கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு விழா மலர் 1972

Page 1
பாவலர் துரையப்பாபிள்ளை
நூற்றண்டு விழா
O6)s
42*ܨ
*} کا معم۔
மகா
32
நூற்ருண்ரு விழ

* '; శ్లో; لماغ S § &#
t لیتی؟ "" مع
gy ಕ್ಲ” : *
ஜனக் கல்லூரி தெல்லிப்பழை
ffở đ60DL/ வெளியீடு 972

Page 2


Page 3
பாவலரின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்ச்சிகள் சில
1872- 1 O - 12
1880
1885
1888
89 O
1892:
1 894 :
I S95 :
897
1898
899
9 OO
பாவலர் பிறப்பு. தந்தையார் கச்சேரி மு தாயார் : தங்கம்மா, ஆரம்பக் கல்விபெறத் சேர்ந்தார். தந்தையார் இயற்கையெ மேற்படிப்புக்காக வட்டு கல்லூரி) யிற் சேர்ந்தமை. அதிபர் : டபிள்யூ. ஈ. கிச்கெ பாவலரின் தமிழறிவைக் தமிழ் இலக்கியம், ஆங்கில கற்ருர், கேம்பிரிட்ஜ் உயர்நிலைப்பள் சேவையிற் சேர்ந்தார். நண்பர்கள், உறவினர்கள் யைத் துறந்தார். பாணந்துறை தூய யோவ அதிபர் சிறில் ஏ. ஜான்ஸ், கவர்ந்தன. பாணந்துறையில் வகித்த ஆ இந்திய விடுதலை இயக்கங் பம்பாய் மாநிலத்திலுள்ள ஆசிரியரானர்; அறிவியல், ஆங்கிலம் ஆகிய திலகர், கோகலே, நவுரோஜி கவனத்தை ஈர்த்தன. பம்பாய் மாநிலத்திலுள்ள ஆசிரியரானர். பம்பாயில் பிளேக் நோய் தாயாரின் வேண்டுகோட்ப தெல்லிப்பழை ஆங்கில உய தலைமையாசிரியர் : பள்ளி வடபகுதிப் புகையிரதப் ப. ஆள்பதி சேர் உவெஸ்ற் றிட் பாமாலை தொடுத்துப் புகழ் ஆசிரியர் தராதரப் பத்திர பாவலர் கற்பித்த பாடசாை பட்டுத் தெல்லிப்பழைச் ச தலைமையாசிரியராஞர்.

நலியார் அருளம்பலம்.
தெல்லிப்பழை ஆங்கில வித்தியாலயத்திற்
ப்தினர். க்கோட்டைச் செமினரி (யாழ்ப்பாணக்
ாக்; தமிழாசிரியர் ஆணல்டு சதாசிவம்பிள்ளை கண்டு வியந்தார்.
இலக்கியம் என்பவற்றை ஆர்வத்துடன்
ளி இறுதித் தேர்வில் சித்தியெய்தி அரசாங்க
விருப்பத்திற்கு மாருக அரசாங்கப் பணி
ான் கல்லூரி ஆசிரியராகப் பதவியேற்ருர். சீர்திருத்த இயக்கங்கள் பாவலரைக்
பூசிரியர் பதவியைத் துறந்தார். களில் நாட்டம் கொண்டார்.
கோலாப்பூர் மிசன் உயர்நிலைப் பள்ளியில்
பாடங்களைத் திறம்படப் பயிற்றினர். முதலியோரின் தேசிய இயக்கங்கள் இவரின்
பெல்காம் மிசன் உயர்நிலைப் பள்ளியில்
பரவியது.
டி இலங்கை திரும்பினர்: ர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். உரிமையாளரான திரு. செல்லப்பா: ாதை திறக்கப்பட்டது. ஜ்வே அவர்களது சேவையைப் புகழ்ந்து ம்பெற்ருர், ப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ருர், ல அமெரிக்கமிசனரிகளால் பொறுப்பேற்கப் ந்திக்கருகில் அமைக்கப்பட்ட நாளில் அதன்

Page 4
190
904 :
H 9 Ο 5 ή
五906:
19 O7
1909
1910-10-14:
191 l- 2 - 13 :
92
1913
சுவாமி சங்கரதாஸ் நாட ஆர்வம் கொண்டார். மறுமலர்ச்சித் தமிழிலக்கிய யின் நட்புத் தொடர்பு. இலகு தமிழில் கீத ரச ம அக்டோபர் பதினேழாந் தி திறமையைக் கண்ட மிசன் கல்கத்தா பல்கலைக்கழகப் திறம்படக் கற்பித்தார். இளைஞர் சமுதாய வளர்ச் ஏட்டினைத் தொடங்கி ஆ8 சகல குன சம் பன்னன் எ மேடையேற்றினர். யூன் இருபத்துமூன்ருந் தி: ராகத் தேர்ந்தெடுக்கப்பட் 이을 1906 - 6 - 14 1906 ۔ 4 ۔۔۔22 1 யில் ஆசிரியர்களின் உரிை அவசியமென எழுதினர். ஆகஸ்ட் பதின்மூன்றில் டே மாட்டுவண்டிக்காரர் வேலை நன்கு விமர்சித்தார்: கலாயோகி ஆனந்தக்குமார றிவியூ ஏட்டில் பாவலரின் யாழ்ப்பாணம் : அன்றும் இன் ந. சபாபதிப்பிள்ளை தம்பதி புரிந்தார். அமெரிக்க மிசன் பாடசாை தலைமையாசிரியர் பதவியை வீட்டில் மகாஜன உயர்நிலைப் நா. சங்கரப்பிள்ளை, க இலங்ை லிருந்து விலகி வந்து இவரின் புதல்வி இரத்தினம்மா பிறட் தெல்லிப்பழை கூட்டுறவுக் கட முதற் செயலாளரானர். கல்லூரி இப்போது அமை! நிறுவிஞர். மதுவரிக் கட்டளைச் சட்ட பெருகின. நாடெங்கும் LDğ ஈடுபட்டார். இவரது மது: மூத்த புதல்வர் பிறப்பு. எடுத்த காரியம் யாவினும் மகனுக்கு *ஜயரத்தினம் என யூன் இரு பதில் இராமநாதன் வழி எனப் ப7ராட்டினர்.
இத்தொகுப்புக்குரிய மூலங்களிற் பல இவரால் வழ
iii

ii
க் குழு இலங்கை வருகை. நாடகங்களில்
தில் ஆர்வம்கொண்ட சி. பி. குமாரகுலசிங்கி
நசரி என்னும் செந்தமிழ்ப் பாமாலையை கதி வெளியிட்டார்.
உயர்பீடம் உதயதாரகை ஆசிரியராக்கியது
புகுமுகத் தேர்வு வகுப்பை ஆரம்பித்துத்
R குறித்து மாணவர் சஞ்சிகை என்னும் ரியர்ப் பொறுப்பேற்ருர்
ண்னும் நாடகத்தை எழுதி நெறிப்படுத்தி
தி உதயமான உபாத்திமார் சங்கத் தலைவ டார்.
கிய நாட்களில் வெளியான "உதயதாரகை” மைகளை வென்றெடுக்க ஆசிரியர் சங்கம்
1ாக்குவரத்துச் சட்டத்தை எதிர்த்து 5000 நிறுத்தம். "உதயதாரகையில் இதுபற்றி
"சுவாமி அவர்களின் " சிலோன் நாசனல்
கட்டுரைகள் இடம்பெற்றன. ாறும் என்ற கட்டுரை சிறப்புமிக்கது.
களின் புத்திரி தையல்நாயகத்தை மணம்
லயுடன் தொடர்பு முறிந்தது. த் துறத்தார். பள்ளிக்குக் கால்கோள் விழா எடுத்தார். கைநாயகம் ஆகியோர் மிசன் பாடசாலையி ன் பாடசாலையிற் பணியாற்றினர்.
1ւI.
ன் சங்கத்தை ஆரம்பித்தார் ;
ந்துள்ள இடத்தில் புதிய கட்டிடத்தை
ம் பிறப்பிக்கப்பட்டது, மதுச்சாலைகள் துவிலக்குப் பிரசாரம். இவரும் தீவிரமாக விலக்குப் பாடல்கள் பரவியமை
வெற்றி என்ற துடிப்புடன் இருந்த இவர் ாப் பெயர் சூட்டினர்.
கல்லூரி ஆரம்பம் ; பெண்கள் உயர்வுக்கு
1ங்கப்பட்டன.

Page 5
9 4
Ι9 Ι 5 ή
916 :
1928
1919 :
1921 - 8- 17 :
922
1924-6 :
925
926
92
7
五529一6–24:
ΧΥ
மகாஜனுவை உதவி நன்கெ வேண்டுகோள். சட்ட நிரூ முயற்சி. கல்விப் பணிப்பா பொதுத் தேர்வுக்குத் தோ, இல்லை. எனவே, பேரறிஞ. நிறுவினர். பொதுத் தேர்வுகளுக்குத் ( வில் சிறந்த பெறுபேறுகள்.
இளைய புதல்வர் தர்மராசா
25 அங்குலப் பெருமழை, ! மீண்டும் வீட்டிற் பாடசாை T வடிவில் பாடசாலைப் புதி 1919-5-27இல் உதவி நன் கெளரவ கே. பாலசிங்கம் 1918ஆம் ஆண்டுக்கான ந: தாயார் இயற்கையெய்தின தெல்லிப்பழை சைவப்பிரக பாவலர் பொறுப்பேற்றயை
இந்துசாதன ஆங்கில உத6 பெற்ருர் .
யாழ்ப்பாணத்தில் தமிழ் ம சேர் அ. கனகசபை தலைவர். பட்டன. இரண்டாம் நாள் தமிழ்க் கல்வியின் தற்கால நி தெல்லிப்பழை சைவ வித்தி யாழ். ஆரிய திராவிட பா6 குழு உறுப்பினராஞர். "இந்துசாதன ஆங்கிலப் பத் சிவதீட்சை பெறல். சரஸ்வதி தமிழ் வித்தியாச மகாஜன உயர்நிலைப் பள் கற்பிக்க அநுமதி
சிவமணி மாலை என்னும் பிர மகாத்மா காந்தி இலங்கை வி வரவேற்புச் சபையில் முக்கி
அமரத்துவம் எய்தியமை,
பாவலர் தமக்கிட்டுக்கொண்ட ஆங்கிலப் புனைபெ
Jaffna Spectator Jaffna Reformer
De Omnibus Rebus

ii
ாடை பெறும் பாடசாலையாகப் பதியுமாறு 1ண சபை உறுப்பினர் சேர் அ. கனகசபை ளர் காவாட் இரங்கவில்லை."
bற மகாஜன மாணவர்களுக்கு அனுமதி *கள் பலரைக்கொண்ட தேர்வுச் சபையை
தோற்றும் அனுமதி வழங்கப்பட்டது தேர்
பிறப்பு. பாடசாலைக் கட்டிடம் தரைமட்டமானது. v). ஈ. எஸ். எல். சி. வகுப்பு ஆரம்பம்.
ய கட்டடம் அமைக்கப்பட்டது. கொடை வழங்கப்பட்டது. நந்திமூலம் அறிவித்தார். ன் கொடையாக ரூபா 1473/- கிடைத்தது. rir. ாச வித்தியாசாலையின் முகாமையாளராகப் ).
பிப் பத்திராதிபர் பதவிக்கு நியமனம்
ாநாடு (27-12-1922) முதலாம் நாள் - பாவலரது பாடல்கள் மாநாட்டில் பாடப் - வைத்திலிங்கம் துரைசுவாமி தலைமையில் லை என்னும் பொருளில் சொற்பொழிவு. யாசாலையைக் கையேற்றர். ஷாவிருத்திச் சங்கம் உதயம் இவர் செயற்
திரா திபராக நியமனம் . 1925 வரை பணி.
ாலையை ஆரம்பித்தார். 1ளியில் அட்சர, கேத்திர கணிதங்களைக்
பந்தத்தை யாத்தார். பருதல். ய உறுப்பினராக இவர் பணியாற்றினர்

Page 6


Page 7
துரையப்பாபிள்ளையின் வாழ்க்கையும் சமகாலமு
0 - 0 ஒருவன் உயிருடன் வாழும் பொழுது அவனுடைய தேவை, சேவை, முக்கியத்துவம் முதலியன வீட்டிலோ நாட் டிலோ உணரப்படுவதில்லை. ஆனல் அவன் தான் வகிக்கும் பங்கினை விடுத்து நிரந்தர மாக விலகும்பொழுதோ இவ்வுலக வாழ்க் கையை விட்டு ஒரேயடியாக நீங்கும் பொழுதோதான் அவன் வகித்த பாத் திரத்தின் சிறப்புடைமையும் முக்கியத்துவ மும் புலப்படத் தோன்றுகின்றன. இதன் காரணமாகவே " அவர் மட்டும் இன்று இவ்விடத்தில் இருந்தால் ..." என்ற அங்கலாய்ப்பு - ஏமாற்றப் பெருமூச்சு வீடு களிலும் : "இவர் மட்டும் மீண்டும் பிறந்து வந்தால் ..." என்ற ஏக்க உணர்ச்சி நாடுகளிலும் அடிக்கடி கேட்பதுண்டு. இதே நிலையையே-ஏக்கத் தொனியையே-ஆங் கிலக் கவிஞரான வில்லியம்’வேட்ஸ் வேர்த் மில்டன் என்ற கவி பற்றிப் பாடிய பாட லிற் கேட்கலாம். அவரது அவசியத்தைத் தமது காலகட்டத்திலுணர்ந்து,
'' Milton thou shouldest be living
at this hour England hath need of thee' i. என்று பாடும் சொற்களிற் காணமுடிகிறது. இது போன்றே இலங்கையில் ஆறுமுக நாவலரை வேண்டி ஏங்குகிருர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்கள்.
திருவுடை யீழந் தேர்ந்துபெற் றெடுத்த அறுமுக நாவல! அரும்பெறற் குரவோய் மறுவறு சில வனப்புடைக் குரிசில் இன்றுநீ எம்மோ டிருந்திலே அந்தோ’2 மனிதரை மதித்து எடை போடுவதில் ஏற்பட்ட குறைபாடு காரணமாகவே,
l. Wordsworth W - Wordsworth Poetical 2. ஈழத்துக் குழுஇறையஞர். இளங்கதிர் 1952 . 3. Silva, Colvin R. De. - Ceylon under

த. வேலாயுதபிள்ளை, பி.ஏ. (ஆனர்ஸ்)
ஆராய்ச்சி மாணவன், .
இலங்கைப் பல்கலைக்கழகம்,
கொழும்பு வளாகம்.
)
மனிதர்களுக்காக வாழ்ந்து அவர்களது வாழ்வுக்காகத் தங்களது வாழ்வைச் சிதைத்து மடிந்துபோன மனிதகுல மாணிக் கங்கள் எத்தனையோபேர். அவர்கள் இறந் ததின் பின்னரே போற்றப்படுகின்றனர். அவர்களுக்காகச் சிலைகள் எழுப்பப்படுகின் றன. மணிமண்டபங்கள் நிறுவப்படுகின் றன. காலநீரோட்டத்திற் கலந்துசென்ற பாவலர் துரையப்பாபிள்ளையின் சிறப்பும் வர லாற்று முக்கியத்துவமும் இப்பொழுது தான் அதிகம் உணரப்பட்டு வருகின்றன: சமீபகாலத்தில் அவருக்காக ஏங்கும் குரல் சற்றுப் பலமாக ஒலிக்கிறது.
1-0. இலங்கையில் சுயாட்சி அழிந்து அந்நியராட்சி சில நூற்ருண்டுகள் நிலைத் திருந்தது. 1796இல் டச்சுக்காரரிடமிருந்து பிரித்தானியர் இலங்கையைக் கைப்பற்றிக் கொண்டாரெனினும் 1815 இல் கண்டியைக் கைப்பற்றி உ ட ன் படி க்  ைக செய்து கொண்டதுடனேயே இலங்கை முழுவதும் அந்நியர் ஆட்சிக்குட்பட்டது. இந் நிகழ்ச் சியை வருணிக்கும் வரலாற்று ஆசிரியர் ஒருவர், " சிங் கள வரி ன் சுதந்திரம் கடைசியாக இவ்வாறு வீழ்ந்தொழிந்தது; சிறி விக்கிரம ராஜசிங்கனைக் கைப்பற்றி யதும் 1815 இன் கண்டிய உடன்படிக்கை யும் சுய அரசியல் ஆதிபத்தியமுடைய கண்டியின் முடிவைக் குறித்து நிற்கிறது" "9 என்று கூறும் சொற்கள் சுதந்திர இலங்கை 'யின் வீழ்ச்சியின் அடித்தளத்தையே சுட்டி நிற்கின்றன. அரசியல் ரீதியாகவும் ஆட்சி எளிமைக்காகவும் இலங்கையை ஒன்ருக இணைத்து ஆண்டனர் பிரித்தானியர். அந்நிய ஆட்சியின் பிடி இலங்கையில் எவ் வளவு பலமாக இருந்தது என்பதனை,
Works-Edited by Seliverest. 1946 Pg. ll6. - 1953.
the British Rule.

Page 8
16 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு
" முழு இலங்கையையும் ஒருங்கிணைத்து ஆள்பதியாலும், சபையாலும் ஆளப்பட வேண்டும்; கொழும்பு. காலி, கண்டி, திருகோணமலை, யாழ்ப்பாணம் என ஐந்து பிரிவுகளாக மட்டும் வகுத்து அவை அர சாங்க அதிபருக்குக் கீழ் இயங்க வேண் டும்." 4 என்ற கோல்புறுரக்கின் கூற்று வலியுறுத்தி நிற்கின்றது. பிரித்தானியரின் ஆணைக்கரங்கள் செல்லாத இடங்களுக்கும் சென்று வந்தன.
அவர்கள் தமது ஆட்சிக்கும் போக் குக்கும் இயைய இலங்கையின் சமுதாய, சமய, பொருளாதார மாற்றங்களையும் இயல்பாகவே புகுத்தத் தொடங்கினர்.
1- 1. உத்தியோகங்களுக்காகக் கல்வி கற்று அதனடிப்படையிலே வளர்ந்து கொண்டிருக்கும் புதிய ஒரு மத்தியதர வர்க்கத்தின் தோற்றத்தை இக்கால கட்டத்திற் காணக்கூடுவதாயிற் று. இவர் கள் பழைய பாரம்பரிய நாகரிகத்தைக் கைவிட்டுப் புத்தம்புதிய சமுதாய விளை வாக நின்றனர்.
இதற்குதவியாக நவீன கல்வி முறை அமைவதாயிற்று. மிஷனரிமாரே இதனை அறிமுகப்படுத்தி வைத்தனரேனும் ஆங்கில அரசாங்கம் பூரண உதவியளித்தது. புத்தி சீவிகளான புதிய வர்க்கத்தினருக்கு, சுய மொழி அழிவதைப்பற்றி எவ்வித கவலையும் இருக்கவில்லை. கவர்ச்சியான உத்தியோ கங்கள் அவர்களை முற்று முழுதாகக் கவர்ந்துவிட்டன என்பதில் ஐயமில்லை.
1-2. கிராமப் பிறழ்வுகளும் நகராக் கங்களும் இடப் பெயர்ச்சிகளும் ஒன்றுட னென்றியைந்து தாராளமாக நடைபெற லாயின. கிராமங்களின் வீழ்ச்சியும் புதிய நகரங்களின் தோற்றமும், அடிப்படை யான நேரடி விளைவுகளி லொன்ருக அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரச் சீரமைப்பு இம்மாற்றங்களுக்கு விரைவளித்
4. Silva Colvin R. De. - Ceylon under t 5. Social Background of Indian National 6. Huludalla H. A. J - British Governc

LD Guri
தது. இப்புதிய பொருளாதார மாற்றங் கள் எவ்வளவுக்கு இந்தியாவைப் பாதித் தனவோ அவ்வளவுக்குக் குறையாமல் இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தின. கிராமப் பொருளாதாரத்தைக் கைவிட்டுச் சுயநல நோக்கில் செய்த மாற்றங்கள் பற்றி இந்தியாவுக்குத் தேசாய் கூறியது இங்கும் பொருத்தமுடையதே. அவர், "பழைய கிராமப் பொருளாதாரத்தை இழுத்து வீழ்த்தி, முதலாளித்துவ வடிவங் களைப் புகுத்தியதன் மூலம் அனைத்திந்தியா வும் ஒரே பொருளாதார அமைப்பிற்குட் படுத்தப்பட்டது. இது முன்னேற்றத் திற்கு ஏதுவாகவிருந்தது என்பதில் ஐய மில்லை; ஆயினும் இம்மாற்றமானது பிரித் தானியாவின் வர்த்தக வங்கி, கைத்  ெத ரா ழி ல் நலன்களுக்கேற்றவண்ணம் நெறிப்படுத்தப் பட்டமையால் இந்திய சமுதாயத்தின் சுதந்திரமான, தடை செய் யப்படாத பொருளாதார வளர்ச்சி கட் டுப்படுத்தப்பட்டது' என்று கூறியுள்ளார். அந்த அளவிற்கு ஆங்கிலேய ஆதிக்கம் இந்திய சமுதாய வளர்ச்சிச்குக் குந்தகம் விளைவித்தது. ***
1 - 3. ஒரே சமயத்திலே தமது பண்டைய நாகரிகத்தையும் பரம்பரை வாழ்க்கை முறையையும் இழக்கச் செய்த ஆங்கில ஆட்சியின் ஆஃணக்கரமாக இலங் கையில் "* ஆள்பதிகள் ' இருந்தனர். சேர் ஹேர்கிலாஸ் ருெபின்சன் (1865-1872), சேர் வில்லியம் கிரகறி (1872 - 1877) முதலிய ஆள்பதிகளின் காலத்திலேயே பிரித்தானிய குடியேற்ற நாடுகளின் தலைவி யாக விக் ருே ரி யா மகாராணியார் அரசோச்சினர். அவர் இங்கிலாந்திலே இருந்தபொழுதும் அவரது ஆட்சிப் பலத் தையும் அதிகார சிரத்தையையும் சாம் ராச்சிய மகோன்னதத்தையும் நிலை நிறுத்து வதற்கு, மகாராணியின் இரண்டாம் மகன் ஏனைய குடியேற்ற நாடுகளுக்கும் இலங் சைக்கும் விஜயம் செய்தான். 8 எடின்பேர்க்
he British Rule.
iSIm. rs of Ceylon.

Page 9
துரையப்பாபிள்ளை
இளவரசரான அல்பிரட்டின் வரலாற்று விஜயம் நடந்து இரு வருடங்களுட் பாவலர் துரையப்பாபிள்ளையின் வரலாறு ஆரம்ப மாகிறது:
1 - 4. இலங்கையில் ஆங்கிலேய ஆட்சி யின் உச்ச நிலைக்கு எவ்வாறு 19ஆம் நூற்ருண்டு குறிப்பிடத்தக்கதோ அவ் வாறே இலங்கையின் முன்னேற்றத்திற்கும் சுதந்திரத்திற்கும் வித்திட்ட பெரியோர் களின் தோற்றத்துக்கும் குறிப்பிடுதற் குரிய நூற்றண்டாகும். ' குருவை வென்ற சிஷ்யர்”களாக இலங்கையின் வளர்ச்சி யிலே நோக்குடையோராக சேர் ஜேம்ஸ் பீரிஸ் (1856-1930), சேர் பரன் ஐயத் திலக (1868-1944), டி. ஆர். விஜய வர்த்தணு (1886 - 1950), கலாயோகி ஆனந்தக்குமாரசுவாமி (1877 - 1947), சேனநாயகா குடும்பத்தினர், பொன்னம் பலம் குடும்பத்தினர் முதலிய முன்னேடிகள் தோன்றினர். இக்காலத்திலேயே ஆங்கில துரைத்தன வாழ்க்கை வாழ்ந்து ஆங்கில அரசாங்க உத்தியோகங்களும் பார்த்தவர் கள் இவர்கள். இங்கிலாந்திலே கல்வி கற்று முன்னேறிய வர்க்கத்தினரான இவர்களே தேசிய விழிப்புணர்ச்சிக்கும் காரண கர்த் தாக்களாக இருந்தனர். இவர்கள் காலத் தால் வேறுபாடு உடையோராய் இருந் தாலும் குறிப்பிட்ட இலக்கிலும் நோக் கிலும் குறிப்பிடக்கூடிய அளவுக்கு ஒரே குரலுடையவர்கள் என்பதில் ஐயமில்லை: முன்னே குறிப்பிட்டவர்களுள் சேர் பொன். இராமநாதன், சேர் பொன். அருளுசலம், ஆனந்தக்குமாரசுவாமி ஆகியோர் யாழ்ப் பாணத் தமிழரிடையே தோன்றி, அவர்க ளது விழிப்புணர்ச்சிக்கு வித்திட்டு நிற் கையில், அவர்களுக்குச் சமகாலத்தவராகச் (1872 - 1929) சமநோக்குடன் வாழ்ந் தவர் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்க
ளாவர்.
2 - 0. மிஷனரிமார் தங்கள் நோக் கங்களையும் போதனைகளையும் புகுத்தக் கூடிய இடமெனத் தெரிந்தெடுத்த இடங் களில் தெல்லிப்பழையும் ஒன்று." அமெ
7. வேலுப்பிள்ளைப் போதகர் - அமெரிக்க மிஷன.
- 3

யின் வாழ்க்கையும் சமகாலமும் 17
ரிக்க மிஷனரிமாரின் கண்ணையுறுத்திய தெல்லிப்பழை பரம்பரைச் சைவக் குடி களைக் கொண்ட பிரதேசம் . இப்பிரதேசத் தின் சைவ உணர்வுக்கும் பழைமைப் பண் புக்கும் சமீபகாலத்தில் இடம்பெற்ற மாவிட்டபுரப் பிரச்சினையே போதிய சாட்சியாகும். தெல்லிப்பழைச் சந்தியிலே அமைந்திருந்தது ஒரு வீடு. அதற்குரிமை யுடைய பரம்பரையினர் இவ்வுணர்வுக ளுடன் இனம் கண்டுகொள்ளக்கூடிய குடும் பத்தினராக இருந்தனர். கதிர்காமச் சட்டம் பியார் என்ருல் அக்காலத்தில் அவர் இரு மொழிப்புலமை வாய்ந்த கல்விமான் என் பது யாவர்க்கும் தெரியும் . இன்று ஆங் கிலம் என்னும் இரண்டாம் மொழியறிவு ஒருவனுக்கு எவ்வாறு ஓர் அறிஞனுக முத்திரை பதிக்கத் தேவைப்படுகிறதோ அதுபோன்றே அன்று கல்விமானுகக் கருது வதற்குச் சங்கதம் அவசியமாயிருந்தது. கதிர்காமச் சட்டம்பியாரும் சங்கதம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் புலமை யுடைய வல்லுநராக விளங்கினர். இவரது வழித்தோன்றல்தான் கச்சேரி முதலியா ராக விளங்கிய பாவலரின் தந்தை அருளம் பலம் அவர்கள். இஃது இவ்வாறிருக்க நுண் கலை வல்லுநராகவும், சகல கலா விநோத ராகவும் சிற்பம், ஒவியம், நாடகத்துறை களிற் பேர்பெற்று அக்காலத்தில் விளங்கிக் கொண்டிருந்தவா காசிநாதர் கந்தப்பிள்ளை அவர்கள். இந்தக் கந்தப்பிள்ளையின் வழி யில் மலர்ந்தவர் தங்கம்மா அவர்கள் : அறிவுத்துறையும், கலைத்துறையும் ஒன்ரு கக் கலந்து சங்கமமாகின : அருளம்பலம்தங்கம்மா திருமணம் நடந்தேறியது.
2 - 1. பரம்பரை ஊற்றுப்போலும்! இவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாவ ரும் பிரபல்யமாக விளங்கினர். அறிவியல் துறையும், கலைத் துறை யும் ஒருங்கே கைவரப்பெற்ற இத்தலைமுறையினரிற் சில ரைக் கால ன் மறைத்தபோதும் அவர் களின் வழிவந்த பலர் இன்று அழியாப் புகழுடன் வாழுகின்றனர். இத் தம்பதி களின் மூத்த புதல்வராகப் பிறந்த l இராசரத்தினம்பிள்ளை அவர்கள்ود . یاه)
ᏄgSeir அரித்திரம்,

Page 10
18 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு
இந்தியாவில் வாழ்க்கையை நடத்திய பொழுதிலும் தமக்கெனத் தனியிடம் பெற் றுக்கொண்டவர். சென்னைக் கிறித்தவக் கல்லூரியிலே கடமை புரிந்த இவர் அக் கல்லூரியின் முன்னேற்றத்துக்கு முன் னின்று உழைத்தார். அக்கல்லூரியிலே இவருக்கிருந்த அக்கறை பல வழிகளில் வெளிப்பட்டுத் தோன்றுகின்றது. 'கல்லூ ரித் தினக் கொண்டாட்ட ஒழுங்கு செய்த இவர் இலங்கையில் இருந்த தமது சகோ தரர் பாவலர் துரையப்பாபிள்ளை அவர் களைக் கொண்டு பாடல் யாப்பித்துப் பெற்றுக்கொண்டார். "8 தாம் கற்பிக்கும் கல்லூரியின் முன்னேற்றத்திற் கொண்ட அக்கறையும், தமது சகோதரரின் புலமை யிற் கொண்ட பற்றும் இதனற் புலப்படக் காணலாம் , கல்லூரியிற் கொண்ட ஈடுபாடே, அந்தக் கல்லூரித் தாபகர் கலாநிதி மில்லருடன் ஏற்பட்ட அத்தியந்த உதவுக்கும் வித்திட்டது. கலை ஆற்றல் படைத்த இராசரத்தினம்பிள்ளை அவர்கள் மில்லரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை எழுதி முடிக்க இத்தூண்டுதல் காரணமா யிருக்கலாம்:
இவரது எழுத்தாற்றலுக்கு சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாறு, மாணவர்களுக்கென எழுதிய கதாவாசகத்தொடர்நூல், பஞ்சதந்திரம், இந்தியச் சரித்திரம் முதலிய நூல்கள் சான்று பகர்வனவாயுள்ளன. கல்வி உலகிலே கால் வைத்துக் கலை உலகத் தொடர்பும் கொண்ட இவர் பாவலருக்கு முன்னேடியாகத் திகழ்ந்திருந்தா ரென் பதில் ஐயமில்லை.
2 - 2. ஆங்கிலேயர் வருகையுடனேயே அச்சுக்கலைத்தோற்றமும் இலங்கையில் ஏற் படுகிறது. ‘‘1821ஆம் ஆண்டில் *கறெற்' என்னும் ஓர் அமெரிக்க பாதிரியாரை இயந்திரத்துடனும், அச்சுக் க ளுடனும் ஆங்கில அரசு இலங்கைக்கனுப்பியது . ... 1855ஆம் ஆண்டுவரை யாழ்ப்
8. பாவலரது தனிப்பாடல்களிலொன்று. இதில் பி.
“Songs to be sung at the OCCasion ( College Day at the request of his
9. சான்காம் இலங்கைத் தமிழ் விழா மலர் 1gs

D Gorf
பாணத்தில் அச் சே நி ய வெளியீடுகள் இவ்வியந்திரத்திலேயே அச்சிடுவித்தன வாகும்"9 எ ன் னு ம் மதியாபரணம் அவர்களின் கூற்று அச்சுக்கலையின் ஆரம்ப நிலையை மிகவும் தெளிவாகத் தருகிறது. இப்படியான ஒரு மழலைப் பருவத்தை யடுத்துக் கற்றனில் அச்சுயந்திரம் நிறுவி ஊ க் கு வித் த வ ர் க. பொன்னையா அவர்கள். இவர் அச்சுயந்திரம் தாபித் ததைப் பா ரா ட் டி ப் பாடியுள்ளார் பாவலர். இவ்வச்சுக்கலை முன்னேடிகளில் ஒருவரான பொன்னையா அவர்களுக்கு வாழ்க்கைத் துணை நலமாக வாய்த்த இராசம்மா, அரு ள ம் பல ம் தம்பதி களின் ஏக புதல்வி. இச் சகோதரர்கள் யாவர்க்கும் முன்னேடியாகவும், தம் பெய ரால் இவர்கள் பெயர்களையெல்லாம் நிலை பெற வைக்கவும் தெ. அ. துரையப்பா பிள்ளை அவர்கள் 1872ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 20ஆந் திகதி பிறந்தார்.
2 - 3. ஐந்தாவது வயதிலேயே கல்வி கற்கப் புகுந்த இவருக்குத் தெல்லிப்பழை மிஷனரிமாரின் தமிழ்ப் பாடசாலையே கிடைத்தது. மிஷனரிமாரின் கல்வித் தாபனங்களைத் தவிர வேறு புகலிடம் தமிழ் மாணவர்க்கு இருக்கவில்லை. அப்படி வேறு ஒன்று இரண்டு இருந்தாலும் அவை திறம்பட இயங்கவில்லை: இந்த நிலையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் ஆங்கில ஆரம்ப பாடசாலையில் காலடி வைத்தார். இது சுதேசியவாதியான செல்லப்பா என்பவரின் தனிமுயற்சியில் உருவாகிய ஒன்ருகும். ஆங்கில பாடசாலையிற் காலடி வைத்த வேளையில், தம் தந்தை அருளம் பலத்தை இழந்தார். "எல்லாமே இனிமேல் ஆகவேண்டிய காலகட்டத்தில் தந்தையை இழப்பது எத்தனை துர்ப்பாக்கியம் !
* சான்ருேளுக்கி, அவையத்து முந்தி இருத்த வேண்டிய தந்தை ", அதனைச் செய்துமுடிக்க முன்னரே இவ்வுலகை நீத்தார். எனினும், இவரது கல்வி ன்வருமாறு எழுதப்பட்டுள்ளது. of the celebration of the Madras Christian brother T. A. Rajaratnampillai.
- u di : 156.

Page 11
துரையப்பாபிள்ளை
தொடர்ந்தது. ஆங்கிலத்தில் ஆரம்பக் கல்வியை முடித்த பாவலரை, தாயும் தந்தையுமாக விளங்கிய தங்கம்மா எவ் வாறே யாழ்ப்பாணக்கல்லூரியிற் சேர்த்து விட்டார். "யாழ்ப்பாணக் கல்லூரி ஒன்று தான் அக்காலத்திலே உயர்தரக் கல்வி பயில விரும்புவோரின் பு க லி ட மா யிருந்தது. "* 10 இப்படியான ஒரே நிறுவ னத்தில் எவ்வாறு சேர்ந்தார் ? சேரும் பொழுது இவருக்கிருந்த தடைகள் எவை? பொருளாதார நிலை எவ்வாறிருந்தது? கிறித்தவராகிச் சேர்ந்தாரா ? என்னும் நிலைகளைத் தெளிவாக்கி அறிந்துகொள்ள ஆதாரங்கள் அவசியமாகும். எனினும் ஒன்று மட்டும் நமக்குத் தெ ஸ்ரீ வாக உள்ளது. இவர் படிக்கும் காலத்தே (1888 - 1891) கல்லூரியிலே சிறந்து விளங்கினர். டபிளியு. ஈ. கிச்கொக் எம். ஏ. அவர்கள் யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிப ராக விளங்கினர். இவ்வதிபர் துரையப்பா பிள்ளையைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது ** இவர் தமது காலத்தில், வகுப்பிலே உயர்நிலையைப் பிடித்திருந்தார். தமது சிரேட்ட பத்திரப் பரீட்சையில் சித்தி யடைந்தபொழுது ஆங்கிலத்தில் மிகத் திறமையாகச் சித்தியடைந்தமைக்கான பரிசையும் பெற்ருர் **11 எனக் குறிப்பிட் (65) Girgmr r i .
இவரது திறமையை வேறு எடுத்துக் காட்டுமூலமும் தெளிவுபடுத்தலாம். இவர் படித்த காலத்தே யாழ்ப்பாணக் கல்லூரி யின் போதஞசிரியரான ஆணல்ட் சதாசிவம் பிள்ளை அவர்கள் மிகச் சிறந்த தமிழ் அறிஞராகவும் தமிழ்ப் புலமையும் புகழும் உடையவராகவும் விளங்கினர். இவரால் இயற்றப்பட்ட பாவலர் சரித்திர தீபம் என் னும் நூல் ஈழத்து இலக்கிய வரலாற்று ஆராய்ச்சிக்கு உதவும் முன்னுேடியாக இன்றும் விளங்குகின்றது. இத் தனிச் சிறப்புடைய அறிஞர் ஆணல்ட் அவர்கள் துரையப்பாபிள்ளை யவர்களுடன் அதிக நெருக்கமுடையவராகவும் இவரிடத்தில் அதிக அக்கறையும், ஈடுபா டுமுடையவராக
10. சிந்தனேச்சோலை - பக், x 11. கிச்கொக் டபிளிபு. ஈ. அவர்களால் அளிக்கப்பட் 12. Taylor S. H. T. - Preface to QGaitug,

ாயின் வாழ்க்கையும் சமகாலமும் 19
வும் இருந்தார் எனத் தெரியவருகிறது. துரையப்பாபிள்ளையவர்களிடம் காணப் பட்ட புலமையும், திறமையும் இவரைக் கவர்ந்து இருக்கலாம். ஆணல்ட் அவர்கள் காட்டிய அன்பும், ஆதரவுமே அவர் இறந்த பின்னரும் பிள்ளையவர்களை அவர்மேற் பற் றுறுதி கொள்ளத் தூண்டியிருக்கவேண்டும். கன்னி முயற்சியான கீதரச மஞ்சரியை அன்னுருக்குச் சமர்ப் பணம் செய்து, ஆங்கில முன்னுரையிலே பின்வருமாறு எழுதுகிருர் பிள்ளையவர்கள். 'இச்சந்தர்ப் பத்தில் எனது அன்பும், பற்றும் நிறைந்த தாழ்மையான காணிக்கையாக மறைந்த ஜே. ஆர். ஆணல்ட் அவர்களுக்கு இச்சீல மலர் மாலையை அவரது ஞாபகமாகப் பொறித்துச் செலுத்துகிறேன். அரைநூற் ருண்டாக அவர் தமிழ் மக்களின் ஒழுக்கத் துக்கும் இலக்கிய முயற்சிக்கும் உண்மை யாகவும் வெற்றிகரமாகவும் உழைத்து யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு வீட்டிலும் தமது பெயரை ஒலிக்கவைத்தார். தமிழ் உலகத்தில் இவருடைய பெயர் வைத்துப் போற்றப்பட வேண்டியதொன்று”.12 இவ ரது அஞ்சலிச் சொற்கள் ஒவ்வொன்றும் இவரது உள்ள ஆழத்தில் அறிஞர் ஆணல் டுக்கு இருந்த இடத்தைத் தெளிவாக்கு கின்றன. இத்தனைக்கும், Lair2:Tuait யாழ்ப்பாணக் கல்லூரி க் காலத்தில் ஆணல்ட் அவர்கள் இவர்மேல் வைத் திருந்த பாசப்பிணிப்பே காரணமெனல் தவரு காது.
2-4 யாழ்ப்பாண க் கல்லூரியிற் கற்ற கல்வியும், பெற்ற அனுபவமுமே துரையப்பாபிள்ளை அவர்களை வழிநடத்திச் சென்றன. இவரது காலத்தில் பிரபல்ய மாய் விளங்கிய கிறித்தவக் கல்விமானன ரி. எச். குறெசெற் அவர்களும் யாழ்ப் பாணக் கல்லூரியிலேயே கற்றிருந்தார். இவர் அக்கல்லூரியின் சேவையையும் தாம் பெற்ற அனுபவரீதியான கல்வியையும் கூறுகின்ருர், "நான் யாழ்ப்பாணக் கல்லூ ரி யி லே 19ஆம் நூற்ருண்டின்
ட கற்சாட்சிப்பத்திரம்.
F மஞ்சரி - 17 Oct. 901.

Page 12
20 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு
எழுபதிலும், எண்பதிலும் கற்கும்பொழுது அளிக்கப்பட்ட பாடத்திட்டத்தையும் வேலைத்திட்டத்தையும் தற்காலமும் பின் இறுறச் செய்யவில்லை. நாங்கள் அறிவின் பல்வேறு துறைகளுக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டோம். இலக்கியம், வரலாறு, விஞ்ஞானம், கணிதம் , தத்துவம் என்ப வற்றுடன் வானசாத்திரத் துறையும் எங்களுக்குக் கற்பிக்கப்பட்டன. எந்த ளுக்கு உடலியல், உளவியல், ஒழுக்கவியல், சன்மார்க்கவியல்களில் அளிக்கப்பட பயிற்சியே எங்கள் வாழ்நாளின் பிற்பகுதி முழுவதற்கும் எங்களுடன் உறுதுணை பாக நின்றது." 13 குருெ செற் அவர்களின் கூற்றுப் பிள்ளையவர்களின் հմո Ա-եւ-ո &ւն பெற்றதொன்று எனக் கூறுவது மிகை யாகாது. 1888இல் யாழ்ப்பாணக் கல்லூ ரியில் காலடி எடுத்துவைத்த துரையப்பா பிள்ளை அவர்கள், குருெ செற் அவர்கள் பெற்ற அதே வகைக் கல்வியையும், அணு பவத்தையும் பெற்றிருப்பார் என்பதற்கு வேறு சொல்ல வேண்டியதில்லை.
யாழ்ப்பாணக் கல்லூரியிற் பயிற்சிகஜளப் பெற்று வெளியேறிய அதே நேரத்தில் கிறித்தவக் கொள்கைகளையும் பற்றிக் கொண்டார். சைவராக அக்கல்லூரியிற் புகுந்த இவர், கிறித்தவராக வெளிே வந்தார். கல்விக்காகச் சமயம் LongiGs தென்பது அக்காலத்தில் சர்வசாதாரண மான ஒன்று. கல்வியிலே சிறந்து விளங் கியவர்கள் யாவரும் கிறித்தவத்தைத் தழுவியே தமது கல்வியைப் பெற்றுக் கொண்டவர்கள். சைவ சமய மறுமலர்ச் சியின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் நாவலரே பார்சிவல்துரையுடன் தொடர்பு கொண்டு கிறித்தவப் பின்னணிக் கல்வி கற்றவரென்பதைத் தவிர இந்நிலைக்கு வேறு உதாரணம் தேவையில்லை. நாவல ருடைய பிறமதக் கல்விக்குப் பார்சிவல் எவ்வாறு காரணமாக இருந்தாரோ, அவ் வாறே பிள்ளையவர்களின் மதமாற்றத் துக்கு ஆணல்ட் ஓர் இயக்கச் சக்தியாக இருந்திருக்கலாம்.
13. St. Johns College Magazine 1948 - Pg 4. - تھیم )L( 5ھ }T f12 - چی رہتے ہ சித், 1901

மலர்
மூன்று வருடங்களை யாழ்ப்பாணக் கல்லூரியிற் கழித்த துரையப்பாபிள்ளை அவர்கள் "பத்தொன்பதாவது வயதிலே கேம்பிரிஜ் சர்வகலாசாலையின் உயர்தரப் பள்ளி இறுதித் தேர்விலே ஆங்கிலம் முதலிய பாடங்களில் விசேஷ புள்ளிகள் பெற்றுச் சித்தியடைந்தார்’ எனச் சிந்தனைச்சோலை யில் " நூலாசிரியர் வரலாறு கூறுகிறது. 1891ஆம் ஆண்டுவரை இவர் யாழ்ப்பானக் கல்லூரியிற் கல்விகற்றுக் கொண்டிருந்தன ரேனும் 1890ஆம் ஆண்டிலே அதாவது, இவரது பதினெட்டாம் வயதிலேயே இப் பரீட்சையிற் சித்தியடைந்துள்ளார். இவ ருக்கு, கேம்பிரிஜ் சர்வகலாசாலையால் அளிக்கப்பட்ட தேர்வு அத்தாட்சிப்பத் திரம், சுட்டிலக்கம் 47ஐயும் வயது 18ஐயும் கொண்ட இவர் மேற்படி பரீட்சையின் பரீட்சகர் குழுவைத் திருப்தி செய்துள்ளா ரெனக் கூறுகிறது. இளம் வயதிலேயே இத் தேர்வைத் தாண்டிய போதிலும், இவர் மேற்படிப்பு முயற்சிகளில் ஈடுபட்டதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடைத்தில. பிற் காலங்களிலே மேற்படிப்புக்கென இலங் கையிலொரு தாபனம் வேண்டுமென அங்க லாய்த்து ' எம்மூர் உயர்தரக் கல்விக்கு இன்னும் அரசாட்சியார் அத்திபாரமிடா திருக்கின்றனர், ஆனபடியால் பெற்றேரும் மற்றும் நன்மை விரும்பிகளா யிருக்கப் பட்டவர்களும் இவ்விஷயத்திற் கவனம் செலுத்துவது இன்றியமையாதது" . 14 என எழுதும் இவருக்கு மேற்படிப்புக் கிட் டாதது துரதிருட்டமே. ஆயினும் ஆசிரியத் தொழிலி லீடுபாடு கொண்ட துரையப்பா பிள்ளை அதிலே உயர்ச்சி காண்பதற்கான பரீட்சை யொன்றுக்கு 1899ஆம் ஆண்டில் தோற்றினர் எனத் தெரிகிறது. அவ் வாண்டிலேயே ஆங்கில ஆசிரிய தராதரப் பரீட்சையிற் சித்தியடைந்தார்.
2 - 5. கல்வி முயற்சிகள் இவ்வாரு க முற்றுப்பெற, உத்தியோக நாட்ட ம் இவரைப் பற்றிக்கொண்டது. ஆரம்பத்திற் சில காலம் அரசாங்கக் கணக்காளராகப் பணிபுரிந்தாரெனினும் அதன் தன்மை, பணிபுரிந்த காலம் என்பவற்றுக்கு ஆதா
f. 17.

Page 13
துரையப்பாபிள்ை
ரங்கள் கிடைத்தில. அவ்வுத்தியோகம் இவரைக் கவர்ந்திருந்ததாகத் தெரிய வில்லை. ஏனெனில் 1892இலேயே பாணந் துறை அர்ச். யோவான் உயர்தரக் கல்லூரி யில் ஆசிரியப் பதவியை ஏற்றுக்கொண் டார். இது அதே வருடம் நடைபெற் றிருக்கவேண்டும். 1894 மார்கழியில் "" பிள்ளையவர்கள் இரண்டைரை வருடங் களாகத் தனக்குக் கீழ் ஆசிரியராகப் பணி புரிந்தார்' என அக்கல்லூரியின் அன்றைய அதிபரான சிறில் ஏ. ஜேம்ஸ் அவர்கள் கூறு கிருர். எனவே 1892 ஆணிக்கும் யாழ்ப் பாணக் கல்லூரியை விட்ட 1901 க்கு மிடைப்பட்ட காலத்தில்தான் கணக் காளர் பதவியை இவர் வகித்திருக்க முடியும். துரையப்பாபிள்ளை அவர்களின் ஆரம்பகால ஆசிரியத்தொழிலே அதிட்டம் நிறைந்ததாகவும், ஆர்வமூட்டுவதாகவும் அமைந்ததெனலாம். சிறில் ஏ. ஜேம்ஸ் அவர்களின் சொற்கள் இதனைப் பிரதி பலிக்கின்றன. "" ஆரம்பத்தில் இரண்டாம் உதவியாசிரியராகவும் கடைசி பதினெரு மாதம் முதலாம் உதவியாசிரியராகவும் கடமை புரிந்த இவர் தமது கடமை களை மனச்சாட்சியுடனும் விடாமுயற்சி யுடனும் நிறைவேற்றினர். மனத்தாங்க லின்றி எவ்வித மேலதிக வேலையையும் கொடுக்கும் பொழுதெல்லாம் செய் தார்.' 15 என ஜேம்ஸ் அவர்கள் கூறியுள் ளார். பிற்காலத்தில் பிள்ளையவர்கள் மேற் கொண்ட முயற்சிகளுக்கும், வெளி வேலை களுக்கும், பொதுநலநோக்குக்கும் இது ஒரு நல்ல ஆரம்பகட்டமாக விளங்கியுள்ளது.
2 - 6. இலங்கையில் இவ்வாரு கப் பெற்ற இளமை அநுபவத்துக்கு உரமூட்டி யது இவரது இந்திய வாழ்க்கையேயாம். 1894 மார்கழி 15ஆம் திகதி பரியோவான் கல்லூரியில் இருந்த துரையப்பாபிள்ளை அவர்கள் 1895 தை மாதத்தில் இந்தியா விற் கோலாப்பூர் மிஷன் உயர்தர பாட சாலையிற் கடமையேற்றுக்கொண்டார். ஆசிரிய உத்தியோகத்திலேயே அமர்ந்
15. ஜேம்ஸ், சிறில், ஏ. அவர்களால் 15 மார்கழி 1 16. A Brief Biography of The Late Mr.
7. St. Johns College Magazine 1948.

ாயின் வாழ்க்கையும் சமகாலமும் 21
திருந்த பிள்ளையவர்கள் அதே உத்தியோ கத்தை இந்தியாவிற் பார்க்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதற்குக் காரணம் எது வெனத் தெரியவில்லை. ஆனல் அக்காலத் திலே இந்தியா சென்று தம் செல் வாக்கை நிலைநிறுத்தி அங்கேயே குடியும் குடித்தனமுமாகி விடுவதும், சிறிது காலத் துக்கு அங்கு தங்கிப் பெறுவதைப் பெற்றுக் கொடுப்பதைக் கொடுத்து மீண்டு வருவதும் தாராளமாக நடைபெற்றன. இது அறி ஞத்துவத்தின் ஒர் அம்சமாக அடிப்படைத் தேவையாக அக்காலத்திற்கொள்ளப்பட்ட ஒன்று எனக் கூறுவதே பொருத்தமுடை யது. ஆறுமுகநாவலர் காலத்திருந்து இத்தேவை ஏற்பட்டிருக்கலாம். தமது சமயப்பணிக்குக் களம் அமைக்க முற்பட்ட இவர், காலூன்றி நின்று தம்மை அறிமுகம் செய்துவைக்க இத் தேவையைப் பயன் படுத்தியிருக்கலாம். இஃது எவ்வாறிருப் பினும், சி. வை. தாமோதரம்பிள்ளை, வி. கனகசபைப்பிள்ளை, கருேல் விசுவநாதபிள்ளை, நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை, தி. த. கனக சுந்தரம்பிள்ளை, ரி. சரவணமுத்து முதலிய அறிஞர்கள் எல்லோரும் இந்தியாவுடன் தொடர்பு கொண்டவர்களே. த மிழா ராய்ச்சியி லீடுபட்ட வி. கனகசபைப்பிள்ளை போன்று, துரையப்பாபிள்ளையின் மூத்த தமையனுன இராசரத்தினம்பிள்ளையும் தமி ழகத்தில் வாழ்க்கையைத் தாபித்துக் கொண்டவர். தமிழகத்திலே வாழ்ந்த த  ைம ய ஞ ரி டம் துரையப்பாபிள்ளை அவர்கள் போய்ச் சேராமல் நேரே பம்பாய் மாகாணத்துக்கே சென்றுவிட் டார். உயர்தரப் படிப்பை மேற்கொள் பவர்களைப் பம்பாய் மாகாணம் மிகவும் கவர்ந்திருந்தது. " சரவணமுத்து எம். ஏ. அவர்கள் பெரும்பான்மை உயர் கல்வியை இங்கேயே பெற்ருர், 16 பிள்ளையின் சம காலத்தவரான 'ரி. எச். குருெசெற் அவர்கள் பம்பாய் மாகாண அகமது கான் மிஷன் உயர்தரக் கல்லூரியின் தலைவராய் இருந்தே பட்டப் படிப்பில் தேறியவர். "1" இதே நோக்கு துரையப்பாபிள்ளையையும்
334இல் அளிக்கப்பட்ட பத்திரம்.
T. Saravanamuttu.

Page 14
22 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு
கவர்ந்திருக்கலாம். எவ்வித தடைகளால் இவருக்கு இம் மேற்படிப்புக் கைகூடா தமைந்ததோ தெரியவில்லை.
எதுதான் இவருக்கு இங்கே கைகூடா விட்டாலும் ஒன்றுமட்டும் நிச்சயமாகக் கைகூடிற்று. இவரது வாழ்க்கையை இவர் பிற்காலத்தில் அமைத்துக்கொள்ளவும், தமது கருத்துக்களைச் செம்மை செய்து கொள்ளவும், இன்று பல்லோராலும் போற்றும் நிலைக்குத் தம்மை மாற்றிக் கொள்ளவும் இந்திய வாழ்க்கை பெரிதும் உதவிற்று இங்கு பெற்ற அனுபவங்களும் கண்ட காட்சிகளும் இவருக்குத் தூண்டு கோலாயிருந்தன. இதனை வி. முத்துக்குமாரு அவர்கள் பின்வருமாறு sinnuy Git Grrr ti v "சமுதாய உணர்ச்சியில் ஏற்பட்ட பற்றுக் கோடு கோல்காப்பூர், பெல்காம் என்ற பம்பாய்ப் பகுதிகளில் இருந்ததன் காரண மாகவும் திலகர், கோகலே ஆகியோரின் தேசிய வேலைகளில் கொண்ட ஈடுபாடு காரணமாகவும் வளர்ந்திருக்கலாம்.' 18
கோல்காப்பூர் கல்லூரியிற் கற்பித்த இவர் பெல் காம் இங்கிலாந்து மிஷன் உயர் நிலைப் பாடசாலைக்கு மாறிச் சென்று அங்கு இருவருடங்களைக் கழித்தார். இவ்விரு கல்லூரிகளில் இவரது ஆற்றலும் திறமை யும் செயற்பட்டன . இளங் கிறித்தவர் சங்கம் ', "இலக்கிய மன்றம்", "ஞாயிறு பாடசாலை முதலிய பொதுஇயக்கங்களின் பொறுப்பை ஏற்றுத் திறம்பட இயக்கி வந்தார். செயல்கள் திறம்பட நடந்தேறிய காலத்தில் இந்தியாவிற் கொள்ளைநோய் பரவிற்று. 1893இல் இடம் பெற்ற கொள்ளைநோய் இந்தியாவில் ஏற்படுத்திய அழிவு சொல்லுந்தரமன்று. இக் கால கட்டத்தில் வருந்தியழைத்த தாயின் வேண்டுகோளுக் கிசைந்து இ ல ங்  ைக திரும்பினர் துரையப்பாபிள்ளை அவர்கள்
3 - 07 இக் கட்டுரையின் ஆரம்பத் திலே அந்நிய ராட்சியின் விளைவாக இலங்கை அடைந்த மாற்றங்களைப் பார்த் தோம். இம்மாற்றங்களுக்கு மறுதலையாக
18. Mahajana Carnival Souvenir l954 - 19. Life and Times of C. R. Das – Pg

மலர்
இவர் இலங்கை வந்த காலத்திற் காரி யங்கள் நடைபெறத் தொடங்கின. சுதேச எண்ணங்களும், அதற்கியைந்த இயக்கங் களும் மலரத் தொடங்கின. பிரித்தானிய குடியேற்ற நாடுகளில் ஏற்பட்ட விழிப் புணர்ச்சி இலங்கையிலும் ஏற்படத் தொடங்கியது. குறிப்பா கப் பக்கத்து நாடான இந்திய தேசத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி இயக்கங்களில் இலங்கையரும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினர்.
3 - 1. இந்தியாவில் அரசியல் விழிப் புணர்வும், அதன் போக்கும் வங்காளப் பிரிவினையுடன் தீவிரமாகின. "வங்காளப் பிரிவினையை உத்தியோ கரீதியாக அறிவித்த அன்று வெளிநாட்டுப் பொருள்களைப் பகிஷ்கரிக்கக் கோரித் தொடங்கப்பட்ட இயக்கமே சுதேசிய இயக்கமாகப் பரிண மித்தது5'19 'வந்தே மாதரம்" விடுதலை வேட்கை கொண்டோரின் தாரக மந்திர மாயிற்று. சுரேந்திர நாத் பா ன ர்ஜி, புவேந்திரநாத் வாசு, நரேந்திரநாத் சென் முதலிய இருபத்தேழு பேர் எதிர்ப்பைத் தெரிவித்துத் தங்கள் உத்தியோகங்களை விட்டு வெளியேறினர். கோபாலகிருஷ்ண கோகலே, பாலகங்காதர திலகர், சித்த ரஞ்சன்தாஸ், சுரேந்திரநாத் பானர்ஜி முதலிய அறிஞர்கள் அரசியல் வானிலே ஒளிரும் நட்சத்திரங்களாய் மக்களை வழி நடத்திச் சென்றுகொண்டிருந்தனர்.
3 - 2. இவர்கள், அரசியல் விழிப் புணர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் சமாந்தர மாக ஒருங்கிணைந்து ஆணிவேராகச் செல்ல வேண்டிய பொருளாதார வளர்ச்சிக்குப்புத் துயிரளிக்கும் முயற்சிகளிலு மீடுபட்டனர். இம் முயற்சி களின் முன்னேடிகளாகக் கிராமத்திற்குத் திரும்பி விவசாயத்தி வீடு படவும், கமத்தொழில், வணிகம் முதலிய துறை களிற் கவனம் செலுத்தவும் சுதேசிகள் தூண்டப்பட்டனர். இப்படி யான பொருளாதார முயற்சியொன்றி லீடுபட்ட பாரதியின் தந்தை பட்ட துயரத் தைப் பாரதியாரின் -
17.

Page 15
துரையப்பாபிள்ளை
"ஆர்ப்பு மிஞ்சப் பலபல வாணிகம்
ஆற்றி மிக்க பொருள்செய்து வாழ்ந்தனர் நீர்ப்படுஞ் சிறு புற்புத மாமது நீங்கவேயுள்ளங்குன்றித்தளர்ந்தனன்.”20
என்னும் பாடலால் அறியலாம்.
முயற்சி தோல்வியோ வெற்றியோ என்னும் கவலையின்றி முழுமனதுடன் மக்கள் இவ்வகை யியக்கங்களி லீடுபட் டதை இந்நிகழ்ச்சிகள் தெளிவுறுத்து கின்றன.
3 - 3. பொருளாதார முயற்சியுடன் மட்டும் நில்லாது மக்களிடையே நிலவிய சமூகக் கட்டுப்பாடுகள், சாதி மத வேறு பாடுகள் யாவற்றையும் களைந்தெறியத் தலைவர்கள் முன்னின்றனர். “ எல்லோரும் இந்நாட்டு மன்னர் " என்ற உணர்ச்சியை விதைக்க முயன்றனர். சைவசமயத்தின் அடித்தளம்போல இடம்பெற்று விளங்கிய சாதி பேதத்தை அகற்றச் சர்வமத சன் மார்க்க நெறிகள் தழைத்தெழுந்தன. சுவாமி இராமகிருஷ்ணர், சுவாமி விவே கானந்தர் ஆகியோரின் போதனைகள் இப் போக்கை நெறிப்படுத்தின. ஆங்கிலக் கல்வியைக் கற்று அவர்கள் வழிநின்றமை யும், நாட்டில் அதிகமாக நிலவும் அறியா மையுமே இந்தியரின் அடிமைத் தனத்துக் கும் அதனுல் ஏற்பட்ட குறைபாட்டுக்கும் காரணம் எனப் பலர் உணர்ந்தனர். அவ்வுணர்ச்சியால் உந்தப்பட்ட அறிஞர்கள் கல்வித்துறையிற் கருத்தைச் செலுத்தி ஆவன செய்து கொண்டனர். எல்லா வழிக ளாலும் அந்நியராட்சியை அகற்றிச் சுதந் திரத்தை நிலைநிறுத்த முயன்ற இந்திய மக்களே, இலங்கையருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினர்.
4 - 0. 'இந்தியாவைத் தொடர்ந்து இலங்கையிலும் சுயாட்சியை நிலைநாட்டும் எண்ணங் கொண்ட தலைவர்கள் அரசியல் விழிப்புணர்வுக்கு வித்திட்டனர். இப்பணி யி லே ஈடுபட்ட சுதேசிய இயக்கமான
20. சுயசரிதை - பாரதியார் பாடல்கள்.
2l. Wythilingam M. - Life of Ramanatha
22. Hullugalla H. A. J. — Life and Timi:

"யின் வாழ்க்கையும் சமகாலமும் 23
"இலங்கைத் தேசிய சங்கம் முன்னுேடி யெனக் குறிப்பிடுதற்குரியது வேகம், புத்தொளி, உறுதி என்பவற்றைக் கொண் டிருந்த சேர் பொன். இராமநாதன் அவர்கள் தலைமையில் இயங்கிய இச்சங்கம் ஒன்றே முற்போக்கும் முடிவும் அற்ற செயல்களுக்கும், மிக முக்கியத்துவ அரசியல் வலுவுக்கும் இடமாக இருந்தது."21 சேர் பொன். இராமநாதனின் பின்னவ ரான சேர் பொன். அருணுசலம் அவர்களும் இவ்வரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்பி ஞர். இவர்கள் சிங்களத் தலைவர்களான சேர் ஜேம்ஸ் பீரிஸ், சேர் பாரன் ஜயதிலகா, திரு. டபிள்யூ. எ. டி. ஈ. சில்வா, திரு. டி. ஆர். விஜயவர்த்தணு முதலியோருடன் தோளோடு தோள் நின்றுழைத்தனர். சுதேசிய இயக் கத்துக்கு வலுவூட்டிய இத்தலைவர்கள் அந் நியர் ஆட்சியை ஒழிப்பதில் முன்னணியில் நின்றனர். இலங்கைச் சீர்திருத்தச் சங்கத் தலைவரான சேர் பொன். அருளுசலத் தின் கூற்று அந்நியருக்கெதிரான போக்கின் வேகத்தைச் சுட்டி நிற்கிறது. ' உள்நாட் டிலும், வெளிநாட்டிலும், பலமானதும் மதிப்பானதுமான சுய ஆட்சியையுடைய சுயமரியாதை விரும்பும் ஏனைய தேசத் தினர் தம் தேசத்திலிருப்பது போன்றே: எம் தேசத்தில் நாங்களிருக்கக் கேட்கிருேம்
மற்றவர்களிடத்திற் கைநீட்டிப் பிச்சை புகுவதற்கு இலங்கை யொரு பக்கிரியல்ல. தன்னுடைய பரம்பரை உரிமையையே கோருகிறது."22 பழைமையைப் போற்றும் குணமுடையவராயிருந்தபோதிலும் தேசிய விழிப்புணர்ச்சியின் விறுவிறுப்பு அருணுசலம் அவர்களையும் விட்டுவிடவில்லை என் பதையே இச்சொற்கள் காட்டுகின்றன.
4 - 1 சட்ட சபையின் உள்ளும் புறமும் சுயராச்சியத்துக்குப் போராடிக் கொண்டிருந்தவர்கள் இவ்வரசியல்வாதி கள். இப்போராட்டங்களிலே துரையப்பா பிள்ளை அவர்கள் நேரடிப் பங்கு பெறவில்லை யெனினும் இப்போராட்டத்தின் முன்னணி யில் நின்ற அரசியல் வாதிகளான இராம
.
s of D. R. Wijayawardana - Pa. 67.

Page 16
24 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு
நாதன், கனகசபை, பாலசிங்கம் முதலி தமிழ்த் தலைவர்களுடன் நேரடித் தொட புடையவராயிருந்தார். ** இவருடைய புகைப்படங்கள் பத்திரிகைகளிலே வ வில்லை. இவர் சுருக்கமான சொற்களும் விசித்திரமான போக்கும் உடையவர் ஆயினும் இவருடைய காலத்து நிகழ்ச்சி களிலே இவருடைய தாக்கம் Gl அரசியல் வாதிகளுடையதிலும் பார்க்க ஏராளம்'.2? என்று டி. ஆர். விஜய வர்த்தணுவைப்பற்றிக் கூறும் சொற்கள் பாவலருக்கும் பொருத்தமுடையன. தேசிய விழிப்புணர்ச்சிக்கும், அரசியல் சுதந்திரத் திற்கும் இவர் ஆற்றிய தொண்டு இக் கூற்றை வலியுறுத்தும்.
உதய தா ர கைப் பத்திரிகையின் ஆசிரியராகக் கடமை செய்யும் பொழுது இப்பணி செவ்விதாக நடைபெற்றது.
* வங்காள தேசத்தவர்களே அதி வைராக்கியமும் தேசாபிமானமுமுள்ளவர் களாகக் காணப்படுகின்றனர். ஐப்பசி 16ஆந் திகதியை வங்காள தேச முழுவதும் துக்கதினமாகக் கொண்டாடினர் 'பிரிவி னையை எதிர்த்து' என எழுதிய பிள்ளை யவர்கள் நமது நாட்டின் அரசியல் போக் கைக் கண்டித்து எமக்கு எது அவசியமென் பதைப் பின்வருமாறு கூறுகிருர் : “அரசாங் கத்தின் போக்குக்கெல்லாம் சம்மதம் காட்டி அவர்களைப் " பிளிஸ் ' பண்ணி நோகாமல் நடந்துகொள்வதே தங்கள் கடமையென்று இலங்கைப் "பெருத்த" மனுஷர்களெல்லா மெண்ணிக் கொண்டு பொது நன் மைக் குரிய காரியங்களில் கையிடாதிருக்கின்றனர். இவ்வகை நிலை எவ்வளவுக்கிருக்குமோ அவ்வளவு காலமும் இலங்கை விருத்தியற்ற தேசமாயிருக்கு மென்பதைச் சொல்லிக்காட்ட வேண்டிய தில்லை. கோக்கலே, பனேர்ஜி போன்ற பிரபுக்கள் நம் இலங்கைக்கு அவசியம்." உணர்வு பூர்வமாக இவ்வாறு உதய தாரகையில் எழுதும் பிள்ளையவர்கள் அரசியல் சுதந்திரத்தை உள்ளும் புறமும் அவாவி நின்ருர்.
23. Hullugalla H. A. J. - Life and Times
^ 24. 2.5L e Tao4

மலர்
அரசியல் சுதந்திரத்தை அடைவதற்குத் தேவையான பலம் இதுவே என முற்ருக உணர்ந்த பிள்ளையவர்கள் ஒரு கட்டத்தில் 'பெரிய மனுஷர்களான ஜேம்ஸ் பீரிசுத் துரையவர்களும் சேர் பொன். இராம நாதன் துரையவர்களும் சிறிய விஷயத் திலே மனவேறுபாடுகொள்வது அழகன்று. பொதுவிஷயத்தில் ஈடுபட்டவர்களுக்கு இக்கருத்து மாறுபாடு பொதுநோக்கை அடைவதில் தடை ஏற்படுத்தும்' 24 எனக் கூறி ஒற்றுமையின் அவசியத்தை வலி யுறுத்துகிருர்,
4 - 2. அரசியற் சுதந்திரத்துக்கு அடிப் படையான பொருளாதாரமுன்னேற்றத்தி லும் இவர் அதிகஅக்கறைகொண்டிருந்தார். பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் வளத்தையும், பொருளையும் கண்ட பிரித் தானியர் விவசாயம் கைத்தொழில்களை முன்னேற்றுவதற்கு முன்வரவில்லை. பதி லாக இலங்கையிற் பாதகமான நடவடிக்கை களையே கைக்கொண்டனர். 1878இன் 11ஆம் இலக்கச் சட்டப்படி எல்லாக் கமக் காரர்களும், பத்துச்சதவீத வரி செலுத்த வேண்டுமெனத் தானியவரி விதித்தனர்:
சொந்த வாழ்க்கையையே நடத்தத் துன்பப்படும் வறிய கமக்காரன் இதனுற் பெரிதும் பாதிக்கப்பட்டான். ‘விவசா
யத்தை விட்டொழி" என்று பிரித்தானியர் கூறுவதாக இதனு ற் கருதப்பட்டது இதற்கு மறுதலையாக மக்கள் யாவரும் விவசாயத்தி லீடுபடவேண்டும்; அரசியல் விழிப்புணர்வுடன் இவையும் ஒருமித்து வளரவேண்டு மென்ற கோஷம் பலமாக ஒலித்தது. இந்தியாவிலே திகழ்ந்துகொண் டிருந்த அதே வகை முன்னேற்றம் இலங்கை பிலும் திகழ்வதாயிற்று. 1889இல் தானிய வரியை நீக்கக்கோரித் தொடங்கிய இராம நாதனின் வாதம் 1892இல் அதன் ஒழிப் புடன் முடிவுற்றது. விவசாயவளர்ச்சிக்குக் தந்தகம் விளைத்த வரியை நீக்கியதுடன், விவசாயத்திலீடுபட எல்லா வழிகளாலும் )க்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர். இராம 1ாதனுக்கு முன்னரே ஆறுமுக நாவலர்
D. R. Wijayawardana,

Page 17
துரையப்பாபிள்ை
ஓரிடத்தில் விவசாய விருத்திபற்றிப் பின் வருமாறு கூறுவதும் இங்கு நோக்கற் பாலது. 'துரைத்தனத் தாருடைய சகா யம் போதுவதன்று. துரைத்தனத்தார் இங்குள்ள காடுகளை அழித்து நாடுகளாக்கி ஏரிகளைத் திருத்தி நீர் பாய்ச்சுவிப்பாரா யின் இலங்கைக்குப் போதும் அளவின தாகிய நெல் விளையும், "25 துரையப்பா பிள்ளையின் சிந்தனைப்போக்கும் இத்துறை யில் மற்றெல்லோரையும் மிஞ்சிவிடுகிறது. மக்கள் வன்னிக்காடுகளுக்குப் போகவும், நவீன விஞ்ஞான சாதனங்களைப் பயன் படுத்தவும், விவசாயச்சங்கங்களை அமைக்க வும், மகாவலி கங்கையைத் திசைதிருப்பவும் கோரி அழைப்புவிடுகிருர், “யாழ்ப்பாணத் தவர் வன்னி நாடுகளுக்குச் சென்று, கிருஷிக முயற்சி செய்ய அதிக சிரத்தை கொள்ளாதிருப்பது மிகத் துக்கத்துச்குரிய காரியம்' என்று உதயதாரகையில் குறிப் பிடுமிவர், ' யாழ் கமக்காரர் சேர்ந்து நூதன கிருஷிக முறைகளைப்பற்றிப் பிரசா ரணங்கள் செய்வதும், கிருஷிகப் பொருட் காட்சிகள் வைப்பதும், மாதிரிக் கிருஷிகத் தோட்டங்கள் தாபித்து நடத்திச் சனங் கள் நூதன கிருஷிக முறைகளைத் தம் சொந்தக் கண்களால் காணச்செய்வதும் கடமையன்றே" எனவும் நவீன சாதனங்க ளுடன் விவசாயத்தைத் தொடர்பு படுத்து கிருர்,
4 - 3 விவசாய வளர்ச்சியோடு ஒட்டிக் கைத்தொழில் வணிகங்களி லீடுபடுவதும் அவசியமாயிற்று. அக்கால இ%ளஞர்கள் யாவரும் அரசாங்க உத்தியோகங்களே தஞ்சம் என வாழ முற்பட்டனர். இதனல் ஏற்பட்ட விளைவுகளை உத்தியோக ரீதியில் விசாரித்த அமெரிக்கன் போர்ட் பிரதிநிதி கள் சொல்லிய ஆலோசனை பின்வருமாறு அமைந்தது: "படித்துத் தேறுகிற மற் றெல்லாரும் வேலைக்காகக் கவர்ண்மெண் டார் பேரிலும் மிஷன்கள் பேரிலும் சார்ந் திருக்கிருர்கள். இதனுல் வேலைக்காகக்
25. யோகசுவாமிகள் - பக். 55 26. Report of the American board represe
27, A short biography of the late Mr. T,
I - 4

யின் வாழ்க்கையும் சமகாலமும் 25
காத்திருப்போர் தொகை வருஷத்துக்கு வருஷம் அதிகரித்து வருகிறது. உத்தி யோகஸ்தர்களும், பிரசங்கிகளும், உபாத்தி யாயர்களும் இருக்கவேண்டியது போலவே நன்ருய்ப்பட்ட சமுதாயிகளும், சிற்பக் காரர்களும், சித்திரக்காரர்களும், வியா பாரிகளும் அவர்களுக்குள் இருக்கவேண்டி யது அவசியமே. கைப்பாடுள்ள வேலை செய்யப் பிரியமில்லாத எந்த மாணவனும் மிஷன் உதவி பெற்றுப் பள்ளியில் இருக்கப் படாது."26 இவ்வாறு இந்தியாவுக்குக் கூறிய நிலையும் ஆலோசனையும்இலங்கைக்கும் பொருந்தியிருந்தது. இச்சவாலைச்சமாளிக்க இந்தியாவில் தோன்றிய சுதேசிய கைத் தொழில் வணிக முயற்சியை, இலங்கை யரும் பின்பற்றினர். வங்காளிகளின் புதிய தொழில், முயற்சிகள் இவர்களைக் கவர்ந் தன. கலாநிதி ரேயின் இரசாயன மருத்துவ தொழிற்சாலையையும் சு தேச மே லா (Swadeshi Mela) GO)6Nuuqub Lumt rij 35 36örGoTrif இலங்கையிலே தொழிற் புனருத்தாரணம் பற்றிப் பலர் சிந்திக்கலாயினர். "ஜப்பான், அமெரிக்கா, ஜேர்மனி முதலிய நாடுக ளுக்குச் செல்லக் குழந்தைகளைத் தொழிற் பயிற்சிக்கு அனுப்புவதுபற்றி"27 ரி. சரவணமுத்து எம். ஏ. அவர்கள் சிந்திக்க முன்னரே துரையப்பா பிள்ளை ய வர்கள் இந்த வழிகளில் ஆலோசனைகள் கூறியுள் ளார்." இந்தியாவைப்போல் இலங்கை யிலும் பரோபகாரிகளெழும்பிச் சங்கங்க ளாய்க்கூடி முதல் சேர்த்துக் கைத்தொழில் கற்கும்படி தமது வாலிபரை இங்கிலாந்து, அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான் முதலிய தேசங்களுக்கு அனுப்புதல் வேண்டும்" என்று பிள்ளையவர்கள் கூறிய இதே வகை உணர்ச்சியைப் பாரதியாரும் பிரதிபலித் தார். 'வெளிநாட்டுக்குக் கப்பலேறிப் போங்கள், புறப்படுங்கள், புறப்படுங்கள். தொழிலாளிகளே, வியாபாரிகளே, வித் வான்களே, புத்திமான்களே, அந்நிய தேசங்களைப் பார்த்துவிட்டு வாருங்கள். நமது தொழில்களுக்கும், கலைகளுக்கும்,
ntatives on mission work in India. Saravanamuttu.

Page 18
26 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு
யோசனைகளுக்கும் வெளிநாடுகளில் ஏராள மான உதவி கிடைக்கும் 28 என்று கூறிய பாரதியிலும் ஒரு படி முன்னே சென்று செயலிலும் இறங்கினர் துரையப்பா பிள்ளை. வித்தியாபகுதியினர் தொழிற் கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்து கொள்ளாத அக்காலத்திலேயே மாணவர் களைத் தொழிற் கல்வி பயிலும்படி தூண்டி அச்சுத்தொழிலிலும், புத்தகங்கட்டுந் தொழிலிலும் மாணவர் பயிற்சி பெறுவ தற்குத் தெல்லிப்பழை ஆசிரிய பயிற்சிக் கூடத்திலே வசதிகள் செய்து கொடுத்தார்.
4 - 4. இத்தகைய செயற்பாட்டுக்கு இலங்கைத் தேசிய வாதமும், தேசிய உணர்ச்சியும் அத்திவாரமாக விளங்கின. சிங்கள மக்களிடையே தேசிய உணர்வு அரும்ப முன்னரே இலங்கையில் தமிழரிடம் இது தளிர்விடுவதாயிற்று. கல்வியில் நாட்டம் கொண்ட மத்தியதர வர்க்கத் தாரின் விழிப்புணர்வு இங்கு அதிகமெனல் பிழையாகாது. உண்மை நிலையில் இராம நாதன் அவர்களே, இலங்கைத் தேசீயத் தின் தந்தையும், தீர்க்கதரிசியும் எனக் கூறலாம். இவரைப் பின்பற்றியே ஒருங் கிணைந்து ஏனைய சிங்களத் தலைவர்கள் ஆரம்பத்திற் செயற்பட்டனர். இந்தியா விலும், இலங்கையிலும் பணி புரிந்த ஆனந்தக் குமாரசுவாமி அவர்கள், மேலும், தமிழரின் மேன்மையையும், உன்னதத்தை யும், பழைமைப்பண்பின் சிறப்பையும் சுட்டி அறிவுறுத்தினர். 'இந்தியாவின் கடந்த 2000 ஆண்டுச் சரித்திரத்தை- நமது சம யம் தத்துவ சாத்திரம் கலைகள் முதலிய வற்றை விளக்கும் சரித்திரத்தை-ஆராயும் பொழுது காணப்படுவதிலும் சிறந்த இலட்சியங்களை வேறெங்கும் காணமுடியா தென்ற முடிபுக்கு வருகின்றேன்." 29 என்ற சொற்களின் உத்வேகம் துரையப்பா பிள்ளை யவர்களையும் கவர்ந்திருக்குமென்பதில் தவ றில்லை. ஆங்கிலக் கல்வியும், யாழ்ப்பாணக் கல்லூரிப் பயிற்சியும் இருந்தபொழுதிலும் பழைமைப் பண்பைக் கைவிட்டாரில்லை. இவரை ஈரடி நிலைக்கு இப்போக்கு உட்
28. சமூக, பாரதியார் வசனம் பக். 9(), 9.
29. ஆனந்தக்ளுமாரசுவாமி அவர்களுக்கு 1906இல் 4

LD67) fi
படுத்தியபோதிலும் தேசிய உணர்வும் தமிழரின் பாரம்பரிய ஈடுபாடும் அவரை அவைபற்றிப் பேசவும், எழுதவும், கடைப் பிடிக்கவும் தூண்டின. யாழ்ப்பாணத்திலே தமிழ் மகாநாடு மிகவும் சிறப்பாக நடை பெற்றது. இந்தியப் பேச்சாளர்கள் அழைக் கப்பட்டனர். இதில், துரையப்பாபிள்ளை யவர்கள் ‘தமிழரின் இன்றையநிலை" என் னும் பொருளிலேயே கட்டுரைவாசித்தார். ஆனந்தக் குமாரசுவாமி அவர்களினல் நடத் தப்பட்ட "இலங்கைத் தேசிய மதிப்பீடு" (Ceylon National Review) at 65769) b F653 கைக்கு எழுதிய பிள்ளையவர்கள் “யாழ்ப் பாணத்தின் முற்கால இக்கால நிலை" என்ற தலைப்பில் எழுதினர். இதில் அந்நிய மோகத் தினுல் அழிந்த தேசியப் பழைமைக்காக ஏங்கினர். கோப்பாய் சரஸ்வதி வித்தியா சாலைப் பரிசளிப்பு விழாவிற் சொற்பொழி விாற்றும்பொழுது ' இளம் பெண்களின் ஆடைகள் தேசியத்தன்மை இழந் து போகின்றன இந்துசமய நாகரிகத்துக் கியையப் பெண்களது உடைகளை அமைப்பது பெற்றேர் கடமை' எனத் தேசியம் அழிந் தமைக்கு வருந்துகிருர் . தமிழரது பண் பாடுகளில் தலைப்பாகையும் ஒன்று. தலைப் பாகை இன்றித் துரையப்பாபிள்ளையவர் களை வெளியிற் காணுவது முடியாத காரியம். இவர் தமது புத்திரர்களுக்குக் "குல்லா தலையிலனிந்தே பாடசாலைக்கு அனுப்பி வைப்பாராம் . இச்சிறுநிகழ்ச்சிகள் யாவும் அன்னிய மோகத்துக்கு எதிராக மேற்கொண்ட சுதேச உணர்ச்சியின் பிரதி பலிப்புக்களே .
4 - 5. இச் சுதேசியத்தின் இன்னெரு விளைவாகச் சமய மறுமலர்ச்சியும் திகழ்ந் தது. ஐரோப்பிய நாடுகளிலே இந்து சமயத்தை இழிவாகக் கருதி இருந்தனர். இந்நிலையைப்போக்கி இந்துசமயம் என்ருல் என்ன என்பதை நிலைநிறுத்தி வந்தார் சுவாமி விவேகானந்தர். இவர் இவ்வாறு பிரசங்கித்துத் திரும்பும் வழியில் இலங்கை பில் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் பிரசங்கம் செய்தார். இவரது சிஷ்யரான
ழ்ப்பனம் அளித்த வர:ேற்பு.

Page 19
துரையப்பாபிள்ளை
சுவாமி அபிதானந்தா என்பவரும் அமெரிக் காவினின்றும் திரும்பும் வழியில் யாழ்ப் பாணத்திற் சொற்பொழிவு நிகழ்த்தினர். இவைகளெல்லாம் தேசியவாதத்துக்குச் சமயத்தின் இன்றியமையாமையை வற் புறுத்தின. இந்துக்களென்ருல் முற்றும் அவபத்தியும் அறியாமையும் நிறைந்த காட்டுச்சனங்களேயெனத் தொடக்கத்தில் ஐரோப்பிய, அமெரிக்கர் கொண்டிருந்த மோசமான விளக்கத்தை மாற்றிப் பூர்வீ கத்தில் அவர்கள் அறிவில் மேம்பட்டவோர் சாதியா யிருந்தார்களென மதிக்கவந்தது இந்துக்களின் பூர்வீக மேன்மை அவர் களின் நூல்களிலிருந்து உள்ளவாறு வெளிப் பட்டிருந்ததனுலேயாம்."30 சைவசமயம் ஒரு சமயமாக மதிக்கப்படாத நிலையும், அதனல் ஏற்பட்ட விளைவுகளும், அந்நிலை களையப்படுதலும் தெளிவாக அபிதானந்த சுவாமிகளின் கூற்று வாயிலாகத் தெரி கிறது.
"" பாதிரிமார்களுடைய பள்ளிக்கூடத் தில் இளமைப் பருவத்தில் கற்கப் புகுந் தவர்கள் அனேகர்  ைச வ ம ய த் து உண்மையை அறியாமையினலே கிறித்து மதத்தில் பிரவேசித்துவிட்டார்கள்’. இவ் வாறு பிரவேசித்த பலர் தங்களது அறிவு முதிர்ச்சியினலும், சமய மறுமலர்ச்சியினல் ஏற்பட்ட உண்மை விளக்கங்களாலும் மீண்டும் சைவசமயத்தைத் தழு வ த் தொடங்கினர். கிங்ஸ்பரி, கறல், பெரிய நெவின்ஸ் என்பவர்கள் தாமோதரம் பிள்ளையாயும், விசுவநாதபிள்ளையாயும், சிதம்பரப்பிள்ளையாயும் மாறினர். இம் ம 7 ம் ற ம் முன்னர்க் கூறியதுபோலத் தற்செயல் நிகழ்ச்சியல்ல. பழம் பெருமை, யாழ்ப்பாண மகத்துவம். தமிழர் நாகரிகம் முதலிய வற்றில் சிரத்  ைத யுடைய துரையப்பாபிள்ளை அவர்களும் ரெயிலர் என்பதை விடுத்து அருளம்பலம் துரை யப்பாபிள்ளையெனக் கூறிச் சைவசமயத் துக்கு மீண்டதும் பொருத்தமுடையதே.
இன்று ஐக்கிய போதன பாடசாலை எனக் கூறப்படும், மிஷனரியால் நடத்தப்
30. உதயதாரகை 1906.
31. மகாஜனக் கல்லூரிட் பொன்விழா மலர் - பக்.

ாயின் வாழ்க்கையும் சமகாலமும் 27
பட்ட தெல்லிப்பழை உயர்நிலைப் பாடசாலை யில் தலைமை ஆசிரியராகக் கடமை ஆற்றிய பிள்ளை உதயதாரகையென்ற கிறித்தவ பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார். இவர் தி ரு ம ண ம் 1909இல் நடை பெறும்பொழுது உதயதாரகையில் பின் வருமாறு பிரசுரிக்கப்பட்டது. “ரெயிலர் செல்வி ருெ ஸ்பெல் தையல்நாயகத்தை மணம் முடிப்பதற்கு ஒழுங்குகள் செய்யப் பட்டுள்ளன. திருமணம் மிகவிரைவில் நடைபெறும் , ' சைவப் பெண்ணை மணந்தபொழுதிலும் கிறித்தவத்துக்கு மதம் மாற்றியே செய்து கொண்டார். இவ்வாறெல்லாம் தான்
தையல்நாயகி என்னும்
கைக்கொண்ட சமயத்துக்கு உண்மையாக நடந்தபொழுதிலும் உள்ளமென்னவோ சைவத்தையே நாடி நின்றிருக்கவேண்டும்? "காடினல் நியூமோனப் போன்று ‘மகாஜனு’ தாபகரின் சமயத்திலுள்ள கருத்துக்கள் ஒரு நீண்ட கால மாற்றத்துக் குட்பட்டிருத்தல் வேண்டும்.’’3 1 என்னும் கூற்று ஆதார மாகிறது. இவர் கோலாப்பூரில் இருக்கும் பொழுதே இம்மாற்றம் ஆரம்பித்திருக்க லாம். மராத்தி மொழியைப் பேசும் இப் பகுதி மக்கள் உறுதியான சைவப் பழமைப் பேர்வழிகள். இவர்களுடன் சேர்ந்து பழகிய தோஷம் இவரைப் பற்றியிருக்க லாம். நேரடிக் காரணம் எதையும் நாம் அறியாவிட்டாலு: வித்துவான் பிரம்மபூரீ சிவானந்தையர், பிரம்மபூரீ முத்துக்குமார சுவாமிக் குருக்கள் ஆகிய இவர்களது சக வாசமும் பெருமளவுக்கு உதவியிருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு .
5 - 0. இவரது சமய மாற்றத்தின் முக்கிய விளைவே தெல்லிப்பழையில் தலை நிமிர்ந்து நிற்கும் தன்னிகரிலாத கல்வி நிலையமாகக் கருதப்படும் மகாஜனக் கல்லூரி. 1910ஆம் ஆண்டு ஐப்பசி மாதத் தில் மிஷனரிமாரின் தெல்லிப்பழை உயர் நிலைப் பாடசாலையை விட்டு வெளியேறி யதும் தமது வீட்டிலேயே பாடசாலையை ஆரம்பித்தார் பிள்ளை அவர்கள்.

Page 20
28 துரையப்பாபிள்ளை நூற்ருண்,
“Here was a man to hold against the wo A man to match the mountains and the se என்று புகழக் கூடியதாயிற்று: அக்கால தில் அவர் செய்த இச் செய்கை, இ ருடைய ஒரு வார்த்தையினலேயே 80 ச வீத மாணவர்களும் நான்காசிரியர்களி இருவரும் மிஷனைவிட்டு விலகி வீட்டி நடாத்திய புதிய பாடசாலையிற் சேர்ந் கொண்டனர்." 182 என்ற என் சங்கர பிள்ளையின் கூற்றுப் பிள்ளையின் செயலி வலுவைத் தெளிவுபடுத்துகிறது.
5 - 1. மிஷனின் ஆதிக்கத்துக்கு கீழேயே கல்வி நிலைத்திருந்த அக்காலத்தில் பல சைவப் பெரியார்கள் இவ்வகையான நடவடிக்கைகளே மிஷனுக்கு எதிராக மேற் கொண்டனர், காரைநகர் இந்துக்கல்லூர் யின் தாபகரான அருளுணசலம் அவர்கள் இவ்வாருன 5டவடிக்கையில் முன்னேடி யெனக் கூறப்படுவர். திரு. அருணுசலத் துக்கு முன்னரே நாவலர் 6ծ *6չյւնւնց քո ց: வித்தியாசாலையை ஆரம்பித்து நடத்தினு ரெனினும் அதன் வளர்ச்சியும், Go5Triģ சியும் இடையிடையே அற்றுவிட்டது. காலம் பின்னேக்கி நகரவே தேவையும், சேவையும் சேர்ந்து இவ்வகையான கல்வி முயற்சிகளில் பெரியவர்கள் ஈடுபட முனைந் தனர். இடையருத இம்முயற்சிகளில் முன் னின்று ஏனையவர்க்கு வழிகாட்டினும் சிருஇசைலம். இவர் பாதிரி }} கற்பித்தலின் உள்நோக்கத்தையும் LD5 LDTip முறையையும் நன்குணர்ந்தவர். தெல்லிப்பழை போதன rt - 5F rati இறுதிப்பரீட்சைக்குக் கற்றுக்கொண்டிருக் கும்போது கிறித்துவ *மயத்தில் புகவே டிய நெருக்கமும் அதிகரித்துக்கொண்டே வந்தது. பரீட்சை முடிந்து வீடு செல்லு முன் ஞானஸ்நானம் பெறுகிறேன் என்று கூறினர். பரீட்சை முடிந்த அன்றிரவு நடு நிசியில் தம் பெட்டியையும் எடுத்துக் கொண்டு மதிலின் மேலாகப் էմո եւնեցել நடந்து வீட்டை அடைந்தார்."38 ை
32. Mahajana College Carnival Souvenir.
33. &ც5. ->. =ஃகுேசலம் - காரை: *?*ՃԼՐՀstrg-6»

fחט6 LD
வழக்கப்படி ஒரு வீட்டுத் திண்ணையிற் பாடசாலையை ஆரம்பித்தார். இது சுப்பிர மணிய வித்தியாசாலையாயிற்று: 1889இல் இவர் காட்டிய ஊக்கத்தின்வழி உதயமான சயம்பு பாடசாலை ? இன்று காரைநகர் இந்துக் கல்லூரியாக "த் திகழ்கிறது.
இதே சிந்தனைப்போக்குடன் வண்ணுர் பண்ணையில் திரு. ரி. நாகமுத்து அவர்கள் மெத்தை வீட்டில் ஒரு பாடசாலையை ஆரம் பித்தார். " இந்துக்கல்லூரியில் ஆசிரிய ராயும் விடுதி மேற்பார்வையாளராசவும் விளங்கிய இவர் சைவ மாணவர்களின் நலன் கருதித் தொடங்கிய இப்பாடசாலை இன்று " வைத்தீஸ்வர வித்தியாலயமாக விளங்கி நிற்கிறது. இவ்வாறு யாழ்ப்பாணத் 6. «ֆr Լ16) பகுதிகளிலும் ஆங்காங்கே பாடசாலைகள் தோன்றிக்கொண்டிருந்தன. அங்கெல்லாம் பாடசாலை தோன்றும் போது மக்களின் ஆதரவும் கிடைத்துக் கொண்டிருந்தது.
5 - 2. மிஷனின் ஆரம்ப காலச் செல் வாக்கை முற்று முழுதாகப் பெற்ற தெல்லி நகர் மக்கள் தங்களுடைய பணப்பையைத் திறப்பதில் மிகவும் தாமதமுடையவர்க ளாகவும் ஓர் இந்துப் பாடசாலை வேண்டு மென்ற கருத்துக்களை அறியக்கூடிய உயிர்ப்பு இல்லாதவர்களாகவும் காணப்பட்டனர். இத்தன்மையுடைய மக்கள் துரையப்பா பிள்ளைக்கு முழு ஆதரவையும் அளித்திருப் பார் எனக் கூறலியலாது. திரு. நாகமுத்து அவர்கள் ஆரம்பித்த பாடசாலைக்கே மக்களின் マ塾g列功「G's கிடைக்கவில்லை. அரசாங்க உதவியும் இல்லாத நிலையிற் பாடசாலை தளர்ந்து விடாது காக்க இராமகிருஷ்ண மிஷனிடம் பாடசாலையை திரு. நாகமுத்து அவர்கள் ஒப்படைக்க வேண்டியதாயிற்று. இத் துன்ப நிலையின் பெறுபேற்றை மாணிக்க இடைக்காடரின் சொற்கள் பிரதிபலிக்கின்றன. "தெற்கின் கல்வி நிலைய முகாமையாளனுக இருப்பது போன்று வடக்கில் இருப்பவன் அதிர்ஷ்டம் வாய்ந்தவனெனக் கூறமுடியாது. வடக்கில் தனித்தோ, குழுவாகவோ ஒரு நிறுவ
.8)$siuיes@ נט

Page 21
துரையப்பாபிள்ளை
னத்தை ஆரம்பித்தால் அவன் பொருள் வசதியற்று அத்தாபனத்தை நடத்துவதில் தளர்வடைவது இயல்பாயிற்று. '** இந்த யதார்த்த சூழ்நிலையில் தெல்லிப்பழைச் சுற்று வட்டத்துக்கெனத் துரையப்பா பிள்ளை அவர்கள் பாடசாலையை ஆரம்பித்த முற்போக்குவாதமும், அதனை மக்கள் பாடசாலை 'யெனப் பெயரிட்ட உறுதியும் போற்றுதற்குரியனவே.
மிஷனரியின் பாடசாலைத் தலைமைப் பதவியை வகித்த, ஒரு கிறித்தவர் அவர்க ளுடன் மனவேறுபாடுகொண்டு, அவர்க ளது கண்ணெதிரிலேயே மதத்தை மாற்றிக் கொண்டு, கிறித்தவ மதத்துக்கெதிரான சைவப் பாடசாலையை ஆரம்பிப்பதென் ரூல் அவரது தீர்க்கதரிசனப் போக்கும், காலச் சூழலும் ஒருபுறமிருக்க, அவரது வலுவான உளத்தையும் அது காட்டி நிற் கிறது. இது இவரது உறுதியான போக்கை மலினப்படுத்த - துணிவாக இறங்கிய செயலைப் பலவீனப்படுத்த-பல காரியங் கள் நடந்தேறின. 'அப்பகுதியிற் பிரபல்ய மான மனிதர்களை ஆசிரியர்களாக்கி அவர் களைக் கொண்டு அப்பகுதி மாணவர்களை மிஷன் பாடசாலையிற் சேரத் தூண்டிக் கொண்டிருந்தனர் இதன்மூலம் துரை யப்பாபிள்ளையின் பாடசாலையை முறி யடிக்கலாம் என்பது அவர்கள் கருத்து." 25 ஊர்ப் பிரமுகர்களினதும் மிஷனரிமாரி னதும் நிலை இவ்வாறிருக்க அரசாங்கத்தின் மனப்போக்கும் பிள்ளைக்குப் பாதகமாகவே அமைந்தது. *" திரு. ஜே. ஹோவாட் கல்வி அதிபர் தெல்லிப்பழை மிஷன் பாட சாலையைப் பார்வையிட்டு அதனுடைய அநாதரவான நிலையை மனதிற்கொண்டு மகாஜனுவைக் கணிக்கக் கூடாதென்ற ஒரு பாரபட்சமான முடிவைக் கொண்டிருந் தார்."38 பலமுனைத் தா க் கு த லுக் கிடையே பாவலர் பாடசாலையைப் பரி பாலிக்கவேண்டியிருந்ததுடன் அரசு ஏற்
34, 'Waidyeswaran' - Golden Jubilee Nu , கங்கையர் எஸ். -- மகாஜனு பொன்விழா மலர் - S. Fia Tai Satar otar. Ibd - Pag. 14. 37. - ši 5 : Si-3&T Težr. Ibd — Pg. 12.

ாயின் வாழ்க்கையும் சமகாலமும் 29
பதற்குரிய தகுதியிலும், மாணவர்க்குக் கல்வி புகட்டும் சாதுரியத்திலும், குறைவு நேராது கவனிக்க வேண்டிய பொறுப்பை யும் ஏற்றிருந்தார்.
பாடசாலை மாணவர்களின் தொகை யைக் காப்பாற்றுவதிலும், நிதி சேர்ப்பதி லும், ஆசிரியர்களுக்குச் சம்பளம் அளிப்பதி லும், கட்டிடங்களையும் தளபாடங்களையும், எதிரிடையான கல்விக் கந்தோருடன் பாட சாலைப் பதிவு சம்பந்தமாகப் போராடு வதிலும் பெருங்காலம் செலவழிந்தது: இவ்வாருன போராட்டங்களை மனதில் நினைத்தே திரு. சங்கரப்பிள்ளை அவர்கள், துரையப்பாபிள்ளை அவர்கள் இறந்த பின்னர் பின்வருமாறு இரங்குகின்றனர்: '' சுமத்தப்பட்ட பாரம் மிகவும் கூடுத லாக இருந்த காரணத்தினுல் அவருடைய உ ரு க்கு நரம்புகளும் தளர்ந்துபோக வேண்டியதாகவும் காலத்துக்கு முந்தியே அவரைக் கூற்றுவன் அழைத்துக்கொண் டான்." 27 ஏனையோருக்கு ஒளி கொடுப் பதற்காகத் தீபம் தன்னையே எரித்துக் கொள்வது போன்று பொருளாதாரப் பலம் சிறப்பாக இல்லாத நிலையிலும் சைவப் பாடசாலையைத் தமது இல்லத் திலே தொடங்கி அதனை அரசாங்கம் 1918இல் உதவி நன்கொடை வழங்கி அங்கீகரிக்கும் வரை யும், தம்மையே எரித்துக்கொண்டுள்ளார்.
இக் கால கட்டத்தில் இவரது இலக்கிய சமூக முயற்சிகள் மந்தப்பட்டிருந்த நிலை ஒன்றே இவரைப் பாடசாலை விவகாரம் நிலைகுலைத்திருந்தது என்பதைத் தெளி வுறுத்தும்.
5 - 3. மிஷனரிமாரின் சார்பாக இருந்த அரசுக்கு எதிராக மகாஜனவைச் செழிப் புறச் செய்யக் கையாண்ட புதிய உத்திகள் இவரது திறமையையும்கிந்தனையையும் ஆற் றலையும் புலப்படுத்துகின்றன. பரீட்சிக்க
mber.
- பச். 82.

Page 22
30 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு
விரும்பாத அரசுக்கு எதிராகச் சிறந்த கல்வி மான்களைக் கொண்ட பரீட்சகர் குழுவை அமைத்து அதன்முலம் பரீட்சித்தார். இக் குழுவில் சைவப்பெரியார் எஸ். சிவபாத சுந்தரம், ஜி. சிவராவ், சி. கே. சுவாமிநாதன், ரி. எச். குறெசெற் ஆகிய அறிஞர்கள் அங்கம் வகித்தனர். அக்காலத்து இப் பெரியார்கள் பாவலரிடம் கொண்டிருந்த பெருமதிப்பும் இதனலே தெரியவரும்.
முழுநேர ஆசிரியர்களை எல்லா வகுப்பு களுக்கும் ஒழுங்கு செய்யமுடியாத பட்சத் தில் வேறு பாடசாலைகளிலே கற்பிக்கும் ஆசிரியர்களின் சேவையைப் பயன்படுத் தினர். அவ்வாறு பயன்பட்டவர்களில் திரு. சங்கரப்பிள்ளை அவர்கள் குறிப்பிடப் படக்கூடியவர். ‘திரு. சங்கரப்பிள்ளை அவர் கள் கணிதத்திற்கு 9You DUġI l I nr l gr nr 2 முடிந்ததும் வந்து சேர்வார்' எனத் துரையப்பாபிள்ளை அ வர் கள் பாட சாலையை ஆரம்பித்த காலத்தே கற்ற திரு. கந்தையா அவர்கள் dig)6) rri .
வசதிகள் குறைந்த இப் பாடசாலையில் மாணவர்களுக்குக் கற்பித்தல் என்பதே தனிக்கலை. அக்கலையைப் பிள்ளையவர்கள் உபயோகித்த முறையே தனிச்சுவை t|63). - யது. 'ஆரும் வகுப்பிலிருந்து கேம்பிரிஜ் கனிஷ்ட பரீட்சைக்கு ஆயத்தப்படுத்துவது இலகுவான காரியமன்று. இலத் தீன் போன்ற u FT -- fi 55 GT irri ஆசிரியர்களும் நாங்களும் கடுமையாக உழைத்தோம். "அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவமாட்டாது" என்ற பழமொழியில் நம்பிக்கையுடையவர் எங்கள் தலைமை ஆசிரியர், இதல்ை அது எந்த நேரமும் உபயோகிக்கப்படும். அவ்வீட்டு அம்மை யார் இரக்கங் கொண்டு சிலவேளைகளிற் பிரம்பினை ஒளித்துவிட்டால் அங்கு ஒரு சிறு குழப்பம் நடை பெறுவதைக் கேட்கலாம். . எங்களுடைய வகுப்புக்கள் தலைமை штaliћишћsir வீட்டில் நடைபெற்றன. எங்க ளுக்குத் தரப்பட்ட பயிற்சியோ தனித்துவ முடையது. அது பழங்காலக் "குருகுல? முறையை ஒத்திருந்தது. முழு நாளுமே
38. கச்தைய எஸ். ட மகாஜகு பொன் விழா மலர் -
39. Mahajana Carnival Souvenir - Pg. 17.

மலர்
எங்களுடைய வீட்டுப் பாடசாலையில் கழிந்தது " . 38 எவ்வளவுக் கெவ்வளவு பழமைப் பாணியைப் பிள்ளையவர்கள் கையாண்டாரோ அவ்வளவுக் கவ்வளவு நவீன உத்திகளையும் தெரிந்து பயன் படுத்தினர். 'இவர்கள் மாணவர்களுக் குச் சுவைபடப் பாடங்களை நடத்தும் கலையைத் தெரிந்தவர். ஆகக் குறைந்த மாணவனும் இவர் பாடங்களில் ஈடுபா டடைவான் .மாணவர்களின். கஷ்ட நஷ்டங்களை உணரவும் கருணை காட்டவும் உள்ளம் உடையவர். விஞ்ஞான விரி வுரைகள் செயல்முறையாகவும் ( Magic Lantern Show ) p6v LD nr G. Gnylib Glamrë; 5'i பட்டது."89 இவ்வாறு நவீன நாட்டங் கொண்ட பிள்ளையவர்களைப் பற்றிக் கூறும் ப7 முத்துக்குமாரு அவர்கள் மாணவர் மீது அவர் கொண்ட அன்புக்கும் நெகிழ்ச் சிக்கும் ஓர் உதாரணம் காட்டுவார்: "பதினெரு வயது நிரம்பிய எமது சகோ தரன் மகாஜனவில் படித்துக்கொண்டிருக் கும்போது நோய்வாய்ப்பட்டிருந்தான். அவனது கடைசி நாட்களில் அடிக்கடி அவனைப் பார்த்துவந்த துரையப்பாபிள்ளை அவர்கள் கடைசியில் மனநெகிழ்ச்சி உடை யவராய் விட்டா ரென்பதை அவரெனக் கெழுதிய தேற்றக்கடிதத்திலிருந்து அறியக் கூடியதாயிற்று." இவரது இத்தகைய செயல்களைத் தொகுத்து நோக்குமிடத்து 'நல்ல ஒரு சூழ்நிலையிற் பிரசித்தி பெற்ற கல்விமான க "ஆர்னல்ட் றக்வி ’ போன்று எழுச்சி உற்றிருக்கலாம்' என்ற சங்கரப் பிள்ளை அவர்களின் கூற்று மிகப் பொருத்த முடையதே.
இவர் தமக்கும் அரசுக்கும் இடையே யுள்ள முட்டுக் கட்டையைப் அரசியல் வாதிகளின் உதவியை நாடித் தீர்க்க முனைந்தார். அக்காலத்தில் பிரபல்யமான திரு. கனகசபை, திரு. பாலசிங்கம் ஆகிய அரசியல்வாதிகள் இவரது பாடசாலைக் காக உழைத்தபொழுதிலும் எட்டு ஆண்டு களுக்குப் பின்னரே அரசாங்கம் கையேற்க முன்வந்தது. இவ்வெட்டாண்டுக் காலமும்
பக், 33.

Page 23
துரையப்பாபிள்ளை
தமது குடும்பமான மனைவியிலும் , மூன்று மக்களிலும் அதிக அக்கறை காட்டும் சந்தர்ப்பம் கிடைத்திலது. " " எ ங் க ள் குடும்பம் தாயின் பொறுப்பிலேயே இயங் கிற்று. எங்களின் தேவைகளையெல்லாம் தாயாரே கவனித்தார். அடுக்களைக்கும் வந்து நின்று வேடிக்கையாகக் கதைகூறும் தந்தை அதிகமான நேரத்தை ஆழ்ந்த சிந்தனையிலேயே செலவழித்தார். ' என் னும் தெ து. ஜயரத்தினத்தின் கூற்று இதனை மெய்ப்பிப்பதாக உள்ளது.
8 - 0 - வீட்டு விவகாரங்கள் என்ன , தனக்குக் கைவந்த கவிதைக் கலையிலும் இக்காலத்தில் கவனத்தைச் செலுத்திய தாகத் தெரியவில்லை. இவரது ஆக்கத் தொகுதியான சிந்தனைச்சோலையின் பெரும் பகுதி 1910 க்கு முன்னரும் 19 18க்குப் பின்னருமே வெளிவந்திருக்கவேண்டும். பாடசாலை தவிர்ந்த ஏனைய முயற்சிகளில் மந்த நிலையைக் காட்டும் இடைப்பட்ட காலத்தில் தனிப்பாடல்கள் தேவை கருதி இயற்றப்பட்டன. இராமநாதன் கல்லூரித் திறப்பு விழாவிற்கு 1913 இல் பாடிய பாடலை இவ்வாறே கருதமுடியும். இவரது இலக்கிய சேவை கவிதையோடும் நாடகத் தோடும் அமையாது கட்டுரைத் துறையி லும் சென்றது. இந்துசாதனத்தின் உதவியாசிரியராகக் க ட  ைம ய ர ற் றும் பொழுது எழுதியதாகக் கருதக்கூடிய , ஆணுல் இன்னும் உறுதி செய்யப்படாத கட்டுரைகள் இவர்பேரில் எழுத்துருவம் GLIGorgiairan 607. How to eat and what to eat, Use and usefulness of English என்பன இவரால் எழுதப்பட்டன எனக் கருத இடமுண்டு. இவை எழுதப்பட்ட 4s nr G 5-ŠSG3av Guiu o Ceylon National Review" என்னும் பத்திரிகையில் எழுதிய *Jaffna Past and Presento arassob கட்டுரையும் பெயர் குறியாமல் வெளிவந்து கொண்டிருந்ததென்பதும் மனங்கொள்ளத் தக்கது. கேட்டார்ப்பினிக்குத் தகையதாக யாழ்ப்பாணத் தமிழ் மகாநாட்டிலே இவர் வாசித்த " தமிழரின் இன்றைய நிலை என்ற தீலேப்புக் கட்டுரையும் பிள்ளையவர்
40. అంతగా గు-3 3 ఇచాr + '}E 1972
, معہ فی ممI c * * ~50 زخیز مسیح ، ، ،

யின் வாழ்க்கையும் சமகாலமும் 31
களின் கட்டுரைத் திறமைக்குச் சான்று பகர்கிறது.
6 - 1. கவிதை உரைநடை இலக்கியங் களைப் பொறுத்த மட்டில் 'பாவலர் காலம் குறிப்பிடக்கூடிய வொன்ருகும். “நவீனத் துவத்தைக் கையாள முற்பட்ட முயற்சி 20ஆம் நூற்றண்டிலே இலக்கிய கர்த்தாக்களால் முழு உணர்வுடன் கைக்கொள்ளப்பட்டதாயினும் பின் நோக்கிப் பார்க்கும்பொழுது சென்ற நூற்றண் டின் கடைக்காலமிருந்து அது படிப்படியாக உருவாகிவந்துள்ளது." 40 இத்தொடர்பிலே கோபாலகிருஷ்ண பாரதியார், அருணுசலக் கவிராயர், அண்ணுமலை ரெட்டியார், இராமலிங்க சுவாமிகள், வேதநாயக சாஸ் திரியார் முதலியோரைக் குறிப்பிடலாம். இவர்கள் பெரும்பாலும் இனிய, எளிய நடையில் இசைப்பாங்குடன் செய்யுள்கள் இயற்றியவர்கள். சிந்து, கும்மி, கண்ணி முதலிய இசைப்பாக்களும், கீர்த்தனைகளும் இவர்களாற் சிறப்பாகப் பாடப்பெற்றவை, இவர்கள் எளிய பதம், எளிய நடை, எளிய சந்தம், எளிய மெட்டு என்பவற்றைக் கையாண்ட பொழுதிலும் ஒருசிலரே எளிய பொருளைக் கையாள முனைந்தனர். பொரு ளிலும் எளிமையைப் புகுத்த முனைந்தவர் களுள் வேதநாயக சாஸ்திரி, இராமலிங்க சுவாமிகள் இருவரும் குறிப்பிடப்படக் கூடியவர்கள். இவர்களது பாடல்களிலே தமது கால சமூகப் பிரக்ஞை தலைகாட்டு கிறது. கிறித்தவரான வேதநாயக சாஸ்திரி யின் பாடல்கள் "கிறித்து மார்க்கத்தின் கொள்கைகளைத் தன்முனைப்புடன் எடுத் துக் கூறுவனவாயுள்ளன . புதிதாக மதம் மாறியோரிடத்துக் காணப்படும் வரம்பு மீறிய கொள்கை வெறியும் பற்ருர்வமும் சாஸ்திரியார் பாடல்களிலே பிரதிபலிக் கின்றன.'
"சாதியேதுகாண் - அதிலொரு
சைவமேதுகாண் "' என்னும் பாடல் அக்காலச் சமுதாயப்
பிரச்சினையை இவர் அணுகுமுறைக்குத் தக்க எடுத்துக் காட்டாகும்.

Page 24
32 துரையப்பாபிள்ளை நூற்றண்டு
6 - 2. பத்தொன்பதாம் நூற்றண்டுப் பாவலரான துரையப்பாபிள்ளையவர்களின் கவிதைகளை இப்புதுமைப் போக்கு நெறிப் படுத்தியது. இவருக்குப் பத்து வருடங் களின் பின்னே பிறந்து, பாவலர் உலகத் தையே புதுமையாற் கவர்ந்த பாரதியார் இவருக்குச் சமகாலத்தவர். பாரதிக்குக் களம் சமைத்தவர்களாக முன்னே கூறிய கவிஞர்கள் கருதப்பட்டாலும் எல்லா வகையிலும் நவீனத்துவத்தின் முன்னேடி யாகப் பாரதி அமைந்துவிட்டான். சொல் லிலும் சிந்தனையிலும் ஒரு புதிய காலத் தைப் படைக்க முனைந்த பாரதி பாவல ரைக் கவர்ந்திருப்பாரென்பதில் ஐயமில்லை. ஆயினும், பாவலர் பாடல்களிலே காணப் படும் அறக் கருத்துக்களும் பழமைக்கும் புதுமைக்கும் முடிச்சுப்போடும் போக்கும் பாரதியினின்றும் இவரைத் தெளிவாக வேறுபடுத்துகின்றன. ஆயினும் பாவல ரிடத்திற் காணப்படும் பழமைப் பண்பு ஈழத்து இலக்கிய முன்னேடி எனக் கூறு வதைத் தடை செய்யாது.
6 - 3. "இவர் பாடிய பாடல்கள் சமூக விழிப் புணர்ச்சியையும் சமுதாயச் சீர்திருத்தத்தை யும் அவாவிய அக்காலச் சமூகத்தின் போக்கிற் கிணங்கக் காலத்தின் குரலாகப் பன்முகப் பட்ட உணர்வுகளையும் தேவைகளையும் ஒருங்கே நிறைவு செய்வனவாக அமைந்தன’கி 1 என்று ஆ. சிவநேசச்செல்வன் அவர்கள் கூறுவது மேலும் பிள்ளை ய வ ர் களின் உணர்வு பூர்வமான சமுதாய நோக்கைச் சுட்டிக் காட்டுகிறது. அக்காலத்திலே இந்திய அரசியல் வானிலே நிகழ்ந்த வீரர்கள், சமயச் சீர்திருத்தவாதிகள், கிறித்தவ மிஷனரிமாரின் செயல்கள், தமிழ்க்கல்வி யின் தாழ்ந்த நிலை, கலாசாரப் பாரம் பரியத்தின் வீழ்ச்சி முதலியவற்றை யெல் லாம் பேச்சுத்தமிழை அடி நிலை யாக ச் கொண்டு ஆக்கினர். இச்சிந்தனைச் சிதறல் கள், அவரது பத்திரிகைத் தொடர்பால் ஏற்பட்டிருக்கலாம். காலத்துக்குக் காலம் காணப்படும் குறைபாடுகளைப் பத்திரிகை வாயிலாக உணர்த்திய பிள்ளைக்கு இவை உந்துதலாக அமைவுற்றிருந்தன.
41. மல்லிகை, துரையப்பாபிள்ளை நினைவு இதழ் : 42. கைலாசபதி ச, தினகரன் 28-12-60.

ldøvfi
இதன் காரணமாகவே “ கோபால கிருஷ்ண பாரதியார், இராமலிங்க சுவாமிகள், வேதநாயகம்பிள்ளை, பாரதியார் என்போர் தமிழ்ச் சமுதாயத்தைப் பற்றிப் பாடிய பாட்டுக் களை அடிக்கடி நினைவூட்டும் பாடல்களைப் பிள்ளை யவர்கள் யாத்திருக்கின்றர்."42 யாழ்ப்பாண சுவதே சக்கும்மி, எங்கள் தேசநிலை, கீதரச மஞ்சரி ஆகிய பகுதிகளிற் காணப்படும் பாடல்கள் புதியதொரு யாழ்ப்பாணத்தை நிச்சயமாகக் காட்டவில்லை. எங்கள் தேச
நிலையில்,
**கொண்டைக்குப் பூச்சூடும் குணம்போச்சு
நாடாக் கொண்டு மயிர்முடிக்கும் காலமாச்சு தண்டைப்பாதசரங்கள்தவிப்பாச்சு-பெண்கள் சப்பாத்துள் நொண்டிவரக் காலமாச்சு’ என வரும் அடிகள் நல்லதோர் உதாரண மாகும் .
கீதரச மஞ்சரிக்கு முகவிலாசம் எழுதிய கதிரைவேற்பிள்ளை அவர்கள் 'தமிழ் நாட் டவருக்குச் சற்புத்தி புகட்டிக் கால விருத்திக்கும் தேச நலத்திற்கும் மேற் சன்மார்க்க விஷயங்களில் எவரும் விளங்கத்தக்க செம்பாகமான பாஷையிற் கேட்போர் செவிக்கின்பம் பயக்கத்தரும் மதுரமான இராகங்களில் சொற்சுவை பொருட்சுவை நிறைந்த இக் கீர்த்தணு மாலையை வெளிப்படுத்தியுள்ளார்கள்? , என்பர். இவரது கூற்று, பாவலர் சங்கீத ஞானத்தைத்தெளிவுபடுத்துகிறது. மேடை களிலே பாடுவதற்கு முன்னர் பலமுறை பயிற்சியளித்து இராகத்துடன் அமைந் தாலே பாடகரை மேடையேற்றும் நடை முறைப் பண்புடையவராயிருந்தார் பிள்ளை யவர்கள். கீர்த்தனங்கள் இவருக்குக் கை வந்தனவாயிருந்தன. கிறித்தவராயிருந்து கீர்த்தனங்களிலே பாடிப் பழகிய தோஷம் இவருக்கு இந்நிலையை அளிப்பதாயினும் பிற யாப்புக்களையும் கையாள்வார். வெண்பா, ஆசிரியப்பா முதலியவற்றில் ஆற்றல் உள்ள இவர் எடுத்த உடனேயே கவிபாடும் திறன் படைத்தவர். மாணவன் ஒருவன் புகையிலை மென்றதைக் கண்ட
.22 . ثم نس .1972 بعد -

Page 25
துரையப்பாபிள்ஃ
பாவலர் அவனைத் தண்டியாது அவன் மேல் வெண்பா ஒன்றை இயற்றினராம். தமிழிலுள்ள பா வடிவங்களை ஆங்கிலப் புலமையுடையவரான கார ண த் தா ல் பரிசீலனை முயற்சியாக ஆங்கிலத்திலும் பாடிமுடித்துள்ளார். பாவலரின் பாடல்கள்,
"சுவைபுதிது பொருள் புதிது வளம்புதிது
சொற்புதிது சோதிமிக்க நவகவிதைஎந்நாளும் அழியாதமாகவிதை.” எனப் புகழத்தக்கனவே,
6 - 4. கிறித்தவராயிருந்த காலத்தே கிறித்தவ நெறிபரப்பிய 'உதயதாரகைப் பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமை புரிந்தார். இது 1905இலிருந்து 1908 வரை யுள்ள மூன்று வருட காலமென ஊகிக்க இடமுண்டு. இவர் ஆசிரியராக இருந்த காலத்தில் இப்பத்திரிகை ஒரு புதிய மாற்றத்தையும், வேகத்தையும் பெறுவ துடன் சமகாலத்துச் சமுதயாய அரசியல் பிரச்சினைகளையும் உணர்வு பூர்வமாக அணுகுகிறது. இவர் எழுதிய தலையங்கங் கள் இவரது காலத்தின் தேவையற்ற மாற்றங்களைச் சாடி நிற்கின்றன. யாழ்ப் பாண தரிசனன்” என்ற புனைபெயரிலே அந்நிய பழக்கவழக்கங்களையும் கண்மூடித் தனமான கொள்கைகளையும் வேடிக்கை யாகக் குத்திக் கண்டித்தார்.
இக் கண்டனங்களும் சீர்திருத்தக் கருத் துக்களும் வாழ்நாளின் இறுதிவரை நீடித் தன. "இந்துசாதன ஆங்கிலப் பத்திரிகை யின் துணையாசிரியராக விளங்கும்போது இத்தொண்டைச் செவ்வையாக நிறை
பாவலர் போற்றுதும்
பண்டிதர் சி.
ஆங்கிலமும் வல்லான் தேங்குபிர சங்கமழை ே தேசகலம் பாஷைகலம் ஆசிரிய னன்றிமற்றிங் ச
SMASMAAMASAMASAMAMAMAAMASAMASMASMAMSMAMMAMAMAMMAMASAMMASAMMALALASALALALALALA
I - S
1a-M.-- WWM-ra-M-N.

ாயின் வாழ்க்கையும் சமகாலமும் 33
வேற்றினர். அப்பொழுது அவர்தம் புனை பெயரை ' யாழ்ப்பாணச் சீர்திருத்தவாதி” (Ja fina Reformer) 67 687 603ugsgjë; Gj5 major டார். 1921ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் திகதி ஆங்கில உ த வி ப் பத்திராசிரிய ராக இருந்த ச. சிவகுருநாதர் அவர்கள் தே கவியோகமாயினர். அவருடைய இடத்தில் தெ. அ. துரையப்பாபிள்ளை அவர்கள் நியமனம் பெற்ருர். 1924ஆம் ஆண்டு மேமாதத்தில் அ. சபாபதி அவர்கள் காலமாகவே ஆங்கிலப் பத்திராசிரியராக வும் கடமைபுரிந்து, மீண்டும் எம். எஸ். இளையதம்பிஅவர்கள் பத்திராசிரியராகவே அவருடனும் 1925 வரை உதவி ஆசிரியராக இருந்து பணிபுரிந்தார். இதனைவிட "மாண வர் சஞ்சிகை" என்ற ஆங்கில சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து மாணவர்களுக்கு உதவி புரிந்த இவர் கொழும்பில் வெளி யான தினசரிகளுக்கும் விடயதானமளித்த தாகத் தெரிகிறது.
இவர் எழுப்பிய சீர்திருத்தக் கருத் துகள், செய்துமுடித்த சமூகசேவைகள், நடத்திய இலக்கியக் கூட்டங்கள், யாத்து முடித்த கவிதை ஊற்றுக்கள் மக்களால் இன்றும் உணரப்படுகின்றன.இளம் வயதிற் கால நீரோட்டத்துடன் சேர்ந்து நீச்ச லடித்த பிள்ளையவர்கள் வாழ்வின் பிற் பகுதியில் காலநீரோட்டத்திற்கு எதிர் நீச்சல் போட்டு வெற்றிகரமாகக் கரை யேறி நின்ற கர்மவீரன். பாவலர் துரை யப்பாபிள்ளை அவர்களைக் கால னின் கைகள் கவர்ந்தபோதிலும், காலத்தின் கைகள் அணைத்து நிற்கின்றன.
கதிரிப்பிள்ளை
அருந்தமிழ்நூ லும்வல்லான் சர்ந்தமுகில் - பாங்குடைய சேர்ந்ததொண்டி னிற்பிரியன் Ti.
MYNWYMM"MMWW*M-W

Page 26


Page 27
துரையப்பாபிள்ளையும் தேசியப் பின்னணியும்
பாவலர்துரையப்பாபிள்ளை அவர்களின் நூற்றண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வேளையில் அவரது வாழ்க்கையையும் சாதனைகளையும் பல் வேறு கோணங் களிலிருந்து நோக்கி மதிப்பிடுதல் இயல் பானதொன்றேயாகும். இந்நூற்றண்டின் தொடக் கத்திலிருந்து இலங்கையிலே தேசியவாதம் படிப்படியாக உருவாகி வந் துள்ளது; இத்தேசியவாதம் முற்பகுதி யிலே சமய, சமூக, கலாசாரத் துறைகளி லும் பிற்பகுதியிலே, பொருளாதார, அர சியல் துறைகளிலும் சிறப்பாக வெளிப் பட்டது. பிரதேச அடிப்படையிலே தேசி யத்தின் வேகமும் வலுவும் ஒரு grrr ges இருக்கவில்லை என்பது உண்மையே. எனி னும் தேசியவாதத்தின் அடிப்படைக் கூறுகள் நாடு முழுவதிலும் பொதுவாக விரவிக் காணப்பட்டதும் மனங்கொள்ள வேண்டியதொன்றே இப்பொதுவிதியின் அடிப்படையிலே துரையப்பா பிள்ளை இயங் கிய சூழலை ஓரளவு விளக்குவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்,
இலங்கையில் மட்டுமன்றி ஏனைய ஆசிய நாடுகள் பலவற்றிலும் தேசியத்தின் உட னிகழ்ச்சியாக, உயர்ந்தோர் குழாம் ஒன்று உருவாகியது. உயர்ந்தோர் குழாம் என்ப தனை நவீன சமூகவியலாளர் எலிற் " (Elite) என்னும் ஆங்கிலச் சொல்லாற் குறிப்பர். மனித வரலாற்றிலே வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தன்மை வாய்ந்த உயர்ந்தோர் குழாங்கள் தோன்றி மறைந்துள்ளன. பொருளுடைமை, சமூக அந்தஸ்து, அரசியற் செல்வாக்கு என்பன இவ்வுயர்ந்தோர் குழாங்களின் தனிச்சிறப் பியல்புகளாயும், வெவ்வேறு காலப் பகுதி களில் இவற்றுக் கிடையேயுள்ள வேறு பாட்டைத் துலக்கிக் காட்டுவனவாயு முள்ளன.

கலாநிதி க. கைலாசபதி M. A. (Cey.) Ph.D. (Birm.) இலங்கைப் பல்கலைக் கழகம்
கொழும்பு வளாகம்,
பிரித்தானியரது ஆட்சியின் விளைவாக வும் நாட்டின் பொருளாதார அமைப்பில் நிகழ்ந்த பெருமாற்றங்களின் பயணுகவும் புதியதொரு உயர்ந்தோர் குழாம் உருவா கியது எனச் சுருக்கமாகக் கூறுவது பொருத்தமாகும். நிலமானிய அடிப்படை யில் கமத்தொழிலை மாத்திரம் பிரதான மாய்க் கொண்டியங்கிய பொருளாதார அமைப்பில், வரையறுக்கப்பட்ட சாதி யமைப்பின்மீது கட்டியெழுப்பப்பட்டிருந்த சமூக உறவுகள், பிரித்தானிய ஆட்சியில் நிலைகுலையலாயின. குடியேற்ற நாடாக அமைந்த இலங்கையைப் பிரித்தானியர் தமது தேவைக்கேற்ப, மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடாகவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை இறக்குமதி செய்து உள்நாட்டிலே விற்பனை முறையை விஸ்தரிக்கும் நாடாகவும் மாற்றியமைக் கும் பெரும்பணியைச் செய்தனர். இது தவிர்க்கவியலாத வரலாற்று நிகழ்வாகவும் இருந்தது. இம்மாற்றம் நிகழ்ந்து கொண் டிருந்தபோது புதிய புதிய துறைகளிலும் வழிகளிலும் பொருளீட்டும் வாய்ப்புப் பலருக்குக் கிடைத்தது. இவர்கள் ஏலவே சமூகத்தில் உயர்நிலையில் இருந்தவர்களா யினும், இடம்பெயர்ந்து சென்று புதிய வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதில் முந்தி யோரினின்றும் வேறுபட்டனர். தாம் ஈட்டிய செல்வத்தைக் கொண்டு தமது பிள்ளைகளுக்குப் புதிய கல்வியைப் பெற்றுக் கொடுத்ததோடு இங்கிலாந்துக்கு மேற் படிப்பிற்காக அனுப்பவும் வழிகண்ட னர். அவர்கள் அங்கு பெற்ற உயர் கல்வி யும் ஆங்கிலப் பயிற்சியும் மேலும் அவர்க ளது வேலை வாய்ப்புக்களையும் உத்தி யோக சந்தர்ப்பங்களையும் அதிகரித்தன. இவ்வாறு காரணகாரியத் தொடர்புடன் புதிய வர்க்கம் ஒன்று - உயர்ந்தோர் குழாம் ஒன்று - தோன்றியது. இஃது

Page 28
38 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு
இலங்கை முழுவதற்கும் பொதுவான வளர்ச்சி முறையாயிருந்தது. அதாவது சிங்களவர் தமிழர், முஸ்லிம்கள் ஆகிய மூன்று சமூகத்தவர்கள் மத்தியிலும் இப்போக்கினைக் காணக்கூடியதாயுள்ளது. பெரும்பாலும் சிற்சில குடும் பங்கள் பிரித்தானியர் ஆட்சியிற் சீரும் சிறப்பும் செல்வாக்கும் பெற்றன. கொழும்பில் இருந்த பொன்னம்பல முதலியார் குடும் பத்தை இதற்குச் சிறந்த எடுத்துக் காட் டாய்க் கொள்ளலாம். இராமநாதன் அருளுசலம் ஆகியோர் இலங்கையின் உயர்ந்தோர் குழாத்தில் இடம்பெற்ற வரலாறு இங்கு நினைவுகூரத்தக்கது.
நவீன இலங்கைச் சமூக வரலாற்றை ஆராய்ந்தவர்கள், இங்குக் குறிப்பிடும் உயர்ந்தோர் குழாம் இரு பிரிவானது என்பர் , 1
உயர்ந்தோர் குழாம் தேசிய அடிப் படையிலும் பிரதேச அடிப்படையிலும் பாகுபடுத்தப்படுவதுண்டு. முன்குறிப்பிட்ட மூன்று அம்சங்களான பொருளுடைமை, சமூக அந்தஸ்து, அரசியற் செல்வாக்கு என்பவற்றில் தேசிய ரீதியான உயர்ந் தோர் குழாத்துக்கும், பிரதேச ரீதியான - உள்ளூர் - உயர்த்தோர் குழாத்துக்கும் அடிப்படை வேறுபாடில்லை எனலாம். ஆயினும், வாழ்க்கைமுறை, இலட்சியங் கள், பாரம்பரிய உணர்வு முதலியவற்றில் இவ்விருபிரிவுகளுக்குமிடையிற் குறிப்பிடத் தக்க சில அழுத்த வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக, அனைத்து இலங்கைக்கும் பொதுவாக - தேசியத் தலைவர்களாகவிளங்கியோர் சுடுதலாக மேலைப்புல நாக ரிகத்தை ஏற்றுக்கொண்டவராய், நாட்டின் வெகுஜனங்களிலிருந்தும் "விலகியிருந்தோ ராய், தாய்மொழியிலும் பார்க்க ஆங்கிலத்
1. உதாரணமாக, இலங்கைத் தேசியத்தின் விற்
றெபர்ட்ஸ், இப்பாகுபாட்டை நுட்பமாக ஆராய்ந்திருக்கும் அவரது கருத்தக்கள் சில இ.
யிருக்கன.
2.
சிற்சில Cரலாற்றுக் காரணிகளிஞல், G ( பார்க்க, அவர்க்குச் சரி5ேரினராய் வட இs யப் பரிச்சயமும் ஈடுபாடும் உடையராய் இரு
பாதிப்டை ஏற்படுத்திவருகின்றன.

மலர்
திலே பயிற்சியும் புலமையும் மிக்கு உடை Guust grm uit விளங்கினர். இப்பண்புக்கு நேரெதிர்நிலைப்பாட்டைப் பெற்றிருந்தனர் உள்ளூர் உயர்ந்தோர் குழாத்தினர்.2
எனினும், தேசிய உயர்ந்தோர் குழாத் துக்கும், உள்ளூர் உயர்ந்தோர் குழாத்துக் கும் ஒரு முக்கியமான வேறுபாடு இருந் தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தோன்றியிருப்பினும் த லே ந கரு ட ன் தொடர்புகொண்டு அதனைத்தமது பிரதான இருப்பிடமாக்கிக் கொண்ட தேசிய உயர்ந் தோர் குழர்த்தினர் இன, மொழி, மத வித்தியாசங்களைக் கடந்து வர்க்க அடிப் படையில் கூடுதலான ஒருமைப்பாடுடைய ராய் விளங்கினர் . வர்க்கம் என்ற சொல்லி ணுல் இக்குழாத்தைக் குறிப்பிடுவதில் தவறு எதுவும் இல்லை. ஒரே தன்மையான வாழ்க்கைமுறை, பொருளிட்டம் , மதிப்பீடு கள், வருமானம் என்பவற்ருலும் நெருங் கிய தொடர்புகளினுலும் இவ்வர்க்கத்தின ரிடையே “வர்க்க உணர்வும் வளர்ச்சி யுற்றுக் கர்ணப்பட்டது. அதுமட்டுமல் லாது இவர்கள் ஆங்கிலேய ஆட்சியாளரிற் பெரும்பகுதியினரையும் தமது சக "வர்க் கத்தின"ராகவே கருதிப் பழகினர். பிரித்தானிய அரசினல் வழங்கப்பட்ட விருதுகளும் பட்டங்களும் இத்தகைய மன ஒற்றுமையை உறுதிப்படுத்துவனவாய் அமைந்தன .
உள்ளூர் உயர்ந்தோர் குழாமோ அத் தகை ஒருமைப்பாடும் ஒன்றிணைப்பும் கொண்டிருக்கவில்லை; அதன் காரணமாக அதனைச் சார்ந்தோர் சில வேளைகளில் முரண்பட்ட கருத்தோட்டங்களையும் நல நாட்டங்களையும் பிரதிபலிப்பவரா யிருந் தனர். இன மொழி, மத அக்கறைகள்
அம்சங்கஃச ஆராய்ச்அள்இ கலாநிதி மைக்கல் பிலக்கியிருக்கிமூர். சிங் களப் பகுதிகளையே சிறப்பாக
கட்டுரையை எழுதிங்கால் எனக்குக் திரைசெய்வனவா
னிலங்கையில் இருந்த பிரதேசப் பிரமுகர்களிலும் ங்கையில் இருந்தோர் கூடியளவு ஆங்கிலக்கஃல இலக்கி *தனர். இதன் விளைவுகள் இன்றுவரை பல வழிகளில்

Page 29
துரையப்பா
இவர் களைக் கூடுதலாகப் பாதித்தன. 35 GT F Tiru பிரச்சினைகளில் இவர்கள் தவிர்க்க இயலாதவாறு ஆழ்ந்த ஈடுபாடும் சிரத்தையும் கொண்டியங்கினர். உதாரண மாக, தேசிய உயர்ந்தோர் குழாத்தைச் சேர்ந்தோர் அனைவரும் அன்றைய நிலையில் ஆங்கில மொழியையே தமது பிரதான கருத்து வெளிப்பாட்டுச் சாதனமாகக் கொண்டனர். ஆணு ல் பிரதேசங்களில் வாழ்ந்த பிரமுகர்கள் (குறிப்பாகச் சிங்க ளப் பகுதிகளில்) தாய்மொழியையே அதிக மதிகமாகப் பயன்படுத்தலாயினர்.ஆறுமுக நாவலரிலிருந்து துரையப்பாபிள்ளை, ஈழ கேசரிப் பொன்னேயா வரையிலான உள்ளூர் உயர்ந்தோர் குழாத்தினர் தாய்மொழிப் பாண்டித்தியம் நிரம்பப் பெற்றவராய்த் திகழ்ந்தனர். இத்தகைய பொதுப்பண்பு கள் வாய்க்கப் பெற்றிருந்த உள்ளூர்ப் பிரமுகர்கள் வரிசையில் இடம் பெறுபவரே பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளை,
பாவலர் அவர்கள் இயங்கிச் செயற் பட்ட தேசியப் பின்னணியைச் சுருக்கமாக விளக்குமுகமாகத் தென்னிலங்கைக்கும் வடபகுதிக்கும் பொதுவாக அமைந்த சில இயக்கங்களை ஈண்டு விவரிக்கலாம் என எண்ணுகிறேன். நாட்டின் பல பகுதிகளி லும் மாவட்ட பிரதேச அடிப்படையில் எழுத்த இவ்விடயங்களிற் சில காலக் கிரமத்தில் அனைத்திலங்கை முக்கியத்துவம் பெற்றது மட்டுமன்றி, மெல்ல மெல்ல உருவாகிவந்த தேசிய வாதத்தின் மிக முக்கியமான கூறுகளாகவும் அமைந்தன என்பது மனங்கொள்ளத் தக்கதே. அத் தகையதோர் இயக்கம் மதுவிலக்கு இயக் கம் ஆகும் ,
கலாநிதி (திருமதி) குமாரி ஜயவர்த் தஞ**,கலாநிதி பி. டி. எம். பெர்ளுந்து ஆகி யோர் அண்மையில் விரிவாக நிகழ்த்தியுள்ள ஆய்வுகளின்படி, இந்நூற்ருண்டின் தொடக் கத்தில் மதுவிலக்கு இயக்கம் (சிறப்பாகத் தென்னிலங்கையில்) பரவலாக நடைபெற் றமை தெரியவந்துளது. மது அருந்துவது பெளத்தமதக் கோட்பாடுகளுக்கு விரோத மானதாயும், மேற்குநாட்டு நாகரிகச் சின்னமாகவும், அந்நிய பழக்க வழக்கமாக வும் கருதப்பட்டமையால், அவ்வியக்கம்
2py. Economic and Political Factors
Studies, Vol. XXIX, No. 2, 1970.

பிள்ளை யும் தேசியப் பின்னணியும் 39
பரந்துபட்ட வெகுஜன இயக்கமாக அமை யக்கூடிய உள்ளியல்பைப் பெற்றிருந்தது. இறுதி ஆய்வில் மதுவிலக்குப் பிரசாரம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான பிரசார மாகவும் அமைந்தது. அன்றைய ஆட்சி யாளர் அதனைக் கவனிக்கத் தவறவில்லை. 1915ஆம் ஆண்டுக்குரிய பொலிஸ் மா அதிபரின் ஆண்டறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது : ' இம் மதுவிலக் குக் கூட்டங்களிலே தேசியமும் அரசியலும் பெருமளவு கலந்தே இடம்பெற்றன. மது விலக்கு என்ற பெயரில் இவை உண்மையில் அரசியற் கூட்டங்களாகவே த  ைட பெற்றன.
1912ஆம் ஆண்டு இயற்றப்பெற்ற மது வரிக் கட்டளைச் சட்டத்தின் விளைவாக நாடு முழுவதும் மதுபானச் சாலைகள் (தவறணை கள்) பெருகின. உள்ளூர்த் தலைவர்கள் இதனை வன்மையாய்க் கண்டித்துக் குர லெழுப்பினர். தென்னிலங்கையிற் பேரியக்க மாக நடந்தேறிய மதுவிலக்குப் பிரசாரம், 1915ஆம் ஆண்டில் ஏற்பட்ட கலவரங் களுக்குப் பங்களித்துதவிய காரணியாய் இருந்தது என அரசாங்கம் கருதியபடியா லேயே, அதில் சம்பந்தப்பட்ட தலைவர்கள் பலரை அரசாங்க விரோதிகள் எனக் குற்றஞ்சுமத்திச் சிறையிட்டது.
இவ்வாறு தென்னிலங்கையை உலுப்பிய மதுவிலக்கு இயக்கம் வடபகுதியிலும் தீவிர மாக நடைபெற்றது. இயக்க வடிவம் பெறுவதற்குப் பல்லாண்டுகள் முன்ன தாகவே ஆறுமுகநாவலர் மதுவிலக்கைப் பற்றிச் சிந்தித்து எழுதியிருந்தார்
* வறுமைக்கும் துன்பத்துக்கும் சகல பாவங்களுக்கும் பிறப்பிடம் மதுபானம். இலங்கையிலே பூர்வகாலத்தில் மதுபானம் மிக அரிது. தற்காலத்திலோ அது விருத்தி யாகிக் கொண்டே வருகின்றது. துரைத் தனத்தாருக்குச் சாராயத்தினுல் 1852ஆம் வருஷத்து வரவு ஏறக்குறைய 6,00,000 ரூபா , 1872ஆம் வருஷத்து வரவு ஏறக் குறைய 20,00,000 ரூபா. கல்வியிலும் நாகரிகத்திலும் சிறப்புற்ற ஆங்கிலேய துரைத்தனத்தார், தமக்குச் சாராயத்தால்
in the l95 Riots, The Journal of Asian

Page 30
40 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு
எய்தும் பொருளைப் பிறவாயில்கள் சில வற்றல் எய்துவிக்கத் தலைப்பட்டுக்கொண்டு சாராயத்தை ஒழிவிப்பாராயின், இலங்கைச் சனங்கள் நல்லொழுக்கமும், செல்வமும், ஆரோக்கியமும்தீர்க்காயுசும் அடைவார்கள்.
1874ஆம் ஆண்டில் வெளியிட்ட பூமி சாத்திரத்தில் மேற்கண்டவாறு சஞ்சலத் துடன் எழுதினர் நாவலர் . 8
சமய அடிப்படையிலேயே நாவலர் தமது எதிர்ப்பைத் தெரிவித்தாரெனினும் , 'இலங்கைச் சனங்கள்" என்ற சொற் ருெடர் உற்று நோக்கவேண்டியதாயுள்ளது. நாவலர் இயற்றிய பாலபாடம் நான்காம் புத்தகத்தில் கொலை, களவு, கள், வியபி சாரம் முதலிய பாதகங்களில் ஒன்ருன கள் ளுண்ணலைக் கடிந்து எழுதியுள்ளார். ஆனல் ஆட்சியினர் தமது வருவாயைப் பெருக்கு வதற்காகச் சாராய விற்பனையை அதி கரிப்பதைக் கண்டிக்கும் பொழுது அவரது "சமூக-பொருளாதார உணர்வு புலப் படுகிறதெனலாம்.
பல வழிகளில் நாவலர் இலட்சியங் களைப் பின்பற்றியவர் எனத் தகும் பாவல ரவர்கள் பலவாண்டுகளாகவே மதுவிலக்குப் பிரசாரத்தில் முன்னின்றுழைத்தார் ; வச னத்திலும் பாட்டிலும் மதுவிலக்கு சம்பந்த மாக நிறைய எழுதினர் . உதயதாரகை பத்திரிகையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பிள்ளையவர்கள் அதிலே குடிவெறியின் கொடுமைகளைப்பற்றியும், கேட்டைப்பற்றியும் பலவாறு தமது கருத் துக்களை வெளிப்படுத்தினுர், 'தெல்லிமா நகர் முகவரியிட்டு ஒர் கிறிஸ்தவன்” என் னும் புனைபெயரில் கீ எழுதிய கடிதமொன் றிலே ' யாழ்ப்பாணமே ... கொள்ளை நோயிலும் பார்க்க நின்னகத்திற் குடி கொண்ட சாராயக் கடைகள் பத்து மடங்கு கொடுமையுடையது' என்றும், "முன் இருமுறை இத்தாரகை வாயிலாய்
ச. அம்பிகைபாகன், யோகசுவாமிகள், யாழ் உதயதாரகை, மார்கழி 20, 1901) உதயதாரகை (ஒக்டோபர் 22, 1903) மேற்படி கட்டுரையின் தமிழாக்கம் இம்மலரில் யோகசுவாமிகள் பக். 51.

மலர்
வெளிப்படுத்திய படியே . . . பெரியோர் சிறியோர், தலைமைக்காரர், உத்தியோ கத்தர், கமக்காரர். வியாபாரிகளென்ற பேதமின்றி யெல்லோரு மொரேமனதா யிக்கொடிய களரியைத் துகள்துகளா யற் றுப்போகச் செய்யவேண்டும்' என்றும் எழுதியிருக்கிருர், குடிவெறி குறித்துத் தெல்லிப்பழையிலிருந்து அடிக்கடி பல விஷ யங்களைத் தாரகையில் எழுதியிருப்பதைக் காணலாம். 1907ஆம் வருடம் ‘* Ceylon National Review” Gtaivslib siö66) 5u7ä6 ''Jaffna Past and Present' GT35/39th 52) பில் எழுதிய நீண்ட கட்டுரையிலும் மேற்கு நாட்டு மதுபானங்களும் சாராயமும் ஏனைய குடிவகைகளும் எமது சமுதாயத்தில் வந்து புகுந்துள்ளமையைப் பற்றிக் கடிந் துரைத் திருக்கிருர் . யாழ்ப்பாண சுவதேசக் கும்மி என்னும் நூலில் மதுவிலக்குப்பற்றிப் பல பாக்கள் யாத்துள்ளார். “எங்கள்தே சத்திற் குடியால் வருந்தீமை
யிம்மட் டென்னவிங் கியலாது சங்கங்கள் நாட்டியித் தீமையை முற்றும்
தடுத்திடு வாயடி சங்கமின்னே."
இப்பாடலில் மதுவிலக்கு இயக்கரீதியாக ஒழிக்கப்படல் வேண்டும் என்னும் கருத்து ஒலிப்பதைக் கேட்கலாமன்ருே! இது விஷய மாகப் பல வருடங்கள் தொடர்ந்து முயற் சிகள் மேற்கொண்டு வந்தார் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. 1917ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற அளவெட்டி மதுவிலக்குச் சங்கத்தின் வரு டாந்தப் பொதுக்கூட்டத்திற் பாடுவதற் காகப் பல பாடல்களை இயற்றியிருக்கிருர். மதுவிலக்கு இயக்கத்தைப் பாராட்டியும் அதனை வாழ்த்தியும் எத்தனையோ இசைப் பாக்களை-ஜனரஞ்சகமான கீர்த்தனைகளைஆக்கிஞர். 1916ஆம் ஆண்டளவில் இயக்க ரீதியாக அமைக்கப்பெற்ற இந்து வாலிபர் சங்கமும் இத் துறையில் முன்னின்று உழைத்தது." மதுவிலக்கு விஷயத்தில்,
{ .64-سس-ل) 5 . نیے بر 1972 تgrtنJ;G
இடம்பெற்றுள்ள அ?.

Page 31
துரையப்பா
இலங்கைக்குப் பொதுவான இயக்கம் ஒன் றில் பாவலர் பிரதேச அடிப்படையில் ஈடுபட்டிருந்தமையை இவை தெளிவுறுத்து கின்றன.
1914, 1915ஆம் ஆண்டுகளை அடுத்த காலப்பகுதியில் தென்னிலங்கையிலே பல விடயங்களில் இலக்கியக் கழகங்களும் இலக்கியச் சங்கங்களும், மாநாடுகளும் அடிக்கடி நடைபெற்று வரலாயின. மது விலக்கு இயக்கத்தைப் போலவே இவ் விலக்கிய இயக்கமும் அரசியல் நோக்கங் களைக் கொண்டிருந்தது. சிங்களத்தைப் பொறுத்தவரையில் இவ்வியக்கத்தின் விளே வாகப் பல கவிதை நூல்களும், நாடகங் களும் வெளியிடப்பட்டன. ஜோன் டி சில்வா அவர்களின் வரலாற்று நாடகங் கள் இத்தொடர்பில் குறிப்பிடத்தக்கன. அக்காலத்தில் பொலிஸ் இன் ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த எச். எல். டெளபிகின் என்பாரது கட்டளைப்படி சிங்களக் கவிதை நூல்களையும் பொலிஸ் பகுதியினர் கவன மாகப் பரிசீலனை செய்தனராம். சுருங்கக் கூறின் இலக்கியச் சங்கங்கள் தேசிய விழிப் புணர்ச்சியின் மற்றேர் அம்சமாக விளங் கின,
இத் துறையிலும் துரையப்பாபிள்ளை யவர்கள் ஊக்கத்துடன் உழைத்தார். தாமே ஒர் இலக்கிய கர்த்தாவாக இருந் தமையால் இலக்கிய சிருஷ்டியில் மட்டு மன்றி அதற்குரிய சூழல், அதற்குகந்த மொழி, இலக்கிய நோக்கு முதலியவற்றி லும் அவருக்கு ஆழ்ந்த அக்கறையிருந்தது. அவர் பாடிய கவிதைகள் பலவற்றில் இது பிரதிபலிக்கின்றது; இது விஷயத்தில் சுப்பிரமணிய பாரதியுடன் ஒப்பு நோக்கி ஆராயப்படவேண்டியவர்.
யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக ( 27-12-1922 ) நடந்த தமிழ் இலக்கிய மகாநாட்டைப்பற்றிய செய்தியொன்று 'HINDU ORGAN' பத்திரிகையிற் காணப் படுகின்றது. யாழ்ப்பாணம் றிஜ்வே மண்ட பத்தில் நடைபெற்ற இம்மகாநாட்டுக்கு ஏ. கனகசபை அவர்கள் முதல்நாள் தலைமை தாங்கினர். இக்கூட்டங்களிலெல் லாம் பிள்ளையின் பாடல்கள் பாடப்பெற்
8. இந்துசாதனம் (ஒக்டோபர் 9, 1922).
- 6

பிள்ளையும் தேசியப் பின்னணியும் 41
றன. 1922ஆம் ஆண்டு நடைபெற்ற இவ் விலக்கிய மகாநாட்டிற்கு அந்நாளில் தென் னிந்தியாவிலே பிரசித்திபெற்று விளங்கிய அறிஞர்கள் சிலர் அழைக்கப்பட்டிருந்தனர். இந்து சாதனம் 8 செய்தியொன்றின்படி, சென்னைப் பல்கலைக் கழகத்து வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார், சென்னைச் சட்டக்கல்லூரி விரி வுரையாளர் கா. சுப்பிரமணியபிள்ளை, பிரபல நாவலாசிரியர் அ. மாதவையா (1874 - 1925), தமிழறிஞர் பா. வே. மாணிக்கநாயக்கர் (1871-1931) ஆகி யோர் மகாநாட்டுக்கு வருவதற்கு உடன் பட்டிருந்ததாய்த் தெரிகிறது. யாது காரணத்தாலோ பின்னர் மாதவையா வரவில்லை. மகாநாட்டின் இரண்டாம் நாள் அரங்குக்கு வைத்திலிங்கம் துரைசாமி தலைமை தாங்கினர். அக்கூட்டத்தில் துரையப்பாபிள்ளை, * தமிழ்க்கல்வியின் தற்கால நிலை ' என்னும் பொருள் குறித் துப் பேருரை நிகழ்த்தினர். இடை யிடையே பாடல்கள் ஒலித்த அவ்வுரை யிலே தமிழ்க்கல்வியிற் காணப்பெற்ற பெருங்குறைகளும் சீர்க்கேடுகளும் இடித் துரைக்கப்பட்டன. சபையிலிருந்தோர் பேரார்வத்துடன் அப்பிரசங்கத்தைக் கேட் டிருந்ததாய்ப் பத்திரிகை எழுதியிருந்தது. இலக்கியச் சங்கமும் மாநாடும் சிறப் புற நடந்த அவ்வாண்டிலேயே (1922) யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கம் நிறுவப்பெற்றது என் பதும் நினைந்துகொள்ளத் தக்கது. இச் சங்கத்திலும் பிள்ளையவர்கள் செயற்குழு உறுப்பினராக அமர்ந்து தொண்டாற்றி ஞர். இலக்கியச் சங்கங்களாக இருப்பினும் அவை குறுகிய வட்டத்திற்குள் இயங்காது, பொதுவான கலாசாரப் பிரச்சினைகளை யெல்லாம் தழுவிச் சென்றன. அப்போக்கு பிள்ளையவர்களின் ஆளுமைக்கும் அக்கறை களுக்கும் ஏற்றதாயிருந்தமையால் உற் சாகத்துடனும் ஊக்கத்துடனும் உழைத் தார் எனலாம்.
கொழும்பிலே 1906ஆம் வருடம் வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி ஒன்று நடந்தேறியது, அவ்வாண்டு ஆகஸ்டு

Page 32
42 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு
மாதம் 13ஆம் திகதி ஐயாயிரம் மாட்டு வண்டிக்காரர் வேலை நிறுத்தஞ் செய்தனர். அக்காலத்தில் துறைமுகத்திலிருந்து பண் டங்களை ஏற்றிச் செல்லவும் துறைமுகத் துக்கு ஏற்றுமதிப் பொருட்களைக் கொண்டு செல்லவும், நகரில் வர்த்தகப் பொருட் களை எடுத்துச் செல்லவும் மாட்டு வண்டி களே பெரிதும் பயன்படுத்தப்பட்டன. 1910ஆம் ஆண்டளவில் சுமார் இருபத்து மூவாயிரம் வண்டிகள் இருந்தன என்று 1911ஆம் ஆண்டுக் குடிசன மதிப்புப் புள்ளி விவரங்களிலிருந்து தெரிகிறது. முனிசிப்பல் சபை புதிதாக விதித்த போக்குவரத்துச் சட்டம் ஒன்றினை எதிர்த்தே ஐயாயிரம் வண்டிக்காரர் வேலைநிறுத்தஞ் செய்தனர். அப்பொழுது உதயதாரகை ஆசிரியராக இருந்தவர் பிள்ளையவர்கள், 23-8-1906 இதழிலே, * வண்டிக்காரர் குழப்பம்" என்னும் தலைப்பில் 13ஆந் திகதி திங்கட் கிழமை தொடக்கமாய் வேலைக்குப் போக வில்லை. . . ஒருவரினுதவி மற்றவர்க்கு அகத்தியம் தேவையாயிருக்கு' என்று எழுதினர், பத்திராதிபர் என்ற வகையில் பிள்ளை பாரபட்சமற்ற முறையில் இவ்வாறு எழுதினர் என நாம் கொள்ளலாம். எனினும் தீவிரவாதியாக விளங்காவிடினும் வாழ்நாள் பரியந்தம் * தொழிற்சங்கங்கள்’ நிறுவுவதிலும் அவற்றை வளர்ப்பதிலும் அவருக்கு நிரம்பிய நாட்டம் இருந்தது: ** இவரது சங்கங்கள் தேசியம் வாய்ந் தனவாக இருக்கும் ".
யாழ்ப்பாணத்திலே பல சங்கங்களை நிறுவியதில் பெரும்பங்கு கொண்ட பெருமை துரையப்பாபிள்ளை அவர்களுக்கு உண்டு. அவை யாவற்றுள்ளும் * உபாத்திமார் சங்கம் நிறுவியதிலேயே அவருக்குத் தனிச் சிறப்பு ஏற்பட்டது எனலாம்: ' உபாத்தி மாரை முகாமைக்காரர்களும் அரசாங்க மும் கவனியாதிருப்பதேனே ?. உபாத்தி மார் எல்லோரும் ஒருங்குகூடிச் செய்ய வேண்டிய விஷயங்கள் எவையென்று யோசிக்க ஓர் உபாத்திமார் சங்கம் இருத்தல் அவசியம் *. 9
9. உதயதாரகை, 12-4-1906,
10. உதயதாரகை, 14-6-1906, 11. உதயதாரகை, 28-6-1906,

மலர்
"உயர்ந்த சம்பளம் பெறுபவர்களுக்கே வயோதிப காலத்திலும் உபகாரச் சம்பளம் கொடுத் தற்கேற்ற ஒழுங்குகளுண்டு. அற்ப சம்பளம் பெறும் உபாத்திமார்க்கு அவ்வித ஒழுங்கில்லை . . உபாத்திமார் ஒருங்குகூடி அரசாட்சியாருக்கு முறையிடுவதற்கும் போதிய நியாயங்களிருக்கின்றன." 10
தொழிற்சங்கம் என்று நேரடியாய்க் கூறவிடினும், '' ஒருங்குகூடிச் செய்ய வேண்டி"யதன் அத்தியாவசியத்தை மேற் காட்டிய கருத்துரைப்பகுதிகள் ஐயத்துக் கிடமின்றித் தெளிவாக்குகின்றன. இத் தகைய பிரசாரத்தின் பயணுகவும் முயற்சி களின் விளைவாகவும் அவ்வாண்டு யாழ்ப் பாணத்தில் உபாத்திமார் சங்கம் ஒன்று உருவாகியது.
*23 ஜூன் 1906 சனிக்கிழமை பகல் பதினுெரு மணியளவில் உபாத்திமார் சங்க க் கூட்டம் அடைக்கலமாதாவின் பாடசாலிையில் நடைபெற்றது. அமெரிக்க, உவெஸ்லிய, சேட்சு, கத்தோலிக்க மிஷன் சங்கங்களின் கீழும் சுதேச முகாமைக் காரர்களின் கீழுமுள்ள ஆசிரியர் நிறைந் னர். தலைவர்: தெ. அ. துரையப்பாபிள்ளை அவர்கள்; தெல்லிப்பழை ஆங்கில வித்தியா சாலைத் தலைமை ஆசிரியர் லிகிதர்: ஏ. தோமஸ் ; கொழும்புத்துறை போதஞ வித்தியாசாலை ஆசிரியர். "11
Brother Philip atai Lauri g) baputba களில் முக்கியபங்கு வகித்ததாகத் தெரி கிறது. இச் சங்கத்தின் பிறிதொரு கூட் டத்திலே, உயர் சம்பளம், உபகாரச் சம்பளம் கோரல் முதலியனவற்றை உள் ளடக்கிய பல நிர்ணயங்கள் (தீர்மானங்கள்) கொண்டுவரப்பட்டன. இம்முயற்சிகளின் முக்கியத்துவத்தை இதற்குமேலும் இவ் விடத்திலே விளக்குதல் வேண்டா.
தென்னிலங்கையிலும் உள்ளூர் உயர்ந் தோர் குழாத்தைச் சேர்ந்த பலர் சிங்களப் பத்திரிகை எழுத்தாளராயும், ஆசிரியர்க

Page 33
துரையப்பா
ளாயும், இலக்கிய கர்த்தாக்களாயும் இருந் தனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்:
ஆசிரியர் சங்கங்களில் மட்டுமன்றி, யாழ்ப்பாணம் தமிழ்க் கழகம், யாழ்ப்பாணம் சனசங்கம் போன்ற பல நிறுவனங்களி லும் இடையீடற்ற அக்கறை கொண் டிருந்தார் துரையப்பாபிள்ளை அவர்கள் வாய்ச்சொல் வீரராக அன்றிச் செயல் வீரராயும் விளங்கினர். அதேவேளையில், தான் வாழ்ந்த பிரதேசத்து விவகாரங்க ளில் மட்டுமல்லாது அனைத்திலங்கைப் பிரச்சினைகளிலும் அவ்வப்போது அபிப் பிராயம் தெரிவித்தார். இந்திய அரசியல் விவகாரங்களையும் கூர்ந்து கவனித்துப் பல கட்டுரைகளை எழுதிஞர்:
பாவலர் போற்றுதும்
புன்குலைக்கட்டுவன், வித்துவசி பிரமயூரீ சி. கணேசையர் அவர்
உதயதா ரகைமுதல
கதிபதியா யோங் இதயதா மரைவிரிய ெ ஞாயிறுபோ லில மதியதாழ் சடைக்கட6
நீழலுக்கு மருவு புதியதாங் கவிகள்தன மடிகளிற்செய் பு
ஆரியமுந் தமிழும்வள பலசங்கத் தங்க
~~~~പ്പെ.
சீரியன வுலகினுக்குத்
பெருமையினுன்
காரியமென் றினிதாற்று முற்றுறயாங் கழ
நேரியலச் செயுமுதவி
றனைப்போற்றல்
1N1a1a1a1a/aaaaaa.

பிள்ளையும் தேசியப் பின்னணியும் 43
இவையெல்லாவற்றையும் நோக்கும் பொழுது, இந்நூற்ருண்டின் தொடக்கத்தி லிருந்து படிப்படியாக எழுச்சி பெற்றுவந்த தேசியம் நாடு முழுவதற்கும் பொதுவான சில கூறுகளையும் அம்சங்களையும் கொண்டிருந்தது என்பதும், அவை பிரதேச அடிப்படையில் பல்வேறு வண் ணங்களிலும் வடிவங்களிலும் செயற் பட்டன என்பதும், வடபகுதியில் அவை நடந்தேறியவாற்றைத் தெரிந்து கொள்ளு வதற்குக் கல்விமானும், சீர்திருத்தவாதி யும், தேசியவாதியுமான தெ. அ. துரை யப்பாபிள்ளையின் வாழ்க்கையையும் பணி யையும் எடுத்துக் காட்டாகவும், முன் மாதிரியாயும் கொள்ளுதல் சாலப் பொருந் தும் என்பதும் ஒருவாறு துணியப்படும்;
G্যাto 6সন্তৰি, கள்
பத்திரிகைக் கச் செய்தோன் வொளிபரப்பி ங்கி நின்றேன் வுள். தன்பாத
மன்பாற்
மப் பட்டணத்தெம் லவன் மாதோ.
ர் சங்கமுதற் த் தோனுய்
தெரிந்துசெயும் தேசத் தொண்டே து மிவன்செயலை ற லாகா
கருதியிவன் நீர்மை யாமே.
AL qLLALALALSLALSLSLALAL LqLALALSLALLSLLLLSLLASLeSMALqASAS

Page 34


Page 35
இருபதாம் நூற்ருண்டுத் தொடக்க காலத்து இலங்கைத் தமிழ் நாடகம்
பாவலர் துரையப்பாபிள்ளை
சகலகுண (F) 606060 l
0 - 1 பத்தொன்பதாம் நூற்ருண்டின் இறுதிக் கூற்றிலும், இருபதாம் நூற்றண் டின் ஆரம்ப காலத்திலும், யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்வி, இலக்கிய வரலாறு களிலே தென்படும் சில நெறி களை விளக்குவதாகவும், அந்நெறிகளுக்கான எடுத்துக்காட்டாகவும் அமைகின்ற து தெ. அ. துரையப்பாபிள்ளை அவர்களது (1872-1921) வாழ்க்கை ஆறுமுகநாவலர் மூலம் முகிழ்த்துக் கிளம்பிய சில வரலாற் றுச் சக்திகள் அவர் மறைவின் பின்னர் எத்தகைய நெறியிலே சென்றன, தொழிற் பட்டன என்பதை அறிவதற்குத் துரை யப்பாபிள்ளை அவர்களின் வாழ்க்கை பெரி தும் துணைபுரிகின்றது. அந்த அளவுக்கு துரையப்பாபிள்ளையின் வாழ்க்கை இலங் கைத் தமிழர் வரலாற்றிலும் முக்கியமான தாகின்றது.
0 2 துரையப்பாபிள்ளை அவர்கள் கிறித்தவராகி ஆங்கிலம் கற்றுப் பின், ஆசிரியராக விளங்கியவர். தனது தொழி லுக்குரிய பண்பாட்டுப் பூரணத்துவத்தை பும் சமூகப் பயன்பாட்டையும் அடைய முனைந்த அவர், மீண்டும் இந்துவாகி, ஒர் இந்துக் கலாசாலையை நிறுவி அதனைத் திறம்பட நடாத்தினர். பிள்ளையவர்களின் இலட்சியப் பயணத்தையும், வாழ்க்கை மாற்றங்களையும் காட்டி நிற்கின்றன அவர்
l. சிந்தனச் சோலை - மகாஜனக் கல்லூரிப் பெ
2. கணபதிப்பிள்ளை G. ι- επιρ தமணி au- 6. நூல்

கார்த்திகேசு சிவத்தம்பி M. A. (Cey) Ph. D. (Birm.)
இலங்கைப் பல்கலைக்கழக வித்தியோதய வளாகத் தமிழ், திராவிடவியற்றுறை முதல்வர்.
ாயின் றிய ஓர் ஆய்வு
விட்டுச் சென்றுள்ள அவரது 'எழுத் துக்கள்'. 'சிந்தனைச்சே27 என்ற பெயருள்ள தொகுதியில் அவ்வெழுத்துக் 3r பிரசுரிக்கப்பட்டுள்ளன." 1
'உயர்திரு. தெ. அ. துரை யப்பா பிள்ளை அவர்கள் நாவலர் அவர்களுக்குப் பின், நாவலர் அவர்களைப் போலவே நமது நிலைமையையும், நமது தேசத்தின் போக்கையும் நன்கு சிந்தித்திருக்கின் முர்கள். நாவலர் அவர்கள் வசனமூலம் தமது சிந்தனைகளை வெளியிட்டிருக்கின் முர்கள். பிள்ளையவர்கள் கவிதை மூலம் தமது சிந்தனைகளை வெளியிட்டிருக்கின் முர்கள். கவிதை பிள்ஜா அவர்களுக்குக் கைவந்தது." 2
பிள்ளையவர்கள் எழுதியவற்றுள் சகல குணசம்பன்னன் எனும் நாடகமும் இடம் பெறுகின்றது.
9 ஈழத்துத் தமிழ்நாடகத்தின் வரலாறு இன்னும் எழுதப்படவில்லை; இது வரை இதுபற்றி வெளிவந்துள்ளவை பூரண மின்ஒரு வரலாற்றுக்கு வேண்டிய ஆதார ஏடுகளே. இந்நிலையில், குறிப்பிட்ட ஒரு காலப்பிரிவில், ஈழத்தில் தமிழ்நாடகம் எந்நிலையிலிருந்தது என்பதைக் காட்டும் சான்றுகளை விரிவாக ஆராய்வது பூரண
rவிழா நினைவுச் சிறப்பு Loc), யாழ்ப்பாணம்-1960 பக், V,

Page 36
பாவலர் துரைய
மான வரலாற்றை எழுதுவதற்கு உதவி யாகவிருக்கும்.
1 : 1 பிள்ளையவர்களின் நாடகத்தை ஆராய்வதன் முன்னர், அவரது இலக்கியப் பணியின் அடிப்படைப் பண்பினை அறிந்து கொள்வது அவசியமாகும்.
ஆறு முக நாவலர் கா லத்தில் (1822-1879) 'சைவமும், தமிழும் என்ற கோஷம், ஈழத்து வடபகுதியின் சமூக, அரசியற்றேவைகளை - ஒரு வ ர லா ற் று த் தேவையினைப் பூர்த்தி செய்வதாக வமைந் தது. நாவலருடைய கண்ணுேட்டத்தில், சைவம் என்பது வெறும் மத ஆசாரத்தை மாத்திரமல்லாது அம் மத ஆசாரத்தைப் பின்பற்றுவோரை, சிறப்பாக விவசாயி களையும் குறிப்பதாகவே இருந்தது. யாழ்ப் பாணத்துச் சமயநிலை போன்ற கட்டுரை உண்மையிலே சமூகப் பிரச்சினை பற்றி யனவே. நாவலரது கண்ணுேட்டத்தில் தமிழ் என்பது சுதேசப் பண்பாட்டுக் கரு வூலமாக விளங்கியது. அப்பண்பாட்டுக் கருவூலம் பிறரது கையிற் சிக்கி, அவர்க ளால் ஆயுதமாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதற் கா கவே தமிழைச் சைவத்திலிருந்து பிரிக்கமுடியாத வொன் ருகக் கொண்டார். 9
இந்தப் பண்புநெறி பிறழாது வளர்ந் திருக்குமேல் அது சைவமக்களை - அதாவது யாழ்ப்பாணத்துக் கமக்காரர்களை மேலும் மேலும் பிரதிபலிக்கின்ற, அவர்களது பிரச் சினைகளை எடுத் துக் கூறித் தீர்வுமுறை காட்டுகின்ற இலக்கியங்கள் தோன்றியிருக் கும். இயக்கங்களின் வரலாறுகளை நோக் கும் பொழுது, ஆரம்பநிலையிற் காணப்படும் நேரடிச் சமூகத் தொடர்பு பின்னர் படிப்படியாக மறைக்கப் படுவதையும் ,
ஆறுமுகநாவலரின் வைத்தமிழ்ச் சேவையின் தே ஆக்கங்களிற் சில. (a) Azeez A. M. A. The West Reapp) (ஆ) காவலர் முத்திரை வெளியீட்டின்பொழுது யிட்ட வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் - (இ) சிவத்தம்பி கா. நமது பரம்பரை - نے ہتھی۔
3
4. சைவர் அ தமிழ்த்தொண்டுக்கும் கிறித்தவரது
டினே இக் கட்டுரையாசிரியர், *தமிழ் இலக்கிய, கலாநிதி பொ. பூலோகசிங்கம்) என்னும் நூஃ
(தினகரன், 17-2-1971),

ப்பாபிள்ளையின்.ஓர் ஆய்வு 47
மறக்கப் படுவதை யும் காண லா ம் , இது காலம் வழங்கும் "தண் டனை' " களி லொன்று சமூகநிலைப்பட்டு நின்ற சைவ ஆர்வம், சைவத்திற்குக் கிட்டிய வெற்றியின் பின்னர் சாஸ்திரீயநிலை ஆர்வ மாக முகிழ்க்கத் தொடங்குகின்றது. சைவச் சூழலில் ஆங்கிலம் கற்பதற்கான வாய்ப்புக்கள் பெருக (உத்தியோக வாய்ப் பினைத் தராத) தமிழ்க்கல்விபற்றிய ஆர்வம் குன்றத் தொடங்கிற்று. யாழ்ப்பாண நில மானியவுடைமைச் சமுதாய அமைப்புக் கேற்ற முறையில், அச்சமுதாயத்து மேன் மக்களின் பொருளாதார, சமூக மேன்மை தொடர்ந்து நிலைப்பதற்கேற்ற வகையில் ஆங்கிலக் கல்வி புகட்டத் தொடங்கியதும் சைவமும், தமிழும் என்ற கோஷம் வலு விழக்கத் தொடங்கிற்று. அரசியலிலும் புதிய உணர்வு எதுவும் ஏற்படவில்லை. இவை காரணமாகப் பத்தொன்பதாம் நூற்ருண்டின் இறுதிப் பாகத்தில், ஈழத் துத் தமிழ் இலக்கியம் , நாவலர் வகுத்த சமூக அர்ப்பண நிலையிலிருந்து சிறிது சிறி தாக விடுபட்டுக் கொண்டிருந்தது.
1 : 2 துரையப்பாபிள்ளை அவர்கள் வட்டுக்கோட்டை செமினறியிற் பயின்ற வர்; Taylor என்னும் கிறித்தவ நாமம் பெற்றிருந்தவர்; "பாவலர் சரித்திர தீப" ஆசிரியர் ஆணல்ட் சதாசிவம்பிள்ளையின் விருப்புக்குரிய மாணுக்கர்களுள் ஒருவர்; 1910இல் ம க ராஜ  ைக் கல்லூரியைத் தொடங்கும் வரை கிறித்தவத் தொடர்பு களைப் பேணிவந்தவர். கிறித்தவ நெறியிலே இவர் தொடர்ந்து சென்றிருப்பின், தமது ஆசிரியர் சதாசிவம்பிள்ளையைப் போன்றே இவரும், "கிறித்தவத்தைத் தமிழ் மண் னுடன் இரண்டறக் கலக்க வைக்கும்' பணியிலீடுபட்டிருப்பார்.4 ஆணுல் இவரோ
:சிய முக்கியத் துவக்கை அறிக் துகொள்வதற்கு உகவும்
caised - Colombo.
தபால் - தந்திப் போக்குவரத்துத் திணைக்களம் வெளி - 1971.
முக 57வலச் புதுமை இலக்கியம் - 1961. தமிழ்த்தொண்டுக்குமுள்ள பண்பாட்டு நிலை வேறுபாட் த்தில் ஈழத்தறிஞர்களின் பெருமுயற்சிகள்' (ஆசிரியர் விமரிசனஞ் செய்த கட்டுரையிற் குறிப்பிட்டுள்ளார் -

Page 37
48 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு
சமூகப்பணியையே தமது வாழ்க்கைப் பணி யாகக் கொண்டார். தமது இதய வேட் கைக்கியையத் தொழிற்படுவதற்கான திட சித்தத்தை இந்திய சீவியம் ஏற்படுத்திற்று எனலாம். இவர் 1894 முதல் 1898 வரை வட-இந்தியாவில் ஆசிரியராகக் கடமை யாற்றியவர்.
பிள்ளையவர்கள் பற்றிய கட்டுரை யொன்றில், வி. முத்துக்குமாரு அவர்கள் குறிப்பிட்டுள்ளவை மிக முக்கியமானவை யாகும் : "த னது பராபரிப்பிலிருந்த குழந்தைகளின் நலனிலும், பாடசாலை வேலையிலும் கவனஞ் செலுத்திவந்த அதே வேளையில் அவர், சமூகத்துக்குத் தான் ஆற்றவேண்டிய கடமையை என்றுமே புறக் கணித்திடவில்லை. சமூகச் சீர்திருத்தத்துக் கான அவர் திட்டம் வளர்ந்தோர் கல்வி, அறநெறியுறுத்தல், இசை, நாடக மறு மலர்ச்சி ஆகிய பலவற்றைக் கொண்டதாக 65i 55 . . . . . . ............... " ... . . . . . . திலகர், கோகலே ஆகிய இந்தியப் பெருந் தலைவர்கள் தமது தேசியப் பணியினைத் தொடங்கிய காலத்தில் பம்பாய் மாகா ணத்தில் கோலாப்பூர், பெல் காம் ஆகிய இடங்களில் வசித்ததன் பலஞகவே இவர் (மக்கள் சேவையின் பால் விருப்புடைய ராஞர் எனலாம். குறைபாடுகளை அகற்று வதற்கான கிளர்ச்சிகளைச் செய்வதற் கெனக் காலத்துக்குக் காலம் இவர் கூட் டங்களை ஒழுங்கு செய்துவந்தார். '5
1 . 3 இவரது பாடல்கள் பெரும் பாலும் சமூகக் குறைபாடுகளை அகற்று வதற்கான இலக்கிய முயற்சிகளாகவே யுள்ளன. சிந்தனைச் சோலையில் இடம் பெறும் இவரது கவிதைகளுள் சிவமணி மாலை தவிர்ந்த மற்றையவை யாவுமே, மேலே குறிப்பிடப்பட்டதுபோன்று, “சமூக சீர்திருத்தம்" சம்பந்தப் பட்டவையே.
5. (Pië. Silé SLD:n (ut V. — Some Recollection
Carnival Souvenir - 1954. PP. l 6-7.
6. சிந்தனைச்சோலே - பக். 292. அரையப்பா *சன்மார்க்சம்” என்னும் சமய சமரச நெறிை தமது மதக்கோட்பாட்டையும், தமது பண் என்னும் இக்கோட்பாடு உதவியிருத்தல் வேன் இத்தகைய ஒரு சமரச நிலையைக் சாணலாம்.
.297 نمی را - مس - پ م تی شع بختی 6ité f .7

LD @)rf
வெகுசன நிலையில், மக்கள் பாடல்களை இசைத்துப் பாட வேண்டும் என்பதற் காகவே இவர் தமது ஆக்கங்களைக் “கீதங்க ளாக' இயற்றினர். இலக்கியத்தைக் கற் றறிந்தோரது ஆர்வ ஈடுபாடாக மாத்தி ரம் கொள்ளாது, சாதாரண மக்களது பாடற்பொருளாகவும் கொள்ள இவர் முனைந்தமை, இவரை இக் காலப் புலவர்கள் பலரினின்றும் வேறுபடுத்திக் காட்டுகின் றது. "இதோபதேச கீதரச மஞ்சரி' என்ற இவரது பாடற்ருெகுதிக்கு 'முகவாசகம்' எழுதிய கு. கதிரவேற்பிள்ளை அவர்கள் கூறியுள்ளவை இப் பண்பினை எடுத்துக் காட்டுகின்றன; 'நமது தேசத்தில் புலவர் சன்மார்க்க விஷயங்களைச் சார்ந்த கீர்த் தனங்கள் இசைப்பாருளராயினும் ஒரோர் மார்க்கத்தோடு சம்பந்தப்பட்டனவாய் அல்லது நரஸ்துதியோடு கலந்தனவா யன் றிப் பெரும்பாலும் இசைத்தாரல்லர், ஆளுல் இம்,மஞ்சரியில் இசைக்கப்பட்ட கீதங்களோ சர்வசமயிகளும் ஒத்த உள்ளத் தினராய்ப் பாடக்கூடிய கீர்த்தனைகள். தாம் பெற்ற அங்கிலோ தமிழ்க் கல்வியறி வின் பயனுய்த் தேச நன்மைக்கேற்ற சிறந்த தேர்ச்சிக்குரிய கருத்துக்களைக் கீர்த் தனங்கள் மூலமாய் இந்நூலைச் செய்தவரே முதன் முதல் வெளிப்படுத்துகிருரென்று சொல்லலாம்.' 6 ஆசிரியரும், தமது நூலின் ஆங்கில முன்னுரையில் சமுதாயத் தின் சீவாதாரமான அமிசங்களை அரித்துத் தின்றுகொண்டிருக்கும் தீயநெறிகளை, அவற் றின் உண்மையான தோற்றத்துடன் எடுத் துக்காட்ட முயன்றுள்ளதாகக் கூறியுள் ளார்." இலக்கிய ஆக்கத்தில், தமிழ் இலக் கிய கர்த்தாக்கள் பழையனவற்றையே மீண்டும் மீண்டும் பிரதிசெய்யாது, புத்தம் புதிய நெறிகளிற் செல்லவேண்டும் என்ற திPது கருத்தைத் துரையப்பாபிள்ளை
of the Founder in the Mahajana College
பிள்ளை அவர்கள் தாம் கிறித்தவராக விருந்த காலத்திலேயே பப் போதிக்கின்ருர் என்பதை மாத்திருச்துதல் நலம். பாட்டுப் பின்னணியையும் இணைப்பதற்கு ச் சன்மார்க்கம் எடும், மாயூரம் வேதநாயச: பிள்ளேயின் பாடல்சளிலும்

Page 38
பாவலர் துரைய
யவர்கள் தாம் எழுதிய ஆங்கிலக் கட்டுரை யொன்றில் மிக வன்மையாக எடுத்துக் επιμήθμH6ίτοιτητή .
இவ்வாறு பார்க்கும்பொழுது இலக் கியத்தை, அல்லது, "எழுத்தை" மக்களின் பாற்படுத்த வேண்டுமென்ற நோக்கம் இவரிடத்துக் காணப்படுவதை நாம் காண லாம்.
இவர் எடுத்துக்கூறும் இப்பண்பு இவர் காலத்திலேயே இயக்க வியாப்தி பெருத தற்குப் பல கார ண ல் கள் உள்ளன. 9 ஆனல் தன்னுல் இயன்ற அளவுக்கு இவர் இலக்கியத்தின் பணியையும், பண்பையும் மாற்றியமைக்க முயன்ருர் என்ற பேருண் மையை நாம் மறந்திடலாகாது.
இலக்கியம், துரையப்பாபிள்ளையின் பன்முகப்பட்ட சமூகசேவா சாதனங்களில் ஒன்றே. இவர் கல்வித்துறையில் ஈடுபட்ட அளவுக்கு இலக்கியத்துறையில் ஈடுபட வில்லையென்பதை மனதிற்கொண்டே இவ ரைப் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளல் வேண்டும்.
2 : 1 இலக்கியத் தை மக்கள் பாற் படுத்துவதைத் தமது முக்கிய குறிக்கோ ளாகக் கொண்ட ஒருவர் எழுதிய நாட கத்தை ஆராய்வது பயன் தரக்கூடிய முயற்சியாகும்.
துரையப்பாபிள்ளையவர்கள், “சகலகுண சம்பன்னன்' என்ற நாடகத்தை மேடை
8. Esso utiluTSair&T -. Jaffna, Past and
Reprinted in Mahajana College Golden “Tamil educated men must write origil the day........ * * * * * r * . . . . . . . . . . . . . . . . . I think an overestimation of the merits of the past, an extreme conservatism v stoutly oppose the introduction of new feeling of diffidence coupled with the ventures characteristic of the Tamil sch defect I have pointed out .............
9 அக்காலத்துச் சமூக, பொருளாதார கிலேமைகள்,
ஆராய்ந்தறிதல் வேண்டும்.
10 சிக்கனேச்சேரல் - பன், !
7 ܚܢ 1

ப்பாபிள்ளையின். ஓர் ஆய்வு 49
யேற்றும் நோக்கத்துடனேயே எழுதினர் என்றும் , அந்நாடகம் 1905இலும் அவர் மறைந்த பின்னர் 1930இலும் நடிக்கப் பெற்றதென்றும் அறிகின்ருேம். 10 இந் நாடகம் 1960லேயே முதன் முதலில் வெளி யிடப்பட்டுள்ளது. துரையப்பாபிள்ளை அவர் கள் அதனை அச்சுக்கான பிரதியாகக் கருதி யிருக்க மாட்டாரென்பது பின்னர் கூறுவன வற்ருல் தெரியவரும். எனவே இந் நாட கப் பிரதி முற்றிலும் நடிப்பதற்கென்றே பயன்படுத்தப்பட்டதெனக் கொள்ளலாம்.
2 : 2 ஒரு கருத் தி னை அல்லது உணர்ச்சிநிலையை வெளிப்படுத்தி அதன் காரணமாகப் பிறருடன் தொடர்பு ஏற் படுத்துவதில் ஆக்க உத்வேகம் காணும் உணர்வு கலை உற்பத்தியின் பொது அமிச மாகும். நாடகத்தைப் பொறுத்தமட்டில் அவ்வெளிப்பாட்டு உறவு கண்முன்னே இருக்கும் குழுவினருடன் (பார்வையா ளர்கள்) ஏற்படுத்திக் கொள்ளப்படுவதால் நாடகம் மற்றெல்லாக் கலை வடிவங்களை யும் விட 'நேரடி’யானதாக விளங்குகின் றது. முன்னெரு காலத்தில் கவிதையும் இவ்வாறு நேரடியாக அனுபவிக்கப்பெற்ற கலைவடிவமே. நடனமும் இத்தகைய ஒரு நேரடிக்கலைதான். ஆனல் அது தனக் கெனச் சில குறியீட்டு மரபுகளைக் கொண் டது. அக்குறியீட்டு மரபுகளிற் பரிச்சய மில்லாததோர் நடனத்தைப் பூரணமாக ரசித்தல் முடியாது. நாடகத்து உத்தி கள் சாஸ்கிரீய நடனத்து உத்திகள்
Present Ceylon National Review - Jan. 1907.
Jubilee Supplement 1960. pp. 16-28.
nal works in Tamil. That is the great need of
S S S S S S 0 S S S S S LS S S S S C L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SL LS SL S0 SLS S SS 0
of old works, an undue reverence for things which would only follow the beaten track and features or original mortifications and a lack of sympathy and support to literary plars must be deemed responsible for the
VA
SSL S S SLS SLS S S S S S S SS LSS LSS C SSS SSLL 0 LLLL SL S0SSL S S S S
இவ்வாசிரியரது தன்மைகள் என அவற்றை ifa is a

Page 39
50 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு
போன்று நெகிழ்ச்சி அற்றவையன்று. நேரடிக் கலையானமையால் கலைஞரும், பார்வையாளரும் தத்தம் தொழிற்பாடு களால் இண்ைந்து நிற்கின்றனர். ஒருவரின் உணர்ச்சிப் பூரணத்துவம் மற்றவரின் உணர்ச்சிப் பூரணத்துவத்திலேயே தங்கி யுள்ளது. அந்த இரண்டு உணர்ச்சி நிலை களும் சங்கமிக்கும்பொழுது தோன்றும் அநுபவத்தைப் “பங்குகொளல் அனுபவம்” (participatory experience) 6Tsăruri: BIT lகக் கலையின் ஆதார உந்து சக்தி இதுவே:
மேற்குறிப்பிட்ட பண்பு காரணமாக, நாடகம் கருத்துப்பரப்பும் வடிவங்களில் முக்கிய ஒன்ருக விளங்குகின்றது. கருத் துக் கோட்பாடுகளை மனிதநிலைப்படுத்தி, உணர்ச்சிப் போராட்டக் களத்து நிறுத்தி வாழ்க்கையோடு இணைத்துக் கண்முன்னே காட்டுவது நாடகம். எனவேதான் மத நிறுவனத்தினர்முதல் சமூக சீர்திருத்த வாதிகள்வரை யாவரும் நாடகத்தைப் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பிட்ட ஓர் இலக்கியக் கோட் பாட்டினைக் கொண்டிருந்த ஓர் இலக்கிய கர்த்தன் நா ட கத்  ைத க் கையாளும் பொழுது. நாடகத்தின் “நேரடியநுபவத்” தன்மையை நன்கு பயன்படுத்துவான்: அதனல் நாம் அத்தகைய நாடகத்தில், ஆசிரியனது கருத்துக்களை மாத்திரமல் லாது, நாடகத்தின் அன்றையநிலைமையை யும், நடிப்பு, மேடையேற்ற மரபுகளையும் அறிந்துகொள்ளக்கூடியதாக விருக்கும்; ”
3 : 1. சகல குணசம்பன்னன் முதன் முதலில் மேடையேற்றப்பட்ட பொழுது (1905) யாழ்ப்பாணக் கலை வாழ்க்கையில் நாடகம் வகித்த இடம் யாது?
யாழ்ப்பாணத்து நாடக வரலாற்றை யறிய விரும்பும் மாணவன் இதுவரை ஒன்றிணைத்தாராயப்படாத இரு நிலைப் பட்ட சான்றுகளை ஆராயவேண்டியுள் ளான். முதலாவது இலக்கிய வரலாற் ருசிரியர் தரும் ' செய்திகள் ', இவை பெரும்பாலான ஆசிரியர் பெயராகவோ அன்றேல் நூற்பெயராகவோ மாத்திரமே யுள்ளன. அதாவது இன்ன புலவர் இன்ன

மலர்
இன்ன நூல்களை இயற்றினர்; அவை இவை என்ருே அன்றேல், இந்நூலை இயற்றிஞர் இவர் என்ருேதான் உள்ளன. பெரும் பாலான நூல்கள் கிடைப்பதற்கு அரி யனவாயுள்ளன. இந் நிலையில் நூல்களின் தனிப்பட்ட இலக்கியத் தன்மையைப் பூரணமாக ஆராய முடியாதிருக்கின்றது:
மேனுட்டார் ஆட்சிக் கால த் து வாழ்ந்த பல புலவர்கள் நாடக நூல்களை எழுதியுள்ளனர் என்பதற்கு இலக்கிய வர லாற்றுச் சான்றுகள் உள்ளன. இந் நாடக நூல்கள் எத்தகையன ? நாடகக் கலாரசிகர்களுக்கும் நாடகத்துறையினர்க் கும் நாடகத்தின் 'எழுத்துநிலை'-அதா வது நாடக இலக்கியம்-நாடகத்தின் ஓர் அமிசமே. அதுவே நாடகமாகாது. அது நடிகர்களால் அரங்கேற்றப்பட்டு மக்கள் பார்க்கும் பொழுதுதான் நாடகமாகின் றது. எனவே நாடக நூற் பட்டி யலை வைத்துக்கொண்டு மாத் தி ர ம் நாடக நிலையை விவரித்துவிட முடியாது;
இந்திய இலக்கிய மரபில், நாடகத்தை ஓர் இலக்கியவடிவமாக மாத்திரமே பயன் படுத்தும் ஒரு நெறியும் உண்டு; அதாவது நாடக அரங்குடன் எத்தகைய தொடர்பு மில்லாது முற்றிலும் இலக்கியமாகவே இயற்றப்படுகின்ற தன்மை உண்டு இப் பண்பு மேனுட்டு இலக்கியங்களிலும் ஒரோ விடங்களிற் காணப்படுவதுண்டெனினும், அவர்களது நாடக ஆக்கங்கள் அரங்க மரபிலிருந்து முற்றிலும் விடுபட்டவை யாக விளங்கவில்லை.
தமிழ் இலக்கிய வரலாற்றிற் குறிப் பாக 17ஆம், 18ஆம் நூற்றண்டுகளில் இத்தன்மை நிலவுவதைக் காணலாம். இக் காலப்பிரிவிலும், சற்றுப் பின் ன ரு ம் தோன்றிய பள்ளுக்கள் யாவும் கோவில் நாட்டிய மரபுடன் இணைந்தவையன்று. குறிப்பாக ஈழத்து "கதிரைமலைப் பள்ளு", *பருளை விநாயகர் பள்ளு’ப் போன்ற நூல் கள் ஆட்ட மரபுகளுடன் இணைந்தவை யன்று. இப்பள்ளு நூல்களைப் பாடியோருக் குப் பள்ளு என்பது முற்றிலும் சிற்றிலக்கி

Page 40
பாவலர் துரை
வகையாகவே இருந்திருத்தல் வேண் டும். ஈழத்து இலக்கிய நூற்பட்டியல் களில் வரும் பெரும்பாலான நாடகங்க ளும், விலாசங்களும், இலக்கிய வடிவங்க ளாகவே எண்ணி எழுதப்பட்ட ன வோ என்பது தெரியவில்லை.
மேலும் தமிழ்நாடக வரலாற்றை யறிந்தோர் தமிழ்நாடகமும், தமிழர் சமு தாய அமைப்புக்கியைய வேத் தி ய ல், பொதுவியல் என அமைந்ததை அறிவர். உயர்மக்களுக்கெனத் தனியொரு நாடக மரபும் (வேத்தியல்), பொதுமக்களுக் கெனத் தனியொரு நாடகமரபும் (பொது வியல்) நிலவிவந்தது, பொதுமக்கள் என வும் கருதப்படாத குலக்குழுக்களின் நாட கக் கலைகள் (ஆய்ச்சியர் குரவை, வேட்டுவ வரி, பள்ளுப் போன்றவை) பொதுவியலுள் அடங்கவில்லையென்றே கூறவேண்டும். 12 ஏற்புடைத்தான இலக்கியமுடையவையா யிருக்கும் நாடகங்கள் உயர்குழுக்களின் நாடகமரபைச் சார்ந்தனவாகவே இருத் தல் வேண்டும். எனவே உள்ள நாடக இலக் கியங்கள் கூட (அவை உண்மையான ஆட்ட அரங்குடன் தொடர்பு கொண்டவையா யிருப்பின்) முற்றுமுழுதான நாடக வர லாற்றை எழுத உதவா, அதற்கு மூன்று சமூகநிலையிலும் பயிலப்பட்ட fBT - 5 மரபுகளை அறிதல் வேண்டும்.
இரண்டாவது நாடகப்பயில்நிலை பற் றிய சா ன்று களாகும். இவை மக்க ளிடையே நிலவிய நாடக மரபுகளைப்பற்றிக் கூறுவன. ஆனல் இவை நாடக இலக்கியம் பற்றி எதுவும் கூரு; கத்தோலிக்க மரபி னரின் நாடக மரபுகளைப்பற்றி முதலில் ஆட்டமரபுவழி சென்றே, பின்னர் அவற் றுக்கான இலக் கி யங் களை அச்சேற்ற முடிந்தது. 18
11. பள்ளு இலக்கிய வகையின் சமுதாய முக்கியத் கமே, உயர்ந்தோரின் புகழை எடுத்துக்கூறு: வரலாற்றுத்தேவை மிகவும் முக்கியமானதாகும். 12. இதுபற்றிய பூரண விளக்கத்துக்கு : சிவ (Ph. D. Thesis submitted to the Uni 13. பேராசிரியர் வித்தியானந்தன் பதிப்பித்த ஞ இராசாக்கள் நாடகம் ஆகியனவற்றை கோக்கு
14, 9. V. Martyn, John. H, Notes on Jaf

யப்பாபிள்ளையின்.ஓர் ஆய்வு 51
3 : 2. இத்தகைய இடர்ப்பாடுக ளிடையேயும் மேலோட்டமான ஒரு நோக் கினைத் தருவதற்கான சான்றுகள் பல உள்ளன.
பத்தொன்பதாம் நூற்றண்டி னிறுதிப் பகுதியில் பல நாடகங்கள் எழுதப்பட் டுள்ளன. 1874 இல் காலமான உடுப் பிட்டிக் குமாரசுவாமி முதலியார் "இந்திர குமார நாடகம்" என்னும் நூலினை" இயற்றினர். 1885 இல் காலமான ஆனைக் கோட்டை வாசியான இராமலிங்க மென் பவர் “மாணிக்கவாசகர் விலாசம்', "தம யந்தி விலாசம்’ என்ற நாடகஞ் சார்ந்த நூல்களை எழுதியுள்ளார் எனத் தெரிகின் றது. 4 இவர் 'புலவராய்ப் பற்பல பதங் கள், கீதங்கள் பாடினர்' எனக் குறிப் பிடப்பட்டுள்ளதால் நாடக அரங்கத் தொடர்புடையவராகவும் இவர் விளங்கி யிருக்கலாம்.
நாடக நூல்கள் பற்றிய செய்திகளி லும் பார்க்க முக்கியமானது, 1887 யூன் மாதம் 28, 29 ஆம் திகதிகளில் யாழ்ப் பாண முற்றவெளியிற் கொண்டாடப் பெற்ற விக்ற் ருேறியா இ ரா னி யின் "யுபிலி விழா பற்றிய செய்தியாகும்;
*" 1887 யூன் 28 இராணியின் யுபிலி விழா வைபவம் தீவின் எல்லாப் பட்டினங்களி லும் பெரு மகிழ்ச்சியுடன் கொண்டா டப் பெற்றது. யாழ்ப்பாணத் தி ல், முற்றவெளியில் பெரியதொரு கூட்டம் திரண்டிருந்தது. இராணியாரின் ஆட்சிக் காலச் சேவை பற்றிய ஒரு பட்டியலை அரசாங்க ஏசண்டர் திரு. டபிள்யூ. சி. துவைனம் ஆங்கிலத்திற் படித்தார். யாழ்ப்பாணத்தில் பின் வரும் நிகழ்ச்சி கள் நடைபெற்றன.
துவத்தைக்கூட உணர்ந்திருப்பார்களோ என்பது சங்சே
பதற்கு அடி நிலையிலுள்ளோரைப் பயன்படுத்தவேண்டிய
is 9 as it, Drama in Ancient Tamil Society rersity of Birmingham, 1970), unpublished. ான சவுக்தரி நாடகம், எஸ் தாக்கியர் நாடகம், மூன்று هتقا
na. (Jaffna, 1922). p. 237.

Page 41
52 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு
மு. ப. 9 மணி புறக்கோட்டைத் தேவாலயத்தில் ஆங்கிலத் திருச்சபை வழிபாடு மு. ப. 11.00 மணி ' ஏழைகளுக்கு அன்னதானம், பி: ப. 4.00 மணி: முற்றவெளியில் அமைக்கப்பட்ட பந்தலிற் சேவை விபரம் வாசிக்கப்பட்டமை, பி. ப. 7-30 மணி: தமிழ்நாடகம் வர்த்தகநாடகம், சுதேசிய இசைவாத் தியக்காரர் இன்னும் பிறவும். யூன் 29. பி. ப. 4-00 மணி: பெண்க ளுக்கான விக்ருேறியா சிகிச்சைச் சாலைக்கான அடிக்கல்நாட்டு வைபவம். பி. ப. 7-30 மணி வாண விளையாட்டு, சுதேசிய இசை,
பி. ப. 9-00 மணி: தமிழ்நாடகம் அரிச் சந்திர விலாசம்’, 15
விக்ருேறியா மகாராணியின் ஆட்சி நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்குக் கூடிய பெருவிழாவில், இரு நாட்களிலும் நாடகம் இடம்பெற்றதெனின், அக்காலத் தில் நாடகம் முக்கிய கலையாக இடம் பெற்றிருந்ததென்பது ஐ யந்திரிபற த் தெரிகின்றது. இத்தகைய சந்தர்ப்பத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில் தாழ்த் தப்பட்ட சமூகத்தினரே பங்குபற்றினர் என்று கொள்வதும் முடியாது. எவ்வாறு பார்க்கினும் நாடகம் இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் உயர்ந்தோரின் கலை பாகவும் விளங்கிற்றென்பது திண்ணம்.
அரங்கேற்றப்பட்ட நாடகங்களுள் அரிச்சந்திர விலாசம் மரபுவழிவரும் கதை யைக் கொண்டது. அரிச்சந்திர விலாசம் ஆங்கி லத்தில் மொழிபெயர்த்து விக்ருேறியா மகாராணியிடமே சமர்ப்பிக் கப்பட்ட நாடக நூலாகும்;
மற்றையதுபற்றிய ஆங்கிலக்குறிப்பு அதனை "வர்த்தகநாடகம்' என்றே வாசிக்கத் தூண் டு கி ன் ற து. இப்
15. W. Martyn, John H. Notes on Jaffna (Ja
6:višgąáv Varthaga Nadaqam 6TcaT di S5ó'S
16. டிை நூல் பக். 48.

Lo Goff
பெயர் தமிழ் ஒலியமைப்புக்கியைய ஆங் கிலத்தில் எழுதப்படவில்லை யாதலால், இதனை "வார்த்தக', 'வர்த்தாக", "வார்த்த கா" எனப் பலமுறைகளில் வாசிக்கலாம். ஆஞல் அவை கருத்துடை யனவாக அமையா. மேலும் நாடகத்தின் முழுப்பெயரும் இதுவாகவே இருத்தலால் வர்த்தக நாடகம் என வாசித்தலே பொருத்தமானதுபோற் ருேன்றுகின்றது. அவ்வாறு வாசிப்பின், இந்நாடகத் தின் கதை புதுமையானவொன் ருக விருந் திருத்தல் வேண்டும். யாழ்ப்பாணத்தின் வர்த்தக விருத்தி, அல்லது ஆங்கில வர்த்தக விருத்தி, அல்லது வர்த்தகன் ஒருவன் பற்றிய நாடகமாகவிருக்கலாம். இவ்வாறு சிந்தி க்கும் பொழுது, சேக்ஸ்பியரின் வெனிஸ் வர்த்தகன் நாடகத்தின் தமி ழாக்கமாக விருந்திருக்கலாமோ என்றும் ஐயுற இடமுண்டு. சமகால ஏடுகளை நன்கு ஆராயும் பொழுது உண்மை புலப்படும் , எவ்வாறு நோக்கினும் இந்நாடகம் புதிய கதை தழுவிய நாடகம் என்னும் எண்ணமே மேலோங்கி நிற்கின்றது. அவ்வாருயின் நாடகக்கலை காலத்துக்கேற்ற இயைபுடன் வளர்ச்சியடைந்து வந்தது என்பதும் தெரிய வருகின்றது.
1887 திசெம்பர் 27ஆம் திகதி யன்று யாழ்ப்பாணக் கத்தோலிக்க வாசிகசாலை நிதிக்காக் சம்பத்திரிசியார் கல்லூரி மண்ட பத்தில் நாடக இசை நிகழ்ச்சி யொன்று நடைபெற்றதாக ஜோன் மார்ட் டின் குறிப்பிட்டுள்ளார். 18 கத்தோலிக்க ரிடையே நாடகம் மதச்சடங்காகவே நிலை யூன்றி வளர்ந்தது என்பது யாவர்க்கும் தெரிந்தவொன்றே. கத்தோலிக்க உயர் சமூகத்தினரிடையேயும் அது ஏற்புடைத் தான பொழுதுபோக்குக் கலையாக விளங் கிற்று என்பதை இச் செய்தி நிரூபிக்கின் |DSil.
மேற்குறிப்பிட்ட இரு செய்திகளும் அக்காலத்து யாழ்ப்பாணத்து உயர் சமூகத் தினரிடையே நாடகம் ஏற்புடைத்தான
ஆங்கி ظاه ہے آج ترتیے ح?s Guiترمیم) --48 فاکھ نه لا ,(ffna l922 .ப்பட்டுள்ளது.

Page 42
பாவலர் துரைய
கலேயாக இடம்பெறுவதையும், நன்கு பயிலப்படுவதையும் எடுத்துக் காட்டுகின் றது. துரையப்பாபிள்ளையவர்கள் தமது சகலகுணசம்பன்னன் என்னும் p5 IT - கத்தை எழுதும்பொழுது, நாடக எழுத் துக்கான ஒரு தேவை (மிகக் குறைந்த அள வில்) இருந்ததென்பது தெரியவருகின்றது.
3 : 3 உயர் சமூக ஏற்புடைமையுடன் அரங்கேற்றிய நாடகங்கள் எம்முறையிலே நடித்துக் காட்டப்பெற்றன?
யாழ்ப்பாணத்து நாடக அரங்க வர லாற்றை அறிவதற்கு எம்மிடையேயுள்ள ஒரேயொரு பயனுள்ள ஏடு, கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் எழுதியுள்ள "" ஈழத்தில் நாடகமும் நானும் "" என்ற சுயசரிதை நூலே, 17
கலையரசு அவர்கள் ' எனக்கு ஏழு வயதாக விருந்த காலத்திலேதான், அதாவது 1896ஆம் ஆண்டிலேதான் முதன் முதலாக மேடையிலே திரைகளுடன் யாழ்ப்பாணத்தில் (மணியகாரன் தில்லை நாதரின் வளவில்) நாடகங்கள் நடைபெற ஆரம்பித்தன" என்கின்றர். 18 மேலும் இவர் எழுதியிருப்பனவற்றை நோக்கும் பொழுது, 1896உக்கு முன்னர் நாட்டுக் கூத்து ஆட்டமுறைமையே மு க் கி ய இடம் பெற்றிருந்தது என்பது தெரிய வரும். கலையரசு அவர்கள் விலாசம், நாடகம் என அவற்றின் வகைகளைத் தெரிவிக்கின்றர். 19
17. (Frie2Tašs க, அஃலய ஏரி , 'ஈழத்தில் நாடக 18. டிை - பச். 8. 19. டிெ - பக். 4.
20. டிெ - பக். 4,
21. அரிச்சந்திரவிலாசம், விலாச முறைமையில் ஆ சனத்திரளிடையே வசதியற்றது என்க. விலாசப் படுத்தப்படுவது தமிழ் லெக்சிக்கனிலிருந்து :ெ நாடக இலக்கியத்தைக் குறித்த பெயராகவே ெ (உ-ம் : டம்பாச்சாரி விலாசம்)
22. Gò - us. 9. 23. டிை - பக். 2.

ப்பாபிள்ளையின் . ஒர் ஆய்வு 53
அவற்றின் ஆட்ட முறைமைபற்றி விவரிக்கும்பொழுது அவர் கூறுவதாவது: *" விலாசத்தில் மேடையமைப்பு வட்ட மாகவும் தரையைவிட ஒரு முழம் உயந்த தாகவும் இருக்கும். நான்கு புறங்களிலும் ஜனங்களிருந்து பார்க்கலாம்.
... ஆனல் நாடகத்தில் எல்லாம் மாருகவே இருக்கும். மேடை சதுரங்க மாகவே அமைக்கப்பட்டிருக்கும். நான்கு மூலைகளிலும் தூண்களை நாட்டி, முன் மூன்று பக்கங்களிலும் கயிறுகளைக் கட்டி விடுவார்கள். அண்ணுவி. பின்பாட்டுக் காரர், பக்கமேளக்காரர் பின்புறமாகவே வீற்றிருப்பார்கள். ஆட்டங்களெல்லாம் பரதநாட்டிய முறையையே யொட்டி யிருக்கும்."20
1896இலேதான் திரைச்சீலையைப் பயன் படுத்தும் அரங்கமுறைமை யாழ்ப்பாணத் துக்கு வந்ததெனின், அதற்கு ஒன்பது வருடங்களுக்கு முன்னர், 1887இல் முற்ற வெளியில் நடந்த நாடகத்தில் நாடக முறைமைக்குச் சொல்லப்பட்ட அரங்க வமைப்பே ஏற்பு டை த்தாக விருந்தி ருக்கும்.21
1896க்கு முன்னரே கொழும்பில், பார்சிமரபு நாடகக் கம்பெனிகள் நாடகங் கள் நடாத்திவந்தன என்பதும் தெரிய வருகின்றது. 22 மேலும் அதற்கு முன்னரே 'இந்தியாவிலிருந்து வருடாவருடம் தஞ்சா வூர்ப்பக்கத்து நாடகக் கோஷ்டிகள் யாழ்ப் பாணம் வந்து கிராமங்களில் நாடகங் களை’’28 நடாத்திவந்தனர். அந்த நாடகக்
மும் 5ாலும்". பாழ்ப்பாணம்-1968.
டப்பெற்றிராதோவெனின், அம்முறைமை அத்தகைய என்ற சொல் காடகநூல் என்ற பொருளிற் பயன் சரியவருகின்றது. எனவே அரிச்சந்திரவிலாசம் என்பது
க13ள்ளல் வேண்டும்.

Page 43
54 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு
கோஷ் டி களின் ஆட்டமரபைப்பற்றிக் கலையரசு அவர்கள் குறிப்பாக எதையும் கூறவில்லையெனினும், அவையும் பொது வாகப் பார்சிநாடகமரபையே பின்பற்றின Golanu GorGiv frui. 2? 4.
1905இல் சக லகுண சம்பன்னன் முதன் முதலில் மேடையிடப்படுவதற்கு முன்னர் யாழ்ப்பாணம் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களையும் கண்டுகளித்துள்ளது. சங்கரதாஸ் சுவாமிகள் 1900இல் Այmւpւն பாணத்துக்கு வந்தார்.25
எனவே சகல குண சம் பன்னனில் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகமரபின் தாக்கத்தையும் காண்பதற்கு இடமுண்டு.
கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் தகப்பனர் எஸ். கே. லோற்றன் அவர்க ளுடன் (1851-1919) துரையப்பாபிள்ளை அவர்களுக்கு நெருங்கிய தொடர்பிருந் திது. மகாஜனக் கல்லூரியின் முதல் முகாமையாளராகவிருந்தவர் எஸ். கே. லோற்றன் அவர்களே. 26 எஸ். கே. லோற்றன் அவர்கள் யாழ்ப்பாணத்துக் கல்வி, கலை மறுமலர்ச்சியில் மிக முக்கிய மான இடத்தினை வகிப்பவர்.27 லோற்றன் அவர்களுக்கு நாடகத்திற் பெருநாட்டம் இருந்த தென்பது அவரது மகனது வாழ்க்கை வரலாற்றிலிருந்து தெரியவரு கின்றது,
யாழ்ப்பாணத்துக்கு வந்த இந்தியப் பார்சிமரபு நாடகங்களைப் பாவலர் அவர் களும் பார்த்துள்ளாரென்பதற்கும் சான்று உண்டு கீதரசமஞ்சரி’ எனும் தமது பாடற் ருெகுதிக்கு எழுதிய ஆங்கில முன்னுரை யில் அந்நாடகக் கம்பெனிக்காரர் ւմ ո՞ւգ սյ Luntriga, இந்துஸ்தானி மெட்டுப் பாடல் களைக் கண்டித்துள்ளார். 28 இந்துஸ்தானி
24, சம்பந்தமுதலியர் ப. சிே!-க*தமிழ். சென்ஜாடg 25. ஈழத்தில் டேகமும் நானும் -تھیل . !{. 26. A Short History the College, Mahajana Colle 27. Notes on Jafna — p. 324.
28. சிங் தண்க்கோஜலட பக், 298,
29. டிெ - பக். 25

ԼՕ 6ծri
மெட்டுக்களை வி டுத் துத் தமிழிசைமரபு மெட்டுக்களையே மக்கள் போற்றவேண்டு மென அக்குறிப்பிற் கூறியுள்ளார்.
துரையப்பாபிள்ளை அவர்களுக்கிருந்த தொடர்புகளையும், அவரது கூற்றுக்களையும் கொண்டு பார்க்கும்பொழுது, அவர் நாட கத்தின் வெகுசனக் கவர்ச்சியை அறிந்தே அதனேப் பயன்படுத்த முனைந்தார் என்று கொள்வதிற் பிழையெதுவும் இருத்தல் (tpւգ Ամո 5].
4 : 1 பாவலர் துரையப்பாபிள்ளை அவர்கள் தமது நாடகத்தைத் தாம் வாழ்ந்த காலத்தே அச்சிடவில்லை. 19053)di) முதன்முதலில் இந்நாடகம் மேடை யேற்றப்பட்டது. மேடையேற்றப்பட்ட வருடம் பற்றிய தகவல் மாத்திரமே யுள் ளது. இது எப்பொழுது எழுதப்பட்ட தென்பது தெரியவில்&ல.
நாடகம் இலக்கியமாகப் பிரசுரிக்கப் படுவதற்கல்லாது, நடிக் கப்படுவதற் கென்றே எழுதப்பட்டதென்பதற்கு அகச் சான்று கள் உள்ளன. செய்கை 2 இடம் 2இல் பின்வரும் குறிப்பொன்று காணப்படுகின்றது:
* பிதா பின்பு மனமிரங்கி மகனை இரண் டாம் முறை வர்த்தகஞ் செய்ய அனுப்ப அவன் இரண்டாம் முறை ஒரு நகரை யடைந்து அங்கு அத்தேச அரசனுல் பிறதேசத்தினின்று. கைதிகளாக்கப் பட்டுக் கொண்டுவரப்பெற்(ற). மறி யற்காரரை மீண்டபின் வீடு செல்ல தகப் பன் முன்னிலும் பன்மடங்கு கே. வேசஞய் அவனை வீட்டினின்று துரத்தி யதைப் பற்றிய சம்பாஷணை யொன்று சுருக்கமாய் இதில் சேர்க் வேண்டி யது".?? இப் பகுதியைக் கதை விளக்கம்
33, பச். 63.
ege Golden Jubilee Supplement, 1960 - p. 4

Page 44
பாவலர் துரைய
எனக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய கதை விளக்கங்கள் பல இந் நாடகத்தில் வருகின்றன. 30
4 2. சகலகுணசம்பன்னன் நாடகக் கதைச் சுருக்கம் பின்வருமாறு :
பாக்கியபுரமெனு மூரிலுள்ள பெரு வியாபாரியான வணிககுலகுரியர் என் பார் மகன் சகலகுணசம்பன்னன், கல்வி பயின்ற பின்னர், ஆசிரியரின் சிபாரிசின் பேரில், பெருநிதியத்துடன் கப்பலொன் றில் வர்த்தகம் செய்ய அனுப்பப்படுகின் ரூன், துருக்கர்கள் சிலர் கைப்பற்றிக் கொண்டுவந்த விஜயபுரி மன்னன் விஜய சிங்க ராஜனின் மகள் ஆனந்த மனேகரி யையும் அவள் தோழி இரத்தினும்பாளை யும் மீட்பதற்குச் சம்பன்னன் துருக்கிய ருக்குத் தன் கப்பலையே கொடுத்து விடு கிருன் , வீடு திரும்பிய மகனைத் தந்தை வைகின்ருர், ஆசிரியரின் சிபார்சின் பேரில் மூன்ரும் முறையும் சம்பன்னன் அனுப்பப் படுகின்றன். இம்முறை அவன் தனது மனைவியாகிவிட்ட மனேகரியின் தகப்ப னது இராச்சியத்துக்குச் சென்று அங்கு தான் யாரெனக்கூறிப் பின்னர் துர்மந்திரி யொருவனின் சதிச்சொல்களினின்றும் தப்பி இராச்சியத்தையும், செளபாக்கியங் களையும் பெறுகின்றன். நற்குணவாழ்வு நலத்தைத் தருமென்பது யாவராலும் உணரப்படுகின்றது.
4 : 3 இந்நாடகத்தைத் துரையப்பா பிள்ளையவர்கள் எழுதியபொழுது தெல்லிப் பழை அமெரிக்கமிஷன் ஆங்கிலப் பாட சாலையின் தலைமையாசிரியராகவிருந்தார். மதம்பற்றிய ம ன மாற்றம் ஏற்படத் தொடங்கிவிட்டதெனினும், பூரணமான மதமாற்றம் ஏற்படவில்லை. அப்பெருமாற் றம் மகாஜனக் கல்லூரி நிறுவப்படுவதுட னேயே (1910) ஏற்படுகின்றது.
30. சித்தனே க்ரோஃ) - பக். 195, 254,
31. குறிப்பு Sబ్లర பார்க்கவும்.
32. குரிய நாராயணசாஸ்திரியார் வி. கோ. நாடகவிய சோமசுந்தரப் புலவர் க. உயிரிளங்குமரன் நாடக
உறுப்பு (Act), களம் (Scene) என்று வகுப்

ப்பாபிள்ளையின்...ஒர் ஆய்வு 55
இந் நாடகத்தி ன் கதையமைப்பு, மொழிநடை முதலியனவற்றை நன்கு விளங்கிக் கொள்வதற்கு இம்மதநிலை முக் கியமாகின்றது.
5 : 1. இந்நாடகத்தின் அமைப்புநெறி யினைப் பார்ப்போம்.
நடிப்பதற்கென்றே எழுதப்பட்டதால் இதன் அமைப்புநெறி இக்கால நாடக நிலை மை யை அறிவதற்குப் பெரிதும் உதவும் .
ஆசிரியர் ஆங்கில இலக்கியப் பயிற்சி யும், தேர்ச்சியும் பெற்றவர். "கேம்பிரிஜ் சீனியர் 'த் தேர்வினிற் பத்தொன்பதாவது வயசிலேயே சித்தியடைந்தவர். ஆங்கிலத் தில் எழுதியுள்ள முன்குறிப்பிட்ட கட்டுரை யொன்றில் ஷேக்ஸ்பியரது ஆக்கங்களைப் பற்றிய பரிச்சயம் தனக்கு உண்டு என்பதை நன்கு புலப்படுத்துகின்ருர் .81
ஆங்கில நாடக இலக்கியமரபில், நாடகங்களைக் காட்சி நிகழ்வுகளுக்கியைய Act, Scene என வகுக்கும் மரபு ஒன்றுண்டு. மேற்குறிப்பிட்ட ஆங்கிலப் பதங்களை அங்கம், களம் என மொழிபெயர்ப்பது மரபு.32 ஆணுல் துரையப்பா பிள்ளையோ Act என்பதைச் "செய்கை” " என்றும், Scene என்பதை "இடம்" என்றும் மொழி பெயர்த்துள்ளார். நாடக அமைப்பில் அங்கம் எனப்படும் Act நாடகக் கதை வளர்ச்சியில் முக்கிய கூரு க அமைதல் வேண்டும். இவ்வங்கப்பிரிவுபற்றி ஆங்கில நாடக மரபிலேயும் ஏகோபித்த கருத்து எதுவுமில்லை. அங்கம் என வகுப்பது நாட காசிரியன் நிலையிலேயே நடைபெறும் ஒரு வகைப் பாடாகும். ஷேக்ஸ்பியர் தாம் எழுதிய நாடகங்களை இவ்வாறு வகுத் தாரா என்பதுபற்றி ஐயமுண்டு.
(8ம் பதிப்பு) சென்னை 1936 - ui. 188-90. , யாழ்ப்பாணம், 1936 பேராசிரியர் கணபதிப்பிள்ளை
ர்-5 ஈகுடகம், சொழும்பு 1941.

Page 45
56 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு ட
சகலகுணசம்பன்னனில் முதலாவது * செய்கை"யில் நான்கு காட்சிகளும் (இடம்) இரண்டாவதில் ஆறு காட்சிகளும் மூன்ருவதில் ஆறும் இடம் பெறுகின்றன: இப்பிரிவு இலக்கிய நெறிப்பட்ட பிரிவே என்பது நாடகத்தினுள் வரும் சில குறிப் புக்களால் தெரியவருகின்றது. கதைவிளக் கம் என்னும் பகுதிபற்றி ஏற்கனவே குறிப் பிடப்பட்டுள்ளது. முதலாம் செய்கையில் ஒரு கதைவிளக்கமும், இரண்டாம் செய்கை யில் இரண்டு கதைவிளக்கங்களும் இடம் பெற்றுள்ளன. காட்சி அமைப்பு நன்கு எழுதப்பட்டிருப்பின் இப் பிரச்சினை ஏற் பட்டிருக்கவிடமில்லை. நாடகத்தில் இரு இடங்களில் உள்ளவற்றைவிட மேலும் சில சம்பாஷணைகள் சேர்க்கப்படவேண்டு மெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 3 இவை யாவும் இந் நாடகம் உண்மையில் மேடைக் கான முன் பிரதி யென்பதையே நிறுவு கின்றன. பாத்திரங்கள் சில தனிமொழி (Soliloquy) பேசுவதை ஒரு காட்சியாகக் கொண்டிருப்பது (செய்கை 3 இடம் 2) ஆங் கில நாடகச் சாயலைக் காட்டுகின்றது.
நாடக அமைப்பில் மேற்குறிப்பிட்ட சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டமைக்கான இன்னுெரு காரணம் , நாடகத்தில் மரபு வழி உத்திகளையும் இணைக்க முயன்றமையே யாகும். மரபுவழி நாடகங்களின் இசை, நாடக அமைப்புப்பற்றிய ஒன்ருகும். நாட்டுக் கூ த் தி ல் அதுவே நாடக உறுப்பைக் காட்டிநிற்கும் (வரவுப்பாட்டு). ஆனல் பார்சியர் வழி வந் திணை ந் த "ஸ்பெஷல்' நாடக மரபில் பாடலைப் பாடிப் பின்னர் அதன் கருத்தை வசனத்தில் விளக்கமாகக்கூறுகின்ற மரபுண்டு. 34 அந்த முறையினைத் துரையப்பாபிள்ளையவர்களும் பின்பற்றியுள்ளார். நாடகம் முழுவதிலும் இப்பண்பு காணப்படுகின்றதெனலாம், பம்மல் சம்பந்தமுதலியாரது நாடகங்
33. கிந்தனைச்சோலை - பக். 215, 245.
34. சங்கரதாஸ் சுவாமி டி. டி. சாரங்கீதரன் (மதுை குற்ற லம்பிஸ்ளை K, ஸம்பூரனை அரிச்சந்திரா (
35. சம்பந்த முதலியார் ப. அமலாதித்யன் (சென்? 35. குற்றுலம்பிள்ளே K, ஸம்பூர்ண அரிச்சந்திரா -
37. இந்தனக்கோலே - பக். 237, 268.

paurit
களிலும் இம்மரபு போற்றப்படுவதைக் காணலாம். 85 ஆங்கிலநாடகச் செல்வாக் குக் குட்பட்டவர்கள் கூட மரபுவழி நாடக மரபினை எந்த அளவுக்குப் பேணவேண்டி யிருந்ததென்பதை இவ்வுண்மை எமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
கர்நாடக இசை இயைத்து வருவதும் பார்சிவழி வந்ததுமான நாடகமரபில் தமிழ் யாப்பு வகைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. விருத்தம், கட்டளைக் கலித் துறை முதலியன உதாரணங்களாம். சங்கரதாஸ் சுவாமிகள் பிரபலப்படுத்திய இந்த நாடகமரபில், முன்னர் நடந்த கதையை மீட்டும் 'நாடகத்தின்) கூறும் பொழுது அகவலைப் பயன்படுத்தல் மரபு. இதற்கான தலைசிறந்த உதாரணம் ஸம் பூரண அரிச்சந்திராவில், மயானகாண்டத் தில் வரும் அரிச்சந்திரன் அகவல், சந்திர மதி அகவல் ஆதியனவாகும்.38 சகலகுண சம்பன்னணிலும் பாத்திரங்கள் முன்னர் நடந்தனவற்றைத் தொகுத்துக் கூறும் பொழுது அகவல் பயன்படுத்தப்பட்டுள் ளது. 37
5 ; 2 சகல குண சம்பன்னன் முதன் முதலில் மேடை யேற்றப்பட்டபொழுது எம்முறையில் மேடை யேற்றப்பட்டது என்பது பற்றிய குறிப்புக்கள் கிடைக்க வில்லை. மேடையமைப்பில் சதுர உயர்ந்த மேடையே (இப்பொழுதுள்ளது) பயன் படுத்தப்பட்டிருக்கலாம். திரைகள் பயன் படுத்தியிருத்தல் வேண்டும். 'செய்கை" 2 இடம் 5இல் வரும் நிகழ்ச்சிகள் "ருேட் சீனை'ப் பயன்படுத்தியே காட்டப்பட் டிருத்தல் வேண்டும் . அக் காட்சியில் முத லில் மந்திரியின் தனிமொழியும் பின்னர் அரண்மனையில் நடப்பனவும் வருகின்றது. செய்கை 1, இடம் 2இல் வரும் துறைமுகக் காட்சி, செய்கை 2, இடம் 1இல் வரும்
ர, 1929), ஸதி அநகுயா (மதுரை, 1926),
ਟੋਕਰ 1948).
f
1908).
பக். 38, 39, 45.

Page 46
பாவலர் துரை
கடற் காட்சி முதலியனவற்றுச்கும் பூங்கா வனத்துக்கும் (1 : 3) திரைச்சீலைகள் பயன் படுத்தப்பட்டிருக்கலாம்.
வேடப்புனைவு, உடைகள் ஆகியனவற் நில் சம்பந்தமுதலியார் ம ர புக் கு ம் (ஆங்கிலநெறியை அறிந்த மரபு) சங்கர தாஸ் சுவாமிகள் மரபுக்கும் (அந்தப் பிரக்ஞை இல்லாத மரபு) வேறுபாடு இருக்கவில்லை யென்பதை அக் காலத் தில் எடுக்கப்பட்ட நாடகத்துப் புகைப் படங்கள் காட்டுகின்றன. 88
5 : 3. இலங்கைத் தமிழ் நாடக மொழி நடைவளர்ச்சிபற்றி ஆராய்வதற் குச் சகல குணசம்பன்னன் பெரிதும் உதவு கின்றது. ஈழத்துக்கெனத் தனிப்பட்ட ஒரு தமிழ்நாடக மரபு ஏற்படவேண்டுமெனில், அது முதன்முதலில் நாடகக் கதையிலும், மொழி நடையிலுமே தொடங்கல் வேண்டும். மரபுவழிவரும் நாடகங்களில்
பக்கம் செய்கை இடம்
73 (i) ( (ii) s 79 l (iii) 84 I II (i) 98 I (i)
G 2 l II I )1( نے G. 24 II (i) { 223 I III (i) L 235 VI (i) u
گی 26 III g
யாழ்ப்பாணத்துப் பேச்சுவழக்கு மொழி குறிப்பிட்ட சில பாத்திரங்களால்மாத்திர மல்லாது எல்லாப் பாத்திரங்களாலும் பேசப்படுவது ஒரு முக்கிய அமிசமாகும்.
38. குறிப்பு 36இல் வரும் நூலின் அட்டையிலுள்ள
அடுத்துள்ள படம்.
39. சிவத்தம்பி கா. வெறுங்கோயில், புதுயுகம், மே
40. கணபதிப்பிள்ளே க. கானுடகம் முன் ஒரை (கொழு
- 8

ப்பாபிள்ளையின். ஒர் ஆய்வு 57
கண்டிராசன், பூதத்தம்பிவிலாசம் ஆதியன சுதேசக் கதைப் பொருளைக் கொண்டவை. கலையரசு சொர்ணலிங்கம் பரப்பிய நாடக மரபில் இத் தேசியமரபு போற்றப்பட வில்லை. ஈழத் தமிழ் நவீன நாடக மரபில் ஈழத்துப் பிரச்சினைகளை வைத்து, சமூக நாடங்கள் எழுதி, தேசிய நாடக மரபுக்கு வழிவகுத்த பெருமை பேராசிரியர் கணபதிப்பிள்ளையைச் சாரும்.89 அவரே முதன்முதலில் முழு நாடகத்தையும் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கில் எழுதி ஞர். 40 யாழ்ப்பாணத்துப் பேச்சுமொழி நாடகங்களிற் பயன்படுத்தப்பட்டதன் வரலாற்றை அறிவதற்குச் சகலகுணசம்பன் ண ன் உதவுகின்றது.
இந்நாடகம் இலக்கியத் தமிழி லேயே பெரும்பாலும் எழுதப்பட்டுள்ள தெனினும், இடையிடையே யாழ்ப்பா ணத்துப் பேச்சுமொழி இடம்பெறுவதைக் காணலாம். அவற்றுட் சில வருமாறு :
நொத்தாரிஸ் சத்தியசன்மா அப்படிச் சொல்லாதேயும் நேரம்போகுது பத்திரம் ராணி
தன் தொழில் விட்டவன் சாதியிற்
கட்டவன்
ஆயிரக்கண்க்கான பறைச்சிகளையும் ஒரு பாள்ளற் கப்பலையும் கொண்டுவந்தாலே இளவரசியல்ல நளவரசியாக்கும் கையரசர் நம்மைச் சருவும் பொருட்டு டல் ச்சரியம் என்றன் புத்திரி சித்திரம் ச்சொட்டாயிங்ங்ணமமைந்ததென் நூதன ம் தென்ன பார இழவாய்க் கிடக்கு
சகலகுணசம்பன்னன் மொழிநடை யைப் பார்க்கும்பொழுது, பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதிய சங்கிலிநாடகத்து நினைவு எழுவது இயல்பே அந்த நாடகத்
படம் கலையரசு சொர்ணலிங்கத்தின் நூலில் பக். 72
ன 10லர் (கொழும்பு, 72) பக். 44-48. l, 1941).

Page 47
58 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு
திலும் யாழ்ப்பாணத்துப் பேச்சு மொழிப் பதங்கள் இயற்றமிழ் நடையிலே பயின்று வருவதைக் காணலாம்.
காலத்தால் வேறுபட்ட இரு நாடகாசிரி யர்கள் நாடக அமைப்பில் ஒரோவிடங்க ளில் ஒத்து நிற்பதற்கான காரணம் யாது? இருவரும் எழுதப் புகுந்த கதைப் பொரு ளும், நாடகத்தின் பொதுசனத் தாக்கம் பற்றிய அவர்களது கருத்துமேயாகும்,
சகலகுணசம்பன்னன் *" இராஜா girit Goof'd கதையாகவிருப்பினும் சமூக முக்கியத்துவமுள்ள கதை : ஆசிரியரின் சமூகக் கருத்துக்களை எடுத்து விளக்கும் நாடகம். (இதனைச் சிறிது பின்னர் பார்ப் போம் ) பாவலர் தமது நாடகம் சமூகத் திலே தாக்கத்தினை ஏற்படுத்தவேண்டு மென்ற கருத்துடையவரென்பது முன்னரே புலனுகிவிட்டது. இதஞலேயே அவர் மக்களின் மொழிநடையில் வரும் சில சொற்களைக் கையாண்டார்; ஆனல் இம் மொழிநடை பூரணமான ஒன்ருக மிளிர வில்லை. அதற்கு அவரது சமூக நோக்கும் ஒரு காரணமாகும். மக்களின் முன்னேற் றம் எனப் பாவலர் கருதியது ஒரு குறிப் பிட்ட சமூகநிலைக்குக் கீழே செல்லவில்லை யென்பது, யாழ்ம்பாண சுவதேசக் கும்மி (244, 253), எங்கள் தேசறிலை (3, 4, 7) போன்ற பாடல்கள்மூலம் தெரிகிறது. இது காலத்துக்கியைய நடந்துகொண்டதன் இயல்பே. ஆனல், பேராசிரியரோ * யாழ்ப்பாணத்து மத்தியதர வர்க்கத்துக் குடும்பப் பிரச்சினைகள் சமூகப் பிரச்சினை கள் யாவற்றையும்...பிரதேச மொழி நடையிலே எழுதினர்.”41 தனது வளர்ச்சி யநுபவ அடிப்படையில் முழுத் தமிழ்ச் சமூகத்தையுமே சித்திரித்துக் காட்டினர். மேலும் பேராசிரியரின் மொழிக் கல்வி யறிவும் சமூக உணர்வும் அவரைப் பாமரத் தமிழினதும் பாமரத் தமிழனதும் நண்ப னக்கின. எனவேதான் அவரது நாடகங் களிற் பேச்சுத்தமிழ் பூரணமாக இடம் பெற்றது.
41. 39இல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரை. 42. இன்றைய பரதநாட்டிய மரபில் இக் கருத்துச்

மலர்
ஆயினும் சமூக உணர்வுடன் நாடகம் எழுதுவோர் மக்களின் மொழிநடையையே கையாளவேண்டிவரு மென்னும் உண்மை இதனுற் புலப்படுகின்றது. அத்துடன் G Lu g m sa in u ri கணபதிப்பிள்ளையினல் தொடக்கப்பெற்ற ஒரு நாடக நெறியின் மூலத்தை நாம் இதனல் அறிந்துகொள் கின்ருேம் .
5 - 4. சகலகுணசம்பன்னனில் வரும் unt L.- Gi) s Gir பாவலரின் இசைக் கோட் பாட்டினை விளக்குவனவாக வுள்ளன. கட்டளைக் கலித்துறை, விருத்தம், அகவல் என்பவற்றைவிடப் பதங்களிலும் இசைப் பாடல்களை எழுதியுள்ளார். சம்பந்த முதலியார் மரபு நாடகங்களிலும், சங்கர தாஸ் சுவாமிகளின் மரபு நாடகங்களிலும் வரும் பாடல்களைப் போலவே இவையு முள்ளன. பார்சி நாடக நெறியை நேரடிப் பிரதி செய்தாரைப் போன்றல்லாது, சங்கரதாஸ் சுவாமிகள் தமது நாடகங் களில் கர்நாடக இசையினை நன்கு பயன் படுத்தினர். அவர் ஒரு சிறந்த புலவர். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகப் பிரதி களில் பாடவின் இராக தாளம் கூறப்பட் டிருக்கும். தமது கீதரசமஞ்சரிக்கு இராக தாளம் குறிப்பிட்ட பாவலர் நாடகப் பாடல்களுக்கு அவ்வாறு குறிப்பிடாது விட்டது ஆச்சரியத்தைத் தருகின்றது.
இசைப் பாடல்கள் பற்றிய சில சொற்கள் முக்கியமானவையாகக் காணப் படுகின்றன. இசைப் பாடல்கள் ஒவ் வொன்றையும் பதம் என்றே கூறுகின்றர். பதம் என்பது அபிநயிக்கப்படும் பாடல் என்ற கருத்தில் நிற்கும்.42 இசைப் பாடல் களைப் பல்லவி, அநுபல்லவி, சரணம் எனப் பிரித்தல் மரபு. பாவலரோ பல்லவி யைப் பல்லவம் என்றும் , அநுபல்லவியை அநுபல்லவம் என்றும் எழுதுகின்றர். பல்லவியைப் பல்லவம் என வழங்கும் பிரயோகம் வின்ஸ்லோ அகராதியிற் காணப்படுவதாகத் தமிழ் லெக்சிக்கன் குறிப்பிடுகின்றது. தமிழ்க் கிறித்தவர்
சிறிது வேறுபட்டுள்ளது.

Page 48
பாவலர் துரைய
களின் மரபில் பல்லவம் என்பதே வழக்குப் போலும்,
தமது பிற பாடல்களிற் கும்மி போன்ற 6.TnT Lóului கவிதை வ டி வங் களை க் கையாண்ட பாவலர் , தமது நாடகத்தில் கப்பற் பாட்டுகளைப் பயன்படுத்தியுள் Gmrntri .
5 : 5 , இந்த நாடகம் எந்த அள வுக்கு நாடகாசிரியரின் கருத்தினைப் பிரதி பலிக்கின்றது என்பதை அறிதல்வேண்டும்.
யாழ்ப்பாணத்துக்கான சமூக சீர் திருத்த வழிமுறையில் வர்த்தகத்துக்குப் பிள்ளையவர்கள் மிக முக்கியமான இடம் கொடுத்திருந்தாரென்பது யாழ்ப்பாணச் சுவதேசக் கும் மியிலும், எங்கள் தேசநிலைக் கண்ணிகளிலும் தெரியக் கிடக்கின்றது; நாடகத்தில் சகல குணசம்பன்னன் வர்த் தகஞ் செய்து பொருளிட்ட முற்படுவதைக் di 607 a Tb .
கல்வித்துறையிற் பெரும்பணியாற்றிய பாவலர் அவர்கள், தமது நாடகத்தின் முக்கிய பாத்திரங்களுள் ஒரு வ ராக ஆசிரியர் ஒருவரைச் சித்திரித்துள்ளார். சம்பன்னனை மூன்ரும்முறையும் வணிகஞ் செய்ய அனுப்புமாறு தகப்பன் தீர்மானிப் பதற்குக் காரணகர்த்தர் ஆசிரியரே.
பாவலர் தாம் நிஜவாழ்க்கையிற் போதித்த சன்மார்க்க நெறியினை நாடகத் தில் ஆசிரியர் மூலம் போதிக்கின்ருர், (செய்கை 1, இடம் 1.) எனவே, ஆசிரியர் என்ற பாத்திரத்தினை இலட்சியங்கள் மிக்க உயர்குண சீலராகச் சித்திரிப்பதில் வியப் பில்லை.
பாவலர் கிறித்தவத்திலிருந்த காலத்து எழுதப்பட்ட நாடகம் என்பதை எடுத்துக் கூறுவனபோ லமைந்துள்ளன சில சொற் பிரயோகங்கள் :

பப்பாபிள்ளையின். ஓர் ஆய்வு 59
'ஜெகதீசன் அனுப்பிய பரமதூதன்' (பக். 204),
' ஏழையினை இரட்சிப்பதற்காய் " (பக். 214)
'ஏழைக் கிரங்குபவன் ஈசனுக்குக் கடன் கொடுக்கிருன் என வேதம் புகல் கின்றதே" (பக் 221) என்பவற்றை உதாரணமாகக் காட்டலாம்.
6. நாடகம் கத்தோலிக்க மரபில் வகித்த இடத்தினைப் போன்ற ஒரு முக்கிய மான இடம், அதற்குப் புரட்டஸ்தாந்த மரபில் இருக்கவில்லை. இங்கிலாந்திலும் புரட்டஸ்தாந்த மரபில் நாடகம் முக்கிய கலா சக்தியாக முகிழ்க்கவில்லை. தியூடர் காலத்து நாடக வளர்ச்சிக்கு வணிக சமுதாயத்தின் எழுச்சியே முக்கிய சமூக, நிலைக் காரணமென்பது இப்பொழுது நிறுவப்பட்டுள்ளது: ஆயினும், இங்கிலாந் தில் வழக்கிலிருந்த 'நன்னெறி' நாடகங் 35&T (Morality Plays), புரட்டஸ்தாந்தத் தினர் ஒரோ வேளைகளிற் பயன்படுத்தினர் என்பதற்குச் சான்றுகள் உள. அந்நாடக மரபில் மனிதக் குணங்களைப் பாத்திரங்க ளாக உருவகிக்கும் ஒரு மரபு உண்டு. சகலகுணசம்பன்னணிலும் அத்தகைய ஒரு சாயலைக் காணல்ாம். ஆனல் இப் பாத் திரச் சித்திரிப்பு சனமரபு நாடகங்களின் ஒரு முக்கிய பண்பாகும்.
சகலகுணசம்பன்னனை எழுதிய காலத் திலே பிள்ளையவர்களுக்குக் கிறித்தவத் தொடர்பிருந்தது. அந்த அளவுக்கு இந் நாடகம் அவர் கூர்ந்து நின்ற மதக்கோட் பாட்டினையும் எடுத்துக்காட்டி நிற்கின்றது என்பதில் கருத்து வேறுபாடு இருக்க (1Բւգաո Ցil ,

Page 49
ஈழத்துத் தொல்பொருளிய தமிழியலும்
1. பொது
தொல்பொருள் என்னும்போது பழைய கால மனிதன் பயன்படுத்திய பொருள்கள் - கல், மண், மரம், உலோகம் முதலிய வற்றினலே செய்து பயன்படுத்திய கருவி கள், உபகரணங்கள், மேற் குறிப்பிட்டன வற்றில் எழுதப்பட்டுள்ள சாசனங்கள், நாணயங்கள், கு  ைக க ள், வீடுகள், மாளிகைகள் முதலிய இருப்பிடங்கள், கோவில்கள், மனிதன் இறந்தபின் எஞ்சும் எலும்புக்கூடுகள், அவற்றலாய கருவிகள் முதலியனவற்றையே கருதுகிருேம். இவை பற்றிய ஒழுங்கான அறிவியலே தொல் பொருளியலாம். மேற்குறிப்பிட்ட ஒவ் வொன்றினைப் பற்றியுமே தனித்தனியாக விவரிக்கலாம். தமிழியல் என்ற பதம் மிக அண்மைக் காலத்தியது. தமிழைப்பற்றிய எல்லாவிதமான அறிவும் - இலக்கியம், இலக்கணம், மொழிநூல், மொழியியல், வரலாறு, வரிவடிவம் முதலியன பலவும் தமிழியலில் அடங்கும்.
11. தொல்பொருளியலும் தமிழியலும்
தொல்பொருளியலுக்கும் தமிழிய லுக்கு மிடையில் என்ன தொடர்பு, என மேலெழுந்த வாரியாகச் சிலர் வினவலாம். ஆனல் இவ்விரு அறிவியற் றுறைகளையும் கூர்ந்து நோக்கும்போது இரண்டிற்கு மிடையிலுள்ள தொடர்புகள் தெளிவாகும். ஆதிகாலம் தொட்டு மனிதனைப் பற்றிய எவ்விதமான அறிவியல்களும் ஒன்ருே டொன்று தொடர்புள்ளனவாகவே யிருந்து வந்தன; ஆனல், சமீபகாலத்திலேதான்
பட்டு வற்புறுத்தப்படுகின்றன.
தமிழியலின் பலதுறைகளுக்கும் இன்று தொல்பொருள் நன்கு துணையாக அமைந் துள்ளது. தமிழ் நூல்களின் காலவரை

வி. சிவசாமி, எம். ஏ, வரலாற்று விரிவுரையாளர் யாழ்ப்பாணக் கல்லூரி
லும்
யறை - தமிழிலக்கணம், இலக்கியம், வரி வடிவம், முதலியனவற்றின் காலவரையறை யினை நிர்ணயிப்பதற்குத் தொல்பொருள் ஏதோ வகையில் உதவலாம். இலக்கிய, இலக்கண நூல்களிலே காணப்படாத கவிதைகள், வசனப்பகுதிகள்,சொற்ருெடர் கள், சொற்கள், இலக்கண வழக்குகள் முதலியனவும் தொல்பொருளியல் மூல மாக வெளிப்படலாம். அதேவேளையிலே இலக்கிய மூலங்கள் கூறும் வரலாற்றுச் செய்திகளை உறுதிப்படுத்தவும், சிலவேளை களிலே பூரணப்படுத்தவும் தொல்பொருள் கள் உதவுவன. இக்கால விஞ்ஞான வளர்ச்சியின் வேகத்தாலே தொல் பொரு ளியலும் வளர்ந்துவந்துள்ளது. பழம் பொருள்களின் காலவரையறையினை விஞ் ஞான முறைப்படி எளிதிலே கணித்து விடலாம். இம்முறைகள் இலங்கையிலோ இந்தியாவிலோ இன்னும் பரவலாகப் பயன் படுத்தப்படவில்லை.
11. இன்றைய நிலையிலே தொல்பொருளிய
லும், தமிழியலும்
இற்றைக்குச் சில ஆண்டுகளுக்கு முன் தமிழியல் பற்றி ஆய்ந்தோர் தொல்பொரு ளியலை அவ்வளவு பயன்படுத்திலர். சிலர் முற்ருகவே பயன்படுத்திலர். காலஞ்சென்ற பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் போன்ற சிலர் இதற்குப் புறநடை யாவர், ஆனல், இன்ருே வயோதிபத் தமிழ்ப் பேராசிரியர் என்ருல் என்ன, இளம்பிராயத் தமிழறிஞர் என்ருல் என்ன, தொல்பொரு ளியலையும் பயன்படுத்துவதைக் காண லாம். எடுத்துக்காட்டாகப் பேராசிரியர் தெ. பொ. மீனுட்சிசுந்தரனர் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய தமிழிலக்கிய வரலாறு என்னும் நூலைக் குறிப்பிடலாம். அல்லது எமது நாட்டவரான பேராசிரியர் எக்ஸ், எஸ். தனிநாயக அடிகள், கலாநிதி கா.

Page 50
32 துரையப்பாபிள்ளை நூற்றண்டு
கைலாசபதி போன்ருர் எழுதிய நூல்களைக் குறிப்பிடலாம். உதாரணமாகப் பின்னையவ ரின் பண்டைத்தமிழர் வாழ்வும் வளமும் என்ற நூலினைக் குறிப்பிடலாம். அல்லது கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை அவர்களின் சாசனமும் தமிழும் என்ற நூலினைக் குறிப் பிடலாம்.
IV. தென்னிந்தியத் தமிழகம்
தென்னிந்தியத் தமிழகத்திலே தற் போது நடைபெற்றுவரும் தொல்பொரு ளாராய்ச்சியினலே பண்டைத் தமிழ்மொழி வரலாறு, இலக்கிய வரலாறு, தமிழக வரலாறு முதலியன நன்கு துலங்குகின்றன. எடுத்துக்காட்டாகத் திரு. ஐராவதம் மஹாதேவன் அவர்கள் தமிழ்ப் பிராமிச் சாசனங்கள் பற்றி எழுதியுள்ள ஆய்வுரை யினைக் குறிப்பிடலாம். மேலும் காவிரிப் பூம்பட்டினத்திலே நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியினலே சங்க நூல்களின் வரலாற்றியல்பு மேம்படுதலையும், அந்நகர் முற்ருகக் கடலினுலே கொள்ளப்படவில்லை யென்பதையும், இதுபற்றிப் பிந்திய காலத் தமிழ் நூல்கள் குறிப்பிட்டிருப்பது சரியில்லை என்பதையும் அறியக்கூடியதாயுள்ளது. 2 இவ்வாறு பல எடுத்துக்காட்டுக்களைக் குறிப்பிடலாம்.
V. Fp
ஈழத்துத் தமிழியல் பற்றி அறிவதற்குத் தொல்பொருளியல் ஓரளவாவது உதவு கின்றது. எமது நாட்டிலே தொல்பொரு ளியல் இன்னும் நன்கு வளர்ச்சியடைய வில்லை. குறிப்பாகத் தமிழியலுக்குத் துணை புரியக்கூடிய தொல்பொருளியல் ஆராய்ச்சி ஆரம்ப தசைகளிலேதான் இருக்கிறதென லாம். ஈழவரலாற்றிலே, தமிழியல் நெடுங் காலமாக ஒரு பிரதான காரணியாக நிலவி வந்தமைக்கு இலக்கிய மூலங்களிலும்பார்க்கத் தொல்பொருளியலே சான்று பகரவேண்டும்.
l. Mahadevan Irawatham-Tamil Brahmi I
2. தியாகராசன் புலவர் நா. (1) * காவிரிப்பூம் ப.
-l972. u. Ol-l.09.
(ii) Raman K. W. Excavations at Pu

மலர்
ஆஞல், அத்துறையின் வளர்ச்சி மந்தமாக இருப்பது ஒரு முட்டுக்கட்டையாக உள் ளது. அவ்வாருயினும் சில பிரதான அம்சங் களைக் குறிப்பிடலாம்.
இலங்கையிலே, ஆரிய நாகரிகத்துடன் வந்த சிங்கள மக்களும், திராவிட நாகரிகத் துடன் வந்த தமிழரும், பிற திராவிடரும், இவர்களுக்கு முன் வாழ்ந்த ஆதி ஒஸ்ரலோ யிட்ஸ் போன்ற இனத்தவரும் சேர்ந்து கட்டியெழுப்பியதே இலங்கை நாகரிக மாகும். ஈழத்துப் பெளத்த-சிங்கள மரபு களை அடிப்படையாகக் கொண்ட வரலாற் றினையே, பாளிமொழியிலே தீபவம்சம், மஹாவம்சம், சூளவம்சம் முதலியன பொது வாக எடுத்துக் கூறுவன. இதனலிவை ஒரு தலைச் சாய்வான நாகரிகத்தினை ஒரளவு பிரதிபலிப்பன. ஆனல் இக் குறைபாட் டினைத் தொல்பொருளியலே ஓரளவாவது நிவிர்த்திசெய்யலாம். இத்தகைய குறை பாடு கி. பி. 13ஆம் நூற்ருண்டு வரையுள்ள ஈழ வரலாற்றில் அதிகம் உண்டு.
கிறிஸ்து ஆண்டிற்குச் சற்று முன்பின் ஞன சில நூற்ருண்டுகளாக (கி. மு. 2ஆம் நூற்ருண்டு தொட்டுச் சில நூற்ருண்டு களாக) ஈழத்திலே திராவிடர் குறிப்பாகத் தமிழரின் செல்வாக்கு நன்னிலையிலிருந்த தற்குப் பாளி நூல்களிலே வரும் குறிப்புகள் மட்டுமன்றிப் பொன் பரிப்பு, குருகல்கின் ன, கதிரவெளி, படியகம்பொல, கொண்ட தெனிய, வளவே பகுதி, கொக்கபே, குல்ஸோஹொனகனதே, வ ல் லி புர ம், மாதோட்டம், அநுராதபுரம், வவுனியா முதலிய இடங்கள் பலவற்றிலே கண்டு பிடிக்கப்பட்டுள்ள திராவிடவியல் சார்பான பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்கள்-குறிப் பாகத் தாழிகளும், சில கல்வெட்டுக்களும் ஆதாரமாம். இவை பற்றிய மூலங்களைச் சற்று விரிவாகக் கலாநிதி கா. இந்திரபாலா
scriptions of the Sangam Age-Madras 1968.
.டினத்தில் புதைபொருளாராய்ச்சி' - ஆராய்ச்சி 11, 1
puhar - ஆராய்ச்சி மேற்படி ப. 118-123.

Page 51
ஈழத்துத் ெ
அவர்கள் ஒன்றுசேர்த்துக் குறிப்பிட்டுள் ளார். தமிழர் செல்வாக்கு நிலவிய அக் காலப்பகுதியிலே சில புலவராவது எமது நாட்டிலும் வாழ்ந்திருப்பர். சங்க நூற் தொகுதி சிலவற்றி லிடம்பெற்றுள்ள சில பாடல்களைப் பாடிய ஈழத்துப் பூதந் தேவனர் 4 ஈழநாட்டவர் என்பது பொருத்த மானதே, சங்ககால முடிவிலே தமிழகத் திலே கி. பி. நான்காம் நூற்ருண்டளவிலே களப்பிரர் ஆதிக்கம் ஏற்பட்டது. மூவேந்தர் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஈழத்திலும் பெளத்த செல்வாக்கு முன்னைய காலத்தி லும் பார்க்க அதிகரித்தது. இத்தகைய காரணங்களாலே தமிழியற் செல்வாக்குக் குன்றியிருக்கலாம்.
இதன் பின், தென்னிந்தியாவிலே, பல்லவ - பாண்டியப் பேரரசுகள் கி. பி. 7ஆம் நூற்றண்டிலே விரிவுற்றன. இதைத் தொடர்ந்து தமிழியற் செல்வாக்கும் அதி கரித்தது, கி. பி. 7ஆம் நூற்ருண்டிலே தமிழகத்திலே வாழ்ந்த திருஞானசம்பந்தர் திருக்கோணமலையிலும், மாதோட்டத்தி லும், எட்டாம் நூற்றண்டிலே வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாதோட்டத் திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் சிவபெருமானைப்பற்றிப் பதிகங்கள் பாடி யுள்ளனர். இவையிரண்டும் துறைமுகப் பட்டினங்களுமாம்: இவ் விடங்களிலே தமிழ்ச் சைவரின் செல்வாக்கு அக்காலத் திலும், அதற்குப் பல நூற்ருண்டுகளுக்கு முன்பும் நன்னிலையில் நிலவியிருந்திருக்க வேண்டும். அல்லாவிடில், தேவார ஆசிரியர் இவற்றிலே கவனஞ் செலுத்தியிரார். இவ் விடங்களிலேயே பழைய சைவக்கோயில் கள், மக்க ளிருந்தமைக்குத் தொல்பொரு
3. Indrapala K. (i) “Early Tamil Settle Branch of the Royal Asiatic Society.
(ii) வீரகேசரி 7-6-69, 22. 4. பூதங்தேவனுர் பாடல்கள் {7). அகநானூறு 86, 2 5, Indrapala K. “South Indian Mercantile The Journal of Historical and Social St 6. இந்திரபால கர, யாழ்ப்பாண இராச்சியத்தின் 7. இவைபற்றிக் கலாநிதி சி. பத்மநாதன் ஆராய்ந்த (கைலாயமாலே, வையாபாடல்)--பேராதனை 197
II - S

தால்பொருளியலும் தமிழியலும் 33
ளியலும் சான்று பகரும். ஆனல் இன்னும் கூடுதலான தொல்பொருளியல் ஆராய்ச்சி மூலம் பல விபரங்கள் தெரியவரலாம். தமிழியற் செல்வாக்கு அதிகரித்தமைக்குச் சிங்கள மன்னர் சேவையிலிருந்த தென்னிந் திய வீரரும், தென்னிந்திய வணிக கணங் களின் நடவடிக்கைகளும் சில பிரதான காரணிகளாம். 5 ஐஞ்ஞாற்றுவர், வீரவலஞ் சியர், நானுதேசியர், நகரத்தார், வீரக் கொடியார் முதலியோரின் கணங்கள் குறிப் பிடற்பாலன. 8 ஈழத்திலே கிடைத்த காலத் தால் முந்திய சாசனத் தமிழ்ச் செய்யுள் அநுராதபுரத்து நான்கு நாட்டார் என்ற வணிக கணத்தாருடைய தென்பது குறிப் பிடற்பாலது.
VI. (Lui p üu G00T 9 JJ;
இவ்வரசு கி. பி. 13ஆம் நூற்ருண் டளவிலே தோன்றி கி. பி. 16 19 வரை நிலவியது. ஈழத்துத் தமிழ்க்குடியேற்றங்கள் சில பற்றியும், இவ்வரசு பற்றியும் கி. பி. 16, 17, 18ஆம் நூற்ருண்டுகளி லியற்றப் பட்ட கைலாயமாலை, வையா பாடல், யாழ்ப் பாண வைபவமாலை முதலியன எடுத்துக் கூறுவன.? யாழ்ப்பாண அரசு தோன்றிய பின்னரே திட்டவட்டமான தமிழியல் மரபு ஈழத்திலே தோன்றியது எனலாம். எனவே இதற்கு முந்தியகாலத் தமிழியலுக்குத் தொல் பொருளியலின் முக்கியத்துவம் வெள்ளிடை மலே. மேற்குறிப்பிட்ட நூல்கள் கூறுவன சிலவாவது தொல்பொருள்களால் உறுதிப் படுத்தப்படுகின்றன. ஆனல் யாழ்ப்பாண அரசின் தலைநகரான நல்லூரில் இன்றைய நிலையிலாவது ஒரளவு அகழ்வாராய்ச்சி நடத்தினல் சிலவேளை புதிய தகவல்கள்
ments in Ceylon. Journal of the Ceylon New Series Wol. XIII. 1968. L. 43-63. S-69, 6-7-69. 1, 307; குறுக்தொகை 189,343,360, நற்றிணை 366 Communities in Ceylon Circa 850 – 1250 dies New Series I No. 2. u. lO4 - 106. தாற்றம் - கண்டி 1972. ப. 4.
வருகின்ருர், ஈழத்து வரலாற்று நூல்கள் பாகம் 1

Page 52
34 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு L
எவையாவது இடைக்கலாம். மேலும் நல்லூரைப் போத்துக்கேய்ர் இறுதியாகத் தாக்கியபோது கோவில்களைக் குறித்த (பூதபெளஷக) சம்பவங்களையும், செப்புப் பட்டயத்தினையும் கொண்டு, கோவிற் பண்டாரம் மட்டக்களப்பிற்கு ஓடினுன் என வைபவமாலை கூறும்.8 இப்பட்டயத் தினை இன்று தேடிக் கண்டுபிடித்தால், ஈழத் தமிழியல் பற்றிய சில அரிய செய்திகள் வெளிவரலாம். யார் முயற்சிப்பர்? யாழ்ப் பாண மன்னரின் சேது நாணயங்கள் கிடைத் துள்ளன. அவர்களின் தனித்துவத்திற்கு இஃது ஒர் எடுத்துக்காட்டாம்.
VI. ஈழத்துத் தமிழ்ச் சாசனவியல்
இத்துறை தமிழியலுக்குப் பலவகையிலே வரையறுக்கப்பட்ட அளவிலே துணை புரி கின்றது. இத் துறையிலே திரு கிருஷ்ணு சாஸ்திரி, பேராசிரியர் செ. பரண விதான, பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஆகி யோர் ஆரம்ப கட்டங்களிலே தொண் டாற்றிவந்தனர். தற்போது கலாநிதி கா. இந்திரபாலா, கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை ஆகியோர் தொடர்ந்து குறிப்பிடத்தக்க ஆய்வுகள் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வரு கின்றனர்.
ஈழத்துப் பூதந்தேவனருக்குப் பின் ஈழத்திலுள்ள இருபெரும் சிவஸ்தலங்களைப் பற்றித் தமிழகச் சைவ நாயன்மார் பாடிய திருப்பதிகங்கள் பற்றிக் குறிப்பிடப்பட் டது. இத்திருப்பதிகங்கள் பிறநாட்டுச் சைவ நாயன்மாராலே பாடப்பட்டனவாகிலும், ஈழத் தமிழியலுக்குத் துணைபுரிவன. இன்று ஈழத்திலேயே கிடைத்துள்ள காலத்தால் முந்திய தமிழ்ச் சாசனச் செய்யுள் ஏற் கனவே குறிப்பிட்ட நான்கு நாட்டார் என்ற தென்னிந்திய வணிக கணத்தின ரதாம். இச்செய்யுள் தன்மபாலன் என்ற புத்தபிக்குவைச் சிறப்பித்து வெண்பாவிற் கூறும். அதாவது
8. திரு. குல சபா6ாதன் (பதிப்பாசிரியர்), யாழ்ப்ப 9. இந்திரபாலா கா. (பதிப்பாசிரியர்), சிந்தனே 1, 10. Indrapala K. (Editor) Epigraphia Tam ll. Indrapala K. GLDöUıp u. 52 - 57.

D GUri“
* போதி நிழலமர்ந்த புண்ணியன்போ
லெவ்வுயிர்க்குத் தீதி லருள்சுரக்குஞ் சிந்தையான் - ஆதி வருதன்மங் குன்றத மாதவன் மாக்கோதை யொருதன்ம பால லுளன்’ என்பதாம். 9
மிக எளிமையான நடையிலே புத்தசமயக் கருத்துக்களும் இதிலே வந்துள்ளன. இவ் வணிக கனத்தினரின் புத்தசமய ஈடுபாட் டினையு மிது குறிக்கின்றது. இஃது ஒருவேளை யவர்கள் வியாபாரச் சலுகைகள் பெறுதற் காகக் காட்டிய அனுதாபமுமாயிருக்க லாம். இதுபோன்று வேறுபல பாடல்களு மிருந்திருக்கலாம். ஆஞ ல வை யின்று வரை கிடைத்தில. சிலப்பதிகாரத்தில் இடை யிடையே அருகியும் பதினெண்கீழ்க் கணக்கு வரிசை நூல்கள் சிலவற்றிலும், " பாரத வெண்பா”விலும் வரும் வெண்பா மரபினை இது நினைவூட்டுகின்றது. இது கி. பி. 9ஆம் நூற்றண்டளவைச் சேர்ந்தது எனலாம்.
இதன்பின் கிடைத்த குறிப்பிடத்தக்க சாசனங்கள் கி.பி. 10 ஆம் 11ஆம் நூற் ருண்டுகளைச் சேர்ந்த சோழரின் மெய்க் கீர்த்திகளும் பிறவுமாம். இவை பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. சோழர் மெய்க்கீர்த்திக்கு எடுத்துக்காட் டாக, பதவியாவிலே கிடைத்த முதலாம் ராஜராஜன் காலத்துச் சாசனத்திலே 'திரு மகள் போலப் பெரு நிலச் செல்வியும்’ எனத் தொடங்கும் மெய்க்கீர்த்திப் பாகத்தினை 0 அல்லது யாழ்ப்பாணக் கோட்டையிலே கிடைத்த 1ஆம் ராஜேந்திரன் காலத்துச் சாசனத்திலே "திருமன்னி வளர" எனத் தொடங்கும் மெய்க்கீர்த்திப் பாகத்தினைக் குறிப்பிடலாம். 11 இவை ஆசிரியப்பா வா லமைந்தவை சமகாலத் தென்னிந்திய சாசனங்களிலே பரக்கக் காணப்படுகின்றன. சோழருக்குப்பின் சிங்கள ஆதிபத்தியத்தினை நிலைநாட்டிய முதலாம் விஜயபாகு முதலாம் பராக்கிரமபாகு முதலியோர் காலத் தமிழ்ச் சாசனங்களைக் குறிப்பிடலாம். தொடர்ந்து
యో ఐమొuఐుLDTడి-Ecrg&tb 1949. L. 80 - 81. V - Gl 177&&ð“ 1967. L. 31 - 35. lica Vol. I. Part I. 1971. t. j. 32 - 36.

Page 53
ஈழத்துத் ெ
கி. பி. 12ஆம் நூற்ருண்டுப் பிற்காலப் பகுதியில் ஆட்சிசெய்த கலிங்க மன்னஞன நிசங்கமல்லனின் பண்டுவாசதுவரக் கல் வெட்டிலே விருத்தப்பா ஒன்றுள்ளமையினை நோக்கலாம் அதாவது,
'தென்னிலங்கைக் கோன் பராக்கிரமபாகு
நிசங்க மல்லற் கியாண்டஞ்சிற் தினகரன் சுறவிலணைந்த வத்தையி லுத்தரட்டாதி யேழ்பக்கம் பொன்னவன் தினநற் சாதயோகத்தில் உயர்தரு போதிமாதவற்கும் பொற்பமர் கோயில் முனிவராலேயந்
தெனறந்திகழ் சாலையுஞ் சயித்தம் அன்னவைதிகழ ஐவர் கண்டன்வனு
பெரிஇலங்கை அதிகாரி அலகுதடியந், தென் பராக்ரமன் மேனேச்
செனவிநாதன் திருப்பியரன் மன்னிய சிறப்பில் மலிதருமழகாற்
பராக்ரம அதிகாரிப் பிரிவுனவளர்தர அமைத்தான் பூர்புர நகருள்
மதிமான் பஞ்சரன் மகிழ்ந்தேய் "12 என்பதாம்.
விருத்தப்பாவில் இம் மன்னனைப் பற்றிய குறிப்பு வந்து ஸ் ள து சம காலத் தமிழகத்திலே கம்பர் இதே யாப் பிலே கம்ப இராமாயணம் என்னும் பெருங் காப்பியம் எழுதியுள்ளமை குறிப்பிடற் பாலது. இதே காலத்திலும் தென்னிந்திய, ஈழத் தொடர்புகள் பல இருந்து வந்தன. இவை சமகாலச் சோழச் சாசனங்களாலும், நிசங்கமல்லனின் அல்லாய் சாசனத்தாலும்,
பிறவற்ருலும் தெளிவாகும்.
இக்காலத்தின் பின்னரும் தொடர்ந்து
சிங்கள மன்னர் சிலர் சிங்களத்தில் மட்டு
12, Kanapathippillai K. (i) “Tamil Inscript
Ceylon Review XVIII l960. L. 157
(ii) Krishnan K. G. Notes on the University of Ceylon Review XX
l3. Perera Fr. S. G. History of Ceylon fo 14. சாயக்கவமிக மன்னர்களைக் குறிப்பிடலாம்.
15. (i) “The Problem of the Kotagama of the Royal Asiatic Society XX
(i) இராs5ாயகம் செ. யாழ்ப்பாணச் சரித்தி

தால்பொருளியலும் தமிழியலும் 35
மன்றித் தமிழிலும் சாசனங்கள் வெளியிட் டனர். எடுத்துக்காட்டாக, يج )Bi" التي لهة பராக்கிரமபாகுவின் காலத்திய முன்னேஸ் வரம் கோவிற் சாசனம், யாழ்ப்பாணம் பிரதானவீதிக் கல்வெட்டு முதலியனவற்றி னைக் குறிப்பிடலாம். போத்துக்கேயராட்சி முடியும்வரை கோட்டை இராச்சியத்திலும் 1815 வரை கண்டி இராச்சியத்திலும் தமிழியற் செல்வாக்கு நிலவியது. 16ஆம் நூற்ருண்டுக் கோட்டையரசர்களில் ஒருவ ரான 7ஆம் புவனேகபாகுவின் கடிதம் தமிழிலுண்டு. 18 கண்டி இராச்சிய காலத் தின் பிற்சட்டத்தி லித்தகைய நிலையினைக் ésrr 6öÖTafTLb. 1 4
கி. பி. 13ஆம் நூற்ருண்டிலேற்பட்ட யாழ்ப்பாண இராச்சியத்தினை ஆண்டஆரியச் சக்கரவர்த்திகளின் கி. பி. 14ஆம் நூற்ருண்டுச் சாசனமொன்று கேகாலையி லுள்ள கோட்டகம என்ற இடத்திலே வெண்பாவிலே வந்துள்ளது, அதாவது,
*கங்கணம்வேற் கண்ணிணையாற்
காட்டினுர் காமர்வளைப் பங்கயக்கை மேற்றிலதம்
பாரித்தார் - பொங்கொலிநீர்ச் சிங்கைநக ராரியரைச்
சேரா அநுரேசர் தங்கள் மடமாதர் தாம் '15
ஏறக்குறைய சமகாலத்திலேதான் புகழேந்தியார் நளவெண்பா பாடிப் புகழ் பெற்றவர்டு
மேற்குறிப்பிட்டதைவிட கி. பி. 16ஆம் நூற்றண்டளவைச் சேர்ந்த திருகோண மலைக் கல்வெட்டினைக் குறிப்பிடலாம். அதாவது,
tion from Panduvasanuvara University of - 162.
Tamil Inscription from Panduvasanuvara . Lu. l5 - 16.
r Schools Colombo 951. Lu. 33.
Inscription Journal of fhe Ceylon Branch XII, L. 214 - l5.
.68 .tb 1933. Jעפ

Page 54
36 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு
* முன்னே குளக்கோட்டன்
மூட்டுந் திருப்பணியைப் பின்னே பறங்கி
பிரிக்கவே - மன்னவயின் பொண்ணுத தனையியற்ற
வழித்தே வைத்து எண்ணுரே பின்னரசர்கள்”16என்பதாம். இஃதுமொரு வெண்பாவே. இவ்வாறு சாசனமூலம் ஈழத்திலே சில தமிழ்ச் செய்யுட்கள் கிடைத்துள்ளன. இவைபோன்று மேலும் சிலவாவது கிடைக் கலாம்; இவற்றிலே, சமகாலத் தமிழக இலக்கியத்தின் போக்கும் தொனிக்கின்ற தெனலாம். சிலவகையிலே வேறுபாடிருப் பினும், தமிழக இலக்கிய வளர்ச்சியினை ஒட்டியே, ஈழத்திலும் தமிழிலக்கிய வளர்ச்சி பண்டுதொட்டு வளர்ந்து வந்ததெனலாம். இக் கருத்திற்குச் சாசனவியலும் சான்ற கும். இன்று ஈழத்திலே கிடைத்துள்ள காலத்தால் முந்திய முழுமையான தமிழ் நூல் கி. பி. 14ஆம் நூற்றண்டைச் சேர்ந்த சரசோதி மாலையாகும். இதற்குச் சில நூற் ருண்டுகளுக்கு மு ன் ன ரே சாசனமூலம் தமிழ்ச் செய்யுட்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடற்பாலது. ஈழத்துப் பூதந்தேவனுர் பாடல்கள் வேறுவகையின;
VIII. ஈழத்துத் தமிழ்மொழி நூல்
ஈழத்தில் இன்றுவரை கிடைத்துள்ள சுமார் 150 தமிழ்ச் சாசனங்களிலே ஈழத் தமிழ் மொழியின் நிலையினையும், அதிலே காணப்படும் சில பண்புகளையும் ஒரளவு அறியலாம். இவ்வகையிலே இலக்கிய நூல் களிற் காணப்படாத குறைபாடுகள் சில வற்றைச் சாசனங்கள் பூரணப்படுத்துகின் றன. தென்னிந்தியாவினைப் போன்று பெருந் தொகையான தமிழ்ச் சாசனங்கள் இங்கு கிடைக்காவிடினும், குறைந்த அளவிலா வது கிடைத்துவருவது குறிப்பிடற்குரியது.
16. இராசநாயகம் செ. மேற்படி ப. 80 இறுதிவர்
படுத்துவர்.
17. Fernando P. E. “ Palaeographical Dev
of Ceylon Review WII. 4. 1949. .
17.அ. வேலுப்பிள்ளை ஆ. சாசனமும் தமிழும் - க

LD an) fit
தென்னிலங்கையிலும், மத்திய இலங்கை யிலும் கிடைத்துள்ள சில சாசனங்களிலே சிங்களச் சொற்கள் சில வந்துள்ளன. ஈழத் தமிழ்மொழி வரலாற்றினைச் சாசனவியற் சான்றி னடிப்படையிலு மாராயவேண்டும். இதற்குமுன் பல இடங்களிலும் கிடைக்கக் கூடிய தமிழ்ச் சாசனங்களைத் தேடிப் பதிப் பித்த லவசியமாகும்.
IX. ஈழத்துத் தமிழ்வரி வடிவம்
ஈழத்துத் தமிழ்வரிவடிவ வளர்ச்சியின் வரலாற்றினைக் குறிப்பாகச் சாசனங்கள் மூலமாகவும் பழையகால ஏடுகள் (கிடைப் பின்) மூலமாகவுமே அறியலாம். தென் னிந்தியாவிலே தமிழ்வரி வடிவத்தி லேற் பட்ட வளர்ச்சிக்கேற்பவே இலங்கையிலும் வளர்ச்சி யேற்பட்டாலும் சில வகையிலே வேறுபாடுகள் உள்ளன. ஈழத் தமிழ்வரி வடிவ வளர்ச்சிக்கும், சமகாலச் சிங்கள வரிவடிவ வளர்ச்சிக்குமிடையிலே தொடர் புண்டு. இரண்டிலும் தென்னிந்தியக் கிரந்த, தமிழ் வரி வ டி வ வளர்ச்சியின் தாக்க முண்டு.17 ஈழத் தமிழ்வரிவடிவ வளர்ச்சி வரலாற்றினை நன்கு ஆராய்ந்து எழுத வேண்டும்.
X. ஈழத்துச் சாசனத் தமிழிலக்கியம்
இத்துறையினைப்பற்றி ஒரளவு கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை யவர்கள் ஆய்ந்துள்ளா ராயினும் 17* இது விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயமாகும். சாசனத் தமிழ்ச் செய்யுட்கள் நான்கு ஏற்கனவே குறிப்பிடப் பட்டுள்ளன. இவற்றைவிட வேறு செய்யுட் களும் உள்ளன. இவையும் சாசனங்களின் வசனபாகங்களும் நன்கு ஆராயப்பட வேண்டியவை. சாசனத் தமிழிற்கும் இலக் கியத் தமிழிற்கும் மட்டுமன்றிப் பேச்சுத் தமிழிற்கு மிடையிலே நெருங்கிய தொடர்பு உண்டு. ஆகவே தமிழ் இலக்கிய, இலக்கண ஆசிரியர் மட்டுமன்றி மொழியியல் ஆசிரிய
* எண்ணுரே பின் வந்தவர்கள் ' எனவும் பூரணப்
slopment of the Sinhalese Script. University 282 - 30 l ; VIII. 4. l950. u. 222 — 243.
σατιρ. 1971.

Page 55
ஈழத்துத் ெ
ருக்கும் சாசனங்கள் பயன்படத் தக்கவை. ஈழத்துத் தமிழ்ச் சாசனத் தொகுப்பு நூல் ஒன்று வெளிவரின் இவற்றிற்கு நன்கு பயன்படலாம்.
XI, காலம்தோறும் ஈழத்திலே தமிழ்மொழி நில
இவ்விடயம்பற்றி எ மக்குத் தொல் பொருளும் துணை செய்கின்றதா? மிகப் பழைய காலத்திலே தமிழ்மொழியின் நிலை எவ்வாறிருந்தது என்பதுபற்றித் திடமாக அறியமுடியாதிருக்கிறது. அக்காலத்திலே ஈழத்தமிழர் அநுராதபுரத்தில் என்றல் என்ன, துறைமுக நகரங்களில் என்ருல் என்ன தம்மவர்க்குள்ளே தமிழ் பேசி யிருப்பர்; சிங்கள மக்களுடன் அவர்களின் மொழியிலே தொடர்புகொண்டிருந்தனர் எனலாம். கி. மு. இரண்டாம் நூற்றண்டு தொட்டுச் சில நூற்ருண்டுகளைச் சேர்ந்த ஆதிச் சிங்கள மொழியி லெழுதப்பட்ட கல் வெட்டுக்கள் சில தமிழர் போன்ற திராவிட ராலே வெளியிடப்பட்டன. இச்சாசனங்கள் அநுராதபுரத்திலோ, அண்மையிலுள்ள இடங்களிலோ கிடைத்துள்ளன . கி. பி. 2ஆம் நூற்ருண்டைச் சேர்ந்த வசபன் காலத்திய வல்லிபுரம் பொற்சாசனம் ஆதிச் சிங்கள மொழியி லெழுதப்பட்டுள்ளது. ஆனல், இஃது ஒர் உத்தியோகபூர்வமான சாசனமாகும். ஆகவே இதுவும் முற்குறிப் பிட்ட சாசனங்களும் அக்கால உத்தியோக மொழியிலெழுதப்பட்டவை. இக் காரணத்தி ஞலே தமிழ் முற்ருக நிலவவில்லையெனத் திடமாகக் கூறமுடியாது. தமிழர் நடமாட் டங்களையும், செயல்கள் சிலவற்றையும் பற்றித் தீபவம்சம், மஹாவம்சம் போன்ற இலக்கிய மூலங்கள் மட்டுமன்றி இதுவரை கிடைத்துள்ள பெருங்கற் சமாதிகளும் சான்று பகருவன . இலங்கையின் வட பகுதியிலேயுள்ள கந் த ரோ டையிலே 1970ஆம் ஆண்டு பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த கலாநிதி விமலா பேர்க்லி, திரு. புருென்சன் முதலி
18. அநுராதபுரத்திலும் வவுனியாவிலும் கிடைத்து
கல்வெட்டுக்கள் அல்லது கி. பி. 5ஆம் போன்முேரின் கல்வெட்டுக்களைக் குறிப்பிடலா

தால்பொருளியலும் தமிழியலும் 37
யோர் குறிப்பிடத்தக்க அசழ்வாராய்ச்சி நடத்தினர். கட்டுரையாசிரியரும், யாழ்ப் பாணக் கல்லூரி முதல்வரும், வேறிரு நண்பர்களும் அவ்விடத்திற்குச் சென்று பார்த்தனர். அவர்கள் அகழ்ந்தெடுத்த சின்னங்கள் பலவற்றைக் குறித்துத் திரு. புருென்சனிடம் கேட்டபோது இவ் அகழ்வு களின் கீழ்ப்படைகளிலே தமிழ்நாட்டி லுள்ள அரிக்கமேட்டிற் கிடைத்துள்ள சின் னங்கள் போன்றவை காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இலங்கையின் வடபகுதியிலும், மேற குக் கரையோரம், அநுராதபுரம், பொல நறுவை போன்ற இடங்களிலும் பழைய காலத்திலே தென்னிந்தியாவிற் போன்று தமிழ்ப் பெளத்தர்களும் வாழ்ந்தனர் என லாம். ஆங்கிலேயர் காலத்திய கிறிஸ்தவர் தமிழைவிட லத்தீன், குறிப்பாக ஆங்கிலத் தினைப் போற்றியதுபோல அவர்களும் பாளிமொழியினையும் சிங்கள மொழியினை யும் போற்றினர் எனலாம். இக்கருத்திற்குக் கி.பி. 5ஆம் நூற்ருண்டுவரை கிடைத்துள்ள சில கல்வெட்டுகளைக் குறிப்பிடலாம். 18 தமிழ்ப் பெளத்தர் வெளிபிட்ட காலத் தால் முந்திய தமிழ்ச் சாசனம் கி. பி. 9ஆம் நூற்ருண்டைய நான்கு நாட்டார் சாசனமாகும். இதற்கு முந்திய காலத் தமிழ்க் கல்வெட்டுக்கள் இனிமேலாவது கிடைக்குமா? ஆனல் இனிமேலாவது கல் வெட்டுக்களோ பிற சான்றுகளோ கிடைக் கும் வரை, இக் காலம்வரை தமிழின் நில பற்றித் திடமாகக் கூறமுடியாது. தமிழ் பேசிய மக்கள் வாழ்ந்தனர் என்பதையும் அவர்கள் ஈழத்திற்குப் பல வழிகளிலும் தொண்டாற்றி வந் த ன ர் என்பதையும் மறுக்க முடியாது.
கி. பி. 10ஆம் நூற்றண்டின் முடிவி லேற்பட்ட சோழப் பெருமன்னர் படை யெடுப்புக்களைத் தொடர்ந்து தமிழ் நன் னிலையுற்றது. சோழரின் இலங்கையிலே (கி. பி. 985-1070) தமிழ் உத்தியோக மொழியாக இலங்கியது. பல இடங்களிலே
*ள கி. மு. 2ஆம் நூற்முண்டு விசாக{ன்) போன்முேர் நாற்முண்டு பெரும்பாரிதேவ(ன்), இளம்பாரிதேவ(ன்)

Page 56
38 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு
தமிழ்ச் சாசனங்கள் பொறிக்கப்பட்டன. சோழரின் பின் சிங்கள ஆதிபத்தியத்தினை மீண்டு மேற்படுத்திய 1ஆம் விஜயபாகு காலம் தொட்டு இலங்கையிலே சிங்கள மன்னர் தமிழ்மொழிக்கும் ஒரளவு ஆதரவு அளித்தனர் என்பதற்குச் சான்று உண்டு. மேலும், தமிழ்மக்கள் கூடுதலாக வாழ்ந்த பிராந்தியங்களிலே (வடபகுதி, மேற்குப் பகுதி, கிழக்குப்பகுதி, கேகாலைமாவட்டம் முதலியன). தமிழ்மொழிக்குத் தக்க அந் தஸ்து ஓரளவாவது நிலவியதை கி. பி. 11ஆம் நூற்ருண்டுப் பிற்பகுதி தொடக்கம் ஆட்சிசெய்த பெரிய சிங்கள மன்னரின் சாசனங்களாலும் அறியலாம். குறிப்பாக, 1ஆம் விஜயபாகு, 19 1ஆம் ஜயபாகு?0, 1ஆம் பராக்கிரமபாகு,21 (கலிங்க நிசங்க மல்லன் 22, 6ஆம் பராக்கிரமபாகு?8 முதலி யோர்காலச் சாசனங்களைக் குறிப்பிடலாம்.
மேலும் கி. பி. 14ஆம் நூற்ருண்டிலே தம்பதேனியாவிலிருந்து ஆட்சிசெய்த 4ஆம் பராக்கிரமபாகுவின் ஆதரவிலிருந்த போச ராச பண்டிதர் சரசோதிமாலே என்ற நூலினை ஆக்கியமை குறிப்பிடற்பாலது. தொடர்ந்து கம்பளை, கோட்டை, சீதவாக்கை, கண்டி ஆகிய அரசுகளிலும் தமிழிற்கோரிட மிருந்தது. இக்காலத்திய பெளத்த பிரிவே ஞக்களிலே தமிழும் பயிற்றப்பட்டது. தமி ழிலக்கிய, இலக்கண மரபுகளைப் பின்பற்றிச் சிங்கள இலக்கண, இலக்கிய நூல்கள் எழுந்தன. எடுத்துக்காட்டாக சிதத்சங்கிரஹ என்ற சிங்கள இலக்கண நூலினையும்,24 மயூர சந்தேசய, கோகில சந்தேசய, சேலாலி
l9. Epigraphia Zealonica Vol. II. L. 242 20. மேற்படி Wol. II. ப. 302 - 312 1ஆம் 21. (i) Rasanayagam C. Ancient Jafna -
(ii) Indrapala K. Nainativu Tamil In Ceylon Review XXI l. l963. Li, 22. ஏற்கனவே கூறப்பட்டது. 23. Indrapala K. (Editor) Epigraphia Tam 24. Godakumpura C. E. Sinhalese Literat இவ் இலக்கண நூல் வீரசோழிச்தைப் பின்பற் 25. Mendis G. C. Ceylon Yesterday anc 26. Kularatnam K. “Tamil place names
Provinces Proceedings of the First Studies Wol. I. Kualalampur l970. L.

மலர்
ஹினி சந்தேசய போன்ற சிங்கள தூதுப் பிரபந்தங்களையும் குறிப்பிடலாம்; இவை வடமொழித் தூதுப் பிரபந்தங்களை மட்டு மன்றித் தமிழ்த் தூதுப் பிரபந்தங்களையும் ஒட்டி எழுந்தனவாம். இவ்வாறு சாசன மூலம் அறியப்படுவது பிற மூலங்களாலும் உறுதிப்படுத்தப்படும்.
சிங்கள அரசுகளிலே தென்னிந்திய குறிப்பாகத் தமிழர் செல்வாக்கு அதிகம் நிலவிய படியாற்ருன் இதுபற்றி ஆராய்ந்த முதுபெரும் இலங்கை வரலாற்ருசிரியரான கலாநிதி ஜே. ஸி. மென்டிஸ் என்பவர் போத்துக்கேயர் 16ஆம் நூற்ருண்டில் வந்திராவிடின் நிலைமை வேறுபட்டிருக்கலா மென்பர். “அதாவது சிங்கள மன்னர் சபை யிலே தமிழர் செல்வாக்கு கி. பி. 15ஆம் நூற்றண்டி லதிகமேற்பட்டிருந்தது. தக்க நேரத்திலே போத்துக்கேயர் வந்திராவிடில் இலங்கை, மதுரை அல்லது தஞ்சாவூர் ஆதிக்கத்துக்குட்பட்டிருக்கும். தென்னிந்தி யாவின் செல்வாக்கு அதிகரித்து வருதலைத் தடுத்து, இலங்கை மேஞட்டுச் செல்வாக்கிற் குட்படப் போத்துக்கேயரே ஐயமின்றி வழிகோலினர் ** எனக் குறிப்பிட்டுள் ளார். 5 ஆணுல், இவரின் கருத்தினை அப் படியே ஏற்றுக்கொள்ள முடியாதெனினும், தமிழர் செல்வாக்கு நன்கு நிலவியதை மறுக்க முடியாது. மேலும் பேராசிரியர் கா. குலரத்தினம் அவர்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களைத் தவிர்த்து ஏனைய இடங்களிலுள்ள தமிழ் இடப் பெயர்களைப் பற்றிஆராய்ந்துள்ளார்.98 இதுவும் ஓரளவு
- 253. Vol. IV. u. 9l - 95. ஜயபாகு காலத்திய புஅ முக்காவு சாசனங்கள் (2). - Madras 1926. U. 203.
scription of Parakramabahu II University of
63 - 70.
ilica Vol. I. Part I. L. 29–31.
ire Colombo 1955. L. 318 - 319. றியது.
Today Colombo 1963. L. 55. in Ceylon cutside the Northern and Eastern
international Conference Seminar of Tamil
493 حصہ 486

Page 57
ஈழத்துத் திெ
இப்பகுதிகளிலே நிலவிய தமிழர் செல்வாக் கினை வலியுறுத்துவதாகும். கி. பி. 13ஆம் நூற்ருண்டு தொடக்கம் 1619 வரை நிலவிய யாழ்ப்பாண இராச்சியத்திலே தமிழ் உத்தியோக மொழியாக விளங்கிற்று இவ் அரசின் சாசனங்கள், நாணயங்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. சாசனங்களி லொன்று மட்டுமே கிடைத்துள்ளது, நாணயங்களிலே செ(சே)து என்ற வாசகம் காணப்படுகிறது.
XII. J, j. 35 ha)
சிங்கள தமிழ் மக்களிடையிலே நிலவிய சமூக கலாச்சார சமயங்களின் செல்வாக் குப் பரஸ்பரமாயிருந்தது. தென்னிந்தியா வில் ஆதி காலம் தொட்டுத் தமிழர் வளர்த்த கட்டிடக்கலை, சிற்பம் முதலியன வற்றின் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டு வந்தது. இதுபற்றிய ஆராய்ச்சி முன்னுரை யொன்று அண்மையிலே கலாநிதி கா. இந்திரபாலா அவர்களாலே வெளியிடப் பட்டுள்ளது.27 போத்துக்கேயரின் அநாகரிக மான கலே அழிவுக் கொள்கையாலே இலங் கையின் கரையோரப் பகுதிகளிலே பழைய கோவில்களும், பிறகட்டிடங்களும் பெரு மளவு அற்றுப்போய்விட்டன. ஈழத்துத் திராவிடக் கட்டிடக் கலையியல் தொடர்ந்து ஆராய வேண்டியதாகும்.
XII. பிற தொல் பொருட்கள்
ஈழத்துத் தமிழர் நாகரிக சார்பான எலும்புக்கூடுகள், சமூக பண்பாட்டு நிலை களைப் பிரதிபலிக்கும் பொருட்கள், குறிப் பாக அன்ருட வாழ்க்கையிலே பயன்படுத் தப்பட்ட மண், கல், மரம் உலோகமாகிய வற்றினுலே செய்யப்பட்ட பொருட்கள் முதலியனவற்றையும் தொகுத்து ஆராய்த லவசியம். எடுத்துக்காட்டாக, மட்பாண்ட வியலைக் குறிப்பிடலாம். மனிதன் தொன்று தொட்டு மண்ணினேப் பயன்படுத்தி வரு கிருன். அவனுக்குத் தேவையான உணவுப் பொருட்களைப் பெறும் மூலப்பொருளொன் ருக மட்டுமன்றி, அவனுடைய வசிப்பிடங் கள். அன்ருட வாழ்க்கைக்குத் தேவையான பாத்திரங்கள், கருவிகள் முதலியனவற்றை அமைத்தற்கும் மண் பயன்படுகின்றது. இன்றைய காலத்திலும் பார்க்கப் பழைய
27. இந்திரபாலா கா. இலங்கையில் வளர்ந்த திராவி

3ால்பொருளியலும் தமிழியலும் 39
காலத்திலே மனிதன் மண்ணுலான சட்டி, பானை, சிறுபிள்ளை விளையாட்டுப் பொருட் கள், வணங்கும் தெய்வத்தின் சிலைகள், மனிதன், மிருகம், பறவை முதலியன வற்றின் உருவங்கள் , போர்க்கருவிகள், பிணப்பெட்டிகள் முதலிய பல்வேறுரகமான பொருட்களைப் பயன்படுத்திவந்துள்ளான். எமது நாட்டின் பல்வேறு பாகங்களி லும் பரவலாகக் காணப்படும் தொல் பொருட்களிலே மட்பாண்டங்கள் குறிப் பிடற்பாலன. இவை காணப்படாத இடங்கள் அருமை. எவ்விடத்திலாயினும், மனித சஞ்சாரம் நிலவியதற்கு மட்பாண்ட மும் ஒரு முக்கியமான சான் ரும். ஏனெனில், நாகரிக நிலையடைந்த பழையகால மனிதன் மட்பாண்டங்களை எவ்வாருே பயன் படுத்தியே வந்துள்ளான்.
இன்று விஞ்ஞான வளர்ச்சியின் விளை வாகத் தொல் பொருளியல் பற்றி "முன்னை யிலும் பன்மடங்கு அறியக்கூடியதாயுள் ளது. அறிஞரில் ஒருசாரார் கருத்துப்படி மட்பாண்டவியல் தரும சான்று பிறவற்றி லும் பார்க்க நம்பகமானதாம். ஈழத்திலே கிடைக்கக் கூடிய மட்பாண்டங்களைத் தொகுத்து விஞ்ஞான ரீதியில் ஆராயின் தமிழியல் பற்றியும் சில முக்கியமான கருத்துக்களைப் பெறக்கூடியதாயிருக்கும். மேலும், மட்பாண்டங்கள் அவற்றின் உப யோகத்தின் காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மத்தியில் மட்டுமன்றி, மற்ற வர்கள் மத்தியிலும் பயன்படுத்தப்பட் டிருக்கலாம். ஆகையால் இத்தகைய ஆராய்ச்சியிலே கவனமாயிருக்கவேண்டும் தென்னிந்தியாவிலே கிடைத்துள்ள. திராவிட நாகரிகச் சார்பான சின்னங்க ளுடன் இலங்கையிலே கிடைத்துள்ள சின் னங்களை ஒப்பிட்டு ஆராய்தலவசியம். ஆணுல், பொருட்கள் பல இக் கலாச்சாரங் கள் யாவற்றிற்கும் பொதுவாகவுமிருந்துள் ளன. எப்படியாயினும் சில வகையிலே தனிப்பண்புகள் தென்படும்.
இவ்வாறு ஈழத் தமிழியலுக்குத் தொல் பொருளியல் பலவழிகளிலும் உதவக்கூடிய தாகும். இவ்விரண்டினையும் இணைத்து ஆய்வதன் மூலமே ஈழத் தமிழியல் நன்கு துலங்கும்3
டக் கட்டிடக் கலை - கொழும்பு 1970.

Page 58


Page 59
ஆங்கிலேயராட்சியிலே யாழ்ப்பாணத்தில் ஆங்கிலக் கல்வியின் வளி
ஆங்கிலேயர் இலங்கையின் கரை யோரப் பிரதேசங்களை 1796ஆம் ஆண் டிலும், கண்டி இராச்சியத்தை 1815ஆம் ஆண்டிலும் கைப்பற்றினர். ஆரம்பத்தில் ஆங்கிலேயர் கல்வி விஷயத்தில் அதிகம் அக் கறை காட்டவில்லை, கரையோரப் பிரதேசங் களில் டச்சுக்காரர்களால் அமைக்கப்பட் டிருந்த பள்ளிக்கூடங்களும் சீர்குலைந்து வந்தன. இந்நிலையில் 19ஆம் நூற்ருண்டின் ஆரம்பத்திலிருந்து மிசனரிமார் இலங்கை யில், விசேடமாக யாழ்ப்பாணத்திலே தமது கல்விப் பணி  ைய ஆரம்பிக்கத் தொடங்கினர்.
யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் ஆங்கிலப் பாடசாலையை ஆரம்பித்தவர்கள் வெஸ்லியன் மிசனரிமார்கள் ஆவர். இவர்கள் 1817ஆம் ஆண்டில், முன்பு ஓர் அணுதசாலையும் லூதரின் சேட்சும் இருந்த இடத்தில், (இப்பொழுது மத்திய கல்லூரி இருக்கும் இடத்தில் ஒரு ஆங்கிலப் பாட சாலையை நிறுவினர்.2 இதையடுத்து 1823ஆம் ஆண்டில் அங்கிளிக்கன் மிசனரி மார் நல்லூரில் பழைய டச் சேட்ச் இருந்த இடத்தில் 'நல்லூர் இங்கிலிஷ் செமினரி’ என்னும் பேரில் ஓர் ஆங்கிலக் கல்வித் தாப னத்தைத் தொடங்கினர். 8 அமெரிக்கன் மிசனரிமார் 1816 ஆம் ஆண்டில், தெல்லிப்
1. இலங்கையில் பிரித்தானிய ஆட்சி, ஜி. வி.
1960 - பக்கம் 53.
2. Jaffna Central College (l.834-1934) Examiner Press, Colombo, l936 - P
3. A History of St. John's College, Jaffna H. W. Cave & Co, l924 - Page, 2.

ச. அம்பிகைபாகன், பி. ஏ. முன்னைநாள் அதிபர் வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயம்
ர்ச்சி
பழையிலும் மல்லாகத்திலும் இலவசத் தமிழ்ப் பாடசாலைகளைத் தாபித்தனர். இதனேடு திருப்தி அடையாது, தெல்லிப் பழை, வட்டுக்கோட்டை, பண்டத்தரிப்பு, மானிப்பாய், உடுவில் முதலிய இடங் களிலும் விடுதிப் பாடசாலைகளைத் தாபித் தனர். இவ் விடுதிப் பாடசாலைகளிற் படித்த ஒவ்வொரு பிள்ளையும், அமெரிக்கா வில் இருக்கும் ஒருவர் அல்லது ஒரு தாபனம் கொடுத்த உதவிப் பணத்தைக் கொண்டு தாபரிக்கப்பட்டு வந்தனர். எவரிடமிருந்து ஒரு பிள்ளை உதவிப்பணம் பெற்றதோ அவரின் பெயர் அப் பிள்ளைக் குச் சூட்டப்பட்டது. இவ்விடுதிச்சாலையிற் படித்த பிள்ளைகளுக்கு ஆங்கிலமுந் தமிழும் கற்பிக்கப்பட்டதோடு, கிறீஸ்த சமயம், இலக்கணம், கணிதம், பூமிசாஸ்திரம் முதலிய பாடங்கள் கற்பிக்கப்பட்டன. 1823ஆம் ஆண்டில் இவ்வைந்து விடுதிப் பாடசாலைகளிலும் 105 ஆண்களும் 28 பெண்களும் கல்வி கற்றனர். இப்படிக் சுற்று வந்தவர்களில் 20 ஆண்பிள்ளைகள் மிகத் திறமைசாலிகளாகக் காணப்பட்ட னர். இவர்களுக்கு உயர்தரக் கல்வியைப் புகட்டுவதற்கு ஒரு மத்திய கல்வி நிலையத் தைத் தாபிக்கவேண்டிய அவசியத்தை அமெரிக்கன் மிசனரிமார் உணர்ந்தனர்.
மென்டிஸ், கொழும்பு அப்போதிக் கரிஸ் கம்பனி,
Centenary Memorial Edition. The Ceylon ge l3.
( 1823-1923) Compiled by J. C. Handy,

Page 60
56 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு
இத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டே வட்டுக்கோட்டைச் செமி னரியை 1823ம் ஆண்டில் தாபித்தனர்.4
1823ம்ஆண்டு மார்ச் மாதத்தில் செமி னரியின் ஐந்து நோக்கங்களையும் விளக்கி ஒரு விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.
முதலாவது நோக்கம் தகுதியுடைய சுதேச இளைஞர்களுக்கு ஆங்கிலப் பாஷை யிற் சிறந்த அறிவு புகட்டுதல். இந் நோக்கத்தை நிறைவேற்றும்பொருட்டு ஆங்கிலமே போதனமொழியாகக் கொள் ளப்பட்டது. வங்காள தேசத்தில் இதே காலத்தில் அமெரிக்கன் மிசனரிமார் ஏற் படுத்திய சிரம்பூர் கல்லூரி யதிகாரிகள் சுதேச பாஷையே போதனுமொழியாக இருக்க வேண்டுமென்று வாதாடினர். வங்காளிகளுக்கு ஆங்கில மூலம் போதித் தல், ஆங்கிலேயருக்கு இலத்தீன் மொழி மூலம் போதித்தலை ஒக்கும் என்றனர். இது போலி நியாயம் என்று செமினரி யைச் சேர்ந்தவர்கள் சுட்டிக்காட்டினர், ஆங்கிலத்திலுள்ள அறிவுக்களஞ்சியங்களை எல்லாம் தமிழில் மொழிபெயர்த்தல் முடியாதென்றனர். அப்படிச் செய்வதற்கு இரு பாஷைகளிலும் வல்லுநர் தோன்று வதற்கு ஆண்டுகள் பல செல்லும் என்றுங் கூறினர்.
இரண்டாவது நோக்கம் தமிழ்ப் பாஷையை வளர்த்தல். தமிழ்ப்பாஷை, கிரேக்க, சமஸ்கிருத , கிபுறு பாஷைகளைப் போலத் தனித்தன்மையுடைய, வளர்ச்சி யடைந்த பாஷையென்றும், அதை அறிந் திருக்காத மிசனரிமார்களைச் சுதேசிகள் மதிக்கமாட்டார்கள் என்றும், ஒரு சில மிஷனரிமார்களாவது அப்பாஷையிலுள்ள இலக்கியங்களை நன்கு கற்கவேண்டுமென்றும் கருதப்பட்டது. தமிழ் மாணவர்களுக்குக்
4. A Century of English Education - J.
l922 - Page 2, 3, 4.
5. ibid Page 9 to l6.
6. யாழ்ப்பாண வைபவ கெளமுதி - க. வேலுப்பி

LD Gvrf
கட்டுரை வரைதலில் நல்ல பயிற்சி கொடுத்து, தமிழில் காலத்திற்கேற்ற உரைநடையை வளர்க்க உதவி செய்ய வேண்டுமென்றும் கூறப்பட்டது.
மூன்ருவது நோக்கம் விரும்பிய மாண வர்களுக்குச் சமஸ்கிருத பாஷையைக் கற்பித்தல்.
நான்காவது நோக்கம் தெரிந்தெடுக் கப்பட்ட சில மாணவர்களுக்குக் கிபுறு பாஷையைக் கற்பித்தல். Gou &amrë செவ்வனே கற்பதற்கும் அதனை மொழி பெயர்ப்பதற்கும் இது உதவும் எனக் கருதப்பட்டது.
ஐந்தாவது நோக்கம் ஐரோப்பாவி லும் அமெரிக்காவிலும் கல்லூரிகளிற் சாதாரணமாகக் கற்பிக்கப்படும் பூமி சாஸ்திரம், சரித்திரம், தத்துவ சாஸ்திரம், கணிதத்தின் பல பிரிவுகள் முதலியவற்றைப் போதித்தல். இந் நோக்கங்களைப் பற்றி விரிவாக அறிய விரும்புவோர் ஜே. வி. செல்லையா அவ்ர்கள் எழுதிய யாழ்ப்பாணக் கல்லுரரிச் சரித்திரத்தைப் படித்தறியலாம்.
மேற்கூறப்பட்டவற்றை நிறைவேற்றும் பொருட்டு வட்டுக்கோட்டையில் 1823ஆம் ஆண்டு ஜ"லாய் மாதத்தில் வன. டானியல் பூஅர் என்பவரை அதிபராகக் கொண்டு செமினரி தொடக்கப்பட்டது. 5
இதனையடுத்து 1824ஆம் ஆண்டில் பெண்பிள்ளைகளுக்கென உடுவிலில் ஒர் ஆங்கில பாடசாலையை அமெரிக்கன் மிசனரிமார் தொடங்கினர். 6
அங்கிளிக்கன் பாதிரிமார் நல்லூரில் இதேபோலப் பெண்களுக்கென ஓர் ஆங்கில பாடசாலையை ஆரம்பித்தனர். கத்தோலிக்கர் 1850ஆம் ஆண்டளவில்
W. Chelliah, American Ceylon Mission Press,
ள்ளை, ஜயசிரீ சாரதா பீடேந்திரசாலே, 1918-பக், 278.

Page 61
ஆங்கிலேயராட்சிய
ஆண்களுக்கென ஒரு பாடசாலையையும், பெண்களுக்கென ஒரு கன்னியாஸ்திரி மடத்தையும் தாபித்தனர்,7
யாழ்ப்பாணத்தில் மிசனரிமாரால் ஆரம்பிக்கப்பட்ட கல்வித் தாபனங்களின் வளர்ச்சிக்கு அக்காலத்து அரசாங்கத்தின் மொழிக் கொள்கையும் அரசியற் போக்கும் உதவியாயிருந்தன. 1829ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல் நிர்வாகத்தைச் சீர்திருத்துவதற்கு வேண்டிய ஆலோசனை களைக் கூறும்படி கோல்புறுாக் என்பவரைப் பிரித்தானிய அரசாங்கம் நியமித்தது. அவர் கூறிய ஆலோசனைகளைப்பற்றி டாக்டர் மென்டிஸ் பின்வருமாறு எழுதி யுள்ளார்: "" தற்காலத்துத் தேவைக் கேற்ற கல்விமுறையை உதவாத வகையில் அமைந்த சுயபாஷைப் பாடசாலைகளுள் திறமையற்ற பாடசாலைகளை அகற்றிவிட்டு ஆங்கிலப் பாடசாலைகளைத் தாபித்து இலங்கையரைப் பயிற்றுமாறு சிபார்சு செய்தார். கீழைத்தேசக் கல்வியினுற் பய னில்லை என்றும் ஆங்கில அறிவினல், கீழைத் தேச மக்கள் அறிவாலும் ஒழுக்கத்தாலும் முன்னேற்றம் அடைவார்கள் என்றும் இக்காலத்திருந்த ஆங்கில அறிஞர்கள் எண்ணினர்கள். கோல்புறூக்கும் இதே அபிப்பிராயங்களைக் கொண்டிருந்த படி யால் ஆங்கிலப் பாடசாலைகளைத் திறக்க வேண்டுமென்று விரும்பினர். **8
இலங்கையில் ஆங்கிலக் கல்வியின் விருத்தியை மேற்பார்வை செய்வதற்கு அங்கிளிக்கன் பாதிரிமார்களும் அரசாங்க உத்தியோகத்தர்களும் அடங்கிய "ஸ்கூல் கமிசனை " (பாடசாலைச் சபையை) அரசாங்கம் நியமித்தது. இச் சபை புரொட்டஸ்டன் ற் சபைகளால் நடாத்தப் பட்ட பாடசாலைகளுக்குச் of trfi u mt 5 இருந்ததில் வியப்பில்லை.
7. யாழ்ப்பாண வைபவ கௌமுதி - க. வேலுப்பில் 8. இலங்சையில் பிரித்தானிய ஆட்சி - பக்கம் 7 9. மேற்படி பக்கம் 99. lO. Jaffna Central College - Page 22.
ll. A History of St. John's College - Pe
II - 8

பிலே . . கல்வியின் வளர்ச்சி 57
1843 ஆம் ஆண்டளவில் கல்வித் துறையில் ஏற்பட்ட மாற்றங்களின்போது * யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஆங்கிலப் பாடசாலைகளைப் பாதிரிமார் திறம்பட நடாத்தி வந்தபடியால் ஆங்கிலக் கல்வி பயிற்றும் பொறுப்பை அரசாங்கம் அவர்க ளிடமே விட்டு உதவி நன்கொடை அளித்து வந்தது’*9 என டாக்டர் மென்டிஸ் கூறு கிருர். இதுவுமல்லாமல் இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் அரசாங்கம் நடாத்திய இரண்டொரு ஆங்கிலப் பாடசாலைகளையும் மூடும்படி பாதிரிமார் செய்தனர். இதனல் யாழ்ப்பாணத்தில் அரசாங்க பாட சாலைகள் ஏற்படா மைக்கு மிசனரிமாரின் முயற்சியே காரணம் என்பது புலப்படும்.
அரசாங்கத்தின் உதவியோடு மிசனரி மார் நடாத்திய ஆங்கிலப் பாடசாலைகளி லிருந்து பல மேதாவிகள் வெளிவந்தனர். இவர்களுட் பலர் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவினர். வெஸ்லியன் ஆங்கில பாட சாலையிலிருந்து பூரீல பூரீ ஆறுமுகநாவலர், சாமுவேல் கிரெனியர் பிற்காலத்தில் இலங்கையில் அற்றேணி ஜெனரலாக இருந் தவர்), T. செல்லப்பாபிள்ளை (திருவாங் கூரில் பிரதம நீதியரசராக இருந்தவர்), ஜி. எஸ். அரியநாயகம்பிள்ளை திருவாங்கூர் நீதியரசராக இரு ந் த வர்), டாக்டர் யோன் ரொக்வூட் மு த லி யோர் வெளிவந்தனர். 10 நல்லூர் இங்கிலிஸ் செமினரி யிலிருந்து புவி ராச சிங்க முதலியார் ( அரசாங்க சேவையிற் பெரும் பதவிகள் வகித்தவர்). வண. தோமஸ் மோட்டிமர், வழக்கறிஞர் உவில்லியம் மார்ஸ் முதலியோர் தோன்றினர் 11.
வட்டுக்கோட்டைச் செமினரியிற் கொடுக்கப்பட்ட கல்வி மிகச் சிறந்த முறையில் அமைந்திருந்தது. ஆங்கிலம் போதன மொழியாக இருந்தபோதிலும்
nam, ஜயசிறீ சாரதா பீடேந்திரசாலை 1918 - பக். 279.
O
محے
ge 3.

Page 62
58 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு
தமிழ்மொழி சிறப்பாக க் கற்பிக்கப் பட்டது. கந்தபுராணம் போன்ற தமிழ் இலக்கியங்கள் பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்தன. வானசாத்திரம், கணிதம், தத்துவசாஸ்திரம் முதலியன கற்பிக்கப் படும்போது மேல்நாட்டு முறைகளோடு இந்திய முறைகளும் கற்பிக்கப்பட்டன. செமினரிக்கு இரண்டாவது அதிபராக விளங்கிய வண. கொய்சிங்ரன் என்பவர் சைவசித்தாந்த சாத்திரங்களிற் பாண்டித் தியம் பெற்றவராய்ச் சிவஞானபோதம், சிவப்பிரகாசம், தத்துவக் கட்டளை முதலிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த் தனர். 12 செமினரிக் கல்வியின் சிறப்பைப் பற்றிப் பாவலர் தெ. அ. துரையப்பா பிள்ளை தா மி ய ந் றிய யாழ்ப்பாண சுவதேசக் கும் மியில் கூறியதில் ஒரு பகுதி பின்வருமாறு 18
* யாழ்ப்பாணி கள்கல்வி தன்னிலோர் கால்மிக
ஏற்ற மடைந்தார் சிலரவர்க்குள்
நாப்புக முமருங் கீர்த்திபெற் றகதை ஞால மறியாதோ சங்கமின்னே.”
* மிக்கநன் மைகள்வி ளங்கு மமெரிக்க
மிஷன் முன்னர் தந்த செமினரி தக்க வுயர்கல்வி நம்மவர்க் கீந்து தழைத்து வளர்ந்தது சங்கமினனே.”
* வட்டு நகர்ச்செமி ஞரி யிறந்தபின்
வாகா முயர்கல்வி மாகழுதை கட்டெறும் பானது போல மிகவுங் கரைந்து குறைந்தது சங்கமின்னே.”
இப்படிச் சிறந்த கல்வியைக் கொடுத்த படியாற்றன் அங்கிருந்து சி. வை. தாமோ தரம்பிள்ளை, கரொல் விசுவநாதபிள்ளை, நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை, வைமன் கதிர வேற்பிள்ளை போன்ற மேதாவிகள் தோன்ற முடிந்தது. இன்னும் அங்கிருந்து வெளி யேறியவருட் சிலர் அரசாங்கத்திற் பெரும் உத்தியோகங்களில் அமர்ந்திருந்தனர்;
l2. A Century of English Education - Pag 13. " சிக்தனைச்சோலை ' - தெ. அ. துரையப்
- பக்கம் 32. l4. A Century of English Education - Pac l5. ibid Page 67, 68.

மலர்
மேலும் சிலர் இந்தியாவுக்குச் சென்று பெரும் பதவிகளைப் பெற்றனர். 14
இப்படியிருந்தும் அமெரிக்கன் மிசனரி மார் சிலருக்குச் செமினரி செய்துவந்த வேலை திருப்தியைக் கொடுக்கவில்லை. செமி னரியிலிருந்து வெளியேறிய சிலர் பழைய படி தங்கள் சொந்த மதமாகிய சைவ சமயத்தைத் தழுவினர். பலர் அரசாங்க உத்தியோகத்தை விரும்பினரே யொழிய கிறித்தமத சேவையில் ஈடுபட விரும்ப வில்லை. இவற்ருல் ஆங்கிலக் கல்வியினல் அதிகம் பயனில்லை எனக் கூறிச் செமி னரியை மூடிவிட்டுத் தமிழ்ப் பாடசாலை களைத் தாபித்துக் கிராமங்களிலே தொண் டாற்றினல் கிறித்த மதத்தைப் பரப்புவ தற்குச் சாதகமாக இருக்குமென ஒரு பகுதி மிசனரிமார் வாதாடினர். 15 இவர்கள் கையோங்கியதினல் முப்பத் திரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த செமினரி 1855ஆம் ஆண்டு மூடப்பட்டது.
இப்படியான ஒரு நிலை வெஸ்லியன் மிசனிலும் ஏற்பட்டது. நாவலர் அவர் களின் ஆசிரியரும் பைபிளைத் தமிழில் மொழிபெயர்க்க அரும்பாடுபட்டவரு மான வண. பார்சிவல் அவர்கள் கல்வித் துறையில் ஊக்கத்துடன் உழைத்தார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைப் பல விதத்திலும் நன்னிலைக்குக் கொண்டு வந் தார். இதனேடு இவர் மேற்பார்வையில் இயங்கிவந்த பெண்கள் .பாடசாலையையும் கண் காணித் து வந்தார். இவற்றுக்கு மேலாக ஒரு ஆசிரிய ப் பயிற் சி வகுப் பையும் நடாத்தி வந்தார். ஆனல் இப் பணிகள் சிலருக்குப் பிடிக்கவில்லை. இதற்குக் காரணம் இக் கல்வித் தாப னங்கள் மத மாற்றத்துக்குப் போதிய உதவி புரியவில்லை என்பதாம். வண, பார்சிவலை எதிர்த்த வண. ஸ்ரொற் என்பவர் கூறியது பின்வருமாறு: 'பாட
52 பிள்ளை, கலைவாணி அச்சகம், யாழ்ப்பாணம், 1960
76.

Page 63
ஆங்கிலேயராட்சியி
சாலைகள் சாதனங்களாகும். அவை முக்கிய மானவையல்ல. அவை உண்மையான மத மாற்றத்துக்குச் சிறிதும் பயன்படவில்லை, என்பது எனது திடமான நம்பிக்கை யாகும்.” வண ஸ்ரொற் என்பவரும் சுதேச பாஷையில் சமயப் பிரசாரஞ் செய்யவேண் டிய அவசியத்தை வற்புறுத்தினர். இப்படிக் கிளர்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது நீண்டகால லீவில் இங்கிலாந்து சென்ற வண. பார் சிவல் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி வரவில்லை. இதற்குப் பதிலாக அவர் சென்னைக்குச் சென்று அங்குச் சிறந்த கல்விப் பணியும் தமிழ்ப்பணியும் புரிந்து சகலருடைய நன்மதிப்பையும் பெற் ருர், சென்னைச் சர்வகலாசாலை பார்சிவ லின் பணியைப் பாராட்டு முகமாகச் சர்வகலாசாலை அலுவலகத்தில் அவரின் சிலையை நிறுவியுள்ளது. 18
19ஆம் நூற்ருண்டின் மத்தியில் இலங் கையில் அரசாங்கப் பாடசாலைகளும் அர சாங்க நன் கொடை பெறும் பாடசாலை களுமென இருவகைப்பட்ட பாடசாலைகள் இருந்தன. யாழ்ப்பாணத்தைப் பொறுத்த மட்டில் எல்லாப் பாட சாலை களும் அரசாங்க நன்கொடை பெற்று மிசனரி மாரால் நடத்தப்பட்டவையாயிருந்தன. இப்பாடசாலைகளில் மாண்வரின் பெற்ருே ரின் விருப்பத்துக்கு மாருகச் (Conscience Clause) சமய போதனை செய்யப்படா தெனச் சட்டசபை அங்கத்தவர் வாதாடின போதிலும், மிசனரிமார் இக் கொள் கையை ஏற்கவில்லை. தாங்கள் விரும்பிய படியே மதபோதனை செய்து வந்தனர். 17 இந்தக் காலத்திற்ருன் நாவலர் அவர்கள் தோன்றிச் சைவப்பிள்ளைகள் சைவப் பாட சாலைகளில் அல்லது அரசாங்க பாடசாலை களிற் படிக்கவேண்டுமெனக் கிளர்ச்சி செய்து வந்தார். மிசனரிமார் அரசாங்கம் கொடுக்கும் நன்கொடைப் பணத்தைக் கொண்டு தங்கள் மதத்தைப் பரப்புவது
l6. Jaffna Central College - Page 23
17. இலங்கையில் பிரித்தானிய ஆட்சி - பக்கம்
18. காவலர் பிரபந்தத் திரட்டு - யாழ்ப்பாணச் சம
1954 - பக்கம் 41, 42, 43,

லே . . கல்வியின் வளர்ச்சி 59
பற்றியும் நன்கொடைப்பணத்தைத் துர்ப் பிரயோகம் செய்வது பற்றியும் நாவலர் அவர்கள் 1872ஆம் ஆண்டு ஐப்பசி மாதத் தில் வெளியிட்ட யாழ்ப்பாணச் சமயநிலை என்னும் பிரசுரத்திற் பின்வருமாறு கூறி யுள்ளார்: 18
**இந்தியாவிலுள்ள பாதிரிமார்கள் தங்கள் பள்ளிக்கூடங்களிலே படிக்கிற சைவ, வைஷ்ணவப் பிள்ளைகளை விபூதி, திருமண் என்னும் சமயச் சின்னங்களை அழிக்கும் பொருட்டாயினும், தங்கள் விவிலிய நூலைப் படிக்கும்பொருட்டாயி னும், தங்கள் பிரசங்கத்தைக் கேட்க வரும் பொருட்டாயினும் வலாற்காரம் பண்ணு கிருர்களிலலை; வலாற்காரம் பண்ணினல் அங்கே கவர்ண்மெண்டாராலும் சுதேசிகளா லும் தாபிக் கப்பட்ட பள்ளிக்கூடங்களுக் குப் போய்விடுவார்களென்னும் பயமே அப் பாதிரிமார்களைத் தடுக்கின்றது. இந்தியாவி லுள்ள கவர்ண்மெண்டுப் பள்ளிக்கூடங் களிலும் சுதேசிகளுடைய பள்ளிக்கூடங் களிலும் விவிலிய நூல் படிப்பிக்கிற தில்லை. கவர்ண்மெண்டுப் பள்ளிக்கூடங் களிலே விவிலிய நூல் படிப்பித்தல்வேண்டு மென்று பாதிரிமார்கள் இங்கிலாந்திலுள்ள கவர்ண்மெண்டுக்கு விண்ணப்பம் எழுதி ஞர்கள். கவர்ண்மெண்டு விவிலிய நூல் படிப்பிக்க உடன்படவில்லை. இத்தேசத்தி லுள்ள பாதிரிமார்கள் தங்கள் பள்ளிக் கூடங்களிலே படிக்கின்ற சைவசமயப் பிள்ளைகளை விபூதி யழிக்கும் பொருட்டு வலாற்காரம் பண்ணுகிருர்கள். விபூதி அழிக்க உடன்படாத பிள்ளைகளை வித்தியா சாலையினின்றும் நீக்கிவிடுகிருர்கள். கிறித்து சமயப் புத்தகங்களையும் சைவதூஷணப் புத்தகங்களையுமே நெடுநேரம் படிப்பிக் கின் ருர்கள். ஞாயிற்றுக் கிழமைகளிலே தங்கள் பிரசங்கம் கேட்க வராத பிள்ளை களையும் சைவசமயத் திருநாட்களிலே சைவசமயக் கோயில்களுக்குப் போகும்
26.
34.
பநிலை, சென்னபட்டணம் வித்தியாறுபாலன யந்திரசாலை,

Page 64
60 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு
பிள்ளைகளையும் தண்டிக்கிருர்கள், இங்குள்ள கத்தோலிக்க குருமார் மாத்திரம் இப் படிப்பட்ட வலாற்காரங்கள் செய்யக்
காணுேம்.
சில காலத்துக்கு முன்னே கவர் மென் டார் இத் தேசத்திலே சில இங்கிலீசுப் பள்ளிக்கூடங்களைத் தாபித்துச் சில வரு ஷங்கள் நடத்தினர்கள் அவைகளிலே கிறித்து சமயப் புத்தகமொன்றும் படிக்கப் படவில்லை. அங்கே சைவசமயப் பிள்ளைக ளெல்லாரும் விபூதி தரித்துக்கொண்டே படித்துவந்தார்கள். அதைக் கண்ட பாதிரி மார்கள், கவர்ண்மெண்டுப் பள்ளிக்கூடங் கள் நிலைபெற்ருல் தங்கள் கருத்து வாய்க் காது என்று நினைந்து இங்கிருந்த சில துரைமாரைத் தங்கள் வசப்படுத்திக் கவர்ண்மெண்டுக்கு வேறு நியாயங்காட்டி எழுதுவித்து, அப்பள்ளிக்கூடங்களை எடுப் பித்துவிட்டு அவர்களுக்குக் கவர்ண்மெண் டார் செலவழிக்கும் பணத்தைத் தங்கள் பள்ளிக்கூடங்களுக்கு ஆக்குவித்துக்கொண்டு அநீதியாய்த் தங்கள் கருத்தையே நிறை வேற்றிக்கொண்டு வருகின்ருர்கள். கவர்ண் மெண்ட் பொருளுதவியைப் பெறும் பள் ளிக் கூடங்களிலே விபூதியை அழிக்கும் பொருட்டும் தமது சமயநூல்களைப் It it - éis கும் பொருட்டும், சமயப் பிரசங்கத்தைக் கேட்க வரும் பொருட்டும் பிள்ளைகளை வலாற்காரம் பண்ணுதல் கவர்ண்மெண் டாருடைய கருத்துக்கு முழுதும் விரோத GLDurrth.'"
கவர்ண்மெண்ட் கொடுக்கும் பணத்தைத் துர்ப்பிரயோசனஞ் செய்வது பற்றி நாவ லர் அவர்கள் கூறியதில் ஒருபகுதி பின்வரு மாறு: 'பாதிரிமார்களுடைய இங்கிலீசுப் பள்ளிக்கூடங்களிலே படிக்கிற பிள்ளைகள் tont&fë grubuarab மும்மூன்று மா சத்துக் கொருதரம் முன்னேறவே கொடுத்து வருகின்றர்கள். அந்தந்தப் பள்ளிக்கூடப் பிள்ளைகள் கொடுக்கும் சம்பளத்தை மாத்திரம் கொண்டு அந்தந்தப் பள்ளிக்
19. நாவலர் பிரபந்தத் திரட்கி - யாழ்ப்பாணச் சமய
1954 - பக்கம் 44. 20, யாழ்ப்பாண வைபவ கிெளமுதி - பக்கம் 305
21. நாவலர் பணிகள் - ச. தனஞ்சயராசசிங்கம்,

Lpan) fir
கூடத்தை நடத்திக்கொள்ளுகின்றர்கள். கவர்ண்மெண்டார் கொடுக்கும் பணத்தை அந்தந்தப் பள்ளிக்கூடத்தின் பொருட்டுச் செலவு செய்யாது தங்கள் சமயவிருத்தி யின் பொருட்டும், சுவப்பிரயோசனத் தின் பொருட்டும் கவர்ந்து கொள்ளு தின்ருர்கள்." 19
1855ஆம் ஆண்டில் மூடப்பட்ட செமி னரிக்குப் பதிலாக 1872ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டையில் யாழ்ப்பாணக் கல் லூரியை அமெரிக்கன் மிசனரிமார் ஆரம் பித்தனர். இக் காலத்தில் யாழ்ப்பாணம் வெஸ்லியன் மிஷன் மத்திய வித்தியாசாலை மத்திய கல்லூரியென்றும், சுண்டிக்குளிச் செமினரி சென்ற் யோன்ஸ் கல்லூரியென் றும், கத்தோலிக்க வித்தியாசாலை சென்ற் பற்றிக்ஸ் கல்லூரி என்றும் அழைக்கப் பட்டு ஆங்கிலக்கல்வி விருத்தி அடைந்து வந்தது.20
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்குக் கிளையாக வண்ணுர்பண்ணையில் 'கில்னர் கொலிச் ' என்னும் ஒரு ஆங்கிலப் பாட சாலை நடைபெற்று வந்தது. 1871ஆம் ஆண்டில் அங்குப் படிக்குஞ் சைவப்பிள்ளை களை விபூதி தரியாது பாடசாலைக்கு வரும் படி அப்பாடசாலைத் தலைமையாசிரியர் கட்டளையிட்டார். இப்பிள்ளைகள் போய் நாவலர் அவர்களுக்கு முறையிட்டனர். இதற்குப் பரிகாரமாக” 1872ஆம் ஆண்டில் அவர்கள் ஒரு சைவ ஆங்கில பாடசாலையை வண்ணுர்பண்ணையில் ஆரம்பித்தனர். அர சாங்கத்தின் அங்கீகாரம் இதற்குக் கிடைக் காதபடியால் போதிய பிள்ளைகள் இதிற் சேரவில்லை. பணக்கஷ்டமும் ஏற்பட்டது. ஆகவே நாலு வருடங்கள் நடத்தியபின் இப்பாடசாலையை மூடவேண்டி நேர்ந்தது. ஆணுல் நாவலர் அவர்கள் முயற்சி வீண் போகவில்லை. ஏனெனில் அவர்கள் சிவபத மடைந்த சில ஆண்டுகளுக்குள் யாழ்ப் பாணம் இந்துக்கல்லூரி அதே வண்ணுர் பண்ணையில் ஆரம்பிக்கப்பட்டது.21
ஃல, சென்னபட்டணம் வித்தியாருபாலன யந்திரசால்,
Fாஷனல் பிறிண்டர்ஸ், 1969 - பக்கம் 30.

Page 65
ஆங்கிலேயராட்சியி
நாவலர் அவர்கள் மறைந்தபின் மிசனரிமாரின் ஆதிக்கம் பழையபடி தலை யெடுத்தது. இதுபற்றிச் சைவப் பெற் ருேர் சேர் பொன்னம்பலம் இராமநாத னுக்கு முறையிட்டனர். அவர்கள் சட்ட சபையில் இவ்விஷயம் பற்றிப் பின்வருமாறு பிரஸ்தாபித்தனர். 'முதலில் நான் யாழ்ப் பாணத்தில் அரசாங்கத்தால் நடாத்தப் படும் ஆங்கில பாடசாலைகளோ அல்லது துவிபாஷா பாட சாலை களோ இல்லை யென்பதையும் , இதனுல் யாழ்ப்பாண மக்கள் ஆங்கிலக் கல்வி பெறுவதற்கு அங்கு நிலைநாட்டப்பட்ட மிசனரிமாரின் பாடசாலைகளிற் றங்கியிருக்க வேண்டி யிருக்கிறதென்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். சமய விஷயத்தில் மிசனரி மாரின் சகிப்புத்தன்மை இன்மையின் வேகம் காலத்துக்குக் காலம் மாறி வரு கிறது. இந்துக்களின் தலைசிறந்த சீர் திருத்தவாதி 1879ஆம் ஆண்டில் மறைந்த பின்னர் இவ்வேகம் வளர்ந்து வருகிறது
தலைமை வகித்த கவர்னர் : தாங்கள்
யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?
இராமநாதன் : இந்துக் களின் Gr汁 திருத்தவாதி ஆறுமுகநாவலர். தங்களுக் கெனப் பாடசாலைகள் இல்லாதபடியால் மிசனரிமாரின் பாடசாலைக்குப் போகும் இந்து மாணவர்கள் மிசனரிமாரிட மிருந்து தப்பித்துக்கொள்வதற்கு வழி வகைகளைப் பழகியுள்ளார்கள். வீட்டில் வழிபாட்டின்போது திருநீற்றையணியும் மாணவர்கள் பாடசாலையை அணுகிய வுடன் அதை அழித்துவிட்டுப் பாடசாலை நேரத்தில் கிறீஸ் த மாணவர்களைப் போல் பாசாங்கு செய்கிறர்கள். கிறிஸ்த பாடசாலைகளில் படிக்கும் போதும் படிப் பிக்கும் போதும் ஞானஸ்நானம் பெற்ற மாணவரும் ஆசிரியரும் அப்பாடசாலை விட்டேகிய பின்பு சைவர்களாகித் திரு நீறு உருத்திராட்சம் முதலிய சைவ சாதனங்களைத் தரித்துக் கொள்ளுகிருர் கள். இப்படிச் செய்வதினுல் மக்களின்
22. Sir Ponnambalam Ramanathan Select Ceylon Daily News Press, l929 - Pa
23. இலங்கையில் பிரித்தானிய ஆட்சி - பக்கம் !

லே . . கல்வியின் வளர்ச்சி 61
பரிகாசத்தக்கும் மிசனரிமாரின் சிற்றத் துக்கும் ஆளாகிருர்கள்."
மேலும் தொடர்ந்து பேசுகையில் கத்தோலிக்க குருமாரும் கல்வி மாவதி காரியும் மிசனரி மாரின் போக்கைக் கண்டிக்கிருர்கள் என்பதை எடுத்துக்காட்டி அரசாங்கம், மிசனரிமாரின் பாடசாலைக ளில் கட்டாயமாகச் சமயக் கல்வி போதிப் பதை நிறுத்தவேண்டும் அல்லது மறு இடங்களிற்போல் யாழ்ப்பாணத்திலும் அரசாங்க பாடசாலைகள் நிறுவ வேண்டு மென்றும் கேட்டுக்கொண்டார்கள், 22
நாவலர் அவர்கள் செய்த பிரசாரத் தினுல் சைவ மக்கள் மத்தியில் புதிய உணர்ச்சி ஏற்பட்டுச் சைவசமயத்தைப் பாதுகாப்பதற்குச் சைவ பரிபாலன சபையை 1888ஆம் ஆண்டில் நிறுவினர், சைவசமயப் பிரசாரஞ் செய்வதற்கு ‘இந்து சாதனம்" என்னும் பத்திரிகையையுந் தோற்றுவித்தனர். சைவபரிபாலன சபை யின் ஆதரவோடு 1889ஆம் ஆண்டில் அப்புக்காத்து S. நாகலிங்கம், திருவாளர் பசுபதிச் செட்டியார், புறக்டர் காசிப் பிள்ளை, கெளரவ சபாபதி முதலியவர்கள் சேர்ந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யைத் தாபித்தனர். இதுவே யாழ்ப்பா ணத்திற் ருபிக்கப்பட்ட முதற் சைவக் கல்லூரியாகும். சேர் பொன்னம்பலம் இராமநாதன், அவரின் சகோதரர் திரு. குமாரசுவாமி, திரு. அருணுசலம் முதலி யோரின் ஆதரவு இதற்குக் கிடைத்தது.28 இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத் திற் பல இடங்களிலும் சைவ ஆங்கில பாடசாலைகளை ஆரம்பிப்பதற்குச் சிலர் முயற்சி எடுத்தனர். ஆனல் அவற்றிற்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் பெறுவதற் கும் உதவி நன்கொடை பெறுவதற்கும் பெரும் முட்டுக்கட்டைகளை மிசனரிமார் போட்டனர் . ஒரு கிறிஸ்த பாடசாலை இருந்தால் அதற்கு அருகில் சைவப் பாட சாலை தாபிப்பதற்கும் கிறீஸ்த பாடசாலை களிற் படிக்குஞ் சைவப் பிள்ளைகளைப் புதி
Speeches in Council (Vol. 1, 1879-1894), e 85 - 88
.165 -- 4ز

Page 66
62 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு
தாகத் திறக்கப்படுஞ் சைவப் பாடசாலை களிற் சேர்ப்பதற்கும் தடைகள் இருந்தன. கந்தரோடையிற் கந்தையா உபாத்தி un turi *" கந்த ரோ டை இங்கிலிஸ் இன்ஸ்றிற்றியூற்’ என்னும் பெயரோடு ஓர் ஆங்கில பாடசாலையை 1894ஆம் ஆண்டிலே தாபித்தனர். இதற்கு உதவி நன்கொடைப் பணம் எட்டு வருடங் கழித்து 1902ஆம் ஆண்டிற்ருன் கிடைத்தது. 24
20ஆம் நூற்ருண்டின் ஆரம்பத்தி லிருந்து இந்தியாவிலும் இலங்கையிலும் சமயம், கல்வி, அரசியல் முதலிய துறை களில் ஒரு புதிய விழிப்பு ஏற்பட்டது. இதற்கு விவேகானந்தர் போதனைகளையும் இந்திய தேசிய இயக்கத்தையும் முக்கிய சாரணங்களாகக் கருதலாம். டாக்டர் ஆனந்தக்குமாரசுவாமி அவர்களின் முயற்சி பால் இலங்கையில் 1905 ஆம் ஆண்டில் சமுதாயச் சீர்திருத்தச் சபை தாபிக்கப் பட்டது. இவர் ஆங்கிலக் கல்விபற்றிச் சிறப்பாக மிசனரிமாரின் கல்லூரிகளிற் கொடுக்கப்பட்ட கல்வியைப் பற்றிப் பின் வருமாறு கூறுகிருர்: ""ஒன்றின் பயனைக் கொண்டே அதன் நன்மை தீமையை நாம் அறியலாம். இக் கல்வியைப் பெறும் பெரும் பாலானேர் இந்தியக் கலாசாரத்தின் பெருமையை உணர முடியாதவர்களாய் இருக்கிருர்கள். இந்திய சர்வகலாசாலைப் பட்டதாரியோடு அல்லது இலங்கை மாணவனேடு நீங்கள் மகாபாரதத்தின் இலட்சியங்கள்பற்றிப் பேசினுல் அவன் சேக்ஸ்பியர் பற்றித் தனது அறிவைக் காட்ட விரைந்து முன் வருவான். சமயத் தைப்பற்றி அவனுடன் பேசினல், ஐரோப் பாவிற் போன சந்ததியிற் காணப்பட்ட நிரீச்சுர வாதிகளைப் போல் காட்சியளிப் பான். ஆங்கிலேயரைப் போலத் தத்துவ சாத்திர அறிவிற் சுத்தசூனியமாக இருப் பான். இந்திய சங்கீதத்தைப்பற்றிப் பேசி ஞல் அவன் கிராமபோன் இசையையோ அல்லது காமோனியத்தின் இசையையோ
24. “ Skanda”, l969 . Seventyfifth Annive
- Page 37.
25. Essays in National Idealism - Dr. An
l909 - Page 96 & 97.

மலர்
உங்கள் மீது திணிப்பான். இந்திய உடை, அணிகலன்கள் பற்றிப் பேசினல் அவை நாகரிகமற்றவை எனக் கூறுவான் இந்தி யக் கலைகளைப்பற்றிப் பேசினல் அவைக ளிருப்பது அவனுக்குத் தெரியாதபடியால் நாம் பேசுபவை அவனுக்குப் புதிராக இருக்கும். அவனுடைய தாய்ப்பாஷையில் எழுதிய கடிதம் ஒன்றை மொழிபெயர்க்கும் படி கொடுத்தால் அவளுல்ை அது முடியாது" தன் சொந்த நாட்டில் அந்நியணுக அவன் இருக்கிருன்.” (இந்தப்பகுதிக்குக்கொடுத்த அடிக்குறிப்பில் தான் கூறுவது இலங்கைக் குப் பொருந்துமென்றும் இந்தியாவில் எல்லா மாகாணங்களுக்கும் பொருந்தா தென்றும் கூறியுள்ளார் . ) 28
மகாஜனக் கல்லூரியைத் தாபித்த துரையப்பாபிள்ளை அவர்கள் நாம் மேலே குறிப்பிட்ட மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந்தவர். அவர் சைவனகப் பிறந்து யாழ்ப்பாணக் கல்லூரியிற் படித்தபோது கிறிஸ்த மதத்தைத் தழுவியவர். படிப்பு முடிந்த பின்பு இலங்கையிலும் இந்தியா விலும் ஆசிரியராக இருந்துவிட்டுத் தாம் ஆரம்பத்திற் படி த் த தெல்லிப்பழை அமெரிக்கன் மிசன் பாடசாலையிற் சில காலம் ஆசிரியராக இருந்தார். இப்படி இருந்து வருங்காலத்தில் மிசன் பாடசாலை கள் சைவசமயப் பிள்ளைகளுக்குச் செய்து வந்த தீங்கைப் படிப்படியாக உணர்ந் திருக்கவேண்டும். அதுவுமல்லாமல் மிசனரி மாரின் பாடசாலைகள். தமிழர் பண்பாட் டையுங் கெடுத்துத் தமிழர் கலைகளாகிய கர்நாடக சங்கீதம் முதலியவற்றைப் புறக் கணிப்பதையும் கண்டிருக்க வேண் டும். ஏனெனில், யாழ்ப்பாணத்தில் வளர்ந்து வரும் போலி ஐரோப்பிய நாகரிகத்தைத் தமது பாடல்களிற் கண்டித்துள்ளார். இதனலேயே மறுபடியுஞ் சைவ சமயத் தைத் தழுவி அதை வளர்ப்பதற்கென்றே 1910ஆம் ஆண்டில் மகாஜனக் கல்லூரியைத் தாபித்தார். இக்கல்லூரிக்கு அங்கீகாரம்
rsary Number of Skanda Warodaya College
anda Coomaraswamy, Colombo Apothecaries,

Page 67
ஆங்கிலேயராட்சிய
பெறவும் உதவி நன்கொடை பெறவும் எட்டு வருடங்கள் சென்றன. 26
சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள்தான் முதன் முதல் யாழ்ப்பாணத் தில் சைவப்பெண்களுக்கென்று ஒரு ஆங்கி லக் கல்லூரியை நிறுவியவர். முதலில் இக் கல்லூரியைக் கோப்பாயிலே தாபிக்க எண்ணி அங்கு இருபத்தைந்து ஏக்கர் நிலத்தை வாங்கினர். பின்னர் மக்கள் பலர் அதிலும் பார்க்க மருதனுர் மடமே பொருத்தமான இடம் என எடுத்துக் காட்டியபடியால் அங்கு பதினைந்து ஏக்கர் நிலத்தை வாங்கினர். அங்கு கல்லூரியைத் தாபிக்க ஆயத்தங்கள் செய்துகொண் டிருக்கும்பொழுது அமெரிக்கன் மிசனரி மார் உடுவிற் பெண்பாடசாலைக்கு அணித் தாக இது அமைய இருப்பதால் தாங்கள் செய்துவரும் வேலைக்கு இது பங்கம் விளை விக்கக்கூடும் என அச்சம் தெரிவித்தனர். வெல்ப்ஸ் என்பவர் சைவக் கல்விபற்றிக் கிராமங்களிற் செய்து வரும் பிரசாரத்துக் குத் தங்கள் எதிர்ப்பையுந் தெரிவித்தனர். இதற்கு இராமநாதனவர்கள் அளித்த ஆணித் தரமான பதிலை 1910 ஆம் ஆண்டு ஏப்பிரில் 10 ஆந் திகதி வண. ஸ்கொட் பாதிரியாருக்கு எழுதிய கடிதத்திற் காண லாம். கிறிஸ்த பிள்ளைகள் கிறிஸ்த பாட சாலைகளிற் படிப்பது எவ்வளவு அவசியமோ அவ்வளவவசியம் சைவப்பிள்ளைகள் சைவப் பள்ளிக்கூடத்திற் படிப்பது எனச் சுட்டிக் காட்டியுள்ளார். 27 1913ஆம் ஆண்டில் இராமநாதன் கல்லூரி ஏற்பட்டதோடு சைவப் பெண்கள் கல்வியைப் பொறுத்த வரையில் ஒரு புதிய சகாப்தம் ஏற்பட்டது.
ஆசிரியர் ரி. நாக முத்து அவர்கள் 1913 ஆம் ஆண்டில் வண்ணுர்பண்டைச் சிவன் கோயில் வடக்கு வீதியில் வைத்தீஸ் வர வித்தியாலயம் என்னும் ஆங்கில பாட சாலையை ஆரம்பித்தனர். அதை மூன்று
26. சிக்தனேச்சோலை - பக்கம் XI, XI,
27. “The Life of Sir Ponnambalam Rama Chunnakam, 1971 - Pages 252 — 25
28. Waidyeshwaran Golden Jubilee Numb

பிலே . . கல்வியின் வளர்ச்சி 63
வருடங்களாக, அருகிலிருந்த பாடசாலை முகாமைக்காரர்களின் எதிர்ப்பினுல், அரசி னரின் அங்கீகாரமில்லாமலும், உதவி நன் கொடைப் பணம் பெருமலும் நடாத்தி வந்தனர். 1918ஆம் ஆண்டில் இதனை இராமகிருஷ்ண சங்கத்திடம் ஒப்படைத் தனர். சென்னை மயிலாப்பூர் இராம கிருஷ்ண மடத்துக்குத் தலைவராயிருந்த சுவாமி சர்வானந்தர் அவர்கள் இராம கிருஷ்ண சங்கத்தின் சார்பாக இதனைக் கையேற்றனர். இராமகிருஷ்ண சங்கமும் இதனை இரண்டு வருடங்கள் நடத்திய பின்பே உதவி நன்கொடைப் பணம் கிடைத்தது. 28 இலங்கையில் இராம கிருஷ்ண சங்கத்தின் கல்விப் பணி வைத் தீஸ்வர வித்தியாலயத்தைப் பொறுப் பேற்றதோடு ஆரம்பித்து, பின்னர் சுவாமி விபுலானந்தர் தலைமையில் கிழக் கிலங்கையில் பல்கிப் பெருகிற்று.
1918ஆம் ஆண்டில் வெளிவந்த "யாழ்ப் பாண வைபவ கெளமுதி' என்னும் நூலில் அக்காலத்து ஆங்கிலக் கல்வி நிலைபற்றிப் பின்வருமாறு கூறப்படுகிறது :- "முற் காலத்திலும் இக்காலத்தில் யாழ்ப்பாணம் கல்வியில் அதிக விருத்தியடைந்திருக்கிறது பிரத்தியட்சமான சம்பவமாகும். இக் காலத்திலே உயர்தர ஆங்கிலக் கல்வியைக் கற்பிக்கும் பதினெரு கல்லூரிகள் யாழ்ப் பாணத்திலுண்டு. இவற்றுள் யாழ்ப்பாணக் கல்லூரி, மத்திய கல்லூரி, கில்நர் கல்லூரி, ஹாட்லிக் கல்லூரி, சென்ற் யோன்ஸ் கல்லூரி, செட் மிஷன் பெண்கள் கல்லூரி என்னும் ஆறு ஸ்தாபனங்களும் புரொட் டெஸ்தாந்து மிஷனரிமாராலும், பற்றிக் கல்லூரி ருேமன் கத்தோலிக்க மிஷனலும், இந்துக்கல்லூரி, விக்ருேரியாக் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, இராம நாதன் கல்லூரி யென்னும் நான்கும் இந்துக்களாலும் நடத்தப்படுகின்றன.
nathan - M. Waithilingam, Thirumakal Press, 4.
er, l963 - Page 22.

Page 68
64 துரையப்பாபிள்ளை நூற்றண்டு
மேலே கூறப்பட்ட இராமநாதன் கல்லூரி, செட் மிஷன் பெண்கள் கல்லூரி, உடுவில் விடுதிப் பெண்பாடசாலை, உடுப்பிட்டி விடுதிப் பெண்பாடசாலை, வேம்படி விடு திப் பெண் பாடசாலை, பருத்தித்துறை விடு திப் பெண்பாடசாலை, நல்லூர் விடுதிப் பெண்பாடசாலை, யாழ்ப்பாணம் கன்னி யா ஸ்திரி மடம் முதலிய ஸ்தாபனங்களும் பெண்களின் உயர்தரக் கல்வியை விருத்தி யாக்கும் விசே ஷ ஸ்தாபனங்களாய் விளங்குகின்றன. இவ்வளவு கல்லூரிகளும்,
29. யாழ்ப்பாண வைபவ கௌமுதி - பக்கம் 32
தாய்மொழி உணர்வு பற். பாவலர் தெ. அ. துரைய
செந்தமி ழென்றிடு மெங்கள் சீர்குலைந் தேகவெப் பாலவு சொந்தமா யிங்கிலிஷ் தன் துக்கமி தல்லவோ சங்கமி
தன்னைப்பெற் றதமி ழன்ஃ தாரணியி லிங்கி லீஷதைே பொன்னைப் பெறும்வழி யெ புத்தியோ சொல்லடி சங்க
செந்தமி ழும்வேணும் இங் சேர்த்திவ் விரண்டையுமே புந்தி விரிந்து மகிழ்வர்தற் புத்தி யிதுவடி சங்கமின்ே
LAMMAMMMALAMALMLMLMLMALALMAMSMLSMLMqASA AAAMMAAMMLALMALSMAAA ASAAASqeAM MAAS LALASAAL AL MMAMMMAMA AMLMLMLS

மலர்
பெண் விடுதிப் பாடசாலைகளும் அதிகப் பட்ட வேறு ஓர் ஸ்தானம் இலங்கை, இந்தி யாவிற் காண்பதரிதாம்."29
இதுகாறும் முதலாம் உலக யுத்த காலம் வரைக்கும் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட ஆங்கிலக் கல்வி வளர்ச்சியை ஆராய்ந்தோம். இதற்குப் பிந்திய காலத் திலும் பழைய கல்லூரிகள் விருத்தியடைந் தும், புதிய கல்லூரிகள் தோன்றியும் ஆங்கிலக் கல்வி மேலும் விருத்தி யடைந்தது.
5, 326.
ப்யாபிள்ளை
ா சுயபாஷை பரும் னையே கற்கிறர் ன்னே.
எயை நீத்திந்தத் L பன்று படித்திடல் மின்னே.
கில் சும்வேணும் ார்பவரே
காலத்தில்
0.
- யாழ்ப்பாண சுவதேசக் கும்மி,

Page 69
ஈழநாட்டுத் தமிழும் செட்டிநாட்டுத் தமிழும்
தென்னிந்தியாவைப்போல ஈழநாடும் மிகப் பழைய காலத்திலிருந்தே தமிழ் மக்கள் வாழ்ந்த நாடு என்று ஒரு சாராரும் தென்னிந்தியாவிலிருந்து ஈழநாட்டுக்கு வந்தேறிய குடிகளே ஈழநாட்டுத் தமிழ் மக்கள் என்று ஒரு சாராரும் வாதித்து வருகின்றனர். தென்னிந்தியாவுக்கும் ஈழ நாட்டுக்கும் மிகப் பழைய காலத்தி லிருந்து நெருங்கிய தொடர்பு இருந்து வந் திருக்கிற தென்பதையும் தென்னிந்திய மக்கள் அண்மைக் காலம் வரை ஈழநாட் டிற்குக் குடிபெயர்ந்து வந்திருக்கின்றன ரென்பதையும் பொதுவாக அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். தென்னிந்தியா வில் எவ்வெப் பகுதிகளுக்கும் ஈழநாட் டின் எவ்வெப் பகுதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளதென்பதை அறிந்தால் இரண்டு நாடுகளுக்குமிடையி லேற்பட்ட பண்பாட்டு உறவு விளக்க மடையும் .
தென்னிந்தியாவிலே தமிழர் பெரும் பான்மையாக வாழும் பகுதி தமிழ்நாடு என்று வழங்கப்படுகின்றது. எனவே, இக் கட்டுரையிலும் தமிழ் நாடு என்ற வழக்கு, தென்னிந்தியத் தமிழ்ப் பிரதேசத்தைக் குறிக்கவே வழங்கப்படுகிறது. பண்டைக் காலத் தமிழகம் இன்று கேரளம் என்று வழங்கும் பழைய சேர நாட்டையும் உள் ளடக்கியிருந்தது. தமிழ் நாட்டுக்கு வட கிழக்கே அமைந்த ஆந்திரப் பிரதேசமும் ஈழநாட்டோடு தொடர்புகள் கொண்டி ருந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் திராவிட மொழிகளுள் ஒன்றன
l. M. D. Ragavan, Tamil Culture in Ceylo

கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை, Ph. D. (Cey.\ D. Phil. (Oxon) சிரேஷ்ட விரிவுரையாளர் இலங்கைப் பல்கலைக் கழகம் பேராதனை வளாகம்
தெலுங்கு மொழியைப் பேசுவோராவர். கேரளம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் என்பனவற்றிலிருந்து ஈழநாட்டுக்கு வந்த மக்கள் ஈழ நாட்டிலே தமது தனித்துவத் தைப் பேண வாய்ப்புகளிருந்த பகுதி களிலே ஈழநாட்டுப் பழந்தமிழ்க்குடிகளாகி யிருக்கவேண்டும். ஈழநாட்டின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளிலிருந்து சில மைல் கள் தூரத்திலுள்ள தமிழ்நாட்டின் செல் வாக்கு ஈழநரட்டில் எப்பொழுதும் மிகவும் அதிகமாக இருந்துள்ளது. ஈழநாட்டு மக்களிடையே காணப்படும் சேரநாட்டுச் செல்வாக்கைப் பலர் குறிப்பிட்டுள்ளனர். இராகவனுடைய நூலில் இந்த அம்சம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஈழநாட்டுக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான தொடர்பிலே தென் னிந்தியக் கடற்கரையோடொட்டிய பிர தேசங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறு கின்றன; தமிழ் மொழிக்கு மொழியியல் அடிப்படையிலான புவியியல் (Linguistic Geography) இன்னும் எழுதப்படவில்லை. பேச்சுவழக்குத் தமிழின் கிளை மொழிகளைப் பற்றிய ஆராய்ச்சி ஆரம்பநிலையிலேயே இருக்கிறது. பல்கலைக் கழகங்களில் நடை பெறும் சில சில ஆராய்ச்சிகள் கூட நூலுருவம் பெற்று வெளிவருவது அருகிய வழக்கு. தமிழ் நாட்டில் வெளியாகும் ஆராய்ச்சி நூல்கள் அனைத்தும் ஈழநாட் டுக்கு வந்து சேர்வதுமில்லை. இந்த நிலை யிலே ஈழநாட்டுத் தமிழுக்கும் தமிழ் நாட்டுத் தமிழுக்கும் இடையிலான ஒற்றுமைகளை விரிவாக ஆராய இயலாது.
n, pp. 106 - Il 26.

Page 70
ஈழநாட்டுத்
ஈழநாட்டுத் தமிழைத் தமிழ் நாட்டின் ஒரு பகுதித் தமிழோடு ஒப்பிட்டு ஆராய்ந்த முதற் கட்டுரை? சுமார் முப்பது ஆண்டு களுக்கு முன்பே வெளிவந்துவிட்டது. ஈழநாட்டிலே பிறந்து வளர்ந்து தமிழ் கற்றுத் தமிழ் நாட்டிலே அண்ணுமலைப் பல்கலைக் கழகத்திலே முதலாவது தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய ஒருவரால் அவ் வாராய்ச்சிக் கட்டுரை வெளியிடப்பட்டது. சுவாமி விபுலானந்தரைத் தொடர்ந்து வேறு எவரும் அத்தகைய கட்டுரைகள் எழுதவில்லை.
ஈழநாட்டுத் தமிழுக்கும் செட்டி நாட்டுத் தமிழுக்கும் இடையிலான ஒப்புமையை எடுத்துக் காட்டும் இக் கட்டுரை, சோமலெ3 அவர்கள் வெளி யிட்ட " செட்டிநாடும் தமிழும் " என்ற நூலிலிருந்து செட்டி நாட்டுத் தமிழைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொண் டுள்ளது. செட்டி நாட்டுக்குரிய சிறப்புத் தமிழ் வழக்குகளாக அவர் எடுத்துக் காட்டுவனவற்றுள் ஒரு கணிசமான பகுதி ஈழநாட்டுக்குரிய சிறப்புத் தமிழ் வழக்குக ளாகவும் அமைந்துள்ளன. " நமது தமிழ் நாடு" என்ற பொதுத் தலைப்பிலே தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களைப் பற்றியும் அவர் தனித்தனி நூல் எழுதி யுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்தைப் பற்றியும் எழுதிய நூலில் அவ்வம் மாவட் டத்துக்குரிய சிறப்புத் தமிழ் வழக்காறு களை எடுத்துக் காட்டியுள்ளார். ஈழ நாட்டுக் கடற்கரையிலிருந்து தூரத்தில் அமைந்துள்ள மாவட்டங்களிலேயுள்ள சிறப்புத் தமிழ் வழக்காறுகள் ஈழநாட்டுத் தமிழிலே காணப்படவில்லை; அல்லது மிக வும் அருகிக் காணப்படுகின்றது. உதாரண மாக சோமலெ எழுதியு ள்ள கோயம் புத்தூர் மாவட்டம், செங் கற் பட்டு மாவட்டம் என்ற நூல்களைப் பார்க்கலாம்.
2. சுவாமி விபுலானந்தர் - சோழமண்டலத்
- பக்கம் 82-83.
3. சோமலெ - செட்டிநாடும் தமிழும் (1954). 4. A. Veluppillai - Ceylon Tamil Inscrip Ceylon Tamil Inscri

தமிழும் செட்டிநாட்டுத் தமிழும் 69
சோமலெ, செட்டிநாட்டுச் செட்டி மரபினராதலினல் அவர் செட்டி நாட்டு வழக்குகளாகக் கூறுவனவற்றைச் சந்தேகக் கண்கொண்டு நோக்கவேண்டியதில்லை. இரண்டாண்டுகளுக்கு முன்பு חזחמr L& * ஆனந்தவிகடன் " என்ற சஞ்சிகை தமிழ் நாட்டு மாவட்டம் ஒவ்வொன்றிற்கும் சிறப்பு மலர் வெளியிட்டு வந்தது. அவ் வாறு வெளிவந்த இராமநாதபுரம் மாவட்டமலரிலே செட்டிநாட்டு வாழ்க்கை யைப் பகைப்புலமாகக் கொண்ட கதை களும் வேறுபல செய்திகளும் வெளிவந்தன. ஈழநாட்டுத் தமிழுக்கும் செட்டி நாட்டுத் தமிழுக்குமிடையிலான ஒப்புமை அப் பொழுதும் விளங்கித் தோன்றியது.
செட்டிச் சமூகத்தினர் ஈழநாட்டிலே இயற்றிய சைவப்பணி பற்றியும் தமிழ்ப் பணி பற்றியும் ஈழநாட்டினர் விதந்து கூறு கின்றனர். ஈழநாட்டிலுள்ள முக்கியமான நகரங்களிலே வணிக நிமித்தம் வந்து சேர்ந்த செட்டிமார் அவ்வப் பகுதிகளி லுள்ள சைவக் கோவில்களுக்குத் திருப் பணிகள் பல புரிந்தனர். நகரங்களிலுள்ள கோவில்கள் சில இன்னும் செட்டிமார் நிர்வாகத்திலேயே இயங்கிவருகின்றன. பத்தொன்பதாம் நூற்றண்டிலே சைவப் பணியும் தமிழ்ப் பணியும் செய்து தம் பெயர் நிறுவிய ஆறுமுகநாவலருக்கும் செட்டிமார் உதவியதுண்டு. ஈழநாட்டி லுள்ள் பழைய தமிழ்ச் சாசனங்களை ஆராயும்போது செட்டிமார் ஈழநாட்டிலே பெற்றிருந்த செல்வாக்கும் இயற்றிய சைவப் பணியும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வந்த மை தெரிய வருகின்றது. *
செட்டிமார் பல்லவர் காலப் பகுதி யிலேயே ஐஞ்ஞாற்றுவர், திசையாயிரத்து ஐஞ்ஞாற்றுவர், வீரக்கொடி என்ற பெயர்
தமிழும், ஈழமண்டலத் தமிழும் - கஃலமகள் (1941),
tions Part I (l971). Also »tions Part II (l972).

Page 71
70 துரையப்பாபிள்ளை நூற்ருரண்டு
களில் வணிகக் கூட்டுத்தாபனமாக இயங்கி வந்ததை அக்காலத் தமிழ் நாட்டுச் சாசனங்கள் தெரிவிக்கின்றன. சோழப் பெருமன்னர் காலத்திலே, இவ்வணிகக் கூட்டுத்தாபனம் கடல் கடந்த நாடுகளி லும் தொழில் செய்யத் தொடங்கிற்று என் பது வரலாற்றுண்மை. நகரத்தார் என்று அழைக்கப்பட்ட செட்டிமார் வணிகம் செய்த இட ங் களி லே மன்னர்களின் தானங்களாக வீரபட்டினங்களைப் பெற்று அவற்றின் தலதாபன அலுவல்களைத் தாமே கவனித்து வந்தனர். ஈழநாட்டுத் தமிழ்ச் சாசனங்கள் இத்தகைய வீரபட் டினங்கள் பதவியா, கப்புகொல்லாவ, லிகாரகின்னை, புலத்திய நகரம், கல்தென் பிட்டி தெட்டியமுல்லை என்னும் இடங் களில் இருந்ததைச் சுட்டுகின்றன. பூரீபதிக் கிராமம் என்று வழங்கப்பட்ட பதவியா வில் செட்டி சமூகத்தினர் செய்த சிவன் கோவிற் றிருப்பணியைப் பல தமிழ்ச் சாசனங்கள் எடுத்துக் கூறுகின்றன. களுத் துறையிலே ஐஞ்ஞாற்றுவருடைய காளி கோயில் ஒன்று இருந்ததை ஒரு தமிழ்ச் சாசனம் குறிப்பிடும். வெருகலம்பதிக் கோவிலின் மதிற்கவர் ஒன்றும் செட்டி மாராற் கட்டப்பட்டுள்ளது;
ஈழநாட்டிலே, செட்டிகள், கொழும்புச் செட்டிகள், அண்மையிலே தமிழ் நாட்டி லிருந்து குடியேறிய செட்டிகள் என்று பல தரப்பினர் காணப்படுகின்ற போதும் செட்டி சமூகத்தின் செல்வாக்கு முழு த் தமிழ்ச் சமூகத்திலும் ஆழமாகப் பதிந் துள்ளதென்று கொள்வதற்கு மொழித் தொடர்பு ஒரு முக்கிய சான் ருகின்றது. ஒரு காரியத்தைத் தொடங்கும்போது, காப்புக் கட்டி அக்காரியம் முடிந்ததும் காப்பை அவிழ்த்தல், மணமக்களை அறுகு, நெல் தூவி வாழ்த்துதல் முதலிய சங்ககால வழக்கங்களை இன்றும் பேணி வருதல் செட்டி நாட்டுக்குரிய சிறப் பென்று சோமலெ கூறுவர். இவ்வழக்கங்கள் ஈழ நாட்டிலும் உண்டு, கந்தசட்டி, பிள்ளையார் கதை முதலிய நோன்புகளில் ஈடுபடும் போது, காப்புக்கட்டிப் பின்பு அவிழ்க்கும் வழக்கம் கிராமங்களிலும் காணப்படுகின்

LD60ff
றது. சோழர் காலத்தில் நாய்ச்சியார் என்று வழங்கிய பெண்பாற்பெயர் செட்டி நாட்டில் இன்றும் வழங்குகிறது: யாழ்ப் பாணத்தில் பெரியநாய்ச்சி, சின்னநாய்ச்சி (சின்னுய்ச்சி), குழந்தை நாய்ச்சி என்ற பெயர்கள் வழங்குகின்றன.
செட்டிநாட்டிலே, தா, கொடு என்ற சொற்கள் இலக்கண மரபு தவருது " எனக்குத் தந்தான் ", * அவனுக்குக் கொடுத்தான்" என்று வழங்குவதையும் சோமலெ எடுத்துக் காட்டி வியந்துள்ளார். இவ்வழக்கு ஈழநாட்டுப் பேச்சு வழக்கிலும். போற்றப்படுவதைக் காணலாம்.
செட்டிநாட்டில் வழங்கும் தமிழ்ச் சொற்கள்" என்ற பகுதியிலே சோமலெ தந்துள்ள பட்டியலில் ஒரு கணிசமான பகுதி ஈழ நாட்டிலும் வழங்குவதைக் காண லாம். காலம் அல்லது இடம் உணர்த்தும் சொற்களிலே சிலவற்றை இங்கே நோக்க லாம். வெள்ளணு என்பது செட்டி நாட்டிலே அதிகாலையில் அல்லது விரைவில் என்ற பொருளில் வழங்குகிறது. ஈழ நாட்டில், வெள்ளன எ ன் ற சொல் அதே பொருளில் வழங்குகிறது. கிருகப் பிரவேசம் என்று தமிழ் நாட்டில் பல பகுதிகளிலும் வழங்கும் வட மொழித் தொடருக்குப் பதிலாகச் செட்டி நாட்டில் குடிபுகுதல் என்ற தூய தமிழ்த் தொடர் வழங்குகிறதெனச் சோமலெ கூறுவர். ஈழ நாட்டிலும் குடிபுகுதல் என்ற தொடரே வழங்குகிறது. தொலைக்குப் போவது என்பது செட்டிநாட்டில், பொருளீட்டுவ தற்காக நெடுந்தொலைவிலுள்ள கடல் கடந்த நாடுகளுக்குச் செல்வதைக் குறிக் கும். ஈழநாட்டில் துலைக்குப் போவதென் பது நெடுந்தூரம் பிரயாணம் செல்வதைக் குறிக்கிறது. ஈழநாட்டுக்கும் செட்டி நாட்டுக்கும் பொதுவானதாகக் காலம், இடம் என்பனவற்றை உணர்த்தும் சொற் கள் சில :- மேலைக்கு (அடுத்த ஆண்டுக்கு); கூதல் (குளிர்); சவலை (பால் மணம் மாழுப் பச்சிளங்குழந்தை); அங்ங்னே/அங்விேனே/ அங்கினே (அங்கே); இங்ங்னே/இங்கவினே/ இங்கனே (இங்கே); ஒட்டற (இறுதிவரை); மேல் (உடம்பு); மானம்பு (மகாநோன்பு).

Page 72
ஈழநாட்டுத்
வணிகத் தொழிலோடு தொடர்புடைய சொற்கள் சிலவும் ஈழநாட்டுத் தமிழுக் கும் செட்டிநாட்டுத் தமிழுக்கும் பொது வாக உள்ளன. இந்தா என்பது இங்கே o இதை வாங்கிக் கொள் என்னும் பொருள்களில் இரண்டு நாடுகளிலும் வழங்குகின்றது. சல்லி என்பது நாண யத்தை உணர்த்த இரண்டிடங்களிலும் மட்டுமல்லாது சிங்களத்திலும் வழங்கு கிறது. நிறைய, அதிகம், நிரம்ப என்ற பொருள்களிலே செட்டிநாட்டுத் தமிழில் வழங்கும் உண்டன என்பது ஈழநாட்டுத் தமிழில் உண்டண என வழங்குகிறது: இன்னும் இத்தகைய சொற்கள் சில :- பைய (மெல்ல) வாசி (அனுகூலம்); வல்லிசு/வள்ளிசு (கருர்); பொணை/பிணை (பொறுப்பு) உருத்து (உரிமை, உரியது, உரித்து); எடுபிடி (பணிவிடை); நட்டா முட்டி(சில்லறைவேலை, தரக்குறைவானது).
பாவனைப் பொருள்கள் பற்றிய சொற் கள் பல செட்டிநாட்டிற்கும் ஈழநாட்டிற் கும் மட்டும் சிறப்பாக உள்ளன. தமிழ் நாட்டில் பிற பகுதிகளிலே வளையல் என்று வழங்குவது இவ்விரு நாடுகளிலும் காப்பு என வழங்கப்படுகிறது. இரண்டு நாடுக ளுக்கும் பொதுவான மேலும் சில சொற் கள் :- அருநாக்கொடி (அரைநாண்கொடி); கடகம் (ஒலைப்பெட்டி: கூறு (பகுதி); சத் தகம் (ஒருபுறம் கத்தியும் மறுபுறம் முனையு மாக உள்ள ஒரு கருவி; சொளகு/சுளகு (முறம்); துப்பட்டி (போர்வை, கம்பளம்); மெத்தை (படுக்கை); கோக்காலி (கோக் கப்பட்ட கால்களையுடைய ஒரு தள பாடம்)
அன்ருட வாழ்க்கையிலே காணப்படும் வேறு பல சொற்களும் இவ்விரு நாடு களுக்கு மட்டும் பொதுவாக உள்ளன. அவற்றை வகைப்படுத்தி நோக்குவதற்கா கக் கவலையை உணர்த்துவது, வெறுப்பை உணர்த்துவது என இரண்டாகப் பிரிக்க லாம். இயலவில்லை என்ற பொருளில் முடிய வில்லை என்பது இரண்டு பகுதிகளிலும் வழங்கப்படுகிறது. தடுமன் (நீர்க்கோவை) என்ற வழக்கு யாழ்ப்பாணத்திலும் உண்டு எனச் சோமலெயும் சுட்டிக்காட்டியுள்

தமிழும் செட்டிநாட்டுத் தமிழும் 71
ளார். இவ்விரு நாடுகளுக்கும் சிறப்பாக உரிய சில வழக்காறுகள்: மெனக் கட்டு மினக்கட்டு (வலிந்து); பேத்தல் (பிதற்று வது); படிமானம் (கீழ்ப்படிதல், குறை வது); நோஞ்சல் (வலுவில்லாதவன்); கெடதலை / கிடதலை (நோய்) கரச்சல் ( தொந்தரவு ); எசகேடு / இசைகேடு (இடையூறு) . அசதி (களைப்பு); அடம் (பிடிவாதம்); அருமந்தா பிள்ளை/அருமந்த பிள்ளை (அருமருந்தன்ன பிள்ளை), கெடக் கிருன் கிடக்கிருன் (1) உடல் நலமின்றி யிருக்கிருன் (2) அவனைப்பற்றிக் கவலை தள்ளிவைப்பது, ( சமூகத்தி லிருந்து விலக்கி வைப்பது, ஒத்திவைப்பது); தட்டுக்கெடுவது (சீர்கேடு அடைவது); உக்கிப்போவது ( உக்கியபின் காணப் படுவதுபோலக் க வ லை யா ல் இளைத்துப் போவது).
வெறுப்புணர்ச்சியைப் புலப்படுத்துகிற சொற்கள் பல இவ்விரு நாடுகளிலும் மட்டும் வழங்கிவருகின்றன. சில எடுத்துக் காட்டுகள் : கழுசறை (கீழ்த்தரமான, கழிக்கப்பட்டவன்); காடையன் (போக் கிரி) ஊதாரி (வரம்பு மீறிச் செலவு செய்பவன்); துப்புக்கெட்டவன் (திறமை யில்லாதவன்); மல்லுக்கட்டு (கட்டாயப் படுத்துவது); நெளிவு சுளிவு (சூழ்ச்சி); கணக்கம் (தாமதம்); சுனே (சொறணை, உணர்ச்சி); கோணுமானு (வரன்முறை யில்லாதது); ஈரட்டு / ஈரோட்டு (ஐயப் பாட்டுக்கு உரியது).
சில சொற்களுக்குச் செட்டி நாட்டில் விரிந்த பொருளும் ஈழநாட்டில் குறுகிய பொருளும் வேறு சில சொற்களுக்கு ஈழ நாட்டில் விரிந்த பொருளும் செட்டி நாட் டில் குறுகிய பொருளும் காணப்படுகின் றன. சாடை என்பது சைகையை இரண்டு நாடுகளிலும் குறிக்கிறது. செட்டிநாட்டில், அச்சொல்லிற்கு மறைமுகமாகத் திட்டுவது என்ற பொருளும் உண்டு. பொல்லாதவன் என்ருல் கடுமையானவன் என்ற பொருள் இரண்டு நாடுகளிலும் காணப்படுகிறது. செட்டி நாட்டில் அச் சொல்லிற்குக் கெட்டிக்காரன் என்ற பொருளு ம் உண்டு. வக்கணை என்ருல் விமரிசனம்

Page 73
72 துரையப்பாபிள்ளை நூற்ருண்டு
என்ற பொருள் இரு நாடுகளிலும் வழங்கு கின்றது. செட்டிநாட்டில் அச்சொல்லிற்கு எழுதும் முறை முதலிய வேறு பொருளும் வழங்கும். பந்தல் என்ற சொல் பிணப் பந்தலைக் குறிக்க இரண்டு நாடுகளிலும் வழங்கும், ஈழநாட்டில் அது மணப்பந்தலை யும் குறிக்கும். அம்மான் என்ற சொல் தாய்மாமனைக் குறிக்க இரு நாடுகளிலும் வழங்கும். ஈழநாட்டிலே அது பிற மாமன் மாரையும் குறிக்கிறது. இஞ்சே என்பது இரு பகுதிகளிலும் கணவர் மனைவியரை விளிக்க வழங்குகிறது. ஈழநாட்டில் அது மனைவியர் கணவரை விளிக்கவும் வழங்கும்.
செட்டிநாட்டுக்குரிய சிறப்பு வழக் காறுகளாகக் கூறப்படும் சொற்களிலே சில ஈழநாட்டிலே வழங்குகின்றபோதும், அவற்றின் பொருள் வேறுபட்டிருப்பதைக் காணலாம். அலக் கழிப்பது என்பது செட்டி நாட்டிலே கேலிசெய்வது, கிண்டல் செய் வது எனப் பொருள்படுமென்றும், தென் ஞர்க் காட்டிலே இன்று நாளையென நாள் கடத்துவது எனப் பொருள்படுமென்றும் , நெல்லையிலும் யாழ்ப்பாணத்திலும் தொந் தரவு செய்வது எனப் பொருள்படுமென வும் சோமலெ கூறுவர்; யாழ்ப்பாணத்தில்
தமிழ் மாதின் பிரலாபம்
என்னைக் கைவிடுவது ஏற்கு இயம்புவீர் யான்பெற்ற இளை
முன்னெரு காலம் முழுவனு முத்தமி ழெனக்கது மணக் பின்னவ காலம் பிறந்தலங் பெருகிடச் செய்ததிக் கலி 8
பெற்றவள் மேலே பிள்ளைவ பிறிதொரு ஸ்திரி தாயென்ற பற்றுறல் போலே பரவிங்லி6 படித்தீ ரெனப்பேனும் இனி

Dal) ri
அச் சொல்லுக்குத் தென்னர்க்காட்டில் வழங்கும் பொருளும் உண்டு. ஆவலாதி என்பது செட்டிநாட்டிலே அவதூறைக் குறிக்கிறது. ஈழநாட்டிலே அது ஆசையைக் குறிக்கும். நடப்பு எ ன் பது செட்டி நாட்டிலே நிகழ்ச்சிமுறை, பழக்கவழக்கம், இன்றைய முறை என்பவற்றைக் குறிக்கு மெனவும் யாழ்ப்பாணத்திலே கர்வமாக நடத்தலைக் குறிக்குமெனவும் சோமலெயும் சுட்டியுள்ளார். மூதலிக்கிறது என்பது செட்டிநாட்டில் நிரூபித்த ல், ருசுப் படுத்துவது என்ற பொருள்களில் வழங்க மோதலிக்கிறது என்பது ஈழநாட்டில் சண்டைக்குப் போதல் என்ற பொருளில் வழங்குகிறது.
இவை யாவற்றையும் நோக்கும்போது செட்டிநாட்டுக்கும் ஈழநாட்டுக்குமிடையி லான தொடர்பு ஆழமானதென்பது புலப் படும். இவ்விரு நாட்டுக்குமிடையிலான தொடர்பு இன்னும் விரிவாகவும் விளக்க மாக வும் ஆராயப்படவேண்டும். ஈழத் தமிழர் வரலாறு, தமிழ்மொழி வரலாறு, தமிழ்மொழியியல் என்பன நிறைவெய்து தற்கு இந்த ஆராய்ச்சியும் உதவும்.
மோ உமக்கென ஞர்களே.
கூலம்
கோலம் ;
கோலம் ாலம்.- ஐயோ! - என்ன.
ன் பாலே
J6ir UTCSG)
நூலே மேலே. - ஐயோ ! - என்ன.
- பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளை

Page 74