கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கண்மணி அம்மா அருணாசலம் (நினைவு மலர்)

Page 1
நல்லூரை அமரர் கண்மணி அ
அவர்களின் சிவ
2 நினை 2:இ 03-07 ସ୍ୱା
 
 
 
 
 
 
 


Page 2
மெழுகுவர்த்தியாக இருந்து
தன்னையே உருக்கி ஒளியூட்டிய
எங்களின் ஆருயிர்த் தெய்வம் எங்கள் அம்மாவின்
பாதக் கமலங்களுக்கு
இம்மலரைக் காணிக்கையாகச்
சமர்ப்பிக்கின்றோம்.
இங்ங்ணம் பிள்ளைகள்.
 
 
 
 


Page 3

ಙ್ಗಣಿಜ್ಮ 塚
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே. திருஞானசம்பந்தர் தேவாரம் - 1 திருமுறை தோடுடைய செவி யன்விடை யேறியோர்
- தூவெண்மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங்கவர்
- கள்வன் ஏடுடைய மல ரான்முனை நாட்பணிந் தேத்த அருள்செய்த பிடுடைய பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (1)
வேத மோதி வெண்ணுல் பூண்டு வெள்ளையெருதேறிப்
பூதஞ் சூழப் பொலிய வருவார் புலியினுரி தோலார் நாதா என்வும் நக்கா எனவும் நம்பா எனநின்று
பாதந் தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே. (2)
பூவார் மலர் கொண்டடியார் தொழுவார் புகழ்வார்
- வானோர்கள்
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கருள் செய்தார் தூமாமழை நின்றதிர வெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணை வந்தணையுஞ் சாரல் அண்ண்ா
- மலையாரே. (3)
22222220 1 2422222

Page 4
ಟಿಶ್ಯೂ
நன்றுடையானைத் தியதிலானை நரை வெள்ளேறு றொன்றுடையானை உமை யொடு பாகம்
- உடையானைச் சென்றடையாத திரு வுடை யானைச் சிராப்பள்ளிக் குன்றுடை யானைக் கூற என்னுள்ளங் குளிரும்மே. (4)
கற்றாங் கெரி யோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ் தில்லைச் சிற்றம் பல மேய முற்றா வெண்டிங்கண் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே. (5)
மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையும் ம்பற் பூச்சுங்கீழ் உடையுங் கொண்ட உருவம் என் கொலோ. (6)
உண்ணாமுலையுமை யாளொடு முடனாகிய வொருவன் பெண்ணாகிய பெருமான் மலை திரு மாமணிதிகழ மண்ணார்ந்தன வரு வித்திரண் மழலைமுழ வதிரும் அண்ணாமலை தொழுவார் வினை வழுவா
- வண்ணமறுமே. (7)
திருஞானசம்பந்தர் தேவாரம் - 2ம் திருமுறை
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தேன்
உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே. (1)
s
{
కృష్ణా 2Dzzzz
vậNw

ಟಿಜ್ಮ
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே.
(2)
சடையா யெனு மால் சரணி யேனு மால்
விடையா யெனு மால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமா விவஞண் மெலிவே. (3)
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம் பந்தன் தேற்றித் தென்ன லுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
ஆற்றல் அடல் விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
(4)
மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம் மடமானி பங்கயச் செல்வி பாண்டிமாதேவி
பணிசெய்து நாடொறும் பரவப்
திருஞானசம்பந்தர் தேவாரம் - 3ம் திருமுறை
பொங்கழலுருவன் பூதநாயகனால்
வேதமும் பொருள் களுமருளி
அங்கயற்கண்ணி தன்னொடு மமர்ந்த
வாலவாயாவது மிதுவே. (1)
S
காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே. (2)
NBANZN 3Dzzzz

Page 5
ಔಟಿಜ್ಮ 4}æ
குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆலவாயிலாய் சுற்றம் நீ பிரானும் தொடர்ந்திலங்கு சோதி நீ கற்ற நூற் கருத்தும் நீ அருந்த மின்பமென்றிவை முற்றும் நீ புகழ்ந்து முன் உரைப்ப மென்முகம்மனே.
(3) மானினேர் விழி மாதராய் வழு திக்கு மாபெருந்
- தேவிகேள் பானல் வாயொரு பாலன் ஈங்கிவன் என்று நீபரி
- வெய்திடேல் ஆனைமாமலை யாதியாய இடங்களிற் பல அல்லல் சேர் ஈனர்கட் கெளியேனலேன் திரிஆலவாயரன் நிற்கவே. (4)
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக் கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லா ளொடும் பெருந்தகை யிருந்ததே.
(5) இடரினுந் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உனகழல் தொழு தெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே. (6)
உற்றுமை சேர்வது மெய்யினையே
உணர்வது நின்னருள் மெய்யினையே கற்றவர் காய்வது காமனையே
கனல்விழி காய்வது காமனையே அற்றம் மறைப்பதும் உன்பணியே
அமரர்கள் செய்வதும் உன்பணியே பெற்றும் உகந்தது கந்தனையே
பிரம புறத்தை உகந்தனையே. (7)
အိန္ဒီ
 

திருநாவுக்கரசர் தேவாரம் - 4ம் திருமுறை
ಙ್
கூற்றாயின வாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
V, ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத் துறைஅம்மானே. (1)
நெஞ்சம் உமக்கே யிடமாக வைத்தேன்
நினையா தொருபோ துமிருந் தறியேன் வஞ்சம் இதுவொப் பதுகண்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட தஞ்சாகி வந்தென் னைதலி வதனை
நணுகா மற்றுரந்து கரந்துமிடீர் அஞ்சே னுமென்னி ரதிகைக் கெடில
வீரட்டாணத் துறையம்மானே (2)
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா,
உன் அடி என் மனத்தே வழுவாது இருக்க வரம் தரவேண்டும்
இவ் வையகத்தே தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள்செய்
பாதிரிப் புலியூர்ச் செழு நீர்ப் புனற் கங்கை செஞ்சடைமேல்
வைத்த தீவண்ணனே. (3)
சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழ கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. (4)

Page 6
மாதற்பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவாரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடுபடாமல் ஐயாரடைகின்றபோது
காதன் மடப் பிடியோடும் களிறு வருவன கண்டேன் கண்டேன் அவர்திருப்பாதம் கண்டறியாதன் கண்டேன்.(3)
திருநாவுக்கரசர் தேவாரம் - 5ம் திருமுறை
.ே
- பாடிப்
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்
குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில்
பால் வெண்ணிறும் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும்
காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே. (6)
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னம் பாலிக்கு மாறுகண்டு இன்புற இன்னம் பாலிக்கு மோ இப்பிறவியே. (1)
மாசில் வீணையம் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே. (2)
விறகில் தீயினன் பாலில் படுநெய் போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே. (3)
నీ

笑炎炎茨袋艾茨袋艾茨煞芙炭巡艾茨怒芝怒交遊怒交
நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும் நமச்சிவாயவே நானறி விச்சையும் நமச்சிவாயவே நாநவின் றேத்துமே நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே. (4)
திருநாவுக்கரசர் தேவாரம் - 6ம் திருமுறை
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்
சங்கரா சய போற்றி போற்றி என்றும் அலைபுனல் சேர் செஞ்சடை எம்ஆதீ என்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே. (1)
-
எல்லா உலகமும் ஆனாய் நீயே
ஏகம்ப மேவி இருந்தாய் நீயே நல்லாரை நன்மை அறிவாய் நீயே,
ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் நீயே பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே,
புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே செல்வாய செல்வம் தருவாய் நீயே
திருவையா றகலாத செம்பொற்சோதி.
(2) திருவே என் செல்வமே தேனே வானோர்
செழுஞ் சுடரே செழுஞ் சுடர்நற் சோதிமிக்க உருவே என் உறவே என் ஊனே ஊனின்
உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே என் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடு பாவாய் காவாய் அருவாய வல்வினை நோய் அடையா வண்ணம் ஆவடு தண்டுறையுறையும் அமரரேறே. (3)
- ಙ್1ಣ್

Page 7
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும் தெரியாத் தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொழியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக் கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்துநின்ற பெரியானைப் பெரும் பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவாநாளே.
அரியானை அந்தணர்தம் சிந்தையானை
(
4.
)
சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து
தரணியொடு வாணாளத் தருவரேனும் மங்குவர் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதேவர்க் கேகாந்தர் அல்லராகில் அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயாராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார் அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.
(
5
)
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ ஒப்புடைய மாதரும் ஒண் பொருளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என்நெஞ்சம் துறப்பிப்பாய் நீ இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ
இறைவன் நீ ஏறுார்ந்த செல்வம் நீயே.
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
(
6
)
நரகத்தில் இடர்ப்படோம் நடலையில்லோம் ஏமாப்போம் பிணியறிவோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
အိန္ဒီ
222222; 8 22222222
 

தாம்யார்க்கும் குடியல்லாத் தன்மையான
சங்கரநற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
கொய்ம் மலர்ச் சேவடியிணையே குறுகினோமே.
(7)
O O. O. O () () சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம் - 7ம் திருமுறை
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர்
- அருட்டுறையுள் அத்தாவுனக் காளாயினி அல்லேன் எனலாமே. (1)
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக் கசைத்து மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை
- அணிந்தவனே மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. (2)
மற்றுப் பற்றெனக் கின்றிநின் திருப்
பாதமே மனம் பாவித்தேன் பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத
தன்மை வந்தெய்தினேன் கற்றவர் தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி நற்றவா உனை நான் மறக்கினும் M?
சொல்லுநா நமச்சிவாயவே. (3)
தில்லை வாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் இல்லையே யென்னாத இயற்பகைக்கு மடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கு மடியேன்
ಙ್ 9ಣಾಣಿ

Page 8
艾葵艾葵实葵实葵艾葵实葵实葵实葵实
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில் சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே.
(
4.
)
நீளநினைந்தடியேன் உமை நித்தலுங் கைதொழுவேன் வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சிலநெல்லுப்
- பெற்றேன்
ஆழிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே. (5)
சார்வினுந் தொண்டர் தருவிலாப் பொய்மையாளரைப் படாதே எந்தை
புகலூர் பாடுமின் புலவிர்காள்
தம்மையே புகழ்ந்திச்சை பேசினும்
இம்மை யேதரும் சோறுங் கூறையும்
ஏத்தலாம் இடர் கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே. (6)
மாணிக்கவாசகர் திருவாசகம் 8ம் திருமுறை
மெய்தானரும்பி விதிர்விதிர்த்துன் விரையார் கழற்கேன்
கைதான் தலைவைத்துக் கண்ணிர் ததும்பி
- வெதும்பியுள்ளம்
பொய்தான் றவிர்ந்துன்னைப் போற்றி யென்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாயென்னைக்
கண்டுகொள்ளே. (1)
 

ಆಣೂ
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச் செம்மையே யாய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. (2)
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம் சித்தமலம் அறிவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன் எனக்கருளியவா றார்பெறுவார் அச்சோவே. (3)然
பாரொடு விண்ணாய்ப் பரந்தஎம் பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய்ச் சிவபுரத் தரசே
திருப் பெருந்துறையுறை சிவனே யாரொடு நோகேன் யார்க் கெடுத் துரைக்கேன் ஆண்ட நீ அருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்று அருள் புரியாயே. (4)
பால் நினைந்தூட்டும் தாயினுஞ் சாலப்
பரிந்துநீ பாவியேன் உடைய
ஊனினை உருக்கி உள்ளொளிபெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே சிவ பெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவதினியே. (5)
2012

Page 9
பூசுவதும் வெண்ணிறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறை போலுங் காணேடி பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை ஈசனவ னெவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.
திருவிசைப்பாதிருப்பல்லாண்டு-9ம் திருமுறை
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள் மணிக்குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
(
6
)
(
1
)
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றவெம் சிவனைத் திருவிழிமிழலை வீற்றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம்
குளிரவென் கண் குளிர்ந்தனவே. (2)
பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப்
பாற்கடலிந்த பிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே. (3)
æಜ್ಮಣಿ
 

ಙ್
பட்டினத்தார் பாடல்
கல்லாப் பிழையுங் கருதாப் பிழையுங் கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையு நின்னஞ் - செழுத்தைச் சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழா மெல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய்கச்
- சியேகம்பனே.
பெரியபுராணம் - 12ம் திருமுறை
உலகெலாம் உணர்ந் தோதற்கு அரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம். (1)
ஆதியாய் நடுவுமாகி அளவிலா அளவுமாகிச் சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப் பேதியா ஏகமாகிப் பெண்ணுமாய் ஆணுமாகிப் போதியாய் நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றிபோற்றி.
(2) கற்பனைக் கடந்தசோதி கருணையே உருவமாகி அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிரத்தின் மேலாம் சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்று பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி (3)
திருப்புகழ் இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப் பிறவாகித் திறமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசற் குமரேசா கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே. (1)
ಙ್

Page 10
艾炭巡芙炭巡艾炭巡艾炭巡艾炭巡炎炎炎炭巡芙炭巡艾
சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேர மட்டில்
தவமுறை தியானம் வைக்க
- அறியாத சகட சட மூடமட்டி பவ வினையிலே சனித்த
தமியன் மிடியால் மயக்கம்
- உறுவேனோ கருணை புரியாதிருப்ப தென் குறையில் வேளை செப்பு
கயிலை மலை நாதர் பெற்ற
- குமரோனே கடக புய மீதிரத்ன மணியணி பொன் மாலை செச்சை
கமழு மன மார் கடப்பம்
- அணிவோனே தருணமிதையா மிகுத்த கனமதுற நீழ்சவுக்கிய
சகல செல்வ யோக மிக்க
- பெருவாழ்வு தகைமை சிவ ஞான முத்தி பரகதியு நீ கொடுத்து
தவி புரிய வெணும் நெய்த்த
- வடிவேலா அருணதள பாத பத்ம மனுதினமு மேதுதிக்க
அரியதமிழ் தானளித்த
- மயில்வீரா
அதிசயவனே கமுற்ற பழனி மலை மீதுதித்த
அழகு திருவேரகத்தின்
- முருகோனே.
ஒரு மையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறம் பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும் பெருமை பெறும் நினது புகழ்பேச வேண்டும் பொய்மை
பேசாதிருக்க வேண்டும் பெருநெறி பிடித் தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும். (3)
ಶಿಫ್ಟ್ಬ (14〕逐æಷಿ

N22222222
ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீரடியா ரெல்லாம். (4)
சக்தி பூத்தவளே! புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே! பின் கரந்தவளே! கறைக் கண்டனுக்கு மூத்தவளே! என்றும் மூவா முகுந்தர்க்கு இளையவளே! மாத்தவளே! உன்னையன்றி மற்றோர் தெய்வம்
- வந்திப்பதே
திருமால்
பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா! அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திர லொகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.
மகா மிருத்யுஞ் மந்திரம் ஓம் த்ரயம்பகம் யஜா மஹே
ஸ“ந்திம் புஷ்டி வர்த்தனம் உர் வாருகமிவ பந்தனாத்
ம்ருத் யோர் முகரிய மாம்ருதாத். பொருள் : நறுமண மிகுந்தவரும், எல்லா ஜீவன்களுக்கும் புஷ்டி அளிப்பவரும் முக்கண்ணனுமான சிவபெருமானைப் பூஜிக் கின்றோம், வெள்ளரி தன் கொடியினின்றும் விடுவிக்கப்படுவது போல் அமரத்துவத்தின் பொருட்டு அன்னவர் நம்மை மரணத்தி
အိန္ဒီ
2015zzzz

Page 11
ಙ್
சாந்தி மந்திரங்கள் ஓம் ஸர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது ஸர்வேஷாம் சாந்திர் பவது ஸர்வேஷாம் பூர்ணம் பவது ஸர்வேஷாம் மங்களம் பவது.
ஸர்வே பவந்து ஸ"கின ஸர்வே ஸந்து நிராமயா ! ஸர்வே பத்ராணி பஸ்யந்து மா கஸ்சித் துக்க பாக்பவேத்.
அஸதோ மா ஸத்கமய gsuD66mur LDII g8urgstjasuDu! ம்ருத்யோர்மா அம்ருதம்கமய
ஓம் பூர்ணமத ; பூர்ண மிதம் பூரணாத் பூர்ண முதச்யதே பூர்ணஞ்ய பூர்ண மாதாய பூர் ண மே வா அவசிஷ்யதே
சாந்திமந்திரங்கள்
உலக மெல்லாம் உயர் நலம் பெருக
அகில மெங்கும் அமைதி நிலவுக
பாருல கெங்கும் பூரணம் பொலிக
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.
எல்லா வுயிர்களும் இன்புற வாழ்க!
எல்லா வுயிர்களும் புனிதமாய்ப் பொலிக!
எல்லா ருக்கும் நல்லதே வளர்க
துன்பமே யின்றித் தொல்புலி வாழ்கவே!
{
N
 
 

S巡ぶ。茨リ茨翌。茨翌。茨リ竣翌。茨リ婆ぶ。
எங்கள் வாழ்க்கை இறைவ! நின்னருளால்
அசத்தினின்று சத்திற் குயர்க சாவினின்று அமரத் தன்மைக் குயர்கவே!
அதுவும் பூரணம் இதுவும் பூரணம்
பூரணத்திற் போந்தது பூரணம்
பூரணத்திற் பூரணம் எடுத்தும்
நிற்பது பூரண நிறைவாம் ஒன்றே!
கநதபுராணம வான்முகில் வழாது பெய்க
மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க
குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை யறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவநிதி
விளங்குக உலகமெல்லாம்.
காயத்திரி மந்திரம் ஓம் பூர் புவ ஸ்வா தத் ஸவித்துர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி திய் யோ யோந ப்ரசோதயாத்.
zzz20172222222

Page 12
S。茨リ茨翌。茨リ。
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகமமாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவா ருள்மகிழுங் கோன் கழல்கள் வெல்க சிரங்குவிவா ரோங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலனடி போற்றி மாயாப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால் அவனருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஒயவுரைப்பனியான்
222222201822222222
အိန္ဒီ
 

கண்ணுதலான் தன்கருணை கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து(ம்) மண்ணிறைந்து(ம்) மிக்காய்
- விளங்கொளியாய் எண்ணிறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய் செல்லா நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யளன் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயாவென ஓங்கி ஆழ்ந்த கன்ற நுண்ணியனே வெய்யாய்த் தணியாய் இயமான நாம் விமலா பொய்யா இனவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதே இன்பப் பெருமாளே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அளிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நனியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற்போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனுறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த

Page 13
ಟಿಜ್ಮ
.
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் றன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த வன்பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப் - பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆராவமுதே அளவிலாப் பெம்மானே ஓராதாருள்ளத் தொளிக்கு மொளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக் கன்பனே யாவையுமாம் அல்லையுமாம் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
கூர்த்த மெய்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமென் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக்காய் நின்ற
os
 

LL LLL LL LLL LLL LL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLLL LL LL LL SLLLL LL LLL LL
酸"文奠实奠实奠实奠实奠实奠实奠实奠实
தோற்றச் சுடரொளியாய் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறி வந்தறிவாய் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றே னெம்மையா அரனேயோ வென்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற்பிறவி அறுப்பானே யோவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
崇
亲
சிந்தனைக்கு சில உன்னிடத்தில் வேலை பார்த்தவனின் வியர்வை உலர்வதற்கு முன் அவர் கூலியைக்கொடு. - தினமும் நாம் செய்யும் வேலைதான் நமக்கு உற்ற தோழன். பிறருக்கு நன்மை செய்யப் பிறந்த நீ நன்மை செய்யா விட்டாலும் தீமையாவது செய்யாதிரு. சுகத்தைக் கண்டு மகிழாதே, அது துக்கத்தின் ஒருவித அலங்காரம். * துன்பங்களை உன்னிடத்தில் குடிவைக்காதே. அது உன்னை
இறுதியில் அழித்துவிடும்.
* கோபப் பாம்பு குழலுக்கு அடங்கும். கொதிக்கும் நெஞ்சை
குளிர்மொழி அணைக்கும்.
କ୍ଷୌର୍ବ୍ବାୟ୍ଯ
250212
ృక్ష
42
ලිඛිණුවිඳී

Page 14
ಙ್ ്യg agag ഖ0b
சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷடருக் குதவுஞ் செய்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடஞ்செய்யும் மயில்வா கணனார் கையில்வே லால்எனைக் காக்கவென்று வந்து வரவரவேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரவண பவனார் சடுதியில் வருக ரஹண பவச ரரரர ரரர fộMB6OOT Lu6u8F ffff fff
விணபவ சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென
ಶೀಷ್ಮ 2ಜ್ಮ
 

வசர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையும் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிறைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் றியும் தனியொளி யொவ்வும் குண்டலி யாம்சிவ குகன்தினம் வருக ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்னும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத்(து) அழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழகு உடைய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
g
செககண செககண செககன செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுன டிகுகுண டிகுகுண டிகுண 贝 贝 贝町 贝
2222223zzzz

Page 15
玄翌。茨、炎。茨翌。茨翌。茨リ茨翌。茨S。
ffff ffff ffff fff
(6060606 (6060606 (6060606 (6(66 டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்று உன் திருவடியை உறுதியென் றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விழிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செல்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க
மார்பை இரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
ಶೀಷ್ಮ 22ಾಜ್ಮಾ

艾葵实葵实葵实葵实葵实葵实葵实葵实
நாணாம் கயிற்றை நல்வேல் காக்க ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க கைகள் இரண்டும் கருணைவேல் காக்க முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணை ஆக { நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க * வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கணகவேல் காக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
பார்க்க பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராக் கதரும்
பிள்ளைக டின்னும் புழைக்கடை முனியும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
ಜ್ಪ(25ಣೂ

Page 16
棠茨煞艾茨煞艾竣巡艾茨煞芙炭巡艾竣巡芝怒
இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட ஆனை அடியினில் அரும்பாவைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகள் உடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலது தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோட படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டு உடல் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கால்கை முறிய கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடுவிடு வேலை வெருண்டது வோட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
222226zzృష్ణా

艾茨袋艾茨袋艾炭巡棠炭巡艾茨袋艾茨袋炎炭巡艾炎炎
தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்லிப் பிருதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீஎனக் கருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணாள் அரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன்றிரு நாமம் சரவண பவனே சைலொளி பவனே! திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொளி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா! குகனே! கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா! கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்காமத் துறை கதிர்வேல் முருகா பழனிப் பதிவாழ் பால குமாரா! ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா! சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யானுனைப் பாட
ဒို☎GD#☎
3ළිඹිබුණුවිඳී

Page 17
ಙ್
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவச மாக! ஆடினேன் நாடினேன். ஆவினன் பூதியை நேசமுடன்யான் நெற்றியில் அணியப் பாசவினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும் மெத்தமெத் தாக வேலாயுதனார் சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசன் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரியம் அளித்து மைந்தனென் மீது உன் மனமகிழ்ந்தருளித் தஞ்சமென்றடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கத் துலக்கி நேசமுடன் ஒருநினைவது வாகி கந்தர்சஷ்டி கவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒரு நாள் முப்பத்தாறுருக் கொண்டு ஒதியே செபித்து உகந்துநீறணிய
2zzzN2822222222
အိန္ဒီ

ಙ್
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் சேர்தங் கருளுவர்! மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் சூரபத் மாவைத் துணிந்தகை யதனால் இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத் தடுத்தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோனே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சிப் புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கோ ரரசே மயில்நட மிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவண பவனும் சரணம் சரணம் சண்முகா சரணம்.
ஐs(29)(ஐ

Page 18
சகலகலாவல்லிமாலை
O ) NᎼᎩ ' y. w Ya
纪 Z S. இ Y ENJIN უწ): SNe C R
வெண்டா மரைக் கன்றி நின்பதந்
தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்டா மரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க ஒழித்தான் பித்
தாகவுண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல்லியே.
நாடும் பொருட் சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும்
பாடும்பணியிற் பணித்தருள் வாய்
பங்கயாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்றும் ஐம்பாற் காடும் சுமக்கும் கரும்பே
சகல கலாவல்லியே.
அளிக்கும் செழுந்தமிழ் தெள்ளமுது
ஆர்ந்து உன் அருட்கடலில்
உளம் கொண்டு தெள்ளித்
குளிக்கும் படிக்கென்று கூடுங் கொலோ
NN223022222222
నీ
 

தெளிக்கும் பனுவற் புலவோர்
கவிமழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே
சகல கலாவல்லியே.
தூக்கும் பனுவல் துறை தோய்ந்த
கல்வியும் சொற்சுவை தோய் வாக்கும் பெருகப் பணித்தருள்
வாய்வட நூற்கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும்
தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே
சகல கலாவல்லியே.
பஞ்சப் பிதம் தரு செய்ய பொற்
பாத பங்கேருகம் என் நெஞ்சத் தடத்து அலராத தென்னே
நெடுந்தாட் கமலத்(து) அஞ்சத் துவசம் உயர்த்தோன்
செந்நாவும் அகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசொத்து இருந்தாய்
சகல கலாவல்லியே.
பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொற் பனுவலும் யான் எண்ணும் பொழுது எளிது எய்த
நல்காய் எழுதாமறையும் விண்ணும் புவியும் புனலும் கனலும்
வெங்காலு மன்பர் கண்ணுங் கருத்தும் நிறைந்தாய்
சகல கலாவல்லியே.
ଉଜ୍ଜ3Dଅଧଃ

Page 19
பாட்டும் பொருளும் பொருளால்
பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின் கடைக்கண் நல்காய்
உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத் தமிழ்த் தீம்பால்
அமுதம் தெளிக்கும் வண்ணம் காட்டும் வெள் ஓதிமப் பேடே
சகல கலாவல்லியே.
சொல்விற் பனமும் அவதானமும்
கல்வி சொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்
நளினா சனஞ்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும்
சிதையாமை நல்கும்
கல்விப் பெருஞ் செல்வப் பேறே
சகல கலாவல்லியே.
சொற்கும் பொருட்கும் உயிராம்
மெய்ஞ் ஞானத்தின் தோற்றம் என்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்
நிலந்தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடியோடு
அரசன்னம் நாண நடை கற்கும் பதாம் புயத்தாளே
சகல கலாவல்லியே.
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய்
வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே.
டேனும் விளம்பினுன்போல்
2203222222222

ಙ್
岑炎炭巡炎茨煞艾炭巡艾茨煞艾炭巡芙炭巡艾炭巡3
awan
διδόαυώυ (τωαυ
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு) இங்ங்ண் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேனன்னே ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்!
பாசம் பரஞ்சோதிக்(கு) என்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ(து) எப்போ(து) இப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையிர்
சீசீ இவையுஞ் சிலவோ விளையாடி ஏசும் இடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந் தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்(கு) அன்(பு) ஆர்யாம் ஆரேலோர் எம்பாவாய்!
முத்தென்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்(து)என்
அத்தன்ஆ னந்தன் அமுதன் என்(று) அள்:றித்
தித்திக்கப் பேசுவாய்வந் (து) உன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியிர! பாங்குடையீர்!

Page 20
笑茨怒茨怒茨怒交遊巡艾茨怒艾茨怒艾茨煞芙茨怒艾
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டால் பொல்லாதோ
எத்தோநின் அன்புடமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்!
ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடு) உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்(று) அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்(கு) ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்(கு) இனியானைப் பாடிக் கசிந்(து) உள்ளம்
உள்நெக்கு நின்(று) உருக யாம்மாட்டோம் நீயேவந்(து) எண்ணிக் குறையில் துயில் ஏலோர் எம்பாவாய்!
மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறி! கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்(று) ஒலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்!
D360 நன்னலை நாளைவந் (து) உங்களை
(3 நீ ର e
நானே எழுப்புவன் என்றலும் நானாமே போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கு
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்!
ತಿಣ್ಣೂ

ಙ್
அன்னே இவையும் சிலவோ பலஅமரர்
உன்னற்(கு) அரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவன்என்றே வாய்திறப்பாய்
தென்னா என்னாமுன்னந் திசேர் மெழு(கு) ஒப்பாய் என்ஆணை என்அரையன் இன்னமு(து) என்று எல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாழா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்!
கோழி சிலம்பச் சிலம்பும் குரு(கு) எங்கும்
ஏழில் இயம்ப இயம்புவெண் சங்(கு) எங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழியீ (து) என்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடமை ஆமாறும் இவ்வாறே ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்!
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்(கு) அவர்க்கே - பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்!
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
æ35ಣೂ

Page 21
艾茨怒芝煞艾茨煞艾茨煞艾茨袋芙炭巡艾茨袋艾茨袋戈
ஐேeேrஐே
པg
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப் பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார் ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர்என்னக்
கையால் குடைந்து குடைந்(து)உன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழல்போல்
செய்யா! வெண்ணிறாடி செல்வா! சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா !
ஐயா! நீ ஆட்கொண்டு) அருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்த்(து) ஒழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்!
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் கூத்தனிவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்(து) உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்!
பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினதாற் பின்னும் அரவத்தால் தங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போற்றிசைந்த பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்(து) ஆர்ப்பக் கொங்கைகள் கொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்(து) ஆடேலோர் எம்பாவாய்!

密&文葵实葵实懿文懿实必热实葵实葵实葵实
தி காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
S கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்ப்ாடி அப்பொருள்ஆ மாபாடிச் S சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதிதிறம் பாடி அந்தம்ஆ மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்!
ஒரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் ܓܵ
சீர்ஒருகால் வாய்ஒவாள் சித்தம் களிகூர % நீர்ஒருகால் ஒவா நெடுந்தாரைக் கண்பனிப்பப்
S. பார்ஒருகால் வந்தனையாள் விண்ணோரைத் தாள்பணியாள் %
2) பேர்அரையற்(கு) இங்ங்னே பித்(து) ஒருவர் ஆமாறும்
t ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வார்உருவப் பூண்முலையிர் வாயார நாம்பாடி
ஏர்உருவப் பூம்புனல்பாய்ந்(து) ஆடேலோர் எம்பாவாய்!
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்(து) உடையாள் t; என்னத் திகழ்ந்(து) எம்மை ஆளுடையாள் இட்டிடையின் இ) மின்னிப் பொளிந்(து) எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைக்குலவி நந்தம்மை ஆளுடையாள்
s தன்னிற் பிரிவிலா எங்கோமா னன்பர்க்கு
முன்னி யவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே SN என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாய்க் து கொங்குண் கருங்குழலி நம்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

Page 22
感艾茨熟实葵实茨憩艾葵艾 ܗܗܘ செங்கமலப் பொற்பாதந் தந்தருளஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப்பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றின்றஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவி றற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல் பாய்ந்தாடேலோ ரெம்பாவாய்!
உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போங்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லாதோள் சேரற்க எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள் போற்றியெல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம் போற்றியார் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.
ܔܛܫ
 
 

酸缸文葵实葵实葵实斑实葵实 艾茨、
s
t
SN
62 gassigs கற்பக தருக்கள் காட்சியளிக் கின்ற கவியுறு ஈழ யாழ்ப்பா ணத்தில் கலையெனப் பலவும் சிறந்திடும் ஊராம் கந்தனரு ளாட்சி நடந்திடும் நல்லூர்.
அருளம் பலமும் பொன்னாச்சி மங்கையும் இணைந்த இல்லற வாழ்வின் பயனாய் அன்புக்கும் ஆசைக்கு மோர் மகளாக கண்ணின் மணியெனக் கண்மணி (நி) பிறந்தனள்,
இளம் பிராயத்தை இயல்பாய்க் கடந்து இல்லற வயதினை எட்டிய வேளை ஐயம் பிள்ளை ஆச்சிப் பிள்ளை குடும்பத் திலுதித்த செல்வப் புத்திரன் வியாபா ரத்தின் வித்தைகள் தெரிந்த அருணா சலமெனும் நற்பண் பாளனை கண் அவனாகக் கொள்ளும் போதிலே ஏழு சேய்களின் அம்மா வாகவே இணைந்திடு வாயென முன்னரே நினைத்தா கண்மணி அம்மா எனப்பேர் கொண்டாய்.
மூத்தவன் கோபால ரத்தினம் அவன் உபதபா லதிபராய் அரும்பணி யாற்றி புவனேஸ் வரியவள் வாழ்வில் இணைந்திட பேருவகை யாய்வழி புரிந்தா யம்மா.
பெண்பிள்ளை யில்லாக் குறைதனை நீக்கிட பேர்த்தியாய் வந்த சசிகலா அவளுடன் காண்டீபன் மேகலா தனஞ் செயனும் முன்னவன் வழிவந்த பேரர் தாமே அடுத்தவன் இராச ரத்தினம் என்பான்

Page 23
ರಾಣಾಚಣ್ಣ
உதவி அரச அதிப ராகப் பணிபுரிந்திட ஆக்கமும் ஊக்கமும் அளித்து அணைத்து இன்புற வளர்த்து இந்திரா தேவியை மணமுடித்து மருமகள் ஆக்கி மகிந்தன் முகுந்தனைப் பேரராய்ப் பெற்றிர்கள்.
பெயரைப் பொலவே குணத்தையும் கொண்ட தருமலிங்கம் நிலஅளவையாள னாகவே மகிழ்ந்து லலிதா தேவியை மருமக ளாக்கி உமா உஷாவைப் பேரராய்ப் பெற்று பேணி வளர்த்தனள் பேருவகை கொண்டனள்.
அடுத்தவன் மகேஸ் வரன்பேர் கொண்டோன் மின்னியல் துறையில் வல்லவன் தான் இனிதே பத்மாவை இவனுடன் இணைத்து இல்லறம் நல்லற மாகவழி காட்டி தர்சினி கரனுடன்தீபன் அவர்களும் நிசாந்தி அஜந்தனைப் பேரராய்ப் பெற்றனள்
மைந்தரின் வாழ்வதை நினைவில் கொண்டு மனதில் உறுதி பூண்டீர்கள் அம்மா மகனாம் வாம தேவன் அவனும் தந்தையின் வணிகத்தைத் தயங்காம லேற்றிட ரஜனியை வாழ்வில் இணைத்துக் கொடுத்து நிசாந்தன் வாணி பேரராய்க் கிடைத்திட தானும் ஒன்றாய் வாழ்ந்தனள் நன்றே.
-:
தொழினுட்ப உத்தியோகத்தனாம் பரமேஸ் வரனவன் சந்திரா எனும் ஏந்திழை யவளை மணமுடித்து மருகன் ஆக்கியே மகிழ்ந்து சஞ்ஜிவ் கோபிகா பேரர் ஆகினர்
-
 

ಶಿಡ್ಲೂ
ராசாவென நீங்கள் செல்லமாய் அழைத்திட்ட மனோகரன் என்பான் இளையவன் பொறியியல் படிப்பையும் பாங்குடன் தொழிலையும் இங்கி லாந்தினில் புரிந்திட்ட வேளையில் விருப்பத் துடனே ராஜேஸ் வரிதனை மகிழ்வுடன் திருமண முடித்துக் கொடுத்து பைரவி ஆதவன் வருணன் தம்மையே பேரராய் கொண்டிடும்பேறு பெற்றாயம்மா.
சசியுடன் இணைந்த தவேந் திரன் கலாவை மணந்த ராஜேந்திரனுடன் காண்டீ பனுடன் இணைந்த ராகினி மகிந்தனை மணந்த மங்கை நந்தினி தயாவை முடித்த கண்ணன் அவர்களும் பேரர் என்றிடும் பெருமை பெற்றனரே.
பேரர் களுடன் கூடிக் குலாவிக் கொஞ்சி மகிழ்ந்து வாழ்ந்திடும் காலை மீரன் மிதுனன் மயூரா அபினயன் கீர்த்தனி தணிரா நீரன் ஆருண் களித்திடக் கிடைத்த பூட்டர் களாமே.
தன்னல மில்லாக் கணவன் கொள்கையைத் தானும் மதித்துத் தாங்கி நடந்து வணிகத் துடன் மட்டு மல்ல சட்டநாதர் தேர்த்திரு விழாவையும் சன்னதிக் கந்தன் ஆலயம் ஏகியே

Page 24
笑炭巡芙炭巡芙炭巡芙茨怒交遊巡芙茨煞艾茨怒艾遊怒艾
ஆண்டுக் கொருமுறை அன்னதானம் வழங்கிட அன்புக் கணவனின் அரும்புகழ் ஓங்கிட அம்மா நீங்களும் நற்பணி புரிந்திரகளே! இங்ங்ணம் உங்கள் பணியது தொடர்ந்திட இனிய வசந்தத்தைப் பொறுத்திடாக் கால்னும் நோயதைக் கொடுத்துக் கணவன் உயிரதை உங்கள் ஐம்பத் தைந்தில் பறித்தானே பதியின் இழப்பால் பதறித் துடித்து பரிதவித்துக் கலங்கிப் போனிரக ளம்மா!
என்பது அகவைகள் ஏற்றமுடன் வாழ்கையில் ஏதிலாப் பெருவாழ்வு போதுமென் றெண்ணி கணவனின் சிவபத தினத்து மறுநாள் உற்றம் சுற்றம் உறவுகள் யாவரும் நினையாப் போதில் நிலையிலா வாழ்விலிருந்து நீங்கினார் எங்கள் கண்மணி யம்மா நீல கண்டன் பாத மலரடியில் !!!
ஆக்கம் : சசி - தவேந்திரன்.
సNKNENKS 4222222222
 

ಟಿಜ್ಮ
அண்பு மகனின் ஆதங்கம் தாயின் அடி வயிற்றில் விதை - என விழுந்து பூவென மலர்ந்தேனே அன்னை அவர் நிழலில் பூமரம் போலே பூமியில் வளர்ந்தேனே பாசத்தில் அன்னை கங்கைநதி அன்பை பொழிந்திடும் அன்புக்கடல் மகேஸ் மகேஸ் என ஆயிரம் தடவை கூப்பிடுவீர்கள் அந்தக் கணிரென்ற ஒலி வீட்டில் கேட்காதம்மா விடிவிளக்கு அணைந்ததம்மா வீடெல்லாம் அலறல் ஒலி விளக்கேற்றி வைப்பதற்கு விரைந்து நீங்கள் வருவீர்களோ நினைவெல்லாம் நீங்கள் தான் நித்திரையிலும் நீங்கள் தான் கனவிலே கதைக்கிறீர்கள் கண்விழித்தால் மறைகிறீர்கள் ஒளிவிளக்கு அணைந்தாலும் ஒளிக்கதிர்கள் என்றும் உலாவிடும் வீடெல்லாம் கண்ணிரோடு முடிக்கின்றேன்
உங்கள் அன்புமகன்
அ.மகேஸ்வரன்.
ಏಜ್ಮ(43ಾಜ್ಮಣಿ

Page 25
நேரில் நிண்று பேசும் தெய்வம்
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே அம்மாவை வணங்காத உடலில்லையே நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறிங்கு ஏது?
அபிராமி சிவகாமி மகமாரி கருமாரி திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா விலைமீது விலைவைத்து கேட்டாலும் கொடுத்தாலும் கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன் அருள்வேண்டும் எனக்கிங்கு அது போதுமே அடுத்திங்கு பிறப்பொன்று அமைத்தாலும் நான் உந்தன் மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே அதை நீயே தருவ்ாயே
பசுந்தங்கம் முத்து வெள்ளி மாணிக்கம் மணி வைரம் இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா விலைமீது விலைவைத்து கேட்டாலும் கொடுத்தாலும் கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா ஈரேழு மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் கொடுத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா உன்னாலே பிறந்தேனே
உங்கள் பிரிவால் துயருறும் அன்புமகன் பரமேஸ் (அபரமேஸ்வரன்)
22:242222222
೫ಣೋಜ್ಮ!
 

笑炭巡艾遊怒艾茨怒二次炭巡艾炭巡艾炭巡艾遊怒之炭巡艾 ότ στέ65υδί θαίουρτ உள்ளத்தால், உணர்வால், உதிரத்தால், அளப்பரிய தியாகங் களுடு என்னை இப்புவியில் ஈன்றெடுத்த தியாகச்சுடர் அம்மா நீங்கள் - நான் பிறந்த நாளிலிருந்து நீங்கள் எனக்காகப் பட்ட கஷடங்கள், என்னை இவ்வுலகில் உயிர்வாழ நீங்கள் கொண்ட வேண்டுதல்கள், நீங்கள் பூண்டவிரதம் தங்கள் பின்னாளில் என் அண்ணன்மார் கூறக் கேட்டறிந்தேனம்மா. பின் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நீங்கள் அதனைத் தொடர்ந்திரகள். உங்கள் பிள்ளைகளின் சுகமான வாழ்வுக்காக, எங்கள் நலனுக்காக உங்கள் வாழ்நாள் பூராகவும் அர்ப்பணித்தீர்களே. எத்தனையோ ஜென்மங்கள் நாம் எடுத்தாலும் உங்களுக்கு நாங்கள் பட்டகடன் தீர்க்க முடியாது அம்மா. நாம் எங்கு வாழ்ந்தாலும் எம் மனதுக்கு ஒரு கஷ்டம் வரும்போதும் சோதனைகள் பல ஏற்பட்டபோதும் கோவிலுக்கு நாம் சென்றதில்லையே. உங்களிடம் தானே வந்து வேதனையைக் கூறி மனவேதனையைக் குறைத்து ஆறுதலடைந் தோம். நாம் இனி எங்கேயம்மா இப்படி ஒரு ஆறுதலை நாம் தேடிப்போவது. 1976ல் எங்கள் அன்புத்தெய்வம் ஊரே போற்றிய உத்தமர் தன்னலமற்ற எங்கள் ஐயா மறைந்தபோது உங்களுடன் நாங்கள் எல்லோரும் சேர்ந்து கதறியழுதோம். அந்தக் கவலை நீண்டகாலம் எம்மனதை விட்டகலாது இருந்தபோதும் பிள்ளைகளே நான் உங்களை அரவணைக்க இருக்கின்றேன் தானே என்று கூறிய அந்தப் பொன்மொழி கேட்டுக் கதறலை நாம் நிறுத்தினோம். இன்று அப்படி ஒரு ஆறுதலான வார்த்தை சொல்லவும் யாருமே இல்லை யம்மா. உங்கள் பிரிவால் உங்கள் மைந்தர்கள் நாம் சிறகொடிந்த பறவைகளாய், கண்ணிழந்த ஓவியனாய், நடாற்றில் விட்ட துடுப்பாய், தாய் இழந்தசேய்கள் நாம் தவிக்கிறோம். அம்மா எப்போது மீண்டும் நீங்கள் அரவணைக்க வருவீர்கள். உங்களைப் போல் பாசம் என்னும் அமுதத்தைப் பொழிய யார் அம்மா உள்ளார்கள். நேர்மையோடு வாழ்ந்து நேசக் கரங்கள் நீட்டுவீர்கள். இன்று எங்கே தான் உங்கள் இரண்டு உதவும் கரங்கள். பாரிலே நீங்கள் பிரிந்தாலும் பாசமாய் உங்கள் வார்த் தைகள் பாரிலே என்னோடு பல்லாண்டு காலம் வாழுமம்மா.
உங்கள் அன்புமகன்
SJTJ T (-9LDCsIdji - UK)
ಏಜ್ಮಣಿ

Page 26
笑炭巡艾炭巡炎炭巡芙炭巡芙炭巡芙炭巡艾茨煞艾茨袋艾
ξο (τιτσ(τ θαίουνίουp(τώραυ
நீங்கள் எங்கே? எமைவிட்டுப் போய் விட்டீர்களா? திடீ ரென்று எமைவிட்டுப் போக எப்படி உங்களுக்கு மனம் வந்தது? வாழ்க்கை எனும் ஒடத்தில் துடுப்புப் போட்டுப் போட்டுச் சலித்து விட்டீர்களா?
ஆண்மக்களைப் பெற்றெடுத்த உங்களுக்கு பெண்பிள்ளை யில்லாக் குறையைப் போக்கவென வந்து பிறந்த முதற்பேர்த்தி என்ற பெருமை எனக்குத்தான் உண்டு. அதனை என் பெற்றோர் மூலமும், உங்கள் மூலமும் சித்தப்பாமார் மூலமும் அடிக்கடி சொல்லக் கேட்டதுண்டு. ஏன் மழலையில் எல்லோரையும் நான் அழைத்த பெயர்தானே இன்றும் அழைக்கப்பட்டு வரு கின்றது. இந்தவகையில் உங்கள் மகிழ்ச்சியை நான் பல தடவை கண்டதுண்டு. பெண்பிள்ளை பிறக்க வேண்டுமென்று நயினை அம்மனுக்கு நேர்த்தி வைத்தீர்களாமே. நான் வளர்ந்த பின்பும் என்னைக் காணும்போது இனிப்புத் தந்து மகிழ்ச்சியைத் தெரிவிப்பீர்களே!
காமாட்சி விளக்கேற்றிக் கடவுளைக் கும்பிடுவீர்களே! ராசாப்பாவின் மறைவிற்குப் பின் அவரின் படத்திற்குத் தானே விளக்கேற்றி வணங்குவீர்கள். யாரிடமும் இந்தப்பண்பு இருந் ததை இதுவரை நான் அறியவில்லை. இராசாம்மம்மா! பிள்ளை களுக்காகவே வாழ்ந்தீர்கள். பிள்ளைகளின் தேவைகளை இயன்றவரை நிவர்த்தி செய்தீர்கள். மற்றவர்கட்குப் பாரமாக இருக்க விரும்பாமையினாலோ என்னவோ இறைவன் உங்கள் நீண்ட நித்திரையைக் கூட நோயின்றி படுக்கவைத்தான்.
i
எது எப்படியோ, ராசாம்மம்மா என அழைப்பதற்கு இனி நீங்கள் இல்லை என்பது மட்டும் உண்மை. உங்கள் ஆத்மா அமைதிபெற எங்கள் குடும்பத்தின் சார்பில் என் பிரார்த்தனைகள்.
உங்கள் பிரிவால் துயருறும்
பேர்த்தி சசி தவேந்திரன்
(8gruneif.
ತಿನ್ಚ@ಜ್ಮ

艾葵实葵实葵艾葵艾葵实葵实葵艾
பேரப்பிள்ளைகள் கதறல்
அன்பின் திருவுருவாய்ப் பணிவின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாய் எமக்கு வழிகாட்டி பாசமாய் சொரிந்த எங்கள் பரிவுள்ள அப்பம்மா சிரித்த முகத்துடன் கதை பலவும் சொல்லி எம்மை சிரிப்பூட்டும் அப்பம்மா சிரித்தமுகம் காணவில்லை - இன்று எங்கு தான் சென்றீர்களோ எம் காவல் தெய்வம் நீங்களென்று எம்மைக்காத்து வந்தீர்கள் இன்பத்தை எமக்கூட்டி துன்பத்தை நீங்கள் சுமந்து எம்மை விட்டுப் பிரிந்து சென்றதால் - நாம் சிறகிழந்த பறவையாய் தவிக்கின்றோம். இனி எமக்குப் பாசத்தை ஊட்டுவது யார்? இனி அப்பம்மாவை எங்கு காண்போம்? உங்கள் அன்பு நெஞ்சங்கள்
மநிஷாந்தி, அஜந்தன்
494ρτυ θύuυνυνιτώδευ ! பிரியமுடன் எம்மை வளர்த்தெடுத்த அப்பம்மாவே! பெரும்துயரம் கொண்டு வாடுகிறோம் நின் பிரிவால் உருகுதே நெஞ்சம் உமையின்று இழந்தமையால் உடனோடி வந்தெம் துயரகற்ற மாட்டிரோ?
A.P.JPGibsitein - GLIprair
ಏಜ್ಮಣಿ

Page 27
怒g实葵实葵实葵实葵实葵实葵实葵实葵实
6τάιαδόή θύυώυρτώ αυ அன்பு இனிமையானது, பிரிவு கொடுமையானது என்பதைப் புரிய வைத்த அன்பிற்கினிய அப்பம்மாவே! அம்புலி காட்டியே அமுதூட்டியும் அன்பு, அடக்கம், பண்பு, ஒழுக்கத்தையும் ஊட்டியே சீரோடும், சிறப்போடும் வாழ் வழிகாட்டிய எங்கள் அப்பம்மாவே! எங்கள் நினைவு உள்ள வரை
எங்கள் இதயங்களில் வாழ்வீர்கள். உங்கள் அன்பு முகத்தை என்று தான் காண்போம்? இறைவன் தான் பதில் சொல்ல வேண்டும்.!!!
இங்ஙனம் கோபிகா.
- 12) - P We met our appammah briefly during our visit to Sri Lanka in 1995. She was very helpful and careing. She was loving and we were very lucky to have her as our grandmother,
We are very sad to loose her and we will miss her very much. We pray god for her soul to restin peace.
பைரவி, ஆதவன், வருணன். (Grand Children.) UK
ஐேடுஐே
 

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ , அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையது எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு! எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
{
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதைக் கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது
{
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொருநாள் அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதியும்,
எனது படைப்பின் சாராம்சமுமாகும்
答 -பகவான் ழரீகிருஷ்ணர் -
ಡಿಡಿಟಿಜ್ಮಲ್ಲಿ

Page 28
பூவுலகில் பல்லாண்டு வ அனுபவித்தப் பிறவி
இறைவன்
鬱圖 لاٹ6ے கண்மணி அம் அவர்களின் இறுதி கொண்டவர்களுக்கும் } அனுப்பி வைத்தோரு கிரியைகளில் கலந்துகெ * நண்பர்கள் எல்லோரு
Y நன்றிகளை : SysMo:09 uultypeof (Ti di
t நல்லூர்,
un pirrori ہ:ہ*مسیر) Na ` كله چN` ژ*
総%○○経○○経○○経○○経額
பிள்ளையார்
 
 

ாழ்ந்த இகபர போகங்களை ப் பெருங்கடலை நீந்தி ாடி சேர்ந்த
மரர் மா அருணாசலம் ச் சடங்குகளில்கலந்து
ஆறுதல் செய்திகளை நக்கும் ஆத்ம சாந்திக் ாண்ட உற்றார், உறவினர், க்கும் எமத மனமார்ந்த நவில்கின்றோம்.
இங்ங்ணம் - insis)SITssil - 4
i
47
f