கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெள்ளிமலை 2011.04

Page 1


Page 2

வலிகாமம் பிரதேச வளங்கள் திறனிகள் வெளிக்காட்டிடும் சஞ்சிகை Ꭰ60Ꭷ6Ꭰ : 0Ꮞ. கித்திறை 2011 வெள்ளி 10
TTMTTTTTMTTTL TTlTTu LLTL L L0 L L L L LmLmlLlmLLLL
இலகுவது புலவர்தரு வழக்காலை பொருளடக்கம்
:து இயலுவேஸ் எண்ணச்சாரல் O2
អ្វី ម្ល៉ោះធំ ក្បឿ់
பாவேந்தர்பாரதிதாசன் சுதேச மருத்துவத்தின் தோற்றம் வகை எததை I_-நகிருஷ்ணகி ஆயராகிணி 03
வாசகர் வட்ட வெளியீடு நூல் அறிமுகம் - எங்கள் தாத்தாவுக்கு
இணை ஆசிரியர்கள் .ܩܘ சண்முகநாதன் O6 க. செளந்தராஜன் சுன்னாகம் புலவர் பரம்பரை திருமதி இ. கருணாநிதி - கசிகுலரத்தினம் O9 இந் நாணயம் பற்றி - சங்குவேலிநந்தினி 16 ஆசிரியர் குழு NIBM - க தேவகி . .22 திரு. அ. தற்பரானந்தன் பழைய நினைவலைகள் - கதிருச்செல்வம் 24
திரு. ஐ. இராமசாமி தமிழ் இலக்கியவரலாறு - திரு. சு. முரீகுமாཨཱ་མ་ - IDLIII. ID8II6âtigilt, IDLIII. UIGwypygii] 29 திரு. ப. சிவானந்தர்மா சிறுகதை - எனது சாம்பலையாவது பிறந்த
திரு சிறமேஷ் LDGrafskoð (BLUTL திரு. கு. றஜியன் பாட்டுவிரு செல்வி முநீ. முநீரங்கநாயகி - பா. பாலச்சந்திரனி 36 விைதை - ஒரு தாய் மக்கள் - ந. ரீஸ்கந்தராசா 41 தொடர்புகளுக்கு SSLLLLSLSSSLSLSLSS
வெள்ளிமலை நீர் வெறுப்பு நோயும்விசர் நாய்க்கடியும் சுன்னாகம் பொதுநூலகம் - தே. பத்மாவதி 42 G6606– இறைவழிபாடும் தமிழும் - த சண்முகநாதன் 45 அச்சுப்பதிப்பு || 9(ÖsQUöUUö usvcoolunoð கிருஷ்ணா பிறிண்டேர்ஸ், வை. க. சிற்றம்பலம் 5O LIăL. சுப்பிரமணியம் வீதி, கவிதை - பெண்ணடிமை வெல்லாதோ
666.065 - கே.எஸ். சிவதானராஜா 52 இச்சஞ்சிகையில் விவளியாகியுள்ள க்ரியாவின் பிரெயில் தமிழ் அகராதி ಅತಿಹಾಸೊಧ್ನ எழுதியவர்களே - பா. துவாரகன் 53

Page 3
事 எண்ணச்சரல் வாசிப்பு அனுபவம் »M»M»M»M»M»M»M»M»M) MXM XMX நூல்களினூடாக வாசித்தல் என்னும் நிலை எமது சூழலில் மேம்பட இன்னும் சிலகாலம் எடுக்கலாம். மாறிவரும் உலக தொழில்நுட்ப சாதன வசதிகள் எல்லோராலும் நுகரப்படக்கூடிய நிலை அமையும்போது தகவல் தேடுகைக்காக தொலைக்காட்சியையும் கணினியையும் இணைய வசதிகளையும் பயன்படுத்தும் நிலை பெருகக்கூடும். ஆனால் அச்சு ஊடகங்களின் பணியை இவை முற்றாக அழித்துவிடப்போவதில்லை என்றே அறிஞர்கள் கருதுகின்றனர். தகவல் மூலங்களாக நூல்களும் சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் உலகெங்கும் இன்னும் பெருகிக்கொணிடே இருக்கின்றன. அச்சுநூலி வெளிவரும் அதேசமயத்தில் அது மின்நூலாகவும் வெளிவருகின்றது. ஒவ்வொரு துறையிலும் நவீன அறிவுகளை பரவச் செய்வதில் அச்சு ஊடகங்கள் கணிசமான பங்களிப்பைச் செய்து வருகின்றன.அதேசமயம் நூல்களையும் சஞ்சிகைகளையும் விலை கொடுத்து வாங்கும் நிலை ஏனோ குறைவடைவதாகக் காணப்படுகின்றது.
ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளை அறிவுசார் உயர்நிலையில் காணவே பெருமுயற்சி எடுத்து வருகின்றார்கள். அனைத்து வகைக் கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியர்களும், அனைத்து குடும்பச் சூழ்நிலைகளில் பெறிறோரும் வாசிப்பினி முக்கியத்துவத்தை பிள்ளைகளுக்கு உணர்த்திவழிகாட்டுவதன் மூலமே ஆழ்ந்த அகன்ற பரப்பில் வாசிப்புக் கலாசாரம் தழைத்தோங்க முழயும்.
சமூகத்தின் மேம்பாடு தனிமனிதர்களின் ஆளுமை விருத்தியில் தங்கியுள்ளது என்பர். எனவே, வாசித்தலை பொழுதுபோக்காகக் கருதாமல் அறிவுவிருத்திக்கான, ஆளுமைவிருத்திக்கான செயன்முறை என்ற வகையில் தவறாமல் அனைவரும் கடைப்பிழக்க முயல வேண்டும். அறிவுச் சமுதாயமாக மாறுதல் என்பது சுயவாசித்தல் அனுபவத்தி னுடாக பெறப்படும் உயர்நிலையாகும். வாழ்வையும் சிந்தனையையும் மேம்படுத்தி எதிர்கொள்ளும் சவாலிகளை அறிவுநிலைப்பட்டு வென்றுயர்ந்து கொள்வதே மனிதனின் பயனுடைய வாழ்க்கையாக (96.Dtougi).
வாசித்தல் பயிற்சியை பெற்று தரமான நூல்களை, ஆய்வுச் சஞ்சிகைகளை, பல்வேறு பத்திரிகைகளை வாசித்து அதனூடாகச் சிந்தனையை வளர்த்து தாமும் அவ்விதமாகப் புதியன படைக்கும் ஆற்றலை உருவாக்கி அருத்தடுத்த தலைமுறைகளுக்கும் இவ் அனுபவம் கடத்தப்பட ஆவன செய்வது அனைவருக்குமான பொறுப்பாகும்.
வெள்ளிமலை இதழ் - 10 சித்திரை 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுதேச மருத்துவத்தின்... தோற்றம் வளர்ச்சியும் >
Dr. ந. கிருஷ்ணராஜா Dr. சி. வித்யறோகிணி தலைவர பொதுச்சுகாதார ஆயுர்வேத ஆயுர்வேத பாதுகாபபுசசபை, வைத்திய அதிகாரி, வலி - தெற்கு பிரதேச செயலகப் பிரிவு. வலி - தெற்கு பிரதேசசெயலகப் பிரிவு
சுதேச மருத்துவத்தின் நான்கு அங்கங்களாக ஆயுள்வேத, சித்த, யுனானி, தேசிய மருத்துவங்கள் உள்ளன. முற்காலத்தில் சித்த மருத்துவம் குருசீட முறையில் பயின்று வந்ததால் மாணவர்கள் பல்லாண்டு காலம் தகுந்த குருவின் கீழ் பயின்று தத்துவப் பயிற்சி பெற்றனர். சித்தர்களினதும், முனிவர்களினதும் காலங்களைக் கருதுமிடத்து இந்தியாவின் வடதிசையில் ஆயுள்வேதம் விருத்தியடைந்து பின் அது தென்பகுதியில் சித்தமருத்துவமாக பரவியது என அறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சித்தமருத்துவத் துறையானது 1984ம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வருகின்றது.
சித்த மருத்துவம் சிவன், சக்தி, நந்திதேவர் என்னும் தொடர்புகளின் மூலமாக உருவாகியதென்றும், சித்தர்கள் தாம் அனுபவத்திற் கண்ட மருத்துவ முறையினை சித்துக்கள் செய்வதன் மூலமாக சித்தமருத்துவத்தினை உருவாக்கினார்கள் எனவும், ஆதியில் வாழ்ந்த ஒரு சிலர் சைவசமயத் தொடர்பில் சில உபாய முறைகளை உருவாக்கியதன் மூலம் தம்மைச் சித்தர்களாக்கிக் கொண்டார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தின் நோக்கம் உடலை ஆரோக்கியமாகவும் நோயில்லாமலும் பாதுகாப்பது மட்டுமன்றி நீண்டகாலம் இளமையுடனும் தளர்ச்சியின்றியும் பேணுவதுமாகும். இவை காயகற்பம் என்னும் முறையில் அடங்கும்.
சுதேச மருத்துவம் மிகவும் தொண்மையானது. அன்றாட வாழ்வில் தொன்றுதொட்டு இயற்கையுடனும் மக்களின் கலாசாரம், சமயம் ஆகியவற்றுடனும் பின்னிப்பிணைந்து காணப்படுகிறது. வரலாற்றிற் கிடையான அணுகு முறைகளை நோக்குமிடத்து ஆதியில் வாழ்ந்த மருத்துவர்கள் தாம் அனுபவ ரீதியாகக் கண்ட மருத்துவங்களை ஏடுகளில் எழுதி வைத்துள்ளனர். பின் அவற்றில் சில அச்சேற்றப்பட்டு நூல் வடிவில் பிரசுரிக்கப்பட்டன. இவ்வாறான மெய்ஞ்ஞான பூர்வமான விடயங்களை விஞ்ஞான பூர்வமாக நிறுவுவதற்கு ஆராய்ச்சி உத்திமுறைகள் உபயோகிக்கப்படுகின்றன.
வெள்ளிமலை இதழ் - 10 சித்திரை 2011

Page 4
நோயியல் ஆராய்ச்சியில் சித்த மருத்துவத்தில் 4448 நோய்கள் உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நோய்வகைகள் குழந்தைகள், வாலிபர், வயது வந்தோர். பெண்கள், கர்ப்பிணிகள், வயோதிபர் என்ற முறையிலும், நோயேற்படக் காரணம், நோயின் குறிகுணங்கள், நோயின் பேதம் (Differential Diagnosis) என்ற ரீதியிலும், உடல் நோய்கள். உளநோய்கள் எனும் பிரிவிலும் அமையப்பெற்றிருப்பது நோக்கப்பட வேண்டும்.
சித்தர்கள் உணவுமுறைகள் பற்றி மிகவும் நுட்பமாக எடுத்துக் கூறியுள்ளனர். ஒவ்வொரு உணவுப் பொருளினதும் சுவை, பஞ்சபூத அம்சம் என்பவற்றைப் பற்றி மட்டுமல்லாது அவற்றிலுள்ள முக்குன (வாதம், பித்தம், கபம்) வேறுபாடுகள் பற்றியும் தெளிவாகக் கூறிவைத்துள்ளனர். ஒருவர் தமது உணவுமுறையை ஒழுங்காகக் கடைப்பிடிப்பதன் மூலம் ஆரோக்கியமாக வாழமுடியும். மேலும் ஒருவர் நோய் வாய்ப்படும் போது தகுந்த பத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அந்நோயிலிருந்து விடுபட முடியும். சித்த மருத்துவம் கூறும், உணவே மருந்தாகும் தன்மை இதுவேயாகும்.
நாட்பட்ட தீராத நோய்களின் பட்டியலிலுள்ள சிலவகையான சர்மநோய்கள், வாதரோகங்கள், நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம், குன்மம், பீனிசம் என்பவற்றைத் தீர்க்கவல்ல, தனித்திறமை கொண்ட மருத்துவம் முறை இதுவாகும். குழந்தைகள், வயோதிபர்கள் பெருமளவு இவ்வைத்திய முறையை நாடுவதும் கண்கண்ட வரலாற்றின் உண்மை. சித்த மருத்துவம் இன்று உலகந்தழுவிய ஓர் உன்னத நிலையை அடைந்துள்ளது. சித்த மருத்துவத்தின் சிறப்பியல்புகளாவன.
. பக்க விளைவோ அல்லது பின்விளைவோ இல்லா மருத்துவம். 2. அந்தந்த நாட்டின் இயற்கைச் சூழலுக்கேற்ப தட்ப வெட்ப நிலைகளுக் கேற்ப காலமாற்றங்களுக்கேற்ப இயற்கையாக கிடைக்கின்ற மூலிகை களை மூலப்பொருட்களாகக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளாகும். 3. நாள்தோறும் மக்கள் பயன்பாட்டிலுள்ள பொருட்கள் மருந்துப் பொருட்
களாக உபயோகிக்கப்படுகின்றன. 4. சித்த மருத்துவத்தில் உண்ணும்முறை, உணவை அளவோடு
உண்ணுதல், உண்ணா நோன்பு, உபவாசம் போன்ற முறைகள் குறிப் பிடப்பட்டுள்ளன. 5. இயற்கையான வாழ்க்கையினை வலியுறுத்துகிறது. 6. யோகப் பயிற்சிகள், உடற்பயிற்சிகள் போன்றவையும் பிரயோகித்தல். 7. பிரணாயாமம், தியானம் போன்றவையும் பயன்படுத்தக் குறிப்பிடப்
பட்டுள்ளன. 8. வெந்நீர்க்குளியல், சூரியக் குளியல், மண்குளியல், குளிர்ந்த நீர்க்குளியல், Gjög5LLb, Sb6îlä5g56ffluu6ö (Steam bath) (BUT6Ởtyp6OD6Jub Ju 16ÖTLUGBögBů படுகின்றன. 9. பல நோய்களை சித்த மருத்துவத்தில் மிகவும் எளிய முறையில்
குணப்படுத்த முடிகின்றது. & வெள்ளிமலை இதழ் - 10 சித்திரை2011

உதாரணமாக - மஞ்சட்காமாளை, தோல்வியாதிகள், சக்கரை நோய் (நீரிழிவு) , பாரிசவாதம், இரைப்பு நோய் (Asthma), இரத்த அழுத்தம் போன்ற நோய்களைக் குறிப்பிடலாம். 10. உணவும், மருந்தும் ஒன்றாக அமைந்திருப்பது இம் மருத்துவத்தில்
சிறப்பிற்குரியது. 11. வருமுன் காப்பதே வாழ்விற்கு அழகு என்ற சித்தர்களின் மெய்ப்
பொருளை நாம் உணர்ந்தாக வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். பிரபஞ்சப் பேராற்றலின் கூட்டமைப்பும், அறுவகைச் சுவைகளும், 96 தத்துவங்களும் இணைந்தது தான் சித்த மருத்துவம். 12. உயிர்களிற்கு ஊறுபாடு வரக்கூடாது என்று நினைத்தால் மாறுபாடு இல்லாத உணவை உட்கொள்ள வேண்டும். நமது நாட்டில் மூலிகை களைக் கீரையாகச் சமைத்தும், துவையலாக அரைத்தும், பொடியாக சாதத்தில் கலந்தும் சாப்பிட்டுவர வாத, பித்த, கப குற்றங்களைச் சமன் செய்து வாழமுடியும். 13. நம்முன்னோர்கள் வாழும் முறைகளின் மூலமும் உண்ணும் உணவு,
மற்றும் நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள் மூலமும் மருத்துவப் பயன் பாட்டைக் கண்டறிந்து பயன்படுத்தி வந்துள்ளனர். உணவே மருந்து, மருந்தே உணவு என்னும் கொள்கைக்கு ஏற்ப வாழ்ந்து வந்தனர்.
சித்த மருத்துவம் என்பது பண்டைய காலம் தொட்டு மரபு வழியாக அறிவுசால் சான்றோர்களான சித்தர்களால் ஆய்வு செய்யப்பட்டதும், அனுபவத்தின் மூலமாகவும் அறிந்த உண்மைகளின் அடிப்படையிலும் அமைந்த மருத்துவ நெறியே சித்த மருத்துவம் ஆகும்.
பல நாடுகளில் மருத்துவ ஆராய்ச்சித்துறைகள் இன்றும் பல்வேறுபட்ட செய்முறைகளை ஆய்வுசெய்து கொண்டிருப்பதும் அனுபவ மருந்துகட்கு ஓர் முழுமையான முடிவை வழங்கியிருப்பதும் அவை சம்பந்தமான வெளியீடுகள் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டுக் கொண்டிருப்பதும் மருத்துவவியலில் புதிய பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருப்பதும் <96Oo 6oLDais asTao முன்னேற்றகரமான செயற்பாடுகளாகும்.
சித்த மருத்துவத்தத்துவத்தின்படி மனித உடல், நிலம்,நீர், காற்று. ஆகாயம், தீ ஆகிய பஞ்சபூதங்களினால் ஆக்கப்பட்டுள்ளது. எனவே மனிதசமுதாயம் ஆரோக்கியமாக நிம்மதியாக சந்தோஷமாக வாழ்வதற்கு இப்பஞ்ச பூதங்கள் மாசுபடாமல் பேணுவதிலும், சமநிலையில் இருப்பதிலும் அக்கறை செலுத்த வேண்டியது நம் அனைவரதும் கடமையாகும்.
சித்த மருத்துவம் சிறப்புடன் அமைவதற்கும், சமூகத்திற்கு தனக்குள்ள பாரிய பணிகளை நிறைவேற்றவும், எதிர்காலத்திலும் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் செயற்பாடுகளை ஏற்படுத்தி நாடளாவ விரிவுபடுத்தித் தழைத்தோங்க ஆவணசெய்ய வேண்டும்.
ଗରାଗtଗfildedq), $3) - 10 சித்திரை 2011

Page 5
மேற்படி "கதைபோல" என்று அந்தக்கதை தெரியாமலேசிலர் சொல்லிக்கொள்வதுண்டு. "எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது" என்ற சிங்களக் கதைபோல என்று வேறு ஓர் எழுத்தாளர் உதாரணம் காட்டியதும் நினைவுக்கு வருகிறது. அதனால் அந்த நாவல் பற்றிய ஓர் அறிமுகத்தினை இங்குதருகிறேன். மனதை விட்டகலாத சிறந்த மலையாள நாவல்களில் ஒன்றுதான், வைக்கம் முகம்மது பவரீரின் "எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது" என்பது. இது இந்தியாவின் சிறந்த நாவல்களில் ஒன்றாகவும் மதிக்கப்படுகிறது.
மூலமொழியில் 1951இல் எழுதப்பெற்ற இந்நாவல் சாகித்திய அகாதெமிக்காக கே.சி.சங்கரநாராயணன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு சென்னை கலைமகள் வெளியீடாக 1959இல் வெளிவந்திருந்தது.
கேரள நாட்டு முஸ்லீம் சமூகத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட இந்நாவலில் அந்தத் தாத்தாவுக்கு இருந்ததாகச் சொல்லப்படும். "யானை" செவிவழிச் செய்தியாக மட்டுமே வருகிறது.
ஒரு முஸ்லீம் குடும்பம் பணக்கார நிலையிலிருந்து ஏழ்மை நிலைக்குத் தாழ்ந்த கதையினை நாவல் சொல்கிறது.
பட்டனடிமைக் காக்கா - அவர் மனைவி குஷ்சுத் தாச்சுமா - அவர்களின் மகள் குஷ்சுப்பத்துமா - மற்றும் ஆயிஷா - நிஸார் அகம்மது - இவர்களே நாவலில் வருகின்ற முக்கிய பாத்திரங்கள். குவிந்கப்பாத்துமாவின் தாத்தா யானை மக்காரும் அவர் வளர்த்த கொம்பன் யானையும் வராத பாத்திரங்கள், (பேசாத பாத்திரங்கள்)
குத்சுப்பாத்துமா அந்த யானையோரு மானசீகமாக விளையாடி வளர்ந்தாள்.
வெள்ளிமலை இதழ் - 10
"எங்கள்தாந்தாவுக்கு இறு யானை இருந்தது"
2 adŤ 6ED Lou JTO UUTIDaTouj 96J6Ť பார்த்ததுகூட இல்லை. வேறு குழந்தைகள் எவருடனும் அவள் விளையாடக் கூடாதென்பது உம்மா குஷ்சுத்தாச்சுமாவின் உத்தரவு. அவளோ தலைமுதலி காலி வரையில் ஒரே தங்கமயந்தான். பட்டைத் தவிர வேறு துணி உருக்கிறதில்லை.
பட்டனடிமைக் காக்கா மதிப்பும் கெளரவமும் மிக்கவர். ஊருக்குப் பெரிய தனக்காரர். பள்ளிவாசல் தர்மகர்த்தா.
குள் சுத்தாச்சுமாவின் உருப்பும் பட்டுத்தான். சர்வாபரண பூவிதையாக இருப்பாள். கில்ட் வேலை செய்த மிதியடிகளைப் போட்டுக்கொண்டுதான் வீட்டுக்குள் நடமாடுவாள். அது சாதாரணப் பாதக்குறடு அல்ல. அதன் குமிழ்கள் இரண்டும் அசல் யானைத் தந்தத்தால் செய்தவை.
குஷ்சுப்பாத்துமாவுக்கு 565usta.T ஏற்பாடுகள் மும்முரமாக இருந்தன. அவளை விவாகம் செய்துகொள்ளத் தயாராக இருந்த இளைஞர்களில் அநேகர் யானை மக்காரின் பேத்தியின் அந்தஸ்துக்கு தகுந்தவர்களாக இருக்கவில்லை.
பள்ளிவாசல் தர்மகர்த்தா என்ற முறையில் பட்டனடிமைக்காக்கா ஓர் இளைஞனுக்குக் கொடுத்த தணிடனை மீதான தீர்ப்பும், "அந்தப் பெரிய வீரும் மற்றச் சொத்துக்களும் அவருக்கு மட்டும் உரியதல்ல" என்ற சகோதரிகளின் புகார் மீதான தீர்ப்பும் அவருக்கு விரோதமாக அமைந்துவிட்டன. அவர்களுக்கு எல்லாமே போய்விட்டன. ஆற்றங்கரை ரோட்டிலுள்ள அந்த வீடும் சுற்றிலுமுள்ள தோட்டமுமே மிஸ்சியன. உருத்த உடையோரும் வீசிய கையோடும் அந்த வீட்டுக்குக் குடியேறுகிறார்கள்.
சித்திரை 2011
 
 

குற்ைசுப்பாத்துமாவுக்குப் புதிய வாழ்க்கை மிகவும் பிடித்துவிட்டது. குற்ைசுத்தாச்சுமாவுக்கு இப்பொழுதும் பிறந்தகத்துப் பெருமைதான்.
குளிக்கப்போன இடத்திலே குஷ்சுப்பாத்துமா ஏரிக்கரையில் சண்டை யிட்டு விழுந்த குருவி ஒன்றைக் காப்பாற்றப் போகிறாள். அங்கே அவளும் அடிபட்டு விபத்துக்குள்ளாகி வெளியேற முடியாது அவதிப்படுகிறாள். அவளுக்குச் சிகிச்சை யளித்து வெளியேற உதவுகிறான் ஓர் இளைஞன் - இருவருக்கும் உறவு வளர்கிறது.
அவர்களின் பக்கத்து வீட்டை விலைக்கு வாங்கிக்கொண்டு வயசான கணவன் - மனைவியும் மிகவும் ராங்கிக்காரியான அவர்களின் பெணி ஆயிஷாவும் வருகிறார்கள். இவர்களின் அபிப்பிராயப்படி அவர்கள் "காபிர்கள்" (அதாவது உண்மையான முஸ்லீம் அல்லவாம்).
ന്ദ്രാഞ്ഞു &uിഖ9 ജൂg| 96്ത് நிஸார் அகம்மதுவினி பெருமைகளை குஞ்சுப்பாத்துமாவுக்குச் சொல்லுகிறாள். அப்பொழுதுதான் அவளுக்கு புரிகிறது, தனக்கு முன்னர் அறிமுகமான அந்த இளைஞனும் நிஸார் அகம்மதுவும் ஒருவரே என்ற உண்மை. நிஸார் அகம்மது வந்ததும் அவளுக்கு இனந்தெரியாத பயமும் மகிழ்ச்சியும் கலந்து தோன்றின."
'அவளைக் கலந்துகொள்ளாமல் அவளுடைய விருப்பம் என்னவென்று தெரிந்துகொள்ளாமல் அவளுக்கு ஒரு கணவனைத் தெரிந்தாகிவிட்டது. அவளுடைய விவாகம் இதோ நெருங்கி விட்டது. அவளுடைய கண்கள் இருண்டன. காது பக்கென்று அடைத்துப் போயிற்று. "ஐயோ ஆண்டவனே." அவள் மூர்ச்சித்து விழுந்துவிட்டாள்.
அவளுக்கு சைத்தான் பிடித்துவிட்டதாக பிசாசு ஒட்ட முஸ்லியார் வரவழைக்கப் பருகிறார். பிரம்படி தாங்காமல் அவள் வாய்விட்டு அழுதாள். பின்னர் அவள் துணிந்து பிரம்பைப் பறித்து 35 ES
நெருப்பிலே வீசுகிறாள். எங்காவது ஓடிப்போக நினைத்திரும்போது கரும் கோபத்துடன் அங்கே நிஸார் அகம்மது நின்றான். அவன்தானாக அவளைச் சேர்த்து வாரி அணைத்தானோ, இல்லை அவளாக அவனருகே ஒடிப்போய் நின்றாளோ? எதனாலும், அவன் அவளை வாரிச் சுருட்டிக்கொண்டு வராந்தாவில் வீட்டுக்குற்ளே பாயில் கிடத்தினாள். அவனுடைய வைத்தியத்தால் அவள் குணமாகிறாள். அவர்களுக்கு விவாகமும் நடந்தது.
இந்நாவலில் வருகின்ற குஞ்சுத் தாச்சும்மா ஒரு மறக்கமுடியாத பாத்திர வார்ப்பாகும். "நீ யார் தெரியுமா? யானை Loa 85 Tb6ODLuu 9 bado Guardt aflat அருமந்தப் பெண்ணடி உங்கள் தாத்தா கிட்டே ஒரு யானை இருந்தது. அது எப்பேர்ப்பட்ட யானை தெரியுமா? பெரிய கொம்பனானை" என்று பழம் பெருமை பேசுவதில் திருப்திகாண்பவள் குடும்பநிலை கீழிறங்கியபோது கூட இந்த வீம்பு அவளை விட்டு நீங்கவில்லை. "எனக்கென்ன நான் urമഞ്ഞു ഥäärത്രഞ്ഞLu ിLഞ്ഞ്ഞT്ദ്രഥ எனக்குச் சமைக்கத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை". "எண்டி நாணி உரக்கத்தானி பேசுவேன். எனக்கு லயிஸேன்ஸ் உண்டடி உரக்கப் பேசறதுக்கு" என்றெல்லாம் பேசி அகம்பாவமாக நடந்துகொள்கிறாள்.
குஷ்சுப்பாத்துமா நல்ல வெளுப் பாயிருந்தாள். கன்னத்தில் கறுத்த மறு. "அது பாக்கிய மறு" என்று முதலில் சொல்லியவள் பின்னர் அதே வாயால் “நீ பாக்கியம் கெட்டவளடி உன்னுடைய மறு துர்ப்பாக் கியத்தைத் தான் காட்டுகிறது" என்று திட்டுகிறாள். கடைசியில் அவளது ஆணவம் யாவும் வாயாலேயே அழிகிறது. "உங்கள் தாத்தாவுடைய கொம்பனானை. அது ஒரு குழியானையாமடி ஒரு குழியானையாம்". "உம்மாவின் தொணிடை தழுதழுத்தது. கண்களில் நீர் வழிந்தது, என்று அவலம் தொனிக்கும் நகைச் சுவையுடன் நாவல்
சித்திரை 2011

Page 6
ஆசிரியர் பஷிர் இல்லாத யானைக்கு மட்டுமல்ல, குஞ்சுத்தாச்சும்மாவின் அந்தப் புகழ்பெற்ற மிதியடிகள் வெற்றிலைக் குக்கூட உயிர் கொருத்திருக்கிறார். ஆக நாவலில் சொல்லாத கதை இருப்பது போலவே பேசாத பாத்திரங்கள் சொல்லு கின்ற கதைகளும் இருக்கின்றன.
எல்லாவற்றையும் இழந்து அவர்கள் வெளியேறும்போது "உம்மா மட்டும் எப்படியோதன் மிதியடிகள் இரண்டையும் கொண்டுவந்துவிட்டாள்" என்று குறிப்பிரும் நயம் நன்றாகவுள்ளது. இப்படியே வெற்றிலை பற்றி. பட்டனடி மைக்காக்கா வெற்றிலை போருவதில்லை' என்கிறார். குஞ்சுத்தாச்சும்மா வெற்றிலை போடுவதும் வம்பு பேசுவதும்தான் அவள் "ஜோலி" என்கிறார். குஞ்சுப்பாத்துமா பதினான்கு வயதில் கல்யான ஏற்பாடு சமயத்தில் கல்யாணமானால் வெற்றிலை போட்டுக்கொள்ளலாம் எனக் கற்பனை பணிவுறுவதாகச் சொல்லுகிறார்.
ஒரு வார்த்தையோ ஒரு வாக்கியமோ திரும்பத்திரும்ப வந்துகூட இந்த நாவல்நயம் பெறுகிறது. எடுத்துக்காட்டு. ‘எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை. குஞ்சுத்தாச் subtosTaflat 9gög5 LógßulJLq...”
குஞ்சுப்பாத்துமாவின் குழந்தை யுள்ளமும் நிஸார் அகம்மதுவின் நயத்தக்க நாகரிகமும் - இவர்களிடையே அரும்பும்
ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான காதலில்
தொனிக்கும் தூய்மையும் உள்ளத்தைத் தொடுகிறது.
சிறந்த எழுத்துக் கலைஞனால் சிறிய உருவத்திலும் நாவலைப் படைக்க முடியும் எண்பதற்குளங்கள்தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது ஒர் எருத்துக்காட்டு இந்நாவல் நூறு பக்கங்கள் கூட வரவில்லை).
இந்நாவலைப் படிப்பதனால் இரண்டுவகைப் பயனர்களையடையலாம். ஒன்று, நல்ல நாவலைப்படித்த மனநிறைவு. இரண்டு முஸ்லீம் மதத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும் நிறைய அறிய
O
GludS
எங்கே வைக்கப் போகிறீர்கள்
äതങ്ങ അങ്ങി 6ഖങ്ങ
டுைத்தவம் இருந்த பெண்ணை
அக்கினியிடம் ஏற்றிப் UL ഉത്തേ? ിaങ്ങി. ØYNo ondata6oM ഉിമീ
635) 6unağagâamü இரையக்கப்பட்ட ഉá ക്രൈ
ര6 ഞഖä 6undijach.
ܥܐ
வெள்ளிமலை இதழ் - 10
 

፴ዕረ/@Ü :
க்குமாரக் க
17so - 1852)
கண்ணாகத்தின் பெருமை
யாழ்ப்பாணத்துப் பழைய செந்தமிழ்ப் பணிணைகளுள் சுன்னாகமும் ஒன்று. அங்கே செம்பாட்டு, நிலப் பணிபு மிகுதியாகவுண்டு. சுன்னாகத்திலேயுள்ள பெரிய நாளங்காழ என்னும் பழயான பெருஞ் சந்தை குடாநாட்ழற்கே மதிப்புக் கொருப்பதாகும். அதன் பெருமை போர்த்துக்கேயரையும், பறங்கியரையும் தலை சாய்க்கச் செய்தது. போர்த்துக்கேயரை அடுத்து இலங்கை வந்த ஒல்லாந்தர் காலத்திலே 1665ஆம் ஆண்டளவிலே காசியிலிருந்து வந்த 9ரங்கநாத ஐயர் மகன் வரத பணிழதர் என்பார் சுன்னாகத்தில் செந்தமிழை வளர்த்ததோரு, சைவசமயத்தையும் நிலைபெறச் செய்துள்ளார்.
“ஐயமின் முந்நூற் றையிரு விருத்தம் செய்ய செந்தமிழாற் அறிந்துரை செய்தனன் கங்கைமா நதி ஆழ் காசிமா நகரமும் பங்கமில் பங்கையப் பைந்துனர் மாலையும் ஆதிநான் மறை சேர்ந்தன ரானையும் கோதக லோமதிக் கொழய மிங்குடையோன் கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்கும் துன்னிய வளவயற் சுன்னை நன்னுடன்” பெருங்காயமிட்ட பாணிடத்தில், பெருங்காயம் சமைத்த பின்பும் அதன் வாச1ை நிலவுமாப்போல் எங்கள் முந்தையோர் கொண்டிருந்த தமிழ்ப்பற்று, அவர்கள் மறைந்த பின்பும் மரபுவழிதவறாமல் நாட்ழல் முகிழ்ந்து நிலவிவந்துள்ளமைக்கு யாழ்ப்பாணத்து ஊர்கள் தோறும் உண்டாய செந்தமிழ்ப் பண்ணைகளே சான்றாக இருந்து வந்துள்ளன.
சுன்னாகப் புலவர்கள் பரம்பரை
சுன்னாகம் என்றுமே புலவர்களின் பெருக்கத்தாற் பொலிவுபெற்றுவந்துள்ளது. அங்கே மரபுவழிவநீத நற்றமிழ்ப்புல்வர்கள் வரிசையில் ஒரே குடுமிபத்தைச் சேர்ந்தவர்க்கர்கர் பரம்பரை பரம்பரையாகப் புலவர் பெற்றுயர்ந்து வந்துள்ளார்கள்.நாகநாதப்பிள்ளை, அவர் மைந்தன் சந்திரசேகரம்பிள்ளை, அவர் மைநீதண் சுப்பிரமணியம்பிள்ளை, அவர் மைநீதன் அம்பலவாணப்பிள்ளை என்னும் நான்கு தலைமுறைகளுமே புலமை வாய்ந்த குரும்பத்தவராவர்.
அம்பலவாணப்பிள்ளை என்பாரின் மைந்தர்கள் இருவர். மூத்தவர் முத்துக்குமாரர், இளையவர் சின்னத்தம்பிப்பிள்ளை, இருவருமே இளமை முதற் புலமை பெற்றுப் புகழீட்டியவர்களாவர்.
பணிழதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் காட்டிய “இலக்கிய வழி * யிலே நாம் சநீதிக்கின்ற இரு கவிராயர்களுள் ஒருவர் முத்துக்குமார கவிராயராவர். அவர் தம் கவித்துவத்திற்கு ஏற்றம் கொடுத்தவர்கள் அவரைக் "கவிராசசேகரம்” என்றே
வெள்ளிமலை இதழ் - 10 சித்திரை 2011

Page 7
வழங்கியுள்ளார்கள்.
கவிராயரின் அருமைத் தம்பியாராய சின்னத்தம்பிப்பிள்ளை என்பாரின் மைந்தருள் ஒருவரின் பெயரும் அம்பலவாணப்பிள்ளை என்பதாகும். இவரைச் சிதம்பரம் அம்பலவாணப்பிள்ளை எனவும் வழங்குவர். சிதம்பரம் அம்பலவாணப்பிள்ளையின் அருமை மைந்தரே, சுண்ணாகம் குமாரசுவாமிப் புலவர். இவரை இலக்கியவழி இரண்டு மனிதர்களுள் ஒருவராகச் சுவைத்துக் காண்பிக்கின்றது.இங்ங்னமாகத் தம்முடைய முற்சந்ததியினரும் பிற்சந்ததியினரும் செந்தமிழ் வளர்த்த செம்மல்களாயிருக்கும் பாக்கியம் பெற்றுத் காமம் செந்தமிழ் வளர்த்த செம்மலாயிருந்தவர் முத்துக்குமார கவிராயராவர்.
முத்துக்குமார கவிராயர் அம்பலவாணர் என்னும் புலவரின் மைநதராய் 780ஆம் ஆணர்ழல் தோன்றியவர். இவர் ஒல்லாந்தர் ஆட்சியையும், ஆங்கிலேயர் ஆட்சியையும் கண்ட அனுபவசாலி. இவர் இளமையிலே தம்மிட்டம் போலக் கவிபாடும் திறமை பெற்றிருந்தாரெனவே, எல்லோரும் இவரைக் கவிராயர் எனவே அழைப்பாராயினர்.
மாணாக்கர்களாற் பெற்ற பெருமை கவிராயருடைய புலமையை அறிந்தவர்கள் பலர், தங்கள் புதல்வர்களை இவரிடம் பழக்க வைத்தனர். கவிராயரின் புலமை பலரிடம் தொற்றியமையால் ஊரிற் பல இளைஞர்கள் புலவர்களாக மலர்ந்திருந்தனர்.
சிறுப்பிட்டி வைரவநாதர் என்னும் பெரியார் ஏழாலையில் திருமணம் செய்தவர். அவரின் மைந்தர்களில் ஒருவராய தாமோதரம்பிள்ளை அவர்கள், கவிராயரின் உத்தம மாணாக்கனாகி, பன்னிரண்டாம் வயதுக்குள்ளேயே பணிழதர்க்கான இலக்கிய, இலக்கண அறிவைப் பெற்றுக் கொண்டார். தாமோதரம்பிள்ளை அவர்கள் தாம் பிற்காலத்தில் எழுதிய நூல்களுக்கும், பதித்த நூல்களுக்கும் முகவுரைகள் எழுதியபோது குரு வணக்கமாகக் கவிராயரைப் போற்றிய பாடல்கள் இலக்கியச் சுவையோரு குரு விசுவாசப் பண்பாட்டையும் காட்டுவன. பிள்ளையவர்கள் பாழய பாடல்களிலொன்று இது.
"எழுத்தொரு விழுந்தமிழ் பழுத்தசெந் நாவினன் முழுத்தகை யேற்கவை யழுத்தினோன் சுன்னா கத்துயர் மரபினோன் முத்துக் குமார வித்தக னடிதலை வைத்து வாழ்த்துவனே" செந்தமிழ் வளர்த்த தாமோதரம்பிள்ளை அவர்கள் தாம் அரிதின் முயன்று நூற்றாண்டுகளுக்கு முன் பதிப்பித்த கலித்தொகைப் பதிப்பிலும் தம்மாசிரியருக்கு வணக்கஞ் செலுத்தத் தவறவில்லை.
“சுன்னை முத்துக் குமாரன் றுணைக்கழல் சென்னி நாவொரு சிந்தை திருந்த வைத் தன்ன மூதறிவாளர் பதந்துதித் திண்நி லத்திவி வுரையின் றியம்புகேன்" இவ்வாறே பிள்ளை அவர்கள் தாம் பதிப்பித்த இலக்கண விளக்கப் பதிப்பிலும் தம்மை உருவாக்கிய செம்மலாய கவிராயர் அவர்களைச் சிந்தையிருத்திப் போற்றியிருக்கிறார்.
"திங்கள் தங்கிய செஞ்சடை முழமினன் திருத்தாள் பாங்க யங்கயி லாயநா தனைமுனிப் பழிச்சிச்
வெள்ளிமலை இதழ் - 10 சித்திரை 2011

சங்க மங்களத் தமிழ்முத்துக் குமாரன் தன் மர்ைப்பா தங்கள் வாங்கமாத் தமிழ்க்கடல் இடைபழ குவனே" “தமிழ், கடலிலும் பெரியது, பரந்தது. இதனைக் கடந்து கரை காணிபதற்கு ஒடம் போலுதவுவது தம் குருவாய கவிராயரது மலர்ப்பதம்” என்பார். குரு பாதம் துணையென்று இந்து நாகரிகப் பணிபாட்டில் நிலவும் பண்டைய தூய மரபுமாகும்.
விநாயக வணக்கம் முத்துக்குமார கவிராயர் சுன்னாகத்துச் சந்திரசேகர விநாயகப் பெருமாளை மெய்யன்போடு உருகி வழிபடும் நியமம் பூண்டவர் என்பது, அவர் அப்பெருமான்மீது பாழய தனிக்கவிகளால் அறியற்பாலது. அவர் வணக்கமாகவும், முறையீடாகவும் சில பாடல்கள் பாழயுள்ளார். வணக்கமாகப் பாழய பாடல்களில் ஒன்று “ஒரு கோட்டானை நாளும் வணங்குவனே" என வருவதாகும். இதில் விநாயகப் பெருமானின் பரத்துவம் பாழ, அவர் தம் கவிதையைக் கேட்டருள் புரிந்தவர் எனப்பாடுவார். அவர் முருகப்பெருமானுக்குத் திருமணஞ்செய்து வைத்தவர். வெள்ளை இடபமேறிய பெருமான் மைந்தர் என்றெல்லாம் பாடுவார்.
வாட்டானை யன்னமை தீட்டாவிழிமிளிர் மான்மகளைத் தாட்டானை யானைக்கு வேட்டானை யுன்பர்தஞ் சஞ்சலங்கள் மீட்டானை யென்கவி கோட்டனைச் சுன்னையின் மேவுநரை மாட்டானருளொரு கோட்டானை நாளும் வனங்குவனே. தமக்கருள்புரிந்த பெருமானைச் சுன்னாக நண்பனே என்றும் கலைஞான தற்பரா என்றும் வழங்குபவர், கால மேலான பரமூல காரணமான கணபதி, கருணாநிதீ எனச் சரணடைவார்.
இங்ங்ணம் சரணடைந்த அவர் தம் காலத்து ஆங்கிலேயர் அத்துமீறி அரசபணி என்னும் சேவையில், குழமக்கள் கட்டாயமாகத் தெருக்கட்டும் வேலையில் ஈடுபடுதல் வேண்டும் என்று பறையறைந்து மக்களை நலியச் செய்தார்கள். இதனைப் பெறாத கவிராயர் விநாயகப் பெருமானிடமே முறையிட்டு வருந்தியுமுள்ளார்.
"மருக்கட்டுமாலை முழமன்னர்
கட்டளை வந்தபடி தெருக்கட் டட்டாம்கன் மலைப்பாரை
ஒப்பனை செய்தழத்து நருக்கட்டு மாமறுத் தாற்குற்ற
மாக்கினை நம்பிக்கை யென்(று) இருக்கட்டு மாமிதறி கென்செய்கு
8ഖ്സ്പ്യൂ ഉfu&്
சிதம்பர நடராசர் தோத்திரம் அக்காலத்தில் ஆண்டுதோறும் சிதம்பரம் போய்வந்த யாழ்ப்பான அழயார்களுக்குத் தில்லை என்னும் சிதம்பரம் அடுத்த ஊர் போலமைந்திருந்த தலமாகும். ஆண்டுதோறும் சிதம்பரம் போய்வந்த யாழ்ப்பாணத்தவர் பலர் தம் நிலபுலங்களைச் சிதம்பரத்திற்குத் தரும சாதனம் செய்துமிருக்கிறார்கள். சிதம்பரத்தில் மடங்கள் கட்டியும் உள்ளார்கள். ஆறுமுகநாவலர் அவர்கள் சிதம்பரத்தில் சைவப்பிரகாச விதிதியாசாலை அமைத்து கல்விக்கான
வெள்ளிமலை இதழ் - 10 G1D சித்திரை 2011

Page 8
வழிவகைகளைச் செய்துள்ளார். அவரின் முன்னோரான ஞானப்பிரகாசத்தம்பிரான் சுவாமிகள் 1650ஆம் ஆண்டளவிலிலேயே சிதம்பரத்தில் திருக்குளமும் திருமடமும் தம்பெயர் நிலவுமாறு அமைத்தவராவர்.
முத்துக்குமாரக் கவிராயர் சிதம்பர நடராசப் பெருமானின் குஞ்சிதயாதம் மறவாதவர். அவர் f5-gsföf மூர்த்திமீது பக்திப் பெருக்கால் உந்தப் பெற்றுத் தோத்திர ரூபமாக வழியெதுகையும் மடக்கலங்காரமும் விரவி வருமாறு மூன்று ஆசிரிய விருத்தங்கள் யாழயுள்ளார். அவை “சிதம்பர மனுவந்தவர் நிதம்பர விதம்பெறு சிதம்பர மகாதேவனே" என்னும் ஈற்றழகளைக் கொண்டு முழவனவாகும்.
"மாதநூபுரமணி.கலின்கலின் கலீனென்று
பரதவித மாடவேங்கைப் பட்டாடை மடமடென விட்டாட வரையினிற்
tuajarasdi asdapartamLë சோதிநூ லாடவுட னாதியெனக் கொம்பு
தொட்டாட விதிகபாலத் 695Тео-шпL фg666žц цаDLшJL Dлаћања
துள்ளிவிளை யாட மதியின் பாதியா டக்குழையின் மீது பொறி குனிடம்ை (IGay Lf6)GITGrigprTL 6MGfluqtíö anfaarv, 6Gotudg toofu- ogs66D
uardš6)g5/JGDLug torpL OB6NGnflď சீதவானதியாட, மன்றாடு நினியாத
தெரிசனம் எனக் கருளுவாய் சிதம்பர மெனுந்தவர் நிதம்பர விதம்பெறு
சிதம்பர மகாதே வனே!"
மாவிட்டபுரக் கந்தசுவாமியார் கோவிற்கடவை என்றும் மாவிட்டபுரம் என்றும் வழங்கும் திருத்தலத்தில் கோயில் கொண்டருளியுள்ள சுப்பிரமணியப் பெருமானுக்குக் காவழக் கந்தன் என்றும் திருநாமம் வழங்குவதுணிரு. அங்கே நடைபெறும் பெருந்திருவிழா நாள்களில் பக்தர்கள் பாற்காவழ கொணர்ரு ஆழப்பாழ வரும் காட்சி பக்திப் பரவச மூட்டுவதாகும். அங்கே நடைபெற்ற திருவிழாவொன்றில் அழயார்கள் வேண்டிக் கொண்டபோது, கவிராயர் பாழய தோத்திரப் பாடல்கள் அற்புதமானவை.
மாவிட்டபுரத்துக் காவழயாட்டங் கண்ட அழயவர்கள் இயமன் ஏறிவரும் எருமையைக் காணமாட்டார் என்று கருத்துப்படப் பாழய பாடலில், தமிழ் எண்வரிசையில் எ என்பது ஏழு, ரு என்பது ஐந்து எனவே ஏழுஞ்சுமை எருமை என வருகிறது.
"கோவிற்கடவைக் குருபரனா ருற்சவத்தைச் சேவித்து நிற்பார் தெருத்தோறும் - காவிச்செலும் காவழயைக் கணிழருப்பார் கார்ைபரோ கூற்றுவனார் தாவழஏழஞ் சுமையைத் தான்”
வெள்ளிமலை இதழ் - 10 C2) சித்திரை 2011

இங்ங்ணம் பாழயவர், தொடர்ந்து திருவிழாத் தரிசனப் பலன், திருவிழாச் சேவையின் சிறப்பு, சப்பர மஞ்சத் திருவிழாச் சிறப்பு என்பன சம்பந்தமாகவும் பாழயூள்ளார். இப்பாடல்களின் முதலழயை நண்பர் சேனாதிராய முதலியார் உடன்நின்று எடுத்துப் பாட, ஏனைய அழகளைக் கவிராயர் தொடர்ந்து பாழயமை இரட்டைப் புலவர்களின் சம்பந்த விசேடத்தைக் குறிப்பனவாகும். இவற்றுக்கு அப்பால் கவிராயர் மாவிட்டபுரத்துக் கடவுள், பவனி வந்த காட்சியைப் பாடியபோது, பாடிய ஆசிரிய விருத்தத்தில் அயலூர்களின் பெயரை இட்டுப்பாழ, அவற்றுள் வேறு பொருளை மறைத்து வைத்துமுள்ளார். இதை வடநூலார் நாமாந்திரிகை என்னும் பிரகேளிகை என்பர். இதனால் ஒரு பொருள் ஆழ்ந்து கிடப்ப, மேலெழுந்த வாரியாக வேறொரு பொருள் மிதந்திருக்கக் காணலாம். இத்தகைய பாடல்கள் சிலவற்றைப் பணிழதமணி அவர்கள் பரமேஸ்வராக் கல்லூரியில் நடைபெற்ற நான்காம் தமிழ் விழாவில் திரு. ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் தலைமையில் தமிழ் என்னும் தலைப்பில் பேசி விருந்து செய்ததும் உண்டு.
அன்று கவிராயர் பாழய பாடலில் மல்லாகம், மாதகல், சுன்னாகம், ஈவினை, துன்னாலை, சில்லாலை, கொழகாமம் ஆகிய ஊர்ப்பெயர்களை வைத்துப் பாடிய பாடலில் மறைத்து வைக்கப் பெற்ற பொருள் உய்த்துணர வேண்டியது.
மல்லாக மாதகலான் மருகன் சுன்னாகத்தான்
மகன்யா வானர் சொல்லாச்சீர் ஈவினையான் துன்னாலையானத்தான்
சுரும்ப ரோதிச் சில்லாலை யிருள்வென்ற குறக்கொழகா மத்தானைச்
சிகணிழ மாவூர் வல்லானை மாவிட்ட புரநகரத் திடைப்பவனி
வரக் கண்டேனே" இங்கே எழுந்தருளி வந்தவர் முருகன். அவர் மல் லியூகம்மாது அகலாண் மருகன் அஃ தாவது வலிய மார்பிலே முரீதேவி அகலாதிருக்கும் திருமாலின் மருகன். சுன்னாகத்தான் என்பவர் வெள்ளியங்கிரியின் சிவன். சீர் ஈவினையான் என்றால் செல்வம் கொடுக்கும் செயலுடையவன். துண்ணாலையானத்தான் என்பது மன்மதனுக்கு அத்தான். சில்லால் ஐஇருள் வென்ற எனபது தகட்டணியாலி வியக்கப்பருமி இருளையும் வென்ற எண்பதாகும். குறக்கொழகாமத்தான் என்பது மடமகளாய வள்ளியய்மையார் மீது அளவுகடந்த அன்புடையவன் என்பதாகும்.
இனி முருகப் பெருமான் எழுந்தருளி உலாவரக் கண்ட மகளிர் கொண்ட காதலையும், செய்த செயல்களையும் இங்கனமாகவே மறைத்துப் பாழய பாடல்கள் பலவாகும். அவற்றுள் ஒன்று கட்டளைக் கலிப்பாவாலமைத்து, இலக்கிய இரசிகர்கள் பல்லாயிரவர் நாவை 9ழக்கழ அசைத்ததாகும்.
"முழவி லாதுறை சுண்ணாகத் தான்வழி
முந்தித் தாவழக் கொக்குவின் மீதுவந்(து) அடைய வோர்பெணி கொழகாமத் தானசைத்(து)
ஆனைக் கோட்டை வெளிகட் குடைவிட்டாள் உருவி லான்வரப் பன்னாலை யான்மிக
உருத்த னண்கடம் புற்றமல் லாகத்துத் தடைவி டாதனை யென்று பலாலிகணி
சார வந்தன ளோர்இள வாலையே”
வெள்ளிமலை இதழ் - 10 ○ சித்திரை2011

Page 9
இங்கே வந்த ஊர்ப்பெயர்கள் சுன்னாகம், தாவழ, கொக்குவில், கொழகாமம், ஆனைக்கோட்டை, கட்டுடை, உருவில், பன்னாலை, மல்லாகம், பலாலி, இளவாலை என்பனவாகும்.
இங்கேயும் மறைத்து வைக்கப் பெற்ற பொருள் அருமை வாய்ந்த அகத்துறை சம்பந்தமான தொன்றாகும். சுண்ணாகத்தான், திருக்கைலாசமலைச் சிவன் வழி என்பது மகனைக் குறிப்பது. தாவழகொக்கு என்பது தாவிப்பாய்கின்ற அழகளையுடைய குதிரை.
பணிகொழ என்பது கொழ போன்ற பெணி. காமத்தாள்- காதல் மிகுதியாயுள்ளவள்.
ஆனைக்கோட்டைக் கட்டு உடை விட்டாள் என்பது அவள் காமவிச்சை காரணமாக யானைக் கொம்பனைய குத்து முலைகளைக் கட்டவிழ்த்து விட்டாள் என்பதாகும். உடுவிலான் என்பது நட்சத்திரங்களைத் தேவியாகவுடைய சந்திரன். உரு + இல்லான் என்பதாகும்.
இனி இத்தகைய சூழலைச் சாதகமாக்கிக் கொண்டு மன்மதன் வருகிறான். அவன் பன் ஆலையான், சொல்லப்படுகின்ற கருப்பு வில்லினையுடையவன், மல்லாகம் - வலியமார்பு, பலாலி - பலவாய துளி, இளவாலை - இளம் பருவத்தாளாய மடக்கொழ.
நல்லூர் முருகனைப் பாடிய நயம்
கவிராயர், சேனாதிராயரோடு நெருக்கமாகப் பழகிய நட்பில் நல்லூருக்கு வந்தார். இருவரும் கோயிலுக்குச் ബ്ലെ வணங்கி நிற்கும்போது கவிராயர், முதலியாரிடம் “எங்கே உங்கள் முருகனை நீங்களே பாருங்கள்" என்றார். முதலியார் பாழய பின், தாமும் பாருதல் கவிராயர் வழக்கம். அன்று கார்த்திகைத் திருவிழா. கீரிமலையில் மடங்கட்டிய கிருஷ்ணபிள்ளை அவர்களின் முன்னோர் பரம்பரையாகச் செய்து வந்த பெருவிழா. கவிராயர் சுவாமி தரிசனஞ் செய்தபோது, நாயகி பாவனையில் நன்கமைந்த கட்டளைக் கலித்துறைப் பாடலிலும், இரட்டையாசிரிய விருத்தமும் பாழத் துதித்தார்.
கட்டளைக் கலித்துறை "மங்கள நல்லை வழவேலர் வீதிவந்தார்மடவார் பங்கயங் காந்தள் குவளைவெணி முல்லை பரப்பிமறு மெங்கு நிறைகுடம்வைத்துமெய்த் தொனர்டு செய்தாரிதற்கோ அங்க முழுதும் புனிதமினார்க்கென் றறைந்ததுவே" கவிராயர் நல்லூர்க் கார்த்திகைத் திருவிழாவன்று அடுத்துப் பாழய இரட்டையாசிரிய விருத்தத்திலே மறைத்து வைத்துப் பாழயதும் நாமந்திரிகையாகும். இது கடவுள் மாட்டு மானுட மகளிர் நயந்த பக்கமுமாம்.
"ஆரா தனைக்காந் திருநல்லூர்
ஆறு முகத்தார் மனைவியரோடு) அருப்பி ஸ்ருத்த நெருப்பிண்ைபர்
அகத்தை உருக்கும் சாறுவைத்தார் வாரா மறுகி னேராய்மென்
மடவா ரெடுத்தார் காற்பலச்சொன் மரத்தைக் கோளி யாரெருத்தார்
மருங்கின் மயலாய் நின்றேனே!
வெள்ளிமலை இதழ் - 10 சித்திரை 2011

ஊரா ருரையும் வம்பலரே!
உற்றா ரினுஷ்கோ வeபலரே! உலவை மீரும் வைவாளே!
உறுக்கி யனையும் வைவாளே! வேரா வுடம்பில் வருமிபீரே!
விரும்பி யென்பால் திரும்பீரே! விளைவின் மதனுக் கத்தானே!
விரும்பு மென்னா கத்தானே!" அருப்பழயில் சுவையாகச் சமைத்த சாறு என்பது வெளிப்படையான கருத்து. ஆனால் மறைத்துக் கூறிய பொருள் அருப்பு - பரணி. பரணிக்கு அடுத்தது, நெருப்பு - கார்த்திகை. சாறு என்பது திருவிழாவாகும்.
காதல் உண்டாய மகளிருக்கு அயலவர் கூறும் பழிச்சொல் அலர். அவளுக்கு தென்றற் காற்று உயிரைப் போக்கும் வாள் போன்றதாகும். இனி அவளுடைய முலைகளில் பீர் என்னும் பசலை படருவதும் உண்டு. எதுவரினும் அவள் ஊரார் அலரைப் பசலையாக்கிக் காதலை வளர்ப்பாள். காதலன் வேறு யாருமில்லை. மன்மதனுக்கு அத்தான். அவளுக்கு நெஞ்சில் நிறைந்த கந்தன்.
நரசிங்க மூர்த்தியைப் பாடியமை மயிலனியிற் கோயில் கொண்ட நரசிங்க மூர்த்தியையும் கவிராயர் விட்டுவைக்கவில்லை. தமக்கு நல்வாழ்வு வேண்டும் என வேண்டுகோள் விருத்துச் சில பாடல்கள் பாடியுள்ளார். அவற்றுள் ஒன்றையாவது சுவைத்துப் பார்க்கலாம்.
“கல்லாத புல்லார் மனையணு காமற் கவியவர் ம்ேற் சொல்லாமல் நல்குர வில்லாமல் நித்தம் துயர்க் கடலுட் செல்லாமல் நல்ல வரந்தருவாய் செந்திருமருவு நல்லாய் மயினிைவாசா விசய நரசிங்கமே”
ஐயப்பனைப் போற்றியமை
தமிழ் நாட்டில் இன்று சபரிமலை ஐயப்பன் வழிபாடு உச்சக் கட்டமடைந்து, காரு மேழு பள்ளத்தாக்கு எங்கும் “சுவாமியே ஐயப்பா சரணம்” என்னும் மந்திரவொலி ஆவேசக் குரலில் ஒலிக்கிறது. பக்தர்கள் கூட்டங் கூட்டமாக ஆழப்பாடி, ஆரோகரா குரலெழுப்பிப் போகும் காட்சி பக்திப் பரவசத்தைத் தூண்டுமாறு படருகிறது.
இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னரே முத்துக்குமாரக் கவிராய சேகரர் சுன்னாகத்து ஐயனார்மீது ஊஞ்சற் பாட்டுப்பாழ வாழ்த்திய அருமை பெரிது. அவர் ஐயனார் தத்துவத்தையும் விளக்கி அவரருளை நாழ வேண்டி, ஊஞ்சரேற்றிப் பாழ ஆருகிறார். நாமும் பக்தி மேலிட்டுத் தமிழ்த் தேனருந்தி அசைகின்றோம்.
சுன்னாகந் தனிலுறைவோம் என்று வந்த சுத்த மகா சாத்தன் என்றும், அத்திமுகன் சகோதரன் என்றும், அதிக கிருபாகரன் என்றும், ஆரணத்தின் உட்பொருள் என்றும், பூரண புட்கலை தேவியார் தலைவரென்றும், திருக்கயிலையில் செண்டு ஏந்தியவர் என்றும், அருட்கடல் என்றும் போற்றி, வஞ்சனை நோய் வறுமை, பிறவித் துன்பம் நீக்கி, அஞ்சல் அஞ்சல் என அருளுமாறு வேண்டுகிறார். இத்தகைய ஊஞ்சற் பாடல்களில் ஒன்றையும் இறுதியில் வரும் வாழ்த்தையும் பாழ இன்புறலாம்.
(மறு இதழில் தொடரும்.
வெள்ளிமலை இதழ் - 10 G15) சித்திரை 2011

Page 10
இந்த நாணயத்தினைய் பற்றி யாராவது விளக்குவீற்கள?
ரெலாற்றினை ஆராய்ந்தறிவதில் தொல்பொருட்களே சிறந்த ஆதாரங்கள் என இன்றைய வரலாற்று ஆராய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த அடிப்படையில், நாணய ஆராய்வும் (Nயmismatics) வரலாற்று ஆராய்வில் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது.
கந்தரோடை கிராமத்தில் வாழும் எனது சிநேகிதி ஒருவள் எனக்கு மேலே காட்டப்பட்ட நாணயம் போன்ற நாணயத்தினைக் காட்டி, அது என்ன நாணயம், அதிலுள்ள அடையாளங்கள் எவற்றினையாவது அடையாளப்படுத்துகின்றனவா, அடையாளப்படுத்தினால் எவற்றினை, அந்த நாணயம் யாரால், எப்போது வெளியிடப்பட்டது என்ற கேள்விகளையெல்லாம் என்னிடம் கேட்டார்.
நான் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 'தொல்லியல் (Archaeology) பற்றிப் படித்திருந்த காரணமே எனது சிநேகிதி இந்த நாணயம் பற்றி என்னிடம் கேட்ட பல சிக்கலான கேள்விகளுக்கான காரணமாகும்.
நான் எனது பட்டத்தினது பெயரைக் காப்பாற்றிக் கொள்ள, இந்த நாணயம் பற்றி ஆராய்ந்தறிய முற்பட்டேன். இதன் விளைவாக, முதலில் அந்த நாணயத்தில் கானப்படும் அடையாளங்களையும், எழுத்துக்களையும் ஆராய்ந்தறிய முற்பட்டேன். இந்த நாணயத்தினை பார்க்கும் ஒருவரின் அவதானிப்பின் தன்மையைப் பொறுத்து, அதில் என்னென்ன அடையாளங்கள் காணப்படுகின்றன என்பதை அவர் அறிவார். சாதாரணமான ஒருவர், நாணயத்தின் முன்பக்கத்தில் எழுந்து நிற்கும் நிலையில் ஒரு மனித உருவம் உள்ளது எனவும், நாணயத்தின் பின்பக்கத்தில் 'செது என்றதமிழ் எழுத்துக்களின் மேல்படுத்தநிலையில் ஓர் எருது வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறுவார்.
ஆனால், நாணயத்தில் இடப்பட்டுள்ளவைகளைக் கவனமாகப் பார்த்தால், அதில் பின்வருவன இடப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும்.
முன்பக்கத்தில் :
1. எமது வலக்கை பக்கமாகத் தலையைத் திருப்பியபடி நிற்கும் மனித உருவத்தின் தலையானது, நான்கு சம பகுதிகளாக, ஒன்றுக்கு மற்றையது செங்குத்தாக இருக்கும் இரண்டு நேர்கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. 2. அந்த மனிதன் தனது இடக்கையினால் ஒரு சங்கினை வாய்க்கு
முன்பாக வைத்துள்ளான்.
வெள்ளிமலை இதழ் - 10 சித்திரை2011
 

3. அந்த மனிதன் தலையில் மூன்று படிகளாக உள்ள தலையணியை
அணிந்துள்ளான்.
4. அந்த மனிதன் தனது வலக்கையில், பத்துக் கெவர்களையுடைய
தண்டினைக் கொண்டுள்ளான்.
5. அந்த மனிதனுக்கு இடப்பக்கத்தில் யாழ்ப்பாணத்தவர்கள் வைரவர்
சூலம் எனக்குறிப்பிடும் சூலம் வைக்கப்பட்டுள்ளது.
6. அதற்கருகில், நெடியகோல் ஒன்று நிலைக்குத்தாக
வைக்கப்பட்டுள்ளது.
பின்பக்கத்தில் :
1. செது என்ற தமிழ் எழுத்துக்கள் இடப்பட்டுள்ளன.
2. செது" என்ற எழுத்துக்களுக்கு மேலே, எமது இடது கைப்பக்கம்
பார்த்தவண்ணம், ஒரு கம்பீரமான எருது படுத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
3. எருதின் தலைக்கு மேலாக பிறை போன்ற வடிவமும், அதன்
உட்புறமாக ஒரு குற்றும் இடப்பட்டுள்ளன.
4. நாணயத்தின் விளிம்பினையொட்டி, முக்கோண வடிவில்
வைக்கப்பட்ட மூன்று குற்றுக்களைக் கொண்ட தொகுதிகள் நான்கு இடப்பட்டுள்ளன. அவற்றுள் 3 தொகுதிகள் ஒரு புறமாகவும், ஒரு தொகுதி தனித்தும் வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், இந்த 'அடையாளங்கள் ஏன் நாணயத்தில் இடப்பட்டுள்ளன. இவைகள் அழகூட்ட இடப்பட்டுள்ளனவா, அல்லது இவை ஏதாவது விடயங்களை அடையாளப்படுத்துகின்றனவா, இல்லையா, இவை சில விடயங்களை அடையாளப்படுத்துகின்றனவாயின், எவற்றை அடையாளப்படுத்துகின்றன. தமிழில் “செது என்றவொரு சொல் உள்ளதா, அல்லது போனால், இது சேது என்ற சொல்லா, “செது' என்பதற்கு என்ன ‘பொருள்", "சேது" என்பதற்கு என்ன பொருள், இவையிரண்டும் ஒரே பொருளைக் கொண்டவையா, “செது" என்ற எழுத்துக்களுக்கு மேல் வைக்கப்பட்டுள்ள எருது என்ன என்ற கேள்விகள் எழுகின்றன. இந்த நாணயத்தினைப் பொறுத்தமட்டில், இவைகள் எமக்குப் பிரச்சினைகள் ஆகும்.
இப்பிரச்சினைகளையெல்லாம் தீர்ப்பதற்கு, தொல்லியல் பட்டப்படிப்பு எனக்கு உதவவில்லை. ஏனெனில், எனது தொல்லியல் பட்டப்படிப்பில் அடையாளப்படுத்துகை (Symbolization) பற்றியும் எனக்கு உதவவில்லை. தொல்பொருட்களில் காணப்படும் அடையாளங்கள், சின்னங்களை எப்படி விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தறிவது என்பது பற்றிக் கற்பிக்கப்படவில்லை.
இந்தநிலையில், இந்தக் குறிப்பிட்ட நாணயத்தினை ஆராய்ந்து முன்னைய ஆராய்வாளர்களும், பேராசிரியர்களும் எவற்றை எழுதியுள்ளனர். இந்த அடையாளங்கள் தொடர்பாக என்னென்ன விளக்கங்களைக் கொடுத்துள்ளனர் என்பதை அறிய முற்பட்டேன்.
ബൈബിഥത്തെ ജg - 10 ○ சித்திரை 2011

Page 11
எனது இந்தத் தேடுகையில் 1877ஆம் ஆண்டில், "ரைஸ் டேவிட்ஸ் (T.W. Rhys Davids) 6T60Tu6)gri6ò 6pg5i LL 5, GB6og856iT “Numismata Orientalia” எண்பதில், அதன் பக்கங்கள் - 30, 31, 32 என்பவைகளில், அவர் இந்த குறிப்பிட்ட நாணயம் பற்றி ஆராய்ந்திருந்தார். இந்த நாணயத்தின் படமும் இலக்கங்கங்கள் - 18, 19 இல் தரப்பட்டுள்ளது.
&bg5 b5 T6OOTLLugög6l6oo6OTů usból “The large setu bull coin” 6T6örp தலையங்கத்தின் கீழ் விபரிக்கையில், "ரைஸ் டேவிட்ஸ் பின்வருவனவற்றை மாத்திரம்தான் குறிப்பிட்டிருந்தார்.
“On the obverse the standing figure as in the Lion coin, but the weapon or flower in the right hand has degenerated into a straight line with serveral cross-strokes. In the place of the lion the trisula or trident, and a sceptre. On the reverse the bull sacred to Vishnou, obove it the new moon with a star between the horns of the crescent; below, the legend (Basa Setu; to the left of the figure five small dots, to the right twelve dots.'
Rhys Davids கொடுத்துள்ள நாணயப் படத்தில் எழுந்து நிற்கும் மனித உருவத்தின் தலையானது நான்காகப் பிரிக்கப்பட்டிருப்பதும், அதன் இடது கையானது சங்கினைத் தாங்கி வாயருகில் வைத்திருப்பதும் தெளிவாகத் தெரிகின்றன.
ஆனால், அவர் அவை பற்றிக் குறிப்பிடவில்லை மேலும், அவரது ஆய்வில், மனிதனின்தலை ஏன்நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது என்பதும், வாயருகில் 'சங்கு ஏன் வைக்கபட்டுள்ளது என்பதும் அவரால் கருத்தில் கொள்ளப்படவும் இல்லை!
மேலும், அந்த மனித உருவத்தின் வலதுகையில் பத்துக் கெவர்கள் உள்ள ஒரு தண்டு வைக்கப்பட்டிருப்பதை, அவர் சிதைந்து காணப்படும் ஓர் ஆயுதம், அல்லது பூ என்றுள்ளார்.
"ரைஸ் டேவிட்ஸ்" தனது விபரிப்பில் திரிகலத்தினையும், அதனருகில் நிலைக்குத்தாக வைக்கப்பட்டுள்ள நீண்ட கோலினையும் குறிப்பிட்டுள்ளார்.
"ரைஸ் டேவிட்ஸ்’ திரிகலமும், நீண்ட கோலும் எவற்றை அடையாளப்படுத்துகின்றன என்பதை விளக்கவில்லை.
நாணயத்தின் பின்பக்கத்தில் படுத்த நிலையிலுள்ள எருதினை "ரைஸ் டேவிட்ஸ் குறிப்பிட்டு இருப்பதுடன் அதற்கு மேலே வைக்கப்பட்டுள்ள பிறை போன்ற வடிவினைக் குறிப்பிட்டிருப்பதுடன், 'பிறை போன்றதின் உட்புறமாக வைக்கப்பட்டுக் காணப்படும் குற்றினை ரைஸ் டேவிட்ஸ் நட்சத்திரம்' (Star) என்றுள்ளார்.
eighly : "to the left of the figure five small dots, to the right twelve dots”எனக்குறிப்பிட்ட ‘dots'உண்மையில் ஒரு தொகுதியாக முக்கோணவடிவில் வைக்கப்பட்ட மூன்று குற்றுகள் படத்தில் தெளிவாகத் தெரிகிறது. இந்த மூன்று குற்றுத் தொகுதிகள் மூன்று எருதின் பின்புறமாக வைக்கப்பட்டுக் காணப்படுகையில், ஒன்று “செது என்ற எழுத்துக்களில் "செ" என்ற எழுத்தருகில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றுத் தொகுதிகள் எவற்றையாவது அடையாளப்படுத்துகின்றனவா, இல்லையா என்பது பற்றி "ரைஸ் டேவிட்ஸ் எதனையும் கூறியிருக்கவில்லை. வெள்ளிமலை இதழ் - 10 சித்திரை 2011

அவர் “செது என்ற சொல்லினை அனை, பாலம் எனக் கொண்டு. இந்த நாணயமானது தமிழகத்தில் செய்யப்பட்டது என்றும், எருதினை விஷ்ணுவுடன் இணைத்து, பாண்டி நாட்டை வெற்றி கொண்ட முதலாவது பராக்ரமபாகுவின் தளபதி Lankapura இராமேஸ்வரத்தினில் தங்கியிருந்தான் என்றும், விஷ்ணுவுக்கு அங்கு கோயில் கட்டப்பட்டது என்றும், பராக்ரமபாகு சிங்களப் பெளத்தனாக இருந்தபோதும் மொழி, சமய வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளது எருதினையும், “செது" என்ற தமிழ் எழுத்தினையும் இந்த நாணயத்தில் இட்டிருந்தான் என்றும் கூறியுள்ளார்.
எருதினை அவர் என்ன அடிப்படையில் விஷ்ணுவுடன் இணைத்தார் என்பது புரியவில்லை. 'செது என்றால் அனை, பாலம் எனக் கூறியுள்ள Rhys Davids, "செது என்ற எழுத்துக்களின் மேல் வைக்கப்பட்டுள்ள எருது எதனைக் குறிக்கிறது என்பது பற்றி ஆராயவில்லை.
இந்தக் குறிப்பிட்ட நாணயத்தில் காணப்படும் அடையாளங்கள் அனைத்தையும் அவர் கருத்தில் கொள்ளவில்லை. அவர் இவைகள் எதையாவது அடையாளப்படுத்துகின்றனவா, இல்லையா என்பதை ஆராயவுமில்லை. இந்தநிலையில், அவை அழகுபடுத்தும் அடையாளங்களாகக் கொண்டுள்ளாரா என்ற கேள்வி இங்கெழுகிறது. ஆனால், அவர் அப்படிக்கொண்டிருந்தார் என்பதை, அவர் தனது கட்டுரையில் குறிப்பிடவும் இல்லை.
ஒட்டுமொத்தத்தில், Rhys DavidS விஞ்ஞான ரீதியிலான நாணய ஆய்விலிருந்து தூர விலகிய நிலையில்தான் அன்று இருந்தார். அவரால் கூறப்பட்டவைகள் பிழையானதாகவும், கற்பனையானதாகவும்தான் இருக்கமுடியும்.
Rhys Davids இன் நிலை 1877ஆம் ஆண்டில் இப்படியிருக்கையில், 1924&lid (e.g.00rpei) 666flushipbb.5 °Ceylon Coins and Currency' 6T66FD தனது நூலில் இந்த நாணயத்தினை ஆராய்ந்துள்ள H.W. Codrington முதல், இற்றை வரையான எந்தவொரு ஆய்வாளனும், இந்த மனிதனின் வாயருகில் சங்கு வைக்கப்பட்டிருப்பதையும், அவனது தலை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டு, அவை பற்றி ஆராயவேயில்லை!
இந்த அடையாளங்கள் எல்லாம் நாணயத்தில் தெளிவாகத் தெரிகின்றபோதிலும், இவை பற்றிக் குறிப்பிட்டு, முன்னைய ஆய்வாளர்கள் ஆராயாதமை வியப்பையே தருகிறது.
அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினைச் சார்ந்த பேராசிரியர் பத்மநாதன், கலாநிதி. ப. புஷ்பரட்ணம், ஏனையோர்கள் இந்தக் குறிப்பிட்டநாணயத்தினைத் தமது நூல்களிலும், கட்டுரையிலும் ஆராய்ந்துள்ளனர். அவர்களும், இந்த நாணயத்தில் இடப்பட்டுள்ள அனைத்து அடையாளங்களையும் ஆராய்ந்து அவை எவையாவது அடையாளப் படுத்துகின்றனவா என்பதை விளக்கியிருக்கவில்லை.
அவர்கள் எருதினை 'நந்தி எனக் குறிப்பிட்டுள்ளதுடன், “செது' என்ற சொல்லினைச் சேது எனக்கொண்டு, அதனைத் தமிழகத்தின் சேதுபதி என்பதுடன் இணைத்து விளக்கத்தினைக் கொடுத்துள்ளனர்.
நந்தி ", "திரிகலம்’ என்பவையுடாக அவர்கள் இந்த நாணயத்தினைச் சைவத்துடன் இணைக்க முற்பட்டுள்ளனர்.
வெள்ளிமலை இதழ் - 10 சித்திரை 2011

Page 12
அவர்களுள் சிலர், 'பிறை போன்றதையும், அதன் உட்புறமாக இடப்பட்டுள்ள குற்றினையும், "சந்திரன்’, ‘கரியன்" என்றுமுள்ளனர். ஆனால், இந்த அடையாளங்கள் எவற்றை அடையாளப்படுத்துகின்றன என்பதை அவர்கள் கூறவேயில்லை.
ஆனால் அவர்கள் இந்த நாணயமானது, யாழ்ப்பான இராச்சிய மன்னனால் வெளியிடப்பட்டது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்! முனைவர் புஷ்யரட்ணம், இந்த நாணயத்தில் காணப்படும் மனித உருவமானது 'ஆரியச்சக்கரவர்த்தி என்றுள்ளார்!
இவர்கள் இந்த நாணயத்தில் இடப்பட்டுக் காணப்படும் அனைத்து அடையாளங்களையும் ஆராயாது, சிலவற்றை மாத்திரம் வைத்துமுடிவுக்கு எப்படி வந்தனர் என்பது விளங்கவில்லை. இது தருக்க ரீதியிலானது அல்ல.
அதுமாத்திரமல்ல, இந்த மனித உருவம் எமது ஆய்வாளர்களும், பேராசிரியர்களும் கூறுவதுபோல் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசனான 'ஆரியச் சக்கரவர்த்தி " என்றால், அவனது தலையானது ஏன் நான்கு சம பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது? ஏன் யாழ்ப்பான இராச்சிய மன்னன் தனது வாய்க்கருகில் சங்கினை வைத்துள்ளான்? ஏன் அவன் தலையில் மூன்று படிகளாகவுள்ள தலையணியை அணிந்துள்ளான்?
முன்னைய ஆய்வாளர்கள் எவரும், இக்கேள்விக்கான விளக்கங்களைக் கொடுத்திருக்க வில்லை.
மற்றைய புறத்தில், இவர்கள் கூறுவதுபோல் நாணயத்தின் பின்பக்கத்தில் காணப்படும் படுத்த நிலையிலுள்ள எருது நந்தி யானால், இந்த நந்திக்கும், அதனருகே வைக்கப்பட்டுள்ள மூன்று குற்றுக்களைக் கொண்ட நான்கு தொகுதிகளுக்கும் என்ன தொடர்பு? ஏன் நந்தி க்கும் அதன் தலைக்கு மேலே வைக்கப்பட்டுள்ள பிறை போன்ற அடையாளத்திற்கும், அதன் உட்புறமாக வைக்கப்பட்டுள்ள குற்றுக்கும் என்ன தொடர்பு? எருதானது 'செது' என்ற எழுத்துக்களின் மேல் வைக்கப்பட்டிருப்பதுTடாக, அது என்னவாக ஆக்கப்பட்டுள்ளது. இவை பற்றியும், அவர்கள் ஆராய்ந்து விளக்கியிருக்கவில்லை!
'சங்கு ஆனது ஒலியெழுப்பும் ஒரு சாதனமாகும். மேலும், சங்கினைக் கொண்டு எழுப்பும் ஒலியானது, எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி சகலருக்கும் அறிவிப்பினைச் செய்யும் ஒன்றாகும். ஆகவே, அந்த மனித உருவம் ஏதோவொன்றினை எந்தவித கட்டுப்பாடுகளுமின்றிச் சகலருக்கும் அறியக்கொடுப்பதையே, போதிப்பதையே, வாயருகில் வைக்கப்பட்டு உள்ள சங்கு அடையாளப்படுத்தமுடியும். இந்த நிலையில், இந்த மனித உருவம் எதனைச் சகலருக்கும் அறியக்கொடுக்கிறது. போதிக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
ஆனால், இந்தக் குறிப்பிட்ட நாணயத்தினை 1877ஆம் ஆண்டுமுதல் ஆராய்ந்துள்ள ரைஸ் டேவிட்ஸ் முதல் 2000ஆம் ஆண்டுகளில் ஆராய்ந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்கள் வரையானவர்கள். தமது நாணய ஆய்வில் இக் கேள்வியை எழுப்பவேயில்லை, அதற்கு 6fleoL60Dulis 5 Te00, முற்பட்டிருக்கவில்லை.
வெள்ளிமலை இதழ் - 10 சித்திரை 2011

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்த நாணயத்தினை முன்னைய, இன்றைய ஆய்வாளர்கள் விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்திருக்கவில்லை. அதில் காணப்படும் ஒவ்வொரு அடையாளமும் எதனையாவது அடையாளப்படுத்துகிறதா, இல்லையா என்பதை ஆராய்ந்தறியவில்லை. நாணயத்தில் இடப்பட்டுள்ள மனித உருவம் உண்மையில் யாரை அடையாளப்படுத்துகிறது என்பதை அறியவில்லை. ஆனால், அவர்கள் முடிவுக்கு வந்து, இந்த நாணயமானது யாழ்ப்பாண இராச்சிய மன்னனான "சிங்கை ஆரியன் இனால் வெளியிடப்பட்டது என்றும், யாழ்ப்பாண இராச்சிய மன்னனின் உருவமே நாணயத்தில் இடப்பட்டுள்ளது என்றும் எமக்குக் கற்பித்து வருகின்றனர்.
'தொல்லியல்' என்பதை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்றுப்பட்டம் பெற்றுவிட்டபோதும், எமது பிராந்தியத்தில் கண்டெடுக்கப்பட்டநாணயம் ஒன்றினைச் சரியாக ஆராய்ந்து விளங்கிக்கொள்ள முடியாத நிலையில்தான் நான் உள்ளேன்.
உண்மையைக் கூறினால், என்னைப் போன்ற ஏனையவர்களது உண்மை நிலையும் இதுதான். யாழ்குடாவின் நாணயங்கள் பற்றி நாம் ஒருவித கற்பனாவாதத்தினுள்தான் வீழ்த்தப்பட்டு உள்ளோம். எமது நிலை இதுவாயின், சாதாரன தமிழ் பேசும் மக்களின் நிலை மிகவும் பரிதாபமானது. அவர்கள் எமது ஊடகங்களில் வெளியாகும் கட்டுரைகளைப் படித்து, கற்பனையில் சஞ்சரித்தவண்ணம் உள்ளனர்.
நான் பட்டப்படிப்பை முடித்துவிட்டநிலையில், இந்தக் கேள்விகளையெல்லாம் பகிரங்கமாகக் கேட்கமுடிகிறது.
இந்தக் குறிப்பிட்ட நாணயத்தில் இடப்பட்டுக் காணப்படும் அடையாளங்கள் ஒவ்வொன்றும் எவற்றையாவது அடையாளப்படுத்துகின்றவா? அடையாளப்படுத்தினால், எவற்றை? இந்த நாணயத்தில் இடப்பட்டுள்ள மனித உருவம் எவரை அடையாளப்படுத்துகிறது? நாணயத்தில் எழுதப்பட்டுள்ள செது என்பதன் பொருள் என்ன்? "செது எழுத்துக்களின் மேல் வைக்கப்பட்டுள்ள எருது எதனை அடையாளப்படுத்துகிறது? இந்த நாணயம் உண்மையில் என்ன நாணயம்? என்பதை எவராவது எனக்கும், என்போன்ற ஏனைய தொல்பொருள், வரலாற்றுப் பட்டதாரிகளுக்கும், சாதாரண தமிழ்மக்களுக்கும் விளக்குவீர்களா? எம்மைக் கற்பனாவாதத்திலிருந்து மீட்டெடுத்துக்கொள்ள உதவுவீர்களா? O
இணையாசிரியர்கள், "வெள்ளிமலை
அறிவியலில் என்னால் எதிர்நோக்கப்படும் பிரச்சினைக்கு உங்களாலும், ஆசிரியர் குழுவினாலும் விடைகளைக் கொடுக்கமுடியாது எனக் கருதினால், தயவு செய்து எனது பகிரங்க வேண்டுகோளை “வெள்ளிமலை சத்சிகையில் வெளியிட்டு, எனக்கும், ஏனையோருக்கும் உதவுவீர்கள் என நம்புகிறேன்.
- சங்குவேலிநந்தினி
வெள்ளிமலை இதழ் - 10 G2D சித்திரை 2011

Page 13
ந்தில் ό சமுதாயத ವಾಣಿ: منابع தேசிய IBM) ሠጠbjó
(N தேசிய வியாபார முகாமை
pÉlgpj6)J6OriÕ (NIBM), 1968śebuñ éeeb60cör(6 கைத்தொழில் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டது. இந்நிறுவனம் கடந்த 43 வருடங்களாக தனது அளப்பரிய சேவையை ஆற்றி வருவதுடன் இளைஞர் விவகார அமைச்சின் சட்ட ஆளுமை உடைய ஒரு அமைப்புமாகும். கொழும்பை தலைமையகமாகக் கொண்ட இந்நிறுவனம் தனது பிராந்தியக் கிளைகளை கண்டி, காலி, குருநாகலை ஆகிய பிரதேசங்களில் விரிவாக்கியுள்ளதுடன் தற்போது யாழ்ப்பாணத்திலும் தனது சேவையை விஸ்தரித்துள்ளது. இலங்கையின் முன்னணி வியாபார கல்வி நிறுவனமாகியNIBM ஆனது பல்கலைக்கழகமானியங்கள் ஆணைக்குழுவினால் (University Grant Commission), No 16 of 1978 Universities Act 66dráp பட்டப்படிப்பினை வழங்கும் ஒரு நிறுவனமாக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியிலும் அங்கீகரிக்கப்பட்ட இதன் அனைத்துக் கற்கைநெறிகளும் மாறிவரும் நவீன உலகத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. NIBM ஆனது கற்கைநெறிகளை சொந்தமாகவும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் கூட்டாக இணைந்தும் வழங்கிவருகின்றது. இக்கற்கை நெறிகள் அடிப்படையில்
பின்வருமாறு வகைப்படுத்தலாம். தேவகி
5. 556 * Degree programmes ဓါးရစံffiHj
Diploma programmes NIBM uLuTypüLJAT60OTL ib. Certificate courses Naprapradarandua
Foundation courses Workshops and seminars
மேலும் NIBM ஆனது விஞ்ஞான மாணிப்பட்டப்படிப்பினை University College Dublin, Ireland L60T 860p600TBg5 h6076).d5 5 J R
*ԳԱրց
羲
துறைகளில் வழங்கிவருகின்றது.
* வியாபார முகாமைத்துவத்தில் விஞ்ஞான LDIT600ft ULLUpty (BSc in Business Manage - ment).
LD6oss6.6T cup8576OLD556 Lib (Human Resource Management). Aansen noemde * கைத்தொழில் முகாமைத்துவம் (Industrial ಇಷ್ರ Management). BosniaqEurt
வெள்ளிமலை இதழ் - o G22) சித்திரை 2011
 
 

65(Susies, g5 L (upastratioLD5g56) b (Logistic, Project Management)
முகாமைத்துவ தகவல் தொழில்நுட்ப முறைமையில் விஞ்ஞானமாணிப் U. Li Julps Ju (BSc in Management Information System) அத்துடன் முகாமைத்துவப் பயிற்சி, அரச மற்றும் தனியார் துறை
நிறுவனங்களிற்கு ஆலோசனை சேவைகள், பாடசாலையிலிருந்து விலகிய மற்றும் வேலை தேடுவோருக்கான பயிற்சி போன்றனவற்றை வழங்கிவருகின்றது. உங்கள் எதிர்காலத்தையும், உயர்கல்வியைத் தொடர்வதற்கும் NIBM ஏன் தெரிவு செய்ய வேண்டும் என்பதற்கான சில காரணங்கள் :
சர்வதேச தரத்தில் அங்கீகரிக்கப்பட்ட கற்கைநெறிகள். NIBMஇன் பட்டப்படிப்புக்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் கூட்டி ணைந்து வழங்கப்படுவதுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கற்கைநெறிகளுமாகும். இது பல்கலைக்கழக அனுமதிக்குத் தவறிய மாணவர்களிற்கும், பாடசாலையிலிருந்து விலகி யோருக்கும் ஓர் அரிய வாய்ப்பாகும்.
கற்கைநெறியின் பயனுறுதித் தன்மை NIBM இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் ஓர் முழுமை யான அரச முதல்தர நிறுவனமாகும். நீண்டகால அனுபவமுள்ள. நன்கு பிரசித்திபெற்ற NIBM இன் கற்கைநெறிகளுக்கு சர்வதேச ரீதியிலும் முக்கியத்துவம் உண்டு.
G36.606D6hTulfil
NIBM ஒரு முதல்தர வியாபார கல்வி நிறுவனமாகையினாலும், வெளியேறும் மாணவர்களின் தரத்தினாலும் வேலைவாய்ப்பு நிச்சய மாகின்றது. சில பிரசித்திபெற்ற தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் NIBM இலிருந்து வெளியேறும் மாணவர்களையே வேலைக்கமர் கின்றன.
NIBM660 66ITIrissir கல்வி, தொழில் தகமையில் அனுபவமுள்ள உள்ளக மற்றும் வெளியக விரிவுரையாளர்களின் கற்பித்தல் மற்றும் வழிகாட்டல்கள். புதய வெளியீட்டு (Latest Edition) புத்தகங்களுடன் கூடிய வசதியுள்ள நூலகம் மற்றும் மாணவர்களிற்கான கலந்துரையாடல் வசதிகள் உடைய கட்டடம். நவீன மயப்படுத்தப்பட்ட விரிவுரை மண்டபம், கணனி ஆய்வுகூடம் ஆகியவற்றை NBM கொண்டுள்ளது. NIBMஇன் கலந்துரையாடல்களும் பயிற்சிப்பட்டறைகளும் பெரும்பாலான அரச, தனியார் நிறுவனங்களுடைய தொழிலாளர் களிற்கு NIBM பயிற்சிப் பட்டறைகளை நவீன யுகத்திற்கேற்ப வழங்கி வருகின்றது. மேலும் வேலைத் தேடுவோருக்கும் வேலையில் ஸ்திரப்படுத்து வோருக்கும் NIBM பயிற்சிப் பட்டறைகளை வழங்கி வருகின்றது.
இத்தகைய பிரபல்ய நிறுவனமாகிய NIBMதற்போது யாழ் மண்ணில் கல்விச்
சேவையினை பாரிய அளவில் நிலைநிறுத்துவதற்காக காலடி எடுத்து வைத்துள்ளது. இது சிறந்த நவீன முறைமையிலான கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு யாழ் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். Ο
வெள்ளிமலை இதழ் - 10 G23D சித்திாை 2011

Page 14
சிர்ண்னாகம் சந்தைக்குவரும் மாட்டுவண்டில்கள் சாரிசாரியாக வாழைக்குலைகளையும், வெற்றிலைகளையும், காய்பிஞ்சு மரக்கறிவகைகளையும் ஏற்றிக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக வருவதைப் பார்க்க அலாதியாக இருக்கும். அனேகமாக புன்னாலைக்கட்டுவன் வீதியாலும், காங்கேசன்துறை வீதியாலும் வந்து சுன்னாகம் சந்தியில் திரும்பிகந்தரோடைறோட்டு வழியாக வந்து வண்டில் காலையுள் செல்லும், வண்டிற்காலை இப்போது பஸ்தரிப்பு நிலையமாக இருக்கும் இடத்திலும், நவீன சந்தை இருக்கும் இடத்தின் மேற்குப்பகுதியின் ஒரு பகுதியும் சேர்ந்து இருந்தது. வண்டில்கள் வண்டிற்சாலைக்கு வந்தவுடன் வண்டிற் சொந்தக்காரர்களும் இதற்கு என்று இருக்கும் கூலி ஆட்களும் காய்பிஞ்சு மரக்கறிவகைகளுக்குரிய சந்தைப்பகுதிக்கு கொண்டு செல்வர். அங்கு தரகர் மூலம் காய்கறிகள் சில்லறை வியாபாரிகளுக்கும், வெளியுர் வியாபாரிகளுக்கும் விற்பனை செய்யப்படும். விடியற்காலை மூன்றரை மணியளவில் சந்தை திறக்கப்பட்டுவிடும்.
விடியற்காலை நான்கு மணியிலிருந்து காலை எட்டுமணி வரை வண்டில்கள் வந்தவண்ணமும் காய்கறி, வாழைக்குலை, வெற்றிலை இறக்கி முடித்த வண்டில்கள் திரும்பிப்போவதுமாக இருக்கும். பிரதேசம் ஒரே வண்டில் மயமாகவே இருக்கும். சில விவசாயிகள் தங்கள் சைக்கிள்களிலும் காய்கறிகளை s ஏற்றிவருவதுண்டு. வெற்றிலைகள், வாழைத்தாரில் அழகாக வரிசையாக அடுக்கிக்கட்டிச் சிப்பம் சிப்பமாகக் கொண்டுவருவார்கள். அந்தச் சிப்பங்களைப் பார்க்க அழகாக இருக்கும். பன்னாலை, கொல்லங்கலட்டி, இளவாலை, மாவிட்டபுரம் முதலிய இடங்களிலிருந்து வெற்றிலையும், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், வசாவிளான், குப்பிளான், உரும்பிராய், புத்தூர், நீர்வேலி, சிறுப்பிட்டி முதலிய இடங்களிலிருந்து காய் பிஞ்சு மரக்கறிகளும், வாழைக்குலைகளும் சுன்னாகம் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வருவார்கள்.
வாழைக்குலைகளைச் சந்தைக்குக் கொண்டு வந்தவுடன் பெரும் குலைகள் கொழும்புக்கு ஏற்றும் வியாபாரிகளினால் வாங்கப்படும். ஒவ்வொரு வியாபாரியிடமும் நாலு, ஐந்து கூலிகள் இருப்பார்கள். இவர்கள் அழகான வெள்ளைப்பிடி போட்ட பிரித்தானியாவில் உற்பத்தி செய்த ஷெபீல்டு மேசைக்கத்திகள் வைத்திருப்பார்கள். வாழைக்குலைகள் வாங்கியவுடன் வாழைக்குலையின் தாரின் ஒருசிறு பகுதியைச்சீவுவார்கள். பெயரை கத்தரிப்பு நிறத்தில் எழுதும் பென்சிலால் எழுதிவிடுவர். பின்னர் அவர்களின் கூலிகள் வாங்கிய வாழைக்குலைகளை
அவர்களுக்கு என்று ஒதுக்கிய இடத்தில் கொண்டு போய் அடுக் குவார்கள். அங்கு பெண்கள், (~~v/) வாலைக்குலைகளை வாழை இலைச்சருகு மூலம் நன்றாகச் >ܝܗ திருச்செல்வம்
சுற்றிப் பொதி செய்து விடுவார்கள். محمحرح سا” வெள்ளிமலை இதழ் - 10 சித்திரை 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்படியே கொழும்புக்கு ஏற்றும் வியாபாரிகளுடைய ஒதுக்கப்பட்ட இடங்களில் வாழைக்குலைகள் அழகாக நிமிர்த்திநிலத்தில் வைக்கப்பட்டு இருக்கும். இப்படியே வாங்கிச் சேர்த்த வாழைக்குலைகள் அழகாக வாழை இலை சருகுகளால் நன்றாகப் பொதிசெய்து வைக்கப்பட்டு இருக்கும். பின்னர் லொறிகள் மூலம் இந்தப் பொதி செய்த வாழைக்குலைகள் கொழும்புக்கு ஏற்றிச் செல்லப்படும். அப்போது கொழும்புக்கு ஏற்றும் பிரபல வியாபாரிகளாக ஏழாலை - இராசா, சுன்னாகம் - வல்லிபுரம், சுன்னாகம் - இரத்தினசிங்கம், அவர் தம்பி சுன்னாகம் - மகாலிங்கம் முதலியோர் இருந்தனர்.
ஒவ்வொருவருடைய வாழைக்குலைகளும் ஐந்து முதல் பத்து லொறிகளில் ஏற்றப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்படும். சந்தைக்கு கொண்டு வந்து இவர்களால் கொள்வனவு செய்யப்பட்ட வாழைக்குலைகள் சருகு மூலம் சிப்பமாகக் கட்டி முடிய மாலை ஆறுமணி வரை செல்லும். அதன் பின்னரே கொழும்பு முகவர்களின் லொறிகள் வந்து இதனைக் கொழும்புக்கு ஏற்றிச் செல்லும்.
சில்லறை வியாபாரச் சந்தை காலை ஆறு மணிக்குத் தொடங்கிப் பிற்பகல் இரண்டு மணி வரை நடக்கும். பெரிய சில்லறை வியாபாரிகள் சாமான்களை விற்றுவிட்டுக் காலை ஒன்பது மணிக்கு வீடுக்குச் சென்று விடுவார்கள். இவர்கள் அனேகமாக விவசாயிகள். அதன் பின் தங்கள் தோட்டத்திற்குச் சென்று தோட்ட வேலைகள் செய்வார்கள். வெற்றிலைக் கடையில் கிட்டத்தட்ட இருபது பெண்கள் வியாபாரம் செய்வார்கள். வெற்றிலைக் கடை பார்க்க அழகாக இருக்கும். நிலத்தில் கடகங்களில் வெற்றிலையை அடுக்கிவைத்து அதன்மேல்தட்டில் வெற்றிலைகளை விரித்து வைத்துத் தரப்படுத்தி வெற்றிலையை விற்பார்கள். நிலத்தில் இருந்தபடியே தான் விற்பார்கள். வெற்றிலைச் சந்தை அனேகமாகக் காலை ஏழுமனிக்குள் முடிந்துவிடும். கொண்டுவரும் வெற்றிலைச் சிப்பங்கள் தரகர் மூலம், சில்லe வியாபாரிகளுக்கும் வெளியுர் வியாபாரிகளுக்கும் விற்கப்படும். இங்கிருந வெற்றிலை சாவகச்சேரி, கொடிகாமம், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, நெல்லிய முதலிய இடங்களுக்கு வெளியூர் வியாபாரிகளினால் கொண்டு செல்லப்படும அனேகமாக பஸ்களிலும், லொறிகளிலும், மாட்டுவண்டிகளிலும் கொண 656b6by GLB.
இதே மாதிரி மரக்கறிக்கடையிலும் மரக்கறிகளை நிலத்தில் பரப்பிவைத்தே குந்தியிருந்தோநின்றோசில்லறை வியாபாரிகள் விற்பார்கள். வெளியூர் ஆட்களும், தங்கள் தேவைக்கு மரக்கறிகளை வாங்கிச் செல்வார்கள். மரக்கறிக் கடையில் எந்தநேரமும் சத்தமும், தூஷணவார்த்தைகளும் தாராளமாகக் கேட்டுக் கொண்டிருக்கும். இதனால் இவர்களிடம் சாமான்களை விலை குறைத்து ஒருவரும் கேட்கமாட்டார்கள். அப்படிக்கேட்டால் படு தூஷனை வார்த்தைகள் வெளிவரும். ஆண்கள் மாத்திரமில்லாமல் பெண் வியாபாரிகளும் தாராளமாகத் தூஷனை வார்த்தைகளைப் பயன்படுத்துவர்.
சந்தைக்குள் சிறு, சிறுகடைகள் இருந்தன. அதில் காண்டீபன்கடை, பெருமாள் கடை பிரபலம் வாய்ந்தவை. விடியற்காலை மூன்று மணிக்கு இவர்கள் கடைத்திறந்து வியாபாரம் செய்யத் தொடங்கி விடு:ர். அந்தக்காலத்தில் மின்சாரம் இல்லாத காலத்தில் பெற்றோமாக்ஸ் என்னும் மண்ணெண்ணை விளக்கைக்
வெள்ளிமலை இதழ் - 10 G2ච් சித்திரை 2011

Page 15
கடையில் ஏற்றிவியாபாரம் செய்வார்கள். அவர்கள் சாமான்களை நிறுத்துப் பேப்பரில் இயந்திர வேகத்தில் கட்டுவார்கள். களைக்காமல் அவர்கள் அவ்வளவு சுறுசுறுப்பாகச் சாமான்களைச்சரை கட்டி விவசாயிகளுக்குச் சாமான்களைக் கொடுத்து நேரத்துக்கு அவர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள்.
சந்தை முழுக்க பெற்றோமாக்ஸ் விளக்குகளாலும் அரிக்கன் லாம்பு விளக்குகளாலும் நிறைந்து இருக்கும். பார்க்க மிகவும் அழகாக இருக்கும். தமது காய்கறிகளை விற்றுப்பணமாக்கி வீட்டுக்குத் தேவையான பொருட்களைக் காண்டீபன், பெருமாள் கடைகளிலும் வாங்கிக் கொண்டு விடியுமுன் தங்கள் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள்.
மீன் கடை அனேகமாக காலை எட்டுமணிக்குத் தொடங்கி மாலை ஆறுமணி மட்டும் மீன்கள் வந்தபடியே இருக்கும். இங்கும் மொத்தமாகவரும் மீன்கள் வெளியூர் வியாபாரிகளால் வேண்டப்பட்டுக் கொண்டு செல்லப்படும். சில்லறை வியாபாரிகள் மீன்களை வாங்கி வாடிக்கையாளர்களுக்கு விற்பார்கள். மீன் கடையிலும் தூஷணை வார்த்தைகளும், கெட்ட வார்த்தைகளும் அந்தக்காலத்தில் சர்வசாதாரணமாகப் புழங்கும்.
சுன்னாகம் சந்தியில் மூன்று மூலைக்கடைகள் இருந்தன. வடமேற்கில் ஆ.மு. சுப்பிரமணியம் பலசரக்குக்கடையும், வடகிழக்கில் இந்திரபவன் கூல்பார் கடையும், தென்கிழக்கில் சி.நா. கந்தையாவின் பேப்பர்க்கடையும் பிரபல்யம் வாய்ந்த கடைகள். கந்தையா கடையில் வீரகேசரி, தினகரன், டெயிலிநியுஸ் பத்திரிகைகளும், கல்கி, குமுதம், ஆனந்தவிகடன், கல்கண்டு முதலிய சஞ்சிகைகளும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. அத்துடன் வெற்றிலை, பாக்கு, பீடா, சோடா, சுருட்டு, சிகரட், பீடி. பிரம்பத்தடி முதலியனவும் விற்கப்படும். கந்தையாவுக்கு குமுதம், கல்கி, ஆனந்தவிகடன் சஞ்சிகைகள் பெரியளவில் நேரடியாக இந்தியாவிலிருந்து வந்தன. கந்தையா பஞ்சாங்கத்திலுள்ள எல்லா விரதங்களையும் பிடிப்பார். மத்தியானம் அனுட்டானம் எல்லாம் பார்த்து சாப்பிட மாலை நான்கு மணியாகிவிடும். அதுமட்டும் கடைக்கு வருபவர்களிடம் எரிந்து விழுந்து கோபிப்பார். மரியாதையில்லாமல் பேசுவார். யாரும் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. பெரியளவில் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் விற்பதனால் கடை எந்தநேரமும் ஜே ஜே என்று இருக்கும்.
இந்திரபவன் கூல்பார் பிரபலமான கடை. குளிர்பானங்கள் மாத்திரமின்றி காப்புச்சாமான்களும் பெரியளவில் விற்பனை நடக்கும். சற்று நாகரீகமான கடை ஆ. மு. சுப்பிரமணியம் கடை பெரிய பலசரக்கு விற்பனைக் கடையாகும். இந்தக்கடைக்குச் சொந்தமாக லொறியும், டெலிபோனும் இருந்தன. பெரிய அளவில் விற்பனை நடைபெறும். இதனை ஆ.மு. சுப்பிரமணியமும் அவரது சகோதரர்களும் வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருந்தனர். சந்தியின் தென்மேற்கு மூலையில் பஸ்தரிப்பு நிலையம் இருந்தது. அங்கு இரண்டு பெரிய அரளி மரங்களும், ஒரு அரசமரமும் நிழலைக் கொடுத்துக் கொண்டிருந்தன. பஸ்தரிப்பு நிலையத் தெற்கு எல்லையில் மூன்று சர்பத்கடைகளும் மேற்கு எல்லையில் மூன்று தேனிர்க்கடைகளும் இருந்தன.
வெள்ளிமலை இதழ் - 10 சித்திரை 2011

பஸ்தரிப்புநிலையத்துக்கு வருபவர்கள் பஸ்வரும் வரை காத்து இருப்பார்கள். அனேகமாக எல்லோரும் காலை மடித்துக் குந்தி இருப்பார்கள். ஒரு சில படித்த மனிதர்கள் நின்றபடி பஸ்ஸாக்காகக் காத்திருப்பார்கள். முழுவதும் ஆண்களே கூடுதலாக இருப்பார்கள். ஒன்று அல்லது இரண்டு பெண்கள் பஸ்ஸ"க்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். அனேகமாக எல்லோரும் வெற்றிலை போட்டுக் கொண்டிருப்பார்கள். வெற்றிலையுடன் புகையிலையும் சேர்த்து குதப்புவார்கள். சிலர் புகையிலையை மாத்திரம் சப்பிக் கொண்டிருப்பார்கள். பின்னர் 1956ஆம் ஆண்டளவில் ஒரு பஸ்தரிப்புமடம் ஒன்று கட்டப்பட்டது. அதில்தான் முதன்முதலில் இருக்கும் வசதி இருந்தது. தட்டி பஸ்கள் புத்தூரில் இருந்து சங்கானைக்கும், நல்ல பஸ்கள் யாழ்ப்பாணம், கீரிமலை முதலிய இடங்களுக்கு ஓடின. பருத்தித்துறை. மானிப்பாய் சேவையும் இருந்தது. இதனைப் பருத்தித்துறை பஸ் கூட்டுறவுச்சங்கம் நடத்திக் கொண்டிருந்தது. மற்ற எல்லா பஸ்களும் வட இலங்கை சென்றல் பஸ் கம்பனிக்குச் சொந்தமானவை.
ஓரளவுக்கு சிறந்த பஸ் சேவை நடந்து கொண்டிருந்தது. பஸ்களின் மேலும், உள்ளும் பல சாமான்கள், பொதிகள் ஏற்றிவரப்படும். பஸ் கொண்டக்டர் கொடுக்குக் கட்டிக் கொண்டு பஸ்ஸின் மேல் ஏறிச் சாமான்களை ஏற்றி இறக்குவார்.
சாமான்கள் விரைவாக ஏற்றப்பட்டு, இறக்கப்படும். கிட்டத்தட்ட ஐம்பது பஸ்கள் இலங்கை பஸ் கொம்பனிக்குச் சொந்தமாக இருந்தன. மாவிட்டபுரம் தேர், தீர்த்தத்திருவிழாக்களுக்கு ஓடிஉழைத்த பணத்தில் ஒவ்வொரு வருடமும் மூன்று அல்லது நான்கு பஸ்கள் புதிதாக வாங்குவார்கள். பஸ்கள் எல்லாம் நல்ல முறையில் மல்லாகம் பஸ் கொம்பனி கராஜ்சில் திருத்தப்படும். அங்கு ஐந்துக்கு மேற்பட்ட மெக்கானிக்மார் வெகுவிரைவாக பஸ்களைத் திருத்தி நேரத்துக்கு ஓடவிட்டுக் கொண்டிருப்பார்கள்.
மல்லாகம்பஸ் கொம்பனியின்மனேச்சர்களாக முதலில் திருவாளர் இராசாவும், பின்னர் ஐயாக்கோன் என்ற புறெக்டர் செல்லத்துரையும் இருந்தார்கள். இவர் மனேச்சராக இருந்த காலத்தில் மல்லாகம் பஸ் கொம்பனி பஸ்கள் எல்லாம் அரசாங்கத்தால் தேசிய மயமாக்கப்பட்டது. இதில் மிகவும் சோகமானது என்னவெனில் அனேகமாக எல்லா பஸ்களும் புதிதான பஸ்கள். அத்தனையும் வருடாவருடம் மாவிட்டபுரக் கந்தசாமி கோயில் தேர்த்திருவிழாவுக்கும், தீர்த்தத்திருவிழாவுக்கும் இரவு, இரவாக ஓடி உழைத்த பணத்தினால் வேண்டப்பட்டவை. அத்தனையும் சாரதிகளாலும், கொண்டக்டர்களானும் கஸ்டப்பட்டு, நித்திரை முழித்து உழைத்த உழைப்பில் வாங்கப்பட்ட பஸ்களாகும். புரொக்டர் செல்லத்துரைக்கு ஐயாக்கோன் என்ற பெயர் வருவதற்குக் காரணம் அவர் சிறு பையனாக இருந்தபோது யாரோ வெள்ளைக்காரத்துரை ஒருவர் தனது ஏறு குதிரையில் ஏறி இருந்து கொண்டு, சிறிய குதிரைச் சவுக்கால் Heygone, Heygone என்று அடித்துக் குதிரையை ஓடச்செய்ததைப் பார்த்துவிட்டார். இதில் நடந்ததுபோல தானும் தென்னம் மட்டையில் ஏறி இருந்துகொண்டு, மற்றைய நண்பர்கள் இழுக்க, LDL60DL Bögö65TLróleglib (ELTg 66,5 będb 5iguílsoTT6ö Hey gone, Hey gone என்று சொல்வாராம். இதனைக் கேட்ட இவரது சிறுவயதுத் தோழர்கள் Heygone, Hey gone என்று செல்லப் பெயராக அழைத்தனர். அது திரிபு பெற்று ஐயாக்கோன்
வெள்ளிமலை இதழ் - 10 ○ சித்திரை 2011

Page 16
என்ற பெயராக மாற, உண்மைப்பெயர் சொல்லி அவரை அழைப்பதுநின்று விட்டது. அந்தக்காலத்தில் ஆண்கள் வேட்டி, சால்வைகள் அணிவார்கள். சேட் போடுவது மிகச்சிலரே, இளம் சந்ததியினர் மாத்திரம் சேட்டும் சாரமும் அல்லது சேட்டும் வேட்டியும் அணிந்திருப்பர்.
வயது முதிர்ந்தோர் நாற்பத்து ஐந்து வயதுக்கு மேற்பட்டோர் வேட்டியும், சால்வையும், அல்லது சாரமும், சால்வையும் அணிந்திருப்பார்கள். படித்தவர்கள், .த்தியோகம் பார்ப்பவர்கள் வேட்டி அணிந்து சால்வையினால் உடலையும் போர்த்தியிருப்பார்கள்.
அனேகமாக வயது முதிர்ந்தவர்கள் Walking stick(வாக்கிங்ஸ்டிக்) கொண்டு நடப்பார்கள். உத்தியோகத்தர்கள், பெரிய அந்தஸ்த்தில் இருப்பவர்கள் Walking Cane (வாக்கிங் கேன்) பாவிப்பார்கள். இதன்மூலம் தங்கள் அந்தஸ்தை வெளிக்காட்டிக் கொள்வர். காலில் செருப்பு அல்லது மிதியடிக்கட்டை என்ற மரத்தாலான செருப்பு போன்ற ஒரு காலணியைப் பாவிப்பார்கள். அனேகமாக மாரி, மழை காலத்தில்தான் மிதியடிக்கட்டை பாவனை கூடுதலாக இருக்கும். வயது முதிர்ந்தவர்கள் வெற்றிலை பாக்குப் புகையிலை பாவித்தல், சுருட்டுக் குடித்தல் முதலிய பழக்கம் எல்லாரிடமும் இருந்தன. ஆண்களைப் போலவே பெண்களுக்கும், வெற்றிலை பாக்கு புகையிலை போடுதலும், சுருட்டுக்குடித்தல் பழக்கமும் இருந்தன. சிகரெட் பாவனை, பீடிப்பாவனை இளம் மட்டத்தினரிடமும், படித்த அந்தஸ்து உள்ளவர்களிடமும் இருந்தன. படித்தவர்களும், மேல்தட்டு வர்க்கத்தினர் சிலரிடம் சுங்கான் புகைக்கும் பழக்கம் இருந்தது. பெண்களும் சர்வசாதாரணமாக பலர் முன்னிலையில் சுருட்டுப் புகைப்பார்கள். பெண்கள் வெளியில் வருவது மிகவும் குறைவு. உறவினர்கள் வீட்டுக்கும், கோயில்களுக்கும் மாத்திரம் போவதற்கு வெளியில் வருவார்கள். கல்யாணம் முடிக்காத பெண்கள் ஒருபோதும் வெளியில் வரமாட்டார்கள். அவர்கள் வெளியில் செல்வதற்கோ, கோயிலுக்குச் செல்வதற்கோ சமூக அனுமதியில்லை.
அரசாங்க உத்தியோகத்தர் தமது உத்தியோக வேலைக்குப் போகும்போது மாத்திரம் காற்சட்டை, சேட், ரை, கோட் அணிந்து செல்வர். மற்றைய வேளைகளில் வேட்டியும், சேட்டும் அல்லது சால்வையும் அணிந்து வெளி செல்வார்கள். தூர இடங்களுக்குச் செல்வதானால் வாடகைக்கார் பிடித்துச் செல்வார்கள். இது ஒரு சமூக அந்தஸ்து சம்பந்தமானது. தேவையில்லாமல் யாரும் தெருவுக்கோ, கடைக்கோ செல்லும் பழக்கம் அக்காலத்தில் இல்லை. இதனால் வீதிகளில் சனப்பிளக்கம் குறைவாகவே இருந்தது. எல்லோருக்கும் வீடுகளிலும், வயல், தோட்டங்களிலும் வேலைகள் பெருமளவில் இருந்தன. வீடுகளைப் பராமரிப்பதிலும் வீட்டில் இருக்கும் ஆடு மாடுகளைப் பராமரிப்பதிலும் அவர்கள் நேரங்களைச் செலவளிப்பார்கள். பெண்கள் வீட்டைச் சுத்தம் செய்வதிலும் சாணியால் நிலத்தை மெழுகுவதிலும் தங்கள் சமையல் நேரத்தைத் தவிர்ந்த நேரங்களைச் செலவளிப்பார்கள்.
(நினைவுகள் தொடரும்.)
Ο
வெள்ளிமலை இதழ் - 10 C28 சித்திரை 2011

சென்ற இதழ் தொடர்ச்சி
தமிழ் இலக்கிய வரலாறு எழுதுதலில்
ஈழத்தறிஞர் செல்வ்ரிக்கு - 2ம் பகுதி 3.தமிழ் வரலாறு
மட்டக்களப்பைச் சேர்ந்தவரான வித்துவான் ச. பூபாலபிள்ளையின் தமிழ் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு எழுதும் முயற்சியில் இன்னொரு முக்கிய கட்டத்தைக் குறிக்கிறது. 1920இலே வெளிவந்த இந்நூலின் முக்கியத்துவம் பெருமளவிலே பேசப்படவில்லையென்றே கூறலாம்.
இந்நூல் D.LITT. LIDESTGórsasáf6 Lb 1. பாடையியல் 2. இலக்கணவியல் LID.LIT. LIITEDypperfi 3. இலக்கியவியல் 4. ஒழிபியல்
என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. இப்பாகுபாடு சபாபதி நாவலரின் திராவிடப்பிரகாசிகையிலுள்ள பாகுபாட்டைப்பெரும்பாலும்பின்பற்றியதாக உள்ளது. பாடையியல் என்னும் பகுதியில் தமிழ் பாஷையின் உற்பவம், தெய்வப் பழைமை, மாட்சிஎன்னும் மூன்று விடயங்கள் விளக்கப்பட்டு உள்ளன. இப்பகுதியில் காரைக்கால் அம்மையார், திருமூலர் ஆகியோர் கடைச்சங்க காலத்தவர்களாகவும் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமான் நாயனார் ஆகியோர் அதற்குப் பிற்பட்ட காலத்தவராகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இலக்கணவியலிலே தமிழ்மொழியில் எழுந்த இலக்கண நூல்களான அகத்தியம், தொல்காப்பியம், தொல்காப்பிய உரைகள், தொல்காப்பியப் பாயிர இறையனார்களவியல், புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கல விளக்கம், வெண்பாப்பாட்டியல், தொன்னூல் விளக்கம், இலக்கணச் சுருக்க வினாவிடைஎன்பன பற்றிய அறிமுகங்கள் தரப்பட்டுள்ளன.
இந்நூலின் உயிர்த்துடிப்பான பகுதியாகவும் முக்கியத்துவத்துக்குக் காரணமான பகுதியாகவும் உள்ளது. இலக்கியவியல் என்னும் மூன்றாவது பகுதியாகும். இங்கு பின்வரும் ஒழுங்கிலே (காலவரன் முறையில் அல்ல) இலக்கியங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 1. திருமுறை இலக்கியம், சமய இலக்கியம்
திருமுறை இலக்கியத்தினுட் பன்னிரு திருமுறைகள் பற்றிய விளக்கமும் சமய இலக்கியத்தினுட் பெரியபுராணம், திருப்புகழ், திருக்குறள், மெய்கண்ட சாத்திர நூல்கள் பற்றிய விளக்கமும் தரப்படுகின்றன. 2. காவிய இலக்கியம்
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி என்பவற்றுடன் சிறு காப்பியங்கள் ஐந்து, நைடதம் என்பன பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. அத்துடன் ஈழத்துக் காவியமான இரகுவம்சமும் சேர்க்கப்பட்டு உள்ளது. 3. கடைச்சங்க இலக்கியங்கள் 4. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 5. இதிகாச இலக்கியம்
கம்பராமாயணத்தைக் காவியத்தினுட் சேர்க்காமல் பாரதத்துடன் இதிகாசத்தினுட் சேர்ப்பது குறிப்பிடத்தக்கதாகும். 6. புரான க்கியம்
இப்பகுதியிலே தமிழகப் புராணங்களுடன் ஈழத்திலே இயற்றப்பட்ட பல புராணங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. வண்ணார்பண்ணைக் கணேச பண்டிதரின்
வெள்ளிமலை இதழ் - 10 சித்திரை 2011

Page 17
இளசைப் புராணம், சபாபதிநாவலரின் சிதம்பர சபாநாதர் புராணம், வட்டுக்கோட்டை பிரமழுநீ நா. சிவசுப்பிரமணிய சிவாச்சாரியரின் கந்தசட்டிப்புராணம் இவரால் அச்சிடப்பட இருந்த தென்கோயிற் புராணம். விநாயக சட்டி புராணம், தேவிநவராத்திரி புராணம் ஆகிய ஈழத்தவர் இயற்றிய புராணங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளன.
7. பல்வகைப் பிரபந்தங்கள்
இப்பகுதியில் பரணி, கோவை, பின்ளைத்தமிழ் முதலிய பல பிரபந்த :படிவங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. இங்கு ஈழத்து இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சேனாதிராசா முதலியாரின் நல்லைவெண்பா, திருஞானசம்பந்த உபாத்தியாயரின் கதிர்காமவேலன் திருவருட்பா, சின்னத்தம்பிப் புலவரின் பிரபந்தங்கள் என்பன பற்றி அவர் கூறும் கருத்துக்களும் பாடல் உதாரணங்களும் இக்கருத்துக்கு ஆதாரங்களாகின்றன. சபாபதி நாவலர் தமது நூலில் ஈழத்து இலக்கியமான இரகுவம்சத்தை மட்டும் சேர்த்துக் கொண்டநிலையில் பொதுவான தமிழ் இலக்கிய வரலாற்றுள் ஈழத்து இலக்கியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஆராயும் மரபை ஆரம்பித்து வைத்தவர் வித்துவான் ச. பூபாலபிள்ளையே 6T66DTD.
நூலின் இறுதிப் பகுதியான ஒழியியல் என்னும் பகுதியில் ஈழத்துச் சோதிட, வைத்திய நூல்கள் பற்றிய விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. எனவே தமிழிலக்கிய வரலாற்றினுள் சோதிட வைத்தியத்துறை சார்ந்த அறிவியல் நூல்களை முதன் முதலிற் சேர்ந்தவரும் பூபாலப்பிள்ளையே.
அவரது வடமொழிப் புலமையையும் ஒப்பியல் அறிவையும் நூலின் பல இடங்களிலும் காண முடிகின்றது. ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றான யசோதர காவியம் பற்றி,
“இது வாதிராஜமுனிவரால் வடமொழியில் இயற்றப்பட்ட யசோதர சரித்திரம்" என்னும் காவியத்தைத் தழுவித் தமிழிலே ஒரு ஜைனர் (பெயர் புலப்படவில்லை) பாடிய நூல். வடமொழிக் காவியத்தில் நான்கு சருக்கங்களாகப் பகுக்கப்பட்ட 296 சுலோகங்களும் தென்மொழிக்காவியத்தில் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்ட 320 செய்யுட்களுமுள்ளன.
வடமொழியசோதர சரித்திரத்துச் சுலோகங்களையும், தென்மொழியசோதர காவியத்துச் செய்யுட்களையும் ஒன்றோடொன்று ஒருங்கு வைத்து ஒப்புநோக்குங்கால் அவ்விரண்டிலும் பொருள் வேறுபாடு காணப்படவில்லை” என்று கூறிவிட்டு வடமொழிக் காவியச் செய்யுள் மொழிப் பெயர்ப்புக்களையும், தமிழ்க்காவியச் செய்யுட்களையும் அருகருகே தந்து ஒப்பிட்டுக் காட்டுமிடத்தில் அவரது ஒப்பியல் நோக்குச் சிறப்பாக வெளிப்படுகின்றது.*
இத்தகு சிறப்புக்கள் மிக்க பூபாலப்பிள்ளையின் தமிழ் வரலாறு பொதுவான தமிழ் இலக்கிய வரலாறு பற்றியோ, ஈழத்து இலக்கிய வரலாறு பற்றியோ ஆய்வு செய்தவர்களிடையே போதிய கணிப்பைப் பெறவில்லை என்றே தோன்றுகின்றது. இந்நூல் பிற்காலத்திற் கிடைக்காமற் போனமையும் இதற்குக் காரணமாகலாம். ஈழத்துப் புலவர் சரித்திரங்களும், இலக்கிய வரலாறுகளும் மீள்பதிப்புச் செய்யப்படும் இன்றைய சூழலில் இந்நூலும் மீள்பதிப்புச் செய்யப்பட வேண்டியது &6) isful DIT6OTg5Telb.
4.3 சி.வை. தாமோதரம்பிள்ளையின் காலப்பகுப்பு
தமிழிலக்கிய வரலாற்றை எழுதிய ஈழத்தறிஞர்கள் தமது இலக்கிய வரலாற்றைத் தமிழகத்தை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள், அவ்வக்காலங்களிலே செல்வாக்குடன் இருந்த நிறுவனங்கள், முக்கியத்துவம் பெற்ற பாடுபொருள் என்பவற்றின் அடிப்படையிற் பல்வேறு காலகட்டங்களாக வகுத்துள்ளனர். 1856இலே
வெள்ளிமலை இதழ் - 10 சித்திரை 2011

666flouis A comparative Grammar of the Dravidian Languages 6T6orpid தமது நூலிலே கால்டுவெல் முன்வைத்த காலப்பகுப்பே தமிழிலக்கிய வரலாறு தொடர்பான முதலாவது காலப்பகுப்பாகக் கருதப்படுகின்றது.
இதனை அடுத்து ஈழத்தறிஞரான சி.வை. தாமோதரம்பிள்ளை தமது
வீரசோழியப் பதிப்பின் (1880 முன்னுரையில் கால்டுவெல்லில் இருந்து வேறுபட்ட காலப்பகுப்பொன்றை முன்வைத்தார். அவரது காலப்பிரிவுகள் பின்வருமாறு அமைகின்றன.
1.
2.
3.
அயோத காலம் - வரிவடிவின்றி ஒலி வடிவு மாத்திரமாய்த் தமிழ் நிகழ்ந்த காலம். இது அகத்தியர்க்கு முன் சென்ற காலம். அகூடிர காலம் :- அகத்தியரால் நெடுங்கணக்கு ஏற்பட்டது முதல் அகத்தியம் நிறைவேறுவது வரைக்குஞ் சென்ற காலம். தமிழுக்கு ஆதியிலக்கிய காலம். இலக்கண காலம் :- அகத்தியரது மாணாக்கர்கள் பன்னிருவரும் தத்தம் பெயரால் வேறு வேறிலக்கணமும் அனைவரும் ஒருங்கு புறப்பொருட் பன்னிரு படலமும் எழுதிய காலமாகும். - சமுதாய காலம் :- இது மதுரைச் சங்கத்தார் காலமாகும். மூன்று சங்கத் திற்கும் காலம் பதினாயிரம் வருஷமென்ப. உக்கிரப் பெருவழுதி காலத்திலே (கி.மு 12Oவரை) சங்கத்தார் தம் நெறி விலகினபோது தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாராலும், ஒளவை, இடைக் காடராலும் அவமானப்பட்டுக் கர்வ பங்கமடைந்து அத்தோடு சங்கமும் முடிய ஏதுவாயிற்று. சங்கத்து அரங்கேறியவற்றுள் தேவர் குறளே கடைசியானது. அநாதர காலம் அல்லது புத்தர் காலம் - கடைச்சங்கம் அழிந்த பின்பு ஏறக் குறைய 200 வருடங்கள் தமிழ் ஆதரவற்றிருந்தது. சமணர் காலம் :- இவர்களிடம் தமிழ் பரிபாலனம் பெற்றது. ஏறக்குறைய 300 வருடம். சிந்தாமணி, வீரசோழியம் தோன்றிய காலம். இதிகாச காலம் - அப்பால் முன்பின் 800 வருடம் கொண்ட காலப்பிரிவு. நைடதம், பாரதம், இராமாயணம். இரகுவம்சம் என்பன தோன்றிய காலம். வடமொழியிலிருந்து புராணம் இதிகாசம், சமய சாஸ்திரம், தலமான்மிட, கணிதம், சோதிடம் முதலாயின தமிழிற் பெருமளவு இடம்பெற்ற காலம். அ வீரராமன், புகழேந்தி, ஒட்டக்கூத்தர், கம்பர், அம்பிகாபதி, தமிழ்த்தண்ா. வில்லிபுத்தூரார், வரந்தருவார், கச்சியப்ப சுவாமிகள், சேக்கிழார், அரசகேசரி செகராசசேகரர் முதலிய தமிழ் வல்லோர் தலைப்பட்ட காலம். ஆதீன காலம் :- சித்தாந்த சமய சாஸ்திரங்கள், கோவிற்புராணம், இலக்கணக்கொத்து, நன்னூல் விருத்தி தொல்காப்பியச் சூத்திர விருத்தி, காஞ்சிபுராணம். திராவிட மகாபாஷ்யம் முதலியவற்றின் காலம். குமர குருபரசுவாமிகள், வைத்தியநாத நாவலர். குகை நமச்சிவாயர், ஞானப்பிரகாச சுவாமிகள் பரஞ்சோதி முனிவர் முதலியவர்கள் வாழ்ந்த காலம்." எனச் சி.வை. தாவின் காலப்பகுப்பு அமைகின்றது. அவர் குறிப்பிடும் சமுதாய காலம், அநாதாரகாலம் என்பவை முறையே சங்ககாலம், சங்கமருவிய காலம் என்பவற்றைக் குறிக்கின்றன போல் உள்ளது. சமனகாலம் தொடக்கம் ஆதீனகாலம் வரையான பகுதி சோழ, நாயக்கர், காலங்களை உள்ளடக்கு வதாக உள்ளது. சபாபதிநாவலர் தமது திராவிடப் பிரகாசிகையில் ஈழத்து இலக்கியமாக இரகுவம்சம் ஒன்றினையே உள்ளடக்கியுள்ளார். ஆனால் சி.வை. தாமோதரம்பிள்ளையோ இரகு வம்சத்துடன் சோதிட நூல்களையும் (இவை ஈழத்துக்கேயுரியவை) அரசகேசரி, செகராச சேகரர் ஞானப்பிரகாச சுவாமிகள் முதலிய ஈழத்துப் புலவர்களையும் சேர்த்துள்ளார்.
எனினும் பின்வந்த தமிழாய்வு அறிஞர்களான முநீநிவாச ஐயங்கார்,
எஸ். வையாபுரிப்பிள்ளை முதலியோர் சி. வை. தாவின் காலப்பாகுபாட்டைக்
வெள்ளிமலை இதழ் - 10 GD சித்திரை 2011

Page 18
கண்டித்துள்ளனர். அகத்தியரதும், அவரது மாணவர்களதும் வரலாறுகள் இன்னும் தெளிவுபடுத்தப்படாத நிலையில் அவர்களை அடிப்படையாகக் கொண்டு சி.வை. தா மேற்கொண்ட ஆரம்பப் பகுதிக்காலப் பிரிவுகள் பொருத்தமற்றவை என்பதே பலரதும் கருத்தாகும். வீரசோழியம், நைடதம் முதலிய நூல்கள் அவர் குறிப்பிட்ட காலப்பிரிவினுள் அடங்காது என்பதையும் பலர் எடுத்துக் காட்டியுள்ளனர்.
சி.வை.தாவினை அடுத்து முறிநிவாச ஐயங்கார். எம். எஸ். பூரணலிங்கம்பிள்ளை போன்ற தமிழக அறிஞர்கள் தமிழிலக்கிய வரலாற்றைக் காலப்பகுப்புச் செய்துள்ளனர். அவர்களுள் எம். எஸ் பூரணலிங்கம் பிள்ளை தனது Tamil Literature (1929) 6T6Ớrgoolid gÞJT6ÓG36D.
1. சங்ககாலம் (śl. Lí 10O 6J60DJ) 2. பெளத்த சமனகாலம் Gś. Lí 10O - 6OO 66og) 3. சமய மீட்சிக்காலம் (ii. 6OO - 11OO 616OpU) 4. இலக்கிய மீட்சிக்காலம் (36l. 11OO - 14OO 660DJ) 5. ஆதீன காலம் (6). 14 OO - 17OO 66CDU) 6. sæGSTIJLluu tu6OơTLJITLOBä5&ST6Bob (கி.பி 1700 - 1900 வரை)" என்னும்
காலப்பாகுபாட்டை முன்வைத்துள்ளார். இக்காலப்பாகுபாடு ஓரளவு தொடர்ச்சியானதாகவும் அதிகமான நூல்களை உள்ளடக்கியதாகவும் அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 5.0 தமிழ் இலக்கியவரலாறு
தமிழிலக்கிய வரலாற்றுலகில் இன்றுவரை முக்கியத்துவம் பெற்றுள்ள காலப்பகுப்பைக் கொண்ட பேராசிரியர் வி. செல்வநாயகத்தின் தமிழ் இலக்கிய வரலாறு 1951இலே வெளிவந்தது. அவர் தமிழ் இலக்கிய வரலாற்றைத் தெளிவான ஏழு காலகட்டங்களாக வகுத்தமைத்தார்.
1. Fris85T6Db (கி.பி 1ஆம் நூ.ஆ - 3ஆம் நூ. ஆ) 2. Files Deb6fluj 85.16Olb (கி.பி 3ஆம் நூ. ஆ - 6ஆம் நூ. ஆ) 3. Lueb6D6 85T6OLD (கி.பி 6ஆம் நூ. ஆ - 9ஆம் நூ. ஆ) 4. (8 FIT,pj BIT6)LD (கி.பி 9ஆம் நூ. ஆ - 14ஆம் நூ. ஆ) 5. நாயக்கர் காலம் (கி.பி 14ஆம் நூ. ஆ - 18ஆம் நூ. ஆ) 6. ஐரோப்பியர் காலம் (கி.பி 18,19ஆம் நூ.ஆ) 7. இருபதாம் நூற்றாண்டு என்பவையே அவையாகும். *
இறையனார் களவியல் உரையாசிரியர் தமது உரையில் பண்டைக்காலத்தமிழகத்திற்கானப்பட்ட முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் தமிழ் வளர்த்த நிறுவனங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். வி. செல்வநாயகம் இச்சங்கத்தை அடிப்படையாகக் கொண்டே தமது முதலிரு காலப்பகுதிகளுக்கும் பெயரிட்டார். சங்கம் இருந்ததாகக் கருதப்பட்ட கி.பி 3ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தைச் சங்ககாலம் எனக்குறித்தார். சங்க காலத்திற் காணப்பட்ட பண்புகள் மருவிச் சென்ற அடுத்த காலப்பகுதி சங்கமருவிய காலம் என அழைக்கப்பட்டது. அடுத்துவந்த பல்லவர்காலம், சோழர்காலம், நாயக்கர்காலம். ஐரோப்பியர் காலம் என்பவை அவ்வக்காலங்களிலே தமிழகத்தை ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் பெயர்களால் அழைக்கப்பட்டன. நிறைவுப் பகுதி இருபதாம் நூற்றாண்டு எனப் பெயரிடப்பட்டது.
இதுவரை காலமும் எழுந்த இலக்கிய வரலாற்றுநூல்களில் இருந்து இந்நூல் பலவகைகளில் முக்கியமானதாகவும் முன்னேற்றகரமானதாகவும் அமைந்திருந்தது. 1. சங்ககாலம் தொடக்கம் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி (இந்நூல் எழுதப் பட்ட காலப்பகுதி) வரையான முழுக்காலப்பகுதியும் ஒரு காலப்பகுதியினுள் இன்னொரு காலப்பகுதி சென்று விடாதவாறு முழுமையாக ஒழுங்கமைக்கப் பட்டிருத்தல். வெள்ளிமலை இதழ் - 10 G2) சித்திரை 2011

2. ஒவ்வொரு காலத்தினதும் அரசியல் வரலாறு, சமயநிலை, சமூகநிலை, வாழ்ந்த புலவர்கள், எழுந்த இலக்கியங்கள் அவற்றின் பொதுப்பண்புகள் (உதாரணங்களுடன் விரிவான விளக்கம்) அப்பண்புகள் எவ்வாறு முற்காலத்தின் தொடர்ச்சியாகவும் பிற்காலத்திற்கான வழிகாட்டியாகவும் அமைந்துள்ளன என்பவை நன்கு ஒழுங்கமைக்கப்பட்டுக் கூறப்படல். 3. ஈழத்து இலக்கியங்கள் உட்படத் தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் முழுமை யாகவே உள்ளடக்கப்பட்டு இருத்தல். இந்நூலில் இடம்பெறாதனவாகப் பிற்கால இலக்கிய வரலாற்றாசிரியர்கள் புதிதாகச் சேர்த்துக் கொண்ட இலக்கியங்கள் பமிகச்சிலவே ஆகும். 4. இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருகாலப் பிரிவாகவே இந்
நூலின் காலப்பகுப்புக்கள் அமைந்திருத்தல். வி. செல்வநாயகத்திற்கு பின்னர் இலக்கிய வரலாறுகளை எழுதிய பெரும்பாலானவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்தோ, தெரிவிக்காமலோ இவரது காலப் பிரிவையே பின்பற்றியுள்ளனர். டாக்டர் சி. பாலசுப்பிரமணியம், ஆர். அடைக்கலசாமி, முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ், முனைவர். ச. சவரிமுத்து ஆகியோர் இவரைப் பின்பற்றியவர்களிற் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களின் நூல்களில் அதிக பதிப்பைப் பெற்ற நூலாக டாக்டர் சி. பாலசுப்பிரமணியத்தின் தமிழ் இலக்கிய வரலாறு விளங்குகின்றது. 2001இல் இதன் 33 ஆவது பதிப்பு வெளிவந்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூலில் சங்ககாலம் தொடக்கம் ஐரோப்பியர் காலம் வரையான முதல் ஆறு காலகட்டங்களின் பெயர்களையும் பாலசுப்பிரமணியன் அப்படியே எடுத்தாள்கிறார். (காலப்பகுப்புப் பற்றி ஆண்டுகளில் மாத்திரம் சிறுவேறுபாடுகள், உதாரணமாக வி. செல்வநாயகம் சங்ககாலம் கி.பி 1ஆம் நூற்றாண்டு தொடக்கம் 3ஆம் நூற்றாண்டு வரை எனப் பாலசுப்பிரமணியன் கி.மு 500 - கி.பி 100 என்கிறார்). இறுதிக்காலப்பகுதியாகிய ஏழாவது காலகட்டத்தை மாத்திரம் 20ஆம் நூற்றாண்டு என்பதற்குப் பதிலாக இக்காலம் என மாற்றியுள்ளமைதான் சிறிய வேறுபாடாக உள்ளது.
வி. செல்வநாயகத்தின் இலக்கிய வரலாற்று நூலின் முக்கியத்துவத்தை,
1. "தமிழ் இலக்கியப் பரப்பினைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு அதன் வளர்ச்சிக்
கட்டங்களைப் பாகுபாடு செய்து, அப்பாகுபாட்டிற்கான அடிப்படைகளும் அரசியல் மாற்றங்களை முதன்மைப்படுத்தி, ஒவ்வொரு பகுதியினையுழு சார்ந்த இலக்கியங்களின் பொருளமைதிக்கான காரணிகளைச் சுட்டி அவ்விலக்கியங்களின் வடிவ அமைதி, மொழிப்பிரயோகம் ஆகியவற்றையும் விளக்கி எழுதப்பட்ட ஒரு தமிழ் இலக்கிய வரலாற்று நூலுக்கு ஆசிரியராக அமைந்தவர். பேராசிரியர் வி. செல்வநாயகம்" எனப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் விளக்குகின்றார்.
அண்மைக்காலங்களிலே தமிழகத்தில் வெளிவரும் இலக்கிய வரலாற்று நூல்களிலே வி. செல்வநாயகத்தின் பெயர் இருட்டடிப்புச் செய்யப்படுவதைக் காணலாம். 1975இல் வெளிவந்த சோம இளவரசின் இலக்கண வரலாறு நூலின் அணிந்துரையில்,
"இலங்கையைச் சேர்ந்த செல்வநாயகம் ஆட்சிக்காலங்களின் தலைப்பில் அரிய இலக்கிய வரலாறு படைத்தார்கள்” என முனைவர் ச. மெய்யப்பன் செல்வநாயகத்தைப் பாராட்டியுள்ளார். அதே முனைவர் ச. மெய்யப்பனே 1998இல் வெளிவந்த புலவர் இரா. இளங்குமரனின் இலக்கண வரலாற்றுப் பதிப்புரையில் தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிடும்போது செல்வநாயகத்தின் பெயரை நீக்கியுள்ளார். இதே போலத் தமிழ் இலக்கிய வரலாறு
வெள்ளிமலை இதழ் - 10 G33) சித்திரை 2011

Page 19
(2002) எழுதிய முனைவர் ச. சபாஷ் சந்திரபோஷ் ஈழத்தவரில் இலக்கிய இலக்கணங்களைப் புதிய நோக்கில் ஆராய்ந்தவர்கள் எனப் பேராசிரியர்களான ஆ. வேலுப்பிள்ளை, கா. சிவத்தம்பி, அ. சண்முகதாஸ் முதலியோரைக் குறிப்பிட்டுவிட்டு வி. செல்வநாயகத்தின் பெயரைத் தவிர்த்துள்ளார். இந்த இருட்டடிப்பு மரபின் உச்சநிலையை முனைவர் சா. சவரிமுத்துவின் தமிழ் இலக்கிய வரலாறு நூலிற் காணலாம். தனது ஆறுகால கட்டங்களையும் செல்வநாயகத்தைப் பின்பற்றி,
1. 5 stil8585srepub 2. GF JG5LD56îluu E5T6Bob 3. பல்லவர் காலம் 4. (38 ftpj assroob 5. நாயக்கர் காலம் 6. 88C&J Tullu 85meoLD
என வகுக்கும் அவர் ஏழாவது காலகட்டத்தை மட்டும் தற்காலம் என மாற்றியுள்ளார். இவ்வாறு காலப்பகுப்பிற் செல்வநாயகத்தைப் பின்பற்றிய அவர் தமது நூல் முன்னுரைப் பகுதியான காலந்தோறும் தமிழில் இலக்கிய வரலாறு என்னும் தலைப்பில் எழுதப்பட்ட பகுதியில் 13 இலக்கிய வரலாற்றாசிரியர்களின் நூல்களைக் குறிப்பிடுகின்றார். இங்கு ஈழத்தவர்களான சைமன் காசிச்செட்டி, ஆ. வேலுப்பிள்ளை, கா. சிவத்தம்பி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. பின்னர் அடுத்த கட்ட முக்கியத்துவம் வாய்ந்தன என அவர்கருதிய 11 நூல்கள் பற்றிய தகவல் தரப்படுகின்றன. தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி வரையறை செய்தவர்கள் என்ற வகையில் ஈழத்தவரான சி.வை.தாமோதரம்பிள்ளை தொடக்கம் எஸ். வையாபுரிப்பிள்ளை வரை பன்னிருவரின் பெயர்கள் தரப்படுகின்றன." இந்த மூவகைப் பாகுபாட்டில் எந்த இடத்திலும் பேராசிரியர் வி. செல்வநாயகத்தின் பெயரை முனைவர் சா. சவரிமுத்து குறிப்பிடவில்லை. அவருக்குச் செல்வநாயகத்தின் நூல் கிடைக்கவில்லையோ என்ற ஐயம் எழ இடமில்லாமல் உசாத்துணை நூல் விபரப்பட்டியலில் இந்நூலையும் குறிப்பிட்டுள்ளார். எனவே காலப்பகுப்புச் செய்வதற்குத் தன்னாற் பின்பற்றப்பட்ட பேராசிரியர் வி. செல்வநாயகத்தின் தமிழ் இலக்கிய வரலாற்றை அவர் திட்டமிட்டே இருட்டடிப்புச் செய்துள்ளார் என்றே கருத வேண்டி யுள்ளது. இதேபோல முனைவர் ச. சிவசாமி தமது 19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் என்ற நூலில் இலக்கிய வரலாற்றாசிரியர்களாக ஈழத்தின் சபாபதிநாவலர், சுன்னாகம் குமாரசாமிப் புலவர், ஆ. வேலுப்பிள்ளை ஆகியோரைக் குறிப்பிட்டுவிட்டு
با ستد -سسسس--
வி. செல்வநாயகத்தை நீக்கியுள்ளார். (மறு இதழில் தெ\ட்டும்.)
8
சஞ்சிகை அறிமுகவிழாவில்
கலாச்சார
ᏪᏐ, ᎧᏡX Ꭷu)
சென்ற 10.07.2010 சனிக்கிழமை LOT3D 6) 3. OO மணியளவில் வலிதெற்குப் பிரதேசசபை சுன்னாகம் பொதுநூல் நிலைய மணி டபத்தில் சித்தாந்தனினர் 'மறுபாதி’ கவிதை சஞ்சிகை அறிமுகநிகழ்வும், மாலை 5.30 மணியினர் பினர் வலிகாமம் தெற்குப் பிரதேசசபை உள்ளூராட்சி மறு சீரமைப்பு நிகழ்ச்சித்திட்ட
வெள்ளிமலை இதழ் - 10
மாதாந்த
நிகழ்ச்சித்திட்டம் - கலை விலாசம் - கலைகளின் நிகழ்வும் நடைபெற்றன.
மறுபாதி சஞ்சிகை ஆசிரியர் குழுவினரை நிகழ்வுக்கு தலைமை யேற்ற வாழ்வகம் தலைவரும் யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரை யாளருமாகிய ஆ. இரவீந்திரனி ,
G2D சித்திரை 2011
 
 

வாசகர்களுக்கு நன்கு அறிமுகப் படுத்தினார். ஈழத்து கவிதை இயங்கியலில் மறுபாதி சஞ்சிகையின் இடமும் இருப்பும் எனுைம் தலைப்பில் உரையாற்றிய யா! கீரிமலை நகுலேஸ்வர 1 மகாவித்தியாலய அதிபர் சு. பூரீகுமரனர் சஞ்சிகை ஆற்றிவரும் பணியைப் பற்றி 6J60607 u i கவிதைக்கான சஞ்சிகைகளுடனர் ஒப்பிட்டு உரையாற்றினார். யா/ ஸ்கந்தவரோதயா கல்லூரி ஆசிரியர் ம.பா. மகாலிங்கசிவம் மறுபாதி கட்டுரைகள் பற்றிய தமது அவதானிப்புகள் பற்றி எடுத்துக் கூறினார். கவிஞரும் விமர்சகருமாகிய சி. கருணாகரனர் மறுபாதியில் வெளிவந்துள்ள நவீன கவிதைகளினி வீச்சைப் பற்றி ஒப்பிட்டு மிகவிரிவாக உரையாற்றினார். இதுவரை வெளி வந்த கவிதை இதழ்களிடையே மறுபாதி வித்தியாசமான தடத்தில் வெளிவந்து கொணர்டிருப்பதை அவரது உரை தெளிவுபடுத்தியது.
ஆசிரியர் குழு சார்பில் மறுபாதி ஆசிரியர் சித்தாந்தனி பதிலுரை வழங்கினார். இலக்கியங்களையும் இலக்கியகர்த்தாக் களையும் அறிமுகப் படுததரிக் கொள்ள விழையும் வாசகர்களுக்கு இந் நிகழ்வினி மூலம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதையிட்டு பாராட்டுத் தெரிவித்தார்.
கவலையை மறந்து சிரித்து மகிழ்ந்த சிறுநேரம்,
அடுத்து கலைவிலாசம் நிகழ்வில இரு நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன. அதில் முதலாவது நிகழ்ச்சியாக சக்தி தியாகராசாவினர் தனிநடிப்பில்
உருவான “இதந்தரும் சொந்தங்கள்" இடம்பெற்றது. முதியோரினர் வாழிக் கையில இருக்க க கூடிய ஏக்கங்களையும் அதனி தாக்கங் களையும் நிஜவாழ்க்கையினர் பிரதி பலிப்பாக நடித்துக் காட்டினார். அலைபாயும் மனதுக்கு இதந்தரும் சொந்தங்களாக இறைபக்தியும் யோகாசனச் செயற்பாடுகளையும், வாசிப்பு செயற்பாடுகளையும் இனங்காட்டி அவரது ஆற்றுகை அமைந்திருந்தது. சபையோரினர் பாராட்டை இந்நிகழ்வு பெற்றுக் கொணர்டது.
முதல் நிகழ்வில் ஏக்கமும் தாக்கமும் கவலையும் அனுபவித்த அவையினர் இவைகளை மறந்து வாய்விட்டுச் சிரித்து மகிழவும் சிந்திக்கும் வகையிலும் அரங்கக்குழு வழங்கிய நகைச்சுவைச்சித்திரம் "அசட்டுராமு”நாடகம் பிரித்துக்கூற முடியாதபடி எல்லோருடைய நடிப்பும் பாத்திர வேடயங்களும் நன்றாக இருந்தது.
நிகழ்ச்சி முடிவில் அவையினர் நேரடி விமர்சனத்தினர் போது நாடகத்தை விமர்சனம் செய்த திருமதி. பகிரதி கணேசதுரை அவர்களின் விமர்சன பாணி அபிநயச் செய்கை மேலும் சிரித்துச் சிந்திக்கக் கூ டி ய த ரீ க வரி ரு ந’ த து . மனக்கவலையை மறந்து சிந்தித்து மகிழ்ந்து மனநிறைவைத் தந்த இந்த இரு கலை நிகழ்ச்சிகளும் பாராட்டுக் குரியவை. சினிமாப்பாணி தொலைக்காட்சிநாடகங்களை பகல் இரவாகப் பார்த்து அலுத்துப் போயிருக்கும் எனி போன்ற வயது முதிர்ந்த மேடை நாடகக் கலைஞர் களுக்கு சுன்னாகம் நூல் நிலையக் கலைநிகழ்வுகள் மனநிறைவைத் தந்தன.
O
ଗରାଗtପfidded $') - 10
G5১
சித்திரை 2011

Page 20
சிறுகதை “னனது சாம்பலையாவது
பிறந்த மணிணில் போட்டுவிடு”
கடவுளே! எங்களை ஏன் இப்படி படுத்தாதபாடு படுத்துகின்றாய். பறநத ஊரைவிட்டு, சேர்த்த சாமான்சட்டுகளை விட்டு, உயிரைக் காப்பாற்ற ஓடிவந்தோம். அங்கேயே செத்துத் தொலைந்திருந்தால் நல்லதாய் இருந்திருக்கும். உயிருக்குப் பயந்து இப்போ ஓயாத துன்பமாய் இருக்கின்றது” என்று கந்தையா மாஸ்ரரின் மனைவியார் கமலம் வீட்டிற்குள் அழும்சத்தம் கேட்டது. நான் மாஸ்ரருடன் கிராம சேவகரிடம் போவதற்காக அவர் வீட்டு வளவிற்குள் காலடி வைத்தேன், போகலாமா, இல்லையா என்று கொஞ்சநேரம் தாமதித்தேன். வீட்டு முற்றத்தில் நின்ற நாய் எனக்கு மிகவும் காரசாரமாக குரைத்து வரவேற்பு செய்தது. யார் என்று பார்க்க மாஸ்ரர் வெளியே வந்தபோது என்னைக் கண்டார். உடனே “வா முருகேசு” என்று அன்பாக அழைத்தார். அவருடைய குரலில் சந்தோஷம், துக்கம் என்பனவற்றைக் கண்டுபிடிக்க முடியாது. மிகவும் நிதானமாகவும், சிந்தித்தும் கதைப்பார். நான் அவருடன் உள்ளே சென்றேன். நாற்காலியைக் S S. ჯ2zჯა. ჯ22xxx ჯჯოლიო?!ჯ2ჯჯ காட்டி “கொஞ்சம் இருந்துகொள் உடைமாற்றிக் கொண்டு வருகிறேன்’ என்றார். -- சிறிது தூரம் சென்றவர் நின்று மனைவியைக் கையால் சுட்டிக் காட்டிவிட்டு “முருகேசு நீ சுன்னா கத்தில் கடையைப் பீர்க்க வேண்டும் என்று எப்பவோ பலாலியை விட்டு வந்துவிட்டாய். உனக்கு சுன்னாகம் தான் சொந்த ஊர் மாதிரி. உனது தோட்டக்காணிகள் மட்டும் தான் அங்கு இருக்கின்றன. ஆனால் எமக்கு aaya Sax எல்லாம் அங்கு தான்’ என்றார் மாஸ்ரர். மனைவி கமலம் தலையில் கைவைத்தபடி அழுதுகொண்டே இருந்தார். என்ன விடயம் என்று கேட்கவும் மனதாய் இருக்கின்றது. ஒரு புறம் பயமாயும் இருக்கின்றது. நான் பேசாமலே இருந்துவிட்டேன்.
“கமலம்! நானும், முருகேசும் கிராம சேவகரிடம் போய்விட்டு வருகின்றோம். ‘மிஸ் போசுன் நெவர் கம் சிங்கிள்’ எல்லாம் குடும்பமாய்ச் சேர்ந்து வரும். கவலைப்பட்டு என்ன? அழாமல் இரு. அவன் அடுத்த கப்பலில் வந்து வேலைக்குப் போவானி. என்ன செய்கின்றது. நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். நாங்கள் நினைத்தது எல்லாம் நடக்குமோ? எனக்கு அமெரிக்கா விடயத்தில் நம்பிக்கையில்லை. அதனால் தான் பேராதனைக்கும் விண்ணப்பம் அனுப்புவித்தனான். ‘ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும்’ என்பது ஒரு உண்மையான பழமொழி. அங்கு என்றாலும் போய் படிக்கட்டும்.” என்றார்.
வெள்ளிமலை இதழ் - 10 சித்திரை 2011
 
 
 

நான் அவருடன் நல்லமாதிரி இருப்பதால் அவருடைய விடயம் எல லாம் எனக் கு தெரியும் . அவருடைய மூத்த மகன் பிரவுக்கு SÐ GLD saĖ 35 FT 6f6ð Misc Jọ &É ab புலமைபரிசில் கிடைத்தது. நிலைமை காரணமாக அது மிகவும் பிந்தி வந்தது. பொடியன் கொழும்பிற்குப் போவதற்கு விமானமும் ஓடவில்லை. எல்லாம் தாமதமாகிவிட்டது. இதனால் விடயம் கைநழுவி விட்டது. யாருக்கும் அது சாதாரண விடய மல்ல. அதற்குத் தான் அந்த தாய் உள்ளம் கதறி அழுதிருக்க வேண்டும் என்று மாஸ்ரரின் கதையிலிருந்து புரிந்து கொண்டேன். நான் அதைக் கேட்டு அவர்களை மீண்டும் ஒரு தடவை மனம்வருந்த வைப்பதா? இல்லையே.
“வா முருகேசு கிராம சேவகர் அலுவலகத் தரிற் குப் (3ust (36ol TLö ' 67 60j g3 DT 6mö Jsi அழைத்தார். இருவரும் ஆளுக்கொரு சைக்கிளில் சென்றோம். அங்கு யாரும் இல்லை. அறிவித்தல் பலகையில் 'அரசாங்க அதிபரின் நிவாரணம் சம்பந்தமான கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றுவிட்டார்’ என்று எழுதியிருந்தது. இருவரும் திரும்பினோம். அப்போ நேரம் பத்து மணி, சரியான சூரிய வெப்பம், மாஸ்ரரின் மனம் நிறைய துன்பமும், ஏமாற்றமும், ஊர்பற்றிய கவலை. அவர் மிகவும் வசதியாக வாழ்ந்த மனிதர். வழியில் வரும் போது சிவன் கோவில் வந்தது. கோவிலுக்கு முன்னால் சைக்கிளை நிற்பாட்டி “முருகேசு கோவிலைப் பார்க்க நிம்மதியாக இருக்கின்றது, ஒரு பதினைந்து நிமிடம் ஆறியிருந்து விட்டுச் செல்வோமா? தாகமாய் இருக்கு, கொஞ ச நீரும் குடித்துவிட்டுப் போவோம்’ என்றார். ஏதோ மனச் சுமைகளை இறக்கப் வெள்ளிமலை இதழ் - 10
போகிறார் போலும் என்று நினைத்து
நானும் “ஓம்’ என்றேன்.
கோவில் வெளிவாசல்
மிகவும் பெரியது, பெரிய மரங்கள்
நின்றன, மிகவும் புனிதமாக வைத்திருந்தனர். நல்ல காற்று வீசியது. ஆரோ பற்றவைத்த
ஊதுபக்தி எரிந்து, நறுமணம் வீசியது. இரு வரும் கால் கழுவிக் கும்பிட்டுவிட்டு, உண்டியலிலும் பணம் போட்டுவிட்டு, நல்ல இடமாகப் பார்த்து அமர்ந் தோம் . அதுவும் ஒரு சொர்க்கத்தின் அனுபவமோ என்று நினைத் தேன். “வீட் டில் இரு நாட்களாக ஒரே அழுகையும், கலக்கமும். அவளோட சேர்ந்து நானும் அழமுடியுமோ. ஆறுதல் கூறுகின்றது தான் எனக்கு வேலை. உள்ளுக்கு ஒரே சோகம். எங்களுக்கு மட்டுமோ, இந்த குடா நாட்டில் பிறந்த எல்லோருக்கும் ஒவ்வொரு விதத்தில் துன் பங்கள் தான் . உனக் கு விளங்கியிருக்கும் கமலம் ஏன் அழுதவள் என்று. அவளுக்கு அமைதியைத் தவிர துன்பமான அனுபவங்கள் கிடையாது. வாகீசர் வளர்த்த விதமும் அவளுடைய வசதியும் உனக்கு தெரிந்த ஒன்று தானே.” என்று பட்டும்படாமலும் மாஸ்ரர் கூறினார்.
மனைவியும் வசதியான இடத்தில் பிறந்து வளர்ந்தவர் தான். ஆனால் இவர் அவளை விடப் பல மடங்கு வசதியான இடத்தில் பிறந்தவர். இருக்கின்ற வளவு மட்டும் பன்னிரண்டு பரப்பு மூன்று பக்க மதில், பின் புறம் தகரம், இரண்டு கிணறுகள். வீட்டிற்கு ஒன்று, தோட்டத்திற்கு ஒன்று. வருடம் முழுக்க மரக்கறி வகைகளும், கரை வகைகளும் உற்பத் தி செய்யப்படும். வளவின் கரையோரமாக தென்னை மரங்கள் நாட்டப்பட்டி ருந்தன. அதை விட பலா, ஈரப்பலா,
Di. 6) 650D மற்றும் ப 6IE601
○

Page 21
ஒரே தோப்பு. இளநீருக்கோ குறை வில்லை. இப்படிப் பட்ட மனிதன் இடம்பெயர்ந்து கஷடப் படுகின்றார். இதை மனதில் வைத்துக் கொண்டு “மாஸ் ரர் நீங்கள் எவ்வளவு வசதியாக வாழ்ந்த மனிதர். இங்கு வந்து இப்படி வாழவேண்டி யுள்ளது.” என்றேன். அதற்கு அவர் வசதியில் லாவிட்டாலும் பரவாயில்லை, நிம்மதியாய் கஞ்சி குடிக்கக் காலம் விடுவதாய் இல்லை. ஒவ்வொரு நெஞ்சிடியாய் வந்து கொண்டிருக் கின்றது. விறகு தட்டுப்பாட்டால் குக்கர் வாங்கினால் மண்ணெண் ணெய் தட்டுப்பாடு வருகிறது. காஸ் அடுப்பு வாங்கினால் காஸ் தட்டுப்பாடு வருகிறது. மின்சார அடுப்பு வாங்கினால் அது நினைத்த நேரம் வந்து போகிறது. அதை நம்பி பிரயோசனம் இல்லை. இரவில் தீப்பெட்டியும், விளக்கும் ஆயித்தமாக வைத்திருக்க வேண்டியுள்ளது. போர் முனையில் உள்ளவர்களுக்கு ஒரு விதமான உயிர் வெறுப்பு, நாட்டில் உள்ளவர்களுக்கு படுகின்றபாட்டால் உயிர் வெறுக் கின்றது. ஏதோ விடியாத வாழ்க்கை’ என்றார்.
“மாஸ்ரர் பாருங்கோ எனது தங்கையின் மகள் விவாகம் செய்து ஒரு வருடமாயும் கணவனிடம் போக முடியாது கொழும் பில் நிற் கின்றாள். உங்களுக்குத் தெரியும் வீரகத்தியின் மகள் பேசின மாப் பிள்ளையை கலி யாணம் செய்யாது வேறு ஒருவனையாம் செய்து போட்டாள் ஐயோ! கடவுளே! வெளிநாட்டில் எங்களின் ஆட்கள் படுகிற பாடு சொல்ல முடியாது. அங்கே இருக் கற நடைமுறை எங் களின் கலாச்சாரத்திற்கு ஒவ்வாது. என்ன செய்கிறது. இதுவும் ஒரு காலத்தின் கோலம் தான்.” என்றேன் நான்.
“கலாச்சார விடயங்கள் போகட்டும். போன பிள்ளைகள் நூற்றுக்கு எண்பது வீதம் செய்கிற வேலைகள் நீ அறிந்திருப்பாய். எனக்கு என்னிடம் படித்த ஒருவன் கடிதம் எழுதியிருந்தான், ‘சேர் வேலை செய்யும் தோட்டத்தில் முதலாளி போத்தலில் நீர் கொண்டு வந்து குடிப்பான், என்னை தோட்டத்தில் குழாய் நீரைக் குடி என்பான்’ என்று. எப்படி இருக்கு, எமது பிள்ளைகள் எவ்வளவு வருந் தி வேலை செய்கின்றார்கள். அதுக்காக நாம் வெளிநாட்டை குறை கூற முடியாது. வரதராஜன் என்ற எழுத்தாளரை உனக்குத் தெரியுமோ?” என்று கேட்டார் மாஸ்ரர். நான் “ஆம், நான் பாடசாலையில் அவரது கட்டுரைத் தொகுப்பு படித்துள்ளேன்’ என்றென்.
“அவர் எழுதியுள் ளார், இந்தியாவின் பெரும் பட்டிணங் களிலும், சில வெளிநாட்டுப் பட்டிணங் களிலும் தமிழர் கூலிகளாகவே வேலை செய்கின்றனர் என்று. இன்று உலகம் முடுழுவதும் இலங்கைத் தமிழர் தான் அந்த இடத்தைப் பிடித்துள்ளனர் போல இருக்கு. அதைவிடு எல்லாம் தொழில் தான். அதை இங்கேயே செய்யலாம். இங்கு சிலர் கெளரவம் பேசுவது தான் கூடாது. எங்களின் இந்த தொழில் பாகுபாடு இல்லாதொழியவேண்டும். இப்போ இங்கே தொழிலாளிகள் தட்டுப்பாடு உண்டு” என்றார் மாஸ்ரர்.
“மாஸ்ரர் நான் பரம்பரை வியாபாரி. எழுபதுக்குப் பின்பு நான் அரசாங்கவரியைவிட வேறு பல வரிகளும் கட்டிக்கொண்டு தான் வருகின்றேன். சந்தர்ப்பம் வரும் போது மக்களிடம் தான் அதைப் பெறுவேன். மக்கள் தான் அந்த வரியைக் கட்டுகின்றார்கள். ஒரே நேரத்தில் பலருக்கு வரி கட்டியுள்ளேன். இன்றும்
வெள்ளிமலை இதழ் - 10
சித்திரை 2011

கப்பலுக்கு என்று ஒரு தனி விலை இருக்கின்றது. அப்பப்பா! எப்போ நாம் உரிய விலைக்கு சாமான்கள் விற்போம், மக்கள் வாங்குவார்கள் என்று அந்த கடவுளுக்குத் தான் வெளிச்சம். உலகில் அதிகவிலை கொடுத்து பொருள் வாங்கி சாதனை செய்தவன் குடா நாட்டுத் தமிழன் தான்’ என்றேன்.
அதற்கு மாஸ்ரர் “முருகேசு கடவுள் எங்களை சாத்தானுக்கு ஒப்பு கொடுத்துவிட்டார் போல இருக்கு. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு துன்பம் பதினாறு, பதினேழு வயதிலை தாயாகியிருக்கின்றார்கள். இவர்களின் வாழ்க் கையைச் சிந்தித் துப் பார். பாவங்கள் யாழ்ப்பாணத்தில் இப்போ புதுப்புது வாழ்க்கை முறைகள், சமூகப் பிரச்சனைகள், வெளிநாட்டிற்கு கணவனை அனுப்பிவிட்டு இங்கு பலரும் சிரிக்கக் கூடியவாறு சில
பெண்கள் வாழ்க்கை நடத்து
கிறார்கள். நான் அறியக்கூடியதாக நாடு திரும்பிய இரண்டு கணவன்மார் துயரம் தாங்காது தற்கொலை செய்து கொண்டனர். நான் யாரையும் குறை கூறவில்லை. எமது சமுதாயத் திற்கு ஏற்பட்ட அவலத்தைத் தான் கூறுகின்றேன்’ என்றார்.
“எல்லா சுகமும் வேண்டும் என்று எதிர்பார்ப்பது மனித இயல்பு. கூழுக்கும், மீசைக்கும் ஒரே நேரத்தில் ஆசைப்படக்கூடாது’ என்றேன் நான். “அதுவும் சரி தான்”
என்று மாஸ் ரரும் நான் கூறியதை ஏற்றுக் கொண் டார். “மாஸ்ரர் உங்களின் மகனுக்கு புலமை பரிசில் கிடையாது போனமாதிரி எத்தனை பேருக்கு நேர்முகப் பரீட்சைக்குப் போக முடியாது போனது, எத்தனை பேருக்கு பரீட்சை எழுதமுடியாது போனது. நெருங்கிய உறவினரின் வெள்ளிமலை இதழ் - 10
விவாகப் போன்றவற்றிற்கு போகமுடியாது போனது, ஏன் தாய் தந்தையருக்கு ஈமைக் கிரிகை கூட செய்ய முடியாது போனது. இதெல்லாம் சாதாரண இழப்புகளா? இத்தனைக்கும் எமது சனம் முகம் கொடுத்து, தாங்கிக்கொண்டு, வாய்மூடி மெளனியாக வாழ்ந்து வருகிறார்கள். பழக்கப்பட்ட அடிமைகளாகிவிட்டோம்” என்று மிகவும் உணர்ச்சிவசமாக கூறினேன்.
அதற்கு மாஸ்ரர் “பிறந்த ஊருக்கு போக முடியாது, சரி இருக்கவிடவேண்டாம், சும்மா பார்த்து வரக்கூடவா முடியாது. என்னைப் போல எத்தனை ஆயிரம் மக்கள் இரத்தக் கண்ணிர் சிந்திக்கொண்டு வாழ்கின்றனர். சொந்தப் பூமியை இழந்து வேறு ஊருக்குச் சென்று அவலவாழ்க்கை வாழுகின்றார்கள். எத்தனை கோயில்கள் பூட்டியிருக் கின்றன. எத்தனை ஊர்கள் காடாகி நரிகள் குடியேறிவிட்டன. எப்போ நாம் அங்கு செல்வது? எப்படி அவற்றை திருத்தி வாழப்போகின்றோம்? ஊர் மக்கள் எல்லாம் சிதறிப் போய் விட்டார்கள். புது உலகம் காண நாம் இருப்போமோ தெரியாது. இப்பிறப்பில் செய்தது நான் அறியேன், முற்பிறப்பில் செயப் த வினையோ அல்லது முன்னோர் செய்த வினையோ இப்போ மூண்டு எரிகின்றது. இறைவன் சிறந்த நீதிமான், ஒரு துளி கூட பிசகாது மிகவும் சரியாக கணக்கு தீர்ப்பார்” என்று மனசார கூறினார்.
“மாஸ் ரர் நாங்கள் வரி கட்டவும், அடிபடவும், அறாவிலை கொடுக்கவும், ஏமாற்றுப்படவும், வருந்தி, வருந்தி வாழவும் தான் பிறந்தோமோ என்று நினைக்கின்றேன். எத்தனை விதவைகளை, அனாதை களை, அங்கவீனர்களை, மனநோயா ளர்களை இந்த நிலைமை உருவாக்கி யுள்ளது. என்னென்ன விதமாய்
சித்திரை 2011

Page 22
எல்லாம் பிள்ளைகளை பறிகொடுத் துள்ளனர், பெண்கள் கணவன் மார்களை பறிகொடுத் துள்ளனர், எல்லோருக்கும் இந்தக் கடவுள் தான் வழிகாட்ட வேண்டும்’ என்று கூறிக்கொண்டு எழுந்தேன். மாஸ்ரரும் எழுந்தார். இருவரும் புறப்பட்டோம். வீதிக்கு வரும் போது தொடரணிக்காக வீதி மூடப்பட்டிருந்தது, இருவரும் ஒரு மரத்தின் கீழ் நின்றோம். அப்போது மாஸ்ரர் “இதுவும் எமக்கென்று வந்த ஓர் ஏற்பாடு, பகலில் நான்கு தரம் பாதையடைப்பு, இரவில் நான்கு மணி வரை ஊரடங்கு, அப்போது கொலை ஞருக்கும், கொள்ளை யருக்கும் கொண்டாட்டம். எல்லாம் எம்மை வேதனைப்படுத்த வந்த சோத னைகள்’ என்று கூறினார். இருபது நிமிடங்களுக்குப் பின்பு பாதை திறக்கப்பட்டது. இருவரும் பிரயா ணத்தைத் தொடர்ந்தோம்.
மாஸ் ரரின் வீட்டிற்குள் புகுந்தோம் , இருவரும் வரும் சத்தத்தைக் கேட்டு, கமலம் கதவை திறந்தாள். அவள் சிறிது மகிழ்ச்சி யோடு காட்சியளித்தாள். கையில் ஒரு நீளக்கடிதம் வைத்திருந்தாள். அதை மாஸ்ரரிடம் கொடுத்து, “பிரபுவுக்கு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் MSC செய்ய இடம் கிடைத்துள்ளது” என்று கூறினாள். பின்பு என்னைப் பார்த்து “முருகேசு அணிணை!
இருங்கோ, தேசிக்காய் தண்ணிர் குடித்துவிட்டுப் போகலாம்” என்று கூறினாள்.
நான் பார்த்துக் கொண்டி ருக்கும் பொழுது மாஸ்ரரும் அருகில் அமர்ந்திருந்தார். அப்போது வீட்டு வாசலில் முச்சக்கர வண்டி ஒன்று வந்துநின்றது. அதில் மாஸ்ரரின் தங்கையார் தாயாரை அழைத்து வந்தார். அவருகி கு 6) uigi தொண்ணுற்றிரண்டு. மகனைப் பார்ப்பதற்கு என்று வந்துள்ளார். வெள்ளிமலை இதழ் - 10
CAD"
“என்ன? அம்மா! வந்துள்ளிர்கள். என்ன விஷயம்?’ என்றார் மாஸ்ரர்.
“எனக்கு ஒரு மாதிரியாக இருக்கின்றது. காலம் நெருங்கிவிட்டது போல் தெரிகிறது. எனக்கு ஏதாவது நடைபெற்றால் எனது இறுதி நிகழ்வை ஊரில் நடத்த முடியுமா?”
“இல்லை அம்மா. விரைவில் போர் முடியும் என்கிறார்கள். எனது கருத்தின் படி சித்திரை, வைகாசி ஆகும். இப்போ மாசி மாதம். எல்லாம் இப்போ சரிவரும் என்று கூறுவதற் கில்லை. 2010 அளவில் தான் சரிவரும் என நினைக்கின்றேன்.”
“அதற்கு பத்துமாதங்களுக்கு மேல் இருக்கிதே. அதுவரை நான் இருப்பேனா? இல்லையேல் எனது சாம்பலையாவது பிறந்த மண்ணில் போட்டுவிடு.”
“நிச்சயமாக இருப்பீர்கள். நீங்கள் தொண்ணுற்றாறு வரை இருப் பீர்கள் என்று பேரனின் காண்டத்தில் கூறியுள்ளது அல்லவா?” என்றார் மாஸ்ரர். மாஸ்ரரின் மனைவி எல்லோருக்கும் தேசிக்காய் தண்ணிர் வழங்கினார். மாஸ்ரரின் தாயாரும், தங்கையாரும் வீட்டிற்குள் சென்றனர். “என்ன முருகேசு அம்மா
இப்படி கூறுகின்றார்? எனது மனம் இருக்கிற நிலைமையில் அம்மாவின்
சித்திரை 2011
 
 

கதையை கேட்க மனவருத்தமாக வுள்ளது. சொந்தவீட்டில் இறக்க
விரும்புகிறார். அங்கே வீட்டில் இராணுவம் இருப்பதாக கேள்வி. இதெல் லாம் நடைமுறைக் கு
சாத்தியமா? என்று யோசிக்கின்றேன்.” என்றார் மாஸ்ரர்.
“இது பாருங்கோ எங்களின் கையில் இல்லை. சூழ்நிலை சரியாக இருந்தால் செய்வேன் என்று கூறுங்கள். எதற்கும் நான் மாலை வருகின்றேன். இப்போது அவசரமாக செல்ல வேண்டியுள்ளது.”
என்று கூறிக்கொண்டு நான் வெளியே வந்துவிட் டேண் . ஆனால் மாஸ்ரருக்கோ மேலும் மேலும் துன்பம் கூடிக் கொணி டே செண் றது. இடம்பெயர்ந்த பலாலிப் பிரதேச மக்களின் நிலைமையை பற்றி மிகவும் மனம் வருந்துகின்றார். மனிதரின் இறுதி ஆசை கூட நிறைவேறுவதாக தெரியவில்லை. வீட்டிற்குச் செல்ல முடியாவிட்டாலும் ஊருக்காவது செல்லமுடியுமோ தெரியாது. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
O
(உருவில் பிரதேச கலாசார சிறுகதைப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற சிறுகதை
(யாவும் கற்பனை)
S பல்லவி
தொல்லைகள் நிறைந்த வாழ்வு வேண்டாம் தொலைந்து போகட்டும் நாட்டினிலே ச்ாந்திச்மாதானம் என்றும் நிலவட்டும் முலிலையில் ಕ್ಲಿಕ್ವೈ மலர் போல் வாசம் எங்கும் வீசட்டும் - இங்கு ಟ್ವಿಟ್ಲೀ மக்களும் ஒற்றுமையாக சர்ந்து வாழட்டும்(தொல்லை)
சரணங்கள் பார்ப்போரை எல்லாம் பரவசமூட்டும் அழகிய தீவடா அங்கு தீமைகள் அழிந்து நன்ம்ைகள் பிறக்க செய்வோம் நாமடா ஒற்றுமையாக வாழ்ந்து வந்தால் நாட்டுக்கு நல்லதடா -நாம் வேற்றுமை என்ற சொல்லே
எமக்கு வேண்டாம் என்போமடா (தொல்லை)
பிரிவினை வாதம் இனியும் வேண்டாம் தேசியம் மலரட்டும் அஹிம்சை என்ற சொல்லே எங்கள்ழந்திரம் ஆகட்டும் புத்தம் இந்து முஸ்லிம், கிறிஸ்தவ மதங்கள் வளர்ட்டும் -இனி எம்மதமும் சம்மதம் என்ற
சிந்தை நிலைக்க்ட்டும் (தொல்லை)
சிங்களம் தமிழுடன் முஸ்லிம் மக்களும் சேர்ந்து வாழனும் இங்கு ஒரு தாய் மக்கள் போல் நீர்ங்கள் வாழ்ந்து காட்டனும் இலங்கை மீண்டும் உல்கப்படத்தில் முததாய மாறனும - அது
எனறும ன மககளுககும செர்த்தாய் ஆகனும் (தொல்லை)
தேசிய ஒற்றுமையை வலியுறுத்தல் எனும் 56)ay ifai 2010 ariasiralat (3 சிறகுகள்) நிறுவனம் தேசிய மட் நடாத்திய பாடலாக்கப் 6ồJaff_ID 6ồL.
வெள்ளிமலை இதழ் - 10

Page 23
நீர் வெறுப்பு நோயும்
நீர் வெறுப்பு நோய் விசர் நாய் கடிப்பதனால் உண்டாகிறது. இந்த நோயால் இறந்தவர் u6of. மக்களிடையே இப்போது இந்நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருப்ப grg.b Anti rabies vaccine 6Tg) b தடுப்பு மருந்தாலும் இறப்பு குறை வடைந்துள்ளது.
நாய்க்கு ஏன் விசர் வருகின்றது? அது எதனால் மனித ருக்கோ மற்றைய விலங்கு களுக்கோ கடிக்கிறது? இந்த நோயின் குணம் எப்படிப்பட்டது? மனிதரை ஏன் குணமாக்க முடியாது? இவைகளை மக்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியது முக்கியமான விடய LDTGLb.
நாய்க்கு விசர்வரும் காரணம்:
அது எந்தவித கெட்டுப்போன
உணவுகளையோ அழுகிப்போன 600T6T6
விலங்குகளையோ உண்ணும் தன்மை உடையது.
விசர்நாய்க் கடியும்
வைசாகிருமி இருந்து நரம்ப மண்டலத் தொகுதியைத் தாக்கும். கடிவாயை வைத்தே இது சாதாரணமான நாய்க் கடியா வெறி நாய்க்கடியா என்பதைப் புரிந்து கொள்ள முடியும். சாதாரண நாய் கடித்தால் 4, 5 பல்கள் படும். வெறி நாய் கடித்தால் 'ஆ' வென கடிக்கும். இதனால் வெட்டும்பல், வேட்டைப்பல், கடைவாய்ப்பல் என7-8 பற்கள் படும். சாதாரண நாய் கடித்தால் இரத்தம் வெளிவரும். ஆனால் வெறி நாய் கடித்தால் இரத்தம் வெளியே வடியாது உள்வாங்கி ஓடும்.
விசர் நாய் கடிக்காரணம்:
அந்த நாய் கடித்து விடும் என்ற காரணத்தினால் சிலர் அவற்றை தடிகளாளோ, கற்களாலோ
தே. பத்மாவதி
அத்தோடு அதன் உடலில் உள்ள குட்டை, W
புணர்கள் மட்டும் அல்லாது சகல நாயின் தலையில் ஏற்படும் ஜலதோசம், பித்த நீர் கசிவினாலும் நாய்க்கு நீர் வெறுப்பு நோய் உண்டாகும். இந்த நோய் காரணமாக நினைப்பும் மறப்புமான மாறாட்டத்தன்மை ஏற்படும். தன் வாலை கூட தூக்கி அசைக்க முடியாத நிலை ஏற்படும். தள்ளாடித் தள்ளாடி நடந்து கடைசியில் இறந்து விடும்.
நீர் வெறுப்பு நோயை நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் Human rabies என்று குறிப்பிடுவார். இதனை தடுக்க A.R.V கொடுப்பார்கள். நாயின் எச்சிலில்
வெள்ளிமலை இதழ் - 10
 
 
 
 
 
 

தாக்கி கொல்ல முயற்சிப்பர். அத்தோடு வேறு நாய்களும் துரத்திக் கடிப்பத னாலும் அந்த நாய் வெறிகொண்டு கோபத்துடன் தப்பி ஓடும்போது எதிர்படும் மனிதரையோ விலங்கு களையோ கடிப்பதுமுண்டு. விசர் வந்தால் எல்லா நாயும் கடிப்பதில்லை கடிக்காத நாயும் விசர் வந்தால் கடிப்பதுண்டு. வழமையான இரத்தச் சுற்றோட்டத்துடன் நாய் விசமும் சேர்ந்து சிறுநீரகத்திற்கும் (Kidney) போய்ச்சேருகிறது. மனிதவுடலில் கழிவகற்றியான இச்சிறுநீரகத்திற்கு இரத்தம் வரும்போது கழிவுப் பதார்த்தங்களாகிய (Urea) யூரியா, யூரிக்கசிற் (Uricacid) எனும் 2 lůu (Nitragen) 6055GBgreg6jí எனும் வாயு இவைகளை சிறுநீர் குழாய் மூலம் வடித்துச் சலப்பைக்கு அனுப்புகிறது. இச்சிறு நீரகங்க ளிலிருந்து சலப்பைக்குச் செல்லும் சிறுநீர்க்குழாய் 11cm நீளமு டையது. இத்தோடு இணைந்துள்ளது, தொப்புளாம் கொடி இதைச் சித்தர்கள் அக்கினிக்கலை என்பர். இத்தொப்புளாம் கொடிதான் தாய்க்கும் சேய்க்கும் ஆதாரம். இந்தக் கொடியில் தொப்புளுக்கு நேரே இந்த நாய்விசம் வந்து தங்கியிருக்கும். அது குறிப்பிட்ட சிலநாட்களிலோ, சில மாதங்களிலோ, ஒருசில வருடத்திலோ குளிர் உணவு அல்லது குளிரில் நிற்றல், நீரில் கடுமையாய் நாம் அலம்பும் வேளை யில் குளிர் சன்னியாக அல்லது சுகசன்னியாக தொடங்கும்.
இந்நீர் வெறுப்பு நோயின ஆரம்ப அறிகுறிகளாக வெளித்தோற்ற மில்லாத குளிர்க்காய்ச்சல், சோர்வு பின்தலை நரம்பு வலித்தல், நோவு. உள்ளுரவிதையை வாங்கி வலித்தல், நாரி நிமிர வெட்டாத பிடிப்பு இவை ஆரம்பித்து 7,8 மணித்தியாலங் களுக்குள்ளாயின் சித்தமருத்துவ முறையிலோ மற்றைய மருத்துவ முறையிலோ நோயைக் குணமாக் கலாம். குறிப்பிட்டநேரத்தின்பினநாயின் நோயை மாற்ற முடியாத நிலை யேற்படும். இந்த நிலையேற்பட்ட பின் தோன்றும் குணம் குறிகளாவன. மலசலம் வெளியாகாமை, நெஞ்சடைப்பு. கண்சிவத்தல், களைப்பு, வெயிலில்லாத இருட்டறை விரும்பல், தாகம், உதடு, நெஞ்சு, தொண்டை உலர்தல், தண்ணிரைக் கண்டு பயப்படும் நிலை, மூச்செடுக்க கஷ்டப்படும் நிலை, மயக்கமும் தெளிவும் மாறிமாறிவருதல், நினைப்பும் மறப்புமானநிலையேற்பட்டு நோயாளி இறுதியில் இறந்து விடுவார்.
இந்நோயானது ஆரம்பத்தில் சிறுநீரகத்தைத் தாக்கும். அந்த நிலையில் நாரிப்பிடிப்பு, உட்காய்ச்சல் அடிக்கும். இந்நிலையில் நோயாளியைக் குணப்படுத்த முடியும். அதன் பின் 7,8 மணித்தியால நேரத்தின் பின் அது சுவாசத்தைத் தாக்கும். அப்போது நெஞ்சடைக்கும். மலசலம் வெளியா காமை, தாகம், உதடு, நெஞ்சு உலர்தல் ஏற்படும். இதன்பின் அவ்விசம் நரம்பு மண்டலத்தை தாக்கி அதன்பின் மூளை அதாவது மையநரம்பைப் பாதிப்படையச் செய்யும். அந்நிலையில் கண்சிவத்தல்,
வெள்ளிமலை இதழ் - 10
சித்திரை 2011

Page 24
வெளிச்சமில்லாத இருட்டறை விருப்பு. தண்ணிரைக் கண்டு பயப்படும் நிலை, மறதியும் நினைப்புமான நிலை, மயக்கமும் தெளிவுமான நிலை. இதுவே நோய் முதிர்ச்சி நிலை. வைகளோடு நோயாளி இறந்து விடுவர்.
இந்த நாய் கடித்தால் மட்டுமில்லாது வேறு புண்களில் இந்த நாயின் எச்சில்பட்டாலும் லைசா கிருமியானது புண்களூடாக உட்சென்று நீர் வெறுப்பு நோயை உண்டாக்கும். இதனைத்தடுக்க கிருமி நீக்கிமூலம் புண்ணைக் கழுவிசுத்தம் செய்து புண்மாறும் வரை நோய்தடுப்பு மருந்து கொடுத்து புண் மாறிய பின் தொப்புள் கொடியிலுள்ள விசத்தை மூலிகை மற்றும் மருந்துகளால் சலப்பைக்கு இறங்கச் செய்து அதன்பின் சலத்தோடுநாய் விசத்தை வெளியேற்றி gj6OOTLDIT666DITLib. உடலிலுள்ள உறுப்புக்கள், நரம்புகள் அதிரினல் சுரப்பி சிறுநீரகம் சுவாசம் சகல பாகங்களையும் பேதி மற்றும் மருந்துகளாலும் சல மூலம் மல மூலம் வெளியேற்றி நோயாளியை பூரண குணமாக்கலாம். இது சித்த ஆயுள்வேத வைத்தியமுறையில் வெற்றிகரமாய் மாற்ற முடியும். முக்கியமாக இந்த மருத்துவ முறையிலே நோயாளி வைத்தியர் சொல்லும் பத்தியத்தை மிக மிக கவனமாய் கடும் பத்தியமாய் இருந்து
அவரின் அறிவுரையின்படி நடக்க வேண்டும் அல்லது நோயாளியும் கஸ்ரப்பட்டு வைத்தியனும் குறை கேட்க வேண்டிவரும். எனவே இவ் வைத்தியம் முடியும்வரை பத்தியம் கடுமை. நோயை மாற்றிய பின் பத்தியத்தை விடுத்து நல்ல்ெண்ணை முழுக்கு ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி இளநீர், வாழைப்பழம், பூசணிக்காய், கறி இவை பத்தியத்திற்தகாத உணவுகள். இவற்றில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு உணவாய் சாப்பிடக் கொடுத்து நோயாளியின் உடலில் நாய்விசம் உள்ளதா எனப்பரிசோதித்து நோயாளிக்கு எவ்விதப்பிரச்சனையும் இல்லை என உறுதி செய்து கொண்ட பின்னர் எவ்வித சாப்பாடும் சாப்பிடலாம்.
நீர் வெறுப்பு நோயானது நாய்களுக்கு மட்டுமல்லாது நரி பூனை,காட்டுப் பூனை, குரங்கு, வெளவால் போன்ற விலங்குகளுக்கும் உண்டாகும். இந்நோயுள்ள நாய்க்கு வாயில் வீனிர் மோர்போல் வடியும். மாறுபட்ட குரலில் கூச்சலிடும், குரைக்கும். இக்குணமுள்ள நாயைக் கண்டால் அதன் மேல் நீரூற்றிவிட்டால் 4 நாட்களுக்குள் நாய் இறந்துவிடும். இப்போது நாய்களுக்கு தடையுசி போடுவதால் இந்நோய் ஏற்படும் வாய்ப்புக் குறைந்துவிட்டது. ஆயினும், மக்களிடையே இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வு அவசியம். O
வெள்ளிமலை இதழ் - 10
சித்திரை 2011

இறைவழிபாடும் தமிழ்மொழி
உலகிற் தோன்றிய மதங்களுள் த. சண்முகநாதன் | அநாதியானது சைவமதம். இம்மதம் இந்துவெளி புத்தார் நாகரீக காலத்திற்கு முந்தியது. சைவசமயம் プー一 சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் >டکمبر
கொண்டது. சிவபெருமான் அங்கிங்கெண்ணாதபடி எங்கும் நிறைந்தவராக, எல்லாம் அறிபவராக எல்லாம் வல்லவராக அனைத்திலும் கலந்திருப்பவராக உள்ளார் என்று சைவ மக்கள் கருதுகிறார்கள். அதனால் அவரை வணங்கி உய்வு பெறலாம் என்று சைவசமயம் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறது.
எவ்வாறு சைவசமயம் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டதோ அதே போலவே தமிழ்மொழியும் அநாதியானது. அகத்திய முனிவர் தமிழை தமிழ் நாட்டிற்குக் கொண்டுவந்தார் என்ற கருத்து நிலவும் அதே நேரம் தமிழ் தென்னன் பொருப்பிலே பிறந்து முச்சங்கங்களிலே வளர்ந்து மதுரையிலே கோலோச்சிக் கொடியேற்றியதென்பர். அருளாளர்களான நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய தேவார, திருவாசக, திவ்வியபிரபந்த பாடல்களைத் தமிழ்மொழி கொண்டுள்ளது. இறைவழிபாட்டில் அவை முக்கியத்துவம் பெறுகின்றன.
முதலாம் தமிழ்ச் சங்க காலத்தின் முன்னரேயே தமிழும் - சைவமும் அல்லது சைவமும் தமிழும் தமிழ் மக்களின் இரு கண்களாகப் போற்றப்பட்டதனை எமது பழைய இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. திருமுருகாற்றுப்படை, பரிபாடல் முதலிய தமிழ் இலக்கியங்கள் இறைசிந்தனையுடன் காணப்பட்டன. கபிலர், பரணர், நக்கீரர் முதலிய சங்கப்புலவர்கள் இறைவனை தமிழ்மொழியிலேயே வாழ்த்தி வழுத்தினர்.
பன்னிரு திருமுறைகளில் அடங்குபவை அனைத்தும் இறைவன் உள்நின்று உணர்த்தப் பாடப்பெற்றவைகளாகும். இறைவனை இடையறாது நினைந்து பற்றற்ற நிலையில் சிவபெருமான் அடியை வணங்கி, அவ்வணக்கத்தின் பேறாகக் கிடைத்த அருள் காரணமாகப் பாடப்பெற்றவையே இத்திருமுறைகளாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர் மூலம் சிவபெருமான் வெளிப்படுத்திய சிறப்புக்குரியன, இத்தேவார திருவாசகப் பாடல்கள் ஆகும். "எனதுரை - தனது உரையாக" எனத் திருஞானசம்பந்தரும், பன்னிய செந்தமிழ் மாலை பாடுவித்தேன் சிந்தை மயக்கறுத்த திருவருளினை" எனத் திருநாவுக்கரசரும், "பெருமானே அருளாளாய் எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை" என்று சுந்தரமூர்த்தி நாயனாரும் கூறுவதிலிருந்து தேவாரதிருவாசகங்கள் தெய்வத்தன்மை உடையன என்பது வெளிப்படுகின்றது.
பாரதியார் தமிழ்மொழி இனிதெனப் போற்றும் அதேசமயம், பிறநாட்டறிஞர்கள் தமிழ், "பக்திச்சுவை கொண்ட இலக்கியப் பொக்கிஷம்" என்று கூறுகின்றனர். அருணகிரிநாதர் தாம் பாடிய திருப்புகழ் பாடல் ஒன்றில் "தெள்ளு தமிழ் பாடத்துணைவோனே" என்றார். இதேபோல கந்தரலங்காரப்பாடல் ஒன்றில் "மெய்மை குன்றா மொழிக்குத்துணை முருகாவெனும் நாமங்கள்" என்றார். திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்த போப் அடிகள் என்பார், அம்மொழி பெயர்ப்பின்போது ஒவ்வொரு தமிழ்ச் சொற்களுக்கும் ஆங்கிலப் பதங்களை இனங்கண்டபோது பக்தி மேலீடு காரணமாகக் கண்ணிர் சிந்தினார் என்று காசிவாசி செந்திநாத ஐயர் கூறியுள்ளதனின்று இந்த
வெள்ளிமலை இதழ் - 10 சித்திரை 2011

Page 25
அருள்வாசகங்களின் தெய்வீகத்தன்மையை எம்மால் உணர முடிகிறது. இபபாடல்களை அருளானார்கள் எம்பெருமானுடன் உரையாடி, உறவாடிய நிலையில் அருமறைகளாக - வேதவாக்காகப் பாடினர் என்பதனை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே தமிழ் வேதமான அவற்றை கோவில்களிலே இறைவனை வழிபடும்போது பாடுதல் சாலப்பொருத்தமானது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றிய இலக்கியங்கள் மூலம் சமய வழிபாடுகளில் தமிழின் வகிபாகத்தைக் காணமுடிகிறது. அப்பரும் சம்பந்தரும் '*' நூற்றாண்டின் பக்தி இலக்கியமுன்னோடிகளாக விசேடித்துக் கூறப்பட்டுள்ளனர். அப்பர் பெருமான் "ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன்" என்றும் "தமிழோசை பாடல் மறந்தறியேன்” என்றும் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் தனது முதல் தேவாரத்திலேயே கழுமலவள நகர் பெருமானை "உள்ளம்கவர் கள்வன்" என்றார். அந்த ஞானசம்பந்தத் தன்மையால் அவர்பாடிய முதல் தேவாரத்தின் முதல் அடியில் தோ என ஓங்காரத்தினை (த்+ஓ = தோ) விழித்துப் பாடினார். தனது பதினாறாம் வயதின்போது சோதியுட் புகுந்து முத்திப்பேறு அடையுமுன் “வேதம் நான்கினின் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே” என்று பாடி பஞ்சாட்சர மகிமையைக் கூறியவர், பயின்ற பாவத்தை நண்ணினின்றறுப்பது நமச்சிவாயவே என்றும் கூறியுள்ளார்.
திருஞானசம்பந்தர் பாடிய பல பதிகங்களுக்குத் தமிழ்சார்ந்த அடைமொழிகளைக் கொடுத்துள்ளார். திருப்பாச்சிலாச்சிராமப்பதிகத்தை ‘தகைமலி தண்டமிழ்’ என்றார். திருநீலகண்டப் பதிகத்தை ‘செந்தமிழ்’ என்றார். திருதருமபுரப்பதிகத்தை “ஞானசம்பந்தன் ஒது செந்தமிழ்’ என்றார். திருவாவடுதுறைப் பதிகத்தை விலையுடையருள் தமிழ்’ என்றார். திருவாலவாய்ப் பதிகத்தை ‘சந்தமார்தமிழ்' என்றார். இவ்வாறே தன் பதிகங்களை சம்பந்தப்பெருமான் தமிழென்றே கூறுவது இறைவழிபாட்டில் தமிழ் வகிக்கும் பங்கினைக் காட்டத்தக்கதொரு சான்றாகும். அத்தமிழைப் பயில்வார்கள் நரகம் புகார், சிவன்தாள் அடைவர், தீவினைகள் அடையார் என்றும் கூறி தனது பதிகங்களை பக்தர்கள் பயில்வதை வலியுறுத்தியுள்ளார்.
எமது கடவுளை எமது மொழியில் வணங்கும்போது அதன் அநுகூலமான பலன்கள் ஏராளம். எமது மொழியில் கடவுளை வணங்குவதால் எமக்கு உள்ளத்தெளிவு ஏற்படுகிறது. எம்பெருமானின் தன்மையை விளக்கும் திவ்விய நாமாவலிகள், தேவார திருவாசகம் எல்லாமே எம் சொந்த மொழியில் உள்ளதால் பொருட் சுவையுடன் நாம் வணங்கும் கடவுள் பற்றிய பொருட்தெளிவும் ஏற்படுகின்றன. "அரியானை அந்தணர்தம் சிந்தையானை, அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும் தெரியாத தத்துவனைத்
தேனைப் பாலை. பேசாத நாளெல்லாம் பிறவா நானே" என்ற அப்பர்பெருமானின் திருத்தாண்டகம் சிவப்பிரானின் சிறப்புக்களை நாம் அறியத் தந்துதவுகிறது.
“எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனிதப்பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே” என்று பாடும் அப்பர் பெருமான் போல் நாம் ஆண்டவனை நேரடியாகக் கண்டு அவனை வாழ்த்த வணங்க ஆசைப்படுகின்றோம்.
வேதம், உபநிடதம் முதலியவற்றில் காணப்படுகின்ற விடயங்களை சிவபிரான் அருள்பெற்ற அருளாளர்கள் தமிழில் தந்துள்ளனர். இதனால் இவை நித்திய, நைமித்திய, வழிபாடுகளுக்கும் சிவபூசைக்கும் மகேஸ்வரபூசைக்கும் உரிய நியம மந்திரங்களாக உள்ளன. இதனால் இவை தமிழ் வேதமென அழைக்கப்படுகின்றன. வடமொழியில் உள்ள வேதாந்தங்களை அருளாளர்கள் தமிழில் பக்திப் பனுவல்களாகத் தந்தபடியால் நாம் அவற்றைப் பாடிப்பணிந்து
வெள்ளிமலை இதழ் - 10 சித்திரை 2011

வருகிறோம். அவற்றின் பொருள் அறிந்து உவகை கொள்கிறோம். அதனால் இறைவழிபாட்டினை எம் மனம் நாடுகிறது. நாம் அனைவரும் பிறவிப்பெரும் பிணியிலிருந்து வழிகாட்டும் வழிபாட்டு முறைகள் தமிழில் இருப்பது எமக்கு y(b UT6)LDT85 9 6íT63sl.
பெரியபுராணத்தை சேக் கிழார் பெருமான் பாடுவதற்கு அடிப்படையாக அமைந்தது சுந்தரர் செந்தமிழ் ஆகும். சுந்தரர் பாடிய செந்தமிழே திருத்தொண்டர் தொகையாகும். திருத்தொண்டர் தொகை அறுபத்து மூவர் பற்றியும் மேலும் ஒன்பது நாயன்மார் பற்றியும் கூறுகிறது. இந்த ஒன்பதுபேரும் யார் என்பதை திருத்தொண்டர் தொகையின் பத்தாவது தேவாரத்தில் சுந்தரர் பெருமான் கூறியுள்ளார்.
சேக்கிழார் பெருமான் "அணைந்த மாமறை முதற்கலை அகிலமும் ஒதாது உணர்ந்த முத்தமிழ் விரகன்"திருஞானசம்பந்தர் அவர் ஏன் பிறந்தார் என்பதற்கு "அவம்பெருக்கும் புரைநெறிகள் பாழ்பட" என்று "வேதநெறி தழைத்தோங்க, மிகுசைவத்துறை விளங்க, பூதபரம்பரை பொலிய" என்றும் குறிப்பிடுகின்றார். சுந்தரப்பெருமானை தமிழ்நாதன் என்று போற்றினார். பக்தி நலம் பற்றி பெரிய புராணம் ஆசிரியர் பாடிய அனைத்துப் பாடல்களையும் "தெய்வீகத்தமிழ்" என்று சான்றோர் அழைக்கிறார்கள்.
வேண்டுவார் வேண்டுவதை ஈயும் பரம கருணாநிதியாகிய சிவப்பிரான் தமிழை விரும்பி திருவாசகத்தை தன் திருக்கரத்தினால் எழுதினார். பாண்டிய மன்னனுக்கு “ஆலவாயின் மன்னிய சிவன் யான் மொழி தரு மாற்றம்” என்று திருமுகப்பாசுரம் அனுப்பினார். சேக்கிழார் பெருமான் இறைவன், தன்னை அடியார் தமிழில் அர்ச்சிப்பதை விரும்புகிறார் என்பதை “அர்ச்சனைப் பாட்டே ஆக” என்றார். ஆதலால் ‘மண் மேல் நம்மைச் செற்ற தமிழ் பாடுக” என்று எம் பெருமான் கூறியதாக தூமறை பாடும் சேக்கிழார் கூறியுள்ளார். ஒருவேளை இதன் காரணமாகத் தானோ தமிழ் மொழியை வழிபடுத்தும் பொருட்டு தமிழ்ச்சங்கத்தில் தமிழ் ஆய்ந்தார் என்று கருத வேண்டியுள்ளது. திருவெண்ணை நல்லூர்ப் பதியில் இறைவன் தடுத்தாட்கொண்ட போது திருமண கோலத்திலிருந்த சுந்தரமூர்த்திநாயனார் எம் பெருமானை பித்தா' என்று அதட்டினார். ஆயினும் மூதாதையரான நம்பி என்பான் எழுதிய அடிமைச்சாசனத்தில் கூறப்பட்டபடி சுந்தரர் வெண்ணை நல்லூர் பித்தனின் அடிமை என்பது நிரூபிக்கப்பட்டபோது தான் நடந்துகொண்ட முறையையிட்டு அவர் மனம் பேதித்தார். அவரை ஆறுதற்படுத்திய எம்பெருமான், என்னை பித்தா' என்று பாடு என அடி எடுத்துக் கொடுக்க சுந்தரர் "பித்தா பிறை சூடி பெருமானே’ எனப் பாடினார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாயிலாக திருத்தொண்டத் தொகையைப் பாடுவிக்க வேண்டும். என்று திருவுள்ளம் கொண்ட சிவப்பொருள் சுந்தரருக்கு தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கு மடியேன்” என்று அடி எடுத்து கொடுத்து அறுபத்து மூவரைப் பற்றிப் பாடவைத்தார். திருவதிகை வீரட்டானத்தில் அப்பர்பெருமான் 'கூற்றாயினவாறு என ஆரம்பிக்கும் தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடி முடிந்தபோது வானத்தில் கேட்ட அசரீரிப்படி மருணிக்கியார் நாவுக்கரசு ஆனார். மறைக்காட்டில் திருவேதங்களால் அடைக்கப்பட்ட திருக்கதவை திறக்க “பண்ணின் நேர் மொழியாள் உமைப்பங்கரோ” என்ற பதிகம் பாடியபோது பத்துப்பாடல்கள் பாடி முடியவும் கதவு திறக்கப்படாமை கண்டு வருந்திய அப்பர் பெருமான் "இரக்கமொன்றிலிர் ரெம்பெருமானிரே” என்றுபாட கதவு திறந்தது அப்பர் உவகை கொண்டு சம்பந்தப்பெருமானுடன் சென்று சுவாமிதரிசனம் செய்தார். இதற்கு நாவுக்கரசரின் நாவன்மை கேட்டு மகிழவே எம்பெருமான் கதவு திறக்கப்படாதிருக்கச் செய்தார். என்று அறிஞர்களால் கருத்து கூறப்பட்டது.
வெள்ளிமலை இதழ் - 10 சித்திரை 2011

Page 26
அருளாளர்களது வாயில் வந்த மொழிகளை பிரியமுடன் கேட்ட பெருமான், மருணிக்கியாரை திருநாவுக்கரசு ஆக்கினார். ஆளுடைய பிள்ளையை திருஞானசம்பந்தர் ஆக்கினார். இவற்றை முன்னிறுத்தி நாம் பார்க்கும்போது இறைவரின் திருவுளப்பாடே தமிழ்மொழி என்பது புலப்படும்.
சிதம்பரத்தின் கண்ணே விளங்கும் கனகசபைப் பஞ்சாக்கரப்படியில் காணப்பட்ட திருவாசகமூல ஏட்டில் "மெய்த்தவ வாதவூர்ன் விளம்பிட எழுதுமிந்தப் புத்தகம் மன்றுள் ஆடல்புரிந்தவன் எழுத்தாம்" என எழுதப்பட்டிருந்ததை அவதானித்த தில்லை தீட்சதர்கள், மணிவாசகப் பெருந்தகையிடம் வினவியபோது அங்கே திருநடனம் புரியும் ஆடல் வல்லானைக் காட்டி எல்லாம் சிவமே என்று கூறிவிட்டார். திருவாசகம் சிவம் எனின், அதனை ஓதுவதால் ஏற்படப்போகும் பயன் - சிவமாதல் என்பதே. எனவே இறைவனை நாம் திருவாசகம் பாடி வழுத்தும்போதும் சிவமாதல் சிவமயமாதல் அதிகரிக்கிறது. திருவாசகம் தமிழ்மொழியில் இருப்பதால் அதனை நாம் பாடப்படிக்க முடிகிறது. இந்த இடத்தில் "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்ற திருமூலர் திருமந்திரப் பாடலை நாம் ஞாபகப்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். எனவே இறைவழிபாட்டிற்குரிய மொழி தமிழ்மொழியே என்பதும் அம்மொழியில் நாம் இறைவழிபாடாற்றும் போது ஓர் தெய்வீக உணர்வை நாம் பெறுவதும் எம்பெருமானின் அருட்கடாட்சமே.
திருவாசகம் தந்த மணிவாசகப் பெருமான் தன்னை எம் பெருமான் எவ்வாறு ஆட்கொண்டான் என்பதை திருவம்மானையில் மிக அழகாகக் கூறுகிறார்.
சிவபுராணத்தில் "புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி.." எல்லாப் பிறப்பும் பிறந்திழைத்தேன் எம்பெருமான். மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்" என்றார். அவை அனைத்தும் இறைவழிபாட்டில் தமிழ்மொழி பெற்றுள்ள பெரும் சிறப்புக்களென்றே கூற வேண்டும். மணிவாசகர் செய்த தமிழும் சிவப்பிரானின் திருவுளப்படியானது என்பதால் இறைவழிபாட்டில் தமிழ் தடமிடுகின்றது.
அருணகிரியார் திருப்புகழ் பாட அடியெடுத்து கொடுத்து 'முத்தித்தருபத்தித் திருநகை” என்று பாடவைத்தார் கந்தப்பெருமான். சேக்கிழார் பெருமானுக்கு 'உலகேலாமுணர்ந்து” என்று அடியெடுத்துக் கொடுத்து பெரியபுராணம் பாட வைத்தார் சிவபெருமான். எனவே தமிழ்மொழி இறை அருள்மயப்பட்டது. அது இறைவழிபாட்டிற்குகந்தது என்பது கண்கூடு.
குமரகுருபரசுவாமிகள் தனது பாடல் ஒன்றில் அம்மை அப்பர் தமிழை மனதார விரும்பினர் என்பதைக் குறிப்பிடுகின்றார். இன்னும் பரஞ்சோதி முனிவர் தனது திருவிளையாடற் புராணத்திலே இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஆற்றல் தமிழுக்குண்டு என்று கூறியுள்ளார். மெய்மை குன்றாத தமிழ்மொழி தந்த பாடல்கள் அற்புதங்கள் நிறைந்து காணப்படுகின்றன என்பதனை அறிஞர்கள் வாயிலாகக் கண்டோம்.
தமிழ்மொழியில் பல மதங்களின் இலக்கியங்கள் உளளன. சமண சமய, பெளத்த சமய, வைஷ்ணவ சமய, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய இலக்கியங்களும் பக்தி இலக்கியங்களும் கூட தமிழில் உள்ளன. இவை அனைத்தும் தமிழ்மொழிக்கான சிறப்புக்களாகும்.
இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களில் முக்கியமாக சீறாப்புராம்ை குறிப்பிடத்தக்கது. மக்காவிலிருந்து மதீனா சென்ற விடயங்களும் ஹஜ் யாத்திரை விடயங்களும், புனிதகடமைகள் முதலாம் விடயங்களும், பக்திப்பாடல்களும் தமிழ்மொழியில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. இலங்கை முஸ்லீம்கள் பரந்து வாழ்ந்தாலும் தமிழ்மொழியையே தாய்மொழியாகக்
வெள்ளிமலை இதழ் - 10 சித்திரை 2011

கொண்டவர்கள். வெள்ளிக்கிழமைகளில் தொழுகையின்போது அவர்களால் மேற்கொள்ளப்படும் “கொத்துவா’ பிரசங்கம் தமிழ்மொழியிலேயே ஆற்றப்படுகிறது. முக்கியமாக இஸ்லாமியச் சகோதரர்கள் தமது ‘ஹஜ் திருநாள் போதனைகளின்போது காலிமுகக் கடற்கரையில் தொழுகையினைத் தமிழிலேயே ஆற்றுகின்றனர். சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் கடைய நல்லூர் மஜீத் என்ற பாடகர் தனது கச்சேரியில் இந்து சமயப்பாடல்களையும், திருப்புகழ் பாடல்களையும் மனமுருகும் வண்ணம் பாடியிருந்தமையினை இங்கு சிறப்பாகக் குறிப்பிடலாம். திருச்சித்தமிழறிஞர் பேராசிரியர் மெய்யனார் முகம்மது இந்து சமயத்தின் சில பண்புகளையிட்டு பிரசங்கங்களைக்கூட நடாத்தி வந்தார். அரபுப்பாடல்களுடன் தமிழ் மொழியிலுள்ள இஸ்லாமியப் பாடல்களை நாகூர் எம். கணிபா, நாகர்கோவில் குசைன்பாகவதர், காயல்சேக்ழுகம்மது ஆகியோர் சிறப்பாகப் பாடிவந்தனர். அதேநேரம் சேக் சின்ன மெளலானா சாசிப் என்ற நாதஸ்வரக்கலைஞர் தமிழ்ப்பாடல்களையும், தியாகராச பாகவதரது பாடல்களையும் தனது நாதஸ்வரத்தில் இசைத்து வந்தார். அவர் திருச்சி உச்சிப் பிள்ளையார் மீதும் பூரீரங்கநாதர் மீதும் அபரிமிதபக்தி கொண்டிருந்தார் என்று காலம் சென்ற தவில் வித்துவான் இணுவில் என். ஆர். சின்னராசா கூறுவார். சின்னராசா இடம்பெயர்ந்து திருச்சியில் வாழ்ந்தபோது மெளலானாவின் கச்சேரிகளுக்கு தவில் வாசித்து வந்தார். அதனால் மெளலானாவுடன் நெருங்கிப் பழகியவர்.
கிறிஸ்தவப் பாதிரிமார்கள் இறையியல் கல்லூரிகளில் தமது குருத்துவக் கல்வியைப் பயிலும்போது சைவ சமயத்தை உப பாடமாகிப் பயிலும் தன்மை காணப்படுகின்றது. அதனால் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளில் அருட்சகோதரரர்களும், அருட்தந்தையர்களும் ஆற்றும் வாராந்த பிரசங்கங்களில் ஏனைய சமயக் கருத்துக்களையும் சுட்டிக்காட்டும் வழக்கமுடையவர்கள். இதனால் சுவாமி ஞானப்பிரகாசர், சுவாமி சேவியர் தனிநாயகம் ஆகியோர் மேடைப் பிரசங்கங்களை தமிழில் செய்யும் பாண்டித்தியம் பெற்றிருந்தனர். மிக அண்மையில் திருவாசகப் பாடல்களை இசையமைப்பாளர் இளையராசா ஊடாக சிம்பொனியில் பதிப்பித்த அருட்தந்தை ஜெகத்கஸ்பார் "தான் படித்த மார்க்க இலக்கியங்களில் திருவாசகத்தில் உள்ள பக்திச்சுவை போன்று வேறொங்கும் காணவில்லை” என்று கூறினார். வைஷ்ணவ ஆழ்வார்களின் பக்திப்பாடல்களும் இறைவழியாட்டில் முக்கிய இடம்பெறுகின்றன. நாலாயிரம் திவ்வியப்பிரபந்தங்கள் அவற்றில் முக்கியமானது. இதில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை மாதரால் விரும்பிப் படிக்கப்படுவதாகும். எவ்வாறு சமய குரவர்கள் சிவபெருமானைப் புகழ்ந்தார்களோ அவ்வாறே திவ்விய பிரபந்தங்கள் மகாவிஷ்ணு புகழ் பாடுகின்றன. அரங்க மாநகரில் கோயில்கொண்ட பெருமானைப் பாடிய ஆழ்வார் ஒருவர் பக்தி மேலீடு காரணமாக "அரங்கநாதப் பெருமானை போற்றுவதே இன்பம் அதற்குமேல் எதையும் வேண்டேன்" என்று பாடுகிறார்.
சமய வாழ்வு என்பது மக்களை உய்யவைப்பது மட்டுமன்றி வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்தது. இணையும்போது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இயற்கையுடனானதாக, இன்பவாழ்க்கையாக தூய சமய வாழ்வாக வாழத் தமிழ்மொழி பெரிதும் துணை நிற்கின்றது.
"மேன்மை கொள் சைவரீதி விளங்குக உலகெலாம்". о
வெள்ளிமலை இதழ் - 10 சித்திரை2011

Page 27
9u expul_ûU_ù tyeoe)toumettp:
இணுவையூர் ஆசிரியச் செம்மல் முதுபெரும்புலவர், புலவர்மணி
கலாபூஷணம் வை.க. சிற்றம்பலம் அவர்கள்
பிறந்த திகதி , சொந்த ஊர் : 16.09.1914, இணுவில்
பகுந்த ஊர் அளவெட்டி
: JL பேராயிரவன் வழித்தொன்றல் - இணுவில்
தந்தை மு. வைத்தியலிங்கம் கந்தர்
தாய் இணுைவில் கொடிகுடை முருகர் வழி வேலாயுதர்
மகள் ஆனந்திப்பிள்ளை
ஆரம்பப்படிப்பு இணுைவில் அமிபாடசாலை
Փ աÙւյtդմL கோண்டாவில் சைவ வித்தியாசாலை
ஆசிரியர் சேவைக்காலம் ; 1934ー 1970
பெற்ற தராதரங்கள் : இளந்தமிழ்ப்புலவர் - 1937
பாலபண்டிதர் - 1939
கற்பித்த ஆசான்கள் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை வித்துவான் ந. சுப்பையாப்பிள்ளை
சமூகப்பணி அளவெட்டி சைவவாலிப சங்க காரியதரிசியாக
6 வருடங்கள், தலைவராக 4 வருடங்கள் பணியாற்றியமை
முதன்முதலாகப் பாடி அரங்கேற்றிய நூல் அளவெட்டி கும்பழாவளை நான்மணிமாலை
பாடிய ஏனைய நூல்கள் :
பண்டிதமணி நான்மணிமாலை, நகுலேஸ்வரப் புகழ்மாலை, இன்னுவில் சிவகாமி யம்மை திருஇரட்டை மணிமாலை, இணுைவில் சிவகாமி இடர்களை திருப்பதிகம், சுவாமி விபுலானந்தர் நான்மணிமாலை, சுழிபுரம் பறாளை சிவசுப்பிரமணியம் பிள்ளைத்தமிழ், இணுைவில் அருணகிரிநாத சிவசுப்பிரமணியர் போற்றிப் பத்து, கரணவாய்கப்புது கந்தசாமி யார் கந்தரனுபூதியுரை, நல்லூர் முருகன் இணைமணிமாலை, உடுவில் சொர்ணசித்தி விநாயகர் கோயில், நல்லூர் கலம்பகம், குயில் தூது, கொக்குவில் கேணியடி சந்திரசேகரப் பிள்ளையார் மும்மணிமாலை, செல்வச்சந்நிதி முருகன் நவமணிமாலை, திருவருக்கச் செழுமணிமாலை, ஒருபா ஒருபது, மும்மணிக்கோவை, இனுவில் சிவகாமி அந்தாதி, பெரிய சன்னியாசியார் வரலாற்று மாண்மியம்
இவை போன்ற நாற்பது வரையான பிரபந்தங்கள், ஆலய ஊற்சற் பாக்கள், திருப்பள்ளியெழுச்சிப்பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் எழுதிய இவர் சந்நிதியான் ஆச்சிரம சைவகலைபண்பாட்டுப்பேரவை பத்திரிகையான எநானசுடரில் தொடர்ந்து பல ஆக்கங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றார்.
இவரைபற்றி, ஒய்வுபெற்ற அதிபரும் முதுபெரும் அறிவுநராக விளங்கிக் கொண்டிருக்கும் கலாநிதி பண்டிதர் க. வைத்தீஸ்வரக் குருக்கள் பின்வருமாறு கூறுகின்றார்.
பேரறிஞர்கள் புலவர்கள் தியாகிகள் வள்ளண்கள் சைவப்பெரியார்கள்முதலானோர்பாராட்டப்பட வேண்டியவர்களாவர். அந்த வகையின் முதுபெரும் புலவர் வைக சிற்றம்பலம் அவர்கள் பாராட்டப்படுவதற்குத் தகுதியுடையவராவார்
விவேகத்தை வெளிப்படுத்தும் பரந்த நெற்றி நெற்றி நிரம்பிய விபூதிப்பூச்சு புருவ மத்தியில் சந்தனப்போட்டு, சிரித்தமுகம்எவரையும்வசீகரித்துநிற்கும்கண்கள் உரத்துப்பேதத்தேரியாகுசுபாவம் உடுப்பது வெண்மைநிற ஆடை தோள்தோடக்கம்ரீண்ட அங்கி கையிலோ ஊன்றுகோலோன்று இந்ததிருக்கோலத்துடன் எங்கள்மத்தியின்நடமாடும்நூலகமாகத்திகந்துகொண்டிருப்பவர்தான்முதுபெரும்புலவர்சிற்றம்பலம் அவர்கள்
வெள்ளிமலை இதழ் - 10 சித்திரை 2011

பயிற்சிபெற்ற ஆசிரியரான இவர், பனிடிதமணி சி. கணபதிப்பிள்ளை, வித்துவானி ரு, சுப்பையாப்பிள்ளை எண்ணும்பெரியார்களைத்தமதுருண்லாசிரியராகக்கொண்டவர் சங்க இலக்கியங்களையும் தோல்காப்பியம் யாப்பருங்கல விருத்தி பிரயோக விருத்தி பிரயோக விவேகம் இலக்கணக்கொத்து, யாப்பணி நூல்களையும் மேப்கனிட் சாத்திரங்களையும் கற்றவர் திருமுறை முதலான அருள்நூல்களையும் எழுத்தேண்ணிப் படித்துப் பெரும் புைைமயெய்தியவர்
இவரொரு ஆசுகவி செய்யுள் இயற்றுவதென்பது இவருக்குக்கை வந்த கலையாகும். இதனை நண்கு அவதானித்த பண்டிதமணி அவர்கள் நல்லூர் முருகனைப் பாடு எண்று சொல்லி -
"திருமுருகன் பாதமர்ைத் தேன்” என அடியெடுத்துக் கொடுத்து நல்லூர் முருகன் கீனை மணிமாலையைப் பாடச்செய்தார். அது தொடக்கமாகப் பல பிரபந்தங்கள் பாடினார்
இவர் தமது இருபத்து மூன்றாம் வயதிலேயே தென்னிந்திய தமிழ்ச்சங்கர் நடாத்திய பரீட்சையில் தோற்றி இனந்தமிழ்ப்புலவர்என்னும் பட்டத்தைப்பெற்றார். 1939இல் யாழ்/ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச்சங்கப் பாலபண்டித ரீட்சையிலும் சித்திபெற்றார்.
இவரது அரிவாற்றலைக் கண்ட யாழ். இந்துப் பேரவைத் தலைவர் அருட்கவி சி. விநாசித்தம்பிப் புலவர் அவர்கள் இவருக்கு முதுபெரும் புலவர் எண்ணும் பட்டத்தை 1998இல் சூட்டினார். மேலும் 2002ஆம் ஆண்டு இலங்கை இந்து கலாசாரத்திணைக்களம் கலாபூஷணம் என்னும் பட்டத்தை வழங்கியது. சென்ற 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ். ஆதி பாஷாவிருத்திச்சங்கம் "புலவர்மணி" என்னும் பட்டத்தையும் வழங்கிக் கெளரவித்தது.
ஒருபா ஒருபது, திருஇரட்டை மணிமாலை, முர்மணிமாலை, நான்மணிமாலை, திருப்பதிகங்கள் வித்தாரகவிதைகளன்றி கடவுளார்மீதுதிரு இஞ்சன்கள் திருப்பள்ளிழுச்சி மாவை முருகன் ஆற்றுப்படை, சந்நிதி முருகன் ஆற்றுப்படை என நாற்பதிற்கு மேற்பட்ட பிரபந்தங்களைப் பாடி உள்ளார் அல்லாமன் தனிப்படவே பல தனிநிலைச்செய்யுட்களையும், மெய்ச்சித்திஉபசாரப்பத்திரமென நூற்றுக்கணக்கானவற்றைப் பாடி உள்ளார்.
LLL0 TTT LLLTTLT LLLT LLLaLTS TT TLTS TLLT என்ற வகையில் நால்வகைப் பாடல்களையுஞ் சுவைபடப் பாடியுள்ளார்.
பொதுவாகப் புலமையும், பண்பாடும் ஒரிடத்தில் இருப்பதில்லை. அப்படி ஏதேனோரிடத்தில் இருந்தாலும் அவை சிறந்து நிற்பதைக் காணமுடியாது.
ஆனாலி அவை இரண்டும் ஒரேயளவில் இருக்குச் காட்சியை இந்தப் புலவர்மனியிடமே காணர்கிறேன். இவருடன் உரையாடும்போது, உரையெண்லாம் பயனுடையதாகவே காணப்படும். சிவபுண்ணியம் பெருக்கும் இவரது பாடல்களில் தொண்மையான புராண, இதிகாசக் கதைகளையுங் காணலாம்.
கோயில்களின் திருமுறைகளைத்தொடர்ந்து பலவருடம் பாடிய இவர் ஒரு புராணிகரும்கூட அதனால் பல கோயில்களிலுஞ் சென்று திருவாதவூரடிகள் புராணம், திருத்தொண்டர் பெரிய புராணம், கந்தபுராணங்களின் பலவருடம் பங்கு பற்றியுள்ளார். நான் ஒருமுறை காசி விசாகநாள் கீரிமலை சிறாப்பர் மடத்தின் கந்தபுராணத்தின் வள்ளியம்மை திருமணப்படலம் நடந்தபோது பயன் சொல்ல வந்தவர்களுள் பண்டிதமணிசி கணபதிப்பிள்ளையும் ஒருவர் அவருக்கு திரு. சிற்றம்பலமே புராணத்தை வாசித்தவர் பொருள்விளங்க, பயன் சொல்லுதற் கேர்றவாறு வாசித்துப் பிரித்தமை கண்டு உவந்த பணடிதமணி அவரை இனிமேல் பயனும் சொல்லார் என்று கூறிவிட்டார். அதன் பின் சிற்றம்பலம் உரைசொல்லத் தொடங்கிவிட்டார்.
நான் இவருடன் அந்நியோந்தியமாகப் பழகியிருக்கிறேன். இவர் ஆடம்பரத்தையோ பாடாடோபத்தையே விரும்பாத தம்பெருமை தாமறியாத தன்மை உடையவர். பேச்சளவில் மாத்திரம் வைத்துக்கொள்ளாது, எதனையும் மக்கள் உணரும்படியான சாதனையாளர் இவர்
கனவிலாயினும் நனவிலாயினும், மன்றாடும் பெருமானை மறக்காத இயல்பினர். குன்றாத உணர்வுடைத் தொண்டராக சேக்கிழார்சுவாமிகளின் வாக்குக்கு அடையாளமாகத் வாழ்ந்து வருபவர். புலமைச்செருக்குச்சிறிதுமில்லாத, புலவர்சிற்றம்பலம், சிவபுண்ணியப் பெருக்கும். புனித கைங்கரியத்திற்கு தன்னை அர்ப்பணித்த தனிப் பெரும் புலவராக விளங்குகிறார் என்பது ஒரு சிறிதும் மிகையாகாது. புலவர்கள் நாட்டின் சொத்து,
இறைவனைப் பாடிப் பரவும் பணியை பாக்கியமாகக் கருதிச் செயற்படும் எம் மண் தந்த பெரும்புலவர் மேலும் பல்லாண்டு வாழ இறையருளை வேண்டி "வெள்ளிமலை"
பிரார்த்திக்கின்றது. O வெள்ளிமலை இதழ் - 10 G5) சித்திரை 2011

Page 28
anugriferirçon 9 nováõaor&ar ?
கண்ணகியால் வெல்லப்பட்ட காலவூரலாறும் - புனித காரைக்காலம்மையாரால் உணங்கப்பட்ட கருதிய நெறியும், திண்ணழுறத்தனைப்படைத்ததிரெளபதியின் சபதமும், திவ்யமாய் அலங்கரித்த தேன்பாவை ஆண்டாளும்,
பெண்குலத்தின் வெற்றிக்கு வழிசமைத்த ஒளவையாரும், பேறாகும் சேவையினை நூறாக்கிய அன்னைதிரேசாவும், உண்ணழுற அறம் செய்து வழிகாட்டியதங்கம்மாவும், வாழையடி வாழையாக இடிவெள்ளிகளாய் வையகத்தில்! பெண்ணடிமை என்றுசொல்ல வூெந்து கொண்ட பெண்குலம் பெறுவூதற்காகப் படைக்கப்பட்ட மருந்துச்சரக்கல்ல பொன்னாக இருக்கவேண்டிய அந்தப் பெருங்குலத்தைப் போலிகளாகக் கருதும் பேதைகளாக்கிவிட்டோமா? மன்னர்களும் மாடல்களில் அழகுதனை உயிராக்கி மடந்தையரை மெளனங்களாக்கிமாட்டினரோ? இன்னுரைகள் இதழோரம் இந்நாட்டில் மல்ந்ததனால் இந்நாட்டில் ஏமாறும் பெண்ணடிமை வெல்லாதோ? பன்னெடுங்காலமாக பறிக்கப்படும் சீதனங்கள், பகுத்தறிவோரால் வாங்கப்படும் பரம மூலதனங்கள், இந்நிலைக்கு எப்போதுமேநான் ஆட்பட்டதில்லை, இலட்சங்கள் கோடியெனும்போது
பெண்ணுக்கு திடிஆ எப்போது? 2
கே.எஸ். சிவஞானராசா
வெள்ளிமலை இதழ் - 10 G52ව சித்திரை 2011

ராமகிருவர்ணன்-குகிைங்கம் கட்பு யாழ்ப்பாணத்திற்குப் பெற்றுத்தங்த "க்ரியா"வின் பிரெயில்
ராதி
த்தில் நடைபெற்றது.இ
லக்கியச்சோலை இ: கிய க்ரியா ராமகிருஷ் கழ்வு 10.04.2011 அன்று
ந்நிகழ்வைப் பின்னணியாகக் கொண்டு இக்கட்டுரை
ப்புபை:சுன்னாகத்தில் சம்பிரதாயபூர்வமாக ணமாக இருந்த கம் அவர்களை பாராட்டி வாழ்த்தவும் 4.00 மணியளவில்
5ரியா’வின் தற்காலத் தமிழகராதியின் பிரெயில் தமிழ்ப் பதப் பை வாழி வகத் தற்கு கையளிக்கும் வைபவம் வாழ்வக மண்டபத்தில் 10.04.2011 அன்று நிகழ்ந்தது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக சுன்னாகம் நூல்நிலைய நூலகர் செளந்தரராஜன் அழைக்கப்பட் டிருந்தார் . இ. து.குலசிங் கம் , செளந்தரராஜன், பாதுவாரகன் , எதிர் வீரசிங் கம் , மருத்துவர் வெ.நாகநாதன், வாழ்வக மாணவன் க.கலைச்செல்வன், வாழ்வக துணைத் தலைவர் ரவீகரன் ஆகியோரது மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து வாழ்வக மாணவன் கு.ஜெயதீசனது தேவாரத்துடன் நிகழ்வு ஆரம்பமா கியது.
வாழி வகதி தலைவர் ரவீந்திரன் தனது வரவேற்புரையின் போது தமிழகத்திலுள்ள "க்ரியா’ பதிப் பக உரிமையாளர் ராமகிருஷ்ணன், சுன்னாகத்திலுள்ள தமது வாழ்வக நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து இவ் அகராதியை அன்பளிப்பாக வழங்கிய மைக் காக தமது நன்றியைத் தெரிவித்துக் கொணி டதுடன் இலங்கையில் முதன்முதல் தமது நிறுவனத்துக்கு இத்தகைய ஒரு
வெள்ளிமலை இதழ் - 10
அகராதி கிடைப்பதையிட்டு தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார். மேலும் ‘இலங்கையில் எமது நிறுவனத்துக்கு பிரெயில் அகராதி கிடைப்பதற்குக் காரணமாக இருந்தவர் பருத்தித் துறையைச் சேர்ந்த இது.குலசிங்கம் ஐயா அவர்கள். அவருக்கும் க்ரியா ராமகிருஷ்ணனினுக்கும் இடையிலான நட்பு - தொடர்பு இவ் அகராதி எமக்குக் கிடைப்பதற்குக் காரணமாக இருந்ததையும் குறிப்பிடவேண்டும்’ என்றார். மேலும் பிரெயில் அகராதி வெளிவர இருக்கின்ற செய்தியை எமக்கு அறிவித்து; 4 பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 43 மாணவர்களுக்கு அபயமளித்து வரும் எமது வாழ்வக நிறுவன நூலகத்திற்கு
( Um. 5J6)rgaśGór
○
இத்தகைய அகராதி கிடைக்கப்பெறும் பட்சத்தில் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்ற எமது விண்ணப்பக் கடிதத்தை குலசிங்கம் ஐயா ராமகிருஷணனனுக்கு உரிய காலத்தில் சேர்ப்பித்து, இவ்விலை மதிப்பற்ற அகராதியை எமக்குக் கிடைக்கச் செய்திருந்தார் என்றும் துவாரகன் , ரமேஷ், பூரீகுமரன்
சித்திரை 2011

Page 29
ஆகியோரும் இவ் அகராதி கிடைப்பதற்கு உதவியிருந்தனர் என்றும் தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில் பொதுவாக பிரெயில் பதிப்பில் நூல்கள் வெளிவருகின்றபோது சுருக்கமாகவே வெளிவரும். அது எமக்குச் செய்கின்ற பெரும் துரோகமாகும். இந்த இடத்தில் ராமகிருஷ்ணனுக்கு நாம் நன்றி கூறவேண்டும். க்ரியாவின் தற்காலத் தமிழகராதியை எந்த மாற்றமும் இல்லாமல் முழுமையாக பிரெயில் தமிழ்ப் பதிப்பாகக் கொணர்ந் திருக்கிறார். இந்த இடத்தில் ராமகிருஷ்ணன் இல்லாவிட்டாலும் இப்பணிக்காக அவருக்கு நாம் சிரம் தாழ்த்தி நன்றி கூறுகின்றோம்.’ ତୀର୍ଘ୍ୟ[BIT).
தொடர்ந்து சம் பிரதாய பூர்வமாக இந்நூற் றொகுதியை இலக்கியச் சோலை இது.குலசிங்கம். கையளிக்க யாழ் தேசிய கல்வியியற்
இலக்கியச் சோலை இ.து.குலசிங்கம். கல்லூரி விரிவுரையாளரும் வாழ்வகத் தலைவருமான ஆ. ரவீந்திரன் பெற்றுக்கொண்டார்.
தொடர் நீது குலசிங்கம் அவர்களைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதைத் வெள்ளிமலை இதழ் - 10
தொடர்ந்து குலசிங்கம் "க்ரியா’ ராமகிருஷ்ணனுடனான தனது நீண்ட நட்பனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
குலசிங்கம் தனதுரையின் போது ராமகிருஷ்ணன் தனது மனைவிக்குப் புற்றுநோய் என்று மருத்துவர்கள் அறிவித்த மறுதினம் கூட தனது கவலையைப் புறந்தள்ளி இவ்வகராதியை வாழ்வகத்துக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த தையும் ராமகிருஷ்ணன் என்ற நல்ல மனிதரது நேர்மையைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். "க்ரியா’வின் தற்காலத் தமிழகராதியை உருவாக்க 6 ஆண்டுகளாக ராமகிருஷ்ணனுடன் இணைந்து உழைத்ததையும் நினைவு படுத்தினார். பல கலைக் கழகப் பேராசிரியர்களிடம் இலங்கையில் வழங்கிவரும் தமிழ்ச்சொற்களைத் தொகுத்துத் தருமாறுகேட்க அவர்கள் பதில்தராத நிலையில் தனது பரந்த வாசிப்பனுபவத்தையும் நண்பர்க ளுடனான தொடர்பையும் கொண்டு ஏறத்தாழ 1700 இலங்கைத் தமிழ்ச்சொற்களையும் அவற்றின் கருத்துக் களையும் தொகுத் து க்ரியாவின் தற்காலத் தமிழகராதிக்குப் பங்களித்திருந்ததை நினைவு கூர்ந்தார். சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நூலகர் செளந்தரராஜன் தனதுரையின் போது "க்ரியா’விண் தற்காலத் தமிழகராதியின் 2008 விரிவாக்கப்பட்ட திருத்திய பதிப்பின் சிறப்பை, ஏனைய அகராதிகளில் இருந்து ·法孵喬響扁 இவி அகராதி கொணி டுள்ள வேறுபாட்டினை ராமகிருஷ்ணனது பதிப்புரையில் இருந்து மேற்கோள் காட்டிப் பேசுகின்றபோது பிரெயில் பதிப்பிலும் உள்ள விசேட தன்மையை பிரெயில அகராதியை பயன்படுத்து கின்ற மாணவர் களால் தானி அறியமுடியும் விழிப்புலன் பாதிக்கப் பட்ட பிள்ளைகள் பயன் பெறும் வகையில் க்ரியா’வின் தற்காலத்
சித்திரை 2011
 
 

தமிழகராதி பதிப்பிக்கப் பட்டிருப்பதும் யாழ்ப்பாணத்திற்குக் கிடைத் திருப்பதும் போற்றுதற்குரிய விடயம். இவ்வகராதி வாழ்வகத்திற்குக் கிடைக்கப் பாடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் என்றார்.
"க்ரியா விக் தற்காலத் தமிழகராதியின் 2008 விரிவாக்கப்பட்ட திருத்திய பதிப்பின் (தமிழ்- தமிழ் - ஆங்கிலம்) மின்னணு பிரதியை ஆராய்ச்சி நிறுவனங்கள் ரூபா. 4 இலட்சம் இந்தியப் பணம் கொடுத்துப் பெற்று ஆய்வுசெய்து வருகின்றன. இவ் அகராதியினை பார்வையற்றவர்கள் பயன்படுத்தக் கூடியவகையில் பிரெயில் தமிழ்ப் பதிப்பாகக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் ராமகிருஷ்ணனிடம் நீண்டகாலமாக இருந்து வந்தது. இந்நிலையில் மதுரையில் உள்ள இநீ தியப் பார் வையற்றோர் if (si Bg5 g5 B (gb (IBA - Indian Association for the Blind Madurai) ராமகிருஷ்ணன் இலவசமாக இத் தமிழகராதியின் மின்னணு வடிவப் îJgf6Du (digital version) Gyptšaś யிருந்தார். இவ் மின்னணு வடிவப் பிரதியை பிரெயில் (தமிழ்- தமிழ் - ஆங்கிலம்) மின்னணு வடிவத்திற்கு LDT[ở mẩì பிரெயில் பதிப்பாகக் கொண்டுவருவதற்கு தன்னார்வத் தொண்டு நிறுவனமான Cognizant Foundation ஐத் தொடர்பு கொண்டு இவர்களது நிதியுதவியை IBA இற்கு பெற்றுக்கொடுப்பதில் ராமகிருஷ்ணன் ஆற்றிய பணி போற்றுதற்குரியது. தமிழ்நாட்டிலுள்ள பார்வையற்றோர் பள்ளிகளுக்கும் பார்வையற்றோர் அதிகம் கற்கும் கல்லூரிகளுக் (G5UDIT&b 40 îJgŚlab6...D6 Cognizant Foundation தனது நிதியின் மூலம்
வடிவப்
ஒரு அகராதி வெளிவந்திருப்பது ராமகிருஷ்ணனது அயரா முயற்சி யினாலேயாகும்.
பிரெயில் தமிழ்ப் பதிப்பு வெளிவர இருக்கின்ற தகவலை ராமகிருஷ்ணன் யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலுள்ள தனது நண்பர் குலசிங்கத்திற்கு தொலைபேசி வழி அறிவித்தார். இங்குள்ள பிள்ளைக ளுக்கும் ஒரு பிரதி அனுப்புமாறு குலசிங்கம், ராமகிருஷ்ணனிடம் வேண்டினார். அதற்கு ராமகிருஷ்ணன் விழிப் புலன் பாதிக் கப்பட்ட பிள்ளைகள் அதிகம் வாழும் நிறுவனம் ஒன்றிலிருந்து விண்ணப்பக்
கடிதம் ஒன்றைப் பெற்று அனுப்புமாறு
கேட்டிருந்தார். இந்நிலையில் குலசிங்கம் நண்பர்கள் ஊடாக சுன்னாகத்தில் உள்ள விழிப்புலன் வலுவிழநீ தோர் இல லத் தனி தலைவரிடம் இருந்து விண்ணப்பக் க டி த த’  ைத ப  ெப ற நு ராமகிருஷ்ணனுக்கு அனுப்பியிருந்தார். 40 பிரதிகள் தமிழ்நாட்டிலுள்ள பார்வையற்ற பிள்ளைகளுக்காக Cognizant Foundation sy,65 அச் சிடப்பட்ட நிலை யரில் யாழ்பாணத்தில் உள்ள பார்வையற்ற பிள்ளைகள் பயன்பெறும் நோக்கில் சுன்னாகத்தில் உள்ள வாழ்வகத்திற்கு ஒரு பிரதியை விசேடமாக அச்சிட்டு வழங்க வேண்டி ராமகிருஷ்ணன் Cognizant Foundation &ö(35 e5 7. 15000 இந்தியப் பணம் கொடுத்து 53 தொகுதிகள் அடங் கய இவ்வகராதியின் மேலதிக விசேட பிரதியைப் பதிப்பித்து மறைந்த வி.ஜெயலட்சுமியின் பிறந்ததின நினைவாக 01.02.2011 அன்று வாழ்வகத்திற்கு வழங்கியிருந்தார்.
ராமகிருஷ்ணன்-குலசிங்கம்
அச்சிட்டு இலவசமாக வழங்கி நட்பு யாழ்ப்பாணத்திற்குப் பிரெயில் யிருந்தது. இந்திய மொழிகளில் தமிழ் -தமிழ் ஆங்கிலம் அகராதியைப் தமிழிலே முதன்முதல் இத்தகைய பெற்றுத் தந்தது என்றால் வெள்ளிமலை இதழ் - 10 சித்திரை 2011

Page 30
மிகையில்லை. கிழக்கில் உள்ள பிள்ளைகளுக்கும் இத்தகைய
அகராதியை வழங்கும் நோக்கில்
மட்டக்களப்பிலுள்ள தரிசனம்’ என்ற விழிப் புலன் வலுவிழந்தோர் இல்லத்திடமிருந்து விண்ணப்பக் கடிதத்தைப் பெற்று ராமகிருஷ்ண னுக்கு அனுப்புவதற்கு ரமேஷ் முயற்சி செய்திருந்தார். மட்டக்களப்
பிலேற்பட்ட வெள்ளம் காரணமாக
கடிதத்தை உரியகாலத் திறி
GarS
நிகழ்வில் கலந்து கொண்டோர் வாழ்வகப் பிள்ளைகளுடன்
பெறமுடியாமறி போனமை வருத்தமளிக்கிறது. இலங்கைக்குக் கிடைத்துள்ள ஒரேயொரு பிரெயில் தமிழ் அகராதித் தொகுதி சுன்னாகம் வாழி வகத் தரிலே உள் ளது. இலங்கையின் எப்பாகத்திலும்
வசிக்கின்ற விழிப்புலன் பாதிக்கப்பட்ட
மாணவர்களுமி இங்கு வந்து அகராதியில் இருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
* உருவில் பிரதேச செயலகத்தால் 2011 மகளிர் தினத்தையொட்டி
நடாத்தப்பெற்ற சித்திரப் போட்டியில் மேற்பிரிவில் முதலாம்
98LLĎ
பெற்ற கோகிலன் சிவதர்சினியின் சித்திரம்முண்அட்டையை
2素
அலங்கரிக்கிறது.
i-g’ κοι( 1} ,,كلهډمن)
ig, it
* கீழ்ப்பிரிவில் முதலாம் இடம்பெற்ற இனுவில்தேதியிக்ல்லூரி மாணவன்
தே. பயிராஜின் சித்திரம் பின் அட்டையில் இடம்பெற்றுள்ளது.
நன்றி உடுவில் பிரதேச செயலகம்.
வெள்ளிமலை இதழ் - 10
சித்திரை 2011
 
 


Page 31

%&&&&&&&
淡