கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நன்னித்தம்பி பொன்னம்பலம் (நினைவு மலர்)

Page 1


Page 2

எமது குடும்பவிளக்காக விளங்கிய இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
● ● e eltost 5órafjöö 6UTóra (DUGOD அவர்களின் சிவபதப்பேறு குறித்த

Page 3
LS0SJ0TMMSeeeee0000eeELETe00OS0eS00zDSeS0ErEeTesL0 eSLt0LrDeSeKLEEEkeLeLJK0KLLLLSSS Հg:S كليات சிவமயம் S /* F r 決。 ] FDTLJ J3D t 兹
எங்கள குருமப
[ت- நி3 விருட்சத்தின் (5:
* عصبی برای 游 வேராகி நின்று NS 毅
트 路 நிழல் தந்து " 器 隱 வாழ்வாங்கு நாம் வாழ 劉 | =
வழிகாட்டியாக 濠 நின்று இன்று எம்மையெல்லாம் ଝୁ
தி 德 ஆறாத்துயரில் ஆழ்த்தி
மீளாத்துயில் கொண்ட இ தி ଓୋ{ எங்கள் அன்புத் தெய்வத்திற்கு 蘇 s நிலையான
蜘 置cm நித்திய ஆன்மா 용 சாந்திபெற 총 அவர் தம் பாதங்களுக்கு இம்மலர் சமர்ப்பணம்.
[ୋ{
}}}}}ع 한
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜ் ଝୁ تحت تايلان ਸ FII R §) 氢 గెస్ట్ նլն:
: 3
அமரர் நன்னித்தம்பி பொன்னம்பலம் இவர்கள்
器
敦
新
* தோற்றம்:25.05.1927 ஆ_ LOGO ADGAJ: 07.03.2006 : திதி வெண்பா
இ தி ஓங்கு புகழ் பார்த்திய பங்குனி ஏழில் வரும் ଓୋ[];
தாங்கு நெறிபூர்வபக்க அட்டமிதிதி தன்னில் - பாங்குமிகு ஐ பக்தியுடன் தொண்டு செய்யும் பொன்னம்பலப் பெரியோன் 澳
隨
క్ట్ల சித்தி தரு சிவகாமியம்மனடி சேர்ந்த தினம் ‘မွို႕
驚
2
Ըն-ՔՈ5 SES. ܒ] ܦܩ థ్రోలికై 354 583 تا 岛
*

Page 4

6. சிவமயம்
தோத்திரப் பாடல்கள்
திருச்சிற்றம்பலம்
விநாயகள் காப்பு விநாயகனே வெவ்வினையை வேரனுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தண்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து.
தேவாரம் சலம்பூ வொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலந் தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்நாமம் என்நாவில் மறந்தறியேன் உலந்தார் தலையிற் பலி கொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூலை தவிர்த் தருள்வாய் அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத் துறை அம்மானே.
திருவாசகம்
அம்மையே அப்பா ஒப்பிலாமணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
-: 03:-

Page 5
திருவிசைப்பா இடர் கெடுத் தென்னை ஆண்டுகொண் டென்னுள்
இருட்பிழம் பறவெறிந் தெழுந்த சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்குந்
தூயநற் சோதியுட் சோதி! அடல்விடைப் பாகா அம்பலக் கூத்தா!
அயனொடு மாலறி யாமைப் படரொளி பரப்பிப் பரந்துநின் றாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே
திருப்பல்லாண்டு சீருந் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன்; பெற்றதார் பெறுவாருலகில் ஊரும் உலகுங் கழற உழறி உமைமண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே,
திருப்புராணம் இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான்மகிழ்ந்து பாடி அறவாநி ஆடும்போது அடியின்கீழ் இருக்க” என்றார்.
திருப்புகழ் இறவாமல் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசற் குமரேசா கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே.
வாழ்த்து வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க் மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவந்தி விளங்குக உலக மெல்லாம்.
6Cibé fibspubLusoub -: 04:-

(1)
(2)
(3)
(4)
(5)
கணபதிதாசர் அருளிய நெஞ்சறி விளக்கம்
தந்தைதாய் நிசமு மல்ல; சனங்களு நிசமு மல்ல; மைந்தரும் நிசமு மல்ல; மனைவியும் நிசமு மல்ல; இந்தமெய் நிசமு மல்ல; இல்லறம் நிசமு மல்ல; சுந்தர நாகை நாதர் துணையடி நிசம்பார் நெஞ்சே!
காண்பது மழிந்து போகும்; காயமு மழிந்து போகும்; ஊண்பொருள் அழிந்து போகும்; உலகமும் அழிந்து போகும்; பூண்பணி நாகை நாதர் பொற்பாதம் அழியா தென்று வீண்பொழுதினைப்போக்காமல் வெளிதனில் ஒளிபார் நெஞ்சே!
உடலினை நிசமென் றெண்ணி உலகெலாம் ஓடி யாடிக் கடல்மரக் கலப்பாய்க் கம்பக் காகம்போற் கலக்க முற்றாய்; திடமருள் குருவின் பாதஞ் சிக்கெனப் பிடித்து நின்றால் நடமிடு நாகை நாதர் நற்பதம் பணிவாய் நெஞ்சே!
வீட்டிருள் போகவென்றே விளக்கினை ஏற்றி வைத்தால், வீட்டிருள் எங்கே போச்சு? விளக்கொளி எங்கே போச்சு? கூட்டினில் நடஞ்செய் ஈசன் குறிப்பறியாமல் நீதான் நாட்டினில் அலைந்தாய் நாகை நாதரை வணங்கு நெஞ்சே!
நித்திரை வந்த போது நினைவுதா னிருந்த தெங்கே?
புத்திரர் தாமுமெங்கே? புணர்ந்திடும் மனைவி எங்கே?
புத்திர பூசை எங்கே? பலதொழில் செய்வ தெங்கே?
சிதம்பர நாகை நாதர் செயலினை அறிவாய் நெஞ்சே!.
-: 05:-

Page 6
6சிவமயம்
நடராஜப் பத்து மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம்நீ மறை நான்கின் அடி முடியும்நீ மதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீ
மண்டல மிரண்டேழுநீ பெண்ணும்நீ ஆணும்நீ பல்லுயிர்க் குயிரும்நீ
பிறவும்நீ ஒருவநியே பேதாதி பேதம்நீ பாதாதி கேசம்நீ
பெற்றதாய் தந்தைநியே. பொன்னும் பொருளும்நீ யிருளும்நீ
ஒளியும்நீ போதிக்க வந்த குருநீ புகழொணா கிரகங்க னொன்பதும் நீயிந்தப்
புவனங்கள் பெற்றவனும் நீ எண்ணரிய ஜிவகோடி களின்ற வப்பனே என்
குறைகளார்க் குரைப்பேன் ஈசனே சிவகாமி நேசனே யெனை யீன்ற
தில்லைவாழ் நடராஜனே.
LDFT60TITL LD(gp6)IITL LDg5uJITL Lq6OT6)ITL LDI5J60)35
சிவகாமியாட LDT6oTL gbJT6OITL uD60ogbu JITL ġi560D JuUITL மறை தந்த பிரம்மனாட கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,
குஞ்சர முகத்தனாட குண்டலமிரண்டாட தண்டை புலியுடையாட
குழந்தை முருகேசனாட, ஞானசம்பந்த ரோடுயிந்திரர் பதினெட்டு முனியட்ட பாலக ருமாட நரை தும்பை யருகாட நந்திவாகனமாட
நாட்டியப் பெண்களாட வினையோட உனைப்பாட யெனைநாடியிதுவேளை
விருதோடு ஆடி வருவாய் ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
-: 06:-

கடலென்ற புவிமீதில் அலையென்றவுரு
கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே
கட்டுண்டு நித்த நித்தம் உடலென்ற கும்பிக்கு உணவென்ற யிரைதே
ஓயாமலிரவு பகலும் உண்டுண்டுறங்குவதைக் கண்டதேயல்லாது
ஒரு பயனடைந்திலேனைத் தடமென்ற மிடிகரையில் பந்த பாசங்களெனு
தாபரப் பின்னலிட்டு தாயென்று சேயென்று நீயென்று நானென்று
தமியேனை யில்வண்ணமாய் இடையென்று கடைநின்று ஏனென்று கேளா
திருப்பதுன் னழகாகுமோ ஈசனே சிவகாமி நேசனே யெனையின்ற தில்லைவாழ் நடராஜனே.
பம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணந்
தம்பனம் வசியமல்ல பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச
மதுவல்ல சாலமல்ல அம்பு குண்டுகள் விலக மொழியுமந்திரமல்ல
ஆகாய குளிகையல்ல, அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல
அரியமோ கனமுமல்ல கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி
கொங்கணர் புலிப்பாணியும் கோரக்கள் வள்ளுவர் போகமுனி யிவரெலாங்
கூறிடும் வயித்திய முமல்ல என் மனதுன் னடிவிட்டு நீங்காது நிலை நிற்.
யேதுளவு புகலவரவாய் ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
-: 07:-

Page 7
நொந்து வந்தேனென்று ஆயிரஞ் சொல்லியும்
செவியென்ன மந்த முண்டோ நுட்பநெறி யறியாத பிள்ளையைப் பெற்ற
பின் நோக்காத தந்தையுண்டோ சந்தமுந் தஞ்சமென்றடியைப் பிடித்த பின்
தளராத நெஞ்சமுண்டோ தந்திமுக னறுமுகன் இருபிள்ளை யில்லையோ
தந்தைநீ மலடுதானோ விந்தையும் ஜாலமும் உன்னிடம் மிருக்குதே
வினையொன்று மறிகிலேனே வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே
வேடிக்கை யிதுவல்லவோ யிந்தவுல கிரேழு மேனளித்தாய் சொல்லு யினியுன்னை விடுவதில்லை ஈசனே சிவகாமி நேசனே யெனையின்ற தில்லைவாழ் நடராஜனே.
வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
வாஞ்சையில் லாதபோதிலும் வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
வஞ்சமே செய்தபோதிலும் மொழியெகனை மொகன்னயில் லாமலே
பாடினும் மூர்க்கனே முகடாகினும் மோசமே செய்யினும் தேசமேகவரினும்
முழுகாமியே யாகினும், பழியெனக் கல்லவோ தாய்தந்தைக் கல்லவோ
பார்த்தவர்கள் சொல்லார்களோ பாரறிய மனைவிக்குப் பாதியுடலிந்த நீ
பாலனைக் காக் கொண்ாதோ யெழில் பெரிய அண்டங்க ளடுக்காயமைத்தநீ
என் குறைகள் தீர்த்தல் பெரிதோ ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
n: 03 :-

அன்னை தந்தைக ளென்னை யீன்றதற்
கழுவனோ அறிவிலாத தற்கமுவனோ அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ
ஆசை மூன்றுக் கழுவெனோ முன்பிறப் பென்னவினை செய்தனென்றழுவனோ
என்மூட லறிவுக் கழுவனோ முன்னிலென் வினைவந்து மூளுமென்ற முவனோ
முத்திவரு மென்றுணர்வனோ தன்னை நொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ
தவமென்ன வென்றழுவனோ தையலர்க் கழுவனோ மெய்வளர்க் கழுவனோ
தரித்திர திசைக்கழுவனோ இன்னமென்னப் பிறவி வருமோ வென்றழுவனோ
யெல்லாமுரைக்க வருவாய் ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ
கன்னியர்கள் பழி கொண்டனோ கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்
தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ தாயாருடன் பிறவிக்கென்னவினை செய்தனோ தந்த பொருளிலை யென்றனோ தானென்று கெர்வித்து கொலைகளவு செய்தனோ
தவசிகளை யேசினேனோ வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ
வானவரைப் பழித்திட்டனோ வடவுபோலேய பிறரை சேர்க்கா தடித்தனோ
வந்தபின் என செய்தனோ ஈயாதலோபியென்றே பெயரெடுத்தேனோ
யெல்லாம் பொறுத்தருளுவாய் ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
-: 09:-

Page 8
தாயா ரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன
தன்பிறவி யுறவுகோடி தனமலை குவித்தென்ன கனபெய ரெடுத்தென்ன
தாரணியையாண்டு மென்ன சேயர்களிருந் தென்ன குருவாய யிருந்தென்ன
சீஷர்களிருந்து மென்ன சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன நதிகளெல்லாம் ஓயாது மூழ்கினும் என்னபலன் எமனோலை
ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ யிதுவெலாம் சந்தையுற வென்றுதான்
உன்னிருபாதம் பிடித்தேன் யார்மீது வுன்மனமிருந்தாலும் முன்கடைக்
கண்பார்வை யதுபோதும் ஈசனே சிவகாமி நேசனே யெனையின்ற
தில்லைவாழ் நடராஜனே. 9.
இன்னமுஞ் சொல்லவோ உன்மணங்கல்லோ
இரும்போ பெரும்பாறையோ இருசெவியு மந்தமோ கேளாது அந்தமோ
யிதுவுனக் கழகுதானோ மோகமோ இதுவென்ன சோபமோ
என்னன்னை யிதுவோவுன் செய்கைதானோ இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ உன்னை விட்டெங்கு சென்றாலும் நிழலாவனோ நான் உனையடுத்துக் கெடுவனோ ஒகோவிதுன் குற்றமென் குற்றமொன்றுமிலை
உற்றுப்பார் வெற்றவையா என் குற்றமாயினும் உன்குற்றமாயினும்
யினியிருளளிக்க வருவாய் ஈசனே சிவகாமி நேசனே யெனையின்ற
தில்லைவாழ் நடராஜனே O.
-: 10 :-

சனி ராகுகேது புதன் சுக்கிரன் செவ்வாய்
குருசந்திரன் சூரியனிவரை சற்றெனக் குள்ளாக்கி ராசிபனி ரண்டையும்
சமமாய் நிறுத்தியுடனே பனியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால் பகள்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டிப்
பலரையும் அதட்டியென்முன் கனிபோல வேபேசிக் கெடுநினைவு நினைக்கின்ற
கசடர்களையுங் கசக்கி கர்த்தரின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின்
தொண்டர்கள் தொழும்பனாக்கி இனியவள மருவுசிறு மணலை முனிசாமி
யெனையாள்வதினி யுன்கடன்காண் ஈசனே சிவகாமி நேசனே யெனையின்ற தில்லைவாழ் நடராஜனே.
பள்ளிக்கூடத்தை நாம் ஆங்கிலத்தில் ஸ்கூல் என்று அழைக்கின்றோம். இந்த ஸ்கூல் (School) என்பதற்கு அழகிய பொருள் உண்டு. அது என்ன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
இத்தகைய பண்புகளைப் போதிக்கும் இடம் பள்ளிக்கூடம்
LIGronfisca LiD - SCHOOL
Sincerity நேர்மை
Capacity g5B60)LD
Homesty உண்மைபேசும் குணம் Obedience மரியாதை
Orderliness ஒழுக்கம்
Learning D கல்வி அறிவு
என்பதை விளக்குவதே (School) என்பதாகும்.
-: 11 :-

Page 9
அமரர் நன்னித்தம்பி பொன்னம்பலம்
0ே அவர்களின்
வாழ்க்கை வரலாறு
AMMMAXaaay's was
யாழ்ப்பாணக் குடாநாட்டின் இருதயமாக விளங்கும் கிராமம் இணுவிலாகும். சைவமும், தமிழும் பிணைந்து வாழும் மக்ளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் புனித மண்ணில் பக்தி மணம் கமழும் பல ஆலயங்கள் இவ்வூரின் சிறப்புக்குச் சான்றாக விளங்குகின்றன. நிலத்தடி நீர்வளம், இவ்வூருக்கு அமைந்துள்ள பெருஞ்செல்வமாக இருப்பதால் விவசாய நிலங்கள் செழிப்புற்று விளங்குகின்றன. இத்தகைய சிறப்புக்களை பெற்ற இணுவை மண்ணில் 1927ம் ஆண்டு (1927.05.25) அமரர் நன்னித்தம்பிக்கும் சாத்திரம்மா என்று பெயர்பெற்ற அமரர் சிவகாமசுந்தரிக்கும் நான்காவது மகனாக அமரர் பொன்னம்பலம் அவர்கள் பிறந்தார். இவருடைய சகோதரர்களில் முத்தவர் அமரர் அருட்பிரகாசம், திரு.நடராசா (வைத்தியர்), திரு.அருளம்பலம் ஆகியோராவர். இவரின் பின் பிறந்தோர் திரு. சண்முகநாதன், அமரர் பரமநாதன், திரு.குமாரசாமி, திரு.பாலசுப்பிரமணியம், சகோதரி திருமதி அம்பிகாதேவி சிவப்பிரகாசமும் ஆவார்.
அமரர் பொன்னம்பலம் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை கோண்டாவில் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் (இந்து மகா வித்தியாலயம்), பின்னர் இணுவில் சைவ மகாஜன மகா வித்தியாலயத்திலும் (மத்திய கல்லூரி) கற்று சிரேஷ்ட தரக் கல்வியைப் பெற்றார்.
பின்பு கல்வியை நிறுத்தி மாமன் அமரர் வைரவநாதர் தம்பாபிள்ளையின் ஹற்றன் கடையில் 1955 - 1957 வரை அவருக்கு உதவியாக அங்கு கடமையாற்றினார். அதன் பின் ஊர் திரும்பி இணுவில் K.K.S வீதியில் ஆஸ்பத்திரிக்கு முன்னால் அம்பாள் ஸ்ரோர் என்னும் வியாபார ஸ்தாபனத்தை நிறுவி 1970 வரை
நடாத்தி வந்தார்.
ո: 12:-

வாலிபப் பருவம் அடைந்ததும் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகின. சிவகாமி அம்மன் ஆலயத்துக்கு முன்புறம் வசித்து வந்த அமரர் சின்னத்துரை கண்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரி செல்வி லீலாவதியை திருமணம் செய்தார். இதனால் அவருக்கு விவசாய நிலங்கள் கிடைக்கப் பெற்றதாலும் ஏற்கனவே முதிசமாக சில விவசாய நிலங்கள் இருந்ததாலும் விவசாயத்தை 1970 களின் பின் முழுநேர தொழிலாகக் கொண்டார். முயற்சி திருவினையாக்கும் என்ற முதுமொழிக்கிணங்க சோம்பலின்றி அயராது உழைத்தார். இதனால் பொருளாதார வளர்ச்சியில் உயர்வடைந்து மேலும் விவசாய நிலங்களைக் கொள்வனவு செய்து சிறப்புற்று விவசாயத்தில் பல சாதனைகள் செய்தார்.
அதிகாலையில் எழுந்து சிவகாமி அம்மன் கோவில், பத்திரகாளி, வையிரவர் கோயில் ஆகியவற்றுக்குச் சென்று வழிபாடு செய்த பின்பே கமத்துக்குச் செல்வார். அதேவேளை தன்னை ஈன்ற அன்னை சாத்திரம்மாவின் திருப்பணிகளுக்கும் உதவிகளும், ஆலோசனைகளும் கூறுவார். அம்மாவும் அவர் மீது கொண்ட பாசப்பிணைப்பால் “பொன்னம்பலம் பொன்னம்பலம்” என்று அழைத்து தனது செயற்பாடுகள் பற்றிக் கூறுவதுண்டு. எதையும் புறங்கூறாது சிரமேற்கொள்ளும் பழக்கமுள்ளவர். யாருடனும் கோபிக்காது எதையும் சிரித்துக்கொண்டே கூறுவார்.
அமரர் பொன்னம்பலம் லீலாவதி தம்பதியினரது இனிய இல்லறத்தின் பயனாக கிடைத்த மக்கள் செல்வங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். தான் விவசாயத்தை மேற்கொண்ட போதும் பிள்ளைகளைக் கல்வி கற்க வைத்து தந்தை மகற்கு செய்யவேண்டிய கடமைகளைச் சிறப்புடன் செய்து வந்தார். இதன் பலனாக மூத்த மகன் சற்குணானந்தராஜகுமார் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வணிகமாணிப்பட்டதாரியானார். இலங்கையில் ஏற்பட்ட போர்ச் சூழலால் கனடா நாட்டிற்குச் சென்றார். நந்தினி என்னும் மங்கை நல்லாளை பெற்றோரின் விருப்பப்படி மணந்து பிருந்தா, சுகிர்தன், கோகுல் என்ற மழலைச் செல்வங்களுடன், பெற்றோர், சகோதரிகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து சிறப்புடன் வாழ்கின்றார்.
-: 13 :-

Page 10
மகள் ஜெயமலர் பாலச்சந்திரன் (விவசாயம்) என்னும் மணாளனை திருமணம் செய்து சுபாங்கி, தர்ஷிகா, தனுசியன் ஆகிய பிள்ளைச் செல்வங்களுடன் சீர்சிறப்புடன் இனிதே இல்லறம் நடத்துகின்றார்.
இன்னொரு மகள் ஜெயவதனா இலங்கைப் பல்கலைக் கழக கலைப்பட்டதாரி. இவர் குகநேசன் என்பவரை மணந்து கனடாவில் இனிதே வாழ்கின்றார்.
இன்னொரு மகள் ஜெயகுமாரி இவர் இலங்கைப் பல்கலைக்கழக வணிகமாணிப் பட்டதாரி. இராமநாதன் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றுகின்றார். இவர் சந்திரசிறீ (வர்த்தகர்) என்னும் மணாளனுடன் இல்லறம் நடத்தி தர்ஷிகன், மதுவுா எனும் மழலைச் செல்வங்களுடன் இனிதே வாழ்கின்றார்.
இரண்டாவது மகன் கிருபானந்தஜெயகுமார் தந்தையுடன் இணைந்து விவசாயத்தில் ஈடுபட்டதால் செய்யுந் தொழிலே தெய்வம் என்று விவசாயத் துறையே தனது உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்.
இன்னொரு மகள் ஜெயசோதி உயர்தர வகுப்பு கற்றுவிட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டு காசிநாதன் என்பவறை வாழ்க்கைத் துணையாய் அடைந்து ஜேர்மனியில் இனிதே வாழ்கின்றார்.
இன்னொரு மகள் ஞானசோதி கலைப்பிரிவில் பட்டப் படிப்பு படிக்கும்போதே திருமணம் கைகூடியதால் சிறீதரன் என்பவரை மணந்து ஜானுகா என்ற மழலைச் செல்வத்துடன் சுவிற்சர்லாந்தில் இனிதே வாழ்கின்றார்.
இன்னொரு மகள் ராஜராஜேஸ்வரி யாழ் பல்கலைக்கழக வணிகமாணி இறுதியாண்டில் கற்றுக்கொண்டிருக்கிறார்.
மூன்றாவது மகன் நித்தியானந்தகுமார் உயர் கல்வியை முடித்துக்கொண்டு லண்டன் சென்று வாழ்கின்றார்.
-։ 14 :-

கடைசி மகள் சுதா என எல்லோராலும் அழைக்கப்படும் சுதர்சினி அமரர் பொன்னம்பலத்தின் செல்லப்பிள்ளை வெளிவாரி கலைமாணிப் பட்டத்திற்காக கல்வியை பட்டப்படிப்புகள் கல்லூரியில் கற்றுக்கொண்டிருக்கிறார்.
பொருட் செல்வத்துடன் மக்கட் செல்வங்களையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்ந்த பொன்னம்பலத்தின் கணக்கை முடிக்க காலன் எண்ணிவிட்டதால் 07.03.2006ல் சிவபதப்பேறு பெற்று அன்னை சிவகாமியின் பாதக் கமலங்களில் சரணடைந்துவிட்டார்.
இணுவில் சிவகாமி அம்பாள் ஆலய கும்பாபிஷேக திருப்பணிச்சபை உறுப்பினராகவும், சிவகாமி அம்பாள் கல்யாண மண்டப நிர்வாக உறுப்பினராகவும் கடமையாற்றிய அமரர் பொன்னம்பலத்தின் ஊனுடம்பு மறைந்துவிட்டாலும் அவருடைய நகைச்சுவைப் பேச்சும் நினைவும் என்றும் அவர் நினைவை ஞாபகப்படுத்தும். அவரது ஆத்மா அவர் மனைவி லீலாவதியின் மனதிலும் பிள்ளைகளின் மனதிலுமும் வாழ்ந்து கொண்டிருக்கும். அவரது ஆத்மா சாந்தியடைய சிவகாமி அம்பாளை வணங்கி பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி1
d
ஆசை இருப்பவனிடம் அன்பும், ஆனந்தமும் நெடுநாள் தங்குவதில்லை.
●
X
நாம் விரும்புவது நமக்குக் கிடைப்பதில்லை. எனவே கிடைப் பதையே நாம் விரும்புவோம். * மனம் உறுதியாக இருந்தால் பாம்பின் நச்சுகூட சக்தியற்ற
தாகிவிடும்.
-: 15 :-

Page 11
6)
ஆத்ம சாந்திப் பிரார்த்தனை
அமரர் நன்னித்தம்பி பொன்னம்பலம் அவர்கள் சிறந்த பக்திமான். அதிகாலையிலும் மாலையிலும் தினமும் அம்பாளின் ஆலயத்துக்கு வந்து வழிபடுவார். அவருடைய தாயாரான சாத்திரம்மாவின் திருப்பணிகளுக்கு துணை நின்றவர். சிறந்த விவசாயியும் ஆவார். பொதுத் தொண்டிலும் ஆர்வமுடையவர். எதையும் வெளிப்படையாகத் துணிந்து கூறும் இயல்புடையவர். பழகுவதற்கு இனிமையான பண்பாளர். எமது ஆலய வளர்ச்சியில் ஈடுபாடுடையவர். 1999ம் ஆண்டு கும்பாபிஷேகத் திருப்பணியில் ஓர் உறுப்பினராகவிருந்து செயற்பட்டவர். இணுவில் சிவகாமி அம்மன் திருமணமணி டப நிர்வாக உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தவர் களுக்கு சிவகாமி அம்பாளின் திருவருள் துணை என்றும் எண்டு. அன்னாரின் ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல சிவகாமி அம்பிகையைப் பிரார்த்திக்கின்றேன்.
இங்ங்னம் வேதசிவாகமக்கிரியாரத்னம் சிவழீரீசாம்பசிவசோமசபேசக்குருக்கள் பிரதமகுரு, சிவகாமி அம்மன் கோவில், இணுவில்.
-: 16 :-

6
அனுதாபச்செய்தி
இணுவில் கிழக்கில் வசித்து வந்து சமீபத்தில் தேகவி யோகம் எய்திய திரு.நன்னித்தம்பி பொன்னம்பலம் அவர்கள் எனது நெடுநாளைய நண்பர். இணுவிலில் அவர் பலசரக்குக் கடை நடாத்தி வந்த காலத்தில் எனது பாட்டனாருடன் அன்பும் விஸ்வாசமும் கொண்டு அவர் கடைக்குச் செல்லும் நேரங்களில் எல்லாம் நிறம்ப நேரம் பேசிக்கொண்டிருப்பார். தானாகவே மனமுவந்து வந்து பங்குனித் திங்கள் அபிஷேகத் திருவிழாவையும் சரஸ்வதி பூஜை உற்சவத்தையும் எங்கள் ஆலயத்தில் தன்னுடைய உபயமாக சிரத்தையோடு நடாத்தி வந்திருக்கின்றார். இணுவில் சிவகாமி அம்பாள் ஆலயத்திலும் தனது உபயமாக திருவிழாக்கள் செய்துவந்தார். அபிஷேகத்தில் நிறை பால், இளநீர், அபிஷேகசஞ் செய்ய வேண்டுமென்று பெருவிருப்புக் கொண்டவராக விளங்கினார். தனது குடும்ப அங்கத்தினருடன் சிறந்த பற்றுக்கொண்ட இவர் அவர்களை விட்டுப்பிரிய எப்படி மனங்கொண்டாரோ தெரியவில்லை. அவர் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர் தேற்றங் கொண்டு தெளிந்து வாழ அன்னை சிவகாமியம்பாளின் திருவருள் துணைநிற்க பிரார்த்திக்கின்றேன்.
வேதாகமஞானபாஸ்கரன் சிவழீதானு.மகாதேவக்குருக்கள் காயத்திரி பீடாதிபதி, இணுவில்.
ո: 17 :-

Page 12
6.
செஞ்சொற்செல்வரின் பிரார்த்தனையுரை
இணுவைத் திருவூரில் ஒளிபரப்பிய ஆன்மீக அன்னை சாத்திரம்மா அவர்கள். அம்மையார் பெற்ற அருந்தவப் புதல்வர் களில் ஒருவன் பூரீமான் பொன்னம்பலம் அவர்கள். இப் பெருந் தகையின் மறைவுச்செய்தி அறிந்து மிகுந்த கவலையடைகிறேன். கருவிலேயே திருவுடைய சிவகாமசுந்தரி அன்னையின் வயிற்றில் உதிக்கும் பாக்கியம் பெற்ற அமரர் பொன்னம்பலம் அவர்கள் இறைபக்தியும் பணிவும் மிக்க பண்பாளர். அவரது பிள்ளைகளும் சீரிய நெறியில் வாழும் பேறு பெற்றவர்கள். அன்பும் பண்பும் பிறரை உபசரிக்கும் விருந்தோம்பல் பண்பும் நிறைந்த அமரர் பொன்னம்பலம் அவர்களின் ஆத்மா எல்லாம்வல்ல சிவகாமி அம்பாளின் திருவருளால் நற்கதியடையப் பிரார்த்தித்து அமைகிறேன்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!
செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுகன்
n: 13 :-

அமரர் நன்னித்தம்பி பொன்னம்பலம் அவர்களின் பிரிவில்
சில சிந்தனைகள்
இலங்கைத் திருநாட்டின் வடக்கே அமைந்திருக்கும் யாழ்ப்பாணத்தில் சைவமும் தமிழும் தனக்கே உரித்தாகிய இணுவில் இசைஞானவல்லுநர்களாகவும், பொறியியலாளர் களாகவும், வைத்தியர்களாவும், தமிழ் பாண்டித்தியம் பெற்றவர் களாகவும், வாணிபமும் விவசாய வல்லவர்களாகவும் இன்னும் எத்தனையோ சேவைகளை ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள். அமரர் நன்னித்தம்பி பொன்னம்பலம் இணுவில் மண்ணில் உதித்த ஓர் சான்றோன் ஆவார்.
இவரது தந்தையார் ஓர் புகழ்பெற்ற வைத்தியராகவும், தாயார் சிவகாமசுந்தரி (சாத்திரம்மா) இணுவில் சிவகாமி அம்மன் கோயில் வைரவர், பத்திரகாளி கோயில் ஆகியவற்றை புனருத்தாரணம் செய்தும், கோயில் கட்டிடங்களைக் கட்டியும் அம்மன் கோயில் வாசற்கோபுரம், மணிமண்டபத்தையும் அமைத்து சாத்திரங்கள் சொல்லியும், பார்வைகள் பார்த்தும் நோய் பிணிகளைத் தீர்த்து வந்தார்.
அவ்வாறே அவரது மகனாகிய அமரர் பொன்னம்பலம் விவசாயத்திலும், வியாபாரத்திலும் விற்பன்னராகத் திகழ்ந்துடன் கோயில் திருப்பணி விடயங்களிலும் சிறப்பாக பங்குகொண்டார். 1999ம் ஆண்டு சிவகாமி அம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிச் சபையில் அங்கத்தவராக இருந்து கும்பாபிஷேகத்தை நடத்துவதற்கு உதவினார். அதேபோன்று சிவகாமி அம்மன் திருமண மண்டப நிர்வாக சபையின் அங்கத்தவராக இருந்து 2005ம் ஆண்டு திறப்புவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு
தொண்டாற்றினார்.
ա: 19 :-

Page 13
அமரர் பொன்னம்பலம் அவர்கள் இணுவில் பத்திரகாளி அம்மனையும், சிவகாமி அம்மனையும் தினந்தோறும் காலையும் மாலையும் வழிபடுவார். 25.05.1927ல் பூமியில் அவதரித்த அமரர் 07.03.2006 அன்று தனது 79வது வயதில் உலகை விட்டுப் பிரிந்தமையானது இணுவில் கிராம சமூகத்தவர்களாகிய எமக்கு ஓர் பேரிழப்பாகும். நீண்ட அனுபவம்மிக்க ஓர் அங்கத்தவரை இழந்து தவிக்கின்றோம். நாள் தவறாது சிவகாமி அம்மனையும் பத்திரகாளி அம்மனையும் வழிபட்டு வந்த 'அமரர் 07.03.2006 அன்று காலை இணுவில் சிவகாமி அம்பாள் பாதாரவிந்தங்களில் இணைந்துகொண்டார்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அன்னை சிவகாமியைப் பிரார்த்திக்கின்றேன்.
இங்ங்ணம்
க.முருகையா இணுவில் சிவகாமி அம்மன் திருமண மண்டப செயலாளரும், கிராம அலுவலரும்
-: 20 :-

உலகத்தவர் உற்றுப்பார்க்கும் உன்னத திருநாமம் ஈழத்திருநாட்டின் சிரசெனத் திகழும் யாழ்ப்பாண மாமண்ணில் பார்போற்றும் சீர்இணுவைத் திருவூரிலே ஊர்போற்ற வாழ்ந்திட்ட உத்தமர் நன்னித்தம்பி பொன்னமபலம் அவர்கள்.
இந்திருவூரின் கண்ணே சீர்மேவ, சிறப்புற்று வாழ்ந்திட்ட செம்மல்கள் வேலுப்பிள்ளை நன்னித்தம்பியும், நன்னித்தம்பி சிவகாமசுந்தரியும். இவர்கள் நாடிவரும் மக்களின் தீராத பிணி தீர்த்தும், தேடிவரும் பக்தர்களின் குறைகேட்டு நிறைகொடுத்து நிறைவோடு திறமாய் வாழ்ந்திட்டவர்கள். இவர்களின் நான்காவது புத்திரரே பொன்னம்பலமாவார்.
இவர் சிந்தனை சிறப்பானதாக அமைய செயல்திறன் உயர்வுற்று விளங்க தன்வலிமையால் தன்னை உயர்த்திக் கொண்டவர். பொழிப்பான உடல்வாகும் எடுப்பான தோற்றமும், இயல்பாக வாய்க்கப்பெற்ற விடாமுயற்சி, தன்னம்பிக்கை வழிவந்த வாழ்வுயர்ச்சியும், ஊரில் பலராலும் இவர் புகழந்து பேசப்படும் அளவிற்கு உயர்த்தி வைத்தன. அன்பும், பண்பும், பாசமும், பிரிவும் வரம்பாய் அமைய வாழ்நெறி வாழ்ந்திட்டவர்.
கண்டிப்பில்லா கண்டிப்பும், கட்டுப்பாடும் ஒருங்கே சேர்த்து பிள்ளைகள் அனைவரையும் கல்வியிலே ஊக்குவித்து தொழில் துறையிலும் வளர்த்தெடுத்து வல்லவரால் வையத்திலே வாழ வழிசெய்தவர்.
அதிகாலையிலே கதிரவன் அலைகள் மண்மகளை தாலாட்டுவதற்கும், பொழுது புலர்வதற்கும் இடையிலே துயில் எழும்பி நீராடி, மலர் பறித்து நடப்பார். சிவகாமி அவள் பாதம் தேடி, கொட்டும் மழையோ, அடிக்கும் காற்றோ, அள்ளிச்சொரியும் பனியோ தடுக்காது இவர் ஆலய தரிசனத்தை "சலம்பூவொடு தூப மறந்தறியேன்” என்ற அப்பர் நவின்றிட்ட நல்வாக்கை தன் நோக்காய் கொண்டு நாளும் நீர் ஊற்றி, மலர் தூவி அரனடியும், அன்னை தாளடியும் சேவிக்கும் பணியில் அவர் வாழ்வு சிறப்புற்று விளங்கியது.
-: 21 :-

Page 14
சோலைகள் சூழ்ந்திருக்கும், வளம் கொழிக்கும் செம்மண் தோட்டங்கள் சேர்ந்திருக்க, ஆடும்பிரான் சுடலையும் சுற்றுப் புறமாய் இருக்க, தேடி எவரும் நாடிவரும் திருத்தலமாய் காரைக்கால் சிவனார் கோவிலும், ஊரின் மத்தியிலே சத்தியவள் தாள் தன் சித்துவத்தால் வந்துதித்த சிவகாமி அம்மன் திருத் தலமும் அமரரின் இல்லத்தின் இருமருங்கும் இருந்ததனால் இவரின் இறைநம்பிக்கை இறுதிவரை தொடர்ந்தது.
இறையாசி நிறைவாக வாய்க்கப்பெற்ற இவர் கைராசி கொண்ட கமக்காரன் எனவும் பெயர் எடுத்தவர்.
காலம் கரைந்து ஓட முப்பும் முதுமையும் தேடிவர ஒய்வேயின்றி உழைத்தவளுக்கு ஓய்வு தேவைப்பட்டது போலும், இதன் வழி சிறிது காலம் நோயுற்றிருந்து நானிலம் விட்டு அன்னை சிவகாமி அடி தேடி வானகம் ஏகினார்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”
எனும் செந்நாப் புலவன் வள்ளுவன் வாய்மொழி அமரர் நன்னித்தம்பி பொன்னம்பலம் வாழ்க்கையிலே நாளும் நின்று நிலைக்க பிரார்த்திப்போம்.
சாந்தி சாந்தி!! சாந்தி!!!
இங்ங்ணம் திருமதி பத்மராணி இரத்தினசிங்கம்
-: 22:-

பொன்னம்பலத்தை ஈன்றெடுத்த அன்னையின் வரலாறு
நீர்வளம், நிலவளம் போல் பல்வேறு வளங்களை தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது இணுவையூர். சாதாரண கிராமியச் சூழல் மாறிட குடாநாட்டின் இருதயமாக, நவநாகரீகத்தின் வளர்ச்சிபெற்ற ஊராக இன்று காட்சியளிக்கும் இணுவில் என்ற இவ்வூர் கிராமிய வளத்தினால் ஏற்பட்ட சுவடுகளை அடிநாதமாக கொண்டு விளங்குகின்றது. இதற்கான காரணங்களை ஆராய்வோ மானால் இப்புனித மண்ணில் அவதரித்து மறைந்த அருளாளர் களின் மகிமை என்றுதான் கூறவேண்டும். வடிவேல் சாமியார், பெரிய சந்நியாசியார், அம்பலவாணர் போன்ற அருளாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓர் பெண்மணியும் இந்த மண்ணில் அவதரித்து பல்வேறு தொண்டுகள் புரிந்து தனக்கு நிகர் தானே என்று மறைந்துவிட்டார். அவரது இயற்பெயர் சிலரைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. ஆனாலும் "சாத்திரம்மா” என்றால் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. இன்னும் சில காலம் போனால் அப்படி ஒருவர் இருந்தாரோ என்று வருங்காலச் சந்ததியினர் கேள்விகூட எழுப்பலாம்.
இணுவில் கிராமத்தில் வைரவநாதர் தம்பதிகளுக்கு மகவாகப் பிறந்தவர் சிவகாமசுந்தரி என்ற சாத்திரம்மா. பல சகோதங்களுடன் பிறந்திருந்தாலும் சிவகாமி அம்மன் மீது பெற்றோர் கொண்ட பக்தியினாலே சிவகாமசுந்தரி என நாமம் குட்டினர். காலஞ்சென்ற நன்னித்தம்பி (ஆயுள்வேத வைத்தியர்) என்பவரைத் திருமணம் செய்து இல்லற சுகத்தில் ஒன்பது பிள்ளைகளையும் பெற்று வளர்த்தார். இவர்களில் அமரர் அருட்பிரகாசம், அருளம்பலம், நடராசா, அமரர் பொன்னம்பலம், சணி முகநாதன், அமரர் பரமநாதன், குமாரசாமி, பாலசுப்பிரமணியம் ஆகிய எண்மர் ஆண்களாகவும், அம்பிகாதேவி ஒருவர் மட்டும் பெண். அன்றைய கிராமியச் சூழலில் வைத்தியம் செய்து வந்த கணவரின் வருமானம் பெரிய குடும்பத்துக்குப் போதுமானதாக இல்லாதபோதும் அம்மாவின் முயற்சியால் பிள்ளைகளை வளர்த்து, படிக்கவைத்து அவர்களை எல்லாம்
-։ 23 :-

Page 15
புண்ணி கைங்கரியம் இன்று எல்லோரும் நல்ல நிலையில் பொருளாதார வளங்களுடன் பிள்ளைச் செல்வங்களுடன் இனிதே வாழ்கின்றனர்.
சிவகாமசுந்தரிக்கு "சாத்திரம்மா” என்ற பெயர் எப்படி வந்தது? இவருடைய தாயாரான கற்பகத்தம்மாவும் ஓர் அருளாளர். கருவிலே திருவுடையவராக பிறந்த சிவகாம சுந்தரி உலோகாதய வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும் பூர்வ புண்ணிய பலனாய் அவருடைய வாழ்க்கையில் ஓர் திருப்புமுனை ஏற்பட்டு அருள்வாக்குச் சொல்ல ஆரம்பித்தார். சிவகாமி அம்மன் ஆலயத்துக்கு மேற்கேயுள்ள ஞானவைரவர் பத்திரகாளி ஆலயத்தின் வடக்கு வீதியில் இருந்து அருள்வாக்குச் சொல்வார். கையில் கொட்டைப்பாக்கு ஒன்றை வைத்துக்கொண்டு கற்பூரம் கொழுத்தி வைப்பார்கள். சில விநாடிகளில் அந்தப் பாக்கை உருட்டிவிட்டு அருள்வாக்குச் சொல்ல ஆரம்பிப்பார்கள். குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பலர் வந்து அருள்வாக்கு கேட்பார்கள். காலையிலிருந்து மதியம் வரை அதிலேயே தங்கியிருந்து தன்னை நாடிவருவோரின் குறை கேட்டு தகுந்த பரிகாரங்கள் கூறி அனுப்புவார்கள். பாமரர்கள் மட்டுமன்றி, படித்து பெரும்பதவிகளில் உள்ளவர்களே வந்து அம்மாவின் முன் மண்டியிட்டு அருள்வாக்கு கேட்டுச்செல்வதை எல்லோரும் அறிவார்கள். அருள்வாக;கு கேட்டவர்கள் கொடுக்கும் பணம் சிவகாமி அம்மாவின் திருப்பணி வேலைகளுக்கு சாத்திரம்மாவை இழுத்து வந்தது. ஆரம்பத்தில் கருவறையையும் அதற்கு அடுத்த மண்டபத்தையும் கட்டிமுடித்து கும்பாபிஷேகம் செய்வித்தார். அம்மாவே தன் ஆலய திருப்பணியை நடத்த வேண்டும் என்று அம்பாள் திருவுளம் கொண்டு சாத்திரம்மாவின் நினைவும், கனவும் அல்லும்பகலும் அனைவரதமும் ஆலய திருப்
பணியிலேயே முழ்கும்படி செய்துவிட்டாள்.
-: 24 :-

மாலை வேளையில் ஓர் கடகம் அதற்குள் சிறு ஒலைப் பெட்டிகள் அதனை இடுப்பில் வைத்து கையால் அணைத்தபடி ஊருக்குள் செல்வார்கள். ஒவ்வொரு வீடாகச் சென்று பிடியரிசி எடுத்து வருவார். இந்தப் பிடியரிசித் தொண்டில் பல திருப்பணிகளை ஆலயத்தில் நிறைவேற்றியுள்ளார். கருவறையிலிருந்து கோபுர வாசல் வரை திருப்பணி நிறைவடைந்ததும் கோபுரத்துக்கு அத்திபாரமிட்டு கோபுர திருப்பணியையும் ஆரம்பித்தார். சிறிது காலத்தில் கோபுர திருப்பணி நிறைவேற்றி கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இவையாவும் வெள்ளைக் கற்களாலும், கருங் கற்களாலும் நிர்மாணிக்கப் பெற்றவை. செய்வன திருந்தச் செய் என்ற முதுமொழிக்கிணங்க அம்பிகையின் அருளால் நிறைவேற்றப் பட்ட பணிகளாகும்.
அருள்வாக்குச் சொல்லும் ஞானவயிரவர் ஆலயத்தையும் புதுமெருகுடன் ஒளிவீசச்செய்து அத்திருப்பணியையும் நிறைவு செய்துமுடித்தார். வயதான காலத்திலும் தள்ளாமையைப் பொருட் படுத்தாடு யாரையாவது உதவிக்குக் கூட்டிச்சென்று பிடியரிசி எடுத்து வந்தார். ஊரில் உள்ளவர்கள் அம்மாவைக் கண்டதும் அன்புடன வரவேற்று அவருக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்வார்கள். அம்மாவினால் இனி முன்புபோல திருப்பணி செய்ய முடியாது என்று எல்லோரும் நினைத்திருந்த வேளையில் மணி மண்டபத்துக்கு கருங்கற்கள் கொண்டு வந்து ஆலய வளவில் குவிக்கப்பட்டன. சில நாட்களில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அழகிய தூண்கள் நிறுவப்பெற்று மணிமண்டபம் வரை அம்மா செய்த திருப்பணியால் தென்னங்கீற்றுக் கொட்டகையாயிருந்த சிவகாமி அம்பாள் ஆலயம் புதுப்பொலிவுடன் அழகுமிகு திருக்கோயிலாக விளங்குவதைக் காணமுடிகின்றது.
அத்துடன் ஊர்மக்களை நோய் பிணிகளிலிருந்து பாதுகாக்க வருடாவருடம அன்னை சிவகாமியை வேண்டி குளிர்த்தியும் செய்துவந்தார்.
-։ 25 :-

Page 16
வேலுப்பிள்ளை நன்னித்தம்பி +
சிவகாமசுந்தரி (சாத்திரம்மா) - 25 :-
 

கந்தையா சின்னத்துரை - 27 :-

Page 17
சாத்திரம்மா நடமாடும் ஓர் அபூர்வ பிறவியாக தனித்து நின்று பலர் சேர்ந்து சாதிக்க முடியாத அரும்பெரும் திருப்பணிகள் செய்ததை எல்லோரும் நன்கறிவர். கடைசிக்காலத்தில் மக்கள் சிலரதும், பேரப்பிள்ளைகள் சிலரதும் உதவியுடன் தனது பணிகளை மேற்கொண்டாராயினும் அவரது அரும்பணி மற்றவர் களால் நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்றாகும்.
இத்தகைய அருளுடைய ஓர் அம்மைக்கு அவர் செய்த அரும்பணிக்கு அன்னாரின் நினைவாக ஓர் நினைவாலயம் நிறுவப் பட்டிருக்கவேண்டும். ஊர்மக்களும் சரி, அவரது எச்சங்களும் சரி, இனியாவது சிந்தித்து ஓர் நினைவாலயம் அமைக்க முன்வந்தால் அதுவே சாத்திரம்மா செய்த திருப்பணிக்கு நன்றிக் கடனாக அமையும். சிவகாமி அம்பாளுக்கு அழகுமிகு ஆலயம் அமைத்த அன்னை சாத்திரம்மாவின் ஆத்மாவுக்கு அம்பாளின் அருட்கடாட்சம் கிடைக்க வணங்கிவேண்டி வழிபடுவோம்.
K.S.ஆனந்தன்
-: 28 :-

விவசாய மன்னனப்பா நீ.
இணுவில் ஊர் செம்மண் செறிந்த பூமி. இம்மண் விவசாயத்துக்கு ஏற்ற நிலமாகும். இம்மண்ணில் எப்பயிரும் செழித்து வளரும். மா, பலா, தென்னை, கமுகு, வாழை முதலிய உயர் மரங்களும், சாமை, குரக்கன், பயறு முதலிய தானிய வகைகளும் மரவள்ளி, கரணை, இரசாவள்ளி, கொடிவள்ள முதலிய கிழங்கு வகைகளும், வெண்டி, தக்காளி, கத்தரி, மிளகாய், வெங்காயம் முதலிய காய்கறிகளும் இவ்வூரில் இயல்பாகச் செழித்து வளருகின்றன. இதனால் இங்கு விளைவிக்கும் பொருள்களை விற்பதற்கான நாளங்காடியும் இவ்வூரில் பல காலமாய் இருந்துவருகின்றது. விவசாயத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட அமரர் நன்னித்தம்பி பொன்னம்பலம் அவர்கள் இணுவில் கிராமத்தின் முதன்மை மிக்க ஒரு முன்னோடி விவசாயியாக திகழ்ந்தவர். அவரது குடும்பத்தினர் யாவரும் விவசாயத்தில் அனுபவமும், திறமையும் உள்ளவர்களாக இன்றும் திகழ்கின்றனர். அதற்கு வழிவகுத்தவர் அமரர் நன்னித்தம்பி பொன்னம்பலம் அவர்களே. அரச உத்தியோகத்திற்கு சமமாக விவசாயிகளும் சமமானவர்களே என நிருபித்துக் காட்டியவர். புதுப்புது முறையில் விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்கு விவசாயத் திைைணக்களத்தின் அனுசரணையுடன் தனது அனுபவத்தையும் சேர்த்து விவசாயத்தில் பெரு விளைச்சலை ஏற்படுத்திய ஓர் விவசாய மன்னன்.
குறிப்பாக உருளைக் கிழங்கு, கரணைக்கிழங்கு, இராசவள்ளி, புகையிலை, வெங்காயம், வாழை போன்ற செய்கைகளில் பெரும் விளைச்சலைக் கண்டவர். அத்துடன் தான் பெற்ற விளைச்சல்களைப் பற்றிய அறிவினை ஏனைய விவசாயிகளுக்கும் தெரியப்படுத்திய ஓர் பெரியார். தனது பிள்ளைகளுக்கும் இத்தகைய அறிவினைப் புகட்டி அவர்களையும் சிறந்த விவசாயியாக தலைநிமிரிந்து வாழ்வதற்கு அத்திவாரமிட்டு கொடுத்தவர். தனது கடைசிக்காலத்தில் கூட தன்னால் உற்பத்தி செய்யப்பட்ட விவசாயப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதிலும் இதன் மூலம் இவரது பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு
-: 29 :-

Page 18
வியாபாரிகள் பலரும் போட்டிபோடுவார்கள். இதற்குக் காரணம் அவருடைய உற்பத்திப் பொருட்கள் தரமுடையதாக இருப்பதே. விவசாயிகளுக்கு ஏற்படும் குறைபாடுகளை எமது உடுவில் கமநல கேந்திர நிலையத்திற்கு வருகை தந்து விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற குறைகளை எடுத்துக் கூறி அதற்கு தீர்வுகாண்பதில் முன்நிற்பவர்.
பொதுப்பணிகளுக்கு மனமாக அள்ளிக்கொடுப்பவர். இவருடைய தாயார் சாத்திரம்மா அவர்களது தொண்டுக்கு உறுதுணையாக நின்று உழைத்தவர். அமரர் பொன்னம்பலத்தின் சகோதரர்களும் தாயாரின் வழியைப் பின்பற்றி பொதுச் சேவையில் தங்கள் பங்களிப்பை அர்ப்பணித்தவர்கள். இணுவிலில் ஓர் சிறந்த விவசாயக் குடும்பம் என்ற பெயரை நிலைநாட்டியவர். இணுவில் கிராமத்தில் ஏறக்குறைய பன்னிராயிலம் மக்கள் நிரந்தரக் குடியிருப்பாளர்களாக உள்ளனர். இவர்களில் அமரர் நன்னித்தம்பி பொன்னம்பலத்தின் குடும்பம் முதன்மையான விவசாயக் குடும்பம் என்பதில் இணுவில் மக்களாகிய நாம் யாவரும் பெருமைப் படுகிறோம்.
உவர் நிலத்திலோ உப்பு உண்டாகின்றது
வயல் நிலத்திலோ நெல் விளைகின்றது
நெல்லைப் பார்க்கிலும் உப்பு உயர்வாக மதிக்கப்படுகின்றது.
அதே போல் விவசாய அறிவால் சிறந்தவர்கள் உயர்ந்தோராகப் பாரட்டப் பெறுவ்ா.
லயன்.செ.இலகுநாதன் தலைவர்,
கமநல கேந்திர நிலையம், உடுவில்.
-: 30 :-

IsosỆ01
§) ựApiĝopossissé韃 Isosság}iloğosť麟 (ųoģųos)용혈un%} }sápí,ose (ņospo) (sponiĝos)+}(u'nuð?) spíségű, péisí plo(sylffigo (u'impo) (qımı ortaĵo)污x) 十+(qmilosoje) çoğusunusoj sposoo@ písoțoșoin+ (?-uņ806)(ņossow) (spouso?) 1||Nomo ‘m(o)\s?)++(IITIŴo) \,^{4pmớ% y esošomáı sırțøfo sieťmæ &#ørsự suos@mob hwsmæ soomäe soogusw.woɖo Ạ.A+ 4}ĄAA_4) 函弓与弩 + gongú恒nb (ụbu-ışını 97's sus@@| oņøvợısípng(įmụự@ qosorð sýs& űsselsso) usmíssimo (yers&go pers)官營종8명9) ựơIÚ000\,0Įgulosso qoumɔsɑpligus-, sýröikoso qoş,poğșúĠ A_AMẠT ẠĄ� ựươışøy + (suoßșøșap umsátøĵo (soņins oupț¢& (ųBumsstølBotoși'qbmmonofi) soosüəXưuu cɔl. ússneiðmð)용高m명lamé)(qmuotose)(ņựgo (woźặtouw (isoleso) (sømsgos)(U-Two) (qmuotojo) yosságúnCTQ) oper, sıras (šņě) řešpio) qįgijęs jogo qmựøơısıņs (oun soạijo siglo sợulo(Los@ ĻolgospolosofisựøpįÚơs@>qonqus@@ upus-offĮÚơso A+ + +AÅ4A�
Cmän)*** J19191}}}quito
-: 31 :-

Page 19
7)
岑
3.
2
fë
*
K
Rö 2
}66
N 3.
Zę
}&ପ
N g S. 3.
总 2
პზ) 2
i)
怒
என்றும் எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய் திகழ்ந்து எங்கள் இதயங்கள் யாவிலும் நீங்காத நினைவுடன் வாழ்ந்தகொண்டிருககும் எம்தெய்வம், 2006.03.07 அன்று அமரத்தவம் அடைந்த
அமரர் திருநணினித்தமிபி வானினமீபலமீ
புரிந்தோர்க்கும், அன்னாரத இறுதிக் கிரியைகளில் பங்குகொண்டவர்களுக்கும், இரங்கற் செய்திகளை தொலைபேசி, தந்தி, அஞ்சல் மூலமும் நேரிலும் வந்த தெரிவித்தவர்களுக்கும், மலர்மாலை, மலர்வளையம் என்பவற்றினுடாகி அஞ்சலி செலுத்தியோருக்கும், அந்தியேட்டிக் கிரியைகளிலும், இன்று நடைபெறும் ஆத்ம சாந்திக் கிரியைகளில் பங்குகொண்டு அவரத ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்த அனைவருக்கும் எமத மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தக் கொள்கிறோம்.
இங்ங்ணம் சிவகாமி அம்மன் கோயிலடி, மனைவி, மக்கள், மருமக்கள்,
உடன்பிறந்தோர்,
홍
VM
மைத்துனாகள், பேரப்பிள்ளைகள் නිර්‍ර්%ඳිණීෂ්වාර්%ෂුද්‍රිෂ්ෂණිමාර්%ෂුද්‍රිෂ්ෂී Sunshine Graphics - K.K.S Road, Inuvis.
S
N
اسحا
 


Page 20
纏
淄
 

呼顶m
ாது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. ாது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. ாது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையது எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய்? அதை நீ இழப்பதற்கு. எதை நீ படைத்திருக்கிறாய், அது வீணாகுவதற்கு. எதை நீ எருத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எருக்கப்பட்டது. எதை கொருத்தாயோ, அது இங்கேயே கொருக்கப்பட்டது. எது இண்று உண்ணுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொருநாள் அது வேறொருவருடையதாகும்.