கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் செய்தி மடல் 2011.06

Page 1
சங்க உறுப்பினர்களுக்கு மட்டும்
ଗଣst
G6.6fu5GB : 020 LOTS5úb
கொழும்புத் தமிழ்ச் சங்க இணையத்தளத் "செய்தி மடல்" என்பதன் பிரசுர வடிவம் ! இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள்.
35):37:155zau: \\ \Vw.colombotamilisangam.com தொலைபேசி இல 2363759
தொலைநகல் : 23638
presonavemo :
கொழும்புத் தமிழ்ச் சங்க
23, 2å :
مهx4های (ttiفه ی دیجtit به هلیم4زش
Ps கதிர்கரமநாதன் இந்திரதt * ೫%¥ಟ! મિ,િ
கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல்
 
 
 

ழும்புத் தமிழ்ச் சங்கம்
() () LingS UDL6ö
ஆனி ஆண்டு : 2011
நில் "எம்மைப் பற்றி" என்னும் பகுதியிலுள்ள இம்மடலாகும், மேலும் விபரங்களுக்கு எமது
tổ5153 Gb3, 6ë: tamilisangamicolombo dyahoo.com
info (colombotanilsangam.com
i. '፶
டிம் - சங்கரப்பிள்ளை மண்டபம்
க், ஜூலை 2011
※。
•.....” • ኃ.።” : ۶۶ * .یادد. ۰ بی
ன்புடன் அழைக்கின்றோம்!
தி பாலgதரன் மா.கணபதிப்பிள்ளை # &4§ §tಳಿ

Page 2
/千 ཛོད༽
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் கண்ணிர் அஞ்சலி
கொழும்புத் தமிழ்ச் சங்கக் காப்பாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி
page : 1932. O5.1O g) gjej : 2011.07.06
"செந்தமிழ் காத்த சிவத்தம்பி பேராசான் செந்தழல் வாய் காக்குமோ செப்பு"
പ്ര
தமிழ்ச் சங்கக் காப்பாளர் அமரர் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர் களின் இல்லத்தில் 10.07.2011இல் | நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அஞ்சலி உரையாற்றும்போது எடுத்த படம் படத்தில் அமரரின் குடும்பத்தினரை யும் காணலாம்.
(02 கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல்
 
 

ஆனி மாதம் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றிய
அறிவோர்ஒன்று கூடல் - 460 01.06.2011 இன்றைய நிகழ்வில் "இலங்கையின் மழை வீழ்ச்சியும்
கொழும்புப் பரிமானமும்" என்னும் பொருள் பற்றி முன்னாள் பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் திரு.தி.குமாரசாமி உரையாற்றினார். ஆட்சிக்குழு உறுப்பினர் க.மகாதேவா தலைமையேற்று உரையாற்றும் போது இன்றைய தலைப்பு ஒரு ஆய்வு முயற்சியாகும். இவர் தனது உயர்கல்வியை சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் பெற்றார். சந்திரனில் மனிதன் காலடி வைத்த நிகழ்வை நேரடியாக ஒலிபரப்புச் செய்த பெருமைக்குரியவர் என பேச்சாளர் பற்றிய சுருக்கமான அறி முகத்தோடு பேச்சாளரை உரையாற்றுமாறு அழைத்தார்.
பேச்சாளர் தனது உரையில் இன்றைய பேச்சு ஒரு ஆய்வு முயற்சி யல்ல. இது எனது காலத்தின் கதை என்று கூறினார். தான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மழை எப்போது வரும் எனது தாயார் சரியாக கூறுவார். ஸ்கந்தவரோதயாவில் அதிபர் சிவசுப்பிர மணியம் அவர்களிடம் கல்வி கற்றது. எனக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பாகும். மழை ஏன்? எப்படிப் பெய்கிறது என்று சொல்வதே எனது ஆர்வமாகும். மழைக்கு முதலில் ஈரப்பதன் வேண்டும். அதற்கு நல்ல வெப்பநிலைவேண்டும். காற்றுநீராவியைக் கொள்ள ஒரு அளவுண்டு. மிகுதியாக வெப்பமேற்படும் போது மழை பெய்யப் பூமியின் சரிவும் வெப்பநிலை மாற்றமுமே மழை வீழ்ச்சியைத் தீர்மானிக்கிறது. 45° பாகைக்கு மேலும் கீழும் வெப்ப மண்டலம் நகரும். பூமி சுழலும் போது மேலும் கீழும் மாறும். முற்காலத்தில் காற்று வீசும் திசையைக் கண்டறிய வல்லவர்களாக அராபியர் விளங்கினர்.
பூமி 23° பாகை சரிவில் சுற்றுவதனால் காற்று வீசும் திசையும் மாறுபடுகிறது. 4000 மைல்கள் பரப்பளவுடைய கடற்பரப்பிலிருந்து வரும் குளிர்ந்த காற்றினால் இலங்கையின் மேற்குப் பகுதி தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழையைப் பெறுகிறது. மே மாதம் தொடக்கம் செப்டம்பர் வரை இம்மழை வீழ்ச்சி கிடைக்கும். அதன் பின்னர் வடகீழ் பருவக் காற்றாக வீசி வடகிழக்குப் பகுதிகளில் மழையாகப் பெய்கிறது. தென் மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றால் 3000 மி.மீற்றர் மழையும் வடகீழ் பருவக்காற்றால் 200 மி.மீற்றர் மழை மட்டுமே கிடைக்கிறது. மத்திய மலை நாட்டு மலைகளின் தடுப்பால் மேற்குப் பகுதி நல்ல மழையைப் பெற அதன் மறு பகுதி வெறும் வெப்பக் காற்றையே பெறுகிறது. இது மழை மறை பிரதேசம் எனப்படும்.
இலங்கையில் 7-8 நிமிடம் வரை நீடித்த சூரிய கிரகணத்தைக் கான பல விஞ்ஞானிகள் இலங்கை வந்தனர். மழை பெறாத மறுபுறத்தி
கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல் 03)

Page 3
லிருந்து பரிசோதனையிலீடுபட்டனர். எல்லாப் பரிசோதனையும் தோல் வியடைந்தது.
ஏப்ரல் மே மாதங்களில் கொழும்பை அண்டிய பகுதிகளில் மேற்கா வுகை மழை பெய்கிறது. மேற்காவுகை மழை (Convectionaal rain) தான் கொழும்பில் காணப்படும் விசேட தன்மையாகும். பகல் நேரத்தில் காணப்படும் வெப்பம் கடலிலிருந்து மேலெழுந்து தரையை நோக்கி வீசும் போது மாலை நேரங்களில் இம்மழை பெய்கிறது. இது இப்போது காலையிலும் பெய்கிறது.
சிங்கப்பூரில் சொல்லப்படும் நேரத்தில் மழை பெய்கிறது. வங்காள விரிகுடாவில் ஏற்படும் சுழல் காற்று, தாழமுக்கம் என்பவற் றால் ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை பெய்கிறது. டிசம்பர் மாதத்தில் இதன் தாக்கம் இலங்கையில் நிகழும்.
மலை இல்லாததால் வட கிழக்குப் பகுதிகளில் மழை குறைவு. வட கிழக்குப் பருவக்காலத்தில் மத்திய தென்கிழக்குப் பகுதிகளில் மழை பெய்யும். பருவப் பெயர்ச்சிக்கால மழை ஒரே சீராக நடைபெறும். இவை தவிர புயல்காற்றும் மழையைக்கொண்டுவருகிறது எனக்கூறி உரையை நிறைவு செய்தார். பயனுள்ள உரையாக இவ்வுரை அமைந்தது.
இலக்கியக்களம் 03.06.2011 இன்றைய இலக்கியக்களம் நிகழ்வில் "சிலப்பதிகாரம் செய்யுள்
மரபும் - பொருள் மரபும்” என்னும் பொருள் பற்றி விரிவுரையாளரும் ஊடகவியலாயருமான எஸ்.மோசஸ் உரையாற்றினார். ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.சி.கந்தசாமி அவர்கள் நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போது தமிழ்ச் சங்க நிகழ்வுகள் தமிழ்க் கலாசார வளர்ச்சிக்கு ஏதோ ஒரு வகையில் உதவுவதாக அமைகின்றன என்றும் எமது அறிவை வளர்க்க நிகழ்வுகள் எவ்வாறு உதவுகின்றன என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றும் கூறினார். இறைவன் அறிவுப் பொருள் என்பர். அதை நாம் எவ்வாறு பெறுகிறோம். பெரியோர்களாகிய நீங்கள் பெறும் அறிவு எவ்வாறு என்பதை நீங்கள் தெரிவிக்க வேண்டும். இன்றைய பேச்சாளர் ஒரு முதுமாணிப் பட்டதாரி, கவிதை, நாடக, சிறு கதைக்காக சாகித்திய மண்டலப் பரிசும். தொலைக்காட்சி விவரணச் சித்திரத்துக்கு அரச விருதும் பெற்றுள்ளார் என்று கூறி அவரை உரை யாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
பேச்சாளர் உரையாற்றத் தொடங்கும் போதுநான் தமிழ்ச்சங்கத்தில் உரையாற்றுவது கொல்லர் தெருவில் ஊசி விற்பது போலாகும் என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார். ஏதாவது இலக்கியத்தையோ நிகழ்வையோ எடுத்தால் அதில் 2 விடயங்களை நாம் அவதானிக்கலாம். 1. வடிவம். 2. பொருள் தமிழ்ப் புலவரால் தமிழ்த் தலைவன் தலைவி பற்றி தமிழில் எழுதப்பட்ட நூல்களே சங்க இலக்கியங்களாக எட்டு தொகை பத்துப்பாட்டு எனலாம். பின்னர் திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய அறநூல்கள் சங்க

மருவிய கால ஆரம்பத்தில் தோன்றின எனலாம். காப்பிய மரபிலே சிலம்பும் மணிமேகலையும் முக்கியத்துவம் பெறுகின்றன. சமூகம் பல் வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நாம் நாகரிக சமூகம் எனலாம். இன்றைய வாழ்வியலுக்கு ஒத்து வரக் கூடிய மரபுகளைக் காணக் கூடியதாகவுள்ளது. எவ்வாறு பேணியது அல்லது வேறுபட்டுள்ளது என்பதை நோக்கலாம். எனது கூற்று முடிவானது அல்ல. எனது அறிவுக் கெட்டும் வரை கூறுகிறேன்.
சிலம்புக்கு முந்திய நூல்கள் 3 தொடக்கம் 81 வரிகளைக் கொண்டி ருந்தன. சிலம்பில் 30 கதையாக 5001 சிறு சிறு கதைகளாக சங்க கால இலக்கியம் அமைந்திருக்க சிலப்பதிகாரம் ஒரு தொடர்நிலைச் செய் யுளாக உள்ளது. அனைத்து வாழ்வியலையும் உள்ளடக்கிய புதிய மரபு. புதிய செய்யுள் வகை. வெண்பா, தமிழிசைத்துறை விருத்தம் போன்ற வடிவங்களோடு கட்டுக் கோப்பான ஒரு செய்யுள் வடிவத்தையும் நாட்டுப் பாடல் வடிவத்தையும் கொணர்ந்ததாகவுமிருந்தது. மக்களின் கலை வடிவங்களை மதித்து இளங்கோ காப்பியம் வடித்தார். சங்க காலத்தில் தலைவன் - தலைவி, அகம் - புறம் என இருந்தது. சிலப்பதி காரம் ஒரு நாடகம், கதை எனலாம். பழமையையும் புதுமையையும் முதல் முதலில் கையாண்டார். வாய்மொழிவடிவிலிருந்த நாட்டார் வடிவப் பாடல்களை இளங்கோ தந்துள்ளார். உரையிடைப்பட்ட பாட்டுடைச் செய்யுள்.
சிலம்பை கதை மொழி பாட்டென அழைப்பர். இது முற்காலத்தி லிருக்கவில்லை யென்பர். முன்னர் கதை தொடர்ந்து வரவில்லை. மையக் கதையோடு கிளைக்கதைகளும் உண்டு. சங்க இலக்கியத்தில் காதலிருந்தது: தூது மடலில்லை. சிலம்பில் அம்மரபு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆயகலைகள் அறுபத்தி நர்ன்கு என்பதை சிலம்பில் கான லாம். முழுக்கதையும் புகார். வஞ்சி. மதுரை என 3 காண்டங்களாக அமைந்துள்ளன. தனிப்பாவாலானது காதை என அமையும். 22 தலைப்புக்கள் காதை என அமையும். ஏனையவை வரி சொற் சுருக்கம் பொருள் விளக்கம் சிலவற்றில் சங்க கால மரபைக் காணலாம். இரு சொற் புணர்த்தல் சிலம்பில் தவிர்க்கப்பட்டுள்ளது.
அடுத்து பொருள் மரபை நோக்கும்போது சங்க இலக்கியம் அகம் புறம் எனவும் சிலம்பு அறம். பொருள், இன்பம், வீடு என வகுத்துள்ளது. சிலம்பு அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும். உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர். ஊழ்வினை வந்துறுத்தும் என்ற மூன்றையும் வலியுறுத்தும். 7 பிறப்புக்களையும் கூறுவதோடு முற்பிறப்பு இப்பிறப்பு இனிவரும் பிறப்பு ஆகிய 3 வாழ்க்கை முறையையும் கூறுகிறது. இவை பிற்சேர்க்கை என்றும் கூறுவர்.
அடுத்து சங்க கால திணைமரபு இங்கும் விரவி வருகிறது. இங்கு சங்க கால நூல்களில் கூறப்படும் புனிதமான காதலாகக் காட்டப்படவில்லை. இங்கு மாதவியின் காதல் ஒரு புனிதமான காதல் என்று கூற முடியாது. பரத்
கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல் 05)

Page 4
தையரிடத்து விலை கொடுத்துச் சொல்லும் மரபு காணப்படுகிறது. உதார னமாக மாதவியிடம் கோவலன் சென்ற விதம் அங்கு பெயர் சுட்டப்பட வில்லை. இங்கு பெயர் சுட்டப்படுகிறது. மாதவி சிறந்த கற்பரசி என்று கூறுகிறார். பரத்தையர் என்ற மரபு, மறைக்கப்பட்டு புது மரபு தோற்று விக்கப்படுகிறது.
சிலம்பில் வாணிபத்துக்கு முக்கிய இடம் கொடுத்து மனைவியையும் (கண்ணகி) அழைத்துச் செல்லும் செயல் காட்டப்படுகிறது. சங்க காலத் தில் 5 தினை கூறப்படுகிறது. புதிய போக்காக போர் வீரம் போன்ற புற நிகழ்ச்சி - புறத்தினை மரபு இங்கு வேறு விதமாகக் காட்டப்படுகிறது. போர், வீரம், கொலைக்களம் போன்றவற்றைக் காட்டுகிறது. அங்கு சொல்லப்பட்ட பொருள் வேறு. இங்கு சொல்லப்பட்ட பொருள் வேறு.
சங்க காலத்தில் நடுகல் ஆண்களுக்கே நடப்பட்டது. இங்கு பெண் களுக்கு நடப்படுகிறது. அங்கே ஒரு பெரிய கோவிலே கட்டப்பட்டது. சிலப் பதிகாரத்தில் பெண்ணும் வீர மங்கையாகக் காட்டப்படுகிறார். இதுவும் ஒரு புதுமையாகும்.
கற்புக் கடவுளாக: பத்தினியாக, கற்பில் சிறந்தவளாக கண்ணகி உயர்த்தப்பட்டுள்ளாள்.
கூறை. கொடி, பொட்டு, மீள்பிறப்பு, களவு கொள்ளை போன்ற நம்பிக்கை காட்டப்படுகிறது. அங்கு மன்னனால் நீதி வழங்கப்பட்டது. இங்கு கண்ணகியால் மன்னனுக்கு நீதி வழங்கப்படுகிறது. இளங்கோ பல புதுமரபுகளைத் தோற்றுவித்ததோடு குல மரபும் கூறுகிறார். பெண் துறவியாவதையும் மணிமேகலை இளங்கன்னியாஸ்திரியாவதையும் காட்டுகிறார். சமூக நடை முறைகளையும் வாழ்வியலையும் தொகுத்து ஒரு புதுமரபை உருவாக்கி வாழ்வியல் தத்துவங்களை சிலம்பில் அடக்கி யுள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது என்று ஒரு நல்ல உரையை யாற்றி நிறைவு செய்தார்.
நூலகம் (சிறுவர் பகுதி)
04:06, 2011 "கதை கதையாம் காரணமாம்” என்ற நிகழ்வில் செல்வி
ஹேமப்பிரியந்தினி ஜனகன் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர்ஒன்று கூடல் - 461 08:06, 2011 இன்றைய அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வில் "நாம் இருக்கும்
இடம் எது?” என்னும் பொருள் பற்றி வைத்தியகலாநிதி சண்முகதாஸ் அவர்கள் உரையாற்றினார். நிகழ்வுக்கு சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் க. சுந்தரமூர்த்தி தலைமை தாங்கி உரையாற்றுகையில் சண்முகதாஸ் அவர்கள் பற்றிய அறிமுகத்தைச் செய்து, எம் நினைவுகள் மூளைக்குச் சென்று பல்வேறு பரிமாணங்களில் செயல்படுவதாகும் என்ற ஒரு குறிப்பை மட்டும் கூறி பேச்சாளரை இது பற்றி விளக்குமாறு அழைத்தார்.
(06
கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி idle)

பேச்சாளர் தமதுரையின்போது இன்றைய காலகட்டத்தில் அரசியல், அறிக்கைகள், மறுப்பு அறிக்கைகள் என நடைபெறும் வேளையில் இப்படியான ஒரு மாறுபட்ட நிகழ்வினை ஒழுங்கு படுத்திய தமிழ்ச் சங்கத்திற்கு நன்றி கூறினார். ஒரு புதுவிதமான தலைப்பைக் கொடுத் துள்ளேன். எம்முடைய நினைவில் ததும்பிக் கொண்டிருக்கும் இடம் எது? நான் என்பது பல்வேறு கருத்துக்களைத் தரும். உடல், உயிரை, மனத்தையும் கருதுகிறது. காலையிலிருந்து தூங்கும் வரை நான் என்ற சொல் இல்லாமல் நாள் கழிவதில்லை. இது இருப்பது எங்கே எனும் போது பொதுவாக எமது கை எமது நெஞ்சைத் தொட்டுக் காட்டுகிறது. இது எமது மூளையோடு அதாவது நரம்பு மண்டலத்தோடு தொடர்புடை. யது. முன்னர் புத்தியோடு சம்பந்தப்பட்டது மூளை என்றனர். ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு உறுப்பு காரணமாக இருக்கிறது என்பது கண்ட றியப்பட்டது. விளக்கப்படம் மூலம் நரம்பு மண்டலத்தைக் காட்டி நரம்பு மண்டலத்தின் மையமாகவும் தலைமையாகவும் இருப்பது மூளை ஒவ்வொரு உறுப்பும் நரம்பு மண்டலத்தோடு தொடர்புடையவை.
ஒவ்வொன்றும் உணர்ச்சி உடையது. மூளையின் ஒரு பகுதி மூளையம் எனப்படும். இன்னொரு பகுதி மூளையின் அறிவார்ந்த செயல்களைக் கவனிக்கிறது. பின் பகுதியில் கட்புலன், செவிப்புலன் சம்பந்தப்பட்ட நரம்புகள் வந்து சேர்கின்றன. எமது உடல் முழுவதுL) பற்றிய ஒரு படம் மூளையில் பதியப்படுத்தப்பட்டுள்ளது. தோலானது சுற்றாடல் பற்றிய அறிவை எமக்கு உணர்த்துகிறது. வெப்ப தட்பம், நோவு தொடுகை என்வற்றை விழிப்பு நிலையில் எமக்கு உணர்த்து கின்றது. பார்வை உணர்வுகளில் முப்பரிமான, இரட்டைப் பரிமானத் தோற்றங்கள் பற்றி அறிவிக்கின்றது. பார்வை பற்றிய பல நுட்பமான பகுதிகள் உண்டு.
எழுத்துக்களை அறிதல், வாசித்தல் இவற்றுக்குக் காரணம் கண்: காது அல்ல. மூளைதான் செயற்படுகிறது. அவை வெறும் கருவிகளே. இவ்வுணர்வுகளை மூளை பகுத்துணர்கிறது.
ஒருவரைச் சந்திக்கும் போது அவரைப் பற்றிய சகல தகவல்களை யும் மூளை உடன் மீளாய்வு செய்துவிடும். இவற்றைக் கொண்டு அவருடன் நின்று கதைப்பதா அல்லது அவரை விலகிச் செல்வதா என்று முடிவு எடுத்து விடுகிறது.
மூளை சிறு சிறு கலங்களால் ஆக்கப்பட்டுள்ளது. 1 கோடி கலா களால் ஆனது. ஒவ்வொரு கலங்களும் ஏனைய கலங்களோடு தொடர் புடையவை. மூளையின் நடுப்பகுதி எல்லா உயிரினங்களிலும் உண்டு. பல்வேறு கூர்ப்பின் ஊடாக மனிதன் பெற்ற அளப்பரிய பொக்கிஷம். இந்த மூளையாகும் (Cerebrum). இது விருத்தியடையும் போதுதான் நாள் என்ற உணர்வு வெளிப்படுகிறது. எமக்குக் கிட்ட இருப்பதாகச் சிலர் கூறுவர்.
கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல் o
7
5

Page 5
இது எந்த இடத்தில் அமைந்துள்ளது என நோக்கும்போது முன் மூளை விருத்தியடைந்து பின்னுக்கு வளர்ச்சியடைகிறது.
மூளை செய்யும் வேலைகள்:- இதயமல்ல. மூளையில் தான் சகல பதிவுகளும் உள்ளன. ஒரு பகுதி தரவுகளைப் பெறுகிறது. மற்றைய பகுதி செயல்படுத்துகிறது. இடது பக்க அலுவல்களை வலது மூளையும் வலது பக்க அலுவல்களை இடது மூளையும் கட்டுப்படுத்துகின்றன. இவ்வாறு வலது இடது மூளைகள் இணைந்து செயற்படுவதுமுண்டு.
எமது உடல் உறுப்புகளின் கீழ்ப் பகுதி பாதிப்புக்கு உள்ளாகும். போது மேல் பகுதியும் பாதிப்புக்குள்ளாகும். ஒரு கிரிக்கட் விளையாட்டில் வீசப்படும் பந்தை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பதை மூளை சில நொடிகளில் முடிவெடுக்கிறது. எமது மூளையின் ஞாபக சக்தி (memory) மிகப்பெரிய கொடையாகும். இது ஒரு அதிசயம் எனலாம். குறுகிய காலநினைவு (Short term memory) நீண்ட காலநினைவு என இரு வகைப்படும். ஒரு வாகன சாரதியின் செயலைச் செய்வது அவரல்ல; அவரது மூளையே (Long term memory). இது ஒவ்வொரு வருக்கும். தனித்தன்மையுடையதாகவிருக்கிறது. செயற்பாடுகள் அறிவு நினைவு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மாறுகிறது. தூங்கி எழுதல் தினசரி நடைபெறுகிறது. சுற்றாடல், ஒளி சத்தம், மனசு இவை பகல் நேரங்களில் விழிப்புநிலையில் வெகு விரைவாகப் பெறப்படுகிறது. இரவாகும் போது இவை குறைவடைய துர்க்க நிலைக்கு வருகிறோம். உணர்வற்ற நிலையில் மூளை (Cerebrum) தொழிற்பாடு குறைகிறது. உணர்வு நிலையுடாக நான் என்கிற விழிப்பு நிலையை அறிகிறோம். உயிரியல் விஞ்ஞான ரீதியான கருத்துக்களையே கூறினேன். சமய, ஆன்மீக வாதிகள் மாறுபட்ட கருத்துக்களைக் கூறுவர் எனப் பயனுள்ள மிகவும் அவசியமான ஒரு உரையை ஆற்றி நிறைவு செய்தார்.
Ģipša asamb 56 10.06.2011 இன்றைய இலக்கியகளம் நிகழ்வு வைத்தியகலாநிதி திரு.தி.ஞான
சேகரனின் தலைமையில் இடம்பெற்றது. திரு.முரீதயாளன் அவர்கள் "கட்டுரைக் கலசம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இவரை அறிமுகம் செய்த நிகழ்ச்சியின் தலைவர். இவர் முதுமாணிப்பட்டம் பெற்றவர் ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுதற்பொழுது எழுத்துத் துறை, பேச்சுத் துறை மற்றும் ஆய்வுத் துறைகளில் அக்கறை எடுத்து கற்றல், கற்பித்தலில் பல நூல்களை எழுதியுள்ளார். வித்துவான் சின்னத் தம்பி அவர்களின் தமிழ்ப் பாரம்பரியத்தில் தோன்றி அவரைப் பின்பற்றி தமிழ்ப் பணி புரிகிறார். சேக்கிழார் மாநாட்டினையும் நடாத்தி வெற்றி கண்டார். கலாபூஷணம் போன்ற 15 பட்டங்களுக்கு உரித்தானவர். "கட்டுரைக் கலசம்" என்ற நூலினை விரைவில் வெளியிட உள்ளார் என்று கூறி அவரை உரையாற்றும் படி அழைத்தார்.
திரு.ழுநீதயாளன் அவர்கள் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின்
(08
கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல்)

நூலகம் 1. CS2O1
மூல கர்த்தாவின் தலைமையில் உரையாற்றுவது பெருமை சேர்த் துள்ளது என்றார். தாம் கூறும் கருத்துக்களில் முரண்பாடுகள் இருந்தால் அதை தெரிவித்தால் நன்று என்று கூறி ஒரு நல்ல இலக்கியகளத்திற்கு வழியேற்படுத்தினார். தமிழ் தமிழனின் உயிர் என்பதை வலியுறுத்திய அவர். மனிதன் வாழ வேண்டிய முறை பற்றிய இலக்கணத்தை இயம்பு வது இலக்கியம் என்றார். தமிழ் கூறும் நல் உலகில் தமிழ் சொற்கள் தமது சிறப்பினை இழந்து நிற்கின்றது. அவற்றை அடையாளம் கண்டு தாம் நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார். நிகழ்ச்சி - நிகழ்வு என்ற சொற்களிடையில் காணப்படும் வேறுபாட்டினைக் காட்டினார்.
ஆங்கிலத்தில் உள்ள பெயர்களை எப்படி தமிழில் எழுதலாம். டட்லிஸ்தாம்ப்" என்பதை "இட்டிலித்தாம்பு" என்று எழுதலாமா? என்பதில் உள்ள முரண்பாடுகளைக் கூறினார். கும்பாபிஷேகம் குடமுழுக்கு என்ற சொற்களில் உள்ள கருத்து வேறுபாட்டினைக் கூறினார். அந்த வகையில் நுகர்வு- நுகர்ச்சி, புணர்வு - புணர்ச்சி போன்ற சொற்களையும் ஆராய்ந் தார். கவிதை என்பது அழகாக இருப்பது; மனதைக் கணிய வைக்கிறது: அத்துடன் அழகினை விதைக்கிறது; உள்ளத்தை தைக்கிறது என்று தமிழின் இனிமையை விளக்கினார். திருமண அழைப்பிதழில் நாம் தமிழில் எழுதும் போது விடும் பிழைகளைச் சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார். மங்கல விளக்கேற்றல் - மங்கள விளக்கேற்றல் என்ற சொற்கள் முரண்பாடு பற்றியும் கூறினார். சிலப்பதிகாரத்தில், கோவலன் கூறும் புதிய கட்டுரை என்ற சொல் மூலம் இளங்கோவடிகள் கட்டுரை என்ற சொல்லாட்சியை கையாண்டிருக்கிறார். ருரீதாயளன் அவர்கள் பாரதியின் தமிழ் வாழ்த்திற்கு ஈடாக நாம் இலங்கையை உள் படுத்தி ஒரு புதிய தமிழ் வாழ்த்தினை எழுத வேண்டும் என்றார். அதை தமிழ் சங்கமும் ஏனையோரும் விவாதிக்க வேண்டும் என்றார். மிகவும் சுவாரசியமான உரையை நிகழ்த்திய உரையாளருக்கு செயலாளர் சங்கத் தமிழ் சஞ்சிகை பரிசளித்து கெளரவித்தார்.
Caférfi u(35gs)
"கதை கதையாம் காரணமாம்” என்ற நிகழ்வில் செல்வி
சிவரூபிசதாசிவம் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து
பரிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அற்றைத்திங்கள் - திருமதி இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு 15.6.2O11 இன்றைய அற்றைத் திங்கள் நிகழ்வுக்கு சங்கத் தலைவர்
திரு.மு.கதிர்காமநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். அற்றைத் திங்கள் புலமைசார் அறிஞர்களை கொண்டு நடாத்தப்படும் ஒரு சிறப்பு நிகழ்வாகும். அந்த வகையில் இன்று உரையாற்றவிருக்கும் முன்னாள் அதிபர் திருமதி இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு அவர்களது உரையைக் கேட்க பல துறையைச் சார்ந்த பார்வையாளர்களும் வந்திருப்பதைப்
கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல் 09 D

Page 6
பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இவர் ஒரு சிறந்த அதிபர், பேச்சாளர், எழுத்தாளர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர். இவரது குடும்பத்தினர் 36 பட்டதாரிகளைக் கொண்ட குடும்பமாகும். வீணை வகுப்புகளை நடாத்தி பல மாணவர்களை உருவாக்கியுள்ளார். அற்றை திங்கள் நிகழ்வில் உரையாற்றும் 3வது பெண் மணியாவார் என்று கூறி தனது தலைமையுரையை நிறைவு செய்தார்.
திருமதி இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு அவர்கள் உரையாற்றும் போது தன்னை இரண்டு தடவை உரையாற்றுமாறு கேட்டதாகவும் தவிர்க்க முடியாத காரணங்களால் உரையாற்ற முடியவில்லை. 3வது முறையாகக் கேட்டபோது மறுக்க முடியவில்லை என்று கூறினார். பாரி மகளிர் அங்கவை சங்கவை தமது தந்தையார் மறைந்து அவரது அரசையும் இழந்த போது கபிலர் அவர்களை அழைத்துச் சென்றபோது பறங்கிமலையை நோக்கிப் பாடியதாக இப்பாடல்
“அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் வெண்றெரி முழவிற்வேந்தர்எம் குன்றும் கொண்டார்” என்று வருகிறது. இப்பாடல் தலைப்பு இந்நிகழ்வுக்குப் பொருத்தமாக அமைந்தது பாராட்டத் தக்கது என்றார். எனது பேரன் மட்டுவில் ம.க.வேற்பிள்ளை நாவலர் சிதம்பரத்தில் ஆரம்பித்த சைவப் பிரகாச வித்தியாசாலை அதிபராக விருந்து சிதம்பரத்தில் காலமானார். வித்தியாசாலையில் அதிபராகக் கடமையாற்றிய பின் சிதம்பரத்திலேயே காலமானார். அவரது 5 பிள்ளைகளில் எனது தந்தையார் திருஞானசம்பந்தப்பிள்ளை ஆவார். தமிழ், சமயம், கலை இவை மூன்றும் எமது கண்கள் என்று எனது தந்தையார் கூறுவார். எம்மையும் அவ்வாறே வளர்த்தார். அவர் ஒரு பேச்சாளர். எழுத்தாளர், இந்து சாதனத்தின் பத்திரிகையாசிரியராக இருந்தார். ஆசிரியர் தலையங்கத்தை யதார்த்தமாக எழுதுவார். சிலரைக் கண்டித்து எழுதியதால் எமது வீட்டுக்குக் கல்லெறி நடந்தது. உலகம் பலவிதம் என்னும் தலைப்பில் தொடர்கதை எழுதி வந்தார். இவரது பல இரசிகர்கள் வீட்டுக்கு வந்து இவரது கதையை விமர்சனம் செய்வர். பல நூல்கள் எழுதினார். நான் தான் கடைசிப்பிள்ளை. இவரது புத்தகங் களில் எழுத்துப் பிழை (Proof) பார்க்கத்தருவார். அப்போது பிழையாக வாசித்து எனது திறமையைப் பரீட்சிப்பார். குடும்பத்தில் 3 பெண்களும் பட்டதாரிகள். அண்ணா பொறியியலாளர்.
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் இருந்தபோது இந்தியாவி லிருந்து சைவமா நாட்டுக்கு வரும் அறிஞர்கள் எமது வீட்டுக்கு வந்து உணவருந்தி செல்வர். எனது தந்தையார் சீதனக் கொடுமை பற்றி எழுதி யதால் பல பெண் இரசிகர்களைப் பெற்றிருந்தார். இவர் எழுதிய ஒரு நாவல் “பேசின பேச்சின் படி பணத்தை வாங்கிக் கொண்டு வரவில்லை யென்றால் உன் பெற்றோருடனே போயிரு” என்று ஒரு நாவலைத் தொடங்கி பல முற்போக்கான சிந்தனைகளை அதில் எழுதியுள்ளார்.
G10
கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி idle.)

சீதனம் வாங்க பெண்ணை அனுப்பியதால் சாப்பிட வழியில்லாமல் போனதாகக் கூறுகிறார்.
எனது இளமைக் காலத்தில் யாழ் இந்துக் கல்லூரியில் கல்விகற்ற காலத்தில் திருமதி பத்மா சோமகாந்தண் எனது விரும்பத்துக்குரிய பள்ளித் தோழியாகவிருந்தார். மண்ணில் 'அ' எழுதிப் பழகும் போது பிழை விட்டால் எமது விரலை வலியேற்படுமாறு நிலத்தில் தேய்த்து விடுவார் ஆசிரியர்.
ஒரு முறை பல்பிடுங்க டாக்டர் வருவதாக அறிந்து பின்பக்க வளவு மூலம் நானும் எனது தோழி பத்மாவும் வீட்டுக்கு ஓடி விட்டோம். வந்தது டாக்டர் இல்லையென்று அடுத்தநாள் அறிந்தோம். பெண்களுக்கென இன்று மகளிர் கல்லூரி ஆரம்பக்கப்பட்ட போது நாமும் அங்கு சென் றோம். முதல் அதிபராக காயத்ரி என்பவரும் பின்னர் திருமதி சிற்றம்பலம், அதன் பின் ஆங்கிலப் பெண் ஒருவரும் பின்னர் தெலுங்குப் பெண்ணும் பணியாற்றினர். இவர் காலத்தில் தான் கட்டிடங்கள் பல கட்டப்பட்டன. S.S.C சித்தியடைந்த பின் மேற் படிப்புக்கு திருச்சி சென்றேன். கண்ணி யாஸ்திரிகள் பலர் கற்பித்தனர். அன்பு, ஆதரவு, அரவணைப்பு மிகவும் இதமாகவிருந்தன. சற்சொரூபவதிநாதனும் எனது பள்ளித் தோழிதான். அவரிடம் ஒரு மரியாதையிருந்தது. அதன் காரணமாக இன்று எனக்கு பல சந்தர்ப்பங்களைத் தந்து என்னை ஊக்குவித்து வருகிறார். தமிழ் கற்பித்த பண்டிதர் மிகவும் திறமையாகக் கற்பித்தார். அதே போல் ஆங்கிலமும் கற்பித்தனர். கல்லூரியைவிட்டு விலகும் போது ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்து விட்டு வந்தேன்.
பிரத்தியேமாக வீணை கற்றோம். எண்னை யாழ் நங்கை என அழைப்பார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உச்சிப்பிள்ளையார் கோவிலுக்குச் சென்று வருவோம். பரீட்சைப் பெறுபேறு வருமுன்னரே வட்டமராட்சி சிதம்பராக் கல்லூரியில் ஆசிரியத் தொழில் கிடைத்தது. இங்கு தான் எனது கணவரைச் சந்தித்தேன்.
இருவருக்குமிடையில் ஏற்பட்ட புரிந்துணர்வால் திருமணம் செய்து கொண்டோம். 43 வருட இல்லற வாழ்வில் இராகம் சம்பந்தமான பிரச்சினை மட்டுமே எமக்கிடையில் ஏற்பட்டது.
இராதை, கண்ணன் என்ற இரு குழந்தைகள். கண்ணன் பல் கலைக்கழக விரிவுரையாளராகவும் இராதை இசை ஆசிரியராகவு முள்ளனர். அவர்கள் திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கிறார்கள். இதனால் கணவரின் இழப்பு என்னைப் பெரிதும் பாதிக்கவில்லை. பல பாடசாலைகளில் கற்பித்து நிறைவாக மங்கையர்க்கரசி வித்தியாசாலை யில் அதிபராகக் கடமையாற்றி இளைப்பாறினேன். பெற்றோர். கணவர், குரு மூன்றும் எனக்கு வாய்க்கப் பெற்றேன். சாம, பேத தாள வழிகளில் கற்பிக்க வேண்டும்.
இன்றைத் திங்களில் நான் விரும்புவது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனமும் அடுத்து கொழும்புத் தமிழ்ச் சங்கமுமாகும். என்ன
கொழம்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல் )

Page 7
இல்லை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில், பாராட்டுக்குரியது. அடுத்து இராமகிருஷ்ணமிஷன், கம்பன் கழகம், இந்து சமய வளர்ச்சிப் பணி மன்றம் ஆகியனவாகும் என்று கூறி தமது அருமையான உரையை நிறைவு செய்தார்.
நினைவுப் பேருரை 17.06.2011 முன்னாள் கொழும்புத் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர்
தமிழவேள் க.இ.கந்தசாமி அவர்களின் நினைவுப் பேருரை நிகழ்வு தமிழ்ச் சங்கத் தலைவர் கலாநிதி மு.கதிர்காமநாதன் அவர்கள் தலை மையில் இடம்பெற்றது. தமிழ் வாழ்த்தினைத் தொடர்ந்து கொழும்புத் தமிழ்ச் சங்க துணைத் தலைவர் திரு.ச.இலகுப்பிள்ளை அவர்கள் தமிழவேள் அவர்களது உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் திரு.இரகுபதி பாலருரீதரன் அவர்கள் வரவேற்புரைநிகழ்த்தினார். தமிழவேள் பற்றிய குறிப்புக்களைக் கூறியதோடு அவர் ஆற்றிய பணிகள் பற்றியும் கூறியதோடு எமது நூல கத்தை உருவாக்கிய பெருமை அவருக்குரியது என்றும் கூறினார். வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று அமர்ந்தார்.
தலைமையுரையாற்றிய தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர் கள் தனது உரையின்போது தமிழவேள் தமிழையும் சைவத்தையும் இருகன்ைகளாகப் போற்றி பக்தியோடு பணிசெய்த ஒரு சித்தர் எனக் கூறலாம். தனக்கென எதுவும் தேடாது சங்கத்துக்கே அனைத்தையும் தியாகம் செய்தார். அவர் சேவையைப் பாராட்டுவது எம் எல்லோருக்கும் பெருமை. இந்நிகழ்வுக்கு திரு.ச.இலகுப்பிள்ளை அவர்கள் அனுசரணை வழங்கினார்தமிழவேள் அவர்கள். இவரைப்போல் பலரை உருவாக்கினார். இந்த நல்ல நிகழ்வில் உரையாற்ற பொருத்தமான ஒருவரைத் தேடிய போது பேராசிரியர் சிவலிங்கராசா அவர்கள் எமக்குக் கிடைத்தார். அவரை உளமார வணங்கி பேராசிரியர் அவர்களை நினைவுச் சொற் பொழிவு ஆற்ற அழைத்தார்.
"யாழ்ப்பாணத்திலே பண்டிதப் பாரம்பரியம்” என்னும் தலைப்பில் நினைவுப்பேருரை ஆற்றினார். பல சிரமங்கள் இருந்தும் தலைவரது அன்புக் கட்டளையை மதித்து நான் வருகை தந்துள்ளேன். தமிழவேள் இறுதியாக நடாத்திய சிலப்பதிகார விழாவில் கலந்து கொண்டு உரை யாற்றினேன்.
தமிழவேள் அவர்களின் பிறப்பிடம், படிப்பு. அவருடன் கொண்ட உறவுகள் பற்றிக் கூறினார். இணுவில் மக்கள் சைவமும் தமிழும் தமது உயிரென கொண்டிருந்தனர். கிறிஸ்தவர்கள் அங்கு வைத்தியசாலை அமைத்துப் பணியாற்றிய போதும் ஒரு வரும் மதம் மாறவில்லை. தமிழவேள் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியர். அதனால் இந்தத் தலைப்பை தெரிவு செய்தேன். யாழ்ப்பாணத்திலே பண்டிதப் பாரம்பரியம் என்ற தலையங்கம் ஏன் கொடுத்தேன் என்பது நூலுருவாக எனது பேச்சு வெளி
C2
கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல்)

வரும்போது நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
நாம் வடக்கிலிருந்து பல வசதிகள் குறைந்தநிலையில் அங்கிருந்து ஆய்வு செய்யவேண்டியிருந்தது. எனவே தான் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு ஆராய்ச்சி செய்தேன். யாழ்ப்பாணத்திலே ஆசிரிய ரிடம் சென்று பாடம் கேட்கும் ஒரு மரபு இருந்தது. ஆசிரிய மாணவர் உறவு முக்கியமாக இருந்தது. சாதாரணமான ஒரு ஆசிரியரிடம் பயின்று சிறப்புப் படிப்புப் படிக்க அதற்குரியவரிடம் சென்று பாடம் படித்தேன். உ.வே.சுவாமிநாதன் யாழ்ப்பாணத்து அறிஞர்களைப் பாராட்டி எழுதி யுள்ளார். ஒருவரையொருவர் விஞ்சி எழுதும் வல்லமை பெற்றவர்கள் யாழ்ப்பான அறிஞர்கள். யாழ்ப்பாணத்து பெரிய வித்துவான்கள் தமிழ்க் கல்வியை வரன்முறையாகப் பயின்ற பின்தான் ஆங்கிலக் கல்வியைக் கற்றார்கள். அவ்வாறு தான் நிறுவனக் கல்வியும் வளர்ந்தது.
பண்டிதர் என்றால் புலவன். வைத்தியன், வித்துவான் எனப் பொரு ளுண்டு யாழ்ப்பாணத்து மரபில் படித்தவனைப் பண்டிதன் என்று அழைப்ப துண்டு. பண்டிதர் பரீட்சையில் தேறாதவர்களைக் கூட பண்டிதர் என்றே அழைப்பர். பேசும்போது பண்டிதர் என்றே விழிப்பர். மரபுக் கல்வியைப் போன்ற 1900ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் தமிழ்ச் சங்கம் நிறு வினர். 1901ஆம் ஆண்டு தான் மதுரைத்தமிழ்ச் சங்கம் ஆரம்பமாகியது. யாழ்ப்பானத்தமிழ்ச் சங்க கையேட்டைப் பெற்ற அவர்கள் தமது யாப்பைத் தயாரித்தனர். இலங்கையிலிருந்து அறிஞர்களை அழைத்தே பரீட்சைகளை நடாத்தினார்கள். முதன் முதல் இலங்கையிலிருந்து விபுலானந்தர் பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்தனர். அதன்பின் யாழ்ப்பாணத்தில் இரண்டு பெண்கள் பண்டித பரீட்சையில் தோன்றி சித்தியடைந்தனர். பத்மாஞ்சலி அம்மா, பரமேஸ்வரி, சந்தனகங்கை, தங்கம்மா அப்பாக்குட்டி போன்றோரைக் குறிக்கலாம்.
1921ஆம் ஆண்டு ஐப்பசி 27ஆம் திகதி ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. முகாந்திரம் சதாசிவஐயர் ஆரம்பித் தார். ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்திலிருந்து 1950இல் 75பேர் அங்கிருந்து சித்தியடைந்து வெளியேறினார்கள்.
இதற்கு சமனாக சமஸ்கிருதத்திலும் பண்டித வகுப்புகளை நடத்தி னார். மதுரை ஆரிய சங்கத்திலும் ஒரே நேரத்தில் தோன்றி சித்தி பெற்றனர்.
பல்வேறு இடங்களிலும் பண்டித வகுப்பு தொடங்கப்பட்டது. பண்டித மணியிடம் பலர் பயின்றுள்ளனர். பால பண்டிதர்களுக்கு 5 ரூபாவுL) பண்டிதருக்கு 10 ரூபாவும் வழங்கப்பட்டது. இதை ஒழுங்கு செய்தவர் முகாந்திரம் சாதாசிவ ஐயராவர். பலரும் பண்டிதர் பரீட்சைக்குத் தோற்) விருப்பினர். இம்மாணவர்கள் தனிப்பட்ட முறையில் வித்துவான்களை அணுகிப் பாடம் கற்றனர். பல்வேறு இடங்களுக்குச் சென்று படித்தனர். கணேசைய்யர் கந்த முருகேசனார் ஆகியோர் பயிற்றுவித்தார்கள்.
ஐங்குறுநூறு முழுவதற்கும் உரையெழுதப்பட்ட ஒரு கொப்பி 28
கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல் 18)

Page 8
சதத்துக்கு விற்கப்பட்டது. ஆ.க.சுப்பிரமணியம் என்பவர் எழுதியதாகக் கூறுவர். உ.வே.சா. நூல்களில் இல்லாத பாடங்களும் அதில் காணப் பட்டது. இவையெல்லாம் பண்தடிப் பாரம்பரியத்தால் கிடைத்த சொத்து. பரமேஸ்வர ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பண்டித வகுப்பும், ஆசிரிய வகுப்பும் பயிற்றப்பட்டது. இங்கு பல ஜாம்பவான்கள் போதித்தனர்.
பண்டிதர் வீரகத்திப்பிள்ளை, சச்சிதானந்தர் போன்றோர் சிறந்தவர் கள் நவநீத கிருஷ்ண பாரதியார் மிகச் சிறந்த புலமையாளர். பண்டிதர்
வீரகத்தி அவர்கள் தஞ்சைக்கு அழைத்து ஆய்வு செய்ய உதவினார்.
பரமேஸ்வராப் பண்டிதர்கள் மரபுவழிச் சிந்தனையோடு நவீன வழிச் சிந்தனையும் மிக்கவர்.
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை. புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளையும் சிறந்த பண்டிதர்கள். நவநீதகிருஷ்ண பாரதியார் திருவாச கத்துக்கு சிறந்த உரையெழுதியுள்ளார். கரவைவேலன் ஒரு சிறந்த கவிஞராவார். ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம், பரமேஸ்வரா பண்டித வகுப்பு இரண்டும் மதுரைச் சங்த்துக்கு ஈடாக விருந்தன.
பண்டிதர் பரீட்சையில் செய்யுள் இயற்றுதல் முக்கியமான பங்கு வகித்தது. பண்டிதர் சச்சிதானந்தார் ஒரு சிறந்த கவிஞராக விருந்தார். பாரதியார் போல் பாடும் திறன் பெற்றிருந்தார்.
இப்பரீட்சையில் சித்தியடைய தமிழ் அல்லாத இன்னொரு மொழி வேண்டும். அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து நாகவிகாரையில் சிங்களம் பயின்று சித்தியடைந்தனர். வித்துவசிரோன்மணி கணே சய்யர் எதுவித வேதனமும் பெறாது கற்பித்தார். பலருக்கு உணவும் கொடுத்துப் படிப்பித்தார். பண்டிதர்களது கற்பித்தல் முறை ஒரு சிறப் பானது ) தமிழ் மொழி இலக்கண வழுவின்றி எழுதுதல் 2) இலக்கிய இரசனையிருக்க வேண்டும் என்ற ஒழுங்கு இருந்தது. இது குமார சுவாமிப் புலவர். ஞானப்பிரகாசகர் போன்றோர் வழியாகப் பரவியது. பண்டிதர்மணி கணபதிப்பிள்ளை இலக்கிய ரசனையோடு கற்பிப்பார். பண்டிதர் பாஞ்சாலி சபதம் கற்பித்த போது இடையிடையே கதைகளும் கூறுவர். பாஞ்சாலிக்கு அனுப்பிய சேலைகள் திரும்ப வரவில்லையா என்று திருமகள் கேட்க எல்லாச் சேலையும் திரும்பக் கிடைத்தனவாம். வேறு சிலர் அச்சேலைகளை உடுத்திருந்தபடியால் சில சேலைகள் திரும்ப வரவில்லையாம்.
பண்டிதர் வீரகத்தி கற்பிக்கும் போது ஒல்லாந்தர் காலத்தில் வரி அற விடும் போது பிராமணருக்கு வரி அறவிடுவதில்லை. வரி அறிவிடுவோர் வரும் போது சிலர் பூணுலுடன் நிற்பார்களாம். ஒருமுறை அதே மனிதன் உழுது கொண்டிருப்பதைக் கண்ட வரி அறவீட்டாளர் இவரை நோக்கி நீர் நேற்று பிராமணராக இருந்தீர் இன்று எண்ண உழுகிறீர் என்று கேட்டார்.
இது உழுபார்ப்பான். அது தொழு பார்ப்பான் என்றார். பல்கலைக்கழக முதல் பேராசிரியர் பண்டிதர் முத்துக்குமாரசாமிப்
கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி DL6)

புலவர் ஆவார். அவரிடம் கற்ற பலர் பின்னர் பேராசிரியர்களானார்கள். பயிற்றப்பட்ட தமிழாசிரியர்களில் 90% மானவர்கள் பண்டிதர் பரீட்சைக்குப் படித்தவர். சித்தியெய்தத் தவறினாலும் அவர்களும் திறமையானவர் களே. மாணவர்கள் அனைவரும் தமிழ்த்துறைக்குச் செல்லாவிட்டாலும் அவர்கள் சென்ற துறையிலெல்லாம் துலங்கினர். தமது பேச்சு நூலாக வெளிவரும் என்று கூறி நிறைவு செய்தார்.
நிலையமைப்புக் குழுச் செயலாளர் திரு.மா.சடாச்சரம் நன்றியுரை நிகழ்த்தினார். பேருரை சிறப்பாக நடைபெற உதவிய தலைவர், செயலாளர், நிதிச் செயலாளர் உள்ளிட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்க்கும் நன்றி கூறினார். நிதிச் செயலாளர் திரு.செல்லத்துரை திருச்செல்வன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
5 "Goassú (afg36Nurir US550
18.06.2011 "கதை கதையாம் காரணமாம்” என்ற நிகழ்வில் செல்வி
பாமினி சுவாமிநாதன் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர்ஒன்று கூடல் - 459
22.06.2011 அறிவோர் ஒன்று கூடல் நிகழ் வில "இலங்கையிலுள்ள அபூர்வ தாவரங்கள், விலங்குகள்" என்னும் பொருள் பற்றி மன்னார் து.அ.ஜெகநாதன் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்கள் தலைமை தாங்கிய தோடு தனதுரையில் விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடுடையவர்: பல விடயங்களில் ஆர்வமுள்ள ஒருவர்; ஆழமாகவும் பேசவல்லவர். இன்று பேசவுள்ளார் என்றும் பல முக்கியமான தாவரங்கள் விலங்குகள் மனிதருக்கு மிகவும் பயனுடையவை. பேச்சாளர் அவை பற்றி திரு.து. அ. ஜெகநாதன் உரையாற்றுவார் என்றார். பேராதனைப் பல்கலைக்கழகம் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இப்போது ஒரு வர்த்தகராகவும் விவசாயியாகவும் இருக்கின்றேன் எல்லாத்துறை களிலும் ஒரு மாணவனாக இருக்கிறேன். உயிருள்ளவற்றுள் தாவரம், விலங்கு எனப் பிரிக்கப்படலாம். தாவரம் தானாக உணவைத் தயாரிக்கவல்லவை. விலங்குகள் தாவரங்களிலிருந்தும் பிறவற்றிலு மிருந்து பெறுகின்றன. குருவிச்சை தாவரங்களிலிருந்து தமது உணவைப் பெறுகின்றன. தாவரங்கள் இருவகையாகத் தேடிக் கொள் கின்றன. தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒரு வகை இலைகள் உள்ள தாவரம் இரண்டு வித தன்மை யுடையது. குருவிச்சை பனை, தென்னையிலிருந்து பயன்பெற முடியாது. சந்தனம் ஒரு ஒட்டுண்ணித் தாவரமாகும். மணன்களிலிருந்து வளர்ந்தா லும் இன்னொரு மரத்தினுடைய வேரினுள் தனது பகுதியை உட் செலுத்தி வளரும் பதுளையில் வெண்சந்தனமரம் காணப்படுகிறது. ஒரு
(கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல் 15 )

Page 9
பறவையின் கூடு காணப்படும். அது குருவியின் எச்சிலால் உருவாக்கப் படும். அது கிட்டத்தட்ட 1 இலட்சம் ரூபா வரை பெறுமதி வாய்ந்தது. இலங்கையில் வன்னிப்பகுதியில் இருவாட்டி என்ற ஒரு விநோதப் பறவையுண்டு. இதை வேட்டையாடிச் சாப்பிடுவர். வெவ்வேறு நிறங் களில் பல நாடுகளில் காணப்படும். இதன் விநோதம் என்ன வென்றால் ஆண்பறவைதான் அடைகாக்கும் மரப் பொந்தில் முட்டையிட்டு, களி மண்ணால் மூடி விடும். முதலை மண்ணுக்குள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். புறா ஆனும் பெண்ணும் அடைக்காக்கும். குஞ்சு பொரித்த தும் களிமண்ணை உடைத்து வெளிவரச் செய்யும். உலகில் 250 வகை மான்களுண்டு. இலங்கையில் 4 வகை மான்களுண்டு. பெரிய மானினம், மரையினம் எருமைமாட்டுக் குணங்கள் இதற்கு உண்டு. இந்தியாவில் இதனை கடம்பமான் என்பர். சம்பு என்பது ஒரு வகைப் புல். சம்பு நிறைந்திருப்பதுதான் சம்பூர், இங்கு இந்த மானினமுண்டு. ஆங்கிலப் பெயரும் அதுதான். இது மாதிரி சம்பு என்ற தானியமும் உண்டு. இதிலி ருந்து தான் கம்பன் கூழ் தயாரிக்கப்படுகின்றது. சோளம் என்பது நாம் பாவிப்பது அல்லது. இதை மக்காச்சோளம் என்றழைப்பர். நாம் இறுங்கு என்றழைப்பது தான் உண்மையில் சோளம், புள்ளி மான் குருட்டை என அழைப்பர். Barking Deer ஒரு சிறிய அளவுள்ளது. ஒரு மான் ஒரு முயலைப் போன்றது. இதனை (மெளஸ் டியர்) Mouse Deer என்பர். இதை MLMT OBTTTO L 0 S L LLtmmL T OO Ot TSsS000T LC TLTB LLLTtL TT00B 0 கூர்மையான பகுதியுண்டு.
ஊர்வன, பறப்பன. நடப்பன. பாலூட்டி, மனிதருள் ஒரு பாலூட்டி, குட்டி மட்டும் போட்டு பாலூட்டாமல் விட்டால் பாலூட்டியல்ல. திமிங்கிலம் ஒரு காலத்தில் நிலத்தில் வாழ்ந்தது. ஒரு ஆபிரிக்க யானை ஒரு நீலத் திமிங்கிலத்தின் வாயினுள் நிற்கலாம். இது ஒரு தாவர போஷணி நீரை யும். பாசிகளையும் உண்ணும். குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு தடவை வெளியில் வந்து மூச்சு எடுக்க நீரின் மேல் தலையை உயர்த்தி மூச்சை இழுக்கிறது. பாம்பு குட்டிபோடும் பால் கொடுப்பதில்லை. இலங்கையில் காணப்படும் மிகப் பெரிய பாம்பு ராஜநாகம். இது சராசரி நீளம் 20 அடி வரையாகும். இலைகளையும் சுள்ளிகளையும் கொண்டு கூடு தயாரிக் கும் பல்லி, ஒனான் வகைகளுண்டு அழுங்கு என்பது ஒரு முலை யூட்டி. இது ஒரு விநோதமான விலங்கு. பிரதான உணவு எறும்பு, கறை யான் ஆகும். இது வேகமாக ஓடாது. காலிலிருந்து தலைவரை சிப்பி போன்ற அமைப்புடையது. வன்னி மக்கள் இதைச் சாப்பிடுவர். பெருங் காடுகளில் மண்ணைத்தோண்டி குடும்பமாக வாழும். அடுத்ததுமுள்ளம் பன்றி. இது முயல், எலிக்குடும்பத்தைச் சேர்ந்தது. உடலெல்லாம் கறுப்பு வெள்ளை கலந்த முள் உடையது. அது சிலிர்த்தால் முள் பறந்து தாக்கும் என்பது மூடநம்பிக்கை. யாரும் தாக்கினால் முட்களால் தாக்கும். இரவில் தான் நடமாடும். இது அனைத்துண்ணி இதுவும் நிலத்தின் கீழ் கிடங்கு தோண்டி வசிக்கும் உணவுக்காக இதனை வேட்டையாடுவர். பாலி
(e.
கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி uples)

என்றவற்றாத ஆறு இங்கு ஓடுகிறது. அடுத்தது யானை- இலங்கையில் 3000 - 5000 வரையான யானைகள் உண்டு. நாம் யானைகள் வாழும் இடங்களை அழிப்பதால் யானை எம்மைத்தாக்குகிறது. சரிபாதி ஆண் யானையும் பெண் யானையுமாகும். பெண் யானையின் கர்ப்ப காலம் 22 மாதமாகும் 500 ஆண் யானைகள் இலங்கைக்குப் போது மானவை. தரமான தந்தமுள்ள ஆண் யானைகளை விட்டு விட்டு ஏனையவற்றை உள்ளூரில் விற்காலம். நட்புநாடுகளுக்கு அன்பளிப் பாகக் கொடுக்கலாம். இதனால் அவற்றின் உணவுத் தேவை குறைகிறது. அவை நாட்டினுள் புகமாட்டா. அல்லது நீர்த் தொட்டிகள் அமைத்து அல்லது வைக்கோல் உமியைக் காட்டிக் கொட்டலாம். கரும்புச் சக்கை வாழைத்தண்டு இலைகளைப் போடலாம். வாழைநார், தென்னந்தும்பி ளிருந்து உடுப்பு தயாரிக்கலாம். ஆபிரிக்க யானை மிக உயரமானது ஆசிய யானை பின் பக்கம் பதிவானது. ஆபிரிக்க யானை ஆண். பெண் யானை இரண்டுக்கும் தந்தமுண்டு. இலங்கையில் கொம் பில்லாத ஆண்யானையுண்டு. இவைதான் மக்களைத்தாக்குகின்றன.
சுமாத்திரா, யாவா போன்ற இடங்களில் உணவுப் பற்றக்குறையால் சிறு உருவமுற்ற யானைகள் தானுண்டு.
கல் தாரி பாலைவனத்தில் குள்ளத்தனமான மனிதர்களிருக்கிறார் கள். இது போல் மனித இனத்திலும் பல வகையினர் உண்டு. மனித இனத்தில் 3 இனம் தான் உண்டு. நிக்றோயின் தமிழர் இதன் வழித் தோன்றல்களே. ஆபிக்காவில் இருந்து நியூசிலாந்து வரை பரந்துள்ளது. பசுபிக் கடலில் காணப்படும் ஈஸ்டன்தீவுகளில் மிக நாகரீகமான மனிதர் வாழ்ந்ததாக கூறுவர். என்றெல்லாம் பல சுவையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
விருந்தினரகம் திறப்பு
24.06.2011 தமிழ்ச் சங்கம் மூன்றாம் தளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட விருந்தினரகம் திறப்பு விழா இன்று மாலை 5.30 மணியளவில் ஆரம்ப மானது. சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சம்பிரதாய பூர்வமாக மங்கல விளக்கேற்றும் வைபவம் இடம்பெற்றது. தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன். பொதுச் செயலாளர் திரு.இரகுபதி பாலழுநீதரன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க வருகைதந்திருந்த விருந்தினரும் மங்கல விளக்கேற்றினர். விருந்தினரகம் உருவாக நிதிக் கொடையளித்ததிரு.சண் குகவரதன், திரு.கைலாசபிள்ளை தம்பதிகள், திரு.சி.குகநாதன் தம்பதிகள், திரு.கருணை ஆனந்தன் மற்றும் வைத்தியகலாநிதி மு.கதிர்காமநாதன் தம்பதிகள் ஆகியோர் மலர் மாலை அணிவித்துக் கெளரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் 3ஆம் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் பொதுமண்டபத்தைத் திறந்து வைக்க ஏனைய கொடையாளிகள் முறையே தங்கத் தாத்தா அகம், விபுலானந்தர்
கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல் 匣 )

Page 10
तह
-
அகம், கம்பன் அகம், வள்ளுவர் அகம். நாவலர் அகம் ஆகியவற்றைத் திறந்து வைத்தனர்.
விருந்தனர் அனைவரும் 4ஆம் மாடியைப் பார்வையிட்ட பின் அன்றைய ஏனைய நிகழ்வுகள் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ஆரம்ப மாயின. தமிழ் வாழ்த்தினைத் தொடர்ந்து நிலையமைப்புச் செயலாளர் வரவேற்புரையை நிகழ்த்தினார். சங்கத் தலைவர் தலைமை உரை யாற்றும்போது விருந்தினரகம் அமைக்க உதவிய அனைத்து கொடை யாளிகளையும் வாழ்த்தியதோடு இப்பணி வெற்றி பெற உதவிய அனை வரையும் பாராட்டி நன்றி தெரிவித்தார்.
அடுத்து பரிசில் நிதியக் குழுச் செயலாளர் திரு.ஆ.குகழுர்த்தி அறிமுக உரையாற்றினார். ஒவ்வொரு அறையும் அமைத்துத் தந்த பெரியார்கள் பற்றிய விபரங்களையும் அவர்களது பணிகளையும் சிறப்பாக எடுத்து ரைத்தார், போக்குவரத்துப் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.க. அரசரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினர் உரை ஆற்றினார். அரசரட்னம் தான் பேசிப் பழகியதே இந்தத் தமிழ்ச் சங்கத்தில் தான். பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களிடம் படித்துள்ளேன். இதன் வளர்ச்சி கண்டு பூரிப்படைகிறேன். நூலகம் 50000 புத்தகங்கள் உள்ளதால் பமிகவும் மகிழ்ச்சியாக விருக்கிறது. பெரிய விருட்சமாக வளர்ந்துள்ளது. தலைவரும் அங்கத்தவர்களும் உழைப்பினால் பல நிகழ்வுகள் நடை பெறுகிறது. சமாதானம் நிலவும் இடமாகவிருக்கிறது. நானும் இயன்றதைச் செய்யத் தான் வேண்டும். தலைவர் ஆற்றல் மிக்கவர் அவரது பணி வளர உதவ வேண்டும்.
கோபுரம் மலர் வெளியீடு முதற் பிரதி ஆமா, சுப்பிரமணியம் பெற்றுக் கொள்ள சிறப்பு பிரதியை க.மு.தர்மராஜா பெற்றுக்கொள்ள வெளியீட்டுரையை சி. பாஸ்க்கார நிகழ்த்தினார். *
கோபுர மலரின் ஒவ்வொரு பக்கமும் சிறப்புற உதவிய அத்தனை நல்லுள்ளங்களையும் பாராட்டியதோடு தனது பணிக்கு மிகுந்த உதவி புரிந்த தலைவர் பொதுச் செயலாளர் நிதிச் செயலாளர் ஆகியோரை யும் புத்தகங்களின் பக்கங்களைச் சரிபார்த்த அனைவரையும் பாராட்டி னார். மலர் அனைவருக்கும் வழங்கப்பட்டு அதன் மனத்தை எல்லோரும் நுகர வாய்ப்பளிக்கப்பட்டது.
அதனையடுத்து திரு.க.சிவபாலரட்னம் அவர்களது புல்லாங்குழல் இசையும் தொண்டர் வித்தியாலய மாணவர்களின் வில்லிசையும் இடம் பெற்றது. நிகழ்ச்சிகளை நிதிச் செயலாளர் செ.திருச்செல்வன் தொகுத்து வழங்கினார். பொதுச் செயலாளர் இரகுபதி பாலமுரீதரன் அவர்களது நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவெய்தியது.
W rann கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல் )

சங்க நிகழ்ச்சிகள்
11.06.2011 தமிழ்ச் சங்க மேல்மாடியிலமைக்கப்பட்டுள்ள விருந்தினர் தங்கும் அறைகள் 5 புதிதாக அமைக் கப்பட்டுள்ளன. இவ்அறைகளுக்கான வாஸ்து சாந்தி விழா இன்று மாலை 7.00 மணியளவில் வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களால் நடாத்தி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சங்கத் தலைவர். செயலாளர், நிதிச் செயலாளர் உட்பட ஆட்சிக்குழு உறுப்பினர்களும் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர். விநாயக பூசையைத் தொடர்ந்து ஹோமம் வளர்க்கப்பட்டு இரவு 9.00 மணியளவில் அந்நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
12.06.2011 மேல்மாடியில் அமைக்கப்பட்ட புதிய அறைகளுக்கான சம்பிரதாக பூர்வமான புதுமனைப் புகுவிழா நிகழ்வு காலை 7.00 மணியளவில் ஆரம்பமானது. சங்கத் தலைவர் உட்பட பல ஆட்சிக்குழு உறுப்பினர்களும் சங்க உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பிரதான அறையில் பால் காய்ச்சி விநாயகப் பெருமான், திருமகள், சரஸ்வதி ஆகியோருக்கு நிவேதனம் செய்யப்பட்டு வந்த அனைவருக்கும் பரிமாறப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் சுவையான காலை உணவு வழங்கப்பட்டு ஒரு இனிமையான நிகழ்வாக நிறைவுபெற்றது.
15.06.2011 கல்விக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட திருக்குறள் அறிவுப் போட்டி கொழும்புத் தமிழ்ச் சங்கம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இப்போட்டியில் திருக்குறள் மனனப் போட்டி, பேச்சுப் போட்டி, வினாவிடைப் போட்டி கட்டுரைப் போட்டி என பல பிரிவுகளாக நடாத்தப்பட்ட இப்டோட்டியில் இலங்கையில் பலபாகங்களிலும் இருந்து மாணவர்கள் பங்கு கொண்டனர்.
இவற்றுக்கான இறுதிப்போட்டி 26.06.2011 கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்று பேச்சுப் போட்டியில் முதலிடம் பெறும் மாணவரது பேச்சு திருக்குறள் மாநாட்டில் இடம்பெறவுள்ளது.
56tribuggol.03urrib
சமூகந்தர முடியாத நாட்களில் சங்க நிகழ்வுகள் பற்றி செய்திகளைச் சேகரித்து தொகுப்புப் பணிக்கு உதவிய பொதுச் செயலாளர் திரு.ஆ.இரகுபதி பாலருரீதரன்,
தொகுப்பாளர்: கந்தசாமி மகாதேவா - வடிவமைப்பு:- உறுப்பாண்மைக்குழுச் செயலாளர் திருமதி.கு.சத்தியஜோதி
(கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல் 19

Page 11
கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.07, 57ஆவது ஒழுங்கை, 6N6E (TupLİL O6.
திருக்குறள் ம சிறப்பு நி
ஜூலை 22 வெ 2:ர்வலம், சிறப்புச் சொற்பொழிவு - பேர é560X6Ꭰf;
ஜூலை 23 சனிக் பேச்சு. சிறப்புச் சொற்பொழிவு - பேராக ஆய்வரங்கு - தலைமை ே
( 23 சனிக் பரிசளிபு சிறப்புச் சொற்பொழிவு - பேர éᏏ60X60Ꮑ.
ஜூலை 24 ஞாயிற்ற பேச்சு ஆய்வரங்கு - தலைவ
ஜூலை 24 ஞாயிற்ற சிறப்புக் சொற்பொழிவு. பேச்சு, பட்டிமன்
(2C
og seasess
 

ாநாடு - 2011 கழ்ச்சிகள்
எர்னிக்கிழமை : ாசிரியர் அரங்க ராமலிங்கம் (தமிழ் நாடு). நிகழ்ச்சி
கிழமை காலை : ரியர் சீர்காழி வி.ராமதாஸ் (தமிழ் நாடு), பேராசரியர் சிதில்லைநாதன்
கிழமை மாலை : ாசிரியர் அரங்க ராமலிங்கம் (தமிழ நாடு). நிகழ்ச்சி
வக்கிழமை காலை : ர் பேராசிரியர் அ.சண்முகதாஸ்
விக்கிழமை மாலை : றம் நடுவர் - கம்பவாரிதி இ.ஜெயராஜ்
கொழும்புத் தமிழ்ச் சங்க செய்தி மடல் )