கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கந்தையா ஸ்ரீபதி (நினைவு மலர்)

Page 1
羲
ខេយ្យ திரு. கந்தையாரு
அவர்களின் சிவபதப் பேறு குறித்து
தினுைஆை ஜூலன்
 
 
 


Page 2

மேன்மை கொன் சைவரீதி ྾ விளங்குக உலகமெல்லாம்
്വീaണn ഗ്രൈ, ഠെ, ഗ്രേറ്റങ്ങa') ഗ്ഗീ ഗ്രന്മാർ, ഗ്രഞ്ച கொல்லங்கலடிடி ഒൈ புகலிடமாகவும், புலம்பெயர்ந்து 3ந்தைவீதி, ഗ്രീധറിന്റെ
வித்து வந்துவடுமான அமரர் திரு. கந்தையா முநீபதி அவர்களின் சிவபதப்பேறு குறித்த
நினைவு மலர்
རྟོ། །
گجگ\\/iقسۓ
素 24-12.2006

Page 3
*
* 鬍 袭
6fශුහූණ6භීcෂ්ණී ගුණිණිqහිනීd to හීණීථූර්ණු) රෙණිrෙoff6හි උණ්ශීcf6f6ර් ඌරූන්හී ශුද්‍රාෆ් (6ර් 6fෆියුනගර ශිරාණීර් பாதுகாத்து ேேராடும் சிறப்வோடும் D Ø6fගී මාරු ග්‍ර බ්‍රහීණrඅංශු T வேரோடும் Cகழேண்டும் இன்று ஜூனனுறைலம் தெல்லடுணகிலிeட் ப் | 67ශණ මෙtණ{ctෂණීරතුංෂගිණි. 1. ගcorරූrරූfගුණිණිණී හිරැණ්‍යෂ්ඨිරහණියගෙනී இந்த ஞாபகார்தத மலரினைச் ෙගéඑරාණීධිණrඉ9qගී
 

25-11-2006
யா ஞரீபுதி
சீர்மேவும் தாரணத்து செளரமாய் கார்த்திகை பேர் பூத்த திதியில் - தார் மேவும் நீண்ட புகழ்ச்சிசெம்மல் ரீபதி சிவனடியில் நன்மலராய்ச் சேர்ந்தார் நவில்

Page 4

விநாயகர் துதி
விநாயகனே வெவ்வினை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பாண் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினாற் கண்ணிற் பணி மின் கனிந்து.
தேவாரம் மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவில்லை கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடு பெருந்தகை இருந்ததே.
திருவாசதம் கண்கள் இரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகை யார்கள் தம்வாழ்வில் எண்வாழ்வு கடைப்படும் ஆகாதே மணர்களில் வந்து பிறந்திடும் ஆறு மறந்திடும் ஆகாதே மாலறியா மலர்ப் பாதமிரண்டும் பணிகளி கூர்தரு பாடலோடு ஆடல் பயின்றிடும் ஆகாதே பாண்டிநல் நாடுடையாண் படை ஆட்சிகள் பாடுதும் ஆகாதே விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே மீன்வலை வீசிய கானவன்வந்து வெளிப்படும் ஆயி டிலே,

Page 5
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரணிமணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்குந் தேனே அணிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக வெளி வளர் தெய்வக் கூத்துஉகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே
திருப்பல்லாண்டு
சீருந் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக் கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன்
பெற்றதார் பெறுவார் உலகில் ஊரும் உலகும் கழற உழறி
g2) 68) LD LD 65T வாளனுக்கே பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம்
பல்லாண்டு கூறுதுமே
திருப்புராணம்
வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க பூதபரம்பரை பொலிய புனிதவாய் மலர்ந்தழுக சிதவள வயற் புகலி திருஞானசம்பந்தன் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

திருப்புகழ் பக்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வில்
முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தம தானசற் குணர்நேய
ஒப்பிலா மாமணிக் கிரிவாச வித்தகா ஞானசத் தி நிபாதா
வெற்றிவே லாயுதப் பெருமாளே
வாழ்த்து வான்முகில் வழாது பெய்க மலிவழம் சுரக்க மன்னன் கோண்முறை அரசுசெய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்களோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
படினத்தார் பாடல் கல்லாப் பிழையுங் கருதாப் பிழையுமங் கசிந்துருகி நில்லாப் பிழையுநினையாப் பிழையு நின்னஞ் செழுத்தை சொல்லாப் பிழையுந் துதியாப் பிழையுந் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியே கம்பனே.
:றிபதி

Page 6
அமரர் கந்தையா முநீதி
- அவர்களின் வாழ்க்கை வரரைற்றுச் சுருக்கம்
பிறப்பு : 21.08.1954
தந்தை : காசித்தம்பி கந்தையா
தாய் : நாகமுத்து அண்னம்மா
பிறந்த இடம் பங்களா வீதி,
மீசாலை மேற்கு, மீசாலை
ஆரம்பக்கல்வி
இடைக்கல்வி சாவகச்சேரி இந்துக் கல்லூரி
உயர்கல்வி: பேரதேனியா பல்கலைக்கழகம்
B.A பட்டதாரி 1980
சகோதரர்கள் : க. கைலாசபதி (காலம் சென்றவர்)
க. கருணாபதி (கனடா)
சகோதரிகள் புஸ்பவதி, கமலாவதி
இராசபூவதி, புனிதவதி, திலகவதி
(காலஞ்சென்றவர்கள்)
தொழில் நியமனம் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் 1981 திருமணம் : 5.09.82 S.
மனைவி : நாகேந்திரம் ஜெயந்தி
 
 
 

வதிவிடம்: மாவை - கொல்லங்கலட்டி, தெல்லிப்பளை
மைத்துனர் : நா. போஜன், நா. தயாளன், நா. கணேசன், நா. தினகரன் -
பிள்ளைகள் : ரீ ரேகா (H.N.D.E மாணவி (உ.தொ.கல்லூரி)
ரீ. நிஷாந் (கனடா) ரீ விதுஷாந் (மாணவண் மானி.இந்து கல்லூரி) ரீ கிரிசாந் (மாணவண் மானி. சோதிவேம்படி
வித்தி.) - ரீ. சிநேகா (மாணவி மானி. சோதி வேம்படி
வித்தி.)
பதவி வகித்த பிரதேச செயலர் பிரிவு
1. தெல்லிப்பளை - அமரத்துவம் அடையும் பொழுதும் நியமனம் பெற்றதும் பணிபுரிந்த இடம் 2. ஊர்காவற்றுறை 3. சண்டிலிப்பாய் 4. கரவெட்டி
கடல் கடந்த கிராமியத் தலைவர்களுக்கான
2-ulf பயிற்சி - ஐப்பான்

Page 7
எனது அன்பு துணைவனுக்கு
15.09.1982 இல் இல்லற வாழ்வில் இணைந்தோம். ஈருடலும், ஓர் உயிருமாய் வாழ்ந்தோம். இழப்பு என்றால் என்னவென்று அறியாத இணைபிரியாத உறவானோம். விளக்கினைப்போல் என் வாழ்வில் இணைந்தீர்கள் ஏற்றமுடன் நாயகனாய் எது ஏற்றதோ - அதையே செய்தாய். எந்தக் கருமம் செய்தாலும் அருகிலிருந்து துணைபுரிந்து சிறப்பாகச் செய்ய உதவுவீர்களே, ஐந்து பிள்ளைச் செல்வங்களை அள்ளித் தந்தே குழந்தைகளை அரவணைத்தபடியே, கற்பனை வானத்தில் மிதந்தோம். அதனை நனவாக்க நாம் பட்ட கஷ்டங்கள் எத்தனை? நாட்டு நிலை மோசமான காலத்திலும் அவர்களது கல்வி, பாதுகாப்பிற்காகப் பட்ட கஷ்டங்கள் எத்தனை? பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும், படிப்புத் தொடர வேண்டும் என்ற உங்கள் இலட்சியம், கொள்கை எனக்கு எவ்வாறு ஆறுதலாகவும்,
தென்பாகவும் இருந்தது.
இவை அனைத்திற்கும் திடீர் என முற்றுப் புள்ளி வைத்தாற்போல் பாதியினிலே எங்கு சென்றீர்கள் ஐயா! உங்கள் நினைவுகள் நினைவுற பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்புற அமைய நீங்கள் இல்லாமல் இனி எண் செய்வேன் என்று
தனிமையில் ஏங்குகின்றேன்.
றி. ஜெயந்தி மனைவி
 
 
 

tDæsøí7æð7 tj6Obu6ð
என்று தாண் காண்போம் இனி எமது அருகில் இருக்கும் திருமுகத்தை - எல்லா விதத்திலும் எமக்கு உதவியாய் இருந்தீர்கள் எங்களுடன் உரையாடிவிட்டு நித்திரைக்குச் சென்றீர்கள் இரவு நடந்தது என்ன என்று அறியாநிலையில் விடிந்ததும் நடந்தது அறிந்து உங்கள் முகம் காண தவிர்த்து நின்றோம்
ஏமாற்றம் அடைந்தோம் அப்பா
உங்கள் புன்னகை அழகு முகம் எங்களை விட்டு அகலாது எண் செய்வோம எண் செய்வோம்!
விதுஷாந், கிரிஷாந்
மகளின் பும்ைபன் என் அன்பு அப்பாவே! இறுதியாக எண்ணிடம் உரையாடிவி 'G நித்திரைக்குச் சென்றிர்களே நடு இரவிலும் எண்னை அழைத்த நீங்கள் நித்திரையாக நான் இருப்பது அறிந்து எழுப்பாது ஆறுதல் அளித்தீர்களே உங்கள் உடல் வேதனையைத் தாங்கி, எமக்கு ஆறுதல் அளித்த நீங்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டீர்களே! என்ன நடந்தது நடந்தது அறிந்து நான் பட்ட வேதனையை என்றவென்று கூறுவது
கறுபதி

Page 8
ஆவி பிரிகையில் உங்கள் அன்பான மகள் நான் அருகிருக்க கொடுத்து வைக்கவில்லையே இனியெமக்கு யாரப்பா துணையிங்கு ரேகா ரேகா! என்று வாயோயாமல் அழைத்து எல்லா விடயமும் சொல்வீர்களே. சிநேகா என்று
செல்லம் காட்டுவீர்களே எப்படி காலனுக்கு அழைக்க மனம் வந்தது உம் திருமுகமே கண்ணுக்குள் நிற்குதப்பா இறைவன் திருவடியில் வாழ்வீர்! வாழ்வீர்!!
ரேகா, சிநேகா
வெளிநாட்டில் இருக்கும் மகனின் பும்ைபன்
உம்மையிங்கு காணாது உருகியான் அழுகின்றேன் உங்களது செய்கைகளை எண்ணி நான் ஏங்குகின்றேன் ஏனெமக்கு இந்த விதி வந்தோன்றிச் சேர்ந்ததையா இந்த நேரம் அருகில் இருக்க முடியவில்லை செம்மையாய் எண் பணி செய்யக்கிடக்கவில்லை உன்னரிய ஒளி முகத்தை இனியெப்போ காண்பேன் வீரபத்திரர் திருவடியைச் சேர்ந்து நீரும் பிரியமுடன்
அவனடியில் வாழ்வீர்! வாழ்வீர்!!
நிஷாந் (கனடா)
 

பிரதேச செயதை அனைத்து அலுவர்ைகள் சார்பிலும்
பிரதேச செயர்ை சு. முரளிதுரன் அவர்களின்
இரங்கன் செய்தி
எமது பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரான "அமரர் கந்தையா ஹீபதி” அவர்கள் இவ்வுலகை நீங்கிவிட்டார் என்பது எம்மால் இன்னும் ஜிரனிக்கமுடியாத பேருண்மையாகும். எமது செயலகத்திற்கு அவரது மறைவு பேரிழப்பாகும். இவ்வுலகில் பிறப்பவர் எல்லோரும் இறப்பது உண்மை என்றாலும் சிலர் வாழ்ந்த காலத்தில் அவர்களது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் கலத்தால் மறக்க முடியாதவையாக நிலைத்து விடுகின்றன. இதில் அன்னாரின் வாழ்வுக்காலத்தையும் குறிப்பிடலாம்.
அந்த வகையில் எமது செயலகம் அவர் இறப்பின் நினைவுகளில் இருந்து இன்னும் மீளவில்லை. தனது கடமையில் கண்ணியமும், நேரந்தவறாமையும் அவரது உயர்ந்த குணங்கள் எனலாம். எந்நேரமும் முகத்தில் மாறாத புன்னகையுடன் கடமையாற்றும் உயர்ந்த பண்பாளர். சக உத்தியோகத்தர்களுடன் உயர்வு, தாழ்வின்றி கலகலப்பாக பழகி, சிரித்த முகத்துடன் அனைவரையும் கவர்ந்து வந்த உத்தமர். உருவத்தில் சிறியவர் என்றாலும் குணத்தில் உயாந்தவர். எந்த வேலையையும், அதில் என்ன பிரச்சினைகள், சிக்கல்கள் வந்தாலும் அதை தனது திறமையாலும், சாதுரியத்தாலும் எளிதாக முடித்துக் கொள்ளும் திறமைசாலி, போற்றப்படக் கூடியவர். தனது அன்பால் யாவரையும் கவர்ந்துவிடக்கூடிய குணக்குன்று.
இவரது இழப்பு அன்னாரின் குடும்பத்தவருக்கு மட்டுமல்ல, எமது செயலகத்திற்கும் ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். இவரது திடீர் மறைவால் துயருற்றிருக்கும் இவர்

Page 9
குடும்பத்தவர்களுக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவதென்று எமது இதயங்கள் ஏங்கிக் கலங்கி நிற்கின்றன.
ஒரு இனிய தோழனை இழந்த துயரத்தால் எமது செயலகம் கண்ணிருடன் பரிதவித்து நிற்கின்றது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
ஒம் சாந்தி 1 சாந்தி 11 சாந்தி !
பிரதேச செயலகம், வலி வடக்கு, தெல்லிப்பளை.
மக்களின் சேவகனாக
சிரித்த முகத்துடன்.
பங்களா வீதி, மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொல்லங்கலட்டி, தெல்லிப்பளையை புகலிடமாவும், சந்தை வீதி, மானிப்பாயை தற்காலிக முகவரியாகவும் கொண்ட மக்கள் சேவகன் அமரர் கந்தையா ரீபதி அவர்கள் இறைவனடி அடைந்த செய்தி அறிந்து சொல்லொனாத் துயரமடைந்தோம். வந்தது சிக்கின் குனியா! தலை குனிய வைத்தது! கண்களை கண்ணிரால் நிரப்பியது.
மிகப் பண்பாகப் பழகும் இப்பெருமகன் கிராம அபிவிருத்திப் பணியில் தான் பணியாற்றிய பிரதேச செயலர் பிரிவுகளில், மக்களிடத்து அவர்தம் வேண்டுதல் நேரறிந்து கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் சேவையாற்றி மக்கள் மனதைக் கவர்ந்தவர் என்றால் மிகையாகாது. மக்களுக்கு உதவுவதில் இவர் ஆற்றிய பணிகள் மூலம் கிராம மட்டத்தில்
ரீபதி

சமூகத்தின் மத்தியில், பெரும் மதிப்பினை பெற்றிருந்தமையை
கண்கூடாகக் கணக்கூடியதாகவிருந்தது.
வஞ்சகம், கபடம் அற்ற மனதுடன் ஆற்றிய இவரது அளப்பரிய சேவையின் மூலம் ஜப்பான் தேசத்திற்கு புலமைக்கற்கைக்கு அரசால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டு ஓராண்டு காலம் பெற்ற அனுபவம், பயிற்சி மூலம் எமது மணி மேலும் பல கிராம மட்ட வளர்ச்சி பெற வித்திட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக தனது சேவைக் காலத்தில் அதிகாரிகளுக்கு விசுவாசமான ஊழியனாக, நண்பனாக, ஒத்துழைப்பவனாக பணியாற்றியதுடன், பல்தரப்பட்ட நிகழ்வுகளிலும் முன்னின்று உழைப்பவனாக, மக்கள் மத்தியில் பணி செய்வதே பெரும் கடப்பாடாய்க் கொண்டு வாழ்ந்து வந்த அன்பன் ரீபதியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது ஆகும்.
அன்னார் இவ்வுலகைவிட்டு இயற்கை எய்தினும் அவர் தம் பணி தொடரும். புகழ் ஒங்கும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை இரஞ்சி வேண்டி அவர்தம் குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறி, நல்வாழ்வு வாழ இறை அருள் வேண்டிப் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி சாந்தி 11 சாந்தி !!!
கனகராசா றிமோகனன் உதவி அரசாங்க அதிபர் தீவகம் வடக்கு ஊர்காவற்துறை
இறுபதி

Page 10
நானறிந்த முரீதி
அவனை அறியாதவர்கள்
மிகக்குறைவு
எதையும் எப்போதும்
எவருக்கும்
செய்து கொடுக்கும் நிலை
என்றும் இருந்ததே ·
இவனைப் பலருக்கும் அறியவைத்தது.
நானறிவேன் அவனை நலமுடன்
கிராம அபிவிருத்திப் பணிக்கு
எண்பத்திரண்டில் நுழைந்த நாள் முதல்.
அவனுக்கு கிராம அபிவிருத்தியில் இருந்த மேன்மையான நாட்டம்
ஊற்றுப் பெருக்காய்
மக்களுக்கு உதவிட
மக்கள் உயர்ந்து வாழ்திட
வழிகாட்டியாக உதவிற்று
நோகையில் கடிகையில்
சிறுமைகண்டு சிறுதாய் - மனம்
வேகையில் விரைந்து
அதை விடுத்து
நல்லதை போற்றலில்
நயந்து பரந்து
நகை புரிகையில்
மழலை மகிழ்ச்சியில்
வல்லன வகுத்தவற்றை -
மெல்லினப் படுத்தையில்
வருமே பெருகி - வள்ளுவம்
அதற்கென வகுத்த
அவன் வாய்க்காலே தா. தியாகமூர்த்தி
மாவட்ட உத்தியோகத்தர் கிராம அபிவிருத்தி திணைக்களம் யாழ்ப்பாணம்.
உருவகம்

மக்கள் பணியானன் சாவதில்லை
அமரர் கந்தையா ரீபதி ஆளுமை சாதுர்யம், நேர்மை, தொழிற்பற்று மிக்க ஓர் கிராம அபிவிருத்திப் பணியில் மக்கள் நலன் சார்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒர் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்க அரச பணியாளன் ஆவார்.
இவர் 1981 இல் தெல்லிப்பளை உதவி அரசாங்க அதிபர் பிரிவின் உதவிக் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பதவியேற்று எமது மாவை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பணிகளைப் பார்வையிட அக்கால கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.க.சீவரத்தினம் அவர்கள் சகிதம் வந்த நாட்களும், துடிதுடிப்பும் நினைவலைகளைத் தொட்டுச் செல்கின்றன. மறுகணம் இதனால் ஏற்ப்பட்ட உறவும், மக்கள் தொடர்பாடலும் சிறிது காலத்தில் குடும்ப அங்கத்தவனாக ஆக்கிற்று. 15.09.1982 முதல் கொல்லங்கலட்டி அவரது புகலிடமாயிற்று.
இவரது வாழ்நாளின் பெரும் பகுதி மக்கள் பணியில் அர்ப்பணிப்புடன் சேவையாக அமைந்தது. குடும்ப நலனிலும் தன் பணி மீது அதிக அக்கறை கொண்ட ஒர் அரச அலுவலராக நான் சந்தித்த காலங்களே அதிகம்.
உடன் பிறப்பின் துணைவனாக, எம் குடும்பமதின் கடமைகளை முன்னின்று பதிற் கடமை செய்ய ஒருவர் உண்டு என்ற நனவையும் கனவாக்கி பாதியிலே உன் வாழ் வுதனை ஏன் இந்தக் கொடூர காலண் கவர்ந்திட்டானோ. உன் மக்கள் பணி போதுமென்றா அல்லது உனக்கு நித்திய இளைப்பாறுதல் வேண்டுமென்றா!
உன் இழப்பு எதனையும் ஈடுசெய்யினும், குடும்பத்தில் ஏற்ப்பட்ட இடைவெளியினை ஒரு காலமும் ஈடுசெய்யாது.

Page 11
உண்தன் இழப்பு ஈடுசெய்ய முடியாததொன்றெனினும் உண்தன் பணி என்றும் மக்கள் மனமதில் அழிய இடம்பெறும் எண்பதில் ஐயுறவில்லை.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்து மனைவி, மக்கள் ஆறுதல் அடைந்து தந்தையின் விருப்புகள் நிறைவுறவும், நல்வாழ்வு கிட்டவும் இறை அருள் வேண்டி நிற்கின்றோம்.
போஜன், நாகேந்திரம்
குரும்பத்தினர்
ஒரு சொல் e எதிர்கால நிகழ்வுகளை முன் கூட்டியே அறிபவன்
தீர்க்கதரிசி 0 யாருக்கும் வரையாது வாரி வழங்குபவர்
வள்ளல் e கணவனை இழந்த பெண்
கைம்பெண் e கலை நிகழ்ச்சிகளை மேடையேற்ற முன் சரி, பிழை பார்க்கும்
முறை ஒத்திகை 9 ஒருவர் முதன் முதல் இயற்றிய பாட்டு
கன்னிக் கவிதை 0 சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மருந்துச் சரக்குகள்
திரிகடுகம் e இறைவன் இருக்கிறான் என நம்புபவன்
ஆத்திகன் 6 வெளியில் உண்மை போல் நடந்து உள்ளுக்குள் மாறு
செய்தல் நயவஞ்சகம் 6 சிரிப்பும், பரிகாசமும் நிரம்பப் பெற்ற கவிதைகளைப் பாடும்
ஆற்றல் பெற்றவன் விகடகவி 6 நீண்ட ஆயுள் உடையவர்
சிரஞ்சீவி
R.
ரீபதி

சர்வதேச முக்கியதினங்கள்
1) ஜனவரி - 12 தேசிய இளைஞர் தினம் 2) பெப்ரவரி - 14 உலக காதலர் தினம் 3) பெப்ரவரி 22 உலக சாரணர் தினம் 4) பெப்ரவரி - 28 தேசிய அறிவியல் தினம் 5) பெப்ரவரி - 28 போக்குவரத்து தினம் 6) LDTffěF 08 சர்வதேச மகளிர் தினம் 7) LDITirë 11 பொது நலவாய தினம் i 8) LDITftë 15 உலக நுகர்வோர்(பாவனையாளர் தினம்)
9) udmfår 15 உலக ஊனமுற்றோர் தினம் 10) மார்ச் 21 உலக சிறுவர் கவிதை தினம் 11) LDTřŤě 21 உலக வன தினம் 12) LDITftë 22 உலக தண்ணீர் தினம் 13) LDITñité- 23 உலக (காலநிலை) வளிமண்டல தினம் 14) LDITांé 24 உலக சயரோக ஒழிப்பு தினம் 15) LDITsië 27 உலக நாடக தினம் 16) ஏப்ரல் 01 உலக முட்டாள் தினம் 17) ஏப்ரல் 07 உலக சுகாதார தினம் 18) ஏப்ரல் 12 உலக விண்வெளி தினம் 19) ஏப்ரல் 18 உலக மரபுரிமை தினம் 20) ஏப்ரல் - 22 உலக புவி பூகோள பாதுகாப்பு தினம்) 21) ஏப்ரல் 23 உலக நூலக சேவைத் தினம் 22) ஏப்ரல் 28 உலக சோக தினம் (வேலைத் தளங்களில்
இறத்தல் - காயமடைதல்) 23) ஏப்ரல் - 29 உலக நடன தினம் 24) மே 01 உலக தொழிலாளர் தினம் 25) மே 03 உலக பத்திரிகைச் சுதந்திர தினம் 26) மே 08 சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தினம் 27) மே 11 உலக அன்னையர் தினம் 28) மே 11 உலக தொடர்சாதன தினம் 29) மே 12 உலக தாதியர் தினம் 30) (3LD 18 உலக நூதனசாலைத்தினம் 31) மே 28 உலகப் பெண்களின் உடல் நலத்தை
வலியுறுத்தும் தினம் 32) மே 31 உலக புகைத்தல் எதிர்ப்பு தினம் 33) ஜின் 01 சர்வதேச கூட்டுறவு தினம் 34) ஜின் 04 உலக கூட்டுறவாளர் தினம் 35) யூன் 05 சர்வதேச சுற்றுச் சூழல் தினம் 36) யூன் 07 உலக தொல்பொருளியலாளர் தினம் 37) யூன் 08 உலக மீன்பிடித் தினம் 38) யூன் 17 உலக பாலைவன மீட்பு தினம் 39) யூன் 26 உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம்
S பூரிபதி

Page 12
40) այ6ծ - 27 உலக நீரிழிவாளர் தினம் 41) ஜூலை - 05 உலக சுற்றாடல் தினம் 42) ஜூலை - 11 உலக குடிசனத் தொகைத்தினம் 43) ஜூலை - 28 உலக அகதிகள் தினம் 44) ஆகஸ்ட - 01 உலக தாய்ப்பால் ஊட்டும் தினம் 45) ஆகஸ்ட - 06 உலக சமாதான தினம் 46) ஆகஸ்ட - 21 அனைத்துலக கத்தோலிக்க இளைஞர் தினம் 47) ஆகஸ்ட - 21 தேசிய விளையாட்டுத்தினம் 48) செப்ரெம்பர் - 08 உலக எழுத்தறிவு தினம் (படிப்பறிவு தினம் 49) செப்ரெம்பர் - 08 உலக பத்திரிகையாளர் ஒற்றுமைதினம் 50) செப்ரெம்பர் - 16 உலக ஓசோன் தினம் 51) செப்ரெம்பர் - 21 உலகஅல்ஸிமர்ஸ் (ஞாபக மறதி)தினம் 52) செப்ரெம்பர் - 25 உலக காது கேளாதோர் தினம் 53) செப்ரெம்பர் - 27 உலக சுற்றுலாத்தினம் 54) ஒக்டோபர் - 01 உலக சிறுவர் தினம் 55) ஒக்டோபர் - 01 சர்வதேச வயோதிபர் தினம் 56) ஒக்டோபர் - 03 உலக மதுவிலக்கு தினம் 57) ஒக்டேராபர் - 03 உலக நல்லொழுக்க தினம் 58) ஒக்டோபர் - 04 உலக விலங்கு நல தினம் - 59) ஒக்டோபர் - 05 உலக சிறுமியர் தினம் 60) ஒக்டோபர் - 05 உலக குடியிருப்பு தினம் 61) ஒக்டோபர் - 05 ஒஸ்டன்தினம் (சிறுநீர் குழாய் மூலம்எடுத்தல்) 62) ஒக்டோபர் - 06 உலக ஆசிரியர் தினம் 63) ஒக்டோபர் - 08 உலக லயன்ஸ் தினம் 64) ஒக்டோபர் - 09 உலக தபால் தினம் 65) ஒக்டோபர் - 14 உலக தர நிர்ணய தினம் 66) ஒக்டோபர் - 15 உலக வெள்ளைப்பிரம்பு தினம் 67) ஒக்டோபர் - 16 உலக உணவு தினம் 68) ஒக்டோபர் - 17 சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் 69) ஒக்டோபர் - 17 உலக வியாபார தினம் 70) ஒக்டோபர் - 22 உலக இஸ்லாமிய மகளிர் தினம் 71) ஒக்டோபர் - 24 சர்வதேச ஐக்கிய நாடுகள் சபைதினம் 72) ஒக்டோபர் - 30 சர்வதேச சேமிப்பு தினம் 73) ஒக்டோபர் - 31 தேசிய வாய்ச் சுகாதார தினம் 74) ஒக்டோபர் - 31 உலக சிக்கன தினம் 75) நவம்பர் - 14 குழந்தைகள் தினம் 76) நவம்பர் - 21 உலக தொலைக்க்ாட்சி தினம் 77) டிசம்பர் - 01 சர்வதேச எய்ட்ஸ் தினம் 78) 193 but - 03 உலக வலது குறைந்தோர் தினம் 79) tọGFDLuñT - 04 சர்வதேச தொண்டர் தினம் 80) டிசம்பர் - 05 டெங்கு நோய் தடுப்பு தினம் 81) டிசம்பர் - 10 உலக மனித உரிமைகள் தினம்
ரீபதி

விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும் மருத்துவமும்
1, மருத்துவத்தின் தந்தை யார்?
கிப்போகிரட்டிஸ்
2. உலகின் முதலாவது சோதனைக் குழந்தையின் பெயர்
என்ன?
லூசி பிறவுண் (1978)
3. இருதய மாற்று சிகிச்சையை முதன் முதல் வெற்றிகரமாகச்
செய்தவர் யார்?
Dr. கிறிஸ்ரியன் பேனாட்
4. உலகின் முதலாவது AIDS நோயாளி கண்டு
பிடிக்கப்பட்ட ஆண்டு? 1981.
5. றோமியோபதி மருத்துவத்துறையின் தந்தை யார்?
சாமுவேல் வானிமன்
6. மனிதனின் இருதயத் துடிப்பை அறியும் கருவியின் பெயர்
ଶtଦେftଶ୪t? காடியோகிராப்
7. ஆயுள்வேத மருத்துவத்தின் தந்தை யார்?
சாரகா
8. டோலியோ வக்சினைக் கண்டுபிடித்தவர் யார்?
அல்பேட் சேபின்
9. மனிதவுடலில் மிகவும் வண்மையான பகுதி எது?
L6)66ff
10. மனித சராசரி நாடித்துடிப்பு நிமிடத்திற்கு எத்தனை?
72 துடிப்பு 1 நிமிடம்

Page 13
சிக்குன்குனியா
டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல் என்பன நுளம்பால் பரப்பப்படுகின்றன. இவற்றில் ஒன்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் போது மற்றது அதிகரிக்கின்றன. டெங்கு காய்ச்சல் நோயைப் பரப்பும் நுளம்பினம் , சிக்குண் குனியா காய்ச்சலையும் பரப்புகின்றன என பரப்புரை வழங்கப்படுகின்றது. உயிர் ஆபத்தான நோய் அல்ல. இதனைக் கட்டுப்படுத்த மக்கள் விழிப்புணர்வு மிகமிக அவசியமாகும். கழிவகற்றல், சுற்றுப்புற சூழல் சுகாதாரம் பேணல் இன்றியமையாதது ஆகும். இதனால் நுளம்புப் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்த முடியும்.
இக் காய்ச்சல் 3, 4 நாட்களில் குணமடைகின்றது. ஆனால் இதன் தாக்கம் 3 - 4 வாரங்கள் சிலரிடத்து நீடிக்கின்றது. வேறு நோய்யுள்ளவர்களுக்கு இதன் தாக்கம் அதிகமாகவுள்ளது. இதன் அறிகுறியாக கடுமையான காய்ச்சல், தலைவலி, கடுமையான மூட்டுவலி, தசைவலி, வாந்தி என்பன காணப்படுகின்றன. சிலருக்கு தோலில் செந்நிறப்புள்ளிகள், நிணநீர்க் கணுக்கள் விங்கியும் காணப்படும். இக் காய்ச்சலுக்கு ஓய்வு எடுத்தல் மிகமிக அவசியமாகும். போதிய நீராகாரத்தை எடுத்தல் வேண்டும். பரிசிற்ராமோல் (P.C.T) வில்லைகளை எடுத்தல், இத்துடன் பீக்கோ (B.Co) sysbaug (Vitc) விற்றமின் சி எடுத்தல் நன்று. காய்ச்சல் அதிகமாயின் தகுந்த வைத்திய ஆலோசனை பெறல் வேண்டும். பக்கவிளைவுகளில் இருந்து பாதுகாத்தல் அவசியமாகும். -
இந் நோயைக் கட்டுப்படுத்த மக்களின் பங்களிப்பு அவசியமாகும். நுளம்புப் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தல். இது தொடர்பான காவிக்கட்டுப்பாட்டு அறிவு மக்களிற்கு கிடைக்க வசதி செய்தல், நுளம்புக்கடிக்கு எதிரான தனியார் பாதுகாப்பு
நினைவு மலர்
 

一
முறைகளைக் கடைப்பிடித்தல் நுளம்புத்திரி, நுளம்பு வலைகள், ஆவியாகும் தரை விரிப்பு, புகையிடல், மின்விசிறி, திரவங்கள், எண்ணெய்கள் போன்றவற்றை பொருளாதார வசதிக்கு ஏற்ப பாவனை செய்தல். - -
இதன் தாக்கத்திற்கும், பரவலுக்கும் தற்கால யுத்த சூழ்நிலையும், புலம்பெயர்ந்த அயல்களில் சுற்றாடல் சூழல் சுகாதார வசதி பேணப்படாமை, போதிய மருத்துவ வசதியின்மை, பொருளாதார சத்துணவு வசதியின்மை என்பன புறக்காரணிகள் ஆகும்.
இதனைச் சமூக அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் நிறுவனங்கள், அமைப்புகள் நீர் தேங்காது தடுத்தல், கழிவகற்றல் (அவற்றினுள் நீர் தேங்காது இருக்க வழி வகுத்தல்) அடிப்படை மருத்துவ வசதிகளைப் பெற ஆவண செய்தல், சமூக பொருளாதார பிரச்சினையை இனம் கண்டு உதவுதல், சுற்றுப்புறச் சூழல் தூய்மையைப் பேண உதவுதல் ஆகிய பணிகளில் உதவுதல் இன்றியமையாதது ஆகும்.
ஈடிஸ் (Aedes) என்ற நுளம்பினம் மாலை வேளையிலும் (டெங்கு, சிக்குண் குனியா காவி) அனோபிலிஸ் (Anopheles) என்ற நுளம்பினம் இரவிலும் கடிக்கின்றன. பூச்சி கொல்லியில் தோய்க்கப்பட்ட நுளம்பு வலை பாவனை சிறந்தது. மக்களோடு இணைக்கப்பட்ட காவிக்கட்டுப்பாடு நடைமுறை இன்றியமையாதது ஆகும்.
È 墓
நினைவு மலர்

Page 14
அபரக்கிரியை விணத்த வினாவிடை
இறந்தவர்க்கு கிரியை செய்வதன் அர்த்தமென்ன? :് இறந்ததன் மேலும் அவருக்கு வாழ்வுண்டு என்பதே
அர்த்தமாகும். 2. இறந்தபின் அவருக்கு எங்கே வாழ்வு எப்படி வாழ்வு?
... ' அவருக்கு சுவர்க்கத்திலும், நரகத்திலும் வாழ்வுண்டு. திரும்பவும் அவர் பூமியிற் பிறந்து முன் வாழ்ந்தது போல வாழும் வாழ்வுண்டு. சுவர்க்க வாழ்வு இண்பானுபவம், நரக வாழ்வு துன்பானுபவம். திரும்பவும் பூமி வாழ்வு, இன்ப துன்ப கலப்பான அனுபவம். 3. இறந்த பின்பு அவர் இங்கில்லை. அந்த நிலையில்
அவருக்குச் செய்வதை அவர் பெறுவது எப்படி? இறந்த பின்பும் குறைந்தது முப்பத்தொரு நாள்வரை அதாவது அந்தியேட்டிவரை அவர் இங்கேதான் இருக்கிறார். அதாவது தான் விட்ட உடலின் தொடர்பு நீங்காமல் அருவமாய் இருந்து கொண்டிருக்கின்றார். அந் நிலையில் உடலைத் தொடர்புபடுத்திச் செய்யுங் கிரியைகளின் பலனை அவர் நேரடியாகவே பெறுகின்றார். அந்தியேட்டியின் பிறகு நிகழும் கிரியைகளின் பலனை மேலுலகத்திலுள்ள பிதிரர்கள் என்ற தேவசாதிரியர் ஏற்று அவர்கள் எங்கிருந்தாலும் அங்கங்கு சேரச் செய்கின்றார்கள். - 4. இக்கிரியைகளை அபரக்கிரியை என்பதேன்?
அவை இறந்தபின் செய்யப்படும் கிரியைகள் என்பதால் தான். அபரம் என்றால் பின், - 5. அபரக் கிரியைகள் எவை எவை?
பிரேதக்கிரியை, சாம்பலஸ்ளுதல், அந்தியேட்டி, மாசிகம், ஆட்டைத்திதி, திவசம் என்பனவனாம். 6. அபரக் கிரியைகள் உடலுக்காகவோ உயிருக்காகவோ?
உயிரு உயிருக்காகவேதான். ஆனால் அந்நியேட்டிவரை உடல் தொடர்பில் வைத்தும் பிறகு தனியாகவும் உயிரைக் கருதிச் செய்யப்படும்.
mmmmmmmmmmmm

7. இக் கிரியைகளினால் உயிருக்கு நன்மை விளைவது
எங்ங்னம்?
இக் கிரியைகளினால் உயிருக்கு இரு விதத்தில் நன்மை விளையும். தனது சரீரத்தைவிட்டு கிளம்பிய உயிர் அதன்மேல் பெறவேண்டிய அநுபவங்களுக்கு உபகரிப்பது ஒன்று. படிப்படியாக அவ்வுயிர் சிவத்தன்மை பெறுவது ஒன்று.
8. சிவத்தன்மை பெறுவதென்பது எங்ங்னம்?
அபரக் கிரியைகளைச் செய்வதனால் உயிரில் பாவங்கள் படிப்படியாக அழிபடுகின்றன. அதற்குத் தக்க அளவு உயிரைப் பற்றியுள்ள மலபந்தம் விலகிக்கொடுக்கும். மலம் விலகுமளவுக்குச் சிவத்தன்மை சிறிது சிறிதாகப் பற்றும். கால அடைவில் சரியான பக்குவம் வாய்க்கும் போது முழுமையாக அது
சிவத்தன்மை பெற்றுவிடும்.
9. நினைவஞ்சலிகளில் அவர் சிவபாதம் அடைந்தார் என்றுதானே எல்லோரையும் குறிப்பிடுகின்றனர். அப்படியானால் கிரியைக்கு என்ன அவசியம்?
அப்படிக் குறிப்பது ஒவ்வொருவரும் சிவபதம் அடைய வேண்டும் என்ற நல்ல விருப்பத்தினால், உரைப்பது உபசாரம் என்ற அளவில் வைத்துக்கொண்டு உரிய கிரியைகளை முறைப்படி செய்யவேண்டும்.
0. பிரேதக் கிரியையில் கும்பபூசை, அக்கினி காரியங்கள்
எல்லாம் செய்வதேன்? அவையெல்லாம் முன் சொல்லியவாறு இறந்தவரை சிவமாக்கும் முயற்சிகள் தான். கும்பங்களில் உருத்திரனையும் திக்குப் பாலர்களையும் எழுந்தருள வைத்து பூசிக்கப்படுகின்றது. அக்கினியிலும் சிவனை எழுந்தருள வைத்து பூசிக்கப்படுகின்றது. கும்பங்களட்ை பூசிப்பதனால் அவற்றிலுள்ள நீருக்கு சிவத்தன்மை உண்டாகும். அந்நீரினால் இறந்த உடலுக்கு நீராட்டுதலால் நீரிலுள்ள சிவத்தன்மை உடலிற்

Page 15
செறியும். அக்கினி சிவமாகப் பூசிக்கப்பட்டதால் அதில் ஏற்பட்ட - சிவத்தன்மை மேலும் அதிகரிக்க உதவும். உடலைவிட்டுப் பிரிந்தாலும் ஒருவகையில் அதன் தொடர்பு நீங்காதிருக்கும். உயிருக்கும் அச் சிவத்தன்மை பதியும்.
ll. உடலைவிட்டு பிரிந்த பின்னும் உயிர் உடல் தொடர்பு நீங்காதிருக்கிறதென்பதை விளக்க முடியவில்லையே அதை எப்படி நம்ப முடியும்?
அப்படி அது தொடர்பு நீங்காதிருப்பதை நாங்கள் காட்சியாற் காணமுடியாது. காணும் பக்குவம் சாதாரணமான எங்களுக்கில்லை. பக்குவமுள்ளவர்கள் கண்டு சொல்லியுள்ளார்கள். அவர்கள் சொல்வதை நாம் அநுமானித்து நம்புவதற்குரிய ஏதுக்கள் நடைமுறையில் இருக்கின்றன. இறந்தவர் உயிர் விடும்போது கிடந்த இடத்தில் அன்று தொடக்கம் இளநீர் அல்லது தண்ணிர்ச் செம்பு வைப்பதுண்டு. எட்டு என்ற வைபவத்திலன்று அவர் விரும்பிய, அருந்திவந்த சகல உணவுப் பண்டங்களும் படைப்பதுண்டு. அங்கே பாடல் படிப்புகள் முடிந்த பின், படைத்தவற்றிற் சிறிது சிறிது எடுத்து முகட்டை நோக்கிக் காட்டுவதுண்டு. இவையெல்லாம் இறந்தவர் தனது உடம்பு எரிந்த பின்னுங்கூட உடல் இருந்த சூழலில் இருக்கிறார் என்பதை அறிவிக்கும் ஏதுக்களாகும்.
2. அங்ங்னமாயின், அவர் சுவர்க்க, நரகம் போவரென்றல்லவோ முதலிற் சொல்லப்பட்டது. இப்போது இங்கேதான் இருக்கிறார் என்பது அதற்கு மாறுபாடாயிருக்கிறதே?
அதற்கு இது மாறுபடாது. எங்ங்னமெனில் இப்போது சொல்லப்படுகின்ற இந்தத் தொடர்பு முற்றாக நீங்கப்பட்டதன் மேல்தான் அவர் சுவர்க்க நரகங்களிற் செல்வார். அந்நியேட்டியில் தான் அத்தொடர்பு முற்றாக நீக்கப்படும்.
2. அந்நியேட்டியில் அது நீங்கப்படும் என்பது எப்படி?
அந்தியேட்டிக் கிரியையை அவதானிப்பதால் அது புலனாகும். அந்நியேட்டிக் கிரியைக்கு அமைக்கும் மாக்கோடிட்ட

மண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் ஐந்துநிற மாக்கள் சதுரவடிவாகப் பரப்பப் பட்டிருக்குமே! அதில் ஒவ்வொரு நிறமும் பஞ்சபூதங்களில் ஒவ்வொன்றைக் குறிக்கும். பஞ்ச பூதங்களால் அமைந்தது அவர் உடம்பு. பஞ்சபூதங்கள் மூலமாகத்தான் அவர் உடம்பில் தொடர்புற்று இருக்கிறார் என்ற உண்மையின் அடிப்படையில், மாவடிவான சதுரங்களில் பஞ்சபூதங்களைப் பொருத்தி அவ்வப் பூதங்களுக்குரிய தெய்வங்களைப் பூசித்து அவற்றின் கருணையால் அவருக்கு அப்பூதங்களோடு இருந்த தொடர்புகளை நீக்கிவிடுவது அக்கிரியையின் விளக்கமாகும்.
3. அந்நியேட்டியிலும் தர்ப்பையிலும் ஆளுருவஞ் செய்து
குளிப்பாட்டி, பொற்சுணர்ணமிடித்துச் சுடுகிறார்களே அது ஏன்?
அதுவும் அந்தியேட்டிவரை உயிருக்கு உடல் தொடர்
பிருக்கிறது. என்பதற்கான மற்றொரு அறிகுறிதான்.
4. சிலருக்கு மட்டும் பிரேதக் கிரியையோடு அந்தியேட்டியும செய்கின்றார்கள் அது ஏன்?
அதையும் அறியத்தான் வேண்டும். சாதாரணமாக நம்மவரைப்போலல்லாது சிலர் விசேஷமான தீகூைடி, ஆசாரம், ஒழுக்கம், சாதனை, சிவபூசை ஒழுங்கு உள்ளவர்களாயிருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு விசேட பக்குவம் இருக்கிறது. அந்த வாய்ப்பினால் அவர்கள் இறந்த உடனேயே தேகத் தொடர்பை நீக்கிவிடக்கூடிய தகுதியும் இருக்கிறது. அதனால் தான் அப்படி நிகழ்கிறது.
5. அஃதிருக்க பிரேதக் கிரியையிலும் அந்தியேட்டிக் கிரியையிலும் பொற்சுண்ணம் இடிக்கிறார்களே அது ஏன்?
அதுவும் அவர் உடல் தொடர்புள்ளவராயிருத்தலிற் சம்பந்தப்படும். அவருடைய தனு, கரண, புவன போகம் எல்லாவற்றையம் இடித்து நொறுக்கி இல்லாமற் செய்தல் என்ற கருத்தில்தான் செய்யப்படுகின்றது.
ஆரீபதி

Page 16
6. பொற்சுண்ணமிடிக்கையில் திருவாசகத்திலிருக்கும் திருப்பொற்சுண்ணப் பதிகமும் படிக்கிறார்களே அது ஏன்?
பொற்சுண்ணமிடித்தலினால் இறந்தவருடைய தேகத் தொடர்பு நீக்கப்பட அவர் சிவலோகஞ்சேர தகுதியாகிறார். அப்படி அவர் சிவலோகஞ் சேரும் பட்சத்தில் அவருக்கு அங்கு வரவேற்பு நிகழும். அந் நிகழ்ச்சியை பிரதிபலிக்கும் ஒசைப் பொலிவும் பொருள் விளக்கமும் திருப்பொற்சுண்ணப் பதிகப் பாடல்களில் உண்டு. அதனாலேயே பொற்சுண்ணமிடிக்கும் நிகழ்ச்சியோடு இதுவும் தொடர்புபட்டிருக்கின்றது. உண்மையில் சிவலோகஞ்சேரும் தகுதியுள்ளவர் விஷயத்தில் அது உண்மையாய் முடியும். மற்றவர் விஷயத்தில் அது உபசாரமாகும் என்றாலும் பரவாயில்லை. ஏனெனில், இவர்களும் எப்பவோவெனினும் தமக்குரிய காலத்திற் if 6 (S6) TasLD60) Lu வேண்டியவர்களே. அது நியாயமான உண்மை. நியாயமான
உண்மையை உபசாரமாகக் கையாளுவதில் பழுதில்லை. அது திருத்தத்துக்குச் சிறந்த வழி என்பது சைவ விளக்கநிலை.
7. அந்தியேட்டி முடிவில் வீட்டுக் கிரியை செய்வதேன்?
அந்தியேட்டி முடிவில் இறந்தவரது வீட்டில், நக்னதானம், ஏகோதிட்டம், தசதானம், சபிண்டீகரணம் முதலிய பல கிரியைகள் நிகழும். இவையெல்லாம் பொதுவில் வீட்டுக் கிரியைகள் எனப்படும். அந்தியேட்டியில் தேகத் தொடர்பு நீங்கப்பெற்றவர் தனககுரிய சுவர்க்க, நரக கதிகளிற் செல்வார். அவ்வாறு செல்லும் அவர் பாதை தனிமையானது. இருளானது. விக்கினங்களோடு கூடியது. ஆதலால் அவ்வித கஷ்டங்களில் இருந்து அவருக்கு விமோசனமளிக்கும் நோக்கில் வீட்டுக் கிரியைகள் நிகழ்கின்றன. கிரியைகளில் குடை, செருப்பு, விளக்கு, செம்பு, தண்ணிர் முதலிய எல்லாம் கொடுப்பது அவ்வசதிகள் வேண்டியிருக்கும் பாதையில் அவை அவருக்கு உதவட்டும் என்பதால் தான்.
25 ரீபதி

8. வீட்டுக்கிரியை அழைப்பிதழில் சிலர் சபிண்டீகரணக் கிரியை என்று மட்டும் குறிக்கிறார்களே அது ஏன்?
அது வேறொரு விசேஷத்தினாலுமல்ல வீட்டுக்கிரியை - யின் பகுதிகள் என மேற்சொன்னவற்றிற் சபிண்டீகரணம் பிரதானமானது என்பதால் தான். எங்ங்னமெனில் இறந்தவர் மேற்குறித்த கஷ்ட வழியெல்லாந் தாண்டிப்போய் தண், சுவர்க்க நரகப் பேறுகளைப் பெறுவதற்கு, முன்சொன்ன பிரதிகளின் சகாயம் வேண்டும். அதற்காக அவர் பிதிகளோடு சேர்க்கப்பட வேண்டும். பிரதிகளுக்கு அறிகுறியாக, மாவுடன் எள், அரிசி, தேன், சர்க்கரை, தயிர் குழைத்துருட்டிய பிண்டங்களையிட்டு வைத்து அவற்றுக்கெதிர் இறந்தவர்க்கு அறிகுறியாக ஒரு பிண்டமிட்டு, கிரியை செய்பவர் எல்லோரையும் ஒரு சேரப் பூசித்து எல்லோர்க்கும் நைவேத்தியம் கதலி பல தாம்பூலம் எல்லாம் சமர்ப்பித்துத் தூய தீபாராதனை செய்து முடிவில் இறந்தவரைக் குறிக்கும் பிண்டத்தை மற்றப் பிண்டங்களோடு ஒன்றுசேர்த்தல் காரணமாக இது சபிண்டீகரணம் எனப் பெயர் பெற்றது.
9. அவ்வாறு பிண்டத்தாற் குறிக்கப்படும் பிதிரர் என்பார் யார்? அவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் உள்ள தொடர்பு யாது? பிதிரர் என்பார் படைப்புக் காலத்தில் சிவனால் படைக்கப்பட்ட ஒரு தேவசாதியார். இறந்தவர் நலன்களைக் கவனிக்கும் அலுவலர்களாகச் சிவனால் நியமிக்கப்பட்டவர்கள் அவர்கள். இறந்தவர் ஒரு ஆண் ஆனால் அவரது பிதாமகர். (பேரன்) பிரபிதாமகர் (பூட்டன்) என்பதற்குப் பொருந்தும் நிலைகளில் அவர்கள் இருப்பர். இறந்தவர் பெண்ணானால் அவரின் மாதா மாதா மஹி, பேத்தி பிரமாதா மஹி பூட்டி என்ற முறைக்குப் பொருந்தும் நிலைகளில் இருப்பார்கள். அதாவது இறந்தவர் பேரில் அவரது தகப்பன், தாய், பேரன், பேத்தி, பூட்டன், பூட்டி என்போர்க்கிருக்கும் கரிசனைக்குச் சமானமான கரிசனை உள்ளவர்களாக அவர்கள் இருப்பார்கள். இறந்தவர் பேரில் அவர்களைக் குறித்து செய்யப்படும் எள்ளும் தண்ணிரும்
స్త్ర ரீபதி

Page 17
மிறைத்தற் (திலதர்ப்பணம்) கிரியையால் அவர்கள் திருப்தியுற்று இவரைக் குறித்துச் செய்யும் தான தருமப்பலன்களை அவர்கள் ஏற்று அவற்றின் மூலம் அவருக்கு நன்மை விளைவிப்பார்கள். அதேவேளை கிரியை செய்பவர் மேல் அவர் தந்தை, தாய் முதலியோர் சொரியும் அண்பையும் ஆசியையும் இவர்கள் பெறவும் வகை செய்வார்கள். அதனால் தான் பிதிர்க்கடன் பிரதானகடன் எனப்படுகின்றது.
20. இப்படியான பரிவர்த்தனைகள் (கொடுக்கல் வாங்கல்கள்) உண்மையென நம்பலாமா? இவற்றுக்கான தொடர்பு சாதனங்கள் எங்கே?
ஏன் நம்பக்கூடாது? சந்திர மண்டலத்திற்கு ஏதும் அனுப்பினால் போய்சேரும் என்று இப்போ சில வருடங்களுக்கு முன் யாபேரும் நம்பியதில்லை, இப்போ நம்புகிறார்கள். உண்மையில் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் மெயில் வண்டியோ தந்திக் கம்பியோ ஒரு சாதனமும் இல்லை. ஆனால் அனுப்பும் பொருள் போய்ச்சேர விஞ்ஞானத்தில் தொடர்பு சாதனம் இருக்கிறது. இச்சாதனத்தை மனிதன் இப்போதுதான் கண்டறிந்தான் என்பதேயன்றி இதற்குமுன் அதற்கு வழியிருந்ததில்லை என்பதற்கில்லை. அந்த அமைப்பை ஏற்படுத்திவைத்த சிவன் மேற்குறித்த பிதிரர்களுக்கும் பூமியிலுள்ளார்க்கும் இடையில் அப்படியொரு தொடர்புக்கான சாதனங்களை அமைத்து வைத்திருக்கமாட்டார் என்பதற்கு ஆதாரமில்லை. ஆனால் கடவுள் சம்பந்தப்பட்ட தொடர்புசாதனம் போலப் பிதிர் மண்டலத் தொடர்பு சாதனமும் ஒரு காலத்தில் வரலாமோ எனில் ஆகாது காரணம் ஏனெனில், தமக்கு சூழலாகிய பஞ்சபூதப் பிராந்தியத்துக்குப்பட்ட அளவில்தான் உருவ அமைப்பு வாயப்க்கும். அதற்கு அப்பாலான பிதிர் லோக முதலியவற்றிற்கு அது வாய்க்காது. தத்துவ இயல்பின்படி அது என்றும் அருவமாயிருக்கும். ஆனால் நம்பலாம்.
நினைவு மலர் ரீபதி

21. இப் பரிவர்த்தனையில் புரோகிதராய் இருப்பவரின்
பங்கு யாது?
கிரியை செய்பவருக்கும் இறந்தவருக்கும் தொடர்பூட்டதிகாரி போல இருப்பவர் புரோகிதர். புரோகிதராவார் நல்லறிவொழுக்கம், அக்கினி காரியம், சிவபூசை நெறிகளும் உடையவராயிருந்தால் அவரிடத்தில் பிதிரர்கள் திருப்தியடைவார்கள். அத்தொடர்பில் அவர் ஏற்கும் தானம் முதலியவற்றிற் பல பிரதிகளையும் அதற்கு காரணமாக இவர் தானங்களை ஏற்கும்போது "இதய சிவாயநம இது சிவனுக்கு, எனக்கல்ல என்று சொல்லி ஏற்க வேண்டிய விதியுண்டு. தானம் சற்பாத்திரமானவர்கள் கையில் கொடுக்கப்பட்டால் சிப்பியின் வாயில் விழுந்த நீர் முத்தாய் விளைவது போலப்பெரும் பயனாய் விளையும். அந்த நிலையில்லாதபோது கமரிலுாற்றிய பால போலாகும்.
22. சிரார்த்தம் என்பது யாது?
அந்தியேட்டிக்குப் பின் இறந்தவரைக் குறித்தும் நிகழும் கிரியைகள் எல்லாம் பொதுவில் சிராத்தம் எனப்படும். சிரத்தையோடு செய்வது சிரார்த்தம் என்ற விளக்கத்தின்பேரில் அது அமையும். சிரத்தை’ என்பது கிரியை செய்பவர் இறந்வதர் மேற்கொள்ளும் அன்பு, அவரைக் குறித்துச் செய்யுஞ் செயல்களிற் காட்டும் நேர்மை, மேற்கொள்ளும் பிரயாசை எல்லாவற்றையும் அடக்கும். நம்மவர் சூழலில், ஆட்டைத்திதி, திவசம் இரண்டுந்தான் சிரார்த்தம் என்று சிறப்பாகக் குறிக்கப்படுவதுண்டு. "சும்மா, ஐயருக்கரிசி கொடுப்பது என்ற பாவனை மட்டிலிருந்தால் அது சிராத்தமாகாது. தெய்வ சிந்தனையும், தேவார, திருவாசக பாராயணமும், உபவாசமுமாயிருந்து உத்தமமான திரவியங்களைத் தேடிப் பக்திபூர்வமாகச் செய்தாற்றாண் அது சிராத்தம் என்ற பெயருக்குப் பொருத்த
மாகும்.

Page 18
23. துடக்குக் காத்தல் என்ற ஒரு வழக்கம் இருக்கிறதே அது என்ன? அது எதற்காக?
துடக்கு என்பது ஒருவர் தொடர்பு காரணமாக ஒருவர்க்கேற்படும் அசுகுசுப்பான அகப்புறச் சூழ்நிலைகளைக் குறிக்கும். விசேஷமாக பிறப்பு, இறப்பு, ருதுவாதல் காரணமாக நிகழும் அத்தகைய அகப்புறச் சூழ்நிலையை அது குறிப்பதுண்டு. அது தொடக்கு எனவும்படும். வடமொழியில் தூய்மையின்மை’ என்ற கருத்தில் ஆசெளயம் எனப்படும். குறித்த நிகழ்ச்சிகள் காரணமாக சம்பந்தப்பட்டவர்களின் உடலிலிருந்து வெளிவரும் துர்நாற்றம் சார்பான திரவங்கள் கிருமிகள் அகச்சூழ்நிலையை மட்டுமன்றி புறச்சூழ்நிலையையும் பாதிப்பதுண்டு. இறப்பு வி\யத்தில் பிரத்தியேகமான மனத்திகில், அதிர்ச்சி, அமைதியின்மை, கவலைகள் மிகுந்து அதனால் தனிப்பட்டவரும், அவர் தொடர்புள்ளவரும், அவர் சூழலும் துடக்காகும் நிலைமை ஏற்படும். ஒருவர் சம்பந்தப்பட்ட துடக்கு இரத்தத் தொடர்பு அடிப்படையில் பலரைத் தாக்கும் என்பது அனுபவ உண்மை. அவ்வகையான தொடர்புக்குட்பட்ட அகப்புறச் சூழ்நிலைகள் சாந்தம், பொறுமை, நேர்மை, திருப்தி முதலிய சத்துவ குணநிலைக்குப் பாதகமானவை. பெரும்பாலும் சோம்பல், கவலை, மந்தம் முதலிய தமச குணவிருத்திகளே அச் சூழ்நிலையில் இருக்கும். அதனால், சத்துவ குணவிருத்தி நிலையில் செய்யப்பட வேண்டிய, தெய்வ கைங்கரியங்கள் விரதங்கள், தானம், தவங்கள், கல்யாணம் போன்ற நண்மைக் காரியங்கள் ஆகியவற்றுக்கு அத்துடக்குக் காலம் விலக்காகும். புனித நிலையங்களிற் பிரவேசித்ததற்கும் அது தடையாகும். இந்த ஒழுங்கை அநுசரித்தல் துடக்குக் காத்தல் எனப்படும் சைவப் பண்பாட்டில் பாரம்பரியமான ஒரு நடைமுறை
விதி இதுவாகும்.
மேற்காட்டிய அகப்புறச் சூழ்நிலைகள் மாறுவதற்குக் குறிக்கப்பட்ட ஒருகால எல்லையுண்டு. இது இயற்கைநியதி, அவ்வெல்லையில் மந்திரக் கிரியை சம்பந்தமான ஒரு தூய்மை செய்தல் அகப்புறச் சூழ்நிலையில் ஒரு திருப்தியும் பரமளிப்பும் புதுமலர்ச்சியும் ஏற்படுதல் சாத்தியமாகும். அந்நேரத்தில் நிகழும் மந்திரக் கிரியை துடக்குக் கழித்தல், ஆசௌச நீக்கம் எனப்பெறர்பெறும்.
ரீபதி

(1,933||fígif@ (?)
ப99ஐழிgilssoļlsoqjustossĒĻ9 giusto ĝi
+!† †
巨949
1,983||Tig) 1991?109$ 1,9810093), 1,919||m§ §qİm&so)
† † † † , † gaeae †ரபிதிப்ஐைய93
*:**---ĢĒTIį009@go国。ĢĒRossupoño sẽrtoo@9ĘĢĢĞIoff-ollúĠeo sẽrī£110,9€œ99
1 「파+" ~ 1 ~ 1
+
!
inqueigoj+ III noĒC09@jos
ĶĪNouoquae
ரீபதி
29
நினைவு மலர்

Page 19
எமது குடும்பத்தின் ஆணிவேராக விளங்கி கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணி பல இடங்களில் புரிந்து குடா நாட்டின் பலரது அன்புக்குப் பாத்திரமாய் எமது நல்வாழ்வுக்கு ஒளி விளக்காய் இருந்த
அமரர் கந்தையா மநீபதி அவர்களின் மரணச்செய்தி கேட்டு வந்து உதவிய அயலவர்கள், நண்பர்கள், உறவினர்களுக்கும் இறுதிக்
கிரியைகளில் கலந்து கொண்டு பல்வழி உதவிய எங்கள் துயரமதில் பங்கு கொண்டோர்க்கும், மலர் மாலை அணிவித்தும், மலர் வளையம் சாத்தியும், கண்ணிர் அஞ்சலி வெளியிட்டும், இரங்கல் உரை ஆற்றியும், நேரடியாகவும், தொலைபேசி மூலமும்
ஆறுதல் கூறியோர்க்கும், ஆத்மசாந்திப்
பிரார்த்தனையிலும், மதியபோசனத்திலும் கலந்துகொண்டோர்க்கும், இந் நினைவு மலரினை கணனிமயப்படுத்திய கங்கை பிறிண்டேஸினருக்கும்
எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மனைவி மக்கள் சகோதரர்கள், மைத்துனர்கள்
சந்தைவீதி, மானிப்பாய்.
கங்கை பிறிண்டேர்ஸ் .&ങ്കഞ്ഞ 78 கே. கே. எஸ் றோட் சிவலிங்கப்புஸ்ற, யாழ்
Τ. Ρ. O777 16.2554
ரீபதி
 
 
 
 
 
 


Page 20
1 AMEA Niza Rza N N. 585
W
Grillati Li 78, B5, B=- Tថាលំ វិញ
 
 
 
 

எது நடந்ததோ, .அது நன்றாகவே நடந்தது ܠܸܛܢܐ
எது நடக்கின்றதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையது எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய்? அதை நீ இழப்பதற்கு எதை நீ படைத்திருக்கிறாய், ! ! !
அது வீணாவதற்கு. எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும். இந்த மாற்றம் உலக நியதியாகும்.
TigerBLTGü li f'ismu GariffaċifiċiL-qsarfuuLg uuriib