கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கந்தையா குணரத்தினம் (நினைவு மலர்)

Page 1
(\! 真
•; QQ Q
A
அவர்களின் சிவ
BESGOBUSUOT UGI
 

தப்பேறு குறித்த
குனர்
OO7

Page 2
நல்லன்புடன்
நலமாய் எமைக் காத்த
நானிலம் போற்றிடும் நல்லவராய் எமை நன்கு வளர்த்தெடுத்த வல்ல கல்வி தந்து ഖഞ്ഞ് ഖന്റുഖിഴ്ച வாழ்வோங்க வகைசெய்து வல்ல மனிதனாய் வையகம் போற்ற வாழ்ந்த எம் அன்புத் தெய்வம் கந்தையா குணரத்தினத்தின் பாதங்களிற்கு இந்நூல்
aਸ0uGo.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
687 / 28, IDπωίlinμπιii ωίδι, மனைவி, மக்கள், ஒட்டுமடம், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
SS யாழ்ப்பாணம்.
 
 
 
 
 

சிவமயம்
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"
யாழ்ப்பாணம் pi ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சைவ வேளாண்குல திலகர் அமரர் கந்தையா குணரத்தினம் அவர்களின் சிவபதப்பேறு குறித்த
நினைவு மலர்
252OO7
நெஞ்சிருக்கும்வரை
சித்திரத்தில் காண்போம் சிலைசெய்து கும்பிடுவோம்! புத்தகத்தில் பாடிப் புகழ்ந்திருவோம் பக்தியுடன்! ஆண்டாண்டுதோறும் உனக்கு அழகு விழா எடுத்தே, வேண்டுதல்கள் செய்வோம் விரைந்து!
eye

Page 3
-
-
-
 
 
 
 
 
 

Λ
ساده است.
|-
-
حسیت
ー。
TT

Page 4

ിഞ്ഞുതുളuബ്
ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம்பலவன்
ஞானகுரு வாணிபதம் நாடு.
திருச்சிற்றம்பலம் தேவறம் நிரை கழல் அரவஞ் சிலம் பொலியலம்பும்
நிமலர் நீறணி திருமேனி வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர் கரைகெழு சந்துங்காரகிற் பிளவும்
அளப்பருங் கனமணி வரன்றிக் குரைகடல் ஒதம் நித்திலங் கொழிக்குங்
கோணமா மலையமர்ந்தாரே.
திருவாசகம்
பாரொடு விண்ணாய்ப் பரந்தவெம்பரனே
பற்று நான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் தறையுறை சிவனே ஆரோடு நோகேனார்க் கெடுத்துரைக்கே னாண்ட நீயருளில்லையதனால் வார் கடலுலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகவென்றருள் புரிவாயே.
CO3)

Page 5
நினைவுமர்ை
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கேயுலப்பிலா வொன்றே
உணர்வு சூழ் கடந்த தோருணர்வே தெளிவளர் பளிங்கின் திரண் மணிக்குன்றே
சித்தத்தள் தித்திக்கும் தேனே அளிவள ருள்ளத் தானந்தக் கனியே
அம்பல மாடரங்காக வெளிவளர் தெய்வக் கடத்தகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே.
திரும்பல்லான்ரு பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப்
பாற்கட லீந்தபிரான் மாலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன்
மண்ணுக தில்லை தன்னுள் ஆலிக்கு மந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே யிடமாகப்
பாலித்த நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதமே.
திருப்புராணம் ஐந்தபேர் அறிவுங் கண்களே கொள்ள
அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே யாகக் குணமொரு மூன்றும்
திருந்தசாத் தவிகமே யாக இந்தவாழ் சடையா னாடுமா னந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபே ரின்ப வெள்ளத்தள் திளைத்த மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
C040

fiതമഒjuബ്
திருப்புகழ்
ஏறமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும் ஆதியருணாசல மமர்ந்த பெருமாளே.
வாழ்த்து
வான்முகில் வழாதபெய்க
மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசுசெய்க
குறைவிலா தயிர்கள் வாழ்க நான்மறை யறங்களோங்க
நற்றவம் வேள்விமல்க மேன்மைகொள் சைவரீதி
விளங்குக வுலகமெலாம்.
திருச்சிற்றம்பலம்

Page 6
15oorayupadi
அமரர் கந்தையா குணரத்தினம் அவர்களின் வாழ்க்கைப் பாதைதனில்.
இந்து சமுத்திரத்தின் நித்திலம் என விளங்கும் தெட்சிணகைலாயம், குபேரபூமி, சுவர்ணபூமி என ஞானிகளாற் புகழப்பெற்ற ஈழவளத் திருநாட்டின் வடபால், சைவமும், தமிழும் தழைத்தோங்கும் மணிமுடியாக விளங்குவது யாழ்ப்பாணம் ஆகுப0.
அங்குள்ள புன்னாலைக்கட்டுவன் என்னும் அழகிய இயற்கை எழில் பொங்கும் வேளாண் கிராமத்தில் வாழ்ந்த அமரர் கந்தையா என்பவருக்கும், சிவாலயங்களுள் சிறந்த ஈழத்துச் சிதம்பரம் அமைந்துள்ள காரைநகர் என்னும் ஊரினைப் பிறப்பிட மாகக் கொண்ட மீனாம்பிகைக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களின் திருமண வாழ்வின் பயனாக நான்கு குழந்தைகள் அவதரித்தன. அவ்வகையில் முத்த குழந்தைச் செல்வமாக 1940 ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் 18ஆம் நாள் குணரத்தினம் அவதரித்தார்.
இவர் தமது ஆரம்பக்கல்வியை இலங்கையின் தலை நகராக விளங்கிய கொழும்பிலுள்ள பாணந்துறை, சரிக்கமுல்ல மகா வித்தியாலயத்திற் பயின்றார். இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிற் பெற்றார். இளமைத் தோற்றமும், வாலிப மிடுக்கும், வசீகரப் பார்வையும், எதையும் செயற்படுத்தும் துணிவாற்றலும் உள்ளவராகத் திகழ்ந்தார். வாலிப வயதிலேயே ஒரு தீமைான சாரதியாகவும் சிறந்த வியாபாரியாகவும் பொருள் தேடும் பணியில் ஈடுபட்டார்.
இவ்வாறு இவர் வாழ்ந்து வருகையில் தனது இருபத்து மூன்றாவது வயதிலே மல்லாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட "ஜஸ்வரி" என்பவரை மணந்து இல்வாழ்வை இனிதே நடத்தினார். இவர்கள் இல்லறம் என்ற நல்லறத்தை இனிதே நடத்தும் காலத்தில்,
* மங்கலம் என்பது மனைமாட்சி - மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு”
என்ற வள்ளுவர் வாய்மொழிக்கிணங்க ஜீவரூபி, விஜயரூபி,
சாந்தரூபி, பகீரதன், பூரீதரன், ஆனந்தரூபி, ஞானரூபி, ஹம்சத்வனி எனும் நன்மக்களைப் பெற்றெடுத்தார்.
-C06)-

நினைவுUர்ை "தந்தை மகனுக் காற்றும் உதவி அவையத்து
முந்தி இருக்கச் செய்தல்” என்ற குறள் மொழிக்கிணங்க தம் குழந்தைகளைக் கல்வியறி வூட்டிப் பட்டங்கள் பல பெற்றுப் பதவிகள் பெறவும் வகை செய்தார்.
கடைக்குட்டி ஹம்சத்வனி தவிர்ந்த ஏனையோருக்கு முறையே சுதாகரன், ஜெகதீஸ்வரன், சிவதாஸ், சிவசக்தி, சுரேக்கா, தயானந்தன், தயாளன் போன்றோரை வாழ்க்கைத் துணைகளாக்கி மகிழ்வு கண்டார்.
இவர் தம் வாழ்க்கையில் சுரேஸ், சகீஸ், தர்சிகா, விதுரன், கதிர்சிகன், ஐஸ்வர்யா ஆகிய பேரக்குழந்தைகளையும் கண்டு இன்புற்றிருந்தார்.
சிவப்பிரகாசம் வீதியிலுள்ள பிள்ளையார் கோவில், ஐயனார் கோவில், காளிகோவில் என்பவற்றில் அதிக பக்தியுடன் தினமும் தொழுதுவந்தார். கற்பூரம், பூ போன்ற பூசைப்பொருட் களுடன் தினமும் வழிபாடாற்றுவார். கள்ளமிலா வெள்ளை உள்ளத்துடன் தனது பிள்ளைகளின் முன்னேற்றத்தையே சதா எண்ணிக்கொண்டிருப்பார்.
வீட்டிற்கு ஓர் காவல் தெய்வம் போல் வாழ்ந்தார். தகுந்த ஆலோசனைகளை பிள்ளைகளுக்கு வழங்குவார். ஒருவருக்கும் ஒரு துன்பமும் கொடாது வாழ்ந்ததுவே இவர் தம் பெருமை யாகும். நோய்வாய்ப்பட்ட இறுதி நாட்களிலும் மனைவி மக்களின் - கண்ணை இமை காப்பது போன்ற பணி விடைகளும், உறவுகள் திரண்டுவந்து நலன் விசாரித்தமையும் இவர் செய்த புண்ணியப் Liu J6i5GB67T.
இவர் மேலும் துன்புறாமல் காலன் இவர் உயிரை 24.10.2007 பிற்பகல் 1.30 மணியளவில் இறைவனடி ஏக வைத்தான்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் ”
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
"உண்மையான மனிதன், தைரியமுள்ள மனிதன் புழுவிற்குக் கூடத் தீங்குசெய்ய மாட்டான்"
- மகாத்மா காந்தி
G07)

Page 7
s6oowo/up6off
சிவபுராணம்
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சி னிங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அனேகன் இறைவன் னடிவாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஒங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேச னடி போற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்றநிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி ஆராத இன்பம் அருளு மலைபோற்றி சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுது மோய உரைப்பனியான் கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
-C08)-
 

ിത്രങ്ങupബ് எண்ணிறைந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன். புல்லாகிப்பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்கார மாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங் கொள் ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா பொய்யாயின வெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவுறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்கில் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நனியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலைனைந்து ம் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தஅன் பாகிக் கசிந்துள்ளுருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
CO9d

Page 8
ിഞങ്ങക്കുpബ്
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேர்க்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்பரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கியென் ஆேருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே N ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞ்ஞானத்தாற் கொண்டு ணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும்வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச்சுட ரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வ்ெவேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேன் எம்ஐயாஅரனே ஒ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற் கரியானை சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்
G10

நினைவுமர்ை
சிவமயம் முந் குமரகுருபர சுவாமிகள் அருளிய சகல கலாவல்லி மாலை
வெண்டாமரைக் கன்றி நின்பதந்
தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டாமரைக்குத் தகாதுகொ
லோசக மேழுமளித் துண்டானுறங்க வொழித்தான்பித்
தாகவுண் டாக்கும் வண்ணங் கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலா வல்லியே.
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்
வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்றுமைம்பாற் காடும் சுமக்கும் கரும்பே
சகல கலா வல்லியே. 2
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமு
தார்த்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கோ
லோவுளங் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர்
கவிமழை சிந்தக் கண்டு களிக்கும் கலாப மயிலே
சகல கலா வல்லியே. 3
Cld

Page 9
நினைவுமர்ை
தூக்கும் பனுவற் றுறைதோய்ந்த
கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள்
வாய்வட நூற்கடலுந் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும்
தொண்டர்செந் நாவினின்றும் காக்கும் கருணைக் கடலே
சகல கலா வல்லியே. 4 பஞ்சப் பிதந்தரு செய்யபொற்
பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென்
னேநெடுந் தாட்கமலத்(து) அஞ்சத் துவச முயர்த்தோன் செந்
நாவு மகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய்
சகல கலா வல்லியே. 5
பண்ணும் பரதமுங் கல்வியுந்
தீஞ்சொற் பனுவரும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல்
காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங்
கனலும் வெங் காலுமன்பர் கண்ணுங் கருத்தும் நிறைந்தாய்
சகல கலா வல்லியே. 6
பாட்டும் பொருளும் பொருளாற்
பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல்
காயுளங் கொண்டு தொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா
லமுதந் தெளிக்கும் வண்ணங் கட்டும்வெள் ளோதிமப் பேடே
சகல கலா வல்லியே. 7
-C123

16apap76uppi
சொல்லிற் பனமு மவதான
முங்கல்வி சொல்லவல்ல நல்வித் தையுந்தந் தடிமைகொள்
வாய் நளினா சனஞ்சேர் செல்விக் கரிதென் றொருகால
முஞ்சிதை யாமைநல்குங் கல்விப் பெருஞ் செல்வப் பேறே
சகல கலா வல்லியே. 8
சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ்
ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர்
யார்நிலந் தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ
டரசன்ன நாணநடை கற்கும் பதாம்புயத் தாளே
சகல கலா வல்லியே. 9
மணிகண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய்
வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம் பல்கோடியுண்
டேனும் விளம்பிலுன்போற் கண்கண்ட தெய்வ முளதோ
சகல கலா வல்லியே. 10

Page 10
fിത്രങ്ങളupബ്
திருவெம்பாவை
திருச்சிற்றம்பலம்
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய் மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்நுன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேயென்னே
ஈதே எந்தோழி பரிசேலோ ரெம்பாவாய். 1
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி யிவையுஞ், சிலவோ விளையாடி ஏசும் இடமீதோ விண்ணோர்க்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய். 2
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதன் என் றள்ளுறித்
திக்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
C14d
 

நினைவுமர்ை
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய். 3
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்(து)
எண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய். 4
மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிநீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேனன்(று) ஒலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய். 5
மானேநீ நென்னலை நாளைவந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
எனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய். 6
அன்னே இவையுஞ் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச்சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாவென் னாமுன்னம் திசேர் மெழுகொப்பாய்
Q15O

Page 11
நினைவுமர்ை
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய். 7
கோழி சிலம்பச் சிலம்புஞ் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய். 8
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவராவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாயப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய். 9
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை யொருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள் ஏதவனுர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய். 10
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வடியடியோம் வாழ்ந்தோங்காணி ஆரழல்போற் செய்யாண்ெ ணிறாடிச் செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய். 11
-C16)-

മഞ്ഞുഞ്ഞുpബ് ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற்றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லாமும்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீராடேலோ ரெம்பாவாய். 12. பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள்மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 13. காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய். 14.
ஒரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங்களிகூர் நீரொருகால் ஒவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தணையாள் விண்ணோரை தான் பணியாள் பேரையற் கிங்ங்னே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 15.
முன்னிக் கடலைச் சுருக்கியெழுந் துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
○

Page 12
நினைவுமர்ை
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய். 16.
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுனித நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 17.
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவி றாற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணா ஒளிமழுங்கிகத் தாரகைகள் தாம்அகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 18. அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போங்கேள் எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய். 19.
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள் போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய். 20.
திருச்சிற்றம்பலம்
-G18)

நினைவுமர்ை 2. ஓம் சரவணபவ
தேவராய சுவாமிகள் இயற்றிய கந்த சஷ்த கவசன்
காய்பு
நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலன்அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.
குறள் வெண்பா
அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடிநெஞ்சே குறி.
நிலைமண்டில ஆசிரியய்பா சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடஞ்செயும் மயில்வா கணனார் கையில் வேலாலெனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக
C19)

Page 13
ിത്രഞ്ഞjuബ്
இந்திரன் முதலா வெண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வே5:ன் சீக்கிரம் வருக சரஹண பவனார் சடுதியில் வருக ரஹன பவச ரரரர ரரர ரிஹண பவச ரி ரி விணபவ சரஹன வீரா நமோ நம நிபவ சரஹண நிறநிற நிறென வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை யாளு மிளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்திெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன்நித்தமுமொளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன்றினம் வருக ஆறுமுகமும் அணிமுடி யாறும் நீறிடுTநெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் FFJFT ရှိုးဂို့ இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூஷணமும் பதக்கமுந் தரித்து நன்ம்னி பூண்ட நவரத்ன மாலையும்
ப்புரி நூலும் முத்தணி மார்பும் சப்பழ குடைய திருவயிறுந்தியும் துவன்ட மருங்கில் "சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செக்கண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுன டிகுகுன டிகுகுன டிகுண JJ JJJ JJJJ JJJJ JJJ fissif fls fissif foisis டுடுடுடு டுடுடுரு டுடுடுடு டுடுரு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து
C20 d

ിത്രങ്ങളuബ്
முந்து முந்து முருகவேள் முந் என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமம் லீலா லீலா லீலா နီရှနှီးနှိ#fig உன்திரு வடியை உறுதியென் றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றிய்ைப் புனிதவேல் காக்க கதிர்வே லிரண்டும் கண்ணினைக் காக்க விழிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க ப்பத் திருபல் முனைவேல் காக்க சப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்தின வடிவேல் கரக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதினாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வடிவேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள், கதிர்வேல் காக்க ஐவிர லடியினை அருள்வேல் காக்க கைக ளிரண்டும் கருணைவேல் காக்க ன்கை யிரண்டும் முரண்வேல் காக்க ன்கை யிரண்டும் பின்னவ ளிருக்க நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பா னாடியை முனைவேல் காக்க எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
-G2D

Page 14
fßcopaowayupooff
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை யகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் எல்லிலு மிருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்ட்ாங் காரரு மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டா ளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை யடியினில் அரும்பாவைகளும் பூனை மயிரும் பிள்ளைக ளென்பும் நீகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைக ளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் க்ாசும் பணமும் காவுட்ன் சோறும் ஒதுமஞ் சன்மும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றான் வஞ்சகள் வந்து வணங்கிட காலதூதாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோட படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுட னங்கம் கதறிடக் கட்டு கட்டி யுருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு
ட்டு முட்டு கள் பிதுங்க
சக்கு 6), சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தனலெரி தணலெரி தணலது வாக விடுவிடு வேலை வெருண்டது வோட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துப் ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
Q229

நினைவுமர்ை ஒளிப்புஞ் சுளுக்கும் தலை நோயும் ਨੌ சமீதிே ၈ို பித்தம் சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரணை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீயெனக் கருள்வாய் ஈரே ழுலகமும் எனக் குறவாக ஆணும் பெண்ணும் அனைவரு மெனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துகீ உன்றிரு நாமம் சரஹண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொளி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை அழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்னா விருக்க யானுனைப் பாட எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசமாக ஆடினேன் னாடினேன் ஆவினன் பூதியை நேசமுடன் யான் நெற்றியில் அணிய்ப் பாச வினைகள் பற்றது நீங்கி உண்பதம் பெறவே உன்னருள் ஆக அன்புடன் இரட்சி அன்னமும் சொன்னமும் மெத்தமெத் தாக வேலா யுதனார் சித்திபெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்கவென் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
Q239

Page 15
fിത്രമഒpബ്
பெற்றவள் குறமகள் பெற்ற வளாமே பிள்ளையென்று அன்பாய்ப் பிரியம் அளித்து மைந்தன்ஏன் மீதுன் மனமகிழ்ந்து క్ల్లో தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசாரத்துடன் அங்கம் துலக்கி நேசமுடன்ஒரு நினைவது ஆகிக் கந்தர் சஷ்டி கவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள்முப்பத் தாறுருக் கொண்டு ஒதியே செபித்து உகந்து நீறுஅணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்னர் எண்மர் அருளுவர் மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமதன் எனவும் நல்எழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத்து அடியை வமியாய்க் காண மெய்யாய் விளங்கம்
ழியாய்க் காண வெருண்டிடும் பேய்கள் ப்ொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி ஆறிந்துஎனது உள்ளம் அஷ்ட லட்சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துஉண வாகச்
ரபத் மாவைத் துணித்தகை யதனால் இதே தேழ்வர்க்கு உவந்துஅமுது அளித்த குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத்து ஆட்கொள்ள எந்தன் உள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கோர் அரசே மயில்நட மிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவண பவஒம் சரணம் சரணம் சண்முகா சர்ணம். சரணம் சரணம் சண்முகா சரணம்.
முற்றிற்று.
C24d

/Baoøræsup6Off
மீண்டும் வருவீரோ?
பொருள் தேடும் இப் புண்ணிய பூமியில் அருள்தேடி - அதனூடு கல்வி ஈந்து அறியாமை இருள் நீக்கிய எம் தந்தையா!
நீர் ஈட்டிய இல்லறமும் காட்டிய நல்வளியும் பார்போற்ற எமை உயர்த்தி இவ்வையமதில் சீர்தூக்கி வைத்தது உம் பெருமையே! கால வோட்டத்தில் நாம் கதிகலங்குங் கால், சாலவே அறிவுரையும் பல ஈர்ந்து பாலம் போலவே தாங்கிய எம் தெய்வமே! பள்ளி வாழ்வில் நாம் மகிழ்ந்து வாழ பணமீட்டும் துறையிற் கால் பதித்து பொருள் சேர்த்துக் காத்தது உம் திறமையே! ஒழுக்க சீலராய் உம் மக்கள் பழக்க வழக்கத்தில் உயர்வாங்கு வாழ்ந்திட மிடுக்குடன் போட்ட கட்டுப்பாடு நாம் அறிந்ததே! எந்தவோர் கடமையும் வேலையும் சற்றும் பிந்தாமல் செய்வதும் செய்வித்தலும் நிந்தனின் சுறுசுறுப்புத் தந்த பலனதே! பொழுது புலருமுன் பூக்கள் பறிப்பதும் பழுதிலாப் பூவுடன் ஆலயம் தொழுவதும் செழுமையாய் திகழ்ந்த பக்தியின் பாலதே! மெல்லவே அழுகிறோம், மேனி சிலிர்க்கிறோம் வெல்லமாய் இனித்திட்ட வாழ்வதை மீளவே வேண்டிடும் எம் இதயமதே!
- பிள்ளைகள்
உங்கள் வாழ்க்கையைப் பாதுகாக்கும்
உண்மையும் அஹிம்சையும் தூய்மையும்
கேடயங்களாக விளங்கும். - மகாத்மா காந்தி
C259

Page 16
நினைவுமர்ை
கடைசி மகளின் கண்ணிரிலிருந்து
ஆயிரம் உறவும் எனக்காயிரம் பொன் தரினும் என் தந்தையே! உன் அன்புக்கு ஈடாகுமா? இக்கொடிய உலகில் எனைக் கதறியழவிட்டு நீங்கள் சென்றதேனோ? அடிக்கடி எனை அழைத்து அறிவுரைகள் கூறியது நீங்கள் செல்வதற்காகவா? உங்கள் விதி முன்னமே தெரிந்திருப்பின் என் உயிர் தந்து உங்களை மீட்டிருப்பேனே! பெண்ணென்றாற் பேயுமிரங்கும் என்பர், ஆனால் எனக்கு அக்கடவுள் கூடக் கண்திறக்கவில்லையே! எனை ஈன்ற மாமணியே! நீங்களே என் குலவிளக்கு என் பரீட்சைப் புள்ளிகள் மீது உங்கள் அழகிய பார்வை படவேண்டுமென வேம்படியிலிருந்து பறந்தோடி வருவேனே உங்களுக்கு சிறுநோய் ஏற்படினும் வெடிக்கும் என்னிதயம் உங்கள் பிரிவினைத் தாங்கும் என நினைத்தீர்களா? "ஜன்னா" என அழைக்கும் என் கண்கண்ட தெய்வமே! உங்களுக்கு சேவை செய்ய வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேனே! சிறுவயதிலிருந்து என்னைச் சீராட்டிப் பாராட்டி சிறந்த மகளாக்கிய என் தந்தையே! இன்று ஏன் என்னை இடையில் விட்டுச் சென்றீர்கள்? உங்களிடத்திற் சகோதரர்கள் இருப்பார்கள் என்றா? உங்கள் அறிவுரைகள் இன்றும் எனை வழிநடத்தும் எங்கு சென்றாலும் உங்கள் முகத்தையே காண்கிறேன் வயது ஏறிடினும் நான் உங்கள் குழந்தையப்பா' குணத்தின் குலவிளக்கு - குணரத்தினம் இரத்தினங்களிற் சிறந்தது - குணரத்தினம் உங்கள் கடைசிக்குஞ்சு என்பதில் நான் பெருமையடைகின்றேன் உங்கள் பெருமையே என் இலட்சியம் இறைக்க இறைக்கக் குறையாத நீரூற்றுப்போல என்றும் உங்கள் புகழோங்கப் போராடுவேன்
C269

நினைவுமர்ை ஈரேழு ஜென்மம் எடுப்பினும் கணேசின் கடைசி மகளாகவே பிறக்கவேண்டும் இறை இல்லத்திலே உங்கள் ஏவல்களைக் குபேரன் நிறைவேற்றிக் கொண்டிருப்பான் அங்கு உங்கள் மகிழ்வுக்காய் இங்கு தினமும் இறைவனை வேண்டுகின்றேன் "தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை"
ஹம்சத்வனிகுணரத்தினம் (யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை)
மருமக்களின் அகத்திலிருந்து.
தாய் மாமனுக்காய்!
எல்லோர்க்கும் பல மாமா எமக்கு மட்டும் ஒரு மாமா தாரகைகள் என வாழும் தாராள மாமாக்களில் சூரியன் என வாழ்ந்த சுத்தமானவர் நீங்களல்லோ.
உறவுகள் ஒற்றுமைக்காய் - நீங்கள் உண்மையாக உழைத்திருந்தீர் நீதி என்று கண்டு விட்டால் - நீங்கள் நிலைநாட்டாமல் நின்றதுமில்லை அநீதி என்று கண்டு விட்டால் - நீங்கள் அடக்காமல் விட்டதுமில்லை.
முந்தித் தவமிருந்து மாமா முநறுாறு நாடசுமநது - உங்களை பெற்றவளே இன்று ஏக்கமாய் வாழுகையில் மூத்தவனாய்ப் பிறந்த நீங்கள் முந்திக்கொண்டு சென்றதேனோ?
C-279

Page 17
நினைவுமர்ை
நல்லோர் இவ்வுலகில் - நெடு நாட்களாக வாழ்வதுமில்லை நலமிக்க நல்லார் வாழ்வு நலம் கெட்டுப் போவதும் இல்லை - என நல்லாவே உரைத்தவர் நீங்கள் - அதை நல்லாவே உணர்த்தி வைத்தீர் - மாமா
போற்றுவார் போற்றட்டும் - முடியாமற் துாற்றுவார் தூற்றட்டும் காற்றல்லோ நான் - எதனாலும் கறைபட்டுப் போகிலேன் என கரைகட்டி வாழ்ந்தவர் நீங்கள்
கங்கையல்லோ மாமா - நீங்கள் காய்ந்து போக மாட்டீர் காற்றல்லோ மாமா - நீங்கள் ஓய்ந்துபோக மாட்டீர் நிலவல்லோ மாமா - நீங்கள் தேய்ந்து போக மாட்டீர்
உடல் ஒன்று இல்லையென்றால் உள்ளது இல்லாது ஆகிவிடுமோ - மாமா' உள்ளது உள்ளதே மாமா - அதை எம் உள்ளமது கொள்ளுது மாமா' வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் இன்று வனப்புடனே வாழும் நீங்கள்
விட்டுச் சென்ற நற்பாதையை தொட்டுச் செல்ல நாமிருப்போம்! எட்ட இருந்தாலும் நீங்கள் எமை ஆசீர்வதிப்பீர்கள் என்ற எமனை விஞ்சும் நம்பிக்கையோடு.
-மருமக்கள்
C289

நினைவுமர்ை
முதலுதவியும் விபத்துக்களைத் தருத்தலும்
விபத்துக்கள் வீடுகளில், பாடசாலைகளில், விளையாட்டுத் திடல்களில், வேலைஸ்தலங்களில், தொழிற்சாலைகளில் மற்றும் வீதிகளில் ஏற்பட வாய்ப்புகள் அதிகம், விபத்துக்களின் வகை, தன்மை, தாக்கம் என்பன அவ்வச் சூழ்நிலைகளுக்கேற்ப வேறு படுகின்றன. பூச்சிகொல்லிகள் மருந்துப் பொருட்கள் மிருகங்கள் மற்றும் விஷஜந்துக்களின் தீண்டுகைகள் என்பனவற்றையும் நாம் கானன்கிறோம்.
தேவையானபோது விபத்துக்களிற் சிக்கியோருக்கு மனிதாபி மான அடிப்படையில் உதவுதல் முதலுதவி ஆகும். தேவையான போது முதலுதவி வழங்குதலும், விபத்துக்களைத் தவிர்ப்பதற் கான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளலும் பெறுமதியான உயிர்களைக் காக்க உதவும்.
முதலுதவி தேவைப்படும் சந்தர்ப்பங்கள் 1. (guggil IGLIGuids@5 (Bleeding)
உதாரணம்: தோல் உரோஞ்சுப்படல், சதை கிழிபடல், காயப்படல், தலைக் காயங்கள்
6T6il 156it (3LibLDiggs) (Dislocation) LITubLassig (Snakebites) 6Tiflatitutiabóir (Burns) 10. 2 -60Luib girl Sluggis6) (Clothes Catching Fire) 11. p.655 (DiBig5.56 (Poisoning) 12. Efs) grufip56) (Drowning)
gp5glaj6ff (FIRST AID)
1. இரத்தப் பெருக்கும் காயங்களும்
உட்காயங்கள், வெளிக்காயங்கள் என இரு சந்தர்ப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. உடனடியாக இரத்தப் பெருக்கை
Q-22つ
2. 95hird-af (Shock) 3. மீள் நினைவுக்குக் கொண்டுவருதல் (Resuscitation) 4. LDuué5lb (Faints)
5. (pp5656ir (Fractures)
6. 3(6áäség5a56it (Sprains)
7.
8.
9.

Page 18
ിതമpബ്
நிறுத்த ஆவன செய்யவேண்டும். பிரதான இரத்த நாடி களிற் காயங்கள் ஏற்படின் அதிக இரத்தப்பெருக்கு ஏற்படும். அதிக இரத்தப் பெருக்குத் தொடர்ந்தால் மரணம் சம்ப விக்கவும் இடமுண்டு. பெரிய இரத்தக்கலங்கள் சேத மடைந்தால் இரத்தம் உறையும் வாய்ப்புகளும் குறைவு.
முதலுதவி
காயப்பட்ட பகுதியின் அருகே அழுத்துவதன் மூலமோ அல்லது உயர்த்திப் பிடிப்பதன் மூலமோ இரத்தப் பெருக்கை நிறுத்தலாம். பாதிக்கப்பட்ட பகுதியை அசைக்காது வைத்தி ருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவரை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவேண்டும்.
உட்காயங்களும் உள்ளக இரத்தப் லயருக்கும்
இவற்றுக்கான சில உதாரணங்கள்
* எலும்பு முறிவினால் ஏற்படும் உள்ளக இரத்தப்பெருக்கு. முறிவுக்குட்பட்ட பகுதிகள் வீக்கமடைதல் உள்ளக இரத்தப் பெருக்கின் அறிகுறி.
* முளை, மண்ணிரல், சிறுநீரகம் போன்றவற்றிலிருந்து நெஞ்சு
மற்றும் வயிற்றுப் பகுதிகளிற்கு இரத்தம் பெருகுதல்.
* உள்ளக இரத்தப் பெருக்குகள் வெளிக்காணப்படும் அல்லது
வெளிவரும் சந்தர்ப்பங்கள் சில வருமாறு:
i) கண், காது, மூக்குகளிலிருந்து i) இருமும்போது நுரையீரலிலிருந்து i) வாந்தியின்போது வயிற்றிலிருந்து iv) மலம், சலம் போன்றவற்றுடன்
வெளித்தெரியாத உள்ளக இரத்தப் லிபருக்கின் அறிகுறிகள்
* மெலிந்து வெளிறித் தோன்றுதல்
* உடல் வளமையிலும் குளிர்ச்சியாயிருத்தல் விசேடமாக
தலை, பாதம்
-C30

水
水
நினைவுமர்ை
வீக்கம் காரணமாகத் தோல் ஈரப்பற்றாகவும் ஒட்டும் தன்மை யாகவும் இருத்தல்.
இதயத்துடிப்பு அதிகரித்தல்
பலவீனமாய்த் தோன்றுதல் பாதிக்கப்பட்டவர் அதிர்ச்சியடையாமலும், நினைவற்ற
நிலைக்குச் செல்லாமலும் பாதுகாத்து உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.
காதிலிருந்து இரத்தம் வடிதல் வெடிப்பு மற்றும் தலைக் காயங்களினால் ஏற்படும். பாதிக் கப்பட்டவரைப் படுக்கவைத்து பஞ்சு மற்றும் மென்மையான துணியினால் அப்பகுதியில் வைத்துத் தளர்வாகக் கட்டலாம். பாதிக்கப்பட்ட பகுதியைக் கீழ்நோக்கி வைத்திருக்க வேண்டும். நினைவற்ற நிலையில் இருந்தால் அந்நிலையில் வைத்தே சிகிச்சை அளிக்கலாம். * காதினுள் பஞ்சை அடையக்கூடாது. * துளி மருந்துகள் இடக்கூடாது * உடனடியாக வைத்தியரை அணுகவேண்டும். உரோஞ்சல் காயங்கள்
தோலின் வெளிப்புறம் சேதமடைதல் இரத்தப்பெருக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். தொற்று ஏற்படும் அபாயம் உண்டு. உரோஞ்சுப்பட்ட இடத்தை சவர்க்காரம் இட்டுக் கழுவலாம். மேலே தெரியும் அன்னியப் பொருட்களை அகற்றலாம் (உதாரணம் - கண்ணாடித்துண்டு, உலோகம், சிறுகற்கள்) கட்டும்துணியால் (bandage) அழுத்திக் கட்டலாகாது. தளர்வான கட்டுப் போடலாம்.
உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்.
முக்கில் ஏற்படும் காயங்களும் இரத்தக் கசிவும் காயங்கள், தடிமன் ஏற்பட்ட பின்னான காய்ச்சல், கடுமை யான வேலையின் பின் போன்ற பல காரணங்களினால் முக்கின் மென்மையான கலங்கள் காயப்படுதல். நடத்தல், கதைத்தல், சிரித்தல், மூக்குச் சிந்துதல் போன்ற செயற் பாடுகள் இரத்தக் கசிவை அதிகரிக்கும். பாதிக்கப்பட்டவரை அமைதியாக வைத்திருக்கவும். சாய்
வாக இருத்தி வைத்திருக்கலாம். மூக்கிலும் முகத்திலும் குளிரான அழுத்தம் கொடுக்கலாம்.
C3d

Page 19
fിത്രതjpബf
5. அதிர்ச்சி
பல இன்றியமையாத உடல் இயக்கிகளின் அழுத்த
நிலையே அதிர்ச்சி ஆகும். அதிர்ச்சி வாழ்க்கையை அச்சுறுத்தக்
கூடியது.
அதிர்ச்சிக்குரிய காரணிகள்
இரத்தப்பெருக்கு
அதிக நீரிழப்பு
எரிகாயங்கள்
தொற்றுகள்
இதயத்தாக்கம்
வாதம்
இரசாயன வாயுக்களின் நஞ்சேற்றம்
பிராணவாயு (Oxygen) கிடைக்காமை
மூச்சுக் குழாய் அடைப்பு
பிழையான அல்லது பிந்திய சிகிச்சை
அறிகுறிகள்
தோல் வெளிறிய நீல நிறமாகவும் குளிர்வாகவும் இருக்கும்.
பலவீனமான சுவாசம், இதயத்துடிப்புச் சீரற்று உயர்வாகவும்
குறைவாகவும் இருத்தல், வாந்தியெடுத்தல் அல்லது அருவ
ருப்புத் தன்மை, கண்கள் உட்செருகுதல். உடல் வெப்பநிலை
குறைதல் சிகிச்சை அளிக்காவிடின் இறப்பும் நிகழலாம்.
முதலுதவி
பாதிக்கப்பட்டவரைப் படுக்க வைக்க வேண்டும் உடல்
வெப்பநிலை குறையாது உடலைப் போர்த்தி வைத்தல். கழுத்து,
நெஞ்சு இடுப்பைச் சுற்றியுள்ள இறுக்கமான உடைகளைத்
தளர்வாக்குதல்.
சாப்பிடவோ குடிக்கவோ எதுவும் கொடுக்காது வைத்
தியரிடம் கொண்டு செல்ல வேண்டும்.
மயக்கம்
மூளைக்கான இரத்த ஓட்டம் குறைவடையும் சந்தர்ப்பங்
களில் குறுகிய நேரத்திற்கு ஏற்படும் பகுதியான அல்லது முழு
மையான நினைவற்றநிலை, திடீரென விழுதல்.
அறிகுறிகள்
1. வெளிப்புற வெளிறல்
ii. 6îuluñgö356ð

நினைவுமர்ை
i. தோல், குளிர்தல் iv. தலைச்சுற்று V) கை கால் விறைத்தல் iv) SÐIQU56lJQ5LÜL Vi) குழப்பமான பார்வை
முதலுதவி
பாதிக்கப்பட்டவரைப் படுக்க வைத்தல், இறுக்கமான உடை
களைத் தளர்வாக்கல், சனக்கூட்டத்தைத்தவிர்த்தல், வாந்தி
யெடுப்பின் தலையைத் திருப்பி உதவுதல்.
பாதிக்கப்பட்டவரின் முகத்திற் தண்ணிர் ஊற்றக்கூடாது.
மயக்கம் தெளிவதற்கு முன் எந்த ஒரு பானத்தையும் குடிக்கக்
கொடுத்தலாகாது. மயக்கம் தெளிந்ததும் படிப்படியாக அவரை
நிமிர்த்தி சிறிதளவு குளிர்ந்த நீரைக் குடிக்கக் கொடுக்கலாம்.
நீண்டநேரம் மயக்கம் தெளியாது இருப்பின் மருத்துவ சேவையை
நாடவும்.
8. என்புகள், மூட்டுகளில் ஏற்படும் காயங்கள்
விபத்துக்களின்போது பலவகையான முறிவுகளும் ஏற்பட
வாய்ப்புண்டு.
i) உள் முறிவுகள் (Closed Fractures) உடலின் மேற்பரப்பில்
தெரியாதிருக்கும்.
ii) G6).J6fc5u G5ifullb (poss6ir (OpenFractures) 65ugs.gilsit போது முறிந்த எலும்பின் முனை தோலின் வெளியே தெரிதல்.
அறிகுறிகள்
1) மயக்கம்
ii) Lu6d6føTub
i) ஒழுங்கீனம்
iv) 6faisa5b
V) அசாதாரண அசைவுகள்
சில சந்தர்ப்பங்களில் மூட்டுகள் இடம்மாறுவதும், என்பு முறிவுடன் முட்டுகள் இடம்மாறுவதும் உண்டு. முதலுதவி
காயத்தை மூடி மேலும் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க் கவும். உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவும்.
G3)

Page 20
്ത്യ്രf =ങ്കത്ത
என்பு முறிவுகளுக்கான முதலுதவி
விபத்து நடந்த இடத்தில் மேலும் அபாயம் இல்லாதிருப்பின் அவ்விடத்தில் வைத்தே சிகிச்சை செய்யலாம். திறந்த காயம் இருப்பின் மூடவும். துருத்திக்கொண்டிருக்கும் என்புகளைத் தள்ளவோ, பழைய இடத்திற்கு கொண்டு செல்லவோ கூடாது. முறிந்த இடத்தை அசைக்காது கட்டும் துணியையும் (bandage) தாங்கு துணியையும் (Sing) பயன்படுத்தித் தளர்வாகக் கட்டலாம். முறிந்த இடத்திற்கு மேல் முடிச்சுகள் போடக்கூடாது. நோயாளியை அதிர்ச்சிக்கு உட்படுத்தாமல் வைத்திய சாலைக் குக் கொண்டு செல்லலாம்.
9. சுளுக்குகள்
என்புப் பிணைப்பு மூட்டுகளிலுள்ள தசைநார்களில் ஏற்படும்
காயங்கள், உரோஞ்சல்கள் அல்லது சிறிய கிழிவுகள்
அறிகுறிகள்
வீக்கம், பலவீனம், வலி, இயங்காமை, மூட்டுகளில் என்புகள்
அசைந்திருத்தல்
நோயாளி நடக்கக்கூடாது
10. நஞ்சுள்ள பாம்புக்கடி
பாதிக்கப்பட்டவர் கலவரமடைந்து காணப்படுவார் அருவருப்பை உணர்தல் அல்லது வாந்தியெடுத்தல் கடுமையான வலியுடன் ஓரிரு சிறிய துவாரங்கள் கடித்த இடத்தில் இருக்கும்.
அறிகுறிகள்
* கடினமான சுவாசம் * அதிர்ச்சியடைந்து காணப்படல்
முதுலுதவி * காயத்தை சவர்க்காரம் கொண்டு தூய நீரினால் நன்
கு கழுவவும்.
* நஞ்சு மேலும் உறிஞ்சப்படுவதைத் தடுப்பதற்கு பாதிக்கப்
பட்டவரது அசைவைத் தடுக்கலாம். சுயநினைவற்றிருப்பின் செயற்கை சுவாசம் கொடுக்கலாம் உடனடியாக வைத்தியரை நாடவும்.
mC34)

நினைவுமர்ை
11. எரிகாயங்கள்
கடுமையான வெப்பம், இரசாயனப் பொருட்கள். கதிர் வீச்சுக்கள் போன்றவற்றால் எரிகாயங்கள் ஏற்படலாம். எரிகாயங்களுக்கான காரணிகள்
தீப்பெட்டி உபயோகத்தின் கவனமின்மை எரிதிரவங்கள் குறைபாடுள்ள மின்சார வெப்பமாக்கும் உபகரணங்கள் கட்டுப்பாடற்ற தீ எளிதில் எரியக்கூடிய ஆடைகளை அணிதல் எளிதில் எரியக்கூடிய திராவகங்கள்
ஆபத்து * மேற்தோல் எரிந்து வெப்பம் இரத்தத்தையோ அல்லது
உடற்கலங்களையோ பாதித்தல் * அதிவெப்பக்காற்றை உள்ளெடுத்தல்
எரிச்சல் * வளியிற் பிராணவாயுப் பற்றாக்குறை ஏற்பட்டு இரத்தத்
திலும் குறைந்திருத்தல் * விழுதலும் காயங்களும் 11. முதல்தர எரிகாயங்கள் * அதிக வெய்யில் பட்டதன் விளைவு * வெப்பமான பொருட்களின் தொடுகை * சுடுநீர் அல்லது நீராவியினால்,
அறிகுறிகள்
* சிவந்திருத்தல் அல்லது மாறுபாடான நிறம்
* சிறியவிக்கம், வலி
பலமாகப் பாதிக்கப்பட்டவர் மருத்துவ உதவியைப் பெற வேண்டும்.
1.2 இரண்டாந்தர எரிகாயங்கள்
* வெப்பமான பொருட்களின் தொடுகை * திராவகங்கள் * பெற்றோலிய எரிபொருட் சுவாலைகள்
C35d

Page 21
ിത്രഞ്ഞuബ്
இரண்டாந்தர எரிகாயங்கள் முதல்தர எரிகாயங்களிலும் பார்க்க அதிகம் வலியேற்படும். தோலிலுள்ள நரம்பு முனை களும் பாதிக்கப்படுகின்றன.
அறிகுறிகள்
* தோல் சிவந்து அசாதாரண அடையாளங்கள் தெரிதல். * கொப்புளங்கள் தோன்றுதல், * சில நாட்களுக்கு வீங்கியிருத்தல், * தோல் ஈரலிப்பாகத் தோன்றுதல்.
முதலுதவி
* எரிந்த பகுதியைக் குளிர் நீரில் அமிழ்த்துதல்
(பனிக்கட்டியில் அல்ல)
* தூய அழுத்திய அல்லது சலவை செய்யப்பட்ட துணியை
உபயோகிக்கலாம்.
* கிருமிநீக்கப்பட்ட மெல்லிய துணிகளையும் உபயோகிக்
356)ΠΙΟ.
கொப்புளங்களை உடைக்கக்கூடாது. தைலம் போன்றனவற்றைப் பூசக்கூடாது.
1.3 மூன்றாந்தர எரிகாயங்கள்
தீச்சுவாலை, சுடுநீர், மின்சாரம், சுடுபொருட்கள் போன்றன
வற்றால் ஏற்படுதல்.
அறிகுறிகள்
ஆழமான கலங்கள் அழிந்திருத்தல், வெள்ளை அல்லது கரிய தோற்றம், தோற்படைகளின் இழப்பு.
முதலுதவி
சுவாசப்பிரச்சினை இருப்பின் காற்றோட்டமுள்ள இடத்தில் பாதிக்கப்பட்டவரை வைத்திருக்கலாம். வெளியே எரிந்த பகுதி களை நீரிலோ அல்லது பனிக்கட்டி நீரிலோ அமிழ்த்தக்கூடாது. எரிந்த ஒட்டிக்கொண்டிருக்கின்ற உடை மீதங்களை அகற்றக் கூடாது. மெல்லிய கிருமியகற்றப்பட்ட துணியினால் எரிகாயங் களை மூடலாம்.
-G6)-

நினைவுமலர்
12. உடையிற் தீப்பிடித்தல்
தியை குளிர்நீரினால் அணைக்கலாம். தீ தொடர்கின்ற நிலை இருப்பின் தீப்பிடித்தவரைப் படுக்கவைத்து படுக்கை விரிப்பினால் இறுக்கச் சுற்றலாம். எரியாத பகுதியிற் பிடித்து புகைக்கின்ற உடைப்பகுதியைக் கிழிக்க வேண்டும். எரிகாயம் கடுமையாயின் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவும். 13. நஞ்சருந்துதல்
தோல் மேற்பரப்பினுTடு அல்லது உடலினூடு திண்ம, திரவ அல்லது வாயு நஞ்சுகள் உட்புகுவதால் ஆரோக்கியக் குறைவு அல்லது மரணம் ஏற்படலாம்.
காரணிகள்
* சிபார்சு செய்தவற்றிலும் பார்க்க அதிகளவான மருந்தை
உட்கொள்ளல். (கூடுதலாக குழந்தைகள்) மருந்துகளை முறையாகப் பத்திரப்படுத்தாமை, விசுறுகருவிகளை முறையாகப் பேணாமை, எதிர்பாராது அல்லது தற்கொலை நோக்கோடு மருந்து களை அதிகளவு உள்ளெடுத்தல்.
* போதையேற்றும் பானங்களுடன் மருந்துகளை உள்ளெ
டுத்தல்.
வீட்டுச் சூழலில் நஞ்சுகள்
* அழகுசாதன வர்ணங்கள் (Cosmetic)
* வெளிற்றும் பொருட்கள் (Beache)
* Firuriassif (Dye)
* இரசாயனப்பசைகள்(Glue)
* 9(Supnafurt (Ammonia)
* sufleuriassif (Acids)
அறிகுறிகள்
* பெரிய வேறுபாடுகள் தெரிதல் * வாயிலும் உதட்டிலும் உள்ள எரிகாயங்கள் * துர்நாற்றம் * கண் மணிகள் மிரட்சியாகத் தோன்றுதல்
○ー

Page 22
fിഞ്ഞുഞ്ഞുlpബ് நிலைமையை உணர்தல் * நஞ்சின் தன்மையைத் தீர்மானிக்க வேண்டும். * இதற்கு நஞ்சருந்தியவரிடமிருந்தோ அல்லது பார்த்தவர்
களிடமிருந்தோ தகவல்களைப் பெறலாம். * நஞ்சுக் கொள்கலன் மூலம் * நஞ்சருந்தியவரின் நிலை.
முதலுதவி * சுயநினைவிருப்பின் தண்ணிரையோ பாலையோ குடிக்கக்
கொடுத்து செறிவுத்தன்மையைக் குறைக்கலாம். * நினைவற்றிருப்பின் காற்றோட்டமான இடத்தில் வைத்திருக்
கலாம். செயற்கைச் சுவாசம் கொடுக்கலாம். * சுயநினைவற்றிருப்பின் வாந்தியெடுக்கத் தூண்டக்கூடாது.
விவசாயப் பாவனைக்கான நஞ்சுகள்
* தோலினூடு உறிஞ்சப்படல் * உள்ளிளுத்தல் அல்லது விழுங்குதல்
முதலுதவி
* பாதிக்கப்பட்டவரை அவ்விடத்திலிருந்து அகற்றுதல் * நஞ்சூறிய உடையை அகற்றுதல் * அதிகளவு நீரைப் பருகச்செய்தல் * குளிர்நீரினால் மெதுவாகத் துடைக்கலாம் * வைத்தியரிடம் கொண்டு செல்லல்.
14. நீரில் மூழ்குதல்
அநேகமான சம்பவங்கள் பாதுகாப்பான நிலையிலோ அல்லது சூழலிலோ தான் நிகழ்கின்றன. எனவே காப்பாற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு.
அந்த நபர் குளம், குட்டை, ஏரி, நீர்த்தேக்கம் போன்ற வற்றிற் தத்தளிப்பின் உடனடியாக துவாய், தடி அல்லது கயிற்றைக் கொடுத்து இழுத்துக் காப்பாற்றலாம். மூழ்குபவர் நுரையீரல் அல்லது வயிற்றினுள் நீர் செல்வதிலும் பார்க்க வளி கிடைக்கப் பெறாமையில்தான் இறக்கின்றார். நீரை வெளியேற்ற
G8)-

நினைவுமர்ை
முயற்சிக்க வேண்டாம். காற்றுப் பாதையைச் சுத்தமாக்கி செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். பாதிப்புற்றவர் சுவாசிக்கும் நிலைக்கு வந்தவுடன் அவ்வாறே மீளும் நிலைக்கும் பேனலாம்.
15. 56DeFüüpu (Cramp)
தசை அல்லது தசைத்தொகுதியில் திடீரென ஏற்படும் இச்சையின்றிய வலிமிகுந்த சுருக்கம் உடற்பயிற்சியின் போது தசை ஒருங்கிணைப்புக் குறைபாட்டினால் ஏற்படுகின்றது. உடலி லுள்ள உப்பும் நீரும் இழக்கப்படுவதனால் நிகழும். அறிகுறிகள்
பாதிக்கப்பட்ட இடத்தில் வலி, இறுக்கமான உணர்வு, சுருங் கிய தசைநார்களை விடுவிக்க முடியாத இழப்பு.
முதலுதவி
மெதுவாகவும் உறுதியாகவும் பாதிக்கப்பட்ட பகுதியை
நீட்டுதல். அவ்விடத்தைப் பிடித்து விடுதல் (Massage). அரைத்
தேக்கரண்டி உப்புக்கலந்த நீரைக் குடிக்கக் கொடுத்தல்.
/ அதி தேவதைகள்
பூஜை மணிக்கு அதிதேவதை - வாசுதேவன் நாக்கிற்கு - சரஸ்வதி தாடனத்திற்கு - அக்னி தண்டிற்கு - சூரியன் நாதத்துக்கு - ஈஸ்வரன்
ஆகியவர்கள் அதிதேவதைகள் ஆகும்.
لر ܢ

Page 23
ଦ୍ରୁଷ୍ଟି
எம் குலவிளக்கை நாம் இழந்து yavčió அழுதபோது, சோகமுதில் உறைந்தபோது, @_献 ஆறுதலும் தேற்றலும், அன்பான நலமான அரவணைப்பும் - மற்றும், இந்தக் குடும்ப ஒளி அவிந்தபோது, ழுந்தியே வந்து பிந்தாமல் தெவிய9றவுகள், அயலவர் மற்றும் நண்பர்களுக்கும்,
தொலைபேசி மூலம் தேற்றுதல் கறியோருக்கும், பள்ளி மாணவர்களுடன் கடவே வந்திeட பண்பான அதிபர் மற்றும் ஆசிரியர் கடீகும், எங்கள் சோகமதை இடங்களுடன் பகிர்ந்திeட அரச, அரசசார் பற்ற நிறுவன உத்தியோகத்தர்க்கும்
இறுதிக் கருமங்களை ஆற்றிய பெரியோர்க்கும், இறுதி யாத்திரையிற் பங்கேற்ற பண்பாளர்க்கும், மலர்ச் செண்டு வைத்து மதிப்பளித்தது மடீடுமல்லாமல் மனமாற அஞ்சலிகள் பிரசுரித்த நன் மாந்தர்க்கும் நோய்வாய்பeடகால் உதவிய நன் மக்களுகும் ®.
தவறிய எல்லோருக்கும் எம் இருகரம் சிரமேற் குவிந்த நன்றியுடன்
ஆத்மார்ந்த வந்தனங்கள்.
- குடும்பத்தினர்
பாரதி பதிப்பகம், 480, காங்கேசந்துறை வீதி, யாழ்ப்பாணம்.
 
 


Page 24
இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமுமாகு
- பகவான் றுநீ கிருஷ்ண
பாரதி பதிப்பகம், காங்கேசந்துறை வீதி
 

“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. 6ಣ್ಣೆ நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய். அதை நீ இழப்பதற்கு. எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு. எதை நீ எடுத்தக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பeடது. s எதைக் கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பeடது. எத இன்று உன்னுடையதோ, W. அது நாளை
மற்றொருவருடையதாகிறது. முற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்."
De
ார் - ۔۔۔۔
ஐ Sl, ULIIrgjpirLIIIr6OOrib. T. P : 021 222 3081