கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கார்த்திகேசு ஐயாத்துரை (நினைவு மலர்)

Page 1
அமரர் கார்த்தி
அவர்
ឆ្នាំទៅរ៍
காரைக்கால் ܡ . வரலாறும் தி
 

ல் கிழக்கு
មិ58 ஐயாத்துரை
களின்
D6) lយាយយោប់ சிவன் கோயில் நிருவூஞ்சலும்

Page 2

SkKYyttöSS-N ZZAZZKVANTNANTAN
இணுவில் கிழக்கு 9py
திரு. கார்த்திகேசு ஐயாத்துரை
அவர்களின்
நீனுணவு மலர்
பின்னிணைப்பு: காரைக்கால் சிவன் கோயில் வரலாறும் திருவூஞ்சலும்
2-O-2003

Page 3
சமர்ப்பணம்
பாசமிகு தந்தையாய் நல்ல ஆசானாய் இருந்து எமக்கு நல்வழி காட்டிய எமது அன்புத் தெய்வத்திற்கு
இம்மலர் 69FL0/TUUGSCOTLD
- குடும்பத்தினர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

இணுவில் கிழக்கு காய்த்திகேசு ஐயாத்துரை
அவர்கள்
தோற்றம்: LOGO.g.06): 1920.04.25 2002. 12.22
திதி: மார்கழி மாத அபரபக்கச் சதுர்த்தி
śląśl Cl6NGOồrUDI சித்திர பானுவாண்டு சேர்மார் கழிமாதம் ஒத்த அபரச் சதுர்த்தியிலே - மெத்துபுகழ் சேர்இணுவை ஐயாத் துரைமகிபன் தானடைந்தான் பேரருளான் போற்றுசிவப் பேறு.

Page 4

பஞ்சபுராணம் தேவாரம்
திருச்சிற்றம்பலம்
பவள வண்ணப் பரிசார் திருமேனி திகழும் வண்ணம் உறையும் திருப்புன்கூர் அழகர் என்னும் அடிகள் அவர்போலும் புகழ நின்ற புரிபுன் சடையரே.
திருவாசகம்
மாடு நகைவாள் நிலாவெறிப்ப
வாய்திறந்து அம்பவளந் துடிப்பப் பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் தேடுமின் எம்பெருமானைத் தேடிச்
சித்தங்களிப்பத் திகைத்துத்தேறி ஆடுமின் அம்பலத்து ஆடினானுக்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
திருவிசைப்பா
பவளமே மகுடம் பவளமே திருவாய்
பவளமே திருவுடம்(பு) அதனில் தவளமே களபம் தவளமே புரிநூல்
தவளமே முறுவல் ஆடரவம் துவஞ மேகலையும் துகிலுமே ஒருபால் துடியிடை இடமருங்(கு) ஒருத்தி அவளுமே ஆகில் அவரிடங்களந்தை
அணிதிகழ் ஆதித் தேச்சரமே.
C 3 D

Page 5
திருப்பல்லாண்டு
மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு
ஆட்செய்ம்மின் குழாம் புகுந்து அண்டங்கடந்த பொருள் அளவில்லதோர் ஆனந்த வெள்ளப் பொருள் பண்டும் இன்றும் என்றும்உள்ள பொருளென்றே
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
வெள்ளி வெற்பின்மேல் மரகதக் கொடியுடன் விளங்கும் தெள்ளு பேரொளிப்பவளவெற்பென இடப்பாகம் கொள்ளுமாமலையாளுடன் கூட வீற்றிருந்த வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார்.
திருப்புகழ்
பத்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப்புகழ்பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வில்
முத்தியே சேர்வதற்கருள்வாயே உத்தமாதானசற் குணநேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞானசத்தினி பாதா
வெற்றிவேலாயுதப் பெருமாளே.
வாழதத
வான்முகில் வழாது பொய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவரீதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்
C4D

இணுவில் கிழக்கு கார்த்திகேசு ஐயாத்துரை அவர்களின் வாழ்க்கை வளம்.
அகவல்
யாழுர் நடுவண் யாவரும் போற்றும் வளமெலாம் மலிந்த வண்மைமிக்கதும் இணையில் கலைகளால் இணையிலியாகி இணுவில் எனும்புகழ் நாமம் பெற்றதும் ஆகிய இணுவில் கிழக்கில் புகழ்சால் சிவகாமியம்மன் திருவருளாட்சியில் தவவாழ்வு வாழும் தக்கோர் குலத்தில் கார்த்திகேசு சிவகாமிப்பிள்ளை தம்பதிகள் தம் இல்லறப்பயனாய் வந்தவதரித்தோர் மூவர் அவருள் ஐயாத்துரையெனும் ஆண்மகன் தானும் இராசலிங்கம் அன்னமுத்தெனும் இருவர் சோதரர் இன்புற வளர்ந்து தன்குலம் வாழும் தகைசால் தொழிலாய் கமத்தொழிலோடு சுருட்டுத் தொழிலும் கச்சிதமாகச் செய்தே சிறந்து அவ்வூர் பொன்னையா நன்மனையாள் நாகரத்தினம் நற்தம்பதிகளின் நல்லற வாழ்வின் பயனாய் வந்த சிவசுப்பிரமணியம் இராஜேஸ்வரியுடன் கனகலிங்கம் பத்மநாதன் எனும் நால்வரும் நற்சோதரராக வாய்த்த நங்கை வள்ளிநாயகியை வதுவை செய்து வாழ்வில் மகிழ்ந்து செல்வமும் செழிப்பும் நல்லறப்பண்பும் மங்கலமான மக்கட் செல்வமும் பெற்றுச் சிறந்து பெருமையுடனே மக்கள் மருகர் பேரப்பிள்ளைகள் வாழும் இன்ப வாழ்வு கண்டுவந்து மூத்த நன்மகள் மதனரூபி ஜெயபாலன்(அமரர்) என்னும் நம்பியை மனந்து ஜெயபானு ஜெயமதனா ஜெயமலர் என்னும் பிள்ளைகள் கல்வியில் பெருமையாய் வாழவும்
C 5 D

Page 6
தேவராணி என்னும் நன்மகள் விஜயபாலன்(லண்டன்) மணாளனை மணந்து அனுஷன், அனுஷியா, அனிதா, வாமணன், விதூஜன் என்னும் பிள்ளைகளுடனே அன்பில் கலந்து மகிழ்ந்து வாழவும் நகுலானந்தன்(சுவிஸ்) என்னும் நன்மகன் நாகநந்தினி நங்கையை மணந்து நிரூபன் நிதுர்ஜன் நிவேதன் என்னும் பிள்ளைகளுடனே பெருமையாய் வாழவும் கிரிதரன்(கனடா) என்னும் நன்மகன் தானும் தேவரஜனியைத் திருமணம் புரிந்து நேசராஜ் துவாரகா தினேஸ்ராஜ் சஜிந்தா எனும் பிள்ளைகளுடன் இன்பமாய் வாழவும் விஜயகுமார், கிரிசா எனும் இருபிள்ளைகள் இறைவன் பதத்தில் சாந்தி பெற்றிருக்கவும் சியாமளா என்னும் செல்வ நன்மகள் செல்வக்குமாரைத்(ஜேர்மனி) திருமணம் புரிந்து இருமனம் கலந்து இன்புற்று வாழவும் எண்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்து இகபர சுகமெலாம் இனிதே கண்டு சித்திரபானு ஆண்டு மார்கழி அபரபக்கச் சதுர்த்தித் திதியில் பிள்ளைகள் பேரர் சுற்றம் சூழ்ந்திருக்க இறைபரம் எய்தினர். இயற்கையுமி.தே.
நிலையாமை
அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழிஅம்பொழுக மெத்திய மாதரும் வீதிமட்டே, விம்மி விம்மிஇரு கைத்தலை மேல்வைத்தமும் மைந்தரும் சுடுகாடுமட்டே பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே.
- பட்டினத்தார்
ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை மாற்றிப்பினமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைச் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே.
- திருமூலர்.
C 6 D

„goðBII?ựis Jĝ9,00901Juntowas dimōto
IIÇéïtÃseJĝ99ăroş)īgsusăŲosseII.109ĝơimŝto ĜII.Ĥqsoloog)ī£1998ųJIỆUĢĪumuštos@sef@irimŝto) JIşefi.urtos@įgori@supoštos@Hạo ĜII,ßạgig)Jp909 urīmỗto) JỊIJI@oreoq9oCo)ự09ồfîrtos@g)J090ĝoŭgŭoligÍ 1990,9 urīmỗusto(ųđơIseo) 十(ųđơTheo)十(Issoire)十十十
III.9Guimus uoUẦUso 199ńsắųÎƯe quơi@mều 9 JQ93@irosung@gi yooomfirogs,υ 19δ1999άσι
t—t—t—t—t—t—? |+|
UsomligÍų,9ų919ĴtooľĝĢIIrnƐ q1.109ÚŘoặsseligÍ + IIIn 109t09.Jp9|url(o) 1909)9U IIIŲIIIor SUẾ + sgweg)(sãoặų się

Page 7
运沪员
நன்றி நவிலல்
எங்கள் குடும்பத்தலைவரை இழந்து தவித்தவேளை இல்லம் நாடி வந்து இறுதிக் கிரியையின் கலந்தவர்களுக்கும், தங்கள் அனுதாபங்களை அகம் நெகிழ்ந்து செலுத்தியவர்களுக்கும், எங்களுடன் நின்று நிறைந்த உதவி புரிந்தவர்களுக்கும், நிம்மதி சொல்கி அஞ்சலிச் செய்தியனுப்பி ஆறுதல் கூறியவர்களுக்கும், மற்றும் so வழிகளிலும் உதவியவர் க்கும், அந் யேட்டி வீட்டுக் கிருத்திய, நிகழ் வுகளின் கலந்து
காணிடவர்களுக்கும் எங்கள் நெஞ்சம் மறவாத
நன்நிகளைக்காணிக்கை யாக்குகின்ேறாம்
இணுவில் கிழக்கு இங்ாகனம்
இணுவில் குடும்பத்தினர்

flesLou IIb
A.
இணுவில்-கோண்டாவில் காரைக்கால் சிவன் கோயில் வரலாறும் விஸ்வநாத சிவன் திருவூஞ்சலும்
ஆக்கியோண்: சைவப்புலவர் சு.செல்லத்துரை இளவாலை

Page 8
முதலாம் பதிப்பு: 1969-07-20
வெளியீடு: இணுவில் இசைநடன
கிராமிய கலைக்கல்லூரி
பிரதிகள்: 500
இரண்டாம் பதிப்பு: 2003-01-21
வெளியீடு: அமரர் கார்த்திகேசு ஐயாத்துரை
குடும்பம்
பிரதிகள்: 1000

6) . afloo.ILDuILb
இணுவில் - கோண்டாவில் காரைக்கால் சிவன் கோயில் வரலாறு
இறைவன் சிவாலயங்களில் உள்ள திருமேனிகளிடத்தும், சிவனடியாரிடத்தும் எழுந்தருளியிருந்து அன்பர்களுக்கு அருள் புரிவ: என்பது ஆன்றோர் வாக்கு. ஈழத்தில் யாழப்பாணக் குடாநாட்டில் நடுவிடத்தில் அமைந்துள்ள இணுவில் பலவித வளமும் செறிந்துள்ள ஊர். பண்டு தொட்டு சைவசமய ஆசார அனுட்டானம் உடையோர் வாழுக் புண்ணிய பூமி. இங்குள்ள ஆலயங்களில் காரைக்கால் சிவன் கோயிலும் முக்கியமான ஒன்றாகும். இது சிவாலயங்களிற்குரிய மூர்த்தி, தல, திர்த்த விசேடமுடையது. இவ்வாலயத்தின் வரலாற்றில் உண்மைச் சரித்திரத்துடன் அருள் நிகழ்ச்சிகளும் பின்னிப்பிணைந்துள்ளன. இங்கு பஞ்சலிங்க மூர்த்தமாக விஸ்வநாத சிவனும் விசாலாட்சி அம்மையும் எழுந்தருளியிருக் கப், பரிவார மூர்த்திகளாக மாரியம்மனும், விநாயகரும்,முருகனும், ஞானவயிரவரும் எழுந்தருளியிருந்து அடியர் பிணியகற்றி அருள்பாலிக்கின்றனர். மேற்கு நோக்கிய இவ்வாலயத்தின் முன்புறத்தில் வேம்பும் அரசும் ஒன்றாக முளைத்துக் கிளைவிட்டுப் பெருவிருட்சங்களாகி அம்மையும் அப்பனுமாய் அமைந்திருக்கும் காட்சி மனதுக்கு ஆனந்தத்தைத் தரவல்லது.
ஆண்டுதோறும் ஆடித் திருவோணத்தைத் தீர்த்த நாளாகக் கொண்டு (கதிர்காமத் தீர்த்தத்தன்று) பத்து நாட்கள் கொடியேற்றித் திருவிழா நடைபெறுகின்றது. திருவிழா அபிடேகம் முதலிய விசேட காலங்களில் அன்னதானமும், வெள்ளிக்கிழமை தோறும் குழைசாதமும் அடியவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றது. எவ்வித பிணியாளரும் இதனை மருந்தாக எண்ணி உண்டு தமது பிணியில் நின்றும் நீங்குகின்றார்கள். இவ்வாலயம் தோன்றுதற்கு ஏதுவான ஒரு அருள் நிகழ்ச்சியே இதற்கும் ஏதுவாகும்.
19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இணுவிலில் பெரிய 'சந்நியாசியார்" என அழைக்கப்பட்ட ஒரு அருட்பெரியார் வாழ்ந்தார். கருவிலே திருவுடைய இவருக்குப் பெற்றார் இட்ட பிள்ளைப் பெயர் சுப்பிரமணியம் என்பதாகும். சுப்பிரமணியம் சிறுவயதினனாய் இருக்கும் பொழுது தனது தந்தையாருடைய மாட்டு மந்தையை மேய்த்து வருவது வழக்கம். இப்போது காரைக்கால் என அழைக்கப்படும் இடம் அப்போது காரை முட்பற்றைகள் நிறைந்த காடாக இருந்தது. காரைக்காடு என அழைக்கப்பட்டது. காரைக்காடு எனும் பெயரே பிற்காலத்தில் மருவிக் காரைக்கால் ஆயிற்று. சுப்பிரமணியம் என்னும் சிறுவன் மாடுகளைக் காரைக்காட்டுப் பக்கத்தில் மேய்ப்பார். அவரது தாயார் தினமும் அவருக்கு அவ்விடத்தில் உணவு கொண்டு பேய்க் கோடுப்பார். ஒருநாள் எக்காரணம்
C ( ) D

Page 9
கொண்டோ உச்சிப் பொழுதாகியும் தாயார் உணவு கொண்டு வரவில்லை. மாடு மேய்த்த சிறுவன் பசியாற்களைப்புற்று அவ்விடத்தில் நின்ற ஆலமர நிழலில் படுத்துறங்கி விட்டான். அப்போது தாயார் வடிவு கொண்ட ஒருவர் கட்டுச் சோற்றுடன் வந்து சிறுவனை எழுப்பி உணவைக் கொடுத்தார். வ்ழமைபோல் கொண்டுவரும்நீரைக் கொண்டு வராததால்நீர் எங்கே என்று சிறுவன் கேட்க அவன் துயில் கொண்ட இடத்தின் அருகிலேயுள்ள கற்குட்டையில் நீர்சுரந்து வரும் இடத்தைக் காட்டினார். அந்நீரிற் கைகால் கழுவி உணவையுண்டு கையலம்பி நீர் குடித்துவிட்டுத் தாயாரைத் தேடிய பொழுது அவரைக் காணாமையால் சிறுவன் திகைப்படைந்தான். உடனே வீட்டுக்குச் சென்று அங்கு தாயார் இருக்கக் கண்டு தனக்குச் சொல்லாது விரைந்து வந்த காரணம் யாதெனக் கேட்டார். தாயார் எதுவும் அறியாதவராய்த் தான் அங்கு வரவில்லை என்பதைக் கூறினார். சிறுவன் நடந்ததைக் கூற இது உலக மாதாவாகிய அம்பிகையின் அருட்செயலே என்பதை உணர்ந்தனர். அன்றே அவரது அருள் வாழ்வு மலரத் தொடங்கியது.
சிறுவன் சுப்பிரமணியத்திற்கு அன்னை அன்னபூரணி உணவூட்டிய இடத்தில் மாரியம்மனுக்குக் கோயில் எடுக்கப்பட்டது. அதுவே இன்றைய காரைக்கால் சிவன் கோயிலின் வடபுறத்தில் மாரியம்மன் ஆலயமாகத் திகழ்கின்றது. அன்று நீர் சுரந்த இடம் தீர்த்த விசேடமாய் இன்று திருமஞ்சனக் கேணியாக இருக்கின்றது. அம்மையின் பெயரால் எழுந்த ஆலயம் இன்று அய்யனின் பெயரால் காரைக்கால் சிவன் கோயில் என அழைக்கப்படுகின்றது. அன்று காரைக்காடாக, கொடிய பாம்பும் பேயும் குடிகொண்டு பயங்கரமாயிருந்த இடம் இன்று அம்மையப்பன் அருள் நிழலாய், ஆலும் மாவும் அரசும் வேம்பும் ஓங்கி வளர்ந்த பெருஞ் சோலையாய் மாறாத வெம்பிணியால் வாடுவோர்க்குத் தஞ்சமளிக்கும் அருட்சோலையாய்த் திகழ்கின்றது.
அன்னையின் அருள்பெற்ற சுப்பிரமணியம் அவ்விடத்திற்றானே இருந்து மணிமந்திரப் பணிமூலம் மக்கள் பிணியகற்றிப் பெரிய சந்நியாசியார்" என அழைக்கப்பட்டார். சந்நியாசியார் தமது வாழ்வில் பல அற்புதங்களைச் செய்த வாய்வழிச் செய்திகளை இன்றும் இணுவிலில் கேட்கலாம். இவர் இணுவில் கந்தசுவாமி கோயிலுக்கு ஒரு மஞ்சம் செய்து விட விரும்பினார். அவ்வெண்ணம் நிறைவேற ஆண்டவன் கனவில் தோன்றி அருள் செய்ததாகவும், இறைவனே சந்நியாசியாரின் வடிவு கொண்டு தென்னிந்தியாவிலுள்ள தேவகோட்டை முத்துக்கறுப்பன் எனும் ஆசாரி தலைமையில் தலைசிறந்த சிற்பிகளை அழைத்து வந்ததாகவும் காங்கேசன்துறையில் வந்திறங்கியபோதுதம்மை அழைத்துவந்தவரைக் காணாது சிற்பிகள் பெரிய சந்நியாசியாரின் இருப்பிடத்தை விசாரித்து வந்ததாகவும், அச்செய்திகளை சந்நியாசியாருக்குக் கூற அவர் இறைவனின் அருட்குறிப்பை உணர்ந்து கலையுலகம் போற்றத்தக்க ஒரு மஞ்சத்தை உருவாக்கப்பணித்துத் தமது மனதிற்பட்ட நியதிக்குட்படவே செய்வித்து முடித்ததாகவும் இதனை நேரிற் கண்டோர் இன்றும் கூறுவர். 37 அடி உயரமுடைய இந்த மஞ்சத்தைப் போலக் கலையம்சமும், நுட்பமும்
C C 2 D

உடையது வேறேங்குமேயில்லை என்பது அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் யாவரதும் ஒத்த முடிவாகும். இந்த மஞ்சம் புனையப்பட்ட இடமே இன்று மஞ்சத்தடி கந்தசுவாமி கோவிலென அழைக்கப்படுகின்றது. இணுவில் கந்தசுவாமி கோயிலிலிருந்து காரைக்கால் சிவன் கோயிலுக்குத் தேர் ஒடுவதற்கு முப்பத்தாறு (36) அடி அகலம் கொண்ட வீதி ஒன்று திறந்து தேரும் ஒடச்செய்தார். இன்று அவ்வழியே தேர் ஒடுவதில்லை எனினும் காரைக்கால் சிவன் கோயில் வீதியில் தேர் ஒடுகின்றது. பெரிய சந்நியாசியாரின் அருள் வாழ்வுடன் இணைந்த இணுவில் கந்தசாமி கோயிலும், மஞ்சத்தடி கந்தசாமி கோயிலும், காரைக்கால் சில: கோயிலும், வரலாற்றிலும் இணைந்துள்ளன. இணுவிலின் அருளுருவாய்த் திகழ்ந்த பெரிய சந்நியாசியார் அவர்கள் இணுவிலின் நடுவிடத்தில் தோன்றிக் கீழ்த்திசையில் (காரைக்காலில்) அருள் பெற்று மேல்திசையில் (இணுவில் கந்தசாமி கோயில்) அவ்வருளால் பல அறங்கள் புரிந்து மீண்டும் தாம் தோன்றிய சூழலிலேயே (மஞ்சத்தடி கந்தசாமி கோயில்) நிறை நிலையுற்றார். அவர்கள் மூலம் வீசத் தொடங்கிய அருள் அலைகள் இன்னும் பல்லாண்டுகள் அவ்வூரையும் அயலூர்களையும் வாழ்விக்கும் என்பதில் ஐயமின்று. பெரிய சந்நியாசியார் அருள்பெற்ற காரைக்காலில் ஒரு அருளாளர் பரம்பரையே உருவாகிவருவதைக் காணலாம்.
அண்மைக் காலத்தில் ஈழத்தின் அருட்சோதியாகத் திகழ்ந்த யோகர் சுவாமிகள் இடையிடையே காரைக்கால் பக்கம் வந்து போனதுண்டு. எதற்காக வந்து போனார் என்பதை எவரும் அறிந்திலர் ஆயினும் அவ்விடத்தில் வீசும் அருளலைகளே சுவாமிகள் வந்து போனதற்குக் காரணமாயிருந்தது என்பதை உணரமுடியும். சுவாமிகளின் அருளாசி பெற்ற ஞானபண்டிதர் கொக்குவில் நடராசா வைத்தியர் அவர்களும் அருட்பணி புரிந்து பெருஞ்சேவை செய்து ஈற்றில் சமாதி நிலையடைந்த இடமும் இதுவேயாகும். உடல்நோயுடன் உளநோயையும நீக்கி ஆன்மஈடேற்றம் நல்கவல்ல வைத்தியர்"அவர்களின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமான திரு.கதிரித்தம்பி அம்பலவாணர்(சாமியார்) அவர்கள் இன்று காரைக்காலிலிருந்து மணிமந்திர, வைத்தியப்பணிபுரிந்து பல்லோர் பிணியகற்றும் அருளாளராய் விளங்குகின்றார். இணுவில் கந்தசாமி கோயிலை ஆக்கிய திரு.கு.வே.அருணாசலம் அவர்களது சந்ததியில் வந்த இவர் சிறுவனாக இருக்கும் போதே ஞானபண்டிதர்நடராச வைத்தியரால் வலிந்து ஆட்கொள்ளப்பட்டு அவரிடம் மணிமந்திர வைத்தியக் கலையைக் கற்றார். அவரையே குருவாகக் கொண்டு காரைக்காலை இருப்பிடமாகக் கொண்டு அருட்பணியாற்றி வருகின்றார். இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் கொடிய நோயாலும் பேயாலும் உளத்தாக்கத்தாலும் வருந்துவோர் இங்கு வந்து தங்கியிருந்து தெய்வ அருளால் சுகம் பெற்று செல்கின்றனர். திராப்பிணியகற்றும் திவ்விய இடமான காரைக்கால் இருமை பயனும் தரவல்ல இணையற்ற தலமாகும். இத்தலத்தின் வளர்ச்சியிலும், அருளாட்சியிலும் கோண்டாவில் மக்கள் கொண்டுள்ள ஆர்வமும் இணுவில் மக்கள் கொண்டுள்ள ஊக்கமும் எல்லையில்லாதன. இவ்விடத்தின் சிறப்பை உணர்ந்து, இறைவனருள் பெற்றுஎல்லோரும் இன்புற்றிருப்பார்களாக,
C C3 D

Page 10
6. சிவமயம்
இணுவில் - கோண்டாவில் காரைக்கால் விஸ்வநாதசிவன்
திருவூஞ்சல்
காப்பு
சிவநெறியும் செந்தமிழும் செழித்தே வாழும்
திருவிடமாம் ஈழவள நாட்டில் மேலோர் தவவிரத சாதனையில் தலைமை பூணத்
தகுமினுவில் கோண்டாவில் சார்ந்தே யார்க்கும் பவமகற்றும் காரைக்கால் பதியில் தொண்டர்
பரவுவிஸ்வ நாதர்மேல் ஊஞ்சல் பாடக் கவளமத கடகளிற்று ஞான பானு
கணபதியின் இணையடிகள் காப்பதாமே.
நால இருக்குயசுர் சாமவதர் வணநால் வேதம்
இயைந்திடுநல் வைரமணித் தாண்கள் நாட்டி திருத்தகுசீர் உபநிடத விட்டம் பூட்டிச்
சிந்தைமகிழ் கலைஞானக் கயிறு மாட்டிப் பெருகுமருட் பிரணவமாம் பீட மேறி
பிரபைவிசா லாட்சியருட் சக்தி யோடு விருததரு காரைக்கால் பதியில் மேவும்
விஸ்வநாத சிவனாரே ஆடீர் ஊஞ்சல்.
விரிபுவன மீதிலருள் வாழ்வு காண
விரும்புமடி யாருளமாம் கோயில் தன்னில் சரியைகிரி யாயோக ஞான மார்க்கம்
சார்ந்திடுநாற் பாதமெனும் கால்க ளாக்கி அரியமறை யாகமத்தை விட்ட மாக்கி
அன்புவடம் மாட்டியருட் பீட மேறி விரிமலர்சேர் காரைக்கால் பதியில் மேவும்
விஸ்வநாத சிவனாரே ஆடீர் ஊஞ்சல். 2
C4D

தம்புருநா ரதர்சாம கானம் பாடத்
தாபமிகு தீபமுடன் முனிவர் கூட நம்பனருள் நந்திபெரு முழவு கொட்ட
நாற்றிசையும் போற்றியிசை நாத மெட்ட உம்பரொடு அரியயனும் வடந்தொட் டாட்ட
உமைவிசா லாட்சியருட் பார்வை கூட்ட வெம்புவினை தீர்காரைக் காலில் மேவும்
விஸ்வநாத சிவனாரே ஆடீர் ஊஞ்சல்.
ஆலமுண்டு தேவர்களுக் கமுத மூட்டி
அடியவரின் மிடியகற்றும் பாங்கு காட்டி நீலகண்டத் தோடுமணிப் பீட மேறி
நினையுமடி யவர்தயரக் கடலை நீக்கிக் கோலமயில் ஆடிடுமாஞ்சோலை யூடே
கொலுவிருந்தே குயில்களிசை பாட ஆடும் வாலறிவன் காரைக்கால் பதியில் மேவும்
விஸ்வநாத சிவனாரே ஆடீர் ஊஞ்சல்.
பங்கயத்தோன் முதற்றேவர் வடந் தொட்டாட்ட
பாரளந்த மால் முதலோர் ஆல வட்டம் செங்கரத்தி லேந்தஇரு மருங்கும் நின்றே
திருமகளும் கலைமகளும் கவரி வீச இங்கிதமாய்க் கின்னரர்ஏழ் இசைகள் பாட
இந்திரனார் வெண்கொற்றக் குடை கவிக்க வெங்கொடிய பிணிபோக்கும் காரைக் காலில்
விஸ்வநாத சிவனாரே ஆடீர் ஊஞ்சல்.
சடையாடப் பிறையாடக் கங்கை ஆடக்
செங்கரத்தி லக்கினியும் சேர்ந்தே யாட இடையாட மான்மழுவும் இசைந்தே யாட
எழில்மார்பில் முப்புரிநால் இலங்கி யாட அடையாத அருளமுதை அள்ளி யுண்ணும்
அன்பருள ஊஞ்சலிலே அசைந்தே யாடி விடையேறி நடமாடும் காரைக் காலில்
விஸ்வநாத சிவனாரே ஆடீர் ஊஞ்சல்,
C 5 D

Page 11
ஐம்பூத முதல்யாவும் ஆட ஆட
ஐந்தொழிற்கும் காரணர்கள் அவரு மாட தம்பிமுக னோடுதம்பி முருக னாடத்
தடியிடையாள் விசாலாட்சி அம்மை யாட நம்புமடி யவர்மிடியும் வினையு மோட
நல்லடியார் மனவூஞ்சல் மீதி லாடி வம்புநறு மலர்ச்சோலைக் காரைக் காலில்
விஸ்வநாத சிவனாரே ஆடீர் ஊஞ்சல். ך
அம்மாவென் றழுமடியார் தயர்கள் தீர்க்கும்
அன்னைசிவ சக்தியருள் மாரி ஓர்பால் இம்மைவினை வலிதீர்த்து ஞானம் நல்கும்
ஐங்கரனோ டறமுகனாம் முருகனோர் பால் வெம்புபவர் பிணிதீர்க்கச் சூல மேந்தும்
வித்தகனாம் ஞானவயிரவரும் ஓர் பால் வெம்பகைகள் வெகுண்டோடும் காரைக் காலில்
விஸ்வநாத சிவனாரே ஆடீர் ஊஞ்சல். 8
அந்தணர்கள் வேதஇசை பாடி ஏத்த
அடியவர்கள் கீதஇசை கூடி யாட சிந்தையெலாம் சிவப்பொலிவுச் செம்மை தேக்கி
செய்வதெலாம் சிவனுக்கே சேவை யாக்கிச் செந்தமிழ்ப்பா வலர்நிறைசொற் கவிதை பாட
தெய்வமணங் கமழினுவைப் பதியின் கீழ்பால் வந்தவினை வெந்தமடி காரைக் காலில்
விஸ்வநாத சிவனாரே ஆடீர் ஊஞ்சல். 9
முக்கண்ணுடைப் பிரானாரே ஆடீர் ஊஞ்சல்
முழுமுதலாய் உள்ளவரே ஆடீர் ஊஞ்சல் தக்கன்மகம் தகர்த்தவரே ஆடீர் ஊஞ்சல்
சர்வவினை தீர்ப்பவரே ஆடீர் ஊஞ்சல் அக்கமணி மாலையினி ஆடீர் ஊஞ்சல்
அன்னைவிசா லாட்சியுடன் ஆடீர் ஊஞ்சல் விக்கினங்கள் தீர்த்தருளும் காரைக் காலில்
விஸ்வநாத சிவனாரே ஆடீர் ஊஞ்சல். O
C 6 D

'வாழி'
அந்தணரும் அருமறையா கமமும் வாழி
ஐந்தெழுத்தம் அருணுாலும் வாழி வாழி சிந்தை நிறை மங்கையர்கள் கற்பும் வாழி
சிவனடியார் திருக்கடட்டம் வாழி வாழி செந்தமிழும் சிவநெறியும் சேர்ந்து வாழி
செம்மைதரு வான்மழையும் வாழி வாழி விந்தைவிசா லாட்சியுடன் காரைக் காலில்
விஸ்வநாத சிவனாரும் வாழி வாழி.
"எச்சரிக்கை
தில்லையிலே நடமாடும் தேவே எச்சரிக்கை செம்பவளத் திருமேனிச் செல்வா எச்சரிக்கை எல்லையில்லா வல்லமையே எத்தாய் எச்சரிக்கை இருவினைப் பிறப்பறக்கும் மருந்தே எச்சரிக்கை நல்லருட்பே ரின்பமய ரூபா எச்சரிக்கை ஞானமய மானகண நாதா எச்சரிக்கை வல்லயை யருள்பெருகு காரைக் காலில் விஸ்வநாத சிவனாரே எச்சரிக்கை.
'பராக்கு
திருமருவு மினுவை நகர்த் தேவே பராக்கு சித்தியொடு முத்திதரு செல்வா பராக்கு அருவுருவ மாகியருள் அமலா பராக்கு அம்மையுமை யாளிண்மண வாளா பராக்கு அருமறை ஐம்பூதமுத லானாய் பராக்கு அப்பனென எப்பரமும் ஈவாய் பராக்கு விருதருறை காரைக்கால் பதியில் மேவும் விஸ்வ நாத சிவனாரே பராக்கு.
C 7 D

Page 12
*IGP
சொற்பதங் கடந்தவற்கு லாலி சுபலாலி தரியாதீத மாணவர்க்கு லாலி சுபலாலி கற்பனைக் கெட்டாதவற்கு லாலி சுபலாலி கஜமுகனைத் தந்தவற்கு லாலி சுபலாலி சற்குருவாய் வந்தவற்கு லாலி சுபலாலி சகலலோக நாயகற்கு லாலி சுபலாலி வெற்றிதரு சித்தருறை காரைக் காலில் விஸ்வநாத சிவனார்க்கு லாலி சுபலாலி.
"மங்களம்
தேவ தேவ சங்கரற்கு மங்களம் தேவியுமை பாகருக்கு மங்களம் பாவவினை அறப்பவற்கு மங்களம் பரமஞான சிற்பரற்கு மங்களம் ஆலம் உகந்தவற்கு மங்களம் அம்பல வாணருக்கு மங்களம் சூலம் தரித்தவற்கு மங்களம் சோதி மயமானவற்கு மங்களம் விண்ணோர்க்கரியவற்கு மங்களம் விரும்புமண்பர்க் கெளியவற்கு மங்களம் கண்மூன்று டையவர்க்கு மங்களம் காரைக் கால் நாதருக்கு மங்களம் வெண்ணிறனிந் தவற்கு மங்களம் விசாலாட்சி நாதருக்கு மங்களம் விண்ணோர் தலைவருக்கு மங்களம் விஸ்வநாத சிவனார்க்கு மங்களம்.
வணக்கம்.
இணுவில் - கோண்டாவில் காரைக்கால் விஸ்வநாதசிவன் திருவூஞ்சல் முற்றிற்று.
சுபம்.
C 8 D


Page 13

****