கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கந்தையா கயிலாயபிள்ளை (நினைவு மலர்)

Page 1
ae,が ***份%*
|×|- ∞∞∞ saeV^*, シ
KY∞《细|×
--竇*-->-*- シ | Noae,YYY) | NoĶs臺T니어-T シgシ シsae)Ķ《鞑sae x) シ●●) | sae;:km
●《清§§∞ kmxxy
--
「*%
:TR*:7《T~~
溶劑s_No_7. - -------『-劑
·의 T-T-TT-지-이-지----sae--------·----· ---------■sae:∞∞ VシシĶskmシシシシ|×シ€.Ķ必シNos* /シkm kmシシ * シ ----)多/ェシシシ シ---- シシグ ***Qシシル〜〜、
·|- ----...--:!!!!!影)
A
Z
C
(
حة
ஒ
: :
S.
※
KD
اليك
--*!!!!!!!!!!!
ƆƆƆƆƆ
:: ¿No.
∞∞∞
○
\°_ܢ
S. ബ
SA
༼ ། ܐ ܓ
།
།
*
1 , ܓ
○。
రk
, km
|KO
ACA ܐ ܓ
R
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|- |-)ƆƆ·
--> © 그대 : →
|-*「그|(XXs.
V
suae
XX
A
Α. Α. ܐ ܓ لاکا
- sae
|-km
Xy
*)! YO∞T,∞--------------------~~ ~ ~ ~ !~· ::CĂ T-:saes, kmシ* シĶs|×*QQxYxYx*劑* |-- ----km*艾No) 阿默邙《松----区 シkm
-|-·-...------|-· !シ 鱷浮韃鱷戀■|シ&soos Nox 響縱 兹*玖*『劑
·----· ·シ 變%*% (シ シ 《) oso!No.Noシ シ 人シミ 影**シkm---- 释)∞屬■■ *)シ 影XXX%) 斑)
ƆƆ
sae 디~,,* s,|×シ ---**「 シ
QQ_《概)
#:)∞∞∞
----歴km
! !! !!!|- ------------------>-------->(*홍*山*シ シ
·----
∞∞∞

Page 2
-
ܦܝ
-
-
... "
. -
.
3.
.
-
-
-
- -
-
- -
.
- - - s
−
s -
.
-
.
-
- w . . . :
ܕܕ ܲ * ۔
s' ッ
... ' .
,
is -- .. ''v . . .
ܦ .
.دهی :A კაია ٭
s
-:
w
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

畿
இணுவில் மேற்கு, இணுவிலைச் சேர்ந்த
அமரர் கந்தையா கயிலாயபிள்ளை
அவர்கள்
இறைபதம் எய்தியமை குறித்து வெளியிடப்படும் நினைவு வெளியீடு
கயிலை மலர் بهع
P மாணிக்கவாசகள் அருளிய திருவெம்பாவும் இணைக்கப்பட்டுள்ளதுك4
4 21, 2,2OO3 Nஜீ;

Page 3
--
 
 
 
 
 
 
 
 

总戟
அமரர் கந்தையா கயிலாயபிள்ளை தோற்றம் (696) INTEGGIAT ԼՕ60)Ո36), 28.12.1932 21.11-2003
தி வெண்மா ,
" ஆண்டு சுபானு அணைகார்த் திகைத்திங்கள்
பூன்ைபூர்வ பட்சம் பொலிசஷ்டி - மானன் திதியில் மேற்கினுவில் மேதைகந்தை யாகயி லாயபிள்ளை SA
رکھ\لم سے اخ
மேற்சென்றான் விண்ணுலக வீடு”

Page 4

$0 - சிவமயம்
குழந்தைத் தேவாரம்
நிரைகழலரவம் சிலம்பொலி அலம்பும் நிமலர் நீறணிதிருமேனி வரைகெழுமகளேர் பாகமாய்ப்புணர்ந்த வடிவினர் கொடியணிவிடையள் கரைகெழு சந்துங்காரகிற் பிளவும் அளப்பரும் கனமணிவரன்றிக் குரை கடலோதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலையமர்ந்தாரே.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஒதுவார்தம்மை நன்னெறிக் குய்வது வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே.
பெரியார் தேவாரம்
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசைபாடல் மறந்தறியேன் நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்நாமம் என்நாவில் மறந்தறியேன் உலர்ந்தார் தலையிற் பலி கொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய் அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே.
மாசில் வீணையும் மாலை மதியமும் விசுதென்றலும் வீங்கிளவேனிலும் மூசுவண்டறை பொய்கையும் போன்றதே ஈசனெந்தை இணையடி நீழலே.
- 01 -

Page 5
தோழர் தேவாரம்
அங்கத்துறு நோய்களடியார் மேலொழித்தருளி வங்கம்மலிசூழ்ந்த கடல்மாதோட்ட நல்நகரில் பங்கம் செய்த மணவாளொடு பாலாவியின் கரைமேல் தெங்கம்பொழில் சூழ்ந்த திருக்கேதீச்சரத்தானே.
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க்கடியேன் இல்லையே என்னாத இயற்பகைக்குமடியேன் இளையான் தன் குடிமாறன் அடியார்க்குமடியேன் வெல்லுமாமிகவல்ல மெய்ப்பொருளுக்கடியேன் விரிபொழில் சூழ்குன்றையர் விறன்மிண்டற்கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே.
திருவாசகம்
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகியான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டு வானாகிநின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே.
பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே யாரொடுநோகேன் யார்க்கெடுத்துரைப்பேன் ஆண்ட நீ அருளிலையானால் வார்க்கடலுலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகவென்று அருள்புரியாயே.
- O2 -

ഴ്ന്നിങ്ങ്
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணை மாகடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றவெம்சிவனை
திருவிழிமிழலை வீற்றிருந்த கொற்றவன் தன்னை கண்டுகண்டென்னுள்ளம் குளிர
என் கண் குளிர்ந்தனவே.
திருப்பல்லாண்டு
சீரும் திருவும் பொலியச் சிவலோகநாயகன் சேவடிக்கீழ் யாரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றதார் பெறுவார் உலகில் ஊரும் உலகும் கழற உமை மணவாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும்பரிசு பல்லாண்டு கூறுதுமே.
திருமந்திரம்
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவதாரும் அறிகிலார் அன்பே சிவமாவதாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.
சிவசிவ என்கிலர் தீவினையாளர் சிவசிவ என்றிடத் தீவினைமாழும் சிவசிவ என்றிடத் தேவருமாவர் சிவசிவ என்றிடச் சிவகதிதானே.
- O3 -

Page 6
பட்டினத்தார் பாடல்
என்செயலாவது யாதொன்றுமில்லை இனித்தெய்வமே உன்செயலே என்றுணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த பின் செய்த தீவினையாதொன்றுமில்லை பிறப்பதற்கு முன் செய்த தீவினையோ இங்ங்னமே வந்து மூண்டதுவே.
பெரியபுராணம்
கற்பனைக் கடந்தசோதி கருணையே உருவமாகி அற்புதக் கோலநீடி அருமறைச் சிரத்தின்மேலாம் சிற்பரவியோமமாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று பொற்புடன் நடம் செய்கின்ற பூங்குழல் போற்றி! போற்றி!
திருப்புகழ்
ஏறுமயிலேறிவிளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழிபேசும் முகம் ஒன்றே கூறுமடியார்கள் வினைதீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே மாறுபடு சூரரைவதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே ஆறுமுகமான பொருள் நீ அருளல்வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்தபெருமாளே.
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ்சுரக்க - மன்னன் கோன்முறை அரசுசெய்க குறைவிலாதுயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்விமல்க மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
安
- 04 -

ésmoud
திருவெம்பாவை
திருச்சிற்றம்பலம் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய் மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்நுன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேயென்னே
ஈதே எந்தோழி பரிசேலோ ரெம்பாவாய்.
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி யிவையுஞ், சிலவோ விளையாடி ஏசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்.
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என் றள்ளுறித்
திக்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடிமீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
- O5 -

Page 7
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்.
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்(து) எண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்.
மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிநீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேனன்(று)
ஒலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்.
மானேநீ நென்னலை நாளைவந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
- 06 -

ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
எனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெடிப்பாவாய். 6
அன்னே இவையுஞ் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச்சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாவென் னாமுன்னம் திசேர் மெழுகொப்பாய் என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய். 7
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழிமீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய். 8
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவ ராவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாயப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய். 9.
- 07 -

Page 8
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை யொருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள் ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய். 0.
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணிறாடிச் செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய். 11
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற்றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லாமும்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீராடேலோ ரெம்பாவாய். 12.
- 08 -

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள்மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 3
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய். 14
ஒரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங்களிகூர நீரொருகால் ஒவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தணையாள் விண்ணோரை தான்
பணியாள் பேரையற் கிங்ங்னே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும்
வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 15
- 09 -

Page 9
முன்னிக் கடலைச் சுருக்கியெழுந் துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய். 16
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்தாடேலோ ரெம்பாவாய். 17
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவி றாற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணா ஒளிமழுங்கிகத் தாரகைகள் தாம்அகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 18
- O -

உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்(று) அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போங்கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள் போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.
20
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து.
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந்தார்.
- குறள்வெண்பா
- 1 1 -

Page 10
வாழ்க்கை வரலாறு
யாழ் நகரின் வளமான பிரதேசங்களில் இணுவில் முன் நிற்கின்றது. உப உணவுப்பொருள் உற்பத்தியில் தனித்துவம் பெற்ற நிலையில் புகையிலைச் செய்கையிலும் இக்கிராமம் சிறந்து விளங்கு கின்றது.
கமச்செய்கையில் வளர்ந்து நிற்கின்றது தனித்துச் சிறந்து நிற்கின்றது என்னு கூறுங்காலை கல்வியிலும் இக்கிராமம் சாதனைகள் பல கண்டுள்ளது.
கமச்செய்கை, கல்வி என்றுங்காலை பக்திக் கோலத்திலும் கோபுரங்கள் உயர்ந்தே நிற்கின்றன.
இணுவிலெம்பதியை கிராமம் என்பதா நகரம் என்பதா என்ற வினா வேறு. நகள் சார்ந்த கிராமம் என்பதே அக் கிராமத்தின் சமூகவியல் சாயல்கள்.
இக்கிராமத்தின் கண் 1932 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி அமரர் கந்தையா கயிலாயபிள்ளை அவர்கள் கந்தையா -தங்கம் தம்பதிகளின் ஆறாவது புத்திரராகப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை இணு வில் மத்திய கல்லூரியில் (இணுவில் சைவ மகாஜன வித்தியாலயத்தில்) பெற்றார்.ஆங்கில மொழிமூலக் கல்வியை கொக்குவில் இந்துக்கல்லூரி யில் பெற்றார்.
கயிலாயபிள்ளை அவர்கள் தமது 21 ஆம் (1953) அகவையில் உள்ளுராட்சி எழுதுவினைஞராகப் போட்டிப் பரீட்சையில் தெரிவு பெற்று உள்ளூராட்சி அவையில் பணியாற்றினார். 24 ஆம் அகவையில் பொது எழுதுவினைஞர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியெய்தினார். சுகாதார இலாகாவில் பொது எழுதுவினைஞராக நியமனம் பெற்றார். சில வருடங்களில் சுகாதார அமைச்சின் உள்ளகக் கணக்காய்வாளராகப் பதவி உயர்வு பெற்றார். அரச சேவையில் இருந்து இளைப்பாறுங்காலை அமரர் வவுனியா சுகாதாரத் திணைக்களத்தில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றினார்.
கயிலாயபிள்ளை அவர்கள் சிறந்த நிர்வாகி. அறிந்த தெரிந்தவர் களுக்கு நன்கு உதவுவார். உடன் பணியாற்றுபவர்கள் இடர்பாடு இன்றி
- 12 -

கருமமாற்ற உதவுவார். அனைத்துச் செயற்பாடுகளும் சட்டத்தின் எல்லையைத் தாண்டாதவாறும் அவர் பார்த்துக்கொள்வார். அதுவே அவரின் தனிச்சிறப்பு.
அமைதியும் பண்பும் மிக்க கயிலாயபிள்ளை ஓர் அமைதிப் புரட்சியாளர் என்பது பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அமரரது திருமணம் 1958 ஆம் ஆண்டு நடைபெற்றது. மணமகள், இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நாகலிங்கம் - அன்னம்மா தம்பதிகளின் இரண்டாவது புத்திரி தங்கரத்தினம் அவர்களை அமரர்கள் கு.வன்னியசிங்கம், ஹண்டி எஸ். பேரின்பநாயகம், அ.அமிர்தலிங்கம் ஆகியோர் முன்னிலையில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டார்.
அமரர் கயிலாயபிள்ளை அவர்களின் பேரனார், பூட்டனார் ஆகியோர் இணுவைக் கந்தசாமி கோவிலில் நித்திய அணுகத் தொண்டர்கள் ஆவர். அமரரின் தகப்பனார் வழிச்சிறியதந்தையார் மதுரை தல்லைக்குளம் ஆதீன மடத்தில் குருவாக இருந்தவர்.
அமரர் கலை, இலக்கிய ஈடுபாடு உடையவர். கள்ணன், ஹரிச் சந்திரா, வீரகுமார், ஆகிய பாத்திரங்களை ஏற்று மூன்று நாடகங்களில் நடித்துள்ளார்.
அமரர் அவர்களுக்கு குழந்தைச் செல்வங்கள் மூவர். முத்தவர் அன்பரசி. இவர் ரமணன் அவர்களைத் திருமணம் புரிந்து ஜேர்மனியில் வாழ்கின்றார்.
இரண்டாவது மகன் அழகிரி. நிர்மலாவைத் திருமணம் புரிந்து அவரும் ஜேர்மனியில் வாழ்கின்றார்.
மூன்றாவது மகள் அபரஞ்சி . இவர் ஆசிரியர் சிவகணநாதனை மணம் முடித்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். எதிர் பாராத விதமாக சிவகணநாதன் காலமாகிவிட்டார்.
பேரப்பிள்ளைகள் ஆறுபேர். சர்மிளன், சாம்பவி, கார்த்திகன், அபிநயா ஆகிய பேரப்பிள்ளைகள் ஜேர்மனியில் வாழ்கின்றனர்.
கஜப்பிரியா, திவாகள் ஆகிய இருவரும் இலங்கையில் வாழ்கின்றார்கள்.
- 13 -

Page 11
அமரரின் மனைவியின் சகோதரர் இருவர். மைத்துணி திருமதி இராஜசுந்தரம், பாலசிங்கம் ஆவர். மைத்துனர் நாகலிங்கம் குலநாயக LDIT6)ÎT.
அமரர் அவர்களுடன் உடன்பிறந்தோர் நால்வர். அவர்கள் அமரர் க. இராசரத்தினம் (புகையிரத நிலைய அதிபர்) க.குமரேசு, க. விசுவ லிங்கம், க.குமாரசாமி ஆவார்.
பொது சேவையிலும் அமரர் அவர்களுக்கு ஈடுபாடு உண்டு. பரமானந்தவல்லி வாசிகசாலைக்கு அமரர் பொருளாளராக இருந்த காலத்திலேயே சொந்தக்காணி கொள்முதல் செய்யப்பெற்றது.
"தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்”
என்பது தமிழ்மறை. அமரர் அனைத்துத்துறையும் வீரியம் பெற்ற எச்சங்களாகவே காணப்படுகின்றார்.
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு
குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்போடு) உயிரிடை நட்பு
- திருவள்ளுவ தேவர்
- 14 -

nறுஷ்றி
“என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செயந்நன்றி கொன்ற மகற்கு”
இது தமிழ் மறை.
அமரர் க.கயிலாயபிள்ளை தான் வாழ்ந்த இடங்களில்
இயைவு பெற்று வாழ்ந்தவர். அவர் நோய் உற்றகாலை உதவியோர்
பலர். அவர்கள் அனை
வரும் எம் நன்றிக்குரியவர். அமரரின் இறுதிச் சடங்கில் கலந்து எம் துயர் துடைத்த அனை வருக்கும்,தந்தி, கடிதம் மூலம் எங்கள் துயரில் பங்குகொண்டோருக்கும்,இன்றைய சமய நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் எமது நன்றி.
égali Sigbig Q-sks மனைவி, மக்கள், இணுவில். ジ மருமக்கள்.
玉 பாரதி பதிப்பகம், 430, காங்கேசந்துறை வீதி, யாழ்ப்பாணம்.

Page 12
&எது நடந்ததோ அது நன்றாகே * எது நடக்கிறதோ, அது நன்றாக * எது நடக்க இருக்கிறதோ, அது * உன்னுடையது எதை இழந்தாய் * எதை நீகொண்டு வந்தாய்? அ *எதை நீபடைத்திருக்கிறாய், அ * எதை நீஎடுத்துக்கொண்டாயே &எதை கொடுத்தாயோ, அது இந்
&எது இன்று உன்னுடையதோ, &மற்றொருநாள் அதுவேறொரு *இந்த மாற்றம் உலக நியதியாகு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடந்தது. வே நடக்கிறது. ம் நன்றாகவே நடக்கும் எதற்காக நீஅழுகிறாய்? தை நீ இழப்பதற்கு து வீணாகுவதற்கு ா, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. கேயே கொடுக்கப்பட்டது. து நாளை மற்றொவருடையதாகிறது வருடையதாகும்.
D.