கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வேலுப்பிள்ளை செல்லத்துரை (நினைவு மலர்)

Page 1
YDDDSDDYKYYYDDDDDKHKYYYKKKDKKLLHDLuuuuDKDKKKKuKuKDKD
回黜
ಇಂ¶ಸ್ತ್ರ್ಯ 2 firqizillif::JE1.jpeg|
திரு. வேலுப்பிள்ை
(66u
 
 

லக் கதிர்
gElellēlielielielielfija
வில் தெற்கு T செல்லத்துரை(ஜோதிடர்) (GI) 31.08.1998

Page 2

6. சிவமயம்
இணுவில் தெற்கு
திரு. வேலுப்பிள்ளை செல்லத்துரை (பிரபல சோதிடர்)
அவர்களின் சிவபதப்பேறு குறித்த
நினைவு வெளியீடு
女
S5Gaugot unt வெகுதா னியவாண்டு விளம்பாடி பி ரெட்டில் சொகுசான நவமித் திதியதனில் - வெகுபேரும் போற்றிப் புகழ்ந்திட்ட பொன்னார் செல்லத்துரையும் காற்றாய்ப் பறந்திட்டான் கைலை.
3-08-1998

Page 3
வள்ளுவன் காட்டிய வாழ்க்கையின் வரைவிலே
வளமாக வாழ்ந்து நின்று இணுவையம்பதி பரராச சேகரப் பிள்ளையார்
பாதம் பணிந்து தோத்திரம்பாடி பரமனடி சார்ந்தஉன் பாதார வித்துங்கட்கு
தெள்ளு தமிழிலே தீஞ்சுவை பளித்திடும் தெவிட்டாத இந்த பொன் மலரை
அள்ளிச் சொரிந்துநா சாறுத வடைகின்றோம். இப்பூ விலகில் எங்களுக்குச் செய்த
எழிலார்ந்த சேவையை நினைந்தோம் முக்கணிச்சாறு தேர்ந்தெடுத் துரட்டிய மோகனத் தந்தையே
முத்தொளிர் வதனத்தை யெம் பக்கமாய்த் திருப்பிடு பார்த்து தாம் மகிழ்கின்றோம்.
கண்களால் மலர் சொரித்து காணிக்கை செலுத்துகின்றோம்
பாதங்கள் சரண்மை பா.
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
 

몸픽
민민민민민
盟
봄
J, Tifi Digfai இறைவன் அடியில்
01-01-1923 O1-08-1998 அமரர் வேலுப்பிள்ளை செல்லத்துரை
பிரபல சோதிடர்)

Page 4

Gl சிவமயம்
எங்கள் தெய்வம்
இந்துமா சமுத்திரத்தில் இலங்குகின்ற முத்தாக மிளிர்வது இலங்கை மணித்திரு நாடு. இத்திருநாட்டின் சிரசாக இருப்பது யாழ்ப்பாணத் தீபகற்பமாகும். இத்தீவகற்பத்தின் இதயமாகவும் இதயத்திற்கு ஞான உயிரை ஊட்டும் மூலவளத்தைக் கொண்டி ருப்பது இணுவில் என்னும் சிவபூமியாகும். இச்சிறப்புப் பொருந்து வதற்குக் காரணம் ஞானிகளும், ஆத்மீக ஈடுபாடு உடையவர்களும் காலத்திற்குக் காலம் தோன்றியமையாகும். மேலும் சிறப்புக் கொடுப்பது எமது ஆன்றோரின் தெய்வீக உணர்வும் பக்தியின் வலிமையுமாகும். இவ்வலிமையை மேலும் பரவசமாக்கியது நம் முன்னோர் மேற்கொண்ட வேளாண்மையேயாகும். இவ்வேளாண் மையில் சிறப்புக் கண்டவர்கள் காசியர் கந்தர் வேலுப்பிள்ளை + முத்துப்பிள்ளை சந்ததியினரே! வேலுப்பிள்ளை + முத்துப் பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனாகத் தோன்றியவர் திரு. செல்லத்துரை என்பவராவர். இவர் சிறு பராயத்தில் தெய் வீக மணம் பொருந்த கிணற்றடி ஞானவைரவர் பாதம் பணிந்து தனது ஆரம்பக் கல்வியை யா | இணுவில் சைவப்பிரகாச வித்தி யாசாலையில் (யா | இணுவில் இந்துக் கல்லூரி) கற்று வந்தார். மேலும் தம் தமிழ் அறிவினை வளர்க்கும் நோக்குடன் திரு. வைத்திலிங்கச் சட்டம்பியாரிடமும் திரு. வை. கதிர்காமநாதன் ஆசிரியரிடமும் கல்வி பயின்றுள்ளார்.
இக் காலத்தில் பஞ்சாங்கம் சேகரிப்பதும் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்படுகின்ற கருத்துக்களை நுணுக்கமாக ஆராய்வதும் சோதிட விடயங்களை மனனம் செய்வதும் இவரிடம் இயல்பாக இருந்தது. இச்சிறப்புக்களுக்கு மூலகாரணமாக இருந்தது இவர் வணங்கிய தெய்வங்களாகிய மடத்து வாசல் பிள்ளையார், இணு வைக் கந்தன், சாந்தியடி வைரவர், மருதடி விநாயகர், மருதனார் மடம் பல்லப்ப வைரவர், கதிர்காமத்துக் கந்தன், செல்லக் கதிர் காமம், நல்லூர்க் கந்தன் ஆகிய தெய்வங்களின் அருளை நேரடி யாகப் பெற்று வாழும் சிறப்புப் பெற்றமையாகும். இவ்வாறு சிறப்புப்பெற்று வாழுங் காலத்தில் யோகர் சாமியின் சீடரான

Page 5
4
ஆனந்தகுமாரசாமியின் தொடர்பால் யோகர் சாமியைத் தரிசிக்கும் வாய்ப்புப்பெற்று அவரிடம் இருந்து கிடைத்த நற்போதனைகளை தம் மைந்தர்களுக்கு உரியமுறையில் விளக்கியுள்ளார்.
இவர் தமது முப்பத்து மூன்றாம் வயதை அடைந்ததும் இணு வைக் கந்தனின் வடபால் அமைந்துள்ள பெருநில விவசாயியும், வர்த்தகருமாகிய திரு. நாராயணர் கந்தையா தம்பதியினரின் புதல்வியான ஆச்சியம்மாவைத் திருமணம்செய்து இல்வாழ்வை இனிது நடாத்திவரும் நாளில் திரு. ஜெயசோதிவுரதன், ஆனந்த வரதன், ஜெயக்குமார், குமரகுரு, கந்தவேள் ஆகிய புதல்வர்களைப் பெறும் நற்பேறு பெற்றார்.
இவர் யாழ் கூட்டுறவுப் பாற்பண்ணையின் கிளை (இணுவில்) முகாமையாளராக நீண்டகாலம் சேவையாற்றியுள்ளார். தமது புதல்வர்களின் உயர் கல்வியில் அதிக அக்கறை கொண்டு வாழ்ந் தவர், அதன் பயனையும் பெற்றவர்.
இவரது மூத்த மகனான ஜெயசோதி வரதன் ஆசிரியர் அவ் வூர் நாகேஸ்வரி என்பவரைத் திருமணம் செய்து மயூரா, லக்ஷப் ரதன், திருமால் மருகன், மாதுமை , ஞானலசுஷ்மி என்னும் பிள்ளைகளையும் ஆனந்தவரதன் அவ்வூர் குகாமதியைத் திரு ம ணம் புரிந்து பிரியங்கன், அபிஷேகா என்னும் பிள்ளைகளைப் பெற்றுள்ளார். அன்னாரின் பிள்ளைகள் யா | இணுவில் இந்துக் கல்லூரியில் ஆரம்பமான கல்வி இலண்டன் மாநகரில் கலாநிதிப் பட்டம் பெறும்வரை தமது ஆத்மீக பலத்தை முழுமையாக வழங்கியுள்ளார். ஜெயக்குமார் இலண்டனில் சிறந்த வர்த்தக இயக்குனராக கடமை புரியும் நாளில் சற்குணவதியைத் திருமணம் புரிந்து சிறப்புடன் வாழ குமரகுரு அவர்கள் யா / தனியார் மருத் துவக் கல்லூரியில் கல்வி பயின்று இலண்டன் மாநகரில் Anatomy M. Sc. பட்டம் பெற்று கலாநிதிப் பட்டப் படிப்பினை மேற் கொண்டுள்ளார். இவர் சோதிடம் பார்ப்பதில் விற்பன்னராகவும் சோதிடத்தில் சிறந்த ஆர்வமுள்ளவராகவும் சோதிடக்கலையின் நுணுக்கமான கருத்துக்களை வெளிக்கொணர்வதற்கு ஏற்றவகை யில் சோதிடக் கலையை கற்பித்துள்ளார், இவருக்கு இணுவை யூர் சேர்ந்த வளர்மதியை (யா | பல்கலைக்கழகம்) திருமண நிச் சயார்த்தம் செய்து வைத்துள்ளார். கந்தவேள் என்பவர் கனடாவில் கணணி முறையைக் கற்று வருகின்றார். இவ்வாறு தமது பிள் ளைகளின் வளர்ச்சியில் இன்பங் கண்டதோடு மட்டுமல்லாது தமது உறவினர்களுக்கும் தம் மாலான உதவிகளைச் செய்துவந் துள்ளார், கோவில் இல்லாத ஊரில் குடியிருத்தல் கூடாது என்ற
1.

ஜோதிடக் கணிப்பீட்டின் போது ஆழ்ந்த சிந்தனையில் அமாந்திருக்கும் காட்சி.
977ம் ஆண்டு శిఙ్గళ్లు பரராசசேகரப் பிள்ளையார் கோயில் சண்டேசுரருக்கு மது சொந்த முயற்சியால் தேரினை உருவாக்கியுள்ளார்.

Page 6

வாக்கினைப் பெரிதும் போற்றுபவர். இதற்காக கோவில்களில்
பலதிருப்பணிகளை முன்நின்று செய்தவர். இணுவில் பூரீ பரராச சேகரப் பிள்ளையார் கோவில் சண்டேஸ்வரர் தேர் செய்வித்துக் கொடுத்தவருமாவர். அத்துடன் மருதனார்மடம் பல்லப்ப வைர வர் ஆலயத்துடன் மிகுந்த ஈடுபாடுடையவர். தன்மனதில் கொண்ட திருப்பணியின் உச்சநிலை காரணமாக தலைமகனிடம் பணித்து கற்பகப் பிள்ளையார் ஆலயத்தில் ஓர் சிறந்த சண்டேஸ்வரர் கோவில் அமைத்துக் கும்பாபிஷேகம் செய்த காட்சியைத் தமது மனக்கண்ணில் கண்டு இன்புற்றதுடன் தம்பிள்ளைகளுக்கு ஆசிச் செய்தி வழங்கியமை ஒரு தெய்வீகமானதாகும்.
திருப்பணியோடு நின்றுவிடாது சோதிடக்கலையில் அதிக ஆர் வம் கொண்டு கணித முறை மூலம் கணிப்பீடுகள் செய்து தர்க்க ரீதியாக சான்றுகளுடன் பலன் கூறுவதில் மிகவும் சிறப்புப் பெற்ற வராவர்.
திருமணப் பொருத்தம் பார்த்தல், புதுமனை அமைத்தல், நினைத்த காரியம் பார்த்தல் போன்றவற்றை தமது ஞான வைர வரின் ஞானப்பார்வையால் மக்களுக்கு சோதிடத்தின் தனித்து வத்தை அள்ளி வழங்கியுள்ளார். இவ்வாறு சிறப்புற்றிருக்கும் வேளை தமது புத்திரர்களின் பட்டத்தின் மேற்படிப்பிற்கு பட்டம் வழங்கும் வைபவத்தை காண்பதற்கு விருப்பங் கொண்டு தமது மக்களின் எண்ணக்கருத்தை நெஞ்சில் அமர்த்தி லண்டன் மாந கரைச் சென்றடைவதற்கு குடும்பத்தார் அனைவரதும் வாழ்த்துக் களுடன் புறப்பட இருந்தார்.
எத்தனையோ காலம் எம்முடன் இணைந்து அரிய பெரிய சாதனைகளை புரிந்துவிட்ட இக்காவல் தெய்வம் தந்தையுருவில் பேரன்பு காட்டி, கட்டியணைத்து, ஆதரவு நல்கி சகல வழிகளி லும் மேம்பாடு காட்டிய எம் அன்புத் தெய்வம் இன்று இல்லை. அது மறைந்துவிட்டது. தெய்வங்களை மனிதக் கண்களால் காண் பது அரிது. தோன்றாத் துணையாகவே நின்று அருள் புரியும். அதுவே தான் இச் செயற்பாடாகும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஞானவைரவரின் பாதங் களைப் பணிந்து நிற்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Page 7
இணுவில் பூரீ பரராஜசேகரப் பிள்ளையார் கோவில்
பிரதமகுரு சிவபுரீ வை. சோமாஸ்கந்தக் குருக்கள்
அவர்களின் இரங்கற் செய்தி
நாமெல்லோரும் இன்று ஒரு பிரபல ஜோதிடரை இழந்து விட்டோம், எந்த ஒரு நல்லகாரியமோ நினை த்தகாரியத்திற்கோ இலகுவில் சந்திக்ககூடிய பிரபல ஜோதிடராக விளங்கிய திரு. செல்லத்துரை அவர்கள் இன்று நம் எல்லோரையும் பிரிந்து சென்று விட்டார். அன்னார் ஒரு சிறந்த ஆசார சீலராகவும் பக்தி மானா கவும் விளங்கினார் . பூரீ பரராஜசேகரப் பிள்ளையாரது காலைப் பூசையில் நாள் தவறது வந்து தரிசித்துச் செல்வார். பிள்ளையார் மீது மிகுந்த பக்தியுள்ளவராக விளங்கினார். பிள்ளையாரது விழாக்கள் பல வற்றிலும் மிகுந்த விருப்பத்தோடு உபயம் செய்து மகிழ்ந்திடுவார். சண்டேஸ்வரப் பெருமானுக்கு தமது சொந்த செலவி லேயே ஓர் சித்திரத்தேர் செய்வித்து அது வருடத்தில் இருமுறை பவனி வருவதைக் கண்டு இன்புற்று இருந்தார். இவ்வாறு இறைவனுக்குச் செய்கின்ற பதிபுண்ணியத்தோடு பசுபுண்ணியமாகியதான தர்மங்கள் அன்னதானம் முதலியன செய்து ஒரு புண்ணிய ஆத்மா வாக விளங்கினார். அன்னார் செய்த புண்ணியங்களால் நோய் நொடியென்று படுக்கையில் புரளாது சடுதியில் இறையடி சேர்ந்தார் அன்னார் செய்த புண்ணிய பலன்களால் அவர் பெற்ற பிள்ளைகள் பலவளங்களை யும் மேல்மேலும் அடைய எல்லாம் வல்ல பிள்ளையா ரை வேண்டிக் கொள்கிறேன். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு அமைதி பெற வேண்டுகிறேன்
சாந்தி! சாந்தி! சாந்தி!

மூதறிஞர், இளைப்பாறிய அதிபர் யூனி வை. கதிர்காமநாதன்
அவர்களின்
இரங்கற் செய்தி
சர்வவியாபக கருணாமூர்த்தியாகிய பூரீ பரராசசேகரப் பிள் ளையாரின் பாதாரவிந்தங்களைத் தவறாது வழிபாடாற்றித் திருத்தொண்டுகள் செய்த பிரபல சோதிடர் வே. செல்லத்துரை அவர்களின் மறைவு பெருந்துயரக் கடலில் ஆழ்த்தியது.
அவர் எனது பழைய மாணவன். அடக்கம், வாய்மை, புறங் கூறாமை முதலிய குணங்கள் அமையப் பெற்றவர். அகண்ட பரி பூரணராகிய பூரீ சச்சிதானந்த சிவத்தின் மஹாமந்திரமாகிய பூரீ பஞ்சாட்சரத்தினை அருமருந்தாகத் தினம் உட்கொண்டு வழிபாடாற்றிவரும் உத்தமர்.
தமது இல்லக் கிழத்தியாரோடு வாழ்ந்து சற்புத்திரர்களைப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்த உத்தமர். தனது சிரேஷ்ட குமார னைக் கற்க வைத்து கற்றாங்கு ஒழுகும்படி ஆற்றுப்படுத்தி ஆசிரி யராக வைத்த பண்பாளர். ஏனைய பிள்ளைகளையும் கற்க வைத்துத் தத்தம் பணியாற்ற வைத்த புண்ணிய சீலர். 'தோன் றிற் புகழொடு தோன்றுக' என்ற வள்ளுவர் வாக்கிற்கு அமைய வாழ்ந்து இவ்வுலக வாழ்வைத் துறந்து இறைவன் பாதாரவிந்தங் களைத் தழீஇய அருமை மகானவன். ஆத்மா சாந்தியடைவ
தாக .
மூதறிஞர், இளைப்பாறிய அதிபர்
பூற் வை. கதிர்காமநாதன் இணுவில்.

Page 8
6?8QulDuuub
இயலிசை வாரிதி, கவிமாமணி, கலாபூஷணம்,
மகா வித்வான்
பிரம்மபூ மா, த. ந. வீரமணி ஐயர்
அவர்களின்
இரங்கற்பா
சோதிட மாமலை சரிந்ததுவோ?
தென்னினுவைப் பரராஜ சேக ரன்தாள்
தினம்தடி தேவாரம் பாடி என்றும் மன்னிடும் தெய்வபக்தி கொண்ட அண்ணல்
மகிமைபெறு சோதிட மாம லையாய் தன்னிக ரில்லாச்சேவை செய்த செம்மல்
திகழ்ந்திடும் செல்லத்துரை நாமம் கொண்ட மன்னவனும் சிவபதத்தைச் சேர்ந்த னனே
மகிமைச்சோ திடமலையும் சரிந்த துவோ?
'கவிமாடிணி'

魏
s
R
எமது இல்லத்தில் அமர்ந்துள்ள ஞான வைரவருடன் ஞானம் பயிலும் காட்சி.

Page 9

சோதிட மேதை சோதியுட் கலந்தார்!
ஆவணிச் சதுர்த்தி நாளில்
அரு பொழி விநாயகன் பூவனி பொற்றேர் ஏற்றி
பக்கவில் வருவாய் பக்தா ஆவணிச் சதுர்த்தி நாளில்
அண்ணலே ஆற்ற மாட்டோம் பேரணி பக்தர் எல்லாம்
உன் புகழ் பேசுவாரே !
செல்வத்தில் திளைத்து பண்புப்
புதல்வரோடு மகிழ்ந்து பேசி இல்லாள் நன் மனையாளோடு
இனிதாக வாழ்ந்த செம்மல் சொல்வது உன் பெருமை
பேசுதல் அரிதே தொன்மை வல்ல சோதிட மேதையேநீ
சோதியுட் கலந்த துண்மை !
கணபதி பக்தனே பல்லப்பர்
வயிரவர் அன்பனே நீ கணமுமே பிரியாய் மக்கள் மனையாளும்
சுற்றம் தன்னை தணலெரி நண்டு போல
தவிக்கின்றார் கதறுகின்றார் குணமெனும் குன்றே நீயும்
சோதியுட் கலந்தாய் உண்மை!
இணுவில் இந்துக் கல்லூரி கல்வி அபிவிருத்தி நிதியம் F Trifu T95 இணுவில் தெற்கு, திரு. திருமதி இணுவில். நா. சின்னராசா அன்னலட்சுமி

Page 10
յ0
எங்கள் குடும்ப தீபம் அணைந்தது
மனைக்கொரு நல்ல வளைவைக்கவே
தந்தையும் வேண்டி நின்றார் நினைத்தது போல நீயும்
பொன் வளையான தாலே அனைத்து மேகல்வி செல்வம்
கலங்கரை விளக்காய் வாழ்ந்தோம் உனை நாங்கள் பிரிந்ததாலே
உருகியே வாடு கின்றோம்.
அன்னையை இழந்து நின்று
பிள்ளையை மணம் முடித்து அன்னைபோல் கண்ணாய் என்றும் பாசமாய் வாழ வைத்தீர் இன்றும் நாலுபத்து ஐந்து
ஆண்டுகள் சென்ற போதும் உன்னையே எண்ணி எண்ணி
உருகுதல் சகிக்க மாட்டோம்
அப்பு நல் மைத்துனரை
அத்தான் நீகாணும் போது செப்புதல் வேண்டும்
நல்ல ஆறுதல் கூறவேண்டும் அப்பனின் அருமை அப்பன்
மாண்டதால் தெரிந்து கொண்டோம் இப்படிச் சொன்னோம் என்று
இயம்பிடு ஆசை அத்தான்.
உங்கள் பிரிவால் வாடும் நாரானர் கந்தையா குடும்பம்

|
இணையில்லா சோதிட விற்பன்னர் செல்லத்துரை ஐயா!
இணையில்லா ஊர் எனச் சிறப்பிக்கப்படும் (இணை + இல்) இணுவில் கிராமம் வட ஈழ நன்நாட்டின் பல்பரிமானச் சிறப்பிற் கும் பண்டு தொட்டு காரணமாய் இருந்து வந்திருக்கின்றது. பிரபலமான அறிஞர் பெருமக்களையும், சான்றோர்களையும் , கவிஞர்களையும் காலத்திற்குக் காலம் தோற்றுவித்துள்ள இக் கிராமத்தில் சோதிடக் கலையில் விற்பன்னராய் திகழ்ந்து வட புலத்தில் தன்னேரில்லா பிரசித்தமாய் வாழ்ந்தவர் அமரர் செல் லத்துரை சோதிடர் அவர்கள்.
தமிழர் பாரம்பரிய பண்பு மேவும் சிறப்பும் , சிவபூசை செய் தன்றி ந7ளு:ைவுண்டறியாத சைவமாபு ஆசாரங்களநம் நிறைந்த வராய் வாழும் காலம் வரை வாழ்ந்த அமரர் செல்லத்துரை ஐயாவின் வாழ்வு வியக்கத்தக்க வகையில் அமைந்ததே தனி.
சிவ வாழ்வு கண்ட செல்லத்துரை ஐயா இல்லத்தரசியோடு இணைந்த காலம் முதல் இனிய இல்லறம் கண்டு, இனிய மக்கட் செல்வத்தைப் பெற்றார். பிள்ளைகளைக் கற்கத்தாண்டி கவின் பெற வைத்தவர். அவர்களின் கல்விச் சிறப்பையும் சான்றாண் மையையும் கண்ட திருப்தியில் திழைத்தவர். இரண்டு 'கலாநிதி கள்" ஒருவரின் பட்டமளிப்பு விழாவுக்கு பெற்றோரை அழைத்த மகனின் வேண்டுகோளுக்காக வெளிநாடு செல்ல கொழும்பு சென் றவர் தம் மனக்கண்ணினால் மக்களின் உயர்வைத் தரிசித்தவாறே இதமான ஒருநாளில் உம்பருலகு அடைந்த விசித்திரம் தெய்வீக மானது,
சான்றோனாக, தண்ணளியாளனாக நிறைந்த திருப்தியோடு சிவலோகம் புக்க அமரர் ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த் தித்து இறைஞ்சுவோம்.
ஓம் சாந்தி
**ஆசிரியமணி' M. S. Lof scus767 Göy உதவி இயக்குனர் வடக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பிராந்திய உத்தியோகத்தர்
யாழ்ப்பானம் ,

Page 11
கவிதையில் காணிக்கை
எம் தந்தை
எம்தந்தையின் நினைவாக பாம்தரும் காணிக்கை எம்வாழ்வில் மறக்காமல் யாம்தரும் காணிக்கை பாம்பெற்ற இன்பமெம் தந்தையின் ரூபத்தில் எம்வாழ்வில் கவிதைக் காணிக்கை தருகின்றோம்
பிரப்பு
இணுவிற் கிராமம் இலங்கையின் வடபுலம் இலங்கிடும் தமிழ் மணம் ஒர் கணுவினில் உதித்த கரும்பின் கிளைபென காசியர் கந்தர் பரம்பரை யில்லோர் அணுவினில் வந்தஎம் தந்தைசெல் வத்துரை
வேலுப்பிள்ளை முத்துப்பிள்ளையின் இரண்டாம் மகனார்
சரிதம்
இருபத்து மூன்றில் இணுவிவில் உதித்து இளமையிற் கல்வியைச் சரிவரக் கற்று ஐம்பத்து மூன்றில் திருமணம் செய்து ஐந்து புதல்வர்கள் எம்மைப் பெற்று அறுபத்து மூன்றில் அழகிய விருட்சமாய் எங்கள் குடும்பம் செழித்து வாழ்கையில் பிள்ளைகள் உயர்வைப் பெரிதாய்ப் பேணிக் கள்ள மில்லாது கல்வியைப் புகட்டி
கல்வியில் உயர்வைக் கண்டு மகிழ்ந்து கடல் கடந்து எம்மை அனுப்பினள் தாங்களும் உங்கள் நற்றப்ெ பேற்றால் கEஎறு கல்வியைக் கசடறக் கற்று உயர்பட்டம் பெற்று உவந்தோம் நாங்கள் அந்தப் பட்ட மினிப்பு விழாவிற்கு அருமைத் தந்தையை அழைத்து மகிழ் அன்புடன் வருக வருக வென்று ஆசை அழைப்பு அனுப்பிய போது எங்கள் அழைப்பை ஏற்று மகிழ்த்த எங்கள் தந்தை உடன்புறப் பட்டு கொழும்புமா நகரில் தங்கி இருக்கையில் காலன் வந்து கடுகதி யாக ஞாலத் தன்னில் உன்னைப் பிரித்தான் சீலம் நிறைந்த எங்கள் தந்தையை காலத் தோறும் போற்றுவம் யாமே
Fil
 
 

தனார் மடம் பல்லப்ப வைரவ ஆலயத்தில் சித்திரை பரணியின் போது காபிஷேக நிகழ்வை காணுகின்ற பூரிப்பில்.
is چیختین-5  ܼܲܬ து குலதெய்வமாகிய பூநீ பரராசசேகரனுக்கு புதிதாக அமைக்கப்பட்ட
if
|ள்ளி எலிவாகனத்தை பூசிக்கும் உருக்கமான காட்சி,

Page 12

g கணபதி துணை
திருச்சிற்றம்பலம்
அகத்தியமுனிவர் அருளிச்செய்த
பிள்ளையார் கதை
காப்பு
திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரு மானை முகத்தோனைக் காதலாற் கூப்புவர்தங் கை.
கதை
பொன்னிறங் கடுக்கும் புனறரு குடுமித் தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன் கந்த மும்மதக் கடவுடன் கதையினைச் செந்தமிழ் வகையாற் றெளிவுறச் செப்பினன் மந்திர கிரியில் வடபா லாங்கோர் இந்துதவழ் சோலை யிராசமா நகரியில் அந்தண னொருவனு மாயிழை யொருத்தியுஞ் சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக் கடவுளா லயமுங் கடிமலர்ப் பொய்கையுந் தட மணிப் பள்ளியுந் தாம்பல சமைத்துப் புதல்வரைப் பெறுவரம் புக்கெமக் கருளென மதர்விழி பாகனை வணங்கிநின் றேத்த மற்றவர் புரிந்திடு மாதவங் கண்டு சிற்றிடை யுமையாள் சிவனடி வணங்கிப் பொற்சிலை வளைத்துப் புரமெரிப் படுத்த பரனே யன்பர் பழவினை யறுக்கும் அரனே மறையவர்க் கருள்புரிந் திடுகென நச்சுவேல் விழியாய் நங்குடிப் புதல்வர் இச்சகத் திவர்தமக் கில்லை யென்றலும் அம்பிகை மனந்தளர்ந் தருவினை யறுக்குத் தம்பி ரான்திருச் சரணம் வணங்கி நம்பிநோற் றுலைந்தார் நாயேன் பொருட்டால்
0
20

Page 13
பிள்ளையார் கதை
எம்பிரா னேயிவர்க் கின்னருள் புரிகென மறுத்துமை யுரைத்த மாற்றம் பொறாமற் கறுத்த வுளத்தொடு கெளரியை நோக்கிப் பேதாய் நீபோய்ப் பிறவென மொழியக் காதார் விழியாள் கையற வெய்தி உருக்குநின் னைந்தெழுத் தோதா தொழியாக் கருக்குழி வீழக் கடவதோ வென்று திருத்தாள் வணங்கிச் சிற்றடி யேன்பிழை அருத்தா நீபொறுத் தருளென மொழியத் , தேங்கமழ் சடையோன் சிறிதே முறுவல்செய் தாங்குறு துணையா யணுகுவம் யாமென மீதார் செல்வத்து விண்ணோர் பயந்த மாதாங் கொல்லென மாத ராகி ஆர்கலி ஞால மழகுடன் றழைப்பச் சீர்மலி குழலி - திருவயி னுதித்துப் பாவை சிற்றிலும் பந்தொடு கழங்கும் யாவையும் பயின்ற வியல்பின ளாகி ஐயாண் டளவுமை யாடி வளர்ந்த பின் எய்தா மகிழ்வுபெற் றீன்ற வியல்பினர் மானிட மறையோற்கு வதுவை சூட்ட வாணுத றன்னை மகிழ்வுடன் கேட்கப் பிறப்பிறப் பில்லாப் பெரியோற் கல்ல தறத்தகு வதுவைக் கணுகலன் யானென மற்றவன் றன்னை மணமுற வெய்துதல் பொற்றொடி மடந்தைநிற் கரிதெனப் புகல அருந்தவ முயற்சியா மலணுகுவன் யானெனத் திருந்து நல்லறஞ் சீர்பெற வமைத்து மணிமதுக் கமல மலர்த்தடங் குறுகி அணிமலர்க் குழலி யருந்தவம் புரிய அரிவைத னருந்தவ மறிகுவன் யானென இருவரு மறியா விமையவர் பெருமான் மான்மழு வேந்தும் வண்ணம் தொழித்து மானிட யோகி மறையவ னாகிக் குடை தண் டுடன்கிழக் கோலங் கொண்டு மடமயி றவம்புரி வாவியிற் குறுகித் தண்ணறுங் கூந்தற் றையலை நோக்கிப் பண்ணுந் தவமென் பயன்வேண்டி யென்னக் கொன்றையஞ் சடையனைக் கூடவென் றுரைக்க நன்றென நகைத்து நான்மறை யாளன் உடுப்பது கோவண மடுப்பது சுடலை
25
3O
35
4G
45
50
5
i5
60

பிள்ளையார் கதை
எடுப்பது மழுமா னேறுவ தெருது பாம்பு மெலும்பும் பலகலன் மாலையுஞ் சாம்பரு மணிந்து தலையோ டேந்திப் 65 பிச்சைகொண் டுழலும் பிஞ்ஞகன் றன்னை நச்சிநீ செய்தவ நகைதரு நாமுனைக் கடிமணம் புரியக் கருதிவந் தனம்பசுந் தொடியணி மடந்தைநிற் கிதுவோ துணிவெனப் பூங்கொடி யருந்தவம் பூசுரன் விலக்க 70 ஆங்கவ ணாணமுற் றயன்மனை புகுதச் சேடியர் வந்து செழுமலர்க் குழலியை வாடுத லொழிகென வணங்கிநின் றேத்திச் சிந்துர வாணுதற் றெரிவைய ரவர்தாந் தந்தைதா யிருந்த தடமனை குறுகி 75 வாவிக் கரையில் வந்தொரு மறையவன் பாவைதன் செய்கையைப் பாற்றினா னென்றலுத் தாடொழு தடிகளைத் தருதிரிவ் விடையெனத் தோடலர் கமலத் தொடைமறை முனிவனை மாடக யாழ்மொழி மங்கையர் கூடி 80 நீடிய புகழோய் நீயெழுந் தருள்கென மைம்மலர்க் குழலி வந்தெமை யழைக்கின் அம்மனை புகுவனென் றந்தணன் கூறப் பொற்றொடி நீபோய்க் பொய்கையி னின்ற நற்றவ முனியை நடத்திக் கொணர்கெனச் 85 சிற்றிடை மடந்தை சீறின ளாகி மற்றம் மாதர் மதிமுக நோக்கி நெற்றியிற் கண்ணுடை நிமலனுக் கல்லதென பொற்பமர் கொங்கை பொருந்துத லரிதென மணமிடா தொழியினு மாதவ முனியை 90 இணையடி தொழுதிட லுலகிய லாமெனத் தந்தையுந் தாயுந் தாழ்ந்துநின் றுரைப்பச் சிந்தை கரைந்து சீறுத லொழிந்து தாய்சொன் மறுத்தல் பாவமென் றஞ்சி நாயகி யதற்கு நன்றென விசைந்தே 95 ஆயிழை மடந்தை அவனெதிர் சென்று சேயிதழ்த் தாமரைச் சீறடி பணிந்து மற்றவன் றன்னை மனையிற் கொணர்ந்த பின் பொற்பமர் பலகையிற் பொலிவுற விருத்தி வண்ணப் பரிபுர மலரடி யவற்கங் 1 OO கெண்ணெய்க் காப்புடன் இயைந்தன சாத்தி மஞ்சன மாட்டி மணித்துகில் புனைந்து

Page 14
பிள்ளையார் கதை
விஞ்சிய தவிசின் மேற்பட விருத்தி ஆடகப் பெருங்கலத் தறுசுவை யடிசில் குடகக் கையார் துலங்கப் படைக்க அந்தண னமுதுசெய் தருளிய பின்னர்ச் சந்தனங் குங்குமஞ் சாந்தொடு பனிநீர் இந்தன நுதலார் இயல்புடன் கொணர்ந்து செந்துவர் மேனியிற் றிகழச் சாத்திச் செவ்வந்தி செண்பகஞ் செங்கழு நீரொடு திவ்விய பிறவுந் திருமுடி சாத்தித் தக்கோ லத்தொடு சாதிக் காயுங் கர்ப்பூ ரத்தொடு கலந்தவெள் ளடை காய் ஒள்ளிய பலவு முவந்துடன் வைத்து வள்ளிநுண் ணிடையார் வணங்கி நின்றபின் ஆங்கவ ரருத்திகண் டகமிக மகிழ்ந்து பூங்கொடிக் கினியருள் புரிகுவன் யானெனக் கற்றைச் சடையுங் கங்கையும் மதியமும் நெற்றியி னயணமும் நீல கண்டமுங் கரமிரு நான்குங் கன்றுமான் மழுவும் உரககங் கணமு மொப்பிடற் கரிய பவள மேனியிற் பாங்குற வணிந்த தவளவெண் ணிறுந் தயங்குமுந் நூலுங் கோவண விடையிற் கொடுஞ்சின வேங்கையின் பூவண மான புலித்தோ லுடையும் ஏழை யடியா ரெழுபிறப் பறுக்குந் தாளிடைச் சிலம்புஞ் சதுர்மறைச் சிலம்பும் மாலயன் றேடியுங் காணா வடிவும்
பாலினன் மொழிக்குப் பரிந்து காட்டலுந் தாமக் குழலி தனைப்பயந் தவர்கள் ஏமுற் றார்களி னெழுமடி மகிழ்ந்து பாவையைப் பெற்றுப் பயன்பெற் றோமெனக் காவண மிட்டுக் காலுறப் புனைந்து பஞ்சினும் பட்டினும் பழுதற விதானித்து மஞ்சுசூழ் கூட மதில்வாயி லெங்கணுந் தோரண நாட்டித் துகிற்கொடி யெடுத்துப் பூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துக் கரும்புங் கமுகுங் கதலியும் நிரைத்துக் குரும்பையந் தனத்தியைக் கோலஞ் செய்து சங்கர னெங்கள் தார்குழல் தனக்கு மங்கல நாணிடு மணநா வின்றெனத் தங்குவான் முரசு சாற்றென வள்ளுவன்
5
15
ISO
125
18O
135
40

பிள்ளையார் கதை
மங்கல முரசு மறுகுதோற் றுதலும் மாலயன் முதலிய வானவ ரெல்லாம் ஆலமர் கடவுள் அணிமணங் காண்பான் 145 விரும்பிவந் தீண்டி விமலனை யெதிர்ந்தே அரும்பவிழ் தாமரை அடிவணங் கியபின் வலம்புரி முதலா மன்னுவாத் தியங்கள் புலம்பு கடலென வடங்கா தார்ப்பக் கொங்கலர் தாமரைக் கொடியிடை தனக்கங் 50 கங்கு ரார்ப்பன வருந்தொழின் முடித்தபின் வார்சடை யானையும் மடமயி றனையும் ஒர்தனி யாதனத் துவந்துட னிருத்தி விதிமுறை சடங்கு விரிஞ்சன் பேணப் புதியமங் கலநாண் பூட்டி யருமறை 夏55 ஆகம நூல்வழி யாகுதி வேட்டபின் கோகன கக்கொடி கொழுநன் முதல்ோர் குரவார் கூந்தற் கொடியிடை தன்னுடன் அரவார் கண்டனுக் கறுகுபா லேந்த அரிவையு மிறைவனும் ஆகுதி வலம்வந் துரிய மணவறை யுட்புகுந் தருளி அரம்பையர் வாழ்த்த அமளியிற் றுயில்கொண் டுரம்பயில் கதிரோ னுதயஞ் செய்தபின் விண்ணோர்க் கெல்லாம் விடைகொடுத் தருளிப் பண்ணோர் மொழிமடப் பாவையை நோக்கி ஒதநீர் வேலிசூழ் உஞ்சையம் பதிபுகப் போதுக வென்று போகிய அந்நாள் இளமதி யணிசடை யெந்தைதன் னருளால் வளமுடன் வழியின் மலைச்சா ரலிலோர் களிறும் பிடியுங் கலந்தது காணா ஒளிர்மதிச் சடையோன் உமைமுகம் நோக்கி ஒர்வழி யன்றிமற் றோர் திசை தன்னைப் பாரா தேவா பணிமொழி யாயென வாரார் முலையாள் மற்றுமுன் டோவென மெல்லிய லுமையவள் விரும்பினள் பார்த்தே I 75 அல்லிசேர் குழலா ளரன்முகம் பாரா இவ்வகை யாக வேண்டு மீங்கென அவ்வகை யரனு மதற்குடன் பட்டு மதகளி லுரித்தோன் மதகளி றாகவும் மதர்விழி யுமை பிடி வடிவ மாகவுங் கூடிய கலவியிற் குவலயம் விளங்க நீடிய வானோர் நெடுநிலை போற்றத்
160
65
170
80

Page 15
பிள்ளையார் கதை
தங்குவெண் ணிறுந் தருமமுந் தழைப்பத் திங்கள் மும்மழை யெங்கணும் பெருக முண்டக மலர்போன் முழுதுஞ் சிவந்த தண்டையுஞ் சதங்கையு மலம்பு தாளினையுங் குண்டவண் டியுந்தண்டரள மா லையு மண்டொளி தழைத்த புண்டர நுதலு முடிவுகண் டறியா முப்புரி நூலுஞ் சுடர்விடுங் கனகத் தோளொரு நான்குஞ் சோதிவண் டரளத் தொடைபுனை கழுத்தும் பூதலம் புரக்கும் பொற்கரி முகமும் தவளக் கிம்புரி தருமருப் பிரண்டும் பவளத் தொளிவாய்ப் பைந்துவ ரிதழும் இமையா முக்கணும் இருதழை செவியும் அமையா நிலவுமிழ் அவிர்சடை முடியும் அந்தி வண்ணமும் அங்குச பாசமும் உந்திச் சுழிமேல் உதரபந் தனமுடன் ஐங்கரக் கரிமுகன் வந்தவ தரித்தலும் பொங்கர வணிந்தோன் புதல்வனை நோக்கி வானோர் மண்ணோர் வந்து வழிபட ஆனோர் வல்வினை யாசற வகற்றித் தண்டுள வோனயன் சதமகன் முதலோர்க்கு இன்றுமுதல் இறையாய் இருத்தியென் றருளித் தெய்வநா யகியாந் திருந்திழை யுமையுடன் மைவளர் சோலை மாநக ரம்புகுந்து அமையாக் கூட்டத் தனேக ங்காலம் இமையா முக்கண் இறையிருந் தருளினன் அந்நாள் தன்னில் அசுரர்வந் தடைந்து பொன்னா டரசுசெய் புரந்தரன் முதல இமையவர் தங்கட் கிடரே செய்ய இமையவர் தலைவனு மிலேகரு மாலும் மதுமல ரபனொடு வந்தெம் பிரான்றன் பதிதனி லணுகிப் பரிந்துநின் றேத்தித் தம்பி ரானைத் தாளினை வணங்கி எம்பி ரானே யெங்குறை முடியெனச் சுடர்விடு மணிமுடிச் சூரனை வெல்லக் கடல்பரு கயில்வேல் கைத்தலத் தேந்தும் புதல்வனைப் பயந்து தருகுவம் யாமென அமரர் கோனுக் கரன்விடை கொடுத்துச் சமர வேல்விழித் தையலுந் தானுங் கூடிய கலவியிற் கூடா தாடலும்
185
90
I95
200
205
21.0
2
i
2
2
O

பிள்ளையார் கதை
நேடிய வானோர் நேர்ந்துடன் கூடிப் பாவகன் றன்னைப் பரிவுடன் அழைத்துக் காவளர் சாரற் கயிலையிற் சென்று சூரன் வன்மையுஞ் சுரர் படு மிடுக்கணும் ஊரர வணிந்தோற் குணர்த்திடு நீயெனக் காமனை யெரித்த கடவுளென் றஞ்சலும் ஏமநாட் டரசன் இயல்புடன் நவில்வான் அஞ்சா தேநீ யவன்முன் செல்ல நஞ்சார் கண்டன் நயன மூன்றினுள் நெற்றியி னயன நீயா மாதலிற் குற்றம்வந் தடாதுநீ கூறுதி சென்றென வானவன் மொழிய மற்றவன் றானும் ஈனமின் றாமென விருதய மொருப்பட்டு எமையா விறைவன் உமையா ஞடனே அமையா வின்பத் தமர்ந்தினி திருந்த பள்ளி மண்டபம் பாவகன் குறுகத் தெள்ளுதேன் மொழியாள் திகைத்து நாணுறப் பாவகன் வரவு பரமனு மறிந்துதன் மூவிரு நுதல்விழி முளரியி னுதித்த அறுமுகப் பொருளை யவன்கையி லளித்தலும் வறியவன் பெற்ற வான்பொருள் போலச் சோதிநீண் முடிச் சுடரோன் கொணர்ந்து வாத ராசன் வலக்கையிற் கொடுப்பப் போர்புனை வாயுவும் பொறுக்கவொண் ணாமற் தார்புனற் கங்கைதன் கையிற் கொடுப்பத் தரும்புனற் கங்கையுந் தாங்கவொண் ணாமற் பொரும்புனற் சரவணப் பொய்கையி லிடுதலுஞ் சர்வணக் கமலந் தணினிலை யுற்றுக் குரவணி மூவிரு குருமணி மகுடமுந் தோளிரண் டாறுத் துலங்குகுண் டலமுந் தாளிரண் டுடனே தாமரை வதனமும் மலையுந் தானவர் வாழ்வினைத் தொலைத்திடுஞ் சிலையும் வேலுஞ் செஞ்சர முங்கொண்டு அறுமுகக் கடவுள்வந் தவதரித் திடுதலுங் கறைமிடற் றிறையொடு கெளரிசென் றெடுத்துத் தம்பதி யடைந்த சதமகன் முதலிய உம்பர்சீர் அருளென உயர்விடை வழங்க வாரந் திகழுஞ் சீர்புனை வெற்புஞ் சூரன் மார்புந் துளைபடத் துளைத்தே அமரர் கோவுக் கமருல களித்துக்
225
230
235
240
245
250
255
260

Page 16
பிள்ளை யார் கதை
குமர வேளுங் குவலயம் விளங்கிட அமரா வதியில் அமர்ந்தினி திருந்தபின் சமர வேலுடைத் தாரகன் றன்னைக் கண்டுள மயங்கிக் கடவுளர் மகளிர் விண்டனர் போன்று மெலிவது கண்டே அண்டரெல் லாம்வந் தடைவுடன் கூடி மாதொரு பாகன் மலரடி வணங்கித் தாதணி கொன்றைச் சடைமுடிக் குன்றே பிறவா தவனே பேரருட் கடலே இறவா தவனே யிமையவர்க் கரசே மருவளர் கடம்பன் மாநகர் புகாமல் அருளல் வேண்டும் அமலவென் றிறைஞ்சி இமையோர் சொல்ல இறைவனும் வெகுண்டு குன்றெறி சுடர்வேற் குமரனை முனியக் காவல்கொண் டோர்வினைக் கட்டறுத் தருளுஞ் சேவலங் கொடியோன் சேதம் போகத் திருந்திழை யுமையா விருந்துய ரெய்தி வருந்திட அவள்தனை வானவன் நோக்கி மங்கை நீதான் வருந்துத லொழிகெனச் சக்கர பாணியைச் சான்றா விருத்தி அக்கணி மார்பனும் ஆயிழை யுமையும் மிக்கநற் சூது விருப்புட னாட மன்றலர் கூந்தல் வென்றுமண மகிழ்ந்து கன்றினால் விளவெறி கண்ணனை நோக்கிச் குதினில் வென்றா ராரென மொழிய ஆதிவென் றாயிழை தோற்றா யென்று தாதிமி ரளகத் தையலை நோக்கி நீதி யில்லா நெறியவ னுரைக்க மலைமகள் வெகுண்டு மற்றவன் றன்னை நிலமிசைக் குருட்டுப் பாம்பாய் நீபோய் வாரண முகத்து மதலைமுன் னிருந்த வேரணி யாலிற் கீழ்க்கிடந் திடுகென நாரணன் றானு நாகமாய்க் கிடந்த பின் சீரணி கரிமுகத் திருமுகக் கடவுள் கரும்புங் கிழங்குங் கதலியும் வருக்கையும் விரும்புமாங் கனியும் வேண்டுவ வளித்து வழிபடு மடியார் வல்வினை தீர்த்தே எழிறிக ழாலின் கீழினி திருந்த கம்பமா முகக் கடவுடன் பெருமையை அம்புவி யோருக்கு அறிவிப் போமென
2
7
O
28O
285
300

பிள்ளையார் கதை
உம்ப ருலகத் தோரெழு கன்னியர் தம்பநூ லேணியிற் றாரணி குறுகிக் கரிமுகக் கடவுளைக் கைதொழு தேத்திப் பொரியவ லடை காய் பொற்புற வைத்துக் கார்த்திகைக் கார்த்திகை கழித்த பின்னாள் ஆர்த்த கலிங்கத் தணியிழை , வாங்கித் திருவைத் தோய்ந்த திகழ்மணிப் புயத்தில் இருபத் தோரிழை இன்புறக் கட்டி வேதத் தாதியும் பூமியி லெழுத்தும் ஆதி நாயகற் காகிய வெழுத்தொடு மூன்றெழுத் தாலே மொழிந்த மந்திரந் தேன்றிகழ் குழலியர் சிந்தையு ளடக்கிப் பொருவரு மலரடிப் பூசனை புரிந்தே இருபது நாளு மிக்கதை கேட்டு மற்றைநா டன்னின் மதிமுக மலர்விழிக் கற்றை வார்குழற் கன்னிய ரெல்லாம் வாரண முகத்தவன் வாழ்பெருங் கோயில் சீருடன் விளங்கத் திருவிளக் கிட்டுக் கோமயங் கொண்டு குறைவற மெழுகி ஏமுறு கரும்பும் எழிலுடைக் கதலியுந் தாளுடைக் கமுகுந் தழைபடு மஞ்சளுஞ் சேறுடைச் செந்நெலுந் திசைதொறு நிரைத்தே கோசிகங் கோடிகங் கொடிவிதா னித்து நீடிய நூல்வளை நிறைகுடந் திருத்தி ஐங்கரன் றிருவுரு அமைத்துள் அன்பொடு தெங்கிள நீருஞ் சீர்பழுக் காயும் விரிந்த பாளையும் மேதகு நீர்பூச் சொரிந்த கேதகை தொல்கனி யுடனே பொருந்திய கவரி புனைமணி மாலை தெரிந்தவை யெல்லாந் திருந்தத் தூக்கி மலைமகள் மதலையை மஞ்சன மாட்டிப் பலநிறப் பட்டும் பழுதறப் புனைந்து சிந்துர நுதலிற் செறிந்தபொற் பட்டமும் இந்திர தனுவென இலங்குமணி யாரமும் மகரப் பகுவாய் வாகு வலயமும் நிகரற வொளிவிடு நித்தில மாலை திகழ்மணி முடியொடு சிலம்புசெஞ் சதங்கை புகரறு பூண்கள் பொலிவுறப் பூட்டிச் சந்தனங் குங்குமஞ் சாந்தொடு பனிநீர்
இந்தன நுதலார் இயல்புடன் கொணர்ந்து
Ꮥ05
310
● l 5
@20
325
330
335
340
9

Page 17
IO
பிள்ளையார் கதை
செந்துவர் மேனியிற் றிகழ்தரச் சாத்திச் செருந்தி செண்பகஞ் செங்கழு நீரொடு குருந்து மல்லிகை கோங்குகுன் றாத்தி தாதகி பாதிரி தாதுமந் தாரம் மாதவி கடம்பு மகிழ்சிறு ஞாழல் நெய்த றயில நீலந் தாடிமங் கொய்திடு குல்லை கொன்றை பைங்குரவு நரந்தை யலரி நந்தியா வர்த்தங் கரந்தை கமலங் கமழிரு வேலி செவ்வந்தி பிச்சி சிறுசண் பகமலர் மவ்வல் செவ்வல்லி மயிலை யிருவாட்சி தும்பை யறுகு துழாயிரும் பூளை வம்பலர் பட்டிகை மத்தமோ டெருக்குக் காந்தாள்கூ தாளங் காக்கண மடம்பு மாந்தளி ருடனே வளர்பஞ்ச வில்வம் பூந்தொடை களபம் புழுகுகத் தூரி ஏந்திள முலையா ரிசையச் சாத்திக் கதிர்நெற் பொரியுங் கண்டசர்க் கரையும் முதிர்நெற் கட்டியும் முரித்ததிண் கரும்புந் தேங்காய் செவ்விள நீர் பல கிழங்கு மாங்கனி வருக்கை வாழைப் பழமும் எட்பொரி யிருவி யிருதினை மாவும் அப்பமும் அவலும் ஆலங் காயும் வெள்ளிலை யடைக்காய் விரவுகர்ப் பூரமோடு ஒள்ளிய பலவு முவந்துடன் வைத்துப் பல்லிய மார்க்கப் பழுதறு திருவிளக்கு எல்லியும் பகலென இருளற விளங்கக் கற்பகக் கடவுள் களிப்புறச் செய்து மிக்க புகழை விருப்புட னாங்கவர் கேட்பது கண்டு கேளா திருந்த பாப்புரு வாகிய பழமறை யாளன் யாப்புறு கொங்கையீர் யானுநோற் பேனெனக் காப்பிடு வித்துக் கனிவகை பலவும் ஆங்கவன் றனக்கு வேண்டுவ கொடுத்துப்
1ாங்குடன் இக்கதை பரிவுடன் கேட்ட பின் கெய்வ மங்கையர் சிந்தித் தவைபெற வையநா யகியால் வாளர வானவன் பண்டையின் வண்ணம் பார்மிசை யெய்தி அண்டர் நாயகன் அரிவையோ டிருந்த உ(ம்சைமா நகர்புகுந் துமையடி வணங்க
345
355
360
365
ጋ80

பிள்ளையார் கதை
I
வெஞ்சின மிகுத்து விமலனை நோக்கி யானிடுஞ் சாபநீக் கினன்மறை யோனென மானன கண்ணி மனைக்கத வடைக்க இறையவ னிதற்குக் காரண மேதென மறையவ னுரைப்பான் மற்றுமுன் மதலை தந்தருள் புரிந்த தவப்பய னிதெனக் சிந்தையுண் மகிழ்ந்து தேவர் தேவனும் பூங்கொடி யடைத்த பொற்றா னிங்க யாங்கதை கேட்போ மெனநினைந் தருளிச் சக்கர பாணி தான்கதை சொல்ல அக்கணி மார்ப னன்புடன் கேட்ப மாதுமை யடைத்த வன்றா னிங்க மாதுமை தன்னை யரனகை செய்ய நானே வரநி நகைபுரிந் ததுவென்று தேனார் சடையாய் தெளியச் செப்பெனப் பொன்மலை முலையாய் புகலக் கேளாய் உன்மகன் நோன்பின் உறுதியை யறிந்து சிந்தையுண் மகிழ்ந்து சிரித்தேன் யானென அந்தமில் லானை ஆயிழை வணங்கித் தேங்கமழ் கடம்பன் தேவர்சே னாபதி ஈங்கு வரும்படி யானுநோற் பேனென இறையவன் கதைசொல ஏந்திழை கேட்டபின் குறமட மகளைக் குலமணம் புணர்ந்து சரவண சம்பவன் றான்வந் தெய்தி அரவணி அமலன் அடியிறைஞ் சியபின் பரிவுடன் இக்கதை பார்தலந் தன்னில் விரைகமழ் நறுந்தார் விக்கிர மார்க்கன் தன்பெரு மனையுந் தானுமிக் கதையை அன்புடன் கேட்டே அரசு பெற்றபின் மற்றவ னகரின் மடந்தையர் தம்முள் எற்பிறை நுதலாள் இலக்கண சுந்தரி கழைபொரு தோட்கையிற் கட்டிய விழையை விழைவில ளாகி விதிவழி களைந்து வற்றிய கொவ்வையின் மாடே போடக் கற்றையஞ் சடைமுடிக் கரிமுக னருளால் ஆங்கது தளிரும் அடைவுடன் பூவும் நீங்கறப் பொலிந்து நிற்பது கண்டு வேப்பஞ் சேரியிற் போய்ச்சிறை யிருந்த பூப்பயி லுங்குழற் பொற்றொடி யொருத்தி கொவ்வை யடகது கொய்வாள் குறுகிச்
385
390
395
400
405
40
4 15
420

Page 18
I 2
பிள்ளையார் கதை
செவ்விய வரசன் றேவிமுன் போட்ட இழையதிற் கிடப்பக் கண்டவ ளெடுத்துக் குழையோ டிகல்விழிக் கோதைமுன் காட்ட கரிமுகக் கடவுளைக் கைதொழு தேத்தி இருவினை தீர இந்நோன்பு நோலென அப்பமோ டடைகாய் அந்நாட் கொண்டு புட்பமுன் வைத்து உவந்து நோற்றபின் பண்டையி னிரட்டி பதமவட் கருளக் கொண்டுபோ யரசன் கோயில்வைத் தனனே விக்கிர மார்க்கன் விழிதுயி லளவில் உக்கிர மான உடைமணி கட்டித் தண்டையுஞ் சதங்கையுந் தாளிநின் றொலிப்பக் கொண்டல் போல்வரும் குஞ்சரக் கடவுள் கலைக்குல வரசன் கனவில் எய்தி அலக்க ணெய்து மரசர்க ளரியே இலக்கண சுந்தரி இம்மனை இருக்கிற் கலக்கம் வந்திடுங் கழித்திடப் புறத்தெனத் துண்ணென விழித்துத் துணைவியை நோக்கி அடி9ண லுரைத்திடு மளவை தன்னில் ஆனை குதிரை யவைபல மடிந்து மாநகர் கேடுறும் வகையது கண்டேட் அணியிழை யாளை அயன்மனை யகற்ற வணிகன் றன்மனை புகுந்தவ விருப்பக் மணியும் முத்தும் வன்கல் லாய்விட அயன்மனை யவனும் அகற்றிய பின்னர் மயிலியன் மேனி மடந்தையுண் மறுகிக் குயவன் றன்மனை புகுந்தவ விருப்பக் குயக்கல முடைந்து கொள்ளை டோக அயற்கடை யவனும் அகற்றிய பின்னர்க் குயிற்பெடை நிகர்மொழிக் கோதையு மேங்கித் தூசுக ளார்க்குந் தொழிலோன் மனைபுகத் தூசுக ளெல்லாந் துணிந்துவே றாய்விட ஆசறை யவனும் அகற்றிய பின்னர்க் காசறை யளகக் காரிகை புலம்பி மாலைக் காரன் மனையிடை புகுந்தபின் மாலை பாம்பாம் வகையது கண்டே அயன்மனை யவனும் அகற்றிய பின்னர்ப் புயலின் வார்ந்த பூங்குழல் வாடி உழவன் றன்மனை புகுந்தவ ணிருப்ப வளர்பயி ரழிந்துபல் வன முங் குன்றவும்
425
430
435
440
455
460

பிள்ளையார் கதை
புரிகுழ றனைப்புறம் போவென் றகற்ற அவ்வை தன்மனை புகுந்தவ விருப்ப அவ்வை சென்ற அகங்க டோறும் வைதனர் எறிந்தனர் மடியத் தள்ளினர் கைகொடு குத்தினர் கள்ளியென் றியம்பினர் அவ்வகை சால அறிவு தளர்ந்து வவ்விய துயரொடு மனையிடை புகுந்த கன்னியால் வந்த காரண மிஃதென மின்னின் நுண்ணிடை மெல்லிநல் லாளே சாணாக மெடுத்து வாவெனப் புகலச் சாணா கத்தைத் தையல்சென் றெடுக்கச் சாணாகம் புழுவாய்த் தண்ணீர் வற்றிப் பேணிய வெல்லாம் பெரும்புழு வாக மானார் விழியாள் வருந்தக் கண்டு தானே சென்று சாணாக மெடுத்துக் கோல மாகக் கொழுந்தரை மெழுகிப் பாலின் மென்மொழிப் பாவையை நோக்கிப் புத்தக மெடுத்து வாவெனப் புகலப் புத்தகம் பாம்பாய்ப் புரிந்துநின் றாடக் கொவ்வை யிதழ்வாய்க் கொடிவிழுந் தேங்க அவ்வைதா னவளை யஞ்சலென் றழைத்துப் புத்தக மெடுத்துப் பொருந்தப் பார்த்து முத் தமி ழறிந்த மூதறி வாட்டி தவநெறி பிழைத்த தையலே நீதான் சிவன்மகன் நோன்பு தெளிவுறப் புரிகென பொரியவ லடைகாய் முதற்பல பொருள்களுந் தெரிவுறப் படைத்துச் சீர்வழி பாட்டுடன் செவ்விய கரத்திற் றிருந்திழை யாத்தே அவ்வைமூ வேழதினம் அருங்கதை சொல்ல மவ்வலங் குழலாள் மனமகிழ் கூர்தரச் செவ்வியோ டக்கதை தெளிவுறக் கேட்டபின் பொற்புறு விநாயகர் பொலிதிரு வருளால் விக்கிர மார்க்கன் வேட்டையிற் சென்று தண்ணிர் வேட்டுத் தன்கிளை விடுப்ப உண்ணிர்க் கரக முவப்பமொண் டுடனே
பண்ணேர் மொழியாள் பரிந்துடன் கொடுப்பச்
சேனையுந் தானுந் தேக்கிட வுண்டே யானை குதிரை யவைகளு மருந்திப் பின்னுந் தொலையாப் பெருமையைக் கண்டு கன்னிகை யிடத்திற் கடிதி னடைந்துநீ
465
470
475
480
At 85
490
495
500
13

Page 19
பிள்ளையார் கதை
யாரென வினாவ விளமயிற் சாயலாள் பேருரை யாதுநாண் பெருகறின் றிடலும் மின்னே ரிடையன நடைமெல் லியலைத் 505 தன்மனை யாளெனத் தரணிப னறிந்தே ஒண்டே ரேற்றி யுளமகிழ் வதனுடன் கொண்டூர் புகுந்த கொற்ற வேந்தன் தலைநம் பிராட்டித் தலைமைபெற் றுயர நிலையருள் புரிந்த நிமலா போற்றி 5 10 கற்பவர் தலைவ போற்றி கருதுவோர் கண்ணே போற்றி நற்பத மவர்க்கு நல்கு நாயகக் களிறே போற்றி பொற்கர மைந்தாய் போற்றி புகர்முகக் குன்றே போற்றி அற்பமாய் மகத்தாய் நின்ற ஆகுவா கனனே போற்றி அன்றுநீ டவனித் தேரை அச்சறுத் தமரர் போற்றி 515 நன்றருள் புரிந்த வேத நாயகக் களிறே போற்றி பண்டுதான் மேரு வெற்பிற் பாரத மெழுதி வைத்த வண்டமிழ் முதல்வா விண்ணேர் வணங்குமா முகவா போற்றி ஈண்டுமாங் கனியை வேண்டி இறைவனை வலஞ்செய் தங்கன் நீண்டகை முதல்வா என்று நினைப்பவர் தலைவா போற்றி ஏத்துவார் முதல்வா போற்றி இறையவன் புதல்வா போற்றி சீர்த்தநல் லுமையா வீன்ற செல்வனாஞ் சிறுவ போற்றி அன்பொடு பரவிநாளும் அடிதொழு வார்கட்கெல்லாம் துன்பம் வாராமல் இன்பே தோன்றநின் றருள்வாய் போற்றி கண்ணே போற்றி கருத்தே போற்றி 525 எண்ணுறுந் தாரக வெழுத்தே போற்றி ஆறணி சடையோன் அருளே போற்றி நீறணி மேனி நிருமல போற்றி கரமைந் துடைய களிறே போற்றி பரமன் றருநற் பாலா போற்றி 530 செய்யதாள் போற்றி போற்றி திரிபுரஞ் செற்றோன் பெற்ற ஐய, என் வினைகள் தீர்த்தே அஞ்சலென் றருளுவாயே.
渡

பிள்ளையார் கதை
நூற்பயன்
கல்லா தவர்நோற்பிற் கற்பவைநன் றாகவுறும் இல்லா தவர்நோற்கின் இன்மைபோம் - பொல்லாத பாவம்போம் மிக்க பழவினைநோய் தானும்போம் வேகமலம் போமே மிக .
வெள்ளை யெருதேறும் விரிசடையோ னீன்றளித்த பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை - உள்ளபடி கற்றவரும் நோற்றவருங் காதலுடன் கேட்டவரும் பெற்றிடுவார் கற்பகத்தின் பேறு.
பொற்பனைக்கை முக்கட் புகர்முகத்து நீண்மெளலிக் கற்பகத்தின் நோன்பைக் கருத்துடனே - சொற்றபடி நோற்றோர் மிகவாழ்வர் நோலா திருந்துகதை கேட்போர்க்கும் வாராது கேடு.
அகத்திய முனிவர் அருளிச் செய்த
பிள்ளையார் கதை
முற்றிற்று.

Page 20
I6
விட சிவமயம்
பஞ்ச புரானப் பாடல்கள்
விநாயகர் துதி வானுலகும் மண்ணுலகும் வாழ மறைவாழப் பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய் ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்.
(336)υ ητα ώ மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை; கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
திருவாசகம்
பாரொடு விண்ணாய் பரந்த எம்பரனே
பற்று நான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
திருப் பெருந் துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
ஆண்டநீ அருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகவென் றருள்புரி யாயே.
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே உணர்வுசூழ் கடந்ததோ ருணர்வே தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே .

திருப்பலலாண்டு
மிண்டு மனத்தவர் போமின்கண் மெய்யடி
யார்கள் விரைந்து வம்மின் கொண்டுங் கொடுத்துங் குடிகுடி யீசற்
காட்செய்மின் குழாம் புகுந்து அண்டங் கடந்த பொருளள வில்லதோர்
ஆனந்த வெள்ளப் பொருள் பண்டு மின்று மென்று முள்ள
பொருளென்றே பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
ஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள
அளபபருங் கரணங்கள நானகும சிந்தையே யாகக் குணமொரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே யாக இந்துவாழ் சடையான் ஆடுமானந்த
எல்லையில் கணிப்பெருங் கூத்தின் வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
திருப்புகழ்
முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரு முப்பத்துமு வர்க்கத் தமரரு மடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியி லிரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வது மொருநாளே தித்தித்தெய வொத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்

Page 21
i8
கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட வொத்துப் பொரவல பெருமாளே.
அபிராமியம்மைப் பதிகம்
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடுவா ராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
களிபிணி யிலாத உடலும் சலியாத மனமுமன் பகலாத மனைவியும்
தவறாத சந்தா னமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள்வா ராத கொடையும் தொலையாத நிதியமுங் கோணாத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்புமுத விப்பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே ! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி அபிராமியே!
பட்டினத்தார் பாடல்கள் ஐயும் தொடர்ந்து விழியும் சொருகி அறிவழிந்து மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதென்று வேண்டுவன்யான்
செய்யும் திருவொற்றி யூருடையீர்திரு நீறுமிட்டுக் கையும் தொழப்பண்ணி யைந்தெழுத் தோதவும் கற்பியுமே .
பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி முத்தும் பவளமும் பூண் டோடி யாடி முடிந்த பின்பு
செத்துக் கிடக்கும் பிணத்தரு கேயினிச் சாம்பிணங்கள் கத்துங் கணக்கென்ன காண்கயி லாயபுரிக் காளத்தியே
வாழதது வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை அரசுசெய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்.

wiłgoge as LQG)
un qe so uga 49* @qa qou, qi@g ミ**6Qg*Age o ŋŋłeșas Xn isosorgirnų,5)au ufìgi || &qm quoregreino@@so gjoi ușoy reassos) ugi (u-laeso)十王莽十十
49mg围遍的xm @@ úơi@xn sự ươn@șormãos,海994ne冷遇ng唯1994, dretg daernã?e, ||||| -- uqiqirngofă: + custosowąsote,
/ oop uomo orogonogi d©iņi» qireeg dwrgia gyoudri greas repress,auga qarwegspfằ” urmabusqę gł
| |
gsgg*ミトQ bgpassもgluotojourne) u nqie urae; do fo? aeqøee, des og No se une
|||||
19091ļ95īņ&#fầ>looo!!°57' is of) + legelegiratores, 十}鲁→了=→→了==占了多x urm@09ĝo planermudugi4 oso ựrnegujognsusg』

Page 22
(
( கண்ணிர் கலந்த நன்றிப் பூக்கள் s
அன்பு, பண்பு. பாசம் ஆகிய முக்குணங்களிலும்
சிறந்து எமது வளர்ச்சிக்கும்
உயர்ச்சிக்கும் காரணமாக இருந்த எங்கள் குலவிளக்கு
அமரர் வேலுப்பிள்ளை செல்லத்துரை (பிரபல சோதிடர்) இறைவன் பாதம் இணைந்ததை அறிந்து உடன் வந்து உதவிபல புரிந்தோருக்கும் அன்னாரது இறுதிக் கிரியைகளில் பங்குகொண்டோருக்கும் அனுதாபச் செய்திகள் அனுப்பியவர்களுக்கும் இன்று நடைபெறும் ஆத்மசாந்திக் கிரியைகளில் பங்குகொண்டு அவரது ஆத்மா
சாந்தியடையப் ( பிரார்த்தித்த அனைவருக்கும் எமது ) மனமார்ந்த நன்றியைத் ( தெரிவிக்கின்றோம். )
( )
*ഇത് "യു.ീ ~ള്ള് ~ജ്ഞ" ~ത്ത് Sപ്രത്
*ஜெய ஆனந்த வாசம்' இங்கனம் இணுவில் தெற்கு, மனைவி, மக்கள், மருமக்கள், இணுவில். பேரப்பிள்ளைகள்
சாந்தி அச்சகம், நாச்சிமார்கோவிலடி, யாழ்ப்பாணம்.
 


Page 23
COVER PRINTE AICO (PRIVATE)
 

D BY LIMITED