கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சந்தைப் பொருளாதாரம் என்றால் என்ன

Page 1


Page 2

சந்தைப் பொருளாதாரம் என்றால் என்ன
மைக்கல் வாட்ஸ் எஸ்ரா சொலமன்
தமிழாக்கம்
டி. தனராஜ் எஸ்.அன்ரனி நோபேட்
Uit Uriffuur
எஸ்.அன்ரனி நோபேட் புவியியல்துறை கொழும்பு பல்கலைக்கழகம்
பொதுசன கல்வி நிகழ்ச்சித்திட்டம் மார்கா நிறுவகம் 1994

Page 3
முதலாம் பதிப்பு 1994
C) பதிப்புரிமை : மார்கா நிறுவகம்
கணணி அச்சமைப்பு : யூனிக் ரைப்செட்டர்ஸ் அச்சுப்பதிப்பு யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட்
விநியோக மற்றும் தொடர்புகளுக்கு :
நியூட்டன் பெர்னாண்டோ உதவிப்பணிப்பாளர்
வெளியீட்டுப் பிரிவு
மார்கா நிறுவகம் 61, இசிப்பத்தன மாவத்தை, கொழும்பு - 5
Tel:585186/881514 61, Cables: Marga Tables : 21642 marga CE Fax:580585
/* ஆலோசனைக் குழு
கொட்பீரே குணதிலக ஷெல்டன் வனசிங்க ரியூட்டன் பெர்னாண்டோ 6rako . Biafrgarrerar6ur.
Γ.ύ. 5τή. Σαπουά
لئے TJA Indshin ܓܠ
இன்வெளியீட்டுத் தொடருக்கான நிதியுதவியானது கனடாவின் சர்வதேச அபிவிருத்திமுகவரகத்தினால் (CIDA) வழங்கப்பட்டது.

பொருளடக்கம்
முன்னுரை 4
பகுதி1
சந்தைப் பொருளாதாரம் என்றால் என்ன?
II III
VI VII
52(5
VII
VIII
IX
§
அறிமுகம் 15
திட்டமிட்ட பொருளாதாரமும் சந்தைப் பொருளாதாரமும் 16 சந்தைப் பொருளாதாரத்தில் நுகர்வோர் 20 சந்தைப் பொருளாதாரத்தில் வர்த்தகம் 27 சந்தைப் பொருளாதாரத்தில் தொழிலாளர் 34 சந்தை முறைமை 43 சந்தைப் பொருளாதாரத்தில் நிதி 48 சந்தைப் பொருளாதாரத்தில் அரசாங்கம் 53
பகுதி II சுதந்திர சமுதாயத்தில் பொருளாதாரம்
அறிமுகம் 73
சந்தை முறைமை 76 அடம் ஸ்மித்தும் மறைமுகக் கரமும் 78 விலைகளின் பங்கு 80 ஒரு சந்தை முறைமையின் ஒழுங்கமைப்பு 83 சுதந்திர சந்தையின் அனுகூலங்கள் 84 சந்தைப் பொருளாதாரங்களில் அரசாங்கத்தின் பங்கு 86 ஸ்மித்தின் பொருளாதாரத்தின் தாக்கம் : ஐக்கிய அமெரிக்கா குறித்த ஓர் ஆய்வு 88 சுதந்திர சந்தையும் கெயின்சியப் புரட்சியும் 90 கெயின்சும் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பும் 92 சுதந்திர சந்தையும் உழைப்பும் 94 கெயின்சின் காலம் 95 அடம் ஸ்மித்துக்குத் திரும்புதல் 97

Page 4
முன்னுரை
இத் தொகுதியானது சந்தைப் பொருளாதாரத்தின் இயல்பும் அதன் செயற்பாடுகளும் பற்றிய ஐந்து வெளியீடுகளில் முதலாவதாகும். சனநாயகம் பற்றி வெளிவரவிருக்கின்ற ஐந்து நூல்வெளியீடுகளுடன் இணைந்தமுறையில், அதன் தொடர்ச்சியாக இது அமைந்திருக்கின்றது. வாசகர்களுக்குப் பொருளாதாரம் மற்றும் அரச முகாமைத்துவம் ஆகிய இரு முறைமைகளின் பிரதான அம்சங்களைத் தருவதற்கு இரு தொடர் வெளியீடுகள் மார்கா நிறுவகத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சமூக சிந்தனையாளர்கள் விவாதிப்பது போன்று பொருளாதாரம், அரச முகாமைத்துவம் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக இணைந்துள்ளது. சந்தைப் பொருளாதாரத்தினை நிர்வகிக்கவும், விருத்தி செய்யவும் முயற்சிக்கின்ற அதேவேளை, அவையின்றிச்சனநாயக நிறுவனங்களைப் பேணுவதும், வலுவூட்டுவதும் மிகக் கடினமானது. இரு முறைமைகளின் அடிப்படைகள் சிலவற்றினைப் பற்றிய விளக்கங்களை இவ் இரு வரிசைத் தொடர் வெளியீடுகள் எடுத்துக்காட்டுகின்றதுடன் சந்தைப் பொருளாதாரத்துக்குத் தளமாக அமையக் கூடிய சனநாயக முதிர்ச்சிக்கு இது மிக அவசியமானதாகும். இவ்விணைவானது உள்ளார்ந்தரீதியில் உறுதியாகவும் நீண்டகாலத்துக்கு நிலைக்கக் கூடிய ஆற்றலையும் கொண்டிருந்தாலும், சனநாயகரீதியற்ற அரசியல் முறைமைகளுக்கிடையில் சந்தைப் பொருளாதாரம் செயற்பட்டு நின்றதற்குப் பல உதாரணங்களை நாம் கொண்டுள்ளோம். இத்தகைய விடயங்களில் சிலவற்றைச் சனநாயகம் பற்றிய இந்நூல்வரிசைத்தொடரில் மிக ஆழமாக ஆராயப்படுகின்றதுடன் சந்தைப் பொருளாதாரத்துடனான அவற்றின் முக்கியத்துவமும் எடுத்துக் கூறப்படுகின்றது.
இத்தொகுதியில், இதன் தலையங்கம் கூறுவதுபோற் சந்தைப் பொருளாதாரம் எந்த வழிகளிற் செயற்படுகின்றது என்பது பற்றிய தெளிவான விளக்கத்தையும் ஏனைய பொருளாதார முறைமைகளுடன் ஒப்பிடும்போது ஏன் அது சிறந்ததாக உள்ளது என்பதற்குமான விளக்கத்தையும் அளிக்கின்றது. சந்தைப் பொருளாதாரம் பற்றி அதற்குச் சார்பாகவும் எதிராகவும் பல தவறான எண்ணக் கருக்கள் காணப்படுகின்றன. இலங்கையில் நீண்ட மரபினைக் கொண்ட சோலிசக் கருத்தியலானது சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறைமைகள் பற்றிய சந்தேகத்தை வளர்க்கும் மனோபாவங்களைத் தோற்றுவித்துள்ளது. முதலாளித்துவம், சோசலிசம், திட்டமிட்ட பொருளாதாரம், சந்தைப் பொருளாதாரம் ஆகிய கருத்தாழம் மிக்க சொற்கள் பல காணப்படுவதுடன் ஒவ்வொன்றும் ஒருவரின் கருத்தியல் சார்பு நிலைக்கேற்ப நேர்கணிய, எதிர்கணிய பொருளைத் தருவதாக
4

உள்ளது. இத்தொடரில் வெளிவர இருக்கும் நூல்கள் இவற்றினைத் தெளிவுபடுத்தும் வகையில் காணப்படுகின்றது. ஸ்கண்டிநேவியப் பொருளாதாரங்களும், சந்தைப் பொருளாதாரத்துடனான அவற்றின் கலப்பும், சமூகநலன் மற்றும் பொதுச் சேவை முறைமைகளும் ஐக்கிய அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது மிகவும் வேறுபட்டனவாக உள்ளன. மத்திய திட்டமிடப்பட்ட பொருளாதாரங்களைக் கொண்ட கிழக்கு ஐரோப்பாவில், குறிப்பாக அப்பொருளாதாரமுறைமையானது உடைந்து போவதற்கு முன்பேயே ஹங்கேரியானது சமூக சந்தை முறைமை அமைப்புக்கான ஒரு பரிசோதனையாக விளங்கியது.
யூகோஸ் செலாவியா, வேறுபட்ட சோசலிசமுறைமையாகச் சோவியத்தினின்றும் வித்தியாசமானதாகப் பரிணமித்தது. எனவே இத்தகைய சொற்களைப் பயன்படுத்தலில், பிரயோகித்தலில் மிகக் கவனமாக இருக்கவேண்டும். அத்துடன் பொருளாதாரப் பரிமாணங்கள் அரசியலிருந்து பிரித்தறியப் படவேண்டும். பொருளாதார, அரசியல்ரீதியாகப் பூரணமான மனித ஒழுங்கு காணப்படாததினால் வன்மையான யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் அவற்றைத் தொடங்க வேண்டிய தேவையுள்ளது. மனிதன் தேடுகின்ற முறைமை பூரணமற்றதொன்று. அது சமுதாயம் முழுவதற்கும், சாத்தியமான உயர் வாழ்க்கைத் தரத்தை அடைவதற்குக் கிடைக்கக் கூடிய வளங்களைப் பயன்படுத்தவதற்கு உதவுவதாக இருக்க வேண்டும்.
முதல் (Capital) என்பது முதலாளித்துவம் (Capitalism)என்ற சொல்லுடன் ஒத்த கருத்துடையதல்ல. இது பண்டைய பிரபுத்துவ, சோசலிச அல்லது முதலாளித்துவ முறைமையின் பிரதான கூறாக இருந்தது. முதல் என்பது ஒரு சமுதாயத்தின் உற்பத்திக்கான செல்வத்தைக் கொண்டிருக்கின்றதுடன் பயிர்செய்யக்கூடிய நிலம், கட்டிடங்கள், ஆலைகள், கருவிகள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வேறுபட்ட பெளதீக முதலையும் குறித்து நிற்கின்றது. தொழிலாளர், அறிவு, தொழிற்றிறன், நுட்பத்திறன் என்பன மனித முதல். இயற்கையினால் அளிக்கப்பட்ட கொடையாக உள்ள பெளதீகச் சூழல், அதில் காணப்படும். வாழ்க்கை ஆதாரத்துக்கும், பொருளாதாரப் பயன்பாட்டுக்கும் பயன்படுகின்ற வளங்கள் இயற்கை முதல் என முதல் பல வகைப்படும். ஒரு பொருளாதார முறைமை இம் முதலைப் பயன்படுத்தக் கூடியதாகவும் மக்களின் நலனை முற்றாக அடைந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டுமென்பதுடன் எதிர்காலத்துக்கு அவற்றைப் பேணிப் பாதுகாக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
பேண்-தகு மனித அபிவிருத்தியானது (Sustainablehumandevelopment) அபிவிருத்திச் செயல்முறையை விளக்குவதற்குத் தற்போது பயன்படுத்தப்படுகின்ற சொல்லாகும். இத்தகைய அபிவிருத்திச்
5

Page 5
செயல்முறைகளுடன் தொடர்பாக முதலாளித்துவம், சோசலிசம் ஆகிய எண்ணக்கருக்கள் மதிப்பீடு செய்யப்பட்டு மீள் வரையறை செய்யப்படவேண்டும். பேண்-தகு மனித அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கு எவ்வாறு இந்த முறைமைகள் தகுதிபெற்றுள்ளன என்பதை ஆராய வேண்டிய தேவை எமக்கு உள்ளது.
சந்தைப் பொருளாதாரம் ஒரு முறைமையாகவே காணப்படுகின்றதுடன் அது செல்வந்தர்களுக்குச் சார்பாகவும், ஒப்புரவின்மையைத் தூண்டுவதாகவுமே கருதப்பட்டது. ஒரு குறிப்பிட்ட நிலையில் ஒரு முறைமைக்குள் இயங்குகின்ற சந்தையில் வளங்களின் உரிமையும் அதற்கான அடைவும் ஒப்புரவற்ற முறையிலேயே பரம்பியுள்ளது. சந்தையும் இவ் ஒப்புரவற்ற தன்மைகளை அதிகரிக்கக் கூடும். ஏனெனில் வளங்களைக் கொண்டிருப்போர் செல்வத்தின் மீதும் மேலாண்மையைக் கொண்டிருப்பர். சந்தையின் உள்ளார்ந்த அம்சமானது உற்பத்தியாளர், விற்பனையாளர்களிடையே போட்டியைக் கொண்டிருப்பதே. ஆனால் இப்போட்டியானது சமனற்ற அடிப்படையில் ஆரம்பிக்கின்றது என சோசலிஸ்ட் சார்பான விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது.
சந்தைப் பொருளாதாரத்தின் மீதான விமர்சனமானது அம்முறைமையின் எதிர்கணியப் பண்பினையே முன்னிலைப் படுத்துவதாக உள்ளது. சந்தையைப் பொறுத்தவரை அவை சமூக, பொருளாதார அமைப்புக்களினால் சூழப்பட்டுள்ளதால் ஒப்புரவின் மைகளைச் சரிப்படுத்துவதற்குப் போதுமானதாக அவை காணப்படவில்லை. உண்மையானதும், திறமையானதுமான அரசியற்பொருளாதாரத்திலேயே பெருமளவு தங்கியுள்ளது. இக்காரணத்துக்காகத் தான் சனநாயக முறைமையானது, சந்தையைப் பேணிப்பாதுகாக்கின்ற, மேன்மைப் படுத்துகின்ற அரசியற் பொருளதாதாரத்தை உருவாக்குகின்ற சிறந்த வழியாக மாறுகின்றதுடன் அத்தகைய ஒரு அரசிற் பல்வேறு வகையான பொருளாதாரப் பிரிவுகளுக்கிடையில் ஒன்றுடன் ஒன்று பேரம் பேசவும், இணக்கத்துக்கு வரவும் சுதந்திரம் உள்ளது. இம் முறைமை ஓர் இயக்கச் செயல் முறையைக் கொண்டதாக இருப்பதுடன், தொழிலாளர் வேலையாட்கள், பங்கு முதலீட்டாளர்கள், நுகர்வோர் ஆகியோரின் முரண்படும் நலன்களைச் சமப்படுத்திச், சமரசத்துக்கும் முயற்சிக்கின்றது.
சந்தைப் பொருளாதாரம் திறமையாகச் செயற்படுவதுடன் ஏனைய சோசலிசக் கருத்தியலிருந்து வரும் திட்டமிட்ட் பொருளாதாரத்திலும் பார்க்க மிக ஒப்புரவுத் தன்மையுடையதாகவும் இருக்கின்றது. கைத்தொழில்ரீதியாக முன்னேறிய சனநாயகங்களின் சந்தைப் பொருளாதாரம், மாக்சிய சோசலிசக் கருத்தியலிருந்து வளர்ச்சியடைந்த மத்திய திட்டமிடற் பொருளாதாரம் ஆகிய இரு பொருளாதாரங்களின் பிரதான அம்சங்கள் இத்தொகுதியில் ஆராயப்படுகின்றது. சந்தைப்
6

பொருளாதாரத்தை வேறுபடுத்திக் காட்டும் பிரதான காரணியானது நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்யவும் சந்தைச் செயல்முறையே. இதனுாடாகவே பொருட்கள் சேவைகளின் பரம்பலும் உற்பத்தியும் ஒழுங்குபடுத்தப்படுகின்றது. நுகர்வோரின் முன் பல தெரிவுகளுக்கான வீச்சுக் காணப்படுவதுபோன்று உற்பத்தியாளர்கள், பங்கீட்டாளர் களுக்கிடையில் சந்தர்ப்பத்துக்கான சுதந்திரமும் காணப்படுகின்றது. இதனால் சந்தைப் பொருளாதாரம் மிகவும் நெகிழ்ச்சித் தன்மை யுடையதாகவும், நுகர்வு மற்றும் உற்பத்திச் சாத்தியங்களை வரிவாக்குவதற்கான பயனுறுதிவாய்ந்த கருவியாகவும் இருக்கின்றது.
மத்திய திட்டமிடற் பொருளாதாரம் இத்தகைய திறனாற்றலைக் கொண்டிருக்கவில்லை என்று "சந்தைப் பொருளாதாரம் என்றால் என்ன” என்ற கட்டுரையின் ஆசிரியர்கள் விவாதிக்கின்றனர். ஏனெனில்பொருட்கள் சேவைகளின் நிரம்பலானது திட்டமிடல் நுட்பங்கள் மற்றும் முறையியல்களினூடாகத் தீர்மானிக்கப்படுகின்றதுடன் அவை மத்திய திட்டமிடல் முகவரகத்தில் பணிபுரியும் தொழில்நுணுக்க அறிஞர்களினாற் (Technocrates) பிரயோகிக்கப்படுகின்றது. அடிப்படைத்தேவைகளைத் திருப்தி செய்யும் சில பொருட்கள் சேவைகளைப் பொறுத்தவரையில் இந்நுட்பங்கள் அளவறியும் முறையில் நிர்ணயிப்பதற்குப் போதுமானது. ஆனால் அவை பரந்தளவான தெரிவுகளுடன் அல்லது வளர்ச்சியடைந்து வரும் நுகர்வோர் சமுதாயத்தினால் வேண்டப்படுகின்ற பல வகையான தரங்களின் வீச்சைக் கொண்ட தெரிவுகளுடன் ஒத்துப்போக மாட்டாது. மத்திய திட்டமிட்டபொருளாதாரங்கள், அவை வளர்ச்சி அடையும்போதும், நுகர்வுப் போக்குகள் மாறுபடும்போதும் பொருளாதார முகாமைத்துவத்தின் பாரிய பிரச்சினைகளுக்குள் ஏன் தள்ளப்படுகின்றதென்பதற்கு இது ஒரு விளக்கமாக அமைகின்றது.
சந்தைப் பொருளாதாரம் பற்றிய பிரதான விமர்சனமானது அது முதலாளித்துவ முறைமையின் கருவியாகவும், எல்லாவகையான ஒப்புரவின்மைகளையும், சமூக நீதியின்மையையும் அதிகரிக்கின்றது என்பதே. சோசலிச அமைப்பின் மூலதத்துவத்தினை முன் மொழிபவர்கள் இத்தகைய பிரச்சினையானது உண்மையில் வளங்களின் தனியார் உடைமையில் தனது மூலவேர்களைக் கொண்டிருக்கின்றது என்றும் எல்லா உற்பத்திக்குரிய செல்வமும் பொதுமக்களுக்குச் சொந்தமாக்கப்பட வேண்டுமென்றும் வாதாடலாம். அரசினால் வழிநடாத்தப்படும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலிருந்து பெறப்பட்ட அனுபவத்தின்படி அரசுடை மையானது தன்னளவில் ஒப்புரவிற்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை வெளிப்படுத்தின. இங்கு பிரதானமானது வளங்களின் மீதான அதிக உரிமை என்ற விடயம் அல்ல அவற்றின் மீதான கட்டுப்பாடும் முகாமைத்துவமே முக்கியம்.

Page 6
அரச கட்டுப்பாட்டுப் பொருளாதாரங்களில் கட்டுப்பாடானது எப்பொழுதும் சுயநல நோக்குடைய அரசியல் அதிகார வர்க்கத்தினதும் அவர்களின் ஆதரவாளர்களினதும் கைகளிலேயே காணப்படுகின்றது. சனநாயக சமூகங்களில் காணப்படும் அரசியல் அதிகாரவர்க்கத்தினர் மக்களுக்குப் பொறுப்புள்ளவர்களாக இருப்பதுபோல் இவர்கள் காணப்படமாட்டார்கள். இத்தகைய நிலைமைகளில் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரவர்க்கத்தினர் விகிதாசாரமற்ற முறையில் இலாபத்தைக் கைப்பற்றக்கூடும். தனியார் செல்வத்தின் உரிமை மீது காணப்படும் கட்டுப்பாடுகளின் காரணமாக இச் சமூகங்கள் அதீதமான செல்வத்தையும் நுகர்வுத்தன்மையையும் வெளிக்காட்ட விரும்புவதில்லை. யப்பான், தாய்வான் , தென்கொரியா போன்ற தனியார் துறைச் சந்தைப் பொருளாதாரங்கள் ஒப்புரவுத்தன்மையுடைய வருமானப் பரம்பல் அமைப்புக் களைக் கொண்டுள்ளன. அத்துடன் அந்நாடுகளில் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்குமிடையிலான வருமானத்தில் காணப்படும் வேறுபாடுகள் ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாகக் காணப்படுகின்றன.
ஒப்புரவின்மை பற்றிக் கூறும்போது ஒன்றை மனதிற் கொள்ள வேண்டும். ஒப்புரவின்மை மட்டமானது (degree ofinequality) மக்களின் நலன்பற்றிய நிலைமையை வெளிக்காட்டும் குறிகாட்டி அல்ல. வருமான ஒப்புரவின்மையானது சமுதாயங்கள் குறைந்த மட்ட வருமானத்தைக் கொண்டிருக்கும்போது தாழ்ந்த நிலையிலும், பொருளாதாரங்கள் வளர்ச்சியடையும்போது அதிகரித்தும், உயர்மட்ட அபிவிருத்தியை அடையும்போது மீண்டும் குறைவடைந்தும் செல்லுகின்றதெனப் பொருளியலாளர் கூறியுள்ளனர். அபிவிருத்திச் செயல் முறையானது பொருத்தமாக நிர்வகிக்கப்படின் வருமான ஒப்புரவின்மைகளில் ஏற்படும் சில அதிகரிப்பு வறுமையானவர்களின் விருத்திகளுடன் இணைந்து செல்லும் என்பதை இது உணர்த்துகின்றது.பொருளாதார வளர்ச்சியின் பல்வேறு சந்தர்ப்பங்களில் இது தெளிவாகியது. தென்கொரியா விரைவாக வளர்ச்சியடைந்த போது வருமான ஒப்புரவின்மை அகன்று செல்லும்போக்குக் காணப்பட்டது. ஆனால், சிலர் ஏனையவர்களிலும் பார்க்க அதிக நன்மையைப் பெற்றாலும் எல்லா வருமானப் பிரிவினரும் குறிப்பிடத்தக்களவு நன்மையடைந்தனர். இவ்வாறு நிகழ்ந்தற்குக் காரணம், தென்கொரியாவின் அபிவிருத்தியானது பரந்த அடிப்படையில் அமைந்திருந்ததுடன் பொருளாதார அபிவிருத்தி மனித வள அபிவிருத்தியுடன் இணைந்திருந்தமையே ஆகும். இதற்கு மாறான முறைமைகள் ஏதேச்சாதிகாரத் தன்மையுடையதாக இருப்பதுடன் அபிவிருத்திக்கான தூண்டுதல்களை எப்பொழுதும் குறைப்பனவாகவே உள்ளதுடன் பொருளாதாரத் தேக்கத்தை உருவாக்குகின்றதினால் எல்லா வருமானப் பிரிவினரும் குறைந்த மட்டத்திலான நலனில் சிக்கிவிடுகின்றனர்.

தனியார் சொத்துரிமை என்னும் எண்ணக்கருவானது சனநாயகத்திலும், சந்தையிலும் ஓர் உள்ளார்ந்த அம்சமாகும். தனிப்பட்டவர்களின் சுதந்திரமானது ஒருவர் வளங்களை அனுபவிக்கவும், கட்டுப்படுத்தவும் கொண்டிருக்கக் கூடிய இயலளவுடன் தொடர்புபடுகின்றது. அதன்மீது ஏனையோர் உரிமை கொண்டாடவோ, ஆக்கிரமிக்கவோ முடியாதவாறு அரசினால் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. இந்நோக்கில் அறிந்து கொள்ளப்படும் தனியார் சொத்து என்பது தனிப்பட்டவர்களின் உத்தரவாதம் என்பதுடன், தனிப்பட்டவர்களின் அந்தரங்கமாகவும் உள்ளது. அரச அதிகாரத்தில் இது வரையறைகளை ஏற்படுத்துகின்றது. தனியார் சொத்து, பயனுறுதி வாய்ந்த சந்தைப் பொருளாதாரம் செயற்படுவதற்கு இன்றியமையாதது. ஏனெனில் அது ஒன்றுதான் வேலை, சேமிப்பு, சொத்துக்களைப் பெறல் ஆகியவற்றுக்கான சிறந்த தூண்டுதல்களை அளிக்கின்றன. சீனாவில் இடம்பெற்ற விவசாயச் சீர்திருத்தங்கள் இவற்றினைத் தெளிவாக விளக்கிக் காட்டுகின்றன. கூட்டுப் பண்ணைகளிலிருந்து குடியிருப்பாளனின் பண்ணைகளாக மாற்றம் அடைந்தபோது விவசாயக் குடியிருப்பாளரின் சராசரி தேறிய வருமானமானது 1978 - 1985க்கு இடையில் மூன்று மடங்காக அதிகரித்தது. தனியார் தூண்டுதலின்மை எவ்வாறு ஒரு சமுதாயத்தின் தீர்மானத்திற் பரந்தளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதனைச் சூழற் பாதுகாப்பு மற்றும் சேதங்களிலிருந்து தெளிவாக விளக்கப்பட்டது.
எல்லோருக்கும் சொந்தமாக உள்ள சொத்துக்கள் எப்பொழுதும் தவறாகப் பயன்படுத்தப்படும் அல்லது அளவுக்கதிமாகச் சுரண்டப்படும் என்பதற்கு உதாரணமாகக் காடுகளிலும், மேச்சல் நிலங்களிலும் ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பிடலாம். தனிப்பட்ட பிரிவினர் இதனைச் சொந்தமாகக் கொண்டிருப்பின் அதனைப் பாதுகாப்பதற்கும் , நிர்வகிப்பதற்கும் பொறுப்பாக இருக்கவேண்டும் . இதனைப் பயன்படுத்துவதற்கான தனிப்பட்டவர்களின் உரிமைகள், தனியார் உரிமைகள் என்ற அடிப்படையில் தெளிவாக வரையறை செய்யவேண்டும். அத்துடன் வளங்களைப் பாதுகாப்பதற்கும் அதன்நிலைநிற்கும்தன்மையை உறுதிசெய்வதற்கும் பாரிய தூண்டுதல் இருக்கவேண்டும். அரசுடமையும், பொதுசன சொத்தும் இதனையொத்த பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றன. இதனைக் கவனமாகப் பயன்படுத்தவும், எதிர்காலப் பயன்பாட்டுக்காக இதனை நிர்வகிப்பதற்குமான தூண்டுதல்கள் பலவீனமான நிலையிலேயே இருக்கின்றன. ஏனெனில் இது ஒவ்வொருவரினதும் சொத்து என்பதால் எவரும் தனிப்பட்ட முறையிற் சொந்தம் கொண்டாட முடியாது. இத்தகைய காரணங்களினால்தான் பொதுவான அரசுடமை நிறுவனங்கள் பயனுறுதிவாய்ந்ததாகவும் இலாப நோக்குடையதாகவும் இருப்பதில்லை. உற்பத்தி மற்றும் வியாபாரம் போன்ற துறைகளில் சந்தைப்பொருளாதாரம் ஏன் தனியார் நிறுவனங்களிற் பெரிதும் தங்கியுள்ளதென்பதற்கு இதுவே பிரதான காரணமாகும்.
9

Page 7
அரசமுறைமையானது இலாபத்தை அடைவதற்குச் சுதந்திரமாக இயங்கக் கூடியவர்களைக் கொண்டுள்ளதேயன்றி அவர்களின் முயற்சிக்கு எதுவும் வழங்கப்படுவதில்லை. அரசுடமையைப் பெரிதும் கொண்ட ஒரு முறைமையில் அல்லது பொருட்களை அல்லது வருமான ஆதரவினை இலவசமாக அளிக்கின்ற பாரிய சமூக நல நிகழ்ச்சித் திட்டத்தினைக் கொண்ட முறைமைகளில், சந்தைப் பொருளாதாரத்திலும் பார்க்க அதிகமான "இலவசமாகச் சவாரி" செய்வோரைக் (free - riders) கொண்டுள்ளது. இதே வகையான பிரச்சினைகளினால்தான் இலங்கைப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் பொதுப்பணம் தொடர்பாக மிகவும் தாராளப் போக்கைக்கொண்டிருந்தன. பொதுமக்களும், சேவைகளையும் வருமானப் பரிமாற்றங்களையும் பரஸ்பரக் கொடுப்பனவு அல்லது முயற்சி இன்றி எதிர்பார்க்கின்ற போக்கினையும் கொண்டுள்ளனர்.
மரபுரீதியான சமூகங்களில் தனிப்பட்டோர், சமுதாயங்களின் உரிமைகள், கடப்பாடுகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. அங்கு சமூக நடைமுறை, அதிகார அமைப்புக்குள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இவை சிலவேளைகளில் தனியார் சொத்துரிமை முறைமையின்றி இன்று சந்தைப் பொருளாதாரத்தில் காணப்படுவது போன்று மிகவும் தாக்கமுடையதாக இருந்தது. இத்தகைய சமூகக் கட்டுப்பாட்டு அமைப்புக்களைச், சமூக பொருளாதார மாற்றத்தின் சக்திகள் தவிர்க்கமுடியாதபடி அழித்துவிட்டன. எனவே புதிய அமைப்புக்கள், அபிவிருத்தி மற்றும் நவீனத்துவமான செயல் முறைகளில் மீளவும் கொண்டுவரப்படவேண்டும். சுதந்திரமான தடையற்ற வாங்கவும் விற்கவும் கூடிய தனியார் சொத்துரிமை அமைப்புக்கள், சொத்துக்கள், இத்தகைய பரிமாற்றங்களைக் கவனிப்பதற்கான சட்டங்கள் மற்றும் ஒப்பந்தரீதியான தொடர்புகள் சந்தைப் பொருளாதாரத்தில் இடம் பெறுகின்றன.
தனியார் சொத்துரிமை மற்றும் சந்தை அமைப்புக்கள் இவற்றுக்கே உரியது என்பது கருத்தல்ல. ஒவ்வொன்றிலும் பூரணத்துவமற்ற தன்மை காணப்படுகின்றதுடன் அவற்றினைத் திருத்துவதற்குத் தலையீடு மிக அவசியமானது. சுதந்திர சந்தை அல்லது நிறைபோட்டிச் சந்தை காணப்படும் ஒரு முறைமை மிகச் சிறந்தது. ஆனால் யாதார்த்த உலகில் அது காணப்படவில்லை. அரசியற் பொருளியலாளர்கள் “சந்தைப் பொருளாதாரம் என்பது அரசின் பங்கினைக் குறைத்தல் என்பதன் கருத்தல்ல" என்று வாதாடுகின்றனர். "அரசானது வர்த்தக முயற்சிகள் போன்ற நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்குவதானது புதிய பங்காற்றலை மேற்கொள்வதற்காகவே இருக்கவேண்டும்” என்ற கருத்தினை மட்டுமே குறிக்கின்றது. பொருளியலாளர்களினால் “சந்தைகளின் செயலொழிவு” (market failures) என்று விபரிக்கப்பட்டவற்றில் பிரதான பங்கினை அரசு கொண்டுள்ளது. சந்தைச் சக்திகள் விதிமுறைகளை மீறிச் சுயமாகச்
10

செயற்படும்பொழுது இடம்பெறும் சூழல் மாசுபடலை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். போட்டியானது நெறிமுறையானதாக இருக்கவேண்டுமென்பதை உறுதிப்படுத்தவும், தனியுரிமை வளர்ச்சிகளைத் தடைசெய்தல், பயனுறுதிவாய்ந்த பொருளாதாரத்திற்கும், நுகர்வோரின் விருப்புக்கள் ஆகிய இரண்டிற்கும் ஊறு விளைவிக்கக்கூடிய சொத்துரிமை மற்றும் முகாமைத்துவ விடயங்களில் அரசு தலையீடு செய்தல் வேண்டும்.
அரசானது பரந்த வீச்சுக் கொண்ட பொதுசன பொருட்கள் குறிப்பாகச் சட்டம் ஒழுங்கு என்பதிலிருந்து பொதுச் சுகாதாரம், பொதுசனக் கல்வி, வீதிகள், துறைமுகங்கள், சக்தி ஆலைகள், தொலைத்தொடர்பு போன்ற பொருளாதாரக் கட்டுமானத்தின் பெரும் பங்கினுக்குப் பொறுப்புடையது எனக் கருதுதல் வேண்டும். இவற்றுக்குமேலாக, எதிர்காலச்சமுதாயத்தின் நோக்கினை விருத்தி செய்வதற்கும், அபிவிருத்திக்காக மக்களைத் தயார்ப்படுத்துவதற்குமான பொருளாதாரத்துக்கும் அரசு உதவவேண்டும். இதனால்தான் மேற்குச் சனநாயகங்களில் உள்ள சோசலிசக் கட்சிகள் "மத்திய திட்டமிட்ட முறைமையின் உடைவானது எவ்வகையிலும்கூட்டுப் பொறுப்பு மற்றும் பொதுமக்களின் பொறுப்புடைமை மீது அழுத்தங்களை முன்வைக்கின்ற சோசலிசக் கருத்தியலின் அடிப்படைகளைப்பலீனமடையச் செய்யவில்லை" என வாதிடுகின்றனர். எனவே சந்தைப் பொருளாதாரம் என்ற கட்டமைப்பினுள் புதிய சோசலிச நிகழ்ச்சி நிரலை அவர்கள் முன் வைக்கலாம்.
இத்தொகுதியினை அடுத்து வெளிவரவிருக்கின்ற நான்கு வெளியீடுகளில் இத்தகைய பல விடயங்கள் ஆராயப்படவிருக்கின்றன. இரண்டாவது தொகுதியானது தேர்ந்த சில நாடுகளின் அனுபவங்கள், அவற்றிலிருந்து பெறப்பட்ட அபிவிருத்திப் படிப்பினைகள் பற்றி ஆராய்கின்றது. இந்நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகள், செயலாற்றங்கள் என்பன சந்தையை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளையுடைய நாடுகளுடனும் அரச கட்டுப்பாட்டு முறையைக் கொண்ட நாடுகளுடனும் ஒப்பீடு செய்யப்படுகின்றது. பொருளாதாரச் சீர்திருத்தங்களையும், சீரமைப்பையும் கொண்ட நாடுகள் பயனுறுதி வாய்ந்த முறையில் உலகப் பொருளாதாரத்துடன் தம்மை வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளன. இந்நாடுகள் விரைவாக வளர்ச்சியடையவேண்டுமாக இருந்தால், மக்களின் வாழ்க்கைத்தர நிலைமைகளை விருத்தி செய்யவேண்டின் இந்நாடுகள் சர்வதேசரீதியாகப் போட்டியை உருவாக்க வேண்டியனவாகவும், தாம் உற்பத்தி செய்கின்ற பொருட்களை உலக சந்தையில் விற்பனை செய்யக்கூடிய தகுதியையுடையனவாகவும் மாறவேண்டும். வேறு மாற்று வழிகள் இல்லை. இதனை மேற்கொள்ளுவதற்கு இந்நாடுகளின் பொருளாதாரங்கள் திறந்த அமைப்புடையனவாக இருத்தல் வேண்டும். அதில் சந்தையானது பொருளாதார முகாமைத்துவம் மற்றும் வள ஒதுக்கீட்டுக்கான பிரதான ஊக்கியாகவும் பயன்படுத்தப்பட வேண்டும்.
11

Page 8
இரண்டாவது தொகுதியில் காணப்படும் சில நாடுகளைப் பற்றிய சிறப்பான ஆய்வுகள் இவை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பதை விபரிக்கின்றன. அரசும் சந்தையும் என்ற மூன்றாவது தொகுதியில் ஆராயப்படுகின்ற சில விடயங்கள் இவ் அறிமுகத்தில் முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது. நான்காவது தொகுதியானது சந்தைப் பொருளாதாரத்துக்கு அடிப்படையான அபிவிருத்திக்கோட்பாடுகள் பற்றிய பிரதான கலைக்கூடச் சிந்தனைகளின் படைப்புக்கள் பற்றிய சில மாதிரியங்களைக் கொண்டுள்ளது. ஐந்தாவ்து தொகுதியானது தனியார்துறையின் பங்கும் தொழிற்துறையும் என்ற விடயத்தினை மையமாகக் கொண்டு வெளிவரவிருக்கின்றது.
கொட்பிரே குணதிலக மார்கா நிறுவகம்
12

பகுதி 1
சந்தைப் பொருளாதாரம் என்றால் என்ன
மைக்கேல் வாட்ஸ்
தமிழ்ாக்கம்
டி. தனராஜ் செயற்றிட்ட அதிகாரி கல்விமுகாமைத்துவ அபிவிருத்தித்துறை தேசிய கல்விநிறுவகம், மகரகம.
பொதுசன கல்வி நிகழ்ச்சித்திட்டம் மார்கா நிறுவகம்

Page 9

சந்தைப் பொருளாதாரம் என்றால் என்ன?
அறிமுகம்
மட்டுப்படுத்தபட்ட வளங்களைக் கொண்டுள்ள உலகில் எதனை, யாருக்கு உற்பத்தி செய்வது என்ற அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைக்கு வரலாற்றினுTடாக ஒவ்வொரு சமூகமும் முகம் கொடுத்தே வந்துள்ளது. இக் கேள்விக்கு 20 ஆம் நூற்றாண்டில் இரண்டு மாறுபட்ட பொருளாதார முறைமைகள் வித்தியாசமான பதில்களைத் தந்துள்ளன. அவை மத்திய மயப்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தால் வழிகாட்டப்படும் திட்டமிட்ட பொருளாதாரமும் , (Commandeconomy) தனிப்பட்டமுயற்சியாளர்களில் தங்கியுள்ள சந்தைப் பொருளாதாரமும் (Marketeconomy) ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் இறுதித் தசாப்தமாகிய இன்று ஒரு விடயம் தெளிவாகியுள்ளது. அதாவது உலகம் முழுவதும் மத்திய, திட்டமிடப்பட்ட பொருளாதார மாறியானது பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் ஓரளவேனும் செழிப்பை அடையவும் ஆகக் குறைந்தது தனது பிரசைகளுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பைப் பெற்றுத்தரவும் தவறிவிட்டது என்பது இன்று தெளிவான விடயமாகி உள்ளது.
இருந்தும் கூட அதற்கு மாற்றீடாக விளங்கும் சந்தைப்பொருளாதாரத்தின் அடிப்படை கோட்பாடுகளும், இயங்கு முறைகளும் பலருக்குப் பரிச்சயமில்லாமல் இருப்பதோடு விளக்கமற்றவையாகவும் தோன்றுகின்றன. மேற்கு ஐரோப்பாவிலிருந்து வடஅமெரிக்கா மற்றும் ஆசியா வரை உள்ள பன்முகப்பட்ட சமூகங்களில் இம்முறைமை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க வெற்றிகள் இவர்களைச் சற்றேனும் பாதிக்கவில்லை. சந்தைப் பொருளாதாரம் என்பது ஒரு கருத்தியல் அல்ல. ஆனால் தனிநபர்களும் சமூகங்களும் எவ்வாறு வாழ்ந்து பொருளாதாரரீதியாக மேன்மையடைய முடியும் என்பதைக் காட்டும் காலத்தை வென்ற நடைமுறைகள், நிறுவனங்கள் பற்றிய ஒரு தொகுப்பு எனலாம். சந்தைப்பொருளாதாரம் இயல்பாகவே பன்முகப்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல் நெகிழ்ச்சி, நடைமுறை மற்றும் மாற்றங்களுக்கு உட்படக் கூடியது. சந்தைப் பொருளாதாரத்துக்கு ஒரு மையம் இல்லை என்பதே அதைப் பற்றிய மையநிலை உண்மையாகும். மறைமுகக்கரம் (Invisible Hand) என்பது தனிப்பட்ட சந்தையைக் குறிக்கும் அடிப்படை உருவகங்களில் ஒன்றாகும்.
சந்தைப் பொருளாதாரம் நடைமுறை சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் அது தனிநபர் சுதந்திரம் என்னும் அடிப்படைக் கோட்பாட்டில்
15

Page 10
தங்கியுள்ளது. அதாவது பொருட்கள், சேவைகளை ஒரு நுகர்வோன் என்றளவில் தெரிவு செய்யும் சுதந்திரம்; ஒரு வர்த்தக முயற்சியை ஆரம்பிக்கவும் விரிவுபடுத்தவும் அதன் நன்மை தீமைகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஓர் உற்பத்தியாளன் என்ற வகையில் சுதந்திரம்; ஒரு தொழிலை அல்லது தொழில் முயற்சியைத் தெரிவு செய்யவும், தொழிற் சங்கத்தில் சேரவும், தொழிலை மாற்றிக்கொள்ளவும் ஒரு தொழிலாளன் என்ற வகையில் உள்ள சுதந்திரம் ஆகும். சுதந்திரம், துணிவு மற்றும் சந்தர்ப்பங்களை உறுதிப்படுத்தும் இத்தன்மையே நவீன சந்தைப் பொருளாதாரத்தையும், அரசியல் சனநாயகத்தையும்(Political democracy) இணைக்கின்றது.
சந்தைப் பொருளாதாரம் எவ்வித முடிவுகளும் இல்லாதது எனக் கருதக் கூடாது. உண்மையில் இதிலுள்ள சமமின்மைகள், துஷ்பிரயோகங்கள் பல மிகவும் பாரதூரமானவை. ஆனால் மறுக்க முடியாத உண்மை என்னவெனில் நவீன தனியார் தொழில் முயற்சியும் அம்முயற்சி சார்ந்த ஆர்வமும் அரசியல் சனநாயகத்தோடு இணைந்து, சுதந்திரத்தைப் பாதுகாக்க உதவுகின்றது. அதுமட்டுமல்லாமற் பொருளாதார வளர்ச்சிக்கு எண்ணிறந்த சந்தர்ப்பங்களை வழங்கிச் சுய மக்களின் மேன்மையை உறுதிப்படுத்தவும் சிறந்த வாய்ப்புக்களை வழங்குகின்றது.
திட்டமிட்ட பொருளாதாரமும் சந்தைப் பொருளாதாரமும்
இன்றைய உலகில் அநேகமாக ஒவ்வொரு நாட்டிலும் வெதுப்பி (bread) இறைச்சி, உடைகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வீடுகள் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. இந்நாடுகளில் இவற்றுக்கான உற்பத்தி முறைகளும், பயன்படுத்தப்படும் வளங்களும் ஏறக்குறைய ஒரேமாதிரியானவை. உதாரணமாக பேக்கரிக்காரர்கள் மா, நீர் மற்றும் உப்பு, சீனி முதலியவற்றைக் கலந்துதான் வெதுப்பி தயாரிக்கின்றனர். தயாரிக்கப்பட்ட வெதுப்பிகள் கடைகளில் வைக்கப்பட்டு நுகர்வோருக்கு விற்கப்படுகின்றன. பல்வேறுபட்ட பொருளாதார முறைமை கொண்ட நாடுகளிலும் கூட வெதுப்பகங்கள் ஒரே மாதிரியாகத் தான் தென்படுகின்றன.
16

உடைகளைப் பற்றிய திட்டமான தீர்மானங்கள்
இவ்வாறு வெளிப்படையான ஒற்றுமைகள் காணப்பட்ட போதிலும் வடஅமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, யப்பான் முதலிய நாடுகளிற் காணப்படும் சந்தைப்பொருளாதாரங்களையும் சோவியத்யூனியன், கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் காணப்படும் திட்டமிட்ட பொருளாதாரங்களையும் ஒப்பிட்டால் கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் எதனை உற்பத்தி செய்வது, எப்படிச் செய்வது, எவ்வாறு விலை குறிப்பது, யார் அவற்றை நுகர்வது என்பதிற் தீர்க்கமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவ் வித்தியாசங்களை இன்னும் தெளிவாக நோக்குவதற்காக இவ்விரண்டு முறைகளிலும் ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு, உதாரணமாக உடைகளுக்கு எவ்வாறு உற்பத்தி மற்றும் விற்பனைத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நோக்கலாம்.
திட்டமிட்டபொருளாதாரத்தில் பொருளாதாரத் திட்டமிடல் அதிகாரிகள், உற்பத்தி நிபுணர்கள், அரசியல் அதிகாரிகளைக் கொண்ட அரசாங்கக் குழுக்கள் இப்பொருட்களின் உற்பத்தி மட்டத்தை நிர்ணயிப்பதோடு எந்தத் தொழிற்சாலைகளில் இவை உற்பத்திசெய்யப்படல் வேண்டும் என்பதையும் தீர்மானிக்கின்றன. இம் மத்திய திட்டமிடற் குழுக்கள் இப்பொருட்களின் விலைகளையும் தொழிலாளரின் வேதனத்தையும் கூடத் தீர்மானிக்கின்றன. இவ்வாறான மத்திய மயப்படுத்தப்பட்ட தீர்மானங்களின் தொகுப்புக்கள்தான் உடைகள் மற்றும் ஏனைய பொருட்களின் எண்ணிக்கை, வகைகள் மற்றும் விலைகளைத் தீர்மானிக்கின்றன. எனவே எதிர்பார்த்தபடி மட்டுப்படுத்தப்பட்ட தெரிவுகளைக் (Choice)கொண்ட இப்பொருட்கள் சீக்கிரம் விற்கப்பட்டு கடைகளிலிருந்து மறைந்துபோய் விடுகின்றன. இதன் காரணம் யாது? தொழிற்சாலைகள் தமது உற்பத்திக் கோட்டாக்களை அடைவதில்லை. ஏனெனில் மத்திய திட்டமிடற்குழுவினர் தமது விலையில் நுகர்வோர் எவ்வளவு சட்டைகளை வாங்குவார்கள் ான்பதைக் குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். எவ்வாறெனினும் திட்டமிடுவோர் பொருட்களின் உற்பத்தியை அல்லது விலையை அல்லது இரண்டையும் அதிகரிக்காதவரை பற்றாக்குறை தொடரவே செய்யும்.
இப்பொருளாதாரத்தில் மக்களது எண்ணிக்கையும் புதிய உற்பத்திப் பொருட்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க, அதிகரிக்க மத்திய திட்டமிடல் அதிகாரிகளுக்கு, நுகர்வோர் விரும்பும் பொருட்களின் பற்றாக்குறையைத் நீர்க்கவோ அல்லது அவர்களுக்கு வேண்டாத பொருட்களின் மிகையை
நீக்கவோ மிகவும் சிரமம் , சனத்தொகையும், பொருட்களும் , தொழில்நுட்பங்களும் மிக விரைவாக அதிகரிக்கும் போது மத்திய திட்டமிடல் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களின் எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரிக்கின்றன. எனவே தேசிய
17

Page 11
பொருளாதாரத் திட்டமிடலில் தவறுகளும் பிழைகளும் ஏற்படும் வாய்ப்புக்களும் அதிகரிக்கின்றன.
இந்நிலைமை சந்தைப் பொருளாதாரத்தில் ஏற்படுவதில்லை. ஏனெனில் இப் பொருளாதார முறைமை முற்றிலும் வேறுபட்ட வழியிற் செயற்படுகின்றது. எந்தவொரு அரசாங்க அமைச்சும் ஆண்கள், பெண்கள் ஆகியோரின் சட்டைகளை எவ்வளவு, (Shirts, Blouses) என்ன நிறங்களில், என்ன பாணியில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில்லை. தனிநபரோ அல்லது ஒரு கம்பனியோ ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் உடைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம். தமது உற்பத்திச் செலவுகளை ஈடுசெய்ய முடியுமெனில் பலர் சட்டைகளையே உற்பத்தி செய்வர். இந்நிலைமையானது சட்டைகளை உற்பத்தி செய்யும் பல்வேறுபட்ட நிறுவனங்களிடையே நேரடியான போட்டியை உண்டாக்குகின்றது. இந்தப் போட்டி நிலைமைதான் ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் நுகர்வோர் தெரிவு செய்ய எண்ணிறந்த, விதம்விதமான உடைகள் காணப்படுவதன் அடிப்படைக் காரணம் எனலாம்.
உண்மையில் நுகர்வோர் எப்பொழுதும் ஒரே விதமான சட்டையையே வாங்குகிறார்கள் என வைத்துக் கொண்டால் உற்பத்தியாளர் பல்வேறு விதமான சட்டைகளை உற்பத்தி செய்வதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்து கொள்வார்கள். ஆனால் பரந்துபட்ட தெரிவுகள் இருக்கும் நிலையில் நுர்வோரின் நடத்தைகளும் வேறுபட்டனவாகவே இருக்கும்.
சட்டைகளின் விலை
சந்தைப் பொருளாதாரத்தின் இன்னொரு முக்கிய அம்சம் சட்டைகளின் அல்லது வேறெந்தப் பொருளினதும் விலைகளை மத்திய திட்டமிடற்குழு தீர்மானிக்க மாட்டாது என்பதாகும். ஒவ்வொரு விற்பனையாளனும் மாறுபடும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப பொருட்களின் விலையை உயர்த்தவோ குறைக்கவோ சுதந்திரம் உள்ளவன். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வகையான சட்டைகளின் நுகர்வு வேகமாக அதிகரிக்கும் போது விலையும் அதிகரிக்கும். இவ்வதிகரிப்பானது அடுத்த கையிருப்பு சந்தைகளுக்கு வரும் வரையிலும் நீடிக்கும். இவ்விலை உயர்ச்சி ஒரே நேரத்தில் இரு நிகழ்வுகளை ஏற்படுத்துகின்றது. முதலாவது இச்சட்டைகளின் விலைஅதிகரிப்புக் காரணமாக நுகர்வோர்தாம் வாங்கும் இச் சட்டைகளின் எண்ணிக்கையைக் குறைத்து வேறு வகைகளை அதிகமாக வாங்குவர். இரண்டாவது இவ்வதிகரிப்பு நேரடியாக இதன் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளரை (அரசாங்கத்தை அல்ல) சென்றடைவதால் அவர்கள் உற்பத்தி மற்றும் விற்பனையின் எண்ணிக்கையை அதிகரிப்பர். வேறுபொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் கூட இந்தச் சட்டைகளை உற்பத்திசெய்யும் கம்பனிகளின்
18

இலாபத்தைக் கண்ணுற்றுத் தமது சொந்த உற்பத்திகளை நிறுத்திவிட்டுச் சட்டை உற்பத்தியில் ஈடுபடக்கூடும்.
இக்காரணங்களினால் (அதாவது நுகர்வோர் குறைந்த எண்ணிக்கையான சட்டைகளை வாங்குதல், உற்பத்தியாளர் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் வேறு நிறுவனங்கள் சட்டை உற்பத்தியில் உள்நுழைதல்) பற்றாக்குறை சீக்கிரமே நீக்கப்படும். இவ்வளவுக்கும் மத்திய திட்டமிடற் குழுவானது இவற்றில் எந்தத் தீர்மானத்தைம் மேற்கொள்ளவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். உண்மையில் நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளாரின் தீர்மானங்கள் பன்முகப்படுத்தப்பட்டிருப்பதால் இச் செயல்முறை மிகவேகமாகவும் சிலவேளைகளில் தன்னியக்கமாகவும் நடைபெறுகின்றது.
சந்தைகள்
சட்டைகளுக்கான உயர்ந்த விலைகள் ஒவ்வொரு நுகர்வோருக்கும் உற்பத்தியாளருக்கும் இவ்வாறாக நடந்து கொள்ள ஊக்குவிப்பினை வழங்குகின்றது. ஏனெனில் தமது தீர்மானங்களின் நன்மைகளைப் பெறவும் அதே நேரத்தில் அவற்றோடு இணைந்துள்ள நட்டங்களை ஏற்றுக்கொள்ளவும் அவர்களுக்கு உரிமை உண்டு. உதாரணமாக, குறிப்பிட்ட சட்டைகளைப் பெற அதிக விலைகொடுக்க விரும்பும் நுகர்வோர் அச்சட்டைகளைப் பெற்றுக் கொள்வர். ஆனால் மேலதிக பணத்தை இழப்பர். (வேறு பொருட்கள் சேவைகள் உட்பட) உற்பத்தியாளர் மேலதிக இலாபத்தை உழைப்பர். ஆனால் தேவையற்ற பொருட்களை உற்பத்தி செய்வோர் அல்லது திறன் குறைந்த உற்பத்தியில் ஈடுபடுவோர் நட்டமடைவர். இதன் தொடர்ச்சியாக, இவ்வுற்பத்தியாளர்கள் திறமையாகச் செயற்பட்டு நுகர்வோர் விரும்பும் பொருட்களை உற்பத்தி செய்து கவர்ச்சிகரமான விலைகளில் உற்பத்தி செய்யாதவிடத்துப் பெரும் நட்டத்தை அடைந்து தமது தொழிலைக் கைவிடுவர். அவர்களது தொழிற்சாலைகள், இயந்திரங்கள் மற்றும் வளங்களை வேறு யாரேனும் பொறுப்பேற்றுக் கொள்வர். சுருங்கக் கூறின் , ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் இவ்வாறுதான் ஊக்குவிப்புக்கள் தொழிற்படுகின்றன.
இந்த அடிப்படைச் செயல்முறைதான் பல்வேறு விதமான சந்தைகளிலும் இயங்குகின்றது. பொருட்கள் சேவைகள் மற்றும் பணம் ஆகியவற்றின் விலைகள் உயர்ச்சி, வீழ்ச்சிக்கு உட்படும் சுதந்திரமான எந்தவொரு நிலைமைக்கும் இச் செயல்முறையே பொருத்தமானது. சந்தைப் பொருளாதாரம் மாயாஜாலத் தீர்வுகளை வழங்குவதில்லை. இச் சந்தைகளில் முற்றாகத் தீர்க்கமுடியாத விடயங்களைத் தீர்க்க உதவுவதில் அரசாங்கம் காத்திரமான பங்கு வகிக்கின்றது. அதுமட்டுமல்லாமல், பணவீக்கம், வேலையின்மை, சூழல் மாசடைதல் வறுமை மற்றும் சர்வதேச
19

Page 12
வர்த்தகத்தின் தடைகள் போன்ற இன்றைய உலகப் பொருளாதாரத்தின் சிக்கலான பிரச்சினைகளுக்குச் சந்தைப் பொருளாதாரம் விதிவிலக்கல்ல. எனினும் பற்றாக்குறையும், திறமையின்மையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு திட்டமிட்ட பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது ஒரு சுதந்திர சந்தைப் பொருளாதாரமானது பொருளாதாரவளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றுக்குப் பரந்தளவான வாய்ப்புக்களை வழங்கவே செய்கின்றது.
சந்தைப் பொருளாதாரத்தில் நுகர்வோர்
சந்தைப் பொருளாதாரத்திலும் திட்டமிட்ட பொருளாதாரத்திலும் நுகர்வோர் ஒரே விதமாகத்தான் தீர்மானங்களை மேற் கொள்கின்றனர். அதாவது உணவு, உடைகள், வீடுபோக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கான செலவுகளைத் தமது வரவு செலவுத் திட்ட வரையறைக்குட்பட்டுத்தான் மேற் கொள்கின்றனர். அத்துடன் இன்னும் அதிகமாகச் செலவழிக்கத் தம்மால் முடியாதா எனவும் ஆசைப்படுகின்றனர். ஆனால் ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் நுகர்வோர் அதன் இய்க்கத்தில் திட்டமிட்ட பொருளாதாரத்தைவிடக் கூடிய பங்கு வகிக்கின்றனர். உண்மையில் சந்தைப் பொருளாதாரம் சில வேளைகளில் நுகர்வோர் இறைமை சார்ந்த முறைமை (Systems of Sovereignty) எனவும் கூறப்படுகின்றது. ஏனெனில் என்ன பொருட்கள், சேவைகள் உற்பத்தி செய்யப்படல் வேண்டும் என்பதைப் பெரும்பாலும் நாளாந்த செலவீடுகள் பற்றிய நுகர்வோரின் தீர்மானங்களே தீர்மானிக்கின்றன. இது எவ்வாறு நிகழ்கின்றது என்பதை நோக்கலாம்.
தோடம்பழங்களையும் கணணிப் பல்மின் சுற்றடக்கிகளையும் (chips) வாங்குதல்
றொபர்ட் அவனது மனைவி மரியா மற்றும் இரு பிள்ளைகள் கொண்ட ஒரு சிறிய குடும்பம் இரவு உணவுக்காக உணவுப் பண்டங்கள் வாங்கச் செல்கிறார்கள் எனக் கொள்வோம். அவர்கள் உண்மையில் ஒரு கோழியையும் தக்காளி, தோடம் பழங்களை மட்டுமே வாங்கச்சென்றாலும் அவர்களது திட்டங்கள் இப்பொருட்களின் சந்தை விலைகளால் வெகுவாகப் பாதிக்கப்படமுடியும். தோடப்பழங்களின் விலை அதிகரிப்பு அவர்களுக்குத் தெரியவரும். தோடம்பழத்தோட்டங்கள் உள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுங் குளிரினால் ஏற்பட்ட பயிர் அழிவுகள் போன்ற பல காரணங்கள் இவ் விலை உயர்வினை ஏற்படுத்தி இருக்கலாம். இதனால் பல நுகர்வோர்,
20

குறைந்த எண்ணிக்கையான தோடம் பழங்களையே கொள்வனவு செய்வர். இதனால் அடுத்த அறுவடைக்குமுன்னர் சீக்கிரமே பற்றாக்குறை ஏற்பட்டுவிடும். விலை உயர் வினால் நுகர்வோர் தாம் நுகரும் தோடம்பழங்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் துரண்டப்படுவர். உற்பத்தியாளர் தமது உற்பத்தியை அதிகரிக்கத் தூண்டப்படுவர்.
வேறொரு வழியும் உண்டு. அதாவது வழங்குவோர் பிறநாடுகளிலிருந்து தோடம்பழங்களை அதிகளவில் இறக்குமதி செய்யலாம். சர்வதேச வர்த்தகமானது இறக்குமதி வரிகள் (இறுப்புக்கள்) போன்ற தடைகளைக் குறைவாகக் கொண்டியங்க அனுமதிக்கப்பட்டால் மிகக் குறைந்த விலையிலான தெரிவை நுகர்வோருக்கு அளிப்பதுடன் பலவகையான உற்பத்திகளை மிகக் குறைந்த விலையில் நிரம்பல் செய்வதற்கு உற்பத்தியாளர்களையும் அனுமதிக்கிறது. உயர்வான விலைகளுக்கான காரணங்கள் பலவாகக் காணப்பட்டாலும், அவர்கள் பொருட்களைக் கொள்வனவு செய்ய இருந்த விலைகளிலும் பார்க்க இவை அதிகமாக இருப்பதைக் கண்டு அவர்களது தெரிவுகள் மாற்றமடைகிறது. இதனால் அவர்கள் குறைந்த எண்ணிக்கை கொண்ட தோடம் பழங்களையே வாங்கத்தீர்மானிக்கலாம். இவ்வாறான தீாமானங்களை வேறுபல நுகர்வோரும் மேற்கொள்வதால் கடைகளில் தோடம்பழங்கள் உடனேயே முடிந்து விடமாட்டாது. ஆனால் அவற்றின் விலைகள் அதிகரித்துக் கூடிய பணம் செலவழிக்க விரும்பும் நுகர்வோரால் மாத்திரமே அவை கொள்வனவு செய்யப்படும். இவற்றிற்கு மாற்றீடாக உள்ள அப்பிள்கள் முதலிய பழங்களின் கொள்வனவு அதிகரிப்பதால் அவற்றின் விலைகள் உயரும்.
தோடம்பழங்களின் விலையை நிர்ணயிக்கும் சமன்பாட்டில் நுகர்வோர் நடத்தை என்பது ஒரு பக்கமும் - அதாவது கேள்விப்பக்கமாகும். மறுபக்கமான நிரம்பலைப் பொறுத்தளவில் என்ன நிகழ்கின்றது. தோடம்பழங்களின் விலை அதிகரிப்பு எல்லாப் பழ உற்பத்தியாளர் களுக்கும் தூண்டுதலை அளிக்கின்றது. மக்கள் பழங்களைக் கொள்வனவு செய்வதற்கு அதிக பணத்தைச் செலவிடுவர் என்பதினால் கடந்த காலத்திலும் பார்க்க அதிக வளங்களைப் பயன்படுத்திப் பழங்களை உற்பத்தி செய்ய முனைவர். அதற்காகக் காலநிலைத் தாக்கத்துக்கு உட்படாத புதிய இடங்களைப் பழ உற்பத்தியாளர்கள் நாடுவர். குளிர்வானிலை, நோய், பூச்சிகள் ஆகியவற்றைத் தாக்குப் பிடிக்கும் புதிய தோடம்பழ வர் க்கங்களைக் கண் டு பிடிக் குமாறு உயிரினவியலாளரைத் தூண்டுகின்றனர். இக்காரணங் களினால் சிறிது காலத்தில் உற்பத்தி அதிகரித்து விலைகள் குறையலாம். ஆனால் இச்செயல்முறை முழுவதும் நுகர்வோர் தமது வருமானத்தின் ஒருபகுதியைத் தோடம்பழம் அல்லது வேறுபழங்களில் செலவழிக்க மேற்கொள்ளும் தீர்மானத்திலேயே பிரதானமாகத் தங்கியுள்ளது.
21

Page 13
நுகர்வோர் ஏதாவது ஒரு காரணத்துக்காகப் பழங்கள் கொள்வனவு செய்வதைக் குறைத்தால் விலைகள் வீழ்ச்சியடையும் . வழங்கல் மற்றும் விலைகள் ஆகியவற்றுக்கிடையில் ஏற்படும் இடைத்தாக்கம் நுகர்வோர் பொருட்களின் மீது மட்டுமன்றி பொருளாதாரத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் நடைபெறுகின்றது. நுகர்வு (Consumption) என்பது இடைநிலைப் பொருட்களையும் (intermediate goods) (அதாவது நிறுவனங்கள் தமது பொருட்கள் , சேவைகளை வழங்குவதற்காகக் கொள்வனவு செய்யும் பொருட்களையும்) தழுவி நிற்கின்றது. இந்த இடைநிலை அல்லது முதலீட்டுப் பொருட்களின் செலவினமானது சந்தைப் பொருளாதாரத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் கேள்வி - வழங்கற் சமன்பாட்டை மாற்றுவதன் மூலம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
இன்னொரு உதாரணமாக நவீன கணணிப்புரட்சியின் நடுநாயகமாக விளங்கும் பகுதி மின் ஊடுகடத்தும் பல்மின் சுற்றடக்கிகளை (seml conductor ship) எடுத்துக் கொள்வோம். தோடம்பழத்தைப் போலவே இவற்றின் உயர்வான விலைகள் கணணிப் பல்மின் சுற்றடக்கிகளினதும் கணணிகளினதும் கேள்வியைக் குறைக்கும். காலப்போக்கில் இவ் விலை உயர்வு கணணி உற்பத்தியாளரைத் தமது உற்பத்தியைக் கூட்டவும், கணணிப் பல்மின் சுற்றடக்கி வழங்குநர்களை இச்சந்தையில் நுழையவும் தூண்டும். கணணிப் பல்மின் சுற்றடக்கிகளின் விலைகள் கீழிறங்க அதன் காரணமாக கணணியின் செலவிடும் (வேறு உள்ளீடுகளின் செலவு மாறாத விடத்து) அதன் கேள்வியும் உயர்வடையும். கணணிக்கான கேள்வியின் உயர்வு உற்பத்தியா : ரின் உற்பத்தி வெளியீட்டினை மட்டும் கூட்டுவதில்லை. அது புதிய கண்டு பிடிப்புகளுக்கான முயற்சிகளையும் உற்சாகப்படுத்தும். அதனால் புதிய திறமைமிக்க சக்திவாய்ந்த கணணி மாதிரிகள் உருவாக்கப்படும். ஓர் உண்மையான கட்டுப்பாடற்ற சந்தையில் எப்பொழுதும் விலைகள், முன்னேற்றங்களுக்கிடையிலான போட்டிகள்
"ணப்படும்.
விலைகளும் நுகர்வோர் வருமானமும்
பொருட்கள் சேவைகளைக்கொள்வனவு செய்வதில் நுகர்வோர் கவனத்திற் கொள்ள வேண்டிய இன்னொரு பொருளாதாரக் காரணி அவர்களது சொந்த வருமான மட்டமாகும். மக்களிற் பெரும்பாலானோர் தாம் செய்யும் தொழில் மூலமே வருமானம் பெறுகின்றனர். இத்தொழில்களைப் புரிவோர் டாக்டராகவோ, ஆசிரியர்களாகவோ, சில்லறைக் கடை குமாஸ்தாகவோ இருக்கலாம். வேறு சிலர் வாடகை, நில விற்பனை, வர்த்தகம் முதலிய தொழில் முயற்சிகளில் கிடைக்கும் இலாபம், சேமிப்பு கண, களிலிருந்து அல்லது முதலீடுகளிலிருந்து வட்டி முதலியவற்றின் மூலப வருமானம் பெறுகின்றனர். இவ்வாறான கொடுப்பனவுகளுக்கா" விலைகள்
22

எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன என்பதைப் பிறிதோர் இடத்தில் நோக்குவோம். ஆனால் பின்வருவன சில முக்கியமான அம்சங்களாகும்.
(1) ஒருசந்தைப் பொருளாதாரத்தில் (market economy) நுகர்வோர் கேள்வியைத் திருப்தி செய்யும் பொருட்கள், சேவைகளை உற்பத்தி செய்யப் பயன் படுத்தப்படும் அடிப்படை வளங்கள் தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமானவை.
(2) இவ்வுற்பத்திச் சாதனங்களுக்கான கொடுப்பனவுகள் அல்லது வருமானங்கள் உயர்ச்சியையும் வீழ்ச்சியையும் கொண்டிருக் கின்றன. இவ் ஏற்ற இறக்கங்கள் பொருட்கள் சேவைகளுக்காக நுகர்வோர் எவ்வளவு செலவிட விரும்புகின்றனர் என்பதிலும் அவ்வுற்பத்திகளை விற்பனை செய்யும் நிறுவனங்களின் வெளியீட்டு மட்டங்களிலும் நேரடியான பாதிப்பினைக் கொண்டுள்ளன.
உதாரணமாக ஒரு தொழிலாளி ஓய்வு பெற்றுத் தனது சம்பளத்தில் 60 வீதம் மட்டும் ஓய்வூதியமாகப் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தனக்குத் தேவையான பொருட்கள் சேவைகளைப் பெருமளவுக்குக் குறைத்துக் கொள்வார். தமது தொழிலுக்குத் தேவையான உடைகள், போக்குவரத்து முதலியவை இதில் அடங்கும். ஆனால் புத்தகங்கள், பொழுதுபோக்கு, நண்பர்களைக் காணுவதற்காக மேற்கொள்ளும் பிரயாணம் ஆகியவற்றில் அவரது செலவுகள் அதிகரிக்கும். ஒய்வு பெறும் வயதை அடையும் மக்களின் தொகை அதிகரித்தால் இப் பொருட்களின் சந்தை விலைகளும் உற்பத்திமட்டங்களும் மாறுதலடையும். இதன் விளைவாகப் பல நிறுவனங்கள், இலாபங்கள் தொடரும் பட்சத்தில் ஓய்வூதியக்காரர்களின் நலன் பேணும் பொருள் உற்பத்தியை அதிகரிக்கத் தீர்மானிக்கலாம்.
சுருங்கக் கூறின் நுகர்வோர் எவ்வகையினராக இருப்பினும் (இளையோர், முதியோர், ஆண், பெண், செல்வந்தர், ஏழை, மத்திய வகுப்பினர் என்ற பாகுபாடு இல்லாமல்) அவர்கள் செலவழிக்கும் ஒவ்வொரு டொலர், பெஸோ, பவுண்ஸ், பிராங், ரூபாய், மார்க் அல்லது யென் ஆகிய அனைத்தும் என்ன பொருட்கள் சேவைகள் உற்பத்தி செய்யப்படவேண்டும் என்பதன் ஓர் அடையாளம் அல்லது பொருளாதார வாக்குச்சீட்டு (vote) எனக் கொள்ளலாம். நுகர்வோர் செலவீடு என்பது சந்தையில் பொருட்கள் சேவைகளின் கேள்வியை நிர்ணயிப்பதில் அரைவாசிப் பங்கினை வகிக்கின்றது. மற்ற அரைவாசி எவற்றை உற்பத்தி செய்வது, எப்படி உற்பத்திசெய்வது என்று உற்பத்தியாளர் மேற்கொள்ளும் தீர்மானங்களில் தங்கியுள்ளது.
23

Page 14
பணவீக்கமு ம் சந்தைப் பொ ருளாதாரத்துக்கு மாறுதலும்
ஒரு சமுதாயம் மத்திய மயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்திலிருந்து சந்தைப் பொருளாதாரத்துக்கு மாறுகின்ற உருமாற்றக் (traftStor) காலத்தில் பணவீக்கம் (trfator)சமாளிக்க முடியாத ஒரு பிரச்சினையாக இருக்கும். எனினும் சந்தைப் பொருளாதாரத்தின் நன்மைகளை அனுபவிக்க வேண்டுமானால் இந்தச் சவாலுக்கு முகம் கொடுப்பது அவசியமாகும். உண்மையில் பணவீக்கம் என்றால் என்ன? அது ஒரு பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் பொருட்கள் சேவைகளின் சராசரி விலைமட்டத்தில் ஏற்படும் உயர்வாகும். பணவீக்கம் பின்வரும் இரு காரணிகளில் ஒன்றினால் ஏற்படலாம். உற்பத்தியாளர்கள் நிரம்பல் செய்ய முடியாத வகையில் நுகர்வோர் பொருட்கள் சேவைகளை அதிவேகமாகக் கொள்வனவு செய்கின்றனர். அல்லது நுகர்வோர் உற்பத்தியாளருக்கான பொருட்கள் சேவைகளின் வழங்கலில் பெரும் வீழ்ச்சி ஏற்படுவதினால் விலைகள் உயர்வடைகின்றன. பணவீக்கம் சிலவேளைகளில் சொற்ப எண்ணிக்கை கொண்ட பொருட்களை அதிகளவு பணம் துரத்திச் செல்லும் நிலை எனவும் விபரிக்கப்படுகின்றது.
பணவீக்கம், உருமாற்றத்திலிருக்கும் பொருளாதாரத்தை விலைகளின் மீதான அரசாங்கக் கட்டுப்பாடு நீக்கப்படுகின்ற காரணத்தினால் அதிகமாகத்தாக்குகின்றது. விலைக் கட்டுப்பாட்டு நீக்கத்தின் உடனடி விளைவு பற்றாக்குறையிலுள்ள பொருட்களின் விலைகள் உயர்வடைதலாகும். ஏனெனில் இத்தகைய பொருட்களின் விலையை இதுவரை காலமும் அரசாங்கம் செயற்கையான முறையில் கீழ்மட்டத்தில் வைத்திருந்தது. ஆகவே கேள்வியானது வழங்கலை விடக் கூடியது அல்லது வேறு பொருளாதாரக் குறைபாடுகள், வினைத்திறனின்மைகளை அரசாங்கத்தீர்மானம் மேற்கொள்பவர்கள் உருவாக்கிஇருக்கலாம். மேலும் இத் தருணத்தில் மக்களிடம் பெருந்தொகைப் பணம் இருக்குமெனினும் பணவீக்கம் மோசமாக அதிகரிக்கலாம்.
எனினும் பொருளாதார மாற்றத்தின்போது இப் பணவீக்கத்தைப் பொறுத்துக் கொள்வதில் நன்மைகளும் உண்டு. அரசாங்கத்தலையீடுஇல்லாமல் கேள்வி வழங்கல் பற்றிய சந்தைப் பொறிமுறை செயற்படத் தொடங்கும். உயர்ந்தவிலைகள் உயர்ந்த கேள்வியைக் காட்டுகின்றமையால் சந்தையானது அதிக உற்பத்தியை வழங்க முயற்சிக்கும். மக்களது பணத்தின் பெறுமதி குறைந்திருக்கலாம். எனினும் இப்போது உள்ள பணம் உண்மையாக
24

இருக்கின்றபடியால் கடைகளில் மெதுவாகத் தலைநீட்டும் பண்டங்களை வாங்கக் கூடியதாக இருக்கும். வழங்கல் அதிகரிக்க, விலைகள் உறுதியடைய மென்மேலும் பண்டங்கள் வரவுள்ளன என்று நுகர்வோர் திருப்தியடைவதால் நீண்ட கியூ வரிசைகள் மறையத் தொடங்கும்.
தொழின் முயற்சியாளர்களும், முதலீட்டாளர்களும் புதிய பொருளாதார சுதந்திரத்தின் காரணமாகப் புதிய தொழின் முயற்சிகளை உருவாக்குவர். இதனால் உற்பத்தி அதிகரிப்பு, புதிய வேலைவாய்ப்புக்கள் தோன்றும். கூடிய வழங்கல் விலைகளின் உயர்வைச் சமப்படுத்தும். இதில் மிக முக்கியமானது என்னவெனில் இம்மாற்றத்தில் அரசாங்கம் தனது விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கைவிடுவதன் மூலம், சகல பொருட்கள், சேவைகளுக்கும் கேள்வி - வழங்கல் சந்தைப் பொறிமுறையின் மூலம் விலைகளை நிர்ணயம் செய்யப்படுவதற்கு வழிவிடுதலாகும். இவ்வாறான ஒரு சுதந்திரமான சந்தை அமையும் போது பணவீக்கம் தொடரும். ஆனால் இப்போதுள்ள பணவீக்கம் சமாளிக்கப் படக்கூடியதாக இருக்கும்.
மாறுகின்ற பொருளாதாரத்தில் ஏற்படும் திடீர் விலை அதிகரிப்பு மக்களுக்கு வேதனையையும் அழிவையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் புதிய சந்தைப் பொருளாதாரத்தில் உள்ள குறைந்த பணவீக்க விகிதம் உண்மையில் பிரச்சினையானதா? நூறுவருடங்களாகப் பணவீக்கமில்லாமலும் அதே விலைகளையும் அத்துடன் குறைந்த வருமானத்தையும் கொண்டு மக்கள் திருப்தியடைய முடியுமா? நிச்சயமாக முடியாது என்பதுதான் இதற்கான விடையாக இருக்கும். றொபர்ட், மரியாவின் வருமானம் பத்துமடங்கு அதிகரித்து, அவர்கள் வாங்கும் பொருட்களின் விலையும் பத்து மடங்கு அதிகரித்தால் அவர்களது வாழ்க்கை முன்னரைவிட விருத்தியடைந்து விடவில்லை.
ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் பணவீக்கமானது ஒரு குறுகிய காலப் பகுதியில் விலை அதிகரிப்பினால் வருமானமும் செல்வமும் நிறுவனங்களின் வெளியீடு அல்லது உற்பத்தித் திறனுடன் தொடர்பில்லாதவகையில் ஒரு தலைப்பட்சமாக மீள் விநியோ கத்துக்கு உள்ளாகின்றது. உதாரணமாக றொபர்ட்டும் மரியாவும் ஒரு வீட்டை வாங்குவதற்காக 10 வீதம் வட்டியில் கடன் எடுத்திருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். இவ்வேளையில் பணவீக்கம் 5 வீதத்திலிருந்து 15 வீதமாக உயர்வடைந்தால் அவர்கள் உண்மையில் நன்மையடைகிறார்கள். ஏனெனில் அவர்கள்திருப்பிச் செலுத்தும் கடன்பணமானது, கடனாக வாங்கிய பணத்தை விடப்
25

Page 15
பெறுமதி குறைந்தது. வேறுவார்த்தைகளில் கூறுவதாயின் இப்பணத்தைக் கொண்டு முன் வாங்கிய அதே பொருட்கள் சேவைகளைப் பெறமுடியாது. இது றொபர்ட், மரியாவுக்குச் சந்தோஷமான விடயம் எனினும் கடன் கொடுத்தவர்களுக்கு கவலையளிப்பதாகும்.
இதே காரணத்தினால் ஒரு குறிப்பிடப்பட்ட பணத்தை ஒய் வீதியமாகப் பெறுவோர் கஷ்டமடைய அப்பணத்தை வழங்குவோர் நன்மையடைகின்றனர். அதேபோல பணத்தைச் சேமிப்பவர்களும், முதலீட்டாளர்களும் இதே காரணத்தினால் நட்டமடைகின்றனர். இதற்கு எதிராகக் கடனைத் திருப்பிச் செலுத்துபவர்கள் வட்டிவீதம் மாறாதவரை நன்மையையே அடைவார்கள். நாடுகளுக்கு வீடுகள், தொழிற்சாலைகள், புதிய தொழின்முறையியல்கள் ஆகிய மூலதன வளங்களில் முதலீடு செய்யச் சேமிப்புக்களும் கடன் வழங்கக் கூடிய நிதிகளும் தேவையானவை, இவ்வாறு சேமிப்பாளர்களைத் தண்டிப்பதன் மூலம் பணவீக்கமானது வளர்ச்சியைக் குறைத்து நாட்டின் நீண்ட காலச் செழிப்பையும் பாதிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. இதை இன்னும் விளக்கமாகக் கூறினால் பணவீக்கமானது வர்த்தக, பொருளாதார முயற்சிகளை எதிர்வுகூற முடியாத நிலைக்குத் தள்ளுகின்றது. அதே நேரத்தில் பணவீக்கமற்ற அல்லது குறைந்த பணவீக்கமுள்ள நாடுகளில் முதலீடு செய்வதைக் கவர்ச்சிகரமாக்குகின்றது. ஒரு நிறுவனம் 10 - 15 வீதம் பணவீக்கமுள்ள நாட்டினை விட 2-5 வீதம் ஸ்திரமான பணவீக்கமுள்ள நாட்டில்தான் தனது புதிய தொழிற்சாலையை அமைக்கும் தீர்மானத்தை மேற்கொள்ளும். இந்த வகையில் பணவீக்கம் பொருளாதார சூழலைச் சிதறடித்து வெற்றி பெறுபவர்களைவிடத் தோற்பவர்களையே அதிகமாகத் தோற்று விக்கின்றது.
இக்காரணங்களினால் அரசாங்கத்தின் உறுதியான கொள்கைகள் பொருளாதார வளர்ச்சித் தேவைகளுக்கும், பணவீக்கத்தைக் கீழ் மட்டத்தில் வைத்திருக்க வேண்டிய தேவைகளுக்குமிடையில் ஒரு சமநிலையைப் பேணவேண்டும்.
26

சந்தைப் பொருளாதாரத்தில் வர்த்தகம்
ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது நுகர்வோரைத் திருப்தி செய்யும் பொருளுற்பத்தி மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் விலை நிர்ணயம் ஆகியவற்றில் தங்கியுள்ளது எனப் பார்த்தோம். இதனைச் செய்வதற்கு, ஒவ்வொரு பொருளாதார முறைமையிலும் காணப்படும் முக்கிய கேள்விகளுக்குக் கவனமாக விடையளிக்கவேண்டிய கடப்பாடு ஒவ்வொரு நிறுவனத்துக்கும் உண்டு. அதாவது, பொருட்கள், சேவைகளை மிகத்திறமையாக எவ்வாறு ஒரு சமூகம் உற்பத்தி செய்ய முடியும். ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் இதன் பொருள் என்னவெனின் உற்பத்தியாளர் பயன்படுத்தும் உள்ளிடு களிலிருந்து உச்சமான வெளியீட்டுப் பெறுமதியைப் பெறுதலாகும்.
ஒரு மிதிவண்டியை உற்பத்தி செய்தல்
உதாரணமாக மிதிவண்டி (bicycle) உற்பத்தியிலும் விற்பனையிலும் ஈடுபட விரும்பும் ஒரு நிறுவனத்தினை எடுத்துக் கொள்வோம். இம்முயற்சியில் ஈடுபடுமுன்னர் இந்நிறுவனம் பல்வேறு காரணிகளைக் கவனத்திற் கொள்ள வேண்டும். முதலாவது ஒரு புதிய மிதிவண்டிக்கான நுகர்வோர் கேள்வியின் பருமனும் இயல்பும் அதாவது ஒரு சாதாரண மிதி வண்டிக்குப்பிளவுபடாத பரந்த சந்தை உள்ளதா அல்லது அச்சந்தையானது பிள்ளைகளுக்கான மிதிவண்டி, பந்தய மிதிவண்டி அல்லது இரட்டையர் மிதிவண்டி என்று பிரிக்கப்பட்டுள்ளதா? மலைகளில் சவாரி செய்யப் பயன்படும் மிதிவண்டி போன்ற புதியபாணி மிதிவண்டி உற்பத்தியிலும் சில உற்பத்தியாளர் இலாபம் கருதி ஈடுபடக்கூடும்.
பலவிதமான மிதிவண்டிகளைச் செய்வது ஒரு புறமிருக்க இவற்றைச் செய்வதற்கு எத்தனையோ வழிகளும் இருக்கின்றன. இவ்வழிகள் மிக உயரிய தன்னியக்கமாகச் செயற்படும் (assembly line) ஒருங்கிணைத்தல் முறையிலிருந்து குறைந்தளவு இயந்திரங்களையும் கூடிய தொழிலாளரையும் ஈடுபடுத்தி உற்பத்திசெய்வது வரை வேறுபடுகின்றன. இப்பொருட்களை வாங்கி விற்கும் மக்களின் நடத்தைக்கு ஏற்ப உயர்ந்து பின் வீழ்ச்சியடையும் பல்வேறு விலைகளை ஒரு சந்தைப்பொருளாதாரத்தில் இவ்வுற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் தீர்மானம் மேற்கொள்ளும் போது கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது
உதாரணமாக, தனது உள்ளீடுகளுக்குக் கொடுக்கும் விலையானது மிதி வண்டிகளைச் செய்வதில் எவ்வளவு உருக்கு, அலுமீனியம், ஊழியம்,
27

Page 16
இயந்திரம் மற்றும் வேறுபொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும். உருக்கின் விலை உயர்ந்து, அலுமீனியத்தின் விலை விழுந்தால் உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவில் அலுமீனியத்தைப் பயன்படுத்தும் வழிகளை ஆராயும். அதேபோல ஊழியத்தின் விலை உயர்ந்தால் அதிக இயந்திரங்களைப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உதாரணமாகப் பொருட்களை ஏற்றி இறக்க நிறுவனம் கூடிய பாரந்தூக்கிகளைப் (forklifts) பயன்படுத்தலாம். அல்லது வெல்டிங் வேலைகளைச் செய்வதற்குக் கூடிய இயந்திரங்களையும் குறைந்த ஊழியத்தையும் பயன்படுத்தலாம். (இதன் விளைவாக மிதிவண்டி உற்பத்தியாளர் பயன்படுத்தும் வெல்டிங் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஊழியர்களின் எண்ணிக்கை உயரும்). இத்தகைய எந்தவொரு தொழில் முயற்சியும் தொழில்சார் அபாயத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதாவது ஒரு புதிய வகை மிதிவண்டி வாடிக்கையாளரைக் கவருவதற்குத் தவறலாம். அல்லது உற்பத்திச்செலவு எதிர்பாராத வகையில் அதிகரித்து நிறுவனம் சந்தையிலிருந்து வெளியே தள்ளப்படலாம். இந்த அபாயங்களை நிறுவனங்கள் மட்டுமே சுமக்கின்றன. திட்டம் வெற்றி பெற்றால் அதன் நன்மைகளையும் அனுபவிக்கின்றன.
ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் இத் தொழில்சார் அபாயங்களையும் இலாபங்களையும் சமநிலைப் படுத்துவதில் அதாவது தனியார் சொத்துரிமையைப் பாதுகாத்தல் (private property rights) ஒப்பந்தங்கள் தொடர்பான சட்டங்களைப் (Law of Contracts) பிரயோகித்தல் மூலம் அரசாங்கம் தனது பங்கினைச் செலுத்துகின்றது. சொத்துரிமைகள் திட்டவட்டமாகச் சட்டரீதியாக வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். வியாபார உரிமையாளர்களும், முதலீட்டாளர்களும் அவர்கள் பிரசைகள், வெளிநாட்டார் என்ற பேதமின்றிச் சட்டத்தினால் சமமாக நடத்தப்படல் வேண்டும். சொத்துரிமை என்பது அரசாங்கத்தினால் கையேற்கப்படும் அபாயத்திலிருந்து விலகியும், அரசியல் நலன்களின் சுரண்டலுக்கு உட்படாமலும் இருந்தால் மட்டுமே தனிநபர்களும், நிறுவனங்களும் புதிய வியாபார முயற்சிகளில் அல்லது விரிவாக்கலில் தமது பணத்தை முதலீடு செய்வார்கள். அதுமட்டுமல்லாமல் நாட்டின் சட்டமுறைமையானது ஒப்பந்தங்கள் தொடர்பான பிரச்சினைகள், பூசல்களை நியாயமாகவும் தளம்பல் இல்லாமலும் தீர்த்து வைக்கும் வல்லமையுடையது என்பதை அவர்களுக்கு உறுதி செய்யவும் வேண்டும்.
சுருங்கக் கூறினால் தொழின் முயற்சியாளர் (பிரசைகளோ அல்லது வெளிநாட்டவரோ) தமது முயற்சிகளில் பொருளாதாரத் தளம்பல்களுக்கு முகம் கொடுத்தே ஆகவேண்டும். ஆனால் தமது முயற்சிகளின் சட்டபூர்வம் தொடர்பாக எவ்வித சட்ட அல்லது அரசியற் தளம்பல்களுக்கு முகம் கொடுக்கக் கூடாது.
28

போட்டியும் உற்பத்தித்திறனும்
ஒரு நிறுவனம் திறமையாக உற்பத்தியை மேற்கொண்டு மற்ற நிறுவனங்களோடு போட்டியிடுவதில், நிறுவனத்தின் உள்ளீடுகளின் விலைகள் மாறும்போது தகுந்த பொருத்தப்பாடுகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது. தமது உற்பத்திச் செலவினங்களைக் கீழ்மட்டத்தில் வைத்திருக்க முடியாத நிறுவனங்கள் தமது உற்பத்திகளின் விலைகளைக் கூட்டுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றன. ஆனால் அது பயன் தராது. ஏனெனில் ஏனைய நிறுவனங்கள் அதே தரமான பொருட்களை மிகக் குறைவான செலவினங்களுடன் உற்பத்தி செய்து குறைந்த விலையில் விற்கவும் கூடும். இப்போட்டியில் நுகர்வோரே நன்மையடைகின்றனர். குறைந்த விலையில் சிறந்த பொருட்களை அவர்கள் நுகரமுடிகின்றது. அத்துடன் இத்தகைய போட்டிச் சந்தையில்தான் அவர்கள் தமது சகல பொருட்களையும் சேவைகளையும் கொள்வனவு செய்கிறார்கள் எனில், அவர்கள் தமது வருமானத்தைக் கொண்டுமென்மேலும் அதிக பொருட்கள் சேவைகளைக் கொள்வனவு செய்யமுடியும்.
எவ்வாறெனினும் போட்டிச் சந்தையிற் கூட சகல நிறுவனங்களும் ஒரே விதமான மூலப்பொருட்களையும், ஒரே விதமான உற்பத்திமுறைகளையும் மேற்கொள்ள மாட்டாது. இதனால் பலவகையான மிதிவண்டிகள் அல்லது வேறுபொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உதாரணமாக, பிள்ளைகளுக்கான அல்லது வளர்ந்தோருக்கான மிதிவண்டிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நியமமான மூலப்பொருட்களையும் ஒன்றிணைக்கும் (assembly line) உற்பத்திமுறையையும் பயன்படுத்தி ஒரேமாதிரியான மிதிவண்டிகளை வகை தொகையாக உற்பத்தி செய்து அவற்றைச் சந்தைப்படுத்தும். இது உற்பத்திச் செலவினங்களையும் விலைகளையும் கீழ் மட்டத்திலேயே வைத்திருக்கும். மறுதலையாகப் பந்தய மிதிவண்டிகள் போன்ற விசேடமான உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் அதிகளவிலான ஊழியம், விசேட வடிவமைப்பு, உபகரணங்கள் மற்றும் செலவு கூடிய உலோகம் ஆகியவற்றைப் பயன்படுத்தும். ஆனால் ஒரே விதமான பகுதிகளைச் செய்யும் ஒருங்கிணைக்கும் தொழில்கள் (assembly line) இயந்திரங்களைக் குறைவாகவே பயன்படுத்தும். எனவே பெரிய தொழிற்சாலைகளில் தொகையாக உற்பத்திசெய்யப்படும் மிதிவண்டிகளின் விலை கூடியனவாக இருப்பது இயல்பாகும்.
உண்மையில், ஒரு கருத்தியல் அடிப்படையில் சகலரும் தாம் வாங்கும் பொருட்களுக்குப் போட்டி இருக்கவேண்டும் என்று விரும்புவர். அதனால் அவற்றின் விலைகள் கீழ்மட்டத்தில் இருக்கும். ஆனால் தாம் வருமானம் பெறும் வழிகளுக்கு எவ்வித போட்டியும் இருக்கக் கூடாது. அப்பொழுதுதான் அவர்களது வேதனம் உயர்வாக இருக்கும். பொதுவாக ஒவ்வொருவரும் உயர்ந்த வேதனங்களையும் குறைந்த உற்பத்திச்
29

Page 17
செலவினங்களையும் (நிறுவனங்களின் உயரிய செலவினமான ஊழியர் செலவினங்கள் உட்பட) விரும்புகின்றன. ஏனெனில் அப்பொழுதுதான் அவர்களாற் கூடிய பொருட்கள் சேவையினைக் கொள்வனவு செய்ய முடியும். ஆனால் எவ்விதமான பொருளாதார முறைமையும் ஒரே நேரத்தில் உயர்ந்த வேதனத்தையும் குறைந்த விலைகளையும் வழங்க முடியாது. ஏனெனில் ஊழியர் வேதனம் உற்பத்திப்பொருளின் ஊழியச் செலவினத்தில் அடங்கியுள்ளது. வேறுவார்த்தைகளில் கூறினால் வேறு செலவினங்களும் கேள்வியும் மாறாதிருக்கும் போது, வேதனங்களை உயர்த்துதல் உற்பத்திச் செலவினங்களையும் உற்பத்திப்பொருளின் விலைகளையும் உயர்த்தி விடும்.
காலப்போக்கில் தொழிலாளர்களாலும் நிறுவனங்களாலும் இப்பிரச்சினையைத் (அதாவது விலைகளை உயர்த்தாமல் உயர்ந்த வேதனமும் இலாபமும் பெறுதலும் அதன்மூலம் வேலை இழப்பு, விற்பனையைப் போட்டி நிறுவனங்களிடம் இழக்கும் அபாயம்) தீர்க்க முடியும். எவ்வாறெனில் உற்பத்தித்திறனை உயர்த்துதல் அதாவது பொருட்கள் சேவைகளின் உற்பத்தியில் உள்ளிடுகளில் இருந்து ஒரு நிறுவனம் அடையும் வெளியீட்டு மட்டத்தை உயர்த்துதல். உற்பத்தித் திறனை உயர்த்த வேண்டுமெனில் தொழிலாளரும் நிறுவனங்களும் மிகக் குறைந்த விலையில், சிறந்த தரத்திற் புதிய பொருட்களைச் சந்தைக்கு வழங்க வேண்டும். அல்லது போட்டி நிறுவனத்தைவிட மிகத் திறமையாகப் பொருட்கள், சேவைகளை உற்பத்தி செய்ய வேண்டும்.
உயர்ந்த உற்பத்தி மட்டங்கள், உயர்ந்த வேதனங்களையும், உயர்ந்த வாழ்க்கைத் தரத்தையும் நியாயப்படுத்துகின்றன. உயர்ந்த உற்பத்தித்திறன் என்பது ஒரு ஊழியரின் வெளியீட்டை உயர்த்துகிறது. அது உயர்ந்த வேதனம், வாழ்க்கைத்தரம் ஆகியவற்றின் மூலம் அடையக்கூடிய செழிப்பை உறுதிப்படுத்துகின்றது. உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செலவினங்களைக் குறைப்பதோடு மிகத் திறமையுடன் உழைக்க வேண்டும். ஆனால் இன்றைய நவீன தொழின்முறையியல்சார் பொருளாதாரங்களில் ஆராய்ச்சி, புத் துரக்கம் என்பன நிரந்தர உற்பத்தித்திறன், நாட்டின் வளர்ச்சி மற்றும் உலகப்பொருளாதாரத்துக்கும் இன்றியமையாதவை. கணணி, தொலைத் தொடர்பு, உயிரியல்சார் பரம்பரை அலகியல் (biogenetics) ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் விஞ்ஞான ஆய்வுகள், பரிசோதனைகள், சோதனை செய்தல் ஆகியவற்றின் விளைவுகளாகும். இத்தகைய முன்னேற்றங்கள் ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் தொடர்ந்து ஏற்படுகின்றன. ஏனெனில் நிறுவனங்கள் புதிய பொருட்கள், சேவைகளை அபிவிருத்தி செய்ய முற்படுகின்றன. அல்லது ஏற்கனவே உள்ளவற்றை மிகத்திறமையாக உற்பத்திசெய்ய முற்படுகின்றன. இதன் விளைவாகப் புதிய தொழில்களும், சந்தர்ப்பங்களும் செழிப்பும் பெருகுகின்றன. காலப்போக்கில் இதுவே தொழிலாளர் மற்றும் தொழின் முயற்சியாளர்கள் தமது
30

நிலையை உயர்த்திக் கொள்ளவும் பொதுவாக நாட்டின் வாழ்க்கைத் தரம் உயரவும் வழிவகுக்கின்றது.
சர்வதேச வர்த்தகமும் உற்பத்தித்திறன், செழிப்பு ஆகியவற்றின் உயர்வு தொடர்பாக மிக முக்கியமான பங்காற்ற முடியும். உதாரணமாக ஒரு இயந்திர உபகரண உற்பத்தியாளன் தோடம்பழத்தின் விலை உயர்வு காரணமாகப், பகுதிநேரத் தோடம்பழ உற்பத்தியில் ஈடுபடுவதாகவும், தோடம்பழ உற்பத்தியாளன் பகுதிநேர இயந்திர உபகரண உற்பத்தியில் ஈடுபடுவதாகவும் வைத்துக் கொள்வோம். இருவரும் தமது இரண்டாவது தொழிலில் தமது முதன்மைத் தொழிலில் காட்டிய திறமையையும், தேர்ச்சியையும் காட்டமாட்டார்கள். இதன் விளைவு குறைந்தளவு, தரக் குறைவான தோடம்பழங்களும், இயந்திர உபகரணங்களுமாகும். இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் உண்மையாதெனின் தமக்குத் திறமையுள்ள பொருட்களை உற்பத்திசெய்து அவற்றை விற்றுத் தமக்குத் தேவையானவற்றை வாங்குவதன் மூலம் தனிப்பட்ட நபர்களைப் போலப் பிரதேசங்களும் நாடுகளும் கூட நன்மையடைய முடியும் என்பதாகும். இவ்வாறு பெறப்படும் நன்மைகள் சம்பந்தப்பட்ட நாடுகளின் மக்களைச் சென்றடைகின்றன.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீது தீர்வை விதித்தல் மற்றும் அவற்றின் தொகையைக் கட்டுப்படுத்தல் ஆகியவை பொதுவாகச் சுதந்திர வர்த்தகத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளாகும். இத்ன் மூலம் அந்நாடுகளில் தொழிலாளர் உயர்ந்த வேதனம் பெற முடியுமென்றும் உற்பத்தியாளர் உயர்ந்த இலாபத்தைப் பெறமுடியுமென்றும் இந்தப் பணத்தின் பெரும் பகுதி உள்நாட்டிலேயே செலவழிக்கப்படும் என்றும் வாதிடப்படுகின்றது. இதில் ஒரளவு உண்மை உள்ளதெனினும் இதில் இன்னொரு பக்கமும் உண்டு. அதாவது உற்பத்தியாளரையும், தொழிலாளரையும் பாதுகாக்கும் போது அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் சேவைகளின் விலைகளும் அதிகரிக்கும். இது நுகர்வோருக்கும், இப்ப்ொருட்களை உள்ளீடுகளாகப் பயன்படுத்தும் உற்பத்தியாளர் களுக்கும் , விற்பனை வீழ்ச்சிகண்டுள்ள நிறுவனங்களுக்கும் சாதகமானதல்ல. ஏனெனில் பாதுகாக்கப்பட்ட பொருட்களுக்கு வாடிக்கையாளர் கூடிய விலைகளைக் கொடுக்கவேண்டியுள்ளது.
31

Page 18
உற்பத்தித்திறன் உயர்ந்த வாழ்க்கைத்தரத்துக்கான திறவுகோல்
ஒரு நாட்டின் பெளதீக வாழ்க்கைத்தரமானது அந்நாட்டின் மக்கள் உற்பத்தி செய்து நுகரும் பொருட்கள் சேவைகளினால் தீர்மானிப்படுகின்றது. இதனால்தான் ஒருநாட்டின் ஊழிய உற்பத்தித்திறனின் அடிப்படை அளவுகள் (பொருட்கள் சேவைகளின் தலாவீத ஊழியர் வெளியீடு) மிக முக்கியமானவை. அதாவது இந்த அளவுகள் உயரும் வேகத்துக்கு ஏற்பவே பெளதீக வாழ்க்கைத்தரமும் உயர்வடையும். கடந்த அரைநூற்றாண்டு களாகச் சில முக்கிய கைத்தொழில் நாடுகளின் வருடாந்த உற்பத்தித்திறன் வளர்ச்சி வீதத்தைக் கீழே தரப்படும் அட்டவணையில் காணலாம். இதிலுள்ள மதிப்பீடுகள் முதற்பார்வையில் மிகக் குறைவாகத் தோன்றலாம். ஆனால் நீண்ட காலக் கண்ணோட்டத்தில் இதில் காட்டப்பட்டுள்ள வித்தியாசங்கள் முக்கியமானவை. உதாரணமாக ஒரு 3 வீத வருடாந்த நிலைநிற்கும் வளர்ச்சி விதமானது சுமார் 24 ஆண்டுகளில் நுகர்வோரின் பொருட்கள் சேவைகளை இரட்டிப்பாக்கும். அதேவேளை 2 வீத வளர்ச்சி இதனைச் சாதிக்க 36 வருடங்களையும் 4 வீத வளர்ச்சி 18 வருடங்களையும் எடுக்கும். இவ்வித்தியாசங்கள் நாட்டுக்கு நிாடு வித்தியாசப்படும் அடிப்படையில் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமே. கடந்த தசாப்தங்களில் ஐக்கிய அமெரிக்காவின் உற்பத்தித்திறன் குறிப்பிடக்கூடிய அளவுக்கு வளர்ச்சியடைய வில்லை. ஆனால் அதன் வாழ்க்கைத் தரம் ஏனைய நாடுகளைவிட உயர்ந்திருந்தது. உண்மையில் என்ன நடக்கிறதெனில் ஏனைய நாடுகள் சீக்கிரம் வளர்ந்து ஐக்கிய அமெரிக்காவின் மொத்த உற்பத்தித்திறன் மட்டங்களை அடைந்து வருகின்றன. இந்த நிலைமை சாதாரணமானது அல்ல.
கடந்த நூற்றாண்டுகளில் பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளின் உற்பத்தித்திறனும் வாழ்க்கைத்தரமும் உயர்வடைந்த அதேவேளையில் ஐக்கிய அமெரிக்காவும் செல்வந்த நாடுகளுள் ஒன்றாக வளர்ச்சியடைந்தது. பொதுவாக வறியநாடுகள் செல்வந்த நாடுகளின் தரத்தை அவற்றின் உற்பத்தியையும், தொழில் நுட்பத்தையும் பின்பற்றுவதன் மூலம் அடைந்து விடமுடியும். சிலவேளை குறைந்த ஊழியச் செலவினம், வினைத்திறன் மிக்க உற்பத்தி முறைகளைக் கையாண்டு அதிக இலாபமீட்டி இந்நாடுகளை மிஞ்சிவிட முடியும். சில தசாப்தங்களில் இந்த உற்பத்தித்திறனைச் சில விசேட சந்தர்ப்பங்கள் பாதிக்கலாம். உதாரணமாக 1950களில்இந்த அட்டவணையிலுள்ள பலநாடுகள்
32

2ஆம் உலக யுத்தத்தின் பின் பாரிய அழிவிலிருந்து தம்மை மீட்டுக் கொள்ள மிக வேகமான நிர்மாணப் பணிகளில் மூழ்கியிருந்தன. ஆனால் இந்தத் துரிதவளர்ச்சி சகல நாடுகளிலும் இருக்கவில்லை. 1973 இன் பின்னர் உற்பத்தித்திறன் வளர்ச்சி வீதங்கள் குறைவடைந்தமைக்கான காரணங்கள் பல உள்ளன. இவற்றில் 1973 - 1979 ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஏற்பட்ட நிலநெய்விலை உயர்வு, அதனை அடிப்படையாகக் கொண்ட தொழிற் சாலைகளையும் தொழில் நுட்பத்தையும் வெகுவாகப் பாதித்தது. 1970 களில் இந்நாடுகளில் பெண்களும், இளம் பராயத்தினரும் என்றுமில்லாத அளவுக்குத் தொழில் தேடத்தொடங்கினர். இவர்களுக்கு எவ்வித தொழில்அனுபவமும் இருக்கவில்லை. எனவே இவ்விரு குழுவினருடைய உற்பத்தித்திறனும், வளர்ச்சிவீதமும் வீழ்ச்சியடைந்தன.
உற்பத்தித்திறனைத் (productutu) துரிதமாக வளர்க்கச் செய்ய வேண்டியதென்ன என்பதே விடைகாண வேண்டிய மிகமுக்கியமான கேள்வியாகும். ஆய்வாளர்கள் இதற்குச்செய்ய வேண்டிய பல்வேறு விடங்களை இனங்கண்டுள்ளனர். சிறந்த கல்வியிலும், ஊழியர் பயிற்சிகளிலும் மூலதன உபகரணங்களிலும் முதலீடு செய்து வெளியீட்டையும் வினைத்திறனையும் வளர்த்தல் முக்கியமானது. ஆனால் வரலாற்றுரீதியாக இந்நூற்றாண்டில் உற்பத்தித்திறன் மட்டத்தை உயர்த்திய காரணி தொழின் முறையியலில் ஏற்பட்ட புத்துக்கமாகும். இத்தகைய சாதனைகள் ஏற்படக் காரணமாயமைந்தவை தனியார் மற்றும் பொதுத்துறை ஆய்வு, அபிவிருத்திக் கருமங்களில் செய்த செலவினங்களும், புதிய கண்டுபிடிப்புக்களை ஆய்வுகூடத்திலிருந்து தொழிற்சாலைகளுக்குக் கொண்டு வருவதற்காகச் செய்யப்பட்ட முதலீடுகளுமே. எனவே உற்பத்தித்திறனில் வளர்ச்சி ஏற்படத் தொழில்நுட்ப ஆய்வுகளை முதலீட்டுச் செலவினங்களும், தனிப்பட்ட சேமிப்புக்களும் ஆதரிக்க வேண்டியது முக்கியமானதாகும். எனினும் இத்தகைய செலவினங்கள் கடந்த 100-150 ஆண்டு காலமாகப் புதிய உற்பத்திகள் கைத்தொழில்களுக்கு வழிவகுத்த புரட்சிகரமான வெற்றிகளைப் போன்ற புதிய வெற்றிகளை உத்தரவாதம் செய்து விடமாட்டா, கார்கள், விமானங்கள், தொலைபேசிகள், கணணிகள் போன்றவை அத்தகைய வெற்றிகளாகும். எனினும் இன்றும் கூட, புதிய கண்டு பிடிப்புக்களுக்கு வழிவகுத்து அவற்றை உற்பத்திக் கருமங்களில் ஈடுபடுத்திக் கொள்ளும் பொருளாதார முறைமைகள் உலகளாவிய உற்பத்தித்திறன் முறைப்போட்டியில் முன்னணியில் திகழ்கின்றன.
33

Page 19
அட்டவணை 1 : (தலா ஊழியர் - மணித்தியாலத்தில்) தயாரிப்பு
வெளியீட்டின் சராசரி வருடாந்த வளர்ச்சி வீதங்கள்.
நாடு 1950-60 1960-73 1973-79 1979-86
ஐக்கிய அமெரிக்கா 2.0 3.2 1.4 3.1 356ft 3.8 4.5 2.1 1.4 ஜப்பான் 9.5 10.3 5.5 5.6 பெல்ஜியம் N.A 6.9 6.2 5.3 டென்மாாக் 2.8 6.4 4.2 3.6 பிரான்ஸ் 2.8 6.5 5.0 1.3 ஜேர்மணி 7.4 5.8 4.3 2.8 இத்தாலி 5.7 7.3 3.3 3.3 நெதர்லாந்து 4. 7.4 5.5 4.4 நோர்வே 3.4 4.3 2.1 1.9 சுவீடன் 3.4 6.4 2.6 3.0 ஐக்கிய இராச்சியம் 2.1 4.3 1.1 4.4
а 1979 - 85
N.A is not available
Source : International comparisions of manufacturing productivity and Labor cost Trends. 1986, U.S. Department of labor publication, 87-237.
V
சந்தைப் பொருளாதாரத்தில் தொழிலாளர்
கைத்தொழில் மயப்படுத்தலில் சமமான மட்டத்தைப் பெற்றுள்ள ஒரு சந்தைப் பொருளாதாரத்திலும் திட்டமிட்ட பொருளாதாரத்திலும் தொழிலாளர்கள் வேலை கொள்வதில் எவ்விதவேறுபாடும் காணப்படுவதில்லை. ஆனால் இவ்வாறான வெளித்தோற்றங்களின் பின்னால் பல வேறுபாடுகள் மறைந்துள்ளன.
தெரிவுகள் (Choices)
உதாரணமாக நாம் முன்னர் குறிப்பிட்ட தோடம்பழம் வாங்கச் சென்ற குடும்பத்தை எடுத்துக் கொள்வோம். தோடம்பழத்தின் விலையேற்றம் காரணமாக அவர்கள் அப்பிள்கள் சிலவற்றையும் வாங்கி வந்தனர். இரவு
34

உணவுக்குப் பின்னர் றொபர்ட்டும் மரியாவும் (இயந்திர இயக்குனர் - பாடசாலை ஆசிரியை) தமது தொழில் பற்றி உரையாடுகிறார்கள். இது வழமையாக நடைபெறுவதில்லை. ஆனால் ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் தொழிலாளர் தமது தொழில் குறித்து மிக முக்கியமான முடிவுகளைச் சிலவேளைகளில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் இத்தீர்மானங்களை அவர்களேதான் மேற்கொள்ள வேண்டும். அவர்கள் எங்கு, எவ்வளவு சம்பளத்துக்கு வேலை செய்யவேண்டுமெனத் தீர்மானம் மேற்கொள்வதற்கான ஒரு மத்திய திட்டமிடற் குழு சந்தைப் பொருளாதாரத்தில் இல்லை. றொபர்ட் ஒரு இயந்திர இயக்குனர் என்ற அளவில் தனது வாய்ப்புக்கள் குறைவானவை என்பதை உணர்ந்து கணணிப் பயிற்சியைப் பெறுவதன்மூலம் பரந்த வாய்ப்புகளைப் பெறமுடியும் என ஆலோசிக்கிறான். மரியா ஆசிரியையாகக் காலம் கழிப்பதை விடப் பாடசாலையில் ஒரு நிர்வாகப் பதவிமுலம் தனக்குக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு எனச் சிந்திக்கிறாள்.
இவ்வாறான தீர்மானங்களை ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்கின்றனர். இத்தீர்மானங்கள் தனிப்பட்ட மற்றும் பொருளாதாரம் சார்ந்த பல காரணிகளில் தங்கியுள்ளன. உதாரணமாகப் பிள்ளைகள் உள்ள மத்தியதர வர்க்கத்தினரும், கல்லூரியிலிருந்து தற்போதுதான் வெளியேறிய மாணவரும் ஓய்வுபெறும் வயதை அடையப்போவோரும் மேற்கொள்ளும் தீர்மானங்கள் முற்றிலும் வேறுபட்டவை. மரியாவைப்பொறுத்தவரையில் வகுப்பறைக் கற்பித்தலில் கிடைக்கும் திருப்தியை உயர்ந்த சம்பளத்துக்காக மட்டும் தியாசிப் செய்கிறார் என்றில்லை. அங்கு ஒரு நிர்வாகப் பதவியுடன் இணைந்துள் நெருக்கடியும், நீண்ட நேர வேலையும் கூடச் சம்பந்தப்பட்டுள்ளன்' றொபர்ட்டைப் பொறுத்தவரையில் நிறையச் சம்பளமும் வாய்ப்புக்களு; கிடைக்கும் நம்பிக்கையுடன் புதிய திறன்களைப் பெறுவதற்காக திரும்பவும் கல்லூரிக்கு அல்லது வேறு பயிற்சி நிலையங்களுக்கு செல்லத்தான் வேண்டுமா என்ற பிரச்சினை உள்ளது. அவரைம் பொறுத்தவரையிற் பொருளாதார அடிப்படையில் இது ஒரு சிறந்தி முதலீடாகுமா என்பது பல்வேறு காரணிகளில் தங்கியுள்ளது. அவையாவன:
(1) மேலதிகக் கல்வித்தகமை, பயிற்சி இல்லாமல் அவரது வருமானம் எவ்வளவு? கல்லூரிக்கு அல்லது தொழிற்பயிற்சிக்குச்செல்வதால் தனது வருமானத்தின் பெரும் பகுதியை அவர் செலவழிக்க வேண்டும்.
(2) இந்த மேற்படிப்பு மற்றும் கணணிப் பயிற்சிக்கு அவரது செலவினங்கள் எவ்வாறு உயர்வாக இருக்கும் . இச் செலவினங்கள் மிக அதிகமாக இருக்கும்போது இவ்வாறான
35

Page 20
தனிப்பட்ட முதலீட்டு வருமானம் மிகக் குறைவாகவே இருக்கும். எனவே இதில் சேர் பவர்களின் எண்ணிக்கையும் குறைவானதாகவே இருக்கும்.
(3) தொழில்வாய்ப்புக்களுடன் ஒப்பிடும்போது இந்தக் கல்வி அல்லது பயிற்சிமுற்றுப் பெற எவ்வளவு காலம் எடுக்கும். ஒரு பல்கலைக் கழகத்தில் பட்டதாரிக் கல்விநெறியை விட ஒரு ஆறுமாதகால குறுகிய பயிற்சிநெறி அவருக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும்.
(4) வயதும் ஒரு முக்கிய காரணி. இளைஞர்கள் தமது தொழில் இழப்பின் மூலம் இழந்த வருமான்த்தையும் படிப்பு செலவினங்களையும் தேடிக் கொள்ள நீண்ட காலத்தைக் கொண்டுள்ளனர்.
(5) கணணிப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த பின்னர் எவ்வளவு வருமானம் கிடைக்கும். இப்போது கிடைக்கும் சம்பளத்தைவிட எவ்வளவு அதிகமாகக் கிடைக்கும் என்பதைப் பொறுத்துத்தான் அவர் தனது பயிற்சியில் சேர்வதைப் பற்றித் தீவிரமாகச் சிந்திப்பார்.
(6) பயிற்சி முடிந்தபின்னர் தொழிலைப் பெறும் வாய்ப்புக்கள்
எவ்வளவு அதிகமாக உள்ளன.
இக் காரணிகள் ஒருவருக்கொருவர் மிகவும் வேறுபடுகின்றன. இதனால்தான் ஒவ்வொருவரும் தமது வருமான உயர்வுக்காக மேலதிக கல்வி அல்லது பயிற்சியைப் பெற விரும்புவதில்லை. சிலருக்கு பெறப்போகும் வருமானத்தை விடச் செலவினங்கள் மிக அதிகம். சிலருக்கு இவை மிகவும் சிறந்த முதலீடுகள்.
றொபர்ட் மரியாவைப் போலவே பலருக்கு இத்தீர்மானங்கள் பணவிடயம் தவிர்ந்த பல்வேறு விடயங்களில் தங்கியுள்ளன. புதிய முதலீடுகள் பற்றிச் சிந்திக்கும் நிறுவனங்களைப் போலவே ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் ஊழியர்களும் மேலதிக கல்வி, பயிற்சியைப் பெறுவதில் செலவினங்கள் மற்றும் தொழில்சார் அபாயங்களை எதிர்நோக்குகின்றனர். இத்தகைய முதலீடுகள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன் அளிப்பதில்லை. ஏனெனில் எல்லாரும் கல்லூரிகளில் தமது கல்வியை வெற்றிகரமாக முடிப்பதில்லை. முடித்தவர்கள் தொழில் பெறுவதில்லை. சிலருக்குச் சம்பளம் குறைவாக இருந்தாலும் பாதுகாப்பானதொழில்தேவை. அவர்களுக்குத் தமது சொந்த விடயங்களிலும் குடும்ப வேலைகளிலும் ஈடுபட நிறைய நேரம் கிடைப்பது முக்கியமானது. எனினும் மேலதிகக் கல்வி, பயிற்சிகளை மேற்கொள்வது சிறந்தது. கடந்த சில தசாப்தங்களாகப் பொருளாதாரம் தொழில் முறை
36

சார்ந்து சிக்கலடைவதினால் இவ்வாறு கல்வி மற்றும் மேலதிக பயிற்சிகளை விரும்புவோர் தொகை அதிகரித்து வருகின்றது.
ஊழியரும் தொழில் வழங்குநர்களும்
றொபர்ட் - மரியா உதாரணத்தைப் போன்று இலட்சக்கணக்கான ஊழியர்கள் சந்தைப் பொருளாதாரம் தொடர்பான மேலும் ஓர் உண்மையைச் சுட்டிநிற்கிறார்கள். அதாவது ஒரு மத்திய திட்டமிடற்குழு இல்லாமலேயே ஊழியர்களும், தொழில் வழங்குநர்களும் சுதந்திரமான தீர்மானங்கள் மூலம் தமது தொடர்புகளைத் தீர்மானித்துக்கொள்கிறார்கள். இதன் பொருள் இவ்விருசாரரும் எப்போதும் சம பங்காளிகளாகத் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள் என்பதோ ஊழியர்கள் தமது தொழில் மற்றும் வேதனங்கள் பற்றி மிகவும் திருப்தியாக உள்ளனர் என்பதோ அல்ல. மாறாக அவர்கள் தமது தொடர்புகளை ஆரம்பிக்கவும், மாற்றிக் கொள்ளவும், முறித்துக் கொள்ளவும் நிறையச் சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதாகும். இதிலிருந்து ஒரு முக்கிய கேள்வி எழுகின்றது. ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் இவர்களை இணைத்து வைத்திருப்பது அல்லது தமது தொடர்புகளை மாற்றிக்கொள்ள உதவுவது எது என்பதே.
றொபர்ட் - மரியா கதையைப்போலச் சந்தைப்பொருளாதாரத்தில் ஒருவரின் தொழிலானது அவரது ஈடுபாடு, பயிற்சி மற்றும் திறன்களில் தங்கியுள்ளது. மக்கள் எத்தகைய தொழிலையும் தெரிவு செய்யச் சுதந்திரம் உள்ளவர்கள். ஆனால் அடிப்படைத் தொழில் நியமங்களைப் பூர்த்தி செய்யக் கூடிய ஊழியர்கள் மட்டுமே தமது தொழிலில் தாக்குப்பிடிக்கக்கூடியவர்களாவர். ஒரு போட்டிச்சந்தையில் நிறுவனங்கள் தமது தொழிலைச்செய்ய இயலாத அல்லது விரும்பாத ஊழியர்களை வைத்துக் கொள்ளமாட்டாது. அதேபோலத் தனது பொருட்கள் சேவைகள் உற்பத்தியிற் பெரிதும் உதவியாக இருக்கும் ஊழியர்களை இழக்கவும் விரும்பமாட்டா.
தமது ஊழியர்களைத் தொடர்ந்தும் வைத்துக் கொள்ள நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக உயர்ந்த வேதனங்கள் மற்றும் சலுகைகளை வழங்கவேண்டும். தொழிற் சந்தைகளில் ஊழியர் நல்ல தொழில்களைத் தேடுவதும் நிறுவனங்கள் நல்ல ஊழியர்களைத் தேடுவதும் நிரந்தரமாக நடக்கும் போட்டியாகும். ஒரு நிறுவனம் வழங்கும் சம்பள விகிதங்கள், ஊழியர்களின் தொழிற்றிறன், இத்திறன்களைக் கொண்ட ஊழியர்களின் அருமை அல்லது மிகை ஆகிய காரணிகளில் தங்கியுள்ளது. பொதுவாகக் கூறுமிடத்து ஒரு சிலரால் மாத்திரமே செய்யக்கூடிய திறன்களைக் கொண்ட ஊழியர், அதிக வேதனத்தைக் கோரக் கூடிய நிலையிலிருப்பர். இத்தகைய அருமையைப் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. உதாரணமாக, அபாயகரமான அல்லது மகிழ்ச்சியற்ற
37

Page 21
சூழ்நிலைகளில் தொழில் புரிபவர்கள் கூடிய ஊதியத்தையும் பெறுவார்கள். ஏனெனில் இச்சூழ்நிலைகளில் வேலை செய்ய எல்லாரும் விரும்புவதில்லை. அதேபோல சுரங்கத் தொழிலாளர், உயர்ந்த கட்டிடங்களைக் கட்டும் உருக்கு வேலை செய்பவர்கள் முறையே குமாஸ்தாக்கள், கட்டிட அடித்தளம் அகழ்பவர்களைவிடக் கூடிய வருமானத்தைப் பெறுகிறார்கள்.
கல்வியும் பயிற்சியும்
அதிக பயிற்சியும் கல்வியும் தேவைப்படும் தொழில்களுக்கு உயர்ந்த சம்பளங்களும் உண்டு. ஏனெனில் இத்தொழில்களைப் பெறும் திறன்களை அடையப் பல ஆண்டுக்கால வேலை நேரத்தை இவ் ஊழியர்கள் இழக்கிறார்கள். அத்துடன் உயர்ந்த நுண்மதியும் கடின உழைப்பும் இல்லாது இக்கல்வியைப் பூர்த்தி செய்யவும் முடியாது. இக்காரணங் களினால்தான் சந்தைப் பொருளாதாரத்தில் பொறியியலாளர்கள், கட்டிடக் கலைஞர்கள் போன்றோர் கூடிய சம்பளங்களைப் பெறுகிறார்கள். பயிற்சி, கல்வி, முயற்சி போன்றவை வருமானத்தைப் பாதிக்கும் காரணிகளாகும். ஆனால் மிக முக்கியமானதொரு காரணி ஒரு குறிப்பிட்டதிறனுக்கு அல்லது தொழிலுக்குச் சமூகத்திலுள்ள கேள்வியாகும். ஒரு ஆசாரி அல்லது மோட்டார் பழுதுபார்ப்பவரை விட ஒரு குழாய் திருத்துபவன் அல்லது மின்னியல் வல்லுனருக்கு அதிக வருமானம் உண்டு. ஆனால் அலுமாரி செய்யும் ஆசாரி அல்லது சிறந்த மோட்டார் பழுதுபார்ப்பவர் மிக அதிகமாக வருமானம் தேடக் கூடியநிலையும் உண்டு.
தொழிற்சந்தையில் இந்நிலைமைகளைக் காட்டும் நிரம்பல் ஒரே விதமாகத்தான் செயற்படுகின்றது. உதாரணமாகப் பல சந்தர்ப்பங்களாகப் பல்கலைக்கழகங்களில் மொழி, மெய்யியல் பயிற்றும் பேராசிரியர்கள், பொறியியல் விஞ்ஞானம் பயிற்றும் பேராசிரியர்களை விடக் குறைவாகவே சம்பளம் பெறுகின்றனர். சில்லறைக் கடைகளில் வேலை செய்யும் குமாஸ்தாக்களின் எண்ணிக்கை, திறன் மிகுந்த ஊழியர்களைவிட அதிகமாகவே காணப்படுகின்றது. இத்தகைய தொழில்களுக்கான கேள்வி குறைவாகவும் நிரம்பல் அதிகமாகவும் காணப்படுவது தான் இதன் காரணமாகும்.
விலைகளும் ஊழியங்களும்
கல்வி, பயிற்சி தொடர்பாக ஊழியர்கள் மேற்கொள்ளும் தீர்மானங்கள், ஊழியவிகிதம் போன்ற பல்வேறு விலைக்காரணிகளின் தாக்கத்தைக் கொண்டிருக்கின்றன. மறுதலையாக ஊழியத்துக்கான இவ்விலைகள் இவ் ஊழியர்கள் ஈடுபட்டுள்ள பொருட்கள் சேவைகளின் கேள்வியினால் பாதிப்புறுகின்றன. இதன் விளைவாக நுகர்வோர் பொருட்கள் சேவைகளின் விலைகள் மாற்றமடையும் போது தொழிலாளர்களுக்கான
38

ஊழியங்களும் உயர்ந்து வீழ்ச்சி அடைகின்றன. உதாரணமாக இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் குதிரை வண்டிகளுக்குப் பதிலாக மோட்டார் வண்டிகள் பயன்பாட்டுக்கு வந்தபோது கம்மாளர்களின் ஊதியம் வீழ்ச்சியடைந்த அதேநேரத்தில் மோட்டார் பழுதுபார்ப்பவர்களின் ஊதியம் உயர்வடைந்தது.
இதேபோல் கடந்த சில ஆண்டுகளில் நுணுக்கமான தொழின் முறையியல் சார்ந்த முறைகளை நிறுவனங்கள் பின்பற்றும் காரணத்தினால் கல்லூரிப் பட்டங்களைக் கொண்டுள்ள ஊழியர்களுக்கான கேள்வி வெகுவாக அதிகரித்துள்ளது. கணணிப் பயிற்சியாளர்களுக்குக் கூடிய கேள்வியும் தொடர்ந்து கூடியவேதனங்களும் உள்ள காரணத்தினால்தான் றொபர்ட் கணணிப் பயிற்சியை மேற்கொள்ள எண்ணினார். மொத்தக் கேள்வியை நிர்ணயிப்பதிற் சர்வதேச வர்த்தகமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. வெளிநாட்டுச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது கைத்தொழில் நிறுவனங்கள் பரந்த வேலை வாய்ப்புக் களையும் தொழில் முன்னேற்றங்களையும் வழங்குகின்றன.
கேள்வி கூடிய தொழில்களுக்குப் பயிற்சிபெறும் ஊழியர்கள் தமது தீர்க்கதரிசனம் காரணமாக அதிக நன்மைகளை அடைவார்கள். மரபுரீதியான திறன்களை மாத்திரம் நம்பிக் காலப்போக்கில் வீழ்ச்சியடையப் போகும் தொழில்களைக் கட்டிக் கொண்டிருப்பவர்கள் விரக்தியடைவது மட்டுமல்லாமல் தமது தொழில்களை இழக்கவும் கூடும். அவர்களுக்குத் தாம் சார்ந்துள்ள நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது அரசாங்கத்தின் மூலமாகவோ தொழிற்பயிற்சி தேவை. ஆனால் இதுவும் கூட ஊக்குவிப்புக்களில் தங்கியுள்ளது. இவ்வூக்குவிப்புக்கள் நுகர்வோர் வேண்டும் பொருட்கள் சேவைகளில் வளங்களைக் குறிப்பாக ஊழியர் வளங்களைத் திருப்பி விடுகின்றன. கேள்வி குறைந்தவற்றிலிருந்து வளங்களை அகற்றி விடுகின்றன. ஊழியம் மற்றும் ஏனைய வளங்கள் ஏன் சந்தைப் பொருளாதாரத்தில் ஆக்கபூர்வமாக உள்ளன என்பதன் அடிப்படைக் காரணம் நுகர்வோரின் தேவைகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம்தான். செழிப்படைய வேண்டுமெனில் மக்களுக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதுதான் நமக்குக் கிடைக்கும் தெளிவான பாடமாகும்.
39

Page 22
வேலையின்மையும் சந்தைப் பொருளாதாரத்துக்கான
நிலைமாற்றமும்
சகல சந்தைப் பொருளாதாரங்களும் எப்பொழுதாவது வேலையின்மைப் பிரச்சினைக்கு முகம் கொடுத்தே ஆகவேண்டும். ஆனால் மத்திய கட்டுப்பாட்டிலிருந்து விலகிச் சந்தைப் பொருளாதாரத்துக்கு மாறுகின்ற பொருளாதாரங்களில் இப்பிரச்சினை மிகவும் மோசமாகலாம். விலை மீதான அரசாங்கக் கட்டுப்பாடுகளை நீக்குதலானது கேள்வி-நிரம்பல் சக்திகளைச் சுதந்திரமாக இயங்கச் செய்யும். ஆனால் அதுவே குறுங்காலத்தில் வேலையின்மையை ஏற்படுத்தும்.
விலைக்கட்டுப்பாட்டின் நீக்கத்துக்குப்பின்னர் நுகர்வோர் கேள்வியே விற்பனைக்கு வரக்கூடிய பொருட்களைத் தீர்மானிக்கின்றது. பொருளாதாரத்தில் போட்டித்தன்மை வலுவடையும்போது வினைத்திறனற்ற தொழின்முயற்சிகள் மூடப்படுகின்றன. அல்லது அவை தமது தொழிலாளர் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. இதன் விளைவாகத் தொழிலின்மை அதிகரிக்கின்றது. அரசாங்கி மானியம் இல்லாத நிலையில் பல தொழின்முயற்சிகள் குறிப்பாக அரச கூட்டுத்தாபனங்கள் இப் புதிய பொருளாதார உலகத்தில் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. ஆனால் வேலையின்மை ஏற்படுத்தும் சிரமங்களுடன் நன்மைகளும் ஏற்படுகின்றன. அதாவது விலைக்கட்டுப்பாடுகளின் நீக்கமும்தனிப்பட்ட சொத்துரிமைகளைத் ஸ்தாபித்தலும் சமூகத்தின் பொருளாதார அடிப்படைகளாக மாறுகின்றன. தொழின்முயற்சியாளர்கள் புதிய சந்தர்ப்பங்களைக் கண்ணுற்று ஊழியர்களை வேலைக்கமர்த்திப் புதிய பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்கின்றனர். உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக ஸ்தாபனங்கள் புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புக்களைத் தேடுகின்றன. இதனால் வேலை வாய்ப்புக்கள் அதிகரிப்பது மாத்திரமல்லாது தொழின் முயற்சிகளின் பல்லினத்தன்மை அதிகரித்து ஊழியர்களுக்கான தெரிவுகளும் அதிகரிக்கின்றன.
பல சந்தர்ப்பங்களில் ஊழியனுக்கும் தொழின்முயற்சியாளனுக்கு மிடையிலுள்ள வேறுபாடுகளும் குறைகின்றன. ஏனெனில் ஒரு நிறுவனத்தில் தனது திறன்களை வார்த்துக் கொள்ளும் ஓர் ஊழியர் பின்னர் விலகிச் சென்று தனது சொந்தக் கம்பனியை ஆரம்பித்து அதே பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்க முனைகிறார். எனவே காலப்போக்கில் ஒரு நெகிழ்ச்சியும்,
40

வளர்ச்சியும் கொண்ட சந்தைப் பொருளாதாரத்தில் வேலையின்மையின் விகிதம் வீழ்ச்சியடைகின்றது.
ஆனால் வேலையின்மை முற்றாக மறைவதில்லை. மிகச் சீராக அமைக்கப்பட்ட செழிப்பு நிறைந்த சந்தைப் பொருளாதாரங்களிலும் கூட வேலையின்மை முற்றாக மறைவதில்லை. ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் ஊழியர்கள் எப்பொழுதும் தமது தொழிலை மாற்றிக்கொள்ள விரும்புகின்றனர். புதிதாகத் தொழிற் சந்தைக்குள் புகுந்த ஊழியரும் தமது முதற் தொழிலை எதிர்பார்த்துக் கொண்டிருப்பர். இது சிறந்த ஊதியத்துக்காகவும் தொழிலில் திருப்தி கருதியும் ஒரு வேலையை விட்டு இன்னொரு வேலைக்குச் செல்லும் ஊழியரின் சுதந்திரத்தைப் பிரதிபலிப்பதாக இது அமைகின்றது. இவ்வாறு தொழிலாளருக்கு மாறும் உரிமை இல்லாதுவிடின் (அதன் விளைவு வேலையின்மையாக இருப்பினும்) போட்டியும் உற்பத்தியும் குறைகின்றன.
இவ்வாறு தற்காலிகமாக வேலையற்றிருக்கும் ஊழியர் எப்போதும் அவ்வாறு இருப்பதில்லை. இவர்கள் தாமாகவே தொழிலை மாற்றிக் கொள்வதாலும், பயிற்சிகளில் பங்கெடுப்பதாலும் ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பிரச்சினையாக இது அமைவதில்லை. நடைமுறையில் இயங்குகின்ற தொழிற்படையையுடைய எந்தவொரு நாட்டிலும் தொழிற்படையின் ஒரு பகுதி எப்பொழுதும் தற்காலிகமாக வேலையற்றிருக்கும். எனவே பொருளியலாளார்கள் இத்தகைய பொருளாதாரங்களை நிறைந்த தொழில் வாய்ப்புக் கொண்டவையாகவே கருதுவர். சுழல்வேலையின்மையும், அமைப்பு G61606 ufolitódupuyth (Cyclical and structural unemployment) ஆகிய இருவகையான தொழிலின்மையும் சாதாரணமானவை அல்ல. ஒரு பொருளாதாரத்தின் செலவீடுகளும், உற்பத்தியும் வீழ்ச்சியடையும்போது சுழல்வேலையின்மை ஏற்படுகின்றது. இச் சந்தர்ப்பத்தில் நாடுகள் பொருளாதாரப் பின்னடைவு , மந்தம் ஆகியவற்றுக்கு உள்ளாகின்றன. இத்தகைய பாரதூரமான நிலையை உயர்வேலையின்மை வீதம் காட்டும். உதாரணமாக, உலகப் பெருமந்தத்தின் போது ஐரோப்பாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் தொழிற்படையின் 25 வீதம் வேலையற்று இருந்தது. இத்தகைய வேலையின்மையைத் தாக்குப் பிடிக்கக் கூடியதாகவே ஒரு நாட்டின் பணம் மற்றும் நிதிக் கொள்கைகள் வடிவமைக்கப்படல் வேண்டும்.
அமைப்பு வேலையின்மை என்பது இன்றைய பொருளாதாரத்தில் தமது தொழில்நிலைத்திருக்கத் தேவையான கல்விப் பயிற்சி மற்றும்
41

Page 23
தொழில் அனுபவங்களைக் கொண்டிராத ஊழியர்களையே பெரிதும் பாதிக்கின்றது. அநேகமான தொழில்கள் உயர் மட்டத் திறன்களையும், தொழில்நுட்பக் கைநூல்களிலிருந்தும், குறுகியகாலப் பயிற்சிகளிலிருந்தும் புதிய தொழில்நுட்பங்களைக் கற்கும் திறமைகளையும் வேண்டிநிற்கின்றன. அமைப்பு வேலையின்மையானது ஒரு பொருளாதாரத்தின் தொழிலாளரில் ஒரு சிறு வீதத்தையே பாதித்தாலும் இப்பிரச்சினையைச் சமாளிப்பது சிரமமானதாகவும் செலவு மிக்கதாகவும் இருக்கலாம். ஒரு நாட்டின் கல்விமுறை பொருளாதார வளர்ச்சிக்கு ஏன் மிகவும் முக்கியமானது என்பதை இது மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றது.
வேலையின்மையின் சமூகச் செலவு (SOctal COS) என்பது சில ஊழியர்கள் வேலையற்றிருப்பதன் காரணமாக உற்பத்தி செய்யப்படாமல் விடப்படும் பொருட்கள் சேவைகளின் வெளியீட்டின் அடிப்படையில் அளவிடப்படுகின்றது. இழந்த உற்பத்தி எப்போதுமே இழக்கப்பட்டதுதான் என்பதால் இச் செலவு பாரதூரமானது. ஆனால் வேலையின்மையின் தனியாள் செலவு (personal Cost) என்பது இதைவிடப் பாரதூரமானது. ஏனெனில் இவ்வாறு இழந்த வருமானத்தின் காரணமாகக் குடும்பப் பிரச்சினைகளும், பிரிவுகளும், உளவியல் தாக்கங்களும் ஏற்பட்டுச் சிலவேளை குற்றங்களும் ஏற்படலாம். இக்காரணங்களினால் சந்தைப் பொருளாதாரங்களில் அரசாங்கங்கள் வேலையற்ற ஊழியர்களுக்கு உதவிகளும் தொழிற்பயிற்சிகளும் வழங்குகின்றன.
வேலையின்மை என்பது மோசமான பிரச்சினை என்பது உண்மையே. ஆனால் ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் பெரும்பாலான ஊழியர்கள் இதைப் பற்றியே சிந்தித்துக் கவலைப்படுவார்கள் என்பது தவறான சிந்தனையாகும். உதாரணமாக 1930களில் இருந்து ஐக்கிய அமெரிக்கா உட்பட சந்தைப் பொருளாதார நாடுகளில் வேலையின்மை என்பது தற்காலிகமானதாகவே இருந்து வந்துள்ளது. இது சுழல் அல்லது அமைப்பு வேலையின்மை அல்ல. ஊழியரில் பெரும்பாலானவர்கள் எப்போதும் வேலையற்ற நிலையில் தொடர்ந்தும் இருப்பர் எனக் கூறமுடியாது. உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவில் 70 வீதமான வேலை நீக்கங்களுக்கு உள்ளானவர்கள் தற்காலிகமாக வேலையில் இருந்தவர்களே. இவர்கள் தமது முந்திய வேலைகளுக்குத்திரும்பிச் சென்றனர். இவர்களில் அரைவாசிப் பேர், தற்காலிகமாகவே வேலையற்றவர்கள், ஆனால் அடுத்து வந்த மாதங்களில் வேலைகளைப் பெற்றனர். போட்டியுள்ள தொழிற்சந்தையில் வேலைநீக்கம் பெற்ற ஊழியர்கள் வேறு வேலைகளைப் பெற்றனர், அல்லது தொழிற்பயிற்சிகளை மேற்கொண்டனர். ஒரு சந்தைப்
42

பொருளாதாரத்திற் பல நிறுவனங்கள் தமது உற்பத்தியும், விற்பனையும் குறைந்திருக்கும் நேரத்திலும் தமது ஊழியரைத் தொடர்ந்தும் வைத்திருந்திருக்கின்றன. ஏனெனில் இவை தமது ஊழியரை ஏனைய போட்டி நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க விரும்புவதில்லை. அத்துடன் கேள்விபின்னர் உயரும்போது புதிதாக ஊழியரை அமர்த்தி அவர்களுக்குப் பயிற்சி வழங்கவும் விரும்புவதில்லை.
V
சந்தை முறைமை
நுகர்வோர், உற்பத்தியாளர் மற்றும் ஊழியர்கள் திறந்த சந்தைகளிலும், போட்டிச் சந்தைகளிலும் தமது சுயவிருப்பங்களையே பின்பற்றுகிறார்கள். இதனால் தேசிய பொருளாதாரத்துக்கு நன்மை அளிக்கும் வகைகளிலேயே அவர்கள் தமது பொருளாதார வளங்களைப் பயன்படுத்துகிறார்கள். மக்கள் தேவைகளைத் திருப்தி செய்யும் ஆர்வம் இங்கு காணப்படுகின்றது. இதனை முதன் முதலில் சுட்டிக்காட்டியவர் பழம் பொருளியலாளரான அடம் சிமித் (Adam Smith) stair us. Gr. 1776 gigs, it "An Inquiry in to the Nature and Causes of the Wealth of Nations" 6Tsirigyid lasp Guibo JT68)6) வெளியிட்டார். சந்தைகளின் முறைமையில் தங்கியுள்ள ஒருபொருளாதாரம் எவ்வாறு பொருளாதார வினைத் திறனையும் தனிப்பட்டோர் சுதந்திரத்தையும் (மக்களின் ஊக்கம் அல்லது சோம்பல் என்பதைக் கருத்திற் கொள்ளாது) வளர்க்க முடியும் என்பதை முதன் முதலில் காட்டினார்.
cops, Jib (The Invisible Hand)
மக்கள் இயல்பாகவே நல்லவர்களாகவும் இரக்கமுள்ளவர்களாகவும் இருப்பின் சந்தைப்பொருளாதாரம் அவர்களது நற்செயல்களைத் தொடரப் பெரும் பொருளாதார சுதந்திரத்தை வழங்குகிறது என்றும் இந்த நற்செயல்களைச் செய்ய அவர்களுக்குப் பாரிய பொருட்கள் சேவைகளை உற்பத்தி செய்யும் திறமை மிகுந்த ஒரு உற்பத்தி முறைமை பின்னணியிலிருந்து உதவுகின்றது என்றும் அடம் ஸ்மித் கூறினார். ஆனால் மக்கள் சுயநலமும், பேராசையும், சோம்பலும் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள் எனில் நிலைமை என்னவாக இருக்கும்.
ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் பொருட்கள் சேவைகளை உற்பத்தி செய்ய விரும்பும் எவருக்கும் கடினமாக உழைக்கவும், கவனமாகச் செலவு
43

Page 24
செய்யவும், சேமிக்கவும், மூலதனமிடவும் சிறந்த பொருளாதார ஊக்கிகள் உள்ளன. வெற்றிகரமான வர்த்தக நிறுவனங்கள் நல்ல பொருட்களை உற்பத்தி செய்து சந்தை விலையில் விற்று, ஊழியர்களுக்கு வேதனம் வழங்கித், தமது வாடிக்கையாளர்களை நம்பிக்கையுடன் நடத்தும் நிலையில் உள்ளன. இவ்வாறு நடந்து கொள்வது உண்மையில் அவர்களது இயல்பாக இல்லாது இருக்கலாம் என்பது வேறுவிடயம்.
சிலரின் இவ்வாறான "நடத்தை மாற்றத்தின்” அடிப்படைக் காரணி போட்டியாகும். அடம் ஸ்மித் குறிப்பிட்டதைப்போல நிறைய இறைச்சிக் கடைகள் இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட இறைச்சிக் கடைக்காரன் தமது வாடிக்கையாளரிடம் மரியாதை காட்டாதுவிட்டால் அல்லது தரக்குறைவான இறைச்சியை நியாயமற்ற விலையில் விற்றால் சீக்கிரமே தமது வியாபாரத்தையும் வருமானத்தையும் இழந்துவிடுவான். உங்களுடைய அயலிலுள்ள இறைச்சிக் கடைக்காரன் இயல்பாகவே நட்புடனும் தாராளமனதுடனும் நடந்துகொணர்டால் உங்களுக்கு நல்லதுதான். ஆனால் நல்ல பொருட்களையும் சேவைகளையும் பெற்றுக்கொள்ள ஓர் இறைச்சிக் கடைக்காரனைத் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். அல்லது அவனது தகாத நடத்தைகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் வாடிக்கையாளருக்குக் கிடையாது. பேராசையும், சுயநலமும், சோம்பலுமிக்க ஒரு இறைச்சிக் கடைக்காரன் சிறந்த வாழ்க்கைத்தரத்தை அடையவேண்டுமெனில் போட்டிக்கு முகம் கொடுக்கவும், திருப்தியுள்ள வாடிக்கையாளரைப் பெருக்கிக் கொள்ளவும் வேண்டும். சந்தைப் பொருளாதாரத்தின் இந்த அம்சத்தை "மறைகரம்" என்று அடம் ஸ்மித் குறிப்பிடுகின்றார். அதாவது மக்களுக்குத் தேவைப்படும் பொருட்கள் சேவைகளை உற்பத்தி செய்வதற்கு வளங்களை வினைத் திறமையுடன் பயன்படுத்தி இவ்வாறு நடந்து கொள்ள மக்கள் "ஒரு மறைகரத்தினால்” வழிநடத்தப்படுகின்றார்கள்.
அடம் ஸ்மித்தின் மறைகரம் ஒழுங்காகத் தொழிற்பட இன்னுமொரு காரணியும் இங்கு தேவைப்படுகின்றது. அதாவது இறைச்சிக் கடைக்காரனுக்குச் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ ஒரு கடை இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அவனுக்கு இலாபத்தைப் பெறும் உரிமையும் உண்டு. இவ்வாறான தனியார் சொத்து மற்றும் இலாப உரிமை இல்லாதவிடத்து இந்த மறைகரம் முயற்சியாளர் சிறந்த பொருட்களையும் , சேவைகளையும் நியாயமான விலைகளில் வழங்குவதற்குப் போட்டியிடத் தூண்டாது. அரசாங்கத்தில் சம்பளம் பெறும் இறைச்சிக் கடைக்காரனும் சொந்த முயற்சியாளனான இறைச்சிக் கடைக்காரனும் வேறுபட்ட மனப்பான்மை கொண்டவர்கள். ஒரு இறைச்சிக் கடைக்காரன், தச்சுவேலை செய்பவன், உணவகங்கள், பன்னாட்டுக் காப்புறுதிக் கம்பனி என்ற சகல பொருளாதார நிலைமைகளிலும் இந்த உண்மை நிலையானது.
44

ஓர் இடத்தில் ஒரேயொரு இறைச்சிக்கடை மாத்திரம் இருந்தால் அதாவது போட்டியில்லாவிட்டால் அந்நிலைமை நுகர்வோருக்குச் சாதகமானதல்ல. இந்த உண்மை, அந்தக் கடை அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் கடைக்கும் பொருத்தமானதே. போட்டியினை நீக்குதல் தவிர்க்க முடியாதவாறு நல்ல பொருட்கள் சேவைகளைக் குறைந்த விலையில் வழங்கும் சந்தை ஊக்கிகளையும் நீக்கிவிடுகின்றது. இதனால்தான் இச் சந்தர்ப்பங்களைத் தவிர உற்பத்தியாளரிடையே காணப்படும் போட்டி, நுகர்வோரின் சிறந்த நண்பன் என்று பல பொருளியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
ஒரு பரந்த நோக்கிற் பொருளாதார வளங்களின் கட்டுப்பாட்டைப் பன்முகப்படுத்தினால் - அதாவது தனிப்பட்ட உற்பத்தியாளரைத் தமது வாடிக்கையாளரைத் திருப்தி செய்ய எதனை, எவ்வாறு உற்பத்தி செய்ய வேண்டுமென அனுமதித்தால் - போட்டியும், சுயநலன்களும் சந்தைப் பொருளாதாரத்தில் உள்ள வளங்களின் உச்சப் பயன்பாட்டை உறுதிப்படுத்தும்.
52(5 Gu TCB shTTg5 Tg5 Gg, TLst 3 tilds (An Economic Chain)
இத்தகைய பொருளாதாரத் தனித்துவ முறைமை (system ofeconomic individualism) நாட்டின் தலைநகரிலிருந்து செயல்படுகின்ற ஒரு மத்திய திட்டமிடற் குழுவைவிடத் தனிப்பட்ட உற்பத்தியாளரும் நுகர்வோரும் தமது தேவைகள், சந்தைவிலைகளின் பொறிமுறை ஆகியவற்றை அறிந்திருக்கிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையிலிருந்து எழுகின்றது. உதாரணமாக, நியூயோர்க் மற்றும் பல்வேறு நகரங்களில் வாழும் இலட்சக்கணக்கான மக்கள் தினமும் சாப்பிடுகின்றனர். இவர்களுக்கு எவ்வளவு வெதுப்பி, இறைச்சி, காய்கறிகள், குடிபானங்கள் ஒரு நாளுக்கு அல்லது மாதத்துக்கு அல்லது வருடத்திற்குத் தேவைப்படுகின்றது என்ற கோட்டாவைத் தீர்மானிக்க எந்தவொரு திட்டக்குழுவும் இல்லை. உண்மையில் சந்தையில் இத்தகைய பொருட்களின்மொத்த நுகர்வு குறித்து ஒருவருக்குமே தெரியாது. அல்லது தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமுமில்லை. உணவகங்களும், சிறு உணவுக் கடைகளும் தனிப்பட்ட உரிமையாளர்களினால் நடத்தப்படுகின்றன. இவர்கள் ஒரு குழுவாக இயங்கிப் பல்வேறு வகையான உணவுப் பண்டங்களைப் போட்டி விலைகளில் விற்கின்றனர். நுகர்வோர் தமக்கு விருப்பமான கடைகளுக்குச் சென்று செலவு செய்கின்றனர். இதனால் கடை உரிமையாளர்கள் வியாபாரத்தில் நிலைக்குமளவுக்கு இலாபமீட்டிக் கொள்கின்றனர். இவ்வுரிமையாளர்களில் எவராவது விருப்பமில்லாத பொருட்களை விற்றால் அல்லது கூடிய விலைகளை விதித்தால் அல்லது தரக்குறைவான சேவைகளை வழங்கினால் சிக் கிரமே தமது முயற்சிகளில் தோல்வியடைந்துவிடுவார்கள்.
45

Page 25
இதே செயன்முறையில்தான் இந்த உணவகங்களுக்கு வெதுப்பி விற்கும் வெதுப்பகங்களும், அவற்றுக்கு அடுப்புக்களை வழங்கும் நிறுவனங்களும், இரும்புருக்கு மற்றும் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களும் செயற்படுகின்றன. இவ்வாறான மொத்த உற்பத்திச் செயன்முறையில் தமது பங்கு என்ன என்பதை வாங்குபவர்களும், விற்பவர்களும் அறிந்துள்ளனர். ஆனால் இந்தப் பொருளாதாரத் தொடர் சங்கிலியின் அடுத்த இணைப்புகளைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள்.
இவ்வாறான பன்முகப்டுத்தப்பட்ட தனியார் சந்தை முறைமையில் நுகர்வோர் கேள்விகளைத் திருப்தி செய்ய வளங்கள் திறமையாகப் பங் கிடப்படுகின்றன. இச் செயன் முறை பரந்தளவு பன்முகப்படுத்தப்பட்டிருப்பதினால் பல உற்பத்தியாளரும் நுகர்வோரும் இது எவ்வாறு தொழிற்படுகின்றது என்பதை அறியமாட்டார்கள். தனிப்பட்ட சந்தைகள் இவ்வாறான திறமையையும் முறைமையையும் கொண்ட வழிமுறையில் இடைத்தாக்கம் கொள்கின்றன என்பதைக்கூட அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். ஆனால் இந்தத் திறமைக்குக் காரணமே இந்தப் பன்முகப்படுத்தல் (decentralization) தான்.
தோடம்பழங்களும், கோப்பியும், கட்டிடத் தொகுதிகளும்
போட்டிச் சந்தைகளில் கேள்வி - நிரம்பலின் இயக்கம் பற்றிய தொடர்பில் சிறந்த உதாரணங்களாக விளங்குவது விவசாய உற்பத்திப் பொருட்களாகும். உதாரணமாக, பல ஆண்டுகளுக்கு முன்னர் புளோரிடாவில் ஏற்பட்ட கடுங்குளிர் பெருந்தொகையான தோடம்பழ மரங்களை அழித்தது. தோடம்பழ உற்பத்தியில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியானது தோடம் பழச்சாற்றின் விலையை உயர்த்தியது. அதனால் மக்கள் ஏனைய பானங்களை நாடினர். தோடம்பழச் சாற்றின் விலை உயர்வானது பிரேசில் நாட்டு உற்பத்தியாளரைஐக்கிய அமெரிக்கச்சந்தைக்கு ஈர்த்தது. இதனால் தோடம்பழச்சாற்றின் வழங்கலில் அதிகரிப்பு ஏற்பட்டது. இந்த விலைஉயர்வானது புளோரிடாவின் பழ உற்பத்தியாளரைத் தென் புளோரிடாவில்தோடம்பழச்செய்கையை அதிகரிக்க ஊக்குவித்தது. சில வருடங்களின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவில் தோடம்பழ உற்பத்தி திரும்பவும் அதிகரித்தது. இதனால் தோடம்பழத்தின் விலைகள் குறைந்தன.
இதே மாதிரியான விளைவு 1970 களில் கோப்பிச் சந்தையிலும் ஏற்பட்டது. 1975 ஆம் ஆண்டு யூலையில் கடுங்குளிர் பிரேசிலின் கோப்பிச் செய்கையைத் தாக்கியது. இதனால் 1976 - 1977ஆம் ஆண்டுகளில் கோப்பிஉற்பத்தி 23 மில்லியன் சாக்குகளில் இருந்து
46

9.3 மில்லியன் சாக்குகளாகக் குறைவடைந்தது. இதன் விளைவாகக் கோப்பியின் விலை வேகமாக அதிகரித்தது. மக்கள் அதிகளவில் தேநீர் பருகத் தொடங்கினர். கோப்பியின் விலை உயர்வு உகண்டா மற்றும் அயனவலயநாடுகளில் கோப்பிச் செய்கையைத் தூண்டியது. இதனால் உற்பத்தி அதிகரித்து விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. இத்தகைய போக்குகள் விவசாய உற்பத்திப் பொருட்களின் வரலாற்றில் பலநூறு முறைகள் ஏற்பட்டுள்ளது. அதனால் அதன் முக்கியத்துவம்கூடக் குறைத்து மதிப்பிடப்பட்டுகின்றது.
கேள்வி - நிரம்பற் தொழிற்பாடு மிகவும் சிக்கலானதாக மாற்றம் அடைகின்றது. விலைகளில் மாற்றம் ஏற்படாத பட்சத்தில் இவை தோல்வியும் அடைகின்றன. சந்தைகளின் தொழிற்பாட்டில் தோல்வி ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் விலைக் கட்டுப்பாடுகளாகும். உதாரணமாக, சில ஐக்கிய அமெரிக்க நகரங்களிலுள்ள வீடுகளின் வாடகைகள் மிகவும் அதிகரித்திருந்ததன் காரணமாக வாடகைக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்தது. விதிக்கப்பட்ட உச்ச வரம்புகள் கேள்வி - நிரம்பல் தொழிற்பாட்டினால் நிர்ணயிக்கப்படும் வாடகைகளைவிட மிகவும் குறைவாக இருந்தது. இதன் விளைவு எதிர்பார்த்ததைப் போலவே நடந்தது. வாடகை வீடுகளுக்கான கேள்விஅதிகரித்தது. இதனால் பலர் நகரங்களைவிட்டு வெளியே வாழ நேர்ந்தது. முதலீட்டாளர்கள் புதிய கட்டிடங்களை அமைப்பதைக் கைவிட்டனர். அதுமட்டுமல்லாமல் தமது வாடகை வீடுகளைத் திருத்துவதையும் கைவிட்டனர். இதனால் வாடகை வீடுகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடையத் தொடங்கியது.
இத்தகைய ஒரு முறைமை அரசியல்ரீதியாக விரும்பப்படுவதன் காரணம் யாது என்னும் கேள்வி மிகவும் இயல்பானதே. இதற்கான விடை ஒரு நல்ல கட்டிடத்தில் ஒரு வாடகை வீட்டைக் கொண்டிருப்பவருக்கு இந்நிலைமை அதிக இலாபத்தை அளிக்கின்றது எணர்பதாகும். வீட்டுச் சொந்தக்காரரைவிட வாடகைக்கு இருப்பவர்களின் தொகை மிக அதிகமாகவே ாப்பொழுதும் இருக்கும். நகரத்தில் வாடன. வீட்டில் குடியிருக்க விரும்புபவர்களுக்கு வீடுகள் கிடைக்க விடத்து அவர்கள் சட்ட ரீதியாக நகரத்தில் வசிக்க முடியாது. அரசியலும் பொருளியலும் அடிக்கடி முரண்படுகின்றன. ஆனால் அடிக்கடி விவற்றிபெறுவது அரசியலேயாகும்.
Robert M. Dunn Jr.
qqqqqqqqq
47

Page 26
VI
சந்தைப் பொருளாதாரத்தில் நிதி
சந்தைகளில் பொருட்கள், சேவைகள், ஊழியம் ஆகியவற்றின் விலைகள் பணம் அல்லது கரன்ஸி மூலம் விளக்கப்படுகின்றது. ஆனால்சிலர் பணத்தை எதிர்காலத்துக்காகச் சேமிக்க விரும்புவதாலும், வேறுசிலர் - வர்த்தக முயற்சியாளர்கள் உட்பட - இன்றைய தேவைகளுக்காகப் பணத்தைக் கடன்வாங்க விரும்புவதாலும் சந்தைப் பொருளாதாரத்தில் பணமானது தன்னளவில் ஒரு வர்த்தகப் பொருளாகியுள்ளது. பணத்துக்கான விலை - வட்டிவீதம் (interestrate) - அது பரிமாற்றத்துக்குள்ளாகும் சந்தைகளில் நிர்ணயிக்கப்படுகின்றது. எனவே ஒரு பரந்த நோக்கில் சந்தைப் பொருளாதாரத்தில் வங்கிகளும் நிதித் துறை சார்ந்த ஏனைய நிறுவனங்களும் பணத்தைச் சேமிக்கவும் முதலீடு செய்யவும் இயலக்கூடிய வசதிபடைத்தோருக்கும், பணத்தைப் பயன்படுத்தும் வாய்ப்புள்ளதினால் பணத்துக்குவிலைகொடுக்க விரும்புவோருக்குமிடையில் இணைப்புகளாகச் செயற்படுகின்றன. பொருட்கள், சேவைகளின் உற்பத்தியும் நுகர்வும்
பற்றிய தீர்மானங்கள் பன்முகப்படுத்தப்பட்டிருப்பதுபோல பணத்தை எவ்வாறு, எங்கு முதலீடு செய்வது என்பதைப் பற்றிய தீர்மானங்களும் இச் சந்தைகளின் ஊடாகப் பன்முகப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு வீட்டைக் கொள்வனவு செய்தல்
இங்கு முன்னர் குறிப்பிட்ட றொபர்ட்-மரியா ஆகிய கணவன் - மனைவி இருவரில் மரியா தொழில் மாற்றம், மேலதிகக் கல்வி ஆகியன பற்றிய விவாதத்துக்குப் பல ஆணிடுகளுக்குப் பின்னர் பாடசாலை நிர்வாகப் பதவியைப் பெற்றுள்ளார். றொபர்ட் கணணிப் பரீட்சைக்குப் பின்னர் ஒரு புதிய துறையிற் தொழில் பெற்றுள்ளார். இதன் விளைவாக றொபர்ட்டும், மரியாவும் தமது தொழிலில் கிடைக்கும் உயரிய வருமானம் காரணமாகப் பணத்தைச் சேமிக்க முடிந்தது. அதனைக் கொண்டு ஒரு வீட்டை வாங்க எண்ணுகின்றனர்.
இங்கு வங்கிபோன்ற நிதிநிறுவனங்களின் பங்குகாத்திரமானது. வங்கிகள் இரண்டு தொடர்புள்ள செயல்களை ஆற்றுகின்றன. ஒருபுறம் றொபர்ட் மரியா போன்று தமது பணத்தைச் சேமித்து வட்டி உழைக்சு விரும்புபவர்களிடமிருந்துவைப்புக்களைப்பெறுகின்றன. மற்றது, திரும்பச் செலுத்த முடியுமான பணவலிமை உள்ளவர்களுக்குக் கடன் கொடுக்கின்றன. கடன் வாங்குபவர்களும், கொடுப்பவர்களும் தனிப்பட்ட நபர்கள் மாத்திரம் அல்லாது தனிப்பட்ட நிறுவனங்களும் உள்ளடங்கியுள்ளன.
48
 
 

சந்தைப் பொருளாதாரத்தில் றொபர்ட், மரியா போன்றவர்கள் வேறுபட்ட சந்தர்ப்பங்களில் சேமிப்பாளர்களாகவும், கடன் கொடுப்பவர்களாகவும் விளங்குகின்றனர். பணத்தைக் கவர்வதற்காக வங்கிகள் ஏனைய போட்டியாளர்களைவிடக் கூடிய வட்டியை வழங்குகின்றன. இப்போது றொபர்ட், மரியா ஒரு வீடு வாங்குவதற்காக வங்கியைக் கடனுக்காக அணுகியுள்ளனர். மாதத் தவணையில் அவர்களால் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதி உள்ளது என வங்கி திருப்தியடைந்தால் மட்டுமே வங்கி கடனை வழங்கும். எனினும் வங்கி தான் அவர்களுக்கு வழங்கிய வட்டியைவிட அதிக வட்டிய்ை அவர்களிடமிருந்து அறவிடும். இந்த வித்தியாசம் வங்கி வழங்கும் நிதித்துறை சேவைகளுக்கான வருமானமாகும்.
கடன்கொடுத்தலு ம் முதலீடு செய்தலும்
புதிய தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் உபகரணங்களுக்காக முதலீட்டு நிதியைத் தேடும் வர்த்தக முயற்சிகளிலும் இதே செயன்முறையே பின்பற்றப்படுகின்றது. சந்தைப் பொருளாதார்த்தில் மற்ற நிறுவனங்களைப் போன்றே வங்கித்துறையிலும் போட்டி நிலவுகின்றது. இப்போட்டியானது வட்டி வீதத்தைக் குறைந்த நிலையில் வைத்திருக்க உதவுவதோடு திறமையாக இயங்கும் வங்கிகளுக்குத் திருப்தியான வருமானத்தையும் வழங்குகின்றது. மேலும் வங்கிகளிடமுள்ள பண வரையறையின் காரணமாகக் கடன் பெறுபவர்கள் (தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும்) வங்கியின் ஆதரவைப் பெறத் தமக்குள் போட்டியிடுவர். இப்போட்டியானது கடன் தொடர்பாக அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்வதனைவிட வங்கிகள் மிகத் திறமையாகச் செயற்படும் முதலீடுகளை ஊக்குவித்து உயரிய வருமானத்தைப் பெற வாய்ப்பளிக்கின்றது.
ர்ேத்தக முயற்சியாளர் தமது உற்பத்தியையும் விற்பனையையும் புதிய வசதிகளுக்காகவும் அல்லது இயந்திரங்களுக்காகவும் த்தகைய முதலீட்டுக் கடன்களை நாடுகின்றனர். இந் நிறுவனங்கள் மது புதிய முதலீடுகளில் நீண்டகால இலாபங்களை எதிர்நோக்குகின்றன. :* இந் நிறுவனங்கள் சொத்துக்களை உடனடியாகக் கொள்வனவு சய்து தமது உற்பத்தியை உடனடியாக ஆரம்பிப்பதற்காக வட்டி சலுத்துவதற்குத் தயாராக இருக்கின்றன.
ண்ேமையில் இந் நிறுவனங்கள் பெறப்போகும் வருமானம் தாம்செலுத்தும் |ட்டியைவிடக் குறைவானதெனில் அவர்கள் கடன் எடுக்க மாட்டார்கள். வர்களால் கூடிய வருமானம் தரும் ஒரு புதிய முதலீட்டை உருவாக்க டியாவிட்டால் கடன் வாங்குவதைவிட சேமிப்பில் மட்டும் நாட்டம் சலுத்துவார்கள். அல்லது வட்டி வீதத்தைவிடக் கூடிய வருமானத்தைத்
49

Page 27
தரக்கூடிய இன்னொருவர்த்தக முயற்சியில் அவர்கள் தமது நாட்டத்தைத் திசை திருப்புவார்கள். இது வளங்களை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தும் வழிவகைகளை இனங்கண்டுள்ள நிறுவனங்களுக்கு வளங்களை வழங்கும் ஒரு சாதாரண வழிமுறையாகும். அதாவது நுகர்வோருக்கு மிகவும் தேவைப்படும் பொருட்கள் சேவைகளை இவற்றை வழங்கும் ஏனைய நிறுவனங்களின் விலைகளுக்குச் சமமாக அல்லது குறைவாக வழங்கும் திறமையுடைய நிறுவனங்களாகும்.
இங்கும் சர்வதேச வர்த்தகம் முக்கியமானது. பொருட்களைப் பரிமாறிக் கொள்வதுபோலவே நாடுகள் நிதித்துறைச் சேவைகளையும், முதலீட்டு நிதிகளையும் பரிமாறிக்கொள்ள முடியும். வெளிநாட்டு மூலதனம் வர்த்தக நிறுவனங்களுக்குத் தேவையான பணத்தினை அல்லது முதலை அதிகரிக்க முடியும். உள்நாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்களுடன் போட்டியிடுவதன் மூலம் இவ்வெளிநாட்டுமூலதனங்கள் (foreigninvestment) வட்டிவீதத்தைக் கீழ் நிலையில் வைத்திருக்க முடியும். வெளிநாட்டு மூலதனம் பரந்ததொரு மட்டத்தை அடையும்போது தேசியப் பொருளாதாரத்தின் சில பகுதிகள் நாட்டின் கட்டுப்பாட்டில் இல்லை என்ற பயம் ஏற்படுவதற்கு இடம் உண்டு. இப் பயம் பெருமளவிற்கு அர்த்தமற்றது. ஏனெனில் சந்தைப் பொருளாதாரத்தின் இயங்குவிசைகள் சர்வதேசிய முதலீட்டையும், தேசிய முதலீடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளையும் சமமாகவே பாதிக்கின்றன. வெளிநாட்டு நேரடிமுதலீடு (Foreign directinvestments) என்பது ஏனைய எந்த முதலீட்டையும் போல பொருளாதார வளர்ச்சிக்கான ஓர் அங்கீகாரமாகும். புதிய நிதி வளங்களை உள்நாட்டுக்குக் கொண்டுவருவதன் மூலம் வெளிநாட்டு முதலீடு பொதுவாகத் திறனை வளர்க்கின்றது. முகாமைத்துவ நிபுணத்துவத்தை உயர்த்துகின்றது. அத்துடன் வட்டி வீதங்களைக் கீழ் நிலையிலும் வைத்துள்ளது.
பங்குச் சந்தைகளும் முதலீடுகளும் (Stock markets and Investments)
றொபர்ட் - மரியா பற்றிய உதாரணத்தில் கவனித்ததுபோல வெற்றிகரமான வங்கிகள், சேமிப்பாளர்களுக்கும் கடன் எடுப்போர்களுக்குமிடையில் ஒர் இடைத் தரகனாகச் செயல்படுகின்றன. அத்துடன் இவ்விரு சாராரையும் இணைப்பதன் மூலம் சேமிக்கப்படும் பணம் முதலீட்டுக்குப் பயன்படவும் வழிவகுக்கின்றன.
ஒரு பரந்த சந்தைப் பொருளாதாரத்தின் நிதித்துறையில் வேறுபல சிறப்பான வர்த்தக முயற்சிகளும் உண்டு. உதாரணமாக, றொபர்ட்டும் மரியாவும் தமது திறன்களை இணைத்து ஒரு சிறுவியாபாரத்தை ஆரம்பிக்க எண்ணுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். இருவரும் சேர்ந்து பாடசாலைகளுக்குத் தேவையான கல்விசார் கணணிக் கனிமங்களை
50

(Computer Software) உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். தமது நிறுவனமான "றொபர்ட் - மரியா கல்விசார் கனிமங்கள்” (R&M Educational Software) என்னும் புதிய வியாபார முயற்சியை ஆரம்பிக்கப் பணத்துக்காக அவர்கள் வங்கியை அணுக முடியும். அல்லது தமது புதிய முயற்சி வெற்றி பெறும் என்னும் நம்பிக்கையுள்ள பலரிடம் உரிமையாளர் பங்குகளை விற்கலாம். சிறு முயற்சியாளரான றொபர்ட் - மரியா முதல் உலகின் மிகப்பெரிய கூட்டுத்தாபனங்கள் வரை உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் பணியாற்றும் தரகர்கள் மூலம் தமது பங்குகளை விற்பனை செய்யும் வழக்கம் உண்டு.
இந்தப் பங்குகளை வாங்குபவர்கள் தமது பணத்தை முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் இந்த நிறுவனம் அடையவிருக்கும் இலாபத்தில் ஒரு : அடைய விரும்புகிறார்கள். இவர்கள், சட்டப்படி நிறுவனத்தின் உரிமையாளர்களாக மாறுவதுடன் தமது பங்குரிமைக்கு ஏற்ப வாக்குரிமையும் பெறுகிறார்கள். இது நிறுவனத்தின் நடவடிக்கைகளில் ஈடுபட அவர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு நிறுவனத்தின் பணிப்பாளர்கள, நிர்வாகிகளை நியமிப்பதற்கும் உரிமை வழங்குகின்றது.
இந்தப் பங்குரிமையாளர்கள் நிறுவனம் எதிர்நோக்கும் தொழில்சார் அபாயத்திலும் பங்கேற்கிறார்கள். உதாரணமாக இந்நிறுவனம் சிறப்பாகச் செயற்படாவிட்டால் அல்லது தோல்வியடைந்தால் இவர்கள் தமது முதலீட்டின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ இழந்துவிடுவர். மாறாக, நிறுவனம் வெற்றியடைந்தால் தமது முதலீட்டுக்கு ஏற்ப இலாபமும் பெறுகிறார்கள். இந்தப் பங்குரிமையாளர்கள் நிறுவனம் சிறப்பாகச் செயற்பட்டால் எதிர்கால இலாபம் கருதிப் பங்குகளைத் தாமே வைத்திருப்பார்கள் அல்லது மேலதிக பங்குகளையும் வாங்குவார்கள். மாறாக நிறுவனத்தின் எதிர்காலம் பற்றித் திருப்தி இல்லாவிட்டால் தமது
|ங்குகளைப் பங்குச் சந்தைகளில் சில நிறுவனங்கள் மூலம் விற்பார்கள். இந் நிறுவனங்கள் தரகு நிலையங்கள் (brokerage houses) எனப்படுகின்றன. இத்தகைய தரகு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்துதான் நியூயோர்க், லண்டன், டோக்கியோ போன்ற நகரங்களில் பாரிய பங்குச்
கதைகளை (stock markets) p (56). It disusir GT60T.
வங்கித் தொழில் போன்றே இந்தப் பங்குச் சந்தைகளும் தேசிய பொருளாதாரத்திலும் சர்வதேச வர்த்தகத்திலும் முக்கிய இடம் வகிக்கின்றன. இவை பங்குரிமையாளர்களுக்கும் (stockholders) மற்றவர்களுக்கும் முதலீட்டுத் தீர்மானங்கள், நிறுவனங்களின் திறமை மதிப்பீடு, பொதுவான வர்த்தக சூழ்நிலைகள் ஆகியவற்றில் உதவி புரிகின்றன. இதனை இவைகள் பங்குச் சந்தைப் பரிமாற்ற நிலையங்களில் தினமும் கைமாற்றப்படும் ஆயிரக் கணக்கான பங்குகளின் விலைகள் மூலமாகச் சாதிக்கின்றன. தனிப்பட்ட நிறுவனங்கள் அவர்களது போட்டி
51

Page 28
நிறுவனங்கள், பொதுவான பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்படும் வர்த்தகச் சூழ்நிலை மாற்றம் காரணமாகப் பங்குகளின் விலைகள் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாகின்றன.
இந்த முதலீட்டுச் செயன்முறையானது தனிப்பட்ட சேமிப்பாளர்கள், முதலீட்டாளர்களுக்குப் புதுமுயற்சிகள், தொழில்சார் அபாயங்கள் பற்றிய தீர்மானங்களில் வரையறையற்ற சுதந்திரத்தையும், வாய்ப்புக்களையும் வழங்குகின்றன. இவர்களது முதலீடு புத்திசாலித்தனமானது எனில் சிறந்த இலாபத்தையும் அப்படியில்லாதவிடத்து பாரிய நஷ்டத்தையும் அவர்கள் அனுபவிப்பர். இதன் காரணமாகப் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தமது முதலீடுகள் அனைத்தையும் ஒரே நிறுவனத்தில் வைத்திருப்பதில்லை. மாறாகத், தமது சொத்தில் ஒரு பகுதியை உறுதியான நிறுவனங்கள் அல்லது வங்கிக் கணக்குகளில் வைத்திருக்கிறார்கள். ஒரு சிலர் மாத்திரமே தமது சொத்துக்கள் முழுவதையும் ஒரு சில உயரிய தொழில்சார் அபாயம் (high-riskventures) நிறைந்த தொழில் முயற்சிகளில் முடக்குகிறார்கள். இவர்கள் நிதித்துறைச் சந்தைகளில் பாரிய நஷ்டத்தை அல்லது பாரிய இலாபத்தை அடைவர்.
கடந்த நூற்றாண்டில் புதிய பொருட்கள், தொழில்முறையியல் அபிவிருத்தியில் தனிப்பட்ட நிறுவனங்களின் செயற்பாட்டையும், அரசாங்கங்களின் குறிப்பாக மத்திய திட்டமிடலைக் கொண்ட பொருளாதாரங்களின் செயற்பாட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஓர்
உண்மை வெளிப்படுகின்றது. உண்மையில் தனியார்துறை முதலீடுகள் (தோல்விகள் ஏற்பட்டபோதும்) ஏற்படுத்திய சாதனைகள் மிகச் சிறந்தவையாகும் என்பதே அந்த உண்மை. இதன் காரணங்கள் திரும்பவும் சந்தைப் பொருளாதாரத்தின் இயல்புகளையே சுட்டிநிற்கின்றன. அதாவது, இம் முறையில் ஒரு சிறு மத்திய திட்டமிடல் குழுவினர் தீர்மானங்களை மேற்கொள்வதில்லை. மாறாக, மாறும் பொருளாதார சூழ்நிலைகளுக்கேற்ப ஒரு பெருந்தொகையான நபர்கள் முதலீடு மற்றும் கடன் தீர்மானங்களை மேற்கொள்ளும் பன்முகப்படுத்தப்பட்ட செயல்முறை மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் தமது சொந்தப்பணத்தை முடக்கியுள்ள நபர்களினால் இத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதினால் நிச்சயமாகக் கவனமான, விவேகமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் வாய்ப்பு உண்டு.
52

VIII
சந்தைப் பொருளாதாரத்தில் அரசாங்கம்
சந்தைகளும், சந்தை முறைமைகளும் இவ்வளவு திறமையாகச் செயலாற்றினால் அரசாங்கம் ஏன் இவைகளின் செயற்பாடுகளில் தலையிடவேண்டும். அரசாங்கத்தின் எவ்வித தலையீடுமில்லாமல் தலையிடாமைக் (Laissez - faire) கோட்பாட்டின்படி இத் தனிப்பட்ட சந்தைகளை இயங்கவிட்டால் என்ன. இது தொடர்பாகப், பல பொருளியலாளார்களும், சமூக அவதானிகளும் பல்வேறு காரணிகளை இனங்கண்டுள்ளனர். இதனைப் பல்வேறு பரிச்சயமான உதாரணங்கள் மூலம் விளக்கமுடியும். பொதுவாக, இங்கு அரசாங்கத்தின் பங்கு சந்தைகளின் இடத்தைத் தான் எடுத்துக்கொள்வதல்ல, மாறாக அவற்றின் செயற்பாட்டை விருத்தி செய்வதாகும். மேலும் சந்தைச் சக்திகளின் செயற்பாட்டை ஒழுங்குபடுத்த அல்லது அதிற் தலையிட முயலும்போது ஒழுங்குபடுத்துவதன் செலவினங்களையும், தலையிடுவதினால் வரும் நன்மைகளையும் கவனமாகச் சமநிலைப்படுத்தவேண்டும்.
தேசிய பாதுகாப்பும் பொதுநலனும்
அரசாங்கத்தின் பங்கு தவிர்க்க முடியாதது என்பதற்குச் சிறந்த உதாரணம் தேசிய பாதுகாப்பாகும். தேசத்தின் பாதுகாப்பு என்பது தோடம்பழம், கணணி அல்லது வீடு என்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு பொருளாகும். மக்கள் தேசிய பாதுகாப்பைத் தனித்தனி அலகுகளாகக் கொள்வனவு செய்வதில்லை. மாறாக, முழுத் தேசத்திற்கும் கூட்டாகக் கொள்வனவு செய்கிறார்கள். ஒரு தனி நபருக்குப் பாதுகாப்பு வழங்குவதென்பது மற்றவருக்குக் குறைந்த பாதுகாப்பு என்ற பொருளைத் தராது. உண்மையில் மக்கள் அனைவரும் சேர்ந்தே இந்தப் பாதுகாப்புச் சேவைகளை நுகர்வு செய்கின்றனர். மக்களுக்கு வேண்டாத போதிலும் பாதுகாப்புச் சேவைகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில் இவற்றை வழங்காமல் இருப்பதற்கான காத்திரமான வழிகள் இல்லை. நாடுகளால் அதிவேக சண்டை விமானங்களைக் (Jet fighters) கட்டமைக்க முடியும், தனிநபர்களால் அல்ல.
இத்தகைய பண்டம் பொதுப்பண்டம் (public good) எனப்படுகின்றது. ஏனெனில் தனிப்பட்ட வியாபார நிறுவனம் மக்களுக்குத் தேசிய பாதுகாப்பை விற்பனை செய்து தொழிலில் நிலைத்திருக்க முடியாது. பாதுகாப்புச் சேவைகளை அவைகள் தேவைப்படும் மக்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு, அவற்றுக்குப் பணம் வழங்க மறுப்பவர்களைப் பாதுகாக்காமல் விட்டுவிடுவது என்பது நிச்சயமாக முடியாத காரியம்.
53

Page 29
பாதுகாப்பைப் பணம் செலுத்தாமல் பெறமுடியுமெனின் அதற்கு ஏன்
பணம் செலுத்தவேண்டும். இதுதான் இலவச சவாரிக்காரன் (free rider) என்னும் பிரச்சினை. இதுவே ஏன் அரசாங்கம் தேசிய பாதுகாப்பினை வழங்கவேண்டும், அதன் செலவினங்களுக்கு வரிகள் மூலம் செலுத்த வேண்டும் என்பதற்கான முக்கிய காரணம்.
இவ்வாறான உண்மையான பொதுப்பண்டங்கள் (கூட்டான நுகர்வுக்கும்,
இலவச சவாரிக்கும் வழிவகுக்கும் பண்டங்கள்) அநேகமில்லை. இதனால்
சந்தைப் பொருளாதாரத்தில் அநேகமான பொருட்கள் சேவைகள் தனிப்பட்ட நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைப் படுத்தப்படுகின்றன. வெள்ளம், பூச்சிக் கட்டுப்பாடு, வானொலி, தொலைக்காட்சி போன்றவைகளும் பொதுப் பண்டங்களுக்கான உதாரணங்களாகும். இவை ஒவ்வொன்றும் கூட்டு நுகர்வுக்கும் அதேநேரத்தில் ஓரளவுக்கேனும் இலவச சவாரிப் பிரச்சினைக்கும்
உட்படுகின்றன. எனினும் வானொலி, தொலைக்காட்சி, ஒலி /
ஒளிபரப்புக்கள் விளம்பரங்கள் மூலம் இலாபகரமானதாகத் தனிப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படமுடியும். சிலவேளைகளில் ஒலி/ஒளிபரப்புகள் இன்று மின்னியக்கரீதியாக (electronically) விரிவுபடுவதால், இவற்றை அடைய விரும்பும் நுகர்வோருக்கு இயந்திரங்களை (decoding machines) விற்பனை செய்வதன் மூலம் தனியார் நிறுவனம் இலாபத்தை உழைக்க (ptsu D. ལྷག་
சூழல் மாசை தலும் வெளிவாரிச் செலவினங்களும்
ஒர். ஆற்றுப்படுக்கைய ல் அமைந்துள்ள கடதாசி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை இங்கு உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம். தொழிற்சாலை தனது உற்பத்திச் செயற்பாட்டின் துணைப்பொருளாக வரும் இரசாயன மாசுகளை (chemical polutants) ஆற்றில் கலக்க விடுவதுதான் இங்குள்ள பிரச்சினை. இதனை நிறுத்துமாறு யாரும் தொழிற்சாலை நிர்வாகத்தை வற்புறுத்த முடியாது. ஏனெனில் ஆறு ஒரு தனிப்பட்ட நபருக்கோ, நிறுவனத்துக்கோ சொந்தமில்லை. அத்துடன் மாசுகளை நீக்கும் செயல் செலவினம் கூடியதாக இருப்பதினால் அதனைச் செய்யாதவிடத்து இந் நிறுவனம் தனது உற்பத்தியைக் கூட்டும். அதே வேளையில் ஆறு மேலும் மேலும் மாசடைகின்றது. தண்டம் (penalty) இல்லாமல் மாசு ஏற்படுத்தும் நடவடிக்கைகளால் இந் நிறுவனம் நியாயமற்ற குறைந்த விலையில் விற்கின்றது. ஏனெனில் இதன் போட்டி நிறுவனங்கள் மாசுநீக்கும் செலவினங்களைக்கொண்டுள்ளதால் அவற்றின் உற்பத்திகளின் விலைகள் இவ்வளவு குறைவாக இருக்கமாட்டாது.
ஒரு சந்தையின் சாதாரண செய ற்பாடுகளில் பிரதிபலிக்காத வெளியகச் செலவுக்கு (external Cost) இது ஒரு சிறந்த உதாரணமாகும். கடதாசி
54
 

உற்பத்தியின் உண்மையரின்உற்பத்தியைக் கடதாசிநிறுவனமோ அல்லது
அதன் வாடிக்கையாளர்களோ பொறுப்பேற்கவில்லை. பதிலாகச், செலவினத்தின் ஒரு பகுதி (மாசடைதற் காரணி) ஆற்றங்கரையில் வசிக்கும் அல்லது வேலை செய்யும் மக்கள் மீது சுமத்தப்படுகின்றது. அத்துடன் அந்த வரி இறுப்பாளர்களே இறுதியில் ஆற்றைச் சுத்தப்படுத்தும் செலவுகளையும் பொறுப்பேற்கிறார்கள்.
ஒரு வளத்தின் உரிமை (ஆறு) தனிப்பட்ட நபர்களால் அல்லது நிறுவனங்களால் காப்பாற்றப்படாதவிடத்து மாசடைதல் அடிக்கடி ஏற்படும். பொதுக்கானிகள், பாதையோரங்கள் மாசடைகின்றன. ஏனெனில் இதற்கு உரிமை கொண்டாடவோ, அல்லது அசுத்தம் ” செய்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவோ ஒருவருமில்லை. உண்மையில் அதிகளவான மாசுபடல் வளி, கடல், ஆறுகளில் கலக்கவிடப்படுகின்றன. இவைகளுக்கு உரிமையாளர்கள் இல்லை. அத்துடன் மாசுபடுத்து பவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி நட்டஈடு கோருவதற்கும் எவருமில்லை. ஒரு சிலர் இத்தகைய நடவடிக்கைகளிற் தமது நேரத்தையும் சிரமத்தையும் செலவழிக்கிறார்கள். ஆனால் இவ்வாறு செய்யப் பொருளாதார ஊக்கிகள் எதுவுமில்லை.
s
இச்சூழ்நிலையில் இச்சமநிலையின்மையைச் சீர்செய்வதே அரசாங்கத்தின் பங்கு. தலையிடுதல் மூலம் அரசாங்கம் உற்பத்தியாளர்களையும், நுகர்வோரையும் சுத்திகரிக்கும் செலவுகளை (clean-up costs) ஏற்கும்படி அரசாங்கம் வற்புறுத்த முடியும். சுருங்கக் கூறின் ஒரு பொருளின் உற்பத்தி மற்றும் நுகர்வில் ஈடுபடும் சகலரையும் அப்பொருளின் உற்பத்தி நுகர்வு தொடர்பான சகலசெலவுகளையும் ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்துவதே அரசாங்கத்தின் GLuft(56TT5TU Luig5 (economic role) gg5ò.
தூரதிஷ்டவசமாக இவ்வாறான விடயங்களில் தனது பங்கு என்ன என்பதை அரசாங்கத்தினால் தீர்மானிக்க முடிவதில்லை. மாசடைதலுக்கான ஆதாரத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமானதும் செலவு கூடியதுமான ஒரு செயல். அதேபோல் சமூகத்துக்கு இந்த மாசடைதலால் ஏற்படும் நட்டத்தையும் துல்லியமாக அளவிடமுடியாது. இந்தச் சிரமங்களின் காரணமாக மாசடைதல் சமூகத்துக்கு ஏற்படுத்தும் செலவினங்களைவிட அதிகமாக, மாசடைதலைக் குறைப்பதற்கு அதிக செலவினங்களை ஏற்படுத்தக் கூடாது என்பதில் அரசாங்கம் நிச்சயமாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையெனின் திறமையின்மையும், பெறுமதிமிக்க வளங்களை வீணடித்தலும் ஏற்படும். அரசாங்கம் முதலில் ஏற்றுக்கொள்ளக் கூடிய அல்லது பொறுத்துக் கொள்ளக் கூடிய அளவுள்ள மாசடைதல் மட்டத்தை (tolerable level of polution) நிர்ணயிக்க வேண்டும். மாசடைதலைக் குறைப்பதற்காகச் சட்டங்கள், விதிமுறைகள், தண்டங்கள், சிறைத் தண்டனைகள் மற்றும் விசேட வரிகளை அரசாங்கம் பயன்படுத்த முடியும்.
55

Page 30
மேலும் இவைகளை விட அடிப்படையிலான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள முடியும். அதாவது மாசடைதலுக்கு உட்படும் வளங்களின் உரிமைகளை முதலில் ஸ்தாபிக்க வேண்டும். இதன் விளைவாக இவ்வளங்களைப் பயன்படுத்துவதற்காகச் சந்தை விலைகளை நுகர்வோர் கொடுத்தாக வேண்டும். இதன் மூலம் மாசடைதலை ஏற்படுத்துவோரே அதற்கான விலைகளை இறுக்கும்படி கட்டாயப்படுத்த முடியும் . இவ்வாறான தெரிவுகளுக்கு மத்தியில் இவ்விடயங்களில் அரசாங்கத்தின் அடிப்படையான பங்கினை விளங்கிக் கொள்ள வேண்டும். வெளிவாரிச் செலவினங்களுக்குக் காரணமாக விளங்கும் மிகை உற்பத்தி, மிகை நுகர்வு ஆகியவற்றைத் திருத்துவதே அதுவாகும்.
w
மாசடைதற் கட்டுப்பாட்டைச் சந்தைப்படுத்தல் (Marketing Pollution Control)
மாசடைதலைக் கட்டுப்படுத்தும் பிரச்சினையானது சந்தைப்
பொருளாதார அரசாங்கங்கள், கேள்வி - நிரம்பலின் சந்தைத்
தொழிற்பாடுகளை எவ்வாறு முழுச் சமூகத்தையும் பாதிக்கும் ஒரு
பிரச்சினைக்கு முகம் கொடுக்க வழிப்படுத்துகின்றன என்பதற்கு
ஒரு நல்ல உதாரணமாகும். வளி, நீர், நிலம் மாசடைதற்
பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும்போது அரசாங்கத்துக்கு நிறைய மாற்றீடுகள் உள்ளன. இவை ஒரு தூய்மையான சூழலுக்கும்
தூய்மைப்படுத்துவதற்கான பொருளாதாரச் செலவினங்களுக்கும்
சமநிலை ஏற்பட உதவவேண்டும்.
உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட மாசுபடுதலுக்கான காரணி மிகவும் பாரதூரமானதெனவும் அதனைப் பாதுகாப்பு முறைகளாலோ அல்லது புதிய உற்பத்திச் செயற்பாட்டின் மூலமோ நீக்க முடியாது என்ற சூழ்நிலையில் அரசாங்கமானது அந்த மாசு உண்டாக்கியின் பயன்பாட்டை முற்றாகத் தடை செய்யவேண்டும். அல்லது பாதிப்பு உண்டாக்காத அளவுக்கு அதன் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். இந்நடவடிக்கை இம் மாசினால் சமூகத்துக்கு ஏற்படும் ஆபத்து மிக அதிகமானது என்ற அடிப்படையைக் கொண்டது. ஆபத்துக்குறைந்த பொருட்களைப் பொறுத்தவரையில் மாசடைதல் மட்டம் குறைக்கப்பட்டால் போதுமானது. முற்றாதத்தடைசெய்தால் உற்பத்தி மற்றும் நுகர்வின் இழப்பு, வேலையின்மை தொடர்பாகச் சமூகத்துக்கு நியாயமற்ற செலவினங்களை ஏற்படுத்தக் கூடியது. இத்தகைய சூழ்நிலையில் இப் பொருளின் பாவனைக்கு வரிவிதித்தல், எல்லா உற்பத்திநிலையங்களிலும் இப்பொருளைத் தடைசெய்வது அல்லது குறைப்பது என்பதைவிடக் கூடிய வினைத்திறன் கொண்டது.
56

துய்மைப்படுத்தும் செலவினம் பல்வேறு உற்பத்திப் பகுதிகள், கம்பனிகளைப் பொறுத்து வேறுபடக்கூடியது. மாசடையச் செய்வோர் மீது வரி விதிப்பதன் மூலம் அரசாங்கமானது நிறுவனங்களின் துய்மைப்படுத்தும் செலவினங்களைக் குறைக்கின்றது. இதன் மூலம் நிறுவனங்கள் மாசடைதல் வரி செலுத்த வேண்டியதில்லை. ஏனைய நிறுவனங்களுக்கு மாசடைதலைக் குறைப்பது பாரிய செலவுகளை ஏற்படுத்தலாம். (பழைய தொழிற்சாலைகள், கருவிகளைக் கொண்டுள்ளவை) இந் நிலையில் இவை மாசடைதலைத் தொடர்ந்து செய்துகொண்டு வரியைச் செலுத்த முற்படலாம்.
அண்மைக் காலத்தில் இன்னொருமுறை கையாளப்படுகின்றது. இம் முறையில் மாசடைதலைக் குறைப்பதற்குச் சந்தை சார்ந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். இது வாங்கிவிற்கும் மாசடைதல் அனுமதி முறையைக் கொண்டுள்ளது. இத் திட்டத்தின்படி நிறுவனங்கள் அரசாங்கத்திடமிருந்து மாசடைதல் அனுமதிப் பத்திரங்களைக் (permits) கொள்வனவு செய்கின்றன. இப் பத்திரம் ஒரு குறிப்பிட்டளவு மாசடைதலை அனுமதிக்கின்றது. இப் பத்திரங்களின் விலைகள் ஏறி இறங்கிப் பல்வேறு சூழல் மற்றும் பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிக்கும். இம் முறையில் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் அனுமதிக்கக் கூடிய மாசடைதல் அளவினைத் தீர்மானித்து அதன்படி பத்திரங்களை விற்பனை செய்கின்றது. எவ்விதமான வரிவிதிப்பு முறையும் அநாவசியமானது. ஒரு நிறுவனம் தனது மாசடைதல் விகிதத்தைக் கூட்டவிரும்பினால் (அதாவது உற்பத்தியைக் கூட்ட விரும்பினால்) மற்ற நிறுவனங்களிடமிருந்து அனுமதிப்பத்திரங்களைக் கொள்வனவு செய்வதன் மூலம் தமது விருப்பத்தை நடைமுறைப்படுத்த முடியும். உண்மையில் இந் நிறுவனமானது மற்ற நிறுவனங்களுக்குப் பணம் கொடுப்பதன் மூலம் அவற்றின் உற்பத்தி மட்டத்தைக் குறைக்கின்றது.
கல்வியும் வெளிவாரி நன்மைகளும் (Education and External Benefits)
றொபர்ட் கணணிப் பயிற்சி பெறத் தீர்மானித்தபோது அவனது நோக்கம்
தனது குடும்பத்தின் முன்னேற்றமே தவிர சமூகத்தை முன்னேற்றுவதல்ல.
ஆனால் அவனது உயர்கல்வி காரணமாக றொபர்ட் உயர் பயிற்சியும் உற்பத்தித்திறன்மிக்க சமூக உறுப்பினனாகவும் மாறியுள்ளான். அவன் இப்போது புதிய திறன்மிக்கவனாக விளங்குவதோடு மற்றவர்களுக்குத்
57

Page 31
தொழில்களையும் வாய்ப்புக்களையும் வழங்கக் கூடிய ஒரு தொழில் முயற்சிக்கும் உரிமையாளனாகியுள்ளான்.
இங்கு றொபர்ட்டின் கல்வியானது சில பொருட்களின் உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் பலருக்கும் நன்மை அளிக்கின்றது. கல்வியானது ஒரு நாட்டுக்கு வெளிவாரி நன்மைகளை அளிக்கின்றது. ஏனெனில் கல்வி கற்றோர் நெகிழ்ச்சியும் உற்பத்தித்திறனும் மிக்கவர்களாகவும் வேலையின்மைக்கு எளிதாக உட்படாதவர்களாகவும் உள்ளனர். அதாவது இன்று கல்விக்கான அதிகரித்த செலவினமானது நாளை குற்றங்கள், வறுமை மற்றும் சமூகப் பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் முயற்சிகளில் ஏற்படும் தனியார், பொதுச்செலவினங்களைக் கட்டுப்படுத்த உதவும். அத்துடன் தொழிற்படையின் திறன் , நெகிழ்ச்சி மற்றும் உற்பத்தித்திறனையும் உயர்த்த உதவும். ஒரு பொருளுற்பத்தி எந்தளவுக்கு வெளிவாரி நன்மைகளை வழங்கி வருகிறது என்ற அடிப்படையில் அரசாங்கங்கள் அதன் உற்பத்தி அல்லது நுகர்வு அல்லது இரண்டையும் ஊக்குவிக்கவோ அல்லது மானியம் வழங்கவோ முயலும். இதன்மூலம் வெளிவாரி நன்மைகளின் மதிப்பு இப்பொருட்களின் சந்தை விலையிலும், வெளியீட்டு மட்டத்திலும் உள்ளடங்க வழி ஏற்படுகின்றது. வெளிவாரிச் செலவினங்கள் சில பொருட்ககளின் மிகை உற்பத்தியை ஏற்படுத்துவதைப்போல வெளிவாரி நன்மைகள் வேறு சில பொருட்கள் சேவைகளின் குறை உற்பத்திக்கும்(underproduction) காரணமாகின்றது.
பொதுக் கல்வி என்பது குறிப்பிடக் கூடிய வெளிவாரி நன்மைகள் உள்ள சேவையாகக் கணிப்பிடப்பட்டிருப்பதினால் அரசாங்கத்தின் செலவுகள், ஆதரவு பெற்றுள்ள மிகப் பெரும் துறையாகும். எனினும் இவ் வெளிவாரி நன்மைகளை ஊக்குவிக்க அரசாங்கம் சில சந்தர்ப்பங்களில் மானியம், வரிகள் ஊடாக விலை நிர்ணயித்தலில் தலையிடுகின்றது. பொதுவாக, வெளிவாரிச் செலவினங்கள் மற்றும் நன்மைகளால் (external Costs and benefits) ஏற்படக்கூடிய சமநிலையின்மையைத் திருத்துவதற்குச் சொத்துரிமைகளை (property rights) விரிவாக்குதல், சந்தையை அடிப்படையாகக் கொண்ட விலை முறைமை என்பன காத்திரமான வழிமுறைகளாகும்.
ஒரு சட்டச், சமூகக் கட்டமைப்பு (A legal and social framework )
சந்தைப் பொருளாதாரத்தில் வெளிப்படையான துஷ்பிரயோகங்கள் காணப்படலாம். ஆனால் அது சுரண்டலுக்கும், களவுக்குமான (theft) அனுமதிப்பத்திரமல்ல. உண்மையில் நுகர்வோர், உற்பத்தியாளர் ஆகியோர் பொருளாதார வளங்களை உரிமை கொள்ளவும், வர்த்தகம் செய்யவும் உள்ள சட்ட உரிமைகள் தெளிவாக வரையறை
58

செய்யப்படாதவிடத்து சந்தைகளில் வர்த்தகம் நடைபெறக் கூடிய வாய்ப்புக்கள் மிகக் குறைவு. இக் காரணத்தினால் தான் சந்தைப் பொருளாதாரத்தில் காணிகள் , வீடுகளின் உரிமைப் பதிவுகள் பேணப்படுகின்றன. எல்லாப் பொருட்களினதும் விற்பனையாளர்கள், கொள்வனவு செய்வோர் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தங்கள் பேணப்படுகின்றன. விற்பனைக்கு வைக்கப்படும் பொருட்கள் உண்மையில் விற்பனையாளர்களுக்குச் சொந்தமானதா என்பதைக் கொள்வனவு செய்வோர் உறுதி செய்துகொள்ள விரும்புகின்றனர். மேலும் விற்பனையாளரும், கொள்வனவு செய்வோரும் பொருளைப் பரிமாற்றம் செய்துகொள்ள இணங்கும் போது அவ் விணக்கம் நடைபெற வேண்டுமெனவும் விரும்புகின்றனர். தொழிலாளர் தனியாவோ அல்லது கூட்டாகவோ தமது வேலை கொடுப்போருடன் சம்பளம், மற்றும் தொழில் செய்யும் நிலைமைகளுக்கு இணக்கத்துக்கு வரும்போது மேற் சொன்ன வழியிலேயே நடந்து கொள்கின்றனர். இவ்வாறான உறுதிகள் வழமையாகவும் காத்திரமானதாகவும் வழங்கப்படாதவிடத்தும் ஒரு நீதியானதும் , நடுநிலையானதுமான குற்றவியல் நீதிமுறைமை இல்லாதவிடத்தும் சந்தையில் நடைபெறும் கொடுக்கல் வாங்கல்கள் முழுமையடைய செலவும் சிரமமும் ஏற்படும்.
சந்தைப் பொருளாதாரத்தில் அரசாங்கம் சொத்துரிமைக்கும் அச் சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வருமான உரிமைக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும். அவ்வாறான உத்தரவாதங்கள் இல்லாத பட்சத்தில் தமது நேரத்தையும் பணத்தையும் தொழில் முயற்சிகளில் எவரும் செலவழிக்க மாட்டார்கள் . ஏனெனில் அவர்களது வருமானம் அரசாங்கத்துக்கோ அல்லது வேறேதும் குழுவினர்களுக்கோ போய்ச்சேரக் கூடிய பயம் உண்டு. றொபர்ட்டும் மரியாவும் தமது நிறுவனத்தை ஆரம்பித்தபொழுது அம் முயற்சியிலுள்ள தொழில் அபாயத்தை அவர்கள் அறிவார்கள். அதே நேரத்தில் தாம் தமது முயற்சியில் வெற்றி பெறும் பட்சத்தில் அரசாங்கத்தில் தனிப்பட்ட சொத்துரிமைகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் சட்ட விதிகள் காரணமாகத் தமது வெற்றியின் வெகுமதிகளை அனுபவிக்க முடியும் என்பதையும் அறிவார்கள்.
அரசாங்கத்தின் சொத்துரிமைப் பாதுகாப்பு, காணி, தொழிற்சாலை, கடைகள் மற்றும் ஏனைய சடப் பொருட்களையும் (tangible goods) அடக்கியுள்ளது. அத்துடன் அறிவியற் சொத்துக்களையும் (intelectual property) அது அடக்கியுள்ளது. அறிவியற் சொத்துக்கள் என்பது புத்தகங்கள், ஏனைய எழுத்தாக்கங்கள், கலைப்படைப்புக்கள், சினிமா, விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள், பொறியியல் வடிவமைப்புக்கள், மருந்துகள் மற்றும் கணணியின் கனிமத் திட்டங்கள் முதலிய மனிதனின் சிந்தனையிலிருந்து ஊற்றெடுக்கும் உற்பத்திகளைக் குறிக்கும். போட்டி நிறுவனங்கள் தமது உற்பத்திச் செலவினங்களில் எத்தகைய பகுதியையும்
59

Page 32
வழங்காது தமது உற்பத்திகளைக் கைப்பற்றிச்சந்தைப்படுத்த முடியுமெனில் ஒரு சில தொழின்முயற்சியாளர்கள் அல்லது நிறுவனங்கள் மட்டுமே நேரவிரயமும் செலவினங்களும் கூடிய புதிய மருந்துகளின் ஆய்வுகள், புதிய கணணி நிகழ்ச்சித் திட்டங்கள் அல்லது புத்தகங்களைப் (நாவல்) பதிப்பித்தல் போன்றவற்றில் ஈடுபடுவர்.
விஞ்ஞானிகளையும், கலைஞர்களையும் பாதுகாத்து ஊக்குவிப்பதற்காக அரசாங்கங்கள் பதிப்புரிமை (copy rights) எனப்படும் விசேட உரிமைகளை வழங்குகின்றன. புத்தகங்கள், சங்கீதம், சினிமா மற்றும் கணணி நிகழ்ச்சித் திட்டங்கள் ஆகிய அறிவியற் சொத்துக்கள் இத்தகைய பதிப்புரிமைகளால் பாதுகாக்கப்படுகின்றன. வேறுவகையான கண்டுபிடிப்புக்கள், வடிவமைப்புக்கள், உற்பத்திகள், உற்பத்திச் செயல்முறைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கும்போது அது உரிமைப் பாதுகாப்பு எனப்படுகின்றது. இத்தகைய விசேட உரிமைகளானது அவற்றைக் கொண்டுள்ள தனிநபர்கள், நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத் தமது பொருட்களையும் படைப்புக்களையும் விற்கவும் சந்தைப்படுத்தவும் விசேட உரிமைகளை வழங்குகின்றன. சனாதிபதி ஆபிரகாம் லிங்கன் குறிப்பிட்டதுபோல் இவ் விசேட உரிமைகள் "மேதாவிலாசம் என்னும் நெருப்புக்கு ஆர்வம் என்னும் எண்ணெய்யை வார்க்கின்றன” எனலாம்.
சொத்துரிமைகளை நிர்ணயம் செய்து அவற்றை அமுல்படுத்தவும் ஓர் உறுதியான சட்ட முறைமையைப் பேணவும் அரசாங்கங்கள் ஒரு சமூக சூழலைக் கட்டி எழுப்ப முடியும். இச்சூழலானது பெரும்பாலான பொருட்கள், சேவைகளுக்கான தனியார் சந்தைகள் காத்திரமாகவும் பரவலான பொதுமக்கள் ஆதரவுடனும் செயற்பட வசதி செய்யப்படவேண்டும்.
GuTLuq (Competition)
ஒவ்வொரு மாதமும் றொபர்ட்டும், மரியாவும் உள்ளூர் நீர்ப்பயன்பாடு மற்றும் தொலைபேசி நிறுவனங்களுக்கு ஒழுங்காகத் தாம் செலுத்த வேண்டிய பணத்தைக் கட்டி விடுகின்றனர். சந்தைப் பொருளாதாரத்தில் உள்ள ஏனைய நிறுவனங்களைப்போல இவற்றுக்குப் போட்டியில்லை. இச்சேவைகள் இரண்டும் இயற்கைத் தனியுரிமைகள் (naturalmonopoles) எனப்படுகின்றன. பொருளாதார அடிப்பட்ையில் இவை ஒரு நிறுவனத்தினால் வழங்கப்படுகின்றன. இரு தொகுதி தண்ணிர்க் குழாய்களை அல்லது ஒவ்வொருவருக்கும் தனித்துவமான தொலைபேசி அல்லது மின்னிணைப்பை வழங்குவது மிக மோசமான வினைத்திறமையின்மையும் விரயமுமாகும். போட்டி அடிப்படையில் செலவினங்களைக் கட்டுப்படுத்தித் திறமையை உச்சப்படுத்துவதற்குப் பதிலாக, இந் நிறுவனங்கள் தமது வாடிக்கைகயாளர்களுக்குச் சிறந்த
60

சேவைகளை வழங்கவும், அதே நேரத்தில் திருப்தியான முதவிட்டு வருமானம் பெறவும் அரசாங்க முகவர் நிலையங்கள் இவற்றின் விலைகள் மற்றும் சேவைகளை ஒழுங்குபடுத்துகின்றன.
இத்தகைய "இயற்கைத் தனியுரிமைகள்’ உண்மையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையுடையன. ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் இவற்றின் பங்கு மிகச் சிறியது, மிகவும் பொதுவானதும் பல வழிகளில் சிக்கலானதுமான பிரச்சினை என்பது ஒரு கைத்தொழில் ஒரு சில பெரிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகும். இந் நிறுவனங்கள் ஒன்றிணைந்து தமது உற்பத்திகளின் விலைகளை அதீதமாக உயர்த்தவும், புதியபோட்டி நிறுவனங்கள் நுழைவதைக் கட்டுப்படுத்தவும் கூடிய உண்மையான அபாயங்கள் உள்ளன. இத்தகைய தனியுரிமைகளையும், ஒன்றிணைந்த நடத்தைகளையும் தடுப்பதற்காகவும், பொருளாதார முறைமையில் காத்திரமான போட்டியைப் பேணுவதற்காகவும் ஐக்கிய அமெரிக்காவிலும் வேறுபல நாடுகளிலும் நம்பிக்கைப்பொறுப்புக்கெதிரான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
விமானப் போக்குவரத்துப் போன்ற ஒரு சில கைத்தொழில்களில் வரையறுக்கப்பட்ட போட்டி தோன்ற முடியும். ஏனெனில் சந்தையிலுள்ள கேள்வி மட்டம் ஒரு சில பாரிய நிறுவனங்களுக்கு மட்டுமே போதுமானவை. எனவே கொள்கை வகுப்போர், இத்தகைய பொருளுற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் ஒரு சில பாரிய நிறுவனங்களுக்கிடையிலான போட்டி விலைகளை நியாயமான அளவுக்குக் கீழ்மட்டத்தில் வைத்து உற்பத்தியை உயர் மட்டத்தில் வைத்திருக்கப் போதுமானதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் அவர்கள் விலைகள், சேவைகள் தொடர்பான ஒழுங்குவிதிகளை ஏற்படுத்தலாம். இப் பாரிய நிறுவனங்களைச் சட்டப்படி சிறு நிறுவனங்களாகப் பாகுபடுத்தலாம். அவ்வாறு செய்யும்போது உற்பத்திச் செலவினங்கள் அதிகரிக்காது பார்த்துக் கொள்ளவேண்டும். அவ்வாறில்லையெனின் கொள்கை வகுப்போர், இப்பாரிய நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்வதைச் சட்ட விரோதமாக்கலாம் . அதே சட்ட விதிகளைக் கொண்டு இந் நிறுவனங்களுக்கிடையில் நேரடிப் போட்டி இருக்கவேண்டுமென்பதை உறுதி செய்யலாம்.
ஆனால் அரசாங்க ஒழுங்கு விதிகளும், நம்பிக்கை விரோதப் பொறுப்புக் கொள்கைகளும் போட்டியை அதிகரிப்பதற்குப்பதிலாகக் குறைக்கின்றன. இக் கொள்கைகள் ஒரு குறிப்பிட்ட பொருள், சேவை உற்பத்திக்கான விசேட அனுமதிப்பத்திரங்கள், வெளிநாட்டுப் பொருட்கள், சேவைகளை மட்டுப்படுத்தும் வரிகள், கோட்டாக்கள் மற்றும் தொழில்சார் திறனுள்ள தொழிலாளருக்கான ஊழிய அனுமதிக் கட்டணங்களையும் உள்ளடக்கும். பதிப்புரிமை வழங்கல் போன்ற இத்தகைய கொள்கைகளை வேறு சில
61

Page 33
பொருளாதார அடிப்படையில் நியாயப்படுத்தலாம். எனினும் ஏனைய கட்டுப்பாடுகள் புத்திசாலித்தனமானவை அல்ல. அவைகள் ஒரு சிறு குழுவினரின் நலன் கருதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக் கட்டுப்பாடுகளினால் ஏற்படும் செலவினங்கள் சனத்தொகையிற் பெரும் பகுதியைத் தழுவி நிற்கின்றன. அதனால் பொது மக்களின் பொறுப்பு இதில் சம்பந்தப்படுவதில்லை.
இவ்வாறான குறைபாடுகள் இருந்தபோதும், சந்தைப்பொருளாதாரத்தில் இத்தகைய ஒரு சில நிறுவனங்களை (அல்லது இணக்கமுறும் நிறுவனங்களைக் கொண்ட ஒரு குழுவை) முக்கிய கைத்தொழில்களில் தனியுரிமையுடைய நிலைக்கு வழிவகுப்பதினால் ஏற்படும் செலவினங்கள் மிகவும் அதிகமானவை என்பதில் பொருளியலாளர் கருத்தொருமித் துள்ளனர். இத்தகைய செலவின் உயர்வானது அரசாங்கம் போட்டியைப் பேணுவதற்குச் சட்டங்கள், ஒழுங்குவிதிகளை உருவாக்குவதை நியாயப்படுத்துகின்றது.
வருமானமும் சமூக நலனும் (Income and Social welfare)
ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் சிலருக்கு வருமானத்தைத் தேடிக் கொள்ளத் திறன்களோ அல்லது வேறு வளங்களோ இருக்கமாட்டாது. வேறு சிலர், பரம்பரையாக வரும் செல்வம், திறமைகள் மூலம் அல்லது தமது குடும்பம் அல்லது நண்பர்களின் வர்த்தக, சமூக, அரசியல் தொடர்புகளின் மூலம் நன்மை அடைகிறார்கள் . சந்தைப் பொருளாதாரத்தில் அரசாங்கமானது வருமானத்தை மீள் விநியோகம் செய்யும் வேலைத்திட்டங்களை மேற்கொள்கிறது. வரிக் கொள்கைகள், மற்றும் வரி விதிப்புக்குப் பிந்திய வருமானத்தின் மீள் விநியோகம் ஆகியவற்றை நியாயமானதாக்கும் வெளிப்படையான நோக்குடனேயே அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றது.
இவ்வாறான பரவலான மீள் விநியோகத்தின் ஆதரவாளர்கள் இந் நடவடிக்கையானது செல்வம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவிவதைத் தடுத்துப் பொருளாதார வலு சமமாகப் பரவுவதற்கு வழி செய்கின்றது எனக் கூறுகின்றனர். இதற்கு எதிரானவர்கள் உயர் வருமானம் கொண்ட குடும்பங்களின் மீது விதிக்கப்படும் மேலதிக வரிகள் உழைப்பு, சேமிப்பு, முதலீடு ஆகியவற்றில் இக் குழுக்கள் காட்டும் ஆர்வத்தைக் குறைத்துவிடுமென்றும், இது முழுப் பொருளாதாரத்துக்கும் கேடாகும் எனவும் வாதிடுகின்றனர்.
வருமானத்தில் மீள் விநியோகம் பற்றிய விவாதமானது எது நியாயபூர்வமானது என்னும் மக்களின் கருத்துக்களில் சார்ந்துள்ளது.
62

ம்க்களின் அடிப்படைக் கருத்துக்கள் பற்றிய பரப்பில் பொருளியலாளரோ அல்லது வேறெந்த நிபுணர்களோ தமது கருத்துக்களை முன்வைக்க முடியாது. அவர்களால் ஒன்றுமாத்திரம் செய்யமுடியும். அதாவது பலவகையான பொருளாதார முறைமைகளில் வருமானத்தின் விநியோகத்தை நீண்ட காலம் அட்டவணைப்படுத்தி, இத் தகவல்களைக் கொண்டு தேசிய மட்டத்தில் உற்பத்தி, சேமிப்பு, முதலீடு ஆகியவற்றை வித்தியாசமான கொள்கைகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இனங்காணலாம்.
இந் நூற்றாண்டில் சந்தைப்பொருளாதாரத்தில் அரசாங்கங்களைப் பற்றிய ஒரு சமூக கருத்தொருமிப்பு உருவாகியுள்ளது. அதாவது அவை இரக்கம், நியாயம், ஆகியவற்றின் அடிப்படையில் சமூகத்தில் மிகக் கீழ்நிலையிலுள்ள குடும்பங்களோடு உதவிசெய்து அவை வறுமையின் பிடியிலிருந்து வெளியேற வழிகாட்ட வேண்டுமென்பதே அதுவாகும். அநேகமாக, சகல சந்தைப் பொருளாதார அரசாங்கங்களும், வேலையில்லாதவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்குகின்றன. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து" சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு" (social safety net) என அழைக்கப்படுகின்றது. கடந்த 40 ஆண்டுகளாக இத்தகைய சமூக வேலைத்திட்டங்கள் தொடர்பான அரசாங்க செலவினங்களும் வரிவிதிப்புத் திட்டங்களும் கைத்தொழில் வளர்ச்சியுள்ள பொருளாதாரங்களில் வளர்ச்சியடைந்து வந்துள்ளன. எனவே இத்திட்டங்கள் தேவையானவையா என்பது இன்றுள்ள விவாதமல்ல, ஆனால் அவற்றுள் பரப்பு எவ்வளவு என்பதும், உழைப்பு சேமிப்புத்தொடர்பான தனிநபர்களின் ஊக்கத்தைப் பேணிக் கொண்டே இவற்றை இந்த வருமான மீள விநியோகத்தை நிர்வகிக்கலாம் என்பதே இன்றுள்ள பிரச்சினையாகும்.
வருமானப் பரம்பலும் அசைவும் (Income Distribution and mobility)
ஐக்கிய அமெரிக்கா போன்ற கைத்தொழில்ரீதியாக வளர்ச்சியடைந்த, சந்தைப் பொருளாதாரங்களில் குடும்பங்களின் வருடாந்த வருமானங்களில் காணப்படும் வேறுபாட்டுக்கான முதன்மைக் காரணம் வேதனங்களிலும் கூலிகளிலும் (யages and Salartes) காணப்படும் வேறுபாடேயாகும். ஏறக்குறைய மூன்றில் நான்கு பங்கு இவ்வேதனங்கள், கூலிகளில் இருந்தும் ஏனையவை வாடகைகள், இலாபங்கள் மற்றும் வட்டிகளுக்கான கொடுப்பனவுகளிலிருந்தும் பெறப்படுகின்றன. இரண்டாம் உலகயுத்தத்துக்குப் பின் பெரும்பாலான சந்தைப் பொருளாதார நாடுகளின் பொதுவான வருமானப் பரம்பல் ஒழுங்கில் எவ்வித
63

Page 34
குறிப்பிடத்தக்க மாற்றமும் ஏற்படவில்லை. ஐக்கிய அமெரிக்காவில் 20 வீதமான குடும்பங்கள் மொத்த வருமானத்தில் 43 வீதத்தைப் பெறுகின்றன. அடுத்த 20 வீதத்துள் 24 வீத வருமானத்தையும், அடுத்த 20 வீதத்தினர் 17 வீத வருமானத்தையும் அடுத்த 20 வீதத்தினர் 11வீத வருமானத்தையும் இறுதியாக உள்ள மிகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினர் மிகுதி 5 வீத வருமானத்தையும் பெறுகின்றனர்.
இந்தத்தரவுகளை நோக்கும்போது அதிக வருமானம்பெறுபவர்கள் (அரசாங்க உதவித் திட்டங்களில் இருந்து நன்மை அடைகின்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைவிட) அதிக வரிகளைச் செலுத்துகின்றனர் என்ற எண்ணத்தைப் பிரதிபலிக்கமாட்டாது. இத்தகைய வேறுபாடுகளைச் சரிசெய்வதற்காக 20 வீதமான மிகக் குறைந்த வருமானம் கொண்ட வறுமையான குடும்பங்களுக்கு 7 வீதமான வருமான அதிகரிப்பையும், உயர்வருமானம் பெறும் குடும்பங்களின் மொத்த வருமானப் பங்கில் 37 வீதமான குறைப்பையும் செய்கிறார்கள். இருந்தபோதும் வருமானத்தில் காணப்படும் இப் பாரிய வேறுபாட்டுக்கான காரணத்தை மக்கள் நீண்ட காலமாகக் கேட்டு வருகிறார்கள் . இத்தகைய வேறுபாட்டுக்குப் பல காரணங்கள் இருக்கின்றதுடன் அவை கூலிகள், வேதனங்களுக்கு அப்பாற்பட்டவையாகவும் இருக்கின்றன. தொழிற்படையில் உள்நுழைந்த இளம் தொழிலாளர், குறைந்த வேலை அனுபவம் கொண்டவர்களும், இளைப்பாறிய தொழிலாளரும், பகுதி நேரத் தொழிலாளருமே இத்தகைய குறைந்த வருமானக் குடும்பங்களில் அதிகமாகக் காணப்படுகின்றனர். பெரும்பாலான தொழிலாளர் நன்கு கல்விப் பயிற்சி பெற்ற, தொழில்நுட்ப பயிற்சியுடைய தொழிலாளர் தமது வாழ்நாளில் வருமானம் உயர்வதைக் காண்கின்றனர். ஏனைய தொழிலாளரின் வேதனங்களும், கூலிகளும் சுகuபீனம், அல்லது காயமடைதல் மற்றும் ஏனைய காரணங்களினால் தற்காலிகமாக வீழ்ச்சியடைகின்றன.
இதற்கான காரணங்கள், பொதுவாக வருமானப் பரம்பலில் நிலையான தன்மை காணப்பட்டபோதும் சந்தைப் பொருளாதாரத்துல் வருமான அசைவு (income mobtu) ஒரு பிரதான அம்சமாகும். வருடத்துக்கு வருடம் இத்தகைய வருமானப் பிரிவுகளில் குடும்பங்கள் மேல் நோக்கியும், கீழ் நோக்கியும் அசைவதைக் காண்கிறோம். இதற்குச்சிறந்த ஒரு உதாரணத்தைக் கூறமுடியும். அண்மையில் செய்யப்பட்ட ஆய்வின் படி கடந்த ஏழு வருடங்களில் உயர் வருமானம் கொண்ட 20 வீதத்தைக் கொண்ட அமெரிக்கக் குடும்பங்களில் ஏறக்குறைய அரைவாசிக் குடும்பங்கள்
64

அடுத்த பிரிவுக்குள் தள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அதில் 6 விதத்தினர் மிகக் குறைந்த வருமானம் பெறும் வறுமையான குடும்பங்களைக் கொண்ட 20 வீதத்துக்குள் தள்ளப்பட்டனர். இதே காலகட்டத்தில் குறைவான வருமானப் பிரிவுக்குள் இருந்த அரைவாசிக் குடும்பத்தினர் உயர் வருமான பிரிவுக்குள் நுழைந்தனர். அத்துடன் 4 வீதத்தினர் மிக உயர்ந்த வருமானப் பிரிவுக்குள் சேர்க்கப்பட்டனர்.
இத்தகைய புள்ளிவிபரத் தரவுகள் இரு சான்றுகளைத் தருகின்றது. (1) ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் உற்பத்திக்குரிய வளங்கள் மற்றும் கூலிகளுக்கான சந்தையானது தாராளமயமானது, குறிப்பிடத்தக்க சுதந்திரம், சந்தர்ப்பங்களையும் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு அளிக்கக் கூடியது. (2) இத்தகைய சந்தர்ப்பங்கள் இருந்த போதிலும் சந்தைப் பொருளாதாரங்களின் மாற்றமானது இன்று மிக வேகமாகக் காணப்படுகின்றது. கவனமாகக் கட்டமைக்கப்பட்ட பயிற்சிகளின் தேவை காரணமாகப் பல தொழிலாளர்கள் பின்தள்ளப்படுகின்றனர். போட்டிநிலவும் தொழிலாளர் சந்தையில் அவர்கள் மீண்டும் நுழைவதற்கு உதவித் திட்டங்கள் தேவைப்படுகின்றன. இவையெல்லாம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை நல்ல நிலையில் நிர்வகிப்பதற்கு உதவுகின்றன.
1930 களின் தசாப்தகாலத்திலும் பாரிய மந்த நிலை ஏற்பட்ட போதும் எல்லாச்சந்தைப் பொருளாதார நாடுகளும்இந்தச்சவாலை எதிர் கொண்டதுடன் தாழ் வருமானம் கொண்ட குடும்பங்களுக்குப் பரந்தளவிலான வருமான உதவிச் செயற்றிட்டங்களை வழங்கின. இவ்வுதவியின் அமைப்பும், நிலைப்பாடும் பலநாடுகளில் அரசியலில் சர்ச்சைக்குரிய விடயங்களாக அப்பொழுது காணப்பட்டன. சந்தைப் பொருளாதாரங்களில் காணப்படும் மிகவும் பழமைபேண் அரசியல் நிர்வாகம் கூட அரசாங்க உதவி என்னும் பாதுகாப்பு வலைப்பின்னலையும்" (safetune) வறுமையான குடும்பங்களைக் குறிப்பாகச் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு அடிப்படையான சமூக சேவைகளை அளிப்பதன் தேவையையும் இன்று ஏற்றுக் கொள்கின்றன.
இத்தகைய செயற்றிட்டங்கள் வறுமையின் தாக்கத்தை அகற்றுவதற்கு உதவினாலும்கூட, வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு வெற்றிகரமாகச் செயற்படவில்லை என்றே கூறலாம். எனவே வறுமைப்பட்டோருக்கு உதவுவதற்கான சிறந்த வழிகள் எவையென்பதில் வாதங்கள் தொடருகின்றன. மத்தியதர, உயர்தர வருமானம் பெறும் குடும் பங்களில் வரிகளை
65

Page 35
அறவிடுவதன்மூலம் இவர்களுக்கு உதவுவது ஒரு நடைமுறைச் சாத்தியமான, குறிப்பிட்ட காலத்துக்குச்சரிப்படுத்தும் வழியாகவும் அமையக்கூடும்.
அரசாங்கத்தின் இறை மற்றும் நிதிக் கொள்கைகள்
சந்தைப் பொருளாதாரங்களில் அரசாங்கங்கள் தனியார் தொழில்முயற்சிகளுக்கான சந்தைகள் காத்திரமாக இயங்கக் கூடிய பொருளாதார சூழ்நிலைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையான ஒரு நாணயத்தை (stable currency) வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும். இந் நாணயமானது குளறுபடியான (cumbersome), திறமையற்ற பண்டமாற்று முறையை ஒழிக்கின்றது. அத்துடன் அரசாங்கமானது அந் நாணயத்தின் பெறுமதியைப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் கொள்கைகளின்மூலம் பேணவும் வேண்டும்.
வரலாற்றுரீதியாகச் சந்தைப் பொருளாதாரங்கள் காலத்துக்குக் காலம் விரைவாக உயர்வடையும் விலைமட்டங்களினாலும், சில காலங்களில் உயர்வான வேலையின்மை விகிதத்தினாலும், இடைக்கிடையே பணவீக்கம் , வேலையின்மை ஆகிய இரண்டினதும் உயர்ந்த விகிதத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலைகளில் பல ஒப்பீட்டளவில் தீவிரமற்றவை. இவை ஒருவருட காலத்துக்கும் குறைவாகவே நீடித்திருந்தன. 1920 களில் ஏற்பட்ட ஜேர்மன் தீவிர பண வீக்கம் (hyperinflation), 1930களில் ஏற்பட்ட பாரிய மந்தம் (depression) எனப்படும் உலகளாவிய வேலையின்மைப் பிரச்சினை ஆகியவை மிகக் கடுமையானவை, தீவிரமானவை.
இந்நூற்றாண்டில்தான் பொருளியலாளரும், அரசகொள்கை வகுப்போரும் நியாயமான நிலைப்படுத்தற் கொள்கைகளை (stablisation policles) உருவாக்கியுள்ளனர். இவை இறை மற்றும் நிதிக் கொள்கைகள் எனப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித் தேசிய அரசாங்கங்கள் மேற்கூறிய நிகழ்வுகளைத் தடுக்கவோ அல்லது அதன் தீவிரத்தைத் குறைக்கவோ முடியும் . நிதிக் கொள்கைகள் அரசாங்கத்தின் செலவீடுகளையும், வரித்திட்டங்களையும் அதிகரித்து வேலையின்மை வீதம் மற்றும் குறைவான பணவீக்க காலத்தில் தேசிய பொருளாதாரத்தை ஊக்குவிக்கப் பயன்படுகிறது. அல்லது உயர்வான பணவீக்கமும் குறைந்த வேலையின்மையும் இருக்கும்போது தேசியப்பொருளாதாரத்தை இழுத்துப் பிடிக்கின்றன. மொத்தச் செலவீடு, உற்பத்தி, வேலைகள் ஆகியவற்றைத்
66

தீவிரப்படுத்த அரசாங்கமானது வரிகளைக் குறைத்துத் தனது செலவுகளை அதிகப்படுத்தும். இங்கு பற்றாக்குறை ஏற்படினும் பிரச்சினை இல்லை.
ஒரு மிதமிஞ்சிய பொருளாதாரத்தை (over heated economy) (வேலை செய்ய விரும்பும் ஒவ்வொருவருக்கும் வேலை வழங்கக் கூடியதாகவும் ஆனால் செலவினமும் விலைகளும் வேகமாக உயர்ந்து செல்லும்நிலை) இழுத்துப் பிடிப்பதற்கு, விலைகள் மிக உயரத்துக்குச் செல்வதைத் தடுப்பதற்கு அரசாங்கத்துக்குப் பலவித தெரிவுகள் உண்டு. அது தனது செலவுகளைக் குறைக்கலாம். வரிகளை உயர்த்தலாம். அல்லது இரண்டையும் மேற்கொள்ளலாம். இதன் மூலம் மொத்தச் செலவுகள் மட்டத்தையும், உற்பத்தி மட்டத்தையும் குறைக்க முடியும்.
நிதிக் கொள்கையானது நாட்டின் பண வழங்கல், கடன் வசதிகளின் மாற்றங்களுடன் சம்பந்தப்பட்டது. உயர்ந்த வேலையின்மை வீதமும் குறைந்த பண வீக்கமும் உள்ள சூழ்நிலைகளில் செலவினங்களைக் கூட்டுவதற்காகக் கொள்கை வகுப்போர் பணத்தின் வழங்கலைக் கூட்டுகிறார்கள். இது வட்டிவீதங்களைக் குறைக்கின்றது. அதாவது பணத்தின் விலையைக் குறைத்து அதன் மூலம் வங்கிகள் கூடிய கடன்களை வழங்க வசதி செய்கின்றது. இது மக்களுக்கு மேலதிக பணத்தை வழங்குவதன் மூலம் நுகர்வுச் செலவினங்களை ஊக்குவிக்கின்றது. மேலும் குறைந்த வட்டி வீதங்களானது விரிவாக்கத்தால் ஆர்வம் உள்ள நிறுவனங்களின் முதலீட்டுச் செலவினங்களை ஊக்குவிக்கின்றன.
இதற்கு முரணாக உயர்ந்த பணவீக்கமும், குறைந்த வேலையின்மையும் உள்ள சூழ்நிலைகளில் கொள்கை வகுப்போர் வட்டிவீதத்தை உயர்த்தி அதன்மூலம் பணத்தின் வழங்கலையும் கடன் வசதிகளையும் குறைத்துப் பொருளாதாரத்தைச் சமநிலைப்படுத்த முடியும். இதனால் உயர்ந்த வட்டி வீதமும், குறைந்த பணப் புழக்கமும் விலைகளை வீழ்ச்சியடையச் செய்யும் அல்லது மிகக் குறைந்த வேகத்தில் விலைகளை உயரச் செய்யும். இதன் காரணமாக வெளியீடும், வேலைகளும் சுருங்கும். நாணயம் மற்றும் நிதிக் கொள்கைகள் 1960 களின் முன்னர் தேசிய வர்த்தக வட்டங்களில் ஏற்பட்ட ஏற்றஇறக்கங்களை நிலைப்படுத்தப் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை. இன்று போர், வெள்ளப்பெருக்கு, பூமியதிர்ச்சி, வரட்சி போன்ற பாரிய இயற்கை, மனித அழிவுகளைத் தவிர இந்த நிலைப்படுத்தற்கொள்கைகள், வேலையின்மை, பணவீக்கம் தீவிரமாக ஏற்படுவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இக் கொள்கைகள் தேசிய பொருளாதாரத்தில் ஏற்படும் குறுங்கால, தீவிரமற்ற தளம்பல்களில் அல்லது வேலையின்மையும், பணவீக்கமும் சேர்ந்து உயரும் சூழ் நிலையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நிச்சயமாகக் கூறமுடியாது.
67

Page 36
இத்தகைய நிச்சயமற்ற தன் மைக்குப் பல காரணங்கள் உண்டு. உண்மையான காரணத்தை இனங்காணுவதற்கு எடுக்கப்படும் நேரம், இப்பிரச்சினைக்கு முகம் கொடுக்கப் பொருத்தமான கொள்கைகளைத் தெரிவு செய்தல், இக் கொள்கைகள் பிரச்சினைகளில் ஊடுருவும் வரை காத்திருத்தல் போன்றவை இக் காரணங்களில் உள்ளடங்கும். இதிலுள்ள சிக்கல் யாதெனில் இக் கொள்கைகளில் பிரச்சினைகளை அடையும் தருணத்தில் உண்மையான பிரச்சினை தானாகவே தீர்ந்துவிடுவதுண்டு. அல்லது திசைமாறிச் செல்வதுமுண்டு. இத்தகைய சந்தர்ப்பத்தில் இந்த நிலைப்படுத்தற் கொள்கைகள் தேவையற்றனவாக மாறுகின்றன. சிலவேளைகளில் பாதகங்களையும் ஏற்படுத்தக்கூடும்.
வேலையின்மையும் பணவீக்கமும் ஒரே நேரத்தில் உயர்வடையும்போது அரசாங்கங்கள் தடுமாறுகின்றன. ஏனெனில் நிதிக்கொள்கைகள் நாட்டின் மொத்தச் செலவு மட்டத்தை ஒழுங்கமைக்கவே உருவாக்கப்படுகின்றன. ஒப்பீட்டளவில் திடீரென வழங்கலில் ஏற்படும் சரிவு காரணமாக ஒரே நேரத்தில் வேலையின்மையும், பணவீக்கமும் ஒரேயடியாக உயரும் நிலைமையை இந்நிதிக் கொள்கைகள் சமாளிக்க முடியாது. இவ்வாறான நிலைமைகள் உண்மையில் எவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்றன. 1970 களில் இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டது. அப்போது எண்ணெய் ஏற்றுமதி செய்யும் பிரதான நாடுகள் தமது ஏற்றுமதிகளுக்குத் தடைகள் விதித்தன. இதனால் ஏற்பட்ட பாரிய விலை உயர்வானது கைத்தொழில் நாடுகளின் பொருளாதாரங்களை நிலைகுலையச் செய்தன. வழங்கலில் ஏற்பட்ட இத்தகைய பாரிய வீழ்ச்சியானது விலைகளை உயர்த்திய அதே நேரத்தில் உற்பத்தி, வேலை மட்டத்தை வீழ்ச்சியடையச் செய்தது.
தேசிய பொருளாதாரத்துக்கு ஏற்படும் இத்தகைய வழங்கல் அதிர்ச்சிகளை அரசாங்கம் ஈடு செய்வதற்கு அரசாங்கம் மக்களின் உற்பத்தி, சேமிப்பு, முதலீட்டு ஆர்வங்களை ஊக்குவிக்கலாம். தனியுரிமை அதிகாரத்தைக் குறைப்பதன் மூலம் காத்திரமான போட்டி மட்டத்தை உயர்த்தலாம். அடிப்படை வளங்களில் (அது எண்ணெய் ஆகவோ அல்லது பொறியியலாளர் போன்ற பயிற்றப்பட்ட திறனாகவோ இருக்கலாம்) காணப்படும் இக்கட்டுக்களை (bottle necks) நீக்கலாம். எண்ணெய் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் விடயத்தில் ஓர் அரசாங்கமானது உள்ளூர் எண்ணெய் உற்பத்தியைக் கூட்டலாம். சக்திவளப் பாதுகாப்பிற்கும், வினைத்திறனுக்கும் ஊக்குவிப்புக்களை வழங்கலாம். மாற்றீடான சக்தி வளங்களில் முதலீடு செய்யலாம். எவ்வாறெனினும் இத்தகைய வழங்கற்பகுதிக் கொள்கைகள் தொழிற்படப் பல வருடங்கள் எடுக்கலாம்.
சந்தைப் பொருளாதாரத்தில் பணவீக்கம், வேலையின்மைக்கு எதிராக நடக்கும் இந்த நீண்ட காலப் போராட்டத்தில் அரசாங்கமானது எவ்விதமான சஞ்சீவி மருந்தையும் வழங்கிவிட முடியாது. எனினும் அது
68

இப்பிரச்சினைகளின் தாக்கத்தின் தீவிரத்தன்மையை நிச்சயமாகக் குறைக்க முடியும். இன்று பல பொருளியலாளர்கள் பணவீக்கம், வேலையின்மை ஆகிய பிரச்சினைகளில் முகம் கொடுப்பதில் நீண்டகால நிலைப்படுத்தற் கொள்கைகள் மற்றும் அரசாங்கத்தின் பங்கு என்பனவற்றை அங்கீகரிக்கிறார்கள். அத்துடன் பணத்தின் வழங்கலில் பொதுவான, உறுதியான வளர்ச்சி வீதம், பொருளாதாரத்தின் நிலைமைக்கு ஏற்ப தன்னிச்சையாக இறங்கி ஏறும் அரசாங்கத்தின் செலவீட்டு வேலைத்திட்டங்கள், வரி அட்டவணைகள் ஆகியனவும் இவற்றுள் அடங்கும்.
பல சந்தைப் பொருளாதாரங்களில் கொள்கையாளர்களினால், தற்காலிகமான ஆனால் தீவிரமான வேலையின்மை, பணவீக்க நிலைமைகளைச் சமாளிக்கக் குறுகியகால நாணய, நிதிக்கொள்கைகள் கையாளப்படுகின்றன. எனினும் இக்கொள்கைகளின் நேரகாலம், தாக்கம் ஆகியவற்றில் பொருளியலாளர்கள் ஓர் இணக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. இறுதியாகச், சந்தைப் பொருளாதாரம் உட்பட எத்தகைய பொருளாதாரத்திலும் என்றும் முழுமையாகவும் நிரந்தரமாகவும், தீர்க்க முடியாத சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்பிரச்சினைகளை நாம் நடைமுறைரீதியாகவும், தனித்தனியாகவும் அவற்றைப் பாதிக்கும் பொருளாதார, அரசியற் காரணிகளைக் கவனத்திற் கொண்டு பரிசீலிக்க வேண்டும். இச் சந்தர்ப்பத்தில் தான் ஒரு சனநாயக அரசியல் முறைமை (அதாவது பொதுவிடயங்களில் இணக்கமின்மையையும் வெளிப்படையான விவாதத்தையும் தூண்டும் முறைமை) ஒரு சந்தைப் பொருளாதாரத்தின் இயக்கத்துக்குக் காத்திரமான பங்களிப்பைச் செய்ய முடியும்.
பொருளாதார மாற் த்துத்
தொழில்நுட்ப மூவிேதார்ம்
தொழில்நுட்பரீதியான ஒரு கண்டுபிடிப்பு, புதிய கைத்தொழிலை உருவாக்கிப் பொருளாதாரங்களிற் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திய சந்தர்ப்பங்களை வரலாற்றில் நிறையக் காணலாம். உதாரணமாக, நீராவி இயந்திரங்கள் ஆரம்பத்தில் மிகவும் பருமனாகவும், பாரமாகவும் இருந்தன. இவற்றைத் தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் மட்டும் நிரந்தரமாக அமைக்கமுடிந்தது. ஆனால் உலோகத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியானது இந்த இயந்திரங்களைச் சக்திமிக்கதாகவும் அதே நேரத்தில் பாரமற்றனவாகவும் மாற்றின. இதன் விளைவாகப் புகையிரத வீதிகளும் கைத்தொழில்களும் வளர்ச்சியடைந்தன. 69

Page 37
பின்னர் ஐரோப்பா, அமெரிக்கா உட்பட உலகத்தில் ஏற்பட்ட அபிவிருத்திக்கு இந்தப் புகையிரத வீதிகள் மூலாதாரமாக அமைந்தன.
அதேபோல அண்மைக்காலத்தில் டிரான்ஸிஸ்டரின் கண்டுபிடிப்பு மின்னியல்துறையிற் பெரும் புரட்சியையே ஏற்படுத்தியது. கணணிகள் முன்னர் பருமனாகவும், விலை அதிகமாகவும் இருந்ததுடன் அடிக்கடி செயலிழந்தன. இன்று அவை அளவில் சிறியதாகியிருப்பதும், மலிவாகவும் கிடைக்கின்றன. அவற்றின் வேகமும் நம்பகத்தன்மையும் அதிகரித்துள்ளன. முன்னர் அவை பெரிய பெரிய நிறுவனங்களில் மட்டுமே அமைந்திருந்தன. இன்று எங்கும் காணப்படுகின்றன.
தொழில்நுட்ப மாற்றமென்பது ஒரு விடயத்தை வேகமாகவும், கூடிய வினைத்திறன் மிக்கதாகவும் செய்யும் வழிகளைக் காட்டுகின்றது. இதனால் கிடைக்கும் நன்மைகள் முக்கியமானவைகளே. அதுமட்டுமல்லாமல் தொழில்நுட்ப மாற்றங்கள் தனியுரிமைகளைத் தகர்த்துப் பொருளாதாரத்தின் போட்டித் தன்மையை அதிகரிக்கின்றன. 19 ஆம் நூற்றாண்டுவரை புகையிரதம் உள்நாட்டுப் போக்குவரத்தில் தனியுரிமை செலுத்தியது. ஆனால் மோட்டார்இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் அது பலவித போட்டிகளை எதிர்நோக்கியது.
பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் இரும்புருக்குக் கைத்தொழிலுக்குப் போட்டி ஏற்பட்டது. அத்துடன் அதன் முக்கியத்துவத்தையும் பெருமளவுக்குக் குறைத்தது. egy6öT6oLoai as T625őlsü g5/6váTegy6226vej (microuvave Satellites), செயற்கைக் கோள்கள் நுண்இழை (fibre Optic) ஆகிய கண்டுபிடிப்புக்கள் தொலைத்தொடர்பு விடயங்களில் அரசாங்கத் தனியுரிமையைக் குறைத்து விட்டது. உதாரணமாக, ஐக்கிய அமெரிக்காவில் அமெரிக்கத் தொலைபேசி மற்றும் தந்தி Afgh 6/67 assor (American Telephone and Telegraph) தனியுரிமையானது இன்று யு. எஸ். ஸ்பின்ட் மற்றும் எம். சி. ஐ. (US sprint and MCI) போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களினால் தகர்க்கப்பட்டுவிட்டது:
Robert M. Dunn Jr.
70

பகுதி II
ஒரு சுதந்திர சமுதாயத்தில் பொருளாதாரம்
எஸ்ரா சொலமன்
தமிழாக்கம்
எஸ். அன்ரனி நோபேட் புவியியல் துறை கொழும்பு பல்கலைக்கழகம்
பொதுசன கல்வி நிகழ்ச்சித்திட்டம் மார்கா நிறுவகம்

Page 38

ஒரு சுதந்திர சமுதாயத்தில் பொருளாதாரம்
அறிமுகம்
பொருளியல் என்றால் என்ன? பொருட்கள் சேவைகளை உள்ளடக்கிய வகையில் உற்பத்தி, பரம்பல், பண்டங்களின் நுகர்வு ஆகியவற்றுடன் தொடர்புபடும் விஞ்ஞானம் என ஒருவர் வரைவிலக்கணம் கூறலாம். ஆனால் சிலர் கூறுவதுபோல் பெளதீகம், உயிரியலில் சொல்லப்படுவது போன்று ஒரு விஞ்ஞானமாக இல்லையெனினும் பொருளியலானது சமூக விஞ்ஞானத்தின் ஒரு முக்கிய பகுதி எனச் சிலர் வாதிடுகின்றனர். மனித விருப்புக்களையும் , தேவைகளையும் திருப்திப்படுத்துகின்ற பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்வதற்கு எவ்வாறு தனிப்பட்டவர்கள், சமூகங்கள், நாடுகள் ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கின்றது என்பதைப் பொருளியல் விளக்க முற்படுகின்றது. அதுமட்டுமின்றி ஒரு பொருளாதாரம் எவ்வாறு இயங்குகின்றது. தனிப்பட்டவர்களும், சமுதாயங்களும் பொருள்ரீதியாக எவ்வாறு வளம்பெறுகின்றார்கள் எனவும் கூறுகின்றது.
பொருளாதாரப் பரப்பில் காணப்படும் கருத்துருவங்கள் மனித வாழ்வில் குறிப்பிடத்தக்க பயன்களைத் தோற்றுவித்துள்ளன. அவற்றில் இரு முக்கிய கருத்தோட்டங்கள் (ideas) குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. விஞ்ஞான சோசலிசம் , தர்க்கரீதியான பொருள் முதல் வாதம் என்பன கோட்பாடுகளாக இருப்பதுடன் அவற்றினைப் பிரயோகிக்க முற்படும் போது அது சர்வாதிகாரக் கட்டுப்பாட்டு ஒழுங்குகளை உருவாக்குகின்றது. அத்தகைய ஒழுங்கானது அரச கட்டுப்பாடு, மத்திய திட்டமிடல் எல்லாவற்றையும் அவை தனியார் சொத்துக்களாக இல்லாவிட்டால் ஒழித்துவிடுதல் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. இறுதியில் விஞ்ஞான சோசலிசமானது நடைமுறையில் வறுமை, இயற்கை வளங்களின் அழிவு, தொழில்நுட்பரீதியாகப் பின்தங்கிய நிலைமை ஆகியவற்றை விளைவுகளாகத் தந்துள்ளன. இரண்டாவது பிரதான கருத்தோட்டமானது இங்கு கலந்துரையாடப்படுகின்றதுடன் பொதுவாகத் "திறந்த சந்தை” அல்லது சுதந்திரமான சந்தை" (free market) என்ற பதத்தின் கீழ் குறிப்பிடப்படுகின்றது. இக்கருத்துக்கள் மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, யப்பான் போன்றவற்றினதும் தற்போது அநேக கிழக்காசிய நாடுகளினதும் மென்மேலும் முன்னேற்றமடைந்து வருகின்ற செழிப்புமிக்க பொருளாதாரங்களுடன் இணைந்திருப்பதைக் காணமுடிகின்றது.
73

Page 39
திறந்த சந்தைப் பொருளாதாரத்தில் முக்கியமான இரு விடயங்கள் காணப்படுகின்றன.
(1) தொழில்நுட்ப முன்னேற்றத்தைத் தருவதுடன் பொருட் செல்வத்திலும் நலனிலும் சார்புரீதியாக உயர்நிலையை அடைந்து கொள்வதற்கான பொறிமுறையையும் வழிகளையும் தருவதாகத் தோன்றுகின்றது. திறந்த சந்தையானது உற்பத்தியாற்றலையும், ஆரம்ப முயற்சிகளையும் ஊக்குவிக்கின்றது.
(2. அரசியல், சனநாயகரீதியாகக் காணப்படுமிடத்து இதன் செயற்பாடு சிறப்பானதாகத் தோன்றுகின்றது. சர்வாதிகார அரசியலைக் கொண்ட பல்வேறு அமைப்புக்கள் பொதுவாக முழுச் சமூகத்துக்குமான பொருட்செல்வத்தை உற்பத்திசெய்ய மாட்டாது. ஆனால் சமுதாயத்தினுள் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான செல்வத்தை உருவாக்குவனவாக இருக்கின்றன.
எவ்வாறிருப்பினும் சனநாயத்துக்கும், செழிப்பான வளர்ச்சியைக் கொண்ட பொருளாதாரங்களுக்குமிடையில் பொதுவான இணைவு இருப்பதனைக் காணமுடிகின்றது. அது ஏன்? திறந்த சந்தைப் பொருளாதாரமாக இருப்பதினால் அல்லது சுதந்திரமான ஆட்சி அமைப்புமுறைக்கு மிகவும் பொருத்தமான திறந்த பொருளாதாரமாக இருப்பதினால் தனிப்பட்டவர்களுக்கும், பிரிவினருக்குமிடையில் பொருட்கள், சேவைகளின் சுதந்திரமான பரிமாற்றத்தில் பரந்தளவான சுதந்திரத்தினை அனுமதிக்கின்றதே காரணம் என ஒரு சிலர் வாதிடுகின்றனர். வேறுசிலர் கருதுவதுபோல் சமய, பண்பாட்டு இயல்புகள் பொருத்தமாகக் காணப்பட்ட நாடுகளில் சனநாயகம் தோற்றம் பெற்றது எனவும் குறிப்பிடப்படுகின்றது.
விஞ்ஞான சோசலிசத்தினர் அனுபவரீதியான முதலாவது விளக்கம் பரந்தளவான நடைமுறைப் போக்கினைக் கொண்டது. தனியார் சொத்துடமை, சுதந்திரமான சந்தைகள் என்பன பிரசைகளின் பொருளாதார வாழ்க்கை முறையின் மேலாக உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம் அரசின் அதிகாரத்தை மட்டுப்படுத்துகின்றது. பொருளாதாரத் தீர்மானங்களை உருவாக்குவதில் தனிப்பட்டவர்களின் சுதந்திரமானது பிரசைகளின் அரசியல் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகின்ற அரசின் அதிகாரத்தைத் தடுக்கின்றது.
சனநாயக அரசில் அரசானது பொருளாதார விடயங்களிலிருந்து விலகிச் செல்வதில்லை. சட்டரீதியாக உருவாக்கப்பட்ட அரசாங்கமானது தனது செயற்பாட்டிற் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது அவை பொருளாதாரத்தைப் பாதிப்பனவாக அமைகின்றன. அரசாங்கத்தின் நிறைவேற்றுப் பிரிவானது (Executive branch) நாணயங்களை
74

அச்சிடுகின்றது. தேசிய நாணயத்தை வெளியிடுகின்றது. இது சமூகத்தில் வட்டி வீதங்களில் செல்வாக்கு செலுத்துகின்றதுடன் பொதுவான விலை மட்டத்தின் ஸ்திர நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. வரிகள் என்ன நோக்கத்திற்காக விதிக்கப்படுகின்றன. சமூகத்தின் மீது விதிக்கப்படும் வரியின் அளவு எவ்வளவாக இருக்கவேண்டும் என்பது பற்றிப் பாராளுமன்றமும், சட்டமன்றமும் தீர்மானம் எடுக்கின்றது. அரசாங்கம் பணத்தைச் செலவிடுகின்றதுடன் தனிப்பட்டவர்கள் என்னென்ன துறைகளில் ஈடுபாடு கொள்ளவேண்டும்மென்பதையும் ஊக்குவிக்கின்றது.
பாராளுமன்றத்தினாலும், சட்டமன்றத்தினாலும் உருவாக்கப்படும் சட்டங்கள் பொருளாதார நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துகின்றன. அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஆணைகளின் பிரகாரம் பொருளாதார நடவடிக்கைகள் மேலும் சீராக்கப்படுகின்றது. ஒரு பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கத்திலும் , பிரசைகளின் தேவைகள் , விருப்புக்கள் என்பவற்றிலுமே இத்தகைய தீர்மானங்களும் , சட்டங்களும் தங்கியிருக்கின்றன.
பொருள் நலனில் செழிப்பு எங்கு காணப்படுகின்றதோ அங்கு வருமானம் எவ்வாறு பரம் பிக் காணப்படுகின்றது, செல் வந்தர்களுக்கும் , வறியவர்களுக்குமிடையில் சமமின்மை காணப்படும் போது அரசாங்கமானது செல்வத்தினை மீள்பரம்பல் செய்வதற்கு உதவி செய்யவேண்டுமா என்ற கேள்வியும் எழுகின்றது. பொதுவாக, திறந்த சந்தைப் பொருளாதாரம் காணப்படும் நாடுகளில் வேலையற்றவர்களுக்கும் வறியவர்களுக்கும் வருமானத்தையும், சேவையையும் அளிக்கக் கூடிய பல்வேறுவகையான நலன்தரு கொள்கைகளைக் காணமுடிகின்றது. ஆனால் இதனை எவ்வளவு காலத்துக்கு வழங்கலாம், யாருக்கு வழங்கவேண்டும் என்பது ஒரு தொடர்ச்சியான கேள்வியாகும். சனநாயக சமுதாயத்தில் பெரும்பான்மை மாற்றமடையலாம். புதிய தேர்தல்கள்மூலம் புதிய ஆட்சியாளர்கள் வரலாம். அவர்களின் வித்தியாசமான சிந்தனைகள் அரசின் ஆட்சியில் பிரதிபலிக்கப்படலாம். இத்தகைய விடயங்களில் மிகப் பிரதானமானது என்னவெனில், ஒரு சனநாயகத்தில் சனநாயக செயற்பாடுகள் மற்றும் அரசியல் யாப்புரீதியான ஒழுங்குகள். ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன் அவை மத்திய அரசாங்கத்துடன் அல்லது அரசின் ஆட்சியையும், நோக்கத்தையும் பொருளாதார விடயங்களில் பிரதிபலிக்கும் என்பதே. நாட்டின் பிரசைகள் பொருளாதார விடயங்களில் அறிவுள்ளவர்களாக இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை இது வேண்டிநிற்கின்றது. உண்மையில் அவர்கள் தான் சுதந்திர சமுதாயத்திலும் , சனநாயகத்திலும் பொருளாதாரத்தை நிர்ணயிப்பவர்களாகின்றனர்.
75

Page 40
சந்தை முறைமை
இக்கட்டுரையானது பல வகையான கருத்துருவங்களை விபரிப்பதுடன் கோட்பாட்டுரீதியிலும், நடைமுறையிலும் எவ்வாறு ஒரு சுதந்திரமான சந்தை முறைமை இயங்குகின்றதென்பதை மேற்கு ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றுப் பின் புலத்தில் விளக்குகின்றது. பலவகைப்பட்ட கோட்பாட்டுரீதியான பாடவிதான நூல்களும் , வரலாறுகளும் மிகவும் விரிவான, விளக்கமான விபரணங்களைத் தருகின்றன. இக்கட்டுரையானது பொருளாதாரம் பற்றிய அறிவு அல்லது அனுபவம் குறைந்தவர்களுக்கு மிகவும் பயனுடைய அறிமுகத்துக்கான மூலாதாரமாக அமையலாம். பயன்படுத்தப்பட்டுள்ள சில கருத்துக்களும், பதங்களும் சர்ச்சைக்குரியனவாக இருப்பதுடன் கருத்தியல்ரீதியான விவாதத்துக்கும் உரியது. எனவே இப்பதங்கள் பற்றிய நோக்கானது மிகப் பயனுள்ள ஓர் ஆரம்ப முயற்சியாக இருக்கின்றது. ஒரு சந்தை முறைமையின் பல்வேறு அம்சங்களையும், வழிகளையும், அதில் ஒரு சந்தை முறைமை எவ்வாறு இயங்குகின்றதென்பதையும் இக்கட்டுரையில் அழுத்திக் கூறப்படுகின்றது.
(1) Jigsbg5 J (pubf (pops Lp (Free enterprise system)
இப்பதம் அழுத்திக் கூறுவதென்னவெனின் தனிப்பட்டவர்களின் சுதந்திரமானது, அவர்களது விருப்பு அல்லது தெரிவின் அடிப்படையில் ஒரு புதிய நிறுவனத்தை ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கவேண்டும். அத்துடன் ஏனைய நிறுவனங்களுடன் கைத்தொழிலில் போட்டி போடவும், பெற்றுக் கொள்ளும் இலாபத்தைத் தாம் வைத்திருக்கவும் அல்லது ஏற்படக்கூடிய இழப்புக்களை ஈர்த்துக் கொள்ளவும் வசதிகள் இருக்கவேண்டும்.
(2) 3565,6houîLITo GasTsiT55,35 (Laissey - faire system)
செய்வதற்கு அனுமதி (allow to do) என்ற பிரான்சிய சொல்லின் கருத்தைத் தரும் இப்பதமானது - சந்தைப் பொருளாதாரத்தில் தனிப்பட்டவர்களினதும், சமுதாயத்தினதும் பொருளாதார விடயங்களில் அரசாங்கத் தலையீடானது இல்லாதிருக்க வேண்டும் என்ற நம்பிக்கையை விபரிக்கின்றது.
76

(3) (pg561)st 6 fig556). If (Capitalism)
வரலாற்றுரீதியானதும் பொருளாதாரரீதியானதுமான அம்சங்களைக் கொண்ட இச்சொல்லின் பொருளானது சுதந்திரமான சந்தை முறைமையானது ஏறக்குறைய 200 வருடங்களுக்கு முன்பிலிருந்து நிலபிரபுத்துவ மற்றும் வணிகத்தின் முதலாளித்துவத்துக்கு முற்பட்ட முறைமைகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் விபரிக்கின்றது. பொருளாதார நோக்கில் இது மூலதனத்திரட்சியின்(capitalaccumulation) முக்கிய செயற்பாட்டை வலியுறுத்துவதாக அமைகின்றது. அதாவது இங்கு மிகையை சமுதாயத்தின் உடனடி நுகர்வுத் தேவைக்கு மேலாகத் தோற்றுவிப்பதற்கான உற்பத்திச் செயற்பாட்டில் மூலதனம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த மிகையானது நீண்டகாலத்தில் தொடர்ந்து உற்பத்தியை மென்மேலும் அதிகரிப்பதற்கு ஏதுவான முதல் இருப்பை (stock of capital) அதிகரிப்பதற்காக மீள் முதலீடு செய்யப்படுகின்றது. ஏனைய முறைமைகளுடன் ஒப்பிடும்போது குறிப்பாக பண்டைய எகிப்து மற்றும் ரோமப் பேரரசுகளில் பொருளாதாரத்தின் மிகையானது உற்பத்திக்கான முதல் இருப்பாக மட்டும் சேர்க்கப்படவில்லை. அத்துடன் உற்பத்திசாராத பிரமிட்டுக்கள், கோயில்கள், இராணுவக் கட்டமைப்புக்கள் என்பவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டதை அறியமுடிகின்றது.
(4) 3795ig5'J LOT5) T GUT(56TTg5TJub (free economy)
இப்பதமானது முதலாளித்துவம் அல்லது சுதந்திரமான சந்தை குறிப்பிடுவதுபோன்று சில கருத்து நிலைப்பட்ட மூலக் கூற்றினைத் தவிர்த்துக்கொள்கின்றது. இப்பதத்தைச் சுதந்திர சமுதாயம் (free Society) என்னும் பதத்துடன் பயன்படுத்தமுடியும். அதாவது முனைப்பான அரசியல் தன்னாதிகத்தைக் கொண்டிருக்கின்ற அதேவேளை தனிப்பட்டவர் களுக்கிடையில் சுதந்திரமான மற்றும் பொருட்கள் சேவைகளின் திறந்த பரிமாற்றத்தைக் கொண்டிருக்கின்ற ஒரு முறைமையை விபரிப்பதற்குச் சுதந்திரமான சமுதாயம் என்ற பதத்துடன் சேர்த்துப் பயன்படுத்த முடியும்.
(5) அடம் ஸ்மித் அல்லது ஸ்மித்தின் முறைமை
முதலாவது சந்தைப் பொருளியல் வல்லுனரான ஸ்மித் என்பவருக்கு மதிப்பளிப்பதற்காகச் சந்தை முறைமையானது அடம் ஸ்மித் அல்லது ஸ்மித்தின் முறைமை என அழைக்கப்படுகின்றது. அடம் ஸ்மித்தின் பிரபல்யமான அரசுகளின் செல்வம் (The Wealth of Nations) என்னும் நூலானது 1776 இல் நவீன கைத்தொழில் முதலாளித்துவம் ஆரம்பித்தவேளையில் வெளிவந்தது. சந்தை அமைப்பானது எவ்வாறு இயங்க முடியும், ஏனைய மாற்று ஒழுங்குகளை விட மிகவும் திறமையாக
77

Page 41
ஏன் இயங்க வேண்டும் என்பது பற்றிய அக நோக்கினை முதன்முதலில் இது வெளிக்கொணர்ந்தது. கடந்த 200 வருடங்களுக்குமேலாகப் பொருளாதாரக் கோட்பாட்டில் ஏற்பட்டுவந்துள்ள பல்தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பொருள் (subject) சார்ந்த விடயங்களில் உருமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் ஸ்மித்தின் உண்மையான அக நோக்கானது, அவை 1776 காலத்துக்குரியவையெனினும் இன்றும் பொருந்துவனவாக இருக்கின்றன.
அடம் ஸ்மித்தும் மறைமுகக் கரமும்
பொருளாதாரத்தில் அன்றும் இன்றும் ஒரு பிரதான கேள்வி எழுகின்றது. அதாவது மத்திய திட்டமிடல் அல்லது நெறிப்படுத்துகை இல்லாமல் எப்படி ஒரு சமுதாயமானது (இலட்சக்கணக்கான தனிநபர்களைக் கொண்ட) நுகர்வோர்களாகக் காணப்படுகின்றது. சந்தையில் இவர்கள் தேவையான பொருட்கள், சேவைகளை அளிப்பதற்கு (அதே இலட்சக் கணக்கான தனிப்பட்டவர்களினால்) எவ்வாறு உற்பத்தியாளர்களாக இயங்க முடிகின்றது. இலட்சக்கணக்கான நிறுவனங்களில் எப்படித் தொழில் புரிகின்றனர் உண்மையில் முடிவு ஓர் ஒழுங்கற்ற நிலையையே தோற்றுவிக்கும். அடம் ஸ்மித்தின் வாதத்தின்படி சுதந்திர சந்தைப் பொருளாதாரமானது மூன்று பிரதான அக நோக்கினடிப்படையில் சீராக இயங்கக்கூடியது.
(1) இருபிரிவினருக்குமிடையில் ஒரு பரிமாற்றம் தன்னிச்சையாக ஏற்படுமானால் , அவ்விருபிரிவினரும் அதிலிருந்து நன்மையடைவார்கள் என நம்பிக்கை கொள்ளாமல் இருந்தால் அது இடம் பெற மாட்டாது. ஒரு பகுத்தறிவுள்ள மனிதன் தனக்குத் தேவைப்படாத ஒன்றுக்கோ அல்லது விருப்பமில்லாமலோ பணத்தைப் பரிமாற்றம் செய்யமாட்டான். தனக்குப் பணரீதியாக இழப்பு வருமெனக் கண்டும் சிலவற்றை விற்பனைசெய்யமாட்டான். அங்கு நன்மை இருக்கவேண்டும். அது பரஸ்பரமுடையதாக இருக்கவேண்டும். ஒரு பிரிவினரின் சுயவிருப்பின்பேரில் இன்னொரு இரண்டாவது பிரிவின் சுய விருப்பத்துக்கு உதவப்படுகின்றது.
(2) ஒரு சுதந்திர, போட்டிச் சந்தையில், தன்னிச்சையான கொடுக்கல் வாங்கல்கள் அநேகமாக விற்பவருக்கும் வாங்குபவருக்குமிடையில் இடம்பெறுகின்றது. ஒவ்வொன்றும் அவனின் அல்லது அவளின் சுய விருப்பின் பேரிலேயே இயங்குகின்றதுடன் ஒவ்வொருவரையும்
78

நல்ல நிலைக்கு உருவாக்குகின்றது. ஒரு தனிப்பட்ட நுகர்வோன், அவனுக்குக் கிடைக்கக் கூடியதாக இருக்கின்ற பல்வகைப் பண்டப் பொருட்களை அவனுக்கு விருப்பமான வகையில் வாங்கிக் கொள்ள முடிகின்றது. அவன் தனது சேவைகளை உற்பத்தியாளனாக (ஏனைய உற்பத்தி வழங்கலின் உரிமையாளன் என்ற வகையில்) விற்பனை செய்யவும் முடியும். எவ்வாறிருப்பினும் நுகர்வோன் பல்வேறு வழிகளில் தனது திருப்தியையும், வருமானத்தையும் உச்சப்படுத்திக் கொள்கிறான். ஒவ்வொரு நிறுவனமும் தனது திறமைகளை உச்சப்படுத்துவதன் நோக்கில் உற்பத்திச்சேவைகளை வாங்கவோ அல்லது வாடகைக்கு எடுக்கவோ கூடும். அதனால் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்வதாலும் உற்பத்தியில் இருந்து நன்மையையும் அடைந்து கொள்கின்றது. இச் செயற்பாட்டில் உற்பத்திகளுக்கான சந்தை விலைகளும் உற்பத்திக் காரணிகளும் (உழைப்பு நிலம், முதல்) தோற்றம்பெறுகின்றதுடன்நிலைமைகள் மாறும்போது மாற்றத்தினையும் அடைகின்றது. சார்புரீதியான விலைகளில் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டு அவை நுகர்வோர், உற்பத்தியாளர்களின் நடத்தையிலும் மரற் றங்களை ஊக்குவிக்கின்றன.
(3) சார்புரீதியான விலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் உற்பத்திகளுக்கான கேள்வி - நிரம்பல்களின் இடையீடுகளினால் இயக்கப்படுகின்றது. உற்பத்திக் காரணிகள் இலட்சக்கணக்கான மக்களின் நடவடிக்கையைக் கூட்டிணைப்பதற்குத், தன்னியக்கமாக
1. நிலம் (Land) இயற்கையின் கொடை. அதற்கு மேலாகச் கணிப்பொருட் படிவுகள், காடுகள், மழைவீழ்ச்சி, வெப்பநிலை, நீர்வளங்கள் முதலியவற்றையும் உள்ளடக்கும். பொருட்கள் சேவைகளை உற்பத்தி செய்வதற்கு மனிதனால் பங்களிப்புச் செய்யப்படுகின்ற பெளதீக, தொழில்நுட்ப மற்றும் அறிவுசார் திறமைகளின் கிடைக்கக்கூடிய தன்மையை உழைப்புக் (Labour) குறிக்கின்றது. முதலானது (Capital) கட்டடங்கள், சடத்துவம், இயந்திரங்கள், வாகனங்கள் மற்றும் ஏனைய கருவிகளின் பெளதீக இருப்பையும் அரையிறுதி மற்றும் இறுதிப் பொருட்களின் விபரப்பட்டியலையும் குறிக்கின்றது. நிதிசார்ந்த முதலானது (Financial Capital) உதாரணமாக ஒரு நிறுவனத்தின் உரிமையாளரினால் அளிக்கப்பட்டதாக இருக்கலாம் அல்லது நிதிச் சந்தையிலிருந்து கடன் வாங்கியதாக இருக்கலாம். அவை உற்பத்தியின் நேரடிக் காரணி அல்ல. ஆனால் மிகப் பிரதானமான மறைமுகக் காரணி என்னவெனில் ஒரு நிறுவனம் தனது உற்பத்திகளை விற்பனை செய்வதினூடாக வருமானத்தைப் பெற்றுக் கொள்ளத் தொடங்குமுன் மூலப் பொருட்களை வாங்கவும், வேயைாட்களுக்குச் சம்பளம் வழங்கவும் இந்நிதியைப் பயன்படுத்துகின்றது.
79

Page 42
உதவுகின்றது. மத்தியதிட்டமிடற் பிரிவு செய்யக் கூடியதிலும் பார்க்க நல்ல முறையில் மிகச் சிறந்த வினைத்திறனுடன் செய்கின்றது. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் போட்டியும் தெரிவுச் சுதந்திரமும் காணப்படும் பொழுது எவ்வாறு விலை முறைமை (price system) பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கின்றது என்ற ஸ்மித்தின் விபரணம் பின்வருமாறு அமைகின்றது.
"தனிப்பட்ட ஒவ்வொருவனும் தனது முதலை ஈடுபடுத்துவதில்பெருமுயற்சி செய்கிறான். அவன் பொதுவாகப் பொது விருப்பை உயர்த்துவதற்கு அல்லது எந்தளவிற்கு அதனை உயர்த்த முடியும் என்பதைத் தெரிந்தவனாகவே செயலாற்றுகின்றான். அவன் சொந்த நன்மையையும் விரும்புகிறான். மறைமுக கரத்தினால் அவன் விரும்பாத ஒரு நிலைக்கு இட்டுச் செல்லும் போது அவனும் அதனைநோக்கி ஈர்க்கப்படுகின்றான். அவன் உண்மையில் சமுதாயத்தை முன்னேற்ற விரும்பியதிலும் பார்க்க மிகவும் பயனுறுதி வாய்ந்த முறையில் தனது சொந்த விருப்பை அனுசரித்துச்செல்வதன்மூலம் முன்னேற்றமானநிலையை அடைகிறான்" (Adam Smith, 1937).
பொருளியலில் பயன்படுத்தப்படும் உற்பத்திக்காரணிகள் என்ற பதம் யாருக்கு, எதை என்பதை விபரிக்கின்றதுடன் ஒரு குறிப்பிட்ட பொருளை உற்பத்திசெய்கின்ற (உதாரணமாக, தொலைக்காட்சிப் பெட்டி) அல்லது சேவைகளை அளிக்கின்றவற்றின் (உதாரணமாக, வங்கியியல் அல்லது உணவுச் சேவை) ஒரு பகுதியாகக் கூறப்படுகின்றது. ஆயிரக் கணக்கான காரணிகள் உற்பத்தியின் பகுதிகளாகக் காணப்படுகின்றன. அவை வழக்கமாக 3 பகுதிகளாகப் பிரிக்கப்படும்.
пп
விலைகளின் பங்கு
மறைமுகக்கரமானது விலை முறைமையினூடாக இயங்குகின்றது. நவீன கைத்தொழிற் பொருளாதாரமானது உற்பத்தி செய்யப்படுகின்ற இலட்சக்கணக்கான பொருட்கள், சேவைகளின் பணரீதியான விலையைக் கொண்டுள்ளன. (ஒரு இறாத்தல் இறைச்சிக்கும் ஒரு தொன் உருக்குக்கும் வெவ்வேறு விலைகள் உள்ளன) இத்தகைய இலட்சக்கணக்கான
2. Adam Smith (1937): The Wealth of Nations, ed. Edwin Cannan (New York,
Modern Library), p.423.
80

விலைகளானது பல இலட்சங்களைக் கொண்ட சார்புரீதியான விலைகளாக அவதானிக்க முடியும். தனிப்பட்ட நுகர்வோர் (consumers) எவ்வாறு தமது மட்டுப்படுத்தப்பட்ட வரவு - செலவில் செலவு செய்வதற்குத் தெரிவு சய்கின்றார்கள் என்பதையே சார்பு விலைகள் (relative prices) விளக்குகின்றன. X என்ற உற்பத்தியைக் கொள்வனவு செய்கின்ற ஒருவனின் உண்மையான செலவானது y இன் உற்பத்தியில் கொள்வனவு இல்லை என்பதைச் சுட்டிநிற்கின்றது. இது மாறாகவும் நடக்கும். ஒரு குறிப்பிட்ட அளவு பணம் வைத்திருக்கும் ஒரு தனிப்பட்ட நபர் எல்லாப் பொருட்களையும் வாங்குவதற்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட வகையான பொருட்களையே வாங்குவதற்குத் தெரிவு செய்கின்றார். இது அவர் வைத்திருக்கும் பணத்தின் அளவிலும், பொருட்களின் விலையிலும் தங்கியுள்ளது. ஒரு மரபுவழிச் (Monogomous) சமுதாயத்தில் ஒரு மனைவியின் தெரிவு என்பது எல்லாச் சாதகமான மாற்றுவழிகளையும் தெரிந்தெடுத்தல் என்ற கருத்தாகாது. ஒரு பொருளாதாரத்தில் மக்களால் உருவாக்கப்படும் இத்தகைய தெரிவுகள் தான் உண்மையான செலவை அல்லது சார்பு விலைகளை உருவாக்குகின்றது.
இவை எம்மை அடிப்படையான பொருளாதாரப் பிரச்சினைக்கு fundamental economic problem) gl Gd Gafs) 8) assir Ds.
பாடுகளுக்கிடையே ஒதுக்கப்பட வேண்டியுள்ளது. தனிப்பட்டவர்கள், குடும்பங்கள், அல்லது முழுச் சமுதாயத்துக்கும் இது உண்மையானது. ாருக்கு, எப்படி, என்னத்துக்கு இத்தகைய வரைறுக்கப்பட்ட வளங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
லைமுறைமையின் செயற்பாடானது உதாரணமாக, இலட்சக்கணக்கான ார்பு ரீதியான விலைத் தொகுதி முழுவதும் உற்பத்தியாளருக்கும, பிற்பனையாளருக்கும், வாங்குவோருக்கும் தகவல்களை அளிக்கின்றது. விலை முறைமைக்கு ஏனைய பிரதான மாற்றுவழியானது அரச ட்டுப்பாட்டு விலையாகும். இம்முறைமையானது உண்மையான செலவு real costs) பற்றிய தகவல்களை அறிந்திருக்க மாட்டாது. ழுந்தமானமாகவே விலைகளை நிர்ணயிக்கின்றது.
ரு சுதந்திர சந்தையில் எந்தத் தனிப்பட்டவரும் பயனுறுதி வாய்ந்த முறையில் செயற்படுவதற்கு சார்பு விலைகளின் முழுவீச்சினைப் பற்றி அதிகம் கவலைப்படத்தேவையில்லை. தனிப்பட்டவர்களும், தனிப்பட்ட றுவனங்களும் தமது உற்பத்திகளினதும் சேவைகளினதும் விலைகளையும், சார்பு விலைகளையும் விளங்கிக் கொள்வதுடன் அவதானிப்பதும் அவசியமாகும். ஏனெனில் விற்பனையாளராகவோ, காள்வனவு செய்பவராகவோ இருப்பினும் அது அவர்களுக்கு க்கியமானது. உதாரணமாக பன்றி வளர்க்கும் விவசாயி ஒருவர்
81

Page 43
ஆரம்பநிலையில் நிலத்தின் விலையையும், வங்கிகள் அறவிடக் கூடிய வட்டிவீதங்களையும், உணவின் விலையையும் அல்லது ஏனைய இறைச்சிகளின் சார்பு விலைகளையுமே கவனத்திற் கொள்கின்றான். அவன் இரும்புருக்கின் விலைகளைப் பற்றிக் கவனம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. எவ்வாறிருப்பினும் முழுச்சமுதாயத்துக்கும், சுதந்திரப் போட்டிச்சந்தையில் காணப்படும் விலை முறைமையானது, அச்சமுதாயம் பதிலளிக்க வேண்டிய மூன்று கேள்விகளுக்கான தெளிவான வழிகாட்டியை அளிக்கின்றது.
அவையாவன : (1) என்ன பொருட்கள், என்ன அளவுகளில் உற்பத்தி செய்யப்படும் (2) அவை எவ்வாறு உற்பத்தி செய்யப்படும் (3) யாருக்காக அவை உற்பத்தி செய்யப்படும். நவீன கைத்தொழிற் சமுதாயங்களில் இலட்சக்கணக்கான வெவ்வேறுபட்ட பொருட்களையும், வெவ்வேறான சேவைகளையும் உற்பத்தி செய்யக் கூடியனவாக உள்ளன. ஏனெனில் உற்பத்திக்கான வளங்கள் பன்முகப்படுத்தப் பட்டவையாகவும், ஒவ்வொருவரினதும் விருப்புக்கள் திருப்திசெய்யப்பட முடியாதனவாகவும் இருக்கின்றது. எவ்வாறு கலப்பு உற்பத்தி (production mix) தீர்மானிக்கப்படவேண்டும். அத்தகைய தீர்மானங்கள் யாரினால் எடுக்கப்பட வேண்டியிருக்கின்றது.
என்ன பொருளை உற்பத்தி செய்ய வேண்டுமென்ற முடிவை ஒருமுறை ஏற்படுத்திய பின், இம்முறைமையானது பல்வேறுவகைப்பட்ட உற்பத்திக் காரணிகளின் (factors ofproduction) இணைவுகள் என்னவென்பதனைத் தீர்மானிப்பதற்கான வழியை அளிக்கின்றதுடன் இந்த இணைவானது ஒவ்வொரு வகையையும் உற்பத்திசெய்வதற்குப் பயன்படுத்தப்படுவதுடன் இத்தீர்மானங்களை யார் மேற்கொள்வது என்பதும் முக்கியமானது.
யாருக்கு உற்பத்தி செய்வது என்ற கேள்வியைப் பொறுத்தவரையில் ஒரு சமுதாயத்தின் வெளியீடானது எவ்வாறு அச்சமுதாய மக்களுக்கிடையில் பிரிக்கப்படுகின்றது என்பது முக்கியமாகும் , வெளியீட்டுக்கான ஒவ்வொருவரின் கோரிக்கையும் அவ்வெளியீட்டினைச் செய்கின்ற ஒவ்வொருவரின் பங்களிப்பின் பெறுமதியில் தங்கியிருக்கின்றதா அல்லது இக் கோரிக்கை சுதந்திரமான பங்களிப்பாக இருக்குமா, எப்படி அரசாங்கமானது வருமானமும், வெளியீடும் பரம்பிக் காணப்படும் ஒரு நிலையில் அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்குப் பரிந்து பேசுகின்றது.
இம்மூன்று கேள்விகளுக்கும் பல்வேறுபட்ட வழிகளில் பதிலளிக்கப்பட்டுள்ளமையை வரலாறு எமக்குக் கூறி நிற்கின்றது. நாம் ஏலவே அவதானித்தது போன்று நவீன கைத்தொழிற் பொருளாதாரங்களில் சுதந்திர சந்தை (முதலாளித்துவ) முறையும், மத்திய திட்டமிடப்பட்ட (சோசலிச) முறையுமே இருபிரதான மாற்று அமைப்புகளாகக்
82

காணப்பட்டிருந்தன. இவ்விருமுறைகளும் மூன்று பரிமாணங்கள் வழியே வேறுபட்டிருந்தன. சோசலிச முறைமையில் என்னத்தை, எப்படி உற்பத்தி செய்வதென்ற தீர்மானங்களின் பெரும் பகுதி அரசினால் மேற்கொள்ளப்பட்டது. உற்பத்திச் சாதனங்கள் அரசின் சொந்தமாக இருந்ததுடன் மத்திய திட்டமிடலே பொதுவான அம்சமாகவும் காணப்பட்டது. மாறாக, சுதந்திர சந்தை முறைமையில் காணப்படும் நுகர்வோரின் தனிப்பட்ட தீர்மானங்களானது உற்பத்திச் சாதனங்களை
உற்பத்தி செய்வது என்ன? என்பதைத் தீர்மானிக்கின்றது. "
تھی کہہ سکتی ہw سے سعتقادیانی معاص؟ ஓசிஒழுங்கமைப்பு
ஒரு சந்தை முறைமைப்
பொருளியலில் காணப்படும் சமநிலை (equibrium) என்னும் கருத்தியலானது பெளதீகத்திலிருந்து பெறப்பட்டதாகும். பொருளியலில் தரப்பட்ட விலைகளில் உற்பத்திக்கும், உற்பத்திக் காரணிகளுக்குமான கேள்வியானது (நிலம், முதல், உழைப்பு) அவற்றின் நிரம்பலினால் திருப்திப்படுத்தப்படுகின்ற ஒரு நிலையையே இது குறித்து நிற்கின்றது. கேள்வியும், நிரம்பலும் ஆகிய கருத்தியலானது, கேள்வியும் நிரம்பலும் சமநிலையில் காணப்படும் ஒரு நிலையில் குழப்பங்கள் ஏற்பட்டு மீண்டும் புதிய சமநிலையை அடைவதற்குக் காரணமான இயங்கு சக்திகள் ஏன், எப்படி ஏற்படுகின்றன என்பதை ஆய்வு செய்வதற்கு, வாய்ப்பளிக்கின்றது. உதாரணமாக, ஒரு கண்ணாடிப்பாத்திரத்தில் உள்ள திரவமானது கலக்கி விடப்பட்டபின் மீண்டும் ஓர் அமைதி நிலைக்குத் திரும்புவதுபோல் ஆகும். -naura சமநிலையானது உதாரணமாகப் புடவைகளை உற்பத்தி செய்வதற்கான செலவுகுறைந்த இயந்திரங்களை அல்லது சிறந்தவற்றைக் கண்டுபிடிப்பதினால் தொழில்நுட்பத்தில் ஏற்படுகின்ற மாற்றத்தினால் குலைக் கப்படுகின்றது எனக் கருதப்படுகின்றது. இத்தகைய கண்டுபிடிப்புக்கள் சில உற்பத்தியாளர்களுக்கு, அவர்கள் முன்பே வேலைக்கமர்த்திய தொழிலாளர்கள் மூலம் இயக்கப்படும் இயந்திரங்களைப் பதிலீடு செய்வதற்கும், சொந்த நலனை அடைந்து கொள்வதற்கும் முயற்சிக்கின்ற உற்பத்தியாளர்களுக்குத் தூண்டுதலாக அமையலாம். புடவைத் தொழிற்சாலையில் வழக்கமாக வேலை செய்வோர் நீண்ட காலத்தில் அவ்வேலையில் இருக்கமாட்டார்கள். இம்முறைமை நீண்ட காலத்திற்குச் சமநிலையில் காணப்படமாட்டாது.
83

Page 44
ஆனால் கதையின் முடிவு அதுவல்ல. புதிய இயந்திரத்தின் பயன்பாட்டினால் நிறுவனத்தின் உற்பத்தி அதிகரிக்கும். பொருட்களின் ஒவ்வொரு அலகுக்கான உற்பத்திச் செலவு குறையும். அத்துடன் நிறுவனத்தின் இயலளவானது அதிகளவில் உற்பத்தியைச் செய்யக் கூடியவாறு அதிகரிக்கும். அதன் மூலம் புடவைச் சந்தையில் இதன் பங்கு நிலவரத்தையும் அதன் மொத்த இலாபத்தினையும் அதிகரிப்பதற்காகக் குறைந்த செலவுடன் போட்டி நிறுவனமானது விலைகளைக் குறைக்க முடியும். புடவைகளின் குறைக்கப்பட்ட புதிய விலைகளினால் நுகர்வோர் அதிக துணிகளைக் கொள்வனவு செய்வதற்குத் துண்டுதல் அளிக்கின்றது. மாற்றாக அதிக துணிகளுக்கான தமது கொள்வனவுகளை அதிகரிப்பதைத் தெரிவு செய்யாத நுகர்வோர் ஏனைய பொருட்களை வாங்க முற்படுவர். எந்த வழியிலும் தொழிலாளருக்கான கேள்வியானது மீண்டும் அதிகரிக்கும். (அதிக பொருட்களுக்கான கேள்வியினால்), இதனால் புடவைத் தொழிற்சாலையில் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வன்மையான மாற்றத்தினால் மாற்றம் செய்யப்பட்ட தொழிலாளர் மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவர். சுருங்கக் கூறின் முன் இருந்த நிலைமையிலும் பார்க்க, தலா ஒரு தொழிலாளிக்கான மொத்த உற்பத்தியின் உயர் மட்டத்தினை அளிக்கின்ற சமநிலைக்குப் பொருளாதாரமானது திரும்பும்.
அடம் ஸ்மித்தும், அவரது வாதங்களைப் பின் பற்றிய பழம் பொருளியலாளர் களும் எவ்வாறு தனிப் பட்டவர்களின் சுயவிருப்புக்களானது நிரம்பல், கேள்வி, விலைச்சக்திகளினூடாக இயங்கி மத்திய திட்டத்தின் உதவியற்று இயங்கக் கூடிய சுதந்திர சந்தைப்
இலாபத்தினை உழைக்க விரும்புகின்றனர். நுகர்வோர் சாத்தியமான சிறந்த விலையில் சிறந்த உற்பத்திகளைக் கொள்வனவு செய்ய விரும்புகின்றனர்.
V
சுதந்திர சந்தையின் அனுகூலங்கள்
ஒரு சுதந்திர சந்தை எவ்வாறு இயங்குகின்றதென்று காட்டுவதற்குமேலாக, ஸ்மித்தும் அவருக்குப் பின் வந்தவர்களும் ஒரு சந்தை முறைமையானது மூன்று மிக முக்கிய நன்மைகளைச் சமூகத்துக்கு அளிக்கின்றன என வாதாடினர்.
84
 

(1)
(2)
(3)
அரசு அல்லது அதன் அதிகாரவர்க்கம் ஆகியவற்றிலும் பார்க்க நுகர்வோன் ஒரு பொருளாதாரம் என்ன அளவில் என்னத்தை உற்பத்தி செய்கின்றது என்பதைத் தீர்மானிப்பவனாக இருக்கின்றான். இது நுகர்வோனின் இறைமை (sovereignty) எனக் கருதப்படுகின்றது. ஒவ்வொரு முறையும் நுகர்வோன் ஒரு குறிப்பிட்டபொருளை அல்லதுசேவையை வாங்கும்போது அவனது பணத்தைப் பயன்படுகின்ற முதன்மைக்குரிய கூட்டுவிருப்பின் மீது ஊன்றிய கவனத்தைக் கொண்டிருப்பது உற்பத்தியாளருக்கு நன்மை பயக்கவல்லது.
இம்முறைமையானது பொருளாதார வளங்களை மிகத்திறமையாகப் பயன்படுத்துகின்றது. ஏனெனில் இதன் உற்பத்திக் காரணிகள் ஒவ்வொன்றும் (நிலம், முதல், உழைப்பு) இதன் சந்தைப் பெறுமதியில் சாத்தியமான அளவில் மிக உயர்வாகச் சமூகத்துக்குப் பயன்படுத்தப்படுவதைத் தன்னியக்கமாக உறுதிப்படுத்துகின்றது. சந்தையானது வேலை செய்வதற்கான பல மாற்றுச்சந்தர்ப்பங்களை ஒருவனுக்கு அளிக்கும் போது, ஒரு பகுத்தறிவுள்ள ஒருவன் அதில் பொருத்தமான ஒன்றைச் சுதந்திரமாகத் தெரிந்தெடுக்கக்கூடும். பொதுவாக அவனால் தெரிந்தெடுக்கப்படுகின்ற வேலையானது அவனுக்கு அதி உயர்வேதனத்தை வழங்கக் கூடியதாக இருக்கும். அந்த வேலையானது சமுதாயத்துக்கான உயர்வான சந்தைப் பெறுமதியைக் கொண்டது என அதனை வரையறை செய்யலாம்.
மாற்றாக, உற்பத்திக் காரணிகளைப் பயன்படுத்தித் தனது நோக்கங்களைப் பூர்த்தி செய்யும் ஒரு நிறுவனத்தை நோக்குவோம். உற்பத்திக் காரணியைப் பயன்படுத்த முயற்சிக்கும் எந்தவொரு நிறுவனமும் அதாவது அந்தக் காரணி ஒரு மணித்தியாலத்துக்கு 10 பண அலகுகளுக்குப் பெறுமதியாக இருக்கும் போது உற்பத்திச் செயற்பாடுகளில் இதன் பங்களிப்பு மணித்தியாலாத்துக்கு 5 பண அலகுகளாக இருக்குமாயின் அந்நிறுவனம் பண இழப்பை எதிர்நோக்கும். இவ்விரு நிலைமைகளிலும் வேலையாளரின் அல்லது நிறுவனத்தின் முற்றான சுய நலனானது அதி உத்தம பயன்பாட்டுக்குக் குறைவாகச் செல்வதைத் தடைசெய்து விடும்.
இறுதியாக மத்திய திட்டமிடல் முகவரகம் இன்றி அல்லது அரசாங்கமானது மக்களுக்கு எதனை நுகர்வது, எங்கே வேலை செய்வது அல்லது எதனை உற்பத்தி செய்வது என்பதைக் கூறுகின்றது. சுதந்திர சந்தை முறைமையானது எல்லாப் பிரசைக்கும் தனிப்பட்ட சுதந்திரத்தை (personal freedom) அளிக்கின்றது. இது மத்திய மயப்படுத்தப்பட்ட சர்வதிகாரப் பொருளாதார முறைமையுடன் ஒப்பிடமுடியாத ஒன்றாகும்.
85

Page 45
குறிப்பிட்டபொருட்களை மக்கள் சுதந்திரமாகத் தெரிவு செய்யவேண்டும். சுதந்திரமாகக் கொள்வனவு செய்யவேண்டும். சுதந்திரமாகப் பணத்தை முதலீடு செய்யவேண்டும். குறிப்பிட்ட வேலையை ஒருவன் தேடுவதற்கு சார்புரீதியாகச் சுதந்திரம் இருக்கவேண்டும்.
V
சந்தைப் பொருளாதாரங்களில் அரசாங்கத்தின் பங்கு
ஸ்மித் என்பவர் தலையிடாப்பொருளாதாரத்தின் (Laissey-faireeconomy) சார்பாளராக இருந்தபோதிலும் அரசின் தலையீட்டை மிகக் குறைந்த நிலையிலேயே மட்டுப்படுத்தியிருந்தார். தேசீய, உள்ளூர் அரசாங்கத்தின், அவை செலுத்தக் கூடிய பங்கினைப் பற்றிய எந்த ஆலோசனையும் கூறவில்லை. ஆனால் ஸ்மித்தின் பார்வையில் இதுவரையறுக்கப்பட்டதாக இருந்தாலும், அரசாங்கத்தின் பங்கு என்று குறிப்பிடப்பட்டிருந்தது முக்கியமானதொன்றாகும். γ. ) \, ήλιο,
(1) பொருட்கள், சேவைகள், நிலம்,உழைப்பு, முதல் ஆகிய உற்பத்திக் காரணிகளுக்கான சந்தையில் போட்டியை உறுதிப்படுத்துதல் அரசாங்கத்தின் ஒரு பங்காகும். W.
ஒரு குறிப்பிட்ட உற்பத்தி தொடர்பாக உற்பத்திய ாளர்களிடையே ஏற்படும் போட்டியானது ஒரு சந்தை முறைமை சரிவர இயங்குவதற்கு மிக முக்கியமான அம்சமாகும். ஏனெனில் இது நுகர்வோர் மிகக் குறைந்த விலையில் அவ் உற்பத்தியை வாங்குவதற்கான ஒரு சூழ்நிலைக்கு இட்டுச் செல்லும். மாறாக, ஓர் உற்பத்தி தொடர்பாக எல்லா உற்பத்தியாளர்களும் ஒன்றாக இணைந்து, ஒருவருடன் ஒருவர் போட்டியிடுவதில்லையென்று உடன்பாட்டுக்கு வந்தால் அவை தனியுரிமைகளாக மாறுகின்றதுடன் தனியொரு விற்பனையாளராகக் கருதப்படும். இந்நிலையில் தமது உற்பத்திக்குச் சுதந்திரமான முறையில் விலையை நிர்ணயிப்பர். அவ்விலைகள் உண்மையான செலவிலும் பார்க்கமிக உயர்வாக இருக்கும். உற்பத்தியாளர்களின் இத்தகைய சுய நலன்கள் சட்டத்தினால் கட்டுப்படுத்தப்படாவிட்டால் ஒருவருடன் ஒருவர் முரண்படுகின்ற நிலை ஏற்படும். இத்தகைய முரண்பாடுகளைத் தருகின்ற பல சட்டங்கள் பெரும்பாலான சந்தைப் பொருளாதாரங்களில் மேற்கெ ாள்ளப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவில், 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் போட்டியை வலிந்து நடைமுறைப்படுத்தும் சட்டங்களும், குற்றம்
86

驚
புரிவோரைக் கடுமையாகத் தண்டிப்பதற்குமான சட்டங்கள் இன்றும் வலுவுடன் காணப்படுவதுடன் தீவிரமாகச் செயற்படுத்தப்பட்டும்
வருகின்றன.
(2) பொதுமக்களுக்குப் பொருட்கள், சேவைகளை அளிப்பது
அரசாங்கத்தின் இரண்டாவது பங்காகும்.
பொருட்களும், சேவைகளும் ஒரு சுதந்திர சமுதாயத்தின் தனிப்பட்ட சுதந்திரமான ஒவ்வொருவருக்கும் அராங்கம் மாத்திரமே அளிக்கமுடியும். இவை பொதுவான பாதுகாப்பு (இராணுவ) சட்டநிர்வாகம், நீதியும் ஒழுங்கும் ஆகியனவற்றை உள்ளடக்கும். அத்துடன் ஒருதனிநபரே அல்லது நிறுவனமோ நிதி செலுத்தக் கூடிய வகையில் இல்லாமல் அச்சேவைகள் பொதுவாகப் பெறக்கூடியதாக இருக்கக்கூடிய சில சமூகப் பொருட்களும் அடங்கும். இவ்விடயங்கள் வீதிகள், பெருவீதிகள், நீர்ப்போக்குவரத்து உதவிகள் மற்றும் பல்வேறு வகையான பொதுசன வசதிகளை உள்ளடக்கும் . அரசாங்கத்தின் பங்கானது இத்தகைய குறுகிய பகுதிகளுடன் வரையறுக்கப்பட முடியாதது. அடம் ஸ்மித்தின் நோக்கு தலையிடாக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. கைத்தொழிற் புரட்சியின் விளைவுகளினால் உணரப்பட்டதுபோல் வேறு வகையான அரசாங்க நோக்கினுக்காகவும், சுதந்திர சந்தைக்காகவும் ஏனையவர்கள் வாதாடலாம். அரசியலமைப்புமுறைமை கொண்ட அரசாங்கத்துக்குமுன்பு அரசின் பங்கானது நேரடியானதாகவும், வரம்பற்றதாகவும் காணப்பட்டது.
ஐரோப்பாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வர்த்தகக் கம்பனிகள், கப்பல் பிரயாணங்களுக்கான நிதியிடல், தங்கம் மற்றும் ஏனைய பொருட்களின் பரிமாற்றம் மீதான கட்டுப்பாடு, இராணுவப் பிரசாரம் ஆகியவற்றினூடாக அரசாங்கமானது பெரும் தூண்டுதல்களை அளித்தது. சுதந்திர சந்தையின் பொருளாதார தொடக்கத்தினால் தனிப்பட்ட உற்பத்தியாளன், வேலையாட்களின் பங் கானது விரிவடைந்தது. இதனால் பொருளாதாரத்தில் அரசாங்கம் கொண்டிருக்கக் கூடிய பங்கு மாற்றமடைந்தது. பொருளியல் பற்றிய விவாதத்துக்கு அரசாங்கத்தின் சனநாயக ரீதியான முறைமையின் விருத்தியும் பெருமளவு பங்களித்தது. கீழே தரப்படும் சில மாதிரிகள் ஐக்கிய அமெரிக்காவில் சில சிந்தனைகள் எவ்வாறு இயங்கின என்பதைக் காட்டுகின்றது. இச் சிந்தனைகள் சுதந்திரசந்தை காணப்படும் ஏனைய நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் அதே வகையான போராட்டத்தையே கொண்டிருந்தன.
87

Page 46
VI
ஸ்மித்தின் பொருளாதாரத்தின் தாக்கம் : ஐக்கிய அமெரிக்கா குறித்த ஒர் ஆய்வு
நெப்போலிய யுத்தத்தின் பின் வட அமெரிக்கவிலும், ஐரோப்பாவின் பெரும்பகுதியிலும் தழைத்தோங்கிய சுதந்திரமான முதலாளித்துவ சந்தை முறைமைக்கான பகுத்தறிவு வாய்ந்ததும், புரட்சிகரமான கொள்கை விளக்கத்தையும் ஸ்மித்தின் நூல் கொண்டிருந்தது. ஸ்மித் எதிர்வுகூறியபடி கைத்தொழிற் காலம் உண்மையிலேயே ஆரம்பிப்பதற்கு முன் சுதந்திர சந்தைகளின் அசியல் - பொருளாதார முறைமையும் சுதந்திரமான தனிப் பட்டவர்களும் திறமையாகச் செய்யக் கூடியவாறு அனுமதிக்கப்பட்டிருந்தனர். தமது வேலைகளின் உற்பத்திகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் சுதந்திரமாக அனுமதிக்கப்பட்டது. இவை சமுதாயம் முழுவதற்குமான முன்னேற்றத்தினையும் பொருளாதார வளர்ச்சியினையும் முன்னெடுத்துச் செல்லுகின்றது. ஸ்மித்தின் சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் நோக்குடைய அல்லது ஏற்றுக்கொண்ட நாடுகளில் இவ்வளர்ச்சியானது பெரிதும் தூண்டுதலை அளிக்கக்கூடியதாக இருந்தது. ஐக்கிய அமெரிக்காவில் குறிப்பாக, இது அறிமுகப் படுத்தப்பட்டிருந்தது. 1776 க்கும் 1936 க்குமிடைப்பட்ட காலத்தில் கைத்தொழில் வளர்ச்சி பெற்றநாடுகளில், பொருளாதார விவகாரங்களின் மீதான மத்திய அரசாங்கத்தின் பங்கும் பங்கீடும் (Role and share) மிகத்தாழ்ந்த நிலையிலேயே இருந்தது.
அரசியல் - பொருளாதார முறைமை (Political - economic system ) ஐக்கிய அமெரிக்காவில் 1936 க்கு முன்பும் நடைமுறையிலிருந்த போதும் அது ஸ்மித்தின் மாதிரிகையுடன் மிக நெருக்கமாகப் பொருந்துவதாக இருந்தது. சமஷ்டி அரசாங்கத்தினால் பொருளாதாரத்தில் கொண்டிருந்த சிறிய பங்கும் ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் அமைப்பின் விளைவாகவே இருந்தது. ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பு பொருளாதாரத்தின் மீதான அரசாங்கத்தின் பங்கினை எவ்வாறு பாதிக்கின்றது, எவ்வாறு விபரணப்படுத்தப்பட்டுள்ளது என்பது ஆராய்வதற்குரிய முக்கிய விடயமாகும். ஆவணத்தில் கட்டுரை ஒன்றின் 8 வது பிரிவின்படி கடன்களுக்கான கொடுப்பனவுக்கும் , பொதுவான பாதுகாப்பை அளிப்பதற்கும் ஐக்கிய அமெரிக்காவின் பொதுவான நலனுக்குமாக வரி சேகரிக்கும் அதிகாரம் காங்கிரசுக்குத் தரப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் பணம் செலவழிக்கக் கூடிய சிறப்பான பொருளாதார வகைகளையும் , ஏனைய நோக்கங்களையும் தெளிவாகக் கணக்கிடுவதுபற்றி மிக நீண்டவசனம் காணப்படுகின்றது. அதன் சாராம்சம் பின்வருமாறு அமைகின்றது.
88

(1) வெளிநாடுகளுடனும், மாநிலங்களுக்கிடையிலும் வர்த்தகத்தை
ஒழுங்குபடுத்தல் (2) கடன் தீர்க்க வகையற்ற வங்கிகளின் (Bankruptcy) விடயமாக
ஒரே வகையான சட்டங்கள் உருவாக்கப்படுதல். (3) விரைவாகப் பணம் ஈட்டுதல், அதற்கான பெறுமதியையும்
வெளிநாட்டுப் பணத்தையும் சீராக்குதல். (4) தபாற் கந்தோர்களையும் பெருந்தெருக்களையும் ஸ்தாபித்தல் (5) இராணுவத்துக்கு உதவி அளித்தலும் மேம்படுத்தலும்.
விசேட அம்சங்கள் எல்லாவற்றையும் கணிப்பிடுவதற்கு மேலாகப் “பொதுவான நலனை அளித்தல்” என்ற சொற்றொடர் காணப்படுகின்றதுடன் இதன் தெளிவான நோக்கம் என்னவெனில் அரசாங்கம் வரிகளை விதிக்கவும் செலவிடவும் முடியும் என்பதே. பொதுவான நலன் (General Welfare) என்பது சமுதாயம் அதன் நலனை அடிப்படையாகக் கொண்டு கவனிக்கப்படவேண்டும் என்ற கருத்தை விபரணப் படுத்துகின்றதாக இருக்கலாமா அல்லது மாற்றாகப், பொதுவான நலன் என்பது ஏனைய வசனத்தில் தெளிவாகக் கணிப்பிடப்பட்ட சிறப்பான நோக்கங்களை விபரிப்பதற்கான கருத்தாகக் கொள்ளலாமா. இது வெறும் சொற் பொருள் சார்ந்த விவாதமல்ல. தனிப்பட்ட மாநிலங்கள் தனது சொந்த வர்த்தகத்தையும் உற்பத்திகளையும் கட்டுப்படுத்த முடியும் என்பதைத் தீர்மானம் செய்கின்றது. உலகின் பாரிய பொருளாதாரமாக மாற்றமடைந்த வரலாறு இதன் விளைவாகவே ஏற்பட்டது. ノ
1971 இல் இவ்விடயங்கள் பற்றிய விவாதம் சேர்த்துக் கொள்ளப்பட்டது. பழமை வாதியான ஜேம்ஸ் மாடிசன் என்பவர் சமஷ்டி அரசாங்கமானது மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டிருக்கவேண்டுமென்ற தளத்தில் தமது விளக்கத்தை முன் வைத்தார். அலெக்சாந்தர் ஹமில்டன் என்னும் சீர்திருத்தவாதி (Interventionist) பரந்த விளக்கத்தை முன் வைத்ததுடன் உற்பத்தியையும் செல்வத்தையும் உயர்த்துவதற்கான நோக்கில் சமஷ்டி அரசாங்கத்துக்குப் பரந்த செலவிடும் அதிகாரங்கள் கொடுக்கப்படவேண்டும் எனக் கருதினார். இதன் விளைவாக அடம் ஸ்மித்தின் பொருளாதாரத் தத்துவத்தினைப் போல் அடுத்த 140 வருடங்களுக்குப் பொருளாதாரத்தின் மீதான ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் பங்கும் பங்கீடும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
பல்வேறு விடயங்களில் அரசாங்கம் குறிப்பாகத் தனிப்பட்டவர்களுக்கு விற்பனைக்காக நிலங்களை அளித்தல் மற்றும் பல்வேறுபட்ட நலன் தொடர்பான சட்டங்களை இயற்றினாலும் “பொதுவான நலனை மேம்படுத்தவதற்கான” சமஷ்டி அரசாங்கத்தின் செலவீடானது 1930கள் வரையும் முக்கியத்துவமற்றே காணப்பட்டன. உண்மையில் 1929 இல்
89

Page 47
பாதுகாப்புச் செலவீடுகளை உள்ளடக்கிய சமஷ்டியின் மொத்தச் செலவீடானது 3 பில்லியன் டொலர்களாக அல்லது அவ்வருடத்தின் ஐக்கிய அமெரிக்காவின் மொத்தத் தேசிய உற்பத்தியின் 3 சதவீதமாகக் காணப்பட்டது. 1936-இல் இவையும் காற்றமேைந்தது.
பொதுசன நூல்கம்
யாழ்ப்ரணம் ساساFittl|شبستر جمعیت جانشین
சுதந்திர சந்தையும் கெயின்சியப் புரட்சியும்
ஸ்மித்தின் முறைமை இருபிரதான வழிகளில் சர்ச்சைக்குள்ளாகியது. பொதுக்கோட்பாடு (General theory) என்ற பிரபல்யமான தனது நூலில் 1936 இல் இதனை அவர் முன் வைத்தார்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முனைப்பான சமுதாயத்தினர் குறைபாடு என்னவெனின், முழு வேலைவாய்ப்பையும் அளிப்பதற்குத் தவறிய இதன் தோல்வியும் அதன் எழுந்தமானமான ஒப்புரவற்ற வருமானப் utié6Gudurgth. (J.M. Keynes, 1936).
சுயமாக ஒழுங்கமைக்கப்படும் பொருளாதாரமானது தன்னியக்கமாகவே புதியதொரு சமநிலைக்குத் திரும்பும் என்கின்ற கருத்தோட்டமானது (உழைப்பு உட்பட எல்லா உற்பத்தி வளங்களுடன் கூடிய முழு வேலை வாய்ப்புடன்) பொருளியல் வரலாற்றின் ஆரம்பத்தில் ஒரு சவாலாகக் காணப்பட்டது. ஆனால் இத்தகைய ஒவ்வொரு சவாலும், குறிப்பாக மாக்ஸ்சினதும் அவ்வாறு அமைந்திருக்கவில்லை எனக் காட்டப்பட்டது. 1930கள் வரையும் சுயமாக ஒழுங்கமைக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரக் (self regulating market economy) Gas it "ustLIts Tg5, fish) 6 it is is வட்டாரங்களைத் தவிர உறுதியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
பெரியளவில் வேறுபடும் தொழில் நுணுக்கங்களையும் வளங்களையும் கொண்டிருப்பவர்கள் சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தில் தேசிய வருமானத்தின் அளப்பரிய பங்கினை வருமானமாகப் பெற்றனர். 1930 கள் வரையும் முறைமையின் பாரிய திறனுக்காக அளிக்கப்படும் ஒரு சிறிய விலையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இத் தோற்றப்பாட்டில் ஒரு திறமையான சந்தை முறைமையினால் உற்பத்தி செய்யப்பட்ட வளர்ச்சியுடன் ஒவ்வொருவரின் வருமான மட்டமும் காலத்துக்குக் காலம்
3 Keynes J.M. (1936): The General Theory of Employment,
Interest and Money, (London, McMillan & Co.).
90

உயர்வடையக் கூடியதாக இருந்தது. இதனால் ஒவ்வொருவரும் உயர் நிலைக்கு வரமுடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
1929 இன் பின் இதுபற்றிய விவாதம் கடினமாகியது. ஐக்கிய அமெரிக்காவும், ஏனைய கைத்தொழில் நாடுகளும் ஆழமான, மீளமுடியாத பொருளாதாரப் பின்னடைவில் வீழ்ந்தன. அதிலிருந்து ஸ்மித்தின் முறைமையினால் கருதப்பட்டதுபோல், புறத்தூண்டுதலற்ற முறையில் தன்னியக்கமாக மீட்புப் பெறும் என்பது இடம்பெறவே இல்லை. பின்னடைவானது (recession) மிக நீண்ட காலத்துக்கு இடம்பெற்றதுடன் மந்த நிலை (depression) எனவும் இது அழைப்பட்டது. 1933 இல் ஐக்கிய அமெரிக்காவில் வருடாந்த வெளியீட்டின் டொலர் பெறுமதியானது (மொத்த தேசிய உற்பத்தி) 1929 இன் மட்டத்தின் அரைவாசியாக வீழ்ச்சியடைந்தது. வேலையின்மை வீதமானது தொழிலாளர் படையின் 25 சதவீதத்துக்கு எழுச்சியடைந்தது. நாட்டின் அரைவாசி வங்கிகள் கடன்களைத் தீர்க்க முடியாது மூடப்பட்டன. வேலையின்மை வீதம் சராசரியாக 20 சதவீதமாக அப்பகுதித் தசாப்தம் முழுவதும் காணப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்ற இந் நிகழ்வுகளை விட ஐரோப்பா முழுவதும் இத்தகைய மீள முடியாத பொருளாதாரத் துன்பங்கள் அரசியல் அமைதியின்மைகளைத் தோற்றுவித்தது. ஜேர்மனியின் வைமார் குடியரசின் சரிவு ஐரோப்பாவில் சிறந்த உதாரணமாகக் காணப்பட்டது. இந்நிலையில் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இவற்றினைச் சரிவர எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்புவது. ஆனால் கோட்பாட்டுரீதியான ஒன்றே முதலாவது விடயமாக இருந்தது. ஏன் இவை தவறான நோக்கில் சென்றன.
கெயின்சின் பொதுக் கோட்பாடானது என்ன நிகழ்ந்தது என்பதற்கு ஒரு விளக்கத்தை அளித்தது. கெயின்சின் கருத்தின்படி, ஸ்மித்தின் தலையிடாக் கொள்கையுடனான தலையீடற்ற பொருளாதாரம் பெரும்பாலான காலங்களில் நன்றாகவே இயங்கியது. ஆனால் எல்லாக் காலத்திலும் அல்ல. 1980 களின் ஆரம்பத்தில் காணப்பட்டது போன்று, குறிப்பிட்ட காலத்தில் சமுதாயத்தின் மொத்தக் கேள்வியானது (aggregate demand) குறைவாகக் காணப்பட்ட நிலைமை நிரம்பலை வீழ்ச்சிடையச்செய்வதற்குக் காரணமாக இருந்தது. இவ்வீழ்ச்சியானது மறுதலையாக மக்களின் வருமானங்களையும், வேலைமட்டங்களையும் குறைத்ததுடன் அது மேலும் மொத்தக் கேள்வியின் வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது. இவ்வாறு ஒரு நச்சு வட்டமாக (vicious spiral) இயங்கிக் கொண்டிருந்தது. முன்பு கூறப்பட்ட நீர் நிறைந்த ஒரு கண்ணாடிப் பாத்திர உவமையை எடுத்துக் கொண்டால் சமநிலையானது மிகவும் கீழ்மட்ட நிலையிலேயே காணப்பட்டது.
கெயின்சின் முடிவுரையின்படி சுயமாக சமநிலைப்படும் சந்தைப் பொருளாதார இயக்கமானது தோல்வியடையக் கூடியது. இது
91

Page 48
தோல் வியடையும் போது குறிப்பாக, கீழ் நோக்கிய வட்டப் பொருளாதாரத்தின் நோயைக் குணப்படுத்துவதற்கான ஒரே ஒரு வழி மத்திய அரசாங்கம் செயற்கையான முறையில் மொத்தக் கேள்வியை உயர்த்துவதன் மூலம் தலையீடு செய்தலே ஆகும். இதனை வரி விகிதத்தினை உயர்த்தாமல் அரசாங்கம் செலவீடுகளை அதிகரிப்பது மூலமோ அல்லது செலவீடுகளையும் குறைக்காமல் வரி விகிதத்தினை வெட்டுவதன் மூலமோ அல்லது இருவழிகள் மூலமோ செயற்படுத்தலாம். கேள்வியைத் தூண்டுவதன் நோக்கில் அரசாங்கம் தனது வரவு செலவில் பற்றாக்குறையைக் கொண்டிருக்கக்கூடும்.
கெயின்சும் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பும்
1936 இல் கெயின் சினால் முன் வைக்கப்பட்ட புரட்சிகரமான சிந்தனையானது உலகம் பூராவும் ஏற்றுக் ரெகள்ளப்பட்டதுடன் ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளின் நடத்தைகளில் சடுதியான மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய வகையில் அல்லது சமஷ்டி அரசாங்கம் மேற்கொள்ளக் கூடிய அதன் பங்கில் மீண்டும் ஒருமுறை பொருளாதாரக் கோட்பாட்டை மீள் பரிசீலனை செய்வதாக மாத்திரம் இருக்கவில்லை. அரசியல் அமைப்பில் "பொதுவான நலன்" என்னும் தொடரின் கருத்தினைப் பற்றிய மேல் நீதிமன்றத்தின் விபரணமானது புதுப்பிக்கப்படுகின்ற அரசியல் சூழ்நிலைகளே காணப்பட்டன. அந்த வசனத் தொடரின் மட்டுப்படுத்தப்பட்ட விபரணம் பற்றி மடிசன் என்பவரினால் விவாதிக்கப்பட்டது. அரசாங்கமானது அரசியல் திட்டத்தில் விசேடமாகக் குறிப்பிட்ப்பட்டவற்றுக்காக மட்டுமே வரிகளை உயர்த்த முடியும். இது ஹமில்டன் என்பவரினால் வாதாடப்பட்டதன்படி அரசாங்கத்தின் பெரும்பாலான செலவீடுகளைத் தடைசெய்வதாக இருந்தது. ஆனால் 1930 களின் பொருளாதார மந்தத்தின் காரணமாக ஏற்பட்ட அவசரகால நிலைமைகளினால் ஏற்பட்ட உந்துதலினால் பிராங்ளின் டிலானோ ரூஷ்வெல்ட்டின் நிர்வாகமானது தனியார்துறையின் பெரும் பகுதிக்கு உதவும் கடுமையான போக்குக் கொண்டு காணப்பட்டது.
விவசாயம், வீடமைப்பு, சமூக இளைப்பாற்றுச் சம்பளம், வேலையின்மை,
கைத்தொழில் ஆகிய பிரிவுகளில் அரசாங்கமானது ஒழுங்குபடுத்தப்படாத,
தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றதுடன் இவை
புதிய செயல் (New Deal) என அழைக்கப்பட்டன. பெரும்பாலான இந்
நடவடிக்கைகள் அரசியலமைப்பு, சரத்து 1 இல் குறிப்பிட்டதன்படி
92

சட்டங்களை ஏற்படுத்துதல் மற்றும் வரி அறவிடுதல் , செலவு ஆகியவற்றுக்கான அரசாங்க அதிகாரங்களுக்கு அப்பாற் சென்றன. 1936 இல் மேல் நீதிமன்றம் ஹமில்டனின் கருத்தை ஏற்றுக் கொண்டது. பொதுவான நலனை அளிப்பதற்கான அரசாங்கத்தின் நோக்கம் இன்று பரந்தளவான தன்மையைக் கொண்டிருக்கிறது. 1936 ஆம் ஆண்டுத் தீர்மானத்தின் படி, பொதுவான நலனை மேம்படுத்தும் நோக்கத்துக்கான ஆர்வம் இருக்கும் வரையும் அரசாங்கமானது சட்டரீதியாகப் பொது நிதியைச் செலவு செய்யலாம் என்பதை ஏனைய பலரும் ஏற்றுக்கொண்டனர். இதனைத் தீர்மானிப்பது தெரிவுசெய்யப்பட்ட சட்டசபை உறுப்பினர்களில் தங்கியிருந்தது. இக்ககாலத்தில் அரசாங்கம் தனது அரசிறையின் பங்கினை (fiscal role) விரிவாக்குவதனை முன்னெடுத்ததுடன் ஆரம்பத்தில் கவனமாக மேற்கொள்ளப்பட்டதுடன் இரண்டாம் உலக யுத்தத்தின் பின் விரைவாக மேற்கொண்டது. முழுச் சமுதாயத் தினதும் தேவைகளை நிறைவேற்றுவதற்கான வெளிப்படையான ஆர்வத்துடன் அரசாங்கச் செலவீடு அதிகரித்தது. ஆனால் நலன் நிகழ்ச்சித் திட்டம் , சமூகப் பாதுகாப்பு அல்லது இளைப்பாற்றுக்கொடுப்பனவு, வேலையின்மைக்கான நன்மைகள், உணவு நிகழ்ச்சித்திட்டம், அரசாங்க உதவி, விவசாயிகளுக்கான உதவி, வங்கிகளுக்கும், சேமிப்பாளர்களுக்குமான காப்புறுதி, சிறுவர்த்தக முயற்சிகள், சுகாதார நல நிகழ்ச்சித்திட்டம் மற்றும் ஏனைய விடயங்களில் தன்னியல்பாகச் செயற்பட்ட சுதந்திர சந்தையினால் இவற்றை நிறைவேற்ற முடியவில்லை. அரசாங்கத்தின் இத்தகைய எல்லா நிகழ்ச்சித் திட்டங்களும், நாட்டின் பொதுவான நலனை அளிப்பதற்கான அரசாங்கத்தினுடைய பொறுப்பின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டதுடன் அதன் பரப்பெல்லையானது தொகுதிகளினால் நிர்ணயிக்கப்பட்டதாகவும் இருந்தது.
1939 இன் பின் வெளியீட்டில் காணப்பட்ட துல்லியமான அதிகரிப்பும் ஐக்கிய அமெரிக்காவின் வேலையின்மை வீதத்தில் காணப்பட்ட வீழ்ச்சியும் கெயின்சின் சிந்தனைகளை நியாயப் படுத்துவனவாகவே இருந்தன. சந்தைப் பொருளாதாரங்களில் காணப்படும் மொத்தக் கேள்வியின் பற்றாக் குறையானது நீடித்த பின்னடைவுக்கான காரணமாக இருக்கமுடியும். அத்துடன், அத்தகைய பின்னடைவு அரசாங்கத்தின் தலையீட்டினால் விரிவான அரசிறைச் செலவீட்டினால் நிச்சயமாகத் திருத்தப்படமுடியும் என்பதே கெயின்சின் சிந்தனையாக இருந்தது. மேற்கு ஐரோப்பாவில் சமூக சனநாயகக் கட்சிகள் பொது நலனை வழங்கக் கூடியதான நலக் கொள்கைகளையே மேற்கொண்டன.
93

Page 49
Χ
சுதந்திர சந்தையும் உழைப்பும்
பாரிய பின்னடைவுக்கு முன், சுதந்திர சந்தையைப் பற்றிய வலிமையான சர்ச்சைகள் மாக்ஸ் சினைப் பின்பற்றுபவர்களும் , லெனினினால் முன்வைக்கப்பட்ட பகுத்தறிவு சார்ந்த, புரட்சிகரமான மாக்ஸ்சின் விளக்கத்தை எதிர்த்துக் கூறிய சமூக சனநாயகக் கோட்பாட்டாளர்களான எடுவார்ட் பேர்ண்ஸ்ரைன் போன்றவர்களைப் பின்பற்றுபவர்களும் இது பற்றி விவாதித்ததுடன் அதனை முன்வைத்தார்கள். இவை பொருளாதார, அரசியல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய சர்ச்சசைகளாக இருந்தன. இச்சர்ச்சைகளைத் தொடர்புபடுத்தும் வகையில் வர்த்தக சங்கங்கள் அக்காலத்தில் எழுச்சியடைந்தன.
பரஸ்பர சுயநலன் பற்றிய ஸ்மித்தின் உட்கருத்தானது நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு நன்கு பிரயோகிக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் தொழிலாளர்களுக்கும் , உற்பத்தியாளர்களுக்கும் தெளிவாகப் பிரயோகிக்கக் கூடிய வகையில் நடைமுறைச் சாத்தியத்தைக் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவான காரணமாக இருந்தது. தொழிலாளர் வேலையைப் பெறுவதில் சுயநலனைக் கொண்டிருந்தார்கள். உற்பத்தியாளர்கள் தொழிலாளரை அமர்த்தும் நிலையில் இருந்தனர். ஆனால் இதுதான் பரஸ்பர சுயநலனின் எல்லையாக இருந்ததுடன், சுயநலன்கள் முரண்படவும் தொடங்கின. உற்பத்தியாளர்கள் மிகவும் குறைந்த வேதனத்தில் தொழிலாளர்களை வேலைக்கமர்த்த விரும்புவது இயற்கையான ஓர் அம்சம், அதேபோல் தொழிலாளரும் சாத்தியமான உயர் வேதனத்தில் வேலைக்கமர்த்தப்பட விரும்புவதும் இயற்கையானது. அப்படியெனில் வேதனத்தை நிர்ணயிப்பது யார்? பொதுவாக, உற்பத்தியாளன் வேதனங்களைக் கட்டுப்படுத்தவதற்கான சட்டரீதியான, நிதி தொடர்பான தகுதியைக் கொண்டிருக்கிறான்.
வட அமெரிக்கா, ஐரோப்பா, யப்பான் ஆகிய நாடுகளில் வர்த்தக சங்கங்கள் வேதனத்தைக் கட்டுப்படுத்தும் உற்பத்தியாளர்களின் அதிகாரத்துக்கு எதிரான ஆற்றலை அளிக்கின்ற பிரதான நிறுவனங்களாக விளங்குகின்றன. தேசிய வர்த்தக சங்கச் சம்மேளனங்கள், அவற்றுடன் இணைந்த பிரிவுகள் தொழிலாளரின் நிலைமைகளையும் வேதனத்தையும், உற்பத்தியாளருடனான தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள், தேசிய பேச்சு வார்த்தைகள், தேசியச்சட்டங்களை ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றினூடாக முன்னேற்றுவதற்குச் சிந்தித்துள்ளன. தொழிலாளரின் நிலைமைகளிலும் வேதனத்திலும் ஏற்படும் முன்னேற்றமானது உற்பத்தியாளரின் சுய நலனில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும், மொத்தக் கேள்வியை
94

இது அதிகரிக்கும். சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தில் வேதன அதிகரிப்புக்கும் இலாபத்துக்குமிடையிலான ஈர்ப்பு விசையானது ஒரு நிலையான காரணியாகும்.
ΧΙΙΙ
கெயின்சின் காலம்
ஐக்கிய அமெரிக்காவில் இரண்டாம் உலக யுதத் தத்தின் பின் பொருளாதாரத்தின் மீதான அரசாங்க நடவடிக்கையானது விரைவாக விரிவடைந்ததுடன் இவ்விரிவான நடவடிக்கைகளைக் கொண்டு நடத்துவதற்குப் பயன்படுத்தும் வகையில் அதன் மொத்த வெளியீட்டுப் பங்கும் அமைந்திருந்தது. சமஷ்டி அரசாங்க நிகழ்ச்சித்திட்டச் செயற்பாட்டில் 1929 இல் மொத்த வெளியீட்டில் 3 சதவீதம் திரும்பவும் பயன்படுத்தப்பட்டது. இது மொத்தத் தேசிய உற்பத்தியில் 33 வீதமாக உயர்ந்தது. மொத்த வெளியீட்டில் எவ்வாறு 3 சதவீதத்தைப் பயன்படுத் தலாமென்று மத்திய அரசாங்கம் ஆணையிட்டால் ஏனைய துறைகள் மொத்த வெளியீட்டில் 97 சதவீதத்தைப் பயன்படுத்தமுடியும். மத்திய அரசாங்கம் எவ்வாறு 23 சதவீதத்தைப் பயன்படுத்தலாமென்று கட்டளையிடும் போது ஏனைய சமுதாயம் 77 சதவீத வெளியீட்டினைக் கட்டுப்படுத்தும். ஸ்மித்தும் அவரைப்பின்பற்றியவர்களும் தமது பொருளை அரசியற்பொருளாதாரமாகவே விளக்கிநின்றனர். ஐக்கிய அமெரிக்காவில் பொருளாதாரங்கள் பற்றிய முழுக் கேள்வியும் (மேற்கு ஐரோப்பாவிலும் கூட) அரசியல் சிந்தனையாளர்களுடனும் அரசியல் சனநாயக முறைமையுடனுமே இணைவு கொண்டதாக இருந்தது.
மந்த நிலைமைகளினால் உருவாக்கப்பட்ட பொருளாதாரத் துயரங்களில் அரசியற்பாதிப்புக்களானது அது வரையும் காணப்பட்ட அரசாங்கத்தினதும் பொருளாதாரக் கொள்கையினதும் அடிப்படைத் தத்துவத்தையே மாற்றியது. நாட்டில் பரவிக் காணப்பட்ட பொருள்ாதாரத் துயரங்களில் (economic distress) இருந்து தூண்டப்பட்ட ரூஷ்வெல்ட் என்பவரின் நடவடிக்கைகள் சுதந்திர சமுதாயம் ஒன்றில் பொருளாதாரம் பற்றிய புதிய சிந்தனைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதாக இருந்தது. இதேபோல் மேற்கு ஐரோப்பாவில் சமூக சனநாயகக் கட்சிகளின் நடவடிக்கைகளும், பெருமந்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தொகுதி மக்களின் விருப்புக்களுக்குப் பொறுப்புடையவையாக இருந்தன. ஜேர்மனி போன்ற சனநாயகம் பலவீனமான நாடுகளில் பொருளாதாரத் துயரத்துக்கான பதிலானது அரசியல் கிளர்ச்சிகளைத் தோற்றுவித்தது.
95

Page 50
பொருளாதாரங்கள் மீதான விவாதங்களானது 1930 கள் அல்லது 1940 கள் வரையும் தொடர்ந்திருந்தது. பொருளாதாரங்கள் பற்றிய அநேக கருத்துக்கள் மாற்றமடைந்தன. தொடர்ந்தும் மாற்றத்துக்குட்பட்டு வருகின்றன. அதேபோல் கலப்புப் பொருளாதாரம் பற்றிய விவாதமும் முடிவடையவில்லை. ஆனால் ஒரு சுதந்திர சந்தை நிலைமைகளில் எப்படிப் பொருளாதாரங்கள் செயற்படுகின்றன, ஒரு சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தின் தாக்கங்களுக்கு எவ்வாறு மக்கள் தமது பிரதிபலிப்பைக் காட்டுகின்றார்கள் என்பது பற்றிய விவாதம் முடிந்துவிட்டது. 1965 ஆம் ஆண்டு வரையும் ஐக்கிய அமெரிக்கப் பொருளாதாரத்தில் சமஷ்டியின் விரிவான பங்கினால் உணரப்பட்ட செலவானது, பெறப்பட்ட நன்மைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக இருந்தது. அரசாங்க நிகழ்ச்சித்திட்டங்கள் பொருளாதாரரீதியாக வெற்றியளிப்பவையாகவும் உணர்ச்சிபூர்வமான கவர்ச்சிகளைக் கொண்டதாகவும் இருந்தன. இதற்கான பிரதான காரணம் என்னவெனில் 1948 க்கும் 1966க்குமிடையில் உற்பத்தியானது (தலா வேலையாளுக்கான வெளியீடு) மிக விரைவாக அதிகரித்தமையேயாகும். தலா ஒரு வேலையாளுக்குரிய உண்மையான வெளியீடு அதாவது பணவீக்கம் சரி செய்யப்பட்டபின் தலா ஒருவருக்கான மொத்தத்தேசிய உற்பத்தி விரைவாக அதிகரித்தது. 1948 - 66 காலத்தில் தலா வேலையாளுக்குரிய வெளியீடு 53 சதவீதத்தினால் உயர்வடைந்தது. 1966 - 73 க்கு இடையில் உற்பத்தியானது குறிப்பிடத்தக்களவு மெதுவானதாக இருந்தாலும் மொத்த வெளியீட்டில் அரசாங்கத்தின் பங்கீடானது உயர்வான நிலையிலேயே தொடர்ந்திருந்தது.
(1) வேறுபாடான பொருளாதாரக் கோட்பாடுகள் அநேகம் காணப்பட்டன. ஏன் சில விடயங்கள் நிகழ்கின்றன என்பது பற்றி அநேக வித்தியாசமான கோட்பாடுகள் விளக்குகின்றன.
(2) உண்மையில் சில கோட்பாடுகள் எல்லாவற்றையும் விளக்குவதில்லை. பரஸ்பர சுயநலன்கள் பற்றிய சிந்தனையானது பல வழிகளில் சமனானது அல்ல. ஒரு புடவைத் தொழிற்சாலையில் வேலை தேவைப்படும் தனிப்பட்ட ஒருவனுக்கும் அத்தொழிற்சாலையின் உரிமையாளனுக்குமிடையிலும் ஒரேவகையான சுயநலன் காணப்படமாட்டாது. போட்டியிடும் நலன்கள் தோன்றுகின்றன. அவை எப்பொழுதும் பொருந்துவதில்லை. உற்பத்தியாளன் குறைவானவேதனத்தையே விரும்புகின்றான். ஏனெனில் அது இலாபத்தைப் பெற்றுத் தரும். வேலையாள் உயர் வேதனத்தை விரும்புகிறான் ஏனெனில் அது உபரி இலாபத்தைக் குறைத்துவிடும். உற்பத்தியாளனுக்கான வருமானம் , உபரி ஆகிய இரண்டும் முதலீட்டுக்குத் தேவைப்படுகின்றது. இது எவ்வாறு இயங்குகின்றது.
96

(3) ஒருநிலைப்படுத்தல் எப்பொழுதும் செயற்படமாட்டாது. ஏன்
அரசாங்கம் அதில் ஈடுபடுகின்றது.
தலா ஒரு வேலையாளுக்கான உண்மையான கிடைக்கக் கூடிய வெளியீடானது 1966 - 1973 காலத்துக்குரிய 7 வருடத்தில் 4 சதவீதத்தினால் ஏற்றம் அடைந்தது. 1973 - 1980 காலத்தில் உற்பத்தியியலின் நன்மையானது மேலும் 2.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. அரசாங்கத்தின் பங்கு உயர்வடைந்து செல்வதைச் சரி செய்தாலும் தலா ஒரு வேலையாளுக்கான கிடைக்கக்கூடிய உண்மையான வெளியீடு 1973 - 80 காலத்துக் கிடையில் உண்மையாகவே வீழ்ச்சியடைந்தது.
1980 களில் ஏனைய பொருளாதாரத்தோல்விகளும் ஏற்பட்டன. பணவீக்கம் வருடத்துக்கு 14 சதவீதமாக ஏற்றமடைந்தது. வேலையாட்கள் அல்லாதோருக்கான கொடுப்பனவுகளில் ஏற்பட்ட சட்ட பூர்வமான அதிகரிப்புக்காலம் அவர்களின் பெறுவனவுகளிலும் பார்க்க அதிகமாக இருந்தது. அடைமானத்துக்கான (mortgage) வட்டிவீதம் வீட்டுரிமையினைப் பெருமளவு வேலையாட்களுக்குக் கிடைக்க முடியாத அளவுக்குத் தள்ளிவிட்டது. இதன் விளைவாகப் பெரும்பாலான சனத்தொகை தமது ஆதரவினைப் பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் சரியான பங்கு தொடர்பாகக் கெயின்ஸ் - கமில்ரன் சார்பு அபிப்பிராயத்திலிருந்து ஸ்மித்- மடிசன் நிலைமைக்கு மாற்றியது. 1946 - 1973 காலத்தினைக் குறிக்கும் கெயின்சின் காலம் (age of Keynes) முடிவடைந்தது. 1981 இல் ஸ்மித்தின் சிந்தனைகள் மீண்டும் தளிர்விடத் தொடங்கின.
XIII
அடம் ஸ்மித்துக்குத் திரும்புதல்
1981 இல் பொருளாதார சிந்தனைகள், கொள்கைகளின் உந்துதலில் புதிய திருப்புமுனையை ஐக்கிய அமெரிக்கா அடைந்து கொண்டது. அவ்வருடத்தின் சனவரியில் சனாதிபதி ரீகன் பதவிலிலமர்ந்தபோது நாட்டின் கொள்கைகள் பற்றிய பின்வாங்கும் போக்குகள் பற்றித் திறந்த முறையில் ஒப்புவித்தார். அறிவியல்ரீதியாகவும், நடைமுறையிலும் பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் சரியான பங்கு பற்றிய சிந்தனைகள் அடம் ஸ்மித்தின் சிந்தனைகள் நோக்கித் திரும்பத் தொடங்கியது. இத்திரும்புதல் அத்தசாப்தமுடிவுக்குள் ஏனைய கண்டங்களிலும் சடுதியான பரவலுக்குட்பட்டது. V−
97

Page 51
1930 களின் மீள் பரிசோதனை
1930 களில் ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு என்ன நடந்தது என்பது பற்றிய ஆய்வானது குறிப்பிட்டதன்படி இது சாதாரணமாகக் கூறக்கூடிய ஒரு “சந்தைத்தோல்வி’ (Market failure) (கெயின்சின் புரட்சிபிரேரித்ததுபோல்) எனச்சொல்ல முடியாது. ஆனால் அது தீவிரமான பணரீதியான மற்றும் இறைக்கொள்கையில் குறையுடைய தன்மையினால் ஏற்பட்ட அரசாங்கத் தோல்வியாகவே இருந்தன.
1930 களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான, வங்கிகளின் தோல்வியினால் நாட்டின் பண இருப்பிற் பெரும்பகுதி இழக்கப்பட்டது. ஆனால் அரசாங்கம் அத்தகைய மிக உயர்வான பணத்தளர்வு (delationary) நிலையைச் சரி செய்வதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதன் விளைவாகப் பொருளாதாரம் விலைகள், வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் இரண்டிலும் கடுமையான தளர்வு நிலையை அடைந்தது. ஆனால் என்ன நடந்ததெனில், பொருளாதார நடவடிக்கைகள் மேலும் மேலும் வரிவீதங்களை உயர்த்தும் இறைக் கொள்கைகள் மூலம் அமுக்கப்பட்டது. 1931-36 காலத்தில் தனிப்பட்ட ஒவ்வொரு வருடத்திலும் இது கடுமையாக இருந்தது. இறுதியில் இரண்டாம் உலக யுத்தத்தின் பின் பதட்டமான வளர்ச்சியின் மீள் தொடக்கமானது ஸ்மித்தின் கருத்தினை அதாவது பொருளாதாரமானது உண்மையில் சுயமாகச் சமநிலையடைகின்றதென்பதினைக் குறித்துநின்றது.
வேலையின்மை
கெயின்சின் புரட்சியில் உள்ள பிரதான உந்துதல் என்னவெனின் ஒரு செயற்பாடு மிக்க அரசாங்கக் கொள்கை மாத்திரமே வேலையின்மை வீதத்தை ஏற்றுக்கொள்கின்ற மட்டத்துக்குக் கொண்டுவரமுடியும் என்பதாகும். அத்துடன் கொள்கையானது அதனுள் சில நோக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
(1) நிலையான கீழ்மட்டத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய வீதத்தில்
இலக்கினைக் கொண்டிருக்க வேண்டும்
(2) இதனை அடைவதற்குப் பயன்படுத்தக் கூடிய கருவிகள் பரந்த தன்மையுடையதாக இருக்க வேண்டும் . உதாரணமாக, இறைத் துரண்டுதலினால் மாத்திரமல்ல, ஆனால் அவ்விறைத்தூண்டுதலானது நேரடிப் பொதுசன வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்ட அமைப்பினைக் கொண்டதாகச் சமஷ்டி அரசாங்கத்தினால் நிதிப்படுத்தப்படுவதாக இருக்கவேண்டும். இந்நோக்கிலான நகர்வு 1980 களில் திரும்புதலுக்குள்ளாகியது.
98

1970 களின் கொள்கைகள் தமது இலக்கினை அடையமுடியாத நிலைமைகளினால் 1989 அளவில் இவ் வீதமானது வீழ்ச்சியடைந்ததுடன் சந்தை முறைமையானது தொடர்ந்து இயங்கக் கூடியது என்பதற்கான மேலதிகச் சான்றுகளை அளிப்பதாக இருந்தது.
பணவீக்கம்
கெயின்சிய சீர்திருத்தவாதிகளின் நோக்கில் விலைத் தளம்பல் ஒரு பிரதான பிரச்சினை அன்று. 1965 வரையும் ஐக்கிய அமெரிக்காவில் பணவீக்கம் ஒரு கடுமையான பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால் 1965 - 1980 க்கு இடையில் அரசாங்கம் தனது ஏனைய நோக்கங்களை அடைந்து கொண்டபோதும் பணவீக்க வீதமானது பத்துமடங்கு உயர்வடைந்தது. 1965 க்கு முன்பு வருடத்துக்கு இது 1.5 வீதமாக இருந்து 1980 களின் ஆரம்பத்தில் ஏறக்குறைய 15 சதவீதமாகக் காணப்பட்டது. 1981 க்கு முன்பு பிரேரிக்கப்பட்ட நவீன பணவீக்கத்துக்கான தீர்வானது அரசாங்கத் தலையீட்டினை மேலும் கொண்டு வந்தது. அத்தலையீடுகள் விலைகள், வேதனங்கள், இலாபங்கள், வட்டிவீதங்கள் கடன் என்பவற்றின் மீதான அரசின் நிர்வாக மயப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளாக இருந்ததுடன், குறைவான பலன்களையே அவை தந்தன. 1981இன் பின் இக்கட்டுப்பாடுகள் பற்றி எவ்வித பேச்சுக்களும் இருக்கவில்லை. ஆனால் மரபு ரீதியான கொள்கையின் உபயோகத்தினால் பணவீக்கம் 15 சதவீதத்திலிருந்து 4 சதவீதத்துக்கு மிக விரைவாகக் குறைந்துள்ளது.
வரிகளும் ஒழுங்குமுறைகளும்
சுதந்திர சந்தை முறைமையின் கோட்பாட்டு ரீதியான மாதிரியானது அதனைப் பின்பற்றுவதற்கு எளிமையானது. பொருட்கள் , சேவைகளுக்கான நுகர்வோர் கேள்விகளை வழங்குவதற்குத் தனியார் நிறுவனங்கள் காணப்படுகின்றன. உற்பத்திச் செயற்பாடுகளினூடாக அவை அவ்வாறு செயற்படுவதுடன் அச்செய்முறையானது தொழிலாளர், முதல் மற்றும் ஏனைய உற்பத்திக் காரணிகளுக்கான நிறுவனங்களின் கேள்விகளுக்கு நுகர்வோர் கேள்வியின் மாற்றீடாகச் செயற்படுகின்றது.
நுகர்வோர் தமது வருமானத்தைத் தமது உற்பத்திச் சேவைகளை நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் பெற்றுக் கொள்கின்றனர். மறுதலையாகத் தமது உழைப்பினைத் தாம் நுகரவிரும்பும் உற்பத்திகள், சேவைகளை வழங்குவதற்குப் பயன்படுத்துகின்றனர். இதனால் பணப்பாச்சலானது நிறுவனங்களிலிருந்து மக்களுக்கு, திரும்பவும் மக்களிலிருந்து நிறுவனங்களுக்கு என ஒரு தொடர்ச்சியான வட்டஒழுங்கில் இடம்பெறுகின்றது. எந்த நவீன சமுதாயத்திலும் வரிகளும் , 99

Page 52
ஒழுங்குமுறைகளும் (Taxes and Regulations) மிக அவசியமானவை. அத்துடன் அவை தொடர்ச்சியான சுற்றுவட்டப்பாய்ச்சல் கொண்ட பொருளாதாரப் பரிமாற்றங்களில் கடுமையான ஒழுக்குகளுக்கும் (Leakages) காரணமாக இருந்தன. அளவுக் கதிகமான ஒழுங்கு முறைகள் நிறுவனங்களுக்கு அதிக செலவுகளை ஏற்படுத்தலாம். இச் செலவுகள் நுகர்வோர் மீது திணிக்கப்படக் கூடியது. நுகர்வோர் மீதும், நிறுவனங்கள் மீதும் விதிக்கப்படுகின்ற வரிகள் பாரிய செலவுகளைக் குறிப்பாக நடைமுறைச் செலவுகளை அதிகரிப்பதன் மூலமும், நுகர்வோருக்குக் கிடைக்கக் கூடியதாக இருக்கின்ற நிதிச் செலவீட்டைக் குறைப்பதன் மூலமோ ஏற்படுத்துகின்றது. 1965 - 80 க்கு இடைப்பட்ட காலத்தில் வரிகளும், ஒழுங்கு முறைகளும் நிலையாக அதிகரிக்கப்பட்டதுடன் ஒவ்வொரு வருடமும் பொருளாதாரச் செயற்பாடுகளில் தனது சொந்தப் பங்கினை விரிவாக்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தது. 1980 ஆம் ஆண்டுகளில் இரண்டும் சுமையாக மாறியது. வட்டியிலும், பங்கு ஆதாயங்களிலும் இருந்து பெறப்பட்ட வருமானத்தில் 50 சதவீதத்துக்கும் உயர்வாக வரி அறவிடப்பட்டது. அத்துடன் அளவுக்கதிகமான ஒழுங்குமுறைகள், வியாபாரம் செய்வது ஒருசெலவுமிக்க தொழில் என்னும் நிலைக்கு வந்தது. 1980 இன் பின் இருசுமைகளும் துல்லியமாகக் குறைக்கப்பட்டன. ஸ்மித்தினால் விதந்துரைக்கப்பட்டவாறு சுதந்திர சந்தைக்கு மிகநெருக்கமாகப்பொருளாதாரமுறைமையானது திரும்பியது. மொத்த தேசிய உற்பத்தியில் பாதுகாப்புத்துறையல்லாத செலவுகளுக்கான பங்கீடு வீழ்ச்சியடையத்தொடங்கியது. 1973- 1981 க்கு இடைப்பட்ட காலத்தில் இப்பங்கானது 14.1 வீதத்திலிருந்து 17.5 வீதமாக உயர்வடைந்தது. 1981 - 1989 இல் 17.0 வீதமாக வீழ்ச்சியடைந்தது.
பெறுபேறுகள்
அடம் ஸ்மித்துக்குத் திரும்பிவருவதினைக் கொண்ட 1981 - 89 காலத்தின் 9 வருடங்களில் ஐக்கிய அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு அளிக்கப்பட்ட சில நன்மை அடம் ஸ்மித்திலிருந்து வெளிச்செல்லுதலே 1973 - 81 காலத்தின் 9 வருடங்களில் பெரிதும் காணப்பட்டது. 1970 களின் பிற்பகுதியில் விருத்தி செய்யப்பட்டிருந்த பணவீக்க உளவியலிலும் பணவீக்கம் ஆகிய இரண்டிலும் துல்லியமான குறைப்பை ஏற்படுத்துகின்ற நன்மை காணப்பட்டது. 1981 - 89 வரையும் ஐக்கிய அமெரிக்காவின் பணவீக்க வீதம் சார்பளவில் நிலையானதாக இருந்ததுடன் 1981 க்கு முன்பு வருடத்துக்கு 9.5 வீதம் என உயர்வடைந்த நிலையுடன் ஒப்பிடும் போது 4.0 வீதமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
1981 இன் பின் ஐக்கிய அமெரிக்காவின் நிதிச் சந்தைகள் கூட நன்கு
நடைபெற்றதுடன் அதன் காரணமாக வீட்டுடைமையாளரின் செல்வத்தில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டது. ஒப்பீட்டுரீதியாக முதல் 8 வருடங்களில்
100

செல்வமானது உண்மையிலேயே வீழ்ச்சியடைந்திருந்தது. 1972 ஆம் ஆண்டு இறுதிக்கும் 1980 ஆம் ஆண்டு முடிவிற்குமிடைப்பட்ட காலத்தில் செல்வமானது மூன்றிலொன்றாக வீழ்ச்சியடைந்தது. ஆனால் அடுத்து வந்த 8 வருடங்களில் மூன்றில் இரண்டாக எழுச்சியடைந்தது.
1870 - 1987 வரைப்பட்ட 117 வருடங்களில் ஐக்கிய அமெரிக்காவின் தலா ஒருவருக்கான வெளியீட்டில் சராசரியான கூட்டுவீத அதிகரிப்பானது வருடத்துக்கு 1.8 வீதமாக இருந்தது. எண்ணிக்கையைப் பொறுத்துச் சிறியதாக இருந்தாலும் பத்துவருடரீதியான தாக்கம் பெரிதாக இருந்தது. 1987 ஆம் ஆண்டு கொள்வனவுச் சக்தியின் நிலையான டொலர்களில் அளவிடப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் தலா ஒருவருக்கான வெளியீடு 1870 இல் 2180 டொலர்களிலிருந்து 1987 இல் 18,560 டொலர்களாக உயர்வடைந்தது.
cypseurtshigi Gurtibas Toub (first golden age) 6T60T (1870 - 1913) அழைக்கப்பட்ட காலத்தில் 2 வீதமாக இருந்தது. யுத்தத்துக்கும் யுத்தத்துக்கு இடைப்பட்ட காலத்தில் 2 வீதமாக இருந்தது. யுத்தத்துக்கும், யுத்தத்துக்கு இடைப்பட்ட வருடங்களிலும் (1913 - 1950) , 1930 களின் மந்தமான காலம் உட்பட இது 1.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. இரண்டாவது பொற்காலத்தில் (1950 - 1973) இது 2.1 சதவீதத்துக்கு மீண்டும் உயர்வடையத் தொடங்கியது. 1973 - 81 வரைப்பட்ட காலத்தில் ஐக்கிய அமெரிக்கப் பொருளாதாரமானது தலா ஒருவருக்கான வெளியீட்டு வளர்ச்சியைப் பொறுத்தளவில் மிகவும் குறைந்த நிலையைக் காட்டி நின்றதுடன் 1.0 சதவீதத்துக்குச் சற்றுமேலாக வீழ்ச்சியடைந்தது. 1981 தொடக்கம் 1989 வரைப்பட்ட காலத்தில் மீண்டும் 2.0 வீதமாக அமைந்திருந்தது.
பூகோளப் பார்வையில்
1980 களில் சுதந்திர சந்தை முறைமையின் இயக்கத்திலும், அதிஉயர்ந்த செயலாற்றத்தின் விளைவினைப் பெற்றுக் கொள்வதற்கான அதன் திறமையாகிய இரண்டிலும் நம்பிக்கை கொள்வதென்பது ஐக்கிய அமெரிக்காவைப் பொறுத்து பொருத்தப்பாடுடையதாகக் காணப்படவில்லை. மேற்கு ஐரோப்பாவில், அநேக பொருளாதாரங்கள் குறிப்பாக ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் என்பன முன்னரே சந்தை முறைமையிலிருந்து விலகிக் காணப்பட்டிருந்தன எனினும், முன்பு தேசீய மயமாக்கப்பட்ட கைத்தொழில்களை மீளத் தனியாரிடம் ஒப்படைத்தல், சிறப்புச் சந்தைகளைச் சீர்குலைத்தல் போன்றவற்றினூடாக மீண்டும் திரும்ப அதனை நோக்கி நகரத்தொடங்கின. சந்தை முறைமையை நோக்கிய அவையொத்த போக்குகள் பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆரம்பிக்கப்பட்டன. மத்தியகட்டுப்பாட்டு முறையைக்
101

Page 53
கொண்ட நாடுகளில் ஒன்றான சீனா கூடச் சுதந்திர சந்தை முறைமைகளின் திசையில் சீர்திருத்தங்களை ஏற்பாடு செய்தது. இறுதியாக 1990 ஆம் ஆண்டளவில் மத்தியதிட்டமிட்ட முறையின் இருதய நிலமாக இருந்த ஐரோப்பிய நாடுகள் சந்தை முறைமைகளை ஏற்றுக் கொள்ளலை நோக்கி நகர்வடைந்தது.
米米米米米米
102


Page 54