கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொன்னையா குருநாதபிள்ளை (நினைவு மலர்)

Page 1
இணுவில் மஞ்சத்தடியை
55.6UstairGOGOU அவர்களின் சிவ
 
 
 
 

ல்லையைப் பிறப்பிடமாகவும்
வசிப்பிடமாகவும் கொண்ட

Page 2

காங்கேசன்துறை மாங்கொல்லையைப் பிறப்பிடமாகவும் இணுவில் மஞ்சத்தடியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு.பொன்னையா குருநாதபிள்ளைN
அவர்களின் சிவபதப்பேறு குறித்த
B606:016 I06ծfi

Page 3
  

Page 4

திருச்சிற்றம்பலம்
விநாயகர் காப்பு பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.
தேவாரம் மந்திர மாவது நீறு வானவர் மேலது நிறு சுந்தர மாவது நீறு துதிக்கப்படுவது நிறு தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நிறு செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே.
திருவாசகம் முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம் சித்தமலம் அறிவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட அத்தனெனக் கருளியவா றார் பெறுவார் அச்சோவே.
திருவிசைப்பா ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றோ உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் ஆத்திக்கும் தேனே

Page 5
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங்காக
தெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயைத்
பல்லாண்டு கூறுதுமே.
திருப்பல்லாண்டு ஆரார் வந்தார் அமரர்
குழாத்தில் அணியுடை ஆதிரை நாள் நாராயணனொடு நான்முகன்
அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
திசை அனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம் சிவனடியே சிந்திக்கும் திருப்பெருக்கு சிவஞானம் பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வறிய மெஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்.
திருப்புகழ் பத்தியால் யானுனைப் பலகாலும் பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனப் பெருவாழ்வின் முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமா தானசற் குணநேயா ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞான சத்தினிபாதா வெற்றி வேலாயுதப் பெருமாளே.
திருச்சிற்றம்பலம்
-: 04:-

6 சிவமயம்
காங்கேசன்துறையைத் தோற்றிடமாகவும், மஞ்சத்தடி, இணுவிலை தற்காலிக வாழ்விடமாகவும் கொண்ட அமரர் திரு.வானினையா குருநாதபிள்ளை அவர்களின்
மணர்ணக வாழ்வியற் பதிவேடு
அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்தும் காத்தும் வரும் மேலாம் பரம்பொருளின் திவ்விய கருணையின் வெளிப்பாடாய் அமையப்பெற்றதே இப்பிரபஞ்சம். இப்பிரபஞ்சம் அனைத்திலும் அப்பரம்பொருளினால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவன்களும் ரட்சிக்கப்பட்டு முடிவில் மறைக்கப்படுகின்றன. இதுவே அப்பரம் பொருளின் சிருஷ்டியின் வரையறையாகும். இச்சிருஷ்டியின் நியதிகட்கமைய இப்பூவுலகின் கண் பிறப்பெனும் தன்மையடைந்து அனைத்து ஜீவன்களும் முடிவில் இறப்பின் வயப்படுதல் தவிர்க்க முடியாதது. அந்த மேலாம் பரம்பொருளின் சிருஷ்டியில் அரிதினும் அரிதாகிய உயர்நிலையுடையதாகச் சிருஷ்டிக்கப்பட்டது மானுடம் ஆகும். மானுடத்தின் மேன்மைதான் என்ன? மானுடத்தின் சிந்திக்கும் ஆற்றலும் உணர்வாற்றலும் மானுடத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள அற்புதமான கொடைகளாகும். சிந்தித்துணரும் அற்புத ஆற்றலால்தான் மானுடம் உயர்வுபெற்று விளங்குகிறது. மானுடர் தம் சிந்திக்கும் திறனால், வாழ்வு என்பது என்ன? நாம் பிறந்து வாழ்வதின் நோக்கம் யாது எம்மை இயங்கவைக்கும் மேலான சக்தி எது என்றெல்லாம் உய்த்துணர்ந்து அதன் பலனாய் வாழ்வின் உயர் வரையறைகளைக் கண்டுகொண்டது. அவ்வரையறையின் நியமங்களாக உயர்பண்புகளையும் ஒழுக்கக் கடப்பாடுகளையும் வகுத்தது. இவற்றிலும் மேலாக அம் மாபெரும் சக்தியைக் கடவுளாகக் கண்டுள்ளது. இவ்வரிய வரையறைகளை ஏற்றுக் கொண்ட மானுடர் கடவுளை வணங்குவதும் வாழ்த்தல் செய்தலுமாய்த் தம் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றினர். இதனால் மண்ணில் நல்லவண்ணம் வாழும் பேறுபெற்றனர்.
- O.S.

Page 6
இந்நியதிகட்கமைவாக மண்ணில் நல்லவண்ணம் பிறந்து விட்டோம். அடுத்து எமக்குக் கிடைக்கவுள்ளது மிகவும் யதார்த்த பூர்வமான மாற்றமுடியாத இறப்பு எனும் நிலை. இத்தன்மையை உணர்ந்த மேலோர் அவ்விரண்டு நிலைகட்குட்பட்ட காலமானது எமக்குக் கிடைத்துள்ள “பொன்னான காலம்” என்று உணர்ந்து அக்காலத்தைப் போற்றிச் செயலாற்ற முயலுகின்றனர். பிறத்தல், இறத்தல் என்ற இருநிலைகளுக்கும் இடைப்பட்ட காலம் எவ்வளவு? ஒருவருக்குமே தெரியாத காலக்கணக்கு. ஒருவருமே அறிந்து கொள்ள முடியாத காலத்தின் கணக்காக அது இருப்பதனை மானுடரில் நேர்மையானவர்கள், உன்னத நிலையிலுள்ளவர்கள் எல்லோரும் அக்காலத்தைப் பயனுள்ளதாக வாழ வழிபல சொல்லிச் சென்றுள்ளனர். அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட நல்வழிமுறைகளை மேற்கொள்வதின் பயனாய் மண்ணில் மாந்தர்கள் வாழ்வாங்கு வாழமுடிகிறது. இவற்றுக்கமைவாக மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து விண்ணில் இடம்கொண்டவரே அமரத்துவமடைந்த பொன்னையா குருநாதபிள்ளை அவர்கள்.
செந்தமிழும் சைவமும் செழித்தோங்கும் உத்தமபதியாகிய யாழ்ப்பதியின் வடபால், நீர்வளமும் நிலவளமும் மிக்கதாய காங்கேசன்துறையெனும் வரலாற்றுப் பிரசித்திபெற்ற திருநிறைப் பதியில், "மாங்கொல்லை” எனும் பகுதியில் உள்ள உயர்சைவ வேளாண்குலத்துதித்த உத்தமத் தம்பதியராகிய அமரர்கள் பொன்னையா தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அருஞ் செல்வனாக 1928.01.01 இல் அவதரித்தார் அமரர் அவர்கள். சிவபதப்பேறடைந்த வேலாயுதபிள்ளை என்பவரை உடன்பிறப் பாகக் கண்டு அமரர் இளமையில் இன்புற்றிருந்தார். கல்வியெனும் கண்திறக்கப் பெற்றோர் அமரர் அவர்களை யா/நடேஸ்வராக் கல்லூரியில் அனுமதித்தனர். அமரர் அவர்கள் போதியளவு கல்வி அறிவு பெற்றவராய்த் தொழில்வாய்ப்பினைத் தேடலுற்றார். அதன் விளைவாக காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தில் கடமைபுரியும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்றார்.
-: 06:-

இளமைப் பருவத்தில் இருந்தே இறைபக்தியும் நற்பண்பு களும் மிக்கவராய் விளங்கிவந்தார். தமது குலதெய்வமான மாங்கொல்லை "இங்கினிகட்டி’ வயிரவப் பெருமான் மீதும், காங்கேசன்துறை ஐயனார் பெருமான் மீதும், மிகுந்த பக்தியுடைய வராய், அவ்வாலயங்களின் பூஜைகள், விழாக்கள் என்பவற்றைச் செய்வதுடன் ஆலயத் தொண்டுகளிம் ஈடுபட்டவராய் வாழ்ந்து தமது ஆன்மீக நிலையை மேம்படுத்தினார்.
தமது இல்லற வாழ்க்கையில் அமையப்பெற்ற அருந் துணைவியாக மாங்கொல்லையைச் சேர்ந்த அமரத்துவமடைந்த சிற்றம்பலம் பார்வதி தம்பதியரின் அருஞ்செல்வியும் அமரர் தம்பிராசா, ஆறுமுகம், சடாசிவம் ஆகியோரின் அன்புச்சோதரியு மாகிய அமரர் அன்னம்மா அவர்களை உவந்து கரம்பற்றி இல்லறமாம் நல்லறத்தினை இனிதே மேற்கொண்டொழுகி வரலானார். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத சத்தியப் பிடிப்புள்ளவராக வாழ்ந்தவர் அமரர் அவர்கள்.
இல்லறத்தன் இனிய பயனாக இறைபதடைந்த சிவலிங்கம், விமலாதேவி, மோகனாதேவி, விக்னேஸ்வரி, கமலாதேவி, ரஞ்சினிதேவி ஆகிய அருஞ்செல்விகளைப் பெற்றெடுத்து அவர் தம் மழலையில் மகிழ்ந்து அவர்களை நல்வழிப்படுத்தி அவர்தமை நன்நிலையடையச் செய்தார். தம் செல்வங்களின் வாழ்வை மலரச் செய்யும் நோக்கில் ஜெயரட்ணசிங்கம், தருமராசா, சித்திரவேலாயுதம் ஆகியேராரை அருமை மருமக்களாகத் தேர்ந்தெடுத்து மகிழ்ந்தார். தம்செல்வங்கள் பெற்றுவந்த ஜெனித்தா, ஜெயந்தா, ஜெயந்தன், ஜெசிந்தா, ஜெயநந்தா, ஜெயவிந்தா, கஸ்தூரி, தனுஜன், சஜிபன், டினேஸ், சர்மிளா, விதூஸ் ஆகியோரை அருமைப் பேரப்பிள்ளை களாகவும் கண்டு ஆனந்தமடைந்தார்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த அமரர் அவர்கள், தாம் பூவுலகில் வந்த கடமையை முடித்து இயற்கையின் மாறா விதிக் -: 07:-

Page 7
கமைய 2006.02.11 அன்று மன்றாடும் மலரவன் திருப்பாதங்களைச் சரணடைந்தார். பக்தியும் உள்ளத்துயர்வும் கொண்ட பண்பாளரை பரமசிவன் பாதாரவிந்தங்களில் என்றென்றும் நிலைபெற்றிருக்கத் திருவருள் புரிந்துள்ளான். அமரர் அவர்கள் நித்தியானந்தப்பேறு பெற்றுய்ய வேண்டும் எனவும், அவர்தம் பிரிவால் மனம்வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மனத்துயர் அகலவும் எல்லாம்வல்ல பரம்பொருளின் பாதார விந்தங்களைப் பணிந்து ஏத்துகிறேன்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!
சிவானந்தவாரிதி சிவத்திரு.வ.குமாரசாமிஐயர்
-: 08:-

s சிவமயம்
அருளமுதிச்சொல்வாரிதி சிவத்திருவகுமாரசாமிஜயர் அவர்களினி உள்ளத்த நெகிழ்வுரைகள்
***RA*S*M*A*
“உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசா உயர்ந்த பண்பாளன்”
கலியுகவரதனாகிய காங்கேயப்பெருமானின் விக்கிரகம் வந்திறங்கியபடியால் காங்கேசன்துறையெனப் புனிதநாமம் கொண்ட ஷேத்திரத்தில், மாங்கொல்லை எனும் கவின்மிகு கிராமத்தில் தோன்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமாகிவிட்டவரே அமரத்துவமெய்திய பொன்னையா குருநாதபிள்ளை அவர்களாவார். அமரர் அவர்களின் தந்தையார் பொன்னையா அப்பா அவரின் தமையனார் சின்னையா அப்பா, அவர்களின் பிள்ளைகள் எல்லோரையும் எமக்கு மிக நீண்டகாலமாக அறிந்திருக்கும் வாய்ப்பிருந்தது. அவர்கள் உயர்ந்த பண்பாடும் சிறந்த மனப்பாங்கும் உடையவர்கள். இந்த வகையில் அமரர் அவர்களின் தொடர்பும் எமக்கு ஏற்பட்டது. அமரர் அவர்கள் தமது குலதெய்வமாகிய காங்கேசன்துறை ஐயனார் தேவஸ்தானம், மாங்கொல்லை இங்கினிட்டி அருள்மிகு ஞானவைரவர் தேவஸ்தானங்களில் உபயங்கள், இறைவழிபாடு களில் ஈடுபட்டு மிகுந்த ஒரு இறைபக்தனாக இருந்து தமது வாழ்நாளை பயனுள்ளதாக்கிக் கொண்டார்.
அமரர் அவர்களிடமிருந்த உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத உயர்ந்த குணம், அவர்மீது எம்மை அளவு கடந்த அன்புவைக்கத் தூண்டியது. எதையும் ஒளிவு மறைவின்றி நேரடியாகப் பேசுவார். இது மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய உயர்ந்த பண்பாடாகும். இவரின் அடியொற்றி இவரின் மைந்தனாகிய அமரர் சிவலிங்கமும் வலிவடக்குப் பிரதேச சபையில் எம்முடன் கடமையாற்றிய காலங்களில் அன்பாகவும்
பண்பாகவும் பழகிவந்தார்.
س: 09^ست

Page 8
அமரர் அவர்களின் இழப்பர் அவரின் குடும்பத்தவர்கள் மிகவேதனை அடைவதை எம்மால் உணரமுடிகிறது. ஆனாலும் வியாக்கிரபாதர், பதஞ்சலி முனிவர்களுக்கு சிவபிரான் தமது திருநடனக்காட்சியை தரிசிக்கச்செய்த தைப்பூசத் தினத்தில் இவர் இறைவனுடன் இரண்டறக்கலந்த புனித நிகழ்வைக் கருத்திற் கொள்ளும்பொழுதும் இவரின் அந்தியேஷ்டி தினம் மாசிமகத் திருநாளில் வருதைச் சிந்திக்கும்பொழுதும் யார்க்கும் எளிதிற் கிடைக்காத பெரும்பேறு பெற்றுவிட்டார் என்பதையறிந்து மனச் சாந்தியடையவேண்டும்.
அமரர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமெனவும் அவர்தம் பிரிவால் துவழும் குடும்பத்தவர்களும் மனச்சாந்தியடைய வேணர் டுமெனவும் எல்லாம் வல்ல அம்மையப் பனைப் பிரார்த்திப்போமாக.
மயிலனி, சிவானந்தவாரிதி சுன்னாகம். சிவத்திரு.வ.குமாரசாமிஐயர்
-: 10 :-

கந்தர் சவடிடி கவசம் காப்பு நேரிசை வெண்பா ததிப்போர்க்கு வல்வினைபோம் தன்பம் போம் நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும் நிமல ரருள்கந்தர் சஷ்டி கவசஞ் தனை
அமரரிடர் தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.
நால் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன் பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மைய னடஞ்செயும் மயில்வா கணனார் கையில் வேலாலெனைக் காக்கவென்று வந்த வரவர வேலா யுதனார் வருக
-: 11 :-

Page 9
வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்திசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவண பவனார் சடுதியில் வருக
ரவண பவச ரரரர ரரர ffos 600 1616 fffffffff ffffff விணபவ சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென
வசர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை யாளு மிளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சீவ குகன்தினம் வருக ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் -: 12:-

ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்டியத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமுந் தரித்த கண்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நாலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயிறு உந்தியும் தவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்னம் பதித்த நற்சீ ராவும் இருதொடை அழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென
tg_ტდტრ00) tg_ტდრ6001 tg_ტტ600) tg_ტ600I
卵卵 卵 卵「卵J卵 JJJ G. G. G. G? (6666 (6666 (6666 (666 டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்த விந்த மயிலோன் விந்த முந்த முந்த முருகவேள் முந்த என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் ததவம் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதனென்று உன்றிரு வடியை உறுதியென் றெண்ணும் என்தலை வைத்தன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க
-: 13 :-

Page 10
பொடியுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி இரண்டும் வேலவர் காக்க நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்தின வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க கைகள் இரண்டும் கருணைவேல் காக்க முன்கை இரண்டும் முரண்வேல் காக்க பின்கை இரண்டும் பின்னவ விருக்க நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க
-: 14 :-

முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்த கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்கத் தடையறத் தாக்க பார்க்கப் பார்க்கப் பாவம் பொடியட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தம் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்தன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்படு மண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டா ளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை யடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைக ளென்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்தடன்
-: 15 :-

Page 11
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதமஞ் சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்த குலைந்திட மாற்றார் வஞ்சகள் வந்த வணங்கிட காலதா தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரன்று புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோடப் படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுடனங்கம் கதறிடக் கட்டு கட்டி யுருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்த குத்த கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலத வாக விடுவிடு வேலை வெருண்டத வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியுங் கரடியும் இனித்தொடர்ந் தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்தயர் அங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறந்த ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
-: 16 :-

பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரணை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீயெனக் கருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணா ளரசரும் மகிந்தற வாகவும் உன்னைத் ததிக்க உன்திரு நாமம் சரவண பவனே சையொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொளி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் காத்தத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை அழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்தறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசமாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியி லணியப்
-: 7 :-

Page 12
பாச வினைகள் பற்றத நீங்கி உண்பதம் பெறவே உன்னரு ளாக அன்புட னிரகழி அன்னமும் சொன்னமும் மெத்த மெத்தாக வேலா யுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைகுற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் தவசம் வாழ்க வாழ்களின் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செயினும் பெற்றவன்நீகுரு பொறுப்பதன் கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்த மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசாரத்தடன் அங்கந் தலக்கி நேச முடனொரு நினைவத வாகிக் கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காத தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஒதியே செபித்து உகந்தநீறணிய அட்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
-: 18 :-

மாற்றல ரெல்லாம் வந்த வணங்குவர் நவகோள் மகிழ்ந்த நன்மை அளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாங் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியால் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்தரு சங்கா ரத்தடி அறிந்தென தள்ளம் அஷ்டலட்சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்தண வாக சூரபத் மாவைத் தணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள என்றன தள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேலே போற்றி உயர்கிரி கனக சபைக்கோ ரரசே மயில்நட மிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவண பவலும் சரணம் சரணம் சண்முகா சரணம்.
முற்றும்
-: 19 :-

Page 13
ஒளவையார் அருளிச்செய்த விநாயகர் அகவல்
LSLESLLLLSLLSSMLESLLSLLLLELSLLMLSSLLSMLALSLSLSLSLSLLSLLLLESLSLESLLLLSLSSL
மதுரமொழி நல்உமையாள் புதல்வன் மலர்ப்பதத்தை முதிரதினைய வல்லவற் கரிதோமுகில்போல் முழங்கி அதிர நடந்திடும் யானையும் தேருமதன் பின்வரும் காதங்கிழவியும் காதங்குல மன்னனே.
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞானும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் ஐந்து கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதம் நின்ற கற்பக் களிறே முப்பழம் நுகரும் மூஷிக வாகன இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்துந் தெளிவாய் பொருந்தவே வந்தன் உளந்தனிற் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திரமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் றன்னை யடக்கு முபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளி கருவிக ளொடுக்கும் கருத்தினை யறிவித்து இருவினை தன்னை யறுத்திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே -: 20 :-

ஒன்பது வாயி லொருமந் திரத்தால் ஐம்புலக் கதவை யடைப்பதுங் காட்டி ஆறா தாரத் தங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பி னாவி லுணர்த்திக் குண்டலி யதனிற் கூடிய வசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட வுரைத்து மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலா லெழுப்புங் கருத்தறி வித்தே அமுத நிலையு மாதித்த னியக்கமுங் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தி னிரெட்டு நிலையும் உடற்சக் கரத்தி னுறுப்பையும் காட்டி சண்முக தூலமுஞ் சதுர்முக சூக்கமும் எண்முக மாக இனிதெனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட வெனக்குத் தெரியெட்டு நிலையுந் தெரிசனப் படுத்தி கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக் கருளி என்னை யறிவித் தெனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயந் தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து இருள்வெளி யிரண்டுக் கொன்றிட மென்ன அருள்தரு மானந்தத் தழுத்தியென் செவியில் எல்லை யில்லா ஆனந்த மளித்து அல்லல் களைந்தே யருள்வழி காட்டிச் சத்தத்தி னுள்ளே சதாசிவங் காட்டி சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி அணுவிற் கணுவா யப்பாலுக் கப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தி னரும் பொருடன்னை நெஞ்சக் கருத்தி னிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே
-: 21 :-

Page 14
27 நட்சத்திர தேவதைகள்
പ~~~പ്പ~~~~പ്പെടുപ്പപ്പ~~പ്പേപ്പ
அஸ்வினி
பரணி கார்த்திகை
85 மிருகசிரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் Sussöub LD&b
ԱՄib உத்திரம் அத்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுசம் கேட்டை முலம் பூராடம் உத்தராடம் திருவோணம் அவிட்டம்
சதயம் பூரட்டாதி உத்தரட்டாதி ரேவதி
சரஸ்வதி துர்க்கை அக்னி பிரம்மன் சந்திரன் பரமசிவன் அதிதி பிரகஸ்பதி ஆதிசேஷன் சுக்கிரன் பார்வதி சூரியன் சாஸ்தா விஸ்வகர்மா
வாயு குமரன் லெட்சுமி இந்திரன் 9aj வருணன் கணபதி விஷ்ணு
68585
எமன்
குபேரன் காமதேனு 8Fର୪f

Isốsse mõ30
IIGწgqimზრტ IIණුupයීම (W9IIfმსხ9授n器的逗m函0 IIIs guļo{{pයීෂිණIsắsmỗ30 Qყ9|0ხეზ]്q9ഴ്ച与鸣亏函0 之†+ qÉmikorosíssý?119IIÓ01@gắq?!?!!?!!07 Iúm&) 十十十(ųÚG|Go) ந9ஜூேழழிப்Ļogéologio写009尽四999Ļ9$$III??IIGIÐ평城路uk&Om령qP២២ទ្រ +++t—++ (ųÚG|Go) IIGIquipps@(ųúGIG>) (ųÚJHG) queựII-1919091þĻssimilono?) qຫຼd)- (ųúOligo) Iloilísiqoğ† 19091þļiņ1003Istoņsố0 †+ sýrðılın + qsoIlmsb009.pLITO
-: 23 :-

Page 15
S
S5
N
s
这
O
Y
sZ
篮
岔
s
எங்கள் இதயங்களில் நீங்காத நினைவுடன் வாழ்ந்து இ கொண்டிருக்கும் எங்கள் ஐயா தைப்பூசத்தினத்தன்று சிவபதம் அடைந்த செய்தியினை அறிந்து சகல வழிகளிலும் ? உதவியும், ஒத்தாயும் நல்கிய உற்றார், உறவினர், நண்பர்கள் : அனைவருக்கும், இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டவர் களுக்கும், தொலைபேசி, கடிதங்கள், தந்திகள் ஊடாக 醫 அனுதாபம் தெரிவித்த ஆறுதல் அளித்தவர்களுக்கும் எமத 怒 ஐயா அவர்களுக்கு இரங்கல் உரையும், வாழ்வியற்
பதிவேடும் வழங்கியுதவிய சிவத்திரு.வ.குமாரசாமிஐயா
g O o அவர்கட்கும், இன்றைய அந்தியேட்டி, வீட்டுக்கிருத்திய 嶺 நிகழ்வுகளில் கலந்தகொண்டவர்களுக்கும் எங்கள் ( உளப்பூர்வமான நன்றிகள் உரித்தாகுக.
5.
N
நன்றி.
@
60 G
இங்ங்ணம் N . . ë% ஒ மஞ்சத்தடி பிள்ளைகள், மருமக்கள், இ 8 S5 இ2, இணுவில். பேரப்பிள்ளைகள், Q
S உறவினர்கள் 宠% SN) றவனாகள. 4
彎
2
9%89%E5%88%A9%R?? Yoganathan Graphics & Offset Printers - K.K.S Road, Inuvil. Tel: 021 4590233
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 16
4. எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே உண்னுடையது எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்?
இ
출혈
எதை நீ கொண்டு வந்தாய்? அதை நீ இழப்பதற்கு, விதை நீ படைத்திருக்கிறாய், அது வீணாகுவதற்கு, | ள்தை நீ எடுத்துக்கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உண்னுடையதோ,
೫ಕ್ತಿ #ಞ மற்றொருவருடையதாகிறது. நிற்றொரு நாள் அது வேறொருவருடையதாகு
義
霹。 is இந்த மாற்றம் உலக நியதியாகும்,
葵
皺。