கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செல்வராஜா சதீஷ் (நினைவு மலர்)

Page 1

療癒劑

Page 2

5
Gg##############@O
சிவமயம்
ர்வீதிநவாலியூரைச்சேர்ந்
Эшой செல்வராஜா சதீஷ் அவர்களின் முழுந்த வரலாற்றுப்
பயணம் குறித்த
O
நூல
S - 2 - 28
质狐
4&&6&&4&&6&&4&&6&&4&&S>LO

Page 3
O 9 2 / Ital 6-(Osh LJLJGOOLO (WRC)'s
எமது அண்புத் தெய்வத்தின் "
திருப்பாதங்களுக்கு இந்நூல் சமர்ப்பனம்
மனிதருள் மாணிக்கமாய் அன்பு நிறைந்த பேரொளியாய் இண்சொல்பேசி அன்புடன் எம்மைப் பேணிக்காத்து பண்புடனும் பாசத்துடனும் நேசத்துடனும் இன்முகத்தினனாய் வாழ்வாங்கு வழிகாட்டி வாழ்ந்து இன்று வானுறையும் தெய்வமாகிவிட்ட
அமரர் திரு. செல்வராஜா சதீஷ்
அவர்களின் ஆத்மா சாந்தியடைய எமது வழிபடு தெய்வமாம் நவாலிகளையோடை கண்ணகை அம்மனின் திருவடிகளுக்கு இம்மலரைச் சமர்ப்பிக்கின்றோம்.
குடும்பத்தினர்
를
 
 
 

அவர்களி
Ššაპჯადააჯაჯადააჭაპაჯაჯაჭჯჯჭკპჯაჭჭ
திதி வெண்பா ர்வதாரி தந்த கார்த்திகை அபரபக்கமதில் திதி சதுர்த்திதனில் ஒங்கு புகழ் - சதீஸ்

Page 4

சிவமயம்
திருமுறைத்திரட்டல்
விநாயகர் துதி
திருச்சிற்றம்பலம்
திருவாக்கும செய்கருமம்கைகூடும் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் காதலாற்கூப்புவர்தம்கை.
தேவாரம்
நத்தார்படை ஞானன்பசு வேறிந்தனைக் கவிழ்வாய் மத்தம்மதயானையுரிபோர்த்த மணவாளன் பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல் செத்தாரெலும் பணிவான்திருகேதீச்சரத்தானே.

Page 5
திருவாசகம்
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பக்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தெனக் கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே.
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுகழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின்திரள்மணிக் குன்றே சித்தத்துள்தித்திக்கும் தேனே அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டி
அழுதிடப்பாற்கடல் ஈர்ந்த பிரான் மாலுக்குச் சக்கரம் அன்டு அருள்
செய்தவன் மன்னியதில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
தில்லைச் சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல்
லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
பகுைச் சுவடுகன் خل

திருப்புராணம்
உலகெலாம்உணர்ந்தோதற் கரியவன் நிலவுலாவிய நீர்மலிவேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சிலம்படி வாழ்த்திவணங்குவாம்.
திருப்புகழ்
இறவாமல் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப் பிறவாகித்திரமான பெருவாழ்வைத்தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசற் குமரேசா கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே!
வாழதது
வான்முகில் வளது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறையரசு செய்க குறைவிலாதுயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ளேங்கநற்றவம் வேள்விமல்க மேன்மைகொள் சைவரீதிவிளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்
ഷ്ട്ര ക്ഷേ

Page 6
பாதியில் முறிந்த பரிஞ்சு மரம் அமரர் செல்வராஜா சதீஷ் அவர்களின்
பாதச் சுவடுகளில்.
GloutcrLIT
ஆண்டு சர்வதாரிதந்த கார்த்திகை அபரபக்கமதில் பூண்டதிதிசதுர்த்திதனில் ஓங்குபுகழ் - சதீஷ்தன் நீண்டபுகழ் வாழ்வியற்றிநிறைவடைந்து கங்கை மதிபூண்ட இறை சென்றடைந்தநாள்.
ஆசிரியப்பா
பொங்கும் எழில் புத்திலங்கும் களனிகள் சூழ்நற்பதியாம் சங்கத்தமிழ் பேசும் நற்புலவரோடு சான்றோரும் பங்கமிலா பாவலரும் வாழ்ந்த பெரும் நற்பதியாம் நவாலி என்னும் நல்லநயம்மிக்க ஊரதிலே உசாவை மணம்செய்து தாதியாய் சுகண்யாவையும் லாவண்யா, நிறோசனோடு சுலக்சனையும் பெற்றெடுத்து செல்வராஜா என்னும் அருமை நற்சகோதரனையும் ஆங்கில ஆசான் அமரர் நவரத்தினத்தை துணையாய் பாங்கொடு வாழ்வியற்றி மானி பிரதேச சபை நூலகத்தின் அலுவலராய் பணிபுரியும் நரேந்திரனை பெற்றெடுத்து
அவர்தம் இல்லாளப்நங்கை
கூதச் சுவடுகள்

ஜொய்லினை மணமுடித்து பேரனாய் கிஷோபனையும் சோதரியாய் இந்துவடிாவையும் பெற்ற இந்திராணி எனும் நல்லாள் சோதரியாய் வாய்த்திருக்க வட்டு தொழினுட்பக் கல்லூரி பாதுகாப்பலுவலர் சாம்ப சிவத்தை கணவனாய் கொண்டில்லறத்தின் பயனாய் மாணவ முதல்வன் அமரர் பிரதீஷ் உடனே ஜேர்மனியில் வாழ்வியற்றும் மகேந்திரராஜாவைக் கணவனாக வாய்த்தநல் சஞ்சுதாவும், மதுஷாவுடனே, மதுராவும், விதுஷா, பிரதீஸம் பேரர்களாய் வாய்த்திருக்க நோர்வேயில் வாழ்ந்திருக்கும் ஜீவிதாவும், கஜிதன் பண்புமிகு பிள்ளைகளாய், பெற்றெடுத்த பாங்குடையாள் சந்திர காந்தியம்மாவும் சோதரியாய்நிலைத்திருக்க கண்ணியம் சேர் கதிரமலையைக் கணவராய்க் கைப்பிடித்து லக்சிக்கா பிரஷன்னா சங்கீதா எனும் மூவரை முத்துக்களப்ப் பெற்று ஜெயசுதனை லக்சிக்காவின் கணவராக்கி கலைவர்ணன் வைஷ்ணவியை தம்மினிய பேரர்களாய் கொஞ்சும் பேறுபெற்ற ஜெயராணியும் பாலகெளரியை விவாகத்தால் இணைத்த இளங்கோவும் விசுவலிங்கம் மணாளனாய் வாய்த்த எம் குஞ்சியம்மா அமுதசுரபியும் உடன்பிறவா சோதரியாய் உடனிருக்க பேறுபெற்ற செல்வசீமாட்டி செல்வராணி வலிதென்மேற்கில் கிராம
O7 ආoණී" හී ෆෙණිග්r خل

Page 7
அலுவலராய் பணிபுரிந்த சீலம் நிறை பண்பினர் சீமான் செல்வராஜாவை மணந்து இல்லறத்தில் நல்லறத்தை இனிதே மேற்கொண்டுயர்ந்து நவாலிவடக்கின் கிராம அலுவலராய் பணிபுரிந்து தொண்ணுாற்று ஐந்ததிலே குண்டு வீச்சில் அமரரான வினைத்திறன் சேர் வித்தகியாம் அமரர் ஹேமலதாவையும் மானிப்பாய் மெமோறியல் கல்லூரியின்
Eéffsoouu C3 Jf6fulu Lu6oorLissir Casir மங்கை சுதாவை மணந்த வேலணை பிரதேசசபை உள்ளூராட்சி உதவியாளராய் திட்டமிடல் பொறுப்பதிகாரியாய் சீலுமிகுபணிபுரியும் சீராளன் ரமேசையும், மாகாண சுகாதார பணிமனையின் நிகழ்த்திட்ட அலுவலராய் பணிபுரியும் LDiGosposomer LDSITG56ssou DITFris65uib கடிதன் மனையாளப்
வந்தேற்ற வர்த்தகமாணியோடு பல பட்டங்களையும் பெற்றுநிலையான ஹேமா இண்டஸ்ரீயையும் இயக்கி ம்ாணவருக்கு ஆங்கிலத்தை ஆவலுடன் போதிக்கும் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் ஆசானுமாய் மென்மையும் நேர்மையும் சேர் பண்பியர் சுரேசையும், யாழ்ப்பான கல்லூரி உயர்கல்வி மாணவனாய் பேராதனை பல்கலைக் கழகத்துகலைப்பீடமாணவனாய் இலங்கை திறந்த பல்கலைக்கழகமதன் முகாமைத்துவடிப்ளேமா பட்டதாரியாய் பெற்றிங்கே யாழ்ப்பாணக் கல்லூரி
oൈ

விவசாய நிறுவனத்தில் சான்றிதழ் பட்டமும் பெற்று ஆண்டு தொண்ணுற்றெட்டினிலே சமுர்த்தி
5δυήήΠπά puUILD6OTCypb தொண்ணுற்றொம்பதிலே சமுர்த்தி தரம் ஒன்றின் அலுவலராய்நியமனமும் பெற்று நவாலிவடக்கு பிரதேசத்தில் மக்களுக்கு பல சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி பல சமுர்த்திதிட்டங் Lb அமுல்படுதுதிய காரணத்தால் இவர் தமக்கு பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலர் செல்வராஜாவால் மெச்சுரையும், பாராட்டும் கிடைத்திடவே ஆனைக் கோட்டை பதியில் முதலாம்தர சமுர்த்தி அலுவலராய் பணிபுரிந்து கிராம அலுவலர் சந்திரராஜாவுடனே இணைந்து ஹேமலதா செல்வராஜா ஞாபக நிறுவனத்தினூடாகவும் சமூகப் பணிகள் பலவும் செய்துள்ளம் நிறைவுற்று ஹேமா ஞாபகார்த்த நிறுவனத்தின் இயந்திரங்களைப் புத்துயிராக்கியும் பலதரகண்டுபிடிப்புக்கள் செய்தும் உணவுகளோடு பல பதார்த்தங்களும் செய்தும் ஹேமா கைத்தொழில்நிறுவன
bகிறீண் பிறிண்டிங் வினைத்தி க்கி பாராட்டுக்களும் பெற்று விவசாயத்திலும் தனது ஈடுபாட்டினைச் செலுத்தி ஒய்வொழிச்சல் இன்றிதனக்கும் தன் குடும்பத்தினதும் முன்னேற்ற பாதையிலே அயராது உழைத்துநின்ற தன்னம்பிக்கை கொண்ட சற்புத்திரன்சதீஷையும் புத்திரனாய் பெற்றுமணம் உவகையிலே திழைத்திருக்க ரமேசின் மக்கள் செல்வங்களப்
O9) ഷ്ട്ര ക്ഷേ!

Page 8
புவி வந்த அஸ்வினி, ஒசாயினி ரிஷாந்தும் சுரேசின் மழலைச் செல்வம் சிறீமாலனும் சேர்ந்து விவிசித்தாப்பாவுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்து இரண்டாயிரத்தியேழு தன்னில் அன்னை செல்வராணி இறைபதமடைய தலைமைப் பொறுப்பேற்ற கந்தையா அழகரத்தினம் தந்தைக்குத்தந்தையாய் தாயாய், தலைவியாய் பேர்த்தியாய் இருந்து வழிகாட்டிட றமேசும் சுரேசுமாய் அருமைத்தம்பிசதீசுக்காய் ஆவரங்கால் மேற்கின் செல்லமகள் ஞானமாலாவை இரண்டாயிரத்தெட்டு ஆனிமாதம் இருபத்தி ரெண்டாம் திகதி செழுமையுறு பதிவுத் திருமணம் நடாத்திவைத்து கார்த்திகை மாதமதில் உறவினர் ஊர்மக்கள் புடைசூழ நல்லூர் துர்க்காமணிமண்டபத்தில் தூயவர்கள் சூழ்ந்திருக்க நல்லூரான் துணையோடு மாங்கல்யம் ஆடி மகிழ்ந்து
மறுநாள் நடந்ததிருமண வரவேற்பு உபசாரத்தில் குறும்பு பேசி அனைவரையும் சிரிக்க வைத்து உடன் மகிழ்ந்து மாலை நாலு மணிக்கேற்பட்ட மார்பு வலிபெரிதாக யாழ். வைத்தியசாலையிலே அனுமதிக்கப்பட்ட சதீஷிடம் வாள் போன்ற பாசக் கயிற்றுடன் வந்த கொடிய இயமன் ஏங்கிய ஞானமாலா கண்ணில் நீராறுபாய்ந்து மயங்கிவிழ
கூதச் சுவடுகள்

சோதரர்றமேசும் சுரேசும் துடிதுடிக்க, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் புலம்பியழ ஈவிரக்கமின்றி தான் வந்த பணிஏழு பத்து மணிக்கே முடித்து சதீஷ் உயிரதனை கவர்ந்து சென்றான்.
க்கும் ஊரவர்க்கும்
O O U S உதவும் சுரங்களப் இருந்தவர்,
5 3. O 5 t அவர்ஆன்மா சாந்திபெற
சாந்தி சாந்தி!சாந்தி!
தேற்றம்
நாம் பெற்ற நல்லுடலும் நல்வாழ்வும் ஈசனவன்தாம் தந்த சொத்துக்களே நாமறிவோம் மேதினியில் வானாழும் நேரம் அறியா எம்மவர்க்கு வீணெக்கம் விட்டு செய்வோம் அறம்.
墅避
O11) ഷ്ട്ര ക്ഷേ!

Page 9
Gesɔe ɔSS /3e3Sasi scaéd
*6zsycz553 303: அரசாங்க அதிபர்மாவட்டச் செயலாளர் பொது தொலைபேசி } 0-222 Government Agent / Bistrict Secretary General Telephone 32-222 22 assadards தோலைபேசி 92.2222235 Telephae as N r. festase දිස්නික් ලේකම් කාෂ්යාලය, යාපනය. பக்ஸ் 紛21-222 235ら o 8 Fax } மாவட்ட செயலகம, யாழபபாணம. E-mail: gajaffnaeslinet.ik oistrict Secretariat, Jaffna. භීෂණයෙන් #ంజని öŠKerò eosco GSYua எனது எண் GᎪᎪᏂᎨ /28 உமது எண் } မြုးနှီ}0 1:2008 My No. Your No. Date
அதிபரின் அனுதாபுச் செய்தி
$匣鲇
மண்ணில் பிறப்பெடுத்த அனைவருக்கும் மரணம் நிச்சயம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனாலும் மன்னில் நல்ல வன்னம் வாழலாம் என்று மணமுடித்த மறுநாள் மரணம் வந்ததும் அந்தச் செய்தி என்னை மட்டுமல்ல அனைவரையும் ஒரு கணம் அதிர்ச்சிக்குள் தள்ளியது.
ஆத்மா அழியாதது. அதன் தொடர்பு நிச்சயமாக அறுந்து போகாத ஒன்று. இறைவன் நாடகத்தில் இதுவெல்லாம் நிச்சயிக்கப்பட்ட ஒன்று. ஆனாலும் செயல்திறன் மிக்க ஒரு செயல் வீரனை சிறு வயதில் நாம் இழந்துள்ளோம். அமரர் சதீஸ் தான் வாழ்ந்த-நடித்த பாத்திரத்தை முடித்து வாழ்வியல் பயணத்தின் கதையை நிறைவு செய்தார். இங்கிருக்கும் நம்மால் அன்னாரது நினைவலையை மட்டும் சுமந்திருப்பதல்லாது வேறு எதையும் செய்ய
(Agrigs.
அமரர் சதீஸ் தமது பணியை எமது வலி தென் மேற்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக ஆரம்பித்து திறம்பட செயற்பட்டு வந்துள்ளார். ஆரம்ப காலத்தில் நவாலி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் செயலாற்றி வந்த போது குறுகிய காலத்தில் அதிக அளவிலான சமுர்த்தி சங்கங்கள், சிறு குழுக்கள் என்பன ஸ்தாபித்து மக்களிடையே சேமிப்பு பழக்கத்தையும் உருவாக்கி தமது பணியில் பாராட்டத்தக்க விதத்தில் செயலாற்றியுள்ளார்.
பின்னாளில் ஆனைக் கோட்டை கிராம அலுவலர் பிரிவிலும் தமது பணியோடு சமூக அபிவிருத்தியிலும் அதிக அக்கறை கொண்டிருந்தார்.
பழ- உணவு உற்பத்தி ஹேமா நிறுவனம் மூலமும் சிறந்த வினைத்திறன் மிக்க ஒருவராக விளங்கிய அன்னார். விவசாயத்திலும் தன்னிறைவு பெற்ற ஒரு சிறந்த விவசாயி. அத்தகைய செயல்திறன்மிக்க ஒருவரது இழப்பு அன்னாரது குடும்பத்திற்கு மட்டுமல்லாது சமூகத்திற்கும் ஒரு பேரிழப்பாகும்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
ஓம் சாந்தி சாந்தி. вPeai حبیما
හිජ්” &ier ஒப்பம்.க.கணேஷ்,
రోజు మికి மதிகஅரசாங்க அ; ශිLa@ථදුනීස <9Іспѣišif* அதிபருக்கா sogỡngể:ẽ seiy-ột j,
அரசாங்க அதிபருக்கான யாழ் மாவட்டம்
கூகுச் சுவடுகள் خل
 
 

மக்கள் சமூக சேவையில் சதீஷ்
வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அதிகாரியாய் - சமூகசேவகனாய் கடமையாறியதை நான் அறிவேன்.
இவரது திருமணம் தாய் - தந்தையர் இல்லாத வேளையிலும் சகோதரர்களால்தாய்தந்தையர்க்குச் சமமாகநின்றுசிறப்புறநடாத்தியதைநான் அறிவேன். அவ்வேளையில் இந்தியா - சத்திய சாயிபாபாவின் “பிரசாந்தி" நிலையத்தில் நான் இருந்தேன்.
மறுநாள் இடம்பெற்ற வரவேற்பு உபசாரத்தில் வந்த பொல்லாத காலன் சதீஷ் அவர்களின் உயிரை அன்றிரவே (6.11.2008) பறித்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்.
இவரது இழப்பு தாங்கமுடியாத ஒன்று. சதீஷின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வழியேறு.
இவரது ஆத்மா சாந்தியடைய பகவான் முரீ சத்திய சாயி பாபாவின் அருளால் பிரார்த்திக்கின்றோம்.
சாந்திசாந்திசாந்தி!
தலைவர், SATT. GluffBFGJIG; JIPUM வடபிராந்திய மாவட்ட நீதிபதி, சத்திய சாயி இணைப்புக்குழு, யாழ் மாவட்டம், uJo LDT6LLõ. யாழ்ப்பாணம்.
C13D படிதச் சுவடுகள் ط

Page 10
சமூர்த்தி அதிகாரி சதீஷின் ஆத்மா சாந்திபெற வேண்டுகின்றேன்
வையத்தில் தோன்றிய உயிர்கள் ஒடுக்கம் பெறுவது இது உறுதி.
இறைபக்தியும்பணிவும்அடக்கமும்அறிவும்கொண்வராம்எங்கள்சதீஸின் மறைவு எல்லோரையும் உலுக்கியதொரு சம்பவமாகிறது.
அவருடைய சிரிப்பு, களங்கமில்லா முகம் இன்றும் நம் மனக்கண்முன் நிழலாடிக் கொண்டிருக்கிறது. அவரின் குடும்பத்தினர் அனைவருமே மக்கள் சேவை செய்வதில் திருப்தி கண்டவர்கள்.
அவருடையதந்தையார் முன்னாள்கிராமசேவையாளர்; சகோதரிஅவரும் முன்னாள் கிராமசேவகர். சகோதரியார் 1995ம் ஆண்டு ஆடி 9ம் திகதிநாட்டில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இடம்பெயர்ந்தோருக்கு வேண்டிய உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கையில் அகாலமரணமானார். சேவை செய்வதில் பெரிதம் ஆர்வம் கொண்டவர். சிறுவயதில் (அதுவும்) இயற்கை எய்தியது வருத்தம் அளித்தபோதும் அவருடைய ஆத்மா எல்லாம் வல்ல நவாலி முறி சிந்தாமணி விநாயகரின் பாதத்தில் சாந்திபெற வேண்டுகின்றேன்.
ஓம் சாந்திசாந்திசாந்தி!
திருமதி ஜோய் மகிழ் மகாதேவன் LDITSilpflug), நவாலி, ഉണ്bഖ്യ്രങ്ങp. 12.12.2OO8.
ക്രമേട് O140

Addagiri - Navaly, Thiruchsathan Malaip Pathy அட்டகிரி - நவாலி, திருச்சாத்தான் மலைப் பதி
Aruliniku Sri Visaladchi Ambal Sanetha
அருள்மிகு முநீ விசாலாட்சி அம்பாள் sBus SR WISWANATHA SWAMY THEWASTHANAM UAB asasnišsaugosus UaULÁS CSSalomössauis
3žsář steše.
Kurukka Kovilady. sai. trias F: NAVAY, MANIPAY.
... d.s.l.200 روی مسایگی و مدیویی تبدو محمد بيعه ”تکمحمد حجعل یعہ نعرہ نبی e کہتے ہوئt_Griینہ ہو ، (3) ہوتی ہے ćFrées/s -- Gb تو (هلyغد sirveyosoma .9ăs, esea o **** دہ ہن نہینچری چحتTنہاد کو جمط فہد بھ پیچھے 

Page 11
நம்பமுழயாத மரணம்
சிண்டிலிப்பாய் பிரதேசசெயலகத்தில்சமூர்த்திஅபிவிருத்திஉத்தியோகத் தராகக் கடமையாற்றிய செல்வராஜாசதீஷ் அவர்களின் மரணச்செய்திஅமரரின் மூத்த அண்ணன் செ. ரமேஷ் உள்ளூராட்சி உதவியாளர்) கடமையாற்றும் வேலணைப் பிரதேச சபைக்கு மாத்திரமல்லாது ஏனைய யாழ் மாவட்ட உள்ளூராட்சிச் சபைப் சமூகத்தினருக்குக்கூடவேதனையைத் தந்தது.
சதீஷின் குடும்பத்தில் அனைவரும் மக்கள் சேவைக்காக அரச உத்தி யோகத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் தாம் கடமையாற்றும் நிலையத்தில் திறம்படச் செயலாற்றுவது போற்றுதற்குரியது. சதீஷின் இழப்பு அவரது குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
சதீஷ் அவர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக அர்ப்பணிப் புடனும், திறமையுடனும் செயலாற்றினார் என்பதைப் பலர் கூறினார்கள். அதற்குச் சான்றாக அன்னாரின் மரண நிகழ்வில் கணக்கிட முடியாத உறவுகளினதும், நண்பர்களினதும் பங்குபற்றல் அமைந்தது.
குழந்தை முகமும், அழகும், அறிவும் மக்கள் சேவைக்காக அரச உத்தியோகமும் கொடுத்த இறைவன், சதீஷின் இல்லற வாழ்வுக்கு ஒரு நாள் மட்டுமே கொடுத்திருந்தான்நம்பமுடியவில்லை. உறவுகள்கலங்க, உடையவள் துடிதுடிக்க சதீஷின் மரணம் நடந்தேறியது.
சதீஷின் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது; எனினும் பிறப்பு உண்டேல்
இறப்பு உண்டு என்பதனை ஞாபகப்படுத்தி துயருற்றிருக்கும் சதீஷின் குடும் பத்தினர் துயரிலிருந்து விடுதலை அடைய இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம்சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
உள்ளூராட்சி உதவியாளர்கள், Sa. Sifat மாநக/நகர/பிரதேசசபைகள், த. ஹிமுரளிதரன் uUTij LDITSalt Lub. உள்ளூராட்சி உதவியாளர் சார்பாக.
ඥාණ්" අාගෙණිග්r O10 ط

யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவனுக்கு அனுதாபச் செய்தி
63essugligit சதீஸின் திடீர் மறைவு அனைவரது உள்ளத்தையும் வேதனையில் ஆழ்த்தியது. வட்டுக்கோட்டையாழ்ப்பாணக்கல்லூரியில்தரம் 4இலிருந்துக.பொ.த.உயர்தரம்வரைகல்விபயின்று, யாழ்ப்பாணக்கல்லூரி விவசாய நிறுவனத்தில் சான்றிதழ் பட்டம் பெறும் நாள் வரை நடந்த கல்விச் செயற்பாடுகளை நினைவு கூர்ந்து பார்க்கின்றேன். இவரோடு இவரது சகோதரர்கள் செ. ரமேஸ், செ. சுரேஸ் ஆகியோரும் சதீஸோடு சேர்ந்து யாழ்ப்பாணக் கல்லூரியிலே கல்விபயின்றவர்கள்.
சதீஸ் அவர்கள் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து, பேராதனைப்
பல்கலைக்கழக கலைப்பிரிவு இறுதியாண்டு மாணவனாக கல்வியைத் தொடர்ந்த அதேவேளை, இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் முகாமைத் G ட்டதாரிஎன் ர்,சமூர்த்திபுத்துயிராக்குவோர் நியமனம் பெற்று, வலி தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் பணியாற்றிவந்தவேளை, சமுர்த்தி அதிகார சபையினால் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் 1 இற்கு நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தான் நவாலி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் திறம்படச் செயற்பட்டு அதிகளவிலான சிறு குழுக்கள், சமுர்த்தி சங்கங்கள் என்பவற்றை உருவாக்கியதோடு மக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதில் மிக வினைத்திறனுடன் செயற்பட்டார். இதற்காகவலிதென்மேற்குசண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் அவர்களினால் “மெச்சுரை" வழங்கிப் பாராட்டவர். குடும்பத்தவர், உறவினர்கள், சமூகத்தவர், நண்பர்கள் அனைவருக்கும் அன்புக்குரியவராகத்திகழ்ந்தவர்.
சமூக சேவைகளில் நல்ல ஈடுபாடு மிக்கவராக இவருடைய செயற்பாடு
அமைந்திருந்தது. உற்பத்தி பொருட்களுக்கான இயந்திரங்கள் உருவாக்குதலில் கைதேர்ந்தவர். சகல உணவுப் பழ உற்பத்திகளில் மிக
O7 ക്രമേഷ്

Page 12
ஈடுபாட்டுடன் ஈடுபட்ட ஓர் இளைஞன். விவசாயத்துறையில் குறிப்பாக நெல் உற்பத்தியில் வருடாந்தம் ஆர்வத்துடன் செயற்பட்டு வந்தவர்.
இவரது வாழ்வின் முக்கிய நிகழ்வாகத்திருமணம் சதீஷ் - ஞானமாலா ஆகியோருக்கு மிகவும் நன்முறையில் நடைபெற்று வாழ்க்கையை மனைவியுடன் அன்புடன் சந்தோஷமாக நடத்துவார் என எதிர்பார்த்தளமக்குப் பெரும் கவலையையும் ஏமாற்றத்தையும் அளித்துவிட்டு இறைவனடி சேர்ந்துள்ளார்.
இவரது பிரிவால் துயருறும், ஆருயிர் மனைவி, சகோதரர்கள், உறவினர்கள், சமூகத்தவர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் சதீஸ் அவர்களின் ஆன்மா இறைவனடியில் அமைதி பெறப் பிரார்த்திக்கின்றேன்.
நோயல் ஏ. விமவேந்திரண் முதல்வர், யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை.
శ్రీ භගුණ්ඨි" හීණGණිණී ፴ C18)
 
 
 
 
 

என்றென்றும் எம் நினைவுகளில்.
edit செல்வராஜாசதீஸ் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் மானிப்பாய் சமூர்த்தி வலயத்தில் ஆரம்பத்தில் (J/134) நவாலி வடக்கு கிராம அலுவலர் பிரிவிலும் பின்னர் (J/133) ஆனைக்கோட்டை கிராம அலுவலர் பிரிவிலும் 1ம் தர சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உடையவராகக் கடமையாற்றினார்.
இவரது செயற்பாடு சமூர்த்திதிட்டத்தினூடாக மக்களுக்கு சேவையாற்றுவதுடன் மட்டும் நின்றுவிடாது ஏனைய செயற்பாடுகளுக்கூடாக பல்வேறு வேலைத் திட்டங்களை வெற்றிகரமாக நடாத்தி அவற்றிற்கூடாக மக்களுக்கு நன்மைகள் சென்றடைவதில் ஆர்வத்துடன் உழைத்தவர்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கும் அன்னாரின் குடும்பத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. தந்தை - கிராம அலுவலர், சகோதரி - கிராம அலுவலர், மூத்த சகோதரன் உள்ளூராட்சியாளன், சகோதரன் - உளவள ஆலோசகர்-ஆசிரியராய், சதீஸ்-சமூர்த்திஅபிவிருத்திஉத்தியோகத்தர். ஆனால் மேற்கூறப்பட்ட உறவுகள் தந்தை, சகோதரி, சகோதரன் என்றவாறு குறைவடைந்து தற்போது அன்னாரின் குடும்பத்திற்கும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கும் இடையிலான தொடர்பும் துண்டிக்கப்பட்டது. எமக்கு மிகவும் மனவேதனையைத் தருகின்றது. பொதுச் சேவையில் தனது நாவண்மையினால் ஏழை மக்களுக்கு நன்மைகள் சென்றடைவதில் திறமையாகவும் உற்சாகத்துடனும் சிரித்த முகத்துடனும் செயற்பட்டவர்.
அலுவலக கடமை தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளிலும் திறமையாகவும், ஆர்வத்துடனும் வேலைகளை இலகுவாக மேற்கொண்டார். 15.11.2008ல் அவரது திருமணவிழாவில் கலந்துகொண்டோம். மறுநாள் அவரது இல்லத்தில் இடம்பெற்ற வரவேற்பு மதிய போசன விருந்து உபசாரத்தில் எங்களை எல்லாம் மகிழ்வித்தார். அன்றையதினம் மாலை எமை எல்லாம் விட்டுப் பிரிந்த செய்தி கேட்டு அதிர்ந்து போனோம்.
இவரது இழப்பு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமன்றி எம் எல்லோருக்கும் ஏற்பட்ட பேரிழப்பாக அமைகின்றது. இவரது மறைவினால் துயருறும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
சமுர்த்தி முகாமையாளர்கள் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகம், ඊණ්Tදෘණ්lúUmu%.
C19. கதைச் ஹேடுகள் తీ

Page 13
நவாலியபூர் மக்களின் மனதில் என்றும் நிறைந்த சதீஷ்
பிறப்பு வாழ்க்கை, இறப்பு இம்மூன்றும் இவ்வுலகின் நியதி. நவாலியூரில் காலஞ்சென்ற புகழ்பூத்த கிராம அலுவலர் கணபதிப்பிள்ளை செல்வராஜா அவர்களுக்கும்செல்வராணிக்கும்மகனாக 1976ல்பிறந்தசதீஸ் தன்ஆரம்பக்கல்வியைநவாலிமகாவித்தியாலயத்திலும், பின்னர் வட்டு யாழ் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழத்திலும் கற்று 1998ல் சமுர்த்தி உத்தியோகத்தராகி 1999ல் முதலாம்தர சமூர்த்தி உத்தியோகத்தராகி நவாலி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் செயற்பட்டு தனது குறுகியகால சேவையிலேயே பிரதேச செயலாளர் பாராட்டைப் பெற்ற பெருமைக்குரியவர்.
இவரது சகோதரியான கிராம அலுவலர் ஹேமலதா 95ல் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையில் விமானத் தாக்குதலில் நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்தில் பலியானவர். இவரது ஞாபகார்த்தமாக நவாலியில் HSCMF நிறுவனத்தை மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே உருவாக்கி சகோதரியின் கனவை நனவாக்குவதில்சகோதரர்களுடன்சேர்ந்துஈடுபட்டவர்.
இவர் 22.06.2008ல் இல்வாழ்க்கையில் காலடி வைத்து 15.11.2008ல் மணவாழ்வில் சுற்றம் கழமிகவும் சிறப்பாகத்திருமணப்பந்தத்தில் ஈடுபட்டார். மணமகன் வீட்டில் போட்ட பந்தல் அழகு பார்த்த மறுநாளே அந்தப் பந்தல் பிணப்பந்தலாக மாறியதை எவருமே ஏற்கமுடியாதொன்றாகிற்று. வாழ்வின் நிலையற்றதன்மையைத்திரையுலகில் வருவதுபோல் நிஜமாக்கியது.
பிறந்தவர் என்றோ இறக்கத்தான்வேண்டும். ஆனால் மணவாழ்வில் ஈடுபட்ட மறுநாளே மாரடைப்பால் இவர் வாழ்வு முற்றுப் பெற்றமையை எவராலும் சகிக்க முடியாதொன்று. காலன்ஏதோதவறிழைத்துவிட்டான். இவர் வாழ்வு பூத்துக் குலுங்கி காயாகி, கனியமுன் காயாகவே இவரைப் பறித்து எல்லோரையும் ஏமாற்றிவிட்டான்.
கூதச் சுவடுகள் O20

உள்ளூராட்சி உதவியாளரான இவரது சகோதரர் செ. ரமேஷ் அவர்கள் நான் நவாலி மகா வித்தியாலயத்தில் அதிபராகப் பொறுப்பேற்ற பின் பாடசாலையின் வளர்ச்சியில் என்னுடன் சேர்ந்து உழைத்தவர். அவரின் முயற்சியாலும் இன்று நவாலி மகாவித்தியாலயத்தில் க.பொ.தா உயர்தரம் ஆரம்பிக்கப்பட்டது. அவரைப்போன்று காலஞ்சென்ற அவர் சகோதரர் காலஞ்சென்றசதீஸ் அவர்களும்எமது பாடசாலையின்கட்டாயக்கல்விக்குழு உறுப்பினராக உள்ளர். இவ்வகையில் பாடசாலைச்சமூகம் இவரது பணியை நினைவுகூர்வதுடன்நானும் அவர்குடும்பத்துக்கு எவ்வாறுஆறுதல்கூறுவது என ஏங்குகிறேன்.
காலன் யாரைத்தான் விட்டு வைத்தான்; எவ்வளவுதான் அழுது புரண்பாலும்மாண்பார்திரும்பவரமாட்ப்ார்கள். அவர் செய்தபணிகளை நாம் நினைவுகூர்ந்து தொடர்வோமாக!
ஓம் சாந்திசாந்தி சாந்தி
SITT. GlafüüDTÍ
அதிபர், யா/நவாலி மகாவித்தியாலயம்.
O210 පශණී" හි ෆෙරිණිෆ්r خل

Page 14
மனதினின்றும் நீங்காத நினைவுகள்
செல்வராஜா சதீஸ்சண்டிலிப்பாய்பிரதேசசெயலகத்தில் 1998ம்ஆண்டு சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையைப் பொறுப்பேற்று 1ம் தர சமூர்த்தி அபிவிருத்திஉத்தியோகத்தராகக் கடமையாற்றினார்.
துடிப்பான, சிறப்பான செயற்பாடுகளை உடைய உத்தியோகத்தர் இவர். இத்துறையுடன் வேறு துறையில் ஆர்வம் காட்டி உற்பத்தி நடவடிக்கையில் வினைத்திறனுடன் செயற்பட்டார்.
இவரது குடும்பம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் நெருங்கிய உறவினைக் கொண்டது. தந்தையார் கிராம உத்தியோகத்தராகக் கடமையாற்றியுள்ளர். சகோதரிஹேமலதாநான்உதவிபிரதேச செயலாளராகக் கடமையாற்றிய காலத்தில் முதல்நியமனத்தைஏற்றுகடமையாற்றிக்கொண்டு இருந்தவேளை1995ம் ஆண்டுசென்.பீற்றர்ஸ்தேவாலய விமானத்தாக்குதலில் அகால மரணடைந்தார். சகோதரன் ரமேஸ் மானிப்பாய் பிரதேச சபையில் உள்ளூராட்சி உதவியாளராகக் கடமையாற்றியபோது அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எம்முடன் இணைந்து செயற்பட்டவர். சகோதரன்சுரேஷ் உளவள ஆலோசகராகசண்டிலிப்பாய்பிரதேச செயலகத்தில் கடமையாற்றியவேளை ஆசிரியர் நியமனம் பெற்றுச் சென்றவர். இக்குடும்பத்தின் கடைசி வாரிசான சதீஸ் இப்பிரதேச செயலகத்தில் சமூர்த்தி அபிவிருத்திஉத்தியோகத்தராகக் கடமையாற்றியவாறே இறைவனடிசேர்ந்தார்.
சதீஸ் அரவணைப்பிலும் உடன் பிறப்புக்களின் அன்பிலும் வளர்ந்தவர். 2007ம் ஆண்டு அவரது தாயாரின் இறப்பு அவரினை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியமை அவரது செயற்பாடுகளில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது. அவரது நண்பர்களின் உந்துதலில் வெளிநாடு செல்லும் ஆர்வம் ஏற்பட்டு வேலையைத் துறக்க முற்பட்டார். உடன் பிறப்புக்களின் ஆலோசனையாலும் எமது அறிவுறுத்தல்களினாலும் தொடர்ந்து திறம்படச் சேவையாற்றிவந்தவேளை அவரதுதிருமண அழைப்பிதழ்கிடைத்ததும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்குப் பக்கத்துணையாக மனைவி பொறுப்பேற்றுள்ளர், அவரது செயற்பாடுகள் சிறப்படையும் எனஏதிர்பார்த்தேன்.
ඥාණ්" අාගGණිෆ් O220 ط

15.11.2008 திருமண நிகழ்வுக்குச் செல்வதற்கு ஆயத்தமானேன். என்னுடைய வழக்கம் வீட்டை விட்டு எந்தவொரு நிகழ்விற்குச் சென்றாலும் விளக்குஒற்றி இறைவனைப்பிரார்த்தித்தேசெல்லுவேன். அன்றுமூன்றுதடவை முயற்சித்தும் விளக்கு எரியாது போகவே சிறிது சஞ்சலத்துடன் இறைவனைப் பிரார்த்தித்துப் புறப்பட்டேன். திருமண விழா வெகு விமரிசையாகச் சிறப்பாக நடைபெற்றது. 17.11.2008 காலை கிராம உத்தியோகத்தர் நித்தியானந்தன் தொலைபேசியில் தயங்கியவாறே 16.11.2008 இல் சதீஸ் மரணமடைந்த செய்தியைக் கூறினார். என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது இருந்தது. மீள அவரிடம் உறுதிப்படுத்தினேன். பண்டத்தரிப்பு சமூர்த்தி முகாமையாளரும் அதனை உறுதிப்படுத்தினார். என்னை சுதாகரித்துக் கொள்ள சிறிது நேரம் சென்றது. அலுவலகத்திற்குச் சென்றபோது அலுவலகமே சோகத்தில் ஆழ்ந்திருந்தது. அவரது மணக்கோலமே யாவரதும் கணிகளிலும் நிறைந்துள்ளது.
வார்த்தைகளினால் அவரது மனைவிக்கும், உடன் பிறப்புகளுக்கும், டும்பத்தினருக்கும் b அளிக் யாது. b அளிக்க இ
ஓம் சாந்திசாந்திசாந்தி
பிரதேசవి றுTபீனிவரதுவிங்கம்.
O23 கதைச் ஹேடுகள் ط

Page 15
நீங்காத நினைவுகளில் - சதீஷ்
edit செல்வராஜா சதீஸ் அவர்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் சமுர்த்திஅபிவிருத்திஉத்தியோகத்தராகக் கடமையாற்றிய வேளையில் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டினைக் கொண்டவராகத் தனித்துவம் மிக்கவராக விளங்கினார். தனது கடமைக்கு அப்பாற்பட்டு தனது பிரதேச மக்களின் நலனுக்காக குரல் கொடுப்பவராகவும் செயல்முனைப்பு கொண்டவராகவும் காணப்பட்டார். பொதுச் சேவையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் பிரதேச செயலகத்தின் பல்வேறு நிகழ்வுகளிலும் அர்ப்பணிப்புடன் முன்னின்று செயற்படுவார். அழகும் இளமைத்துடிப்பும் சுறுசுறுப்பும் கொண்ட இவர் தனது நாவாண்மையால் ஏழைகளுக்கான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதில் திறமை பெற்றவர். இவருடைய மறைவு பிரதேச செயலகத்திற்கு மட்டுமன்றி இப்பிரதேசத்திற்கே பேரிழப்பாக அமைகிறது.
இவரது மறைவினால் துயருறும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவருடைய ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.
உதவி பிரதேச செயலர், திருமதி எ. அண்ரண் யோகநாயகம் பிரதேச செயலகம், சண்டிலிப்பாய்.
சதீஷ் - ஞானமாலா திருமணத்திற்குச் செல்லுமுன் 15.11.2008 அன்று காலை சதீஷ் அவர்களின் பேர்த்தி திருமதி கந்தையா அழகரத்தினம் ஆசீர்வாதம் வழங்கி முத்தமிடும் காட்சி 徽
శ్రీ లQgశ్రీ జ్విలి(8&d XXXXXXXXXXXXX
 
 
 

பல்துறை விற்பன்னன் சதீஷ் ஓர் ஒப்பிலா மாணவமணி
ஆறிலும் சாநூறிலும் சாஎன்பார்கள். ஆனால் அமரர்திரு.செல்வராசா சதீஸ் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பதல்ல முக்கியம். எப்படி வாழ்ந்தார் என்பதுதான் மிக முக்கியம். அன்னாரின் பிறப்பால் 18.02.1976 உற்றார், உறவினர்கள் ஆனந்தம் அடைந்தார்கள்.
மூன்றாவது மாதத்தில் தந்தையைப் பறிகொடுத்தார். இருந்தும் "மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை எண்நோற்றான் கொல்லெனும் சொல்” என்பதற்கு அமைய பிள்ளை தந்தைக்குச் செய்யவேண்டிய உதவி இந்தப் பிள்ளையைப் பெறுவதற்கு இவரது தந்தை என்ன தவம் செய்தானோ என்று உலகு வியக்கும் வண்ணம் வாழ்ந்தார்.
ஆரம்பக் கல்வியை நவாலி மகாவித்தியாலயத்தில் ஆரம்பித்துவட்டு, யாழ் கல்லூரியில் AL வரையும் கற்று, பேராதனை பல்கலைக் கழக கலைப்பிரிவு இறுதியாண்டு மாணவனாகவும் - இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் முகாமைத்துவடிப்ளோமா பட்டதாரியான ஓர் ஒப்பிலா மாணவமணி.
01.08.1998ல் சமுர்த்தி “புத்துயிராக்குவோர்" நியமனம் பெற்று வலி. தென்மேற்கு பிரதேச செயலகம், சண்டிலிப்பாயில் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டின் வித்தகராக உதவிக்கும் உறவுக்கும் மக்களின் நன்மதிப்பையும் பெற்றுச் செய்யும் தொழிலே தெய்வமாகப் பிரகாசித்தார்.
ஹேமா நாகசக்தி ஜாம் நிறுவனத்தின் உற்பத்தி இயந்திரங்களை இயக்குவதிலும், உருவாக்குதிலும் - ஸ்கிறீன் பிறின்ரிங் தொழிலிலும் மிக வினைத்திறனாகச் செயற்பட்டார். சுருங்கச் சொல்லில் ஓர் சிறந்த பல்துறை விற்பன்னர். அன்னாளின்தோற்றமும், பொலிவும் கனவுக்கும் கண்ணியத்திற்கும் செயல்திறன் பாட்டிற்கும் அவருக்கு அவரே நிகர்.
நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் 15.11.2008 அன்று அந்த திருமண மேடையில் கைகோர்த்து ஞான-உயிரோடு இணைந்த கண்கொள்ளாக் காட்சி சிவனும் சக்தியும் போல் சதீஷ் - ஞானமாலா தோன்றினார்கள். தோன்றின் புகழுடன் தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. உற்றார், உறவினர்கள், சிலர் இரத்தக் குடும்பம், நண்பர்கள், பெரியோர்கள், பலர் இதயக்
O25D ෂැංගුණිණී" හීණGණිණී శ్రీ

Page 16
குடும்பம். அத்துடன் வலிதென்மேற்கு பிரதேசத்தின் செயலக உத்தியோகத்தர் எல்லோரும் கடல் அலைபோல் அலை அலையாக பெருந்தொகையில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
அமரருக்கு பொல்லாத 16.11.2008 மறுநாள் வரவேற்பு உபசாரம் இடம்பெற்ற அன்று பி.ப நான்கு மணியளவில் ஏற்பட்ட மார்புவலிப்புக் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அன்னார் இறைவனடி
எய்தினார்.
உறக்கத்தில் சொற்பனம்போல், மேடையில் நாடகம்போல், வாழ்க்கையின் மேடையில் படக்காட்சிபோல், மின்சாரம்போல் சம்சாரப் பயணம் சரிந்தது - பிரிந்தது.
என்னே ஓர் பாரிய பேர் இழப்பு: பெரிய இழப்பு, நிரப்பமுடியாத பெரும் இழப்பு, நினைக்கமுடியாதபேரிழப்பு:வார்த்தைகளல்வர்ணிக்கமுடியாத இழப்பு. அன்பர் சதிஷ்அன்னாரின்வாழ்க்கைத்துணைவியையும்பாசமிகுசகோதரர்கள் ரமேஷ் குடும்பத்தினரையும் சுரேஷ் குடும்பத்தினரையும் உற்றார், உறவினர்களையும் நண்பர்களையும் ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளத்துயில் கொண்டுவிட்டார். பகவான் முநிசத்தியசாயிபாபா சொல்லுகிறார். "இறப்பு ஒரு மகத்தான உறக்கம்” என்று.
அன்னாரைப் பறிகொடுத்து பதகழிக்கும் அன்னாரின் பாரியார்
ஞானமாலாவுக்கும், உறவினர்களுக்கும் ரமேஷ் குடும்பத்தாருக்கும் சுரேஷ்
குடும்பத்தாருக்கும்பேர்த்தியார்திருமதிகந்தையா அழகரத்தினம் அவர்கட்கும்
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரிற்கும் எங்கள் ஆழ்ந்த
அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையபகவானைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்திசாந்தி!சாந்தி!
பசுமைப் பரட்சியாளர் - வை. செகராஜசிங்கம் (ச.நி)
தலைவர்,
முறிசத்தியசாயி சேவா நிலையம்,
மானிப்பாய்.
கூதச் சுவடுகள் O20

Satheesh has entered the kingdom of God to serve His Lotus feet.
The entire Manipay parish was steeped in shock and profound sorrow by the demise of Selvarajah Satheesh of Navaly. Sometimes God is quite remarkable when he creates men with much talents and vision and then wrenches off his creation to the bewilderment of all and sundry. It is said God takes to this bosom the one whom he likes most. Therefore Satheesh has entered Hiskingdom to serve His Lotus feet.
Satheesh was appointed as samurdhi Development officer and served in Vali South west Divisonal Secretary's office. When the samurdhischeme was introduced in Sandilipay Divisonal Secretariat he inaugurated several samurdhi groups in Navaly J/134 Grama Niladhari's division. He instilled saving habit among the redidents of low income groups in Navaly and Sandilipay. His services were highly commended by thivisonal Secretary Sandilipay and he was awarded an eulogy in verse in recognition of His services.
When he rose to be a Grade 1 officer he worked in collaboration with Annaikoddai Grama Sevaka officer J/133. During this period he learnt the art of preserving fruits and making jam and cordials. He offered his technical know of fruit preservation to Naga Sakthi jam production centre.
He was also interested in screenprinting and paddy cultivation. In short he was and enthusiastic cultivator, a talented technician and a committed social worker who dedicated the prime of his life for the amelioration of the distressed displaced and the poor.
I knew him well as an uprising journalist when he was in the editorial staff of Valampuri. The journalist community has lost a member whose potential was inestimable.
O27) రాత్రికి ఉఅ8ఉత శ్రీ

Page 17
Satheesh is dead but he will continue to live in the realm of memory where he can never die. May his shadows never grow less. May the Gracious Lord in his infinite mercy granthimeternal rest and
sustained peace.
S. Kathirgamathamby, J.P. (all Island) Retired Principal,
President, North Sri Lanka Journalist’s Association.
懿
ர Xჯგურჯ
శ్రీ கதைச் ஹேடுகள்
 

கண்ணிர் அஞ்சலி
edgi செல்வராசா சதீஷ் அவர்களின் திடீர் மறைவை இட்டு எமது சம்மேளனம் ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறது.
சிறுவயதிலிருந்து பட்டதாரியாக வந்து வலி. தென்மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றியபொழுது அரும்பெரும் சேவைகளை ஆற்றியுள்ளார். மக்கள் சேவையே மகத்தான சேவை என தந்தையாரின் சேவைகளுக்கு மேலாக தனது நவாலி கிராமத்திற்கும் பெரும்பாலுமும் விவசாயிகளின் நன்மை கருதி தொண்டாற்றிய உத்தமன். குறுகிய காலத்தில் வாழ்ந்து சிவபதம் அடைந்துவிட்டார். -
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக.
துயர் கொண்டுள்ள அவர்களின் சகோதரர்களுக்கு எமது கவலைகளைத் தெரிவிப்பதோடு எமது அனுதாபங்களையும் தெரிவிக்கிறோம்.
சாந்தி சாந்தி சாந்தி தலைவர் யாழ் மாவட்ட தேசவழமை சி.பொ.வ.மா.க.முதலியார் (ச.நி) 66l3ruiser & LibGLD6T60TLD.
இ9) లQgశ్రీః ఉఅతిడి خلہ

Page 18
இருதய இரத்தக் குழாய் நோய்
தற்போது, இருதய இரத்தக்குழாய் நோய், இலங்கையில் இரண்டாம் உயிர்க்கொல்லியாக இருக்கிறது. உண்மைகளை அறிவதாலும், உங்கள் இருதயத்திற்கு எது நல்லதோ அதைச் செய்வதாலும், உங்களுக்கு இந்நோய் வரும் அபாயத்தை நீங்கள் குறைக்கலாம்,
உங்கள் இருதயத்தைப் பற்றி
உங்கள் இருதயம் வலுவான தசைகளல் ஆன ஓர் உறுப்பு. இது உங்கள் உடலின் எல்லாப் பாகங்களுக்கும் இரத்தத்தைச் செலுத்துகின்றது.
இரு ஒவ்வொரு நாளும் ஓய்வின்றி, நிமிடத்திற்கு 70 துடிப்பு என ஒரு சாதாரண 70 வயது ஆயுட்காலத்தில் இருதயம் 70x60x24x, 366x70 = 2,575,440,000 தடவைகள் துடித்துச் செயல்பட்டிருக்கும்
இருதய இரத்தக் குழாய்கள் இருதய தசைகளுக்கு இரத்தத்தைச் செலுத்துவதன் மூலம் அவற்றிற்குப் பிராண வாயுவையும் ஊட்டச் சத்துக்களையும் கொண்டு செல்கின்றன.
இருதய இரத்தக் குழாய் நோயைப் பற்றி
இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் கொழுப்புப் படிவங்கள் சேர்வதால், அவை குறுகிப் போகின்றன. இது இருதய தசைகளுக்கு இரத்த ஓட்டத்தைக் குறைக்கின்றது. காலப்போக்கில், இரத்த ஓட்டம் தடுக்கப்படலாம். இந்நிலை இரத்தக் குழாய் இறுக்கம் என அழைக்கப்படுகிறது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்தத் தடை இருதய இரத்தக் குழாய் நோயை ஏற்படுத்துகிறது.
நமது இரத்தத்தில் அதிகளவு கொழுப்பும் கொலஸ்ரோலும் சேருவதால் இரத்தக்குழாய் இறுக்கம் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் அதிக கொழுப்பும் கொலஸ்ரோலும்நிறைந்தஉணவுகளை உட்கொள்வதால் ஏற்படுகிறது. மேலும் இது, போதிய உடற்பயிற்சியின்மை, இரத்தக் கொதிப்பு, இனிப்புநீர், புகைப் பிடித்தல், மனவுளைச்சல் போன்றவற்றோடும் தொடர்புகொண்டுள்ளது. அபூர்வ மான சந்தர்ப்பங்களில் இது குடும்பங்களில் பரம்பரையாகவும் இருக்கலாம்.
வகுைச் சுவடுகள் O30 ط

நெஞ்சுவலியைப் பற்றி :
“எஞ்ஜின பெக்டோரிஸ்” அல்லது மாரடைப்பால் ஏற்படுமு நெஞ்சுவலியே இருதய இரத்தக் குழாய் நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.
இருதயத்தசைகளில் ஏற்படும் தற்காலிக இரத்தஓட்டக் குறைவு"எஞ்ஜின பெக்டோரிஸை" ஏற்படுத்துகிறது. நெஞ்சின் நடுவிலோ இடப்பகுதியிலோ வலி, இறுக்கம் அல் வசதி ர்பாகும். இவ்வலி ந்சின்மற்றபகுதிகள்,
es ல்லது s கியவற்றிற்கும் பர b.
இவ்வலிஓய்வெடுப்பதால் குறைந்துவிடும். அதோடு ஒருசில நிமிடங்களே நீடிக்கும். இருதய தசைகளுக்கு எந்தவித நிரந்தர பாதிப்பும் கிடையாது.
மாரடைப்பு இருதய தசைகளுக்கு இரத்தம் முற்றாக தடைப்படுவதால் ஏற்படுகிறது. இது மிகக் கடுமையான ஒரு நிலைமை. ஏனெனில், இது மரணத்தை ஏற்படுத்தக்கூடும். இவ்வலி மிகவும் கடுமையானது. வியர்வை, குமட்டல், வாந்தி, மூச்சுத் திணறல் போன்றவையும் ஏற்படலாம். இவ்வலி நீடிக்கக்கூடியது. ஒய்வு எடுப்பதால் குறையாது. மாரடைப்பில் இருதயத்
bலது மருத் க்கு உடனே செல்லுங்கள்! தாமதிக்காதீர்கள் விரைந்துசெயலாற்றுவதுஉங்கள் உயிரைக்காக்கலாம்.
மாரடைப்பை எதிர்நோக்குகிறீர்களா?
இரத்தக்குழாய் இறுக்கத்தையும் மாரடைப்பையும் ஏற்படுத்தும் அபாயக்கூறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் இதில் ஏதாவதுஒன்றைப் பெறும் அபாயத்தில் உள்ளீர்கள?
அதிக இரத்தக் கொலஸ்ரோல்
மொத்த இரத்தக் கொலஸ்ரோல் அளவு 200mg/100 m (5.2mmol/l) க்குக் குறைவாக இருந்தால் நல்லது. அளவு கூடினால் அபாயமும் கூடுகிறது.
O310 ඥාණී" ඇඟGණිෆ්'s ط

Page 19
கட்டுப்படுத்தாத இரத்தக் கொதிப்பு
அதிக இரத்தக் கொதிப்பென்றால் உங்கள் இருதயமும் கடுமையாக இயங்கவேண்டியுள்ளது. உங்களுக்கு மாரடைப்பு வரும் அபாயமும் அதிகம். உங்களுக்கு இரத்தக் கொதிப்பு இருந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து அதைக் கட்டுக்குள் வைத்திருங்கள்.
கட்டுப்படுத்தாத இனிப்பு நீர்
இனிப்புநீர்உடையோர்கட்டுப்பாடின்றி இருந்தால் அவர்களுக்குமாரடைப்பு வரும் வாய்ப்பு2லிருந்து 3 மடங்கு அதிகம்.
புகைப்பரிடித்தல்
புகைப்பிடிப்போர் கவனத்தில் கொள்ளுங்கள் உங்களுக்கு மாரடைப்பு வர மூன்று மடங்கு அதிக அபாயம் உண்டு. சிகரெட் புகையில் உள்ள நஞ்சுப் பொருட்கள் இரத்தக் குழாய்களைப் பாதித்து, இரத்தக் குழாய் இறுக்கத்தைத் துரிதப்படுத்தி இருதயத்திற்குப்பிராணவாயு செல்வதைத் தடுக்கின்றன.
சலரோகம்
இந்நோய் இன்றைய நலவியல், நோயியல் பிரச்சினைகளில் முதன்மையானது. இது எமது வாழ்வு முறை உணவுப் பழக்க வழக்கங்கள் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்புடையதொன்றாகும். எமது உடலுக்கு சக்தியைக் கொடுக்கும் குளுக்கோசுப் பதார்த்தம், உடலுக்கு தீங்கிழைக்கும் பொருளாக நச்சுப் பதார்த்தமாகச் செய்யப்படும் நிலை இந்நோயினா லுண்டாகின்றது. இந்நோயினை ஆரம்பத்தில் கண்டால் அதைக் கட்டுப் படுத்தவோ, தடுக்கவோ முடியும்.
சரலோகமென்றால் என்ன?
உடல் கலங்கள் உயிர் வாழவும், தன் நாளாந்த தொழிற்பாடுகளை ஆற்றவும் சக்தி தேவை. இது எமது உணவிலுள்ள காபோவைதரேற்றிலிருந்து பெறப்படும் குளுக்கோசிலிருந்து பெறப்பட்டு போசிக்கப்படுகின்றது. மனிதன்
ക്രമേട്

இரத்தத்திலுள்ள குளுக்கோசின் அளவு 80 - 120 Mg/dl ஆகும். குறித்த மட்டத்திலிருக்கவும், குளுக்கோஸ் கலங்களுக்குள், உள் எடுக்கப்படும் தொழிற்பாட்டைஊக்குவிக்கவும்கூடாமலும், குறையாமலுமிருக்கச்செய்வதற்கு soa5Lásigni (Pancreas) goreigSloreigigi Ganon(3LDITGir (insulin)dupidu இடம் வகிக்கின்றது. இவ் இன்சுலின் சரியான முறையில் சுரக்கப்படாமலும், சுரக்கப்பட்டது தனது தொழிலைச் சரியான முறையில் செய்யமுடியாமலிருக்கு மாயின் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவு உயருகின்றது. இந்நிலையை சலரோகம் என்பர்.
சலரோகத்தின்போது இரத்தத்திலுள்ள குளுக்கோசின் மட்டம் சாதாரண அளவிைட(80-120Mg/dl) உயரும் 1OOஅடஇரத்தத்தில் குளுக்கோசின் அளவு 180mg (180mg/dl) மேற்படும்போது சிறுநீரில் குளுக்கோஸ் வெளியேறும் நிலை ஏற்படும். இதனால் பாரம் கூடிய சீனிச்சத்து பாரம் குறைந்த நீரைத் தன்னுள் இழுத்து அடிக்கடி நீர் விடும் தன்மை உண்டாகின்றது. சாதாரண சுகதேகிஒருநாளைக்கு1-11/2லீற்றர்சிறுநீரைளெவியேற்றுவார். குளுக்கோஸ் கூடினால் ஒரு நாளைக்கு அவர் வெளியேற்றும் சலம் 5 - 6 லீற்றர் ஆகவே, நீரிழிவுநோய் எனவும் அழைக்கப்படுகின்றது.
காணக்கூடிய அறிகுறிகள்
அடிக்கடி சிறுநீர் கழித்தல் இரவுவேளையில் பலதடவை கழிப்பார்) அதிக தாகம்,நீர்வேட்கை, வாய் உலர்தல்.
அதிவேகமான பசி, அடிக்கடிதேகத்தில் பருக்கள், கட்டுக்கள் தோலில் கிருமிகளின் தாக்கம். ஒருவருக்கு காயமேற்படுமானால் அதுமாறறினிடகாலமெடுக்கும். சடுதியாக அதிகளவில் உடல்நிலை குறைதல். அதிகளவில்களைப்பு, தளர்ச்சி, கோபப்படல்.
பிறப்புறுக்களில் ச்சல், கடி, வுெ, சிறுநீர் கழித்தபின்பு. சிலரில் மயக்கம், கண்பார்வை குறைதல்.
O,
நீரிழிவு நோயாளி வேறு வருத்தங்கள் இருதயநோய், இரத்த அமுக்கம், இரத்தத்தில் கொழுப்பு கூடல் இல்லாத விடத்து வேண்டியளவு சாப்பிடக்கூடிய
உணவு வகைகள்.
O33) oos* eossa,

Page 20
இறைச்சி, மீன்,முட்டை
கப்தக்காளி, எலுமிச்சம்பழச்சாறு. கோவா, கரட், கீரைவகை, வெண்காயம், முள்ளங்கி, கெக்கரிக்காய். உவர்ப்பு, உறைப்பு, உணவுகள். உழுந்து, கெளப்பி, பயறு, குரக்கன், வெந்தயம்.
äFDELITächössl II IDIf EI BMel SFILLGuins
இடியப்பம் 3 / தோசை 2 / பாண் 2 துண்டு /1/2 தடிப்பில் உழுந்து சாப்பிடலாம்.
id சோறு1அகப்பை காபோவைதறேற்-78%, குரக்கன்மா உணவு காபோவைதறேற் - 72%, புரதம் 7.3, பருப்பு - புரதம் (24.8), காபோவைதறேற் - 59%, கல்சியம் 13O, பொசுபரசு 2.45
மரக்கறி வேண்டியளவு (பூசணி, கிழங்கு தவிர்க்கவும்) கீரைவகை தினம் கூடச் சேர்க்கவும்.
1/2தடிப்பு பாண்துண்டு, உழுந்து வறுத்துசாப்பிடலாம். பாண் துண்டு 3 1/2, இடியப்பம் 3, பிட்டு 3,தோசை2
நீரிழிவு நோயாளி தவிர்க்கவேண்டிய உணவு வகைகள்.
அதிகளவுசீனி, இனிப்புகலந்தபானம்,சொக்லேட்சர்க்கரை, குளுக்கோஸ், ஐஸ்கிறீம், ஜாம், பனம்கட்டி, ரின்பால், பழரசம், பனம்பாணி, கற்கண்டு, தேன், தகரத்திலடைந்த பழம்.
கூதச் சுவடுகள் O340
 
 
 
 

oogse manın eşseo@os įmonę
***********
LLekeLeTekekekekeOeOeOeeLeOee
ọn, nog sofi,%
······ạoréŋuɖg mænésíu, wo soqru qaepe s quốørgyóo sə quae ? suowośộwooșous sosos poợmo más, į quće osso pousso-os op, șoseaeae ; quố~~đo roś ślaeo osągowo. ; 日每海9日星99@e温四门塔员皆首肯sge osno sors euoueśńạo gŵ»ồ os qhoşun ģ i uoounsoustosságos ș••șos șosus į śíoợuosーシsaegge』geシ容
49%*******
悖些麟劑fff峰
Bowserum syswrw sywaewoo ŋwmywan/ww *%,#ffff;ufgør, aeops, omɔɔŋɔ,o o s svær, o oaz orosaero oyowae øsøy», si
ഷ്ട്ര ക്ഷേ!

Page 21
‘mun, punoaș, tę oặeoo&apy-pŵaeyeowo
*觸屬屬唱會矚•圖 q, wagonness鄭娜娜***** **** 鼻竇皇高貴高等學高제「日高貴高활**
********* *圖*** *ner屬冕**e幟** quaeso,țgsgass@gėjų sąoomu,seo sisto qysog 噴鼻劑曾闆屬* *TQ員瀏織*m@屬 *圖*劃**增h擔n
•••ąovýượsoorrosiguae sięganos, sinogim ¿Imoog, gọuaesi pr圈屬*ym灣辯皇im &quaerisissae się russos nogmaeae !ognae aerogăț¢simo sąžņijnog sựra
±rsorgs soos sąsiasssssssogae 長曾白鳴劃體長過彎曾雪rég圈圈"Im藝 繆sae·,--«, ÈY;s'?? ?!?&% §§©®o: 1:1QQ § 1$减 sæsoortqasqfugo
濑澱藏“\劑 *****ml。喻爆白**
*********~*~apgae uouisoqpeis „saugo
**屬鬥屬****『靈屬靈
9員增é實l唱屬
சதீஸ்
(J/133 சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்)
அமரர்
Bohai Gaia sa o na Ogi ang taga pagitanggi
:ெதுச்சேவையிலே இeறை அப்பணித்திரே! தண்ணலயிலிறிதுெநல காப்பவரே! TT u eS ee0YS ssMLMMMtLLt OTTMLMMLtLLtLM TLSS0 TtCtMMLS
ങ്ങ് 8.ൈ, ഠെ, ഒി', 'gindീ &uil
தrம்புத்தி சொல்விரே * 49göğ : bey)
%&éá % fé%g;{};á8yið hlið.
அணி: ஆத்திருக்குக் குருத்தினரு துே ஆ&g
: 0%; 8: %).
இrத்திக்கிறோம்.
ಟ್ವಿಫ಼
懿·畿·鞘6
*
••• )
•••
శ్రీ பதைச் ஹேடுகள்
 
 
 
 
 
 

蠟關*壩攔熱熾體 激*******娜娜獻*****r徽 * ; sopranoq wung, ********
“ouseoseidoqogs ogse qęŲnogoļī£TI Į pirogs sūqĪTI Ļledooyreig, địogo
පදාර්ෂී- ඤෆGණිෆ් శ్రీ

Page 22
"S - στ’ -ς 、“ミ སྤྱི་སྒྲི་སྤྱི་བློ། སྤྱི་ is リリ 母 S s ළ 群)主 譯 壓每_鬆濕靈隱 藍子
སྤྱི་ e5. སྤྱི་ཕྱི་ཕྱི་ལོ་
窪 \ S 添隠 。 。 芸ど 5 圭、誤。劉 "。 (ནི། ་་སྡེ . རྒྱུ་ |リ ー る 題 エ ○ミ ミ ബ
들 蒋 き 。 選 སྒོ་སྤྱི་ཟླ་ ༤
སྐྱེ་བོ་ཁྲི་ཕྲེ 顎麗雲晝讓羅疆靈。 སྤྱི་ ༦ ) (སྤྱི་ ཉི་
출 ཕྱི་ 港溪 裔器 S. 翡器言
சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் ஆசிரியர் செல்வராசா சுரேஸ் அவர்களின் அன்புச் சகோதரன்
அமரர் செல்வராசா சதீஸ்
(சமூர்த்தி அபிவிருத்தி அலுவலர்)
அவர்களின் திடீர் மறைவினால் துன்
பத்தில் துவண்டுபோய் இருக்கும்
குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது
ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன்
அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டு கின்றோம். சாவகச்சேரி இந்துக் கல்லூரி, ஆசிரிய சகோதரத்துவமும் கல்வி சார ஊழியர்களும், (A-555374)
శ్రీ ෂැංගුර්භී" හීබෘශ්‍රේණිය් 380
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*{q(p+q)Dénr噶**) jossuírnổo-osasso
嘎a白氧白殭 ilgąjue (quqig) lolo@gilssons dinleggjue uenoso
1993(O’CTS)
*)曬***
·*)*爵l*還 (シ
inggulæ 11&silo 1&suo
·ąượjørøșşģquâți sjøofessoo strường@wa naosowuje po
issureg
கூகுச் ஜூேடுகள் خلہ
h*觀圍了負gé o gresos doisos), ngắmelo seulsoortsoo ofi^o·
·ŲJŲUjųIsis

Page 23
செல்வராஜா சதீஸ் (சமூர்த்தி அபிவிருத்தி அலுவலர், வலிதென்
Gtja so, Jabli, gipčiti. J/133 ஆனைக்கேட்டை)
செல்வராஜா சதீஸ் நேற்று (16.11.2008)
•Uی
ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கணபதிப் பிள்ளை சேல்வராஜா(கிராம அலுவலர்) காலஞ்சென்ற திருமதி செல்வராஜா செல்வ ராணி தம்பதியினரின் இளைய மகனும் ஞானமாலாவின் அன் புக் கணவரும் தரலஞ்சென்ற ஹேமலதா(G.S.), ரமேஸ் உதவியாளர், பிரதேசசபை, வேலணை), சுரேஸ் (ஆசிரியர், சாவகச்சேரி இந்துக்கல்லூரி) ஆகியோரின் சகோதரரும் சுதா (ஆசிரிய்ை, மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாட சாலை), மகாதேவி(D.P.ேH.S.யாழ்ப்பாணம்) ஆகியோரின் மைத்துனரும், அஸ்வினி, ஒஷாமினி, ரிஷாந், சிறிமாலன் ஆகி. யோரின் சிறியதந்தையும் திருமதி கந்தையா அழகரத்தினத்தின் பேரனுமாவார். N
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறி விக்கப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக் கொள்ளவும்.
ஹேம 1 இல்லம், புலவர் வீதி, தகவல்: நவலிவடக்கு. சுரேஸ், ரமேஸ்.
తీ ඡාශණ්ෂී- ඤෆGණිෆ් C4O
 
 
 
 
 
 
 
 

குட்டி சதீஷ் - விவியின் திருமணம் - மரணம்
அறிவென்னும் சோலையிலே ஆனந்தமாய் இசைபாடும் அறிஞனாய் என்றும் மாறாத புன்னகையால் மனங்குளிர மக்களை ஈர்த்து நின்று தேவை அறிந்து சேவை செய்யும் - உத்தமனாய் மணக்கோலம் பார்க்க ஓடிவந்தேன் - நீ பிணக்கோலமாய் கிடப்பதைக் கண்டு பதறி விழுந்தேன் உண்போன்ற மரணம் உலகில் வேண்டாம் எவர்க்கும்.
உன் ஆத்மா ஆண்டவன் பாதம் அமர வேண்டி நிற்கும்
பாலர் பாடசாலை ஆசிரியை
திருமதி அண்ரணிதாளம் அருளம்மா அருளம்மாநவாலி.
எமது ஆங்கில ஆசிரியர் செல்வராஜா கரேஸ் அவர்களின் அன்புச் சகோதரன் செல்வராஜா சதீஸ் (சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், ! வலிதென்மேற்குப் பிரதேச செயலகம்) அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டுத் துயருறுவதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதtrங்களைத் தெரிவிப்பதுடன் ஆத்மசந்திக்காகவும்
ஞ்சலி
பிரார்த்திக்கின்றோம். பசவகச்சேரி இந்துக் கல்லூரி, தரம் 108, 18
(f/555703 மாணவர்கள் (2008).
evosið- Grov(Biscắr ل

Page 24
துர்க்கா மணி மண்டபத்தில் சதீஷ் - ஞானமலாவிற்கு தாலிகட்டும்போது.
•
శ్రీ හෘෂ්ඨි" හී ෆෙණිෆ්
 
 
 
 
 
 
 


Page 25
2002இல் இலங்கைதிறந்த main Managem (OUSD பட்டத்தினை அமரர் செ. சதீஷ் கொழும்பு BMICHஇல் பெற்றபோது சகோதரர்களுடன்.
X
犯
மாவட்ட மட்டத்தில் சிறந்த கிராம அலுவலர் விருதுக்கான தெரிவில் 1ம், 2ம், 3ம் இடங்களுக்கான மாவட்டமட்டவிருது வழங்கும்நிகழ்வில் அமரர்செ. சதீஷ் (SDO) HSCME சார்பாக கலந்துகொண்டு அரச அதிபர் திரு.க. கணேஷ், மேலதிக அரசாங்க அதிபர்திரு.ஆ.சிவசுவாமி ஆகியோரிடம் கிண்ணங்கள்
கையளிக்கும்போது எடுக்கப்பட்ட படம் (2009 )
శ్రీ ඥාණ්ෂී- ඤෆෙණිණී
 
 
 
 

அமரர் செ. சதீஷ் இன் தாய்-தந்தையர் திருமணத்தின் | 696ՅՑԵլb ஆண்டு போது பால்-பழம்பரிமாறும் காட்சி
(45.5 கதைச் ஹேடுகள் خلہ

Page 26
ஞாபகச் சுமைகளும் உன் நண்பர்களும்.
எங்கள்ஞாபக இழைகள்என்றோ ஒருநாள்தமதுபுலன்களைப்பூரணமாக இழந்துவிடும். இவ்வாறு இழக்கநேரிடும்போதும் ஓரிருமுகங்களை எமதுபுலன் கள் விடாப்பிடியாகப் பற்றி வைத்திருக்கும். வியியின் முகம் அவற்றில் ஒன்று.
விபி எங்கள் உண்மையான நண்பன். நீண்டகால நட்பின் ஞாபகச் சுமைகளை எங்களின் இமைகளின்மேல் இருத்திவிட்டுக்காலத்தின் எல்லையை அவன் கடந்துவிட்டான். நாங்கள் அவரது ஒவ்வொரு அசைவுகளையும் அசை போட்டபடி இரவுகளைக் கண்ணிரில் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றோம். விபியின் குணாதிசயங்கள் ஆழமானவை: அபூர்வமானவை.
அவன் எங்களை உண்மையாகவேநேசித்தான். யாரும் கேட்காமல்தானே வலியச் சென்று உதவி புரிவது அவனது இயல்பு. தான் செய்கின்ற உதவிகளுக்காகப் பிரதிஉபகாரங்களை அவன் எதிர்பார்த்ததுமில்லை. பிரதேச செயலகத்தில், மக்களின் தேவைகளை உணர்ந்து ஓடி ஓடி உதவி புரியும் உத்தமன் அவன்என்பதை எண்ணற்ற பலர் அறிவார்கள். நண்பர்களின் மனமறிந்து உதவி செய்வதிலும் விபிக்கு நிகர் எவருமில்லை. உதவிகளைப் பெற்றுக்கொண்டு, உதவியவரை உதைக்கின்ற இன்றைய காலச்சூழலில் ஒப்பற்ற நட்புக்கு ஓர் இலக்கணமாகவே விளங்கியவன் விபி. மற்றவர்களின் வேதனையில் பங்குகொள்வதோடு மாத்திரமல்லாமல்,அவ்வேதனையைத் தீர்ப்பதற்குத்தன்னாலான மட்டும் முயற்சிப்பவன். எவரையும் அவன் இகழ்ந்து பேசியதில்லை என்பதால் அவனது நண்பர்கள் வட்டம் விசாவித்திருந்தது.
விபிநல்ல அழகன் வசீகரமானபேச்சால்னங்களின்மாலைப்பொழுதுகளை
ப்படுத்தியவன்.அ யஇதழ்களில்ஒருபுன்முறுவல்தவழ்ந்தபடிஇருக்கும். முதன்முதல்நட்புக்கொண்டபோதும் அப்படித்தான். அவனது வசீகரம் விலகவே யில்லை. ஒரு கரம் இழந்தவர்களாய் இன்றும்தான் நாங்கள் அழுதுகொண்டி ருக்கின்றோம். அவனோ எங்களின் வல்லமைக்கெட்டாத வான்வெளியில். இறைவனின் காலப் பெரும் புத்தகத்தில் விபியின் பக்கம் எழுதி முடிக்கப்பட்டி ருக்கலாம். ஆனால் விபிக்கான விரிந்த எமது இதயப் பேரேட்டில் அவனது நினைவுகள் நாளும் பொழுதும் ஞாபகக் கவிதைகளை வரைந்தபடி தான் உள்ளன. எமது நட்பு சாசுவதமானது களங்கமற்றது. சென்று வருக நண்ப.
உன் நினைவில் சசி, பிரதிபன், சுதர்சன், சிவபாலன், சுபாளம், சிவப்பிரகாளப், சுரேளப், வேந்தனர், பாளம்கரன்.
)பதைச் சுவடுகள் O46 ځله

G9ಗಗಗಗಗಗಗಗಗಗಗಗಗ
நாவெழா நிலையில் நன்றி நவில்கின்றோம்
எங்கள் வாழ்க்கைக்கு ஒளி விளக்காய், வாழ்வின் வழிகாட்டியாய்
வழிநடாத்திய பாசத்திற்குரிய எமது அன்புச் சகோதரன் அவர்களின் இன்னுயிர் பிரிவு கேட்டு விரைந்து வந்து எமக்கு ஆறுதல் கூறிய அன்பு நெஞ்சங்களுக்கும் அன்னாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும், அனுதாபச் செய்திகளை அனுப்பியோருக்கும், தந்தி, தொலைபேசி மூலம் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், பத்திரிகைகள் மூலம் கண்ணிர் அஞ்சலியை வழங்கியோருக்கும், செய்தியாக கொழும்பு தினகரன், வீரகேசரியில் வெளியிட்ட செய்தியாளர்களுக்கும், மலர்வளையம் மற்றும் துண்டுப்பிரசுரம் மூலம் அனுதாபங்களைக் கூறியவர்களுக்கும் இந்நினைவு மலரை மிக அழகுற அச்சிட்டுத் தந்த ANDRA நிறுவனத்தாருக்கும் மற்றும் சகல வழிகளிலும் உதவி செய்த உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றியை நவில்கின்றோம்.
ஹேமா இல்லம், புலவர் வீதி நவாலி வடக்கு, LDITessfisurtu.
O6O 2212676
இங்ங்ணம்
தங்ப்பத்தினர்.
s

Page 27


Page 28
,
 

“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய். அதை நீ இழப்பதற்கு. எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு. எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதைக் கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொருநாள்,
அது வேறொருவருடையதாகும்" இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாரம்சமுமாகும்.
பகவான் நீ கிருஷ்ணர்