கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாகலிங்கம் சாந்தலிங்கம் (நினைவு மலர்)

Page 1
N சிவ K கட்டுவன் - ( N திரு. கா. சாந்தலி N அவர்
அமரத்து
Ꮴ4
N சாந்த
N ஈஸ்வர ஆண்டு தை W
 
 
 

重=
மயம்
தென்மயிலை W. |ங்கம் (சாங்கப்பா) \ களின்
வ மலர்

Page 2

கட்டுவன் - தென்மயிலை அமரர் நல்லதம்பி நாகலிங்கம்
விதானையாரின் புதல்வரும் வலி= வடக்கு பிரதேச சபை மயிலிட்டி உப - அலுவலக
மின் இணைப்பாளருமான
திரு. ாே, சாந்தலிங்கம் (சாந்தப்பா)
அவர்களின்
அமரத்துவ மலர்
ஈஸ்வர ஆண்டு தை மாதம் 13ஆம் நாள்
1998 - Ο 1 - 26

Page 3
ċjL DfI LIL IGOOTLD
அன்பு ஊட்டி ஆதரவு கூட்டி இன்முகங் காட்டி ஈகை தனை நாட்டி உண்மையே உரைக்க ஊக்கம் நிலைக்க எண்ணெழுத்து அறிவில் ஏற்றம் கண்டிட ஐக்கியம் கொண்டிட ஒப்பற்ற இறை புகழை ஓதி வேண்டிட : ஒளவை நெறி - போதித்த சாந்தப்பாவே இம்மலர் உங்களுக்குச் சமர்ப்பணம்
- குடும்பத்தினர்
 


Page 4

ళ్ల
Ά
திரு. நா. சாந்தலிங்கம் அவர்கள்
அன்னையின் மடியில் : ஆண்டவன் அடியில் : 17 2 - 1943 27一12-199雳
திதி - திரியோதசி திதி வெண்பர
தென்மயிலை மருதடி சேவித்த சசந்தனவன் தென்திசைத் திரியோ தசிஏகி - நன்றிசன் ஆண்டு மார்கழி அபர பன்னீர்நாளில் வேண்டும் பேறுற்றான் காண்.

Page 5

தோத்திரத் திரட்டு
திருச்சிற்றம்பலம்
விநாயகர் துதி ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
தேவாரம் வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்தவதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டுமுடனே ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்குமிகவே.
திருவாசகம் பால் நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம் புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ திணியே.

Page 6
سس۔ 4 سس۔
திருவிசைப்பா
ஏகநா யகனை யிமையவர்க் கரசை
யென்னுயிர்க் கமுதினை யெதிரில் போகநா யகனைப் புயல்வணற் கருளிப்
பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்த மேகநா யகனை மிகதிரு விழி
மிழலைவிண் ணழிசெழுங் கோயில் யோகநா யகனை யன்றிமற் றொன்று முண்டென வுணர்கிலேன் யானே.
திருப்பல்ல கண்டு பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப்
பாற்கட லீந்தபிரான் மாலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கு மந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே யிடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம் உலகெலா முணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
திருப்புகழ்
இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் எழில்நீறும்
இலங்கு நூலும் புலியத ளாடையு மழுமானும்
அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு முடிமீதே
அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய குருநாதர
உசந்த மாறன் பதிமிக கூட லி லுறைவோனே
உகந்த பாசங் கயிறொடு தூதுவர் நலியாதே
அசந்த போதென் துயர்கெட மாமயில் வரவேணும்
அமைந்த வேலும் புயமிசை மேவிய பெருமாளே.
திருச்சிற்றம்பலம்

où
திருவெம்பாவை
திருச்சிற்றம்பலம் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போத ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்கண் ஏதேனும் ஆகாள் கிடந்தாளென் னேயென்னே
ஈதேயெந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.
பாசம் பரஞ்சோதிக் கென்பா யிராப்பகனாம்
பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரி ைழயீர்
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி யேசு மிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்து
வீசனார்க் கன்பார்யா மாடேலோ ரெம்பாவாய்,
முத்தன்ன வெண்ண கையாய் முன்வந் தெதிரெழுந்தென்
னத்தனா னந்த ன் முதனென் றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையி ரீசன் பழவடியிர் பாங்குடையீர் புத்தடியோம் புன் மைதீர்த் தாட்கொண்டாற்பொல்லாதோ
வெத்தோநின் னன்புடைமை யெல்லோ மறியோமோ சித்த மழகியார் பாடாரோ நம் சிவனை
யித்தனையும் வேண்டு மெமக்கேலோ ரெம்பாவாய்.
ஒண்ணித் திலநகையா யின்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியா ரெல்லாரும் வந்தாரோ வெண்ணிக்கொ டுள்ள வா சொல்லுகோ மவ்வளவுங்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக்கு கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ள் முண்ணெக்கு நின்றுருக யாமாட்டோ நீயேவந்
தெண்ணிக் குறையிற் றுயில்ேலோ ரெம்பாவாய்,
3

Page 7
- 6 -
மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளே பேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ண்ே பிறவே யறிவரியான் கோலமு நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென் றோல மிடினு முனரா யுணராய்கா
ணேலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்.
மானேநீர் நென்னலை நாளைவந் துங்களை ,
நானே யெழுப்புவ னென்றலு நாணாமே போன திசைபகரா யின்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே யறிவரியான் றானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய் திறவா யூனே யுருகா யுனக்கே யுறுமெமக்கு
மேனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்,
அன்னே யிவையுஞ் சிலவோ பலவமர
ருன்னற் கரியா னொருவ னிருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாவென் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பா யென்னானை யென்னரைய னின்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னேங்கேள் வெவ்வேறா யின்னந் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியா லென்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்,
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கு
மேழி லியம்ப வியம்பும் வெண் சங்கெங்குங் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோங் கேட்டிலையோ வாழியீ தென்ன வுறக்கமோ வாய் திறவா
யாழியா னன்புடைமை யாமாறு மிவ்வாறோ வூழி முதல்வனாய் நின்ற வொருவனை
யேழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்,
முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
யுன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார்தாள் பணிவோ மாங்கவர்க்கேபாங்காவோ

مه 7-سسه
மன்னவரே யெங்கணவராவா ர வருகந்து
சொன்ன பரிசே தொழும்பாப்ப் பணிசெய்வோ
மின்ன வகையே யெமக்கெங்கோனல்குதியே
ରାଷ୍ଟ୍ ଗar குறையு மிலோமேலோ ரெம்பாவாய்.
பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியு மெல்லாப் பொருண்முடிவே பேதை யொருபாற் றிருமேனி யொன்றல்லன்
வேதமுதல் விண்ணோரு மண்ணுந் துதித்தாலு மோதர்வுலவா வொருதோழன் றொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகா ளேதவனூ ரேதவன்பே ராருற்றா ராரயலா
ரே தவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்,
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல் பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்கா ணாரழல்போற்
செய்யாவெண் ணிறாடி செல்வா சிறுமருங்குன் மையார் தடங்கண் மடந்தை மனவாளா
வையா நீ யாட்கொண் டருளும் விளையாட்டி னுய் வார்க ளுய்யும் வகையெல்லா முய்ந்தொழிந்தோ
மெய்யாமற் காப்பா யெமையேலோ ரெம்பாவாய்,
ஆர்த்த பிறவித் துயர்கெடநா மார்த்தாடுந்
தீர்த்தனற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங் கூத்தனில் வானுங் குவலயமு மெல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைக
ளார்ப்பரவஞ் செய்ய வணிகுழன் மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாத
மேத்தி யிருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்,
பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதா
லங்கங் குருகினத்தாற் பின்னு மரவத்தாற் றங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தலினா
லெங்கள் பிராட்டியு மெங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற்புக்ப்பாய்ந்து பாய்ந்துநஞ்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
4.
0.
2

Page 8
ജി 8 Afon Rwsiaid
காதார் குழையாடப் டைம்பூண் கலனாடிக்
கோதை குழலாட வண்டின் குழமோடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள் பாடி யப்பொருளா மா பாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி யாதி திறம்பாடி யந்தமா மாபாடிப்ப்ே பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய், 4.
ஒரொருகா லெம்பெருமா னென்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகா லோவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத்தான் பணியாள்
பேரரையற் கிங்வனே பித்தொருவ ராமாறு
மாரொருவ ரிவ்வண்ண மாட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வா யார நாம்பாடி
யேருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய், 15
முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையா
ளென்னத் திகழ்ந்தெம்மை யாளுடையா விட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பித் சிலம்பித் திருப்புருவ மென்னச் சிலைகுலவி நந்தம்மை யாளுடையா
டன்னிற் பிரிவிலா வெங்கோமா னன்பார்க்கு முன்னி யவணமக்கு முன்சுரக்கு மின்னருளே
யென்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய், 6
செங்க ணவன்பாற் றிசைமுகன்பாற் றேவர்கள்பா
லெங்கு மிலாததோ ரின் பநம் பாலதாக் கொங்குண் சுருங்குழலி நந்தம் மைக் கோதாட்டி ஐ யிங்குநம் மில்லங்க டோறு மெழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
பங்கண் ணரசை படியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய், 7
அண்ணா மலையா னடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவி நற்றாற்போற்
கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணா ரொளிமழுங்கித் தாரகைக டாமகலப்

பெண்ணாகி யானா யலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணா மண்ணாகி யித்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய் 18
உங்கையிற் பிள்ளை யுனக்கே படைக்கலமென்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் மச்சத்தா லெங்கள் பெருமா னுணக்கொன நுரைப்போங்கே
ளெங்கொங்கை |ଣ ବର୍ତ୍ତୀ ବraitu, ரல்லார்தோள் சேரற்க வெங்கை யுனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க விங்கிப் பரிசே யெமக்கெங்கோ னல் குதியே
லெங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய். 9
போற்றி யருளுகநின் னா தியாம் பாதமலர்
போற்றி யருளுகநின் னந்தமாஞ் செந்தளிர்கள் போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமn ம் பொற்பாதம்
போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல் லா வுயிர்க்கு மீறா மிணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம் போற்றியா முய்யவாட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய், 20
திருச்சிற்றம்பலம்
s

Page 9
ୱିଲ୍ମ୍சிவமயம் அம்பாள் துணை
இரங்கற் செய்தி
கட்டுவன் மயிலிட்டி தெற்கு வருத்தலை விளான் ஆகிய மூன்று கிராமங்களையும் முன்னொரு காலத்திலே தனியரசு செய்து வந்த கிராமத் தலைவர் திரு. நல்ல தம்பி நாகலிங்கம் என்பவருடைய மகன் நா. சாந்த லிங்கம் என்பவரை எனக்குச் சிறுவயதிலிருந்தே நன் றாகத் தெரியும்.
இவர் குறுமுனிவர் அகத்தியரின் உயரமும் எந் நாளும் நெற்றியில் நிறைந்த திருநீற்றுப் பூச்சும் மதி நிறைந்த சந்தண திலகமும் பெருத்த கண்களும் சிவந்த வாயில் புன்முறுவலும் உடையவர். -
இவர் எமது கிராமத்தின் பண்டு தொட்டு வரலாற் றுச் சிறப்புப்பெற்று அகில உலகமும் பாராட்டிப் போற்றி வருகின்ற அலவத்தை வீரபத்திர சுவாமிமேல் கட்டுவ னுார் வரகவி விஸ்வப்புலவரால் பாடப்பெற்ற வசந்தன் நாடகத்திலும் நாடகத்துக்கு மிருதங்கம் வாசிப்பதிலும் எமது ஆலயங்களில் நடைபெறும் சூரன்போர், மானம்பூ, திருவிழாக்கள் பூங்காவனம் வேட்டைத் திருவிழா ஆகிய வைபவங்களில் தவறாது பற்குபற்றி அவ் விழாக்களை சிறியோர் தொடக்கம் முதியோர் வரையும் கலகலப்பாக மகிழ வைப்பனர்.
அன்னாருடைய திடீர் மரணம் எனக்கு மட்டுமல்ல எமது கிராமத்துக்கு ஒரு பலவீனத்தையும் அவருடன் சேர்ந்தவர்களுக்கு நிறைந்த வேதனையையும் கொடுக் கின்றது. பிறந்தவர் மண்மேல் இறப்பது முடிந்த முடி பாகும் இது ஆண்டவன் கட்டளை எனவே தான் ‘திரு

................ 11 ............میم۔
வருள் செல்வ நின் செய்திக்கு மாறென்ன செய்குவம் நினைவதன்றி” என்ற பெரியோரின் வாக்கிற்கு அமைய நாமும் அவருடைய பணிகளையும் சேவைகளையும் நினைந்து சிந்திப்பதேயன்றி வேறு கைமாறு ஒன்றும் இல்லை,
ஆகவே அவரது இறப்பினால் அல்லலுறும் அனை வருக்கும் எனது ஆறுதலைக் கூறி மார்கழி மாதம் மதி நிறைந்த நல்ல நீராடல் காலத்தில் விநாயகர் நோன்பு காலங்களில் ஒன்றான அனுஷ நட்சத்திரமும் அபரபக்க திரியோதசி திதியும் கூடிய நன்னாளிலே சனிநீராடி விட்டு தென் மையிலைச் சாந்தலிங்கம் தென் புலத்தைச் சென்றடைந்தார்.
அன்னா ரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று தில்லைக் கூத்தப் பெருமானை யானும் உங்க ளுடன் சேர்ந்து திய னித்துக் கொண்டு வணங் கி முடிக்கின்றேன்.
ஓம் சாந்தி சாந்தி ! சாந்நி !!
ஆகம கிரியா விவுதர் சிவபூநீ சி. ஆறுமுகக் குருக்கள்
பிரதமகுரு பூரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம், கட்டுவன்.

Page 10
இதய அஞ்சலி
மரணம் நிச்சயமானது அது பூவிலே, பிஞ்சிலே, காயிலே கன்னிலே என்று எப்பொழுதும் நிகழலாம். ஆடி அடங்குகின்ற இந்த வாழ்க்கையிலே கொண்டு வந்தது கொண்டு போவது எதுவுமில்லை. ஒருவனுடைய வாழ்வு தொடர்பான நினைவலைகள் அவனுக்கு அண்மையிலும் சேய்மையிலும் உள்ளவர்களுடைய உள்ளத்து உணர்வுகளில் நிலை பேறடைந்து அவனது மரணம் பற்றிய வேதனை மற்றையவர்களுடைய இத யங்களை வெடிக்கச் செய்யு மா யி ன் அத்த  ைகய வாழ்க்கை வையத்துள் வாழ்வாங்கு வாழ்கின்ற உயர்ந்த மானிட வாழ்வு எனக் கருதுவர் பெரியோர்.
இத்தகைய பெருவாழ்வு வாழ்ந்தவர் தான் எனது அருமை நண்பர் சாந்தப்பா, அன்பைப் பகிர்ந்து வாழ் கின்ற அன்புடை வாழ்க்கை இனிமையானது, இத மானது, உன்னதமானது அந்த உண்மையான வாழ் வையே சாந்தப்பா தேடிக்கொண்டார். மானிடப்பிறப் பிற்கு இது இயல்பானது என்றும் எம்மிற்பலர் இதனை விரும்பிக் கொள்வதோ, தேடிக் கொள்வதோ, விருத்தி செய்வதோ இல்லை. இதனால் பசுஞ்சோலையை நோக்கி நகர வேண்டிய மனிதவாழ்வு பாலைவனத்தை நோக்கி விரைகிறது.
சாந்தப்பா அன்பைச் சொரிந்து அன்பைப் பெற்று வாழ்ந்தார். எதனை விதைக்கிறோமோ அதனைத் தான் அறுவடை செய்வோம் தமர் பிறர் யாவரையும் குழந்தை களாக நேசித்த காரணத்தால் சாந்தலிங்கம் சாந்தப்பன ஆனார். ஒருவன் குழந்தைகளை நேசிக்கவும் குழந்தை களால் நேசிக்கப்படவும் வேண்டுமாயின் அவனும் கள்ளம் கபடமற்ற ஒரு குழந்தையாக வேண்டும். சாந்தப்பாவின் உள்ளம் கள்ளமில்லாதது, கபடமறியாது.

- 3 -
முறுக்கு மீசையுடன் கூடிய மிடுக்கான சாந்தப்பா வின் முகத்திலே அன்பு ரேகைகள் எப்பொழுதும் இழையோடியிருக்கும். இதழ்களிடை யே பூக்கும் புன்னகை காண்டோரைக் காந்தம் போல கவரும், பருத்த உடலி னுள்ளே அமைந்த பூவினும் மென்மையான இதயத்தில் இருந்து வரும் மென்மையான சொற்கள் கரும்பென இனிக்கும். குழந்தைகளைப் பயமூட்டி நல்வழிப்படுதது வதற்கு இவருடைய தோற்றப் பொலிவு உதவும் எனக் கருதி இவரிடம் அனுப்பப்பட்ட குழந்தைகள் இவருடைய அன்பு மழையில் நனைந்து இவருடைய மடியை விட்டி றங்காமல் அடம் பிடிப்பர். உற்றார், உறவினர், நண்பர் கள், ஊரவர்கள், அயலவர், உடன் கடமை புரிந்த சகோதர உத்தியோகத்தர்கள் எனச் சகலராலும் நேசிக் கப்பட்டார் மதிக்கப்பட்டார். இவரது இறுதிச் சடங்கில் கூடியவர்களின் ஒருமித்த கருத்தும் இதுவேயாகும்.
ஒருவனுடைய உயர்ச்சி அவனுடைய தொழிலினால் அல்லது செல்வத்தால் அமைவதில்லை. அவனுடைய சான்றாமையினால் அமைவதாகும்.
30 வருடங்களுக்கு மேலாகச் சாந்தனுடனும் அவரது குடும்பத்தினருடனும் நெருக்கமான உறவு கொண்டிருந் தேன். இறப்பிற்கு முந்திய ஒரு மாத காலத்துள் பல தடவைகள் பொது விடயங்கள் சம்பந்தமாகச் சந்திக்க நேரிட்டது. சாந்தன் பொது ச்சேவைகளிலும் ஈடுபாடுடை யவர். அவருக்கு இத்தகைய கொடிய நோய் இருப்பதாக ஒருபோதும் காட்டிக்கொள்ளவேயில்லை. அவருடைய திடீர் இறப்பு அவருடைய குடும்பத்தாருக்கும் ஏனை யோருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் எப்பவோ முடிந்த காரியம் என அமைதி கொள்வோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி !!
வ, கிருஸ்ணசாமி
யாழ்ப்பாண மாவட்டம், உள்ளுராட்சி உதவி ஆணையாளர்,

Page 11
இரங்கற் செய்தி
எவருக்கும் நிச்சயமான ஒன்றாக இருக்கும் இறப் புப்பற்றி நம்மிற் பலர் சிந்திப்பதில்லை, இறப் பை மறுப்பதுபோற் கேடு வேறு எதுவும் இருக்க முடியாது. வசிட்ட முனிவர் இராமனுக்கு குழம்பிப் போன முடி சூட்டின் முதல் நாள் போதித்தார். 'இறப்பெனும் மெய்மையை இம்மையாவர்க்கும் மறப்ப்ெனும் அதனின் மேற் கேடாகுமோ” என்பது அவர் கூற்று.
மறந்திருக்கும் எமக்கு நடுத்தர வயதில் சாவைத் த ழு விக் கொண்ட திரு. நாகலிங்கம் சாந்தலிங்கம் போன்றாரது மரணம் எமக்கு ஞாபகஞ் செய்து நிற் கிறது. திரு நா. சாந்தலிங்கம் ஒரு அரசினர் உத்தி யோகத்தர் க. மையில் அசிரத்தை காட்டாதவர், அவர் தமது மனைவியை விட்டுப் பிரிந்தாலும் ஓய்வூதியத்தை பெறும் வாய்ப்பை மனைவிக்குக் கொடுத்துச் சென்றுள் ளார். அதனால் அவரது மனைவியின் எதிர் காலம் இருளில் மூழ்காது. ஆனாலும் அவருக்குக் கணவன் பிரிவால் ஏற்படும் கவலையை எதுவும் போக்க முடியாது.
திரு நா. சாந்தலிங்கம் அவர்களது குடும்பத்தின ருக்கும் அவரது உற்றார் உறவினர்க்கும் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய வல்லோம்.
திரு நா. சாந்தலிங்கம் அவர்களது ஆத்மசாந்திக் கரக இறைவனைப் பிரார்த்திப்போம்.
*阿声飙 夕序虚姆 *肪扇!
வலி - வடக்கு, நா. வேததசிய ஆன் பிரதேச சபை, விசேட ஆனையாளர், வலி - தெஃமேற்கு, பிரதேச செயலர்.

நாகலிங்கம் சாங்திலிங்கம்
அமரர் நாகலிங்கம் சாந்தலிங்கம் அவர்கள் இன்று இப்பூவுலகில் இல்லாதபோதும் தந்தையைப்போல் தனது புன்னகையுடன் "எம்முன் காட்சியளிக்கிறார் போல் தெரிகிறது. எனது" பழைய மாணவர்களுள் அவரும் ஒருவர். பாடசாலை நாட்களில் நகைச்சுவையுடன் நாசூ " +irsւն (3ւյքlւն Levoց պլb மகிழவைப்பார். அன்னாரின் குடும்பம் முழுவதையுமே நான் நன்கு அறிவேன். அவ ரின் மூத்த சகோதரி நேசபூபதி அவர்கள் 28-10-1961இல் நடைபெற்ற எனது திருமண விழாவில் இன்னிசைக் கச்சேரி நடாத்தியது நீங்கா நினைவில் உண்டு. இக் குடும்பம் நாட்டுக் கலைகளை வளர்ப்பதில் ஆர்வமுள்ள வர்கள் அன்னாரின் ஊருக்குப் பாரம்பரியமாக விளங் கிய "வசந்தன்” ஆட்டத்தில் இவர் பங்களிப்புச் செய்யத் தவறவில்லை. சாந்தலிங்கம் அவர்களின் அகராதியில் 'மாட்டேன்’ என்ற சொல் இல்லை.
நல்ல எதிர் காலத்தை உடைய இவர் இளம் வயதில் மண்ணுலகை விட்டுப் பிரிந்தது அன்னாரின் குடும்பத் திற்கும், ஊருக்கும் மாத்திரமன்றி தமிழ் மண்ணிற்கே பேரிழப்பாகும். அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போமாக,
இடம்பெயர்ந்தோர் சங்கம், ஐ. எஸ். பூதீபாஸ்கரன்
மயிலிட்டிப் பிரிவு. தலைவர்

Page 12
இதய அஞ்சலி
அமரர் நாகலிங்கம் சாந்தலிங்கம் அவர்களை நீண்ட காலமாக அறிவேன். ஒரு குதூகல மனிதர், வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் மின்சாரப் பகுதிப் பணியா ளராக நீண்டகாலம் சேவையாற்றி வந்தவர். தெல்லிப் பழை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் புனரமைக்கப் பட்ட காலத்திற்கு முன்பிருந்தே கூட்டுறவுச் சேவையில் ஈடுபட்டவர். எமது சங்கக் கிளை 16 இன் கிளைக்குழுச் செயலாளராகவும், பொதுச்சபை உறுப்பினராகவும் பல ஆண்டு சேவையாற்றியவர்.
எல்லோருடனும் அன்பாகப் பழகுபவர். இவருடைய திடீர் மறைவு எல்லோரையும் துன்பத்தில் ஆழ்த்தி விட்டது. இவருடைய இழப்பு எமது சமூகத்திற்கு பேரி ழப்பாகும். இவரது இழப்பால் அதுயருறும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக் கின்றேன்.
திெல்லிப்பழை ப.நோ. க. சங்கம் சி. சிவமகாராசச
தெல்லிப்பழை.
i 398 a 3
 

இன பேதமற்ற உறவில் ஒன்றுபட்டு நாம் வாழ்ந்தோம். சாந்தப்பா குறையேதும் இன்றிநிறை வுற்ற நல்வாழ்வு எம் வாழ்வு, நீர் வேறு நாம் வேறு என்ற பிரிவு மனம் எங்கட்கில்லை. உங்கள் நற் பண்பு நல் நோக்கமும், நல் வாழ்வும் எங்களின் வழிகாட்டி என்பதை நாம் மட்டுமல்ல எம் சந்ததி யும் நினைவு கொள்ளும், காலநிலைகள் மாறினும் எம் மனநிலை என்றும் மாறாது. நாங்கள் உள்ளத் தால், வாழ்வால் ஓரின மக்கள், கொடுத்துக் கொடுத்து கொடையுள்ளம் பொருந்தி வாழ்கின்ற உங்கள் இனம் எங்களால் என்றும் போற்றப்படும். அன்புச் சாந்தப்பா, உங்கள் பிரிவு உடற்பிரிவு மட்டுமே, உள்ளத்தால் என்றும் வாழ்கிறோம். வாழ்ந்து கொண் டேயிருப்போம் என ஆறுதல் அடைகிறோம்.
நன்ன்புரிச்சங்க உறுப்பினர் சார்பில்
தேவராசர து. கலியுக வர தன் (தலைவர்) (செயலாளர்)
ஊழியர் நலன் புரிச் சங்கம், மயிலிட்டி உப-அலுவலகம், வலிகாமம் வடக்கு பிரதேச சபை,
ല്പS
A.

Page 13
அமரர் நா. சாந்தலிங்கம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பேடு
அன்பளைந்த நெஞ்சும் ஆற்றலொடு தன்பணியை இன்புடனே செய்யும் இயல்புடையோய் - மன்னவன் போல்
மேலான சிவபதம் சேர்ந்தனையே சாந்தலிங்கச் சீலோனே பெற்றனையே முத்தி.
பிறப்பு: 17- 12 - 1943 தந்தை நல்லதம்பி நாகலிங்கம் ( விதானையார் இறப்பு) as is : நா. இலட்சுமி ( இறப்பு)
ஆல்வி : மயிலிட்டி தெற்கு ஞானோதய வித்தியாசாலை
மாத்தனை சைவப் பிரகாச வித்தியாசாலை
உயர்கல்வி : தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி
தொழில் : மின் இணைப்பாளர் வலி வடக்கு பிரதேச சபை
உப அலுவலகம் மயிலிட்டி,
கலைத்திறன் : மிருதங்கம் திருமணம் : கட்டுவனைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னக்குட்டி இளைய பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரி செல் லம் மா வை 15-07-1979இல் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டார். உடன் பிறந்தோர் : சிவராஜலிங்கம் (ஓய்வுபெற்ற உத்தியோகத்
தர் உணவு இலாகr) இராஜபூபதி ( கனடா ) காலஞ்சென்ற குல சிங்கம், ஞானவதி, சி வஞா ன லிங்கம் (நோர்வே } நேசபூபதி ( ஆசிரியை R - C T. M. S. கொழும்பு) சுந்தரலிங்கம் (கனடா) மைத்துனர் பொ. பாலசிங்கம் (கனடா), க. பால சுப் பிர 4D6ohub (BOBBY TRAVALS) op. 6o) a 5rra, ராஜன் (இளைப்பாறிய உதவிக்கல்விப்பணிப்பாளர்) மைத்துனிவர் நகுலாம்பிகை, மங்களேஸ்வரி, தற் பரா தே வி
(நோர்வே ) பரமேஸ்வரி

سمسم 19 سم.
பெறாமக்கள் : சிவாகரன், பூரீ சுதேஸ்கரன், சிவராகிணி, சுதன், தரன், யாழினி, அபர்ணா, அருணன், சிறீ தரன், சியாமளன், சிந்துஜன், சுரதீஸ் மருமக்கள் : கிருபாகரன், கிருபாலினி, பவதாரணி, யசோதா, விஜிதா, பாலமுரளி, வனிதா, ஞானமுரளி, சிவா னுகன் சமூகசேவை : உபதலைவர் மயிலிட்டி உபஅலுவலக நலன்புரிச்
சங்கம்
பொதுச்சபை உறுப்பினர் தெ ல் லிப் பழை பல நோக்கு கூட்டுறவுச் சங்கம்
இறுதி 3 1997 ஈஸ்வர ஆண்டு மார்கழி மாதம் 12ஆம் நாள் (27-12 - 1997) சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு அபரபக்க திரியோதசி தி தி யில் இறைவன் திருவடி சேர்ந்தார்.
தேற்றம் எல்லாரும் ஒர் நாள் இறப்பர் சாந்தன் பல்லார் புகழப் பருவுடலே - இல்லாமற் செய்தாலும் மேன்மை சிறக்கும் புகழுடல் விட்டு) உய்வான் இறையடைந்தான் காண்.
அமரர் சாந்தப்பாவின் ஆன்மா ஆடல்வல்லான் அடியிணைகளில் ஆராஇன்பம் அடைக.
ஓம் சாந்தி சாந்தி !! சாந்தி !!!
கந்தரநுபூதி உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள் வாய் குகனே.

Page 14
வருந்த வேண்டா
‘இவன் பிற ப் பது மில்  ைல. இவன் ஒரு முறை இருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை. இவன் பிறப்பற்றான்; அனவரதன், இவன் சாசுவதன்; பழை யோன் உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப் பட்டான்.
“நைந்த துணிகளைக் கழற்றி எறிந்து விட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்து கிறான்! s
'இவனை ஆயுதங்கள் வெட்டமாட்டா: தீ எரிக்க்ாது; நீர் இவனை நனைக்காது; காற்று உலர்த்தாது
*உயிர்களின் ஆரம்பம் தெரியவில்லை; நடுநிலைமை தெளிவுடையது; இவற்றின் இறுதியுந் தெளிவில்லை. இதில் துயரப்படுவதென்ன?
*எல்லோருடம்பிலுமுள்ள இந்த ஆத்மா கொல்ல முடியாதவன். ஆதலால், நீ எந்த உயிரின் பொருட்டும் வருந்துதல் வேண்டா!'
அமர நீதிகள்
1. பொருளுள்ள போது தியாகம், அதிகாரத்தில் சகிப் புத்தன்மை, துன்பத்தில் தைரியம், ஒழுக்கத்தில் மனிதாபிமானம் என்பனவே பெரியவர்களின் இலட் சிய வாழ்வாகும்.
2. புனித நதி பாவங்களைக் கழுவுகிறது. சந்திரன் வெப்பத்தைத் தணிக்கிறது. கற்பகதரு வறுமை யைப் போக்குகிறது. பெரியவர்கள் இம் மூன்றையும் செய்கிறார்கள்,

l, 0.
li .
................... 21 سست۔
விவேகம் இல்லாதவனுக்குச் சாத்திரங்களால் பய னில்லை. கண் தெரியாதவனுக்கு முகம் பார்க்கும் கண்ணாடியால் பயனில்லை. மரங்களை வெட்டினாலும் தழைவிடுகின்றன. சந் திரன் தேய்ந்தாலும் வளருகிறது செல்வம் குறைந் தாலும் அறிவானது அழிவதில்லை உலோபியைப் பொருளாலும், ஆத்திரங் கொண்ட வனை வணக்கத்தாலும் மடையனைக் கீழ்ப்பணி வதாலும் பெரியவர்களை உண்மை பேசுவதாலும் வசப்படுத்தலாம்.
மன்னித்துவிடுதலை விடப் பெரிய நோன்பு எது வுமில்லை திருப்தியை விட மேலான மகிழ்ச்சி எது வுமில்லை அவாவை விட கொடியநோய் வேறெது வுமில்லை இரக்கத்தை விட மேலா ன தருமம் வேறெதுவுமில்லை. நாம் நினைப்பதால் மாத்திரம் எமக்கு எதுவும் கிடைப்பதில்லை எதனையும் சிரமப்பட்டுச் செய்தே பெறுதல் வேண்டும் நித்திரையாய் கிடக்கும் சிங் கத்தின் வாய்க்குள் உணவு தானே கிடைப்பதில்லை.
நந்தவனத்தில் ஒரு மரத்தின் நறுமலரால் நறுமணம் நிரம்புகிறது நல்ல குடியில் ஒரு மைந்தனால் புகழ் பரவுகிறது. உண்மையான உறவினன் உன் வாழ்விலும் தாழ்வி லும் உன் பக்கத்திலேயே நிற்பான் பஞ்சத்திலும், யுத்தத்திலும், மயானத்திலும் அவன் அருகில் நிற்பான், நல்லவர்கள் வறுமை வந்த போதிலும் தம்மியல்பு குன்றுவதில்லை பனிக்கட்டி வெயில் வந்த போது உருமாறினாலும் குளிர்ச்சி குறைவதில்லை, நாளைக்கு யாருக்கு என்ன நடக்கும் என்று எவ ருக்கும் தெரியாதாகையால், இன்று செய்யவேண்டி யவற்றை நாளைக்கு எ ன் று தவணையிடாமல் இன்றே செய்தல் வேண்டும்.

Page 15
দুই
தெரிந்து கொள்ளுங்கள்
மனிதனைப் போல நிமிர்ந்து நிற்கக் கூடிய பிராணி
கங்காரு
தாவரத்திற்கு உயிர் உண்டு என உணர்த்தியவர்
போஸ் அவர்கள்
முதன்முதலில் விண்வெளிக்குச் சென்ற விலங்கு
லைக்கா எனும் நாய் உடலில் உள்ள மொத்த எலும்புத் தொகுதியின்
2O6
மனித இதயத் துடிப்பு வீதம்
ஒரு நிமிடத்துக் 72 தடவை சுவெஸ்கால்வாய் வெட்டப்பட்ட காலம்
1869 ஆம் ஆண்டு சமாதானத்தை நிலை நாட்டும் அமைப்பும் அது தொடக்கப்பட்ட காலமும்
ஐக்கிய நாடுகள் சபை - 1945 சாதாரண மனிதனின் குருதி அமுக்கம்
120/80 ஒரே தடவையில் இரு முட்டையிடும் பிராணி
மாடப்புறா அதிக காலம் வாழவல்ல ஒரு பிராணி
(LP5606)
பறக்கமுடியாத பறவை
தீக்கோழி
ஞாபக சக்தி கூடிய விலங்கு
Ut6).59"

-س. 23 س--
இலங்கையின் தேசியப் பறவை
காட்டுக்கோழி
மிகவும் நச்சுத் தன்மையான பூச்சி
சிலந்தி கழுதைப் பாலால் தீரும் நோய்
இகம்
நாணயத்தின் உபயோகத்தை முதன்முதல் மேற் கொண்டவர்
Ar y ėjos, if
அமாவாசை
பூரணையின் பின் 1ஆம் நாள் ( பிரதமை ) தொடக்கம் 14ஆம் நாள் ( சதுர்த்தசி ) வரை தேய்ந்து முற்றாக சந்திர ஒளி தெரியாத நாள்.
பெளர்ணமி
அமாவாசையின் பின் 1ஆம் நாள் ( பிரதமை) தொடக்கம் 14ஆம் நாள் (சதுர்த்தசி )வரை வளர்ந்து முற்றாகச் சந்திர ஒளி தெரியும் நாள்.
இலங்கை வங்கி தொடங்கப்பட்ட காலம்
1939
இலங்கையில் மக்கள் வங்கி தொடக்கப்பட்ட காலம்
196
முதலாவது உலக யுத்தம் மூண்ட காலம்
1914
இரண்டாவது உலக யுத்தம் மூண்ட காலம்
1939
முதன்முதல் இலங்கையுடன் கூடிய உலகப் படத்தை வரைந்தவர்
தொலமி

Page 16
ତ).
ஈன்றி கவிலல்
AAAASAASESeiAAAAAAqAAAAAAAAqAAAAAMAAMMAMqqqAqMqMTA AAMAAMATASAAMMeeAS AAAAMAAMqqAAAqMqAAqAMAqAMA
எங்கள் அருமைத் தலைவர் சாந்தப்பாவின் ஈமச்சடங்கின் போது நேரிற் கலந்து கொண்ட உற்றார், உறவினர், அயலவர், நண்பர்களுக்கும் அனுதாயச் செய்திகள் அனுப்பியோருக்கும், வேண்டிய நேரத்தில் உதவிகள் புரிந்தோருக்கும், அந்தியேட்டி சயிண்டிக்கிரிகைகளின் போது சமூகமளித்துச் சிறப்பித்து, சாந் த ப்ப வின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்த அனைவருக் கும் எங்கள் குடும்பத்தவர் சார்பில் உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்,
இங்ஙனம்
கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி, குடும்பத்தினர் உரும்பிராய் வடக்கு,
உரும்பிராய். ( 26 - Oil - 1998
SASASAMSASAMSSqSqqSSqASqAqSqSASASqMATSASMAMMqSqSqMqASqSqqSSqSqSqSqMAASqTSLASSASSAASSAMqSqqSSqMSSqA SSASqSqASqMSSSMSSSMAqAMqSqSSMqMqSqqSSSqqqSqMSMSMMSMSMSSMSSMSAqAS SMqSqqSqSqSqSqSqMqSqMqAASqMSMAMei
தொகுப்பு !
கனகசபாபதி தர்மகாயகம்
மஞ்சத்தடி, இணுவில்.


Page 17
ܠܛ ܲ
*
--
திருமகள் அழுத்
 

s 35 D gF 6ðIT GITT SAÔ) ,
- 岛 廖