கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2011.07

Page 1
NDA. INR 10000 CANADA.C.
SER ANKAS IR 200.000 AUSTRAL.A.A.
SINGAPORE.SGS 4.00 SWISS.
C N
== ဓမ္ဘီ
蠶
--
 

Ns 1000 USA...USS 1000 SS 1000 UK.G.B. 600
HF DOO EUROPE. EUS 700

Page 2
TO STRENGTHEN
HARROOTS Within
USe the ORIGINAL
Hair NOUrisher
Sri Arkenn Pha 12/1/1, Prince
Color el: 0.094
 
 

Formulo
Lanka
rmaceuticas of Wales Avenue, nbo-14,
11 2470290

Page 3
寧
震系密
|-
ᎢᏛ Ꮽ
彦
爵
இx
籌
 


Page 4

SOL” GODILLILLib :
சுன்னாகம் சிவன் கோயில் தேரில் உள்ள குதிரைச் சிற்பங்கள்
உள்ளடக்கம்
06 மறந்தவையும் மறைந்தவையும்
கவியரசர் தாகூரின் 20 அழகியல்
24 நெடுந்தீவு புக்காடு
இந்து ஆலயம்
30 வங்கம் வளர்த்த
யாத்ரா நடனம்
46 பண்டைய யாழ்ப்பாண
இராஜதானி
50 ஜெய்ப்பூரின் அழகு மாளிகை
ஹவா மஹால்

Page 5
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka.
T.P. --94.115234.338 WWW. kalaikesari.Com
EDITOR Annalaksmy Rajadurai editor(CDkalaikesari.Com
SUBEDITOR Bastiampillai Johnsan editorOkalaikesari.com
MEDIA CO-ORDINATOR Pragash Umachandraa
CONTRIBUTORS Prof. S. Sivalingaraja Prof. N. Shanmugalingan Prof. Pushparatnam Prof. S. Jeyarasa Pathma SOmakanthan K. Thangeswary D. Manoharan Subashini Pathmanathan Thakshayiny Prabagar
PHOTOS
Sabita N.
Uma P:
LAYOUT
S. A. Eswaran
IOT
S. T. Thayalan
ADVERTISING A. Praveen marketing(CDvirakesari. Ik
SUBSCRIPTIONS Arjun Jeger arjun GDexpressnewspapers.net
PRODUCTION L. A. D. Joseph
ISSN 2012 - 6824
அன்புள்ள கை
வணக்கம். ச
2O11 இதழ் மூல ஆய்வறிஞர்க
சரி, உங்கள் கன
விக்கும் கருத்து, கின்றது என்றா6 நன்றிகள்.
இவ்விதழிலு LIT(B, 856orfg-ITTLD வாழ்வின் ஆதா மூலம் நாம் வலு கினியின் சுடரா மாக உள்ளது. { வது. ரிசோதியே திப் பிழம்பதோர் மொசற்ற சோதி" பொருளை விள
கையில், அப்பு
கண்ணோடு ே குறிப்பிடத்தக்கது மேலும் பல பு
ਪ
کعeھ سکسیsxوہ کلام
 

ஆசிரியர் பக்கம்
>ங்கள விளக்கு வழிபாட்டின் மகத்துவம்
லைக்கேசரி வாசகர்களுக்கு, sலைக்கேசரி 19 ஆம் இதழின் மூலமாக, அதாவது ஜூலை மாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. 5ளின் காத்திரமான, கட்டுரைகளுடன் வெளிவரும் கலைக்கே ண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்ந்ததாக நீங்கள் தெரி எமது பணியில் நாம் மேலும் கருத்துான்றி இயங்கத் தூண்டு ல் மிகையில்லை. கருத்துத் தெரிவித்த அன்பர்களுக்கு எமது
ம் உங்கள் சிந்தனைக்கு விருந்தாக அறிஞர்கள், தமிழ்ப் பண் , வரலாறு குறித்த சில கட்டுரைகளை நல்கியிருக்கிறார்கள். ார சுருதி தன்னம்பிக்கையாகும். அதனை இறை நம்பிக்கை ப்படுத்தி நிம்மதி காண்கிறோம். பஞ்சபூதங்களில் ஒன்றான அக் க கடவுளை உருவகித்து வழிபடுதல் பல மதங்களின் வழக்க இந்து மதமும் அவ்வாறே ஒளி ஏற்றி இறைவனைப் போற்று சுடரே , சூழ் ஒளி விளக்கே" என்றும், பிரமமாய் நின்ற சோ மேனியாகி" என்றும், தோற்றச் சுடரொளியாய்" என்றும், என்றும், இன்னும் பலவாறாகவும் பணிந்தேற்றப்படும் பரம் க்கேற்றி வழிபடும் வழக்கம் எம்மிடம் என்றுமுள்ளது. அவ்வ னித விளக்கு வழிபாட்டின் சமூக முகத்தினை ஆய்வுக் நாக்கித் தரப்படும் கட்டுரையும் இவ்விதழில் இடம்பெறுவது
I.
ஜபூழமான ஆக்கங்களுடன் சந்திப்போமா? நன்றி
ཡབ་སྔོ་

Page 6
5,50idí, Biff, it 06 வாழ்வியல்
யாழ்ப்பாணப் பண்பாடு:
மறந்தவையும் 1
பாரம்பரிய விளையாட்டுக்கள் றுவர்கள் இருபாலாரும் கூடி மண்சோறு கறி சமைத்து அரி விளையாடும் வழக்கமும் இப்பிரதேசத்திலே வழங்கி வந்தது. மண்சோறு கறி சமைத்தல், மணல் வீடு கட்டுதல் முதலிய விளையாட்டுக்களைப் பெரும்பாலும் பெண் பிள்ளைகளே விளையாடுவர். கலித்தொகையில் வரும் “சுடர்த்தொடீ கேளாய் என்னும் பாடல் இந்த விளையாட்டு மிகப் பழங் காலத்தில் இருந்தே வழங்கி வந்தது என்பதை நிறுவும். பிற்காலப் பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தங்களிலே இடம் பெறும் சிற்றிற்பருவம், சிறுசோறட்டல் முதலானவையும் இந்த விளையாட்டின் தொன்மையை நினைவு படுத்தும்.
சிறுவர், சிறுமியர் மண்சோறு கறி சமைத்து விளையாடும் நிகழ்வொன்றை எம்.வீ.கிருஷ்ணாழ்வார் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
"முற்றத்து மண்சோறாய் முன்றுாமற் காயடுப்பாய் (ப்) பற்றிய பா வட்டையிலை பாற்கறியாய் - பெற்றுவித்து (ச்) சாப்பிடவா அப்பா சமைத்த உணவாறுதென்று கூப்பிடுவ தாரையினிக் கூறு” பேரப்பிள்ளைகள் புலம்புவதாக அமையும் மேற்படி கவிதை இப்பிரதேசத்திலே சிறுவர் சிறுமியர் மண்சோறு கறி சமைத்து
விளையாடிய விளையாட்டினைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.
இப்பிரதேசத்திலே 30/4/7 மந்திரி' என்னும்
விளையாட்டினையும் ஒரு காலத்திலே விளையாடினார்கள்.
※
 

மறைந்தவையும்
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
ஒருவர் இராசாவாகவும், ஒருவர் மந்திரியாகவும், ஒருவர் சேவகனாகவும், ஒருவர் குடியானவராகவும், ஒருவர் கள்வனாகவும் இந்த விளையாட்டு அமையும், ஓரளவுக்கு நாடகப் பாங்காக இந்த விளையாட்டு அமைவது குறிப்பிடத்தக்கது. சிறுவர்கள் கூத்து உரையாடற் பாங்கிலே பேசி விளையாடுவார்கள். அந்த உரையாடல் பின்வருமாறு அமையும்.
அரசன் : யாரடா அங்கே! குடியானவன் : நான் தான் ஐயா ராசாவே அரசன் - உன் வீட்டில் நடந்த சம்பவமென்ன குடியானவன் : கள்ளன் வந்து களவெடுத்துப் போட்டான் அரசன் அமைச்சனைப் பார்த்து : கள்ளனைக் கண்டுபிடி. இவ்வாறு தான் இராசா மந்திரி விளையாட்டு அமையும். 260)0(UOC-g/cb இவ்வாறே தொடரும், (நினைவில் உள்ளவற்றையே குறிப்பிட்டுள்ளேன்.) கள்வனை மந்திரி பிடித்து வந்ததும் அவனுக்குச் சவுக்கடி அல்லது மரண தண்டனையை இராசா வழங்குவார். (இந்த விளையாட்டினை இக்கட்டுரையாசிரியரும் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.) அரசியல், சமூக மாற்றம் காரணமாக 19ஆம் நூற்றாண்டளவிலே இந்த விளையாட்டு 'கள்ளன் பொலிஸ் விளையாட்டாக மாறியிருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது.
சிறுவர்கள் ஊஞ்சல் ஆடும் விளையாட்டும் இருந்தது. இந்த விளையாட்டு இப்பொழுதும் உண்டு, சிறுவர்கள் ஊஞ்சலாடும்
பொழுது பாடும் பாட்டு மட்டும் இப்போது இல்லாமற்போய்

Page 7
விட்டது. அந்தக் காலத்திலே சிறுவர்கள் ஊஞ்சல் ஆடும் பொழுது பின்வரும் பாடலைப் பாடுவார்கள்.
'கச்சாயிற் புளியிலே உஞ்சாலும் கட்டி கனகரா தோப்பிலே தோட்டமும் செய்து வெட்டாத செவ்விளணி வெட்டி மடைபோட்டு எரியாத கற்பூரம் எரித்து மடைபோட்டு. இவ்வாறு ஊஞ்சலாடும் பொழுது பாடும் பாடல் தொடர்ந்து செல்லும்,
அக்காலத்தில் சிறுவர்கள், வளையம் உருட்டி விளையாடுவது, பனை மட்டையில், தகரப் பேணியின் மூடியை ஆணியால் அறைந்து உருட்டி ஓடி விளையாடுவது முதலான விளையாட்டுக்களும் விளையாடப்பட்டன.
கெந்தியடித்தல், கிட்டியடித்தல், துரத்திப்பிடித்தல் முதலான விளையாட்டுக்களையும் சிறுவர்கள் Gი?602677u_//7(?GთJ/ჩ. பிற்காலத்தில் மாபிள் அடித்தல் (இதனை “போளை என்று சொல்லுவார்கள்) பெரு வழக்கான விளையாட்டாக இருந்தது. சிறுவர்கள் பட்டம் விட்டு விளையாடும் வழக்கம் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றது. சிறுவர்கள் மாத்திரமன்றிப் பெரியவர்களும் பட்டம் விட்டு விளையாடும் வழக்கம் இன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழத்துக் குழந்தைக் கவிஞர்கள் பலர் சிறுவர்கள் பட்டம் 6)9fco(23? விளையாடுதல் பற்றிக் பாடியுள்ளமையும் கவனிக்கத்தக்கது. மேற்குறிப்பிட்ட விளையாட்டுக்கள் பலவற்றை இன்றைய சிறுவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அக்காலத்து இளைஞர்கள் பெரும்பாலும் விரும்பி விளையாடும் விளையாட்டாகக் கிளித்தட்டு மறித்தலைச் சொல்லலாம். இந்த விளையாட்டைத் 'தாச்சி' என்றும் ‘யாடு என்றும் அழைப்பர். வடமராட்சிப் பகுதியில் இதனை 'யாடு என்று அழைப்பதே பெருவழக்காகும். உடற்பயிற்சிக்கு மிகவும் உகந்ததான இந்த விளையாட்டு ஒரு காலத்தில் மிகப் பிரசித்தி வாய்ந்ததாக இருந்தது. பூத்தல், காய்த்தல் (காத்தலாக இருக்க வேண்டும்) காய், பழம், உச்சுதல், கொந்தம் பாய்தல் முதலான சொற்கள் இந்த விளையாட்டிலே பயன்படுத்தப்படும். இரண்டு கோடு முதல் எட்டுக் கோடு வரை போட்டு 'யாடு' GSFGOD 6m7CUATGBGJorje; Gř7. கீழ்க்கோட்டில் இருந்து மேலே போபவரும், மேற்கோட்டில் இருந்து கீழே வருபவரும் ஒரு அடைப்புக்குள் வந்து விட்டால் 'காயும் பழமும் என்று கூறுவார்கள். எல்லாக் கோடுகளிலும் ஒடி வருபவரைத் தெம்பால்' என்று அழைப்பர். சில இடங்களிலே தெம்பால் ஓடுபவரைக் கிளி என்று அழைப்பதும் உண்டு. இன்று மிகச் சிறுபான்மையாகக் கிராமத்து இளைஞர்கள் இதனை விளையாடுகின்றனர்.
பாரம்பரிய விளையாட்டுகளிலே "கிட்டி அடித்தல்' என்னும் விளையாட்டினைப் பெரும்பாலும் இளைஞர்களே
விளையாடுவர். மிகச் சிறுபான்மையாகச் சிறுவர்களும்

塞 }ញត្អែ
O7
விளையாடுவதுண்டு, இளைஞர்கள் கிட்டி அடித்தலுக்கும் சிறுவர்கள் கிட்டி அடித்து விளையாடுவதற்குமிடையே சில வேறுபாடுகளும் உண்டு. கிட்டி அடித்தல் விளையாட்டில் இரண்டு குழுவினர் இருப்பர். ஒரு குழு அடிக்கிற குழுவென்றும் மற்றயது அலையிற் குழு’ என்றும் அழைக்கப்படும். ஏறத்தாழக் கிரிகெட் விளையாட்டின் தன்மையை இந்த விளையாட்டிலே காணலாம். கிட்டி அடித்தலில் 'மறுத்தான் அடித்தல்' என்பது மிகவும் முக்கியமானது. மறுத்தான் அடிபட்டுப் பல், மூக்கு முதலியன உடைந்த பலரை அக்காலத்திலே கிராமப் புறங்களிற் காணலாம். இன்று இந்த விளையாட்டு முற்றாகவே மறைந்து விட்டதெனலாம்.
யாழ்ப்பாணத்துப் U/TOC) U/fcU விளையாட்டுகளிலே 'அம்பெறிதல் விளையாட்டும் மிக முக்கியமானதாகக் காணப்பட்டது. 'அம்புப்பிட்டி என ஒரு பிட்டி அமைத்து இளைஞர்கள் அம்பெறிவர். வைரமான பன்னைத் தடிகளைச் சீவி (சில வேளையிற் பூவரசு, துவரை முதலான தடிகளையும் பயன்படுத்துவர்.) வைத்திருப்பர். ஒவ்வொரு இளைஞரும் தமது உடல் வலிமைக்கு ஏற்ப அம்புப்பிடியைத் தொட்டு உரசிச் செல்லும் வகையிலே அம்புகளை எறிவர். 50 /00 யார்களுக்கு மேல் இந்த அம்புகள் செல்வதுண்டு. இன்று இந்த விளையாட்டும் முற்றாகவே மறைந்து விட்டது.
பெரும்பாலும் சித்திரைவருடப் பிறப்பன்றும், சித்திரா பூரணையன்றும் நடைபெறும் விளையாட்டுகளிற் போர்த்
தேங்காய் அடித்தல் மிகவும் முக்கியமானது. இளைஞர்கள்
மாத்திரமன்றி நடுத்திர வயதினரும் போர்த் தேங்காய் அடித்தலில்

Page 8
ឆ្នាញត្អែ 鑫 O8
ஊக்கத்துடன் பங்குபற்றுவர். கே. டானியல், எஸ்.பொ. முதலான ஈழத்து எழுத்தாளர்கள் போர்த் தேங்காய் அடித்தலைச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளனர்.
இளைஞர்களும் நடுத்தர வயதினரும் மகிழ்வுடன் விளையாடும் விளையாட்டுகளிற் கோழிச்சண்டை (சேவற் சண்டை), மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி என்பவை குறிப்பிடத்தக்கவை. யாழ்ப்பாணப் பிரதேசத்திலே கோழிச் சண்டை முற்றாகவே மறைந்து விட்டதெனலாம். டானியலின் அடிமைகள் நாவலிற் கோழிச்சண்டை மிகவும் சிறப்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாட்டு வண்டிச் சவாரி மட்டும் ஒரளவுக்கு இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இப்பிரதேசத்திலே இளைஞர்கள், நடுத்தர வயதினர் முதியவர்கள் என யாவரும் ‘நாயும் புலியும்', 'தாயம் முதலிய விளையாட்டுக்களோடு 'கடதாசி விளையாட்டும் (cards) விளையாடுவர். பொரும்பாலும் மழைக் காலங்களில் வீட்டில் இருந்து விளையாடும் விளையாட்டாகத் 'தாயம் முதலிய விளையாட்டுகள் காணப்பட்டன. கடதாசி விளையாட்டு பந்தயம் வைத்து (பணம்) விளையாடுவதனால் அந்த விளையாட்டை விளையாடுபவர்களுக்கு அக்காலத்திற் சமூக மதிப்புச் சற்றுக் குறைவாகவே காணப்பட்டது. பேராசிரியர் கணபதிப்பிள்ளை காட்டும் யாழ்ப்பாணத்து வாழ்வியற் கோங்கள் என்னும் கட்டுரையிலே இவ்விளையாட்டுகளைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெண் பிள்ளைகள் வீட்டிற்கு உள்ளேயும், வீட்டு முற்றத்திலேயும் தான் பெரும்பாலும் விளையாடுவார்கள்.
இவர்களின் பிரதான விளையாட்டாகக் கொக்கான் வெட்டுதல்
 

என்னும் விளையாட்டைக் குறிப்பிடலாம். இந்த விளையாட்டிற்கும் இலக்கியங்களிற் குறிப்பிடப்படும் அம்மானை விளையாட்டிற்கும் தொடர்பு இருக்கலாம் எனக் கருதத் தோன்றுகின்றது. "கொக்கான் வெட்டுதல் இப்போது காண முடியாது. பெரும்பாலும் பெண் பிள்ளைகள் விளையாடிய 'மாங்கொட்டை போடுதல் என்னும் விளையாட்டும் முற்றாகவே மறைந்து விட்டது. கிராமப்புறப் பெண் பிள்ளைகள் கெந்தியடித்தல், கயிறடித்தல் முதலான விளையாட்டுக்களைச் சிறுபான்மையாக விளையாடுகின்றனர். கும்மியடித்தலும் இப்போது மறைந்து விட்டது. எனினும் ஞானப் பெண்ணே என விழித்துப் பாடும் கும்மி இலக்கியங்கள் பல இன்றும் நம்மிடையே உள்ளன. இவை அக்காலத்துக் கும்மியடித்தலை நினைவூட்டுபவையாக விளங்குகின்றன.
பாரம்பரிய விளையாட்டுகளிற் பயன் படுத்தப்படும் சொற் தொடர்கள் சில இன்றும் கிராமங்களிலே வேறு சந்தர்ப்பங்களில் வழங்குகின்றது. ஒருவர் உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் பேசித்தன் காரியத்திலே தோற்றுப் போனால் இவன் காயும் பழமும் சேர்த்துப் போட்டான் என்று கூறுவர். இவ்வாறே கொந்தம் பாய்கிறான், தெம்பால் ஒடுறான், துரும்புச் சீட்டடிக்கிறான் முதலான சொற்றொடர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களிலே பயன்படுத்தப்படுகின்றன.
பாரம்பரிய விளையாட்டுக்களிலே இடையிலே
விளையாட்டை நிறுத்தவேண்டின் ஆட்டம், துப்பல், தொங்கல் துப்பல் முதலான சொற்களைப் பயன்படுத்துவர்.
யாழ்ப்பாணத்துப் பாரம்பரிய விளையாட்டுக்கள் பல சமூக
மாற்றம் காரணமாக மறைந்து விட்டன. நாமும் அவற்றை மறந்து விட் *"ož (முற்றும்)

Page 9
To place your
аayertisететt
IM
ూ
KALAKESAR
យញ្ជរ៉ាវ៉ៃ
魏接羲接 iššifÅč* *Ršo;{x FYfi:KFS *ÅRSKR jši:Ryiš 戮
Contact uS On
+94 11 5322733/734/7
ΟΥ marketing(@virakesarilk
 
 
 
 
 
 

Send the World's Best
Home Appliances
to your loved ones in
Sri Lanka
Simply visit on the website of Sri Lanka's No. 1 retailer of home appliances. Choose any number of items among over 300 models from 33 of the world's leading brands and make your payment by credit card. We'll deliver them to your loved ones in any part of Sri Lanka. Guaranteed
sincer SISIL
TACT Panasonic WissGKA يعمليتيمWA

Page 10
=Laeo
 

SOCBILDEFGJñatör பழங்குடிகளான மற்சேஸ் - மயோறுனா
6 ரு மற்றும் பிரேஸில் சார்ந்த அமேசனில் வாழ்கின்ற ஆதிக்குடிகளில் ஒரு பகுதி மக்களே மற்சேஸ் அல்லது மயோறுனா என்னும் பெயரில் அழைக்கப்பட்டு வருகின்றனர். மற்ரிஸ் மற்றும் கொறுவோ என்னும் இன மக்களும் இவர்களைச் சார்ந்த ஆதிவாசிகளேயாவர். ஜவாரி மற்றும் கல்வெஸ் நதிகளுக்கு இடையில் இவர்களின் சொந்த பூமி உள்ளது. இவர்களது மொழி, மதம், கலாசாரம், நம்பிக்கைகள் ஆகியன கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே
go L6ñTGmTG07.
தற்போது சுமார் 3200 மற்சேஸ் மக்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் பேசுகின்ற மொழி மற்சேஸ் மொழியாகும். இம்மொழி பானோன் (panoan) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. பிரேஸிலில் மற்சேஸ் மக்கள், பொதுவாக மயோறுனா என அழைக்கப்படுகின்றனர். ஆனால் பெருவில் இவர்கள் மற்சேஸ் என அழைக்கப்படுகின்றனர்.
மழைக் காடுகளில் வாழுகின்ற மற்சேஸ் மக்கள் தமது சுற்றாடலில் உள்ள மிருகங்கள் மற்றும் தாவரங்கள் பற்றி நன்கு அறிந்தவர்களாக இருக்கிறார்கள். மிகச் சிறிய அளவிலேயே இவர்களுக்கு இறக்குமதி பொருட்கள் கிடைக்கின்றன.
அவர்களது வாழ்க்கைக்குத் தேவையான பெரும்பாலான பொருட்கள் மழைக் காடுகளில் இருந்தே கிடைக்கின்றன. இற்றை வரைக்கும் இம்மக்கள் மிருகங்களை வேட்டை ஆடுவதற்கு அம்பையும் வில்லையுந்தான் நம்பியிருக்கின்றார்கள்.
மிருகங்களின் ஆவிகளை பெரிதும் நம்புகின்ற மற்சேஸ் மக்கள் யதார்த்த உலகினுக்கும் ஆன்மீக உலகினுக்கும் வித்தியாசமில்லை என்ற கருத்தினைக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் உலகெங்கினும் ஆவிகள் நிறைந்திருப்பதாக நம்புகின்றார்கள். உடல் ஆரோக்கியத்தினையும் வேட்டையாடுதலில் வெற்றியையும் தீர்மானிப்பவை
மிருகங்களின் ஆவிகள் தான் என்பது இவர்களது நம்
பிக்கையாக உள்ளது. அதனால் மிருக ஆவிகளுக்குக் கோப மூட்டக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அத்துடன் பல்வேறு வகையான மிருகங்களை வேட்டையாடுவதில் தடைகளும் வைத்திருக்கின்றனர்.
மற்சேஸ் கலாசாரத்தில், அம்பும் வில்லும் முக்கிய ஆயுதங்களாக விளங்குகின்ற போதும், தனிப்பட்ட மோதல்களில் இவை மிக அரிதாகவே பாவிக்கப்படுகின்றன. சுமார் இரண்டு மீட்டர் நீளமுள்ள அம்புகள் மிகவும் சிறந்த தொழில்நுட்பமும் கலைத்துவமும் கொண்டவையாக விளங்குகின்றன. மற்சேஸைப் பொறுத்தவரை, தாவரங்கள்,
குறிப்பாக மரங்கள் மிக முக்கிய இடத்தைப் பெற்று

Page 11
விளங்குகின்றன. ஒரு தாவரத்தில் இருந்து பெறப்படும் ஒரு பொருள், மருந்தாக உபயோகிக்கப்படுமானால், அது முதலில் வெளிப்பூச்சாக உடலில் பாவிப்பதாகவே அமையும். அத்துடன் குறிப்பிட்ட தாவரத்துடன் சம்பந்தப்பட்ட மிருக ஆவியுடன் மந்திரவாதி ஒருவர் பேசுவார்.
வரலாற்று ரீதியாக, பிரேஸிலின் மற்ரிஸ் ஆதிவாசிகளைப் போல் வேட்டைக்கு கட்டுத்துவக்குகளைப் பாவித்தார்கள் எனினும், சமீப காலமாக அதனை விடுத்து அம்பையும் வில்லையுந்தான் பாவிக்கின்றார்கள்.
மற்சேஸ் குடும்பங்கள் பெரும்பாலும் பலதாரத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கின்றார்கள். திருமணங்கள் பெரும்பாலும் உறவுக்குள்ளேயே நடைபெறுகின்றன. அதாவது தந்தையின் சகோதரியின் (மாமி) மகளை மணக்கும் வழமை நிலவுகின்றது.
கடத்தப்பட்டு கொண்டு செல்லப்படும் பெண்களைத் தவிர, பொதுவாக மயோறுனா பெண்கள் தமது இனத்திற்கு வெளியே திருமணம் செய்துகொள்வது அரிது. இந்த ஆதிவாசிகளிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. அதாவது இவர்கள் வெள்ளைக்காரப்
பிள்ளைகள் உட்படப் பிள்ளைகளைத் திருடிச் சென்று
விடுவார்கள். அவர்களை வளர்த்தெடுத்து, தமது இனத்தின்
அங்கத்தவர்களாக ஆக்கிக் கொள்வார்கள்
தவளை வாந்தி மருந்து கொடுத்தல் மற்சேஸ், மயோறுனா மக்களின் மிக முக்கியமான சடங்காக விளங்கி வருகின்றது. தற்போது தான் இந்த மருந்தின் இரசாயன தாக்கம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஓர் இளம் கணவன் தனது மனைவி குடும்பத்துடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தங்கியிருப்பான். அக்காலத்தில், மாமனாருக்காக வேலை செய்யும் மருமகன், ரேடியோக்கள்,
N
கைக்கடிகாரங்கள், கைத்துப்பாக்கிகள் போன்ற விலை
உயர்ந்த பொருட்களை, தனது மாமன் மாமிக்கு பரிசுகளாகக் கொடுக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கப்படுகிறான்.
மற்சேஸ் மக்கள் வெளி உலகுடன் நிரந்தர தொடர்பு கொள்ள முனைந்தது 1969 ஆம் ஆண்டிலாகும். அப்போது அவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகளை தமது சமூகத்தின் மத்தியில் வர அனுமதித்தார்கள். அதற்கு முன்னர் அவர்கள் பெருவியன் அரசாங்கத்துடன் போர் புரிந்து கொண்டு இருந்ததினால், அரசாங்கம் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் நேபாம் குண்டுகளை வீசி அழித்தது. அத்துடன் அச்சமூகங்களை முற்றுகையிட தனது படைகளையும் அனுப்பிவைத்தது. ஆனால் தற்போது மற்சேஸ் மக்களுக்கும் பெருவிய அரசுக்கும் இடையில் சுமுக உறவு நிலவுகின்றது.
அவர்கள் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டிருக்கவில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு தலைவர் இருப்பார்.

鹽
聽
露

Page 12

இந்த ஆதிவாசிக் குழுக்களைக் கட்டுப்படுத்த மத்தியில் அமைந்திருக்கக் கூடியதாக அமைப்பு ஏதும் இல்லை.
மற்சேஸ் இந்தியப் பெண்கள் தமது மூக்கின் மீது பூனையின் மீசை போன்று ஒரு அணியைப் பொருத்திக் காணப்படுவார்கள். அதனால் அவர்கள் 'பூனை மக்கள் என்றும் சாதாரணமாக அழைக்கப்படுவார்கள்.
தற்போது பெருவின் ஜவாரி பள்ளத்தாக்கிலும் பிரேஸிலிலும் சுமார் 2200 மற்சேஸ் மக்கள் வாழ்கின்றார்கள். பெரும் பான்மையானவர்கள் பெரு நாட்டில் தான் வாழ்கின்றனர்.
முகத்தில் வரி வரியாக பச்சை குத்திக் கொள்ளுதல் இவர்களது வழக்கமாகும். வாயைச் சுற்றிச் செல்லும் வரிகள் பின்னர் கன்னங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு காதுகளின் கீழ்ப்பகுதியில் முடிவடையும்.
ஆண்கள் தமது கிராமங்களில் உள்ள அன்னற்ரோ மரத்தின் விதைகளில் இருந்து கிடைக்கும் சிவப்பு மையை முகத்திலும் உடலிலும் பூசிக்கொள்வர். அத்துடன் ஒலைகளால் செய்யப்பட்ட தலைப் பட்டியையும் அணிந்து கொள்வர். இந்த அணிகளில் தீட்டப்படும் வடிவங்கள் அவர்களது சமூகத்தின் பிரிவுகளைக் குறிப்பதாக அமைந்திருக்கும். தலைப்பட்டியை ஆண்கள் மட்டுமே அணிந்திருப்பர். முன்னர் இடைப் பட்டிகளாக
அணிகளைப் பாவித்திருந்தனர்.
வெள்ளை இன குழந்தைகளை திருடிச் சென்று, வளர்த்தெடுத்து, தமது இனத்தின் அங்கத்தவர்களாக ஆக்கிக் கொள்ளும் ஆதிவாசிகள்.
இந்த மக்களது வீடுகளில் பொதுவான வளர்ப்பு பிராணியாக பெலிஜோ என்னும் தேவாங்கு காணப்படும். பாடகர்களின் வைபவங்களில் பெலிஜோ முக்கிய இடத்தைப் பெறும். கொகுமாக் என்று கூறப்படும் இப்பாடல் வைபவத்தில் பாடகர்கள் தலையில் இருந்து பெருவிரல் வரை கையில்லாத தளர்ந்த ஆடையால் தம்மை மூடியிருப்பர். ஆவிகள் என்று கூறப்படும் இவர்கள், பெண்களுக்கு விசேடமாக பெலிஜோவை வழங்குவர்.
மற்சேஸால் மேற்கொள்ளப்படும் மற்றுமொரு சடங்கு தவளை வாந்தி மருந்து கொடுப்பதாகும். அவர்களைப் பொறுத்தவரை, தவளை வாந்தி மருந்து என்பது நஞ்சு அல்ல, அது ஒரு மருந்தாகும். பெரும்பாலும் உள்ளூர் மருந்துகள், வாந்தி மருந்து கொடுப்பதன் மூலம் தான் ஆரம்பிக்கப்படுகின்றன. இந்தத் தவளை, அமெரிக்க மழைக் காடுகளில் உள்ள ஒரு மரத்தில் வாழ்வதாகும் இந்தத் தவளையின் தோலில் இருந்து வெளியாகும் பிசின் போன்ற பதார்த்தத்தை கைகளிலும், நெஞ்சிலும் ஒரு சிறு புள்ளி இடத்தை நெருப்பினால் சுட்டு அவ்விடத்தில் ஏற்றுகின்றார்கள்.
இதன் மூலம் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. மயக்கம் ான்றுகின்றது, வாந்தி வருகிறது ஒய்வு எடுத்துக் கொண்ட

Page 13
பின், அந்த நஞ்சு மருந்தைப் பெற்றுக் கொண்டவர், வேட்டைக்குச் செல்லத் தயாராகிறார். இதை இம்மக்கள் வேட்டை மாயாஜாலம் என்கிறார்கள். வேட்டை ஆடுபவரின் சக்தியை இச்சிகிச்சை மேலும் அதிகரிக்கச் செய்வதாக அவர்கள் நம்புகின்றனர்.
பல நூற்றாண்டுக் காலமாக மற்சேஸ் மயோறுனா மற்றும் மற்ரிஸ் ஆதிவாசிகளினால் இத்தவளை மருந்துச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனினும், மிகச் சமீபத்தில் தான் விஞ்ஞானிகளுக்குத் தெரிய வந்திருக்கிறது. இந்த விஷத்தின் இரசாயனப்பொருட்கள் எவ்விதம் மனித உடலில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்பதனை விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கியிருக்கிறார்கள்.
தவளை நஞ்சு மருந்தை உடலில் ஏற்றி, சக்தியை அதிகரிக்கச் செய்து சுறுசுறுப்பாக வேலை செய்வது என்பது அம்மக்களைப் பொறுத்தவரை மிக முக்கியமான ஒரு சடங்காகவே கருதப்படுகிறது. பில்லோமெடுஸா பைகலர் (phylomedusa bicolour) எனப்படும் இத் தவளை இனச் சேர்க்கைக்காகச் சத்தமிடும்போது, மற்ஸேஸ் அதனை செவிமடுத்து இலகுவாக இத்தவளையைப் பிடித்து விடுகிறார்கள். அவ்விதம் பிடித்துவந்து கூண்டில் அடைத்து வளர்க்கும்போது, விஷத்தை உற்பத்தி செய்யும் திறனை அத்தவளை இழந்து விடுகிறது.
நாடோடிகள் போன்றே வாழும் மற்சேஸ், தமது சீவியத் துக்கு வேட்டையாடுதலையும், மீன் பிடித்தலையுமே நம்பியிருக்கிறார்கள். அத்துடன் தமக்கு தேவையான அளவில் விவசாயத்தையும் மேற்கொள்கின்றார்கள். இருப்பினும் ஓரிடத் தின் வளம் குறைந்து போகும்போது வேறிடத்துக்குச் செல்கின்றார்கள்.
இவ்விதம் வேட்டையாடும் காலத்தில் சிறுசிறு குடில்களை அமைத்து வாழ்ந்திருப்பார்கள். குடில்களுக்குப் பக்கத்தில் வாழைகள், மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றைப் பயிரிடுகின்றார்கள். தம்மோடு எதுவித தொடர்புமில்லாத நீளமாகத் தலைமுடி வளர்த்த உள்ளுர்வாசிகள் சிலர் வந்து தமது விவசாயப் பொருட்களை அபகரித்துச் செல்லுகிறார்கள் என அண்மையில் இவர்கள் புகார் கூறினர்.
/998 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உள்ளுர் காணி ஒதுக்கீட்டில் மற்சேஸ்"க்கு உரிமைப் பத்திரங்கள் உள்ளன. இருப்பினும் இவர்களது வாழ்க்கை நிலைமைகள் சீரழிந்துள்ளன. இம்மக்கள் தொடர்ந்தும் வாழ்ந்திருப்பது கஷ்டம் எனக் கூறும் அளவுக்கு வாழ்க்கை நிலை மோசமடைந்துள்ளது எனக் கூறப்படுகிறது
Y - ஜெனிஷா


Page 14
អ៊ែងហ្គ្រាម៉ាអៃ 鑫 14 ប្រៀបប្រែ ពេញ
பஞ்சேஸ்வரங்க தேவநகர் தெ
லங்கையைச் சிவபூமி என்றார் திருமூலர். புத்த பிரான் இ. தினத்தன்றே இலங்கையில் கரையொதுங்கினான் விஜயன் என்று கூறப்படுகின்றது. விஜயனுடன் கரையொதுங்கியவர்களில் ஒருவரான உபதிஸ்ஸன் என்கின்ற பிராமணர் இலங்கையில் நான்கு திசைகளிலுமிருந்த ஐந்து சிவாலயங்களைச் சென்று தரிசித்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது புத்த பிரான் அவதரிப்பதற்கு முன்பே இந்நாட்டில் சிவ வழிபாடு சிறந்தோங்கியிருந்தது என்பது கூறப்பட்டுள்ளது.
உபதிஸ்ஸன் சென்று வழிபட்ட சிவத்தலங்கள் ஐந்தும் இன்று பஞ்சேஸ்வரங்கள் என்று கூறப்படுகின்றன. அவை வடக்கே நகுலேஸ்வரம், கிழக்கே திருக்கோணேஸ்வரம், தெற்கே தொண்டீஸ்வரம், மேற்கே முன்னேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் என்பவையாகும். இவ்வைந்து சிவாலயங்களும் போர்த்துக்கேயரால் சிதைத்தழிக்கப்பட்ட போதும் தொண்டீஸ்வரம் தவிர்ந்த ஏனைய நான்னு
ஈஸ்வரங்களும் மீண்டும் தமது பண்டைய சிறப்புடன்
இன்றும் துலங்குகின்றன. ஆனால் தொண்டீஸ்வரத்தின் நிலை வேறுபட்டுள்ளது.
இலங்கையின் தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தின் தென்முனையில் உள்ளது தேவேந்திரமுனை. பருத்தித்து றையை தீவின் வடக்கெல்லையாகக் குறிப்பிடு வது போன்று தெற்கெல்லையாகத் தேவேந்திர முனை குறிப்பிடப்படுவது வழக்கிலுள்ளது. பருத்தித்துறை யில் உள்ள சிவாலயம் பசுபதீஸ்வரம். அதுபோல் தேவேந்திர முனையில் இருந்தது தொண்டீஸ்வரம் சந்திரசேகரேஸ்வரம் என்றும் குறிப்பிடுகின்றது.
போர்த்துகேயரின் வருகையின் முன்னர் இலங்கையிலிருந்த இந்துக்களின் மிகப்பெரும் வரலாற்றுச் சிறப்புமிகு தொண்டீஸ்வரத் திருக்கோயில் அவர்களது வருகையின் பின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களில் ஒன்றான ாண்டீஸ்வரம்
னர் சிதைத்தழிக்கப்பட்டது. போர்த்துக்கேயருக்கும் முதலாம்
இராஜசிங்க மன்னனுக்கும் இடையே இடம்பெற்ற போரின் போது இத்திருக்கோயில் சிதைத்துக் கொள்ளையிடப்பட்டது. கி.பி. 1587 இல் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது போர்த்துக்கே யர் ஆலய மூலஸ்தானத்தில் வைத்து பசு மாட்டை வெட்டிக் கொலை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
சீனச் சக்கரவர்த்தியால் இச்சிவாலயத்திற்கு வழங்கப்பட்ட பல பெறுமதி வாய்ந்த பொருட்களும் போர்த்துக்கேயரால் கொள்ளையிடப்பட்டு இன்றும் லிஸ்பன் நகர தொல்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
தென்னிலங்கை கரையினிலே தொன்மை மிகுந்த தொண்டீஸ்வரம் இன்று திருமாலின் திருத்தலமாகப் பிரசித்தி பெற்றுள்ளது. ஈஸ்வரனை மூலமூர்த்தியாகக் கொண்டு விளங்கிய தொண்டீஸ்வரம் இன்று தென்னிலங்கையில் பிரசித்தி பெற்ற விஷ்ணு கோயிலாக சீரமைப்பு செய்யப்பட்டு மக்கள் வழிபாட்டிற்குரியதாக விளங்குகின்றது. -
மாத்தறை நகரத்திலிருந்து இரண்டரை மைல் தொலைவில் மாத்தறை - வுறம்பாந்தோட்டை
வீதியில் தெவிநுவர அமைந்துள்ளது. கடலை மிக அண்டியதாக அமைந்துள்ள தெவிநுவரையில் கடலை எல்லையாகக் கொண்ட இந்து தெய்வமான விஷ்ணு தெய்வத்தை திருத்தலமாகக் கொண்டு பண்டைய  ெத ர ன் டீ ஸ் வ ர ம்
விளங்குகின்றது.
இன்று தெவிநுவர விஷ்ணு தேவாலயம் என்று சிறப்புடன் 6 Ο σβή βού ω (5 ώ இக்கோயில் பெளத்த
சிங்கள மக்களால்
ப க் தி யு ட ன்

Page 15
வழிபாடு செய்யப்படும் இந்துக் கோயில்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. தெவிநுவர என்பதன் பொருள் தேவநகர் அல்லது தெய்வநகர் என தமிழில் பொருள்படுகின்றது. இன்று சிங்கள மொழியில் தெவிநுவர என்று வழக்கிலுள்ள பெயர் ஆதியில் தேவநகர் என்ற தமிழ்ப் பெயரிலேயே அழைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத் தமிழ் மன்னன் ஆரிய சக்கரவர்த்தியை எதிர்த்துப் போரிடச் செல்லு முன் தன் வெற்றிக்காக சப்புமல்குமாரயா என்று கூறப்படும் செம்பகப் பெருமாள் தொண்டீஸ்வரத்திற்குச் சென்று வழிபாடு செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.கி.பி. 1234-/27/ வரை தம்பதெனியாவிலிருந்து ஆட்சி செய்த இரண்டாம் பரக்கும்பா மன்னன் காலத்தில் தொண்டீஸ்வரத்தின் வருடாந்த திருவிழாக்கள் சிறப்பாக இடம் பெற்றிருந்தன. சிறப்பாக இடம் பெற்று வந்த திருவிழா 1587இல் இடம்பெற்ற யுத்தத்தின் பெறுபேறாகக் கைவிடப்பட்டது. மிகப்பெரும் கருங்கற் கோயிலாக விளங்கிய இக்கோயிலின்
கற்களைக் கொண்டே மாத்தறைக் கோட்டை நிர்மாணிக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது. தொண்டீஸ்வரம் அமைந்திருந்தமையால் ஐரோப்பியர்
டொண்றா (Donra point) என்று தேவேந்திர முனையைக் குறிப்பிட்டுள்ளனர். நீர்கொழும்பு என்ற தமிழ்ப்பெயர் நிகம்பு (Negombo) என்று மாறியது போன்றது இந்தப்பெயர் மாற்றம் என்று கொள்ளலாம்.
விஜயன் வந்தபோது இருந்த சிவாலயங்கள் பற்றி றோயல் géfcU (Journal of the royal Asiatic Society) 66/6fc.5"qGö7 வரலாற்றறிஞரான சேர் போல் பிரிஸ் இலங்கையிலிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஐந்து சிவாலயங்களைப்பற்றி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். பஞ்சேஸ்வரங்கள் என்று நாம் போற்றும் அந்த ஐந்து சிவாலயங்களுமே அவை என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கள இனத்தவரான அறிஞர் சேர் போல் பிரிஸ் ஆராய்ந்து எழுதிய கட்டுரை தென்னிலங்கையில் தேவேந்திர முனையில் சிறப்புமிகு சிவாலயமாகத் தொண்டீஸ்வரம் விளங்கியமையை ஆதாரப்படுத்துகின்றது. மாத்தறை மாவட்டத்திலுள்ள பலரின் பரம்பரைப் பெயர்களும் ஆய்வுக்குரியன. சிங்கள பெளத்தர்களாகக் கூறிக் கொள்ளும் அவர்களின் பரம்பரைப் பெயர்களில் தமிழ் தொக்கி நிற்பதை அவதானிக்கலாம். பெருமான் அல்லது பெருமாள் என்ற பதம் பெருமா என்று முடியுமாறு பல பெயர்கள் உள்ளன. நல்ல பெருமா, வீரப் பெருமா இவ்வாறு தமிழ் கருத்துக்களை முன்னதாகக் கொண்டு பெருமா என்று முடிவைக் கொண்டவையாக பெயர்கள் அமைந்துள்ளன.
அன்று சிவ பெருமான் கோயில் கொண்டிருந்த பகுதியில் இன்று விஷ்ணு பொருமாள் கோயில் கொண்டுள்ளார். பெருமானோ, பெருமாளோ இறுதி எழுத்தின்றி மக்களின் பெயர்களில் இணைந்திருப்பது சிறப்பானது. நல்ல, இளைய, பொன்னம், அழக போன்றவற்றுக்கு சிங்கள மொழியில்

#ff
អ៊ែអ្វីក្បែរៃផ្សៃ
శ్లో
15

Page 16

கருத்தில்லை. ஆனால் தமிழ் மொழியில் கருத்துண்டு. தூய தமிழ் மொழியை முதலாகக் கொண்டவர்களாக தென்னிலங்கையில் சிங்கள பெளத்தர்கள் வாழ்வது பண்டைய உறவின்
626)JGrfüU/C GöGUG)J/77
போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு புனித லூசியா தேவாலயம் அமைக்கப்பட்ட தொன்மையான தொண்டீஸ்வரம் இருந்த அதே நிலப்பரப்பில் 1955ஆம் ஆண்டு மூன்று அடுக்குகளைக் கொண்ட விஷ்ணு கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சிவாலயம் விஷ்ணு ஆலயமாக மாற்றமடைந்தாலும் இந்துக்களின் வழிபாட்டிற்குரிய விஷ் ணுவே மூலமூர்த்தியாக இருப்பது இந்து சமயத்தின் பண்டைய பெருமையை மிளிரச்செய்கின்றதென்றே கொள்ள வேண்டும்.
தொண்டீஸ்வரம், சந்திரசேகரேஸ்வரம் என்ற திருப் பெயருடன் சந்திரமெளலிஸ்வரம் என்ற பெயரும் இக்கோயிலுக்குரிய தொன்மையான பெயர்களிலொன்றாகும்.
தற்போது விஷ்ணு கோயிலாக விளங்கும்
தொண்டீஸ்வரத்தின் நிலப்பரப்பில் UG0760) ( (U (LUGU தொன்மையான ஆதாரங்களுள்ளன. அவற்றிலே 4 அடி உயரமும் 2 1/2 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கம், அழகாக வடிவமைக்கப்பட்ட நந்தி, பழைமை மிக்க விநாயகப் பெருமானின் கருங்கல்லினாலான திருவுருவம் மற்றும் நான்கு வரிசைகளாகவுள்ள கருங்கற் தூண்கள் என்பன ஆகும்.
விஷ்ணு கோயிலுக்கு உரித்தற்ற சிவலிங்கமும், நந்தியும் பண்டைய சிவாலயத்தின் இருப்பை உறுதி செய்து வெளிப் படுத்துகின்றன. இவ்வாலய வளவில் சிற்பங்கள் செதுக்கப்பட்ட பல கருங்கல் படிமங்களுமுள்ளன. வரலாற்றுச் சிறப்புக் கொண்டதாகக் கொள்ளப்படும் தெவிநுவர விசித்திரமான விகாரையின் ஒத்பிலிம விகாரையில் மேற்குறிப்பிட்ட சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பிரசித்தி பெற்றதும் இலண்டனிலிருந்து வெளிவருவதுமான 'நியூஸ்லங்கா (News lanka) என்ற வாராந்தர சஞ்சிகையின் /998ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆந் திகதி வெளியிட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
/9/7 இல் பழைமை வாய்ந்த தொண்டீஸ்வரம் தொடர்பாக வரலாற்றாய்வாளர் சேர் போல் பிரிஸ் தனது ஆய்வுக் கட்டுரையின் மூலம் வெளிப்படுத்தினார். 1998 இல் சான்றுகள் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சுற்றாடலில் வேறெந்தவொரு சிவாலயமும் இருந்ததற்கான ஆதாரங்கள் இன்மையும் இங்கு கண்டெடுக்கப்பட்ட சிவாலய சின்னங்கள் பழம்பெரும் தொண்டீஸ்வரத்திற்கே உரியவை என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஆவுடையார் அகப்படாத நிலையில் கண்டெடுக்கப்பட்ட நான்கு அடிகள் உயரமான சிவலிங்கத்தை நோக்கும்போது மூல மூர்த்தியாக விளங்கிய ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கத்தின் பாரிய அளவினைக் கணிக்க முடிகின்றது. அழகுற
வடிவமைக்கப்பட்ட நந்தியின் திருவுருவம் பிள்ளையார்

Page 17
கோயிலுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்நந்தியின் திருவுருவம் பல்லவர் காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது.
பிள்ளையார் கோயிலில் திரைச்சீலையால் மூடி மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது பண்டைய பிள்ளையாரின் திருவுருவம், கருங்கல்லாலான பெரிய அளவைக் கொண்ட மேற்படி திருவுருவம் (மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவும் பண்டைய திருக்கோயிலின் ஆதாரச் சின்னமாக விளங்குகின்றது.
அடுத்ததாக பண்டைய சிவாலயத்தின் இருப்புக்கும், வரலாற்று நிகழ்வுக்கும் கட்டியம்கூறி நிற்பவை நான்கு வரிசைகளில் வரிசையாகவுள்ள கற்றுரண்களாகும். புராதன சின்னங்களாகக் கொள்ளப்படும் இக்கற்றுரண்கள் போர்த்துக்கேயரால் சிதைக்கப்பட்ட தொண்டீஸ்வரத்தின் மண்டபத் தூண்களாகும். இதன் மூலம் கருங்கற்றுரண்களைக் கொண்ட பிரமாண்டமான மண்டபங்களைக் கொண்டதாகத் தொண்டீஸ்வரம் விளங்கியுள்ளது என்பது சான்றுகளுடன் வெளிப்படுகின்றது.
இன்று இக்கோயில் வளவிலே விஷ்ணு பெருமான் மூலவராக வீற்றிருக்க விநாயகர், முருகன், சூரியன், அம்மன் உட்பட பல இந்துத் தெய்வங்கள் அமர்ந்து அருள் செய்கின்றன. ஒருபுறம் பழைமையும் பெருமையும் கொண்ட காலி மீனாட்சி சுந்தரேஸ்வரமும் மறுபுறம் தமிழ்த் தெய்வமென்று போற்றப்படும் கதிர்காமக்கந்தன் திருத்தலமும் அமைந்திருப்பது தேவநகர் தொண்டீஸ்வரத்திற்கு மேலும் சிறப்புச் சேர்க்கின்றது. மூலவராக விஷ்ணு விற்றிருக்கும் மண்டபத்தில் விஷ்ணுவின் அவதார மூர்த்தங்கள் அழகுறச் சித்திரிக்கப்பட்டுள்ளன. வராக, நரசிம்ம, பரசுராம, கிருஷ்ண இராமச்சந்திர என்று சகல அவதாரங்களும் சித்திரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் புத்தரும் அடங்குகின்றார்.
ஆண்டுதோறும் ஆடிமாதம் வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இலங்கையில் பிரசித்திபெற்ற சமயத் திருவிழாக்களில் தெவிநுவர விஷ்ணு ஆலய வருடாந்த மகோற்சவம் சிறப்புப் பெறுகிறது. தென்னிலங்கையின் காவல் தெய்வமாகப் போற்றப்படுபவரும் விஷ்ணுபகவானே. இதனால், தென்மாகாணத்தின் சிறப்பு மிகு திருவிழாவாக இலட்சக் கணக்கானவர்கள் கலந்து கொள்ளும் பெருவிழாவாக இவ்வாலய மகோற்சவம் இடம் பெறுகின்றது.
மூன்றாம் சங்ககாலம் அதாவது கடைச்சங்க காலத்தில் ஆக்கப்பட்டது சிலப்பதிகாரம் என்றும் தமிழுக்கு அணிசேர்க்கும் காவிய நூல். இளங்கோ அடிகளார் ஆக்கப்பட்ட இக்காவிய நூலிலுள்ள பாடல்களுக்கு மேற்குறிப்பிட்ட விஷ்ணு ஆலய மகோற்சவத்தின்போது சிறப்பிடம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவுள்ளது. இது சிலப்பதிகாரத்திற்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை தருவதாயுமுள்ளது.


Page 18
கலைக்கேசரி தீ 18
ஆண்டுதோறும் நடைபெறும் மகோற்சவத்தின் போது பத்தினி அம்மனுக்காக யாகம் நடைபெற்று வருகின்றது. வாழை, மா, தென்னங் குருத்துக்களால் எல்லையிடப்பட்டு புனிதப்படுத்தப்பட்ட இடத்தில் மேற்படி பத்தினியம்மனுக்கான யாகம் இடம் பெறுகின்றது.
குடை, கொடிகளுடன் சேமக்கலம், கொம்பு, உடுக்கு, தவில், தம்பட்டை ஆகியவை ஒலிக்க இந்த யாகம் ஆரம்பமாகின்றது. தமிழ் மாமுனி இளங்கோவடிகளால் ஆக்கப்பட்ட சிலப்பதிகாரத்தின் பாடல்கள் பாடப்பட்டு அதற்கேற்ப வாத்தியங்களின் ஒசையும் எழுப்பப்பட்டு இந்த யாகம் இடம்பெற்று வருகின்றது. தமிழ் மொழியில் சிலப்பதிகாரப் U/C G)4, Gir பாடப்பட்டு பத்தினியம்மனின் ஆசி கோரப்படுகின்றது. தென்னிலங்கையின் தென் கரையிலிருந்து தமிழ் இசையுடன் ஆண்டுதோறும் ஓங்கியொலிப்பதை அறியும் போது பெருமிதம் ஏற்படுகின்றது. தமிழச்சி கண்ணகி அறம் காத்து மறம் அழிக்க வல்லவள் என்ற வரலாறு நினைவூட்டப்படுகின்றது.
அன்னதானம் என்று கூறப்படும் மகேஸ்வர பூசை
விசேடமானது. மகோற்சவ இறுதியில் அன்னதானம்
 

வழங்கப்படுகின்றது. அன்னதானம் வழங்கும் வழக்கம் இந்துக்களுக்குரியது என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மகேஸ்வரன் என்ற திருப்பெயர் சிவனுக்கு உண்டு. திருக்கோயில் பெயர் மாறினாலும் சிவனுக்குரிய முக்கிய வழிபாடான , பூசையான மகேஸ்வர பூசை தவறாது தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது.
போர்த்துக்கேயரால் சிதைக்கப்படுவதற்கு முன்பு கடல் பயணிகளுக்கான கலங்கரை விளக்கமாக தொண்டீஸ்வரத்தின் தங்க முலாம் பூசப்பட்டு ஒளி வீசிய கோபுர கலசங்கள் விளங்கி, வழிகாட்டியதாகக் கூறப்பட்டுள்ளமையும் இலங்கையின் வரலாற்றில் இந்து சமயத்தின் தொன்மைக்கு கட்டியம் கூறி நிற்கும் சான்றாதாரமாக விளங்கும் பெருமை பண்டைய தேவநகர் இன்றைய தெவிநுவர திருத்தலத்திற்குண்டு.
பஞ்சேஸ்வரங்களில் ஒன்றான தொண்டீஸ்வரத்தின் பழைமை, மேன்மை, இருப்பு, வளம் யாவும் வெளிக்கொண்டு வரப்படுவதன் மூலம் இலங்கையின் ஆதிக்குடிகளின் வழிபாட்டு முறையை, நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தலாம்.
*
- த. மனோகரன்

Page 19
விண்ஸள் கார்டின் விசாகா வீதி கொழு அமைந்துள்ளது. சுயாதீனமாக வாழ்ந் உணவு சமைத்தல் மற்றும் வீட்டுப் பொ பற்றிய கவலையின்றி வாழ்க்கையை விரும்பும் தனிப்பட்டவர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கி கொடுப்பதே வி டினின் நோக்கமாகும்.
ஆகையால் இத்தகையோருக்கு வின் பல திட்டங்களும் சுகாதார பராமரிப் இணைந்த வாழ்க்கை தரத்தை நாம் கொருக்கிறோம். பெரிய சொகுசு அறை தனித்துவமான பொது இடங்கள், இ6 ஊக்குவிக்கும் சேவைகள், நீடித்த வ நல்லாரோக்கியம், பாதுகாப்பு போன் வின்ஸள் கார்டின் வழங்குகிறது.
நன்கு பயிற்றப்பட்ட ஊழியர்கள் எமது வசிப்பவர்களுக்கு தினமும் 24 மணி ே அன்பான அரவணைப்பையும் ஆதரன வழங் ாள்கள்.
29/8, Visaka Road, 7. Contact: 077 www.Windsor
 
 

து கொண்டு ாறுப்புக்கள் அனுபவிக்க தொரு
Isrof siri
வயும்
Colombo 04.
33, 5000 fardems. İlk

Page 20
கலைக்கேசரி 20 ஆளுமை
கவியரசர் தாக
/ரலனித்துவ ஆட்சி முறை ஏற்படுத்திய பன்முகமான பண்பாட்டு விளைவுகளின் மேலெழுச்சிகளை இரவீந்திரநாத் தாகூரின் (/86/ - 194/) கலை இலக்கியப் பணிகளிலும் கல்விப் பணிகளிலும் அழகியல் நோக்கி லும் கண்டு கொள்ளமுடியும்.
ஒரு புறம் ஆங்கிலக் கல்வி வழியான புலமை ஊட்டங்களைப் பெற்றுக் கொண்ட தாகூர் மறுபுறம் வங்கத்தின் பண்பாட்டுத் தளங்களில் ஆழ்ந்து வேரூன்றி நின்றார். இந்திய அழகியலை மீட்டுருவாக்கம் செய்தார். இவ்வாறான இருதளப் பயில்வும், அனுபவங்களும், கலை இலக்கியப் புத்
தாக்கங்களுக்கும், பண்பாட்டு மறு மலர்ச்சிக்கும் இட்டுச்
:
 

Lrfløör 9 pafu J6ð
பேராசிரியர் சபா.ஜெயராசா
சென்றன.
அரசியல் நிலையில் /906 ஆம் ஆண்டிலே கல்கத்தாவில் முன்மொழியப்பெற்ற சுயராஜ்யா' என்ற எண்ணக்கரு பண்பாட்டு மீட்புக்கும் மறுமலர்ச்சிக்கும் மட்டுமன்றி மேலைப்புல நவீனப் பாட்டின் நல்லியல்புகளை உள் வாங்குவதற்கும் இட்டுச் சென்றது.
ஆங்கிலக் கல்வியில் ஊறியெழுந்த தாகூர் தாய்மொழிக் கல்வியைச் சகல நிலைகளிலும் உய்த்தெழச் செய்தல் வேண்டுமென்ற வினைப்பாட்டை முன்னெடுத்தமை மிக முக்கியமான ஒரு வரலாற்றுத் தீர்மானமும் நடைமுறையுமாயிற்று. அந்நிலையில் எழு குழாத்தினர் (elite group) மத்தியில் இருவிதமான கல்வி அணுகு முறைகள் இடம் பெற்றிருந்தன. ஒரு சாரார் ஆங்கில மொழி வழிக் கல்வி என்ற ஒரு தலைப் போக்கினை வலியுறுத்த, இன்னொரு சாரார் தாய் மொழி வழிக் கல்வியை வலியுறுத்தி அதனை வளம் செய்ய ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிக் கல்வியை அனுசரணையாக்க கட்டியெழுப்ப முயன்றனர்.
தாகூர் உருவாக்கிய சாந்தி நிகேதன் மற்றும் விஸ்வபாரதி ஆகிய கல்வி நிலையங்களில் கல்வி மொழிக் கொள்கை தெளிவாக மேற்கிளம்பியது. முற்றிலும் ஆங்கில மொழியாட்சிச் சூழல் மேலோங்கிய சமூகத்தில் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தாய்மொழியிலே பேருரை நிகழ்த்திய முன்னோடியாக வும் தாகூர் விளங்கினார். அவரின் முயற்சி தேசிய மொழிக ளுக்குக் கிளரும் வலுவூட்டலாயிற்று. கல்வி மொழி பற்றிய திட்ட வட்டமான தெளிவான கருத்தை முன்வைத்த புலமை யாளருள் தாகூர் தனிச் சிறப்பிடம் பெற்றுள்ளார். அரசி யல் மற்றும் பண்பாட்டு விடுதலை நோக்கிய பெரும் தளத்தில் தாகூர் வங்க நாட்டுக்குரிய தனித்துவத்தை
ஒன்றிணைத்துக் கட்டியெழுப்ப முயன்றார்.
சமூக மற்றும் பண்பாட்டு வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். இனங்களின தும் புலங்களினதும் தனித்துவத்தை நிராகரித் துப் பெரும் இந்திய தேசியத்தை உருவாக்க முடியாது என்ற கருத்திலே தாகூர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். தேசிய இனங் களின் தனித்துவங்களை இழந்து அகன்ற இந்திய தேசியத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற கருத்து எழு குழாத்தினர் ஒரு பிரிவினரிடத்து நிலவிய வேளை அதற்கு எதிரான வினைப்பாட்டினை முன்னெடுத்தவர்களுள் தாகூர் சிறப்பிடம் பெற்று நிற்கின்றார்.

Page 21
இனம் மற்றும் மொழிகளின் தனித்துவங்களின் அடிப்படையிலே ‘தேசியமும், தேசிய தனித்துவத்தின்
அடிப்படையிலே சர்வதேசியமும் கட்டியெழுப்பப்படல் என்ற தாகூரின் கல்விக் கொள்கைகள் எழுச்சி கொண்டன.
தேசிய மொழிகள் தேசியக் கலைகள் முதலியவற்றின் முக்கித்துவங்களை அறிந்திருந்த ஜவகர்லால் நேரு அவர்கள் தனது மகள் இந்திராகாந்தியை தாகூரின் சாந்தி நிகேதனிலே கற்பதற்கு 1930 ஆம் ஆண்டிலே அனுப்பியமை முக்கியத்து வம் பெறும் நிகழ்ச்சியாயிற்று.
தாகூரின் கல்விக் கருத்துக்களோடு மாறுபட்டிருந்த மகாத்மாகாந்தி இந்தியக் கல்வியானது தொழில்களை மையப்படுத்திக் கட்டியெழுப்பப்படல் வேண்டுமென வலியுறுத்தினார். அதாவது தாகூர் கலை, விஞ்ஞானம், அழகியல் முதலாம் பாடங்களை வலியுறுத்த காந்தி தொழில்மையப் பாடத்தை வலியுறுத்தினார். கருத்தியல் நிலையில் தாகூர் இயற்கை வாதத்தை வலியுறுத்த காந்தி பயன்கொள் வாதத்தை வலியுறுத்தினார். இயற்கைக்குத் திரும்புங்கள்’ என்று காந்தி தமது கருத்தை முன்வைத்தார்.
தாகூர் அமைத்த சாந்தி நிகேதன், விஸ்வபாரதி ஆகிய கல்வி நிலையங்கள் இயற்கைச் சூழுலில் அமைந்திருந்தன. மாணவரின் இயற்கையான வளர்ச்சிக்கும் இயற்கையோடு சுதந்திரமாக ஈடுபடுவதற்கும் வாய்ப்புத் தரப்பட்டன. அழகியற் கல்விக்கு அங்கே சிறப்பிடமளிக்கப்பட்டது.
வங்க இலக்கிய வரலாற்றை எழுதுவோர் தாகூர்
காலம்’ என்ற தனிப் பிரிவை ஆய்வு வழியாக அமைத்திருத்தல் குறிப்பிடத்தக்கது. எல்லையற்ற எழிலுக்கு வங்க இலக்கியத்தைத் தாகூர் எடுத்துச்சென்றார்.
தாக
மெய்யியலாளரும் பொருளியலாளரும் நோபெல் பரிசு
பெற்றவருமாகிய அமர்த்யா சென் சாந்தி நிகேதனிலே தாம் கற்றுப் பெற்ற அனுபவத்தைக் குறிப்பிடும் பொழுது குறுகிய மனோபாவங்களைத் தகர்த்து அகன்று விரிந்த பெரும் மனப்பாங்கைத் தாம் வளர்த்துக் கொள்வதற்கு அந்தக் கல்வி நிலையம் தளமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விஸ்வபாரதியிலே தாம் கற்ற அனுபவங்கள் பற்றிப் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் சத்தியஜித்ரே அவர்கள் குறிப்பிடும் பொழுது, தனது கலை நோக்கினுக்குரிய சாளரத்தை அந்நிறுவனமே அகலத் திறந்து தந்தது என் குறிப்பிட்டுள்ளார்.
தாகூர் முன்னெடுத்துச் சென்ற இயற்கை தழுவிய கல்வி அழகியல் தழுவிய கல்வி ஆகியவற்றை புகழ்பூத்த குழந்தைக் கல்வியியலாளராகிய மாரியா மொன்ரிசோரி அம்மையார் விதந்து பாராட்டினார். அங்கு பயிலும் மாணவர்
மேலைப்புல மானவரைக் காட்டிலும் மேலான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

& கலைக்கேசரி 21
భ°ణభు. -29 كمين.
சிக்மண்ட ஃப்ராய்டுடன் தாகூர்

Page 22
கலைக்கேசரி கீ 22
உணர்வுகளையும் உறுபற்றுகளையும் (sentiments) உரிய முறையில் வளர்த்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.
வங்க இசை மரபிலும் நாட்டார் மரபுகளிலும் ஆழ்ந்து ஊறியி ருந்த தாகூரின் கவிதைகள் அவற்றோடிணைந்த 'செழுங்கல வைகளாக' முகிழ்த்தெழுந்தன. இவ்வகையிலே பாரதிக்கும் தா கூருக்குமிடையே பல நிலை ஒப்புமைகளைக் காணும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேராசிரியர் கைலாச பதி அவர்கள் அந்த இரு மகா கவிகளையும் ஒப்பியல் நோக்கில்
விாைத்தினார்.
பாரதியார் தமது காலத்திலே புரண்டெழுந்த புதிய அனுபவங்களைக் கவிதை வடிவிலாக்கம் செய்யச் சிந்து வடிவத்தைச் செப்பமாக எடுத்தாண்டார். அவ்வாறே வங்கத்தின் புதிய அனுபவங்களை வெளிப்படுத்த தாகூரும் மரபு வழியான வங்கத்து இசை பொதிந்த கவிதைகளை ஆக்கம் செய்தார்.
ஆங்கில ஆட்சியின் பண்பாட்டு எதிர் விசைகள் சுதேச அழகிய a) மீட்டுருவாக்கம் செய்யும் வினைப்பாடுகளை ー முன்னெடுத்தன. தாகூர் மேற்கொண்ட மீட்டுருவாக்கல் வங்க இலக்கிய வரலாற்றிலே தனித்துவமான விசைகளை ஏற்படுத்தி
யது. வங்க இலக்கிய வரலாற்றை எழுதுவோர் தாகூர் காலம்'
என்ற தனிப் பிரிவை ஆய்வு வழியாக அமைத்திருத்தல்
குறிப்பிடத்தக்கது. எல்லையற்ற எழிலுக்கு வங்க இலக்கியத்தைத் தாகூர் எடுத்துச்சென்றார்.
 

கீதாஞ்சலி, சித்ரா, சதனா, கபீர் பாடல்கள், கனிசேகரம், தப்பி ஓடுபவர், ஆக்க ஒருமை, மின்மினிகள், மனிதன், மதம் முதலாம் பல நூல்களை அவர் எழுதினார். அழகியல், கல்வி, சமயம், சமூகம், நாட்டுப்புற வாழ்க்கை, தேசியம், அனைத்துலக நோக்கு, மானிட நேயம் முதலாம் பல்லேறு உள்ளடக்கங்களை அவரது எழுத்தாக்கங்கள் தழுவி எழுந்தன.
பழைமையும் இந்தியப் பெருநிலப் பரப்பில் நிகழ்ந்த புதுமையின் மோதல்களும் தாகூரின் புலக்காட்சியிலே தோற்றுவித்த சலனங்களைப் பின்வரும் கவிதையிலே
கானலாம்.
அமைதி யற்ற நான்
எட்டாத பொருள்களின் மேல்
வேட்கையுடையவனா யிருக்கிறேன்
தொலை தூரத்தைத் தொடவிரும்பி
என் மனம் வெளியேறிவிட்டது ஓ, எட்டாத ஏந்தலே, நின் குரலெழுப்பும் ஆர்வக் குரலின் அழைப்புத்தான் என்னே!
இறக்கைகள் அற்ற நான் இந்த நிலத்தோடு கட்டுண்டவன் என்பதை மறந்து விடுகிறேன்! மறந்தே விடுகின்றேன்!

Page 23
இயற்கை நயப்பும் அந்திய மரபு வழி வந்த மறை ஞான மும், வங்கத்துப் பாரம்பரிய இசையும் அவரது கவிதைக ளிலே வியாபித்து நின்று சலனங்களை ஏற்படுத்தின.
தாகூரின் கீதாஞ்சலி அவருக்கு அகிலக் கவிஞர்' என்ற உச்சத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இசையமைவும், ஒத்திசைவுமாய் அவரது கவிதை வெள்ளம் கீதாஞ்சலியில் வெளிவந்தது. அது கவிதைத்தன்மை (poesy) மிக்கெழுந்த படைப்பாக அமைந்துள்ளது. அவ்வகையில் பாரதியும் தாகூ ரும் ஒன்றிணைந்து கொள்கின்றனர். முடிவறியா நிலையிலெனை முதல்வா, நீ படைத்துவப்பாய் - ஏன்? அதுவே நின் பெருவிருப்போ' என்று கீதாஞ்சலி தொடக்கம் பெறுகின்றது. கீதாஞ்சலியின் மூல வங்க மொழியாக்கம் கீதமயமானது. கவிஞரின் ஆங்கில மொழி பெயர்ப்பு அனேகமாக அஞ்சலி மயமானது என்ற திறனாய்வும் முன் மொழியப்பட்டுள்ளது.
கீதாஞ்சலி என்பது கவிதைவாயிலாக இறைக்கு மலர் குடலாகின்றது. (song offerings) அது பக்திப் பாமாலை ஆகின்றது. நாயன்மாரும் ஆழ்வார்களும் உருவாக்கிய பக்திப் பாமாலை சூடும் மரபு இசை வடிவிலே பாரதி பாடல்க ளிலும், வெளிப்பாடு கொண்டன. அந்த புதிய வளர்ச்சிக்கு ஒப்புமையாகக் கீதாஞ்சலி அமைந்தது.
தாகூர் நித்திய அழகியல் இன்பத்தைத் துதித்தார். அழகியற் கல்விக்கு ஊன்றிய விசையை வழங்கினார்.
அழகே, நின் நாமம் எப்போதும் ஒளிர்வதாக! நின் திருவுள்ளம் நிறைவேறட்டும் நின் ராஜ்யம் மிளிர்வதாக! நின்னருகில் வேறெந்தத் தெய்வமும் வழிபாடுபெறாது உன்னை ஒருமுறை தரிசித்து உணர்ந்தால் போதும் மரணம் நம் வாழ்க்கையின் சிற்றகலை அணைத்தாலும் சரி பரமானந்தம் எங்களுக்குக்கிடைத்தது. கவலையே இல்லை' அழகியல் கல்வி சிந்தனைகளுக்கு தாகூர் புதிய வளமும் வலுவும் தந்தார்.
தாகூரின் சிந்தனைகள் அழகியற் கலைக் கூடங்களை நிறுவும் செயற்பாடுகளுக்கு உற்சாகம் தந்தன. இலங்கையின் அழகியற் கல்விச் செயற்பாடுகள் எழுச்சி கொள்வதற்கும் தாகூரின் உரையாடல்கள் முன்னுதாரணங்களாக அமைந்தன. இந்நாட்டின் புகழ் மிக்க இசை நடன ஆசிரியர் பலர் சாந்தி நிகேதனில் கற்று வநதமை குறிப்பிடத்தக்கதுது
ஜ்fs
 

盡。 55ញញថាម៉ែធ្វើអ្វី
23
தனது குடும்பத்தாருடன் தாகூர்
این نیوبر ---- کسی....................................... سمسم سر سب سے
%ჯჯვა.ఇర్కో _r"|
தாகூர் பெற்றநோபெல் பரிசின் இரண்டு பக்கங்கள்

Page 24
ឆ្នាអែអ្វី 鑫 24 தொல்லியல்
10-11ஆம் நெடுந்தீவு புக்கா
CCV/Tழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள நெடுந்தீவைப் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நெடுந்தீவு தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளில் வரலாற்று ஆசிரியர்களும், தொல்லியலாளர்களும் அதிக ஆர்வம் காட்டவில்லை. எனவே வரலாற்று ஆசிரியர்களையும், தொல்லியல் ஆய்வாளர்களையும் அதிகம் ஈர்க்காத ஒர் இடமாக நெடுந்தீவு உள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கிட்டத்தட்ட 38 கடல் மைல் தொலைவில் உள்ள நெடுந்தீவானது, வட இலங்கையில் உள்ள தீவுகளில் மிக நீளமான தீவுகளில் ஒன்றாகும். கிட்டத்தட்ட 8 கிலோ மீற்றர் நீளமும், 6 கிலோ மீற்றர் அகலமும் கொண்ட இத்தீவில், அண்ணளவாக 7000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். முழுமையான கடல் வழி சார்ந்த தொடர்புகளை மட்டுமே இத்தீவு கொண்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்தை இணைக்கக் கூடிய எந்தவொரு தரை வழித் தொடர்பும் இங்கில்லை. இவ்விடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பலர் கல்வியில் சிறந்து விளங்கிப் பல பொறுப்பு வாய்ந்த துறைகளில் இருந்தாலும், கல்வி கற்ற பின்னர் அங்கு வசிப்பதில்லை. சில வர்த்தகர்களும், கடல் சார்ந்த தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுமே தற்போதும் அங்கு வசிக்கிறார்கள்.
இந்து கலாசார அமைச்சில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள்
 
 

ாண்டைச் சேர்ந்த
டு இந்து ஆலயம்
பேராசிரியர் புஸ்பரட்ணம் “போர்த்துகேயர் வருகையின் பின்னர் அல்லது /6ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் வட இலங்கை வரலாற்று ஆய்வுகளில் நெடுந்தீவுக்கு ஒரு தனி இடம் உண்டு. யாழ்ப்பாண அரசு
காலத்தில் விஜயநகர் பேரரசுக்கும், யாழ்ப்பாண மன்னர்களுக்கும் இடையிலான குதிரை, காளை முதலிய வணிக நடவடிக்கைகள் இந் நெடுந்தீவு உளடாகவே நடைபெற்றிருப்பதாகவும், அங்கு பெருந்துறை,
மகாவலித்துறை ஆகிய இரண்டு பெரிய துறைமுகங்கள் இருந்ததாகவும் அறியக் கிடைக்கின்றது.
அத்துறைகளுக்கு அருகில் பெளத்த வழிபாட்டுத் தலங்கள், ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட வெளிச்சக்கூடுகள், கோட்டைகள் முதலியன காணப்படுகின்றன. பரப்பளவு குறைந்த ஒரு சிறிய தீவுக்குள் ஏறத்தாழ 16 கத்தோலிக்கத் தேவாலயங்கள் உள்ளன. ஒல்லாந்தர் ஆட்சி காலத்துக்குப் பின்னர் மக்கள் புரட்டஸ்தாந்து மதத்துக்கு மாற்றப்பட்டமையால் இங்குள்ள சில கத்தோலிக்கத்
தேவாலயங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன.
இவ்வாறானதொரு வரலாற்றுப் பின்புலம் நெடுந்தீவுக்கு இருந்தாலும், நெடுந்தீவின் பழமையான, தொன்மையான வரலாறு இதுவரை வெளிச்சத்துக்கு வரவில்லை. நெடுந்தீவு தனிமைப்படுத்தப்பட்டு, தொலைவில் இருந்த காரணத்தால்
அதன் வரலாற்றுப் பக்கங்களை மீட்டுவதற்கு யாரும் ஆர்வம்

Page 25
ஆலயத்தின் பு
ജ്ഞ:Can அலை ஆத்ஐஜில்
துகை
క్షేత్తిజ్ఞ్కణ్ణి
2 3. శ్లో
శ్లో 羲
జ్లో శ్లో?
த
-C=- கற்றுமதில் --- த்
காட்டவில்லை என்றே கூறவேண்டும். அங்கு போக்குவரத்து மேற்கொள்வதுவும் அபாயம் நிறைந்ததாகவே உள்ளது. மிக அண்மையில் வெளிவந்த 'நெடுந்தீவு லசுஷ்மணன்' என்பவரின் சிறுகதையில் நெடுந்தீவு தொடர்பான சில தொல்லியல் சான்றுகள் வெளியிடப்பட்டிருந்தன. அதன் பின்னரே நாம் இந்நெடுந்தீவை ஆய்வுக்கு உட்படுத்தினோம். அண்மையில் எனது தலைமையில், வரலாற்று மாணவன் கேதீஸ்வரன் மற்றும் தொல்லியல் ஆர்வலர் நெடுந்தீவு நல்லதம்பி சசிகுமார், நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்கள் தேவசுதன், தயாகரன், பகீரதன் ஆகியோர் இணைந்து அங்கு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வின் போது அங்குள்ள புக்காட்டுப் பகுதியில் அழிவுண்ட நிலையில் ஏறத்தாழ நாற்பது அடி நீளமும், பத்தடி அகலமும் கொண்ட ஆலயமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' எனப் பேராசிரியர் கூறினார்.
இவ்வாலயம் தொடர்பான ஆய்வை மேற்கொண்டுவரும் பேராசிரியர் புஷ்பரட்ணம் இவ்வாலயம் தொடர்பாகக் கருத்து தெரிவிக்கையில் “இவ்வாலயம் எப்போது கட்டப்பட்டது என்பதை அவ்வூர் மக்கள் கூறமுடியாத அளவுக்கு அதன் தோற்ற காலம் மிகப் பழமையாகக் காணப்படுகிறது. நெடுந்தீவில் நெருக்கமான குடியிருப்புக்களைக் கொண்டுள்ள இப்புக்காட்டுப் பகுதியில் இவ்வாலயம் ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியில் அல்லது ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டிருந்தால் அது பற்றிய வரலாறு அப்பகுதி
 

க் கலைக்கேசரி
25
மாதிரி அமைப்பு
கக் கோவில்கள்
இத்ஜஜ் ജ്ഞ Cഅജ്ഞ C
*శ్లేశ్లో ప్తత్త్వజ్జీ
瞳
jščë så sätế
s
னைக் கோவிலிகள்
দুঃঞ্জ ா)ண கற்றுமதன் மண
துணைக் கோவிலிகள்
மக்களுக்குத் தெரிந்திருக்கும். மேலும் இப்படியான கலை வேலைப்பாடு கொண்ட பெரிய ஒர் ஆலயம் குறுகிய காலத்தில் அழிந்து போவதையும் அவ்வூர் மக்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள். ஆகவே இவ்வாலயம் ஐரோப்பியர் ஆட்சிக்கு முற்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என எடுத்துக் கொள்வதே பொருத்தமாகும். இவ்வாலயம் அதன் சுற்றாடலில் பரவலாகக் கிடைக்கும் சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும், ஆலயத்தின் கட்டட அமைப்பும் குறைந்த நீள அகலம் கொண்ட கர்ப்பக்கிருகம், அந்தராளம் என்பவற்றின் அமைப்பும் /0ஆம், //ஆம் நூற்றாண்டளவில் தமிழகத்திலும், இலங்கையில் பொலநறுவையிலும் கட்டப்பட்ட சோழர்கால ஆலய அமைப்புக்களை ஒத்துள்ளன. ஆலயத்தின் உட்பகுதியில் சிதைவுண்டு காணப்படும் அந்தராளப் பகுதியில் சிறிய அளவில் மேற்கொண்ட ஆரம்ப அகழ்வின் போது கிடைத்த
சிலைகள், புடைப்புச்சிற்பங்கள், அலங்கார வேலைப்பாடுடைய
கற்கள், சுடுமண்ணால் அமைந்த நீர்ப்பாசனக் குழாய்கள்,
ஆலயச் சுற்றாடலில் இருந்து ந.சசிகுமார் கண்டுபிடித்த /0ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் ராஜராஜ சோழன் பெயர் பொறித்த நாணயம் என்பன ஆலயத்தின் பழமையைக் கண்டறிவதற்கு நம்பிக்கையான ஆதாரங்களாக உள்ளன. மேலும் இவ்வாலயத்தின் பழமையைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவ்வூர் மக்கள் இவ்வாலயம் தொடர்பாகத் தந்து உதவ முன்வந்திருக்கும் தொல்பொருட் சான்றுகள் ஆலயம்

Page 26
Esiinnästää
26.
 

தொடர்பான எதிர்கால ஆய்வுகளில் பல உண்மைகளை வெளிப்படுத்த உதவும் என நம்புகிறேன்' என்றார்.
"அப்பிரதேசத்தில் கிடைக்கும் சுண்ணாம்புக்கல், சுதை என்பவற்றைக் கொண்டு கட்டப்பட்ட இவ்வாலயம் மிகச் சிறிய கர்ப்பக்கிருகத்தையும், அந்தராளத்தையும் 24 X /5 அடி நீள அகலத்தில் முகமண்டபத்தையும் கொண்டுள்ளது. மூடுசாந்தினால் அமைக்கப்பட்ட கூரையைக் கொண்ட இவ்வாலயத்தின் கர்ப்பக்கிருகம், அந்தராளம் என்பவற்றின் அத்திவாரத்தையும், சிறிய உயரத்திலான சுவரையும் தவிர ஏனைய பகுதிகள் முற்றாக அழிவடைந்து வெறும் கல்மேடாகக் காட்சியளிக்கிறது. இப்பின்னணியில் கண்டுபிடிக்கப்பட்ட இடிபாடுகள் நிறைந்த பகுதியை அங்குள்ள மக்கள் பெளத்த ஆலய இடிபாடுகளாகத்தான் எண்ணினார்கள். 1987ஆம் ஆண்டு சில பெளத்த துறவிகள், அங்கு சென்று பெளத்த கோவில்களை நிர்மாணிப்பதற்கு முயற்சி எடுத்தார்கள். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. இவ்வாலயத்தைச் சூழ அதிகளவான அரச மரங்கள் நிறைந்து, சோலையாகக் காணப்பட்டமை ஒரு காரணமாகும். இவ்வாலயத்துக்கு மிக அண்மையில் இடிபாடு நிறைந்த பெளத்த ஆலயம் காணப்பட்டமை இரண்டாவது காரணமாகும்.
ஆனாலும் குறித்த கோயிலை ஆய்வுக்கு உட்படுத்தியபோது அக்கோயில் ஒரு இந்துக் கோயில் எனத் துல்லியமாகத் தெரியவந்தது. ஏற்கனவே கூறிய பூநகரி மண்ணித்தலைச் சிவாலயமும் இவ்வாலயமும் கிட்டத்தட்ட கர்ப்பக்கிரகமும், அந்திராளமும் ஒரே அளவைக் கொண்டதாக அமைந்துள்ளன. அதாவது 6 X 6 அடி நீள அகலத்தில் கர்ப்பக்கிரகமும், 6X 6 அடி நீள அகலத்தில் அந்திராளமும் கொண்டதாக இக்கோயில்கள் உள்ளன. ஆனாலும் மண்ணித்தலைச் சிவாலயத்தில் கிடைக்காத சில சான்றுகள் இங்கு செறிந்தளவில் எமக்குக் கிடைத்தன. அவற்றின் மூலம் மண்ணித்தலைச் சிவாலயத்தை விட மிகப் பெரிய கோயிலாக இக்கோயில் அமைந்திருந்தது என்னும் முடிவுக்கு நாம் வரமுடியும். இங்கு கர்ப்பக்கிருகம், அந்திராளம், மகாமண்டபத்தைத் தவிர, ஆறு இடங்களில் பரிவார
தெய்வங்களுக்கு உரிய சான்றுகள் அல்லது அடையாளங்கள் காணப்படுகின்றன. அவற்றைக் கொண்டு உத்தேசமாக வரையப்பட்ட கோயில் கட்டட மாதிரிப்படம் ஒன்று இங்கே தரப்பட்டுள்ளது.
கோயில் கர்ப்பக்கிருகத்துக்கு இரண்டு அடி அல்லது மூன்றடி தூரத்தில் பிரதான வீதி ஒன்று காணப்படுகின்றது. இவ்வாலயத்திற்கு சுற்று மதில் ஒன்றும் இருந்தமைக்கான அத்திவாரமும் ஆங்காங்கு காணப்படுகின்றன. மேலும் இடிவடைந்த நிலையில் ஆலயத்துக்கு உரியதாகக் கருதப்படும் கேணி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு ஆலயத்துக்குரிய சுற்று வீதி இல்லை என்பதுடன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீதி 'ஒல்லாந்தர் வீதி' என்றே அழைக்கப்படுகிறது. குறித்த ஒல்லாந்தர் வீதியானது கிறிஸ்தவ

Page 27
தேவாலயத்துக்குச் சென்று வழிபடும் பொருட்டு நேரடியாக தேவாலயத்துற்கே செல்கிறது. ஆகவே ஆலயம் கட்டிய பின்னரே வீதி போடப்பட்டிருக்க வேண்டும் என்னும் முடிவுக்கு நாம் வரமுடியும். காரணம் என்னவெனில்: விதி நிர்மாணிக்கப்பட்ட பின்னர் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக வீதிக்கும் கர்ப்பக்கிருகத்துக்கும் இடையில் பல அடி தூர இடைவெளி இருந்திருக்கும்’ எனவும் பேராசிரியர் கூறினார்.
“இவ்வாலயத்தை நாம் முதன் முதலாகப் பார்த்தபோது பற்றைகளால் மூடப்பட்ட நிலையில் இருந்தது. பின்னர் அதை துப்பரவு செய்து, ஆய்வுக்கு உட்படுத்தி, மாணவர்களுடன் இணைந்து மிழாய்வு செய்தபோது ஓரளவு இடிபாடு நிறைந்த ஆலய அமைப்பை பார்க்கக் கூடியதாக இருந்தது. அவ்விடத்தை அகழ்வுக்கு உட்படுத்தியபோது அங்கு கோவிலுக்குரிய கோமுகி (தீர்த்தம் செல்லும் இடம்) இருக்கவில்லை. ஆனாலும் அங்கு மேற்கொண்ட தொடர் ஆய்வின் மூலம், அவ்விடத்துக்கு சற்றுத் தொலைவில் புதையுண்ட நிலையில் இருந்த கோவிலுக்குரிய கோமுகியைக் கண்டு பிடித்தோம். கண்டெடுத்த கோமுகியை கோயிலில் பொருத்தி, புகைப்படங்களை எடுத்துவிட்டு அன்றைய ஆய்வு நடவடிக்கைகளை நிறைவு செய்தோம். ஆனாலும் மறுநாள் கோயிலுக்குச் சென்றபோது பொருத்தப்பட்ட கோமுகியை யாரோ எடுத்துச் சென்றிருப்பதை எங்களால் அவதானிக்க முடிந்தது. கோயிலுக்குரிய மிக முக்கிய பகுதியாக விளங்குவது கோமுகி ஆகும். இக்கோயில் கர்ப்பக்கிருகம் இருந்த இடத்தில் ஏதாவது எழுத்துப் பொறிக்கப்பட்ட தகடு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தெய்வம் வைக்கப்பட்ட இடத்தை மிகவும் நுட்பமாக ஆராய்ந்தோம். இறுதியாக தெய்வ பீடம் வைக்கப்பட்ட இடைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தினோம். பூநகரி மண்ணித்தலைச் சிவாலயக் கர்ப்பக்கிருகத்தின் மேற்சுவர் மூன்று அடி அகலமாகவும், மண்டபத்தின் மேற்சுவர் இரண்டரை அடி அகலமாகவும் உள்ளது. பூநகரி மண்ணித்தலைச் சிவாலயத்தைப் போன்று கர்ப்பக்கிரகம், அந்திராளம் ஆகியன ஒரே நீள அகலத்தைக் கொண்டிருந்தாலும், இக்கோயிலின் கர்ப்பக்கிரகத்தின் சுவர் மண்ணித்தலைச் சிவாலயத்தை விடத் தடிப்புக் கூடியதாகவும், மேற்சுவர் தடிப்புக் குறைந்ததாகவும் காணப்படுவது இங்குள்ள சிறப்பம்சமாகும்.
இக்கோயில் மண்டபம் அண்ணளவாக 25 அடி நீளத்தைக் கொண்டுள்ளது. மேலும் நெடுந்தீவு கிராமத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறுபட்ட ஆய்வு நடவடிக்கைகள் மூலம் பல மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன.
கிடைக்கப்பெற்ற COC'U/IGOTC /ija,60)Gm தமிழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பியபோது, அவை /2ஆம், /3ஆம் நூற்றாண்டுக்குரிய மண்பாண்டங்கள் என அவற்றை ஆராய்ந்த பேராசிரியர் இரகுபதி மற்றும் பேராசிரியர் இராஜன்
போன்றவர்கள் காலம் கணித்துள்ளார்கள், கர்ப்பக்கிருகத்தில்

ឆ្នាញ់
27
இருந்து குறிப்பிடப்பட்ட தூரங்களில் சதுரமாக சிறிய துணைக் கோயில்களுக்குரிய அத்திவாரங்கள் காணப்படுகின்றன. மேலும் அங்கு கண்டெடுக்கப்பட்ட தூபி, விமானத்தின் உச்சியில் இருந்த பாகம் ஆகியவற்றின் காரணமாக அக்கோயிலுக்கு சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ ஒரு விமானம் இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும்' எனவும் அவர் கூறினார்.
மேலும் //ஆம், 12ஆம் மற்றும் 13ஆம் நூற்றாண்டுக்குரிய சீன மட்பாண்டங்கள் இங்கு அதிகளவில் கிடைத்துள்ளன. கந்தரோடை போன்று பெருங்கற்காலப் பண்பாட்டுக் குடியிருப்பு ஒன்று இங்கு இருந்துள்ளமைக்கு அடையாளமாக அவை கருதப்படுகின்றன. இக்கண்டுபிடிப்புக்கள் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தை ஒத்த ஒரு குடியிருப்பு அல்லது சாட்டி, வேலணை, ஆனைக்கோட்டை போன்ற ஒரு
குடியிருப்பு நெடுந்தீவிலே ' இருந்தமைக்கு சான்றாக

Page 28
តាវ៉ៅ É 28
அமைகின்றன. மேலும் மணிமேகலையில் கூறப்படும் இடம் (கடல் மைல் கணக்கின் அடிப்படையில்) நெடுந்திவாக இருக்கலாம் அல்லது மணிமேகலையில் கூறப்படும் தமிழ் பெளத்தம் நெடுந்தீவுடன் தொடர்புபட்டதாக இருக்கலாம் என்பதற்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“எது எவ்வாறெனினும் தமிழகத்துக்கும் வட இலங்கைக்கும் இடையிலான உறவின் முதற்படியாக நெடுந்தீவு விளங்கியுள்ளதுடன் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் செல்வாக்குகளின் தாக்கம் நெடுந்தீவில் ஆதிக்கம் செலுத்தியமைக்கு அங்கு கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்கள் சான்றுகள் பகர்கின்றன. மேலும் பிற்பட்ட காலத்தில் நெடுந்தீவு பெற்ற செல்வாக்கும் இங்கு கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். யாழ்ப்பாணக் கோட்டையுடன் ஒப்பிட முடியாவிட்டாலும் மிகுந்த கலை நுணுக்கம் நிறைந்த, ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட
(óla, Ó 600 J/facy கோட்டையாக நெடுந்தீவு கோட்டை முக்கியத்துவம் பெறுகிறது. அதுதவிர கோட்டைக்கு அருகில் தென்கிழக்காசியாவின் //ஆம், /2ஆம் மற்றும் /3ஆம் நூற்றாண்டுகளின் சிறந்த கலை வடிவமாகக் கருதப்படும் புறாக்கூடு' என அழைக்கப்படும் கலையம்சம் நிறைந்த கட்டிடங்களும் இங்குண்டு' எனப் பேராசிரியர் தெரிவித்தார்.
“மேலும் ஒல்லாந்தர் காலத்தில் ஆயுதக் களஞ்சியசாலையாகப் பாவிக்கப்பட்ட இடம் அதிகளவு சேதங்களுக்கு முகம் கொடுக்காமல் இப்போதும் அங்கு காணப்படுவது நெடுந்தீவுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கிறது. கோறைக்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அக்கட்டடத்தில் இருந்து கற்களை பெயர்த்து வேறு கட்டடங்களைக் கட்டியிருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. அங்கு மிக அண்மைக் காலம் வரை சுதை, சுண்ணாம்பு, கோறைக்கற்கள் கொண்டே கட்டடங்கள் கட்டப்பட்டன. பெருந்துறையில் உள்ள வெளிச்ச வீடு போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு அதன் பின்னர் ஒல்லாந்தரால் பாவிக்கப்பட்டு, இப்போதும் நல்ல நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது அவ்வெளிச்ச
 

வீட்டை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒல்லாந்தர் காலத்தில் இராணுவ வர்த்தக நடவடிக்கையின் மையமாக நெடுந்தீவு விளங்கியதுடன், தென்னிந்தியாவின் கிழக்கிந்தியக் கம்பனியுடன் மிக நெருங்கிய தொடர்பையும் வைத்திருந்துள்ளது. அக்காலத்தில்தான் வணிக நடவடிக்கைகளில் குதிரைகள் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தன. ஒல்லாந்தர் காலத்தில் குதிரைகள் வளர்க்க சிறந்த இடமாக நெடுந்தீவு விளங்கிய காரணத்தால் அங்கு குதிரைகள் தண்ணிர் குடிப்பதற்காகக் கட்டப்பட்ட கேணிகளை இன்றும் நாம் காணலாம். நெடுந்தீவுப் பிரதேசத்தில் சீமெந்து கொண்டு மதில் கட்டும் மரபு அல்லது ஒலைகள் கொண்டு வேலிகள் அடைக்கும் மரபு இல்லை. அங்குள்ளவர்கள் கடலில் இருந்து எடுக்கப்படும் கோறைக்கற்களைக் கொண்டு சீமெந்து கலக்காமல் மிக அழகாக மதில்களைக் கட்டியிருப்பார்கள். அவ்வாறு (86)J65? அமைக்கப் பயன்படுத்தப்பட்ட கோறைக்கற்களை நாம் ஆய்வுக்கு உட்படுத்தபோது, அவை புராதன இடிவடைந்த இந்து ஆலயங்களில் இருந்து எடுக்கப்பட்ட கற்கள் என்பதை தெரிந்துகொண்டோம்' எனவும் அவர் கூறினார்.
ஆகவே நெடுந்தீவில் கிடைத்திருக்கும் சான்றுகளை வைத்துப் பார்க்கும்போது, இங்குள்ள ஆலயம் /0 ஆம் - //ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைமையான ஓர் ஆலயமாக விளங்குவதுடன் அதைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும், மீள்நிர்மாணப் பணிகளிலும் நாம் ஈடுபடவேண்டும். இவ்வாலயப் பகுதியில் விரிவான அகழ்வாய்வினை மேற்கொள்வதற்கான அனுமதியை தொல்லியற் திணைக்களப் பணிப்பாளர் கலாநிதி திசநாயக்கவிடம் பெற்றுள்ள பேராசிரியர் புஷ்பரட்ணம் அவர்கள், 6)?602/0762?6ს பல்கலைக்கழக உதவியுடன் தொல்லியற்துறை மாணவர்களுடன் இணைந்து ஆலயப் பகுதியில் 6)წi/fმციJ/7607 அகழ்வுகளை மேற்கொள்ளத்
திட்டமிடப்பட்டுள்ளார்.
தொகுப்பு - உமா பிரகாஷ்

Page 29

oz LZ9|Zs; 699 izgsz osal ‘90 oqu'olol) sayıyıp/wp/fa/M oppo, als po ‘Os L.

Page 30
ក្តាញអ៊ែ 廖
30 நடனக் கலை
வாங்கத்தில் விய
● USJT
ரலாற்றுப் புகழ்மிக்க கங்கை நதி இமயத்து உச்சியிலே வேகமாகக் கீழ்நோக்கிப் பாய்ந்து ربوہ مریم کو /62
விரிகுடாவில் கலக்கும்போது வங்கத்தை வளமும் எழிலும் கொழிக்க செழுமைப்படுத்தியே செல்கின்றது. அதன் மக்களோ மிகுந்த மதிநுட்பம் வாய்ந்தவர்கள். தங்களது மரபுவழிப் பண்பாட்டையும் பேசும் மொழியையும் பழக்க வழக்கங்களையும் பெருமையுடன் பேணிவருபவர்கள். இனிய பாடலும் ஆடலும் சிறந்த கவிதையாற்றலும் அவர்களிடம் ஆட்சிசெய்தே வருகின்றது.
யாத்ரா என்பது பவனிபோதல் எனப் பொருள்படுவதாகும். நாடக வடிவத்தையும் இனிமையான பாடல்களையும் கொண்டிலங்கும் இவ்வாடற் கலையானது மேற்கு வங்கத்தில் மாத்திரமன்றி இந்திய உப கண்டத்தில் வங்காள மொழியினைப் பேசுகின்ற மக்கள் நிறைந்த வங்காள தேசத்திலும் பீகார்,
அசாம், ஒரிசா மற்றும் திரிபுரா மாநிலங்களிலும் புகழ்பெற்ற
 

ாபித்து வளர்ந்த
151-60TLD
நாட்டார் அரங்கக் கலையாக மிளிர்வதைக் காணலாம். மிக நீண்ட கால வரலாற்றினை யாத்ரா கொண்டிருப்பதாகப் பொதுவாகக் கருதப்பட்டாலும் பக்தி இயக்கம் வங்கத்தில் வேகமாகப் பரவிய காலமான கி.பி 15 ஆம் நூற்றாண்டு முதல்கொண்டே இதற்கான தகவல்கள் பெறப்படுகின்றன. இக்காலத்தே பக்தர்கள் ஆலய வீதிகளில் ஆடிப்பாடி, தங்கள் கடவுளரின் சரிதைகளை இசை கலந்த நாடக வடிவில் ஆற்றுகைப்படுத்தி பக்தியை வெளிப்படுத்தினர்.
யாத்ரா ஆடற்கலையின் வரலாறு தொடர்பிலும் அதனது வரைவிலக்கணம் மற்றும் அர்த்தப்பாடு தொடர்பிலும் ஆய்வாளர்கள் வேறுபடவே செய்கின்றனர். சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு பரதமுனிவரால் எழுதப்பட்ட நாட்டிய சாஸ்திரத்துடன் இதனை இணைத்துப்
பார்க்கவும் செய்கின்றனர். பார்வையாளரைச் சுண்டியிழுக்கும்
அரங்கியல் தன்மையுடன் வங்கத்தின் மூலை முடுக்கெல்லாம்

Page 31
வியாபித்து வளர்ந்த யாத்ராவின் தோற்றம் பற்றியும் காலம் பற்றியும் அறிந்து கொள்ளவேண்டிய விவாதத்தில் பலர் நீண்டதொரு காலத்தைக் கடத்தியிருப்பது இதன் மூலம் அறியவருகின்றது.
யாத்ராவின் சிறந்த நடனக் கலைஞராகவும், இயக்குனராகவும், எழுத்தாளராகவும் விளங்கிய பாணியூரன் வித்யா வினோத், யாத்ரா என்பது கிருஷ்ணனின் வாழ்க்கைச் சரிதையிலிருந்து இசை வடிவில் தோற்றம் பெற்றதெனக் குறிப்பிடுகின்றார். கிருஷ்ணன் பிருந்தா வனத்திலிருந்து தனது வளர்ப்புப் பெற்றோர்களையும் கோவியர்களையும் பிரிந்து தனது மாமனான கம்சனை வதம் செய்வதற்காக மதுராவை நோக்கிச் சென்றதைச் சித்திரிக்கும் பலாசே (ஆட்டம்) யாத்ரா, என்பது அவரது கருத்தாகும்.
வைஷ்ணவத் துறவியான சைதன் யாதேவ் (1485 - 1533) என்பவர் உயர்சாதி மற்றும் தாழ்ந்த சாதி மக்களிடம் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்ட தனது சீடர்களுடன் ஆன்மீகப் பாடல்களை பாடியும் ஆடியும் வீதிகளில் யாத்ரா சென்றதாக அறியமுடிகின்றது. சைதன்யரின் சீடர்களில் ஒருவரான சந்திரசேகர் தனது குரு பற்றிய குறிப்பில், சைதன்யர் ஒருநாள் கிருஷ்ணனின் சரிதையிலிருந்து ருக்மணியை கவர்ந்து செல்லும் சம்பவத்தினை நிகழ்த்திக் காட்டுவதற்காக சதாசிவ புத்தி மந்தா எனும் சீடரை அழைத்து அதற்கான ஒழுங்கினை மேற்கொள்ளச் சொன்னார். ருக்மணியின் பாத்திரத்தையும் அவரே ஏற்றுக்கொண்டார். இதற்கான சிறப்பு மிக்க ஒப்பனைகளையும் ஆடை அணிகளையும் அவரே மேற்கொண்டார். இதுவரை யாருமே நிகழ்த்திக் காட்டாத தன்மையில் இந்த யாத்ரா மிகக் கச்சிதமாக அமைந்திருந்தது எனக் குறிப்பிடுகின்றார்.
சைதன் யாதவ் நிகழ்த்தியதான இந்த யாத்ராவானது முதன் முதலில் 1507 இல் ஓர் இரவு முழுவதும் இடம்பெற்றதாக சைதன்ய பாகவத எனும் தனது நூலில் பிருந்தாயன தாஸ் தகுரா குறிப்பிட்டுள்ளார்.
கி.பி 9ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 12 ஆம் நூற்றாண்டு வரையும் வங்கத்தில் பெரும் சிறப்புற்று விளங்கிய இசை வடிவமான கறியாவே (Carya) இவ்வாறு இசை யாத்ராவாக மாற்றமுற்றதென ஆய்வாளர்கள் கருதுவர். சமகாலப் பகுதியில் இவ்விசை வடிவம் ஒரிசாவிலும் (கலிங்க நாடு) பரவியதோடு கறிய பாடாஸ் (கறியப் பாட்டு) என அழைக்கப்பட்டுள்ளமை தெரிகின்றது. இந்த இசை வடிவத்தின் ஒத்த தன்மையினை உத்தரப் பிரதேசத்தின் நவ்தாங்கியும் மகாராஷ்டிராவின் தமாஷாவும் குஜாரத்தின் பாவைக் கூத்தும் கொண்டிருப்பதைக்
கானலாம்.
யாத்ராவுக்கான அரங்கு அண்மைக்காலம் வரை திறந்த வெளியாகவே அமைந்திருந்தது. திறந்த வெளியொன்றின் மையப்பகுதியை அரங்காகக் கொண்டு நான்கு புறமும் மக்கள்
அமர்ந்திருக்க இது நிகழ்த்திக்காட்டப்பட்டது. இதன் இன்றைய

భ
அரங்கமைப்பு கி.பி 19 ஆம் நூற்றண்டை மையப்படுத்தியதாக அமையும். அசார் எனப் பெயர்பெறும் இவ்வரங்கு பதினாறு அடி சற்சதுரத்தில் இரண்டரை அடி உயரம் கொண்டதாக அமைக்கப்படும். அரங்கின் நேர் எதிரான இருபக்கம் மேடையிலிருந்து அரை அடி பதிவாக அமைக்கப்பட்டு அது வாத்தியக் கலைஞர்களது இருக்கையாகத் தென்படும். ஒருபுறம் மேளம், சல்லாரி, ஜால்ரா கலைஞர்கள் அமர்ந்திருக்க மறுபுறம் புளுட், வயலின், ஆர்மோனியம் மற்றும் கிளரினட் கலைஞர்கள் அமர்ந்திருப்பர். மேளம், சல்லாரி மற்றும் ஜால்ராவே இதன் நீண்டகால தாளவாத்தியக் கருவிகளாக விளங்கியுள்ளன. மேடையின் நான்கு மூலைகளிலும் கம்பு நடப்பட்டு அதில் மிகப் பிரகாசமான நான்கு விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். தொடக்க காலத்தே இது நான்கு மிகப்பெரிய எண்ணெய்ப் பந்தங்களாகவும் பின்னர் பெற்றோமெக்ஸ் விளக்காகவும் தற்போது மிகப் பிரகாசமான மின் விளக்காகவும் அமைகின்றது. மேடையின் ஒரு பக்கம் பெண்களும் ஏனைய மூன்று பக்கங்களும் ஆண்களுமாக அமர்ந்திருப்பர். இது ஒர் கோவில் கூட்டம்போல் தென்படும். மேடையில் ஒர் இருக்கை மட்டுமே இருக்கும். இது பெரிய கல்லாகவோ மரக் குற்றியாகவோ அன்றேல் பலகையால் செய்யப்பட்ட வாங்காகவோ இருக்கும். இது நிகழ்த்துகையின் போது பெண்கள் நீராடும் காட்சியில் ஆற்றுப் படியாகவோ அன்றேல் துணிமணிகளை வைக்கும் இடமாவோ பயன்படும். நிகழ்த்துகையின்போது உபயோகிக்கும்
பொருட்களை வாத்தியக்காரருடன் அமர்ந்திருப்பவர்

Page 32
வைத்திருப்பார் வேண்டியவிடத்து வேண்டிய பொருளை அவர் பார்ை வயாளருக்குத் தெரியாவண்ணம் Gco 60) ( CC96ů
வைத்துவிடுவார்.
அரங்கிலிருந்து சுமார் அறுபது அடி தூரத்தில் ஒப்பனைக் கூடம் அமைந்திருக்கும். அதிலிருந்து மேடைவரை ஒரு பாதை வடிவில் இருபக்கமும் சீராக சுமார் நான்கடி உயரத்தில் மூங்கில் தடி நட்டு மூன்று வரிசையில் கயிறு கட்டியிருப்பர். ஒப்பனைக் கூடத்திலிருந்து நடிகர்கள் மேடைக்கு சென்றுவருவதோடு அந்நடைபாதை அரங்கின் ஒரு பகுதியாகவும் செயல்படும். நாயகி தன் காதலனைப் பிரிந்து துயரத்தில் பாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் செல்வதற்கும் எஜமானன் தன் குறும்புமிக்க வேலையாளை கைத்தடியால் அடிக்கும்போது அவன் வேடிக்கை காட்டி சத்தமிட்டவாறு ஒடிச்செல்வதற்கும் இப்பாதை பயன்படும். மேலும் நிகழ்த்துகையின்போது கோவில் வீதியாக, தெருவாக, ஊர்வலம் மற்றும் படையணிகள் செல்லும்
இடமாகவும் இப்பாதையே பயன்படும். ஜப்பான் நாட்டின் குபுகி
 
 
 

அரங்கின் கனாமிச்சி எனும் பாதையமைப்பையே இது கொண்டமைவதாகக் கருதப்படுகின்றது. மரக் குற்றிகளினால் அமைக்கப்பட்ட நான்கடி அகலமான பூம்பாதை எனப் பொருள்படும் கனாமிச்சி குபுகி நிகழ்த்துகையில் அரங்கின் ஒரு பகுதியாகவே செயல்படுகின்றது.
ஒரு யாத்ரா நடிகர் அவர் நிற்கும் நிலையில் உடல் முன்னோக்கிய வண்ணம் ஒரு கோபுரத்தை ஒத்ததாக நிமிர்ந்த நிலையில் தென்படுவார். அவரது குரலோ மிக்க கம்பீரமாக இருக்கும். ஒரு சிறிய எல்லைக்குள்ளேயே அவர் சுழன்று சுழன்று வருவார். தொடர் ஆற்றுகையின்போது தரையில் அவர் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் மிக்க உறுதி வெளிப்படும். பார்வையோ பார்வையாளர்களைச் சுண்டியிழுக்கும்.
கி.பி 16 ஆம் நூற்றண்டு முதல் கி.பி 18 ஆம் நூற்றண்டு
6) JG0)OCU/7607 காலத்தே பாடல்களையும் நடிப்பையும் முக்கியப்படுத்திப் பல யாத்ராக்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் மிக்க புகழ்வாய்ந்தனவாக பின்வரும் யாத்ரா வடிவங்களைக் குறிப்பிடுவர். 0/. ஜுமர் (Jhumur). இது வசனம் பேசி ஆடுவதுடன் டுயட்
பாடல்களையும் கொண்டது. 02. பஞ்சாலி (Panchali), இதில் ஒருவரே CUATC -25O77956)/gió நடிகராகவும் செயல்படுவார் 03, agasga (Katha katha). gig சமயக் கதையினை ஒருவரே பாடுவது. 04. கீர்த்தன் (Keerthan) பக்திப்
பாடல்கள்
05. கபிகன் (Kabigan): ஒரு சம்பவத்தை நினைவு படுத்துவதாக சித்திரிப்பது. கி.பி 18 ஆம் நூற்றண்டில் யாத்ராவின் சிறப்பு, மிக்க பிரமிப்பை ஊட்டுவதாக அமைந்திருந்தது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அக்காலத்தே கிருஷ்ணனின் கதையை மையப்படுத்தியதாகப் பல பலாசுகள் உருவாகின. புரமானந் சென், ஸ்ரீதன் தாஸ் - சுபோல்தாஸ் சகோதரர்கள் பிராமண குலத்தைச் சார்ந்த மதன் அதிகாரி, சிசுராம் அதிகாரி போன்றவர்கள் அக்காலகட்டத்தே யாத்ராவை ஒரு முறைப்படுத்தப்பட்ட இசை வடிவத்துள் கொண்டு வந்தவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். பொதுவாக வங்காள மக்கள் தீவிரம் மிக்க இசை வடிவங்களிலும் புதுமையான கருத்துக்களிலும் மிக்க ஆர்வமுடையவர்கள். இதனை முக்கியப்படுத்தியதாக கிருஷ்ணனின் சரிதையோடு மட்டும் யாத்ராவை கட்டுப்படுத்துவதை விடுத்து ராமர், சிவன், காளி போன்ற கடவுளரின் கதை கூறும் ராம யாத்ரா, சிவ யாத்ரா, சண்டி யாத்ரா போன்ற யாத்ராக்கள் உருவாக்கப்பட்டன. இவை வரலாற்றுச் சம்பவங்களையும் காதல் நிகழ்வுகளையும்
கொண்டவையாக அமைந்தன. பாரச் சந்திரா எனப்படும்

Page 33
புகழ்பெற்ற கவிஞரால் உருவாக்கப்பட்ட வித்யா சுந்தர் என்ற யாத்ரா மிகப் புகழ்பெற்றதாகும். இளவரசி வித்யாவையும் இளவரசன் சுந்தரையும் கொண்டமைந்த இவ்வடிவம் யாத்ராவில் ஒரு புதிய பாதையை வகுத்தது எனலாம். இதில் நாயகியைக் கவர்ந்து செல்லும் எதிரியைத் தாக்கியழித்தல் பயங்கர திகிலூட்டும் சம்பவங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது.
கி.பி 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்காளம் கிழக்கிந்தியக் கொம்பனியின் வசம் வந்தபோது பொழுதுபோக்கு அம்சங்களிலும் மாற்றம் ஏற்படலாயின. இதன்போது சமய நிகழ்வுகளிலேயே யாத்ரா முக்கியத்துவம் பெறலாயிற்று.
கி.பி 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை யாத்ரா பாடல்களையே முக்கியப்படுத்தியதாக அமைந்தது. இக் காலங்களில் ஆலய முன்றலில் இடம்பெறும் இந்நிகழ்வு முன்னிரவு தொடக்கம் விடிய விடிய இடம்பெறும் நிகழ்வாக மாற்றம் கண்டது. ஒரு யாத்ராவில் சுமாராக ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடல்கள் இடம்பெறலாயிற்று. இதன்பின்னர் யாத்ராவை ஒரு தொழில்முறை அரங்காகவும் நேரத்தைக் குறைத்தும் மாற்றியமைத்த பெருமை கிரிஷ் கோஷ் என்பவரையே சாரும்.
GET 5606uó(35iff DEL
Please complete the form given below, along with your Cheque/
(Ceylon) (Pvt) Limited' and send it to our Head Office at No.185
Tel+94-11-5322700/5738046 Fax:+94-11-5517773 For more details, please contact. Overseas Subscriptions Arju Local Subscriptions S. Sa
Online Payment: www.kalaikesari.com/ Subscr
ORDER FORM : Title
First Nam ۔۔۔۔۔۔۔۔۔۔۔
தி 絮魏。魏囊囊影蕊表鲨籍 ថាបាបាដំរី, a km ട്ലä Հ Institution Manager Subscriptions 2 Apartmen Kalaikesari No. 185, Grandpass Road, Colombo - 14, a Street / RC Sri Lanka. вота,
Tel: +94-11-5322783 / +94-11-5738046
Fax : +94-11-5517773 Country E-mail: subscription (akalaikesari.com AmoUno E
Cheque should be drawin in favour of Mode of
Express Newspapers (Ceylon) (Pvt) Limited
Online Po
 
 

& கலைக்கேசரி 33
இன்று யாத்ரா பொதுவாக நான்கு மணித்தியால நிகழ்வாகவே அமைக்கப்படுகின்றது. இதில் ஆறு தொடக்கம் எட்டுப் பாடல்கள் வரை இடம்பெறும். இதனை யத்ரகன் என அழைக்கின்றனர். இசை யாத்ரா என்பது இதன் பொருளாக அமையும்.
அண்மைய திரைப்படத் துறையின் வளர்ச்சியானது யாத்ராவைப் பெருமளவு பாதிக்கவே செய்தது. எனினும் கிராமப் புறங்களைப் பொறுத்தவரை இதன் வளர்ச்சி குன்றிவிடவில்லை என்றே கூறவேண்டும். மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை 200/ தொடக்கம் 2005 வரையான காலப் பகுதியில் 4000 வரையான யாத்ரா நிகழ்வுகள் இடம்பெற்றிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளமை அதன் பெருமையை உணர்த்தவே செய்யும். இன்று 300 வரையான தொழில்முறைக் குழுவினர்
வங்கத்தில் இயங்குவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
- தாக்ஷாயினி பிரபாகரன் விரிவுரையாளர், நடனத்துறை கிழக்குப் பல்கலைக்கழகம்
IVERED To YoUR HOME
Money Order written in favour of 'Express Newspapers „Grandpass Road, Colombo 14, Sri Lanka.
n-on arjun(o)expressnewspapers.net/Mobile:+94777 801034 Indrasegar – +94 77 5359106 / + 94 - 11 - 5322783
iption
: Mr. Mrs. / Miss Dr. Prof.
0z0zz0000000S000000czY C00000SY00YY00000S00L0000S000000000LSL0zzLLLYLLLLLLSLLLLLLSLLLYYLL 0LL0L0LLL0L0LLLLSSLSSLSSLLSLSLLSS
0000YY000CS00C0C0000C0S0 0C000CC0LSLLCzz00Yz0L0L0LL0L0LLL00000000z0000z00z00LL0SYS000 S000 0000CCCCCC0CCLC LCLCLCSCL0S0
SYYLLLSLLL0LLLLLLLLLLCL0L00L00L00L0L0L000 0000L0000LLLLLL0LLS00LLLLLLL00LLLLLLLLCLLLLLLLLLLLLL LLLLLLLL0L0LLL0LL000S
ναd .................................. ..............
L 0 Y0YC0Y YYCYYYYCCL0L SCSSCSSLLLSLCSLLL0LSLLCYSLLSLLLSLLLCLCLLCLCLCL 0 LL0LLCLS00L C S0 C S 0000 S0L0CYY0Y0 LLYYSSYY000SSYSS0zSYzLSLSLSLzYSLSLLLSLSLSL0SS
SLYCYYLCS0LC0CCC CLLL0000SCC00CC00CCS 00CCCCS 0CL0C0000LLS0LL 00L00LY0SYLLLL0L0LY0SS0LLSSS0LY0LLLYLLLLLLLLSLLL0LLLLS00LYY0S0LY00SYS
nclosed ................................... . . . . . . . . . . . . (12/6 lssues) payment : Cheque / Money Order
yment : www.kalaikesari.com/Subscription
S S S S S S S S S S S S S S S S

Page 34
អ៊ែងហ្វិញម៉ារ៉ៃរឺ 鑫 34 அட்டைப்படக் கட்டுரை
தேரோட்டப் ப கொக்கட்ழச்சோலை த
சங்ககாலத் திருவிழாவும் தேரோட்ட ஆரம்பமும் தமிழர் பண்பாடு பல்லாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் உடையது. உலகின் தொன்மையான நாகரீகங்கள் பல அழிந்து போக திராவிட நாகரீகமும் இந்து சமயமும் இன்று வரை நிலைத்து நிற்கும் பண்பே தனித்துவமானது. கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்துவெளி நாகரீகம் தொடக்கம் இந்து சமய வழிபாடுகளும் திருவிழாக்களும் ஆரம்பித்து விட்டன
எனலாம்.
தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே கடம்பர் வழிபாடும், கடம்ப மரத்திற்கு விழா எடுக்கும் வழக்கமும் இருந்ததை தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்கள் மூலமாகவும் அறிகிறோம். முரசுகளுடன் பேரிகை அடித்து தீவட்டிகள் பிடித்து கடம்ப மரத்தடிக்குப் போய் அலங்கரிக்கப்பட்ட கடம்ப மரத்தை வழிபட்டதை சங்க இலக்கியங்கள் தெளிவாகத் தருகின்றன. சங்க காலப்பரிபாடலில் இப்படி வருகிறது.
தேம்படு மலர் குழை பூந்துகில் வடிமணி
ஏந்திலை சுமந்து சாந்தம் விரை
 

ாரம்பரியமும் ான்தோன்றிஸ்வரமும்
விடையரை யசைத்த வேலன் கடிமரம் பரவின நரையொடு பண்ணின விசையினன் விரி மலர் மதுவின் மரநனை குன்றுத்துக் கோலெரி கொளை நறை புகை கொடி யொருங்கெழ
(Ufu7_6ů /7 : / - 6)
இது கடம்ப மரத்தினை வழிபட்டதைக் காட்டும் சங்கப் பாடலாகும். கடம்ப மரத்தினை நோக்கி கோல் விளக்குகள், இசைக்கருவிகள், சந்தனம் நறுமணம், தூபம் கொடிகள் ஆகியவற்றோடு மலர் தளிர் பூந்துகில், மணி, வேல் ஆகியவற்றைச் சுமந்து வந்து கடம்ப மரத்தின் கீழ் வழிபட்டதை இப்பாடல் காட்டுகிறது. இத்தகைய நிகழ்வுகளே காலப் போக்கில் திருவிழாக்களாக தேரேட்டங்களாக, உற்சவங்களாக, ஊர்வலங்களாக பரிணமித்தன. இத்தகைய பரிமாணமானது
இன்று எல்லாக் கோயில்களிலும் வளர்ந்திருந்தாலும் தேரோட்ட
வரலாற்றிலே சிறப்புப் பெறுவது தான்தோன்றிஸ்வர தேரோட்ட நிகழ்ச்சியே ஆகும்.

Page 35
அட்டைப் பட விளக்கம் :
யாழ்ப்பாணம், சுன்னாகம் சிவன் கோயிலில் 1992 ஆம் ஆண்டு கலாயேயி ஆறுமுகம் தம்பித்துரை என்பவரினால் கட்டப்பட்ட தேரில் உள்ள தத்ரூப குதிரைச் சிற்பங்கள் வை. யாழ்ப்பாண நாகர இரட்டைப் பஞ்சாங்க மரபில் அமைக்கப்பட்ட முதலாவது தேர் என்ற பெருமையை சுன்னாகம் சிவன் கோயில் தேர் பெற்றுள்ளது. தேர் வடிவமைப்பில் உருவரை, பிரம்மா அல்லது பிரம்பிணி உடனான குதிரைகள் உள்ளிட்ட சாரத்திய அம்சம் , விக்கிரக, அலங்காரச் சிற்ப வடிவமைப்பு, ஆலய வர லாற்றில் சிற்ப வடிவமைப்பு, செய்நேர்த்தி மிக்க சிற்ப சித்திரிப்பு ஆகிய பண்புகளை அளவு கோல்களாக எடுத்து இத்தேர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
தேரோட்ட மரபு
பண்டைய காலத்தில் மன்னனுக்கும் இறைவனுக்கும் இடையே நெருங்கிய தொடர்பிருந்ததாகக் கருதியே மக்கள் அரசனை இறைவனாகக் கொண்டனர். இறைவனுக்குரிய மரியாதைகளைக் கொடுத்தனர். தேரில் உலா வருபவனும் தேரை பல்வேறு விடயங்களுக்கு பயன்படுத்துபவனும் மன்னனே என்பதை எமது இலக்கியங்கள், இதிகாசங்கள், புராணங்கள் ஆகியன காட்டுகின்றன. மன்னனின் பல்வேறு தேவைகளுக்கும் பயன்பட்ட தேர் காலப்போக்கில் இறைவன் உலா வருவதற்கும் பயன்பட்டதில் ஆச்சரியமில்லை. ஆனால் பின்னர் அவை பிரமாண்டமான வடிவிலே இறைவனின் தேரோட்டமாக மாறிவிட்டன.
காஞ்சி, பூம்புகார், மதுரை முதலிய பண்டைய நகரங்களில் தேரோடும் வீதிகள் இருந்தன என இலக்கியங்கள் மூலம் அறிகிறோம்? அக்காலத் தேர்களின் வேலைப்பாட்டை நோக்கும் போது தேர் சமைக்கும் கலை மிக நீண்ட காலமாக வளர்ந்து வந்துள்ளது என்பதை அச்சிற்ப பாரம்பரியத்தினைக் கொண்டே உணர முடிகின்றது.
பல்லவர் காலத்திலே இரதங்கள் என ஒரே கல்லிலே செதுக்கப்பட்ட பல்வேறு சிற்பங்கள் திராவிடச் சிற்ப மரபின் செழிப்பைக் காட்டுகின்றன. மாமல்லபுரக் கடலோரம் காணப்பட்ட கடினமான பாறைகளை அப்படியே வைத்து மரத்தால் செதுக்கப்பட்டவை போன்று அற்புதமான தேர்கள் செதுக்கப்பட்டன. தனிக்கல்லிலே செதுக்கப்பட்ட ஐந்து தேர்க் கோயில்கள் மாமல்லபுரத்திலே காணப்படுகின்றன. பஞ்ச பாண்டவர் இரதங்கள் எனப்படும் இவற்றின் அழகே மாமல்லபுரத்தின் தனிச்சிறப்பு எனலாம். இவைகளே பல்லவர் கால சிற்ப வேலைப்பாடுகளுக்கும், தேரோட்டங்களுக்கும் சான்றாக இன்றும் நிலைத்து நிற்கின்றன. அக்காலத்து தேரின்
 

遠。 ថាញញយ៉ាវែ
35
பிம்பங்களாக இவை இன்றும் காட்சி தருகின்றன, ஆதாரமாகின்றன.
வட இந்திய தேரோட்ட மரபு
வட இந்தியாவிலே கோணரக் (Gonark) என்னுமிடத்தில் உள்ள சூரியன் கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும். சூரியக் கடவுளின் தெய்வீகத் தேரின் வடிவம் பிரமாண்டமானதாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலைச் சுற்றி அடிப்பகுதியில் ஒவ்வொன்றும் எட்டு அடி உயரமுள்ள இருபத்திநான்கு தேர்ச்சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலைச் சுற்றிலும் ஏழு பெரிய குதிரைகள் முழுவடிவில் அமைக்கப்பட்டுள்ளன.4 தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயிலின் சிற்பமானது

Page 36
606066äåí ಸಿ. 36
இதற்கு முந்திய காலங்களில் இருந்த தேர்ச் சிற்பக் கலையை படம் பிடித்துக் காட்டுகின்றன. இத்தகைய தேர்கள் பல்வேறு வடிவில் அமைந்திருந்தன.
கிழக்கிந்திய தேரோட்ட மரபு கிழக்கு இந்தியாவில் மிகப்பெரும் திருவிழாவாக காணப்படுவது பூரி ரத யாத்திரை ஆகும். இது பூரி ஜகந்நாதர் கோயிலில் நடைபெறும். இந்திய நாட்டின் மிகப்பெரிய தேர்த் திருவிழாவாக பூரி தேர்த் திருவிழாவே கருதப்படுகின்றது. பூரிஜகந்நாதர் ஆலயத்தில் மூல விக்கிரகமாக ஜகந்நாதரும், பலராமரும் தங்கை சுபத்திரையும் இக்கோயிலின் வழிபாட்டுத் தெய்வங்களாக உள்ளனர்.
திருமாலின் எட்டாவது அவதாரமாகிய கண்ணபிரானே இக்கோயிலின் மூலதெய்வமாகும். //98 ஆம் ஆண்டிலே அனந்தவர்மன், சோடகங்கதேவன் என்னும் கலிங்க அரசனால் கட்டப்பட்ட இவ்வாலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் ஜகந்நாதர், பலராமர், சுபத்திரை, சுதர்சனச்சக்கரம் ஆகிய இறை உருவங்கள் சதுர்த்த மூர்த்திகளாக அமையப்பெற்றுள்ளன. இவ்வாலயத்தின் தேர் வேப்பமரத்திலானது 'நந்திக் கோஷம் எனப்படும் ஜகந்நாதரின் தேர் மஞ்சள் நிறத் துணியாலும், 'தளத்வாஜா எனப்படும் பலராமரின் தேர் நீல நிறத் துணியினாலும், 'தேவி ரதம் எனப்படும் சுபத்திரையின் தேர் கறுப்பு நிறத் துணியினாலும் அலங்கரிக்கப்படும். ஜகந்நாதரின் தேர் /6 சக்கரங்கள் உடையதாய் /4 மீற்றர் உயரமுடையதாயும், பலராமரின் தேர் /4 சக்கரங்கள் உடைய தாயும், 14 மீற்றர் உயரமுடையதாயும் சுபத்திரையின் தேர் /2 சக்கரங்களைக் கொண்டும் அமைக்கப்பட்டிருக்கும்.
தேரோட்ட நம்பிக்கை இரத யாத்திரைக்குத் தேர்கள் நகர ஆரம்பித்ததும் பக்தர்கள் முழக்கம் விண்ணைப் பிளக்கும். இரத யாத்திரையின் போது ஒருவர் வடத்தைத் தொட்டு இழுத்தால் ஏழு பிறப்பிலும் செய்த பாவங்களை நீக்கி இறைவனடி செல்வார் என நம்புகின்றனர். இந்த நம்பிக்கையின் பேரில் தேர்ச் சக்கரங்களில் தலையைக் கொடுத்து உயிர் துறந்தவர்களுமுண்டாம். தேரோட்டத்தின் முக்கிய அம்சமானது பூரி ஜகந்நாதருக்கு படைக்கப்பட்ட பிரசாதம் 'மகாபிரசாதம் எனப்படும். இப்பிரசாதம் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும். அது மட்டுமல்ல கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எண்ணிக்கையைப் பொறுத்து வெவ்வேறு அளவுள்ள பானைகளில் சாதம், பருப்பு, பொரியல் வகைகளைச் சமைத்து விற்பனை செய்வார்கள். /0 பேர் முதல் 150 பேர் வரையுள்ள பக்த கோடிகளுக்கு 'மகாப்பிரசாதம்' பானைகள் வழங்கப்படும். 9
ஆலய அமைப்பும் தேர்களின் அமைப்பும் தெய்வ மூர்த்தங்கள் உலா வரச் செய்யப்பட்ட தேர்கள் பவனி வருவதைத் தேரோட்டம் எனக் குறிப்பிட்டனர். இத்தகைய தேர்கள் பல்வேறு வடிவங்களில் அமைந்திருந்தன.8
/ சதுர வடிவத்தேர் - நாகரம் எனப்பட்டது.
2. எண்கோண வடிவத்தேர் - திராவிடம் எனப்பட்டது.

3. வட்ட வடிவத்தேர் - வெசரம் எனப்பட்டது 4. அறுகோண வடிவத்தேர் - அத்திரம் எனப்பட்டது. இத்தேர்கள் ஆலயத்தின் கர்ப்பக்கிருகத்தை ஒத்திருப்பதை நாம் அவதானிக்கலாம். ஆலயங்களை அமைப்பதற்கு விதி முறைகள் இருப்பது போலவே தேர்களை அமைப்பதற்கும் விதி முறைகள் உள்ளன. ஆலயமானது ஒரு மனிதனின் உடம்பினை ஒத்து அமைக்கப்படுவது மரபு. அவை வருமாறு.
பாதம் - கோபுரம், முழங்கால் - ஆஸ்தான மண்டபம், தொடை - நிருத்தமண்டபம், தொப்புள் - பலிபீடம், மார்பு - மகா மண்டபம், கழுத்து - அர்த்தமண்டபம், சிரம் - கர்ப்பக்கிருகம், செவி - தட்சணாமூர்த்தி ஆலயங்களின் கட்டட அமைப்பானது அடியிலிருந்து கோபுர கலசம் வரை பின்வருமாறு அமையும்.
(/). அதிர்ஷ்டானம் (2), சுவர் (3). தண்டு (4). இடைக்கட்டு (5), கலசம் (6). கமலம் (7). பலகை (8). போதிகை (9). பூதகணவரி (/0), கொடுங்கை (//). யாழிவரி (/2). நந்தி (/3). கழுத்து (/4). கூடு (15). சிகரம் (16). மகாபத்மம் (/7). ஸ்தூபி (கும்பம்) என்ற அமைப்பினைக் கொண்டதாகும். தேர்களும் இத்தகைய அமைப்பிலேயே கொண்டு அமைந்தனவாகும்.
ஈழத்தில் தேரோட்டமும் கொக்கட்டிச்சோலை தேரோட்டமும் ஈழத்திலே பல இடங்களில் தேரோட்ட உற்சவம் இன்றுள்ளது. மாத்தளை முத்துமாரியம்மன் கோயில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயம், கொழும்பு பம்பலப்பிட்டி முருகன் ஆலயம், சம்மாங்கோடு பிள்ளையார் ஆலயம் இப்படி பல ஆலங்களிலும் தேரோட்டம் உள்ளது. ஆடிவேல் எனப்படும் தேரோட்டமும் நடைபெறுகிறது. ஆனால் ‘தேரோட்டம்' என்ற சொல் கொக்கட்டிச்சோலை தான் தோன்றிஸ்வரர் ஆலய தேரோட்டத்தை மட்டுமே விசேடமாகக் கொண்டது. ஆவணி முதற் பிறையன்று கொடியேற்றம் நடைபெற்று பூரணைக்குப் பின் வரும் ஞாயிறு தேரோட்டம் நடைபெறும். கொக்கட்டிச் சோலையின் தேரோட்டம் (இருதேர்கள்) இங்கு முன்னர் மூன்று பெரிய தேர்கள் இருந்ததாகவே வரலாறு கூறுகிறது? எனினும் தற்போது இரண்டு தேர்கள் மட்டுமே உள்ளன. மட்டக்களப்பை ஆட்சி செய்த தருமசிங்கன் கலி ஆண்டு 4040 (கிபி 958)இல் சோழ நாட்டிலிருந்து சிற்பிகளைக் கொண்டு வந்து மூன்று தேர்களையும் அமைத்தான் எனவும் அறியமுடிகிறது. இதனை மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது.
இத்தேர் சோழ சிற்பிகளால் செய்யப்பட்டது என்பதாலும் தர்மசிங்கன் காலம் சோழர் காலத்திற்கு நெருக்கமாக உள்ளமை யினாலும் சோழர் காலத்தது எனவும் கருத இடமுண்டு. பாண்டி யர் கால சிற்பங்கள் எனவும் ஏற்றுக் கொள்ளலாம். எனினும் அப்பிரதேசத்தில் கலிங்கர் ஆட்சிக் காலமே நீண்ட காலம் பலத்து டன் நிலவியதும் செல்லாக்கு செலுத்தியதும் கருத்தில்
கொள்ளத்தக்கது.

Page 37
இதனை மட்டக்களப்பு வரலாறு கூறுகிறது. முக்குவ தேசம் என அழைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திலே படுவான் கரைப் பிரதேசம் முழுக்க முழுக்க கலிங்கர் ஆட்சிக்குட்பட்ட பிரதேசமாகும். இப்பகுதியில் பல முக்கிய கோயில்களிலும் கலிங்கமாகோன் வகுத்த சட்ட திட்டங்களே இன்றும் நடை முறையிலுள்ளன. கலிங்க மாகோன் வகுத்த வன்னிமைகளும், மாகோன் வகுத்த கோயில் நிர்வாக முறைகளுமே இன்றும் உள்ளன.8
பூரி ஜகந்தாதர் கோயிலை ஒத்த முறை
பூரி ஜகந்நாதர் ஆலயத்திலே நடைபெறும் நடைமுறைகள் போன்றே இங்கும் தேரோட்டம் நடைபெறுவது முக்கிய சிறப்பாகும். அங்கு போலவே இங்கும் மூன்று தேர்கள் இருந்தன. இன்று இரண்டு தேர்கள் உள்ளன. சித்திரத்தேர், பிள்ளையார் தேர் எனப்படுகின்றன. உமாமகேஸ்வரர் கோலத்திலே சிவபெருமான் சித்திரத் தேரிலும், பிள்ளையார் தேரில் பிள்ளையார் முருகன் பவனி வருவர். பிரசாத முறையும் பூரி ஜெகந்நாதர் ஆலயம் போன்றதே. ஜகந்நாதர் ஆலயத்திலே வழங்கப்படும் மகாபிரசாதம் என்ற சோறு கறி வைத்து வழங்கும் முறையை ஒட்டியது போன்றே இங்கும் கஞ்சிமுட்டி வைக்கப்படும். ஜகந்நாதர் ஆலயத்தில் கலிங்க மன்னன் அனந்தவர்மன் சோடகங்கதேவன் கி.பி. /2 ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து வைத்தது போலவே இங்கும் கலிங்க மாகோன் (கி.பி. 1225) காலப்பகுதியில் மேற்படி தேரோட்ட நிகழ்வை ஆரம்பித்து வைத்தான் எனலாம். ஆகவே கலிங்க தொடர்பினாலே இங்கு தேரோட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
தேரோட்ட வைபவ நிகழ்விலே ஆலயத் தெண்டு செய்யும் ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேரைச் சுத்தம் செய்வது தொடக்கம் அலங்கரிப்பது போன்ற முழு அலுவல்களும் அவர்களே செய்வர். சுவாமியுடன் இவ்ஊழியர்களும் தேர்த்தட்டில் ஏறி நிற்பர். நீற்றுப் பூசணிக் காய் வெட்டி பலி இட்ட பின்பு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் நகரத் தொடங்கும். ஓர் அடிக்கு மேல் இருக்கும் மண்ணிலே தேர் ஒடுவது அபூர்வ நிகழ்வாகும்.
மூலைக்கு மூலை பூசணிக்காய் வெட்டி பலி இடப்படும். தேரோட்ட வைபவம் முடிந்ததும் சுவாமி ஆலயத்தினுள் எழுந்தருளுவார். அடுத்த நாள் சிவ விக்கிரகத்திற்கு பட்டாடை உடுத்தி இரத்தின மாலை அணிவித்து பல்லக்கில் வைத்து வேளாளர் சுமந்து வர சுவாமி சூகர வேட்டைக்குப் புறப்படுவார். சூகரம் (பன்றி) வேட்டையாடும் வேலாயுதம் இன்னொரு பல்லக்கில் வர தேசத்து வன்னிமைகள் முன் செல்ல அடியார் கூட்டம் பின் தொடர வாத்தியங்கள் முழங்க சுவாமி தற்போதைய வீரபத்திர சுவாமி ஆலய அருகில் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் கொண்டு போகப்படுவார். இங்கு திருவேட்டைப் பாடல்கள் பாடிமுடிய கஞ்சி முட்டி கூறல் இடம் பெறும், முதலில் பெரிய திருவாசல், பின் வேதம், பின்னர் நம்பி, பின்னர் திருப்பாட்டு பின்னர் வன்னியம், உலக குருநாதர்,


Page 38
5ក្លាញ585ffff 鑫 38
பூபால கோத்திரம், பூவசியர், புன்னாலை, மண்முனை, மட்டக் களப்பு, நாடு, நகரம், கண்டி, கதிரை, கந்தளை, மாவலி, அயோத்தி கூறி பின்னர் ஆலய ஊழியர்களுக்குப் பங்கிட்டு சுவாமியை மஞ்சள் நீராட்டி மகிழ்வித்து, அவர் ஆறி இருக்கும் போது முட்டி கூறும் கல்வெட்டு படிக்கப்படும். படையாண்ட குடியைச் சேர்ந்த பெரியவர் இதனைப் படிப்பார்.
இங்கு முக்கியமான ஓர் அம்சம் பெரிய திருவாசல் என்பது கைலயங்கிரி, வேதம் என்பது பிரமன், தேசம் என்பது கலிங்கர், வன்னிபம் என்பது படையாட்சிகுலம், பூபால கோத்திரம் என்பது கலிங்கவேளார், கந்தளை என்பது மலையாள முக்குவர், எனவே கலிங்கர், படையாட்சிகுலத்தவர், கலிங்க வேளர்,
CO60)6)COO67. முக்குவர் என்போருக்குள்ள தொடர்பு பிணைக்கப்பட்டுள்ளது. பங்கு கூறும் கல் வெட்டின் முப்பத்தாறு பாடல்கள் இக்கல் வெட்டில் காணப்படுகின்றன. மட்டக்களப்பு தேசத்தில் வாழ்ந்த 140 வரையிலான சாதிப் பிரிவினருக்கும் திருக்குடுகை கொடுத்து கெளரவிக்கப்படுவர். இக்குடுக்கை கூறும் வைபவம் முடிவுற்றவுடன் தீர்த்தோற்சவம் நடைபெறும். ஆலயத்தின் முன் அமைந்துள்ள பண்டைய கிணற்றிலே அர்ச்சகர் அச்சர தேவரோடு இறங்கி அச்சர தேவரை கிணற்றில் தீர்த்தமாடச் செய்து கிணற்று நீரைப் புனிதமாக்கிய பின் பக்தர்கள் அனைவருக்கும் அந்தநீரைத் தெளித்து நிறைவு செய்வர். அன்றிரவு சண்டேசுவரர் பூசையும் காவற் தெய்வங்களுக்கான கேழ்வியும் நிகழ்த்தப்படும். கடைசியில் குருக்கள் இரகசியமாக நள்ளிரவில் செய்யும் சம்பிரதாய கிரியையோடு கொடியிறக்கி விழா முடிவிக்கப்படும்.
கொக்கட்டிச் சோலை தேரோட்ட சிறப்பு தேரோட்ட நிகழ்வு என்பதன் விசேடத்தை நோக்கினால் ஈழத்தில் தேரோடும் எல்லா ஆலயங்களையும் விட கொக்கட்டிச்சோலை தான்தோன்றிஸ்வரத்தின் தேரோட்ட
சிறப்பு விசேடமானது.
 

/. தேரோட்டம் என்ற சிறப்புப் பெயராலே இந்நிகழ்வு குறிப்பிடப் படுவது - கொக்கட்டிச்சோலை தான்தோன்றிஸ்வர நிகழ்வில் மட்டுமே.
2. பண்டைய மரபு முறைப்படி இங்குள்ள தேர்களும், தேர்ச்
சக்கரங்களும் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இலுப்பை மரமே இதற்கு பாவிக்கப்பட்டுள்ளது.
3. பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் போல மூன்று தேர்களே பண்டு இருந்தன. அதில் ஒரு தேர் ஆற்றில் புதையுண்ட கதை இன்றும் மக்களால் பேசப்படுகின்றது. 4. பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் தேரோட்ட நிகழ்வை ஆரம்பித்தவர் கலிங்க மன்னன் அனந்தவர்மன் சோடகங்கதேவன். கொக்கட்டிச்சோலையில் இந்நிகழ்வை ஆரம்பித்தவன் கலிங்க மன்னன் மாகோன். இருவரும் கலிங்க மன்னர்களே. காலமும் ஓரளவு ஒத்த காலமே. /2 ஆம் நூற்றாண்டாகும். 5. பூரி ஜகந்நாதர் ஆலயத்திலே கறி, சாதம் சிறிய குடுக்கையிலே மகாபிரசாதம் என வழங்கப்படும் முறை போன்றே இங்கு கஞ்சி திருக்குடுக்கைகளில் வழங்கப்படுகிறது. 6. இங்கு குறிப்பாக கிழக்கிலே நிலவிய கலிங்க தொடர்பு ஒரிசா
தேசத்து தொடர்பு என வரலாறு கூறுகிறது,
Y - செல்வி. க. தங்கேஸ்வரி B, A - தொல்லியல் சிறப்பு அடிக்குறிப்பு
/. ცy65?ც J/7ც -6) / : / - 6 2. சிலப்பதிகாரம், மணிமேகலை 3. பல்லவ கால கட்டடக்கலை - அ.மு. இராசமாணிக்கனார். Arts and Crafts of
Andhra and Ceylon LN fonlis Ananada kumarasamy — London. 4. இந்திய பாரம்பரியங்கள் - ராம்குமார் /998 PP 2/8 22/ 5. இந்திய பாரம்பரியங்கள் - ராம்குமார் /998. PP 240 - 24 6. Aspects Of ancient Indian culture , Asian publishing house -
Bombay
7. மட்டக்களப்பு மான்மியம் fXC நடராசா மட்டக்களப்பு PP.50 8. மட்டக்களப்பு மான்மியம் fXC நடராசா - மட்டக்களப்பு 1952 PP 60 86, 26

Page 39
szosos, , /o/woo og
 

50s. Is II (6 + 3H8), “IL-QUDDIOLOJ “Joo Is Los
uuooooouse/No L6, e6eue.ueu : Iselu-e|T
圈)%

Page 40
ឆ្នាភ្នំផៃអឺ 趁 40 urnih usluh
 

திருவிளக்குப் பூசையின் சமூக முகம்
பேராசிரியர் கலாநிதி என்.சண்முகலிங்கன்
ருவிளக்குப் பூசை பற்றிய விளம்பரச் செய்திகளை இன்று அடிக்கடி சந்திக்க முடிகிறது. தமிழ் நாட்டுச் சஞ்சிகைகள், திரைப்படங்கள் ஆகியவற்றில் இதுபற்றி விளக்கங்களைக் காணமுடிகிறது. பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இன்றைய பிரபலத்தை இந்தப் பூசை பெற்றிருக்கவில்லை. இந்து மரபில் தீப வழிபாடு பற்றிய சில குறிப்புகளை ஆங்காங்கே காணமுடிந்தாலும், இன்றைய திருவிளக்குப் பூசையின் வடிவமைப்பின் தொடக்கத்தினை தெளிவாக இனங்கண்டு கொள்ள முடியாதுள்ளது. இந்நிலையில் திருவிளக்குப் பூசையின் இன்றைய எழுச்சியின் சமூகப் பின்னணியை இனங்காணும் ஒரு பூர்வாங்க ஆய்வு முயற்சியாகவே இந்தக் குறிப்பு அமைகிறது. யாழ்ப்பாணத்து ஆலயங்கள் இரண்டினை மையமாகக் கொண்ட கள ஆய்வின் தரவு மூலங்களின் துணையுடன் சில சிந்தனைகள் இங்கு
முன் வைக்கப்படுகின்றன.
இலங்கையில் சிறப்பாக யாழ்ப்பாணத்தில் துர்க்கா வழிபாட்டின் எழுச்சி பற்றிய சமூகவியலாய்வு ஒன்றினை தொல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தினை மையமாக கொண்டு எண்பதுகளின் முன்னரைப்பகுதியில் மேற்கொண்ட வேளை, அங்கு இடம்பெற்ற திருவிளக்குப் பூசையின் போது பெறப்பட்ட தரவுகளுடன் அவ்வப்போது ஏனைய ஆலயங்களில் மேற்கொள்ளப்பட்ட திருவிளக்குப் பூசை அவதானங்களும் இணைத்து நோக்கப்படுகின்றன. திரு விளக்குப் பூசையின் எழுச்சிக்கான சமூகப் பின்னணியை இனங் காட்டுவதுடன் நவீன மயமாக்கத்தின் வழி மதசார்பின்மை என்கின்ற வெபரின் max Weber (1921) கருத்தினை மறுதலிப்பதாயும் இவ்வாய்வு அமைகின்றது. இந்த வகையில் M.James Freeman (1975) போன்ற சமூக மானுடவியலாளர் கள், இந்திய பண்பாட்டுப் புலத்திலும் கனநாத் ஒபயசேகர (/977) இலங்கையில் சிறப்பாக கதிர்காமத்தை மையமாகக் கொண்டு நிகழ்த்திய ஆய்வுகளும் முன் முயற்சிகள் எனலாம்.
விளக்கின் தோற்றம்
ஆதிவழிபாட்டு நிலையில் சூரியனை, மரங்களை, நாகத்தினை வணங்கி நின்ற மனிதன், அக்கினியையும் வணங்கி இருக்கின்றான். ஆரம்பத்தில் அச்சத்தில் அக்கினியை வணங்கிய மனிதன் காலவோட்டத்தில் அதே அக்கினியை தனது வாழ்வின் வளத்திற்கும், நாகரிக வளர்ச்சிக்கும் பயன்படுத்தத்
தொடங்கினான். விலங்குகள் கொழுப்பினை சிப்பி,
சங்கு முதலான அகலில் இட்டு தனது

Page 41
முதலாவது திரி விளக்கினைக் கண்டான் மனிதன். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த வகையான எளிய விளக்குகளை மனிதன் பாவித்திருப்பதனை இன்றைய அகழ்வாராய்ச்சிகளும், மானுடவியலாய்வுகளும் சுட்டிக் நிற்கின்றன. இந்துப் பண்பாட்டின் தொட்டில் எனப்படுகின்ற மொகஞ்சதாரோ நாகரிகத்திலும் ஏனைய எகிப்து சுமேரிய சீன நாகரிகங்களிலும் இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. காலப்போக்கில் வெண்கலம், வெள்ளி, பொன் எனப் பல்வேறு உலோகங்களினாலும் பல்வேறு வடிவங்களிலும் விளக்குகள் உருப்பெற்றன. மக்களது பண்பாட்டுச் சின்னமாக அவர்களது மத நம்பிக்கைக் குறியீடுகளைத் தாங்கி நிற்பனவாய் விளக்கு கள் விளங்கத் தொடங்கின. எமது மரபில் கைவிளக்கு, அன்ன விளக்கு, லசுஷ்மி விளக்கு, பதுமை விளக்கு என்றெல்லாம் தோற்றம் பெற்றன. இந்த வரிசையிலேயே குத்துவிளக்கு தோற்றத் தினையுங் காண்கின்றோம்.
இந்து மரபில் விளக்கு முன்னர் குறிப்பிட்டவாறு அக்கினி' வழிபாட்டில் இறைவனைக் கண்ட மக்கள், தம் பண்பாட்டு வளர்ச்சிப் போக்கினுக்கேற்ப தீபத்தில் அக்கினியை ஆவகித்துக் கொண்டனர். தமிழ் மரபில் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களில் பாவை விளக்குகள் பற்றிய குறிப்புக்களைக் காணுகின்றோம் கிரேக்க பண்பாட்டுப் பரவலின் விளைவாக அதனைச் சில ஆய்வாளர் கருதுவர். விளக்கு நாச்சியர்களாக இன்றும் தீபத்தை வழிபடும் வழக்கத்தினை நாம் காண முடிகின்றது. இன்றைய ஆகம ஆலய அமைப்பிலும் இடம் பிடித்துள்ள விளக்கு நாச்சியரின் தொடக்கத்தை அறிய முடியவில்லை. சக்தியாக விளக்கினை மனிதன் கண்ட தொடர்ச்சியிலேயே குத்துவிளக்குப் பற்றிய பல்வேறு நம்பிக்கைகளும் விழுமியங்களும் உருப்பெற்றிருக்கலாம் எனக் கருத வேண்டியுள்ளது.
விளக்குப் பூசை பற்றிய விழுமியங்கள் வீட்டுக்கு விளக்கேற்றியவள் என்று நலந்தரும் பெண்ணை வாழ்த்தி நிற்கும் மரபு இன்றும் வழக்கில் உள்ளது. இது லெளகீக வாழ்வில் நலன்களின் அடிப்படையிலானது. 'மங்களகரம், 'லக்ஷ்மீகரம் என்ற கருத்தில் குத்துவிளக்கை திருமணம், சீர்வரி சையில் முதன்மைப்படுத்தும் வழக்கம் இன்றைய வியாபார திருமண மரபில் அருகிவிட்டாலும் கிருகப் பிரவேசத்தில் குத்து விளக்குக்குள்ள முக்கியத்துவம் இன்றும் தொடர்கிறது,
குத்துவிளக்குப் பூசை பற்றிய இன்றைய தமிழக மங்கையர் சஞ்சிகைக் குறிப்புகள் இங்கு முக்கியமாகக் கருத்திற் கொள்ளப்பட வேண்டியவை, இந்தப் பூசை பற்றிய இன்றைய கருத்தோற்றங்களில் பெரும்பாலானவை இத்தொடர்புச் சாதனங்களின் வழியானவை. மங்கை (ஏப்ரல் 86) சஞ்சிகையில் திசைகளும் தீபங்களும் என ஒரு குறிப்பு பல்வேறு திசைகளுக்குமான பலனில் வட
திசைக்குரியதாகக் கூறப்படும் பலன்
 
 
 
 


Page 42
តែកាលពីថ្ងៃ ខែ 42
இங்கு கவனத்தைப் பெறும், திரண்ட செல்வமும் திருமணத் தடை, சுபகாரியத்தடை, கல்வித்தடை அனைத்தும் நீங்கும். சர்வமங்களமும் உண்டாகும் என வடதிசை தீப பலன் கூறப்படுகிறது. பல்வேறு எண்ணெய் விளக்குகளுக்குமான பலன்களில் விளக்கெண்ணெய் விளக்கு, ‘தேவதா வசியம், புகழ், ஜீவனசுகம், பந்து சுகம், தாம்பத்திய சுகம் என்பவற்றினை விருத்தி செய்கின்றது எனப்படுகின்றது. இந்து மதம் அழைக்கிறது (ஒக்டோபர் 86) சஞ்சிகை, திருவிளக்கு ஏற்றும் பெண்களை அலங்கார அம்பிகைகளாகவும், அதிர்ஷ்ட தேவதைகளாகவும் வர்ணிக்கின்றது. நெய்விளக்கு ஏற்ற குடும்ப சந்தோசமும், நலமும் பெருகும் என இதே குறிப்புக்கூறும். இது போன்று வாழ்வியல் சார்ந்ததாக சிறப்பாக திருமண வாழ்வுடன் இணைந்ததாக குத்துவிளக்கு பூசை பிரபலப்படுத்துவதைக் காணலாம். இந்த வகையில் தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களில் இவ்வாறான பூசைகளின் பலாபலன்களைக் காட்டும் அனுபவங்களும் இன்று தாராளம்.
இவ்வாறான உலகியல் சார் விளக்கங்களினின்றும் வேறுபட்டனவாய் ஒளியை, தீபத்தை ஒரு குறியிடாய்க் காட்டி உலகப் பொதுமை பேசும் நவீன மத இயக்கங்கள் தரும் விஞ்ஞானப் பாணியிலான விளக்கங்களையும் இன்று அடிக்கடி கேட்க முடிகிறது. ஞானச்சுடர் விளக்காய் நின்றவர் (அப்பர்)
துண்டா விளக்கின் சுடரனையர் (சுந்தார்) 6760)
திருமுறையாசிரியர் விளக்கினைப் போல என்ற நிலையில்
 

இறைவனைக் கண்டதற்கும் விளக்காகவே ஆலயம் அமைத்து
இறைவனை வணங்கிய இராமலிங்க 9; GJATCóo போன்றவர்களுக்கும் வேறுபாடு உண்டு, மேலே குறிப்பிட்ட நவீன மத இயக்கங்கள் தீபத்தைக் குறியிடாய்க் காண்பதில் தீவிரவாதிகள்.
தீப வழிபாடு
இந்து மரபில் திருக்கார்த்திகை, தீபாவளி என்பன பெரு விழாக்களாக கொண்டாடப்படுவன. சமூக சமய விழாக்களாக பிரிக்க முடியாதவாறு இணைந்திருப்பன. குமாராலய, சர்வாலய தீபங்களாக ஆலயங்களிலும், இல்லங்களிலும் இடம் பெறும் கார்த்திகை விளக்கீடு ஆலயங்களில் 'சொக்கப்பனை சிறப்பாக ஏற்றப்படுவது. திருவண்ணாமலைக் கார்த்திகை விளக்கீடு இந்து தீப வழிபாட்டின் கொடுமுடி எனத்தக்கது. தமிழ் மரபில் மலைவிளக்கேற்றும் வழக்குத் தொன்மையானது. குன்றத்து உச்சிச்சுடர் என சீவக சிந்தாமணி இதனைச் சுட்டும். தலமிகு கார்த்திகை நாட்டார் ஈட்ட தலைநாள் விளக்கு என்று கார் நாற்பது கூறும். இந்த விளக்கு வழிபாட்டு மரபில் குத்து விளக்கைக் கும்பபூசையின் போது அர்ச்சிக்கும் ஆகம வழக்கு இன்றும் தொடர்வது. விக்னேஸ்வரபூசை, காண்டா பூசை, கலசபூசை என்பவற்றுடன் தீபழசையும் இன்றியமையாததாய் நிகழ்த்தப்படுவது. குத்துவிளக்கில் லசுஷ்மி ஆவாகனம் செய்யப்பட்டு,
சுபம் பவது கல்யாணம் ஆரோக்கியம் தன
சம்பதக மம சத்துரு விநாசாய தீபத்
ஜோதி நாமோஸ்துதே'
என மங்களமும் நலனும் செல்வமும் வேண்டி வணங்கப்படுகின்றாள்.
கூட்டுவழிபாடாக பல பெண்கள் வரிசையில் குத்து விளக்கின் முன் அமர்ந்து, அர்ச்சகர் வழிப்படுத்த பூஜிக்கும் இன்றைய திருவிளக்கு பூசை வழக்கம் பற்றி கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்னைய ஆதாரங்கள் எதனையும் பெற முடியவில்லை. எனினும் தேவியைத் தீபத்துர்க்காவாக வழிபடும் வழக்கம் கேரளத்தில் முன்னிருந்தே நிலைபெற்றுள்ளது. இந்த தீபதுர்க்கா பூசையிலிருந்தே இன்றைய திருவிளக்குப் பூசை முகிழ்த்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. எனினும் இதுபற்றி மேலும் ஆராயப்பட வேண்டும். இலங்கையில் கிட்டத்தட்ட முப் பது ஆண்டுகளுக்கு முன்னரே முன்னேஸ்வரத்தில் திருவிளக்குப் பூசை தொடங்கப்பட்டதாக அறிய முடிகிறது. பிரபலமான சில குருமாரின் தலைமையில் சில பிராமணப் பெண்கள் திருவிளக்குப் பூசையைச் செய்துள்ளனர். (ச,பஞ்சாட்சரசர்மா -நேர்முகம்) இந்திய தொடர்புகளின் வழி, கொழும்பிலும் இது அறிமுகப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை வண்ணார் பண்ணை பெருமாள் கோயிலிலேயே முதலில் இப்பூசை தொடங்கப்பட்டதாக அறிய முடிகின்றது. முன்னேஸ்வரத்திலிருந்த குருக்களே இங்கு இம்மரபு
ஆரம்பிக்க காரனர் ஆவர் 6760)
தெரிவிக்கப்படுகின்றது.

Page 43
நாளடைவில் கொக்குவில் நாச்சிமார் கோவில்மற்றும் ஆங்காங்கே விளங்கும் அம்பாள் ஆலயங்களுக்கும் இது பரவியது. எழுபதுகளின் இறுதிக் கூறில், தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் இது எழுச்சி பெறுவதைக் காணலாம். பெருமாள் கோயிலுக்கு பின் மிக விரிவான முறையில் இந்திய ஆலயங்கள் சிலவற்றின் மாதிரியில் பாரிய அளவில் நிகழ்த்தப்பட்டது. இங்கு வருடமொருமுறை கார்த்திகைப் பூரணையில் நிகழ்த்தப்பட, ஏனைய ஆலயங்களில் மாதம் ஒரு நாளென பூரணை தினத்தில் திருவிளக்குப் பூசை நிகழ்த்தப்படும் வழக்கினைக் காண்கின்றோம். இந்தியாவில் குமரி மாவட்டம் சுசீந்திரம் போன்ற ஆலயங்களில் வெள்ளிக்கிழமை திருவிளக்குப் பூசை நாளாகவிருக்கின்றது. அபிராமிப்பட்டருக்கு அபிராமி அருளிய பூரணையுடன் பூரணைத் திருவிளக்குப் பூசையைத் தொடர்புபடுத்தும் நம்பிக்கைகள் நிலவுகின்றன. எனினும் திருவிளக்குப் பூசையைத் தொடர்புபடுத்தும் நம்பிக்கைகள் நிலவுகின்றன. எனினும் திருவிளக்குப் பூசையைப் பூரணையுடன் தொடர்புபடுத்தும் ஆதாரங்கள் எதுவுமில்லை.
இன்று யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் உள்ள அம்பாள் ஆலயங்களில் மட்டுமன்றிப் பிள்ளையார் கோயில்கள் இன்னும் வைரவர் கோயில்களிலும் கூட திருவிளக்குப் பூசையைப் பரக்கக் காண்கின்றோம். மட்டக்களப்பு, திருமலை ஆகியவற்றில் மிக அண்மையில் இந்த பூசை சில ஆலயங்களில் இடம் பிடித்துள்ளது. முல்லைத்தீவு, மன்னார்ப் பகுதிகளில் அறியப்படவில்லை, மலையகத்திலும் அண்மையில் அறிமுகமாகியுள்ளது. பரந்தளவில் இப் பிரதேசங்களை உள்ளடக்கியதாக இந்த ஆய்வினை நடத்தும் எண்ணம் இன்றைய சூழ்நிலையில் சாத்தியமாகவில்லை. எனினும் செங்கலடி காளிகோயில், வந்தாறுமூலை கிருஷ்ணன் கோயில் ஆகியவற்றில் சில அவதானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பூசை நிபந்தனைகளும், நடைமுறையும்
பூசையில் கலந்து கொள்வோருக்குத் தேவைப்பட்டுள்ள குத்துவிளக்கு, பூக்கள், குங்குமம், திரி எண்ணெய் என்பன கலந்து கொள்பவர்கள் இவற்றினை ஆலயத்திற்குக் கொண்டு வர வேண்டும். சில ஆலயங்களில் குத்துவிளக்கும், பூவும் மட்டும் கொண்டு வந்தால் போதுமானது. ஏனையவை ஆலயத்தில் வழங்கப்படும். பூசையில் கலந்து கொள்வதற்கென குறித்த தொகைப் பணம் செலுத்தப்பட வேண்டும். ஆலயத்துக்குத்தக இத்தொகை அமையும். வண்ணை பெருமாள் கோயில், தெல்லி துர்க்காதேவி ஆலயம் ஆகியவற்றில் முன்னரேயே பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம். பெரும் எண்ணிக்கையில் கலந்துகொள்ளும் நிலையில் அவர்களுக்குரிய இடங்கள் பரீட்சை மண்டபத்தில் சுட்டிலக்கம் எழுதப்படுவது போல நிலத்தில்
குறிப்பிடப்படுகின்றன. தங்களுக்குரிய
 
 
 
 
 

ឆែ្កតែម្តី
43

Page 44
கலைக்கேசரி கீ 44
இடங்களில் பதினைந்து நிமிடங்களுக்கு முன்னரே அமர்ந்து கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து அர்ச்சகரின் வழிகாட் டலுடன் பூசை ஆரம்பமாகும்.
ஒரு பெரிய குத்துவிளக்கினை முன் வைத்து அதற்கு அர்ச்சகர் பூசை செய்ய அதன் வழி கலந்து கொள்ளும் மங்கையரும் தொடருவர். முதலில் புஷ்பாஞ்சலியும் பின்னர் குங்கு மாஞ்சலியும் நிகழும். அபிஷேகம், நைவேத்தியம், தீபாராதனை என்பவற்றில் தீபாராதனை முக்கியமானது. அர்ச்சகர் ஆராதித்த அதே பஞ்சாராத்தி இம்மங்கையரிடம் தரப்படுகிறது. ஒவ்வொருவரும் தத்தமது குத்து விளக்குகளுக்குப் பஞ்சாராத்தி காட்டுகின்றனர். பெரும் குத்து விளக்கினை மையமாகக் கொண்ட வழிபாடு தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் உண்டு. இந்தப் பூசைக்கென விசேட அர்ச்சகர்கள் நாட்சம்பளத்தில் அமர்த்தப்படுகின்றனர். தேவிபாகவதம், லசுஷ்மிதோத்திரம், அஸ்டோத்ர நாமம் முதலியவற்றால் அர்ச்சனை நடக்கிறது. இவை திருவிளக்கு
பூசைக்கென சிறப்பாக அமைந்தவை அல்ல. தீப பூசைக்குரியதாகக் கருதப்படும் மந்திரங்களும் பயன்படுத்தப்படும்.
ஏனைய ஆலயங்களில் அர்ச்சகர், கலந்து கொள்பவரை
வழிப்படுத்துபவராக இருக்க, தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் அவ்வாலய நிர்வாகத்தலைவரும், பிரபல சமயச் சொற்பொழிவாளருமான செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் பூசையை நெறிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. கவர்ச்சிகரமான அவரது விளக்கங்களும் இப்பூசையின் பிரபலத்திற்கு கணிசமான பங்களிப்பினைச் செய்துள்ளதை அறியமுடிகிறது. தீபத்துடன் ஆலய வீதி வலம் வந்து தத் தமது இல்லம் வரை கொண்டு சென்று வணங்கிய பின்பே அணைக்க வேண்டும் என்பது பெரும்பாலான ஆலயங்களின் நிபந்தனை. தூர இடங்களிலிருந்து A பலர் வந்து கலந்து கொள்வதால் தெல்லி
துர்க்காவில் இந்நிலையில்லை.
முதன் முதலில் முன்னேஸ்வரத்தில் பிராமணப் பெண்களே கலந்து கொள் ளும் வழிபாடாகத் தொடங்கப்பட்ட திருவிளக்கு பூசை இன்று ஏ  ைன யோ ரு க் கு ம் உரியதாகியுள்ளது. சுமங்கலி பூசையில் இ ன் று ம்
சுமங்கலி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாத்திரம் ஏற்பவர்கள் பிராமணப் பெண்களே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒருவர் எவ்வளவு காலத்துக்கு இதனைச் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடில்லை. சிலர் தொடர்ந்து செய்கின்றனர். நேர்த்தி, விருப்பம் நிறைவேறும் வரை செய்யப்படுவதும் உண்டு. சிலர் இடையிலே விட்டு, பின் பிரச்சினைகளை எதிர் கொள்ள நேருகையில் மீள ஆரம்பிப்பதும் உண்டு. பிரச்சினையுடன் நேரடித் தொடர்பானவருக்காக அவரது நெருங்கிய உறவினர் இப்பூசையினைச் செய்வதும் உண்டு. பெரும்பாலும் இவ்வாறான சந்தர்ப்பங்கள், பிள்ளைகளுக்காக அன்னையர் செய்யும் பூசைகளாக அமைகின்றன.
இந்தப் பூசையில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய அல்லது உயர் மத்திய வகுப்பினராகவே இருக்கின்றனர். சாதிய, சமூக வகுப்பு அகபுறத் தடைகளைத் தாண்டமுடிந்த இடங்களில் ஏனையோரின் பங்கேற்பினையும் அவதானிக்கலாம்.
தரவுகளை நோக்கும்போது பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ஒரு வழிபாடாக இது அமைவது புலப்படும். ஆண்கள் திருவிளக்குப் பூசை செய்யக் கூடாது என்று சட்டம் ஏதுமில்லை. ஆலய கும்ப பூசை செய்வது முன்னர் சுட்டப்பட்டது. எனினும் இது பெண்களுக்குரியதாகவே வழங்கப்படுகிறது. திருமணமான, திருமணமாகாத இருசாராரும் கலந்து கொண்டுள்ளனர். இரு சாராரும் கணிசமாக இயற்றும் பூசையாக இது கொள்ளப்படலாம். திருமணம் செய்தவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் திருமணத்திற்கு முன்பிருந்தே இப்பூசையைத் தொடர்பவர்கள் என்பதும் இங்கு கவனத்திற் கொள்ளத்தக்கது திருமணமாகாத நமது பிள்ளைகளுக்காக இதனைச் செய்யும் தாய்மாரையும் கருத்திற் கொண்டு நோக்குகையில் இதன் குவிமையமாக திருமணமாகாத பெண்களே பெருமளவில் அமைவது சுட்டப்பட வேண்டியதே.
வயது அமைப்பின்படி 25 - 35 வீச்செல்லையுள் அதிகமானவர் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் கணிசமான அளவு இந்த வீச்செல்லையைத் தாண்டியுமுள்ளன. அதிகரித்துச் செல்லும் பெண்களின் திருமண வயதெல்லையினையும் இக்குவியங்கள் ஓரளவிற்குச் சுட்டி நிற்பன எனலாம். கல்வி நிலையைப் பொறுத்தவரையில் அனேக மாணவர்கள் ஆரம்ப இடைநிலைக் கல்வியை முடித்தவர்கள். உயர்கல்வி கற்றவர்களும் இடம்பெறுகின்றனர். நவீனமய மாக்கத்தோடிணைந்த கல்வி மாற்றங்கள் சமயச் சார் பின்மை நிலைக்கு இட்டுச் செல்வதாக பலர் கருதியமை இங்கு அர்த்தமிழப்பதைக் காணலாம். பூசையை இயற்றியவரில் பெரும்பான்மையானவர் திருமணம் வேண்டி நிற்பவர்கள் அடுத்ததாக மாங்கல்ய பலம் கருதிச் செய்பவர்கள் பொதுவாக குடும்ப நலம், மகிழ்ச்சி என்பனவும் ஓரளவுக்குத் திருமண வாழ்வுடன் தவிர்க்க முடியாதபடி

Page 45
இணைந்துள்ளமை புலப்படும். தமிழ் மரபில் இன்று தமிழ் நாட்டி லும், ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் திருமணம் என்பது பலருக்கு ஒரு பெரும் பிரச்சினையாக விளங்குகின்றமையைக் காணலாம். திருமணத்துடன் இரண்டறக் கலந்துள்ள சீதன முறை, திருமண சோடிகளை இணைக்கும் சோதிட பொருத்தம் பார்த்தல் நல்ல மாப்பிள்ளை விழுமியங்கள் என்பவற்றில் பெருமளவில் திருமணங்கள் தடைப்படல், தள்ளிப்போடல் என் பன அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளன. சமகால அரசியல் பொருளாதார விளைவுகளால் நல்ல மாப்பிள்ளைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டு நிலை இதனை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் திருவிளக்குப் பூசை ஒரு வரப்பிரசாதமாக திருமண அருளைத் தருவதாக நம்பப் படுகின்றது.
திருமணத்தின் போது சீர்வரிசைகளுக்குத் தலைமை வகித்த குத்துவிளக்கு இன்று திருமணம் நிறைவேற்றும் சின்னமாக கருதப்பட்டு பூசைக்குரியதாகிறது. மத்திய, உயர் மத்திய வகுப்புப் பெண்களே பெருமளவில் இந்த சீதன மற்றும் 'நல்ல (0/7Uც9°6hló02677 ” விழுமியங்களால் பாதிக்கப்படுகின்றார்கள். ஒப்பீட்டளவில் அடிநிலை மக்களுக்கு இது மற்றவர்கள் அளவுக்குப் பிரச்சினையல்ல. இம்மக்கள் அதிகம் அக்கறை கொள்ளாமை இதனால் விளங்கப்படும். சாதியடிப்படையில் நோக்குகையில் ஏனைய பெண்களுடன் சரிநிகர் சமானமாக அமருதல் மற்றும் இதற்கான ஒரு குத்துவிளக்கினைக் கொண்டிருத்தல் போன்று சில அடிப்படைப் பிரச்சினைகளும் இம்மக்களுக்கு உண்டு. யாழ்ப்பாணத்து கிராம ஆய்வு ஒன்றிலே இதனை அவதானிக்க முடிந்ததையும் ஈண்டு குறிப்பிடலாம்.
இத்தகு சூழமைவில் தாங்கள் தங்கள் கோயில்களில் இப்பூசையில் தொடக்கும் சமஸ்கிருதமயமாக்கமும் இன்று அதிகரிக்கக் காணலாம். எனினும் சிறிய ஆலய கட்டட மட்டுப்பாடுகளிடை காற்றிடை தீய ஒளியைக் காக்க இவர்கள் படும்பாடு கொஞ்சமல்ல. 'மாங்கலிய பலம் பற்றிய தேவையும் முன்னெக் காலத்தையும் விட, இன்று பெரிதும் உணரப்படுவது. போரும் அதனோடிணைந்த இருள் நிறைந்த ஆபத்துக்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு மாப்பிள்ளை அதிகரிப்பும் இங்கு முக்கியத்துவம் பெறும், குறிப்பாக தம் இளம் மனைவியரை உடன் அழைத்துச் செல்ல முடியாத நிலையில் தனிச் சீவியமே பெருவழக்காகிறது. இந்நிலையில் கணவனை இழந்துவிடாத நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. மாங்கல்ய பலம் நாடி இந்தப் பூசையினைச் செய்த பலர் இவ்வகையினராக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய குடும்ப சுகம், மகிழ்ச்சி வேண்டி நிற்பவர்களிலும் கணிசமானவர்கள் இன்றைய சமூக மாற்றங்களிடை குடும்ப நிறுவனம் காணும் உடைவுகளுக்கு நிவாரணம் வேண்டி நிற்பவர்களாக விளங்கக் காணலாம்.
இவை அனைத்திற்கும் மேலான ஒரு முக்கிய சமூகப் பணியை இத்திருவிளக்குப் gᏗ 6ᏡᏯ* நிறைவேற்றி நிற்பதனை எனது
 
 
 
 
 

& கலைக்கேசரி 45
ஆய்வின் போது உறுதியாகக் காணமுடிந்தது. எனது துர்க்கா பற்றிய ஆய்விலும் இதன் முக்கியத்துவத்தைச் சுட்டியிருந்தேன். எமது சமூகத்தில் ஒரு பெண் தனது திருமண விருப்பை வெளியிடுவது கற்பினை இழத்தலுக்குச் சமானமாக, இழிவாகக் கருதப்படும் நிலையில் பண்பாட்டினால் அங்கீகரிக்கப்பட்ட திரு விளக்குப் பூசை செய்தல் எனும் ஊடகத்தினூடாக ஒருத்தி தனது பெற்றோருக்கும், சமூகத்திற்கும் தன் விருப்பினைச் சொல்ல முடிகிறது. அழுத்தும் சமூகப் பிரச்சினையான திருமணம், குடும்ப வாழ்வு என்ற தேவையும், அதனை இந்தப் பூசையுடன் இணைத்துப் பிரபலம் தரும் ஆலய பிரசாரங்கள், அவற்றிற்குக் களம் அமைக்கும் இன்றைய திரைப்படங்கள், மங்கையர் சஞ்சிகைகள் என்பனவும் சேர்த்து திருவிளக்குப் பூசையின் எழுச்சிக்குக்காலாயின எனலாம்.
இறுக்கமான சைவ மரபினிடை உள்நுழைய முடியாமலிருந்த புதிய வழிபாட்டு மரபுகள் சில இன்று இலகுவாக நுழையத்தக்கதாக எமது சமூக சமய அமைப்புக்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுடன் இவ்வாறான வழிபாட்டு மரபுகளைத் தொடர்பு படுத்தி மேலும் விரிவாக ஆராயலாம். உசாத்துணைகள்
இந்து மதம் அழைக்கிறது : ஒக்டோபர் இதழ் - 1986 மங்கை ஏப்ரல் இதழ் - 1986, தமிழ்நாடு Freeman, james (1975) - religious changes in a Hindu pilgrimage centre, review of religious research, 16,124-133
Obeysekere gananath (1977) social change and the deities, the rise of the kataragama cult in modern sri lanka, man 12, 377-96
Shanmugalingam, Nagalingam (2002) A new face of Durga: religious and social change in Srilanka, kalinga publications, Delhi.

Page 46
கலைக்கேசரி கி 46 ធ្យូង (តៃវ៉ា
 

ஓர் சிறப்புப் பார்வை ழ்ப்பாண ராஜதானி வரலாறு பற்றியதான ஒரு
நோக்கினைப் பரவலாக இன்றைய தலை முறையின ரும், எதிர்காலத் தலை முறையினரும் அறிந்திருப்பது
இன்றியமையாததாகும். கடைசித் தமிழ் ராஜதானியான யாழ்ப்பாண ராஜதானியின் தலை நகரமாக விளங்கியது நல்லூர் ஆகும். அத்தகையதான வரலாற்றுப் பெருமை வாய்ந்த நல்லூர் நகரமானது வரலாற்று ரீதியில் தனிப் பெருமை பெற்றதாகவும், அதே சமயம, சமயப் பின்னணியுடன் உயரிய நகரமாக அன்றும், இன்றும், விளங்குகின்றது.
ஆங்காங்கே சரித்திர வரலாற்றினை நாம் எடுத்து நோக்கும் போது, அதன் வரலாற்றுப் பின்னணி சுவாரஸ்யம் மிக்கதாகவும் பண்பாட்டியலில் சிறந்த வரலாற்றுப் பெருமை மிக்கதாகவும் விளங்குவதைக் காணலாம். இத்தனித்துவமான ராஜதானி காலக் கிரமத்தில், அன்னிய ஆட்சியாளரான போர்த்துக்கேயரிடம், அவர்களது காலனித்துவ ஆட்சிக்கு அடிபணிந்தது.
யாழ்ப்பாண ராஜதானியானது பாண்டிய மன்னர்களின் வழித் தோன்றலாக விளங்கிய தமிழ் பரம்பரையின் வம்சாவழி மன்னர்களினால் ஏறத்தாழ கி.பி. 1200 ஆம் ஆண்டுக் காலப்பகுதி தொடக்கம் சுமார் நானுற்றுமூன்று ஆண்டுகள் ஆளப்பட்டு வந்தது. ஆரிய சக்கரவர்த்திகள் என்ற பெயர் பூண்ட அரச வம்சமே, நீண்டகாலமாகச் செழுமையுடன் ஆட்சி செய்து வந்தது.
வரலாற்றுக் குறிப்புகளின்படி குலசேகர சிங்கை ஆரியன் காலமானது கி.பி. /240 தொடக்கம் /256 வரை நீடித்தது. அதனை அடுத்து குலத்துங்க சிங்கை ஆரியன் ஆட்சியானது ஏறத்தாழ கி.பி. 1256 தொடக்கம் கி.பி. 1279 வரையிலும் விக்கிரம சிங்கை ஆரியன் 1279 தொடக்கம் 1302 வரையிலும் நீடித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, வரலாற்றுப் பின்னணியில் கி.பி. 1302 தொடக்கம் கி.பி. /325 வரை வரோதய சிங்கை ஆரியனும் கி.பி. /325 தொடக்கம் கி.பி. 1348 வரை
மார்த்தாண்ட சிங்கை ஆரியனும் ஆட்சி செய்தனர். அதனைத் தொடர்ந்து கி.பி. 1348 தொடக்கம் கி.பி. 1377 வரை குணபூஷண சிங்கை ஆரியனின் ஆட்சி நீடித்தது.
குணபூஷண சிங்கை மன்னன் ஆட்சிக்குப் பின்னர் வரோதய சிங்கை ஆரிய மன்னன் ஆட்சியானது கி.பி. 1371 தொடக்கம் கி.பி. 1380 வரை நீடித்திருந்தது. அவ்வாறே கி.பி. 1380 தொடக்கம் கி.பி. /4/0 வரை சியவிர சிங்கை ஆரியன் ஆட்சியும் நீடித்தது. அதனைத் தொடர்ந்து யாழ் ராஜதானி வரிசையில், ஆட்சி புரிந்த மன்னர் வரிசையில் குணவீர சிங்கை ஆரியனது ஆட்சிக் காலமானது கி.பி. /4/0 தொடக்கம் /440 வரையும்,

Page 47
அவ்வாறே /440 தொடக்கம் /450 வரை கனகசூரிய மன்னன் ஆட்சியும் இடம்பெற்றது.
இதன் பின்னர் யாழ் ராஜதானியின் கடைசித் தலை நகரமான நல்லூரானது யாழ்ப்பாணத் தலைநகரமாயிற்று. இக்கால கட்டத்திலே இந்த ராஜதானியானது வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் குறிப்பிட்ட அளவு விஸ்தரிப்புப் பெற்று இருந்தது என வரலாற்றுக் குறிப்புகள் சாட்சி பகருகின்றன.
இக்கால கட்டத்திலேயே கோட்டையை ஆண்ட ஆறாம் பராக்கிரம பாகு தன் வளர்ப்பு மகனான செண்பகப் பெருமாளை யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுமாறு ஏவி விட்டான். செண்பகப் பெருமாள் என்பவன், மலையாளத்தில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பணிக்கன் என்பவனது மகனாவான். அப்பணிக்கனுக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தனர் என்றும், அவர்களில் மூத்த புதல்வன் செண்பகப் பெருமாள் என்றும் சிங்கள மொழியில் சப்புமால் குமாரய என்றும், இளைய புதல்வன் ஜெயவீரன் அம்புலகல குமாரய என்றும், குறிப்பிட்டு அழைக்கப்பட்டு வந்தனர் என வரலாற்றுச் சான்றுகள் சாட்சி மொழிகின்றன. ஆண் புத்திரப் பாக்கியம் அற்ற ஆறாம் பராக்கிரமபாகு மன்னன், இவ்விருவர்களையும் தன் வளர்ப்பு மகன்களாக வளர்த்தான் என வரலாறு எடுத்தியம்புகின்றது.
இந்த வகையில் வன்னியை ஆண்ட மன்னர்களை அடக்கி, யாழ்ப்பாண அரசனை வெற்றிவாகை சூடி வருமாறு செண்பகப் பெருமாள் பணிக்கப்பட்டான். அவ்வாறே கனகசூரிய சிங்கை
ஆரியன், என்ற அக்கால மன்னனை தோற்கடித்து
வெற்றிவாகை சூடிய செண்பகப் பெருமாள் யாழ்
 

,ே கலைக்கேசரி 47
ராஜதானியை ஏறத்தாழ /7 ஆண்டுகள் ஆட்சி செய்தான். அதாவது கி.பி. /450 தொடக்கம் /467 வரை அரசாண்டான். செண்பகப் பெருமாள் ஆட்சிப்பீடம் ஏறியதன் விளைவாக, தன் ஆட்சியினை இழந்த கனக சூரியன், இந்தியாவில் தஞ்சம் புகுந்தான். செண்பகப் பெருமாளே நல்லூரை தன் தலை நகரமாக்கி ஆட்சி பீடம் ஏறியதாக வரலாறு எடுத்தியம்புகின்றது. இச்செண்பகப் பெருமாளே ஸ்ரீசங்கபோதி புவனேக பாகு எனப் பெயர் பூண்டு ஆட்சி செலுத்தி வந்தான். அவனாலேயே நல்லூர் கந்தன் ஆலயம் கட்டப் பெற்றது என வரலாறு சாட்சி மொழிகின்றது.
ஆயினும், கோட்டையை ஆண்ட ஆறாம் பராக்கிரம மன்னன் ஆட்சியானது, அவனது மரணத்திற்கு பின், அவனது மகள் வழிப் பேரன் ஆட்சிபீடம் ஏறிய செய்தியினைக் கேள்வியுற்ற செண்பகப் பெருமாள், கோட்டைக்கு திரும்பி அவனது பேரனைக் கொன்று ஆறாம் புவனேகபாகு என்ற பெயருடன், கோட்டை அரசன் ஆனான்.
செண்பகப் பெருமாள், விஜயபாகு என்னும் ஒருவனை யாழ்ப்பாண அரசாட்சிக்கு நியமித்து விட்டு, தான் கோட்டை அரசனானான் என வரலாறு எடுத்தியம்புகின்றது. ஆயினும், இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்த அரசன் கனக சூரியன், விஜயபாகு மன்னனைத் தோற்கடித்து மீண்டும் அரியணை ஏறினான்.
அரசன் சிங்கை ஆரியன் கனகசூரியன், நல்லூரை மீண்டும் தனது தலை நகராகக் கொண்டு யாழ் ராஜ்யத்தைச் சிறப்புற நிர்மாணித்து வந்தான் என வரலாறுகள் வாயிலாக இன்றும்

Page 48
கலைக்கேசரி தீ 48
நாம் அறிகின்றோம். கனக சூரியன் ஆட்சிக்காலத்தில் பல வீதிகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு தொழிலாளர் பெயரிலும் வீதிகள் அமைக்கப்பட்டு அவர்களது பெயர்களால் அவ்வீதிகள் அழைக்கப்பட்டன. இன்று வரை பல விதிகள் அதே பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகின்றன. கனக சூரியன் ஆட்சிக்குப்பின் அவனது மகன் பரராஜசேகர மன்னனின் ஆட்சிக் காலம் /478 தொடக்கம் /5/9 வரை நீடித்தது.
சிங்கைப் பரராஜசேகரன் ஆட்சிக் காலமானது யாழ்ப்பாணத்தை ஆண்ட சகல மன்னர்களினதும் ஆட்சியுடன் ஒப்பிடுகையில் பொற்காலம் எனக் குறிப்பிடலாம். பரராஜசேகரன் ஆட்சிக் காலத்தில் யமுனாரி ஏரி உட்பட ஏராளம் குளங்கள் நீர்த் தேவைகளுக்காகக் கட்டப்பட்டன. மேலும் நல்லூரைச் சுற்றிச் சட்டநாதர் ஆலயம், வெயிலுகந்த பிள்ளையார் ஆலயம், கைலாயநாதர் ஆலயம், வீரமா காளிஅம்மன் ஆலயம், ஆகிய பிரசித்தம் பெற்ற ஆலயங்கள்
கட்டப்பட்டன.
பரராஜசேகரனது மூன்றாவது மனைவியின் மகனே கி.பி. /5/9 ஆண்டு தொடக்கம் /56/ வரை யாழ் மண்னை அரசாண்ட (முதலாம்) சங்கிலி மன்னன் ஆகும். இக்காலப்பகுதியிலே யாழ் ராஜ்யம் போர்த்துக்கேயர் ஊடுருவலுக்கு ஏதுவாயிற்று எனலாம். ஆயினும் காலக்கிரமத்தில் போர்த்துக்கேயருடன் சமாதானம் மேற்கொள்ளப்பட்டு போர்த்துக்கேய ஆட்சியாளர்களின் அனுசரனையுடன் பல மன்னர்கள் ஆண்டனர். குறிப்பாக புவிராஜா பண்டாரம், கி.பி. 156/ தொடக்கம் /565 வரையும், பெரியபிள்ளை கி.பி. 1565 தொடக்கம் 1582 வரையும், அதனைத் தொடர்ந்து மீண்டும் மற்றுமொரு மன்னனான புவிராஜா /582 தொடக்கம் /59/
 

வரையும், எதிர்மான சிங்கம் கி.பி. 159/ தொடக்கம் /6/5 வரை யும் ஆட்சி செய்தனர். அதன் பிற்பாடு வயதில் மிகவும் இளையவனான முடிக்குரிய இளவரசனான அரசகேசரி அரியணை ஏறினான். அவனது காலம் /6/5 தொடக்கம் /6/7 வரையான காலப்பகுதியாகும். இறுதியில் யாழ் ராஜதானியின் கடைசி மன்னனான சங்கிலிகுமாரன் இளவரசன் அரசகேசரியினைக் கொன்று அரியணை ஏறியதாக வரலாற்றுச் சுவடிகள் சான்று பகிர்கின்றன. இவனது ஆட்சிக் காலமானது /6/7 தொடக்கம் /6/8 வரை நீடித்தது. சங்கிலி மன்னன் ஆட்சிக் காலமானது வரலாற்றுச் சுவடுகளின்படி மிகவும் குருகியதும் கொடுமைமிக்க ஆட்சிக் காலமாகவும் விளங்கியது எனலாம்.
ஆயினும் கி.பி. /6/8 ஆம் ஆண்டு சங்கிலிகுமாரனின் ஆட்சி போர்த்துக்கேயரிடம் வீழ்ச்சியுற்றது. போர்த்துக்கேய
படைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட சங்கிலி மன்னன் தென்னிந்தியாவில் உள்ள கோவாவிற்கு நாடு கடத்தப்பட்டு அங்கு தூக்கில் இடப்பட்டதாக வரலாறு வாயிலாக அறிகிறோம். இதுவே தனி ராஜ்யமாக விளங்கிய யாழ் மண்ணின் பண்டைய அரசாட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று.
மேலும் இன்று சரித்திர வரலாற்றுப் பெருமைகளை எடுத்தியம்பும் யமுனா ஏரி, சங்கிலியன் தோப்பு, சங்கிலியன் அரண்மனை வாயில் முகப்பு, மந்திரியின் வதிவிடம் மற்றும் குறிப்பிட்ட கோயில்கள், சங்கிலியனின் உருவச்சிலை, என்பன இன்றும் பலதரப்பட்ட வரலாற்றுச் சுவடுகளாக, பண்டைய யாழ்ப்பாண ராஜதானியினை பறைசாற்றி நினைவூட்டும்
ஞாபகார்த்தச் சின்னங்களாக விளங்குகின்றன. భ
- மதுபாஷினி மகாதேவா

Page 49

£I 8£419), noCorsi09@ 19:19 (noɑogo, quocigos|×ueg JuəudolɔAƏQ IeuoỊ6ə\!8!!0!!!
q13)Fisioorso09 IĜŌŌŌシg eFFTILFØs|Lorsurto[ĝoğ@Ų9Ųıło59战四físı §§@-@@ Nostā 199Įmosso snoodi Qolsissiɗɗo golygostoso Fisg)?୧୪୦) ।}6 O 1(ප ඥෆලූලoඋදා ෆශ්‍රව්‍රමේd
solosae soooooo isotnosto osso) soţilo oo@sı Qofnssoof) gif@lo | G 目) Bezosst@@@@@@@@@zz gén 98110
TÊ@jo 109@qİsto 1909? ĶĒRo0çZ 199ŲnĢIĘisto @@@Ļ9Įilo ogĚg)([ı @qgħolimųohorto @ZIĶĒĢĒĻ9 @@@@@Ļ9Įilo úIGĖılı9@IIIIo, múırı

Page 50


Page 51
ஜெய்ப்பூரின் அழகு மாளிகை
ஹவா மஹால்
6 ய்ப்பூர் நகரின் மிகக் கவர்ச்சியான மாளிகைகளில் ஒன்றாக விளங்குவது வறவா
மஹால் (Hawa Mahal) என்றால் மிகையில்லை. ஹவா என்றால் அவர்களது மொழியில் காற்று என்பது அர்த்தமாகும். இந்தக் காற்று மாளிகை’ யில் சுமார் 953
ஜன்னல்கள் go Girging07. இவற்றினூடாக காற்று உட்புகுவதால், மாளிகை எப்போதுமே குளிர்மையாக இருக்கும். அதனாலேயே தான் இவ்வழகிய மாளிகைக்கு ஹவா மஹால் எனப் பெயரிடப்பட்டது. SAKSASANA ஜெய்ப்பூரின் மிகப்பெரிய நகர மாளிகைக் கட்டிடத் தொகுதியில் ஒரு பகுதியாக ஹவா மஹால் விளங்கினாலும், அது தனக்கேயுரிய கவர்ச்சி அமைப்பினால்,
பார்வையாளர்களைப் பெருமளவில் தன்னகத்தே கவரும்
பான்மையைக் கொண்டு விளங்குகின்றது. வுறவா மஹறால் எந்தப் பெண்ணின் ஞாபகத்துக்கும் கட்டப்பட்ட மாளிகையல்ல. பெண்களுக்காகக் கட்டப்பட்டது என்று கூற வேண்டும். ஆம் / ராஜபுத்திர ஆட்சியாளர்களது குடும்பத்துப் பெண்களின் வசதிக்காக இம்மாளிகை அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜபுத்திர ஆட்சியாளர்கள் தமது மரபுகளைப் பேணுவதில் மிகுந்த கட்டுப்பாடுடையவர்கள். தமது குடும்பத்துப் பெண்கள் பொது மக்களுடன் கலப்பதில் விருப்பமில்லாதவர்கள். ராஜ புத்திர குடும்பப் பெண்களும் தமது வம்சப் பெருமைகளையும் பெயரையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர்கள். அதனால் அவர்கள் பொது மக்கள் முன்னிலையிலோ அல்லது அன்னியர்கள் முன்னிலையிலோ தோன்ற விரும்பாதவர்களாக இருந்தார்கள்.
எனினும் அவர்களது இந்தக் கோட்பாடு நாளாந்த ராஜ்ய விடயங்களை அவர்கள் கவனித்துக் கொள்வதற்குக் குந்தகமாக அமையவில்லை. ஆட்சி தொடர்பான விடயங்கள் ஆராயப்படும் அரச மாளிகைகளில், பெண்கள் அவற்றினைக் கவனித்துக் கொள்ளும் வகையில் விசேட கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் அமர்ந்திருந்தவாறே சகல ஆட்சி விடயங்களையும் அவர்கள் கவனித்துக் கொண்டனர். உள்ளத விடயங்கள் இவ்விதமானால் வெளியுலக விடயங்களை அவர்கள் எவ்விதம் கவனித்துக் கொள்வது? இவ்விடத்தில் தான் ஹவா மஹால் போன்ற ஒரு மாளிகை கட்டப்பட வேண்டும் என்ற எண்ணப்பாடு தோன்றியது.
எனவே /799 ஆம் ஆண்டு மஹாராஜா சவாய் பிரதாப்
சிங்கினால் இந்த வறவா மாளிகை கட்டப்பட்டது. இவர் இம்
 
 
 
 


Page 52
總
 

மாளிகையைக் கட்டிமுடித்தாரெனினும் இதற்குக் கால்கோள்
இட்டவர் 1727 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த இம்மன்னனின் பாட்டனாரான மஹாராஜா சவாய் ஜெய் சிங் ஆவார்.
ஜெய்ப்பூரின் பிரதான வீதிகளில் ஒன்றில் அமைக்கப்பட்ட ஹவா மாளிகையில் இருந்தவாறு ராஜபுத்திர குடும்ப மகளிர் கீழே கடைத் தெருக்களிலும் மற்றும் சுற்றுப் புறத்திலும் நடக்கும் விடயங்களை அவதானிக்கும் வகையில் அமைக்கப்பட்டமை அதன் விசேட அம்சமாகும். மேலிருந்தவாறே அவர்கள் தெருவில் உள்ள தமக்கு வேண்டிய பொருட்களை தெரிவுசெய்வார்கள். ஜெய்ப்பூர் நகர வாசிகளின் அன்றாட அலுவல்களை தற்போது அம்மாளிகை அமைதியாக அவதானிக்கும் அதேவேளை, அதைப் U/177řGODGJ (CSPC வருவோரையும் அன்புடன் வரவேற்கிறது.
ஐந்து தளங்களைக் கொண்ட இம்மாளிகையை வடிவமைத்து உருவாக்கியவர் லால் சந்த் உஸ்தாத் என்ற
கட்டடக்கலை நிபுணராவார். இவர் கிருஷ்ண பரமாத்மா மீதும்
ராதை மீதும் மிகுந்த பக்தி கொண்டவர். தமது வேலையை அவர்களுக்கே அர்ப்பணமாக்கியவர். கூர் நுனிக்கோபுர அமைப்பில் அமைந்த இம்மாளிகை கிருஷ்ண பரமாத்மாவின் 3606060)CC/ அலங்கரிக்கும் முடியைப் போன்றதோ தோற்றத்தினை வறவா மஹாலின் கூர் நுனிக்கோபுர வடிவ அளிப்பதாக விளங்குகின்றது.
மேடை போன்ற இடத்தில் அமைந்துள்ள இக்கட்டடம், 50 அ
உயரம் கொண்டது. அதன் பருமன் ஓர் அடிக்கும் குறைவானது
நகர மாளிகையின் கதவின் ஊடாக இதன் நுழைவாயி அமைந்திருக்கிறது. அதன் மேலுள்ள மூன்று தளங்களும் தனி ஒ

Page 53
அமைப்பினாலும் பிரபல்யம் பெற்று இருப்பதுடன் ராஜபுத்தி கலைத்துவத்திற்கு சிறந்ததோர் உதாரணமாகவும் திகழ்கின்றது.
வீதியிலிருந்து அதன் முகப்பைப் பார்க்கின்ற போது, ஒரு மாளிகை என்ற தோற்றத்தையும் விட, ஒரு திரையைப் பார்ப் பது போன்ற உணர்வையே ஏற்படுத்தும்.
6)6)J67fმც(%ზ6) இம்மாளிகை மிகச்சிறந்த கட்டட வேலைப்பாடுகளுடன், கண்ணையும் கருத்தையும் கவர்ந்தாலும், மாளிகையின் உட்பகுதி மிக எளிமையான வேலைப்பாடுகளுடன் தோன்றுவது பார்வையாளர்களுக்கு ஆச்சரியமளிக்கும். இருப்பினும் உள்ளே நின்றவாறு, ஜெய்ப்பூர்
நகரின் அழகிய காட்சிகள் பலவற்றையும் பார்வையாளர்கள்
மிகப்பெரிய சுற்றுலாத் தலமாகவும் விளங்கும் ஜெய்ப்பூர்
நகரம், எல்லா போக்குவரத்து வசதிகளாலும் இணைக்கப்பட்ட
 
 
 


Page 54
SOsoj, (Bën k 54 យលryវើ
தமிழர் கலாசாரத்தில்
டும்பம் ஒன்றில் புதிய அங்கத்தவர் ஒருவரின் வரவு @ மனமகிழ்வையும், சந்தோசத்தையும் கொடுக்கக்கூடியது. அந்த உறவு சிறு குழந்தையாக இருக்கும் பட்சத்தில் மகிழ்வு இரட்டிப்பாகும். புதிதாகக் பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அக் குழந்தையைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தமிழர் பண்பாட்டுடன் ც%ჩ6ბ76öfმც) பிணைந்ததாகவே அமைந்துள்ளது.
ஒரு குழந்தை பிறந்த வீடு துடக்கு வீடாகவே கருதப்படும். சொந்தங்கள், உறவுகள் என அனைவருமே புதிய வரவை பரிசுகளோடு வந்து பார்த்து மகிழ்வார்கள். உறவில் வயதில் மூத்தவர்கள் குழந்தையைப் பார்க்கும் போதே குழந்தையின் ஜாடையைச் சொல்லி விடுவார்கள். பொதுவாக ஆண் குழந்தை அம்மாவைப் போலவும், பெண் குழந்தை அப்பாவைப் போலவும் இருந்தால் தாய், தந்தையருக்கு நல்லது என்பது நம்மவர் நம்பிக்கையாகும்.
குழந்தை பிறந்த 3/ஆம் நாள் துடக்குக் கழித்தல் நிகழ்த்தப்படும். அன்றைய தினம் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் வழக்காறும் உண்டு, துடக்குக் கழித்தல் சடங்கு இந்துக் கோவில் பூஜைக் கருமங்களை ஆற்றும் பிராமணர்
ஒருவரால் நிகழ்த்தப்படும். பெண் குழந்தையாக இருந்தால் அன்றைய தினம் காதணி அல்லது காது குத்துவார்கள். குழந்தை
 

.
D 595605 USIgSO5 (UU
பிறந்து 41 நாட்கள் கழிந்த பின்னர் காது குத்தும் வழக்கமும் உண்டு. குழந்தையின் காது மடல்கள் மிக மெல்லியதாக இருக்கும் போதே காது குத்துவது நல்லது என்று பெரியோர்கள் கூறுவார்கள். தமிழர் வாழ்வில் காது குத்தல் என்பது மரபு சார்ந்த ஒரு நிகழ்வாகும். அன்றைய தினம் குழந்தையை தொட்டிலில் இடும் நிகழ்வும் இடம்பெறும்.
மேலும் குழந்தை பிறந்து 31 ஆம் நாள் அன்றே குழந்தைக்கு
நகைகள் அணிவிப்பார்கள். தந்தை அல்லது குடும்பத்தில் முதிர்ந்த ஒருவர் முதல் முதலாக குழந்தைக்கு நகைகளை அணிவிப்பார். பிறந்த குழந்தைகளுக்கு காப்பு, சங்கிலி, மோதிரம் முதலிய அணிகலன்களை அணிவித்து மகிழ்வார்கள். காப்பு என்ற சொல்லுக்கு பாதுகாப்பு என்ற பொருளும் உண்டு காவல் மரபிற்காக தோள் மூட்டுக்குக் கீழே காப்புக் கட்டிய வழமை மருவி கை மணிக்கட்டில் காப்பு அணியும் முறையாக தற்போது வழங்குகிறது. கடகம் என்னும் பெயரும் காப்புக்கு உண்டு. கடகம் என்னும் சொல்லுக்கு கங்கணம், வட்டம் போன்ற பொருள்கள் கிடைக்கப்பெறுகின்றன. இதனாலோ என்னவோ குழந்தைகளுக்கு கைகளில் தங்கக் காப்பு அணிவித்து மகிழ்வதுடன், குழந்தைகளுக்கு கண் திருஷ்டி படாமல் இருப்பதற்கு கருகமணி மாலை, கறுப்புப் பொட்டு, கறுப்புக் காப்பு முதலியவற்றை அணியும் வழக்கமும் காணப்படுகிறது.
மேலும் கறுப்புக் கயிற்றில் அல்லது தங்கச் சங்கிலியில்

Page 55
பஞ்சாயத்தைக் கோர்த்து குழந்தைக்கு அணிவிப்பார்கள். இதில் சூலம் முதலிய வடிவங்கள் இருக்கும். இவை தீய சக்திகளிடம் இருந்து குழந்தையைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை காலங்காலமாக உண்டு. அதேநேரம் ஐம்பொன் காப்பையும் குழந்தையின் காலில் அணிவிப்பார்கள். தங்கம், பித்தளை, வெள்ளி இரும்பு, செப்பு ஆகிய ஐவகையான உலோகங்கள் கொண்டு இவை உருவாக்கப்படுவதால் குழந்தையைப்
பாதுகாக்கும் சிறப்பு மிக்க அணிகலனாகக் கருதப்படுகின்றது.
ஐம்பொன் உடலில் படுவதால் உடலுக்குத் தேவையா வெப்பம் கிடைப்பதுடன், நரம்புகளுக்கும் சக்தி கிடைக்கிற நிறைந்த மருத்துவ குணம் கொண்ட ஐம்பொன் காப்புக i நரம்புகளுக்கு சீரான இரத்தோட்டத்தை வழங்குகின்றன. «ა:
பழங்காலத்தில் காற்சிலம்பை ஒத்த அமைப்புடன் தண்ை என்னும் ஒருவகை ஒலி எழுப்பக் கூடிய ஆபரணத்தை குழந்தைக்கு அணிவிக்கும் வழக்கமும் இருந்துள்ளது. இை தற்காலத்தில் புழக்கத்தில் இல்லாவிட்டாலும் சதங்ை இன்திரிை முதலிய ஆபரணங்கள் பழங்காலத்தி குழந்தைகளுக்கு அணிசேர்த்த ஆபரணங்களாகும். தங் என்பது மருத்துவ பயன் கொண்ட உலோகம் ஆகும்.
தங்கத்திலே தண்ணிர் பட்டு உடம்பிலே சேரும்போது ua நோய்கள் இல்லாதொழிகின்றன. இக்குணம் வெள்ளிக்கும் உண்டு. பழங்காலத்தில் குழந்தைகளுக்கு அணிவிக்கப்பெற்ற இடைஅணிகள் அரைத்தொடர்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. பொதுவாக குழந்தைகளின் இடுப்பில் பொன் மற்றும் வெள்ளியால் உருவாக்கப்பட்ட சங்கிலிகளை அணிவிப்பார்கள். தற்காலத்தில் அரைஞாண் கொடி அல்லது இடுப்புச் சங்கிலி என்றும் அழைப்பார்கள். இதை தமிழ் இலக்கியங்கள் கிண்கிணி எனச் சிறப்பாக எடுத்தியம்புகிறது. கந்தர் அலங்காரத்தில் 'கிண்கிணி சிந்த விளையாடும் பிள்ளை திருவறையில் கிண்கிணி ஓசை பதினான்கு உலகமும் கேட்டதுவே எனக்கூறப்பட்டதில் இருந்து மிகப் பழைமையான காலத்தில் குழந்தைகளின் இடையை கிண்கிணி என்ற ஆபரணம் அலங்கரித்தது எனத் தெரிந்து கொள்ளமுடியும்.
குழந்தைகளுக்கு நெற்றியிலும், கன்னத்திலும் கறுப்புப் பொட்டு இடும் வழக்கமும் உண்டு. சவ்வரிசி, செவ்வரத்தம் பூ முதலிய இயற்கைப் பொருட்களைக் கொண்டு காய்ச்சப்படும் கறுப்புப் பொட்டை சுத்தப்படுத்திய சிரட்டையில் ஊற்றி நன்றாகக் காய வைத்துப் பொட்டாகப் பயன்படுத்துவார்கள். இவ்வாறு புதிதாகப் பிறந்த குழந்தையை அரணாக நின்று பாதுகாக்கும் நடவடிக்கைகள் காலங்காலமாக, இடத்துக்கு
இடம், பிரதேசத்துக்குப் பிரதேசம் மாறுபட்டாலு வேறுபட்டாலும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாற்றமில்லை.
= L Garfu II TiñIJST
 
 
 
 
 
 
 
 
 
 


Page 56
៣៣៣ ខែ 56 நினைவுத்திரை
இசையுலகின் ஒரு சகாப்தம் செம்மங்குழ முறிநீனிவாசய்யர்
6? ம்மங்குடி பூரீனிவாசய்யர் இசையுலகின் ஒரு ്.... இந்திய இசைப் பாரம்பரியத்தின் ஒரு தூணாக விளங்கிய இவர் கர்நாடக இசையில் ஒரு மேதையாக மாத்திரமன்றி, இசையோடு தொடர்பான பல்வேறு விடயங்களிலும் ஒரு ஜாம்பவானாகத் திகழ்ந்தார். இவருடைய பன்முகப்பட்ட மேதைமையை உலகிற்கு எடுத்துக்காட்ட இவர் பெற்றுள்ள கணக்கிலடங்கா விருதுகளும் ஏனைய இசை வல்லுனர்கள் இவரைப்பற்றிக் குறிப்பிட்டுள்ள கருத்துக்களுமே சான்றாகும்.
கேரளாவில் செம்மங்குடி அவர்கள் இசைக்காக ஆற்றிய மிக உன்னதமான பணிக்கு 1945 இல் மகாராஜாவினால் ‘ராஜ்யசேவா நிரத' (கொடுக்கப்பட்ட பட்டம் ) தொடக்கம்
சங்கீத கலாநிதி, இசைப்பேரறிஞர், சங்கீத கலா சிகாமணி, ராக
 

ரத்னா, சங்கீத சம்ரகஷ்க, சங்கீத கலா ரத்ன, சங்கீத கலாஸாகர, சங்கீத நாடக அக்கடமியின் ஃபெலோஷிப் விருது, டாக்டர், சங்கீத சாம்ராட், காளிதாஸ் சம்மன், சப்த கிரி சங்கீத வித்வான் மணி, ஜனாதிபதி விருது என இவர் பெற்ற விருதுகளும் பாராட்டுக்களும் ஏராளம்/
கர்நாடக இசையில் வளர்ச்சி பெற்றுவரும் இளைஞர்களின் தொகை கணிசமான அளவு அதிகரித்து வருவதாலும், தொழில் நுட்ப வளர்ச்சியோடு ஏராளமான பிற நாட்டவரும் இசையை விரும்பி ரசிப்பதாலும் எமது கர்நாடக இசை மென்மேலும் உயர்ச்சிபெறும் என்றாலும் அது வணிகமயமாகும் அபாயமும் தலை நீட்டுகிறது என்ற அபிப்பிராயத்தைத் தெரிவித்த செம்மங்குடி பூரீனிவாசய்யர் அவர்கள் 1908 ஆம் வருடம் ஜூலை 25 ஆம் திகதி கும்பகோணம் அருகேயுள்ள செம்மங்குடி என்ற ஊரில் பிறந்தார்.
இவருடைய தந்தையார் பூரீ ராதாகிருஷ்ண ஐயர். தாயார் பூரீமதி தர்மாம்பாள். வளமும் செழிப்பும் மிக்க சங்கீத வயலுக்குள்ளேயே முளைத்தெழுந்த இவ்வித்தின் தாய்மாமன் பிரபல பிடில் வித்துவான் திருக்கோடிக் காவல் பூரீ கிருஷ்ண 32(Oή.
பிறக்கும்போதே இறைவன் கொடையாகவும் பெற்றோர், பரம்பரை, சூழல் என இசை ஞானத்தோடே ஜனித்த குழந்தை அழும்போதே அந்த அழுகையின் தொனி இராக ஆலாபனையாக மிளிரும். தந்தையாரும் இசையில் ஊறித் திளைத்த பேர்வழி ஆலயங்கள் தோறும் பஜனை, நாம சங்கீர்த்தனம் செய்வதே அவரது தொழில், பூரீனிவாசன் சிறுவனாக வளரும்போதே, சுற்றாடலில் எத்தகைய இசையைக் கேட்டாலும் அதை நின்று நிதானித்து அவதானிப்பதிலும், அதனை அப்படியே திருப்பி ஒப்பிப்பதிலும் வல்லவனாகவே திகழ்ந்தான்
இவனது அபார ஆற்றலை அவதானிப்போர் பெரிதும் வியந்தனர், உஞ்ச விருத்திற்காக அதிகாலை வேளையில் விதிகளில் பாடிக்கொண்டு போவோருடைய பாடல்களை உன்னிப்பாக அவதானித்துத் தானும் அவர்களோடு பாடிக் கொண்டு செல்லும் போக்கைத் தனது எட்டு வயதிலேயே கடைப்பிடித்தான். எங்கெங்கு இசை கேட்கிறதோ அந்தக் கும்பலின் மத்தியிலே பூரீனிவாசனைக் 35/T6007ου/Tώ. அந்தளவுக்குப் பிறப்பிலிருந்தே இச்சிறுவனை இசை ஆகர்சித்துக் கொண்டது.
குழந்தை பூரீனிவாசனின் போக்கை அவதானித்த பெற்றோர் குதுரகலித்தனர். பள்ளிப் படிப்பிற்கான கல்வியைப் பெறும் வாய்ப்புகள் சுற்றாடலில் இல்லாமையாலும் Сy/Tдад பரியத்தையொட்டிய சங்கீதக் கலையையே வளர்த்தெடுத்தல் வாய்ப்பானது எனக் பெரியதாயாரின் மகனான பிடில் வித்துவான் செம்மங்குடி பூரீநாராயண ஸ்வாமி ஐயரிடம் குரு குலவாசம் செய்து சங்கீதம் கற்க அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நான்கு வருடங்கள் அதே குருவிடம் பாடம் கேட்டு மிக அவதானிப்போடும் ஆர்வத்துடனும் கற்றுவந்த

Page 57
பூரீனிவாசனின் குரல் சில காலம் செல்ல திடீரென பாட முடியாமல் இடர் பண்ணியது. ரொன்சில்ஸ் என்ற பிரச்சினையும் தோன்ற தொண்டை இசைக்குரிய இனிமையை இழந்து பாடமுடியாத நிலையை ஏற்படுத்தியது.
சங்கீத சாகரத்தில் மூழ்கி எழ வேண்டுமென்பதே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்த பூரீனிவாசன் இத் துன்பத்தையெல்லாம் இடறித்தள்ளி தொடர்ந்து சாதகம் செய்தபடியேயிருந்தான். அவன் முயற்சி வீண் போகவில்லை. திருவினையாக்கியது, தொடர்ந்து பூரீ ஸ்காராம் ராவ், உமையாள்புரம் பூரீ சுவாமிநாத ஐயர் என்ற வித்துவான்களிடம் எல்லாம் கற்ற பூரீனிவாசன் மகாராஜபுரம் பூரீ விஸ்வநாத ஐயரிடம் சில வருட காலம் குருகுலவாசம் செய்து தனது இசை மாளிகையைத் தளம் தளமாக தெளிவேற்றி மெருகூட்டிக் கொண்டார். தனக்கு இசை புகட்டிய குருமாரின் நுட்பமான ஞான பாவத்தைத் தனது உழைப்பினால் பெற்றுக்கொண்ட பூரீனிவாசன் பண்டைய ஆசாரங்கள் சிறிதும் பிசகாமல் சங்கதிகள் மளமளவென்று வேகத்தோடு வெளிவர ஸ்வரப் பிரஸ்தாரத்தோடு அற்புதமான பிடிகளுடன் U/TGc)
வல்லமையைப் பெற்றுக் கொண்டார்.
 

遠。
ខ្សឆ្នា 57
பத்தொன்பதாவது வயதிலே முதலாவது இசைக் கச்சேரியை நிகழ்த்திய இவர் இறுதிவரை சுமார் 75 ஆண்டுகள் தொடர்ந்து இசையுடனே வாழ்ந்தார்.
மனோதர்மப்படி அவரது ஆத்மார்த்தமான உள்ளத்திலிருந்து பிறக்கும் துல்லியமான இசையில் சொக்கி மகிழாதவர், புகழ்ந்து பாராட்டாதவர் இல்லை என்றே குறிப்பிடலாம். இசை வித்துவான்கள், நிபுணர்கள் , இசை மேதைகள் என இசையின் எல்லை கண்ட பெரும் பெரும் வித்தகர்களே செம்மங்குடியின் இசையைக் கேட்டு மகிழ்வதில் ஆர்வம் காட்டினர். இவருடைய மேதைமையைப் புகழ்ந்து கருத்துக்கள் கூறினர்.
இசையுலகின் )( 2)67. نقاع" மன்னனாகத் திகழ்ந்த செம்மங்குடிக்கு இசைஞானி இளையராஜா அவர்கள், 96 ஆவது பிறந்த நாளிலே பொற்காசுகளால் கனகாபிஷேகம் செய்து பாராட்டி கெளரவித்தார்.
செம்மங்குடி அவர்கள் இசைத்துறையில் பல புதிய புதிய நுட்பங்களைக் கண்டறிந்தது மாத்திரமன்றி அற்புதமாக வாதிக்கும் திறமைமிக்க பேச்சாளனாக விளங்கினார். அதுவுமன்றி திறமை மிக்க சாஹறித்ய கர்த்தாவாகவும் ஒப்புயர்வற்ற நிர்வாகியாகவும் கற்றோர் ஏத்தித்தொழும்

Page 58
ក្រុញឲ្យម៉ែផៃអឺ 58
ஆசானாகவும், பழைமைக்கும் மரபுக்கும் துளி கூடப் பங்கம் ஏற்படாது புதுமையை வரவேற்பதில் முதன்மை வாய்ந்தவராகவும் பல்லாயிரக் கணக்கான பாடல்களை ஒழுங்கு முறையாக ஸ்வரப்படுத்திப் பாடுவதற்கு உயிர் கொடுத்தவராகவும் விளங்கினார்.
தனது இனிய ஆதார ஸ்ருதிகளடங்கிய சாஸ்திர பூர்வமான இசையை மேடைக் கச்சேரிகள் மூலம் பிரபலப்படுத்திப் பல்லாயிரக் கணக்கான ரசிகர்களையும், பரம்பரையினரையும் சேகரித்துக்கொண்ட செம்மங்குடி தன் வாழ்நாள் முழுதையும் இசைக்காக அர்ப்பணித்தார். செம்மங்குடி சுவாதித் திருநாள் இசைக்கல்லூரி, திருவனந்தபுரம் இசைக் கல்லூரி, டெல்கி அகில இந்திய வானொலி நிலையம் எனப் பல இடங்களிலும் இசை ஆசிரியராகப் பணி புரிந்த காலங்களில் இசை தொடர்பான பல்வேறு ஆய்வுகளைச் செய்து புதிது புதிதாக ஏற்றுக் கொள்ளக்கூடிய அம்சங்களையெல்லாம் உள்வாங்கி இசைக்கு
மென்மேலும் வலுவூட்டினார்.
 

இசைப்பணியில் துறை போன ஒருவரால் தான் இத்தகைய கைங்கரியங்களை இலகுவாகக் கையாள முடியும். அதற்கமைவாக ஆற்றலும், திறமையும், கற்பனையும் மிக்க மகான்களால் தான் இந்திய இசைவானம் பளிச்சென மெருகேறி அகில உலகெங்கணுமே ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறது. இத்தகைய மாமேதைகளின் அடியொற்றி வந்த இசைதான் இன்றும் ஏ. ஆர். ரகுமான் போன்ற இளந் தலைமுறை ஆஸ்கார் விருது பெறத் தூண்டுகோலாகத் திகழ்ந்ததென்பதையும் நாம் மனம்கொள்ள வேண்டும்.
செம்மங்குடி என்ற அவர் பிறந்த ஊரின் பெயரால் இம்மாமேதை பூரீனிவாசன் அறியப்பட்டாலும் மேளகர்த்தாராகங்களென்ன, ஜன்னி ராகங்களென்ன எல்லாமே இம்மாமேதைக்கு அத்துப்படிதான் என்றாலும், சில ராகங்களின் பெயர்களை அடைமொழியாக வைத்து, அவரே அந்த இராகம் என்பது போல அழைக்கும் பண்பாடும் அன்று நிலவியது. அதில் ஒன்று கரஹரப்பிரியா’ பூரீனிவாசய்யர் என்பது. ஒரு தடவை சங்கீத கலாநிதி ஜி. என். பி. யிடம் கரகரப்பிரியா ராகத்தைப் பாடும்படி ஒரு ரசிகர் கேட்டாராம். அதற்கு அவர் '60600 U.S/fcUs பூரீனிவாசன் தானே அந்த ராகக் கோட்டையின் ராஜா. அவர் பாடிய இனிமையை விட அதில் பாட எனக்கு என்ன இருக்கிறது?’ என்றாராம். ஜி.என்.பி. அப்படியான பெரும் வித்துவான்கள், பக்கவாத்திய விற்பன்னர்கள் எனப் பலருமே செம்மங்குடியைப் பாராட்டிப் புகழ்ந்து அவருடைய மேதைமைக்குத் தலைவணங்கி மகிழ்வதுண்டு.
இரு அண்ணன்மாரோடு மூன்றாவது குழந்தையாகப் பிறந்த செம்மங்குடியின் இசைக் குடும்பத்தோடு தையம்மாள் என்ற பெண் அவருக்கு மனைவியாக வாய்த்தார். காந்திய வாதியாக எளிமையையும் கதராடைகளையுமே விரும்பிய இவருக்கு வாய்த்த மனைவியும் இவரது நிழல்போல ஒட்டிக் காரியம் பார்ப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். மனைவியினுடைய எளிமையான வாழ்வும் உயர்ந்த சிந்தனையும் தான் என்னை இந்தளவு உயரத்தைத் தொட ஆதரவாக இருந்தது என இப் பெரியார் அடிக்கடி மனைவியைப் பாராட்டுவார். இனிமையான இவர்களது இல்லற வாழ்வில் இவருக்கு இரு மகள்மாரும் மூன்று மகன்மாரும் மென்மேலும் இனிமையைக் கூட்டினர், 96 ஆண்டுகள் இனிய இசையோடு சஞ்சரித்த இவர் சென்னையிலுள்ள லாயிட்ஸ் வீதியில் இறுதி நாட்களில் வாழ்ந்து வந்தார்.
இசையே சுவாசம், இசையே இதயம், இசையே வாழ்வு என இனிய இசையால் எல்லா உள்ளங்களிலும் இனிமையை நிறைவித்த இம்மாமேதை, இசைப்பேரரசு கடந்த 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 3/ ஆம் திகதி காலை உலகின் தெய்வீக இசையோடு சங்கமமானார். இவருடைய மறைவு இசையுலகை யே இருளில் ஆழ்த்தியது.
Y - பத்மா சோமகாந்தன்

Page 59
Wor Mann
WWW.Va.
மேலதிக தகவல்களுக்
 
 
 
 

விருது வென்ற யாழ் மண்
ற்கு சிறு விளம்பரதாரர்களை
Connect with Jaffnc.
mann.Ik

Page 60
តែពាក្វាឌ័ ដ៏ 60 வரலாறு
(/)" இலங்கையின் UG0760) (U தலைநகரமாகும். இலங்கையின் இன்றைய
தலைநகரமான கொழும்பிலிருந்து ஏறத்தாழ 2/6 கிலோ மீட்டர்களுக்கு (734 மைல்) அப்பால் வடகிழக்கு புறத்தே பொலனறுவை என்னும் இப்பண்டைய தலைநகரம் அமைந்துள்ளது. இங்குள்ள இந்துமதக் கோயில்கள், தொன்மைவாய்ந்தவை, சரித்திர வாயிலாக வரலாற்றுச் சிறப்புப் பெற்றவை. இன்றைய தொல்பொருள் ஆராய்ச்சிக்கு பெரும் பயனளிப்பவையாகும். அடிப்படையில் பொலனறுவை என்னும் பெயரானது பாலி மற்றும் சிங்கள மொழிகளின் கலப்புப் பெயரெனக் கருதப்படுகின்றது.
அனுராதபுரம் என்னும் புராதன ராஜதானி வீழ்ச்சியுற்றதன் பின் பொலனறுவையே சரித்திர வாயிலான இலங்கையின் தலைநகரமாயிற்று. பொலனறுவைக் கால கட்டத்தில் இந்து ஆதிக்கம், இந்து மதம், இந்துப்பண்பாட்டுப் பாரம்பரியங்கள் சிறப்புற்று அதியுயர் வளர்ச்சியடைந்திருந்த காலப்பகுதி எனலாம். பொலனறுவையில் ஏராளமான இந்துச் சிற்பங்கள் வரலாற்றுப் பெருமைமிக்க புராதன இந்துச் சின்னங்கள் என்பன மலிந்தும், நிறைந்தும், பரந்தும், காணப்படுகின்றன. அவற்றில் சில வெறுமனே வழிபாட்டுச் சிற்பங்களான சிவன், சிவகாமசுந்தரி, பார்வதி, சோமஸ்கந்தமூர்த்தி, கணபதி,
சுப்பிரமணியர், சமயக்குரவர்கள் ஆகியோரது சிற்பங்கள்
 
 
 
 

அடங்கலாக நந்திகேஸ்வரர், காரைக்காலம்மையார் உட்பட பல இந்து சிற்பங்களை இன்றும் நாம் காணக் கூடியதாக உள்ளது.
ஆயினும், ஆங்காங்கே இன்றுடன் ஒப்பிடும்போது, பொலனறுவைச் சிவாலயச் சிற்பங்கள் குறிப்பாக, சிவன் சிற்பங்களின் சில பல மாற்றங்களை நாம் அவதானிக்க முடிகின்றது. அவையாவன, பொலனறுவை சிவன் சிற்பமாக பெரிதும் பிரதிபலிக்கப்படும் ஆனந்த தாண்டவ சிற்பத்தில் ஆனந்த தாண்டவத்தைச் சுற்றி அமையப்பெற்ற பிறப்பு, இறப்பு சக்கரத்தை வெளிப்படுத்தும் திருவாதிரையானது பொலனறுவை சிற்பத்தில் சற்று வேறுபட்டதாகவும் குறிப்பாக அச்சிற்பத்தில் வட்டவடிவுக்குப் பதில், சதுர வடிவமாகக் காணப்படுவதையும், சடாமுடியானது பரந்தும், விரிந்தும் காணப்படாதவிடத்தும் பெரும்பாலும் கட்டுண்ட தலைமுடியைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.
பொலனறுவை மாவட்டத்தில் அமையப்பெற்ற சிவாலயங்கள் பெரிதும் சிவாலயம் I, சிவாலயம் 2 என எண்ணிக்கை வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளமையை காண முடிகின்றது. பொதுவாக எடுத்து நோக்கும் போது, இவை செங்கற்களாலும் ஆங்காங்கே தூண்கள் கதவு நிலைகள் என்பன கருங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளமையை காணக் கூடியதாக உள்ளது. எது எவ்வாறாயினும், பொலனறுவை
மாவட்டம் பண்டைய காலத்தில் பெளத்த, இந்துமத

Page 61
செல்வாக்குக்கும், செழிப்புக்கும், ஒருமைப்பாட்டிற்கும் இருப்பிடமாக விளங்கியது என்றால் அது மிகையாகாது. காலக்கிரமத்தில் பொலனறுவையானது சோழ மன்னர் படையெடுப்புக்கு உட்படுத்தப்பட்டு, சோழ மன்னர் ஆட்சிக்கு அடிபணிந்தது. சோழ மன்னர் ஆட்சிக் காலத்தில் இயல்பாகவே இந்து சமய, சமூக, கலாசார பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கிய ஓர் உன்னத ராஜதானியாக விளங்கியது என்பதினை இன்றைய தொல்பொருள் ஆராய்ச்சியும், அதன் அகழ்வாராய்ச்சிப் பெறுபேறுகளும் பறைசாற்றுகின்றன.
சோழ ராஜ்யத்தின் ஆதிக்கமானது இலங்கையில் கிறிஸ்துவுக்குப் பின் 993 இல் ஆரம்பமானது எனலாம். சோழ ராஜ்யம் இலங்கையில் ஆரம்பமானது முதல் பொலனறுவை மாவட்டம் ஜனத்த மங்களம்; எனப் பெயரிடப்பட்டது.
இரண்டாவது சிவாலயம் எனப் பெயர் பெற்ற சோழ ராஜ்யத்தில் பொலனறுவையில் கட்டப்பட்ட சிவாலயம் முதலாம் ராஜராஜசோழனின் மனைவியின் நினைவாகக் கட்டப்பட்டதாகப் பொதுவாக நம்பப்படுகின்றது. இத்திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் தேவியரின் பெயரானது வன்னவன் மாதேவி ஈஸ்வரன் உதயர், எனக் குறிப்பிடப்பட்டு அழைக்கப்பட்டதாக வரலாற்றுச் சுவடுகளில் நாம் அறிகின்றோம். ராஜராஜன் தன் மனைவியின் பெயரில் ஞாபகார்த்தமாக இத்திருத்தலத்தினை செங்கற்களாலும் ஆங்காங்கே சிற் சில தேவைகளுக்கு கருங்கற்களாலும் கட்டியதாக எம்மால் கருதக்கூடியதாக உள்ளது.
பொலனறுவையில் காணப்படும் சிவலிங்கம், ஆங்காங்கே காணப்படும் அதிகார நந்திதேவரின் உருவம் என்பன ஏனைய சிவாலயங்களில் உள்ளது போன்று இங்கும் மூலஸ்தான மூர்த்தியான சிவலிங்கத்தை எதிர்கொண்டதாக அமையப் பெற்றிருக்கலாம் எனவும், இதிலிருந்து பொலனறுவைக் காலத்திலும் நந்திதேவரைக் காவற் தெய்வமாக அக்காலத்தில் கருதி வழிபட்டு வந்திருக்கலாம் என்பதையும் ஊகிக்க முடிகின்றது.
சோழர் காலத்தில் நிலவிய இந்துமத ஆதிக்கத்தை நாம் இன்றும் மாதோட்ட நன்நகரின் வரலாற்றுச் சுவடுகளில் காணமுடிகின்றது. மற்றும் தென் கைலாசம் எனப் போற்றப்படும் பிரபல்யமிக்க சிவாலயமானது முதலாம் விஜயபாகு மன்னனால் குறிப்பாக அவனது ஆட்சிக் காலமான கி.பி 1070 தொடக்கம் கி.பி ///4 வரை உள்ள காலகட்டத்தில் கந்தளாய் மாவட்டத்தில் கட்டப்பட்டதாக எம்மால் அறிய முடிகின்றது.
இரண்டாம் விக்கிரமபாகு மன்னன் ஆட்சிக் காலமானது கி.பி ///6 முதல் கி.பி //37 வரை நீடித்த காலப்பகுதியாகும். இவ்விரண்டாம் விக்கிரமபாகு மன்னனானவன் முதலாம் விஜயபாகுவின் மகன் ஆவான். இவன் சிறந்த சிவ பக்தனாகவும், உயர்ந்த ஆன்மீகவாதியாகவும் விளங்கி இந்துமதம் எவ்வாறு சோழர் ஆட்சிக் காலத்தில் இந்து சாஸ்திரீக சம்பிரதாயங்களுடன் உயர்ந்து விளங்கியதோ, அவ்வாறே அதே பாங்கில்

遠。 យ៉ាងវិញម៉ាឡៃ 61

Page 62
66ppiBáí # 62
இவ்விக்கிரமபாகு மன்னன் ஆட்சியின் போதும் பாதுகாக்கப்பட்டு வந்தது.
அவ்வாறே, இரண்டாம் கஜபாகு மன்னன் குறிப்பாக, கி.பி //37 ஆம் ஆண்டு தொடக்கம் //52 ஆம் ஆண்டு வரை பொலனறுவையை ஆண்டு வந்தான். இவன் காலத்திலேயே பொலனறுவையில் முதலாவது சிவாலயம் அமைக்கப்பட்டதாக நாம் அறிகின்றோம். 1908 ஆம் ஆண்டளவில், அகழ்வாராய்ச்சியின் போது, ஏராளமான செப்பு சிவன் உருவச்சிலைகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால்
கண்டெடுக்கப்பட்டன, Ꮿ/6ᏡᎧ 6ᎧᏗ gd COV/ôfcU ტნ 60) 6ს) பொக்கிஷங்களாக, கலாச்சார சிற்பக் கலை உன்னதத்தின்
66/61fo) U/C (74, இன்றும் உறுதி செய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
முதலாம் பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் இந்துசமய அனுஷ்டானங்கள் உயர்ந்த வகையில், பின்பற்றப்பட்டு வந்தன என்பதற்குப் பல ஆதாரங்கள் சான்றாக உள்ளன. அக்கால
அந்தணர்களுக்கு சமூக மட்டத்தில் உயரிய அந்தஸ்து
 
 

கொடுக்கப்பட்டு வந்தது என்பதினை சரித்திர வரலாற்றுச் சாட்சிகள் சான்று பகர்கின்றன. ஏறத்தாழ முதலாம் பராக்கிரமபாகு மன்னன் ஆட்சிக் காலத்தில் பதின்மூன்று இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டதாகவும், ஏற்கெனவே இருந்து
வந்த 6) OO677COO60) ஆலயங்கள் புனர்நிர்மாணம்
செய்யப்பட்டதாகவும் அவ்வாறே 60-26) 鸟ó(2 விதிமுறைகளுக்கு அமைய இந்துமதச் சிலைகள் பல ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் அறிகின்றோம். நிஸங்கமல்லன் கி.பி //86 தொடக்கம் //97 வரை ஆண்ட காலகட்டத்தில் அந்தன அர்ச்சகர்களுக்கு அஃதாவது ஆலயப் பணியாளர்களான இச்சமூகத்தினருக்கு ஆலயப் பணிகளை மேற்கொள்ளும் வண்ணம் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும், அவர்களது சகல நலன்களும் செவ்வனே கவனிக்கப்பட்டதாகவும் நாம் அறிகின்றோம்.
எது எவ்வாறாயினும், பராக்கிரமபாகு மன்னன் இறந்த பிற்பாடு ஏறத்தாழ 29 ஆண்டுகள் கழிந்த பின்னர், கலிங்கமன்னர் ஆட்சிக்கு பொலனறுவை உட்பட்டது. கலிங்க மன்னர்களின் ஒருவனான கலிங்கமாகா என்னும் மன்னன் கலிங்க விஜயபாகு எனப் பொலனறுவை வரலாற்றுக் குறிப்புக்களில் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றான்.
கலிங்கமாகா மன்னனானவன் தனது இருபத்து நாலாயிரம் படைத்துருப்பினருடன் பொலனறுவையைக் கைப்பற்றினான். ஆயினும், அவனது ஆட்சிக்காலம் பொதுப்படையில் எடுத்து நோக்கும் போது, பொதுமக்கள் மத்தியில் பெரிதும் பிரபல்யம் பெற்ற ஆட்சியாக கருதப்படவில்லை. பொதுப்படையில் எந்தவொரு ஆட்சியாளருக்கும் மக்கள் ஆதரவு என்பது இன்றியமையாததாகும். ஆயினும், துரதிர்ஷ்டவசமாக கலிங்கத்து மன்னனான கலிங்கமாகா பொதுமக்களிடையே பிரபல்யத்தை இழக்க நேரிட்டது. காரணம், பெரும்பாலான பெளத்த மத மக்களை இந்து மதத்தைத் தழுவத் தூண்டி அவர்களது மத உரிமைகளின் மீது தன் ஆதிக்கத்தைச் செலுத்த முற்பட்டதே ஆகும். இந்த வகையில், ஏறத்தாழ இருபத்து ஒன்பது ஆண்டுகாலமாகக் கலிங்க மன்னர் ஆட்சியில் சிக்குண்ட பொலனறுவை படிப்படியாக தன் செல்வாக்கை இழந்து, இறுதியில், தன் ராஜதானியை இழக்க நேரிட்டது.
எது எவ்வாறாயினும், சோழ மன்னர் ஆட்சிக்காலத்தில் பெரிதும் பெளத்த மதத்தினை பின்பற்றியவர்களுக்குக்கூட, உயரிய இடம் கொடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு அவர்களது மதக்கொள்கைகள் மதிக்கப்பட்டு, சீரிய வகையில் உயர்ந்த நிலைப்பாட்டில் பராமரிக்கப்பட்டனர் என்பதினைச் சரித்திர சான்றுகள் கூறுகின்றன. அவ்வாறே, பொலனறுவையை ஆண்ட பெளத்த மன்னர்கள் கூட, வேதங்களின் ஊடகமாகத் திகழும் சமஸ்கிருத மொழியையும், இந்து மத குருமார்களான அந்தண சமூகத்தினரையும், இந்து மதத்தினையும் உயரிய இடம் கொடுத்து, சீரிய வகையில் செவ்வனே பாதுகாத்து வந்தனர்.
பெரும்பாலான பெளத்த அரசர்கள் தென்னிந்திய

Page 63
அரசியர்களைத் திருமணம் முடித்ததன் விளைவாக பெரும்பாலான தென்னிந்திய அரசிகள் இலங்கையிலேயே தங்கி வாழ்ந்தனர். உதாரணமாக, முதலாம் விஜயபாகு மன்னன் கலிங்க தேச இளவரசியையே மணம் முடித்தான் என சான்றுகள் கூறுகின்றன. அவ்வாறே அவனது சகோதரியை பாண்டிய இளவரசனொருவன் மணந்ததாக நாம் வரலாற்று ஏடுகளில் காண்கின்றோம்.
இதுமட்டுமன்றி, பொலனறுவை காலகட்டத்தில் அரச அவைகளில் அந்தண சமூகத்தினர் மதக் கிரியைகளில், மத அனுஷ்டானங்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த வகையில் மதங்களிடையே குறிப்பாக, பெளத்த, இந்து மதங்களாகிய இரு மதங்களிடையே பரஸ்பர ஒற்றுமை, நம்பிக்கை, புரிந்துணர்வு என்பன மேலோங்கிக் காணப்பட்டன.
/886 ஆம் ஆண்டளவில், என்.எம். பெளரஸ் என்பவர் தமது அகழ்வராய்ச்சிப் பெறுபேற்றை அடிப்படையாகக் கொண்டு, பொலனறுவை பற்றிய சில குறிப்புக்களை வெளியிட்டார். அவரது கூற்றுப்படி சிறிய விஷ்ணு ஆலயமொன்று வெறும் கருங் கல்லால் மட்டுமே கட்டப்பட்டு இருந்தது என்றும் கலையம்சம் செறிந்த கைவனப்பில் மிகுந்த பல இந்து விக்கிரகங்களை அகழ்வாராய்ச்சியில் காணக்கூடியதாக இருந்தது எனவும் வெளியிட்டு இருந்தார். அவற்றில் இடம்பெற்ற இந்து விக்கிரகங்கள் ஆவன, கணபதி விக்கிரகம்,' சற்றுப் பாதிக்கப்பட்ட மயில்வாகனத்துடன் 66.42 (U சுப்பிரமணியர் விக்கிரகம், எருதில் எட்டுக் கைகளைக் கொண்டு விளங்கும் ஓர் உருவ விக்கிரகம் பெரும்பாலும் காளி உருவாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இதுமட்டுமன்றி கல்லிலே செதுக்கப்பட்ட பல்வேறு விக்கிரங்கள் உலோகங்களினால் உருவாக்கப்பட்ட விக்கிரகங்கள், கற்தூண்களின் பொழியப்பட்ட சிலைகள், என்பன பொதுப்படையில் இன்றைய அகழ்வாராய்ச்சியில் பண்டைய இலங்கையின் இந்துமத தொன்மையின் சின்னங்களாக, சிகரங்களாக் கருதப்பட்டு, கலைப் பொக்கிஷங்களாக நாடாளாவிய ரீதியில் sა — 6/76.77 நூதனசாலைகளில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
/907ஆம் ஆண்டு மற்றும் 1908 ஆம் ஆண்டு அளவில் பி.வெல் என்பவரது கண்டுபிடிப்பின் பிரகாரம் பொலனறுவை சிவாலயம் ஒன்று மற்றும் பொலனறுவை சிவாலயம் ஐந்து ஆகியவற்றில் உயர்ந்த அரிய புராதன சிவன் சிற்பங்கள் கிடைக்கப்பெற்றதாக எமக்கு எடுத்தியம்பப்படுகின்றது. இவரது ஆய்வுப் பெறுபேறுகளை டாக்டர் ஆனந்த குமாரசுவாமி அவர்களும் உறுதி செய்ததாக நாம் அறிகின்றோம். அவ்வாறே 1960 ஆம் ஆண்டளவில் சி.ஈ. கொடன்கும்பொர என்பவரது கண்டுபிடிப்பின்படி பொலனறுவை மாவட்டத்தில் ஏராளமான செப்புச் சிவன் உருவச்சிலைகளும், சிவவழிபாட்டுப் பொருட்களும் பெருமளவில் கிடைக்கப் பெற்றதாக உறுதிசெய்துள்ளார். அவரது கூற்றுப்படி கோவில் 4 என

,ே கலைக்கேசரி 63
விபரிக்கப்பட்டுள்ளது விஷ்ணு ஆலயமே ஆகும்.
குறிப்பாக, பொலனறுவையில சோழர் ஆட்சியின் பின்னரும் மற்றும் கலிங்க மன்னரது ஆதிக்கத்தின் பின்னரும் கூட ஏராளம் தமிழ் இந்து மக்கள் பொலனறுவையில் வாழ்ந்து வந்தனர். ஆயினும், கி.பி 1244 இல் கலிங்க மன்னரது ஆட்சிக்குப் பின்னர், பெரும்பாலான இந்துச் சின்னங்கள் பூமிக்கடியில் புதையுண்டு இருக்கலாம் எனறு ஊகிக்கப்படுகின்றது. புராதன பொலனறுவை ராஜதானியில் இந்துமதம் குறிப்பாகச் சைவம், வைஷ்ணவம் ஆகிய இரண்டும் தழைத்தோங்கி வளம்பெற்று வாழ்ந்துவந்துள்ளன என்பதினை பல்வேறு தொல்பொருள் அகழ்வாராய்ச்சியிலும் சரித்திர வரலாற்றுப் பெறுபேறுகளிலும், இலங்கையின் இந்துமத வரலாற்று அம்சங்களிலும் மற்றும் இன்று சிதைவுற்று காணப்படும் பழம்பெருமை மிக்க சின்னங்களிலும் சிற்பங்களிலும் நாம் செவ்வனே காண முடிகின்றது
- சுபாஷினி பத்மநாதன்

Page 64
酗臨面產 64 Gorfrannu i Gomorth
ராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றில் C- பாடப்பட்டிருக்கும் நிகழ்வுகள், சம்பவங்கள் சாதாரணமாக மனிதர்களால் நிகழ்த்த முடியாதவை. அமானுஷ்ய சக்தி படைத்தவர்களினால் உருவாக்கப்பட்டதாகவோ அல்லது நிகழ்த்தப்பட்டதாகவோ காண்பிக்கப்படுகின்றன. இந்த நிகழ்வுகளையும், சம்பவங்களையும் மூடநம்பிக்கை எனப் புறந்தள்ளுவோரும் இருக்கின்றனர். ஆனால், இதிகாசங்கள், கர்ண பரம்பரைக் கதைகள் மூலம் வெளிப்படுத்தப்படும் அறநெறிக் கருத்துக்கள் அர்த்த புஷ்டியானவை. தர்மம் மட்டுமே வெல்லும் என்பதனை வலியுறுத்தும் சம்பவங்கள், மற்றும் தொல்லியல் வரலாற்றுக்குச் சான்று பகரும் ஆதாரங்கள் என்பவற்றை புறந்தள்ளி விட முடியாது.
அந்த வகையில், இராமாயண இதிகாசம் கிறிஸ்துவுக்கு முன் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏழுதப்பட்டதாகவும், ஆனால் இராமாயண சம்பவங்கள் ஏழாயிரம் வருடங்கள் முதல் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் இடம்பெற்றதாகவும் நம்பப்படுகின்றது. எனவே இராமாயணத்தில் குறிப்பிடப்படும் சம்பவங்கள் வழிபாட்டு ரீதியிலும், தொல்லியல் வரலாற்று ரீதியிலும் முக்கியத்துவம் மிக்கவையாகத் திகழ்கின்றன.
இராமாயணம் இலங்கையுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. இக்காலப் பகுதியில் இராவணனின் ஆட்சி இலங்கையில் நிலவியது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். இலங்கை செல்வம் கொழிக்கும்
நாடாக திகழ்ந்தது.
 

இராமாயணத்தில் இலங்கை - 10
சீதையை மீட்பதற்கு இராமன் படையெடுத்து இலங்கை
வந்தபோது இடம்பெற்ற போர் இராவண சாம்ராஜ்யத்தின் அழிவுக்கு வித்திட்டது. அந்தப் போரில் ஒரு கட்டத்தில்
இராமனின் CJ60) Cl வீரர்கள் காயமடைந்து GUATŷ முனையிலிருந்து அகற்றப்பட்டார்கள். இலங்கை வீரர்களின் தாக்குதல்களை குறைந்த படைவீரர்களுடன் சமாளிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை இராமனுக்கு ஏற்பட்டது. காயமடைந்தோர் அதிக அளவில் காணப்பட்டதினால் அந்த வீரர்களை உடனடியாக குணப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. மிக விரைவில் குணப்படுத்தக்கூடிய, உயிர் காக்கும் சிரஞ்சீவி மருந்து இமயமலையில் இருப்பதை உணர்ந்த இராமன், உடனடியாக அதை எடுத்து வர தகுதியான ஆள் அனுமன் எனத் தீர்மானித்து, அனுமனை வட திசை நோக்கி அனுப்பி வைத்தார்.
இமயமலை அடிவாரத்தை அடைந்த அனுமன் மூலிகையின் பெயரை மறந்து விடுகிறார். எனவே இமயத்தில் மூலிகைகள் அதிகம் கொண்ட குன்றை பெயர்த்தெடுத்துக் கொண்டு இலங்கை நோக்கி வானில் மிதந்து வருகின்றார். அனுமன் வாயுவின் மகன். வளியில் மிதக்கும் சக்தி அவருக்கு இருந்ததாகக் கூறப்படுகின்றது.
வீரம், விவேகம் போன்ற குணாம்சங்கள் அனுமனிடம் குடி கொண்டிருந்ததாலும் சுட்டித்தனமும் விளையாட்டுக் குணமும் அவரிடம் நிரம்பவே காணப்பட்டன. இராமாயணத்தில்
பின்வருமாறு விபரிக்கப்படுகின்றது. இமயமலையை

Page 65
உள்ளங்கையில் அனுமன் ஏந்தி வந்துள்ளார். சுட்டித்தனம் நிரம்பப் பெற்ற அனுமன் மலையை பந்தை எறிந்து ஏந்துவது போல் மலையை ஏந்தி வந்ததனால் மண் கட்டிகள் மலையிலிருந்து நிலத்தில் கீழே வீழ்ந்துள்ளன. இப்படி வரும் போது கையில் இருந்து தவறிய மண் குலியல்கள் இலங்கையின் பல பகுதிகளில் விழுந்ததாகவும் இவை சிறுகுன்றுகளாகத் தோன்றின எனவும் நம்பப்படுகின்றது.
மன்னாரில் தள்ளாடி, காலியில் றுமஸ்லாவை, கச்சதீவு ஹபறனவில், றிற்ரிகல வறிரிபிட்டியவில் டுலுகந்த ஆகிய இடங்களில் காணப்படும் சிறிய குன்றுகளில் உயிர்காக்கும் மூலிகைகள் காணப்படுகின்றன. இன்று இந்த மூலிகை மலைகள் அரசாங்கத்தின் பூரண கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
இராமாயண சம்பவத்தின்படி இராமனுக்கு தேவைப்பட்ட மூலிகை உடனடியாக உயிர்காக்கும், குணப்படுத்தும், உடலுக்கு பலமூட்டும் மூலிகையாகும். இந்த மூலிகை மேற்குறிப்பிட்ட ஐந்து இடங்களிலும் காணப்படுகின்றன.
குறிப்பாக காலியில் உள்ள றுமஸ்லாவை என்ற குன்று, அனுமன் இமய மலையைச் சுமந்து வரும்போது காலி கடற்கரையில் விழுந்த மலையின் ஒரு பகுதி என நம்பப்படுகின்றது. இங்கு பலவிதமான மூலிகைகள் காணப்படுகின்றன. நோய்களை உடனடியாக குணப்படுத்தக் கூடிய அரிய சக்தி வாய்ந்த மூலிகைகள் இங்கு காணப்படுகின்றன. ஆனாலும் இந்த அரிய வகை மூலிகைகள் குறித்த விளக்கம் இப்பகுதி மக்களிடம் காணப்படாமையினாலும் பராமரித்து பாதுகாப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்காததினாலும் பல மூலிகைச் செல்வங்கள் அழிந்து விட்டன.
றுமஸ்லாவை மலையில் கடந்த 9/ வருடங்களாக செய்யப்பட்ட ஆய்வின் பிரகாரம் சுமார் /50 க்கும் மேற்பட்ட அரிய மூலிகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது தென்மாகாண சபையின் தேசிய ஒளடதங்கள் கனிய வள அமைச்சினால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. முக்கியமாக மூலிகைகள் நிறைந்துள்ள காட்டுப் பகுதிக்குள் வெளியார் யாரும் உள் நுழைய முடியாதபடி இரும்புக் கம்பி வேலியால் சுற்றியடைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இப்பகுதிக்குள் அனுமதி பெற்றே உள்நுழைய முடியும்.
தற்போது றுமஸ்லாவை மலையில் இரண்டு கிராமசேவகர் பிரிவுகளில் 2600க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். 1976 ஆம் ஆண்டளவில் மலையில் எதிர்ப்புறத்தில் இருந்த மக்கள் குடியிருப்பு அபிவிருத்தித் திட்டத்திற்காக அகற்றப்பட்ட போது இங்கே குடியிருந்த மக்கள் றுமஸ்லாவை மலையில்
குடியமர்த்தப்பட்டனர்.
 

ប៉ាញម៉ាឡៃ
塞
65

Page 66

இப்பகுதி மக்களிடையே இந்த மூலிகை மலை குறித்து பல்வேறு நம்பிக்கைகள் இன்றளவிலும் காணப்படுகின்றன. இந்த மலைக் காட்டிலிருந்து கனிகளை பறித்து செல்வது சாத்தியமற்றதாக நம்புகின்றார்கள். இங்கு பல வர்ணங்களில் நறுமணமும் சுவையும் உள்ள கனிவகைகள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைப் பறித்து காட்டிற்கு வெளியே கொண்டுபோகும் எண்ணத்துடன் நடந்தால் வழியைத் தவறவிட்டு காட்டிற்குள்ளேயே நாட் கணக்கில் அலையவேண்டி ஏற்பட்டு விடுமாம். இது உண்மையா பொய்யா என்று பரிசோதிப்பதற்காகக் சென்ற அனேகர் இவ்வாறு வழியைத் தவறவிட்டு பின்னர் பழத்தைக் கைவிட்ட பின்னரே வழி கண்டுபிடிக்கப்பட்டு வெளியேறியிருந்தார்கள்.
ஒருமுறை காட்டுக்குள் சென்ற முதியவர் வழித் தவற விடக் கூடாது என்பதற்காக மரக் கிளைகளை வெட்டி வழி அடையாளங்களை ஏற்படத்திச் சென்று அதன் வழியே வெளியேறியிருந்தார். காட்டுக்குள் முதுமையின் அடையாளங்களுடன் சென்றவர் வெளியே வரும்போது இளைஞரின் திடகாத்திர தோற்றம் பெற்று திகழ்ந்தார். மனைவியும் கிராமத்தவர்களும் ஆச்சரியமடைந்தனர். கிராமத்தவர்கள் பலரும் குறிப்பட்ட அந்தப் பகுதியால் காட்டுக்குள் சென்று வெளியேறும் போது இளமைத் தோற்றமும் பலமும் பெற்றவர்களாக உணர்ந்தார்கள். இதற்கான சரியான காரணத்தை அவர்களால் அறிய முடியாது இருந்தது.
இதேபோல் றுமஸ்லாவைக் காட்டிலிருந்து விறகு வெட்டி வந்து உணவு சமைத்து உண்டவர்களும் பொலிவு பெற்றவர்களாக நீண்டகாலம் வாழ்பவர்களாக இனம் காணப்பட்டார்கள். இதற்கு என்ன காரணம் என உணர்ந்த போதுதான், அங்குள்ள ஒரு விசேட சக்தி மிக்க மூலிகையே காரணம் என அறியப்பட்டது. இப்பகுதி மக்களால் இந்த மூலிகைகள் அழகு சாதன பொருட்களாக பயன்படுத்தப்பட்டது.
காலி நகரிலிருந்து மாத்தறை செல்லும் பாதையில் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் றுமஸ்லாவை மலைக்குச் செல்லும் வீதி உள்ளது. இந்த மலை 300 மீற்றர்களுக்கும் குறையாத உயரமுடையது. இங்கிருந்து 1500 மீற்றர் பயணிக்கும் போது றுமன்சலாவை பெளத்த விகாரை உள்ளது. இங்கு 18 அடி உயரமான அனுமன் சிலை உள்ளது. அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து வருவது போன்ற உருவ அமைப்புடன் காணப்படுகின்றது. இந்த அமைதி பெளத்த விகாரையை காலி மாநகரிலிருந்து காண முடியும். மூலிகைப் பிரதேசத்தைத் தவிர ஏனைய பகுதிகள் விரைவாக நகரமயப்பட்டு வருகின்றது. மலையில் வீதிகள் அமைக்கப்பட்டும் குடிமக்கள் கல்வீடுகள் கட்டியும் வருகின்றார்கள். அன்பும் ஆரோக்கியமும் நிறைந்த இயற்கையுடன் கைகோர்த்த இன்பமயமான வாழ்வு கொஞ்சம் கொஞ்சமாக நம்மைவிட்டு விலகிச் செல்கின்றது என்பது உண்மைதான்.
- மிருணாளினி

Page 67
« » o ^•*. ^^ ~^ ~^聲霹„”
(sogioco -1,9 83-76, og Nolgoso lyougi)
斑
:-/OOOoo@@@jốilgos, El
(sogioco algo 83-79, og spoo ŋɔŋgi)
¿-/OOOZ, QD QQŪőlıç09fēJZI dwg별w활떨hm昌昌a wg법원통편 ĢģĶĒølghausmoņsis sūJŲ@mssing ĢĪhņuw zimo, -/ooooooool's
 

LLLLLLLL LLLLL LLLL LLLLLLLLLK LLLKKK LLLLLLL LL LLLLL LLLL©aeae:----
uuoooexue|ollow squisosmosoɛ Tā ç6* 06ç ZIIo sợ9oqiaodouse) 8 – 96ç ɛçç ZILO (orig}(\odoloče) LLZ Zçç ZILO :hr}đidoos@ ðilos-ı-ās Z87 G/9 € // O *\xƏL/I|BO
mm한mm aumg별철교 }^o||od əJIT əund sulle
< ± 議鬆 議 韓 * � 娜 «*» 肇 義 km ! × × 辯 州F
(stosooo :) && -//log(@@@goo ŋous)
毛
;-/^^^o-(T) GÐQUỐII000‰, DZ]

Page 68
05,
கொழும்
vů (85 lů நாரஹேண்பிடிய, NineWellsCa
4520999 கெயார் தா
懿
55/1, கிரிமண்டல
,çOሸኽ
f ER
Printed and published by Express Newspapers (Ceylon)(Pvt) Lt.
 
 

கர்ப்பகாலத்திலும் பிரசவத்திற்கு பின்னரும் தாயின் ஆரோக்கியத்தை
பேணுவதிலும் கருக்கட்டலுக்கான சாத்தியக் and sootub (Sub Fertility) அக்கருக்கட்டலுக்கான(IVF) சாத்தியக் கூறுகளையும் வழங்குவதன் மூலமும்
தொடர்ச்சியாக இனப்பெருக்க காலத்தின்
பின்னரும் எமது தொழில்நுட்பத்திறன்களி
னுடாக எல்லா வயதுடைய பெண்மணி
களையும் பராமரிக்க நைன் வெல்ஸ்
豊
ஆகிய b ள் பொறுப்பாகவுள்ளோம்.
at No. 185, Grandpass road,Colombo -14, Sri Lanka.