கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சங்கரப்பிள்ளை கணேசரத்தினம் (நினைவு மலர்)

Page 1
26535 ജൂടാതൃട്ട് LLC. அமரர். சங்கரப்பிள் suitain is நினைவி
7
 
 
 
 
 

ளை கணேசரத்தினம்
\தப்பேறு குறித்த வெளியீடு

Page 2

::x:32
'జ్యx:#*ళ#జ్యభ్యస%';#జ ఫిషిxభ#** భభ్య *:::: 8888,*.^&;8^%&ہ ം:
ཁང་ལ་ཀ་ར་མཆན ) STeSeSkieiqSieTT ee eeiqieqSYTeeky TeieS euSkSkS ieSYSkYyYSYSSsYS 年节
ॐ
. {fo}}{{ եւ iւՐ
8
t
t
/?”/ノッ
கனேசமலர்
{3}sX))ő5). S) G3(Odboo).9)Ö ÓlnoÖÓ (O03x5xÖ, LSST ATJLcS cL TLL SLL S LL EMML sTSMMLLTTL S
அமரர். சங்கரப்பிள்ளை கணேசரத்தினம் ("Hobulo III) vägi; t நினைவு வெளியீடு
s 17.02.2007 tr
SeY SeSeSeSYYSSeeeS eS eSeYSY z zeeSeSeYSYSYSeBeSBBeSeeSYSeeSeSeee برخی مهم పిషt భగ్గిపడ- • SeeeeSS eeeSrSeSeeee S SeeeSSSSeeSeSeS keSeS S reSeeeeSS SSeeeSer eSeSY

Page 3
FDTUL60) எமது அன்புத் தெய்வத்தின் திருப்பாதங்களுக்கு
இ TY A
x (\ S_ 5میلا اللہ // ,xلا^T
சமர்ப்பணம்
மனிதருள் மாணிக்கமாய் புகழ்மிக்க பெருந்தகையாய்
பண்புமிக்க தந்தையாய் அண்பைப் பொழிந்த ஒளிவிளக்காய்
எம்மை நல்வழிப்படுத்திய தெய்வமாய்
R வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
இன்று வானுறையும் தெய்வமாகிவிட்ட
எமது குரும்பத்தலைவரின் திருப்பாதங்களுக்கு காணிக்கையாக
இக் கனேசமலரினைச் சமர்ப்பிக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி: சாந்தி1
இங்ஙனம் குடும்பத்தினர்
-: 02:-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோற்றம்: 02.02.1932 TLADGOngIDG2.J: 18.01.2007
திதி வெண்பா விய வருட தைத் திங்கள் பூர்வபட்ச திருதியை நன்னாளில் மண்ணுலகை நீத்தே சங்கரப்பிள்ளை கணே விண்ணுலகு சேர்ந்தார் பணிந்து.

Page 4

6. சிவமயம்
தோத்திரத் திரட்டு
திருச்சிற்றம்பலம் விநாயகர் காப்பு விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து.
தேவாரம் அங்கமும் வேதமும் ஒதும் நாவர்
அந்தணர் நாளும் அடிபரவ மங்குல் மதிதவள் மாட வீதி
மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் செங்க லார்புனல் செல்வ மல்கு
சீர்கொள் செங் காட்டங் குடியதனுள் கங்குல் விளங்கெரி யேந்தி யாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
திருவாசகம்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே யாய சிவபதமளித்த
செல்வமே சிவபெருமானே இம்மையே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவ தினியே.
-: 03:-

Page 5
திருவிசைப்பா ஒளிவளர் விளக்கே உவப்பிலா வொன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே.
திருப்பல்லாண்டு சீருந் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன்
பெற்றதார் பெறுவாருலகில் ஊரும் உலகும் கழறவுளறி
உமை மணவாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின்
வேண்டு கின் றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு
உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்
நான் மகிழ்ந்து பாடி அறவா நீ ஆடும்போதுன் அடியின்
கீழ் இருக்க என்றார்.
-: 04:-

திருப்புகழ் கைத்தல நிறைகனி அப்பமோ டவல் பொரி
கப்பிய கரிமுக னடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவர்
கற்பக மெனவினை கடிதேகும் மத்தமும் மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொருள் திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட வெழுதிய முதல்வோனே முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதிரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை 9цLOTaš அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.
பட்டினத்தள் பாடல் முடி சார்ந்த மன்னரும் மற்று முள்ளோரும் முடிவிலொரு பிடி சாம்பராய் வெந்து மண்ணாவது கண்டு மின்னுமிந்தப் படி சார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னினம்பலவர் அடி சார்ந்த நாமுய்ய வேண்டுமென்றேயறி வாரில்லையே.
வாழ்த்து வான்முகில் வழாதுபெய்க மலிவளஞ்சுரக்க மன்னன் கோன்முறை அரசுசெய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்
-: 05:-

Page 6
யோகர் சுவாமிகள் நற்சிந்தனை நல்லூரான் திருவடி
நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி - கிளியே! இரவு பகல் காணேனடி
ஆன்மா அளியாதென்று அன்றெனக்குச் சொன்ன மொழி நான் மறந்து போவேனோடி - கிளியே! நல்லூரான் தஞ்சமடி
தேவர் சிறை மீட்ட செல்வன் திருவடிகள் காவல் எனக்காமெடி - கிளியே! கவலையெல்லாம் போகுமெடி
எத்தொழிலைச் செய்தாலென்ன ஏதவத்தைப் பட்டாலென்ன கர்த்தன் திருவடிகள் - கிளியே! காவல் அறிந்திடெடி
பஞ்சம்படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவமோ நாங்களெடி - கிளியே! ஆறுமுகன் தஞ்சமெடி
சுவாமி யோகநாதன் சொன்ன திருப்பாட்டைந்தும் பூமியிற் சொன்னாலெடி - கிளியே!
பொல்லாங்கு தீருமெடி,
-: 06:-

வngத்தையை சாதைைMக்கிUJ அமரர். சங்கரப்பிள்ளுைகணேசரத்தினம்
சைவமும் தமிழும் செழித்து வளரும் யாழ்ப்பாணத்து வலிகாமப் பிரதேசத்தின் மத்தியில் அமைந்திருக்கும் பெருமைமிக்க கிராமங்களில் ஒன்று இணுவில் ஆகும். இங்கு தமிழர் பாரம் பரியத்தையும் கலாச்சாரத்தையும் பேணுகின்ற உயர்வேளாள மரபில் தோன்றிய சங்கரப்பிள்ளை அன்னம்மா தம்பதியினருக்கு மூத்த புதல்வனாக அமரர் கணேசரத்தினம் 02.02.1932 இல் அவதரித்தார். இவருடன் அரியராசா, செல்வராசா, மகேஸ்வரன் ஆகிய மூன்று சகோதரர்களும், இராஜமணி, புஷ்பலீலாவதி, சிவயோகராணி ஆகிய மூன்ற சகோதரிகளும் உடன்பிறப்புக்களாகினர். இவர்கள் குடும்பம் இணுவிலில் பிரபலமாகவும், செல்வாக்குடனும் திகழ்ந்தது மட்டுமன்றி கிராமத்தின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகித்தது.
அமரர் கணேசரத்தினம் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை முதலில் இணுவில் மத்திய கல்லூரியிலும், பின்னர் உடுவில் மான்ஸ் ஆங்கில பாடசாலையிலும், இரண்டாந்தரக் கல்வியை இணுவில் மத்திய கல்லூரியிலும் நிறைவுசெய்து கொணடார். சிறுவயதிலிருந்தே தனது மாமியார் ஆச்சிமுத்து வீட்டில் தங்கியிருந்து கல்விகற்று வந்தார். கல்வியை முடித்துக் கொண்டு கொழும்பிலுள்ள அரஸ்கோ நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர் திருமதி பூமணி பொன்னுத்துரை அவர்களது அழைப்பின் பேரில் பதுளை மாவட்டத்தின் பெருந்தெருக்கள் திணைக்களத்தில் ஒவசியராகப் பணியாற்றத் தொடங்கினார். அதேநேரம் அவரது சகோதரர்களான அரியராசா அவர்கள் சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கியிலும், செல்வராசா எழுதுவினைஞர் சேவையின் ஊடாக உதவிப் பிரதேசசெயலர் பதவியிலும், மகேஸ்வரன் அவர்கள் வியாபாரத்திலும் ஈடுபட்டு குடும்ப முன்னேற்றத்தின் அச்சாணிகளாகினர். இன்று அரியராசா அவர்கள் இலண்டனிலும், மகேஸ்வரன் அவர்கள் சுவிஸ் நாட்டிலும் கொடி கட்டிப் பறப்பதனைக் காணமுடியும்.
அமரர் கணேசரத்தினம் அவர்கள் தனது திருமண பராயத்தை அடைந்த வேளையில் பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு மஞ்சத்தடியைச் சேர்ந்த சின்னப்பு - வள்ளியம்மை தம்பதியினரின் மூத்த புதல்வியும் ஆசிரியையுமான பொன்மணி அவர்களை கைப்பிடித்து மணவாழ்க்கையை ஆரம்பித்தார். இவர்களது இன்பமான இல்லற வாழ்வின் பயனாக குகதாசன், கண்ணதாசன், சங்கரதாசன், சண்முகதாசன் என்கின்ற நான்கு புதல்வர்களைப்
-: 07:-

Page 7
பெற்று இன்புற்றிருந்தனர். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற அருள்மொழிக்கிணங்க குடும்பத்தவருடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் திழைத்த அமரர் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் பெரும் அக்கறை கொண்டு விளங்கினார்.
அமரர் கணேசரத்தினம் அவர்களின் மூத்தமகன் குகதாசன் கல்வியை நிறைவுசெய்து இலங்கையின் ஆசிரிய சேவையில் இணைந்து கொண்டார். அவருக்கு கோட்பாயைச் சேர்ந்த பிறேமராணி எனும் மங்க்ையைக் கரம்பிடித்துக் கொடுத்த அமரர் நாட்டின் பிரச்சினைகளிலிருந்து காப்பாற்ற அவர்களை கனடா நாட்டிற்கு அனுப்பிவைத்தார். அவர்களது இல்லற வாழ்க்கையில் திவ்யஆரபி, குகேசன், பிரணவி, பிருந்தன் எனும் நான்கு பேரப்பிள்ளைகளைப் பெறும் வாய்ப்பை அமரர் பெற்றுக்கொண்டார். அதேநேரம் கண்ணதாசன், சங்கரதாசன் ஆகிய புதல்வர்களையும் கல்வியைப் பெறும்பொருட்டு அவுஸ்திரேலியா நாட்டிற்கு அனுப்பிவைத்த அமரர் அவர்களைப் புலமையாளர்களாக உயர்த்தி பெருமைதேடிக் கொண்டார். இதில் கண்ணதாசன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஜெயந்தி எனும் மங்கையைக் கரம்பிடித்து டனேஸ், சரண்யன் ஆகிய இருவரையும் பேரப்பிள்ளைகளாகத் தந்தனர். அதேவேளை சங்கரதாசன் அவர்கள் தாவடியைச் சேர்ந்த றோகினி எனும் மங்கை நல்லாளைக் கரம்பிடித்து இல்லற வாழ்வின் பயனாக பிரியன் எனும் பேரப்பிள்ளையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை அமரருக்கு வழங்கினார். இந்நிலையில் கடைசிப் புதல்வரான சண்முகதாசன் அவர்களை நியூசிலாந்து நாட்டிற்கு அனுப்பிவைத்த அமரர் அவரின் நல்வாழ்வை உறுதிப் படுத்தியதுடன் அவருக்கு தனது ஊரைச் சேர்ந்த மங்கைநல்லாள் சர்மிலாவை வாழ்க்கைத் துணையாகப் பெற்றுக்கொடுத்ததன் மூலம் தனுஷ் எனும் பேரப்பிள்ளையைப் பெற்று பேருவகையடைந்தார். பிள்ளைகளின் வளர்ச்சியே தனது வாழ்க்கையின் குறிக்கோள் என வாழ்ந்த அமரர் கணேசரத்தினம் அவர்கள் அதில் வெற்றி கண்டவர் எனக்கூறினால் அது மிகையாகாது.
அமரர் தனது குடும்பப் பொறுப்புக்களையெல்லாம் நிறை
வேற்றியதன் பின்னர் தனது வேலையிலிருந்தும் இளைப்பாறினார்.
தனது எல்லாப் பிளைகளும் நல்லதொரு நிலையில் வாழ்வதைக்
கண்டு மகிழ்ந்த அமரர் கணேசரத்தினம் அவர்கள் தனது மனைவி
யுடனும் உறவினருடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். தினசரி -: 08:-

காலையும் மாலையும் மஞ்சத்தடி முருகனை வழிபட்டுவந்த அமரர் அக்கோயிலின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வந்தார். இயற்கையிலேயே மெலிந்த தோற்றத்தைக் கொண்ட அமரர் கணேசரத்தினம் அவர்கள் முதுமைக் காலத்திலும் சுறுசுறுப்பாக வாழ்ந்த ஒருவர் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. அன்னார் நோய்வாய்ப்பட்டு சிலகாலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரியப்படுத்திய வேளையில் அவரின் புத்திரள்கள் நால்வரும் செய்வதறியாது துடித்தமையைக் காணும்பொழுது இத்தகைய புதல்வர்களைப் பெற அவர் செய்த மாதவம் எப்படிப் பட்டது என உறவினர்கள் மனம் நெகிழ்ந்தனர். நாட்டின் இக்கட்டான காலகட்டத்திலும் அவரைக் காணவேண்டுமென்ற விருப்பில் ஓடோடி வந்த மூத்த புதல்வன் குகதாசனின் பாசத்தை எவ்வாறு வர்ணிப்பது எனக் கூற முடியவில்லை.
பூமியில் பிறந்த எல்லோரும் இறப்பது என்பது நியதி. என்றாலும் தனது வாழ்நாளில் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். சத்திரசிகிச்சையின் பின்னர் காலனால் அரவணைக்கப்பட்ட அமரர் கணேசரத்தினம் அவர்கள் உத்தராயன கால பூர்வபட்ச திதியில் 18.01.2007 அன்று இறைபதம் சேர்ந்தார். இன்று அவரது பூதவுடல் தகனம் செய்யப் பட்டாலும் புகழுடல் நிலைத்திருப்பதைப் பார்க்க முடிகின்றது. நல்லதொரு குடும்பத் தலைவனாக, பாசம்மிகு தந்தையாக, அன்பு கொண்ட சகோதரனாக, அரவணைக்கும் உறவினராக வாழ்ந்து சிவபதமடைந்த அமரர் கணேசரத்தினம் அவர்கள் ஒரு நிறைவான வாழ்வை வாழ்ந்து முடித்தவர் என்ற பெருமையுடன் சொர்க்கத்தில் புகுத்துவிட்டார். அன்னாரை நாம் தெய்வமாகப் பூசித்து அவரின் வழிகாட்டலைப்பெற்றுக்கொள்வோமாக.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!! -: 09:-

Page 8
பிள்ளைகளின் மனக்குமுறல்
அன்புடனே பெற்றெம்மை வளர்த்தெடுத்து கல்வியறிவூட்டி இன்புற்று இன்ப அருள் வேண்டி தாயாகவும், தந்தையாகவும் நின்று எம்மையெல்லாம் வையத்துள் வாழ்வாங்கு வாழவைத்து பெருமை தேடித் தந்த எம் இனிய தந்தையே எம்மைவிட்டு எங்கு சென்றீர்கள்? தந்தை என்ற சொல்லுக்கு தரணியில் இலக்கணமாய் இருந்தீர்களே! பாசத்தின் பிறப்பிடாய், நேசத்தின் இருப்பிடமாய், சொல்லில் கனிவும், பார்வையில் பரிவும் காட்டிய எம் தந்தைய்ே உங்கள் நினைவு எம் மனதில் நிழலாய் நிற்கையிலே நீங்கள் மறைந்த மாயந்தான் என்னவோ? உங்கள் மறைவு கேட்டு துடியாய்த் துடிக்கின்றோம்.
மஞ்சத்தடி முருகனைத் தஞ்சமெனக் கொண்ட உங்களை காலனவன் தந்திரமாய் அழைத்திட்டானோ? அப்பா இன்றுவரை எங்களுக்காக வாழ்ந்த தெய்வமே! உங்கள் பெயரும் புகழும் துலங்க உங்கள் பிள்ளைகள் நாம் நல்லவர்களாக வாழ்வதே உங்களுக்கு நாம் செய்யும் கைமாறு. “தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச் செயல்” என்ற வள்ளுவர் வாக்கிற் கேற்ப எம்மை உயர்த்திவிட்ட தெய்வமே உம்புகழைப்பேச எமக்கு வார்த்தைகளோ போதவில்லை. நீங்கள் ஆசையுடன் அழைக்கும் அக்குரலை இனி எப்பொழுது கேட்போமோ? நீங்கள் காட்டிய வாழ்க்கைப் பாதையில் உங்கள் ஆசியுடன் என்றும் வாழ்ந்திடுவோம் என உறுதிசெய்கின்றோம்.
உங்கள் பிரிவால் ஆறாத்துயரில் மூழ்கியிருக்கும் பிள்ளைகள் குகன், கண்ணன், சங்கர், தாசன் -: 10 :-

O O O O O O நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்தான் எனது பெரியண்ணன். எம் குடும்பத்தில் ஆண்களில் முதல் உதித்தவர். ஆண்பிள்ளை இல்லை என்று தவமிருந்து விளாத்தியடியானை வேண்டி பெற்றவர்தான் பெரியண்ணன். சிறுவதியில் இருந்தே செல்லமாக வாழ்ந்து வந்ததனால் கஷ்டம் எது என்று தெரியாது. திருமணம் முடித்து வாழ்க்கை சுமையாக, கஸ்டப்பட்டு பிள்ளைகளை வளர்த்தார். பிற்காலத்தில் பிள்ளைகளின் அரவணைப்போடு இருக்கலாம் என்று எண்ணினார். நாட்டின் அசாதாரண சூழ்நிலை பிள்ளைகளைப் பார்க்கமுடியவில்லை என்ற ஒரே ஏக்கம். தம்பி செல்வம் அடிக்கடி வந்து போ. எனக்கு பயம் இல்லை. ஆனால். விக்கி விக்கி அழுவார். கடைசி நிமிடம் வரை ஏதோ சொல் வாய் முணுமுணுப்பார். நெஞ்சுச் சுமையை இறக்கி வைக்க துடித்தார் முடியவில்லை.
பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் நல்ல ஆசானாக, உடன் பிறந்தோர்க்கு நல்ல சகோதரனாய், பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாய் வாழ்ந்து காட்டியவர். அரியண்ணன் வந்து பார்க்க எண்ணியதைக் கூறியபோது நாட்டுச் சூழ்நிலை சரியில்லை வரவேண்டாம் என்று சொல்லு என சகோதர பாசத்தைத் தொட்டார்.
அவரால் விட்டுச்செல்லப்பட்ட விழுமியங்கள் நல்ல எச்சங்களாக விளங்குகின்றன. அவர் எம்மை ஆறாத்துயரில் விட்டிருந்தாலும் அவர் எம்முடன் வாழ்ந்த வாழ்வு மறக்கமுடியாத நினைவுகள் ஆகும். பெரியண்ணாவின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
"அன்பகம்’ அன்புத் தம்பி இணுவில் கிழக்கு, செல்வம்
இணுவில்.
-: 11 :-

Page 9
6TD35(560 D (DTLDITG36)
எங்குதான் சென்றனையோ?
ALSLA ALALSLALAALSSLASLSSA AAAS AAA AALLLLLSAA AAAA ALMM AALSLA LALASLMLALALALLSAAAAASAEASALSLMAAA AALLSLLM AALSLA AALMAALLSSLA A LALASLLA LSM AAAA AAASSAA AAAAALLSSLMA AAMAL ALSLLALAL LMMLAL LLLLSSMSLLLLLLSLLSLL SAA ESLSLSLALLSLLLAJSLMA LALA AJLMMLA
சீர்பூத்த இணுவையம் பதியினிலே
இறும்பூது எய்தும் படிவாழ்ந்த பேர்பூத்த பெரும் செம்மல்
இறைவனடி சேர்ந்ததினால் கார்பூத்த மழையப் போல்
எமது விழி இரண்டும் நீர்பூத்துக் கொண்டதுவோ
இறைவிதியோ எமதருமை மாமாவே
முத்தொழில் உடையோனே
முகமாறு கொண்டவனே சித்திகள் தரவல்லவனே
சிறப்பான வள்ளிமணாளா பத்திகள் பலசெய்து
பாடிய மஞ்சத்தடி முருகா முத்தியை கொடுத்து எங்கள்
மாமாவை பாதத்தில் வைத்திடையா.
உங்கள் பிரிவால் வாடும் மருமக்கள் பிறேமராணி, ஜெயந்தி, றோகினி, சர்மிலா
-: 12:-

APPAPPA
My Appappa, We all miss you so Losingyou was terrible Trulyitis unbearable No longer can we talk to you Losingyou make us blue Without you life will never the same You were there in my childhood days For it was you that gave me my name And that I can proclaim Your love was everlasting And your soul is too Never will we forget That there really is no reason to fret For you are up in the skies Watchingus with your watchful eyes But there really is no salve For the pain we have right now But one day we will heal Right not it's too unreal The only things left to say To our great dismay Is goodby.
By: Grandsons and Granddaughters.
س: 13 :س

Page 10
9Ισότύσότ ΘΙύυ.ύυπ'
அப்பப்பா அப்பப்பா என்று ஆசையுடன் அழைத்தோமே ஆனால் இன்று எம்மை வாஞ்சையுடன்
அழைப்பதற்கு யார் உளர் இனி இந்தப் பூவுலகில் கருங்கல்லில் வடித்த காவியம் களங்கமற்ற உங்கள் வாழ்க்கை பாரதக் கதைகளும் இராமாயணமும் சுவையுடன் கேட்போமே உங்களிடம்
நாம் ஒழுக்கமாக வாழ்வதற்கு நன்முறைகள் எடுத்துரைத்த தெய்வமே இனி யாருளர் எமக்கு இதையுரைக்க இனிய உங்கள் குரல் M இனிக்கிறது எம்காதில் கண்ணை இமைகாப்பது போல் கனிவுடன் எம்மைக் காத்திரே மஞ்சத்தடியில் மட்டுமல்ல தரணியிலும் மங்காத் தனிப்புகழ் கொண்டவரே முருகனிடம் வரம்கேட்ட உங்கள் முத்தான கோரிக்கையை ஏற்று அவருடன் சங்கமமாகிவிட்ட அப்பப்பா அவனியில் கடவுளாய் இருந்து
எம்மைக் காத்தருளும் அப்பப்பா எம்மை உம்மிடம் ஒப்படைத்தோம்.
அன்புடன் பேரப்பிள்ளைகள் -: 14:-

எங்குதான் சென்றீர்கள் பெரியப்பா?
EeAMLASLTMLALALkeMLAeSeLALAL keSMLkLkLkLMLALeLSLMLeAeLALATSMLSL eeLeMAALAMMALMLALAMMALAAAASLMAALALAMASAAMLM AALMLMA
மண்ணுலக வாழ்வு துறந்து விண்ணுலக வாழ்வு தேடி விரைவாகச் சென்று எம்மை வியப்பில் ஆழ்த்தி விட்ட பெரியப்பா
நிலையில்லா வாழ்வு இதுவென்றா நிம்மதியான இடம் தேடிச் சென்றிர் மனையாளும் மக்களும் இங்கே தவித்திட எங்குதான் சென்றீர் பெரியப்பா?
குடும்பத்திற்கு உற்ற தலைவனாய் சகோதரர்க்குச் சிறந்த அண்ணனாய் சமூகத்திற்கு ஏற்ற தொண்டனாய் எல்லோர்க்கும் வேண்டிய பெரியப்பா
அன்புக்கும் பண்புக்கும் இலக்கணமாய் நின்று கள்ளம் கபடமற்ற உள்ளம் தனைக் கண்டு தன்னடியில் அழைத்தானோ இறைவன் தான் சொந்தம் கொண்டாட பெரியப்பா
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி என்றும் மீளாத் துயில் கொண்ட மாயமென்ன பெறாமக்கள் யாம் ஏங்கித் தவித்திட எங்குதான் சென்றீர் பெரியப்பா?
கிருபானந்தி
பெறாமகள் - : 15 5ܝ

Page 11
நெஞ்சம் நிறைந்த பெரியமாமா
மானுடம் சென்றதே? மாமா எனும் தேன்வதை மறைந்தும் மறையாத ஆருயிர் மாமா தமை மறக்க முடியுமா?
மண்ணிலே பிறந்த உயிர் மண்ணிலே மடிவது யதார்த்தமே? மாமா எங்கள் மாமருந்தன்ன
மாநிலத்தில் வாழ்ந்தாரே!
மாமா எனக்கூற அமுதம் ஊறுமே மண்ணில் உதித்த நாள் முதல் எனை நேசித்தாரே மண்ணைச் சிறுகை பிசைந்த நாள் முதல் மண்ணில் நல்ல வண்ணம் வாழ வைத்தாரே
மாமாவின் எச்சத்தால் விளைந்த நல்முத்துக்கள் மாமாவின் அடிச்சுவட்டை அடியொற்றி மறக்காது எமக்கெல்லாம் என்றும் உதவி மாமாவின் மைந்தர்கள் பணிதொடர எம்மிதயம் உருகுதே
மாமா எமக்கெல்லாம் பெரியமாமா மலர்ந்தும் மணம் வீசும் மலர்போல மாமாவின் ஜனனம் எமக்கெல்லாம் ஓர் விடியல் மறப்போமோ! எமதருமை மாமாதனை.
“குமரஸ்த்தான்” இராசு குடும்பம் இணுவில் மேற்கு, (சிவகுமாரன்)
இணுவில். மருமகன்
-: 16:-

தன்னடக்கம் கொண்ட பண்பாளன்
அமரர் சங்கரப்பிள்ளை கணேசரத்தினம் அவர்கள் மீளார் துயில்கொண்ட செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவன். அமரர் கணேசரத்தினம் அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் யாழ். பெரியாஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று படிப்படியாகக் குணமடைந்து வந்தமையால் அவரை மீண்டும் பழைய நிலையில் காணமுடியும் எனப் பலரும் எண்ணியிருந்தோம். ஆனால் காலன் அவரை எம்முடன் இணைந்திருக்க விட்டுவைக்கவில்லை. நல்ல குடும்பத்தலைவனாக, பாசமிகு தந்தையாக, அன்பைப் பொழியும் சகோதரனாக, உறவு பேணும் மைத்துனராக, ஊரவருக்கு உதவும் தொண்டனாக வாழந்த அமரர் கணேசரத்தினம் அவர்கள் உறவினர் களின் பேரன்புக்குப் பாத்திரமானவர் எனக் கூறினால் அது மிகையாகாது.
அமரர் கணேசரத்தினம் அவர்கள் எனக்குச் சம்பந்தியாகக் கிடைத்தமையைப் பெரும்பேறாகக் கருதுகின்றேன். அவர் குடும்பத்தவரும் எனது குடும்பத்தவரும் இந்தியாவில் திருமண எழுத்திற்காகச் சென்றவேளையில் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எதனையும் துணிந்து சொல்லும் சுபாவம் மிக்க அமரர் எவரது மனதையும் கவரும் வண்ணம் வார்த்தைகளைப் பயன்படுத்தியதை நான் நேரில் கண்டு வியந்திருக்கின்றேன். தன்னடக்கம் என்பதையே தனது அணிகலனாகக் கொண்ட அமரர் கணேசரத்தினம் அவர்கள் எவரையும் மதிக்கத் தெரிந்தவர். இதன் காரணமாகவே அவருக்குப் பல நண்பர்கள் காணப்பட்டனர் என்றால் அது மிகையாகாது.
“தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்”
என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க அமரர் கணேசரத்தினம் அவர்களது பெருமையை நிலைநாட்ட பிள்ளைகள் இன்று சிறந்து விளங்குவதனைக் காணமுடிகின்றது. கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிழநாடுகளில் வாழுகின்ற அன்னாரின்

Page 12
நான்கு பிள்ளைகளும் அவரின் பெயரைத் துலங்க வைத்திருப்பதனை நோக்கும்பொழுது “இவன் தந்தை என்றோற்றான்” எனப் போற்றும் அளவுக்கு அமரரின் பேரும் புகழும் பேசப்படுவதனை காண முடிகின்றது. பெற்றோரைத் தம்முடன் வாழவைப்பதற்கு முயன்ற பிள்ளைகள் இவரின் சுகயினத்தை அறிந்து கலங்கி நின்றமையைக் காணும்பொழுது இத்தகைய பாசம்மிக்க பிள்ளைகளைப் பெற எத்தகைய மாதவம் செய்திருக்க வேண்டும் என நாம் எல்லோரும்
வியந்து நிற்கின்றோம்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
என்ற பொய்யாமொழிப் புலவரின் கூற்றுக்
கிணங்க இவ்வையத்துள் மிகச்சிறந்த வாழ்க்கையை நிறைவு செய்து இன்று வானத்தில் தெய்வமாகிவிட்ட அமரர் கணேசரத்தினம் மஞ்சத்தடி முருகப்பெருமானின் நிறைந்த பக்தராவார். ஆதலால் அப்பெருமானின் பாதங்களைச் சரணடைந்திருக்கும் அமரரின் ஆத்மா சாந்தியடைய அவரைப் பிரார்த்திப்பதுடன் அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங் களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
க.தேவராஜா பீடாதிபதி, முகாமைத்துவ கற்கைகள் வணிகபீடம், யாழ். பல்கலைக்கழகம்.
-: 18:-

நல்ல வண்ணம் வாழ்ந்த வானுறையும்
“வையத்து வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்து வைக்கப்படும்”
என்று வள்ளுவர் வார்த்தைக்கு அமைய தான் பிறந்த மண்ணான இணுவிலுக்கு பெருமை சேர்த்து, கைப்பிடித்த மனைவிக்கு இனிய கணவனாய், பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாய், உடன்பிறந்தோருக்கு உற்ற சகோதரனாய், தனது மருமக்களுக்கு நல்ல மாமனாய் என்றும் புன்முறுவலுடன் சாந்தசொரூபியாய் இம் மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்து காட்டிய சங்கரப்பிள்ளை கணேசரத்தினம் அவர்கள் ஆவார்.
அன்னார் பெருந்தெருக்கள் திணைக்களத்தில் ஒவிசியராக கடமையாற்றியவர். தனது பிள்ளைகளை கல்வியில் மிளிர வைத்ததுடன் நல்ல முறையில் வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருக் கின்றார். தனது இளைய மகனான சண்முகதாசை யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ கற்கைநெறிப் பீடாதிபதி உயர்திரு. க.தேவராஜா அவர்களின் சிரேஷ்ட புத்திரி சர்மிலாவை திருமணம் செய்து கொடுத்ததன் மூலம் அவரின் குடும்பம் பெருமையடைகின்றது.
இத்தகைய பெருந்தகையினை இழந்து தவிக்கும் அவர்தம் துணைவியாருக்கும், பிள்ளைகளுக்கும், சகோதரருக்கும், மருமக்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய மஞ்சத்தடியான் தாளிணையை இறைஞ்சுகின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
ஞான.திருக்கேதீஸ்வரன் குடும்பத்தினர் K.T.C - 60386 (8bit, gióT6OTITELD. -: 19 :-

Page 13
O O O () ) O O உளளததால உயாநத உததமா
“வையத்து வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்து வைக்கப்படும்”
என்று வள்ளுவன் வாக்குக்கமைய வாழ்ந்து வந்த உத்தமன் சங்கரப்பிள்ளை கணேசரத்தினம் ஆவார்.
“தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும். என்ற பொய்யா மொழிக்கேற்ப அன்னாரின் புதல்வர்கள் நல்ல கல்விமான்களாக எம்மண்ணிலே கல்விபயின்று வெளிநாடுகளில் தொழில்புரிந்து பெரும்செல்வங்களைத் தேடி புகழையும் தேடி "மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்” என்ற குறளுக்கமைய அன்னாரின் புகழை மேலோங்கச் செய்தார்கள். தனது பிள்ளைகளை நல்ல இடங்களிலே மணம் முடித்து வைத்தார். இவர்களில் இளைய புதல்வன் சண்முகதாசன் வணிகபீடாதிபதி தேவராஜா அவர்களின் புதல்வியை மணந்து அன்னாரின் குடும்பத்தின் பெருமையை மேலும் உயர்த்தியதோடு இரு குடும்பங்களும் ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருந்துவந்த வேளை கணேசரத்தினம் அவர்களை நோய் எனும் அரக்கன் குடிகொண்டு இம்மண்ணுலகை விட்டு விண்ணுலகை நோக்கி அழைத்து விட்டான். ஆயினும் அன்னாரின் வாழ்க்கை முறை, நற்பண்பும் வள்ளுவரின் வாசுகிபோல் காத்த மனைளாயின் பணிவிடையும், சகோதரர்களின் அரவணைப்பும், புதல்வர்களின் பாசஅலையும், எல்லோரது உள்ளத்திலும் நிலைத்து நிற்கும்.
“பிறப்பென்பது உண்மையானால்
இறப்பென்பது பேருண்மை”
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
A.T.C Institute, இவ்வண்ணம் nuvi. அன்புடன்
இரா.அருட்செல்வம் -: 20 :-

99图鸟号 逐9凤阁
JG 1,9 s Ji |(9 frì sự9 ( 899999 長9mUn(ા9|09}} ।U14肃m9筑 ††+† Leg」もĻolo|sję)ggヨ89Ļo JúJisīję)ŲT 十十十+ 極F」gga)gE污99巨949阁也Į9€11$ 1,9 RO93||逗由巨999 A}AA (44016)(4406) | 831] [ Tgg19呎逾4R)g19m巨因n恒un四 十十十 gisapņo uglofi匠R9它99944圆ĢIS Q1919Li&gl長9트그8 AA| AA (440 可) 01@g1m后后R9十(4401可)h习层9忘 (44016)(在40 G)(44016) 因诅4 马巨区由习姆99199f点的写9国901昌阁に3asqQ』コ Lコesuggg Usesgsコ 十十十十。”十十 BE』g」コQeg gs」eeコNeコに巨9918」』Q友4月9它9用四m 巨由巨4己写电9巨由巨4mu可gus的唱De臣西岛 AAĄ{AAA
(44016)与写反运动十(440 5)后 949Unn49但由
Ĵirolloqır.(9
-: 21 :-

Page 14
எமது குடும்பத்தின் ஒளிவிளக்காய்த் திகழ்ந்த அமரர். சங்கரப்பிள்ளை கணேசரத்தினம் அவர்களின் மரணச்செய்தி கேட்டு அன்புடன் ஓடோடி வந்து எமக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவித்தவர்களுக்கும், தொலைபேசி மூலமும் தந்தியூடாகவும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கும், வைத்தியசாலைப் பராமரிப்பில் உதவிய வைத்திய நிபுணர்கள், தாதிகள், உறவினர்கள் ஆகியோருக்கும், அந்தியேட்டிக் கிரியைகள், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் ஆகியவற்றில் பங்குகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மஞ்சத்தடி, என்றும் நன்றியுடன் இணுைவில், திருமதி பொண்மணி (மனைவி).
குகன், கண்ணன், சங்கர், தாசன் (பிள்ளைகள்), திரு.ச.செல்வராசா (தம்பி), திரு.த.சிவகுமார் (மருமகன்).
இலங்கை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 15

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்த நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது
எது நடக்க இருக்கின்றதோ அதுவு
நன்றாக நடக்கும் بي/ உன்னுடையது எதை இழந்தாய் எதற்காக அழுகின்றாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு