கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோமசுந்தரம் பரமேஸ்வரி (நினைவு மலர்)

Page 1

வில் கிழக்கு சுந்தரம் பரமேஸ்வரி வர்களின்
IC3DLOI GOÓlas36I fluidh) siODICESCib»
LGLTIDG5ff

Page 2

சிவமயம்
இணுவில் கிழக்கு திருமதி சோமசுந்தரம் பரமேஸ்வரி அவர்களின்
சிவபதப்பேறு குறித்து 6)h6bb6fullLiñOE6ib
ПšloОGOIG) | 106loj 18-03-2007

Page 3
சிவமயம்
öFLDIjriıILI60OITib
எங்கள் குடும்பத்தின் குல விளக்காய்
நல்வழி காட்டும் ஒளிச்சுடராய் பாசத்தின் கோயிலாய்
பண்புக்கோர் இலக்கணமாய்
பொறுமையின் சிகரமாய் பாசத்துடன் எம்மை எல்லாம் வழிநடத்தி வாழ்வித்த எங்கள் அன்புத் தெய்வத்தின் பொற்பாதங்களில்
இம்மலரினைக் காணிக்கையாக்குகின்றோம்.
營
-
ଝୁଖآ
-குடும்பத்தினர்

*
屬 AA 臀 * #:
இ
:

Page 4

திருமுறைத் தோத்திரப்பாக்கள்
விநாயகர் வணக்கம்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
தேவாரம்
உண்ணாமுலை யுமையாளோடு முடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திரு மாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைமுழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணமறுவே
திருவாசகம்
பால்நினைந் தாட்டும் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்த சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவதினியே.
திருவிசைப்பா
நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே ஐயாநீ உலாப் போந்த அன்றுமுதல் இன்றுவரை கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ அருள் கோடை திரைலோக்கிய சுந்தரனே,
03

Page 5
திருப்பல்லாண்டு பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப்
பாற்கடலிந்த பிரான் மாலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கு மந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம் பலமே யிடமாகப் பாலித்த நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதமே.
திருப்புராணம் இறவாத இன்ப அன்பு வேண்டிப்
பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண் டேல் உன்னையென்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்
நான் மகிழ்ந்த பாடி அறவாநி ஆடும் போத உண்ணடியின்
கீழ்இருக்க என்றார்.
திருப்புகழ்
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசற் குமரேசா கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே.
வாழ்த்து
வான்முகில் வழாத பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை அரசுசெய்க குறைவிலா தயிர்கள் வாழ்க நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
04

திருமதி சோமசுந்தரம் பரமேஸ்வரி அவர்களின் வாழ்க்கைச் சுவருகள்
யாழ் நகரத்தின் வடமேற்குத் திசையில் நகரப் பொலிவுடன் விளங்குகின்றது கொக்குவில் எனும் ஊர். ஆலயங்களும் கல்விக்கூடங்களும் இவ்வூரின் அணிகலங்களாக, விளங்குகின்றனவாயினும் கொக்குவில் இந்துக் கல்லூரியாலும் பலராலும் போற்றப்படுகின்ற வாக்கிய பஞ்சாங்கத்தினாலும் பலராலும் இனங்காணக்கூடிய பிரபலம் பெற்றுள்ளமை யாவரும் அறிந்த ஒன்றாம். பல் தொழில் புரியும் மக்களைக் கொண்ட சிறப்பியல்புகளைப் பெற்று திகழ்கின்றது கொக்குவில் பதியாம். இவ்வூரில் மேற்குப் பகுதியில் வாழ்ந்த அமரர்களான சின்னத்துரை திரவியம் தம்பதியரின் அன்பு மகளாகப் பிறந்தவர் அமரர் பரமேஸ்வரி.
இவருடன் கூடப் பிறந்தவர்கள் அமரர் மகாதேவன் திரு. அன்னலிங்கம், திரு. தேவராஜா (இத்தாலி), நாகரத்தினம் (ராசு), திருமதி இராசலட்சுமி, திருமதி இராசேஸ்வரி, திருமதி பூமணிதேவி, திருமதி பகவதி (சுவிஸ்), அமரர்களான செல்லம்மா (இராசாத்தி) மனோன்மணி ஆகியோராகும். பத்துப்பேர் கொண்ட நிறைவான குடும்பம். அமரரான பரமேஸ்வரி ஆரம்பக் கல்வி பயின்று தொடர்ந்து கற்கும் நிலையில் பருவ வயதை அடைந்ததும் பெற்றோர் வரன் பார்க்க ஆரம்பித்தனர். அவ்வேளை இணுவில் கிழக்கைச் சேர்ந்த அமரர்களான ஆறுமுகம் முத்துப்பிள்ளை தம்பதியரின் இளைய மகனான சோமசுந்தரம் என்பவரை நிட்சயம் செய்தனர்.
திரு. சோமசுந்தரம் அமரர்களான ஆறுமுகம் முத்துப்பிள்ளையின் கடைசி மகனாவர். இவருக்கு மூத்த சகோதர சகோதரிகள் இருந்தனர். அமரர்களான வினாசித்தம்பி, நடராசா, செல்லையா ஆகிய சகோதரர்களும் அமரர் கனகம்மா திருமதி சிவகாமிப்பிள்ளை, திருமதி இராசம்மா, திருமதி பொன்னம்மா ஆகிய சகோதரிகளும் ஆவர்.
முத்த அண்ணன் அமரர் வினாசித்தம்பியுடனும் அன்னை முத்துப்பிள்ளையுடனும் வாழ்ந்த திரு. சோமசுந்தரம் அவர்களை
C_05ם ג

Page 6
எல்லோரதும் நல்லாசிகளுடன் கைத்தலம் பற்றி இல்லறத்தில் ஈடுபட்டார் அமரர் பரமேஸ்வரி.
கணவன் ஓர் விவசாயி. ஒய்வடைந்திருக்கும் போது சுருட்டுக் கைத்தொழிலுக்கும் போவார். நல்ல கணவனான அவருடன் இனிய இல்லறத்தில் ஈடுபட்டு சுந்தரலிங்கம், விநாயகமூர்த்தி, விக்கினேஸ்வரமூர்த்தி, கிருபாகரமூர்த்தி, சந்திரகுமார் ஆகிய ஆண் மக்களையும், வசந்தாதேவி, வசுமதி, சிவமதி ஆகிய பெண் பிள்ளைகளையும் பெற்று செம்மையுடன் வாழ்ந்து வந்தார்.
விவசாயமும், சுருட்டு தொழிலும் நலிவுற்ற வேளையிலும் தன் குடும்பத்தில் சிறிதளவும் தளப்பிடியின்றி கணவனுக்கு ஏற்ற அன்பு மனைவியாகவும் பிள்ளைகளின் அன்புத் தாயாகவும் வாழ்ந்தவர். பரமேஸ்வரி தங்கள் குல தெய்வங்களான சிவகாமி அம்பாளையும், காரைக்கால் சிவனையும் தினமும் வணங்கி வழிபட்டதுடன், மாமன் மாமி செய்து வந்த பூசை விழாக்களையும் இவ்வாலயங்களுக்குரிய தெய்வங்களுக்கு மனப்பூர்வமான நிறைவுடன் செய்து வந்தார். அதன் பலாபலன்கள் இன்று அவரது மக்கட் செல்வங்கள் உள்ளூரிலும், வெளிநாட்டிலும் சீர் சிறப்புடன் பொருள் வளத்துடன் வாழ்கின்றனர்.
மனைவி, அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். என்பார்கள். இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் கூறியிருக்கின்றார்.
"மனைத்தக்க மாண்புடையளாகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துனை". - குறள்
கணவனுக்கு ஏற்ற மனைவியாய் அவர் மனம் கோணாது நற்பண்பும், நற்செய்கைகளாலும் வருவாய்க்கு ஏற்ப தன் குடும்பத்தைச் செம்மையாய் அமைத்து வாழ்பவளே சிறந்த வாழ்க்கைத்துணையாவாள். அப்படி வாழ்ந்ததால் அந்த மகராசி
O6

சிவராத்திரி தினத்தன்று சிவபதப்பேறு பெற்று விட்டார். மரணம் என்பது யாவர்க்கும் நிட்சயம் நிகழும் ஒன்று என்பது யாவரும் அறிந்ததே. ஆனாலும் அது எப்ப வரும் என்று சொல்லி வைத்து வருவதில்லை. சிவராத்திரி என்ற புண்ணிய தினத்தில் இறைபதம் அடையும் நற்பேறு எல்லோர்க்கும் கிடைத்து விடுவதில்லை. அவன் அருளாலே அவன் தாழ் அடைந்த அந்த புண்ணியப்பேறு அமரர் பரமேஸ்வரி போன்று எல்லோர்க்கும் இலகுவில் கிடைத்து விடுவதில்லை.
அன்பு அன்னையை இழந்த துன்பம் பிள்ளைகளுக்கும், கணவன், பேரப்பிள்ளைகளுக்கும், மருமக்களுக்கும் இருப்பது இயற்கை நியதியானாலும் சிவராத்திரி தினத்தன்று கிடைத்த பெரும்பேறு போற்றுவதற்கும், பிரார்த்தனைக்கும் உரிய செயலாகும்.
6-- e O மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு”
என வள்ளுவர் கூறிய பொய்யா மொழிக்கேற்ப இல்லற வாழ்வில் அமரர் பரமேஸ்வரியின் அழகுமிகு அணியாக அமைந்தவை நன்மக்களைப் பெற்ற பேறேயாகும்.
அன்னாரின் மூத்த மகன் திரு. சுந்தரலிங்கம் இணுவில் கிழக்கைச் சேர்ந்த பொன்னுத்துரை பரமேஸ்வரியின் அன்பு மகளாகிய பிரபாசக்தி எனும் மங்கையை மணந்து பிரணவன் எனும் புத்திர செல்வத்துடன் இனிதே கனடாவில் வாழ்கின்றார்.
இரண்டாவது மகன் விநாயகமூர்த்தி இணுவில் கிழக்கைச் சேர்ந்த துரைராசா விசாலாட்சியின் அன்பு மகளாகிய கலையரசி (சொக்கம்மா) எனும் மங்கையை மணந்து விதுஷன், தமிழினி எனும் மக்கட் செல்வங்களுடன் சுவிஸில் சீர் சிறப்புடன் மகிழ்வுடன் வாழ்கின்றார்.
மூன்றாவது மகன் விக்கினேஸ்வரமூர்த்தி (விக்னேஸ்) இணுவில் கிழக்கைச் சேர்ந்த முருகையா மீனாட்சியின் அன்பு
_ג C07

Page 7
மகளாகிய சாந்தலஷசுமி (சாந்தி) எனும் மங்கையை மணந்து சந்தோஷ் எனும் புத்திர செல்வத்துடன் இணுவிலில் பெற்றோர்க்கு உறுதுணையாகவும், விதுஷன் அழகுமாடம் சுன்னாகம் எனும் வர்த்தக நிலையத்தின் உரிமையாளராக சீர் சிறப்புடன் இனிதே வாழ்கின்றார்.
திரு. கிருபாமூர்த்தி (U.A.E) திரு. சந்திரகுமார் (கொழும்பு) இருவரும் சிறப்புடன் வாழ்கின்றனர்.
மகள் வசந்தாதேவி இணுவில் மேற்கைச் சேர்ந்த சபாரத்தினம் கனகாம்பிகையின் அன்பு மகன் சுரேஸ்குமாரைத் திருமணம் செய்து கவிந்தன் எனும் மழலைச் செல்வத்தினைப் பெற்று டென்மார்க்கில் சீர் சிறப்புடன் இனிதே வாழ்கின்றார்.
மகள் வசுமதி இணுவில் மேற்கைச் சேர்ந்த கிருஷ்ணசாமி நரீல சிலோசனாவின் அன்பு மகன் சோமாஸ்கந்தமூர்த்தி (மூர்த்தி) என்பவரை மணந்து ஜனார்த்தனன், ரவிதன் எனும் மக்கட் செல்வங்களுடன் சீர் சிறப்புடன் வாழ்கின்றார்.
மகள் சிவமதி பாலாவோடையைச் சேர்ந்த அருமைத்துரை மங்களேஸ்வரியின் அன்பு மகனாகிய தர்மசீலன் (சிறி) என்பவரை மணம் முடிக்க ஆயத்தமான வேளையில் நோய்வாய்ப்பட்டிருந்த அன்னையவள் மகளின் திருமணக் கோலம் கண்டு களித்த பின்பே இறைபதம் எய்தினார்.
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் அனைவரதும் பெருவாழ்வு கண்டு இன்புற்றிருந்த வேளையில் காலன் கணக்கை முடித்துக் கொள்ள நினைத்த வேளையில் தன் நிலை அறிந்த அன்னையவள் தன் கணவன் இனிதுடன் வாழ மகனிடம் வழிசொல்லி சிவனருளால் சிவராத்திரி தினமான புண்ணிய நாளில் சிவபதமடைந்தார். அமரர் பரமேஸ்வரியின் இழப்பால் துயருற்றுள்ள அன்னாரின் குடும்பத்தவருடன் இணைந்து அவர் ஆன்ம ஈடேற்றத்திற்காக ஆத்ம சாந்திப் பிரார்த்தனை செய்வோமாக.
ஓம் சாந்தி
K08

சிவமயம்
மாணிக்கவாசகசுவாமிகள் அருளிய சிவபுராணம்
திருச்சிற்றம்பலம் காப்பு தொல்லை இலும்பிறவிச் சூழும் தளைநீக்கி அல்லலறுத்(து) ஆனந்தம் ஆக்கியதே ~ எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூரர் எம்கோன் திருவா சகம்என்னும் தேன்.
கலிவெண்பா
நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க! இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க! கோகழி ஆண்ட குருமனிதன் தாள்வாழ்க! ஆகமம் ஆகிநின்(று) அண்ணிப்பான் தாள்வாழ்க! ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க! வேகம் கெடுத்(து) ஆண்ட வேந்தனடி வெல்க! பிறப்பறக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க! புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க! கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க! சீரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க! ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி! தேசனடி போற்றி சிவன்சே வடிபோற்றி! நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறக்கும் மன்னன் அடிபோற்றி! சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றி: சிவன்அவன்என் சிந்தையுள் நின்ற அதனால் அவன்அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன்யான் கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்(கு) எட்டா எழில்ஆர் கழல்இறைஞ்சி விண்நிறைந்து மண்நிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை இலாதானே! நின்பெருஞ்சீர்
O 09

Page 8
பொல்லா வினையேன் புகழுமாறொன்றறியேன் புல்ஆகிப் பூடாய்ப் புழுவாய் மரம்ஆகிப் பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்அசுரர் ஆகிமுனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திழைத்தே னெம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யவென் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாக வேதங்கள் ஐயா, வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நண்ணியனே! வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞான மில்லாதே இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவுறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அளிப்பா யருள்தருவாய் போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பின் நாற்றத்தினேரியாய் சேயாய் நனியானே மாற்றம் மனம்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறிநின்ற பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்களேத்த மறைந்திருந்தா யெம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய விருளை அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டி புறந்தோல் போர்த்தெங்கும் புழவழக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மங்கலப் புலணைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்கு கலந்தவன் பாகிக் கசிந்துள்ளுருகும் நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
10

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்தப் பாரிக்கும் ஆரியனே நேச வருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப் பேராத நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா வமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே இன்பமும் தன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக் கண்பனே யாவையுமாய் அல்லையுமாஞ் சோதியனே தன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகியல்லானே ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார் தம்கருத்தின் நோக்கரிய நோக்கே நணுக்கரிய நண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய் சொல்லாத நண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள் இாற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பினுட்கிடப்ப ஆற்றேனெம் மையா வரனேயோ வெண்றென்று போற்றிப் புகழ்ந்திருந்த பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குர்ம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற் கரியாணைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரு மேத்தப் பணிந்து,
திருச்சிற்றம்பலம்.

Page 9
6. முருகன்துணை கந்த வழஷ்டி கவசம் காப்பு ததிப்போர்க்கு வல்வினைபோம் தண்பம்போம், நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்துஓங்கும் நிஷ்டையுங் கைகூடும் நிமலர் அருள்கந்தர் சஷ்டி கவசந் தனை.
குறள் வெண்பா அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன் பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மைய நடஞ்செயும் மயில்வா கணனார் கையில் வேலாலெனைக் காக்கவென்று வந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறு முகம்படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவண பவனார் சடுதியில் வருக J66007 | J6JG JJ JJJJJJ JJJJ foj60 (16ug ? ??? விணபவ சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென வசர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில்
12)

பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயுங் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமுந் தரித்த நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நாலும் முத்தணி மார்பும் செப்பழு குடைய திருவயிறு உந்தியும் தவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்னம் பதித்த நற்சீ ராவும் இருதொடை அழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சீலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண் டிகுடிகு டிகுகுன டிகுண ரரரர ரரரர ரரரர ரரர G FFFF FG FFF (6060606 (6060606 (6060606 (60606 டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்த முந்த முருகவேள் முந்த என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் ததவும் லாலா லாலா லாலா வேசமும்
3

Page 10
லீலா லீலா லீலா விநோதனென்று உன்றிரு வடியை உறுதியென் றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடியுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி இரண்டும் வேலவர் காக்க நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்தின வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க கைகள் இரண்டும் கருணைவேல் காக்க முன்கை இரண்டும் முரண்வேல் காக்க பின்கை இரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்த கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கணகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்கத் தடையறத் தாக்க பார்க்கப் பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தம் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோடனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டா ளர்களும் எண்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை யடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைக ளென்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைக ளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டிய பாவையும் ஒட்டியச் செருக்கும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதமஞ் சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்த குலைந்திட மாற்றார் வஞ்சகள் வந்த வணங்கிட காலதா தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
15

Page 11
வாய்விட் டலறி மதிகெட் டோடப் படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுட னங்கம் கதறிடக் கட்டு கட்டி யுருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்த குத்து கூர்வடி வேல்ால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலத வாக விடுவிடு வேலை வெருண்டது வோட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியுங் கரடியும் இனித்தொடர்ந் தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்தயர் அங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரணை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீயெனக் கருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்தற வாகவும் உன்னைத் ததிக்க உன்திரு நாமம் சரவண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொழி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே
O 16

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை அழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்தறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யானுனைப் பாட எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசமாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியி லணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னரு ளாக அன்புட னிரகழி அன்னமும் சொன்னமும் மெத்தமெத் தாக வேலா யுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் தவசன் வாழ்க வாழ்களின் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்ப தன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்தடன் அங்கந் தலக்கி

Page 12
நேச முடனொரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஒதியே செபித்து உகத்துநீறணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர் மாற்றல ரெல்லாம் வந்த வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாங் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியால் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்காரத்தடி அறித்தென தள்ளம் அஷ்டலட் சுமிகளில் வீர லட்சுமிக்கு விருந்துண வாக சூரபத் மாவைத் தணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினிலிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள என்றன தள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கோ ரரசே மயில்நட மிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவண பவலும் சரணம் சரணம் சண்முகா சரணம்.
முற்றும்

தோற்றம்: LD60)B6): 05 16
05 02
1948 2007
எமது கழக செயலாளர் Cst. சந்திரகுமாரின் அன்புத் தாயார் திருமதி சோமசுந்தரம் பரமேஸ்வரி
மாறில்லா உலகில் மாறிவிட்ட காலத்தில் நீ மட்டும் மாறிவிட்டாய் தாயே!
நம்மை விட்டு நாம் தடிக்கின்றோம் நீ பெற்ற பிள்ளைகளின் தயரம் கண்டு
உணர்வத யார். இதை
அறிந்தத ஊர்!
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி!! 9াটgষ্টী!!!
18.01.2007 இளைஞர் கழகத்தினர்.
கண்ணீரைக்காணிக்கையாக்குகின்றோம்

Page 13
விழிநீர் சொரிகின்றோம்.
மறைவு: 16
O2
2007
எமது கழக உறுப்பினர் சோ. சந்திரகுமாரின் அன்புத்தாயார்
திருமதி சோமசுந்தரம் பரமேஸ்வரி
இணுவையின் சிவக் கொழுந்தே குடும்பத்தின் குல விளக்கே நீ பெற்றவர்கள் அருகில் இருக்க பெற்றவள் நீயில்லை மருங்கில் | நீசெய்த நன்மையினால் நாம் இருக்கின்றோம் நாம் செய்த தீமையாலோ: நாம் தடிக்கின்றோம் அவன் தாள் எங்கும் இருப்பான் என்பாய் இறுதியில் தாயே நீயும் அவ்வாறே இருக்கின்றாய் இறைபதம் அடைந்தது உன் ஆண்மா அதையிழந்து துடிக்கின்றது எம் ஆண்மா. அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!!
ಸ್ಥಿಣ್ಣನ್ಡಿ. ணுேவில் ந்ேது விளையாட்டுக்கழகத்தினர்
–205
 
 

"ال AW L "سم سے
Tहु=| / Flgu LLLith
生活
நவில்கின்றோம்
எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்ட எம் குரும்ப குலவிளக்கின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும்
பல்வேறுவழிகளிலும் பேருதவிபுரிந்தவர்களுக்கும்
கண்ணிர் அஞ்சலிப்பிரசுரங்கள் வெளியிட்டவர்களுக்கும்
தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்
அந்தியேட்டி வீட்டுக்கிருத்தியக் கிரியைகளில் கலந்து சிறப்பித்த உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர் களுக்கும் -
எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இணுவில் கிழக்கு, இங்ங்னம்
இணுவில், குடும்பத்தினர்
"◌"
ދޮށި(މިފޮޑީ ޖޯ ് . '~"
அம்மா, இணுவில்,

Page 14
ഖഞ്ഞ]
EFIDECDIDIGl றுநீ கிரு
இதுவே உலக நியதியு b,
5.660
எனது படைப்பின்
 
 

நடந்ததோ, ಶಿಣ್ಣೆ நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, ខំផ្សៃបំ நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்? A எதை நீ கொண்டு வந்தாய். அதை நீ இழப்பதற்கு.
அது வீணாவதற்கு, எதை நீ எடுத்தக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பeடது. எதைக் கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பeடது.
} இன்று உன்னுடையதோ, N. ਏi gtതുങ്
ஒற்றொருவருடையதாகிறது. மற்றொருநாள்,
$لا g
அது வேறொருவருடையதாகும்".