கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உள்ளக் கமலம்: சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா

Page 1
3.
卷
க
}
ܕ݁ܬܵܐ
* * s معيوبه"
*
விபுலானந்தர் று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5)
@
戴密) ・シ溶
;: *潑變
km
*
ቓችኛ;
șạo
ェぎ“*變〉 **· · · ·**확월 %淺戀----
B) 溶----
闇密- - - *• • • . .|- *** 爵窃**さこ
விழ
*灣%፳፰ቕፋ
藏
T6õõt
κα
ଶ୍ରୀ"
| || J. TI
_象
T

Page 2


Page 3
உள்ளக்
சுவாமி விபுலானந்தர் பூ
- வவு
 

கமலம்
நூற்றாண்டு விழாச் சபை
னியா -

Page 4


Page 5
சுவாமி விபுலானந்தர் நு
sriti TE STŘr
ஆலோசகர்
தலைவர்
துணைத் தலைவர்கள்
பொறுப்பாளர்
பொதுச் செயலாளர்
துணைச் செயலாளர்கள்
ஒழுங்கமை செயல்கள்
கணக்காய்வாளர்
செயற்குழு உறுப்பினர்கள்
மலர்க் குழு
அட்டைப் படம்
வவுன
திரு. எஸ்.
திரு. எஸ்.
திரு எஸ். பிரதேசக் க
திரு. வே. பிரதிக் கல்வி திருமதி. த.
பிரதிக் கல்வி
அருட்சகோத கொத்தணி
திரு எஸ். அ
திரு. கே. 8
திரு. ஜீ. சி திரு. தி. ெ திரு. க திரு. எ திரு. ஜி. ஆ

ாற்றாண்டு விழாச் சபை fut
தில்லைநடராஜா, அரச அதிபர், வவுனியா,
ரி. மார்க்கண்டு
நவரத்தினராஜா, ல்விப் பணிப்பாளர்.
க. நாகராஜா, பிப் பணிப்பாளர்,
ஜெயபாலசிங்கம், பிப் பணிப்பாளர்.
நரி எம். எம். மடுத்தீன்,
அதிபர்;
முருளானந்தம், கோட்டக் கல்வி அதிகாரி.
பான்னையா, உதவிக் கல்விப் பணிப்பாளர், . ஆர். ஏ. ஒஸ்வோல்ட், விப் பணிப்பாளர்.
ஜயராஜ், பிரதம எழுதுநர், டராஜசுந்தரம், நிர்வாக அலுவலர், பொன்னுத்துரை, நிர்வாக அலுவலர், நடராஜா,
க் கல்வி இணைப்பாளர்.
ஈந்திரசேகரம், கணக்காளர்.
வபாலன், பொறியியலாளர், பான்னையா, பொறியியலாளர், னிவாசகம், கொத்தணி அதிபர்,
வீ. பேரம்பலம், கொத்தணி அதிபர், அலெக்சாந்தர், கொத்தணி அதிபர்,
எஸ். பத்மநாதன், கொத்தணி அதிபர், இராசரத்தினம், கொத்தணி அதிபர், ஜெயதரன், கொத்தணி அதிபர்,
மர்மலானந்தகுமார், கொத்தணி அதிபர், 3. முத்துக்குமாரசாமி, கொத்தணி அதிபர்,
சிறிகோபால், எழுதுநர், அரசரத்தினம், தட்டெழுத்தாளர்,
கலைச்செல்வி, தட்டெழுத்தாளர்.
அருளானந்தம், பொன்னையா, தர்மராஜா.
. அருள்பாஸ்கரன்.

Page 6


Page 7
ஈசனுவக்கு
வெள்ளைநிற மல்லிகையோ ே வள்ளல் அடியிணைக்கு வாய்த் வெள்ளைநிறப் பூவுமல்ல வேெ உள்ளக் கமலமடி உத்தமனார்
காப்பவிழ்ந்த தாமரையோ கழு மாப்பிளையாய் வந்தவர்க்கு வ காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீ சுப்பியகைக் காந்தளடி கோம
பாட்டளிசேர் பொற்கொன்றை வாட்ட முறாதவர்க்கு வாய்த் பாட்டளிசேர் கொன்றையல்ல
நாட்ட விழி நெய்தலடி நாயகன

LD D6)f
வறெந்த மாமலரோ
த மலரெதுவோ
றந்த மலருமல்ல
வேண்டுவது.
ழநீர் மலர்த்தொடையோ ாய்த்த மலரெதுவோ ர்த் தொடையுமல்ல கனார் வேண்டுவது.
யோ பாரிலில்லாக் கற்பகமோ த மலரெதுவோ
பாரிலில்லாப் பூவுமல்ல னார் வேண்டுவது.
- சுவாமி விபுலாநந்தர்.

Page 8


Page 9
Ma i
虐伶莒家虐伶离家莒餐虐、扈家芭
毫麾罕姜餐率伶墨寮š弹墨宗莒餐毫家
微觀隱蛇隱亂爆娜娜娜娜感應劑隱蛇隱劑隱秘隱戴僧亂隱秘愉劑隱喻讀劑隱劑隱劑隱劑隱劑隱亂隱劑據** 毫*毫*毫w毫W*
 

************************************************************
额 {元赞 鳞历V鳞 $历尸额 $历\, 豁肝燃 鳞3 홍 耀

Page 10


Page 11
சுவாமி விபுலாநந்தரின்
 

ா இளமைத் தோற்றம்

Page 12


Page 13

புலாநந்தர்

Page 14


Page 15
2
10.
12.
3.
14.
16.
17.
l 8.
பொருள்
திருமதி இராஜமனோகரி புளே திரு. பி. பி. தேவராஜ் 9|aliis,
ஜனாப் எம். ஏ. சீ. முகைதீன் ஆ
திரு. வெ. சபாநாயகம் அவர்
திரு. எஸ். தில்லைநடராசா அ
திரு. சி. நவரத்தினராசா அவ
திரு. க. தியாகராசா அவர்கள்
சுவாமி ஜீவனானந்த அவர்களி
நுழைவாயிலில்
சுவாமி விபுலாநந்தருக்கு விழா -- பேராசிரியர் சி. தில்ை
பணி தொடர்வோம்
- ஆலையூரன்.
அபூர்வக் கலவை
- முருகையன்.
பல துறை விற்பன்னர்
- எஸ். எதிர்மன்னசிங்க
சுவாமி விபுலாநந்தர்
- கணியன் புலவனார் :
சுவாமி விபுலாநந்தரும் கலைச - பேராசிரியர் வி. சிவச
சேரத்து இளங்கோவும் ஈழத்து
- நா. புவனேந்திரன்.
மீட்கும் நோக்கே
- தாமரைத்தீவான்.
தமிழ்மொழி பற்றிய விபுலாந - கலாநிதி இ. பாலசுந்

ாடக்கம்
Liéhub ந்திரன்
அவர்களின் ஆசியுரை 1 ளின் ஆசியுரை iii
அவர்களின் ஆசிச் செய்தி iv
களின் ஆசிச் செய்தி V
அவர்களின் வாழ்த்துச் செய்தி vi
பர்களின் வாழ்த்துச் செய்தி vii
ரின் வாழ்த்துச் செய்தி viii
ன் ஆசிச் செய்தி Χ
xii
வெடுத்தல் I சலநாதன்.
us 5
7.
12
b
14
ஐங்கரலிங்கன்.
5ளும் 6 tir LiS).
து விபுலானந்தரும் 25
28
ந்த அடிகளாரின் நோக்குகள் 30
தரம்.

Page 16
19.
20.
23.
25.
2
6
28.
29.
30.
31.
சுவாமி விபுலானந்தரின் கல்வி
- கலாநிதி அம்பலவான
முத்தமிழ் வித்தகன் புகழ் பா( - தி. மகேஸ்வரராஜா,
சுவாமி விபுலானந்தரும் பல்க - செ. அழகரெத்தினம்.
விபுலானந்தத் தொண்டு
- க. சுவர்ணராஜா.
சென்றதினி மீளாது
- ந. இரவீந்திரன்,
விபுலாநந்தரின் மனம்பற்றிய
- கலாநிதி நா. ஞானகு
முத்தமிழ் வித்தகர் விபுலான
- எஸ். கே. சிவநாதன்
கங்கையில் விடுத்த ஒலையின் - அகளங்கன்.
வன்னிக் கலாச்சாரம் - ஒர் ே - செல்வி அன்ரோனியா
விபுலானந்த அலை
- ஆலன்.
துறவி தந்த இசை நூல்
- உடுவை தில்லை நடர
இலக்கிய நாயகர்களும் அடிக - கலாநிதி சி. மெளனகு
யாழ் ஆராய்ச்சியில் சுவாம வி
-- வித்துவான் சா. இ.
St
ܛܓ ܓܹܔ 习 تھی۔
 

ப் பணிகள்
னர் சிவராஜா.
டுவோம்
லைக் கழகக் கல்வியும்
கருத்து
குமாரன்.
ந்தர்
ஊற்றுக்கண்கள்
நாக்கு r ஸ்ரனிஸ்லாஸ்,
广芮“凸Pf了。
ளாரும்
5@・
புலாநந்தரின் தனித்துவம் .
கமலநாதன்.
-
6 OG
80.
S3
9

Page 17
கல்வி இராஜா திருமதி இராஜமனோகரி
மனமுவ
ஆசி
முத்தமிழ் வித்தகர்
தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் நூற்றாண்டு விழா எடுக்கப்ப எனது தொகுதியான வவுனி பாக, வவுனியாக் கல்வித்
சுவாமி விபுலானந்தர் நூற் விழாவினைக் கோலாகலமா செய்துவரும் ஏற்பாடுகள் கு! கும் விழா மலர் குறித்தும்
பேருவகையும் அடைகின்றே விழா மலருக்கு ஆசிச் செய்தி கிடைத்த வாய்ப்பினைப் பெ
அடிகளார் அவர்களை கொள்ளுவது பொருத்தமன்று பிறவி என்றே போற்றல் ே சைவத்திற்கும், தமிழுக்கும் ப கதியற்ற பாலர்க்கும் செய்த ே காதவை. தமிழோடு இசை சம்பந்தர் வழித்தோன்றலாக கள், ஆக்கி அளித்த "யாழ்று ருக்கிருந்த ஈடுபாட்டினைக் பதினாறு வயதிலேயே மதுை தினையும், லண்டன் பி.எஸ். பெற்றுக்கொண்ட விபுலான திறமையானது, படிக்கவேண் பட்டங்களாகத் திசைமாறித் களுக்கெல்லாம் சிறந்த வெ விளங்குகின்றது.
அடிகளார், கிழக்கிலே அவர் வடக்கிலும் சுடர் வீசி

rங்க அமைச்சர்
புலேந்திரன் அவர்கள்
ந்தளித்த
யுரை
Ws.
விபுலானந்த அடிகளாருக்குத்
மூலைமுடுக்குகளில் எல்லாம் ட்டுவரும் இச்சந்தர்ப்பத்தில், யாத் தொகுதியிலேயும், குறிப்
திணைக்களத்தைச் சேர்ந்த றாண்டு விழாச் சபையினர் கக் கொண்டாடுவதற்குச் றித்தும், வெளியிடப்படவிருக் யான் மிகவும் பெருமிதமும், ன். அத்தோடு அடிகளாரின் யினை அனுப்பிவைப்பதற்குக் ரும் பேறாகக் கருதுகின்றேன்.
ஒரு துறவி என்று மாத்திரம் று. அவர்களை ஒரு தெய்வப் வண்டும். சுவாமி அவர்கள் மாத்திரம் அன்றி, கல்விக்கும், தொண்டுகள் கணக்கில் அடங் பாட மறந்தறியாத ஞான
வந்துதித்த அடிகளார் அவர் ால்" இசை இயலில் அன்னா கோ டு காட்டி நிற்கின்றது. ரத் தமிழ்ப்பண்டிதர் பட்டத் ஸி. பட்டத்தினையும் ஒருங்கே ந்த அடிகளாரின் வியப்பூட்டுந் டிய பருவத்திலேயே நூலறுந்த * திரியும் தமிழ் இளைஞர் பாரு மேல்வரிச் சட்டமாக
உதித்த கதிரவன். ஆயினும், னார். மலையகத்திலும் ஒளி

Page 18
பரப்பினார். தமிழகத்திலு நல்லுலகம் முழுவதும் செ6 முடியாதவை. கலையியல்,
றியல், மொழியியல் போன் மாணம் பெற்ற அடிகளார் யப் பணி தொட்டு, பத்திரி விளங்கிய வித்தகர். இத் உன்னத ஞானியைத் தமிழ் நிற்கின்றது.
விபுலானந்தர் பற்றிய கொண்டாட்டங்களோடு ம னாரின் நினைவுகள் நிறைவு மெனக் கேட்டுக்கொள்கின்
வவுனியாத் தொகுதி நூற்றாண்டு விழாச் சிற வாழ்த்துக்களைத் தெரிவித்
கல்வி, உயர் கல்வி அமைச்சு, இராஜாங்க கல்வி அமைச்சர் அலு "இசுருபாய', ழரீ ஜயவர்தனபுர ( பத்தரமுல்லை.

ம் பிரகாசித்தார். தமிழ்கூறும் ன்று செய்த சேவைகள் செப்ப அறிவியல், இசையியல், வரலாற் ற பல்வேறு துறைகளிலும் பரி அவர்கள், பாடசாலை ஆசிரி கை ஆசிரியர் பணி வரை சிறந்து ந்தகைய சிறப்புக்கள் வாய்ந்த ம்கூறும் நல்லுலகம் உவந்தேத்தி
ப பணிகள் நூற்றாண்டு விழாக் ாத்திரம் நின்றுவிடாமல் அன் ற இன்னும் செயற்படவேண்டு றேன்.
பிலே விபுலானந்த அடிகளாரின்
ப்புற எனது மனம் நிறைந்த துக்கொள்கின்றேன்.
இரா. புலேந்திரன்
கல்வி இராஜாங்க அமைச்சர்.
வலகம், கோட்டே,
ii -

Page 19
இந்து சமய, கலாசார
திரு. பி. பி. தே
மனமுவ
ஆசிய
கிழக்கு தந்த தமிழ் மூ: அடிகளாரின் நூற்றாண்டு விழ தமிழ்பேசும் மக்கள் வாழுமிடங் தனைகள் பற்றிய உணர்வும், அ செயற் திட்டங்களும் பரந்த வருகின்றமை பெருமகிழ்வு தரு வவுனியாவில் சுவாமி விபுலான யினர் வெளியிடும் நூற்றாண்டு களை அளிப்பதில் நிறைவுகொ
சுவாமி விபுலானந்தர், சமயப் பழமையைப் பேணுவதிலு ஒரு மாபுருஷர் ஆவர். காலத் வளர்ப்பதில் அவர் முன்னின் உலகம் இன்று வியந்து போ இசையின் தொன்மையை உண அரிய பொக்கிஷத்தைத் தமிழு யில் நாம் அடிகளாருக்கு என்று
இன்று அடிகளார் பற்றிய லும், தமிழகத்திலும், இலங்ை வருகின்றன. தமிழர்தம் நெஞ்: அவர்பற்றிய செய்திகளைப் ட கடமையாக மேற்கொள்ளவேண் ருக்கும் அன்னாரின் வாழ்வும், வேண்டும்.
இதன் ஒரு செயற்பா ! சுவாமி விபுலானந்தர் நூற்றா கொள்ளும் பணிகள் செழித்தே வும் மனமார வாழ்த்துகின்றே

இராஜாங்க அமைச்சர்
வராஜ் அவர்கள்
ந்த விரித்த
புரை
தறிஞர், சுவாமி விபுலானந்த ழாவினை ஒட்டி இலங்கையின் கள்தோறும், அடிகளாரின் சிந் டிகளாரின் பணிகளை விளக்கும் அளவில் மேற்கொள்ளப்பட்டு கின்றது. அதன் எதிரொலியாக ந்தர் நூற்றாண்டு விழாச் சபை விழா மலருக்கு எனது ஆசி ள்கின்றேன்.
மொழிவளத்தைக் காப்பதிலும், லும் அளப்பரும் பணிகளாற்றிய ந்துக்கு ஏற்றவாறு மொழியை று ஆற்றிய பணிகளைத் தமிழ் bறுகின்றது. அவ்வாறே தமிழ் ாணர்த்தும் "யாழ்நூல்" எனும் லகுக்குத் தந்தார் என்ற வகை றும் நன்றிக்கடன்பட்டுள்ளோம்.
ப ஆய்வுகள் பல்வேறு நாடுகளி கையிலும் மேற்கொள்ளப்பட்டு சங்களில் அடிகளார் வாழுமாறு பரப்புவதை நாம் அரியதோர் ண்டும். இளைய தலைமுறையின பணிகளும்பற்றி உணர்த்தியாக
டாக வவுனியாவில் இயங்கும் ண்டு விழாச் சபையினர் மேற் ாங்கவும், விழா மலர் சிறப்புற
பி. பி. தேவராஜ்,
இந்து சமய, கலாசார இராஜாங்க அமைச்சர்.
iii -

Page 20
வடக்கு-கிழக்கு மாகாண
விளையாட்டுத்துறை
ஜனாப். எம். ஏ. சி
மன மு வி
ஆசிச்
முத்தமிழ் வித்தகர் சுவாமி ( நிறைவு தினத்தைக் கொண்டாடு வடிக்கை மேற்கொள்ளப்பட்டுவரு மகிழ்ச்சியடைகிறோம். பாராட்டு வெளியிட்டு, ஞாபகார்த்த முத்தி மணிமண்டபம் கட்ட முயற்சி எடுத், மக்கள் முயன்றுவருவதைக் காணு
மக்கள் சேவை செய்த தொ6 கப்படுகின்ற சான்றிதழ்களுக்கு இ யத்திற்கு இவையெல்லாம் நல்லே கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் ! ஆசிரியர்களும், மாணவர்களும் ப தொண்டினை மக்களறிய பல்வேறு காணும்போது என் மனம் பூரிப்ப
அகில இலங்கை ரீதியாக ந போட்டிகள்கூட சுவாமிகளது ஞா வது தேசிய மட்டத்தில் அன்னாரது
வவுனியாக் கல்வி மாவட்டத் திரு. எஸ். நவரெத்தினராசா அவர் நந்த அடிகளுக்குப் படிவ மலரொ மேலும் பெருமைக்குரியதே. அம் பெருமைப்பட்டுக்கொள்வதில் என போது உவகை அளிக்கிறது.
தொடர்க சுவா
ந6
வடககு - கிழக்கு மாகாண கல்வி, கலாசார, விளையாட்டு அமைச்சு, திருகோணமலை.

ல்வி, கலாசார அலுவல்கள், அமைச்சின் செயலாளர்
முகைதீன் அவர்கள் ந்த விரித் த செய்தி
айыны»
விபுலாநந்த அடிகளாரது நூற்றாண்டு வதற்கு இலங்கை முழுவதும் நட வதைக் கண்டு நாம் அனைவரும் விழாக்கள் எடுத்து, நினைவு மலர்கள் ரை வெளியிட்டு, சிலைகள் எழுப்பி, து இவ்வடிகளாரைக் கெளரவப்படுத்த ம்போது பெருமைப்படுகிறோம்.
ண்டனொருவனுக்கு மக்களால் வழங் வை நல்ல சாட்சிகள். எமது சமுதா தொரு முன்மாதிரியும்கூட. வடக்கு - கீழுள்ள கல்வி அதிகாரிகளும், அதிபர், ாடசாலை மட்டத்தில் அடிகளாரது நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வருவதைக் டைகிறது. டைபெறுகின்ற தமிழ்மொழித் தினப் பகார்த்தத் தினத்திலே நடத்தப்படு து புகழை உயர்த்திக் காட்டுவதாகும். திலுள்ளவர்கள் கல்விப் பணிப்பாளர் களது தலைமையில் சுவாமி விபுலா ான்றை வெளியிட முன்வந்திருப்பது
மலருக்கு ஆசிச் செய்தி வழங்குவதில் க்கும் பங்குண்டு என்பதை நினைக்கும்
மிகளது பணிகள் ! ன்றி.
இவ்வண்ணம், அன்பூான
எம். ஏ. சீ. முகைதீன், செயலாளர்.

Page 21
கல்வி, உயர் கல்வி அமைச்சுப் பிர திரு. வெ. சபாந
ம ன மு வந்
ஆசிச் ே
கல்முனைக்கண்மையிலுள்ள
சாமித்தம்பிக்கும் பிறந்த தவப்புதல்வி மட்டக்களப்பிலும் கற்று, தமிழ்த்துை யிலும் தேறி, யாழ் மாவட்டத்திலு கற்பித்து மானிப்பாய் இந்துக் கல்லு மலை இந்துக் கல்லூரியில் அதிபராக பூண்டு சுவாமி விபுலானந்தர் என்னு நடராசரின் அருட்பார்வையிலுள்ள தின் முதலாவது தமிழ்த்துறைப் ே பெருமை சுவாமிக்கண்டு.
இந்தியாவில் சுதந்திரத்தாகம் புரட்சியும், உணர்ச்சியும் ததும்பும் யைப் பாரெங்கும் அறியச்செய்தவர் நாம் பெருமையடையவேண்டும் ஆ கல்வித் தொண்டும் அளவிலடங்கா, கல்வியூட்டி அவர்களை சமுதாயத்தி ரின் பாதையைப் பின்பற்றி பல ை களுக்கு உதவ முன்வரவேண்டும். அ யும் சிறந்த அஞ்சலியாகும். இச்சந்த களப்பு, திருகோணமலை ஏழைச் சி குறிப்பிடத்தக்கது. கெர்மும்பிலும் ( பிள்ளைகளுக்கு உதவி செய்து அவர் கூறிய எடுத்துக்காட்டுக்கள் யாமறிந் இலைமறை காய்களாக இருக்கலாம்
விஞ்ஞானத்தைக் கற்று, மெய் அடிகளார் அமரத்துவமெய்திய ஜ" அகில இலங்கைத் தமிழ்த் தின மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணசி புரை வழங்கியமை அடிகளாருக்கு
வாழ்க முத்தமிழ் வி வளர்க அவர்களின்

திக் கல்விப் பணிப்பாளர் நாயகம் ாயகம் அவர்கள்
| த விரி த் த
செய்தி
காரைதீவில், கண்ணம்மைக்கும், 1ன் மயில்வாகனம் கல்முனையிலும், றையிலும் தேறி, விஞ்ஞானத் துறை ள்ள சம்பத்திரிசியார் கல்லூரியில் ாரியில் அதிபராகவும், திருகோண வும் பணிபுரிந்தார். இவர் துறவறம் தும் நாமத்தைச் சூடினார். சிதம்பர அண்ணாமலைப் பல்கலைக் கழகத் பராசிரியராகக் கடமை யாற்றிய
வேண்டி நின்ற காலத்தில் பல
கவிதைகளை உருவாக்கிய பாரதி சுவாமி விபுலானந்தர் என்பதில் அடிகளாரின் தமிழ்த் தொண்டும், து. பல ஏழைப் பிள்ளைகளுக்குக் ல் சிறந்த சிற்பிகளாக்கினார். இவ சவப் ப்ெரியார்கள் ஏழைப் பிள்ளை துவே நாம் அடிகளாருக்குச் செய் ர்ப்பத்தில், யாழ்ப்ப்ாணம், மட்டக் மார்களுக்கு உதவும் பணியும் இங்கு வீ. ரீ. வீ. நிறுவகத்தின் 100ஏழைப் களைக் கற்கவைத்துள்ளார். மேலே தவை. இன்னும் சில நிறுவனங்கள்
ஞானத்தைப் பெற்ற விபுலானந்த லை 19ம் திகதியில் ஆண்டுதோறும் விழா கொண்டாடவேண்டுமென்று ங்க பிரேமதாசா அவர்கள் பணிப் வழங்கிய பெரும் கெளரவமாகும்.
த்தகரின் பணி. தமிழ்த் தொண்டு.
வெ. சபாநாயகம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் நாயகம், கல்வி, உயர்கல்வி அமைச்சு.

Page 22
வவுனியா அரசாங்க அதிபரு
திரு. எஸ். தில்ை
மனமு
வாழ்த்து
ஈழத்தின் கிழக்கில் விபுலாநந்த அடிகள் பிறந் சென்ற இடமெல்லாம் செ
ஆசிரியராக - அதிட முகாமையாளராக - மொழிே வாளராக - வளம்மிக்க எழு ராக - தேசப்பற்றுள்ள பேr களில் விற்பன்னராக விளங்
தமிழ்ச்சுவை சொட்( தாழம் நிறை க்ட்டுரைகள், வும் நிகழ்த்திய உரைகள், வைக்கும் மொழிபெயர்ப்புக ஞானத்தையும் வெளிப்ப யாவும் விபுலாநந்த அடிகள்
விபுலாநந்தருக்கு த பு யுடன் விழாவெடுக்கும் இச் லும் விழாவெடுத்து மலர் ஆதரவளிப்பதும் நமது பெ
விழா, இலக்கியத் திரு இலக்கிய இதயங்களில் என் ராகத் திகழவும் மனம்நிை மட்டற்ற மகிழ்ச்சியடைகின்

ம், மாவட்ட ஆணையாளருமான
லநடராசா அவர்கள்
வந்தளித்த
துச் செய்தி
உதித்த முத்தமிழ் வித்தகர் த பொன்னாட்டில் மட்டுமன்றி ல்வாக்கோடு வாழ்ந்தவர்.
ராக - கல்வி நிறுவனங்களின் பெயர்ப்பாளராக - சொற்பொழி ழத்தாளராக - ஆராய்ச்சியாள ாராளியாக - பல்வேறு துறை கியவர் விபுலாநந்தர்
நிம் இனிய கவிதைகள், கருத் கேட்டின்புறவும், படித்து மகிழ அசலா நகலா" எனப் பிரமிக்க ள், விஞ்ஞானத்தையும், கலை டுத்தும் "யாழ்நூல் - இவை
எமக்கு,வழங்கிய செல்வங்கள்.
மிழ் கூறும் நல்லுலகம் நன்றி சந்தர்ப்பத்தில் வன்னிமாநகரி வெளியிடுவதை வரவேற்பதும், ரும் கடமையாகும்.
விழாவாகச் சிறப்புறவும், மலர் றென்றும் மாறா மணமிகு மல ற வாழ்த்தை வழங்குவதில் றேன்.
எஸ். தில்லைநடராசா, அரசாங்க அதிப்ரும், மாவட்ட ஆணையாளரும், வவுனியா.
i ensae

Page 23
வவுனியா பிரதேசக் திரு. சி. நவரத்தி
மனமுவர்
வாழ்த்து
இருபதாம் நூற்றாண்டின் முற் தமிழுக்கும் தொண்டாற்றிய பெரிய மேலைத் தேசத்தார் வருகையால் குறிப்பாகக் கரையோரங்களிலே நவி பட்டது. அப்படியான இடங்களில் களும் அடங்கும். இங்கு அடிகளா அதன் பயனாக கல்விக்குத் தொண்
ஒல்கொற், நாவலர் கல்வியி போன்று, சுவாமிகள் கல்வியில் ஈ( சேவையினால் யாழ்ப்பாணம், திருட பாடசாலைகளில் சிறப்பான பணிய டினை ஏற்படுத்தினார். இராமகிரு யான ஒரு இடத்தைப் பெற்றபொ தனது பணியினைச் சிறப்பாகச் കെ
அவர் எழுதிய யாழ்நூல், ம அவர் பெற்ற கல்வியின்ாற்றான் எ அறிவும், ஆங்கில இலக்கியத்தில் ஈ அடிகளார் எழுதியிருக்க முடியாது.
சுவாமியின் திறமையினால் ட ஆரம்பித்து பல்கலைக்கழகப் பேர அடைந்தார். அதனால் ஓர் புதிய மா
தமிழ் கூறும் நல்லுலகம் அவ செய்த பணியினை நினைவுகூர்ந்து தாக அமைவதற்கு என் நல்லாசிக

கல்விப் பணிப்பாளர்
ன ராசா அவர்கள்
தளித்த
ச் செய்தி
பகுதியில் இலங்கையிலே கல்விக்கும், பார் சுவாமி விபுலாநந்தர் ஆகும். இலங்கையின் பல பாகங்களில், 'ன பாடசாலைமுறை ஆரம்பிக்கப் கல்முனை, மட்டுநகர் ஆகிய இடங் ார் கல்வி கற்க வாய்ப்புப்பெற்று டாற்றும் நிலையினை அடைந்தார்.
ல் புது மலர்ச்சியை ஏற்படுத்தியது டுபட விருப்புக்கொண்டார். அவர் மலை, மட்டுநகர் ஆகிய இடங்களில் ாற்றி கல்வியில் பெரும் ஈடுபாட் ஷ்ண மிஷன் இலங்கையில் நிலை ழுது அதில் துறவியாகச் சேர்ந்து Fய்தார்.
தங்க சூளாமணி போன்ற நூல்களும் ான்றால் மிகையாகாது. விஞ்ஞான டுபாடும் இல்லாமல் இந்நூல்களை
மாணவ ஆசிரியனாக வாழ்க்கையை ாசிரியராக ஓர் உச்ச நிலையினை ணவர் பரம்பரையும் தோன்றியது.
பரது பிறந்த நூற்றாண்டிலே அவர் வெளியிடும் இம்மலர் பயனுள்ள
சி. நவரத்தினராசா, பிரதேசக் கல்விப் LUGraflůLumrart, Gavayefunf.
ii -

Page 24
மட்ட சுவாமி விபுலாநந்தர் நூற்ற
திரு. க. தியா
மனமு:
வாழத்து
விபுலாநந்த அடிகளாரது வவுனியா சுவாமி விபுலாநந்தர் நு பிடும் ஞாபகார்த்த மலருக்கு இந் மகிழ்ச்சி அடைகின்றேன். ஈழத் மாவட்ட மண்ணில் தனக்குவமை அடிகளாருக்கு விழாக்காணும் முய களம் முன்னிற்பதைப் பாராட்டுகி
*இமயத்தலையின் தமிழ் மு மைக் கபிலன். கலியுக தெய்வ வரைக் கொடிகட்டும் இசைத்த பெருமக்களால் பாராட்டப்பெற்றவ நல்லுலகிற்கு அளித்த பெருமை நீ ஆண்டுகள், சாதித்தவையோ பலட் யர்த பலவற்றைச் சாதித்த பெரு
பொனல் அடிகளார் போன்ற ஒரு தலைசிறந்த மாணாக்கராக, ராக, இராமகிருஷ்ண சங்கப்பாட நாட்டிலும், ஈழத்திலும் முதற்தமி ரியராக, அரிய நூல்களின் ஆசிரியர் ஆய்வாளராக, மாணவ இல்லங்கவி யாளராக, பூg இராமகிருஷ்ண சங் துறவியாக, ஈழம் கண்ட தலைசிற யுள்ளார். மேற்கூறிய எத்துறை துறைகளில் பல அரிய சாதனைகள் என்பதையே நாம் அறியக்கூடியத
இலக்கியத் துறையினைப் நாடகத் துறைகளில் அடிகளாருக் அறிவாற்றலும், ஆய்யுத்திறனும், கலைத்துறையினைப் பொறுத்தவ6 துறையிலும் அடிகளாருக்கிருந்த ஆ உலகறிந்தவை. அவரது உள்ளம் சூளாமணியும் இவரது கலையுள்ளத் சேவைக்குத் தனது வாழ்வினைே

க்களப்பு ண்டு விழாச் சபைத் தலைவர்
கராசா அவர்கள்
பந்தளித்த ச் செய்தி
dhammar
நூற்றாண்டு விழாவினையொட்டி ாற்றாண்டு விழாச் சபையினர் வெளி த ஆசியுரையினை வழங்குவதில் பெரு தமிழர்தம் வீரம் விளைந்த வன்னி யில்லா. தமிழியலாளனாக வாழ்ந்த ற்சியில் வவுனியா கல்வித் திணைக் ன்றேன்.
த்திரைவரை ஈழக் கரிகாலன். lgbt அகத்தியன். ஈழமுதற் பணி இமயம் மிழன்." என்றெல்லாம் புலவர் பர் அடிகளார். எமது நாடு தமிழ்கூறும் நிதியம். இவர் வாழ்ந்த காலமோ 55 பல. மற்றயோரால் சாதிக்க முடி மை அடிகளாருடையது.
) ஆசிரியர்களினால் பாராட்டப்பட்ட பின்னர் சிறந்த ஆசிரியராக, அதிப Fாலைகளின் முகாமையாளராக, தமிழ் ழ்ப் பேராசிரியராக, பத்திரிகை ஆசி ாக, எழுத்தாளராக, பேச்சாளராக, fன் பொறுப்பாளராக, சமூக சேவை கத்தின் நிழல் சார்ந்த ஈழத்தின் முதல் ந்த கல்வியாளராக அடிகளார் விளங்கி யை எடுத்து நோக்கினும் அவ்வத் ளை அன்னார் நிலைநாட்டியுள்ளார் "கவுள்ளது.
பொறுத்தவரையில் இயல், இசை, கிருந்த நாட்டமும், சிறந்த புலமையும், எம்மைத் திகைக்க வைக்கின்றன. ரயில் இசைக் கலையிலும், நாட்கத் ;ழ்ந்து-அகன்ற அறிவும், இணைவும் கலை, உள்ளம். யாழ்நூலும், மதங்க திற்குச் சிறந்த சான்றுகள், மனிதகுல அர்ப்பணித்து துறவறம் பூண்ட்
iii -

Page 25
அடிகளாரது பணிகள் சமயத்துறை சிறப்பு வாய்ந்தவையாக அமைந்துள் ஒப்பாரும் மிக்காரும் இல்லையென் கல்விச் சிறப்பும், தெளிவான, யதா களும், பாடசாலைகளை ஆரம்பித்து கழகப் பேராசிரியராகவிருந்து செயற் பாடுகள் வரலாற்றுச் சிறப்புமிக்கை செயற்பாடுகளின் பயனாக ஈழத்தில் வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றம் பே இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு சிவா வைத்தீஸ்வரா வித்தியாலயம் போல கள் அடிகளாரது கல்விப் பணிக்கு கல்விப் பணியின் பல கிழக்கிலங்கையி என்று கூறவேண்டும்.
அடிகளாரது சிந்தனையில் தெ படுத்தும் துடிப்பு இருந்தது.இராம வறமும் அடிகளாரது முயற்சிகளுக்கு வாதத்தினையும் வழங்கின. அடிக எமக்கு கிடைத்துவிட்ட பேறுகள் ட
இன்று தமிழ்கூறும் நல்லுலக றாண்டு விழாவெடுத்து அஞ்சலிசெலு புணர்ச்சியினைக் காணமுடிகின்றது. வினை, ஒசையினை உணரமுடிகின்ற மாக வெளிக்கொணரப்படவில்லை.
அடிகளார் ஓர் தத்துவஞானி தமிழியலாளன். அவர் மனிதநேயம் நூற்றாண்டு. அவரை நினைவுகூர அவரது மதிப்பார்ந்த பெருமைகலை வெளிப்படுத்தவும் தக்கதோர் சந்த இத்துறையில் வவுனியா விபுலாநந்த பெருமுயற்சி கண்டு நாம் உவகை றோம். உங்கள் நற்பணிகள் தொ நிற்கின்றோம்.
மட்டக்களப்பு. 1992-06-19.
- ix

பிலும், சமூகத்துறையிலும் தனிச் rளன. கல்வித் துறையில் அவருக்கு rறே கொள்ளவேண்டும். அவரது ர்த்தபூர்வமான கல்விச் சிந்தனை நடாத்தியது முதல் பல்கலைக் பட்டதுவரையுமான அவரது செயற் வ. அன்னாரது கல்விச் சிந்தனை, குறிப்பாக கிழக்கிலங்கையின் கல்வி ாற்றுவதற்குரியது. திருகோணமலை நந்த வித்தியாலயம், யாழ்ப்பாணம் ன்ற இன்னோரன்ன வித்தியாலயங் தக்க சான்றுகள். அடிகளாரது ல் ஒரு சமூகப்புரட்சியே ஏற்பட்டது
1ளிவிருந்தது-உறுதியிருந்தது-சொற் கிருஷ்ண சங்கத் தொடர்பும், துற த ஆத்மீக பலத்தினையும், ஆசீர் ளாரது சிந்தனைகளின் பயனாக 1லப்பல.
ம் விபுலாநந்த அடிகளாருக்கு நூற் அத்துகின்றது. யாங்கனும் ஒரு விழிப் விபுலாநந்த அலையினை, அசை து. அடிகளாரது சிறப்புக்கள் பூரண வெளிக்கொணரப்படவேண்டும். .
, இசையறிஞன், கல்வியியலாளன், மிக்க மாமனிதன். இது அவரது வும், மதிப்பளிக்கவும், பயிலவும் ா தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ர்ப்பம் எமக்குக் கிடைத்துள்ளது. ர் நூற்றாண்டு விழாச் சபையினரின்
அடைகின்றோம். பாராட்டுகின் டர இறைவனைப் பிரார்த்தித்து
அன்புள்ள,
க. தியாகராசா,
தலைவர், விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை,

Page 26
சுவாமி ஜீவன
மனமுை
ஆசிச்
உலக வரலாற்றில், ஒவ்வொரு காலத்தின் தேவைக்கேற்ப மகான் தற்குமே வழிகாட்டிகளாக வாழ்ந்
பாரதநாட்டில் இந்து தர்ம மறக்கப்பட்டிருந்தபோது ஒரு பூரீ இந்து தர்மத்தின் உண்மைத் தத் போற்றும் வகை செய்தார். அவர் ( சங்கம் ஆல்போல் தழைத்து, அ கிளை பரப்பி உலக மக்களிடையே க தையும் போதித்து வருகிறது. ஒன் உண்மையையும், அவனை அடைய துமே சமத்துவம் என்ற உண்மை6 உணர்த்தி நிற்கிறது.
“மரம் பழுத்தால் வெ6 இரந்தழைப்பா எனவே, ராமகிருஷ்ண சங்க வேறு சமய மக்களும் இன, மத ே இலகுவாக ஈர்க்கப்படுகின்றனர். இன்னும் சிறந்த கிறிஸ்தவனாக g லிமாக இருந்தால் இன்னும் சிறந் நீ ஒரு பெளத்தனாக இருந்தால் இ முயற்சி செய் என்று கூறுகிறது ! சமயத்தவர்கள் புனிதமானது என் நீ தலை வணங்கு' என்பது பகவா இத்தகைய உன்னதமான கோட் பூரீ ராமகிருஷ்ண சங்கத்தின் கில பரந்திருக்கின்றன. இத்தகைய g முதற் துறவியாக உருவெடுத்தவர் கானந்தர்மூலம் பாரதத்தில் எத்த சமூக மறுமலர்ச்சியும் ஏற்பட்டதோ ணர்வும், சமூக மறுமலர்ச்சியும் ஈழ களில் ஒருவராக சுவாமி விபுலாநந்த்
இது விபுலாநந்தர் நூற்றான ஆகும். விபுலாநந்தர் பெயரால் ஈழ நடைபெறும் சமய, சமூக ԼDԱյ1ւD601 போது, இது விபுலாநந்த யுகம் எ எண்ணத் தோன்றுகிறது. ஈழத்திலு விபுலாநந்த நூற்றாண்டு விழாச் ஒருமைப்பாட்டுச் செய்தியை இன்ை

ானந்த அவர்கள் ாந்தளித்த
செய்தி
நாட்டிலும், ஒவ்வொரு சமூகத்திலும் கள் அவதரித்து, மனிதகுலம் முழுவ து வந்துள்ளதை நாம் அறிகிறோம்.
தின் மகத்துவமும், மகோன்னதமும் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் தோன்றி துவத்தை உலக மக்களே உணர்ந்து பெயரால் உருவாகிய பூரீ ராமகிருஷ்ண றுகுபோல் வேரூன்றி, உலகமெலாம் மய சமரசத்தையும், சகோதரத்துவத் ாறே குலம்; ஒருவனே தேவன் என்ற வழிகாட்டும் சமயங்கள் அனைத் யையும் இந்நிறுவனம் உலக மக்களுக்கு
ாவாலை வாவென்று கூவி ர் யாருமில்லை "
த்தின் பொதுமையை உணர்ந்த பல் வேற்றுமை கடந்த இச்சங்கத்தின்பால் நீ ஒரு கிறிஸ்தவனாக இருந்தால் இருக்க முயற்சி செய். நீ ஒரு முஸ் த முஸ்லிமாக இருக்க முயற்சி செய். இன்னும் சிறந்த பெளத்தனாக இருக்க gரீ ராமகிருஷ்ண தத்துவம். " மற்ற று எதைக் கருதுகிறார்களோ அதற்கு ன் பூரீ ராமகிருஷ்ணரின் போதனை. பாட்டின் அடிப்படையில் அமைந்த ளைகள் உலக நாடுகள் முழுவதிலும் ஒரு நிறுவனத்திலிருந்து, ஈழத்தின் சுவாமி விபுலாநந்தர். சுவாமி விவே கைய ஒரு ஆத்மீக விழிப்புணர்வும், ா, அத்தகைய ஒரு ஆத்மிக விழிப்பு pத்தில் ஏற்படுவதற்கு மூலகாரணர் ர் இருந்தார் என்றால் மிகையாகாது. ண்டு மட்டுமல்ல, விபுலாநந்த யுகமும் pத்திலும், கடல் கடந்த நாடுகளிலும் ர்ச்சி நடவடிக்கைகளைப் பார்க்கும் ன்று கூறுவதில் தவறில்லை என்றே லும் பல பாகங்களிலும் ஏற்பட்டுள்ள
சபைகள், விபுலாநந்த ஆன்ம நேய றய தலைமுறையினர் இதயங்களிலும்,
X -

Page 27
எதிர்காலச் சந்ததியினரின் இதயங்க வைக்கும் பணியைச் செய்து வருகில் விலும் விபுலாநந்தர் விழா இடம்பெறு மிகவும் மகிழ்ச்சிக்கும், பாராட்டுக்கு மக்களின் தமிழ்ப் பற்றும், சமயப் பற கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியி நூற்றாண்டுவிழாக் கொண்டாடுவது துக்காட்டாகிறது. வவுனியாவில் ந விழா மலரும் அத்தோடு நின்றுவிட படிக்கற்களாக அமைய வேண்டும் 6 விழாச் சபை ஒரு நல்ல செயல்திட்ட காலங்களில் தொடர்ந்து செயற்படு
சுவாமி விபுலாநந்தர் தாம் சோதனைகளுக்கு மத்தியில் தனது டனர் என்பதை நாம் எண்ணிப்ப விடவா இன்று சோதனைகள் அ வவுனியா மக்கள் அவர் வாழ்ந்த சு களையும் நினைவில் கொண்டு இன் சமய, சமூகப் பணிகளை ஆற்ற முன்
'எண்ணிய எண்ணியாங்கு 6 திண்ணியராகப் பெறின்' என்பது வள்ளுவர் கூற்று. எண்ணி எதிர்ப்புகளையும் முகம் கொடுத்து களை எண்ணியவாறு நிறைவேற்று விபுலாநந்தரின் வாழ்க்கையே இக்கூ அமைந்துவிடுகிறது. விழாக்கள், ம சாதனைக்கு நம்மை இட்டுச் செல்ல றால் பூரணமான பலன் ஏற்பட்ட விபுலாநந்த இலக்கிய மாலையில் மற் இம்மலர் வாடா மலராக மணம் வி
மட்டுநகர் புரிந்த மாதவத் எட்டுத் திக்கும் எழில்பரப் ஈழத்தின் பெருமையை இட தாழாமல் ஈட்டித் தனிப்ெ பாலை நிலங்களிற் பள்ளிக சாலைகள் தோறும் சால்பி சாதிமதச் சமுக்குகளைச் ச மோதி மிதிக்கவந்த மொய்
இராமகிருஷ்ண மிஷன், (இலங்கைக் கிளை), இராமகிருஷ்ணபுரம், மட்டக்களப்பு, இலங்கை.

ளிலும் கல்மேல் எழுத்தாகப் பதித்து ண்றன. அந்த வகையில் வவுனியா வதும், நினைவுமலர் வெளிவருவதும் தமுரிய சங்கதிகளாகும். வவுனியா ற்றும் நாடறிந்தவை. இன்றைய இக் லும் வவுனியா மக்கள் விபுலாநந்தர் அவர்களது தமிழ்ப் பற்றுக்கு எடுத் டைபெறும் விபுலாநந்தர் விழாவும், ாது, வவுனியாவின் எதிர்காலத்தின் ான விரும்புகிறேன். இதற்காக இவ் த்தை வகுத்து அதன்படி இனி வரும் வது பயனுடையது.
வாழ்ந்த காலத்தில் எத்தகைய சமய, சமூகப்பணிகளை மேற்கொண் ார்க்க வேண்டும். அவர் காலத்தை திகரித்துள்ளன? இல்லை எனவே காலத்தையும், அவர் ஆற்றிய பணி று மக்களுக்கு அதைவிடச் சிறந்த * வரவேண்டும்.
rய்துவர் எண்ணியர்
யர் திண்ணியரானால் எத்தகைய வெற்றி காணலாம். எண்ணிய பணி ம் ஆற்றலைப் பெறலாம். சுவாமி ற்றுக்கு ஏற்றதொரு உதாரணமாக லர்கள் யாவும் இத்தகைய காரிய 0 வேண்டும். இல்லையெனில் அவற் டதாக நாம் கொள்ள முடியாது. றொரு மலராகச் சேர்ந்துகொள்ளும்
ச வாழ்த்துகிறேன்.
தின் பேறாக பத் தோன்றியவர் மயத்தின் உச்சிவரை பருமை கூட்டியவர்
at 9566 st னைப் பரப்பியவர் :ால்பொவ்வாக் கொடுமைகளை புமுடைய செம்மல்
சுவாமி ஜீவனானந்த

Page 28
நூழைவாயிலில்
முத்தமிழ் வித்தகர், விபுலானந்தர், ஈழத்திருநா மட்டக்களப்புக் காரைதீவி ஓடி மறைந்துவிட்டது.
அறிவாளியாக, ஆ ஆசிரியராக, எழுத்தாளர பேச்சாளராக, கவிஞரா துறவியாக எனப் பல்வேறு வாழ்ந்து வழிகாட்டிச் செ பணிகள் கணக்கிடப்படுகின்
இவ்வேளையில் சுவ பல மதிப்பீடுகளும், உரைக் தொடங்கியிருக்கின்றன. அ லிருந்து, வவுனியா கல்வி முயற்சியினால் இம்மலர் ெ
இம்மலர் "வள்ளல் ராக" இருக்குமோ இல்லை ஆனால் இம்மலரின் இதழ் தின்" இதழ்கள் என்பதால் களை அலங்கரிக்கும் அரு என்று நம்பித் தூவுகிறோம்
இம்மலரிதழ்கள், பல் களின் பணிகளை அலசி 一罢 விதழ்களாகத் தொகுக்கப்ப
ஆக்கங்கள் அனைத்தி அவர்களுக்கு எம் நன்றிகை நுழைவாயிலில் நிற்கும் உங் அழைத்துச்செல்கிறோம்.
ந6

)... a O o
LSLMSSSkLSSSGLS
முதுதமிழ்ப் புலவர், சுவாமி ட்டின் கிழக்கு மாகாணத்தில், ல் அவதரித்து நூறாண்டுகள்
ராய்ச்சியாளராக, பத்திரிகை ாக, மொழிபெயர்ப்பாளராக, க, சமூக சீர்திருத்தவாதியாக, பட்ட வகைகளில் வாழ்வாங்கு ன்ற சுவாமி விபுலானந்தரின் றன; கணிப்பிடப்பெறுகின்றன.
ாமியவர்களின் பணிகள்பற்றிப் 5ளும், நூல்களும் வெளிவரத் 1ந்தவகையிலே வவுனியா நகரி த் திணைக்களத்தின் அயராத வளிவருகிறது.
அடி இணைக்கு வாய்த்த மல பயோ என்பதை நாமறியோம். கள் எல்லாம் 'உள்ளக் கமலத்
அவை உத்தமனாரின் பாதங் கதையுடையனவாக இருக்கும் Da.
vவேறு வகையில் சுவாமியவர் ராய்ந்து முடிவு காணும் ஆய் ட்டிருக்கின்றன.
ற்கும் ஆக்கியோரே பொறுப்பு. ள். நூல் நயம் கண்டு மகிழ களை மகிழ்ச்சியோடு உள்ளே
ன்றி.
இங்ங்ணம், 母°。 அருளானந்தம், நா. தர்மராஜா மலராசிரியர் குழு.
kii

Page 29
-- சுவாமி விபுல் விழா6ெ
- பேராசிரியர் சி.
பல்வேறு துறைகளிலே பொதுநலப் பணியாற்றியதன் விளைவாகத் தம் நினைவினை நிலைபேறுடைத்தாக்கிய சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டுகளுக்கு முன் இத்தேசத்திலே தோன்றியவர். ஐம் ப்த்தைந்து ஆண்டுகளே உயிர் வாழ்ந்து அரும்பணிகள் பலவற்றுக்குத் தம்மை அர்ப்பணித்த சுவாமி விபுலாநந்தரைப் பற்றி எண்ணும்போது, அவரது மதிப் புக்குரிய மகாகவி சுப்பிரமணிய பாரதி யாரைப்பற்றிச் சுவாமியின் நட்புக்குரிய முதுதமிழ்ப் புலவர் மு:நல்லதம்பி பாடிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.
'lumps யென்றொரு தாமரை பூத்தது பாரத நாடெனும் வாவியிலே - அதன் சீரித ழாயிரஞ் செங்கதிர் போலொளி செய்து விளங்குது பூமியிலே"
என்பதுவே அக்கவிதையாகும். பாரத நாட்டிலே, தோன்றிய பாரதியின் பிர காசம் பாரெங்கும் பரவி விளங்கியதென் பது அதன் பொருளாகும். அதுபோலவே, சுவாமி விபுலாநந்தரும் இலங்கையிலே தோன்றினாரெனினும் அவரது புகழ் தமிழ் கூறு நல்லுலகெங்கணும் 'அதற்கு வெளியேயும் பரவிற்று. தமது மொழி யிலும்,சமயத்திலும் பண்பாட்டிலும் ஆழ மான ஆர்வம் கொண்டவராயினும் சுவாமி விபுலாநந்தர் "கூட்டி மானிட ஜாதியை ஒன்றெனக்கொண்டு தன் பணியினை விசாலமாக விரித்துக்கொண் LITrif.
வறுமையிலும்,அறியாமையிலும், அடி மைத் துயரிலும் மூழ்கிக்கிடந்தவர்களி டத்து இளம் பிராயமுதற் பரிவுகொண்ட கவாமி விபுலாநந்தர் அம்மக்களை ஈடேற் றிக் கரைசேர்க்க விரதம் பூண்டார்.
ཡག་ལ་ཁང་པ་ t

லாநந்தருக்குவடுத்தல்
தில்லைநாதன் -
பரந்த மானிடம் பயன்பட வாழ்ந்த அவருடைய சிறப்பு இன்று பொது மக் களின் போற்றுதலுக்குரியதாகிவிட்டது. தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்துக் கொண்டு, சொத்து சுகம் போன்றவற் றைச் சேகரித்து அவர்தம் வாழ்வைக் கழித்தாரல்லர். "யாதும் ஊரே யாவருங் கேளிர்" எனக்கொண்டு "எல்லோரும் இன் புற்றிருக்க வேண்டி வலியமுயற்சிகளை மேற்கொண்ட அவர் தமக்கென வாழ்ந் தாரல்லர். ஒடுங்கிய சாதி, மத, இன, பிரதேச பேதங்களைக் கடந்தது அவரது штrѓcoа/.
"தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்" என்பது திருக்குறள், சுவாமி விபுலாநந் தர் விட்டுச் சென்ற எச்சங்கள் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், ஊரவர், நாட்டவருக்கு மட்டும் நலம் பயப்பனவாய் அமையவில்லை. அவை எல்லாருக்கும் ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றும், அளிப்பனவாகவும் பயன் விளைப்பனவாகவும் விளங்குகின் றன. பலரும் அவரது பெருமைகளுக்கு உரிமைகோர விழைவதை அவதானிக் கின்றோம்.
சுதந்திரத்தையும்,சமத்துவத்தையும், சமாதானத்தையும் தேடுபவர்களுக்கு அவ ரது சமூக சேவைகள் வழிகாட்டுவன வாக உள்ளன. அறியாமை என்ற இரு ளினை ஒழித்து அறிவொளிபரப்ப முனை வோருக்கு அவரது கல்விப் பணிகள் கலங் கரை விளக்க்ங்கள்போல் தோன்றுகின் நன. மனித சமுதாயத்தின் உயர்வு கரு திய சமயப்பணி மேற்கொள்ள எண்ணு பவர்களுக்கு அவரது சமயப் பணிகள் எடுத்துக்காட்டுக்களாக விளங்குகின்றன.

Page 30
இயற்றமிழ் வளர்ச்சியை ஆய்வோர்க்கு அவர் கைகொடுக்கிறார். . இச்ைத்தமிழ் வரலாற்று வழியில் அவர் துலாம்பர மாகவும்,துணையாகவும் தோன்றுகிறார். நாடகத்தமிழ் வரலாற்றிலும் அவர் இடம் பெறுகிறார். தமிழ் மக்கள் தம் வர லாற்றையும், பண்பாட்டையும் விண்டு காண விரும்புமிடத்து அவர் துணைவ ராகிறார். ஒரு பல்கலைக்கழகம் எத் தகைய பயன்தரும், அது எவ்வாறு அமையவேண்டும் என்பவை குறித்தோ, தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் எவ்வாறு செயற்படவேண்டும் என்பதுபற்றியோ அறியவிரும்புமிடத்து அவர் ஆலோசன்ை வழங்குபவராகவும், முன்னுதாரணமாக வும் விளங்குவதைக் காணலாம்.
அவதார புருஷரைப்பற்றிய சுவாமி விபுலாநந்தரின் செய்யுள் அவரது உள் ளக்கிடக்கையைக் காட்டுவதாய் அமைந் ඊශ්‍රීl •
“மருங்காகப் பலமரங்க ளொருங்கு
பிணைத் தமைத்ததெப்ப மரபி னாலே இரும்பார மிகத் தாங்கி நூற்றுவரைத்
தன்மேற்கொண் டெளிதாய்ச்
செல்லும்; கருங்காகப் பொறைசுமவாச் சிறுதுணிநீ ரமிழ்ந்திடுமால்:கடவுண் முன்னோர் வருந்தாது பலருக்குங் கதியளிப்பார்:
தமைக்காக்க வல்லார் சித்தர்."
சுயநலமோ, சொந்த ஈடேற்றமோ கருதி முயன்றவர்களை அவர் மதிக்க வில்லை. பலருக்குப் பயன்படும், பல ரைக் கரைசேர்க்கும், பலருக்கும் கதி யளிக்கும் செயல்களையே அவர் போற்றி னார். எனவே, அத்தகைய செயல்களை மேற்கொண்டார். அவரைப் பொறுத்த வரை சொல்லுக்கும் செயலுக்குமிடையே முரண்பாடு காண்பதற்கில்லை.
பிறர்க்குரியாளனாய்ப் பயன் பட வாழ்ந்த விபுலாநந்தரின் வாழ்வினையும், பணிகளையும் நோக்குவதும், போற்று வதும், பொதுநலப் பணிகளுக்கு உற் சாகமளிப்பதாகவும், மேனிலையெய்தற்கு ஏற்றுவழிகான உதவுவதாகவும் அமை யும். அந்தக் காரணத்தினால் அவருக்கு

விழாவெடுப்பதென்பது பயனுள்ள காரி யம் அவ்வாறன்றி, அவர்தம் புகழ் பறி போய்விடாது காத்திடுவோம் யாமே என யாராவது எண்ணுவராயின், அது நகைப்புக்கிடமானதாகும். ஏனெனில், சுவாமி விபுலாநந்தரின் பெருமையானது முண்டுகொடுத்துக் காப்பாற்றப்பட வேண்டிய நிலையில் இல்லை.
சுவாமி விபுலாநந்தருக்கு அவர் பிறந்த மட்டுநகரிலும், யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை முதலான இடங்களிலும் விழாக்கள் எடுக்கப்படு கின்றன. இந்து சமய கலாசார அலு வல்கள் அமைச்சும் நடவடிக்கை எடுக் கிறது. வவுனியாப் பிரதேசக் கல்வித் திணைக்களம் அவ்விழாவினை விமரிசை யாகக் கொண்டாடவுள்ளது. நினைவு மலர்கள் வெளியிடவும், கருத்தரங்குகள், கூட்டங்கள் முதலான பல்வேறு நிகழ்ச்சி களை நாட்டின் பல பாகங்களிலும் நடாத் த வும் பெருமக்கள் முன்வந்திருப்பது மகிழ்ச்சி தருவதாகும். தமிழகத்திலும், அவர் முதலாவது தமிழ்ப் பேராசிரிய ராக விளங்கிய அண்ணாமலைப் பல் கலைக் கழகத்திலும் ஏன் விழா எடுக்கப் படவில்லை என்ற வினா அவரது பெரு மையைக் காட்டும் வகையில் எழுந்து நிற்கின்றது. "உங்களுக்கு ஏன் சிலை நிறுவப்படவில்லை?" என்று யாரோ தத்துவ ஞானியான- சோக்கிறற்றீசிடம் ஒரு தடவை கேட்டார்களாம். அதற்கு அவர், “சிலையொன்று நிறுவப்பட்ட பின்னர் யாராவது அதைக் காட்டி "இது யாருடைய சிலை?" என்று கேட்பதைக் காட்டிலும் "ஏன் சோக்கிறற்றீசுக்குச் சிலை எடுக்கப்படவில்லை?" என்று கேட் கப்படுவது பெருமைக்கு உரியதாகும்" என்று பதில் அளித்தாராம்.
பெரியோர் நினைவுக் கொண்டாட் டங்களைச் சிலர் தம் பெருமை காட்டு வதைக் குறியாகக்கொண்டு ஒழுங்கு செய்வதும் உண்டு. அவ்வாறான பேராசை மனஸ்தர்பங்களுக்கும் வழிவகுக்கக்கூடும் s பெரியோர்மீது கொண்ட ஈடுபாடு அவர் கள் கருத்துக்களையும், இலட்சியங்களை யும் முன்னெடுப்பதாய் அமைவது சால வும் நன்று.
2 -

Page 31
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்
அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளை நட்ாத்திய மட்டக்
களப்பு மகாநாட்டில் பேராசிரியர் சு.
வித்தியானந்தன் நாவலர் இருவர் - ஒப்பாய்வு" என்ற தலைப்பில் ஆறுமுக
நாவலர், சுவாமி விபுலாநந்தர் ஆகியோ
ரது பணிகளை ஒப்பிட்டு ஒரு கட்டுரை வாசித்தார். தொடர்ந்து இடம்பெற்ற
கலந்துரையாடலின்போது, " உங்களு
டைய நாவலர் எங்களுடைய விபுலா
நந்தர்' என்ற முறையிலும் ஒரு சிலர்
பேசத்தலைப்பட்டனர். அங்கு அதிகமாக
எடுபடாதுபோன அப்பேச்சுக்கு இங்கு
முக்கியத் துவம் தரப்படவேண்டிய
தில்லை. ஆனால், சாதி, மத, இன, பிர தேச உணர்வுகளைத் தூண்டிச் சாதா
ரண மக்களின் பலவீனங்களைச் சுய
லாபத்துக்குப் பயன்படுத்தும் போட்டி அரசியலுடன் பழக்கப்பட்ட ஒரு நிலை. இல்லாமலில்லை. அந்நிலையில் சுய
வெற்றியோ. புகழோ, விளம்பரமோ
வேண்டுவோரும் விழாக்கள் எடுக்கும் முயற்சியில் இறங்கலாம். ப்ெரியோரிடத்
தும் அவர்தம் பொதுப்பணிகளிலும் உண்மையான ஈடுபாடு உடையவர்கள்
அதற்கேற்றவாறு நடந்து கொள்வது
நன்று.
திறந்த உள்ளமும், விரிந்த பார்வை
யும்,உயர்ந்த நோக்சமும்,தாராள சிந்தை யும் கொண்ட சுவாமி விபுலாநந்தரின் நினைவு குறுகிய பார்வைகளையும், குரோத நோக்கங்களையும், விரோத உணர்வுகளையும் புறங்காண உதவக் கூடியதாகும். ஆயினும், அவர் பிறந்த தேதி குறித்த சர்ச்சைகள் நடைபெறும் விதமும், தொனியும் துரதிர்ஷ்டவசமான வையாகவே தோன்றுகின்றன.
அவர் பிறந்தது 1892ஆம் ஆண்டில் என்பது யாவராலும் ஏற்றுக்கொள்ளப் படுவது. அவ்வாண்டில் அவர் தோன்றி பது மார்ச் மாதம் 29ஆம் நாளா, 26ஆம் நாளா, 27ஆம் நாளா என்ற கேள்வி நூற்றாண்டைச் சிறப்ப்ாகக்கொண்டாட வென்று அமைக்கப்பட்ட மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்த்ர் நூற்றாண்டுவிழாச் சபைமுன் எழுந்தது. நூற்றாண்டு விழாக்
3 سی۔

கொண்டாடப்படும் வேளையில் பிறந்த நாள் எதுவென்ற மயக்கத்தைத் தீர்த்து வைத்தல் தக்கதெனக் கருதப்பட்டதால், கொழும்பிலுள்ள பதிவுக்காரியகர்த்தர் காரியாலயத்துக்குச் சென்று பிறப்புச் சாட்சிப் பத்திரம் பெற முயன்றனர். அங்கு தேடிக் காண முடியாத நிலையில் எமது பல்கலைக்கழகத்திலுள்ள பதிவேடு கள், கோவைகளில் தேடிப்பார்க்குமாறு சென்ற ஆகஸ்டில் வித்துவான் சா. இ. கமலநாதன் எனக்கு ஒரு கடிதம் எழுதி னார். சுவாமி விபுலாநந்தர் இலங்கைப் பல்க்லைக்கழகத்தின் முதலாவது தமிழ்ப் பேராசிரியராக 1948 முதல் மறையும் வரை பணியாற்றியவர்.
அவர் பிறந்தது மார்ச் 29ஆம் நாளில் என்று நீ. கந்தசாமி அவர்களும், க. வெள்ளைவாரணன் அவர்களும் கூறி யுள்ளமையை அறிந்திருந்தபோதிலும், அது குறித்த ஐயம் எழுந்துவிட்டமை யால், ஐயத்தைத் தீர்த்து உண்மையினை ஆதாரபூர்வமாக நிலைநாட்டவேண்டு மென்ற நண்பர் கமலநாதனின் ஆர்வத் தைப் புரிந்துகொண்டு பலவாறு முயன் றும் பேராதனையில் ஒரு தகவலையும் பெறமுடியவில்லை. கொழும்புப் பல் கலைக்கழகத்தில் விசாரித்தும் ப யன் கிடைக்கவில்லை. பின்னர் பதிவாளர் நா யூகத்தின் திணைக்களத்திலிருந்து பிறப்புச் சாட்சிப் பத்திரம் கிடைத்து விட்டதாகவும் சுவாமி விபுலாநந்தர் பிறந்த நாள் 3-5-1892 என்றும் தக வ்ல் கிட்ைத்தது.
சுவாமி விபுலாநந்தர் பிறந்த தேதி குறித்து மாறுபட்ட செய்திகள் நிலவு மாயின், உண்மையைக் காண முயல்வது ஏற்புடையதே. என்றாலும், அதுகுறித்த மோதல்கள் தோன்றுமிடத்து அதிகாரப் பூர்வமான பிறப்புச் சான்றிதழைப் புறக் கணித்தல் சாத்தியமில்லை. அந்தக்காலத் துப் பிறப்புப் பதிவுகள் வழுவற்றவை யாக அமைந்திருக்குமென்று நிச்சயமாகக் கூறவியலாதாயினும், அது சம்பந்தமாக ஒன்றும் செய்யமுடியாது.
அது எவ்வாறாயினும்,சுவாமி விபுலா நந்தர் யாரென்பதிலோ, அவர் எங்கு

Page 32
பிறந்து என்னென்ன பணிகளை ஆற்றி னாரென்பதுபற்றியோ எவ்வாறான சந் தேகத்துக்கும் இடமில்லை. அவரையும் அவரது கருத்துக்கள், இலட்சியங்களை பும் பாமெல்லோரும் அறிவோம். சுமுக மாகத் தீர்க்கப்படுவதற்குப் பதிலாக, சிைைரப் பெருமைக்குரியவர்களாக்கவும், வேறு சிலரை ஒதுக்கவும் பிரச்சினைகள் பயன்படுத்தப்படுவது அவ்வளவு விரும் பத்தக்கதன்று. பிரச்சினைகளை வளர்த் துப் பிரசித்திபெறுவதற்கான முயற்சி se அரசியல் உலகில் பலவேளைகளில் அவதானிக்கிறோம். அங்கு பிரச்சினை திரவேண்டும் என்ற அக்கறைக்குப் பதி லாக அதனைத் நீர்க்கும் பெருமை பிளைத் தட்டிக்கொள்வதில் தீவிரம் காணப்படலாம். அதனால் பல பிரச் சினைகள் நீர்க்கப்படாமல் இழுபறிகளுக் கும், போட்டிகளுக்குமே இடனாயுள்ளன. யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்று சொல்லுவார்கள். ஆனால், விட uprull-striassir.
சுவாமி விபுலாநந்தருக்குப் பலரும் ஒருவரை ஒருவர் முத்திக்கொண்டு விழாக்
“காந்தத்தின் இழுக்கும் சக்தி முடியாது. நாம் ஒரு காந்த பெரிய காந்தத் துண்டாலிரு இழுக்கும் சக்தியை நன்றாக உணர நமக்கு விசேட ஞான அப்படி ஒரு சக்தி இருப்பது நம்முடைய சிறிய அறிவுக்கு ளொன்று உண்டென்பதும், அடைந்தால் மட்டுமே நாம் աn &ւծ.""

தியை நாம் பொறிகளால் உணர
கள் எடுப்பதும், அவரைப்பற்றிய ஆய்வு களை வெளியிடுவதும் மகிழ்ச்சி அளிப் பதேயாகும். அறிந்த யாவராலும் உரிமை luntgrntu Lugláš கொண்டாடப்படத்தக்க பெருமை அவருக்கு உண்டு. அவரது பெருமையிலே தினைப்பவர்கள் மறைந்து கிடக்கும் அவருடைய ஆக்கங்களைத் தொகுத்து வெளியிடுவதிலும் தமது auriulu (disaparuyub, ஆற்றல்களையும் பயன்படுத்துவராயின், சுவாமி விபுலா நந்தரைப்பற்றிய ஆய்வும், அறிவும் வளர அது உதவுவதாகும். ஏலவே வெளிவந்த பல ஆக்கங்களைப் பொறுத்தவரையிற் &fit- «96TM வெளியான இடம், காலம் ஆகியன தரப்படாதிருத்தல் குறையாக aldiver £57.
சுவாமி விபுலாநநதருக்கு விழா வெடுப்பது அவருக்குப் பெருமை சேர்ப் பதற்காக அல்லது அவரது-பெருமையை நிலைநாட்டுவதற்காக என்று கருதுவது ஏற்புடையதன்று. அது எமது காலத்தின் தேவை எதிர்கால நலனுக்கு ஏற்றது:
த் துண்டாயிருந்து இன்னொரு ழக்கப்பட்டால் மாத்திரம் அந்த நாமுணரலாம். அந்தச் சக்தியை ம் வேண்டியிருக்கிறது. ஆனால், உண்மையேதான். அப்படியே
எட்டாவிட்டாலும், பரம்பொரு அதனைப் பூரண சரணாகதி ஆேமமுறலாமென்பதும் உண்மை
- விபுலாநந்த அடிகள்.

Page 33
- பணி தொ
- ஆலை
கன்னித் தமிழ் கன
* காரைதீவு அன்னைத் தமிழ்
அகமகிழ்ந் ( கண்ணின் மணிபே கடலாம் அ மன்னன் தமிழ்ப்
“ Dufaivaunrása
தென்னன் தமிழ் {
தித்திக்கும் எண்ணற்கரிய பல இறவாத பு நண்ணிச் சுவைக்க
நல்லறிவுப் ஒன்றுக்கு மேலொ யைாது இவ
அஞ்ஞான இருளாக ஆசிரியப் ப விஞ்ஞானத் துறை வித்தகனாய் எஞ்ஞான்றும் புகழ்
இனிய பல நெஞ்சாரப் பல ட நிறைவாகத்
ஆழநெடுங் கடலில்
ஆடும்மீன் கோலமுறக் காற்று கேட்டுக் கு. யாழ் நூலைத் தா யாம் மகிழ ஈழத்தின் புகழ் ம எல்லோர்க்கு
5 سے

டர்வோம்
பூரன் -
ரிந்த
எனும் பதியில் அணங்கு
தெமக்களித்த
ான்றான் றிவொளியில் ! பணிக்கு! னன்’ எனும் மகனாம் !
தேர்ந்து கவியார்த்தான் !
gil çöllifல்கள் கப்பல போதனைகள் ன்றாய் ானளித்தான் !
dop ணிதொடாந்தான் ! 2யதிலும் த் திகழ்ந்ததுடன் bւմՄւնւյւծ
நூலாய்ந்து 1ணிகள் | தந்தவனாம் !
பாடுமொலி று வழிக் துரகவித்தோன் ! ானளித்து த் தந்ததுடன் |ணததை குந் தந்தமகான் !

Page 34
பல்கலைக் கழக படிப்போ சொல்லற்கரிய் GD6s எல்லோர்க்கு மி எங்கள் ? நல்வித்தை நவி: நம்மிடத்
ஈழம் முதற்றொ இமயம் ெ ஆழமாய்த் தமி
அறிஞன், ஆளணி தனைக் அறைவோ நீளநினைந் தவ நெஞ்சுமை
"ஆடம்பரமின்றித் தியானம் போகும்போதும், துயிலொ செய்யலாம். எல்லாருந் துய வது எளியதும் மேலானதுப னைத் தொழவேண்டும்; வுயிர்க்கும் பயன்படவேண் வேண்டும்" என்று அவனை
 

மிவன் ர்க்கு நூலிவனாம் !
ா தமிழ்ப் பணிகள் னிதளித்த
விபுலானந்தன் "" ஸ்வதற்கு நிலாற்றலிலை !
ட்டு
ரைசென்று
p ஆய்ந்த
இவன் புகழை
கூட்டி ாம் உலகெங்கும்,
ற்றை )யப் பணி தொடர்வோம் !
செய்ய விரும்புபவன், துயிலப் Nந்தும் கிடந்தபடியே தியானம் பிலும் நள்ளிரவில் தியானம் செய் ான முறையாகும். 'யான் உன் தூய்மையடையவேண்டும்; பல இம்; எல்லாரும் இன்புற்றிருக்க ப் பிரார்த்திக்கவேண்டும்."
- விபுலாநந்த அடிகள்.

Page 35
அபூர்வக் கலவை
1.
*விபுலாநந்தர் அறிஞரா, கலை ஞரா?” சயிக்கிளால் இறங்கிய செந்திரு, விறுக்கென்று ஒரு கேள்வியோடு ஞானி யார் அப்புவின் குடிலுள் நுழைந்தாள்.
"என்ன, செந்திரு இன்றைக்கு விபுலாநந்தரிலே விழுந்திட்டாயா? பள் ளிக்கூடத்திலே ஏதாவது ஒப்படை கொடுத்திருக்கிறார்களா? நீ தான் ஒப் படை எழுதிக் கொடுக்கிற கட்டங்கள் எல்லாவற்றையும் கடந்திட்டாயே!” என்று ஆச்சரியப்பட்டார் அப்பு.
'அதுக்கல்ல அப்பு, நின்றசீர் நெடு மாறனார் ஒரு கட்டுரை எழுதியிருக் கிறார், “முல்லைமணிப் பத்திரிகையிலே. அதைப் பார்த்த பிறகுதான் இந்த ஐமிச் சம் எனக்கு வந்தது. உங்களைக் கேட் டால், நீங்கள் வடிவாய் விளங்கப்படுத்தி விடுவீர்கள். அதுதான்.""
"இங்கே பார், செந்திரு. விபுலா நந்தர் அறிஞரா கலைஞரா என்று முடிவு செய்கிறதுக்கு முந்தி, அவரைப்பற்றிச் சில செய்திகளை நாங்கள் அறிந்திருக்க வேண்டும்.""
"அதெல்லாம் எனக்கு ஒரளவு தெரி யும். நெடுமாறனார் அந்தக் கட்டுரை யிலே ஓரளவுக்கு எழுதியிருக்கிறார். வேறொரு பாடப்புத்தகத்திலும் நான் விபுலாநந்தரைப்பற்றி வாசித் திருக் கிறேன்.""
*அப்படியானால், சரிதான். விபுலா நந்தர் ஒரு பெரிய படிப்பாளி. இதுதான் அவரைப்பற்றி என்னுடைய மதிப்பீடு." இப்படிச் சொல்லிவிட்டு, தமது பனை யோலை விசிறியைத் தேடி எடுத்துக் கொண்டு சாய்மானைக் கதிரையிலே ஞானியாரப்பு சாய்கிறார். அவருடைய
7 ۔

r
முருகையன்.
அகலமான நெற்றியிலே வேர்வைத் துளி கள் சில மின்னிப் பளபளத்துக் கொண் டிருக்கின்றன.
செந்திரு கேட்கிறாள் - "அவருக் குப் பாட்டியற்றுகிற ஆற்றலும் இருந் தது தானே! அந்த ஆற்றல் படிப்பினால் மாத்திரம் வருமா?"
"அப்படி எல்லாம் வெட்டொன்று து ன் டு இரண்டாய் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு மறுமொழி சொல்ல இய லாது. மனித ஆளுமை என்றது பிறப் பினால் மாத்திரம் அமைகிற ஒன்று அல்ல. பிறப்பும் வளர்ப்பும் சூழ்நிலை யும் வேறும் எத்தனையோ பல காரணி களும் சேர்ந்துதான் ஒவ்வொருவரின் ஆளுமையும் உருவாகும். விபுலாநந்த ருடைய ஆளுமையும் அப்படித்தான்'.
"விபுலாநந்தருடைய ஆளுமையிலே உங்களுக்கு மிகவும் பிடித்த அம்சம் என்ன??*
"அப்படிக் கேள், செந்திரு. அது நல்ல கேள்வி. அவர் ஒரு பயிற்சி பெற்ற ஆசிரியராகத் தமது வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த நாளிலே ஆங்கில் ஆசிரியராகப் பயிற்சி பெறுகிறவர்களுக்கு நிரம்பிய அறிவு ஆங்கிலத்தில் இருக்கும். பரீட்சைக்கு வேண் டி ய பாடங்களை மாத்திரம் படித் துவிட்டு நிறுத்திக் கொள்ளும் போக்கு விபுலாநந்தரிடம் இருக்கவில்லை. அதற்கு அப்பாலும் அவருடைய அறிவு வேட்கை பரந்து விரிந்து இருந்தது. அவர் ஆங்கிலக் கவிதைகளையும்.நாடகங்களையும் விரும் பிப் படித்திருக்கிறார். அவருடைய கலை ஈடுபாடுதான் அவரை அந்தத் திசையிலே திருப்பியிருக்க வேண்டும். ஷேக்ஸ்பியரு டைய நாடகங்களிலும் அவருக்கு விருப் பம் அதிகம். அதனாலேதான் அவர் ஷேக்ஸ்பியருக்கு மதங்க சூளாமணி"

Page 36
என்று ஒரு பெயரைச் சூட்டிப் போற்றி வந்தார். ஷேக்ஸ்பியர் நாடகங்களிலே வரும் பிரதானமான பகுதிகள் சிலவற் றையும் தமிழ் மொழியிலே செய்யுளாக இயற்றித் தந்திருக்கிறார். மனிதனின் ஏழு பருவங்களைப்பற்றி ஷேக்ஸ்பியர் எழுதின ஆங்கிலச் செய்யுளுக்கு விபுலா நந்தர் தந்த தமிழாக்கம் பிரபலமானது தவிரவும், றோமியோ அன்ட் யூலியற். யூலியஸ் சீச(ர்), மே"ச்சன்ற் ஒஃவ் வெனிஸ், தற்றெம்ப்பெஸ்ற், லவ்ஸ் லேய் பேஸ் லொஸ்ற் என்ற நாடகங்களிலி ருந்தும் சிற்சில பகுதிகளைத் தமிழாக் கித் தந்திருக்கிறார். இந்தத் தமிழாக்கங் கள் எல்ல்ாம், விபுலாநந்தர் ஷேக்ஸ்பிய ரிலே வைத்திருந்த விருப்பத்தைக் காட் டுகின்றன."
"ஏன், அவருக்குத் தமிழரிலே இருந்த அன்பையும் அந்தத் தமிழாக்கங்கள் காட் டுகின்றனதானே!"
"ஒம், பிள்ளை. வெளி உலகத்திலே என்னென்ன சாதனைகள் நடந்திருககின் றன என்னென்ன விதத்திலே கலை களும் பண்பாடுகளும் வளர்க்கப்பட்டிருக் கின்றன; என்னென்ன வகையான நாக ரிகங்கள் எல்லாம் தோன்றி இருக்கின் றன - இவைகளை எல்லாம் எங்களு டைய தமிழ் மக்களும் அறிந்திருக்க வேண்டும்; அறிந்து அவற்றைவிடச் சிறந்த சாதனைகளை நம்மவர்கள் ஈட்ட வேண்டும். இந்தப் போக்கிலே விபுலா நந்தருடைய எண்ணங்கள் இருந்திருக் கின்றன. அதனாலே தான் அவர் மொழி பெயர்ப்புப் பணியிலே மும்முரமாக ஈடு Lill-frt."'
"ஷேக்ஸ்பியரைத் தவிர வேறு கவி ஞர்களை அவர் மொழிபெயர்க்க வில் dð)SPlutr? **
"ஏன் இல்லை? தாகூரைத் தமி ழாக்கம் செய்திருக்கிறார். மில்ற்றன், ற்ேஸ், உவேட்ஸ்வேத், "பிறெளனிங் என்று வேறு சில ஆங்கிலக் கவிஞர்கள் இயற்றின பாட்டுகளையும் தமிழாக்கி யிருக்கின்றார். தமிழாக்கம் என்று வரும் பொழுது, பிற மொழிகளிலிருந்து வச னப் பகுதிகளையும் அவர் தமிழாக்கி
-- }

யிருக்கின்றார். எடுத்துக்காட்டாக, இரா மக்கிருஷ்ண பரமஹம்சருடைய உப தேசங்களைத் தமிழ்ப் பாட்டாக விபுலா நந்தர் அமைத்துத் தந்திருக்கிறார். இவைகள் எல்லாம் அவருடைய மொழி பெயர்ப்பு முயற்சிகள்."
2
இனியாரப்பு மேலும் சொல்லு கிறார் - "அந்தக் காலத்திலே கல்வித் துறையிலுள்ளவர்கள் பெரும்பாலும் ஆங்கில அறிவு உள்ளவர்களாய்த்தான் இருந்தார்கள். ஆனால் அவர்களிலே அநேகர் தங்களுடைய ஆங்கில அறிவைக் கூர்மைப்படுத்துவதிலும், தங்களைச் சூழ உள்ளவர்களை ஆங்கில மயமாக்குவதி லும் தான் அதிகமாக ஈடுபட்டார்கள். ஆங்கிலத்தில் உரையாடுவதற்கும், ஆங்கி லத்திற் சிந்திப்பதற்கும் தம் மையும் பிறரையும் பழக்கி எடுப்பதிலேதான் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் முக்காற் பங்கையும் செலவிட்டார்கள். அப்படி எல்லாம் பழகி ஆங்கிலமயமா வதற்கு, தமிழ்ப் பேச்சும் தமிழ்ச் சிந் தனையும் தமிழ் எழுத்தாக்கமும் - சுருக்கமாகச் சொல்வதானால், தமிழ்ப் பயன்பாடு -இடைஞ்சலாயிருக்கும் என்று கருதினார்கள். அதனாலே அந்த "அறி வாளிகள்’ தமிழைப் புறக்கணித்தார்கள். தமிழ்ப் பண்பாட்டை அலட்சியப்படுத்தி னார்கள்,
"ஆனால், விபுலாநந்தர் இந்த விச யத்திலே வித்தியாசமானவர். ஆங்கில ஆசிரியராகப் பயிற்சி பெற்றுக்கொண் டிருந்த அதே வேளையிலே அவர் பழைய தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் படித்துணர்ந்தார். தமிழ்ப் பண்டிதர் என்ற தகுதியையும் பெற்றுக்கொண்
Trif.
"அவருடைய ஆங்கில அறிவு இலே சுப் பட்டதல்ல. ஆங்கிலத்தில் எழுந்த இலக்கியங்களை மட்டும் அல்லாமல் விஞ்ஞானம், தொழில் நுட்பம், தத்துவ ஞானம் ஆகியவற்றையும் கற்றறியும் ஆற்றல் அவருக்கு இருந்தது. அது மட் டும் அல்லாமல், ஆங்கிலத்தில் ஆழ்ந்து
3 -

Page 37
சிந்தித்துப் பேசவும், எழுதவும் வல்லவ ராக அவர் இருந்தார். இராமகிருஷ்ண இயக்கத் தொண்டுகளில் ஈடுபட்ட பொழுது அவருடைய ஆங்கிலப் புலமை ஒளி வெளிப்பட்டுத் தோன்றிப் பெரும் பயன் விளைவித்தது. "பிரபுத்த பாரத என்ற பிரபல சஞ்சிகையின் ஆசிரியராகப் பொறுப்பை அவர் தாங்கியிருந்த வேளை அவருடைய ஆங்கில மொழி ஆற்றல் மிகவும் பரந்த அளவிலே புலப்படலா யிற்று. அவ்வாறு அந்த உலக மொழி யிலே திறன் பெற்று விளங்கிய அடிக ளார், தமிழிலும் பெரும் புலமை பெற் றுத் திகழ்ந்தார் என்பது பாராட்டுக் குரியது.'
"தமிழில் அவருக்கு இருந்த புலமை பற்றி...”*
ஞானியார் செந்திருவை நோக்கிச் சொல்லுகிறார் - 'விபுலாநந்தர் எழுதிய உரைநடையும், பாட்டு நடையும். அவ ரு டைய புலமையின் தன் மை யை உணர்ந்துகொள்ள எங்களுக்கு உதவி யாகும். பாட்டு நடைக்கு உதாரணம் பல சொல்லலாம். ஏனென்றால் பாட்டு நினைவில் நிற்கும். வசனம் என்றால், தேடி எடுத்துத்தான் காட்ட வேண்டும்”.
செந்திரு கை கொட்டிச் சிரிக்கிறாள். * "அதுதான் உண்மையான, எடுத்துக் காட்டு. (தேடி) எடுத்துக்காட்டுகிறது தானே" எடுத்துக்காட்டு. இதோ, நான் எடுத்து வைத்திருக்கிறேன்.""
'என்னத்தை' 'விபுலாநந்தருடைய ஒரு வ ச னத்தை. ""
'சரி, சரி. எ டு த் துவிட் டா ய், இனிக் காட்டு. எடுத்துக்காட்டு".
செந்திரு தன்னுடைய கொப்பியி லிருந்து வாசிக்கிறாள் - 'இளந்தென்ற லின் மெல்லுயிர்ப்பும் மாலைப் பொழு தின் அழகும், எங்கும் நிறைந்த அமைதி நிலையும், வளர்மதியின் ஒள்ளொளியும், விண்மீன்களின் மெல்லொளியும், நீல விதானம் போன்றமைந்த வானினழகும் மேல்வரும் வெண்பாக்களுட் கூறப்படு கின்றன."
9 -سـ

'இது விபுலாநந்தருடைய வசனத் துக்கு ஒரு வகை மாதிரி"
"இனி விபுலாநந்தருடைய பாட் டுக்கு ஒரு காட்டு."
'நான்ே பாடுகிறேன், அப்பு. வெள்ளை நிற மல்லிகையோ..."
‘'வேண்டாம், வேண்டாம். உ து எல்லாருக்கும் தெரிந்த - வாலாயமான பாட்டு. வேறே ஒன்று சொன்னால் நல்லது."
'நீங்களே சொல்லுங்கள் ".
ஞானியார் பாடுகிறார் - இலேசான இசையோடு -
“வேலை முகட்டிற் கதிரெழுமுன் விரைந்து பறித்த புது மலராற் கோல புறவே புனை மாலை யார்க்கோ வெங்கள் குலக்
கொழுந்தே!
கோலமுறவே புனை மாலைக் குரியார் யாரென் றறியாயோ? சீல முறமுன் பெமையாண்ட செல்வருடைமை யாமலவோ?' '
"அப்பூ.
*" என்ன பிள்ளை?"
“பார தி யார் பாட்டுகளிலுள்ள நாடித் துடிப்புக்கும், விபுலாநந்தர் பாட்டு களிலுள்ள நாத ஓட்டத்துக்குமிடையே ஏதோ ஒரு வேறுபாடு இருக்கிறது. அது என்ன? என்ன..'
"எங்கே, நீயே சொல்லு பிள்ளை, பார்ப்பம்.""
"அது என்ன என்றால். அது என்ன என்றால். என்னாலே ஏலாது. நீங்களே சொல்லுங்கள், அப்பு.'
டாரதி மக்கள் கவிஞர். படிப்பு வாசனை குறைந்தவர் நெஞ்சிலும் நேரே போய்த் தைக்கிற சொல்லுகளை அவர் வழங்குவார். அவர் பேச்சிலும், பாட்டி லும் ஒரு நேரடித் தன்மை இருக்கும்; ஒரு விதமான தீவிரமும்,மந்திரம் போன்ற சுருக்கமும், சூத்திரம் போன்ற சக்தியும் இருக்கும். ஆனால் விபுலாநந்தர் இயற் றின பாட்டுகள் படிப்பாளிகளுக்கு நல்ல

Page 38
விருந்தாய் அமையும். பழைய செந்தமி ழிலே தோய்ந்து மெருகேறிய செழுமை இந்தப் பாட்டுக்களில் இருக்கும். சிலப் பதிகாரத்து இளங்கோ அடிகளுடைய ஒசைக்கோலம் இந்த ஈழத்து அடிகளார் இயற்றின பாட்டுக்களில் இருக்கும். சிலப் பதிகாரத்து வரிப்பாடல்களிலே வரும் குளிர்மையும், வினா விடை, மடக்கு போலேயுள்ள ஒழுங்கு முறைகளுங் கூட இவருடைய செவ்விய செய்யுள்களிலே பயின்று வரும். எப்படி, என்னுடைய மதிப்பீடு சரிதானே?"
* மெத்தச் சரி, அப்பு. மேலே சொல் லுங்கள்."
**விபுலாநந்தருடைய தமிழ் ப் புலமையிலே ஒரு முதன்மையான குறிப் பிடத் தகுந்த அம்சம் அவருடைய ஆய்வு நோக்கு. "யாழ் நூல்" அவருடைய ஆராய்ச்சிப் பணிகளுக்கு மணி முடி.' *யாழ் எனறால் வீணை, தானே?"
அப்பு அட்டகாசமாகச் சிரிக்கிறார். *இல்லைச் செந்திரு. அது வீணை அல்ல. அது பழந்தமிழர் வீட்டிய ஓர் இசைக் கருவி. குழலும் யாழும் தான் தமிழிசை யிலே முக்கியமானவை. குழ ல் வகை களிலே புல்லாங் சுழலும், நாயனமும் இப் பொழுதும் வழங்கி வருகின்றன. ஆனால் யாழ் வ்ழக்கொழுந்து போய்விட்டது. யாழுக்கும் வீணைக்கும் நிரம்ப வித்தி யாசம் உண்டு. வீணையிலே தந்திகளின் நீளங்கள் சமன். வீணையை மீட்டுகிற பொழுது விரல்களாலே தந்திகளைப் பல்வேறு இடங்களிலே கலைஞர் தொடு கிறார். அப்படித் தொடத் தொட, அதிரும் தந்தியின் நீளம் வேறுபடும். அப்போது பிறக்கும் ஒசையின் சுருதியும் மாறும் வெவ்வேறு சுரங்கள் உண்டா கும். இந்தச் சுரங்களின் வெவ்வேறு சேர்மானத்தினாலே இசை தோன்றும்."
*யாழின் செயற்பாடு எப்படிப்ப்ட் டது?"
"யாழிலே ஒவ்வொரு சுரத்துக்கும் ஒவ்வொரு நீள்முள்ள தந்தி இருக்கும். பல வேறு எண்ணிக்கையுள்ள வெவ்வேறு விதமான யாழ்கள் இருந்தனவாம். பத் துப் பாட்டு சிலப்பதிகாரம், திருமுறை

கள், பழந்தமிழ் நூல்களின் உரைகள், விளக்கக் குறிப்புகள் - இவை எல்லா வற்றையும் துணைக் கொண்டு தான் விபுலாநந்தர் மறைந்து போன அந்த யாழை மீட்டெடுத்து நமக்குத் தந்தார். புதியதாக ஒரு யாழையே செய்வித்துப் புகழ் வாய்ந்த இசைக் களைஞர் ஒரு வரைக் கொண்டு அதை மீட்டுவித்துக் காட்டினார். அந்தக் கலைஞர் கே. பி. சிவானந்தம் பிளளை. சில நூற்றாண்டு களுக்கு முந்தியே மறைந்து போன அந்த இசைக் கருவி பற்றிய முழு விபரமும் கிடைக்காத நிலை; அதைச் செய்ய வல்ல கை வினைஞர்கள் இல்லாத நிலை; அதை இசைக்கத் தெரிந்த கலைஞர்கள். இல்லாத நிலை - இப்படிப்பட்ட தடை களை எல்லாம் தாண்டி அந்த அரிய சாதனையை நிறைவேற்றத் தூண்டியது எது? அடிகளாருடைய ஓயாத செயலூக் கம்; அவருடைய தணியாத கலை ஆர் வர். இல்லையா, செந்திரு?"
'ஓம், அப்பு. பழைய இலக்கியங் களிலும், உரை விளக்கங்களிலும், யாழி னுடைய புறத் தோற்றம், நிறம், செய் பொருள் போலே உள்ள சில தரவுகள் தான் இருந்திருக்கும். அந்த இசைக் கருவியுடைய செப்பமான வடிவம்."
'யாழினுடைய வடிவத்தைக் &rtଜdit கிறதிலேதான் அடிகளார் பெரிதும் சிரமப்பட்டார். பல காலமாகப் பல வேறு இடங்களிலே தேடித் தேடி அலைந்து, இறுதியிலே. ஒரு குகை ஓவி யத்திலே அந்த வடிவத்தைக் கண்டு Gs5rr6diru-sarrrf.” “
'எவ்வளவு அரிய சாதனை!"
“யாழ் நூல் முற்பகுதி மற்றுமொரு சிறப்பையும் கொண்டது. அதிலே விஞ் ஞானத்தின் ஒரு பிரிவான பெளதிக வியலின்படி ஒலியின் பிறப்பையும், அதன் இயல்புகளையும், இசையின் அடிப்படை களையும் அடிகளார் விளக்கியிருக்கிறார். விஞ்ஞான உண்மைகளைத் தமிழில் எடுத்துச் சொல்லுவதிலே மேற்கொள் ளப்பட்ட முன்னோடியான முதல் முயற்சி களிலே ஒன்று என்று அதை நாங்கள் சொல்லலாம்.""
10 -

Page 39
*யாழ் நூலின் மற்றுமொரு சிறப்பு பண்ணும் திற ம் என்றும் சொல்லப் படும் முறையிலே, பழந் தமிழ் இசை யினை விரிவாக மறு கண்டுபிடிப்புச் செய்து தந்ததுதான்.""
"பண் என்றால்?"
'பண் என்று சொல்லப்பட்டவை சம்பூரண இராகங்கள் திறங்கள் ஜன்ய இராகங்கள். தமிழிசை பற்றி மிகவும் விரிவாக ஆராய்ந்த முதல் முன்னோடி அறிஞர் விபுலாநந்தர். அவரை த் தொடர்ந்து, பல்கலைக்கழக நிலையிலே யும், வேறு நிலையிலேயும் ஆராய்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. இன்றும் நடை பெற வேண்டும். ஆனால் ஒன்று - ஒவ் வொரு தமிழிசைப் பண்ணுக்கும், திறத் துக்கும் ஒப்பாக, கருநாடக இசை முறை யிலே என்னென்ன இராகங்கள் இருக் கின்றன என்று கண்டறிகிற முயற்சி யிலே விபுலாநந்தருடைய பங்களிப்புக் கணிசமானது."
3
"பொழிப்பாக்கிச் சொல்லுகிற தென்றால், விபுலாநந்தருடைய ஆளு மையை நாங்கள் எப்படி விபரிக்கலாம்?" செந்திரு கேட்கிறாள்.
ஞானியார் அப்பு சொன்னது இது தான் - 'சாராம்சத்திலே அவர் ஒர் ஆன் மீக அறிஞர்; தொண்டுள்ளம் கொண்ட துறவி. அதே நேரத்திலே வாழ்நாள்
“கொலை கூடாதென்பதற்குப் தால் துன்பம் வருமென்பத மற்றதாகச் செய்து, அடிக்க மாகச் செய்யும் என்பதுதான்
[[ -س-

முழுவதும் அவர் கலை இலக்கிய மாண வராக இருந்திருக்கிறார். அதே மாண வர் ஒரு சிறந்த ஆசிரியராக - பேராசிரிய ராக - தமிழகம் முழுவதும் போற்றின, பேராசனாகவும் இருந்திருக்கிறார். அந் தப் பேராசான் ஆராய்ச்சி உள்ள ம் கொண்டவர். பகுத்தறிந்து சான்று கண்டு, ஏனையோர் கண்டறியாத 5rf) யங்களைக் கண்டறியக் கூடிய ஆய்வாள ராகவும் விளங்கினார். இந்த ஆய்வு நோக்குக்கு அவருடைய விஞ்ஞான அறி வும், பயிற்சியும் துணை நின்றன என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
"துறவி என்ற முறையில் அவர் ஓர் அருளாளர். அருள் என்றது மனிதகுலம் முழுமைக்கும், பொதுவானது. இருப்பி னும் தம்மைச் சூழ இருந்த தமிழ் மக் கள் மேலும் இந்து மக்கள் மேலும் அவ ருடைய மனம் சிறப்பான பற்றுக் கொண்டு திகழ்ந்தது. ஆகையினால், அந்த மக்கள் நன்மை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் இடை யறாது பாடுபட்டார்.
*விபுலாநந்தருடைய ஆளுமையிலே ஆங்கிலமும் தமிழும் - ஏன், வடமொழி யுங்கூட, சந்தித்தன; கலையும், இலக்கிய மும், இசையும், பாட்டும், கூத்தும் சங்க மித்தன; அறிவியலும், ஆய்வு நோக்கும் ஆன்மீகமும் கூடிக் குலவின. துறவும், தொண்டும், பண்பும், நயமும் வந்து கலந் தன.
"அந்த ஆளுமை ஓர் அபூர்வக் கலவை."
பிரதான காரணம், அப்பாவத் ன்று; அது மனத்தை இரக்க டி தீய அலைகள் எழும் இட
- விபுலாநந்த அடிகள்,

Page 40
பல துறை விற்பன்
எள்
(al
விபுலாநந்த அடிகளாருடைய நூற் றாண்டினை மிகச் சிறப்பாகக் கொண் டாடிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத் தில் அன்னார் மேற்கொண்டிருந்த பல பணிகளைப்பற்றிச் சிந்திக்கவேண்டியது நமது பொறுப்பாகும். அடி க ளார் தொடக்கத்தில் ஆசிரியராகப் பணி புரிந் துள்ளார். பின்னர் அதிபராகவும், இராம கிருஷ்ண மடத் துறவியாகவும், முகா மையாளராகவும், பத்திராதிபராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும், பேராசிரியராகவும் விளங்கிய சிறப்பு அடிகளார் ஒருவரையே சாரும். அடிக ளாரது சிறப்பு நோக்கிக் கவியொருவன்;
“திறமான யாழ்நூலை
ஆக்கித் தந்தான் தித்திக்கும் தமிழ்ப்பாடல்
யாத்து வைத்தான் நறை தோய்ந்த
கவிவாணன் விபுலாநந்தன் நாட்டுக்கும் அவனுக்கும்
வணக்கம் சொன்னோம்."" என்று கூறுகின்றான்.சிறுவயதிலேயே மிக வும் அபாரமான கணிதப் புலமை அடி களாரிடம் காணப்பட்டது. இதுவே பின் னர் யாழ்நூலைச் சிறந்த முறையில் வடித்தெடுப்பதற்குப் பெரிதும் உதவியது.
மயில்வாகனனார் 1908ல் கேம்பிறிஜ் சீனியர் பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர் புனித மிக்கேல் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் பல பரீட்சைகளில் சித்தியடைந்ததோடு கொழும்பு அரசினர் கல்லூரியில் வேதி நூல் உதவி ஆசிரியராகக் கடமையாற் றினார். 1917ம் ஆண்டு தொடக்கம் மூன்று ஆண்டுகள் யாழ்ப்பாணம் புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் வேதிநுரல் தலைமையாசிரியராகப் பணிபுரிந்தார். இக்காலப் பகுதியில் இலண்டன் B. Sc. பரீட்சையிலும் தேர்ச்சி பெற்றார். இத னைத் தொடர்ந்து மாணிப்பாய் இந்துக் கல்லூரி, திருகோணமலை இந்துக் கல்

“னர்
S. 6 Sri LD6irst Tsinsub, B. A. Hons. நவிப் பணிப்பாளர், கலாசார அலுவல்கள்.)
லூரி ஆகியவற்றில் அதிபராகக் கடமை
யாற்றினார். இக்காலகட்டங்களில் இவரிடம் கல்வி பயின்று பயன் பெற்ற மாணவர்கள் எண்ணிலடங்காதவர் களாகும்,
விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கை யில் ஒரு பெரும் மாறுதல் ஏற்பட்ட காலம் 1922 தொடக்கம் 1924 வரை யிலான காலப்பகுதியாகும். இக்கால கட்டத்தில் சென்னைழைலாப்பூர் இராம கிருஷ்ண மடத்தில் சேர்ந்து பிரபோத சைதன்யர்" என்னும் பிரமசரிய ஆசிர மப் பெயரையும் பெற்றார். அத்தோடு 1924ம் ஆண்டு சித்ரா பூரணையன்று ஞானோபதேசம் பெற்றுச் சுவாமி விபு லாநந்தர் என்ற துறவுத் திருநாமத்தைச் சூழ க் கொண்டார். இராமகிருஷ்ண மடத்தில் இரு ந் த காலகட்டத்தில் சிறந்தவொரு பத்திரிகை ஆசிரியராகப் பணிபுரிந்தார். "வேதாந்த கேசரி" என் னும் ஆங்கிலப் பத்திரிகை, "பிரபுத்த பாரத" என்னும் ஆங்கிலச் சஞ்சிகை, *இராமகிருஷ்ண விஜய்ம்" என்னும் தமிழ் சஞ்சிகை ஆகியவற்றை நடாத்தி னார். இப்பத்திரிகைகளில், ஏராளமான ஆங்கில. தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். இக்கட்டுரைகள் கல்விக் கருத்துக்களையும், சிந்தனைக் கருத்துக்களையும் கொண்டு எழுதப்பட் டவையாகும். அடிகளாரின் நூல் வடிவில் வந்த இலக்கியங்களை விடுத்து ஆய்வுக் கட்டுரைகளை எடுத்து நோக்கினால், எத்தனை துறைகளில் அவருக்கு ஈடுபாடு இருந்துள்ளதென்பதைக் கண்டுகொள்ள முடியும். இலக்கிய ஆய்வு சம்பந்தமான கட்டுரைகள் இசையாராய்ச்சிபற்றியவை சமய சம்பந்தமானவை, மொழியியல் ஆய்வு பற்றியவை. கல்விக் கருத்துக் கள கொண்டவை, அறிவியல் சம்பந்த மானவை, மறுமலர்ச்சிக் கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகள், தலம், யாத் திரை, வரலாறு ஆகிய விடயங்களைக் கூறும் கட்டுரைகள் என்று குறிப்பிட்டுச் சொல்லலாம். இக்கட்டுரைகளிலிருந்து சுவாமிகளுடைய பலதுறைசார் வித்துவத்
12 -

Page 41
தினை நன்கு கண்டுகொள்ள முடிகின்
Ogil,
அடிகளார் இராமகிருஷ்ண மடத் துடன் தொடர்புகொண்டிருந்த கால கட்டத்தில் அதன் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்த பாடசாலைகளைப் பொறுப்பேற்று த டா த் தும் முகாமையாளராகவும் கடமையாற்ற வேண்டியிருந்தது. இதன் படி காரைதீவு, மண்டூர், கல்லடி உப் போடை, ஆரைப்பற்றை போன்ற பகுதிகளிலிருந்த பாடசாலைகளைப் பொறுப்பேற்று நடாத்தினார். இதே போன்று யாழ். வண்ணார்பண்னை வைத்தீஷ்வர வித்தியாலயம், விவேகா னந்த வித்தியாலயம் ஆகிய பாடசாலை களின் பொறுப்பினையும் ஏற்று நடாத் தினார். 1930ம் ஆண்டு யாழ்ப்பாணத்து ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்கத் தார் சுவாமிகளைப் பண்டித பரீட்சக ராக நியமித்தார்கள். அதன் பின்னர் 1931ம் ஆண்டு ஜனவரியில் அண்ணா மலைச் சர்வகலாசாலைத் தமிழ்ப் பேரா சிரியர் பதவியினை ஏற்றுக்கொண்டார். 1933ம் ஆண்டு வன்ரை இங்கு தமிழ்ப் பேராசிரியராகவிருந்து கல்வித்துறையில் அளப்பரிய பல சேவைகளைச் செய்தார். 1933ம் ஆண்டு தொடக்கம் 1943ல் இலங்கைப் பல்கலைக்கழக முதற்றமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்படும் வரை பற்பல துறைகளில் ஈடுபட்டு வியத்தகு சேவைகள் பலவற்றைப் புரிந்தார். இக் காலகட்டத்திலே தான் 1937ல் இமய மலைக்கு வடக்கேயுள்ள திருக்கைலாய மலைக்கு யாத்திரை செய்தார்.
இவ்விதம் பல துறைகளிலும் ஒப் பாரும் மிக்காரும் இல்லாமல் சிறந்து விளங்கிய சுவாமிகள் எழுதிய செய்யுள் நூல்கள் அவரது கவித்துவத்தை எடுத் துக் காட்டுகின்றன. இவற்றுள் கணேச
தோத்திர பஞ்சகம், "கதிரையம்பதி மாணிக்கப்பிள்ளையார் இரட்டைமணி மா லை", "சுப்பிரமணிய சுவாமிகள்
இரட்டைமணிமாலை', 'குமார வேணவ மணிமாலை" என்பன குறிப்பிடத்தக் கவையாகும். அடிகளார் எழுதிய வசன நூல்களே கூடிய பெருமையினை இன் றும் அடிகளாருக்கு ஏற்படுத்திக் கொடுத் துக் கொண்டிருக்கின்றன. இவற்றுள்
*வணக்கத்துடன், சிரத்தையுட உள்ளத் தூய்மை பெற்றுக்

சிறப்பாகக் குறிப்பிடக்கூடியது "யாழ் நூலாகும், இசைத் தமிழ் பற்றிய ஆய்வு நூலானவிது மிக அளப்பரிய பொக்கிஷ மாகும். அடுத்து நாடகத் தமிழ் நூலான 'மதங்க சூளாமணி குறிப்பிடத்தக்கது. அத்தோடு வசன நடையில் அமைந்த இலக்கியங்களில் நடராச வடிவம்', 'உமா மகேசுவரம், கலைச்சொல்லகராதியின் ஒரு பகுதி ஆகியவை குறிப்பிடத்தக்கன.
விபுலாநந்த அடிகளாரின் பல துறை சார்ந்த சேவைகளை இன்று சகல இன மொழியைப் பேசும் மக்களும் போற்றிப் பாராட்டுகின்றனர். தேசியக் கல்விமுறை யினை அறிமுகப்படுத்தியதோடு, தேக பலமே மனவுறுதிப்பாட்டை அளிக்க வல்லது என்பதனையுணர்ந்து உ டல் வளர்ச்சிக்குத் தலையாய இடம் அளித் தார். மேல்நாட்டு உடற்பயிற்சி. கீழ் நாட்டு உடற்பயிற்சி என்ற வித்தியாச மின்றி. இருவகையிலுமிருந்து தேர் ந் தெடுக்கப்பட்ட தேகப்பியாச முறைகளை மாணவரின் உடற்பயிற்சிக்குப் பயன் படுத்தினார். தமிழ், ஆங்கிலம், சிங்க ளம் ஆகிய மூன்று மொழிகளையும், கட் டாயம் மாணவர்கள் கற்கவேண்டும் என்கின்ற அவசியத்தை விபுலாநந்த அடிகள் முதன் முதல் உணர்ந்ததோடு மட்டக்களப்புக் கல்லடி உப்போடைச் சிவானந்த வித்தியாலயத்தில் அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டினார். தேசியக் கல்வி முறையினை சிறப்புறச் செய்வதற்கு அமரகவி பாரதியாரின் தேசிய கீதங்களையும், வீரத்துறவி விவே கானந்தரின் ஆலயப் பிரசங்கங்களையும் நன்கு பயன்படுத்தினார். இவ்விதம் விபு லாநந்த அடிகளார் தாம் வாழ்ந்த குறு கிய காலப்பகுதியில் மிகப் பெரியளவி லான இலக்கியப் பணிகளைச் செய்த தோடு சமய, சமூகத் தொண்டுகளிலும் தம் நேரத்தைச் செலவிட்டார். அடிக ளார் பலவாண்டுகள் மேற்கொண்ட முயற்சியினால் எழுதப்பட்ட "யாழ்நூல்" 1947ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம், 6ம் தேதிகளில் திருக்கொள்ளம்பூதூரில் அரங் கேற்றம் செய்யப்பட்டக. இப் பணி பூர்த்தியான மனநிறைவோடு அதே யாண்டு ஜுலை மாகம் 19ந் தேதி சுவாமிகள் இறையடி சேர்ந்து உலகிற்கு ஒளியூட்டிக்கொண்டிருக்கின்றார்.
டன் ஈசுவரனை வழிபடுவோன், கடவுளைக் காண்கிறான்."
- விபுலாநந்த அடிக்ள்.

Page 42
சுவாமி வி
(நேரிசை
--
கணியன் புலவனா
தந்தைசா மித்தம்பி தாய் விந்தையார் முத்தமிழ் வி விபுலாநந் தர்வாழ்ந்த ம தமிழாழ முள்ள தலம்,
மயில்வாக னன்தானே LD துயிலின்றித் தொன்தமிழ் ஆங்கிலம் ஆரியம் ஆயதற் தாங்கிய தத்துவன் தான்
ஆச்சிரம வாழ்வை யகில: மூச்சுவரை மேற்கொண்ே தொண்டுசெய்த தோன்ற கண்டுகொள்வ தெப்படிே
வஞஞான மாணி விபுலா அஞ்ஞான மேயகன்ற தல் இன்பத் தமிழ்மாதே Flpg பொன்போல் துலங்கும் பு
வெள்ளைநிற மல்லிகையே அள்ளியிந்தத் தேன்கவிகள் விண்ணகத்தி லொண்விள எண்ணுவதோ எங்களுக்ே
எங்களுக்கோர் யாழ்நூல்
நங்களது நல்விபுலா நந்த மட்டக் களப்பதனில் மன் கிட்டிப் பிறந்தாரே கேள்.
பேராசான் பேர்துறவி ெ ஆராய்ந் தடைந்தண்டி ஆ மண்ணகத்தும் விண்ணகத் கண்ணகத்துக் கார்மணியே
14 مسـ

புலாநந்தர் வெண்பா)
ார் - ஐங்கரலிங்கன்
பார்தான் கண்ணம்மை பித்தகராம் - அந்த ட்டுகாரை மேலூர்
ன்விபுலா நந்தன் த் தொண்டு - பயின்றுசெய்தோன் ற் பன்மொழி
த் தகமகிழ்ந்து ட முத்தமிழ்க்கோர் - பேச்சுவரை ல் துணைவிபுலா நந்தரையே பா காட்டு.
நந் தர்தன்னால் லாமல் - எஞ்ஞான்றும் $து மெல்விடக்கம் கழ்.
ா வேறேந்த மாமலரோ
ஆக்கியவர் - கொள்ளையின்ப க்காய் வீற்றிருக்கும் மேன்மையதை கார் இன்பு.
இலட்சணமாய் யாத்தளித்த ரவர் - மங்களமாய் னுபுகழ் காரை நகர்
பம்மான் பெருமடிகள் தவன்போல் - சீராக தும் மாணெர்ண் விளக்கமதாய்க்
காண்,

Page 43
8 பல்கலைக் கூடப் பயிற்றுே சொல்லுமிசை வல்ல சுவா நந்தர் நறுந்தமிழ்க்கும் நா தந்தடைந் தார்விண் தகு
9 முத்தமிழ் வித்தகராய் மு: பத்தித் தமிழ்க்குப் பகர்:ெ லாநந்தர் செய்தார் வளரு லாவல்லா ரேயல் லவா?
10. மாரடைப்பு நோய்வரவே
சீரான கந்தசாமிச் செம்ம கங்கையில் ஒலை கடிதுவி மங்களமாய் விட்டார் மகி
11. கந்தசாமிப் பேரான்காண் பந்தநட்புச் சொந்தபாசப் மண்விண்ணில் செல்வதன ஒண்கடித வோலையிட்டா
12. சொல்லுஞ் சுவாமி விபுல நல்லாக வானென்னும் நா பாதம் அருச்சிக்கும் பண்ே சேதம் எதுவுமின்றிச் சென்
“தந்தையிடத்திலுஞ்சரி: ஆசிரிய திலுஞ்சரி, எந்த உயிரிடத்தி இரக்கமே உண்மை யன் பு. யிலும், பற்றையிலும், ஏழை வழிப்போக்கனிடத்திலும் உ தையோ, இன்பத்தையோ அ அன்பு வாழ்வு."
 

ப ராசானாய்ச் மியவர் - நல்விபுலா னிலத்தும் நல்லபணி ந்து.
ந்தி யடைந்துவிட்டார் நாண்டு - சுந்தவிபு நநி லாநற்க
மாண்டதன் நண்பரவர் லுக்கு - நேராகக்
லாநந்தர் ழ்ந்து.
விண்ணிற் களித்திருக்க பற்றிழுக்க - அந்தகங்கை ால் வந்துவிபு லாநந்தர் ர் ஒன்று. s
ாநந் தர்தானே ாடதனில் - வல்லசிவன் தொண்டே - யாற்றுகிறார் *று.
பரிடத்திலுஞ்சரி; தமையனிடத் லாயினும், நீதியோடு நிகழ்கிற
காரணந் தெரியாமலே பனை நாயிலும், சாரைப் பாம்பிலும், ள்ள்ம் ஒடித்தழுவி, இரக்கத் டையக்கூடுமானால், அதுதான்
- விபுலாநந்த அடிகள்.

Page 44
சுவாமி விபுலாநந்
சூழ்நிலை:-
சுவாமி விபுலானந்தர் பல திறப் பட்ட அறிவியல்களுக்கும் பல்வேறு அள விலே பங்களிப்புக்கள் செய்துள்ளார். இவருடைய கலைப்பணிகளைப்பற்றி எடுத்துக்கூறுமுன் இவர் வாழ்ந்த காலச் சூழ்நிலைபற்றியும், இவருடைய பல திறப்பட்ட அறிவுத்தகைமைகள். புலமை முதலியனபற்றியும் குறிப்பிடுதல் அவசிய மாகின்றது. இவர் வாழ்ந்த காலத்திலே (1892 - 1947) இலங்கையிலும், இந்தியா விலும் பிரித்தானியர் ஆட்சி நிலவிற்று எனினும், தேசீயவாதமும், சுதந்திர உணர்வும், சுதந்திரப் போராட்டங்களும் வளர்ந்து இந்நாடுகள் சுதந்திரமடையும் கட்டத்தினையடைந்துவிட்டன. மேலும் 19ம் நூற்றாண்டு இலங்கையிலும், இந்தி யாவிலுமேற்பட்ட ப்ெளத்த, இந்து சமய மறுமலர்ச்சி இப்க்கங்களின் தாக் கம் தொடர்ந்து ஏற்பட்டுவந்தது. குறிப் பாக வட இலங்கையிலே ஆறுமுகநாவ லர் தலைமையிலேற்பட்ட சைவ சமய மறுமலர்ச்சியும், இந்தியாவிலேற்பட்ட ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சமூக, ஆன்மீக இயக்கமும் சுவாமி விபுலானந் தரைப் பொறுத்த அளவிலே கவனித்தற் பாலன. இவ் இரு மகான்களுடைய சமய, சமூக சிந்தனைகளிலே சுவாமிகள் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தவர். இக்காலத் திலே ஆங்கிலக் கல்வி, மேலைத்தேய விஞ்ஞானம், கலைகள் முதலியன ஒரு புறத்திலே வளர்ந்தன. மறுபுறத்திலே சுதேச விழுமியங்கள் வலியுறுத்தப்பட்டுச் சுதந்திர உணர்வும் மேலோங்கிற்று. சுதேச மொழிகள், கலைகள் முதலியன வற்றிலே புதிய விழிப்புணர்வு ஏற்பட் டது.இவற்றைப்போற்றி மேலும் வளர்க்க

தரும் கலைகளும்
பேராசிரியர் வி. சிவசாமி
(தலைவர், சமஸ்கிருதத் துறை, யாழ்ப்பாணப் பல்கல்ைக்கழகம்.)
வேண்டும் என்ற வேணவாவும் சிலர் மத்தியிலாவது ஏற்பட்டது.
தகைமைகள்:-
மேற்குறிப்பிட்ட சூழ்நிலையிலே தோன்றிய சுவாமிகள் தமிழ், வட மொழி, ஆங்கிலம், விஞ்ஞானம் முதலி யனவற்றை நன்கு கற்றுத் தேர்ச்சி பெற் றார். பிறந்த இடமான மட்டக்களப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங் களிலே கல்வி பயின்றவர். தமிழியலறி விலும், விஞ்ஞான அறிவிலும் சிறந்து விளங்கினார். மதுரைத் தமிழ்ப் பண்டித ராகவும், லண்டன் பல்கலைக் கழக விஞ்ஞான பட்டதாரி (B. Sc.) யாகவும் இலங்கி, ஆசிரிய சேவையிலே ஈடுபட் டார். 1924லே ராமகிருஷ்ண மிஷன் துறவியாகிய பின் இவருடைய தமிழ், கல்வி, சமயப் பணிகள் மிக நன்கு விரி, வுற்றன. இலங்கையிலே மட்டுமன்றி, இந்தியாவிலும் சேவை செய்தார். சிதம் பரத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், இலங்கைப் பல்கலைக் கழகத்திலும் முதலாவது தமிழ்ப் பேரா சிரியராகவும் திகழ்ந்தார். ராமகிருஷ்ண மிஷன் சஞ்சிகைகளான ராமகிருஷ்ண விஜயம் (தமிழ்), பிரபுத்த பாரத (ஆங் கிலம்) ஆகியனவற்றின் பத்திராதிபராக வும் சில ஆண்டுகள் கட்மையாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே தமிழ்ப் பேராசிரியராகக் கடமையாற்றிய காலத்திலே அந்நிறுவனத்திலுள்ள இசைப் பிரிவினையும் மேற்பார்வை செய்தார். இதனாலும், இசைக் கலைஞர் தொடர்பு களும், இசை ஆய்விலீடுபாடும் இவருக்கு மேலும் அதிகரித்தன. சென்னைப் பல் கலைக்கழகம், குறிப்பாகக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலியனவற்றுடன்
6 -

Page 45
நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந் தார். இயல், இசை, நாடகமாகிய முத் தமிழிலும் இவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. இவற்றிலே நாடகத்தில்ே இயல், இசை, மட்டுமன்றி அபிநயம், நடிப்பு முதலியனவும் இடம்பெறும். இவர் இசை,நடனம், நாடகம் முதலிய அவைக் கற்றுக் கலைகளிலே மட்டுமன்றிச் சிற்பம், ஒவியம் முதலிய குழைமைக் கலைகளி லும் ஈடுபாடுகொண்டிருந்தார்.
கலைகளில் இயல்பான ஈடுபாடு:-
இவர் இயல்பாகவே கலைகளிலீடு பாடுகொண்டிருந்தார். எடுத்துக்காட் டாக, 'ஒரு நாட்டின் மக்களுடைய மனோநிலையும், கலையுணர்ச்சியும், நாக ரிகமும், சங்கீதம், சித்திரம், சிற்பம் இவைகளிலேயே தெளிவுபடும்" எனவும், 'உண்மையை உணர்த்துவனவும், அழ கினிமையை அவாவி நிற்பனவும், நன் மையே உறுதியென்த் துணிவுப்பனவு மாகக் கலைகள் ஒவ்வொரு திறத்தை யும் மேவி நிற்பன. இவை உண்மை, அழகு, நன்மை எனும் மூன்றினையும் தந்து சித்தம் முழுவதிலும் ஒருங்குபற் றும் ஆற்றல் வாய்ந்தன" எனவும் கூறி யிருப்பனவற்றால் இது நன்கு புலப்படு கின்றது. பின்னையதிலே, சத்தியம், சிவம், சுந்தரம் என்பன அழுத்திக் கூறப் பட்டுள்ளன. இறைவன் , சத்தியம் (உண்மை), சிவம் (நன்மை/மங்களம்), சுந்தரம் (அழகு) வடிவினன் என இந்து சமயம் கூறும். இக்கருத்துச் சுவாமிகளின் உள்ளத்திலே நன்கு பதிந்துவிட்டது. இவரின் கலை ஈடுபாட்டிற்கு இதுவும் முக்கியமான ஒரு காரணி அல்லது பிர தான காரணியே எனலாம்.
64 கலைகள்:
மரபு வழியாகக் கலைகள் அறுபத்தி தான்கு என்று கூறப்படுகின்றது. மணி மேகலை ஆசிரியர் "எண்ணெண் கலை கள்" எனவும், 'ஆயகலை அறுபத்தி நான்கு" எனக் கம்பர் சரஸ்வதியந்தாதி யிலும் இவற்றைக் குறிப்பிடுகின்றனர். அம்பாளுக்குரிய, "லலிதா சகஸ்ர நாமா வளியிலே' (1000 திருப்பெயர்களின்
17 سے

வரிசையிலே), "சதுஷ்ஷடிகலாமயி' (64 கலைகளின் வடிவமாக உள்ளவள்) என அம்பாள் துதிக்கப்படுகின்றாள். சுவாமி கள் இம்மரபினை ஒட்டி 'இன்பநூல் எண்ணெண் கலையாக (84) விரிவுற்று நின்றது" எனக் குறிப்பிட்டு, 'இன்ப விழைவுடையாருக்கு இவ்வின்பத்தினை நல்குதலைத் தமது தொழிலாகக் கொண்ட நாடக மகளிர் அவ் இன்பத் துறையில் பலவற்ற்ைபும் கற்று வல்ல ராதற்குரியர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்
முன்னைநாட் கலைகள்:-
கலைகளைப்பற்றிக் குறிப்பிடுகையில் "தற்கால வாழ்க்கை அதிகப்படியான பலன் தருவதாகச் செய்ய உறுதியான படிப்பினைகளாகவே பழைமையான நூல் களையும், வாழ்க்கை முறை முதலிய வற்றையும் ஆராய்கின்றோம்.இவ்விதமே பண்டைக் காலத்துச் சங்கீதம், சித்திரக் கலை, சிற்பக்கலை எவ்வாறிருந்தன என் பதுபற்று ஆராய்வோம். சங்கீதம், சித் திரம், சிற்பம் ஆகியன கலையுணர்ச்சி முதிர்ந்த காலத்திலே இக்கலைகளும் அபி விருத்தியடைந்திருக்கலாம்" என இவற் றின் தோற்றத்திற்கான சூழ்நிலையினை இவர் கூறியுள்ளார்.
கலைகளிலே புதிய ஆக்கங்கள்:-
கவிதையிலும், கலைகளிலும் புத்தம் புதிய ஆக்கங்களைத் தோற்றுவித்தலைச் சுவாமிகள் நன்கு ஆதரித்தவர். ஆனால் இவை பழைய மரபுகளின் அடிப்படை யிலும் அமையவேண்டும் என்பதையும் அவர் குறிப்பிடத்தவறிலர். எடுத்துக் காட்டாக, 'புத்தம் புதிய உருவங் களைப் படைத்தலே கவிஞர் முதலிய அழகுக் கலையார் இயற்றுதற்குரிய அருந் தொழிலென்பது புலனாகின்றது. மரபு பட்டு வந்த உருவங்களில் பயின்றோர் நுண்ணறிவுடையராயின் புதிய உருவங் களை எளிதின் ஆராய்ந்து கண்டறிதற் கும்.அத்தகைய பயிற்சியும், நுண்ணுணர் வும் வேண்டப்படுபவையாம்' என்பதைச் சுட்டிக்காட்டலாம்.

Page 46
கோவில்கள் - செழுங்கலை
நியமங்கள்:-
பழைய கலைகள்மூலம் இன்றும் அநேகம் உண்மைகளை அறியலாம் என இவர் கருதினார். எடுத்துக்காட்டாக, 'பழைய ஓவியங்களை ஆராய்ந்து இன் றும் அநேக உண்மைகளை நாம் தெரிந்து கொள்ளலாம்" என அவர் குறிப்பிட் டிருப்பதை உற்றுநோக்கலாம். கலைகள் தொடர்பாகக் கூறும்போது, இந்து சமய ஆலயங்கள் சிற்பம், ஓவியம், இசை முதலிய நுண்கலைகளின் மையங்களாக விளங்கிவந்துள்ளமையினையும் அவர் சுட்டிக்காட்டி அவையே அக்காலச் செங் கலை நியமங்கள்" (பல்கலைக்கழகங்கள்) எனவும் விதந்து கூறியுள்ளார். 'பழைய ஆலயங்கள், சிற்பக் கலைகள், ஓவியக் கலை, இசைக் கலையெனும் அழகுக் கலைகள் பலவற்றை எமக்கும் எளிதில் உணர்த் தும் தன்மையவாதலின், அவையே நமது நாகரிகத்தைக் காட்டும் உண்மையான செழுங்கலை நியமங்கள்'" எனக் குறிப்பிட்டு மதுரை, சிதம்பரம், தஞ்சாவூர், பேரூர் முதலிய கோவில் கள் கொண்டிலங்கும் "கலைகள் பழந் தமிழரது நாகரிகத்தின் சிறப்பினைக் காட்டுகின்றன" எனவும் அவர் கூறி யுள்ளமை ஈண்டு கவனித்தற்பாலது.
ஒவியங்கள்:-
மேலும், 'தென்னாட்டுச் சித்திர வன்மையைக் காட்டும் பழைய சித்திரங் கள் சித்தன்னவாசலிலும், தஞ்சைப் பெருங்கோயிலிலும், ஈழநாட்டுச் சிகிரி யாக் குகையிலும், வடநாட்டு அஜந்தாக் குகைகளிலும் உள்ளன. இவற்றைக் கூர்ந்து ஆராயின் பழந் தமிழ்நாட்டு அணிகலன், உடை, கூந்தலமைப்பு என்று அன்றைய ஆடவரும், மகளிரும், அறங் கூறவையவத்தும், விளையாட்டிடங்களி லும், வாழ்மனையிலும், வேறிடத்தும் எவ்வெச் செய்திகளை மேற்கொண்டிருந் தார்கள் என்பதும் தெளிவாகும். மண் ணிட்டாளர், கண்ணுள்வினைஞர் ஆகிய இரு பாலரையும் ஓவியர் என்றும், வண் ணம்,வடிவு என வேறுபடுத்தாது,அனைத் தினையும் ஓவியம் என்பதும் ஒரு கலை"

எனச் சுவாமிகள் கூறியிருப்பவை நன்கு கவனித்தற்பாலன. மேலும் தொடர்ந்து கூறுகையில், சுவர்கதையிலே புனைந்த தும், வெண்சலவைக் கல்லிலே செதுக் கியதும், கருங்கல்லினைப் பொளிந்தும் வெளிப்படுத்திய 'உருவத்தை.அறிவுடை யோர் நோக்கும்போது, ஒவியனுடைய கைவன்ம்ையை வியப்பதோடமையாது, "ஓவியன் உள்ளத்து உள்ளியது இது' வெனக் கண்டு வியத்தல் வேண்டும். ஓவியனது உள்ளக்கருத்தே ஒவியத்துக்கு உயிர்போன்றது. ந வி லுந் தோறும் இனிமை பயக்கும் நூல் நயம்போலவும், பயிலுந்தோறும் இனிமை பயக்கும் பண்புடையாளர் தொடர்புபோலவும், பார்க்குந்தோறும் அறிவுடையோர்க்கு உவகையளிக்கும் ஓவியமே அழகிய ஓவிய மாகும்" என அவர் குறிப்பிட்டிருப் பனவும் ஈண்டு உற்று நோக்கற்பாலன. ஓவியம்,அதனை வரைந்தவனதும், பார்ப் பவனதும் உள்ளத்தைக் கவரவேண்டும். அப்போதுதான் அது உயர்ரகக் கலைப் படைப்பாகக் கருதப்படும்.
இசை, ஓவியம் இன்றியமையாமை:-
இசைக் கலையும், ஓவியக் கலையும் மாணவர்களுக்கு அவசியமென்பதை **கண்ணினையும், செவியினையும் பயிற்று தற் பொருட்டு மாணவருக்கு ஓவியக் கலையையும், இசைக்கலையையும் ஓரள வாவது அறிவுறுத்தல் நலமாகும்" எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இசை உலகப் பொதுவான கலை:-
இசையினை உலகப் பொதுக்கலை யாகவுமிவர் நோக்கியுள்ளார் என்பது "இசை எந்த நாட்டிற்கும் பொதுவாத லின் மேனாட்டாரின் இசைக் கிரமங் களைக்கூட பன்னிருபாலையிலே காட்ட லாம். மேனாட்டுப் பியானோ வாத்தி யத்தை முறைப்படி இசை கூட்டினால் அதிலே பழந்தமிழ்ப் பண்களை வாசித் தல் கூடும்" எனும் கூற்றினாலே புலனா கின்றது.
கலைகள் யாவருக்கும் அவசியம்:-
இசை, நடனக்கலை போன்றவற்றி னைக் குலத்தொழிலாகக் கொண்டுள்
8. -

Page 47
ளோர் கற்பினும், ஏனைய மகளிரும் இக்கலைகளை இயனறவரை கற்றுப் பயன் அடையவேண்டும் என அழுத்திக் கூறியுள்ளார். இதற்கு உதாரணமாகப் பெருங்கதையென்னும் நூலில் அரசன் தனது செல்வப் புதல்வியர் கற்ற கலை களின் திறனைக் காட்டுமாறு
*அடிசில் வினையும்
யாழின்றுறையும் கடிமலர்ச்சிப் பருங்கரந்
துறைகளாக்கும் வட்டிகை வரைப்பும்
வாக்கின் விகற்பமும் கற்றவையெல்லாம் காட்டுமின்
நம்க்கென்'
எனக் கேட்பதைக் குறிப்பிடலாம்,
இவரின் சமகால இசை, நடன விழிப்புணர்வு:
ஏற்கனவே குறிப்பிட்டவாறு இவரின் காலப் பகுதியிலேற்பட்ட தேசீய உணர் வின் விளைவாகத் தமிழிசை, இந்திய இசை, பரத்நாட்டியம் முதலியனவற் றிலே விழிப்புணர்வு தோன்றிற்று. இவர் பிறந்த ஆண்டிலேதான் (1892 லே) தமிழ்த் தாத்தாவான தாஷிணாத்ய கலாநிதி உ. வே. சுவாமிநாதய்யர் முத் தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத் தினை முதன்முதலாக அச்சுவாகனமேற்றி னார். இந்நூலில் இவருக்கு இளம்பிரா யத்திலேயே மிகுந்த ஈடுபாடு இருந்தது. இதனை நன்கு கற்றுத் தெளிவுபெற் றார். குறிப்பாக, இதிலுள்ள அரங் கேற்றுகாதை, ஆய்ச்சியர் குரவை முத லியனவற்றிலுள்ள இசை, நடன நுணுக் கங்களையும், பிற தரவுகளையும் விஞ் ஞான அறிவுடன் நன்கு ஆய்ந்தார். இவற்றைவிட பழந்தமிழ் நூல்களிலும், வடமொழி நூல்களிலுமுள்ள இசை, நடனம்பற்றிப் பேருரைகள் நிகழ்த்தி னார்; கட்டுரைகள் எழுதினார். குறிப் பாகப் பண்ணிசை, யாழ், குழல், பரத நாட்டியம்பற்றி ஆய்வுசெய்தார். 1941லே தோன்றிய தமிழிசை இயக்கம் இவரின் பழந்தமிழரின் இசைபற்றிய ஆய்வுகளுக்கு ஓர் உந்துகோலாயிற்று. தமிழிசையுடன் நின்றுவிடாது பொதுவான இந்திய இசைபற்றிக் குறிப்பாக வடமொழி நூல்
19. س

க ைள யு ம அடிபபடை மூலங்களாகக கொண்டு ஆய்வுசெய்தார். பரந்த இந்திய இசையின் ஓர் அடிப்படையாகவும், ஒரு பகுதியாகவுமே தமிழிசை விளங்குதலை அவர் அவதானித்தார். தாசியாட்டம்' "சதிர்" என அழைக்கப்பட்டுக் கீழ்நிலை யடைந்திருந்த தமிழகத்தின் சாஸ்திரீய நடனம் திரு. இ. வி. கிருஷ்ணய்யர், திருமதி ருக்மிணிதேவி அருண்டேல் முதலியோரின் அயராத முயற்சிகளாலே 'பரத நாட்டியம்’ என மீண்டும் சிறப்பு
நிலையுற்றது.
பண்ணிசை:-
பழைய காலத்திலே தமிழகம் குறிஞ்ச, முல்லை, பாலை, மருதம், நெய்தல் எனும் ஐவகை நிலங்களாக வகுக்கப் பட்டிருந்தது. இந்நிலங்களின் தன்மைக் கேற்பவே பண்ணிசை சங்ககாலத்தில் நிலவி வந்துள்ளமையினை சங்க நூல் கள், தொல்காப்பியம், முதலியனவற்றால் நன்கு அறியலாம். பல்லவர், பாண்டியர் காலத்திலே (சுமார் கி. பி. 600 - 900 வரை) இவ் இசை அக்காலத் தமிழகத்தி லேற்பட்டு நன்கு நிலவிய பக்தி இயக் கத்தின் விளைவாகத் தெய்வீக இசை யாக மலர்ந்து மேலும் சிறப்புற்றது. இவ்விசைபற்றியும், இசைக்கருவிகள், கர் நாடக இசை முதலியனவற்றைப் பற்றி யும் சிறப்பாக ஆய்வு நடத்திய சுவாமி கள் இவைபற்றிய தமது கருத்துக்களைப் பேச்சிலும், எழுத்திலும் குறிப்பிட்டுள் ளார். இவரின் யாழ் நூலிலுள்ள பண் ணியல், தேவாரவியல் எனும் இரு அத்தி யாயங்களிலும் பண்ணிசைபற்றியே விப ரிக்கப்படுகின்றது. பண்ணிற்கும் பிற் காலத்திலே தோன்றிய கர்நாடக இசைக் கான இராகங்சளுக்குமிடையிலுள்ள தொடர்புகள் பற்றி ஆழமாக ஆய்வு செய்தார். பண்ணிலிருந்தே இவ் இரா கங்கள் பெரிதும் முகிழ்ந்துள்ளன என் பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். எடுத் துக்காட்டுகளாகப் பண் தக்கேசியும்,இரா கம் காம்போதியும், பண் நட்டபாடை யும், இராகம் நாட்டைக் குறிஞ்சியும் பண் பழம்பஞ்சுரமும், இராகம் சங்கரா பரணமும், புண் வியாழக் குறிஞ்சியும், செளராஷ்டிரமும் ஒன்றேயென்பதைக்

Page 48
குறிப்பிட்டுள்ளார். 103 பண்களும் அவற் றிலே இராப்பண்கள், பகல்பண்கள், பொதுப்பண்கள் எவையென்பதும், பண் களுக்கான யாழ், வீணை முதலிய இசைக் கருவிகளும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. பழந்தமிழிசை, பண்ணிசை என்பது பல கோணங்களிலிருந்தும் ஆராயப்பட்டு, எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
பிற்காலத்திலே தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய திரா விட மாநிலங்களுக்குப் பொதுவான கர் நாடக இசையின் உருவாக்கத்திலே பண் ணிசையும், வடமொழியும் பெரும் பங் களிப்புகளைச் செய்துள்ளன.பண்ணிசை, கர்நாடக இசை ஆகியன தென்பாரதத் திற்குரிய இசை வடிவங்களாயினும் பரந்த அடிப்படையிலே பாரதம் முழுவதற்கும் பொதுவான அடிப்படைகளைக் கொண் டில்ங்குவதுடன் அதன் பகுதிகளாகவும் விளங்குகின்றன. எனவே, இந்திய இசை யினை முழுமையாக அறிந்து, தென் னிந்திய இசைவடிவங்களைப்பற்றி ஆராய முற்பட்ட சுவாமிகள் வடமொழியிலுள்ள பாரிய சங்கீத சாத்திர நூலான சாரங்க தேவரின் சங்கீதரத்னாகரம், சங்கீத பாரி ஜாதம், சங்கீத மகரந்தம் முதலிய நூல் களையும், கர்நாடக இசைக்குரிய 72 மேளகர்த்தாக்களை வகுத்துக் கூறும் வேங்கடமகியின் சதுர்தண்டி பிரகாசி காவையும் நன்கு கற்று ஆய்வுக் கட்டுரை கள் எழுதியமையில் வியப்பில்லை. தமி ழிலே கிளி, விளரி, தாரம், குரல், துத் தம், கைக்கிளை, உழை எனும் ஏழிசையே இந்திய இசைக்குப் பொதுவான ஷட் ஜம் (ஸ), ரிஷபம் (ரி), காந்தாரம் (க), மத்திமம் (ம), பஞ்சமம் (ப), தைவதம் (த), நிஷாதம் (நி) எனும் ஸப்த ஸ்வரங் களாகும். இவை முறையே மயில், எருது, ஆடு, கிரெளஞ்சம், குயில்,குதிரை, யானை முதலியனவற்றின் ஒலிகளை ஒட்டி உரு வாக்கப்பட்டவை. எனவே, இந்திய சாஸ் திரீய இசை வடிவங்களின் பொது அடிப் படை தெளிவு.
இசைப் பாடல்கள்:-
கவிதை புனையும் திறனுடன் இசைப் பாடல்கள் இயற்றும் திறமை இவருக்கு

இருந்தது. இன்னிசையும், எழிற்கவி நய மும் ஒருங்கமைந்த பாடல்களையுமிவர் இயற்றியுள்ளார். இவற்றிலே மட்டக் களப்பு வாவியிலுள்ள பாடுமீன்கள் அல் லது நீரரமகளிர் பற்றியவை நன்கு குறிப் பிடற்பாலன. சுவாமிகளின் கற்பனை உலகிலே ஏழு நீரரமகளிர் அழகுமிக்க. திருமேனியுடன் ஆடல் பாடல்களிலே திளைப்போராகக் காட்சியளிக்கின்றனர். இசை நயமுள்ள இப்பாடல்களிலே சப் தஸ்வரங்களே நீரரமகளிர் வடிவங்களாக விளங்குகின்றனர். இராகங்களை உரு வகப்படுத்திக் கூறும் முறை இந்திய இசை யில் உண்டு . இம்மரபையொட்டியே சுவாமிகளும், இவ்வாறு பாடல்களியற்ற முற்பட்டிருக்கலாம். இவரின் பாடலுக்கு எடுத்துக்காட்டாக, -
"நீதி - சாச - ரி நீலவானிலே
நீசரி - காக - மா - நிலவுவீசவே ‘மாம - பாப - தா - மாலைவேளையே மபத - நீதி - சா மலைவு தீருவோம் சாச - ரீரி - சாலநாடியே சரிக - மாம- பா சலதி நீருளே பாப - தாத - நீ பாலை பாடியே பதநிசாச - ரி பலரொடாடுவோம் நீலவானிலே நிலவு வீசவே மாலைவேளையே மலைவு தீருவோம் சால் நாடியே சலதி நீருளே பாலை பாடியே பலரொடாடுவோம் நிதரி காக மாமபதநீநிசா சரிக மாம பாபபதநிசாசரி நிகம பாபதா தநிச ரீரகா கமப தாநி நிகரி காகமா நிலவு வீசவே மலைவு தீருவோம் சலதி நீருளே பலரொடாடுவோம்'
என வரும் பகுதியினைக் குறிப்பிடலாம். இவ்வாறு ஆடிப்பாடி வரும் எழிற்கண்ணி யர் புலவனுக்கு இசை நயங்களை ஊர்த்து கின்றனர். கீர்த்தனை, வர்ணம்போன்ற இசை உருப்படிகளை இயற்றும் ஆற்றல் இருந்தும் இத்தகைய பாடல்களை அவர் பாடியதாகத் தெரியவில்லை. எனினும், தெய்வங்கள், பெரியோர், இயற்கை பற் றிய பாடல்கள் இயற்றியுள்ளார். எடுத் துக்காட்டாக, “ஈசன் உவக்கும் இன் மலர் மூன்று' எனும் தலைப்பிலுள்ள
20

Page 49
*வெள்ளை நிற மல்லிகையோ
வேறெந்த மாமலரோ
வள்ளலடியிணைக்கு வாய்த்த
மலரெதுவோ? வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார்
வேண்டுவது" என்பதைக் குறிப்பிடலாம்.
இசைக் கருவிகள்:
இசைபற்றிய ஆய்வுகளிலே இசைக் கருவிகள் பற்றியவையும் இன்றியமை யாததே. பழந்தமிழர் இசைக் கருவி களிலே முக்கியமான புல்லாங்குழல், குறிப் பாக யாழ்பற்றிய ஆய்விலும் இவர் முழு மூச்சாக ஈடுபட்டார். தமிழிலக்கியத் திலும் பிற நூல்கள் சிலவற்றிலும் கூறப் படுவனவற்றைத் தொல்லியல் மூலங்கள் மூலமும் உறுதிப்படுத்தியும் இவர் ஆய்ந் துள்ளார். யாழிலே மிகக் கூடுதலான கவனத்தைச் செலுத்தித் தமது ஆய்வு கள், குறிப்பாக இசை ஆய்வுகளின் ஆழத் திற்கும், அகலத்திற்கும், மகுடமாகத் திகழத்தக்க வகையிலே யாழ் நூல் எனும் பேராய்வு நூலினை எழுதியுள்ளார். பல ஆண்டுகளாக மறிைந்து இலக்கியத்தில் மட்டும் நினைவுகூரப்பட்டுவந்த யாழ் பற்றிய இந்நூல் பல ஆண்டுகளாக (14)ச் சுவாமிகள் செய்த ஆய்வுகளின் விளை வாகும். “மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்துகொண்டு இனத்திற் சேர்த்தி யுணர்த்தல்வேண்டும்" என்னும் 'ஒல்காப் பெரும் புகழ்'த் தொல்காப்பியர் கூற்றே தமது ஆய்வின் குறிக்கோளாக இலங்கி வந்ததென அவர் கூறியுள்ளார்.இளங்கோ வடிகள் சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையில் யாழாசிரியனமைதி கூறும் 25 அடிகளுக்கு இயைந்ததொரு விரிவுரை யாக இந் நூல் எடுத்துக்கொள்ளப்பட்ட தென் ஆசிரிய்ரே குறிப்பிட்டுள்ளார். இவ் வாய்வினை எழுத்துவதற்குச் சங்க நூல் கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம், சைவத்திருமுறைகள், பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய தமிழ் நூல்களையும் நாட்டியசாஸ்திரம், சங்கீதரத்னாகரம், சங்கீதமகரந்தம், சங்கீத பாரிஜா தம், சதுர் தண்டிபிராசிக்ா முதலிய வடமொழி
21 سے

நூ ல் களை யும், குடுமியாமலைக் கல் வெட்டு முதலிய தொல்லியல் சின்னங் களையும் வரலாற்று ரீதியிலும், ஒப்பியல் ரீதியிலும், விஞ்ஞா ன ரீதியிலும் ஆராய்ந்து பழந்தமிழர் மத்தியிலே நிலவி வழக்கற்றுப்போன வில்யாழ், சீறியாழ். பேரியாழ், மகரயாழ், செங்கோட்டியாழ் எனும் ஆறு வகை யாழ்களின் அமைப்புக் களை மீண்டும் உருவாக்கித் தமிழருக் கும், உலகிற்கும் அளித்துள்ளார். இவற் றுள் ஒன்று ஆயிரம் நரம்புகள் கொண் டிருந்தது என்பதையும் எடுத்துக்காட்டி யுள்ளார். *யாழும், வீணையும் ஒரே இசைக் கருவியன்று. அவை வெவ்வேறு இசைக் கருவிகள்' என்ற உண்மையை யும் இவரே நன்கு நிலைநாட்டியவர்.
இந்நூல் பாயிரவியல், யாழுறுப் பியல், இசைநரம்பியல், பால்ைத்திரி பியல், பண்ணியல், தேவாரவியல், ஒழி பியல் என ஏழு இயல்களைக் கொண் டுள்ளது. பலவிதமான யாழ்களின் விளக் கப்படங்களும், முடிவிலே ஆயிரம் நரம்பு கள் கொண்ட யாழ்பற்றிய ஆங்கிலக் கட்டுரையும் உள்ள்து. பழந்தமிழரின் மிகச் சிறந்த இசைக்கருவி இதுவே என் பது இவரின் கருத்தாகும். இவருடைய கருத்துப்படி யாழ் தமிழகத்திலே தோன் றிப் பிறநாடுகளுக்குப் பரவிற்று. யாழின் வரலாற்றினை வரலாற்றுரீதியிலே தமிழ் இலக்கியச் சுவைபடவும் எடுத்துக் கூறி யுள்ளார். எனவே, பல காலமாக மங்கி யிருந்த தமிழிசைச்கும், இசைக்கருவி Hான யாழுக்கும் புதுமெருகும் புத்துயிர்ப் பும் ஊட்டி யு ள் ளார் . இவரைத் தொடர்ந்து வேறு சில அறிஞர் சிலப் பதிகார இசைபற்றி எழுதியுள்ளார். எடுத்துக்காட்டாகக் காலஞ்சென்ற பிர பல கர்நாடக இசைக் கலைஞர் கலாநிதி எஸ். இராமநாதன் 'சிலப்பதிகாரத்து இசை நுணுக்கம்' எனும் நூலினை எழுதியுள்ளார். இதுபற்றி ஆங்கிலத்தி லும் இவர் எழுதியுள்ளார். எனினும், இந்தியத் தமிழறிஞரோ அல்லது இசை யாராய்ச்சியாளரோ அடிகளார் ஆற்றி யுள்ள தமிழியல் குறிப்பாக இசைத் தொண்டுகளுக்கு ஏற்ற முக்கியத்துவத் தினை இ துவரை அளிக்காம்ை ஏனோ என்பது தெரியவில்லை.
تتسم :

Page 50
யாழிசையின், சிறப்பு:-
“இசையின்பத்தை அள்ளித் தருவ தும், மனிதனைக் கவர்ந்து செவிக்கின் பம் பயப்பதுமாகிய யாழினிசை செவி யினைப் பயிற்றுதற்கு நல்லது. இசையை அநுபவிக்கும் உள்ளம் நெகிழ்ந்துருகும் தன்மையடைகின்றது; கல்லெனவுள்ள நெஞ்சமும் கரைகின்றது. யாழானது ஆளுடைய பிள்ளையார் காலத்தில் தெய்வமீதமர்ந்த பொற்பலகை மீதேறி அன்பருள்ளத்தை உருக்கி அருட்கவியா யிற்று. கொங்குவேளிரும், திருத்தக்க தேவரும் நூலெழுதிய காலத்தில் அர் சிளங் குமரிகளின் கையிலேறி அவர் மனம் விரும்பிய காதலரை அவருக்கு அளிக்கும் அருங்கவியாயிற்று. இத்தகைய யாழிசை மாணவருள்ளத்தைப் பண்படவைக்குந் தன்மையது" எனச் சுவாமிகள் கூறு வதிலே இசைப்பயிற்சியினுள்ளே யாழி னிசை வகிக்கும் சிறப்பிடம் தெளிவா கின்றது.
LIJE BпTuqu' ubi
நடனத்திலும் சுவாமிகள் கவனஞ் செலுத்தினார். இசைக்கு இவர் ஆற்றிய பங்களிப்புகள்போன்று நடனத்திற்கு இவர் ஆற்றியவை குறைவே எனினும், பரதநாட்டியத்திலிவருக்கு ஈடுபாடு இருந் தது. ஏற்கனவே குறிப்பிட்டவாறு சம காலத்திலே பரதநாட்டியம் மறுமலர்ச்சி யடைந்துவந்தது. “பரத சாஸ்திரம்' என்ற தலைப்பிலே ‘கலாநிதி" எனும் சஞ்சிகையில் இவர் எழுதிய கட்டுரை குறிப்பிடற்பாலது. இக் கட்டுரையில் நாடக மகளிர் பற்றிக் குறிப்பிட்டுள் ளார். இதுபற்றிக் குறிப்பிடுகையில் தமிழி அலும், வடமொழியிலுமுள்ள நடனம், நர்டகம்பற்றிய நூல்களின் முக்கியத்து வம்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாடகவியல் நூல்களில் ஒன்றான தனஞ் ஜயனின் தசரூபத்தினைத் தமிழிலே மொழி பெயர்த்து மதங்கசூளாமணி பெனும் நூலிலே அதனையும் சேர்த் துள்ளார். இந்நூல் நாடகவியலுக்கு மட்டுமன்றி நடனத்திற்கும் அவசியமான தாகும்.
an.2

நகை, அழுகை முதலிய ஒன்பது சுவைகள் (ரசங்கள்) சாத்வீக, ஆங்கிக, வாசிக, ஆஹார்ய முதலிய நான்கு வகை அபிநயங்கள்பற்றியும், அவற்றினைப் புலப்படுத்தும் இருவகைக் கூத்து, பத்து வகை நாடகங்கள்பற்றியும் இவர் விளக்கி யுள்ளார். இவை நடனத்திற்கும், அதா வது பரத நாட்டியத்திற்கும் அவசிய Life).
1942லே மதுரையிலே நடைபெற்ற இய்ற்றமிழ் மகாநாட்டுத் தலைமைப் பேருரையிலே இசைத் தமிழ்பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இதிலே பண், இரசம், (பாவம், ரசம்) தாளம் என்னும் மூன் றும் அடங்கிய பிண்டமே பரதம் என விளக்கியுள்ளார். இக்கருத்தினைப்
“பண்ணும் பதமும் பலவோசைத்
தமிழவையும் உண்ணின்றதோர் சுவையுமுறுதாளத் தொலி பலவும் மண்ணும் புனலுயிரும் வருகாற்றும்
சுடர் மூன்றும் விண்ணும் முழுதானானிடம்
விழிம்மிழலையே" என ஆளுடையபிள்ளையார் இறைவனது இசையுருவினையும், எண்பேருருவினை யும் கூறியுள்ள அருமைத் திருப்பாடலிலே *பண்ணும் பதமேழும் பலவோசைத் தமிழவையும் என்ப் பண்ணிர்மையும், உண்ணின்றதோர் சுவையுமென இரத மும், உறுதாளத்தொலி பலவும் எனத் தாளக் கூறுபாடுகளும் மேற்காட்டிய முறையில் அமைந்துள்ளன" எனக் குறிப் பிட்டுள்ளார்."பண்ணும் இரதமும் எனும் முறையினை அறியாத பிற்காலத்தவர் இரதமாகிய பாவத்தினை முன்பும், பண் ணிர்மையாகிய இராகத்தினைப் பின்னு மாக மாறிவைத்து இடர்படுவாராயினர்” எனக் கூறியுள்ளார்.
நடனத்தின் தெய்வமாகச் சிறப்பித் துக் கூறப்படும் நடராஜாப் பெருமானின் திருவுருவம் குறிப்பிடும் தத்துவார்த்தம் பற்றியும் ஒரு சிறுநூல் எழுதியுள்ளார்.
நாடகம்:-
முத்தமிழில் ஒரு முக்கிய பகுதியான
நாடகத்திற்கும் முத்தம்ழ் வித்தகராகிய
சுவாமிகள் மிகுந்த முக்கியத்துவம் அளித்
2 -

Page 51
துள்ளார். மதங்கசூளாமணி இவரின் நாடகப் புலமையினைக் குறிப்பாக ஒப் பியல் நாடகப் புலமை - தமிழ், சமஸ் கிருத, ஆங்கில நாடகப் புலமைக்குத் தக்க எடுத்துக்காட்டாகும். தலைசிறந்த ஆங்கில நாடக ஆசிரியரான சேக்ஸ்பிய ரின் (இவரைச் செகசிற்பியர் என அழைத் துள்ளார்) 12 நாடகங்களைத் தெரிவு செய்து அவற்றின் சிறப்புகளை எடுத்துக் காட்டியல் எனும் இரண்டாம் இயலில் எடுத்துக்கூறியுள்ளார். முதலாவது உறுப் பியல் எனும் பகுதியிலே நாடக இலக் கியம்பற்றியும், நாடக இலக்கணம் பற் றியும் பழந்தமிழ் நூல்களான சிலப்பதி காரம் முதலியனவும், வடமொழி நாடக வியல் நூல்களும் கூறும் கருத்துக்களும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. இறுதி ப் பகுதியான ஒழிபியலிலே வடமொழியிலே தனஜ்ஜயனின் நாடகவியல் நூலான தசரூபத்தின் மூலமும், தமிழ் மொழி பெயர்ப்பும் குறிப்பிடற்பாலன. சேக்ஷ பியரின் நாடகங்களின் சில சிறந்த பல பகுதிகளை மூலத்தின் சுவை குன்றாது தமிழில் வசனத்திலும், செய்யுளிலும் செவ்வனே மொழிபெயர்த்துள்ளார். இவை எடுத்துக்காட்டியலில் இடம் பெற்றுள்ளன.
நாடகக்கலை நாட்டுக்கும், மனித நடத்தையின் சீராக்கத்திற்கும் உதவும் என இவர் கருதினார். என்வே, இவ் வகையிலேதான் இதனை நெறிப்படுத்தல் .,வசியமென்பதை வலியுறுத்தியுள்ளார். போலி நாடகங்களினால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளையும், சீர்கேடுகளையும் தவிர்த்து செவ்வையான முறையில் நாட கங்களைத் தயாரிக்கவேண்டுமென இவர் அழுத்திக் கூறியுள்ளார்.
நாட்டார் கலைகள்:-
சுவாமிகள் நாட்டார் இசை, நாட் டுக் கூத்துகள் முதலியனவற்றிலும் RFG) untC கொண்டிருந்தாா. இக்கலைகளும் தன்கு போற்றிப் பேணப்ப்டவேண்டு மெனக் கூறியுள்ளார்.
2. سیست

இசை, நடன, நாடக வளர்ச்சிக்கான சில ஆலோசனைகள்:-
இக்கலைகளின் வளர்ச்சிக்கான சில ஆலோசனைகளையுமிவர் குறிப்பிட்டுள் ளார். இக்கலைகளைப் பலரும் கற்றுப் பண்படைய வேண்டுமென இவர் விரும்பி னார். இக்கலைகளைக் கற்பதாலே ஆண், பெண் ஆகிய இரு பாலாரும் நன்மை யடைவர் என்பது இவரின் கருத்தாகும். இலங்கை அரசாங்கத்திற்கு பாடசாலை களிற் பயன்படுத்தும் நோக்குடன் இசைக் கான பாடத்திட்டமொன்றினை வகுத் துக் கொடுத்தார் என அறியப்படுகின் றது. இசைக்கலை, நடனக்கலை முதலி யனவற்றைக் குறிப்பாக நிறுவனரீதியாக வும் நன்கு வளர்க்க வேண்டுமென் பதை இவர் அழுத்திக் கூறியுள்ளார். எடுத்துக்காட்டாக,“இந்நாட்களிலே வட நாட்டிலும், தென்னாட்டிலும் பரத நாட்டியத்தினை விருத்திசெய்யும் முயற்சி நடந்துவருகின்றது. இமயமலைச் சார லில் அல்மோரா நகரிலே உலகப் பிரசித்தி பெற்ற உதயசங்கர் என்பார் ஒரு கலா நிலையத்தினை ஏற்படுத்தி அங்கு பல மாணவர்களுக்கு நீாட்டியக் கலையை அறிவுறுத்திவருகின்றார். தெற்கே பிரம்ம ஞானசங்கத் தலைவராகிய அருண்டேல் துரையின் பாரியாராகிய உருக்குமணி தேவியார் தகுதியுடைய மாணவருக்குப் பயிற்றி வருகிறார். வடமொழியிலும், தென்மொழியிலும் உள்ள நாட்டியக் கலை, அபிநயக்கலை நூல்களிலே கண்ட மரபுகளை இவ்விரு நிலையங்களும் கை யாண்டுவருகின்றன" என அவர் கூறி யிருப்பதனைச் சுட்டிக்காட்டலாம்.
மேலும் வடமொழியிலுள்ள பிரதான இசை, நடன நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்படுதல் தமிழிசை, நடனக் கலைகளுக்குப் பெரிதும் பயன்படும் என் பதும் இவர் கருத்தாகும். 1942ல் மதுரை யில் அவர் நிகழ்த்திய பேருரையொன் றிலே 'வடமொழிப் பரதமும், சங்கீத ரத்னாகரமும் சிறந்த முறையில்ே மொழி பெயர்க்கப்படுமாயின் அம்மொழிபெயர்ப் புகள் தமிழிசையில் மறுமலர்ச்சிக்கு உத வும் என்பது என் கருத்து" எனக் கூறி யுள்ளமை ஈண்டு கவ்னித்தற்பாலது.
3 -

Page 52
இக்கலைகளிலே புதிய வடிவங்களை பழைய மரபுகளின் அடிப்படையிலே காலத்திற்கேற்றவாறு உருவாக்குதலை யும் இவர் வலியுறுத்தியுள்ளார். எடுத் துக்காட்டாக, "புத்தம் புதிய உருவங் களைப் படைத்தலே கவிஞர் முதலிய அழகுக் கலையார் இயற்றுதற்குரிய அருந்தொழிலென்பது புலனாகின்றது. மரபுபட்டு வந்த உருவங்களின் பயின் றோர் நுண்ணறிவுடையராயின் புதிய உருவங்களை எளிதின் ஆராய்ந்து கண் டறிந்தும் அத்தகைய பயிற்சியும், நுண் ணறிவும் வேண்டப்படுபவையாம்' என அவர் கூறியுள்ளமை உற்றுநோக்கற்
உசாத்
அருள் செல்வநாயகம் டி. ரி. விபுலானந்
அருள் செல்வநாயகம் (தொகுப்பாசிரியர்,
(1) விபுலானந்த (2) விபுலானந்தத் (3) விபுலானந்தக்
சற்குணம், மு, (மலர் ஆசிரியர்) அடிகள
அழகரத்தினம், செ, விபுலானந்தரின் கல் யாழ்ப்பாணப் பல்க ஆய்வுக் கட்டுரை, பு சுவாமி விபுலானந்தர் (1) மதங்கசூளாம கொழும்பு 19
(2) யாழ்நூல், த
(3) நடராஜா வ
பெருமாள் டாக்டர் ஏ. என். தமிழரிசை
மருணிக்கியார் (தொகுப்பாசிரியர்),
ஈழநாட்டுத் தமிழ் விருந்
ஈழகேசரி.
கலாநிதி.
செந்தமிழ்,
செந்தமிழ்ச்செல்வி.
தமிழ்ப் பொழில்.
விவேகானந்தன்.

பாலது. நாடகத்தைப் பொறுத்த அள வில் தமிழ் நாடகம் மட்டுமன்றி ஆங்கில, வடமொழி நாடகம் நாடகவியல் பற்றி யும் ஒப்பீட்டுரீதியில் கூறியுள்ளமைபற்றி ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு இசை, நடனம், நாடகம் பற்றி நன்கு ஆராய்ந்தது மட்டுமன்றி அவற்றின் வளர்ச்சிக்கான சில நல்லுரை களையும் வழங்கியுள்ள சுவாமிகளின் பெயரில் ஓர் இசை, நடன நிறுவனம் அவர் பிறந்த பிராந்தியத்திலே - மட்டக் களப்பிலே நிறுவப்பட்டுள்ளமை குறிப் பிடற்பாலது.
துணை
த அடிகள், சென்னை 1966
ஆய்வு, 1987.
தேன், சென்னை. கவிமலர், யாழ்ப்பாணம், 1965
ார் படிவமலர், காரைதீவு, 1969
விச் சிந்தனைகளும், தொண்டுகளும், லைக்கழக முதுகலைமர்ணிப் பட்டத்திற்கான பிரசுரிக்கப்படாதது, 1983.
ணி, பிரதேச அபிவிருத்தி அமைச்சு, 87. (மறு பிரசுரம்)
ஞ்சாவூர், 1974.
டிவம், சென்னை, 1968.
சென்னை, 1984.
து, யாழ்ப்பாணம், 1980,
4 -

Page 53
சேரத்து இளங்கோ6 ஈழத்து விபுலி
Gио.
சேரத்து இளங்கோவின் நெஞ்சை பள்ளும் சிலப்பதிகாரத்தை அழிந்து போகாமல் ஏட்டுச் சுவடிகளில் இருந்து பாதுகாத்து அச்சு வாகனமேற்றி புத்தக வடிவில் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு 1892ம் ஆண்டு டாக்டர் உ. வே. சாமி நாதையர் பரிசளித்தார். அதே ஆண் டிலே சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டு பின் னர் மறைந்துபோன தமிழ் மக்களின் இசை நுணுக்கங்களை ஆராய்ச்சி செய்து மீண்டும் தமிழ் மக்களுக்கு அதை யாழ் நூலாக வழங்கிய ஈழத்து விபுலானந்த ரும் கிழக்கு மாகாணத்தில் காரைதீவிலே அவதரித்தார். எனவே, டாக்ட்ர் உ. வே. சாமிநாதையர் சேரத்து இளங்கோவை யும், ஈழத்து விபுலானந்தரையும் இணைக் கும் பாலமாக அமைத்தார் என்று கூறி னால் மிகையாகாது. சிலப்பதிகாரத்தை அச்சு வாகனமேற்றிய உ. வே. சாமி நாதையர் தான் அச்சு வாகனமேற்றிய சிலப் பதிகாரத்தை ஆதாரமாகக் கொண்டு அதை அடியொற்றி தமிழ் மக்களின் பரந்து விரிந்த இசை ஞானங் களை எல்லாம் நலிந்து போகாது மீண் டும் உருக்கொடுத்து தமிழ் மக்களின் உள்ளங்களிலே உறவாடும் கருவியான யாழ் நூலை உருவாக்கப்போகும். ஈழத்து விபுலானந்தரும் அதே 1892ல் பிறந்தார் என்பதை அன்று அவர் அறிந்து இருக்க வில்லை. ஆனால் டாக்டர் உ. வே. சாமி நாதையரின் கனவு நனவாக சிலப்பதி காரம் அழிந்து போகாமல் புத்தக வடி வில் நிலைத்திருப்பது மட்டுமன்றி சிலப் பதிகாரத்தில் வெளியிடப்பட்ட தமிழ் மக்களின் அழியாத சொத்தான யாழ் வரலாறும் தமிழ் மக்சளுக்கு மீண்டும்
-- ...

պլք,
ஸ்ானந்தரும.
புவனேந்திரன், லதிக அரசாங்க அதிபர், திருகோணமலை.
வழங்கப்பட்டது. இது அவரின் கனவை நனவாக்க ஆற்றிய அளப்பெரிய சேவை யாகும். இந்த வகையில் சேரத்து இளங் கோவையும், ஈழத்து விபுலானந்தரையும் நாம் ஒன்று சேரப் பார்க்கும்போது தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதையரை யும் எம்மால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
சேரத்து இளங்கோவும் துறவி, ஈழத்து விபுலானந்தரும் ஒரு துறவி. ஆனால் இருவரும் தமிழில் மேற்கொண்ட காதலை மட்டும் துறக்கவில்லை. இளங் கோவின் தமிழ்க் காதல், தமிழ் இலக் கிய வரலாற்றுக்கு முதல் முதல் ஓர் காப்பியத்தை வழங்கியது. விபுலானந்த ரின் தமிழ்க் காதல் யாழ்நூலை மட்டு மன்றி மதங்கசூளாமணியையும் தந்தது. இளங்கோவும் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் ஒருங்கு சேரக் காப்பியம் அமைத்து முத்தமிழால் கவி பர்டினார். எமது விபுலானந்தரும் முத் தமிழையும் வளர்த்தெடுத்து முத்தமிழ் வித்தகர் என பட்டமும் பெற்றார். சேரத்து இளங்கோவோ துறவு பூண்டது, உலகத்தை வெறுத்தல்ல. தன் அண்ணன் செங்கூட்டுவனுக்கு போட்டியாகத் தான் அரசுரிமை கோருவேன் என யாரோ ஒருவர் ஆரூடம் கூறியதால், அண்ண னுக்கு ம ன க் குழப்பம் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு தானே துறவு பூண்டான். இது ஒரு நிர்ப்பந்தத்தால் ஏற்பட்ட துறவுதான். ஆனால் எமது ஈழத்து விபு லானந்தரோ துறவு பூண்டது எந்த நிர்ப்பந்தத்தாலும் அல்ல. அவருக்குப் பட்டமும், பதவியும், செல்வமும், செல்
D -

Page 54
வாக்கும் நிறைய இருந்தன. துறவு பூண வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எதுவும் இருக்கவில்லை. ஆனாலும் நலிந்து போன, இருளடைந்த சமுதாயத்திற்கு தன்னம்பிக்கையற்ற சமுதாயத்திற்கு, ஒளியூட்டி, உயிரூட்டி, வாழ்வு த ர வேண்டும் என்ற ஆதங்கத்தால் தானா கவே சேவை நோக்கில் மன்ச்சலனமின்றி துறவு பூண்டார். ஆனாலும் துறவு பூண் ட விதத்தில், சமுதாயத்தைப் பார்க்கும் பார்வையில் இருவரும் ஒரே அடிநாதத்திலேயே வின்ரந்து சென்றார் கள். இளங்கோவும் ஏனைய புலவர் களைப்போல அரசர்களை மட்டும் புகழ்ந்து பாடும் கவிஞனாக இருக்க வில்லை. வடமொழியிலும், கிரேக்க மொழியிலும், ஆங்கில மொழியிலும் உருவாகிய முதல் காப்பியங்கள் அரசர் களையே காப்பியத் தலைவர்களாக வைத்து பாடப்பட்டு இருந்தன. ஆனால் இளங்கோவடிகள் யாத் த த மிழ் மொழிக்கு முதலாவது அலங்கரிக்கப் பட்ட சிலப்பதிகாரமோ சாதாரண குடி மகனான கோவலனையும், கண்ணகியை யுமே காப்பியத்தலைவர்களாகக்கொண்டு இலக்கியம் செய்யப்பட்டது. வேண்டு மான்ால் இமயத்தில் கொடியேற்றிய தன் சகோதரன் சேரன் செங்குட்டுவனை மாத்திரமே காவிய த் தலைவனாகக் கொண்டு அவரால் மாபெரும் காப்பி யத்தை உருவாக்கியிருக்க Փ ւգ պ Lն. ஆனால் எல்லாப் புலவர்களும் அரசர் களையே பாடிக்கொண்டிருக்க இளங்கோ மாத்திரம் சாதாரண பொதுமகனை காப்பியத் தலைவனாக்கியதன்மூலம் சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் மக்களையும், அவர்களது அபிலாசைக ளையும்,ஆசாபாசங்களையும் சித்தரிக்கும் இலக்கியம் செய்தது. அவரது சமுதாய நோக்கில் அவர்கொண்ட விழிப்புணர்ச்சி யைக் காட்டுகின்றது. இந்த வகையில் சுவாமி விபுலானந்தரும், இளங்கோவடி களும். அடிப்படை நோக்கில் ஒன்றுபட்ட வராகின்றார்கள். சமூக, பொருளாதார நிலைமையில் தாழ்வுபட்டுக் கிடந்த மக் களின் வாழ்க்கையை முன்னேற்றத் துடிக்கும் விபுலானந்தரின் இதய தாகம் சங்க மருவிய காலத்து இளங்கோவடி
so

களின் சமுதாய நோக்கில் இருந்து வேறு பட்டதாகத் தெரியவில்லை.
அடிகளர்ரும் அண்ணாமலைப் பல் கலைக்கழகத்தில், உலகின் முதல் தமிழ் பேராசிரியராக இருந்த காலத்தில் “திரு வேட்களத்’தைச் சுற்றியிருந்த சேரிகளி லும் பிற தாழ்ந்த இடங்களிலும் சென்று அங்குள்ள ஏழை மக்களுக்கு சேவை செய்ய முயன்றபோது அதை எதிர்த்த பலர், அடிகளார் அங்குள்ள நல்ல நீர்க் கேணியில் நீர் எடுக்கக்கூடத் தடை செய் தனர். ஆயினும் அடிகளார் உள்ளம் கலங்காது உப்பு நீரையே எல்லாத் தேவைகளுக்கும் உபயோகித்து வாழ்ந்து வந்து, தன் திடமான இலட்சிய வாழ்க்கை யில் மட்டும் சிறிதும் பிறழாமல் அற வாழ்க் கை யை மேற் கொண்டார். சேரத்து இளங்கோவும் அவ் அறவாழ்க் கையையே, தன் சிலப்பதிகாரத்தின் மூலம் பரீட்சார்த்தமாக வெளிப்படுத்தி, அறங்கூறும் காவலனாகத் திகழ்ந்தார். எனவே, சேரத்து இளங்கோவும், ஈழத்து விபுலானந்தரும் அற வாழ்க்கையை போற்றுவதிலும், வாழ்த்துவதிலும்,அதை வழிநடத்திச் செல்லுவதிலும் ஒரே வகை யான உள்ளத் துடிப்புடன் வாழ்ந்து வந்தார்கள் என்பது வெளிப்படை.
இளங்கோவடிகளின் காப்பிய த் தலைவி கண்ணகி சாதாரண ஒரு பெண் ணல்ல். அவள் வீறுகொண்ட ஒரு வீர மாது. சமுதாயத்தின் புரையோடிக் கிடந்த அடக்குமுறைக்கும் அநியாயத் திற்கும் எதிராக கங்கணங்கட்டி நின்று பறைசாற்றிய வீரத் தமிழ்ப் பெண். நீதி யற்ற சமுதாயத்தை நேரே எதிர்த்த வீரநெஞ்சம் படைத்த மெல்லியலாள். தன் கணவன் பாண்டிய மன்னனால் அநியாயமாக நேர்மைக்கு மாறாக கொல் லப்பட்டு விட்டான் எனச் செய்தி கேட்டு அவள் மன்னன் கோட்டை வாசலடைந்து வாயிற் காவலரைப் பார்த்து
வாயிலோயே! வாயிலோயே! அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து
மைமுறை பிமைத்தோன் இறைமுறை Aä லோயே! எனத் தன் உள்ளக் குமுறலை வெளிப்
26 -

Page 55
படுத்தியபோது, இளங்கோவடிக்ள் அக் காலச் சமுதாயத்தின் அறனற்ற தன் மையை கண்ணகிவாயிலாகச் சாடுகி றார் என்றே தோன்றுகின்றது. அதே காலச் சூழல்தான் அக்காலத்தில் கிழக்கு மாகாணத்திலும், விபுலானந்தர் வாழ்ந்த காலத்திலும் இருந்தது. அறனற்ற சமு தாய வாழ்க்கையால் மக்கள் நலிந்து ஒடுங்கி, அடங்கிப்போய் பேசவும் நாதி பற்றுத் தன்னம்பிக்கையற்ற, நடைப் பிணங்களாக வாழ்ந்தார்கள். இதைக் சுண்ட விபுலானந்தர் உள்ளம் உருகி உறுதி பட்ைத்த வீரத் துறவியென சமு தாயப் புரட்சிக்கு, வீறுகொண்டு வழி காட்டி நின்றார். அடங்கிக் கிடந்த மக்களுக்கு நெஞ்சுரமூட்டினார். சமய வாழ்க்கைக்கு மறுமலர்ச்சி கொடுத்தார். ஏழை மக்களின் கல்விக்கு அத்திவார மிட்டார் யாருமற்ற அனாதைப் பிள்ளை களுக்கு ஊன்றுகோலானார். எனவே, எமது இரண்டு துறவிகளுமே வாழ்க் கையை வெறுத்து காட்டுக்குப்போய் தம் சுய அபிவிருத்தியை மட்டும் கவனத்திற் கொள்ளாது, சமுதாய வளர்ச்சிக்கு பாடு பட்டு அதன் விடிவுக்கு வழிகாட்டியாக நின்று புதியதோர் சமுதாயம் படைக்கப் பாடுபட்ட வீர நெஞ்சம் படைத்த தியா கத் துறவிகளாக திகழ்ந்தார்கள்.
சுவாமி விபுலானந்தர் சிலப்பதி காரத்தை படித்தபொழுது பெளர்ணமி நிலவில் கடற்கரை ஓரத்தில் காணல் வரி பாடிய மாதவியின் யாழை மனக் கண்ணிலே கண்டார். அந்த யாழின் மேல் அடங்காத காதல்கொண்டார்.அது புற்றியே சிந்தித்தார். அவர் இதயத்தின் அடித்தளத்தில் இந்திர விழாக் கோலத் தின் தமிழ் மக்களின் இசைப் பாரம் பரியச் சொத்தான யாழ், மாதவியின் கையில் இருந்து இசை மீட்ட இன்ப நாதத்தை மீண்டும் மீண்டும் ரசிக்க முனைந்தது.
மாலை வேளைகளில் மட்டக்களப் பில் கல்லடியில் இருக்கும் நீண்ட பாலத் தின் கீழே பெளர்ணமி காலங்களில் இசை மீட்டும் இனிய நாதத்தையும் அவர் கேட்கும்போது யாழின் தொன்மை யும், இனிமையும் அவருக்கு மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தன. பெளர் ணமி தினங்களில் சிறிய ஒடத்திலே
2

அமைதியான சூழிநிலையில் நீண்ட ஏரி யில் இன்னிசை நாதத்தைக் கேட்கக் கேட்க சிலப்பதிகாரத்திலே கானல் வரி பாடிய மாதவியின் யாழ் அடிகளாரின் நினைவுக்கு மீண்டும் மீண்டும் வந்தது. அவர் சிந்தனை ஓட்டம் சிலப்பதிகாரத் திலே மாதவி தான் மீட்ட யாழை மீண் டும் தமிழ் உலகிற்கு தரமாட்டீர்களிா என அடிகளாரைப் பார்த்து இரந்து கேட்பதைப் போல ஒரு மனவெழுச்சியை அடிக் கடி அடிகளாரின் உள்ளத்தில் தோற்றுவித்தது மட்டுமன்றி, பழந்தமிழ் இலக்கியங்களில் பல்வேறு காலங்களில் உருவான வேறு வேறு இலக்கியங்களில் தெரிவித்த யாழ்களின் வரலாற்றையும் சிந்திக்கத் தூண்டியது. உத யண ன் வாசித்த யாழ் வேறு, இராவணன் சிவ னிடம் தன்னைப் பாதுகாக்க மீட் ட சாமகீதம் இசைத்த யாழ் வேறு. திரு ஞான்சம்பந்தர் தேவாரங்களை இ சை யேறு வாசித்த பாணர் யாழ் வேறு. இப்படி ஏராளமான இசைக் கருவிகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அழிந்து ஒழிந்துவிட்டன. இவையெல்லாம் மீண்டு கொணர்ந்து தமிழ் உலகத்திற்கு வழங்க வேண்டுமென அவர் இதய்ம் துடி துடித்து நின்றது. ஆனால் அதன் வரலாறுகளை அறிய அக்காலப் புலவர்களால் எழுதிய சிறந்த இசை நாடகத் தமிழ் நூல்களான பெருநாரை, பெருங்குருகு, இசைநுணுக் கம், பஞ்சபாரதீயம், முறுவல், சயந்தம் குணநூல், செயிற்றியம் என்பன இன்று எம்மிடம் இல்லை. ஆனாலும் இக்கலை கள் வளர்ந்த வரலாற்றை சிலப்பதி காரத்தில் உரை இல்லாத பகுதிகளுக்கு உரை தேட முயன்றபொழுது அதன் விளைவாக உருவாகிய யாழ் நூலின் மூலம் அடிகளார் தருகின்றார். மேலும் அவர் ஆயிரம் நரம்புயாழின் கணக் கினைக் கண்டறிந்து அ வ் யாழினை மீண்டும் அமைப்பதற்கு வேண்டிய எல்லா விபரங்களையும் தெளிவாகத் தன் யாழ் நூ ல் மூலம் வெளிப்படுத்துகின்றார். ஈழத்து விபுலானந்தர் இதன் மூலம் சே ரத் து இளங்கோவைப்போலவே தானும் ஒரு இச்ை ஞானி என்பதை தெள்ளெனப் புலப்படுத்துகின்றார்.

Page 56
மீட்கும்
*தாமரை
இழந்ததை மீட் எளிதன்று இழந்ததை மீட் எம்விபு ( அளந்தவென் ே அவரதற் பழந்தமிழ் இை பார்த் ெ
தமிழிசை இருந் * சரிகமப தமிழ்க்குரல், வி தாரம், 6 அமுதப் பண்ண
ஐந்திணை தமதருந் திறத்தி தந்திட்ட
தமிழ் - வடமெ தகுந்த ஆ தமிழர்கள் பறி
தமிழிசை தமிழ் யாழின்
தனியாக தமிழிசைப் பண் தமிழர் ய
கட்டுரை, கவிை கடும் பெ விட்டிடாப்பணி
வேண்டிய விட்டாரா போ விடுவாரா தொட்டாரே இ தொடர்ந்

நோக்கே !
ாத்தீவான்’
டெடுத்தல்
கடினமேதான் ! கும் நோக்கே லாநந் தர்க்கும்! நாக்குமஃதே !
கேதான் வந்தார் ! சயை ஆய்ந்து நடுத் திடவே வந்தார் !
த தன்று ! தநி* இல்லை ! ளரி, துத்தம்,
கை, உழை, இளியாம் னைத்தும் மீண்டும் ாப் படியாராய்ந்து நால் நந்தர் ார் யாழும் செய்தே !
ாழி யாராய்ந்து, ஆங்கில மாராய்ந்து,
கொடுத்த ச் சிலம்பாராய்ந்து, அமைப் பாராய்ந்து, ப் பல்லாண்டாய்ந்து ாயாழ் தந்தார், பாம்பெருமை கொள்ள !
த தந்தும், ாருட்பொழிவு செய்தும்,
புரிந்தும், பதவி பெற்றும் துமென்று?
இசையுளத்தார்? ழப்பை மீட்க தேயோர் முடிவுகண்டார்!
28 -

Page 57
5. செவிக்குண வில் சிறிதுண்ட செவிச்சுவை யுை சென்றாெ செவிச்சுவைக் கு தேவனார் செவிக்குணவூட்டு திருப்பணி
6. அருமையாம் என egritor TGS, பெருந்தெய்வத் ே பெருங்கூல் உருவாகும் ஊழு உஞற்றின அருங்குறளார் த அடியொற்
7. பல்லாண்டாய்ப்
பழந்தமிழ் எல்லார்க்கும் மீ "எனதின் வல்ல நற்செயை
வையகப் நல்லுலகுள்ள ம நந்தனார்.
*சாந்தம், பொறுமை, தயை நிறைந்த உள்ளம், பதறுதலி மாதலால் எடுத்தது முடிக்கு நிலையில் நிற்கும் ஞானி புற காணப்படினும் அவனிடத்தி ரளவில்லை."

லாப் போதே டாம் வயிற்றுக்கென்றும், Orpurnir omréksasit லன்-வாழ்ந்தென்? என்றும, றளைத்தந்த
கருத்தைக் கண்டே ம்ெ யாழின்
புரிந்தார் போலும் ?
வினும் வேண்டும் ம - பெருமை நல்கும் ! தேலாதேனும் பிமெய்யே நல்கும் ! ம் தாழாது ால் புறமிட்டோடும் ! நங்கூற்றை bறி அடைந்தார் வெற்றி!
பாடுபட்டே
இசையை - யாழை ட்டுத் தந்தார், பம் எவர்க்கும் " என்றே ! லச் செய்வோர் பெரியாரேதான் ! ட்டும்
வாழ்க - வாழ்க !
யென்னும் நற் குணங்களால் ன்றி அமைதி நிலையில் நிற்கு ம் ஆற்றல் சான்றது. அமைதி த்தொழில் செய்யாதவன்போற் ருந்து உதிக்கும் நன்மைக்கோ
~ விபுலாநந்த அடிகள்.

Page 58
தமிழ்மொழி பற்றி விபுலாநந்த அடிக
மொழிப்பற்று :
விபுலாநந்த அடிகள் வாழ்ந்த காலம் ஆங்கிலேயரும், ஆங்கில மொழியும் தமிழ் மக்களை ஆட்சிபுரிந்த காலமாகும்; தமிழ் மக்கள் உயர்பதவிக்காகத் தம் தாய் மொழியைப் புறக் கணித்து ஆங்கில மோகம் கொண்டு ஆங்கிலமொழியைத் தம் வீட்டு மொழியாகவும் பேசிப்பழகி வந்த காலம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அக்காலப்பகுதியில் ஈழத்தில் தமிழினத் தலைவர்கள் எனப் பட்டம் சூட்டித் தம் மைத் தாமே உயர்த்திக் கொண்டவர்கள் கூட ஆங்கில மொழிக் கல்வியால் உயர்பதவிகள் பெற்றவர்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது. உலகமொழியாகப் போற்றப்படும் ஆங் கிலமொழியைக் கற்றுத் தாம் உயர்ந்தார் களே அல்லாமல் தாம் சுற்ற ஆங்கில மொழிப் புலமையைத் தம் தாய்மொழி யாம் தமிழின் வளர்ச்சிக்கும் பயன்படுத் தினார்களல்லர். இந்த இழிநிலையைத் தாய்மொழிப்பற்று மிக்கவரான விபுலா நந்த அடிகள் வருமாறு துணிச்சலுடன் சுட்டிக்காட்டியுள்ளார். ' மேனாட்டார் பன்னாள் வருந்திச்செய்த அரிய ஆராய்ச்சி யின் பயனாகத் திரட்டி வைத்திருக்கின்ற எண்ணிறந்தனவாகிய கணிதநூல், அனல் நூல், உடல்நூல், மனநூல், சீவநுால், பொருட்டன் மைநூல், இரசாய்ண்துரல், உலக சரித்திரம், பூகோள விவரணம், சிற்பநூல், வர்த்தகநூல் முதலியவற்றில் ஒன்றையேனும் நாம் தமிழ்ப்படுத்த வில்லை. என்ன்ே நம் பேதமையிருந்த வாறு! இங்கனஞ் செய்யாதொழிந்தது

ய
ளாரின் நோக்குகள்.
கலாநிதி இ. பாலசுந்தரம்,
தலைவர், தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம்.
ஆங்கிலங் கற்ற தமிழ் மக்கள் அனைவர் மேலும் பொறுத்த குற்றமாகும்.’’
அவர்கள் தமிழ்மொழியைப் புறக் கணித்தமையையும் அடிகளார் குறிப் பிட்டுள்ளார். தாய்மொழிப்பற்றும், மொழியுணர்வும் ஒவ்வொரு வரிட மும் மேலோங்கி நிற்க வேண்டும். தாய்மொழியிற் படிக்கவேண்டும். தாம் கண்ட்றிந்த உண்மைகளைத் தம் தாய் மொழியிலேயே எழுதி அம்மொழிக்கு வளம் சேர்க்க வேண் டும் என்ற கோட்பாட்டில் அடிகளார் மிக உறுதியாக இருந்த தோடு, செயலிலும் காட்டிய செயல்மறவரா வார். ஆங்கிலத்திலும், தமிழிலும் புத் திரிகைகள் வெளிவரும்போது ஆங்கிலமோகம், தகுதிப்பாடு முத லான போலிக்காரணங் காட்டி ஆங் கிலப் பத்திரிகைகன்ள மட்டும் வாங் கிப் படிக்கின்ற போலி நாகரிகவாசி களை அடி க ளார் கண் டித் தும் வந்திருக்கிறார்.
பட்டணவாசிகளாகிய தமிழ் மக்கள் பெரிதும் ஆங்கிலப் பத் திரிகை களையே ஆதரிக்கிறார்கள். தாம் ஆராய்ந்து கண்ட முடிபுகளை ஆங் கிலமொழியிலெழுதி அம்மொழிக்கே மேலும் மேலும் மதிப்புண்டாக்கு கின்றனர். ஆங்கிலத்திற் கவியெழுத வும் தொடங்கிவிட்டார்கள். வேறு நாம் பேசுவதென்ன? கவிசிரேஷ்ட ராகிய ரவீந்திரநாத்தாகூர் தமது தாய்மொழியிற் கவியெழுதினமை

Page 59
யினாற்றான் உல்கத்தாரது நன் மதிப்பைப் பெற்றாரென்பதை ஆங் கிலம் கற்ற தமிழ் மக்கள் அறியார் போலும். எட்டுமுறை குட்டிக்கரணம் போட்டாலும் தாய்மொழியின்றிப் பிறிதொரு மொழியில் அம்மொழி யினரால் முதற்றரத்ததென்று மதிக் கப்படத்தக்க நூலியற்றல் இயலவே இயலாது." 2
மேற்காட்டப்பட்ட அடிகனாரின் கூற றுக்கள் அவர் தாய்மொழிமீது கொண் டிருந்த பற்றின் ஆழத்தைக் காட்டுவன வாகம்.
தமிழின் தனிச் சிறப்பு
ஆங்கில மொழியை உலகமொழி என்றும், வேந்தன்மொழி என்றும் கூறு வது போன்று தமிழ்மொழிக்கும் உயர் நிலையளிக்க வேண்டும் என்று கூறியவர் விபுலாநந்த அடிகளேயாவார்.
“அவைக்களத்துச் செல்லு தற்குரிய வரம்பினமைந்த ஆங்கில மொழி யினை வேந்தன்மொழி (King’s English) என அம்மொழிப் புலவர் விதந்து கூறுவர். அப்பரிசே யாழும் அவைக்களத்திற் செல்லு தற்குரிய வரம்பினமைந்த தமிழினைப் பாண் டியன் தமிழ்" என்போம். எது தமிழ்? என வினவுவோருக்குப் பாண்டியன் தமிழே தமிழ் என்பது விடையாகும். அதுவே நிலைபேறுடையது.”*
பண்டைத் தமிழ் இலக்கியங்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறி யவை. அவையே நற்றமிழ் என்பதும் அடிகளார் கருத்தாகும்.
தமிழ்மொழியின் தெய்வத்தன்மை :
அடிகளார் மொழிகள்' அனைத்தும் தெய்வத்தன்மை கொண்டவை என்ற கோட்பாடுடையவர். (வி. ஆ. பக். 113) அவ்வகையில் தமிழ்மொழிக்கும் தெய்வத் தன்மை கற்பிக்கிறார். குமரகுருபரசுவாமி கள் இறைவனைப் * பழம்பாடற்றொடை யின் பயனே" எனவும், "நறைபழுத்த
3 س

துறை தீந்தமிழ்னொழுகு நறுஞ் சுவையே எனவும் பாடு வ ைத மேற்கோளாகக் காட்டித், தமிழ் தெய்வத் தன்மை கொண்ட மொழி எனவும் அடிகளார் விளக்கியுள்ளார். *
தூய தமிழில் எழுதுதல் :
இலக்கியம் நற்றமிழில் எழுதப்பட வேண்டும், பிறமொழிக் கலப்போ அன்றிக் கொச்சைப் பேச்சோ எழுத்துமொழியில் இடம்பெறக் கூடாதென்பது அடிகளார் கொண்டிருந்த மொழிக் கொள்கையா கும். இவர் வாழ்ந்த காலத்தில் தமிழில் "மர்ம நாவல்கள்’ மக்களிடையே பெரிதும் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந் தன. அவற்றின் மொழி நடையிலும் தூயதமிழ் இடம் பெற வில்லை. வணிக் நோக்கைக் குறிக்கோளாகக் கொண்டு புதிய ஆக்க இலக்கிய ஆசிரியர்கள் பேச்சு நடையில் தமது ஆக்கங்களை எழுதிக் கொண்டிருந்தனர். இவற்றைக் கண்டிக்கு முகமாக அடிகளார் வருமாறு எழுத லானார்:
* பொருள் வருவாயொன்றினையே கருதி மனம் போனவாறு மரபு தவறி யெழு தும் மொழி வழக்கான து மழைக்காலத்திலே தோன்றி அக் காலங்கழிய மறைந்து போகின்ற சிறு பூடுகளைப் போல் நிலைபேறில்லா தது.”*
தாய்மொழிவழிக் கல்வி :
ஒருவர் தமது எண்ணக் கருத்துக் களை எளிதில் கருத்திற் கொள்ளவும், அவ்வாறே தம் உள்ளத்தே தோன்றும் எண்ண அலைகளை வெளிப்படுத்தவும் ஏற்ற வசதியான கருவியாக அமைவது அவரது தாய்மொழியாகும். பிறர் கருத் துக்களைத் தாய்மொழி யூடாக உள்வாங் கும்போது அவை தெற்றென விளங்கும் தன்மையும் பெற்று விடுகிறது. அது போன்றே தாய்மொழிமூலம் கற்கும் போது எளிதில் விளங்கிக்கொள்ளவும், தாம் அறிந்த வற்றையும், விளங்கிய வற்றையும் மேற்கொண்டு ஆராய்ந்து
-

Page 60
அறியவும் வாய்ப்பாக இருக்கிறது. விபு லாநந்த அடிகள் கல்வித்துறையில் பாலர் முதல் பட்டதாரிகள் வரையிலான பயிற்சி நெறியில் பட்டறிவுடையவர். கல்வித் துறையில் ஆசிரியராகவும், அதிபராகவும், பாடசாலையின் முகாமையாளராகவும், பல்கலைக்கழகப் பேராசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும், இவற்றுக்கும் மேலாகப் பன்மொழிப் புலமையும் பெற் றிருந்தவர். கல்வித்துறையில் இத்தகு பின்புலங்களைக் கொண்டிருந்த அடிக ளார் தாய்மொழிவழிக் கல்வியே சாலச் சிறந்தது என்ற கோட்பாடுடையவர். இக்கோட்பாட்டில் மிகவும் உறுதியான நோக்குடையவராக அடிகளார் காணப் பட்டார். இத்தியாவில் பல மொழி யாளர்கள் தத்தம் மொழிவழியான கல்வி முறையை மேற்கொண்டிருந்தபோது தமிழ்மக்கள் ஆங்கிலமொழிவழிக் கல்வி யைப் பின்பற்றி வந்திருப்பதை அடிக ளார் கண்டித்திருக்கிறார்.
' உயர்தரக் கல்விக் கழகங்களிற் கல்வியறிவூட்டும் முறையைப் பார்த் தால் தினையளவு மருந்தைப் பெறுவ தற்கு மலை முழுவதையும் சுமப்பிக் கும் தோற்றமாயிருக்கிறது. யோக்கி யதா பட்டம் பெறுவதற்கு முயலு கிற மாண வன் தான் தெரிந்து கொண்ட பொருட் டு றை யில் நிறைந்த புலமையுடையவனாயிருப் பினும் ஆங்கில மொழியிற் சொல் வன்மை யில் லா த வனாயிருப்பின் த கா த வ னென்று தள்ளப்படுகி றான்” 6 எனப் பிறமொழிக் கல்வியின் குறை பாட்டை எடுத்துக் காட்டித்தாய்மொழி யாம் தமிழ் மொழிவழிக் கல்வி முறையை வற்புறுத்தும் போக்கு அடிகளாரிடம் காணப்படுவதாயிற்று.
மொழிபெயர்ப்புக்கள் :
விஞ்ஞானக் கல்வியின் இன்றியமை யாமையைத் தாம் நிறுவிய கல்லூரிகளின் மூலம் மாணவர்களுக்கு வற்புறுத்தி வந்த தோடு, விஞ்ஞானக்கல்வி தமிழில் அமைய வேண்டும் என்பதிலும் மிகுந்த அக்கறை யுடையவராக அடிகளார் செயற்ப்ட்டார்.
ar

அவர் எழுதிய ' விஞ்ஞான தீபம் " என் னும் கட்டுரை தமிழில் விஞ்ஞானக் கலைச் சொல்லாக்கங்களை அறிமுகப் படுத்துவதாகும். விஞ்ஞானத்தை அறியும் வழி தமிழ்மொழிக் கல்வியே என்பதில் அடிகளார் உறுதியான நம்பிக்கை கொண் டிருந்தார். தமிழர் தம் வரலாறு தமிழ கத்திலும் சரி, ஈழத்திலும் சரி முறையாக எழுதப்படவில்லை. அதுபற்றிய அறிவும் தமிழ் மாணவர்களுக்கு முழுமையாக இல்லை. இதனை அன்றே உணர்ந்த அடிகளார் இதுபற்றி வருமாறு அழுத்திக் கூறியுள்ளார்
* பள்ளியிற் பயிலும் தமிழ்ச் சிறார் முதற் பலகலை கற்றுத் தேறிய முது தமிழ்ப் புலவர் ஈறாக அனைவரும் தமிழ்க் குலத்தாரின் உண்மை வர லாற்றினை உளம் கொண்டுணர் வதற்கு வேண்டிய சிறியவும்,பெரியவு மாகிய வரலாற்று நூல்கள் பல தமிழ் மொழியிலே எழுதப்படல் வேண்டும். இதுவே நாம் செய்ய வேண்டிய தமிழ்த் தொண்டுகளிலே முதலிலே வைத்து. எண்ணுதற்குரிய தென்பது எனது உள்ளக்கிடக்கை’ 7
தமிழ்மொழியிலே பற்றுக் கொண்ட அடிகளார் பல்வேறு துறைகளிலும் அது முழுமை பெறவேண்டும் என விழைந் தார். தமிழ் மக்களிடையே வடமொழிப் பரதமும், கர்நாடக இசையும் வடமொழி யூடாகச் செல்வாக்குப் பெற்றிருத்தலை உணர்ந்த அடிகளார் ' வடமொழிப் பரதமும், சங்கீதரத்திநாகரமும் சிறந்த முறையிலே தமிழில் மொழிபெயர்க்கப் படுமாயின் அம்மொழிபெயர்ப்பு நூல் கள் தமிழிசையின் மறுமலர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்பது எனது கருத்து” எனக் குறிப்பிட்டுள்ளார்.8 காலத்தின் மாற்றங்களுக்கும், தேவைகளுக்குமேற்ப விரைந்து செயற்படவேண்டும் என்பதே அடிகளார் கோட்பாடாகும் என்பதை அவரது சுற்றே செயற்படுத்துகின்றது:
* கால நீரோட்டம் விரைந்து, ஒடு கிறது. தமிழர் பழங்காலத்துச் சிறப் பினை மாத்திரம் பறையறைந்து கொண்டிருப்பாரெனின் நிகழ் காலத்

Page 61
தையும்,எதிர்காலத்தையும் முழுதும்
இழந்த நீர்மையராதலும் கூடும்.
சென்ற நூற்றாண்டிலே ஐரோப்பா
விலும், அமெரிக்காவிலும் விஞ்ஞானநூல் மிகவும் விருத்தியடைந்து
விளங்குகின்றது. அந்த அறிவுச் செல்
வத்தை தமிழ்மொழி பெறுவதற்
காவன செய்தல் சிறந்த தொண்
டாகும்.’?
"பாரதியார் காட்டிய வழியில்
புத்தம் புதிய கலைகள் பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே’ என்பதற்கேற்ப மேற்றிசையில் வளர்ந் தன்ன விஞ்ஞான அறிவைத் தமிழ் மக் களும் பெறவேண்டும் என அடிகளார் பேராவல் கொண்டிருந்தார். ஆங்கில ம்ொழிகளிலுள்ள விஞ்ஞா ன நூல் களைத் தமிழில் துறைவல்லார் மொழி பெயர்த்துப் பேணவேண்டும் என்பதும் அடிகளார் போதனையாகும். அவ்வாறு மொழிபெயர்க்கும்போது அவை தமிழ் மொழிப் பண்பும், அழகும் சிதையாவண் ணம் அமைய வேண்டும் என்பதை வருமாறு குறிப்பிடுவர்
* தமிழில் மொழிபெயர்ப்பு நூலெழுத முன்வருபவர் சிலர் நிரம்பிய தமிழறி வின்மையான் ஆங்கில மக்களும் தமிழ்மக்களும் ஒருங்கு வெறுக்கத் தக்கப் பயற்றுப் பச்சரிசி நடையில் (பைந்தமிழும் ஆங்கிலமும் சரிக்குச் சரி கலந்த நடையைப் பயற்றுப் பச்சரிசி நடையெனலாம். மணிப்பிர வாளம் என்றாற்போல்) நூலெழுதி முடிக்கிறார்கள். இவ்வாறெழுந்த நூல்களால் விளையும் பயன் ஒன்று மில்லை. ஒரே வழி அயனாட்டுச் சொற்களைச் சேர்த்துக் கொள் வதனாற் குற்றமில்லை. முடிந்த நூல் தமிழ் மணங் கமழ்வதாகவிருத் தல் வேண்டும். அல்லாவிடில் நின்று நிலவாது." 10
பிறமொழிச் சொற்களைத தமிழில் மொழிபெயர்க்கும்போதும் அல்லது பிறமொழிச் சொற்களுக்குரிய கலைச் சொற்களை ஆக்கும்போதும் தமிழ்ச்
-

சொற்கள் சுருக்கம் கொண்டனவாக அம்ைதல் வேண்டும் என்றும்; அவ்வாறு ஆக்கப்படும் சொற்கள் விளக்கமுடை யவையாக இருத்தல் வேண்டும் என்றும்; அத்தோடு அச்சொற்கள் தெளிவுடையன வாக இருத்தல் வேண்டுமென்றும்; இறுதி யாக அவை தமிழுருவம் கொண்ட சொல் லமைப்புடையனவாகவும் அமைதல் வேண்டும் என்றும் அடிகளார் தம் கருத் தைக் குறிப்பிட்டுள்ளார்.
வடமொழித் தாக்கம் :
இரண்ட்ாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்மொழியில் வடசொற்கள் கலந்து வந்துள்ளன. சங்க காலத்திலே சதக் கூற்றுக்கு இரண்டு என இருந்த இவ்வட மொழிக் கலப்பு கி. பி. பத்தாம் நூற் றாண்டுக்குப் பின்னர் ஐம்பது சதக் கூற் றையும் கடந்த நிலையினைத் தமிழ் இலக்கியங்களிற் காணலாம். சொல்லும், பொருளும் வடமொழியினுர டாகத் தமிழ் மொழியில் வந்து சேரலாயின. வட மொழிக் கலப்புடன் வடமொழிப் பண் பாடும் தமிழிற் கலந்து தமிழ்ப்பண்பாடு தனது தனிப் பண்பினை இழந்தது என் பது உண்மையே. இதுபற்றி விபுலாநந்த அடிகளார் கூறுவது ஈண்டு மனங்கொள் ளத்தக்கது :
* தமிழில் சமஸ்கிருதம் கலந்தது. இதன் பயனாக வீரவாழ்வு நடத்திய தமிழன சாதுவானான். வடமொழி அவனுக்குப் பரமார்த்திக விடயங்க ளைப் புகட்டிக் கடவுட் சிந்தனையை மிக வூட்டியது. எனவே, தமிழன் கடவுளைப்பற்றிய ஆராய்ச்சியிற் கருத்தைச் செலுத்த லா னான். மேலும் ஆரிய நாகரீகமே மிகச் சிறந்ததெனவும் ஏனையவை குறைந் தன எனவும் வடமொழி இலக்கியம் போதித்தது. இது காரணமாகத் தமிழனின் வலிமை குன்றத் தொடங் கியது. ஆனால் ஆங்கிலேயருக்குக் கிரேக்க மக்களின் சரிதம் உற்சா கத்தையூட்டி உணர்ச்சியைப் பெருக் கியது. ஆளப் பிறந்தவன் என்ற உண்மை அவனுடைய கண்களைத் திறந்தது. தமிழரிடையே சமஸ்கிரு

Page 62
தம் ஆற்றலைக் குறைத்து வரவே பண்ழய புராணக் கதைகளை நம்பும் நிலை நாட்டில் உண்டாயிற்று. சுருங்கக் கூறின் தமிழனுக்கு அடிமை மனப்பான்மை வலு ப் பெற்றது. உதாரணமாக இலங்கையை எடுத்துக் கொள்வோம். பறங்கிக்காரர் ஆண்ட தன் பின் டச்சுக்காரர் ஆட்சி செலுத் தினர். பின்னதாக ஆங்கிலேயர் எங் கள் தீவைக் கைப்பற்றினர். நாங் கள் எல்லோரும் அடிமைகளாகி விட்டோம். அடிமைமனப்பான்மை நாட்டிற் குடிகொண்டது. ' '
வடமொழியின் ஊடுருவலாலும்,வட வர் பண்பாட்டு மேலாண்மை யா லும் தமிழ்நாடும், தமிழ்ப்பண்பாடும் எவ்வாறு தம் தனிப் பண்புகளை இழந்து அடிமைத் தன்மை கொண்டன என்பதை அடிக ளார் வீறுடன் எடுத்துக்காட்டுதல் இன் றும் பொருந்துவதாகும்.
மொழியியல் நோக்கு:
இசைத்தமிழ் ஆய்வில் புலமையும், பட்டறிவும் மிக்கவரான அடிகளாரிடம் மொழியின் நுட்பங்களை உணர்ந்து கொள்ளும் ஆற்றலும் வாய்ந்திருந்தது. Modern Review Tairpg, liaisyfai) sitti 6Tigu (The phonetics of Tamil Language) தமிழ்மொழியின் ஒலியியல் என்ற கட்டுரையும், கலைமகள் இதழில் அவர் எழுதிய ' சோழ மண்டலத் தமி ழும் ஈழமண்டலத் தமிழும் ' என்ற கட்டுரையும் அடிகளாரின் மொழியியற் புலமைக்குத் தக்க சான்றுகளாகும். ஆங் கிலம், கிரேக்கம், வடமொழி, தமிழ் முதலிய பன்மொழிப் புலமையும்,இந்தியா விற் பல மொழிகள் பேசிய மக்களோடு பழகிய பட்டறிவும் அடிகளாருக்கு மொழி யியல் துறையில் கட்டுரைகள் எழுதவும் தூண்டுதல்களாக இருந்தன. மேலே குறிப்பிட்ட ஆங்கிலக் கட்டுரையில் தமி ழக மக்களின் பேச்சு மொழியின் இயல்பு களை அடிகளார் விளக்கியிருந்தார். இரண்டாவதுகட்டுரையில் யாழ்ப்பாணத் தமிழின் இயல்புகளைச் சிறப்பாக ஆராய்ந்து காட்டியுள்ளார்.

தமிழில் கலைச் சொல்லாக்கம் :
உலக மொழிகள் பல துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருதல் போன்று, தமிழ் மொழியும் வளரவேண்டுமாயின் ஏனைய வளர்ச்சியடைந்த மொழிகளி லுள்ள அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும். அவ்வாறு அறிவுநூல்களை மொழிபெயர்ப்பதற்குக் கருவியாகிய கலைச் சொற்களை (Techntcal Terms) BLÓÁSão ஆக்கிக்கொள்வதற் குரிய அடிப்படை வசதிகளையும் ஏற் படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வகை யில் தமிழிலுள்ள நிகண்டுகள், அகராதி கள் எமக்கு உதவி செய்யத் தக்கன. ஆங் கில மொழியிலுள்ள "1 தெசாநூல் "" என்னும் நிகண்டு நூலினைப்போல் தமி ழிலும் கலைச் சொல்லாக்கத்திற்கென வடமொழி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் பொருட் பாகுபாடு செய்யும் மும்மொழி நிகண்டினை வகுத் தமைத்தல் பெரும் பயன்தரும் செயல் என் பதை அடிகளார் குறிப்பிட்டுள்ளார். 12
தமிழ் மொழியில் ஆட்சியிலுள்ள சொற்களை ஆராய்ந்தறிந்து அவற்றைப் புதிய கலைச் சொல்லாக்கத்திற்குப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். வடமொழி யிலிருந்தெடுத்துத் தமிழ் ஆன்றோராலே தமிழுருவாக்கி, வழங்கப்பட்ட சொற் களைப் பிறமொழிச் சொற்களென கடிந் தொதுக்காது, அவைதம்மை ஆக்கத் தமிழ்மொழியாகத் தழுவிக்கொள்வதே முறைமையாகும்; ஒரோவிடத்து ஆட்சிப் பட்ட வடமொழிப் பதங்களைத் தமிழில் வழங்குதல் குற்றமாகாது என்னும் கருத் துக்களை அடிகளார் முன் வைத்திருப்பது ஆய்வுக்குரியதாகும். மேலைத் தேய மொழிகளில் மட்டுமன்றி வடமொழியில் பேரறிஞர்கள் எழுதிய நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து எழுதித் தக்க வகையில் கலைச் சொற்களை ஆக்கும் பணியில் வடமொழி வல்ல தமிழறிஞர் இனிமேலாவது ஈடுபடுவாராக எனவும் அடிகளார் எழுதியுள்ளார். 19
பிறமொழிச் சொற்களைத் தமிழில் வழங்குமிடத்து அவைதம்மை எவ்வாறு தமிழாக்கிக்கொள்ளுதல் வேண்டுமென்
34 -

Page 63
பது பற்றியும் அடிகளார் குறிப்பிட்டுள் னார். ஒவ்வொரு மொழிக்கும் சிற்சில சிறப்பியல்புகளுள்ளன. அவை தம்மை மாறுபடாது பாதுகாத்தல் ஆன்றோர்க் கியல்பு. தமிழில் ஈரசை மொழிகளே பெருவரவின. மூவசையின் மிக்க மொழி கள் தமிழிற் பயில்வதில்லை. மொழி முதலிலும், இறுதியிலும் நிற்றற்குரிய எழுத்து இவையா மெனவும் இன்ன இன்ன எழுத்துக்களின் முன்னர் இன்ன இன்ன எழுத்துக்கள் மயங்காவெனவும் இலக்சண நூலாசிரியர் வகுத்துக் காட்டி யிருக்கின்றனர். அவர் ஆராய்ந்தமைத்த விதிகளுக்கு இயைவாகச் சொற்களை யாக்கிக்கொள்ளுதல் முறையாகும். உயிருள்ள மொழியானது பிறமொழித் தொடர்புகொண்டு தகைகுரிய சொற் களஞ்சியத்தைப் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும். கலைச் சொல்லாக்கத்தின் போது தமிழ் மொழி மரபு பேணப்பட வேண்டும் என்பதே அடிகளார் கொள்கை யாகும். மேலும் கலை நூல்கள் நர்ட்டிற் பரவுவதற்கு எவ்வெச் சாதனங்கள் வேண்டப்படுவனவோ ஆங்க வற்றைத் தர்மதமின்றி ஆக்கித் தருவது அறிஞரது கடனாகும் (இல. கட்டு பக். 160) என்று எழுதும் அடிகளார், கலைச்சொல்லாக்கம், நூலாக்சம் என்பன விரைந்து செயற்பட வேண்டியதன் இன்றியமையாமையை நன்குணர்ந்திருந்தார் என்பதைக் கோடிட்டுக் கர்ட்டுகின்றது.
அடிகளார் எழுதிய கட்டுரைகளிற் காணப்படும் சில கலைச் சொற்களை எடுத்துக்காட்டு அடிப்படையில் ஈண்டுத் தருதல் பயனுடையதாகும்.
அரமடந்தை - Fairy ஆவியாதல் - Vaporization 2.65s - Conductors உருவம் - Figure ஒரு நீர் ை - Homogeneous ஒளிவீச்சு - Light effect கட்டியாதல் - Solidification சிலைப்பொருள் - Inorganic செம்மை - Goodness செள்ளல் - Deppression தகைவன் - Non-Conductors ( Insulators
3^-سـ

தசைப்பொருள் - Organic
தாக்கல் - Discharge. துகள் நிலை – Amorphous நிறம் – Chlorine படிகநிலை — Crustalline படிமம் — Image பலநீர்மை — Heterogenous பாய்கதிர் - Refracted ray மின்னுரு - Electron மையம் - Focus வட்டம் - Spherical வேதிநுால் . Chemistry
கலைச் சொல்லாக்கத்திலும், மொழி பெயர்ப்புத் துறையிலும் அடிகளார் மிக வும் அக்கறையுடன் செயற்பட்டுள்ளார். ஒரு மொழியிலுள்ள நூலினை மற்றொரு மொழியிற் பெயர்த்து எழுதுமிடத்து முதனூற்பொருள் நடை, இயைபு முதலிய வற்றை மாறு பட விடாது மொழி பெயர்ப்பு நூலினுள்ளுங் காட்டுதல் வேண்டும் என்பதும் அடிகளார் குறிக் கோளாகும். *
அடிகளார் மொழி, மொழிபெயர்ப் புப்பற்றிய கருத்துக்களை எழுத்திலும், உரையிலும் குறிப்பிட்டே வந்திருக்கிறார். யாழ்ப்பாணம் தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கத்தினர், அடிகளார் இலங்கைப் பல் கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக நியமனம் பெற்றபோது, அவரை யாழ்ப் பாணத்துக்கு அழைத்து வரவேற்புச் செய்த கூட்டத்தில் அடிகளார் ஆற்றிய உரையின் ஒரு பகுதி ஈண்டுப் பொருத்த மாகிறது :
மொழிபெயர்ப்பு நூல்களை ஆக்கு வோன் அதிக கவனம் எடுக்க வேண் டும். முதல் நூல் கடின நடையிலிருந் தால் அந் நடையையே மொழி பெயர்ப்பிலும் அனுசரிக்கலாம். எளிய நடையிலிருந்தால் அந்நடை யிலேயே மொழிபெயர்ப்பும் இருத் தல் வேண்டும். அது போலவே அலங்கார நடையிலுள்ள நூலை அலங்கார நடையிற்றான் மொழி பெயர்க்க வேண்டும். சுருங்கச் சொன் னால் முதல் நூலை இயற்றிய ஆசிரியன் தமிழ் நாட்டில் பிறந்து

Page 64
தமிழில் எழுதியிருப்பானானால் எங்ங்ணம் எழுதியிருப்பானோ என யூகித்து, அவ் வகை யில் மொழி பெயர்ப்பு நூலையும் ஆக்கல் வேண் டும்.” 15
நிறைவுரை :
தமிழரிடையே ஆங்கில மொழித் தாக்கம் பெரிதும் மேலோங்கிக் காணப் பட்ட சூழ்நிலையில் வாழ்ந்துகொண் டிருந்த விபுலாநந்த அடிகளார், தமிழ் மக்கள் தாய்மொழிப் பற்றுக்கொண்ட வராக வாழவும், தமிழ்மொழிவழிக் கல்வி பெறவும் பெரிதும் பாடுபட்டார். தாம் அமைத்த கல்லூரிகளினூடாக மொழி
அடிக்குறி
விபுலாநந்த ஆராய்வு - தொகு
மேலது - பக். 35.
மேலது - பக். 112. மேலது - பக். 113. மேலது - பக். 112. விபுலாநந்த அடிகளார் இலக்கி
விபுலாநந்த ஆராய்வு - பக். மேலது - பக். 105 மேலது - பக. 110. Cேலது - பக். 36 - 37. ஈழகேசரி - 1-4-45. விபுலாநந்த இலக்கியக் கட்டு
மேலது - பக். 154.
விபுலாநந்த செல்வம் - தொகு
ஈழகேசரி - 1710-1943.
*உன்னுடைய சிறிய உயிரும், றவையெல்லாம் உன் ஆதீன

பற்றிய தமது கருத்துக்களைச் செயற் படுத்தினார். தனித் தமிழ் வழக்குப்பற்றி யும்; பயன் தரும் பிறமொழி ஆக்கங் களைத் தமிழில் மொழிபெயர்த்தல் குறித்தும் ஆக்கபூர்வமான கருத்துக் களைத் தம் எழுத்திலும், பேச்சிலும் வெளிப்படுத்தி வந்ததோடு,தாமே மொழி பெயர்ப்புத்துறையிலும் கலைச்சொல் லாக்கப் பணியிலும் ஈடுபட்டுவந்தார். விபுலாநந்த அடிகளார் பன்மொழிப் புலவர் என்பதும், தமிழ் மொழியிற் பெரிதும் பற்றுள்ளம்கொண்டிருந்தவர் என்பதும், தொன்மை மறவாத தூய தமிழ்க் கோட்பாட்டினர் என்பதும் புலனாகின்றது.
|ப்புக்கள் :
தப்பு: அருள் செல்வநாயகம், சென்னை,
1963, Ludž. 35.
கியக் கட்டுரைகள், கொழும்பு, 1973,
V ué. 104 00.
ரைகள் - பக். 155.
ப்பு: அருள் செல்வநாயகம், மயிலாப்பூர் - 1963, L16. 94. - 95.
உடலும் உன்னுடையவை. மற் மல்ல. இதை மறவாதிரு."
- விபுலாநந்த அடிகள்.

Page 65
சுவாமி விபு
கல்விப்
இளமைக் காலம்
1892 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி மட்டக்களப்பிலுள்ள காரைதீவு என்னும் கிராமத்தில் சாமித் தம்பி,கண்ணம்மை என்போருக்கு மைந்த னாகப் பிறந்த விபுலானந்தருக்குப் பெற் றோர் இட்ட பெயர் மயில்வாகனம் என் பதாகும். கிராமப் பாடசாலையில் குஞ் சித்தம்பி ஆசிரியரிடம் பாடங்கேட்ட இவர் வீட்டில் வைத்திலிங்க தேசிகரிடம் இலக்கண, இலக்கியங்களைக் கற்று வந் தார். சிறு வயதிலேயே பாரத வசனம் பெரியபுராணம், பஞ்ச தந்திரம், விநோத மஞ்சரி, வில்லி பாரதம், நைடதம், கந்த புராணம் போன்ற நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். ஆங்கிலக் கல்வியினை இவர் முதலில் கல்முனையிலுள்ள மெதடிஸ்ற் கல்லூரியிலும் பின்னர் மட்டக்களப்பி லுள்ள மைக்கேல் கல்லூரியிலும் கற்றார். இவர் 16ஆவது வயதிலேயே கேம்பிறிட்ஜ் சீனியர் பரீட்சையில் சித்தியெய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வித் தகைமைகளும், வகித்த பதவிகளும்.
மட்டக்களப்பிலுள்ள மைக்கல் கல் லூரியிலும், கல்முனை மெதடிஸ்ற் கல் லூரியிலும் ஆசிரியராகக் கடமையாற்றிய விபுலானந்தர் அவர்கள் சிறிது காலத் தின் பின்பு கொழும்பு ஆசிரியர் பயிற் சிக் கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்ற பின்னர் கொழும்பிலேயே விஞ்ஞான டிப்ளோமாப் பட்டம் பெற்றார். மது ரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற பின்னர் யாழ்ப்பாணத்திலுள்ள சம்பத்திரிசியார் கல்லூரியில் விஞ்ஞான
3 سنه

லானந்தரின் பணிகள்
கலாநிதி அம்பலவாணர் சிவராஜா (பேராதனைப் பல்கலைக்கழகம்.)
ஆசிரியராகக் கடமையாற்றினார். யாழ்ப் பாணத்தில் வாழ்ந்தபோது அங்கு விவே கானந்த சபையினை நிறுவினார். பின் னர் லண்டன் பீ. எஸ்சி பரீட்சைக்குத் தோற்றி சித்தியெய்தினார். 1920 இல் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிப ரானார். 1922இல் அதிபர் பதவியைத் துறந்து இராமகிருஷண சங்கத் தில் சேர்ந்து துறவியானார். இக்கட்டத்தில் சுவாமி விபுலானந்தர் என்று பெயர் பெற்று இராமகிருஷ்ண விஜயம் வேதாந்த கேசரி என்ற தமிழ், ஆங்கில சஞ்சிகைகளின் ஆசிரியராகக் கடமை யாற்றினார். 1925 இல் இலங்கை யி லுள்ள இராமகிருஷ்ண பாடசாலை களைப் பரிபாலிக்கும் பொறுப்பினை ஏற்றார்.
1931இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் பதவியை ஏற்றுப் பணிபுரிந்தபோதே யாழ் பற் றிய ஆராய்ச்சிகளை ஆரம்பித்தார். அவருக்கிருந்த பெளதீக, கணித, தமிழ் அறிவே இவ்வாராய்ச்சியைச் செய்ய உத வியது. 1933ல் இலங்கை திரும்பி வந்த சுவாமி மட்டக்களப்பிலுள்ள சிவானந்த வித்தியாலயத்தின் அதிபரானார். இதன் பின்பு பலரின் வேண்டுகோள்களுக்கும் இணங்க இலங்கைப் பல்கலைக்கழகத் தின் தமிழ்ப் பேராசிரியர் பதவியினை ஏற்றார். 1947ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம், 21ஆம் திகதிகளில் இவரது யாழ் நூல் அரங்கேற்றப்பட்டது. இவ்வாறு பல பதவிகளையும் வகித்த சுவாமி விபு லானந்தர் அவர்கள் கல்விக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன. அவை எவை என்பதை இங்கு காண்போம்,
- ܚܪ 7

Page 66
சுவாமி விபுலானந்தரின் கல்வி ப் பணிகள்ை நோக்கும்போது அவற்றை மூன்று பிரிவுகளாக வகுத்து நோக்கலாம் என்று தெரிகின்றது. அவை முறையே (1) தமிழ்க் கலைச் சொல்லாக்கத்துக்கு அவர் ஆற்றிய பணிகள், (2) கல்வி பற்றி சுவாமி அவர்கள் கொண்டிருந்த கருத்துக்களும், அவர் எழுதி வெளியிட்ட நூல்சளும், (3) உயர் கல்விக்கு அவர் ஆற்றிய பணிகள்
கலைச் சொல்லாக்கப் பணி
1934 ஆம் ஆண்டில் சென்னை மாகா ணத் தமிழர் நட்த்திய முதலாவது மகா நாட்டில் கலைச் சொற்சளை ஆக் க வேண்டுமென்ற தீர்மானம் எடுக்கப்பட் டது. கலைச் சொற்கள் ஆக்கப்பட வேண்டிய துறைகளை பின்வரும் ஒன்பது துறைகளாகப் பிரித்தனர். கணிதம், மர நூல், விலங்கு நூல், உடலியலும், நல் வாழ்வும், பூகோ ளம், வரலாறு, வோளாண்மை. இவ்வொன்பது துறை களுக்கும் தனித்தனியான தலைவர்கள் 'நியமிக்கப்பட்டபோதும் இவ்வொன்பது 'துறைகளினதும் பொதுத் தலைவராக சுவாமி விபுலானந்தர் அவர்களே நிய மிக்கப்பட்டார். சுவா மி விபுலானந் தரைத் தலைவராகக்கொண்டு 1938ம் ஆண்டு வெளிவந்த கலை சொற்றொகுதி நூல் பின்வரும் இரண்டு அடிப்படை களைக் கொண்டதாக அமைந்தது. (1) சொற்கள் சுருக்கமாகவும்,தெளிவாகவும், பொருள் பொதிந்தனவாயும் இருத்தல் வேண்டும். (2) அவை தமிழோடு தமி ழாய்க் கலக்கும் இயல்பினவாக இருத் தல் வேண்டும். மேலும் சுவாமி விபுலா னந்தர் ஆக்கிய கலைச் சொற்க ள் மொ ழி த் தூய்மையுடையனவாகவும், இலக்கண வரம்புக்குட்பட்டனவாகவும் அமைந்தன. உதாரணமாக றொடியம் என்ற ஆங்கிலப் பதத்தினை தமிழில் உரோதியம் என சுவாமி அவர்கள் ஆக்கி னார்கள். அதுபோன்றே ஆங்கிலத்தில் மங்கனீஸ் என வழங்கும் சொல் லை தமிழில் மங்களம் என ஆக்கித் தந்தார் கள். மேலும் அவ்வாறான கலைச் சொற் களை ஆக்கும்போது தமிழ் ஒலியமைதி கெடாதவாறு ஆக்கினார்கள். உதாரண

மாக ஆங்கிலத்தில் அக்ரினியம் எ ன. வழங்கும் சொல்லினை அத்தினியம் என. வும், கொறோமியம் என்று வழங்கும் சொல்லினை குருமியம் எனவும் ஆக்கித் தந்துள்ளார். 1976இல் க. நவசோதி அவர்கள் குறிப்பிட்டதுபோல் முப்பத் தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுவாமி விபுலானந்தர் வேதி நூற்றுக்குச் சிறப் புத் தலைவராகவும், கலை ச் சொற் றொகுதிக்குப் பொதுத் தலைவராகவும் விளங்கி தமிழ்க் கல்வியாளர்களோடும் இணைந்து உருவாக்கிய கலைச்சொற்கள், தமிழ் கூறும் உலகிற்கும், தமிழ் வழங் கும் நாடுகளுக்கும் ஒரே தன்மையான சொற்கள் அமையும் மாபெரும் பணியில் முதலாவதாகவும்.முடிவானதாகவும் மேற் கொள்ளப்பட்ட முயற்சியின் சின்னங் களாக இன்றும் விளங்குகின்றன.
வெளியிட்ட நூல்கள்
விபுலானந்தரின் கல்விக் கருத்துக் கள் பற்றியும், அவர் வெளியிட்ட நூல் கள் பற்றியும் ஆய்வுகளை மேற்கொண் டவர், கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கல்வித் துறை விரிவுரை யாளராகக் கடமையாற்றும் திரு. ந. நடராஜா ஆவார். சுவாமி விபுலானந் தரின் கல்விச் சிந்தனைகள்பற்றிக் கூற வந்த நட்ராஜா அவர்கள் மேற்கத்திய அறிவியலினைக் கீழைத்தேசக் கலை ஞானத்துடன் சேர்த்து உள, உ யற் பயிற்சியடிப்படையில் புதியதொரு கல்வி யமைப்பை எம்மிடையே பரப்ப வேண்டு மென்று இவர் முயன்றுள்ளார். அவை எவையெனக் காண்போம்.
கலை, அறிவியல், மெய்ஞானம் மூன்றும் ஒருங்கிணையும் கல்வியே முழு மையான கல்வி என்பது இவரது கருத் தாகும். பல வகை க் கல்வியினையும் மாணவர்களுக்கு எந்தளவுக்குப் புகட்டு தல் வேண்டும் என்பதுபற்றிய கலைத் திட்டம் ஒன்றினையும் சுவாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள், நடராஜா அவர் கள் குறிப்பிட்டுள்ளதுபோல் அது எண் ணுரல், இலக்கண நூல், புவியியல் நூல், வரன்முறை நூல், ஓவிய நூல். இசை நூல் ஆகியவற்றின் சில பகுதிகளைப் பதினாறு வயது நிரம்பும் மு ன்ன ர்
38 -

Page 67
மாணவர்கட்குப் புகட்டுதல் வேண்டும் என்றும், கணித நூலுக்கு அடிப்படை யாகிய பொது விதிகளைக் கருவியாக வும், செய்கையாகவும் மாணவர் க்கு உணர்த்துதல் வேண்டுமென்றும், அறிவு நூற்றுன்றகளுள்ளே இன்றியமையாத பாகமான உயிர் நூலை எல்லா மாண வர்க்கும் அறிவுறுத்துதல்தான் பயன் தரு கின்ற கல்வியாக அமையுமென்றும் இவர் சொல்கிறார். ஆகவே கலையும், அறிவிய லும் இணைந்து நடைமுறையில் பயன் தரத் தக்கதொரு கல்வியமைப்பினை அடிகளார் வலியுறுத்துவதனை நாம் காண்கின்றோம்.
சுவாமி அவர்கள் கற்பித்தல் முறை கன்பற்றி மிக நுணுக்கமான கருத்து களை முன்வைத்துள்ளார். வரலாற்றைக் கற்பித்தல்பற்றியும், அறிவியற் கல்வியை வேதாந்தக் கொள்கையடிப்படையில் புகட்டுதல்பற்றியும், கற்றல் முறைகள் பற்றியும் சுவாமி அவர்கள் தமது கருத் துக்களை முன்வைத்துள்ளார்.
சுவாமி அவர்கள் பல மொ ழி பெயர்ப்பு நூல்களையும் அறிவியல் சம் பந்தமான நூல்களையும், வெளியிட்டுள் ளார். அவரது மொழிபெயர்ப்பு நூல் கள் பின்வருவன:-
(1) விவேகானந்த ஞானதீபம் சம்பா சனைகள் (1924), க ரு ம யோ கம் (1934), ஞானயோ கம் (1934), நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை ( 1941), விவேகானந்தரின் பிரசங் கம் (1934), மேலும் அறிவியல் சம் பந்தமான எந்திரவியல் (1933), கலைச் சொல்லாக்க மாநாட்டுத் தலைமை யு ரை (1936), கலைச் சொற்கள் - வேதி நூல் (1938), மின் சார சாத்தி வரலாறு விஞ்ஞான தீபம் (1922). விஞ்ஞான தீபம். மொழிபெயர்ப்பு முறை (1922) போன்ற நூல்களையும் எழுதி வெளி யிட்டுள்ளார்.
(2) யாழ் நூல், மதங்க சூளாமணி, கணேச தோத்திரப் பஞ்சகரும், குமர
வேணவ மணிமாலையும், நடராஜ
4 --س

வடிவம் என்ற இவரது பிரதான நூல்கள் தவிர இலக்கியம், இசை, சமயம், மொழியியல், கல்வி, அறி வியல் சம்பந்தமாக எண்ணிறந்த கட்டுரைகளையும், நூல்களையும் வெளியிட்டு தமிழுக்கும் கல்விக்கும் தொண்டாற்றியுள்ளார்
இந்தவகையில் பாரதியார் கேட் டுக்கொண்டவற்றை விபுலானந்தர் செய்து முடித்திருப்பதாகத் தெரி கிறது.
(3) உயர் கல்விக்கு ஆற்றிய பணிகள்.
சிதம்பரத்தில் ஒரு பல்கலைக்கழகத் தினை நிறுவி அங்கு தமிழுக்கு ஒரு பேரா சிரியரை நியமிக்க வேண்டுமென்று (ԼՔւգ-6/ செய்தபோது சுவாமி விபுலானந்தரையே அப்பதவியினை ஏற்குமாறு வேண்டினர். அதன்படி சுவாமி அதனை ஏற்றார். பல் கலைக்கழகங்களில் வழங்கப்படும் கல்வி உன்னத வளர்ச்சியடைவதற்கும், அத னால் மக்கள் முழுப் பயன் அடைவதற் கும் அக்கல்வி தாய்மொழிமூல்ம் வழங் கப்பட வேண்டுமென்பதை அவர் நன்
குணர்ந்திருந்தார். இவ்விடயத்தில் தமிழ் நாட்டின் நிலையைப் பின்வருமாறு எடுத்துரைத்தார்: இவ் விடயத்திற்
சென்னை சர்வகலாசாலையாகும், தமிழ் மக்களுமே மிகவும் பிற்பட்டு நிற்கின்றார் கள். தமிழில் மொழி பெயர்ப்பு நூல் எழுத முன்வருவோர் சிலர் நிரம்பிய தமிழறிவின்மையால் ஆங்கில மக்களும், தமிழ் மக்களும் ஒருங்கு வெறுக்கத்தக்க நூல் எழுதி முடிக்கிறார்கள். இவ்வா றெழுந்த நூல்களால் விளையும் பயன் ஒன்றுமில்லை.
இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் பதவியினை ஏற்றமை யால் தமிழுக்கு ஒரு புதுச்சகாப்தம் ஏற் பட்டது. இதன் பின்பு தமிழில் விமர் சன நூல்கள், இலக்கிய வரலாற்று நூல் கள், மொழி சம்பந்தமான நூ ல் க ள் வெளிவரத் தொடங்கின. இதன் பின் னர் இலங்கை திரும்பிய சுவாமிகள் 1942 ஆம் ஆண்டில் இலங்கைப் பல் கலைக்கழகத்தின் முதற் தமிழ்ப் பேரா
9 -

Page 68
சிரியர் பதவியினை ஏற்றார். உயர் கல்வியில் தேசிய ஒருமைப்பாட்டை விரும்பிய சுவாமிகள் சமஸ்கிருதம், பாளி ஆகிய மொழிகளை மற்றவர்களும் பயிலு தல் வேண்டுமென்று வற்புறுத்தி உயர் கல்வியில் தமிழ் கல்வி சிறப்பிடம் பெறுதல் வெண்டுமென்று விரும்பிய சுவாமிகள் தமிழ் நூற் பர ப் பை ஆராய்ந்து யாவுமடங்கியதொரு கலைத் திட்டத்தினை பத் துத் துறைகளாக வகுத்து வழங்கினார். உயர் கல்வி பற்றி சுவாமி விபுலானந்தர் பின்வரும் கருத் தி னை த் தெரிவித்துள்ளார். பா கு பாடற்ற தேசியக்கல்வியே நாம் விரும்பு வது. இமயம் முதல் ஈழம் வரை பரந்து கிடக்கின்ற பெருநிலப் பரப்பின் அறிவுச் செல்வம் பிளவுபடாத ஒன்றாகும். சாதி, சமய வேறுபாடின்றி இந்திய நாட்டுப் பேரறிஞர் கலைத் துறையிலே ஆழப் புகுந்து, ஆர்ாய்ந்து கண்டறிந்த சில முடிவுரைகளை வட மொழியிலெழுதும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வரு கின்றது. இங்கு சாதி, சமயம், மொழி என்பன கல்விப் பெருக்குக்குத் த டை யாக இருக்கவில்லை என்பதை உணர முடிகின்றது. ஐரோப்பாவிலே இரு ள டைந்திருந்த காலத்துக்குப் பின்னர் கல் விப் புனருத்தாரணம் செய்யப்பட்ட பொழுது ஒரு தேசத்து மன்னரும், மந் திரிமாரும் வேற்று நாட்டு பண்டிதர் களுக்குச் சிறப்புப் பட்டமும், புலமைப் பரிசிலுமளித்தனர். இந்திய அறிஞர் சீனாவிலே வரவேற்கப்பட்ட கடன். சீன
‘‘மனிதன் முதன்முதல் கடவுள் தல்வேண்டும். நான் ஆதர யும், அப்பரம்பொருளே அவ உணர்தல்வேண்டும். கடவுன தற்குமுரிய நேரிய வழி அவு பரம்பொருளையே அருந்து இவ்வாறு ஒருவன் திடபக்தி ! அவனுக்கு இவ்வுலகில் இடு

நாட்டுக் கற்றறிந்தோர் இந்திய அரசர் களாலே ஆதரிக்கப்பட்டார்கள். உண் மையின் நிலைபேறான தன்மையானது அரசியல் அக்கறை, செயற்பாடு முதலிய வற்றடுக்கப்பட்டதாக பூ ர ண சுதந்தி ரத்தை அனுபவிக்கும் நோக்கத்தோடு சகல பெருங்கல்வி நிலையங்களையும் நாம், சர்வதேச ரீதியாக அமைத்தல் வேண்டும். இவ்வாறு கூறிய சுவா மி விபுலாநந்தரை திரு. நடராஜா அவர் கள் உலக தேசியக் கல்வி நிபுணர்களுக்கு ஒப்பானவர் என்று குறிப்பிட்டுள்ளார்
சுவாமி விபுலானந்தருக்கு ஒரு பத்து ஆண்டுகள் முன் வாழ்ந்த பாரதியார் அவர்கள் தமிழ்மொழி வளரவேண்டு மாயின் பிற நாட்டு நல்லறிஞர் சாத்தி ரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும். இறவாதப் புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்ற வேண் டும் என்றும் பாடினார். இந்த வேண்டு கோளை சுவாமி விபுலான்ந்தர் நடை முறையில் செய்து காட்டியுள்ளார்.மேலும் பஞ் பாதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் புத்தம்புதிய கலைகள் தமிழில் இல்லை என்றும் பலர் குறைபடுவதைச் சுட்டிக்காட்டியிருந்தார். இக்குறைபாடு களையும் சுவாமி அவர்கள் நீக்க முயற் சித்துள்ளார்:
இவ்வாறு சுவா மி விபுலானந்தர் அவர்கள் தமிழுக்கும் கல்விக்கும் ஆற்றிய பணிகள் விதந்து போற்றத்தக்கதும்,
Gift t fiħ maġg, tal u jew enu Librerstit .
விசுவாசமுடையோனாக இருத் வற்ற் ஓர் அனாதை என்பதை னுக்கு வழிகாட்டி என்பதையும்
ளயறிவதற்கும், அவரையடைவ
ர்மேல் நம்பிக்கைகொண்டு அப்
ணையாய்க் கடைப்பிடித்தலாம்.
உடையோனாய் இருப்பானாயின்
*கண் ஒன்றுமில்லையாகும்.”*
- விபுலாநந்த ագահ,

Page 69
முத்தமிழ் வித்தகன்
தி. மகேஸ் வ | தமிழ் மத்திய ம
கன்னித் தமிழ்மொழியில் கவியொன்று நானியற்றி முத்தமிழ் வித்தகனின் முது புகழ் பாடுவதற்கு கற்றறிந்தோர் சபைதனிலே கவியென்ற போர்வையிலே கானல் நீர் வரியதனைக் கவிஎன்று கூறிவந்தேன்.
குற்றம் புரிகின்றேன் - ஐயா குதர்க்கம் செய்கின்றேன்-பொய்யா ஆசையால் அறையலுற்றேன் அவையோரே அடங்கிடுவீர்!
முத்தமிழ் வித்தகனே முது தமிழ் நாயகனே எத்தனை புகழ் உனக்கு, எதனை நான் இயம்பிடுவேன்.
கன்னித் தமிழுக்கு களங்கமில்லா நம் மொழிக்கு வண்ணத் தமிழோவியங்கள் வகையாய் வரைந்ததற்கா ? இல்லை.
கல்விப் பெருமைக்கு கற்றறிந்தோர். செழுமைக்கு எண்ணற்ற பள்ளிகள் எங்கும் எடுத்த தற்கா? இல்லை.

புகழ் பாடுவோம்
வரராஜா கா வித்தியாலயம்.
சைவம் தழைத்திடவும் - நம் சமயம் விழித்திடவும் பல்விதமான பணி பலப்பல செய்ததறகா. எத்தனை நீ செய்தாய் எத்தனை நான் சொன்னேன.
கற்றலில் வல்லோனாய் கல்வியில் நல்லோனாய் உற்றவர் தனை எல்லாம் உய்விக்க நீ முயன்றாய்.
ஊருக்கு உழைக்கவென உன்னையே நீ துறந்து பாருக்குப் பல பணிகள் பண்பாகச் செய்தோனே! இன்பத் தமிழ் மொழியின் இயல் இசை நாடகத்தில் இனிய வட மொழியில் இன்னும் ஆங்கிலத்தில்.
வங்கம் யவனம் எனும் வான்புகழ் மொழிகளிலும் சிங்களம் அரபு - பாலி சீரிய இலத்தீன் எனும் பண்பறி மொழிகளிலும் படைத்தனை - யே பாண்டித்தியம்.
அடக்க முடையோனாய் அரும்ை யாளனுமாய் சிறப்பு மிக்கவுள்ள சீரியதொண் டாளனுமாய் திறம்பல நீ படைத்து தீரச் செயல் செய்தாய்.

Page 70
வள்ளுவன் தனை ஈந்து தமிழ் நாடது வான் புகழ் கொண்டது போல் வித்தகன் தனை ஈந்து
ஈழம் விண்ணில் மிளிர்ந்ததையா.
முத்தமிழ் வல்லோனே முதல்தமிழ் ஆசானே எத்திறம் நீ படைத்தாய் எவர் தான் உன்நிகராவார்.
ஒப்பியல் நோக்கினாலே. ஓய்ந்திருந்த நம் பண்பைச் செப்பிய உன் செயலைச் செய்வாரோ இன்னொருவர்.
V* Y7 *\,a.ܐܸܠ
'இவ்வுலகம் ஆண்டவனுறை மனிதரெல்லாம் தெய்வாம் வேடம் போடுவோர் பலட் தன்மையைப்போல மானிட கத் தோற்றுவர். ஆயினு பொருளை உற்றுநோக்கும்ே ருடைய மக்கள். நிரதிசயவி டவர். இதனை யாவரும்

கவினூறு புலவோனே - உன் கவிதைகள் கோடிகோடி நவினுணர் நம் தமிழர் - அதை நயப்பாரே நாடிநாடி.
இனிய நம் தமிழ் மொழியில் இருந்த நல் யாழை எல்லாம் புவியதில் மறைந்த பின்பும்
புணர்ஜென்மம் எடுக்க வைத்தாய்.
புவியதில் விபுலாநந்தன் புரிந்த நற் செயல்களெல்லாம் இனி யெவர் யார் மறப்பார் இப் புவி மீதினிலே,
கின்ற கோயில். ஈண்டுவசிக்கும் சம் பெற்றவர். நாடகவரங்கில் பல தோற்றத்தோடு நடிக்கின்ற உரும் புறத்தோற்றத்தில் பலவா ம் உயிருக்குயிராகிய உண்மைப் பாது அ னை வரும் ஆண்டவ பின்பப் பெருவாழ்வுக்குரிமை பூண் அறிதல்வேண்டும்.”*
விபுலாநந்த அடிகள்.

Page 71
சுவாமி விபுலாநந்த பல்கலைக்கழகக் க
சுவாமி விபுலாநந்தரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இக்காலகட் டத்தில் அன்னாரின் செயற்கரிய செய்கை கள், அதனடிப்படையிலமைந்த சிந்தனை கள், கருத்துக்கள் பற்றி காலங்கடந்த நிலையிலாதல் ஆராய்வது சாலச் சிறப் புடையதாக அம்ையும். கிழக்கிலங்கை தோற்றுவித்த முத்தமிழ் வித்தகர் விபுலா நந்தர் ஒரு தமிழ் அறிஞர்; யாழ் தந்த இசை ஞானி எனும் வகையில் அவரது புகழும் பெருமையும் பற்றி பலரும் பரவ லாகப் பேசுவதும், எழுதுவதும், விமரி சிப்பதும் வழமையாக வந்துள்ளது. எனி னும் சிறப்பாக அடிகளாரது கல்விச் சிந் தனைகள், கருத்துக்கள், செயற்பாடுகள் குறித்து அழுத்தங்கொடுத்துக் கூறுவது, எழுதுவது, ஆராய்வது மிக அரிதாகவே அமைந்துள்ளது. விபுலாநந்த அடிகள் ஆசிரியராக, பண்டிதராக விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலை அதிபராக, பள்ளிக்கூடங்கள் பலவற்றின் முகாமை யாளராக, எழுத்தாளராக, பேச்சாள ராக, கவிஞராக, பதிப்பாசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, பத்திரிகாசிரிய ராக, ஆராய்ச்சியாளராக, பல்கலைக் கழகங்களின் பேராசிரியராகப் பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபட்டதோடு, கல் விக் கருத்துக்கள் பலவற்றை வெளிக் கொணர்ந்தவராகவும் இருந்துள்ளார். ஈழமுதல் இமயம்வரை தமிழ்த் தொண் டும், சமய சேவையும், கல்விப் பணியும்" ஆற்றிய வித்தச் செல்வர் விபுலாநந்தரின் கல்விப்பணிப் பரப்பிலே அவரது உயர் கல்விச் சிந்தனைகள், அதற்கான பின்
4 سسس

ரும் ல்வியும்
செ. அழகரெத்தினம் உதவிக் கல்விப் பணிப்பாளர், பிராந்திய கல்வித் திணைக்களம், திருகோணமலை.
‘னணி நிலைப்பாடுகள் பல்கலைக்கழகக்
கருத்துக்களோடு இணைத்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பின்னணி வரலாறு:-
தமிழிலும், ஆங்கிலத்திலும், சமஸ் கிருதத்திலும் புலமைத்துவம் பெற்றிருந் ததும், கல்விக் கூடங்களில் ஆசிரியர், அதிபர், பாடசாலைகளின் முகாமையாள ராகப் பொறுப்புடை பதவிகள் வகித் தமை, பல்கலைக் கழகங்களில் பேரா சிரியராகப் பணிபுரிந்தமை, பிரமச்சாரிய வாழ்வு, இராமகிருஷ்ண மடாலயத் தொடர்புகள் போன்றன அடிகளாரது கல் விச் சிந்தனைகளை வளர்ப்பதிலும்,வெளி யிடுவதிலும், கல்வித் தொண்டாற்றுவதி லும் பகைப்புலமாகவும், முன்னெடுத்துச் செல்லும் பாரிய களமாகவும் அமைந்தன வ்ெனலாம். குறித்த குறுகிய வாழ்க்கை வட்டத்தின் ஏறத்தாழ ஐம்பத்தைந்து ஆண்டுகளில் வி புல 1ா ந ந் த அடிகள் விதைத்த வித்துக்கள் இன்று வேரூன்றி விருட்சமாக வளர்ந்துள்ளன ஆற்றிய தொண்டுகள் அன்னாரை இன்றும் நினைவுபடுத்துகின்றன.
விபுலாநந்த அடிகளின் பல்கலைக் கழகக் கல்விபற்றிய கருத்துக்களைக் கணிப்பதற்கு அவருக்கும், பல்கலைக் கழ கங்களுக்குமிடையே இருந்த இணைப்பு கள், தொடர்புகள் பற்றி அறிவதும் அவ சியமாகும்.
இலங்கைப் பல்கலைக் கழகக் கல் லூரி 1921ம் ஆண்டு கொழும்பில் முதன்
y -

Page 72
முதலில் அமைக்கப்பட்டபோது அதன் தமிழ்ப் பீடத்திற்கு அப்போது 30 வய துடைய இளைஞரான மயில்வாகனன் என்ற பெயரில் இருந்த விபுலாநந்தர் பொருத்தமானவராகக் கருதப்பட்டார். சேர் பொன். அருணாசலம் அவர்கள், இலங்கை மக்கள் சார்பாக gTTLD கிருஷ்ண மடாலயத் தலைமைப் பீடத் திற்கு மயிம்வாகனரை மேற்படி பதவிக்கு விடுவித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். எனினும் அப்போதைய இராமகிருஷ்ண மடாலயத் தலைவர் சர்வானந்தாஜி அவர்கள் துறவுப் பயிற் இக் காலத்தில் அவரை மடாலய சட்ட விதிகள் இடம் தராமையால் விடுவிக்க இயலாதென்று மறுத்துவிட்டார். விபுலா நந்தருக்கு துறவிப் பயிற்சிக் காலத்தி லேயே இலங்கைப் பல்கலைக்கழகக் கல் லூரியில் கற்பிக்கும் வாய்ப்பு தானாகவே ஏற்பட்டமையும், அதற்கு அன்றே அன் னாருக்கு விருப்பம் இருந்தமையும் மயில் வாகனன் - சேர் பொன். அருணாசலம் - திரு. R. மார்ஸ் (அப்போதைய பல் கலைக்கழகக் கல்லூரி அதிபர்) ஆகி யோரிடையே இடம்பெற்ற க டி த ப் போக்குவரத்துக்கள் இதைத் தெளிவு படுத்துகின்றன. இந்நிகழ்வு அடிகளாரது பல்கலைக்கழக ஆரம்ப ஈடுபாட்டுச் சந் தர்ப்பத்தைத் தவறச்செய்ததுடன் கால நேரத்தையும் சிறிது பிற்போட ஏது வாயிற்றெனலாம்.
1927ம் ஆண்டு தமிழ்நாடு சிதம்பரத் தில் ஒரு பல்கலைக் கழகம் நிறுவும் பொருட்டு அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிற்கு அப்பல்கலைக் கழகத்தின் அவசிய தேவை பொருட்டு சான்று சமர்ப் பித்துரைக்க விபுலாநந்தர் அவர் கள் அழைக்கப்பட்டிருந்தார். தமிழ்நாட்டின் கல்வித்துறை விருத்தியின் பரவலாக்கம், மாண்வர்தம் உயர்கல்வித் தேவை, சனப் பெருக்கத்தின் கல்விக் கேள்வி நிலைப் பாடு, தமிழ்நாட்டின் நிலப்பரப்பளவடிப் படையில் கல்வி அமைப்புபோன்ற பல் வேறு கல்வி ஆதாரங்களைக் காரணங் காட்டி புதிய பல்கலைக் கழகங்களின் அவசியத்தையும், குறிப்பாக சிதம்பரத் திற்கென ஒன்று நிறுவப்படுவதன் முக் கிய தேவையையும் விபுலாநந்தர் வலி
- 4

யுறுத்திச் சாட்சியமளித்தார். அவ்வாறு அத்தகைய பல்கலைக் கழகமொன்று சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகமென அமைக்கப்பட்டபோது, அந் நிறுவனத்தின் தமிழ்த் துறைப் பேராசிரிய ராகவும், கீழைத்தேயபிடத்தின் தலைவ ராகவும் பதவி ஏற்குமாறு வேண்டு கோள் விடுக்கப்பட்டமையால் அதனைப் பெருமனத்துடன் ஏற்று அப்பதவியை அடிகளார் 1931 ஆடி தொடக்கம் 1933 ஆண்டு வரை அலங்கரித்தாரெனலாம்.
1943ம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை முதற் பேராசிரிய ராக கடமை ஏற்குமாறு விபுலாநந்தர் அழைக்கப்பட்டதன்பேரில் அதனை ஏற்று 1947 அடிகள் அமரத்துவம் அடையும் வரைக்கும் பணிபுரிந்துள்ளார். சாதா ரணமாக ஒருவருக்கு பல்கலைக் கழகம் தொடர்பாக இவ்வாறான வாய்ப்புக் கள் தாமாகவே வந்துசேருவதென்பது சாத்தியமானதொன்றல்ல என்பதை எவ ரும் ஏற்றுக்கொள்வர். அந்தவகையில் அடிகளாரது நுண்மான் நுழைபுலம் மேலோங்கி மற்றவர் போற்றி ஏற்று மளவிற்கு இருந்ததென்பதே யாதார்த்த மாகும்.
1937ல் விபுலாநந்தர் கைலாயமலை வரை சென்று புண்ணிய தலங்களைத் தரிசித்த காலகட்டத்தில் சென்னைப் பல்க்லைக் கழகத்தில் வரவேற்பு வழங் கப்பட்ட நிகழ்வு, பல்கலைக்கழக தேர்வுச் சபையில் அங்கத்துவம் பெற்றமை, ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்க ஈடு பாடு, இன்னும் பல்வேறு பல்கலைக் கழ கங்களில் சிறப்புச் சொற்பொழிவு ஆற் றிய நிகழ்வு, 1936 புரட்டாதி மாதம் 20ம் திகதி சென்னை பச்சையப்பன் கல் லூரியில் கலைச் சொல்லாக்க மகாநாட் டிற்குத் தலைமை வகித்தமைபோன்றன மேலும் பல்கலைக் கழகம் தொடர்பான அவரது அனுபவங்களை வளம்படுத்தின.
எனவே, கல்வித்துறையில் கடமை புரிந்த கலையறிவும், விஞ்ஞான அறி வும் வாய்ப்பும், உயர் கல்வி நிறுவனங் கள், பல்கலைக் கழகங்களில் சென்று கண்டறிந்த பட்டறிவும் பன்மொழி நூல்
4 -

Page 73
க  ைள ஆராய்ந்து பெற்றுக்கொண்ட நூலறிவும், அறிஞர் பெருமக்கள் பல ருடன் பழகிப்பெற்ற பழுத்த அனுபவங் களும், சுருங்கக்கூறின், 37 வருட கால கல்விச் செயன்முறை அனுபவங்களின் ஒட்டுமொத்தமான அடிப்படை, விபுலா நந்தரின் பல்கலைக்கழகக் கருத்துக்களுக்கு அத்திபாரமாக அமைந்தன. இத்துடன் அவர் வாழ்ந்த காலத்தின் ஈழ, பாரத, உலகச் சூழ்நிலைக்ள், அரசியல்,பொருளா தார, சமூக, சமய, கலாச்சாரத் தேவை கள் போன்றனவும் கணிசமான அளவு இச் சிந் தை களில் செல்வாக்குற்றிருந் தமையையும் மறுக்கவியலாது.
பல்கலைக் கழகக் கருத்துக்கள்:-
விபுலாநந்தர் பல்கலைக் கழகங்கள் பற்றித் தனியாகத் தொகுத்துக் குறித்து கூறாதிருப்பினும் ஆங்காங்கே பல நூல் களிலும், ஆற்றிய சொற்பொழிவுகளி லும், எழுதியும், பேசியும் வந்துள்ளார். *சிந்தா விளக்கின் செழுங்கலை நியமம்' என மணிமேகலைக் காப்பிய நூல் பல் கலைக்கழகத்தைக் குறிப்பிடுகிறது. இத னைத் தெளிவாக நமது விபுலாநந்த அடிகள், ‘செழுங்கலை நியமங்கள் சிந்தா தேவியாகிய கலைத் தெய்வத்தின் ஆல யம் நமது யூனிவசிற்றிஸ்’ (Universities) இக்காலத்து செழுங்கலை நியமங்கள் ! என்றும், ‘நிலவுலகத்திலுள்ள பல்கலைக் கழகங்கள் எல்லாம் கல்வித் தெய்வத் தி ன் கோயில்களாகிச் சத்தியலோக தேவாலயங்களாக விளங்குகின்றன 2 என் றும், அறிஞர் கூடிய இடமே அவைக் களம்” 3 என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கலைபயில்வோன தனக்கியைந்த கல் வித்துறை எதுவெனத் தேர்ந்து அத் துறையில் நிரம்பிய புலமைபெற முய லும் இடம் பல்கலைக் கழக 4 மென்று விபுலாநந்தர் பல்கலைக் கழகத்திற்கு வ  ைர வி ல க் கணம் கண்டுள்ளார். *.நாளந்தை, தகோசீலம் எனும் இடங் களிலும், தென்னாட்டில் காஞ்சிபுரத்தி லும் சிறந்து விளங்கிய சர்வ கலாசாலை களுக்கு உலகின் பல பாகங்களிலிருந்து கற்று வல்லாரும், வித்தியார்த்திகளும் வந்தார்கள் எனவும், பல்வேறு நூற்
4 مست.

றுறை க ள் இச் சர்வ கலாசாலையில் ஆராயப்பட்டுவந்தனவாம் எனவும் அறி கின்றோம். இவ்வாராய்ச்சியை நோக்கு மிடத்து சர்வ் கலாசாலை நிறுவி உயர் தரக் கல்வி வளர்க்கும் முறை நம்மனோர்க் குப் புதுவதொன்றல்ல என்று புலனா கின்றது. இவற்றை ஆராயுமிடத்து பரத கண்டம் பிறநாட்டினருக்குத் தொன்று தொட்டு கலை ஞானத்தையும், தத்துவ ஞானத்த்ையும் வழங்கிவந்ததென்பது புலனாகின்றது 8 என்பதை மிகத் துலாம் பரமாகத் தற்கித்துணர்த்தியுள்ளார். இன்னும் பல்கலைக் கழக அமைப்பு நோக்கம்பற்றி இரத்தினச் சுருக்கமாக அடிகள் பின்வருமாறு கூறியுள்ளதும் சிந்திக்கத்தக்கதாகும். “நாம் எதிர்பார்க் கும் கலாசாலை இலக்கியத்திலும்,ஏனைய கலா ஞானங்களிலும், தேசிய இலட்சி யங்களை வளர்த்தல் வேண்டும். ஏனைய நாட்டிலுள்ள கலைஞானிகள் ஏதாவது கற்றுக் கொண்டு திரும்பக்கூடியதாக இங்கு வரவேண்டும். பின் இங்குள்ள அஞ்ஞானிகளை மெஞ்ஞானிகளாக்கும் அவர்கள் இங்கு வரும் வருகை ஒழிதல் வேண்டும் 6
*.நம் நாட்டிலே நிம்மால் நிறுவப் படுகின்ற சர்வ கலாசாலைக்குரிய பிர தான நோக்கம் கேம்பிறிஜ், லண்டன், பரீஸ், ஜப்பான்போன்ற இடங்களிலுள்ள சர்வ கலாசாலைகளைப்போல தத்தமக் குரிய கலைஞான செல்வத்தை வளர்த்து வருவதாக அமையவேண்டும். த்ொன்று தொட்டு வந்த நமது சிறப்புப் பொருந் திய நாகரிகத்தை வளர்ப்பதாக அமைய வேண்டும். நமது கலை நூல்களைப் பிற ருக்குக் கொடுப்பதற்காக நம்மால் நிறு வப்பட்ட உயர்கல்வி நிலையங்களே உண்மைச் சர்வ கலாசாலைகளாகும்’ என்று உரத்து உரைக்கும் அடிகளார், 'நம் நாகரிகத்தை நாசப்படுத்தி அந்நிய நவநாகரிகத்தை அளித்து, நாளும் நம்மை அடிமையாய் இருக்கச் செய்கின்ற சர்வ கலாசாலை அமைப்பு நமக்குத் தேவை யில்லை. நாம் நமது நாகரிகத்தை நமது நாட்டில் மாத்திரமல்ல பிறநாட்டிலும் பரப்பவேண்டும். பல்கலைக் கழகங்கள் அறிவையும், ஆன்மீகத்தையும், கலா சாரத்தையும் தேசிய உணர்வுடன் சமூக
-س 5

Page 74
நலனுக்காக வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டனவாக அமையவேண்டும் 7 என்று வலியுறுத்திக் கூறுவது இன்றைய போக்கிலும் ஆழச் சிந்திக்கத்தக்கதாகும்.
அரசியல் சுதந்திரம் இல்லாத கார ணத்தால், நம் அறிவையும், ஆத்மாவை யும் ஆங்கிலேயருக்கு அடிமைசீட்டு எழு திக் கொடுத்துவிட்டோமா? இல்லை. அறி வும் ஆத்மாவும் நமக்கே உரியனவாக இருக்கின்றன. அவர்கள் என்றும் ஆசிரி யர்களாகவும், நாம் என்றும் மாணவர் களாகவும் இருந்தால் சமத்துவமும், அந் நியோந்நியமும், நட்பும் ஏற்படுவது எவ் வாறு? அவர்கள் முக்கியத்துவம் வகித்து நமச்குக் கற்பிக்கவேண்டிய பொருளும் உண்டு. நாம் ஆசிரியத்துவம் வகித்து அவர்களுக்குக் கற்பிக்கவேண்டிய பொரு ளும் உண்டு. உலகிற்குக் கொடுக்கக் கூடிய பொருள் நம்மிடம் ஒன்றுமில்லை uurt u96ör pintuh duri வாழ்வதற்கு 욕으f) யோம் அல்லோம். இன்றே தென் கட லுள்ளே குதித்து உயிரை விட்டுவிடுவதே முறையாகும். ஆதலின் நம்மிடத்திலும், பிறருக்குக் கொடுக்கத்தக்க பொரு' இருக்கிறது. அதனைக் கொடுப்பதற் காகவே நமது நாட்டில் கல்விக் கழகங் களை ஏற்படுத்தியுள்ளோம். ' 8 என்று புரட்சிகரமான யதார் த்த நிலைப் போக்கை விபுலானந்தர் எடுத்தியம்பி யுள்ளார்.
“இசைத் தமிழ், நாடகத் தமிழின் இயல்பை இதுவரை பிறநாட்டார் அறிந் தார் இல்லை. இவற்றை வளர்த்து உல கிற்குப் பயன்படச் செய்யும் கடமையும், தமிழ்நாட்டுச் சர்வ கலாசாலைக்கே அன்றி, பிறிதெச் சர்வ கலாசாலைக் குரியது? ? என்று பல்கலைக் கழகத்தின் மற்றுமொரு நோக்கத்தையும் விபுலாநந் தர் விளக்கியுள்ளார். இந்நாட்டின் பல் கலைக் கழகங்கள், கலாசார விடயத்தில் மனப்பூர்வமான சிந் த னா சக் தி யை அளிக்குமானால், இலக்கியப் பாடத் துறைகளுக்கு ஒரு புதிய வழிகாட்டலை வகுத்து, கீழைத்தேய, மேலைத்தேய கலா சாரங்களின் உயிர்த்துடிப்பான தன் மையை ஏற்படுத்துவனவாக அமையும். பிளேட்டோவும், அரிஸ்ரோற்றிலும் மேல்
- 4

நாட்டு மாணவர்களுக்கு எவ்வாறு சொந் தமோ, அவ்வாறு இந்நாட்டு மாணவர் களுக்கும் சொந்தமாக வேண்டும். சென்ற் பிரான்சிஸ், இக்னேசியஸ் லோயலா ஆகி யோர்போல துளசிதாஸ், கபீர் போன் றோரையும் கருதவேண்டும். மாணவர் அறிவினைப் பரந்த ரீதியில் நோக்கி கிழக்கு, மேற்கு கலைச் செல்வங்களில் சிறந்தவற்றை எடுத்து வருங்கால உல கினை நன்முறையில் நடத்தக்கூடிய நற் பிரசைகளாக வளர, பல்கலைக் கழகங் கள் உதவவேண்டும் "10 என்று மேலும் பல்கலைக் கழகங்களின் இலட்சியம்பற்றி விபுலாநந்தர் கூறியுள்ளார்.
“...பட்டம் பெற்ற இலங்கையருள் பெரும்பாலோருக்குத் தாய்மொழியறிவு இல்லாதிருந்ததுடன், அவர் நாட்டின் பண்டைய வரலாறுபற்றிய அறிவும் இல் லாதிருந்தது. சிலர் கிறீக், இலத்தின், பிரான்சிய மொழிகளில் திறமை பெற்று, கிரேக்க, உரோம, பிரான்சிய கலாசார எண்ணம்கொண்டவராக விளங்கினர். ஆனால் அவர்களுக்கு பாரத, பண்டைய ஆசிய நாகரீகமோ, அயலாரின் தென் னிந்திய திராவிட நாகரீகமோ பற்றித் தெரியாமல் இருந்தார்கள். இவர்கள் சீன, ஜப்பானிய, பேர்சிய, துருக்கிய, மொங் கோலிய, ஈரானிய, சுமித்திய கலாசாரத் தொடர்புகள் பற்றிக் கன வி லும் கூட தொட்ர்பற்றவர்களாக காணப்பட்ட னர். இவர்கள் மனோ உலகம். இவர்தம் தாய்நாட்டில் இருந்து சுமார் 1000 மைல் களுக்கு அப்பாலுள்ள பிறநாட்டுக் கல்வி முறையால் நஞ்சாக்கப்பட்டிருந்தது" "1. என்று விபுலாநந்த அடிகள் இதுபற்றிக் குறிப்பிட்டு பொதுவில் பல்கலைக் கழ கத்தில் கலை, கீழைத்தேய பீடங்கள் அந்தந்த நாட்டின் மொழி கலாசாரப் பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பேண வேண்டிய அவசரத்தையும், அவசியத்தை யும் வலியுறுத்தியுள்ளார்.
“நமது முன்னோர்கள் எழுதிவைத்த ஞான நூல்களும் பிறவும் இன்னும் ஐரோப்பிய பண்டிதரால் ஆராய்ந்தள விடப்படாத நிலையினவாக விளங்குகின் றன். தொன்றுதொட்டு தமிழ்நாட்டில்
6 -

Page 75
பா ரா ட் டி வளர்க்கப்பட்டுவருகின்ற அளவை நூல், முப்பொருள் உண்மை உணர்த்தும் சிவஞானபோதம் முதலிய தெய்வ நூல்கள் எனும் இவற்றைப் பெறு வதற்குப் பிறநாட்டினர் நிறைவார்கள் என்பதில் ஐயமில்லை. அங்ங்ணம் நமது தேசத்தறிஞரும் பிறரும் ஒருங்குகூடி உறையுமிடமே சர்வ கலாசாலை எனப் படுதற்குரியது” ? என்றும் “...இதுவரை யில் மேற்றிசையோர் மெய்கண்டானை மதியாமலிருப்பது ஏன் என்றால் மெய் கண்டன் உதித்த தமிழ்நாட்டிற்குரிய நாம் மெய்கண்ட்ானுடைய அறிவு நூலை முறை ப் படி ஆராயா மையினாலென் போம். மெய்கண்டானுடைய சிறப் பியல்பு, பிற்நாட்டு ஆசிரியர்க்கும் மெய் கண்டானுக்குமுரிய ஒற்றுமை விகற்பம், மெய்கண்டான் உதிக்குமுன் தமிழ்நாட் டுச் சமய நிலை, ஆரியரது காலம், முத னுரல், வழிநூல், பிற்பட்ட ஆராய்ச்சி களினால் மெய்கண்டானது நூலில் காணப்படும் வழுக்கள், வழுவமைதி என் றின்னோரன்னவற்றையெல்லாம் பிற நூல் உதவி, பிறமொழி நூலுதவி கொண்டு ஆராயின் அவ்வாராய்ச்சி உல கிற்குப் பயன்படுவதாகும். உலகு அத னைப் பயன்படுத்திக்கொள்ளும்”9 7 ன்று ஆராய்ச்சிபற்றிய அவசியத்தையும், அதை எவ்வாறு மேற்கொள்ளல்ாம் என்பதற் கான குறிப்புகள் சிலவற்றையும் அடி கள் விளக்குவது அவதானிக்கத்தக்கது.
*தொன்றுதொட்டுத் தமக்குரிமை யாக வருகின்ற உண்மை நூல்களின் நிறைய்ையும் குறையையும் நன்குணர்ந்த கலைவல்லுனர் குறையாய துறைகளை நிறைவு செய்யும் வழிகளைத் தேடி நிற் பது இயல்பேயாம். அதன்றியும் கலைத் துறைகள் சர்வதேச விகற்பங்களால் வேறுபடாது எந்நாட்டினர்களுக்கும், எக் காலத்தும் வேண்டப்படுவனவாதலின் அவை பொதுவுடமைகளாகக்கொள்ளும் தகுதிவாய்ந்தன. மேலும் இந்நாட்டின் கல்வி முறை இங்குள்ள பல்கலைக் கழ கங்களை அநுசரித்து ஒழுங்குசெய்யப் படுகின்றன. இற்றைக்கு ஏறக்குறைய 80 ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்ற சென்னைச் சர்வ கல்ாசாலையின் விதி
- 4

களுக்கிணங்கக் கல்வி கற்றுத்தேறிய அறி ஞர்களே இந்நாளிற் கலைத்துறையிலும், அரசியல் துறைகளிலும் முன்னின்று இந் நாட்டின் நிர்வாகங்களை நடத்திவரு கின்றனர். இவர் தாம் பயின்ற மேற் றிசைக் கலைத்துறைகளின் சிறப்புணர்ந்து அவை எல்லாரிடத்தும் பரவவேண்டு மென விழைந்து நிற்பது முறையே யாம். 4 என்று தமிழ் கலைச் சொல் லாக்க மாநாட்டுத் தலைமையுரையில் குறிப்பிடும் அடிகள், பல்கலைக் கழகங் களில் கல்விபெற்ற அறிஞர்கள் தம் கல்வியறிவை ஏனையோர்க்கும் பரவ லாக்கம் செய்து வயனுறச் செய்யவேண் டும்; அதுவே பல்கலைக்கழகக் கல்வியின் பயன்பாடென்றும் குறிப்பிடுகின்றார்.
இலங்கைப் பல்கலைக் கழகம்:-
ஈழத்தின் பல்கலைக் கழகம் தொடர் பாக அடிகளின் கருத்துக்களும், சிந்தனை களும், பணிகளும் சிறப்பிடம்பெறத்தக் கனவாகும். 1943ல் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பதவியை ஏற்பதற்கு முன்னரே விபுலாநந்தர் பார தத்திலிருந்துகொண்டே,1941ல் இலங்கை யின் முக்கிய வெளியீடான ஹிண்டு Fssör (Hindu Organ) 6T 6 b l iš Siffla) s uá “What typ of University Ceylon Needs’ என்ற தலைப்பில் ஆவணி மாதம் 4ம், 8ம், 25ம் திகதிகளிலும், புரட்டாசி மாதம் 1ம், 8ம் திகதிகளிலும், அதே të gfas, susai) “Hints about University for Ceylon 67 air spa, 33) all 9á) 18-9-41 லும் பல சிறப்புக் கருத்துக்களடங்கிய விடயங்களை வெளியிட்டுள்ளார். இவை பற்றி சற்று விரிவாக ப் பார் ப் பது பொருத்தமாகவிருக்கும்.
முதலில் பல்கலைக் கழக இலட்சினை பற்றி விபுலாநந்தர் கருத்துரைக்கையில், *.பழைய சாஸ்திர வரலாறுகள் இவ் வாறாக, இந்நாளிலே ஈழநாட்டுப் பல் கலைக் கழகம் சிங்க இலட்சினையையும், ஸர்வஸ்யலோசனம் சாஸ்த்ரம்’ எனும் வாக்கியத்தினையும் தனக்குரிமையாக்கி நிற்கின்றது. பல்கலைக் கழகத்தின் குறிக் கோளாகிய வாக்கியத் தொடர், “கண்
7 -

Page 76
ணுடையர் என்பவர் கற்றோர் முகத்தி ரெண்டு புண்ணுடையர் கல்லாதவர்' எனும் திருவள்ளுவப் பயனோடு ஒத்த பொருளினது. இலட்சினையும் இப்பொரு ளுடைய தாக க் கொள்ளப்படுதலே பொருத்தமாகும். இனி சாஸ்திரமும் சென்ற காலத்து நிகழ்ச்சிகளையும், எதிர் கால த் தி ல் நிகழவிருப்பனவற்றையும் ஒருங்குணர்த்தும் ஆற்றல் வாய்ந்ததாக வேண்டும். எனவே 'ஸர்வஸ்பலோசனம் சாஸ்த்ரம்" எனும் உரைத்தொடரும், சிங்க இலட்சினையையும் ஒத்த பொரு ளினவாதல் காண்கின்றோம். நாகர்க்கும், நாசதுரபத்தில் இந்நாளில் வாழும் யாழ்ப் பாணத் தமிழர்க்கும், கலிங்கநாட்டு அர சர் குலத்தோடு தொடர்புடைய சிங்கள வர்க்கும் சிங்கக்கொடியுரிமையாதலால் பல்கலைக் கழகத்து இலட்சினையை இரு பெருமக்களும் உவர்ந்தேத்துக்கொள்வார் கள் என்பதில் ஐயப்பாடில்லை' 15 என்று விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1942ல் புதிதாக இலங்கையில் அமைக் கப்படவிருந்த புதிய பல்கலைக் கழகத் தின் அமைப்பு, சுயேச்சைத்தன்மை பற் றிப்பின்வருமாறு அடிகள் Hindu Organ" பத் திரி கை யில் குறிப்பிட்டிருந்தார். “.அரசு உயர்கல்வி உட்பட எல்லாத் தேசிய நடவடிக்கைக்ளுக்கும் பொறுப் பாக இருக்கவேண்டும். அரசின் கொள் கைக்கு முரணாக அல்லது மேலாக இயங் கக்கூடியதாக தன்னாதிக்க சுயநிறுவனம் இருத்தலியலாது. உயர்கல்வி சிறப் புடைத்தகைமை பெறுவோர்க்காக இருப் பது எனினும் அரசியல்வாதிகள் பங்கு கொள்ளத்தக்கதாக உயர்கல்வி உருவாக் கப்பட வேண்டும். வருடாந்த நிதியானது வரவு செலவுத்திட்ட விவாதங்களால் வரையறுக்கப்படாது, அதற்செனச் சட்ட மூலம் வரையறுக்கப்படவேண்டும். பல் கலைக் கழகச் சட்டம் அதன் கொள்கை களை அட்டக்கியதாகவும், பல்கலைக் கழக அதிகாரிகள் அதனை விளங்கித் தீர்மா னம் செய்ய முழுச் சுதந்திரம் உடைய வராக இருத்தல் வேண்டும். இச்சட்டத் தினை பொது மக்கள் விரும்பினால் நாளடைவில் திருத்த, மாற்றக்கூடியதாக இடமிருத்தல் வேண்டும். 18

பல்கலைக் கழக அமைப்பில், பல் கலைக் கழகத்துடன் இணைப்புக் கல் லூரிகளும் இணைக்கப்பட வே ண் டு மென்று அடிகள் அபிப்பிராயப்பட்டுள் ளார். “உயர் கல்லூரிகள் இணைக்கப் பட்டு அவை பல்கலைக் கழகத்தின் கட் டுப்பாட்டின் கீழ் இருத்தல் வேண்டும். அக்கல்லூரி அதிபர்கள் பல்கலைக் கழகச் Fபைகளில், பரீட்சைச் சபைகளில் அங் கத்துவம் பெறவேண்டும். மெட்றாஸ் போன்ற பல்கலைக் கழகங்களில் உதவி கள் பெறுவதுடன், தென் ஆபிரிக்கா, அவுஸ்ரேலியா, பிலிப்பைன்ஸ், இந்தியா, பர்மா, பேர்சியா போன்ற வெளிநாடுகளி லும் இருந்து சிறந்த அறிவாளிகளைக் கொண்டும், அங்கு விரிவுரைகள் நடத் தப்படவேண்டும். கலாநிதி ராதாகிருஷ் ணன், கல்கத்தா பல்கலைக் கழகத்துப் பேராசிரியர் குமார் சர்க்கார் ஆகியோரை வரவழைத்து பல்கலைக் கழக இலட்சி யங்கள் பற்றி ஆற்றச் செய்யும் விரிவுரை கள், அமையவிருக்கும் புதிய பல்கலைக் கழகத்திற்குப் பொருத்தமாக இருக்கும் இவ்வாறு ஒரு நாட்டில் பல்கலைக் கழகம் தகுந்த முறையான ஆயத்தங்களுடன் உருவாக்கப்பட வேண்டும் என்ற உள் ளார்ந்த மனப்பாங்கு அடிகளிடத்துக் காணப்பட்டது எனலாம். 7
கீழைத்தேய, மேலைத்தேய இலக்கி யங்களை பல்கலைக் கழகச் சுவருக்குள் ஒன்றிணைக்கவேண்டும். இதிலும் கீழைத் தேய செல்வாக்கு முதன்மை பெறுதல் வேண்டும். வரலாறு, தத்துவம், கலை மொழி எல்லாவற்றிலும் கீழைத்தேய செல்வாக்கு முதன்மை பெறுதல் வேண் டும். பொருளியல், தொழிநுட்பவியல், அரசியல் என்பவற்றினை மேலைத்தேய முறையில் அணுகுதல் வேண்டும். 18 என் றும் இலங்கைப் பல்கலைக் கழகம் புத்த சமய வரலாற்றை முக்கியமாகக் கற்பித் தல் வேண்டும். இது ஆசிய வரலாற் றுடன் பல வகையிலும் தொடர்புடைய தாகையால் “இன்டர் மீடியற் வகுப்பு களுக்கு இலங்கை, இந்தியா, இந்தோ னேசியா, சீயம், இந்தோசீனா, யாவா, சுமேத்திரா, மலேய குடாநாடு, பிலிப் பைன்ஸ் ஆகிய நாடுகளில் வரலாறுகளை
مسب 48

Page 77
யும் கற்க உதவியாக அமையும். இறுதி வகுப்பு மாணவர்கள் சீனா, கொரியா, ஜப்பான் ஆகிய கீழைத்தேய நாடுகளின தும், ஆப்கானிஸ்தான், பேர்சீயா போன்ற தூர கிழக்கு நாடுகளினதும் வரலாறு களையும் கற்கவேண்டும். சிறப்பு மாண வர்கள் மேற்குறிப்பிட்டவற்றுடன் தற் கால ஐரோப்பிய வரலாறு, உலக வர லாறு என்பவற்றையும் முற்றாகக் கற்க வேண்டும். உள்நாட்டு வரலாறு, அயல் நாட்டு வரலாறு ஆகியவற்றை கற்றுக் கொண்ட பின்னரே ஏனைய நாடுகள் வரலாற்றை கற்கவேண்டும் என்றும் 'ஆசியக் கலைகள் தனிப்பிரிவாகக் கற் பிக்கப்பட வேண்டியவை. புதை பொருள் ஆராய்ச்சியும், தனியாக இலங்கை மாண வர் கற்றற்குரிய ஒரு துறையாகும்’ 19 என்றும், கலைத்திட்டத்தில் வரலாற் றுப் பாடத்தின் முக்கியத்துவத்தை அன்றே வலியுறுத்தியமையும் உணர முடி யும். இன்று தற்போது வரலாற்றுப் பாடம் கலைத்திட்டத்தில் 6 - 11 வகுப்பு களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப் பது விபுலாநந்தரின் கருத்துக்களுடன் தொடர்புபடுத்தத்தக்கதாகும்.
பல்கலைக் சழக ஆளணியினர் பற்றிக் சருத்து ரைக்கையில் விபுலாநந்தர், “பார தத்தில் எல்லாப் பல்கலைக் கழகங்களி லும் பாரத உபவேந்தர்களேயுள்ளனர். பார்மா இதைவிட ஒருபடி மேற்சென்று உபவேந்தரையும், வேந்தரையும் பெற் றுள்ளது. அரச சேவையில் போதிய திறமை வாய்ந்த சிறந்த இலங்கையர் ஒருவர் வேந்தராக இடம்பெறலாம். சேர். பாரன் ஜெயதிலகா அல்லது சேர். வைதியலிங்கம் துரைசாமி அல்லது முக் கிய முஸ்லிம் ஒருவரோ, ஒல்லாந்த பறங்கி யரோ இப்பதவியை அலங்கரிக்கலாம். ஆனால் உபவேந்தர் என்பவர் சர்வதேச மட்டத்தில் ஆழ்ந்த அறிவுள்ள கல்வி மானாக இருத்தல் வேண்டும். சலாநிதி ஆனந்தக்குமாரசுவாமி அவர்களை உப வேந்தராகப் பெறுவது பெறற்கரிய பாக் கியமாகும். அவரது சேவையைப் பெற் றுக்கொள்ள முடியாமல்போனால் அடுத்த மிகச் சிறந்த தெரிவாக பாரதத்தில் இருந்து ஒரு அறிவாளியை உபவேந்த
49 س--

ராக்கிக் கொள்ளலாம். 20 அதற்கு கலா நிதி இராதாகிருஷ்ணன் மிகப் பொருத்த மாக அமைவர்” என்று ஆலோசனை வழங்கியமை பாராட்டுதற்குரியதாகும். சாதி, மத, நிற, நாடு என்ற பேத வேறு பாடு காட்டாது பெறும் ஊதியத்திற் கேற்ப கடமையாற்றக்கூடிய அறிஞரைப் பல்கலைக் கழக விரிவுரையாளனாகப் பெறவேண்டும் 2 என்றும் அடிகள் வலி யுறுத்தியுள்ளார்.
பல்கலைக் கழகத்தில் தாய்மொழிக் குத் தனியிடம், முதனிலை அளித்தல் வேண்டும் என்பதில் அசையா நம்பிக் கையையும், பற்றையும் கொண்டிருந் தார். விபுலாநந்த அடிகள் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய காலத்தில் தாய்மொழிக்கென தனியான இடத்தை ஏற்படுத்த விழைந்திருந்தார் தமிழ், இலக்கிய, இலக்கண உரை நடை களை தமிழில் எழுதாது ஆங்கிலத்தில் எழுதிய தன்மையை அகற்றி, தமிழைத் தமிழில் பல்கலைக் கழக பரீட்சை மட் டத்தில் எழுதுவதற்கு வழிவகுத்தவர் விபுலாநந்த அடிகளே. *.நான் முன் னம் எழுதிய கட்டுரையிலும் தாய் மொழிக் கல்விபற்றிய கவனத்தை ஈர்த் துள்ளேன். சிங்கள, தமிழ் மாணவர்கள் பல்கலைக் கழகத்தில் ஆகக்குறைந்தது ஒரு வினாத்தாளையாவது தத்தம் தாய் மொழி இலக்கியத்திலும், இலக்கணப் பகுதியிலும் எடுக்கச் சட்டரீதியாகச் செய்யவேண்டும். இதை மீறக்கூடிய வகையில் ஏதாவது மாற்றுத்திட்டமோ, சட்டப்பெலவீனங்களோ இருக்க க் கூடாது" 22 என்றும் , சென்னைச் சர்வ கலாசாலை சுதேச பாஷைகளைப் புறக் கணித்துவருகிறது என்பது மறுக்கொணா உண்மையே. சர்வ கலாசாலைகள் ஏற் பட்டு இருப்பது எதற்கோ? ஏழைச் சனங் களிடமிருந்து பெறுகின்ற வரிப்பணத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபா ய்களைக் கொடுத்து வருவது என்ன காரணத்திற் காகவோ? சர்வ கலாசாலை அளிக்கின்ற பட்டங்கள் தம் மொழி மறந்து பிறமொழி யில் பிதற்றுகின்ற பேதை மக்களைக் குறியீடு செய்தற்குரிய அடிமை முத்திரை யாமோ? அன்றேல் அறிவு நிறை மாந்

Page 78
தர்களுக்கு கல்விக் கழகத்தினை கொடுத் துதவும் அறிவு முத்திரையோ?? என்றும் திட்டவட்டமாகத் தாய்மொழிக் கல்வி முக்கியத்துவம் பல்கலைக் கழக மட்டத் திலும், பரவலாக்கம் பெறுதலின் அவ சியத்தை வலியுறுத்தியுள்ளார். இவை பின்னர் நடைமுறைப்படுத்துவதற்கான வழிகோலிகளுள் ஒருவராகவும் விளங்கு கின்றார். அதுமட்டுமன்றி இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவர் ஓங்களமொழி கற்கவும் வகுப்புகளை மற்றவர் உதவியுடன் ஒழுங்கு செய்த துடன், சிங்கள மாணவர், தமிழ்மொழி கற்கும் வகுப்புகளை அடிகள் தாமாகவே நடத்தியும், பன்மொ இக் கல்வி அறி வுக்கு வழிகோலுபவராகவும் இருந்தார்.
யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழகம்:-
விபுலாநந்த அடிகள் பல்கலைக் கழ கம் தனியே, கொழும்பிலோ, பேரா தனையிலோ அமைந்திருந்தால் மட்டும் போதாது. அது குறிப்பாக தமிழ் மக் கள் நலன்கருதி வடக்கு, கிழக்குப் பகுதி களிலும் பரவலாக்கம் பெறவேண்டு மென்ற எண்ணப்பாங்குகொண்டவராக இருந்தார். விசேடமாக யாழ்ப்பாணத் தில் ஒரு பல்கலைக் கழகம் அமைக்கப் படுவது மிகவும் இன்றியமையாத் தேவை யாகும் என்பது அவரது அபிப்பிராயம். இத்தகைய அபிப்பிராயம் ஈழத்தின் அப் போதைய தமிழ்த் தலைவர்கள் ஒரு சிலர் மத்தியில் இடம்பெற்று இருந்தமை யும் குறிப்பிடத்தக்கதே.
*.அழகமைந்த கட்டிடங்களின் தொகுதி தன்னளவிலே சர்வ கலாசாலை யாகமாட்டாது. அறிவுடையோர் பலர் கூடிய இடம் ஆரணியமாயினும் அதுவே சரஸ்வதி தேவி நடனம் புரிவதற்குரிய அரங்கமாகும். பாவலரும், நாவலரும் வசித்துவந்த யாழ்ப்பாண நாடு கல்வித் துறையில் மென்மேலும் விருத்தியடைய வேண்டும் என்பதே எமது உள்ளக் கிடக்கை. தமிழ்ப் புலமையும், சமஸ் கிருதப்புலமையும்,மேலைநாட்டுக் கலைப் புலமையும் யாழ்ப்பாணத்திலே நிரம்ப வேண்டும். புத்திக்கூர்மையுள்ள சிறுவர்

தத்துவ ஞானிகளாகவும், சாஸ்திரிகளாக வும், வடமொழிப் பண்டிதராகவும், தமிழ் நூற் புலவராகவும் சிறந்து விளங்க வேண்டும். உலகம் புகழத்தக்க ģ நூல்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து உற் பத்தியாக வேண்டும். தொன்றுதொட்டு கல்வி வளம் சிறந்து விளங்கும் யாழ்ப் பாணத்தைப் புறக்கணித்துவிட்டு கல்வி மணமில்லா தும்பறையை நாடிச் செல் வது, அவலை நினைத்து உரலை இடித் ததுபோலாகுமொன்றே"? என்று வெர் படையாக விவேகானந்தர் பத்திரிை யில் விமரிசித்ததன் மூலம் விபுலாநந்தர், யாழ்ப்பாணத்திற்கு தனிப் பல்கலைக் கழகமொன்று வேண்டுமென்பதை முதன் முதலில் துணிந்து வெளியிட்டார் என கொள்ளலாம். இவ்விமர்சனத்தில் யாழ்ப் பாணத்திற்கு பல்கலைக் கழகம் தேவை என்பதை ப ல் வேறு கிரணங்களைத் காட்டித் தெளிவாகத் தெரிவித்து. கிழக்கு மாகாணத்தில் பிறந்த அடிகள் கிழக்கு மாகாணத்திற்கு ஒரு பல்கலைக் கழகம் வேண்டும் எனக் கோராமல், கல் விக் காரண நிமித்தம் காய்தல், உவத் தல் இன்றி யாழ்ப்பாணத்திலேயே தமிழ் மக்களுக்குப் பல்கலைக் கழகம் s9 60l Di கப்படவேண்டுமெனக் கேட்டமை அவரது நடுநிலைத்தன்மையையும், தீர் க் 5 fl சனத்தையும் புலப்படுத்துகின்றது.
ஆரியபாஷா அபிவிருத்திச் சங்கத்தை ஒரு பல்கலைக் கழகத் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்ற அவாவும் அடிகளின் உள்ளத்தில் வேரூன்றி இருந்தது. “மதுரை யில் இருக்கும் செந்தமிழ் சங்கமே gp(5 பல்கலைக் கழகமாக விருத்தி பெறுதற் குரியது. யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஆரிய பாஷா அபிவிருத்திச் சங்கமும் அத்தகையினதே '29 என்பதன் மூலம் இதைத் தெரிவித்தார். இச்சங்கம் பல் கலைக் கழகத் தரத்தில் பலதரப்பட்ட பரீட்சைகளை நடத்திப் பட்டங்களை வழங்கவேண்டும் எனக் கருதியே அடிகள் அதற்காகத் தாமாகவே ஒரு கலைத் ஓட்டத்தையும், அதில் சித்தியடைவோர் பெறுதற்காக பத்துவகைப் பட்டங்களை யும் விரிவாக வகுத்துக் குறிப்பிட்டுள் ளார். விரிவு குறித்து அதுபற்றி இங்கு
50 -

Page 79
விளக்கமாக எழுதவில்லை. உண்மையில் இதனை ஆரிய பாஷா அபிவிருத்திச் சங்கம் அமுல்நடத்தியதாகத் தெரிய வில்லை. அவ்வாறு செய்து இருப்பின் அச்சங்கம் இன்று இந்துக்களின் கலா சாரப் பல்கலைக் கழகமாக பரிணமிக்கும் வாய்ப்பினைப் பெற்று இருக்கலFF"
தமிழ்ப் பல்கலைக் கழகம்:-
தமிழ்மொழி விருத்தி நோக்கிலும், தமிழர்தம் நலன்பொருட்டும் தமிழ்ப் பல்கலைக் கழக ம் அமைக்கப்படுதல் பொருத்தமானதென்ற அபிப்பிராயத்தை யும் அடிகள் கொண்டிருந்ததில் ஆச்சரிய மில்லை. ‘தமிழ்க் கலைப் புலமையை வளர்த்தற்குவேண்டிய ஏற்பாடுகள் தமிழ் நாட்டிற்கெனவோர் பல்கலைக் கழகம் நிறுவப்படவேண்டும் என்னும் எண்ணம் நெடுநாளாகத் தமிழ் மக்களது உள்ளத் திற் கிடந்து வருகின்றது. அங்ங்ணமாயி னும் கருதிய அவ் எண்ணம் முற்றுப் பெற்று கைகூடுகின்ற நாள் எந்நாளோ யாம் அறியோம். . பழைய நூற்களை ஆராய்ந்து கற்கவும், புது நூலாக்கவும் பொருந்தி அருங்கலைக் சழகமொன்று தமிழ் நாட்டில் ஏற்படுமாயின் அது பெரும் பயன் அளிக்குமென்பதில் ஐய மில்லை. கன்டை பாஷைக்காதாரமாக மைசூர்ப் பல்கலைக் சழகமும், தெலுங்கு மொழிக்காதாரமாக ஆந்திரப் பல்கலைக் கழசமும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மலையாள பாஷைக்காதாரமாக திரு விதாங்கூர் நகரத்தில் பல்கலைக் கழக மொன்று விரைவில் ஏற்படும்போலும், அங்ங்ணமாயின் கலைவளம் நிறைந்த தமிழ்மொழிக்கு ஆதாரமாக ஒரு பல் கலைக் கழகம் தனியாக ஏற்படவேண்டு மென்பதை அறிஞர் யாவரும் மறுத் துரையார்' 27 எனக் குறிப்பிட்டுள்ளார். சுவாமிகள்ன் விருப்பம் தமிழ்நாட்டில்
அடிக் கு
1. விபுலாநந்தர் சுவாமி ‘பண்டைத் த கலாநிதி 1942
2. விபுலாநந்தர் சுவாமி 'விண்ணுலகம்
- 5

பிற்காலத்தில் நிறைவுபெற்றது. நம் நாட்டில் 1956 தமிழ்ப் பல்கலைக் கழக இயக்கம் உருவானது; காலவோட்டத் தில் அது காலாவதியானது. எங்ஙன மாயினும் அடிகளின் ஆலோசனைகள் நம்மவர் மத்தியில் என்றும் சிந்தனையை தூண்டவல்லன என்பதில் ஐயமில்லை யெனலாம்.
விபுலாநந்தரது வாழ்க்கைக் காலம் இ. பி. 1892 - 1947 வரை உள்ளடக்கிய தாகும். 21ம் நூற்றாண்டின் முன்னரைக் கூற்றில் அவர் வெளியிட்ட பல்கலைக் கழகங்கள் தொடர்பான கருத்துக்களும், சிந்தனைகளும், ஆற்றிய பணிகளும் அவர் காலகட்டப்போக்கின் அடிப்படையில் கணிக்கப்படவேண்டியன. சமகாலத்தில் வாழ்ந்த கல்வியியலாளருடன் ஒப்பிட்டு நோக்குதற்குரியன. குறிப்பாகப் பண்டி தர் நேரு, ரவீந்திரநாத் தாகூர், ராதா கிருஷ்ணன், பொன்.அருணாசலம் G3 Jfr sr றோர் கருத்துக்களுடன் ஒப்பிடுதற்குகந் தன. அடிகள் பல்கலைக் கழ1ங்களில் பதவி வகித்த காலையில் செய்த சேவை களும், ஆற்றிய பணிகளும் தனித்து ஆராயப்படவேண்டியன. இன்னும் சிறிது நாள் வாழ்ந்திருக்கக்கூடிய வாய்ப்பு இருந் திருக்குமேல் அடிகளின் பல்கலைக் கழகப் பணிகளும், அக்கல்வி தொடர்பான கருத் துக்களும் மேலும் விரிவாக்கப்பெற்று நம் எல்லார்க்கும் பயன் தருவனவாக அமைந்திருக்கலாம். பொது வில் அன் னாரது பல்கலைக் கழகக் கருத்துக்கள் பல்கோணங்களில் நுணுகி ஆராய்ந்: அறியப்படுவதுடன் அவை பொருத்த முற அமுலாக்கம் பெறவும் வழிகோலப் பட வேண்டும். விபுலாநந்த அடிகளின் கல்விப் பணிகள் குறிப்பாக உயர்கல்வி தொடர்பான கருத்துக்கள் டாரிய பெறு மானம் வாய்ந்தன எனக்கூறலாம்.
மிழரின் இசைக் கருவிகள்’
Ljës. 4 8.
' ஈழகேசரி ஆண்டு மடல், 1938 பக். 1.
1 -

Page 80
9.
0.
I.
2.
13.
14.
5.
16.
7.
8.
19.
20,
21.
22.
23.
24.
25。
26,
27.
விபுலாநந்தர் சுவாமி இந்து சாதன
சந்திரசேகரம், ப. கல்வித் தத்
விபுலாநந்தர் சுவாமி ‘தமிழ்மொழ
கடமையும்"
விபுலாநந்தர் சுவாமி “புதிய கல்வி
30-10-38.
விபுலாநந்தர் சுவாமி 'தமிழ்மொழ
கடமையும்" மேற்படி பக். 109. மேற்படி பக். 111.
Vipulananda Swami Notes and (
Prabuddha
Vipulananda Swami “What Type Hindu Org
விபுலாநந்தர் சுவாமி “தமிழ்மொழி
யும்” இராமகி மேற்படி பக். 110.
விபுலாநந்தர் சுவாமி ‘தமிழ்க் கை
செந்தமிழ்ச் ( விபுலாநந்தர் சுவாமி “பல்கலைக் க
Vipulananda Swami What Type Hindu Orga bid Page 5.
I bid Page 5.
bid 1-9-41 Page 3.
Vipulananda Swami “Hints about J8-9-41 Pag bid. Page 5.
I bid Page 3.
விபுலாநந்தர் சுவாமி ‘தமிழ்மொழி யும்" இராமகி
விபுலாநந்தர் சுவாமி 'ஆசிரியர் உ6 1927 Li. 2.
விபுலாநந்தர் சுவாமி 'தமிழ்மொழி யும்" இராமகி
விபுலாநந்தர் சுவாமி ‘ஆரிய திரா6 கலாநிதி 1943
விபுலாநந்தர் சுவாமி விபுலாநந்த உ

ாம் மறுபிரசுரம் 17-6-60 பக். 1.
5in Lo Lud. 207.
பியின் தற்கால நிலமையும், தமிழர்தம் இராமகிருஷ்ண விஜயம் பக். 105 - 106.
த் திட்டத்திற்கு ஆதரவு' ஈழகேசரி 1ё5. 2.
மியின் தற்கால நிலமையும், தமிழர் தம் விபுலாநந்த வெள்ளம் பக். 107 - 108,
comments Freedom in Education - Bharatha 1941 Page 46.
of University Ceylon Needs.' an 25-8-41 Page 3.
யிென் தற்கால நிலையும், தமிழர்தம் கடமை ருஷ்ண விஜயம் பக். 107.
லச் சொல்லாக்க மாநாட்டுத் தலை மையு ரை’’ செல்வி 1935/36 பக். 99. ழக இலட்சினை' ஈழகேசரி 19-2-45 பக். 4.
of University Ceylon Needs' un 4-8-41 Page 1. 18-9-41 Page 3.
University for Ceylon' Hindu organ
3.
பின் தற்கால நிலையும், தமிழர்தம் கடமை ருஷ்ண விஜயம் பக். 111. ள்ளக் கிடக்கை' விவேகானந்தன்
யின் தற்கால நிலையும், தமிழர்தம் கடமை ருஷ்ண விஜயம் பக். 110. விட பாஷா அபிவிருத்திச் சங்கம்’ 3 u. 93.
உள்ளம் பக், 20.
52 --

Page 81
விபுலானந்த
க. சுவர்ணராஜா, B
மனித இனம் நாகரீகம் அடையத் தொடங்கிய நாள் முதலே கல்வியும் தோன்றியது. எனின் அது மிகையாகாது. ஆனால் மனித இனம் நாகரீகம் அடைந்த பல காலம் முதல் அது பட்டை தீட் டாத மண்ணின் வைரமாகவே இருந்து வந்துள்ளது மாந்தர்களின் உடல், உள் ளம், ஆன்மா ஆகியவற்றின் இயற்கைப் பேறுகளை வெளிக்கொணர்ந்து விளக்கம் பெறச் செய்யும் அக் கல்வி யா ம் வைரத்தை பட்டை தீட்டி மனித இனத் திற்கு நன்முறையில் பயனளிக்கக்கூடிய தாக வழங்கியவர்கள் கல்வி தத்துவ ஞானிகளாவர்.
பிளேட்டோ, ரூகோ ஜோண் ரூயி, கார்ல்ம்ார்க்கஸ் போன்ற மேலைநாட் டுக் கல்வி ச் சிந்தனையாளர்களுடன் காந்தி, தாகூர் போன்ற கீழைத்தேய தத்துவ ஞானிகளும் கல்வியை உலோ காயுத முறையில் மாற்றியமைத்த பெரு மைக்குரியவர்களாவர். இவ்வரிசையில் இலங்கையைச் சேர்ந்த நாவலர், சுவாமி விபுலானந்தர், அநாகரிக தர்மபால அறிஞர் சித்திலெப்பை ஆகியோரும் கல்வி வளர்ச்சிக்கு பெருந் தொண்டாற் றியவர்களாவர்.
இவர்களுள் பாடசாலைகளில் ஆசி ரியராகவும், கல்லூரிகளில் அதிபராகவும், ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்க அமைப்பாளராகவும், பூரீ இராமகிருஸ்ண சங்கப் பாடசாலைகளின் முகாமைக் கா ர ரா க வும், சர்வகலாசாலைகளின் முதல் தமிழ்ப் பெரும் பேராசிரியராகவும், இந்திய தமிழ்ச் சங்கங்களில் உறுப்பின ராகவும், தலைவராகவும், யா ழ் நூ ல் என்ற இசைக் களஞ்சியத்தின் எழுத் தாளராகவும் திகழ்ந்து கல்விப் பணி ஆற்றிய முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவர்கள் இலங்கை ஈன்
s

த் தொண்டு
, Com. Dip-in-Edu.
றெடுத்த அரும்பெரும் கல்விமான்களில் தலையாய இடத்தை வகிப்பவராவர்.
‘விபுலம்’ என்பதன் பொருளான அறிவு என்பதையும் *ஆனந்தர்”என்பதன் பொருளான மகிழ்விப்பவர் என்பதையும் தன் நாமத்தில் கொண்டு, அறிவினால் உலகத்தை மகிழ்விப்பவர் என்ற திரண்ட பொருளுக்கு ஏற்ப சுவாமிகள் தமது சமூகத்திற்கு அன்பு நெய்யூற்றி, அறிவுச் சுடர் வளர்த்து மகிழ்வினை உண்டாக் கினார்கள்.
சுவாமி விபுலானந்தர் தமிழும், ஆங் கிலமும் செவ்வனே ப யி ன் று அம் மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். கணிதம், விஞ்ஞானம், இசைக்கலை, நாடகக்கலை எ னு ம் துறைகளிலும் ஆழ்ந்த அறிவு படைத்தவர்.இந்துசமயம், கலாச்சாரம் என்பவற்றின் சின்னமாய் விளங்கியவர். இலங்கையிலேயே - சிறப் பாகக் கிழக்கிலங்கையிலேயே ஒரு சமு தாயப் புரட்சியை உண்டாக்கியவர்.
சமதர்ம முறையில் அமைந்த ஒரு உயர்தரக் கல்விமூலம் தேசிய மறுமலர்ச் சிக்கு வித்திட்டதன்மூலம் கிழக்கிலங்கை யில் வீறு கொண்ட சமுதாயத்தை உரு வாக்குவதற்குத் தம் மை அர்ப்பணித் தவர்.
சுவாமி விபுலானந்தரின் கா லம் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலமாகும். இலங்கை மண்ணை எ ல் லாம் கொள்ளைகொண்டு, அரசு கட்டி, பேரரசு அமைத்து, எம் செல்வங்களை அன்னியர் சுரண்டிச்சென்ற காலம் அது. மட்டுமன்றி அவர்களைத் துதி பாடுவதற் தாக ஆங்கில மொழியோடு மதத்தை யும் சேர்த்து அதனை நன்றாக க ற் போர்க்கு வேலை கொடுத்து ஒரு கூட்
3 -

Page 82
டத்தைத் தமக்குச் சாதசமாய் அமைத் திருந்தனர். இந்நிலையில் நா ட் டி ன் பெரும்பாலான மக்கள் கல்வி வாசனை யின்றி, வறுமையுற்றுச் சோர்வடைந்து, தன்னம்பிக்கையிழந்து ஏங்கி இருந்தனர். குறிப்பாகக் கிழக்கிலங்கை மக்கள் கீழ் நோக்கி போய்க்கொண்டிருந்தனர். இந் நிலைமையைப் பேர்க்க சுவாமிகள் சமு தாயத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியக் கல்வி முறையைச் செயல்படு தியவராவர்.
அடிகளார் அன்புடன் ஆக்கி உதவிய புத்தம் புதிய தமிழ்ச் சொற்களும், மொழிபெயர்ப்புகளும் தமிழ் மக்களால் இன்னும் போற்றிப் புகழப்படுகின்றன. கிழக்கிலங்கையின் திருகோணமலை இந் துக் கல்லூரி, மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம், வடக்கிலங்கையின் யாழ்ப் பா ன வைத்தீஸ்வரா வித்தியாலயம் என்பனவும், இக்கல்லூரிகளிலே கற்றுத் தேறிய நம்மவரும் அடிகளாரின் கல்விப் பணியினை நமது சமூகத்திற்கு எடுத்துக் காட்டும் சான்றுகளாகும்.
அடிகளார் தாம் நிறுவிய பாடசாலை கள் மூலம் மாணவர்களிடையே சமதர் மத்தையும், தேசியப் பற்றையும், கலை ஆர்வத்தையும், விஞ்ஞான உணர்வையும் ஏற்படுத்தினார். அமரகவி பாரதியாரின் பாடல்களையும், வீரத்துறவி விவேகா னந்தரின் ஆலயப் பிரசங்கங்களையும் கலைத் திட்டத்தில் சேர்த்தார். இவை மாணவரிடையே தேசப்பற்று, சமயப் பற்று, மொழிப்பற்று என்பவற்றை ஏற் படுத்தின. தேசிய உணர்ச்சியை வேரூன் றச் செய்தன. ரவீந்திரநாத் தாகூரின் கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சர்வதேச கல்வி முறையிலும் நமது அடி களாருக்கு அபார நம்பிக்கை இருந்தது. இவற்றுடன் விஞ்ஞானத்திற்கும் சிறப் பிடம் கொடுத்து அத்துறையில் எவ் வளவுக்கு வளரச் செய்ய முடியுமோ அவ்வளவுக்கு அரும்பாடுபட்டுச் சகல செளகரியங்களையும் தமது பிற்கால சந்ததியாருக்குச் செய்து கொ டு த் த பெருமையும் அடிகளாரையே சாரும்.
“கல்வி பயனுள்ள ஓர் தொழிலை மையமாகக் கொண்டு இருத்தல் வேண்டு மென்ற' அடிப்படைக் கரு த் தை க் கொண்ட காந்தியடிகளின் ஆதாரக் கல்வித் திட்டத்தை இலங்கையில் முதன் முதலில் பரீட்சித்துப் பார்த்த பெருமை முத்தமிழ் வித்தகரையே சாரும். அத் துடன் கல்வியானது சகல இன மக்க
anse

ளிடையேயும் சமத்துவ, சகோதரத்துவ உணர்வை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் மாணவர் களிடையே பல மொழிகள் கற்கும் ஆர் வத்தை ஏற்படுத்தியமை இவரது கல் விப் பணிகளில் தலையாயது ஆகும். கல்வித் துறையில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்னும் மூன்று மொழிகளை யும் கற்க வேண்டிய அவசியத்தை முதன் முதலில் உணர்ந்து, அதைச் சிவானந்த வித்தியாலயத்தில் செயல்படுத்திக் காட் டிய பெருமை அடிகளாருக்கு உண்டு.
யாழ்நூல், ம தங்க கு ளா ம ணி போன்ற அரும் பெரும் நூல்களையும், பல கட்டுரைகளையும், செய்யுள்களை யும் யாத்துத் தந்ததுடன் பல மொழி பெயர்ப்புக் கட்டுரைகளையும், ஒப்பிலக் கியங்களையும் சுவாமிகள் கல்வி உ ல கிற்கு வழங்கி பணியாற்றியுள்ளார்கள். பழமையும், புதுமையும் மேற்றிசைச் செல்வத்தையும், கீழைத்தேய நாகரீகத் தையும் ஆழ்ந்து நோக்கி அவை யாவற் றிலும் உயிர்த்துடிப்புடன் உள்ளவற்றை எடுத்துக் காட்டியவர் அடிகளாவார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தி அலும், இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றியும், இலங்கை யின் பல கல்விச் சபைகளிலும் அங்கம் வகித்தம் அரும் பெரும் உரைகளையும் கல்வித் திட்டங்களையும் உ ல கி ற்கு அளித்துள்ளார்.
“பல்கலைக்கழகமே ஒரு நாட்டின் மாங்க்ல்யம். அது ஒரு நாட்டின், ஓர் இன மக்களின், ஒரு மொழி பேசுவோரின் மரபுப் பண்பாடு உடையோரின் உயிர் நாடி' எனும் கருத்தைக் கொண்டிருந்த அடிகளார் தமிழ் நாட்டிலும், இலங்கை யிலும், பல்கலைக்கழகக் கல்வியை உரு வாக்கியவர்களுள் சிறப்பிடம் பெறுகின் றார்.
சிறந்த படைப்பாளியாக, சிறந்த பேராசிரியராக, தேசீயப்பற்றை வளர்க் கும் மகா னாக, சமத்துவம், சகோதரத்து வம் பேணும் வழிகாட்டியாகத் திகழ்ந்து உண்மை, அழகு, செம்மை முதலியன நிறைந்த வாழ்வில் மக்கள் தம் உள்ளக் கமலம் கூப்பிய கைக் காந்தள், நாட்ட விழி நெய்தல் முதலியவற்றை இறை வனுக்குப் படைத்து மகிழவேண்டுவது கல்வியின் பயன் எனக் கொண்டவர் முத்தமிழ் வித்தகர் ஆவர். 萃
54 -

Page 83
சென்றதின்
ந. இரவி (விரிவுரையாளர், சிறி
*அடிகளார் 1931ம் ஆண்டு ஆணி மாதம் அண்ணாமலைப் பல்கலைக்கழ கத்துக்குப் பேராசிரியராகப் போயிருந்த பொழுது அவர் ஆற்றிய அரும்பணி ஒன் றினை நாம் இங்கு குறிப்பிடவேண்டி இருக்கின்றது. சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பாட்டுக்கள் யாவும் மிகுந்த உணர்ச்சியுடன் முன்னேற்றமான கருத் துக்களைப் பொதிந்துள்ளனவாயிருந்தா லும், அவை பழைய யாப்பமைதியோடும், தமிழ் மரபோடும் முற்றப்பொருந்தாமை யின் உண்மையான தமிழ்க் கவிகளல்ல என இலக்கண, இலக்கியங்களைக் கற்ற றிந்த பண்டிதர்கள் வெறுத்தனர். அப் பாடல்களுக்குரிய மேலான சிறப்பையும் கொடுக்க மறுத்தனர். ஆனால் அடிகளார் அண்ணாமலை நகரை அடைந்தபோது அங்கு பாரதி கழகம் என்ற ஒரு சங்கமுங் கூட்டி அப்பாட்டுக்களை இசையறிந்த புலவரைக்கொணடு இசையுடன் பாடு வித்தார். அதன் பின்னரே பாரதியாரின் புகழும், டாட்டுக்களும் தமிழ் நாடெங் கணும் பரவின. தேடாதிருந்த பாரதி யாரை தமிழுலகம் கனம்பண்ண வைத்த பெருமை விபுலாநந்த அடிகளாருக்கே உரியதாகும்'. (பேராசிரியர் க. கண பதிப்பிள்ளை; 'ஈழத்து வாழ்வும் வள மும் ' பக். 39 - 40]
தனது முதல் தமிழ்ப் பேராசிரியராய் விபுலானந்த அடிகளாரைப் பெற்றிருந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தில், அவ ரைத் தொடர்ந்து தமிழ்ப் பேராசிரிய ராய் புகழுடன் கற்பித்த அடிகளாரின் மாணவர், பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை 'யாழோசை' எனுந் தலைப் பில் எழுதிய கட்டுரையின் சில வரிகள் இவை. தாய்மொழிப் பற்றும், தேசியக் கல்வியில் அயராத உழைப்பும், தேசப் பற்றும் மிகுந்திருந்த அடிகளார் உள்ளம்
5 --س-

ரி மீளாது
ந்திரன். ாத கல்விக் கல்லூரி.)
பாரதியால் ஈர்க்கப்பட்டதும், அதன் காரணமாய் அவர் பாரதியை மகாகவி யாய் பாரறிய வைக்க முனைந்தமையும் வியப்புக்குரிய ஒன்றல்ல.
அடிகளார் போற்றிய பாரதி ‘சென்ற திணி மீளாது மூடரே" என இடித்துரைத் தவர். ஆயினும், வழக்கொழிந்து போன யாழ் இசைக்கருவியை மீளக் கண் டு பிடித்து உலகுக்கு வழங்கிமையாலேயே அடிகளார் பெரிதும் போற்றப்படுபவர். சென்றது மீள முடிந்ததும் அதன் பொருட்டே புகழ்ச்சியீட்டவும் சாத்திய மானது எப்படி?
வேறொரு சந்தர்ப்பத்தில் பேராசிரி யர் க. கணபதிப்பிள்ளை குறிப்பிட்ட ஒரு விடயம் இங்கு மனங்கொள்ளத் தக்கது. 'தமிழ் நாட்டின் ஏனைய பாகங் களிலே தமிழிசையைப் பழைய முறைப் படி கேட்பது அரிது. காதில் விழுவதெல் லாம் பிறநாட்டுக் கலப்பிசை. ஆனால், இன்னும் மட்டக்களப்பு பகுதியில் ஆடப் படும் கூத்துக்களிலோ அல்லது ஏருழவர் வாயிலே அல்லது அரிவிவெட்டும் அரிவை யர், ஆடவரிடத்திலோ அல்லது நெற் குத்தும் வனிதையர் நாவிலோ இன்றுங் கேட்பது சரியான தமிழிசை. அவ்லிசை ஒலியின் நடுவில் பிறந்ததன் காரணத்தி னாலேயோ அடிகள் தமிழிசைக்கலை ஆராய்ச்சியிலீடுபட்டது?’ (அதே நூல். Luji. 79 ]
அகக்காரணிகளுள் ஒரு அம்சமாக வும், வேறெவரைக்காட்டிலும் ஏன் அடி களார் இத்துறையில் முன்னோடியாய் அமைந்தார் என்பதற்கான காரணங் களில் ஒன்றாகவும் பேராசிரியர் க. கண பதிப்பிள்ளையின் இக்கூற்றைக் கவனத் திற்கொள்ளமுடியும்.
5 -

Page 84
புறக்காரணியின் தூண்டுகை இல் லாதவிடத்து இத்தகைய நூல் ஒன்று பிறந்திருக்கவோ, முக்கியத்துவம் பெற்றி ருக்கவோ முடியாது என்பதை நாம் அவதானிக்க முடியும். வேறு வார்த்தை களில் கூறின், அதன் உருவாக்கத்திற்கு அடிகோலிய புறக்காரணியே அந்த நூலின் முக்கியத்துவத்தையும் பாரறிய வைத்ததென்பதை நாம் காணமுடியும்.
பல ஆண்டுகளின் முன்னரே பாரதி தமக்கும், சபைக்கும் புரியாத தெலுங்குக் கீர்த்தனங்களை சங்கீதக் கச்சேரிகளில் சங்கீத விற்பன்னர்கள் பாடுவதைக் கண் டித்து, தமிழிசை இயக்கத்திற்கு அடி யெடுத்துக் கொடுத்திருந்தார். பாரதி மறைவையடுத்த சில ஆண்டுகளிலேயே தமிழிசை இயக்கம் முனைப்படையத் தொடங்கிவிட்டது. 1929ம் ஆண்டில் அண்ணாமலைச் செட்டியார் நிறுவிய இசைக்கல்லூரியும், அது 1932 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டதும், 40-41ம் ஆண்டு களில் அண்ணாமலை செட்டியார் தமி ழிசை பாடல்களை ஊக்குவிக்க 20,000 ரூபா வழங்கியமையும், 1941 ஆசஸ்ட் 14 - 17 தேதிகளின் முதல் தமிழிசை மாநாடும், 1943 மே மாதம் சென்னைத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பெற்றமையும், சென்னைத் தமிழ்ச்சங்கம் தமிழிசை இயக் கம் தொடர்பாக எடுத்த தொடர் செயற்பாடுகளும் என விரிந்த வரலாற் றுப் பின்னணியின் பேறாகவே யாழ் நூலின் தேவை எழுந்தது.
தமிழிசை அடையாளம் காணப்படும் போது அதை வழங்கியிருக்கக்கூடிய கரு வியை இனங்காண்பதும் தவிர்க்கவியலா தது. இச்சூழ்நிலையில் யாழ் பற்றிய ஆய்வு முன்னெடுக்கப்படுவது ஒரு வர லாற்று நிர்ப்பந்தம். அந்த வரலாற்றுக் கடமையை அடிகளார் யாழ்நூல் வாயி லாய் நிறைவு செய்தார். யா ழ் நூ ல் கரந்தை தமிழ்ச் சங்கத்தினால் 1947இல் வெளியிடப்பட்டது.
விபுலாநந்த அடிகள் பற்றிய குறிப் பில் யாழ்நூல் பற்றிக் கூறும்போது, 'இசைத்தமிழ் நுட்டங்களை ஆராயும்
5 صہ

இப்பெருநூல். தமிழ், வடமொழிகளின் இசைநூல் முடிவுகளையும் ஒப்பவைத்து ஆராய்ந்து வெளிப்படுத்தும் இறவாத ஒரு புது நூல்; அடிகளாரின் பதினான்கு ஆண்டு ஆராய்ச்சியின் பயனாகக் கிடைத் தது இந் நூ ல்' (கலைக்களஞ்சியம், தொகுதி 9, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, முதலாம் பதிப்பு 1963, கலைக் களஞ்சிய அலுவலகம், பல்கலைக் கழகக் கட்டடம், சென்னை 5, பக். 3301 எனக் கலைக்களஞ்சியம் கூறுவதை நாம் கவனத்திற் கொள்ளவேண்டும். இங்கு குறிப்பிடப்படும் பதினான்கு வருட ஆய் வுப் பரப்பு தமிழிசை இயக்கம் முனைப் படைந்த காலம்.
பாரதியை பிரபல்யப்படுத்துவதற்கு அடிகளாரை ஊக்கிய அதே தேசிய விடு தலை உணர்வே, யாழ் பற்றிய ஆய்வை முன்னெடுக்கவும் அவரைத் தூண்டியுள் ளது. அடிகளார் உள்ளம் அறிந்தவர்கள் இதற்கு மாறாக அவர் யாழ் மீண்டும் அதே வடிவில் புத்துயிர்பெற எண்ணி னார் என்றோ, தனித்தமிழிசை தூய்மை குன்றாது விளங்கவேண்டும் எனக் கருதி னார் என்றோ நினைக்கமாட்டார். வர லாற்று இயக்கப்போக்கில் மு ன் னு ற விரைதல் தவிர்க்கவியலாததென்பதும், சென்றது அப்படியே மீளாது என்பதும் அடிகளார்க்குத் தெரியாததல்ல. தூய தமிழ், அல்லது தூய தமிழிசை மட்டுமே வேண்டுமென அவர் எங்கும் வெளிப் படுத்தியதுமில்லை.
அந்தவகையில், த ன து காலத்தின் தேவையை நிறைவு செய்யும் பணியையே அடிகளார் முன்னெடுத்தார் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியும். எமது பண்பாட்டின் வேரை வெளிக்கொணர் வதன் வாயிலாக, அடிமை மனோ பாவத்தில் மூழ்கி, சுயமிழந்து செயலற் றுக் கிடந்த இனத்தை தட்டியெழுப்ப யாழ்நூல் ஒரு கருவியாக முடிந்தது.
‘தேசிய இன உணர்வுகளின் காரண மும், காரணியுமாக முகிழ்த்தது யா ழ நூல்' என்ற அர்த்தம் பிறக்கக்கூடிய வாறு நாம் கூறும்போது சமயத் துறவி யொருவரின் அடிப்படை நோக்கங்களுக்கு
6 -

Page 85
விரோதமாக அரசியல் சாயம் பூசுவ தாகக் கருத இடமுண்டா?
சமயத் துறவென்பது சமூகத் துற வல்ல என்ற உ ண் மை விபுலாநந்தர் காலத்துக்கு முன்பே நிதர்சனமாகிவிட்ட ஒன்று. 1876 - 77 ஆம் ஆண்டுகளில் ஈழம் எதிர்கொண்ட கடும் பஞ்சத்தின் போது ஐந்தாம் குரவராய் மதிக்கப் பெறும் ஆறுமுகநாவலர் கஞ்சித்தொட் டி த் தர்மத்தை ஒரு இயக்கமாகவே நடாத்தியவர். தவிர, நாவலரின் பணி வெறும் சைவ மேன்மையில் மட்டும் அடங்கிவிடவில்லை; அந்நிய கலாச்சார ஆக்கிரமிப்பை முறியடித்து, தேசிய கலாச் சாரத்தைப் பாதுகாத்து முன்னெடுப்பதற் கான முயற்சியாக அவர் பணி இனங் காணப்பட்டு, தேசிய எழுச்சியின் வித்து களில் ஒன்றாக அடையாளங் காணப் படுவதை பேராசிரியர் க. கைலாசபதி போன்றோர் ஆய்வுகளில் நாம் கண் டிருக்கிறோம். (பேராசிரியர் க. கைலாச் பதி: அடியும் முடியும், இலக்கியச்சிந்தனை கள், ஈழத்து இலக்கிய முன்னோடிகள்).
விபுலாநந்த அடிகள் இராமகிருஷ்ண இயக்க்த்தைச் சேர்ந்தவர். அந்த வகை யில், இராமகிருஷ்ண இயக்கத்தை ஸ்தா பித்து அதன் பணிகளை த ன் செய லாற்றல்மூலம் செப்பனிட்ட விவேகா நந்தரின் வழித்தோன்றல். விவேகாநந் தர் தன்னை ஒரு அரசியல்வாதியாக இனங்காணக்கூடாதென வலியுறுத்திய போதிலும் இந்திய தேசிய விடுதலை இயக்கத்தின் முன்னோடியாகக் கருதப் படுபவர். அவருடைய உரைகளும், செயல் களும் இந்திய மக்களிடம் அரசியல் விழிப் புணர்வைத் தூண்டியிருந்தது. 'அடிமை யொருவன் ஆன்மீக விடுதலைபற்றி எண்ண முடியாதாகையால் தேசிய விடு தலையை முதலில் ஈட்டுக" என்ற அந்த வீரத்துறவியின் உரைகளால் மக்க ள் மட்டுமல்ல சுதந்திரப் போராட்டத் தலைவர்களுங்கூட உணர்ச்சிபெற்றனர் என்பதை காந்தி, நேரு, ராஜாஜி போன் றோர் கூற்றுக்களிலிருந்து அறிய முடி யும். (பெ. சு. மணி: 'பாரதியாரும், இராமகிருஷ்ண இயக்கமும்', பக். 64 - 71 1.

7
விவேகாநந்தரின் சிஷ்யையும், பாரதி யின் குருவுமான நிவேதி தா தே வி நேரடியாகவே தேசிய விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்ததோடு, தன்னைப் பின்பற்றிய பாரதி போன்றோரை தேச விடுதலை - பெண் விடுதலை - சாதிய ஒழிப்பு ஆகியவற்றுக்காகப் (Burt prrrl é சொன்னவர்; அப்போராட்டங்களில் தா மே முன்னுதாரணமிக்கவராய்த் திகழ்ந்தவர் (பெ. சு. மணி: அதே நூல், Luj 218 - 91
அந்த வகையில், செயல்மறுப்பைக் கைவிட்ட துறவறத்தை நவீன வரலாற் றில் பரக்க்க் காண்கிறோம். கேவலம் தனியாளின் ஆன்ம ஈடேற்றம் என்ற நிலை கடந்து, சமூக விடுதலையை இத் துறவிகள் இலட்சியமாக வரித்துக்கொண் டதைக் காண்கிறோம். உலகையும், உலக வாழ்வையும் மாயை எனப் புறக்கணி யாது, அத்வைத வேதாந்தத்தின் தூய் மையிலிருந்து அதனை விடுவித்து, செயல் முறை வேதாந்தத்தை நிலைநிறுத்த முனைந்த விவேகானந்தர் தந்த இராம கிருஷ்ண இயக்கத்தின் வழித்தோன்றல் விபுலாநந்தர் என்ற எல்ல்ா அம்சங்களி லும் வெளிப்படுவது.
மாயை பொய்யில்லை என்ற வர் பாரதி; பெளத்தம் வளர்த்த மாயைக் கோட்பாட்டை முற்றாக மறுதலித்து, மாயா சக்தியை தான் போற்றிய சக்தி யின் வடிவமாய்க் கண்டவர். நீ பொய் யில்லை, இந்த உலகம் பொய்யில்லை, உன் மனைவி - பிள்ளைகள் பொய்யில்லை என்று போதித்த பாரதி, இவ்வுலகில் அ மர வாழ்வு வேண்டிக் கிருதயுகம் கொணர்வேன் என முழங்கியவர்.
விவேகாநந்தர், பாரதி போன்றோ ரின் கோட்பாடுகளால் வளம் பெற்ற விபுலானந்தரும் 'சீர் மன்னு நிலை யியற் பொருளும் இயங்கியலும் வகைப் பொருளும் வகுத்தவாற்றால் இன்னலற எமைப் புரந்த இன்னமுதப் பெருங் கடலே இறைவியே' எ ன் கிறார். பொருள்களையும், நிலைபேறடைந்து மாற்றமின்றி முக்காலமும் ஒரே தன்மை யால் எதுவும் புனிதம் பெறாத வகை யில் அனைத்தையும் இயக்கப் போக்கில்

Page 86
சலித்து முன்னுறக்கிளர்த்தும் இயங்கி யவையும், சக்தியின் வடிவங்களாய் அடி கள் கண்டு காட்டுவதை அவரது இப் பாடல் அடிகள் உணர்த்துகின்றன.
இதே இயங்கியல் கோட்பாடு "சென் றது அப்படியே பிரதிசெய்ததுபோல மீளாது" என்பதைக் காட்டும். சென்ற திணி மீளாது என்று சரியாகவே கூறும் பாரதி, கிருதயுகம் என முன் ஒரு பொற் காலம் இருந்ததாக வழங்கும் பெளரா ணிக மரபை அடியொற்றி மீண்டும் அத் தகைய ஒரு சமத்துவ பொற்காலம் (கிருதயுகம்) வரும் என்று கூறுவதையும் காண்கிறோம்.
கவிச்சக்கரவர்த்தி கம்பரின் ‘ஈவோர் இல்லை, இரப்போர் இல்லாமையால்' என்ற ராமராஜ்யக் கனவும், புரட்சிக் கவி பாரதியின் 'இல்லையென்பதை இல்லையாக்கும்' கிருதயுகமும், புத்தரி லிருந்து விபுலாநந்தரின் சிஷ்யரான குன் றக்குடி அடிகள் வரையிலான பெரியோர் பலரும் காண விழையும் அமைப்புத் தான். அந்த வகையில் பாரதியின் விருப்பத்தைப் புரிந்துகொள்ள முடியும்; ஆயினும், சென்றதினி மீளாது என்ற பாரதி பழைய பொற்காலத்தின் மீட் புக்குக் குரல் கொடுப்பது முரண்பாடாக இல்லையா?
இது பாரதியின் முரண்பாடான தன்மையல்ல. ஹெகல் மாக்ஸ் போன்ற ஜெர்மானிய தத்துவ அறிஞர் காட்டிய இயங்கியல் விதியின் வெளிப்பாடு இதை சரியெனக்காட்டியிருக்கிறது. புரா த ன பொதுவுடைமை அமைப்பு ஒன்று முன் னர் இருந்தது மெய்; அதனை நிலை மறுத்து ஏற்றத்தாழ்வான சமூக நியதி களைத் தோற்றுவித்த தனியுடமை அமைப்பு மேலோங்கி, இரண்டாயிரம் ஆண்டுகட்கும் மேலாக நிலைபெற்று, தனக்கேயுரிய மாற்றங்களோடு இன்று வரை இயங்கியவண்ணமுள்ளது. புரா தன பொதுவுடைமை அமைப்பை (கிருத யுகத்தை) மறுதலித்த முந்திய நிலை மறுப்பு இனி நிலைமறுக்கப்பட்டு (நிலை மறுப்பால் உருவான தனியுடைமை அமைப்புத் தகர்ந்து) மீண்டும் பொது

வுடைமை அமைப்பு தோன்றும் என்ற விஞ்ஞான பூர் வ இயங்கியல் கோட் பாட்டின் நிலைமறுப்பின் நிலைமறுப்பு விதி" பாரதியின் முரணற்ற போக்கை விளக்க உதவும்.
இந்த விதியானது நிலைமறுப்பின் நிலைமறுப்பைத் தொடர்ந்து முந்திய அமைப்பு அப்படியே மீளப் பிரதியிடப் படுவதால் அமையாதென்பதையும் வலி யுறுத்தும். ஒரு வட்டப்பாதையில் மீண் டும் அதே இடத்தை அடைவதாக அல் லாமல், சுழல் ஏணி முறையில் வளர்ச்சி நிலை ஏற்படும்; மீண்டும் அதே இடத்தை அடையும்போது உயர்ந்த தளத்தில், முன்னிருந்ததைவிட மேலாக, வந்தடைந் ததைக் காண்போம்.
பொதுவுடைமை முன்னர் நிலவி யது நுட்பத்திறன் மிக்க உற்பத்திக் கருவிகள் இல்லாத காரணத்தால் - இயற்கை வழங்கியதை அப் படி யே பெறும் ஒரு சூழலில், "எல்லோர்க்கும் எல்லாம் கிடைத்தது. நுட்பத்திறன்மிக்க உற்பத்திக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு உற்பத்தியிலீடுபட்டபோது அவற்றை உடைமையாகக் கொண்டிருக்கக்கூடிய ஆற்றல் படைத்தோரையுடைய தனி யுடைமை அமைப்புத் தோன்றியது.
பொதுவுடைமை அமைப்பு நிலை மறுப்புப்படி மீண்டும் தோன்றும்போது பல நூறு ஆண்டுகளாக வளர்ந்த உற்பத் திக் கருவிகளை சமூக் உடைமையாக ஆக்கிக்கொண்டு, விஞ்ஞான - தொழில் நுட்ப - இலத்திரனியல் சாதனைகளை சமூகப் பயன்பாடுள்ளதாய் ஆக்கிவிடும்.
இந்த இயங்கியல் விதியின் அடிப் படையில் யா ழி ன் மீள்கண்டுபிடிப்பு புதிய பயன்பாடு எழுச்சிக்கான வித்தாக அமைந்தவாறை எ ம் மா ல் விளங்கிக் கொள்ள முடியும். கடந்த காலத்தை உயர்ந்த பண்புகளோடு மீண்டும் கொணர உதவும் இந்த விஞ்ஞான பூர்வ விதியின் ஒளியில் அடிகளாரின் யாழ் நூலும், அடிகளின் பணியும் விரிவாக ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டும். தனி யொரு கட்டுரையின் கனம் அ தைத்
-سس- 58

Page 87
தாங்கக்கூடியதல்ல. இருப்பினும் சுருக்க மாய் அதைத் தொட் டு க் கா ட் டி, தேவையை உணர்த்துவதே இக்கட்டுரை யின் நோக்கம்.
மீண்டும் நாவலர், மீண்டும் விவே கானந்தர், மீண்டும் பாரதி, மீண்டும் விபுலாநந்தர் வரவேண்டும் என்ற விருப் பங்கள் எழுப்பப்படுவதை நாம் அடிக் கடி கேட்டிருக்கிறோம். அதைக்காட்ட நாம் இந்த விஞ்ஞானபூர்வ இயங்கியல் விதியின் ஒளியில் விளங்கிக்கொள்ள முடி պմ).
எமது பண்பாட்டுத் தொடர்ச்சியை பொருளியல் துறையிலும், ஆன்மீகத் துறை யிலும் இழந்துகொண்டிருக்கும் இன்றைய சமகால நிலைமைகள், இதை யொத்த முந்திய காலத்தில் - நோயுற்று, வறுமை மிஞ்சி, சுதந்திரம் த வறிக் கெட்டு வாழ்ந்த நிலைமையில் - எமது தேசிய கலாச்சாரத்தை அடையாளங் காட்டி, அதன்வழியே முன்னுறவிரைய அழைத்ததோடு செயல்பூர்வமான முன் னோடிகளாயும் திகழ்ந்த இப்பெரியார் கள் மீண்டும் வந்தால் என்ற விருப் பத்தை எழுப்புவது இயல்புதான்.
ஆயினும் ஒரு விடயத்தை நாம் அவதானிக்கத் தவறக்கூடாது. சென்றது அப்படியே பிரதிசெய்ததைப்போல மீண் டும் வருவதை இயங்கியல் போ க்கு அனுமதிப்பதில்லை. கடந்த கால வர லாற்றிலும் தேசிய விடுதலை நாடிய அப்பெரியார்களிடையே ஒருவரிலிருந்து இன்னொருவர் ஈட்டிய வளர்ச்சியில் இயங்கியல் ரீ தி யான வளர்ச்சியைக் காணமுடியும்.
‘ஆண்டவனது அருட்கருணை நெறியில்லை. கருணையினை ஆதலினாலே நம்மாலியன்றவ பாராட்டவேண்டியவராகின்ே

நாவலர் தனி மனிதராக இருந்து ஆற்றிய மகத்தான கைங்கரியங்களை பின் வந்தவர்கள் அதே முறையில் முன் னெடுக்கவில்லை. விவேகானந்தர் தனித் தியங்கவல்ல ஆளுமையும், செயற்துடிப் பும் பெற்றிருந்தபோதும், தனது பணி களை ஸ்தாபனமயப்படுத்திய வளர்ச்சிப் போக்கை வெளிப்படுத்தியவர். அவர் கட்டிவளர்த்த இராமகிருஷ்ண இயக்கமே விபுலானந்த அடிகள் ஆற்றலைப் பன் முகப்படுத்தி வளர்த்ததைக் காண் கி றோம். விவேகானந்தரின் சிஷ்யையின் சிஷ்யரான பாரதி நேரடியாகவே அரசி யல் கட்சியில் இணைந்து விடுதலைக் குரல் எழுப்பினார்.
இது மக்கள் யுகம். ஒரு சில பிரபுக் களின் அனுசரணையுடன் தனி மனிதர் அன்று முன்னெடுத்த பணிகளை இன்று மக்களின் ஆதரவுடன் பொது ஸ்தாபனம் ஒன்றே சாதிக்க முடியும் என்பதையே இந்த மாற்றப்போக்கு எமக்கு உணர்த்தி நிற்கிறது.
நாவலரிலிருந்து விபுலானந்தர் வரை முன்னெடுத்த பணி புதிய வடிவில் எம் மைத் தொடர வலியுறுத்துகிறது. சென் றது அப்படியே மீளாது என்பதையும் அறிவோம். புதிய வரலாற்றும் பணியை புதிய வடிவில் முன்னெடுக்க பு தி ய - கலாச்சாரத்தின் குரல்கள் அனைத்தை யும் ஒன்றிணைப்போம்! எமது உள்ளக் கமலம் புதிய - பண்பாட்டு ஞாயிறு கண்டு மொட்டவிழ்க்கட்டும்!!
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது!!!
இல்லாத வழி நமக்கு உய்வு நாம் அவாவி நிற்கின்றோம்; ரை பிறவுயிர்கள்மீது கருணை
Ost Lib. ” ”
- விபுலாநந்த அடிகள்.

Page 88
விபுலானந்தரின் மனம் பற்றிய கரு
விபுலானந்தர் தமிழ், ஆங்கிலம், வடமொழி, இலத்தீன், யவனம், வங்கம், அரபிபோன்ற பன்மொழிகளைக் கற் றறிந்த விற்பன்னராக விளங்கியவரா வர். இவர் ஆன்மீகத்தில் நாட்டங் கொண்டு துறவுநெறியைக் க  ைடப் பிடித்து ஒழுகியதுமன்றிப் பல துறைகளி லும் குறிப்பிடத்தக்க் வகையில் தொண் டாற்றியவராகவும் விளங்கினார். இவர் மனம்பற்றிப் பல கட்டுரைகளை எழுதி யுள்ளார். இவர் எடுத்தாண்ட எழுத் துக்களை ஆதாரமாகக்கொண்டு விபுலா னந்தரின் மனம்பற்றிய கருத்துக்களினை இக்கட்டுரை ஆராய முற்படுகின்றது.
மனம்பற்றிய கருத்தானது அறிவியல் சார்பாகவும், உளவியல் சார்பாகவும், ஒழுக்கச் சார்பாகவும், பெளதீக அதீத நிலை சார்பாகவும் எனப் பலவாறான கோணங்களில் தனித்தனியாக அணுகத் தக்கவையாகும். இவ்வாறான போக்கு மேலைத்தேயச் சிந்தனை மரபில் பெரிது மிருந்தாலும் இந்திய மெய்யியல் பரப் பில் இத்தன்மையைக் காண்பது அரிதே. வாழ்விற்கு வழிகாட்டும், வளமூட்டும் சிந்தனைகளாய்த் தத்துவம் மலர்ந்துள்ள நிலையில் அவ்வாழ்வின் வளர்ச்சிக்குரிய கூறுகளாய் அறிவாராய்ச்சி, உளவியல், ஒழுக்கம், பெளதிக அதீத உண்மை என் ப3 அமைந்துள்ளன. இந்திய மெய் யியல் சிந்தனைகளில் பெரிதும் கவரப் பெற்று, குறிப்பாக வேதாந்த, சித்தாந் தக் கருத்துக்களைக் கைவரப்பெற்று, ஆன்மீக வாழ்வில் திளைத்த விபுலானந்
-- (

தது
கலாநிதி நா. ஞானகுமாரன், சிரேஷ்ட விரிவுரையாளர், மெய்யியற் துறை,
யாழ். பல்கலைக் கழகம்.
தர் சிந்தனைகளிலும் அதேபோக்கு மிளிர் வது ஆச்சரியத்திற்குரியதொன்றல்ல. விபுலானந்தரும் மனம்பற்றிய கருத்துக் களைப் பல்வேறுபட்ட கோணங்களி லிருந்தும் அறிந்துகொண்டபோதிலும் தேவைக்கேற்றவகையில் எளிமையான முறையில் எடுத்தாண்ட சிறப்பு நயக்கத் தக்கதாகும்.
மனம் எனும்போது அது அகநிலைக் குரியதொன்றோ அன்றேல் புறநிலைக் குரியதொன்றோ என எண்ணத் தலைப் படுவது இயல்பே. தனக்கு மனம் ஒன்று இருக்கின்றது என ஒருவன் நினைப்பது அவனுக்கு மனம் என்பது அக நிலைக் குரியதொன்றென்பதனைப் புலப்படுத்த லாம். அதேவேளை எனக்கு மனம் இருப் பது என நான் எண்ணுவதன் அடிப் படையில் அவனுக்கும் மனம் ஒன்று இருக்கவேண்டுமென நான் நினைப்பது மனத்தைப் புறநிலைக்குரியதொன்றாக எடுத்தாளவைத்துவிடுகின்றது. மனதின் அகநிலை புறநிலைபோல மன மெய்யிய லாளர்களிடையே மனதிற்கும் உடலுக்கு மிடையிலான தொடர்பு, மனதின் தன்மை இயல்புபோன்ற பல்வேறான தன்மைகள் பற்றி வேறுபட்ட விளக்கங்கள் எழுந் தமை காணலாம்.
விபுலானந்தர் மனதைக் காண்பதற் குச் சொற் செயல்கள் அருவியாக அமைய வல்லதென எடுத்தாண்டார் . இங்கு மனம் புறநிலைக்குரியதெனும்தன்மை புலனாகிறது. மனதின் செயற்பாட்டை அவரது மெய்ப்பாடுகள் பிற ரு க்கு
-- 0ز

Page 89
உணர்த்தவல்லன எனவும், அவலம, நகை, இழிவரல், மருட்கை போன்ற நாற்பத் தொன்பது மன நிலைகள் இத்தன்மைய தெனவும் விபுலானந்தர் ‘மானிடனும் அவன் மனத்தின் ஆற்றலும் எனும் கட்டுரையில் குறிப்பிடுகிறார். ? இது மனமானது புறநிலைக்குரியதென்பத னைத் தெளிவாகக் காட்டி நிற்கின்றது. மனநிலையும் செயன்முறையும் எனும் கட்டுரையில் மனநிலை செயன்முறைக்கு எவ்வகையில் தொடர்புகொண்டதென் பதைத் தெளிவாகச் சுட்டுகின்றார். - *மனமெனும் எந்திரத்தின் வேலையே வாழ்க்கையாகும்’ எனும் வகையில் மனத் திற்கும் வாழ்வுக்கும் நெருங் கி ய தொடர்பை வலியுறுத்துகின்றார். இதன் மூலம், “மனித எண்ணங்களே அவன் வாழ்வு' எனும் முடிவுக்கு வருகின்றார். * இந்த வகையில் வாழ்வு வழிப்படுத்தப் பட மனதின் நிலைப்பாடு எடுத்தாளப் படுகின்றது. மனதின் வேலை சுதந்திர மான சிந்தனையைக் கொண்டதென்ப தும் விபுலானந்தரின் கருத்தாக அமை கின்றபோது 'உயர்ந்த எண்ணங்களே சிந்திக்கப்படவேண்டும்" என வலியுறுத்து கின்றார். * அதுவே மனித சக்தியாகவும் மிளிர்கின்றதென்பது அவர் கருத்தாகும். மனதிற்கும் வாழ்விற்கும் தொடர்பைக் காட்ட முற்பட்ட விபுலானந்தர் ஒவ் வொருவரின் வாழ்வின் உயர்விற்கும் தாழ்விற்கும் அவனது மனதின் தொழிற் பாடு, சிந்தனை முக்கியமான பங்கினை வகிக்கின்றதெனும் முடிவுக்கு வருகின் றார். அதேவேளை மனதிற்கும் செய லுக்குமிடையில் இ ன் só su GMD luar ës தொடர்பு இருக்காமல்போகலாம் என் பதனையும் ஏற்றுக்கொள்கின்றார். குறிப் பாக “மனமும் செயலும் சிலபோது வேறு படலாம்" என்று காட்டினாலும் அத் தன்மை தொடர்ந்து அமைவது சாத்திய மில்லையென விபுலானந்தர் கருதுகின் றமையும் குறிப்பிடத்தக்கது.
மனிதனின் செயலுக்கும் மனதிற்கும் இடையே வலுவான தொடர்பைக் காட் டும் வகையில் விபுலானந்தர் ஒழுக்கச் செயலுக்கு அடிப்படை மூலமாக அமை வது மனம் எனும் போக்கிற்கு வழிவகுக் கின்றார். மனதின் எண்ணங்களே செயல்

களாக உளள அதனும\போது அசயலக ளான தராதரத்திற்கு மூலமாவதும் எண்ணங் களேயாகின்றன. இதனாலேயே “என் உள்ளம் வேறு; அவன் உள்ளம் வேறு. அவன் அவன் நன்மையும் தீமையும் அவ னவன் ஆதீனமே" எனக் குறிப்பிடுகின் றார். 8 இவ்வகையில் பின்வரும் மூன்று அம்சங்களைக் குறிப்பிடுகின்றார்.
1. மெய்யறிவுடன் எண்ணங்களை
மனதில் கொள்வது.
2. உபகாரமான செயல்களைச் செய்
வது.
3. தன் ஆதீனமில்லாமல் தானே நிக ழும் நிகழ்ச்சிகளைத் திருப்தியுடன்
அங்கீகரிப்பது 8 என்பனவாகும்.
இவற்றின் வழி செயல்களிற்கும் மன திற்குமான தொடர்பு தெளிவாகின்றது.
ஒழுக்கச் செயல்கள் நல்வாழ்வுக்கு ஆதாரமூலங்களெனும் இந்திய மெய்யி யல் சித்தாந்தம் விபுலானத்தரிடம் ஆளப் பதிந்த ஒன்றாகும். மன எண்ணங்கள் செயல்களாக விளங்குவதனால் மனது தூயதாகவும் நல்லதாகவும் வழிநடத்தப் படவேண்டுமெனக் கருதினார். ‘நம் முடைய சிறிய அறிவுக்கு எட்டாவிட் டாலும் பரம்பொருள் ஒன்று உண்டென் பதும் அதனால் பூரண சரணாகதி அடைந் தால் மட்டுமே நாம் ஷேமமுறலாமென் பதும் உண்மையாகும்' எனத் துணிந் தார். 7 தடைக்குத் தகுந்தவாறு முயற் சியை மாற்றிக்கொண்டு வேறு வேறு வழிகளில் தன் கருத்தை நடத்த மனத் துக்குச் சக்தியுண்டு என்பதனால் என் உள்ளத்தினிருக்கும் தெய்வம் என்னை விட்டு நீங்காது என்றார்.”* மன நிலை யைக் காப்பதற்குமேல் எந்தப்பொருள் உள்ளது? என விபுலானந்தர் வினாவு வதற்கு அடிப்படையாக தெய்வ சிந்தனை மனதின் தூய்மைக்கு வழிவகுக்குமெனும் திட சிந்தையே காரணமாக இருக்கலா மென எண்ணத்தூண்டுகின்றது.
ஒழுக்கச் செயல்களுககு மனம் காரண மாகும் எனும்போது மனம், வாக்கு, காயம் எனும் மூன்று நிலைகள் வழி வெஃதல், வெகுளல், பொல்லாக் காட்சி
61一

Page 90
என்பனவும், பொய், குறளை, கடுஞ் சொல், பயனில்சொல் என்பனவும், கொலை, களவு, காமம் என்பனவும் முறையே வருமென்பதுவும் ஆராயத் தக்கதாகும். ? அனைத்துச் செயல்களும் மனத்தின் விளைவுகளெனின் இவற்றில் மனத்தைவிட வாக்கு, காயத்தால் வரு பவை மனத்தின் தொடர்பின்றி வரு வதோ எனும் ஐயப்பாட்டை உருவாக்கி விடலாம்.
“உலகமெல்லாம் உன் எண்ணத்தைத் தவிர வேறில்லை. உள்ளத்தைப் பரி சுத்தமாக்கிப் பயன்படுத்திக்கொள்வதே பெருமை. அதிற்றான் சகல நற்பயனு முண்டு. மற்றவை அனைத்தும் நிலை யற்றவை. வெறும் புகையாய்ப் போகும்” எனும் 10 விபுலானந்தரின் கூற்று அவரை சங்கரவேதாந்தியின் சாயலை வெளிக் காட்டுவதுபோல் தெரிகின்றது. அதே வேளை 'உலகமெல்லாம் உன் எண் ணத்தைத் தவிர வேறில்லை' எனும் கூற்று உலகின் உண்மைத் தன்மையை நிராகரிப்பதாகவும் கொள்ள முடிய வில்லை. 'எவ்வளவு அருமையான உல கம்," என்ன அருமையான உலகம்' எனும் கூற்றும், "அருமையான உலகம்" பற்றிய சிறு கட்டுரையும் மேற்கூறிய கருத்துடன் முரண்படுகின்றது. " இங்கு பரம்பொருள் பற்றிய எண்ணத்திற்கு முதன்மையும் நிலையான தன்மையும் கொடுக்கும்வகையிலேயே உலகமெல்லாம் உன் எண்ணத்தைத் தவிர வேறில்லை எனக் குறிப்பிட்டார் எனக்கொள்ளலாம். மேலும் மனதின் பிரதிவிம்பம்" எனும் கட்டுரையில் மனிதனுடைய "மனமே அவன் காணும் உலகமாகப் பிரதிபலிக் கிறது எனக் குறிப்பிடுகின்றார்.12 நல்லவ னுக்கு மற்றவர்கள் நல்லவனாகத் தெரிவ தும், பொய்யனுக்கு மற்றவர்கள் பொய்ய னாகப் புலப்படுவதும், சத்தியவானுக்கு மற்றவர்கள் சத்தியவானாகத் தெரிவதும், கடவுளை நிறைத்துவைத்துக் கொண்ட வனுக்கு உலகம் முழுவதும் கடவுள் மய மாகிறது என்பதும் மனதில் கொண்ட எண்ணமே புறவுலகில் பிரதிபலிக்கின்றது எனும் விபுலானந்தரின் கருரத்தைத் தெளிவாக்குகிறது.
- 6

விபுலானந்தர் மனதிற்கும் செயலிற் கும் தொடர்புகாட்டியதோடு இறைச் சிந் தனையோடுகூடிய மன நிலைகள் ஒழுக் கச் செயற்பாட்டிற்கும் வாழ்வின் மேன் மைக்கும் வழிகாட்டுமென்பதனை எடுத் தாண்டார். இத்தோடு நில்லாது மன மானது எவ்வகையில் சுத்திசெய்யப் படலாமென்பதனை துறவொழுக்கத்தில் வாழ்ந்த சுவாமிகள் யோகாப்பியாசங் கள், யோகமார்க்கத்திற்கூடாக விளக்கி னார். பிராணாயாம முறை வழி மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அகக் கரணங்களின் இயல்பினையும்,இவற்றால் இயற்றப்படும் புறக் கரணங்களின் இயல் பினையும் உணர்ந்தவன் செயற்கருஞ் செயல்களைச் செய்தல் சாத்தியமாகும். மனதின் செயற்பாட்டை தூயதாக்கு வதும், ஐம்புலவுடலை நல்ல நிலையில் பேணுவதும் யோகமார்க்கத்தால் பெற வல்ல பலனாகிறது. முற்கூறியதுபோல மனமும் செயலும் ஒன்றுபடுவதற்கு உதவு வதாகவும் இது அமைகிறது.
யோக சித்தியானது மனித சுத்திக் குப் பெரிதும் உதவுகின்றது. யோகம் பிரம்மச்சாரியத்தை வலியுறுத்துகிறது. யோக நெறிவழி காமம், கோபம் போன்ற அழுக்காற்றுக் குணங்கள் நீங்குகின்றன. இதுவே ஆரோக்கிய மனமாக விபுலா னந்தரால் எடுத்தாளப்படுகின்றது. அவ் வாறன்றி காமம், கோபம், கையோங் கப்பெறின் ஆன்ம சக்தி சிதறுண்டு போய்விடும். ஆன்ம சக்தியின் நிறை வினாலேயே செயல்களைச் செய்தல் சாத்தியமென்பத சித்தாந்த விளக்கமு மாகும்.
மனம் சிந்திக்கின்றது, எண்ணுகின் றது எனும்போது மனதிற்கு ஞாபகம் உள்ளதென்பதும் தெளிவு. ஞாபகமே அறிவின் வளர்ச்சிக்கு உறுதுணையாவ துடன் அறிவிற்கும் அவசியமாகிறது. மனித நல்வாழ்விற்கும் உலக உயர்ச்சிக் கும் மனதை பக்குவப்படுத்துவது அவ சியமாகிறது. 'தன்னையும் உலகத்தை யும் நல்வழிப்படுத்துவதற்கு எவனும் தன் மனத்தை நடுவு நிலைமையில் நிற் கப் பழக்குதல் அவசியமென விபுலானந் தர் எடுத்தாள்வது இங்கு சுட்டத்தக்க தாகும். 8

Page 91
யோகம் உடலைத் தூய்மைப்படுத்து கிறது.மனமும் தூய்மையுறுகிறது.ஆனால் உடலே மனமென்றில்லை. அதேவேளை உடல்நலம் மனநலத்திற்கும், மனநலம் உடல் நலத்திற்கும் பரஸ்பரம் உதவு கின்றது. உடலோ, மனமோ நாமென்று மில்லை. மனம் ஒடுங்கிய நிலையிலேயே சிவத்தோடு அத்துவிதமாகின்றது. இந்
அடிக் குறி
1. அருள் செல்வநாயகம் (தொ கலா நிலையம், இலங்கை ப 2. அருள் செல்வநாயகம் (தொ
ஒரியன்ட் லாங்மன்ஸ், சென்ை 3. மேற்குறிப்பிட்டது - விபுலான 4. முற்குறிப்பிட்டது - ப. 86. 5. முற்குறிப்பிட்டது - ப. 27. 6. முற்குறிப்பிட்டது - ப. 27. 7. முற்குறிப்பிட்டது - ப. 20. 8. முற்குறிப்பிட்டது - ப. 27. 9. மேற்குறிப்பிட்டது. விபுலான 10. மேற்குறிப்பிட்டது. விபுலான 11. முற்குறிப்பிட்டது. ப. 02: 12. முற்குறிப்பிட்டது. ப. 48. 13. முற்குறிப்பிட்டது. ப. 45.
‘விளக்கின் ஒரு புறத்திலே ஒளி புறத்திலே பிரகாசம் அதிகமா கண்ணாடிக்குள் ஒளி நுழை பொருளின் சாயை அதனு 6 ஐம்புலனாகிய ஒட்டைகளை நோக்கியிராமல் திருப்பிவிட்ட மானந்தம் தேங்கி நிற்கும்."
- 6:

நிலையில் உண்மையை உணர்கின்றோம். அதுவே உண்மையான பேரின்பம் அல் லது வீடு என எடுத்தாளப்படுகின்றது. இந்த இலட்சியத்தை அடைகின்ற குறிக் கோளை நோக்கும் வகையில் மனம் எனும் எண்ணக்கருத்து விபுலானந்தரி னால் எளிமையாக விளங்கப்படுத்தப் பட்டுள்ளது.
ப்ெபுக்கள்
தப்பு) விபுலானநத அமுதம் , 34.
குப்பு) விபுலானந்த வெள்ளம்
pesar - Il 9 6 . . . I l 8 - 120
ந்த அமுதம் - ப. 35.
ந்த வெள்ளம் - ப. 30: ந்த அமுதம் - ப. 30.
ப்போக்கைத் தடுத்தால், மறு கும். அந்த ஒளி மடங்குதலால் பாதபடி இரசம் பூசிவிட்டால் ாளே தங்கித் தோன்றுகிறது.
அ டைத் து விட் டா ல், கீழ் ால், மனத்திலே ஊறும் பர
- விபுலாநந்த அடிகள் .

Page 92
முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர்
காலத்துக்குக்காலம் இலங்கை மாதா வும் சான்றோர்களை பெற்றெடுத்து பெருமைப்பட்டுக்கொண்டு வருகின்றாள். இம்மாதா பெற்றெடுத்த நன் முத்துக் சளுள் ஒன்றுதான் முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர். ஆறுமுகநாவலர் சைவத் துக்கும் தமிழிற்கும் தொண்டாற்றி ஒரு நூற்றாண்டின் பின் தோன்றிய சுவாமி விபுலானந்தர் அவர்கள் முத்தமிழ் வித்த *ராகவும், நூலாசிரியராகவும், மொழி பெயர்ப்பா ள ராகவும், பத்திரிகை ஆசிரியராகவும், ஆசிரியராக, அதிபராக, பேராசிரியராகக் கடமையாற்றியதோடு சிறந்த சமயவாதியாகவும், தொண்ட ராகவும் கடமையாற்றினார். பன் மொழிப் புலமைமிக்க சுவாமி விபுலானந் தர் பாடசாலைகளையும் தாபித்தார். அவர்கள் இமயம் சென்று தமிழின் பெருமையை நிலைநாட்டியவர். அகத்தி யன் முத்தமிழுக்கும் இலக்கணம் செய்த வர். அவ்வாறே இவரும் முத்தமிழ் வித்த கராக விளங்கியதோடு பிருகத்தனுக்கு தமிழ்மொழியின் சிறப்பினை எடுத்துக் காட்டிய கபிலன்போல ஆங்கிலக் கவியின் சிறப்பினை தமிழ் மக்களுக்கு ஆங்கில வாணி மூலம் உணர்த்தியவர். சிலப்பதி காரத்தில் உர்ைகாணாது விட்ட Լյ35 தியை ஆராய்ந்து பண்டைய தமிழ் இசைக்சலையின் புதுமைப் பொலிவை மீண்டும் நிலை நாட்டியவர்.
இவரது நல்லாசானாக அமைந்தவர் திரு. நல்லரத்தினம் என்பவராவார். தனது பத்தாம் வயதில் மெதடிஸ்த சங்க ஆங்கில கலாசாலையில் தமிழும் ஆங்கிலமும் கற்கத் தொடங்கினார். இங்கு குஞ்சித்தம்பி என்பவரிடம் கல்வி
- 6

எஸ். கே. சிவநாதன்,
சிவபுரம் அ. த. க. பாடசாலை.
கற்றார். பின்னர் அர்ச். மைக்கல் கல் லூரியின் ஓர் மாணாக்கனாகிக் கல்வி கற்ற வேளையில் இவரது கணிதப் புலமை பற்றி வொணர் சுவாமி அவர் களால் பாராட்டும் பெற்றார். தமது 16ம் வயதில் கேம்பிறிஜ் சீனியர் பரீட் சையில் 1ம் வரிசையில் சித்தி பெற்றார். இக்காலத்திலேயே தமிழ், வடமொழி போன்றவற்றை வைத்திலிங்க தேசிகர் என்பவரிடம் கற்றுத் தேறினார். அத் தோடு தென்கோவை கந்தையாபிள்ளை முதலியார், சிற். கந்தையாபிள்ளை, சி. தாமோதரம்பிள்ளை போன்றோரிடம் சங்க இலக்கியம், தொல் காப்பியம் போன்றவற்றைக் கற்றார். 1916ல் விஞ் ஞான டிப்ளோமா பட்டம் பெற்றதோடு இக்காலத்திலேயே பண்டித பரீட்சை யிலும் சித்தி பெற்றார். 1917ம் ஆண் டில் B. Sc. இலண்டன் பல்கலைக்கழக பட்டமும் பெற்றார்.
நாவலா பெருமான்- சமயம், மொழி சம்பந்தமாக பிறந்த நாட்டிலும் தமிழ் நாட்டிலும் சிறந்த சேவை செய்து ஈழ மாதாவின் புகழை பாரதநாட்டிலும் பரப்பினார். அவ்வாறே விபுலானந்தரும் ஈழத்திலும் பாரதநாட்டிலும் சிறந்த தொண்டாற்றி தமிழையும், சமயத்தை யும் செழிப்புறச் செய்தார். இலங்கை யில் யாழ்ப் பாண த்தில் சம்பத்திரிசி பார் கல்லூரியின் விஞ்ஞான போதகா சிரியராகக் கடமையாற்றினார். ஒர் ஆண்டு மட்டக்களப்பில் ஆசிரியராகக் கடமை யாற்றிய தோடு மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபராகவும் இருந் தார். இந்தியாவில் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தின் முதலாவது தமிழ்ப்
4.--

Page 93
பேராசிரியராக விளங்கியதோடு இலங் கைப் பல்கலைக் கழகத்தின் முதலாவது தமிழ்ப் பேராசிரியராகவும் விளங்கிச் சிறப்புச் செய்தார். இவரிடம் கல்வி கற் றவர்களில் பலர் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் ஆசிரியர்களாகவும் திகழ்ந்த னர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தின் சிறப்பினை ஆங்கில வாணிமூலம் தமிழ் மக்களுக்குத் தந்த முத் தமிழ் வித்தகன் இசைத் தமிழ் நூலான யாழ் நூலை எழுதினார். சிலப் பதிகாரத்தில் உரை காணாது விட்ட பகுதியை நுணுகி ஆராய்ந்தார். இதன் மூலம் வடமொழியோடு கலந்து ஆயிரம் ஆண்டுகளாக மறைந்துகிடந்த தமிழ் இசையின் சிறப்பினை வெளிக்கொணர்ந் தார். யாழ் நூல் ஆராய்ச்சிக்காகத் தேவார திருமுறைகளையும், உதயணன் கதையையும், பல்வேறு இலக்கிய நூல் களையும் கற்கவேண்டி ஏற்பட்டது. இதன் பயனாக பாணர், இசைத்த யாழ், உதயணன் வாசித்த யாழ், மாதவி காணல்வரி வாசித்த யாழ் என்பவற்றின் வேறுபாடுகளை உணர்ந்துகொண்ட விபு
லானந்தர் ஆராய்ச்சி முறையாக விரித்து
விளக்கும் பெருநூலாக யாழ் நூலை ஆக்கினார். இது சிலப்பதிகாரத்தில் காணப்பட்ட இசை மரபுகளை ஒழுங்கு படுத்தி நிரல்பட விளக்குகின்றது. பண் டையத் தமிழரின் சிறந்த இசைக் கருவி களான வில் யாழ், பேரியாழ், மகரயாழ், கோட்டியாழ் என்பவைகளை இந்நூல் பொதுவாகவும், சகோடயாழை சிறப் பாகவும் கூறுகின்றது.
மதங்க சூளாமணி நாடக இலக்கண அமைதி கூறும் நூலாகும். தமிழ், வட மொழி நாடக அமைப்பினையும், ஆங்கில நாடக அமைப்பையும் ஒப்புநோக்கிக் கொண்ட முடிவுகளை அடிகளார் ஒருங்கே அமைத்துக் காட்டுகின்றார். வட மொழிப்புலவர் தனஞ்செயன் முதலி யோர் கூறியவற்றை ஆராய்ந்துள்ளார். உரைநடை யில் இவ ற்றை மொழி பெயர்த்தபோதும் மூலச்சுவை குன்றாத முறையில் கருத்துச்சுவை மிக்க கூற்றுக் களில் சிலவற்றை செய்யுளில் மொழி பெயர்த்துள்ளார்.
6 ۔۔۔

மேனாட்டு செல்வமான விஞ்ஞா னத்தை தமிழில் சுருக்கமாகவும், விளக்க மாகவும் கூறும் நோக்கோடு செந்தமிழ் என்னும் சஞ்சிகையில் தொடராக வெளி யிட்டு வந்தார்கள். அவர் எழுதிய விஞ் ஞான தீபம் என்னும் நூலை உற்பத்தி விளக்கம், தத்துவவிளக்கம், பதார்த்த விளக்கம் என்னும் மூன்றாகப் பிரித்து முதற்பிரிவில் வானநூல், பூமிநூல், தாவர நூல், உடலுறுப்பு நூல், இலங்கு உயிர் நூல் என்னும் 5 அதிகாரங்களை யும் எழுதினார். சென்னை கலைச் சொல் லாக்க சபையின் தலைவராக விளங்கிய இவர் நடராச வடிவம், உமாமகேசுவரம், கலைச்சொல் அகராதியின் ஒரு பகுதி என்னும் நூல்களையும் ஆக்கினார்.
மொழிபெயர்ப்பாளராக விளங்கிய விபுலானந்தர் நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை, விவேகானந்தர் சம்பாசனை என்பவைகளை மொழிபெயர்த்தார். அத்தோடு சிறந்த தமிழ் பாடல்களை பிரபுத்தபாரத் ஆங்கில, சஞ்சிகையிலும் மொழிபெயர்த்து வெளியிட்டார். விபு லானந்தர் அவர்கள் இராசயோகம் என் னும் நூலினை மொழிபெயர்த்ததோடு பதஞ்சலி யோக சூத்திரம் என்னும் நூலை வடமொழியில் இருந்து தமிழிற்கு மொழிபெயர்த்தார். இதன்மூலம் தமி ழின் நுண்ணிய தன்மையை வெளிப் படுத்தக்கூடியதாக இருந்தது,
பாரதி பாடல்களில் மனதைப் பறி கொடுத்த முத்தமிழ் வித்தகர் ‘அல்லிக் குளத்திடையே ஒருநாள் அந்திப்பொழு தினிலே முல்லைச்செடியதன் பால் ' " என்னும் பாட்டிற்கிசைய சிவ புரியில் அல்லிக் குளமும், முல்லைச்செடியும் அமைத்தவர். பாரதி பாடலை தம் பாட சாலையில் கற்பித்த இவர் சிங்கள மொழியை அக் காலத்திலேயே மட்/ சிவானந்த வித்தியாலயத்தில் கற்பிக்க ஏற்பாடு செய்தவர். மாணவரின் உடல், உள வளர்ச்சிக்கு ஏற்ப மேலை நாட்டு, உள்நாட்டு உடற்பயிற்சிகளில் சிறந்த வற்றைத் தெரிந்தெடுத்துத் தம் மாணாக் கர்களுக்குப் பயிற்சிக்க ஏற்பாடு செய் தார்.
) mi=

Page 94
சிறந்த சமூக சேவகனாக விளங்கிய தோடு இந்தியாவில் சேரிகளுக்கும் சென்று அங்குள்ள குழந்தைகளை நீராட்டி, சுத் தம் செய்தும், சுண்டல், கடலை போன் றன கொடுத்து மகிழ்வூட்டியும் வந்தார் என அறியக்கிடக்கின்றது.
இதுவே பின்னர் அநாதை இல்லம் போன்றவற்றை தாபிக்கக் காரணமாக மைந்ததெனலாம். நாளடைவில் துறவி யான இவர் இலங்கையில் திருகோண மலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் பாடசாலைகளைத் தாபித்தார்.
‘காமத்தினும் வெகுளி கொ கொடியது. விடய சுகங்களை ளமே காமம் எனப்படுவது. உளப்போக்கினைப் பிறிதொ அவற்றை அழித்தற்கு முயலு வெகுளியினால் அலைந்த உ றும், தீமையை நன் மை ெ மயக்கம் எனப்படுவது. இ கோடாகிய விடய சுகங்கை சக்தி அதிகரிக்கின்றது. (6ெ காரணம்)
 

இவரது செந்தமிழ் என்னும் சஞ்சிகை யில் நம்முடைய சிறுமைக்கெல்லாம் காரணமாக இருக்கின்ற பொறாமையை யும், பிரிவினையையும் ஒருங்கே களைந்து விட்டு, உடல், பொருள, ஆவி, மூன்றை யும் தேச சேவைக்கே ஒப்புக்கொடுத்து தமது தேசத்தையும், மொழியையும் பெருக்கமுறப் பேணுவோமாயின் நாமும் பெருமை அடைவோம், நம் முன்னோரும் பெருமை அடைவர் என்றார். 7-7-1947 இல் பெற்றெடுத்த ஈழமாதாவும், தமி ழுலகமும், ஆறாத்துயரில் மூழ்க அவ் வெள்ளை. மலர் மெதுவாகத் துயில் கொண்டது.
டியது, வெகுளியினும் மயக்கம் ாக் காதலித்து நிற்கும் பற்றுள் மற்றைய பொருள் மேற்செல்லும், "ருவர் இடைநின்று தடுக்குங்கால் றும் முயற்சியே வெகுளியாவது. ள்ளம், நன்மையைத் தீமையென் யன்றும் மாறுபட உணர்வதே ம்மூன்றும் எழுதற்குப் பற்றுக் ா வெறுத்தகற்றுதலால் ஆன்ம பகுளி - கோபம், பற்றுக்கோடு -
- விபுலாநந்த அடிகள்.
-س- 66

Page 95
"கங்கையில் விடுத்
ஊற்றுக் க
சுவாமி விபுலானந்தரின் ' கங்கை மிகுந்தவை. தத்துவச் செறிவுள்ளவை. இ பும் பல அறிஞர்களால் கண்டுணரப்பட்டு
சுவாமி விபுலானந்தரின் கவித்துவரு குத் தோற்றுவாயாக, ஊற்றுக்கண்ணாக சான்றுகளைச் சிறிது நோக்குவோம்.
தமிழகத்திலுள்ள திருவேட்களத்தில் கந்தசாமி என்று சொல்லப்படுகின்ற தமி மிகுந்த அன்புபொருந்திய நட்புப் பூண்டி
உலகப் பற்றைத் துறந்து, துறவற களும், கலை, இலக்கிய, தத்துவ ஆய்வு துரையாடி முடிவுகாணும் உயர் நட்புப்
சுவாமி விபுலானந்தர், வட நாட்டி கும் காசி நகர் மடத்திற்குச் சென்ற பில் மல் இருந்தது.
சுவாமி விபுலானந்தரின் அன்பர் ஒ பெரியோன், சுவாமி விபுலானந்தருக்குக் ச தாக, அவ்வன்பர் சுவாமி விபுலானந்தரு
தனது நண்பர் கந்தசாமியின் அன் னந்தர் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து மாரடைப்பு நோயினால் மரணமடைந்த கிட்டியது.
மாயப் பொய் உலகின் மாண்புகை ளிய சுவாமி விபுலானந்தரின் உள்ளம், தனது நண்பர் தனக்கு எழுத நினைத் அவருள்ளம் ஏங்கியது.
தனது கவலைய்ை ஆற்றி உலகப் நிலைநிறுத்திக்கொள்ள, அவரது அறிவு

த ஒலை'யின் ண்கள்
அகளங்கன், தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வவுனியா.
பில் விடுத்த ஒலை'ப் பாடல்கள் கவிநயம் |ப்பாடல்களின் கவிநயமும், தத்துவச் சிறப்
எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன.
ழம், தத்துவமும் நிறைந்த இப்பாடல்களுக் அமைந்திருக்கும் பழந்தமிழ் இலக்கியச்
ஸ் சந்தித்துத் தன்னோடு நட்புக் கொண்ட ழ்ப் பேரறிஞனோடு சுவாமி விபுலானந்தர் ருந்தார்.
ம் பூண்டிருந்த இரு தவநெறிச் செல்வர் களைச் செய்து ஒருவரோடு ஒருவர் கலந் பெற்றிருந்தனர்.
லேயுள்ள கங்கைக் கரையில் அமைந்திருக் ாபு, இருவருக்குமிடையில் தொடர்பில்லா
ருவரிடம் அவரது நண்பராகிய கந்தசாமிப் டிதம் எழுதுவதற்காக, முகவரியைப் பெற்ற க்கு அறிவித்தார்.
பு நிறைந்த கடிதத்தைச் சுவாமி விபுலா க்கொண்டிருக்க, கந்தசாமிப் பெரியோன், நாகச் சுவாமி விபுலானந்தருக்குச் செய்தி
ள நன்கறிந்து, உலகப்பற்றை உதறித் தள் உயிர் நண்பனின் பிரிவு கண்டு உருகியது. } செய்தி என்னவாக இருக்குமோ என்று
பொய்யானது என்ற உறுதியை மனதில் இவரைத் தூண்டியது.
て〜7 u li
രത്ത

Page 96
அந்தப் பிரிவுத் துயரை ஆற்றுவத லகில் இருக்கின்ற கந்தசாமிப் பெரியோணு கடிதம் எழுதிக் கங்கையிலே விட்டு, த **கங்கையில் விடுத்த ஒலை"ப்பாடல்கள்
ଜ!!! ଈdit',
இப்பாடல்களில் உலக நிலையான பாடு, பாவ, புண்ணிய, மறுபிறவித் தத் ளன. இங்கே இப்பாடல்களின் ஊற்றுக்
கந்தசாமிப் பெரியோனின் அறிவ வருமாறு கூறுகிறார்.
சொல்வகையுஞ் சொற்றொ சொல்லவல்லான், சொற்சே
இப்பாடல் திருவள்ளுவரின் சொல் குறளொன்றை நினைவு படுத்துவதைக்
சொலல்வல்லன் சோர்விலன் இகல்வெல்லல் யார்க்கும் அ
மேலோடமாக இத்திருக்குறளை 'சொற்சோராத் தூய நெறியாளன்' எ "சொற் சோர்வு படேல்" என்ற வாக் கண்டுகொள்ளலாம்.
மொழித்திறத்தின் முட்டறுத் மொழிவதற மொழியெ அழுக்கறுத்த தூயசிந்தை அ அணியிவைதா மெனக்ெ
இப்பாடலில் வரும் 'மொழிவத தோன்" என்ற வரி ஒளவையாரின் ஆத் என்ற வாக்கியத்தை நேரடியாகவே சொ
'அழுக்கறுத்த தூயசிந்தை அந்தண் கொண்டோ னறநெறியில் நின்றோன்' நினைவுபடுத்துவதைக் கண்டுகொள்ளலாப்
அழுக்காறு அவாவெகுளி இ இழுக்கா இயன்றது அறம்.
பணிவுடையன் இன்சொலன் அணியல்ல மற்றுப் பிற
கந்தசாமிப் பெரியோனின் இருப் வருமாறு கூறுகிறார் சுவாமிகள்:

ற்காகக் கங்கைக் கரைக்குச் சென்று, வானு லுக்கு, சுவாமி விபுலானந்தர் ஆறுதல் கூறிக் ன் மனக்கவலையை மாற்றிக் கொள்வதாக
சுவாமி விபுலானந்தரினால் ஆக்கப்பட்டுள்
மை, நட்பின் உறுதிப்பாடு, கல்வியின் மேம் துவங்கள் அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள் கண்களை மட்டும் நோக்குவோம்.
rறறல்பற்றிச் சுவாமி விபுலானந்தர் பின்
கையுஞ் சொல்நடையு முணர்ந்தோன் ாராத் தூயநெறி யாளன்.
வன்மை என்ற அதிகாரத்தில் வரும் திருக் காணலாம்.
அஞ்சான் அவனை ரிது. (647)
r நினைவுபடுத்துவதோடு இதில் வரும் ான்பது ஒளவையாரின் ஆத்திசூடியில் வரும் கியத்தைத் தாங்கி நிற்பதை நேரடியாகக்
த்து முதனூலு முணர்ந்தோன். ன்னும் மூதுரையுந் தெளிந்தோன். ந்தண்மை அடக்கம் காண்டோ றைநெறியில் நின்றோன்.
ற மொழி என்னும் மூதுரையுந் தெளிந் தி குடியில் வரும் "மொழிவதற மொழி' ல்லி நிற்கின்றது
ாமை அடக்கம், அணியிவைதா மென க்
என்பது பின்வரும் இரு திருக்குறள்களை b.
ன்னாச்சொல் நான்கும்
(35)
ஆதல் ஒருவற்கு
(95)
பிடத்தைப்பற்றிக் குறிப்பிடும்போது பின்
68 -

Page 97
அன்பாண்ட புலமையினோ ( அடைந்துவத்தல் முறைெ தென்பாண்டி நன்னாட்டிற் ( சேர்ந்துதிகழ் சைவநெறி
இப்பாடல், வள்ளுவரின் கல்வி என்
யாதானும் நாடாமால் ஊரா சாந்துணையும் கல்லாத வாழ
என்ற குறளை நேரடியாகவே நினைவுறு ஒளவையார் பாடலையும் நினைக்கத் துரன்
நாடா கொன்றோ காடா ெ அவலா கொன்றோ மிசையா எவ்வழி நல்லவ ராட்டவர்
அவ்வழி நல்லை வாழிய நில
அலையினாலே இழுத்துச்செல்லப்பட் ஒய்வடையாமல், அலை மேலெழும்போது கீழ் விழும்போது அலையுடன் சேர்ந்து கீழ் அலையினாலே கரையிலே ஒதுக்கப்பட்டு இன்னொரு அலை வந்து அந்தக் குச்சியை பதையும் பார்த்து, மானிட வாழ்க்கைத் பார்க்கின்ற வித்த்திலே பின்வரும் பாடல்க கிறார்.
நிர்த்திரையா லிமுப்புண்ட கு
நில்லாது மேலெழுந்தும் சீர்க்கரையி லெற்றுண்டு கிட
சிந்திக்கின் மானிடர்தம்
இன்பவிளை யாட்டினிடை ே எமக்குநிக ராரென்ப ரிரு துன்பமுற மண்ணில்விழுந் தி சேர்ந்தழுவார் மயக்கமெ
மரணமெனுந் தடங்கரையி ே மறுபிறவித் திரைகவர வ கரணமுறு முடலெடுத்து மண் காதலிப்பா ரெண்ணிறந் இப்பாடல்களின் ஊற்றுக் கண்ணா! பாடிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்" மாகக் கண்டுகொள்ளலாம். அப்பாடல் இ
யாது மூரே யாவருங் ே தீதும் நன்றும் பிறர்தர நோதலுந் தணிதலு மவ சாதலும் புதுவ தன்றே இனிதென மகிழ்ந்தன்று இன்னா தென்றலு மில வானந் தண்டுளி தலைஇ
} س----

ரந்நாடும் நாடா யனினு மமலனர சாண்ட சாழவந்தா னுாரைச் க் திருமடத்தி லுறைந்தோன்.
ர அதிகாரத்தில் வரும
மால் என்ஒருவன்
(397) த்துவதோடு, பின்வரும் புறநானூற்று ண்டுகின்றது.
கான்றோ
கொன்றோ
னே. (187)
ட குச்சியொன்று, ஒரு கணப் பொழுதும் அலையுடன் சேர்ந்து மேல்ெழுந்தும், அலை ம் விழுந்தும், அலைந்து திரிந்து, இறுதியில் ஆதரவற்றுக் கிடக்கின்ற நிலையினையும், மீண்டும் இழுத்துச் சென்று அலைக்கழிப் தத்துவத்தை அதனோடு பொருத்திப் நளைச் சுவாமி விபுலானந்தர் பாடியிருக்
நச்சியொன்று கணமும கீழ்விழுந்து மலைந்து ந்தசெயல் நோக்கிச் வாழ்க்கையிது வென்றேன்.
மலெழுந்து குதிப்பார் கணத்தி னுளத்தில்
ருகண்ணீர் சொரியச் னுஞ் சுழல்காற்றி லலைவார் லெற்றுண்டு கிடப்பார்
பந்தியையுங் கருவி
ாணுலகி னுழல்வார் த வேதனையுட் புகுவார். க புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் என்ற பாடல் அமைந்திருப்பதைச் சுலப துதான்:
856ítř
6rt Trr பற்றோ ரன்ன
வாழ்தல் மிலமே முனிவின் மே மின்னொடு இ யானாது
سسہ {%6

Page 98
கல்பொரு திரங்கு மல் நீர்வழிப் படூஉம் புனை முறைவழிப் படூஉ மெ காட்சியிற் றெளிந்தன
பெரியோரை வியத்தலு சிறியோரை யிகழ்த ல
உலகியலையும், ஆத்மீகத்தையும் மையைப் பூரணமாகத் தெரிந்துகொண்ட கொள்ளலாம்.
இப்பாடலைப் பாடியவர் 'கணி சோதிட மேதையாக இருக்கவேண்டும். தையும் போலியென எண்ணி விரக்தி அ பிறவி என்பவற்றை உலகுக்கு எடுத்துக்க வப் பாடலாகவே இப்பாடல் அமைந்திரு
சிறந்த உண்ர் என்று எந்த ஊரும் யான ஊர்களே. சுற்றத்தார் என்று தன சுற்றத்தாரே. தீமையும், நன்மையும், நாமே நமது பாவ புண்ணியங்களால் அ மடைவதும், துன்பத்திலிருந்து விடுதலை
பிறந்த உயிர்கள் உடலைவிட்டுப் புதுமையானதொன்றல்ல. அது பிறக்கும் வது இனிதானது என நாம் மகிழ்ச்சியை விடத்து வாழ்க்கை இன்னாதது என்று
ஏனெனில் மின்னலோடு மேகம் கு அலைத்து ஒலித்து ஒடும் பெரிய ஆற்று னது ஊழ்வினையின்படியே செல்லும் ஆராய்ந்து தெளிந்த அறிஞர்கள் கூறிய
அதனால் மேன்மைகள் பெறுபவர்க மெச்சி விய்க்கும் தன்மையும் எம்மிடம் லிருப்பவர்களைப் பார்த்துப் பழிக்கும் த இப்பாடலின் திரண்ட பொருள்.
இப்பாடலிலும், கங்கையில் விடுத் திற்கும், அங்கே அடிக்கின்ற அலை ஊழ் படுகின்ற குச்சி, மிதவை (புனை) ஆகிய ளதைத் தெளிவாகக் கண்டு தெளியலாம்
இந்தப் புறநானூற்றுப் பாடலின் கங்கையில் விடுத்த ஒலைப் பாடல்கள் கொள்ளலாம். கங்கையில் விடுத்த ஓலை -ட்டிருக்கின்றது. புறநானூற்றுப் பாடலி . جمع حة
சந்திரன், சுவாமி விபுலானந்தரு s. r s 5: Grapunoğ535 Lum" - 6onr607

லற் பேர்யாற்று
னபோ லாருயிர்
ன்பது திறவோர்
மாகலின் மாட்சியிற
மிலமே.
தனினு மிலமே. (புற. 192)
நன்றாக உணர்ந்து, வாழ்க்கை நிலையா - ஒரு ஞானியின் பாடலாக இப்பாடலைக்
பன் எனப் பட்டங்கொண்டவராதலால், உலகியல் வாழ்க்கைச் சம்பவங்கள் அனைத் டைந்து, பாவ - புண்ணியம், விதி, மறு ாட்டும் ஒரு துறவியின் உத்தமமான தத்து }க்கிறது.
இல்லை. எல்லாம் எமக்கு ஒரே தன்மை ரியாக யாரும் எமக்கு இல்லை. எல்லோரும் எமக்குப் பிறர் தர வந்து சேர்பவையல்ல. வைகளைத் தேடிக்கொள்கிறோம். துன்ப யடைவதும் இதே போன்றதே.
பிரிந்து செல்வதைக் கூறும் சாவு என்பது போதே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. வாழ் டவது மில்லை. அதேபோல வெறுப்பு வந்த கூறுவ்தும் இல்லை.
ளிர்ந்த நீரைப் பெய்தலினாலே, கல்லையும் நீரிலே போகின்ற மிதவை போல, உயிரா என்பது நன்மை, தீமைகளை நன்றாக நல்ல நூல்களிலே தெரிந்துகொண்டோம்.
5ளைப் பாாத்து, அவாகளது தறமையை இல்லை. அதேவேளை தாழ்ந்த நிலையி ன்மை சிறிதளவும் எம்மிடமில்லை என்பது
5 ஒலைப் பாடல்களிலும் ஆறறுநீர் உலகத் விதிக்கும், அலையினாலே அலைக்கழிக்கப் வை மனித வாழ்விற்கும், ஒப்பிடப்பட்டுள்
விரிவான விளக்கமாக மேலே காட்டிய அமைந்திருப்பதை எளிதாக விளங்கிக் யில் மறு பிறவி நேரடியாகவே குறிப்பிடப் ல் அது மறைபொருளாகத் தொக்கி நிற்
கு, பிற்ப்பு இறப்புப்பற்றி உணர்த்துவ
'O -

Page 99
இன்றுயில்போற் சாக்காடும்
எழுவதுபோற் பிறப்புமெ நன்றுணர்த்தி யெனக்கூறுந் தி நரகமொடு சுவர்க்கமுந்த
என்ற பாடலில் முதலிரண்டடிகளிற் செ பதைச் சந்திரனே எடுத்துக்காட்டுவதாக வள்ளுவனே என்பதில் சந்தேகமே இல்லை.
உறங்குவது போலும் சாக்கா விழிப்பது போலும் பிறப்பு.
ஒருவன் கற்ற கல்வியானது அந்தப் அல்லது மறுபிறப்பிலும் அல்லது மறுமை லானந்தர் சந்திரனைக் கேட்பதாகவும், அ அமையும் பின்வரும் பாடலைக் கவனிப்பே
வருந்தித்தாங் கற்றகல்வி மா
மறுமையிலு முதவுமோ திருந்துகல்வி எழுமையுமே ம! செம்மொழியைத் தேர்தி(
இப்பாடலில் திருக்குறளொன்றையே தாகக்கொள்ளலாம். அத்திருக்குறள் இதுத
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி எழுமையும் ஏமாப்பு உடைத்
சுவாமி விபுலானந்தர் தனது நண்ப கல்வி எக்காலத்தும் அவரைக் காப்பாற்றுட வருமாறு ப்ாடலாக்கித் தருகிறார்:
"அறிவறறங் காக்குமெனு மறவுரை வரிகள்
அறிவுஅற்றம் காக்கும் கருவி உள்ளழிக்கல் ஆகா அரண்
என்ற திருக்குறளைச் சொல்லுக்குச் சொ இதேபோல சிவபெருமானது சிவந்த சடாமு
செம்பவளக் கொம்பினிடைச் எம்பெருமான் செஞ்சடையை
என்ற வர்ணனை உவமையானது பல ப
பட்டிருக்கின்றது. கடவுள்மா முனிவர் இ
காப்புப் பாடலான
பவளமால் வரையில் நிலவெ
பரந்த நீற்றழகு பச்சுடப்
- 7

இனிதுதுயின் றதன்பின் ணு மியற்புலவ னுரையை 1ண்மதியை நோக்கி “ன் நண்ணுவதேன் என்றேன்
ாலலும் கருத்து, இயற்புலவனுரை என் அமைகிறது. அந்த இயற்புலவன் திரு
டு உறங்கி
(339)
பிறவியோடு மாய்ந்து, மறைந்துவிடுமோ பிலும் தொடருமோ என்று சுவாமி விபு தற்குச் சந்திரன் பதில் சொல்வதாகவும் Tub:
ப்ந்துமறைந் திடுமோ வான்மதியே என்றேன். ாப்புடைத்தென் றுரைத்த யென வெண்மதியம் விடுக்க.
செம்மொழி எனச சநதரன் குறிப்பிடுவ ான்:
பி ஒருவற்கு து (398)
ருக்கு கடிதம் எழுதுமபோது, அவர் கற்ற ம் என்ற ஆறுதல் வார்த்தைகளைப் பின்
ாயை எழுதி' எனப் பாடுகிறார். இவ்
செறுவார்க்கும்
(421)
ல் நினைவூட்டுவதாகவே அமைந்துள்ளது. டியிலே கங்கைநதி வீற்றிருக்கும் காட்சியை
சேர்ந்தமுத்து மாலையைப்போல்
யெய்திநின்ற வானதியே
ழந்தமிழ்ப் புராணங்களிலே எடுத்தாளப் யற்றிய திருவாதவூரடிகள் புராணத்தின்
றிப்பதுபோல் பிற் திவள
-

Page 100
என்ற பாடலில், சிவபெருமானின் செம்ட பூச்சு வெண் நிலா எறிப்பதைப்போல் இ பார்க்கக்கூடியதே.
சுவாமி விபுலானந்தரின் கங்கையி பரந்துபட்ட தமிழிலக்கிய அறிவையும், 6 எளிமையாக எல்லோராலும் பரிந்த கெr கண்டுகொள்ளலாம்.
பல நூல்களைக் கற்று அறிய வே விபுலானந்தரின் கங்கையில் விடுத்த ஒ6ை பல ஊற்றுக் கண்களிலிருந்தும் புறப்பட்டு நீரைப்போன்றது சுவாமி விபுலானந்தரின் அது மிகையாகாது.
“ ‘ஆண் 60யயும ஆறறலும நவி உள்ளவாறறிய வல்லவன்’
களின் அருள் வாக்கு. வீரதீ வீரமில்லாதவனிடத்து ஞா உதிப்பினும் பேடி கை வாள்ே வல்லமையுடைய ஆண்டவ: அறியும் அறிவே ஆண்மைக் தாரமாகும். ஞானியானவன் தன்மையைச் சதா தியானிக் தத்தால் நிறைந்திருக்கின்ற ஆண்மை அவனிடங் காணப் ஆண்மைமிக்க சிங்கவேற்றை (நிர்ப்பயம் - பயமற்ற தன்ன
 

பவள மலைபோன்ற மேனியில், திருநீற்றுப் ருப்பதாகக் கூறும் பாடலோடு பொருத்திப்
ல் விடுத்த ஒலைப் பாடல்கள், அவரது சைவ சித்தாந்தக் கருத்துக்களையும் காட்டி 1ள்ளக்கூடிய வகையில் அமைந்திருப்பதைக்
ண்டிய செய்திகள் பலவற்றையும் சுவாமி \யிலே கண்டு சுவைத்துப் பயன்பெறலாம். ,ெ ஒன்று சேர்ந்து, பிரவகித்து ஓடும் ஆற்று ' கங்கையிலே விடுத்த ஒலை' என்றால்
றைநதவனே சமயவுண்மைகளை என்பது விவேகானந்த சுவாமி ரமே மெய்ந்நெறிக்கு அறிகுறி. னமுதிப்பதில்லை. ஒரு சிறிது 'பாற் பயன்தரா தொழியும். சர்வ னுடைய பிள்ளை நாம் என்று கும் அச்சமின்மைக்கும் அடியா ஈகவரனோடு ஒன்றாய் நிற்குந் கிறான்; ஆதலால் அவன் ஆனந் *ன். நிர்ப்பயத் தோடு கூடிய படுகிறது. விவேகானந்த சுவாமி
நிகர்த்திருந்தார்.' ம)
- விபுலாநந்த அடிகள்.

Page 101
“வன்னிக் கலாச்சா
செல்வி அன்ரோனி
வளம் மிக்க வன்னியின் வரலாற் றிலே, காலத்தின் கண்ணோட்டத்திலே மறைந்துவிட்ட எத்தனையோ பண்பாடு கள், அவற்றின்கண் பொதிந்துவிட்ட புதுமைகள், புத்தியின் நுட்பத்தைக் காட்டும் கருத்துக்கள், வளம் கெடாத வாழ்க்கை முறைகள், காலத்தால் கடத்த முடியாத பசிய நினைவுகளாக மலர் கின்றன.
எல்லை வடக்கில் எழில் யாழ் பரவுகடல் பல்லோர் புகழருவி தெற்கெல்லை -
நல்லதிருக் கோணமலை கீழ்பால் கேதீச்சரம்
மேற்கில் மாணத் திகழ்வன்னிநாடு என எல்லைகள் வன்னிக்கு வகுத்துரைக் கப்படுகின்றது. குயில்பாட மயில் ஆடும் குளிர்தரு சோலைகளும், மானும் மரை யும் தாவிப்பாயும் அடர்ந்த அடவிகளும், கொக்கும் நாரையும் குளிர்ச்சி பொருந்தி அமரக் கஞ்சம் கொஞ்சும் குளங்களும், நீர் வடிந்து வாய்க்கால்களில் செல்ல அவற்றை வாங்கி வளம் கொழிக்கும் வயல்களும், ஒன்று சேர்ந்து முல்லையும் மருதமுமாகி மனோரம்மியமாக விளங்கு வதுதான் வன்னி. வயல் நிலங்களை யடுத்து மக்கள் வாழும் மேட்டு நிலங் கள். அம்மேட்டு நிலங்களில் ஒலையால் கூரை சமைத்து, களிமண்ணும் Ֆւգեւյւծ கொண்டு சுவர் அமைத்து அவற்றைச் சாணம்கொண்டு கைகளால் மெழுகி, மண்ணினால் அழகான திண்ணைகள் அமைத்துச் சிறப்பாக வாழ்ந்தனர் குடி கள். மந்திகள் வாழைகளிலே மாங்கனி களைச் சிந்த, சிந்திய கனிகளின் சுமை யால் வாழைகள் குலைகளுடன் பலா விலே சாய, முக்கனிகளும் முச்சாறு பிளியும் பழம் நிறை சோலைகள் வன் யர்வாழ் குடிசையின் அயலில் அமைந் திருக்கும். அச்சோலையின் மத்தியில்
- 7.

ரம் - ஓர் நோக்கு”
யா ஸ்ரனிஸ்லாஸ்,
அமைந்த தொழுவத்திலே வண்டியிழுக் கும் மாடுகள், பால் தரும் பசுக்கள், 2-p- வுத் தொழில் செய்யும் எருமைகள் எழி லுடன் விளங்கும்.
பாலும், தயிரும், நெய்யும், வெண் ணெய்யும் வெகுவாகப் புரளும் நாடு. பனிரசத் தேன் சொரியும் பழங்கள் பகிர்ந் தளிக்கும் நாடு. வசந்த காலத்தின் வாசத் தில் தேனீக்கள் சேர்க்குந்தேன், கொப் பாந்தேன், பெருந்தேன், சிறுதேனாக முறையே கொம்பர்களிலும், பொந்து களிலும்வதைகளாகப் பொதிந்துவிளங்க, அவற்றைக் குடங்களில் சேர்த்து உண வாகக் கொள்வர். நாயுடன் காடு சென்று அதன் மோப்பச் சக்தியிலே அடிவைத்து, அலைந்து திரியும் விலங்குகளை வேட்டை யாடி வி ரு ப் புட ன் அனைவர்க்கும் பகிர்ந்து, எஞ்சியவற்றைக் கருக்கலாக்கி யும், வற்றலாக்கியும், பொதிகளாக்கித் தேவையானபோது புனிதமாய் உண்பர். கெளிறும், கெண்டையும், வராலும்,ஒட்டி யும், உளுவையும், மாங்கனும், பொட்டி யனுடன் பனையறியும், குளங்க ள் கொடுக்க,அவற்றைக் குதூகலமாக உண்டு வாழ்வர். மண்ணிலே வாழ்நாள் முழு வதும் மாடாய்ப் பாடுபட்டு, மண்ணை நம்பியே வாழ்ந்து, மண்ணிலே விளைந்த பொருட்களையே கொண்டும், கொடுத் தும் தன்னிறைவாள வாழ்க்கையைச் சமீபகாலம் வரை வாழ்ந்தவர்கள் இவர் கள். வன்னி நெல்லும், சேனைச் செய் கைப் பொருட்களான உழுந்து பயறு, கச்சான், மிளகாய் என்பனவற்றை உள் நாட்டிலேயே ஏற்றுமதி செய்து அவற்றி லிருந்து பெறும் வருமானம் வாழ்க் கையை வளமானதாக ஒட்டப் போது மானதாக விளங்கியது. பாற்பண்ணைப் பொருட்களும், பழவற்றல்கள், தேன் என்பன ஏனைய வியாபாரப் பொருட் களாக விளங்கின. மண்ணை நம்பி

Page 102
வாழ்ந்த இவர்களுக்கு வளமான வள மும், குளமும், மண்ணும் மனோரம்ய மான வாழ்க்கையைக் கொடுத்தன.
செய்யுந் தொழிலே தெய்வம் எனப் போற்றினர் வன்னியர். எத்தொழிலைச் செய்யினும் களைப்பையன்றி மகிழ்ச் சியை அதிற் கண்டனர். வீடுகள் அமைத்த போதும், விளைநிலங்கள் விதைத்த போதும், விதைத் தவற்றை அறுவடை செய்தபோதும், போர் தள்ளிச் சூடடித்த போதும் கூட்டுமுயற்சியில் செய்து முடித் தனர். எதற்கும் வித்திடும் இறையோனை வேண்டி அவனின் பாதங்களைப் பூஜனை செய்து, விதைக்குந் தானியத்தில் ஓர் சிறு ப்குதியை இறைவனுக்கு அர்ப்டணம் செய்து ஏரினில் எருத்தையோ அன்றேல் எருமையையோ பூட்டி விதைக்க முற் படுவர். விதைத்த பயிர் விளைந்து வரு கின்றவேளையில் கொத்தும் குருவிகட் கும், பன்றி, மான், மரை, யானைகட்கும், உணவாகாதிருக்க ஓயாது காவல் புரிவார் கள். அவன் இவ்வுயிர்களால் படும் வேத னையைப் பன்றிகள் பேசுவதாகக் கூறும் பன்றிப்பள்ளு, குருவிகளைப் பேசவைத்து ஆக்கம் செய்த குருவிப்பள்ளு என்பவை எடுத்துக்காட்டுகின்றன. சேனைச் செய் கையை மிக விருப்புடன் செய்பவர் வன்னியர். அடர்ந்த வனமதனை வெட்டி வெளியாக்கித் தீயிலிட்டு எரிப்பர். எரிந்த கட்டைகளைக் கவனமாக இடையீடின்றி அடுக்கி வேலிகளாக்குவர். பின் நெல் லைத் தூவ, அது முளைத்துச் செழித்து வளர்கிறது. கதிர் கண்டு முற்றி விளை கிறது. விளைந்த நெல்லின் ஒரு பகுதி வன விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் உணவாகிறது. பன்றிகள் அவற்றைக் காண்கின்றன. பன்றிக் குட்டிகள் பாய்ந்து பாய்ந்து உண்கின்றன. அக்குட்டிகளின் பெற்றோர் தம் பிள்ளைகட்குப் பற்கள் பெயர்ந்துவிடாமல் உண்ணும்படி கவ னம் கூறுகின்றன.
“நெல்லுத் தின்னும் ஆசையாலே பல்லுக்கில்லுப் பேர்ந்திடாமல் மெல்ல மெல்ல நன்னித் தின்னுங்கோ மக்காள்" என்ற வகையில் பன்றிப் பள்ளில் ஒரு பாட்டு அமைகிறது. இவ்வாறு பன்றி
kan

களும், குருவிகளும் விவசாயத்தில் தம் எதிரிகளாக இருந்தும் அவை சிந்திப்பது போல் தாம் சிந்தித்துப் பாடிய பாடல் கள் மிக அருமையானவை.
“குஞ்சுப்பட்சி பசித்துத் தவிக்குது
கொத்திவாரும் சுருக்கினில் நெல்லை
இந்த மாதம் முடிந்தாலுமக்கினி
யெங்குங் கிட்டாது செங்கதிர்
நெல்லு
என்று பெண் குருவி ஆண் குருவியிடம் கூறுவதாக அமைகிறது. இப்பாடல் பயிர் கள் விளைந்துவரும்போது அவற்றில் ஏற் படும் நோய்களைக் கிருமிநாசினிகளும், களை கொல்லிகளும் இல்லாத அக்காலத் தில் தெய்வநம்பிக்கைகொண்டு விரட்டி னர். இறைவனுக்குப் பூஜனை செய்து, பொங்கல் செய்து, பொங்கிவரும் பாலு டன் தீர்த்தமும் கலந்து தெளித்தால் நோய்கள் அற்றுப்போகும் என எண்ணி னர். அவ்வாறு செய்து வயலின் வாயி லுக்கு முள்வேலிகள் இட்டு மூன்று நாட் கள் உட்செல்லாதிருந்தனர். முழு முதற் பொருளில் அவர்கள் வைத்த நம்பிக்கை முழுமையான பலனை அவர்களுக்கு அளித்தது. விவசாயத்தோடு விண்ண வனையும் எவ்வாறு இணைத்தார்கள் என்றால், தாம் விளைக்கும் மண்ணில் கால்வைக்கும்போதே தோளிலிட்டிருந்த சால்வையை எடுத்து இடையிலிட்டு,ஒடை நீரில் கைகால் கழுவி,இறைவனை வேண்டி வயலினுள் கால்வைப்பர். இவ்வாறு பூச்சியமாகத் தம் விளைநிலத்தைப் பேண்ய அவர்கள் பெண்களை வயலி னுள் இறங்க அனுமதிப்பதில்லை. பாத ரட்சைகளிட்டுப் பயிரினுாடே நடப்பதோ, விளை நிலங்களில் நடப்பதோ நம்மை வாழவைக்கும் அந்நிலத்திற்கு நாம் செப் யும் அவமரியாதை எனக் கருதினர்.
விளைந்த பயிரை அறுவடை செப் யும்போது கூட்டு முயற்சியில் வெட்டு வர். இவ்வாறு ஏனைய விவசாயிகளின் உதவியுடன் கூலியின்றி ஒருவருக்கொரு நாளாக வெட்டிமுடித்தல் 'பரத்தை போடுதல்' என்னும் சொல்லால் வழக் கப்படும். அறுவடையின்போது,
74 -

Page 103
"முற்றிய நெற்கதிரை எங்கள்
முக்கண்ணன் தாள் வணங்கி நற்குடுவைத்திடவே நன்றாய்
அரிந்திடுவோம்' என்று பாடிக்கொண்டும், அதனைத் தொடர்ந்து
"மட்டுருக்காலை அருவாளுமடித்து
மாவிலங்கன் பிடிசீவி யிறுக்கி வெட்டும் பிடியைச் சிறக்கவே GBunT (B)
வெள்ளித் தகட்டினால் விரல்
கூட்டமிட்டு வளர்ந்தரிவி வெட்டும் இளந்தாரி
praig நாவூறு வாராமற் காரும் ஐயனாரே போன்ற பல பாடல்களைத் தாள லயத் துடன் பாடிப்பாடிக் களைப்பின்றி அறு வடை செய்வர். வெட்டிய பயிரைக் கட்டக்கந்துகளாகவும், பின் அவற்றைச் சூடாகவும் அடுக்குவர். புதிர் எடுத்தற் குரிய நல்லநாட் பார்த்து விளைந்த வயல் நிலத்தில் இறங்கி விளைந்த நற் கதிரின் ஓர் சிறு பகுதியை வெள்ளைத் துணியால் மூடி வீட்டுக்குக் கொணர்ந்து அதற்கு முதலே வீட்டில் தயாராக இருக் கும் நிறை குடத்தடியில்வைத்து இறை வனை நினைந்து தாயறையில் பக்குவ மாகக் கட்டுவர்.
புதிர் உண்ணுவதற்கு உற்றார் உற வினராகிய அயலில் உள்ளவர்களுக்கு உரிய நல்லநாளைத் தெரிவித்து வீட் டிற்கு அழைப்பர். விளைந்த பயிரின் ஒரு பகுதியைத் தலையடி அடித்து அம் மணிகளை வீட்டிற்குக் கொண்டுசென்று பக்குவமாகக் குற்றி பச்சையரிசிச்சாத மும் பலவகை மரக்கறிகளும் சமைத்துப் புதிர் மாவில் தயாரித்த பலகார வகை களுடன் பாலும் பழமும் தயிரும் நெய் யும் இட்டு அழைத்த அனைவருக்கும் வாழையிலையில் இட்டுத் தாமும் உண்டு மகிழ்வர். இவ்வாறு அனைவரும் மனம் குளிர்வதனால் விளைச்சலைத் தந்த பூமாதேவியும் குளிர்வாள் என்பது சம் பிரதாயமாகும். இவ்வாறு சீனட்டி, மொறுங்கன், முத்துச் சம்பா, மலை யழகன், பச்சைப் பெருமாள், வட்டிப் பித்தன், கொக்கு வெள்ளை என்னும் நெல்லினங்களை விதைத்து நெடுநல்
7 سم

வாழ்க்கை கண்டனர் மக்கள். வன்னி யின் வயற் பிரதேசங்களில் தொழில் புரி யும்போது இன்ன பொருளை இச்சொல் லால் அழைக்கவேண்டும் என்ற குழு உக்குறி இட்டு வழங்கினர். அக்குறி களையே வயலில் தொழில் புரியும்போது பிரயோகிக்க வேண்டும் என்பதும் வன் னிப் பிரதேசப் பாரம்பரியமாகும். அவ் வாறு பாவிக்கும் குழு உக்குறிகள் சில பின்வருமாறு:-
பெருவாயன் - கடகம் சாக்கு - இளையான்
சாணி - போல்
தண்ணீர் - நெடியாழி நெருப்பு - வெளிச்சக்காரன் பாக்கு - கொட்டை மணல் - வைரப் பொலி வெற்றிலை - வாடல் வைக்கோல் - பொலிக்கொடி கழிபடும் நெல் - அக்கந்துமுகப்பொலி சுண்ணாம்பு - வெள்ளை சுழகு - குல்லம்
சோறு - அமுது
தயிர் - வெள்ளை நெல் - பொலி, கூரன் புகையிலை - கருக்கல் மாடு - நடையன்
வீடு - குடில் வேலைக்காரன் தடி - வேலைக்காரன் கொட்டாப்பிச்சு - சாப்பாடு
சூடாக வைத்த தானியங்களுடன்கூடிய தர்கிய நெல்மணியை பொருத்தமான நன்னாளில் சூட்டைத் தள்ளி எருமைகள் கொண்டு மிதிப்பர். எருமைகள் வளைந்து வளைந்து மிதித்து வலம்வரும்போது நெல்மணிகள் வேறாகவும், வைக்கோல் வேறாகவும் பிரிக்கப்படும். இவ்வாறு எருமைகள் வலம்வருவதை 'நடையன் வளைதல்" என அழைப்பர். நெல்லைத் தூற்றும்போது
* "பொலி பொலி பொலி
பலுகிப் பெருகிப் பொலி பரமனார் பதம் போற்றியே
GIFT 6ör GøOTTb GounT Gó?” ” எனப் பாடித் தூற்றுவர். முதற் குடு தள்ளி அடித்த தானியத்தை முதற்

Page 104
பொலி என அழைப்பர். பொலியைத் தூற்றும்போது தெய்வத்தை நினைந்து, தேங்காய் உ  ைட த் து க் கற்பூரம் கொழுத்தி, உடைத்த தேங்காயைப் பொலியினுள் புதைத்து முக்காலி கட்டி, அதன் மேலேறிக் காற்று வீசுந் திசை நோக்கித் தூற்றுவர். இவ்வாறு வன்னி யரின் தொழிலோடு இணைந்து தெய்வ நம்பிக்கையும் வாழ்ந்தது.
கல்வி நிலையை நோக்குமிடத்து ஆசிரியன் தெய்வமாகப் போற்றப்பட் டான். மாணவர்கள் மத்தியிலும், சமூ கத்திடமும் அவனுக்குப் பெருமதிப்பு இருந்தது. ஏனெனில் அவனிடம் சகல அறிவாற்றல்களும் நிறைந்து விளங்கின. சமூகம் விரும்பும் ஒழுக்கத்தை அவன் பேணி நடந்தான். அதனால் 'எழுத் தறிவித்தவன் இறைவன்' என்ற தொட ருக்கு அவன் இலக்கணமாக வாழ்ந்தான். சிறிய வகுப்புகளிலேயே ஆழமா ன அறிவை பண்டைய மாணவர்கள் பெற் றனர்.
எழுத்துக்களை ஆரம்பிக்கும்போது மணலிட்டு, அம்மணலில் பிஞ்சு விரலை யிட்டு எழுதக் கற்றுக்கொடுத்தார்கள்.
**கொம்பு சுழிகோணாமல்
கொண்டபந்தி சாயாமல் அம்புபோற் கால்கள் அசையாமல்
தம்பி எழுதினால் நன்மையுண்டு' என்ற வகையில் தெளிவான முறையில் எழுதவும், தமது கருத்துக்களைச் சரி யான முறையில் தெரிவிக்கவும் அக்கால மாணவர்கள் நன்கு பயிற்சி பெற்றிருந் தனர். 5ம் வகுப்பு கற்றவர்களே அழ கான முறையில் எழுதவும், வாசிக்கவும் நன்கு கற்றிருந்தார்கள். அவர்கள் தமது கருத்துக்களைத் தொகுத்து எழுதும் பொழுது காணக்கூடிய் ஆற்றல் இக் கால அவ்வகுப்பு மாணவர்களிடையே காணுதல் மிக அபூர்வமாகும். குற்றுக் கள் இல்லாத ஏட்டில் எழுதப்பட்ட எழுத்துக்களையே சரியான முறையில் வாசிக்கத் தெரிந்தவர்கள் அவர்கள. ஒர் ஆசிரியன் சமூகத்தை இயக்குபவனாக வும் விளங்கினான். விவாக விடயங்களில் கூட அவன் பெருஞ் செல்வாக்குப் பெற்
7 سے

றிருந்தான். அவர் கூறும் பெண்ணையோ, ஆணையோ வீட்டு மாப்பிள்ளையாக, அன்றேல் பெண்ணாக ஏற்றுக்கொள்ள சமூகம் தயங்குவதில்லை. அவரின் சொற் கேட்டு நடந்தால் இறைவனின் ஆசி உண்டு என்ற நம்பிக்கை உண்டு. உடற் பிணி தீர்க்கும் சிறந்த வைத்தியர்களாக வும் ஆசிரியர்கள் விளங்கியிருக்கின்றனர்.
வன்னிக் கல்விக்கும், புலோலி, தும் பளை, பருத்தித்துறை ஆதியாம் இடங் களுக்கும் தொடர்புண்டு. அங்கிருந்து ஆசிரியர்கள் மாட்டுவண்டியில் வருவார் கள். இவ்விடத்திலே தங்கியிருந்து வீட் டுத் திண்ணைகளில் பாடங்களைச் சொல் லிக் கொடுப்பார்கள். கந்தபுராணம், திரு விளையாடற் புராணம், பாரதம், வாக் குண்டாம், நல்வழி, நன்னெறி, நீதி வெண்பா, நிகண்டு முதலான பாடங் களை மிக ஆர்வத்தோடு கற்பித்தனர். அவற்றின் காரணமாகவே இன்றுள்ள முதியோர் அவற்றை வாய்ப்பாடமாகவே இளஞ் சமுதாயத்திற்கு எடுத்தோதி மகிழ்வர். இவ்வாசிரியர்களுக்குச் சம்பள மாக நெல்லும், பணமும் கொடுக்கப் பட்டது. இவ்வாசிரியர்கள் இங்கு மூன்று வருடங்கள் தங்கியிருந்து கற்பித்துச் செல்வர். செல்கையில் மாணவர்களின் சன்மானப் பொருட்கள் நிறைவாக அவர் களுக்குக் கொடுக்கப்படும். அதே வேளை தேன், நெய் போன்றவற்றையும் தம் முடன் எடுத்துச் செல்வர்.
சகுனங்களை நம்புவதில் வன்னியர் சிறந்தவர்கள். பல்லி சொல்லுவதில் அர்த்தங்கள் உள்ளதாக நிறைவாக நம்பு வர். நாய், பூனை, சாரைப்பாம்பு குறுக்கே செல்லுதல், செல்லவிட்டுப் பின் னால் கூப்பிடுதல் ஆகியவை விளிவளர்த் திற்கு ஆகாதென்றும், டாற்குடத்துடன் வரல், கன்றின்ற பசுக்கள் எதிர்ப்படல், நெல், அரிசி, வெற்றிலை, தேங்காய் கொண்டுவரல் நல்ல சகுனம் எனவும் எண்ணினர். திருமணக் கிரியைகள் கூடத் தைமாதந் தொடக்கம் ஆனி மாதத்திற் கிடையில் நிச்சயார்த்தம் செய்யப்படும். ஏனெனில் குழந்தைகள் சித்திரை மாதத் தில் பிறப்பதைத் தடுப்பதற்காகவும், அத் துடன் தட்சணாயன காலங்களில் தேவர்
6 amulo

Page 105
கள் உறங்குவதாகவும், அவ்வேளை அவர் களின் ஆசி திருமணம் புரிபவர்களுக்குக் கிடையாமற்போகும் என்பதற்காகவு மாகும். மரணச் சடங்குகளிலும் சமு தாயத்தோடு படிந்துவிட்ட கிரியைகள் பல உண்டு. உயிர் பிரிந்த வீட்டில் நெருப்பு மூட்டாது உறவினர்களால் கொடுக்கப்படும் உணவுகளை அருந் துவர். உயிர் பிரிந்த வீட்டில் ஒரு வருட காலத்தினுள் எவ்வித சுபகிரியைகளும் செய்வதில்லை. கணவனை இழந்த பெண் கள் பொட்டும் பூவும் இழந்தவர்களாய், தாலி அணியாதவர்களாய், சுபகாரியங் களில் முதலிடம் வகிக்கும் உரிமையை இழந்தவர்களாய் தாலியறுத்தவர்கள் என்ற அபாக்கிய நிலைக்குத் தள்ளப் படுவார்கள். இறந்த வீட் டி ன் மிக அண்மையில் இந்துசமயத் தேவாலயங் கள் இருப்பின் அங்கு பூஜைகள் நடை பெறுவதில்லை. அங்கு நடைபெறும் முக்கிய நித்திய கருமங்கள் பின்போடப் படும். மரண வீட்டில் அழுகுரல் கேட்க ஆலயத்தில் மணியோசை கேட் கக் கூடாது என்பதற்காகவும், மன அமைதி யுடனும் ஆத்ம திருப்தியுடனும் இறை வனைச் சிந்தையிலமர்த்திச் செய்யவேண் டிய இச்செயல்களை மன அமைதியற்ற வேளையில், அழுகையின் மத்தியில் செய் யக்கூடாது என்பதற்காகவும் அவ்வாறு பின்போடப்படும். இழவுக்கு முழவு ஏங்க ஆலயத்தில் விழாவுக்கு முழவு முழங்கக் கூடாது என்பதற்காக விழாக்கள் அத் தேவாலயங்களில் நடைபெறுவதில்லை. அமங்கல வீட்டார் மங்களகரமான அணி கலன்களை அணியக்கூடாது என்பது பாரம்பரியம்.
வெள்ளி வாரத்தில் காசு எண்ணிக் கொடுத்தல், உடைகள் கொடுத்தல், வெள்ளி வாரத்தில் பிரயாணம் செய் தல், விவாகம் செய்த புதுத் தம்பதிகள் வெள்ளி வாரத்தில் வெளியே செல்லு தல் ஆகியவைகள் அனுமதிக்கப்படுவ தில்லை. ஏனெனில் தந்தையுடன் கோபித் துக்கொண்டு வெள்ளிவாரத்தில் பழனி சென்ற முருகன் பின் வீடு திரும்பவில்லை என்பது ஐதீகம். ன்னொளியில்லாக் காலத்தில் அயல் வீட்டுக்குத் தேவை நோக்கிச் செல்லும் ஒருவர், விளக்குக்
7 س--

கொண்டு சென்று அவ்வீட்டின் வாசலில் சென்றவுடன் அதை அணைத்துவிட்டுத் தேவை முடிந்தபின் வீட்டாரின் விளக் கில் தம் விளக்கைக் கொழுத்தி வீட் டாரின் விளக்கை அணைத்துத் திரும்ப அதனைப் பற்றவைத்துச் செ ல் வர் . விளக்கு வீட்டின் இலக்குமி எனவும், அந்த இலக்குமியை அடுத்த வீட் டி ற் குக் கொண்டுசெல்லக் கூடாது என்பதற்காக வும் அந்தக் கிரியைகளைச் செய்துகொள் வர். காகம் தொடர்ந்து கரைதலில் விட யங்கள் உண்டு என்பதை நம்புவர். தொடர்ந்து காகம் கரைந்தால் வெய் யிலில் நின்று தமது காலடி நிழலைத் தாமே அளந்து, அத்தொகையுடன் ஒரு பத்தும் ஒன்றும் கூட்டி 'ஒரேழுக்கீவ ராயின் வருவது சுகம், துக்கம், பிரிவு, மரணம், போன பொருள் திரும்பிவரல் போன்ற நிகழ்வுகள் ஏற்படுவதாக அனு மானித்துக்கொள்வர். மேலும் பல்லி சொல்லுதல், சுடலைக் குருவி கத்து தல், நாய் ஊளையிடுதல், மாட்டின் அவலச் சத்தம் இவையெல்லாம் அப சகுனமாகக் கருதப்படுகிறது. பஞ்சமி யில் இறப்பின் வேறும் ஆட்கள் இறப் பார்கள் என்ற நம்பிக்கையும் இம்மக் ளிடம் இருந்துவருகிறது.
இன்ப துன்பங்கள் யாவற்றிலும் எம்மை இயக்கும் ஒருவன் இருக்கின்றான் என்ற நம்பிக்கையில் ஸ்திரமாக வாழும் வன்னி மக்கள் இறைவனை எந்நிலை யிலும் இறைஞ்சத் தவறுவதில்லை. இயற்கைத் தெய்வத்தை வழிபட்டனர் அவர்கள். பெண் தெய்வ வடிவங்க ளாகிய பத்தினித் தெய்வ வழிபாடு, பத்திரகாளி வழிபாடு, வீரமாகாளி வழி பாடு, அம்மன் வழிபாடு ஆகிய வழி பாடுகள் நடைபெற்றுவருகின்றன. சப்த கன்னியர் வழிபாட்டின் பொருட்டு முல் லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஆல யத்தில் விழாவெடுக்கப்பட்டுவருகின்றது. வற்றாப்பளையில் உப்பு நீரிலேயே விளக் கேற்றி அம்மனுக்கு எடுக்கப்படும் விழா நாடறிந்த உண்மையாகும். இன்னும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 27 at கல்லிருப்பு அம்மன் கோயில், வன்னி விழாங்குளம் அம்மன் கோவில் ஆகிய
س- 7

Page 106
வற்றிலும், வவுனியா மாவட்டத்தில் உள்ள வண்ணான்குளம், கோயிற் குஞ் சுக்குளம் ஆகிய இடங்களில் அமைந் துள்ள அம்மன் கோயில்களிலும் வருடா வருடம் அம்மனுக்கு விழாவெடுக்கப்படு கின்றது. இப்பகுதியில் ஆதிக்குடிகளாகிய நாகர் வாழ்ந்தார்கள் என்பதற்குச் சான் றாகப் புதூர் நாகதம்பிரான் கோயில் விளங்குகிறது. இவர்கள் நாக சர்ப்பத்தை வணங்கியவர்கள். ஆதலின் அங்கே நாக <தம்பிரானுக்குக் கோயில் ஒன்று அமைக் கப்பட்டு வருடாவருடம் விழாவெடுக்கப் பட்டு வருகின்றது.
சிவனுக்குரிய சிறப்பான கோயில் களை ஈஸ்வரம் என அழைப்பதுண்டு. அவ்வாறு சிறப்புப் பெற்ற ஈஸ்வரங்கள் ஐந்து எனப் புகழப்படுகின்றன. அவற் றில் இராமேஸ்வரம் என்னும் பெயர் பெற்ற தலம் இந்தியாவிலும், கோணேஸ் வரம், திருக்கேதீஸ்வரம், முனிஸ்வரம், நகுலேஸ்வரம் என்னும் நான்கும் இலங் கையிலும் அமைந்திருப்பது எம் நாடு செய்த பாக்கியமே. திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகிய இரண்டும் நாயன்மார்களின் பாடல் பெற்ற தலங்க ளாகவும்,வன்னிப் பிரதேசத்தில் அமைந்த தலங்களாகவும் விளங்குகின்றன. சிறு தெய்வ வழிபாட்டில் சிறந்தவரான வன் னியர் ஐயனார், வீரபத்திரர், வைரவர் போன்ற தெய்வங்களை வன்னித் தெய் வங்களாகக் கொள்வர். காடும், காடு சார்ந்த நிலமுமாக வன்னிநிலம் இருப்ப தால் கரடி,புலிபோன்ற கொடிய விலங்கு களிடமிருந்து காக்கும் தெய்வங்களாக இத்தெய்வங்களை வழிபடுபவர்.வவுனியா மாவட்டத்திலுள்ள சடவன்குளம் என் னும் இடத்தில் உள்ள ஐயனார் கொடிய வனவிலங்குகள் உள்ள இப்பகுதி மக் களின் காவற்தெய்வமாக விளங்குகின் றார். இக்காவற் தெய்வமான ஐயனார் மீது மக்கள் எவ்வளவு நம்பிக்கை வைத் திருக்கிறார்களென்றால், கொடிய மிரு கங்களைச் சந்திக்கும்போது சடவன்குள ஐயனே என விளித்தால் அக ன் று போகின்றன என்னும் பாரம்பரிய நம் பிக்கையையுடையவர்களாக விளங்கு கின்றார்கள். அது மாத்திரமன்று, சட

வன்குளத்து ஐ ய  ைன நினைத்துக் கொண்டே வனத்தில் இறங்குதலும், வனத்தினுரடே செல்லும் பாதையில் இறங்குதலுமாகிய கிருத்தியங்களைச் செய்தல் அப்பகுதி மக்களின் மரபாக விளங்குகின்றது.
ஏறக்குறைய 500 ஆண்டுகளாக இப் பகுதியில் நிலையூன்றியுள்ள கத்தோலிக்க மதத் தேவாலயங்களும் ஆங்காங்கு அம் மக்களின் மதச் சின்னங்களாக விளங்கு கின்றன. ஆங்காங்கு வீற்றிருந்து மக் களின் நம்பிக்கை தவறாது அனுகூலங் களைச் செய்து வருபவரான புனித அந் தோனியார் வீற்றிருந்தருளும் கோயில் களாகப் பெரியகட்டு அந்தோனியார் கோயில், இறம்பைக்குளம் அந்தோனி யார் கோயில் ஆகிய கோயில்களும், வன்னிக்காட்டிலே எழுந்தருளி நாட்டின் பல இன, மத மக்களின் மனத்திலும் நிறைந்து பக்தகோடி மக்களின் பாசத் தெய்வமாக விளங்கும் மருதமடு மாதா கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் மடுத் திருப்பதி, கடலில் தொழில் செய் பவர்களுக்குக் காவற் தெய்வமாக விளங் கும் முல்லைத்தீவு கப்பலேந்தி மாதா கோயில், பரப்புக்கடந்தான் என்னும் இடத்தில் அமர்ந்து அதிசயங்களைப் புரிந்துவரும் கர்த்தர் கோயில், முல்லைத் தீவு மாவட்டக் கத்தோலிக்கர்களால் போற்றப்பட்டுவரும் புனித நீக்கிலார் கோயில் ஆகியவை பக்தர்கள் பலகோடி வணங்கும் பக்தித்தலங்களாக விளங்கு கின்றன.
"இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு" என்னும் குறளின் கூற்றுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் வன்னியர். வந்த வேளையெல்லாம் சுபமான வேளை யாகக் கருதி, அறிமுகமாயினுஞ்சரி, புது முகமாயினுஞ்சரி உளங்குளிர நோக்கி உணவு உவந்தளிக்கும் நீர்மை இவர் களுக்கே சொந்தமான தன்மையாகும். பச்சையரிசிச் சாதமும், பகிர்ந்தளிக்கும் மரக்கறிகளுடன் பாலும் பழமும் கலந் தளித்துப் பெருமிதமுறுவர். வெய்யிலில் வேகிச் செல்லும் வழிப்போக்கருக்குக் குளிர்ச்சி கொடுக்கும் பொருட்டு நெடுஞ்
78 -

Page 107
சாலைகள் தோறும் நிழல்தரு மரங்கள் நிறைந்திருக்கும். அவையும் பெரும் பாலும் நாவல், பாலை, வீரை, விளாந்தி போன்ற கணிதருவிருட்சங்களாக விளங்கி வழிப்போக்கருக்கு விருந்தளிக்கும் தன்மை யுடையன. நெடுவழி செல்வோர் நீரருந் திச் செல்ல குளிர் நீர்ப்பானங்கள் வீதி யோரங்களில் விநியோகம் செய்வதற் காக சிறு குடிலமைத்து அதனுள் ஒர் புதுப்பானையிட்டு அள்ளிப் பருகப் பாத் திரமும் இட்டனர். அதுமாத்திரமன்று வீதிவழி செல்வோர் சுமைகளை இறக்கி
'தீயது செய்யாத உடற்றுாய் யறியாத மனத்தூய்மை, ெ பக்தி நீங்காத உயிர்த்தூய்ை முடைமை, உயிர்களிடத்தே வாடாத தழைவுள்ளம் வேலி னென்று குறித்துணரப்படுகிற வனையன்றி அறியாத அறி( காட்டும் தெய்வ ஒளி வேண் தகஷ்ணாமூர்த்தியின் தாள் வாழ்வு, சிவவாழ்வு வேண்டு பொருந்திய மனம்).
 

வைத்து இளைப்பாறிச் செல்ல வீதி யோரங்களில் சுமைதாங்கிகள் சமைத்து வைத்தனர்.
இவ்வாறான வன்னியின் பாரம்பரி யங்கள் சில இன்று வரண்டுவிட்ட வர லாறுகளாகக் காலக்கண்ணோட்டத்திலே கடந்துவிட்டபோதிலும் சில மக்களின் வாழ்க்கையோடொட்டி வளங்கெடாத பண்புகளாக வன்னியர்க்கோர் தனித்தன் மையை நிலைநாட்டி நிற்கின்றன.
மை, தீங்கு குறியாத, கவலை பாய்யுணராத அறிவுத்தூய்மை, ம வேண்டும். தண்மை, ஈர இரக்கமுடைமை, கஷ்டத்தால் ண்டும். நல்லறிவாளரால் நல்ல புகழொளி, மெய்யறிவு, இறை வொளி, சூழவிருப்பார்க்கு வழி ாடும். அந்தத் தவ முதல்வன் நிழலிலே வீற்றிருக்கும் பெரு
ம்." (தழைவுள்ளம் - வளமை
- விபுலாநந்த அடிகள்.

Page 108
விபுலானந்த அை
*வெள்ளை நிற மல்லிை வள்ளல் அடியிணைக்கு வெள்ளை நிறப் பூவும6 உள்ளக் கமலமடி உத்த
அந்தச் சமாதியில் படிந்த கவிதை யைப் பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்து, படித்து கண்களில் நீர்மல்க சமாதியில் மலர் தூவிச்செல்கின்றனர். விரிந்து அலைமோதும் பெருங்கடலின் உப்புக்காற்று தாழை மடல் தழுவி, தென்னஞ் சோலைகளுட் புகுந்து, சமாதி யைத் தரிசித்து, அலையலையாய்ச் செல் லும் மக்களைத் தழுவி அவர்களது மனத் துயரைச் சற்று ஆற்றுதற்காய் வீசிக் கொண்டிருக்கிறது:
மட்டக்களப்பு மானி லம் அழுது வடிந்து கொண்டிருக்கிறது. அந்த மண் ணில் காரைதீவில் பிறந்து, மண்ண ளைந்து, காலடி பதித்து, நடந்து பயின்று, தன்னையுணர்ந்து, சமுதாய நலனைப் புரிந்து, தமிழுக்கும், சமயத்திற்கும், கல்விக்கும் பெரும் பணியாற்றிய மயில் வாகனப் பண்டிதன் - வித்தகத் துறவி விபுலானந்தன் சமாதியுள் தன்னை மறைத்துக்கொண்ட துயர், - வெள்ள மாக - பெரும் புயலாக வீசிக்கொண்டிருக் கிறது.
மட்டக்களப்பு நகருக்கு அப்பால் வெண்மணற் பரப்பை நீவி வகிடு எடுத்து நீண்டு கிடக்கும் மட்டு - கல்முன்ை வீதி, மக்கட் பூக்க ளால் நிரம்பி வழிந்து கொண்டு கிடக்கிறது. கல்லடி உப்போடை இராமகிருஷ்ண சதுக்கம் சோகமே P-Саб வெடுத்து விம்மிக் கொண்டிருக்கிறது. ஒவ் வொருவர் உள்ளத்திலும் ஒவ்வொரு நிலையில் வித்தகன் விபுலானந்தன் செயல் வீறு கொண்டெழுகிறது.
- 8

U) ஆலன்.
கயோ வேறெந்த மாமலரோ
வாய்த்த மலர் எதுவோ ஸ்ல வேறெந்த மலருமல்ல மனார் வேண்டுவது.”
தெளிந்த காற்று வீசிக் கொண்டிருக் கிறது. கண்ணம்மையார் பார்த்து மகிழ, சாமித்தம்பி தன் மகன் மயில்வாகனனை திரு. நல்ல ரெத்தினம் அவர்களிடம் வித்தியாரம்பம் செய்விக்கின்றார். காரை தீவினிலே குஞ்சித்தம்பி ஆசிரியர், வசந்த ராசபிள்ளை, வைத்திலிங்கத் தேசிகர், மயில்வாகனனின் அறிவுப்பசிக்கு விருந் தளிக்கின்றனர். கல்முனை மெதடிஸ்த மிஷன் பாடசாலை ஆங்கிலக் கல்விக்கு அடிகோலுகிறது. தொடர் கல்வியை அர்ச். மிக்கேல் கல்லூரி வழங்குகிறது. ஆசிரியர்களின் அன்பிற்கும் மதிப்புக்கும் உள்ளாகி "கேம்பிரிட்ச்" தேர்வில் சிறப் பான சித்தியைத் தட்டிக்கொள்ள, அப் பாடசாலையிலேயே ஆசிரிய நியமனம் பெறுகிறான்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவந்து-சான் றோனாக்கிய தாயின் மறைவு மயில் வாகனனைப் பெரிதும் வாட்டுகிறது. தன் துயர் மற்க்க கல்முனை கத்தோலிக்க மிசன் பாடசாலையில் ஆசிரியராகி, பின் ஆங்கில ஆசிரிய கலாசாலையில் பயிற்சிக் காக நுழைகிறான். கொழும்பில் தமிழறி ஞர்களான பண்டிதர் தென்கோ  ைவ கந்தையாபிள்ளை, தாமோதரம்பிள்ளை, கைலாயப்பிள்ளை போன்றோர் சங்க இலக்கியப்பயிற்சியையும் அளிக்கின்றனர்.
பயிற்சியின் பின் மூன்று ஆண்டுகள் அர்ச். மிக்கேல் கல்லூரியின் ஆசிரியராகி, பொறியியற் கல்லூரியில் சேர்ந்து டிப் ளோமா' பட்டம்பெற்று, மதுரைத்
O minnanaw

Page 109
தமிழ்ச்சங்கத்தின் பண்டித பரீட்சைக்குத் தோற்றி பண்டிதர் ஆகிறான். பொறி யியற் கல்லூரியின் ஆசிரியராகி பின் யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரி யின் விஞ்ஞான ஆசிரியராகிறான்.
கற்றல், கற்பித்தலில் வழிகாட்டி, மாணவர்களைத் திறம்பட ஈர்த்த பண்டி தர் மயில் வாகனன், லண்டன் பல்கலைக் கழகம் நடத்தும் பீ. எஸ். சீ. தேர்வில் தேறி பட்டதாரியாகிறான்.
மானிப்பாய் இந்துக் கல்லூரி இரு கரம் நீட்டி அழைக்க - அதிபராகி - அளப் பரிய சேவைகள் செய்கிறான். பல பண்டி தர்களை உருவாக்கி தமிழை அலங்கரிக்க யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா பிவிருத்திச் சங்கம் அவனது முயற்சியால் மலர்கிறது.
தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்ற பண்டித, பட்டதாரி மயில்வாக னன் பல நூல்களை நன்கு கற்றுச் சுவைத்து, தான் சுவைத்தவற்றை தமி ழினம் சுவைக்கவும், எழுதவும் செய் கிறான். உலகப் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர்களின் பாடல்களை மொழி மாற் றம் செய்தலிலும் ஈடுபடுகிறான். தெனி சனின் உலீசன் ” எனும் செய்யுளில் வரும் 'சாதல் எய்துமுன் மேதகவுடைய செயல் சில புரிகுவம்' என்ற அடியின் பொருளை தன் மனத்திருத்தி, தன்னை கல்விக்கும், மொழிக்கும், சமயத்துக்கும், நாட்டு மக்களினது நல்வாழ்விற்கும் அர்ப் பணிக்க - துறவு பூண்டு தூய வாழ்க்கை வாழ்ந்து பணிசெய்யச் சென்னை பூரீ இராமகிருஷ்ண மடாலயத்தில் சேர்ந்து பிரபோத சைதன்யர் என்ற பிரமச்சரியப் பெயரைப் பெறுகிறான்.
பிரபோத சைதன்யர் - பூரீ இராம கிருஷ்ண விஜயம் திங்கள் தமிழ் இதழுக் கும், வேதாந்தகேசரி - ஆங்கில இதழுக் கும் ஆசிரியராகி தலை சிறந்த கட்டுரை களை எழுதுகிறார். மக்களின் மனவிருளை யகற்றும் ஞான நூல் களைக் கற்றும், மொழிபெயர்த்தும் அளப்பரிய சேவையில் தன்னை ஆழ்த்திக்கொள்கிறார். சித்திரை முழுமதி தண்ணொளி பரப்பிக் கொண்
- 8

டிருககிறது. உலகம் உவபப, உணாவுகs' பொங்க - பிரபோத சைதன்யர் - சுவாமி சிவானந்தாவின் ஞான உபதேசம் பெற்று சுவாமி விபுலானந்தா எனும் துறவுப் பெயரைப் பெறுகிறார்.
ஷேக்ஸ்பியரின் நா டகங்களில் ஈடுபாடு கொண்டு, தனஞ்செயரின் தசரூபத்தை மூலக்கருவாகக் கொண்டு சிலப்பதிகாரத் தின் நாடக முடிவுகளை விளக்க மதங்க சூளாமணியை எழுதி முடிக்கிறார். பண்டி தர் மயில்வாகனனாகச் சென்னை சென்ற வர் விபுலானந்தராக இலங்கை மீண்டு, பூரீ இராமகிருஷ்ண மிசன் பாடசாலை களின் முகாமைத்துவத்தை ஏற்று, பல பாடசாலைகளைத் திறந்து கல்விப்ப யில் தன்னை அர்ப்பணிக்கிறார் காரை தீவு சாரதா வித்தியாலயம், கல்லடி உப் போடை சிவானந்த வித்தியாலயம், திரு கோணமலை இந்துக் கல்லூரி Gurgi றவை விபுலானந்தரின் புகழ் பரப்பும் சான்றுகளாக விளங்குகின்றன.
சிதம் பரம் - அண்ணாமலைப் j6 கலைக் கழகத்தின் தமிழ்ப் GuTT Saifuu ராகி - பழந்தமிழரின் இசைக் கருவிகளை யிட்டு ஆராய்வதற்குப் பதவி துறந்து இமயமலைச் சாரல் செல்கிறார். இசை யாராய்ச்சி தொடர்கிறது. இலங்கைப் பல்கலைக் கழகம் தமிழ்ப் G_prri g)ífluff பதவி கொடுத்து அணைத்துக் கொள் கிறது. இசையா ராய்ச்சி - மறைந் தொழிந்த யாழ்க் கருவிகளை மீட்டெடுக் கும் முயற்சியில் தன்னை முழுமையாக ஆழ்த்துகிறார்.
வங்காள விரிகுடாக் கடல் மட்டக் களப்பு நிலத் திணிவுக்குள் தன் நீர் நாக்கை நீட்டிச் சுவைத்துக் கொண்டிருக் கிறது. நீர் நாக்கின் மேலாக நிலத்திணிவு களை இணைத்து நிற்கும் பாலம் கம்பீர மாக எழுந்து நிற்கிறது. தெங்கும், இள நீரும், தேமதுர முந்திரியும், எங்கும் மணம் பரவ வீசும் இளம் காற்று இருளில் கலந்து வீசுகிறது. சித்திரை முழு நிலவு வானவீதியில் ஊர்ந்து செல்கிறது.
உலகத்துக் குதூகலங்கள் முடிவுற்ற மக்கள் உறங்குகின்ற நேரம். நீர் நிலை

Page 110
மேல் படகு தவழ்ந்து வருகிறது. பட கோட்டி மெதுவாகத் தன் துடுப்பை நீரின் ஒசை எழாது இயக்குகிறான். விண்மீன் கள் முழுமதியை வட்டமிட்டு கண்சிமிட்டு கின்றன. பணி கலந்த காற்று தென் னோலைகளை அசைக்க எழும் ஒலியலை எங்கும் பரவிப் பரவசப்படுத்துகிறது. தங்க நிலவின் ஒளி நீரில் பட்டுத் தெறிக் கிறது. படகின் மறுமுனையில் விபுலானந் தர். அவரது செவிகளிலே தெய்வீக. ராகம் வாவியின் நீரின் அடித்தளத்தி லிருந்து. மெலிதாய். சரிகமபத நி. மிக மெலிதாய். எழுந்து. செவிகளில் மோதி, காற்றில் கரைந்து செல்கிறது. உற்றுக் கேட்கிறார். அவரது கண்கள் மலர்கின்றன. உள்ளம் உவகை கொள் கிறது. "ஐந்தாம் நரம்பின் அமைதி யினை நானறிந்தேன்.” மகிழ்ச்சியில் வாய் முணுமுணுக்கிறது. யாழ்நூல் உரு வாகிறது. தான் கண்டுணர்ந்த யாழ்க் கருவிகள் உருவாகின்றன.
அதோ திருக்கொள்ளம் புத்தூர் கோயில் கண்கொள்ளாக் காட்சியாகத் தன்னை அலங்கரித்துநிற்கிறது.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் சுறுசுறுப்பாகின்றனர். யாழ் நூல், யாழ்க் கருவிகளைச் சுமந்து ஊர்வலம் வருகிறது. அறிஞர்கள், பண்டி தர்கள் புடைசூழ நடுவில் விபுலானந்தர். கற்றோரும், மற்றோரும் ஊர்வலமாக. மாவிலைத் தோரணம், மரகதக் கும்பங் கள், வாழ்த்தொலிகள் விண்முட்டுகின் றன. ஊர்வலம் கோயிலை அடைகிறது.
மேடையில் தேவார இன்னிசை பண் கள் முழங்க. யாழ்நூல் அரங்கேற்றம். யாழ்நூலை விளக்க விபுலானந்தர் எழுந்து நிற்கிறார். மக்கள் மகிழ்ந்து ஆரவாரம் செய்கின்றனர். மலர் மாலை கள் அவரது கழுத்தை அலங்கரிக்கின் றன. மனம் கசிந்து அன்பில் திளைத்து யாழ்நூலுக்கு விளக்கம் அளிக்கிறார். அவரது மனத்திரையில் மட்டுநகர் வாவி யின் அந்த இசை ஆரவாரிக்கிறது. பலர் பாராட்டிச் சிறப்புரை வழங்குகின்றார்
- 82.

கள். மூன்று நாட்கள் விழா தொடர்ந்து நடைபெறுகிறது. வீணை வித்தகர் சிவானந்தம்பிள்ளை விபுலானந்தர் கண்டு ணர்ந்த யாழ்களை மீட்டியும், யாழ் நூலில் கண்ட கணிப்பின்படி அமைந்த சுருதி வீணையில் ஏழ் பெரும் பாலை களைக் கிரக சுவரம் மாற்றி இசைத்து, அவையினோரை ஆனந்தப்படுத்துகிறார். விழா முடிகிறது.
உடல் நலம் குன்றிய விபுலானந்தர் கொழும்பு மருத்துவ விடுதியில் ஒய்வெடுக் கிறார். அவரது உடல் களைப்புற்றுக் கிடக்கிறது. உள்ளம், உயிர் எங்கோ. வெகு தூரத்தில் மட்டக்களப்பு வாவி யினடியில் எழும் அந்த இசையை நாடிச் செல்கிறது. அவரது காதுகளில் ச.ரி.க.ம. ப. த. நி. அதோ. இசை. பரவுகிறது.
நீல வானிலே நிலவு வீசவே மாலை வேளையே மலைவு தீருவோம் சால நாடியே சலதி நீருளே பாலை பாடியே பலரொடாடுவோம்.
அந்த இசையோடு. இசையாகி உயிர் பிரிகிறது.
தமிழ்த்தாய் கண்ணிர் வடிக்கிறாள். தமிழ் பேசும் மக்கள் ஆறாத்துயரால் அலைமோதுகின்றனர். மட்டக்களப்புப் புகைவண்டி நிலையத்திலிருந்து புறப் பட்ட ஊனுடம்புப் பேழை ஊர்வலமாக வருகிறது. மெதுவாக, வெகு மெதுவாகக் கொண்டுவரப்பட்டு, பூறி இராமகிருஷ்ண சதுக்கத்தை அடைந்து வெண் மணற் பரப்பில் கிளையோச்சியிருக்கும் ஆலை நிழலில் சமாதியடைகிறது. சாரி சாரி யாக மக்கள் கூட்டம் அஞ்சலி செலுத்திய வண்ணம் சிலம்பு தந்த இளங்கோவன் போல் யாழ்நூல் தந்த வ புலன் எனப் போற்றியும். மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அவர்களது உள்ளங்களில் *உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டு வது” என்ற பாடல் நிறைந்து ஒரு உந்து சக்தியாக மாறுகிறது.

Page 111
துறவி தந்த
- உடுவை தில்
சுமார் முப்பதாண்டுகளுக்கு முன் பொழுதுபோக்கு: நூலகங்களில் நுனிப்பு தல். விழாவொன்றில் அறிஞர் ஒருவர் "இ கோவடிகள் பற்றியும் நெஞ்ன்சயள்ளும் சில பற்றியும், நல்லிசை யாழ்நூல்பற்றியும் செ
அதன் பின்னர் சிலப்பதிகாரத்தின் மாக ஏன் திரைப்படமாகக்கூடப் பார்க்க பல நாள் தேடுதலுக்குப்பின் யாழ் நூை ஆனால் சிறுவனாகிய எனது கையில் பருட இடையில் இரண்டொரு பக்கங்களைப் படி கத்தை அப்படியே வைத்துவிட்டேன். ந இருந்திருக்கலாம் என இப்போது எண்ணு
* மேலே காட்டிய நிரல்களுள், முதல் மேலே காட்டினாம். இரண்டாம் நிரல் வச குறிக்கும். இதனை இக்காலத்தார் வகுள யென்னும் 21ஆம் மேளத்தைக் குறிப்பது. இ
* ஷட் ஜக் கிராமம், சாதாரிதா, .ை ஷட் ஜாதி மூர்ச்சனை பெற்றன. அவற்றி
a 命
ஷட்ஜக் கிராமம் 16 1 7 7
சாதாரிதா 14 5 2
கைசிக மத்தியம் 2 4 3
கைசிகம் 24 || 4 || 4 || 1
ஒரளவுக்கு எழுதப் படிக்கத் தெரி செல்வமாகிவிட்டது. பெருத்த சிரமத்தில் பாட்டு நிலையத்தில் விபுலாநந்த அடிகளt கூடிய பேறு கிடைத்தது. அந்நூலிலிருந் சில குறிப்புகள் இவை:-
- 8.

இசை நூல்
லைநடராசா -
தொழில்: பாடசாலைக்குச் செல்லுதல்; ல் மேய்தல்; விழாக்களை விரும்பி இரசித் ந துறவிகள்’ என்னும் தலைப்பில் - இளங் ப்பதிகாரம்பற்றியும், விபுலாநந்த அடிகள் ாற்பொழிவாற்றினார்.
சில பகுதிகளை கட்டுரைகளாக - நாடக க்கூடிய சந்தர்ப்பங்கள் பல கிடைத்தன. ல காணக்கூடிய பாக்கியம் கிடைத்தது. மனுடைய புத்தகம் கனமாக இருந்ததால் டக்க முயற்சித்தேன்; முடியவில்லை. புத்த ான் படிக்க முயன்ற பக்கங்கள் இப்படி கின்றேன்.
நிரல் 58 ஆம் மேளத்தைக் குறிக்குமென ந்த பைரவியென்னும் 14 ஆம் மேளத்தைக் ாபரணம் என்பர். ஐந்தாம் நிரல் ஆகிரி இதனை இக்காலத்தார் கீரவாணி என்பர்.”
- பக்கம்: ந. வா கூ க.
கசிக மத்தியம், கைசிகம் என்னும் நான்கும் ன் ஆளத்திகள் பின்வருமாறு அமைவன.
莎 நி கிழமை குறை
4. 9 8 9
7 19 3 4 | t ሠ, ‹ም க, நி
8 4 14 9 | LD, - g5 ரி, க, ப
9 6 6 rif, és
- பக்கம்: ங் எ ரு உ.
ந்த பின்பு யாழ் நூல் கிடைத்தற்கரிய ன் பின் திருக்கோணமலை மனிதவள மேம் ார் அருளிச்செய்த இசை நூலைத் தரிசிக்கக் து எடுத்தனவும், நூலைப்பற்றியதுமான
3 -

Page 112
நூலின் ஆரம்பத்தில், “ஐயிரண்டு லாம் முயன்று குருவருளினாலும், தமிழ்த் இவ்வாராய்ச்சி நூலினை ஒருவாறு எழு லிருந்து பத்தாண்டுகளுக்கும் மேலான மு என்னும் நல்லிசை நூல் என்பதை அறிய
இந்நூல் 1947ல் தென்னிந்தியாவி வெளியிடப்பெற்றது. நூலின் இரண்டாட தால் 1974ல் வெளியிடப்பெற்றது. அத இருப்பதாகவோ அல்லது எல்லாப் புத்தக தாக இருப்பதாகவோ தெரியவில்லை.
பழமையான இசை நூல்களை நன் இசை நுணுக்கங்களையும் ஆராய்ந்து - த கொண்டு - பண்டைய தமிழ் இசைக் கரு மாக யாழ் நூல் செய்துள்ளார். அடிகள ஆற்றிய சொற்பொழிவுகள் முதலியவற். நூலை அலங்கரிக்கின்றன. இசை நூலி இனிமையான மொழிபெயர்ப்புசஞம், க றொடர்களும் படிக்கப் படிக்க இன்பந்தரு
உழை, இளி, விளரி, தாரம், குரல் யோசையின் சிறப்புகளும் தனித் தன்மைக் இசை நுணுக்கம் தெரியாதோரும் ப உதாரணத்துக்கு ஒன்று:-
* இன்பத்திலும், துன்பத்திலும் பா இன்பந் துய்த்த உள்ளத்தினின்று மலர்ச் தோய்தலினாலே மனத்தில் அசைவுங் க அசைவு, கலக்கம் என்னும் நான்கினும் வெகுளி என்னும் நான்கும் தோன்றுவன. னின்று மருட்கையும், இளிவரலினின்று அச் வன. இவ்வெட்டுந் தொல்காப்பிய மெய்ப்பு இவற்றோடு சமநிலையினையுஞ் சேர்க்கச்
பழந் தமிழ் இலக்கியங்களிலெல்ல பற்றிய குறிப்புகள் இருப்பதாக பாயிரல் கின்றது:-
* புனத்திலும், பொழிலிலும், குன் முல்லைப் புறவத்திலும், கடற்கானலிலும் லும், மனையினகத்தும், மன்றத்தினுள் ளும் யிலும் இசை வழங்கிய நாடு தமிழ் நாடு. லும், இழுமென இழிதரும் அருவி நீரிலு னொலியிலும், இசையினைக் கேட்டு உவந் பாடலையும், பாணனிசைத்த யாழ்ப் பா லையும் செவியாரக் கேட்டு இன்பமெய்தி
- 8.

ஆண்டுகளாக நேரங் கிடைக்கும்போதெல் * தெய்வத்தின் கடைக்கண் நோக்கினாலும் திமுடித்தேன்” என்ற சுவாமிகளின் கூற்றி யற்சிகளின் அறுவடைதான் யாழ் நூல் க்கூடியதாயுள்ளது.
ல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் b பதிப்பு தஞ்சை, கரந்தைத் தமிழ்ச் சங்கத் ன் பின்னர் வெளிவந்ததற்கான சான்றுகள் விற்பனை நிலையங்களிலும் வாங்கக்கூடிய
ாகு ஆராய்ந்து, சிலப்பதிகாரம் சொல்லும் மது விஞ்ஞான, கணித அறிவின் துணை வியான யாழின் வகைகளைப்பற்றி விபர ார் அவ்வப்போது எழுதிய கட்டுரைகள், றிலிருந்து பொருத்தமான பகுதிகள் யாழ் லுள்ள ஓசை நயம் மிக்க கவிதைகளும், ற்பனை வளம் நிறைந்த செந்தமிழ்ச் சொற்
குவன.
, துத்தம், கைக்கிளை என்னும் ஏழிசை களும் நூலில் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன. டித்து இன்புறப் பல பகுதிகள் உண்டு
ட்டு உதித்து மனத்திற்கு ஆறுதலளிக்கின்றது. சியும், உயர்ச்சியும் தோற்றுவன. துன்பந் லக்கமும் ஏற்படுவன. மலர்ச்சி, உயர்ச்சி, நின்று உவகை, பெருமிதம், இளிவரல், உவகையினின்று நகையும், பெருமிதத்தி சமும், வெகுளியினின்று அவலமும் தோன்று பாட்டியலினுள்ளே விரிவுற ஆராயப்பட்டன.
சுவை ஒன்பதாகும்.'
ாம் யாழினின்று எழும் இனிய இசை' பியல் அதிகாரம் பின்வருமாறு குறிப்பிடு
றத்தின்மீதும், மருதத் தண்பணையிலும், கான்யாற்றடை கரையிலும், அருஞ்சுரத்தி ம், தேவர் கோட்டத்தும், அறவோர் பள்ளி
மெல்லென்றிசைக்கும் தென்றலினுயிர்ப்பி 1ம், நறுமலரில் முரலுகின்ற தேன் வண்டி த பழந்தமிழர், பாடன் மகளது மிடற்றுப் டலையும், குழலோன் தந்த வங்கியப் பாட
trri.
--سہ !

Page 113
யாழுறுப்பியல் அதிகாரத்தில் -
* வில் ய * பேரி ய
'' D5 by u. * சிறி யr * சகோட என ஐவகை யாழை விபரித்துரைக்கும் அ விளக்கம் தரும் விபுலாநந்த அடிகளார், மூங்கில் குழலில் பாலைப்பண் எழும் வர்ணிக்கும் அழகைச் சிறிது பார்ப்போப்
" நண்பகற் காலமாகிறது. இடை கூழ் கொண்டு வருகிறாள். இடையன் யிலே குழலை எடுக்கிறான். சில நாட்களு இசைக் கருவியாக்கப்பட்டது. தீக்கடை தீயைக் கடைந்து கொண்டு, அக்கடை ( யிட்டான், குழலிலே பாலைப் பண் வாசி
** அவள் போனபின்பு வில் வடிவ வில் யாழ். அக்கருவியையும் இடையன் துளையுடைய குமிழ மரக் கொம்புகளை கயிற்றினை நாணாகக் கட்டியிருக்கிறான் நாண்கள் மாத்திரம் தாழ்த்தியும் உய பட்டிருக்கின்றன. வில் யாழின் உருவத் களைத் தெறித்து இசை யொப்புமையில்
இதே அதிகாரத்தில் ஒவ்வொரு 6 பட்டிருப்பது இன்னொரு வகைச் சிறப்ட - நரம்பு க - முறுக்கா6 - ஒற்றுறுப்பு ஆகியவற்றை ஆதாரங்களுடன் அழகாக் சொல்கிறார். அது மாத்திரமன்று - கரு லாக இருப்பின் பயன்படுத்தக்கூடிய மா கின்றார் -
* மரற்கயிறு கிடையாதிருப்பின், இசை கூட்டி இடையன் வாசித்த குறிஞ்
தமிழ் நிகண்டு நூல்கள், சங்க வற்றிலுள்ள யாழ் பற்றிய குறிப்புகே வாழ்ந்து நாகரீகம் பரப்பினார்கள் என போற்றப்பட்டன எனவும் குறிப்பிட்டுள்
யாழ் நூலில் -
- இலண்டன் மாநகர்ப் ட
வியத்தில் காட்டப்பட்டி

ாழ் 9 ாழ் ” πέρ 9. rழ் ”
யாழ் ழகு தனிச்சிறப்பு வாய்ந்தது. வில் யாழுக்கு இசைவான குழலுக்கு அழைத்துச்சென்று ஒலியைத்தொடர்ந்து யாழின் அமைப்பை
ச்சி ஒரு குடுவையிலே பாலிட்டுக் காய்ச்சிய கூழினையுண்டு நீரருந்துகிறான். பின்பு கை ருக்கு முன் அம்மூங்கிற் குழல் இடையனால் கோலினாலே புகையெழக் கைம்முயன்று கோலிலுள்ள தீயினாலே மூங்கிலிலே துளை சிக்கிறான். இடைச்சி கேட்டு மகிழுகிறாள்.’
வமான கருவியையெடுக்கிறான். அஃது ஒரு " தானே செய்து கொண்டான். உள்ளே வில்லாக வளைத்து, மரல் நாரிலே திரித்த . ஒரே அளவான ஏழு விற்கள் இருக்கின்றன. ர்த்தியுங் கட்டப்பட்டனவாய், அளவு வேறு ந்தைப் படத்திற் காண்க. இடையன் நரம்பு னை ஆராய்கிறான்.”
~~- 5555 LD 5. «56.
வகையான யாழின் உருவப் படங்களும் தரப் 1ாகும். அத்துடன் -
ட்டுதல் னி அமைத்தல் பு அமைத்தல்
கூறி யாழிலே இசை கூட்டும் முறையையும் வியை உருவாக்க சில பொருட்கள் அருந்த ற்றுப் பொருட்களும் உள்ளன என உரைக்
பட்டுநூற் கயிற்றினை நரம்பாகக்கட்டி - நசிப்பண்ணை நாமும் வாசிக்கலாம்.”
- பக்கம்: ந. சு. இலக்கியங்கள வடமொழி நூல்கள் ஆகிய ளாடு - பிற தேசங்களிலும் தமிழ்க் குலத்தார் வும், அந்நாடுகளிலெல்லாம் யாழ்க் கருவியும்
off,
ழம்பொருட்காட்சிச்சாலையிலுள்ள கல்லோ ருக்கும் சகோட யாழ்
85

Page 114
- பிரித்தானிய காட்சிச்சாை - பாக்தாத் நகர காட்சிச்சா - சென்னை மாநகர்ப் பழம்
ஒவியங்கள் - எகிப்திய பிரமிட் கோபுர பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. மதிப்புக்கும் உரிய இசைக் கருவி மறைந்த
* சரித்திர காலவெல்லைக் கெட்டா, குழவியாயுதித்து, மழலைச் சொற் பேசி, சீறி யாழ்' என்னும பேதைப் பருவச் சி நாடெங்குந் திரிந்து, ஏழைகளும் இதயங் & யாழ்' என்னும் பெயரோடு பெதும்பைப் குறுநில மன்னரும், முடி மன்னரும், த கேட்டு வியப்பெய்தும்வண்ணம் நயம்பட பருவமெய்தி, அப்பருவத்திற்கேற்ப, புதிய அரங்கத்திலே திறமை காட்டி, மடந்தைப் பெரும்பாணரோடும், மதங்க சூளாமணியா கோயில்கள் பலவற்றை வலம் வந்து, ெ யுருக்கி, முத்தமிழ் விரகராற் பாராட்டப்ப அரசிளங்குமரிகளுக்கு இன்னு பிர் பாங்கிய சேர்த்து, சீருஞ்சிறப்பு மெய்தி நின்ற ய விடந் தெரியாமல் மறைந்து போயினாள்
அக்காலத்தில் பல்வேறு இசைக் சிலப்பதிகாரத்தில் வரும் * யாழை ஆரா வண்ணமும் கொடுத்து, கருவியைப் புதி கேற்றினார்.
அடிகளார் ஆக்கிய கவிதைகளும் க லாநந்தத் தேன், விபுலாநந்த வெள்ளம், வி விபுலாநந்தக் கவிதைகள், விபுலாநந்தச் ே தலைப்புகளில் நூலுருப் பெற்றுள்ளன.
விபுலாநந்தரின் மதங்க சூளாமணி களை விளக்குகின்றன. விவேகாநந்த நாட்டு ஞான வாழ்க்கை" ஆகிய சமய நூ னும் “முத்தமிழ் வித்தகர்” ஆற்றிய தெ நூல்” அருளிச் செய்தமையே.
சகோட யாழ் பல வழிகளிலும் கள் “ சிறப்பு வாய்ந்த கருவியின் இசையி செய்தல் தமிழகத்தின் மறுமலர்ச்சிக்கு சிற
எனவே சிறப்பு வாய்ந்த யாழ் லாம் ஒலிக்க வேண்டுமானால் - இசை ஆ மினிய நல்லிசை நூல் வலம்வர வேண்டு
யாழ் நூல் இரண்டாம் பதிப்பு வெளியீட்டுக்கு ஒரு படியின் விலையினை ( என பதிப்புரையிலுள்ள வாசகமும் கவனி
முயன்றால் முடியாததொன்றில்ை கொண்டு, யாழ் நூலை நன்கு பயின்று * யாழ் ஒலிக்க வகை செய்தல் வேண்டு

பயில் இடம்பெற்றுள்ள யாழ் லையிலுள்ள யாழ் பொருட்காட்சிச்சாலையிலேயுள்ள யாழ்
ந்தில் இடம்பெற்ற யாழ் ஓவியம் இப்படியெல்லாம் போற்றுதலுக்கும், பெரு தை எண்ணி மனம் கவல்கின்றார்:-
த காலத்திலே, ‘வில் யாழ்' எனப் பெயரிய இடையர் இடைச்சியரை மகிழ்வித்துச், றுமியாகிப், பாணனொடும் பாடினியொடும் ளிப்பெய்த இன்சொற் கூறிப், பின்பு பேரி பருவமெய்திப் பெரும் பாணரோடு சென்று, மிழப் புலவரும், கொடை வள்ளல்களும் உரை பகர்ந்து, அதன்பின் மங்கைப் ஆடையும் அணிகலனும் பூண்டு, நாடக பருவம் வந்து எய்தலும், திருநீலகண்டப் "ரோடும் அம்மையப்பர் உறைகின்ற திருக் தய்வ இசையினாலே அன்பருள்ளத்தினை ட்டு, அரிவைப் பருவம் வந்து எய்துதலும், கி, அவர்க்கேற்ற தலைவரை அவர்பாற் ாழ்” என்னும் மென்மொழி நங்கை இருந்த
’ என மனம் வருந்துகின்றார்.
- பக்கம்: க. அ.
கருவிகள் இருந்தபோதும் விபுலாநந்தர், ய்ந்து ஆராய்ந்து அக்கருவிக்கு வடிவமும் தாக உருவாக்கி இசை நுலையும் அரங்
ட்டுரைகளும் விபுலாநந்த அமுதம், விபு புலாநந்தக் கவிமலர், விபுலாநந்த ஆராய்வு, செல்வம், விபுலாநந்த சொல்வளம் ' ஆகிய
* தமிழ், சமஸ்கிருத, ஆங்கில நாடக மரபு ஞான தீபம், கர்ம யோகம்’, ‘நம்மவர் ால்களையும் ஆக்கித் தந்துள்ளார். இருப்பி ாண்டுகள் அனைத்திலும் சிறந்தது * யாழ்
சிறப்புடையது ன்ன்று குறிப்பிடும் துறவி னை மீண்டுமொரு முறை தோற்றுமாறு ந்ததோரேதுவாகும்’ என்கிறார்.
- பக்கம்: ரு உ.
எழுப்பும் ஒலி தமிழ் வழங்கும் இடமெல் பூர்வலர் மத்தியில் ' யாழ் நூல் " என்னு D.
வெளிவருவதற்கு - தமிழன்பர்கள் இந்நூல் முற்பணமாகக் கொடுத்து உதவியுள்ளனர்" க்கத்தக்கது.
ல என்பதை இசைக் கலைஞர்கள் மனங் மீண்டும் தமிழ் ஒலிக்கும் இடமெல்லாம் 5.
6 - -

Page 115
இலக்கிய நாயகர்களு அடிகளாரும்.
விபுலாநந்த அடிகளாரின் நூற்புலை அவர் எடுத்தாளும் நூல்களின் தகவல்கள் சரித்திரம், விஞ்ஞானம், நாடகம், சங்கீதம் இலக்கியம், கிரேக்க இலக்கியம், ஆங்கில இ முடையவராகக் காட்சி தருகின்றார். பல் (p60p (Multi Disciplinary Approach) ga அணுகுமுறை வாய்க்கப்பெற்றவராகத் திக
இலக்கியத்துறையில் கூடுதலான நா களிலும், பாரத இலக்கியத்திலும் தாம் ர அவர் தரும் பாடல்கள் அவர் மனப்பான் நேர்மை, அஞ்சாமை, தேடல் போன்ற இலக்கிய கதாபாத்திரங்கள் அவரைக் கவர் பாத்திரங்களை அவர் வெகுவாக இரசித்த செய்தார். இத்தகைய பாத்திரங்களுள் குறி தில் வரும் கர்ணன், சேக்ஸ்பியரின் யூலியஸ் ஹோமரினால் உருவாக்கப்பட்டு ஆங்கிலக் கொடுக்கப்பட்ட யூலிஸஸ். பாரதக் கர்ணனு உலக இலக்கிய நாயகர்கள்.
1939ஆம் ஆண்டு கல்முனையில் நை விபுலாநந்தர் இலக்கியம் கற்பித்தல்பற்றி வாகச் சிலாகிக்கின்றார். உயர் குடியிற் பி இளமையில் உரிமைகள் மறுக்கப்பட்டவ6 போடும் திட்டங்கள் ஏராளம். தான் பா சமூகமே தன்னைக் கைவிட்டபோதும் தன் காக கடைசிவரை நின்று செஞ்சோற்றுக் யுத்தத்திலே களத்தில் வீழ்ந்த கர்ணனின் உ கள் அவனைக் காக்கும் தன்மை கண்ட கண்ணி கின்றான். ஆவியே நிலையிற் கலங்கியது ய நிலையிலும் தான் செய்த புண்ணியமனை னின் பண்பிற்குருகி கண்ணன் வேண்டிய
இல்லை யென்றிரப்போர்க்கு இதய நீ அளித்தருள் என்! கண்ணபிரான் உளமுருகிக் கண்களிலிருந்து டித் தன் தெய்வ வடிவத்தோடு காட்சி த தால் தெய்வமான கர்ணன் தெய்வத்தின்
வாழ்ந்த காலத்தில் நன்றி மறவாத போதுகூட கொடையை மறக்காத பண்
8 س

ரும்
கலாநிதி சி. மெளனகுரு.
ம மிகப் பரந்தது. அவரது கட்டுரைகளில் எம்மை பிரமிக்க வைக்கின்றன. தத்துவம், கலைகள், தமிழ் இலக்கியம், சமஸ்கிருத |லக்கிய்ம் எனப் பல துறைகளிலும் பரிச்சய துறை ஆய்வொழுங்குச் சங்கம் அணுகு ன்று பிரபல்யமானதொன்று. அன்றே இந்த ழ்கிறார் அடிகளார்.
‘ட்டமுள்ள அடிகளார் உலக இலக்கியங் சித்த பகுதிகளைத் தமிழில் தருகிறார். மையை நமக்குக் காட்டுவன. உண்மை, பண்புகள் வாய்க்கப்பெற்ற ஆளுமைமிக்க ந்தன. அத்தகைய குணங்கள் கொண்ட ார். மக்களுக்கும் அவர்களை அறிமுகம் றிப்பிடத்தக்க பாத்திரங்கள் மகாபாரதத் 0 சீசர் நாடகத்தில் வரும் யூலியஸ் சீசர்; கவிஞராக ரெனிசனினால் மீள் வடிவம் னும், இத்தாலிய சீசரும், கிரேக்க யூலிஸ்சும்
டபெற்ற ஆசிரியர் விடுமுறைக் கழகத்தில் ஆற்றிய உரையில் கர்ணனைப்பற்றி வெகு றந்தும், தாழ்குடியிற் வளர்ந்தமையினால் * கர்ணன். அவனை வீழ்த்த கண்ணன் ண்டவர்களின் அண்ணன் என அறிந்தும், னை மதித்து உயர்த்திய துரியோதனனுக் கடன் தீர்த்த செம்மல் அவன். கடைசி பிர் போகாமல் நிற்கிறது. அவனது தர்மங் னன் வேதிய வடிவு தாங்கி அவனை அடை ாக்கை அகத்ததோ புறத்ததோ என்றறியா த்தையும் தாரை வார்த்துத் தரும் கர்ண் வரம் கேளென்ன இல்லையென்றுரையா றொன் கர்ணன். கருணை வள்ள லான சொறிந்த நீரினாலே கண்ணனை நீராட் ருகிறான். தெய்வம் எதிரே தன் குணத் முன்னே.
நண்பனாக வாழ்ந்த பண்பு; இறக்கும் பு கர்ணனிடமிருந்து இன்றைய மனிதர்
7 -

Page 116
கற்கவேண்டிய பண்பு. விபுலாநந்தர் கர்ல பாரதத்தின் கதாநாயகன் என்று கெளரவ
விபுலாநந்த அடிகளார் காட்டும் இ மக்களின் பண்டைய தலைவன். உரோம கண்டு நண்பர்கள் பொறாமையுறுகின்றன. கின்றனர். தீக்கனாக் கண்ட அவன் மன போக வேண்டாம் எனத் தடுக்கிறாள்.
அஞ்சினர்க்குச் சதமரணம், அஞ் ஆடவர்க்கு ஒரு மரணம் அவனி துஞ்சுவர் என்றறிந்திருந்தும் சா, துன்மதி மூடரைக் கண்டால் புை இன்னலும் யானும் பிறந்ததொ இளம் சிங்கக் குருளைகள் நாம்; பின் வருவது இன்னல் எனப் ப பேதுறல் பெண்ணணங்கே யான்
எனக் கூறிச் செல்கிறான். அஞ்சாத நெஞ் காண்கிறோம். இன்னலும் யானும் சகோ நயம்படக் கூறும் அவன் வார்த்தைகளில் அவனை முழந்தாளிட்டு வணங்கி தன் சே மற்றவன் தாழ்ந்து வணங்கும் செயல்கூட
தாழ்ந்து மென்மொழியு தரணியிற் பணிந்து வீழ்ந்து நைபவர் பொ கிரங்கிய வீணர் என்ற சீசரின் வார்த்தைகளில் எதிரியும் ஆண்மையைக் காணுகின்றோம்.
சேக்ஸ்பியரின் நாடகத்தை ஆங்கா அடிகளாரின் எழுத்துக்கூடாகத் தமிழ் பாத்திரம் இது.
ஹோமர் படைத்த பாத்திரம் யூலிய தார் அடிகளார். ஹெலன் எனும் அரச நடைபெற்ற கிரேக்க நாட்டுப் போர் பிர பத்து ஆண்டுகள் பிரயாணத்திலும் கழித் பருவமெய்தி நாட்டுக்கு மீள்கிறான். அவன உறங்கி இருக்க முடியவில்லை. மற்றவர்க: தெரிகிறது, அவனுக்கூடாக வாழ்க்கைப படுத்துகிறார்.
என்னிழல்வாழ்வோர் என உண்பார், துயில்வார் ஒ செம்மை நலமிலாச் சிறி,
என மக்களை பரிதாபத்தோடு நோக்கும் கண்ட நகரங்களைக் கூறுகிறான்.
- 8

ானை வெகுவாகப் போற்றுகிறார். மகா மளிக்கின்றார்.
ன்னொரு பாத்திரம் யூலியஸ் சீசர். உரோம ப் பேரரசை விஸ்தரித்தவன். அவன் புகழ் *. அவனைக் கொல்ல சதித்திட்டம் தீட்டு னவி கலிபோர்னியா அன்று அவைக்குப் அதைக் கேட்ட சீசர் புன்னகை புரிந்து
Fாத நெஞ்சத்(து) மிசைப் பிறந்தோர் தலுக்கு நடுங்கும் ானகை செய்பவன் நான் ந தினத்தில் அறிவாய்
யான் மூத்தோன் எனது கை மன்னர் அறிவார்
போய் வருதல் வேண்டும்
நசமும், துணிவும் கொண்ட சீசரை இங்கு தரர்; அதிலும் நான் மூத்தோன் என்று ஆண்மை காண்கிறோம். அச்சமயம் சிம்மர் காதரனை மன்னித்துவிடும்படி கேட்கிறான்.
சீசருக்கு உடன்பாடில்லை.
ரைத்திடேல்
ப்யுரைக்
தாழ்ந்துவிடக்கூடாது என்று வீரத்தை,
ாங்கு தமிழ்ப்படுத்தித் தரும் விபுலாநந்த மக்களுக்கு அறிமுகமான யூலியஸ் சீசரின்
பஸ். இதனை உலீசன் என மொழிபெயர்த் குமாரியை மீட்டதற்காக 10 ஆண்டுகள் சித்தமானது. பத்து ஆண்டுகன் போரிலும் த, ஒய்வு என்பதேயறியாத உலீசன் கிழப் ால் எல்லோன்ரயும் போல உண்டு, உடுத்து, ள் அப்படி வாழ்வது அவனுக்கு வளிதாகத் ற்றிய தன் கருத்தை விபலாகந்தர் புலப்
ன்னியல்பறியார் ண்ணிதி குவிப்பாா
3untri
அவன் தான் பெற்ற அனுபவங்களை
8 -

Page 117
எத்தனை நகரம் எத்தன எத்தனை ஒழுக்கம் எத் எனத் தன் அனுபவங்களை நினைவுகூர்ந்:
வாழ்க்கை வட்டத்து எ6 வேற்றுப் புலங்கள் மிகப் செல்வுழிச் செல்வுNச் ே என்கிறான். ஆம். வாழ்க்கையை ஒரு வட நோக்கோடு அப்பாலும் செல்பவன் வேறு றைத் தேடிச் செல்லச் செல்ல அவை இ. இருக்கும். அத்தகைய தேடல் எண்ணமுை
யாண்டு பல கழிந்தன F
எஞ்சிய நாள் ஒரு சிலே
புதுப்பயன் விளையும் ந எனும் உலீசனின் கூற்றில் எஞ்சிய நாளை வாழ்க்கையின் பிடிப்புத் தெரிகிறது. சாத தரு காரியங்கள் புரிவதே அவன் நோக்கு யும் அழைக்கிறான்.
வம்மின் நண்பிர் ! என்னு யானும் நீரும் யாண்டினி மூப்பினும் வினையுள; அ சாதல் எய்துமுன் மேதக செயல் சில புரிகுவேம். என்பது அவன் அழைப்பு. "மூப்பினும் 6 மூப்பு அவனைப் பயப்படுத்தவில்லை.
இரிந்தன பலவெனின் இருப்பவும் ட உலக நோக்கு புலப்படுகிறது. இவ்வுலகத்ை துய்க்க, வயோதிபப் பருவத்திலும் அறிய கும் உலீசன் விபுலாநந்த அடிகளார் நமக்கு
கர்ணன், யூலியஸ் சீசர், உலீசன் ே வன். இரப்போர்க்கு இல்லையென்னது ஈயு தன் எதிரியும் அஞ்சாமல் இருக்கும். பண்ட பினன் யூலியஸ் சீசர். வயோதிப நிலை ஆசைப்படுபவன். இறக்கும் வரையும் அா ஆசையுறுபவன் உலீசன்.
எத்தனை அற்புத பாத்திரங்கள் ! வாரின் பாடல்களைக் கொண்டு அறிமுக
உலீசனையும் தனது மொழிபெயர்ப்புக்கூட
தான் படித்த இலக்கியங்களினின்று மக்களுக்குத் தரவேண்டும் என்ற அடிகளா
அடிகளார் துறவி. ஆனால விவேகால வாழ்க்கையை மாயை என "உதறாத துற
- 8

ன மக்கள் நனை அவைக்களம்
5l ;
ல்லையில் இருந்த
பல உள அவை சணிடை அகல்வன ட்டம் போட்டுக்கொண்டு வாழாமல் தேடல் பல விடயங்களையும் காண்பான். அவற் ன்னும் இன்னும் என அகண்டுகொண்டே டயோன் ஒய்வு அறியா உளத்தினன்.
Fண்டு இப்பிறவியில்
வ; ஆங்கவை
ாளாகுக
"யும் பயனுடன் கழிக்க வேண்டும் என்ற
ல் வருமுன் இன்னும் இன்னும் எனப் பயன் தான் மாத்திரமல்ல தன் நண்பர்களை
றுடன் உழன்றீர் ரில் முதிர்ந்தனம் ஆக்கமும் உளவே வுடைய
வினையுள' என்ற அடிகள் நயமிக்கவை.
பலவே என அவன் கூறும் வரிகளில் அவன் த மேலும் மேலும் அறிய, மேலும் மேலும்
மரணம் வரும்வரையும் அறிய நினைக் அறிமுகம் செய்யும் இன்னுமோர் பாத்திரம்.
சொந்தபந்தங்களுக்காக நட்பைக் கைவிடாத ம் ப்ண்பினன் கருணன். அஞ்சா நெஞ்சினன்; புடையனாயிருக்க வேண்டும் என்ற பண் யிலும் மேலும் மேலும் உலகை அறிய ர்த்தமான வாழ்வு வாழவேண்டும் என்று
கருணன் பாத்திரத்தை வில்லிபுத்தூர் ஆழ் ம் செய்யும் அடிகளார், யூலியஸ் சீசரையும், டாக அறிமுகம் செய்கிறார்.
எவற்றை இரசிக்கவேண்டும், எவற்றை ரின் நோக்கு எமக்குப் புலனாகின்றது.
ாந்த வழிவந்த இராமகிருஷ்ணமடத் துறவி. வி. துறவினால் தன் ஆன்மா மாத்திரம்
9 -

Page 118
உயர்நிலையடைய வேண்டும் என்ற சுய வேண்டும் என்று மக்களுக்குச் சேவை புரிந்
மற்றயவைtது வைக்கும் பற்றின லாம். மக்கள் மறுமைப் பயன் மாத்திர உலக நோக்குமிக்க துறவி. வேதாந்த சிவலோகம் வைகுந்தம் சென்றிடலாம் எ இப்பிறவியிலேயே இன்ப நிலை அடை ரசித்த, உலகுக்கு அறிமுகப்படுத்திய அடி மக்களாக வாழ வேண்டும் என்று வி கொண்டவர்களாக, சீசர்போல ஆண்ை யின்பம் துய்க்கும் தேடல் நோக்குடையவ களார் அவா.
சுருங்கச் சொன்னால் வாழ்க்கைை வாழ்வாக அமைத்துக்கொள்ள வேண்டும்
தேடிச் சோறு நிதமுண் சின்னஞ்சிறு கதைகள் வாடித் துன்பம் மிக உ வாடப் பல செயல்கள் கூடிக் கிழப் பருவமெய் கூற்றுக்கிரையெனப் பின் வேடிக்கை மனிதரைப் வாழாமல் அர்ப்பணிப்பும், உண்மையும், மும் கொண்ட மக்களாக தமிழ் மக்கள் யையே அவர் தெரிவுசெய்து தருகின்ற காணுகின்றோம். அவர் காட்டும் பாத்தி யும் அறிந்துகொள்கிறோம்.
“இறைவனுடைய திருவடிகளிே
ஒன்றே யல்லாமல் வேறெ பொருள்களுள் ஒன்றை நல்ல( லும் சிறந்த ஒன்றை இழந், வேண்டிவரலாம். அல்லது நாட குத் தீமையுந் தரலாம். என வொன்றே நமக்குத் துன்பம் முயற்சியின்றிக் கிடைப்பது; அ ஆகவே, எதை வேண்டாமெல தேவை காண்பது பயனற்றது

நலமில்லாத துறவி. மக்களும் தம்மை உணர த துறவி. ஒருவகையில் பற்று வைத்த துறவி.
7ால் தன்மீது வைக்கும் பற்றைத் துறக்க மல்ல இம்மைப் பயனும் பெறவேண்டுமென்ற
ஞானமிக்க பாரதியார்கூட செத்த பிறகு ன்போர் . பித்தர் என்று கூறினார். இங்கு பவேண்டும் என்றார். பாரதியை மதித்த, களாரும். இன்று, இப்பிறவியிலேயே மக்கள் ரும்பினார். கர்ணன்போல மனப்பாங்கு மயுடையவராக, உலீசன்போல வாழ்க்கை ர்களாக மக்கள் வாழவேண்டும் என்பது அடி
ய வறிதே வாழாமல் அர்த்தம் பொதிந்த
என்று வழிகாட்டுகிறார் அடிகளார்.
ாடு - பல பேசி - மனம் .ழன்று - பிறர்
செய்து - நரை தி - கொடுங் ன்மாயும் - பல போல
ஆண்மையும், நேர்மையும், தேடல் நெஞ்ச வாழ வேண்டும் என்ற அடிகளாரின் ஆசை
உலக இலக்கியப் பாத்திரங்களுக்கூடாகக் ரங்களுக்கூடாக அடிகளாரின் மனப்பாங்கினை
ல தோய்ந்து இன்பமனுபவிக்கிற துவும் வேண்டாம். இந்த உலகப் தென்று எடுப்போமானால், அதனி துவிடவோ, பெறாது கழியவோ ம் தெரிந்தெடுத்த பொருளே நமக் த வேண்டாமென்கிறோமோ அது தராது. நன்மை தருவது; பெரு ல்லது தானே கிடைப்பதாகலாம். ாலாம் ? நிலையற்ற பொருள்களில்
- விபுலாநந்த அடிகள்.
سمسم 90

Page 119
யாழ் ஆராய்ச்சியில் சுவாமி விபுலாநந்த
அடிகளார் யாழ்பற்றிய தமது ஆராய பொருந்திய இசைக் கருவி மறைந்ததோ மறைந்துபோயிற்று. யாழ் வாசித்த பான என ஓரிடத்திலும், ‘சங்கமருவிய பத்துப் காங்கு கிளந்தோதப்பட்டிருக்கும் இசைக் காலத்துப் பேரறிஞர் ஆராய்ந்துணர முய கூறுகிறார். அடிகளாரது மேற்படி கூற் கொண்டபோது யாழாராய்ச்சி எந்த நி கின்றன. அதேநேரம் அவர் பிரச்சனைகை மும் விளங்குகிறது.
யாழ் பற்றிய அறிவு முற்றாக மறக் ஒன்றென மயங்கும் நிலை இடைக்காலத்து
திருவிளையாடற் புராணம் விறகு வி றென மயங்கும்படியான கருத்துக்களைப் லத்தில் வருகிற ஏமநாதன் யாழ் மீட்கும் *யாழ்ப்பாணன்" எனப்பட்டான்.
'. ஏமநாதன்
என்றொரு விறல் யாழ்ப்பாணன் வென்றிகொள் விருதி னோடும் (விறகு விற்ற படலம், பாடல் 2) எனவும், மீட்டியது வீணை எனவும் கூறப்படுகிறது: ‘ஏழிசை மழலை வீணை யிடந்த வாழியின் னிசைத்தேன் மன்ன
மேற்படி பகுதிகளுக்குக் கருத்தெழுதிய எனபதற்கு ‘ஏழு இசைகளையுடைய மழவி எனப் பொருள் கூறுகிறார்.
மீண்டும் 64ஆம் பாடலிலே,
*ஏவன் மைந்தர்போல் விளங் காவ லன்கனா நிகழ்ச்சியு என்னும் பகுதிக்கு "வீணை வேந்தனாகிய படுகிறது. இவற்றிலிருந்து இடைக்காலத்
- 9

5ரின் தனித்துவம்
பித்துவான் சா. இ. கமலநாதன், பி.ஏ. புனித மிக்கேல் கல்லூரி முன்னாள் அதிபர்)
ப்ச்சியினை மேற்கொண்டபோது, “பழமை டு, அதன் வழி எழுந்த பண் மரபும் எனுந் தன் தொழில் இழந்துவிட்டான்" பாட்டிலும் தொகை நூல்களிலும் ஆங் கருவி யிலக்கணங்களைத் தானும் இடைக் ன்றாரல்லர்" எனப் பிறிதோரிடத்திலுங் றுக்கள், அவர் தனது பணியினை மேற் லையில் இருந்துள்ளதென்பதை உணர்த்து ள அணுகிய முறையில் அவரது தனித்துவ
கப்பட்ட நிலையில் யாழும் வீணையும்
அறிஞரிடையே ஏற்பட்டது:
ற்ற படலத்திலே யாழும் வீணையும் ஒன் பரஞ்சோதி முனிவர் தருகிறார். அப்பட ஒரு பாணன். யாழ் மீட்பதால் அவன்
ா வுடபுலத் திருந்தும் போந்து
விஞ்ஞைசூழ் மதுரை சார்ந்தான்.”
அடுத்துவரும் பாடலிலே யாழ்ப்பாணன்
ழிஇச் சுருதி கூட்டி னஞ்செவி வமியப் பெய்தான்.”
உரையாசிரியரோ ‘ஏழிசை மழலைவீணை" லைபோலும் இனிமையைப் பயக்கும் யாழ்”
பகிவந் திசைத்தும் வீணைக் மொத்தல். 9
பாணபத்திரன்" எனப் பொருள் கூறப் ந்து வாழ்ந்த பரஞ்சோதி முனிவரும் பிற்
l -

Page 120
காலத்து உரைகாரருங்கூட யாழும் வீை தெளிவாகும். இதேபோலவே, சீவகசிந்தா மகர வீணை" (சீவகசிந்தாமணி - காந்தருளி கிளைநரம்பு வடித்த” (மணிமேகலை 19, வீணை" எனக் கூறும் மணிமேகலை பிறிே கிறது. அதாவது “மகரயாழின் வான்ே களை அடிகளார் யாழ்நூல் 48ஆம் பக் மணிப் பாடல்கள் ‘வீணை" என்ற சொ சிரியர் பல இடங்களில் அதற்கு “யாழ்”
'வீணை வென்றிவஸ் வெம் ஆணை தோய்வதல் லாற்
என்னும் அடிகளுக்கு "இவள் முலைத் எனப் பொருள் கூறப்படுகிறது. இது ஒன்று. இப்பிரச்சனை பண்டைய யாழ்ட தில் தோன்றியதென்பதை முன்பு கண்ே என்பதை மிகப் பண்போடு மறைமுகம *ஆக்சுபார்ட் பல்கலைக் கழகப் பதிப்பகத் 55uth' (The Legacy of India, Oxford பக்கத்திலே, ‘வேதற்திற் கூறப்பட்டதும், சுவரங்களையும், இருபத்தொரு மூர்ச்ச காட்டுதற்கு இயைந்ததும், பரத முனி உண்மை சாதிக்கப்பட்டிருப்பதோடு, யாழ் உள்ள வேறுபாடுந் தெளிவுபடுத்தப்பட்டிரு தனது ஆராய்ச்சியைத் தொடர்கிறார்.
அடுத்ததாக அடிகளாரை எதிர்நோ வகையான யாழ்க் கருவிகள் இருந்தன 6
சிலப்பதிகார உரையாசிரியர் அடியா திரம் ஒன்றை எடுத்துக்காட்டுகிறார் :
"பேரியாழ் பின்னும் ம சீர்பொலியும் செங்கே மன்னுந் திருமார்ப வ பின்னும் உளவே பிற
மேற்படி பாடலை மேற்கோள் காட்டுவ( உரையிலே “யாழ் நால்வகைப்படும். அ செங்கோட்டுயாழ் என்பன. இவை யா வருவன பிறவுமுள” எனக் கூறப்படுகிறது யாழ்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது 14 பெயர்களைத் தருகிறது. இவற்றுள்
இன்று, நுண்கலைச் செல்வர், சா இருபத்துநான்கு யாழ்களின் பெயர்கை (இசையும் யாழும் - பக்கம் 220.) அடிய கோள் வெண்பாவிலும் "வில்யாழ் சு

ணயும் ஒன்றென மயங்கியுள்ளனர் என்பது மணியும், மணிமேகலையும்கூட “தீந்தொடை பதத்தை 608) எனவும், "மகர வீணையின் 25ஆம் வரி) எனவும் கூறுகின்றன. "மகர தோரிடத்தில் “மகரயாழ்” எனக் குறிப்பிடு காடு தழீஇ' என்கிறது. (இம்மேற்கோள் கத்தில் எடுத்தாண்டுள்ளார்.) சீவகசிந்தா ல்லை எடுத்தாளும் அதேநேரத்தில் பேரா எனப் பொருள் கூறுகிறார்.
முலைப் பூந்தடம்
பிறன். sy
(காந்தருவ தத்தையாரிலம்பகம் - 640) தடத்தை யாழைவென்று தோய்வதன்றி" அடிகளார் எதிர்நோக்கிய பிரச்சனைகளில் பற்றிய அறிவு மறக்கப்பட்ட இடைக்காலத் டாம். இதுபற்றித் தனது கருத்து என்ன ாகப் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறார். *தார் வெளியிட்ட ‘இந்தியாவின் கலைமுது Press) என்னும் ஆங்கில் நூலிலே 329ம் பஞ்சகன் என்னும் இசை வல்லோன் ஏழு னைகளையும் ஒரே நரம்பிலே வாசித்துக் வர் கையாண்டதும் வீண்ையே’ என்னும் pக் கருவிக்கும், வீணைக் கருவிக்குமிடையே டுக்கிறது" என மேற்கோள் காட்டிவிட்டுத்
க்கிய பிரச்சனை தமிழகத்தில் எத்தனை ான்பது பற்றியதாகும்.
"ர்க்கு நல்லார் பின்வரும் மேற்கோள் குத்
கரஞ் சகோடமுடன் ாடு செப்பினார் - தார்பொலிந்து 1ண்கூடற் கோமானே
}费
தோடு சிலப்பதிகாரம் 26ம் வரிக்கு எழுதிய வை பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், வும் பெரும்பான்மைய. சிறுபான்மையின் 1. கல்லாடம் (கி. பி. 11ம் நூ. ஆ.) ஏழு
“நடனாதி வாத்ய ரஞ்சனம்" என்ற நூல் வில்யாழும் ஒன்று.
த்தன்குளம் - அ. இராகவன் போன்றோர் ளப் பட்டியல் போட்டுக் காட்டுகின்றனர். ார்க்கு நல்லார் தரும் உரையிலும், மேற் றப்படவில்லையென்பது நோக்கற்பாலது.
سح– 92

Page 121
கடைச் சங்ககாலத்துப் புலவராகிய கடிய பெரும்பாணாற்றுப் படையிலே,
". . . . . . . . . . . . . . . . . . . . . . . . குமி வில் யாழ் இசைக்கும் பல்காற் பறவை கிை என வில்யாழ் தெளிவாகக் கூறப்பட்டிரு கோள் பாடலிலும், அடியார்க்கு நல்லார் ஆச்சரியமே. ஆனால் அடிகளாரோ வில்ய மாகக் கொள்கிறார். வேட்டையாடவும், ( காக்கவும் ஆரம்பகால மனிதனுக்குப் பய6 யாழ் தோற்றியதென்பதும், ஏனைய யாழ் அடைந்த பரிணாம வளர்ச்சி எனவும் கெ கைவழி எனப்படும் யாழ்நூல்' எழுதிய தவிர்ந்த சகலரும் அடிகளாரின் கூற்றையே
1899ம் ஆண்டு எச். பல்பார் எழுதி என்னும் நூலில், "வேட்டையாடுவோரின் முன்னோடியானது அல்லது மூலாதாரமான அபிப்பிராயத்தை அரண்செய்து நிற்கின்ற
அடுத்ததாக, யாழ் உறுப்புகள் பற்றிய களையும் அடிகளார் எதிர்நோக்கவேண்டிய
பத்தர் அல்லது பத்தல் எனக் கூறப்ட ஒன்று. இது குடம்போல் அல்லது தோ செய்யப்பட்டிருக்கும். இதன் உட்புறம் பட்டிருக்கும். இத்தோலினைப் "போர்வை பட்ட ‘பத்தர்" என்னும் உறுப்பின் நடு போன்ற ஓர் உறுப்பு இறுக்கமாகப் பொரு கள் பொருத்தப்பட்டு, போர்வைத் தோ துளையினுாடாக மேல்நோக்கி இழுக்கப்ப என்னும் உறுப்போடு பொருத்தப்படும். என அழைக்கப்பட்டது. திருவிளையாட பாடலில்,
'பழையதோர் பொல்லம் பொ உழைய தஈகவிட் டெருத்தள என்னும் வரிகள் காணப்படுகின்றன. இதி பத்தர்யாழ்' என்னும் பகுதிக்கு “பழை வீணை’ என உரையெழுதப்பட்டுள்ளது. பொருள்கொள்ளப்படுவது கவனிக்கற்பால முந்திய தகவல்களைத் தரும் பொருநராற் 1-16, சிறுபாணாற்றுப்படை 221-229, மேற்கோளாகக்கொண்டு “பழையதாகிய கொள்வதன் தவறினை எடுத்துக்காட்டி பொருள்கொள்ளும் என சுவாமி நிறுவுகிற
'பத்தர்’ என்ற முக்கிய உறுப்பு மர கிச் செய்யப்பட்டது.
- 9

லூர் உருத்திரங் கண்ணனார் பாடிய
ழின்
விரலெறி குறிஞ்சிப்
ளசெத் தோர்க்கும்" க்கும்போது, நாம் மேலே காட்டிய மேற் உரையிலும் “வில்யாழ்' குறிக்கப்படாதது rழையே தனது ஆராய்ச்சியின் அத்திவார வெளி அபாயங்களிலிருந்து தன்னைப் பாது ன்பட்ட வில்லென்னும் ஆயுதத்திலிருந்தே கள் ‘நல்லது சிறக்கும்" என்ற விதிக்கமைய ாள்கிறார். 1950ம் வருடத்தில் "பாணர் டாக்டர் ஆ. அ. வரகுணபாண்டியனைத்
ஏற்றுள்ளனர்.
ப “இசை வில்லின் இயற்கை வரலாறு' வில்லே நரம்புக் கருவிகள் சகலவற்றிற்கும் னது' எனக் குறிப்பிடுவதும் அடிகளாரின் 5|-
ஆராய்ச்சியிலும் பல கருத்து முரணபாடு பிருந்தது.
படுவது யாழின் முக்கியமான உறுப்புகளில் ாணிபோல் அமைந்திருக்கும். மரத்தினாற் குடையப்பட்டு ஒரு தோலினால் மூடப் வத் தோல்" என்பர். உட்புறம் குடையப் ப்ெபாகத்தில் கீழ்ப்புறமாக நீளமான தடி குத்தப்பட்டிருக்கும். இந்த உறுப்பில் நரம்பு லில் இடப்பட்ட "பொல்லம்" என்னுந் பட்டு யாழின் மேற்புறத்துள்ள “கோடு' இந்தத் துளைவே "பொல்லம் பொத்தல்" ற் புராணம், விறகு விற்ற படலம் 13ம்
'த்திய பத்தர்யாழ்க் கோறோள் லத் துரசலாடிய' நில் 'பழையதோர் பொல்லம் பொத்திய யதாகிய தைக்கப்பட்ட ஒரு பத்தரையுடைய
(இங்கும் யாழ் என்பது வீணையெனப் து.) யாழ் உறுப்புகள் பற்றி காலத்தால் றுப்படை 4-22, பெரும்பாணாற்றுப்படை
மலைபடுகடாம் 21-37 ஆகிய வரிகளை
தைக்கப்பட்ட ஒரு பத்தர்' எனப் பொருள்
அது "பச்சையாகிய போர்வை' எனப்
)T nr.
த்திலே குடைந்து உட்புறம் வெறுவாயாக்
3 -

Page 122
“சொல்லிய கொன்றை கழு நல்ல குமிழும் தணக்குட உத்தம மான மரங்க ளின் வித்தக யாழோர் விதி" என உரையாசிரியர்கள் மேற்கோள் காட் பத்தரும், கோடு முதலாம் உறுப்புகளு தெளிவாம்.
பின்வரும் பாடலிலே மரக்குற்றம் கூ
“நீரிலே நிற்ற லழுகுதல் ே பாரிலே நிற்ற லிடிவீழ்த ணேரிலே செம்பகை யார் சேரினேர் பண்க ணிறமய
இவை யாவும் யாழ் மரத்தினாற் செய் கின்றன. ஆனால் திருவிளையாடற் புரா “குண்டுநீர் வறந்திட் டன்ன ெ தண்டுநீ னிறத்த நல்யா ழிட என பத்தர் என்ற யாழுறுப்பு சுரைக்கா
இதேபோலவே, 'உந்தி" யென்னும் ஒ கூறப்பட்ட பத்தரினுள் பொருத்தப்பட் தோலுக்கு கீழாக அதனைத் தாங்கக் கூ பட்ட நரம்புகள் இவ்வுறுப்பில் அமைக்க பட்டு பின்னர் போர்வைத் தோலில் அை தப்பட்டு போர்வைத் தோலில் அமைக்க யாக மேலே இழுத்துக் கட்டப்படும். உ வினையடியாகப் பிறந்தது. நரம்பின் அ புரியும் என அடிகளார் விளக்குகிறார். 'உந்தி’ என்னும் பெயர் "கொப்பூழைக் “கொப்பூழ் போன்ற வட்ட வடிவாகிய எனத் தரும் விளக்கம் தவறு என்பதை களைப் பொருட்டூய்மையும் சொற்றுாய்ை அடிகளாரின் ஆன்றமைந்த இயற்றமிழ் அ
சிலப்பதிகாரம் புறஞ்சேரியிறுத்த கால
"செந்திறம் புரிந்த செங்கோட்
தந்திரி கரத்தொடு திவவுறுத் கரத்தை விளக்கவந்த Ad-60)DUrugurt Grflurir, ** g வதற்குத் தகைப்பொழிய இருசா னால் ஐம்பத்தோருறுப்பு" எனக் கூறுகிறார். “செங்கோட்டு யாழே செவ்விதிற் றெரியி வும் அவைதாம் “கோடே, திவவே, ஒற்றே, வும் விளக்கம் தந்துவிட்டுப் பின்னர் 'gotDL கிறது. முன்னர் 电功 உறுப்பெனக் கூறி பி கூறுவதால், மேற்படி பிழை ஏடெழுதுவே
- 9

ங்காலி மென்முருக்கு ன - மெல்லிலாய் வயென்றார்
டுகின்றனர். இதனால், பண்டைய யாழின் ) மரத்தினாற் செய்யப்பட்டன என்பது
றப்படுகிறது.
வத னிலமயக்குப்
னோய்மரப் பாற்படல்கோ ப்பொடு கூட மதிர்வுநிற்றல் க் குப்படுஞ் சிற்றிடையே'
பப்பட்டதென்பதை மேலுந் தெளிவுபடுத்து ணம், விறகு விற்ற பட லம் 26ம் பாடல், நடுங்கொடிக் குறுங்காய்ப் பத்தர்த் ந்தழிஇத் தெறித்துத் தாங்கி" யால்" ஆக்கப்பட்டதெனக் கூறுகிறது.
ருறுப்பும் யாழுக்குண்டு. இவ்வுறுப்பு முன்பு ட "யாப்பு’க்கு மேலாகப் போர்வைத் டியதாக அமைந்திருக்கும். யாப்பிற் கட்டப் ப்பட்டிருக்கும் பகுப்பினுாடாகச் செலுத்தப் மக்கப்பட்டிருக்கும் பகுப்பினுTடாகப் புகுத் ப்பட்டிருக்கும் "பொல்லம் பொத்தல்" வழி ந்தி" என்னும் இச்சொல் 'உந்து" என்னும் சைவை உந்திப் பெரிதாக்க இது துணை ஆனால் உரையாசிரியர் மயிலைநாதரோ ' குறிக்கும் ஒரு சொல்லெனக்கொண்டு, பாழ்ப் பத்தற் றுழையினை உணர்த்திற்று' எடுத்துக்காட்டுகிறார். இத்தகைய தவறு மயுஞ் செய்து தெளிவு படுத்திச் செல்வது றிவைக் காட்டுகிறது.
தையில்
டியாழின் தியாஅத் து' என்னும் வரிகளில் தந்திரி வற்றுள் தந்திரி கரமென்பது நரம்பு துவக்கு விரல் நீளமாகக் குறுக்கிடத்துச் சேர்த்தும் முன்னர், புறஞ்சேரியிறுத்த காதையில், ன், அறுவகையுறுபயிற் றாகுமென்ப' என பத்தர், தந்திரிகரமே நரம்போ டாறே" என த் தோருறுப்பு” எனக் கூறுவது மயக்கந் தரு ட்டு பின்னர் ஐம்பத்தோருறுப்பு எனக் ாரால் ஏற்பட்டிருக்கலாம் எனச் சுட்டிக்
4 -

Page 123
காட்டி ‘சேர்த்து மைம்பத்தோ ருறுப்பு" ஆக இருக்கலாம் என அடிகளார் திருத்து
நால்வகைப் பண்களைப் பற்றிக் கூற டும் “யாமையாழ்' என ஒரு பண்ணைக் குரியதெனப் பிங்கல நிகண்டு குறிப்பிடு அது "குறிஞ்சிப்பண்" எனக் குறிப்பிடுகிற,
“யாமையாழ்ப் பெயர்க் செவ்வழி யாழ்ப்பெய பாலை யாழும் மருத நால்வகை யாழும் நா எனச் சேத்தன் திவாகரம் கூற,
'நோதிறம் பெயர்திறம் நாலுஞ் செவ்வழி நல் எனப் பிங்கல நிகண்டு கூறுகிறது. யாமை உண்டு. குறிஞ்சிக்குரியது ‘யாமயாழ்'. ( திவாகரம் குறிஞ்சிக் குரியதாகக் குறிப்பிடு ‘யாமயாழ்' என இருத்தலே பொருத்தமு குரியதெனவும் அடிகளார் நிறுவுகிறார்.
சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில்
"குழல்வழி நின்ற தியா தண்ணுமை நின்றது : பின்வழி நின்றது முழ கூடிநின் றிசைத்த தா என்னும் பாடல் வரியில் "ஆமந்திரிகை" எ
சீவகசிந்தாமணி 875ஆம் பாடலுக்கு நூலிலிருந்து,
"குழல்வழி யாழெழீஇத் தண்ணு
முழவியம்ப லாமந்திரிகை." காட்டுகிறார். இதிலும் ‘ஆமந்திரிகை" றிசைத்த தாமந்திரிகை" என்னும் சிலப்ப வொடு கூடிநின்ற வாச்சியக் கூறுகளை , யென்றவாறு' என விளக்கந் தந்தனர். வகை இசைக்கருவி. இக்கருத்தையே மே, யாவது "இடக்கை’ எனவும் பொருள் கூ அதாவது ஒருவகைத் தோற் கருவி. கூத் ணுமை, முழவு ஆகியவை கூடியிசைக்கும் ஆமந்திரிகை என்பது இன்று பல்லியம் 6 அடிகளார் கருத்துரை தருகிறார்.
மேலே நாம் காட்டிய உதாரணங்கள் வைத் தொடங்குமுன் தகவல் தரும் மேற்கே றுகள் யாவற்றையும் நாம் முன்னர் கூறிய றுரய்மையும் செய்து கொண்டார் என்பன
-

ான்பது "சேர்த்து அமைப்பதோ ருறுப்பு' கிறார்.
வந்த சேத்தன் திவாகரமும், பிங்கல நிகண் குறிப்பிடுகின்றன. மேற்படி பண் முல்லைக் கின்றது. ஆனால் சேத்தன் திவாகரமோ 5.
குறிஞ்சி ܠܐJ1 ܢ ܐ
முல்லை யாழும் யாழுமென ற்பெரும் பண்ணே''
யாமை முல்லையென யாழ்த் திறனே' பாழ், யாமயாழ் என இருவகைப் பண்கள் மல்லைக்குரியது "யாமையாழ்', சேத்தன். ம் யாமையாழ் தவறுடையதெனவும், இது
டையதெனவும், 'யாமையாழ் முல்லைக்
ழே யாழ்வழித்
தகவே தண்ணுமைப்
வே முழவொடு
மந் திரிகை (வரி - 139 - 142) ான்னுஞ் சொல் காணப்படுகிறது:
விளக்கந்தரும் நச்சினாக்கினியர் கூத்த
மைப் பின்னர் என ஒரு மேற்கோள் பாடலையும் எடுத்துக் காணப்படுகிறது. 'முழவொடு கூடிநின் திகார அடிக்கு உரை எழுதியோர் 'முழ அமைத்தது ஆமந்திரிகை என்னுங் கருவி இதன்படி "ஆமந்திரிகை" என்பது ஒரு லும் வலியுறுத்துவதுபோல் ஆமந்திரிகை றுகிறார். ‘இடக்கை" என்பது வாச்சியம். நூலார் கருத்துப்படி குழல், யாழ், தண் கூட்டிசையே ‘ஆமந்திரிகை" எனப்படும். னப்படும் Orchestraவையே குறிக்குமென
பாவும், அடிகளார் யாழ் பற்றிய அகலாய் "ட் சூத்திரங்கள், உரைகள், இலக்கியச் சான் ாறு எவ்வாறு பொருட்டூய்மையும் சொற் த விளக்கும். இவ்வாறு பொருட்டுப்மை
5 -

Page 124
செய்துகொணட பின்னர், அடிகளார் த சனைகளை நோக்குவோம்.
சிலப்பதிகாரத்திலே அடியார்க்கு நல் கும் நரம்பின் தொகைகளைக் கூறுகிறது.
“ஒன்று மிருபதும் ஒரேழ்மேற்
நின்றபதி னாறேழு நேடுங்கா நால்வகை யாழிற்கு நன்னரம், மேல்வகை நூலோர் விதி"
மேற்படி சூத்திரம் சகோட யாழிற்குப் பு நேரத்திற் பாட பிரதிபேதத்துடன் பிறிே
'ஒன்று மிருபது மொன்பதும் ட நின்ற பதினான்கும் பின்னேழு நால்வகை யாழிற்கு நன் னரம் மேல்வகை நூலோர் விதி'
அடியார்க்கு நல்லார் எடுத்துக்காட்டு பதினான்கு நரம்புகள் எனக் கூறுகிறது காட்டப்பட்ட மேற்கோள்படி சகோட திருக்கலாம் என ஏற்றுக்கொள்ளும் அதே சொல்வதுமான சகோட யாழிற்குப் ட சுவாமி விபுலாநந்தர் சகோட யாழிற்கு எவ்வாறு வந்தார் என்பது சிலர் எழுப் மேதை ஆனந்த குமாரசுவாமி அவர்களா வருடத்தில் 'ஓரியன்டல் சொசைட்டி"யின் கட்டுரையின் பெயர் ‘பண்டைய இந்திய தாகும். அக்கட்டுரையிலே ஆந்திர நாட் னும் இடத்திலே தீட்டப்பட்டிருந்த கல் இன்றும் லண்டனிலுள்ள தொல்பொருட் ளன. இக்கல்லோவியங்கள் கி. மு. 2ம் குமாரசுவாமி அவர்கள் எடுத்துக்காட்டிய ஆய்வுக்குப் பெரிதும் துணை புரிந்துள்ளது அடிகளார் பின்வருமாறு கூறுகிறார்.
"இலண்டன் மாநகர்ப் பழம்பொருட் கல்லோவியத்திலே காட்டப்பட்டிருப்பது உறுப்பு இலது. நரம்புகளை வலித்தல் ெ காணி அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். லினால் மறைவுண்டிருத்தலின், நாம் பத் வில்லை; கோடும் நரம்புமே தோற்றுகின்ற
இப்பந்தியிலே “கோடும் நரம்புமே சகோட யாழில் நரம்புகள் பற்றிய தீர்ம யது எனக் கொள்ளலாம். அந்த ஓவியத் அந்த ஒவியத்திற் காணட்டடும் உருவம்

மது அகலாய்வில் எதிர்நோக்கிய சில பிரச்
லார் தரும் மேற்கோள் நால்வகை யாழுக்
பத்துடனே ற் - குன்றாத பு சொன்முறையே
பதினாறு நரம்புகள் எனக் கூறுகிறது. இதே தார் செய்யுளும் காணப்படுகிறது
பத்துடனே ம் - குன்றாத பு சொன்முறையே
ம் மேற்படி செய்யுள் சகோட யாழுக்குப் 1. அடிகளாரோ ஒரு காலத்திலே முன்பு யாழிற்குப் பதினாறு நரம்புகளும் இருந் 5 நேரத்தில் தான் இயற்றியதும், விளக்கிச் பதிநாலு நரம்புகளே பொருத்தியுள்ளார்: 14 நரம்புகள் உண்டு என்னும் முடிவிற்கு பும் ஒரு வினாவாகும். ஈழத்தறிஞர் கலா ல் எழுதப்பட்ட கட்டுரை ஒன்று 1931ஆம் சஞ்சிகை ஒன்றிலே பிரசுரமாகியது. அக் apgoor' (The Old Indian Veena) graitu ட்டு அமராவதிக் கருகிலுள்ள "கோலி" என் ஒவியங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். இவை காட்சிச் சாலையிலே பாதுகாக்கப்பட்டுள் நூற்றாண்டிலே தீட்டப்பட்டன. ஆனந்த ப இந்த ஒவியம் சுவாமியவர்களின் யாழ் து. இதுபற்றி யாழ்நூல் 41ஆம் பக்கத்திலே
காட்சிச் சாலையிலேயுள்ள அமராவதி நகர்க் சகோடயாழ். இதிலே, திவவு என்னும் மலித்தல் செய்யும் மாடகம் என்னும் முறுக் பத்தர் யாழ் வாசிக்கும் பெண்ணின் உட தரினையும், மாடகத்தினையும் காணமுடிய
T.''
தோற்றுகின்றன’’ என்னும் கூற்றிலிருந்து ானத்திற்கு மேற்படி ஒவியமே துணையா ந்திலே 14 நரம்புகளைக் கண்டதினாலேயே
சகோட யாழ் என்றும் தீர்மானிக்கிறார்.
سنہ 96

Page 125
* இரண்டாம் நூற்றாண்டுக் கல்லோவிய காணப்பெற்றது, இசை மடந்தை நமக்கு
என அடிகளார் பெருமைப்படுவதும் ரே ஆதாரமும், சிலப்பதிகாரம் வேனிற் காை
"பிழையா மரபின் ஈரேழ் கோன உழைமுதற் கைக்கிளை இறுவா இணைகிளை பகைநட் பென்றி இசைபுணர் குறிநிலை எய்த ே குரல்வாய் இளிவாய்க் கேட்டன ஆதாரங்களும் சகோட யாழ் பற்றிய பிர ருக்குத் துணை புரிந்தன.
1640ஆம் ஆண்டளவிலே பிரஞ்சு நா என்பாரும், அவரைத் தொடர்ந்து 1660 என்பாரும் செய்த ஆய்வுகளை அடிப்படை ஆங்கிலேயர் "ஒலி வேகம்" பற்றிய பூரண ஒலி வேகம் பற்றிக் கூறப்பட்ட சிற்றலை இசை வளர்ச்சியிலே பெருந் தாக்கங்க்ளை பற்றப்பட்ட இசையானது விஞ்ஞான ரீதி
மேலைத்தேய மெட்டுகளிலே ஆக்கப்ப யங்களிலே பாடப்பட்டபோது அம்முறை ஆண்டளவில் திரு. ஏ. எம். சின்னச்சாமி வரிசையில் கீழைத்தேய இசை (Oriental எழுதுகிறார். 1917இல் ‘கருணாமிர்த சா இம்முறையினை அறிமுகஞ் செய்கிறார். அ விளங்கங்கூடிய வகையில் ஒழுங்குபடுத்துவதி யிருக்கலாம். இதேநேரத்தில் பண்டைய களிலும் காணப்படும் தகவல்களைப் பொ நரம்பு பற்றியும், சுருதிகள் பற்றியும் கண யாக விளக்கிச்செல்லும் அடிக்ளாரின் தனி பங்களிப்பினைச் செய்துள்ளது. 1917இல் இசை மகாநாட்டிற்கூடத் தீர்க்கப்படாதி சனையைக் கணித சாஸ்திர உதவிகொண்டு என விஞ்ஞான ரீதியாக நிறுவிய பெருை
இவ்வாறு யாழ்பற்றிய வருங்கால நுணுக்கங்கள் பற்றிய எதிர்காலச் சிறப்பு ளார் களம் அமைத்துச் சென்றுள்ளார் எ

த்திலே சகோட யாழுருவத்தினை நாம் அளித்த பெரியதோர் அருங்கொடையே’ தாக்கற்பாலதாகும். மேற்படி கல்லோவிய தயில்,
ாய் கட்டி
ன் நான்கின்
நாக்கி ாள்.' என்னும் பகுதியிற் காணப்படும் ாச்சினைகளை நுணுகி ஆராய அடிகளா
G3, soofs (Budos Marin Mersenne இல் இத்தாலியர்களான Borell, Vivian -urts goal 53, William Derham (Taireplib மான தனது ஆய்வுகளை முன்வைத்தார். களின் அசைவுச் சித்தாந்தம் மேற்றிசை ஏற்படுத்தியது. அனுபவ ரீதியாகப் பின் யாக ஒழுங்கமைக்கப்பட்டது.
பட்ட தமிழ்க் கீதங்கள் கிறிஸ்தவ தேவால கள் இங்கும் அறிமுகமாகின. 1904ஆம் முதலியார் அவர்கள் "மேலைத்தேய சுர Music in European Notation) 67 airp isno Gu ாகரம்’ எழுதிய மு. ஆபிரகாம் பண்டிதரும் ஆனால் அவை யாவும் சகலரும் இலகுவாக நிலே மேலும் கூடிய கவனத்தைச் செலுத்தி இலக்கியங்களிலும், மேற்கோள் சூத்திரங் ருட்டூய்மை செய்து ஒழுங்குபடுத்தி இசை ரித, விஞ்ஞான அடிப்படையில் தர்க்க ரீதி த்தன்மை தமிழிசை வளர்ச்சிக்கும் பெரும் பரோடாவில் நடைபெற்ற அனைத்திந்திய ருந்த சுருதிகளின் தொகைபற்றிய பிரச் டு, சுருதிகள் 24 அல்ல, சுருதிகள் 22தான் ம அடிகளாருக்கே உரியது.
ஆராய்ச்சிகளுக்கு மட்டுமல்லாது, இசை ஆய்வுகளுக்கும் சுவாமி விபுலாநந்த அடிக ன்பது போற்றத்தக்கது.

Page 126
Sik SkiSkiSkiSkTS
அட்டையில்.
மயில் வா
வளம் டெ பயில் து விபுலா ந வெளி வ உலா வந் உள்ளக் ச
பூத்து உ6
ہےS-
డ 23
Sek:
SS
S5
TSE
Sk
ܛܵܧܸܓ؟
డ25

;S3*S*S*S*S*S*;
ாகனனாம்
பறு திறலோன் ரவி யாகிப்-பின் ந்த ராய் ந்த போது த உரு-நம் கமல மாய்
ள்ளது.
.r -- ftچہ -------۔
畿
:,
8

Page 127


Page 128
Lu || ... * * *
* اسgIni).stے
čxxxxxxxxxxxxČхXXxxxxxxxxxxxxxxxxxx
இந்த மலரு இனிய நல் L உயர் கல்வி : வளம் அளிக் உங்கள் பங்க
உருவானவை நல் மனம் ெ உங்கள் அ5ை உளங் கொண் உணர்வால்,
சொரிந்து நி நன்றி.
e- 36
நூற்
గ్ళ్శ్ళ్ళ ధx 0 0 0 KXXXXXX
புனித வளனார் கத்தோடு
 

༽ uLu Li
is 5
|! 68
* «୫
D மாணவர்க்கு வாய்ப்புக்கு கும் நிதியமும். ளிப்பால் யே. கொண்ட னவர்க்கும் ாட நன்றிகளை உள்ளத்தால், ற்கின்றோம்.
ாமி விபுலானந்தர்
றாண்டு விழாச் சபை,
(xxxxxxxxxxxxx