கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்ரீமதி வள்ளியம்மை (நினைவு மலர்)

Page 1
அமரர் ரீமான் கணபதிப்
அவர்களின் அமரர் முநீமான் கந்தைய
தம்பதியினரின்
முநீமதி வள்
 

H
σενά
தர் பராசக்தி
புத்திரியுமாகிய
漆
2008
TGñULIMI İDGEDUID
渤 卧

Page 2


Page 3

யாழ்ப்பாணம் - நீர்வேலி
பூநீலழரீ சிவசங்கரபண்டிதர் வழித்தோன்றலும்
iY இணுவையூர் ့်နျူ அமரர் பூரீமான் கணபதிப்பிள்ளை இலங்கைநாயகம் 影 அவர்களின் பிரிய பத்தினியும்
w
அமரர்
பூரீமான் கந்தையா பண்டிதர் பராசக்தி அம்மா தம்பதியினரின் புத்திரியுமாகிய
முரீமதி வள்ளியம்மை அவர்களின்
நினைவு லைர்
O6.09.2008
/ t سمسمیہ
ဂဲ;-အဲ့•အဲ့•
':'ീ',
حصہ"عبم

Page 4
எமது குடும்பத்தின்
ஒளிவிளக்காகத் திகழ்ந்து
எமை அன்போடும் பாசத்தோடும்
பேணிப் பாதுகாத்த எமை
நல்வழிநடாத்தி இன்று வானுறையும்
தெய்வமே, அம்மா, உம்
பொன்னடிகளில் இம்மலரைத்
தலைவணங்கி, கைகூப்பிச் சமர்ப்பிக்கின்றோம்.
ஒம் சாந்தி. சாந்தி. சாந்தி.
L០យoបំ, រោយចៅហm, L០ញយ, மருகி, பேரர்
 
 


Page 5

நற்பிறப்பாய் ஆக்கி வைத்தாய் எப்பிறப்பில் ஐயா இனிக் காண்போம்”

Page 6

அமரர் ழரீமதி வள்ளியம்மை அவர்களின்
வாழ்க்கை வரலாறு
சென்ற 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் நாடறிந்த, நாமறிந்த, நல்லோர். வல்லோர், பற்பல நூல் கற்றுணர்ந்தோர் வரிசையில் முதலாசனத்தில் கீர்த்தியுடன் வாழ்ந்து மறைந்த நீர்வை பண்டிதர் கோட்டத்தை அலங்கரித்தவரே பூனிலழறீ சிவப்பிரகாச சங்கர பண்டிதவராவார். சிவபூசை துரந்தரர், ஐதீக - நைட்டியம் உடையவர். தம் அறிவால், ஆளுமையால், தன் தனித்துவமான முத்திரையைப் பதித்தவர்; தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பாண்டித்தியம் படைத்தவர்; சமஸ்கிருத மொழியிற் பல மணி நேரம் பிரசங்கம் படைத்தவர். யாழ்ப்பாணத்துடன் அல்லாது தமிழ் நாட்டிலும்
புகழுடன் விளங்கியவர். இவை வரலாறு கூறும் உண்மை.
தந்தை போன்று அவரின் மகன் அமரர் ழீமான் சிவப்பிரகாச பண்டிதரும் கீர்த்தியுடன் விளங்கினார். இன்று அத்தியார் இந்துக் கல்லூரி என விளங்கும் பாடசாலையே அன்றைய “பண்டிதர் பாடசாலை’ என அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சைவப் பிரகாச
வித்தியாசாலை யாகும்.
பண்டிதர் கோட்டப் பரம்பரை விளங்க சிவப்பிரகாச பண்டிதர் தென்மராட்சி, கோவிலாக்கண்டி, தேவராஜேந்திர முதலி வழிவந்த, அமரர் ழீமான் சரவணமுத்துப் புலவர் கந்தையா புலவருக்குத் தம் தவப் புதல்வி தெய்வானைப் பிள்ளைக் குத் துணை வியாகி அவதரித்தவரே "செல்லம்” என்று செல்லமாய் அழைத்த ழரீமதி
பராசக்தி அம்மையாவர். உரிய காலத்தில் தம் குலப் பெருமைக்கேற்ப
FG LInGETTGn LnGn) fi O1

Page 7
நீர்வேலி பண்டிதர் பூரீமான் வ.சி. கந்தையாப்பிள்ளைக்கு வாழ்க்கைத் துணைவியாக்கி வந்த புத்திர செல்லங்களில் ஒன்றே எம் இன்றைய நினைவிற்குரிய பூனிமதி வள்ளியம்மை இலங்கை நாயகம் ஆவார். பூனிமதி வள்ளியம்மை தலைவன் அமரர் பூணீமான் இலங்கைநாயகத்துடன் இல்லறமாம் நல்லறத்தை இனிதேயாற்றி, சர்வதாரி வருஷம் ஆடி 23 வியாழக்கிழமை பி.ப. 5.30 மணியளவில் பூர்வபக்க ஷஷ்டியாம் தித்தித்த திதியில் தன்னை மறந்து தன் நாமம் கெட்டு விழித்துக் கண்டனர்
மெய்ப்பொருள் தன்னை!
தாயே கோவில், தந்தையே மந்திரம். தாயிற் சிறந்தொரு கோவிலுமில்லை போன்றவற்றை எம் தாரக மந்திரமாய் சிரமேற் கொண்டு பிள்ளைகள் ஆகிய நாமும் எமக்கு வாய்த்த துணைவர்களும் எம் கடன் முறையேயாற்றி வந்த போதும் “காலன் வந்தால் ஐயோ விடமாட்டான் காலகண்டன் ஐயனென்னால் தொட மாட்டான்” என்ற கூற்றுப்படி எமது பாச அன்னையை, குடும்பத் தலைவியைப் பிரிந்தும், அவரின் விண்ணகப் பெருவாழ்வு சிறப்புடன் பெருஞ்சாந்தியுடன் விளங்க நாளும் கரம் கூப்பித்திரிகரண சுத்தியுடன் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி
மக்கள், மருகர், இணுைவில். பேரர், குடும்பத்தினர்.
ஐயிரண்டு திங்களா வங்கமெலா நொந்துபெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்யவிரு கைப்புறத்திலேந்திக் கனகமுலை தந்தாளை யெப்பிறப்பின் காண்பேனினி
(பட்டினத்தார்)
fEGm GiTang LOGIh) fi 02

6)
அமரரின் விரிவான வாழ்க்கைக் குறிப்பு
1. அமரரின் பெயர்
2. தோற்றம்
3. படித்த பாடசாலை
4. தந்தை
தாய்
5. கனவன்
6. திருமணம்
7. பிள்ளைகள்
8. மருகர்/மருகியர்
9. பேரப்பிள்ளைகள்
10. உடன் பிறப்பினர்
பூரீமதி வள்ளியம்மை இலங்கைநாயகம் நீர் வேல் பழம்பெரும்பதி பண்டிதர்
G9, T Lo. 04.09.1933
அத்தியார் இந்துக் கல்லூரி அமரர் பூனிமா ன் பண்டிதர் வ. சி. கந்தையாப்பிள்ளை (முன்னைநாள் தமிழ் ஆசான், மானிப்பாய் இந்துக் கல்லூரி) அமரர் பூஞரீமதிபராசக்தி கந்தையாபண்டிதர் இணு  ைவ யூர் அ மரர் பூணுரி மா ன் கணபதிப்பிள்ளை - மாணிக்கம் தம்பதியர் களின் புத்திரன்
21.04.1969
திரு.இ விக்கினேஸ்வரன் (இலங்கை மின்சார சபை) திருமதி நந்தினி ஜெயக்குமார் திருமதி நளாயினி செந்தில்தரன் திரு. ஜெயக்குமரன் (நோர்வே) திரு.செந்தில்தரன் (லண்டன்) திருமதி சுகந்தி விக்னேஸ்வரன் (தெல்லிப்பளை பிரதேச செயலகம்) யகதுக்ஷா (நோர்வே)
தீப்தன் (நோர்வே)
பிரின்ஷிகா (லண்டன்) அமரர் பூரீமதி தையல்,அம்மை தம்பித்துரை அமரர் பூணூரீமதி சிவபாக்கியம் நாகலிங்கம் அமரர் பூரீமான் க.சண்முகசுந்தரம்
(தலைமைப் பாதுகாப்பாளர் C.G.R)
മT്യ രീ
03

Page 8
11. பற்றான சிறியதாய்
12. சகோதர வழி
மருமகர்மருகியர்
18. பெறாமக்கள்
14. கணவன் வழி
மருமக்கள்
அமரர் பூஞரீமான் க.வேலாயுதபிள்ளை (பிரதம எழுதுவினைஞர், கல்வித்திணைக்களம்) அமரர் பூணீமான் க.முத்துக்குமாரசுவாமி (எழுதுவினைஞர், இலங்கை வங்கி) அமரர் பூணிமான் க. விநாயகசுந்தரம் (சொந்த விவசாயம்) செல்விநா.இராஜேஸ்வரி அமரர் திரு.நா.தெட்சணாமூர்த்தி திரு.வி.கணாதீபன் (பணியாளர், கல்வித்திணைக்களம்) திருமதி வினோதினி கணாதீபன் திரு.வி. லம்போதரன் (கன்னாகம் பிரதேச சபை) திருமதி பராசக்தி ஈஸ்வரன்(கனடா) செல்வன் ஈ.பிரவீன் செல்வன் ஈ. பிரதீஸ் செல்வி வி. சிவதர்சினி
(மாணவி, யாழ். பல்கலைக்கழகம்) திரு.ச.நித்தியானந்தன் திருமதி றஜினா நித்தியானந்தன் திரு. ச. சர்வானந்தன் (பிரான்ஸ்) திரு. ச. சண்முகானந்தன்(கனடா) திருமதிவெண்நிலாசண்முகானந்தன்(கனடா) திரு. சச்சிதானந்தன்(கனடா)
திரு.ஞா.செல்வநாயகம் (அமெரிக்கா) திரு.ஞா. சிறீதரன் (சுவிஸ்) திருமதி. சிறீதரன் பரதலஷ்மி
Gangran un Guñ
04

திருமதியசோதரா நிற்குணம் (அமெரிக்கா) அமரர் செல்வி ஞா.செல்வராணி
14. மைத்துனர்மைத்துனிமார்
அமரர் பூரீமதி மகேஸ்வரிமுத்துக்குமாரசாமி பூரீமான் பாலேந்திரன் (ஒய்வுபெற்ற எழுது வினைஞர் K.K.S. சீமெந்துக்
கூட்டுத்தாபனம்) பூணிமதி சிவமலர் பாலேந்திரன் பூரீமான் கணேசநாதன் பூgரீமதி லங்காதேவி பூரீமான்சு. வைத்தியலிங்கம் பூரீமதி கதிர்காமநாயகி வைத்திலிங்கம் அமரர் ஞானேஸ்வரன் அமரர் பூரீமதி சிவகாமிப்பிள்ளை அமரர் பூணீமான் க.சபாபதிப்பிள்ஸ்ள அமரர் பூணூரீமதி சபாபதிப்பிள்ளை
samarNan Lacansk 05

Page 9
6) சிவமயம்
வாய்கால் தரவை முத்தவிநாயகர் தேவஸ்தானம் நீர்வேலி.
பிரதம குருவின் பிரார்த்தன்னை உரை பிறப்பும் இறப்பும் உலகின் நியதி. வாழும் காலத்தில் நிறைவாழ்வு வாழ்ந்தவர்களின் சிறப்பினைப்பற்றிச் சிந்தித்து அவர் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதும் அவர் நெறி நிற்றலும் சற்புத்திரர்களின் கடமையாகும்.
அமரர் இலங்கைவிநாயகம் வள்ளியம்மை அவர்கள்
நீர்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தந்தையார் வ.சி.கந்தையாப்பிள்ளை வருடம்தோறும் சிதம்பரம் தில்லைநடராசர் ஆருத்திரா தரிசனத்திற்குப் போவதுண்டு. அங்கு தில்லைச் சபை முன்னாற் கண்ணிர் வார்த்துக் கதறி அழுது செந்தமிழ் பாக்களைத் திறம்படச் சொரிந்து அனைவரையும் குழையச் செய்த சிறப்பினர். சிறப்பான இல்லறம் நடாத்தியவர்.
பூரீலபூரீ சிவசங்கர பண்டிதர் வழித்தோன்றல், சிவப்பிரகாச பண்டிதர் வாழ்ந்த, பண்டிதர் கோட்டத்திற் பிறந்த, பராசக்தி அன்னவர் பெண்வழிப் பேத்தி;செல்லமாக அழைக்கப்பட்ட
செல்வம்’ செல்லமாக மருவியவரே பராசக்தியாவர்.
பண்டிதர் கந்தையாப்பிள்ளைக்கும் பராசக்தியிற்கும் மக்கட் பேறாய் வந்த எழுவரின் ஒருவரே வள்ளியம்மையாவர். இளமையில் தந்தையார் சிவப்பேறு பெற்றாலும் தாயாரின் அரவணைப்பில் சீரிய
sign GmTGin Lnsmus 06
 

சமய வாழ்வுடன் இணுவில் உயர் வேளான் மரபில் திரு. இலங்கை நாயகத்தை மணம் செய்து நல்வாழ்வு வாழ்ந்து ஒரு குமாரனையும் இரு பெண்களையும் பெற்றெடுத்து மங்கலமாக வாழ்ந்து சர்வதாரி வருஷம் ஆடி 28 வியாழக்கிழமை சுக்கில ஷஷ்டித் திதியிற் சிவப்பிராப்தியடைந்தார்.
அன்னாரின் ஆத்மா சிவபதமடையப் பிரார்த்திப்பீர்களாகுக.
நீர்வேலி பண்டிதர் குடும்பத்தாரும் நீர்வை அண்ணாச்சாமி குருக்கள் வழிவந்த நாமும் பரஸ்பரம் வித்தியாகுரு, தீஷாகுரு என்னும் நிலைப்பாட்டில் நம்பிக்கை அபிமானம் கொண்டவர்கள். எனவே தான் அன்பிற்குரிய விக்னேஸ்வரன் எம்மோடு தொடர்பு கொண்டு விஷய தானமொன்றினைத் தாயாரின் நினைவு மலரில் வெளியிட
விரும்பியமையால் இப் பிரார்த்தனை உரையைச் சமர்ப்பிக்
கின்றேன்.
ஓம் சாந்தி,சாந்தி, சாந்தி
முத்தவிநாயகர் தேவஸ்தானம், ஆ. சந்திரசேகரக் குருக்கள் நீர்வேலி. தர்மகர்த்தா
25.08.2008
ՈHնIտնոIնվ ԼոնմՈ 07

Page 10
அரசகேசரிப்பிள்ளையார் தேவஸ்தானம்,நீர்வேலி.
பிரார்த்தனை உரை
அமரர் பூரீமதி வள்ளியம்மை இலங்கைநாயகம் அவர்களைப் பல காலம் அறிவோம். பண்டிதர் கோட்டம் என்று சொல்லப்படுகின்ற சைவபாரம்பரியத்தில் தோன்றியவர். அறிவு, ஆற்றல் மிக்கவர். இல்லறத்தில் நல்லறம் கண்டவர். நன்மக்கள், பேரர் பெற்ற பெருமைக்குரியவர். அன்னார் திருமுறைகளைப் பாடும்போது எமதுள்ளம் உருகும். எமது ஆலயத்தில் அவரின் இசையைக் கேட்டுள்ளேன். அன்பு, பக்தி மிக்கவர். அன்னாரின்
ஆன்மா சாந்திக்குப் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி
29.08.2008 சிவழனரீ சா. சோமதேவக்குருக்கள்
பிரதமகுரு
signs.DIT Gun Linn) si 08
 

இரத்த பாசங்களின் உள்ளத்திருந்து.
மகன், மருகி, உள்ளத்திலிருந்து
என் பாசத்தாயே, அம்மாவே என் உயிருக்குரியவளே, கண்கண்ட ஆரமுதே
நான்மருகியானாலும் என்னை மகளாய் காத்தவளே, அன்பைச் சொரிந்தவளே
எங்கள் இருவரின் தனிப்பெரும் முதலே, தூயவன்பு தந்தவளே நீவீர்
மகனே என அழைத்தால் தேனாய் இனிக்குமே, தித்திக்கும் அமிர்தமே
மருமகளே என்று நீங்கள் என்றும் எனைக் கருதவில்லை. மகளே போன்று எண்னக் கட்டி அணைத்தவளே
என்றும் எம் வாழ்வு சிறக்கவென கண்கண்டதெய்வமெனலாம் கரம் கூப்பி வேண்டியவளே
என் அம்மாவுக்கு நிகர் யார்தான் இருப்பாரென இறுமாப்புக் கொண்ட எனக்கு யார் தான் இங்கு உள்ளனரோ நாம் அறியேன் ஆண்டவனே
மாமி அருகிருக்க யாது குறை எனக் குண்டெனசிங்காரி யாயிருந்தேன் இன்று நீங்களின்றி வாடி வதங்குகின்றேன். பெற்றவளே தாயே மகளாய் எனை அணைத்த உத்தமியே மாமி
உங்கள் விண்ணகப்பெரு வாழ்வு
சிவனார் திருவடியில்
பேரின்ப நிலையிருக்க
நாளும் நாம் பெம்மான் o g
திருவருளை வேண்டுகின்றோம். பறறான மகன
ஓம் சாந்தி பாசமுள்ள மருகி
sian GDTG) innish 09

Page 11
பெற்றவளே! பெரும் பேறு தந்தவளே
தந்தையார் போனதுயர் ஆறவில்லை; அம்மா நீங்களும் பிரிந்துவிட்டீர்களே! அடிக்குமேல் அடி, ஆறுமோ எம் இதயம்? தூர நாட்டில் நாமிருந்து கண்ணிர் வடிக்கின்றோம் உம்மருகரும் பாசமுள்ள பேரரும் பெரும் துயரமடைந்துள்ளனரே. தொலைபேசியில் உரையாடும் பொழுதெல்லாம் பலகாலம் இருப்பேன். உங்கள் எல்லோரையும் பலமுறை காண்பேன்; அஞ்சவேண்டாம் என்றே ஆறுதல் கூறி எமது நம்பிக்கை நட்சத்திரமாய் இருந்தீரே!ஏனோ சடுதியில் விண்ணகம் விரைந்தீர்கள்? அம்மா நீங்கள் இன்று எங்கிருந்தாலும் வளமுடன் வாழ்ந்து எம்மை என்றும் ஆசீர்வதியுங்கள் என இரவுபகலாய் இறைவனை வேண்டுகின்றோம் தாயே, நீங்கள் கைமாறு கருதாது காலமெல்லாம் எமக்காற்றிய உதவிகட்கும் எமக்குக் காட்டிய பாசத்திற்கும் எவ்வாறு நன்றி கூறுவதென தடுமாறுகின்றோம்! மறைவும் தோற்றமும் எமக்குள நியதி என்று எண்ணி தங்கள் பேரின்பப் பெருவாழ்விற்கு நாளும் எம் பிரார்த்தனைகள் மீண்டும் பிறப்புண்டேல் தங்கள் பிள்ளையாய் தங்கள் மடியில் தங்கள் அருகிருக்க இறையருள் வேண்டிநிற்கும்
ஓம் சாந்தி தங்கள் பாசமுள்ள
பெரியபிள்ளையும், மருகர், பேரரும்.
മT ീ 10

அம்மா, என் தாயே.
எங்கள் அன்பு ஆத்தாளே அன்பால் என்னை அரவணைத்தீர்; பாசத்தால் எனைக் காத்தீர்; எல்லோர்க்கும் நல்லவளாய்த் திகழ்ந்தீர்; கண்ணாகக் காத்தவளே திடீரென மறைந்ததேனோ? எங்குதான் இன்று சென்றீர்கள். ஏங்குகின்றேன் அழுது துடிக்கின்றேன் தவிக்கின்றேன் உங்கள் மறைவால் வழி தெரியாது இடிந்துள்ளேன். உங்கள் இழப்பை எமக்கு ஈடுசெய்ய முடியாது அன்னையே நெடும்பயணம் சென்றிரோ? அன்னையே உங்களிடம் வர வழிதெரியாதுள்ளேன். எப்பிறப்பில் காண்பேன் இனி? அழுது உருண்டு புரண்டாலும் எம் துயரம் ஆறவில்லை! ஆறாது! சிந்தை குளிரச்சிரித்தொளிரும் நின் முகத்தை எந்தநாள் காண்பேன் இனி? உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
ஓம் சாந்தி
நோர்வே உங்கள் சின்னமகள்,
மருகர் பேரர்
ՈiնոնոTնոյ Լոնսfi 11

Page 12
என் தாயான சித்தியே!
தந்தையை தாயை இழந்த எனக்கு தாயாய் தந்தையாய் காவற் கோபுரமாய் காத்து வந்தீர்கள். ஆனால் இன்று உம்மையும் இழந்து ஊமையாய்ப் போனேனே, உங்கள் போன்ற சித்தியொன்று எனக்கிருக்க யாது குறை என்றே எண்ணி ஏமாந்து போயினனே!துயரம்! துயரம் தான்! தாங்கள் இறப்பிறப்பற்ற பேரின்பப் பெருவாழ்வில் வாழ்க வாழ்கவென நாளும் பிரார்த்திக்கின்றேன்.
ஓம் சாந்தி நா. இராஷேஸ்வரி
பெறாமகள்
sin Tin Lnsi 2

பெற்றோர் வணக்கம்
கண்ணிகள்
உற்றவரே என்னைப் பெற்றவரே தினம்
உமக்கே நமஸ்காரம்:
முற்றுமே நீர்செய்த உதவிக்குநான் என்ன
மொழிவேன் உபசாரம்
பத்துமாதம் என்னை வயிற்றிலே சுமந்து
பலதுயர் சகித்தீரே,
எத்தனை பிரான சங்கட முடனெனை
ஈன்றுநிர்வகித்தீரே
தேனினும் அமிழ்தினும் இனிதே எனக்குநீர்
செப்பியதாலாட்டு: வானின் அமரர்க்கும் வருமோ இதுபோல்
மங்களத்திருப்பாட்டு! கவலை எல்லாம் என் கவலை அல்லால் வேறு
கவலையொன்றறியீரே, புவியிலே என்சுகம் அல்லது வேறொரு
பொருளையும் குறியீரே!
பால வியாதிகள் எனை அணுகாமலே
பத்தியம் பிடித்தீரே; காலம் எல்லாம் பல விரதங்கள் அனுட்டித்துக்
கருமங்கள் முடித்தீரே.
Ոiնտնurնiվ Լոնաfi 13

Page 13
இரவு முழுதுமே தூங்காதிருந்துநீர்
என்றனைக்காத்தீரே.
அரவு முதற்பல ஐந்துக்களால்வரும்
ஆபத்தைத் தீர்த்தீரே.
தரணியில் என்சுகம் வேண்டியே நீர்பல
தருமங்கள் செய்தீரே!
கருணை செய்யும்படி கடவுளைத் துதித்துநல்
காணிக்கை செய்தீரே.
தரணியில் என்சுகம் வேண்டியே நீர்பல
தருமங்கள் செய்தீரே
கருனை செய்யும்படி கடவுளைத் துதித்துநல்
காணிக்கை செய்தீரே.
பாலும் சோறும்பட்சணங்களும் எனக்கிட்டுப்
பழஞ்சோறு உண்டீரே காலமெல்லாம்நல்ல சோமன்நான் உடுக்கநீர்
கந்தையைக் கொண்டீரே.
காணாத் தெய்வத்தின் அருளாலேவந்த
கண்கண்ட தெய்வம்நீரே,
ஆணாப் பெண்ணாஇராஅந்தத் தேவையும்
அன்னைதந்தை என்பாரே.
நீளமnளவு மலர் 14

திருச்சிற்றம்பலம் விநாயகர் துதி
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
தேவாரம்
தந்தையார் தாயார் உடன் பிறந்தார்
தாரமார் புத்திரரார் தாம்தாம்ஆரோ வந்தவா றெங்ங்னே போமா றேதோ
மாயமாம் இதற்கேதும் மகிழ வேண்டாம் சிந்தையீர் உமக்கொன்று சொல்லக் கேண்மின்
திகழ் மதியும் வாளரவும் திளைக்கும் செந்தீ எந்தையார் திரு நாமம் நமச்சி வாய
என்றெழுவார் இருவிசும்பில் இருக்கலாமே.
நீளnளவு மலர் 15

Page 14
திருவாசகம்
பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே,
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள் மணிக்குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே,
திருப்பல்லாண்டு
சீருந்திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும்பெறாத வறிவுபெற்றேன் பெற்றதார் பெறுவாருலகில்
ஊருமுலகுங் கழறவுழறியுமை மணவாளனுக் காட் பாரும் விசும்பு மறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.
siana0.Tgny LOsh) si 16

திருப்புராணம்
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார் "பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்; இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி அறவா! நீ ஆடும் போதுன் அடியின் கீழ் இருக்க" என்றார்.
திருப்புகழ்
இருந்த வீடும் கொஞ்சிய சிறுவரும் உலகேளும் இசைந்கவூரும் பெண்டிரு மிளமையும் வளமேவும் விரிந்தநாடுங் குன்றமு நிலையென மகிழாதே
விளங்குதீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே குருத்தி லேறுங் கொண்டலின் மருகபொன் வயலூரா
குரங்கு லாவும் குன்றுறை குறமகள் D66T6JTGTT திருந்த வேதங் தண்டமிழ் தெரிதரு புலவோனே சிவந்த ககாலுந் தண்டையும் அழகிய பெருமாளே.
வாழ்த்து வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்
fijalnom m! Intimfi. 17

Page 15
எம் மாதா என்றும் அனுஷ்டித்த விரதம் ஆறு கவசங்களும் அடங்கலாக
கந்தர் சஷ்டி கவசம் திருப்பரங்குன்றுரை தீரன்
முதலாவது கவசம்
அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.
துதிப்போர்க்கு வல்வினை போம், துன்பம் போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்(து) ஓங்கும் நிஷ்டையும் கைகூடும், நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந்தனை.
நூல் திருப்பரங் குன்றுறை தீரனே குகனே மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா குறுக்குத் துறையுறை குமரனே அரனே இருக்குள் குருபரா ஏரகப் பொருளே வையா புரியில் மகிழ்ந்துவாழ் பவனே ஒய்யார மயில் மேல் உகந்தாய் நமோ நமோ ஐயா குமரா அருளே நமோநமோ மெய்யாய் விளங்கும் வேலா நமோநமோ பழனியங் கிரிவாழ் பகவா நமோ நமோ
மழுவுடைய முதல்வன் மதலாய் நமோ நமோ
GinnsDTG LOGlins 18
 

விராலி மலையுறை விமலா நமோ நமோ மராமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ சூரசம்கார துரையே நமோ நமோ வீரவே லேந்தும் வேளே நமோநமோ பன்னிரு கரமுடைப் பரமா நமோ நமோ கண்களிராறுடைக் கந்தா நமோ நமோ கோழிக் கொடியிடைக் கோவே நமோ நமோ ஆழிகழ் செந்தில் அமர்ந்தாய் நமோநமோ சசச சசச ஒம் ரீம்
Jgg ggg fib fLb
வவவ வவவவா ஹோம் ணணண னணண வாம் ஹோம் LJLJL LJLJL u effTlib 85up
வவவ வவவ களம் ஓம் லல லிலி லுலு நாட்டிய அட்சரம் கக கக கக கந்தனே வருக இக இக இக ஈசனே வருக தக தக தக சற்குரு வருக பக பக பக பரந்தாமா வருக வருக வருகவென் வள்ளலே வருக வருக வருகநிஷ்களங்கனே வருக தாயென நின்னிரு தாள்பணிந்தேன்எனைச் சேயேனக் காத்தருள் திவ்யமா முகனே அல்லும் பகலும் அனுதினமும் என்னை எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை வல்ல விடங்கள் வராமல் தடுத்து நல்ல மனதுடன் ஞான குரு உனை
வணங்கித் துதிக்க மகிழ்ந்து நீ வரங்கள்
19 fiנוםםL !הםזםם6thה!

Page 16
இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும்
கந்தா கடம்பா கார்த்திகேயா
நந்தன் மருகா நாரணி சேயே எண்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை தண்ணளி அளிக்கும் சாமி நாதா சிவகிரி கையிலை திருப்பதி வேளூர்
தவக்கதிர்காமம் சார்திரு வேரகம்
கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர் விண்ணவர் ஏத்தும் விராலி மலை முதல்
தன்னிகரில்லாத் தலங்களைக் கொண்டு
சந்நிதி யாய்வளர் சரவணபவனே
அகத்திய முனிவனுக்(கு) அன்புடன் தமிழைச் செகத்தோர் அறியச் செப்பிய கோவே
சித்துகள் ஆம் சிதம்பர சக்கரம்
நர்த்தனம் புரியும் நாற்பத்தெண் கோணம்
வித்தாய் நின்ற மெய்ப்பொருளோனே ! உத்தம குணத்தாய் உம்பர்கள் ஏறே வெற்றிக் கொடியுடை வேளே போற்றி
பக்திசெய் தேவர் பயனே போற்றி
சித்தம் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி
அத்தன் அரியயன் அம்பிகை லட்சுமி
வாணியுடனே வரையுமாக் கலைகளும்
தானே நானென்று சண்முகமாகத்
தாரணி யுள்ளோர் சகலரும் போற்றப் பூரண கிருபை புரிபவா போற்றி பூதலத்துள்ள புண்ணிய தீர்த்தங்கள் ஒதமார் கடல்கழி ஒளிர்புவி கிரிகளில் எண்ணிலாத்தலங்கள் இனிதெழுந்தருள்வாய்
sin sin rin Linansi 20

பண்ணும் நிஷ்டைகள் பலபல வெல்லாம் கள்ளம் அபசாரம் கர்த்தனே எல்லாம் எள்ளினுள் எண்ணெய் போல் எழிலுடைய உன்னை அல்லும் பகலும் ஆசாரத்துடன் சல்லாப மாய்உனைத் தானுறச் செய்தால் எல்லா வல்லமை இமைப்பினில் அருளி பல்லாயிரநூல் பகர்ந்தருள் வாயே செந்தில் நகர்உறை தெய்வானை வள்ளி சந்ததம் மகிழும் தயாபர குகனே ! சரணம் சரணம் சரவணபவலும் அரன் மகிழ் புதல்வா ஆறுமுகா சரணம் சரணம் சரணம் சரவணபவஒம்
arge.oOTLD fgeOOTLD aféoorpalsT & JeOOTib,
*つ。
عی
W
21
thנחםL והםTם,6תו6ה)

Page 17
கந்தர் சஷ்டி கவசம்
செந்தில்மேவும் சரவணன்
இரண்டாவது கவசம்
நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம் போம் நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்(து) ஓங்கும் நிட்டையுங் கைகூடும், நிமலர் அருள்கந்தர் சஷ்டி கவசந்தனை.
காப்பு அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.
சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாத மிரண்டிற் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணியாட
மைய நடஞ்செயும் மயில்வா கணனார் கையில்வே லாலெனைக் காக்கவென்றுவந்து வரவர வேலாயுதனார் வருக! வருக! வருக! மயிலோன் வருக! இந்திரன் முதலா எண்திசை போற்ற மந்திர வடிவேல் வருக! வருக!
வாசவன் மருகா வருக வருக!
(Нашаптац шпић 22
 

நேசக் குறமகள் நினைவோன் வருக! ஆறுமுகம் படைத்த ஐயா வருக! நீறிடும் வேலவன் நித்தம் வருக! சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவணபவனார் சடுதியில் வருக!
ரஹன பவச ரரரர ரரர rfgomp6OOT LJ6)Jag fırfırfırf yfirfrf விணப சரஹன வீரா நமோ நம நிபவ சரஹன நிறநிற நிறென
வசர ஹணப வருக! வருக! அசுரர் குடிகெடுத்த ஐயா வருக! என்னை யாளு மிளையோன் கையிற் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக! ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையும் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் மொளிரும் சண்முகன் றீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன்றினம் வருக! ஆறு முகமும் அணிமுடி யாறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பிற் பல்பூ ஷணமும் பதக்கமுந் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
ரிாாடி மலர் 23

Page 18
முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயிறுந்தியும் துவண்ட மருங்கிற் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனிற் சிலம்பொலி முழங்க
65F85856OOT 6BF55600T Ghafe55600 655600
6LD 1856LDIT85 6LD 1856LDT85 6LDT866LDT85 6LD 16856OT
நகநக நகநக நகநக நகென
டிகுகுன டிகுடிகு டிகுகுன டிகுண
項 項 項項
frffrif ffrff rfffff ffrff
(BGB(BGB (BGBCBCB (BGBCBCB (BGGB டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும் 6DITGOIT 6DITGOn 6pm GOIT (86.16 (Upb லீலா லீலா லீலா விநோதனென்று உன்திருவடியை உறுதியென் றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியாற் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வே லிரண்டு கண்ணினைக் காக்க விழிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
நீளமாவு மலர் 24

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்தின வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதினாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க நானாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட பறிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க பனைத் தொடை யிரண்டும் பருவேல் காக்க கனைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிர லடியினை அருள்வேல் காக்க கைகளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க நாவிற் சரஸ்வதி நற்றுணையாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பா னாடியை முனைவேல் காக்க எப்பொழுதும்எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
മu ഥീ 25

Page 19
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கணகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க தாக்க தாக்கத் தடையறத் தாக்க பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை யகல வல்லபூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்படும் அண்னரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டா ளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை யடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைக ளென்பும் நகமும் மயிரும் நீள்முடி மண்டையும் பாவைகளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும் காசும் பணமும் காவுடன் சோறும்
ஒது மஞ்சனமும் ஒரு வழிப் போக்கும்
26 ffנהםםL 1תGHTfתfFDL

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலது தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோடப் படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி யுருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு கர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தனலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடுவிடு வேலை வெருண்டது வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர் தொடைவாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரனை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
mīl Lnf 27

Page 20
நில்லா தோட நீயெனக் கருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரு மெனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன்திருநாமம் சரவன பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொழி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர் காமத்துறைக் கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசேகாரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா விருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந்திருக்கும் எந்தைமுருகனைப் UITp(360T6öT &lp(86OT6öT upo)&LDITE ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடனிரகூழி அன்னமுஞ் சொன்னமும் மெத்த மெத்தாக வேலாயுதனார்
frпошта Lohnfii 28

சித்திபெற்றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியென் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென்றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந்தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையிற் கருத்துடன் நாளும் ஆசாரத்துடன் அங்கந் துலக்கி நேச முடனொரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே ஜெபித்து உகந்துநீறணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் செயல தருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீரெட்டாய் வாழ்வர்
fiնոնմrնով ԼոնսՌ 29

Page 21
கந்தர்கை வேலாம் கவசத் தடியை வழியாய்க்கான மெய்யாய் விளங்கும் விழியாற்கான வெருண்டிடும் பேய்கள் பொல்லாதவரைப் பொடிப்பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்டலட்சுமிகளில் வீரலட்சுமிக்கு விருந்துணவாகச் கரபத் மாவைத் துணித்தகை அதனால் இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த குருபரன் பழநிக் குன்றினிலிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள்ள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே மயில்நடமிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவணபவலும்
சரணம் சரணம் சண்முகா சரணம்
திருச்சிற்றபலம்
Gina Talaq numri 30
 

கந்தர் சஷ்டி கவசம்
பழநிப் பதியொளிர் பரமன்
மூன்றாவது கவசம்
திருவா வினன்குடி சிறக்கும் முருகா குருபரா குமரா குழந்தைவேலாயுதா சரவணா சண்முகா சதாசிவன் பாலா இரவலர் தயாபரா ஏழைபங் காளா பராமசு வரிக்குப் பாலா தயாபரா வரமெனக்(கு) அருள்வாய் வாமனன் மருகா இரண்டாயிரம் வெள்ளம் யோகம் படைத்தவா திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா இலட்சத் திருநான்கு நற்றம்பிமாருடன் பட்சத் துடனே பராசக்தி வேலதாய் வீர வாகு மிகுதள கர்த்தனாய் சூரசம் காரா துஷ்டநிஷ் டுரா கயிலாய மேவும் கனகசிம் மாசனா
fளmனவு மலர் 31

Page 22
மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா அகத்திய மாமுனிக்(கு) அருந்தமிழ் உரைத்தவா சுகத்திரு முருக்காற்றுப்படை சொல்லிய நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக் கைக்கீழ் வைக்கும் கனமிசைக் குதவா திருவருணகிரி திருப்புகழ் பாட இரும்புகழ் நாவில் எழுதிப் புகழ்ந்தவா ஆயிரத் தெட்டாம் அருள்சிவ தலத்தில் பாயிரம் தோத்திரம் பாடப் புகழ்ந்தவா எண்ணா யிரம்சமண் எதிர்கழு வெற்றி விண்னோர் குமாரன் வியாதியைத் தீர்த்தவா குருவாம் பிரமனை கொடுஞ்சிறை வைத்து உறுபொருள் வேதம் உரைத்தாய் சிவனுடன் சுருதிமெய் யோகம் சொல்லிய (து) ஒருமுகம் அருள்பெறு மயில்மி (து) அமர்ந்த துே) ஒருமுகம் வள்ளிதெய்வானையை மருவிய (து) ஒருமுகம் தெள்ளுநான் முகன்போல் சிருஷ்டிப்ப (து) ஒருமுகம் கரனை வேலால் துணித்த (து) ஒருமுகம் ஆரணம் ஒதும் அருள்மறையடியார் தானவர் வேண்டுவ தருவடுது) ஒருமுகம் ஞான முதல்வர்க்கு நற்பிள்ளை பழநி திருப்பரங் கிரிவாழ் தேவா நமோநம பொருட் செந்தில் அம்பதி புரப்பாய் நமோநம ஏரகம் தனில்வாழ் இறைவா நமோநம கரகம் ஆவினன் குடியாய் நமோநம சர்வசங்கரிக்குத் தனயா நமோநம உறுசோலை மலைமேல் உகந்தாய் நமோநம எல்லாக் கிரிக்கும் இறைவா நமோநம
சல்லாபமாக சண்முகத் துடனே
sansTin Lnsinsi 32

எல்லாத் தலமும் இனிதெழுந்தருளி உல்லா சத்துறும் ஓங்கார வடிவே மூலவட்டத்தில் முளைத்தெழும் சோதியை சால முக்கோணத் தந்தமுச் சக்தியை வேலாயுதமுடன் விளங்கிடும் குகனைச் சீலமார் வயலூர்ச் சேந்தனைத் தேவனை கைலாச மேருவா காசத்தில் கண்டு பைலாம் பூமியும் பங்கய பார்வதி மேலும் பகலும் விண்ணுரு வேத்தி நாற்கோ ணத்தில் நளினமாய் அர்ச்சனை கங்கை யீசன் கருதிய நீர்புரை செங்கண்மால் திருவும் சேர்ந்துசெய் அர்ச்சனை அக்கினி நடுவே அமர்ந்த ருத்திரன் முக்கோண வட்டம் முதல் வாயு ருத்திரி வாய் அறுகோணம் மகேசுரன் மகேசுவரி ஐயும் கருநெல்லி வெண்சாரை தன்மேல் ஆகாச வட்டகு) அமர்ந்த சதாசிவன் பாகமாம் வெண்மைப் பராசக்தி கங்கை தந்திர அர்ச்சனை தலைமேல் கொண்டு மந்திர மூலத்தில் வாசியைக் கட்டி அக்கினிக் குதிரை ஆகாசத் தேவி மிக்கமாய்க் கருநெல்லி வெண்சாரை உண்பவர் பாகமாய் ரதமும் பகல்வழியாவர் சாகா வகையும் தன்னை அறிந்து ஐந்து சீவனுடன் ஐயஞ்சு கல்பமும் விந்தை உமைசிவன் மேன்மையும் காட்சி சந்திர சூரியன் தம்முடன் அக்கினி அந்திரனைக்கண்டு அறிந்தே யிடமாய்ச் சிந்தையுள் ஏற்றுச் சிவசம்புதன்னை
sanaman Lninsi 33

Page 23
மந்திர அர்ச்சனை வாசிவா என்று தேறுமுகம் சென்னி சிவகிரி மீதில் ஆறுமுகமாய் அகத்துள்ளே நின்று வாசல் ஒன்பதையும் வளமுடன் வைத்து யோசனை ஐங்கரன் உடன்விளையாடி மேலைக் கருநெல்லி வெண்சாரை உண்டு வாலைக் குழந்தை வடிவையும் காட்டி நரை திரை மாற்றி நாலையும் காட்டி உரைசிவ யோகம் உபதேசம் செப்பி மனத்தில் பிரியா வங்கணமாக நினைத்தபடி என் நெஞ்சத் திருந்து அதிசயம் என்றுன் அடியார்க்(கு) இரங்கி மதியருள் வேலும் மயிலுடன் வந்து நானே நீயெனும் லட்சணத்துடனே தேனே என்னுளம் சிவகிரி எனவே ஆறாதாரத் (து) ஆறுமுகமும் மாறா திருக்கும் வடிவையும் காட்டிக் கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்கத் தனதென வந்து தயவுடன் இரங்கிச் சங்கொடு சக்கரம் சண்முக தெரிசனம் எங்கு நினைத்தாலும் என்முன்னேவந்து அஷ்டாவதானம் அறிவுடன் சொல்லத் தட்டாத வாக்கும் சர்வா பரணமும் இலக்கணம் இலக்கியம் இசையறிந்துரைக்கத் துலக்கிய காவியம் சொற்பிர பந்தம் எழுத்துச் சொற் பொருள் யாப்பலங் காரம் வழுத்தும் என் நாவில் வந்தினி திருந்தே அமுத வாக்குடன் அடியார்க்கும் வாக்கும் சமுசார சாரமும் தானே நிசமென
34 flגהםםL וגםTםם תLםהוf

வச்சிரம் சரீரம் மந்திர வசீகரம் அட்சரம் யாவும் அடியேனுக் (கு) உதவி வல்லமை யோகம் வசீகர சக்தி நல்ல உன் பாதமும் நாடிய பொருளும் சகலகலை ஞானமும் தானெனக் கருளி செகதல வசீகரம் திருவருள் செய்து வந்த கலிபிணி வல்வினை மாற்றி இந்திரன் தோகை எழில்மயில் ஏறிக் கிட்டவே வந்து கிருபை பாலிக்க அட்டதுட் டமுடன் அநேக மூர்க்கமாய் துட்டதே வதையும் துட்டப்பிசாசும் வெட்டுண்ட பேயும் விரிசடைப் பூதமும் வேதாளம் கூளி விடும்பில்லி வஞ்சனை பேதாளம் துன்ப பிசாசுகள் நடுநடுங்க பதைபதைத் தஞ்சிடப் பாசத்தால்கட்டி உதைத்து மிதித்தாங்(கு) உருட்டி நொறுக்கிச் கலத்தாற் குத்தித் தூளுதூளுருவி வேலாயுதத்தால் வீசிப் பருகி மழுவிட் டேவி வடவாக் கினிபோல் தழுவி அக்கினியாத்தானே எரித்துச் சிதம்பர சக்கரம் தேவி சக்கரம் மதம்பெறும் காளி வல்ல சக்கரம் மதியணி சம்பு சதாசிவ சக்கரம் பதிகர்ம வீர பத்திரன் சக்கரம் திருவை குண்டம் திருமால் சக்கரம் அருள்பெருந் திகிரி அக்கினி சக்கரம் சண்முக சக்கரம் தண்டா யுதத்தால் விம்ம அடிக்கும் எல்லாச் சக்கரமும்
ஏக ரூபமாய் என்முனே நின்று
film GTGh Lnfının fi 35

Page 24
வாகனத்துடன் என் மனத்துள் இருந்து தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம் இம்பமா கருடனம் மேவுமுச் சாடனம் வம்பதாம் பேதுனம் வலிதரும் ஆரணம் உம்பர்கள் ஏத்தும் உயிர்வித் வேடனம் தந்திர மந்திரம் தருபனி அட்சரம் உந்தன் விபூதி யுடனே சபித்து கந்தனின் தோத்திரம் கவசமாய்க் காக்க எந்தன் மனத்துள் ஏதுவேண்டியதும் தந்துரட்சித்தருள் தயாபரா சரணம் சந்ததம் எனக்கருள் சண்முகா சரணம் சரணம் சரணம் சட்கோன இறைவா சரணம் சரணம் சத்துரு சம்காரா சரணம் சரணம் சரவணபவலும்
சரணம் சரணம் சண்முகா சரணம்
S363
analTon LOGanti 36

கந்தர் சஷ்டி கவசம் திருவேரகத்துறை பெருமான்
நான்காவது கவசம்
ஒமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார் காமுற உதித்த கனமறை பொருளே ஓங்கார மாக உதயத் தெழுந்தே ஆங்கார மான அரக்கர் குலத்தை வேரறக் களைந்த வேலவா போற்றி தோர்ச் சூரரைத் துண்டதுண் டங்களாய் வேலாயுதத்தால் வீசி அறுத்த பாலா போற்றி பழனியின் கோவே நான்கு மறைகள் நாடியே தேடும் மான்மரு கோனே வள்ளி மணாளனே
நானெனும் ஆண்மை நண்ணிடாடுது) என்னை கான நீ வந்து காப்பதுன் கடனே காளி கூளி கங்காளி ஓங்காரி சூலி கபாலி துர்க்கை யேமாளி போற்றும் முதல்வா புனித குமார சித்தர்கள் போற்றும் தேசிகா போற்றி
"ஏகாட் சரமாய்" எங்கும் தானாகி
familton Lnans 37

Page 25
வாகாய் நின்ற மறைமுதற் பொருளே "துவியட் சரத்தால்" தொல்லுலகு) எல்லாம் அதிசயமாக அமைந்தவா போற்றி "திரியட் சரத்தால்" சிவனயன் மாலும் விரிபா ருலகில் மேன்மையுற்றவனே "சதுரட் சரத்தால்" சாற்றுநல் யோகம் மதுரமாய் அளிக்கும் மயில்வாகனனே "பஞ்சாட் சரத்தால்" பரமன் உருவத்தால் தஞ்சமென்றோரைத் தழைத்திடச் செய்தென் நெஞ்சகத்(து) இருக்கும் நித்தனே சரணம் அஞ்சலி செய்த அமரரைக் காக்கும் ஆறு கோணமாய் ஆறெழுத்தாகி &bull f’JUpLb éĐUpéßulu (Upat5UpLib ஆறிரு செவியும் அகன்ற மார்பும் ஆறிரு கண்ணும் அற்புத வடிவும் சரவணை வந்த சடாட்சரப் பொருளே அரண்யன் வாழ்த்தும் அப்பனே கந்தா கரங்கள்பன் னிரண்டில் கதிரும் ஆயுதத்தால் தரங்குலைந்து) ஒடத் தாரகா சுரன்முதல் வேரறச் சூர்க்குலம் முடித்து மகிழ்ந்தோய் சீர்திருச் செந்தூர்த் தேவசேனாதிப அஷ்ட குலாசலம் யாவையும் ஆகி இஷ்டசித் திகளளுள் ஈசன் புதல்வா துட்டசம் கார சுப்பிர மண்யா மட்டிலா வடிவே வையாபுரித் துரையே எண்கோணத்துள் இயங்கிய நாரணன் கண்கொளாக்காட்சி காட்டிய சடாட்சர
60.56 lb 6066OOT6 b flippif LDTB
தெய்வமாய் விளங்கும் சரவணபவனே
മTഖ് ഥീ 38

சரியை கிரியை சார்ந்தநல் யோகம் இரவலர்க்(கு) அருளும் ஈசா போற்றி எதுசெய்திடினும் என்பால் இரங்கிக் கோதுகள் இல்லாக் குணமெனக் கருளித் தரிசனம் கண்ட சாதுவோடு) உடன்யான் அருச்சனை செய்ய அனுக்ரகம் அருள்வாய் பில்லிவல் வினையும் பீனிச மேகம் வல்ல பூதங்கள் மாயமாய்ப் பறக்க அல்லலைப் போக்கிநின் அன்பரோடு) என்னைச் சல்லாப மாகச் சகலரும் போற்ற கண்டு களிப்புறக் கருணை அருள்வாய் அண்டர் நாயகனே அருமறைப் பொருளே குட்டிச் சாத்தான் குணமிலா மாடன் தட்டிலா இருளன் சண்டிவே தாளம் சண்டமா முனியும் தக்கராக் கதரும் மண்டை வலியோடு வாதமும் குன்மமும்
சூலைகா மாலை சொக்கலும் சயமும் மூலரோ காங்கள் முடக்குள் வலிப்பு திட்டு முறைகள் தெய்வத சாபம் குட்டம் சோம்பல் கொடிய வாந்தியும் கட்டிலாக் கண்ணோய் கண்ணேறு முதலா வெட்டிக் காயம் வெவ்விடம் அனைத்தும் உன்னுடைய நாமம் ஒதியே நீறிடக் கன்னலொன்றதனில் களைந்திடக் கருணை செய்வதுன் கடனே செந்தில் நாயகனே தெய்வ நாயகனே தீரனே சரணம் சரணம் சரணம் சரவணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்
fFG ThaGTG La Ghhfi 39

Page 26
கந்தர் சஷ்டி கவசம் குன்றுதோறாடும் குமரவேள்
ஐந்தாவது கவசம்
கணபதி துனைவா காங்காதரன் புதல்வா
குனவதி உமையாள் குமரா குருபரா
வள்ளி தெய்வானை மருவிய நாயகா
துள்ளி மயிலேறும் சுப்பிரமணியா
அழகொளிப் பிரபை அருள்வடி வேலா
பழநி நகரில் பதியநு கூலா திருவா வினன்குடி சிறக்கும் முருகா
அருள்சேர் சிவகிரி ஆறுமுகவா
பன்முகம் நிறைந்த பழநிக்கு இறைவா
ஆராறு நூற்று அட்டமங் களமும் வீரவை யாபுரி விளங்கும் தயாபரா
ஈராறு பழநி எங்கும் தழைக்கப்
பாராறு சண்முகம் பகரும் முதல்வா
ஆறு சிரமும் ஆறு முகமும் ஆறிரு புயமும் ஆறிரு காதும் 696).jp dD55 LD5J5600T L6Duplb தடித்த பிரபைபோல் சார்ந்த சிந்துரமும்
ՈHնտնոTնկ Լոնսfi 40
 

திருவெண் ணிறனி திருநுதல் அழகும் கருணை பொழியும் கண்ணான்கு மூன்றும்
குனித்த புருவமும் கூரிய மூக்கும் கணித்த மதுரித்த கனிவாய் இதழும் வெண்ணிலாப் பிரபைபோல் விளங்கிய நகையும்
எண்ணிலா அழகாய் இலங்குபல் வரிசையும் காரிகை உமையாள் களித்தே இனிதெனச் சீர்தரும் வள்ளி தெய்வநாயகியாள் பார்த்தழ கென்னப் பரிந்த கபாலமும் வார்த்த கனகம்போல் வடிவேல் ஒளியும் முறுக்குமேல் மீசையும் மூர்க்கம் சிறக்க மறுக்கம் சூரர்மேல் வாதுகள் ஆட ஈசுவரன் பார்வதி எடுத்து முத்தாடி ஈசுவரன் வடிவை மிகக்கண் டனுதினம் கையால் எடுத்துக் கனமார்டுஅனைத்தே ஐயா! குமரா! அப்பனே! என்று மார்பினும் தோளினும் மடியினும் வைத்துக் கார்த்தி கேயா எனக் கருணையால் கொஞ்சி முன்னே கொட்டி முருகா! வுருகவென்டு) அந்நேரம் வட்மிட் டாடி விளையாடித் தேவியும் சிவனும் திருக்கண் களிகூரக் கூவிய மயிலேறும் குருபரா வருக
தாவிய தகரேறும் சண்முகா வருக ஏவிய வேலேந்தும் இறைவா வருக
கூவிய சேவற் கொடியாய் வருக
பாவலர்க் கருள்சிவ பாலனே வருக
அன்பர்க் கருள்புரி ஆறுமுகா வருக
பொன்போல் சரவணைப் புண்ணியா வருக
sm GTIG LInsans 41

Page 27
அழகிற் சிவனொளி அய்யனே வருக களபம் அணியுமென் கந்தனே வருக
மருமலர்க் கடம்பணி மார்பா வருக
மருவுவோர் மலரணி மணியே வருக திரிபுர பவனெனும் தேவே வருக பரிபுர பவனெனும் பவனே வருக சிவகிரி வாழ்தெய்வ சிகாமணி வருக காலில் தண்டை கலீர் கலீரென சேலிற் சதங்கை சிலம்பு கலீரென இடும்பனை மிதித்ததோர் இலக்கிய பாதமும் அடும்பல வினைகளை அகற்றிய பாதமும் சிவகிரி மீதினில் திருநிறை கொலுவும் நவகிரி அரைமேல் இரத்தினப் பிரபையும் தங்கரை ஞானும் சாதிரை மாமணி பொங்குமாந்தளிர்சேர் பொற்பீதாம் பரமும் சந்திர காந்தச் சரிகைத் தொங்கலும் மந்திர வாளும் வங்கிச் சரிகையும் அருணோதயம் போல் அவிர்வன் கச்சையும் ஒருகோடி சூரியன் உதித்த பிரபைபோல் கருணையால் அன்பரைக் காத்திடும் அழகும் இருகோடி சந்திரன் எழிலொட்டி யாணமும் ஆயிரம் பனாமுடி அணியுமா பரணமும் வாயில்கள் மேழியாய் வழங்கிய சொல்லும் நாபிக் கமலம் நவரோம பந்தியும் மார்பில் சவ்வாது வாடை குயீரென புனுகு பரிமளம் பொருந்திய புயமும் ஒழுகிய சந்தனம் உயர்கத் தூரியும் வலம்புரிச் சங்கொலி மணியணி மிடறும்
42 fiנוnםf LזנaוtII

நலம்சேர் உருத்திர அக்க மாலையும் மாணிக்கம் முத்து மரகதம் நீலம்
அணிவை டூரியம் அணிவைரம் பச்சை
பவளகோ மேதகம் பதித்தவச் ராங்கியும் நவமணிப் பிரபைபோல் நாற்கோடி சூரியன் அருணோதயமெனச் சிவந்த மேனியும் கருணை பொழியும் கடாட்சவீட் சணமும் கவசம் தரித்தருள் காரண வடிவும் நவவிரர் தம்முடன் நற்காட்சியான ஒருகை வேலாயுதம் ஒருகை கலாயுதம் ஒருகை நிறைசங்கு ஒருகை சக்ராயுதம் ஒரு கை நிறைவில்லு ஒருகை நிறையம்பு ஒருகை மந்திரவாள் ஒருகை மாமழு ஒருகை மேற்குடை ஒருகை தண்டாயுதம் ஒருகை சந்திராயுதம் ஒருகை வல்லாயுதம் அங்கையில் பிடித்த ஆயுதம் அளவிலாப் பங்கயக் கமலப் பன்னிரு தோளும் முருக்கம் சிறக்கும் முருகா சரவணை இருக்கும் குருபரா ஏழை பங்காளா வானவர் முனிவர் மகிழ்ந்து கொண்டாடத் தானவர் அடியவர் சகலரும் பணியப் பத்திர காளி பரிவது செய்யச் சக்திகள் எல்லாம் தாண்டவ மாட அஷ்ட பயிரவர் ஆனந்த மாட துஷ்டமிகுஞ் சூளிகள் சூழ்திசை காக்க சத்த ரிஷிகள் சாந்தக மென்னச் சித்தர்கள் நின்று சிவசிவா என்னத் தும்புரு நாரதர் கரிய சந்திரர் கும்பமா முனியும் குளிர்ந்ததாரகையும்
fiնւոնDTնոյ ւոնսft 43

Page 28
அயன்மால் உருத்திரன் அஷ்ட கணங்கள் நயமுடன் நின்று நாவால் துதிக்க அஷ்டலட்சுமி அம்பிகை பார்வதி கட்டழகன் என்று கண்டுனை வாழ்த்த இடும்பா யுதன்நின் இணையடி பணிய ஆடும் தேவகன்னி ஆரத்தி எடுக்க தேவ கணங்கள் செயசெய என்ன ஏவற் கணங்கள் இந்திரர் போற்ற கந்தருவர் பாடிக் கவரிகள் வீசிச் சார்ந்தனம் என்னச் சார்வரும் அநேக பூதம் அடிபணிந் தேத்த வேதாளம் பாதத்தில் வீழ்ந்து பணிந்துகொண் டாட அரகர என்றடியார் ஆலவட்டம் பிடிக்க குருபரன் என்றன்பர் கொண்டாடி நிற்க குடையும் சேவலின் கொடியும் சூழ இடைவிடாமல் உன் ஏவலர் போற்றச் சிவனடி யார்கள் திருப்பாத மேந்த நவமெனும் நால்வரை ஏற்ற சரமண்டலம் உருத்திர வீணை நாதசுர மேளம் தித்திமி என்று தேவர்கள் ஆடச் சங்கீத மேளம் தாளம் துலங்க
மங்கள மாக வைபவம் இலங்க
தேவ முரசடிக்கத் தினமேள வாத்தியம் சேவல் கொடியும் சிறப்புடன் இலங்க நந்திகேசுவரன் மீது ஏறிய நயமும் வந்தனம் செய்ய வானவர் முனிவர் எங்கள் பார்வதியும் ஈசனும் முன்வர ஐங்கரன் முன்வர ஆறுமா முகவன் வீர மயிலேறி வெற்றிவேல் எடுத்துச்
44 fiנfauנrti trםriחr

கரன்மேல் ஏவத் துடித்தவன் மடியச் சிங்கமுகா சுரன் சிரமது உருளத் துங்கக் கயமுகன் கரனும் மாள அடலற்ற குலத்தை அறுத்துச் சயித்து விடவே லாயுதம் வீசிக் கொக்கரித்துத் தம்பமெனும் சயத் தம்பம் நாட்டி அன்பர்கள் தம்மை அனுதினம் காத்துத் திருப்பரங் குன்றம் சீர்ப்பதி செந்தூர் திருவாவினன்குடி திருவே ரகமும் துய்ய பழநி சுப்பிரமணியன் மெய்யாய் விளங்கும் விராலி மலைமுதல் அண்ணா மலையும் அருள்மேவு கயிலை கண்ணிய மாவுற்று கழுகுமா மலையும் முன்னிமை யோர்கள் முனிவர் மனத்திலும் நன்னய மாய்ப்பணி நண்பர் மனத்திலும் கதிர்காமம் செங்கோடு கதிர்வேங்கடமும் பதினாலு லுலகத்தினிலும் பக்தர் மனத்திலும் எங்கும் தானவ னாயிருந்(து) அடியர்தம் பங்கிலிருந்து பாங்குடன் வாழ்க கேட்ட வரமும் கிருபைப் படியே தேட்ட முடன்அருள் சிவகிரி முருகா நாட்டு சிவயோகம் நாடிய பொருளும் தாட்டிக மாய் எனக்கு) அருள் சண்முகனே சரணம் சரணம் சரவணபவலும்
சரணம் சரணம் சண்முகா சரணம்.
窟
நினைவு மலர் 45

Page 29
கந்தர் சஷ்டி கவசம்
பழமுதிர்சோலை மலை கிழவோன் (பண்டிதன்)
சங்கரன் மகனே சரவன பவனே
ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே
செங்கண்மால் மருகனே தெய்வானை கேள்வனே
பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே
பழநிமா மலையுறும் பன்னிரு கரத்தனே
அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்
சரவணபவனே சட்கோணத்துள்ளுறை
அரனருள் சுதனே அய்யனே சரணம்
சயிலொளி பவனே சடாட்சரத் தோனே
மயில்வாகனனே வள்ளலே சரனம்
திரிபுர பவனே தேவசேனாபதி
குறமகள் மகிழும் குமரனே சரணம் திகழொளி பவனே சேவற் கொடியாய்
நகமாயுதமுடைநாதனே சரணம்
பரிபுர பவனே பன்னிரு கையனே
தருணமிவ் வேளைத் தற்காத்தருளே
EGInaring unanni 46
 

சவ்வும் ரவ்வுமாய்த் தானே யாகி
வவ்வும் னவ்வுமாய் விளங்கிய குகனே
வவ்வும் வவ்வுமாய்ப் பழமுதிர்ச் சோலையில்
தவ்விய ஆடும் சரவணபவனே
குஞ்சரி வள்ளியைக் குலாவி மகிழ்வோய்
தஞ்சமென்றுன்னைச் சரணம் அடைந்தேன்
கொஞ்சிய உமையுடன் குழவியாய் சென்றங்கு)
அஞ்சலி செய்தவள் அமுதம் உண்டு
கார்த்திகை மாதர் கனமார்டு) அமுதமும்
பூர்த்தியாய் உண்ட புனிதனே குகனே
நவ மைந்தர் சிவனால் நலமுடன் உதிக்கத் தவமுடைய வீரவாகுவோடு ஒன்பான்
தம்பிமா ராகத்தானையைக் கொண்ட
சம்பிரதாயா சண்முக வேலா நவவிரர் தம்முடன் நவகோடி வீரரும்
கவனமாய் உருத்திரன் அளித்தே களித்துப்
பேதம் இல்லாமல் பிரமனைக் குருவாய்
ஒதிடச் செய்ய உடன்அவ் வேதனை ஒமெனும் பிரணவத் துண்மை நீ கேட்கத்
தாமே யோசித்த சதுர்முகன் தன்னை
அமரர்கள் எல்லாம் அதிசயப்படவே
மமதைசேர் அயனை வன்சிறை யிட்டாய்
விமலனும் கேட்க வேகம தாக
உமையுடன் வந்தினி துவந்து புரிந்து
அயனைச் சிறைவிடென்டு) அன்பாய் உரைக்க
நயமுடன் விடுத்த ஞானபண்டிதனே
47 ftנוםםL והםTםםחםiםה!

Page 30
திருமால் அயன்சிவன் சேர்ந்து மூவரும் கெளரி லட்சுமி கலைமகளுடனே அறுவரோர் அம்சமாம் அரக்கரை வெல்ல ஆறு முகத்துடன் அவதரித் தோனே சிங்க முகாசூரன் சேர்ந்த கயமுகன் பங்கமே செய்யும் பானு கோபனும் சூரனோ டொத்த துட்டர்க ளோடு கோரமே செய்யும் கொடியராக் கதரை வேருடன் கெல்லி விண்ணவர் துன்பம் ஆறிடச் செய்தவ வமரர்கள் தமக்குச் சேனா பதியாய்த் தெய்வீக பட்டமும் தானாய்ப் பெற்ற தாட்டிகப் பெருமானே திருப்பரங் குன்றம் செந்தூர் முதலாய்ச் சிறப்புறு பழநி திருவே ரகமுதல் எண்ணிலாத் தலங்களில் இருந்தாடும்குகனே விண்ணவர் ஏத்தும் விநோத பாதனே அன்பர்கள் துன்பம் அகற்றியாள் பவனே தஞ்சமென்டு) ஒதினர் சமயம் அறிந்தாங்(கு) இன்பம் கொடுக்கும் ஏழைபங் காளா கும்பமா முனிக்கு குரு தேசிகனே தேன்பொழி பழநித் தேவகுமார கண்பார்த்(து) எனையாள் கார்த்திகேயா என் கஷ்ட நிஷ்டூரம் கவலைகள் மாற்றி அஷ்டலட்சுமிவாழ் அருளெனக்(கு) உதவி இட்டமாய் என்முன் னிருந்து விளையாடத் திட்டமாய் எனக்கருள் செய்வாய் குகனே
அருணகிரிதனக்கு) அருளிய தமிழ்போல்
ssrnsDTl LDsus 48

கருணையால் எனக்கு கடாட்சித்தருள்வாய்
தேவ ராயன் செப்பிய கவசம்
பூவலயத்தோர் புகழ்ந்துகொண் டாட சஷ்டி கவசம் தான் செபிப் போரைச்
சிட்டாய்க் காத்தருள் சிவகிரி வேலா
வந்தென் நாவில் மகிழ்வுடன் இருந்து
சந்தத் தமிழ் திறம் தந்தருள் வோனே
சரணம் சரணம் சரவணபவலும்
சரணம் சரணம் தமிழ்தரும் அரனே
சரணம் சரணம் சங்கரன் சுதனே
& JeOOTLb FJgOOTLD 5600Tupast FU6OOTLb
駝
famfirûn. LaGufi
49

Page 31
ஆழ்வார் திருவாய்மொழி
Lu56025 t Dm LD6o6o(Bun6o (BLD6ofl
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே
ஆயர்தங் கொழுந்தே யென்னும் இச்சுவைதவிர யான்போய்
இந்திரலோக மாளும் அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமாநகருளானே.
குலம்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயின எல்லாம் நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்(பு) அருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும் வலந்தரும் மற்றுந் தந்திடும்
பெற்றதாயினும் ஆயின செய்யும் நலந்தருஞ் சொல்லைநான்கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்.
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து (உன்) பவளவாய் காண்பேனே.
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் நீள்கடலுள்- என்றும் புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாய்திருமாற்(கு) அரவு
san DTG Lansi 50

பட்டினத்தார் பாடல்
திரு ஏகம்பம் எத்தனைஊர் எத்தனைவிடு எத்தனைதாய் பெற்றவர்கள் எத்தனைபேர் இட்டு அழைக்க ஏன்என்றேன்-நித்தம் எனக்குக்களை ஆற்றாய் ஏகம்பா கம்பா உனக்குத்திருவிளையாட்டோ.
திருக்குற்றாலம் காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே பால்உண்கடைவாய்ப்படும்முன்னே-மேல்விழுந்தே உற்றார் அழும்முன்னே ஊரார் சுடுமுன்னே குற்றாலத்தானையே கூறு.
பொது சிற்றம் பலமும் சிவனும் அருகுஇருக்க வெற்றம்பலம்தேடி விட்டோமே-நித்தம் பிறந்தஇடம் தேடுதேபேதைமடநெஞ்சம் கறந்தஇடம்நாடுதே கண்.
விட்டுவிடப் போகுதுஉயிர் விட்டஉடனேஉடலைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் - பட்டதுபட்டு எந்நேரமும்கிவனை ஏத்துங்கள் போற்றுங்கள் சொன்னேன் அதுவே சுகம்.
ஆவியொடுகாயம் அழிந்தாலும் மேதினியில் பாவிஎன்றுநாமம் படையாதே - மேவியசிர் வித்தாரமும்கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே செத்தாரைப் போலே திரி.
எத்தனைநாள் கூடி எடுத்த சரீரம்இவை அத்தனையும் மண்தின்பது அல்லவோ - வித்தகனார் காலைப் பிடித்துமெள்ளக்கங்குபகல் அற்றஇடம் மேலைக் குடிஇருப்போமே.
MGTnG DIT Gn An Ghinsi 51

Page 32
இருப்பதுபொய் போவதுமெய் என்றுஎண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினைஉன்னாதே - பருத்ததொந்தி நம்மதுஎன்று நாம்இருப்பநாய்நரிகள் பேய்கழுகு தம்மதுஎன்று தாம்இருக்கும் தான்.
யோகர் சுவாமிகளின் நற்சிந்தனையிலிருந்து.
அப்பனும் அம்மையும் சிவமே
அரிய சகோதரரும் சிவமே
ஒப்பில் மனைவியும் சிவமே
ஒதரும் மைந்தரும் சிவமே
செப்பில் அரசரும் சிவமே
தேவாதிதேவரும் சிவமே
இப்புவியெல்லாம் சிவமே
என்னை யாண்டதும் சிவமே.
நல்லூரான் திருவடிக்கு நல்லூரான்திருவடியை நான்நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனெடி-கிளியே! இரவுபகல் காணேனெடி 1
ஆன்மா அழியாதென்று அன்றெனக்குச் சொன்னமொழி நான்மறந்து போவேனோடி - கிளியே! நல்லூரான் தஞ்செமடி 2
தேவர் சிறைமீட்ட
செல்வன்திருவடிகள் காவல் எனக்காமெடி - கிளியே! கவலையெல்லாம் போகுமெடி 3
sin Tin Lnnst 52

எத்தொழிலைச் செய்தாலென் ஏதவத்தைப்பட்டாலென் கர்த்தன்திருவடிகள் - கிளியே
காவல் அறிந்திடெடி 4.
பஞ்சம்படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவமோநாங்களெடி - கிளியே ஆறுமுகன் தஞ்சமெடி 5
சுவாமியோகநாதன் சொன்னதிருப்பாட்டைந்தும் பூமியிற் சொன்னாலெடி - கிளியே பொல்லாங்குதீருமெடி 6
மங்களம்
அப்பனுக்கும் அம்மைக்கும் மங்களம் அத்துவித வஸ்துவுக்கு மங்களம் ஒப்பில்குருநாதனுக்கு மங்களம் உத்தம பத்தருக்கு மங்களம் முப்பொழுதும் தொழுவார்க்கு மங்களம் மூவாசை வென்றவர்க்கு மங்களம் முப்பத்து முக்கோடி தேவர்க்கும் மங்களம் முனிவர்க்கும் இருடிகட்கும் மங்களம் தன்ன்ைத்தன்னா லறிந்தவர்க்கு மங்களம் ஐயமிட் டுண்பவர்க்கு மங்களம் ஐயமில்லாச் சாதுக்கட்கு மங்களம் ஆதியந்த மில்லாத ஆன்மாவுக்கு மங்களம் சீர்காழித் தேவருக்கு மங்களம் திருநாவுக் கரசருக்கு மங்களம் சீர்பெருகு சுந்தரர்க்கு மங்களம் திவ்விய மாணிக்கர்க்கு மங்களம் எங்குந்தாங்கும் உயிர்களுக்கு மங்களம்.
மங்களம் G934U Dr.orຫຼື
IdræbGrrid GlogiU IDISBGITid
funditurani LOGh) ft. 53

Page 33
நன்றி
~ Wa (ட கூறுகின்றோம்.) ༄༽་ཀྱི་
எமது குடும்பத் தலைவியின் மறைவின்போது
உறுதுணையாக நின்று எமக்கு உதவிய அன்பர்கள்
உறவினர் அனைவர்கட்கும், அனுதாபம் தெரிவித்த
அன்பான இதயங்களுக்கும், இன்றைய சபிண்டீகரண
கிரியைகளிலும் மதிய போசனத்தில் கலந்து
சிறப்பித்தோருக்கும், இம்மலரிணை அச்சிட்டுத் தந்த
கரிகணன் பிறிண்டேர்ஸ் நிறுவனத்தாருக்கும்,
எல்லோருக்கும் எமது நன்றியைக் கரம் கூப்பி
1 நவில்கின்றோம்.
8്മ குடும்பத்தினர்
இணுவில் O9.O9.2OO8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 34


Page 35

மு
எது நடந்ததோஅதுநன்றாகவேநடந்தது எதுநடக்கின்றதோஅதுநன்றாகவேநடக்கின்றது
- எது நடக்க இருக்கின்றதோஆதுவும்
உன்னுடையதுஎதைஇழந்தாய்
எதைநிகொண்டுவந்தாய்
எடுத்துக்