கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனோன்மணி சரவணபவன் (நினைவு மலர்)

Page 1

அக் கவிஞர் 1.கு.சரவணபவன்

Page 2

சிவமயம்
1. மேன்மை கொள் சைவரீதி 4 a விளங்குக உலகமெல்லாம் ష్ట్ర ? *
நலிணநீவைப் ഗ്ഗീ_om2', வாழ்விடமாவம் கொண்ட
edget -
O O திருமதி மனோன்மணி மூவணபவன்
அவர்களின் சிவபதப்பேறு குறித்த
நினைவு மலர் ܬ
16.04.2007
އާG"
-ಸ್ಥಿ-

Page 3
அமரர் அன்னை மனோன்மணிக்கு இன்புடன் படைத்திடும் O O O அன்புப் படையல்
எடுத்கு முத்துக்கள்
என்றும் நிலைபெற விடுத்கு வேண்டுகுலை விருப்புடன் ஏற்று குொடுத்து மாலையாக்கி குொல் பனுவலகுனை படைத்துப் போற்றுகின்றோம் பகுக் கமலமத்குே
 

அமரர் திருமதி மனோன்மணி சரவணபவன்
குேயும் விபவிருடப் பங்குனி மூன்றுசனி ஆபருத் திரயோ குசியவிeடம் - நேயமிகு கல்விப் பணியுடனே களித்குமனோன் மணியம்பாள்
வல்லபுகும் சென்றிeடாள் வான்.

Page 4
-
:
3.
',
്
 
 
 

6)- கடவுள் வாழ்த்து நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
' தரவு பாலளிக்குந் தாய் மடியிற் பசி யெடுக்கும் குழவியர்தம் பாலளிக்குந் தாயரின் மேற் பரம் நீ யென்பர மேட்டி பாலிரக்கும் அவருண்மிகப் பசியுடையேன் கேஎளினி
தாழிசை ஈசரு முன்பால் விரும்பி இடப்பால் தந்தருள்வ ரெனில் ஆசை யெனுங் கடற்ற விப்பேன் அரற்றுதல் அற்புதமாமோ நச்சரவு முனைப் பணிந்து நலனடையு மென்னிலுனை எச்சகமும் போற்று மென இசைப்பது மோர் இசையாமோ முப்பதிரண்டறம வளர்க்கும் முதல்வி யென நீ யிருக்கும் அப்பரிசு நினைந் தழுமிவ் வடிமையுரை வியப்பாமோ.
என வாங்கு.
சுரிதகம்
அருளுறு நின்பாற் பொருள் பெறு நசையேன் பன் னெடுங் காலமும் பத நிழல் மன்னி வாழ்த் துன்னிசை வழுத்து வன் மகிழந்தே.

Page 5
அமரர் திருமதி மனோன்மணி சரவணபவன் அவர்களின்
வாழ்க்கைச் சுவடு
இலங்கையின் வடபாகத்தில் உள்ள தீவுகளில் நடுநாயகமாக விளங்குவது நயினாதீவு. அங்கு அன்னைக்கு அன்னையாக அகில அண்டங்களையும் படைத்துக் காத்து அருள் புரியும் அம்பிகை கோயில் கொண்டருளியுள்ளாள். அம்பிகையின் அருள் சுரக்கும் மண்ணில் உயர்குடித்தோன்றல் முத்துகுமாரு மீனாட்சி தம்பதிகளுக்கு மூத்த மகளாக 1923.07.05 ஆந் திகதி பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் மனோன்மணி.
ஒளிபடைத்த கண்ணும், உறுதி கொண்ட நெஞ்சும், உடல் வனப்பும் கொண்ட நங்கையாகத் தோற்றமளித்தார். வெள்ளை நிறவாகு கொண்டவராதலால் அவரை “வெள்ளச்சி’ என்று செல்லமாக அழைத்தனர். தமது உறவுமுறைகளுக்கேற்ப வெள்ளச்சி அக்கா, வெள்ளைச்சிப் பெரியம்மா, வெள்ளச்சிச் சின்னம்மா, வெள்ளச்சி அம்மம்மா, வெள்ளச்சி அப்பம்மா, வெள்ளச்சி மாமி எனப் பாசத்துடன் அழைத்தனர்.
அன்னார் தனது இளமைக் கல்வியை நயினை தில்லையம்பல வித்தியாலயத்தில் பயின்றார். மங்கைப் பருவத்தை அடைந்த இவர் தமது குலமரபில் தோன்றிய கவிஞர் ப.கு.சரவணபவன் அவர்களை வாழ்க்கைத் துணைவராக ஏற்றார் தமது இல்லற வாழ்வின் பயனாக மூன்று ஆண்குழந்தைகளுக்குத் தாயானார்.
2

மலைப்பிரதேசத்தில் தன் கணவருடன் இன்புற்று வாழ்ந் திருக்கும் வேளை விதிசெய்த சதியின் காரணமாக 1949ஆம் ஆண்டில் தனது கணவரைக் காலனிடம் பறிகொடுத்தார். பூத்துக் குலுங்க வேண்டிய பருவத்தில் பட்டமரமாகிய அன்னாரை அவரது உறவுகள் கல்வியைத் தொடர வழி காட்டினர். வாழப்போகும் காலங்களில் “தன் கையே தனக்குதவி என்றெண்ணி அயரா முயற்சியினால் சிரேஷ்ட கல்வித் தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தியடைந்து 1.1.1952 ஆம் ஆண்டில் கண்டி அலப்படகம அரசினர் பாடசாலையில் தனது முதல் ஆசிரிய நியமனத்தைப் பெற்றார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் தனது பயிற்சியை முடித்து அதனைத் தொடர்ந்து குருனாகல் இப்பாகமுவ அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கண்டி கலஹா அரசினர் பாடசாலை, நயினாதீவு மகாவித்தியாலயம், நயினாதீவு ரீ கணேச வித்தியாலயம், நயினாதீவு நாகபூஷணி வித்தியாலயம் ஆகியவற்றில் கல்விப்பணியாற்றி 04.07.1983இல் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ----
இளஞ் சிறார்களின் உள்ளங்களைக் கவர்ந்து கற்பிக்கும் திறன்வாய்ந்த இவர் தனது இறுதிக் காலம் வரையும் சிறார்களுக்குப் பாட்டுக்களையும், கதைகளையும் இனிதாக வழங்குவார். இறுதிவரையும் பிறருக்கு இன்னல் அளிக்கக் கூடாதென்று எண்ணிய இவர் தனது கடின உழைப்பின் பயனாக 1967ஆம் ஆண்டில் பெருமனையொன்றைக் கட்டி யெழுப்பினார். தனது புதல்வர்களான பரஞ்சோதி, பாலகிருஷ்ணபாரதி, சிவகுமார் ஆகியோரை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகியவற்றில் சேர்த்துக் கல்விக்கு வலுவூட்டினார்.

Page 6
தமிழ் சைவ விழுமியங்களைப் பேணும் மரபும், நன்றி மறவாத தன்மையும், உறவுளை அன்பாக உபசரிக்கும் பாங்கும், பகுத்துண்டு பல்லுயிர் ஒம்பும் தன்மையும் இவரிடம் நிறையவே காணப்பட்டன.
மனனத் திறனும், ஞாபக சக்தியும் கொண்ட இவர் தனது இறுதிக்காலம் வரை நாட்குறிப்பெழுதத் தவறியதேயில்லை. தன் கணவரின் பாடல்களைப் பாதுகாத்து “எடுத்த முத்துக்கள்” என்ற நூற்றொகுதியாக வெளிவரச் செய்த பெருமை 1 (946گ- ரையே சாரும்.
தனது இரு புதல்வர்களையும் முறையே ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்பி இறுதிக் காலங்களை மூத்த புதல்வரின் குடும்பக் கவனிப்பில் கழித்து வந்தார். பேரப்பிள்ளைகள், பீட்டப்பிள்ளைகளைக் கண்டு இன்புற்ற போதும் காலத்தின் தாக்கத்தால் உறவுகளை வலுப்படுத்த முடியாமற் போய்விட்டது.
எனினும், பேரப்பிள்ளைகள், பீட்டப்பிள்ளைகள் கண்டு நிறைவான வாழ்க்கை வாழ்ந்து நிறைவாகவே செல்கின்றேன் என்று அன்புப் பேரன் ஒருவரிடம் கனவில் கூறி விடைபெற்று, 17.03.2007 அன்று காலை 7.00 மணியளவில் வானுறையும் தெய்வத்துன் தெய்வமாகிவிட்டார். இவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளைத் தியானிப்போமாக!
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
4 )

நூலாசிரியர் வாழ்க்கைச் சுவெடு
இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் நயினாதீவ, மணிபல்லவம், நாகதீபம் என்கின்ற பெயர்களால் வர்ணிக்கபடுவதும், ஏழுகடல் சூழ்ந்த சமுத்திரத்தின் மத்தியில் உள்ளதுமான தீவில் அருளாட்சி புரிந்துகொண்டிருக்கிறாள் அன்னை நாகபூஷணி. கற்றோரும், மிக்கோரும் வாழும் பதி அது. அத்தகைய பொற்பதியில் பல அவதாரபுருஷர்கள் அவதரித்தனர். அத்தகைய அவதார புருஷர்களில் ஒருவரே பாரதியடியான் ப.கு சரவணபவன் அவர்கள்.
நாகபூஷணி அம்பாளின் பிரதம பரிபாலகராக வாழ்ந்து வந்த பரமலிங்கம் தில்லைவனம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனாக 1909 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் பாரதியடியான் பிறந்தார்.
இவருக்குப் பெற்றோர்கள் இட்ட பெயர் குழந்தைவேல். சிறுவயதில் கடும் நோயுற்று முருகன் கோயிலில் அடைக்கலமாக வைத்திருந்து குணமடைந்தபடியால் சரவணபவன் என நாமம் இட்டனர். எனவே தனது பெயரை ப.கு. சரவணபவன் எனப்பதிந்து எழுதி வந்தார்.
இவர் இளமைப்பருவத்தில் வித்துவான் கணேசையரிடமும், வேலணையூர் தம்பு உபாத்தியாயரிடமும் குருசிஷ்ய முறையில் இலக்கண இலக்கியங்களையும், வேதாந்தசித்தாந்த சாத்திரங்களையும் வரன்முறையாய்க் கற்றுத் தேறினார். சிறுவயதிலே கவிகட்டும் திறமைவாய்ந்தவர். தம் வாழ்வில் இனிய தமிழ் இலக்கியங்களைக் கற்பதையும், நயப்பதையும் இலட்சியமாகக் கொண்டார். தமிழ்நூல்களைச் சேர்ப்பதையும் பேறாகக் கொண்டார்.
அமைதியான போக்கும், எவருடனும் கோபம் கொள்ளாது அன்பாகவும், இனிமையாகவும் பேசிப் பழகும் பண்பும் கொண்டவர். சோமசுந்தர பாரதியார், நவதீதகிருஷ்ண பாரதியார் ஆகியோருடன் கடிதமூலம் இலக்கியக் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டவர்.

Page 7
பாரதியார் பாடல்களைப் பாடுவதிலும், பாரதியார் போல் நடைஉடை பாவனை செய்வதிலும் அலாதியான பிரியமுடையவர். பாரதியாரை தெய்வமாக மதித்து வணங்கி வந்ததுடன் தனது பெயருக்கு முன் “பாரதியடியான்’ எனக் குறிப்பிட்டு எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரின் புலமைத்திறன் நோக்கி ‘ஈழநாட்டுக் குறம்’ என்னும் பாடல் 1970 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமிழிலக்கிய பாடத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- இவர் தனது முப்பதாவது வயதில் தம் குலமரபில் உதித்த மனோன்மணியென்னும் மாதை மணந்தார். இல்லற இன்பப் பேறாய் ஆண்மகவுகளைப் பெற்றெடுத்தனர். வேறு தொழில் புரிய மனமின்றி இலங்கைத் தோட்டப் பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். தன்னலமற்ற பொது நலம்பேணி பல இன்னல்களையும் அடைந்தார்.
சுப்பிரமணிய பாரதியாரின் வாழ்வையே பின்பற்றி வாழ்ந்த இவர் மரணத்திலும் அவரது மரணத்தையே பின்பற்றித் தமது நாற்பதாம் வயதில் 1949 ஆம் ஆண்டு மாசிமாதம் ‘எற்னா’ தோட்டத்தில் மாரடைப்பு நோயினால் மீளாத்துயில் கொண்டார்.
அவர் பூதவுடல் மறைந்தாலும் அவர் ஆக்கிய இன்சுவைப் பாடல்கள் மறையாது நின்று மிளிரும் என்ற நம்பிக்கை மனதிற்கு ஆறுதல் அளிக்க வல்லன.
முதன் முதலாக ‘எடுத்த முத்துக்கள்’ பாடற்றொகுதியை (1951ஆம் ஆண்டு) தொகுத்துப் பதிப்பித்த பெருமை நயினாதீவு சனசமூக நிலையத்தினரையே &FIT(bib. அவர்களுக்கு என்றும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம்.
சுபம்.

நயினை நாகாம்பிகை பதிகம்
1. பால்நினைந் தூட்டுதா யாதலா லுன துசிறு
பாலன்மேற் பரிவை யதனால்
பாருல களைத்துமீன் றருள்சுரந் திடுமிளைய
பக்குவத் திளையை யதனால்
சீலமிகு தந்தையிவ னென்றுகாட் டெணதரிய
சிவசக்தி நீயாத லால்
செப்பரிய ஞானவமு துன்பாற் குழைத்தெனைத்
தீற்றிடும் செவிலி யதனால்
கோலோங்கு மிமராஜ ராஜயீஸ்வரி யெனுங்
குமாரிநீ யாகை யாலும்
கொடியவிட முண்டருளு கொழுநர்நோய் தீர்க்குமொரு
கொடியமருந் தாகை யாலும்
நாலோங்கு திசைகளிலு மிசைநிறீஇ நிறுவுகொடி
நாயினேற் கருள் தராயோ
நாகாம்பிகே நயிளை யேகாம் பிகேபரம
நரதாந்த மோன வடிவே.
2. எத்தனை விதப்பனுவல் பாடியுனை யேத்துகினும் எனதுகுறை எனது மொழியால் இறைவியுன் கொலுமண்ட பத்தெதிரில் நின்றுசொலு
மேழைவிண் ணப்ப மதுபோல் மெத்துகுறை தீரின் பளித்திடா தாகையால்
விளையாடு சிறுகுழவி கை
7

Page 8
மேவுபொருளுலகெலாம் தேடரு நுணுக்குடைய
- வித்தகச் செறிவு பெறினும்
சித்திர விசித்திரத் தன்கார்ய சித்தியே
சேய்க்குமிக வின்ப விக்கும்
தேவியே யெனதுபுரை யுரையுமொரு மாலையாய்ச் சேவடிக் கணியாக் கினேன் -
நத்துவாய் வைத்துதி முத்தாதி யிட்டெந்த
நாளுமேத் திடுமாழி சூழ்
நாகாம்பி கேநயினை யேகாம்பி கேபரம
நாதாந்த மோன வடிவே.
வானமுறு மீனினம் மழுக்குமொரு பேரொளி வகுத்தவோர் காட்சி கண்டேன் மாதிரம் செவிடுபடு மொலியையு மடக்குமுன்
மந்திரக் கேள்வி கண்டேன் மாணவன் எனப்பெயர் வகுத்துலக மாள்ராஜ வன்மையின் வன்மை கண்டேன் வையத்து ளொன்றுபல வாகியும் ஆகாத மாசாத்ர மொன்று கண்டேன் ஈனமிகு பிறவிவரு ஜீவகோ டிகளெலாம்
ஈறில்பர மாத்மா வினுள் இயைவன வெனக்கூறு தந்ரமிவை வாய்த்தபின்
ஏழையா னும்விடு வனோ நானபரி மளசெளந் தர்யையே யெனையாளு
நர்த்த நடராஜ சதியே நாகாம்பிகே நயினை யேகாம்பி கேபரம
நாதாந்த மோன வடிவே.
8

மாயமிகு பொய்யுலக வாழ்வுசத மன்றிதோ
வாருமிது பாருமென நீள் வானுயரு கோபுரத் துச்சியிற் றவழு நூஉம் மழைமுகிலின் வாழ்வு கண்டே நேயமொடுன் மலைவாழ்வின் நினைவுவர வுருகடிமை
நெஞ்சினும் இருகண் ணினும் நீவெளிப் பட்டருள்வ தெந்தநாள்? ஏழையேன்
நினைவுமுற் றாதுபோ மோ சேயாகு மெனையூட்டு முண்ணா முலைப்பெயர்த்
தெய்வமே மலை மருந்தாய்த் தீராத வென்பிறவி நோய்மாள வந்தருளு திவ்யபிர ணவகுளிகை யே நாயாகு பிறவியும் நன்றியெணு மாயிலுனை
நரனாயி னேனெண்ண னே நாகம்பி கேநயினை யேகாம்பி கேபரம
நாதாந்த மோன வடிவே
அன்னைதந் தையர்உடன் பிறவிமனை மகவன்பு
ஆகுமிவை யாவு முனது அடிமலர்க் கென்றெண்ணு மன்பருக் கிவ்வுலக
- மானந்த வீடா குமே
இன்னமிர்த மாகவுரு சித்திடு மதால்உலகில்
இனியவுன வாதிவிழை யார்
ஏகாந்த மாய்யோகி யாயிருந் தாலுமுலகின் கின்பெலாம் துய்த்து மகிழ்வார்
9

Page 9
பொன்னை விழையாவாழ்வு பொன்னெனப் போற்றுவார்
பொருளுளார் வீடு புகுவார் புகலரிய அறிவதனில் ஓர்அறி வுளார்மறையுள்
புக்குகளி யுண்டாடு வார் நன்நயம் இன்னபல மன்னுயோகியர் நிதமும்
நாயகி ஜெயஜெய வெனும் நாகாம் பிகேநயினை யோகாம் பிகேபரம
நாதாந்த மோன வடிவே.
நாலுகடல் சூழுலக நடுவீற் றிருக்குமுனை நாடிவரு முயிர்வகை யெலாம் நாடுமலை காடுதிட லாமிவை நடந்துர்தி
நண்ணியும் ஈற தான ஆறுகடல் கண்டயரும் வேளைதனில் நாவாய்
அளித்தன்பு மீதுர்த லான் அலைக்கரம் பலகொண் டனைத்தணைத் திடுமியல்பு
அன்னையுன் பெருமை சொலுமால் மாலுறு மனத்தினேன் என துநா வாய்கொண்டு
மாயப்பிர பஞ்ச மென்னும் மைக்கடல் கடந்துனது மலரடிக் கரைசேர
மந்திரித் தாவலித் தேன் நாலுமறை போலொலிசெய் ஆழிநடு வாழுமுன்
நடுநிலைமை யாருணரு வார் நாகாம்பி கேநயினை யேகாம்பி கேபரம
நாதாந்த மோன வடிவே.
10

அடிமைஇவர் குடிமையிவர் அவர்சிறியர் இவரெளியர்
ஆவர்இங் கெமைநிகர்வர் ஆர்? அணுவளவு குறையுமெமை மொழிபவர்கள் நாவளிவம்
ஆண்மையிது பாரு மென்பார் மடமைமிகு மிவைமொழியு மவருமுன துடைமையென
LD60TOLp(585 6). T6 Lots 60LD - மனவெளியில் நடனமிட வெனநயினை குடிகொண்ட
மலையரய னுதவு மயிலே கடவுளென வொருவருளர் காலமிலர் ஞாலமிலர்
கற்பனை யெலாங் கடந்தோர் கனவுநன வதனும்நினை அன்பர்கை கோத்தவர்
கருத்துளும் இருகண் முன்னும் நடனமிடு பவரென்று நடனமிடு பவருறவு நாயினேற் கென்றாகு மோ நாகாம்பி கேநயினை யேகாம்பி கேபரம
நாதாந்த மோன வடிவே
எண்ணரிய சூரியரி னிடையில்ஒரு முழுமதியம் இருகண்முகிலி னுாடெழுவ போல் இருகுழலி னடுவிலகு திருமுகமும் மரகதத்
தியல் கொடியின் வடிவ வுருவும் தண்ணென்ற மென்வசன கிஞ்சுகப் பவளவாய்த்
தரள நகை யிளமுறுவலும் தடையிலாக் கருணையிரு கரைபுரளு விழிகளும்
தழதழென ஒளிர் திலகமும்
11 )

Page 10
பண்ணிலவு மடியருரை யுண்ணிலவலாற் குழைப்
பரிசுபெறு மிருசெவிகளும் பாதமுறு மாதவர்கள் பாடுமிரு பாதமெனப்
பாதுநூ புரமலார் களும் நண்ணுசேய் அணிகடம் புணருமிள நாசியும்
நளினகர முங்காண்ப னோ நாகாம்பி கேநயினை யேகாம்பி கேபரம
நாதாந்த மோன வடிவே.
முப்பத்தி ரண்டறத் தலைவியாய் உலகுக்கு
மூலமாய் மூல முதலாய் . முதன்மைபெறு மிமராஜ குலபுத்ரியாய் என்றும்
மூப்பறு மிளங் குமரியாய் செப்பற்கு மருவன்மை சேர்பரா சத்தியாய்த்
திகழ்சியா மளரூபி யாய்ச் செகமெலா மழியவரு காலமுந் தனைவிடாத்
தேவியா குவையாகை யால் எப்பற்று மற்றவன் கைப்பற்றி யென்றென்று
மின்பமே தனதுருவ மாய் இடக்கையில் வலக்கையாய் வைத்திருப் பதுமுனது
இன்றியமை யாமை யன்றோ நப்பற்று மற்றவிந் நாய்க்குதவு நெறியொன்றுன் நல்லறத் தில்லையோ சொல் - நாகாம் பிகேநயினை யேகாம்பி கேபரம
நாதாந்த மோன வடிவே
12 )

10.
கனவுபுற் புதம்மின்னல் நிகரான காயமும்
கடவுளுன தடியுத விடும் கரணமாம் என்நினைவும் யோகியர்க் குன்பெருமை
கையுறுங் கனியல் லவோ - தினமுமுனை நினையுமவர் உறுதுன்பு ரூபுமுன்
திருவருட் செறிவாகு மால் செகமதைத் துன்புமயம் என்றுகோள் சொலுமனித
சேர்க் கயுல கென்றொழியு மோ மனமதிற் பேரின்ப மயமாகி யொன்றாகி
வகைவகை யுயிர்க்கு முதலாய் மாதாவு மாயுலக நீதாசனத் தமரு
மங்கையுன் மலரடிக் கீழ் நனவுகன வதனுமற வாத்யோ கத்திந்த
நாயுமறி துயில்கொள் ஞமோ - நாகாம்பி கேநயினை யேகாம்பி கேபரம
நாதாந்த மோன வடிவே.
முற்றும்.
13

Page 11
கீர்த்தனம்
இராகம் - கமாசு தாளம் - ஆதி தாளம்
பல்லவி சங்கம்மார் கடலிடை நயினையின் தனி முதலாய தயாபரியே . . . சந்தங்கொண டென்பந் தந்தவிர் தனிமையென் ஞான கிர் பாகரியே
அனுபல்லவி தாயெ ல்லாவுல குக்குநீயே - சேய னெய்ப்பினில் வைப்பு நீயே சண்டன்வந் தண்டும் முன் தொண்டன் னென்
றென் றென் தண்டும் றருளுவை. (சங்கம்மார்)
துன்பங் கொண் டன் பொன் றடியர்கள் துணை புனை யெனு மினை அடி மலராய் துன் பந்தந் தருளவு முன கழல் துதி செய வும் மென தவ மலராய் என் றென்றும் முன் நின் றந் தணர் இசை விரி விரி தரி நூலுரையாய் எங் கெங்கும் பரி பூ ரணி யாதலின் இதயமு முன திட மதிலுறை வாய் வாழ்வு அளிக்ருமா தாவலவோ
14 )

இன்பொன்றே துன்பின்றே என் றென்றே பண் பொன் நினர் நிறை (சங்கம்மார்) அஞ் சஞ்சாம் புலபுளி னர்கள் வலை அக மறு குறுபுளி னகநிலையேன் அந்தம் என் றொன்றின் றிலகு நின் அருள் புரி உடலமும் அவமுறுமோ பஞ்சங்கண் படுமுன முனதெழில் படுமெனில் யமபய மெதிர்படுமோ பண் கொன்சந் தஞ்செறி பலவித பதமலர் புனைவுறு பத முறுமோ பாங்கார் பசுநிற மடமயிலே ஓங்கா ரப்பொரு ஞரை குயிலே பஞ்சின்துன் பங்கொண்டென் நெஞ்சம்புண் தஞ்சம் அருள்புரி (சங்கம்மார்) மஞ் சென்றுந் தஞ்சம் புகுமலை மகள் மகன் மலைமன மனையடைவாய் மஞ்சன்துஞ் சும்பொழு துனையலால் மறுதுணை இலைமடி தலம் அருளாய் வஞ்சம்பொய் கொலைச ளவாதிய மயலிருள் கெடநிறை மதிவதனி வண்பொன்றும் மறைமொழி பிரணவ மந்திர சுந்தர மணிவசனி மாண்பார் மரகத கிஞ்சுகமே காண்பார் மனதுளுறு ஞசுகமே வந்தித்தே யெந்தத்தே வந்தித்தோம் தித்தோம் எனமகிழ் (சங்கம்மார்)
15

Page 12
தேசீயம்
நாகரீக உலகுக்கு வேண்டுவன பசிக்குதவாத் தொழில்களின் வேர்ப் பற்றறுத்தல் வேண்டும் பஞ்சத்தாற் பஞ்செனவே பறக்கு முயிர்க் கமிர்து ருசிக்கும் வகை உவந்தளித்து முகம்மலர அளிப்போர் உளம்மலரும் வாழ்க்கையுல கொளி விடுதல் வேண்டும் பசைப் பொருளிலாதவுடல் பர மாகி எங்கும் பாவ மெனும் வித்துதிர்க்கும் பயிர் களைதல் வேண்டும் திசைக்களிறோ வென வயிர்க்கும் செயலோரே வம்மின் திக்கெல்லாம் பவனி சென்று சேவைசெய்வோம் வம்மின்
பெண்கொளலாம் பின்பு பொருள் முன்புதரல் வேண்டும் பேடியரைப் பிரித் தொதுக்கும் பேராண்மை வேண்டும் கண் கொண்டின் பம்நுகரும் காமுகர்தம் முகத்தே காறியுமிழ் கன்னியர் முன்னணி வகுத்தல் வேண்டும் திண் கொண்ட மனத்தினராய் ஆண்மையும் பெண்மையுமெச் செயல்களிலும் புகுந்து ழைக்கும் திறனுறுதல் வேண்டும் விண் கொண்ட பூழின்பமுமிம் மேதினியிற் பெறலாம் வீறுடைய மீசையுள விறற் செயலோர் வம்மின்
சுதந்தரச் சொற் பொருளுணராய் தோள்கள் புடைத்தார்பார்
துள்ளுவார் எள்ளளவும் தூய்மை யிலார் த்ேமைப்
பதந் தொலைக்கும் பஞ்சமகா பாதகஞ் செய்தவத்தின் பயனானார் அதற் கடிமைப் பட்டிருப்ப தறியார்
விதம்விதமாம் சாதி என்பார் மனித ரென்பார் கறுப்பு
16

வெள்ளை யென்னும் வீணருக்கும் விடுதலையுண் டாமோ சுதந்தரத்தின் பயன் படைக்கில் ஒவ்வொரு வருளத்தும் சூதாதிக் கடிமையிலாத் துறவு நிலை வேண்டும்
சீவன் ஒரு மாத்திரையிற் சிவனாகு மெனவே
செப்பு குருமொழி பொருளின் வைப்புநிலை யுணரார் பாவமிகு வாரெனவே கலப்பார் இடைப்பிரிந்து பறைவர் மறைமொழிகள் பின்னும்பழமை யெனக் கலப்பார் தேவரடியார் வருகிற செய்தவ மென்றழைப் பார் சிரிப்பர் பின்னர் குறிப்புமொழி சிலவும் நவிற்றிடுவார் கூவல் செயும் நரிக்குணத்திக் கூட்டமெலாந் தொலையக் (5616ouЈLDTIb பூங்காவிற் கோவி லொன்று வேண்டும்
காரூரும் கருந் தாதுப் படைலகுப்பார் கப்பல்
கட்டுவார் கடல்களெல்லாம் காவல் செய வென்றே தேரூரும் வீதிகள் புண் நீருழும் செய்கைச் சிற்றரசுப் புல்லுருவி செத் தொழிதல் வேண்டும் போரூரும் அவரிருந்த உலக மெலாம் பாவம் - போயகலப் புண்ணியத்தாற் புனித முறல் வேண்டும் ஒரூரில் ஒருகுலத்துக் கொரு தெய்வம் உண்டென் றுரைக்கும் வகை உலகமெலாம் ஒன்றுபடல் வேண்டும்.
பலகலையுந் தனித் தனிப் பள்ளிகளாகிப் பொலியப் பக்கத்தே கோயி லொன்றில் ஞானவிளக் கெரிய கலகலெனும் புள்ளெழும்பும் காலையிற் பூங் கொடிபோற்
கன்னியரும் கட்டமைந்த காளை யருங் கூடி
17

Page 13
மலரனைய வாய்மலரத் தேனொழுகு LDT (8LIT6Ö வசன நடைப்பளியெழுச்சி மகிழ்ந்து சொலவேண்டும். சிலசிலவாந் தழை கறிக்கும் ஆடனைய கல்விச் சிற்றாட்டுப் பட்டி யெலாம் தீவளர்த்தல் வேண்டும்
எத்தனை யோ புத்தர்களும் ஏசுகளும் நபிகள் என்றோரும் இராமர்களும் சீவ கணத் தோரும் பித்தன் எனை ஆள இருகண்குளிர வந்த பெருமான் எம்காந்திகளும் பின் தொடர்ந் தையாவே பக்தி வயிற்றெரியு மிந்தப் பசிப்பிணி தீர்ப்பீரே பாரும் எனப்பாரார் அப்பரிவு மொழி கேளார் சித்திபெற வேண்டு மெனிற் சீவரெலாம் அவ்வத் தெய்வங்க ளென நினையும் தேசசத்து வேண்டும்
தமக்குறுதி எண்ணாதார் பிறர்க் குறுதி எண்ணுய் தகையம்எனக் கூறுமொழி நகைதரு. மொன் றன்றோ கமைக் குணமில்லாத விரு மலடுகள் தம்மகார்க்குத் கடிமணஞ் செய் செயலதனிற் களிப்பு முளதாமோ சுமைப் பொருளாய் நகரமெலாம் நரகாக்கி எங்கும் தொழுநோய் விற்றுழல் பவர்க்குச் சுகமட மொன்றமையார் இமைப்பிலெட்டு லட்சமும் வீண்விழற் கிறைத்து மகிழ்வான் இருளர் இவர் இரியவொரு இரவிவரல் வேண்டும்
உதவாக் காடழித்து மிக உதவ காடாக்கி உறைபஞ்சப் பேயோட்ட உதவு மந்ரம் வேண்டும் முதலாளித்துவ மாயின் முழு உலகும் வேண்டும்
18

முடியாதேல் முழு உலகும் அடிமை எனல்வேண்டும் மதவாதஞ் செயவேண்டாம் மதங் கொண்டு மனித வர்க்கத்து விரு பிரிவு வகுத்திடவும் வேணடாம் பதவாதஞ் செய்வதி லோர் பயனுமில்ல்ை பாரீர்
பரலோக வாழ்வு மிங்கு படைத்திடலாம் வாரீர்
பரதாரம் விரும்பாத பவி சுடையீ ராயின் பக்தி செயும் நெறிகளில் நற் சித்தியுளீராயின் விரத முடன் பஞ்சமகா பாதகமா மிருட்கு விளக்காயின் நும்முகத்தே வெற்றி யுள தென்று முரசறை யுந் துடிப்புடைய வீறுடனோர் மீசை முறுக்கண்டந்தும் முகத்தழகு மிகப் பொலிய வேண்டும் அரசருமக் கிவ்வுலகும் அவ்வுலகம் ஈடோ - ஆண்டவன்ற னாணை அவன் அன்பு செயல்வேண்டும்.
காந்தீயம்
வையத்தே வாழ்வாங்கு வாழ்பவன் அவ்வானின் வழங்குகின்ற தெய்வமென வள்ளுவனார் சொன்னார் உய்விக்கும் அம்மொழிக்கோர் உதாரணமாய் மனுவின் உருவாகி வந்துதித்த உலகுபுகழ் தெய்வம் பொய்வைத்த கெஞ்சினார்க்கும் மெய்வைத்த தெய்வம் புண்ணிய மெல்லாந்திரண்டோர் பொருளான தெய்வம் கைவைத்தே யெவ்வுயிரும் காதலிக்குந் தெய்வம் கலியுகத்தே கண்கண்ட காந்திமகா தெய்வம் -
19

Page 14
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சண்டையிடீர் என்று சொன்னார் ராமலிங்கஸ்வாமி சோதியவர் விட்டகுறை தொட்டழைத்த தெய்வம் தூண்டாத ஞானமணிச் சுடரான தெய்வம் கீதையடிப்பாதை செலும் கிஞ்சுகவாயத் தெய்வம் கேட்டவரம் நாட்டமுறு கேடில்புகழ்த் தெய்வம் காதுகொலைப் பாதகனைக் கைகூப்புந் தெய்வம்
கலியுகத்தே கண்கண்ட காந்திமகா தெய்வம்
மறம் மலியும் உலகதனின் வாழ்க்கையதே வேண்டும் வந்துநின் தன்பர்பணி வாய்க்கு மெனக்காகில் அறமுடையேன் என்றுதாயு மானார் சொன்னாரது போல் அனைத்துயிரு மின்பமுறின் ஆண்டுபல வாழ்வேன் குறைவுபெறின் கூற்றுவனே இப்பொழுதே என்னைக் கொண்டுசெல வேண்டுமெனக் கூற்றழைத்த தெய்வம் கறுவுகொளும் வஞ்சகர்க்கும் கனிவுகொளுந் தெய்வம் கலியுகத்தே கண்கண்ட காந்திமகா தெய்வம்
புத்தபிரான் வந்துதித்த பூவுலகுத் தெய்வம் புனிதபுண்ய ராமகிருஷ்ணப் பொருளான தெய்வம் பத்திசெயும் மார்க்கமெலாம் பத்திசெயுந் தெய்வம் பாருலகுப் பாவவிருட் பகலவனாந் தெய்வம் சித்தர்முனி வோர்களெலாஞ் செய்ததவத் தெய்வம் செகமுழுதும் யுகம்யுகமாய்ச் சிந்தனைசெய் தெய்வம் கத்துகடல் சூழுலகுக் கஸ்தூரிமணத் தெய்வம் கலியுகத்தே கண்கண்ட காந்திமா தெய்வம்
20

இந்துமத இலட்சியம் தென்றுசொன்ன தெய்வம் இளவல்நர இந்திரனார் ஈன்றகிழத் தெய்வம் சிந்தைதனில் வந்தனையே சிந்தைசெயுந் தெய்வம் தீமைபுரி வோருமது தீர்துதிசெய் தெய்வம் பந்தமுறுஞ் சீவர்களைப் பரிந்தனைக்குந் தெய்வம் பாலூட்டித் தாலாட்டி பக்குவஞசெய் தெய்வம் கந்தமுறு கஸ்தூரியம்மை கைப்பித்த தெய்வம்
கலியுகத்தே கண்கண்ட காந்திமகா தெய்வம்
ஈழமாதா திருப்பள்ளியெழுச்சி
l. காலமெனுந்தேர் பாவமாம் பள்ளம் கடுகியே யோடுது கண்மூடித்துயி
லாய், பாலர்கள் பசிகொண்டு பால் மொழிகூறிப் பரிதவித்துன்முகம் பார்த்தழல் பாராய், மாலுறுத்தும் பஞ்சப் பேய்வீரித்தாட மார்க்கம் மொன்றறியாம லேக்கமுங்கொண்டாய், ஏலுமட்டும் இன்னல் உற்
.றணம் வாழோம் ஈழமாதாபள்ளி எழுந்தருளயே .. ܗ݈ܝ
2. புத்தபிரானடிப் புண்ணிய ரெங்கே போற்றியவீர ஜெயக்கொடி
யெங்கே முத்தமிழானளம் மும்முரசெங்கே மூர்த்தி யெங்கேதல தீர்த்த மெங்கேயோ, சத்தியமிகை முதற்படை யெங்கே தானமெங்கேவிர மானமெங் கேயோ, எத்தனை காலமிவ் வின்னலில் வாழ்வோம்
ஈழமாதா பள்ளி எழுந்தருளயே
3. கத்திபுகை குண்டுப் பேடியரெங்கே கட்டிடுஞானத் தளைக்கயி றெங்கே
முத்துநவ மணி ரெத்தினமெங்கே முடீகளெங்கேயுந்தன் குடிகளெங் கேயோ, நித்திரை செய்திடுங் காலமீதில்லை நெட்டுயிர்ப்புற்று நிலை
தடுமாறி, எத்தனை காலமிவ் வின்னலில் வாழ்வோம் ஈழமாதா பள்ளி
எழுந்தருளயே.
21 )

Page 15
பராக்ரம வாகுதன் பராக்ரமத்தாலே பண்ணியநீர்நிலை மண்மூடிப் போச்சு, கராக்களாம் கயவர்கள் வெளிவந்துவிட்டார் கள்கொலை காமமே கடைப்பிடி யென்றார், தூராக்ரம செயல்களாம் புழுமலிவாழ் வில் சுதந்தரத் தூக்கமும் வந்திடுமோ சொல், இராப்பக லென்ப தினியிலையம்மே ஈழமாதா பள்ளி எழுந்தருளயே.
துட்டகை முனுவென்ற சொற்சொலுவோரே துணிவுளராவரச்சுகுணு
னாம் வீரக் கட்டுள காளையைப் பெற்றனன்தாயே கண்துயிலேன்
அவன் கண்துயின்றானோ, இட்டமொ டெவ்வுல கெவ்வர சீமத்
தெரியை எடுத்திட்ட புகழ்பெற்றதோதாய், இட்டமொ டுனக்கந்தக் காலமே வேண்டும் ஈழமாதாபள்ளி எழுந்தருளயே.
(ஆணிப் பொனம்பலத்தே கண்காட்சிகள் அற்புதக் காட்சியாம்)
1.
மாணிக்க மெங்கும் மலிந்த மணித் தீபம் காணக் கண் கூசுதடி - அம்மா , காணக் கண் கூசு தடி (மாணிக்க)
அரியிருந்தாண்ட அரியணை மீது புண்
நரியிருந்தாளு தடி இரண்டு கால் . நரியிருந்தாளு தடி (LDIT600slds)
மாமயிலாடிய சோலையிலங்கையில்
ஊமன் உறுமு தடீ - குருட்டு ஊமன் உறுமு தடி (மாணிக்)
காமினி நித்திரை கொண்ட பொற் கட்டிலில் காமி கலக்கு தடி - இரண்டு காமி கலக்கு தடி (மாணிக்)
பேயரசாளிற் பிணந்தின்னும் என்ற சொல் பிரபல்ய மாச்ச தடீ - அம்மா பிரபல்ய மாச்சு தடீ
22

10.
11.
12.
13. 14.
15.
குடிக்கத் தண்ணீரின்றக் குடிகெட்டுப் போச்சு
குடிவகை யாச்சு தடீ - சீமைக் -
குடிவகை யாச்சு தடீ (LDIT60slds)
கொல்லாதே என்றசொல் சொல்லாதே என்றுபேய் கூத்துக்களாடு தடீ - மனிதப்பேய் கூத்துக்களாடு தடீ (LDIT60slds)
விலாப்புடைத் தென்பு வெளிப்பாட்டு எங்கெங்கும் விருந்து பறக்கு தடீ - பசியால்
விருந்து பறக்கு தடீ (மாணிக்)
விருந்து பறக்க விலாப்புடைத்து ணணப்பின் பருந்து பறக்கு தடீ - மனிதப் பருந்து பறக்கு தடீ (LDIT60slds)
கயவாகு மன்னவன் பண்டங்க ளேற்றிய கப்பல் கவிழ்ந்த தடீ - அந்தக்
கப்பல் கவிழ்ந்த தடீ (மாணிக்)
ஆறுகள் யாவும் அணைப்பவரின்றி
அழுதழு தோடு தடீ - கடல் விழ - அழுதழு தோடு தடீ (LDIT60oids)
வாசப் பொருள்கள்மணத்த பொன் மேனிதுர் வாடை யடிக்கு தடீ - எங்கும் பின வாடையடிக்கு தடீ (மாணிக்)
கிடைக்கவில்லை
சோற்றொடு பானை நாய் கெளவிக் கொண்டோடில் சோறுண்ணலாகு மொடீ சுதந்தரச் சோறுண்ணலாக மோடீ (மாணிக்)
23

Page 16
ஈழ நாட்டுக் குறம் (பச்சைமலை பவளமலை எங்கள் மலை நாடு என்றபடி)
தேவரெலாம் கொலு விருக்கும் ஈழம் எங்கள்தேயம் செப்பிடுவேன் அதன் பெருமை சற்றிருந்து கேளும் மூவரன்று பாடு திருக் கோணமலை நாட்டில் முத் தொதுக்கிக் கத்தகடல் சூழும் எங்கள்தேயம்
(தேவர்)
எத்திசையும் போற்றும் கதிர்காம மலைநாட்டில் எங்கள் வள்ளி குடியிருக்கும் ஈழம்எங்கள் தேயம் புத்தபிரான் பொன்னடியாம் பொற் கமல பீடம்
பொலியுமலை எங்கள் மலை ஈழம் எங்கள் தேயம்
(தேவர்)
மாவலி கங்க்ை புனலாம் தாவணியை வீசி மாதிர மெலாம் மணக்கும் வாசனையைப் பூசி காவலரின் கண்மருட்டும் கன்னி எங்கள் தேயம் காசினியில் இவளைப் போலும் கன்னி இல்லைஇல்லை (தேவர்) செந்தமி ழும் சிங்களமும் ஆய விரு தோழி சேவை செய்யும் இராசகன்னி ஈழம் எங்கள் தேயம் இந்தியரெம் அக்கை மக்கள் என்றணைக்கும் அம்மை வந்தனை யல்லா தெமக்குச் சிந்தனை வேறில்லை
(தேவர்) தவமுனிவ ரா மெனவே தாடி மீசையோடு தாரமொன்று கொண்டு மந்தி காவில் விளையாடும் நவ நவமாம் முத்து நவரத்தினங்கள் மின்னும்
நாடிதனுக் கீடிலையென நாணிப் போனது விண்ணும் (தேவர்)
24

10.
பொற்புதையல் கண்டெடுப்பார் போலச் சில மந்தி பூமியுள் வெடித்த பலாப்பொற் சுளையைக் கிண்டும் நற்குணங் கொள் மங்கையரும் மைந்தர்களும் போல
நாலுகின்ற பூங்கொடியில் ஊசல் சில ஆடும்
(தேவர்)
மானின் கவைப் கொம்பெடுத்துக் கால்களென நாட்டி வளமான பன்றி முள்ளுக் கைம்மரங்கள் பாய்ச்சி கானிலுகிர் மாமயிலின் தோகை கொண்டு வேய்ந்து
கட்டி அதனுள்ளிருந்து சிற்றில் சில ஆடும்
(தேவர்)
கனிபெற வென்றொரு குறத்தி காதணியை வீசக் கடு வனதைக் கைப்பிடித்துக் காதலிதன் காதில் நனியழுத்தக் கண்ணில் நின்று நீர்வடியும் வாயில் நகைவருமக் குரங்கிருக்கும் ஈழம் எங்கள் தேயம்
(தேவர்) மட்டுமிஞ்சி மதுவை யுண்ட மயக்கத்திலோர் குறவன் மனைக்குறத்தி முடிக்கணிய LD6) பறிப்பே னென்றே பட்டனைய பன்னிறப்பூப் பறவைகள் வாழ் மரத்தில்
பறிக்க ஏறப் பறக்கக்கண்டு குறத்தி நின்று சிரிக்கும்
(தேவர்)
எம்மமமும் சம்மதமென்றேத்து ரீ பாதம் எங்கள் மலை அங்கிருப்பார் எங்களின் சம்பந்தி கைம்மலையும் அம்மலையைக் கையெடுத்து வாழ்த்தும்
காரணமாய் ஆனைமுகக் கடவு ளென வந்தார்
(தேவர்)
25

Page 17
ஒரு நாட்டின் சீனநிலைக்குக் காரணம் கொலை - மறுத்தல்
பால் சொரிந் தூட்டு தெய்வப் பசுவறுத்துண்ணும் நாட்டில் கோல் வாழாக் கோவுண்டாமோ குறையிலாக் குடியுண்டாமோ சீலமுமுண்டோ தர்மச் செயலுண்டோ தெய்வ முண்டோ சாலவும் நன்றே தாயைக் கொன்று அவள்தனத்தையுண்ணல்
பாரதீயம் (வணக்கம்)
1. பாரதியே தெய்வப்பழமே யென் பாக்கியமே
பேருலகில் யான்பெற்ற பேறே பெருமானே வீரனே யானேற்று வீட்டுமணி விளக்கே வாரிதியேளன் மனத்துள் மலர்த்தாண் மலராதோ
2. உள்ளக்கிழியில் உருவெழுதி உன் புகழ்த்தேன்
அள்ளத்துடிக்கும் மிந்தஅபூசை நிறை வேறொதோ துள்ளிப்பிடித்துன் துணைத்தாட் புணைய யின்ப வெள்ளத்தி லோட்டி விளையாட மாட்டேனோ
26)


Page 18
* தில்லைவனம்
一──
மசந்திரன் இ அண்ணப்பிள்ளை உகந்தசாமி பூேம்பாவை இலிசால
பரஞ்சோதி
*,
பத்மினி - கலைமகள் ஜீவபூரணி ஜனார்த்தனன் ஆரேச்
གི་སྤྱི་ ' பாலச்சந்திரன் பதஞ்சலி திருவருட்செல்வன்
பிரணவன் ଈକ୍ନt;$ର୍ଣ୍ଣାft நர்த்தனா
இஇ)
.ே இறைபதம் எய்தியோர்
 
 
 

drag
rá அணபவன்
$கா சுதாகரன்
திலீபா 63.6R List
பாலசரவணன் பாலகுருபவன் லக்ஷனா

Page 19


Page 20
இதுவே உலக நியதியும்,
எனது படைப்பின் சாராம்சமுமாகும்
- பகவான் றுநீ கிருஷ்ண
கங்கை 高○しcmo781@ó。@ó。
 

"எகு நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. 5ಣ್ಣೆ நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய். அதை நீ இழப்பதற்கு எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு, எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்படிடது. எதைக் கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்படீடீ, - 6ಣ್ಣಿ ರಿಪೆಗ್ಡೆ உன்னுடையதோ, அது நாளை ܣܛܢܐ
மற்றொருவருடையதாகிறது. மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்."
b.
-
Grio 6gpat diGy6asastbusing upg.