கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தர்மலிங்கம் ஜெயக்குமார் (நினைவு மலர்)

Page 1

G Et kolić. Sidst
198s

Page 2

தோற்றம்: {08 — 12 თ. H1955
அமரர் தர்மலிங்கம் ஜெயக்குமார்
மறைவு 05 04 - 1985

Page 3

இணுவில் மேற்கு அமரர் தர்மலிங்கம் ஜெயக்குமார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்
இத்துங் கிடல்சூழும் நித்திலத் தீவாகிய இலங்கை திணித்திரு நாட்டிற்கு மூலவளம் மிக்க சிரசாக விளங்கும் யாழ்ப்பாணிக்குடா நாட்டில் தமிழின் சுவையுணர்ந்து தமிழின் சுவையுணர்த்கி, வாழும் பழங்குடிகள், சைவத்தின் உயிர்நரடியாக விளங்கும் சிவார்ப் பணசிந்தை, சைவ ஒழுக்கம் என்பவற்றின் நிலககளன்களாக விளங்கும் பெருங்குடி மக்கள் வாழும் சிற்றுார் இணுவில் இதன் மேற்குப்பகுதியில் பழசார உளப்பாங்கும் தளர்வறியாத் தாளாண் ைையும் மிக்க தந்தை திரு. சின்னப்பா தர்மலிங்கம் என்பார்க்கும் கள்ளங்கபடற்ற வெள்ளேயுள்ளமும் அடக்கமும் சேர்ந்துருவெடுத்த அன்னை சங்கரப்பிள்ளே இராசமணி என்பார்க்கும் மும்மணிகளாக உதித்த புத்திரர்கள் திரு? சிவகுமாரன், செல்வன் ஜெயக்குமார், செல்வக்குமார் என்பவர்கள்.
இவர்களுள் ஜெயக்குமார் என்னும் அடக்கமே உருவாய மைந்து அருஞ்செல்வன் ஜெயக்குமார் 1955 ஆம் ஆண்டு மார்கழி ஐாதம் 8ஆம் திகதி பிறந்தார். மாநிறமேனியும் மனங்கவர் அழகும் தோற்றமும் விவேகமும் எல்லாப் பற்றுக்கும் மேலாக அடக்கமான கபாவமும் இவர் பெற்றுரையன்றி சகோதரங்களை மட்டுமன்றி பேரன் , பேத்தியான சங்கரப்பிள்ளை அன்னம்மா மனமல் மார்களான நிகு கணேசரத்தினம், அரியராசா, செல்வராசா, மகேஸ்வரன் சிற்றன்னேயரான புஷ்பலீலா, சிவலோகராணி, பெரியதந்தையார் இளான பொன்னுத்துரை, தம்பிஜயா ஆகியோரையும் தன் பால் ஈர்த்துப் பாசங்கொள்ள வைத்து யாவர்க்கும் செல்லப்பிள்ளையாக இளர்ந்து வந்தார்.
தமது ஆரம்பக் கல்வியை இணுவில் சைவழிகாஜன வித்தியா அாலேயிலும் உயர் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியிலும் விற்றுத் தேறிய செல்வன் ஜெயக்குமார் தமது தொழிற் கல்வியை யாழ் அரச தொழில் நுட்பக் கல்லூரியில் கற்றுநிறைவுற்றர்

Page 4
கல்வி கற்ற காலத்திலும் கல்வியை முடித்துக் கொண்டு வீட் டில் தங்கிய காலத்திலும் சரி தானுண்டு தன் வீடுண்டு, என்ற போக் கில் இருந்து கொண்டு ஆலய வழிபாட்டில் இன்பங்கண்டு வந்தார். அதிலும் கிருஷ்ணர் வழிபாட்டில் கூடுதலான ஈடுபாடு கொண்டவ ராய் வண்ணே பெருமான் கோவிலுக்கு அடிக்கடி யாத்திரை சென்று வழிபாடாற்றி வருவார்.
செல்வன் ஜெயக்குமார் கல்வியை முடித்துக் கொண்ட சில மாதங்களில் காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் நியமனம் கிடைக்கப் பெற்றுத் தொழில் புரிந்து வருநாளில் அதாவது 1982ம் ஆண்டு முற்பகுதியில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது.
தாம் சம்பாதித்துத் தான் தன் குடும்பம் வாழவேண்டும் என்ற நிலை இல்லாதிருந்த போதும் உழைத்துண்ணும் உத்தமப் பண்பில் ஊறிய குடிப்பிறப்பு உந்தித்தள்ள திங்கங்பூர் சென்று தொழில் பார்த்து வந்த ஜெயக்குமார் சில ஆண்டு கழிந்தபின் தம் பெற்றர் சகோதரங்களைப் பார்த்து வரவேண்டும் என்ற ஆசை தூண்டப் பல தடவை அங்கிருந்து கிளம்பினராயினும் அவ்வப் போது இலங்கையில் நடைபெற்ற கலவரங்களால் அவர் ஊர்வரும் முயற்சிகள் பிற்பே' டப் பட்டுவந்தன.
அண்மையில் தமது அண்ணன் சிவகுமாரனின் திருமணத்திை ஒட்டி இங்குவரக் கிளம்பிய ஜெயக்குமாரை எரியும் இலங்கை வர விட்வில்லே.
தமது அண்ணனின் திரும்ணத்தின் போதாயினும் பிறந்த அகத்திற்கு வரமுடியாத துயரநிலையில், இவரும் தமது குடும்பத்தில் மூதலாவது மங்கல நிகழ்ச்சியில் மக்களனைவரையும் ஒருசேரக் காண முடியாத நிலையில் இவர் பெற்ருரும் தடுமாறிய நிலையில் இவரது அண்ணன் சிவகுமாரன் ஆசிரி ப்ருக்கும் செல்வி நல்லதம்பி நளாயினிக் கும் திருமணம் நடந்தது.
திருமணம் நடந்த மூன்று மாதங்கள் சென்ற பின் இந்நாட் டுக்கு எப்படியும் வந்தே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தோடு பிரயாண - ஆயத்தங்க்ளிலீடுபட்டு வந்த ஜெயக்குமார் சென்று அங்கு ஒரு நீர் வீழ்ச்சியில் நீராடிய போது விபத்துக்குள்ளாகி கடந்த 5= 4-88இல் திடீரென விண்ணுலகம் புக்இனர்.

இடியாய் வந்த இச்செய்தி கேட்டுத் துடியாய்த் துடித்து அலறிப் புரண்டு அலறித்துவண்ட னர் பேற்ருர் சகோதரங்கள் மாமன் மார் மாமிமார் சிறியதாய் சிறியதந்தை மட்டுமல்லர், இணுவிற் கிராமமே சோகத்தில் ஆழ்ந்து இதயங்கலங்கிற்று.
சிங்கப்பூரிலிருந்து அவர் பூத உடலைத்தாய் நாட்டு மண்ணுக்கு எடுத்து வந்த அவர்தம் உயிர் நண்பரும் உடனுரழியருமான கொக்கு வில் கிழக்கு சிவதாசன் அவர்களின் அன்பு நெஞ்சம் உட்பட ஜேயக் குமாரின் பெற்ஜர், சகோதரர், உறவின்ர், நண்பர்கள். 2) ua aurio அடைந்து வரும் கனத்துயர் ஆறும்படி அருள்புரியும் வண்ணம் ஆறு முகக் கடவுளை வேண்டுவோமாக. விசேடமாக இவரது அன்பில் ஆடி வளர்ந்து இன்று இருநிழல் இழந்து துடிக்கும் மாமன் மக்கள் ஜெகன், ரஞ்சா, துஷி, சிறியதாய் மக்கள் சந்திரன், சாந்தா, சத்தியன் ஆகிய பிஞ்சுநெஞ்சங்களைத் திருவருள் ஆற்றுவதாக
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!

Page 5
ဖြိုဇ္ဈ GaAuto Giuffiề.
திருச்சிற்றம்பலம்
ogsaa Argáis
ஒவு நாளுணர் வழியு நாளுயிர்
போகு நாளுயர் பாட்ைமேல் காவு நாளிலை யென்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரிப் பாவு தண்புனல் வந்தி பூழிபரஞ்
சோதிப் பாண்டிக் கொடுமுடி நாவ லாவுனே நான்மறக்கினுஞ்
சொல்லுநா நமச்சி வாயவே
திருவாசகம்
தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைக்
சங்கரா ஆர்கொலே சதுரர் அந்தமொன் றில்லா ஆநந்தம் வெற்றேன் யாதுநீ பெற்றதொன் றென் பால் சிந்தையே கோயில் கொண்டனம் பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் யானிதற் கிலன் ஒர்கைம் மாறே
திருவிசைப்கை
நீறணி பவளக் குன்றமே நின்ற
நெற்றிக்கண் ணுடையதோர் நெருப்பே வேறணி புவன போகமே யோக
வெள்ளமே மேருவில் வீரா ஆறணி சடைஜெபம் அற்புதக் கூந்தா அம்பொன் செய் அம்பலத் தரசே ஏறணி சொடியெம் மீசனே உன் ஜனத் தொண்டனே இசையுமா றிசையே,
 
 

திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதீடப்
டாற்கட லீந்தபிரான் - மோலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கு மந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பாலித்து நட்டம் பயிலவல் லோனுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புகழ்
ஏறுமயி லேறிவிளையாடு முகமொன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடியார்கள் வினே தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு சூரரை வதைத்த முகமொன்றே
வள்ளியை மணம்புணர வந்த முகமொன்றே ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும் ஆதியரு சைலம் அமர்ந்த பெருமாளே.
தெரியவுராணல்
கற்பனை கடந்த சோதி கருணையே உருவ மாகி அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிரத்தின் மேலாஞ் சிறபர வியோம மாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்று பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி.
திருச்சிற்றம்பலம்
5

Page 6
நன்றி நவிலல்
அமரர் ஜெயக்குமார் அவர்களின் பிரிவுத்துயர் கேட்டு எமது துன் பத்தில் பங்குபற்றி ஆறுதல் கூறியவர்களுக் கும், பல்வேறு உதவிகள் புரிந்தவர்களுக்கும், அனுதாபச் செய்திகள் அனுப்பியவர்களுக்கும், அந்தியேட்டிக் கிரியை களில் பங்குபற்றிய உற்ருர், உறவினர், நண்பர்கள் சகலருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவிக்கின்ருேம்.
'குமாரஸ்தான்" சி. தர்மலிங்கம் குடும்பத்தினர்
இணுவில் மேற்கு இணுவில்
இலிக்இது சீே49இல், இஜஜிஜ்
 


Page 7