கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய நூலகம் 2011.06.15

Page 1
www.noolaham.org
புதிய நூ ܣܢ
இதழ் 6
நூலக நிறுவன ஆண்டறிக்கை
நூலக நிறுவனத்தின் மூன்றாவதும் 2010 ஆம் ஆண்டுக்கானதுமான ஆண்டறிக்கை கடந்த மே மாதத்தில் வெளியாகியுள்ளது. ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மொத்தம் 32 பக்கங்களில் வெளியான இந்த அறிக்கை நூலகச் செயற்பாடுகள் பற்றியும் நிதிப் Lulu u 6õTLU FTG தொடர்பிலும் விரிவான தகவல்களைக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தமிழில் அமைந்த பக்கங்கள் அதிகமாக உள்ளன. இந்த 9 góljs60d3560puu www.noolahamfoundation.org g6i) Publications பகுதியில் வாசிக்கலாம், தரவிறக்கிக் கொள்ளலாம். அறிக்கையின் அச்சுவடிவத்தைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் மின்னஞ்சலில் தமது தொடர்பு விபரங்களை அனுப்பி வைக்கலாம்.
யாழ்ப்பான நூலகச் சந்திப்பு
நூலக யாழ்ப்பாணக் குழுவினரின் Guid மாதத்துக்கான ஆவணப்படுத்தல் செயலமர்வும் மாதாந்த ஒன்றுகூடலும் 29.05.2011 ஞாயிறன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
பேராசிரியர் இரா. சிவச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எழுத்தாளர் க.சட்டநாதன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். புதிய நூலகம் செய்திமடல் அறிமுகமும் இடம்பெற்றது.
யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளர் பா. அகிலன் காத்தலும் பேணலும் - இலங்கையின் மரபுரிமைகள் எனும் தலைப்பில் சிறப்புப் பேருரையாற்றினார். யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் கோசலை மனோகரன் பயனாளர் உரை நிகழ்த்தினார்.
அவுஸ்திரேலியாவில் வானொலி அறிமுகம்
இணைய எண்ணிம நூலகங்களின் தேவை தொடர்பான வானொலி உரையாடல் ஒன்று அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தினால் கடந்த யூன் முதலாம் திகதியன்று ஒலிபரப்பப்பட்டது.
 

www.noolaham foundation.org
நூலகம்
15-06-20 1 1.
வலைப்பதிவரும் எழுத்தாளருமான 55 T6 பிரபாவும் நூலக நிறுவனத்தின் கோபியும் இவ்வுரையாடலை மேற்கொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சி யூன் 3, 2011 அன்று மறுஒலிபரப்பும்
செய்யப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் நூலகம்
நூலகச் செயற்பாடுகளை அவுஸ்திரேலியாவில் விரிவுபடுத்தும் நோக்கிலான முன்னோடிக் கலந்துரையாடல் ஒன்று கடந்த யூன் 1, 2011 அன்று சிட்னி கோம்புஷ் ஆண்கள் பாடசாலையில் நடைபெற்றது.
நூலகத்தின் பங்களிப்பாளர்களுள் ஒருவரான வைத்திய கலாநிதி ଗult. கேதீஸ்வரனின் முயற்சியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோபியும் கேதீஸ்வரனும் நூலகச் செயற்பாடுகள் தொடர்பில் அறிமுகம் செய்தனர்.
எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வானொலி அறிவிப்பாளர்கள் (அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இன்பத் தமிழ் ஒலி), தமிழ் விக்கிப்பீடியர்கள், தமிழ் முரசு இணைய இதழ்
சிட்னி தமிழ்ப் பாடசாலையினர், சமூகச் செயற்பாட்டாளர்கள் என சுமார் 25 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஏறத்தாழ இரண்டு மணிநேரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் அவுஸ்திரேலியாவில் நூலகச் செயற்பாடுகளை விரிவாக்குவது தொடர்பிலும் அவுஸ்திரேலிய வெளியீடுகளை எண்ணிம வடிவங்களில் ஆவணப்படுத்துவது தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நூலகத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும் நூலகம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் விரிவான உரையாடலும் இடம்பெற்றது.
கனடாவில் நூலகம்
கனடாவில் நூலகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான முன்னோடிக் கூட்டம் கடந்த யூன் 4 அன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பில் கனடியத் தமிழ் பருவ வெளியீடுகளை ஆவணப்படுத்துதல், கனடாவில் வெளியான தமிழ்

Page 2
நூல்களைச் சேகரித்தல், கனடா அரசு தமிழில் வெளியிட்ட பிரசுரங்களைச் சேகரித்தல், கனடாவில் எண்ணிமமாக்க நடுவம் ஒன்றினை உருவாக்குதல், பல்லூடக ஆவணங்களைச் சேகரித்தலும் ஆவணப் படுத்தலும், தகவற்சேகரிப்புக்கான வலைப்பதிவு அல்லது வலைத்தளமொன்றினை ஆரம்பித்தல், நுட்பச் சாத்தியங்களை ஆராய்தல், நூலக அறிமுகங்களை மேற்கொள்ளுதல், நிதி சேகரிப்பு முயற்சிகளில் ஈடுபடல், சமூக நிறுவனங்களுடனான ஊடாட்டத்தைத் தொடங்குதல் எனப் L6) விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மாதாந்தம் தொடர்ச்சியாகச் சந்தித்து முயற்சிகளைத் தொடரவும் தீர்மானிக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் விழா
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய, கலைச் சங்கமானது ஆண்டுதோறும் அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களில் எழுத்தாளர் விழாக்களை நடத்தி வருகின்றது. அவ்வகையில் பதினொராவது எழுத்தாளர் விழாவானது கடந்த யூன் 4 சனிக் கிழமை மெல்பேனின் பிரஸ்டன் நகரமண்டபத்தில் சங்கத்தலைவர் கலைவளன் சிசு. நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த விழாவின் இலக்கிய அரங்கில் நூலக நிறுவனம் சார்பில் கலந்துகொண்ட கோபி எண்ணிமமாக்கம் தொடர்பிலும் நூலக நிறுவனச் செயற்பாடுகள் தொடர்பிலும் அறிமுகவுரை நிகழ்த்தினார். பின்னர் கலந்துரையாடலின்போது வலைத்தளங்களை ஆவணப்படுத்துதல் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
நூறுக்கும் அதிகமானோர் பங்குபற்றிய இந்த நிகழ்வில் நூலக வலைத்தளம் தொடர்பான அறிமுகப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டதோடு நூலக நிறுவன ஆண்டறிக்கையும் புதிய நூலகம் இதழ்களும் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டன.
குறித்த எழுத்தாளர் விழா தொடர்பில் அவுஸ்திரேலிய தமிழ் முரசு இணைய இதழில்
புதிய நூலகம் இதழ் 6
15-06-2011
இது ஒரு நூலக நிறுவன வெளியீடு noolahamfoundation@gmail.com
புதிய நூலகம் இதழின் உள்ளடக்கம் அனைத்தும் நூ இருக்குமென்றில்லை. வெளியாகும் கட்டுரைகளின்
356öT 2 L6T6ITLšsid Attribution-ShareAlike 3.0 Unported

ரஸஞானி எழுதிய கட்டுரை இந்த இதழில் நன்றியுடன் மீள்பிரசுரமாகிறது.
கொழும்பு நூலக நிகழ்வு
கொழும்பு நூலகக் குழுவினரின் மாதாந்த சந்திப்பானது கடந்த யூன் 5, 2011 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் நடைபெற்றது.
ஜெ. திவாதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குமரன் புத்த இல்ல அதிபர் க. குமரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் க. சரவணனின் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்நிகழ்வில் பிரதம விருந்தினரால் புதிய நூலகம் செய்திமடல் அறிமுகம் செய்யப்பட்டது. பிரதம விருந்தினர் உரையைக் குமரனும் சிறப்புப் பேருரையைப் பேராசிரியர் சபா ஜெயராசாவும் நிகழ்த்தினர்.
கொழும்பு சட்டக் கல்லூரியின் நிலா லோகநாதன் பயன் உரையையும் கொழும்புப் பல்கலைக் கழகத்தின் பூதுவாரகன் பங்களிப்பாளர் உரையையும் நிகழ்த்தினர். சி.பிரகாஷ் நன்றியுரை நிகழ்த்தினார்.
இணையத்தில் நூலகச் சந்திப்பு
நூலகச் செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்களின் முதலாவது ஸ்கைப் சந்திப்பு கடந்த மே 14, 2011 அன்று இடம்பெற்றது.
அதன் தொடர்ச்சியாக இ. நற்கீரனின் ஒருங்கிணைப்பில் மேலும் சந்திப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு நூலகந் தொடர்பான பல்வேறு விடயங்களும் ஆராயப்படுகின்றன. அவ்வகையில் மே 21, மே 28, யூன் 4 ஆகிய திகதிகளிலும் இந்தச் சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
இவை பற்றிய மேலதிக விபரங்கள் நூலக நிறுவன வலைத்தளத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ஆசிரியர் குழு இ. கிருஷ்ணகுமார் சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் க. சசீவன்
தி கோபிநாத்
பதிப்பாசிரியர் கோபி
லக நிறுவனத்தின் நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாக ருத்துக்கள் கட்டுரையாளர்களுடையவை. பொதுவாக (CC BY-SA 3.0) of DigiL6ir Gausful Tassirpg.
2

Page 3
எழுத்தாளர்
Joe
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர்விழா இம்முறை மெல்பனில் கடந்த ஜூன் 4 ஆம் திகதி பிரஸ்டன் நகரமண்டபத்தில் சங்கத்தலைவர் கலைவளன் சிசு. நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிட்னியிலிருந்து பிரபல எழுத்தாளரும் சீர்மிய செயற்பாட்டாளருமான திருமதி கோகிலா மகேந்திரன், கம்பன் கழக ஸ்தாபகரும் தமிழ்க்கல்வி போதனாசிரியரும் இலக்கியவாதியுமான திரு.திருநந்தகுமார், மற்றும் பேர்த்திலிருந்து நூலகம் பவுண்டேசன் அமைப்பைச் சேர்ந்த திரு. கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்து உரையாற்றினார்கள்.
உலகடங்கும் யுத்தங்களினாலும் இயற்கை அநர்த்தங்களினாலும் மரணித்த மக்களுக்கான மெளன அஞ்சலியுடன் தொடங்கிய பதினொராவது எழுத்தாளர்விழா, தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் பணிகளை குறிப்பிடும் வாழ்த்துப்பாடலுடன் (நிகழ்ச்சிகள்) ஆரம்பமாகின. திருமதி டவீனா வேந்தனின் மாணவிகள் செல்விகள் அபிதாரணி சந்திரன், சாகித்தியா வேந்தன், தீப்தா முரளிதரன் ஆகியோர் இனியகுரலுடன் வாழ்த்துப்பா பாடினர்.
இம்முறையும் சிறுவர் அரங்கு மாணவர் அரங்கு என்பன இவ்விழாவில் களைகட்டின. மூத்ததலைமுறையினர் மாத்திரம் பங்கேற்கும் விழாவாக அமையாமல் இளம் தலைமுறைச் சிறார்களும் தமது ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கேற்றவாறு நிகழ்ச்சிகள்
வடிவமைக்கப்பட்டிருந்தன.
சிறுவர் அரங்கிற்கு தலைமைதாங்கியதும் ஒரு சிறுமிதான். செல்வி காவியா வேந்தன் தலைமையில் தமிழுக்குப்பணி செய்தவர்கள் என்ற தலைப்பில் செல்வி நித்தியசிறி பத்மசிறி (பாரதியார்) செல்வி ஆரபி மதியழகன் (சோமசுந்தரப்புலவர்) செல்வன் அஜ்யன் மணிவண்ணன் (பாரதியார் கவிதை) தமிழுக்குப்பணி செய்பவர்கள் என்ற தலைப்பில் செல்வன் துவாரகன் சந்திரன் (அம்பித்தாத்தா) செல்வன் காவியன் பத்மசிறி (இளமுருகனார் பாரதி) செல்வன் ஆரூரன் மதியழகன் (இளமுருகனார் கவிதை) ஆகியோர் சரளமாக உரையாற்றினர்.
திருமதி மாலதி முருகபூபதி தலைமையில் நடந்த மாணவர் அரங்கில் சிட்னியிலிருந்து வருகைதந்த செல்வி தர்சனா சிறீசந்திரபோஸ் எழுத்தாளர் பேராசிரியர் ஆசி. கந்தராஜாவின் சிறுகதைகளில் சமூக நோக்கு என்ற தலைப்பில் ஆய்வுரை

க்கியம் சங்கமித்த იYყნიr 2011
நாணி -
நிகழ்த்தினார். சிட்னியிலிருந்து வருகைதந்திருந்த மற்றுமொரு மாணவரான செல்வன் விதுரன் ஜெகதீஸ்வரன் திரைப்பட இயக்குநர் சேரனின் படங்கள் பற்றிய தமது மனப்பதிவுகளை விமர்சனக் கண்ணோட்டத்துடன் சமர்ப்பித்தார். மெல்பன் பாரதி பள்ளி மாணவர்கள் செல்விகள் கீர்த்தனா ஜெயரூபன், மதுசா சண்முகராஜா, மதுசா ஆனந்தராசா, மெல்பன் மில்க்பார்க் தமிழ்ப்பாடசாலை மாணவர்களான செல்விகள் சஞ்சிதா நாகசாந்தகுமார், அம்சவி கோபாலசிங்கம், விபுசனா ஜெயமனோகரன், ஜெகனி நடேசமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர். அவர்களது உரைகள்
ரசனையினதும் அனுபவப் பகிர்வாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தகுந்தது.
திரு. சண்முகம் சந்திரன் தலைமையில் நடைபெற்ற இலக்கிய கருத்தரங்கில் திரு.திருநந்தகுமார் உரையாற்றுகையில் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் அவுஸ்திரேலியா போன்றதொரு நாட்டில் குடியேறிய தமிழ்ச்சிறார்களுக்கும் புகலிட நாடுகளில் பிறந்த தமிழ்க் குழந்தைகளுக்கும் எவ்வாறு தமிழை கற்பிக்கலாம் அவர்களுக்கான எழுதும் திறனை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பதை பலதரப்பட்ட விளக்கங்களுடன் விரிவுரைப்பாங்கில் குறிப்பிட்டார்.
திருமதி கோகிலா மகேந்திரன் இலக்கியப் படைப்பாளர் பல நூல்களை எழுதியிருப்பவர். உளவியல் சார்ந்து பல சீர்மிய பணிகளை இலங்கையில் போரில் பாதிக்கப்பட்டவர்களின் நலன் குறித்தும் மேற்கொண்டவர். அவர் தமது
உரையில்" தமிழினம் நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்டிருக்கும்போது எழுத்தாளர்கள் எவ்வாறு இயங்கவேண்டும் என்பதை உளவியல் தரிசனத்துடன் விளக்கினார்.
கணினி யுகதில் வாழும் எம்மவரது இலக்கியப்படைப்புகளை இலத்திரனியல்
ஊடகங்களில் சேமித்து கணினி நூலகத்தில் எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக அரிய பல ஆலோசனைகளை தெரிவித்தார் நூலகம் பவுண்டேசன் சார்பாக உரையாற்றிய திரு. கோபிநாத். அத்துடன் இதுதொடர்பான பிரசுரங்களையும் தகவல்களுக்காக வழங்கினார்.
இவர்கள் மூவரினதும் உரைகள் சிறந்த ஆவணப்பதிவுகள் என்றும் சொல்லலாம். அவர்களுடைய கருத்துக்கள் காற்றோடு கலந்து மறைந்துவிடாமல் ஊடகங்களில் முழுமையாக பதிவாகவேண்டும். எழுத்தாளர் விழாவை கடந்த

Page 4
பதினொரு வருடகாலமாக தங்கு தடையின்றி நடத்திவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இந்த சிறப்புரைகளை இனிவரும் காலங்களில் பிரசுரங்களாக வெளியிடுவது சாலச்சிறந்தது. மூத்ததலைமுறையினரது உரைகள் மாத்திரமின்றி இளம் தலைமுறையினரது எழுத்தாளர் விழா உரைகளும் அவ்வாறு பிரசுர வடிவில் வெளியாகவேண்டும்.
மூத்த தலைமுறையினர் மூவர் பங்கேற்ற இலக்கியக் கருத்தரங்கில் இளம்தலைமுறை மாணவி விமலா பூணூரீநிவாசன் தமிழ் இசைக்கு மகத்தான சேவையாற்றிய மூன்று இசைவேந்தர்கள் பற்றி உரையாற்றினார்.
விமர்சன அரங்கில் டென்மாரக் ஜிவகுமாரன் தொகுத்த முகங்கள் புலம்பெயர்- புகலிட வாழ்வை சித்திரிக்கும் 50 சிறுகதைகள் இடம்பெற்ற நூலை திருமதி ரேணுகா தனஸ்கந்தாவும் கோகிலா மகேந்திரன் எழுதிய உள்ளத்துள் உறைதல்' என்னும் உளவியல் சார்ந்த நூலை திருமதி உஷா சந்திரனும் அறிமுகப்படுத்தி விமர்சித்தார்கள்.
அவுஸ்திரேலியாவின் நான்கு 66.d5 6. பருவகாலங்களை இலக்கியநயத்துடன் சித்திரிக்கும் கவியரங்கு திரு. நிர்மலன் சிவா தலைமையில் நடந்தது. கவிஞர்கள் கலாநிதி மணிவண்ணன், செல்வி ஹம்சாயினி தில்லைநாதன், திருவாளர்கள் ஆனந்தகுமார் பாலசுப்பிரமணியம், சசிதரன் தனபாலசிங்கம் ஆகியோர் இக்கவியரங்கில்
அபிதான
தமிழின் முதற்
அபிதானகே
இலக்கியக்
அபிதானகோசம்
புராணங்கள்
காணப்பெற்
THE TAMIL புலவர், புரல்
CLASSICAL தொகுத்தளி
DICTIONARY அபிதானகே
鑫赫 முத்துத்தம்பி
ajistag takätiä உரையெ (9;
ஆ.முத்துத்தம்பிப்பிள்ளையால் நடத்தியவர்
fisi,
அபிதான ே ܚܘܝܚaܕ݁ܢܶܝܳܝܳܝܵܢܵܝܵܐܝܶ
aaaaasai ada ide dia ak அச்சுக்கூட
தான்.போ.குராசன் سیستم தமிழகத்தில்
வெ6 )1910( سه وعده میتوان به سوریه
எனினும் அ
பரப்பிலே அ
சிந்தாமணி.
நூலக வலைத்தளத்தில் அபிதானகோசம் முழுமையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பங்குபற்றினர்.
எழுத்தாளர் விழா கலையரங்கில் இடம்பெற்ற இரண்டு நிகழ்வுகளிலும் சிறுவர்களான இளம்தலைமுறையினரே பங்கேற்றனர். பாரதி பள்ளியின் ரிசேர்வயர் வளாக மாணவர்கள் எலிக்குஞ்சு செட்டியார் என்ற நாடகத்தில் நடித்தனர். செல்விகள் உபாஷனா, லசஷனா ரமேஷ்வரக்குருக்கள், லாவண்யா அறிவழகன், செல்வன்கள் அஷ்வின், ஆகாஷ் பொன்னுத்துரை ஆகியோர் இந்நாடகத்தில் பங்கேற்றனர். ஆசிரியர் திரு. மயில்வாகனம் மகாதேவா இந்நாடகத்தை தயாரித்து நெறிப்படுத்தியிருந்தார்.
வந்தேன் வந்தனம் என்னும் தாளலய நாடகத்தில் செல்வன்கள் தர்சிகன் சிறிகாந்தன், ரவிசங்கர் சுபசேகரன் ஆகியோர் நடித்தனர். பக்கவாத்தியம் திருவாளர்கள் பூனிநந்தகுமார், வாசவன் பஞ்சாட்சரம். இந்நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியவர் திரு. நிர்மலன் சிவா.
குறும்படக்காட்சி, இராப்போசன விருந்துடன் பதினோராவது எழுத்தாளர்விழா பல்சுவை அரங்காக நிறைவடைந்தது. சங்கத்தின் செயலாளர் திருமதி கெளசல்யா - அன்ரனிப்பிள்ளை நன்றி நவின்றார். வானமுதம் ஊடகவியலாரும் சங்கத்தின் நிதிச் செயலாளருமான திரு. நவரத்தினம் அல்லமதேவன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்திருந்தார்.
56irg5: ww.tamilmurasuaustralia.com
ாகோசம்
கலைக்களஞ்சியம்
5ாசம் என்பது தமிழிலே முதன் முதலாகத் தோன்றிய கலைக்களஞ்சியமாகும். வடமொழி, தென்மொழி மொழிகளிலும் இயற்றப்பெற்ற வேதங்கள், ா, இதிகாசங்கள், தருமநூல்கள், இலக்கியங்களிற் ற தெய்வம், தேவர், இருடி, முனிவர், அசுரர், அரசர், வலர் முதலிய விபரங்களை அகர வரிசையிலே க்கும் முயற்சி அபிதானகோசம் ஆகும்.
காசத்தைத் தொகுத்தளித்தவர் மானிப்பாய் ஆ.
ப்பிள்ளை (1858-1917) சுயமாக எழுதியும் தியும் பதிப்பித்தும் உதவியவர், சஞ்சிகை
அகராதி தொகுத்தவர்.
காசம் 1902 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நாவலர் த்திற் பதிப்பிக்கப்படடு வெளியிடப்பட்டது.
சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி ரிவரும் முன் இது வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. பிதானகோசத்தைக் காட்டிலும் விரிவாகவும் விடயப் ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது அபிதான
நன்றி. தமிழ் விக்கிப்பீடியா

Page 5
நூலகத்திலிருந்து.
மல்லிகை முதலிதழின்
ea i
sa kasala sa sa sa sa:
* ************* Eraig srassa sa.sat. Gas pa aata atas; asutriktarat ಹಷ್ರಣತಿ
ge saint i 'sharii' riarú oraif irreá eagrá ré * 3á6ersai ostačí" srpna tణిశీ డఓఖ** 8. ‘மணி’ என்று வைக்கதாக மூத தலத்தி YYST S S LLLLLLLTSLTMLLS SYTtOOkM TTMMLEL S SYSeTL TLLLLL MTL TLL S0LTLTTYLLLL LLLLL S TMMeLTLMTTM SLMS STMTe பிரயம்பட்ட* முடிவில் கலஞன்” என்று பெயர் ஆட்டம் *** ** if ( ( (
.. ' Aww.
சர்த்தப்படங்களுக்கு இப் பெயரில் அவர் కణిi#a జడి, శిష్ట அங்கீகரிக்கரமில்ல. மின்னும் ****årsfie «Migasraga,
episóé atrás pse கைக்கட்டது. அத்து Y LLLLLLLLM LLLLL S SLkLLL ML TTYYLSLTLLL STL LYSLgTTTLLLLSS
சில அட்ாேன கருத்தோ அல்லது శీat *** #### + ఓsa * ஆத்
வேகத்து விடுவண் காத்திரம் அல ár&Sébåtar arissa. ##ణిజ్యశీత,
శుశీకిr *த்தைகளும் West $'. bis sur வருக்குதுதிகளுமே இதயத்திருதி வெளியிடப்ப்டுபன்
sisisssää
assi, **ங்களது கருத்தானுல் அத
கொடி 1 ம6 ஆகஸ்ட் 15
வணக்கம்
மல்லிகையி
இந்த சஞ்சி ஒரு தனிக்
ஒரு நண்பர் இன்னொரு வேறொருவ சொன்னார் செந்தாரை முடிவில் கல் ஆரம்ப ஆய
சம்பந்தப்ப இல்லை. சி ஆலோச:ை
முடிவில் ஏ( முடிவின் நா
மிக நுட்பம தமக்குத் தா இருந்து வி உயர்ந்ததா
அவைகளை வாழ்க்கைை உதவுகின்ற வாழும்; அது எங்கள நம
மிக எளிடை மங்களகரம மல்லிகை பு கருத்தில் து பாதையில்
சேர்ந்து நிற் பயன்படக்
மலர இருப்
ஆடம்பரமா
வாக்குறுதி படுபவைய
மல்லிகையி போதும்.
 

ஆசிரியத் தலையங்கம்
Df 1
1966
lன் முதல் இதழ் தான் இது.
கைக்கு மல்லிகை என்ற நாமகரணம் சூட்டப்பட்டதே கதை, சுவாரஸ்யமான வரலாறு.
இதயம் எனப் பெயர் வைக்கலாம் என்றார். வர் கமலம் எனப் பெயர் சூட்டலானார். பர் மலர் என்று வைக்கலாமென முக மலர்ச்சியுடன் . சற்றுத் தீவிரவாதியான பிறிதோர் அன்பர் 5 என அழைக்கலாமே என அபிப்பிராயப்பட்டார். லைஞன் என்று பெயர் சூட்டப்பட்டு அதற்குரிய பத்த வேலைகள் செய்யப் பட்டு வந்தன.
ட்டவர்களுக்கு இப் பெயரில் அவ்வளவு அபிமானம் லர் அங்கீகரிக்கவுமில்லை. மீண்டும் னயும், கலந்துரையாடலும்.
கோபித்த முடிவு காணப்பட்டது. அந்த ஏகமனதான ாமகரணம் தான் மல்லிகை.
ான கருத்தோ அல்லது அற்புதமான கலையோ மே நுட்பமாகவோ அல்லது அற்புதமாகவோ டுவதால் மாத்திரம் அவை சிறந்து விளங்குவதில்லை, க ஆகிவிடுவதுமில்லை.
ா மக்கள் எவ்வளவு விரும்புகிறார்களோ, அவர்களது யைச் செம்மைப் படுத்த கலையும் கருத்தும் எவ்வளவு னவோ அந்தக் கலையும் கருத்துமே நீண்டகாலம் துவே பின்னர் மக்கள் கலைகளாக மலரும். இதுவே பிக்கை.
மயாகவும் தூய்மையாகவும் அதே சமயம் ான முக்கிய நிகழ்ச்சிகளில் முத்லிடம் பெறும் லரைப் போலவே அமைப்பில் மிக எளிமையாகவும், ாய்மையாகவும் அதே நேரம் மக்களின் வாழ்க்கைப் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் தோளோடு தோள் கும் நண்பனைப் போன்று ஏதோ ஒரு வகையில் கூடியதுமான அம்சங்களைத் தன்னகத்தே கொண்டு பது மல்லிகை.
“ன வார்த்தைகளினால் சொல்லப்படும் எந்த களுமே இதயத்திலிருந்து வெளிப்படப் ல்ல.
lன் கருத்தே உங்களது கருத்தானால் அதுவே

Page 6
இலங்கையில் இ
- சிந்து
உலகளாவிய ரீதியில் பலவகையான இசை வகைகள் உள்ளன. அவற்றுள் இந்திய இசை வகைகளும் குறிப்பிடத்தக்கவை. பலவித மொழிகளையும் பேசுகின்ற பல்வேறு இனத்தைச் சார்ந்த மக்கள் வாழ்கின்ற இந்தியாவில் வெவ்வேறு வகையான இசைவகைகள் காணப்படுகின்றன. அவற்றில் தமிழிசை, கிராமிய இசை, கருநாடக இசை வகைகளை தமிழ் மக்கள் இசைத்தும் கற்றும் வருகின்றனர்.
கர்நாடக இசையானது தென்னிந்தியாவில் எழுந்த ஓர் இசை வடிவமாகும். 6J(Կ சுரங்களை அடிப்படையாகக் கொண்டமைந்த இக் கருநாடக இசை குரலிசையாக மட்டுமன்றி வாத்திய இசையாகவும் பாடப்பட்டும் பயிலப்பட்டும் வருகின்றது. இவ்விசையுடன் தொடர்பான கருவிகளாக வயலின், வீணை, புல்லாங்குழல், நாதஸ்வரம், ஆர்மோனியம், மிருதங்கம், தவில் போன்ற இசைக்கருவிகள் விளங்குகின்றன. தவிர தற்காலத்தில் மேற்கத்திய மற்றும் இந்துஸ்தானிய இசைக் கருவிகளிலும் இவ்விசை வாசிக்கப்படுகின்றது.
இலங்கையைத் தமிழர் மத்தியில் தென்னிந்திய இசைவகைகள் குறிப்பிடத்தக்க இடத்தினைப் பெறுகின்றன. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் தென்னிந்திய இசை சார்ந்த ஒரு நீண்ட இசைப் பாரம்பரியம் இலங்கையிலும் காணப்படுகின்றது. இசைக் கல்வியானது பாடசாலைப் பாடமாகவும் உள்ளது. உலகளாவிய ரீதியில் வாழும் இலங்கைத்தமிழர் தென்னிந்திய இசையினை தமது பண்பாடு மென்மேலும் நின்று நிலைக்கக் கருதியும் தமது பாரம்பரிய இசையாகக் கொண்டும் பயில்கின்றனர்.
இந்தியாவில் இசை தொடர்பாக 69 நூற்றுக்கணக்கான நூல்கள் எழுந்துள்ளன. இலங்கையில் தென்னிந்திய நூல்கள் பெருமளவில் பயன்படுத்தப்படும் அதேவேளை குறிப்பிடத்தக்க பல நூல்கள் இங்கும் வெளியாகி வருகின்றன.
அவ்வகையில் இச்சிறு கட்டுரையானது இலங்கையில் பிறந்த எழுத்தாளரால் எழுதப்பெற்ற அல்லது இலங்கையில் தோன்றிய இசை நூல்கள் பற்றிய ஒரு தேடலாக அமைகின்றது. இது ஓர் ஆரம்பநிலைத் தேடல் முயற்சி மட்டுமே. இது மிக விரிவாகச் செய்யப்படக் கூடிய (செய்யப்பட வேண்டிய) ஓர் தேடலின் தொடக்கமாக மட்டும் அமைகிறது.
தேடலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இலங்கையில் எழுந்த இசை நூல்கள் கிடைக்கப் பெற்றன. கைவசம் உள்ள நூல்கள் தவிர்ந்த ஏனைய நூல்கள்,

கோபி -
கைவசமிருந்த நூல்கள் எழுத உசாத்துணையாக இருந்த நூல்கள் பட்டியலில் இருந்தும் வட இலங்கை சங்கீத சபையின் பாடத்திட்ட ஏட்டில் பயன்படுத்த வேண்டிய உசாத்துணை நூல்கள் பட்டியலில் இருந்தும் நூலகம் இணையத் தளத்திலிருந்தும் என். செல்வராஜா அவர்களால் எழுதப்பெற்ற நூல்தேட்டம் தொகுதிகளிலிருந்தும்
பெறப்பட்டவையாகும்.
இலங்கையில் இசை நூல்கள்
ஈழத்து இசை நூல்கள் பலதரப்பட்டவையாகக் காணப்படுகின்றன. இசை தொடர்பான அறிமுறை செயன்முறையை விளக்கும் நூல்கள் முதல் ஆழமான ஆய்வுகள் வரை உள்ளன. துறைசார் வல்லுனர்களால் எழுதப்பட்டவை முதல் ஆர்வங் காரணமாக எழுந்தவை வரை உள்ளன.
ஈழத்து இசை நூல்களில் இசைப் பாடற் தொகுதிகள், குறித்த ஓர் இசையியலாளரால் இயற்றப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல்கள், இசையியலாளர்கள் பற்றிய வரலாறு கூறும் நூல்கள், இசையின் வரலாறு பற்றிய நூல்கள், இசை விளக்கம் குறித்த நூல்கள், இராகங்கள் பற்றிய நூல்கள், பாடசாலை மாணவர்கள் கற்கும் வகையில் அவர்களது இசையறிவுக்கு ஏற்ப எழுதப்பட்ட விளக்க நூல்கள், பயிற்சி நூல்கள், ஆண்டு மலர்கள், இசைக்கருவிகள் குறித்த நூல்கள், இசை வகைகள் தொடர்பான நூல்கள், ஆய்வு நூல்கள், பண்ணிசை தொடர்பான நூல்கள் என வெவ்வேறு வகைகளை அடையாளங் காண முடிகிறது.
LinL- Þéðastir
இலங்கையில் வட இலங்கை சங்கீத சபையானது வாய்ப்பாட்டு, வயலின், வீணை, புல்லாங்குழல், நாகசுரம், ஆர்மோனியம், மிருதங்கம், தவில், நடனம், நாடகமும் அரங்கக் கலைகளும் போன்றவற்றில் தேர்வுகளை நடாத்தி சான்றிதழ்களை வழங்கி வருகின்றது. இச்சபையின் தேர்வுகள் $905 குறிப்பிட்ட பாடத்திட்ட ஒழுங்கிலேயே நிகழ்கின்றது. இத்தேர்வுக்கு தோற்றும் மாணவர்களுக்காக சில நூல்கள் எழுதப்பட்டன. உதாரணமாக மீரா வில்லவராயர் அவர்களால் எழுதப் பெற்ற வட இலங்கை சங்கீத சபை பாடத்திட்டத்திற்கு அமைவாக எழுதப்பட்ட இசையியல் விளக்கம் (3 தொகுதிகள்), செல்வி குமுதினி கனகரத்தினம் அவர்களால் எழுதப்பெற்ற சங்கீதம் (இரு தொகுதிகள்) ஆகிய இசை அறிமுறை நூல்களைக் குறிப்பிடலாம்.

Page 7
தேசிய கல்வி நிறுவக அழகியல்துறை, பாடசாலைகளில் இசையினை ஒரு பாடமாக பயிலும் மாணவர்களுக்கு இசையை போதிக்கும்
ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கைந்நூல்களை வெளியிட்டுள்ளது. இது தரம் 6 முதல் 13 வரையிலான இசையினைப் பயிலும் மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு பயன்படும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன. தவிர
மாணவர்களுக்கான அறிமுறை செயன்முற்ை விடயங்களை விளக்கும் வகையில் மேலும் வெளிவந்துள்ள சில நூல்கள் பின்வருமாறு:
• கர்நாடக சங்கீதம் (2 தொகுதிகள்) - சிறீமதி ஜெயந்தி இரத்தினகுமார்
• கர்நாடக சங்கீதம் (ஆண்டு 6-7 வரை) - செல்வி குமுதினி கனகரத்தினம்
• கர்நாடக சங்கீதம் தரம் 10 - செல்வி கிருஷ்ணவேணி மயில்வாகனம்
• ஹிந்துஸ்தானி, மேற்கத்திய செந்நெறி இசை மரபுகள் ஓர் அறிமுகம் - மீரா வில்லவராயர்
அத்துடன் ஆண்டு 6 முதல் ஆண்டு 11 வரையான பாடத்திட்டத்திற்கமையவும் வட இலங்கை சாங்கீத சபையின் தேர்வுகளுக்கு அமரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் வினாவிடைகளையும் அறிமுறை விடயங்களையும் கொண்டு வெளிவந்த நூல்களாக சங்கீதம் (பொன் சிறி வாமதேவன்), கர்நாடக சங்கீதம் (அநேகா இளங்கோவன்), அழகியற்கல்வி சங்கீதம் (சச்சிதானந்தம் சிறீ காந்தா) போன்றவை அமைந்துள்ளன. மேலும் கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த பரீட்சை வினாத் தாள்களையும் அவற்றுக்கான விடைகளையும் கொண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. எடுத்துக் காட்டாக கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பிரிவின் கர்நாடக சங்கீத மாணவர்களுக்கான கடந்த கால வினாக்களும் விடைகளும் ஒரு நூல் வடிவில் யாழ்ப்பாணம் உயர்கல்விச் சேவை நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட பாடத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த நூல்களில் பல இந்தியாவின் டாக்டர் பி.டி.செல்லத்துரை என்பவர் எழுதிய தென்னக இசையியல் என்ற நூலைப் பிரதான உசாத்துணையாகப் பயன்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிகிறது. தவிர பேராசிரியர் சாம்பமூர்த்தியின் நூல்களும்
உசாத்துணைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
நிறுவன வெளியீடுகள்
1931ஆம் ஆண்டு முதல் 80 ஆண்டுகளாக பல இசை ஆசிரியர்களையும், இசைக் கலைஞர்களையும் உருவாக்கிய, உருவாக்கி வருகின்ற பெருமைக்குரிய வட இலங்கை சங்கீத சபையானது தனது பொன்விழா, வைரவிழாவின் போது
வெளியிட்ட மலர்ப்பிரசுரங்களும் கிடைக்கப்பெறுகின்றன. இவற்றில் சங்கீதம், பரதம், மிருதங்கம், நாடகம், ஈழத்து
இசைக்கலைஞர்களைப் பற்றிய குறிப்புக்களையும்,

இசையின் வரலாறு, தமிழ்ப் பண்ணிசை, சங்கீத மும்மணிகள், இசை கற்பிக்கும் முறை, சுருதிகளும் அவற்றின் உபயோகமும், இசையின் தத்துவம், ஈழத்தில் கதகளி, வட இலங்கை சங்கீத சபையின் தோற்றமும் வளர்ச்சியும் ஆகிய விடயங்கள் தொடர்பான கட்டுரைகளையும் கொண்டு வெளிவந்துள்ளன.
ஜேர்மனியின் டோர்ட்முண்ட் நகரில் 1992ம் ஆண்டு முதற்கொண்டு இயங்கி வருகின்ற தமிழர் கலையகம் என்ற அமைப்பினர் தமிழையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் வளர்க்கும் முகமாக இவ்வமைப்பை நடாத்தி வருகின்றனர். தமிழர் கலையகத்தினால் வெளியிடப்பட்ட நூல்கள் இலங்கையுடன் தொடர்புடைய நூல்கள் என நூல்த்தேட்டத்தில் குறிப்பிடப்படுகின்ன்றன. தமிழர் கலையகத்தினரின் பாடத்திட்டம் வடமொழியின் ஆதிக்கத்தை நீக்கி தூய தமிழில் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வமைப்பினரின் இசை, நாட்டிய பாடத் திட்டத்திற்கு அமைய நூல்கள் வெளிவந்துள்ளன. இவ்வமைப்பு இன்பத்தமிழ்ப்பாக்கள், கீர்த்தன
Dist606), புதிய நோக்குடன் செந்தமிழ் செவ்விசைப்பாக்கள், பைந்தமிழ்ப்பாக்கள் போன்ற கீர்த்தனைகளை, பாடல்களை உள்ளடக்கிய
நூல்களையும், தமிழர் இசையியல் என்ற நூலையும் வெளியிட்டுள்ளது.
இசைப் பாடற் தொகுதிகள்
பல வகையான பாடல்களை உள்ளடக்கிய நூல்கள் வெளிவந்துள்ளன. சிறீ தியாகராஜ சுவாமிகளின் பஞ்சரத்தின கீர்த்தனைகள், ஸ்வர தாள அமைப்புடன் கிறிஸ்தவ தமிழ்த் துதிப்பாடல்களின் தொகுப்பு, சிவயோக சுவாமிகளின் நற்சிந்தனைக் கீர்த்தனைகள், ஈழத்து நாட்டார் பாடல்கள், அம்பாள், விநாயகர், முருகன், வெங்கடேஸ்வரர் ஆகிய கடவுளர் மீது எழுந்த கீர்த்தனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியும், கீர்த்தனை மாலை, கீர்த்தனாசாகரம், தமிழிசைப் பாடல்கள் என்னும் பெயர்களிலும் பாடல்கள் உள்ளடங்கிய நூல்களும் வெளிவந்துள்ளன.
இசையியலாளர்கள்
இசைக் கலைஞர்கள் தொடர்பான நூல்கள் பெரும்பாலும் இந்திய இசைக் கலைஞர்கள் குறித்தோ அல்லது மறைந்த ஈழத்து இசைக் கலைஞர்கள் குறித்தோ எழுந்த நூல்களாக காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஆர். காண்டீபன் அவர்கள் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களைப் பற்றிய நூல்கள் இரண்டை வெளியிட்டுள்ளார். அதே வேளை மறைந்த தவில் வித்துவான் தட்சணாமூர்த்தி அவர்களைப் பற்றி வ. மகேஸ்வரன் எழுதிய நூலையும் குறிப்பிடலாம். மேலும் அ.நா. சோமஸ்கந்தசர்மா அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இசை முன்னோடிகள் எனும் நூலை எழுதியுள்ளார்.

Page 8
இசைக் கருவிகள் பற்றிய நூல்கள்
இசை என்னும் போது குரலிசை மட்டுமன்றி கருவியிசைகளும் அடங்கும். கருவியிசை குறித்த நூல்களும் இலங்கையில் வெளிவந்த்துள்ளன. பல விதமான கருவிகள் உள்ள போதிலும் வெளிவந்த்துள்ள இசைக் கருவிகள் குறித்த சில நூல்களில் பெரும்பாலானவை மிருதங்கத்தினைப் பற்றியவையாகவே உள்ளன. மிருதங்கம் குறித்து வெளிவந்த நூல்களாக அ.நா.சோமாஸ்கந்த சர்மா எழுதிய மிருதங்க சங்கீத சாஸ்திரம், எம். என். செல்லதுரை எழுதிய மிருதங்க சஞ்சீவி, இணுவில் க.சங்கரசிவம் எழுதிய மிருதங்கம் சுருக்க விளக்கம் ஆகிய நூல்களைக் கூறலாம். தவிர தமிழிசை அரங்கக் கருவிகள், தமிழர் முழவியல், வில்லிசைக் கலை இன்னிசை யாழ் போன்ற நூல்களும் வெளிவந்துள்ளன.
விபுலானந்த அடிகளுடைய யாழ் நூல் இலங்கையர்
மதங்ககு
மதங்க சூளாமணி என்பது முத்தமிழில் ஒன்றாகிய நாடகத் தமிழுக்கு என எழுந்த ஒரு நூல். தமிழ்க் காப்பியங்களுள் முன்னணியில் வைத்து எண்ணத்தக்க சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட தகவல்களையும், சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையில் காணும் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு 1926 ஆம் ஆண்டில், இலங்கையின் மட்டக்களப்பில் பிறந்த சுவாமி விபுலானந்தர் இதனை எழுதினார்.
சேக்சுப்பியரின் அடியொற்றி, நாடகப் பாத்திரங்கள், உரையாடல்கள் எவ்வாறு அமையவேண்டும் என்பதையெல்லாம் மிக நுணுக்கமாக ஆராய்ந்து அடிகளார் இந்நூலில் தந்திருக்கிறார். -
மதங்க சூளாமணி 3 இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. உறுப்பியல்
2. எடுத்துக்காட்டியல்.
3. ஒழிபியல்
உறுப்பியல்
உறுப்பியலில் சிலப்பதிகார அடியார்க்கு நல்லாருரையினால் பெறப்பட்ட அழிந்து போன நாடகத்தமிழ் நூல் சூத்திரங்கள் சிலவற்றை ஆதாரமாகக் கொண்டு தமிழ் நாடக இலக்கியத்தை உரைக்கின்றார்.
இவ்வியலில் நாடக உறுப்புக்கள், நாடகத்திற்குரிய கட்டுக்கோப்பு என்பவற்றுடன் நாடகத்திற்கான பாத்திரங்கள், நாடகம் தரும் சுவை என்பன பற்றி இந்திய ரசக்கோட்பாட்டினடியாக எடுத்துக் கூறப்படுகிறது.

ஒருவரால் எழுதப்பட்ட மிக முக்கிய ஆய்வு நூல்களில் ஒன்றாகும். இந்நூல் பழந்தமிழரின் இசைநுட்பங்களையும் இசைக் கருவிக் குறித்த செய்திகளையும் ஆராய்ந்து கூறுகிறது. பதினைந்து ஆண்டுகால ஆராய்ச்சியின் பெறுபேறு யாழ் நூல்.
பிற நூல்கள்
இலங்கையில் இசை குறித்த ஆய்வு நூல்களும் வேறும் பல வகை நூல்களும் வெளிவந்துள்ளன. ஈழத்துக் கலைத்துறைப் பதிவுகள் குறித்த நூல், மேலைத்தேச இசையியல், இலக்கிய இசை பற்றிய நூல், இசையையும் சமூகத்தையும் பற்றிய நூல், பண்ணிசை குறித்த ஆய்வு நூல், இசையும் நடனமும் குறித்த நூல் என அவற்றை வகை பிரிக்கலாம். அடிப்படைக் கர்நாடக இசையியல் என்ற பீ.ஞானவரதனால் எழுதப் பெற்ற கர்நாடக இசையின் அடிப்படை அம்சங்களை விளக்கும் நூலையும் கூட இதில் குறிப்பிடலாம்.
61sto600f
எடுத்துக்காட்டியல்
இரண்டாம் இயலான எடுத்துக்காட்டியலில் சேக்ஸ்பியரின் 12 நாடகங்கள் உறுப்பியலிற் கூறப்பட்ட தமிழ் நாடக இலக்கணங்களுக்கமைய விளக்கப்படுகின்றன. நாடகத்தின் அமைப்பை மகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என விளக்கி அந்த அமைப்பு இந்த நாடகங்களில் எவ்வாறு காணப்படுகிறது என்பதனையும் அத்தோடு நாடகம் தரும் வீரம், அச்சம், இளிவரல், அற்புதம், இன்பம், அவலம், நகை, உருத்திரம், நடுவு நிலையாகிய ஒன்பது சுவைகளையும் தந்து அச்சுவைகளை இந்நாடகங்கள் எவ்வாறு தருகின்றன என்பதனையும் விளக்குகிறார்.
இந்தப் 12 நாடகங்களிற் சிலவற்றின் அமைப்பை விபரமாகக் காட்டிச் செல்லும் அவர் சிலவற்றின் கதைகளை மாத்திரமே கூறிச் செல்கிறார்.
ஒழிபியல்
ஒழிபியல், தனஞ்சயனார் வடமொழியில் இயற்றிய நாடக இலக்கண நூலான தசரூபகத்தின் முடிபுகளைத் தொகுத்துக் கூறுகிறது. தனஞ்சயனார் பரத நூல், நாட்டிய சாத்திரத்தில் பொதிந்து கிடந்த அரிய இலக்கணங்களையெல்லாம் ஆராய்ந்து தொகுத்துச் செய்ததே தசரூபகம். இதனைவிட தொல்காப்பியச் சூத்திர உரையினின்று எடுக்கப்பட்ட நாடகத்திற்குரிய அபிநயம் பற்றிய சூத்திரங்களுடன் நடித்தல், நாடகத்திற்கு பாட்டு வகுத்தல், ஆட்டம் அமைத்தல், அரங்கின் அமைதி பற்றிய செய்திகளும் தரப்பட்டுள்ளன
நன்றி. தமிழ் விக்கிப்பீடியா