கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாடகக் கலைஞர் ஏ. ரி. பொ. வெள்ளி விழா மலர் 1974

Page 1
5. 6.
ம்பசிட்டி சன்மா
 
 
 

ர்க்க சபை வெளியீடு

Page 2


Page 3

நாடகக் கலைஞர் 6. f. 6ul.
வெள்ளி விழா மலர்
" கலப்பேரரசு”
கெளரவப் பட்டம்
குரும்பசிட்டி சன்மார்க்க சபை வெளியீரு

Page 4
சன்மார்க்க சபை வெளியீடு - 38 ஒகஸ்ட், 1974
திருமகள் அழுத்தகம், சுன்னுகம்

பதிப்புரை
உலகியலிலும் மெய்ந்நெறியிலும் சென்ற நாற்பது வருடங்களாக அளப்பரிய தொண்டு செய்து வரும் நிறுவனம் குரும்பசிட்டி, சன்மார்க்க சபை. இதன் உன்னத இலட்சியங் களுள் கலைஞர்களைப் பாராட்டுதல் தனிச்சிறப் புடையது. நாட்டுக் கூத்துக்களைப் புடம் செய்த தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களை, நாடகத்துறை வல்லுநர்களாம் கலையரசு க. சொர்ண லிங்கம் அவர்களை, கலாஜோதி செ. சண்முக நாதன் (சான) அவர்களை, நாவலர் வழிவந்த பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களை (அறுபதாண்டுப் பாராட்டு விழா எடுத்து), பேச்சுக் கலைமூலம் ஆத்மீகநெறி வளர்க்கும் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களை, எழுத்துக்கலை மூலம் இலக்கிய இரசனையூட்டும் இரசிகமணி கனக. செந்தி நாதன் அவர்களை, கவின்கலை விற்பன்னர் கலாகேசரி ஆ. தம்பித்துரை அவர்களைப் பாராட்டி விழா எடுத்துக் கெளரவித்துள் ளோம். இந்த வகையில், எமது சபையின் நீண்டகால உறுப்பினரும், செயலாளரும், நாடகப் பிரிவுத் தலைவரும் ஆகிய நாடகக் கலைஞர் ஏ. ரி. பொன்னுத்துரை அவர்களின் கால் நூற்ருண்டுக் கலைவாழ்வை மெச்சிக்

Page 5
iV
கலை இலக்கியப் பெருமக்களால் எடுக்கப்ப்டும் வெள்ளி விழாவில், இம்மலரை வெளியிடு வதில் சன்மார்க்க சபையினரான நாம் பெரு மகிழ்வு கொள்கிருேம்.
எமது வேண்டுகோளுக்கியைந்து அறி ஞர்கள் அனுப்பிவைத்த பாராட்டுரைகள், ஏ. ரி. பொ. எழுதிய கலைவாழ்வுக் குறிப் புக்கள் இவர்தம் தொண்டினைப் ப்டம்பிடித் துக் காட்டுகின்றன என நம்புகின்ருேம்.
பாராட்டுரைகள் வழங்கிய பெருமக்க ளுக்கும் திரு. ஏ. ரி. பொன்னுத்துரை அவர் களுக்கும் எமது நன்றிகள். எமது மலரில் இடம்பெற்றுள்ள புகிைப்படங்களைத் திறம்பட "புளொக்"காக்கித் தந்துதவிய கொழும்பு ஸ்ரூடியோ உரிமையாளர் திரு. அ. குகதாசன் அவர்களுக்கும், இம் மலர் வெளியீட்டை வெள்ளி விழா நிகழ்ச்சி நிரலிற் சேர்த்து வெளியிட அனுமதித்த விழாக் குழுவுக்கும், இம்மலரை அழகுற அமைத்து அச்சிட்டுத் தந்த சுன்னகம், திருமகள் அழுத்தகத்தின ருக்கும் எமது நன்றி உரித்தாகுக. நாம் வளர்த்த கலைஞன் ஏ. ரி. பொ. கலைத் தொண்டு பல்கிப் பெருகிச் சிறப்புற்றேங்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிருேம்.
குரும்பசிட்டி, சன்மார்க்க சபையினர்
. 74-س-8 --233
来 米 率 家
* வள்ளலும் பிரபுவுமான திரு. பொன்னையா அவர் களின் ஞாபகமாய் விளங்குகின்ற இச் சன்மார்க்க சபை சன்மார்க்கர்களைத்தேடிப் பயன்செய்யுமென்பது எனது கருத்து. அக்கருத்து நிறைவேறவேண்டுமென்று திருவருளைப் பிரார்த்திக்கிறேன்.” பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை .59-س-9-12

6. மாவையாதீன பிரதமகுரு சிவாகம வித்தியாயூஷணம் பிரம்மழறி சு. து. ஷண்முகநாதக்குருக்கள்
அவர்கள் வழங்கிய
ஆசியுரை
சமயத்துறையில் பல்லவர்கள்தான் சிறந்த சேவைகளை யாற்றினர். பாறைகளைக் குடைந்தும், தனிப்பாறைகளைக் கோயில்களாகச் செதுக்கியும், பின் கற்களைப் படிமானம் செய்து கோயில்களைக் கட்டியும், இக் கோயில்களிலெல்லாம் நுண்கலை களை விருத்தி செய்வதற்கான உபாயங்களையும் அதற்கேற்ப வழி வகைகளையும் பல்லவர்கள் செய்தனர். நாடகக்கலைக்குக்கூட அதற்கென்றே ஒரு பிரிவையுஞ் சேர்த்து-ஆலயங்களை மைய மாகக் கொண்டு நாடகக்கலையை அபிவிருத்தி செய்த வரலாறு களும் பலவுண்டு. நாடகங்கள் சமுதாய வளர்ச்சிக்குச் சமயச் சூழலில் தெய்வீகம் பொருந்தியதாக அமைய வேண்டுமென வலியுறுத்திய நாடக அறிஞஞன பல்லவ மன்னன் இராசசிம்மனை நாம் இன்று நினைக்கும்போதும் இன்றயகால நாடக அபிவிருத்தி செய்ய முனையும் நவீன கலியுக புருஷர்களை இன்று நினைக்கும் போதும், நாடகக்கலை எப்படி யாரால் சீரழிகிறது என்பது தெரியும்.
இன்று கண்ட கண்ட இடங்களில் பண்பற்றவர்களாலும், தகுதியற்றவர்களாலும் ' நாடகம் " என ஒருவகை ஆட்டம் நடாத்தப்படுகிறது. இந்நிலையில், கடந்த 25 ஆண்டுகளாக நாடகத்துறைக்கே தன்னை அர்ப்பணித்துத் தொண்டாற்றிவரும் நாடகப் பேராசானுன ஆசிரியர் ஏ. ரி. போன்னுத்துரை, B, A. அவர்கள் காட்டும் வழியில் நாம் வீறுநடை போடுவோமானல், வெகு விரைவில் நாடகக்கலை புத்துணர்ச்சி பெற்றுத் தெய்வீக மாகிவிடும் என்பதிற் சிறிதும் ஐயமில்லை.
ஆகமங்களால் ஆசீர்வதிக்கப்படும் நாடகக்கலை இன்று பல கோணங்களாலும் சித்திரவதை செய்யப்படுகிறது. இதனைக் கலையரசு சொர்ணலிங்கம் கூட தடுத்து நிறுத்த முயன்றும் பய னளிக்கவில்லை. கலையரசு சொர்ணலிங்கம் அவர்களது வழியைப் பின்பற்றி, சித்திரவதைக்குள்ளாக்கப்படும் இந் நாடகக் கலைக்கு அபயமளித்து பல்லவக் கலைப்பேரரசன் காட்டிய முறையில் நாடகக்கலையைத் தெய்வீகமாக்க வேண்டிய பெரும் பொறுப்பு கலைஞர் ஏ. ரி. பொன்னுத்துரை அவர்களிடம் சுமத்தப்பட் டிருக்கிறது. இத்தெய்வீகத் தொண்டை இனிது செயற்படுத்த ஏ. ரி. பொன்னுத்துரை அவர்கள் நீண்ட ஆயுளும், திடகாத் திரமும் பெற்று வாழ எல்லாம்வல்ல பார்வதி பரமேஸ்வரனைப் பிரார்த்திக்கின்றேன்.
சு. து. ஷண்முகநாதக்குருக்கள்

Page 6
பொன்விழா நோக்கிப் பொன்னுத்துரை
இலங்கைப் பல்கலைக் கழக-பேராதனை வளாக தமிழ்த்துறைத் தலைவரும் பேராசிரியருமாகிய
கலாநிதி சு. வித்தியானந்தன், M. A. Ph.D. அவர்கள்
பொன்முடிப்போடு முதன்முதல் என்முன் தோன்றியவர் பலதுறை நாடகக் கலைஞன் ஏ. ரி. பொன்னுத்துரை அவர்கள். இது நடந்து 12 ஆண்டுகளாகிவிட்டன. நடிகமணி வி. வி. வைரமுத்துவின் மயான காண்டம் யாழ். நகரசபை மண்டபத் தில் நூருவது தடவை மேடையேறியபோது அவரைப் பாராட்டு முகமாகப் பொற்கிழியோடு மேடையிலே தோன்றிய ஏ. ரி. பொன்னுத்துரையின் அறிமுகம், கடந்த 12 ஆண்டுகளாக அவருடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியது. அவருடைய சிறந்த குணங்களில் என்னைக் கவர்ந்தது கலைஞரைப் பாராட்டும் பெருந்தன்மை. வைரமுத்துவுக்குப் பொற்கிழி, கலையரசுக்குத் தேநீர் விருந்து, சானவுக்குப் பட்டமளிப்பு என இவர் ஒழுங்கு செய்த பாராட்டு வைபவங்கள் பல. கலைஞரின் படைப்புக்களைப் புகழ்ந்து அவர் எழுதிய விமர்சனங்கள் பல. இவ்வாறு, பிறர் மகிழத் தான் இன்புறும் குணப்பண்பே 25 ஆண்டுக் கலைவாழ்வில் இவருக்குத் தனிச்சிறப்பை அளித்திருக்கின்றது.
கலை உலகிலே தன்னை இனங்கண்டு உயர்த்தியவன் என இவர் எம்மைப்பற்றிப் பல இடங்களிற் கூறியதுண்டு. கலை யுலகிலும், இலக்கியவுலகிலும், எழுத்துலகிலும், கல்வி உலகிலும் நன்மை செய்தல் ஆபத்தாக முடிகின்ற சூழலில் ஏ. ரி. பொ. அவர்கள் தமக்குக் கைகொடுத்துதவியவர்களை நன்றியோடு மதிப்பது அவரின் முன்னேற்றத்திற்குக் காரணமாக இருந்திருக் கின்றது.
நாடகக் கலையிற் பலதுறை வல்லுநராக இவர் விளங்கு கின்ருர், நாடகங்களின் ஆசிரியராக இவரை நோக்கும்போது மக்களை நற்போக்குப் பாதையிற் செலுத்தும் தன்மையை இவர் எழுதி வெளியிட்ட "இறுதிப் பரிசு', 'கூப்பிய கரங்கள்", "பக்தி வெள்ளம்" போன்ற நாடகங்களிலும், கலைக்கழக நாடக எழுத்துப் போட்டியில் பரிசிலைப் பெற்ற " நாடகம் ", "நாம் ஒன்று நினைக்க.." என்னும் ஒரங்கநாடகங்களிலும் அவதானிக்க லாம். இவரது வானெலி நாடகங்களிலே " தாளக் காவடி", பஞ்ச பூதங்கள்", "வருஷம்பிறந்து முன்னம் முன்னம்’, ‘காதல் கைநட்டம்" என்பவற்றிற்கு நல்ல வரவேற்பிருந்தது.
பலவகைப்பட்ட பாத்திரங்களை ஏற்று நடிக்கும் சிறந்த நடிகராகவும் இவர் விளங்குகின்ருர். இச் சிறப்பினை, இவர் எழுதி நடித்தவற்றுட் புகழ் தந்த நாடகங்களாகிய “நிறைகுடம்", நாடகம்", "பண்பின்சிகரம்' , ' பாசக்குரல்", " மதவெறி” ஆகிய

VI
வற்றிலும், சாளுவின் தயாரிப்பாகிய ‘பதியூர் ராணியிலும் கலைக்கழக நாடகப் போட்டியில் முதலிடம் பெற்ற ஆராமுது sy*lft'66Jub astrotarub.
பாடசாலை நாடகத் தயாரிப்பாளராகவும் இவர் தொண் டாற்றியிருக்கிருர், உடன் ஆசிரியர்களின் நக்கல், பெற்ருரின் சித்துழையாமை, பணக்குறை, வசதியீனங்கள் முதலியவற்றின் மத்தியில் யாழ்ப்பாணத்திற் பல பாடசாலை நாடகங்களைப் பாடசாலை நாடகப் போட்டிகளிலே தயாரித்தளித்துப் பரிசிலும் பெற்றிருக்கின்றர். இப்பொழுதும் கண்டியில் இத் தொண்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
கலைக்கழகமும், சாகித்திய மண்டலமும் நடாத்திய கருத் தரங்குகளில் ருேயல் கல்லூரி மண்டபத்தில் “பாடசாலை நாடகம்' பற்றியும், யாழ்ப்பாண வை. எம். சி. ஏ. மண்டபத்தில் "ஓரங்க நாடகம்' பற்றியும், யாழ். நூலகத்தில் "நகர்ப்புற நாடகங்கள்" பற்றியும் இவர் படித்த கட்டுரைகள், இவரின் ஆராய்ச்சித் திறனுக்கும், சிந்தனை ஆற்றலுக்கும், பரந்த அறிவுக்கும் சான்று பகருகின்றன.
* வீரகேசரி’, ‘மித்திரன்’, ‘ஈழநாடு ", "தினகரன்', ' கலைச் செல்வி" போன்ற பத்திரிகைகளில் வெளிவந்த " நாடகக்கலை வளர", "கால்நூற்ருண்டில் ஈழத்து நாடகங்கள் ", "இலங்கையர் கோன் நாடகங்கள்", "ஓரங்க நாடகம்'. 'நாடக உலகில் நால்வர்? எனப் பெயரிய இவரது கட்டுரைகள் பல நாடக வரலாறு, நடிப்பு, தயாரிப்பு போன்ற துறைகளிற் பொதுமக்களின் அறிவை வளர்த்தன .
கடந்த கால் நூற்ருண்டாகப் பரிசில்கள் பெற்ற நாடக ஆசானுக, புகழ் பூத்த நடிகனக, மதிப்புப்பெற்ற தயாரிப்பாள ஞக, கட்டுரை ஆசிரியனுக, ஆராய்ச்சியாளனுக நாடகக் கலையின் பல துறைகளிலே தோண்டாற்றிய கலை மேதை ஏ. ரி. பொன்னுத் துரை அவர்களுக்கு வெள்ளிவிழா எடுக்கும் பாராட்டுக் குழுவுக்கு விழா எடுக்க வேண்டும்.
இவ் வேளை வெள்ளிவிழா மலர் வெளியிடும் சன்மார்க்க சபைபோல வேருெரு சபையும் அறிஞர்களுக்கும், கலைஞர் களுக்கும் பாராட்டு விழாக்களும், அறிமுக விழாக்களும் எடுத்தது கிடையாது. இதனுலேதான் இச்சபை பொலிவுடன் விருத்தி அடைந்துகொண்டு வருகின்றது ; அதன் சேவையினல் குரும்பசிட்டியும் பல்வகையில் விருத்தியடைந்து சால்பு படைத்த பலரின் இருப்பிடமாகத் திகழ்கின்றது.
நாடகக் கலைக்கு ஓர் அணிகலனகக் கலையுலகிலே வெள்ளி விழாக் காணும் ஏ ரி. பொன்னுத்துரையின் பொன் விழாவிற் கலந்துகொள்ளும் வாய்ப்பை இறைவன் எமக்கு அளிக்க வேண்டும்.
கலாநிதி சு. வித்தியானந்தன்

Page 7
வாழ்த்துரைகள் 1
கலையரசு க. சொர்ணலிங்கம் அவர்கள்
பிரபல நாடகக் கலைஞர் திரு. ஏ. ரி. பொன்னுத்துரை அவர்கள் சென்ற இருபத்தைந்துவருட காலமாக நாடகக்கலை வளர்ச்சிக்குச் செய்துவந்த அரிய சேவைகளைப் பாராட்டுமுகமாக வெள்ளிவிழா எடுக்கப் போவதை அறிந்து மிக மகிழ்ச்சியடைகி றேன். அன்னர் நாடகத்துறையிலீடுபட்டுச் செய்துவந்த பணிகள் யாவையும் நான் அறிவேன். மதிக்கப்படவேண்டிய கலைஞர்.
இவர் முதல் முதலாக அனேக வருடங்களுக்குமுன் பரமேஸ்வராக் கல்லூரியில் மாணவனுக விருந்த காலத்தில் அங்கு நடைபெற்ற " லோபியின் காதல் " என்னும் நாடகத்தில் லோபியாக நடித்ததைப் பார்த்ததும் "இந்தப் பையன் ஓர் காலத்தில் நல்ல குணசித்திர நடிகனக வருவா’னென்று நான் வாழ்த்தியது ஞாபகத்திலிருக்கிறது. பின்பு பட்டதாரிப் படிப்பை முடித்துக்கொண்டு ஆசிரியர் ஆனதும் நாடகக்கலையை வளர்க்கவேண்டுமென்ற ஆவலுடன் அத்துறையிலிறங்கினர். பல நாடகங்களைத் தாமே இயற்றித் தாமும் கூட நடித்து அவைகள் மூலமாகப் பல நடிகர்களையும் உருவாக்கினர். இவரது நாடகங் களில் சுவையிருப்பதைக் கண்டு அவைகளை அடிக்கடி பார்த்து மிருக்கிறேன். இவருடன்கூட றேடியோ-மேடை நாடகங்கள் சிலவற்றில் நடித்துமிருக்கிறேன். இவரால் இயற்றப்பட்ட சில நாடகங்கள் புத்தக ரூபமாகவும் வந்துள்ளன. இவைகளில் பல புதிய புதிய (original) உத்திகள் அமைந்திருப்பதினுல் அவை களே வாசிக்கும்போதே ஒருவித சுவை ஏற்படுகின்றது. இத் தனக்கும் தன்னைப் பெரிதாக எண்ணிக்கொள்ள மாட்டார். சுயநலத்தையோ, பெருமையையோ இவரிடம் காணமுடியாது. எவருக்கும் எச்சமயத்திலும் உதவியும் ஊக்கமும் அளிக்கத் தயங்கமாட்டார். இவர் உண்மையாகவே ஒரு கலைஞர். இவரது சேவையைப் பாராட்டி விழா எடுப்பது உகந்ததே.
இவரது வெள்ளிவிழா மலரை வெளியிடும் குரும்பசிட்டி சன்மார்க்கசபையினர் கலைகளையும் கலைஞர்களையும் முன்னேறச் செய்து வருகின்றர்கள். அத்துடன் கலைகளுக்கு அரும்பணி யாற்றிவரும் கலைஞரை அழைத்து விழாக்கொண்டாடிக் கலைக்கே ஒரு விசேட மதிப்பைக் கொடுத்து வருகிருர்கள். இப்படியான பெரும் சேவை செய்துவரும் குரும்பசிட்டி சன்மார்க்கசபை யாரை மனமார வாழ்த்துகிறேன். இதற்கெல்லாம் வெகு சிரத்தையெடுத்து முன்னணியில் நின்று பணியாற்றும் திரு. A. T.
பொன்னுத்துரையவர்களை மிகவும் போற்றுகிறேன்.
க. சொர்ணலிங்கம்

2 கலாஜோதி செ. சண்முகநாதன் (சாணு) அவர்கள்
தமிழ் நாடகத் துறை யை முறையே வளர்த்து இருபத் தைந்து வருடமாகச் சேவை புரிந்துவரும் என் மாணுக் கனும், நண்பனுமாகிய ஏ. ரி. பொன்னுத்துரைக்கு யான்
வழங்கும் வாழ்த்துரை.
“ “ Lu68207 ub G3 untuŭ 49u ĉi øi...(89th ; Goumr(56mrntosnrprub uonrpáš கூடும் ; கலை மட்டும் சாவதில்லை".
- வங்கக்கவி தாகூர்
* கற்பனை எனப்படுகிற அந்த அற்புதமான சக்தி மனித னிடத்தில் இல்லையென்ருல் கலை என்ற ஒன்று வாழ்க்கை
யில் இடம்பெற்றிருக்க முடியாது".
- மாக்வRம் கோர்க்கி
' உயிர்க்குறுதி பயக்கும் மருந்தினை உண்ண விரும்பாத ஒரு மகனுக்குச் சர்க்கரையினுட் பொதிந்து வைத்து உதவு கின்ற அன்புடையாளன்போல, உயிர் க் குறு தி பயக்கும் உண்மையினை நவரசங்களுட் செறித்து வைத்து உதவும் நீர்மையது நாடகம் நாடகக்கவி தன்னை ஒரு வைத்திய னென அறிதல் வேண்டும். நோயாளியிடத்துப் பொரு ளினைப் பெறுதல் கருதிப் பொருந்தாப் பண்டத்தை மருந் தெனக் கொடுக்கும் வைத்தியன் உளனயின், அவளுல் விளையும் கேட்டுக்கு அளவில்லை. காமக்கனலை மூட்டுதற்கு எண்ணிச் சிற்றின்பச் சரிதைகளை நாடகமாக்கியுதவும் போலி நாடகக் கவிகளால் நாட்டுக்கு விளைகின்ற கேடு, மேற் குறித்த போலி வைத்தியனுல் விளைகின்ற கேட்டினைப் பார்க்கிலும் பல்லாயிரம் மடங்கு பெரிது".
www.w3. விபுலானந்த அடிகளார்
இத்தகைய மூன்று அம்சங்களையும் சிரமேற்கொண்டு, தமிழ் நாடகத்தின் இலட்சணங்களைத் தெளிவுற ஈழத்து மக்க ளுக்கு எடுத்துக் காட்டியவர் ஏ. ரி. பொன்னுத்துரை.
யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியில் யான் ஆசிரிய ராகக் கடமையாற்றிய காலத்தில் " மோலியர் " எழுதிய * மைஸர் " என்ற நாடகத்தின் தழுவலான "லோபி" என்ற நாடகத்தைத் தயாரித்து மே  ைடயே ந் நும் படி " சிதம் பரப்பிள்ளை மாஸ்டர் " என்னைக் கேட்டுக்கொண்டார். அதில், பொன்னுத்துரை (மாணவன்) " லோபி"யென்ற பாகத்தை
2

Page 8
X
ஏற்று நடித்தார். நான்காவதுநாள் ஒத்திகையில் பொன்னுத் துரை, ஒரு உன்னதமான குணசித்திர நடிகர் என்பதை வெளிக் காட்டினர். தாங்கும் பாத்திரத்தின் தன்மையை நன்கு விளங்கி, சக நடிகர்களின் தன்மைகளையும் புரிந்து, கட்டுப்பாட்டுக்குள் அடங்கி நடிக்கும் நடிகர்களுள் இவரும் ஒருவரென்ருல் மிகை யாகாது. நாடகம் மேடையேறியது. வெற்றியும் கண்டோம்: என்னைப் பொறுத்தவரையில் ஈழத்துத் தமிழ் நடிகர்களுட் சிறந்த குணசித்திர பாத்திரங்களை ஏற்று கடிக்கத் தகுந்தவர்கள் மூவரே உளர். முதல்வர் கலையரசு சொர்ணலிங்கம்; மற்றவர் ஆர். பேரம்பலம். இவர்களைத் தெர்டர்ந்தவர் ஏ. ரி, போன்னுத் துரை.
குணசித்திரம் என்னவென்று சொல்லி விளக்க இது சந்தர்ப்பமல்ல. சுருங்கச் சொன்னல், தாங்கும் பாத்திரத்தின் தன்மையை நாடக ஆரம்பத்திலிருந்து நாடக முடிவுவரையும் செவ்வனே நிலைநாட்டும் சக்தியே குணசித்திரம்
* கொழும்பு லயனெல் வென்ற் மண்டபத்தில் யான் தயா ரித்து மேடையேற்றிய "ஒஸ்கார் வைல்ட்" ஆங்கிலத்தில் எழுதிய "டச்செஸ் ஒப் படுவா " என்ற நாடகத்தைத் தமிழிற் தழுவி " வளவன் ' (இ. இரத்தினம்) எழுதிய " பதியூர் இராணி" என்ற நாடகத்தில் பதியூர் மன்னணுகத் தோன்றினர் பொன் னுத்துரை சக்கை போட்டு வாங்கிவிட்டார்.
பி. ஏ. பட்டம் பெற்றவர்தான் ; ஆனல் அதிகம் பேச மாட்டார். மேடையில் ஏறினுல் பொன்னுத்துரை வேறு மனிதன். இ வ  ைரப் போ ன் று பல நடிகர்கள் தோன்ற வேண்டும். கட்டுப்பாடுகளுக்குள் அடங்கவேண்டும். நுண்கலைகள் யாவற்றிலும் ஓரளவு சிறிது விளங்கி அவற்றை வழங்க வேண்டும். இப்படியான தத்துவங்களைப் பெறுவது கஷ்டம்தான். ஆனல், முயற்சி வெற்றிதரும்.
பொன்னுத்துரை சிறந்த தயாரிப்பாளர்கூட. இதற்குக் காரணம், மேற்கூறிய யாவற்றையும் மனக் கண்முன் வைத்து, அதன்படி ஒழுகி, அவற்றிலிருந்து சிறிதளவாவது ஆடி அசை யாது நினைத்ததைச் செவ்வனே செய்து முடிக்கும் வன்மை பொருந்தியவர்.
செ. சண்முகநாதன்

3 இலங்கைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாண வளாகத் தலைவர் கலாநிதி க. கைலாசபதி, M. A. Ph.D. அவர்கள்
திருவாளர் ஏ. ரி. பொன்னுத்துரை அவர்களின் கலைச் சேவையைப் பாராட்டி வெள்ளிவிழா மலர் ஒன்றை வெளியிட சன்மார்க்கசபை முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். கால் நூற்ருண்டாக அவர் கலைத் துறையில் முழுமூச்சாக உழைத்து வந்திருப்பதை இலக்கிய உலகம் நன்கறியும். பாராட்டும், உற்சாகப்படுத்தலும் கலைஞர்களுக்கு ஆன்ம உணவாக அமை வன . நண்பர் பொன்னுத்துரை எமது நாட்டின் கலாசார வளர்ச்சிப் போக்கை அநுசரித்து மேன்மேலும் பணிகள்
ஆற்றுவார் என்பதில் எனக்கு எதுவித ஐயமுமில்லை.
க. கைலாசபதி
4
இலங்கைப் பல்கலைக்கழக நுகேகொட வித்தியோதயா தமிழ் -திராவிட துறைத் தலைவர் கலாநிதி கா. சிவத்தம்பி, M. A. Ph.D. அவர்கள்
ஈழத்து நவீன தமிழ் நாடக வரலாற்றின் அண்மைக் கால நெறிப்பாடுகளையும், வளர்ச்சியையும் அறிய முனையும் எவரும், ஏ. ரி. பொன்னுத்துரை என்னும் பெயர் பல சான்ரு தாரங்களில் நின்ருெளிர்வதைக் காண்பர். நாடகாசிரியஞய், நடிகனுய், நெறியாளனுய்த் திரு. பொன்னுத்துரை அவர்கள் குறிப்பிடத்தக்க தொண்டாற்றியுள்ளார். நாடக இலக்கியத் தின் ஆக்கத்திலே திறனும், ஆய்விலே பேரார் வமு முடைய திரு. ஏ. ரி. பொன்னுத்துரை பல நாடக எழுத்துப் போட்டி களிலே வெற்றியீட்டியவர். நாடகத்தைப் பாடசாலை நிலையில் ஏற்புடைத்தான ஒரு கலைவடிவமாக ஆக்குவதில் திரு. பொன் னுத்துரை அவர்கள் ஆற்றியுள்ள பணி வியத்தற்குரியது. கலைச் செம்மையும், கருத்துச் சீர்மையுங் கொண்ட பல நாடகங்களை நெறிப்படுத்தி வெற்றிகண்டவர் இவர்.
கலை வாழ்வில் இவர் ஈட்டியுள்ள வெற்றிகளை நினைவுகூரும் இவ் வெள்ளி விழாவில், நான் பெரிதும் நினைவுகூரும் முக்கிய விடயம், திரு. ஏ. ரி. பொன்னுத்துரை அவர்களின் ஆர்வ வேகமும், அடக்கச் சிறப்புமாகும். தம்மைத்தாம் வியந்து கொள்ளும் பலர் முற்றுகையிட்டு நிற்கும் எமது கலைத் துறையில் பண்புசான்ற பணிவும், ஆழமான அறிவும் கொண்ட திரு. ஏ. ரி. பொன்னுத்துரை அவர்கள் தம் பணியினைத் தொடர்ந்தும் செய்து வருதல் அவசியமான வொன்ருகும்.
வாழ்க திரு. பொன்னுத்துரை வளர்க அவரது கலைப்பணி ஒளிர்க அவரது திறன்.
கார்த்திகேசு சிவத்தம்பி

Page 9
5
பரமேஸ்வர, வைத்தீஸ்வரக் கல்லூரிகளின் முன்னுள் அதிபரீ திரு. சி. சிவபாதசுந்தரம், M. A. (Cantab) அவர்கள்
பார்த்தால் அப்பாவி ; பேச்சு ஒரு மிழற்றல்; சிரித்தால் குழந்தை. ஏதோ சொல்லியோ செய்தோ, இடையிடையே மற்றவர்களையும் சிரிக்கவைக்கிருர் போலிருக்கு ; அதனல் ஒரு குறையுமில்லை. பிரயாசி படிப்பார்; பரீட்சையில் சித்தியெய்து வார். இவ்வளவுதான் பொன்னுத்துரையைப் பற்றி நான் அறிந்திருந்தவை.
பரமேஸ்வர இலட்சிய ஜயந்தி காலம், செய்வனவெல்லாம் திருந்தச் செய்பவர் ஆசிரியர் திரு. ச. சிதம்பரப்பிள்ளை. நாடகப் பகுதிக்கு அவர் பொறுப்பு. அவ்வருடம் அவர் தெரிந்தெடுத்த நாடகம் மோலியரின் லோபி". நாடகம் உலக இலக்கியம். நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியருக்குச் சமானமான மேதை. ஆனல், ஏற்ற நடிகர் இவருக்கு எங்கே கிடைக்கப்போகிருர்கள் என் றிருந்தேன்.
நாடக ஒத்திக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பார்க்க லாம் என்று போயிருந்தேன். மேடையில் ஒரு சுத்த முரடு ; பார்த்தால் பயங்கரம்; பேச்சோ கொடூரம்; சிரித்தால் பிசாசு. மேடையில் ஏறியதும், பொன்னுத்துரையில், இந்தமாதிரி யான மாற்றங்கள் ஏற்படுமானல், யாரை, எதை, எப்போ நம்புவது?
திரு. ஏ. ரி. பொன்னுத்துரை ஒரு கலைஞன், நா ட கம் அவருக்கு இயற்கையாக அமைந்த ஒரு கருவி அவருடைய, என்போடியைந்த தொடர்பு வேறு மொ ன் று ண் டு. அது அவருடைய பேரன்பு நாடகக்கலையும், சமூகத்தொண்டும் அவருடைய உயிர்நிலை. அவருக்கு ஒரு குறையுமில்லை.
சி. சிவபாதசுந்தரம் 6 இலங்கைத் தமிழாசிரியர் சங்கம் என் இனிய நண்பர் - யாவர்க்கும் இனியர் ! பழகற் கெளியர் ! கலையே உருவானவர் 1 சக நடிகர் 1 எமக்கெல்லாம் ஆசான் அவர்தம் கலைப்பணி தொடரக் கலைத்தெய்வம் அருள் பாலிக்கட்டும்:
வாழ்க திரு. ஏ. ரி. பொன்னுத்துரை ! வாழ்க குரும்பசிட்டி சன்மார்க்கசபை !
செ. யோ, யோசேப்பு

フ
பரமேஸ்வரக்கல்லூரி முன்னுள் விஞ்ஞான ஆசிரியர்
அளவையூர் திரு. F. சிதம்பரப்பிள்ளை, B. A., B. Sc. (Lon.) Jesej6hu rifas6ih
திரு. A. T. பொன்னுத்துரை அவர்களின் இருபத்தைந்து வருட நாடகக் கலைச்சேவையைப் பாராட்டு முகமாக வெள்ளி விழா எடுப்பதை அறிந்து மிகவும் சந்தோஷப்படுகிறேன். அவர், கல்லூரி மாணவனக இருக்கும்போதே, பிரபல பிரெஞ்சு நாட்காசிரியர் இயற்றிய "லோபி" என்னும் நாடகத்தில் கதா நாயகன் பாத்திரம் ஏற்று, அசல் லோபிகளே " பிச்சை வாங் கும்படி " நடித்து, கலையரசர், "சான" முதலிய ஈழத்து முன்னணி நடிகர்களின் பாராட்டைப் பெற்று, அன்றுமுதல் வளர்பிறைபோல் தலைசிறந்த நடிகராகவும், நாடகாசிரிய ராகவும் தமது ஆற்றலை விரு த் தி செய்து வந்திருக்கிருர், நடிப்பு அவருக்குக் கைவந்த கலை-வாழ்க்கையிலன்று, மேடையில் மாத்திரமே. நாடக உலகுக்கு அ வ ரு  ைட ய அரும்பெரும் சேவை மேன்மேலும் தேவை. அவர் பல்லாண்டு காலம் வாழ்க.
ச. சிதம்பரப்பிள்ளை
8
காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி அதிபர் திரு. பொ. சோமசுந்தரம், B. Sc. அவர்கள்
நாடகக்கலையில், தனக்கெனத் தனிவழிசமைத்து, இருபத் தைந்து ஆண்டுகளாக ஈடு இணையற்ற சேவையாற்றி, அக் கலையின் நுட்ப திட்பங்களை, தமது நாடகங்களின் வாயிலாக நாடறியப் பரப்பிய நாடகப் பேரறிஞர் பொன்னுத்துரை அவர் களைப் போற்றிப் பாராட்டுவதில் பேருவகை அடைகிறேன். திரு. ஏ. ரி. பொ. அவர்கள் எமது கல்லூரி ஈன்றெடுத்த பழைய மாணவர், எமது கல்லூரியில் பல காலம் சேவை செய்த ஒர் ஆசிரியர். சேவைக் காலத்தில் கவின் கலைப் பிரிவுத் தலைவ ராகப் பல நூற்றுக் கணக்கான பிள்ளைகளை நாடகக் கலையிலும் பல்வேறு கவின் கலைகளிலும் ஈடுபடுத்தி வெற்றிச் சாதனை நாட்டிய பேராசிரியர். அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற நாடகப் போட்டிகளில் எமது கல்லூரி வெற்றி வாகை சூடச் செய்த வெற்றி வீரர். கலைஞரவர்கள் பல்நெடுங்காலம் தமது அரிய பெரிய சேைையச் செய்ய அருள வேண்டும் என்று தில்லைக் கூத்தன் திருவடி வேண்டி அவரை வாழ்த்துகிறேன்.
பொ. சோமசுந்தரம்

Page 10
9
பண்டிதை, சிவத்தமிழ்ச் செல்வி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்
ஈழத்து நாடகவளர்ச்சியில் திரு. ஏ. ரி. பொன்னுத் துரை அவர்கள் தனக்கென ஒரு சிறப்பிடம் பெற்ற வர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இப்பணியில் தலைநின் றுழைத்த அன்னருக்குப் பாராட்டுவைபவம் ஒன்று நிகழ்த்துவது மிகப் பொருத்தமாகும். தரமான நாடகங்களை நம் நாட்டில் மேடையேற்றியதுமன்றித் தானே பிரதான நடிகராக நடித்தும் நாடகத்துறைக்கு மெருகூட்டியவர். எந்த ஒரு துறையிலாவது சிறப்பிடம் பெறவேண்டுமானல் கல்வி கேள்வி ஞானம் மிக முக்கியமாகும். இவர் ஒரு நடிகர், எழுத்தாளர், நாடகத் தயாரிப்பாளர், பேச்சாளர், திறனய்வாளர், ஆசிரியர், பக்தர், சமூகநல ஊழியர் என்பது மாத்திரமல்ல அவர் ஒரு பட்ட தாரி என்பதையும் காணும்போதுதான் முன்னைய துறைகள் சிறப்பிடம் பெறுகின்றன. இத்தகையோர் கலைத்துறை போற்ற முன்வரும்போது அங்கொரு தனிப்பட்ட அழகைக் காண்கி ருேம். பெரியாருடைய சேவை இன்னும் பல்லாண்டு காலம் பெருகி நிலைக்க வேண்டும். நாடகத்துறையில் நம்நாடு சிறப் பிடம் பெற வேண்டுமானல் அன்னரின் நற்பணியே வேண்டற் பாலது. எம்பெருமான் அவர்களுடைய கலைவாழ்வைச் சிறக்க வைத்து நல்லருள் புரிந்து நாட்டுக்கும் நமக்கும் அவர் மூலம் பெருமையும் பேறும் அளிப்பாராக. தெல்லிப்பழை, தங்கம்மா அப்பாகுட்டி
1 Ο
மல்லாகம் ஊர்மன்றத் தலைவர் திரு. வ. பொன்னம்பலம், M. A. . P. அவர்கள்
நண்பர் ஏ. ரி. பொன்னுத்துரை அவர்களை எனக்குப் பல்கலைக்கழக காலம் முதல் நன்கு தெரியும். இவருடைய கலை யாற்றலையும், நகைச்சுவையையும், நடிப்புத் திறமையையும் கண்டு ரகித்து மகிழ்ந்தவர்களுள் நானும் ஒருவர். நண்பர் பொன்னுத்துரையின் கலை, இலக்கியத் தொண்டினைக் கெளர விக்கும் வகையில் தாங்கள் மலர் வெளியிடத் தீர்மானித் திருப்பது மிகவும் பாராட்டத்தக்க தொன் ருகும். நண்பர் பொன்னுத்துரை முத்தமிழுக்கும் தொண்டு செய்து நெடுநாள் வாழ வாழ்த்துகின்றேன். அளவெட்டி, வ. பொன்னம்பலம்

11
மானிப்பாய் மறுமலர்ச்சி மன்றத் தலைவர் திரு. பொ. செல்வரத்தினம் அவர்கள்
நாடகத்துறையிலும், இலக்கியத்துறையிலும் கடந்த பல வருடங்களாகச் சேவையாற்றி வரும் திரு. ஏ. ரி. பொன்னுத் துரை அவர்களின் வெள்ளிவிழா குறித்து எமது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்ருேம்.
மறுமலர்ச்சி மன்றத்தின் அக்கிராசனராகவும், உப அக்கிரா சனராகவும் சேவை புரிந்த திரு. பொன்னுத்துரை, இம் மன்றம் மேற்கொண்டுவரும் பல்வேறு முயற்சிகளிலும் தனது அரிய உழைப்பினை ஆர்வமுடன் நல்கி வருகின்றர்.
இவர் எழுதி மேடையேற்றிய ஓரங்க நாடகங்களும், கலைக் கழகப் பரிசில் பெற்ற ஓரங்க நாடகங்களும் ஒரங்க நாடகங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்று எழுத்து மூலமும், கருத் தரங்குகள் மூலமும் இவர் வெளியிட்ட கருத்துக்களும் இத் துறையில் ஒரு முன்னுேடி என்பதை வலியுறுத்துகின்றன. இவர் எழுதிய பஞ்சபூதங்கள்" என்ற நாடகத்தினை எமது மன்றத்தினர் வானெலி மூலம் நடித்துள்ளனர்.
திரு. பொன்னுத்துரை நாடகாசிரியர் மட்டுமல்ல; சிறந்த இலக்கியகர்த்தா கலாரசிகர் பண்பட்ட நடிகர்.
எமது மன்றம் தயாரித்த "ஆராமுது அசடா " நாட கத்திலும், வேறு பல நாடகங்களிலும் அவரது நடிப்பாற்றலை நாம் அறிந்துள்ளோம்.
தமிழ் நாடகம் இலங்கையில் உத்திமுறைகளிலும், தயா ரிப்பு முறைகளிலும் உன்னத நிலையை அடையவேண்டும் என்ற ர்வம் திரு. பொன்னுத் துரை அவர்களின் உள்ளத்தில் நிறைந் ருக்கின்றது. அவருக்கு விழா வெடுக் கும் சுபதினத்தில் அன்னுரை மனமார வாழ்த்தி எல்லா நலங்களையும் இறைவன் அருளவேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.
பொ. செல்வரத்தினம்
12 ஆசிரியர் வெ. சுந்தரமூர்த்தி அவர்கள் பேச்சாளர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், நடுவர் திறனய்வாளர், இலக்கிய ரசிகர், நாடக ரசிகர். இத்தனைக்கும் முதலில் "சிறந்த பிரபல' என்ற சிறப்புப் பெயர் களைத் தனித்தனி சேர்க்கவேண்டிய மாபெரும் கலைஞன் திரு. ஏ. ரி. பொ. அவர்களே.
மகாஜனக் கல்லூரி, வெ. சுந்தரமூர்த்தி தெல்லிப்பழை

Page 11
13
இரசிகமணி கனக செந்திநாதன் அவர்கள்.
மாவைக் கந்தனை வணங்கி, கந்தசட்டி விரதமிருந்து மிக்க ஆசாரசீலர்களாக இருந்த பெற்றேர்களுக்குப் பிறந்தவர் திரு. ஏ. ரி. பொன்னுத்துரை. எனவே அவரது உதிரத்தில்எண்ணத்தில்-தெய்வபக்தி, ஒழுக்கம், நன்னடத்தை என்பன குடிகொண்டிருக்கின்றன; எதைச் செய்தாலும் இந்தத் தடத்தை விட்டுப் பிறழமாட்டார். இவை அவரது கவசங்கள்.
நாடக உலகமே திரு. ஏ. ரி. பொ "வின் மூச்சு. அந்தத் துறையில் அவர் கால் நூ ற் ரு ண்  ைட க் கண்டுவிட்டார். ஆனலும் அவர் நன்னடத்தையில், ஒழுக்கத்தில் தவறியது கிடையாது. மச்சமாமிசம், குடிப்பழக்கம் என்பவற்றை அவர் கனவிலும் கண்டறியார், நாடக உலகில் இப்படி இருப் பவர்கள் அருமையிலும் அருமை. இந்த ஒன்றுக் காகவே அவரை எப்படி வாழ்த்தினலும் தகும்.
சென்ற இருபது வருடங்களாக அவரும் நானும் உற்ற நண்பர்களாக இருந்து வருகிருேம் சன்மார்க்கசபையில், யாழ் இலக்கிய வட்டத்தில் சேர்ந்து உழைத்து வருகிருேம். எனது " தாகம் ', "மன்னிப்பு ", "ஒளி பிறந்தது" என்ற நாடகங்களைச் சன்மார்க்க நாடக மன்றம் மூலம் மேடையேற்றி வைத்த பெருமை அவருக்குண்டு.
பல நாடகங்களை ஏ. ரி. பொ. மேடையேற்றி வெற்றி பெற்ருர். அவரது சிறந்த நாடகமான "நிறைகுடம்" இருபத் தைந்து தடவைகளுக்கு மேல் நடிக்கப்பட்டுப் பெரும் புகழை அளித்தது,
எதைச் செய்யத் தொடங்கின லும் முற்றுமுழுதாகசிரமத்தைப் பாராது, தன்னுடைய பணச்செலவையும் நோக் காது, ஈடுபடும் குணம் அவருடையது. அவர் நாடகத் துறைக் காகச் செலவழித்த பணம் கொஞ்சமல்ல. வெறும் வாயளவி லேயே இலக்கிய சேவை செய்வோரை எனக்குத் தெரியும். *ஏ. ரி. பொ. ' குணத்தால், உழைப்பால் உயர்ந்தவர். வெள்ளி விழாக் காணும் அவருக்கு என் இதய பூர்வமான வாழ்த்துக்கள்.
குரும்பசிட்டி, கனக, சேந்திகாதன்

14 யாழ்ப்பாணம்-தேவன் அவர்கள்
திரு. ஏ. ரி. பொன்னுத்துரையை நான் நீண்ட காலமாக
அறிவேன்-ஒரு கல்லூரி ஆசிரியராக அவர் எனக்கு அறிமுக மாகவில்லை." நாடக உலகில்தான் அவரை முதலில் கண்டேன்.
அன்று தொட்டு இன்று வரை அவருடைய நாடக ஈடு பாடு என்னை வியக்கவைக்கிறது. இ வ. ரு க்கு நடிப்புக்கல் மீதுள்ள ஆர்வத்தை ஒரு வெறியென்றே சொல்லலாம்.
இவர் இக்கலைக்காகச் செய்துள்ள நேரவிரயமும், தியா கங்களும் அளவிடற் பாலதன்று. ஆனல் இவற்றையெல்லாம் இக்கால "திடீர் நாடக தயாரிப்பாளரும், ரசிகரும் உணர மாட்டார்கள்.
இவர் உருவாக்கிய நடிகர் பலர் இன்று நமிழ் நாடக மேடையை அணி செய்கின்றனர். இவர் நாடகங்களை எழுதி ஞர், இயக்கினர், நாடகங்களில் நடித்தார், கருத்தரங்குகளில கலந்துகொண்டார்-வளர்க இப்பணி !
இவர் நீடூழிவாழ, கூத்தப்பிரான் அருள் கிட்டுவதாக.
இ. மகாதேவா
15 திரு. க. சொக்கலிங்கம், B, A, (சொக்கன்) அவர்கள்
திரு. ஏ. ரி. பொன்னுத்துரை நாடகமே மூச்சாக உயிர்ப் பவர்; தணியாத கலையார்வமும், புதியன செய்தல் வேண்டும் என்ற வேட்கையும் நிரம்பப் பெற்றவர்.
ஈழத்தின் மரபு வழிவந்த தலைசிறந்த நாடகக் கலைஞர்க ளாகிய் கலையரசு க. சொர்ணலிங்கம், சான" போன்ருேளின் அரவணைப்பில் வளர்ந்த இவர், சிறந்த குணசித்திர நடிகராயும் விளங்குகின்ருர் . " ஆராமுது அசடா? " நாடகத்தில் வில்ல ஞகத் தோன்றி நடித்த இவரின் நடிப்புத்திறன. இப்பொழுதும் நினைவுகூரக் கூடியதாயுள்ளது.
திரு. ஏ. ரி.பொன்னுத்துரையிடம் எழுத்துத் திறனும், கலைநுணுக்கத் திறனும் சுடர்விடுகின்றன. இவர் போன்ருே ரின் பணிகளால் ஈழததில் தமிழ் நாடகத்துறை சிறப்புற வளரும் என்பதற்கு ஐயமில்லை.
எழுதப்பட்ட நாடகம் ஒன்றினைச் சபையோர்க்கு வாசித்துக் காட்டுதலாகிய புதிய உத்தியொன்றினை அறிமுகம் செய்த வகை யில் இவரின் புதுமைகாண் திறனை அண்மையில் அறிதல் சாத்திய uotuojibapu.
நாடகக் கலைஞராம் இவ்வன்பர் நெடிதுநாள் வாழ்ந்து நாடகப் பணிகளாற்ற நல்லைக் கந்தனை வழுததுகின்றேன்,
* சொக்கன் ? 3

Page 12
16
யாழ் இலக்கியவட்டத் தலைவர்
கவிஞர் வி. கந்தவனம், B. A. அவர்கள்
உண்மை நேர்மை ஒப்பி லன்பு திண்மை வண்மை சீர்க்கும் பண்பு யாவும் வாய்ந்த ஆற்றல் நண்பர் ஒயா துழைக்கும் உண்மைக் கலைஞர் : நாடகக் கலையின் நன்மைகள் ஆய்ந்தும் மேடையின் நுட்ப மேன்மைகள் தேர்ந்தும் உன்னத மான ஒப்பனைத் திறனும் மன்னுயர் காட்சி அமைக்கும் வகையும் நடிக்கும் திறனும் நயமுற இயக்கி முடிக்கும் திறனும் முழுதாய்ப் பெற்றவர் : ஈடில் லாத நாடக நூல்கள் பீடுறத் தந்த பெருமெழுத் தாளர் : ஒரங்க நாடக உத்திகள் தம்மை ஊரெங்கும் நாட்டிய வுயர்முன் னேடி um - enåa) sönt-sá sðhvGou ஆடியும் எழுதியும் அறிவிக் கின்றவர்; விற்பனர் போட்டியில் வித்துவம் காட்டியும் பற்பல பரிசில்கள் பாங்குடன் ஈட்டியும் கற்ருேர் கூட்டும் கருத்தரங் கங்களில் நற்ரு மரையா நறுமணம் வீசியும் நாளும் பொழுதும் நாடகக் கலைக்கே வாழும் கலைஞர் ஆளும் நிபுணர் என்னப் பலரும் ஏமுறப் போற்றும் பொன்னுத் துரையின் புகழ்மிகப் பெரிதே
வி. கந்தவனம்

17
திரு. சி. சிவசரவணபவன், B. A. அவர்கள் (சிற்பி)
புகழ்மிக்க சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் என் உடன் மாணவராக இருந்தபோது பல்வேறு நாடகங்களில் வெவ்வேறு குணசித்திர பாத்திரங்கள் தாங்கித் தமிழ்நாட்டின் தலைசிறந்த நடிகர்களின் பாராட்டினைப் பெற்றுத் தன் கல்லூரிக்கும் தாய் நாடாம் இலங்கைக்கும் புகழ் சேர்த்த பெருமைக்குரியவர் gswuf Sr. fl. Gun.
நடிகராக-நாடக எழுத்தாளராக-இயக்குநராக-தயாரிப் பாளராக-நடுவராக-விமர்சகராக-நாடகக் கலைக்கு நல்ல பல தொண்டுகள் ஆற்றி வருபவர் அவர் பொருமைக்கும் எரிச்ச லுக்கும் புலமைக் காய்ச்சலுக்கும் அடிமையாகாதவர் ; தரமான கலையை-தரமான எழுத்தை-கண்டதும் மனம் திறந்து பாராட் டும் பண்பு நிறைந்தவர்.
நாடகப்பணி மூலம் மேலும்மேலும் நாட்டுப் பணிபுரிவதற்கு இவ் வெள்ளி விழா பெருந்துணை புரியும் எனநம்புகின்றேன். 2-8-74 சி. சிவசரவணபவன்
8
கவிஞர் காரை செ. சுந்தரம்பிள்ளை, B. A. அவர்கள்
நாடகத்தால் நற்பணியால் நல்லெழுத்தால் நற்குணத்தால் தேடரிய சீர்திருத்தச் சிந்தனையால்-நாடுபுகழ் பொன்னுத் துரையார்க்குப் பூத்தவிந்த வெள்ளிவிழா கன்னித் தமிழணங்கிற் காம்;
அன்பன் அறிவுடையோன் ஆன்றதமிழ்ப் பற்றுடையோன் என்றுங் கலைவளர்க்கும் இன்முகத்தோன்-தன்னலமில் பொன்னுத் துரைக்கலைஞன் பொன்புகழ்நற் கீர்த்தியுடன் எந்நாளும் வாழ்க இனிது:
சங்கத் தமிழ்வாழ்க சான்ருேர் புகழ்வாழ்க பொங்கும் கலைவாழ்க பூவாழ்க-எங்குமுள கன்னித் தமிழ்க்கலைஞர் கற்றவெழுத் தாளரொடு பொன்னுத் துரைவாழ்க பொலிந்து.
சே. சுந்தரம்பிள்ளை

Page 13
19
கவிஞர் செ. கதிரேசர்பிள்ளை அவர்கள்
நாட்டுக்கு நீதிகளை - நலந்தரும்
நன்மை ஒழுக்கங்களை வீட்டின் நடைமுறையே - வெளியே
வேண்டும் விதிவிலக்கை ஏட்டில் இதிகாச - புராணங்கள் எழுதி வைத்தவற்றைக் காட்டி உணர்வுறுத்த - நாடகக் கலையைப் போற்றினம்யாம்.
அன்னதோர் நாடகத்தை - உள்ளத்தில்
ஆர்வத் தொடும்பயின்றே சின்ன வயதினிலே - பள்ளியிற் சேர்ந்திடு நாள்முதலாய் இன்னும் நடித்திருக்கும் - ஒருவன்
எங்கள் பெருநண்பன் பொன்னுத் துரைநம்பி - அவன் புகழ் போற்றுதல் நாம்குறித்தோம்
நடிப்பது மட்டுமன்று-நாடக
நல்விதி நூல்பலவும் துடிக்கும் உணர்ச்சிகளே - நிறைந்து
தோய்ந்தபல் நாடகமும் படித்துணர்ந் தேநடிக்க - எமக்குப்
படைத்து நல்கியவன் தொடுத்துயர் பல்குணங்கள்-வாய்ந்திடும்
தூநெறி ஆசிரியன்.
கலைத்தமிழ்ச் சேவையில்ே - இருபத்தை
யாண்டு கடந்துநின்று நிலைத்ததோர் வெள்ளிவிழாக் - கண்டிடும்
நேரில் கலைஞனிவன் தலத்தினர் சொல்புகழும் - அறநெறிச்
சார்ந்த வளனுமுற்றே நலத்தினின் மிக்கவணுய் - நாடக
நம்பிநீ வாழியவே.
சே. கதிரேசர்பிள்ளை

2O
நடிகர் க. வை. தனேஸ்வரன் அவர்கள்
நினைவு அலைகளில் நாடகச் சிந்தனைகள் ; கனவுலகில் நாடகக் காட்சிகள்; இன்ப துன்பச் சுமைகளும், நாடகங்கள் : உயிரும் உயிருக்குறு துணையாம் இறையும் நாடகமே" இவ் வாறு வாழ்பவர் நாடகக் கலைஞர் ஏ. ரி. பொ. அவர்கள். ஈழத்து நாடகக் கலையுலகில் தனக்கென ஒரு இடத்தைத் தேடிக் கொண்டதோடு ; பாடசாலை மட்டத்திலும், சமூக அரங்கிலும் நாடகக்கலைக்கு நன்மதிப்பும், புனிதத்துவமும் தேடிக் குவிக்கும் நல்லாசிரியர்களில் ஒருவர் இவர்.
ஏ. ரி. பொ. அவர்கள் நாடகக் கலைக்கு ஆற்றிய மேலான பணிகளிலும் அவரது வாழ்க்கையே சமகாலக் கலைஞர்களுக்குப் பெரியதோர் உணர்வூட்டமாக அமைவதாகும். கட்டுப்பாடும், நிதான புத்தியும், நேர்வழிச் செயற்திறனும் மிக்கவர் இவர். கலைஞரின் சிறப்புமிகு தேவைகள் இவையன்றி வேறில்லை. சொந்த வாழ்க்கையில் ஒழுக்க சீலம் உடையோரே நாடகத் தில் ஒழுங்கையும், ஒழுக்கத்தையும் மேற்கொள்ள வல்லவர். பல நாடகங்களில் ஒருசேர நடித்த அனுபவத்தால் ஏ. ரி. பொ. அவர்களின் மாசற்ற கலையுள்ளத்தின் உணர்வு வடிவங்களை என்னல் அனுபவிக்க முடிந்தது.
நாடகங்களை எழுதி, நெறிப்படுத்தி, தயாரித்து, அவற்றில் நடிக்கும் கலைஞர்கள் மிகக் குறைவு. இக் குறை போக்கிய ஏ. ரி. பொ. அவர்கள் ஆங்கிலப் புலமையின் துணைக்கொண்டு நாடகமேடை உத்திகளைக் கற்றறிந்து, ஈழத்துத் தமிழ் நாட கங்களை, வளர்ந்துவிட்ட மேலைத்தேச மேடை நாடக உயர் நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற நிலைத்த அவாவுடையர். நகைச்சுவை நா ட கங்க ளா ன "அண்டல் ஆறுமுகம் *. * நாடகம்" என்பவற்றில் குணசித்திரப் பா த் தி ரங் களை எனக்கு வழங்கி நகைச்சுவைப் பகுதிகளைத் தான் ஏற்று நடித்து, மேடையில் நடிகர்களைப் பாத்திரமாக மாறவைக்கும் திறன் தயாரிப்பாளருக்கு அவசியம் என்ற உண்மையை நடிப் புக்கலை உணர்ந்தவர்கள் அறிந்துகொள்ள வகை செய்பவர் களில் இவருக்கிணை இவரே !
ாடகக் கலைஞர் ஏ. ரி. பொ. அவர்களுக்கு நிறைவு த. வரலாற்று நாடகம் "நிறைகுடம் ". ஈழத்தின் பல பாகங்களிலும் மேடையேறி, ஆசிரியர் இத்துறையில் நிறை குடம் என்பதைக் கோடிட்டுக் காட்டியது. ஆனைக்கோட்டையில்

Page 14
XXii
அரங்கேறியபோது ஏ. ரி. பொ. வின் வெற்றித் தயாரிப்புத் திறனைக் கலையரசு பாராட்டுகையில் "நாடகத் தமிழை வளர்க்கவல்ல புதிய பரம்பரையினர் வரிசையில் தனித்துவம் உடையவர் பொன்னுத்துரை " என்று கூறிய கூற்றுச் சாலவும் பொருத்தமானது.
எழுத்துலகிலும், கலையுலகிலும் அரசியற் காற்றுக்களுடன் பொருமையும், ஆற்ருமையும் கலந்து வீசும் காலம் இது. ஆக்கப்பணியில் உழைக்கும் ஆற்றல் படைத்தோரைக் கட்சி கட்டித் தூற்றும் இக்கால கட்டத்தில் பாண்டித்தியமற்ற, பண்பாடற்ற படைப்பாளர்கள் நடுவில்-சான்ருேஞக, நிஜக் கலைஞனக நடிப் புத் துறை யில் அகல் விளக்காக மிளிரும் ஏ. ரி. பொன்னுத்துரை அவர்களின் வாழ்க்கை வளனும் நற்றமிழ் நாடகப் பண்பும் மேன்மேலும் மேன்மை கொள நவரச நாயகி நல்லருள் புரிவாளாக,
" கலை இன்பமே நிலை இன்பமாம் "
ashuash க. வை. தனேஸ்வரன் கோண்டாவில்
21
கண்டி இந்து சிரேஷ்ட வித்தியாலய அதிபர் திரு. வை. பொன்னையா அவர்கள்
க/இந்து சிரேஷ்ட வித்தியாலயத்தின் முன்னைநாள் பதில் அதிபரும் இன்றைய சிரேஷ்ட உதவி ஆசிரியருமான திரு. ஏ. ரி. பொன்னுத்துரை அவர்கள் கலைத்துறையில் ஆற்றிய புனித பணி யில் வெள்ளிவிழாக் காணும் இத்தருணத்தில் என் வாழ்த்தினை அனுப்புவதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
திரு. ஏ. ரி. பொ. அவர்கள் கடந்த கால்நூற்ருண்டு கால மாகக் கலையுலகில் சஞ்சரித்து நாடகத்துறையில் அளப்பரும் சேவை செய்துவருவதோடு இந் நீண்ட காலத்தில் உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் பாரதத்திலும் ஏன், ஈழநாட்டிலும் காலத் தோடொட்டி நாடகத்துறை அடைந்த முன்னேற்றத்திற்குத்தக பீடுநடை போடுகிருர். பல பரிசில்களைத் தட்டிக்கொண்ட அவ ருடைய நாடகங்களிற் சில இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தின் பாராட்டைப் பெற்றதோடு அவை ஒலிபரப்பப்பட்டு வருவதை நாமும் அடிக்கடி கேட்டு மகிழக்கூடியதா யிருக்கிறது:

XXiii
ஆசிரியர் அவர்கள் கலையுலகில் பிரவேசித்துவிட்டால் அவரது மற்றைய வேலைகள், நாளாந்த கடமைகள் எல்லாம் கண்படுப் போர் கைப்பொருள்போற் ருமாகவே ஒதுங்கிவிடுமளவுக்கு கலையும் தானுமாக இலயித்து ஒன்றித்துக் கவின்பெறு கலைஞ ஞகத் திகழ்கின்றர்.
நாடகத்துறையில் மாத்திரமன்றிக் கவிதை புனைவதிலும் சிறந்து விளங்கும் ஆசிரியர் அவர்கள் பாடசாலை விழாக்களிலும் பொது வைபவங்களிலும் கவிதை நடையில் தனக்கென அமைந்த பாணியில் உரைநிகழ்த்துவதோடமையாது வரவேற் புரை, நன்றியுரைகளிலும் கூடக் கவிதையிலேயே அவற்றை நிகழ்த்தியமை கவிதை புனைவதில் அவருக்கிருக்கும் சாமர்த் தியத்தை ஓரளவு மதிப்பீடு செய்ய உதவுவதாகும்.
சாந்த சொரூபியும், ஒழுக்கசீலனும், முருகபக்தனுமான ஆசிரியர் அவர்கள் எமது வித்தியாலய உயர்தர வகுப்பினர்க்கு சமயம், வரலாறு, புவியியல், தமிழ் இலக்கியம் என்னும் பாடங் களைச் சுவைபட நவீனமுறையில் புகட்டி அப்பாடங்களில் 74 நூ. வீதத்திற்கும் அதிகமாகச் சித்தியடையச் செய்து கல்வித் திணைக் களத்தினரின் பாராட்டைப் பெற்றமை அன்னர் தலைசிறந்த ஒர் ஆசிரியர் என்பதை நிரூபிக்கப் போதுமானதாகும்.
நாடக மறுமலர்ச்சியில் ஒரு மைல்கல்லாக அமையும் ஆசிரிய ரின் புனிதப்பணி ஒரு கலையூற்ருகக் கலையுலகை வளம்படுத்த வல்ல இறைவன் துணைநிற்கட்டும்.
வளர்க ஏ. ரி. பொ. கலைத்தொண்டு.
வை, போன்னையா
22
கலைத்தென்றல்
எஸ். எஸ். கணேசபிள்ளை அவர்கள் (வரணியூரான்) திருவாளர் பொன்னுத்துரை ஆசிரியர் அவர்களுடன் எனக்குப் பல்லாண்டுகாலத் தொடர்புண்டு. அவர் ஒரு சிறந்த நடிகர், எழுத்தாளர், பாடகர், தயாரிப்பாளர், நெறியாளர் என்பதை நாடே அறியும். இன்று வெள்ளிவிழாக் கொண் டாடுவது போல இவரது பொன்விழா, வைரவிழா என் பனவும் நடைபெற எல்லாம் வல்ல இறைவன் துணைநிற்கட்டும்; எஸ். எஸ். கணேசபிள்ளை

Page 15
23
கொழும்பு, கமலாலயம்
குரும்பசிட்டிக் கிராமத்தைச் சேர்ந்த கலையார்வம் மிக்க இளைஞர்களினுல் ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் எமது கலைக் கழகம் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. எமது கிரா மத்தைச் சேர்ந்த திரு. ஏ. ரி. பொன்னுத்துரை, B, A, அவர் களுக்கும் எமது கழகத்திற்கும் நிரம்பிய தொடர்பு உண்டு. இக்கழக உறுப்பினர்களிற் பலர் நாடக உலகத்தில் காலடி எடுத்துவைப்பதற்கு வழிகாட்டியாக அவர் விளங்கினர்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக ஈழத்து நாடக உலகத் திற்கு அளப்பரும் தொண்டாற்றியுள்ள இவருக்கு வெள்ளி விழா எடுக்கும் முயற்சி மிகமிகப் பாராட்டக்கூடியதொன்ருகும்.
எமது கழகத்தினரின் உள்ளங்கனிந்த வாழ்த்துக்களையும், ஆசிகளையும் கூறி, அவர்களுக்கு நீடிய ஆயுளையும் பூரண ஆரோக் கியத்தையும் நல்கவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கிருேம் .
அ. சிவதாசன்
செயலாளர்
24
அரியாலையூர் கவிஞர் வே. ஐயாத்துரை அவர்கள்
இதமுறு நயமெழு நாடக மெழிலுற
இருபத் தைந்தாண் டாய்மலரும் பதமுறு பணிநிறை பாங்குயர் பரவும்
பலமுறும் பொன்னுத் துரையன்பா ! நிதமுறை கலைமகள் நேர்திரு வருளால் நிறைகுட நீர்மை நிகர் திடமும் புதுமல ரெழிலும் பூரண பொலிவும்
பொருந்திட வாழி பல்லாண்டே !
வே, ஐயாத்துரை
 

ஏ. ரி. பொன்னுத்துரை

Page 16

மேடை ஏற்றமும் மேன்மக்கள் ஆதரவும்
1950ஆம் ஆண்டு. சேர் பொன். இராமநாதன் நிறுவிய பரமேஸ்வராக் கல்லூரியில் (வடக்கே அமைந்துள்ள இன்றைய பல்கலைக் கழக வளாகம்) பிரபல பிரான்சிய நாடகாசிரியர் மோலியரின் *லோபியின் காதல்’ நாடகம் இருதடவைகள் மேடை இடப்ப்டுகின்றன. லோபியாக, முக்கிய பாத்திரம் தாங்கும் தனிப்பேறு எனக்குக் கிடைத் தது. ஆதரவு நல்குகிருர்கள் அப்போதைய அதிப்ர் திரு. எஸ். சிவபாதசுந்தரம், M. A. ( Cantab.), திரு. எஸ். சிதம்பரப்பிள்ளை, B. A., B. Sc. ஆகி யோர். நெறிப்படுத்துகிருர் கலாஜோதி எஸ். சண்முகநாதன் (சான) அவர்கள்-இருபது ஆண்டு களுக்குமேல் இலங்கை வானெலி தமிழ் நாடகப் பகுதி பொறுப்பதிகாரியாய்க் கடமையாற்றியவர்.
நடிகர்களாக மிளிர்ந்து நாடகம் எழுதுவோ ரிடம் எனக்கு அலாதிப் பிரியம்; தனி அபிமானம். 18ஆம் நூற்றண்டில் பிரான்சிய நாடகமேடை யில், தணிக்கொலுவுடன் இருந்த நடிகன் மோலியர் ஆவர். அவர் யாத்த நாடக இலக்கியங்கள் சிரிப் பூட்டிச் சிந்திக்க வைக்கும் பெற்றியன. இத்தகை

Page 17
- 2 -
யோனின் நாடகத்தில் முதல்தடவை, முறையாக நடித்த பூரிப்பு எனக்கு,
அரங்கேற்றத்தன்றே ஈழ த்து நாடகத் தந்தையை - கலையரசு அவர்களை - முதன்முதல் காண்கின்றேன். ' என்னைப்போல ஒரு த் தனை இன்றைக்குத்தான் மேடையிற் காண்கிறேன்' என்று நாடக முடிவில் கலையரசு கூறியதாக திரு. எஸ். சிதம்பரப்பிள்ளை யவர்கள் தெரிவித்தபோது புளகாங்கிதமடைகின்றேன்.
* உடையார் மிடுக்கு நாடகத்தில் கலையரசு அணிந்த "கோற்'- கடுக்கன் என்பனதான் என்னையும் அன்று அலங்கரித்தன. க லை ய ர சு ஏற்றிவைத்த கலாஜோதி எஸ். சண்முகநாதன் (சான) அவர்கள்தான் எனது முக்கிய ஆசான். மேடை பற்றிய நுணுக்கங்களைத் துறைபோகக் கற்றவர்கள் தொட்டுவிட்டனர் ; தொடக்கி வைத் தனர். அறிஞர் பெருமக்கள் அரவணைத்து நின்ற னர். அதன் விழைவு இன்று வெள்ளிவிழாக் காணும் பாக்கியம்.
* 25 ஆண்டுகளுக்கு முன் இரண்டே இரண்டு பாடல்களுடன் மட்டும் வெற்றியாய் நடந் தேறிய முழுநீள நாடகத்தில், நடித்த சிந்தனை இன்றுதான் அதன் சிறப்பை எனக்கு உணர வைக்கிறது.
* ஆறுமாத ஒத்திகை-நீண்ட மண்டபமான லும் ஒலிபெருக்கி இன்றி உரத்துப் பேசி நடித்த தன்மை-முதல் ஒத்திகையின் போதே மேடையேற்றத்தன்று உபயோகித்த "பணப் பெட்டி", "மாடிப் படிக் கட்டு" என்ற செற்றிங்'

سے 3 --س۔
பொருள்களை உபயோகித்த முறை இன்னே ரன்ன பல ஒழுங்குகள் உடன் நடாத்தப்பட்ட நாடகத்தில்-அதுவும், 25 ஆண்டுகளுக்குமுன் இவ்விதம் நடாத்தப்பட்ட நாடகத்தில் - நடித்ததை எண்ணி உண்மையிற் பெருமிதம் கொள்கிறேன்.
“Well-begun is half-done” GTGirl intrisG67. அது என் கலைவாழ்வில் உண்மைபோல் தெரி கிறது. தக்கோன் அளித்திட்ட தரமான நற்பரிசு
1950இல் பரமேஸ்வராக் கல்லூரி மாணவர் ஆளுகைக் குழுவுக்கு (Board of Prefects) பலரின் பெயர்களை இல்ல ஆசிரியர்கள் சிபார்சு செய்தனர். எனது பெயரை ஆசிரியர் எவருமே சிபார்சு செய்ய முன்வரவில்லை. எனது நடிப்பை விதந்து மதித்து அதற்காக என்னை மாணவர் தலைவன் ஆக்கினர் அப்போதைய அதிபர் திரு. எஸ். சிவபாதசுந்தரம் அவர்கள். 'ஸ்கொலர்சிப்பில் இங்கிலாந்து சென்று ஆங்கிலத்தில், M. A. பட்டம் பெற்ற மேதைஆங்கில நாடக இலக்கியங்களை நன்கு கற்ற வல்லோன் - நடிப்புக்காகத் தந்த கெளரவம் - மதிப்பு இளமையில் நான் பெற்ற தரமான பரிசுதானே !
* ஒலியமைப்பு நாடகத்தில் தவிர்க்க முடியாதெனின், ஒலிவாங்கிகளே இருப்பதாகக் கூடத் தெரியாத முறையில் அவற்றை அமைக்கவேண்டும். களங்களை இயற்கையாகக் காட்ட, நடிப்பை இயற்கையாய் மிளிரவைக்க இது பெரிதும் துணைபுரியும்."

Page 18
2
கன்னிப் படைப்பொன்று சன்மார்க்க சபை நிதிக்கு
* ஈழகேசரி’ வார ஏட்டினை இருபத்தைந்து ஆண்டுகள் நடாத்தி கலை, இலக்கியத்துறையிற் கணிசமான தொண்டாற்றிய தேசிய வீ ர ன் திரு. நா. பொன்னையா, ர. P. அவர்கள் நிறுவிய கலாகூடம்தான் குரும்பசிட்டியின் மத்தியில் சுடர் விடும் சன்மார்க்க சபையாகும். சபையின் நிதிக் காக 1951இல் நடாத்தப்பட்ட கலைவிழாவில் யான் முதன்முதலில் எழுதித் தயாரித்தளித்த கன்னிப் படைப்பே " விதியின் சதி '. எனது கிராமத்து இளைஞர்களுக்கு நாடக நுணுக்கங்களை முதன்முதல் பாய்ச்சுகிறேன். பத்துப்பேர்வரை பயிற்சிபெற்ற போதிலும் தலைநிமிர்ந்து நின்ருர் இன்று பிரபல புளொக்-புகைப்படக் கலை ஞ ரா க மிளிரும் கொழும்பு ஸ்ரூடியோ உரிமையாளர் திரு. அ. குகதாசன் அவர்கள்.
杀
** இசைபற்றிக் கூறுவதானல், பாட்டுக்கள் பொருத்த மாக அவசியமெனின் மட்டும் புகுத்தப்படலாம். அள வாக அடக்கமாக உபயோகிக்கப்படும் வாத்திய இசைகள் நாடகங்களுக்கு நன்கு பொருந்தும்."

சென்னை மாநகரில்
சேர்ந்திட்ட
அனுபவங்கள்
பட்டப்படிப்புக்காகச் சென்னை சென்று
கிறிஸ்தவ கல்லூரியில் (1951 -1955) நான்கு
ஆண்டுகள் கல்விகற்றேன். அவ்வேளை யான்
பெற்ற கலை அனுபவங்கள் ஏராளம்.
பலவேறுபட்ட இனமக்கள் பல பாஷை பேசும் பார்வையாளர்கள் முன், ஒரு நாடகம், நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானல், அந்த நாட்கம் பாடல் ஆடல் விரவியதாக இருந்தே ஆகவேண்டும். தமிழ்மக்கள் முன் தமிழிலோ, தெலுங்கர் முன் தெலுங்கிலோ, மலையாளிகள் முன் மலையாளத்திலோ பேசி நடித்துவிடலாம். உரையாடல் துணைகொண்டு உள்ளத்தை ஈர்த்து விடலாம். ஆனல், பல பாஷை பேசுவோர் குவிந் திருக்கும் மன்றத்தில் ஆடலும் பாடலும் கைகொடுப்பதுபோல எவையும் உதவா. ஆடல் பாடல் விரவிய சிங்கள நாடகங்களை (நரிபேணு, அ ப் பட்ட புத் தே, குவேனி ) சிங்களம் தெரியாத ரஸிகர்களே விதந்து பேசுகிருர்கள்; யானும் கூடத்தான். பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன் புடம்செய்த வடமோடி,

Page 19
- 6 -
தென்மோடி நாடகங்களும் பாராட்டுப் பெற்ற மைக்கு ஆடலும் பாடலும் அடிப்படைக் கார ணங்கள் எனலாம். இந்த உண்மையை அன்றே (1952இல்) உணரும் அனுபவம் எனக்கு ஏற் பட்டது. பத்துக்கு மேற்பட்ட பாஷை ப்ேசும் பார்  ைவ யா ள ர் மு ன் (தமிழர், தெலுங்கர், மலையாளிகள், குஜரத்தி பேசுவோர், ஹிந்தி பேசு வோர், ஆங்கிலேயர், சீக்கியர், சிங்களர், பிரான்சு பேசுவோர், பர்மியர், காப்பிரிகள்) நாடகம் மேடையிடவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற் பட்டது. கிராமிய நடன தாளக்கட்டுக்களை (வசந்தன்-காவடி-கரகம்-பரதம்) துணைகொண்டு நாட்டுப்பாடலின் சாயல் விரவிய ஆட லும் பாடலும் இழையோடும் நாடகங்களைத் துணி வுடன் இயக்கினேன்; சேர்ந்து ஆடினேன் : மகத் தான வெற்றிகண்டு மகிழ்வெய்தினேன்.
1952இல் ‘முதலாளி தொழிலாளி கிராமிய நடன நகைச்சுவை நாடகத்தையும்,
1953இல் 'குவேனி' என்ற இதேவகை நாட கத்தையும்,
1954இல் "ராகி மை டியர்" என்ற நாட கத்தையும், பாரதத்தின் பல்வேறு இனத்தைப் பிரதி பலிக்கும் அவையின்முன்னே மேடையிட்டு வெற்றி கண்ட அனுபவம் சென்னைமாநகர் தந்த பெரும் அனுபவம்.
சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரித் தமிழ்ப் பேரவை, 1952இல் தமிழ்ப் பேராசிரியர் M. ஆலால சுந்தரம் செட்டியார், M. A. அவர்கள் தலைமையில் "பசி" என்ற நாடகத்தை மேடையிட்டது. யாழ்ப்

--ས་ལ། 7 --མ་
பாணத்துப் பேச்சுநடை நாடகத்துக்கு எடுக்காது என்று காரணம்காட்டி முக்கிய பாத்திரங்கள் தர மறுக்கப்பட்டன. அப்போது ஐந்து நிமிடங்கள் மட்டும் தலைகாட்டும் சிறுபாத்திரத்தையே நடித் தேன். சிறுப்ாத்திரமூலம் கூட, முறையாக எம்மை நகர்த்தினல் முன்னணிக்கு வரலாம் என்ற அனுப வத்தை அன்றே பெற்றேன்.
* உண்மைக் கலைஞன் முக்கிய பாத்திரம், சிறிய பாத்திரம் என்ற பாகுபாட்டை விட்டு, தான் தாங்கும் பாத்திரத்தைத் தத்ரூபமாய்க் காட்டப் பல தடவை முயற்சிகள் பெற்ருக வேண்டும்.
* இயக்குநர்கூட அலட்சியமாகச் சிறுபாத் திரங்களை விட்டுவிடலாகாது.
* தடிபிடித்து நிற்போனுக்கும், குடைதாங்கி நிற்போனுக்கும் மு க் கி யம் கொடுத்தே ஆக வேண்டும்.
யான் தாங்கிய சிறு பாத்திரத்துக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்தேன். தனியறையில் நின்று திரும்பத்திரும்ப நடித்ததைக் கண்ட நண் பன் 'பைத்தியம் பைத்தியம்' என்ருன், தலைமை வகித்தவர் என்னைச் சுட்டி உயர்த்திப் பேசியதன் இரகசியம் இந்தச் சிறு அம்சத்தில்தான் தங்கி யிருக்கிறது.
மக்னிக்கல் முதல் மக்பெயில் ஈருக
சென்னை கிறீஸ்தவக் கல்லூரியில் ஆங்கிலம் கற்பித்தவர்கள் இங்கிலாந்துப் பிரமுகர்கள்தான்.

Page 20
- 8 -
யான் கற்ற வேளை ஆங்கில நாடகங்களைப் படிப் பித்த அறிஞர்கள் திரு. மக்னிக்கலும் திரு. மக் பெயிலுமாவர். திரு. மக்னிக்கல் ° ஹொலிவூட்" நடிகர் போன்ற தோற்றமுடையவர். நடிப்பது போலவே நாடகங்களைப் படிப்பிப்பார். ‘Merchant of Venice”, “Cymbeline' 6Taird Gafiah). Surfair still கங்களை உயர்ந்த மேடையில் நின்று சுவையாக வாசித்து வாசித்து நடிப்பின் கோலத்தைக் கோடி காட்டிய அவரது படிப்பித்தல் இன்றும் என் மன தில் நிழலாடுகிறது. 'Macbeth நாடகத்தை திரு. மக்பெயில் அவர்கள் படிப்பித்த விதம் ஒரு தனி ரகம். வருடாவருடம் சேக்ஸ்பியர் நாடகத்தைக் கிறிஸ்தவக் கல்லூரியில் தயாரித்தளிக்கும் தயாரிப் பாளர் இவர். தாகூரின் நாடகங்கள், கோல்ட் Slf.55air She Stoops to Conquer Guntairsp நாடகங்களையும் நல்ல முறையிற் சுவைக்க வைத் தனர். நல்ல நாடகங்களை நடிப்பில் வல்லவர்க ளிடம் கற்றவேளை தயாரிப்புக் குறிப்புக்களையும் அறிய நேர்ந்தது. கற்றது கைம்மண்ணளவு என்ப தைக் கற்றறிந்த பெருந்தகைகளுடன் பயிலும் போதுதான் விளங்கும்.
* நாடகக் கலைஞர்கள், கட்டாயமாக சேக்ஸ் பியரின் நாடகங்கள் சிலவற்றையாவது முறையாகப் படிக்கவேண்டும். அதன் மூலம் நாடக எழுத்தின் அடிப்படை அம் சங்களை அறிய, அதன் துணைகொண்டு நவீன உத்திமுறை வளர்ச்சிகளை உய்த் துணர முடியும். புதிய முறைகளை ஒப்பு நோக்கப் பழைய நாடக இலக்கியங்கள் துணைநிற்கும். சேக்ஸ்பியர் நடிகராகவும்

- 9 -
தயாரிப்பாளராகவும் விளங்கியமையால் அவர் யாத்த நாடகங்கள் நமக்கு நல்ல ஆசானுய் மிளிர்கின்றன.
கலேதான் முக்கியமா? பிரசாரம் முக்கியமா?
டி. கே. எஸ். சகோதரர்களின் நாடகங்கள் பலவற்றுள் திரு. டி. கே. சண்முகத்துக்குப் புக ழிட்டிக் கொடுத்தது “ஒளவையார்’ நாடகம்தான். இது ஒரு இலக்கிய நாடகம். அழகான ஆண் மகன் ஒளவையார் போலத் தோன்றி, குறிக்கப் பட்ட கோணத்தில் முதுகை வளைத்து, குரலினிமை காட்டி வெண்பா, விருத்தங்கள் சிந்தியபோது யான் இருந்த உலகம் வேறு. ஒவ்வொரு காட்சி யிலுமா அதே கோணம்; அதே வளைவு. அதிச யிக்க முடிந்தது. கிழவிநடையில் நடந்து சென்ற வேளைகளில் அதிர்ந்தே விட்டேன். பாடல்கள் பதினரு ? பழைய பாணி யாச் சே 1 என்ற முணுமுணுப்புக்கு இடமேயில்லை. இலக்கியநாட கத்தில்-அதுவும் தமிழ்ப் புலவரின் வாழ்க்கைப் பின்னணியில் எழுந்த நாடகத்தில்-பாடல்கள் பொருத்தமாகப் புகுத்தப்ப்டலாம். புகுத்தப் பட்டுமிருந்தன. ஒளவையார்' நாடகம் இதை வலி யுறுத்திநிற்கிறது. அதற்காகப் பாடல்கள்தான் நாடகமா ? இல்லவே இல்லை. அண்ணுத்துரை யின் சமூக நாடகமொன்றையும் பார்த்து ரசித் தேன். ப்ாடலுக்கே இடமில்லை. மடாதிபதிக ளின் தில்லுமுல்லுகளை அழகாகச் சித்திரித்த கிண்டல் நாடகமாய்-இல்லை பிரசார நாடகமாய், அன்றைய சமுதாய ஊழல்களைச் சாடுவதாய்

Page 21
- 10 -
அமைந்திருந்தது. வாழும் சமுதாயம் வஞ்சிக்கப் படக்கூடாது என்ற கருத்துடன் அரசியற் கருத் துக்கள் இழையோட அமைக்கப்பட்டது அந்த நாடகம். கலைக்குக் கூடிய அழுத்தம் கொடுத்த சண்முகத்தின் நாடகத்தையும் பிரசாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த அண்ணுவின் நாடகத் தையும் கண்ட எனது உள்ளம், இரண்டும் (கலைசமூக கண்ணுேட்டம்) இணைந்த உன்னத தயா ரிப்பு மக்கள் வாழ்வை வளமாக்க உதவும் கலை வடிவு என எண்ணினேன்.
இவற்றைவிட நவாப் ராஜமாணிக்கத்தின் * சம்பூரண ராமாயணம்', "ஐயப்பன்’ நாடகங்களை, எம். ஆர். ராதாவின் 'இரத்தக்கண்ணிர் நாட கத்தை, எஸ். சகஸ்ரநாமம், சிவாஜி கணேசன் நடித்த இருளும் ஒளியும் ' என்ற ஒரு செற் நாடகத்தைக் காண்பதற்குத் தவற வில் லை. கொள்ள வேண்டியதைத் தள்ளியும் விடவில்லை.
* ஒரிரு செற்றில் மூன்று காட்சிகளுக்கு மேற் படாது முழுநீள நாடகத்தை நகர்த்துவதே சாலச் சிறந்த உத்தியென உணர்ந்தேன்.
* அளவான நடிப்பே மேடைக்கு எடுக்கும். அதுவே இன்றைய உத்தியும்கூட என்பதை எஸ். சகஸ்ரநாமத்தின் நடிப்பில் இனம்கண்டு கொண்டேன். மிகையான நடிப்பில் இயற் கையின் நிழலில்லை.
* நாடகக் கலைஞர்கள் அனுபவ நடிகர்களது நாடகங்களைப் பார்ப்பது, அவைபற்றித் தமக்குள் தாமோ அன்றி நண்பர்களுடனே

1950 இல் பரமேஸ்வராக் கல்லூரி மேடையிட்ட மோலியரின் “லோபியின் காதல்’ நாடகத்தில் லோபியாக நடிக்கும் காட்சி.
ஒப்பன: “ சாஞ

Page 22
குரும்பசிட்டி, சன்மார்க்க சபையின் தயாரிப்பாகிய *தாகம்" என்ற ஓரங்க நாடகத்தில் மந்திரவாதியாக சக நடிகர் அ. குகதாசனுடன் தோன்றும் காட்சி. ஒப்பனை : அ. குகதாசன்.
 

- ll -
விமர்சித்துக்கொள்வது வளர்ச்சித் தடத்தில் முன்னேற வழி வகுக்கும் என்று உணரு கிறேன்.
பட்டப்படிப்புக்குச் சென்னைக்குச் சென்ருலும் மேடைபற்றிய ஆய்வு என்னை அலைத்து உலைத்தது. அது தந்த அனுபவம் உரமூட்டி வளர்த்தது : வளர்கிறது.
4.
* தாகம்' என்ற ஓரங்க நாடகத்தில் என் பங்கு
ஆங்கில நாடகமொன்றைத் தழுவி திரு. எஸ். அப்புஸாமி, B. Sc. அவர்கள் "கலைமகளில் எழுதிய "தாகம்" என்ற நாடகத்தை இரசிகமணி கனக, செந்திநாதன் மேடைக்கென அமைத்துத் தந்தார். மூன்றே மூன்று பாத்திரங்கள் கொண்ட அந்த நாடகத்தில் (1 9 5 1) மந்திரவாதியாய் நடிக்கிறேன். " சபாஸ் பெற்ற ஓரங்க நாடகம் அது சன்மார்க்க சபையின் புது முயற்சி அது.
" நாடகத்தில் பிரமாண்டமான காட்சியமைப்புக்குப் பதில் களங்களைக் காட்டவல்ல சூசகமான காட்சியமைப்பு உகந்ததென்பேன். கலைத்துவக் கண்ணுேட்டத்தில் சூசக உத்திமுறை உயர்ந்த ரகத்தைச் சேர்ந்ததெனக் கருதப் படுகிறது."

Page 23
5
"இருமணம்” நாடகமும் ஈழகேசரி’ விமர்சனமும்
இருமனம் ஒத்தத்ால் திருமணம் நடந்தது. திருமணம் நடந்து ஒருவாரம் ஆகவில்லை. "இரு மனம் " நாடக அரங்கேற்றம் செய்கின்றேன். இலங்கையர்கோன் தலைமையில் மேற்படி நாடகம் சன்மார்க்கசபை அரங்கில் 1956இல் மேடையிடப் படுகிறது. அதுபற்றிய "ஈழகேசரி’ விமர்சனத்தில் சில வரிகள் :
"இந்த நாட்டில் நாடகமேடைகள் சமீப காலமாகப் பெரும்பாலும் பிரசங்க மேடைக ளாகவே காணப்படுகின்றன. நாடகம் என்ற பெயரால் தரமும் சுவையுமற்ற மலிவுப் பிரசுரங்கள் படையெடுத்துக் கொண்டிருப் பதும் அவற்றைத் துணைகொண்டு கலையைக் களங்கப்படுத்தக் கலாரசனையற்ற பலரும் கங்கணம் கட்டிக்கொண்டு முன்வந்திருப் பதுமே இதற்குக் காரணங்களாகும். இதற் குப் புறநடையாக 28-4-56 சனிக்கிழமை சன்மார்க்க நாடக மன்றத்தால் அரங்கேற்றப் பட்ட "இரு மனம் " நாடகம் கலைநுணுக்கங்க ளுடன் சிறப்புற அமைந்திருந்தது."

- 13 -
இதில் நடித்த ஏ. சிவதாசன் அவர்கள் கொழும்பில் " கமலாலயம் அமைத்து நாடக விழாக்களை எடுப்பாய் நடாத்துகிருர். கதா நாயகனுய் நடித்த திரு. S. விஜயசிங்கம் தேவர் பிலிம்ஸ் உதவி டைரக்டராய் மிளிர்கிருர், தர மான நடிகர்களை உருவாக்கிய நாடகமிது. ஆனல் ஒரு குறை. பெண் பாத்திரங்களையும் இளைஞர் களே நடிக்கவேண்டிய நிலை
* பெண் பாத்திரங்களைத் தாங்கி நடிக்கத் தாராளமாக மகளிர் முன்வரும்போதுதான் எம்மைப் பொறுத்தவரை நாடக உலகை நல்ல நிலைக்கு இட்டுச்செல்ல முடியும். இது பற்றி இன்றும் பூரண திருப்தி இல்லை.
நடிகமணியும் யானும் இணைகின்ருேம்
நடேஸ்வராக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிய வேளை கலைத்தொண்டு புரியக் கணிசமான ஆதரவு கிட்டிற்று. 1958இல் மாண வர்களுடன் சேர்ந்து " இரு மனம் " நாடகத்தை இரு தடவைகள் நடாத்தினுேம். இதனல் ஏற் பட்ட வசூல் கட்டிட நிதிக்கு உதவியதை இட்டு எனக்கொரு மன நிறைவு. இந்தச் சந்தர்ப்பத்தில் தான் நாட்டுக்கூத்தரசன் நடிகமணி வி. வி. வயிர முத்துவுடன் முதன்முதல் தொடர்பு கொள்ளு கிறேன். பின்னணி இசையாலே நாடகத்தை மெருகூட்டினர் இவர்.
* நாடக அநுபவசாலி இசை அமைக்கும் போதோ அன்றி அதனேடு கூடிய இதர அம்சங்களில் ஈடுபடும் போதோ அதன் சிறப்பு அப்பட்டமாகத் தெரிகிறது.

Page 24
i 14 -
இவரோடு கொண்ட இறுகிய பிணைப்பு பல வேறு கலைப்பணிகளுக்கும் உரமாய் உதவுகிறது. * பகையும் பாசமும்', ' பண்பின் சிகரம் , " நிறை குடம் ', ' இரணியன்', ' நாடகம் * முதலிய பல நாடகங்களுக்கு இசையமைத்து உதவிஞர். இவ ருக்குப் பொன்முடிப்பு வழங்கப் பொருளாளராய் உழைத்தேன். "பூதத்தம்பி " நாடகத்தில் வசன வளம் கொடுத்தேன். கலைத்தாயின் மடியினிலே நாமெல்லாம் சகோதரர்கள். சாதியும், சமயமும், இனவெறியும் பாறியவை. பொருமை விடுத்து மதிப்ப்ாக நாம் நடந்தோம்.
* நல்ல நாடக வளர்ச்சிக்குக் கலைஞர்கள் மத்தி யில் பரஸ்பரம் ஆழமாய் வேரோட வேண் டும். போட்டியும் பொருமையும் சாடப்பட வேண்டும். வித்துவக் காய்ச்சல் விஷமென்று படவேண்டும்.
" நாடகமென்ருல் நவரசங்கள் இருக்கவேண்டும் - சோகம் வேண்டும்-சிரிப்பு வேண்டும்-காதல் வேண்டும்அது வேண்டும் இது வேண்டும் என்ற ஒரு முறை நம் மிடையே வளர்க்கப்பட்டுவிட்டது. நர்த்தனத்தைக் கூடப் பொருத்தமின்றிப் புகுத்தி இன்பமடைபவர்கள் நம்மத்தி யில் உளர். இந்நிலை மாறவேண்டும். எல்லா ரசங்களையும் திணித்துக் குழப்பாது, கருப் பொருளுக்குத் தக சில ரசங்களை மட்டும் பீறிடச் செய்யலாம். இம்முறை நாட கத்தின் கால வரையறைக்கு மட்டுமன்றிக் காட்சிக் குறைப் புக்கும் துணைநிற்கும்."

6
* கற்புக்கனல்’ மூலம் தேவனும் யானும்
தேவனின் ‘கற்புக்கனல்’ நாடகத்தை 1959இல் கொழும்பிலே மேடையிட நடேஸ்வராக் கல்லூரி (அப்போதைய) முகாமையாளர் திரு. த. சிவ ஞானம் அவர்கள் முன்வந்தார். முக்கிய பாத்திரங் களில் ஆசிரியைகள் நடித்தனர். ‘வஞ்சிப்பத்தன்" பாத்திரம் என்மேல் சுமத்தப்பட்டது. சுமத்தப் பட்டதைப் பக்குவமாய்ச் சுமந்தேன். அதன்விளைவு: சாஞ வீட்டில் ஒருமுறை நடிகவேள் லடீஸ் வீரமணி ஒரு விஞ வுக் குப் பின்வரும் பதில் சொல்லுகிருர் : “ வஞ்சிப்பத்தணுய் நடித்தவர் முதல்தரமாய் நடித்தார்.” சானவின் முகத்தில் புன்முறுவல். '" இவர்தான் அவர் ' என்று என்னை அறிமுகம்செய்கிறர். இந்த நாடகத்தில் கண்ணகி, மாதவி, மாதரி பாத்திரங்களில் நடித்த ஆசிரியை களின் நடிப்பு அற்புதம், கண்ணகியாய்த் தோன்றி, கனலாய் எரிந்த திருமதி புவனேஸ்வரி சச்சிதா னந்தம், B. A. (Hons) (மானிப்பாய் மகளிர் கல்லூரி இன்றைய அதிபர்) அவர்களின் நடிப்பு அபாரம். அவர் ஒரு நடிப்பின் துடிப்பு.
* நாடகத்தில் பெண்கள் ஆண் வேடம் தரித்து நடிப்பது பெரும்பாலும் எடுப்பாக அமைவ

Page 25
தில்லை. இயற்கையாயும் இருப்பதில்லை. மகளிர் கல்லூரிகள் பெரும்பாலும் நாடகம் நடாத் தும் போது பெண் பாத்திரங்கள் தொக்கு நிற்கும் நாடகங்களைத் தேர்ந்தெடுப்ப்து புத்தி சாலித்தனம் என்று என் அநுபவம் பேசுகிறது.
தேவனைப்பற்றி (திரு. இ. மகாதேவா) ஒரு வார்த்தை. இந்த நாடகத்தின் வெற்றிக்கு அடிப் படைக் காரணம் நல்லாக அமைந்த அவரது நாடகப் பிரதியும்; முறையாக அமைந்த டைரக்சன் சிறப்புமே. என்னேடு கவனமாய், கண்ணியமாய் நடந்துகொண்டார். இதற்குக் கார ணங்கள் இல்லாமல் இல்லை. தென்னவன் பிரம ராயன் நூல் வெளியீட்டு விழாவை யாழ் நகரில் வைத்தவேளை என்னை விமர்சகராய் அழைத்து
மதித்தும் இருக்கின்ருர்,
"ஓரங்க நாடகம் என்று கருதிச் சிலர் சிறு நாடகங்களை எழுதிவிடுகின்றனர். முழுநீள நாடகமாக நடிக்கத்தக்க நாடகத்தை, சுருங்கிய குறுகிய நேரத்தில் நடிக்கத்தக்க தாய் அமைத்துவிட்டால் ஓரங்க நாடகம் எனப் பலர் எண்ணுகிருர்கள். இது தப்பான எண்ணமாகும். ஒரே களத்தில் ஒரே காட்சியில் நகர்த்தக்கூடிய வாழ்வின் சிறு அம்சத்தை ஒட்டிய குறுகிய காலத்தில் நடிக்கவல்ல முறை யில் அமைந்த நாடகத்தை நல்ல ஓரங் க நா ட க மென்பேன். ஒன்றுக்கு மேற்பட்ட களங்களிலும் காட்சிகளி லும் ஓரங்க நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன. மேடைக் கண்ணுேட்டத்துடன் நோக்கும்போது இம்முறை சிறந்த தல்ல என்பது என் தீர்க்கமான முடிவு. "

ア
லயனல்வென்ட்’ தியேட்டரில் கொடிகட்டிப் பறக்கின்றேன்
1960ஆம் ஆண்டு என் கலைவாழ்வில் பத் தாண்டுகள் கழிந்த ஆண்டு. புதிய தெண்பும் புத் தூக்கமும் நிறைந்த ஆண்டு. திரு. கே. பாலச் சந்திரன் கொழும்பில் நடாத்திய நாடகவிழாவில் மூன்று முழுநீள நாடகங்கள் இடம்பெற்றன. அவற்றுள் திரு. இ. இரத்தினம், B. A. அவர்களால் GoLDmryÓ7Goluulu tři svilu - Oscar Wilde Gör “Dutchess of Paduwa ” GT6örp “ LugSri TT G0of” pintussub முக்கிய இடம் பெற்றது. அதில் நடிக்க விசேட அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். முதியவனும் கொடியவனும் மனைவியின் சூழ்ச்சிக்குப் பலியாகு பவனுமான, ஒரு சிக்கலான பாத்திரத்தைத் தாங்கி நடிக்க நேர்ந்தது. நாடக முடிவில் அப்போதைய வானெலி ஆங்கில சிங்கள நாடகப் பகுதி டைரக் டர்கள் மேடையுள் என்னைக் கண்டு மெச்சினர். முக்கிய பாத்திரம் தாங்கிய திரு. S. M. A. ஜபார், திரு. C. P.M. காசிம், தாசன் பர்ணுந்து என்போர் நடிப்பு என்னைக் கவர்ந்தது. “சுதந்திரன்’ விமர்சகர் ஏனே என்னை "சபாஸ் பதியூர் அரசன்" என மிகைப் படுத்தி எழுதிவிட்டார். இந்த நாடகத்தின் "செற்" அமைப்பு (சாணுவின் திறமை ) யான் கலையுலகில் காணுத தனிச்சிறப்பு மிக்கது. British Council ஐச்
2

Page 26
- 8 -
சேர்ந்த திரு. பெ ள ட ன் உட்பட இரு பிர முகர்கள் சன்மார்க்கசபைக்கு விஜயம்செய்த வேளை எனது பட"அல்ப”த்தில் இருந்து இக்காட்சிப் படத்தைக் காட்டினேன். பல நிமிட ங் கள் திகைத்து ரசித்தார்கள். "சரஸ்வதி பத்திரிகை நிர்வாகி திரு. விஜயபாஸ்கரன் என் இல்லம் வந்தபோது இதனைப் பார்த்து வியப்புற்றர். "சாணுவின் சித்திரக் கண்ணுேட்டம் இந்நாடகத் தில் எல்லா அம்சங்களிலுமே விரவியிருந்தது.
* ஒவியத்தில் வல்லுநராய் இருக்கக்கூடிய ஒருவர் நாடக நுணுக்கங்களை அறிந்த இயக்குநராய் ஒரு நாடகத்திைத் தயாரிக்கும்போது, அது எவ்வளவோ கலையம்சங்களுடன் அமையும் என்பதைச் சாளுவின் ‘பதியூர் ராணி மூலம் பார்த்து வியந்தேன். சித்திரக் கண்ணுேட்டம் * நாடகத் தயாரிப்புக்கு அவசியம் என வலி
யுறுத்துகின்றேன். அடுத்தபடியாக அந்த ஆண்டில் எனக்குப் புகழ் தந்த நாடகம் பகையும் பாசமும் " ஆகும். இதன் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர்க ளுள் திரு. கே. கோபிநாத், திரு. க. சிவதாசன், திரு. த. சிவலிங்கம், திரு. த. புவனேந்திரன் என்போர் குறிப்பிடத்தக்கவர்கள்.
al ୪ଟ
“நாடகத்தில் ஒலியமைப்பு என்றதும் பஞ்சவர்ணங் களையும் மாறிமாறிப் பாய்ச்சுவதைக் குறிப்பிடவில்லை. நாடகத்தில் பல்வேறு கட்டங்களுக்குத் தக நடிகர்களின் உணர்ச்சிப் பெருக்குகளை மேம்படுத்தும் வகையில் அமைய வேண்டிய நுண்ணிய ஒளிப் பிரயோகத்தையே அவசிய மென்கிறேன். ஒளியமைப்பு நுணுக்கமாகக் கையாளப் படும்போது நடிகனின் முகபாவம், நடிப்பு என்பன மெருகேறுகின்றன.”

1960ல் திரு. கே. பாலச்சந்திரன் கொழும்பில் நடாத்திய நாடக விழாவில் * லயனல் வென்ட் தியேட்டரில் நடந்த ‘பதியூர் ராணி"யில் பதியூர் அரசனுக நடிக்கும் கட்டம்.

Page 27
• bıņgnq gì)? og løsgjoặseu úsố · @ “No : icons& 'unlo) og o so:1ęs úr sapıssg)oẾ 'tuscosடிஇேஒப்ஜைன “g :ńss1@@r@ışsunto) ·ıldı : quostwoặgio “Uys : qsoņ@gogospo-augű ‘,q-Qaïwsg, sēıssıs gïgîrie-Issos qɛɛŋúmystisc) sẽĝaĵoĝ-fium
@īgasıęsfÐ mwsgąšųfi ŋufigs asoo ognicos y llons) @ıspuoĚoẾn
 

8
இருபத்தைந்து அரங்குகளில் பவனிவந்த 'நிறைகுடம்
யான் எழுதித் தயாரித்து நடித்த நாடகங் களில் நல்ல வரவேற்புப் பெற்ற நாடகம் “நிறை குடமாகும். ஒன்றரை மணித்தியாலங்கள் வரை நடிக்கத்தக்க வகையிலே அதனை அமைத்திருந் தேன். சில இடங்களில் குறுக்கியும் நடிக்க முடிந் தது. சரித்திர நாடகம் என்ற போர்வையில், நாட்டுப் பற்று, இராஜ விஸ்வாசம், லஞ்ச ஊழல், நேர்மை, கடமை என்பனபற்றி விமர்சனம் செய்யும் வகையில் அமைந்தது நாடகம். இருபத் தைந்து கணிசமான அரங்குகளில் மேடையேறியது இந்த நாடகம் அதன் பட்டியல் இதோ:
1. குரும்பசிட்டி சன்மார்க்க சபை அரங்கு 14-10-61 2. நடேஸ்வராக் கல்லூரி, காங்கேசந்துறை 5-11-6 3. முத்தமிழ்விழா, மாவிட்டபுரம் 27-1-62 4. யாழ் நகரமண்டபம் (கலைப் பிரசாரச் சபை) 26-5-62 5. நாடகவிருந்து (இளவாலை) 30-6-62 6. சனசமூக நிலைய நாடகப் போட்டி 20-7-62 7. யாழ் நகரசபையில் (ஜேமன் ஸ்தானிகர் முன்) 28-7.62 8. இசைவிழா, பரமேஸ்வராக் கல்லூரி 29-7-62 9. வசந்த கான சபை நாடகவிழா, காங்கேசந்துறை 30.7.62

Page 28
- 20 -
10. இந்து இளைஞர் மன்றம், நீர்கொழும்பு 24-8-62 11. மயிலிட்டி கிராமசபை நடாத்திய சாகித்திய விழா 28-9-62 12. கதம்பவிழா (மகாஜனக் கல்லூரி) 62ஆம் ஆண்டு
13. வள்ளுவர்விழா (இடைக்காடு) sy
14. யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை
(இரசிகமணி வரவேற்பு விழா) 64ஆம் ஆண்டு
15. இந்துக்கல்லூரி, மானிப்பாய் (கலையரசுவின்
75ஆவது வயதுப் பூர்த்தி விழா) 64ஆம் ஆண்டு
16. திருக்குறள் மகாநாடு, கிளிநொச்சி 12-6-65 17. நாடகவிழா, சாவகச்சேரி 66ஆம் ஆண்டு 18. விஜயா கல்லூரி, மாத்தளை 67ஆம் , 19. இந்துக்கல்லூரி, உரும்பிராய் 67, s 20. சைவ வித்தியாசாலை, ஊரெழு 67, 99 21 சனசமூக நிலையம் நடாத்திய கலைவிழா,
ஆனக்கோட்டை 67ஆம் ஆண்டு 22. இந்துக்கல்லூரி, சாவகச்சேரி 67ஆம் ஆண்டு
23. திறந்த வெளியரங்கு, யாழ்ப்பாணம்
(பெளர்ணமிக்கலைவிழா பத்தாண்டு பூர்த்தி) 78ஆம் ஆண்டு
24. சன்மார்க்க சபை 73ஆம் ஆண்டு
25. கண்டி இந்து சிரேஷ்ட பாடசாலை 74ஆம் ஆண்டு
இந் நாடகத்தை மேடையிடும்படி வேண்டிய கலைப்பெருமக்களிற் சிலர் குறிப்பிடத்தக்கவர்கள். மாவை ஆதீன பிரதமகுரு சு. து. ஷண்முகநாதக் குருக்கள் அவர்கள், இசைப்புலவர் N. சண்முக ரத்தினம் அவர்கள், கலையரசு கே. சொர்ண லிங்கம் அவர்கள், கலைத்தொண்டன் மறுமலர்ச்சி மன்றத் தலைவர், திரு. P. செல்வரத்தினம் அவர் கள், நடிகமணி திரு. வி. வி. வைரமுத்து அவர்கள், ஆசிரியர் திரு. க. வை. தனேஸ்வரன் அவர்கள்,

- 2 -
வர்த்தகப் பெருமகன் திரு. வி. மார்க்கண்டு அவர் கள்,கொடைவள்ளல் திரு. E. நல்லதம்பி அவர்கள் (நீர்கொழும்பு), கண்டி இந்து சிரேஷ்ட வித்தி யாலய அதிபர் திரு. வி. பொன்னையா அவர்கள் என்போர் மறக்கமுடியாதவர்கள்.
இத்தகைய கலைப்பெருமக்கள் காணிவல் போலல்லாத, முறையான கலைக்கூடங்களில் இந் நாடகத்தை நடிப்பித்தமையை எண்ணி, அதில் யான் நடித்தமையையும் நினைந்து பெருமிதம் கொள்கிறேன். நாடகத்தைத் தொழிலாகக் கொள்ளாத எனது சிருஷ்டி வெள்ளிவிழாக் காண் பது எனக்கு நிம்மதி தருகிறது. "நிறைவு தந்த நிறைகுடம்" என்று கூறி மகிழ்கிறேன். செந்தமிழ் மணி பண்டிதர், பொ. கிருஷ்ணபிள்ளை (பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி முன்னுள் விரிவுரை யாளர்) இதனை வைத்தோ என்னவோ என்னையே 'நிறைகுடம் பொன்னுத்துரை” என்று அழைப் பார். இந்த வெற்றிக்கு ஆதரவு நல்கியவர்களில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் கலைக்கழகத் தலைவராய் இருந்தவேளை தந்த நிதி உதவியை, சன் மார்க்க சபை தந்த ஆதரவை, இரசிகமணி கனக. செந்திநாதன் கூறிய ஆலோசனையை மறக்க (Լpւգ-Ամո Ցl.
இந்த நாடகத்தில் எனது டைரக்ஷனில் பின்வரும் நாடகக் கலைஞர்கள் நடித்தனர். ஆசிரி யர் க. வை. தனேஸ்வரன், ஆசிரியர் கே. கோபி நாத், கவிஞர் வி. கந்தவனம், திரு. கே. மகேந் திரன், திரு. நா. கருணுநிதி, ஆசிரியர் க. கணே சன், திரு.த. புவனேந்திரன், திரு. சி. சிவலிங்கம், திரு. ச. சுப்பிரமணிய சர்மா, திரு. ச. சுந்தர

Page 29
--صص 22 ۔۔۔۔۔۔
மூர்த்தி சர்மா, திரு. ச. பாலகிருஷ்ணன், ஆசிரியர் திரு. S. சுந்தரமூர்த்தி, நடிகமணி வி. வி. வைர முத்துவும் புதல்வியரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
* காத்திரமான கரு, சிக்கலான சம்பவங்கள்
எதிர்பாராத திருப்பங்கள், பொருத்தமான உரையாடல் என்பன அமைந்த நாடகப் பிரதியின் துணைகொண்டு நடிக்கப்படும் நாட கம் வீழ்ச்சியடைய இடமில்லை என்பதை உணர்ந்தேன். இலகு நாடக உத்திமுறை, நாடகங்களைப் பல தடவைகளில் சிக்கனமாக மேடையிட உதவு மென்பதை அறிந்தேன்.
ஒழுங்கற்ற, ஒத்திகைக்கு முக்கியத்துவம் கொடுக்காத அநுபவ நடிகர்களைவிட, ஒழுங் கும் ஒத்திகைக்குத் தவழுது வரவும் வல்ல இளம் நடிகர்களைக் கொண்டே அரிய சாதனை களைச் செய்யமுடியும் என்பதனைக் கண்டேன்.
球
:
*நாடகம் மேடையிடப்படும் தினத்தில் நடிகன் நடை முறையில் ஐகக் கொள்ளவேண்டிய ஒழுங்குகளை அலட்சியம் செய்தால், எவ்வளவுதான் பயிற்சி பெற்ருலும் கூட, உயரிய ஸ்தானத்தைப் பெற்றுவிடத் தவறுகிருன். நாடக அரங்கேற்றத்தன்று நல்ல நடிகன் "மேக்கப் * செய்து கொள்ளுவதற்குக் குறித்த நேரத்துக்கு முன்னரே வந்து விடுகிருன், அப்போதுதான் ஒப்பனை செய்பவள் தனது முழுத் திறமையையும் காட்டமுடியும். ஒத்துழைக்கும் மனப்பான்மை உள்ளவனே சிறந்த நடிகளுக முடியும். " நாள் " என்ற அகந்தையற்று, ரசிகர்கள் புகழ்ந்தாலும் கூட மாணவநிலையில் தன்னை இருத்திக்கொள்பவனே சிறந்த நடிகனுக முடியும்.”

மாவை, முத்தமிழ்க் கலைமன்றத் தயாரிப்பான
எனது 'பண்பின் சிகரம்’ நாடகத்தில் பேரிடிக்
கடும் புயலாக நடிக்கும் திரு. சி. சிவலிங்கத்துடன், ஆசிரியர் ஆலாலசுந்தரமாக யான்.
ஒப்பன: எம். சிவபாலன்.

Page 30
மாவை, முத்தமிழ்க் கலைமன்றத் தயாரிப்பான எனது “பாசக் குரல்’ நாடகத்தில் ஒர் உணர்ச்சியான கட்டம். ச. பாலகிருஷ்ணன், ச. சுந்தரமூர்த்தி சர்மா. த. புவனேந்திரன், ஏ. ரி. பொ. அவரது கரங்களில் ச. சுப்பிரமணிய சர்மா. ப்பனை ஏ. ரி. பொ.
 
 

*பண்பின் சிகரமும் “பாசக் குரலும்
மாவை முத்தமிழ்க் கலைமன்றம் ஈழத்துக் கலை உலகில் தனிச்சிறப்புப் பெற்றிலங்கும் நிறுவனம், அதன் நாடகப் பகுதிப் பொறுப்பை 1962இல் யான் ஏற்றேன். இளம் நடிகர்கள் பத்துப் பேரைப் புடம் செய்து பண்பின் சிகரம் " என்ற நாட கத்தை மகாஜனக்கல்லூரியில் அரங்கேற்றினுேம், யாழ். பரமேஸ்வராக் கல்லூரி இசைவிழா உட்பட நான்கு அரங்குகளில் மேடையிடப்பட்டது. இன ஒற்றுமையையும் மன்னிக்கும் பண்பையும் வலி புறுத்தியது இந் நாடகம், இதைத் தொடர்ந்து தயாரிக்கப்பட்ட “பாசக்குரல் எட்டுத் தடவை கள் மேடையிடப்பட்டன. கீரிமலை புனிதஸ்தல அபிவிருத்தி நிதிக்காக அப்போதைய உள்ளூராட்சி ஆணையாளர் திரு. ச. மாணிக்கவாசகர் அவர்கள் தலைமையிலான குழு அதனை நடாத்துவித்தது. இந் நாடகங்களை எழுதி இயக்கியதுடன் நடித்தமை காரணமாகவும் பெருந்தொகையான உயர்தர இரசிகப் பெருமக்களை ஈர்க்க முடிந்தது, நடித்த இந்த நாடகங்களில் திரு. வே. குலசிங்கம், திரு. சி. சிவலிங்கம், திரு. மு. சிவபாலன், திரு. வ, வைரவப்பிள்ளை, திரு. க. சிவதாசன்,

Page 31
- 24 רודר
திரு. ஐ. பாலசுப்பிரமணியம், திரு. E. மகேந் திரன், திரு. இராஜன் என்போர் நாடக உலகில் மிளிர்ந்து வருகின்றனர். மாவைப் பிரதமகுரு பிரமயூரீசு. து. ஷண்முகநாதக் குருக்கள் பெருமன துடன் கைகொடுத்து நிதிஉதவி ஊக்குவித்தார்கள்.
* நாடக எழுத்தாளன்-இயக்குநன் என்போரின்
சுதந்திரத்திற் குறுக்கிடாது நிதி உதவி ஆத ரிக்கும் பண்புள்ள தயாரிப்பாளர்கள் (சு. து. ஷண்முகநாதக்குருக்கள் போல) ஈழத்தில் முன்வருவார்களேயானல் நாடக உலகு நனி சிறக்க முடியும் என உணருகிறேன்.
நாடகத்தில் ஒருவகைப் போராட்டம் (Conflict) இருத்தல் வேண்டும். வீறு குறைந்த, சிக்கல்கள் அடங்கிய பெரிய சிக்கல் இடம்பெற்றே யாகவேண்டும். அவா வுணர்வு (Suspense) இடையிடையே புகுத்தப்படவேண்டும் மோதல்கள் சிக்கல்களாகவும், அவையே உச்சக் கட்டத்தை (Climax) அமைக்கும் படிகளாகவும் அமைகின்றன. உச்சக் கட்டம் முழுநீளமான நாடகத்தில் மதிநுட்பமாக அமைக்கப்படவேண்டும். உச்சக் கட்டத்தைத் தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகளைத் தளர்வுருமல் சிருஷ்டிப்பதில் எழுத் தாளன் கவனமாய் இருத்தல் வேண்டும்.

Ο
ஆறு நாடகங்களுள "ஆயிரத்தில் ஒருவர்
ஈழநாடு நிறுவனம் சூருவளி நிதிக்காக ஒரு கலைவிழாவை 1965இல் வண்ணை வைத்தீஸ்வரக் கல்லூரி அரங்கில் நடாத்தியது. அதில் யான் எழுதிய " செங்கோல் சரிந்தது " என்ற நாடகத்தை மாவை முத்தமிழ் மன்றத்தினர் மேடையிட்டனர். * இறைபக்தி இருக்கலாம். ஆனல் அது வெறியாக மாறினல் ஏற்படும் விளைவு அழிவே " என்ற கருப் பொருளை விக்கிரக உடைப்பு முதலிய அம்சங்க ளுடன் நடித்தோம். நாடக முடிவில் ‘ஈழநாடு’ ஆசிரியர் திரு. கி. பி. ஹரன் அவர்கள் மேடை யின் பின் விரைந்தார்கள் ; வெகுவாகப் பாராட்டி ஞர்கள். வேறு மூன்று இடங்களிலும் இந் நாடகம் நடிக்கப்பட்டது. 1973இல் கண்டி தமிழ்ப் பாட சாலைகளுக்கிடையே நடந்த மேடை நாடகப் போட்டியில் இதே நாடகத்தை " மதவெறி' என்ற பெயருடன் இந்து சிரேஷ்ட வித்தியாலயம் நடித்து முதலாம் பரிசைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. தவிர இரசிகமணியின் "ஒளி பிறந்தது ", "எனது பரதன்', ' பிற்பகலிலே. ’, ‘இரணியன்", "ஆயிரத்தில் ஒருவர்' என்ற நாடகங்களையும் அரங் கேற்றினேன். பிரபல எழுத்தாளர் திரு. எஸ்.

Page 32
பொன்னுத்துரையின் மேற்பார்வையில் 1964இல் மட்டக்களப்பில் நடந்தேறிய தமிழ் விழாவில், " நரி பேணு சிங்கள நாடகக் கலைஞர்கள், தமிழ் எழுத்தாளர்கள் முன் "ஆயிரத்தில் ஒருவர்" நாடகத்தை ஒரங்க நாடக உத்தியில் நடிப்பித் தேன் ; சேர்ந்து நடித்தேன். ஈழத்தின் சொல் வேந்தர் இரா. சிவலிங்கம், M. A. உட்படப் பலர் பாராட்டினர்.
மாணவர்கள் மத்தியிலே கலையுணர்வு ஊட்டுகிறேன்
ஆசிரியனுக யான் முதன்முதல் கடமையாற்றிய
கல்லூரி காங்கேசன்துறையில் உள்ள நடேஸ்வராக் கல்லூரியாகும். அங்கே " பணமா பாசமா ? ,
" சூழ்ச்சியும் வென்றது ", "பாசத்தின் எல்லை யிலே. ", " தோல்வி’, ‘ மதவெறி', ' இறு திப் பரிசு ", "நள்ளிரவிலே ' என்ற நாடகங்க
ளில் மாணவர்களை ஈடுபடுத்திப் பயிற்சி அளித் ததன் மூலம் நாடகம் பற்றிய அடிப்படை அம்சங்களை அவர்கள் மனதில் பாய்ச்சி னேன். நடேஸ்வராவில் மட்டும் முப்பத்தாறு மாணவ மாணவிகள் என்னிடம் நாடகப் பயிற்சி பெற்றுள்ளனர். "குத்துவிளக்குத் திரைப் படக் கதாநாயகன் திரு. ஆனந்த இராச மாணிக்கத்தை " தோல்வி' என்ற நாடகமூலம் முதன்முதல் நடிக்க வைத்தமையை நினைந்து

سس۔ 27 سس۔
மகிழ்கிறேன். திரு. தேவராஜன், திரு. நா. கருஞனந்தசிவம் என்ற என் மாணவர்கள் கலைக் கழக நாடக எழுத்துப் போட்டியில் பரிசும் பெற்றனர். பின்னர் கடமையாற்றிய கல்கின்னை முஸ்லிம் மகாவித்தியாலயத்திலும், இரஜவலை தமிழ் மகாவித்தியாலயத்திலும், கண்டி இந்து சிரேஷ்ட வித்தியாலயத்திலும் நாடகப்பணி தொடர்ந்தது. கண்டிப் புஷ்பதான மண்டப்திதில் நடித்த "வீரமுரசு' நாடகமூலம் இரஜவலை மகா
வித்தியாலய மாணவர் பதின்மரும், "கூப்பிய கரங்கள்", " நாடகம் * , " இன்பம் மலரும் 74°, * மதவெறி', 'சிக்கலும் சிரிப்பும் ', ' நிறை
குடம் " என்ற நாடகங்கள் மூலம் கண்டி இந்து சிரேஷ்ட வித்தியாலய மாணவ மாணவிகள் முப்பத்திரண்டு பேரும் முறையான நாடகப் பயிற்சி பெற்றனர். இதுவரை கிட்டத்தட்ட எழுபத் தெட்டு மாணவ மலர்களுக்கு நாடகத்திற் பயிற்சி கொடுத்து மேடையேற்றியமை எனக்குப் பெரு மகிழ்வைத் தருகிறது.
" நாடகத்தைத் தொழிலாக உடையவர்களுக்கு இருக்கும் சுதந்திரம் பாடசாலை நாடகங்களைப் பொறுத்த வரை இல்லை. பண்பான பிரஜைகளை உருவாக்குவது கல் வியின் நோக்கங்களுள் தலையாயது.எனவே, மாணவர்களின் உளவளர்ச்சிக்குக் குந்தகம் செய்யாத வகையில் கருவை அமைத்துக்கொள்ள வேண்டும். காதல் காட்சி தவிர்க்க முடியாத ஒன்று எனக் கண்டவிடத்தும்கூட அதைக் கோடி காட்டும் வகையில் புனிதமாக அமைத்துவிடலாம் ".

Page 33
12
"ஆராழுது அசடாவில் ‘பாஸ்கர் பாத்திரம்
அமைதியாக ஆனல் ஆணித்தரமாக நாடகக் கலையைப் பேணும் புரவலர் திரு. பொ. செல்வ ரத்தினம் அவர்கள் தலைமையில் உருவாகிய "மறு மலர்ச்சி மன்றம் கலையுலகில் அரிய நற்பணிகள் புரிகிறது. எத்தனையோ தரமான நாடகங்களை மேடையிட்ட இம்மன்றம் இலங்கைக் கலைக்கழகம் நடாத்திய மேடை நாடகப் போட்டியில் ஆரா முது அசடா" என்ற நாடக மூலம் முதற் பரிசு பெற்றது. தலைசிறந்த நடிகர்களான திரு. ஏ. பிரான்சிஸ், திரு, ஏ. மகேஸ்வரன், திரு. எஸ். ஜே. யோசேப், திரு. ஜி. அன்னப்பா, திரு. ரி. இரகு நாதன், திரு. க. ஞானபண்டிதன், திரு. ஐ. செல்வரத்தினம், திரு. வே. மண்டலேஸ்வரன், திரு. சு. நவரத்தினம், திரு. S. ஜெயபாலன் என் போர் நடித்த இந்த நாடகத்தில் ‘பாஸ்கர்" என்ற முக்கிய பாத்திரம் தாங்கினேன். சுளிபுரம் விக்டோறியாக் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி, கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி, யாழ் நகரமண்ட பம், மானிப்பாய் இந்துக்கல்லூரி, குரும்பசிட்டி சன்மார்க்கசபை, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, மகாஜனக் கல்லூரி, இளவாலை கொன்வென்ட், கிளிநொச்சி, வவனிக்குளம், பம்பலப்பிட்டி சரஸ் வதி மண்டபம் உட்பட இருபத்தொரு தரமான அரங்குகளில் மேடையேறி அமோக வெற்றி ஈட்டிய

மறுமலர்ச்சி மன்றத்தாரின் ஆராமுது அசடா" நாடகக் கலைஞர்கள் :
இடமிருந்து வலம்: ஏ. ரி. பொ., N. செல்லையா, ஏ. பிரான்சிஸ், சு. நவரத்தினம், ஏ. மகேஸ்வரன், T. தில்லைநாதன், க, ஞானபண்டிதன், எஸ். ஜே. யோசேப், எம். ஜெயபாலசிங்கம்.
ஒப்பனை : க. ஞானபண்டிதன், ஏ. மகேஸ்வரன்.

Page 34
மேடை நாடகப் போட்டியில் கலைக்கழக 1ஆம் பரிசில் பெற்ற மறுமலர்ச்சி மன்ற "ஆராமுது அசடா" நாடகத்தில் கதாநாயகியாக ஏ. மகேஸ்வரனும், உச்சக்கட்டக் காட்சியில் தோன்றும் எஸ். ஜே. யோசேப்பும், யானும் (ஏ. ரி. பொ.).
ஒப்பன: நவாலியூர் க. நடேசன்.
 

--۔ 29 - سس۔
நாடகம் இது.இன்னும் நான்கு தடவைகள் மேடை யேறினல் வெள்ளிவிழா கொண்டாடப்பட வேண் டிய கலைப்படைப்பு இது. இத்தகைய நாடகத்தில் முக்கிய பாகம் ஏற்ற பூரிப்பு எனக்கு.
இந்த நாடகத்தில் "பாஸ்கர்" என்ற பாத் திரத்தைத் தாங்கி நடித்த யான் உடையைப் பொறுத்தமட்டில் ஒரே ஒரு தடவை மட்டும் தேவை நோக்கி எனது " கோற்றை மாற்றி அணிந்தேன். இந்த நாடகத்தை ஒட்டி நடந்த பாராட்டு வைபவத்தில் தற்போதைய, பலாலி ஆசிரிய கலாசாலை ஆங்கில விரிவு ரை யாளர் திரு, கே. சோமசுந்தரம், B. A. (Hons) அவர்கள் சில குறிப்புக்கள் கூறினர்.
*நடிகர்கள் அடிக்கடி உடை மாற்றம் செய் வதைக் கண்டித்தார். மனன சக்தியை, உச்சரிப்புச் சிறப்பை, நடிப்புத் திறமையை உடையவன் உடை மாற்றத்தில் தஞ்சம் புகவேண்டிய தேவையில்லை என்பது அவர் வலியுறுத்திய நுணுகிய அம்ச மாகும். இது என் அனுபவ உண்மையும் கூட.
* நாடக மன்றம் எப்படி இயக்கப்படவேண்டும் என்ற ஒரு முறையை "மறுமலர்ச்சி மன்றத்தில் தான் என்னுல் காண முடிந்தது. பண்பான பலர் அங்கத்துவம் வகித்துவரும் காரணத்தால் நிருவா கத்திற்கு ஒரு குழு,மேடையேற்றத்திற்கு இன்னுெரு குழு இப்படிப் பிரிந்தும் தேவைநோக்கி இணைந்தும் இயங்கிய தன்மையை அவதானித்தேன், சிக்கல்கள் ஏற்படும் வேளை தலைமைப் பீடத்திற்கு நடிகர்கள் தலை சாய்க்கும் பண்பு என்னைக் கவர்ந்தது. கட்டுப்பாடு ஒழுங்கு பெரிதும் பேணப்படுகிறது. இப்படியான மன்ற அமைப்பு நாடகக்கலை வளர வழிவகுக்கும் எனலாம்.

Page 35
13
*லும்பிளித் தியேட்டரில் இரு தடவை இறுதிப் பரிக’
இலங்கை வானெலி நடாத்திய மன்ற நாடக நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் "இறுதிப் பரிசு " என்ற இலக்கிய நாடகத்தை வானெலிக்கென எழுதித் தயாரித்தளித்தேன். 'பின்னர், அதனை இரண்டு மணிநேரம் வரை நடிக்கத்தக்க மேடை நாடக மாக்கினேன். கல்வி நூற்ருண்டு விழாவையிட்டு 1968இல் ஈழத்து ஆசிரிய கலாசாலைகளுக்கிடையே நடந்த மேடை நாடகப் ப்ோட்டிக்கு, கொழும்புத் துறை ஆசிரிய கலாசாலை எனது " இறுதிப் பரிசு “ நாடகத்தைத் தேர்ந்து பயின்று நடித்துப் பரிசு பெற்றது. மேற்படி நாடகத்தை இரு தடவைகள் கொழும்பு " லும்பிளித் தியேட்டரில் மேடை யிட்டனர். அப்போதைய அதிபர் திரு. வி. சி. விஸ்வலிங்கம், B, A, E. T. அவர்கள், இலக்கிய சுவை சொட்டும் உரையாடலை விதந்து பேசி, நாடகப் பிரதிக்காக 75 ரூபாவரை தந்து சிறு உப காரமும் செய்தார். முன்னர் எவ்வித தொடர்பு மில்லாத அதிபரிடம் இந் நாடகம் உருவாக்கிய உணர்வை, அதன் உந்தலால் எனக்கு அவர் தந்த மதிப்பை விடவா வேறு கலைப்பரிசு இருக்கிறது. சமீபத்தில் அளவெட்டி, அருணுேதயக் கல்லூரி அதிபர் திரு. வி. கந்தவனம் அவர் களும், அருட்கவி சி. விநாசித்தம்பி அவர்கள் உட்படப் பல ஆசிரியர்களும் சேர்ந்து நடித்து ஆயிரத்துக்கு

- 31 -
மேற்பட்ட ரசிகப் பெருமக்களுக்கு முன் என் நாடகத்தை அணி செய்து நின்ற நினைவு என் நெஞ்சை விட்டகலா நிகழ்ச்சி. நடிக நண்பன் ரி. எஸ். லோகநாதன் அவர்கள் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் நடந்த இல்ல நாடகப் போட் டிக்கு இதனைப் பயிற்றி அளித்ததாகவும், நாடகம் இரண்டாவது இடத்தைப் பெற்றதாகவும் கூறி ஞர். கலை உள்ளம் உயர்ந்ததுதானே. பல கல்லூரி களிலும், மன்றங்களிலும் இந்நாடக ம் பல தடவைகள் மேடையேற்றப்பட்டு விட்டன. பிரபல நாடகக் கலைஞர்களான திரு. S. T. அரசு, திரு. R. பேரம்பலம் என்ப்ோர்கூட சில பாத்தி ரங்கள் தாங்கி எனக்குப் பெருமை தந்தனர். பத்து ஆண்டுகள் ஒரு சிருஷ்டி வாழ்கிறதென்ருலே அது சிருஷ்டி கர்த்தாவுக்குத் திருப்தியைத் தரு மென்றே ககுதுகிறேன்.
கோப உணர்வும் மெய்ப்பாடும் : மூக்கு விரிதல், கண் சிவத்தல், விழி உருளல், நெற்றி சுருங்கல், புருவம் குவித்தல், விரல்களை மடக்கிக் குத்துதல், கை ஓங்கல், உடல் படபடத்தல், நறநறவெனப் பல் கடித்தல், காலை அழுத்தி மிதித்தல்.
பய உணர்வு: புருவத்தைச் சுருக்குதல், கையை உயர்த்து தல், உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தல், மார்பில் துடிப்பை உண்டாக்கல், பெருமூச்செறிதல்.

Page 36
14
*நாடகம்’ என்ற ஓரங்க நாடகம்
கலைக்கழகப் பரிசு பெற்ற என் " நாடகம் " என்ற ஓரங்க நாடக நூல் வெளியீட்டு விழாவும் மேடை யேற்றமும் ஒரே நாளில் நிகழ்ந்தன. எழுத்து வடிவில் உள்ள நாடகத்தை மேடையிலும் பார்த்தபின்னரே விமர்சிப்பது ப்ொருத்தமானது என்பதை வலியுறுத்தியே இவ்வொழுங்கைச் செய் திருந்தேன். இந்நாடகத்தை மேடையிற் பார்த்து ரசித்த, யான் போற்றும் நாடகக் கலைஞர் ஓவியர் திரு. K. K. V. செல்லையா அவர்கள், நாடக முடிவில், " உங்கள் நாடகங்களுள் இது என்னை வெகுவாகக் கவர்ந்த நல்ல நாடகம்' என்று மெச்சினர். மேடையிடமுன் நூலுரு கொடுக்கப் பட்டபோது முகப்புப்படம் வரைந்த இவர், நாடக உரையாடலை மட்டும் எழுத்து வடிவில் பார்த்துவிட்டு, ' இந்த நா ட கத்  ைத ஏன் பொன்னுத்துரை நூலாக்குகிருர்’ என்று தாழ்த்தி மதிப்பீடு செய்திருந்தார். மேடையில் கண்டதின் பின் புகழ்ந்திருக்கிருர் என்ருல், அது காட்டும் உண்மை-நாடகநூல்களின் தரத்தை மேடையில் பார்த்தபின்தான் எடைபோட வேண்டும் என்ப தேயாகும். யாழ் திறந்தவெளியரங்கு, அருணுே

கலைக்கழகப் பரிசுபெற்ற 'நாடகம்" என்ற எனது ஓரங்க நாடகம் குரும்பசிட்டி சன்மார்க்க சபையில் மேடையேறியபோது பயந்தாங்கொள்ளிகளாக யானும், கவிஞர் வி. கந்தவனமும் தோற்றும் கட்டம், ஒப்பனை : த. இராசரத்தினம்.

Page 37
* ஈழநாடு" நடாத்திய சூறவளி நிதிக் கலைவிழாவில்
மாவை முத்தமிழ்க் கலை மன்றம் அளித்த எனது "செங்கோல் சரிந்தது" நாடகத்தில் மன்னராக யானும், அமைச்சராக திரு. சி. சிவலிங்கமும். ஒப்பனை : கலைஞர் S. T. அரசு
 

தயாக் கல்லூரி, கண்டி இந்து சிரேஷ்ட பாடசாலை போன்ற பல அரங்குகள் கண்ட இந்த நாடகத்தில் * வேலு பாத்திரம் தாங்கி தத்ரூபமாய் நடித்த அளவையூர் ஆசிரியர் ஒவியர் V. சுந்தரமூர்த்தி அவர்களை மறக்கமுடியாது. சிங்கப்பூர் சுப்பிரமணி யமாய் நடித்த திரு. வை. தனேஸ்வரன் அவர்களும் இயற்கையாய் அழகுற நடித்து குணசித்திர நடிக ரென நிரூபித்தார். எழுத்து வடிவில் மட்டும் படித்துவிட்டு "மல்லிகை"யில் விமர்சனம் செய்த புதுவை இரத்தினத்துரை அவர்கள் கையாண்ட சில வரிகள் என் மனதில் சில கீறல்களை இட்ட போதும் மேடையேற்றத்தைக் கண்டிருந்தால் சிலவேளை தன் கருத்தை மாற்றவும் கூடும் என எண்ணினேன். பி ர பல சிறுகதை ஆசிரியர் திரு. தி. ஞானசேகரன் அவர்கள் கண்டியில் இந் நாடகத்தைப் ப்ார்த்தபின் தமது கிராமத்தில் இதனை மேடையேற்றக் கங்கணம் கட்டியமை, மேடைக்கண்கொண்டே நாடகத்தை எடைபோட வேண்டு மென்ற கருத்தை வலியுறுத்துவதுபோலத் தெரிகிறது.
இந்த நாடகத்தில் நடித்த சில முக்கிய நடிகர்கள் :
திரு.
. நாகேஸ்வரன்
சுப்பிரமணிய சர்மா சுந்தரமூர்த்தி சர்மா . பாலகிருஷ்ணன் , , பொ. கணேசமூர்த்தி , , சி. தயாபரன் , , க. சிவபாலன் , . Gormr. LunT Gvg5 LonTrif , , மு. விஜயகுமார் , , சி. மயில்வாகனம்
p
:

Page 38
15
வானெலி நாடகமும் " தாளக் காவடியும்
இலங்கை வானெலி நிலையத்தினர் வானெலிக் கலைவிழாவை 1960இல் யாழ்ப்பாணத்தில் நடாத் தியபோது ‘காதல் கைநட்டம்’ என்ற நகைச் சுவை நாடகத்தைத் தயாரித் தளித் தேன். கொழும்பு ருேயல் கல்லூரியில் 1962இல் நடை பெற்ற வானெலிக் கலைவிழாவில் எனது வருஷம் பிறந்து முன்னம் முன்னம். என்ற நாடகம் இடம்பெற்றது. ஈழத்தின் நாடகத் தந்தை கலை யரசு கே. சொர்ணலிங்கம், நகைச்சுவை மன்னன் கே. செல்வரத்தினம், கே. என். நவரத்தினம், வசந்தா அப்பாத்துரை என்போர் என்னுடன் சேர்ந்து நடித்தனர். ரசிகர்களின் பிரதிபலிப்பு நாடகத்தின் தரத்தைக் காட்டிற்று. மேற்ப்டி நாடகத்தை மேடைநாடகமாக்கி "அண்டல் ஆறுமுகம்" என்ற பெயருடன் இதுவரை இருபது தடவைகள் நடித்துவிட்டேன். மெதடிஸ்த மிஷன் நடாத்திய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை மெதடிஸ்த கல்லூரியில் இரு தடவைகள் மேடையிடப்பட்டன; தொடர்ந்து யாழ். "ரிமர் மண்டபத்திலும் நடாத்துவித்தனர். மிஷனின் தலைமைப்பீடத்தைச் சேர்ந்த தமிழ் விளங்க எழுதவல்ல இரு ஆங்கிலேயர் இந்நாட கத்தை ரசித்த நிலையில் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இதோ : м

- 35 -
Methodist Church, Ceylon, Superintendent Minister, Rev. L. J. Julian M. A.
The Manse,
Dockyard Road, Trincomalee. 11. 11-67 Mr. A. T. Ponnuthurai,
The memory of your hilarious “yairls go (upstb' is still in my mind. I wonder how many other performances you have given since we met in Point Pedro last June, ...... • • • ... ... ..
My own view is that the play is too good to be missed.
Yours sincerely
Lewis J. Julian
"வீரகேசரி நிறுவனம் யாழ். திறந்த வெளி அரங்கில் ‘வீரகேசரிக் கலைவிழா'வைக் கோலாகல மாகக் கொண்டாடியது. அதிலும் "அண்டல் ஆறுமுகம் வெற்றியீட்டியது. திரு. க. வை. தனேஸ்வரன் திரு. வி. கந்தவனம், திரு. V. சுந்த ர மூர்த்தி, திரு. ச. பாலகிருஷ்ணன் என்போர் என்னுடன் எடுப்பாய் நடித்தனர். ஒப்பனைமூலம் எனது நாடகங்களை மெருகூட்டிய திரு. த. இராசரத்தினமும் இந்நாடகத்தில் சில தடவை நடித்துள்ளார். இந்த வரிசையிலே 'பஞ்ச பூதங்கள்", "தாளக் காவடி" என்ற வேறு வானெலி நாடகங்களையும் எழுதினேன். 1973 நவம்பரில் ‘தாளக் காவடி" ஒலிபரப்பப்பட்டு பெரும் புகழ் ஈட்டித் தந்தது. வானுெலி நடிகர்கள் ரசிகர்கள் வேண்டுகோட்படி இரு வாரங்களில் திரும்பவும் ஒலிபரப்பப்பட்டது. 1944ஆம் ஆண்டு தாளக்

Page 39
ཡང་ནས་ 36 ཕ་མ་
காவடி பழகி ஆடிய அநுபவம் யதார்த்த பூர்வமாக நாடகத்தை எழுத உதவியது. மேடை நாடகத் தயாரிப்பில் மட்டுமன்றி வானெலி நாடகத் தயாரிப்பிலும் மேம்பட்டு மிளிரும் திரு. கே. எம். வாசகரின் தயாரிப்புச் சிறப்பால் நாடகம் சுவையாக அமைந்தது. "புளுகர் ப்ொன் னையா’ புகழ் திரு. கே. கணேசபிள்ளை, செல்வி சந்திரப்பிரபா மாதவன், திரு. ரி. ராஜகோபால், வித்துவான் சோதிநாதன், திரு. அமிர்தநாயகம் என்போரின் ரேடியோ நாடக நடிப்பு அநுபவம், நாடகம் முழுவதிலும் இழையோடி இருந்தது. தாளக் காவடி ஆட்டுவது போலத் தாளம்தட்டி **செல்வச் சந்நிதியிலே அமரும் ப்ன்னிருகை வேலவனே தா” என்று பாடி, 'தகுட தீம் தக தா' என்பன போன்ற தாளக்கட்டுக்களை, தீர்மானங்களை யான் உச்சரித்த வேளை நடிகமணி வி. வி. வைரமுத்து பிற்பாட்டுப் பாடி மெரு கூட்டிய வேளை, இசை இசைத்த வாத்தியக் குழு வினரே வியந்தனர். பாராட்டுக்கள் தெரிவித்த பிரமுகர்களில் நடேஸ்வராக் கல்லூரி அதிபர் திரு. P. சோமசுந்த ரம், B. A. அவர் கள், குறமகள், B. A. அவர்கள், கண்டி அசோக வித்தி யாலய அதிபர் திரு. நடராசா, B. A. அவர்கள், பரிசுத்த பெனவெற் கல்லூரி தமிழ்ப் பிரிவு அதிபர் திரு. சோ. செளந்தரநாயகம், B. Sc. அவர்கள், அகஸ்தியர், சிற்பி, இரசிகமணி, கொழும்பு திரு. வ. செல்லமுத்தர், நீர்கொழும்பு திரு. க. விஸ்வநாதன், திரு. த. செல்லத்துரை, தலாத்தோயா தமிழ் வித் தி யால ய அதிபர் திரு. கே. மதியாபரணம், அதிபர் கே. எஸ். தம்பு, மாவைப் பிரதமகுரு என்போர் தந்த ஊக்க உரைகள் என் உள்ளத்தை விட்டக லாதன.

16
கலக்கழகப் போட்டியில் பெற்ற சில பரிசில்கள்
இலங்கை கலைக்கழகம் நடாத்திய ஓரங்க நாடக எழுத்துப் போட்டியில் 1966இல் 'நாடகம்" என்ற நாடகத்துக்கு 2ஆம் பரிசிலையும், 1967இல் “நாமொன்று நினைக்க. * என்ற நாடகத்துக்காக 1ஆம் பரிசிலையும் பெற்றுக்கொண்டேன். பல ஆண்டுகள் ஓரங்க நாடகம்பற்றிச் செய்த ஆராய் வும், ஒரு காட்சியில் முழு நாடகத்தையும் நகர்த்தும் உத்தியைப் பெரிதும் வியக்கும் இயல்பும் இத்துறையில் முன்னணிக்கு வர வழிவகுத்தன வெனலாம். பரிசில்கள் பெற்ற வேளை உத்வேகம் அளிக்கும் வகையில் யாழ். இலக்கிய வட்டமும், சன்மார்க்க சபையும், மறுமலர்ச்சி மன்றமும் திரு. ஏ. எம். ரஹ்மான் அவர்களும் தேநீர் விருந் தளித்துக் கெளரவித்தமையை மறக்கமுடியாது.
e
* இன்றைய பிரச்சினைகளை முறையாக நாடக உருவில் காட்டச் சரித்திர நாடகங்கள் ஈடுகொடுப்பதாய் இல்லை. பரந்து விரிந்த பல்வேறு பிரச்சினைகளையும் தொடவல்ல சக்தி சமூக நாடகங்களுக்கே உண்டு. எனவே இன்றைய தேவை முறையாகக் கலாரூப மிடப்பட்ட சமூக நாடகங்களே."
4.

Page 40
17 நூல் வடிவில் எனது நாடக ஆக்கங்கள்
இறுதிப் பரிசு (முழுநீள நாடகம்) நாடகம் (ஓரங்க நாடகம்) கூப்பிய கரங்கள் (ஓரங்க நாடகம்)
பக்தி வெள்ளம் (ஒரங்க நாடகம்) பாடசாலை நாடகம் (கட்டுரை)
வானெலியில் ஒலிபரப்பப்பட்டு, மேடைக்கென எழுதப்பட்ட " இறுதிப் பரிசு ’ நாடகம், யாழ். இலக்கிய வட்டத்தாற் பிரசுரிக்கப்பட்டது. இவ் வாண்டு (1974) ஆரம்பத்தில் முழுப் பிரதிகளுமே விற்பனையாகி விட்டன. இரண்டாவது பதிப்புப் பற்றிச் சிந்திக்கின்றேன். அடுத்து, ' நாடகம்", "கூப்பிய கரங்கள்", "பக்தி வெள்ளம்" என்ற ஓரங்க நாடகங்கள் வெளிவந்தன. Lu 6ööT Lç- 95 LD சி. கணபதிப்பிள்ளையவர்கள் தொகுத்த "சிந்தனைச் செல்வம் " நூலின் அநுபந்தமாக எனது சமய நாடகமான "பக்தி வெள்ளம் சேர்க்கப்பட்டமை எனக்குப் பெரும் கெளரவத்தைக் கொடுக்கிறது. எனது நாடகங்களை அச்சுவடிவு கொடுத்து ஊக்கிய பெருமைக்குரியவர்கள் திருமகள் அழுத்தக அதிபர் திரு. மு. சபாரத்தினம் அவர்கள், "வெற்றிமணி" ஆசிரியர் திரு.மு.க.சுப்பிரமணியம் என்போராவர். பெருந்தொகை நல்கி ஊக்கிய திரு. தா. திருநாவுக் கரசு அவர்கள், திரு. சி. சிவலிங்கம் அவர்கள் திரு. S. சிதம்பரப்பிள்ளை, B, A, B, sc. அவர்கள், திரு.வி. மார்க்கண்டு அவர்கள், திரு. அ. குகதாசன் அவர்கள் ஆகியோரது தாராள மனப்பான்மை கலைத்தொண்டு மேன்மேலும் பெருகட்டும்.

18
பூரீலங்கா சாகித்திய மண்டலமும் நாடகக் கருத்தரங்கங்களும்
சாகித்திய மண்டலம் முதல் தடவையாக 1966இல், கொழும்பு ருேயல் கல்லூரியில், நாடகம் எழுதுதல் பற்றிய கருத்தரங்கினை நடாத்தியது. தலைவராகப் பேராசிரியர் கலாநிதி சு. வித்தியா னந்த்ன்,M. A. அவர்களும், செயலாளராகக் கலாநிதி கா. சிவத்தம்பி, M. A. அவர்களும் செயலாற்றிய காலம், நாடக உலகு துரித நடை இட்ட காலம். இவர்கள் தந்த ஊக்கத்தால் " பாடசாலை நாடகம்’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையைஇலங்கை வானெலி தமிழ் அதிகாரி திரு. கே. எஸ்.நடராசா (நாவற் குழியூர் நடராஜன்) அவர்கள் தலைமையில் சமர்ப் பித்துக் கலந்துரையாடலிலும் பங்குகொண்டேன். தொடர்ந்து o 9 Julas 5T L-assid”, * நகர்ப்புற நாடகங்கள்’ என்ற கட்டுரைகளைச் சமர்ப்பித் தேன். இவற்றைவிடச் சாகித்திய மண்டல வெளி யீடான "கலைப்பூங்கா"வில் ஒருமுறை எனது * நாடகமும் மரபும்" என்ற கட்டுரையும் வெளி வந்தது. "ஓரங்க நாடகம்" என்ற ஆராய்ச்சிக் கட்டுரையைத் ‘தீபம்’ ஆசிரியர் விதந்து தம் பத்திரிகையிற் பிரசுரித்தமை எனக்குப் பெருமை யைத் தருகிறது. எப்படியோ கலை இலக்கிய கர்த்தாக்களை ஈர்த்து நிற்கும் திங்கள் வெளியீ டல்லவா ‘தீபம் ".

Page 41
19
நாடகக் கட்டுரைகள் ஏடேறி வந்தன
ஈழத்து நாடகக்கலை தனிச்சிறப்புடன் மிளிர வேண்டும் என்ற உந்தலால் காலத்துக்குக் காலம் பத்திரிகைகள், சஞ்சிகைகள் வாயிலாகக் கட்டுரை கள் எழுதினேன். அவற்றுள் 'நாடகக்கலை வளர ub 0 0 ) ) { * (வீரகேசரி), "கால் நூற்ருண்டில் ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சி (மித்திரன்), “பாடசாலை நாடகம் (தினகரன்), "ஒரங்க நாடகம்" (தின கரன், தீபம்) 'நாடக உலகில் நான் கண்ட நால்வர்" (கலைச்செல்வி), 'நாடகம் நடத்திப்பார்’ (ஈழநாடு), "இலங்கையர்கோன் நாடகங்கள் " (ஈழநாடு), “எனது நாடக அநுபவங்க ள்" (மல்லிகை), “சிறந்த நடிகனக வேண்டுமா? (வலி வடக்கு சனசமூக சமாஜ மலர்), “சமூக நாடகமும் சரித்திர நாடகமும் (கலைக்கண்) என்பன குறிப் பிடத்தக்கன. 1-8-74இல் காலமாகிய மக்கள் கவிமணி திரு, மு, இராமலிங்கம் அவர்கள் சில மாதங்களுக்கு முன் தான் சேர்த்துவைத்திருந்த இக் கட்டுரைகளிற் சிலவற்றை எனக்கு அனுப்பிவைத் ததை நினைந்து பெருமிதமடைகிறேன். பழைய அரிய சம்ஸ்கிருத நாடக இலக்கிய மொழிபெயர்ப்பு நூல் களை யும் எனக்கு அன்பளிப்புச் செய்த அவர்தம் பெருந்தன்மையையும் வியக்கிறேன்.

2O
சிந்தையை ஈர்த்த சில சிங்கள நாடகங்கள்
யான் முதல் முதல் பார்த்த சிங்கள நாடகம் 'தரிபேணு" என்ற புதிய உத்தியிலமைந்த நாடகம். வியந்த ஒரு நிலையில் நடிகர்கள் குழுப் போட்டோ ஒன்றை வாங்கி என் அல்பத்தில் ஒட்டி இன்றும் பேணுகிறேன். இந்நாடகத்தில் நடித்த சிங்கள அன்பர் ஒருவரைப் பல ஆண்டுகளின் பின் கண்ட வேளை இதனைக் காட்டி மகிழச் செய்தேன். "வெஸ்முகுணு" என்ற நாடகத்தை யாழ் - நகர மண்டபத்தில் பார்த்து முடிந்ததும் வீட்டுக்கு விரையவில்லை. அதில் முக்கிய பாத்திரம் தாங்கி, நடிப்பித்த இயக்குநரைச் சந்தித்து ஊக்குவித்தே திரும்பினேன். கென்றி ஜெயசேனவின் "குவேனி" உட்பட இரு நாடகங்களைக் கண்டியில் பார்த்தேன். அவற்றை விமர்சிக்கும் வகையில் கட்டுரைகூட எழுதினேன். அவரது கலைத்துவத்துக்கு யான் செலுத்திய காணிக்கை அது. திரு. சரத்சந்திரரின் நாடகங்களைக் காணும் வாய்ப்புக் கிட்டவில்லை. இருப்பினும் கண்டி அமெரிக்கன் கலாசார நிலை யத்தில் நடந்த கருத்தரங்கில் அவரையும், கென்றி ஜெயசேன, வசந்தகுமார் ஆகியோரையும் காண

Page 42
- 42 -
நேர்ந்தது. கருத்துக்களைக் கேட்கவும், கலந்துரை யாடவும் முடிந்தது. சிங்களச் சகோதரர்களின் சிறந்த சிருட்டிகளை, சிறந்த சிருட்டி கர்த்தாக்களைப் புகழ வாழ்த்தப் பின்னிற்கவில்லை.
* நல்ல சிருஷ்டிகளைப் பார்த்தபின்கூட சிலர் வாழ்த்துகிருர்கள் இல்லை. அருமையானது என்பதற்குப் பதில் சுமார் " என்கின்றனர். மெளனமாகவும் இருந்து விடுகின்றனர். குறைகள் உள்ள நாடகத்தைக் கண்டுவிட்டால் போதும் இயக்குநனை ஆற்றுப்படுத்தும் வகை யில் இன்றி, மனம் நோகக்கூடியதாக மட்டம் தட்டும் வகையில் பிரசாரம் செய்வதில் பேரின்பம் காண்கின்றனர். இந்த மனேநிலை அவசியந்தான ?
亲
"ஈழத்துத் தமிழ் நாடக உலகு மேம்பட 'ஒசியில் நாடகம் பார்க்கும் மனேநிலையை விட்டு நாமாகவே பணம் கொடுத்துப் பார்க்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். தயாரிப்பாளர்களும் நன்கு திட்டமிட்டு, பார்வையாளர்கள் பிரசாரம் செய்யத்தக்க அளவு, தரமான நாடகங்களை மேடையிடவேண்டும். நகர்ப் புறங் களில் சிங்கள சகோதரர்கள் தமது நாடகங்களைப் பணம் கொடுத்துப் பார்க்கத் திரள்வது என்னை வியக்க வைக் கிறது. யான் பார்த்த எந்த சிங்கள நாடகங்களுமே தரங் குறைந்ததாக எனக்குப் படவில்லை. "நாடகங்களுக்குப் போனல் ஒருவித திருப்தி அடையல்ாம்" என்ற எண்ணம் பார்வையாளருக்கு ஏற்படும் வகையில் நாடகங்களை உருவாக்க வேண்டும்."

விமர்சனத்தை ஊக்கி நாடகத்தை வளர்த்தவர்கள்
* சுதேசமித்திரன்" என்ற வார ஏடு நாடக விமர்சனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அன்று (1955-59) அத்துறையை வளர்க்க முனைந்தது. இதனைப் போற்றியவன் யான். ஈழத்துப்பத்திரிகை களும் இத்தகைய பணியை ஆற்ற வேண்டுமென மேடைகளில் யான் பேசியதும் உண்டு. கலாநிதி திரு. க. கைலாசபதி, M. A. அவர்கள் (தலைவர் பல்கலைக் கழக யாழ். வளாகம்) 'தினகரன்' ஆசிரி யராய்ப் பணிபுரிந்த வேளை இக்குறை துடைக் கப்பட்டது; மக்கள் மத்தியில் நாடகக்கலைஞர்களின் மதிப்பேறியது. மன்ற நாடக அறிமுகம் என்ற பகுதியை ஆரம்பித்துத் திரு. R. சிவகுருநாதன் அவர்களும் (ஆசிரியர் 'தினகரன்") நாடக உலகுக்கு உத்வேக ம் கொடுத்தார். திரு. லோகநாதன் * வீரகேசரி’ வார ஏட்டின் பொறுப்பாசிரியராய் இருந்த வேளை நாடகத்துறைக்குத் தனிமெருகேற் றினர். ‘ஈழநாடு" தாராளமாகக் கலை அரங்கு" மூலம் நாடகப்பணி புரிந்தது. இத்தகைய நிலை நாடகக் கலைஞர்களை ஊக்கியது ; உயர்த்தியது. யானும் அவர்களுள் ஒருவன்தானே?

Page 43
22
"காவியப் பரிசும் கருத்துப் பரிவர்த்தனையும்
புதிய பரீட்சார்த்த நிகழ்ச்சியாக இவ்வாண்டு "ஈழகேசரிப் பொன்னையா" நினைவு தினத்தில் "காவியப் பரிசு" என்ற கவிதை நாடக வாசிப்பு நிகழ்ச்சியைத் தயாரித்தளித்தேன். நல்ல வர் வேற்புப் பெற்ற நிகழ்ச்சியிது. இதுபற்றி 'தீபம்’ மாத இதழில் யாழ்வாசி எழுதிய இலங்கைக் கடிதத்திற் குறிப்பிடப்பட்டவை இவை :
"குரும்பசிட்டி சன்மார்ர்க சபையினர் மிகவும் புதுமையான நிகழ்ச்சி ஒன்றைப் பெருவெற்றியுடன் சமீபத்தில் நடாத்தினர். பிரபல எழுத்தாளரும் இலக் கிய விமர்சகருமான சிதம்பர ரகுநாதன் எழுதிய "காவியப் பரிசு" என்ற கவிதை நாடகத்தைப் பொது மக்கள் முன்னிலையில் வாசித்துக் காட்டினர். நாடகம் நடிக்கப்படவில்லை. வாசிப்புத்தான் நடைபெற்றது. எனினும் வாசிப்போர் மேடையிலே தோன்றி, தத்தம் பாத்திரங்களின் குண இயல்புகளை நன்குணர்ந்து பொருத்தமான முறையில் குரலை ஏற்றியும் தாழ்த்தியும் வாசித்தமை நல்லதொரு நாடகத்தை நேரிற் கண்டு களிப்பதைப் போன்ற பிரேமையை ஏற்படுத்தியது என்ற உண்மையை அந் நிகழ்ச்சியை உடனடியாகவே விமர்சனம் செய்த செம்பியன்செல்வன், நாவேந்தன், குறமகள், கவிஞர் கந்தவனம், திரு. ஆ. சிவநேசச் செல்வன் ஆகியோர் ஒப்புக்கொண்டனர். தமிழ் நாட கங்களைத் தயாரித்து அரங்கேற்றுவதிற் பெரும் கஷ்ட மும் நஷ்டமும் அடைந்து வருவோர்க்குப் பயன் மிக்க புதுமையான ஓர் உத்தியை அறிமுகம் செய்த திரு. ஏ. ரி. பொன்னுத்துரை பாராட்டுக்குரியவர்." guid-June 1974.

பிரபல விமர்சகர் சிதம்பர ரகுநாதனின் தேசபக்தியை வலியுறுத்தும் * காவியப் பரிசு நாடக வாசிப்பைச் சன்மார்க்கசபை நடாத்தியவேளை எனது பயிற்சியிற் பங்குகொண்ட இளம் கலைஞர்கள்: செல்வன் சி. தயாபரன்; செல்வன் பொன். பாலகுமார்; யான்; ஆசிரியர் நா. கருளுனந்தசிவம் செல்வன் மு. விஜயகுமார்.

Page 44
* வீரகேசரி கலைவிழா யாழ். திறந்தவெளியரங்கில் நடந்த போது, " அண்டல் ஆறுமுகம்’ என்ற எனது நாடகத்தில் நடித்த கலைஞர்கள்: பெண்ணுக - ச. பாலகிருஷ்ணன்; க. வை. தனேஸ்வரன், ஏ. ரி. பொ., V. சுந்தரமூர்த்தி, V. asj6g5QI 60Tib.
ஒப்பனை: த. இராசரத்தினம்.
 

2c
நாடக மேடையில் நாதஸ்வரக் கலாமேதை திரு N. K. பத்மநாதன்
ஈழத்துப் பிரபல குணசித்திர நடிகர் திரு. R. பேரம்பலம் அவர்கள் 1968இல் தயாரித்து யாழ்-நகர மண்டபத்தில் மேடையிட்ட "திருநா வுக்கரசர்" என்ற சமய நாடகம் ஆத்மீக நெறியின ருக்குப் பெருவிருந்தாய் அமைந்தது. இந்த நாட கத்தில் நாதஸ்வரக் கலாமேதை திரு. N. K. பத்ம நாதன், நாட்டியப் பேரொளி லீலா நாரா யணன் என்போரை நாடகக் காட்சிகளிற் பொருத்தமாகப் புகுத்தினர். அவர்கள் மத்தியில் அடியார்க்கு அடியன் அப்பூதியடிகளாகத் தோன் றிய யானும் அதிஷ்டசாலிதான்.
24 கலைஞர்கள் கெளரவத்தில் களிபேருவகை கொண்டேன்
* நாட்டுக் கூத்துக்களைப் புடம் செய்து, சிங்களக் கலைஞர்களே வியக்கும் வகையில் மேடை
யிட்டும் உண்மைக்கலைஞர்களை இனம் கண்டு ஊக்கியும் கலைச்சேவை புரியும் பேராசிரியர்

Page 45
- 46 -
சு. வித்தியானந்தன், பேராசிரியராகப் பதவி ஏற்ற வேளை சன்மார்க்கசபை விருந்தளித்துக் கெளரவித்தப்ோது தலைமை தாங்கிப் பெரு மகிழ்வெய்தினேன்.
"எனது நாடக அநுபவங்கள்’ என்ற நூலுக் குச் சாகித்திய மண்டலப் பரிசிலைக் கலையரசு க. சொர்ணலிங்கம் அவர்கள் பெற்றபோது ச ன் மார் க் க ச  ைப மூலம் கெளரவிக்க முடிந்தது.
திரு. செ. சண்முகநாதன் (சான) சேவை யைப் பாராட்டிக் "கலா ஜோதி" என்ற பட்டத்தைச் சன்மார்க்கசபையார் 30ஆவது ஆண்டு முத்தமிழ்ப் பெருவிழாவில் வழங்கிய வேளை தங்கப்பதக்கம் அணிவித்தும் உரை நிகழ்த்தியும் மகிழ்ந்தேன். கொழும்பில் வானுெலி நாடக நடிகர்களால் அளிக்கப்பட்ட இராப்போசன விருந்திற் பேசி மகிழ்ந்தேன்.
இரசிகமணி கனக. செந்திநாதனது வெள்ளி விழாவுக்குத் தலைமை தாங்கிக் குதூகலித் தேன். கலைக்கழகம் நடாத்திய நாடக எழுத்துப் போட்டியிற் பரிசுபெற்ற மகாகவி, திரு. எஸ். பொன்னுத்துரை, சு. வே. திரு. சோ. நட ராசர், திரு. இராசரத்தினம் என்போர் பரிசுபெற்ற வேளை பம்பலப்பிட்டி கிறீன்லன் டில் எம். ஏ. ரகுமான் ஒழுங்குசெய்த தேநீர்விருந்து வைபவத்தில் நாவற்குழியூர் நடராஜன், சாந்தன், மற்றும் பலருடன் யானும் உரையாற்றி இன்புற்றேன்.

- 47 -
* தேவன், சொக்கன், திரு. செ. கதிரேசர் பிள்ளை, திரு. த. சண்முகசுந்தரம் என்ற முத்தான கலைஞர்கள் பெற்ற நாடக உலக வெற்றிகளை வாயார வாழ்த்தினேன்.
நடிகமணி வி. வி. வைரமுத்துவுக்குப் பொன் முடிப்புக் கொடுக்கப் பொருளாளராய் நிதி சேர்த்து நிறைவு கொண்டேன்.
* தலைசிறந்த நடிகை திருமதி சுப்புலட்சுமி காசிநாதனுக்குக் கட்டிடக்கலைஞர் திரு. V. S. துரைராஜா பொன்னடை போர்த்திக் கெளர வித்த விழாவில் Dr. இந்திரபாலா, நடிகமணி சில்லையூர்ச் செல்வராஜன் என்போருடன் யானும் பாராட்டுக்கள் வழங்கினேன். * புளுகர் பொன்னையா புகழ் எஸ். கணேச பிள்ளையின் வெள்ளிவிழாவை கமலாலயம்" வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத் தில் கொண்டாடிய வேளை பிரதம பேச்சாள ராய்ப் பாராட்டி மகிழ்வுற்றேன். * கலாகேசரி ஆ. தம்பித்துரை அவர் களின் வெள்ளிவிழாவில் வரவேற்புரை கூறி வாழ்த் திப் பூரித்தேன்.
* கலை இலக்கிய உலகு மிளிர வேண்டுமா ? கட்டாயமாக, தகுதியுடையவர்களை மனத்தூய்மை யுடன் வாழ்த்த, ஏத்த, கெளரவிக்கத் தயங்கவே கூடாது என்பது என் அசையாத முடிவு.

Page 46
25
எஸ். பொ. வின் கணிப்பும் எனது விழிப்பும்
ஆற்றல் மிக உள்ள சிறந்த எழுத்தாளர் திரு. எஸ். பொ. அவர்கள் என்பது நாடறிந்த உண்மை. நாடகத்துண்றயிற் சிறப்பாக ஒரங்க நாடகத்தில் யான் சிறப்புறலாம் எனப் பத்தாண்டு களுக்கு முன்பே கணித்திருந்தார். பரீட்சார்த்த மாகத் தான் 'தினகரனில் வெளிவரச்செய்த ஒரு கூட்டு முயற்சியில் பாலகிருஷ்ணனின் "கடுதாசிக் கூட்டம்" என்ற ஓரங்க நாடகத்துக்கு என்னை விமர்சிக்க வைத்தார். ஒரங்க நாடகம் பற்றி யான் எழுதிய சிறு கட்டுரையை மெச்சினர். இந்த வகையில் சூசகமாக அவர் தன் கணிப்பைக் காட்டி ஞர். அது என்னிடத்தில் விழிப்பை ஏற்படுத்தி ஓரங்க நாடக எழுத்துப்போட்டியிற் கலைக்கழகப் பரிசில்களைப் பெறவும், சாகித்தியமண்டலம் நடாத் திய கருத்தரங்கங்களில் கட்டுரைகள் சமர்ப்பித்துக் கலந்துரையாடவும் கூடிய நிலைக்கு உயர்த்திற்று.
ae
"சிதம்பர சுப்பிரமணியனின் தோல் வி" என்ற நாடகம் எனக்குப் பிடித்த நல்ல ஓரங்க நாடகம். ஒரே களத்தை, ஒரே காட்சியை மிகக் குறைந்த பாத்திரங் களைக் காண்கிறேன். ஒரங்க நாடகத்தில் சிறந்த ஒரு குணசித்திர பாத்திரமோ அல்லது எதிர்பாராத முடிவோ இருந்தால் அது நாடகத்தை மெருகூட்டி வெற்றியீட்டச் செய்யும்."

பெருமையடைகிறேன் எதற்காகத் தெரியுமா?
நாடக நூல்கள் ஏராளம் படித்ததுண்டு நாடகங்கள் எழுதிப் பிரசுரித்ததுமுண்டு கருத்தரங்கில் கட்டுரைகள் சமர்ப்பித்ததுமுண்டு கலைக்கழகப் பரிசில்பெற்று மகிழ்ந்ததுமுண்டு நாடகத் தயாரிப்பாளராய் மிளிர்ந்ததுமுண்டு ஆனல்,
அவற்றுக்காக யான் பெருமைப்படவில்லை. 1950 முதல் 1974 வரை தொடர்ந்து கால்
நூற்ருண்டு இடைவிடாது வருடா வருடம் மேடைஏறி நடித்தேனே,
நூறுவரை இளைஞர்களைப் பயிற்றினேனே, "இலக்கியம்’ என்ற நிலையில் மட்டுமன்றி, *மேடை நிலையிலும் வளர்க்கிறேனே பைத்தியமாய் நின்று உழைக்கிறேனே.
அதனல்,
'நாடக இலக்கியம்', 'நாடக மேடை" இரண்டிலும் கணிசமான உரிமையை முறை
யாகப் பெற்றேனே, அதனுலேதான் யான் சற்றுப் பெருமையடைகிறேன்.

Page 47
27
ஊக்கி நின்றவர்கள்!
திரு. த. இராசரத்தினம் அவர்கள்
(பொதுச் செயலாளர், சன்மார்க்க சபை
கலாஜோதி
செ. சண்முகநாதன் (சா)ை அவர்கள்
(Lu J TAfului,
கலாநிதி க. வித்தியானந்தன் அவர்கள்
责
உயிர்நாடியானவள்!
குடும்பச் சுமைதாங்கி கலை உயரக் கைதந்த
என் மனைவி
பாலாம்பிகை பொன்னுத்துரை

பாலாம்பிகை பொன்னுத்துரை

Page 48

.
எனது ஆக்கங்கள்
நூலுருப் பெற்றவை:
1. இறுதிப் பரிசு (நாடகம்) நாடகம் (நாடகம்) கூப்பிய கரங்கள் (நாடகம்)
பக்தி வெள்ளம் (நாடகம்)
:
பாடசாலை நாடகம் (கட்டுரை)
எழுதித் தயாரித்து நடித்த நாடகங்கள்
1. விதியின் சதி 2. முதலாளி தொழிலாளி 3. குவேனி 4. TrrS 60 Digurt 5. இரு மனம் 6. பகையும் பாசமும் 7. நிறைகுடம் 8. பண்பின் சிகரம் 9. பாசக் குரல் 10. செங்கோல் சரிந்தது 11. அண்டல் ஆறுமுகம் 12. பிற்பகலிலே. 13. இறுதிப் பரிசு 14. நாடகம் 15. பஞ்சபூதங்கள் 16. காதல் கைநட்டம்
17. ஆயிரத்தில் ஒருவர்

Page 49
- 52 -
11. நடித்த நாடகங்கள் :
லோபியின் காதல் தாகம்
மன்னிப்பு
பசி
கற்புக்கனல் பதியூர் ராணி ஒளி பிறந்தது
-ՉԱՄո (ԼքՑl -9|*ւ-n" சாந்தி நிலையம்
IV. எழுதிய வானெலி நாடகங்களுட் சில:
1. தாளக்காவடி
காதல் கைநட்டம்
வருடம் பிறந்து முன்னம் முன்னம். .
இறுதிப் பரிசு
பஞ்சபூதங்கள்
:


Page 50


Page 51
சுன்னகம், திருமகள் அழுத்த சபாரத்தினம் அவர்களால் அ சன்மார்க்க சபையினரால் வெளி
 

த்தில், குரும்பசிட்டி, திரு. மு. ச்சிடப்பட்டு, குரும்பசிட்டி, பிடப்பெற்றது -246/8-74,