கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வைரமுத்து அழகர் (நினைவு மலர்)

Page 1
பெரியவிளான் இளவான வதிவிடமாக
மரர் வைர
அவர்களின் சிவ
 
 
 

ளையைப் பிறப்பிடமாகவும் வும் கொண்ட
(Upg5g of U23s பதப்பேறு குறித்த
2OOS

Page 2

பெரியவிள7ன் இளவாளையைப் டபிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட
அமரர் வைரமுத்து அழகர்
அவர்களின் சிவபதப்பேறு குறித்த
(அமரர் அழகர் அவர்களின்

Page 3
தந்தைலைப் போல் தென்றும் ტეფრინრ $რფიფ) adრუ) முந்தைலேழ் சொல்லிவைத்த
முறைமையும் அதுதா ஒன்றே! சிந்தை04ல் மகிழ்ந்து இந்த சிறப்புகள் பலவும் செல்த தந்தைக்கு நாம் வழங்கும் சமூர்ப்படிம் இதுதான் அப்பர்.
- குடும்பத்தினர் -
அமரர் அழகர் அவர்களின்
 


Page 4


Page 5

தோத்திரப் பாடல்கள்
விநாயகர் ததி”
ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
தேவாரம் திருப்புகலூர் திருத்தாண்டகம்
எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால் கண்ணிலேன் மற்றோர்களை கண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால் ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போதுணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே.

Page 6
:(Qg @光%
Σς. திருவாசகம்
பாரொடு விண்ணாய்ப் பரந்தஎம் பரனே
பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத்துரைக்கேன்
ஆண்டநீயருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகவென்றருள் புரிவாயே.
aeafloatur
கோயில் பஞ்சமம் ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே! தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனே! அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனே விளம்புமா விளம்பே.
திருப்பல்லானர்டு
சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த
தூய்மனத் தொண்டருள்ளீர் சில்லாண்டிற் சிதையுந் சில
தேவர் சிறுநெறி சேராமே வில்லாண்ட கனகத் திரள் மேரு
விடங்கன் விடைப்பாகன் பல்லாண்டென்னும் பதங் கடந்தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே, D
ફ્રિ
(அமரர் அழகர் அவர்களின்
 

※引
திருப்புரானம்
சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவமதளை அறமாற்றும் பாங்கினில் ஒங்கியஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்தார் அந்நிலையில்.
திருமந்திரம்
அன்புஞ் சிவமுமி ரெண்டென்பரறிவிலார் அன்பே சிவமாவதாரு மறிகிலார் அன்பே சிவமாவதாருமறிந்தபின் அன்பே சிவமா யமர்ந் திருந்தாரே.
திருப்புகழ்
உம்பர் தருத் தேனுமணிக் கசிவாகி ஒண்கடலிற் தேனமுதத் துணர்வூறி இன்பரசத் தேன்பருகிப் பலகாலும் என்தனுயிர் காதரவுற் றருள்வாயே தம்பிதனக் காகவனத் தணைவோனே தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே. |
வாழ்த்தர
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறையரசுசெய்க குறைவிலாதுயிர்கள் வாழ்க நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்
ငွစ္ထိ இ93
ಶೌಯ್ರಕೆ: @gàಿಶಿನಕೆಹifಷ್ರ ಅp೮ LDai |

Page 7
அமரர் வைரமுத்து அழகர் அவர்களின் வாழ்க்கை வரலாறர
இந்துமா கடலில் முத்தென மிளிரும் ஈழமணித் திருநாட்டின் வடக்கே சைவமும் தமிழும் ஒருங்கே தழைத்தோங்கி சிறக்கும் இலங்கையின் மணிமுடியாகிய யாழ்ப்பாணத்தில் பலவளமும் நிறைந்து காணப்படும் பெரிய விளானைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருமதி வைரமுத்து செல்லம்மா தம்பதியின் இளைய புதல்வராக 01.09.1937 அன்று அழகர் இவ்வுலகில் அவதரித்தார்.
இவருடைய உடன்பிறப்புக்களாக அக்காவாக இராசம்மாவும், அமரர் செல்லம்மாவும், அண்ணனான அமரர் செல்லர், இராசா ஆகியோர் ஆவார்கள். இவர் தனது தொழிலாக விவசாயத்தையே மேற்கொண்டார்.
28.06.1963 அன்று பெரியவிளானில் வசிக்கும் திரு.திருமதி பொன்னம்பலம் இராசம்மா தம்பதியின் மகள் செல்வநாயகியை மணம் முடித்து இவர்களின் இல்லறப்பேறாக, அன்புச் செல்வங்களாக நவமணி, இரத்தினசிங்கம், நளினி, நந்தினி, இரவீந்திரன், சர்வாஜினி, நகுலினி, நளாயினியையும், பெற்றெடுத்தனர்.
இவர்களை நல்வழிப்படுத்தி, நல்வாழ்க்கை தேடிக்கொடுத்து, பெற்றோரையும் கண்ணை இமை காப்பது போல பேணி அன்புடனும் வாழ்ந்து வந்தார். 1992ம் ஆண்டு நாட்டுச் சுழ்நிலை காரணமாக
தி இடம்பெயர்ந்து சங்கானையில் இருந்து பின் நாட்டுச்
(། 6 ཡོད་
அமரர் அழகர் அவர்களின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

స్టణం அமைதியான வேளையில் தனது
இடமான பெரியவிளானில் மனைவி, பிள்ளைகளுடன் இன்புற்று வாழ்ந்து பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்து வைத்தார்.
இவர்களின் இல்லறப்பயனாக பேரப்பிள்ளைகளாக கபில்ராஜ், கோபிராஜ், றம்மியா, கஜல்விழி என்போரை யும் கண்டு அவர்களின் மழலை மொழிகேட்டு ஆனந்தப் பெருவெள்ளத்தில் திளைத்து இன்புற்று வாழ்ந்து வந்தார்.
தனது மனைவியுடனும் பிள்ளைகளுடனும் மற்றும் அனைவருடனும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார். பிள்ளைகளின் முயற்சியையும் அவர்களின் சந்தோசங் களையும் கண்டு இன்புற்று சீரும் சிறப்பாக பெருமை யுடன் வாழ்ந்து வரும் வேளையில் 01.07.2008 அன்று இரவுப் பொழுதில் காலன் கடுகதியென வந்து உயிரைக் கவர்ந்து சென்றுவிட்டான். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”
ஒம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!

Page 8
கு
உறவுகளின் கையறுநிலைா
மனைவி புலம்பல்
&
ஊரறிய எந்தனுக்கு மாலை சூட்டி
உவப்புடனே திருமணப் பொற்றாலி மாட்டி தீரமுடன் நாமிருவர் சிறப்புக் கண்டோம்
தித்திக்கும் வாழ்வினிலும் சிறப்புக் கண்டோம் ஒதரிய வாழ்வினிலே எங்கள் அன்பு
ஒரு நாளும் குறையாதென்று உறுதி பூண்டோம் பாதகனாம் அக்காலன் என்னை விட்டுப் பாதியிலே
உன்னைப் பிரித்தான் பாவி பாவி
இல்லற வாழ்வில் இன்பத்தைப் பருக வைத்திர் இன்று நீர் பிரிந்து நான் துன்பமே பருகுகின்றேன். ஆவியாய் போகு முன் எனக்கு ஆறுதல் கூறவில்லை
சோடிழந்த அன்றிலைப்போல் தவிக்கின்றேனே இங்கு நான்.
பிள்ளைகள் புலம்பல்
அப்பா அப்பா என்று - இனி யாரை நாங்கள் அழைப்போம் அன்பு நிறைந்த கனிந்தமுகம்
எங்கு நாங்கள் காண்போம்.
ஈரேழு பிறப்பென்ன ஒராயிரம் பிறப்பு வரினும் என் தந்தை நீங்கள் - அன்றோ ஈன்றெடுத்த எண்மரையும் - கல்விதனில் சிறக்கவைத்த என் அன்புத் தெய்வமே. எம்மை வளர்த்து அன்பை ஈந்து அறிவைப்புகட்டி பண்பைக் காட்டி பாரினில் நாம்வாழ நல்விருச்சமெனநிழல் பரப்பி சகோதரர் மூவர்க்கும் நல்லறமாய் இல்லறத்தை இனிதாக்கி மாண்புபெற வைத்தவிட்டகணமே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

“பெருகும் விழிநீரில் சோகம் கழுவியெழ வருமோ மனமின்றி வாய்குழற்றி நிற்கின்றோம்" அருமை அப்பா அணைத்தெம்மை மகிழ்ந்த பெருமைக்குரியவரே போய் மறைந்ததெங்கே ஐயா
உங்கள் வரவை வழிமேல் விழிவைத்து காத்திருப்பதுடன் உங்கள் உயிர் ஆத்மா சாந்தியடைய வடசேரி விநாயகரை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி மருமகன் புலம்பல்
உயிர் மூச்சாய் எமை உள்வாங்கி வெளிவந்த மூச்சு இன்று சென்றதெங்கே கல்லும் கனியாகும் முள்ளும் மலராகும் சொல்லின் இனிமை கண்ட மாமா எங்கே தலை வாழை இலை போன்ற எம் தலைவன் எங்கே எம் குலம் வாழ ஒளிகொண்ட குலவிளக்கே நல்வாழ்வு தனைக்கண்டு விழி உறங்கா துணை நின்று அகல் விளக்காய் ஒளி தந்த தீபமின்று அணைந்ததுவோ எம்புகழ் காணமுடியாது புயலாக சென்றதும் ஏன்? இமையது விழி ஏங்கும் கடைக்கண்ணில் நீர்.
- மகேந்திரன்
மருமகள் துயர்
தேனினு மினிய சிந்தை சிறந்தநல்லறிவு மேலாம் பாலினுமினிய இன்சொல் பண்பிலும் உயர்ந்த உள்ளம் வாழ்வினை வகுக்கவேண்டி மாமனாய்ப் பெற்றோம் நாமும் ஊழ்வினை வந்து உன்னை உருக்கியே சென்றதையா.
- இ. பராசக்தி
மருமகன் புலம்பல்
எனது வாழ்க்கையை தொடர்வதற்கு ஓடோடி வந்தேன் மாமா எமை இடைநடுவில் விட்டுவிட்டு சென்றதன் மாயமென்ன உமது தீராத முகம் பார்க்க வந்தேன் மாமா

Page 9
இன்னது இதயத்தை நித்தழும் தீயிலிட்டு சென்றதென்ன வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லிவிட்டு சென்றவரே அந்த வாழ்க்கையே தெரியாமல் இங்கு நாம் கலங்குகிறோம் சென்றுவிட்டீர் நீர் அங்கு சீருடன் வாழ தினம் தினம் நாம் கலங்குகிறோம் உமது நினைவுகளில் இருந்து நாம் தொடர்கின்றோம் உமது பாதச் சுவடிகளில்.
பேரப்பிள்ளைகள் புலம்பல்
தாத்தாவே! எங்கள் தங்கத் தாத்தாவே - நின் மடிதனிலே, எமையிருத்தி இன்பமாய்க் கதைகள் பல சொன்னவரே! அன்றொரு நாள் இரவில் தாங்கள் மீளாத்துயில் கொண்டதாய் எங்கள் அம்மா அப்பா சொன்னார்கள் தாத்தாவே நீங்கள் துயில் கலைத்து வெகுவிரைவில் எம்மிடத்தில் ஒடி வாங்கோ வழிமேல் விழிவைத்து - வரவைப் பார்த்திருக்கின்றோம்.
- கபில்ராக், கோபிராக், றம்மியா, கயல்விழி
தேற்றல் அறுசீர் விருத்தம் காசினியதனில் வாழும் உயிர்களைக் காலன் ஒர்நாள் பாசமாம் கயிற்றை வீசிக் கவர்வதை மனதில் கொண்டு பாசத்துக் கடிமையாகி கண்ணில்நீர் சிந்த வேண்டாம் நேசத்தை இறைவன்மீது வைத்துநீர் கடமை செய்வீர்.
(அமரர் அழகர் அவர்களின்
 

x? Gy fer 3. 經 பெரிய விளானை பிறப்பிடமாகவும் శిస్థ
வசிப்பிடமாகவும் கொண்ட அலூர் வைரமுத்து அழகர்
குடும்பத்தின் ஒளிவிளக்காய் ஒளிகாட்டி கலங்கரை
விளக்காக வாழ்ந்தார்.
எளிமை, நேர்மை, கண்ணியம் நிறைந்த பண்பாளர். அமைதியே உருவான கணவானாக சீரிய வாழ்வு வாழ்ந்து மறைந்துவிட்டார். இவரின் இழப்பு குடும்பத்தினருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்
என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்து இறைபதம் அடைந்துவிட்டார்.
தலைவரை இழந்து தவிக்கும் அமரரின் குடும்பத் தினருக்கு அனுதாபங்கள் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
ஆ. சிறீதரன் J.P அதிபர்
யா/ சிறுவிளான் கனகசபை வித்தியாலயம்,
இளவாலை,
அவர்களின்

Page 10
艇 அனுதாயச்செய்தி
சைவமரபு மழுவாத ஒரு குடும்பத்தில் பிறந்து அம் மரபு நிற்கும் இன்னுமொரு குடும்பத்தில் உதித்த செல்வநாயகியுடன் இணைந்து செம்மையுற வாழ்ந்த அமரர் வை. அழகர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டுமென எல்லோரும் ஏங்கி நிற்க அமரர் விநாயகர் பாதம் சேர்ந்து விட்டார்.
கரம்பிடித்த மனைவியுடன் என்றும் இணைந்து இல்லறம் நல்லறமாக நடாத்தி ஈன்றெடுத்த எட்டுப் பிள்ளைகளையும் உலகம் போற்றும் வகையில் அன்புடன் சீராட்டி வளர்த்து நல்ல நிலையில் சேர்த்து சுற்றத்தாரும் உற்றாரும் மெச்சிட வாழ்ந்த அமரரின் குடும்பத்தாருக்கு மட்டுமல்ல அவரை அறிந்த சகலருக்கும் பேரிழப்பாகும்.
பிறப்பு ஒன்று உண்டெனில் இறப்பு என்றோ உண்டு என்பது உலக நியதி. இறைவன் தீர்ப்பு. மறைந்தவர் கண் மீண்டும் வரப்போவதில்லை என மனம் தேறி அவரின் ஆத்மா சாந்தியும் என மனநிறைவு கொண்டு அதற்காக இறைவனை வேண்டி நிற்கிறோம். அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்கள் அனுதாபங்கள்.
சாந்தி சாந்தி சாந்தி!
சிவமுறிநீகதிர். செ. நகுலேஸ்வரக் குருக்கள் வடசேரி விநாயகர் ஆலய பிரதமகுரு
دقت کے
 

1)
3) 4) 5) 6) 7) 8)
10) 11) 12) 13) 14) t5) 16) 17) 18) 19) 20) 2) 22) 23)
25) 26) 27) 28) 29) 30) 31) 32) 33) 34) 35) 36) 37) 38) 39) 40) 41) 42) 43) 44) 45)
47) 48) 49) 50)
அகரமுதல எழுத் அகழவாரைத்தாங்கும் அ.கி அகன்ற அறிவு அஞ்சுவது அஞ்சாமை அருட்செல்வம் அச்சம் உடையார் அரியவற்றுள் எல்லாம் அல்லற்பட்டு அவி சொரிந்து
அறன் எனப்பட்டதே
அமிழ்தினும் ஆற்ற அளவுஅறிந்து வாழா அழுக்காறு என ஒரு அறன் அறிந்து அறிவுடையார் எல்லாம் அற்றார் அழிபசி அன்பு இலார் எல்லாம் ஆக்கம் அதர்வினாய் இதனை இதனால் இணர் எரி தோய்வு இனிய உளவாக இன்பம் இடையறாது இன்னா செய்தாரை ஈன்ற பொழுதில் உலகத்தோடு ஒட்ட உள்ளத்தால் உறங்குவது போலும் உள்ளுவது எல்லாம் ஊருணி நீர் நிறைந்து எல்லா விளக்கும் எப்பொருள் எத்தன்மைத்து என்என்ப ஏனை எனைத்தானும் 6TÜGALJITQ56íT uLurTrf uLTrf எண்ணித்துணிக ஏதிலார் குற்றம்போல ஒழுக்கம் விழுப்பம் ஒறுத்தார்க்கு ஒழுக்காறாக் கொள்க கணை கொடிது கன் நின்று கண்அற களவினால் ஆகிய கற்கக் கசடு அற காக்க பொருளா காக்கை கரவா குடம்பை தனித்து குனம நாடிக் கேடுஇல் விழுச்செல்வம் கொக்கு ஒக்க கொல்லான் புலாலை
கொன்று அன்ன இன்னா சிறப்பு ஈனும்செல்வம் செப்பம் உடையவன் செய்தக்க அல்ல செவிக்கு உணவு செய்யாமல் செய்த செயற்கரிய செய்வார் சொல்லுக சொல்லின் GSFTi(8ssil Lib ஞாலம் கருதினும் தக்கார் தகவு இலர் தன் குற்றம் நீக்கிப் தன் உயிர் நீப்பினும் தன்னைத்தான் காதலன் தினைத் துணையாம் தீயவை தீய படத்தலால் தீயினால் சுட்ட புண் துப்பார்க்குத் துப்பாய தெய்வத்தால் ஆகாது தேரான் தெளிவும் தொட்டு அனைத்து தோன்றில் புகழொடு நல்லார் கண்பட்ட நன்றே தரினும் நன்றிக்கு வித்தாகும் நன்றிமறப்பது நெடும் புனலுள் பகுத்துண்டு பல்லார் முனியப் பிறர்க்கு இன்னா பிலிபெய் சாகாடும் பொச்சாப்பார்க்கு பொய்ம்மையும் மகன் தந்தைக்கு மழித்தலும் நீட்டலும் மறத்தல் வெகுளியை மனத்துக்கண் மாசிலன் முயற்சி திருவினை யாகாவார் ஆயினும் யான் எனது என்னும் வசை ஒழிய வாழ்வாரே வலியார் முன் வறியார்க்கு ஒன்று வருமுன்னர்க் காவாதான் வாய்மை எனப்படுவது விருந்து புறத்ததாத் விலங்கொடு மக்கள் வினைவலியும் வெள்ளத்து அனைய
100) வையத்துள் வாழ்வாங்கு

Page 11
1) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1.
பகவன் - குரு (ஆசிரியன்), இறைவன் (எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.)
2) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. 12.
துப்பு - உணவு துப்பார் - உண்பவர்
3) செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார் 26.
4) மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. 34.
ஆகுலம் - ஆரவாரம், நீர - தன்மையன
5) அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அ ஃ. தும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று. 49.
6) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். 50.
7) அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளவிய கூழ். 64.
அளாவிய - துளவிய
8) ஈன்ற பொழுதில் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். 69.
உவக்கும் - மகிழும். சான்றோன் - நல்ல அறிவுடையோன்
9) மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
எந்நோற்றான் கொல்எனும் சொல். 70.
எந்நோற்றான் - என்ன தவம் செய்தான்
10) அன்பு இலார் எல்லாம் தமக்குஉரியர் அன்புஉடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. 72.
 

1)
2)
3)
4)
5)
6)
7)
8)
9)
10)
எழுத்துக்கள் எல்லாம் 'அ'கரத்தை முதலாக உள்ளன. அது போல இந்த உலகம் பகவனை முதலாகக் கொண்டது.
உண்பவர்களுக்கு விருப்பமான உணவுப் பொருள்களை உற்பத்தியாக்கிக் கொடுத்து, தானும் உணவாக இருப்பது மழையாகும்.
செய்வதற்கு அரிதான செயல்களைச் செய்பவர்களே ‘பெரியவர்கள்’ எனத்தக்கவர்கள். அப்படியான அரிய செயல்களைச் செய்ய இயலாதவர்களே ‘சிறியவர்கள்’ ஆவர்.
மனத்திலே குற்றம் அற்றவனாக இருப்பதே எல்லா அறமுமாகும். மற்றவை யாவும் வெறும் ஆரவாரத் தன்மையன.
அறம் என்று சொல்லப்படுவதே சிறந்த இல்வாழ்க்கையாகும். அதுவும் பிறரால் பழிக்கப்படாதிருப்பின் மிகவும் சிறப்புடையதாகும்.
இவ்வுலகில் வாழவேண்டிய முறையில் (8bf60) Du JITE ഖIpLഖങ് வானத்திலுள்ள தெய்வங்களுள் ஒருவனாக வைக்கப்படுவான்.
தமது மக்களின் சிறு கைகளால் துளாவப்பட்ட கூழ் கூட, அவர்களின் பெற்றோர்களுக்கு அமுதத்தைவிட இனியதாகத் தோன்றும்.
தனது மகனைச் ‘சான்றோன்’ என்று உலகோர் புகழ்வதைக் கேட்டால், அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைவிடப் பெரிய மகிழ்ச்சி அடைவாள் தாய்.
இவனது தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தானோ என்று பிறர் பேசவைப்பதே, ஒருவன் தனது தந்தைக்குச் செய்யும் கைம்மாறாகும்.
அன்பு இல்லாதவர், எல்லாப் பொருள்களும் தமக்கே உரியதாக விரும்பும் சுயநலமிகள். அன்பு உள்ளவர்களோ 35 D5 எலும்புகளையும் பிறருக்கு உதவும் மனம் உள்ளவர்கள்.

Page 12
11)
12)
13)
14)
15)
16)
17)
18)
19)
20)
திருக்குறள் வரிசை எண்
விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா மருந்து எனினும் வேண்டற்பாற்று அன்று. 82.
இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந்து அற்று. 100.
இன்னாத - துன்பம் தருகின்ற
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. 101.
ஆற்றல் - ஈடுஆதல்
நன்றி மறப்பது நன்று அன்று நன்றுஅல்லது அன்றே மறப்பது நன்று 108.
கொன்றுஅன்ன இன்னா செயினும அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். 109.
உள்ள - நினைக்க
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. 112.
செப்பம் - நடுவுநிலைமை. எச்சம் - வழிவந்தோர்
ஏமாப்பு-பாதுகாப்பு
நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல். 113.
இகந்து - நீக்கப்பட்ட ஆக்கம் - செல்வம்
தக்கார் தகவுஇலர் என்பது அவர்அவர் எச்சத்தால் காணப் படும். 114.
தகவு - நடுவுநிலைமை எச்சம் - எஞ்சியிருப்பவை
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின். 119.
கோட்டம் - வளைவு. ஒரு தலையா - உறுதிப்பாடாக காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு.
122.
 
 

11) விருந்தினரைப் புறந்தள்ளிவிட்டு, தான் உண்பது அமுதமே
யாயினும், அது விரும்பத்தக்கது அல்ல.
12) பேசுவதற்கு இனியசொற்கள் இருப்பது தெரிந்திருந்தும் அவற்றைவிடுத்து, கேட்பதற்குத் துன்பம் தரும் சொற்களைப் பேசுவது, நல்ல பழம் இருக்கவும் அதை விடுத்துக் காயை உண்பது போலாம்.
13) வெளியில் தெரியாமல் ஒருவர் செய்த உதவிக்கு இந்த உலகமும்
6.Tgpj6o85püD FFLATG5 LDTÍLIT.
14) ஒருவர் செய்த நன்றியை மறப்பது நல்லதல்ல. ஆனால், அவர் செய்த
தீமையை உடனே மறந்துவிடவேண்டும்.
15) கொலை செய்வது போன்ற துன்பத்தை ஒருவர் செய்த போதிலும், அவர் முன்பு செய்த ஒரு நன்மையை நினைக்க அத்துன்பம் மறந்துபோகும்.
16) நேர்மை தவறாமல் வாழ்பவனுடைய செல்வம், அவனுக்குப் பின்னும்,
அழியாமல், அவன் பின்வருவோருக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
17)நேர்மை தவறிய வழியில் கிடைக்கும் செல்வம் நன்மையே தருமாயினும்,
அந்த நேர்மையற்ற செயலை உடனே ஒழித்து விட வேண்டும்.
18) ஒருவர் நல்லவர் என்பதும், தீயவர் என்பதும் அவரவர் விட்டுச் சென்ற
புகழ், பழி என்பவற்றால் தெரிந்து விடும்.
19) பக்கச் gाth6ip] மனத்தினாலும் வாக்கினாலும் தவறு
செய்யாதிருப்பதே நேர்மையாகும்.
20) அடக்கத்தை மிகச் சிறந்த பொருளாகக் கருதிக் காக்க வேண்டும்.
அதைவிடச் சிறந்த செல்வம் வேறில்லை.

Page 13
திருக்குறள் 21) யாகாவார் ஆயினும் நா காக்க காவாக்கால் வரிசை எண்
சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு. 127.
நா - நாக்கு(சொல்) சோகாப்பர் - துன்புறுவர், இழுக்கு - குற்றம்
22) தீயினால் சுட்டபுன்ை உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு, 129.
வடு - புண் 23) ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். 131.
விழுப்பம் - மேன்மை. ஒம்புதல் - போற்றுதல். 24) நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும். 138.
வித்து - விதை. இடும்பை - துன்பம் 25) உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். 140.
ஒட்ட ஒழுகல் - சேர்ந்து பழகுதல் 26) அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 151. அகழ்தல் தோண்டுதல், தலை - மேல், (சிறப்பு). 27) ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். 156.
ஒறுத்தல் - தண்டித்தல். பொன்றுதல் - இறத்தல்
28) ஒழுக்காறுஆக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு. 61.
ஒழுக்காறு - (ஒழுக்க + ஆறு) - ஒழுக்கவழி, அழுக்காறு - பொறாமை 29) அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். 168.
திருச் செற்று - செல்வத்தை அழித்து, தீயுழி - தீயவழி 30) அ.கி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும்
வெ. கி வெறிய செயின். - 175.
அ.கி - நுட்பமாக, வெஃகி - ஆசைப்பட்டு, வெறிய - அறிவற்ற
*禦。雛
雛 雛 雛
... 8 ܠ ܐ ܠ ܐ ܼ ܼ ܼ कहा है। திருக்குறள்0ே0 க்

21) எதனைக் காக்காது விட்டாலும் நாவைக் (தீயவை பேசாமல்) காக்க
வேண்டும். இல்லையேல் சொற்குற்றம் ஏற்பட்டுத் துன்பப் படுவர்.
22) தீ சுட்டதனால் ஏற்பட்ட புண் மனத்திலிருந்து விரைவில் மறைந்து விடும். கொடும் சொற்களினால் ஏற்பட்ட காயம் மனத்தைவிட்டு விரைவில்
DfTCDT.g.
23) நல்ல ஒழுக்கமானது மக்களுக்குப் பெரும் சிறப்பைத் தருவதால், அந்த
ஒழுக்கம் உயிரிலும் மேலானதாகக் கருதப்படும்.
24) நல்ல ஒழுக்கமானது நன்மைகளை விளைவிக்கும் விதை போன்றது. தீய
ஒழுக்கமோ எக்காலத்திலும் துன்பத்தையே தரும்.
25) மக்களோடு சேர்ந்து பழகுவதைக் கல்லாதவர்கள், பலவித நூல்களைக்
கற்றிருப்பினும் அறிவற்றவரேயாவர்.
26) தன்னை வெட்டித் தோண்டுபவரையும் தாங்கும் நிலத்தைப்போல, தன்னை
இகழ்ந்து பேசுபவர்களையும் பொறுத்துக் கொள்ளல் சிறப்பானது.
27) குற்றம் செய்தவரைத் தண்டிப்பதனால் அப்போதைக்கு மட்டும் மகிழ்ச்சி உண்டாகும். அவர்களை மன்னித்துவிட்டால், அது இறக்கும்வரை மன நிறைவு தரும்.
28) ஒருவன், மனத்திலே பொறாமை கொள்ளாத தன்மையைத் தனது
ஒழுக்கமாகக் கொண்டு நடக்க வேண்டும்.
29) பொறாமை எனப்படும் தீயசக்தி, ஒருவனுடைய செல்வத்தை அழித்து,
அவனைத் தீய வழியில் புகுத்திவிடும்.
30) பொருள் ஆசையினால் ஒருவன் அறிவற்ற செயலைச் செய்வானாயின், அவன் நுட்பமாகவும் விரிவாகவும் கற்று அறிந்த அறிவினால் என்ன Luigi

Page 14
திருக்குறள் வரிசை எண் 31) கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல். 184.
கண்நின்று - கண்முன்னாகநின்று, ඝණ්rජෙp - கண்ணோட்டம்இன்றி, பின்நோக்கா - பின்னால்
வரக்கூடிய கேடுகளைக் கவனியாது
32) ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கில்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு 190.
ஏதிலார் - தொடர் பற்றவர் (பிறர்)
33) பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும் 191.
முனிய - சினம் கொள்ள, எள்ள- எள்ளிப்பளிகசிக்க
34) சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயன்இலாச் சொல். 200.
35) தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் 202.
36) தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்துஒன்றும்
துன்னற்க தீவினைப் பால், 209.
துன்னற்க - நெருங்காதிருக்க
37) ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. 215. ஊருணி - ஊரார் உண்கின்ற நீர்நிலை; அவா - விருப்பம், திரு - செல்வம் 38) வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றுஎல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து. 221. குறியெதிர்ப்பு - பயனை எதிர்பார்ப்பது, நீரது - தன்மையது
39) அற்றார் அழிபசி தீர்த்தல் அ. துஒருவன்
பெற்றான் பொருள்வைப்பு உழி. 226.
வைப்புழி - வைக்கக்கூடியவழி
40) தோன்றில் புகழொடு தோன்றுக அ.திலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று 236.
 

31) ஒருவரின் கண்முன்னாக நின்று கண்ணோட்டமற்ற கடும் சொற்களைச் சொல்லினும், அவர் முன்னே இல்லாதபோது, பின்வரக் கூடியதை
33) பலரும் சினம் கொள்ளுமாறு, பயனற்ற சொற்களைப் பேசுபவன்
சொற்களை ஒருபோதும் பேசக்கூடாது.
35) தீய செயல்கள் தீமைகளையே தருவதால் அத்தீய செயல்களை நெருப்பு
என்று கருதி அஞ்ச வேண்டும்.
36) ஒருவன் தனது சொந்த நன்மையை விரும்புபவனாயின், தீவினைத்
தன்மையுடைய எச்செயலையும் நெருங்காது இருக்கவேண்டும்.
37) ஊரவரின் குடிநீர்க் கிணறு நிறைந்தது போன்றதே, மக்களை விரும்புகின்ற
பேரறிவாளனுடைய செல்வமாகும்.
38) வறியவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ‘ஈகை' எனப்படும்.
மற்றவை யாவும் பலனை எதிர்பார்த்துக் கொடுப்பன வாகும்.
39) பொருளற்ற வறியவரின் கொடிய பசியைத் தீர்ப்பதற்காகப் பொருளைச் செலவு செய்வது, பொருள் பெற்ற செல்வன், தனது செல்வத்தைப் பத்திரமாகச் சேமித்து வைப்பதற்குரிய சிறந்த வழியாகும்.
40) ஏதாவது (5 துறையில் L35 (தோன்ற) விரும்பினால்
அத்துறையில் புகழ் பெறக்கூடிய தகுதியோடு புகவேண்டும். அன்றேல் புகாமல் இருப்பதே நல்லது.
திருக்குறள் 100

Page 15
தருககுற61 வரிசை எண்
41) வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர். 240.
வசை - பழிச்சொல், இசை - புகழ் 42) அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள. 241.
பூரியார் - கீழோர்
43) வலியார்முன் தன்னை நினைக்த்தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து. 250.
44) அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று 259.
அவி - வேள்வி நெருப்பில் சொரியப்படும் நெய் மற்றும் உயிர்ப் பிராணிகள். செகுத்தல் - கொல்லுதல்
45) கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும். 260. 46) கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்குஅன்ன
வினைபடு பாலால் கொளல் 279.
கனை - அம்பு. கோடு - தண்டு
47) மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின், 280.
48) உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். 282.
உள்ளல் - நினைத்தல்
49) களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து
ஆவது போலக் கெடும். 283.
அளவு இறந்து - அளவுக்கு மிஞ்சி
50) வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும்
தீமை இலாத சொலல் 291.
வாய்மை - உண்மை
 

41) நல்லவர்களின் பழிச்சொல்லைப் பெறாமல் வாழ்பவரே உண்மையில்
நல்ல வாழ்க்கையை வாழ்பவர். புகழ் இன்றி வாழ்பவர் இறந்தவருக்குச் öFLDLDIT6)Iff.
42) செல்வங்களுள் சிறந்தது அருட்செல்வமே மற்றையபொருட் செல்வங்கள்
யாவும் கீழ் மக்களிடத்தும் உள்ளன.
43) தான் தன்னிலும் மெலியவர்களைத் துன்புறுத்தும் போது, தன்னிலும்
வலியார்முன், தான் படக்கூடிய துன்பத்தை நினைக்கவேண்டும்.
44) பலிப்பொருள்களைக் கொடுத்து ஆயிரம் வேள்விகளைச் செய்வதிலும், ஓர்
உயிரைக்கொன்று அதன் ஊனை உண்ணாமலிருப்பது நன்று.
45) உயிர்களைக் கொல்லாமலும் அவற்றின் ஊனை உண்ணாமலும்
இருப்பவனை எல்லா உயிர்களும் போற்றி வணங்கும்.
46) நேராக உள்ள அம்பு செயலால் கொடியது. வளைவாக உள்ள யாழ் இனியது. அது போல எப்பொருளையும் அதன் வடிவத்தாலன்றி செயற்பாட்டினால் அறிந்து கொள்க.
47) உலக மக்களின் பழிப்புக்குரிய செயல்களை நீக்கினால் போதும். துறவு
வேடங்களான GLDIT' 60L அடித்தலும், g5fTLQ வளர்த்தலும் வேண்டியதில்லை.
49) களவினால் வந்த செல்வம், அளவற்றுப் பெருகுவது போலத் தோன்றி,
பின்னர் அழிந்துவிடும்.
ー-・"

Page 16
திருக்குறள்
வரிசை எண்
51) பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். 292.
புரை - குற்றம்
52) எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. 299.
53) மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். 303.
வெகுளி - சினம்
54) இணர்எரி தோய்வுஅன்ன இன்னா செயினும்
புணரின் வெருளாமை நன்று. 308.
இணர்ளி - கொழுந்து விட்டு எரியும் தீ,
புனரின் - சேர்ந்தால்
55) சிறப்பு:ஈனும் செல்வம்பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள். 31
ܛ .
மாசு - குற்றம். கோள் - கொள்கை
56) இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நான
நன்னயம் செய்து விடல். 314.
57) பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தானே வரும். 319.
زمر؟ | 58) பகுத்துஉண்டு பல்உயிர் ஒம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322.
59) தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்உயிர் நீக்கும் வினை. 327.
60) குடம்பை தனித்துஒழியப் புள்பறந்து அற்றே
உடம்பொடு உயிர்இடை நட்பு. 338.
குடம்பை - கூடு புள் - பறவை
ষ্টুষ্ঠু
 
 
 
 

51) குற்றமற்ற நன்மை செய்யுமாயின், அதற்காகச் சொல்லப்படும் பொய்யும்
"வாய்மை (உண்மை) என்று கொள்ளப்படக்கூடியதே.
52) புற இருளை நீக்கும் விளக்குகள் யாவும் உண்மையான விளக்குகளல்ல. மன இருளை நீக்கும் அறிவு விளக்கே சான்றோர்க்கு உண்மையான விளக்காகும்.
53) எவரிடத்தும் கோபம் கொள்ளற்க. அக்கோபத்தினால் தீமைகளே
உண்டாகும்.
54) பெருநெருப்பிலே தோய்வதுபோன்ற துன்பத்தை ஒருவன் செய்தாலும்,
அவன்மீது கோபம் கொள்ளாது இருத்தலே நல்லது.
55) சிறப்புக்களைத் தருகின்ற பெரும் செல்வம் கிடைக்குமாயினும், அதற்காகப் பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தல் குற்றமற்ற பெரியோரின் கொள்கையாகும்.
56) பிறர்க்குத் துன்பம் செய்தவருக்குச் சரியான தண்டனை, அவர் வெட்கும்
படியாக அவருக்கு நன்மை செய்து விடுதலேயாகும்.
57) இப்போது பிறருக்குத் துன்பம் செய்தவருக்கு, பின்னால் தானாகவே துன்பம்
வந்து சேரும்.
58) பசித்தவர்களோடு உணவைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் காத்துவருதல், நீதிநூலோர் சொல்லிய அறங்கள் எல்லாவற்றிலும் மேலானது.
59) தனது உயிரே போகும் எனினும், பிற உயிர்களின் இனிய உயிரை
நீக்கும் செயலைச் செய்யலாகாது. Ya
60) முட்டையைத் தனித்து விட்டு விட்டு, பறவையானது பறந்து செல்வது போன்றதே, எமது உடம்புக்கும் அதில் தங்கியிருக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு
திருக்குறள் 100 15

Page 17
61)
62)
63)
64)
65)
66)
67)
68)
69)
70)
திருக்குறள்
வரிசை எண்
உறங்குவது போலும் சாக்காடு உறங்கிப்பின் விழிப்பது போலும் பிறப்பு.
சாக்காடு - இறப்பு
யான் எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும் துன்பத்துள் துன்பம் கெடின்.
ஈண்டு - இவ்வுலகில்
கற்க கசடுஅறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
கசடு- ஐயம், (சந்தேகம்). அற - நீங்க
எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்ணன்ப வாழும் உயிர்க்கு.
தொட்டுஅனைத்து ஊறும் மணற்கேணி, மாந்தர்க்குக் கற்றஅனைத்து ஊறும் அறிவு.
கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு மாடுஅல்ல மற்றை அவை
விழுச் செல்வம் - சிறந்த செல்வம், மாடு - செல்வம்
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு.
திரு - செல்வம்
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்.
இலங்கு நூல் - (அறிவு) விளங்கும் நூல்
339.
346.
355.
369.
391.
392.
396.
400.
408.
 
 
 

61) ஒருவருக்கு இறப்பு வருதல், உறக்கம் வருவது போன்றது. பிறப்பு வருதல்
உறக்கத்தின்பின் விழித்தல் போன்றது.
62) நான்” “எனது என்னும் இறுமாப்பை நீக்கியவன், வானோர்க்கும்
கிடைத்தற்கரிய உயர்ந்த நிலையை எய்துவான்.
63) ஒரு பொருள் (வெளித்தோற்றத்தில்) எப்படியிருந்தபோதிலும்,
அப்பொருளின் உண்மையான தரத்தை ஆராய்ந்து காண்பதே அறிவாகும்.
64) பேராசை என்னும் பெரிய துன்பத்தை நீக்கிவிட்டால், இடையறாது
எப்பொழுதும் இன்பம் உண்டாகும்.
65) ஒருவர் தாம் கற்கவேண்டிய நூல்களை ஐயம் திரிபு அறக் கற்க
வேண்டும். கற்றபின் கற்ற கல்விக்கு ஏற்றபடி ஒழுக வேண்டும்.
66) எண்களால் அறியப்படும் கணிதம், எழுத்தினால் அறியப்படும் அறிவு நூல்கள் ஆகிய இவ்விரண்டும் உயிர் வாழும் மக்களின் கண்கள் போன்றவை.
67) மண்ணில் தோண்டப்படும் கேணி, தோண்டுகின்ற அளவுக்கு நீர் ஊறும்.
மக்கள் தாம் கற்கும் அளவுக்கே அறிவுவளர்ச்சி உண்டாகும்.
68) கேடற்ற சிறந்த செல்வம் கல்வி ஆகும். மற்றைய பொருட் செல்வங்கள்
யாவும் சிறப்பானவை அல்ல.
69) நல்லவர்களிடம் ஏற்பட்ட வறுமையைவிடக் கல்விகற்காத மூடர்களிடம்
சேர்ந்த செல்வம் அதிக துன்பத்தைத் தரக் கூடியது.
70) விலங்குகளுக்கும் மக்களுக்கும் உள்ள வேறுபாடு போன்றதே, சிறந்த நூல்களைக் கற்ற அறிஞர்களுக்கும் கல்லாதவர்களுக்கும் உள்ள வேறுபாடு.

Page 18
வரிசை எண்
71) செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். 412. ༈ རྗེས་ ஈதல் - வழங்குதல்
72) எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். 416.
ஆன்ற - நிறைந்த
73) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு 423.
74) அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். 428.
பேதைமை - அறிவின்மை
75) அறிவுஉடையார் எல்லாம் உடையர் அறிவுஇலார்
என்உடைய ரேனும் இலர். 430. 76) தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
জন্ম ஸ்வர் பழிநாணு வார். 433.
தினைத்துணை - சிறிய தினை அளவு:
77) வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். 435.
கணி ைைெகுப்பூ வைத்தாறு - வைக்கோல் 7) தன்தற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
எண்குற்றம் ஆகும் இறைக்கு 436.
இறை - தலைவன்
79) அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து கொளல் 44,
} ܬܲܪ இதன்மை -meباش
இ ஆகியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
இவித் தமராக் கொனல், 443.
ஆண் - உற்றும்
 

71) செவியால் கேட்டுக் கொள்ளப்படும் அறிவு கிடைக்காத நேரத்தில்தான்,
(உயிர்வாழ்வதற்காக) வயிற்றுக்கும் சிறிது உணவு வழங்கப்படும்.
72) எத்துணைச் சிறியவையாயினும் நல்ல கருத்துக்களைக் கேட்டு அறிக. அத்துணை சிறியவையாக இருந்த போதிலும் அவை நிறைந்த பெருமையைத்தரும்.
73) எந்த ஒரு பொருள் பற்றியும் யார் யார் எப்படி எப்படிப்பேசினாலும், அப்பேச்சுக்களிலிருந்து அவற்றின் உண்மைப் பொருளைக் கண்டு கொள்வதே அறிவாகும்.
74) பயப்பட வேண்டியவற்றுக்குப் பயப்படாதிருப்பது அறிவற்ற செயலாகும். பயப்பட வேண்டியவற்றுக்குப் பயந்து நடத்தல் அறிவுடையார் செயலாகும்.
75) பிற என்ன இல்லாதபோதும், அறிவு 9) 60DLUL6) ri56 66ò6OTLD உள்ளவர்களாகக் கருதப்படுவர். பிற என்ன இருந்தபோதும், அறிவு இல்லாதவர்கள் ஒன்றுமே இல்லாதவராகக் கருதப்படுவர்.
76) ஊரார் பழிச்சொல்லுக்கு வெட்கப்படும் தன்மையர், தாம் தினை அளவான சிறிய தவறு செய்ய நேரிட்டாலும், அதைப் பனை அளவு பெரிதாக எண்ணுவர்.
77) குற்றம் நேர்வதற்கு முன்பே தன்னைக் காத்து நடக்காதவனுடைய
வாழ்க்கை, நெருப்பிலிட்ட வைக்கோல் போல அழிந்துவிடும்.
78) தன்னுடைய குற்றத்தை அறிந்து அதை நீக்கியபின், மற்றவர்களுடைய
குற்றத்தை கண்டு கடியக்கூடிய தலைவனுக்குத் தவறு ஏற்படாது.
79) அறத்தின் சிறப்பை அறிந்து, மூத்த அறிஞர்களின் நட்பின் அருமை
அறிந்து, தெளிந்து நட்புக் கொள்ள வேண்டும்.
80) கிடைத்தற்கு அரியவற்றுள் எல்லாம் அருமையானது, அறிவிற் சிறந்த பெரியாரைப் போற்றி, அவரைத் தமது உற்றவராகக் கொள்வதேயாம்.
திருக்குறள் 100

Page 19
81)
82)
83)
84)
85)
86)
87)
88)
89)
90)
திருக்குறள் செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க வரிசை எண்
செய்யாமை யானும் கெடும். 466.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. 467.
இழுக்கு - குற்றம்,
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். 471.
வினை - செயல். தூக்கி - சீர்தூக்கி
பிலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் 475.
பீலி - மயில் இறகு. பெய் - ஏற்றிய சாகாடு - வண்டி இறும் - முறியும், சால - மிகவும்
அளவுஅறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். - 479.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின் - . 484.
ஞாலம் - உலகம்
கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து. 490.
கூம்பும் பருவம் - ஒதுங்கி இருக்கவேண்டிய காலம், சீர்ந்த இடத்து - ஏற்ற காலம் வாய்க்கும் போது நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. 495.
நெடும்புனல் - ஆழமுள்ள நீர் குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். 504.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். 510.
தேரான் - ஆராய்ந்து பார்க்காது. ஐயுறவு - சந்தேகம்,
தீரா இடும்பை - நிங்காத துன்பம்
திருக்குறள்:
 

81) ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான்,
செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதாலும் கெடுவான்.
82) ஒரு கருமத்தைச் செய்யு முன்னரே அதை நன்கு ஆராய்ந்து எண்ணிச் செய்யவேண்டும். தொடங்கிய பின் ஆராய்வோம் என்று எண்ணுவது g56(3).
83) ஒரு கருமத்தைச் செய்யும்போது, அதன் வலிமையையும், தன்னுடைய திறமையையும், தனக்குத் துணையாக உள்ளவற்றின் திறனையும், அதற்கு எதிராக உள்ளவற்றின் திறத்தையும் கருத்தில் கொண்டு செய்யவேண்டும்.
84) மயில் இறகு ஏற்றிய வண்டியேயாயினும், அம்மயில் இறகினை அளவுக்கு
மிஞ்சி ஏற்றினால், அவ்வண்டியின் அச்சு முறிந்து விடும்.
85) தனது பொருளின் அளவை அறிந்து அதற்கேற்ப வாழாத வனுடைய, வாழ்க்கை, நன்றாக உள்ளது போலத் தோன்றி, பின் இல்லாமல் அழிந்து போகும்.
86) ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து செயலைச் செய்பவன், இந்த
உலகத்தைக் கட்டி ஆளக் கருதினாலும் அது கைகூடும்.
87) ஒய்ந்திருக்க வேண்டிய காலத்தில் கொக்கைப் போலக் காத்திருக்க வேண்டும். நிலைமை சரியாக அமையும்போது. அதன் குத்தைப்போலத் தவறாது செயற்பட வேண்டும்.
88) பெரிய நீர் நிலையில் இருக்கும்போது, முதலை பிற உயிர்களை யெல்லாம் வெல்லும், அந்த நீர் நிலையைவிட்டு நீங்கினால், பிற பிராணிகள் அதைக் கொன்றுவிடும்.
89) ஒருவனிடம் உள்ள நற்குணங்களையும், குறைகளையும் ஆராய்ந்து,
அவற்றுள் அதிகமாக உள்ளவற்றால் அவனை அறிந்து கொள்க.
90) ஒருவனை ஆராயாது தெளிந்து நம்புவதும், தெளிந்து நம்பியவரை
ஐயுறுவதும் தீராத துன்பத்தைத் தரும்.

Page 20
  

Page 21
திருக்குறள் 133 அதிகாரங்கள் 1330 குறட்பாக்கள்
(1) அறத்துப்பால் 1 பாயிரவியல் - 4 அதிகாரங்கள் (4x10) 40 2 இலலறவியல் - 20 அதிகாரங்கள் (20x10) 200 3 துறவறவியல் - 13 அதிகாரங்கள் (13x10) 130 4. ஊழியல் - 1 அதிகாரம் (1x10) 10
380
(2) பொருட்பால்
1 அரசியல் 25 அதிகாரங்கள் (25x10) 250 அமைச்சியல் - 10 அதிகாரங்கள் (10x10) 100 3 அரணியல் 2 அதிகாரங்கள் (2x10) 20 4. கூழியல் 1 அதிகாரம் (1x10) 10 5 படையியல் 2 அதிகாரங்கள் (2x10) 20 6. நட்பியல் 17 அதிகாரங்கள் (17x10) 170 7 குடியியல் 13 அதிகாரங்கள் (13x10-130
700
(3) இண்பத்துப்பால் 1. களவியல் 7 அதிகாரங்கள் (7x10) 70 2. கற்பியல் 18 அதிகாரங்கள் (18x10) 180
250
குறட்பாக்கள் மொத்தத் தொகை - 1330
 

LIITUȚIȚIaj sourių Luog) souriąosioÚff seqøãŝo 1991@ųílo|??-?Lúrī1ạo ús@giog)GT +++
TLL L000 LL LLLLLLL L0LLL0Y LLLSL00L LLLLL LLLLLLY0Y
*^��^�^
|
「디loomugitoqo olo)+©)
(Ļsíqīlē) uqTq7ou6-(súGiff) uqTq709ọoolo)
十-十
(±11g isto) qiaorīqī1991go:JfTC)(411afē) sĒĢfī) oftewe

Page 22
உறவினர்,
பெரியவிளான்,
நி) இளவாலை.
அமரர் வைரமுத்து அழகர் அவர்களின் இறுதிக் கிரியைகளில் கலந்து அஞ்சலியை வெளியிட்ட நிறுவனங்களுக்கும், இரங்கல் உரை நிகழ்த்தியவர்களுக்கும் அனுதாபச் செய்திகள் அனுப்பியவர்களுக்கும், அந்தியேட்டி, வீட்டுக்கிருத்திய கிரியைகளில் பங்குகொண்ட யாவர்க்கும் மற்றும்
சகல விதங்களிலும் உதவி செய்த உற்றார்,
இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்
செய்யாமற் செய்து உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்ற அரிது.
எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்தி அமரத்துவம் அடைந்த
அயலவர், நண்பர்கள் அனைவருக்கும்
கொள்கின்றோம்.
இங்ங்னம்
குடும்பத்தினர் (3)
றம்மியா பிறிண்டேர்ஸ், மானிப்பாய். தொ.பே. 0779591252
 
 


Page 23

Sivaranjanam