கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆறுமுகம் இராசையா (நினைவு மலர்)

Page 1


Page 2

உயர் திரு. ஆறுமுகம் இராசையா - உயர் திருமதி தங்கம்மா இராசையா சட்டநாதர் வீதி , நல்லார்- யாழ்ப்பாணம்
Losujes : ldd = 07 - 1907 மலர்வு: () - gld 6: 3 - 5 - 1997 உதிர்வு: -
திதி வெண்பா:
தவழும் ஈசுர தொண்ணுாற் றேழுதணில் நிகழும் வைகாசி அமரபக்கத் தசமியேதான் - கமழும் இராசையா எனும் பெயரோன் நிகழும் ஈசனடி புக்கநாள்
15 - 06 - 1997
OG — 917
O5 - 1988
ஓங்குபுகழ்

Page 3

வரலாற
தனிப்பெரு மினமாய் தலைநிமிர் வுடனே தனித்துவ வாழ்வதைத் தமக்கென வகுத்திட்ட தமிழரின் பெருமையைத் தரணியில் கூறிடும்
தலைநகர் யாழ்ப்பாணம் எனும் நகரில்
நம்பிக் கைதொழுத அடியவர்க்கெலாம் நம்பிக்கை கொடுத் திடுமெம் நல்லைக் கந்தன் நல்லாட்சி புரிந்திடும் நல்லூர் எனும் வல்லூர் தன்னில்
ஆறுமுக மெனும் அருந்தவப் பெரியோன் அம்மணிப் பிள்ளையை மணந்திட்ட பேறாய் கிடைத் திட்ட முக்கனிச் செல்வர்களான செல்வமாய்ப் பிறந்த நற் செல்லம்மாவுடன்
பாக்கியப் பேறாய்ச் சிவ பாக்கியமவளுடன் இனிதாய் இராசையா வெனப் பெற்ற ஆகைச் கொரு மகனாய் அவதரித்தான் ஆசைப் பிள்ளையாய் வளர்ந்தனன் நன்றாய்
இளம் பிராயக் கல்வியைத் தொடர்ந்து இயல்பாய் வணிகமும் பேணிட எண்ணி விளையும் பயிரை முளையிலே தெரிந்ததால் விருப்புடன் இராசையா வணிகம் ஏற்றனன்
சிவக் கொழுந்துவும் அன்னப் பிள்ளையும் சிறப்புடன் வளர்த்த சீரிய பெண்ணவள்
இனியநற் செல்வியாம் தங்கம் மாவையே இருபத் தைந்தினில் இல்லறம் பூண்டனன்

Page 4
இல்லறம் பேணி நல்லறம் காத்து வாழ்வுடன் வணிகமும் சிறந்திட்ட வேளை இல்லறச் செடியும் தந்திட்ட கிளைகள் இன்பத்தை அள்ளித் தந்தஐம் மக்கள்
மூத்தோன் இரத்தின சபாபதி என்பான் மதிப்புடன் கணக்காள னாக உயர்ந்து சத்திய பாமாவைக் கைப் பிடித்த்தனால் சந்தோசமுடன் கனடா சென்றுவாழ் கின்றனன்
சிரேஷ்ட புத்திரி இரத்தின பூபதி சிறப்புடன் நற்பல குணங்கள் கொண்டவள் தியாக ராசா எனும் பண்பாளளை திருப்தியாய் வாழ்வினில் இணைத்து மகிழ்ந்தனள்.
இராச ரத்தினம் எனும் சீராளன்
சோதி மலரினைத் துணைவியாய்ப் பெற்று தந்தையின் வணிகத்தை தயங்காம லேற்று திறனுடன் தன்பணி தொடர்ந் திட்டனனே
களிப்புடன் வளர்த்த கனிஷ்ட புத்திரி இந்திரா தேவி எனும் நல்லாள் நிர்வா கத்துயர் அதிகா ரியான இராச ரத்தினத் தையவள் வரித்தனள்
இளையவன் இராம நாதன் என்பான் இனிதே கல்வியை இயல்பாய் தொடர்ந்ததால் மக்கள் பிணியதைத் தீர்க்கும் பணியதாம் மாண்புறு வைத்தியப் பதவியும் பெற்றனன்

சீரிய பணியதும் சிறப்புடன் தொடர்ந்திட ஆராய்ச்சி யாளராம் வசந்தி யவளினை
சேர்த்தனன் இல்லற வாழ்வினில் நன்றாய் சிறப்புடன் வாழ்வது சிறந்திட வென்றே
தனது மக்களை மட்டு மல்லாது தம் சோதரி களது புத்திரர்களையும் கண்ணின் மணியதாய்ப் பேணிக் காத்து கருத்துடன் கல்வியும் ஊட்டினன் நன்றாய்
வணிகத்தொழிலதை மைல்கல்லாய்க் கொண்டு வளமுடன் வாழ்வதை வழி சமைத்திடவே உண்டி கொடுக்கும் உயர்ந்த தொழிலாம் உயரிய விவசாயத்தி லீடுபட எண்ணி
முன் மாதிரியாய் குடாநாட்டின் வெளியே வன்னி எனும் மருத நிலந்தனில் மேன்மை பெற்று முத்திரை பதித்து வயலுடன் வாழ்வை வளமுடன் பேணினன்
இல்லற வாழ்வை இயற்றிட்ட மனையாள் இவ்வுலக வாழ்வை முடித்துமே ஏக தனியொரு வனாக பிள்ளைகள் துணையுடன் தலை நிமிர்ந்தே தன்பணி தொடர்ந்தனன்
இளைய மகனின் வேண்டுதலுக் கிணங்க இங்கிலாந்து சென்று வாழ்ந்திட்ட வேளை தன்நாட்டில் மக்களின் நலன் களிலும் தவிப்புடன் அக்கறை கொண்டிருந்த காலை

Page 5
உற்றமக்கள் பேரரோடு தொண்ணுாறு அகவைகள் உற்சா கத்துடன் நோயற்ற வாழ்வினை உழைப்பின் செல்வனாய் உலகம் போற்ற இராசை யாவும் வாழ்ந்திடும் வேளை
குமரனாக விருந்து குன்றாப் பணிபுரிந்து குறைவிலாப் பெருமை கொள்குல விளக்கவர் சிறிதரன் எனும் சீரிய பண்பாளனின்
சிறப்புயிர் அவலமாய்ப் பறிக்கப் பட்டதால்
ஆற்றாத கவலையை அகத்தினி லிருத்தி அடுத்த நாட்களில் பெருந்துய ருற்றனன் அடுத்தவர் உதவியை நாடிடாப் போதிலும் அன்புடன் கணித்து இருந்திட்ட போது
பேரனின் பாதையை நாடிட நினைந்து பத்தினி யாளின் நினைவு நாளதுவிலே எம் பெருமானின் திருவடி அடைய ஏகினார் பெருமகன் இராசை யாதான்
பூதவுடல் அழிந்து புகழுடல் பெற்றாலும் பரந்த உள் மனத்தினால் செய்தநற் பணிகளுடன் பன்னக் கண்டிப் பிள்ளையார் ஆலயப் புதுப்பொலிவு நாளுமுன் புகழினைச் சாற்றுமே.
ஆக்கம் : செல்வி கோபாலரத்தினம் சசிகலா, நல்லூர்

இலண்டன் மாநகரில் 31-05-1997 இயற்கை எய்திய எங்கள்
குடும்பத்தலைவர் நல்லூர் ருரீமான் ஆறுமுகம் இராசையா (ஆசைப்பிள்ளை) அவர்களின் நினைவு அஞ்சலி
வெண்பா
மருந்துக்கடை இராசையா மாரடைப்பால் வான் சென்றார் அந்தோ அவர்பெருமை யாரறிவார்- பந்தமென வருக வருகவென வானோர்கள் பூச்சொரிந்தார் பெருகும் அவர் உதவி கண்டு.
ஈசுரவை காசிதனில் இறைவன் அடிசேர்ந்த மாசில் புகழ்படைத்த மாமணியாம் -இராசையா தேய்பிறை யாந்திதியில் சேர்ந்தார் திருவடிக்கீழ் மாய்ந்தார் வருவாரோ மற்று.
ஆசிரியப்பா
திருமகள் மலைமகள் தெய்வக் கலைமகள் மூவின மடந்தையர் முதன்மையாய் விளங்கும் ஈழ மென்னும் இலங்கைத் தீவில் நல்லூர்ப் பதியில் செங்குந்த மரபில் ஆறு முகமும் அம்மணிப் பிள்ளையும் பெறலரும் பேறாய் பெற்றிடும் உத்தமன் இராசை யாவெனும் ஏந்தல் தானும் சிவக்கொழுந் துமகள் தங்கம் மாவை மனைவியாய் அடைந்து மருந்துக் கடையில்

Page 6
மதிப்பாய் இருந்து பரந்தனில் சிறப்பாய் விவசாயம் செய்து விவசாய மன்னனாய் அரசினர்அளித்த பட்டமும் பெற்று வேண்டிய வர்க்கு வேலைகள் அளித்து பண்ணைக் கண்டிப் பிள்ளையார் கோவிலும் சட்டநாத சிவனார் கோவிலும் நன்றாய் நடக்க வேண்டிய கொடுத்தும் சகோதரி மார்க்கு தக்க உதவியும் அன்பாய்க் கொடுத்த ஆசைப் பிள்ளையின் முதல்வ ரான இரத்தின சபாபதியை கணக்காள ராகக் கல்வி கொடுத்து சின்னத் துரைமகள் சத்திய பாமாவை திருமணம் புரிந்து இளங்கோவன் இளஞ்சேயன் அனுஷியா என்னும் மும்மக்கள் பெற்று முதலாம் மகளாய் விளங்கிய மாது இரத்தின பூபதி தியாக ராசாவை திருமண மாற்றி திகழுறும் வேளை சிறிதரன் சிறிவதனி என்போரைப் பெற்று இரண்டாம் மகனாம் இராச ரத்தினம் செல்லத் துரைமகள் சோதி மலரை திருமணம் செய்து இன்பமாய் வாழ்ந்து ரஜிதா,விஜிதா ரஜனி இராசசெழியன் இராசசேரன் ஐவரைப் பெற்று இரண்டாம் மகளாம் இந்திரா தேவியை இராச ரெத்தினம் இல்வாழ்வில் இணைத்து மகிந்தன் முகுந்தன் புதல்வர்கள் பெற்று மூன்றாம் மகனாம் வைத்திய கலாநிதி இராம நாதனை நடராசர் மகளாம் விவசாய கலாநிதி வசந்தியை மணந்து குமரன்இரகுதரன் ரதிலஷ்மி பெற்று

வளமுடன் வாழ்ந்து வசதியாய் இருக்கையில் அன்னவர் தானும் எண்பத் தெட்டில் மனைவியை இழந்து சொந்த நாட்டில் வாழ வழியின்றி புலம்பெயர்வேளை லண்டனுக்கேகி இராம நாதனாம் மகனுடன் வாழ்ந்து கனடா போக எண்ணுங் காலை வைகாசி மாதம் முப்பத் தொன்றில் மனைவி சிவபதம் அடைந்த அத்தினமே மக்களும் சுற்றமும் கலங்கி அழுதிட சிவபதம் சேர்ந்த ஆசைப்பிள்ளையின் ஆத்மா சாந்தி அடைந்திட ஆண்டவன் அருளுக இனிதே!
ஆக்கம் பண்டிதர் க. இராசையா
சிட்னி , அவுஸ்திரேலியா

Page 7
கலங்கரை தீபம் ஒன்று அணைந்துவிட்டது
எமக்கு வெளிச்சவீடாக விளங்கி எல்லா வழிகளிலும் வழிகாட்டிய அணையாத தீபம் 31.05.97 அன்று அணைந்துவிட்டது. எம்மையெல்லாம் தனது அன்பாலும் பண்பாலும் பாசத்தாலும் வளர்த்த எமது மூத்த வழிகாட்டி ஆறுமுகம் இராசையா அவர்கள் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அமரர் ஆ. இராசையா அவர்கள் தனது தன்னம்பிக்கை, விடாமுயற்சியினால் வாழ்வில் மிகவும் முன்னேறி தனக்கும், தனது வழியைப் பின்பற்றுபவர்களுக்கும் மிகுந்த பயனுள்ள வாழ்வைக் கொடுத்தவர். இதனால் உற்றார், உறவினர் ஊரார் உள்ளங்களில் என்றும் அழியாமல் இடம் பிடித்து விட்டார்.
சைவசமய வழிபாட்டிலும் மகேஸ்வர பூசையிலும் மிகுந்த நம்பிக்கை உள்ளவர். தன் வீட்டில் உள்ள குலதெய்வமான அம்பாள் ஆலயத்தில் இன்றும் தனது மூதாதையர் பற்றிய வழியைப் பின்பற்றி பூசைகள் நடாத்துவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். நாட்டுக் கலவரம் காரணமாக மக்கள் வீட்டை விட்டு இடம் பெயர்ந்த போது கோவில்களில் விளக்கேற்ற முடியவில்லை என மிகவும் கலங்கிப் போயிருந்தார். எனக்கு நினைவு தெரிந்த நாள் தொடக்கம் அவர் செய்தித்தாள்கள் தமிழ்ப் புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருப்பதாக ஞாபகம். இன்றும் கூட தனது தள்ளாத வயதிலும் தமிழ் செய்தித்தாள் பற்றாக்குறையுள்ள இந்நாட்டிலும் தனது வாசித்தறியும் ஆற்றலினாலும் அவாவினாலும் வாசிப்பதிலேயே மிகுந்த ஈடுபாட்டினைக் காட்டினார். அன்னார் காட்டிய பாசப் பெருமழையில் நனைந்து ஊட்டி வளர்த்த கருத்துக் கொள்கைகளைப் பின்பற்றும் நாங்கள் அவரது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை இறைஞ்சுவோமாக.
திருமதி ம. தர்மா ( உயிரின மருத்துவ ஆராய்ச்சியாளர்)
10

நெஞ்சம் மறப்பதில்லை.!
ஆலமரமாய் நீண்டு நீங்கள்
அனைவருக்கும் நிழல் கொடுத்தீர்
அவனியிலே அயர் விடுத்து அல்லும் பகல் பாடுபட்டீர்.
ஊனமின்றி உலகினிலே
உயர்வதற்காய் உழைத்து நின்றீர்
உமது மக்கள் சிறந்து வாழ உமது வாழ்வை
அர்ப்பணித்திருந்தீர்
அண்டை அயலாரை அன்புடனே அனைத்து நின்றீர் அண்டி வந்தோர் யாவர்க்குமே அன்புக் கரம் நீட்டி நின்றீர்
வையகத்துள் வளமுடனே வாழும் வகை காட்டி நின்றீர் வானகத்திற்கே இன்று
விரைந்து நீவிர் சென்றுவிட்டீர்.
பூத்து நிற்கும் மலரது போல் புன்னகையில் உங்கள் முகம் பார்த்து நின்றோம் பாரினிலே பழகிய நாள் பசுமைகளே
ஆர்த்து எம் குழந்தைகளை அரவணைத்தீர் அருமை சொன்னீர் வேர்த்து நின்றீர் வேதனையால் வேறுநாட்டில் முடங்கல் கண்டு
நாடுவிட்டு நாடு வந்தும் நாட்டம் ஏனோ பிறந்த மண்ணில் நலிவு விடுத்து அமைதி கொள்வீர் நன்றே உம்பணி தொடரும் என்றும்
காலம் என்றும் நின்றதுண்டோ காதில் சேதி சொன்னதுமுண்டோ வேளையெது எவர்க்கு என்று விடைகள் யாரும் கண்டதுமுண்டோ
ஒலை வந்ததா வேலையுண்டென்று ஓய்வு பெறவா ஒளிந்து விட்டீர். வேலன் பாதம் சாந்தி கொள்வீர் வேண்டுதல் வேறுமுளதோ ஐயா!
திருமதி மதினி விஜயகுமார் பொறியியலாளர்
SURBITON SURREY
11

Page 8
சற்குரு மணிமாலை
மாற்றறியாத செழும் பசும் பொன்னெ மாணிக்கமே சுடர் வண்ணக் கொழுந்தே கூற்றறியாத பெருந் தவருள்ளக் கோயிலிருந்த குணப் பெருங் குன்றே வேற்றறியாத சிற்றம் பலக் கனியே விச்சையில் வல்லவர் மெச்சும் விருந்தே சாற்றறியாத வெண் சாற்றுங் களித்தாய் தனி நடராஜவென் சற்குரு மணியே
திருஓங்கு, சீர்ஓங்கு, செஞ்சொற்தமிழ் ஓங்கு, தெய்வத் தலம் ஓங்கு இராசதானியாயும் திரு முருசு அருளாட்சியில் இலங்கு புனித நலமோங்கு நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டார் அமரர் ஆறுமுகம் இராசையா அவர்கள், அன்னாரின் இல்லத்தின் நாலாபக்கமும் முறையே சட்டநாதர் சிவன் ஆலயம், நல்லூர் முருகன் ஆலயம், மரதவளவுப் பிள்ளையார் ஆலயம், கொண்டலடி வயிரவர் ஆலயம், பூதவராயர் ஆலயங்கள் அரணாகத் திகழ்கின்றது. மேலும் அயலில் உள்ள அந்தணர் குடும்பங்களும் ஏனையோரும் தத்தமது இல்லங்களில் காவல் தெய்வங்களுக்கு கோவில் எழுப்பியுள்ளார்கள். இவ்வாறே அமரரின் இல்லத்தில் பரம்பரையாக பூசித்து வந்த அம்மனுக்கு கோவில் கட்டி பூசை புணர்க்காரங்கள் ஒழுங்காக நடத்த சிரத்தையுடன் செயலாற்றியுள்ளார். அன்னாரின் சுற்றாடல் சூழ்நிலைகளின் பேற்றால் அவர் முழுமையான சிவதொண்டில் ஈர்க்கப்பட்டு சிவானந்தப் பேறு பெற்றார்.
2. வாழ்க்கையின் முற்பகுதியில் யாழ்ப்பாணம் பெரிய கடையில் ஆயுள்வேத மருந்துக்கடை அத்துடன் கோவில் அபிஷேக வாசனைத்திரவியங்கள் விற்பனை நிலைய முகவராக திகழ்ந்தார் எனவே அத்தொழிலிலும் தெய்வத்திருப்பணிக்கு வேண்டிய பொருட்களை உற்ற வேளைகளில் உறுதுணையாக வியாபாரம் செய்து வந்தார். அன்னார் வியாபார நிலையத்திற்குச் செல்லும் போதும் நிலையத்திலிருந்து வீடு திரும்பும் போதும் நல்லூர் தேரடி முன்றலில் நின்று தூயமேனிச்சுடர் விடுசோதியை சிரமலர் மீது கரமலர் கூப்பிப்பிடியது சலியாத்
12

தழலது கண்ட மெழுகதுபோல நெக்குநெக்குருகி தொழுவதை பல தடவைகளில் கண்டின்புற்றேன்.
அன்னார் பண்டாரக்குளம் மரத வளவு விநாயகர் ஆலய திருவிழாக்களிலும் பரந்தன் 3ஆம் வாய்க்கால் பன்னைக்கண்டி பிள்ளையார் கோவில் வளர்ச்சியிலும் பேரவா செலுத்தி வந்தார். அங்கு தற்போது ஐங்கரன் பாத மலர் மீது போதமலர் தூவித் தொழுது சச்சிதானந்தப் பெரும் பேறு பெற இறைஞ்சுகின்றார்கள். மேற்படி சிவதொன்டின் மூலம் சரியை கிரியை யோக பதங்களில் திளைத்தோங்கித் தானதருமம் மகேஸ்வரபூசைகள் மூலம் உற்றார், உறவினர் ஊரார் உள்ளங்களில் ஓங்கிச் சுடர்ஒளியாய்க் கங்குள் பகவற்ற காட்சியராய் உதிக்கின்ற செங்கதிரின் ஒளிமயமாய்த் திகழ்கின்றார்.
சொல்லொழியப் பொருளொழியக் கரணமெலாஞ் சேர்ந்தொழிய வளாவொழிய துலங்கானின்ற அல்லொழியப் பகலொழிய நடுவே நின்ற ஆனந்த அனுபவமே அதீத வாழ்வே
ஓம் சம்போ சிவ சம்போ ஓம் SWééGums Dr, T.5LMEFT
13

Page 9
எங்கள் கொடி
வயிரமுத்து ஆறுமு
-
இரா தங்தம்மா செல்லம்மா பொன்ஜ
இரதி தினசபாபதி இளங்கோவனி இராசலக் சுமி. சதி தியபாமா < இளஞ சேயனி |பரமானந்தம்
அனுகூரியா இரத்தினபூபதி |ါur၈#### uphs, it பரமேஸ்வரி இராசரெத் தினம் விTதா 2 ா சோதிமலர் ரஜனி 5-9781 །
இராச செழியன் இராசசேரன் சரஸ்வதி
இந்திராதேவி
காசிப் பிள்ளை
குமரன் இரகுதரன் ரதிலட்சஷமி
இராமநாதன் வசந்தி
சிறிதரன் சிறிவதனி
மகிந் முகுந்
 
 
 
 
 
 
 
 
 
 
 

யில் மலர்ந்த பூக்கள்
pகம் அம்மனிப்பிள்ளை
ததுரை
பூச்சநீதான லகி சுமி கமலாதேவி سلکسے ད། ஜெகநாதனி
N சந்திரா
கேதீஸ்வரன் つ மனோரஞ் சினி ། சுந்தரமூர்த்தி
* யோகேந்திரனி
- இராசரெத் தினம் >வசநீதா Nஅரசரெத் தினம்
வினிதா குனரெத் தினம் \சிவரெத் தினம் தவரெத் தினம்
R
சிவபாக்கியம் அருணாசலம்
கோபாலரத் தினம் ހ;f%;"
புவனேஸ் வரி காணி டீபன்
`\း
தனஞ செயணி
இராசரெத் தினம்
நன்
தனி

Page 10
நல்லூர் சட்டநாத சிவன்கோவில் திருப்பொன்னுரஞ்சல்
பண்டிதர் சு. இராசையா நல்லூர், யாழ்ப்பாணம்
ஆசிரிய விருத்தம்
நீர்கொண்ட வேணியணி நிமலன் முன்னாள் நிலவுதமிழ்ப் பேரரசு நியமமாகப் பேர்கொண்ட வளநகராம் நல்லூர் தன்னில்
பிரதிட்டை பெறுசட்ட நாதர் மீது நேர்கொண்ட திருவூஞ்சற் பதிகம் பாட
நினைவார்தம் இடர்களைந்து சித்தியாக்கும் கார்கொண்ட புகர்முகத்தைக் கரத்தன் செய்ய
கமலமல ரடியிணையே காப்பதாமே
பதிகம்
எல்லையிலா மக்கள்மனம் உடையாவண்ணம்
எள்ளளவுங் கைவிடா தேந்துந் தெய்வம் பல்விதமாம் அலங்கார மூர்த்தி யாகிப்
பரவுமன்பர் பயந்தீர்க்க வந்த தெய்வம் தொல்லைவினை நீக்கியருள் செய்வீர் என்று
தோத்திரிக்கும் அடியர்துயர் தீர்க்குந் தெய்வம் நல்லைவளர் சிவனாராஞ் சட்டநாத!
நாயகியோ டமர்ந்தினிதே ஆடீ ரூஞ்சல்.
16

பல்லாண்டாய் வாழ்ந்திட்ட மன்னர் யாரும்
பகலவன்முன் பனியானார் பாரின் மீதே கல்விப்பொருள் நிலையொன்று கருது வோரும்
காற்றெதிரே பஞ்சானார் கண்டோ-மன்றெ எல்லாமே அழிந்தொழியும் காலம் வந்தால்
எண்ணியதே நடவாமல் இருக்கச் செய்யும் நல்லைவளர் சிவனாராஞ் சட்டநாத!
நாயகியோ டமர்ந்தனிதே ஆடீ ரூஞ்சல்
எல்லையிலாக் கருணைவடி வான ஈசன்
எங்கணுமே முழுமுதலாய்க் காட்சி தந்து சொல்லரிய புகழ்மாலை சூட்டு மன்பர்
தொல்லைவினை போக்குதற்காய்க் கோயில்கொண்டு அல்லலிலா தேவர்களையும் ஆளுந்தெய்வம்
ஆனந்த பொக்கிஷமே என்ன நின்ற நல்லைவளர் சிவனாராஞ் சட்ட நாத!
நாயகியோ டமர்ந்தினிதே ஆடீ ரூஞ்சல்.
கல்லால நீழற்கண் குருவாய் வந்து
சனகாமுதல் நால்வருக்கும் அருள்செய் மூர்த்தி வில்லாலே புரமூன்றும் மாய்த்த வீரன்
வேண்டியவர் வினைதீர்க்குங் கருணை வள்ளள் எல்லோர்க்கும் நீதியுடன் ஆண்ட மன்னன்
எழிலுடனே வைத்ததிருக் கோல மேவி நல்லைவளர் சிவனாராஞ் சட்டநாத
நாயகியோ டமர்ந்தினிதே ஆடீ ரூஞ்சல்
17

Page 11
பல்லாண்டு காலமதாய்த் தேடிக் காணார்
பழமறைகள் ஆகமங்கள் ஒதுமன்பர் எல்லார்தம் பயம்தீர்க்கும் ஈசன் கோயில்
எழுந்தருள வைத்திடுநல் லூரில் வந்த தொல்லையிலாச் சங்கிலியன் முன்னோர் வைத்த துகள்தவிர்ந்த தலமேவி யருள் பாலிக்கும் நல்லைவளர் சிவனாராஞ் சட்ட நாத!
நாயகியோ டமாந்தினிதே ஆடீ ரூஞ்சல்.
அல்லனவே அறியாத அன்பர் தம்மை
ஆனந்த வாழ்வளித்தாட் கொள்ளும் தெய்வம் நல்லனவே புரிதொண்டர் நாளும் போற்றும்
நம்பனவர் நடலைதவிர்த் தாளும் தெய்வம் பல்விதத்தால் பணியுமன்பர் பாவம் தீர்க்கும் பகரரிய மருந்தாகி வாழ்வு நல்கும் நல்லைவளர் சிவனாராஞ் சட்டநாத!
நாயகியோ டமர்ந்தினிதே ஆடீ ரூங்சல்
நல்லவர்கள் நாள்தோறும் ஈண்டித் தத்தம்
நலிவினைகள் தீர்க்கவருள் செய்யும் மூர்த்தி சொல்லரிய மாங்கனியைக் கணப திக்காய்த்
துகள்தீர்ந்த மதிவிரகால் ஈந்த வள்ளல் கல்லாதார் ஆயிடினும் கலக்க மில்லாக்
கருணைவடி வாந்தெய்வக் காட்சி தந்து நல்லைவளர் சிவனாராஞ் சட்டநாத!
நாயகியோ டமர்ந்தினிதே ஆடீ ரூஞ்சல்
18

பல்லியங்கள் பண்ணிசைக்கப் பரவும் தொண்டர் பக்குவமே பேணியருள் தேவ தேவன் புல்லியராய்த் தணைநினையார்க் கருளி லாதான்
போற்றுநர்க்கே அறக்கருணை புரியும் வள்ளல் அல்லதணில் பகல்தன்னில் அடையுந் துன்பம்
ஆண்டவனே தவிர்த்தருள்வீர் என்போர் ஏத்தும் நல்லைவளர் சிவனாராஞ் சட்டநாத!
நாயகிகொ டமர்ந்தினிதே ஆடீ ரூஞ்சல்
நில்லாத யாக்கைதனை நித்தம் பேணி
நிலையாக உள்ளதென நினையும் மூடர் கல்லாத மாக்களையே தெருட்டிக் காக்கும்
கருணைமிகு கற்பகமே கண்ணே அன்பாய் வல்லானாய் வாழ்வித்த வடிவோ உன்றன்
வண்மைதனைக் கண்டுள்ளம் மயங்கா நிற்கும் நல்லைவளர் சிவனாராஞ் சட்டநாத!
நாயகியோ டமர்ந்தினிதே ஆடீ ரூஞ்சல்.
பல்லுலகில் நாமெல்லாம் பல்கி வாழ
பரவுசிவ நெறிவாழ தமிழும் வாழ நில்லாதிவ் வுடலென்ற நினைப்பே வாழ
நிலையாக அறம்வாழ நீதி வாழ இ சொல்லுமறை யோர்வாழ மழையும் வாழ,
தொண்டர்பசு மகளிர்நிறை வாழ என்றும் நல்லைவளர் சிவனாராஞ் சட்டநாத!
நாயகியோ டமர்ந்தினிதே ஆடீ ரூஞ்சல்
19

Page 12
பத்திரிகை மரண அறிவித்தல்
ஆறுமுகம் இராசையா bblöIDI SDJIMöFIII
அன்னை மடியில் அன்னைமடியில் -1407,907 - 2006.917 O இறைவனடியில் இறைவனடியில் - 31.05.1997 ー31.05.1988
உயர்திரு ஆறுமுகம் இராசையா சட்டநாதர் வீதி, நல்லூர் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டனில் வசித்து வந்தவருமாகிய திருவாளர் ஆறுமுகம் இராசையா 31.05.1997 சனிக்கிழமை சிவபதம் அடைந்தார். அன்னார் யாழ்ப்பாணம் பெரியகடை ஆ. இராசையா அன்சன்ஸ், மருந்துக்கடை உரிமையாளரும், பரந்தன் பன்னைக்கண்டி 3ஆம் வாய்க்கால் பிரபல கம உரிமையாளரும், காலம்சென்ற தங்கம்மாவின் ஆருயிர்க்கணவரும், இரத்தினசபாபதி(Fort Henry Motel Kingston Canada) உரிமையாளரும், இரத்தினபூபதி ( கனடா), இராசரெத்தினம் - இராசையா மருந்துக்கடை(வவுனியா), இந்திராதேவி (நல்லூர் - இந்தியா) Dr.இராமநாதன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத்தந்தையும், தியாகராசா, சத்தியபாமா(கனடா) சோதிமலர் (நல்லுர் வவுனியா) இராசரெத்தினம் சமூகசேவை உதவி ஆணையாளர் (கிளிநொச்சி) , டாக்டர் வசந்தா ( லண்டன்) பரமானந்தம் இராசலெக்சுமி, காலம்சென்ற நடராசா பரமேஸ்வரி, காசிப்பிள்ளை சரஸ்வதி, அருணாசலம் கோபாலரெத்தினம் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் காலம்சென்ற பொன்னுச்சாமி செல்லம்மா, காலம்சென்ற சிவக்கொழுந்து செல்லத்துரை கணக்காளர் (கொழும்பு) முருகேசு இரத்தினம்மா(FloridaU.S.A) காலம்சென்ற அரசபிள்ளை நடராசா இலட்சுமி அம்மா ஆகியோரின் மைத்துனரும் இளங்கோவன் இளஞ்சேயன் அனுசியா (கனடா) காலம்சென்ற சிறிதரன், சிறிவதனி, ரஜிதா, விTதா, ரஜனி, இராசசெழியன், இராசசேரன் (வவுனியா) மகிந்தன்(அவுஸ்திரேலியா) முகுந்தன் (இந்தியா) காலம்சென்ற இரகுராம், குமரன்இரகுதரன் , ரதிலஷ்மி (லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனுமாவார். அன்னாரின் இறுதிச்சடங்குகள் இந்து சமய முறைப்படி 5.697 ஆம் திகதி வியாழக்கிழமை லண்டனிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது. மாலை 3 மணிக்கு Tamberth CrematOrium த்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது. அன்னாரின் அந்தியேட்டி, வீட்டுக்கிருத்தியம் 15ஆம் 16ஆம் நாட்களில் லண்டனில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவள் திரு இரத்தினசபாபதி (மகன்-கனடா) தொலைபேசி இலக்கம்-613-542-7651
திரு. இராசரத்தினம்(மகன்) சிறீதரன் இல்லம், இராசதுரைவீதி வவுனியா டாக்டர் இராமநாதன் (மகன் லண்டன், UK)தொலைபேசி இல: 0181-542 6877 திரு. செ. ரவீந்திரன் (மருமகன் கொழும்பு) தொலைபேசி இல 941 447702 திரு அ. சிவநாதன் JP சின்னப்புதுக்குளம் வவுனியா தொலைபேசி இல 3424 22542 திருவாளர் பரமானந்தம் ஜெகநாதன் காசிப்பிள்ளை இராசரத்தினம், நடராசா கேதீஸ்வரன்
சட்டநாதர்வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் 20
 

அன்னாரின் இறுதிக்கிரிகைகளின் போது திரு கு. கிட்ணர்(முன்னைய நாள் உதவி அரசாங்க அதிபர் வழங்கியஇரங்கல் உரை)
கந்தபுராணக் கலாச்சாரமூறிய நல்லூரில் வசித்த வைரமுத்து ஆறுமுகம் அம்மணிப்பிள்ளை தம்பதிகளுக்கு 14-07-1907 அன்று ஏக புத்திரனாக பிறந்தார். சிறுவயதில் திண்ணைப் பாடசாலையில் கல்வி கற்றார். அதன் பின் 1937ஆம் ஆண்டு தனது சொந்த வியாபாரமாக தமிழ் மருந்துக்கடையொன்றை யாழ் பெரிய கடையில் ஸ்தாபித்தார். 1932ஆம் ஆண்டு பிரபல வர்த்தகள் விசுவர் சிவக்கொழுந்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் இரண்டாவது மகள் தங்கம்மாவை விவாகம் செய்து மூன்று ஆண்பிள்ளைகளையும் இரண்டு பெண்பிள்ளைகளையும் பெற்று இல்லறவாழ்க்கையை நடாத்தினார். தனதுபிள்ளைகளை மாத்திரமல்ல மருமக்களையும் தன்பிள்ளைகள் போல் பராமரித்தார். யாழ்குடாநாட்டு மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிப்பகுதி சென்று விவசாயம் செய்து சிறந்த வாழ்க்கை நடாத்த முன்னோடியாகத் திகழ்ந்தார்.தனது வாழ்வின் கடைப்பகுதியை லண்டன் நகரில் இளையமகனுடன் களிக்கும் போது தாய்நாட்டின் சுதந்திர தாக உணர்ச்சியுடையவராகத் திகழ்ந்தார். தெய்வ வழிபாட்டிலும் சிறந்து விளங்கினார்.
திருவாளர் ஆறுமுகம் இராசையா அவர்களின் இறுதிக்கிரியையின்போது திரு நடராசா-(திருமதி ம. தர்மா வழங்கிய இரங்கல் உரை) செங்கணகத் தமிழ் வளர் புனித நல்லூர் கந்தர்கோட்டம் இராசதானியில், ஆறுமுகப் பெருமான் தன்னருளால் அவதரித்த அமரர் இராசையா இன்பத்தேனொப்ப தெள்ளமுதே எனில் மிகையாகாது. அன்னாரின் சிந்தை தெளி சிவதொண்டின் மூலம்சரியை. கிரியை யோக முதலிய நெறிகளில் தளைத்தோங்கி பக்தர்கள் சூழ் பண்டாரக்குளம் மருதவளவு பிள்ளையாார் திருக்கோயில் தொண்டராகவும் பன்னைக்கண்டி விநாயகராலய சிவதொண்டுச் சேவைகளிலும் ஈடுபட்டுத்தான தருமம் மகேஸ்வரபூசைகள் மூலம் ஓங்கு சுடரொளியாய் உற்றார் உறவினர் ஊரார் உள்ளங்களில் அருட் சோதியாய் கங்குல பகலற்ற காட்சியராய் அரனடிக்கீழ் அதாவது தில்லைத் தாண்டவ குஞ்சிதபாதத்தில் உறைந்து சிவபெருமான் சிலம்பொலி ஆடல் பாடல் சங்கனாத ஒலிகள் ஆர்ப்ப ஆர்ப்ப சூழலில் நிலைபெற்று இன்புறும் பேரானந்தப் பேற்றில் திளைத்திருக்கும் நிலையிலுள்ளார்.
21

Page 13
ஆத்திகடி
காப்பு ஆத்திசூடி யமர்ந்த தேவனை ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே 1. அறம் செய்ய விரும்பு 2. ஆறுவது சினம் 3.இயல்வது கரவேல் 4. ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
. ஊக்கமது கைவிடேல்
5
6 7. எண்ணெழுத் திகழேல் 8. ஏற்ப திகழ்ச்சி 9. ஐய மிட்டுண்
10. ஒப்புர வொழுகு 11. ஓதுவ தொழியேல் 12. ஔவியம் பேசேல் 13. ஒஃகஞ் சருக்கேல் 14. கண்டொன்று சொல்வேல் 15. ங்ப் போல் வளை 16. சனி நீராடு 17. ஞயம்பட வுரை 18. இடம்பட வீடெடேல் 19. இணக்கமறிந் திணங்கு 20.தந்தை தாய் பேண் 21. நன்றி மறவேல் 22. பருவத்தே பயிர்செய் 23. மன்று பறித்துண்ணேல் 24.இயல்பலாதன செயேல் 25.அரவ மாட்டேல் 26.இலவம் பஞ்சிற் றுயில் 27.வஞ்சகம் பேசேல் 28. அழகலாதன செயேல்
l. Desire to be charitable. 2.Sub due the anger 3.Withhold not your talents 4.Cease not to giving 5. Reveal not the wealth 6.Maintain the efforts. 7.Neglect not the writing and number. 8. Begging is degrading 9. Share the food. 10.Be co-operative 11...Never give up spiritual chanting 12. Don't speak ill of others 13.Maintain clarity in speech. 14.Talk not unnecessarily 15. Beflexible. 16...Batheshead)on Saturdays. 17. Becuritious in speech. 18.Cut your coat to Suit your size. 19.Choose your companions. 20.Care for your father and mother. 21. Begrateful. 22. Make hay while the Sun shines. 23. Avoid consuming others food. 24. Attempt not the impossible 25. Avoid playing with snakes. 26. Sleep on a soft bed. 27. Avoid uttering evil words. 28. Attempt not to do evil. 29.Acquire knowledge while young. 30. Forget not to be charitable. 31. Avoid interfering in others problem.
32 Cease to be rude
22

29.இளமையில் கல் 30.அறனை மறவேல் 31.அனந்த லாடேல் 32. கடிவது மற 33. காப்பது விரதம் 34. கிழமைப் படவாழ் 35. கீழ்மையக் காற்ற 36. குணமது கைவிடேல் 37. கூடிப் பிரியேல் 38. கெடுப்ப தொழி 39. கேள்வி முயல் 40. கைவனை கரவேல் 41. கொள்ளை விரும்பேல் 42. கோதாட் டொழி 43. சக்கர நெறி நில் 44. சான்றோ ரினத்திரு 45. சித்திரம் பேசேல் 48 சீர்மை மறவேல் 47. சுளிக்கச் சொல்லேல் 48. சூது விரும்பேல் 49. செய்வன திருந்தச் செய் 50. சேரிடமறிந்து சேர் 51. சையெனத் திரியேல் 52. சொற்சோர்வுபடேல் 53. சோம்பித் திரியேல் 54. தக்கோனெனத் திரி 55. தானமது விரும்பு 56. திருமாலுக் கடிமை செய் 57.தீவினை யகற்று 58.துன்பத்திற்கிடங் கொடேல் 59. தூங்கி வினைசெய் 60. தெய்வ மிகழேல் 61.தேசத்தோ டொத்துவாழ் 62.தையல் சொற்கேளேல் 83. தொன்மை மறவேல்
64. தோற்பன தொடரேல் 5ேநன்மை கடைப்பிடி
33. Be firm 34. Live according to your needs. 35. Avoid feeling of inferiority. 36. Maintain good manners. 37. Depart not your friends. 38. Spoil not the others. 39. Desire acquiring knowledge 40. Withhold not your capabilities. 41. Desire not to steal. 42. Avoid gambling 43. Learn to adjust 44. Keep the company of righteous 45. Avoid ambiguity in speech 46. Forget not to live a righteous life. 47. Utter not any ironies. 48. Do not gamble. 49. Attempt to do the best. 50. Join friends after fully knowing them. 51. Maintain your importance. 52. Be steadfast in your action. 53. Avoid being lazy. 54. Maintain respectability. 55. Desire to be charitable. 56. Be God's servant. 57. Avoid being lazy. 58. Allow not the worrying habit. 59. Work with rest periods. 60. Utter not blasphemy. 61. Harmonies with society. 62. Avoid listening to women. 63. Forget not your ancestry. 64. Cease to be always failure 65. Maintain righteousness. 66. Cooperate with the community. 67. Maintain being steadfast. 68. Avoid playing with water. 69. Cease to be finical. 70. Increase your knowledge. 71. Maintain to cultivate paddy. 72. Lead a righteous life. 73. Avoid displeasing others. 74. Cease using harsh words. 75. Give no room for sickness. 23

Page 14
66. நாடொப்பன செய் 67. நிலையில் பிரியெல் 68.நீர் விளையாடேல் 89.நுண்மை நுகரேல் 70.நூல்பல கல் 71. நெற்பயிர் விளை 72. நேர்பட வொழுகு 73. நைவினை நணுகேல் 74. நொய்ய வுரையேல் 75. நோய்க் கிடங்கொடேல் 78. பழிப்பன பகரேல் 77யாம்பொடு பழகேல் 78.யிழைபடச் சொல்லேல் 79.பீடு பெற நில் 80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ் 81 பூமி திருத்தியுண். 82. பெரியோரை துணைகொள் 83.பேதமை யகற்று 84. கையாலோ எணங்கேல் 85.பொருடனைப் போற்றி வாழ் 86. போர்த் தொழில் புரியெல் 87. மனந் தடுமாறேல் 88. மாற்றானுக்கிடங்கொடேல் 89மிகைப் படச்சொல்லேல் 90மீதுண் விரும்பேல் 91.முனை முகத்து நில்லேல் 92.மூர்க்கரோடிணங்கேல் 93. மெல்லினல்லா டோள் சேர் 94.மேன்மக்கள் சொற்கேள் 95.மைவிழியார் மனையகல் 96.மொழிவதற மொழி 97.மோகத்தை முனி 98.வல்லமை பேசேல் 99.வாதுமுற் கூறேல் 100 வித்தை விரும்பு 101 வீடு பெற நில் 102உத்தமனாயிரு 103ஊருடன் கூடிவாழ் 104.வெட்டெனப் பேசேல் 105.வேண்டி வினைசெய்யேல் 106.வைகறைத் துயிலெழு 107ஒன்னாரைத் தேறேல் 108 ஊரஞ் சொல்லேல்
76. Displease not the others. 77. Avoid to acquaint with snakes. 78. Utter no false word. 79. maintain your respectability. 80. Give praise to the learned. 81. Cultivate for your food 82. keep the company of the respectable. 83. Irradicate ignorance. 84. Conform not with women. 85. Take care of property. 86. Refrain from joining the army. 87. Maintain your consistency. 88. Keep the enemy at a distance. 89. Avoid to exaggerate your thoughts. 90. Desire not to be gulton. 91. Avoid being at the battlefront. 92. Conform not with the evildoers. 93. Join the gentle women. 94. Listen to the nobility. 95. Avoid the harlot's house. 96. Be eloquent. 97. hate to be passionate. 98. Avoid being boastful. 99. Initiate not the argument. 100. Desire to acquire knowledge. 101. Live a life to attain the paradise. 102. Maintain to be righteous. 103. Cooperate with the community. 104. Be soft in speech. 105. Beg not to obtain work. 106. Always be early to rise. 107. the incorrigible can never be mended.
108. Always be impartial.
24

SA BHAJANS
Sai Gajanana dinavana Sindhura vadana hrudajana palana Ambikathanaya amaratheeswara Aganitha guna ganalananda dayaka
Atma Rama anada Ramana Atchutha Kesawa Hari Narayana Bhavabhaya harana Vanditha charana Ragu kula bhushana rajiva locchana Adi Narayana anatha sayana Satchidananda Sri Sathya Narayana.
Jegathpari Hari Sai Gopala Jegathodhara Sainandala Maduradhipathe Krishna Gopala Madura madhura hey sai Gopala Jegathodhara sai Nandalala Sai Nandalalajaijai Gopala
Kesava Madhava Madhu Sudhana Sridhara Govinda Narayana Murali Manohara Janardhna Achyutha ananda Narayana Govinda jai jai Gopala jai jai.
Ragupathi Ragava Raja Ram Pathitha Pavana Sita Ram Rama rama Jaya raja ram Rama rama jaya Sita ram
25

Page 15
சிரத்தையுடனும் தைரியத்துடனும் இரு ஆத்ம ஞானத்தை அடை பிறர் நலனுக்காக உன் வாழ்க்கையைத் தியாகம் செய் இதுவே நான் விரும்புவது, இதுவே என் ஆசீர்வாதம் - சுவாமி விவேகானந்தர்
 

நல்லைநாயகி சமேத நல்லைநாதராகும் சட்டநாதர் சித்திரத்தேரில் சிங்காரப்பவனி பண்டிதர் சு. இராசையா நல்லூர் யாழ்ப்பாணம் (சிட்னி, அவுஸ்திரேலியா)
சித்திரத்தேர் ஏறிவரும் சட்டநாதா! - உமைச்
சிந்தனையாற் போற்றி செய்வோம் சட்டநாதா! பக்தியுடன் பூசைசெய்வோம் சட்டநாதா!- உமைப்
பாடுமன்பர் பயந்தீர்ப்பாய் சட்டநாதா எத்திசையும் போற்றிடுவார் சட்டநாதா - இனி
எங்கவலை தீர்த்திடுவீர் சட்டநாதா! வித்தகனே விடையேறும் சட்டநாதா! - எங்கள்
வேதனையைத் தீர்த்திடுவீர் சட்டநாதா!
தேரோடும் வீதிதனில் நல்லைநாத - நீர்
தெருவோரம் எழுந்தருள்வீர் நல்லைநாதா! வேரோடும் வினைபோக்கும் நல்லைநாதா! - நாம்
வேண்டும்வரந் தந்திடுவீர் நல்லைநாதா! பாரோடும் சங்கிலியன் நல்லைநாதா - அன்று
பறங்கியர்க்குத் தோற்றுவிட்டான் நல்லைநாதா! ஊரோடும் உன்திருத்தேர் நல்லைநாதா - எங்கும்
உயர்வாக வந்ததுவே நல்லைநாதா!
வேறு
ஆடி வருகுது தேரங்கே - நன்றாய்
அசைந்து வருகுது தேரங்கே பாடி மகிழுவோம் தேரங்கே - நன்கு
பார்த்து மகிழுவோம் தேரங்கே ஓடி வருகுது தேரின்றே - மணி
ஒயா தொலிக்குது தேரின்றே நாடிவருகுது தேரின்றே - நல்லை
நாயகி நாயகர் தாள்தொழுவோம்
கூடியே தேரை இழுத்திடுவோம் - உன்றன் கோலப் பவனியைக் கண்டிடுவோம் நாடியே அன்பாயிழுத்திடுவோம் - நல்லை
நாயகி யாளையும் வணங்கிடுவோம் ஆடியே நின்புகழ் பாடிடுவோம் - எங்கள் ஆண்டவன் சந்நிதி கூடிடுவோம் தேடித் தேடொனாச் சிவனாரை - இன்று
சித்திரத் தேரினிற் கண்டிடுவோம்
திருவிருத்தம்
அமிழதனைய யமுனைநதித் தீர்த்தங் கொண்டே அருமறைகள் ஆகமங்கள் ஒதும் அன்பர் பழுதில்யமு னாரியெனும் ஏரிசேர்த்துப்
பாராண்ட பூரீசிங்கா ரியனார் நித்தம் எழுந்தருள் வைத்திடுநல் லூரில் மேவும்
எழில்சட்ட நாதரெனுஞ் சிவனார் என்றும் பழகுதமிழ்ப் பாமலரால் அர்ச்சிப் போர்தம்
பழவினைகள் போக்கியருள் பாலிப்பாரே
27

Page 16
குலதெய்வம் அம்மனின் நாம அர்ச்சனை மாலை
ஓம் உமாய நம ஓம் பார்பதியே நம ஓம் பத்திராயே நம ஓம் சர்னாணியே தம ஓம் விசயாயே நம ஓம் வாணியே நம ஓம் சேயாயே நம ஓம் கெளரியே நம ஓம் கமலப்பிரியரயே நம ஓம் சரஸ்வதியே நம் ஓம் ஸ்க்கமியே நம ஓம் சர்வதங்கியே நம
ஓம் காளமாயேஸ்வரியே நம ஓம் மாதங்கியே நம
ஓம் புவனேஸ்வளியே நம ஓம் காளியே நம ஓம் துர்க்காயே நம
ஓம் வடுகவயிரவியே நம ஓம் அபிராமியே நம
ஓம் அன்னபூரணியே ELČ. ஓம் மகேஸ்வரியே நம
விரேஷ் தினங்கள்
சித்திரைவருடப் பிறப்பு வைகாசி விசாகம் நவராத்திரி
விசயதசமி
தீபாவளி மார்கழி- திருவாதிரை
தைப்பொங்கள்
தைப்பூசம் பங்குனித்திங்கள்
 

எங்கள் குடும்பத்தின் தலைவனாய் பண்போடு வழி நடந்து, முழுவாழ்வை வாழ்ந்து காட்டி, எதிர்பாராத நேரத்தில் எம்மை விட்டு அகன்று, பெரும் கடலில் சங்கமாகும் நேரந்தன்னில் எங்கள் கலங்கிய நிலை அறிந்து உற்ற உதவி தந்து, ஆறுதல் மொழி பேசி நேரில் வருகை தந்து, தொலைபேசி, அஞ்சள் மூலம் அநுதாபம் கூறி, மலர்வளையம் வைத்து, மலர் அஞ்சலி செலுத்தி, அஞ்சலி உரை நிகழ்த்தி, நினைவஞ்சலிக்கு ஒத்தாசை புரிந்து மற்றும் பல வழிகளில் பேருதவி புரிந்தது மட்டுமன்றி எங்கள் வேண்டுகோளை ஏற்று அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அந்தியேட்டி, வீட்டுக் கிருத்தியத்திலும் பங்குபற்றிய உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனங் கனிந்து சிரந் தாழ்த்தி நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்படிக்கு இ. இரத்தினசபாபதி குடும்பத்தினர் தியாகராசா இரத்தினபூபதி குடும்பத்தினர் இ. இராசரத்தினம் குடும்பத்தினர் இராசரத்தினம் இந்திராதேவி குடும்பத்தினர்
இ. இராமநாதன் குடும்பத்தினர்
Kingston 208 Nor Hill Rall 90 Saddanathar Rd Ontario Wimbledon Nallur Canada London Jaffna

Page 17