. இவருடன் உடன் பிறப்புக்களாகத் தோன்றியவர்கள் கணேசலிங்கம், சிதம்பரநாதன் எனும் பாசமிகு சகோதரர்கள் ஆவர்.
உரியகாலத்தில் பெற்றோர்கள் இவரின் உறவுக்காரர் ஆகிய இளையதம்பி - ஆறுமுகம் என்பவரை மணமுடித்து வைத்தனர். இல்லற வாழ்க்கையை ஆரம்பித்த நாள் முதல் சிறந்த இல்லத்தரசியாக, கணவனுக்கு ஏற்ற அன்பு மனையாளாக வாழ்ந்து இல்லம் சிறப்புற அர்ப்பணிப்புடன் குடும்பத்தை வழிநடத்தி வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் இல்லற வாழ்க்கையின் பயனாக தியாகராஜா, யோகராஜா, சிறீஸ்கந்தராஜா, பரமேஸ்வரி, தங்கராஜா, விஜயா, விஜயராஜா, மோகனராஜா ஆகியோரைப் பிள்ளைகளாகப் பெற்று அன்புடனும் பாசத்துடனும் நற்பண்புள்ளவர்களாக வளர்த்தார். இவர்களில் விஜயா, விஜயராஜா, சிறீஸ்கந்தராஜா ஆகியோரை இளவயதில் காலன் காவு கொண்ட போதிலும் அவர்களின் இழப்பால் ஆறாத்துயர் அடைந்தும் மனம் தளராது ஏனையோரை நல்லொழுக்க சீலர்களாக வளர்த் தெடுத்து ஆளாக்கினார்.
தனது குடும்ப வாழ்க்கையை சீராக அமைத்து வாழ்ந்த காலத்தில் தனது அன்புச் சகோதரர்களையும் திருமண பந்தத்தில் இணைய வைத்து மகிழ்வுற்றர்.
கணேசலிங்கத்திற்கு வேலணை மேற்கு முடிப்பிள்ளையர் கோவிலடியைச் சேர்ந்த மயில்வாகனத்தின் புதல்வி ஞானேஸ்வரி யையும், சிதம்பரநாதனுக்கு தாய்மாமன் ஆகிய நல்லதம்பியின் புதல்வி சரஸ்வதியையும் திருமணம் செய்து வைத்து மைத்துணிகளாக ஏற்று அவர்களின் ஊடாக பதின்னான்கு மருமக்களைக் கண்டு இன்புற்றார்.
O8

வாழ்க வையகம் syryjs nawGtp_ał
1970 ஆண்டு தனது சிரேஸ்ட புதல்வன் தியாகராஜாவிற்கு கல்வியங்காடு வேளாதோப்பைச் சேர்ந்த தம்பிராஜாவின் மகள் சந்திரமலரை மணமகளாக்கி திருமணத்தை நிறைவேற்றி மகிழ்ந்ததுடன் அவரின் குடும்ப வாழ்க்கை சிறப்புற அமைந்ததைக் கண்டு அகமகிழ்ந்தார்.
1971" ஆண்டு கணவனை இழந்த நிலையில் சிரேஷ்ட புதல்வர்களின் துணையுடன் பிள்ளைகளைச் சீரும் சிறப்புடனும் வளர்த்து ஆளாக்கினார்.
இரண்டாவது மகன் யோகராஜாவிற்கு கட்டுவனைச் சேர்ந்த தம்பிராஜாவின் புதல்வி நாகம்மாவையும், மகள் பரமேஸ்வரிக்கு யாழ்ப்பாணம் நாவலர் வீதியைச் சேர்ந்த பரமசிவத்தின் மகன் சிவபாலனையும், மகன் தங்கராஜாவிற்கு மட்டுநகர் ஆரையம்பதி - மாவிலங்கத்துறையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளையின் மகள் அன்னம்மாவையும், மகன் மோகனராஜாவிற்கு வேலணையைச் சேர்ந்த ஏகாம்பரத்தின் மகள் சுகதாவையும் திருமணஞ்செய்து வைத்து அகமகிழ்வெய்தினார். பிள்ளைகளின் குடும்பங்கள் வாயிலாக பேரப்பிள்ளைகளாக சிவகுமார், சிவதர்சினி, சிவந்தினி, சுதர்சன், திவாகர், கிஷாந்தன், டினேஸ்காந்தன், ஹரிராம் ஆகியோரையும் பூட்டப்பிள்ளைகள் ஆக பிரியந்தன், வினுஜன் ஆகியோரையும் கண்டு இன்புற்றார். பிள்ளைகளின் கல்வியிலும் உரிய கவனம் செலுத்திய அன்னை ஆரம்பக்கல்வியைத் தொடர்ந்து பிள்ளைகளுக்கு வாணிபத்துறையில் வழிகாட்டியாக அமைந்த போதிலும் மகன் தங்கராஜாவின் உயர் கல்வியில் அதிக அக்கறை செலுத்தி அவர் யாழ்ப்பானப் பல்கலைக்கழகம் சென்று விஞ்ஞானமானிப் பட்டம் பெற்று ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டதைக் கண்டு பெருமகிழ்ச்சி யடைந்தார்.
பேரப்பிள்ளைகள் கல்வித்துறையில் அதிக ஈடுபாடு காட்டுவதையும் அவர்கள் கணக்காளர்கள், மருத்துவர், பொறியியலாளர் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெறுவதைக் கண்டு மிகப் பெரியளவில் மகிழ்ச்சியடைந்தார்.
தனது 83" வயதிலும் தன்னம்பிக்கையுடனும், உடல்நலத்துடனும் வாழ்ந்து தனது செயற்பாடுகளை தானே நிறைவேற்றி வாழ்ந்து வந்தார்.
வாழ்க்கையில் பெருமளவில் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்த அன்னை இயற்கைத் தத்துவத்திற் கேற்ப உயிர்களுக்கான இறப்பின்
09

Page 10
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நிட்சயத்தை உறுதிப்படுத்துவதாக 13.04.2010 அன்று திடீரென நோய் வாய்ப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் உணர்விழந்த நிலையில் இருந்து 18.04.2010 அன்று இறைவெளியுடன் இணைந்து கொண்டார்.
எங்கள் அம்மாவின் திடீர் மரணம் எங்கள் எல்லோருக்கும் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டும் உண்மை, ஆனாலும் இன்னமும் குறிப்பிடக் கூடிய காலம் வாழ்வார் என எதிர்பார்த்த எங்களுக்கு அவரின் திடீர் மரணம் ஏமாற்றத்தைத் தந்த போதிலும் அவரின் எண்ணப்படி யாருக்கும் எந்தத் துன்பங்களையும் ஏற்படுத்தாது தானும் வருத்தப்படாமல் மரணத்தைத் தழுவியது அவருக்கு இறைவனால் வழங்கப்பட்ட ஆசீர்வாதமாகவே எல்லோரும் ஏற்றுக்கொள்வதால் நாமும் அவ்வாறே ஏற்று மனதைத் திடப்படுத்திக் கொள்கின்றோம்.
எங்கள் அம்மாவின் ஆத்மா இறைநிலையுடன் இணைந்து எங்கள் எல்லோருக்கும் வழிகாட்டுவதாக அமைய வேண்டி இறைவனைப் பிரார்த்தித்து நிற்கின்றோம்.
நன்றி
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
ஓம் சாந்தி சாந்தி: சாந்தி:
உறவுகள் மேம்பட.
葵 நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். 17އި
அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசின்கொண்டே 齊 இருப்பதை விடுங்கள்.
 

Airps Gadamu USA) வாழ்க வளமுடன்
நேரில் நின்று பேசும் தெய்வமாகிய பெற்றதாய்க்கு பிள்ளைகளிடம் இருந்து வரும் இரங்கல்
பாசத்தாயே..
தாய்ப்பாசத்திற்கு இலக்கணமாக இருந்து என்னையும் என் குடும்பத்தையும் வாழவைத்த என் அன்னைக்கு என் கண்ணிரைக் காணிக்கையாக்கி அம்மாவின் ஆத்மா சாந்தி பெறப் பிரார்த் திக்கின்றேன்.
மகன் தியாகராஜா
1Seo) (6s2
அன்பின் இஹற்றாசிய ஆச்சிக்கு.
என்னுடைய ஆச்சி என்றைக்குமே கவலைப்படக் கூடாது என்ற உயரிய நோக்கத்தைக் குறிக்கோள் ஆகக்கொண்டு அதற்கு செயல் வடிவம் கொடுத்த எனக்கு ஆச்சியின் ஆசீர்வாதம் முழுமையாகக் கிடைத்த நிறைவு ஏற்பட்ட போதிலும் ஆச்சியின் திடீர் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து விடுபடுவது தான் சற்று கனதியாக உள்ளது இக்கனத்த இதயத்துடன் என்னுடைய ஆச்சியின் ஆத்மா சாந்திபெற இயற்கையை வேண்டி நிற்கின்றேன்.
(பிள்ளைகள் எல்லோரும் காலத்தின் மாற்றத்திற்கேற்ப ஆச்சி என்ற பேச்சு வழக்கை அம்மா என மாற்றிய போதிலும் இவர் மட்டும் இறுதி வரை அந்த ஆச்சி என்ற பேச்சு வழக்கையே பின்பற்றி வாழ்பவர்
ஆகும்)
மகன் - யோகராஜா

Page 11
வழக வையகம வாழ்க வளமுடன்
தெய்வத்தின் திருவுருவமாகிய அம்மாவே.
“என்ரை அம்மா என்ரை தெய்வம்” என்ற அடிமன ஏக்கத்துடன் கூடிய துயர் நெஞ்சை அடைக்க, 'தங்கச்சி” என்ற சொல்லை இனி எப்போ கேட்பேன் என்ற கவலை மனதைக் கல்லாக்க, அம்மாவின் இழப்பால் ஏற்பட்ட வெறுமையும் தனிமையும் வாழ்வின் தத்துவத்தை புரிய வைத்த நிலையில் இருந்து கொண்டு என் கண்ணிர்த் துளிகளால் என் தெய்வத்திற்கு ஆராதனை செய்து அவரின் ஆத்மா சாந்தி பெற நாராயணனைப் பிரார்த்திக்கின்றேன்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
மகள் - பரமேஸ்வரி (ரதி)
一つ。ミ三○○三条ー
பாசத்தின் முழுவடிவ அம்மாவே.
என் கல்விச் செயற்படுகளுக்காக தன்னை முழுமையாக அர்பணித்து என்னை ஆளாக்கியதுடன் நாள்தோறும் எனக்குக் கூறும் ஆசிகளை எண்ணும் போது தாய் உள்ளத்திற்கு நிகர் அந்தத் தாயைத் தவிர வேறு ஏதும் இருக்கமுடியாது. எனக்காக என் அம்மா பட்ட கஷ்டங்களை எண்ணும் போது இந்த அன்பு உள்ளத்தை இனி எங்கு சந்திப்போம் என ஏங்கியபடி எனது அம்மாவின் ஆத்மா இறைநிலையுடன் இணைந்து கொள்ள வேண்டி பிரார்த்திக்கின்றேன்.
コトミー・○ーつ மகன் - தங்கராஜா
பெற்றமனம் பித்து என்பதற்கு இலக்கணமான அம்மாவே.
நான் சாப்பிட்டு வயிறு நிறையும் போது என் எதிரில் இருந்து என்னை அவதானிக்கும் என் அம்மாவின் முகத்தில் தெரியும் முகமலர்ச்சி தனது வயிறு நிரம்பிய சந்தோசத்தை வெளிக்காட்டுவதாக அமையும். இதனை எண்ணும் போது என்னிடம் என் அம்மாவின் அன்பை விபரிக்கவே வார்த்தைகள் இன்றி தவிக்கின்றேன். ஒன்றுமட்டும் உண்மை என் அம்மாவின் ஆசீர்வாதம் என்னையே சுற்றிவரும் எப்போதும் மகனே பார்த்துப்போ பார்த்துப்போ என்று என்னைஎச்சரித்த படியே இருக்கும் என்ற நம்பிக்கையுடன் என் கண்ணிரை என் அம்மாவுக்கு காணிக்கையாகச் செலுத்தி ஆத்மா சாந்தி பெறப் பிரார்த்திக்கின்றேன்.
மகன் - மோகனராஜா
〜コミ三○○三条ー
12
 


Page 12

வழக வையகம வாழ்க வளமுடன்
பாசமிகு அப்பம்மா.
பேரன் புலம்புகிறேன் கேளப்பம்மா - உன் மூத்த பேரன் புலம்புகிறேன் பாரப்பம்மா - சுட்டாறிய தண்ணிரோ போத்தல் நிறைய நீநிரப்பி - அன்பாய்ப் போகப் போகத் தருவாயே கொண்டுபோடா என்பாயே நான் கொழும்பு வந்ததையும் அறியாமல் - ஒருமுறை நான் வருவேன் என்று வாசலிலே காத்திருந்தாயாமே? பல முறை பாரப்பம்மா எனைப் பாரப்பம்மா - நான்வந்து விட்டேன் - ஆனால் பாரினிலே நீயில்லையே ஏனப்பம்மா????
மூத்த பேரன் பெண்டாட்டி நான் - நீங்கள் வயதில் மூத்தவளாய் இருந்தாலும் அப்பம்மா என்னை வார்த்தைக்கு வார்த்தையாய் வாங்கோ போங்கோவென்று வாய்நிறைய அழைப்பீர்களே அப்பம்மா!. பேத்தி என்னைப் பார்க்க மீண்டும் வருவீர்களோ பிறப்பெடுத்து? - எம்புலம் பல்களை பார்த்துத்தான் கொண்டிருப்பீர்களோ - சொர்க்கத்திலிருந்து
பூட்டி பூட்டி. ஆறுவயதுச் சிறுவன் இப்பூட்டன் பூட்டியென்றும். பாட்டியென்றும், கிழவியென்றும் - வாயுழைய சேட்டை பண்ணும் என்னுடனே - பூட்டி நீங்களும் சேட்டை பண்ணி சமாதானமும் ஆகினிர்களே - ஒரு கிழமைக்குமுன் பூட்டி!. நீங்களெங்கே - அப்பா கொண்டுவரும் லப்ரொப்பில் எனைப் பார்த்து பூட்டா! வெளியே வாடா என உரிமையுடன் அழைக்க இனி uustiftu(335???
மூத்தபேரன், பேத்தி, அனபுபமுடடன (சிவகுமார் குடும்பம்) கொழும்பு, வெள்ளவத்தை.
1so set
13

Page 13
வழ்க வையகம் வாழ்க வளமுடன் பிரியமுள்ள அப்பம்மா.
சந்தனப் பொட்டு, அருட்டானக்குறி, கோடம்பாக்கம் சேலை இவைதான் எங்கள் அப்பம்மாவின் குறியீடுகள். இவை அனைத்தும் எங்கள் அப்பம்மாவின் தோற்றத்திலும் செயற்பாட்டிலும் அவரின் தனித்துவத்தை எங்கள் கண்முன் காட்டி நிற்கின்றன. தள்ளாத வயதிலும் என்னை வழி அனுப்ப விமான நிலையம் வரை வந்து என்னை வாழ்த்தி அனுப்பிய காட்சி இன்றும் என் கண்களை விட்டு அகலவில்லை ஆனால் நீண்ட இடைத்துாரம் எங்களையும் எங்கள் அப்பம்மாவையும் பிரித்து நின்று தனது பூட்டப்பிள்ளையைப் பார்க்க விடாது தடுத்துவிட்டது. அத்துடன் எங்களையும் அப்பம்மாவின் பூத உடலைக்கூட பார்க்கமுடியாத இக்கட்டை ஏற்படுத்தியதால் தாங்கொணாத் துயரத்தைத் சுமந்த வண்ணம் என் குடும்பம் தத்தளிக்கின்றது. இத்துயரத்துடன் கூடிய எங்கள் கண்ணிர்த் துளிகளை பிரியமுள்ள அப்பம் மாவின் பாதங்களுக்கு காணிக்கையாக்கி அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பேறிப்பிள்ளைகள் மோகனகுமாரன் - சிவதர்சினி பூட்டப்பிள்ளை - வினுஜன் (லண்டன்)
1Neo oses
ஆசை அப்பம்மா.
தள்ளாத வயதிலும் தன்னம்பிக்கையை இழக்காத அப்பம்மா, நியாயங்களை முன் வைப்பதில் எங்கள் குடும்பத்தின் தலைமை நீதிபதி எங்கள் அப்பம்மா, கருத்தாளம் கொண்ட பழமொழிகளைக் கூறி தனது எண்ணங்களை வெளிப்படுத்துவதில் அப்பம்மாவுக்கு நிகர் அப்பம்மாதான். தனது அனுபவத்தை எங்கள் எல்லோருக்கும் பாடப்புத்தகமாக வெளிக்காட்டியவர் எங்கள் அப்பம்மா. நீண்ட தூர இடைவெளி எனது அப்பம்மாவின் பூதஉடலைப் பார்க்கத் தடையாக இருந்ததால் இன்றும் என் இதயம் கனக்கின்றது. கனத்த இதயத்தில் இருந்து எங்கள் அப்பம்மாவின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனைகளை காற்றலையாக உதிர்த்து நிற்கின்றேன்.
பேரன் சுதர்சன் (96.6d)G665us)
-e Seco ose
14
 

வாழ்க வையகம வாழிக வளமுடன்
அன்பு நிறைந்த அப்பம்மா.
உறவு என்றால் என்ன? அன்பு என்றால் என்ன? மனிதநேயம் என்றால் என்ன? இறைபக்தி என்றால் என்ன? இத்தகைய வினாக்களுக் கெல்லாம் விடைதந்த ஒருவராக எம் கண்முன் எங்கள் அப்பம்மாவே இருந்தார். அவரின் செயற்பாடுகள், பேசும் வார்த்தைகள், கூறும் பழமொழிகள், சொல்லும் விடுகதைகள் யாவும் சிறியவர்கள் ஆகிய எங்களை மிகவும் வியக்க வைத்ததுடன் பல விடையங்களில் விழிப்புணர்வு அடையவும் செய்துள்ளன.
எங்கள் அப்பம்மாவின் ஆத்மா என்றும் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுவதுடன் அவரின் ஆத்ம சாந்தி வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பேரப்பிள்ளைகள் திவாகர், கிஷாந்தன், டினேஸ்காந்தன்
1Neg (exse
LIGJuồJ ESPIůıuubLOMI
என்னைப் பார்ப்பதற்கு ஏங்கியிருந்த அப்பம்மா என் மழலை மொழி கேட்டிருந்த SÜLILöLDIT என் சுட்டித்தனத்தைப் பாராட்டிய அப்பம்மா என்றுமே நான் மறவாத அப்பம்மா - அப்பம்மா , அப்பம்மா
1乐

Page 14
பாசமுள்ள மாமி
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் பிறந்தோம் இயற்கையின் ஒன்றிணைப்பால் ஒரு குடும்ப உறவுகள் ஆனோம். உங்களுடன் பழகிய காலங்களில் உங்களின் தனித்துவத் தன்மைகளைக் கண்டு வியந்தோம். உங்கள் பிள்ளைகளின் துணைகளாக வந்த எங்களையும் உங்கள் பிள்ளைகள் போலவே எண்ணி எங்களுக்கும் வழிகாட்டியாக வாழ்ந்த உங்கள் பிரிவு எங்கள் எல்லோருக்கும் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் ஆத்மா இறைநிலையுடன் இணைந்து சாந்தி பெறப் பிரார்த்திக் கின்றோம்.
ஒம் சாந்தி சாந்தி சாந்தி
மருமக்கள்
- சந்திரமலர் - நாகம்மா
- சிவபாலன்
- அன்னம்மா
- சுகதா
உறவுகள் மேம்பட.
அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்
அவ்வவ்போது நேரில் சந்தித்து மனந்திறந்து பேசுங்கள்
:
அற்ப விசயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்
16

வழக வையகம் வாழ்க வளமுடன்
தம்பி கணேசனின் புலம்பல்
வேலணையின் கிழக்கில்: விடி வெள்ளியாக அன்றுதித்த "சொர்ணம்” எனும் சொப்பன சுந்தரி - இன்றுவரை அன்புக்குப் பாலமாய்: அழகிற்கு இலக்கணமாய் பண்புக்கு கொழு கொம்பாய் இல்வாழ்விற்கு இலக்கணமாய் - உன் தம்பிமார் இருவருக்கும் தலைமகளாய் தலைசிறந்து தரணியில் நாம் வாழ நமக்கெல்லாம் உதாரணமாய் ஊருக்கோ.
வாய்விட்டு ஆ. சொல்லும் ஆட்காட்டி விரலானாய் உன்னால் நான் கொண்ட உறுதி இன்றும் என்மனச்சுவரில் உருக்குலையாது உன்னுருவை மெளனமாக வரைகிறது ஊமையாய் அழுகின்றது. அக்கா. அக்கா.
ஏதோ பிறந்தோம் ஏதோ வளர்ந்தோம் என்றன்றி வடநாடு நான் வந்திடினும் பிரிவின் பரிவிலும் - உன் உருவக் கிறுக்கல்களும் உள்ளச் சிதறல்களுமே - என்னை இங்கு உலாவச் செய்து கொண்டிருக்கும் என் பிராண வாயு.
உன்முகம் கண்ட - அந்த வேலணை மண்ணும்
மணல் புதைத்து
நடைபயின்று
தடம் பதித்த - நம் பாதச் சுவடுகளுமே - நம் நாவலடிப் புலத்தில் நாம் வாழ்ந்த வாழ்வின் சரித்திரப் பக்கங்கள் இம்மையில் நாம் கண்ட வாழ்வின்
17

Page 15
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
இனிமையான தொடு கோடுகள். அக்கா. அக்கா. அன்று நானழைத்த அதே குரலில் அழைத்து அழைத்து விழிக்கின்றேன். விழி மூட முடியாமல் தவிக்கின்றேன் அக்கா. மாண்டு நீ போன பின்பும் நீண்டு போன உன் நினைவுகளால் என் கண்ணிரைக் கடக்க முயன்றும் தோற்றுப் போகின்றேன் அக்கா வடநாட்ாம் இந்தியாவின் திருச்சியிலே தனிமரமாய் என் துணையுடனும் பிள்ளைகளுடனும் திணறுகின்றேன் அக்கா. அக்கா . அக்கா. என் தாய்க்கு நிகரான அக்காவே - உன்னை இனி தரிசிப்பதெப்படி? சாவின் மாளிகைக்குத்தான் ஜன்னல்கள் கிடையாது
ஒ மரணமே . நீ
திருடிய பொக்கிஷத்தை திருப்பிக் கொடுத்து விடு - அக்கா அருகிலின்றி காற்று மண்டலமே சூனியமாகிவிட்டது எமக்கு அயிரம் கண்ணிருக்கு ஆறுதல் கூறிய நீ இன்று - எம் கண் காணாது மெளனித்து ஸ்தம்பித்து விட்டாயே. நீயில்லாத உன் இந்த தமியிக்கு வாழ்க்கை தனது
முகமூடியைக் கழற்றி முகத்தைக் காட்டி விட்டது, அக்கா. உன்னால் கருக் கொண்டு உருப் பெற்ற உன் நான்கு ஆண் வாரிசுகளும் ஏக புதல்வியும் - கிளைபரப்பி செழிப்பாகும் தருணம் உன்க்கென்ன குறைகணடு - வையத்திலிருந்து விண்ணுக்கு இடமாற்றம் பெற்றாயக்கா?
18
 

aryn nauskä வாழ்க வளமுடன்
முள் குத்தி முகம் கோணி நாமழுதால் நழக்கு - முன்னுனக்கு கன்னம் நனையுமே அக்கா இப்போது மட்டும் நியே ஏனெமக்கு இப்படியானாய். இடிதாங்கியாயிருந்த நீ இன்று எம்மை கண்ணிரே கதியென்றாக்கி - நீ மட்டும் அணையாத தீபமாகிவிட்டாயே அக்கா விட்டில் பூச்சிகளயிருந்த எமக்கு திசைகாட்டி முகவரி தந்த நீ நிச்சயம் - என்றுமே உருவம் காட்ட மறுத்து உணர்வுகளால் மட்டுமே தொட்டுத் தொட்டு
பேசிச் செல்லும்
பீனிக்ஸ் பறவைதான் எமக்கு நீ அக்கா.
என்றும் உன்னுடன் பேசத்துடித்து கண்ணி வடிக்கும் தம்பி கணேசலிங்கம் (குடும்பம் சார்பாக).
1Nso 6s2
உறவுகள் மேம்பட.
உங்கள் கருத்துக்களில் உடுப்புப்பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
为 எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும் அவர்களுக்கு
சம்பந்தம் உண்டோ இல்லையோ அவர்களுக்கு சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்
19

Page 16
வழிக வையகம் வாழ்க வளமுடன்
தம்பி சின்னத்துரையின் புலம்பல் (சிதம்பரநாதன்)
வேலணை மண் விட்ட வேரறுத்து இன்று என் வைர மனம் நொருங்குகிறது அக்கா. சொர்ணாக்கா தொடர்ந்து அழைத்தும் நீ ஏன் வர மறுக்கின்றாய்
9....... சொர்ண ராகம் முடிந்து விட்டதா? எம் தெய்வீக ராகம் மெளனித்த விட்டதா? எம் குடும்ப வீணையில் ஆனந்த, நரம் பொன்று அறுந்து விட்டதா? உன்னைக் காண காத்திருந்த கண்கள் இப்போது கனம் தாங்க முடியாமல் நனைகின்றது உனக்காக நான் எழுதும் இந்த கவிதைத் தாள்களை கண்ணிர்க் கவியை உனக்கென்று எழுதவா என் கைகள் இன்னும் முடமாகாதிருக்கின்றன. அக்கா. அக்கா. எண்பத்திரெண்டு வருட காலத் தென்றல் நின்றுவிட்டதால்
மனதிலே புழுக்கம் கண்ணிலே கண்ணிராக வியர்வை அக்கா. அக்கா. உன் பூத உடலிலே விழுந்த பூவிலுள்ள தேனெல்லாம் கண்ணிராய் மாறிய விதம் பிரமையல்ல நிஜம்
கடைசியில் எங்கள் தங்கம் தகன மடைந்ததுவே.
ஐயகோ. தி தின்றுவிட்டதே - உன் பிள்ளைகளின் கண்ணிர் வடித்து வரண்டு விட - நீ
20
 

வழக வையகம வாழ்க வளமுடன்
சிதைச் சிம்மாசனமேறி விட்டாயே அக்கா. சுடுகாட்டுத் தியோ உன்னைச் சுட அது என் உயிரைச் சுட்டது. நீயற்ற சூழல். சூன்யமே என்னைச் சுற்றிக் கொண்டது. யாருடைய சாவுக்குமே மரணம் மட்டும் மனதார வருத்தப்படாத போதும் என்றோ ஒரு நாள் மரணத்திற்கு மனச்சாட்சி வந்தால் நிச்சயம் உன்னிடம் ஓடி வந்து மன்னிப்புக் கேட்கும் அக்கா - உன் காலடிச் சுவடு அழியினும் காலச் சுவடு அழிந்திடாது - நம் நாவலடிப் புலக் கிராமத்துக் காற்றில் கூத்தியமாய் கலந்திருக்கும் உன் வீராப்பான பேச்சு மொத்தத்தில் உன் மரணம் கூட ஆச்சரியம் தான் பூமியைத் தோண்டித்தான் வைரம் எடுப்போம் இன்று தான் முதன் முதலாய் பூமியைத் தோண்டி வைரத்தைப் புதைத்திருக்கின்றோம் அன்று என்னுடன் நீ பேசிய சிரித்த சக்கரைப் பொழுதுகள் மீண்டும் என்னுடன் எட்டிப்பார்த்து என்னை சீண்டி அழுகின்றேன் சொர்க்கத்தில் சந்திக்கலாம் அக்கா. சொர்க்கத்தில் சந்திக்கலாம் ஆம் அக்கா. இந்த நம்பிக்கை நிஜமானால் - உனக்கு மட்டுமல்ல எனக்கும் கூட அங்கு கிடைக்கும் - எம் "பழைய சக்கரைப் பொழுதுகள்” ஊருக்கு நிழல் வழங்க தன் தலை தாங்கும்
21

Page 17
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
விருட்சம் போலாகி - எம்மை கோபுரமேற்றியவளே. போதும். போதும். உன் ஞாபக அலைகள் மோதி - என் இதய வாசல்கள் சின்னா பின்னமாகின்றன என் இதய நிலாவுக்கு இனியென்ன விடியல்? நித்திய அமாவாசை தான் இருளின் மடியில் உலகம் உலகின் மடியில் இருள் என்றா எம்மை யெல்லாம் தள்ளிவிட்டாய் இருட்டுக்குள். கும்மிருட்டுக்குள் நானிருந்து குழறும் ஒவ்வோர் தருணமும் தம்பி. என்று நீயணைத்து நீவி விடும் அன்பு ஞாபகம் என்னை திடுக்கிட வைக்கிறது அக்கா. மாண்டு போன உன் உருவம் என்றுமே என் மனக் கரும்பலகையில் ஆங்காங்கெ வெண்கட்டியால் போடப்பட்ட புள்ளிகளின் வலைப்பின்னலே!
மிளாத் துயருடன் நீளும் நினைவுடனும் கண்ணிக் கவி கூறும் உன் கடைசித்தம்பி சி.சிதம்பரநாதன் (சின்னத்துறிை) (ഭ്രധb (Uക)
1Nso cose
உறவுகள் மேம்பட.
郑 பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
22
 

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
நன்றி நவிலல்
எமது அன்னையின் மரணச் சடங்கையிட்டு எமக்கு பல வழிகளிலும் உதவிபுரிந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் ஈமக்கிரியைச் செயற்பாட்டில் நேரடியாகப் பங்குகொண்டவர்கட்கும் மரணச்செய்தி கேட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து தொலைபேசி மூலம் துயரில் பங்கு கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும். மருத்துவமனையில் இருந்த போது பல்வேறு உதவிகள் புரிந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடமாணவர்கட்கும் மற்றும் உற்றார். உறவினர். நணபர்கள், அயலவர்கள் அனைவர்க்கும் மற்றும் இன்றைய வீட்டுக்கிருத்தியக் கிரியைகளில் பங்கு கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்தனை செய்தோருக்கும் மற்றும் உதவிகள் புரிந்தோருக்கும் இம்மலரினை அழகுற அச்சேற்றித்தந்த விகடன் அச்சக உரிமையாளர் ஊழியர்கட்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
இங்ங்னம் குடும்பத்தினர்
1Nso os2S
23

Page 18
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாய் அன்றி வேறொன்று ஏது
(εώρα)
அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி திருக்கோயில்த் தெய்வங்கள் நீதானம்மா அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம் புரிகின்ற சிறுதொண்டன் நான் தானம்மா பெருளோடு புகழ் வேண்டும் மகன் அல்ல தாயே உன் அருள் வேண்டும் என்க்கின்று அதுபோதுமே அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உன்தன் மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே அதை நீயே தருவாயே.
(εώρα)
பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம் அவையாவும் ஒருதாய்க்கு இடாகுமா விலைமீது விலை வைத்து கேட்டாலும் கொடுத்தாலும் கண்டதன்னில் தாய் அன்பு கிடைக்காதம்மா இhஐந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி நீபட்ட பெரும்பாடு அறிவேனம்மா இரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கின்று நான்பட்ட கடன்திருமா உன்னாலே பிறந்தேனே.
(9ώωρα)
கவிஞர் - வைரமுத்து
24
 


Page 19
சரவணமுத்து - சின்னாச்சி
கணேசலிங்கம் சிதம்பரநாதன் சொர்ணி
-H sh
ஞானேஸ்வரி சரஸ்வதி
ー
புவனேஸ்வரி கமலேஸ்வரி குகதாசன் விமலேளல்வரி கோணேஸ்வரன்
-- -H mகனேசரட்னம் இராசமலர் விஜயநாதன்
956)69 st சபிதா திவ்வியா 8F(658Fuj6. selgoj69 st சஜீவன்
-
மாலதி முருகதாளில்
--
சிவலிங்கம்
லுஜிதன் gFir u 56m fir லிபிஜன்
தியாகராஜா யோகராஜா *சிறீஸ்கந்தராஜா பரமேஸ்வரி
r- - சந்திரமலர் 5m 35.LbLDT சிவபாலன்
சிவகுமார் சிவதர்சினி *சிவந்தினி சுதர்சன்
( 6υ 6οστι 6ότ) (அவுஸ்ரேலியா) -- -- மணிமொழி மோகனகுமாரன்
(6)6Ooll 65)
பிரியந்தன் வினுஜன்
(6)6Oo. 65i )

வம்சாவழி
இளையதம்பி " நாகத்தை
சோமசுந்தரம் செல்லம்மா அன்னம்மா தங்கம்மா ஆறுமுகம்
wo- -- 一+一
subos --
இலட்சுமிப்பிள்ளை சுப்பிரமணியம் நடராஜா ஆறுமுகம்
விக்கினேஸ்வரன் ஜங்கரன் ஆனந்தி ரஜேந்தி
H H தரணிதரன் வரதகஜன்
அக்ஷயன்
சுமதி சிவதாளில் கிருஷ்னதாளில்
சிவநேசன்
தங்கராஜா *விஜயா விஜயராஜா மோகனராஜா
-- H அன்னம்மா சுகதா
l | |
திவாகர் கிஷாந்தன் டினேஸ்காந்தன் ஹரிராம்
"அமரர்களைக் குறிக்கும்

Page 20


Page 21
எது நடந்ததோ, அது நன்றாகவே எது நடக்கிறதோ, அது நன்றாகே எது நடக்க இருக்கிறதோ, அதுவு உன்னுடையது எதை இழந்தாய், எதை நீ கொண்டு வந்தாய் அதை எதை நீ படைத்திருந்தாய் அது வ எதை நீ எடுத்துக்கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது எதைக் கொடுத்தாயோ , அது இங்கேயே கொடுக்கப்பட்டது எது இன்று உன்னுடையதோ இது நாளை மற்றொருவருடையதா மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்
இதுவே உலகின் நியதியும், எனது படைப்பின் சாராம்சமுமாகும் - பகவான் ஜீ கிருஷ்ணர் -
 
 
 

நடந்தது. வே நடக்கிறது. ம் நன்றாகவே நடக்கும். எதற்காக நீ அழுகிறாய் ? * நீ இழப்பதற்கு ? னோவதற்கு ?