கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2011.07

Page 1
50வது ஆண்டை நோக்கி
Soil)(\{
N
W
தனக்கெண்றை ஈறைக்கும்
ஜூலை 2011
 

ملی انگلی برف . ( A ) ( ) را به نامه
றாரு தனி வழி
- தம்பு சிவா.
விலை 40/-

Page 2
15 வருடத்திருமணசேவை நிறைவினை முன்னிட்டு
வேல் அழுதன் பாரிய சேவைக் கட்டன
து
குறைப்பு
LJU
விவரங்களுக்குத் தனிமனித நிறுவநர், 'சுயதெரிவுமுறை
முன்ாேழ முத்த புகழ் பூத்த சர்வதேச சகலருக்கு மான திருமண் இலோசகர் / இற்றுப்படுத்துநர் குரும்ப சிடியூர், மாயெழ வேல் அமுதன்றுடன் திங்கள், புதன், வள்ளி மாலையிலோ, சனி, ஞாயிறு நண்பகலி லேயோ தயங்காது தொடர்புகொள்ளலாம்
មជ្ឈិ முன்னேற்பாடு ஒழுங்குமுறை
சுலப மணமக்கள் தெரிவுக்குச் சிறந்த முறை சுயதெரிவுமுறையே ரம்மிய மணவாழ்வுக்குக் குரும்பசி டியூர் யெழுவேல் அமுதனே!
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவர்
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே, இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரம் தான் ஓர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாரா ட்டப் பெற்ற பெறுமதி மிக்க சம்பவம் இடம் பெற்றுள்ளது. அங்கு பாராட்டப்பட்ட சஞ் சிகை மல்லிகை. இதனை நாடாளுமன்றப் ug:3SLIrsei sosserviriri (04.7.2001) Lugês செய்ததுடன் எதிர்காலக் கந்ததியினருக்காக ஆவணப்படுத்தியுமுள்ளது. அத்துடன் உலக வரலாற்றில் முதன் முதலில் சலு? ணுக்குள் இருந்து வெளிவந்த இலக்கியச் சஞ்சிகையும் மல்லிகையே தான்!
50 - ஆவது ஆண்டை நோக்கி. ஜூ6ை)
586 'ഠ'%' ീസ്യു
மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளி
வரும் தொடர் சிற்றேடு மாத்திரமல்ல. அது
ஓர் ஆரோக்கியமான இலக்கிய இயக்கமு மாகும். மல்லிகையில் வெளியாகும் எழுத்துக்களுக்கு எழுதியவர்களே
@uffញuffតាអាំងទៅ
201/4, Sri Kathiresan St, Colombo - 13. I Tel: 2320721 mallikaijeevaGyahoo.com
85 - ஆச்சரியப்பட்டு, நாவுறுபடுத்தி விடாதீர்கள் எனக்கு வயது - எண்பத்தைந்து
கடந்த 27.06.2011-ல் எனக்கு 85 வயது ஆரம்பமாகியுள்ளது.
இந்த முதிர் இளமை வயதை ஞாபகப் படுத்திக் கொண்டாட என்னை நேசிக்கும் நண்பர்களும், என்னால் நேசிக்கப்படும் இலக்கியத் தோழர்களும் சேர்ந்து விழா ஒன்றை எடுத்தனர்.
நான் இந்த நிகழ்ச்சியை மனசார ஏற்றுக்கொண்டேன்.
காரணம், கடந்த அறுபது ஆண்டு களுக்கும் மேலாக மெய்யான இலக்கிய நெஞ்சத்துடனும் ஆர்வத்துடனும் இந்த மண்ணுக்கும், நான் வணங்கும் தமிழ் மொழிக்கும் என்னை முழுவதும் அர்ப் பணித்தே இயங்கி வந்துள்ளேன்.
- தினசரி பேராட்டம்தான் வாழ்க்கை. அன்றன்றாடு வாழ்க்கை நடத்தப் போதிய கைத்தொழில் திறமை இருந்தபோதிலும் கூட, அதை ஒரம் கட்டிவிட்டு இந்தத் துறைக்குள் காலடி பதித்தேன்.
அத்துடன், அரை நூற்றாண்டுக் கால த்தை அண்மிக்கப் போகும் காலகட்டம் வரைக்கும் மல்லிகை என்றொரு சிற்றேட் டைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதும் அரிது. இலக்கியப் பெறுமதிகளில் ஒன்று என நெஞ்சார நான் நம்பி வந்துள்ளேன்.
அதிலும், முக்கியமான தகவல் ஒன்று, இந்த மண்ணில் நவீன இலக்கியத்திற் காகத் தம்மை ஒப்புக்கொடுத்து உழைத்த எனது இலக்கிய நண்பர்கள் பலர், எனது

Page 3
எண்பது வயது வரைக்கும் உயிர் வாழ்ந்து எண்பதைத் தொட்டுச் சென்றது கிடையாது. நான் எண்பதையும் கடந்து, எண்பத்தைந் தைத் தாண்டிக் கொண்டிருக்கின்றேன். இன்னமும் வாழ்ந்து, தினசரி இயங்கிக் கொண்டிருக்கின்றேன்.
என்னையொத்த வயதுடைய இலக் கியவாதிகளில் பலர், இன்று மூப்பின் இய லாமை காரணமாக வீட்டு வாசலுக்குள் நாற்காலிக்குள் முடங்கிப் போயுள்ளனர்.
நான் இந்த மண்ணையும், இந்த மண் னில் விளையும் இலக்கியத்தையும் மன சார நேசிப்பதன் நிமித்தமாக இன்றும் தெருத்தெருவாகச் சுற்றிச் சுழன்று மல் லிகை இதழ்களை உரிய நெஞ்சங்களுக் குச் சேர்ப்பித்து வருகின்றேன். - இந்த ஆத்ம திருப்திதான் இன்றும் என்னை ஆரோக்கியமான உடல் - மன நிலையுள்ள வனாக நடமாட வைக்கின்றது என்பதை மனசார நம்புகின்றேன்.
சிற்றேடுகளின் தொடர் வரவு வரலாற் றிலேயே தொடர்ந்து 46 ஆண்டுகள் ஓர் இலக்கிய இதழை வெளிக்கொணர்ந்த சரித் திரப் பெருமை எனக்கொருவனுக்குத்தான் உண்டு. அதிலும் முப்பது ஆண்டுகளான உள்நாட்டு யுத்தம், இரண்டு அரசாங்கங் களினது யுத்தகாலத் தணிக்கைக் கெடு பிடிகள், பத்திரிகைக் தாளுக்கான இல் லாமை, தொடர் மின்சாரத் தடை, தபால் தலை கிடைக்காமை, தொடர் விநியோகத் தடங்கல், யாழ்ப்பாணப் பட்டினத்திலிருந்து புலம்பெயர்ந்து கொழும்பில் நிரந்தரமாக நிலைகொண்டமை, தலைநகருக்குரிய தான வாழ்க்கைச் செலவைத் தாங்கிக் கொள்ள முடியாத இயலாமை. இத்தனை தடைகளையும் தாண்டி மல்லிகை இதழ் கள் தொடர்ந்தும் இத்தனை ஆண்டுகளாக
வெளிவந்துள்ளமை வரலாற்றுப் பதிவுக் குரியவைகளாகும்.
ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஏற் கனவே எனக்கொரு பதிவுமுண்டு.
முதன் முதலில் தமிழ் இலக்கிய வர லாற்றில் நமது மண்ணில் படைப்பிலக்கி யத்திற்கு சாஹித்திய மண்டலப் பரிசைப் பெற்றுக்கொண்டவன் என்ன பெறுமதி மிக்க இலக்கிய மரியாதை ஏற்கனவே எனக்குண்டு.
அத்துடன் இந்த மண்ணில் இந்தப் பாரிய யுத்த நெருக்கடிக்குள்ளும், அரை நூற்றாண்டுக் காலமாக ஓர் இலக்கியச் சஞ்சிகையைத் தொடர்ந்து வெளிக் கொணர்ந்தவன் என்ற வரலாற்றுப் பொறுப் பும் எனக்குண்டு.
சர்வதேசமெங்குமிருந்தும் மின்னஞ் சலில் நூற்றுக்கணக்கான இலக்கிய நெஞ் சங்கள் என்னை வாழ்த்தின. அவற்றை நான் பத்திரமாக பேணி வைத்துள்ளேன். நான் என்றும் நிரந்தரமானவனல்ல! மாற்றுத் திட்டம் வேண்டும். ஆனந்த விகடன் ஆசிரியருக்கு மகன் பாலசுப்பிர மணியம் கிடைத்தது போல எனக்கும் ஒரு மகன் உள்ளார். பெயர் திலீபன். காண்டே கர் கிரெளஞ்சகவரம் நாவலில் வரும் கதா நாயகனின் பெயர்.
அச்சகத் துறையில் சகலவிதமான தொழில்நுட்பத் திறமை கொண்டவர். இலக்கியத்தை நெஞ்சார நேசிப்பவர். எனது நண்பர்களை மனப்பூர்வமாக நன்கு தெரிந்து வைத்துள்ளவர்.
- திலீபன்தான் எனது அடுத்தகட்ட
ubSlässodas!
مسد6هختہ مستحسیل>

எண்வரைக்கும் இதுவோர் ஆவணம்
ஆரம்பத்தில் எனது சொந்த உணர்வுகள், சுகதுக்கங்களின் வெளிப்பாடுகளை மல்லிகை இதழ்களில் பிரதிபலிக்கக் கூடாது என்ற உள்ளுணர்வினால் உந்தப்பட்டு, பெரும்பாலும் தனிப்பட்ட சொந்த நிகழ்வுகளை இதழ்களில் தவிர்த்து வந்துள்ளேன்.
இந்த 85வத் வயதுப் பாராட்டு நிகழ்ச்சி, எனது கட்டுப்பாடுகளையும் மீறி, சர்வதேச விவகாரமாகப் பிரபலப்படுத்தப்பட்டு விட்டுள்ளதை தினசரி வந்து குவியும் தகவல்கள் மூலம் எதார்த்தமாக தெரிந்து கொண்டதும் உண்மையாகவே மெய்சிலிர்த்துப் போனேன்.
இது ஒரு தனிப்பட்ட படைப்பாளிக்கு - சஞ்சிகையாளனுக்குச் செலுத்தப்பட்ட இலக்கியக் காணிக்கையல்ல, என்பதையும் உளமாரத் தெரிந்துகொண்டேன்.
சர்வ உலகெங்குமிருந்து மின்னஞ சலிலி பலர் என்னைத் தெரிந்தவர்களும் , தெரியாதவர்களும் கூட, வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் எழுத்தில் தெரிவிக்கின்றனர்.
ஓர் எழுத்தாளனை நினைவில் வைத்திருந்து, இத்தனை இத்தனை உயரத்திற்குப் பாராட்டுத் தெரிவித்த அத்தனை நெஞ்சங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெரும் மனநிறைவு கொள்ளுகின்றேன்.
இந்தச் சந்தர்ப்பத்தையும், இந்த இதழின் தலையங்கப் பகுதியையும் நான் தவிர்த்து விட்டால், நான் அத்தனை பேர்களுக்கும் நன்றி சொல்வது தவிர்க்கப்பட்டு விடும்.
எனது பிறந்த தினத்தன்று, மாலையில் இதயம் கனிந்த நண்பர்களால் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து சிறப்பித்த, என்னை நெஞ்சாரப் புரிந்துகொண்ட சகலருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளை, அவர்களது பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.
- தொடர்ந்தும். ஒரு புதிய இலக்கிய யுகத்தைப் படைத்தளிப்போம்!

Page 4
அட்டைப்படம்
சமூக மார்ராத்துக்கான தம் சிவாவின் இலக்கியப் பணி
- கே. ஆர். டேவிட்
கடந்தகால வரலாற்றுச் சம்பவங்களின் உணர்வும், அறிவியலும் சார்ந்த தரிசனங் களின் அடிப்படையில் இன்றைய வாழ்வு தீர்மானிக்கப்படுவதோடு, நாளைய வாழ்வு திட்ட மிடப்படுகின்றது. கடந்தகால வரலாறுகளை நாம் இலக்கியங்கள் மூலந்தான் புரிந்தும் பகிர்ந்தும் கொள்கின்றோம். அந்தவகையில் தனிமனிதனிலிருந்து தேசியம் வரையான இயங்கியல் நீட்சிக்கு இலக்கியங்கள் அடிநாதமாகவும், ஆதார சுருதியாகவும் அமை கின்றன. இலக்கியங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதே போன்று இலக்கிய கர்த்தாக்களும் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியம்.
அண்மைக் காலத்தில் அரசும், பிற இலக்கிய அமைப்புகளும் இலக்கிய கர்த்தாக் களைக் கெளரவிப்பதில் அக்கறை காட்டிவருவதை அவதானிக்க முடிகிறது.
தினகரன் பத்திரிகையில் க.கைலாசபதி அவர்கள் கடமையாற்றிய காலம், வீரகேசரிப் பத்திரிகையில் இராஜகோபால் அவர்கள் கடமையாற்றிய காலம், வடக்கு - கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் சுந்தரம் டிவகலாலா அவர்கள் கடமையாற்றிய காலங் களென்று சில காலங்களை இங்கு குறிப்பிட்டுக் கூறலாம். இவர்களது காலங்களில் இலக்கியமும், இலக்கியக் கர்த்தாக்களும் கெளரவிக்கப்பட்டதோடு ஊக்குவிக்கப் பட்டுள்ளனர்.
இலக்கிய கர்த்தாக்கள் கெளரவிக்கப்படுவதோடு மட்டுமன்றி வெளியீட்டுத்துறையில் அவர்களை ஊக்குவிப்பதற்கான பதிப்பித்தல் - விநியோகித்தல் வசதிகளும் செய்யப்பட வேண்டுமென்று நீண்டகாலமாக இலக்கிய கர்த்தாக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளாகும்.
சென்றவருட இறுதிப்பகுதியில் திருகோணமலை - உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில் கிழக்கு மாகாண இலக்கிய விழா நடத்தப்பட்டு, பல்துறை சார்ந்த இலக்கிய கர்த்தாக்கள் கெளரவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து முதுசொங்களையும் இழந்து நிற்கும்
மல்லிகை ஜூலை 2011 & 4

வடக்கு கிழக்கு மக்கள் மீண்டும் துளிர் விடுவதற்கு இந்த இலக்கிய முதுசொங்கள் அவசியமானவைகள் என்ற வகையில் இந்த இலக்கிய விழா முக்கியத்துவம் பெறு கின்றது.
நடந்து முடிந்த இலக்கிய விழாவில் கெளரவம் பெற்ற இலக்கிய கர்த்தாக்களில் தம்பு சிவா (த.சிவசுப்பிரமணியம்) அவர் களும் ஆக்க இலக்கியத்துக்கான மாகாண முதலமைச்சரின் விருதைப் பெற்றுள்ளார்.
தம்பு சிவா என்ற படைப்பாளி பல புனைப்பெயர்களில் பல்துறை இலக்கிய ஆக்கங்களைப் படைத்தவர். கடந்த 40 ஆண்டுகளாக இலக்கியப் பணியாற்றி வரும் தம்பு சிவா அவர்களின் இலக்கியப் பணிகள் பற்றி சுருக்கமாகச் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமை கின்றது. தம்பு சிவா அவர்கள் சகல எழுத் தாளர்களாலும் விரும்பப்படுகின்ற ஒரு படைப்பாளி. ஒரு மனிதனுடைய பெயருக் குப் பின்னால் குறிப்பிடப்படுகின்ற பட்டங் களை விட, அந்த மனிதனின் பெயருக்கு முன்னால் மனிதம் என்ற பட்டம் அமைந் திருக்க வேண்டும். அவர்களையே நான் நேசிக்கின்றேன் என தம்பு சிவா அவர்கள் அடிக்கடி கூறிக்கொள்வார்.
தம்பு சிவா அவர்கள் யாழ்ப்பாணத் தில் இணுவிலைப் பிறப்பிடமாகவும், திருமணப் பந்தலால் திருகோண மலையை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவர் தம்பு சிவசுப்பிரமணியம் என்ற இயற் பெயரிலும், இணுவை வசந்தன், சிவ நித்திலன், த.சிவா, இணுவிலி மாறன், சிவ சிவா போன்ற பல வேறு புனைபெயர்களில்
தொடர்ச்சியாக எழுதிவருபவர். ஆரம்ப கல்வியை இணுவில் சைவ மகாஜன வித்தியாலயத்திலும், கல்வியை கொக்குவில் இந்துக்கல்லூரி யிலும் மேற்கொண்டுள்ளார். இலர் மாணவ னாக இருந்த காலத்திலேயே கலை, இலக்கியம் சார்ந்த முயற்சிகள் முனைப்புப் பெற்றிருந்ததை அறிய முடிகின்றது. பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசில்கள் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, மாணவப் பராயத்தில் சோக்கிரட்டீஸ் நாடகத்தில் அனிட்டஸ் பாத்திரமேற்று நடித்து பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.
இடைநிலைக்
1967ம் ஆண்டு உள்நாட்டு இறை வரித் திணைக்களத்தில் எழுதுவினைஞ ராக நியமனம் பெற்ற இவர் 1975ஆம் ஆண்டு இறைவரி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்று 1985ஆம் ஆண்டு ஒய்வு பெற்றுள்ளார். அரச சேவையி லிருந்து ஒய்வுபெற்ற இவர், 1987ஆம் ஆண்டு மாலைதீவுக்குப் பயணமானார். மாலைதீவில் அரச மீன்பிடி செயற்பாட்டுத் திணைக்களத்தில் உதவிக் கணக்காள ராகக் கடமையாற்றி 1989இல் திரும்பவும் இலங்கைக்கு வந்துள்ளார். இலங்கைக்கு வந்த இவரை வடக்கு - கிழக்கு மாகாண சபை உள்வாங்கி, வடக்கு - கிழக்கு மாகாண சபையின் பதிப்பகத் திணைக் களத்தில் உதவிப் பணிப்பாளராக நியமனம் வழங்கியது. இத்திணைக்களத் தில் எட்டு வருடங்கள் கடமையாற்றி யுள்ளார். இத்திணைக்களத்தில் இவர் கடமையாற்றிய காலத்தில் இத்தினைக் கள வெளியீடான தமிழ்த் தென்றல் என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் இவர்
மல்லிகை ஜூலை 2011 季 5

Page 5
கடமையாற்றியுள்ளதைப் பதிவுகள் தெரி விக்கின்றன.
எழுத்தாளர் தம்பு சிவா அவர்கள் இன்று சஞ்சிகையாளனாக, பத்திரிகை யாளனாக, வெளியீட்டாளனாக, எழுத்தாள னாக, பேச்சாளனாக, திறனாய்வாளனாகப் பல்துறைப் பரிமாணங்களைப் பெற்றிருப் பினும் இவரது இலக்கியப் பதிவு 1970ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கற்பகம் சஞ் சிகை மூலம் தொடங்குகிறது. 1972இல் அனுராதபுரம் கலைச் சங்க வெளியீடான புத்துலகம் படைப்போம் கவிதைத் தொகுதியில் இவரது முதல் கவிதை வெளி வந்தது. தொடர்ந்து ஈழமணி, காப்புறுதி உலகம், சுடர்ஒளி, ஞானம் போன்ற வெளி யீடுகளில் இவரது கவிதைகள் வெளி வந்துள்ளன.
கற்பகம் சஞ்சிகையில் பிரசுரமான சிறுகதைகளைத் தொகுத்து காலத்தால் மறையாத கற்பக இதழ் சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியீடு செய்ததன் மூலம், சிறந்ததொரு தொகுப் பாளனாகவும், இவரால் எழுதப்பட்ட சிறு கதைகளின் தொகுப்பான சொந்தங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பு மூலம் சிறு கதை எழுத்தாளனாகவும், இவரால் எழுதப் பட்ட கட்டுரைகளைத் தொகுத்து முற் போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற கட்டுரைத் தொகுதி மூலம் சிறந்த கட்டுரை யாளனாகவும், தூரத்து கோடை இடிகள், அப்பா ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளைத் தொகுத்து வெளியீடு செய்ததன் மூலம், சிறந்த வெளியீட்டாள
னாகவும், அரும்பு, கற்பகம், தமிழ்த் தென்றல், ஒலை போன்ற சஞ்சிகைகளின் ஆசிரியராகக் கடமையாற்றியதன் மூலம் சிறந்த சஞ்சிகையாளனாகவும் தம்பு சிவா அவர்கள் இனங்காணப்படுகின்றார்.
வீரகேசரி, தினகரன், தினக்குரல், உதயன், சுடர்ஒளி, லண்டன் புதினம் ஆகிய பத்திரிகைகளிலும், மல்லிகை, ஞானம், இனிய நந்தவனம், செங்கதிர், ஜீவநதி, இந்து ஒளி, ஒலை, பூங்காவனம், சங்கத்தமிழ் போன்ற சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன. இதுவரையில் எண்பது சிறுகதைக்ளை யும், இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், முன்னூறுக்கும் மேற் பட்ட பக்தி எழுத்துக்களையும், நூல் அறி முகம், நூல் ஆய்வு, இரசனைக் குறிப்பு, தினனாய்வு, கண்ணோட்டம், பார்வை, மனப்பதிவு, விமர்சனம் என்ற தலைப்பு களில் முன்னூற்றி முப்பதுக்கும் மேற்பட்ட ஆக்கங்களையும் தம்பு சிவா அவர்கள் எழுதியுள்ளார். தொடர்ந்து பத்திரிகை களிலும், சஞ்சிகைகளிலும் எழுதிவரும் இவர் பலராலும் கவரப்பட்டவராக முன்னிற் கின்றார்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடை பெற்ற சிலப்பதிகார முத்தமிழ்க் காப்பிய பெருவிழாவில் பாண்டிச்சேரி புதுவை பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் ஏ.அறிவுநம்பி அவர்களால் தம்பு சிவா அவர்களுக்கு சொல்லின் செல்வர் என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்துள்ளமை யும் இவரைப் பற்றிய முக்கிய குறிப்பாகும்.
மல்லிகை ஜூலை 2011 率 3.

இவர் தனது இலக்கிய வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டுள்ள சில தகவல் களையும் இங்கு குறிப்பிடுவது அவசிய மானதும், பொருத்தமானதுமாகுமென நினைக்கிறேன். இவர் முதலில் மணி வண்ணனின் குறிஞ்சி மலர் என்ற நாவலைப் படித்ததாகவும், அந்த நாவலில் வருகின்ற அரவிந்தன் - பூரணி ஆகிய பாத்திரங்கள் தன்னைக் கவர்ந்ததாகவும் குறிப்பிடும் தம்பு சிவா அவர்கள் தொடர்ந் தும் தன் வாசிப்பு முயற்சியில் ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கோர்க்கியின் தாய் நாவலையும், காண்டேகரின் நூல்களை யும் தேடிப் படித்ததாகவும் குறிப்பிடு கின்றார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், அநேகமான நாவல்களில் வருகின்ற பாத்திரங்களின் சித்திரிப்பில் கற்பனை வாதம் மேலோங்கியிருப்பதாகவும், மாக்ஸிம் கோர்க்கியின் நாவலில் சாதாரண மக்களின் வாழ்க்கை முறை களும், இயல்பான முயற்சிகளும் உள்ள டங்கிள்ளன. தொடர்ந்தும் நான் மாக்ஸிம் கோர்க்கியின் நாவல்களைத் தேடிப் படித்தேன். மாக்ஸிம் கோர்க்கி அவர் களின் நூல்களில் காணமுடிந்த சத்திய தரிசனங்களே எனது இலக்கியச் செல் நெறியை வளப்படுத்தியது என்று அவர் கூறுகின்றார். எனது இலக்கிய வளர்ச் சிக்கு உந்துசக்தியாக விளங்கிய பேரா சிரியர் பொன்னையன், செ.கதிர்காமநாதன்,
க.கைலாசபதி, நீர்வை
செ.யோகநாதன், அ.முகம்மது சமீம் போன் றோருக்கு நான் பெரிதும் கடமைப்
பட்டுள்ளேன் என்றும் குறிப்பிடுகின்றார். ஒருவன் தான் அனுபவித்து ஜீரணிக்க முடியாத உணர்வுகளைத் தனது அநுபவங்களில் பட்டை தீட்டி கற்பனை GDT.g.
வண்மைக்கூடாகப் பதிவு செய்யும்போது
மெருகுடன் பொருத்தமான
அப்படைப்பு இலக்கிய வடிவம் பெறு கின்றது. அவ்விலக்கியங்கள் தரிசனங் களாக மட்டும் அமையாது, தத்துவங்கள் உள்ளிடாக அமையும்போது அவ்விலக் கியங்கள் நித்தியத் தன்மையைப் பெறுகின்றன.
மாக்ஸிம் கோர்க்கியின் தாய் நாவல்
தனிமனித, சமூக, தேசியம் என்ற எல்லை
களைத் தாண்டி, சர்வதேசத்திற்கும்
பொருந்தும் வகையில் அமைந்திருந்த காரணத்தினாலேயே இன்றும் அந்த நாவல் சர்வதேச மக்களின் பு:ஈர்வைக் குட்பட்டுள்ளது என்பதை எழுத்தாளர்கள் புரிந்துகொள்வது மிக அவசியமானதாகும்.
எழுத்தாளர் தம்பு சிவா அவர்கள் விகள்:ம் குறுகிய காலத்தில் மிகத் தெவிே வாக ஒரு இலக்கியத்தின் இறுதிப் பயன்பாட்டைப் புரிந்துகொண்டமை அவரது விவேகத்தையும், பரந்துபட்ட அறிவையும் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளது.
தம்பு சிவா அவர்கள் தொடர்ந்து எழுதவேண்டும். அவரது படைப்புக்கள் சமூக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டு மென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மல்லிகை ஜூலை 2011 季 f

Page 6
வீட்டில் எங்கோ ஒர் இடத்திலிருந்து எழும் சத்தம் என்னவென்று உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத சந்ரரத்ன, தனது செவில்புலனைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருந்தான். கட்டிலில் சாய்ந்திருக்கும் அவனுக்கு, இந்தச் சத்தம் கேட்பது அருகிலுள்ள அறை யிலிருந்தா? அல்லது சாலைப் பக்கமிருந்தா? என்பதை விளங்கிக் கொள்ள நீண்ட நேர மெடுத்தது. சிவிலிங்கை ராஜா தானியாக்கிக் கொண்டுள்ள எலி யொன்று, சிவிலிங்கைக் கடிப்ப தாக இருக்க வேண்டுமென அவன் நினைத்தான். இப்படி அநியாயம் செய்யும் எலிகளைத் தொலைப்பதற்காக பலநாட்க
ளாக எலிப்பாஷாணம் வைத்த போதும், அதனால் எந்தப் பயனும் சிங்களத்தில் டெனிஸன் பெரேரா கிட்டியதாக இல்லை. ஏதோ வொரு வகையில் தனது முயற்சி தமிழில் திக்குவல்லை கமால் வெற்றியளித்து, பாஷாணம் உண்ட எலியொன்று வேதனை பொறுக்க முடியாமல் மரணக் குழப்பத்தில் சிவிலிங்கை கடித்துச் சுரண்டுவதால் எழும் சத்தமாக இருக்க முடியும். இருந்தும் நஞ்சுண்டு பலவீன முற்ற எலியொன்றுக்கு இவ்வாறு இடைவிடாது இயங்க முடியுமா என்று அறியும் ஆவல் அவனுக்குள் மிகைத்து நின்றது. இப்பொழுது சுமார் அரைமணி நேரமாக சிவிலிங்கைக் கடிப்பதற்கு விஷேட சக்தி இருக்கவேண்டும். இதனால் இந்தக் குறுகுறுப்பு வேறொரு விலங்கினுடையதாக இருக்க முடியாதாவென சந்திரத்ன தன்னோடு தர்க்கம் செய்து கொண்டிருந்தான். எலிகள் இல்லாதபோது மரநாய்கள் சிவிலிங்கில் பிரச்சினை ஏற் படுத்தும். அதுமட்டும்ஸ்ல, சிவிலிங்கில் எழுந்தருளியுள்ள கர5ொய்பா ஒன்றுமுண்டு, இந்தக் கபரகொய்யா சில நாட்களுக்கு முன்பு தனது படுக்கை அறைக்கு மேலேயிருந்து விதவிதமான ஒலிகள் எழுப்பி, தூக்கத்தைக் குழப்பிய பாங்கு அவனுக்கு நல்ல ஞாபகம். அதன் நகங்களினால் இவ்வாறான சுரண்டலைச் செய்ய முடிந்தாலும், இவ்வளவு நுண்ணியதாகச் சுரண்டுவதற்கு அதனால் இயலாது. யாருடைய வேலையென்பதை இன்னும் தெரிந்து கொள்ள முடியாதிருப்பதும், இந்தக் குறுகுறுப்பு ஓயாமலிருப்பதும் சந்ர ரத்னவின் மனதுக்கு வேதனையளித்தது. ஊரில் உறவினர் ஒருவரின் மரண வீட்டுக்குச் சென்ற மனைவி இன்னும் வந்து சேரவில்லை. சிலவேளை அவள் இருந்திருந்தால் இது சம்பந்தமாக அவளது அபிப்பிராயத்தைக் கேட்டு, இந்தச் சிக்கலிலிருந்து அவனால் விடுபட முடிந்திருக்கும்.
சுமார் ஒருமணி நேரத்தின் பின்பு, சூரியக் கதிர்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு புகுந்து கொண்டிருக்கும் போது, இந்தச் சத்தம் எங்கிருந்து எழுகிற மல்லிகை ஜூலை 2011 霹 8
 

தென்பதை சந்திரத்ன மிகத் தெளிவாக அறிந்துகொண்டான். அந்தச் சத்தம் அவனது அறைக்கு வெளியேயுள்ள திறந்த பகுதியிலிருந்தே எழுந்தது. சாதாரணமாக நான்கு அடிக்குமேல் அகலமற்ற அப்பகுதி, பூச்செண்டுகள் வைக்கப்பட்டுள்ளதால் எவருக்கும் செல்ல முடியாதபடி குறுகியது. சந்ரரத்ன ஜன்னல் தட்டொன்றைத் திறந்து, அதனூடாக எட்டி மேலே சிவிலிங் கிற்கு காது கொடுத்துக் கொண்டிருந்தான். கூரை நீர் இறங்கிச் செல்லும் பீலிக்கும், வெளியே நாற்பக்கத் தலைப்பகுதியைக் கொண்ட செதுக்கல் வேலைப்பாடு கொண்ட அலங்கார மரத்தூணுக்கு மிடையே இருந்துதான் இந்தக் குறுகுறுப்பு எழுந்தது. இந்தக் குறுகுறுப்பு எப்படிப் போனாலும், நுண்ணிய விதத்தில் உடலைச் சிராய்ப்பது போலிருப்பதே கொடுமையானது. கூர்மையான பற்கள் கொண்ட எந்த உயிரினத்தாலும் இப்படி யான வேலை பார்க்க முடியும். அணிலும் இத்தகைய கைக்காரியம் செய்யக்கூடியது தான். இருந்தும் இந்தக் குளிரான விடி காலையில் அணிலொன்று சிவிலிங்கிற் குள் புகுந்துகொண்டு இப்படியான காரிய மொன்றை செய்யுமென்று நம்ப முடியாது. சந்ரரத்ன உறுதியற்ற மனநிலையைத் தவிர்த்து, உறுதியானதொரு முடிவுக்கு வந்தான். ஆமாம் எலி, பாஷாணம் சாப் பிடாத எலி.
பிரதான வீதியில் இரண்டொரு வாகனங்கள் எழும்பும் சத்தத்தையும், பக் கத்து வீடுகளிலிருந்து எழும் வானொலி, தொலைக்காட்சி சத்தத்தையும் விட, சந்ர ரத்னாவுக்கு எலி எழுப்பும் சத்தமே எல்லா வற்றையும்விட பெரிதாகக் கேட்டது. ஈயத்
தகடொன்றை, கூரான கம்பியினால் சுரண்டுவது போன்ற இந்தச் சத்தத்தால் உடலை விறைப்படையச் செய்துவிட முடியும். அவன் ஜன்னல் தட்டுக்கருகே காதுகளை நன்கு கூர்மைப்படுத்திக் கொண்டு, இது நடைபெறும் இடத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நின் றான். தண்ணிர் கீழ்நோக்கிப் பாய்ந்து செல்லப் பொருத்தப்பட்டுள்ள எஸ்லோன் குழாய்க்கருகே இக்காரியம் நடைபெறுவ தென்பது நிச்சயம். ஏதாவதொரு வகையில் இடையூறு செய்து இதனை இல்லா தொழித்துவிட, சந்ரரத்ன நினைத்த போதும், அதனைக் கட்டுப்படுத்திக் கொண்டான். இது இவ்வளவு பெரும் முயற்சியெடுப்பது எப்படியாவது சிவிலிங் கைத் துளைத்துக்கொண்டு வெளியே வருவதற்காகத்தான் இருக்க வேண்டும். அப்படிப்பட்டதொரு அபிப்பிராயம் அதற்கு ஏன் ஏற்படவேண்டும்? அதன் இடைவிடாத முயற்சியை மனிதனொருவனால் மதிப்பீடு செய்ய இயலாதா? ஏதோ ஒருவகையில் அது சிவிலிங்கில் துளையொன்றை ஏற் படுத்திக் கொண்டால், எஸ்லோன் குழாயி னுாடாகவோ, செதுக்கல் வேலைப்பாடு கொண்ட மரத்துணுக்கூடாகவோ அதற்கு கீழே இறங்க முடியும். அல்லது அலங் காரத் தூண் வழியாகச் சென்று அதன் வெளி நீட்டிய நாற்பக்க உச்சிப் பகுதியில் புதிய வீடொன்றை அமைத்துக் கொள்ள வும் இயலும்.
இரண்டு நாட்களாக அடிக்கடி எலி யின் இம்முயற்சி தொடர்ந்தது. வீடு வாச லில் வேலை வெட்டிகளிருந்த போதிலும், சந்ரத்னாவின் மனதிலிருந்து இந்த எலி யின் செயற்பாடு தூரமாகி விடவில்லை.
மல்லிகை ஜூலை 2011 * 9

Page 7
அவனால் முடிந்தபோதெல்லாம் இவ் விடயம் பற்றி கவனமாகவிருந்தான். ஒரு போது ஜன்னலூடாகவும் மறுபோது வீட்டுக்கு வெளியே வந்தும் அவன் கண் காணிப்புச் செய்தான். மூன்று நாட்களின் பின்னர் சிவிலிங்கில் சிறிய துவார மொன்றைக் கண்ட சந்ரரத்ன அதனால் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளானான். அது தனது கஷ்டத்தைப் பார்த்து மகிழ்ச்சி கொள்கின்ற, புரிந்துகொள்ள முடியாத மனி தனின் நடத்தைக்கு மிகவும் சமமானது. எலியின் இடைவிடாத தைரியம் பற்றி எழும் பெருமையும், அதனைக் கண் காணிப்பதால் ஏற்படும் திருப்தியும் உயர் வானது. அந்தத் துவாரத்தை மேலும் விசாலமாக்கி, அதனுடாக வெளிவரும் வீரனைக் கண்டுகொள்ளும் அற்றுப் போகாத ஆசையும் அவனுக்குள் வளர்ந்து கொண்டிருந்தது. மனைவியுடன் இந்த விபரத்தைச் சொல்லி அவளோடு கலந் துரையாடும் ஆசை அவனுக்குள்ளிருந் தாலும் சிவிலிங்கில் ஏற்பட்டுள்ள ஒட்டை யைக் கண்டு அவள் கோபம் கொண்டு, ஏசுவதையும் பேசுவதையும், குற்றம் சுமத்துவதையும் நினைத்து அந்த எண் ணத்தைக் கைவிட்டு விட்டான். மேலும் மரண வீட்டுக்குப் போய்த் திரும்பிய நாளி லிருந்து அவளுக்குள் ஏற்பட்டிருக்கும் அமைதியற்ற தன்மையை நினைக்கும் போது, இவ்வாறான விடயமொன்றை கதைக்குமளவுக்கு இயல்பான மனோ நிலை அவனுக்குள் காணப்படவில்லை. இது புதிய விடயமொன்றல்ல. அவள் வீட்டிலிருந்து இரண்டொரு நாள் வெளியே செல்லும்போது, அவள் பெறுமதியெனக் கருதும் பொருட்களை வீட்டில் ஆங்
காங்கே மறைத்து வைப்பாள். பெறுமதி யான தங்க நகைகள் மட்டுமன்றி, பெறுமதி யற்ற பொருட்களும் அவளது கள்ளன் - பொலிஸ் விளையாட்டுக்கு ஆட்படும். பயணம் சென்று வீட்டுக்கு வந்ததிலிருந்து செய்யும் குழப்படிகள் சிரிப்பூட்டுவனவாகும். அவள் காசுகீசை காணாமல் செய்துவிட் டால் அது பற்றித் தேடிப் பார்க்காமல் கன வனை சந்தேகத்துக்குள்ளாக்கி விடுவாள். அண்மைக் காலமாக இன்னும் சில பொருட்களுக்கும் கணவனைச் சந்தேகிப் பதைக் காணமுடிகிறது. இன்றைக்கென்று இரண்டு சாமான்கள் காணாமல் போயுள் ளன. ஒன்று அவள் கட்டும் தலைமுடி. அடுத்தது பாட்டன் அவளுக்குக் கொடுத்த தாகச் சொல்லும் தங்க நார்ச் சுற்று. “பாட்டன் தந்த தங்க நார்ச் சுற்றொன்று என்னிடமிருந்தது. ம். என்ன நடந்த தென்று தெரியல்ல.” மனைவி சந்தேகத் தோடு சந்ரரத்னாவின் பக்கம் பார்த்துச் சொன்னாள். “போய்ப் பாரன். வைத்த இடத்திலிருக்கும்” சந்ரரத்ன சொன்னான். “ஒருநாளும் நடக்காத விஷயம். எனக்கு நல்ல ஞாபகம். சமையலறையில் முட்டி யொன்றுக்குள் போட்டு. மேலே கிழிந்த பழந்துணியையும் வைத்தன்"அவள் தனது ஞாபகத்தை உறுதிப்படுத்தினாள். “தலை முடியொன்று வெச்சிருந்தன். அதுவு மில்லை.” “ஐயோ என்ன இது பைத்தியக் காரக் கதையா இருக்கு. ம். நான் என்ன தலைமுடி கட்டிறவனா?” “ஒ. தெரியும் இதை இப்போ யார் கட்டிறாங் கென்னு’ மனைவியின் வாய் கிழியும் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருக்க முடியாத சந்ரரத்ன இந்தச் சிலநாட்களாக வீட்டை மறுபக்கம் புரட்டிக்கொண்டு தேடினான். −
ን$ ፌ(
எனக்குத்
மல்லிகை ஜூலை 2011 季 O

இந்தப் பிரச்சினை எப்படிப் போனா லும் எலியின் கெட்டித்தனங்கள் பற்றி கவனம் கொள்ள அவன் மறந்துவிட வில்லை. இப்பொழுது எலி, வெளியே வந்து விடக்கூடிய அளவுக்குத் துளையை அகல மாக்கியிருப்பதை அவன் கண்டான். பலகைத் துணிக்கைகள் பூமரங்கள் மீது மெல்லிய மழைத் தூறலாய் விழும் விதத்தை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தான். இருந்தும் அதன் சிரமத் தின் அளவுக்கு இவ்வளவு காலமெடுப்பது, வேம்புச் சிவிலிங் பலகை காய்ந்து வன்மை யடைந்தன்வாக இருக்கவேண்டுமென அவன் எண்ணினான். அவன் ஜன்னலுக் கூடாக எட்டியெட்டிப் பார்த்தும் இந்த வீரனின் கூர்முகத்தின் சிறிய மயிரொன் றாவது அவனது கண்ணில் படவில்லை. ஒருநாள் பார்க்கும்போது வெள்ளை மயிர் கள் இரண்டு துளையினூடாக வெளிப்பட்டு இளம் சூரிய ஒளியில் பளபளப்பதைக் கண்டு அவன் எல்லையற்ற மகிழ்ச்சியை அனுபவித்தான். இன்னும் பல மயிர்க் கற்றைகளைப் பார்க்க வேண்டுமாயின் அது தன் கூர்முகத்தின் ஐந்திலொரு பகுதியையாவது புகுத்துமளவுக்கு ஒட்டை பெரிதாக வேண்டும். ஆனால் எலிக்கோ அது பற்றிய ஆர்வம் இல்லாதது போல் தெரிந்தது. எந்தவெர்ரு மனிதனுக்கும் இறுதிக் கட்டத்தை எய்தும் போது ஏற்படும் பொறுமை எலிக்குள்ளும் இருக்க வேண்டும். விலங்குயிர்கள் மனிதனை விட தனது அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பொறுமைக்கும் புத்திசாதுர் யத்திற்கும் இடங்கொடுக்கும். இந்த எலி
யின் பின்னடைவும் அத்தகையதே. அது இனி ஏற்படக்கூடிய எதிரிகளின் உபத்திர வங்களையிட்டும் கவனமாக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் எவனோ முன்னே பாய்ந்து தன்னைக் கொன்று விடக் கூடுமென்று நினைக்கலாம். துளை யினூடாக வெளியே வந்து செய்யக்கூடிய பயங்கரமான விடயம் என்னவென்று நினைத்துப் பார்க்கக்கூடும். காகம் போன்று ஆக்கிரமிப்புத் தன்மையுள்ள பறவைகள் நிதமும் சஞ்சரிக்கும். இங்கு யோசிக்க வேண்டிய விடயம் அதிகம். ஒரு நாள் சந்ரரத்ன பார்க்கும்போது எலி துவா ரத்தை கணிசமான அளவுக்கு பெரிதாக்கி யிருந்தது. உண்மையில் அது ஒரு வெற்றி கரமான சந்தர்ப்பத்திற்குச் சமமானது. குறிப்பிட்ட நேரம் இதுபற்றிக் கவனித்துக் கொண்டிந்த போதும் எலி வெளியே வர வில்லை. இருந்தும் ஒருநாள் எலியின் வால் போன்ற ஏதோ, செதுக்கல் தூணின் உச்சியிலமைந்த நாற்பக்க அமைப்பில் அங்குமிங்கும் அசைவதைக் கண்டு அவனுக்குள் பெரும் ஆவல் மூண்டது. உண்மையிலேயே இது துவாரத்தை உரு வாக்கிய வீர எலியின் வால்தானா? சூரியன் உதித்துவரும் வேளையில் அது பொன்னிறமாக மினுங்கியது. சந்ரரத்ன மிகவும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டி ருக்கும்போது, எலி நாற்பக்க அமைப்பில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு, எஸ் லோன் குழா யின் அருகால் சிரமத்தோடு நகர்ந்து துளை யினுள்ளே மறையும்போது எலியின் முதுகுப் பக்கம் பொன்னிறமாகப் பளபளப் பதைக் கண்டான். துளையினூடாக சிவி
மல்லிகை ஜூலை 2011 & 11

Page 8
லிங்கினுள் புகுந்த எலி, மீண்டும் வந்து அதனூடாகச் சுற்றாடலை அவதானிப்பது சந்ரரத்னாவின் கண்ணில்
அபூர்வமான ان تک முகத்தைக் கொண்டதொரு எலிதான்.
Ull-gil.
உண்மையில்
மிகவும் மனதை ஈர்க்கத்தக்க முகவாய் அதற்கிருந்தது. வாய் மருங்கிலிருந்து பர விய தங்க நிற மயிர்கள் அலங்காரமாக மட்டுமன்றி அதற்கொரு பெறுமதியையும் கொடுத்தது. வாயை விரித்து நாக்கினால் துளையை மோப்பம் பிடித்துப் பார்க்கும்
போது எலியின் பெறுமதி இரண்டு மூன்று மடங்காக அவனுக்கு உயர்ந்து தெரிந்தது. அவன் முதலில் வீரக் கிரியைகள் புரியும் ஒரு ஜீவராசியாகவே இதனை விளங்கிக் கொண்டிருந்தான். இப்பொழுது அதன் பெறுமானம் மேலும் உயர்ந்தது சென்றது. எலி வம்சத்தில் மிகவும் அற்புதமான படைப்பு தனது வீட்டிலிருப்பதையிட்டு சந்ர ரத்னவுக்குள் மிகுந்த ஆடம்பரம் அர சோச்சியது.
/
மல்ஸிகை ஆண்டுச் சந்தாதாரராகச் சேருபவர்கள் கவனத்திற்கு.
ஆண்டுச் சந்தா 600/-
தனிப்பிரதி 40/- gy6óTG LDeuf 200/-
ஒராண்டுச் சந்தாவுக்குக் குறைந்தது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வங்கித் தொடர்புகளுக்கு: Dominic Jeeva 072010004231- Hatton National Bank. Sea Street, Colombo - 11.
காசோலை அனுப்புபவர்கள் Dominic Jeeva எனக் குறிப்பிடவும். காசோலை அனுப்பு வோர் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, Dominic Jeevaஎன எழுதுவோர் இந்தப் பெயருக்கு முன்னாலோ பின்னாலோ வேறெதுவும் கண்டிப்பாக எழுதக் கூடாது. காசுக்கட்டளை அனுப்புபவர்கள் Dominic Jeeva Kotahena, P.O. எனக் குறிப்பிட்டு அனுப்பவும்.
தனித்தனி இதழ்களைப் பெற விரும்புவோர் 5 பத்து ரூபா தபாற் தலைகளையனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 201/4, முறி கதிரேசன் வீதி, கொழும்பு 13. தொலைபேசி : 2320721
மல்லிகை ஜூலை 2011 奉 12
 

சண்முகம் சிவலிங்கத்தின் "వీర93unn G932ల mñK3Vnom Otomà, SaS), MnS”
கவிதை நூல்
சில அவதானக் குறிப்புகள்
- அன்புடீன்
(2011.03.29ஆம் நாள் கல்முனை கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினால் கல்முனை கிறிஸ்தவ இல்லத்தில் நடத்தப்பட்ட கவிஞர் சண்முகம் சிவலிங்கத்தின் "சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்” கவிதை நூல் வெளியீட்டு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை.)
சண்முகம் சிவலிங்கம் அவர்களுக்கும் எனக்கும் 40 வருடகால பழக்கம் இருக்கிறது
என்று சொல்வதற்கு இன்னும் 04 வருடங்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது. அவ்வளவு பழமை வாய்ந்தது எங்களுக்குள்ளான இலக்கிய உறவு.
1988இல் வெளிவந்தது எனது முதல் கவிதைத் தொகுதி ‘முகங்கள். அதில் எனது முன்னுரையில் நான் எழுதியிருந்தேன், “பொருள் புதிது, வளம் புதிது என்ற சோதி மிக்க நவ கவிதைகளைப் பாடி என்னை ஆகர்ஷிப்பவர்கள் இருவர், அதிலொருவர் சண்முகம் சிவலிங்கம், மற்றவர் எம்.ஏ.நுஃமான்” என்று. அப்படி என்னை அப்பொழுதிருந்தே ஆட் கொண்டிருந்தவர், இருப்பவர்தான் சண்முகம் சிவலிங்கம்.
சண்முகம் சிவலிங்கம் என்று இலக்கியவாதிகளாலும், “சசி’ என்று அவரது ஆத்ம நண்பர்களாலும், “ஸ்ரீபன்’ என்று பாண்டிருப்பு ஊரவர்களாலும் அழைக்கப்படுகின்ற இக்கவிஞர் எப்பொழுதும் என் நினைவுகளில் நிறைந்து வாழுகின்ற ஒருவராவார்.
“சண்முகம் சிவலிங்கம் தற்காலத் தமிழில் ஒரு வித்தியாசமான, தனித்துவமான
கவிஞர். அவரைப் போல் பிறிதொரு கவிஞரை, அவருடையதைப் போல் பிறிதொரு
வருடைய கவிதையை அடையாளம் காட்டுவது கடினம். அவருடைய தனித்துவம் அப்படி.
ஈழத்து தமிழ்க் கவிதை மரபின் ஒரு தீவிர வளர்ச்சி நிலையை, பாய்ச்சலை இவருடைய
கவிதைகளில் காணமுடியும். இவர் மூலம் நவீன தமிழ் கவிதை சில சிகரங்களை எட்டி மல்லிகை ஜூலை 2011 * 13

Page 9
இருக்கிறது’ என்று எம்.ஏ. நுஃமான் என்றோ சொன்ன கருத்து இன்று கவனம் கொள்ளத்தக்கது.
இலக்கிய உலகுக்கு ஒரு கவிஞராக மாத்திரம் அறியப்பட்டவரல்ல சண்முகம் சிவலிங்கம். சிறந்த சிறுகதை எழுத்தாள ராக, நாவலாசிரியராக, வெட்டொன்று துண்டு இரண்டான கருநாக்கு ஆய்வாள ராகக்கூட அடையாளம் காணப்பட்டவர் அவர்.
“மஹாகவி உருத்திரமூர்த்தி ஒரு புதிய சந்ததியை விருத்தியாக்கும் ஓர் கால கட்டம் ஆகிறார். நாம் இன்னமும் பாரதி யுகத்தில் இருக்கிறோம் என்று சொல்வது தவறு. பாரதி பரம்பரையின் இறுதித் தளிர்கள் பழுத்துக் கொண்டிருக்கின்றன. பாரதி ஒரு யுக சந்தி என்பது மெய்யே. ஆனால் அந்த யுக சந்தி பிரிந்து விட்டது. அதன் ஒரு கிளையே பிச்சமூர்த்தி என்றால் அதன் மறுகிளை மஹாகவியே” என்று மஹாகவியின் 'கோடையில் எழுதி யிருந்தார் சண்முகம் சிவலிங்கம்.
பாரதி ஒரு யுக சந்தி என்றும், அந்த யுக சந்தியில் இருந்து பிரிந்த ஒரு கிளை பிச்சமூர்த்தி என்பதும், அதன் மறுகிளை மஹாகவி என்பதையும் போல - அதிலி ருந்து இன்னுமொரு கிளையாக தளிர்த்து நிற்பவர் சண்முகம் சிவலிங்கம் என்பதை யும் நாம் அடையாளப்படுத்தியே ஆக வேண்டும். அதற்கு கட்டியம் கூறுகின் றவை அவரது நீர் வளையங்கள், சிதைந்து போன தேசமும் தூர்ந்துபோன மனக் குகையும் - முதலான கவிதை நூல்கள் என்பது எதார்த்தம்.
இலங்கை கவிதையின் எழுச்சியில் மஹாகவி, நீலாவாணன், முருகையன் மூவரும் முதன்மையானவர்கள் என்பது வாய்ப்பாடு. கல்முனைப் பிரதேசத்தில் நீலாவாணனுக்குப் பிறகு கவிதையின் கட்டமைப்பிலும் வெளிப்பாட்டு முறை யிலும் வித்தியாசங்களை வெளிப்படுத்திய பெருமை எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவ லிங்கம் இருவருக்கும் உண்டு. இருவரை யும் தொட்டு விடும் தூரத்தில் நின்று நிதானித்த ஒருவரான பஸில் காரியப்பர் கருதப்படுவதும் உண்டு. 1970இற்குப் பிறகு ‘கல்முனை புதிய பறவைகள் இந்த அலைகளின் சுழிகளுக்குள் அகப்பட்டு, வகுடெடுத்து வழி சமைத்த வரலாறுகள் ஆய்வு செய்யப்பட வேண்டியவை.
1980இற்குப் பின்னால் கல்முனை பிரதேச கவிதை கட்டமைப்பை அவிழ்த்து அதற்கு வேறொரு திறப்பெடுத்துக் கொடுத்த அருமை ‘சோலைக்கிளி’க்கு உண்டு. அதை அப்படியே உரித்து வைத் ததைப் போல அலரியும், அஸாருதீனும் அடையாளப்படுத்தி நிற்க - அதை இன்னு மொரு பரிமாணத்தில் றஸ்மி’யும், ‘அபா'ரும் அறிமுகம் செய்துவரும் இன் றைய எமது கவிதை சூழலுக்குள்ளே - பாரதியிலிருந்து பிரிந்த இன்னுமொரு யுக சந்தியாக கருதப்படும் ‘சசியின் ‘சிதைந்து போன தேசமும் தூர்ந்துபோன மனக் குகையும் கவிதை நூலின் சில துளிகளை நுகர்ந்து பார்க்க முனைப்புக் கொண்டுள் ளேன் நான்.
இந்நூலில் மொத்தம் 123 கவிதைகள் இருக்கின்றன. எல்லாக் கவிதைகளையும் பற்றி பேசவேண்டும் என்ற ஆசை எனக் குள் இருக்கின்றது. ஆனால் அதைக்
மல்லிகை ஜூலை 2011 $ 14

கேட்க வேண்டும் என்ற ஆவல் உங் களுக்கு இல்லை என்பது எனக்குத் தெரி யும். ஏனெனில், அந்தக் கவிதைப் புத்த கத்தை முற்று முழுதாக தாமே வாசித்து அதில் மூழ்க வேண்டும் என்னும் விருப் பத்தோடு இருப்பவர்கள் நீங்கள். அதனால் தான் அதில் சில கவிதைகளை மாத்திரம் உங்கள் கவனத்துக்கு கொண்டுவர இருக் கின்றேன் நான்.
இந்நூலில் சண்முகம் சிவலிங்கம் சொல்வதைப் போல, 01. தொடக்கம், 02. வளர்ச்சி, 03. முடிவு என்ற முப்பரிமாணங் களுக்குள் அக்கவிதைகள் அடங்குவதால் அவை 10 இயல்களாக தொகுக்கப் பட்டுள்ளன.
அதில் முதல் இயல் ‘போருக்குப் போனாய் போ’ கவிதைகளைப் படித்து கண்ணிர் வடித்தவன் நான். தனயனை இழந்த ஒரு தந்தையின் தானத்தில் இருந்து மனம் வெதும்பி அழுது கரைந்த முகத்தொடுதான் நான் உங்கள் முன் னிலையில் நிற்கின்றேன். சசியினது ‘அமலபதி’ என்னும் வீட்டின் பெயர் ‘பிரகாஷ்தம்' என்ற பெயர் மாறிய வரலாறு இந்த இயல் முழுவதிலும் அப்பிப்போய் இருக்கிறது.
“போனாய் நீ/ போருக்குப் போனாய் / போ / ஓநாய்களுக்குப் பயந்து / உன்னை / வாயில் கவ்வி வழி தேடிய / பூனை நான் / போனாய் நீ / போருக்குப் போனாய், / போ. / வானில், / பனையின் வைர ஒலைகளில் / கூடுகள் நெய்தால் / குண்டர் உன்னைக் கொல்வார் என / பூமிக்கடியில் பொந்து கிண்டி / உன்னை என் சிறகு / தோலுக்குள் போர்த்திய /
தூக்கனாங் குருவி நான் / என் துணை யையும் மீறி / போனாய் நீ / போருக்குப் போனாய், போ.”
இக் கவிதையில் வரும் பூனை, பொந்து, தூக்கணாங்குருவி போன்ற உருவகங்கள் கவிதையின் உள்ளார்ந்த உவமமாக அமைந்திருப்பதை நாம் உணர வேண்டும். “போனாய் நீ, போருக்குப் போனாய், போ.” என்ற வரிகள்"போய்வா நீ” என்று போக்காட்டி வரவழைத்திருக்கக் கூடாதா என்றதொரு நப்பாசை எனக்கு. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று சொல்வார்களே, அந்த ‘மந்திரம்’ ‘போ’ என்று போக்காட்டாமல் ‘போய் வா’ வென்று வரவழைத்திருக்கலாமே என்று வாடி நிற்கின்றேன் நான்.
அந்த இயலில் வரும் இன்னுமொரு துயர். ஏக்கம், "துப்பாக்கிக் குழந்தை' கவிதை.
“உன் தங்க மீன்கள் / இன்னமும் கண்ணாடித் தொட்டியில் / தகதகக் கின்றன / உந்துதல் / ஓடுதல் / ஒளித்தல் எனும் / எந்த நகர்வும் இன்றி / நீரின் மேலெழுந்து / எங்கே நீ எனத் தேடு கின்றன / எவர் அவர்க்கு உன்போல் / தீனி இடுவர்?
வெண்பஞ்சுத் துளிகள் - உன் முயல்கள் / வெளியில் வந்து / துள்ளித் துள்ளி / முன்பாதங்கள் தூக்கி / செங் கண் முகத்தைத் திருப்பித் திருப்பி / எங்கே நீ எனத்தான் / இன்னமும் தேடு 6u60T / 6T6uñ solsûT (8urr6ù / 2-Lbu6öT தளிரை ஊட்டுவார் / அவர்க்கு?
மல்லிகை ஜூலை 2011 奉 15

Page 10
பப்பி திரிகிறது / நாலுகால் பாய்ச் சலில் / எறிந்த பந்தை எடுத்து வந்து / என்னிடம் தராதாம் / உன்னையே தேடி / ஒட்டமாய்த் திரிகிறது.
இத்தனையும் விட்டு / எப்படி நீ / துப்பாக்கியோடு / வாழ்வைத் தொடர் கின்றாய் / மகனே!”
“இத்தனையும் விட்டு எப்படி நீ துப்பாக்கியோடு வாழ்வை தொடர்கின்றாய் மகனே' என்ற கேள்விக்கு விடை? விடுதலை விரும்பும் நாட்டுப்பற்று என்பதை மறைமுகமாகச் சொல்லும் அக்கவிதை யின் மறைபொருள் முன்னெடுப்பு எடுத் தாளத்தக்கது. அந்த இயலிலுள்ள எல் லாக் கவிதைகளுமே அத்தகைய நினைவு களின் நிழல்கள்தான்.
இயல் II ஆறாத ஆறுகள் இயலில் காலத் துயரின் ஒரு கட்டமாக வரும் ‘மெளனத்தின் நாவுகள்’ கவிதையில் கவிஞர் 'பாண்டியூரானின் மரணம் ஞாப கப்படுத்தப்படுகிறது.
“கல்லுக்கும் இருந்தன காதுகள் / புல்லுக்குள் கிடந்தன புடையன்கள் / ஊருக்குள் / டைனோசோஸ் உட்புகுந்த போது / அவைகளை உருவேற்றும் / மந்திரவாதிகளம்பப்புடையன்கள் மாறவும் / ஆளுக்கொரு திசையில் ஒடினோம் / அகப்பட்டுக் கொண்டாய் / நீ
காலம் உனக்கு ஒரு கவி எழுதும் / அந்தக் காலம் வரை / மெளனத்தின் நாவுகளில் / வாழ்ந்திருப்பாய் நீ.”
இதுவரை காலமும் மவுனத்தின் நாவு களில் வாழ்ந்த 'பாண்டியூரான்’ இனி சசி யின் இக்கவிதை மூலம் எல்லார் நாவு
களிலும் சப்தமாக எதிரொலிப்பார் என்பது உறுதி.
ஒருவனது கவிதை உறவுகளின் கதையாக மலரும் மூன்றாவது இயலில் வரும் "உறவும் நினைவும் ஒரு பாலை வனத்தின் குரலும் கவிதை எம்.ஏ.நுஃமா னுக்கு உரியது என்று நினைக்கின்றேன்.
“உன்னைப் பற்றியே, உன்னைப் பற்றியே / இன்னமும் இந்தப் பாலையின் குரல் / உறவும் பிரிவும் தந்த உவப்பு / மழைநாட்கள் வரும் நினைவில் / எந்த மகிழ்ச்சி / என்னைப் பகிர்ந்து கொள்ள / என்னை நான் புரிந்துகொள்ள / என் னோடு வந்த / எனது அழியா நிழல் / கவிதையின் மென்மை அழகை / என் கண்ணுக்குள் தேக்கிய / வைகறை
“இருளிலும் ஒளிரும் சர்ப்ப மணி மகுடத்தின் / அழகிய தீமை / தனிப்பட்ட தர்மமென / மரப்பசு நாயகியின் / கலா சொருபத்தில் மயங்கினையே, / ஏரோதின் வாளால் / தலையை இழந்த இந்தப் / பாலைவனத்தின் குரல் / இன்னமும் இன்னமும் / உன்னைப் பற்றியே / உன்னைப் பற்றியே!” என்று நுஃமான் நினைவில் சுழன்றாடுகிறார் சசி. இதற்கு சசியின் நீர் வளையங்கள் தொகுதியில் இதைப் போன்றதொரு சந்தர்ப்பத்தில், “இன்று தனது விலகிச் செல்லும் மையங் களில் என்னையும் ஒன்றாக அவர் கருதிய போதிலும் அது ஒரு பிரம்மைதான். என்னைப் பொறுத்தவரை இன்னும் அவர் நெருங்கிய நண்பர்தான் நான். மனம்
மல்லிகை ஜூலை 2011 奉 16

நெகிழ்ந்து நினைவு கூரும் மிகச் சில நண்பர்களுள் அவரும் ஒருவர்.” எம்.ஏ. நுஃமான் சொல்லியுள்ள சொல்லாடல் பதிலாக அமையும் என நினைக்கின்றேன்.
சல்மாவுக்கு என்னும் கவிதையில் சல்மாவுக்கு ஊட்டும் தைரியம் எல்லா சல்மாக்களுக்கும் உரித்தானதுதான்.
“சல்மா, / ஒரு வாசிப்பும் அதன் நேசிப்பும் / இந்த வரிகள். / தனித்திருந்து தவிப்பதா பெண் வலிமை? / உயிர் திருக வேண்டாமா? / துயர்களை / தோசைக் கல்லில் தெறித்துவிட்டு / நீராடப் போ/.../ நிலவில் / ஏறி நில் y மலையில் குதி / மண்ணில் நட / யார் எமக்கரசர் / இங்கு / யாரிடம் நியமம்? / நீயே / உனக்கு அரசி / என / நிமிர்.” பெண் விடுதலையை விரும்பும் கவிஞரின் வேட்கைக்கு இக் கவிதை வகிக்கும் பங்கு முதன்மை
யானது.
தீ - ரா - மை - என்ற நாலாம் இயலின் 'தீராமை' என்ற சொல் ‘தீ’ ஒரு சொல் லாகவும், "ரா'இன்னொரு சொல்லாகவும், “மை வேறொரு சொல்லாகவும் தனித்தனி யாக தீ - ரா - மை - யாக பிரித்து எழுதப் பட்டுள்ளமையிலுள்ள சொற்பிரயோகத்தை நாம் பகுத்தறிய வேண்டி இருக்கிறது.
தீராமை என்ற சொல்லினுள்ளே முடிவுராமை என்னும் கருத்து ஒளித்திருப் பதை உணரமுடியும். ‘தீர்ப்பு வழங்காமை' என்றதொரு கருத்தும் அதற்குள் இல்லாம லில்லை. அச்சொல்லை தனித்தனியாக பிரித்தெழுதியுள்ளத்தில் ‘தீ’ என்றால் நெருப்பு. ரா’ என்றால் இரவு. ‘மை’ என் றால் தொழிற்பெயர் விகுதிகளில் ஒன்றான பண்புப் பெயராக அது கொள்ளப்படும்
போது ‘மை’ என்றால் அது செம்மை, நன்மை, போகின்றமை, செய்தமை எனும் பொருள்களைப் புலப்படுத்துகின்றன. ஆகவே அந்தத் தீ - ரா - மை - யின் உள் ளிட்டை நாம் கவிஞரிடம்தான் கேட்டறிய வேண்டியிருக்கிறது. அந்த இயலில் வரும் 'நொங்கும் சாம்பலும் என்னும் கவிதை வேட்கையும் போதையும் நிறைந்த இள வயதின் இடறல்களாக படம் விரிகின்றன.
"குரும்பட்டி அளவு / உன் முகிழை நீயே திறந்தாய் / கண் புடைத்த / உன் திட்டுக்கள் மீது / என் கையைப் பிடித்து விட்டாய் / தடவினேன் களுக் என்று சிரித் தாய் / எனக்கு ரோஷம் பொத்தது / பொத் திப் பிடித்தேன் / கையை விலக்கி மீண் டும் பொத்த விட்டாய் / உனது கண் ணிமைகளைத் திறந்து / என் நாவைப் பொருத்தினாய் / . / நொங்குதான் / எனினும் பிஞ்சு / ப்ருகச் சொன்னாய் அரு வெருத்தேன் / எனினும் பருகினேன்’ என்று சொல்லி இந்தப் பொறி அழியாமல் நீறுபூத்த நெருப்பாய் புகைந்து கொண்டி ருப்பதேன் என்று கேட்டு, உயிர் இருக்கும் வரை மறக்க முடியாத ஞாபகமாக அந்த முதல் அனுபவம் யாருக்குள்ளும் இருக் கும் என்பதை எடுத்தோதும் இயல்புக் கவிதை அது.
இந்த இயலில் வரும் 'இருளானால், கிடாய் போன்ற இன்னும் சில கவிதை களில் புலப்படும் விரகதாப உணர்வுகள் வாசகர்கள் வாசித்தறிய வேண்டியவை.
'நிழல் கோடுகள் இயலில் தொட்டம் தொட்டமாகத் தொடரும் காதல் தகிப்புகள் ரசனை மிக்கவை. நம்பமுடியாத நம்பிக்
மல்லிகை ஜூலை 2011 率 17

Page 11
கைகள் அவை. இந்தப் பூனையும் பால் குடிக்குமா? என்று கேள்வி கேட்கத் தூண்டும் கவிதைகளும் அந்த இயலில் காணப்படுகின்றன.
“எடுத்த வெண்கட்டியால் எழுத முடி யாது / தடுப்பதென்ன / எனக்கும் கரும் பலகைக்கும் இடையில் அசைவு/ வெறும் அசைவு / அசைவின் ரேகைகள் / எனக் கும் கரும்பலகைக்கும் இடையில் / கடைக்கண் கோடியில் மறையும் ஒரு கழுத்தசைவு / நிற்பதில் / நிமிர்வதில் / நெளிவதில் / நெஞ்சைச் சுண்டும் நிழல் கோடு / அமர்வதில் / சாய்வதில் / திரும் பலில் / அள்ளுண்டு போகும் கனவுகள்.”
இந்தச் சலனங்களும், சபலங்களும் மனித சமபங்கு வாழ்வில் மறுதலிக்க முடி யாத நடைமுறைகள்தான் என்பதை எவரும் எதிர்த்தொலிக்க முடியுமா? என்று கேட்க வேண்டும் போலிருக்கிறது அக் கவிதையின் வாசிப்பு எனக்கு.
தூண்களை இழந்த வானம் கவிதை பொழியும் துயரம் கனதியானது. வாழ்வின் வெறுமையை வரி பிரித்துச் சொல்லுகின்ற சோகம் அக்கவிதை.
இயல் V1"நீக்கல்கள்'இயலில் வரும் ‘வீழ்ச்சி' கவிதை தரும் விளைபொருள் வினைத்திறன் நிறைந்தது. காலத்தின் தோற்றம் மாற்றம் என்பனவற்றின் மடல் திறந்த ஏற்றம் இக்கவிதை.
'குருவிமனம்’ இயல் VII மின்மினி கவிதை பெரும் தத்துவார்த்தமாகும். மின் மினியின் மினுமினுப்பையும். அழகையும்
இருளில்தான் ரசிக்க முடியும். வெளிச் சத்தில் மின்மினி மினுமினுப்பதில்லை. அழகை வெளிப்படுத்துவதுமில்லை. இருளுக்கு அழகு மின்மினி. மின்மினிக்கு அழகு இருள். ஆனாலும் வெறும் மின்மினி விவகாரமல்ல அக்கவிதை.
“இருளில் ஒரு மின்மினி / எங்கோ வெகு தூரத்திலிருந்து / மெதுவாக / மிக மெதுவாக / ஆனால் / நிச்சயமாக என் இல்லத்தை / நெருங்கிக் கொண்டிருந்தது / திடீரென மீண்டும் மின்சாரம் / வெளிச் சமோ வெளிச்சம் எங்கும் / ஓ என் மின் மினி எங்கே?” இருளிலிருந்து ஒளிக்கும் - ஒளியிலிருந்து இருளுக்குமான ஒரு தேடல் கவிதை அஃது.
இரவின் இறங்கு துறையில் இயல் VII இல் வரும் "சடுகுடு ஆட்டம் கவிதை ஒரு கூரையின் கீழ் வாழ்ந்தாலும் ஒட்டுற வில்லாமல் வாழ்வதில் ஒத்து வாழும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரு தம்பதியினரின் வெட்டுமுகம்தான் அக் கவிதை.
மாலை / ஏழு இருந்து எட்டுவரையும் / அவள் / தொலைக்காட்சியில் தனிமை தொலைப்பாள் / அவன் / படிப்பகத்தில் பாரம் குறைப்பான் / அவள் எட்டு இருந்து எட்டரை வரையும் / சமையற்கட்டில் சடு குடு செய்வாள் / அவன் / தொலைக் காட்சியில் தொங்கிக் கொள்வான் / எட்டரை இருந்து ஒன்பதுவரையும் / அவள் மீண்டும் / தொலைக்காட்சியினுள் துணை தேடுகையில் / அவன் / இரவுணவு முடித்து / வாசல் மணலில் மனதைப்
மல்லிகை ஜூலை 2011 * 18

புதைப்பான் / ஒன்பது மணிக்கு அவள் / தனது அறையில் / விளக்கணைத்துத் துயிலும் வேளையில் / அவன் / தன் படிப் பகத்தில் அமர்ந்து / பன்னிரண்டு வரையும் தீக்கோழி ஆகி / பின் துயில் அறையில் / விளக்கணைத்துக் கனவுகளில் மேய் வான் / இடைக்கிடை / விடியும் வரை / இரண்டு அறைகளிலும் கேட்கும் / பெரு மூச்சுகள்.
ஒடும் புளியம் பழமும் போலவும், தாமரை இதழில் பனித்துளி போலவும் ஒட்டியும் ஒட்டாமலும் ஒத்து வாழும் ஒரு தம்பதியினரின் வாழ்வின் காட்சிப் LuL9LDLOTL அக்க்விதை விரிந்துள்ளது.
இலங்கையின் போர்க்காலச் சூழலை புடம்போட்ட புதையல்களாக மிளர்பவை IX ஆம் Xஆம் இயல்கள். அதற்கு உதாரணமானதொரு கவிதை ‘சிதைந்து போன தேசமும் தூர்ந்துபோன மனக் குகையுமாகும்.
மொத்தத்தில் 1960ஆம் ஆண்டுக்குப் பின்னரான தமிழ் கவிதை எழுச்சியின் ஒரு நெம்புகோலாக விளங்குபவை சண்முகம் சிவலிங்கத்தின் கவிதைகள் என்பதில் எதுவித ஐயமுமில்லை. ஈழத்து தமிழ் கவிதையின் கட்டமைப்பும், பொருள் வெளிப்பாடும் இன்னமும் நெறி பிறழ வில்லை என்பதற்கு ஒரு கல்வெட்டாக சண்முகம் சிவலிங்கத்தின் ‘சிதைந்து போன தேசமும் தூர்ந்துபோன மனக் குகையும் கவிதைத் தொகுதி அமையும் என்பதுதான் உண்மை.
HAPPY PHOTO
Excellent
Photographers Modern Computerized Photography For Wedding Portraits & Child Sittings
Photo Copies of Identity Cards (NIC), Passport & Driving Licences Within 15 Minutes
300, Modera Street, Colombo - 15. Tel: 2526345
மல்லிகை ஜூலை 2011 * 19

Page 12
பாறி அசுரகதியில் மா இடித்துக்கொண்டிருந்தாள். யாழ்ப்பாணத்தில், இப்படி உரலில் மா இடித்தே சுவையான பிட்டும், இடியப்பமும் ஆக்கித் தின்றே அன்றைய மனிதர்கள் பசியாறிய காலம் ஒன்று இருந்தது. அதற்காகவென்றே பாறி போன்ற அன்றாடங்காய்ச்சிகள் அல்லது கீழ்சாதி ஏழைப் பெண்கள் நிறையப் பேர் இரவு பகலாய் கண்விழித்துக் காத்துக் கிடந்த காலம், இப்போது மலையேறிவிட்ட தென்னவோ உண்மைதான். இதுகூட மலருக்கு நிதரிசனமாகத் தெரிந்த ஒன்றல்ல. அவ்வப்போது ஊரிலிருந்து வந்துபோகும் யாழ்ப்பாணத்துப் பெண்களிடம் வெறும் வாய் மூலமாகவே கேட்டறிந்து கொண்ட கசப்பான உண்மைதான் இது.
அதை அவள் கசப்பாகவே உணர்வதற்குக் காரணம் நெஞ்சில் தீட்டிவிட்டுச் செல்கிற, இந்தக் கொடிய காலமாற்றமல்ல. அதற்கும் மேலாக பாறி மீது அவள் கொண்டிருக்கிற, அவள் பற்றிய சிரஞ்சீவியான நினைவுத் தடங்கள் மட்டும்தான் காரணமென்று சொன்னால், தலை கீழாகப் போய்க்கொண்டிருக்கிற உலகம் கைதட்டிச் சிரிப்பது போன்ற ஒரு பிரமை அடிக்கடி வந்து போகும். அதனா லென்ன? அப்படிப் பாறியை நினைப் பதே, அவளுக்கு ஒரு சுகமான அனுபவம். அவள் காற் றிலே கால் முளைத் தவலல்ல. இறக்கை விரித்துப் பறந்து திரிந்த அந்ந வீட்டிற்கு வரும்போதெல்லாம், அவளருகே, அவள் மா இடிக்கிற உரலருகே, தரையில் குந்தியிருந்த வண்ணம், லாவகமாக அசுரவேகத்தில், அவள் மா இடித்து முடிக்கிற அந்த அழகை மலர், ஒரு கண்கொள்ளாக் காட்சியாகவே கண்டு மகிழ்ந்தது மட்டுமல்ல, மனம் விட்டு நிறையவே பேசிய ஞாபகமுண்டு. பாறியின் இயற்பெயர் என்னவென்று யாருக்குமே சரியாகத் தெரியாது. எல்லோர் வாயிலும் அவள் பாறிதான். சமயத்துக்கு அவளைப் பாறாத்தை என்று அழைப்பவர்களுமுண்டு. ஒருவேளை அவளது உண்மைப் பெயர் பார்வதியாகக்கூட
ாட்களில், மா இடிக்கப் பாறி ஒவ்வொரு சமயமும்
இருக்கலாம். எவ்வளவு அழகான அம்மன் பெயர் அது. அந்த அம்மனையே இழிவுபடுத்துகிற மாதிரி, அவள் ஏன் பாறியானாள்?
இதைப் பாறியிடமே கேட்டுவிட வேண்டுமென்று, ஒரு தினம் மலருக்கு ஆவேசம் வந்தது. கேட்டும் விட்டாள். படிப்பைப் பத்தாம் வகுப்போடு முடித்து விட்டு, அவள் வீட்டில் இருந்த காலம் அது. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. ஆகிற வயசுதான். அதற்கான ஆயத்தம், இப்பொழுதே தொடங்க வேண்டாமா?
மல்லிகை ஜூலை 2011 & 20
 
 
 
 
 
 

அதற்காக, அவளை வாழ்க்கையைப் படி என்று உலகம் சொல்கிறதே.
இதுதான் வாழ்க்கை. இதோ நிற் கிறாளே, பாறி, அவள்தான். அவள் ஏன் பாறியானாளென்பதே பெரும் புதிர். இதற்கு விடையறிந்தாலே, வாழ்க்கை முழுவதும் பிடிபட்ட மாதிரித்தான்.
“சொல்லு பாறி. நீ ஏன் பாறி யானாய்? உன்ரை உண்மையான பெயரைச் சொல்ல மாட்டியே?”
பாறி அசடு வழியச் சிரித்துக் கொண்டே கூறினாள், “எனக்கென்ன தெரியும். அப்ப தொடக்கம் நான் பாறிதான்.”
“இல்லை பாறி. நீ ஒருநாள் பார் வதியாக வேணும். நான் அப்படி நம்புறன். காலம் கிழித்த ஒளிக் கோட்டிலே, உன் முழு இருளும் போகும். அப்ப பார்வதியாக, உன்னை இந்த உலகம் வணங்கும்.”
இது நடக்குமா? வெறும் பத்து ரூபா கூலியை நம்பி நெஞ்சு வலிக்க, நாளெல்லாம் வெள்ளாள வீடுகளில் மா இடித்துக் கொடுத்தே, மாய்ந்து போகும் இந்தப் பாறிக்கு இதை விட்டால் வேறு கதிமோட்சம் கிடைக்குமா? அவள் கஷ்டப்பட்டு, இடித்துத் தருகிற மாவே, மலர் வீட்டில் மூட்டைக் கணக்கில் வரும். இப்போது பலகாரமெல்லாம் வெறும் பைக்கெற் மாவிலேதான். இருக்கவே இருக்கிறது மிக்ஸி இயந் திரம். இனிமேல் பாறி எதற்கு?
அவளைத் தேட வேண்டும். கண் நிறைந்து பார்க்க வேண்டும். ஊர்க் கோடியில் திட்டுத் திட்டாகப் படிந் திருக்கிற கனத்த இருளினூடே, அவள் நிழல்கூட இப்போது இல்லையாம். யார் சொன்னது? நிழல் எங்கே போய்க் கவி யும்? இருள் நடந்து வந்த பாதையில் நிழலின் ஒற்றைத் தொடரான முடிவு கூட ஒளியாகத்தான் விடியும். இந்த முடிவு ஏன் பாறிக்கு வந்திருக்கக் கூடாது? அவளைப் பாறியென்றே அழைத்த வாயில், பார்வதியென்ற மங்களத் திருநாமம் விளங்குமா?
சே! என்ன நினைப்பு இது. அவளைப் பார்வதியாக்கவும், பஞ்சுப் பொதியில் படுக்க வைக்கவும் நான் ஆர்? நானே நானாக இல்லை. இடை யில் வந்த பாறியைப் புதுப்பிக்க, அவளின் கரிக்கோலம் போக்கி, அவளை ஒளித்தேரில் ஏற்றி, ஊர்வலம் கொண்டு போக என்னிடம் ஏது தகுதி? எல்லாம் காலச் சுழற்சியில், தானாகவே மாறும். இப்போது நான் மாற வில்லையா? அப்படி எல்லாவற்றையும் அசைபோட்டு மெல்ல மெல்ல நினைத்து உயிர்க்கையில், மலருக்கு ஏனோ வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போல் தோன்றியது. இப்படி வரு மென்று யார் கண்டார்கள்? கொழும்பு முழுவதும் கரைத்துக் குடித்து, இப்போது அவள் பாஷையே புரியாத மண்ணில், வேரூன்றிய நிலைமை. எங்கேயிருந்தாலென்ன, ஒளிச்சூரியன் இங்கும் வரும். உயிர் ஒன்றே உண்மை. நான் வேறு, நீ வேறு இல்லை. அப்படி யானால், பாறி ஏன், பாறியானாள்?
மல்லிகை ஜூலை 2011 奉 21

Page 13
அவள் இப்போது பாறியில்லை என்றது ஒர் குரல். மலர் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தபோது, சீதா மச்சாள் எதிரே முகம் சிரித்தபடி நின்று கொண்டிருந்தாள். அவள் எப்போது கொழும்புக்கு வந்தாளென்று தெரிய வில்லையே. அடிக்கடி கப்பல் ஏறி வரு கிற ஆள்தான் அவள். வெளிநாட்டுப் பிள்ளைகளிடம் பணம் வாங்க, அடிக் கடி வந்து போவாள். அப்போது மலர் வீட்டிற்கு வந்துபோகவும் தவறுவ தில்லை. அவளைக் கண்டதும், முகம் நிறையச் சிரிப்போடு மலர் அவளை வரவேற்றாள்.
“வா சீதா. இரு. நிறையக் கதைப்பம்” என்றாள்.
வழக்கமாகச் சீதா வாய் ஒயாது வளவளவென்று பேசிக்கொண்டிருப் பாள். இன்று வெறும் வறட்டுச் சிரிப்பு மட்டுந்தான் அவளின் பதிலாக இருந் தது. தொடர்ந்து, மலரே கேட்டாள்.
“என்ன சீதா. மனவருத்தமாக இருக்கிறாய். ஏதும் கவலையே?”
“பின்னையென்ன? எங்கடை ஊர் முந்தின மாதிரியே இருக்கு. மா இடிக் கக்கூட ஆள் இல்லை.”
“நீ என்ன சொல்கிறாய்?”
“எல்லாம் வெளிநாட்டுக் காசு செய்கிற வேலை.”
“ஏன் பாறி எங்கை போட்டாள்?”
“சரிதான். அவள் இப்ப புதுப் பணக்காரி. அவளுக்கென்ன. பிள்ளை சுவிஸிலை, நாங்கள்தான் அவளுக்கு மா இடிக்கப் போகவேணும்.”
“சீதா மச்சாள்! நான் ஒன்று சொல் லுறன். கோபிக்கக்கூடாது. இதிலே மனவருத்தப்படுகிற மாதிரி என்ன இருக்கு? எனக்கு விளங்கேலை. பாறி எப்பவுமே பாறியாகவே இருக்கவேணு மென்று நாங்கள் ஏன் ஆசைப்பட வேணும். பாறி பார்வதியானால், எங்களுக்கும் சந்தோஷம்தானே.”
“இதிலே என்ன மண்ணாங்கட்டிச் சந்தோஷம் இருக்கென்று, நீ சொல்ல வாறாய்?”
"நான் சொன்னால், உனக்கு விளங் குமே அது. நான் பாறியைப் பாறியா கவே பார்க்கிறேலை. அதுக்கும் மேலை ஒரு நிலைமை இருக்கு. அவள் மனிஷி அப்படியென்றால் என்ன அர்த்தம்? பார்வதிதான்” என்று மலர் மகிழ்ச்சியுடன் சொல்லும்போது அதை நம்ப முடியாமல், சீதா வெகுவாகத் திணறிப் போனாள். மலர் கூறிய, அந்த உண்மைக் கருத்துக்கள் எதுவுமே அவளுள் ஜீரணமாக முடியாமல் போன தால், அவளுக்கு நெஞ்சு வலித்துக் கண்ணை இருட்டிற்று. பாறி பார்வதி யாவதா? எப்படியென்று அவளுக்கு யோசனையாகவும், கவலைக் கொந் தளிப்புமாகவுமிருந்தது. மலரைப் பொறுத்தவரை, மாறாக இதுவே ஜீரண மாகக்கூடிய, மிகப் பெரிய அளவில் மகிழ்ச்சி தரக்கூடிய விடயம். பாறி பார் வதியாவதென்றால் சாதாரண விடயமா? குருட்டு உலகம், இருட்டிலேயே கிடக் கட்டும். விழிப்பு நிலையில், ஒளியின் தரிசனம் காண்பதற்கே, நான் கொண்ட தவமெல்லாம் என்று அவளுக்குப் பட்டது.
மல்லிகை ஜூலை 2011 & 22

இலக்கியம் சார்ந்து பெருகி வரும் இணயைத்தளங்களின் எண்ணிக்கை யும் அவற்றின் நடுவு நிலைமைகளையும் பார்க்கும் பொழுது மிக அண்மை
யில் நான் சந்தித்த ஒரு அனுபவத்தை இந்தக் கட்டுரைக்கு முன்னுரையாக வைக்கலாம் என எண்ணுகின்றேன்.
வைகாசி 13. தமிழகத் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் அன்று காரியாலயத்திற்கும் செல்லாமல் ஒருநாள் லீவு போட்டுவிட்டு அதிகாலையே எழுந்திருந்தேன். டென்மார்க்கில் வசிக்கும் எங்கள் வீட்டில் இலண்டனில் இருந்து ஐங்கரன் நிறுவனத்தினரால் ஒளி பரப்பப்படும் கலைஞர் ரி.வி. மட்டுமே உண்டு. முதல் நாளே தேர்தல் ஆணையகம் முதலில் தபாலில் அளிக்கப்பட்ட வாக்குகளும் பின்பு கணனியில் பதியப்பட்ட வாக்குகளும் வெளியாகும் என அறிவித்திருந்தார்கள். எனவே எனது காலைச் சாப்பாடும் ரீ.வி.க்கு முன்னேதான்.
புத்தக விமர்சனங்களும், இணையத்தளங்களும்.
- வி. ஜிவகுமாரன
தமிழகத் தேர்தல் முடிவு எதுவும் இந்திய வெளியுறவுக் கொள்ளையில் எந்த மாற்றமும் கொண்டு வரப்போவதில்லை என்ற எண்ணம் எனக்குள் வலுப்பெற்று இருந்தாலும், வாக்கு வங்கியை நிரப்ப வடிவேலு என்ற ஒரு நகைச்சுவை நடிகரை பாவிக்க வேண்டிய தேவை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வந்து விட்டதே என்ற ஒரு பரிதாப உணர்வும் இருந்தது. மேலாக டென்மார்க்கின் அதிகமான நிறுவனங்களில் கணனித் துறையினை நம் தமிழ்நாட்டு உறவுகள் நிறைத்திருக்க அதே தமிழ்நாட்டுப் பிரச்சாரத்துக்கு “கப்டன் என்பவன் தண்ணியில் கப்பலைச் செலுத்துபவன் - தண்ணியில் மிதப்பவன் இல்லை” என வடிவேலு சொல்லவும், முன்னாள் தகவல் தொலைத் தொடர்பு மந்திரி தயாநிதிமாறன் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க தமிழகத்தின் தலைவிதியை எந்தச் சீனச்சுவரில் முட்டி மோதுவது என வேதனைப்பட்டேன். இலங்கையில் இனப்படுகொலை நடந்திருக்குது. வேறு என்ன என்னவெல்லாமோ நடந்திருக்கு. ஆனால் இப்படியான ஒரு தேர்தல் பிரச்சாரம் நடந்திருக்கவில்லை என்பதில் மிக்க மகிழ்ச்சி.
மல்லிகை ஜூலை 2011 等 23

Page 14
இனி விடயத்திற்கு வருவோம். முடிவுகள் வரமுதல் முன்னணியில் யார் யார் நிற்பது என்ற விபரங்கள் வரத்தொடங்கியது. பின் இறுதி முடிவுகள் வரத்தொடங்கியது. வடி வேலுக்கும் தி.மு.க.விற்கும் காலம் சரியில்லை என எண்ணத் தொடங்க முதல் தேர்தல் ஒளிபரப்பு நிறுத்தப் பட்டு வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப் பத் தொடங்கியது கலைஞர் தொலைக்காட்சி. தமிழ்நாடு முழுக்க மின்சார வெட்டோ, அல்லது வாக்கு எண்ணும் அத்தனை கணனி இயந்தி ரங்களிலும் வைரஸ் பிடித்து விட்டதா என்ற ஐயப்பாட்டுடன் எனது கணனி யில் இந்திய இணையத் தளங் களுக்குச் சென்று பார்வையிட்டேன்.
உதயசூரியன் கடலினுள் மறைந்து கொண்டு இருந்தான்! இரட்டை இலைகள் துளிர்த்துக் கொண்டு இருந்தது!!
அடுத்த வருடம் ஐங்கரன் f.வி.க்கு சந்தா கட்டுவதில்லை என்ற முடிவுடன் தொடர்ந்து கணனி முன் இறுதி முடிவு வரை உட்கார்ந்திருந் தேன். மனம் கேட்காமல் அன்று மாலையில் மீண்டும் ஐங்கரனை அழுத்த கலைஞர் திருவாருர் தொகுதியில் 50,000 வாக்கு வித்தி யாசத்தில் வென்ற செய்தியும், கெளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வென்ற செய்தியும் இடம்பெற்றுக் கொண்டு இருந்ததே தவிர இறுதி வரை அ.தி.மு.க. வென்ற செய்
தியோ, தி.மு.க. மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட செய்தியோ இடம்பெற வில்லை. இந்த நடுநிலை செல்வி. ஜெயலலிதா முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட செய்தி தணிக்கை செய்யப்பட்டு ஸ்டாலின் மூன்று நாட்களுக்கு வாக்காளருக்கு நன்றி சொல்லப் புறப்பட்டிருக்கம் செய்தி தொடர்ந்து கொண்டிருக் கின்றது.
இந்த முன்னுரையுடன் புத்தக விமர்சனங்களும் இணையத்தளங் களின் நடுவுநிலையும் பற்றிய எனது கட்டுரையை முன் வைக்கலாம் என நினைக்கின்றேன்.
நல்ல விமர்சனம் என்றால் எழுத் தாளன் பார்க்காத வேறு ஒரு தளத் தில் அல்லது கோணத்தில் இருந்து அவனின் படைப்பை பார்க்கும் திறமையும், அதனின்றும் சில உணி மைகளையும் வெளிக் கொணரும் ஆற்றலும், ஒரு எழுத் தாளனின் படைப்பை எதிர்காலத்தில் புடம் போடும் வல்லமையும் உள்ள னவையே நல்ல விமர்சனங்கள் என வரைவிலக்கணங்கள் கூறுகின்றன.
ஒரு படைப்பின் கரு, அமைப்பு, சொற்கள் - வாக்கியங்களின் அள வும் தேவையும், அழகியல், மொழி யியல்யு அரசியல் கோட்பாடுகள் - தத்துவங்கள் என பல்வேறுபட்ட பகுதிகளின் வாயிலாக அது விமர் சனப் பார்வைக்குள் உள்புகுத்தப்
மல்லிகை ஜூலை 2011 奉 24

படும் அழகியலை தம் விமர்சனப் பார்வையில் வைப்போர் முன்பு வந்த பிரபலமான படைப்புகளையும் அவை தரும் அனுபவங்களையும் அளவு கோலாகாக வைத்து மதிப்பீடு செய் வார்கள். இதில் சுந்தரராமசாமி, க.நா.சுப்பிரமணியன், வெங்கட்சாமி நாதன் ஆகியோர் முன்னிலையில் நின்கின்றனர்.
மார்க்சீச அடிப்படையில் தம் விமர்சனப் பார்வைகளை முன்வைத் தவர்கள் என வானமாமலை, கைலாசபதி, சிவத்தம்பி ஆகி யோரைக் குறிப்பிடலாம். மொழியி யலை அடிப்படையாக வைத்து நாகார்ஜனன், தமிழவன் ஆகியோர் பிரபலமானவார்கள். இந்த அடிப்படை கள் அல்லது இவ்வாறு பிரிவுகள் உள்ளன என்றே தெரியாமல் எத்தனையோ வாசகர்கள் தங்கள் நுகரும் திறனால் பல நல்ல விமர் சனங்களை முன்வைத்து வருகின் றார்கள். இருப்பினும் விமர்சனங்கள் பலவற்றில் பாராட்டும் பண்பு மட்டும் மேலோங்கியும், தவறுகளை சுட்டிக் காட்டும் தன்மை அறவே அற்றும் போகும் பொழுது ஒரு நூலை வேண்டி வாசிக்கச் செல்லும் வாச கன் சில சமயம் ஏமாற்றம் அடைவது மனத்துக்கு நெருடலான விடயமாக அமைவதுண்டு.
அவ்வாறாகவே இலக்கியச் செய்திகளை தாங்கிவரும் இணை யத்தளங்கள் சரி, பத்திரிகைகள் சரி
இந்த விமர்சனங்களுக்கும் வெளி யீட்டு விழாக்களுக்கு கொடுக்கும் முன்னுரிமை அல்லது புறக்கணிப்பு சில நல்ல படைப்புகளை வாசகரை சென்றடைய விடாமலும், தரம் குறைந்த படைப்புகளை வாசகர் களின் கையில் திணித்து விட்டுப் போகும் அபாயநிலை இன்று உண்டு.
பெருகி வரும் புத்தக வெளி யீடுகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் இல்லாவிட்டாலும் அதற்கு சற்றுக் குறைந்தளவாவது விமர் சனங்களை முன்னிலைப்படுத்தக் கூடிய ஒரு இணையத்தளம் எம்மிடத் தில் இல்லாதது ஒரு வறட்சியான நிலையே. இலக்கிய இணையத் தளங்களில் விமர்சனங்கள் இடம் பெற ஆசிரியர்களோ, பதிப்பகத் தினரோ குறைந்தது இரண்டு பிரதி களை அனுப்பும் பொழுது நாங்கள் அதன் விமர்சனத்தை பிரசுரிப்போம் என இணையத்தளங்கள் அறிவிப்புச் செயப்து கொணி டு இருக்கும் பொழுதும் அதனை இணையத்தளங் களுக்கு அனுப்பாமல் இருப்பது ஆசிரியர்களின், பதிப்பகத்தினரின் குறையாகும். அந்தக் குறையை ஆசிரியர்களும் பதிப்பகத்தினரும் தங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
அவ்வாறு ஒரு படைப்பு அனுப்பப் படும் பொழுது ஒரு இணையத்தளத் தின் அல்லது பத்திரிகையின் அரசியல்
மல்லிகை ஜூலை 2011 & 25

Page 15
நிலைப்பாடுகளுக்கு சார்பாக இல்லாத போதும் அதன் மீது நேர்மையான ஒரு விமர்சனத்தை வைக் கும் நேர்மைத் தன்மையை இன்றைய பத்திரிகை உலகமும் இணையத்தளங் களும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஒரு எழுத்தாளரின் மீது ஒரு பத்திரிகைக்கும் இணையத்தளங் களுக்கும் உள்ள நெருக்கம் அல்லது விளக்கம் எதுவும் இல்லாது ஒரு நடு நிலையான தன்மையை நாம் வளர்த் துக் கொள்ள வேண்டும். அதில்லை யாயின் நல்ல பல படைப்புகள் இருட்ணினுள்ளும் வியாபாரச் சந்தை யின் நெருக்கடியிலும் போட்டி போட வலுவில்லாமல் போகும் அபாயம் உண்டு. இதில் உங்கள் படைப்பு களும் அடங்கலாம்.
இதனை உணர்ந்து இலக்கியப் பணி செய்யும் இணையத்தளங்கள் செயற்பட வேண்டும் என்ற என் பணி வான வேண்டுகோளை முன் வைக் கின்றேன். இன்றைய சில இணையத் தளங்களில் வெளிவந்த விமர்சனங் களை வாசித்துவிட்டு அந்த நூல் களை வேண்டி வாசிக்கும் பொழுது வாசகர்களுக்கு ஏமாற்றம் ஏற்படும் ஆயின், எதிர்காலத்தில் இந்த தவறு சரி செய்யப்படுமாயினும் ‘ஓநாய் வருகிறது” என்ற ஒரு நம்பக மில்லாத தன்மையை வாசகர் களுக்கு ஏற்படுத்திவிடும். இந்த தவறை இனி மேல் செய்யாமல் இருப்போம் என நம்புவோமாக.
இந்தக் கட்டுரை எழுத்தாளர் களின் படைப்புகள் பற்றிய என் விமர் சனம் இல்லை - பதிலாக பத்திரிகை களின் இணையத்தளங்களின் நடுவு நிலை பற்றி என் விமர்சனம் என என் சக எழுத்தாளர்கள் விளங்கிக் கொள் வார்கள் என நினைக்கின்றேன்.
அ.தில்லையாயின், கலைஞர் ரீவி. மட்டும் பார்க்கும் என் நண்பன் ஒருவன் அண்மையில் நடந்த தேர் தலில் தி.மு.க. கழகம் அதிக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது என இன்றும் நம்பிக்கொண்டு இருப்பது போன்ற ஒரு நிலைதான் எம் படைப்பு களுக்கும் ஏற்படும்.
- நினைவு நல்லது வேண்டும் -
பத்தாண்டிச்சந்த செலுத்திறே
El-left:HII? C புதிய ஆண்டு MgDÖğledu L-51DD தயவு செய்து தமது சந்தாக்க ளைப் புதுப்பித்துக் கொள்ளவும். ○
மனந் திறந்து மல்லிகையுடன்
ஒத்துழையுங்கள். ஏனெனில்)ே
மல்லிகை உங்கள் ஒவ்வொருவ ரினதும் இலக்கியக் குரலாகும்.
அசட்டை செய்வோருக்கு
முன்னறிவித்தலின்றி இதழ்)ே நிறுத்தப்படும்.
sau CPD
மல்லிகை ஜூலை 2011 率 26
 

மீண்கும் வந்துவிடாதே!
நீ இல்லாத
நமதுவானத்தின் கீழ் -
இப்போநாம்
நிம்மதியாயிருக்கிறோம்!
மீண்டும்
சூரியக் கனவுகளோடும்
விடியல் பற்றிய - அwேலியூர் விளங்கா வேதங்களோடும் வந்துவிடாதே விேல்/தத்தல் பூச்சியத்தில் இருந்து
தொடங்கினாலும் - உன்
ராச்சியக் கனவு மட்டும்
இப்போ எம்மிடம் இல்லை
இனியாவது
நட்சத்திரங்களாய்
எம்மை வாழவிடு.
நாளும்/காளும் காமும்
நாளும் நாளும் வதைபடும் செய்திகளால் நிறைந்தபடி எம்உயிர்ப்பயணம் ஏதோ ஒன்று தொலைந்து போவதாய் தெரிந்தும் பல்லுத் தெரிய சிரித்தபடிநாம்
மல்லிகை ஜூலை 2011 சீ 27

Page 16
எங்கோ அழைத்துச் செல்லப்படும் எம் எதிர்காலம் முடிவு தெரியாக் கதையாக யாரோவாசிக்கும் எங்கள் வாழ்வு
நம்பிக்கையின் ஒவ்வொரு எழுத்துக்களும் நம்மை விட்டுப் போய்க்கொண்டிருக்க மாறிக் கொண்டிருக்கும் காட்சிகளும் விம்பங்களும் எமக்குத் தரப்படப்போகும் கண்ணாடி பற்றிய கனவுகளுடன் நொருங்கிப் போனபடிநாம்.
Utuariunaaj M uuanufaivaafiddy Uuafuti Ustaajuub
C5 சரிபார்த்துக் ணேத்தின் கொள்கிறேன் தரிப்பிடத்தில் என்னை நின்றபடி ஏதோ ஒன்றை மீண்டும் தொலைத்து விட்டாய் பயணிக்கும் ஓர் உணர்வு பாதை பற்றிய இப்போ புரிகிறது கனவுகளோடு எங்கேநான்
போக வேண்டுமென்பது.
மல்லிகை ஜூலை 2011 奉 28

தலித் இலக்கியல் காலாவதி ஆகிவிeடதா?
- சி.விமலன்
இது இலக்கியம்? எது இலக்கியமல்ல? என்று வரையறுப்பது கடினம். அவ்வாறு வரை யறுக்கவும் முடியாது. அந்த வகையில் ‘தலித்துகள் பற்றி தலித்துகளால் எழுதப்படுவது என ஆரம்பத்தில் தலித் இலக்கிய வரையறையை எளிதாகவே பலரும் புரிந்து கொண்டார் கள். ஆனாலும் இந்த வரையறையானது தன்னளவில் முழுமைத்துவம் பெறாத ஒன்றாகவே காணப்பட்டது. எல்லா இலக்கியமும் ஏதோவொரு கருத்தியல் தளத்திலேயே இயங்கு கின்றன. இதற்கு தலித் இலக்கியமும் விதிவிலக்கல்ல. எந்தவொரு படைப்பும் முதலில் இலக்கியமாக இருக்க வேண்டும். அதன் பின்னரே அது தலித் இலக்கியமா? மார்க்சிய இலக்கியமா? பெண்ணிய இலக்கியமா? என்ற வகைப்படுத்தலுக்குள் உள்ளடக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும். ஈழத்தில் முற்போக்கு இலக்கியம் முளைவிட்ட காலத்தில் “கலைச்செல்வி' சஞ்சிகையின் ஆசிரியரான சிற்பி அவர்கள், இலக்கியத்தினுள் முற்போக்கு என்பது அடங்குவதனால் முற்போக்கு இலக்கியம் என்ற வகைப்படுத்தல் தேவையற்ற ஒன்றே எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவில் தலித் இலக்கியம் தோன்றுவதற்கு முன்னதாகவே ஈழத்தில் இழிசனர் வழக்கில் டானியல் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை நாவலாகப் படைத்த காரணத் தினாலேயே தமிழகத்தில் டானியல் தலித் இலக்கிய முன்னோடியாக போற்றப்படுகின்றார். ஆனாலும் டாக்டர் எம்.வேதசகாயகுமார் போன்றவர்கள் “மார்க்சியச் சிந்தனைப் போக்கு கொண்ட டானியல் வர்க்க முரண்பாட்டுடன் சாதி முரண்பாட்டையும் கணக்கில் கொண் டுள்ளார். இதை தலித் படைப்பாக்கத்தின் முன்னோடியாகக் கொள்ள முடியாது” என்று கூறுகின்றார்.
தலித் எழுத்தாளரான உஞ்ஞை ராசன் தலித்துகளால் படைக்கப்படும் படைப்புக் களையே ‘தலித் இலக்கியம்’ என்றும், தலித் அல்லாதோரால் படைக்கப்படும் படைப்புக் களை‘தலித் ஆதரவு இலக்கியம் என்றும் வகைப்படுத்துகின்றார். ஆனாலும் தலித் அல்லா தோரால் படைக்கப்படும் தலித் இலக்கியங்கள் அனைத்தும் தலித் ஆதரவு இலக்கியம் தானா என்பதிலும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்படவே செய்கின்றன. ஏனென்றால் தமிழ் நாட்டில் கீழ்வெண்மணி என்ற இடத்தில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட விவசாயிகளின் படு கொலை தொடர்பாக இந்திரா பார்த்தசாரதியால் எழுதப்பட்ட 'குருதிப்புனல்நாவல் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினரால் வன்மையான கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. ஒரு படைப்பு நூறு வீதமும் உண்மைத் தன்மையுள்ளதாக இருக்க வேண்டிய அவசியம்
மல்லிகை ஜூலை 2011 * 29

Page 17
இல்லாத போதிலும் தலித் படைப்புகளின் அடிச்சடராய் விளங்குவது இயற் பண்பு வாதம் என்றால் அது மிகையில்லை. தலித் மக்கள் மத்தியிலே ஒரு எழுச்சியை உரு வாக்கும் நோக்கோடு படைக்கப்படுபவை
9.606.
'கணையாழி இதழ் ஒன்றில் வெளி வந்த கட்டுரையில் இமையம் கூறுகின்ற ஒரு விடயம் “தலித் இலக்கியம் படைப்பவர் கள் தலித்துகளின் வாழ்க்கையை எழுது கின்றோம் என்று சொன்னால் கூட ஏற்க முடியும். ஆனால் தலித்திய மனோபாவத் தில், தலித்தியப் பார்வையில் எழுதுகின் றோம் என்பதை ஏற்க இயலாது”என்கிறார். ஒரு தொழிற்சாலைப் பிரச்சினை பற்றி எழுதும்போது மார்க்சிய எழுத்தாளர்கள் அப்பிரச்சினையை மார்க்சியக் கண் கொண்டு பார்ப்பதைப் போலவே ஒடுக்கப் பட்டவர்களின் வாழ்க்கையினை தலித்திய எழுத்தாளர்கள் தம் உணர்வுடன் ஒன்று கலந்த தலித்திய பார்வையிலும், தலித்திய மனோபாவத்திலும் எழுதுவது தவிர்க்க முடி யாத ஒன்றே. ஆனால் தலித் அல்லாதோர் படைக்கும் தலித் படைப்புகளில் அவர்கள் தலித்தியப் பார்வையிலும், தலித்திய மனோபாவத்திலும் தாங்கள் இலக்கியம் படைத்துள்ளோம் என்று கூறுவதற்கு தலித் இன படைப்பாளிகள் எவ்வாறு பாத்திரவாளி களாக முடியும்?
1990களுக்கு முன்னதாக ராஜ்கெளத மன் மார்க்சிய விமர்சகராகவும், ரவிக்குமார், இந்திரன் போன்றோர் மார்க்சியச் சிந்தனை யாளராகவும், கலை விமர்சகர்களாகவும் கருதப்பட்டனர். ஆனால் 1990களில் முனைப்புப் பெற்ற தலித் இலக்கியத்தின் வாயிலாக இவர்கள் தலித்திய விமர்சகர்
களாகவும், தலித்தியச் சிந்தனையாளராக வும் ரஸவாதமாக்கப்பட்டிருந்தனர். உலக ளாவிய ரீதியிலான மார்க்சியத்தின் உடை வும், அதுவரை காலமும் தலித்திய முன் னோடிப் படைப்புகளாக தலையில் வைத் துக் கொண்டாடிய உயர் சாதியினரின் படைப்புகளை ஒதுக்கிவிட்டு தலித்துகளால் மாத்திரம் படைக்கப்பட்ட படைப்புகளில் முன்னோடிப் படைப்பை தெரிவு செய்து போற்றியமையும் இலக்கியத்தில் காலாதி காலமாக கோலோச்சிக் கொண்டிருந்த உயர்சாதி எழுத்தாளர்களுக்கு உவப்பான தாக இருந்திருக்காது என்ற கூற்றிலும் உண்மை இல்லாமல் இல்லை. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 80களில் வெளிவந்த இந்திரா பார்த்தசாரதியின் 'நந்தன் கதை' முதல் தலித் நாடகமாகக் கொள்ளப்பட்டா லும் தமிழ் தலித் இலக்கியம் தோற்றம் பெற்ற பிறகு நந்தன் கதையை தலித் எழுத்தாளர்கள் ஒதுக்கியதாக அவரே ஒரு நேர்காணலில் கூறியதை குறிப்பிட்டுச் Gersososomb.
இமையம் கூறுகின்ற இன்னொரு விடயம் “பிற இனத்தவர்கள் தாங்கள் தலித் ஆதரவு இலக்கியம் படைப்போம் என்பது வேடிக்கையானது. எப்படி உங்களுடைய வாழ்வை பிறர் வாழ முடியாதோ, எப்படி 2äis(ST56oLu sT6o6 Spsi sTes (pg யாதோ அதே மாதிரித்தான் தலித்து களுடைய வாழ்வை பிறர் வாழவும் முடி யாது, எழுதவும் முடியாது” என்பது இமை யத்தின் இந்தக் கருத்தோடும் என்னால் உடன்பட்டுக்கொள்ள முடியவில்லை. இதற்கு அவர் எழுதிய நூல் ஒன்றினை வைத்தே விளக்கலாம். இமையம் எழுதிய முதல் நாவல் “கோவேறு கழுதைகள்' 1994 இல் வெளிவந்தது. இந்நாவலில் சாதிய
மல்லிகை ஜூலை 2011 * 30

அடித்தளத்தில் உள்ள சலவைத் தொழி லாளிகளின் சமூக வாழ்வை ரத்தமும் சதையுமாக அவர் பதிவு செய்திருக்கிறார். வெளிவந்த காலத்திலேயே தமிழின் மிக முக்கிய நாவலாக கவனிப்பையும் பெற்றி ருந்தது. இந்நாவலுக்கு தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் சங்கப் பரிசு, அக்னி அறக்கட்டளைப் பரிசு, அமுதன் அடிகள் பரிசு என்பன கிடைத்ததோடு Manas நிறுவனம் இந்நாவலை ஆங்கிலத்தில் alongursasib Qstig Beats of Burden என்றும் வெளியிட்டிருந்தது. இவ்வளவு சிறப் பையும் பெற்றிருந்த கோவேறு கழுதைகள்’ நூல், விவசாயக் குடும்பத்தில் பிறந்த இமை யத்தால் எழுதப்பட்டிருந்ததை நினைத்துப் பார்க்கையில் இமையத்தின் பேச்சுக்கும் எழுத்துக்குமான முரண்வெளியாகவே அது எனக்குப் படுகிறது.
இஸங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படைப்புக்கள் நின்று நிலைக்காமல் போயுள்ள நிலையில் சாதியப் படிநிலையில் குறைந்தவர்களின் எழுச்சிக்காக தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்த பஞ்சமன்', 'பறையன்' ஆகிய இரு இதழ் களினது ஆயுளும் சொற்ப காலத்தில் முடி வடைந்தாலும் இன்றைய சமூக, அரசியல் தளத்தில் இருந்து நோக்குகின்ற பொழுது தலித் இலக்கியத்தின் வீச்சு இன்னமும் அதிகரிப்பதற்கான வாய்ப்பே உள்ளது. ஒருகாலத்தில் தலித் பிரிவினருக்கு எட்டாக் கனியாக இருந்த கல்வி வாய்ப்பு இன்று பெரும்பான்மையானோருக்கு சாத்தியமாகி உள்ளது. அவர்கள் கல்வி அறிவில் மேம் பட்டுவரும் நிலையில் அறிவார்ந்த கலாச் சாரப் பார்வையும், சூழலோடு தங்களுடைய அநுபவங்களைச் சேர்த்துப் பார்க்கின்ற
பார்வையும் விஸ்தீரணப் படலாம். 'பழை யன கழிதலும்', 'ஆனந்தாயி’ போன்ற நாவல்களை எழுதிய தலித் எழுத்தாளரான ப.சிவகாமி ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
தலித் அரசியல் பேசப்பட்ட பிறகு எழுதப்பட்ட ஒரேயொரு சுயசரிதை நூலாக விளங்குவது கே.ஏ.குணசேகரனின் "வடு’ ஆகும். தலித்திய தன்வரலாறு கூறும் நூல் களாக பாமாவின் “கருக்கு', ராஜ்கெளத மனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்’ என்பவை விளங்குகின்றன. மேற்கூறிய படைப்புகள் அனைத்தும் தலித் படைப்பாக மதிப்பிடப் படாமல் இருந்தால் இப்படைப்புகளுக்கான இலக்கிய மதிப்பமீடு என்ன என்றொரு கேள்வியும் கேட்கப்படுவதுண்டு. தமிழ் தலித் இலக்கியம் தோற்றம் பெறுவதற்கு முன்னதாகவே புதுமைப்பித்தனின் ‘புதிய நந்தன்', 'கடவுளின் பிரதிநிதி, கு.ப.ராவின் ‘பறச் செங்கான்', பிச்சமூர்த்தியின் ‘அடகு சிறுகதைகள் ஒடுக்கப்படும் மக்களின் வாழ்வை அனுதாபத்தை பெறும் வகையில் புறநிலையாகப் பதிவு செய்திருந்தன். இவை அனைத்தும் இலக்கியங்களாக அங்கீகரிக்கப்பட்டிருந்தன. அதுபோல தமிழ் தலித் இலக்கியம் தோற்றம் பெறாமல் எழுத்துலகில் தலித்துகளுக்கான இடம் வழங்கப்பட்டிருந்தால் தமிழ் தலித் எழுத் தாளர்களின் தரமான படைப்புகளும் இலக் கிய அந்தஸ்தினை பெற்றிருக்கக் கூடும். தமிழ் இலக்கியம் பிராமணர்களதும் வேளாளர்களதும் அதிகாரத்திற்கு உட்பட்டி ருக்கும் பொழுது தலித் இலக்கியத்தின் தோற்றுவாயைத் தவிர தமிழ் தலித் எழுத் தாளர்களுக்கு வேறு மாற்றீடாக எது இருக்க முடியும்?
மல்லிகை ஜூலை 2011 奉 31

Page 18
ங்கை
முரண்பாடு
- வேல் அமுதன்
"நாங்க, உங்களை இப்ப வந்து காணலாமா?” தொலைபேசியில் தெரிந்த குரல் அனுமதி கேட்டது.
“நீங்க ஆர்?" "நான் சோதி ஐயா. என்னோடுகூட எனது சம்பந்தி சாமியும் வர இருக்கிறார்.” “சரி. சரி வாங்கோவன். அப்படி என்ன சங்கதி?” “ஒரு விழா! எதுக்கும் வந்து நேரிலை சொல்லுறம்.” பேசியவரை எனக்குத் தெரியும். அவருடன் வரவிருப்பவரையும் தெரியும். ஐந்து வருடத்திற்கு முன், “விவாகம் செய்யலாம். பொருத்தம்” எனத் தெரிவிக்கப்பட்ட சாதகங்களை, சடங்கிற்கு நாள் குறிக்க சென்ற இன்னொரு இடத்தில் “பொருத்தமே இல்லை. செய்தால், ஆயுளுக்கே ஆபத்து” என எச்சரிக்கை செய்யப்பட்டமையால் குழப்பம் அடைந்து, ஆலோசனை கேட்க என்னிடம் வந்தவர்கள், இவர்கள். நான் சஞ்சலத்தின் தீர்வாக நான் குறிப்பிட்ட சோதிடர் ஒருவரின் முடிவை ஏற்றுக் கொள்ளலாம் என ஆலோசனை கூறி அவர்களை அவரிடம் அனுப்பியதன் பெறுபேறு இன்று சங்கடமோ? எனச் சந்தேகித்தேன்.
எல்லாம் சரியானால் மெளனம் சாதிப்பதும், சொட்டுப் பிழைத்தாலும் பொருத்து நர்மார் வாங்கிக் கட்டுவதும் வழமையாக இருப்பதால், சந்தேகம் பயத்தை - மன நடுக்கத்தை ஏற்படுத்தியது. அத்தோடு “விழா' என்ற சொல் சிலேடை என்பதால் எனது உள் மனத்துள் பீதி குடிகொண்டு விட்டது!
சோதியும் சாமியும் வந்தனர். ஒரு பார்சலை எனது மேசை மேல் வைத்தனர். "அவிட்டுப் பாருங்கோவன்?” என்றனர், இருவருமே.
எனக்கு நடிப்பு நல்லாக வரும். அதனால், மனநடுக்கத்தை மறைத்தேன். மளமள வென பார்சலை அவிழ்த்தேன். என்ன ஆச்சரியம்! ஒரு அதி பெறுமதி வாய்ந்த costullisi sidjirGuirair (Camera Mobile Phone).
“ஏன் இது?” எனக் கேட்டேன். “உங்கள் சரியான வழிகாட்டலுக்குச் சிறிய நினைவுப் பரிசு இது. மணமக்களின் இரண்டாம் பிள்ளையின் முதலாம் பிறந்தநாளைக் கொழும்பில் கொண்டாட U.K. இல் இருந்து பிள்ளைகள் வந்திருக்கிறார்கள்” என்றார் சோதி.
எனது மனம் மகிழ்வில் துள்ளிக் குதித்தது!
மல்லிகை ஜூலை 2011 奉 32

1 , உண்மையைச் சொல்லிவிடு
மெல்ல அசையும் தொங்குபாலமதில் நாங்கள் கரம் கோர்த்து நடந்த பொழுதுகளில்
நீ வெள்ளாளன் என்பதும் நான் அதுவல்ல என்பதும்
உனக்குத் தெரியாதா?
- க. தரணி
துள்ளி ஒடும் மாவலியின் கரைகளில்
நாங்கள் பரவசித்திருந்த பொழுதுகளில், நீ கத்தோலிக்கன் என்பதும் V நான் அதுவல்ல என்பதும் உனக்குத் தெரியாதா?
முங்கில் ஒரம் பற்றைகளின் மறைவில் நாங்கள் சல்லாபித்திருந்த பொழுதுகளில், Հ. உனக்குச் சீதனமாய்த் தர N எங்களிடம் வெள்ளவத்தையில் சொந்த வீடோ, V அது வாங்க வசதியோ இல்லையென்பது I W
உனக்குத் தெரியாதா?
உன் சாதகம் இப்போது 4. வேல் அமுதன் திருமண சேவையில் பத்து மில்லியன் பிரிவுக் கோப்பிலும் எண் பெயர் ஊராரின் / நடத்தை கெட்டோர்’ A பட்டியலிலும் இருப்பது
உனக்குத் தெரியாதா?
மல்லிகை ஜூலை 2011 奉 33

Page 19
2.
என்னை எதுவும் கேட்க வேண்டாம் என் அம்மா சொல்வது போலி
நான் வேண்டுமென்றே
எந்த எந்தவொரு ஆணின் முன்பும்
இளித்துக்கொண்டு நிற்பதில்லை என் முக அமைப்பு அப்படி நான் சும்மா நின்றாலே அவளுக்கு அது சிரிப்பது போலிருக்கும்
என் அண்ணன் சொல்வது போல் மாப்பிள்ளை பிடிக்க’ நான் பேஸ் புக்’ பயன் படுத்துவதில்லை என்னுடன் சட்' செய்யவந்து விட்டு என் வயதை
ஊரை
שנg%2//4
சமயத்தை
Jiraflous
நட்சத்திரத்தை தொலைபேசி இலக்கத்தை என் அங்கங்களின் பரிமாணங்களை மாதவிடாய் வரும் நாட்களை
a p a
எதுவும் கேட்க வேண்டாம்
இனியும் கேளாதீர்கள்! நீங்கள் கேட்டு நான் சொல்லாவிட்டால் தூஷனங்களால் என்னை ஏசாதிர்கள் நான் செய்வதெல்லாம் எனக்குப் பிடித்தவருக்கு வெறுமனே "லைக்' என்று குறிப்பிடுவதும் கருத்துக்கள் இடுவதும் மட்டும் தான் நீ. கிழவங்களுக்கு மட்டுந்தான்
கருத்துக்கள் போடுவியா வேசை’ என்று
இனியும் ஏசாதிர்கள்.
நான் செய்ததெல்லாம் எனக்குப் பிடித்தவற்றுக்கு கருத்துக்கள் போடுவது மட்டுந்தான்!
மல்லிகை ஜூலை 2011 率 34
 

அன்புமணியின் கருத்துகளிலே அர்த்தமுண்டு
- செல்லக்கண்ணு
முத்த எழுத்தாளர் அன்புமணி இலக்கியக் கூட்டம் நடத்துவோரே என்ற தலைப் பிட்டு, மிக அத்தியாவசியமானதொரு எழுத்துருவை, மல்லிகையின் 385ஆவது இதழில் தந்திருந்தார். இலக்கியக் கரிசனத்தோடு வாசித்தபோது மனதிலுாறிய சிந்தனைகளை வாசகரோடு பகிர்ந்து கொள்வது ஈழத்து இலக்கியத்துக்கு ஆதாயமாக இருக்குமென்ற காரணத்தால் இச்சிறு குறிப்பை எழுத விழைந்தேன்.
ஈழத்து இலக்கியத்துக்கு 1950கள் பொற்காலமென்பதை இலக்கிய ஆர்வலர்கள் மறுக்கார். இலக்கிய எழுத்துகள் அன்று நிறையக் குவிந்தன. எமது தொப்புள் கொடி உறவுகளான தமிழகத்தார் மூக்கில் விரலை வைத்து வியக்குமளவுக்கு ஈழத் தமிழிலக்கிய உலகில் கதைஞர்கள், கட்டுரையாளர்கள், கவிஞர்கள் பெருகினர். ஈழத்து இலக்கியத்தைச் செழுமைப்படுத்தினர். இதன் விளைச்சலாகக் குவிந்த ஆக்கங்களை இலக்கியவாதிகள் - தாலிக்கொடியை, சங்கிலியை, காப்பை விற்றும் நூலுருப்படுத்தினர். நூல் வெளியீட்டு விழாக்களும், விமர்சன அரங்குகளும் ஒகோவென அரங்கேறின. இந்தப் புத்தாயிரத்திலும் இதே போக்கு ஈழத்து இலக்கியத்துக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி யானதே! இருந்தும் அன்றைய எழுச்சிக்கு இன்றைய எழுச்சி ஈடுகொடுக்கமா? என்பது விசனத்தையே ஏற்படுத்துகின்றது.
இத்தகைய ஆழ்நிலையில் மூத்த எழுத்தாளர் அன்புமணி எமது இலக்கிய உலகின் நடவடிக்கையொன்றைச் சற்று ஆதங்கத்தோடு பார்த்துள்ளார். இக்காலகட்டத்தில் நடத்தப்படும் இலக்கியக் கூட்டங்களை அவதானித்து, அதன் ஏற்பாட்டாளர்களைச் சாடி நெறிப்படுத்த முனைகின்றார். நிகழ்த்தப்படும் உரைகள், சிறப்புப் பிரதிகள் வழங்கல் ஆகிய விடயங்களில் தனது அபிப்பிராயத்தை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு தமிழ்ச் சங்கம்; தேசிய கலை, இலக்கியப் பேரவை; இலங்கை முற்போக்குக் கலை, இலக்கிய மன்றம், தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), கம்பன் கழகம், புரவலர் புத்தகப் பூங்கா ஆகிய இலங்கையின் இலக்கியவாதிகளின் அபிமானத்தைப் பெற்ற கலை, இலக்கிய அமைப்புகள் இன்று இலங்கையில் கிரமமாக இலக்கியக் கூட்டங்களை நடத்துகின்றன. இவைகளது உழைப்புப் பாராட்டத்தக்கதே.
மல்லிகை ஜூலை 2011 35

Page 20
உரைகள் - வரவேற்பு, நன்றி, நயங் காணல், ஆய்வு, அறிமுகம், சிறப்பு ஆகிய தடங்களில் செய்யப்படுகின்றன. நூல் விமர்சன உரை 15 நிமிடங்களுள் அடங்க வேண்டுமென்கிறார், அன்புமணி. இன் றைய அவசர உலகை கருத்திற் கொண்டு அவர் அப்படிக் கூறினாலும், இதை ஏற்றுக் கொள்வது சற்றுச் சங்கடந்தான் சிறுகதை யொன்றைப் பற்றி விமர்சன, ஆய்வு, திறனாய்வு ரீதியில் உரை நிகழ்த்தக்கூட இந்தப் 15 நிமிடங்கள் போதாதே அந்த வகையில் பத்துச் சிறுகதைகளைக் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுப்பையோ, அல்லது நூறு பக்கங்களைக் கொண்ட நாவல் அல்லது கவிதை நூலையோ எப்படி நயப்புரை செய்வது? இக்கால எல்லைக்குள் நூல் அறிமுகத்தைக் கூடச் செய்ய முடியாதே
இவ்விடயத்தில் அன்புமணி சொல் லத்தக்க விடயமொன்றையும் சொல்ல மறந்துவிட்டார்! இன்றைய பெரும்பாலான இலக்கியப் பேச்சாளர்கள் - பேராசிரியர் கள், கலாநிதிகள் அடங்கலாக எழுதிக் கொண்டு வந்த பிரதிகளை மேடையில் வாசித்து விட்டுச் செல்கின்றனர். இவ் வினைப்பாடு நிச்சயமாகப் பேச்சுக் கலை யைத் தமிழர் மத்தியில் மெல்லச் சாகடிக்கு மென்பதை மறக்கக்கூடாது. தடம் பதித்த தமிழிலக்கிய பேச்சாளர்களான ரா. பி.சேதுப்பிள்ளை, சி.என்.அண்ணாதுரை, ம.பொ.சி., ப.ஜீவானந்தம், பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி, லெட்சுமணஐயர், எஸ்.பொன்னுத்துரை, இளங்கீரன், டொமினிக் ஜீவா ஆகியோர் தமது உரைகளை எழுதியா வாசித்தனர்? எனவே எமது மேடைப் பேச்சாளர்கள்
மேடையில் வாசிக்காது, பேசி இளைய சந்ததிக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும். தேவையாகில் குறிப்புகளை வைத்திருக்கலாம்.
வேறொரு விடயத்தையும் அன்புமணி சுட்டிக்காட்டாது விட்டுவிட்டார். இன்று எமக்குக் கிடைக்கும் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்களில் நீண்ட பெயர்ப் பட்டியல் காணப்படுகின்றது. சொல்லப் போனால் இலக்கிய ஆளுமைகள் சில இன்னமும் வாழ்கிறார்களென்பதை இவையே அறிவிப்புச் செய்கின்றன. ஈழத்து இலக்கியத்துக்கு ஏற்பட்டிருக்கும் துர்ப்பாக்கிய நிலையே இது அழைப் பிதழில் பிரசித்தப்படுத்தி ஒருவரை இலக் கிய நூலொன்றை வாங்க வைக்கும் நிலைக்கு ஈழத்து நூல் வெளியீட்டாளன் ஏன் தள்ளப்பட்டானென்பதைத் தமிழ்ச் சமூகம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இப் போக்கை இல்லாது செய்வதுக்கான நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு அடி அத்திவாரமாக அமைவது, எமது புத்தகச் சந்தையை ஆக்கிரமித் திருக்கும் தென்னிந்திய நூல்களின் ஆதிக்கமே. இது நிறுத்தப்படும் பட்சத்தில் எமது நூல்களைக் கூவி அழைத்து விலைப்படுத்தும் நிலை ஏற்படாது.
கெளரவப்படுத்தும் நோக்கில்தான் பிர முகர்கள், நூல்களை வழங்க அழைக்கப் படுகின்றனர். இதைச் சில்லறைத்தன மாகச் செய்யாது தக்க ஆளுமைகளை இனங்கண்டு செய்விப்பது உகந்ததாகும். இலக்கியமும் வளர உதவும். வெவ்வேறு பிரமுகர்களை அழைத்து பொன்னாடை, சான்றிதழ் போன்ற கெளரவங்களைச்
மல்லிகை ஜூலை 2011 奉 36

சிறப்பு ஆளுமைகளுக்குச் செய்விப்பது ஏற்பாட்டாளர்களின் பெருந்தன்மையையே உணர்த்தும்.
நூலின் விற்பனை பாதிக்கப்படக் கூடாதென்பதுக்காகவே வெளியீட்டு மற்றும் அறிமுக விழாக்களில் நூலிலுள்ள ஆக்கங்கள் பற்றி காட்டமாக ஆய்வு செய் யப்படுவதில்லை. நயப்புரையில் அது அடங்கக் கூடாதெனவும் ஏற்பாட்டாளர்கள் சுட்டுகின்றனர். ஆனால் அச்சு ஊடகங் களிலும் இதே போக்கிருப்பதை இன்று காண முடிகின்றது. நூல்கள் குறித்து எழுதுபவர்கள் அக்குவேறு ஆணி வேறாகத் திறன் காண்பதே தக்கதொரு
இலக்கிய எழுச்சிக்குபூபாளம் இசைக்கும்.
இடைக்கிடை ஆய்வரங்குகள் இதைச் செய்து வருவது பாராட்டத்தக்கதே.
* தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்) சிறுகதைகளைப் பல நிலைகளில் ஆய்வுக்குட்படுத்தித் தரங்கண்டு பரிசு வழங்கி வருவது இலக்கிய உலகுக் குத் தெரியாததல்ல பரிசு வழங்கும் விழாக்களில் இந்த அமைப்பு பரிசு பெற்ற சிறுகதைகள் பற்றிய நயப் புரையையும் சேர்க்கின்றது. இதைத் தவிர்ப்பது சிறந்தது. தடம் பதித்த இலக்கியவாதிகள், திறனாய்வாளர் களால் தேர்ந்த சிறுகதைகளை; மேடையில் பேசுவோர் மீண்டும் தரப் படுத்த முயல்கின்றனர். குறை காண் கின்றனர். இதற்குப் பதிலீடாக, இருபது நிமிடத்துக்கு மேற்படாத சிறப்புரை யொன்றையும் இவ்வமைப்பு ஏற்பாடு
செய்யலாம். புதுமைப்பித்தன், இலங்கையர்கோன் பற்றியதாக இந்த அல்லது இன்றைய நவீன சிறுகதை அல்லது நாவல் பற்றியதாகவும் இருக்கலாம். இதற்கு ஏற்பாடு செய்யப்படும் உரை ஞர்கள் இலக்கியக் கரிசனையுடைய பொறுப்பானவர்களாக இருக்க
உரை இருக்கலாம்.
வேண்டும்.
கூட்டத்தின் கால அளவை அன்பு மணி இரண்டு மணியாகக் கணித் திருப்பது மிகச் சரியானதே. மாலை 4 1/2 மணிக்குத் தொடங்கும் நிகழ்வு இரவு 7 மணிக்குள் நிறைவு பெற வேண்டும்.
எது எப்படி இருப்பினும் ஈழத்துத் தமிழ் இலக்கியம் எழுச்சி கொள்ள வேண்டுமென்ற நோக்கில் இலக்கிய ஆர்வலர்கள் ஏற்பாட்டாளர்களின் தவறுகளைச் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். கூட்ட மண்டபங்களில் குவிந்து, கூட்ட ஏற்பாட்டாளருக்கு உற்சாகத்தை ஏற்படுத்த வேண்டும். அத்தோடு கூட்ட ஏற்பாட்டாளர்கள் அன்புமணி போன்ற மூத்த இலக்கிய வாதிகளின் ஆலோசனைகளையும் கவனத்துக்கெடுத்து தமது பணியைச் செம்மைப்படுத்தி ஈழத்துத் தமிழ் இலக் கியத்தைச் செழிப்பாக்க வேண்டும். இது இன்றைய காலத்தின் முக்கிய மானதொரு தேவையென்பதை மறக் கக்கூடாது.
மல்லிகை ஜூலை 2011 * 37

Page 21
2eamamrje
இலக்கிய விழா - 2011
கிறுக ட்டுரைப் போட்
ஜனசங்கதய இலக்கிய விழாவை (2011) முன்னிட்டு திறந்த சிறுகதைப் போட்டி யொன்றையும் மாணவர் கட்டுரைப் போட்டியொன்றையும் நடாத்த முன்வந்துள்ளது.
மனித உரிமைகள் தொடர்பான பின்னணியைக் கொண்ட எந்தக் கருப்பொருளிலும் சிறுகதைகள் எழுதப்படலாம். மாணவர் கட்டுரைகள் பாடசாலைச் சூழல் மாணவர் களுக்கு மகிழ்ச்சியூட்டுவதாக அமைதல் வேண்டும்' என்ற தலைப்பில் நூறு சொற்களுக்குள் அடங்க வேண்டும்.
சுய விபரங்களை வேறொரு தாளில் எழுதி ஆக்கங்களுடன் இணைத்து அனுப்புவது முக்கியமாகும்.
தெரிவு செய்யப்படும் முதல் மூன்று சிறுகதை - கட்டுரைகளுக்கும் முறையே ரூபா 5000/= ரூபா 3000/= ரூபா 2000/= மும், மேலும் சிறந்த பத்து ஆக்கங்களுக்கு ரூபா 1000/= மும் வழங்கப்படுவதோடு, ஒவ்வொருவருக்கும் பெறுமதியான புத்தகப் பொதியொன்றும் பரிசளிக்கப்படும்.
சிறுகதை, கட்டுரைகள் யாவும் எதிர்வரும் 2011 ஆகஸ்ட் 15இற்கு முன் கிடைக்கக் கூடியதாகச் செயலாளர், ஜனசங்சதய, 81/2, ஆதர் வீதியெஸ் மாவத்தை, பாணந்துறை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், செப்பெடம்பர் மாதம் நடைபெறவுள்ள வருடாந்த புத்தகக் கண்காட்சியின் போது பரிசளிப்பு விழா இடம்பெறும்.
மேலதிக விபரங்களுக்கு 0382235191- 0716386955 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
இணைப்பாளர்
ஏற்பாட்டுக் குழு 81/2, ஆதர் வீதியெஸ் மாவத்தை, பாணந்துறை
மல்லிகை ஜூலை 2011 奉 38

த.அஜந்தகுமாரின ஒரு சோம்பேறியின் கடல்
அனுாைடீசில்வாவின் நாம் நண்பர்கள் தமிழில் - கலாநிதி மா.கருணாநிதி
- மேமன்கவி
த. அஜந்தகுமாரின் 'ஒரு சோம்பேறியின் கடல் - தன்னிலையான GLIm UmLLib
இன்றைய இளைய சமூகம் இது வரை கால வரையிலான எந்த நூற் றாண்டிலும் கன்டிராத, கண்டு இருக்க முடியாத பல நெருக்கடிகளைச் சந்தித துக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் எல்லா நூற்றாண்டுகளையும் போல எல்லா சமூக அசைவியக்கத் திற்கான உயிர் மூச்சாகவும், முக்கிய வளமாகவும் அத்தலைமுறையினரே இருந்நு வந்துள்ளார்கள். அதேவேளை இந்த நூற்றாண்டு இளைய சமூகம் வேறு எந்தவொரு நூற்றாண்டு இளைய சமூகமும் அனுபவிக்காத சமூக அசைவாக்கம் சார்ந்த மற்றும் அறிவியல் தொழில் நுட்பம் ரீதியான வசதிகளையும் வாய்ப்புகளையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது. அதனால்தான் இந்த சமூக அசைவாக்கம் சார்ந்த அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் எதிர்விளைவுகளையும், அதுசார்ந்த அனுபவங்களையும் இந்த நூற்றாண்டு இளைய சமூகம் எதிர்கொள்ளும் ஒரு நிலையும் தோற்றம் பெற்றுள்ளது. இந்த நிலையே இந்த இளையச் சமுகத்தை கடந்த நூற்றாண்டு இளைய சமூகத்திலிருந்து அவர் தம்மை பிரித்துக் காட்டும் முக்கிய ஒரு பண்பாக இருக்கிறது. இத்தகைய ஒரு பண்பின் கராணமாக இந்த யுகத்து இளைய சமூகம் ஒரு விதமான சலிப்பான மனோநிலைக்கும், தன்னிலை சிதைவுக்கும் ஆளாகி இருப்பதை நாம் பார்க்கிறோம். அத்தகைய அனுபவங்களின் வெளிப்
மல்லிகை ஜூலை 2011 * 39

Page 22
பாடாகவே இன்றைய இளைய தலை முறையினர் படைப்புலகம் வெளிக் கொணரப்படுகிறது. இந்த படைப்புலகம் அதிலும் இலக்கியப் படைப்புலகம் என்பது கவிதை வழியாகவே அதிக அளவில் வெளிப்படுகிறது. அத்தகைய கவிதைகளில் நாம் அந்த சலிப்பான மனோநிலையையும் தன்னிலை சிதை வையையும் காணக்கூடியதாக இருக் கிறது. இத்தகைய மனோநிலையில் நின்று, இந்த யுகத்தின் அதாவது நவீன யுகத்தின் ஆரம்ப கட்டத்தில் படைக்கப் பட்ட பொழுது, விமர்சனப் பார்வையில் அக்கவிதைகள் வெறுமனே தனிமனிதப் புலம்பலாகவே அடையாளப்படுத்தப்பட் டன. ஆனால் பின்வந்த காலகட்டத்தில் வாசிப்பின் அரசியலில் ஏற்பட்ட மாற்றங் களுக்குப் பின்னால் அத்தகைய கவிதை கள் மீள்வாசிப்புக்கு உட்படுத்தப்பட்ட பொழுது, அக்கவிதைப் படைப்புக்கள் வெறுமனே தனிமனித புலம்பல்களாக
ஏஞ்சி நிற்பவை அல்ல என்ற உண்மை
புரியத் தொடங்கியது எனலாம். அதற்கு மாறாக அக்கவிதைகள் இந்த யுகத்தின் புற யதார்த்தம் அக நிலையில் ஏற்படுத் திய மாற்றங்களை சித்திரிக்கின்ற படைப் புக்கள் என அடையாளப்படுத்தப்பட்டன.
த.அஜந்தகுமாரின் ‘ஒரு சோம்பேறி யின் கடல்' எனும்கவிதைத் தொகுப்பை
வாசித்துக் கொண்டிருந்த பொழுது
எழுந்த இச்சிந்தனைகள் பின்னணியில் அஜந்தகுமாரின் கவிதைகளை என் வாசகப் பார்வையில் நின்று பார்த்த பொழுது, அஜந்தகுமாரின் இக்கவிதை களின் முதல் வாசிப்புக்கள் ஒருவருக்கு அவரது கவிதைகள் தன்னிலை சிதைவு கள் பற்றி அதிகமாக பிரஸ்தாபிக்கவே படும். இன்னொரு வகையில் சொன்
னால் தனிமனித புலம்பல்களாக வெளிப் படுகின்றன என்றே படும். இதற்குக் காரணம் அவரது இத்தொகுப்பின் தலைப்பே முதற் காரணம் ஆகுகிறது. “ஒரு சோம்பேறியின் கடல்".
அடுத்து அவரது கவிதை வெளிப் பாடு அமைப்பு. எல்லா கவிதைகளும் தன்னிலை நிலை நின்று இரட்டை எதிர் நிலை அமைப்புடன் (Binary Model) எழுதப்பட்டுள்ளன. அதாவது அவரது “நான்”, “என்னோடு”, “நீ”, “உன்” என்ற மாதிரியான எதிர்நிலை அமைப்பு களுடன் பேசுகின்ற பொழுது வெளிப் படும் தனித்துப் பேசும் பாங்கு இன் னொரு காரணமாகுகிறது.
மூன்றாவது காரணம் அவர் பேசி இருக்கும் விடயங்கள் முதல் வாசிப்புக் காரருக்குக் கொடுக்கும் வியாக்கி யானம். அல்லது அர்த்தம்.
இத்தன்மைகளே அவரது கவிதை கள் தன்னிலை பதிவுகளாக அர்த்த மாகும் ஆபத்தினை எதிர் கொள் கின்றன. ஆனால் என் வாசிப்பு அஜந்த குமாரின் கவிதைகள் மீதான வேறுவித மான வாசிப்பை மேற்கொள்கின்றது. அவ்வாசிப்பின் தொகுப்பே அஜந்த குமாரின் கவிதைகளைப் பற்றி என் கருத்து நிலை.
இத்தொகுப்பின் முதல் கவிதைத் தலைப்பு கவிதை ‘ஒரு சோம்பேறியின் கடல'
அயராது உழைத்து கொண்டிருக் கும் கடலை சோம்பேறித்தனமாய் நோக்கி காதலித்துக் கொண்டிருக்கும் ஒரு இளைஞரின் குரல். அக்குரல் இவ ரது கவிதைகளின் முதல் வாசிப்புக்
மல்லிகை ஜூலை 2011 奉 40

காரருக்கு பலத்த ஆதாரம். ஆனால் அக்கவிதை வேறு விதமான கேள்வியை எழுப்புகிறது. அயராது உழைத்து, வான் அளவுக்கு கிளர்த்தெழுந்து பல்லாயிரம் உயிர்களை காவு கொண்ட (அன்று சிறிதுநேரம் பிறகு சோம்பேறியாய் அடங்கி கிடந்தது என்னவோ உண்மை தான்) கடலை சேம்பேறித்தனமாகப் பார்க்க வைத்த சமூக காரணி எது? இந்தக் கேள்விக்கான பதில் இத் தொகுப்பில் இரண்டாவதாக இடம்பெற் றுள்ள கவிதையில் கிடைத்து விடுகிறது. ஆனால் இக்கவிதைக்கான தலைப்பே முதல் வாசிப்புக்காரருக்கு இன்னொரு ஆதாரமாக இருக்கிறது. "சும்மா இருக் கிறேன்’ என்ற அத்தலைப்பு இயங்காத் தன்மையை இனங்காட்டுவதற்கு உதவு கிறது. ஆனால் அக்கவிதையின் இரண் டாவது பந்தி இப்படி பேசுகிறது.
எதிலும் நிழலின் தோற்றம் தவிர்க்க முடியாதபடி எழுதப்பட்டு விடுகிறது நிழலுக்கும் நிஜத்துக்குமான இடைவெளிச் சுருக்கம் ஏதோவொரு மாயையைச் சிருவுர்டித்து உண்மையைப் பதுக்கி வைத்திருக்கிறது.
இப்பொழுது புரிகிறதல்லவா அந்த இன்றைய யுக இளைஞனின் இயலா மைக்கான காரணம்?
அடுத்து அஜந்தகுமாரின் கவிதை களில் இடம்பெறும் தன்னிலைக்கும் எதிர்நிலையில் இருக்கும் முன்னிலை படர்க் கைகளான “நீ”, “உன்' “அவன்”, “அவர்கள்” என்பவர்கள் வெறுமனே தனி மனிதர்கள் அல்ல.
அந்தத் தன்னிலையை கடந்த புற யதார்த்தத்தில் நிலவும் சமூக அசை வாக்கத்தினுடாக வெளிப்படும் அதி காரத்தையும் மேலாண்மையையும் போலிமையையும் பிரிதிநிதித்துவப்படுத் தும் மனிதர்கள் அவர்கள். ஆனால் அவர்களுக்கு எதிரான, அவர்களை நோக்கிய ஒருவகையான தாக்குதல் களாக நாம் இத்தகைய படைப்புக்களை வாசிக்க வேண்டி இருக்கிறது. அந்த வாசிப்பே இத்தகைய படைப்புகள் வெறு மனே தனிமனித புலம்பல்கள் சார்ந்த படைப்புகள் அல்ல என்பதை நமக்கு அடையாளப்படுத்துகிறது. எனது இக் கூற்றுக்கு பலம் சேர்க்கும் வகையில் பல வரிகளை இத்தொகுப்பில் காணப் படும் பல கவிதைகளில் தேடிக்கொள்ள லாம். உதாரணமாக "விரம் குறித்த ஒரு கேள்விக் குரல்’ எனும் கவிதை யில் ‘என் கையில் துப்பாக்கி’ எனும் பொழுது, அக்கவிதைகளில் நடப்பது ஒரு போராட்டம் என நமக்குப் புரிகிறது. அத்தகைய போராட்டத்தின் கவிதை யாய் வெளிப்படுகிறது ‘உன் தவறும் என் சக்தியும்’ எனும் கவிதை. அக் கவிதை முழுதும் அஜந்தகுமாரின் கவிதையில் இயங்கும் தன்னிலையின் கருத்தியல் என்ன? அப்போராட்டத்திற் கான நோக்கம் என்ன? அந்தத் தன் னிலையின் இயக்கத்திற்கான காரணம் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு பதில் அக்கவிதை ஒன்றிலே ஒட்டு மொத்தமாக கிடைத்து விடுகிறது. வேறு வகையில் சொல்வதானால் முன் னிலைக்கு எதிரான பிரகடன அறிக்கை யாக (Manifesto) அக்கவிதை வெளிப் படுகிறது. அக்கவிதை இப்படி தொடங்கு கிறது
மல்லிகை ஜூலை 2011 & 41

Page 23
விரிந்த வியாபகம் கொண்டிருக்கும் இந்த விருட்சத்தின் கிளைகளை ஒவ்வொன்றாயோ ஒட்டு மொத்தமாகமாயோ கத்திரிப்பதிலேயே நீ கவனமாகியுள்ளாய் எனத் தொடங்கி
உனதெண்ணம் தவறென்று நீயுணரும் பொழுதொண்றை உன்னுள் போர்த்தும் வரை. நான் சலியாது சக்தி கொள்வேன் என நகர்ந்து
இனி நீ என்ன செய்ய போகிறாய்? இனி.நான் எதற்கும் நயார் எங்கே.உன் ஆயதத்தோடு வா பார்க்கலாம் என்ற இந்த இறுதி வரிகளே இக்கவிதை யினை அஜந்தகுமாரின் தன்னிலையின் பிரகடன கவிதையாக்குகிறது. மிஞ்சும் அத்தனை கவிதைகளும் அப்போராட்டத் தின் நகர்வுகள், விசாரங்கள், விசா ரணைகள்தான்.
இருள் மண்டிக் கிடக்கும் இந்த வீதி. என் பயணத்தின்போது மட்டும் புதுப்பிரகாசத்தை பொழிகிறது
(எனக்கான விசேஷட் ஒளிப்பரப்பு)
ஊழித்தாண்டவனாய் எனக்குள் ஒருவன் சுற்றிச் சுற்றி என்னை ஆட்டியபடி.
(என்னிலிருந்து வெளியேறும் ஒருவன்)
அஜந்தகுமாரின் தன்னிலை சோம் பேறித்தனமாக ஆரம்பிக்கிறது. தனது
போராட்டப் பயணத்தை, அவ்வாறான சோம்பேறித்தனத்திற்கான காரணத்தை நான் முன்பு கண்டறிந்த வழியாக, ஆனால் அதற்கு பிறகான நகர்வில் அச்சோம்பேறித்தனம் போராட்ட குணம் பெறுகிறது. இறுதியில் தன்னிலைக்கு சோம்பேறித்தனமான தெரிந்த கடல், ஆர்ப்பரிக்கும் கடலாக இத்தொகுப்பின் கடைசி கவிதை (ஆர்ப்பரிக்கும் என் கடல) மாறுகிறது. இத்தொகுப்பின் ஆரம்பத்தில் ஒரு சோம்பேறியின் கடல் என அந்த தன்னிலையால் ஓர் அந்நியத் தன்மையுடன் அதாவது சோம்பேறியின் என சொல்லும் பாங்கிலிருந்து ஆர்ப் பரிக்கும் என் கடல் என அன்னியோன் னியமாக சொல்ல முடிகிறது. இதுவே அஜந்தகுமாரின் கவிதைகளில் நடந் தேறும் போராட்டத்தின் வெற்றியின் வெளிப்பாடு ஆகுகிறது.
2. அனுலா டீசில்வாவின் நாம் நண்பர்கள் (அபியாலுவா) தேசத்திற்குத் தேவையான
தருணம்
1983ஆம் ஆண்டு இந்த நாட்டின் நடந்தேறிய சிங்கள - தமிழ் இனக்கல வரம், இந்த நாட்டின் வரலாற்றில் ஒரு களங்கத்தை ஏற்படுத்தி விட்டது. இந்தக் கலவரத்திற்கு காரணமானவர்கள் இன வாத அரசியல் சக்திகள் என்பது உண்மையாயினும், அதனால் களங்கப் பட்டது என்னவோ சிங்கள இனம் என் பது ஒரு கசப்பான உண்மை. (அதே வேளை சிங்கள சமூகமும் அந்தக் கலவரத்தாலும், அந்த கலவரத்திற்கு
மல்லிகை ஜூலை 2011 * 42

பின்னான காலகட்டத்தில் உருவான போர்ச் சூழலினாலும் பாதிக்கப்பட்டது என்பதை விஷம சக்திகள் கண்டு கொள்ளவில்லை என்பது இங்கு குறிப் பிட வேண்டிய ஒன்று.)
அந்தக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் நான் மேலே கூறியது போல் இனவாத பிற்போக்கான சக்திகளே தவிர, முழு சிங்களச் சமூகம் அல்ல. அந்தக் கால கட்டத்திலும் சரி, பிற்காலத்திலும் சரி தமிழ் மக்கள் மீது கரிசனையும் நேச மும் கொண்ட தனிமனிதர்கள் சிங்களச் சமூகத்தில் இருந்தார்கள், இருக்கிறார் கள். ஆனாலும், அந்த இனவாத சக்தி கள் சிங்களவர்களுக்கு தமிழர்கள் எதி ரானவர்கள் என்றும், தமிழர்களுக்கு எதி ரானவர்கள் சிங்களவர்கள் என்ற மாதிரி
யான ஒரு வெகுசன மாயை உரு வாக்கி வந்துள்ளன. அத்தகைய மாயைக்கு எதிராக செயற்படுவதிலும் பெரும்பாலான ஊடக மற்றும் சமூக சக்திகள் செயற்படவில்லை. ஆனால் இரு சமூகத்தின் கலை இலக்கிய மட்டத் தில் இரு தரப்பினரின் வழியாக அந்த மாயையை உடைக்கும் வகையிலான ஆக்கங்கள் அக்காலட்டத்திலும், பிற் காலத்திலும் வெளிவரத் தொடங்கின. ஆனாலும் அத்தகைய மாயையை உடைக்கும் வகையிலான ஆக்கங்கள் பற்றிய அறிதல் என்பது பரஸ்பர நிலை யில் சாத்தியம் ஆகாமல் போனதற்கு மொழியறிவுத் தடை காரணமாக இருந் தது எனலாம்.
இவ்விடத்தில்தான் மொழிபெயர்ப் பாளர்களின் பங்களிப்பு மிகுந்த அத்தி யாவசியமான ஒன்றாக மாறியது. இரு மொழி தெரிந்த மொழிபெயர்ப்புத்துறை ஆற்றல் கொண்ட, அந்த மாயையை ஏற்றுக்கொள்ளாத தனிநபர்களின் முயற்சினால் இரு மொழிகளிலும் மேற் கொள்ளபட்ட மொழிபெயர்ப்பு முயற்சி ஆக்கங்கள், அந்த மாயையை உடைப் பதில் பெரும் பங்காற்றி வருகின்றன. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்பு முயற்சிகள் (50கள் தொடக்கம் அந்த விஷ வித்து விதைக் கப்பட்டிருப்பினும்) அந்த மாயையைக்கு எதிராக ஒரளவுக்கு பேசிய பொழுதும், அதிக அளவில் பரஸ்பர நிலையான கலாசார விழுமியங்களை பற்றிய அறி தலுக்கு வழிவகுத்தவைதான் அதிகம். ஆனால் சமகாலத்தில் நடந்தேறும் பரஸ்பர நிலையான மொழிபெயர்ப்பு முயற்சிகளில் முக்கியத்துவம் பெறுவது, அந்த மாயையை உடைக்கும் வகை
மல்லிகை ஜூலை 2011 奉 43

Page 24
யிலான சிந்தனைகள் முக்கியத்துவம் பெறுவது ஓர் ஆரோக்கியமான போக்கு எனலாம். இத்தன்மையே கடந்த காலத் தில் பரஸ்பர நிலையில் நடந்தேறிய மொழிபெயர்ப்பு முயற்சிலிருந்து சமகால மொழிபெயர்ப்பு முயற்சிகளைப் பிரித்துக் காட்டும் முக்கிய பண்பாக இருக்கிறது. அத்தகைய ஒரு படைப்பாக திகழ்கிறது அனுல டி.சில்வா அவர்கள் 2004இல் எழுதிய அபி யாலுவா எனும் நாவல். இதனை நாம் நண்பர்கள் எனும் தலைப் பில் கலாநிதி மா.கருணாநிதி அவர்கள் தமிழில் தந்துள்ளார்.
அனுல டி.சில்வா சிங்கள இலக்கி யத்துறையில் முக்கிய முன்னணி பெண் எழுத்தாளர். நாவல், சிறுகதை, சிறுவர் இலக்கியம், இளைஞர் இலக்கியம் எனப் பல்துறையில் தனது ஆளுமையை வெளிப்படுத்தி வருபவர்.
நாம் நண்பர்கள எனும் இந்த நாவல் கிராமம் சார்ந்த நகர் ஒன்றில் வாழும் சிங்கள சமூகத்து குடும்பம் ஒன் றில் பணியாற்றும் மலையகத் தோட் டத்தை சார்ந்த ஒரு சிறுமியும், அந்த குடும்பமும், அக் குடும்பம் வாழும் சூழலைச் சார்ந்த சிறுவர் சிறுமிகள் 83ஆம் ஆண்டுக் கலவரத்தை கொழும்பு நகரச் சூழலில் எதிர்கொண்ட அனுப வத்தைப் பற்றிப் பேசுகிறது.
குறிப்பாக அக்கலவரம் பிஞ்சு உள் ளங்களில் ஏற்படுத்திய அதிர்வை உணர்வை விசேடமாக பேசுகிறது என்று சொல்லாம். அந்த வகையில் அச்சூழ லில் அந்த பிஞ்சு உள்ளங்கள் அக்கல வரத்தினற்கான காரணத்தை, அவர் களைச் சுற்றி உள்ள பெரியவர்கள் எந்தக் கோணத்தில் பேசினாலும், அவர்
கள் எந்த விதமான சார்ப்பு நிலைக்கும் ஆளாகாமல், அவர் தமக்கான உல கினை தொந்தரவுபடுத்தும் ஒரு நிகழ் வாக அக்கலவரத்தை பார்த்தார்கள் என் பதுதான் உண்மை. இன்னொரு வகை யில் சொன்னால் அக்கலவரத்திற்கான அரசியல் பற்றிய பிரக்ஞையற்று ஒரு வகையான விபத்தாக அல்லது அழி வாக மட்டுமே பார்க்கிறார்கள். விபத்து, அழிவு ஏற்படுத்தும் பய உணர்ச்சிக்கு ஆளாகிறார்கள் தவிர, அரசியல் விசா ரத்தில் அவர்கள் இறங்குவதில்லை. இறங்குவகையில் அவர்கள் யோசிப்பது மில்லை என்பதை அழுத்தமாக இந்த நாவல் சொல்ல முயற்சிகிறது.
அதே நேரத்தில் இந்த நாவலில் இக்குறிப்பில் முன்னர் குறிப்பட்டது போல் 50கள் தொடக்கம் விதைக்கப் பட்ட பரஸ்பர நிலையில் தூவப்பட்ட இனத்துவேஷ விஷ வித்தின் காரண மாக மாயையின் செல்வாக்கு 83ஆம் கலவர நிகழ்வு வரை குறிப்பாக சிங்கள சமூகத்துப் பிஞ்சு நெஞ்சங்களில் இருந் தும் வந்துள்ளது என்பதையும் ஆசிரியர் காட்டித்தான் இருக்கிறார். இந்த நாவ லின் கதாநாயகியாக வரும் நீலா எனும் தமிழ்ச் சிறுமி பணியற்றும் குடும்பத்தினர் நகர் ஒன்றில் வாழும் காலத்தில் அவளை கல்வி கற்க அனுப்பும் சிங்கள தோட்ட பாடசாலையில் அச்சிறுமியுடன் பயிலும் ஒரிரு பிள்ளைகள் நடந்துக் கொள்ளும் விதத்தில் அன்றைய சிங்கள சமூகத்துப் பிஞ்சு உள்ளங்களில் அந்த மாயை செல்வாக்கினை செலுத்த முயற் சித்து இருக்கிறது என புரிகிறது.
அதேவேளை 83 இனக்கலவரம் நிகழ்வதற்கு மு னி னமான ஒரு
மல்லிகை ஜூலை 2011 & 44

தருணத்தில் அந்த சிங்கள குடுத்தினர் கொழும்பு வந்து குடியேறி, ஊரில் இருந்தபொழுது தமிழ் பிள்ளையை பாட சாலைக்கு அனுப்ப முடிந்த அவர் களால் கொழும்புக்கு வந்த பின் நீலாவை பாடாசாலைக்கு அனுப்ப முடிவதில்லை. அத்தோடு அக்குடும்ப அங்கத்தினர் இல்லாத வேளை, பன்னி ரண்டு வயது சிறுமியான நீலாவை தனியே வீட்டில் விட்டு போவதையிட்ட அக் குடும்ப தலைவியான சந்திரா அம்மாவுக்கு ஏற்படும் பயம் நீலா ஒரு தமிழ்ச் சிறுமியாக இருப்பது என்பதற் காக ஏற்படுகிறது. இந்தப் பயம் சந்திரா அம்மாவுக்கு ஏற்படுத்துவதற்கு அவள் பன்னிரண்டு வயதுச் சிறுமி என்பதற்காக மட்டுமே ஏற்படுகிறது என்றால் அதற் கான நியாயமான காரணம் இருக்கிறது. இன்றைய சமூகச் சூழலில் பெண் பிள்ளைகளுக்கான பாதுகாப்பின்மை என்பதாக இருக்கக் கூடும். ஆனால், அவள் ஒரு தமிழ்ச் சிறுமியாக இருப்பது என்றே விஷயமே அந்த பயம் ஏற்படு வதற்கான அழுத்தமான காரணமாக இருப்பதற்கான அரசியல் என்ன? என்ற ஒரு கேள்வி எழுகிறது. ஊரில் அந்தப் பெண்பிள்ளை தங்களுடன் இருந்த பொழுது அவள் தமிழ் சிறுமி என்ற பிரக்ஞை நகரில் குடியேற வந்தபின் (அப்பொழுது 83 கலவரம் நடந்திருக்க வில்லை என்பது இங்கு கவனிக்க வேண்டிய விடயம்) அத்தகைய உணர்வு ஏற்பட்ட காரணம் என்ன? என்ற ஒரு கேள்வியும் எழுகிறது. மேலும் ஊரில் இருந்தபொழுது சிங்கள மொழி பாடாசாலைக்கு அனுப்பப்படும் நீலா, நகரில் அவர்களுடன் நகரில்
குடியேறிய பின் அவளை கொழும்பில் ஒரு பாடசாலையில் சேர்ப்பதில் பிரச் சினை இருப்பதாக நாவலில் சொல்லப் படுகிறது. அது என்ன பிரச்சினை என சொல்லப்படவில்லை. அதனால் வீட்டுக் குள் பூட்டப்பட்டு ( Child labor ஆக) வீட்டு வேலை செய்வது என முடிவு செய்யப்படுகிறது.
அடுத்து இந்த நாவலில் வரும் இன்னொரு அம்சம் பெரும்பாலான தமிழ் பிள்ளைகள் சிங்கள மொழியிலே படிக்க அனுப்பப்படுவதாகக் காட்டப்படு கிறது. நீலா உட்பட இது இன்றைய நமது தேச யதார்த்தத்தில் சற்று இடறு கிறது. அதேவேளை அக்குடும்பத்தின் பிள்ளைகள் தமிழ் படிக்க விரும்பும் பொழுது அதனை தடுப்பதும் அவ்வீட் டின் பாட்டி. இதே பாட்டி பிறிதொரு சந்தர்ப்பத்தில் நீலா மற்றும் அவரது தமிழ் தோழியும் அவர்கள் தமிழாக இருப்பதன் காரணமாக சக மாணவி களால் தொல்லைப்படுத்தப்படுவதாக சொல்லப்படும் பொழுது பாட்டி நீலா விடம் உன் பெயர்தான் உன்னை தமிழ் எனக் காட்டுகிறது. அதனால் உன் பெயரை மாற்றினால் உன்னை யாரும் தமிழ் என்று சொல்லமாட்டார்கள் (அதாவது சிங்களச் சிறுமி என நினைப் பார்கள்) என்ற தொனியில் ஒரு கருத்தை சொலகிறாள்.
அடுத்து இந்த நாவலில் வரும் தமிழ் பிள்ளைகள் ரொம்பவும் குழப்படிக் கரார்கள். (தங்கம்மாவின் பிள்ளைகள் - கஜேந்திரன் சந்திரா, வதனா) அவர் களால்தான் தங்களின் பிள்ளைகள் கெட்டு போவதாகவும், சிங்களப்
மல்லிகை ஜூலை 2011 率 45

Page 25
பிள்ளைகளுடன் சேரும் பொழுதுதான் நல்ல பிள்ளைகளாக மாறுகிறார்கள் எனவும் சந்திரா அம்மாவின் கணவர் நினைப்பதாக காட்டப்படுகிறது.
இவ்வாறான இடத்தில் இந்ந நாவ லுக்கான நமது வாசிப்பு பல கேள்வி களையும் இடர்வுகளையும் சந்திக்கிறது. ஆனால் ஒன்று, இத்தகைய கேள்விகள் எழுப்புவதற்கான காரணமாக இருப்பது அந்த நாவலில் வரும் பெரியவர்களின் நடத்தைகள்தான் என்பது இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம்.
அத்தகைய நடத்தை அந்த நாவ லில் அந்த பிள்ளைகளிடம் இல்லை என்பதற்கு உச்சமான ஒரு உதாரண மாக ஒரு நிகழ்வு காட்டப்படுகிறது. கலவரத்தில் தாக்கப்பட்ட தங்கம்மாவின் வீட்டுக்குச் சென்று அதில் மிஞ்சி நிற்கும் பொருட்களை அப்பிள்ளைகள் சேகரிப் பது. சில்வா மாமி காப்பாற்றி ஒளித்து வைத்திருந்த அவர்களை பார்த்தது போன்றவற்றைச் சொல்லாம்.
ஆனாலும் அத்தகைய வளர்ந்த மனிதர்கள் மத்தியில் தமிழ் மக்கள் மீது மனிதாபிதானம் கொண்ட மக்களும் சிங் கள சமூத்தில் இருக்கிறார்கள் என்பதை இந்த நாவலில் ஆசிரியர் காட்டத் தவற வில்லை. கலவரத்தில் யார்க்கும் தெரி யாமல் தங்கம்மா குடும்பத்தினரை காப் பாற்றி தன் வீட்டில் ஒளித்து வைத்த சில்வா மாமிகளும் இருக்கிறார்கள் என்பதை நாவல் நிரூபிக்கிறது சில்வா மாமி என்ற அப்பாத்திரத்தின் மூலம்!
ஆனாலும் இச்சிறப்புகளை சொல்ல வருவதே அதாவது எல்லா சமூக பிள்ளைகளின் அரசியல் நீக்கம் கொண்ட நடத்தை, LDTLÓ) போன்ற சார்பு நிலையற்ற தன்மை (இதனை நாம் 83 கலவரத்திற்கான காரணத்தை பற்றி சில்வா மாமி பேசும் போது அந்த சார்பு நிலையற்ற தன்மை நாம் துல்லியமாக தெரிந்துக் கொள்ள லாம்.) மனிதாபிமானம் மிக்க நடத்தை ஆகியவற்றை சொல்ல முனையும் ஆசிரியர், நாம் மேலே குறிப்பிட்ட பெரியவர்களின் அந்த நடத்தைகளை மற்றும் மனோபாவத்தை சித்திரிக்கும் பொழுது, தேவைப்படும் கண்டன தன்மை, அவைகளை விமர்சிக்கின்ற தன்மை அற்ற நிலையில் சித்திரித்து செல்வது, அந்த நடத்தைகளை மனோ பாவங்களை அங்கீகரிப்பது போலான ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது. அல்லது அத்தன்மைமைகள் மூலப் பிரதியில் பேணப்பட்டு மொழிபெயர்ப்பு வழியான இடர்வுகளால் இழக்கப்பட்டு விட்டனவோ என்ற ஒரு கேள்வியும் எழுகிறது.
சில்வா
ஆனாலும் இந்த விமர்சன கருத்து களுக்கு அப்பாலும், அரசியல் உணர்வு நீக்கம் பெற்ற அந்த பிஞ்சு உள்ளங் களையும், சில்வா மாமி போன்ற மனித நேயம் மிக்கவர்களை அடையாளம் காட்டி இருக்கிறது என்ற வகையில் அனுல டி.சில்வா வின் நாம் நண்பர்கள் (அபி யாலுவா) எனும் இந்த நாவல் நம் நினைவில் நிற்கும் என்பது மறுப்ப தற்கில்லை.
மல்லிகை ஜூலை 2011 率 46

பளை, அந்த ஏ.9 பாதையிலிருந்து தெற்குப் புறமாக உள்ள அந்த விதி வழி சிறு தூரம் நடந்து சென்று, வலதுகைப் பக்கமாக இருபது மீற்றர் தூரம் நடந்துசென்றால், மாலாவின் வீடு வரும்.
மாலை நேரக் கருக்கலில் அந்த சிறிய குடிசையில் ஏற்றி வைத்த கைவிளக்கு சிறு தூரங்களுக்கு ஒளியினை பாய்ச்சிக் கொண்டிருந்தது.
வீட்டுக் கூரையைத் தாங்கி நிற்கும் மரக்கப்பில் ஆணி ஒன்று அறையப்பட்டி ருந்தது. அதில் ஒரு பட்டரி ரேடியோ தொங்கிக் கொண்டிருந்தது. அது ஒரளவு சத்தமாக பாடிக்கொண்டிருந்தது. சின்னதொரு இரைச்சலும் பாடலுடன் கலந்து வந்தது. பாடலைக் கேட்டு இரசித்தும், இரசிக்காததுமாக மாலாவின் மாமி!
மாமி, அந்தத் திண்ணைக் குந்திலிருந்து பெட்டி பொத்திக் கொண்டிருந்தாள். சர்மியும், சாளினியும் ஆனா, ஆவன்னா எழுதி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
நன்கு வார்ந்தெடுத்த ஒலைகளால் தட்டிளைத்து, அதை நன்கு குவித்து, ஈர்க்கு வைத்துக் கட்டினாள். மூலை கட்டப்பட்ட பெட்டியின் ஐந்து பக்கமும் ஒலைக் கீலங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அவை, பெட்டிப் பட்டத்தின் கீழ் விளிம்புகளில் வெட்டி ஒட்டப்பட்ட பட்டத்தாள் கீலங்கள் போல் தோற்ற மளித்தன.
அந்த ஒலைக் கீலங்களை ஒவ் வொன்றாக எடுத்து, பெட்டியில் உள்ள சதுர வடிவ அடையாளங்களின் ஒலை (C3)g. யின் ஒரு பக்கத்தின் ஊடாகச் சொருகி, அதன் எதிர் துவாரத்தின் ஊடாக - சமரபாகு சி. உதயகுமார் இழுத்துப் பொத்திக் கொண்டிருந்தாள். ---
அந்த நேரம், அன்றைய மதியச் சாப்பாடு தயாரிப்பதற்காக மாலா அடுப்படியில் இருந்துகொண்டு போராடினாள். ஒரு அந்தரம் அவசரம் தெரியாத அடுப்பு படக்கென்று எரியாதாம்!' என்று புறு புறுத்துக் கொண்டாள்.
இன்று விடிய வெள்ளென கடும் மழை. அவள் வேலை முடித்து வரும் போதும் கடும் மழை. நேற்று வாங்கி வைத்த காய்கறிகள் கொஞ்சம் மிச்சம் இருந்தன. அதை நினைத்து அவள் அரிசி, காய்கறிகள் வாங்காது வந்துவிட்டாள்.
மழையில் விறகெல்லாம் நனைந்திருந்தன. பக்கத்து வீடு சென்று பார்வதி ஆச்சியிடமிருந்தி இரண்டு பேணி அரிசி வாங்கி வந்திருந்தாள் மாலா. அந்த அரிசியும் நாளைக்குக் கொடுத்துவிட வேண்டும். அது பார்வதி ஆச்சி நாளைக்குக்
மல்லிகை ஜூலை 2011 & 47

Page 26
காய்ச்ச என்று வைத்த அரிசியில் ஒரு அந்த இரண்டு பேணி அரிசியும் மாலாவின் குடும்பம் ஒரு
கொஞ்சம்,
நேரம் வயிற்றைக் கழுவவே போது மானதாகும்.
மாலாவின் கணவர் அருண்! அவன் ஒரு ஆசிரியன். போன வருசம் குண்டு பட்டு இறந்து போனான். இன்று சர்மி, சாளினி எனும் இரண்டு பெண் பிள்ளைகளே அவளுக்குச் சொந்தமானவர்கள். மற்றது அவள் மாமி.
பிள்ளைகள் இரண்டும் அழகான பொம்மைக் குட்டிகள். பார்க்கவும், பிள்ளைகளின் பேச்சு மொழியைக் கேட்கவும் நல்ல ஆசையாக இருக்கும்.
சர்மி மூத்தவள். அவளுக்கு ஐந்து வயது. இரண்டாவதுக்கு மூன்று வயது. இவர்களுடன் அருணின் அம்மா. பிள்ளைகளைப் பாதுகாத்து வளர்த் தெடுப்பது மாலாவின் கடமை. அவளுக்கு ஒரு உதவியாக அவள் மாமி.
மாலா, இப்பவெல்லாம் சனி, ஞாயிறு தவிர்ந்த மற்றைய நாட்களில் பகல் பொழுதில் வீட்டில் நிற்பதில்லை. விடிய வெள்ளெனவே எழும்புவாள். அந்த நேரம் அவள் மாமி பெட்டி, பாய் இழைத்துக் கொண்டிருப்பாள். இவ ளும் தன் கடமைகளில் சுறுசுறுப்பாக இயங்குவாள்.
காலைச் சாப்பாடு தயாரிப்பாள். பிள்ளைகளைச் சுத்தம் செய்து, வெளிக் கிடுத்துவாள். வேலைக்குப் புறப்பட்டு
விடுவாள். ஒர் இயந்திரம் போல் தொழிற்படுவாள்.
மாமி பெட்டி பாய் இழைத்த வண்ணம், தன் பேரப்பிள்ளைகளிலும் கவனம் குவிப்பாள். சர்மியும், சாளினி யும் மண் சோறு கறி காய்ச்சி விளை யாடுவார்கள்.
மாலா கிளிநெச்சிக் கச்சேரியில் முகாமைத்துவ உதவியாளராக கடமை பார்க்கிறாள். அங்கு வேலை முடித்து மாலை ஆறுமணிக்குத்தான் தன் வீடு வந்து சேருவாள். அதன் பிறகுதான் அவள் மதியச் சாப்பாடு தயார் செய் இன்று கொஞ்சம் தாமதமாகவே வீடு வந்து
வாள். ஆனாலும் என்ன!
சேர்ந்துள்ளாள்.
குந்தியிருந்து அடுப்பு ஊதினாள். ஊ. ஊ.’ என்று ஊதினாள். முக்கி முனகிக்கொண்டு அடுப்பு சுவாலை யுடன் எரியத் தொடங்கியது. அது பெரும் சுவாலையுடன் எரியும் பிறகு படக்கென்று அணையும்!
அடுப்பு ஊதி, ஊதி களைச்சுப் போனாள். அவள் வியர்வைத் துளி களால் நனைந்திருப்பாள். அடுப்பை எரிய வைப்பதில் போராடி அலுத்துப் போனாள். 'இதென்ன பூழல் விறகு! எரியாதாம்!” என்று புறுபுறுத்தாள்.
பசி தாங்கமாட்டாமல் இளை யவள் அழுது வாங்கிப் போனாள். அந்த நேரம் மாலாவுக்கு, அழுகை அரையண்டமாக இருந்திருக்க வேண்டும். கும். கும். என்று இளை யவ ளின் முதுகினில்
மகளின்
கும் மிக்
மல்லிகை ஜூலை 2011 率 48

கொண்டாள். பிள்ளை சுழண்டு போனாள். பிள்ளைக்குப் பயத்தில் சலமும் போனது. கொஞ்ச நேரம் அழுது வாங்கி, களைத்த பிறகு தூங்கி விட்டாள்.
இப்ப பிள்ளைகள் இருவரும் நித்திரை கொள்கின்றனர். பிள்ளைக்கு அடித்த அடியும், நோவினால் பிள்ளை துடித்த துடிப்பும் மாலாவின் கண்களில் வந்து நிறைந்து கொண்டன. அவள் கண்கள் கலங்கின. கண்ணிர் கன்னம் வழி வழிந்து பெரும் துளிகளாய் விழுந் தன. அத்தனையும் அவளின் மனச் சுமைகள். வலது பக்கப் புறங்கையால்
துடைத்துக் கொண்டாள்.
அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. இவள் நெஞ்சம் குமுறிக் கொண்டது. நினைவுகள் மீண்டுகொள்ள அவளுக்கு அழுகை வந்தது.
நாளை பகல் இடியுடன் கூடிய மழை வன்னி நிலப்பரப்பைத் தாக்கக் கூடும்!’ கரகரத்த ஒலியிலும் ரேடி யோவில் இருந்து வந்த இந்தச் செய்தி மாலாவை எச்சரிக்கை செய்தன.
இந்தச் செய்தியால் மாலாவின் மனம் உருக்குலைந்து போயிருந்தது. இப்ப வன்னியில், மழை என்றால் பயப் படும் ஓர் சூழல் உருவாகியிருந்தது.
முன்பென்றால் மழை என்றால் நல்ல விருப்பம். மழையில் நனையலாம். மழை நீர் குண்டும் குழியுமான ஒழுங்கை வீதி எங்கும் நிறைந்து நிற்கும். அப்பிடி யொரு மழை வெள்ளத்தைக கண்டால் போதும், அதில் இறங்கி துள்ளிக் குதித்து ஆடுவோம்! வெள்ள நீரை அள்ளி ஒரு
வருக்கொருவர் எறிந்து மகிழ்வோம்! மழை வெள்ளத்தில் இறங்கி விளையாடி னால் நீர்ச்சிரங்கு வரும். நித்திரை முழித்து கால்பாதம் சொறிவோம். உபத் திரம் தாங்க முடியவில்லையென்றால், எரியும் கைவிளக்கு நெருப்புச் சுவா லையை உள்பாதத்தில் மென்மையாகப் பிடிப்போம். அல்லது போனால் தணல் உள்ள அடுப்பின் மேல் காலை வைப் போம். அப்பிடி வைக்க ஆசையாகவும் இருக்கும். அது மட்டுமே! கடதாசியில் கப்பல் செய்து மழை வெள்ளத்தில் ஒட விடுவோம்! மழை வெள்ளம் நிற்கும் சில இடங்களில் காகங்கள் குளிக்கும். அதை நாங்கள் ரசித்துப் பார்ப்போம். அதில் இறங்கி உடல் முழுவதையும் நனைத்து விட்டு, பறந்து போய் மரங்களில் இருந்து கொண்டு உதறும். சிறகுகளுக்குள் ஒளிந்திருந்த மழை வெள்ள நீர்த்துளிகள் சிறு சிறு துமிகளாய் விசிறப்படும். மழையே மழையே மெத்தப் பெய்! மண் னில் வெள்ளம் நிறையப் பெய்! பாட சாலை முடிகிற நேரம் மழை வந்தால், மழை போ! வெயில் வா! மழை போ! வெயில் வா! என்று பாட்டெல்லாம் பாடு வோம்! இப்படியாக அந்தக்கால மழை பற்றிய ஞாபகங்கள் மாலாவின் நினைவு களுக்குள் நுழைந்து ஒடிச் சென்றன. அவை என்றும் பசுமையான நினைவுகள்.
ஆனால், இப்ப அப்பிடி இல்லை. மழை என்றால் எல்லாரும் பயப்படுகிறார் கள். ஷெல் குண்டுகளிலும், விமானக் குண்டுகளிலும், களிலும் அகப்பட்டுப் பயந்து பழகிய மக்கள், இப்ப மழை என்றால் நல்லாவே
கடல் பீரங்கி வெடி
பயப்படுகிறார்கள்.
மழை வந்தால் வெள்ளம் வரும்!
மல்லிகை ஜூலை 2011 奉 49

Page 27
வெள்ளம் வந்தால் பாம்பு வரும்! கருந் தேள் வரும்! அவை மழை வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. மிதந்து வருபவை வீடுகளுக்குள் புகுந்து பதுங்குகின்றன.
ஷெல் வெடிபட்டும், விமானக் குண்டுகளுக்குள் அகப்பட்டும் தமிழன் உருக்குலைந்து செத்திருக்கிறான்! ஆனால், இப்ப பாம்பு கொத்தியும், தேள் கடித்தும் விசம் ஏறிச் சாகிறான். இவற் றையெல்லாம் நினைத்துப் பார்த்தவளின் உள்ளம் பதட்டம் அடைந்தது. இப்ப மழை வந்தாலும் சாவு வரும் என்று எல்லா மக்களும் பயப்படுகின்றனர். பெரியதொரு மூச்சு விட்டுக்கொண்டாள். அரிசி பொங்கி வழிகிறது. "கொழ. கொழ.’ என்ற சத்தம் மாலாவின் ஊஞ்சல் நினைவுகளை தடுத்து நிறுத் தின. கஞ்சி வடித்தாள். சில சோற் றவிழ்களும் விழுந்து கொண்டன. கஞ்சி வடித்து முடிந்ததும், அந்தச் சோற்றுப் பானையை ஒரு குலுக்குக் குலுக்கினாள். நீர் நீங்கிய வெந்த சோறு அசைந்து கொண்டது. சோற்றுப் பருக்கைகள் ஈச்சங்காய்க் கொட்டைகள் போல் அழ காய்த் தெரிந்தன. உலை மூடியினால் சோற்றுப் பானையை மூடிக்கொண்டாள். அன்றிரவு முழுவதும் கடுமையான மழை பெய்தது. பலத்த காற்றும் விசியது.
மழை வெள்ளம் வீட்டிற்குள் வருமள
வுக்கு இருந்தது. பிள்ளைகள் நல்ல நித்திரை கொண்டார்கள். மாலா நித்திரை யின்றி முழிப்பிருந்தாள். தேளும் வரும் என்ற பயம் அவளுக்கு! உள்ளம் பயத்தால் ஏதோ ஏதோ
பாம்பும்,
வெல்லாம் நினைத்துக் கொண்டது. அத்தனையும் பய நினைவுகள்.
குந்தியிருந்து நித்திரை முழிப்பிருந் தாள். தூக்கம் வர கழுத்து சரிந்து விழுந் தது. திடுக்குற்று, திடுக்குற்று நிமிர்ந்து இருந்தாள். கண் முழிகளை மேலே கீழே என்று உருட்டி தூக்கத்தை வில்லங்க மாய்க் கலைத்தாள்.
மழை பெய்து ஓய்ந்திருந்தது. நித்திரை கண்களை உருட்டிக் கொண்டு வந்தது. ஒருவிதப் பயத்துடன் படுத் தாள். போர்வையை எடுத்துப் போர்த் துக் கொண்டாள். நித்திரை வந்தது. தூங்கி விட்டாள். மாமி இந்த நேரத் திலும் பாய் இழைத்துக் கொண்டி ருந்தாள்.
டொக். டொக். என்று மழைத் துளிகள் வீட்டுக் கூரையில் விழுந்து கொண்டன. வீட்டு அருகோரமாக நின்ற அந்தப் பூவரசு மரம் நனைந் திருந்தது. இலைகளில் தேங்கி நின்ற மழை நீர் வடிந்து ஒன்று சேர்ந்து குமுழ் களாக வந்து விழுந்தன.
காலை ஆறு மணி. மாலா கண் களைக் கசக்கிக் கொண்டு எழுந்தாள். இண்டைக்கு விறகுகள் எடுத்து கொட் டிலுக்கை போட வேண்டும். பார்வதி ஆச்சிக்கு அரிசி குடுக்க வேணும்' என்ற நினைவுகள் அன்று அதிகாலையே அவளை ஆக்கிரமித்தன. இளைய வளுக்கு முதுகில் கும் மினதையும் நினைத்தாள். அவள் மனம் துவண்டு போனது. இளைய வளைக் கொஞ் சினாள். ஒரு அருட்டுதல் அருட்டி விட்டு மற்றப் பக்கம் திரும்பி படுத்துக் கொண்டாள், சின்னவள்.
மாலா, விறகு எடுக்கவென்று பின் வளவுக் காணிக்குள் இறங்கி நடந்தாள்.
மல்லிகை ஜூலை 2011 & 50

விறுவிறுவென்று நடந்தாள். அடுத்த மழையும் வந்து விடும் போலிருந்தது. மேகம் இருட்டாகி இருந்தது.
பின் காணிக்கான ஒற்றையடிப் பாதை வழி நடந்தாள். வெள்ளத்தில் மிதந்து வரும் பாம்புகளும், கரும் தேள் களும் அவள் நினைவுகளில் ஒடிப் பயம்
செய்தன. அவதானமாக நடந்து போனாள்.
பனம் மட்டைகள், தென்னம்
மட்டைகள், காவோலைகள், கொக்காரை கள், கர்ய்ந்த தென்னம் பாளைகள் எல் லாம் விழுந்து கிடந்தன. அவை போராட் டத்தில் விழுந்த போர் வீரர்கள் போல் காட்சி தந்தன.
அள்ளி எடுத்து வந்து கொட்டிலுக் குள் சேர்த்தாள். அவை மலைபோல் குவிந்திருந்தன. முருங்கை மரம் முறிந்து விழுந்து விட்டது. கத்தியால் அலாக்கு கன்ள வெட்டினாள். அதில் ஆங்காங்கே காய்களும் இருந்தன. அதையும் எடுத்து ஒடித்து எடுத்துக் கொண்டாள்.
அலாக்குகளாக வெட்டிய முருங்கை மரத்தண்டுகளைத் தூக்கி ஒரு ஒரமாகக்
கொண்டு சென்றாள். வேலைக்குப் போகும் அவசரத்தில் பதட்டத்துடன் செயற்பட்டாள். அலாக்குகளை ஒன்று சேர்த்து அணைத்துக் கொண்டு காணி
யின் வேலியோரமாகக் கொண்டு சென்றாள்.
டமார்.’ என்ற பெரியதொரு
வெடிச்சத்தம், ஐயோ. அம்மா..!" என்று குரல் கொடுத்து அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தாள், மாலா. அவள் குரல் அனுங்கலாக ஒலம் செய்தது. ஈரமான நிலம் சிவப்பு நிறமாக மாறியிருந்தது.
இப்ப, வெள்ளத்தில மிதிவெடியும் மிதந்து வருகுதாம் பொடிச்சியள்! கவன மாய் கால் வைச்சு நடவுங்க பொடிச்சி யள்!’ என்று சொல்லிக் கொண்டு பதகளித்தபடி ஓடி வருகிறாள், பக்கத்து வீட்டு பார்வதி ஆச்சி. (இச்சிறுகதை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'உதயன்' பத்திரிகையின் வெள்ளி விழா பரிசுப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்ற கதையாகும்.)
மல்லிகை ஜூலை 2011 & 51

Page 28
எங்கள் பேனாக்கள்
ஏன் உறங்கிப் போயின?
- பிரகலாத ஆனந்த்
காலத்தின் கண்ணாடி எழுத்தாளன் என்பர். இந்த வகையில் ஊடகவியலாளனின் பங்கு இன்னொரு படி மேலானது. முப்பது வருட போர்க்கால வரலாற்றில் சில படைப் பாளிகளும், ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டார்கள். இனம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டதுடன், கொலையாளிகள் இனம் காணப்படாமலே போனதற்குமான பின்னணிகளை யாவரும் அறிவர். கொலை நடந்த இடம், முறை, பின்னர் எடுக்கப்பட்ட, எடுக்கப்படாத நடவடிக்கைகள் என்பவற்றிலிருந்து பொதுமக்கள் கொலையாளிகளை இனம் கண்டு விடுவார்கள். அதாவது கொலைக்குப் பின்னணியில் யார் அல்லது எந்த அமைப்பு அல்லது அரசியல் பின்னணி என்பதை கைவிரல் சூப்பும் குழந்தை கூட ஊகித்து விடும்.
இவ்வாறான கொலைகளைச் செய்தவர்கள் அல்லது செய்வித்தவர்களில் பல சந்தர்ப்பங்களில் ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்கள், படையினர் இருந்தனர். இன்னும் சில படுகொலைகளின் பின்னணியில் போராளிகளோ, ஆயுதக் குழுவினரோ இருந்தனர். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இவ்வாறான செயல்களில் ஈடுபடும் அனைவருமே பயங்கரவாதி கள்தான். ஆனால் எமது நாட்டில் பயங்கரவாதிகள் என்ற பதம் தீவிரவாத போராளிகளை மட்டுமே சுட்டி நிற்கும் நிலையை அதிகார பீடம் ஏற்படுத்தியுள்ளது. அதிகார பீடம் செய்யும் படுகொலைகள் பயங்கரவாதமல்ல என்ற மாயையும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
படுகொலைகளுக்கு அஞ்சி பல எழுத்தாளர்கள் பேனாக்களை மூடி வைத்திருந் தார்கள். சிலர் பட்டும் படாமலும் எழுதினர். இன்னும் சிலர் சற்று உரத்து எழுதினர். இவ்வாறு எழுதியவர்களில் சிலர் உண்மைகளைப் புட்டு வைத்தனர். இன்னும் சிலர் பக்கச் சார்பாக எழுதினர். காலவோட்டத்தின் ஊடகங்களும், ஆக்க இலக்கியங்களும் போரின் கொடூரங்களை வெளியுலகுக்கு கொண்டு வருவதில் வெற்றி கண்டன.
கடந்த முப்பது வருட ஈழத்து மற்றும் புலம்பெயர் ஆக்க இலக்கியங்களை மீட்டுப் பார்க்கும்போது அவை ஆற்றிய பங்களிப்பு மகத்தானவை என்பது புரிய வருகின்றது. கவிதையும், சிறுகதையும் இந்த வகையில் முன்நிற்கின்றன. நாவல்கள் போர்க் காலத்தை தரிசனமாக்கியதில் பின்நிற்கின்றன. எனினும் அவ்வப்போது சில நாவல்கள் வரத்தான்
மல்லிகை ஜூலை 2011 露 52

செய்தன. உறங்கிப் போயிருந்த பேனாக் களும் உரப்பாக எழுதியிருந்தால் இன்னும் பல போர்க்கால படைப்புகள் அறுவடையா யிருக்கும். சில எழுத்தாளர்களும் பலியாகி இருக்கக் கூடும்.
எழுத்தாளன் என்பவன் ஒரு சமூகப் போராளிதான். எனினும் அவனுக்கென்று ஒரு வயிறு, ஒரு குடும்பம் இருக்கிறது என் பதை நாம் மறந்துவிட முடியாது. ஒரு உயிரை பறிகொடுப்பது என்பது இலேசான காரியமல்ல. இன விடுதலைக்காக தம்மை ஒப்புக்கொடுத்த போராளிகளுக்கு உயிர் துச்சமாக இருக்கலாம். எழுத்தாளன் தியாகி அல்ல. இதனால்தான் போர்க் காலத்தில் பல பேனாக்கள் மூடியிருந்தன. இல்லாது விட்டால் அவர்களுக்கு எந்த நேரமும் எதுவும் நடந்திருக்கலாம். அவர் களை இரகசியமாக போட்டுத்தள்ளும்படி கட்டளையும் வந்திருக்கலாம்.
எழுதியவர்கள் கூட இதனால்தான் பல சந்தர்ப்பங்களில் பட்டும் படாமலும் எழுதினார்கள். கொடுர போர்க்கால வாழ் வினை உயிர்த்துடிப்புடன் உற்றுணர்ந்த போதும், அதை எழுத்தில் பிசகாமல் வடிக்க படைப்பாளிகளால் முடியாமற் போனது. இதனால் ஒரு படைப்பின் உயிர்ப்பே கேள்விக் குறியாகிப் போனது. போர்க்கால எழுத்தாளர்களுக்கு மெல்ல வும் முடியாமல், விழுங்கவும் முடியாத நிலையே இருந்தது. பேனா மை உலர முன்னதாகவே பேராபத்து அவர்களை அச்சுறுத்தினால் அவர்களால் என்ன செய்ய முடியும்?
யாரும் மரணத்தை வரமாகப் பெற்றுக் கொண்டு வாழ விரும்புகிறவர்களில்லை என்பது எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.
ஆபத்திலிருந்து மீண்டு, அமைதியின் கரையில் ஒதுங்கி வாழவே விரும்பு கிறார்கள். இதனால்தான் போர்க்கால படைப்புகள் மட்டுமன்றி, 1958, 77, 83 இனக்கலவரப் பதிவுகள் கூட போதியளவு ஈழத்து இலக்கியங்களில் பதிவாகவில்லை 6T60T shortlb.
அரசு சார்பு ஊடகங்கள் எப்போதுமே ஒரு பக்கமாகவே செயற்பட்டுக் கொண்டி ருந்தன. போராளிகள் தும்மினாலும் பெரி தாகப் பிரசாரம் செய்யும் அவை, அப்பாவித் தமிழர்கள் வகை தொகையின்றி ஆங் காங்கே படையினராலும், காடையர் களாலும் கொல்லப்பட்டபோது மெளனம் சாதித்தன அல்லது மறுப்புச் செய்தி களையே வெளியிட்டு வந்தன. அதிகார பீடத்தின் அதீத பிரச்சாரத்தை முறியடிக்க முடியாமல் பத்திரிகை மற்றும் ஊடகங் களுக்கு தணிக்கை பயன்படுத்தப்பட்டது. இதனால் ஆக்க இலக்கியங்கள் மூலமாக புனைவுகள் போலவே உண்மைகளை வெளிக்கொணர வேண்டிய நிலைப்பாடு இருந்தது. சில எழுத்தாளர்கள் சாதுரிய மாக தமது படைப்புகளில் இவற்றைப் பதி வாக்கினர். எனது சில போர்க்கால படைப்புகளிலும் இதையே என்னால் செய்ய முடிந்தது. முழு அனுபவங் களையும் இலக்கியமாக்க முடியவில்லை. ஈழத்தின் இனப்போர் பற்றிய முதலா வது சிறுகதையான எனது அலியன் யானை’ (1984) சிறுகதை ஊடாக, ஆக்கிர மிப்பாளரை ஒரு மதம் பிடித்த யானைக்கு உருவகப்படுத்தி, அதைச் சுட்டு வீழ்த்த முயலும் கிராம விவசாயிகளை போராளி களுக்கு உருவகப்படுத்தி எழுதினேன். பத்திரிகைகள் போர்க்காலச் சிறுகதை
மல்லிகை ஜூலை 2011 & 53

Page 29
களை வெளியிட முடியாத காலத்தில் எழு தப்பட்ட கதை இதுவாகும். இவ்வாறே குமுதினி படகு கொலைகள், வாகரைப் பிர தேச விவசாயிகளின் கொலை, எல்லைப் புற தமிழ் கிராமவாசிகளின் படுகொலை கள், வல்வெட்டித்துறை இளைஞர்களின் வாசிகசாலை கட்டட படுகொலை என்ப வற்றை பதிவாக்கும் கதைகளையும் எழுதி னேன். இவ்வாறே எனது சமகால எழுத் தாளர்கள் பலரும் போரின் கோர முகங் களைத் தமது படைப்புகளில் தரிசனமாக் கினர். போருக்குள்ளேயே வாழ்ந்த படைப் பாளிகளின் படைப்புகளில் இது வெகு துல்லியமாக வெளிப்பட்டன.
இவர்களில் பலரும் போருக்கு காரண மானவர்களையோ போரிடுபவர்களையோ விமர்சிக்காமல் விலகிக் கொண்டனர். இன் னும் சிலர் பக்கச் சார்பாக எழுதிய போதிலும், அதில் கூட வெளிப்படைத் தன்மையின்றி பட்டும் படாமலும் எழுதிய மையைக் காணமுடிந்தது.
1957இல் தமிழருக்கு சில உரிமை கள் வழங்கப்படுவதை விரும்பாதவர்கள் காடையர்களைத் தூண்டி இனக்கல வரத்தை ஏற்படுத்திய போதிலும், அதிகார பீடம் விரைவில் அதைக் கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வந்தது. மீண்டும் 1977இல் சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படு கொலை கலவரமாக வெடித்து அப்பாவித் தமிழர்கள் தலைநகர் கொழும்பிலும் பிற இடங்களிலும் கொல்லப்பட்ட போது அதி கார பீடம் மந்தகதியிலேயே நடவடிக்கை எடுத்தது. இனவெறியர்கள் காடைத்தனம் புரிந்தபோது அவர்கள் மீது துப்பாக்கிப் பிர யோகம் செய்து விரட்டாது கண்ணிர்ப் புகை யையே வீசியது. இனக்கலவரம் என்ற
போர்வையில் சிறுபான்மை இனத்தவரை திட்டமிட்டு படுகொலை செய்த 1983இன் கோர முகத்தினை யாருமே மறந்திருக்க மாட்டார்கள். நாட்டின் தலைவரே யுத்த பிரகடனம் செய்ததும், மக்கள் விடுதலை முன்னணியினரே படுகொலை செய்த தாகப் பிரசாரப் படுத்தியதையும் ஆயிரக் கனக்கில் தமிழர்கள் வெட்டியும், தீயிட் டும், உயிரோடு தீயிடப்பட்டும் கொல்லப் பட்டமையையும் யார்தான் மறப்பார்கள். இக்கலவரங்களின் அவலங்களை சில எழுத்தாளர்கள் தமது படைப்புகளில் பதிவு செய்துள்ளனர்.
1983இல் கொழும்பில் அதுவரை மக்கள் கண்டிராத அளவு குரூரமாக கல வரம் வெடித்தது. அதிகாரத்தில் இருந்தவர் களால் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட் டது. வழியிலும் தெருவிலும், வீடுகளிலும் அப்பாவித் தமிழர்கள் துரத்தித் துரத்திப் பிடிக்கப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டனர். திட்டமிட்டு தமிழர்களின் உடமைகள், உறையுள் யாவும் எரிக்கப்பட்டு அவர்களது பொருளாதாரத்தையும் சிதறடித்தனர். அரச படையினர், பொலிசார் பார்த்துக் கொண்டி ருக்கும் போதே தமிழர்கள் அடித்துக் கொல்லப்பட்டார்கள். குழந்தைகள், பெண் கள் என்று பேதமின்றி படுகொலை செய் யப்பட்டார்கள். நல்ல இதயம் கொண்ட சிங் களவர் கூட தமிழர்களுக்கு உதவி செய்ய முடியாத சூழ்நிலை இருந்தது. எனினும் சில சிங்களவர்கள் தமது தமிழ் நண்பர் களைக் காத்தனர். இந்தக் கலவரத்தின் பின்னர்தான் நாட்டில் நிரந்தர யுத்தம் வெடித்தது. அரசின் ஆக்கிரமிப்பும், அதற்கு எதிரான கொரில்லா யுத்தமும் வளர்ச்சியுற்று பெரு யுத்தமாக மாறியது.
மல்லிகை ஜூலை 2011 & 54

இந்த யுத்த வரலாறு பற்றிய ஆவண மாக பலரது படைப்புகள் தரிசனமான போதிலும் முழுமையான வரலாற்றைச் சொல்லும் படைப்பாக ஒரு நாவல் இனித் தான் வரவேண்டும். காலம் கடந்தாவது இது சாத்தியப்படுமா?
இன்றும் கூட மழை விட்டாலும் மேக மூட்டம் விலகவில்லை என்பது போல், யுத்தம் முடிவடைந்தும் அமைதியற்ற நிலையே காணப்படுகிறது. சிறுபான்மை யினரின் பிரதேச ஆக்கிரமிப்பானது அச் சுறுத்தலாக உள்ளதுடன், இனப்பிரச் சினைக்கான தீர்வும் எட்டிப் போவதால் சிறுபான்மையினர் நம்பிக்கை இல்லாதவர் களாக வாழும் நிலையே உள்ளது. இந்த நிலையில் எழுத்தாளர்கள் நிதானமாகவும், தூரநோக்குடனும் செயற்பட வேண்டிய வர்களாக இருக்க வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் போராளி களின் அஸ்தமனத்திற்கு பின்னர் சில எழுத்தாளர்கள் பச்சோந்திகளாக செயற்படு வதையும் காணமுடிகிறது. போராளிகள் இருந்தவரை அவர்களுக்குச் சாதகமாக எழுதிய சிலர் இப்போது தமது முகமூடியை விலக்கிக் கொண்டு போராளிகள் பற்றி
அவதூறாகவும், அவர்களது குறைகளைச் சுட்டியும் எழுதுகிறார்கள். போராளிகளே இல்லை என்று ஆகிவிட்ட பின்னர் இவ் விதமான எழுத்துக்களால் ஏது பயன்? தவி ரவும், இவ்வாறான எழுத்துக்கள் தவறான முடிவுகளுக்கும் வித்திடுமல்லவா? அதி லும் இவ்வாறான படைப்புகள் அண்டை நாட்டு இலக்கிய சஞ்சிகைகளில் எழுதப் படும் போது எமது போராட்டம் கொச்சைப் படுத்தப்படும் என்ற சிந்தனை சிறிதளவு தானுமின்றி இவர்கள் எழுதுவது வேத னைக்குரியது. இதைவிட மேல் முன்பு சிலர் செய்தது போல் தமது பேனாக்களை மூடி வைத்திருத்தலாகும்.
எழுதும் சுதந்திரம் ஒவ்வொரு எழுத் தாளனுக்கும் உண்டுதான். எனினும் எழுத் தின் சமூகப் பெறுமானம் பற்றியும் சிந் தித்து எழுத்தாளர்கள் செயற்பட வேண்டும். பழையவற்றையே பிரஸ்தாபித்துக் கொண் டிராமல் இனி என்ன செய்யலாம் என்று சிந்தித்தும் எழுதலாம். இது காலத்தின் தேவை.
பேனாக்கள் கூர்மையாக இருந்தால் மட்டும் போதாது. அவை எழுதும் தாளை குத்திக் கிழிக்காமலும் இருக்க வேண்டும்.
அவர்களினது ஞாபகார்த்தமாக எழுத்தாளர் பெரிய ஐங்கரன் ’கறுப்பு மழை என்றொரு
தனது தந்தை
பொன்னையா பெரியதம்பி
கவிதை நூலைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
மல்லிகை ஜூலை 2011 奉 55

Page 30
వీక్ష. స్టఫ్వక్లు, భుభణే ఇన్ని స్త్ర
K. Kiiranaaeian
eBBe S eBS SSeSe SB ZS Seee ee S ee e egg eeeeSeB Ze Seee eee0DDSS0SS ********* : శు:భః:: -
(?န္ဓမ္ဘီÁန္ဓာဲရီಟ್ವೇ? ప్రఖళీ _ggg.sు శరత్తి 9.0|
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் ஆண்டுதோறும் ஈழத்திலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற ஈழத்து தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம் தமிழியல் வித்தகர் பட்டமும் தமிழியல் விருதும் பொற்கிழியும் வழங்கிக் கெளரவித்து வருகின்றது.
இவ்வாண்டும் கார்த்திகை மாதத்தில் இவ்விருதுகளை வழங்குவதற்கு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் செயல் வடிவம் கொண்டுள்ளது.
உவர்தமிதிவல் விருது
இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மிகச் சிறந்த மூத்த படைப்பாளி ஒருவருக்க எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய ஸ்தாபகர் ஓ.கே.பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது வழங்கிக் கெளரவிக்கும்.
நமிதிவல் விருதும் தமிதிவல் வித்தகர் பட்டமூம்
தமிழிலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மூத்த படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் 5 பேருக்கு தமிழியல் வித்தகர்பட்டத்துடன் தலா ரூபா 15,000 பொற்கிழியும் வவுனியூர் முரீ இராமகிருஷ்ணா - கமலாநாயகி தமிழியல் விருது வழங்கிக் கெளரவிக்கும்.
மிகச் சிறந்த நூலுக்கான தமிதிவல் விருது
2010ஆம் ஆண்டில் வெளிவந்த மிகச் சிறந்த நூலொன்றுக்கு ரூபா 30,000 பொற்கிழியுடன் சுவாமி விபுலானந்த அடிகளார் தமிழியல் விருதும் வழங்கிக் கெளரவிக்கும்.
சிறந்த நூல்களுக்கானதசிதிவல் விருது
2010ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த 13 நூல்களுக்கு ரூபா 00,000 பொற்கிழியுடன்,
மல்லிகை ஜூலை 2011 & 56
 
 
 
 

புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை தமிழியல் விருது புலவர் ஆ.மு.ஷரிபுத்தீன் தமிழியல் விருது
கல்விமான் க.முத்துலிங்கம் தமிழியல் விருது
அருட்கலைவாரிதி சு.சண்முகவடிவேல் தமிழியல் விருது சிவநெறிப் புரவலர் சீ.ஏ.இராமஸ்சுவாமி தமிழியல் விருது நாவலாசிரியை பவள சுந்தரம்மா தமிழியல் விருது கலைஞர் ஓ.கே.கணபதிப்பிள்ளை தமிழியல் விருது பம்பைமடு நாகலிங்கம் - நல்லம்மா தமிழியல் விருது வனபிதா சந்திரா அடிகளார் தமிழியல் விருது
பதிவாளர்நாயகம் எஸ்.முத்துக்குமாரன் தமிழியல் விருது வித்தியாகீர்த்தி ந.சந்திரகுமார் தமிழியல் விருது செந்தமிழ்ச் செல்வர் சு.முரீகந்தராஜா தமிழியல் விருது
பம்பைமடு கந்தையா இரஞ்சிதமலர் தமிழியல் விருது வழங்கிக் கெளரவிக்கும்.
குறுந்திரைப்படத்திற்கான தமிதிவல் விருது
2010ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த 2 குறுந்திரைப்படங்களுக்கு தலா ரூபா 10,000 பொற்கிழியுடன்
கவிஞர் கல்லாறன் மு.கணபதிப்பிள்ளை தமிழியல் விருது
துறையூர் வே.நாகேந்திரன் தமிழியல் விருதும் வழங்கிக் கெளரவிக்கும்.
சிறப்த்தமிதிவல் விருது
மிகச் சிறந்த வெளியீட்டகம் / பதிப்பகம், நூல் வடிவமைப்பு / அட்டை
வடிவமைப்புக்கு தலா ரூபா 5,000 பொற்கிழியுடன்
புரவலர் ந.ஜெகதீசன் தமிழியல் விருது
புரவலர் எஸ்.சோலைமலைத்தேவர் தமிழியல்
விருதும் வழங்கிக் கெளரவிக்கும்.
ஓவிwருக்கான தமிதிவல் விருது
மிகச் சிறந்த ஒவியர் ஒருவருக்குத் தலா ரூபா 5,000 பொற்கிழியுடன் ஓவியர் கிக்கோ தமிழியல் விருது வழங்கிக் கெளரவிக்கும்.
அந்த வகையில் 2011ஆம் ஆண்டு தமிழியல் விருதுக்கான நூல்களையும், குறுந் திரைப்படங்களையும் தேர்வு செய்ய படைப்பாளிகளிடமிருந்து நூல்களையும், இறுவட்டுக்களையும் எதிர்பார்க்கிறது.
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற இலங்கையைத் தாயகமாகக் கொண்ட படைப்பாளிகள் 2010ஆம் ஆண்டு தை 01ம் திகதி முதல் மார்கழி 31ஆம் திகதி வரை வெளிவந்த நூல்களையும், குறுந்திரைப்பட இறுவட்டுக்களையும் தேர்வுக்காக அனுப்பி வைக்கலாம்.
(P(b படைப்பாளி எத்தனை வகையான படைப்புக்களையும் அனுப்பி வைக்கலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி : ஓ.கே.குணநாதன்
(3LD6umenir, எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, மட்டக்களப்பு, இலங்கை. தோலைபேசி இல. 0776041503
மல்லிகை ஜூலை 2011 & 57

Page 31
இருபாலை Fழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே
தனக்கென ஓரிடத்தைக் கொண்டிருப்பவர் இருபாலை சேனாதிராய முதலியார். இவர் QF 6) 60 6) FIT லியாரின் மைந்தர். (BerøTrøflyITLV நல்லைநாத முதலியாரின் மைந்த
தந்தையும் சிறந்த கல்விமான். அபார நினை வாற்றல் கொண்டவர். மகனும் அப்படியே.
முதலியாரின் இவர்களது ஞாபக சக்தி குறித்து ஒரு கதை
கூறப்படுகிறது.
வண்ணார்பண்னை சிவன்கோவில் ce diapsib6ff ஆதின கர்த்தாவாகிய வைத்திலிங்கச் செட்டி யார் மேல் வடதேசப் புலவரான செந்தில்கவி என்பவர் பிரபந்தம் பாடி அதை அரங்கேற்ற தந்துதவுவீர்களா? வெனக் கொண்டு வந்தார். பிரபந்தங்கள் கோலோச்சிய காலம் அது. ஒருவர் மீது பிரபந்தம் பாடினால் அவர் பொருமைக்குரிய - யோகேஸ்வரி dalgessTefib வராகக் கருதப்பட்டார். பிரபந்தம் பாடியவரும் அதில் அவர் காட்டும் திறமையைப்
பொறுத்துப் புகழப்பட்டார்.
பிரபந்தம் அரங்கேற்றப்படும் போது அறிவிற் சிறந்த சான்றோர் கொண்ட சபையில் அதை அரங்கேற்றுவது வழமை. செட்டியாரும் அத்தகைய அறிஞர் சபையைக் கூட்டுவதற் காக மற்றைய பிரபுக்கள், பண்டிதர்களுக்கு ஆளனுப்பும் போது சேனாதிராய முதலி யாருக்கும் ஆளனுப்பினார். அரங்கேற்றம் வண்ணார்பண்ணை சிவன் கோவிலில் நடை பெற்றது. இவர் அங்கு சென்றபோது, வடதேசப் புலவர் இவரைச் சிறிதும் மதியாது இறுமாப் போடு இருந்தனர். முதலியார் அதனைக் கவனித்தவாறு சென்று அவையில் அமர்ந்து கொண்டார். பிரபந்த அரங்கேற்றம் ஆரம்பமாகியது. அரங்கேற்றத்தில் பாடப்பட்ட பாடல்களை முதலியார் மனதில் பதித்துக்கொண்டார்.
அரங்கேற்றத்தின் முடிவில் செட்டியார், “முதலியாரே, பாடல்கள் எப்படி?” எனக் (385LLITff.
முதலியாரும் “பாடல்கள் நன்றாக அமைந்துள்ளன. சுவையாக உள்ளன. ஆனால் அத்தனையும் பழைய பாடல்களே’ என்றார்.
அவையோரும், செந்தில்கவியும் துணுக்குற்றனர். செந்தில்கவி முதலியாரைப் பார்த்து "ஐயா, எங்கள் பாடல்கள் பழையவை என்கிறீர்களே. எங்கே ஒரு பாடலைச்
சொல்லுங்கள் கேட்கலாம்” எனக் கேட்டார்.
மல்லிகை ஜூலை 2011 * 58

உடனே சேனாதிராய முதலியார் ”ஒரு பாடல் என்ன? முழுப்பாடல்களுமே எனக்கு மனப்பாடம். இதோ சொல்லு கிறேன். கேளுங்கள்’ எனக் கூறி பாடல் களைக் கூறத்தொடங்கினார்.
அதைக் கேட்ட செந்தில் கவியின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? எவ் வளவோ திறமையைக் கொட்டி சிறப்புற அவரே இயற்றிய பாடல்களை மற்றொரு வர் “பழைய பாடல்கள். வேறு யாரோ இயற்றியவை” எனக்கூறினால் எவ்வளவு வேதனையாக இருக்கும்? அதைவிட தேர்ந்த அறிஞர்கள் நிறைந்த சபையில் யாரோ எழுதிய பாடல்களைத் திருடி, தன தெனப் பாடியதாக 'திருடன் என்ற பட்டம் கிடைத்த வெட்கம் தலை குனிந்து கூனிக் குறுக வைத்தது.
கவிஞரின் நிலைகண்டு முதலியார் மனமிரங்கினார். உண்மையை அவர் அவைக்கு “இப்பாடல்கள் கவிஞரால் இயற்றப்பட்டனவே. அவர் அவற்றை அரங் கேற்றும் போதே நான் அவற்றை மனனஞ் செய்து இங்கு கூறினேன்?’ என அறிவித் தார். கவிஞரின் மனம் வெயிலில் வாடிய பயிர் மழை கண்டது போலாயிற்று. நான் முதலியாரை முன்னர் மதிக்கத் தவறி யதை மன்னிக்குமாறு அவர் வேண்டிக்
கொண்டார்.
இதனைப் பார்த்திருந்த செட்டியார், இரு தாம்பாளங்களில் பரிசுகள் கொணரு மாறு செய்வித்து ஒன்றைக் கவிஞருக்கும், மற்றொன்றை முதலியாருக்கும் அளித்து இருவரையும் கெளரவித்தார். முதலியார் அப்பரிசை மகிழ்ச்சியுடன் பெற்று, செந்தில்
கவியிடமே கையளித்தார். முதலில்
வேதனையிலும் அவமானத்திலும் தத் தளித்த கவிஞர், இப்போது இரட்டைப் பரிசில் பெற்று மகிழ்வில் மிதந்தார்.
இவ்வாறு அபார நினைவாற்றல் கொண்ட முதலியார் ஏக கந்தக் கிராகி எனப் போற்றப்பட்டு வந்ததாகக் கூறுவர். இவ்வாறே தந்தையார் நெல்லைநாத முதலியாரும் பாராட்டப்பட்டார்.
தந்தையினதும் மைந்தனதும் வர லாறு கூறும் அறிஞர்கள் வெவ்வேறு நூல் களில் எழுதிய மேற்குறித்த கதையைக் கோர்த்துத் திரட்டி சுவையூட்டி மேலே தந்துள்ளேன்.
வடதேசப் புலவரின் பாடல்களைக் கேட்டு மனனஞ் செய்து கூறியவர் நெல்லைநாத முதலியார் என்றும் சிலர் கூறியுள்ளனர். சேனாதிராய முதலியாரின் நல்லை வெண்பாவிற்கு உரையெழுதி வெளியிட்ட யாழ்ப்பாணத்துப் புலோலி வித்துவான் திரு. க.முருகேசபிள்ளைய வர்கள் அந்த நூலில் இவ்வாறே எழுதி யுள்ளார். ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகத்தில் சேனாதிராய முதலியார் பற்றி அவர் எழுதியதற்குக் குறிப்புரை எழுதும்பொழுது கலாநிதி. பொன் பூலோகசிங்கம் அவர்கள் இதுபற்றி எழுதியுள்ளதை இங்கு தருவது பொருத்த மாகவிருக்கும். அது வருமாறு,
சேனாதிராயரின் ஞாபக சக்தியை எடுத்துக்காட்டச் சதாசிவம்பிள்ளை கூறும் வடதேசப் புலவர் கதை ஆ.முத்துத்தம்பிப் பிள்ளையால் யாழ்ப்பாணச் சரித்திரத் திலும் (1912), க.வேலுப்பிள்ளையால் யாழ்ப்பாண வைபவ கெளமுதியிலும் (1918) நெல்லைநாதர் மீது ஏற்றிக்
மல்லிகை ஜூலை 2011 率 59

Page 32
கூறப்பட்டது. தமிழ்ப் புலவர் சரித்திரத்தில் (1916) இ.குமாரசாமிப் புலவர் முன்னர் சதாசிவம்பிள்ளை தந்த கூற்றினையே ஏற்றுச் சிலர் தந்தை மீது ஏற்றிக் கூறு வதையும் குறிப்பிட்டார். ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரித்திரத்தில் (1939) சி.கணேசை யர் நெல்லைநாதருக்கு உரியதாகவே கூறியுள்ளார்.
பொன்.பூலோகசிங்கம் அவர்களது இந்தக் குறிப்பிலிருந்து கதை தந்தைக்கும் மகனுக்குமாக மாறி மாறிக் கூறப்படு வதைக் கண்டுகொள்ளலாம்.
எப்படியிருப்பினும் இருவரும் சிறந்த நினைவாற்றல் கொண்டவர்கள் என்பது மட்டும் உண்மை. இந்த ஆற்றல் பற்றி இங்கு ஏன் கூறவருகிறேனென்றால் அந்த நினைவாற்றல் தமிழ் இலக்கியத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தியிருக்குமோ என்ற ஓர் ஐயப்பாடுதான்.
சேனாதிராய முதலியார் இயற்றிய நூல்களாக நல்லை வெண்பா, நல்லைத் திரியந்தாதி, நல்லைக் குறிஞ்சி, மாவைக் கந்தன் ஊஞ்சற் பதிகம், வேறும் சில ஊஞ்சற் பதிகங்கள், வண்ணை நீராவி விநாயகர் மீது கலிவெண்பா, மற்றும் பல தனிச் செய்யுட்கள் என்பன அறிஞர்களால் குறிப்பிடப்படுகின்றன.
இவற்றைத் தேடிச் சேர்க்க முற்பட்ட முற்குறித்த உரையுடனான நல்லை வெண்பா நூல் மிகுந்த கஷ்டப்
போது,
பட்டுப் பெறவேண்டிய ஒன்றாகக் கிடைத் தது. நீராவியடி வீரகத்தி வித்துவான் ந.சுப்பையாபிள்ளையின் உரையுடன் நீராவிப் பிள்ளையார் கலிவெண்பா வெளி யிடப்பட்டுள்ளது. கோப்பாய் கண்ணகை
யம்மன் திருவயூஞ்சல், அக்கோவில் கும்பா பிஷேக மலரில் வெளியாகியுள்ளது. நல் லூர் கந்தசுவாமி கோவில் என்னும் நூலில் குல.சபாநாதன் அவர்கள் தொகுத்துள்ள பாடல்களில் நல்லைக் கலிவெண்பாவும் ஊஞ்சற் பதிகமும் உள்ளன. ஏனையவை 6Tris(85?
மற்றவர்களது பாடல்களையே நினை வில் வைத்துக் கூறியவருக்கு தான் இயற் றிய பாடல்களை எழுதி வைக்க வேண்டிய அவசியமிருக்கவில்லையோ? அதனால் அவற்றை அறிந்திருந்த களினதும் அவரதும் மறைவுடன் அவை
LDT 60016uff
யும் மறைந்து விட்டனவோ? என்றொரு சந்தேகம் முளைவிட்டது.
அப்படியிருக்காது. எங்காவது பழமை பேணுவோர் கைகளில் அவை இருக்கக் கூடும். நூலகங்களில் பேணப்பட்டிருக்க ਲL(6u
லாம் என்ற
தோன்றியது.
எண்ணமும்
இருபாலை சேனாதிராய முதலி யாரின் ஆக்கங்களை ஒருங்கே தொகுத்து வெளியிடலாம் என்ற ஆர்வமொன்று ஏற்பட் டுள்ளது. இருக்கின்றனவாக மேலே குறித் தவை தவிர்த்த அவரது வேறு ஆக்கங் களை வைத்திருப்போர் அவற்றைத் தந்துதவினால் பேருதவியாகவிருக்கும். அவற்றை நிழற்பிரதி எடுத்துவிட்டு மீண்டும் தங்களிடமே ஒப்படைப்போம். தொடர்பு கொள்ள வேண்டி முகவரி, கோப்பாய் தெற்கு, கோப்பாய். தமிழுக்கு ஆற்றும் தொண்டாக இதைக் கருதி உதவுவீர்க ளென எதிர்பார்க்கிறேன்.
மல்லிகை ஜூலை 2011 $ 60

கங்காரு நாட்டு காகிதம்
உலகத்தில் இலகுவானதும்
56VULOT6jLOTE B)5ýli
- முருகபூபதி
உலகத்தில் எத்தனையோ வகையான தொழில்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் இலகுவான அல்லது சுலபமான தொழில் என்ன? என்று யாராவது உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்?
இந்த ஆக்கத்தை படித்து முடிக்க சில நிமிடங்கள் தேவைப்படலாம். அதற்குள் மேற்குறித்த கேள்விக்கான பதில் கிடைக்கவில்லையென்றால் சற்றுப் பொறுத்திருங்கள்.
கணவன் வேலைக்குப் போய்வருவான். வீட்டில் மனைவி குழந்தைகளை பராமரித்து உணவுபூட்டி, உடை மாற்றி பாடசாலை அனுப்பிவிட்டு சமையல் பாத்திரங்கள் யாவும் கழுவித் துடைத்து வீட்டை கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்து, கணவனதும் குழந்தை களினதும் தனதும் உடைகளைத் துவைத்து காயப்போட்டு காய்ந்த பின்னர் எடுத்து மடித்து வைத்து, பகல் உணவுக்கு ஏதும் சமைத்து, சமைக்க ஒன்றும் இல்லையென்றால் கடைத்தெருவுக்கோ சந்தைக்கோ சென்று காய்கறி மற்றும் பொருட்களை வாங்கிவந்து வீட்டில் அவற்றை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து, சமையலும் செய்து, பாடசாலை விட்டதும் குழந்தைகளை அழைத்து வந்து அல்லது அவர்களது வருகைக்காகக் காத்திருந்து, வந்ததும் உடை மாற்றி மாற்றுடை வழங்கி மதிய உணவுபூட்டி, தானும் உண்டுவிட்டு எஞ்சியுள்ள மாலை வேளையில் குழந்தைகளின் வீட்டுப் பாடத்திற்கு (Home Work) உதவியும் ஆலோசனையும் வழங்கி, வீட்டின் முற்றத்திலோ அல்லது பின்புறத்திலோ வளரும் பூங்கன்றுகளுக்குச் செடிகளுக்கு தண்ணிர் வார்த்து, குளியலறை, சமையலறை, படுக்கை அறைகளை துப்பரவு செய்து, மாலையானதும் குழந்தைகளுக்கு கோப்பியோ தேநீரோ தயாரித்துக் கொடுத்துவிட்டு சற்றுநேரம் ஒய்வாக அமர்ந்து தொலைக் காட்சியைப் பார்க்கலாம் என்றால், அதற்குள் வேலைக்குச் சென்றிருந்த கணவன் வீட்டுக்கு வந்துவிடுவான்.
வந்தவனுக்கு அடுத்த பணிவிடை ஆரம்பமாகி விடும். தேநீரைக் கொடுத்தால், கோப்பி இல்லையா என்பான். கோப்பியைக் கொடுத்தால் குளிர்பானம் இல்லையா? என்பான். குளிர்பானத்தைக் கொடுக்கப் போனால், "வேண்டாம். உடல் அசதியாக இருக் கிறது. கொஞ்சம் ட்றிங் (மதுபானம்) எடுத்துவிட்டு சாப்பிடுகிறேன்” என்பான். அதற்கும்
மல்லிகை ஜூலை 2011 & 61

Page 33
மனைவிதான் கண்ணாடித் தம்ளரை கழுவி எடுத்துக் கொடுக்க வேண்டும்.
இவ்வளவும் மனைவி பொறுமை யுடனும் நிதானத்துடனும் செய்ய வேண் டும். இரவு உணவு உண்ணும்போது 'கறி யில் உப்பில்லை, புளியில்லை, உறைப்பு காணாது. உனக்கு இன்னமும் சமைக்கத் தெரியாது. உருப்படமாட்டாய்” என்பான்
கணவன்.
பொறுமை இழக்கக்கூடிய மனைவி என்றால், “சரி. நீங்களே உங்களுக்கு சமைத்துக் கொள்ளலாமே..” என்று வெடுக்கென கேட்பாள், ஏனென்றால் அவனுக்கு தேநீர் தயாரிக்கவே தெரியாது என்ற தைரியத்தில்,
அவனுக்கும் அச்சமயம் மூட் நன் றாக இல்லையென்றால் கையை நீட்டப் பார்ப்பான். அவுஸ்திரேலியா போன்ற நாடு களில் யாரும் யாருக்கும் கைநீட்ட முடி யாது. சின்னச் சின்ன விடயங்களுக்கெல் லாம் தனது மனைவிக்கு கைநீட்டிக் கொண்டிருந்தான் ஒரு ஆசிய நாட்டவன். ஒருநாள் விடுமுறை நாளன்று வீட்டில் சில மாற்றங்களை கணவனும் மனைவியும் இணைந்து செய்ய நேர்ந்தது. மேசை, கதிரைகளை, கட்டில்களை வெவ்வேறு அறைகளுக்கு இடம்மாற்றி தூசு தட்டி வீட்டை துப்பரவு செய்ய நேர்ந்தது.
ஒரு அறையில் கட்டிலை தூக்கும் போது மனைவி உடனடியாகவே ஒரு முனையில் டக்கென தூக்கி விட்டாள். ஆனால் கணவனோ மறுமுனையில் தூக்குவதற்கு சில கணங்கள் சிரமப்
பட்டான்.
அந்தக் கணம்தான் அந்த மனைவி யின் பொன்னான நேரம்,
‘தொட்டதெற்கெல்லாம் கையை நீட்டிக்கொண்டு வருவீங்க. ஆனால் இந்தக் siņ6)6) pas6Tr6 g) --6Tņas (36) தூக்க முடியவில்லை பார்த்தீங்களா? உங்கட பலம் இவ்வளவுதான?’ என்று அவனது ஆண்மைக்கே சவால் விட்டாள்.
நிலைமைய சமாளிக்க கணவனும், "இந்தக் கட்டிலில் நான் எத்தனையை தயாரித்தேன் தெரியுமா? வெளியே விளை யாடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான்.
“சுமந்தது நான்தானே” என்று நிதான
மாக மனைவி சொன்னாள்.
இனி கலை இலக்கியம் ஊடகத் துக்கு வருவோம். அல்லது அவை சம்பந்த மான நிகழ்ச்சிக்கோ ஒன்றுகூடலுக்கோ வருவோம். எனக்கு இந்த விடயத்தில் எழுத்துலகத்திலும் சமூகப்பணிகளிலும் ஈடுபடத் தொடங்கிய 1970களில் இருந்தே அனுபவம் இருப்பதனால்தான் சொல் கிறேன். என்னைப் போன்று பலருக்கும் இந்த அனுபவம் வாழ்வோடு இணைந் திருக்கும்.
ஆக்க இலக்கியங்களான சிறுகதை, நாவல், கவிதை எழுதத் தெரியாதவர்கள், நாடகம், திரைப்படம், கூத்து உட்பட கலை நிகழ்வுகளை தயாரித்து இயக்கத் தெரி யாதவர்களுக்கு அவற்றை வாசிப்பதற்கும் ரசிப்பதற்கும் தெரிந்தவர்களுக்கு ஒரு தொழில் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அது இலகுவான சுலபமான தொழில்.
அது என்ன தொழில்?
மல்லிகை ஜூலை 2011 * 62

ஒரு ஓவியக் கண்காட்சியில் ஒரு ஒவி யத்திற்கு சிறந்த பரிசைக் கொடுத்துவிட் டார்கள், தெரிவுக் குழுவில் இடம்பெற்ற நடு வர்கள். அந்தக் கண்காட்சி நடந்த மண்ட பத்தின் பக்கம் வந்த செருப்புத் தைக்கும் தொழிலாளியான செங்கோடனும் கண் காட்சியை பார்க்க வந்தான். சிறந்த பரிசுக் குரியதாக தேர்வு பெற்ற பெண் ஒவியத்தில் அந்தப் பெண் அணிந்திருந்த பாதணியில் துல்லியமாகத் தெரிந்த தவறை அவன் சுட்டிக் காட்டினான். நடுவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு வழங்கிய புள்ளிகளை குறைத்தனர். தனது பேச்சுக்கு மரியாதை கிடைத்து விட்டதனால் புளகாங்கிதம் அடைந்த செங்கோடன் மேலும் மேலும் பல தவறுகளை குறிப்பிட்ட ஒவியத்தில் சுட்டிக்காட்டத் தொடங்கிவிட்டான்.
ஒவியக் கண்காட்சியில் நடுவர் தல்ை வர் தொழில் ரீதியாக ஒரு நீதிபதி. அவர் பொறுமை இழந்து சொன்னார், “செங் கோடா. செருப்போடு நில்.”
எனக்கும் தினக்குரல் பிரதம ஆசிரி யர் நண்பர் தனபாலசிங்கத்திற்கும் இந்தச் சுவாரஸ்யமான கதையை ஒருகாலத்தில் சொன்னவர் இப்போது இல்லை. அவர் தான் வீரகேசரியில் நீண்டகாலம் பணி யாற்றிய பிரபல பத்திரிகையாளர் தியாக ராஜா.
அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு முதல் கடந்த (2011) மே மாதம் வரையில் தொடர்ச்சியாக தமிழ் எழுத் தாளர் விழாக்களை தங்கு தடையின்றி (சவால்கள், இடையூறுகளுக்கு மத்தி யிலும்) நடத்தும் பணியில் இங்கு பலருடன் இணைந்திருக்கின்றேன். ஒவ்வொரு விழா
வுக்கும் பிரசன்னமாகும் சிலர், தமக்கே யுரித்த பாணியில், "அப்படி நடத்தலாம். இப்படி நடத்தலாம். மக்களைக் கவரு வதற்கு ஏற்றவாறு நிகழ்ச்சிகளை வடி வமைக்கலாம்” என்றெல்லாம் முட்டை யில் மயிர் பிடுங்கிக் கொண்டிருப்பார்கள்.
“சரி நீங்கள் சுட்டிக் காட்டும் தவறு களை ஏற்றுக்கொள்கின்றோம். அடுத்த விழாவில் உங்கள் ரசனைக்கு ஏற்றவாறு நிகழ்ச்சிகளை தயாரித்துத் தாருங்கள். நாம் மண்டபத்தில் கதிரை, மேசைகளை ஒழுங்கு செய்யும் பணிகளையும், சமை யலறையில் விழாவுக்கு வருகை தருபவர் களுக்கான மதிய உணவு, சிற்றுண்டி களை தயாரிக்கும் வேலைகளிலும் ஈடுபடு கின்றோம்” எனச் சொன்னால், 'அதற் கென்ன பார்ப்போம்” என்பார்கள். ஆனால் அடுத்த ஆண்டு விழா நடக்கும் மண்டபத் தின் பக்கமும் எட்டியும் பார்க்க மாட்டார் கள். காரணம் சொல்வதற்கு ஏதும் சாக்குப் போக்கு இருக்கும்.
இத்தகைய சாக்குப்போக்கு சுந்தரர் களையும், சுந்தரிகளையும் நான் அவுஸ்தி ரேலியாவில் மட்டுமல்ல கடந்த ஜனவரி யில் கொழும்பில் நாம் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலும் பார்த் தேன்.
மல்லிகை வாசகர்களே கண்டுபிடித்து விட்டீர்களா?
உலகத்தில் இலகுவான சுலபமான தொழில் என்ன?
அதற்கு ஒரு சொல்லில் பதில் இருக்கிறது.
விமர்சனம்.
மல்லிகை ஜூலை 2011 & 63

Page 34
த்தெ ர்த்தைகளு
soit B56b6ng foöp 6oi lL
O
ளின் வா
8585
鼎
வாழ்த்து
இ மல்லிகை ஜூலை 2011 奉 64
 

蠶
மல்லிகை ஜூலை 2011 奉 65

Page 35
சஞ்சிகைச் சாதனையாளர்
ஜீவாவை வாழ்த்துவோம்.
ஈழத்தமிழ் இலக்கியத்திற்கு உரமிட்டது மல்லிகை மாத இதழாய் மணம் பரப்பி மக்கள் மனதில் பதிந்த சஞ்சிகை ஆரோக்கியமான இலக்கிய இருப்பை ஸ்திரப்படுத்திக்கொண்டது ஐம்பதாவது ஆண்டை நோக்கி அரிய சாதனை படைக்கிறது. அயரா உழைப்பே மூலதனமென அடுத்த தலைமுறைக்கும் நடைமுறையால் விளக்கிடும் ஆசிரியர் டொமினிக் ஜீவா. அகவை எண்பத்தைந்தில் அகமகிழ வாழ்த்துவோம் நாமும்.
- வி.ரி.இளங்கோவன்
டொமினிக் ஜீவாவின் 85ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்கள்
- லெனின் மதிவானம்
ஈழத்து சஞ்சிகை வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக திகழ்கின்ற தோழர் டொமினிக் ஜீவாவின் 85ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு முச்சந்தி இலக்கிய வட்ட நண்பர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக மல்லிகை என்ற முற்போக்கு சஞ்சிகையை வெற்றிகரமாக நடத்தி வருவதுடன், முற்போக்கு மார்க்சிய உணர்வு கொண்ட பல தளிர்கள் கிளையாவதற்கும், வேர்கொள் வதற்கும் தூண்டுதலாக இருந்து வருபவர் டொமினிக் ஜீவா. எமது யாசிப்பு அவர் தொடர்ந்து இந்த மானுட அணி சார்ந்து காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதாகும்.
மல்லிகை ஜூலை 2011 & 66

வணக்கம் ஐயா!
ஈழத்தின் முதுபெரும் சொத்து திரு மல்லிகை ஜிவா ஐயா பற்றிய குறிப்பை வாசித்தேன். மீண்டும் அந்தக் கண்ணாடி போட்ட முகம் என்முன்னே வந்து நின்றது.
முன்னைய காலங்களில் அவர் தனது மல்லிகையை வீடு வீடாக கொண்டு சென்று விற்று வந்தவர். அப்படியாக எவற்கள் வீட்டுக்கு வந்தபொழுது அதனை எனது தந்தையார் வாங்கி வாசித்துவிட்டு, அதற்கு அடுத்தமுறை வரும்பொழுது இனி நீங்கள் இங்கு மல்லிகையை கொண்டு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு எதை எங்கு எடுக்கலாம் என்று கேட்டு, அதன்பின்னர் அது கிடைக்குமிடத்தில் போய் வாங்கி வந்து வாசித்தார். அவற்றையெல்லாம் ஒரு பொக்கிஷமாக அவர் சேகரித்து வைத்திருந்தார். பின்னைய காலங்களில் அவை அழிந்துபோய் விட்டன. ஆனால் எனது தந்தையார் இப்பவும் உயிருடன் உள்ளார். அவற்றை எல்லாம் நல்ல ஞாபகசக்தியுடன் நினைவு கூருவார்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் மல்லிகையை எடுத்து வாசி என எங்களை வற்புறுத்துவார். அந்த வயதில் எனக்கென்ன விளங்கும்? ஆனால் மல்லிகை மணம் மட்டும் தெரியும். எங்காவது கண்டால் இது என் ஐயா வாசிக்கும் புத்தகம் என்று மட்டும் பிரித்துப் பார்க்கத் தெரிந்தது. அவரது மல்லிகையில் நான்கு இதழ்கள் இருக்கும். அதையும் ஒருநாள் எனது தந்தையார் ஆசிரியர் ஜீவா ஐயாவிடம் கேட்டிருக்கிறார்.
நீங்கள் குறிப்பிடுவது போன்று ஏறத்தாள அரை நூற்றாண்டை எட்டிப்பிடிக்கும் மல்லிகையின் வயது என்பது தனி மனிதன் இட்ட பசளையால் வளர்ந்தது. அந்த முயற்சி யினை நாம் பாராட்டுகிற அதேநேரம், எம்மால் இப்படி ஒன்று சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியே.
எனக்கு அறிவு தெரிந்த நாட்கள் தொடக்கம் மல்லிகையை தேடி வாசித்த நாட்கள் பல. அதிலும் தூண்டில் பகுதியை விரும்பி வாசிப்பேன்.
அவர் மீதும் மல்லிகையின் மீதும் கொண்ட காதலால் அவரை எமது வளாகத்தில் ஒரு இலக்கிய கருத்தாடல் ஒன்றிற்காக அழைத்திருந்தோம். மிகுந்த மகிழ்ச்சியோடு கலந்துகொண்டார். அப்பொழுது முதல்வராக இருந்த பேராசிரியர் நா.பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில், கலாநிதி நஇரவீந்திரன், கலாநிதி கந்தையா ருரீ கணேஷன் மற்றும் கவிஞர் அகளங்கன் போன்ற அறிஞர்களுடன் காரசாரமான கருத்தாடல் ஒன்று நடைபெற்றது.
இதன் பின்னர் ஒரு கவலை என்னவென்றால், நாம் இப்படி ஒரு கருத்தாடலுக்கு அழைத்தது முதல் தடவை. பல்கலைக்கழக வளாகங்கள் தங்களை அழைத்தது மகிழ்ச்சி தருகின்றது என மேடையில் முழங்கிய ஐயா அவர்கள், அதுபற்றி ஒரு சிறு குறிப்பேதும் அதன் பின்னர் வந்த மல்லிகையில் பதிவு செய்யவில்லை. (பின்னர் அவர் அப்படி செய்தது எனக்குத் தெரியாமல் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.)
அந்தக் கருத்தாடலின் பொழுது, யாழ்ப்பாணத்தில் கம்பன் கழகம் அமைந்திருக்கும் இடம் பற்றியும், அதன் நிர்வாகிகள் பற்றியும் மிகவும் காட்டமான விமர்சனம் ஒன்றினை மல்லிகை ஜூலை 2011 $ 67

Page 36
ஆசிரியர் ஜீவா அவர்கள் வைத்திருந்தார். அதன் பின்னர், சில காலம் கழித்து பத்திரிகையில் இரு வேறுபட்ட விளம்பரங்களைக் காணக் கிடைத்தது.
ஒன்று, இவரது நூல் வெளியீடு ஒன்றிற்கு கம்பன் கழக அமைப்பாளர் திரு. இ.ஜெயராஜ் அவர்கள் முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டமை. இரண்டாவது கம்பன் விழா ஒன்றிலே ஜீவா ஐயா முதன்மையாளராக கெளரவிக்கப்பட்டது. இவையிரண்டும் அவரது சமூக அரசியல் கொள்கையின் பால் நின்று சற்று விலகிப் போகின்றாரோ என எண்ணத் தோன்றுகின்றது. இவைதான் என்னிடம் அவர் தொடர்பில் இருக்கக்கூடிய கேள்விகள். ஆனால் அந்த விருட்சத்திற்கு இப்படியான சிறு கேள்விகள் காம்பொடிந்து விழுகின்ற இலைகளைப் போன்றது. அவற்றை விட அவரது சேவையும் புகழும் இந்த பாரெங்கும் பரந்து கிடக்கின்றது.
நான் எட்ட இருப்பவன் ஐயா. நீங்கள் அவர் அருகில் இருப்பவர். அவரைப் பற்றி உங்களுக்கு நிறையவே தெரிந்திருக்கும்.
அறிவிலும் வயதிலும் சிறியவன்
சேகர் தம்பிராஜா
மல்லிகை வாழ்த்துகிறது!
முருகபூபதிக்கு இந்த ஆண்டு
ஜூலை 03ந் திகதி தொடக்கம்
மணிவிழா ஆண்டாகும்.
శళ శశికళ,
 
 

- quffiefi: ຂົວຽກ
Y.
> மூத்த படைப்Unளிக்ளுக்கும் வளர்ந்து வருகின்ற இளம் எழுத்தாளர்களுக்குமிடையேயான இலக்கிய உறவுப்
Unலத்தைக் കe്ധഗ്രv நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?
புலோலி வேல் நந்தன்
Y இளம் எழுத்தாளர்களைத் தனித்தனியாக இனங்கண்டு, பழகி வருகின்றேன். எப்படியும் சீக்கிரமாகப் புகழ் பெற்றுவிடலாம் எனப் பலர் துடிக்கின்றனரே தவிர, ஆழமாக வளர வேண்டும் என இவர்களில் பலர் அறவே யோசித்துக் காரியமாற்றி வருபவர்களல்ல. இலக்கியக் கூட்டங்களுக்கு அறவே வந்துபோக மாட்டார்கள்
எங்களது ஆரம்ப கால இலக்கிய வாழ்வில் நன்மைப் போன்றவர்கள் எத்தனை தூரம் கசப்பான அனுபவங்களைப் பெற்று, நீடித்து நிலைத்திருக்கின்றோம் என்பதும் இவர்களுக்குப் புரிவதாயில்லை.
தாம் எழுதுவதெல்லாம் சுடச்சுட அச்சில் வந்துவிட வேண்டும் என ஆவலாதிப் படுகின்றனர். பிரபலமாக எத்தனை தூரம் ஆலாய்ப் பறக்கின்றனரோ, அத்தனைக் கத்தனை சீக்கிரம் எழுத்து உலகிலிருந்தும் மறைந்தும் போய்விடுகின்றனர்.
எழுத்து உலகில் பெயர் பதிக்க முனைந்து செயற்படும் இளந்தலைமுறையினர் தம்மை முழுக்க முழுகக்க இத்துறையில் அர்ப்பணித்துவிட வேண்டும். அவசரப்பட்டால் வேறு துறைக்குப் போய்விடுவது, அவர்களது எதிர்காலத்திற்கே நல்லது.
Y y Ny
> இந்த ஆண்டுத் தொடக்கத்தில் கொழும்பு மாநகரில் நடைபெற்ற உலகத் தமிழ் எழுத்தாளர் மாறneடில் பங்கு கொண்ட இளம் படைப்Unளிக்ள் குறித்து ஒரு மூத்த படைப்பாளின்ெகின்ற முறையில் உங்களது கருத்து
என்ன?
பருத்தித்துறை ச.வசீகரன்
மல்லிகை ஜூலை 2011 奉 69

Page 37
Y இதில் சந்தோஷமான செய்தி என்ன வென்றால், மாநாடு பற்றி வதந்தி பரப்பிய வர்களின் பரபரப்புப் பிரபலம்தான் இம்மா நாட்டை அமோகமாக வெற்றி பெற வைத் துள்ளது என்பது என் கணிப்பு.
இலங்கையில் இருந்து ஏராளமான இளந்தலைமுறை எழுத்தாளர்கள் இம்மா நாட்டில் பங்கு பற்றியது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலிருந்து 40 பேர் கலந்துகொண் டனர். வந்தவர்களில் பெரும்பாலானோர் இளந்தலைமுறையினரே!
நாங்கள் இளந்தலைமுறை எழுத் தாளர்களாக இருந்த காலங்களை விட, இன்றைய இளந்தலைமுறையினர் கொடுத்து வைத்தவர்கள். அன்று எதற் குமே தமிழ்நாட்டைப் பார்த்துக் கொண்டே இருந்தோம். இன்றோ இம்மண்ணிலே சகலவற்றையும் தரிசிக்கின்றோம்.
Y y Ny
> நீங்கள் யாரை மனசார நேசிக்கிநீர்கள்?
சாவகச்சேரி ஆர். சிவநேசன்
Y எவனொருவன் இந்த மண்ணில் மலர்ந்து, மணம் வீச, எழுதிக்கொண்டிருக் கிறார்களோ, அவர்கள் அத்தனை பேர் களையும் நெஞ்சார நேசிக்கின்றேன்.
Y Y Y
> உங்களது காலத்து எழுத்தாளர்களினது நடவடிக் கைகளுக்கும் இன்றைய எழுத்தாளர் களினது நடவடிக்கைகளுக்கும் என்னென்ன வித்தி unசங்களைக் காண்கின்றீர்கள்?
தெல்லிப்பளை ம.வாமதேவன்
7 அன்று ஒருவரை ஒருவர் தெருவில், வழியில் கண்டுவிட்டால் அப்படியே உருகிப்போய் விடுவோம். அத்தனை நேசிப்பு மனோபாவம் அன்று. இன்று அந்த நேசிப்பு மனோபாவம் குன்றிப்போய்க்
காணப்படுகின்றது.
\y `y \y > நீங்கள் ஆரம்பகாலங்களில் எந்தப்
uத்திரிகையில் எழுத ஆரம்பித்தீர்கள்?
நல்லூர் எஸ்.தவநேசன்
Y ‘சுதந்திரன்’ என்றொரு வாரப் பத்திரிகை கொழும்பிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. அதன் உரிமையாளர் தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் அவர்கள். ஆசிரியர் : எஸ்.டி. சிவநாயகம், உதவி ஆசிரியர் பிரேம்ஜி.
Y Y Y
> இராஜ அரியழெத்தினம் என்பவர் அன்னாகத்தில் இருந்து அன்று வெளிவந்து கொண்டிருந்த ழெகேசரி என்றuத்திரிகைக்கு ஆசியராகக் கனகாலம் இருந்து வந்துள்ளார். அன்னாரைப் பற்றி அவரது மறைவுக்குப் பின்னர் எந்தவிதமான தகவலும் இல்லையே? என்ன áኔሰ06wክዕ?
தெஹிவளை எஸ்.திவ்வியநாதன்
Y இப்படி இப்படிப் பலர் காணாமலே போய்விட்டனர். நமது தமிழுக்கு மிகப் பெரிய நஷ்டமிது. இலக்கிய வரலாறே இதன் மூலம் தேங்கிப் போய்க் கிடக் கின்றது. நமது கனக செந்திநாதனும் மறைந்து போய் விட்டார். அவர் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயமாக பல பல இலக் கியத் தகவல்களை நூலுருவில் தந்திருப்
மல்லிகை ஜூலை 2011 奉 70

பார். வருங்காலத் தமிழுக்கு எத்தனை பெரிய இழப்பு, இது?
Y YY YY
> ஜூன் மாதம் 27ந்திகதி உங்களுடைய பிறந்த நாள் எனக் கடந்த ஜூன் இதழில் குறிப்பு வெளியிeடி ருந்தீர்கள். ஒல்வோர் ஒபூண்டும் வயது முதிர முதிர ன்ெனதிeடத்தை எதிர்காலத்திற்காக விட்டுச் செல்ல இருக்கிறீர்கள்?
வவுனியா எம்.ரகுபதி
Y மல்லிகையையும், மல்லிகைப் பந்தல் வெளியீடுகளையும் நான் எதிர்காலத்திற்காக விட்டுச் செல்லுகின்றேன். எனது சொந்தப் படைப்புக்கள் பல நூலுருவில் வெளி வந்துள்ளன. ஒன்றை நெஞ்சு நிறைவுடன் நம்புகின்றேன். சமகாலத்தில் பலரும் பலதையும் பேசலாம். கதைக்கலாம்.
ஆனால், நானில்லாத காலத்தில் இன்னும் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக் குப் பின்னர் மணிக்கொடி இன்று பேசப் படுவது போல, மல்லிகையின் ஆரோக்கிய மான இலக்கியத் தாக்கமும் அன்று கட்டாயம் பேசப்படவே செய்யும்.
Y Y \/
> உங்களுடைய சுய வரலாற்று நூல்கள் இரண்டையும் எழுத்தெண்ணில்Uடித்துச் சுவைத்தேன். மற்றும் அடுத்ததாக இற்றை வரைக்குமான வரலாற் றுத் தகவல்களை முன்னர் இரண்டு நூல்களில் எழுதிச் சுவைஞர்களுக்குத்தந்ததுபோல, இனிவரும் நூலைச் சீக்கிரம் டும் கைகளுக்குத் தரமneடீர்களn என்ன?
அளவெட்டி எஸ்.கணேசநாதன்
Y உண்மையை மனந்திறந்து கூறட் டுமா? எனது படைப்புக்கள், வாழ்க்கைக் குறிப்புக்கள், மல்லிகை அனுபவங்கள் என நிறைய நிறைய எழுதி வைத்து விட்டுக் காவலிருக்கின்றேன். அவைகளை நூலுரு வில் வெளிக்கொணர, நிறைய நிறையத் தேவை. மாதா மாதம் மல்லிகை வெளியிடு வதே, மிகப் பெரிய சவால் எனக்கு.
பார்ப்போம் - பார்ப்போம். வழி கிடைக்
காமலா, போகப் போகின்றது?
*/ y y
> பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுக்கு 80-வது வயதுப் Unறnடீடு விழாவாமே? உங்களது Uங்களிu என்ன?
சுன்னாகம் எஸ்.தங்கராஜன்
Y நெஞ்சு நிறைய மல்லிகை அவரை வாழ்த்துகின்றது. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இந்த மண்ணில் காலூன்றி நிலைக்க, இரு பெரும் பேராசிரியர்கள் தத் தமது பெரும் பங்களிப்பை நல்கி இருக் கின்றனர். ஒருவர் பேராசிரியர் கைலாச பதி. மற்றொருவர் நமது சிவத்தம்பி அவர் கள். இவ்விருவரும் இலக்கியத் தகைமை வாய்ந்தவர்கள்தான். அதேசமயம் இவ்விரு வருமே தனித்தனியாக முத்திரை பதித்த வர்கள். தனித்துவமானவர்கள்.
Y Y Y
Ys
> உங்களது சரஸ்வதி காலத்து இலக்கிய நண்பரான ஜெயகாந்தன் uந்நி, தமிழகப் பத்திரிகை களில் எந்தவித மான தகவலும் வரக் காணோமே! அவரது தற்போதைய சுக9ேமம் எப்Uடி?
நல்லூர் ஆர். நடேசலிங்கன்
மல்லிகை ஜூலை 2011 & 71

Page 38
7 வயது காரணமாக ஒதுங்கிப்போய் வீட்டுடன் இருக்கிறார் எனக் கேள்வி. மற்றும்படி அன்னாரது புதிய எழுத்தாக் கங்கள் சஞ்சிகைகளில் வந்ததாகக் கூடத் தெரியவில்லை. நானும் கூட, சென்னையி லுள்ள எனது இலக்கிய நண்பர்களை அவரது சுகசேமம் பற்றி அடிக்கடி விசாரித் துக்கொண்டுதான் இருக்கின்றேன்.
``7 `y \`y
> உண்மையை மனந்திருந்து சொல்லுங்கள். காலாதி காலமாக இலக்கிய உலகில் உழைத்து வரு கின்றீர்களே, உங்களுக்கு அலுப்புச் சலிvே ஏற்படுவ தில்லையா?
தெஹிவளை கே.ரமணன்
Y உலகில் சலிப்பே ஏற்படாத ஒரே யொரு தொழில் என்றவென்றால், இலக்கிய வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் அழைத்து வருவதே
Y 7 y
> நீங்கள் பெரிதும் விச்சலடைந்து வெறுப்Uது எந்தச் செயலை?
LD6ë stirit
எம்.காருண்யன்
Y ஆழ்ந்த யோசனையோடு தெரு வோரம் நடந்துபோய்க் கொண்டிருக்கும் வேளையில், பின்னாலிருந்து கைதட்டி
அழைக்கும் நண்பரின் பண்பு கெட்ட
(მ8fuu60-ი6ს.
N7 y Y
> தமிழ் நneடினர் பலர் நமது தேசத்துத் தமிழ் மக்களுக்காக உருகி உருகிஜூறிக்கை விடுகின்றனரே
இது உண்மையில் எதைக் கmeடுகின்றது?
சாவகச்சேரி எஸ்.தவநேசன்
7 பத்திரிகைகளில் தமது பெயர் அடிக் கடி வருமல்லவா? நமக்காக இத்தனை உருக்கமாக அறிக்கை விட்டு அழுது தொலைக்கும் இத்தனை கண்ணிர்த் துளி களில் எத்தனை பேர், இந்த மண்ணில் தமிழில் வெளிவரும் எத்தனை நூல்களை இதுவரை படித்து வைத்துள்ளனர்? எல்லாமே ஒருவகை நடிப்புத்தான்!
Vy y sy
* நமது இழத்துத் தமிழ் இலக்கியப் படைப்புச் செல் ருெநிலைப் uொறுத்தவரை, தற்uேnது நிலவும் இந்த இலக்கிலக் காலகடிடத்தை எப்Uெயர் கொண்டு ஜூழைக்கலாம், ைெ நீங்கள் கருதுகின்றீர்கள்?
புலோலி புலோலியூரான்
Y இன்று ஈழத்துப் படைப்புலகம் சர்வ தேச மயப்பட்டு, விரிந்து, பரந்து போய், உலகப் பரப்பெங்கும் பேசப்பட்டு வரு கின்றது. நமது படைப்பாளிகளும் பல்வேறு நாடுகளில் பரந்துபட்டு வாழ்ந்து கொண்டு, படைப்பாக்கம் செய்து வருகின்றது எதார்த்தமாகும்.எனவே, இன்றைய சர்வ தேசத் தமிழ் எழுத்தையும், இலக்கியச் சிந்தனைகளையும் படித்துக் கணக்கில் எடுக்காமல் கருத்தைச் சொல்லிவிட (ւpւգաT8l.
நிச்சயமாக இதற்கான விடை கிடைக் கவே செய்யும். கொஞ்சக் காலம் பொறுத் திருப்போமே!
201/4, ருரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103A, இலக்கத்திலுள்ள Lakshmi Printers அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

DATABASE PRINTING, BROCHURES, CATALOGUES SOUVENIRS, BOOK MARK GREETING CAR NAME TAGS, CD/DVD COVERS COLOUR BIODAT STICKERS
NVITATIONCAR PROJECT REPOR BOOK COVER, MENU CARDS, THANKING CARDS, CERTIFICATES, BOOKS, POSTERS, CD STOMER, PLASTIC CARDS, SCRATCH CARDS, VISING CARDS.
HAPPY DIGITAL CENTRE (PVT) LTD
Digital Colour Lab e Digital Offset Press
No. 75 1/1, Sri Sumanatissa Mawatha, Colombo - 12. Tel:+94 114937336, +9411 7394592 web: www.hdck.com, E-mail: happy2002Olive.com

Page 39

Zoo 22 227
o.