கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விசுவலிங்கம் பரஞ்சோதி (நினைவு மலர்)

Page 1
இணுவில் மேற்ை GoIF in LDII
"கலை
அவர்களின் சி
02.
 
 
 
 
 

கைப் பிறப்பிடமாகவும்,
(கவும் கொண்ட ஞானகேசரி’ வலிங்கம் பரஞ்சோ வயதப்பேறு குறித்த
05:2008

Page 2

0eYeeeT0erYJLAz0ereeLLaLLLL දි)||6 3)6 3)6 टS. } :ہے “S % d6)ILDutb 岑 议
g @架
இணுவில் மேற்கைய் பிறப்பிடமாகவும், ဒွို வசிப்பிடமாகவும் கொண்ட
s “கலைஞானகேசரி”
2 O O O O
அமரர்.திரு.விசுவலிங்கம் பரஞ்சோதி
அவர்களின் சிவபதப்பேறு குறித்த
o WApr
§န္တိ 02.05.2008
SSS.2, కీనక్కిత్తి9&క్కిత్త్వి9Reసిల్లి52

Page 3
翔S
雞 繫
恋
J
என்றும் எம் குரும்பத்தின் ஒளிவிளக்காய் திகழ்ந்து இன்று வானுறையும் தெய்வமாகிவிட்ட எம் குரும்பத்தலைவரின் பாதாரவிந்தங்களில்
இம்மலரினை
காணிக்கையாக்குகின்றோம்.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தே - வேண்டா நமக்கு மதுவழியே நாம் போமளவும் எமக்கென்னென் றிட்டுண்டிரும்.
瓣
N 蟹 激 影 N: 磨 谤
Në ?
Në. 霹
瀏 Në 缀
స్త్రీ
བྱེ་
N།5
SSM
es
LU
-: 02:-
 


Page 4

பஞ்சபுராணத் திரட்டு
LSLSLESAALeTSLSLMLSSLALeSMALALSLSSLSA LESAAALSLSSLSA LESLESLMALALSLESLMAAESSeMS LESLESMALkLSSLESeMALkSkLSAeS
திருச்சிற்றம்பலம் விநாயகர் காப்பு வாக்குண்டாம் நல்லமன முண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு.
தேவாரம் எல்லா வுலகமு மானாய் நீயே
யேகம்பம் மேவி யிருந்தாய் நீயே நல்லாரை நன்மை யறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே பொல்லா வினைக ளறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருவையா றகலாத சேம்பொற் சோதி
திருவாசகம்
பாரொடு விண்ணாய்ப் பரந்தவெம் பரனே
பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
ஆண்டநீ யருளிலை யானால் வார்கட லுலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகவென் றருள்புரி யாயே!
-: 03:-

Page 5
திருவிசைப்பா கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை மற்றவ ரறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண் டுள்ளங்
குளிரவென் கண்குளிர்ந்'தனவே!
திருப்பல்லாண்டு சீரும் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றதார் பெறுவாருலகில் ஊரும் உலகும் கழற வுளறி
உமைமண வாளனுக்காட் பாசும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம் இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னையென்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான்மகிழ்ந்து பாடி அறவாநி ஆடும்போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்.
திருப்புகழ் பக்தியால் யானுனைப் - பலகாலும் பற்றியே மாதிருப் - புகழ்பாடி முத்தனா மாறெனைப் - பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் - கருள்வாயே
-: 04:-

உத்தமா தானசற் - குணர்நேசா
glhoolT LDITLD60slds - assfourtest
வித்தகா ஞானசத் - திணிபாதா
வெற்றி வேலாயுதப் - பெருமாளே.
வாழ்த்து ஆறிரு தடந்தோள் வாழ்க! அறுமுகம் வாழ்க! வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க! செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க! யானைதன் அணங்கும் வாழ்க! மாறிலா வள்ளி வாழ்க! வாழ்கசீர் அடியார் எல்லாம்!
பட்டினத்தார் பாடல் பிறவாதிருக்க வரம் பெறல்வேண்டும் பிறந்துவிட்டால் இறவாதிருக்க மருந் துண்டுகாணிது வெப்படியோ அறமார்புகழ் தில்லையம்பல வாணரடிக்கமலம் மறவாதிருமண மேயதுகாண்மருந் துனக்கே.
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப் பையல்என்ற போதேபரிந்து எடுத்துச் - செய்யஇரு கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி.
கல்லாப்பிழையும் கருதாப்பிழையுங் கசிந்துருகி நில்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின்னஞ்செழுத்தை சொல்லாப்பிழையுந் துதியாப்பிழையும் தொழாப்பிழையும் எல்லாப்பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.
திருச்சிற்றம்பலம்
-: 05:-

Page 6
“கலைஞானகேசரி’ அமரர் திருவிசுவலிங்கம் பரஞ்சோதி அவர்களினி வாழ்க்கை வரலாறு
ஏழிசையும் தமிழ்மறையும் சேர்ந்திலங்கி சைவமதம் தழைத் தோங்கும் சீர்பதியாம், சிவபூமியின் வடபால் யாழ்ப்பாண மத்தியில் துலங்கும் இணுவையிலே, வேளாண்மை விளைவித்து தானுண்டு, தன் சுற்றமுண்டு என வாழ்ந்த விசுவலிங்கம் - தங்கராசம் தம்பதியர்க்கு வடிவாம்பிகை, தனலட்சுமியுடன் ஏகபுத்திரனாக 08.12.1947 இல் வந்தவதரித்தவர் அமரர் பர்ஞ்சோதி அவர்கள்.
இன்று மத்திய கல்லூரி என வழங்கும் இணுவில் சைவ மகாஜனா வித்தியாசாலையில் கற்ற காலத்தில் ஏட்டுக்கல்வியுடன் மட்டுமன்றி, விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கினார். நீளம்பாய்தல், தத்திமிதித்துப் பாய்தல் நிகழ்ச்சிகளில் அன்றைய மானிப்பாய் வட்டாரத்தில் சாதனையாளராகத் திகழ்ந்தார். 1965ம் ஆண்டு பாடசாலையில் மாணவ தலைவராக இருந்து பெற்ற அனுபவம் பிற்காலத்தில் பாடசாலைகளில் சிறந்த தலைமைத்துவத்திற்கு வழிவகுத்தது.
பாடசாலைகளில் மட்டுமன்றி, ஊரிலுள்ள விளையாட்டுக் கழகங்களில் உறுப்பினராகவிருந்து தாச்சி, காற்பந்து, கரப்பந்து, துடுப்பாட்டம் போன்றவற்றிலும் சிறந்த வீரனாகத் திகழ்ந்தார்.
கல்வியில் சிறந்த சித்திபெற்ற இவர் 18.07.1972 இல் லிந்துலை தோட்டத்துறையினரால் நுவரெலியா அக்ரா கலிபோனிய தோட்டப்பாடசாலையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 16.06.1977 இல் அரசாங்க நியமனம் பெற்ற இவர் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிபெற்று கலிடேனிய தமிழ் வித்தியாலயம், அக்கரப்பத்தனை த.ம.வி, இணுவில் மத்திய கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும், அக்கரப்பத்தனையில் பதில் அதிபராகவும், இணுவில் மத்திய கல்லூரியில் உபஅதிபராகவும்
-: 06:-

இருந்து உடல் நிலையும் சூழ்நிலையும் பாதகமாக அமையவே 08.12.2005 இல் ஓய்வுபெற்றார். இவரது வழிகாட்டலில் பலர் ஆசிரியர் களாகி சிறப்புற்றனர்.
கற்றகாலத்தில் மட்டுமன்றி கற்பித்தகாலத்திலும் இவர் மைதானங்களில் தடம்பதித்தார். 1980 களின் ஆரம்பப் பகுதியில் டயகம மைதமானம், TRI மைதானம் ஆகியவற்றில் அக்கரப் பத்தனை விளைாட்டுக் கழகத்தில் விளையாடி சகலதுறை ஆட்டக் காரராகவும் திகழ்ந்தார்.
கல்விச்சிறப்பும், பதவிச்சிறப்பும், நற்பண்புகளும் ஒருங்கேசேர அளவெட்டியைச் சேர்ந்த செல்லப்பா தம்பதிகள் தமது சிரேஷ்ட புத்திரி செங்கமலத்தை மணம்முடித்துக் கொடுத்தனர். இவர்களின் இல்லறமாம் நல்லறத்தின் தவப்பயனாய் ஜனார்த்தனி, யசோதினி, றோஜினி, ரமேஸ்கண்ணா ஆகிய பிள்ளைச் செல்வங்களைப் பெற்றெடுத்தனர். இவரது கள்ளமற்ற உள்ளத்தைப் பறை சாற்றுவதாக மூத்தமகள் மட்டக்களப்பு கல்வியியற் கல்லூரியில் கற்பித்தலில் டிப்ளோமா பட்டம் பெற்று இவ்வூரைச் சேர்ந்த அழகப்பெருமாள் தம்பதியினரின் மகன் வரதராஜனை மணம்புரிந்து, பேரப்பிள்ளை யையும் வழங்கி லண்டனில் இன்புற்று வாழ்கின்றார்.
இரண்டாவது மகள் யசோதினி யாழ்ப்பாணப் பல்கலைக் கழத்தில் பட்டம்பெற்று தனது மைத்துனரான பூங்குன்றனை மணம் முடித்து லண்டனில் சந்தோசமாக வாழ்கின்றனர். இளைய மகள் றோஜினி கலைமாணியாகி வேலையை எதிர் பார்த்திருக்க, ஏகபுத்திரன் ரமேஸ்கண்ணா லண்டனில் உயர்படிப்பை மேற்கொள்கின்றார்.
இவரது சேவைக்கு இவர்பெற்ற பாராட்டுக்களும், பாராட்டிய வர்களும் சான்றுகளாவன, சிங்களப் பாடசாலையுடன் சேர்ந்தியங்கிய அக்கரப்பத்தனை த.ம.வித்தியாலயத்தை தனிப்பாடசாலை யாக்கியதால் பாடசாலையின் ஸ்தாபகராக பெயர் பொறிக்கப் பட்டமையும், இவர் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் அமைச்சர் தொண்டமானும், இ.தொ.கா பிரமுகர்களும் கலந்து
-: 07:-

Page 7
சிறப்பித்தமையும், 1985 இல் யாழ்ப்பாணத்தில் வட்டாரக்கல்வி அதிகாரி திரு.தனஞ்செயன், வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் இரா.சுந்தரலிங்கம், கோட்டக்கல்வி அதிகாரி திரு.ரட்ணராஜா, வலயக்கல்விப் பணிப்பாளர் வீ.இராசையா, கோட்டக்கல்விப் பணிப்பாளர் தற்பரானந்த ஆகியோராலும் கெளரவிக்கப்பட்டதோடு, இவரிடம் இயல்பாகவே இருந்த பாடும் திறமையினால் இந்துகலாசார அமைச்சு “கலைஞானகேசரி’ என்னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது. இதற்காக திரு.ஆறு.திருமுருகன் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கெளரவித்ததோடு, இணுவில் மத்திய கல்லூரிச் சமூகமும், இணுவில் அரிமாக்கழகமும் இவரை வாழ்த்தி பொன்னாடை போர்த்திக் கெளரவித்தது.
கல்விப்பணி, சமூகப்பணி, இசைப்பணி என்பவற்றோடு குடும்பம், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரோடும் அன்பாகப் பழகியதோடு உதவும் பண்பும் கொண்ட இவர் பல யாழ்ப்பாணப் பாடசாலைகள் அகில இலங்கை சுற்றுல்ா சென்ற காலங்களில் வழிகாட்டும் உதவியாளராகச் செயற்பட்டார்.
இவரது வாழ்வுடன் தொடர்ந்திருந்த இறை வழிபாட்டு நாட்டம் சேவை இளைப்பாற்றலின் பின் மேன்மையடைந்தது. இணுவைக் கந்தன் மீதும், செகராசசேகரன் மீதும் அயரா பற்றுக்கொண்ட இவர் உற்சவ காலங்களில் திருமுறை ஓதல், திருமுறைக்கச்சேரி நடத்துதல், என்பவற்றுக்கப்பால், பிற்காலத்தில் வெள்ளிக்கிழமைகளில் சந்நிதி முருகனிடமும் சென்று தன் கீதாஞ்சலியைச் சமர்ப்பித்தார்.
அந்த நல்ல உள்ளம், இசைக்குரல், அன்பு நெஞ்சம் தான் வந்த வேலையை முடித்துக்கொண்டு 02.04.2008 புதன்கிழமை பகல் 1000 மணியளவில் இவ்வுலகைவிட்டு இறையடி சேர்ந்தது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம வல்ல இணுவைக்கந்தனையும், செகராசசேகரனையும் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
-: 08:-

பிரார்த்தனையுரை
அமரர் திருவாளர் விபரஞ்சோதி ஆசிரியர் அவர்களின் மறைவு ஓர் பேரிழப்பாகும். அவர் இளம் வயதிலே படிப்பிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் வல்லவர். மிகுந்த கடவுள் பக்தி உடையவர். செகராசசேகரப்பிள்ளையார், பரராஜசேகரப்பிள்ளையார், கந்தசாமியார், ஆறுமுகப்பெருமான், வயிரவப்பெருமான் முதலிய தெய்வங்களில் அதிக பற்று உடையவர். பருத்தியடைப்புப் பிள்ளையாரின் 3ம் திருவிழாவை மிகச் சிறப்பாக நடாத்துவார். பஞ்சபுராணங்களை எல்லா ஆலயங்களிலும் மிகுந்த பக்தியோடு முன்னின்று பாடுவார். அவர் தனது குடும்பத்தவர்களையும் அரவணைத்து நல்ல முன்னேற்றகரமாக வழிநடத்தியுள்ளார். தனது பிள்ளைகளையும் நல்ல இடத்தில் திருமணங்கள் செய்து மிகச் சிறப்பாக வாழி வகைசெய்துள்ளார். மகனையும் உயர்கல்விக்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். அப்படிப்பட்டவரின் ஆன்மா கட்டாயம் சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு, அன்னாரின் குடும்பத் தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங் களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
ந.உருத்திரமூர்த்திக்குருக்கள் குடும்பத்தினர் பிரதமகுருக்கள், கந்தசாமி கோவில், இணுவில்.
பாம்புக் கடிக்கு மருந்து “பாம்புக் கடிக்கு மிகச் சிறந்த மருந்து வாழைச்சாறு’ வாழைப் பட்டையைப் பிழிந்து சாறு எடுத்து பாம்பு கடித்தவரின் வாயில் புகட்ட வேண்டும். சாறு எடுப்பதற்குள் பற்கள் கிட்டிக் கொண்டால் புகட்டுவது கடினமல்லவா? அதற்கு உபாயம் இருக்கிறது. வாழைப் பட்டைகளைப் போட்டு அதன்மேல் கடிபட்ட வரைப் படுக்கவைத்தால், கிட்டிக்கொண்ட பற்கள் சுலபமாய்த் திறக்கும்.
-: 09:-

Page 8
நினைவஞ்சலி
இணுவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்த ஆசிரியர் “கலைஞானகேசரி" அமரர் திரு.விபரஞ்சோதி அவர்கள் காலமான செய்தி அறிந்தவுடன் அதிர்ச்சியடைந்தேன். அன்னால் பல்வேறு செயற்பாடுகளில் தொடர்புடையவர். எனது கிட்டிய உறவினர். இணுவில் மத்திய கல்லூரியில் (இணுவில் சைவமகாஜன மகா வித்தியாலயம்) நான் ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் மேல்வகுப்புக்ளில் கல்வி கற்றவர். இணுவில் மத்திய கல்லூரியில் அதிபராக இருந்த காலத்தில் உடன் ஆசிரியராகக் கடமைபுரிந்தவர். அக்காலத்தில் மாணவர்களின் கல்வியில் மிக அக்கறையாக இருந்தவர். கல்லூரியில் மாணவர்களின் இணைபாடவிதானச் செயற் பாடுகளில் அயராது உழைத்தவர்.
வெளிமாவட்டங்களில் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றி, இடமாற்றம் பெற்று எமது கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார். பதவிக்கு ஆசைப்படாது சேவை செய்தவள். ஆரம்பப்பிரிவின் அதிபராக கடமையாற்றி சுகவீனம் காரணமாக இளைப்பாறியவர்.
அன்னார் பண்ணிசை விற்பன்னராக விளங்கிய ஒருவர். ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக் காலங்களிலும், ஏனைய காலங்களிலும் திருமுறைகள் ஓதி சிறப்பித்து வந்துள்ளார்.
அன்னாரின் பிரிவு கல்விச் சமூகத்திற்கு ஓர் பேரிழப்பாகும். அமரரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல கந்தப் பெருமானையும், சாந்தியடி வயிரவப் பெருமானையும் பிரார்த்திக்கின்றேன்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
சரஸ்வதி மஹால், செ.சோதிப்பெருமாள் J.P இணுவில். இளைப்பாறிய அதிள்,
இணுவில் மத்திய கல்லூரி
- 10 -

அஞ்சலியுரை கலைஞானகேசரி அமரர்.விசுவலிங்கம் பரஞ்சோதி அவர்கள் காலமாகிய செய்திகேட்டு இணுவில் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர். இணுவில் கிராமம் ஓர் நல்லாசிரியனை, கலைஞனை, நற்பண்பாளனை இழந்து நிற்கின்றது. பரஞ்சோதி ஆசிரியர் என்றால் சிறுபிள்ளைகள் தொடக்கம் முதியோர்கள் வரை தெரியாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.
எமது கல்லூரியில் கல்வி கற்றது மட்டுமன்றி, தனது கிராம மக்களுக்கு அருஞ்சேவையாற்ற வேண்டும் என ஆசிரியராக, உபஅதிபராக கடமையாற்றி இருவருடங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவு காரணமாக சேவையினின்று ஓய்வுபெற்றவர். இருந்தபோதும் கல்லூரி வளர்ச்சி பற்றிஅதிபர் என்ற வகையில் என்னுடன் அடிக்கடி கதைத்துக்கொள்வார். கல்லூரியில் சேவை யாற்றிய காலத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக மாணவர்களை சித்தியடைய வைப்பதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் காரணமாக கூடுதலான மாணவர்கள் சித்தியடைந்தவர். ஆசிரியர்களுடன் தானும் இணைந்து மேலதிக வகுப்புக்களை நடத்தி பயிற்சி அளித்தவர். இணைபாடவிதானச் செயற்பாடுகள் அமுலாக் கத்தல் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டவர். கல்லூரியின் வளங்களைப் பெருக்கி மாணவர்கள் கற்றலுக்கு ஊக்குவித்தவர். பெற்றோர்கள், பழைய மாணவர்களின் உதவிகள் பெற்று ஆரம்பப்பிரிவு மண்டபத்திற் மின்னிணைப்பு செய்தமை, மின்விசிறி பொருத்தியமை, முற்றத்தில் சரஸ்வதி சிலை நிறுவியமை போற்றுதற்குரிய அம்சங்களாகும்.
அவர் ஆரம்பப்பிரிவில் பணியாற்றிய காலம் பொற்காலம் என்று குறிப்பிடலாம்.
அன்னாரது இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருடன் எமது துக்கத்தையும் பகிர்ந்து கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
அ.சதானந்தன் அதிவர், இணுவில் மத்திய கல்லூரி
-: 11 :-

Page 9
கையறுநிலைப்பாக்கள் (அறுசீர் விருத்தம்)
மனைவி மாள்கை திருமண மாலை சூடி மங்கல வாழ்வு தந்து இருமணம் ஒன்று சேர்ந்து அவனியில் அன்பாய் வாழ்ந்தோம் குறுமனக் காலன் உம்மை எம்மிடம் பிரித்துச் சென்ற மறுகிடும் செய்கை எம்மை கவலையில் ஆழ்த்து தையா.
பிள்ளைகள் புலம்பல் (ஜனார்த்தனி, யசோதினி, றோஜினி) தந்தையே என்று சொல்லித் தரணியில் அழைக்க இன்று எந்தையே யாரு முண்டோ எலும்பிலாப் புழுவைப் போல வெந்துநாம் துயரில் வாடி வாழ்வையே கழிக்கின் றோமே புந்தியில் உம்மை வைத்து வேண்டுவோம் ஆத்ம சாந்தி.
(ரமேஸ்கண்ணா) அன்னிய நாடு சென்றும் வாழ்ந்ததால் உம்மை நாங்கள் அன்புடன் ஓடி வந்து உயிருடன் பார்க்க வில்லை அன்பிலாக் காலன் செய்த சதியினால் உயிரோ டில்லை இன்பமாய் உம்மைக் காண கொடுத்துநாம் வைக்கவில்லை
உடன்பிறப்புகள் உளறல் உதிரத்தில் ஒன்றாய்த் தோன்றி உருகிடும் அன்பி னோடு உதரமும் ஒன்றே எங்கள் உடன்பிறப் பான நாங்கள் கதிகெட வாழ்ந்த தில்லை பிரிவென்னும் சூறை யாலே மதிகெட்டு மயங்கு கின்றோம் மேதினி மீதில் ஐயா.
மைத்துனர், மைத்துனி மயங்கல் அத்தானே என்று சொல்ல அவனியில் யாரும் இல்லை தித்திக்கும் மொழி களோடு தீஞ்சுவைக் கதைகள் சொல்லி எத்திக்கும் போற்ற வாழ்ந்த அன்புடை மச்சான் நீயோ பத்தியாய் உமது ஆத்மா சாந்திக்காய் வேண்டி நிற்போம். -: 12:-

மருமக்கள் புலம்பல் எம்மன்னை தந்தை போல மாமாவே உம்மை நாங்கள் எம்மனை மீதில் வைத்து உதவிகள் பலவும் செய்தோம் நம்பினோம் நோயில் நீங்கள் மீளுவீர் என்று இருக்க விம்மிநாம் அழவே செய்தான் இயமனும் இரக்க மின்றி.
பேரப்பிள்ளைகள் புலம்பல் அம்மப்பா என்று சொல்ல அவனியில் யாரும் இல்லை தப்பப்பா என்று சொல்லி தீமையை விலக்கச் செய்தீர் வெப்பத்து பயிர்க்கு நீராய் துயரத்தை துடைப்பீர் நீரோ எப்பப்பா உம்மைக் காண்போம் காலனும் கொடியன் தானே.
உற்றார், உறவினர் அலறல் உறவுகள் எங்க ளுக்கும் ஊரவர் யாவ ருக்கும் நறவென மொழிகள் பேசி நல்வழி பலவும் காட்டி உறவுக்கு அர்த்த மான உங்களின் மரணச் செய்தி பறவைக்கு பாய்ந்த அம்பாய் இதயத்துள் தைத்த தையோ.
தேற்றம் (அறுசீர் விருத்தம்) குஞ்சரம் ஊர்ந்த கோவும் குவலயம் மீதில் ஒர்நாள் வஞ்சகன் காலன் பாசக் கயிற்றுக்கு இரையு மாகி துஞ்சுவர் என்ற உண்மை தெரிந்தும்நீ கண்ணின் நீரை மிஞ்சிடச் சொரிய வேண்டாம் கடமையைச் செய்து வாழ்வீர்.
来 தவறித் தவறின் தவறன்று தவறறிந்து தவறின் தவறு.
米 களவினால் ஆகிய ஆக்கம்
அளவிறந்து ஆவதுபோலக் கெடும்.
-: 1.3 :-

Page 10
எவ்வழிக் காலன் வந்தான்?
பலகலையும் சிறந்தபதிப் பேரிணுவைப் பக்திசெய் பருத்தியானை, தம்பியைப் பாடிப் பரவிய பரஞ்சோதி - எம் தந்தையுனை அழைத்தனரோ!
விசுவலிங்கம் தங்கராசம் சேர் நேசமகனுனை வாவென்று சொன்னவுடன், செங்கமலம் - உன் பாசத்தவளை பெருகும் அன்புடை மங்களைப் பிரிந்து நீ சென்றதோனோ!
தவமிருந்து நீசெய்த பக்திப் பயன்களில் பேத்தி முகம் காணாது சென்றனையோ.
வாடுகின்றோம் நாமிங்கு!
-: 14 :-
 

அன்புமகன் உயர்வு கண்டு உவகையுடன் நீயிருந்து இன்னும் சிறப்புடனே வாழ்வாயென்று கண்டதெல்லாம் கனவாச்சே!
ஐமூன்று வருடம்நீர் வாழ்வென்று ஐயமுறச் சொன்ன நின் மொழிகேட்டு ஆறப்போட்டோம் பயணமதை ஆறிடுமே எம்நெஞ்சு!
பாசமிகு சோதரிகள் பரிதவிக்க மருமக்கள் பேரப்பிள்ளைகள் மனம்கற மறந்து நீர் வேறுலகு சென்றதேனோ!
அத்தானென் றுனை அழைத்த அன்புடை நெஞ்சங்கள் பெறாமக்கள் அழுகுரல் உம் காதில் விழவில்லையோ!
பரஞ்சோதி அண்ணனென்னுறும் அத்தான்ெறும் ஆசானென்றும் ஆயிரம் உறவு அயலெல்லாம் சூழ்ந்திருக்க எவ்வழிக் காலன் வந்தான்!
பூ யசோதினி
லண்டன்
-: 15:-

Page 11
நவக்கிரவுற தோத்திரங்கள்
திருச்சிற்றம்பலம் பலன்மொழி நவநிதி நல்கிடும் நவக்கிரஹமாலையைத் தவத்தோடு நேமமாய் தனித்திருந் துரைத்திடின் அவத்தோடு வறுமைகள் அழிபசி பிணிகளும் சிவசிவ மறைந்திடும் செல்வமே நிறைந்திடும்.
காப்பு மண்ணுள் உயிர்கட்கு அன்ைத்தும் மாறாது நண்ணு நவக்கிரக நண்பு?சொலத் - தண்ணுலவு திங்களனி தங்குமுயர் செஞ்சடையா ருள்மகிழ்சேய் கங்கையருள் ஜங்கரனார் காப்பு.
சூரிய பகவான் (ஞாயிறு) சீலமாய் வாழச் சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி சூரியா போற்றி சுந்தரா போற்றி வீரியா போற்றி வினைகள் களைவாய்.
சந்திர பகவான் (திங்கள்) எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி திருவருள் புரிவாய் சந்திரா போற்றி சற்குணா போற்றி சங்கடந் தீர்ப்பாய் சந்திரா போற்றி
அங்காரக பகவான் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய் தேவே குறைவில்லா தருள்வாய் குணமுடன் வாழ மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி
ஆங்கார்ர்ஹனே அவதிகள் நீக்கு.
-: 16 :-

புத பகவான் (புதன்) புண்ணியப் புதனே புகலெனப் பணிந்தேன் கண்முனே கனிந்துநீ கருணையா யொளிவிடு பண்ணிடும் செயல்களின் பலனெனப் பல்நலம் மண்ணினி லருள்வாய் மலரடி போற்றியே.
குரு பகவான் (வியாழன்) குணமுள்ள வியாழ குரு பகவானே மணமுள்ள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் பிரகஸ்பதி வியார பரகுரு நேசா கிரஹதோஷ மின்றிக் கடாட்சித் தருள்வாய்.
சுக்கிர பகவான் (வெள்ளி) சுக்கிர மூர்த்தி சுகமிக ஈவாய் வக்கிர மின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க் கருளே.
சனிஸ்வரன் (சனி) சங்கடந் தீர்க்கும் சனி பகவானே மங்களம் பொங்க மனம்வைத் தருள்வாய் சச்சர வின்றி சனிஸ்வர தேவே இச்சகம் வாழ இன்னருள் தாதா
இராகு பகவான் (ராகு) அரவெனும் ராகு ஐயனே போற்றி கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி இராகு கனியே ரெம்மியா போற்றி.
கேது பகவான் (கேது) கேது தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய் வாதம் வம்பு வழக்குகள் இன்றி கேது தேவே கேண்மையாய் ரட்சி.
திருச்சிற்றம்பலம் -: 17:-

Page 12
01. 02. 03.
05. 06. 07. 08. 09. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. 29. 30.
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
விநாயகர் அர்ச்சனை 108 (3Lubg அனுகூல விநாயகா அகார உகார மகாரமே அடியார்க்கு எளியாய் அப்பல் அவல் பிரியாய் அமரரைக் காத்தவா அரசமரம் அமர்ந்தாய் அறுகம்புல்மாலை அணிவோய் ஆதி விநாயகா ஆபத்துக் காத்த விநாயகரே ஆறுமுகனுக்கு அருளினோய் ஆழத்துப் பிள்ளையார் ஆனைமுகத்து அரசே இன்னருள் தருவாய் உச்சிஷ்ட கணபதி உச்சிப் பிள்ளையாரோ உத்துண்ட கணபதி ஊர்த்துவ கணபதி எங்கும் இருப்போய் எள்ளுருண்டை பொறி ஏற்பாய் ஏகதந்த கணபதி ஏகாட்சர கணபதி ஏரம்ப கணபதி ஐந்து கரத்தோய் ஓங்கார வடிவே ஒளைவைக்கு அருளினோய் கணபதி ஈஸ்வரம் கற்பக விநாயகரே கயமுக அசுரனைக் கடிந்தாய் கள்ளவாரணப் பிள்ளையாரே காணாபத்தியத் தலைவா
-: 18 :-
போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
 

காரிய சித்தி கணபதியே காவிரியை விரித்தாய் குட்டிக்கொள்ள அருள்வாய் குளக்கரை அமர்ந்தாய் கொம்பொடித்துப் போர் செய்தாய் சக்கர விநாயகரே சக்தி கணபதி சங்கடஹர கணபதி சாளக்கிராம விநாயகா சிங்கமுக கணபதி சிதறுகாய்ப் பிரியா சித்தி கணபதி சித்தி புத்தி விநாயகா சிருஷ்டி கணபதி சிவப் பிரியாய் சுஜீப்ர கணபதி சுப்ரப்ரசாத கணபதி சுந்தர கணபதி செல்வக் கணபதி சொர்னக கணபதி ஞானக் கொழுந்தே தருண கணபதி திரயாட்சர கணபதி திருமுறை காட்டிய விநாயகரே திருவழஞ்சுழித் தேவே துண்டி கணபதி தும்பிக்கைத் துணையே துர்க்கா கணபதி துவிமுக கணபதி துவிஜ கணபதி தோகையடி விநாயகரே நம்பியாண்டார்க்கு அருளினோய் நிருத்த கணபதி பக்தி கணபதி பஞ்சமுக விநாயகரே பாரதம் எழுதினோய் பால கணபதி பிள்ளையார் அப்பச்சி பிள்ளையார்பட்டிப் பிள்ளையாரே பிள்ளையார் சுழியே பிரளயங்காத்த பிள்ளையாரே - 19:-
போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

Page 13
72. 73. 74. 75. 76. 77. 78. 79. 80. 81. 82. 83. 84. 85. 86. 87. 88. 89. 90. 91. 92. 93. 94. 95. 96. 97. 98. 99.
100. 101. 102. 103. 104. 105. 106. 107. 108.
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
பிரணவ சொரூபமே பெருச்சாளி வாகனா பேழை வயிற்றோய் பொய்யா விநாயகரே பொல்லாப் பிள்ளையாரே மகா கணபதியே மாங்கனி பெற்றோய் மாணிக்க விநாயகரே மாவடிப் பிள்ளையாரே மாற்றுரைத்த விநாயகரே முக்குறுணி விநாயகா முதல் பூசை ஏற்பாய் மும்முக கணபதி மோதகப் பிரியாய் யோக கணபதி ரணமோகன கணபதி லட்சுமி கணபதி வர கணபதி வரசித்தி விநாயகரே வலம்புரி விநாயகரே வல்லபை கணபதி வழித்துணை வருவாய் வழியெல்லாம் அமர்ந்தாய் வாதாபி கணபதி விகடச் சக்கர ராஜாவே விக்ன கணபதி வினை தீர்த்த விநாயகரே விஷ்ணுப் பிரியா esgu a5e0LÉ விர கணபதி வீரசக்தி விநாயகரே வெற்றிகள் தருவாய்
வெள்ளருக்குப் பிள்ளையாரே
வெள்ளை விநாயகரே வேதப் பிள்ளையாரே வேழமுகத்து விநாயகரே ஹரித்திரா கணபதி
போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
(தடித்த எழுத்தில் உள்ளவை 32 வகைச் சிறப்புக் கணபதிமூர்த்தங்களைக் குறிக்கும்)
-: 20 :-

27 நட்சத்திர தேவதைகள்
அஸ்வினி
LIJ6oof கார்த்திகை $j[Taଣତof மிருகசிரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் SeussÁSub
Dasib
ԱՍմ, உத்திரம் அத்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுசம் கேட்டை முலம் பூராடம் உத்தராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்தரட்டாதி ரேவதி
சரஸ்வதி துர்க்கை அக்னி பிரம்மன் சந்திரன் பரமசிவன் அதிதி பிரகஸ்பதி ஆதிசேஷன் சுக்கிரன் பார்வதி சூரியன் சாஸ்தா விஸ்வகர்மா
6Tu குமரன் லெட்சுமி இந்திரன் ӨНалії வருணன் கணபதி விஷ்ணு
elis 56 எமன் குபேரன் காமதேனு சனி

Page 14
d
X
0.
பயனிதரு மருத்துவக் குறிப்புக்கள்
குப்பைமேனி இலையையும் பூண்டையும் சேர்த்தரைத்து சாறு எடுத்துப் பருக வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.
வயிறு சுத்தமாக இருக்க தினந்தோறும் தக்காளிப்பழத்தை உண்ணலாம்.
பாகற்காயை உண்டு வந்தால் வயிற்றுப் புழுக்கள் அழிந்து விடும்.
வயிற்றுக் கடுப்பு கோளாறு போக்க மாதுளம்பழத்தை உண்ணலாம்.
வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுக்கடுப்புக்கு விளாம்பழம் கைகண்ட மருந்தாகிறது.
வயிற்றில் புண் உள்ளவர்கள் இளநீரைப் பருகி புண்ணைக் குணமாக்கலாம்.
பிற்றில் புண் இருப்பவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிடலாம்
மாதுளம்செடியின் வேரை நீர்விட்டுக் காய்ச்சிப் பருக வயிற்றுப் பூச்சிகள் அழியும்.
வல்லாரைக்கிரை இலைகளை வாயில்போட்டு மென்று
சிறிது சிறிதாக சாறை உறிய குடல்புண் ஆறும்.
குடலில் உள்ள நச்சுக் கிருமிகளைக் கொல்ல ஆப்பிள் பழத்தைச் சாப்பிடலாம்.
கருணைக்கிழங்கை சமைத்துச் சாப்பிட வயிற்றுவலி
நீங்கும்.
-: 22 :-

&
C
X
0.
X
O
X
வேப்பமரத்திலிருந்து வரும் பாலை சிறிதளவு சாப்பிட்டு வர வயிற்றுப்புண் நீங்கும்.
வாழைப்பூ உள்குருத்தை பொடியாக்கி தேன்கலந்து சாப்பிட வயிற்றுப்புண் ஆறும்.
ஒரு வெற்றிலையோடு சிறிது சீரகம், உப்பு இரண்டையும் சேர்த்து உண்ண வயிற்று அஜீரணம் நீங்கும்.
வேப்பிலைக் கொழுந்தை வெறும் வயிற்றில் உண்ண வயிற்றுப் பூச்சிகள் அழியும்,
வல்லாரைக் கீரையை கொஞ்சம் எடுத்து வாயில் மென்று சாப்பிட்டால் பல் சொத்தை, வாய் நாற்றம், வாய்ப்புண் ஆகியவை நீங்கிவிடும்.
தினசரி சிறிது துளசி இலைகளைத் தின்றுவர வாய்ப்புண் சரியாகும்.
மாவிலையைக் கொண்டு பல்துலக்க பற்கள், ஈறுகள் உறுதியாகும்.
வெங்காயச்சாற்றால் வாய் கொப்பளிக்க பல்வலி, ஈறுவலி குணமாகும்.
மிளகையும், சர்க்கரையையும் அரைத்து பல்வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி குணமாகும்.
இரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் காய்ச்சிய பசும்பாலில்
2-3 வெள்ளைப்பூண்டைப் போட்டு வேகவைத்து உண்ணலாம்.
பச்சைப்பூண்டை உண்டுவர இரத்த அழுத்தம் குறையும்.
-: 23 :-

Page 15
«Ο
0.
4.
Х•
0x8
0.
X
4.
X
O
X
0.
X
«Xo
பசும்பாலில் வேகவைத்த வெள்ளைப் பூண்டைச் சாப்பிட்டு வந்தால், வாயுத்தொல்லை அகலும்.
வாயுத்தொல்லை உள்ளவர்கள் உருளைக்கிழங்கைச் சாப்பிடக்கூடாது.
பூண்டு, இஞ்சியை சம அளவு இடித்துச் சாறுபிழிந்து 3 நாட்கள் பருக நெஞ்சுக்குத்தல் சரியாகும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழத்தைத் தவிர்க்கவும்.
நீரிழிவு நோயாளிகள் பூண்டை அடிக்கடி உண்ண பலன் ஏற்படும்.
வெற்றிலைச் சாறை இரண்டு சொட்டு முக்கில் விட மூக்கில் இருந்து சளி ஒழுகுதல் நிற்கும்.
இருமல் பிரச்சனை உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடக் &nLiigil.
உருளைக்கிழங்கு இருமலை உண்டாக்குகிறது.
பாகற்காய் சாறுடன் தேன் கலந்து அருந்த நீண்டகால மார்புச்சளி நீங்கும்.
வெண்டைக்காயை பாலில் காய்ச்சி பருக நாட்பட்ட இருமல் நீங்கும்.
எலுமிச்சைச்சாறில் தேன் கலந்து சாப்பிட்டால் வறட்டு
இருமல் திரும்.
மிளகுதுரளுடன் கொஞ்சம் தாய்ப்பாலை சேர்த்து கொதிக்க
வைத்து நெற்றியில் தடவ ஜலதோஷம் தீர்ந்துவிடும்.
-: 24 :-

0x8
வேப்ப இலையை நன்றாக அரைத்து தலையில் தேய்த்து குளித்துவர பேன்தொல்லை குறையும்.
வாரத்தில் ஒருமுறையேனும் எலுமிச்சம்சாற்றை தலையில் தேய்த்து குளிக்க பேன் குறையும்.
துளசி இலையை அரைத்து தலையில் தேய்த்து-குளித்து வர பேன்தொல்லை குறையும்.
கடுகையும் இஞ்சியையும் நன்றாக இடித்து தேனைக் கலந்து வாயைக் கொப்பளித்தால் மூளை தெளிவடையும், தலைவலி நீங்கும்.
இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் உள்ளவர்கள் இரும்புச்சத்து நிறைந்த தேனைப் பாலுடன் நாள்தோறும் கலந்து உட்கொள்ள வேண்டும்.
இருதய நோய் உள்ளவர்கள் மாம்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட விரைவில் குணமடைவர்.
அத்திமரத்தின் பட்டையை எடுத்து இடித்துச் சாறு எடுத்து சாற்றில் சமஅளவு பசுப்பாலைக் கலந்து அருந்தினால் தொண்டைப்புண், குடற்புண், வாய்ப்புண் குறைந்துவிடும்.
தேமல் நீங்க இரண்டு வெற்றிலையையும் ஆறு மிளகையும் சேர்த்து நன்றாக அரைத்துப் பூசுக. அல்லது கனிந்த பப்பாளிப் பழத்தை நன்றாகத் தேய்க்கவும்.
சுண்டங்கத்தரி இலைகளைத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடித்தபின் பித்த வெடிப்புக்கள் உள்ள இடத்தில் பூசினால் பித்தவெடிப்பு நீங்கும். தினமும் பூசுக.
கால் லீற்றர் நல்லெனன்னையில் 35 கிராம் மிளகுதுளைக் கலந்து காய்ச்சி ஆறவைத்து பக்கவாதம் உள்ள பகுதியில் பூசினால் இந்நோய் குணமடையும். மிகுதி எண்ணெயைப்
போத்தலில் இட்டு முடிவைத்துப் பிறகு பூசுக.
-: 25 :-

Page 16
O
X
0x8
0.
X
வயிற்றுவலி - மாதுளம்பழச் சாற்றுடன் சிறிதளவு மிளகு, உப்பு, இஞ்சி என்பவற்றைக் கலந்து சாப்பிடவும். அல்லது வெள்ளை முள்ளங்கிச் சாற்றைக் குடித்து வரவும்.
காதுக்குள் பூச்சி போனால் குச்சி, ஊசி, ஹேர்பின் விட்டு எடுக்கக்கூடாது. காதுக்குச் டோச் லைட் அடித்தால் பூச்சி வெளியே வரும். அல்லது சுத்தமான உப்புத் தண்ணிர் விடலாம்.
ஆஸ்மா திடீரென தாக்கி மூச்சுவிடத் திணறினால் முதலில் முதுகை நீவி ஆசுவாசப்படுத்த வேண்டும்.
தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை ஒருநாளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
கொலா பரவியுள்ள காலங்களில் பச்சை வெங்காயத்தை மென்று தின்ன கொலரா தங்காது.
பாவற்காய் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் இருமல், இழைப்பு, நீரிழிவு, வயிற்றுப்புழு போன்ற பிரச்சினைகட்கு நிவாரணம் கிடைக்கும்.
வேம்பம்குச்சியில் மேசை உப்பைத் தொட்டு பற்களைத் துலக்கினால் பற்கள் பளிச்சென வெண்மை நிறத்தை -9|60pւսյւb.
காலையில் எழுந்தவுடன் தினமும் 4 டம்ளர் நீர் குடித்தால் மலச்சிக்கல் இலகுவாக இருக்கும்.
மஞ்சள் பொடியை வேப்பிலையுடன் சேர்த்து தண்ணிர் விட்டு அரைத்து பூச்சிக்கடி, சருமக்கிரந்தி உள்ள இடங்களில் பூசிவர நோய் குணம் அடையும்.
-: 26 :-

Ο 0x8
Κ. 0x8
மஞ்சள் துண்டை ஊசியில் குற்றி நெருப்பில் பிடித்து எரித்த பின்பு, எரித்துவந்த புகையை முக்கின் துவாரத்தின் அருகில் வைத்துப் புகையை உள்ளெடுத்துக் கொண்டால் தொடர்ந்து தலைவலி, தடிமன், மூக்கடைப்பு என்பன குணமடையும்.
பீற்றுாட், கரட் போன்றவற்றைச் சுத்தம் செய்து பச்சையாகச் சாப்பிட்டால் உடலுக்கு வேண்டி இரும்புச் சத்து கிடைப் பதுடன் இளைநரை, கண் பார்வை குணமடையும்.
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் காலையில் அரைத் தேசிப் பழச்சாற்றுடன் அல்லது இஞ்சிச் சாற்றுடன் 2 தேக்கரண்டி தேன்விட்டு அருந்திவர இரத்த அழுத்தம் குணமடையும்.
தொண்டை நோவுக்கு வேப்பெண்ணையைத் தொண்டையின் வெளிப்புறத்தில் பூசிவரக் குணமடையும்.
சிறுகாயங்கள் ஏற்பட்ட இடங்களில் தேன் சிறிதளவு பூசி வர காயங்கள் விரைவில் குணமடைவதுடன் வடுவும் நீங்கி விடும்.
முந்திரிகைவற்றல் 50 கிராம் எடுத்து அரை டம்ளர் தேநீரில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டால் மலட்டுத் தன்மை நீங்கிவிடும்.
புளியமிலையை நீர்விட்டு அவித்து இறக்கி ஆறவிட்டு நகச் சூடாக இருக்கும்போது குளித்தால் உடல்வலி நீங்கும்.
தினசரி காலையில் ஒரு டம்ளர் நீரில் (இளம் சூடான நீரில்) ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் உடல்பருமன் குறையும்.
குழந்தைகளுக்கு இரண்டு பேரீச்சம்பழங்களும் அரை டம்ளர் பாலும் உண்ணத் தினம் கொடுத்தால் மூளைப்பலம் ஏற்படும். 27

Page 17
தேங்காய் எண்ணெயில் கற்பூரம் போட்டுச் சூடாக்கி வீக்க மான இடத்தில் பூசினால் குணமடையும்.
கர்ப்பிணிகள் வாரத்தில் இரண்டு நாட்கள் கடலையை வேகவைத்துச் சாப்பிட்டால் அதிக நன்மை ஏற்படும்.
தினமும் ஒருமுறை எலுமிச்சம்பழச்சாற்றைக் குடித்து வந்தால் சருமநோய் வராது.
15 நாட்களுக்கு ஒருமுறை கொழுந்து வேப்பிலையை அரைத்துப் பசுப்பாலில் கரைத்து இரண்டு தேக்கரண்டி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் எந்தக் கொடிய நோயும் வராது.
வயிற்றுப்போக்குள்ளவர்கள் கடுமையான தேயிலைச்சாயம் அருந்தினால் வயிற்றுப்போக்குக் கட்டுப்படும்.
முகத்தில் எண்ணெய் வடிந்தால் முட்டை வெண்கரு அரை மூடி தேசிப்பழச்சாறும் கலந்து முகத்திற்குப் பூசி 10 நிமிடம் ஊறவிட்டபின்பு கழுவினால் பிசுபிசுப்புத் தன்மை நீங்கி விடும்.
வாய்த் துர்நாற்றம் உள்ளவர்கள் அடிக்கடி கராம்பு சாப்பிட வேண்டும். அல்லது இரவு தூங்கும்போது உப்புநீரினால்
வாயைக் கழுவுதல் வேண்டும்.
வாயில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தைப் போட்டு ஒரு கப் நீர் குடித்தால் வயிற்றுவலி உடனே குறையும்.
குழந்தைகளுக்கு விக்கல் ஏற்பட்டால் கொஞ்சம் தேனை எடுத்து நாவில் தடவினால் விக்கல் நின்றுவிடும்.
பூவரசம்பூவை அவித்துக் குடித்தால் அலேஜிக் நீங்கிவிடும்.
-: 28 :-

ΚΣ 0X
0x
அகத்தியிலைச் சாற்றுடன் தன்கலந்து பருகினால் நீர்கோவை
காரணமாக வரும் தும்மல் நீங்கிவிடும்.
துளிச்சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன்கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர முகப்பரு நீங்கிவிடும்.
ப்பைமேனி இை * சிறிது உப்பைச் சேர்த்து த்துத் தேமல் உள்ள இடங்களில் பூசிவரக் குணமடையும்.
கண்பார்வை கெடாமல் இருக்க கரட்டைத் தினமும் பச்சை யாகவோ சாறு பிழிந்தோ சாப்பிடவேண்டும்.
வெள்ளைப் பிஞ்சைப் பச்சையாகச் சாப்பிட்டு வர இரத்தக் கொதிப்பு மறையும், தாய்ப்பால் சுரப்பி நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டால் மல்லிகைப்பூவைப் பசுந்தையாக அரைத்து மார்பில் பற்றுப்போட்டால் தாய்ப்பால் வற்றிவிடும்.
கட்டெறும்பு, பூரான் கடித்தால் அந்த இடத்தில் மண்ணெண் ணெய் அழுத்தித் தேய்த்தால் வலி குறையும் தேள் கடித்தால் அந்த இடத்தில் குப்பைமேனி இலையை அரைத்துச் சாம்பல் கலந்து பூசிவரக் குணமடையும்.
தேசிப்பழத்தைத் தணலில் தாட்டு வைத்து இளஞ்சூடான போது தலையில் தேய்த்து கால்மணிநேரம் முழுகிவர
பொடுகு குறையும்.
சீரகம் ஒரு மேசைக்கரண்டியளவு எடுத்துக் குடிப்பதற்கான தண்ணி கொதிக்க வைக்கும்போது அதில்போட்டு கொதிக்க வைத்து மண்பானையில் ஊற்றி வைத்த பின்பு குடித்துவர உடல் உஷ்ணம் சமப்படும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலையளில் வெறும் வயிற்றில்
ஒரு தேக்கரண்டி வெந்தயத்தூள் சாப்பிட்டுவர குருதி
- 29

Page 18
Sg:M R %签 வில்கின்றோம் சிறிதனை. இ இநவில்கின்றோம் நன்றிதனை. இ (i. و... به دسته به ۰۰۰۰۰۰.م.م
盛
G
N 容 S.
穆 않 G
எமது அன்புத் தெய்வம் “கலைஞானகேசரி அமரர். திரு. விசுவலிங்கம் பரஞ்சோதி அவர்கள் ஐ அமரத்துவம் அடைந்த செய்தியறிந்து எமது இல்லத்திற்கு ஐ வருகைதந்து எமது துயரினைப் பகிர்ந்து கொண்டவர் N s களுக்கும், இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டு உதவிகள் S كم 6. புரிந்தவர்களுக்கும், தந்தி, தொலைபேசி மூலம் அனுதாபம் இ. தெரிவித்தவர்களுக்கும் அஞ்சலிப் பிரசுரங்கள் வெளியிட்டோருக்கும் 器 器 மலர்வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும், s அந்தியேட்டி, வீட்டுக்கிருத்திய நிகழ்வுகளிலே கலந்து s கொண்டோருக்கும் இன்னும் பல்வேறு வழிகளிலும் உதவிகள், ! ஒத்தாசைகள் புரிந்த அனைவருக்கும் எமது இதயபூர்வமான 용 நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
* இணுவில் மேற்கு, இங்ங்னம் s
瞬 S ষ্টু இணுைவில். குடும்பத்தினர் ရို႕ SSS2 Sě?ůž §ණීමෘදුඹුඹුණෑණීමෘදුඹුඹුණී.රෝර්‍ර්ෂීෂුණීහිණි8f8
சண்சைன் கிரிக்ல் - கே.கே.கில் వక్ష, இவலுவில்.
 


Page 19
Noö
 

எது நடந்ததோ,
அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ,
அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையது எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய்?
அதை நீ இழப்பதற்கு ) எதை நீ படைத்தாய்,
எதை நீ எடுத்துக் கொண்டாயோ, து இங்கிருந்தே எடுக்கப்பட்டது