கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஏழாவது ஊழி: சுற்றுச்சூழல் கட்டுரைகள்
Page 1
ভূ/^2
甄前则毒围事
Page 2
Page 3
ஏழாவது ஊழி
சுற்றுச்சூழல்கட்டுரைகள்
Page 4
ஏழாவது ஊழி
சுற்றுச்சூழல்கட்டுரைகள்
பொ.ஐங்கரநேசன்
Gauol DG
சேமமடு பதிப்பகம்
Page 5
ஏழாவது ஊழி சுற்றுச்சூழல் கட்டுரைகள்
நூலாசிரியர் பொ.ஐங்கரநேசன்டு முதற் பதிப்பு : smaTTL) - Loirjá 2009 இரண்டாம் பதிப்பு : சேமமடு - செப்டெம்பர் 2010 அளவு ; டெம்மி 1/8
தாள் ! என்.எஸ்.மேப்லித்தோ எழுத்து 11 புள்ளி
பக்கம் : 432
விலை : ரூ.1000
வெளியீடு ; சேமமடு பதிப்பகம்,
யூஜி - 50, பீப்பிள்ஸ் பார்க், கொழும்பு - 11
ISBN : 978-955-1857-78-3
Ezhavathu Oozhi
Environmental Articles
Author : PAyngaranesan G 1st Edition : Saalaram-March 2009 2nd Edition : Chemamadu - September 2010 Size : Demy 1/8
Paper : NSMaplitho
Font 11
Pages : 432
Price : RS.1000
Published By : Chemamadu Pathippakam
UG.50 People's Park,Colombo - 11 - Tel: 011-2472362,2331475
E-mail: chemamaduOyahoo.com Web: W.Chemamadu.COm
CBCN:2010-09-01-79
இயற்கையை அதன் முழுப் பரிமாணங்களுடன் உணர வைத்த
எனது ஆசான்
நாட்டுப்பற்றாளர் திரு.க.சி.குகதாசன் அவர்களுக்கு
Page 6
பதிப்புரை
முதற் பதிப்பு
வேண்டும் இயற்கை நேயம்
ழலியல் என்றால் புகைமாசும் குப்பை மாசும் பற்றி பெரிதாகப் பேசப்படும் தமிழ்ச்சூழலில் சூழலியலின் பன்முகப் பிரச்சினைகளை மிகநேர்த்தியாகக் கையாளுகிறார் ஐங்கரநேசன். கடலில் கானகத்தில் மட்டுமல்ல; வண்ணத்துப்பூச்சியைத் துரத்திக் கொண்டும் ஒடுகிறார். நோய்க்குரிய நஞ்சு எந்தெந்த அறிவியல் சாதனங்களில் எல்லாம் இருக்கிறது என்பதை எடுத்துரைக்கிறார்.
அறிவியல் எந்த அளவுக்கு வசதியைச் சேர்த்ததோ அதே அளவுக்கு இயற்கையின் மீது தாக்குதலையும் நடத்தியுள்ளது. மனித நேயம் பற்றிப் பேசுகிறவர்கள் இயற்கைநேயத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது இந்நூல்.
மனிதன் வானத்து இடிமுழக்கத்தையும் வையம் புரக்கும் சூரியனையும் கானகத்துத் தீயையும் கடல் ஏவும் புயல் காற்றையும் கடவுளாக்கிக் கைதொழுவான். கைக்கு அடங்குகிற உயிரினங்களைக் காலில் போட்டு மிதிப்பான். காடு கொன்று நாடு ஆக்கும் முயற்சியில் இயற்கையின் மீது பகைமை கொண்டு படைஎடுப்பையே நடத்திக் கொண்டிருப்பான். இருந்தாலும் தமிழ் மரபில் முல்லைக்குத் தேர்தத்து, மயிலுக்கு போர்வை தந்து இயற்கை நேசத்தை வளர்த்ததையும் காண்கிறோம். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன், காற்றில் கைவீசி நடக்கவும் அஞ்சினேன் என்ற வள்ளலாரின் கனிந்த இயற்கை நேசமும் நம் கவனத்திற்குரியது.
மனித நடத்தைகளைத்தான் செடிகொடிகள் மீதும் விலங்குகள் மீதும் பொருத்திப் பார்த்து இலக்கியம் மகிழும். ஆனால் விலங்கு நடத்தைகள் மனிதனிடம் எப்படி ஆளுமை செலுத்துகின்றன என்பதை ஏழாவது ஊழி நிரூபிக்கின்றது. இயற்கைப் பரிணாமத்தில் உயிரின் உச்சம் மனிதன். ஆனால் அவன் தான் பிறந்த இடத்தை மறந்துவிட்டு காட்டுமிராண்டி என்று ஏசுவது வேடிக்கையாக இருக்கிறது. உண்மை யில் மனிதநிலைதான் அநாகரிகமானது என்று எண்ணத் தோன்றுகிறது இந்நூலைப் படிக்கும்போது.
கவிஞர் வைகறை 23, O3,2OO9 பதிப்பாளர் - சாளரம்
8
பதிப்புரை இர
புதிய வாழ்வியற் சிந்தனை
பொ.ஐங்கரநேசன் அவர்களது'ஏழாவது ஊழி' என்னும் இந்நூல் கடந்த ஆண்டு தமிழகத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. நூலாசிரியர் சூழலியல் என்பதை வெறுமனே கற்கை நெறி சார்ந்த குறுகிய கண்ணோட்டத்துடன் அணுகவில்லை. மாறாக, இயற்கையின் மீது மனிதன் கொண் க்கும் எல்லாவி ம் சமூக - பொருளாதார - அரசியற் பின்புலங்களில் கேள்விகளுக்கு உட்படுத்தி விடுதலைச் சூழலியல் என்னும் புதிய வாழ்வியற் சிந்தனையாக நமக்கு அறிமுகம் செய்கிறார்.
'ஏழாவது ஊழி, இயற்கை - சமூகம் - மனிதன் மீதான தொடர் விசாரணைகளை ஆழமாக மேற்கொள்கிறது. நமது சிந்தனைக்கும் கண்களுக்கும் செவிகளுக்கும் இதுவரையில் எட்டாது இருந்து வந்த கொலைஞர்களை நமக்கு அம்பலப்படுத்துகிறது. உலக மயமாக்கல் என்னும் பொருளாதாரக் கொள்கையால் நமது இயற்கை வளங்கள், நமது வாழ்க்கை, வளமான எதிர்காலம் எவ்வாறு பலிக்கடாவாக்கப்படுகிறது என்பதைத் தெளிவாக அடையாளம் காட்டுகிறது. போர் எவ்வாறு இயற்கைச் சூழலைச் சீரழித்தது என்ப்தை விரிவாக எடுத்தியம்புகிறது.
போருக்குப் பின்பான இன்றைய ஈழத்தில் காத்திருந்தது போலப் பன்னாட்டு நிறுவனங்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. அபிவிருத்தியின் பெயரால் ஏராளமான திட்டங்கள் முன்னெடுக்கப்படு கின்றன. இவற்றின் அரசியலைப் புரிந்துகொள்ள, இவற்றால் நமது வாழ்வும் வளமும் பறிபோகாமல் இருக்க 'ஏழாவது ஊழி சரியான திசை காட்டும் என்று நம்புகிறோம். இதன் அடிப்படையில், 'ஏழாவது ஊழியின் இரண்டாவது பதிப்பை எமது பதிப்பகத்தின் சார்பில் வெளியிடுவதையிட்டுப் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
சதபூ,பத்மசீலன் 15, O9,2OfO பதிப்பாளர், சேமமடு
9
Page 7
முன்னுரை இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை
61ன் சிறுவயது முதலே இயற்கையை நேசிப்பதிலும், இயற்கையைப் பற்றி அறிந்துகொள் வதிலும் ஆர்வம் கொண்ட வனாகவே இருந்திருக்கிறேன். யாழ்ப்பாணத்தில் எனது கிராமமான திருநெல்வேலியில் பரவைக்குளம் என்ற நீர்த்தேக்கம் இருக்கிறது. அன்று, குளத்தையொட்டிப் பச்சைப் பசேலென்ற நெல்வயல்கள் இருந்தன. வீட்டுக்குச் சொல்லிக் கொள்ளாமல் குளக்கரையில் வந்தமர்ந்து விடுவேன். காற்றுத் தலைவாரிவிடும்போது நெற்பயிர்களில் ஏற்படும் அசைவு என்னுள் ஆச்சரியத்தைக் கிளர்த்தும். குளக்கரை இலந்தை மரத்தில் குடியேறியிருக்கும் தகதகக்கும் பொன்வண்டுகளும், குளத்தில் மலர்ந்து சிரிக்கும் தாமரைப் பூக்களும், 'மீனுக்குத் தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டும் விலாங்கு மீன்களும், பச்சைத் தவளைகளும் என்னைப் பரவசத்தில் ஆழ்த்தும். தாமரைப் பூக்களைப் பறிக்கச் சென்ற சிலர் சேற்றில் சிக்கி இறந்ததாக ஊரில் கதைகள் உலாவின. இதனால் குளக்கரைக்குப் போய் வந்தது வீட்டுக்குத் தெரியவந்த நாட்களில் பெற்றோரால் கண்டிக்கவும், தண்டிக்கவும் பட்டது இன்றும் நினைவில் இருக்கிறது.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயர் வகுப்புப் பயின்றபோது எனக்கு உயிரியல் ஆசானாக வாய்த்தவர் க.சி. குகதாசன் அவர்கள். வகுப்பறைகளுக்கு வெளியே மாணவர்களை அழைத்துச் சென்று இயற்கையை அதன் முழு அர்த்தப் பரிமாணத்தில் புரியவைப்பதில் வல்லவர் அவர். யாழ்ப்பாணத்தில் தொண்டைமானாறுக்கும், அது போசிக்கும் கண்டற்காடுகளுக்கும் பலதடவைகள் எங்களை அழைத்துச் சென்றார். இவரால், யாழ்ப்பாணத்தில் எனக்கு மிகவும் பிடித்த இடமாகக் கண்டற்சூழல் ஆகிப்போனதில் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் அங்கு போய்வர ஆரம்பித்தேன். பின்நாளில், பட்டப்படிப்புக்காகச் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் பயிலக்
1Ο
பொ. ஐங்கரநேசன்
கிடைத்தமையையும் ஒரு பேறாகவே நான் கருதுகிறேன். கல்லூரியின் கானகச் சூழல் என்னைப் புதிய அனுபவங்களுக்கு இட்டுச் சென்றது. இரவில் காற்று சுமந்துவரும் காட்டுமல்லிப் பூவின் வாசத்தை நுகர்ந்து கொண்டு, மின்மினிப் பூச்சிகளைப் பார்க்க விடுதி நண்பர்களுடன் கிளம்பி விடுவேன். வகுப்பறையின் நுழைவாசலில் 'இன்றைய தாவரம் என்று தலைப்பிட்டு தினமும் ஒவ்வொரு தாவரத்தைக் காட்சிப்படுத்தி அது பற்றிய குறிப்புகளையும் எழுதி வைப்பார்கள். இப்படி, மூன்று வருட கிறித்தவக் கல்லூரி வாழ்க்கை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரம், செடி, கொடிகளை எனக்கு அடையாளம் காட்டித் தந்தது.
பட்ட மற்றும் பட்டப்பின் படிப்புகளுக்கான கற்கை நெறியாக நான் தாவரவியலையே தேர்வு செய்தேன். எனினும், வகுப்பறைக் கல்வியைவிட எனக்குக் கிடைத்த மேற்குறித்த கள அனுபவங்கள் போதித்தவை தாம் அதிகம். சூழலியல் வெறுமனே கல்வி அல்ல; அது வாழ்க்கை. இரத்தமும் சதையும் என்பார்களே; அதுபோல இயற்கையில் தோய்ந்து அதன் ஒரு அங்கமாகவே அனுபவித்து வாழுகின்ற வாழ்க்கை தான் சூழலியல். சூழலியல் குறித்து இவ்வாறுதான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதனால் அபிவிருத்தியின் பெயரால் காடுகள் அழிக்கப்படும்போது எனக்கு வலிக்கிறது. காற்றில் குவியும் கரிப்புகை எனக்குச் சுடுகிறது. உயிர்ப்பல் வகைமையில் அழியும் ஒவ்வொரு உயிரினமும் என்னை அழ வைக்கிறது. உடையில், உணவில், அருந்தும் பானத்தில், மொழியில் பல்லினத்துவத்தை நிராகரிக்கும் உலகமயமாக்கலின் போக்கு என்னைக் கோபப்படுத்து கிறது. பெரும்பான்மையின் பெயரால் எனது நிலம், இயற்கைச் சூழல் அபகரிக்கப்படும்போது என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இவற்றின் தெறிவினையாகவே சுற்றுச்சூழல் இயக்கங்களில் என்னை இணைத்துக் கொண்டதோடு, சுற்றுச்சூழல் குறித்து எழுதவும் ஆரம்பித்தேன்.
எனது கிராமமான திருநெல்வேலியில் முன்பிருந்த நெல்வயல்களையெல்லாம் மேடுறுத்தி குடிமனைகள் ஆக்கிரமித்து விட்டன. எனது குழந்தைகளுக்கு மாதிரிக்காகவேனும் காட்டுவதற்கு ஒரு பொன்வண்டைக்கூடக் காணக் கிடைக்கவில்லை. பரவைக்குளம் பாதிதூர்ந்துவிட்டது. தவளைகள் ஐந்து, ஆறு கால்களோடு தோன்றிப் பயமுறுத்துகின்றன. தாமரைகளை விடவும் அதிகமாக, முன்னர் காணப்படாத ஆகாயத்தாமரைகள் பச்சைப் புற்றுநோயாகக் குளத்தில் பரவியுள்ளன. இந்திய இராணுவம் கொண்டு வந்து சேர்த்த
11
Page 8
ஏழாவது ஊழி
பார்த்தீனியம் களைகள் உள்ளூர்த் தாவரங்களை மிரட்ட ஆரம்பித்துள்ளன. பல கிணறுகளில் நீர்மட்டம் கீழ் இறங்கிச் சென்றுவிட்டது. இது எனது கிராமத்தின் சோகம் மாத்திரமல்ல; பூவுலகு அடுத்த ஊழிக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றதோ என நினைக்கும் அளவுக்கு உலகப் பொதுவான அனுபவமாகவும் இருக்கிறது. இவை குறித்தே எனது கட்டுரைகள் பேசி விழைகின்றன.
பல்வேறு இதழ்களிலும் நான் எழுதி வந்த கட்டுரைகளில் இருந்து நாற்பத்தியொரு கட்டுரைகளைத் தேர்ந்து ‘ஏழாவது ஊழி என்னும் தொகுப்பாக உங்கள் முன் சமர்ப்பித்துள்ளேன். இக்கட்டுரைகள் யாவும் பிந்திய தரவுகளைச் சேர்க்கும் விதமாக இற்றைப்படுத்திப் புதுக்கி எழுதப்பட்டுள்ளன. இதனால், கட்டுரைகளின் அடிக்குறிப்புகளாக அவை முன்னர் வெளியான இதழ், காலம் போன்றவற்றைக் குறிப்பிடுவதைத் தவிர்த்துள்ளேன். மேலும், கட்டுரைகள், வெளியான கால ஒழுங்கில் அல்லாமல், கட்டுரைகளுக்கிடையேயான தொடர்பு களின் அடிப்படையிலேயே இயன்ற அளவுக்கு வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. வாசிப்பின் படிநிலைக்கு இது உதவும் என்பது என் அபிப்பிராயம்.
இலங்கை, தமிழகம் என்று இரண்டு தமிழ்ச் சூழலிலும் எனது ஆக்கங்கள் பிரசுரமாவதால், இரண்டுக்கும் பொதுவான அறிவியல், சுற்றுச்சூழலியல் கலைச்சொற்களைத் தேடுவது எனக்குச் சிரமமாக உள்ளது. கலைச்சொற்களின் ஒலிபெயர்ப்புகளிலும் வித்தியாசங்கள் உள்ளன. இந்த இடைவெளி கடக்க முடியாத ஒன்றல்ல. இதற்கு இலங்கையையும், தமிழகத்தையும் சேர்ந்த தமிழறிஞர்களினதும் அறிவியலாளர்களினதும் ஒருங்கிணைக்கப்பட்ட பணி அவசியம். கலைச் சொற்களைப் புரிந்து கொள்வதில் உள்ள சிரமங்களைத் தவிர்ப்பதற்காக அவற்றின் அருகில் பொருத்தமான ஆங்கிலச் சொற்கள் அடைப்புக்குள் தரப்பட்டுள்ளன. புள்ளி விபரங்களும் பொது வாசகர்களுக்குச் சில சமயங்களில் சலிப்பூட்டக் கூடியவைதாம். ஆனால் முதலாளித்துவ உலகு தனக்குச் சாதகமான தரவுகளை மட்டுமே எடுத்தியம்பி சூழற்சீர்கேடுகளின் உண்மையான பரிமாணங்களை மறைத்தவாறு, இயற்கையைத் தொடர்ந்தும் சூறையாடி வருகிறது. இந்த இருட்டடிப்பை எதிர்கொள்ளுவதற்குச் சூழலியலாளர்கள் தரப்பிலும் புள்ளி விபரங்கள் அவசியமாகின்றன. எனினும், இந்த கலைச்சொற்களும், புள்ளி விபரங்களும் தேடல் மிகுந்த வாசகர்களுக்கு ஒருபோதும் இடையூறாக அமையாது என்று நம்புகிறேன்.
2
பொ. ஐங்கரநேசன்
ஏழாவது ஊழி என்னும் இந்நூலானது, பூவுலகு எதிர்நோக்கியுள்ள பேரபாயத்தில் இருந்து அதனை மீட்டெடுப்பதற்கு வாசகர்களின் சிந்தனை மாற்றத்தையே பெரிதும் வேண்டி நிற்கிறது. இதனைப் படித்து முடிக்கும் ஒருவர் தனது பெருநுகர்வைக் குறைக்கும் விதமாகத் தேவையற்ற நேரத்தில் சுழலும் மின்விசிறியொன்றை நிறுத்திவைக்க, சொட்டு நீரையேனும் வீணாகச் சிந்த விடாது நீர்க்குழாயை இறுக்கமாக மூடிவைக்க, எரிபொருளை மீதப்படுத்தும் விதமாகக் குறைந்தபட்சத் தூரத்தையேனும் மிதிவண்டியில் கடக்க, தெருவில் ஒணான் மீது கல்லெறிந்து துன்புறுத்தும் வக்கிரபுத்தியுள்ள ஒருவரைத் தடுக்க அல்லது இவை போன்ற இன்ன பிற சிறிய, ஆனால் அரிய முயற்சிகளில் இறங்குவாரெனின் மூச்சிரைத்துக் கொண்டிருக்கும் பூமிஅன்னையை கொஞ்சமேனும் ஆசுவாசப்படுத்துவதாக அமையும். அதுவே, இந்நூலாக்க முயற்சிக்கு கிடைத்த பெரு வெற்றியாகவும் இருக்கும்.
பூமி அனுபவித்து வரும் இன்னோரன்ன சீரழிவுகளுக்கு மத்தியிலும், மனிதன் பூமியின்மீது மேலாண்மை செய்வதை விடுத்துக் கூட்டாண்மை உறவுக்குத் திரும்புவான் என்ற நம்பிக்கை எனக்குள் இன்னமும் மீதமிருக்கிறது.
அன்புடன் 6LIT. antiaircipater 30.3.2009
'செல்வமாணிக்கம் திருநெல்வேலி கிழக்கு யாழ்ப்பாணம்
இலங்கை ayngaranesan 590yahoo.com
13
Page 9
நன்றியுரை செய் நன்றி மறவாமல்.
னெது எழுத்தாக்க முயற்சிகளில் தங்களது அறிவுத் தேட்டத்தைப் பெருவிருப்போடு பகிர்ந்து கொள்ளும் பேராசிரியர் கா.சிவத்தம்பி, சென்னைக் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியர்கள் முனைவர் சா.பாலுசாமி, முனைவர் கு. அரசேந்திரன், முனைவர் து. நரசிம்மன், நண்பர்கள் திரு அ. தமிழன்பன், திரு தி.திருக்குமரன் ! எனது முயற்சிகளை எப்போதும் ஆசீர்வதிக்கும் பெரியவர் திரு.மசூபெர்க்மன்ஸ் I எனது கட்டுரைகளுக்குக் களம் தரும் இதழாசிரி யர்கள் திரு. வீ. தனபாலசிங்கம் (தினக்குரல் - இலங்கை), திரு.இ.பாரதி தினக்குரல்-இலங்கை),திரு.தெ. மதுசூதனன் (கூடம் - இலங்கை), திரு.எ.சுரேஷ் பால் (அரும்பு - தமிழகம்), திருமதி. செளமியா அன்புமணி (பசுமைத் தாயகம் - தமிழகம்), கவிஞர் வைகறை சோளரம், இலக்கியமலர் - தமிழகம்), திரு. சுப. வீரபாண்டியன் (கருஞ்சட்டைத் தமிழர் - தமிழகம்), திரு. சி. மகேந்திரன் (தாமரை - தமிழகம்), திரு. இரா.சிறீதரன் (தாமரை - பிரான்ஸ்), திரு. இ. அமலன் (அருவி - இலண்டன்),திரு.பொ.ரவிச்சந்திரநேசன் (வைகறை - கனடா) கட்டுரைகளைத் தட்டச்சு செய்து தரும் திருமதி. பேபி இராஜேந்திரன் இராஜகுணா கணினியகம்) நூல் பதிப்பாளர்கள் கவிஞர் வைகறை (சாளரம்),திரு.சதபூ,பத்மசீலன் (சேமமடு) எனது எழுத்தாக்க முயற்சிகளுக்கு எல்லாவிதத்திலும் உறு துணையாக இருக்கும் எனது வாழ்க்கை இணை பாமி கணினியில் தரவுகளைத் தேடித்தரும் எனது அன்புப்புதல்விகள் அஞ்சலி, பைரவி ஆகியோர்களின் கூட்டு முயற்சி இல்லாமல் இந்நூல் உருவாக்கம் சாத்தியமாகி இராது.
இவர்கள் அனைவருக்கும் என் பணிவு நிறைந்த நன்றிகள்
அன்புடன் 6?Lumt. asenzida517G35asF6zör
14
பொருளடக்கம்
இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை செய் நன்றி மறவாமல்.
கொதிக்கும் பூகோளம்
10
14
17
அனல் கக்கும் அமெரிக்காவும் புனல் தின்ற ஆர்லியன்சும் 32
ஓசோன் குடையில் ஒட்டை பிளாஸ்ரிக்கின் பிடியில் பூமி ! அச்சுறுத்தும் அஸ்பெஸ்ரஸ் கொலைக்களமாகும் அடுக்களைகள்!
நீல நஞ்சு
காதினுள் பாயும் நஞ்சு செல்லிடப் பேசிகள் வரமா - சாபமா? தள்ளாடும் மினமாட்டா சுவாசமே நஞ்சாக. தாய்ப்பாலிற் சிறந்ததொரு அமிர்தமும் இல்லை மென்பானங்களின் வன்முறைகள் நீரின்றி அமையாது உயிர் பாழாகும் யாழ்ப்பாணக் கிணறுகள்! யாழ்ப்பாணம் பாலையாகுமா? நீர்ப் போர் மூளுமா? முற்றுகையில் மழைக்காடுகள்!
15
46
56
67
75
88
9.
98
107
115
124
134
142
151
158
166
174
Page 10
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
4丑
ஏழாவது ஊழி
கண்டல்களைக் காப்போம்
படையெடுக்கும் பார்த்தீனியம் வாழை உயிர் வாழுமா? இயற்கை விரித்த வலை சுதந்திரத்தின் சிறகுகள் காணாமற் போகும் கடற்குதிரைகள் கேட்குமா இனித் தவளைச் சத்தம்? ஆசியாவின் கடைசிச் சிங்கங்கள் புலிகள் அழியலாமா? குரங்குகளில் மனிதர்களும் மனிதர்களில் குரங்குகளும் தந்திர விதைகளும் தற்கொலை விவசாயிகளும் பறிபோகும் பாரம்பரிய மருத்துவம் காப்புரிமை என்னும் பொருளாதார ஆயுதம் எதனோல் பெற்றோல்; மாற்றா - ஏமாற்றா? மிதிவிசைப் பயணம் ஊமையாகும் மொழிகளும் மரணிக்கும் உயிர்ச்சூழலும் ஏழாவது ஊழி கோழிகளைக் கொல்ல இராணுவம்
gyao)&Fall DIT?...60&FGILDIT? உலகப் பசிக்கு உருளைக்கிழங்கு தாங்குமா இந்தப் பூமி? தேசிய வாசம் வீசும் கார்த்திகைப் பூ!
விடுதலைச் சூழலியல்
187
197
206
28
227
238
248
258
271
281
292
305
314
330
340
349
365
378
386
393
403
414
422
1
கொதிக்கும் பூகோளம்
"மட்டுமீறிய நுகர்வுப் போக்கு வாழ்க்கை முறையாக பரிணமித்து விட்டதும், வளங்களை வரம்பின்றிச் சூறையாடும் அபத்தமும்தான் சுற்றுச்சூழலின் முக்கிய எதிரிகளாக விளங்குகின்றன."
- ஃபிடல் காஸ்ட்ரோ
ஆண்டுதோறும், "போன வருஷத்தை விட இந்த வருஷம் கடுமையான வெய்யில். தாங்க முடியாத அளவுக்குக் கொதிக்கிறதே" என்று பலர் நொந்துகொள்வதைக் கேட்டு வருகிறோம். இதில், ஆண்டுகள் ஓட ஓட நமது வயதும் ஏற ஏற வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் சக்தி நம்மை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்வாங்கிக் கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இதையும் விடச் சுட்டெரிக்கும் உண்மை வேறொன்று இருக்கிறது. அது, ஆண்டுக்கு ஆண்டு இந்தப் பூகோள உருண்டையின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்பதுதான். பூமி, சூரியனிலிருந்து வெகுதொலைவில் - சுமார் 15 கோடி கிலோமீற்றர்களுக்கு அப்பால் - இருப்பினும், வெம்மை தாங்க முடியாதவாறு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
பூமியில் தரை - கடல், துருவம் - மத்தி என்று இடத்துக்கு இடம் வேறுபட்ட வெப்பநிலைகள் நிலவுகின்றன. இவற்றின் சராசரி வெப்ப நிலை 15 பாகை செல்சியஸ் (°C). இதுவே பூமியின் வெப்பநிலை யாகக் கொள்ளப்படுகிறது. பூமியின் வெப்பநிலை பற்றிய தரவுகள் 1880ஆம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப்புள்ளி விபரங்களின் அடிப்படையில், அமெரிக்காவின் "தேசிய கடல்சார் மற்றும் வளிமண்டலவியல் நிர்வாகம் கடந்த நூற்றாண்டு கால வரலாற்றில் அதிவெப்பமான ஆண்டாக 2005ஆம் ஆண்டைப் பதிவு செய்துள்ளது. அப்போது, பூமியின் சராசரி வெப்பநிலை 0.6 பாகை செல்சியஸ் அளவால் கூடியிருந்தது. 1998 மற்றும் 2002ஆம் ஆண்டுகள் முறையே பூமியின் அதிவெப்பமான இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆண்டுகள் ஆகும். கடந்து சென்ற 2008ஆம் ஆண்டும், சராசரியைவிட
17
Page 11
ஏழாவது ஊழி
0.49 பாகை செல்சியசால் உயர்ந்து எட்டாவது இடத்தில் உள்ளது. இப்படி, பூமியின் வெப்பச் சரிதத்தில் பத்து ஆண்டுகள் எவை என்று பார்த்தால் அவை அத்தனையும் 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு வந்த ஆண்டுகளே.
பூமி, ஏன் இப்படித் திடீரென்று ஒரு கொதிக்கும் கோளமாக மாறிவருகிறது. இயற்கையிலேயே அப்படியா? இல்லை!. தொலை நோக்கு இன்றித் தமது தற்போதைய அவசியத்தை அவசரமாகப் பூர்த்தி செய்யும் மனிதர்களுடைய நடவடிக்கைகளே பூமியை இப்படிச் சூடு போட்டுக் கொண்டிருக்கின்றன. உலகம் எங்கும் உள்ள அவர்களுடைய பெருவாரியான தொழிற்சாலைகளும், மோட்டார் வாகனங்களும் வளி மண்டலத்துள் இடைவிடாது கக்கிக் கொண்டிருக்கும் காபன் ஈரொக்சைட்டு (Carbon dioxide), மெதேன் (Methane), நைட்ரஸ் 3d603, G5 (Nitrous Oxide), situair Gurdjiangl. G. (Carbon monoxide), கந்தக ஈரொக்சைட்டு போன்ற வாயுக்களினால்தாம் பூமி பெருமளவில் தகிக்கத் தொடங்கியுள்ளது. இவற்றில் பிரதான வில்லன் காபன் ஈரொக்சைடு வாயுதான். இந்த வாயுக்களைப் ‘பச்சை வீட்டு வாயுக்கள் என்றும், இவற்றின் விளைவாகப் பூமி சூடாகுவதைப் ‘பச்சை வீட்டு விளைவு என்றும் சூழல் விஞ்ஞானிகள் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
பச்சை வீட்டு விளைவு (green house effect) என்பது அவ்வளவு பாரதூரமான ஒன்றா? சொல்லப்போனால் ஒரு எல்லை வரை இது அவசியமான ஒன்றுதான். சூரியக் குளியல் செய்து கொண்டிருக்கும் பூமி, தான் பெற்ற வெப்பத்தின் ஒரு பகுதியை கண்ணுக்குப் புலப்படாத அகச்சிவப்புக் கதிர்களாக மீண்டும் விண்ணை நோக்கி வீசி விளையாடு கிறது. இப்படி எறியப்படும் வெப்பத்தில் கணிசமான பகுதியைப் பூமியின் வளிமண்டலப் போர்வையில் உள்ள காபன் ஈரொக்சைட்டு போன்ற வாயுக்கள் அப்படியே பிடித்து வைத்துக் கொள்கின்றன. வளிமண்டலம் ஒரு கம்பளிப் போர்வைபோல வெப்பத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதால்தான் பூமி கதகதப்பாக உள்ளது. தண்ணீர் திரவ நிலையில் பாய்கிறது. பூமியில் உயிரினங்கள் வாழவே முடிகிறது. இந்தப் பச்சை வீட்டு விளைவு மட்டும் இல்லாது போயிருந்தால் பூமி அதன் தற்போதைய வெப்பநிலையை விட வெகுவாகக் குறைந்து, குளிரில் நடுங்கும் ஒரு கிரகமாகவே உறைந்திருக்கும்.
இப்போதுள்ள பிரச்சினை என்னவெனில் பூமியின் வளிமண்டலம் சுமக்கும் காபனின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகமிாகி வருவதுடன்,
18
பொ.ஐங்கரநேசன்
பூமியின் வெப்ப நிலையும் அளவு தாண்டி அதிகரித்து வருகிறது என்பதுதான். இயற்கை வளியில் காபன் ஈரொக்சைட்டு வாயுவின் அளவை மிகக் குறைந்த அளவில், ஒரு சமநிலையில் (0.03 விழுக்காடு) வைத்திருக்கவே எத்தனிக்கின்றது. பெருமளவு காபன் ஈரொக் சைட்டைக் காட்டுத்துகில்களினாலும், புல் விரிப்புகளினாலும் ஒற்றி உறிஞ்சுகிறது. அதை இலைகளினுள்ளும் தண்டுகளினுள்ளும் அடைத்து நிரப்புகிறது. அமெரிக்கக் காடுகளில் ஆய்வுகளை மேற் கொண்ட ஹாவார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வோப்ஸி (Wofsy) என்னும் வளிமண்டலவியல் விஞ்ஞானி, ஆண்டுதோறும் ஒவ்வொரு ஏக்கர் அளவு காட்டுப் பரப்பும் குத்து மதிப்பாக முக்கால் மெற்றிக் தொன்கள் அளவு காபனை வளியில் இருந்து அகற்றுவதாகக் கணக்கிட்டுள்ளார். இயற்கை இன்னுமொரு பகுதி காபனீரொக்சைட்டு வாயுவை காபன் தொட்டிகளாகக் கடலில் கரைக்கின்றது. அங்கு கிளிஞ்சல்களினதும், முருகையுருப் பிராணிகளினதும் (Corals) வன்கூடு களில் சேமித்து வருகின்றது. மரங்கள் உறிஞ்சிய காபன் மில்லியன் கணக்கான வருடங்களில் நிலக்கரி, பெற்றோலியம் என்று உருமாற, கடல் குடித்த காபன் சுண்ணாம்புக் கல்லாகக் கெட்டிக்கின்றது.
ஆனால், இயற்கையின் உதவுங்கரங்களினால் இந்தச் சுத்திகரிப்பு களை இன்று செவ்வனே நிறைவேற்ற இயலவில்லை. தொழிற் புரட்சியின் கைங்கரியமாக வளியில் கரியமில வாயுவின் அளவு ஏகத்துக்கும் எகிறி வருகிறது. கைத்தொழில் பொருளாதாரத்தை ஒட்டு விக்கும் நிலக்கரி, பெற்றோல், இயற்கை வாயு போன்ற எரிபொருட்கள் எல்லாம், தாவரங்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த காபனை நொடிப் பொழுதில் வளிக்குள் கழித்துக் கொண்டிருக்கின்றன. காபனீரொக்சைட்டை மீள உறிஞ்சி காபன் சுழற்சியில் பங்கேற்பவை மரங்கள். அந்த மரங்கள் கூட காடழிப்பில் எரியூட்டப்படுகின்றன. இப்படி, சுவட்டு எரிபொருட் களின் தகனத்தினால் 6.5 பில்லியன் மெற்றிக் தொன்கள் காபனும் காடழிப்பால் 1.5 பில்லியன் மெற்றிக் தொன்கள் காபனும் என ஆண்டுதோறும் 8 பில்லியன் மெற்றிக் தொன்கள் அளவு காபனை மனிதன் வளிமண்டலத்துள் திணித்துக் கொண்டிருக்கின்றான்.
தொழிற்புரட்சி ஆரம்பிக்கப்படும் முன்னர்-1750இல்வளிமண்டலத்தில் காபன் ஈரொக்சைட்டின் செறிவு வெறுமனே 280 ppmv (Parts per million by Volume) egyGrGagsfrGör. gțös gy6MrGay gÜG3Lungsi 360 ppmv (30 விழுக்காடு அதிகரிப்பு)ஐத் தாண்டிவிட்டது. காபனீ
19
Page 12
ஏழாவது ஊழி
ரொக்சைட்டு மட்டுமல்ல, மெதேனும், நைதரசன் ஒட்சைட்டும்கூடப் பெருமளவில் தேங்கிவருகின்றன.
காபனீரொக்சைட்டு வாயுவுக்கு அடுத்தபடியாகப் பூமியைக் கொதிக்க வைப்பதில் மெதேன் வாயு பெரும் பங்கு வகிக்கிறது. இதன் பெருமளவு உபயம் பண்ணை விலங்குகள். ஆடு, மாடு, எருமை, ஒட்டகம் போன்ற இரை மீட்கும் கால்நிடைகளின் இரைப்பையில் சமிபாட்டுக்கு உதவும் நுண்ணங்கிகள் குடித்தனம் செய்கின்றன. இவற்றின் நொதித்தல் செயல்பாட்டின் மூலம் (Enteric Fermentaion) கணிசமான அளவு மெதேன் வாயு வெளியேறுகிறது. பண்ணை விலங்குகளின் கழிவுகளில் பக்ரீறியங்கள் பல்கிப் பெருகியும் மெதேன் வாயுவை விடுவிக்கின்றன. இதுவே தொழில் முறையில் உயிர் வாயு (Bio gas) எனப்படுகிறது. நெற்பயிர்ச் செய்கையும் வில்லங்கமானதுதான். களைகளையும், பீடைகளையும் கட்டுப்படுத்துவதற்காக வயல்களில் தண்ணிரைத் தேக்கி வைப்பது உண்டு. அதிக பசளைகள், ஈரலிப்பு, காற்றில்லாச் சூழல் பக்ரீறியங்களுக்கு உவப்பாக அமைய மெதேன் வாயு குமிழியிட்டு வெளியேறுகின்றது. இப்படிப் பச்சை வீட்டு வாயுக் கள் குவிவதைத் தடை செய்யக் கூடிய தீவிரமான அணுகுமுறைகள் மேற்கொள்ளப்படாவிடின், இந்நூற்றாண்டின் இறுதியில் இந்த அளவுகள் தொழிற்புரட்சியின் முன்னர் இருந்ததைவிட மூன்று மடங்காக அதிகரித்து விடும்.
பச்சை வீட்டு வாயுக்களின் அளவு அதிகரிக்க அதிகரிக்க பூமியை விட்டு வெளியேறவிடாது அவை தடுத்து வைக்கும் வெப்பத்தின் அளவும் கூடி வருவதாலேயே பூமி இப்படித் தகிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த நூற்றாண்டில் பூமியின் வெப்பநிலை சராசரியாக 0.6 பாகை செல்சியஸ் அளவால் உயர்ந்திருக்கிறது. இவ்வளவுதானா என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இந்த அதிகரிப்பு சாதாரணமான ஒன்றல்ல. கடந்த 600 ஆண்டுகால புவி வரலாற்றில் இந்த அளவு மிக வெப்பமான ஒன்றாகும். 2100 ஆம் ஆண்டில் பூமியின் சராசரி வெப்பநிலை 1.4 முதல் 5.8. பாகை செல்சியஸ் வரை உயரக் கூடும் என்ற அபாய அறிவிப்பை ஐ.நா.வின் சூழல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
பூமி இப்படிச் சூடாகி வருவது வெறுமனே வெப்பமானிகளின் அளவுத் திட்டங்களில் மாத்திரம் மாற்றத்தை உண்டு பண்ணிவிட்டுப் போய்விடுகின்ற ஒரு சாதாரண சம்பவம் அல்ல. இது, பூமியின் துன்பியல் வரலாறாகப் பதியப்படப்போகும் பேரணர்த்தங்கள் பலவற்றின் பிரம்மா.
2O
Page 13
ஏழாவது ஊழி
இதற்கான அச்சவாரங்களாக உலக அரங்கில் இப்போதே அனர்த்தங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளன.
பூமியின் வெப்ப உயர்வால் நீர்ப்பரப்புகளில் இருந்து வளியில் சேரும் நீராவியின் அளவு அதிகரித்து வருகின்றது. கடந்த 20 வருடங் களில் 20 விழுக்காடு கூடியுள்ளது. இந்த மேலதிக ஈரப்பற்று தட்ப வெப்ப நிலையில் மாற்றங்களை உண்டு பண்ணும். குளிர் காலத்தை விரைவிலேயே மரணிக்கச் செய்து கோடைகாலத்தின் ஆயுளை நீடிக்க வைக்கும். காற்று, மழை ஆகியவற்றின் பாங்கில் திசை திருப்பத்தை ஏற்படுத்தும். இதனால் பாலைவனப் பகுதியில் அடை மழை பொழிய, வளமான நிலங்கள் வறண்டு போகலாம். சூறாவளிகள் வேகம் கொண்டு அடிக்கடி மிரட்டலாம். இந்தக் கடூரங்களில் ஒன்றாகவே, 1998இல் கடும்வறட்சி மூட்டிய காட்டுத்தீ இந்தோனேஷியாவில் 20 இலட்சம் ஏக்கர் காடுகளைப் பொசுக்கி எரித்தது. 1998இல் திபெத் லாசா வரலாறு காணாத வெப்பத்தைக் கண்டது. 1999இல் நியூயோர்க் மிகவும் உக்கிரமான கோடையை அனுபவித்தது. 2002இல் மத்திய ஐரோப்பிய நாடுகளில் வெப்ப உயர்வு சுமார் 2000 பேர்களின் உயிர்களைக் கருக்கியது. 2005இல் கத்ரீனா, ரீட்டா வில்மா என்று சீறிய சூறாவளிகள் அமெரிக்காவை வெள்ளத்தால் புரட்டியெடுத்தன. அதே ஆண்டில் அல்ஜீரியா 50 பாகை செல்சியஸ் அளவு சூட்டில் தவிக்க, அதற்கு நேர்மாறாகக் பால்கன் பகுதியில் கடும் குளிர் நிலவியது.
பூமி சூடாகுதல் நீர் நிலைகளை மட்டுமல்ல, வயிறுகளையும் காய வைத்து வருகின்றது. இதில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது ஏற்கனவே பஞ்சை பராரிகளாக உள்ள ஆபிரிக்க மக்கள்தாம். ஆபிரிக்கர்களில் பெரும்பான்மையினர் மழையை நம்பிய சாகுபடியால் வயிற்றை நிரப்பி வாழ்பவர்கள். வானம் பொய்த்துப் போனதால் விளைச்சல் இன்றி இவர்கள் மோசமான உணவுப் பஞ்சத்தை அனுபவித்து வருகின்றனர். மேற்கு ஆபிரிக்க நாடான நைகர் படுகின்ற அவலம் அண்மையில் ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நைகரின் சனத்தொகை 12 மில்லியன்கள். இவர்களில் 20 விழுக் காட்டினர் தகுந்த உணவு இன்றி, போசணைக் குறைபாடுகளால் அவதிப்படுகின்றனர். ஐந்து வயதைத் தொட முன்னரே நான்கு குழந்தை களில் ஒன்று பசியாற முடியாமல், பட்டினிக்குப் பலியாகிவிடுகிறது.
இந்தச் சோகங்களோடு, கால நிலை மாற்றங்களினிால் ஏற்படும் நோய்களும் சேர்ந்து கொண்டு ஏழை நாடுகளைப் போட்டுத்
22
பொ.ஐங்கரநேசன்
தாக்குகின்றன. கென்ய மக்கள் இதுவரையில் மலேரியாவால் அவதிப் பட்டதில்லை. இப்போது, வெப்பநிலை உயர்வு நுளம்புகளைத் தாராளமாக விளைவித்து, மலேரியாவை அங்கும் விதைக்கத் தொடங்கி யுள்ளது. இப்படித் தட்ப வெப்ப மாற்றம் காரணமாக ஏற்பட்டுவரும் பசி பட்டினியாலும், மலேரியா - வயிற்றுப் போக்குப் போன்ற வெப்ப மண்டல நோய்களினாலும் ஏழை நாடுகளில் ஆண்டுதோறும் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமானோர் இறந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த உயிர்ப்பலிகள் 2030 ஆம் ஆண்டளவில் இரண்டு மடங்குகளாக உயரும் என அஞ்சப்படுகிறது. இதில் பரிதாபம் என்னவெனில் வெப்ப உயர்வால் அதிகம் தண்டிக்கப் படும் இவர்கள், பூமியை வெப்பப்படுத்தும் செயல்கள் எதிலும் சம்பந்தப்படாத அப்பாவி ஏழைகள் என்பதுதான்.
தட்ப வெப்ப மாறுதல்களினால் உலகின் பவளப்பாறைகளிலும் (corals) பாரதூரமான பாதிப்பு ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. பவளப் பாறைகள் மில்லியன் கணக்கான "பொலிப்புகள் (Polyps) எனப்படும் மெல்லுடலிகளையும், வெளியே அவற்றினால் சுரக்கப்படும் கல்சியம் காபனேற்றுச் சுவர்களையும் கொண்ட உயிரிகள் ஆகும். மெல்லுடலி களில் குடியேறியிருக்கும் அல்காக்களினால் உணவூட்டங்களையும், விதவிதமான நிறங்களையும் பெறுகின்றன. இவற்றைக் 'கடலின் மழைக் காடுகள் என வர்ணிக்கிறார்கள். காபனீரொக்சைட்டை சுண்ணாம்பாக சிறைப்பிடிப்பதோடு, 25 விழுக்காடு கடலுயிரிகளுக்குப் புகலிடமும் வழங்குவதாலேயே இந்த ஒப்புவமை. தரையின் மழைக்காடுகளைப் போன்றே இவற்றுக்கும் அவலங்கள்தான். வெப்ப உயர்வு கடுமை யாகவே அச்சுறுத்துகின்றது. சூடு அதிகரிக்கும்போது பவளப்பிராணி களை ஒம்புகின்ற அல்காக்கள் வெளியேற, பவளப் பாறைகள் நிறமிழந்து வெளிறி, உணவின்றி இறக்கத் தொடங்குகின்றன. 1998இல் ஏற்பட்ட வெப்பப் பெரும் உயர்வு வெப்ப மண்டலக் கடல்களில் உள்ள எல்லாப் பாறைத் தொடர்களிலுமே ஏதேனும் ஒரு அளவில் பாதிப்புகளைப் பதித்துச் சென்றுள்ளது. உலகிலுள்ள பவளப்பாறைகளில் ஏறத்தாழ 15 விழுக்காடு மீள முடியாத அளவுக்கு ஏற்கனவே அழிந்து விட்டதாகவும் இன்னும் 30 விழுக்காடு அளவு, வருகின்ற 30 ஆண்டுகளில் பட்டுவிடும் எனவும் ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக, பூமியில் அதிகரித்துவரும் வெப்பம், துருவப்பகுதிகளில் கெட்டித்துக் கிடக்கும் பனிக் கவிப்புகளை யும் பதம் பார்க்கத் தொடங்கியுள்ளது. பனிமலைகளுக்கு இன்னும்
23
Page 14
ஏழாவதுஊழி
ஒரு சோகம் வேறு. அடுக்கடுக்காக உறைந்து கிடக்கும் பனிப்பாறைகள் எப்போதுமே பளபளப்பாக மினுங்கிக் கொண்டிருக்கும். இந்தப் பளபளப்பு, சூரியக் கதிர்கள் விழும்போது கதிர்களின் வெப்பத்தை அப்படியே திருப்பி விண்ணுக்கே பந்தாடிவிடும். இதனால் சூடு அதிகம் தங்குவதில்லை. உறைபனியும் உருகுவது இல்லை. பல்லூழி காலமாக இதுவே நிகழ்ந்தது. ஆனால் தொழிற்புரட்சியின் பின்னர், உலகின் புகைப் போக்கிகள் கக்கித் தள்ளுகிற கரிக்காற்று மெல்ல நகர்ந்து பனிப்பாறைகளின் முகத்தில் காபனினால் கறுப்புப் பூசி வருகின்றன. இதனால் கதிர்வீசும் திறனை படிப்படியாக இழந்து வரும் பணிப் பாறைகள் வெப்பத்தை அதிகம் உள்வாங்க, உருகும் வேகம் இன்னும் அதிகரித்துள்ளது.
தொலை வானத்தில் உள்ள ஆர்ட்டிக், அன்டார்ட்டிக் பகுதிகளில் மட்டுமல்ல, இங்கே இமயமலை அணிந்திருக்கும் பனித்தொப்பி களில்கூட பொத்தல்கள் விழ ஆரம்பித்துள்ளன. 1999 ஆண்டுத் தகவல் களின்படி இமயத்தின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட், பணி உருகிவழிந்ததில் அதன் உயரத்தில் 1.3 மீற்றர் குறைந்துள்ளது. இப்போது ஆண்டுக்கு சராசரியாக 0.1 மீற்றர் என்ற அளவில் அது காணாமற் போய்க்கொண்டிருக்கிறது. இமயத்தின் சியாச்சின், கங்கோத்ரி, கன்லுன், தூண்கிரி போன்ற பணிச்சிகரங்களும் சுருங்கி வருகின்றன. கங்கா, யமுனா என்று நதிகளின் ரிஸிமூலமே இந்தப் பணிச்சிகரங்கள் தாமே. சீனாவில் ஆண்டுதோறும் மஞ்சள் ஆற்றில் பாயும் நீரின் அளவுக்குச் சமமான அளவு அதன் பணிச்சிகரங்களிலிருந்து தொலைந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடிப்பின் 2050ஆம் ஆண்டளவில் சீனாவின் பனிமலை களில் 64 விழுக்காடு அளவு உருகித் தீர்ந்திருக்கும் என சீன அறிவியற் கழகம் அண்மையில் தெரிவித்துள்ளது. இதனால் நதிகளில் நீர் வரத்துக் குறைந்து, வறண்டு காய்ந்து மேற்கு சீனாவில் 300 மில்லியன் பேர் குடிநீரின்றித் தவிக்கும் நிலை உருவாகும் என அஞ்சப்படுகிறது.
உலகின் மொத்த நன்னீரில் முக்கால் பங்கு, துருவப்பகுதியிலேயே உறைந்து இருக்கின்றது. உருகி வழியும் இப் பனிநீர், வெப்பத்தால் விரியும் கடல் நீருடன் சேர்ந்து கொள்ள, கடல் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. கடந்த நூற்றாண்டில் மட்டும் இப்படி 25 சதம மீற்றர்களால் உயர்ந்துள்ளது. 2100 ஆம் ஆண்டளவில் கடல்மட்டம் அரை அடி முதல் மூன்று அடிகள் வரை உயரக்கூடும் என்று அனைத்து அரசாங்கங்களின் வெப்பநிலை மாறுபாட்டு ஆய்வுக் குழு (Inter Governmental Panel On Climatic Changes-IPCC) 6Tdispfigs/girGigi. g.gif
24
பொ. ஐங்கரநேசன்
நிகழின், அமெரிக்காவின் நியூயோர்க் தொடங்கி இந்தியாவின் மும்பை வரையான கரையோர நகரங்கள் பலவற்றுள் கடல் நீர் புகுந்துவிடும். வெப்ப மண்டல நாடுகளின் கரையோரப் பகுதிகளிலேயே உலக சனத் தொகையின் கால்வாசிப் பகுதியினர் காலம் தள்ளுகின்றனர். இவர்களின் கதி அதோ கதிதான். மாலைத் தீவு மக்களின் விதி இன்னும் சோகமானது. மாலைத் தீவு என்பது ஆயிரத்து நூற்று எண்பது தீவுகளின் கூட்டம். இவற்றில் எண்பது விழுக்காடு தீவுகள் கடல் மட்டத்தில் இருந்து வெறும் மூன்று அடிகள் உயரத்தில் மட்டுமே அமைந்துள்ளன. இந்தத் தீவுகள் யாவற்றையும் கடல் விரைவில் விழுங்கித் தீர்த்துவிடும். இப்பவே, மாலைத் தீவுகளின் தலை நகரமான மாலே (Male), சுற்றி யிருக்கும் கடல் நீர் கொஞ்சம் உயர்ந்தாலே தாங்காது என்ற நிலையில் 'கொங்கிறீற் சுவர்களை எழுப்ப ஆரம்பித்துள்ளது. மாலைதீவு அரசாங்கம் சுமார் மூன்று இலட்சம் மாலைத்தீவு வாசிகளை வேறுநாடுகளில் குடி யேற்றவும் தீர்மானித்துள்ளது. பூமி வெப்பமடைவதால் மாலைத்தீவு எதிர்நோக்கியுள்ள பேரபாயத்தை மனித உரிமைப் பிரச்சினையாகக் கருதி இந்தச் சூழல் அகதிகளை ஏற்றுக் கொள்ளுமாறு சமீபத்தில் உலக நாடுகளிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருக்கிறது.
பூமி முகங்கொடுத்து வரும் இது போன்ற பல்வேறு சூழற் பிரச்சினைகள் பற்றியும் ஆராய ஐக்கிய நாடுகள் சபை 1992ஆம் ஆண்டு றியோ டி ஜெனிரோவில் புவி உச்சிமாநாட்டைக் (Earth Summit) கூட்டியது. பூமியைக் காப்பாற்றுவதற்கான கடைசிச் சந்தர்ப்பம் என விடுக்கப்பட்ட அறைகூவலில், அதுவரை நிகழாத அளவுக்கு உலக நாடுகள் ஒன்று கூடின. சுற்றுச்சூழலும் அபிவிருத்தியும்' என்ற கருப்பொருளில் அமைந்த இந்த மாநாட்டின்போது 'பூமி சூடாகுதல் எரியும் பிரச்சினையாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், பூமியைக் காப்பாற்றும் பொருட்டு பசுமை இல்ல வாயுக்களின் அளவைக் குறைப்பதற்கு ஏதாவது செய்தேயாக வேண்டும் என்ற அவசரம் உணரப்பட்டதில் 'கால நிலை மாறுதல் பற்றிய கட்டமைப்பு ஒப்பந்தம் (United Nations Framework Convention on climate changes) a CourtGolgi). 155 நாடுகள் கையெழுத்திட்டு ஏற்றுக் கொண்டன. இதன்படி தொழில் வளர்ச்சியடைந்த நாடுகள் தாங்கள் வெளியேற்றி வருகின்ற பசுமை இல்ல வாயுக்களின் அளவை, அவை 1990ஆம் ஆண்டில் வெளி யேற்றிய அளவுக்கு குறைத்துக் கொள்ளுதல் வேண்டும். இதற்கான காலக்கெடுவாக 2000 ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.
25
Page 15
ஏழாவது ஊழி
ஆனால் இந்த 'காலநிலை மாறுதல் பற்றிய கட்டமைப்பு ஒப்பந்தம் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுவது தொடர்பாக மூன்றாம் உலக நாடுகளைக் கட்டாயப்படுத்தவில்லை. பூமி உச்சிமாநாடு நடைபெற்ற 1992 ஆம் ஆண்டு வளியில் குவிந்திருந்த, முதன்மைப் பசுங்கூட வாயுவான காபன் ஈரொக்சைட்டின் அளவு 26.4 பில்லியன் மெற்றிக் தொன்கள். இதில் மிகப் பெரும் பங்கு, 22.3 பில்லியன் மெற்றிக் தொன்கள் தொழிற்சாலைகள் கக்கிய கறுப்பு வாந்தி. இவற்றில் இலங்கைக்கும், சோமாலியாவுக்கும், அல்லது எந்த ஒரு மூன்றாம் உலக நாட்டுக்கும் எந்த அளவுக்குப் பங்கிருக்க முடியும்? இதனால் வளர்முகநாடுகள் மீது ஐ.நா கண்டிப்புக் காட்டவில்லை. மாறாக வளர்முக நாடுகளுக்குத் தொழில் வளநாடுகள் பூமி சூடேறுவதால் ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்புகளுக்கு நிதியுதவிகளை வழங்க வேண்டு மெனவும், பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கும் மாற்று நுட்பங்களை வழங்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.
1992 இல் பூமி உச்சி மாநாட்டில் ஆரம்பித்து 1997 மே மாதம் வரையில் காலநிலை மாறுதல் பற்றிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்த போதும் இலக்கை எட்டுவது இலகுவான ஒன்றாக இருக்கவில்லை. ஆய்வாளர்களின் நெருக்குதல்கள் தீர்மானங்களை எடுக்க வைத்தாலும் அவற்றை அமுல் செய்ய வேண்டிய தரப்பு அரசியல்வாதிகள்தானே. மலிவு அரசியலும், இலாப வேட்கையும், அதிகாரப் பசியும் புண்ணாகிப்போயிருக்கும் பூமியைக் குணப்படுத்தக்கூடிய நீடித்த மேம்பாட்டுக்கு (sustainable development) இன்றளவும் குறுக்காகத்தானே நிற்கின்றன. பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முனைந்தால், அதற்கான மாற்று களைப் பயன்படுத்த நேர்ந்தால் பெருமளவு செலவு பிடிக்கும், எதிர்ப்பு பெருகி அதிகாரத்தை இழக்க நேரிடும் என்று கருதி பெரும்பாலான நாடுகள் தீர்மானத்தைச் செயற்படுத்துவதில் அசட்டை காண்பித்தன.
உலகளாவிய இயற்கைப் பாதுகாப்பு நிதியம் (WWF) 1997 இல் இது தொடர்பாக, கடமைகளைச் செய்தவர்கள் - செய்யத் தவறிய வர்கள் என ஒரு பட்டியலை வெளியிட்டது. இதன்படி ஐரோப்பாவின் புகைபோக்கிகள் கக்கிக் கொண்டிருக்கும் காபன் ஈரொக்சைட்டு வாயுவின் அளவு 19.6 விழுக்காடு. தூய்மைக்கேட்டை உண்டாக்கு வதில் உலக அளவில் இரண்டாவது இடம். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனி, தனது காபன் ஈரொக்சைட்டு வாயு வெளியேற்ற அளவை 2000 ஆண்டுக்குள் 80 கோடி தொன்கள் வரை குறைத்துவிட
26
பொ. ஐங்கரநேசன்
ஒப்புக் கொண்டதுடன், வாக்குறுதியை நிறைவேற்றும் நிலையையும்
எட்டியிருந்தது. ஆனால் இந்த நம்பிக்கைக் கீற்று ஐரோப்பாவுக்கு வெளியே தென்படவே இல்லை.
வளிமண்டலத்தை மாசுறுத்துவதில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் ஜப்பான், காபன் ஈரொக்சைட்டின் வெளியேற்றத்தை ஐந்து விழுக்காடுகளுக்கு மேல் குறைக்க விரும்பவில்லை. ஆண்டுக்கு 80 கோடி தொன்கள் காபன் ஈரொக்சைட்டை வெளியேற்றி நான்காவது இடத்தில் உள்ள ரஷ்யாவும் இதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. ஒப்பந்தம் ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சிக்குக் குந்தகமானது எனக் குற்றம் சாட்டி வந்தது. இதில் அதிகம் பிடிவாதமாக நின்றது, இன்றளவும் நிற்பது வழக்கம் போல அமெரிக்காதான்.
உலக சனத்தொகையில் வெறும் நான்கு விழுக்காடுகள் மாத்திரம் கொண்டுள்ள அமெரிக்காதான் பச்சை வீட்டு வாயுக்களை வெளியேற்று வதில் உலகில் முதலிடம் வகிக்கிறது. சுமார் நான்கில் ஒரு பாகம் அமெரிக்காவுடையதே. அமெரிக்கர்கள் எதையுமே ஒரு கை பார்த்து விடுவதுபோல, அளவுக்கு மிஞ்சி அனுபவிக்க நினைப்பவர்கள். உதாரணத்துக்கு சராசரி அமெரிக்கர் ஒவ்வொருவரும் 12 கிலோகிராம் பண்ணை உற்பத்திகள், 9 கிலோகிராம் காட்டு விளைபொருட்கள், 18 கிலோகிராம் நிலக்கரி - பெற்றோலியம், 13 கிலோகிராம் அளவுக்கு பிற கனியங்கள் என்று தினமும் தங்கள் உடல் எடையளவுப் பொருட்களை நுகர்ந்து தீர்ப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள், எந்தச் செளகரியங்களையும் எதன் பொருட்டும் இழப்பதற்குத் தயாராக இல்லை. இதனால் எரிபொருள் நுகர்வுக்கு எந்தவகையிலும் வரம்புகள் விதிப்பதை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. "ஆர்ஜென்டைனாவில் வெளியேறும் ஒரு தொன் காபன், அமெரிக்காவில் வெளியேறும் ஒரு தொன் காபன் போன்ற அதே விளைவுகளையே கொண்டிருக்கும். ஆனபடியால் மூன்றாம் உலக நாடுகளை வலியுறுத்தாத எந்த ஒரு தட்ப வெப்ப உடன்படிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது" என அப்போதைய ஜனாதிபதி பில் கிளின்டன் அறிவித்தார். அத்தோடு, தனது சகபாடிகளான கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளையும் தனது கருத்துநிலைக்குத் துணை திரட்டினார்.
றியோ டி ஜெனீரோவில் (Rio de Janeiro) எட்டப்பட்ட உடன்பாட்டுக்கு உயிர் பாய்ச்சவேண்டி ஐக்கிய நாடுகள் சபை 1997
27
Page 16
ஏழாவது ஊழி
டிசம்பரில் மீளவும் உலக நாடுகளைக் கூட்டியது. இம்முறை ஜப்பானின் புராதன தலைநகரான கியோட்டோவில். இம்மாநாட்டில் பங்கேற்ற மாலைத் தீவு அதிபர் அப்துல் கயூம், "இந்த மாநாட்டிலாவது தீர்வு காணாவிடில் அடுத்த மாநாடு நடக்கும்போது எங்களைப் போன்ற தீவு நாடுகளுக்கு அமர்வதற்கு இருக்கைகள்கூட வேண்டியிராது" என்று உணர்ச்சி வயப்பட்டு வேண்டினார். இன்றோ நாளையோ கடல் உயர்வின் காவுகைக்குக் காத்திருக்கும் நாடு அவருடையது. இம் மாநாட்டின் போது சில, பல விட்டுக் கொடுப்புகளுடனும் கண்டிப்பு களுடனும், 1992 இன் காலநிலை பற்றிய ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. காபன் ஈரொக்சைட்டு, மெதேன், நைட்ரஸ் ஒக்சைட்டு, சல்பர் ஹெக்ஸா ஃபுளோரைட்டு, ஹைட்ரோ ஃபுளோரோ 3:TuaöTchair (Hydro Flurocarbons), Guif o%C36ITTftaöt (33Fjó06)(356st (Per Fluorinated compounds) ஆகிய ஆறு பசுமை இல்ல வாயுக்களைச் சட்ட பூர்வமாகக் கட்டுப் படுத்துவது தொடர்பான இந்த மீள்வரைவு 'கியோட்டோ ஒப்பந்தம் (Kyoto protoco) எனப்படுகிறது. இதன் பிரகாரம், தொழில் வளர்ச்சியடைந்த நாடுகள் எல்லாமுமாகச் சேர்ந்து 2012 ஆம் ஆண்டுக்கு இடையில் தாங்கள் வெளியேற்றுகின்ற இந்தப் பசுமை இல்ல வாயுக்களை 1990 இல் இருந்த அளவிலும் பார்க்க 5.2 விழுக்காடு குறைவாகக் கொண்டு வந்துவிட வேண்டும். இந்த அளவு தனியாக ஐரோப்பாவுக்கு 8 விழுக்காடு, அமெரிக்காவுக்கு 7 விழுக்காடு, ரஷ்யா வுக்கு 0 விழுக்காடு என்று ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாகவும் நிர்ணயிக்கப்பட்டன. சோவியத் ஒன்றியத்தின் குலைவுக்குப் பின்னர் ரஷ்யாவின் தொழில்உலகு, சரிவுகளைச் சந்தித்ததாலேயே அது பசுமை இல்ல வாயுக்களின் அளவை இனிமேலும் அதிகரிக்காமல் இப் போதுள்ள மட்டத்திலேயே பேணலாம் எனச் சலுகை காட்டப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து புகைத் தணிக்கையைக் கடைப் பிடிக்க ஆரம்பித்தபோதும், உடன்படிக்கையைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்ட அமெரிக்கா, அதனை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் இம்முறையும் தடங்கல்களை உண்டு பண்ணியது. தன்னைவிட வேறு எந்த நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் இருந்து விடக் கூடாது என்ற தவிப்பில் அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தைக் கடுமையாக வலியுறுத்தி வருகின்ற அமெரிக்கா, தன்னை நிர்ப்பந்திக்கும் எந்தச் சட்டத்துக்கு இதுவரையில் பணிந்துள்ளது? கியோட்டோ உடன்படிக்கையில் இருக்கக்கூடிய நெகிழ்வுகளைச்
28
பொ.ஐங்கரநேசன்
சாதகமாக்கி, வருடமொன்றுக்கு 300 மில்லியன் தொன்கள் காபனை உறிஞ்சக் கூடிய காடுகளைத் தாம் வளர்த்துள்ளதால் பச்சை வீட்டு வாயுக்களைக் குறைக்க வேண்டிய கடப்பாடு தனக்கு இல்லையென வாதிட்டது. மேலும் ரஷ்யா, உக்ரெயினில் ஏற்பட்டுள்ள தொழிற் துறைப் பின்னடைவுகளால் அங்கு பச்சைவீட்டு வாயுக்களின் அளவு 1990 இல் இருந்ததைவிட 20 விழுக்காடுகள் குறைந்திருப்பதைக் காட்டி, அந்தச் சரிவைத் தனது அதிகரிக்கும் புகைக்கரிவாயுக்களுடன் சமன்படுத்தவும் முயன்றது. பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்று வதில் இப்போது இரண்டாவது இடத்துக்கு வந்துவிட்டிருக்கும் சீனாவை வளர்முக நாடு என்ற வகையில் ஒப்பந்தம் கட்டுப்படுத்தாததை பலமுறை வெளிப்படையாகவே விமர்சித்தது. உச்ச பட்சமாக, 2001 ஆம் ஆண்டு, "பச்சை வீட்டு வாயுக்களைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக எரிபொருள் புாவனையைக் குறைப்பது அமெரிக்காவின் பொருளாதாரத்தை மோசமாகப் பலவீனப்படுத்தும் என்பதால், வளர்முகநாடுகளை எது விதத்திலும் நிர்ப்பந்திக்காத ஒரு தலைப்பட்ச மான கியோட்டோ தீர்மானத்தை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளாது" என்று அப்போதைய அதிபர் புஷ் தனது புதிய சக்திக் கொள்கையில் அறிவித்துவிட்டு கியோட்டோ உடன்படிக்கையில் இருந்து விலகிக் கொண்டார்.
அமெரிக்க அதிபர் தனது பசுமைத் தேர்தல் பரப்புரைக்கு மாறாக நடந்து கொண்டமை ஆச்சரியமான ஒன்றல்ல. சூழல் பாதுகாப்பில் தனது தலைமைத்துவத்தை முன்னிறுத்த முயலும் அமெரிக்கா, ஒரு பங்கேற்பாளனாக ஒருபோதும் விருப்பம் காட்டியதில்லை என்பதற்கு அதன் வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உண்டு. வியட்நாமியக் காடுகளில் இருந்து கெரில்லாப் போராளிகளை வெளியேற்றுவதற்காக அமெரிக்கா ஏழு கோடி இலீற்றர்கள் ஏஜன்ட் ஆரஞ்ச் என்னும் நஞ்சைத் தெளித்து காடுகளை அழித்தொழித்ததும், ஒரு சூழலியற் படுகொலையை நிகழ்த்தி முடித்த எதுவித குற்றவுணர்வும் இல்லாமல் உடனேயே 1972 இல் ஸ்டாக்ஹோமில் (Stockholm) நடந்த முதலாவது சூழல் மாநாட்டில் தலைமையேற்றதும் குறிப்பிடத்தக்கது.
மிகப் பெருமளவில் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றி வருகின்ற அமெரிக்காவின் விலகல், கியோட்டோ ஒப்பந்தத்துக்குப் பெரும் நெருக்கடியைத் தந்தது. கியோட்டோ ஒப்பந்தம் சட்டபூர்வ அந்தஸ்தைப் பெற்றுச் செயற்பாட்டுக்கு வருவதற்குக் குறைந்த பட்சம் 55 நாடுகள் ஒப்பந்தத்தை ஏற்று உறுதி (Rafication) செய்திருக்க வேண்டும்.
29
Page 17
ஏழாவது ஊழி
அத்தோடு ஒப்பந்தத்தை ஏற்றுறுதி செய்திருக்கும் தொழில்வள நாடுகள் வெளியேற்றுகின்ற பசுமை இல்ல வாயுக்களின் கூட்டு அளவும் 55 விழுக்காடுக்கு எட்டியிருக்கவேண்டும். தொழில்வள நாடுகள், வளர்முக நாடுகள் என்று 140க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்பந்தத்தை ஏற்று முதலாவது நிபந்தனையை எப்போதோ பூர்த்தி செய்து விட்டிருந்தன. பூரீலங்காவும், இந்தியாவும் 2002 ஆம் ஆண்டு கியோட்டோ உடன்படிக்கையை ஏற்று உறுதி செய்துள்ளன. ஆனால் இரண்டாவது நிபந்தனையான 55 விழுக்காடு இலக்கை எட்டுவது மிகக் கடினமாக இருந்தது. தொழில் வளநாடுகள் பலவும் ஒப்பந்தத்தை ஏற்று தங்கள் நாடாளுமன்றங்களில் ஒப்புதல் பெற்றபோதும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றுகையில் அவற்றின் பங்கு 44.2 விழுக்காடுகள் தான.
இந்நிலையில் தனது பழைய மிடுக்கின் நினைப்பில் முரண்பட்டுக் கொண்டிருந்த ரஷ்யாவின் மீது கவனம் திரும்பியது. 17 விழுக்காடு காபன் ஈரொக்சைட்டு வாயுவை வெளியிடும் ரஷ்யாவை இந்த ஒப்பந் தத்தை ஏற்றுக்கொள்ள வைக்கும் முயற்சிகளில் ஐரோப்பிய ஒன்றியம் இறங்கியது. கியோட்டோ ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால் உலக வர்த்தக அமைப்பில் ரஷ்யா இணைய ஆதரவளிப்போம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்ததையடுத்து ரஷ்யா பணிந்து வந்தது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நவம்பர் 5, 2004 இல் ஒப்பந்தத்தில் கைச்சாத் திட்டார். ஒப்பந்த விதிகளின்படி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து 90வது நாள், பெப்ரவரி 16, 2005இல் வரலாற்றுச் சிறப்புமிக்க 'கியோட்டா ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. பூமியின் வெப்ப அதிகரிப் பைக் கட்டுப்படுத்துகின்ற முதற்படி என்பதால் மட்டுமல்ல; அமெரிக்கா வின் எதேச்சாதிகாரத்தைப் புறம்தள்ளி உலக நாடுகள் ஒப்பேற்றிய ஒரு ஒப்பந்தம் என்ற அளவிலும் இது தனிச்சிறப்புப் பெறுகிறது.
கியோட்டோ ஒப்பந்தம் ஒரு வகையில், கோளத்தைக் காத்தல் என்ற பெயரில் தொழில்வள நாடுகள், வறிய நாடுகளின் மீது கொண்டிருக்கும் சூழல் ஏகாதிபத்தியம் என்பதையும் மறுப்பதற்கு இல்லை. ஒப்பந்தம், தொழில்வள நாடுகள் பச்சை வீட்டு வாயுக்களின் அளவைக் குறைக்க வேண்டும் என்று சொன்னாலும் இந்நாடுகள் புகைத் தணிக்கைகள் எதனையும் செய்யாமலே ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்கும் கனவான்கள் ஆகமுடியும். ஒப்பந்தத்தின்படி குறைவான அளவில் காபனை வெளியேற்றும் நாடுகளுக்குப் புள்ளிகள் வழங்கப்படும். ஏழை
3O
பொ. ஐங்கரநேசன்
நாடுகளிடம் இருந்து இந்தப் புள்ளிகளைத் தொழில் வளர்ச்சியடைந்த நாடுகள் மிகக் குறைந்த விலைக்கு வாங்கி தமது மாசின் அளவில் கழித்துக் கொள்ள முடியும். மேலும் வறிய நாடுகளில் காடு வளர்ப்பதற்கு நிதியூட்டம் வழங்கிவிட்டு அல்லது மாசுக் கட்டுப்பாட்டு உதவிகளை வழங்கி அதனால் அங்கு குறையும் மாசைத் தன் கணக்கில் வரவு வைத்துக் கொள்ள முடியும். இங்கு, பூமியின் நலன் என்பதைவிட மேற்குலகின் வாணிப நலன்களே அப்பட்டமாக மேலோங்கியுள்ளன. இந்தக் காபன் வணிகத்துக்கான பன்னாட்டுச் சந்தையை உடனடியாக ஏற்படுத்த வேண்டுமென்பது கியோட்டோ ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கு முன்னர் அமெரிக்காவின் தீவிர நிலைப்பாடாக இருந்தது.
பூமியை வெப்பப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்ற வளர்ந்த நாடுகளிலேயே இந்த வாயுக்களைக் கட்டுப்படுத்தக்கூடிய தொழில் நுட்ப வளமும் பணபலமும் நிறைந்து காணப்படுகின்றன. இந்த நாடுகள் நினைத்தால் பெற்றோலிய எரிபொருட்களுக்குப் பதிலாக சூரிய சக்தியையும், குறைந்த அளவில் காபனீரொட்சைட்டை வெளியேற்றும் இயற்கை வாயுவையும் பயன்படுத்த முடியும். மின் உற்பத்திக்குப் பூமியின் வெப்ப சக்தியையும், அணுசக்தியையும், காற்று மற்றும் நீர் வலுவையும் பயன்படுத்த முடியும். ஆனால் இவற்றுக்கு அதிக பணத்தைச் செலவிட்டுத் தொழிற் போட்டியில் கொஞ்சமேனும் பின்தங்க இந்நாடுகள் தயாராகவில்லை. ஆனால் இந்தச் சூழ்நிலைச் சீர்கேட்டின் முதலாம் எதிரி வளர்ந்த பணக்கார நாடுகள்தான் என்ற குற்றச்சாட்டை மட்டும் வைத்துவிட்டு வெம்மையின் தீவிரத்திலிருந்து ஒதுங்கி விட முடியுமா என்ன? கியோட்டோ மாநாடு வளரும் நாடு களில் புகைத் தணிக்கை பற்றி எந்த நிபந்தனையையும் முன்வைக்க வில்லை. இருந்தும், வளரும் நாடுகளில் மிகப்பெருமளவில் புகையை ஊதித் தள்ளிக் கொண்டிருக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளும் பூமியை இப்படிச் சூடுபண்ணிச் சூடுபண்ணி வேக வைத்துக் கொண்டிருப்பதில் சுய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலையி லேயே உள்ளன. ஏழை பணக்காரன் என்ற பேதமின்றி ஒரு படகில் எல்லோரும் பயணம் செய்யும்போது யார் தயவால் படகு கவிழ்ந்தால் என்ன?
31
Page 18
2
அனல் கக்கும் அமெரிக்காவும் புனல் தின்ற ஆர்லியன்சும்
"பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்'
- திருக்குறள் (அறத்துப்பால், 139)
"துருவப் பனிக்கவிப்புகள் உருகிக் கரைந்து உயர்ந்தெழும் கடலினுள்ளே நாம் நேசிக்கும் "கேப் கொட் (Capecod - அமெரிக்காவின் வடகிழக்குக் கரையோரத்தில் உள்ள ஒரு குடாநாடு) போன்ற அபிவிருத்தியடைந்த கரையோரப்பகுதிகள் பலவும் மூழ்கித் தவிக்கின்ற உலகையும், உஷ்ணமும் ஈரப்பற்றும் நிறைந்து மலேரியா-மஞ்சட் காய்ச்சல் என்று தொற்றிப்பரவும் நோய்களின் பிடிக்குள் வசப்படுகின்ற உலகையும் கற்பனை செய்து பாருங்கள். இவை விஞ்ஞானத்தின் புனைவுகள் அல்ல. இருக்கக்கூடிய உச்சபட்ச விஞ்ஞான அறிவின் அடிப்படையில் அமைந்த, நாளையைப் பற்றிய நம்பகமான முன் அறிவிப்புகள்தான் இந்த அச்சுறுத்தல்கள் எல்லாம்"
- என்று 2001ஆம் ஆண்டு, அப்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கோபி அனன் சற்று உரத்ததொனியில் எச்சரித்திருந்தார். பூமிப்பந்து சூடேறி வருவதைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் அமெரிக்காவின் ஒத்துழை யாமையைக் கண்டனம் செய்யும் விதமாகவே கோபி அனன் அவ்வாறு எதிர்வு கூறியிருந்தார். துர்அதிர்ஷ்டவசமாக, நான்கு ஆண்டுகள் கழிவதற்குள்ளாகவே அமெரிக்கா அவை போன்ற அவலங்களை, அதே காரணத்தின் பொருட்டு அனுபவிக்க நேர்ந்தது.
2005 ஆகஸ்ட் 29 ஆம் திகதி கத்ரீனா சூறாவளி, அமெரிக்கா அதன் வரலாற்றிலேயே சந்தித்திராத அளவுக்கு வளைகுடாக் கரைகளை மூர்க்கம் கொண்டு தாக்கியது. இதில் லூசியானா, மிஸிஸிப்பி, அலபாமா போன்ற கரையோர மாநிலங்கள் வெள்ளக் காடாகி மூச்சுத்திணறின. அதிகாரபூர்வத் தகவல்கள் 1277 பேர் பலியாகியுள்ள
32
பொ.ஐங்கரநேசன்
தாகத் தெரிவித்தபோதும், இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. புயல் வீடுகளைத் தீக்குச்சிகள்ாக ஒடித்துப் போட்டதில் JGol) இலட்சக்கண்க்கானோர் ஏதிலிகளாயினர். உடைமைகளின் சேதார மதிப்பீடு 200பில்லியன் டொலர்களுக்கும் அதிகம். அதிலும் லூசியானாவின் சன அடர்த்திமிக்க நியூ ஆர்லியன்ஸ் நகரத்தைக் கத்ரீனா மிகவும் கடுமையாகவே சூறையாடியது. இந்நகரம் மெக்சிக்கோ வளைகுடாவுக்கு அருகே, கடல்மட்டத்திலும் கீழாக இருக்கிறது. இதனால் கடலாகச் சூழ்ந்த மழை வெள்ளத்தோடு கடல்நீரும் வந்துபுகுந்து மூடிக் கொண்டது. இவை இரண்டும் சேர்ந்து உருட்டித் தள்ளியதில், பெற்றோலியச் சுத்திகரிப்பு ஆலையொன்றிலிருந்து சுமார் 85,000 பீப்பாய்கள் அளவு கச்சா எண்ணெய் வெளியேறிப் பாய்ந்தது. தொழிற்சாலைகளிலிருந்து இரசாயன நச்சுக்கழிவுகள் பெருக்குடைத்தது. ஜாஸ் இசைக்கும் சுற்றுலாவுக்கும் பெயர் பெற்ற அழகிய ஆர்லியன்ஸ் இன்னும் சில வருடங்களுக்குச் சீரழிந்த நகரமாக இருக்கப்போகிறது.
அமெரிக்கா இதற்கு முன்னரும் பின்னரும் பல தடவைகள் இயற்கையின் சீற்றங்களுக்கு ஆளாகியுள்ளது. இவற்றில் சில கத்ரீனாவை விடவும் அதிக எண்ணிக்கையில் உயிர்களைப் பலியெடுத்திருக்கிறது. ஆனால் மனித அவலங்களையும் தாண்டி கத்ரீனா, அமெரிக்காவிலும் உலக அரங்கிலும் ஏற்படுத்திச் சென்றிருக்கும் அதிர்வுகள் அதிகம்.
அமெரிக்கர்கள் செப்ரெம்பர் 11ஐப் போலவே ஆகஸ்ட் 29 ஆம் திகதியையும் தங்களது தேசிய கெளரவத்தில் சரிவை உண்டு பண்ணிய கரிநாளாகவே குறித்துக் கொண்டிருக்கிறார்கள். 2001 செப்ரெம்பர் 11ஆம் நாள், நியூயோர்க்கில் உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும் பாகக் காட்டி நின்ற வர்த்தக மையக் கோபுரங்களையும் இராணுவ மேலாண்மையின் திரளுருவான பென்ரகனையும் தீவிரவாதிகள் விமானங்களினால் மோதித் தள்ளினர். அதில் மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். யுத்தத்தின் சன்னதங்களைத் தொலைக்காட்சியில் மட்டுமே ரசித்துக்கொண்டிருந்த பெரும்பாலான அமெரிக்கர்கள், அன்றுதான் அதனுள் உறைந்து கிடக்கும், உயிரைச் சில்லிடச் செய்யும் அச்சத்தை நேரடியாக அனுபவித்தார்கள். மற்றைய நாடுகளில் இராணுவம் அவர்களது எல்லைகளில் மட்டுமே தரித்துள்ள போது, அமெரிக்க இராணுவம் உலகம் பூராவும் நிலைகொண்டிருக் கிறது. இதனால் தங்களுடைய பாதுகாப்பை எஃகுக் கோட்டையாக எடைபோட்டிருந்த அமெரிக்கர்கள், அலுமினியப் பறவைகள் தாக்கியதும் கவசகுண்டலங்கள் தரித்த அமெரிக்கத் தேசியத்தின் மார்பு
33
Page 19
ஏழாவது ஊழி
பிளந்ததாகவே பதைபதைத்துப் போனார்கள். கத்ரீனா சுழற்றியதில் அவர்களுடைய தேசியத்தின் இன்னுமொரு முகமூடி கழன்று விழுந்ததை அவர்கள் பரிதாபமாகத் தரிசிக்க நேர்ந்தது.
சூறாவளி என்பது பூகம்பங்கள் போல அல்லாமல் முன்கூட்டியே ஊகிக்கப்படக்கூடியது. இதனால்தான் கத்ரீனா, ரீட்டா, வில்மா என்று புயல்களின் பிரசவத்துக்கு முன்னரே அவற்றுக்குப் பெயர் சூட்ட முடிகிறது. இலண்டனில் இயங்கும் வெப்பமண்டலப் புயல் ஆபத்து மையம் 2005ஆம் ஆண்டின் புயற் சுற்றுப்பாதையை ஏற்கனவே அறிவித்திருக்கிறது. யூன் - நவம்பர் கால கட்டத்தில் 22 புயல்கள் உருவாகுமெனவும், இவற்றில் ஏழு அமெரிக்காவைத் தாக்குமெனவும், இந்த ஏழில் - மூன்று சூறாவளிகளாக அமையும் எனவும் அதில் எச்சரித் திருந்தது. இருந்தும், விண்ணில் இருந்து வீழும் விண்கற்களை அண்டவெளியிலேயே சந்தித்து அழிக்கும் பலம் பொருந்திய அமெரிக்கா எந்தவித எதிர்ப்பும் இன்றி கத்ரீனாவுக்கு வழி விட்டு நின்றது.
பூலோக சொர்க்கமென வளரும் நாடுகள் நம்பிக்கொண்டிருக்கும் அமெரிக்காவில், சூறாவளி தாக்கிய லூசியானா மக்கள் நரகத்தையே அனுபவித்தார்கள். உதவிக்கு வருவார் யாருமின்றி, பிணங்களுடன் வாரக் கணக்கில் அடைபட்டுக் கிடந்தார்கள். உணவும், குடிநீரும், மருந்துகளும் இன்றி உயிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். பசித்த வயிறுகள் கடையுடைப்பை ஆரம்பித்துவைக்க அதுவே கொள்ளை, கொலை, துப்பாக்கிச் சூடு, பாலியல் வல்லுறவு என்று வன்முறை களாகத் தலைவிரித்தாடியது. நகரின் அவசரகாலத் தயார்ப்படுத்து தலுக்கான செயலகத்தின் இயக்குநர் ஜோசப் மத்தியூ "உணவும் தண்ணீரும் மேலதிகப் படைகளும் அனுப்பிவையுங்கள்' என்று அமெரிக்கக் குடியரசிடம் கெஞ்சி மன்றாடினார். ஆசிய நாடுகளைச் சுனாமி சூழ்ந்த போது அங்கு மனிதாபிமானம் தன்னெழுச்சி பெற்றுத் துயர் களைந் தமையைக் கண்ட உலகம் இவற்றைப் பார்த்துத் திகைத்துப் போனது.
வல்லரசாக இருந்தும் அமெரிக்காவால் கத்ரீனாவை எதிர் கொள்ளுவதற்கான உபாயங்களை முன்கூட்டியே முடுக்கிவிட முடியாமற்போனது ஏன்?ஆபத்பாந்தவனாக பிறநாடுகளில் மூக்கை நுழைக்கும் அமெரிக்காவால் அதன் சொந்தத்துயரில் சிந்தை கலங்காதிருக்க எப்படி முடிந்தது? ஆர்லியன்ஸின் அவலங்களைத் தொலைக்காட்சியில் உலகம் பூராவுமிருந்து பார்த்துக் கொண்டிருந்த வர்களிடம் தவிர்க்க முடியாமல் இந்தக் கேள்விகள் எழுந்தன. பிரிட்டிஷ்
34
Page 20
ஏழாவது ஊழி
தொலைக்காட்சிக்கு நியூ ஆர்லியன்ஸில் இருந்து நேரடி அஞ்சல் செய்து கொண்டிருந்த அதன் செய்தியாளர் வர்ணித்தபடி அமெரிக்காவின் அழுக்கு இரகசியங்கள் இந்தக் கேள்விகளுக்கான பதில்களாக முகத்தில் ஓங்கி அறைகின்றன.
நியூ ஆர்லியன்ஸ், உலகின் மிக அழகிய நகரங்களில் ஒன்று. 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிறுவப்ப்ட்ட இந்நகரம் 1803ஆம் ஆண்டு வரை பிரெஞ்ச் அரசிடம் இருந்தது. அதன் பிரெஞ்சு பகுதியின் கட்டிடங்கள் உலகப் புகழ் பெற்றவை. குடும்பத்தோடு சுற்றுலா செல்வதற்கு மிகவும் தகுதி வாய்ந்த நகரமாக "நேஷனல் ஜியோகிரஃபிக் சஞ்சிகை 2004ஆம் ஆண்டு இந்நகரையே தெரிவு செய்தது. ஆனால், இருண்டகண்டம் என்று ஆபிரிக்கா சொல்லப்படுவது போல், அமெரிக் காவில் கறுப்பு இனத்தவர்களின் இருண்ட நகரமாக நியூஆர்லியன்ஸ் இருக்கிறது. கறுப்பு இனத்தவர்கள் அமெரிக்காவில் இங்குதான் முதன் முதலில் குறிப்பிடத்தக்க அளவு சொத்துக்கள் வாங்கிக் குடியேறி னார்கள். ஆர்லியன்ஸின் சனத்தொகையில் பெரும் பங்கு - 70 விழுக்காடுக்கும் அதிகமானவர்கள் - இவர்கள்தாம். பெரும் பாலனவர்கள் ஏழைகள், எழுத்தறிவு இல்லாதவர்கள். பலர் வாக்குரிமையற்றவர்கள். வாக்காளர் பட்டியலில் இடம் பெற முடியாத அளவுக்குச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வாக்குரிமை பெற்றவர்களும் அதிபர் புஷ் சார்ந்த குடியுரிமைக் கட்சிக்குச் சார்புடையவர்கள் அல்லர். புயல் வந்து கொண்டிருப்பதைத் தெரிந்தும், வெள்ளையர்களைப்போல் போவதற்கு வேறு இடமோ, போக்கிடத்தை அடைவதற்கான வாகனங்களோ இன்றிப் பெரும்பாலானவர்கள் வீடுகளில் தங்கி விட்டார்கள். நல்லது நடக்கட்டும் என்று பிரார்த்திப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி தெரிந்திருக்கவில்லை.
ஆர்லியன்ஸ் நகரம் மெக்சிக்கோ வளைகுடா பகுதியில், கடலுக்கு முகத்தை காட்டியவாறு இருக்கிறது. நகரை வளைத்துச் சலசலத்தபடி பிரசித்தி பெற்ற மிஸிஸிப்பி நதி ஆர்லியன்ஸின் பல இடங்கள், கடல் மட்டத்துக்குக் கீழே மட்டுமல்லாமல் இந்த நதி மட்டத்துக்கும் கீழாக இருப்பதால் தண்ணிர் எட்டிப் பார்க்கும் ஆபத்தை எந்நேரமும் எதிர் பார்த்தபடியே உள்ளது. தண்ணீர் புகாமல் தடுக்க பல வெள்ளத்தடுப்பு அணைகள் எழுப்பப்பட்டிருந்தபோதும் இவை மணிக்கு 210 கிலோ மீற்றர் வரை வேகம் பெறும் புயல்களுக்கு (அழிப்புத்திறன் 3) மட்டுமே ஈடுகொடுக்கக் கூடியவை. மணிக்கு 250 கிலோ மீற்றர்கள் இராட்சத வேகத்துடன் உள்நுழைந்த கத்ரீனாவுக்கு
36
பொ.ஐங்கரநேசன்
அெழிப்புத்திறன் 5) இவற்றால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பல இடங் களில் பல நூறு மீற்றர்களுக்கு உடைப்பெடுத்து வெள்ளம் கரைபுரண்டது.
இப்படி நிகழக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகத் தொடர்ச்சியாக எச்சரிக்கப்பட்டதால், வலுவான அணைகளை அமைக்கும் பொருட்டு தென் கிழக்கு லூசியானா நகர்ப்புற வெள்ளத்தடுப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், ஈராக் போரை காரணம்காட்டி நிதி உதவியை அமெரிக்க அரசு 2003ஆம் ஆண்டுடன் நிறுத்திக் கொண்ட தால் அணைக்கட்டு வேலைகள் பாதியிலேயே தடைப்பட்டு விட்டன. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவப் பொறியியலாளர்களும் ஈராக்குக்கு அனுப்பப்பட்டார்கள். அத்தோடு 2004ஆம் ஆண்டு பழைய தடுப்பணைகளைப் பராமரிப்பதற்கான செலவையும் அமெரிக்க அரசு நிறுத்திக் கொண்டது. இயற்கை அரண்களாக விளங்கிய சதுப்பு நிலங்களும் நிரப்பப்பட்டுக் குடிமனைகளாகிப் போனதில், கத்ரீனா தங்குதடையின்றி ஆர்லியன்சை நீரால் நிரப்பியது.
கியூபாவில் 2004ஆம் ஆண்டு பெரும் புயல் வந்த போது, அதனால் சமாளிக்க முடிந்தது. உள்ளூர் குழுக்களும், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் கரையோரக் குடியிருப்புகளில் இருந்த 15 இலட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயர உதவி செய்தார்கள். புயல் 20,000 வீடுகளைத் தூக்கிச் சென்றது. ஆனால், அப்புயலால் ஒரு உயிரைக் கூடக் கொண்டு செல்ல முடிய வில்லை. ஆனால், நியூஆர்லியன்ஸ்சில் நகர மேயர் றே நாகின், "புயல் நகரைத் தாக்கப்போகிறது. மக்கள், தங்கள் வீடுகளைக் காலி செய்து வெளியேற வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்ததோடு தன் கடமையை நிறுத்திக்கொண்டார். எங்கு செல்ல வேண்டும் என்பதைப் பற்றியும் கூறாமல், தனது குடும்பத்தை டாலஸ் நகரத்துக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் இறங்கிவிட்டார். ஜனாதிபதி புஷ், உடனேயே ஆர்லியன்சுக்கு விரையவில்லை. மாறாக, மறுநாள் சான்டியாகோவில் இடம்பெற்ற பெரும் முதலாளிகளின் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார். துணை ஜனாதிபதி மக்செனி ப்யோமிங்கில் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருந்தார். சாவகாசமாக மூன்றாவது நாள் நியூ ஆர்லியன்சுக்குச் சென்ற புஷ், அங்கு மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்தார்.
இத்தகைய பேரிடர்களின்போது மீட்புப் பணிகளில் ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்புப் படையே உடனடியாகக் களத்தில்
37
Page 21
ஏழாவது ஊழி
குதிக்கிறது. ஆனால் நியூ ஆர்லியன்ஸில் அவதிக்கு உதவ முடியாத வாறு அதன் தேசிய பாதுகாப்புப் படையில் 10,000 பேர் வரையில் ஈராக்கில் நிறுத்தப்பட்டிருந்தார்கள். அமெரிக்க அரசு ஆர்லியன்சுக்கு அனுப்பிய முதல் தொகுதி இராணுவமும் உயிர்காக்கும் பணிகளில் ஈடுபடாமல் வர்த்தக நிறுவனங்கள் உடைக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சிகளிலேயே இறங்கியது. இலங்கைன்யக் கடற்கோள் சூழ்ந்த போது, அமெரிக்காவால் பயங்கரவாத முத்திரை குத்தப்பெற்ற விடுதலைப்புலிகளின் படையணிகள் மின்னல் வேகத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுப் பாதிக்கப்பட்ட மக்களின் ரணங்களை ஆற்றியதை உலகம் வியப்புடன் பார்த்தமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
வெள்ளை மாளிகையின் பாராமுகத்தோடு வெள்ளை ஊடகங் களும் பாரபட்சம் காட்டின. அரசின் மெத்தனத்தைக் கண்டுகொள்ளாத இவை, கொள்ளை, கொலைச்சம்பவங்களை முன்னிலைப்படுத்தி கறுப்பர்கள் என்றாலே காட்டுமிராண்டித்தனமானவர்கள் என்ற பிம்பத்தை உறுதி செய்ய முயன்றன. உணவுக்காகவும் குடிநீருக்காகவும் அலையும் மக்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் இந்தக் குரோதம் தெளிவாகவே பிரதிபலித்தது. மார்பளவு தண்ணிரில் கிடைத் ததை எடுத்து வரும் வெள்ளைத் தம்பதியினரின் படத்தை வெளியிட்ட ஊடகங்கள் அவர்கள் உணவையும் சோடாவையும் கண்டெடுத்து வருவதாகத் தலைப்பிட்டன. அதேபோன்று கறுப்பர் ஒருவரின் படத்தை, கொள்ளையடித்த பொருட்களைக் கொண்டுவருவதாக பிரசுரித்தன. மனித உரிமைவாதிகள் குரல் எழுப்பியதும் ஏஜென்சி பிரான்ஸ் ப்ரெஸ்ஸி (ஏ. எவ்.பி) செய்தி ஸ்தாபனம் மன்னிப்பைக் கோரியதோடு படத்தைத் திரும்பப் பெற்றது. யாகூ இணையத்தளமும் இதற்கு வருத்தம் தெரிவித்து புகைப்படத்தைத் திரும்பப் பெற்றது.
கத்ரீனாவுக்கு கதவுகளை அகலத் திறந்துவிட்டதில் வறுமை, செயல்திறன் இல்லாத நிர்வாகம், இனஒதுக்கல், சுற்றுச்சூழலைப் பலிக்கடாவாக்கிக் காசு பண்ணும் தடையில்லாச் சந்தை போன்ற காரணங்களோடு ‘அமெரிக்க மனம்' என்ற ஒன்றும் வெளியே முகம் காட்டாமல் இயங்கியது. அமெரிக்க மக்களிடையே ஒவ்வொரு மனிதனும் ஒரு தீவு என்ற எண்ணம் பல ஆண்டுகளாகப் பரப்பப்பட்டு வருகிறது. "உடுக்கை இழந்தவன் கை போல இடுக்கண் களையும் பாங்கு' அங்கு அருகிவருகிறது. தான் அல்லது தன் குடும்பம் அல்லது தங்களைச் சார்ந்த குழு என்பதற்கும் அப்பால் தன்னுடைய துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள அமெரிக்க மக்கள் தயங்குகிறார்கள்.
38
பொ. ஐங்கரநேசன்
அதன் ஒரு வெளிப்பாடாகத்தான், பாதிக்கப்பட்ட லூசியானா மக்களை அரவணைப்பதில் ரெக்ஸாஸ் மாநிலம் நிபந்தனைகளை விதித்தது. லூசியானாவிலிருந்து 1 இலட்சம் பேர் வரையில் ரெக்ஸாஸ் மாநிலத் துள் நுழைந்த நிலையில், இதற்குமேல் அகதிகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ரெக்ஸாஸ் தலைவர்கள் அறிவித்தார்கள். உள் நுழைந்தவர்களைப் பராமரிப்பதற்கு உதவிகளை குடியரசு அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் கோரினார்கள். ரெக்ஸாஸ், ஏறத்தாழ ஐரோப்பா அளவு பரந்த நிலப்பரப்புடையது. அமெரிக்க மாநிலங்களில் எண்ணெய்ச் செழிப்புமிக்க மிகவும் பணக்கார மாநிலங்களில் ரெக்ஸாசும் ஒன்று. இருந்தும், மனமில்லாததால் இடம் இல்லாமற் போனது. ஆனால், அமெரிக்காவால் அதிகம் பாதிக்கப்பட்ட வறிய நாடுகளிடமிருந்தும்கூட தயக்கமின்றி உதவிகள் நீண்டன. வெனிசுலாவின் அதிபர் ஹ்யூகோ சாவெஸ் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக 1 மில்லியன் டொலர் உதவிகளை அனுப்பிவைப்பதாக அறிவித் தார். கியூப அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ 1100 மருத்துவர்களையும், 26 தொன் மருந்துகளையும் வழங்க முன்வந்தார். இந்த உதவிகளினூடே அரசியல் இழையோடுகிறதெனினும், அதையும் தாண்டி மானுட நேயமே அதிகம் சுடர்கிறது.
கத்ரீனாவைத் தொடர்ந்து அதன் இளைய சகோதரிகளான ரீட்டா, வில்மா போன்ற சூறாவளிகளையும் அமெரிக்க மக்கள் அடுத்தடுத்து எதிர்கொண்டார்கள். இன்னும் எதிர்கொள்வார்கள். ஆனால், பிரிட்டிஷ் தொலைக்காட்சிச் செய்தியாளர் குறிப்பிட்டது போல, அமெரிக்காவின் அழுக்கு இரகசியங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய கத்ரீனாவை அவர்கள் இலகுவில் மறக்கத் தயாராக இல்லை. கத்ரீனா, உலக அரங்கில் தங்களை நிர்வாணமாக்கியதாகவே பெரும் பாலான அமெரிக்கர்கள் அவமானப்பட்டுப் போய் உள்ளார்கள்.
I
2001 செப்டம்பர் 11ஆம் தேதி அல்குவைதா தீவிரவாதிகளால் அமெரிக்கா தாக்குண்டபோது, "அமெரிக்கா உலகை மிரட்டுகின்ற ஒவ்வொரு தடவையும் அது அமெரிக்கா மிரட்டப்படுவதற்கே ஒப்பானதாகும்" என்று சுதந்திரக்கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹாரி பிறவுண் தெரிவித்திருந்தார். அமெரிக்காவின் முதுகெலும்பில் விழுந்த அடிக்கு, அமெரிக்காவேதான் காரணம் என்ற அவரது கருத்து மிகைப்பட்டது அல்ல.
39
Page 22
ஏழாவதுஉஊழி
ஆப்கானிஸ்தானில், 1978 இல் இராணுவப் புரட்சியின் மூலம் மார்க்சிஸ்டுகள் அரியணை ஏறியதும் அந்த ஆட்சியை அகற்றும் கைங்கரியத்தில் அமெரிக்கா இறங்கியது. முஜாகிதீன்களின் கிளர்ச்சியை அடக்கிக் கம்யூனிச ஆட்சிக்கு முண்டு கொடுக்கவென சோவியத்தின் துருப்புகள் 1979இல் காபூலில் காலடி வைத்தன. அன்றிலிருந்து 1989இல் ஆப்கானைவிட்டு சோவியத் பின்வாங்கும் வரை அமெரிக்கா பெரும் நிழல்யுத்தமே நிகழ்த்தியது. அந்த ஒரு தசாப்த காலத்தில் சோவியத்துக்கு எதிரான பின்னரங்கத் தயாரிப்பே அல்-குவைதா (A aெedah). அதுவே பின்நாளில், வரம் கொடுத்த சிவன் மேலேயே கைவைத்த பகாசுரனைப்போல், பயிற்சி தந்த அமெரிக்காவையே குறி பார்த்தது. தனது அரசியல் பொருளாதார ஆதாயங்களுக்காகப் பிறநாடு களைப் பலிகேட்கின்ற அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை இப்படிப் பல தருணங்களில் அதற்கு எதிராகவே திரும்பியிருக்கிறது.
கத்ரீனா - ரீட்டா - வில்மா என்று அமெரிக்கா சூறாவளிகளினால் மிரட்டப்படுவதிலும், அவற்றை எதிர்கொண்ட விதங்களுக்காக மட்டுமல்லாமல், அவற்றைச் சினங்கொள்ளவைத்த கர்த்தாவாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டப்படுகிறது. ஜேர்மனியின் சுற்றுச் சூழல் அமைச்சர் டிரைடின், "அமெரிக்காவைக் கத்ரீனா சூறாவளி தாக்கிய தற்கு இயற்கையைக் குற்றம் சாட்டமுடியாது; மாறாக அமெரிக்கர் களின் இயற்கையை மாசுபடுத்தும் போக்கினைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்" என்று தொலைக்காட்சிச் செய்தியொன்றில் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவைச் சூறாவளிகள் தாக்குவது வழக்கமான நிகழ்வு தான். அதுவும், மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்கா சூறாவளிகள் அதிகம் நடமாடும் ஒரு பாதையாகவே இருக்கின்றது. சின்னதும் பெரியதுமாக ஆண்டுக்கு நூறு சூறாவளிகள் வரை அமெரிக்கப் பகுதிகளைக் கடந்து செல்வதாகக் கணக்கெடுத்துள்ளார்கள். அப்படி இருந்தும் கத்ரீனாவும், பின்தொடர்ந்து வந்த அவளது சகோதரிகளான ரீட்டாவும், வில்மாவும் அமெரிக்காவின் மீதான இயற்கையின் எதிர்த்தாக்குதல் என்று வர்ணிக்கும் அளவுக்குக் கவனம் பெற்றுள்ளன. அதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.
சூறாவளிகள், அத்திலாந்திக் சமுத்திரத்தை அண்டியிருக்கும் அமெரிக்காவில் ஹரிக்கேன் (Hurricane) என்றும், பசுபிக்கின் மேற்குக் கரையில் உள்ள சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் டைஃபூன் (Typhoon) என்றும், இந்து சமுத்திர நாடுகளில் சைக்கிளோன் (cyclone) என்றும்
4O
பொ. ஐங்கரநேசன்
அழைக்கப்படுகின்றன. அந்தந்த நாடுகளின் மொழிகளுக்கேற்ப, நம்பிக்கைகளுக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களைச் சூட்டிக் கொண்டாலும் எல்லாச் சூறாவளிகளுமே கடலில் கருக்கொள்ளுவது ஒரே மாதிரித்தான்.
கோடைகாலங்களில் வெப்பமண்டலக் கடற்பரப்பு கடுமையாகச் சூடு அடைகிறது. இந்த வெப்பம் கடலுக்கு நேர்மேலே உள்ள வளிப்படையில் தொற்றிக் கொள்ள, அதுவும் சூடாகிறது. சூடேறச் சூடேற, அடர்த்தியில் குறைந்து இலேசாகும் வளி மேலே கிளம்ப, அதன் இருப்பிடம் சடுதியில் வெற்றிடமாகிறது. அந்த வெற்றிடத்தைச் சுற்றயலில் உள்ள ஈரக்காற்று வெகு வேகமாக வந்து நிரப்பிக்கொள்ளு கிறது. சக்கரம் போல இது தொடர்ந்து நிகழ, ஒரு கட்டத்தில் காற்று சுழன்று வேகங்கொள்ளும். ஏற்கனவே கடலில் இயல்பாகவே வீசிக் கொண்டிருக்கும் காற்று இந்தச் சுழல்காற்றை உந்தித்தள்ள, பெரும் வேகமெடுத்துக் காற்று சூறாவளியாகக் கரையை நோக்கி நகரத் தொடங்கும். போகும் பாதையில் துணைக்கு மழைமேகங்களையும் திரட்டிச் செல்லும். இவை, கரையைத் தொட முன்னரே பலமிழந்து செத்துவிடவும் கூடும். ஊடகங்களின் தலைப்புச் செய்திகள் எதிலும் இடம்பிடிக்காமல் இப்படிப் பாதிவழியிலேயே காணாமற்போகும் புயல்கள்தாம் அதிகம். அல்லது, இடையில் வெப்பக் கடல்களில் மேலும் வெப்பத்தை ஏற்றிக்கொண்டு மூர்க்கத்தனமாகக் கரையை நெருங்கவும் கூடும். புயல்கள் விரையும் வேகத்துக்கு ஏற்ப மரங்களை உலுப்புவது, மனிதர்களை இலைச்சருகுகளாகச் சுழற்றுவது, கட்டிடங்களை அப்பளமாக நொறுக்குவது என்று அவற்றின் அழிப்புத் திறன் வேறுபடுகிறது. அதனடிப்படையில், மணிக்கு 119 தொடங்கி 153 கிலோமீற்றர்கள் வரையும் வீசுகின்ற புயல்களை வகை 1 என்பதில் தொடங்கி (வகை 2 : மணிக்கு 154-177 கி.மீ வகை 3: மணிக்கு 178209 கி.மீ வகை 4 : மணிக்கு 210-249 கி.மீ) மணிக்கு 250 கிலோமீற்றர் களுக்கும் மேல் கடுகதி கொள்ளுகின்ற சூறாவளிகளை வகை-5 என்பது வரை புயல்களுக்கு ஒரு அளவுச் சட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
சூறாவளிகளுக்கும் மனித நடவடிக்கைகளுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லையென்றுதான் விஞ்ஞானம் சொல்லி வந்திருக்கிறது. ஆனால், புயல்களின் பிறப்பும் இறப்பும்தான் மனிதர் களின் கைகளில் இல்லையே தவிர, அவற்றைச் சினங்கொள்ளு மளவுக்குத் தூண்டிச் சீறவைப்பதில் மனிதர்களின் கைங்கரியம்
41
Page 23
ஏழாவதுஉஊழி
நிறையவே இருக்கிறது. இதனை வளிமண்டலவியல் ஆய்வாளர்கள் பலரின் சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கெர்ரி இம்மானுவல் (Kerry Emanuel-Massachusetts Institute of Technology) gasgol' 2005 "Gibisi (Nature) இதழில் இது தொடர்பான ஆய்வுக்கட்டுரையொன்றை வெளி யிட்டுள்ளார். கெர்ரி, 56 ஆண்டுகளாக விடக்கு அத்திலாந்திக்கிலும் வடக்கு பசுபிக்கிலும் வீசிய சுமார் 4,800 புயல்களை விலாவாரியாக ஆராய்ந்திருக்கிறார். இதில், ஆண்டுதோறும் வீசும் புயல்களின் எண்ணிக்கையில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாத போதும், அவற்றின் வேகத்திலும் நின்று தாக்குகின்ற நேரத்திலும் இதுவரை இல்லாத அளவுக்குப் பாரிய அதிகரிப்பு நிகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக 1970 க்குப் பின்னர் ஹரிக்கேன் புயல்களின் வேகம் 50 விழுக்காட்டால் உயர்ந்துள்ளதைக் கண்டறிந்துள்ளார்.
கியூரி, ஹொலண்ட் (Cuாy, Holand) என்னும் இரண்டு ஆய்வாளர் களும் 'சயன்ஸ் (Science) என்னும் விஞ்ஞான ஆய்வு ஏட்டில் இது போன்றதொரு கட்டுரையைச் சமர்ப்பித்திருக்கிறார்கள். அவர்களது தரவுகளின்படியும் 1970 ஆம் ஆண்டிலிருந்து முதலாம், இரண்டாம், மூன்றாம் வகைப் புயல்கள் எண்ணிக்கையில் குறைந்து அழிவுப் புயல்களான நான்காம், ஐந்தாம் வகைப் புயல்கள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளன. 1970களில் ஆண்டுக்கு சராசரியாக 10 என்ற எண்ணிக்கையில் வீசிய நான்காம் ஐந்தாம் வகைப் புயல்கள் 1990களில் இருந்து இரட்டிப்பு மடங்காகியுள்ளன. இப்படி அழிவுத்திறன் மிக்க சூறாவளிகள் அதிக எண்ணிக்கையிலும் அதிக மூச்சுடனும் வீச ஆரம்பத்திருப்பதை ஆய்வாளர்கள், மனிதன் பூமியைச் சூடுபோட்டு வருவதன், குறிப்பாக அமெரிக்க சக்திக்கொள்கையின் எதிர்விளைவு களாகக் குறிப்பிடுகிறார்கள்.
வெப்பமண்டலக் கடல்களில், பொதுவாக வெப்பநிலை 27.2 பாகை செல்சியஸ் அளவைத் தாண்ட நேரிடும்போது புயல்கள் சூல் கொள்ளத் தொடங்குகின்றன. ஆனால், வெப்பமண்டலக் கடல்களின் வெப்பநிலை இப்போதெல்லாம் இதையும்விட மிக உயர்வாகவே இருக் கிறது. அத்திலாந்திக் பெருங்கடலில் 1970களில் 30 பாகை செல்சியஸ் ஆக உயர்ந்திருந்த வெப்ப நிலை, கத்ரீனா பிரசவமான ஆகஸ்ட் 2005 இல் 33 பாகை செல்சியஸை எட்டியிருந்தது. பூமியின் ஒட்டுமொத்தக் கடலினதும் சராசரி வெப்பநிலை உயர்வு 0.5 பாகை செல்சியஸ். 0.5 பாகை என்பது புறக்கணிக்கத்தக்கதல்ல, இந்த உயர்வே புயல்களின்
42
பொ.ஐங்கரநேசன்
அழிப்புச் சக்தியை இரட்டிப்பாக்கி விடுகின்றன என கெர்ரி இம்மானுவேல் குறிப்பிட்டிருக்கிறார். வெப்பநிலை உயரும் போது கடற்காற்றில் சேரும் நீராவியின் அளவு கூடிக் கொண்டு செல்கிறது. அளவுக்கு அதிகமாக நீராவியைச் செரிக்கும் காற்று, புயலின் பிரசவத்துக்குக் காரணமான மேற்காவுகை ஓட்டத்தை விரைவுபடுத்திப் புயல்களை ஆபத்தான வேகத்துக்கு இட்டுச் செல்லுகிறது. அத்தோடு வளியில் நீராவி கேரச் சேர, புயல் அதைப் பெரும் மழையாக மொண்டு சென்று போகும் பாதையில் துப்பிவிட்டும் போகின்றது. இப்படித்தான், சாதாரணமாக வந்து போயிருக்க வேண்டிய கத்ரீனா, பூமியின் வெப்பநிலை உயர்வால் பெரும் பிரளயமாக உருவெடுத்தது.
சுவட்டு எரிபொருட்களின் வரம்பை மீறிய பாவனையும், காட்டுத்துகிலைக் களைந்து பூமியை நிர்வாணமாக்கும் முயற்சிகளுமாகச் சேர்ந்து வளியில் குவித்து வரும் பச்சைவீட்டு வாயுக்களால்தான் (பெருமளவில் கரியமிலவாயு) பூமி தகிக்கத் தொடங்கியுள்ளது. மனிதன் பூமியை இப்படி வேகவைப்பதைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஐக்கிய நாடுகள் சபை 1997 டிசெம்பரில் ஜப்பானின் கியோட்டோவில் உலக நாடுகளைக் கூட்டியது. அதில், தொழில்வள நாடுகள் யாவும் தாம் வெளியேற்றும் பச்சைவீட்டு வாயுக்களின் அளவை 2012 ஆம் ஆண்டுக்கு இடையில் - 1990இல் இருந்த அளவிலும் பார்க்க 5.2 விழுக்காடு குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற உடன்படிக்கை (Kyoto Protoco) உருவானது. உலகமக்கள் தொகையில் 4 விழுக்காடு மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் அமெரிக்காதான் உலகிலேயே அதிக அளவில் - 25 விழுக்காடு - கரியமிலவாயுவை வெளியேற்றிகொண்டிருக்கிறது. மொத்தப் பெற்றோலியப் பெர்ருள் களின் நுகர்வில் 25 விழுக்காடு அளவை அமெரிக்கர்கள்தாம் பயன் படுத்தித் தீர்க்கின்றனர். இதனால், மற்றைய தொழில்வள நாடுகளை, கரியமில வாயுவை வெளியேற்றும் அளவை 1990 ஆம் ஆண்டிலிருந்த அளவிலும் 5.2 விழுக்காடு குறைக்கக்கோரிய உடன்படிக்கை, அமெரிக்காவை ஏழு விழுக்காடு குறைத்தாக வேண்டும் என்று கண்டிப்புக் காட்டியது.
ஆனால், அமெரிக்கா இதனை ஏற்பதாக இல்லை. ஆரம்பம் முதலே கியோட்டோ உடன்படிக்கை நடைமுறைக்கு வருவதில் தடங்கல்களை உண்டு பண்ணி வந்த அமெரிக்கா, ஒருதலைப் பட்சமாக 2001ஆம் ஆண்டு உடன்படிக்கையை முறித்துக் கொண்டது. அப்போது அதிபர் புஷ், கியோட்டோ உடன்படிக்கை அமெரிக்காவின்
43
Page 24
ஏழாவது ஊழி
பொருளாதார நலன்களை மோசமாகப் பாதிக்கிறது என்று அறிவித்த தோடு, ‘கியோட்டோ தீர்மானம் வலுவான விஞ்ஞானத்தின் அடிப்படையில் அமையாதது என்றும் குற்றம் சாட்டினார். இதனால் தான் கோபி அனன் அறிவியலையும் துணைக்கு அழைத்துக் கொண்டு, இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று அமெரிக்காவை எச்சரிக்க நேர்ந்தது.
மிதமிஞ்சிய எரிபொருட்களின் பாவனைதான் பூமியின் வெப்பநிலை உயர்வுக்குக் காரணம் என்ற எச்சரிக்கைகளைத் தவறான பரப்புரையாகச் சித்திரிக்க அமெரிக்கப் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்கள் ஏராளமாகச் செலவிட்டு வருகின்றன. எக்ஸான் மொபில் (Exxon Mobil) என்னும் எண்ணெய் நிறுவனம் பூமி வெப்ப உயர்வு எச்சரிக்கைக்கு எதிரான பரப்புரைக்காக 1998 தொடங்கி 2005 வரையில் 13 மில்லியன் டொலர் செலவிட்டுள்ளது. மினசோட்டாவில் நடைபெற்ற ஒரு பொதுவிசாரணையின் போது அமெரிக்க நிலக்கரி நிறுவனம் ஒன்று பூமி வெப்ப உயர்வு குறித்து அதிகம் பேசிவந்த நான்கு விஞ்ஞானிகளின் வாய்களை மூட ஒரு மில்லியன் டொலர்கள் கையூட் டாக வழங்கியமை வெளிச்சத்துக்கு வந்தது. இவை போன்ற பன்னாட்டு பெற்றோலிய நிறுவனங்கள்தான் அமெரிக்க அரசியல் கட்சிகளின் நிதிமூலமாகவும் உள்ளன. தேர்தலில் அதிபர் புஷ்ஷின் தேர்தல் நிதியாக பெற்றோலிய நிறுவனங்கள் 52 மில்லியன் டொலர்கள் வழங்கின. அதிபர் புஷ்ஷின் தந்தையும், முன்னாள் அமெரிக்க அதிபருமான புஷ் பெற்றோலிய நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் என்பதும், அமெரிக்கத் துணை அதிபர் டிக்செனி பெட்ரோலிய நிறுவனமொன்றின் முன்னாள் இயக்குநர் என்பதுவும் குறிப்பிடத்தக்கவை.
கத்ரீனாவால் இன்று மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நியூஆர்லியன்ஸ் நகர சபை இந்த ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்திருந்தது. நியூஆர்லியன்ஸ் 2001 மே மாதம், அமெரிக்க அரசு கியோட்டோ ஒப்பந்தத்தை ஏற்கக்கோரும் தீர்மானமொன்றை நிறைவேற்றியது. அதில், வெப்பநிலை உயர்வால் நியூஆர்லியன்ஸ் மிக மோசமாகப் பாதிக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் கால நிலை மாற்றத்துக்கான விஞ்ஞானிகள் குழு எச்சரித்துள்ளது. கடல் மட்டம் உயர்ந்து, கடல் நீர் உட்புக வாய்ப்புள்ள நிலையில் இனி நியூஆர்லியன்ஸ் பிழைத்திருப்பதே கடினம். வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிபர் புஷ் முன்வரவேண்டும் என அமெரிக்கக் குடியரசிடம் வேண்டுதல் விடுத்தது. ஆனால் அதிபர் புஷ்,
44
பொ.ஐங்கரநேசன்
ஆர்லியன்ஸின் வேண்டுகோளை மட்டுமல்ல, இது தொடர்பாக பென்ரகனின் ஆலோசனைகளையும்கூடக் கண்டு கொள்பவராக இல்லை. பென்ரகனின் பாதுகாப்பு ஆலோசகர் ஆன்ட்ரூ மார்ஷல், பூமியின் வெப்ப உயர்வு உலகையும், அமெரிக்காவின் பாதுகாப்பையும் எதிர்காலத்தில் எவ்வாறெல்லாம் பாதிக்கும் என்பதை விலாவாரியாகக் குறிப்பிட்டு அறிக்கையொன்றை அமெரிக்க அரசுக்கு அனுப்பி வைத்தார். இரகசியமாக அமுக்கப்பட்ட அந்த அறிக்கையை த ஒப்சேவர் பத்திரிகை தனது 2004 பெப்ரவரி 22ஆம் திகதிய இதழில் அம்பலப்படுத்தியுள்ளது. அதில், பிரதான ஐரோப்பிய நகரங்கள் பலவும் கடலில் மூழ்கும், பிரித்தானியா சைபீரியாவைப் போலக் குளிர் பாலையாகும், கடும் வறட்சி ஏற்பட்டுப் பட்டினிச் சாவுகள் மலியும், உணவையும் தண்ணீரையும் எரிசக்தியையும் பெறுவதற்காக அணுவாயுதங்களைப் பிரயோகிக்குமளவுக்கு யுத்தங்கள் வெடிக்கும் என்றெல்லாம் எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், இவை, ஐக்கிய அமெரிக்கா வின் தேசியப் பாதுகாப்புக்கும் பெரும் சவாலாக அமையும் என்பதால் அமெரிக்க அரசாங்கம் இவ்விடயத்தில் உடனடியாகவே கரிசனை கொள்ளவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாம் வெறும் அனுமானங்கள் அல்ல; விஞ்ஞானத் தின் தீர்க்கதரிசனங்கள்தாம் என்பதை, கத்ரீனா நியூஆர்லியன்ஸை அறைந்து அமெரிக்காவுக்குத் தெரியப்படுத்தியுள்ளது. ஆனால், இயற்கையை வஞ்சித்தமைக்கான இயற்கையின் வஞ்சினம்தான் இது என்பதை அமெரிக்கப் பொதுப் புத்தி புரிந்து கொண்ட அளவுக்கு அமெரிக்க அரசு உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல், ஒட்டுமொத்த உலகையுமே அழிக்கக்கூடிய பெரும் சூழலியற்பயங்கரவாதத்தை நிகழ்த்திக் கொண்டே, உலகில் பயங்கரவாதிகளைத் தொடர்ந்தும் அமெரிக்கா தேடிக் கொண்டிருக் கிறது.
45
Page 25
3
ஓசோன் குடையில் ஓட்டை
"அல்ல்ை அருளள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்ல்ைமா ஞாலம் கரி"
- திருக்குறள் (அருளுடைமை, 245)
பூமித்தாய் தன் தற்காப்புக்கென விரித்து வைத்திருக்கும் ஓசோன் குடையில் துளைகள் விழுந்திருப்பது முதன்முதலில் 1970இன் உறைபனிக் காலத்தின்போது அன்டார்ட்டிக்காப் பிரதேசத்தில் பிரித்தானிய ஆராய்ச்சிக் குழுவொன்று மேற்கொண்டிருந்த ஆய்வுகளின் போதுதான் தெரிய வந்தது. அப்போது இந்தச் செய்தி அதிக முக்கியத்துவம் பெறவில்லை. 80களில் அன்டார்ட்டிக்காவுக்குச் சென்று திரும்பிய ஆராய்ச்சிக் குழுக்கள் ஒசோன் படையில் ஒவ்வொரு உறைபனிக் காலத்திலும் மிகப்பெரிய அளவில் ஒட்டைகள் தோன்று வதையும் வருடாவருடம் துவாரங்களின் அளவு பெரிதாகி வருவதையும் கண்டறிந்து அது, பூமியில் ஏற்படுத்தும் பயங்கரமான விளைவுகளைப் பட்டியலிட்ட போதுதான் 'ஓசோன் ஓட்டை உலகளாவிய சூழற் பிரச்சினையாக விஸ்வரூபம் பெற்றது.
ஓசோன், வளிமண்டலத்தில் புறஊதாக்கதிர்களின் துணை கொண்டு மூன்று ஒட்சிசன் (Oxygen) அணுக்களின் இணைவில் கருக்கொள்ளும் ஸ்திரமற்ற ஒரு நச்சுவாயு. தரையை அண்டிய வளிமண்டலத்தில் மிக அரிதாகவும், தரையில் இருந்து 15 கிலோமீற்றர்களுக்கு மேலே 50 கிலோமீற்றர்கள் வரையான பகுதியில் (Stratosphere) செறிந்தும் காணப்படுகிறது. பூமத்திய கோட்டை அண்டிய அயனப்பகுதிகளில் மெல்லிய படலமாகவும், துருவப்பகுதிகளை நோக்கி அதிகமாகத் தடிப்படைந்தும் செல்கிறது. இதன் தடிப்பை, வளியில் ஓசோன் வாயுவைப் பற்றி ஆய்வு செய்த டொப்சன் என்னும் விஞ்ஞானியின் நினைவாக 'டொப்சன் அலகுகளில் அளவிடுகிறார்கள். உதாரணத்துக்குச் சொல்வதானால் 400 டொப்சன் அலகுகள் 4 மில்லி மீற்றர்கள் தடிப்புக்குச் சமனாகும்.
Հ6
பொ. ஐங்கரநேசன்
இயற்கை கொடுத்த இராட்சதக் குடையாகப் பூமியைச் சூழ்ந்து காணப்படும் ஒசோன் படை, சூரியனில் இருந்து வரும் ஆபத்தான புறஊதாக்கதிர்களை உறிஞ்சித் தீங்கில்லாத ஒளியைப் பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. இந்த வடிகட்டியில்தான் இன்று ஒட்டைகள் தோன்றியுள்ளன. ஆரம்பத்தில் அன்டார்ட்டிக்கா பகுதியில் மாத்திரம் தென்பட்ட ஓசோன் ஒட்டைகள் இப்போது ஆர்க்டிக் பகுதியிலும் உருவாகி வருகின்றன. தொழில் நுட்பரீதியாக 220 டொப்சன் அலகுகளுக்கும் கீழாக ஓசோன் படை தடிப்பில் குறை வடையும் பகுதிகளைத்தான் 'ஓசோன் துளை என்று வரையறை செய்திருக்கிறார்கள்.
அறிவியலின் அசுரத்தனமான வளர்ச்சி, வளிக்குச் சொந்தமில்லாத ஏராளமான அந்நியன்களை வளிமண்டலத்துக்குள் திணித்துக் கொண்டிருக்கிறது. அப்படி வளிமண்டலத்துள் கழிக்கப்பட்டவற்றுள் குளோரோ புளோரோ காபன்கள், மெதையில் புரோமைட்டு, புரோமோ குளோரோ மெதேன், நைத்திரிக்கொட்சைட்டு. என்று ஏறத்தாழ 90 வேதிகள் ஒன்று சேர்ந்து ஒசோன் படையைத் தாக்கி வருகின்றன. அவற்றில் குளோரோ புளோரோ காபன்கள் மற்றையவைகளைவிட மிகவும் வெறித்தனமாகவே ஒசோனுடன் நடந்து கொள்கிறது.
குளிர்சாதனப்பெட்டிகளில் குளிர்விப்பான்களாக 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமோனியா, கந்தக ஈரொக்சைட்டு, மெதையில் குளோரைட்டு போன்ற நச்சு வாயுக்களே பயன்பட்டு வந்தன. குளிரூட்டிகளிலிருந்து அவ்வப்போது இவை கசிந்து நிகழ்த்திய மரணங்கள் அநேகம். இவற்றுக்கான மாற்றீடுகளைத் தேடியபோதே குளோரோ புளோரோ காபன்கள் கண்டறியப்பட்டன. 1928ஆம் ஆண்டில் அமெரிக்காவின் "ஜெனரல் மோட்டேர்ஸ் நிறுவனத்தின் விஞ்ஞானி தோமஸ் மிட்ஜ்லி (Thomas Midgey, JN) குளோரோ புளோரோ situair,6061T (Chloro Fluoro Carbons - CFCs) Liggs(Tasg Gossrgiggs, a Goj6) irrd கினார். குளோரோ புளோரோ காபன் வாயுக்கள் அவற்றிலிருக்கக் கூடிய குளோரின், புளோரின், காபன், ஐதரசன் அணுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் CFC-11, CFC-12, CFC-115 என்று பெயர் சூட்டப் பெற்றுள்ளன. இவற்றின் நஞ்சற்ற தன்மை, அரிக்காத பண்பு, தீப்பிடிக்காத குணாம்சங்கள் ‘நல்ல பெயரை வாங்கித்தர, சந்தைக்கு வந்ததுமே பச்சைக் கம்பள வரவேற்புக் கிடைத்தது. உலகம் பூராவுமுள்ள குளிரூட்டிகளை நிரப்பிய குளோரோ புளோரோ காபன்கள் விரைவில்
47
Page 26
ஏழாவது ஊழி
அதையும் தாண்டிப் புகழ் பெற்றன. தீயணை கருவிகளில், விசிறு தெளிகருவிகளில், பெண்களுக்கான அலங்காரப் பூச்சுகளின் தயாரிப்பில் கணினிச் சுற்றுகளைச் சுத்தம் செய்வதில் என்று ஏராளமான தேவைகளுக்குப் பயன்படத் தொடங்கின.
உண்மையில், குளோரோ புளோரோ காபன்கள் தரையில் மட்டும்தான் பாதகங்கள் எதுவுமே இல்லாத பரம சாதுக்கள். ஆனால் வானத்தில் மகா பயங்கரவாதிகள். வளியில் CFC-1 இனது ஆயுள் 50 ஆண்டுகள். CFC-12 இனது ஆயுள் 102 ஆண்டுகள். CFC-115 இனது ஆயுளோ 1700 ஆண்டுகள். சாகாவரம் பெற்ற 'அரூப அரக்கர்களாக வளியில் ஊடுருவும் இவை, நீரில் கரையும் இயல்பும் இல்லாதவை யாதலால் மழையில் கழுவிச் செல்லும் வாய்ப்புப் பறி போய்விட, வளிமண்டலத்தை நிரந்தரமாகவே ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. பாவனை முடிந்த பின்னரும் உருக்குலையாத இந்த உறுதித்தன்மைதான் பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. வளியில் சாவகாசமாகப் பயணம் செய்து ஒசோன் படையை அடைந்ததும் இவை தம் கைவரிசையைக் காட்டத் தொடங்கி விடுகின்றன.
குளோரோ புளோரோ காபன்கள் ஒசோன் படையை அடைந்ததும் புற ஊதாக்கதிர்களால் சிதைவடைந்து குளோரின் அணுக்களை விடுவிக்க, குளோரின் அணு ஒசோனைச் சிதைத்து ஒட்சிசனாக மாற்றுகிறது. இதில் மிகவும் துர்அதிர்ஷ்டம் என்னவெனில், ஓசோனைப் பிளக்கும் குளோரின் அணுக்கள் விரைவில் தீர்ந்து போவதற்கான வாய்ப்பே இல்லை என்பதுதான். ஒரு தடவை ஓசோனை அழிக்கும் குளோரின் அணு தாக்கத்தில் மீளவும் மீளவும் தோன்றி சங்கிலித் தொடராக ஓசோனைப் பிளந்து கொண்டேயிருக்கிறது. இப்படி குளோரின் ஒற்றை அணுவாகவே நின்று ஒரு இலட்சம் ஓசோன் மூலக்கூறுகளை அழித்தொழித்து விடுவதாகக் கணக்கெடுத்து வைத்திருக்கிறார்கள்.
வளிமண்டலத்தில் ஒட்சிசன் ஒசோனாகத் தோன்றுவதும், பின்னர் ஓசோன் ஒட்சிசனாக அழிவதும் புறஊதாக்கதிர்களின் வெவ்வேறு அலை நீளக்கதிர்களில் ஒருபுறம் இயற்கையில் நிகழ்ந்தவண்ணம்தான் உள்ளது. இயற்கையில் சமகதியில் நிகழும் இந்த ஆக்கலும் அழித்தலும் ஓசோன்படையின் இருப்பில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் குளோரோ புளோரோ காபன்கள் தின்று தீர்க்கும் ஓசோனுக்குப் பிராயச்சித்தமே இல்லை. தனக்குத்தானே சிகிச்சை
48
1ష్ట్రక్వశ
త్రొ
పై క్షా
S ప్తి
ప్తి
ミ S
Page 27
ஏழாவதுஉஊழி
யளித்துக் கொள்ளும் இயற்கையிடம், இந்தப் பொத்தல்களில் தடவுவதற்கு எந்தக் களிம்புகளும் இல்லை.
ஓசோன் படையில் ஏற்பட்டுள்ள உடைப்புகளினூடாக ஒழுகும் புற ஊதாக்கதிர்களினால் பூமியின் உயிரினமண்டலம் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றது. ஓசோன் வடிகட்டி அனுப்பும் சாதாரண சூரிய ஒளியில் 'மிச்சம் மீதியிருக்கும் புற ஊதாக்கதிர்களே அதிக நேரம் படுகின்றபோது ஆபத்து என மருத்துவர்கள் எச்சரிக்கும்போது, வடிகட்டப்படாமல் அப்படியே ஒழுகும் ஒளியில் எவ்வளவு ஆபத்துகள் கரந்துறையும். புற ஊதாக்கதிர்களின் 'பி வகைக் கதிர்வீசல் (UV-B radiation) LDafistfidi, Gisstadio Lippi Gisraoutylb (Non-melonima, Malignant melonima Skin Cancers), 56 or safa) (50560Lulb L60J 60uulb (Cataract) ஏற்படுத்துகின்றது. ஒசோன் படையின் ஒவ்வொரு விழுக்காடு அழிவின் போதும் தோலில் புற்றுநோய் தோன்றுவதற்கான வாய்ப்பு இரண்டு விழுக்காடால் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர்களின் விளைச்சல் வெகுவாகக் குறைவதோடு மறைமுகமாக நோய்களும் தூண்டப்படுகிறது. இப்படித் தரையில் மட்டுமல்ல, தண்ணிரிலுமே கோளாறுகள்தான். கடல்நீரின் ஒளிவலயத்தில் மிதக்கும் அலைதாவரங் களைப் (phytoplanktons) பெருமளவில் பாதிக்கிறது. அவற்றின் உணவு உற்பத்தியில் வீழ்ச்சியை உண்டு பண்ணுகிறது. இந்தத் தாவரங்கள் எல்லாம் நுண்ணியனவாய் இருந்தாலும், கடலின் வயல்களாக ஒட்டு மொத்தக் கடல் விலங்குகளுக்கும் போசிக்கும் உணவு உற்பத்தியாளர்கள் இவைதாம். இந்த அலை தாவரங்கள் பாதிக்கப்படும்போது, கடலின் விலங்குகள் எல்லாமே ஏதோ ஒரு பரிமாணத்தில் பட்டினியின் அவலத்தை அனுபவிக்க நேரிடும். அவற்றிலும், உணவுச் சங்கிலியின் முன்வரிசையில் காத்திருக்கும் மீன்களே முதலில் பெரும் எண்ணிக் கையில் அழிவைச் சந்திக்கும். புறஊதாக் கதிர்களினால் மீன், இறால், நண்டு போன்ற கடலுயிரிகளின் இனப்பெருக்கச் செயற்பாடுகளும் பெரிதும் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
பயங்கரமான இந்த உயிரின எதிர்விளைவுகள் ஐக்கிய நாடுகளை 1987 செப்டெம்பரில் கனடாவின் மொன்றியலில் கூட வைத்தது. ஓசோன் படைக்கு வேட்டு வைக்கும் இரசாயனங்களின் பாவனையைக் கட்டங்கட்டமாகக் குறைத்து, ஈற்றில் முற்றாகவே தடைசெய்யும் "மொன்றியல் உடன்படிக்கை (Monreal Protoco) உருவானது. ஒசோனை அழிப்பதில் வளர்ந்த நாடுகளின் படாடோபச் செயற்பாடுகளே அதிகம்.
5O
பொ.ஐங்கரநேசன்
அதனால் மொன்றியல் உடன்படிக்கையில், வறிய நாடுகள் பொருத்த மான மாற்றுக்களைக் கண்டடைவதில் தொழில் நுட்பங்களையும் நிதியையும் வளர்ந்த நாடுகளிலிருந்து பெற்றுக் கொள்ளவும், ஓசோன் விரோதிகளை வறிய நாடுகள் களைவதில் காலத் தளர்வு வழங்கவும் வழிவகை செய்யப்பட்டது. இதன்படி குளோரோ புளோரோ காபன்களின் உற்பத்தியையும் பாவனையையும் வளர்ந்த நாடுகள் 1996 ஜனவரி 1க்கு முன்னதாகவும், வளரும் நாடுகள் 2010ஆம் ஆண்டுக்கு முன்னதாகவும் முற்றாகவே நிறுத்திக் கொள்ள வேண்டும். மெதையில் புரோமைட்டின் உற்பத்தியையும் பாவனையும் வளர்ந்த நாடுகள் 2005 ஜனவரி 1க்கு முன்னதாகவும், வளரும் நாடுகள் 2015ஆம் ஆண்டிலும் முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும். குளோரோ புளோரோ காபன்களுக்கு மாற்றீடாகப் பயன்படுத்தலாம் என ஒப்புக் கொள்ளப் பட்ட ஹைட்ரோ குளோரோ புளோரோ காபன்களும் (HCFCs) குளோரோ புளோரோ காபன்களைப்போல அல்லாது குறைந்த காலத்துக்குத்தான் உறுதியாக இருக்குமாயினும் அவையும் சாதாரண பேர்வழிகள் அல்ல. அந்தக் காலப்பகுதியில் தம் பங்குக்கு அவையும் ஒசோனைத் தின்றுகொண்டுதான் இருக்கின்றன. இதனால் இவற்றின் பாவனையையும் வளர்ந்த நாடுகள் 2030ஆம் ஆண்டுக்கு முன்பும், வளரும் நாடுகள் 2040ஆம் ஆண்டுக்கு முன்பும் நிறுத்திவிட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இப்படி, மொன்றியல் உடன்படிக்கை யில் காலத்துக்குக் காலம் இணைக்கப்பட்ட பிற்சேர்க்கைகளுடன் இது வரையில் மொத்தம் 96 இரசாயனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எல்லா ஒப்பந்தங்களையும் போன்றே, மொன்றியல் உடன்படிக் கையும் நடைமுறையில் பல சவால்களை எதிர்கொண்டே வருகிறது. குளோரோ புளோரோ காபன்களின் உற்பத்தி தடை செய்யப்பட்ட போதும் ஆராய்ச்சிகளுக்கும், மருந்துகளில் பிரயோகிப்பதற்கும் (asthma inhalators) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் பழைய மோட்டார் வாகனங்களின் வளி பதனப்படுத்திகளை மறு சீரமைப்புச் செய்வதில் கு.பு.கா. (CFC)இன் பாவனைக்கு சட்டரீதியான அனுமதி உள்ளது. இவற்றைச் சாட்டாக வைத்து உற்பத்தி செய்யப்படாத நாடுகளுக்குப் பிற நாடுகளில் இருந்து குளோரோ புளோரோ காபன்கள் போய்ச் சேருகின்றன. வளர்ந்த நாடுகளில் 1996இல் குளோரோ புளோரோ காபன்கள் தடை செய்யப்பட்ட பின்னர், அமெரிக்காவில் குளோரோ புளோரோ காபன்களைப் பயன்படுத்தியதாக ஆகஸ்ட் 99இல் 36 நிறுவனங்கள் மீது அமெரிக்கச் சுற்றுச் சூழல் அமைப்பு வழக்குத்
51
Page 28
ஏழாவதுஉஊழி
தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கறுப்பு வியாபாரத்தின் கேந்திர நிலையமாக ரஷ்யா இருந்து வருகிறது.
வளர்ந்த நாடுகள் தமது பராக்கிரமத்தைப் பிரயோகித்துப் பாவனையைத் தொடர்வதுவும் நடந்தேறுகிறது. மொன்றியல் உடன்படிக்கையின்படி மெதையில் புரோமைட்டை பாவனையில் இருந்து விலக்குவதற்கான காலக்கெடு 2005 ஜனவரி 1. ஆனால், 2005 ஜூலை 1இல் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைவனத்தின் ஏற்பாட்டில் மொன்றியலில் நிகழ்ந்த கூட்டமொன்றில் காலக்கெடு திருத்தி எழுதப்பட்டது. கடும்வாதப் பிரதிவாதங்களின் மத்தியில் அமெரிக்கா, இஸ்ரேல், கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 13 வளர்ந்த நாடுகள் 2006ஆம் ஆண்டுவரை மெதையில் புரோமைட்டைப் பயன்படுத்துவதற்கான கால நீடிப்பைப் பெற்றன.
மெதையில் புரோமைட்டு செல்வந்த நாடுகளின் பழச்செய்கையில் செல்வாக்குமிக்க ஒரு பீடைகொல்லி நஞ்சு. நிலத்தைக் கிருமியழிப் பதிலும் ஏற்றுமதிக்காகக் காத்திருக்கும் பழங்களைப் பீடைகளின் பிடியில் இருந்து விடுவிப்பதிலும் பயன்பட்டுவருகிறது. உலகில் ஆண்டுதோறும் 70,000 தொன்கள் மெதையில் புரோமைட்டு விசிறப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் பெரும் பங்கு, வளர்ந்த நாடுகளில் ஸ்ரோபெரி, தக்காளிப் பழங்களின் உற்பத்திக்காகச் செலவிடப்படுகிறது. குளோரோ புளோரோ காபன்களுடன் ஒப்பிடும்போது இது ஆயுளில் மிகவும் குறைந்தது. எனினும், 40 மடங்கு வீரியத்துடன் ஒசோனுடன் மோதக் கூடியது. இதனால் மெதையில் புரோமைட்டைப் பயன்படுத்துவதில் முதலிடம் வகிக்கும் அமெரிக்கா வில் இதன் பாவனைக்குக் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. 2006ஆம் ஆண்டில் பயன்படுத்தவென வளர்ந்த நாடுகள் அனுமதி பெற்ற மெதையில் புரோமைட்டில் 50 விழுக்காடுக்கும் அதிகமான அளவு அமெரிக்கா வுக்கே ஒதுக்கப்பட்டது. சுற்றுச் சூழலியலாளர்கள் அமெரிக்கா தனது கையிருப்பில் வைத்திருக்கும் பெரும் அளவிலான மெதையில் புரோ மைட்டைக் கணக்குக்குக் கொண்டு வராததோடு, தனது தேவைக்கு மிதமிஞ்சிய அளவில் மெதையில் புரோமைட்டைக் கேட்டுப் பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். 2006ஆம் ஆண்டு காலக்கெடு முடிந்தும்கூட மெதையில் புரோமைட்டின் பாவனை முடிவுக்கு வருவதாகவில்லை. தொழில்நுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வேறு பொருத்தமான மாற்று இல்லாதபோது, விவசாயத்தில்
52
பொ. ஐங்கரநேசன்
இக்கட்டான தருணங்களில் இதனைப் பாவிப்பதற்கு ஒப்பந்தத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி ஏறத்தாழ எல்லா வளர்ந்த நாடுகளுமே இன்றுவரை கணக்குக் காட்டியும் காட்டாமலும் மெதையில் புரோமைட்டைப் பயன்படுத்தியவாறுதான் உள்ளன.
அதேசமயம், சர்வதேச ஒப்பந்தங்களில் இன்றைய தேதியில் அதிக அளவில் வெற்றிபெற்ற ஒரே ஒப்பந்தம் மொன்றியல் உடன்படிக்கை தான் என்பதையும் மறுப்பதற்கில்லை. 1987இல் 27 நாடுகள் மாத்திரமே கையொப்பமிட்ட இவ்வொப்பந்தம் இன்று 191 நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஒப்பந்தம் கைச்சாத்தான செப்டெம்பர் 16ஆம் தேதியை, 1995ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை உலக ஓசோன் பாதுகாப்பு தினமாக அனுட்டித்து, இது தொடர்பான விழிப்புணர்வை ஊட்டி வருகிறது. ஓசோன் படையில் சேதங்களை விளைவிக்கும் வாயுக்களை அதிக அளவில் வளியில் தூவும் தொழில்வள நாடுகளே, வினை விதைத்தவன் கதையாக ஓசோன் துளையால் அதிக அளவில் பாதிக்கப்படும் நாடுகளாகவும் உள்ளன. பூமியின் வட, தென் துருவப் பகுதிகளுக்கு மேலாக உள்ள ஓசோன் படலம் அதிகம் சிதைவுக்கு ஆளாவது மாத்திரம் அல்ல; இப்பகுதிகளை அண்டி வாழுகின்ற வெள்ளைத் தோல் மனிதர்களே அதி ஊதாக்கதிர்களால் தோல் புற்றுக்கு ஆளாகும் வாய்ப்பையும் அதிகமாகக் கொண்டுள்ளனர். இதை உணர்ந்து கொண்ட சில வளர்ந்த நாடுகள் மொன்றியல் உடன்படிக்கைக்கு விசுவாசமாகவே நடந்து வருகின்றன. குளோரோ புளோரோ காபன்களுக்கு விதித்த காலக்கெடுவுக்கு இரண்டு வருடங்கள் முன்னதாக சுவீடனும், சுவிற்சர்லாந்தும், ஒன்றரை வருடங்களுக்கு முன்னதாக ஜேர்மனியும் குளோரோ புளோரோ காபன்களுக்கு விடைகொடுத்தமை நினைவு கூரத்தக்கது.
ஓசோன் விரோத வேதிகளைக் களையத் தொடங்கியதன் பிரதிபலிப்புகளை வானத்தில் ஒசோன் கூரையிலும் காண முடிந்தது. செப்டெம்பர் 2000இல் 29 மில்லியன் சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவில் இருந்த ஒசோன் துளைகள் செப்டெம்பர் 2004ஆம் ஆண்டில் 15 மில்லியன் சதுர கிலோமீற்றர்களாகச் சுருங்கியிருந்தது. இந்தச் சகுனங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒசோன் படையின் காயங்கள் ஆறத் தொடங்கியிருப்பதாகவும், 2050ஆம் ஆண்டளவில் முற்றாகவே குணமடைந்து விடும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தார்கள். ஆனால் பொத்தல்கள் இழைய ஆரம்பித்ததாக
53
Page 29
ஏழாவதுஉஊழி
அவர்கள் ஆசுவாசப்பட்டு அதிக காலம் ஆகவில்லை. அதற்குள்ளாக, சூழலியலாளர்களின் நிம்மதியைக் குலைக்கும் வகையில் ஒசோன் குடையில் மீண்டும் பாரிய துளைகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. ஆறுமாதத்திலேயே - 2005 மார்ச்சில் - ஐக்கிய இராச்சியத்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆர்க்டிக் பிரதேசத்துக்கு மேலான ஓசோன் படை ஏறத்தாழ 50 சதவீதம் அழிவடைந்திருப்பதைக் கண்டு துணுக்குற்றனர். அதுவரை பதிவு செய்யப்பட்ட ஓசோன் சிதைவுகளில் இதுவே பெரும் அழிவு. அத்தோடு நிற்கவில்லை. 2006, 2007 என்று ஆண்டுக்கு ஆண்டு ஓசோன் துளைகள் முந்திய அளவுகளை முறியடித்து விசாலித்தவாறே உள்ளன. இது விரைவில் அணைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட ஒசோன் விவகாரத்தை மீண்டும் எரியும் பிரச்சினைகளில் ஒன்றாகக் கவனம் பெற வைத்திருக்கிறது.
வளியில் ஒசோன் பகை மாசுக்களின் அளவு குறைந்து செல்லும் நிலையில் மீளவும் ஒசோன் துளைகள் ஏற்பட்டிருப்பதன் காரணமாக, யாரும் எதிர்பாராத "பூமி வெப்பம் அடைதல்' விஞ்ஞானிகளால் சுட்டப்படுகின்றது. ஓசோன் படையில் துளைகள் தோன்றுவதும், பச்சைவீட்டு விளைவால் பூமி கொதிக்கத் தொடங்கியிருப்பதும் இரண்டு தனித்தனியான சுற்றுப்புறச் சீர்குலைவுகள். இருந்தும் இரண்டுக்கும் இடையே நெருங்கிய தொடர்பிருப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளபட்டுவரும் ஓசோன் துளைகளுக்கும் காலநிலை மாற்றங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. வளியில் அதிகரிக்கும் பச்சை வீட்டு வாயுக்கள் தரையை அண்டிய வளிப்படையில் அதிக அளவில் வெப்பத்தைச் சிறைப்பிடிக்கின்றது. இதனால் அதற்கு நேர் மேலே உள்ள வளிப்படை - 14 தொடங்கி 26 கிலோமீற்றர் உயரம் வரையிலான வளிப்பகுதி - குளிரடைகின்றது. உறைபனிக் காலத்தில் மேலும் குளிர்வடைய, இப்பகுதியில் பணி முகில்கள் உருவாகுகின்றன. இது சரியாக ஒசோன் படை விரிந்திருக்கும் பகுதியாகும். இப் பனிமுகில்கள், ஓசோனைத் தின்றுதீர்க்கும் இரசாயனங்கள் தங்கியிருந்து தாக்கங்களை இலகுவில் விரைந்து அரங்கேற்றும் மேடையாகத் தொழிற்படுவதாலேயே பாரிய ஓசோன் துளைகள் தோன்றியுள்ளன. இதனால், ஆண்டுக்கு ஆண்டு பூமியின் வெப்பநிலை அதிகரித்துச் செல்லும் நிலையில் எதிர்பார்த்ததைப் போல அல்லாமல் ஓசோன்துளைகள் சீரடைவதற்கு மேலும் அரைநூற்றாண்டு காலம் தேவைப்படலாம் என ஆய்வாளர்கள் பெருமூச்செறிந்துள்ளனர்.
54
பொ.ஐங்கரநேசன்
ஓசோன் துளைபடுவதற்குக் காரணமான இரசாயனங்களை வளியில் கலப்பதைத் தடைசெய்யும் மொன்றியல் உடன்படிக்கையைப் போல, பூமி வெப்பமடைவதற்குக் காரணமான இரசாயனங்களை வளியில் விடுவிப்பதைத் தடை செய்யும் கியோட்டோ உடன்படிக் கையும் நடைமுறையில் உள்ளது. ஆனால் தோல்புற்றுநோய்க்குப் பயந்து குளோரோ புளோரோ காபன்களுக்கு விடை கொடுக்க முன்வந்த வெள்ளை உலகம் கரிக்காற்றைக் கட்டுப்படுத்தும் கியோட்டோ உடன்படிக்கையைச் செயற்படுத்துவதில் உரியவேகம் காட்டவில்லை. அதிலும், பூமி சூடேறுவதற்குக் காரணமான கரியமிலவாயுவை அதிகளவில் புகைத்துத்தள்ளும் அமெரிக்கா கியோட்டோ உடன்படிக் கையை ஏற்றுக் கொள்ளவே இல்லை. மற்றெல்லா நாடுகளையும்விட தோல் புற்றுநோயால் அவதிப்படுபவர்கள் அமெரிக்காவிலேயே அதிகம். அமெரிக்கச் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஒசோன் அழிவால், 2075வாக்கில் அமெரிக்காவில் பிறக்கும் 60 மில்லியன் பேர். தோல் புற்றுக்கு ஆளாகுவார்கள் என்றும், இவர்களில் ஒரு மில்லியன் அமெரிக்கர்கள் வரை இறக்க நேரிடும் எனவும் எச்சரித்து வருகிறது. ஆனால், ஓசோன் அழிவுக்கும் பூமி சூடாகுவதற்கும் இடையிலான தொடர்பு தெளிவாகிய பின்பும்கூட வெள்ளை மாளிகையின் மனம் இளகுவதாகவில்லை. பூமியில் தானும் ஒரு அங்கம் என்பதை மறந்து, பூமியை மேன்மேலும் புண்ணாக்கி வருகிறது.
55
Page 30
4.
பிளாஸ்ரிக்கின் பிடியில் பூமி !
"மடத்தனமான நுகர்வுப் பழக்கங்களை ஊக்குவிக்கின்ற, கழிவுகளை மேலும் அதிகரிக்கின்ற, புதுப்பிக்க இயலாத சக்தி வளங்களை அழிக்கின்ற வாழ்க்கை முறை சுற்றுச்சூழனை முன்கேட்டிராத, கற்பனைக்கு அப்பாற்பட்ட விதத்தில் பாதிப்படையச் செய்து வருகிறது"
- ஃபிடல் காஸ்ட்ரோ
மனிதத் தேவைகளும் பிளாஸ்ரிக் தொழில்நுட்பமும் கைகோர்த்து அசுர வேகத்தில் விரைந்து கொண்டிருக்கின்றன. இந்த வேகத்தில் மிதிபட்டு இறந்து கொண்டிருக்கும் இயற்கையின் ஒவ்வொரு பகுதியையும் மனிதனின் செயற்கைத் தயாரிப்பான பிளாஸ்ரிக் ஆக்கிர மித்துக் கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலின் பிரதான வில்லன்களில் ஒன்றான பிளாஸ்ரிக்கின் அபாயத்தை விளக்க இதை விடக் குறைவான வார்த்தைப் பிரயோகங்கள் இல்லை.
பற்துரிகை பற்பசை அடைப்பான், சவர்க்கார டப்பா, சட்டைப் பொத்தான், சீப்பு, செருப்பு, விளையாட்டுப் பொருட்கள் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய உபயோகத்தில் இருந்த பிளாஸ்ரிக் (Plastic) இப்போது நமது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் ஒட்டி உறவாடும் ஒரு பொருளாக மாறியிருக்கிறது. வாழை இலைகளின் இடத்தில் பிளாஸ்ரிக் விரிப்பே பந்தி பரிமாறுகிறது. உள்ளக அலங்காரச் செடிகளின் இடத்திலும் பிளாஸ்ரிக்கின் செயற்கை நெடியே வீசுகிறது. இரும்பு போன்ற உலோகங்களுக்குக் கூட ஓரம்போ சொல்லிவிட்டுப் பெரிய பெரிய பீப்பாக்கள், வாளிகள், தட்டுகள், குவளைகள், மேசைகள், நாற்காலிகள், வீட்டுக் கதவுகள், பொலித்தீன் பைகள் என்று எங்கு திரும்பினாலும் விதம் விதமான வண்ணங்களில், வடிவங்களில், தன்மைகளில் பிளாஸ்ரிக்கின் ஆட்சியே நடந்து கொண்டிருக்கிறது.
'பில்லியர்ட் பந்துகள் செய்வதற்கான தந்தங்களைப் பெறு வதற்குத் தினமும் நூற்றுக்கணக்கான யானைகள் கொல்லப்பட, மாற்றைக் கண்டறியும் முயற்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜோன்
56
பொ.ஐங்கரநேசன்
வெஸ்லி ஹயற் (JohnWesley Hyat) 1869 இல் ‘செலுலோயிட்டைக் கண்டு பிடித்தார். 1907 இல் லியோ ஹென்ட்றிக் பேக்லான்ட் (Leo Hendic Bakeland) "பேக்கலைற் எனப்படும் இன்னுமொரு வகையான பிளாஸ்ரிக்கை உருவாக்கினார். இருந்தபோதும் 1933 இல் ஃபோசெற், கிப்சன் (Fawcett & Gibson) என்னும் இரண்டு வேதியியலாளர்கள் வேதிப்பொருட்களை உயர் அழுத்தத்துக்கு ஆளாக்கிப் பார்க்கையில் தற்செயலாகப் பிரசவித்த 'பொலித்தீன்தான் (எதிலீனினதும் பென்சல் டிகைட்டினதும் புணர்வின் பெறுதி) பிளாஸ்ரிக்கின் முகவரியை உலகுக்குத் தெரியப்படுத்தியது. அதன் பின்னர் பிளாஸ்ரிக் தொழில் நுட்பம் இரண்டாம் உலக யுத்தத்துடன் தலையெடுக்க ஆரம்பித்தது. போரில் ஜப்பானின் நுழைவுடன் தூரக்கிழக்கு நாடுகளில் இருந்து கிடைத்து வந்த ரப்பரின் அளவு தடைப்பட்டுப்போக, மேற்குலக விஞ்ஞானிகளின் பார்வை பிளாஸ்ரிக்கின் மீது திரும்பியது. ரப்பருக்குப் பதிலாக பிளாஸ்ரிக்கை கம்பி வடங்களுக்குக் காவலிடவும், ஆயுத உற்பத்தியிலும் விறுவிறு எனப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
பிளாஸ்ரிக் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்கள் எளிதில் கிடைக்கக்கூடியவை. தாவரப் பெறுதிகளானான ரெசின்களில் இருந்தும் பெற்றோலியப் பொருட்களிலிருந்துமே பெரும்பாலான பிளாஸ்ரிக் வகைகள் தயாரிக்கப்படுகின்றன. பிளாஸ்ரிக் இலேசானது. தண்ணிரில் கரையாது. துருப்பிடிக்காது. எல்லாவற்றுக்கும் மேலாக மக்கிப் போகாது. இந்தச் சிறப்புத் தகைமைகளுடன் அன்று பந்தயத் தில் ஒடத்தொடங்கிய பிளாஸ்ரிக், உலோகங்கள் - மரப்பொருட்கள் என்று பாவனையிலிருந்த எல்லாவற்றையும் ஒரம்கட்டிவிட்டு இப்போது முழு உலகையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. ஆனால், பிளாஸ்ரிக்கின் ஏகபோக வளர்ச்சி சத்தமில்லாமலே பூமியைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது. பூமியின் மேனியெங்கும் பிளாஸ்ரிக் தன் கோரப்பற்களைப் பதித்து நிற்கிறது என்ற இந்த உண்மையைச் சமீபகாலமாகத்தான் உலகம் உணரத் தொடங்கியுள்ளது.
மண்ணோடு மண்ணாக மக்கிப் போகாத தன்மைதான் பிளாஸ்ரிக் குக்குத் தனியானதொரு அந்தஸ்தைத் தேடிக்கொடுத்தது. ஆனால் அதே ஸ்திரத் தன்மைதான் சுற்றுச்சூழலின் பிரதான எதிரிகளில் ஒன்றாகவும் பிளாஸ்ரிக்கை ஆக்கிவிட்டிருக்கிறது. மண்ணில் உள்ள பக்ரீறியாக்கள், பங்கசுக்கள் போன்ற நுண் உயிரிகளின் செயற்பாட்டி னால் பொருட்கள் சிதைந்து அழிவதை விஞ்ஞானிகள் உயிர்மச் சிதைவு (Bio - Degradation) என்று பெயரிட்டிருக்கிறார்கள். வீட்டுக்கழிவுகள்,
5ア
Page 31
ஏழாவது ஊழி
பண்ணைக்கழிவுகள், மரப்பொருட்கள் எல்லாம் இப்படித்தான் மண்ணுடன் கரைந்து இன்றியமையாத இயற்கைச் சுழற்சியில் பங்கேற் கின்றன. உலோகப் பொருட்கள்கூட வேதி மாற்றங்களினால் துரு ஏறி காலப்போக்கில் அழிந்து போய்விடுகின்றன. ஆனால், பிளாஸ்ரிக் மட்டும் சாகாத வரத்தை மனிதனிடம் வாங்கி வைத்திருக்கிறது.
பாவித்து வீசும் (Use and throw) நுகர்வுக் கலாச்சாரத்தில் தண்ணீர் - பால் அடைத்து வரும் பொலித்தீன் பைகள், போத்தல்கள், தேநீர்க் குவளைகள், தட்டுகள் என்று மலை போலக் குவியும் பிளாஸ்ரிக் கழிவுகள் சூழலின் அழகைக் கெடுக்கின்றன என்பதற்கு அப்பால் பெரும்பாலா னோரது பார்வை விரிவதேயில்லை. ஆனால், உக்கிச் சிதையாமல் மண்ணின் மேலும் கீழும் காலம் காலமாகக் கிடக்கும் பிளாஸ்ரிக் கழிவுகளால் பூமி அனுபவித்து வரும் துயரங்கள் ஏராளம்.
பிளாஸ்ரிக் கழிவுகள் மழை நீரை நிலத்தினுள் நுழைய அனுமதிப்பதேயில்லை. ஏற்கனவே காடழித்தல், பச்சைவீட்டு விளைவு போன்ற சீர்கேடுகளால் நாவறண்டு போயிருக்கும் பூமியின் மிச்சச் சொச்ச நிலத்தடி நீரையும் மேலும் மேலும் பற்றாக்குறையாக்குகிறது. தண்ணிரை மட்டுமல்ல; மண்ணுக்குள் காற்றுப் புகுவதற்குக் கூடத் தடை சொல்லி விடுகிறது. காற்றில்லாத சூழல், மண்ணுக்குக் கீழே கண்ணுக்குத் தெரியாமல் இயங்கிக் கொண்டிருக்கும் நுண்ணங்கிகளின் உலகத்தை வெகுவாகப் பாதிக்கிறது. இதனால் உயிர்மச் சிதைவு இன்றி பொருட்களின் சுழற்சி தடைப்பட்டுப் போய்விடுகிறது. இது தாவரங் களின் வளர்ச்சியை மோசமாகப் பாதிக்கிறது. இதைவிட, பிளாஸ்ரிக் கழிவுகள் விதைகளை மூடி அவற்றை முளைகொள்ள விடாமல் சிரமத்துக்கு ஆளாக்கி வருகின்றன. தரைக்குக் கீழே புதையுண்டு கிடக்கும் பிளாஸ்ரிக் மண்ணின் பிடிமானத்தைத் தளர்த்தி மலைப் பகுதிகளில் அவ்வப்போது பெரும் மண்சரிவையும் உண்டுபண்ணுகிறது. களை விதைகள் போலக் காற்றில் விரவிப் பரவும் இலேசான பொலித்தீன் பைகள் கழிவுநீர்க் கால்வாய்களில் விழுந்து அடைப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் தேங்குகின்ற நீரில் நுளம்புகள் போன்ற நோய்க் காவிகள் பெருகுவதும், கழிவு நீர் தெருக்களில் பெருக் கெடுப்பதும் நிகழ்கிறது.
உணவுகளுடன் தூக்கி வீசப்படும் போசன விரிப்புகள் (Lunch Sheets), பொலித்தீன் பைகளை உட்கொள்வதால் விலங்குகள் இறப்பதுவும் சர்வசாதாரணமாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில்
58
Page 32
ஏழாவதுஉஊழி
மட்டும் தினமும் 100 மாடுகள் இவ்வாறு இறந்து வருகின்றன. அவ்வாறு இறந்த ஒரு பசுவின் வயிற்றில் 35 கிலோ பிளாஸ்ரிக் பைகள் இருந்ததாகக் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சபரிமலைப் பகுதிகளில் திரளும் ஐயப்ப பக்தர்கள் விட்டுச் செல்லும் பொலித்தீன் கழிவுகளை ஆகாரமாக்கி யானைகளும், மான்களும் இறந்து வருகின்றன. வருடத்துக்கு எட்டரை லட்சம் மக்களுக்கும் அதிகமாக வந்து செல்லும் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவான சென்னை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலும் கடந்த காலங்களில் பிளாஸ்ரிக் கழிவுகள் ஏராளமான விலங்குகளுக்கு எமனாக அமைந்திருக் கின்றன. இந்த விலங்குகளின் பட்டியலில் காண்டாமிருகமும் ஆபிரிக்காவில் இருந்து மூன்று லட்சம் ரூபா செலவில் தருவிக்கப்பட்ட லாமா என்னும் விலங்கும்கூட அடக்கம்.
தரையில் மட்டுமல்லாமல் பிளாஸ்ரிக்கின் வல்லாட்சி கடலிலும் நீளுகிறது. மனிதன் பயன்படுத்தி விட்டுக் கடலில் வீசும் திடக் கழிவுகளில் பிளாஸ்ரிக்தான் முதலிடம் வகிக்கிறது. கடலின் ஒவ்வொரு சதுர மைல் பரப்பளவிலும் சுமார் 46 ஆயிரம் பிளாஸ்ரிக் கழிவுகள் மிதப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை டீ.டீரி போன்ற கிருமி நாசினிகளை ஈர்த்து நஞ்சாக மாறி வருகின்றன. இந்தப் பிளாஸ்ரிக் கழிவுகளால் ஆண்டு தோறும் சுமார் ஒரு மில்லியன் கடற்பறவைகளும், ஒரு இலட்சம் கடற்பாலூட்டி விலங்குகளும், எண்ணுக்கணக்கில்லாத மீன்களும் பலியாகி வருவதாக ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பிளாஸ்ரிக் பைகளை ஜெலிமீன்கள் என நினைத்து விழுங்கும் ஆமைகள் உணவுக்குழல் உபாதைகளால் பெருமளவில் இறப்பதும் நிகழ்கிறது. நீரில் அலையும் பிளாஸ்ரிக் பொருட்கள் பக்ரீறியா, பங்கஸ், அல்காக்கள் போன்ற சிறிய உயிரிகளை ஒர் இடத்தில் இருந்து உலகின் இன்னோர் இடத்துக்கு காவிச்சென்று சேர்ப்பிப்பதால் புதிய பகுதியின் உயிரினச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது.
கடல்உயிரினங்களை அழிப்பதுடன் உலகின் சிறு தீவுகளின் இருப்புக்கும் பிளாஸ்ரிக் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. 2003ஆம் ஆண்டில் இந்தியாவின் கடற் தொழில்நுட்ப தேசிய ஆய்வுமையம் அந்தம்ான் - நிக்கோபார் தீவுகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் இது நிரூபணமாகியுள்ளது. அந்தமான் - நிக்கோபார் தீவுகள் கூட்டத்தில் 572 தீவுகள் அடங்கியுள்ளன. இத்தீவுகளைச் சூழ அதிக அளவில் பவளப்பாறைகள் (corals) காணப்படுகின்றன. வங்கக் கடலில் பயணிக்
6O
பொ.ஐங்கரநேசன்
கும் கப்பல்களில் இருந்தும் சிங்கப்பூர் மலேசியா, இந்தோனேசியா, மியான்மர், தாய்லாந்து ஆகிய சூழவுள்ள நாடுகளில் இருந்தும் சேரும் பிளாஸ்ரிக் கழிவுகள் பவளப்பாறைகளில் அடைந்து அவற்றை இறக்கச் செய்து வருகின்றன. இயற்கைப் பாதுகாப்பு அரண்களாக விளங்கும் பவளப்பாறைகளின் அழிவு, அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் அழிவுக்கும் வழிகோலும் என அஞ்சப்படுகிறது. சுற்றுச்சூழல்வாதிகள் பிளாஸ்ரிக் பிரச்சினைகள் என்று இப்படி ஏராளமானவற்றை பட்டியலிட, மருத்துவ விஞ்ஞானிகளும் தம் பங்குக்கும் வேறு எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர்.
சில வகையான பிளாஸ்ரிக் தாளினால் சிலவகை உணவுகளைப் பொதிசெய்து நெடுநாட்கள் வைத்திருக்க நேரின் பிளாஸ்ரிக்கின் நச்சுக்கூறுகள் சிறிது சிறிதாக உணவைச் சென்றடைவது தெரிய வந்துள்ளது. பொலி ஸ்ரைlன் பிளாஸ்ரிக்கிலிருந்து 'ஸ்ரைlனும் (Styrene), பீவி.சி. எனப்படும் பொலி வீனைல் குளோரைட்டு (PVC-Poly Viny Choloride) Sotiroiddisascoig, gift Capodsersli' (Phthalates) unrá) உணவுப் பொருட்களுடன் கலக்கின்றது. பீவி.சி பிளாஸ்ரிக்கில் அதனை நெகிழ்த்துவதற்காக கட்மியம், ஈயம் போன்ற உலோகங்களும், தரம் சிதைவதைத் தடுப்பதற்காக தாலேற்றுக்களும் சேர்க்கப்படுகின்றன. பீவி.சி பிளாஸ்ரிக்காலான விளையாட்டுப் பொருட்களைக் குழந்தை கள் கையாளும்போது இந்தக் கூறுகள் வாய்மூலம் குழந்தையின் உடலைச் சென்றடைகின்றன. தூய குடிநீர், சோடாப்பானங்கள் gyeol giga/Colb 'Qup' (PET-Poly Ethylene Tetra Phthalate)போத்தல்களும் கூடப் பாதுகாப்பானவை அல்ல. இவற்றிலிருந்து நீரினுள் 'அசற்றல் டிகைட்டு (Acetaldehyde) என்னும் வேதிப்பொருள் விடுவிக்கப்படுகிறது. இவ்வாறு பிளாஸ்ரிக்கின் விசத்தன்மை கொண்ட கூறுகள் உடலில் சேரும்போது தலைச் சுற்று, வாந்திபேதி, குடற்புண், நரம்புத் தளர்ச்சி தொடங்கி ஆண்மை இழப்பு, புற்றுநோய் வரை ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
பிளாஸ்ரிக் கழிவுகளை எரித்து அகற்றுவது என்பதும் இலேசான ஒன்றல்ல. தனது இருப்பின் போது அச்சுறுத்தும் பிளாஸ்ரிக் இறப்பின் போது முன்னரைவிட அபாயகரமான அவதாரம் எடுக்கின்றது. பிளாஸ்ரிக் கழிவுகளை எரிப்பதால் 'டையொக்சின் (Dioxin) என்ற நச்சு உருவாகி காற்றுடன் கலக்கிறது. குளோரினை ஒரு உள்ளடக்கமாகக் கொண்ட பொருட்களை உருவாக்கும்போதும் அவற்றை எரிக்கும் போதும் விடுவிக்கப்படும் நூற்றுக்கும் மேலான நச்சுக் கூறுகளையே
61
Page 33
ஏழாவது2ஊழி
இப்படி டையொக்சின் என்று பொதுப் பெயர் கொண்டு அழைக் கிறார்கள். மனிதன் உருவாக்கிய நஞ்சுகளில் இதுவே மிகவும் கொடூர மானது. கதிர்த் தொழிற்பாட்டுக் கழிவுகளுக்கு அடுத்த படியாக இது ஒப்பிடப்படுகிறது. இலகுவில் பிரிந்து அழியாத இந்த நச்சுவேதி புகையைச் சுவாசிப்பதன் மூலமும் உணவுச் சங்கிலி மூலமும் உடலினுள் நுழைகிறது. கொழுப்பில் கரையக் கூடியதாகையால் அப்படியே உடல் இழையங்களில் தேங்கியும் விடுகின்றது.
தமிழகத்தில் சென்னை மாநகராட்சி குப்பை கொட்டிவரும் பெருங்குடிப்பகுதியில் வாழும் பெண்களின் தாய்ப்பாலை ஜப்பானில் உள்ள எஹிம் பல்கலைக்கழகத்தின் கடலியல் சுற்றுச்சூழல் மையம் ஆராய்ந்ததில் அதிர்ச்சியளிக்கும் அளவில் தாய்ப்பாலில் டையொக்சின் இருப்பது தெரியவந்துள்ளது. தாய்ப்பால் மூலம் சிறுகச்சிறுக குழந்தைகளில் சேரும் டையொக்சின் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைத்து தொற்றுநோய்களை வாங்குவதுடன், மூளை வளர்ச்சியையும் பாதித்து வருவதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது. டையொக்சின் பல்வேறு வகையான புற்றுநோய்களையும் பிறப்புக் குறைபாடுகளையும் ஏற்படுத்தக் கூடியது. வியட்நாம் போரில் அமெரிக்கா காடுகளில் விசிறிய 'ஏஜன்ட் ஒறேன்ஞ்ச் (Agent Orange) என்னும் நச்சுக் களை கொல்லியில் டையொக்சினும் கலந்திருந்தது. போர் முடிந்து இவ்வளவு வருடங்கள் கழிந்த பின்னரும் அங்கு பிறக்கும் குழந்தைகள் பிறப்புக் குறைபாடுகளைக் கொண்டிருப்பதற்கு டையொக்சின்தான் காரணம் என நம்பப்படுகிறது. தவிரவும், டையொக்சின் ஆண்களில் 'ஈஸ்ற்ரோஜன் (Estrogeon) என்ற பெண் ஒமோனைப் போலப் பாசாங்கு செய்து மலட்டுத் தன்மையையும் உண்டு பண்ணுகிறது. 50 ஆண்டு களுக்கு முன்னால் ஆண்கள் பிறப்பித்த விந்துகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இப்போது ஆண்களில் விந்துகளின் எண்ணிக்கை 50 விழுக்காடாகக் குறைவடைந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. விந்துகள் இப்படிக் காணாமற் போனதற்கான காரணிகளில் மருத்துவ விஞ்ஞானிகள் டையொக்சினையே முதன்மைப்படுத்துகிறார்கள்.
பிளாஸ்ரிக்கின் இவ்வளவு மோசமான பின்விளைவுகளை அறிந்ததும் முதலில் அதிர்ந்தது பிளாஸ்ரிக்கை அதிகளவில் உற்பத்தி செய்து பயன்படுத்தி வரும் மேற்குலக நாடுகள்தாம். பிளாஸ்ரிக்கின் பிடியிலிருந்து விடுபடுவதில் அவை அதிகம் முனைப்புக் காட்டி வருகின்றன. பென்ஸ், ஃபோக்ஸ் வாகன் போன்ற பிரபல மோட்டார் வாகன நிறுவனங்கள் பீவி.சி பிளாஸ்ரிக் போன்றவற்றால் செய்யப்படும்
62
பொ. ஐங்கரநேசன்
உதிரிப்பாகங்களின் உற்பத்தியைக் குறைத்துக்கொண்டுள்ளன. ஜேர்மனி, பிரான்ஸ், பின்லாந்து போன்ற பல நாடுகள் பீவி.சி கலந்த பிளாஸ் ரிக்கைத் தடைசெய்துள்ளன. பெரும்பாலான நாடுகளும் மாநிலங்களும் ஒரு தடவை பயன்படுத்திவிட்டு வீசும் பிளாஸ்ரிக் பைகளுக்குத் தடை விதித்தும், அங்காடிகளில் இலவசமாக விநியோகிப்பதை நிறுத்தியும், அதிக வரியைச் சுமத்தியும் பாவனையிலிருந்து விலத்த ஆரம்பித்துள்ளன. அயர்லாந்து 2007ஆம் ஆண்டு முதல் அனைத்து பிளாஸ்ரிக் பைகள் மீதும் 22 சதம் (Cent) வரியை அறவிட்டு வருகிறது. ஒரு சதம் என்பது ஒரு யூறோவின் (Euro) நூறில் ஒரு பங்கு. இந்த வரிச்சுமையால் அயர்லாந்தில் பிளாஸ்ரிக் பைகளின் பயன்பாடு 90 விழுக்காடு குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல் உலகநாடுகள் தாங்கள் பயன்படுத்தி வீசும் பிளாஸ்ரிக் கழிவுகளையும் மிகவும் நாசூக்காக மூன்றாம் உலக நாடுகளின் தலையில் கட்டத் தொடங்கியுள்ளன. கணிசமான சலுகை விலையில் பிளாஸ்ரிக் கழிவுகளை விற்பதுடன், கூடவே பிளாஸ்ரிக் கழிவுகளில் இருந்து பிளாஸ்ரிக்கை மறு உற்பத்தி செய்யும் நுட்பத்தையும் சேர்த்துத் தருவதால் மூன்றாம் உலக நாடுகளும் பிளாஸ்ரிக் கழிவுகளை வாங்கிக் குவித்து வருகின்றன. ஆண்டுதோறும் அமெரிக்கா பயன்படுத்தி விட்டுத்தூக்கி வீசும் பிளாஸ்ரிக் கழிவுகளின் அளவு சுமார் 160 இலட்சம் தொன்கள். இவற்றில் 50 விழுக்காடு இந்தியா, வங்காளதேசம் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு மறு உற்பத்தி என்ற பெயரில் அனுப்பிவைக்கப் படுகின்றன. இதில் மிகப்பெரும் அளவில் கொள்வனவு செய்வது இந்தியாதான். வங்காளதேசத்தை விட 115 விழுக்காடும் பாகிஸ்தானை விட 30 விழுக்காடும் அதிகமாக இந்தியா கழிவுகளை வாங்கி வருகிறது. பிளாஸ்ரிக் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, புற்றுநோயை ஏற்படுத்துவதால் வளர்ந்த நாடுகள் தமது தொழிற்சாலை களையும் மூன்றாம் உலக நாடுகளுக்கு இடம்மாற்றி வருகின்றன. சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் 'டுபான்ட் நிறுவனம் நைலோன் ஆலையை அமைத்ததன் பின்னணி இதுதான். அதேபோல அமெரிக்க மக்கள் பாவிக்கும் பிளாஸ்ரிக் குவளைகள், போத்தல்களைத் தயாரிக்கவென'இந்திய ஆர்கானிக் கம்பெனி மத்திய அரசின் அனுமதி யுடன் பெரும் முதலீட்டில் தொழிற்சாலை ஒன்றை நிறுவி வருகிறது.
பிளாஸ்ரிக் கழிவுகளால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுவதைத்
தொடர்ந்து ஆசிய நாடுகளிலும் பிளாஸ்ரிக்குக்கு எதிரான யுத்தம் அண்மைக்காலமாக வலுக்க ஆரம்பித்திருக்கிறது. உலக அளவில்
63
Page 34
ஏழாவதுஉஊழி
பிளாஸ்ரிக்கை அதிக அளவு பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில், அமெரிக்காவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. இங்கு நாளொன்றுக்கு 3 பில்லியன் பிளாஸ்ரிக் பைகள் பாவனையில் உள்ளன. இதனைக் கட்டுக்குள் கொண்டுவரும் முகமாக சீனஅரசு அங்காடிகளில் இலவசமாக பிளாஸ்ரிக் பைகளை வழங்குவதற்குத் தடைவிதித்திருக்கிறது. தைவான், தனது வீட்டுக் கழிவுகளில் ஏறத்தாழ 20 விழுக்காடு அளவுக்கு பிளாஸ்ரிக்காகக் கழித்துக்கொண்டிருக்கிறது. நாள்தோறும் 16 மில்லியன் பிளாஸ்ரிக் பைகள் என்ற அளவில் பயன் படுத்தி வந்த தைவான் இப்பொழுது பாடசாலைகள், மருத்துவ மனைகள், அரச அலுவலகங்கள் போன்ற பொது இடங்களில் ஒரு தடவை பாவித்து வீசும் பிளாஸ்ரிக் குவளைகள், பைகள், மேசை விரிப்புக்களுக்குத் தடை விதித்துள்ளது.
இந்திய அரசு தேசியப் பூங்காக்களிலும் ஒதுக்கப்பட்ட காடு களிலும் பிளாஸ்ரிக் பாவனையை முற்றாகவே விலக்கியுள்ளது. பார்வை யாளர்களால் எடுத்து வரப்படும் பொலித்தீன் பைகள் பூங்காவின் வாசலில் வாங்கப்பட்டு அதற்கு மாற்றீடாகச் சுற்றுசூழல் நட்பு மிக்க கடதாசிப் பைகளும், மிகக்குறைந்த கட்டணத்தில் துணிப்பைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 20 மைக்குறோனுக்கும் குறைவான கனதியுடைய பிளாஸ்ரிக்குக்கு தடை விதித்தபோதும் சில மாநகராட்சி அமைப்புக்களைத் தவிர பரந்த அளவில் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. தமிழக அரசு 2002ஆம் ஆண்டில், ஒருமுறை மட்டுமே ப்யன்படுத்திவிட்டுத் தூக்கி வீசும் பிளாஸ்ரிக் பொருட்களுக்குத் தடைவிதித்த போதும் அடுத்த ஆண்டே அத்தடைச் சட்டத்தை திரும்பப் பெற்றுவிட்டது. மக்களின் விழிப்புணர் வின்மையும், பிளாஸ்ரிக் உற்பத்தியாளர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பும் இதை வென்றெடுக்க முடியாத தேர்தல் அரசியலும் மாநில அரசுகள் தடைச்சட்டத்தைக் கையில் எடுப்பதற்குத் தடையாக உள்ளன.
இலங்கையில் தெகிவளை மிருகக்காட்சி சாலை, சிவனொளி பாதமலை போன்ற சில சுற்றுலா மையங்களில் பிளாஸ்ரிக் பைகளின் பாவனை விலக்கப்பட்டுள்ளது என்பதைத் தவிர பிளாஸ்ரிக் பைகள் மீதான தடை இதுவரை விதிக்கப்படவில்லை. இருந்த போதும் நாட்டின் சில முன்னணிப் பல்பொருள் அங்காடிகள் சிதைவடையக் கூடிய, சுற்றுச்சூழல் நட்பு மிக்க பிளாஸ்ரிக் பைகளைத் தமது நுகர்வோருக்கு அறிமுகம் செய்துள்ளன. இந்த வகைப் பிளாஸ்ரிக்குகள் நுண்ணுயிரிகளால் அல்லாது ஒட்சிசன், சூரியஒளி, வெப்பம், காலநிலை
64
பொ. ஐங்கரநேசன்
மாற்றம் போன்ற காரணிகளால் சிதைவுக்கு ஆளாகின்றன. இரத்மலானையில் இயங்கி வரும் 'பிளாஸ்ரிக் பக்கேஜிங் பிறைவேற் லிமிற்ரெட் (Plastic Pakaging (Pte) Ltd.) என்னும் நிறுவனம் தனது வழமையான வில்லத்தனமான பிளாஸ்ரிக் உற்பத்திகளுடன், இப்போது அமெரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்ட விசேட சேர்மானங்களைப் பயன்படுத்தி இத்தகைய, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சிதையக் கூடிய பிளாஸ்ரிக் பைகளையும், போசன விரிப்புகளையும் தயாரித்து வருகிறது. ஆனால் ஒப்பீட்டளவில் இவற்றின் விலை சற்று அதிகம் என்பதாலும், பிளாஸ்ரிக் பிரச்சினை பற்றிய போதிய அறிவூட்டல் இன்மையாலும் உள்ளுரில் இந்த வகைப் பைகளினால் இன்னமும் செல்வாக்குப் பெற முடியவில்லை. உற்பத்தியின் பெரும்பகுதி மாதம் தோறும் பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பிளாஸ்ரிக்கை ஒழித்துக்கட்டும் யுத்தத்தில் வங்கதேசம் பெற்றிருக்கும் வெற்றி பெரிது. 1998ஆம் ஆண்டு வங்காள தேசத்தைச் சூழ்ந்த புயலால் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதற்கான காரணம் மழைநீர் வடிந்தோட முடியாதவாறு கால்வாய்கள் பிளாஸ்ரிக் பைகளால் அடைக்கப்பட்டிருந்ததுவே ஆகும். இதையடுத்து, வங்காளதேசம் எல்லாவகையான பிளாஸ்ரிக் பைகளினதும் பாவனையை விடாப் பிடியாகத் தடைசெய்து அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியும் வருகிறது. பிளாஸ்ரிக் பைகளை இறக்குமதி செய்வது, உற்பத்திசெய்வது, காட்சிப்படுத்துவது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது என்று எல்லா மட்டங்களிலும் தடையை விதித்திருக்கிறது. இதற்கான தடை ஆணை ஏகமனதாக நிறைவேற்றப் பட்டதும் குறிப்பிடப்பட்டது. மீறுவோ ருக்குத் தண்டப்பணம் அறவிட, சிறைத்தண்டனை வழங்கச் சட்டம் உறுதிசெய்வதால் பிளாஸ்ரிக் இல்லாத வங்காளம் சாத்தியமாகியுள்ளது.
சுற்றுச்சூழலியலாளர்கள் மேற்கொண்டு வரும் பிளாஸ்ரிக்குக்கு எதிரான பரப்புரைப் போரை, உயிர்காக்கும் இரத்தம் சேகரிக்கும் பைகள் தொடங்கி துடுப்பாட்டக்காரர்களின் தலைகாக்கும் கவசம் வரை மனதைத் தொடும் உதாரணங்களாகக் காட்டி பிளாஸ்ரிக் உற்பத்தி யாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். மனித வாழ்வியலில் வந்து ஒட்டிக்கொண்டு விட்ட பிளாஸ்ரிக்கின் பயன்பாட்டை மறுப்பதற்கு இல்லை. ஆனால், இதன் உபயோகங்களை விட உபத்திரவங்கள் அதிகம் என்பதே பிளாஸ்ரிக் மீதான தடைபற்றியும் பிளாஸ்ரிக்குக்கான மாற்றீடு பற்றியும் உலகை மிகத் தீவிரமாக யோசிக்க வைத்திருக்கிறது.
65
Page 35
ஏழாவதுஉஊழி
ஒரு தடவை பாவித்து விட்டு வீசும் பிளாஸ்ரிக் பொருட்களுக் கான கட்டுப்பாடுகளும் தடைகளும் சாத்தியமாகி அவ்விடத்தை மீண்டும் இயற்கை உற்பத்திகளான அழகிய கடதாசிப்பைகளும், அட்டைப்பெட்டிகளும் துணிப்பைகளும் மெல்ல ஈடுசெய்து வருகின்றன. ஆனால், ஏனைய பிளாஸ்ரிக்குகளுக்கான வெற்றிகரமான மாற்றீடு இன்னமும் அறிவியலாளர்களின் சிந்தனையை எதிர்பார்த்துக் கண்டறியப்படாமலே உள்ளது. அதுவரையில் தேவையற்ற பிளாஸ்ரிக் பொருட்கள் வாங்குவதைத் தவிர்ப்பது, தேவைகளை இயன்றளவு குறைத்துக் கொள்வது, முடிந்தவரை நீண்டகாலம் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவது, எறிவதற்கு முன்னால் இன்னொரு முறை பயன்படுமா என்று சிந்திப்பது, கழிவுகளில் இருந்து சுற்றுச்சூழலுக்குப் பாதகம் இல்லாத முறையில் மீண்டும் பிளாஸ்ரிக்கைப் பிரித்தெடுப்பது போன்ற கழிவுமேலாண்மைதான் பிளாஸ்ரிக் அபாயத்தை எதிர்கொள்ள நம் முன்னால் உள்ள ஒரே கேடயமாக இருக்கும்.
66
5
அச்சுறுத்தும் அஸ்பெஸ்ரஸ்
"இன்றைய உலகளாவிய சூழற் சீர்கேடுகளுக்கு முதன்மையான காரணம், மிகவளர்ச்சியடைந்த நாடுகளில் உருவாக்கப்பட்டு, அவர்களது அதிகாரத்தாலும் மக்கள் கருத்தில் அவர்கள் கொண்டுள்ள பிடிமானத்தாலும் உலகின் பிறபகுதிகளுக்குப் பரப்பப்பட்ட பொருளாதார நடத்தை மாதிரி என்பதை எவராலும் மறுக்கமுடியாது"
- ஃபிடல் காஸ்ட்ரோ
குடிசைகளின் ஒலைக்கூரைகள் சிலரது அழகியற் பார்வைக்குக் கறைகளாகத் தெரியக்கூடும். கறையான்களிடமிருந்தும், தீயின் நாக்குகளிடமிருந்தும் இவற்றைக் காப்பாற்றுவதிலும், பராமரிப்பதிலும் சிரமங்கள் இருக்கக்கூடும். மற்றபடி, இந்தத் தென்னங்கீற்றுகளும், பனை ஓலைகளும் தருகின்ற ஆரோக்கியச் சூழலுக்கு நிகரேதும் இல்லை. குடிசைகள் சீமெந்து வீடுகளாகும் போது கூரைகளை அலங் கரிப்பவை பெரும்பாலும் சுட்ட களிமண் ஓடுகள்தான். இலங்கையில் ஒட்டி சுட்டானில் ஒடுகள் தயாராகும் முன்னர், மங்களூரில் இருந்து கப்பலேறி வந்த ஒடுகளை இன்னமும் கூட பொலிவுகுன்றாமல் பழைய வீடுகளில் காணமுடியும். மிக நீண்ட ஆயுளைக் கொண்ட இவை, மனிதர்களின் ஆயுளுக்கும் கெடுதல் தராதவை. சூழல் சிநேகிதம் மிக்கவை.
ஆனால், குண்டு வீச்சு, சுனாமி, சூறாவளி என்று அனர்த்தங்கள் சூறையாடிய வீடுகளை மீள்கட்டுமானம் செய்வதில் நம்மிற் பலரும் அஸ்பெஸ்ரஸ் தகடுகளுக்கு முன்னுரிமை தருவதுதான் உறுத்தலாக உள்ளது. ஆழிப்பேரலையால் வீடுகளை இழந்தவர்களுக்காகத் தென் இலங்கையில் அரசு சார்பில் திறந்து வைக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள், ஏறத்தாழ எல்லாமே அஸ்பெஸ்ரஸ் கூரைகளின் கீழேயே தஞ்சமடைந்துள்ளன. இலங்கையில் மட்டுமல்ல; 2004 ஆம் ஆண்டில் தமிழகத்தில் கும்பகோணம் பள்ளிக்கூடமொன்றில் 93 குழந்தைகளைக் கருக்கிய தீ விபத்தின் போதும் அஸ்பெஸ்ரஸ் தகடுகளே தீர்வாக வலியுறுத்தப்பட்டன. ஒரு வீடு மட்டுமே கட்டக் கூடிய குறுகலான
67
Page 36
ஏழாவது ஊழி
இடத்தில் விதிமுறைகளையெல்லாம் மீறி எழுப்பப்பட்ட பள்ளியில், சத்துணவு ஆக்குவதற்கு மூட்டப்பட்ட தீ ஒலைக் கூரையில் தொற்றிக் கொண்டது. அணைப்பதற்கு யாரும் இல்லாததாலும், தப்பியோடு வதற்கு வாசல்கள் இல்லாததாலும் அகப்பட்ட குழந்தைகளுக்கு ஒலைக் கூரையே சிதையாக மாறியது. பழி, கீற்றுக் கூரை மீது சுமத்தப் பட்டது. இதற்காகவே காத்திருந்தது போலத் தமிழகத்தின் ஒலைப் பள்ளிகளிலெல்லாம் அஸ்பெஸ்ரஸ் தகடுகள் ஏறி உட்கார்ந்து கொண்டன.
அஸ்பெஸ்ரஸ் தகடுகளின் பாவனை நமக்கு ஒன்றும் புதியது இல்லைத்தான். வருவாய் குறைந்த தரப்பினரின் கூரைத் தகடுகளாகவும், பெரும்பாலான கல்வீடுகளின் ஒட்டுக்கூரைகளுக்குக் கீழே அடைப்புத் தகடுகளாகவும் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. ஆனால் சமீபகாலமாக இவற்றின் விற்பனை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஊக்குவிக்கப்படுகின்றது. விளம்பரங்கள் அஸ்பெஸ்ரஸின் பராக்கிரமங்களை வானளாவப் புகழ்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, புனர் நிர்மாணப் பணிகளில் உதவிக்கு வருகின்ற சர்வதேசத் தொண்டு நிறுவனங்களும், உலக வங்கியும் விற்பனை முகவர்களையும் விஞ்சும் அளவுக்கு அஸ்பெஸ்ரஸ் தகடுகளைப் பரிந்துரை செய்கின்றன. உலக வர்த்தக நிறுவனமும் இறக்குமதியில் இருக்கக்கூடிய தடைகளை Gugi artib 's T' ' (GATT-General Agreement on Trade And Tariff) gluluigi:55 air மூலம் களைந்து, அஸ்பெஸ்ரஸ் நிறுவனங்களின் தடையில்லா வர்த்தகத் துக்கு வழி செய்து கொடுத்துள்ளது. அஸ்பெஸ்ரஸ் நிறுவனங்கள் இப்படி இழவு வீட்டிலும் இலாபம் பார்க்க முனைவதை வெறுமனே வர்த்தக தந்திரங்கள் என்று ஒதுக்கி விடுவதற்கு இல்லை. இதற்கும் அப்பால் அஸ்பெஸ்ரஸினதும், இதனை ஏற்றுமதி செய்யும் நாடுகளினதும் அழுக்கேறிய முகங்கள் கோரமாகத் தெரிகின்றன.
அஸ்பெஸ்ரஸ் (Asbestos) ஒரு இயற்கைக் கனிமம். நிலத்துக்குக் கீழேயுள்ள பாறைப் படிவுகளிலிருந்து நீண்ட சிலிக்கேற்று நார்களாகப் பிரித்து எடுக்கப்படுகின்றது. இவற்றில் வெள்ளை, நீலம், சாம்பல் என்று நிறங்களிலும் இயல்புகளிலும் வேறுபடக் கூடிய ஆறு வகைகள் உண்டு. கல்லின் நார்களாக இருப்பினும் கடினமானவை அல்ல. இந்தக் கல்நார்கள் எல்லாமே பருத்திப் பஞ்சின் நார்களைப் போல மிருது வானவை. விருப்பத்துக்கு நெகிழக்கூடியவை. ஆனால் வெப்பத்துக்கும், நெருப்புக்கும் கிஞ்சித்தும் கலங்காதவை. வெப்பத்தில் வேகாத, தீயில் கருகாத இந்த இயல்புகளால்தான் அஸ்பெஸ்ரசுக்கு ‘அற்புதக் கனிமம் என்ற தனி மவுசு நீண்ட காலமாக இருந்து வருகிறது.
68
ஆபத்தான அஸ்பெஸ்ரஸ் கழிவுகளின் மீது இளைப்பாறும் சிறுமி - சென்னை, தாம்பரம்
Page 37
ஏழாவதுஊழி
புராதன கிரேக்கத்தில் மன்னர்களின் ஈமச்சடங்குகளில் சடலங்களுக்கு அணிவிக்கும் ஆடைகள் நெய்யவும், மேசைவிரிப்புகள், கைக்குட்டைகள் செய்யவும் அஸ்பெஸ்ரஸ் நார்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரோமானியர்கள் அஸ்பெஸ்ரஸ் கைக்குட்டைகளைப் பாவித்த பின்னர் நெருப்பில் போட்டுச் சுத்தம் செய்வகை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மார்க்கோபோலோவின் பயண வழிகளில் அஸ்பெஸ்ரஸ் துணியாலான பொருட்கள் அவருக்குக் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக வரலாறுகளில் பதிவாகியிருக்கிறது.
அஸ்பெஸ்ரசை வர்த்தக நோக்கில் 1860 இலேயே வட அமெரிக்காவின் கியூபெக்கில் அகழ்ந்தெடுத்துப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். தொழில் புரட்சியும், இரண்டாவது உலக யுத்தமும் பரவலான அறிமுகத்தைச் செய்துதர, அஸ்பெஸ்ரஸ் இன்று தனியாகவும், சீமெந்து அல்லது பிளாஸ்ரிக்குடன் கூட்டுச் சேர்ந்தும் பல்வேறுபட்ட கைத்தொழில்களில் செல்வாக்குச் செலுத்துகிறது. வீடுகளின் கட்டுமானப் பணிகளில் கூரைத் தகடுகள் - தரை ஓடுகள் - நீர் விநியோகக் குழாய்கள் - கழிவகற்றுக் குழாய்கள், கப்பல்கள் கட்டுவதில் அவற்றின் தரைப்பூச்சுகள் - கொதிகலன்கள் - கொதிநீர்க் குழாய்கள் - நீராவிப் போக்கிகள், மின் விநியோகத்தில் மின்சாரக் கம்பிகளின் காப்பு உறைகள், மோட்டார் வாகனங்களில் தடுப்புச் drilungsg/sair (Brake shoes), 'Saltd' lully-digir (Clutch pads), g60L-gs தொழிலில் தீப்பிடிக்காத போர்வைகள் - திரைச்சீலைகள். என்று ஐம்பது நூறு அல்ல, 50,000க்கும் அதிகமான தயாரிப்புகளில் அஸ் பெஸ்ரஸ் வியாபித்திருக்கிறது. இவற்றில் பொதுமக்களின் பாவனைக்குப் பெருமளவில் சென்றடைந்திருப்பது அஸ்பெஸ்ரஸ் கூரைத் தகடுகள்தாம்.
ஆனால், எங்கள் தலைக்கு மேலே கூரைகளில் உட்கார்ந்திருக்கும் அஸ்பெஸ்ரஸ் தன் ஆபத்பாந்தவன் முகத்துக்குப் பின்னால் ஆபத்துகளையும் மறைத்து வைத்திருக்கின்றது என்பதுதான் பயங்கரம். ஆம், அஸ்பெஸ்ரஸ் அற்புதக் கனிமம் மட்டுமல்ல; அது ஓர் உயிர் குடிக்கும் நஞ்சும்கூட.
அஸ்பெஸ்ரஸ் மூலப்பொருளாகச் சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும்போதும், அஸ்பெஸ்ரஸ் பொருட்களைத் தயாரிக்கும் போதும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் போதும், கப்பல் உடைக்கும் தளங்களில் பழைய கப்பல்களைப் பிரிக்கும் போதும் அஸ்பெஸ்ரசில்
7O
பொ. ஐங்கரநேசன் இருந்து நுண்ணிய அஸ்பெஸ்ரஸ் துகள்கள் காற்றில் கலக்கின்றன. இதற்கு அஸ்பெஸ்ரசின் இருப்பைக் கடுமையாகக் குழப்ப வேண்டும் என்பதில்லை. நீண்ட நாட்கள் பாவனையில் உள்ள பழைய கூரைத் தகடுகளில் இருந்து காற்றுக் கூட அஸ்பெஸ்ரஸ் நுண்நார்களை அரித்து எடுத்து வந்து விடுகிறது. காவி வருவது காற்று என்பதால் நாம் எல்லோருமே ஏதோ ஒரு அளவில் தினமும் அஸ்பெஸ்ரசை சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஒரு கனமீற்றர் அளவு வழியில், அதாவது ஒரு மணித்தியாலத்தில் நாம் சுவாசிக்கும் காற்றில் 10 அஸ்பெஸ்ரஸ் நார்த் துகள்களாவது இருக்கும். நகரத்துக் காற்றில் இந்த அளவு 10 மடங்குகளுக்கும் அதிகமாக உள்ளது என்று கணக் கெடுத்துள்ளார்கள். அதுவும் அஸ்பெஸ்ரஸைக் கையாளுகின்ற வேலைத் தலங்களில் 5 மில்லியன் துகள்கள்வரை கூடச் செறிந்துபோய் இருக்கும்.
மூச்சுக் காற்றுடன் சுவாசப்பாதையினுள் நுழையும் அஸ் பெஸ்ரஸ் துகள்களை, உடல் தன் பலத்தைப் பிரயோகித்து தும்மியோ, இருமியோ வெளியே தள்ளுவதற்கு முனையும். ஆனால் இந்தத் தள்ளுமுள்ளில் 5 மைக்குரோன்கள் அல்லது அதனிலும் பெரிய அளவு அஸ்பெஸ்ரஸ் துகள்களை உடலின் எதிர்ப்புப் பொறிகளினால் எதுவும் செய்துவிட முடியாது. அவை நுரையீரலின் ஆழமான பகுதிகளைச் சென்றடைந்து விடுகின்றன. மீள, மீள அஸ்பெஸ்ரஸ் காற்றையே சுவாசிப்பவர்களில், நுரையீரல்களில் அஸ்பெஸ்ரஸ் ஒரு படையாகவே படிந்து விடுகிறது. இது, நுரையீரலை வழமை போலச் சுருங்கவோ, விரியவோ இடங்கொடுக்காததால் சுவாசித்தலில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், நுரையீரல்களை இயங்கச் செய்வதற்கு இதயம் அதிக அளவில் வேலை செய்ய நேரிட்டு, கடைசியில் வீங்க ஆரம்பிப்பதுடன் நுரையீர லில் இரத்தம் கசியவும் தொடங்கும். இந்த நோயை மருத்துவர்கள் "அஸ்பெஸ்ரோஸிஸ் (Asbestosis) என்று பெயரிட்டு இருக்கிறார்கள். இந்நோய்க்குத் தகுந்த சிகிச்சை இதுவரையில் இல்லாததால் பெரும்பாலும் நோய்வாய்பட்டவர்கள் செயலிழந்து போவார்கள். அல்லது மரணத்தைத் தழுவுகிறார்கள்.
நுரையீரலினுள் நுழையும் அஸ்பெஸ்ரஸ் துகள்கள் நுரையீரற் புற்று நோய்க்கும் (Lung Cance) காரணமாகிறது. அஸ்பஸ்ரோஸிஸ் நோயை விட, நுரையீரற் புற்று நோய் பறிக்கும் உயிர்களின் எண்ணிக்கை அதிகம். சுரங்கத் தொழிலாளிகள், அஸ்பெஸ்ரஸ் பொருட்களின் தயாரிப்புப் பணியில் ஈடுபடுவர்கள், கட்டுமானப் பணி யாளர்கள் போன்ற அஸ்பெஸ்ரசுடன் நீண்ட நேரம் செலவிடுபவர்களை
71
Page 38
ஏழாவது ஊழி
அதிக அளவில் தாக்குகிறது. அதுவும், இவர்கள் புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்தால், நுரையீரற் புற்று ஏற்படும் வாய்ப்பு பன்மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்தப் புற்று நோயை விடவும், நுரையீரலின் உட்பக்கத்தைப் போர்த்தியிருக்கும் மெல்லிய சவ்வில் 'மீசோதீலியோமா (Mesothelioma) என்னும் புற்று நோயையும் ஏற்படுத்து கிறது. 1970களில் அஸ்பெஸ்ரஸைப் பெரிய அளவில் பயன்படுத்திய அமெரிக்காவில், இன்று வருடமொன்றுக்கு 3000 பேர் வரையில் மீசோதீலியோமா நோய்க்குப் பலியாகிக் கொண்டிருக் கிறார்கள். இவர்களிற் பெரும் விழுக்காட்டினர் நீண்ட காலமாகக் கப்பல்களில் பணியாற்றிய அமெரிக்கக் கடற்படையினரும், கப்பல் சிப்பந்திகளும் என்பது குறிப்பிடத்தக்கது.
மீசோதீலியோமா சுவாசப்பாதையில் மட்டுமல்லாமல் தொண்டை, இரைப்பை, பெருங்குடல் போன்ற உணவுக் கால்வாயின் பகுதிகளிலும், சிறுநீரகங்களிலும் தோன்றுவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. நுரையீரலில் அஸ்பெஸ்ரஸ் துகள்களை நிறைத்து வைத்திருப்பவர்கள் இருமும்போது வாயினுள் சேரும் சளியத்துடனும், அஸ்பெஸ்ரஸ் நீர் விநியோகக் குழாய்கள் வழங்கும் தண்ணீரின் மூலமும் அஸ்பெஸ்ரஸ் உணவுக் குழாயை வந்தடைகிறது. இப்படி உணவுக் குழாயில் சேரும் அஸ்பெஸ்ரஸின் ஒரு பகுதி, அங்கிருந்து குடற்சுவரின் இரத்த ஓட்டத்தினுள்ளும் நுழைந்து விடும். இப்படி இரத்தத்தில் கலக்கும் அஸ்பெஸ்ரஸ்தான் கடைசியில் சிறுநீரகங்களையும் பாதிக்கிறது.
அஸ்பெஸ்ரஸ்துகள்களைச் சுவாசித்தவர்களுக்கு உடனடியாகவே நோயின் அறிகுறிகள் தோன்றிவிடும் என்பதற்கில்லை. 25 முதல் 40 ஆண்டுகள் கழிந்த பின்பும்கூட நுரையீரற் புற்றுநோய் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் செப்டெம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலை அடுத்து அப்பகுதியை அண்டிய காற்று அஸ்பெஸ்ரஸ் தூசுகளால் மண்டியிருந்தது. மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களும், இடிபாடுகளை அகற்றியவர்களும் தவிர்க்க இயலாமல் மிக அதிக அளவில் அஸ்பெஸ்ரஸ் தூசிகளை மூச்சிழுத் தார்கள். நுரையீரல்களில் அஸ்பெஸ்ரஸைக் காவித் திரியும் இவர்கள் வருங்காலத்தில் மீசோதீலியோமா புற்று நோயால் அவதிப்பட நேரிடும் என அஞ்சப்படுகின்றது. ஆபத்தான பொருள்கள் குறித்து இலண்டனில் ஆராய்ச்சி செய்துவரும் அமைப்பொன்றின் தகவல்களின்படியும், இப்படி சுவாசப்பைகளினுள் கரந்துறையும் அஸ்பெஸ்ரஸ் துகள்களினால்
72
பொ.ஐங்கரநேசன்
இங்கிலாந்தில் மட்டும் 2025 ஆம் ஆண்டுக்குள் குறைந்த பட்சம் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேர் அஸ்பெஸ்ரஸ் தொடர்பான நோய்களால் இறப்பார்கள் எனத் தெரியவந்துள்ளது.
அஸ்பெஸ்ரசின் இவை போன்ற கொடிய விளைவுகளைக் கருத்தில் கொண்டு உலக சுகாதார நிறுவனமும் (WHO), உலக தொழிலாளர் அமைப்பும் (LO) அஸ்பெஸ்ரஸ் பயன்பாட்டை ஒழித்துக் கட்ட வேண்டும் என வற்புறுத்திவருகின்றன. இதைத் தொடர்ந்து பல நாடுகள் அஸ்பெஸ்ரஸின் பாவனையைக் கட்டுப்படுத்தவும், தடைவிதிக்கவும் ஆரம்பித்துள்ளன. அஸ்பெஸ்ரசுக்கு பதிலாக செயற்கை இழைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா 1973 இல் வீட்டுத் தேவைகளுக்காகப் பயன்படுத்திய அஸ்பெஸ்ரஸ் 7,19,000 மெற்றிக் தொன்கள். 2002 ஆம் ஆண்டில் இந்தப் பிரமாண்டப் பாவனையை 9,000 மெற்றிக் தொன்களாக வெகுவாகக் குறைத்துள்ளது. அத்தோடு, ஏற்கனவே அஸ்பெஸ்ரஸைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களைத் தவிர, அஸ்பெஸ்ரஸைக் கொண்டு புதிதாக வேறு பொருட்களைத் தயாரிப்பதற்குத் தடையும் விதித்திருக் கிறது. அவுஸ்திரேலியாவும் டிசம்பர் 31, 2003 ஆம் ஆண்டு முதல் அஸ்பெஸ்ரஸைப் புதிதாகப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது. ஜப்பான் அஸ்பெஸ்ரஸ் பொருட்களை இறக்குமதி செய்வதையும், தயாரிப்பதையும், ஏற்றுமதி செய்வதையும் 2004 ஆம் ஆண்டு முதல் முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் 2005 ஆம் ஆண்டில் இருந்து அஸ்பெஸ்ரசைத் தடை செய்திருக்கின்றன. இந்தப் பட்டியலில் சமீபத்தில் தென் ஆபிரிக்காவும் இணைந்து கொண்டுள்ளது.
அஸ்பெஸ்ரஸின் பாவனையை வளர்ந்த நாடுகள் பலவும் விலக்க ஆரம்பித்திருப்பதாலேயே, அஸ்பெஸ்ரஸ் தயாரிப்பில் ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளைக் குறி வைத்து விற்பனையைப் பெருக்க ஆரம்பித்துள்ளன. மானுடநேயம் இன்றி சோகத்தைக்கூட இலாபமாக அறுவடை செய்ய விழைகின்றன. அஸ்பெஸ்ரஸை அதிக அளவில் அகழ்ந்தெடுக்கும் கனடா தன்னுடைய நாட்டில் அதன் உபயோகத்தைத் தடை செய்து விட்டு, அவ்வளவையும் மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. இதில் பெரும்பகுதி இந்தியாவுக்கே அனுப்பிவைக்கப்படுகின்றது. 2003 ஆகஸ்ட் 18 ஆம் திகதி அன்று இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் ஒரு கேள்விக்குப் பதிலளித்த, அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்
73
Page 39
ஏழாவதுஉஊழி
சுஷ்மா சுவராஜ், அகமபாத் தேசிய சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி எந்த வகை அஸ்பெஸ்ரசுடனும் அதிககாலம் இருக்க நேர்ந்தால் அஸ்பெஸ்ரோசிஸ், நுரையீரல் புற்றுநோய், மீசோதீலியோமா நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்த உண்மை தெரிந்த பின்பும் இந்தியாவில் ஆண்டு தோறும் 1.25 இலட்சம் தொன்கள் அளவில் அஸ்பெஸ்ரஸ், மற்றும் அதன் கழிவுகள் வந்து குவிந்துவாறுதான் உள்ளன.
இந்தியா மட்டுமல்ல ஊழலிலும், வறுமையிலும், உள்நாட்டு குழப்பங்களிலும் திளைத்திருக்கும் மூன்றாம் உலக நாடுகள் எல்லாமே பணத்துக்காக, பணக்கார நாடுகள் கழித்துத் தள்ளும் எவற்றையும் தங்களுடைய முகத்தில் ஏந்தத் தயராகவே உள்ளன. இதனைப் பெருக்கித் தள்ளுவதற்கு இன்னொன்றில் சார்ந்திராத அரசியல் தன்னாட்சியும், உடனடித் தேவைகளுக்குச் சூழலைப் பலி கொடுக்க ஒப்பாத தொலை நோக்குப் பார்வை மிக்க அரசியல் தலைமைத்துவமுமே தேவைப்படு கிறது. போரினாலும், சுனாமியானாலும் மிக மோசமாகப் பாதிக்கப் பட்ட ஈழத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கான குடியிருப்புகளை அமைப்பதில், விடுதலைப் புலிகளின் திட்டமிடுதலுக்கும் அபிவிருத் திக்குமான செயலகம் அஸ்பெஸ்ரஸ் தகடுகளின் பாவனையைத் தொண்டு நிறுவனங்களிடம் தவிர்க்க வேண்டியது இதனையே மெய்ப்பிக்கின்றது.
74
6
கொலைக்களமாகும் அடுக்களைகள்
நாம் நேற்று வரை வாந்தி பேதி பிளேக் அம்மை போன்ற கொடிய நோய்களைக் கண்டுதான் அஞ்சினோம். ஆனால் இன்றோ, சூழலில் கலந்திருக்கும் கொடிய நஞ்சுகளைப் பார்த்து அதைவிட அதிகமாக அஞ்ச வேண்டியுள்ளது."
- Gueirai amiarait ('Silent Spring'prasai aafflu Iti) வீடுதான் சொர்க்கம். ஆனால் மூன்றாம் உலக நாடுகளில், அதிலும் குறிப்பாக ஏழைப் பெண்களைப் பொறுத்த வரையில் வீடு நரகவேதனையைத் தரும் இடமாகவே உள்ளது. நாளின் பெரும் பகுதியை இவர்கள் அடுக்களைக்குள்ளேயே கழிக்க வேண்டியிருக்கிறது. சமைப்பதற்கு முற்றுமுழுதாக விறகுகளையும், விறாட்டியையும், மண் எண்ணெயையும் நம்பியிருக்கும் இவர்கள் இவற்றைப் பெறுவதற்குப் பாடாய்ப்பட வேண்டியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இவை கரித்துத் தள்ளும் புகை மாசுகளால் பெரும்பாலான பெண்களும், அவர்களது தோளிலும் தூளியிலும் ஆடும் குழந்தைகளும் படுத்த படுக்கையாகி விடுகின்றனர். வீட்டுக்குள்ளே பெருகிவரும் புகையைக் குடித்து ஆண்டொன்றுக்கு இரண்டரை மில்லியன் பெண்களும் குழந்தைகளும் ஈளை (Asthma) முதல் நுரையீரற் புற்றுநோய் வரை பல்வேறு சுவாசக் கோளாறுகளுக்குப் பலியாகிவருகின்றனர்.
நீளும் இந்தத் துயரம் பழைய கதை. இப்போது இன்னுமொரு துயரம் சூழ்ந்து கொண்டுள்ளது. புகையின் "பகைப்புலத்தில் இருந்து விடுபடுவதற்காக மின் அடுப்புகளிடமும், எரிவாயு அடுப்புகளிடமும் தஞ்சம் அடைந்தவர்களின் அடுக்களைகளிற்கூடக் காலன் கரந்துறை வதை அமெரிக்கச் சுற்றுச் சூழற் பணிக்குழு அண்மையில் சுட்டிக் காட்டி அதிர்ச்சிப்படுத்தியிருக்கிறது. மின் அடுப்புகள், எரிவாயு அடுப்புகள் கைகூடிய பின்னர் பெண்களின் அடுத்த கட்டத் தேர்வு 'ஒட்டவே ஒட்டாது' என்ற "நொன் ஸ்ரிக் (Non-stick) பாத்திரங்களாகவே உள்ளன. ‘அதிகம் வழுக்கும் பூச்சு என்று கின்னஸ் சாதனை படைத்த
75
Page 40
ஏழாவது ஊழி
"ரெஃப்லான் (refon) பசை தடவிய இந்தப் பாத்திரங்களைப் பிசிறுகள் இன்றி இலகுவிற் சுத்தம் செய்யலாம். கொழுப்புக்கு தடா போட்ட 'கொலஸ்திரோல் மனிதர்களுக்காக இதில் எண்ணெய் இல்லாமலே எதனையும் பொரிக்கலாம். இவை போன்ற வசீகரங்களினால் சமையல் அறைகளில் அதிகம் செல்வாக்குப் பெற்றிருக்கும் ரெஃப்லான் பாத்திரங் களே, அதிகம் ஆபத்தானவை என்று இப்போது எச்சரிக்கப்பட்டுள்ளது.
ரெஃப்லானின் வேதியற் பெயர்: "பொலி ரெற்றா ஃபுளோரோ எதிலீன் (PolyTetraFluoroEthylene-PTFE). இதன் பிதா மகன் றோய் பிளங்கெற் என்னும் வேதியியலாளர். குளிரூட்டிகள் குறித்த ஆய்வில் ஈடு பட்டிருந்த சமயம் வெப்பத்தைத் தாங்குவதும் நிலையாக ஒட்டியிருப் பதுமான இந்த ஃபுளோரோ எதிலின் பசையைக் கண்டுபிடித்தார். பகாசுர ‘டூபான்ற் (DuPon) பன்னாட்டு நிறுவனத்தின் நியூஜேர்ஸி ஆய்வுக் கூடத்தில் - 1938இல் - ஒரு தற்செயல் பிரசவிப்பாக இது நிகழ்ந்தது. பல தொடர் சோதனைகளின் முடிவில் 1949இல் ரெஃப்லான் உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அன்றிலிருந்து சமையல் அண்டாக்கள் - தட்டுக்கள் தொடங்கி அண்டவெளி ஓடங்கள் வரை ரெஃப்லானின் பயன்பாடு வியாபித்திருக்கிறது. ரெஃப்லான் என்ற பெயரில் மட்டுமல்லாது, "சில்வர்ஸ்ரோன் (Siverstone), சுப்ரா (Supra) "சைலோன் (Xylon),'எக்ஸ்கலிபர் (Excaliba), "டியூறாகோல் (Durocol) என்று பல்வேறு நாமகரணங்களிலும் இது உலாவருகிறது.
சமையல் அறைகளில் தீய்ந்து கொண்டிருக்கும் ரெஃப்லான் குறித்த காய்தல் உவத்தல் அற்ற ஆய்வுகளை வாஷிங்டனில் இயங்கி 6) CD b. Jippi diggpai) Li Goof digiCup (Environmental Working Group - EWG) மேற்கொண்டு வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் ரெஃப்லான் பற்றிக் கிடைத்திருக்கக் கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப் பட்ட தனது ஆய்வுகளின் அறிக்கையை மே 2003இல் வெளி யிட்டுள்ளது. இதில் ரெஃப்லான் பூச்சின் பின்னால் மறைந்திருக்கும் பயங்கரவாதம் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. டூபான்ற் நிறுவனம் எவ்வாறெல்லாம் அப்பாவி நுகர்வோரை ஏமாற்றி வந்திருக்கிறது என்றும் விலாவாரியாகப் விவரிக்கப்பட்டிருக்கிறது.
ரெஃப்லான் பூசப்பட்ட பாத்திரங்கள் சூடேறத் தொடங்கியதும், ரெஃப்லானில் இருந்து முதலில் நுண்ணியதிலும் அதிநுண்ணியதான துகள்கள் மேற்கிளம்புகின்றன. இவை பத்து நிமிடங்களிலேயே சோதனை எலிகளில் நுரையீரல்களை நச்சுப்படுத்துவது நிரூபணமாகி
76
Page 41
ஏழாவது ஊழி
யுள்ளது. ரெஃப்லான் மேலும் சூடேறச் சூடேற வெவ்வேறு வகையான உயிர் கருக்கும் வாயுக்களாக உருவெடுக்கிறது. இவற்றில் 'ஃபெர்ஃ புளோரோ ஐசோ பியூற்றின் (PerFluorolsoButene-PFIB) போர் ஆயுதங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஒரு வேதி. இரண்டாம் உலக யுத்தத்தில் பிரயோகிக்கப்பட்ட நரம்பு வாயு பொஸ்ஜினை (Phosgene) விட இது பத்து மடங்குகளுக்கும் மேலான நச்சுத்தன்மை கொண்டது 'காபனைல் ஃபுளோரைட்டு (Carbony Fluoride -COF2) 6Tairgilb gags/TT b, பொஸ்ஜின் போர்வேதியின் ஃபுளோரின் வடிவமாகும். கண், காது, மூக்கு என்று புலன் உறுப்புகளில் எரிச்சலை உண்டுபண்ணுவதுடன் நுரையீரற்பை களை நீர் கோர்க்க வைத்து மூச்சுத் திணற வைக்கிறது. ஈரலை சேதம் செய்து, இரத்தத்தில் குளுக்கோஸை இனிக்கச் செய்கிறது. 'ஹைட்ரஜன் ஃபுளோரைட்டு (HydrogenFluoride-HF)'கை பட்டாலே கரி நாசம்' என்னுமளவுக்கு, உடலில் எங்கே தொட்டாலுமே அந்த இழையத்தை அரித்துவிடக்கூடிய வாயு. சுவாச வழியைத் துவம்சம் செய்து சென்று நுரையீரலை மிக மோசமாக நீர் கோர்க்க (எடீமா - Edema) வைக்கிறது. இன்னுமொரு வாயுவான "மொனோ ஃபுளோரோ அசற்றேற்று (MonoFluoroAcetate-MFA) வாந்தி, மயக்கம், பார்வை மங்குதல் என்று ஆரம்பித்து கடைசியில் இதயத்தையும், சுவாசப்பைகளையும் சீராக இயங்க விடாமல் தள்ளாட வைக்கிறது. இதன் சில மில்லிகிராம்கள் அளவே ஆளைக் கொன்றுவிடப் போதுமானது. மொத்தத்தில் இந்த நான்கு வாயுக்களையும் (PEB, COF2, HFMFA) உலகின் மற்றெல்லாக் கைத்தொழில் வேதிகளையும் விட நச்சின் உச்சமாக சுற்றுச்சூழல் பணிக்குழு தனது அறிக்கையில் பதிவு செய்துள்ளது.
இவை மட்டுமல்ல; ரெஃப்லான் விடுவிக்கும் 'பெர்ஃபுளோரோ SéšG3TrTG36Trtuš gylófalviib' (Per Fluoro Octanoic Acid - PFOA), 'GUTțbprT LIGGTTTGymt 6 ga&sår (Tetra FluoroEthylene-TFE) GTGörggyub grGoTG G3ag35GLib புற்றுநோய்த் தூண்டிகள். எலிகளில் நிகழ்த்திய சோதனைகளில் இவை புற்றுநோயை ஏற்படுத்துவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெர்ஃபுளோரோ ஒக்ரோனோயிக் அமிலம் சாகாவரம் பெற்றது. சுற்றுச் சூழலில் நீண்ட காலம் நீடித்திருக்கக் கூடியது. இது, அமெரிக்கர்களில் 92 வீதமானோரின் இரத்தத்தில் இரண்டறக் கலந்திருப்பது இரத்த வங்கிகளில் சேகரிக்கப்பட்டிருக்கும் குருதி மாதிரிகளைச் சோதித்ததில் தெரியவந்துள்ளது.
ரெஃப்லான் தயாரிப்பில் அதன் வழுவழுப்புத் தன்மைக்காகச் சேர்க்கப்படும் ஒரு செயற்கை வேதிப்பொருள்தான் பெர்ஃபுளோரோ
78
பொ.ஐங்கரநேசன்
ஒக்ரோனோயிக் அமிலம், அமெரிக்காவின் மேற்கு வேர்ஜீனியாவில் உள்ள டூபான்ற் தொழிற்சாலையொன்றிலிருந்து வெளியேறும் கழிவு நீருடன் சேர்ந்து இந்த அமிலம் ஒஹியோ ஆற்றில் கலந்து வருகிறது. இதனால், அப்பகுதிகளிலுள்ள குடிநீரில் ஒக்ரோனோயிக் அமிலத்தின் செறிவு அளவுக்கும் அதிகமாக உள்ளது. மாசடைந்த குடிநீரை அருந்துவதால் நோய்வாய்ப்படுவதாகவும், பிறப்புக் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிரசவமாவதாகவும் டூபான்ற் நிறுவனத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கொன்றில், 2004ஆம் ஆண்டில் டூபான்ற் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகத் தண்டப்பணம் செலுத்த வேண்டியதாயிற்று. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் டூபான்ற் நிறுவனத்தினிடம் இந்த நச்சுவேதியின் உற்பத்தியையும் பாவனையையும் 2015ஆம் ஆண்டுக்கிடையில் நிறுத்திவிடுமாறு வற்புறுத்தியுள்ளது.
மேலும், உயர் சூட்டில் ரெஃப்லான் பாத்திரங்கள் பிரசவிக்கும் 'பெர்ஃபுளோரோ பியூற்றேன்' (Perfuoro butane - PFB), காபன் ரெற்றா såL Gørt fr60g L G)" (Carbon tetra Fluoride - CF) GLI st 6örp Huntuy & Gir வளிமண்டலத்தில் நீண்ட காலம் தங்கியிருந்து பூமியைச் சூடுபடுத்தக் கூடியன. அதுவும், பூமியைச் சுட்டுத் தள்ளுவதில் பிரதான வில்லன் என்று பெயரெடுத்த கரியமிலவாயுவை விடவும் இவை பல ஆயிரம் மடங்குகள் மூர்க்கம் மிக்கவையாகும். இப்படி, ரெஃப்லான் பசையில் இருந்து வெளியேறும் உயிர்பிசையும் பதினைந்து நஞ்சுகளின் பெயர்களை வெப்பநிலை வாரியாகச் சுற்றுச்சூழல் பணிக்குழு பட்டியல் இட்டுள்ளது. கூடவே இந்தத் துகள்களினதும் வாயுக்களினதும் கலவையைச் சுவாசித்து ஆண்டுதோறும் உலகம் பூராவும் வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்புப் பறவைகள் ஆயிரக்கணக்கில் இறந்து வருவதாகவும் எண்ணுக் கணக்குத் தெரியாமல் மனிதர்கள் நோயின் வயப்படுவதாயும் குறிப்பிட்டுள்ளது.
இதில் வேதனை என்னவெனில் ரெஃப்லான் கக்கும் நஞ்சுகளில் பலவற்றைப் பற்றியும், அதன் உயிரெதிர் விளைவுகள் பற்றியும் உரிமையாளரான டூபான்ற் நிறுவனத்துக்குத் தெரியும் என்பதுதான். ரெஃப்லானின் அறிமுக காலத்தின் போதே - 1950களில் - தன் பணி யாளர்களுக்கு ஏற்பட்ட காய்ச்சல் ரெஃப்லான் நஞ்சுகளால் உருவான "பொலிமர் காய்ச்சல் (Polymer Fume Fever) என்பதை டூபான்ற் தனது விஞ்ஞானிகள் மூலம் உறுதி செய்து கொண்டது. ரெஃப்லான் பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று டூபான்ற்
79
Page 42
SupT6.g5 DST
ஏற்றுக் கொண்டபோதும், "ரெஃப்லான் பசை 260 பாகை செல்சியஸ் வெப்ப நிலை வரைக்கும் அப்படியே ஒட்டியிருக்கும். 350 பாகை செல்சியஸை எட்டும்போது மாத்திரமே குறிப்பிட்டுச் சொல்லு மளவுக்குப் பிரியத் தொடங்குகிறது. ஆனால் இந்த அளவுகள் சமைக்கும் வெப்பநிலைக்கு வெகு மேலாக இருப்பதால், சாதாரணமாகச் சமைக்கும் போது ரெஃப்லான் நஞ்சாவது சாத்தியமேயில்லை" என்று சத்தியம் செய்தது. அதனையே தொடர்ந்தும் கூறி வருகிறது.
ஆனால், சுற்றுச் சூழல் பணிக்குழு டூபான்ற் குறிப்பிட்ட பாதுகாப்பான வெப்ப நிலைகளையும் விடக் குறைவான வெப்ப நிலைகளிலேயே நச்சுக்கள் வெளிப்படுவதையும், குறுகிய நேரத்திலேயே இந்தச் சமையற் கலன்கள் வெப்பத்தின் உச்ச நிலையை அடைந்து விடு வதையும் நிரூபித்துள்ளது. தனது ஆய்வறிக்கையில், கோழிப்பண்ணை யில் சூடேற்றப் பயன்படும் ரெஃப்லான் பூச்சு விளக்குகள் 202 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் ஒளிர்ந்தபோது சுமார் 1000 கோழிக் குஞ்சுகள் வரையில் இறந்துபோன ஒரு சம்பவத்தை மிசூரி பல்கலைக் கழகத்தின் ஆவணங்களில் இருந்து ஆதாரமாகக் காட்டியுள்ளது. உணவைச் சுடும் பொதுவான வெப்பநிலைக்கும் கீழாக - 176 பாகை செல்சியஸ் - ரெஃப்லான் தட்டுகள் வெறுமையாகச் சூடாக்கப்பட்ட போதும், தவறுதலாக உணவைக் கருகவிட்ட சந்தர்ப்பங்களிலும் வளர்ப்புப் பறவைகள் இறக்க நேர்ந்த பல உதாரணங்களையும் சேர்த்துள்ளது. மேலும், மின் அடுப்பில் ரெஃப்லான் கலன்கள் 5 நிமிடங் களில் 382.7 பாகை செல்சியஸ் வெப்ப அளவை அடைவதையும், 240 பாகை செல்சியஸ் அளவிலேயே நஞ்சுத் துகள்கள் வெளியேறத் தொடங்குவதையும் சோதனை ரீதியாகப் பதிவு செய்துள்ளது.
ஆனால், டூபான்ற் உலகெங்கும் உள்ள தனது பில்லியன் கணக்கான நுகர்வோர்களிடம் ரெஃப்லான் குறித்த உண்மைகள் சென்றடையாமல் தடுப்பதில் குறியாக இருக்கிறது. ரெஃப்லான் தொடர்பான விளம்பரங்களிலோ, ரெஃப்லான் உபகரணங்களிலோ எச்சரிக்கை வாசகங்கள் எதுவும் இடம் பெறாமல் பார்த்துக் கொள்கிறது. பறவைகளின் பாதுகாப்புத் தொடர்பான தனது பிரசுரமொன்றில் மின்விசிறி, கண்ணாடி, கழிப்பறை, பூனை போன்றவற்றின் அச்சுறுத்த லுக்குப் பின்பே பறவைகளை ரெஃப்லான் பாதிப்பதாக நிரற்படுத்தி நுகர்வோரைத் தவறாக வழிநடத்தவும் செய்கிறது. ரெஃப்லான் பாதிப்புக் குறித்து இடம் பெற்றிருக்கும் பறவைகள் தொடர்பான இணையத் தளங்களில், நிர்ப்பந்தங்களைப் பிரயோகித்து அந்த உரைகளை நீக்கியும்
8O
பொ.ஐங்கரநேசன்
வருகிறது. டூபான்ற்றின் இந்தத் தந்திரங்களோடு சேர்ந்து நுகர்வோரைப் பொலிமர் காய்ச்சலும் ஏமாற்றி வருகிறது. பொலிமர் காய்ச்சலுக்கான அறிகுறிகள் பொதுவான "ஃபுளு (Fu) காய்ச்சலுக்கான அறிகுறிகளை ஒத்திருப்பதால், ரெஃப்லானின் அப்பாவிநுகர்வோர் இதனை சாதாரண ஃப்ளூதான் என்று இலேசாக நினைத்து விடுகின்றனர்.
இந்நிலையில், ரெஃப்லானின் நச்சுக் கொடுக்குகளில் இருந்து தப்பிக்க வெற்றுச் சமையற் கலனை அடுப்பில் வைக்காமல் இருப்பது தான் சிறந்தது என்று சொன்னாலும், ரெஃப்லான் பாத்திரங்களை அடியோடு நிராகரிப்பதுதான் மிகச்சிறந்த வழியாகும். இதற்கான மாற்றாக துருப்பிடிக்காத இரும்பு வார்ப்பு இரும்பு போன்றவற்றினால் ஆன கலன்களைப் பயன்படுத்துமாறு அமெரிக்கச் சுற்றுச் சூழற் பணிக்குழு அறிவுறுத்தி வருகின்றது. விட்டுப் போன உறவான மட்பாண்டங்கள் பற்றியும் நாம் சிந்திக்கலாமே.
81
Page 43
7
நீல நஞ்சு
நமது போலி நாகரிகம், பகட்டு ஆடம்பரம் ஆகியவற்றைக் கைவிட்டால்தான் சூழல் கேட்டிலிருந்து நம்மைக் காப்பாற்ற dolջեւիb՛
- കേffങ്ങഖ് ബ്രfങ്ങി
நவீனத்தின் சின்னம். அந்தஸ்தின் அடையாளம். எந்தப் பின்னணிக்கும் பொருந்தக் கூடிய எடுப்பான நீலநிறம். கோடையில் குளிர்மை, குளிரில் சூடு, பசபசவென்றிருக்கும் வியர்வையில் இருந்து விடுதலை, சலவையைப் பற்றிய கவலை இல்லை. பட்டி தொட்டியெல் லாம் போட்டு அடிக்கக் கூடிய கடின உழைப்பு. நீடித்த உழைப்பில் நிறம் தேய்ந்து போனாலும், நூல் நைந்து போனாலும் அதுவும் தனி நாகரிகம். ஒரு வார்த்தையேனும் பேசாமலே ஆளுமையை வெளிக் காட்டிவிடக் கூடிய கம்பீரமான ஆடைமொழி. இத்தனைக்கும் மேலாக, ஒப்பீட்டளவில் மலிவான விலை. இவைதாம் இன்றைய தலைமுறை 'ஜீன்ஸ்'ஐத் தலைகால் புரியாமல் தூக்கி வைத்துக் கொண்டாடுவதற்கான காரணங்கள். இங்கு 'ஜீன்ஸ் (Jeans) என்று குறிப்பிடுவது "டெனிம் (Denim) துணிகளாலான முழுக்காற்சட்டைகள் என்பது வெள்ளிடை மலை.
"ač3" (Lee), “Glav6ĵaño" (Levis), “G)356ĥivo (Guess), "prTšiš6ujo (Wrangler) "6$ கூப்பர் (Lee Cooper) போன்ற விதம் விதமான முத்திரைகளுடன் விற்பனையில் தூள் பறத்திக் கொண்டிருக்கும் ஜீன்ஸ் எதோ "எங்கள் எங்களுக்காகவே தான் உருவாக்கப்பட்டது என இன்றைய இளசுகளை நினைக்க வைத்திருக்கிறது. ஆனால், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர்ேயே ஜின்ஸ் மேற்குலகின் சந்தைக்குள் நுழைந்து விட்டது. இதன் வருகை அப்படி ஒன்றும் நாகரிகம் கருதியது அல்ல. சான் பிரான்சிஸ்கோவில் வாழ்ந்த ஜேர்மனியரான லெவி ஸ்ராஸ் (LewiStrauss) என்னும் வணிகர் 1850களில் அடிமைத் தொழிலாளிகள், சுரங்கத் தொழிலாளிகளின் கடுமையான பாவிப்புக்கென்றே இந்தக் கரடு முரடான டெனிம் துணிகளை அறிமுகப்படுத்தினார்.
82
பொ.ஐங்கரநேசன்
டெனிம் என்பது உடைந்து போன பிரெஞ்ச் வார்த்தையொன்றின் எச்சம். பிரான்ஸின் நிம்ஸ் (Nimes) நகரத்தில் பட்டு நூலையும் கம்பளியையும் கலந்து நெய்து Serge-de-Nimes என்ற பெயரில் ஒரு வகைத் தடித்த துணியை 17ஆம் நூற்றாண்டளவில் தயார் செய்தார்கள். 'deNimes என்றால் ‘நிம்ஸில் இருந்து என்பது பொருள். நாளடைவில் இதுவே குறுகத் தறித்து de-Nim ஆனது. ஐரோப்பியரான லெவி ஸ்ரோஸுக்கு டெனிம் என்ற பெயர் ஏனோ பிடித்துப் போக, அதையே முற்று முழுதாகப் பருத்தியினால் ஆன தனது தயாரிப்புக்குச் சூட்டிக் கொண்டார்.
கலிபோர்னியாவில் தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் அணிந்திருந்த 'ஜீன்ஸ் 1930களில் ஹொலிவூட் "கவ் போய்களின் கண்களில் பட, கடைசியில் இந்த நீலத்துணிகளுக்கு வெள்ளித்திரை பச்சைக் கொடி காட்டிவிட்டது. ஜேம்ஸ் டீனும், மார்லன் பிராண்டோவும் நிழலில் அணிந்து காட்டியதை அவர்களுடைய ரசிகர்கள் நிஜத்தில் அணிந்து அழகு பார்த்துப் பூரித்தார்கள். ஜீன்ஸ் எம்மிடையே அறிமுகமானபோது ஹிப்பிக் கலாச்சாரம் என்று பெரியவர்களிடையே அது குறித்த ஒரு அசூசை உணர்வு இருந்தது. அதைப் போலவே, அப்போது அமெரிக்கப் பழமைவாதப் பெற்றோர் களும் பின்நவீனத்துவ ஜின்ஸை கழிசடைகளின் ஆடை என்று நிராகரிக்கவே செய்தார்கள். ஆச்சாரமான பாடசாலைகள் மாணவர்கள் அணிவதை அபச்சாரம் என்று தடை செய்தன. ஆனால் ஹொலிவுட் என்னும் கனவுத் தொழிற்சாலையின் முன்னால் எல்லாமே தூள்தூள்!! ஹொலிவுட், அமெரிக்காவையும் தாண்டி ஜீன்ஸ் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றது. ஜீன்ஸின் புகழைக் காவியதில் அமெரிக்க இராணுவத்துக்கும் பெரும் பங்கு உண்டு. இரண்ட்ாம் உலகப் போரின்போது இங்கிலாந்து, ஜேர்மனி, ஜப்பான் என்று போய் இறங்கிய அமெரிக்கப் படைகள் சீருடைகளுடன் ஜீன்ஸ்களையும் எடுத்துச் சென்றன. ஒய்வு நேரங்களில் இவர்கள் ஜீன்ஸ் அணிந்து உலாவிய மிடுக்கில், உள்ளூர் வாசிகள் ஜீன்ஸ் பின்னால் அள்ளுண்டு போயினர். சினிமாவும், முற்றுகை இராணுவமும் வெகுசனப் பண் பாட்டில் எவ்வளவு தூரத்துக்குச் செல்வாக்குச் செலுத்தும் என்பதற்கு இன்று உலகம் பூராவும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் ஜீன்ஸ்களே சாட்சி.
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஏறத்தாழ 4 ஆயிரம் மில்லியன் மீற்றர்கள் அளவு ஜீன்ஸ் துணி விற்பனையாகிறது. ஜீன்ஸின்
83
Page 44
ஏழாவது ஊழி
முன்னோடியான அமெரிக்காவின் லெவி ஸ்ராஸ் நிறுவனமே உலக அளவில் ஜீன்ஸ் விற்பனையில் இன்றளவிலும் முன்னணியில் உள்ளது. வட அமெரிக்காவுக்கு சான் பிரான்சிஸ்கோவிலும், ஐரோப்பாவுக்கு புறுரசெல்ஸிலும், ஆசிய பசுபிக் பகுதிகளுக்குச் சிங்கப்பூரிலும் பிராந்திய தலைமையிடங்களைக் கொண்ட லெவி, பூகோளம் பூராவிலும் அரை இலட்சத்துக்கும் அதிகமான சில்லறை விற்பனை மையங்களினூடாகத் தனது தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தி வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டில், இதன் வருடாந்த விற்பனை 4,400 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியிருக்கிறது. ஜீன்ஸ் விற்பனையில் மட்டுமல்லாமல், ஜீன்ஸ் அணிவதிலும் அமெரிக்காவுக்கே முதலிடம். அமெரிக்கர்கள் படுக்கைக்குப் போகும் நேரத்திலும், தேவாலயத்துக்குப் போகும் நேரத்திலும் தவிர மீதி எந்நேரமும் ஜீன்ஸோடுதான் காணப்படுவார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. அந்த அளவுக்கு ஒவ்வொரு அமெரிக்கரும் சராசரியாக ஏழு ஜீன்ஸ் வைத்திருக்கிறார்.
அமெரிக்காவுக்கு வெளியே ஜின்ஸ் அதிகம் விற்பனையாகும் நாடுகளில் 113கோடி சனத் தொகையைக் கொண்ட இந்தியாவும் ஒன்று. 1970களின் மத்தியில் செய்மதித் தொலைக்காட்சியின் வருகையுடன் ஜீன்ஸ் குக்கிராமங்கள் வரை எட்டிப் பாய்ந்தது. இன்று உலகின் அத்தனை முன்னணிவகை ஜீன்ஸ்களுக்கும் இந்தியா மிகப்பெரிய சந்தை. இவை போதாதென்று, இந்தியாவில் பாரம்பரிய ஆடைகளை உற்பத்தி செய்து வந்த அரவிந்த் மில்ஸ் இப்போது நூற்றுக்கும் அதிகமான டெனிம் ஆடை வகைகளை உற்பத்தி செய்கிறது. உள்ளூர் சந்தையில் விற்பது போக, பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து, ஜீன்ஸ் தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில் உலகில் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. இன்றைய தேதியில், இந்தியாவில் ஆண்டுக்கு 25 மில்லியன் ஜீன்ஸ்கள் விற்பனையாகிக் கொண்டிருக் கின்றன. "எனக்கு ஏன் சார்ம்ஸ் சிகரெட் பிடிச்சிருக்குத் தெரியுமா? அதன் அட்டைப்பெட்டியில் அச்சாகியிருக்கும் ஜீன்ஸ் துணிதான் காரணம்' என்ற 'சார்ம்ஸ் (Charms) சிகரெட்டின் விளம்பரம் இந்தியாவில் மிகவும் பிரபலமானது. ஜின்ஸைக் காட்டி சிகரெட்டுக்கு விளம்பரம் தேடுகின்ற அளவுக்கு துணி உலகின் "கொக்கோ கோலாவாக இன்றைய தலைமுறையை ஜீன்ஸ் உற்சாகம் பீறிட வைத்திருக்கிறது. ஆனால், ஜீன்ஸின் மறுபக்கத்தைப் பார்க்க நேர்ந்தால், இந்த உற்சாகம் கோலாப் பானத்தின் பொங்கியெழும் நுரையைப் போல நொடியிலேயே வடிந்து
போய்விடும் என்பதுதான் உண்மை.
84
Page 45
ஏழாவது ஊழி
ஜீன்ஸ் துணிகள் பருத்திநூல் கொண்டு அவற்றின் உரமேறிய உழைப்புக்காக விசேடித்த இரட்டை நூலிழையும் முறையினால் நெய்யப்படுபவை. பருத்தி நார்கள் இயற்கையானவை என்பதால், ஜீன்ஸ் ஆடைகளையும் இயற்கையின் நண்பர்களாகவே கருதத்தோன்றும். ஆனால் ஜீன்ஸ் துணிகள், அவற்றைக் கொண்டாடும் மனிதர்களினதோ அல்லது இயற்கையினதோ நண்பர்கள் அல்ல. அன்பு, நட்பு, மகிழ்ச்சி போன்றனவற்றைக் குறியீடு செய்யும் அதனது நீலநிறத்துக்கு ஜீன்ஸின் குணவியல்புகள் எதுவிதத்திலும் பொருந்தாதவை. மூன்றாம் உலக நாடுகளின் பருத்தித் தோட்டமொன்றிலிருந்து மேற்குலகத்தின் குளிரூட்டப்பட்ட கண்ணாடிக் காட்சியறை வரைக்குமான தனது பயணப்பாதை நெடுகிலும் ஜீன்ஸ் ஏராளமான வன்முறைகளை விதைத்து வருகிறது.
ஜீன்ஸின் முதல் மூலப்பொருள் பருத்திப் பஞ்சு. உலகின் நார்களில் ஆகப்பிரபலமான இந்தப் பஞ்சினைப் பெற்றுக் கொள்வதற்காகப் பூமிப்பந்தில் 34 மில்லியன் ஹெக்டயர்கள் பரப்பளவில் இன்று பருத்திச் செடிகள் பயிரிடப்படுகின்றன. அமெரிக்காவுக்கே ஜீன்ஸ் அணிந்து விட்டதைப் போன்று மிகப்பெருமளவில் ஜீன்ஸை நுகரும் அமெரிக்காவைவிடப் பருத்தி உற்பத்தியில் இந்தியாவும் சீனாவும் முந்தி நிற்கின்றன. இந்தியாவில் 2008ஆம் ஆண்டில் 9 மில்லியன் ஹெக்டயர்களில் பருத்திச் செய்கை பண்ணப்பட்டுள்ளது. இது வெறுமனே நாடுகளின் பரப்பளவு சம்பந்தப்பட்ட ஒன்றல்ல. அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் எல்லாமே தமது நாடுகளில் ஜீன்ஸ் தயாரிப்பது பலவிதங்களிலும் பாதகமானது என்பதால் பருத்தி உற்பத்தி தொடங்கி ஜீன்ஸ் தைப்பது வரை எல்லாவற்றையும் மூன்றாம் உலக நாடுகளின் தலைமீது சுமத்தி விட்டிருக்கின்றன.
உலக வர்த்தக நிறுவனத்தின் துணையுடன் இன்று உலகை ஆண்டு கொண்டிருப்பது பன்னாட்டு நிறுவனங்கள்தானே. ஒருவேளை உணவைத் தன்னும் சரியாகப் பெறமுடியாமல் பசியுடன் இருக்கும் ஏழை நாடுகளின் விவசாய நிலங்கள் படிப்படியாக மான்சான்டோ, யுனிலிவர், சிங்கென்டா போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடம் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. நெல்லுக்கும் சோளத்துக்கும் பதிலாக ஜீன்ஸ் தயாரிப்புக்குத் தேவையான பருத்தியே இவர்களது விளைநிலங்களில் இன்று பெருமளவில் பயிரிடப்படுகிறது. அண்மைக் காலத்தில், இந்தியாவில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 60,000
86
பொ. ஐங்கரநேசன்
சிறு விவசாயிகள் கவர்ச்சிகரமான கடனுதவி போன்ற விளம்பரங் களினால் பருத்திச் செய்கைக்குத் தாவியிருக்கிறார்கள். எதியோப்பியா வின் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக மிகவும் வளமான அஸ்வான் பள்ளத்தாக்கின் 60 விழுக்காட்டுப் பகுதி பருத்திக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தைப் பெறுவதற்காக உள்ளூர்வாசிகள் வலுக்கட்டாயமாகக் காட்டுப் பகுதிகளுக்குக் குடிபெயர்க்கப்பட்டார்கள். ஜீன்ஸுக்காக அந்த ஏழைகளின் வயிறுகளைக் காயவைத்ததோடு, காட்டுத் துகிலையும் உரிந்து கொடுக்க வேண்டியதாயிற்று. எதியோப்பியா இன்று அனுபவித்து வரும் சூழலியல் அவலங்களுக்கு இதுவும் ஒரு காரணம்.
பருத்தியின் தாகம் பெரியது. சோவியத் ஒன்றியத்தின் ஒரு அங்கமாக விளங்கிய உஸ்பெகிஸ்தான் இன்று பருத்தி ஏற்றுமதியில் இரண்டாவது இடத்திலும், பருத்தி உற்பத்தியில் ஆறாவது இடத்திலும் உள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு உஸ்பெகிஸ்தான் பருத்திக்கு ஒரு கடலையே குடிக்கக் கொடுத்திருக்கிறது. நம்ப முடியாத உண்மை இது உஸ்பெகிஸ்தானையொட்டி ஏரல் கடல் உள்ளது. 1960களில் சோவியத் ஒன்றியம் ஏரல் கடலுக்கு நல்ல தண்ணிரை வழங்கிக் கொண்டிருந்த அமுர்தாரியா, சைர்தாரியா ஆறுகளை பருத்தி விளைவிப்பதற்கு நீர் வேண்டித் திசைதிருப்பி விட்டது. படிப்படியாகச் சுருங்கத் தொடங்கிய கடலில் இப்போது பாதிக்கு மேல் இல்லை. கரையில் இருந்து 100 கிலோ மீற்றர்கள் தள்ளிச் சென்றுதான் மீன்பிடிக்க வேண்டிய நிலை. அதுவும் 30 வகையான மீன்கள் இருந்த கடலில் 2 வகையான மீன்களே எஞ்சியுள்ளன. கடல் வற்றியதால் 36,000 சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவுள்ள கடற்படுக்கையில் உப்புகள் படிந்துகிடக்கின்றன. அவற்றைக் காற்று அள்ளிச் சென்று வளமான விவசாய நிலங்களில் சேர்த்து வருவதால் உணவுற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு குடிநீரும் உப்புக்கரிக்கின்றது. மோசமான குடிநீர் காரணமாக சிறுநீரக நோய்களால் அதிகம் பேர் அவதிப்படுகிறார்கள். கைக்குழந்தைகளின் மரண விழுக்காடு உலகிலேயே அதிகமாக உள்ள இடங்களாக ஏரல் கடலை ஒட்டிய பகுதிகள் ஆகிவிட்டன. உஸ்பெகிஸ்தான் பருத்திக்காகக் கொடுத்திருக்கும் இந்த விலை மிகமிக அதிகம். அந்நிய செலாவணியாக எவ்வளவு டொலர்கள் கிடைத்தாலும் இதனை ஈடுசெய்ய முடியாது. ஏரல் ஒர் உதாரணம்தான். பருத்தி வயல்கள் எல்லாவற்றிலும் ஆழக்குழாய் இறக்கி பூமியின் தொண்டை வறளவறள நீரை உறிஞ்சியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
87
Page 46
ஏழாவது ஊழி
பருத்திக்கு வேறு எந்தப் பயிர்களை விடவும் அதிகளவிலான பூச்சிக்கொல்லி நஞ்சுகளும் தேவைப்படுகிறது. உலகில் உபயோகிக்கப் படும் பூச்சிக்கொல்லிகளில் கால்வாசிப் பாகம் இந்தப் பருத்திச் செடி களின் மீதுதான் தெளிக்கப்படுகிறது. இந்தியாவிலோ, பூச்சி கொல்லி மருந்துகளில் பாதியளவு பருத்திக்கே செலவாகிறது. ஆனால் பீடை களையும், நோய்களையும் இன்னும் கட்டுப்படுத்தியபாடில்லை. விளைச்சலை மட்டும் கருத்திற் கொண்டு புதிது புதிதாக உருவாக்கப் படும் கலப்பினப் பருத்திச் செடிகள் பீடைகளுக்கும் நோய்களுக்கும் காட்டும் எதிர்ப்புத் தன்மை குறைவாக இருக்கிறது. அதிக அளவில் இரசாயனங்களைப் பயன்படுத்தப் பயன்படுத்த பீடைகள் அதற்கு இசைவாக்கம் பெற்று விடுகின்றன. மாறாக, நிலம் நஞ்சாவதுடன் மில்லியன் கணக்கான மக்களும் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் சோகம் என்னவெனில், பூச்சிக்கொல்லி நஞ்சுகளின் புட்டிகளில் இருக்கும் தற்காப்பு முறைகளைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு இந்த ஏழை விவசாயிகள் கல்வியறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். நான்கு விழுக்காடான பூச்சிக்கொல்லி மருந்துகளை இறக்குமதி செய்யும் ஆபிரிக்காவிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்த மருந்துகளால் நிகழும் மரணங்களும் அதிகமாக இருக்கின்றன. இயற்கையான உரங்களையும் பூச்சித் தடுப்பு முறைகளையும் பயன்படுத்தும் மாற்று நடவடிக்கைகள் பற்றிப் பேசப்பட்ட போதும் இன்று வரை அது சாத்தியமாகவில்லை. இந்தப் 'பசுமை முறைக்கு ஒரு டொலர் செலவழிக்கப்பட்டால் அதனைவிடப் புல ஆயிரம் மடங்குகளில் (சுமார் 4000 டொலர்கள்) புதிது புதிதான செயற்கை இரசாயனங்களை உற்பத்தி செய்வதற்குச் செலவழிக்கப்
படுகிறது.
இவ்வளவு இழப்புகளையும் பயிர்செய்நிலங்களில் கொடுத்து விட்டு வெளியே வரும் பருத்திப் பஞ்சு இங்கே மட்டும் வெள்ளை மனதுடன் இருந்து விடுகிறதா என்ன? சாயமூட்டப்படும் போது தன்பங்குக்கும் மிகப் பெருமளவு நஞ்சுகளைச் சூழலில் சேர்ப்பித்து வருகிறது. பருத்தி நூல்களை நீலமேற்ற, "இன்டிகோ (Indigo) சாயம் பயன்படுத்தப்படுகிறது. இன்டிகோ பழைய உலக இந்தியாவின் அறிமுகம். அதனால்தான் இன்டிகோ என்ற பெயர். அறிமுகத்தின்போது சில அவரையினச் செடிகளில் இருந்தும் கடல் நத்தைகளில் இருந்தும் பெறப்பட்ட இன்டிகோ, அதன்பிறகு முற்று முழுதாக செயற்கை இரசாயனங்களைக் கொண்டே உற்பத்தி செய்யப்படுகிறது. இன்டிகோ
88
பொ.ஐங்கரநேசன்
நீலம் நச்சுத் தன்மையானது. தயாரிப்பின் போதும் சாயமூட்டும் போதும் நிலத்தையும், நீரையும் நஞ்சுகளால் நீலம்பாரிக்கச் செய்துவிடுகிறது. இதனைக் கையாளுகின்ற தொழிலாளர்கள் படுகின்ற அவலங்களை, 19ஆம் நூற்றாண்டிலேயே ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ் Galpigs (William Wordsworth) g560g. The prelude Tairp 56,605uSai LD60TLD(pg.cgi/ பதிவுசெய்திருக்கிறார். போதாக்குறைக்கு சாயமூட்டிய ஜின்ஸை கற்சலவை (Stonewash) செய்ய 'பியூமைஸ் கற்களைத் தோண்டியெடுப்ப தால் நியூ மெக்சிக்கோவின் ஒருநிலப்பகுதி அப்படியே சூறையாடப் பட்டிருக்கிறது. "பியூமைஸ் (Pumice) என்பது எரிமலைக் குழம்புகளில் இருந்து உருவாகிய மயிர்த்துளைகளைவுடைய ஒரு வகைக் கல். 150 ஜீன்ஸ்களை நிறம் மங்கி வெளிறச் செய்ய 150 கிலோகிராம் பியூமைஸ் கற்களும், 750 இலிற்றர்கள் தண்ணீரும் தேவைப்படுகின்றன. இவற்றில் இருந்து வெற்று நாகரிகத்துக்காகச் சூழல் எவ்வளவு தூரம் நாசமாகி வருகின்றது என்பதை உய்த்துணரமுடியும்.
மேற்கு நாடுகள் தங்களது ஜீன்ஸ் தயாரிப்பு நிறுவனங்களை மூன்றாம் உலக நாடுகளில் இயக்க ஆரம்பித்திருப்பதற்குத் தமது சுற்றுச் சூழலைத் தற்காத்துக் கொள்வது மாத்திரம் காரணம் அல்ல. மூன்றாம் உலக நாடுகளில் சம்பாதிக்கக் கூடிய கொள்ளை இலாபமும் இதன் பின்னணியில் உள்ளது. மூன்றாம் உலகத்தில் நிலவும் வறுமை இவர்களுக்கு அங்கே இரத்தினக் கம்பள வரவேற்பைக் கொடுத்திருக் கிறது. இந்தியா, வங்காளதேசம், கவுதமாலா, பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் குறைந்த ஊதியத்துடன் நிறைந்த வேலையை இவர்களால் வாங்க முடிகிறது. இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களின் தொடுப்பில் உள்ள கலப்பினப் பருத்திவிதை உற்பத்திப் பண்ணைகள் பெண் குழந்தைகளைக் கொத்தடிமைகளாக வேலைக்கு அமர்த்தியுள்ளன. கலப்பு இன விதைகளை உற்பத்தி செய்வது இலேசான ஒன்றல்ல. ஒவ்வொரு பூவாகக் கைகளினால் செயற்கை முறையில் மகரந்தச் சேர்க்கையைச் செய்வது தொடங்கிப் பருத்திப் பஞ்சில் இருந்து தரமான விதைகளைப் பிரித்தெடுப்பது வரை அதிக அளவில் தொழிலாளர்களை வேண்டி நிற்பது. 6வயது தொடங்கி 14வயது வரையுடைய சுமார் நாலரை இலட்சம் பெண் குழந்தைகள் இந்தியாவின் கலப்பினப் பருத்தி வயல்களில் இவ்வாறு வெய்யிலில் காய்ந்து கொண்டிருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆந்திராவில் தெலுங்கானா, ராயல சீமா பகுதிகளிலேயே இந்தக் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் பேருள்ளனர். கண்ணிரும் கம்பலையுமாக வாடி நிற்கும் இந்தக்
89
Page 47
ஏழாவது ஊழி
குழந்தைகளில் ஒன்றின் பிஞ்சு விரல்கள் தடவி உருவாக்கிய பருத்திப் பஞ்சிலிருந்துகூட நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் ஜீன்ஸ் நெய்யப்பட்டிருக்கலாம்.
வறிய நாடுகளில் உள்ள ஆடை தயாரிப்பு நிலையங்களிலும் நெசவாளர்களாகக் குறைந்த கூலிக்குப் பெண்களே பெரிதும் அமர்த்தப் படுகின்றனர். கனடாவில் 34 டொலர்களுக்கு விற்பனையாகும் ஜீன்ஸ் மேலாடை ஒன்றுக்கு அதைத் தைத்துக் கொடுத்த கூலியாக எல்சல்வடோரில் உள்ள ஒரு ஏழைப் பெண்ணுக்கு ஒரு டொலருக்கும் குறைவான தொகையே வழங்கப்படுகிறது. இவர்கள் பாலியல் வன்முறை களுக்கு ஆளாக்கப்படுவதும் சகஜமான ஒன்று. தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போராடுவதற்கு இந்தத் தொழிலாளிகள் வலுவற்றவர்களாகவே இருக்கிறார்கள். எல்சல்வடோரில் இயங்கும் தாய்லாந்துக்குச் சொந்தமான மான்டரின் எனும் சர்வதேச ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளர்கள் தங்களுக்குகென ஒரு சங்கம் அமைக்க முயற்சித்தபோது நிர்வாகத்தால் 300க்கும் அதிகமானோர் சுட்டுத் தீர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
இப்போது சொல்லுங்கள்! நாகரிகம், கம்பீரம் என்று நாம் அணிந்து கொண்டிருக்கும் ஜீன்ஸ், அநாகரிகம் என்று சொல்லி எமது மனசாட்சி எம்மைத் தலை குன்றச் செய்யாதா? நாளை இந்த ஜீன்ஸ் மோகம் மாறி பாரம்பரிய ஆடைகளுக்கு நாம் திரும்பவும் கூடும். ஆனால் அது அழித்து விட்டுப் போயிருக்கும் நிலத்தை, இந்த ஏழைத் தொழிலாளிகளின் வாழ்க்கையை யார் மீட்டுத் தருவார்கள்?
8
காதினுள் பாயும் நஞ்சு
"பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாது உண்பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்'
— сежѣдbПgyp/ (4: 1o—12)
நாம் இரைச்சல் மிகுந்த ஒரு சமூகம். நமது தெருக்களெங்கும் ஒன்றையொன்று முந்தித்தள்ளியவாறு விரைந்து கொண்டிருக்கும் வாகனங்களின் உறுமல்கள், அவற்றின் ஒலியெழுப்பிகளின் பிளிறல்கள், வரிசைகட்டி நிற்கும் ஒலிபெருக்கிகளின் கதறல்கள் என்று சத்தவெள்ளம் கரைபுரண்டோடுகிறது. தொழிற்சாலைகளில் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும் இயந்திரங்களின் கர்ண கடூர ஒலி கவிந்து கணக்கின்றது. சமூக அரங்குகளை திரையிசைப் பாடல்களும் துள்ளல் இசைக்கருவி களும் அதிரவைத்துக் கொண்டிருக்கின்றன. வீடுகள் தோறும் உச்ச ஸ்தாயியில் அலறித் தீக்கும் வானொலி - தொலைக்காட்சி அலை வரிசைகள், அரவை-சலவை இயந்திரங்களின் மூலம் ஒலி மூலைமுடுக்கு களிலெல்லாம் பிரவாகித்தவாறு உள்ளது. அமைதி தவழ வேண்டிய ஆலயங்களும் தப்பிப்பதாக இல்லை. மந்திர உச்சாடனம், பிரித் ஒதுதல், ஜும்மா தொழுகை, தேவ ஆசீவாதம் என்று வேறுபாடு இல்லாமல் எல்லா மதச்சடங்குகளுமே ஒலிபெருக்கிகளில்தான் உரத்துக் கொண்டி ருக்கின்றன. மொத்தத்தில், சத்தத்தின் அடை மழையில் இருந்து ஒருவர் ஒதுங்குவதற்கு பெரும்பாலும் இடமே இல்லை என்ற நிலைதான்.
எம்மை அறியாமலேயே ஒலி வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டி ருக்கும் நாம் இந்த இரைச்சல்கள் குறித்து அதிகம் பொருட்படுத்து வதில்லை. இவற்றை உறக்கத்துக்கும் உரையாடல்களுக்கும் நேரும் தொந்தரவுகள் என்று மட்டும்தான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சத்தங்களின் சூழல் சீர்கேடுகள் தொடர்பான அண்மைக்கால ஆய்வின் முடிவுகளோ செவிப்பறையில் ஓங்கி அறைகின்றன. இந்த ஆய்வுகளெல்லாம் தண்ணிரில் கலக்கும் கழிவுகளைப் போல, காற்றில் குவியும் புகை வேதிகளைப்போல காற்று சுமந்து வந்து காதினுள்ளே
91
Page 48
ஏழாவது ஊழி
வீசிவிட்டுப் போகும் இரைச்சல்களும் உளநலத்துக்கும் உடல்நலத்துக்கும் பேரூறு செய்யும் மாசுகள்தான் என்பதை நிரூபணம் செய்துள்ளன.
லக்சம்பர்க்கில் டாக்டர் ஜோன்சன் என்பவர் தொழிலாளர்களைப் பல்வேறு ஒலிச்சூழலில் பணிபுரிய வைத்து ஆராய்ந்து பார்த்துள்ளார். முடிவுகள் அவரைத் திடுக்கிட வைத்தன. ஒலி அதிகமான சூழலில் பணிபுரிந்தவர்கள் கொடுமை நிறைந்தவர்களாகவும், ஆதிக்க மனப் பான்மை கொண்டவர்களாகவும், பீதி உணர்வு மிக்கவர்களாகவும் மாறி யிருந்தனர். இத்தாலியில் டாக்டர் மாகெரி பல்கலைக்கழக மாணவர் களை வைத்து ஒரு சோதனை நடத்தினர். பல்கலைக்கழகத்தின் மிகச் சிறந்த மாணவர்கள் எண்பது பேரைத் தேர்வு செய்து தொழிற்சாலை யொன்றின் சந்தடிமிக்க சூழலில் வினாக்களுக்கு விடையளிக்க வைத்தார். எண்பது பேருமே படிப்பில் சூரர்கள். அவ்வாறு இருந்தும் இரைச்சலின் அளவு அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் தவறு செய்வதும் அதிகமாகிக் கொண்டே சென்றுள்ளது.
அதிக ஒலிகளுக்கு இடையில் மனிதர்கள் வாழ நேரிடும்போது அவர்கள் நிறக்குருடர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பதைப் பிரான்ஸில் நிகழ்த்தப்பட்ட ஒரு சோதனை வெளிப்படுத்தியுள்ளது. பதினைந்து நிமிடங்களுக்கு உரத்த ஒலி உள்ள சூழலில் நிற்கும் ஒருவர் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நிறக்குருடால் அவதிப்பட நேரிடுமாம். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிக ஒலியளவால் பாதிக்கப் படும்போது அவர்களுக்கு இரத்தக்குழாய்களில் கொழுப்புப் படிவு ஏற்படவும், இரத்தக்குழாய்கள் சுருங்கி இரத்த ஓட்டம் தடைப்படவும், மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் உண்டு எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொழும்பைச் சேர்ந்த முன்னணி இதய நோய் நிபுணர் டி.பீ அத்துக்கோறள. இவர் தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் பல நாட்களாகத் தினமும் அதிகாலை 5 மணிக்கு மார்புவலிக்கு ஆட்பட்டதாகவும் இதற்குக் காரணம் அந்த நேரத்தில் பெளத்த விகாரைகள் ஒலிபெருக்கும் 'பிரித் சத்தம்தான் எனவும் கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது இதய நோயாளிக்ளில் மேற்குறிப்பிட்ட நண்பர் உட்பட இன்னும் பலர் ஒலிபெருக்கிகளின் 'பிரித் சத்தம் காரணமாகவே அதிகாலை வேளைகளில் மரணமடைய நேர்ந்ததாகவும் பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் இந்திய மருத்துவக் கழகமும் தன் பங்குக்கு ஆய்வு களை மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தினமும் உரத்த ஒசைகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு மன
92
Page 49
ஏழாவதுஉஊழி
அழுத்தம், எதற்கெடுத்தாலும் படபடப்பு, எதிலுமே மனதை ஒருமுகப் படுத்த முடியாமை, களைப்பு, உணவுக் குழாயில் அழற்சி (அல்சர்) எனப் பலவும் வரும் எனப் பயமுறுத்தியுள்ளது. கூடவே, இன்னொரு குண்டையும் தூக்கிப்போட்டிருக்கிறது. வெகு விரைவில் இந்திய மாநகரங்களில் உள்ளவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு வகையில் செவிப்புலன் பாதிப்புக்கு ஆளாகியிருப்பர் என்பதுதான் அது. இந்திய மருத்துவக் கழகத்தின் இந்த அறிவிப்பை அலட்சியப்படுத்து வதற்கு இல்லை. சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் சமூகப் பணித் துறை சென்னை மாநகரின் வணிகக் கேந்திரமையங்கள், தொழிற் பேட்டைகள், குடியிருப்புப் பகுதிகள், அமைதிவலயங்கள் என்று வெவ்வேறு பகுதிகளிலும் ஒலியின் அளவுகளைப் பதிவு செய்ததில் எல்லா இடங்களிலுமே அனுமதிக்கப்பட்ட எல்லையையும் தாண்டி ஒலியின் அளவு ஏகத்துக்கும் எகிறியிருப்பது தெரியவந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவிலும் பார்க்கச் சென்னை நகரின் ஒலி அளவு 50 விழுக்காடால் அதிகரித்திருப்ப தால் விரைவிலேயே சென்னை நகரவாசிகள் அரைச்செவிடர்களாகும் ஆபத்து இருப்பதாக இன்னு மொரு ஆய்வறிக்கை எச்சரித்திருக்கின்றது.
இவற்றுக்கெல்லாம் மேலாக அதிகப் போக்குவரத்து இரைச்சல், சனசந்தடி காரணமாக 'ரினைற்றஸ் (Tinnius) எனப்படும் வேறொரு வினோத நோயும் உலா வருகிறது. உட்காதின் நத்தைச்சுருள் கால்வாயில் சீப்பு ஒன்றில் பற்கள் அமைந்திருப்பது போல ஆயிரக்கணக்கான மயிர்க்கலங்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். ஒலியை வாங்கி மின் துடிப்புகளாக மூளைக்கு அனுப்பி வைப்பவை இவைதாம். சிலந்திவலை இழையொன்றின் தடிப்பளவேயான இம்மயிர்க்கலங்கள் அளவுக்கு மீறிய சத்தங்களை வாங்க நேரிடும்போது தாங்கமுடியாமல் ஒடிந்து போகின்றன. இப்படி, மயிர்க்கலங்கள் உடைந்து போனவர்களில் சத்தமே இல்லாத அமைதியான நேரத்தில்கூட காதுகளில் சில்வண்டின் இரைச்சல் போல நாள் பூராவும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கும். இந்தப் பாதிப்பைத்தான் ரினைற்றஸ் என்கிறார்கள். ரினைற்றஸால் பாதிக்கப்படுபவர்கள் கடைசியில் செவிட்டுத் தன்மைக்கு ஆளாகவும் நேரிடலாம். தொழில் வளர்ச்சியடைந்த இயந்திரமய நாடுகளில் இந்தக் கோளாறு அதிகம். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மில்லியன் கணக்கானோர் இதனால் தங்களது அன்றாட வாழ்க்கையை வாழமுடி யாமல் அவதிப்படுகிறார்கள். போர்க்களங்களில் பங்கேற்ற இராணுவத் தினர்களிலும் ரினைற்றலின் தாக்கம் பரவலாக உணரப்பட்டுள்ளது.
94
பொ. ஐங்கரநேசன்
இரண்டாம் உலகப்போரின் போது ஜேர்மனியின் மியூனிச் நகரம் கடுமையான விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களுக்கு இலக்கானது. அப்போது அங்கிருந்த விலங்குக் காட்சியகத்தில் வசித்த 'போனபோ குரங்குகள் எல்லாம் இறந்து போயின. அவற்றின் உடலில் காயங்கள் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. குண்டு வெடிப்பு அதிர்வுகளினால் இதயம் பாதிக்கப்பட்டே இறந்தனவாம். போனபோ (Bonobo) மனிதக் குரங்குகளில் மனிதர்களுக்கு மிகவும் நெருக்கமான இனம். பெண் ஆதிக்கச் சமூகமான இவை, சிம்பன்சிகளைப் போல அல்லாது மிகவும் சாத்வீகமாகவே வாழ விரும்புவை. அமைதி விரும்பிகளான இவற்றின் மெல்லிதயங்களால் குண்டுச் சத்தங்களைத் தாங்க இயலவில்லை. வன்னிப் பெருநிலப்பரப்பில் பூரீலங்கா போர் விமானங்கள் குண்டு வீச்சுகளை நிகழ்த்தியபோது இளவயதினர் பலர் மயங்கிச் சரிந்தது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது. குண்டு வெடிப்புச் சத்தங்கள் மாத்திரமல்ல; குண்டு வீச்சு விமானங்களின் பறத்தலுமே ஆபத்தானதுதான். போர் விமானங்கள் 'சுப்பர்சோனிக் (Super Sonic) எனப்படும் மிகையொலி விமானங்கள் ஆகும். அதாவது ஒலியின் வேகமான மணிக்கு 1230 கிலோமீற்றர்கள் என்பதையும் தாண்டி மிகையான வேகத்தில் பறப் பவை. இவை ஒலியின் வேகத்தையும் கடந்து மிகையொலி வேகத்தில் பறக்கும் போது வளிமண்டலத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இடியென முழங்குகின்றன. இந்த விமானங்களின் முழக்கங்களும் குண்டு வெடிப்புச் சம்பவங்களும் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்ட ஈழத்தமிழர் களிடையே முறையான ஆய்வுகளை மேற்கொண்டால் ஒலிமாசின் புதிய பயங்கர முகங்கள் மேலும் தெரிய வரலாம்.
ஒலியின் முக்கிய இயல்புகளில் ஒன்றான ஒலியின் உரப்பு (Loudness) அல்லது ஒலித்தீவிரம் 'டெசிபெல்' (Decibe) என்கிற அளவு முறை யாலேயே அளவிடப்படுகிறது. ஒரு 'பெல்' என்பது 10 டெசிபெல்கள். ஆனால், இரண்டு பெல் என்பது 20 டெசிபெல்கள் அல்ல; 100 டெசிபெல்கள். இங்கு டெசிபெல் என்பது பத்தின் மடங்குகளாகும் (தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரஹாம் பெல் அவர்களது நினை வாகவே ஒலியளவுக்கு இந்தப் பெயர்). நமது மூச்சுக்காற்று 10 டெசிபெல்கள் என்பதில் இருந்து மரங்களின் சல சலப்பு 20 டெசி பெல்கள், சாந்தமான உரையாடல் 30 டெசிபெல்கள், வானொலி இசை 50 டெசிபெல்கள், உரத்த பேச்சு 60 டெசிபெல்கள் என்று அத்தனை ஒலிகளையும் அளவெடுத்து வைத்திருக்கிறார்கள். இந்த அளவீடுகளை அறிந்து கொள்வதற்கென கருவிகள் (Sound Level Meters) உள்ளன.
95
Page 50
ஏழாவதுஉஊழி
கேட்டலைப் பாதிக்கக்கூடிய எந்த ஒரு ஒலியையுமே சத்தம் என்று வரையறை செய்திருக்கிறார்கள். பொதுவாக 50 டெசிபெல் களுக்கும் அதிகமான ஒசை நிரம்பிய அறையில் அமைதியான உரையா டலைத் தெளிவாகக் கேட்க முடியாது. அதுவும், 70 டெசிபெல்களை எட்டிவிட்டால் எதுவுமே கேட்காது. இதன் அளவு 120 டெசிபெல்களுக்கு (ஒலி பெருக்கிகளின் ஒலி அளவு) போய்விட்டால் காதுகளுக்குத் துன்பம்தான். 130 டெசிபெல்களுக்கும் மேல் போவது அதிகம் ஆபத்தானது. இயந்தரக் கோளாறுகளுடைய மோட்டார் சைக்கிள் எழுப்பும் ஒலி 105 டெசிபெல்கள். இது, சிலரது செவிப் புலனை ஒரு மணி நேரத்தில் பாதித்து விடும். பேருந்துகளிலும் சரக்குந்து களிலும் நீதிமன்ற தடையுத்தரவையும் மீறிப் பயன்படுத்தப்படும் காற்றொலியெழுப்பிகள் (Air Horn) கதறும் சத்தத்தின் அளவு 135 டெசிபெல்கள். இரண்டே நிமிடங்களில் மயிர்க்கலங்களில் சிலவற்றைச் சிதைக்க இது போதும். ராக் இகை ஸ்டீரியோ கருவிகள் சிலவற்றின் ஒலி அளவுகளும் 135 டெசிபெல்கள்தான். இயந்திர ஓசைகளும் வாகனங்களின் இரைச்சல்களும் மட்டுமே காதுகளைக் கெடுக்கக் கூடியவை என்பதல்ல. இசையுமே அது சங்கீதமாக இருந்தால்கூட பெரும் ஒசையாகும்போது நாசத்தையே பரிசாகத் தருகிறது.
இத்தனை நஞ்சுகளையும் சுமந்து கொண்டுவரும் சத்தங்களின் மத்தியிலேயே பகலில் மட்டுமல்ல; இரவிலும் பொழுதைக் கழிக்க வேண்டியதாய் உள்ளது. உலக சுகாதார நிறுவனம் அமைதியான ஆழ்ந்த தூக்கத்துக்கு 35 டெசிபெல்கள் அளவுடைய ஒலிச் சூழலைப் பரிந்துரை செய்திருக்கிறது. இதன்படி கடிகாரம் ஒன்றின் டிக். டிக் ஓசையே தூக்கத்தைக் கெடுக்காத தாலாட்டாக இருக்க முடியும். ஆனால், உலகில் எத்தனை பேருக்கு இப்படி ஒரு நிசப்தமான படுக்கையறை வாய்த்திருக் கிறது? மிகப் பெரும்பாலானோர் 50 டெசிபெல்கள் சூழலிலேயே நித்திரை என்ற பெயரில் புரண்டு கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சத்தத்தை உறிஞ்சும் இயற்கை வடிகட்டிகளான மரங்களைக் கட்டிடக் காடுகளின் நடுவே தொலைக்கத் தொடங்கிய பிறகு சத்தம் ஒரு பெரும் அரவமாகப் படுக்கை அறைகள் வரையிலும் நுழைந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
உரந்த ஒலி காதினுள் பாயும் நஞ்சுகள்தான் என்பது வெளிச்சத்துக்கு வந்ததுமே மேற்கு நாடுகள் விழித்துக் கொண்டன. கைத்தொழில் அபிவிருத்தி காரணமாக முதலில் ஒலிமயமான இந்நாடுகள் அவற்றைக் களைவதிலும் முந்திக்கொண்டு சிரத்தை
96
பொ.ஐங்கரநேசன்
யெடுத்து வருகின்றன. ஐரோப்பிய நாடுகள் பலவும் தமது பிரதான நகரங்களில் நிலவிவரும் ஒலி அளவுகளைக் குறித்துக்காட்டும் சத்த வரைபடங்களை (Noise maps) தயாரித்து அவற்றைப் பொது மக்களின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளன. நெதர்லாந்து சத்தத்தினால் ஏற்படக்கூடிய சீர்கேடுகளிலிருந்து குடிகளைத் தற்காத்துக் கொள்ள வேண்டி 50 டெசிபெல்களுக்கு மேல் ஒலிமிகுந்த பிரதேசங்களில் குடியிருப்புகளை நிறுவுவதற்குத் தடை விதித்திருக்கிறது. பிரித் தானியாவில் அளவை மீறி ஒலியெழுப்புபவர்களிடமிருந்து தண்டப் பணம் அறவிடும் வகையில் உள்ளூராட்சி நிர்வாக அலகுகளுக்கேகூட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2007 டிசம்பரில் நிகழ்ந்த சம்பவம் இது. இத்தாலியின் மலைக் கிராமம் ஒன்றில் விவசாயி ஒருவர் வளர்த்து வந்த சேவல் அதிகாலையில் சற்று உரத்துக் கூவும் வழக்கமுடையது. அயலவர்கள், சேவல் எழுப்புகின்ற சத்தத்தினால் தமது தூக்கம் கெடுவதாக வழக்கு தொடுத்ததில் நீதிமன்றம் தண்டமாக விவசாயிடம் 200 யூறோ அறவிட்டுள்ளது. மேலும், சேவலை அப்புறப் படுத்துமாறும் உத்தரவிட்டிருக்கிறது. இப்படி ஒலி மாசுபாடுகள் தொடர்பான விழிப்புணர்வும் ஒலிமாசுபாடுகளைக் கட்டுப்படுத்து வதற்கான கடுமையான சட்ட விதிகளும் கைகோத்துச் செயற்படுவதால் வளர்ச்சியடைந்த நாடுகள் பலவற்றின் பொது இடங்களில் செல்லிடப் பேசிகளின் சிணுங்கல்களைக்கூடக் கேட்க முடிவதில்லை.
மணிகள் கட்டப்பட்ட தேரிலே வருகின்ற தலைவன் அத்தேரின் மணி, ஒலி வண்டுகளின் அமைதியைப் பாதிக்கும் எனக் கருதி அம்மணி யின் நாவைக் கட்டித் தேரை ஓட்டி வந்ததாக அகநானூறு பகர்கிறது. ஆனால், சங்கப் பழந்தமிழில் புளகாங்கிதம் கொள்ளும் இன்றைய தமிழ்ச் சமூகம் மதச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பவற்றின் பெயரால் அடுத்தவர் காதுகளுக்குள்ளேயே நின்று சப்தித்துக் கொண்டிருக்கிறது. நாம் இரைச்சல் மிகுந்த ஒரு சமூகம் மாத்திரமல்ல; விரும்பியோ விரும்பாமலோ சத்தங்களை மோகிக்கும் ஒரு சமூகமாகவும் மாறிவிட்டிருக்கிறோம்.
97
Page 51
9
செல்லிடப் பேசிகள்
6JJUDIT - GFTUL DIT?
நுணனும் தன் வாயால் கெடும்"
- செவ்வியல் பழமொழி
நவீன தொடர்புச் சாதனங்களுக்கு ஒருபோதுமே வரவேற்புக்குப் பஞ்சம் இருந்ததில்லை. ஆனால், செல்போன்களை இந்த அளவுக்குக் கொண்டாடுவார்கள் என்று எவருமே நினைத்திருக்கமாட்டார்கள். முதன் முதலாக, 1977 இல் சிக்காக்கோவில் பாவனைக்கு வந்த செல் போன் இன்று குக்கிராமங்களிலெல்லாம் சிணுங்கிக் கொண்டிருக்கிறது. தொழிலதிபர்கள் தொடங்கி கூலித் தொழிலாளிகள் வரையில், முதியோர் முதல் சிறார்கள் வரையில் தகுதி - வயது - பால்வேறுபாடின்றி எல்லாத் தரப்பினரது கைகளிலும் வளைய வந்து கொண்டிருக்கிறது. பயன்பாட்டுக்கு வந்த குறுகிய காலத்துக்குள்ளேயே, இந்த அளவுக்கு வெகுசனமயப்படுத்தப்பட்ட தொழில் நுட்பச் சாதனம் அநேகமாகச் செல்போன்களாக மட்டுமே இருக்கும்.
செல்லுமிடமெல்லாம் எடுத்துச் சென்று பேசத்தக்க வண்ணம் வடிவமைக்கப்பட்ட இந்த செல்லிடப்பேசிகளில் நோக்கியா, மோட்ட ரோலா, சாம்சங், சோனி எரிக்சன், சீமென்ஸ், எல்.ஜி, அல்க்காரெல். என்று ஏராளமான தயாரிப்புகள். ஒவ்வொரு தயாரிப்பிலும் விதம்விதமான வடிவங்கள். இவற்றில் வெறுமனே பேசுவதற்கு மட்டுமல்லாமல் எஸ். எம்.எஸ் எனப்படும் குறுந்தகவல் சேவை, புகைப்படம், வீடியோ, வானொலி மின்னஞ்சல் என்று பல்வேறு வசதிகள். இவற்றுக்கு செல் ரெல், டயலொக், மொபிரெல், ஹக் ஏர்ரெல், ஏர்செல், றிம் என்று பல இணைப்புகள். இத்தனை பரிவாரங்களுடன் டிஜிட்டல் புரட்சியில் களமிறங்கியிருக்கும் செல்லிடப் பேசிகள், விற்பனையில் ஏனைய தொழில் நுட்ப சாதனங்களையெல்லாம் ஓரங்கட்டி, தூள் கிளப்புகின்றன.
செல்லிடப் பேசிகள் தென் ஆசியாவில் முதன் முதலாக இலங்கையினுள்ளேதான் நுழைந்தன. 'மில்லிகொம் இன்ரர்நேஷனல்
98
பொ.ஐங்கரநேசன்
என்னும் சர்வதேசிய நிறுவனம், 1989இல், ‘செல்ரெல்' என்ற இணைப்புச் சேவையை ஆரம்பித்து வைத்தது. இலங்கையில் இன்று சுமார் 5 இலட்சம் கணினிகள் பாவனையில் உள்ளன. இவற்றில் ஒன்றரை இலட்சத்துக்கும் குறைவான கணினிகளே இணைய (internet) வசதி பெற்றுள்ளன. ஆனால் இலங்கையின் 20 மில்லியன் சனத்தொகையில் 10 பேருக்கு ஒருவர் செல்லிடப்பேசியும் கையுமாகத் திரிந்து கொண்டிருக்கிறார்கள். உலக அளவில் ஆண்டுக்கு 20 கோடிக் கணினிகளும், 20 கோடி தொலைக்காட்சிகளும் விற்பனையாகின்றன. ஆனால் கார்ட்னர் என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில் 2007 ஆம் ஆண்டில் 115.2 கோடி செல்லிடப் பேசிகள் விற்பனை ஆகியுள்ளன. 2008 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 122.2 கோடி. இவற்றில் 38.6 விழுக்காடு விற்பனையைப் பெற்று பின்லாந்தின் நோக்கியா நிறுவனம் முதலாம் இடத்திலும், 16.8 விழுக்காடு விற்பனையைப் பிடித்து தென்கொரியாவின் சாம்சங் இரண்டாவது இடத்திலும் உள்ளன. 8.7 விழுக்காடு விற்பனையைப் பெற்று அமெரிக்காவின் மோட்டரோலா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
செல்லிடப்பேசிகள் உபயோகத்துக்கு வந்த புதிதில் அது பணக் காரர்களின் அந்தஸ்தைக் காட்டும் ஒரு அடையாளமாகவே இருந்தது. உதாரணத்துக்கு, இந்தியாவில் இதன் சேவையை 1995, ஆகஸ்ட் 22 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் டெல்ஸ்டா மற்றும் பி.கே, மோடி குழுமம் இணைந்து கூட்டாக ஆரம்பித்தது. அப்போதைய மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அவர்கள் சம்பிரதாய பூர்வமாகப் பேசித் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கையில் இருந்த செல்லிடப்பேசியின் விலை இந்திய ரூபாய்களில் 45,000. ஒரு நிமிடம் பேசுவதற்கான கட்டணம் 16 ரூபா 80 சதம். இன்று இந்தியாவில் 24 தயாரிப்பு நிறுவனங்கள், 165 மாதிரிகளில் செல்லிடப்பேசிகளை உற்பத்தி செய்கின்றன. நோக்கியா மாத்திரமே விதம்விதமாக 28 வடிவங்களில், செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்களும் இணைப்பு நிறுவனங்களும், காளான்களாக முளைத்ததில், இன்று சாமானியர்களின் சட்டைப்பைகளிலும் மலிவுக் கட்டணத்தில் செல்லிடப் பேசிகள். பத்து வருடத்தில், இந்தியா எங்கும் ஏழு கோடிப் பேரை செல்லிடப் பேசிகள் சென்றடைந்தன. இப்படி பாரபட்சம் இல்லாமல் ஒரு நவீன தொடர்பாடல் தொழில்நுட்பம் எல்லோரையும் எட்டியிருப்பதில், செல்லிடப்பேசிகளுக்கு ஒரு தடவையல்ல; பல முறை தலை தாழ்த்தலாம்.
99
Page 52
ஏழாவது ஊழி
ஆனால் நவீன வசதிகள் என்று வரும்போது கூடவே அவை ஆபத்துகளையும் அழைத்துவருகின்றன என்பதற்கு இந்தச் செல்லிடப் பேசிகளும் விலக்காகவில்லை. பயன்பாட்டுக்கு வந்த நாள் முதலே, நிழல் உலக நடவடிக்கைகளுக்குத் துணை போகின்றன என்றும், பயணம் செய்து கொண்டே பேச முற்படுவதால் விபத்துக்களுக்கான பிரதான காரணமாய் உள்ளனவென்றும் பல்வேறு குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகின. இப்போது இவை எல்லாவற்றையும் விடப்பயங்கரமான, செல்லிடப்பேசிகளின் இன்னுமொரு முகம் தெரிய ஆரம்பித்திருக்கிறது.
தொடர்பாடலில் செல்லிடப் பேசிகளினது பிறப்பின் நோக்கம் துலாம்பரமானது. கம்பி வழித்தொலைபேசியில் ஒருவரைத் தொடர்பு கொள்ள இயலாத நிலையில், அந்தத் தொடர்பு இடைவெளியை இட்டு நிரப்புவதற்கென்றே செல்லிடப் பேசிகள் அவதரித்தன. ஆனால், சொட்டாகப் பேச வேண்டிய அவை இன்று அரட்டை அரங்கங்களாகப் பேசித் தீர்க்கின்றன. இதில், தங்கள் வாடிக்கையாளர் களினது வாய் மூடிவிடக்கூடாது என்பதில் இணைப்பு நிறுவனங்கள் கண்ணும் கருத்துமாக உள்ளன. இவை தருகின்ற இலவச நேரங்கள், சலுகைக் கட்டணங்கள், விளம்பரங்கள், 'பேசு கண்ணா பேசு' என்று, தொடர்பாடல் என்றாலே அது செல்லிடப் பேசிகளினூடாக மாத்திரம்தான் என்று ஊக்குவித்து வருகின்றன. புகைப் பழக்கத்துக்குப் போதையாகி விட்டவர்களைப் போல, செல்லிடப் பேசிகளைப் பயன்படுத்துபவர்களிலும் பெருமளவிலானோர் அதனை வாய்விட முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார்கள். இவர்களுக்கு மருத்துவ மனைகள், கருத்தமர்வு அரங்குகள், திரையரங்குகள், பேருந்துகள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், நூலகங்கள் ஏன் - தேர்வு மண்டபங்கள் கூட ஒரு பொருட்டாக இல்லை. மெய்மறந்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். நவீனத் தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் இந்தத் துஷ்பிரயோகம் தொழில்நுட்பத்தின் பேரபாயமாக உருவெடுத்துள்ளது.
செல்லிடப்பேசிகள் வானொலி தொடர்பாடலை ஆதாரமாகக் கொண்டவை. செல்லிடப்பேசிகளுக்கும், அவற்றுக்குக் கிட்டவாக வுள்ள ஆதாரக் கோபுரத்துக்கும் இடையே உரையாடல்கள் மின்காந்த அலைகள்ல் ஏற்றி அனுப்பப்படுகின்றன. இதில், செல்லிடப் பேசிகளின் அலைஈர்ப்பியில் (Antenna) இருந்து 2 வாற் (Watt) அளவிலும், ஆதார நிலையத்தின் அலைஈர்ப்பியில் இருந்து 60 வாற் அளவிலும் கதிர்வீச்சு நிகழுகின்றது. ஒருவர் செல்லிடப் பேசியைக் காதில் அழுத்திய
1OO
Page 53
ஏழாவதுஉஊழி
வண்ணம் உரையாடும்போது, தொலைபேசியின் அலை ஈர்ப்பி sing/Slairp Lisairsnipigid digital 356fair (Electro Magnetic Radiation - EMR) முற்றுகைக்குள் அவரை அறியாமலே ஆளாகின்றார். இந்த மின்காந்த அலைகள் ஏற்படுத்துகின்ற பாதிப்புகள் குறித்து, உலகம் பூராவுமிருந்து ஆய்வாளர்கள் அண்மைக்காலமாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
இங்கிலாந்தின் வோர்விக் (Warwick) பல்கலைக்கழகத்தின் இயற்பியல் விஞ்ஞானி ஜெரால்ட் ஹைலான்ட் (Gerald Hyland), அலை ஈர்ப்பிகள் உமிழும் கதிர்வீசலினால் மூளையின் பல செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகப் பட்டியலிட்டுள்ளார். கதிர்வீசல் நரம்புகளில் செய்திகளைக் காவிச் செல்லுகின்ற மின்துடிப்புகளை இடையூறு செய்கிறது. அத்தோடு மூளையிலுள்ள குருதிமயிர்க் குழாய்களின் மெல்லிய அகவணிக்கலங்களைச் சிதைத்து, இரத்தத்தில் உள்ள நஞ்சுகளை தங்கு தடையின்றி மூளையில் கலக்கவும் வழிசெய்கிறது. இவற்றின் விளைவாக தலைவலி, நித்திரையின்மை, ஞாபகக் குறைபாடு போன்றவைகளுடன் மூளையிலும் காதிலும் கட்டிகளும் ஏற்படு கின்றன. சுவீடனைச் சேர்ந்த புற்றுநோய் நிபுணர் லென்னார்ட் ஹார்டெல் என்பவரும், செல்லிடப்பேசியை அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளையில் கட்டிகள் (BrainTumour) ஏற்படுவதற்கான வாய்ப்பு, மற்றைய வர்களை விட 2.5 மடங்குகள் அதிகம் எனத் தெரிவித்திருக்கிறார்.
நோட்டிங்ஹாம் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டேவிட் டி பொமிராய் (David de Pomera) புகைபிடிப்பதால் ஒருவர் வாழ்நாளைச் சுருக்கிக் கொள்வதைப்போல, அதிக அளவில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்துவோரின் வாழ்நாளும் குறையத் தொடங்கியிருப்பதாக அச்சமூட்டும் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். கதிர்வீசல் உடற் கலங்களை சூடுபண்ணி உடலின், பாதுகாப்புப் பொறிமுறையைத் தொழிற்படாதவாறு தடைசெய்வதாகவும், தோலைச் சேதப்படுத்தி வயதுக்கு மீறிய முதிர்ந்த தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உயிரின் இருப்பு இதயத்தின் 'லப் டப்' துடிப்புக் களிலேயே அடங்கியிருக்கிறது. இதயத்தில் உள்ள "பேஸ்மேக்கர் (Pace Maker) என்னும் அமைப்பு மின் துடிப்புகளை அனுப்பி தாளலயம் தப்பாமல் இதயத்தை இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது. இந்த இதய இயக்கி சரிவரத் தொழிற்படாதவர்களுக்குச் செயற்கையான பேஸ்மேக்கர் சாதனம் ஒன்றை அறுவைச் சிகிச்சையின் மூலம் பொருத்தி
1Ο2
பொ.ஐங்கரநேசன்
விடுவார்கள். இதனை இயக்குவதற்கு மின்கலம் ஒன்று இணைக்கப் பட்டிருக்கும். இப்படிச் செயற்கைப் பேஸ்மேக்கரிடம் உயிரை ஒப்படைத்து விட்டு உலகில் பல இலட்சக்கணக்கானோர் உலாவி வருகின்றனர். இதன் சில மின்சாரப் பகுதிகள் அலை வாங்கிகளாகச் செயற்படக் கூடியவை. இவை செல்லிடப்பேசிகளின் மின்காந்த அலைகளை ஈர்த்துத் தமது உணர்திறன் மிக்க மின்சுற்றினுள் இறக்கி விடுவதால் பேஸ்மேக்கரின் இயக்கம் பாதிக்கப்படுகின்றது. இது இதயத்தை முற்றாகவே செயலிழக்கச் செய்யவும் கூடும். அப்பலோ மருத்துவமனையின் இதய அறுவைச்சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த டாக்டர் பபானந்ததாஸ், பேஸ்மேக்கர் கருவியைப் பொருத்தி உள்ள வர்கள் இதயத்தில் இருந்து ஓர் அடி தொலைவில் செல்லிடப்பேசி களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என அறிவுறுத்தியுள்ளார்.
செல்லிடப் பேசிகளின் அபாயவளையத்தினுள் அதிகம் ஆட்பட்டிருப்பது வளர் குழந்தைப்பருவம்தான். செல்லிடப்பேசி நிறுவனங்களும், இணைப்பு நிறுவனங்களும், இதுவரை அதிகம் வசூலாகாமல் இருந்த இந்தப்பருவத்தினரது சந்தையை இப்போது குறிவைக்கத் தொடங்கியுள்ளன. குழந்தைகளுக்கு மிகவும் நெருக்கமான மிக்கிமவுஸ், பார்பி, டொனால்ட் டக் உருவங்களைக் காட்டி அவர்களை வசீகரித்து வருகின்றன. தங்களுடைய பிறந்த நாள் பரிசாகப் பல குழந்தைகளும், இதனையே வற்புறுத்துகின்றன. தங்கள் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் என்பதை அறியவேண்டி பெற்றோர்களும் மசிந்துவிடுகிறார்கள். ஜப்பானில் சமீபத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வில், ஆரம்பப் பள்ளிக்குச் செல்லும் 7 தொடங்கி 12 வயதுக்குட் பட்ட மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் செல்லிடப் பேசிகளைப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
முன் எப்போதையும் விட அதிக அளவில் கதிர்வீச்சுக்கு ஆளாகி வரும் இன்றைய இந்த வளர்குழந்தைத் தலைமுறை பற்றி மருத்துவ உலகு கடும் கவலை கொண்டுள்ளது. குழந்தைகளுடைய மெல்லிய மண்டையோடு செல்லிடப் பேசிகளின் கதிர்வீச்சைத் தடுக்கப் பலமின்றி, ஆழமாக ஊடுருவ அனுமதிக்கின்றன. உள்ளே மூளையிலும் நரம்பு இழையங்களிலும் வளர்ச்சி நிகழ்ந்து கொண்டிருப்பதால் கதிர்கள் அவற்றின் டீ.என்.ஏ (DNA) இழைகளைச் சேதமாக்குவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாகவே உள்ளது. இது புற்றுநோய்வரை இட்டுச் செல்லும் என டாக்டர் லென்னார்ட் எச்சரித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, அண்மையில் இங்கிலாந்து அரசு 16 வயதுக்குட்பட்ட பள்ளிக்
1O3
Page 54
ஏழாவதுஉஊழி
குழந்தைகள் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்து மாறு பள்ளி நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து ஏராள மான பிரசுரங்களையும் வெளியிட்டுள்ளது. அமெரிக்கக் கடைகளிலும் குழந்தைகள் செல்லிடப் பேசிகளைப் பயன்படுத்துவது தொடர்பான எச்சரிக்கை வாசகங்கள் விளம்பரப்படுத்தப் பட்டுள்ளன.
செல்லிடப் பேசிகளின் ஆபத்துகள் பற்றி முதன் முதலில் 1993 ஆம் ஆண்டுதான் வெளியுலகத்துக்குத் தெரிய வந்தது. அமெரிக்காவின், புகழ் பெற்ற சி. என். என் (CNN) தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியான "லாரிகிங் லைவ் ஷோவில் பங்கு பற்றிய டேவிட் ரெய்னார்ட் என்பவர் தனது மனைவி மூளைப் புற்று நோயால் மரணமடைய என். ஈ. சி செல்லிடப் பேசி நிறுவனம்தான் காரணம் என்று குற்றம் சுமத்தியதோடு வழக்கும் தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட போதும், அப்போது 150 இலட்சம் பேர் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தி வந்த அமெரிக்காவில் செல்லிடப் பேசி நிறுவனங்களுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இதையடுத்து செல்லிடப் பேசிகள் பாதுகாப்பானவை என நிறுவும் பொருட்டு செல்லிடப்பேசி நிறுவனங்களின் கூட்டமைப்பு 1993இல் ஆய்வுகளுக்கு ஏற்பாடு செய்தது. மருத்துவ விஞ்ஞானி டாக்டர் ஜோர்ஜ் கார்லோ (George Cario) தலைமையில் ஆய்வுகள் இடம் பெற்றன. இதில் செல்லிடப்பேசிகளின் பாதிப்புகள் ஒவ்வொன்றாகத் தெரியவரத் தொடங்கியது. ஆய்வுகள் மேலும் தொடருவதை விரும்பாத நிறுவனங்கள் உடனடியாகவே ஆய்வுக்கான நிதியுதவியை நிறுத்திக் கொண்டன. டாக்டர் ஜோர்ஜ் கார்லோ ஒதுங்கவில்லை. ஒரு மருத்துவருக்கே உரித்தான அறநெறியின் பேரில் இதனை அம்பலப் படுத்தியதோடு, செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய அபாயங்கள் பற்றிய புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
செல்லிடப்பேசிகளின் கதிர்வீசல் மட்டுமல்ல; செல்லிடப் பேசி களில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) அனுப்புகின்ற முறைகூட சமயங் களில் பிரச்சினைகளைத் தோற்றுவித்து விடுகிறது. குறுந் தகவல்கள் செல்லிடப்பேசிகளின் வலைப்பின்னலில் பெரும் தகவல் வெள்ள மாகவே கரைபுரண்டு கொண்டிருக்கின்றன. இந்தியாவில் மாத மொன்றுக்கு 330 கோடி குறுந்தகவல்கள் பரிமாறப்படுகின்றன. பள்ளி - கல்லூரி மாணவர்களின் கைங்கரியமே இதில் அதிகம். இவர்களிடையே எஸ்.எம்.எஸ் ஒரு "மேனியா போலவே நிலவுகிறது. சென்னை லயோலா கல்லூரி காண்பியத் தொடர்பாடல் துறையின்
1O4
பொ.ஐங்கரநேசன்
விரிவுரையாளர் சுரேஷ் பால், கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டிருந்த மாணவியொருவர், அந்த அமர்வு பூராவுமே வெறி கொண்டவரைப் போல எஸ். எம். எஸ் அனுப்பிக் கொண்டிருந்ததைக் கண்ணுற்றதாக குறிப்பிட்டுள்ளார். இப்படி அளவுக்கு மீறி, அறிவையும் மீறி எஸ். எம். எஸ் அனுப்பும் போது கட்டை விரலைத் தொடர்ச்சியாக அழுத்தி வைக்க நேரிடுகின்றது. ஆரம்பத்தில் எந்தப் பிரச்சினையும் தென்படாது. ஆனால் சில வருடங்களில் கட்டை விரலில் நீடித்த வலி ஏற்பட்டு, அதன் வழமையான இயக்கமே பாதிக்கப்படும் என்று டெல்லியைச் சேர்ந்த பிரபல எலும்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் மனோஜ் மாலிக் அண்மையில் முதல் சங்கை ஊதியிருக்கிறார்.
செல்லிடப்பேசிகள் அரங்கேற்றிவரும் இத்தனை அனர்த்தங் களையும் விட, இன்னும் பார்வைக்கு வராத பெரும் சூழலியற்சிர்கேடு ஒன்றும் உள்ளது. செல்லிடப் பேசிகளின் ஆயுள் குறைவு என்ற வகையில், பெருவாரியாக அவை இளைப்பாற ஆரம்பித்துள்ளன. " விரைவில் மில்லியன் கணக்கான எண்ணிக்கையில் குப்பை மேட்டுக்கு வந்து விடும். சில வருடங்களில், ஆண்டுதோறும் அமெரிக்கர்கள் கழித்து எறியும் செல்லிடப்பேசிகளின் எண்ணிக்கை 130 மில்லியன் களாக இருக்கும் என்று 'இன்ஃபோம் (Inform) என்னும் சூழல் ஆராய்ச்சி அமைப்பின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஆர்சனிக், பெரிலியம், கட்மியம், ஈயம், நிக்கல், நாகம் என்று சுமார் 65,000 தொன்கள் டிஜிற்றல் கழிவுகள். இவை எல்லாமே சூழலில் நீடித்திருந்து, உயிர்களில் செறியக்கூடிய நஞ்சுகள். நரம்புகளினதும், இனப்பெருக்க அமைப்புகளினதும் செயற்பாடுகளை ஒழுங்கு குலைப்பதோடு, புற்று நோய்களையும் ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாகக் குழந்தைகளை மிக மோசமாகப் பாதிக்க வல்லவை.
ஆனால், செல்லிடப்பேசி நிறுவனங்கள் இவை எதனையும் கண்டுகொள்வதாக இல்லை. ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் என மறுத்து வருகின்றன. இவர்களுக்கு ஆதரவாக ஆய்வாளர்கள் சிலரும், தங்களது ஆய்வுகளில் செல்லிடப்பேசிகளின் பாதிப்புகள் பற்றி எதுவுமே கண்டறியப்படவில்லை என நற்சான்றிதழ் கொடுத்துள்ளனர். அதே சமயம், இவர்களில் பலரும் செல்லிடப்பேசிகள் என்பதே சமீபத்திய அறிமுகம் என்பதால் நீண்ட காலம் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை இப்போது கூறமுடியாது என்றும் தெரிவித்துள்ளனர். சிகரெட், அஸ்பெஸ்ரஸ் போன்றவை உபயோகத்துக்கு வந்த போதும் அவற்றின் உபத்திரவங்கள் பற்றி விஞ்ஞானிகள் வாய் திறந்தபோது இதே
1O5
Page 55
ஏழாவது ஊழி
வாதங்களே நிகழ்ந்தன. ஆனால் பல்லாண்டுகள் கழித்து அவற்றின் சுயரூபங்களை உலகம் அறிந்து கொள்ள முடிந்தது. செல்லிடப்பேசி களின் விளைவை அறுவடை செய்வதற்கும் இன்னும் காலம் இருக்கின்றது. அதுவரை பொறுத்திருக்கப் போகின்றோமா?
இறக்கை கட்டிக்கொண்டு பறக்கும் இந்த அவசர உலகில் செல்லிடப் பேசிகளின் பாவனை தவிர்க்க முடியாதது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதே அளவுக்கு, செல்லிடப்பேசிகளின் பாவனையை மட்டுப்படுத்துவதென்பதும் தவிர்க்க முடியாததாக ஆகிவருகிறது. இயன்றவரை தரைவழித் தொலைபேசிகளைப் பயன் படுத்துதல், அவசரம் ஏற்படின் காதருகில் அழுத்திப் பேசுவதைவிட அதனுடன் செவிப்பன்னியை (ear phone) இணைத்துப் பேசுதல், சமிக்ஞைகள் (Signals) குறைந்திருக்கும் போது செல்லிடப் பேசியைப் பலவந்தப்படுத்திப் பேச முற்படுவதைத் தவிர்த்தல், இதன் பிடியிலிருந்து குழந்தைகளை விடுவித்தல் என்று. செல்லிடப்பேசிகள் எங்களை ஆளவிடாது, அவற்றில் எமது ஆளுமையைச் செலுத்தப் பழகிக் கொள்ளுதல் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அண்மை யில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தனது ஆட்சிக்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் செல்லிடப் பேசிகளைப் பயன்படுத்து வதற்குத் தடைவிதித்திருப்பதைப் போல, பொதுஇடங்களில் செல்லிடப் பேசிகளின் கட்டுப்பாடுகள் குறித்து நாமும் தீவிரமாக யோசிக்கலாம். இதில் பேச்சுச் சுதந்திரம் குறித்துச் சிலர் குரல் உயர்த்துதல் கூடும். ஆனால், தொடர்பாடலின் அற்புதமாகக் கருதப்படும் செல்லிடப் பேசிகள் தொழில்நுட்பத்தின் சாபமாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்வதற்குச் சிலவற்றைச் செய்துதான் ஆகவேண்டும்.
1O6
10
தள்ளடும் மினமாட்டா
"ஆலை முதலாளிகள் சுத்தம், சுகாதாரம் பேணும் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதால் தங்களுடைய இலாபத்தில் பங்கம் ஏற்படும் எனில் ஒரு போதும் அதைச் செய்வதில்லை"
- ósmitfab Lommieš6iv.
மினமாட்டா, ஜப்பானின் கியூஷூ தீவின் கரையோரத்தில் உள்ள ஒரு தொழிற்பேட்டைச் சிறுநகரம். ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களைப் போல இந்தக் கடலோரச் சிறுநகருக்கும் ஒரு சோகக்கதை இருக்கிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் ஆறாத ரணங்களை ஹீரோஷிமாவும் நாகசாகியும் இன்றும் சுமப்பது போல, ஜப்பானின் தொழிற்புரட்சியின் அவல சாட்சியமாக மினமாட்டா உள்ளது.
1953இல் மினமாட்டா (Minamata) குடாவிலும், அதனை அண்டிய கரையோரக் குடியிருப்புகளிலும் இனங்காணமுடியாத அனர்த்தங்கள் நிகழ ஆரம்பித்தன. கடலில் மீன்களும், சிப்பிகளும், பிற கடற்கரை வாழ் விலங்குகள் பலவும் இறந்து தரையொதுங்கின. பறவைகள் நிலை தடுமாறி வானத்திலிருந்தும், மரக்கிளைகளிலிருந்தும் விழுந்து இறந்தன. பூனைகளின் நடத்தை இயல்புக்கு மாறாக அமைந்தது. வாயில் நுரைதள்ள, எந்த நேரமும் சிரிப்பது மாதிரி விநோதமான ஒரு சத்தத்தை எழுப்பின. மது அருந்தியவை போலத் தள்ளாடித் தள்ளாடி இறக்கும் வரையில் வட்டமடித்தன. பல பூனைகள் மினமாட்டாக் குடாவில் விழுந்தும், உயரமான மாடிகளிலேறிக் கீழே குதித்தும் தற்கொலை செய்து கொண்டன. அதிர்ச்சியும், ஆச்சரியமுமாக இவற்றைப் பார்த்த மினமாட்டா வாசிகள் பூனைகளுக்கு ஒரு வகைப் பைத்தியம் பீடித்திருப்பதாக நம்பினார்கள். புதுமாதிரியான அந்த வியாதிக்கு நடனமாடும் நோய் (Dancing disease) என்று பெயர் சூட்டப்பட்டது.
மீனைக் கடித்து, பூனையைக் கடித்து, கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக 1956இல் மினமாட்டா மக்களிலும் பாதிப்புகள் தெரியத் தொடங்கின. உதடுகளில், கை-கால்களில் உணர்வு மரக்க
1O7
Page 56
ஏழாவது ஊழி
ஆரம்பித்தது. பேச்சு நாக்குழறியது. விழிகளில் கண்மணிகள் வீங்கிப் பெரிதாக பார்வை பறிபோனது. விரைவில் மூளை மோசமாகப் பாதிக்கப் பட, நிறுத்த முடியாமல் உடல் நடுங்கியது. நோயுற்ற பூனைகளைப் போலவே இவர்களும் தள்ளாடத் தொடங்கினர். சிலர் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் கூச்சல்போட சிலர் மயங்கிச் சரிந்தனர். இப்படி, 50 பேர் வரையில் பலியாகினர். குடும்பம் குடும்பமாக ஆயிரக்கணக் கானோர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் கருச்சிதைவுக்கு ஆளாகினர் அல்லது அங்கவீன மான, மூளை வளர்ச்சி அற்ற குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். பூனைகளில் இருந்து நடன நோய் தொற்றுவதாக மினமாட்டா நகரமே பூனைகளைக் கண்டு பீதியில் உறைந்தது.
என்னவென்று அடையாளம் காணப்படாததால் ஊரின் பெயரிலேயே மினமாட்டா நோய் (Minamata disease) என்று அழைக்கப் பட்ட இந்த அனர்த்தங்களுக்கு அதே ஆண்டிலேயே விளக்கம் கிடைத்தது. சிஸ்ஸோ கூட்டுத்தாபனத்தின் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஹஜிமி ஹொசோகாவா (Dr.Hajme Hosokawa) தன்னிடம் சிகிச்சை பெற வந்தவர்களிடம் மேற்கொண்ட சோதனையில் அவர்களில் மைய நரம்புத் தொகுதி பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தார். தொற்று நோய் அல்ல என்றும், மீன்உணவின் மூலம் உடலில் சேரும் உலோக நஞ்சுகளே இவ்வாறு நரம்புகளைச் செயலிழக்க வைப்பதாகவும் தெரிவித் தார். தொடர்ந்த விசாரணைகளில் நோயின் புதிரை முதன்முதலாக விடுவித்த இந்த மருத்துவர் பணியாற்றிய சிஸ்ஸோ கூட்டுத் தாபனமே உலோக நஞ்சுகளின் பிறப்பிடம் என்று உறுதியாகியது.
மினமாட்டா நகர் ஷிரானுயி (Shiranu) கடலையும், அதன் ஒரு அங்கமான மினமாட்டாக்குடாவையும் ஒட்டி அமைந்திருக்கிறது. நகரில் வசிப்பவர்களிற் பெரும்பாலானவர்கள் மீன் பிடித்தலிலும், விவசாயத்திலும் வாழ்க்கையை ஒட்டுபவர்கள். இங்கு, சிஸ்ஸோ கூட்டுத்தாபனம், 'தொழில்மயத்தின் பயன்களைக் கிடைக்குமாறு செய்வோம்' என்ற உறுதிமொழியின் மூலம் மினமாட்டாவாசிகளை இசைய வைத்துத் தனது உரத்தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளை 1907 ஆம் ஆண்டு ஆரம்பித்தது. "சிஸ்ஸோ' (Chisso) என்றால் ஜப்பானிய மொழியில் நைதரசன் (Nitrogen) என்று பொருள். பெயருக் கேற்ப, சிஸ்ஸோ இயங்க ஆரம்பித்ததும் தங்களது வாழ்க்கை ஊட்டம் பெறும் என்றுதான் மினமாட்டா மக்கள் பெரிதும் நம்பியிருந்தார்கள். ஆனால், ஆலை நிர்வாகம் மறுதலையாகச் சிந்தித்தது. அலுவலர்கள்
1O8
Page 57
ஏழாவது ஊழி
தரப் பணியாளர்கள் ஜப்பானின் தலைநகர் ரோக்கியோவில் இருந்து வரவழைக்கப்பட்டனர். உள்ளூர்வாசிகள் பெரிதும் கடைநிலைத் தொழிலாளர்களாகவே அமர்த்தப்பட்டனர். ஆலைக்கழிவுகளைச் சுத்தம் செய்யும் தொழில்நுட்பத்துக்கு ஆகும் செலவுடன் ஒப்பிடுகையில், கழிவுகளை அப்படியே கடலில் சேர்ப்பிக்கும்போது அதனை ஆட்சேபிக்கும் சிலருக்குக் கொடுக்க வேண்டிய கையூட்டு பன்மடங்கு குறைவு என்று கணக்குப் பார்த்த நிர்வாகம் 1925 இல் இருந்து கழிவுகளைக் கால்வாயொன்றின் மூலம் நேரடியாகவே கடலுக்கு அனுப்பத் தொடங்கியது.
சிஸ்ஸோ உர உற்பத்தியை நிறுத்தி, 1932 ஆம் ஆண்டில் இருந்து பிளாஸ்ரிக் தயாரிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தது. பிளாஸ்ரிக்கின் மூலப் பொருளான ‘அசற்றல்டிகைட்டு’ (Acetaldehyde) என்னும் வேதிப்பொருளைப் பெருமளவில் உற்பத்தி செய்தது. பிளாஸ்ரிக்கின் கடினத்தை நெகிழ்த்தும் 'டீ.ஓ.ரி'- (D.0.T. Diothy Phthalate) என்னும் இரசாயனத்தின் ஒரேயொரு தயாரிப்பு நிறுவனமாகவும் சிஸ்ஸோ இயங்கியது. மினமாட்டாவின் மற்றைய தொழிற்சாலைகள் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்திய தொழில் வளர்ச்சியின் போதே இலாபம் காணத்தொடங்கின. ஆனால், ஜப்பானின் பொருளாதாரம் மிக மந்தநிலைக்குச் சரிந்த உலகயுத்த காலத்தின்போதுகூட, சிஸ்ஸோ மினமாட்டாவின் மிகப் பெரும் தொழில் நிறுவனமாக இலாபத்தைச் சுவைத்துக் கொண்டிருந்தது. இருந்தும், தனது நச்சு எச்சங்களைக் சுத்திகரிப்பு எதுவும் இன்றித் தொடர்ந்தும் கடலினுள்ளேயே கழித்துத் தள்ளியது.
சிஸ்ஸோ கூட்டுத்தாபனத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள்தான் மினமாட்டாவைத் தள்ளாடுவிக்கின்ற நோயின் மூலம் என்று ஆய்வாளர்கள் பகிரங்கப்படுத்தியபோது, அதற்கு வாய்ப்பே இல்லை என்று சிஸ்ஸோ அடியோடு மறுத்தது. நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்காகக் கழிவுகளின் அகற்றிடங்களை மினமாட்டா குடாவிலிருந்து, மினமாட்டா நதிக்கு இடம்மாற்றியது. மினமாட்டா நதியும் ஷிரானுயி கடலையே தேடிப் போகிறது. சில மாதங்களில், சிஸ்ஸோதான் இத்தனை அவலங்களுக்கும் காரணம் என்பதை உறுதிப்ப்டுத்துவது போல நதியின் வழிகளில் உள்ளவர்களிலும் இந்த விசித்திர நோய் குடிகொண்டது. ஆனால் சிஸ்ஸோவின் இயந்திரத் தனமான நெஞ்சம் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்தும் சூழலை நச்சுப்படுத்தி வந்தது.
1O
பொ. ஐங்கரநேசன்
1959இல் ஜப்பானின் குமோமோட்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சிஸ்ஸோவின் கழிவுகளுக்கும் மினமோட்டா நோய்க்கும் இடையிலான தொடர்பை விரிவாக விளக்கினர். சிஸ்ஸோ, பிளாஸ் ரிக்கின் மூலப் பொருளான அசற்றல்டிகைட்டை உருவாக்குதலில் வினை ஊக்கிகளாகப் பாதரசத்தின் சேர்வைகளைப் பயன்படுத்துகிறது. பாதரசத்தின் சேர்வைகளிலிருந்து விடுவிக்கப்படும் பாதரச அயன்கள் கழிவு நீருடன் கடலில் கலந்தது. பாதரச அயன்கள் அதிகம் பாதகமானவை அல்ல. ஆனால், கடலில் படியும் இவை கடற்சேற்றில் உள்ள பக்ரீறியங்களால் "மெதையில் மேர்க்கூரி (MethylMercury) என்னும் ஆபத்துமிக்க நச்சு இரசாயனமாக மாற்றப்படுகிறது. இந்த மெதையில் மேர்க்கூரிதான் மினமாட்டாவின் அத்தனை அனர்த்தங்களுக்கும் காரணமாகியது. மெதையில் மேர்க்கூரி முதலில், மீன்கள் உணவாகக் கொள்ளும் கடலின் மிதவை உயிரிகளின் (Planktons) மூலம் மீன்களினுள் நுழைகின்றது. பின்னர் பறவைகள், பூனைகள், மனிதர்கள் என்று மீன்களை உணவாகக் கொள்ளும் எல்லா உயிர்களையும் போய்ச் சேருகிறது. மெதையில் மேர்க்கூரி உடற்கழிவுகளுடன் வெளியேறாதது ஆகையால் சிறுகச்சிறுகத் தேங்கிச் செறிந்து நரம்புத் தொகுதியை மோசமாகப் பாதிக்கச் செய்கிறது. அதுவும் உணவுச் சங்கிலியின் உச்சப்படியில் மனிதன் இருப்பதால் உயிர் விதிக்கு அமைய, பெருக்கல் விகிதத்தில் மிகவும் அதிகமாகவே மனிதனில் இரசவேதி குடியேறுகிறது. இந்த விளக்கம் அறிக்கையாக வெளியிடப்பட்டது.
அந்த வருடமே, மூவாயிரம் மீனவர்கள் வரை தொழிற் சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். நட்ட ஈடு கோரினர். ஆனால் சிஸ்ஸோ நோய் பீடித்தவர்களுக்கோ இறந்தவர் களின் குடும்பத்தினருக்கோ உதவிகள் எதனையும் செய்ய முன்வர வில்லை. மாறாக பெரும் செலவு செய்து தன்மீதுள்ள குற்றச்சாட்டின் ஆதாரங்களை இருட்டடிப்புச் செய்ய முயன்றது. சிஸ்ஸோ மருத்துவமனையின் டாக்டர் ஹொசோகாவா வசம் இருந்த ஆய்வுகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தது. அவர் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபடுவதற்குத் தடை விதித்தது. தன்னுடைய ஏற்பாட்டில் ஆய்வுக் குழுவொன்றை அமைத்து, தொழிற்சாலையின் கழிவுகளுக்கும் இரச நஞ்சூட்டலுக்கும் எதுவித தொடர்பும் இல்லையெனச் சொல்ல வைத்தது. நகரின் ஆட்சித் தலைவர்கூட சிஸ்ஸோ கூட்டுத்தாபனம் நட்ட ஈடு வழங்கத் தேவையில்லை என அறிவித்தார்.
111
Page 58
ஏழாவது ஊழி
பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக 1969 இல் சிஸ்ஸோ கூட்டுத் தாபனத்திற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. சிஸ்ஸோ, இதற்கு ஒரு வருடத்துக்கு முன்பே 1968இல், இரசத்தின் பாவனையை நிறுத்திவிட்டதாகச் சொன்னது. அதுவும் வலுத்து வரும் எதிர்ப்பினால் அல்ல; இரசத்தைப் பயன்படுத்தும் செயல்முறை காலாவதியானதால் அம்முறையைக் கைவிட்டது. ஆனால், 1932இல் இருந்து 1968 ஆம் ஆண்டு வரை அது கழித்து வைத்த இரசம் கடலில் இருந்தது. ஏறத்தாழ 20 தொன்கள். இரசச் சேர்வைகள் சிதைந்து அழியாமல் நீண்ட காலம் இருக்கக் கூடியவை. அவற்றின் வதை தொடர்ந்து கொண்டிருந்தது.
மினமாட்டாவில் அனர்த்தங்கள் தொடர்ந்து கொண்டிக்கும் போதே, 1971 இல் மினமாட்டாவுக்கு சில மைல்கள் அப்பாலுள்ள ஒரு நகரில் இன்னுமொரு இரசாயனத் தொழிற்சாலை இரசத்தினால் மக்களை நஞ்சூட்டியது. பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்லவே, தீர்ப்புத் தொழிற்சாலைக்கெதிராக அமைந்தது. இச்செய்தி அடங்கியிருந்த மினமாட்டா மக்களை மீண்டும் தட்டியெழுப்பியது.
இக்காலப்பகுதியில், அமெரிக்காவின் "லைஃப் பத்திரிகையின் புகழ்பெற்ற புகைப்பட இதழியலாளர் இயூஜீன் சிமித் (Eugene Smith) ஆற்றிய பணி மிகவும் முக்கியமானது. அமெரிக்கரான இவர், ஜப்பானியப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். மனைவி சகிதம் மினமாட்டா வந்து பாதிப்பின் களநிலவரங்களை நேரடியாகத் தரிசித்துச் செய்தியாக்கினார். இதற்காகச் சிஸ்ஸோ கூட்டுத்தாபனத் துக்குச் சென்றபோது ஒரு தடவை நையப்புடைக்கவும் பட்டார். இவர் பிரசுரித்த புகைப்படங்கள் சிஸ்ஸோவுக்கு எதிரான பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தன. அவற்றில், இரச நஞ்சினால், உடல் ஊனங்களுடன் 1956இல் பிறந்த ரொமோக்கோ இமூரா (Tomoko Uemura) என்னும் பெண் குழந்தையை அதன் 16 வயதில் தாயார் குளியல் தொட்டியில் நீராட்டியபோது பிடிக்கப்பட்ட படம் பார்ப்பவர்களை நெகிழ்த்துவதாக அமைந்தது.
இந்தச் சம்பவங்களெல்லாம் மினமாட்டா விவகாரத்துக்கு எண்ணெய் வார்க்க, 1973இல் கூட்டுத்தாபனம் குற்றச்சாட்டைப் புறக் கணிக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாதிக்கப்பட்ட வர்களும், தொழிற்சாலை நிர்வாகமும் கலந்து பேசியதில் நோயினால் இறந்தவர்களின் குடும்பத்தினர், நோயினால் கடுமையாகப் பாதிக்கப்
112
பொ. ஐங்கரநேசன்
பட்டவர்கள், குறைவாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்று தரம் பிரித்து அவர்களுக்குச் சிறிது தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. இத்தொகை நோயாளிகளின் பராமரிப்புக்குப் போதாதென்ப தால், பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அதிகமாகக் கேட்டார்கள். பேச்சு வார்த்தை முறியும் தறுவாயில், கூட்டத்திலிருந்த நோயாளியொருவர் விரக்தியாலும் கோபத்தாலும் மேசையிலிருந்து கண்ணாடிச்சாடி யொன்றை ஓங்கி அடித்து நொறுக்கவே அது அவர் கைகளில் குத்தி இரத்தம் சிதறியது. அதிர்ச்சியில் உறைந்து போன தொழிற்சாலைத் தரப்பு தொகையை அதிகரித்துத் தருவதாக ஒப்புக் கொண்டது.
மினமாட்டா மக்களை முடமாக்கியதில் சிஸ்ஸோ கூட்டுத் தாபனத்துடன், அதற்கு நிகரான அளவில் ஜப்பானிய அரசின் பங்கேற்பும் உள்ளது. நாடு பிடிக்கும் காலனியாதிக்கப்போட்டியில் ஆசியாவிலிருந்து கடைசியாகக் கலந்து கொண்ட ஜப்பான் பலத்த பின்னடைவுகளைச் சந்தித்தது. இதனால் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததுமே நாட்டின் இராணுவ - பொருளாதாரப் பலத்தைத் தேசிய இலக்குகளாகக் கொண்டு தீவிரமாகச் செயற்படத் தொடங் கியது. வணிக நிறுவனங்களுக்குத் தாராளம் காட்டியது. தொழிற்சாலை களினால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகக் குரலெழுப்பும் அமைப்புகள் கூட தேசிய பாதுகாப்பின் பெயரால் ஒடுக்கப்படுமளவுக்கு வணிக நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்டன. ஒன்றையொன்று ஒம்புகின்ற ஜப்பானிய அரசியலும் - வாணிகமும் முதலாளித்துவத்தைப் பிரதிநிதித் துவம் செய்யும் ஒரு நிறுவனமாக இறுகிப் பலம் பெற்றது. உலக யுத்தத் துக்குப் பின்னான காலப்பகுதியிலும் அரசு இக்கூட்டமைப்பில் மாற்றங் களைக் கொண்டு வரவில்லை. அதனாலேயே, சிஸ்ஸோ கூட்டுத் தாபனம் கடலில் நஞ்சூட்டிக் கொண்டிருந்தபோது ஜப்பானிய அரசு வாழாவிருந்தது.
ஜப்பானிய அரசாங்கத்தை, பாதிக்கப்பட்டவர்கள் 1982ஆம் ஆண்டில் ஒஸாக்கா மாவட்ட நீதிமன்றின் கூண்டில் நிறுத்தினார்கள். பல்வேறு நீதிமன்றங்களின் படிகளில் ஏறிய வழக்கு ஒருவாறாகக் கடந்த 2004 அக்டோபர் 15ஆம் தேதி ஜப்பானிய உச்சநீதிமன்றில் முடிவுக்கு வந்தது. சிஸ்ஸோவை அரசு தடுத்து நிறுத்தாமையைக் கடுமையாகக் கண்டனம் செய்த தீர்ப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், காலம் பிந்திய இந்த நீதியைப் பாதிக்கப் பட்டவர்களால் அதிகம் கொண்டாட இயலாது. அரசினால் பாதிக்கப் பட்டவர்களாக அங்கீகரிக்கப்பட்ட சுமார் 3000 பேரில் இதுவரையில்
113
Page 59
ஏழாவது ஊழி
1700 பேர் மரணத்தைத் தழுவியுள்ளனர். எஞ்சியுள்ளவர்களிலும் பெரும் பாலானோர் கை, கால்கள் நடுங்குவது முதல் முழுஉடலும் மரத்தது வரை நோயின் பல்வேறு பரிமாணங்களையும், தள்ளாத வயோதிபத் தையும் சுமந்தவாறு வாழும் பிணங்களாக உள்ளனர். இவர்களைத்தவிர நிவாரணம் பெறுவதற்குரிய மருத்துவ அங்கீகாரத்துக் காக இன்னும் 12,000 பேர்வரையில் கோளாறுகளுடன் காத்திருக் கிறார்கள்.
மினமாட்டாவின் கதை சூழலியல் வரலாற்றில் ஒரு படிப்பினை யாக இடம்பெற்று விட்டது. ஆனால், உலகில் சூழல் பாதுகாப்பைப் புறக்கணிக்கும் தொழிற்சாலைகளை இதன் பக்கங்கள் தடுத்து நிறுத்துவதாகத் தெரியவில்லை. மினமாட்டாவின் சுவடு மறைவதற்கு முன்னரே புதிய சுவடுகள், புதிய புதிய கழிவுகளால் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன.
114
பொ.ஐங்கரநேசன்
11
சுவாசமே நஞ்சாக.
"பூவில் நுழைந்து புல்லில் மணந்த எனது தாய்நாட்டுத் தென்றலில் எந்தக் கைகள் விஷத்தைத் தூவின? உறக்கத்தின் இடத்தில் மரணத்தை நிறுத்தி இரவின் நம்பகத்தை எவர் பறித்தார்கள்? இரத்தக் கறைபடிந்த எல்லாக் கரங்களும் காற்றில் எழுதின நானில்லை! நானில்லை!"
- கவிஞர் இன்குலாப் (ஒவ்வொரு புல்லையும்' - கவிதைத் தொகுப்பு) இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால். 1984 ஆம் ஆண்டு, மார்கழி மாதத்தின் இரண்டாவது நாள் விடைபெற்று மூன்றாவது நாளை வரவேற்கத்தயாரான நள்ளிரவுப் பொழுது. வரப்போகும் ஆபத்தை உணராமல், குளிரில் விறைத்துக் கிடந்த நகரை காலன் காற்றிலேறி வலம்வரத் தொடங்கினான்.
காற்றுச் சுமந்துவந்த விஷவாயு மூலை முடுக்குகளையெல்லாம் மோப்பம் பிடித்தது. அதனைச் சுவாசித்தவர்களுக்கு நாசியிலும் தொண்டையிலும் நுரையீரல்களிலும் தாங்க முடியாத அரிப்பு. அடக்க முடியாத இருமல். பலருக்குத் தொடர்ச்சியான வாந்தி. கண்களைத் திறக்க முடியாத எரிச்சல். அங்கு ஒரு ஜீவமரணப் போராட்டமே நிகழ்ந்தது. உயிரைக் காப்பாற்றவேண்டி ஊர் ஊராகப் பெயர்ந்து இலட்சக்கணக்கான மக்கள் போபாலை விட்டு ஒடத்தலைப் பட்டார்கள். அடர்த்தியான மார்கழிப்பணி கவிந்து இருளை மேலும் கும்மிருட்டாக்கியிருந்தது. எந்தத் திசையில் ஒடுகிறோம் என்று தெரியாமல், பலர் விஷவாயு பரவிவந்த பக்கமாகவே ஓடி விட்டில் பூச்சிகளாக மரணத்தைத் தழுவிக் கொண்டார்கள். மருத்துவமனையில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களும், தாதியரும் ஏற்கனவே விஷவாயுவால் பாதிக்கப்பட்டிருந்தனர். வேறொரு மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டது. இருந்தும், விஷவாயு என்னவென்று தெரியாத
115
Page 60
ஏழாவது ஊழி
நிலையில் சரியான விஷமுறி மருந்தைத் தீர்மானிக்க எவராலுமே இயல வில்லை. மருத்துவமனை, இறந்தவர்களால் நிரம்பி வழிந்து கொண்டேயிருந்தது. விஷ வாயு அங்குள்ள கால்நடைகளையும் தப்பவிடவில்லை. கண்கள் சிவந்து புடைத்து, வாயில் நுரைதள்ளிய வாறு விழுந்து பரிதாபமாக துடிதுடித்து மாண்டன. மரம், செடிகொடிகள்கூட இலைகளின் பசுமை துறந்து கறுக்க ஆரம்பித்தன. அன்றும் அதற்கடுத்த பல நாட்களிலும் எங்கு பார்க்கினும் சடலக்குப்பைகள். எங்கெங்கு கேட்கினும் மனித ஒலங்கள். போபால் ஒரு போர்க்களம் போலவே காட்சியளித்தது.
இந்த வாயுவின் நச்சுத் தன்மையை பூனை, எலி போன்ற பிராணிகளுக்குச் செலுத்திச் சோதனைகள் செய்து பார்த்தது உண்டு. ஆனால் மனிதர்களில் நிகழ்த்திப் பார்த்ததில்லை. போபால் நகரில் இருக்கும் யூனியன் கார்பைட்டு என்னும் பூச்சிக்கொல்லி மருந்துத் தொழிற்சாலை அதனைச் செய்து முடித்தது.
யூனியன் கார்பைட்டு (Union Carbide) ஒரு அமெரிக்கப் பல்தேசிய நிறுவனம். வேர்ஜீனியாவில் 1898ல் சாதாரண கார்பைட்டு தயாரிப்பு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட 'யூனியன் கார்பைட்டு விரைவிலேயே மின்கலங்கள் (Batteries) தயாரிப்பு, பிளாஸ்ரிக் உற்பத்தி, பூச்சிக் கொல்லி விளைவிப்பு, யுரேனியம் பிரித்தெடுப்பு, அணு ஆயுத ஆராய்ச்சி என்று தனது கவனங்களை விரிவாக்கம் செய்தது. உலக நாடுகள் பலவற்றில் கிளை பரப்பியது, பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நுழைவதற்கு அந்நிய முதலீடுகளுக்கு எதிரான இந்தியாவின் அப்போதைய வணிகக் கொள்கை தடையாக இருந்தது. எனினும், யூனியன் கார்பைட்டுக்கு இந்தியாவின் கதவுகளைத் திறப்பதில் அவ்வளவு சிரமம் இருக்கவில்லை. பசித்த இந்தியாவுக்குச் சோறிடுவதற்கு விவசாயத்தில் தன்னுடைய பூச்சிக் கொல்லி மருந்துகளின் அவசியத்தை எடுத்தியம்பி, யூனியன் கார்பைட்டால் இந்தியாவில் கால் பதிக்க முடிந்தது.
யூனியன் கார்பைட்டு, இந்திய முதலீடுகளையும் கூட்டுச் சேர்த்து 'யூனியன் கார்பைட் இந்தியா லிமிட்டெட் (Union Carbide India Limited) என்ற பெயரில் போபாலில் 1969இல் தனது பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்புத் தொழிற்சாலையை நிறுவியது. இதனுடைய உற்பத்திகளில் 'செவின் என்று அழைக்கப்படும் 'கார்பறைல் (Carbay) பூச்சிக்கொல்லி மருந்து மிகவும் பிரபல்யமானது. ஆரம்பத்தில் செறிவூட்டப்பட்ட கார் பறைல் மருந்தை அமெரிக்காவில் உள்ள தனது தாய்நிறுவனத்திலிருந்து வரவழைத்துப் பயன்படுத்தியது. பின்னர், இந்திய அரசின் சம்மதத்தைப்
116
Page 61
ஏழாவது ஊழி
பெற்று 1975 ஆம் ஆண்டிலிருந்து பூச்சிக்கொல்லி மருந்தை போபா லிலேயே உற்பத்தி செய்யத் தொடங்கியது. கார்பறைலின் தயாரிப்புப் படிமுறைகளில் முதலில் 'பொஸ்ஜீன் (phosgene) என்னும் நச்சுவாயு பிறப்பிக்கப்படும். முதலாவது உலகயுத்தத்தில் பயன்படுத்தப் பட்ட கொடிய நஞ்சு இது. அடுத்தடுத்த படிகளில் பொஸ்ஜீனில் இருந்து "மெதையில் ஐசோ சயனேற்று' என்னும் நச்சு வாயுவும், பின்னர் மெதையில் ஐசோ சயனேற்றில் இருந்து கார்பமைல் பூச்சி நஞ்சும் உற்பத்தி செய்யப்படும். இதில், மெதையில் ஐசோ சயனேற்றைச் சிறிது காலம் அப்படியே அமெரிக்காவில் இருந்து தருவித்துப் பயன்படுத்தி வந்த யூனியன் கார்பைட்டு, கடைசியில் அதனையும் போபாலிலேயே விளைவிக்க ஆரம்பித்தது.
GLD6056) gGFIT FuGaoTsipylb (Methyl isocyanate - M.I.C.) Glurrah) ஜீனைப் போலவே ஒரு ஆட்கொல்லி வாயு. இலகுவில் ஆவியாகக் கூடியது. அமிலம், காரம், தண்ணிர் என்று அத்தனை வேதிகளுடனுமே வீறுகொண்டு மோதக்கூடியது. எல்லாவற்றுக்கும் மேலாகத் தன்னைத் தானே தாக்கக் கூடியது. இவற்றில் பெரும்பாலானவை மிகப் பெருமளவில் வெப்பத்தை வெளியேற்றுகின்ற வன்முறைத் தாக்கங்கள். இதனால் மெதைல் ஐசோ சயனேற்று அதிக அழுத்தத்தைப் பிரயோ கித்து, திரவமாக மாற்றப்பட்டு, உருக்கினால் வார்க்கப்பட்ட வாயுத் தாங்கிகளில் பத்திரமாகச் சேமித்து வைக்கப்படும். இத்தொட்டிகள் மீது பாதுகாப்புக்காகச் சீமெந்துக் கலவையினால் கொங்கிறீற் உறையும் இடப்பட்டிருக்கும்.
1984 டிசம்பர் 2ஆம் திகதி இரவு 11 மணிக்குத் திடீரென வாயுத் தாங்கியின் உள்ளே வெப்பநிலையும் அமுக்கமும் வழமைக்கு மாறாக எகிறத் தொடங்கியது. அதிர்ந்து போன ஊழியர்கள் இவற்றைத் தணிவிக்கப் பலவாறு முயன்றும் தோற்றுப்போனார்கள். தாங்கியில் வெடிப்பு ஏற்பட்டு விஷவாயு வெளியே கசியத் தொடங்கியது. துரதிர்ஷ்டவசமாக காலநேரமும் சேர்ந்து சதி செய்தது. வெளியேறிய விஷவாயுவை ஈரக்காற்று உயரே செல்ல வழிவிடாமல் அழுத்தி, தரையை அண்டியே பரவவிட்டுக் கொண்டிருந்தது. அடிக்கடி காற்று திசைமாறி வீசி விஷ வாயுவை எல்லா இடங்களுக்கும் விரைந்து சேர்ப்பித்தவாறும் இருந்தது. என்ன? ஏது? என்று நிதானித்துக் கொள்ளும் முன்னரேயே நகரின் 20 சதுரக் கிலோமீற்றர் பரப்பளவை மூடிவிட்டிருந்த நச்சு மேகங்களினால், ஏறத்தாழ 8000 பேர் புழு பூச்சிகள் போலத் துடிதுடித்து மாண்டனர்.
118
பொ.ஐங்கரநேசன்
இந்தியா மட்டுமல்ல, உலகமே இதுபோன்றதொரு பேரழிவை விளைவித்த தொழிற்சாலையைச் சந்தித்ததில்லை. யூனியன் கார்பைட்டு இந்த அனர்த்தத்துக்குக் காரணம் சதி என்றது. நிர்வாகத்தின் மீது அதிருப்திகொண்ட யாரோ ஒரு பணியாளர், மெதைல் ஐசோ சயனேற்றுத் தொட்டியில் தண்ணிரைக் கலக்க விட்டதாலேயே தொட்டி வெடித்ததாக விளக்கம் சொன்னது. ஆனால் உண்மை நிலை வேறு. இந்தப் படுகொலையை யூனியன் கார்பைட்டும், இந்தியாவுமே கூட்டுச் சேர்ந்து அரங்கேற்றின. இரண்டு தரப்பினருமே ஆரம்பம் முதலே காட்டிவந்த அலட்சியங்களே ஒரு கைத்தொழில் சுனாமியாக விஷவாயுவைக் கட்டவிழ்த்து விட்டது.
யூனியன் கார்பைட்டும், இந்தியாவும் தொழிற்சாலையின் மூலதனப் பங்கீடுகளில் காட்டிய கரிசனம் அளவுக்கு (யூனியன் கார்பைட்டு 50.9 விழுக்காடு, இந்திய முதலாளிகள் 49.1 விழுக்காடு) அதன் அமைவிடம், கையாளும் இரசாயனங்களின் நச்சுத்தன்மை, அதற்கான முற்காப்புப் போன்றவை குறித்துக் கண்டு கொள்ளவில்லை. மக்கள் அடர்ந்து வாழும் பகுதியில் தொழிற்சாலைக்குரிய இடத்தைத் தேர்வு செய்தனர். மாநகராட்சி அதிகாரியாக இருந்த புச் என்பவர், குடியிருப்புகளைக் காரணங்காட்டி தொழிற்சாலையைப் புறநகரில் அமைக்குமாறு வலியுறுத்தி வந்தார். ஆனால் அவரது மனசாட்சிக்குப் பரிசாக கடைசியில் மாநகராட்சியிலிருந்து அவரே இடமாற்றப் பட்டார்.
வேர்ஜீனியாவில் உள்ள யூனியன் கார்பைட்டின் தாய் நிறுவனத் தில் பாதுகாப்பு இரட்டைத் தாழ்ப்பாள் உத்தியில் பலப்படுத்தப் பட்டுள்ளது. எம்.ஐ.சி வாயுவைச் சேமித்து வைக்கும் தாங்கிகள் எப்போதும் குளிரூட்டப்பட்டவாறு இருக்கும். வேதிச்செயல்கள் மெதுவாக ஆபத்தின்றி நிகழ இது உதவும். அத்தோடு, வாயு கசிய நேர்ந்தால் அதனைப் பாதிப்புத்தராத உயர வெளியில் சேர்ப்பிப்பதற்கு வாயுபோக்கிக் குழாயும், அங்கேயே எரித்து அழித்துவிடுவதற்கு எரிப்புக்கோபுரம் ஒன்றும் எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும். ஆனால், யூனியன் கார்பைட்டு போபாலில் வாயுத்தாங்கிகளைச் சூழ இருந்த குளிரூட்டிகளை இயக்காமல் சேவையிலிருந்து விலக்கி வைத் திருந்தது. நீண்ட காலமாக மராமத்துப் பணிகளை மேற்கொள்ளாததால் எரிப்புக்கோபுரமும் பழுதடைந்திருந்தது. வாயுத் தாங்கியின் வால்வு களும் இணைப்புக் குழாய்களும் கூட அம்மைத் தழும்புகளாகத் துருவேறி அரிப்புக் கண்டிருந்தன.
119
Page 62
ஏழாவது ஊழி
பாதுகாப்புப் பொறிகள் நைந்து போயிருந்த நிலையிலும் தாங்கி களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மிகவும் அதிகமாகவே வாயுவைச் சேமித்து வந்துள்ளார்கள். விபத்து நடந்தபோது தாங்கியில் 11,290 கலன்கள் மெதையில் ஐசோ சயனேற்று இருந்துள்ளது. உண்மையில், ஆபத்தான மெதையில் ஐசோ சயனேற்றை இப்படி, அதிக அளவில் அதிக காலம் சேமிப்பில் வைத்திருக்காமல் தயாரான உடனேயே கார்பமைல் பூச்சிக்கொல்லி மருந்தாகத் தயாரித்து தீர்ந்துபோகச் செய்யமுடியும். அமெரிக்காவின் ரெக்சாஸில் உள்ள டூபாண்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆலையிலும், ஜப்பானில் மிற்சுபிஸியின் ஆலையிலும் இந்த நுட்பத்தையே பயன்படுத்துகிறார்கள். தாங்கிகளில் மெதையில் ஐசோ சயனேற்று ஒருபோதும் 20 இறாத்தல்களுக்கு மிகைப்படாத அளவில் உற்பத்தி முறைமை வடிவமைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கெல்லாம் மேலாக, மெதையில் ஐசோ சயனேற்றின் பயன்பாடு இல்லாமலேகூட மாற்று முறைகளில் கார்பமைல் மருந்தை உற்பத்தி செய்யவும் இயலும். ஆனால் இலாபத்தை மட்டுமே கணக்குப் பார்க்கும் பன்னாட்டு நிறுவனங்கள் சூழல் பாதுகாப்பு விதிகளும், தண்டனைகளும் கடுமையாக உள்ள தங்களது தேசங்களைத் தவிர பிற நாடுகளில் இவற்றைக் கண்டுகொள்வதில்லையே!
யூனியன் கார்பைட்டு இதற்கு முன்னரும் பலநாடுகளில் சூழல் விரோதப்போக்கைக் கடைப்பிடித்துப் பலரது சாவுக்குக் காரணமாகி யுள்ளது. வேர்ஜீனியாவிலேயே நீர்மின்வலுவை அமைக்கும் பொருட்டு சுரங்கப்பணியில் ஈடுபட்டிருந்த இதன் தொழிலாளர்களில் 476 பேர் நுரையீரல்களில் சிலிக்காத் தூசு படிந்து மரணமாகியுள்ளனர். சடலங் களை மரண பரிசோதனையின்றி, அவசரம் அவசரமாக அடையாளம் தெரியாத குழிகளுக்குள் புதைத்துப் பலத்த கண்டனத்துக்கு ஆளானது. யூனியன் கார்பைட்டின் இந்தக் குற்றப்பின்னணி தெரிந்தும், இந்திய அரசு தகுந்த கண்காணிப்பை மேற்கொள்ளாமலே இருந்து வந்துள்ளது. யூனியன் கார்பைட்டு ஊழியர்களின் தொழிற்சங்கங்கள், தொழிற்சாலை யில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்படுவதை மத்தியப்பிரதேச அரசின் கவனத்துக்குப் பலமுறை எடுத்துச் சென்றும் கண்டு கொள்ளப்படவே யில்லை. இந்த உதாசீனங்களே ஆபத்தை அடைகாத்து, அடைகாத்து ஒரு இரசாயன வெடிகுண்டாக வாயுத் தாங்கியை வெடிக்க வைத்தன. அதனால்தான் போபால் விஷவாயுக் கசிவு படுகொலை எனப்படுகிறது.
விஷவாயு போபாலின் உயிர்களைக் குடித்துக் கொண்டிருந்த போதுகூட பன்னாட்டு நிறுவனத்தின் கார்பைட்டு நெஞ்சம்
12Ο
பொ.ஐங்கரநேசன்
கரையவில்லை. வாயுத்தாங்கியில் இருந்த 40 தொன் மெதைல் ஐசோ சயனேற்று முழுவதும் வெளியேறியதன் பின்னர், சாவகாசமாக புதன் அதிகாலை மூன்று மணிக்கே தொழிற்சாலை நிர்வாகம் இது பற்றிக் காவல் துறைக்குத் தகவல் சொன்னது. அதன் பின்னர், "பீதியடைய வேண்டாம். வெளியேறியது நச்சு வாயு அல்ல; கண்களைத் தண்ணீ ரால் கழுவினாலே போதுமானது" என்று வானொலியில் திரும்பத் திரும்ப அறிவிப்புச் செய்தது. சில தினங்களில், வெளிநாடுகளில் இருந்து மருத்துவ நிபுணர்கள் குழுவை வரவழைத்து, மக்கள் பீதியடைந்து ஒட ஆரம்பித்ததாலேயே வாயு கலந்த காற்றை அதிகமாக மூச்சிழுத்து இறக்க நேர்ந்தது. மற்றபடி விஷவாயுக் கசிவின் உச்சப்பாதிப்பு ஆஸ்த்மா தான்" என்று சொல்ல வைத்தது. ஆனால் யூனியன் கார்பைட்டுக்கு மெதைல் ஐசோ சயனேற்றின் வீரியம் குறித்து விரிவாகவே தெரியும். அமெரிக்காவில் பிற்ஸ்பேர்க்கிலுள்ள பல்கலைக்கழகத்தில் இது பற்றிய ஆய்வுகளை 1960களிலேயே மிகவும் இரகசியமாகச் செய்து முடித் திருந்தது. இருந்தும், கசிந்து பரவிய வாயு எதுவென்பதையும், அதற்கான முறிமருந்தையும் வெளியே சொல்லாமல் இரக்கமற்ற முறையில் தொழில் இரகசியம் காத்தது.
இந்திய அரசும் தனது தகவல் ஊடகங்களில் இவைபற்றிய செய்திகளை இருட்டடிப்புச் செய்ததோடு, யூனியன் கார்பைட்டு நிர்வாகத்தைக் காப்பாற்றும் விதமாகவும் நடந்து கொண்டது. பேரிடர் நிகழ்ந்து சில தினங்களில், யூனியன் கார்பைட்டின் அப்போதைய தலைவர் வாரன் ஆன்டர்சன் (Warren Anderson) அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். அவரைக் கைது செய்து, உடனடியாகவே பிணையில் விடுதலை செய்தது. அவர் அமெரிக்காவுக்குத் தலைமறை வாகினார். ஆனால் ஆன்டர்சனை, இந்தியா வீட்டுக்காவலில் வைத்து நாடு கடத்தியதாக யூனியன் கார்பைட்டு தெரிவித்தது. ஒரு நாடகம் போலவே நிகழ்ந்த இந்தச் சம்பவம் போபாலில் கொந்தளிப்பை ஏற்படுத்த, ஆன்டர்சனைத் தேடப்படும் குற்றவாளியாகப் போபால் நீதிமன்றம் அறிவித்தது. மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவும் அவரை நாடு கடத்திவரும் சட்ட முயற்சிகளில் இறங்கியது. ஆனால், இந்திய அரசு இந்த வெளியுறவு விவகாரத்தில் போதிய முன்னகர்வுகளைக் காண் பிக்காததால் ஆன்டர்சனை நீதியின் முன் நிறுத்த இயலாமற்போனது.
விஷவாயுவைச் சுவாசித்து இத்தனை வருடங்கள் கழிந்ததன் பின்பும் கூட, போபால் இயல்பு வாழ்க்கைக்கு வெகு தொலைவிலேயே உள்ளது. ஏறத்தாழ அரைமில்லியன் பேர்களது இரத்தத்தில் சயனேற்று
121
Page 63
ஏழாவது ஊழி
விஷம் கரந்துறைகின்றது. இது தீண்டி வருவதால் பார்வைக்குறைபாடு, சுவாசக் கோளாறு, இருமல், பசியின்மை, புற்றுநோய், மாதவிடாய்ச் சிக்கல்கள், இனப்பெருக்க இயலாமை என்று தீராத உபாதைகளைச் சுமந்து திரிகிறார்கள். எய்ட்ஸைப் போலவே இந்த நஞ்சும் நோய் எதிர்ப்பு ஆற்றலை மழுங்கடிக்கக்கூடியது. இதனால் எல்லாத் தொற்று நோய்களுமே விருப்பம் போல இவர்களைச் சீண்டிப்பார்க்கின்றன. கசம் சர்வ சாதாரணம். அரசு மருத்துவமனைகளில் மட்டுமே நாளொன்றுக்கு நாலாயிரம் பேர்வரையில் சிகிச்சைகளுக்கு வந்து செல்கிறார்கள். ஆனால் எப்படியான சிகிச்சைகளை வழங்குவது என்பது குறித்து மருத்துவர்களால் இன்னமும் கூட ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர இயல வில்லை. பல நோய்கள் பயன்பாட்டில் இருக்கும் நவீன மருந்துகள் எதற்கும் அடங்க மறுக்கின்றன. பலசமயங்களில் தேவைப்படாத அல்லது பிறநாடுகளில் தடைசெய்யப்பட்ட மருந்துகள் கூட வழங்கப்படுகின்றன. இவற்றின் பக்க விளைவுகள் வேறு. பயங்கரமான இரவுச்சாவில் தப்பிப் பிழைத்த இவர்கள் மாதமொன்றுக்கு 15 பேர் வரையில், தவணை முறையில் சாவை அணைத்துக் கொண்டிருக் கிறார்கள். இப்படி, கசிவு நிகழ்ந்த நாளில் இருந்து இற்றைவரையிலும் விஷவாயுவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 22,000த்தையும் தாண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) தெரிவித்துள்ளது.
போபால் மக்களின் ஆரோக்கியத்தில் ஏற்பட்டுவரும் சரிவு அவர்களைப் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளும் தள்ளி விட்டிருக்கிறது. நோய் காரணமாகத் தொழில் செய்யும் திராணியை இழந்து, அல்லது தொழில் வாய்ப்புகளில் ஒதுக்கப்பட்டு ஏராளமானோர் 'விஷவாயு அகதிகளாகியுள்ளனர். இவர்களுக்கு இந்திய அரசினால், யூனியன் கார்பைட்டிடம் இருந்து போதிய நிவாரணத்தையும் பெற்றுத்தர இயலவில்லை. பட்டினி நோன்பு, ஆர்ப்பாட்ட ஊர்வலம், நீதிமன்ற வழக்குகள் என்று கடுமையாகப் போராடியதில் பாதிக்கப்பட்ட வர்களுக்குத் தலா 25,000 ரூபா கிடைத்தது. ஆனால் இந்தத் தொகை மருத்துவச் செலவுகளுக்காக அவர்கள் பட்ட கடனை அடைக்கவே போதுமானது அல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நோயும் வறுமையும் தோற்றுவித்துவரும் சமூகப் பிரச்சினைகளுடன், விஷ வாயுவால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிக்க முடியாத நிலைக்கு ஆளாகியிருப்பதால், போபால் சமூகம் திருமண உறவுச் சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகிறது.
122
பொ. ஐங்கரநேசன்
போபால் அனுபவித்து வரும் துயரை விடப் பெரும்துயரம், இந்தத் தலைமுறையுடன் இவர்களது அவல்ங்கள் தீர்ந்துபோவதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை என்பதுதான். கைவிடப்பட்ட யூனியன் கார்பைட்டு தொழிற்சாலை வளாகத்தில் பல ஆயிரம் தொன்கள் நச்சுக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. யூனியன் கார்பைட்டு 1985இல் போபாலில் தனது தொழிற்சாலையை மூடியது. போபாலை விட்டு வெளியேறினாலும் 'எவரெடி இந்தியா' என்ற பெயரில் இந்தியாவில் பிற தயாரிப்புகளில் ஈடுபட்டு வந்தது. 2001 ஆம் ஆண்டிலிருந்து தன்னுடைய மூலதனத்தில் பெரும்பங்குகளை, 'டோவ் கெமிக்கல்ஸ் (DOWChemicals) என்னும் மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனத்திடம் விற்று, அந்தப் பெயரினுள் சங்கமமாகியுள்ளது. கைவிடப் பட்டுள்ள தொழிற் சாலை வளாகத்தைத் துப்புரவு செய்யவேண்டிய பொறுப்பு யூனியன் கார்பைட்டினுடையதா, டோவ் நிறுவனத்தினுடையதா அல்லது மத்தியப்பிரதேசத்தினுடையதா என்ற சர்ச்சைகள் இன்னமும் தீர்ந்த பாடில்லை. சட்ட விவாதங்களில் காலம் கரைந்து கொண்டிருக்கும் போது, தொழிற்சாலையில் கழிந்திருக்கும் நச்சுகள் போபாலின் காற்றிலும், தண்ணிரிலும், மண்ணிலும் கரைந்து போபால் படுகொலை யின் இரண்டாவது அத்தியாயத்தை எழுத ஆரம்பித்துள்ளன.
இருபதாம் நூற்றாண்டின் மிகக் கோரமான தொழிற்சாலைப் பேரழிவாக வரலாற்றில் இடம்பெற்று, புதிய நூற்றாண்டிலும் அழிவு களைத் தொடர்ந்து கொண்டிருக்கும் விஷவாயுப் படுகொலையைப் போபால் நகர மக்கள் ஆண்டுதோறும் டிசம்பர் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் நினைவு கூருகிறார்கள். விஷவாயு பதித்த வடுக்களின் அடையாளமாக அருங்காட்சியகம் (Gas Tragedy Museum) ஒன்றை அமைக்கும் முயற்சியில் சமீபத்தில் இறங்கியிருக்கிறார்கள். சுற்றுச்சூழல் வாதிகளுடன் இணைந்து இன்னொரு போபால் இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எங்கேயுமே ஏற்பட்டு விடக்கூடாதென போராடி வருகிறார்கள். ஆனால் உலகமயமாக்கலின் கர்ணகடூர இரைச்சலில் இந்த ஊர்க்குருவிகளின் குரல் சன்னமாகவே கேட்கிறது.
123
Page 64
12
தாய்ப்பாலிற் சிறந்ததொரு அமிர்தமும் இல்லை
"வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா,
மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்,
கலி அழிப்பது பெண்கள் அறமடா"
– LmpSo முதன்முதலில் உலகத்தை எட்டிப்பார்க்கும் குழந்தைக்குத் தாய்ப்பாலை அன்பளிப்பாகக் கொடுத்தே உலகம் வரவேற்புக் கூறுகிறது. இதைவிட அந்தக் குழந்தைக்குப் பிடித்தமான பொருத்த மான, மிகவும் அவசியமான பரிசு உலகில் வேறொன்று இருக்க (Լpւգ-Ամո35].
மனிதனுக்கு மட்டுமல்ல, சின்னஞ்சிறிய மூன்றே மூன்று
சென்ரிமீற்றர் நீளமான வெளவால் (Bumble bee bat) தொடக்கம் மிகப் பெரிய நீலத்திமிங்கிலம் வரைக்குமான உலகில் உள்ள அத்தனைவகைப் பாலூட்டி விலங்குகளுக்குமே அவற்றின் சிறப்பு அவை இளசுகளுக்கு ஊட்டிவிடும் தாய்ப்பாலில்தான் அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு இனத்தினதும் தேவைக்கு ஏற்ப சத்து முதல் சுத்தம் வரைக்கும் அத்தனையையும் கச்சிதமாகக் கணக்கிட்டு இயற்கை தாய்ப்பாலிடம் கையளித்துள்ளது. ஆனால் மனிதன் மட்டும் இந்த விடயத்திலும் இயற்கையுடன் முரண்படத் தவறவில்லை. அவனுக்கு மட்டுமே உரித்தான தனித்துவமான தாய்ப்பாலை பசுவினது பாலை ஆதாரமாகக் கொண்ட பாற்பொருட்களினால் பெருமளவில் மாற்றீடு செய்து விட்டான். மற்றைய விலங்குகள் செய்ய விரும்பாத - செய்ய முடியாத - இந்தப் 'பால் மாறாட்டம் உலகம் பூராவும் இறந்து கொண்டிருக்கும் குழந்தைகளின் அரைவாசிப் பேரின் சாவுக்குக் காரணமான போசணைக் குறைபாட்டில் பெருமளவில் பங்கேற்கிறது.
குழந்தை மருத்துவத்துக்கான அமெரிக்கக் கல்விமையம், நோயுள்ள குழந்தைகள், குறைமாதக் குழந்தைகள் உள்ளிட்ட ஒரு வயது வரை உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் ஏற்ற உணவு தாய்ப்பால்தான்
124
பொ. ஐங்கரநேசன்
என அடித்துக் கூறியிருக்கிறது. வேண்டுமானால் குடிப்பவர் - கொடுப்பவர் என்று இரண்டு தரப்பினரில் ஒருவர் களைப்படையும்வரை ஒரு வயதுக்கும் மேலாகக்கூட தாய்ப்பாலூட்டலைத் தொடரலாம் எனவும் பரிந்துரை செய்திருக்கிறது. அந்த அளவுக்குத் தாய்ப்பாலினதும் தாய்ப்பாலூட்டலினதும் பெருமைகளைச் சொல்லி மாளாது.
தாய்ப்பால் - தாய் தன் குழந்தைகளுக்கு ஊட்டி விடும் வெள்ளை இரத்தம். குழந்தைகளின் உடல் வளர்ச்சியில், மூளைவிருத்தியில், நோய் எதிர்ப்பில், உளநலத்தில் நிகரில்லாப் பங்களிப்புகளைச் செய்துவரும் ஒரு திரவ நிறையுணவு. ஒரு குழந்தைக்கு வேறு எந்த உணவுப் பொருளும் ஆறுமாதங்கள் வரைக்கும் தேவைப்படாத அளவுக்கு, தேவையான போசணைகள் அனைத்தையும் அவற்றின் பண்பும் பரிமாணமும் குன்றாமல் தாய்ப்பால் வழங்குகிறது. தாய்ப்பாலின் 100 மில்லி இலீற்றர்களில் அண்ணளவாக லக்ரோஸ் எனப்படும் பால்வெல்லம் 7 கிராம்களும், கொழுப்பு 4 கிராம்களும், புரதம் 1.5 கிராம்களும் உள்ளன. லக்ரோஸ் வெல்லம் சக்தி மூலமாகப் பயன்படும் அதேவேளை, அதன் ஒருபகுதி குழந்தையின் உணவுக்குழாயில் குடியேறும் நட்பு பக்ரீறியங்களினால் லக்ரிக்கமிலமாக (Lactic acid) மாற்றவும் படுகின்றது. இந்தப் புளிப்புப்பால், உணவுக்குழாயில் இயற்கையாகவே விற்றமின்களைத் தொகுக்கும் பக்ரீறியங்களின் செயற்பாடுகளுக்கு அவசியமானது. காபோவைதரேற்று, கொழுப்பு, புரதம் தவிர விற்றமின்கள் ஏ, டி, இ போன்றவையும் கல்சியம், மகனிசியம், இரும்பு, சோடியம், பொற்றாசியம் போன்ற கனியுப்புகளும் காணப்படுகின்றன. தாய்ப்பாலில் உள்ள கூறுகளின் அளவுகள் குழந்தைகளுக்கு ஏற்படும் தேவைகளைப் பொறுத்துப் பெண்ணுக்குப் பெண், மார்புக்கு மார்பு, நாளுக்கு நாள் மாறிக் கொள்ளும் அதிசயம் இங்கு நிகழுகிறது. குளிரான நேரங்களில் சக்தியைப் பெறுவதற்காக அதிக அளவில் கொழுப்பையும், சூடான தருணங்களில் நீரிழப்பை ஈடுசெய்வதற்காக அதிக தண்ணிரையும் பாலில் சுரந்துவிடும், 'தன்னெழுச்சியாக விழித்துக்கொள்ளும் தாய்மையை உலகின் எந்தப் பால்மா நிறுவனங்களினால் வென்றெடுக்க முடியும்?
தாய்ப்பால் வெறுமனே ஒரு போசாக்கு உணவு மாத்திரம் அல்ல; அந்த உணவைச் செரிக்கச் செய்யும் ஏராளமான நொதியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றின் துணையோடு, தாய்ப் பாலிலுள்ள போசணைக் கூறுகள் குழந்தையின் பலம் பெறாத உணவுக் குழாய்க்கு அதிக சிரமம் தராது இலகுவில் சமிபாடு அடைந்து
125
Page 65
ஏழாவது ஊழி
விடுகின்றன. இதனாலேயே தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் சமிபாட்டுக் கோளாறுகளால் அவதிப்படுவதில்லை. ஆனால் பசுவினது பால் குழந்தைகளுக்குத் தொந்தரவு தரக்கூடியது. இதன் 100 மில்லி இலிற்றர்களில் 3.5 கிராம்கள் புரதம் உள்ளது. கன்றுகள் விரைவிலேயே அதிக எடையை எய்துவதற்காகத் தேவைப்படும் இந்த அதிகப்படியான புரதங்களை மனிதக் குழந்தைகளினால் முழுமையாகச் சீரணிக்க முடிவ தில்லை. கணிசமான அளவைக் கழிவுகளாகக் கழிந்து வைக்கின்றன.
தாய்ப்பாலில் 100 மில்லி இலிற்றர்களில் ஏறத்தாழ 250 மில்லி கிராம்கள் என்னும் விகிதத்தில் கணிப் பொருட்கூறுகள் காணப்படு கின்றன. ஆவின்பாலில் இதன் மூன்று மடங்குகளில் கணிப்பொருள்கள் உள்ளன. இதனால் தாய்ப்பால் அருந்தும் சிசுவின் சின்னஞ்சிறு சிறுநீரகங்கள் கனியுப்புகளை வடிகட்ட அதிக சுமையுடன் களைத்துப் போராட வேண்டிய தேவை ஏற்படுவதில்லை. மேலும், கணிப்பொருள் இவ்வாறு குறைவாக இருப்பதன் காரணமாக நீரிழப்பு, சூடான காலங் களில் அதிக வியர்வை என்பனவற்றில் இருந்தும் குழந்தை காப்பாற்றப் படுகின்றது.
மனிதனின் மூளை விருத்தி தாயின் வயிற்றிலேயே முழுமை பெற்றுவிடுகிறது என்றுதான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதனைக் கூர்மைப்படுத்தும் செயற்பாடுகள் குழந்தை பிறந்த பின்பும் தொடருகின்றன. இதற்குத் தாய்ப்பாலின் பங்களிப்பு இன்றி ULIGOLDuLunggil. eupGONGIT GíîQUšgsėšGg5 Gnrh (Gonadotropin releasinghormone) GTGörggyLib ஒமோன் தேவை. தாயின் கருவறையில் தொப்புள் கொடியூடாக வழங் கப்படும் இந்த உயிர்வேதி, குழந்தை பிறந்த பின்னர் தாய்ப்பாலிலும் காணப்படுகிறது. இஸ்ரேலிலுள்ள உவீஸ்மன் விஞ்ஞான நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் யிற்சாக் கொச் (Dr. Yizhakkoch)தலைமையிலான குழுவினர் தாய்ப்பாலில் Gnrh எதற்கு என்பது குறித்து எலிகளை வைத்து ஆராய்ந்துள்ளனர். இதில், குழந்தையின் முதல் வருடத்தில் மூளையில் நிறையவே மாற்றங்கள் நிகழ்வதும், இதனைத் தாய்ப்பாலில் உள்ள ஒமோன்கள் நிகழ்த்துவிப்பதும் கண்டறியப் பட்டுள்ளது. இதை மெய்ப்பிப்பது போல, சமீபத்தில் நியூசிலாந்தில் வெளியான ஆய்வு முடிவுகள் தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்கள் புட்டிப்பால் குழந்தை களை விட நுண்ணறிவு மிக்கவர்களாகவும், படிப்பில் அதிகச் சாதனைகளை நிகழ்த்துபவர்களாகவும் உள்ளனர் எனத் தெரிவிக்கின்றன. பச்சிளம் பாலகர்களைப் பலி கொள்ளக் காத்திருக்கும் வயிற் றோட்டம், சுவாசநோய்கள் போன்றவற்றில் இருந்து குழந்தைகளைக்
126
Page 66
ஏழாவது ஊழி
காப்பாற்றும் ஆபத்பாந்தவனாகவும் தாய்ப்பால்தான் உதவிக்கு வருகிறது. குழந்தை தனக்கெனச் சொந்தமாக நோய் எதிர்ப்பு ஆற்றலை (நிர்ப்பீடனம் - immunity) விருத்தி செய்வதற்குச் சில மாதங்கள் தேவை. அதுவரையில் தாய்ப்பால்தான் அதற்குக் காவலரண். தாய்ப்பால் கொண்டிருக்கும் வெண்கலங்கள், 'இம்மியூனோ குளோபியூலின் (Immuno globulin) என்னும் நோய் எதிர்ப்புப் புரதம், 'லக்ரோபெரின் (Lactoferin), ‘லைசோசைம்’ (Lysozyme) போன்ற வேதிகள் நுண்ணங்கிகளைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தவை. தாய்ப்பாலில் உள்ள கொழுப்புகள்கூட வைரஸ் கிருமிகளின் புரதச் சுவரைச் சின்னாபின்னப் படுத்தி அவற்றை அழித்து விடுகின்றன. இதனால்தான் கண் நோய்க்குக் கைகண்ட மருந்தாக இன்றளவும் கிராமப் புறங்களில் தாய்ப்பாலைக் கண்களில் இட்டு வருகின்றனர்.
தாயிடமிருந்து குழந்தை பாலை உறிஞ்சிக் குடிப்பதற்குப் புட்டியில் இருந்து உறிஞ்சுவதைவிட அதிகமான சக்தி தேவைப் படுகிறது. ஏறத்தாழ 60 மடங்குகள். இதுவே ஓர் உடற்பயிற்சி போலாகி தாடை எலும்புகளினதும் பற்களினதும் சீரான - வலுவான வளர்ச்சிக்கு வித்திடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பின்நாளில் சொற்களின் தெளிவான உச்சரிப்புக்கும் இது உதவும். ஆனால், புட்டியில் பால் அருந்தும் குழந்தை, அதிகம் அவதிக்குள்ளாகிறது. அளவு கணக்கில்லா மல் ஒழுகும் பாலைக் கட்டுப்படுத்துவதற்காக குழந்தை தன் நாவை அடிக்கடி வெளிநீட்டி செயற்கை முலைக்காம்பை அதிக விசையுடன் தள்ளும். நாளடைவில் நாவுக்கு இதுவே வாடிக்கையாகிப் போகும். பேசும் போது பாம்பு நாக்காக வெளிநீளும். வாய்ச்சுவாசம், உதடு கடித்தல் போன்ற விரும்பத் தகாத பழக்கங்களுக்கும் இது வழிகோலி விடுகிறது.
தாய்ப்பாலூட்டலின்போது தாயின் அரவணைப்பில் சொக்கிக் கிடக்கும் குழந்தை அனுபவிக்கும் சுகத்துக்கு மேலான சுகம் எதுவும் இல்லை. இந்த அணைப்பும் அணைவும் வெறும் பெளதீகச் சொகுசுகள் அல்ல. பாலூட்டலின் போது தாயின் உடலில் ஒக்சிரோசின் (Oxytocin) என்னும் ஓமோன் அதிக அளவில் சுரப்பதற்குத் தூண்டப்படும். இவ்வோமோன், மகப்பேற்றுக்கால நடத்தைகளில் ஒன்றாக, தாய்க்கு மகவு மீதான பாசப் பிணைப்பை அதிகரிக்கச் செய்யும். இந்தப் பிணைப் பின் நெருக்கத்தில், தொடுகை உறவில் பாதுகாப்பாக இருப்பதாகக் குழந்தை உணர்ந்து கொள்வதாலேயே அதனால் கண் மூடிச் சுகம் காண முடிகிறது. ‘பாதுகாப்பாக இருக்கிறேன்' என்ற உணர்வு
128
பொ.ஐங்கரநேசன்
குழந்தையில் தன்னம்பிக்கை விதைகளை முளைவிடச் செய்யும் ஒர் உளவியல் ஊட்டம். தாயின் பாதுகாப்பு தனக்கு எப்போதுமே துணையாக வரும் எனக்கருதும் இத்தகைய குழந்தைகள் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக் கொள்வதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு மாத்திரம் அல்ல, பாலூட்டுவதன் பலன்கள் அம்மாக்களையும் சென்றடைகின்றன. பாலூட்டுதல் ஒரு பெரும் உடற்பயிற்சி. தினமும், சராசரியாக 500 கலோரிகள் சக்தி மேலதிகமாக எரிக்கப்படுகிறது. இதனால் பாலூட்டும் பெண்கள் கர்ப்பகாலத்தில் பெற்ற அதிகப்படியான எடையை இழந்து விரைவிலேயே பழைய நிலைக்குத் திரும்பி விடுகிறார்கள். ஆனால், குழந்தைகளின் வாயில் 'சிலிக்கன் முலைக்காம்பைத் திணித்துவிட்டுப் போய்விடுபவர்கள் பருத்த உடம்பைக் கரைப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு, நடைப்பயிற்சி என்று படாதபாடு படவேண்டியிருக்கும். குழந்தையைச் சுமப்பதால் 20 மடங்குகளாக விரிந்து போய் இருக்கும் கருப்பையும், பாலூட்டும் போது உடலில் தூண்டப்படும் ஒக்சிரோசின் ஒமோனின் தயவால் வெகுசீக்கிரத்தில் வழமைக்குச் சுருங்குகிறது. இதன்போது, முன்னர் குழந்தைக்குப் போசணைகளை வழங்கிய குருதிக்குழாய்களின் வாசல்களும் சேர்ந்து சுருங்கி விடுவதால் இரத்தப்போக்கும் நின்றுபோய் விடுகிறது. இதனால்தான் பாலூட்டாத் தாய்மார்கள் செயற்கை "ஒக்சிரோசின் ஒமோனை ஏற்றிக் கொள்கிறார்கள். இவை மாத்திரமல்ல; பெண்களை அச்சுறுத்தும் மார்புப் புற்றுநோய்கூட பாலூட்டும் முலைகளைப் பெரும்பாலும் அணுகுவதில்லை.
மனிதனுக்கு இன்று கிடைக்கக் கூடிய உணவு வகைகள் எல்லாமே அவற்றின் உற்பத்தி முதல் நுகர்வு வரை சூழலில் ஆற்றொணாத வடுக்களைப் பதிக்கக் கூடியவை. இவற்றில் தாய்ப்பால் மாத்திரமே விதிவிலக்கு. இதன் தண்ணிர் கலக்கவோ, சூடாக்கவோ, பொதிசெய்யவோ, ஏற்றுமதி - இறக்குமதியென்று நெடுந்தொலைவு எடுத்துச் செல்லவோ தேவையில்லாத இயல்புகள் எவையும் சாதாரண மானவையல்ல. மிகுந்த சூழல் நட்புடையவை. இதனை, புட்டிப் பாலின் முகத்திரையைச் சற்று விலக்கினாலே புரிந்து கொள்ள முடியும். புட்டிப்பால் கரைப்பதற்கு ஒரு குழந்தைக்கு நாளொன்றுக்கு ஒரு இலிற்றர் நீர் தேவைப்படுகிறது. ஒரு குழந்தை பருகும் புட்டிப்பாலைச் சூடுபடுத்துவதற்கு வருடமொன்றுக்கு ஆகக் குறைந்தது 73 கிலோ விறகு அல்லது அதற்கு நிகரான எரிபொருள் செலவாகிறது. பால்மா
129
Page 67
gupreng DST
நிறுவனங்கள் மழைக்காடுகளை அழித்தே பசுக்களின் மேய்ச்சல் புல்வெளிகளை அமைக்கின்றன. மெக்சிக்கோவில் ஒரு கிலோ பால்மாவை உற்பத்தி செய்வதற்கு ஏறத்தாழ 12 சதுர மீற்றர் பரப்பளவு காடுகளை விலையாகக் கொடுக்கிறார்கள். இப்படி ஒருபுறம் வளங்களின் விரயமெனில், இன்னொருபுறம் உயிர்மச் சிதைவுக்கு ஆளாகாத பாற்புட்டிகள், முலைக்காம்புகள், பால்மாவைப் பொதி செய்யப் பயன் படும் பொலித்தீன் - பிளாஸ்ரிக் பைகள் எல்லாம் மண்ணில் மக்கிப் போகாமல் சூழலுக்குப் பெரும் தலைவலியைத் தந்து கொண்டிருக் கின்றன. 1987ஆம் ஆண்டு தரவுகளின்படி அந்த வருடத்தில் பாகிஸ் தானில் மட்டுமே 4.5 மில்லியன் பால்புட்டிகள் விற்பனையாகியுள்ளன.
சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் தலையானதாகக் கருதப்படும் பூமி வெப்பம் அடைவதிலும் (Global Warming) புட்டிப்பாலின் கைங்கரியம் இருக்கிறது. வெளுத்த பாலுக்கு இப்படி ஒரு கறுப்புமுகம் இருக்கிறது என்பது பலருக்கு நம்ப முடியாத ஒன்றாகவே தோன்றினாலும் சுடுகின்ற உண்மை இது. பூமியின் வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமான பச்சை வீட்டு வாயுக்களில் கரியமில வாயுவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் மெதேன் வாயு உள்ளது. வளிமண்டலத்துள் சேரும் மெதேனின் கணிசமான பங்கு மாடு, ஆடுகளின் இரைப்பையில் இருந்தே உருவாகிறது. ஒரு பசு நாளொன்றில் வெளியிடும் மெதேன் 100 தொடங்கி 200 இலிற்றர்கள். இதிலிருந்து உலகம் பூராவுமுள்ள பசுக்கள் ஏப்பம் விடும் மெதேனின் கனபரிமாணத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
தாய்ப்பாலூட்டலின் அவசியத்தை வலியுறுத்துவதற்கு இப்படி ஏராளமான காரணங்கள் இருந்தபோதும் அவை, பொதுப்புத்தியை எட்டுவதில் பால்மா நிறுவனங்கள் பெரும் தடையாக இருக்கின்றன. 'லக்ரோஜன், "கவ் அன்கேற், எஸ்.எம்.ஏ.', 'ஃபார்லீஸ்', 'அமுல் ஸ்பிறே என்று சந்தையில் இருக்கும் பலதரப்பட்ட பால்மா வகைகளில் எதனாலும் தாய்ப்பாலை நெருங்க முடியாது. ஆனாலும் பால்மா உற்பத்தி நிறுவனங்களின், 'பிறந்ததில் இருந்தே பருகுவதற்கேற்றது, "புதிய ரகப் புரதச் சத்து அறிமுகம்', 'சிறந்த குழந்தைப்பால்', 'இலகுவில் சமிபாடு' போன்ற இன்னோரன்ன மூளைச்சலவை விளம்பரங்கள் அவற்றைச் சந்தையில் தாய்ப்பாலின் உயரத்துக்குத் தூக்கி வைத்துள்ளன. இல்லாததுகளைச் சொல்லிப் பொதுப் புத்தியைத் திசை திருப்பும் இவைபோன்ற விளம்பரங்களைத் தடைசெய்யும் பொருட்டு 1981இல் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியமும் உலக சுகாதார
13O
பொ. ஐங்கரநேசன்
நிறுவனமும் இணைந்து சர்வதேச சந்தைப்படுத்தல் விதிமுறைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளன. ஆனால், பால்மா நிறுவனங்கள் இவற்றைப் பொருட்படுத்துவதாக இல்லை. பிரசவ மருத்துவமனைகளுக்கே சென்று இலவசமாக தங்கள் பால்மா மாதிரிகளைத் தாய்மாருக்கு விநியோகிக்கும் உத்தியைக்கூட கையாண்டு பிள்ளைபிடித்து வருகின்றன.
பசித்து அழுகின்ற குழந்தையின் வாய்க்குத் தாய்ப்பாலைத் தருவதில் பல சமூக பொருளாதாரக் காரணிகளும் தடைகளாக உள்ளன. இதில் 'சீம்பால் (colostrum) குறித்து சமூகத்தில் கட்டப்பட்டிருக்கும் புனைவு முதலில் குறிப்பிடத்தக்கது. பிரசவத்தைத் தொடர்ந்து தாயில் முதல் இரண்டு மூன்று நாட்களில் சுரக்கும் மஞ்சள் நிறமான தடித்த பாகுத் தன்மையுடைய திரவம் - சீம்பால். இதன்நிறம் காரணமாகப் பெரும்பாலானோரால் தீங்கானது எனக் கருதப்பட்டுக் குழந்தை களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. உண்மையில், இம்மஞ்சள் நிறப்பால் பின்னர் சுரக்கப்படும் வெள்ளை நிறப்பாலைவிடப் பெறுமதியானது. நோய் எதிர்ப்புப் புரதங்களையும், நோய்க் கிருமிகளைக் கொல்லக்கூடிய உயிருள்ள வெண்கலங்களையும் பெருவாரியாகக் கொண்டிருக்கும் சீம்பால், இயற்கை குழந்தைக்குத் தருகின்ற முதல் தடுப்பு மருந்து ஆகும். மேலும், குழந்தையின் குடலில் தேங்கியிருக்கும் கரிய கசடு களையெல்லாம் கழுவிச் சுத்தம் செய்து "காட்டுப் பீச்சல்' ஆக வெளியனுப்பும் பேதி மருந்தாகவும் சீம்பால் செயற்படுகின்றது. ஆனால் தனது குழந்தைகளுக்குச் சீம்பாலை மறுப்பதோடு மாத்திரம் அல்லாமல், வீட்டில் கால்நடைகள் ஈனும்போதும் அவற்றின் சீம்பாலைக் குட்டிகள் குடிக்கவிடாது கறந்து கூரையில் ஊற்றுகின்ற அதி மேதாவித்தனத்தைப் படித்த குடும்பங்களிலேகூடப் பார்க்க முடியும்.
பருவத்துக்கு முந்திப் பிறக்கும் குழந்தைகளினால் சரிவரப் பாலை உறிஞ்ச முடியாது என்றும், அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்த தாயில் குறைந்தளவு பாலே சுரக்கப்படுவதால் குழந்தைக்குப் போதுமான்து அல்ல என்றும் சமூகத்தில் கருத்துகள் நிலவுகின்றன. இதனால் உடனடி யாகவே குழந்தைக்குப் புட்டிப்பால் புகட்ட ஆரம்பிக்கப்படுகிறது. பொதுவாகக் கர்ப்ப காலம் 38 தொடங்கி 42 வாரங்கள். குழந்தை 37 வாரங்களுக்கு முன்னால் பிறக்க நேரும்போது, அதன் விருத்தியின் கடைசிப் பருவத்தில் தொப்புள் கொடியூடாகக் கிடைக்க வேண்டிய கல்சியம், இரும்பு, இம்மியூனோ குளோபியூலின் போன்ற அத்தியாவசிய வேதிகள் கிடைக்காது போய்விடுகின்றன. ஆனால், இயற்கை தனது எந்தப் படைப்பையும் 'அம்போ என்று கைவிட்டு விடுவதில்லையே!
131
Page 68
ஏழாவதுஉஊழி
கருவறையில் வழங்க முடியாது போனவற்றைத் தாய்ப்பாலினூடாகக் கொடுத்து அனுப்புகிறது. குழந்தை சில வினாடிகள் உறிஞ்சினாலும் வேண்டியனவற்றைப் பெறுவதற்கு ஏற்றவகையில், குறைந்த அளவு பாலிலேயே கூடிய நோயெதிர்ப்பு மற்றும் போசணைப் பொருள்களை நிரப்பி விடுகிறது. இதனால்தான், அதிதீவிர சிகிச்சையில் இருக்கும் குறைமாதக் குழந்தைக்குக் கூட அதன் தாயினது பாலைப் பருக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
பொருளாதாரக் காரணங்களினால் நடுத்தர மற்றும் அடித்தட்டு சமூகத்தில் பாலூட்டும் காலங்களிலும் வேலைக்குப் போகப் பெண்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இத்தகைய பெண்களின் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைத் தேவைக்கு ஏற்பப் பருகும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. முலைக்காம்பில் வேம்பின் எண்ணெய் போன்ற கசப்புகளைத் தடவி குழந்தைகளின் பால்குடிக்கும் இயல்பூக்கம் வலுக்கட்டாயமாக மறக்கடிக்கப்படுகிறது. முலையூட்டிகளில் வேறு எந்தத்தாய்க்கும் - இளந்தைகளுக்கும் நேராத கொடுமை இது. கர்ப்ப காலத்தில் போதிய ஊட்டச்சத்து கிடைக்காததால் பிரசவத்தின் பின்னர் போதிய தாய்ப்பால் சுரக்க முடியாமல் திண்டாடும் தாய்மாரும் குழந்தைகளும் அதிகம். ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம் (UNICEF) வளர்முக நாடுகளில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 12 மில்லியன் குழந்தைகள் வருடந்தோறும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பரிதாபமான தகவலை வெளியிட்டுள்ளது. இதில், பாதிப்பேர் சரிவரத் தாய்ப்பால் கிடைக்காததால் ஏற்படும் போசணைக் குறைகளினாலேயே மரணத்தைத் தழுவுகின்றனர்.
தாய்ப்பால் கிடைக்காமல் அல்லாடும் குழந்தைகளுக்கு உதவு வதற்கென மனிதத் தாய்ப்பால் வங்கிகள் (Human Milk Banks) மேற்கு நாடு களில் உருவாகத் தொடங்கியுள்ளன. தங்களது குழந்தைக்குத் தேவை யானதைவிட மேலதிகமான பால்சுரப்பைக் கொண்டுள்ள தாய்மார் களிடமிருந்து பால் தானமாகப் பெறப்படுகிறது. பால்தானம் வழங்கும் பெண்கள் புகை பிடிக்காதவர்களாக இருப்பதோடு, எய்ட்ஸ், மஞ்சட்காமாலை போன்ற தொற்று நோய்கள் எதுவும் இல்லாது ஆரோக்கியமானவர்களாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை பாச்சர் முறையில் சுத்தம் செய்து சேமிக்கப்படும் பாலுக்கு ஆகும் செலவை சரிக்கட்டுவதற்காக ஒரு அவுன்ஸ் பால் 2.5 அமெரிக்க டொலர்கள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வசதி படைத்த மேற்குலகத்தினருக்குச் சாத்தியமாகலாம். ஆனால் நமக்கு?
132
பொ. ஐங்கரநேசன்
தாய்ப்பாலூட்டல் பற்றிய விழிப்புணர்வுப் பரப்புரையிலும் மேற்கு நாடுகள் இன்று அதிகக் கவனம் செலுத்துகின்றன. இதற்குப் பிரபலமான பெண்மணிகளின் உதவி பெறப்படுகிறது. வெகுமக்கள் செல்வாக்குப் பெற்ற "பொப் இசைப்பாடகிகள், திரைநட்சத்திரங்கள் போன்ற 'மணி கட்டிய பசுக்களின் மூலம் பாலூட்டலின் இன்றியமை யாமை குறித்துச் சமூகத்துக்குச் செய்திகள் சொல்லப்படுகின்றன. இவர்களில் பலர், பொது அரங்குகளில் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுகிறார்கள். இவர்கள் தாய்ப்பாலூட்டும் படங்கள் ஊடகங்களில் விளம்பரங்களாகின்றன. அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் அல்கோரியின் மகள் கரீனா, தந்தையின் தேர்தல் பரப்புரையின்போது மட்டும் பயன்படவில்லை. நெஸ்லே பால்மா நிறுவனம் தனது தயாரிப்புகளை மூன்றாம் உலக நாடுகளில் சந்தைப் படுத்துவதை எதிர்க்கும் அல்கோரிக்கு ஆதரவாக, தாய்ப்பாலூட்டலை வற்புறுத்தும் கருத்துருவாக்கப் பெண்மணிகளில் ஒருவராகவும் உள்ளார். ஆனால், துர்அதிர்ஷ்டவசமாகத் தமிழ்ச் சூழலில் இத்தகைய போக்கு இல்லை. மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஆகஸ்ட் முதல்வாரத்தில் மட்டும், 'உலகத் தாய்ப்பாலூட்டும் வாரத்தைச் சடங்குகளாகக் கொண்டாடுவதுடன் அடங்கிவிடுகிறது. 'ஃபன்ரா', 'மிறிண்டா' விளம்பரங்களில் தோன்றி அவற்றைத் தினம் தினம் குடி என்று சொல்லும் நமது திரைத் தாரகைகள் மறந்தும் தாய்ப்பால் குறித்துப் பேச முன்வரமாட்டார்கள். மாறாக, அழகை மார்பகங்களுடன் இணைத்துப் பார்க்கும் திரைப்படங்களின் மூலம் வரம்பின்றிப் பாலூட்டுவது அழகுக்கு ஊறு செய்யும்' என்ற கற்பிதத்தையே சமூகத்தில் கட்டமைத்து வருகிறார்கள்.
தாய்ப்பால் அருந்தக் கேட்பது குழந்தையின் உரிமை. அதை வேண்டிய மட்டும் பருகத் தருவது தாயின் கடமை. உரிமைகளையும், கடமைகளையும் மறுக்கின்ற, மறக்கின்ற சமூகம் ஆரோக்கியமாக இருப்பதில்லை. தாய்ப்பால் விடயத்தில் இது இன்னும் அதிகமாகப் பொருந்தும்.
133
Page 69
13
மென்பானங்களின் வன்முறைகள்
நீர்கருக்கி நெய் உருக்கி மோர்பெருக்கி உண்பவர்தம் பேருரைக்கப் போமே பிணி"
- சித்தர் பாடல்
தாங்க முடியாத வெய்யில் உடலைச் சுட்டெரிக்கிறது. நா வறண்டு விட்டது. குளிர்ச்சியான பானம் அருந்துவதற்கு மனது தவிக்கிறது. உங்கள் ஞாபகத்துக்கு வருவது பெப்ஸி மற்றும் கோக் குடும்பத்துப் பானங்கள் தானே. கொக்கோ கோலா, பெப்சி மிறிண்டா, ஃபன்ரா, ஸ்பிறைற், செவன்அப், டயற் பெப்ஸி, டயற் கொக்கோ கோலா என்று பன்னாட்டு மென்பானங்கள் பல வரிசை கட்டி உங்கள் நினைவுக்கு வந்து போகும். வெறுமனே தாகம் தீர்க்க என்பதற்கு மட்டும் அல்லாமல் உல்லாசம், உற்சாகம் என்பவற்றின் ஊற்றாகவும் சமூகத் தகுதியின் அடையாளமாகவும் இந்த மென்பானங்கள் கருதப்படு கின்றன. நண்பர்கள் கூடும்போது இவற்றைப் பருகுவது நாகரிக வழக்காகியுள்ளது. சமூக விழாக்கள் எல்லாவற்றிலுமே அறிவிக்கப்படாத ஒரு சடங்குப் பானமாக இவை வளையவருகின்றன.
மென்பானங்களைப் பற்றிய இந்த நினைவூட்டல்கள் கூட உங்களிற் பலரின் சுவையரும்பர்களை அருட்டி விட்டிருக்கக் கூடும். கொஞ்சம் பொறுங்கள். மென்பான வகையறாக்களில் உங்களுக்குப் பிடித்தமானவற்றைக் கையில் எடுப்பதற்கு முன்னால் இந்தக் கட்டுரையை ஒரு தடவை முழுமையாகப் படித்துவிடுங்கள்.
மென்பானங்கள் என்றால் என்ன? மேலும் மேலும் பருகுவதற்குத் தூண்டும் சுவையூட்டிகள், தித்திக்கவைக்கும் வெல்லங்கள், கண்ணைக் கவரும் வண்ண நிறமூட்டிகள், நாசியை நிரப்பும் நறுமண இரசாயனங்கள், நுரைத்தெழச் செய்யும் கரியமிலவாயு போன்றவற்றை நீரில் கலந்து பெறும் இரசாயனங்களின் கலவைதான் மென்பானங்கள்.
134
பொ. ஐங்கரநேசன்
அல்ககோல் சேர்க்கப்படாததால் மிகவும் ஆசாரமாக 'மென்பானங்கள் (Softdrinks) என்று அழைக்கப்படுகின்றன. பெயரளவில்தான் மென்பானங் களே தவிர இவை எல்லாமே வன்முறைகள் ததும்புகின்றவை. அரசாங்க முட்டை அம்மியையே உடைக்கும் என்பதைப் போல இந்த அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் மென்பானங்கள் உடலின் ஆரோக்கியச் சூழலுக்கு மட்டுமல்லாது, உள்ளூரின் பண்பாட்டுச் சூழலுக்கும் சுற்றுச்சூழலுக்குங்கூட வேட்டு வைப்பனவாகவே உள்ளன.
மென்பானங்களில் சுவையூட்டிகளாகப் பொதுவாகச் செயற்கை யாகத் தயாரிக்கப்பட்ட பொஸ்போரிக் அமிலம், சித்திரிக் அமிலம் போன்ற அமிலங்களே பயன்படுத்தப்படுகின்றன. இனிப்புச் சுவையை நிலைப்படுத்துவதிலும் இந்த அமிலங்களுக்குப் பங்குண்டு. கொக்கோ கோலா, பெப்ஸி போன்றவற்றின் சராசரி அமில அளவு (pH) 3.4. இந்தப் பானங்களில் பல் ஒன்றை அமிழ்த்தி வைப்பின் பத்து நாளில் அது முழுவதுமாகக் கரைந்து மறைந்து போகிறது. அந்த அளவுக்கு வலிமையானவை. குடிக்கும்போது பற்களின் பாதுகாப்புப் பூச்சை (Ename) மெல்ல மெல்ல அரித்து வருகின்றன. குடித்து ஒருமணி நேரம் வரை இந்த அரிப்பு நீடிக்கக் கூடும். மென்பானங்கள் அருந்தியதும் பற்கள் கூசுகின்ற சங்கதி இதுதான். பொஸ்போரிக் அமிலத்தின் தாக்கம் இன்னும் கடுமையானது. உடலில் சேரும் பொஸ்போரிக் அமிலம் கடைசியில் சிறுநீருடன் வெளியேறும்போது தனியாக வெளியேறு வதில்லை. பற்களிலும் எலும்புகளிலும் உள்ள கல்சியத்தையும் பெயர்த்துக் கொண்டு போய்விடுகிறது. கல்சியம் போதாத நிலையில் எலும்புகள் பலம் குன்றி முறியும் நிலைக்கு ஆளாகின்றன. இவ்வாறு கரைந்து வெளியேறும் கல்சியம் சேர்வைகள் சிறுநீரகத்தில் கற்களாகப் படிவதால் சிறுநீரகத்தின் தொழிற்பாடும் தடங்கலுக்கு ஆளாகின்றது.
மென்பானங்கள் எல்லாவற்றிலுமே வெல்லங்கள் சேர்க்கப்படு கின்றன. உதாரணத்துக்கு 325 மில்லிலீற்றர் பெப்ஸியில் ஐந்தரைத் தேக்கரண்டி சீனி சேர்க்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) நாள் ஒன்றுக்கு ஒருவர் உட்கொள்ளவேண்டிய வெல்லத்தின் அளவு 8 தொடங்கி 11 தேக்கரண்டி என நிர்ணயம் செய்துள்ளது. ஒரு நாளில் நாம் அருந்தும் பால், தேநீர் மூலம் உடலில் சேரும் வெல்லங்களுடன் மென்பானங்களுடன் சேர்ந்துவரும் வெல்லங்களும் சேர்ந்து கொள்ள அது நிர்ணயித்த அளவை விடப் பன்மடங்காக அதிகரித்து விடுகிறது. சீனிதானே என்று இதனை இனிப்பான செய்தியாகக் கொள்ளுவதற்கு இல்லை. ஊட்டச்சத்து ஆய்வாளரான யோன் யாட்கின் சீனியை
135
Page 70
ஏழாவது ஊழி
'வெள்ளை நஞ்சு என வர்ணித்து இருக்கிறார். சீனி பற்களில் பக்ரீறிய கிருமிகள் பெருக வசதி அளிப்பதுடன் இதயநோய், தோல் வியாதி போன்றவற்றையும் ஏற்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயுடையவர்களில் எவ்வளவோ பேர் மென்பானங்களில் உள்ள வெல் லத்தின் அளவு தெரியாமல் தினமும் குடித்துத் தொலைக்கிறார்கள்.
இயற்கை வெல்லங்களின் சேதாரங்களுடன் செயற்கை வெல்லங் களும் தம் பங்குக்கும் தொல்லைகளைத் தருகின்றன. குறைந்த கலோரி டயற் பானங்களில் "அஸ்பாரேம்' (ASpaetame), சக்கரின் (Sacchain), 'சுக்கிராலோஸ் (Surcralose) போன்ற செயற்கை வெல்லங்கள் பயன் படுத்தப்படுகின்றன. மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் அஸ்பாரேம் சீனியை விட 200மடங்கு அதிகமான இனிப்பைக் கொண்டது. வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோன் ஒன்லி மிருகங்கள் மீது நடத்திய ஆய்வுகளில் இருந்து இந்த அஸ்பாரேம் மூளைப் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
மென்பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் நிறமூட்டிகளில் பெரும்பாலான சாயங்கள் புற்றுநோய்க்குக் காரணமாய் அமைந்து விடு கின்றன. 'தார்ட்ராசின் (Tartazine) எனப்படும் செம்மஞ்சள் நிறச் சாயம் தோலில் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு புற்றுநோய்க்கும் காரணமாகத் திகழலாம் என்பதால் பின்லாந்து, நோர்வேயில் இந்த நிறப்பொருட்களை மென்பானங்களில் சேர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ‘கார்மொசின் (Camosine) எனப்படும் சிவப்பு வர்ணம் உணவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துவதுடன் புற்று நோயையும் எற்படுத்துகிறதென கனடாவும், அமெரிக்காவும் அதற்குத் தடை விதித்திருக்கின்றன. ஃபன்ரா ஒறேஞ், டயற் ஃபன்ரா போன்ற பானங்களில் அவற்றின் செம்மஞ்சள் நிறத்துக்கு காரணமாக பீற்றா கரோட்டீன் (Beta Carotene) உள்ளது. இந்தச் சாயத்தை நிலைப்படுத்து வதற்காக மீன்களில் இருந்து பெறப்படும் ஜெலாற்றினைப் பயன்படுத்து கிறார்கள். இது சைவ உணவாளர்களுக்குத் தெரிய வராத ஒர் உண்மையாகும்.
கொக்கோ இலைகளையும், கோலா விதைகளையும் தயாரிப்பில் சேர்த்துக் கொண்டதாலேயே கொக்கோ கோலா என்ற பெயர் கிடைத்தது. கொக்கோ இலைகளில் இருந்து பெறப்படும் கொக்கெயின் போதைப் பொருள் 1903 வரையிலும் கொக்கோ கோலாவின்
136
Page 71
ஏழாவது ஊழி
தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இப்போது அந்த இடத்தை “கஃபின்' (Caffeine) எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வேதிப்பொருள் கொக்கெயினைப் போன்றே நரம்புகளை மிகையாகத் தூண்டி மேலும் மேலும் பானங்களை அருந்தக் கேட்கிறது. அதிகமான கஃபின் தூக்கமின்மை, எரிச்சல், இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்ற வற்றுக்கும் வழிகோலுகிறது. மென்பானங்கள் யாவுமே குளிர்பானங் களாகவே அதிகம் பரிமாறப்படுகின்றன. மென்பானங்கள் குளிரூட்டி களில் உறைந்து போவதைத் தடுப்பதற்காக உறையெதிர் பொருளாக எதிலின் கிளைக்கோல்' எனும் வேதி சிறிதளவில் கலக்கப்படுகிறது. சிறிதளவே ஆனாலும் ஆசனிக் அளவுக்கு மெல்லக் கொல்லும் வீரிய முடையது. ஒரு மணி நேரத்தில் ஒருவர் நான்கு இலீற்றர்கள் கொக்கோ கோலாவை அருந்துவாராயின் அவரை இலகுவில் மரணத்துக்கு அழைத்துச் சென்று விடும்.
மொத்தத்தில் மென்பானங்களின் சேர்மானங்களில் தண்ணிரைத் தவிர மீதி எல்லாமே பயங்கரவாத இரசாயனங்கள்தாம். இதனாலேயே தயாரிப்பு நிறுவனங்கள் மென்பானங்களின் சேர்மானங்களையும் அவற்றின் விகிதாசாரங்களையும் பகிரங்கப்படுத்துவதில்லை. பரம இரகசியம் பேணி வருகின்றன. சேர்மானங்களின் செறிவாக்கப்பட்ட கலவை இன்றளவும் அமெரிக்காவில் உள்ள இவற்றின் தாய் நிறுவனங்களிலிருந்தே விமானங்களில் வந்திறங்கிக் கொண்டிருக்கிறது.
கொக்கோகோலா, பெப்சி போன்றவை அவற்றின் ஆக்கக்கூறு களால் மாத்திரம் நஞ்சேறியிருக்கவில்லை. நச்சுப் பூச்சி கொல்லி மருந்து களாலும் மாசடைந்துள்ளன. இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையம் ஆகஸ்ட் 2006ல் ஊடகவியலாளர்களைக் கூட்டி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் பெப்ஸி, கொக்கோ கோலா மற்றும் அவற்றின் சகோதரக் குடிபானங்களில் டி. டி. ரி, லிண்டேன், மலத்தியோன், குளோர்பைரிஃபாஸ், ஹெப்ரோகுளோர் போன்ற பூச்சிக் கொல்லி மருந்துகள் அளவுக்கு அதிகமாக இருப்பது தெரிய உள்ளது. இந்நஞ்சுகள் சாதாரணமானவை அல்ல. நரம்புக் கோளாறுகள் முதல் புற்று நோய்கள் வரை ஏற்படுத்த வல்லவை. அதிர்ச்சி அளிக்கும் இந்தப் பயங்கரம் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் முதற்தடவையாக 2003ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆய்வறிக்கையிலேயே தெரியவந்தது தான். ஆனால், இம்முறை முன்பை விட இன்னும் அதிகமாக பூச்சிக் கொல்லிகள் செறிந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய தர நிர்ணயக்கழகம் அனுமதித்த அளவை விட கொக்கோ கோலாவில் 27
138
பொ.ஐங்கரநேசன்
மடங்குகள் அதிகமாகவும், பெப்சி கோலாவில் 30 மடங்குகள் அதிகமாகவும் உள்ளன. அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் இதே பன்னாட்டு நிறுவனங்களின் பானங்களைத் தருவித்து அறிவியல் சுற்றுச்சூழல் மையம் பகுப்பாய்வு செய்து பார்த்ததில் அவற்றில் எவ்வித பூச்சிக் கொல்லிகளும் இல்லாதிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் மென்பான நிறுவனங்கள் இவற்றைக் கண்டுகொள்வதாக இல்லை. நீரைச் சுத்திகரித்துப் பயன்படுத்துவதில் தமக்குள்ள கடப்பாடுகளை மறுத்து, வேளாண்மையில் அளவுக்கு அதிகமாகப் பூச்சி நாசினிகள் பயன் படுத்தப்படுவதையே தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
கொக்கோ கோலா, பெப்சி வகையறாக்கள் இவ்வளவு பாதிப்பு களை ஏற்படுத்தினாலும் இவை எவையும் எளிதில் வெளியே தெரிய வராதவாறு மறைக்கப்பட்டுவிடுகின்றன. தெரிந்தாலும் கைவிட முடியாதபடிக்கு, அபிமான துடுப்பாட்ட வீரர்கள் தொடங்கி திரை நட்சத்திரங்கள் வரைக்கும் மென்பானப் போத்தல்களுடன் தோன்றி மூளைச்சலவை செய்துகொண்டேயிருப்பர். ஒர் உற்பத்தியாளர் தனது தயாரிப்பை அதன் தரத்தையும் பயன்பாட்டையும் சொல்லியே விளம்பரம் செய்வார். ஆனால் கொக்கோ கோலா, பெப்சி நிறுவனங்கள் அவற்றின் பயன்பாடு எதையும் சொல்வதில்லை. அப்படி எதுவும் இல்லை என்பதுதான் உண்மை. "மனம் போல் தினம் ஜமாய் - கொகோ கோலா என்ஜாய், "ஹேவ் எ பெப்சி-ப்ளே இட் கூல் போன்ற விளம் பரங்களின் மூலம் வாழ்வியலின் அடிப்படை இலக்கணத்தையே மாற்ற முயல்கின்றன. உள்ளூர்ப் பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டி களுக்கு நிதியுதவி செய்வது தொடங்கி உலகக்கோப்பைப் போட்டி களுக்கு 'ஸ்பொன்சர் செய்வது வரை கோடானுகோடி ரூபாய்களை விளம்பரத்துக்கென வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றன. நாற்புறமும் இருந்து போட்டுத் தாக்கும் இந்த விளம்பரங்களின் மூலம் நுகர் வோருக்குத் தங்கள் பானங்களுடன் அமெரிக்க நுகர்வு வெறிப் பண்பாட்டையும் கலந்து பருக்குகின்றன.
வணிகமும் இலாபமும் மட்டும்தான் இந்நிறுவனங்களின் குறிக்கோள் என்றால் சுதேசிய மக்களின் நாவுக்கு ஏற்கனவே பிடித்த மாக இருக்கும் நெல்லி, தோடை, எலும்பிச்சை திராட்சைச் சுவைகளி லேயே தமது பானத்தை இந்நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி சம்பாதித்து இருக்கலாம். ஆனால், உலகம் முழுவதும் ஒரே பண்பாடு, ஒரே வாழ்க்கை முறை என்ற உலகமயமாக்கலின் அடிப்படையை விட்டுக் கொடுக்க இந்நிறுவனங்கள் தயாராக இல்லை. கோக் நிறுவனத்தின்
139
Page 72
ஏழாவதுஊழி
தலைவர் ஒரு தடவை, "இந்தியச் சந்தையில் எங்கள் முதல் எதிரி எலு மிச்சைச் சாறுதான்" என்று குறிப்பிட்டது இங்கு நினைவு கூரத்தக்கது. பல்வேறு விதமான உணவுகள், பல்வேறு விதமான சுவைகளுக்கு பழக்கப்பட்டிருக்கும் மக்களுடைய நாவின் சுவை நரம்புகளையே தங்களின் விருப்பத்திற்குப் பணிய வைக்கும் இந்நிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் எமது உணவுப் பண்பாட்டில் பண்டைக் காலம் தொட்டு இடம்பெற்று வந்த எத்தனை பானங்கள் இன்று இல்லாமற் போயின. எத்தனை சுதேசிய குளிர்பான நிறுவனங்கள் நொடிந்து, இல்லாது ஒழிந்தன.
பன்னாட்டு மென்பானங்களை அருந்துபவர்கள் அவற்றின் பண்பாட்டு வன்முறைக்கு இலக்காகிறார்கள் எனில், அருந்துபவர்கள் அருந்தாதவர்கள் எல்லோருமே அதன் சூழலியல் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள். ஒரு இலிற்றர் கோலா பானம் தயாரிக்கும் போது ஆலைகளிலிருந்து ஏழு இலிற்றர் கழிவு நீர் வெளியேறுவதாகவும், வெளியேறும் ஒவ்வொரு இலீற்றர்கள் கழிவு நீரும் எட்டு இலீற்றர் நிலத்தடி நீரை மாசுறுத்துவதாகவும் சூழலியலாளர்கள் தெரிவிக்கின் றனர். ஆக, ஒவ்வொரு இலீற்றர்கள் பானமும் 56 இலீற்றர்கள் குடிதண்ணிரை ஒழித்துக் கட்டுகின்றது. இந்தச் சீரழிவுக்கு கேரளாவின் பிளாச்சிமடா ஒரு பரிதாப உதாரணம். கேரளாவின் நெற்களஞ்சியம் என வர்ணிக்கப்படும் பாலக்காடு மாவட்டத்தில் பிளாச்சிமடா மிகவும் செழிப்பான கிராமம். இங்கு 2000 ஆண்டின் நடுப்பகுதியில் இந்தியா விலேயே மிகப் பெரிதாகத் தனது ஆலையை அமைத்த கோக் நிறுவனம் ஆழ்குழாய்க் கிணறுகளின் மூலம் தினமும் 15 இலட்சம் இலீற்றர்கள் நீரை உறிஞ்சி வருகிறது. இரண்டு வருடங்களுக்குள்ளாகவே அப்பகுதியில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் ஒரு மீற்றருக்கும் மேலாகக் கீழிறங்கிவிட்டது. சில கிணறுகள் முற்றாகவே காய்ந்து போய் விட்டன. மீந்திருக்கும் நீரையும் குடிக்க இயலாதவாறு ஆலைக்கழிவு களின் காட்மியம் உலோகம் பாழ்படுத்தியுள்ளது. வறட்சி என்பதை வரலாற்றில் சந்தித்திராத பிளாச்சிமடா மக்கள் கோக் நிறுவனத்திற்கு இடம் கொடுத்த விதியால் இப்போது நல்ல குடிநீருக்கு வீதிவீதியாக அல்லாடித் திரிகிறார்கள்.
சுற்றுச் சூழலியலாளர்களினதும் உலகமயமாக்கலுக்கு எதிரானவர் களினதும் தொடர்ச்சியான பரப்புரை காரணமாக உலகின் பல நாடு களும் மென்பானங்கள் தொடர்பாகப் பல கட்டுப்பாடுகளையும் தடை
களையும் உருவாக்கி வருகின்றன. சிங்கப்பூர், தனது பத்து ஆண்டு
14Ο
பொ. ஐங்கரநேசன்
சுகாதார இயக்கத்தின் ஒரு அங்கமாக கொக்கோ கோலா, பெப்சி போன்றவற்றுடன் சீனி அதிகம் கொண்ட பல குளிர்பானங்களை 1972இல் இருந்து கல்வி நிறுவனங்களில் விற்பதற்குத் தடைசெய்திருக் கிறது. இந்தியாவிலும் மென்பானங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கண்டறியப்பட்டதை அடுத்து ராஜஸ்தான், குஜராத் மத்தியபிரதேசம் போன்ற பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்களிலும, அரசாங்க அலு வலகங்களிலும் இவற்றின் விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு ஆபத்துகளையும் சுமந்து கொண்டு வரும் மென்பானங் களை நாம் இனியும் அருந்தவேண்டுமா என்ன? கோடை காலத் தாகத்தைத் தணிக்க மட்டுமல்ல; எப்போதுமே இளநீர், பதநீர், கரும்புச்சாறு, பழச்சாறு, மோர். போன்றவற்றை அருந்துவது ஆரோக் கியத்துக்கும் உணவுப்பண்பாட்டின் பல்வகைத்தன்மைக்கும் ஆதர வானது. இவை இல்லாத பட்சத்தில் இருக்கவே இருக்கிறதே தண்ணிர் என்னும் உன்னத பானம். தமிழர் பண்பாட்டில் தண்ணிர்ே ஒரு ஆகாரம்தானே!
141
Page 73
14
நீரின்றி அமையாது உயிர்
நீர் இன்று அமையாது உலகெனின் யார் யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு"
- திருக்குறள் (வான்சிறப்பு, 20)
தண்ணீருக்கு நிறம், மணம், சுவை என்று பகட்டுகள் எதுவுமே யில்லை. இருந்த போதும் ஒரு குவளை பச்சைத் தண்ணிருக்கு முன்னால், பற்பல வர்ணங்களில் இனிக்கும் மென்பானங்கள் எல்லாம் எம் மாத்திரம்? தாகத்தைத் தணிவிப்பதில் மட்டுமல்ல; உயிருக்குத் தண்ணிர் தருகின்ற ஏனைய கொடைகளை வெல்வதற்கும் உலகில் எந்தத் திரவங்களும் இல்லை. தன்னிகரில்லாத தண்ணீரின் அந்தச் சிறப்பு களைத்தான் உங்கள்'மனங்குளிர இங்கு பருகத் தரப்போகின்றோம்.
தண்ணிர் உடலில் உயிர்ப் பசையைப் பிசைந்து வைத்திருக்கும் உயிர் நீர். இதனால்தான் உணவு அருந்தாதபோதிலும் பார்க்க, நீர் அருந்தாதவிடத்து விரைவிலேயே உயிர் காயத் தொடங்கிவிடுகிறது. உலகின் பல பட்டினிப் போராட்டங்கள் இதற்குச் சாட்சிகளாக உள்ளன. ஐரிஸ் குடியரசு இராணுவத்தைச் (IRA) சேர்ந்த பொபி சான்ட்ஸ் (BobbySands) இங்கிலாந்தில் சிறைப்பட்டிருந்த போது தன்னை அரசியல் கைதியாகக் கருதக்கோரி உண்ணாவிரதம் இருந்தார். மரணம் மெல்ல மெல்ல நெருங்கி வந்து அவரை 66ஆவது நாளில் சூழ்ந்து கொண்டது. இங்கிலாந்துச் சிறையில் ஐரிஸ் குடியரசு இராணுவத்தின் இன்னுமொரு போராளி ஃபிராங் ஸ்ராக் (Frang Stagg) பட்டினி கிடக்க ஆரம்பித்த 62 வது நாளில் மரணம் நேர்ந்தது. துருக்கியில் குர்திஸ் பட்டினிப் போராளிகள் சிலர் 65 தொடங்கி 69 நாள்வரையில் உயிரைத் தாக்குப் பிடித்தனர். ஆனால், ஈழத்தில், உணவுடன் துளிநீரேனும் பருகாது போராட்டம் நிகழ்த்திய திலீபனின் உயிர் எண்ணி 12 வது நாளில் பிரிந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றக்கோரி பட்டினிக்குத் தன்னை உண்ணக் கொடுத்த திலீபனின் சாவு ஈழவிடுதலைப் பேராட்டத்தில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியதோடு, உயிர்த்திருத்தலில் நீரின் முக்கியத்
142
பொ.ஐங்கரநேசன்
துவத்தை எடுத்தியம்பும் ஒரு வலிய உதாரணமாகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.
நீருக்கும் உயிருக்கும் இடையேயான தொடர்பு 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் உலகின் முதலாவது உயிரி பிரசவமான போதே உருவாகிவிட்டது. உயிரின் தோற்றம் பற்றிய நவீன கொள்கை கள் எல்லாம் 'உயிர் தண்ணீரில் உருவானதாகவே விளக்குகின்றன. அண்டவெளிக்கதிர்களின் தாக்குதலில் பல்வேறு இரசாயனங்கள் கைகோர்த்துத் தம்மைச் சுற்றி எல்லை அமைத்துக் கொண்டபோது முதற்கலம் உருவாகியது. இந்தக் கலத்தினுள் (Cel) ஆதிகாலத் தண்ணிர் சிறைப்பிடிக்கப்பட்டது. அறிவியலின்படி, இந்த ஒற்றைக் கலத்தில் இருந்துதான் இன்று உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் பரிணாமம் பெற்றன. நமது உடலில் கலங்களிலுள்ள குழியவுரு (cytoplasm) எனப்படும் திரவப்பகுதி வேறெதுவுமல்ல; ஆதிகாலக் கடல் நீர்தான். உடலில் உள்ள நீர்மப் பொருட்களில் உள்ள உப்புச் செறிவும், கடல் நீரின் உப்புச் செறிவும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுவது இதனை உறுதி செய்கிறது.
ஒவ்வொரு உயிர்க்கலத்திலும் மிக அதிகமாகக் காணப்படும் பதார்த்தம் நீர்தான். பல ட்ரில்லியன் (Trilon) கலங்களினால் ஆன மனிதனில் தோலின் கீழாக உள்ள கொழுப்பு இழையத்தில் (Adjpose tissue) மட்டும் தண்ணிர் இல்லை. அநேக இழையங்கள் அவற்றின் உடல் எடையில் 70 தொடங்கி 75 விழுக்காடு நீரைக் கொண்டிருக் கின்றன. இரத்தம் அநேகமாக முழுவதும் நீராலானது. எலும்பு இழையங்களில் அவற்றின் கடினத்தன்மையையும் மீறி 20 விழுக்காடுக்கும் குறையாத அளவுக்கு நீர் இருக்கிறது. மொத்தத்தில், ஒரு சராசரி ஆணின் எடையில் 70 விழுக்காடு அளவுக்கு உடலிலுள்ள நீரே காரணமாகிறது. பெண்களில் ஒப்பீட்டு அளவில் கொழுப்பு அதிகம் என்பதால் உடல் எடையில் நீரின் அளவு ஆண்களிலும் பார்க்கச் சற்றுக் குறைவாகவே காணப்படும். கனவளவுப்படி, நடுத்தர வயது மனிதர் ஒருவரில் உள்ள நீரின் அளவு ஏறக்குறைய 45 இலீற்றர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், தினமும் மூன்றரை இலீற்றர்கள் வரையில் மூச்சுக் காற்றுடன், மலத்துடன், சிறுநீருடன், வியர்வையுடன் என்று பல வழிகளில் நம்மை அறியாமலே உடலில் இருந்து வெளியேறிவிடுகிறது. ஆனால், இழந்த நீர் நம்மால் உள்ளெடுக்கப்படும் நீரால் ஈடு செய்யப்பட, உடலின் நீர்ச்சமநிலை தொடர்ந்தும் பேணப்பட்டு வருகிறது.
143
Page 74
ஏழாவது ஊழி
உடலினுள் சேரும் நீரில் 20 விழுக்காடு நாம் உண்ணும் உணவுகளிலிருந்து கிடைக்க, எஞ்சிய பெரும் பகுதி குடிக்கும் தண்ணிரில் இருந்தும் பிற பானங்களிலிருந்துமே வந்து சேர்கிறது. பருகுகின்ற பானங்கள் எல்லாமே உடலுக்கு நீர் பாய்ச்சுபவைதாம். எனினும் கோப்பி, தேநீர், மென்பானம், மதுபானம் போன்ற தயாரிப்பு கள் சிறுநீர்ப் பெருக்க விளைவை (Diuretic effect) ஏற்படுத்துகின்றன. அதாவது, உடலில் இருந்து சிறுநீர் வடிவில் நீர் வெளியேறுவதை அதிகப்படுத்துகின்றன. இதனால்தான் உடலின் நீர்ச்சமநிலையை உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்காகத் தினமும் ஒருவர், குறைந்தபட்சம் இரண்டு இலீற்றர்கள் (8 அவுன்ஸ் அளவுடைய 8 குவளைகள்) தண்ணிரையேனும் பருக வேண்டும் என மருத்துவ உலகம் சிபார்சு செய்துள்ளது.
உணவுக் கட்டுப்பாட்டில் (Diet) இருப்பவர்கள் தமது உடலுக்குத் தேவையான அளவிலும் பார்க்கக் குறைவான நீரையே பெற நேர்கிறது. உடலை நீரேற்றிக் கொள்வதற்கு இவர்கள் முன்னால் உள்ள ஒரே வழி கூடுதலான நீரை அருந்துவதுதான். தண்ணிரை அதிகமாகப் பருகும் போது உணவுக் குழலில் உணவுக்கான வெளியும் குறைகிறது. இது உணவுக் கட்டுப்பாட்டைப் பேண உதவுகிறது. நெடுநேரம் உடற் பயிற்சியில் ஈடுபடும் விளையாட்டு வீரர்களது நாளாந்த குடிநீர்த் தேவையும் அதிகம். பொதுவாக வியர்வையுடனும் சுவாசக் காற்றுடனும் வெளியேறும் நீர் அண்ணளவாக ஓர் இலீற்றர். இது ஒரு நாளில் வெளியேறும் அளவு. ஆனால், கடுமையான உடற்பயிற்சியின் போது ஒரு மணித்தியாலத்திலேயே ஒர் இலீற்றர் வியர்வை பெருக்கெடுத்து வழிகிறது. இதனால் பயிற்சிக்கு முன்பும் பின்பும் இவர்கள் அதிக அளவில் நீரைப் பருகுவது அவசியமாகிறது. இப்படி அருந்தாவிடின் உடல் வழமை போல இயங்க முடியாமல் சிரமங்களுக்கு ஆளாக நேரிடும்.
உடலில் இருந்து வழமையிலும் பார்க்க அதிகமாக நீர் வெளி யேறுவதை நீரிழப்பு (Dehydration) என்கிறார்கள். வாந்தி பேதி, வயிற்றோட்டம் போன்ற நோய்களில் இதன் தீவிரம் அதிகமாக இருக்கும். நோயாளியின் தோலில் சுருக்கங்கள் ஏற்படும். தோலின் மேற்பரப்பில் உள்ள நீர் அவசர தேவைகளுக்காக எடுத்துக் கொள்ளப் படுவதாலேயே, நீரை இழந்த தோல் சுருங்கிப் போகிறது. தாகம், தலை வலி, மயக்கம், வாய்உலர்தல் என்று உடல் விடுக்கும் எச்சரிக்கை களைக் கண்டு கொள்ளாவிடின் நீரிழப்பு, மரணத்துக்கு இட்டுச்
144
Page 75
9Jypr76)igj26ITL5)
செல்லவும் கூடும். தோலின் பெரும்பகுதியைத் தீயின் நாக்குகளிடம் இரையாகக் கொடுத்தவர்களின் மரணத்துக்குக் கிருமிகளின் தொற்றுதல் மாத்திரம் காரணம் அல்ல. திறந்த தோலினூடாக நிகழும் நீரிழப்பும் ஒரு பெரும் ஆபத்தாக இருக்கிறது.
அனைத்து உயிரினங்களும் நீருடன் இப்படிச் சொந்தம் கொண்டாடுவதற்கு நீர் கொண்டிருக்கும் மிகவும் அசாதாரணமான தன்மைகளே காரணம். அத்தனை இயல்புகளுமே எது முதல்? எது பிந்தி? என்று வரிசைப்படுத்த முடியாத அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவைதாம். எனினும் தண்ணிரின் தனித்துவங்களில், அதன் வெப்பத்தைச் செரிக்கும் ஆற்றல் உயிரியலாளர்களால் பெரிதும் விதந்துரைக்கப்படுகிறது.
எல்லாப் பொருள்களுமே சூட்டை வெளிக்காட்டாமல் ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பத்தைத் தம்முள் தேக்கி வைத்திருக்கும் தன்மை வாய்ந்தவை. தண்ணிருக்கு இந்த வெப்பக் கொள்ளளவு (Heat capacity) அதிகம். ஒரு கலோரி வெப்பத்தை உறிஞ்சிய பின்னரே ஒரு கிராமளவு தண்ணீரின் வெப்பநிலை ஒரு பாகை செல்சியஸ் (1°C) உயரு கிறது என்பதில் இருந்து தண்ணீரின் வெப்பக் கொள்ளளவின் பரிமா ணத்தைப் புரிந்து கொள்ளலாம். இதனால், பெருமளவு வெப்பத்தை வாங்கி விழுங்கிக் கொண்ட போதும் தண்ணீரால் தண்ணென்று தொடர்ந்தும் குளிர்ச்சியாக இருக்க முடிகிறது. இந்த இயல்பு, உயிர்ச்சூழலுக்கு இயற்கை வழங்கியுள்ள மிகப்பெரும் கொடை ஒரு தொழிற் சாலை போன்று இயங்கிக் கொண்டிருக்கும் உடலினுள்ளே உருவாகும் வெப்பத்தை, உடலிலுள்ள நீர் உறிஞ்சித் தன்னுள் மறைத்து வைத்திருப்பதால்தான் உயிர் இயந்திரத்தால் சூடாகாமல் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்க இயலுகிறது. தண்ணிர் நீராவியாக மாறும் போதும் கணிசமான அளவு வெப்பத்தைத் தன்னுள் இழுத்து மறைக்கிறது. இயற்பியலில் இதனை ஆவியாதலின் வெப்பம் (Heat of Vaporization) என்கிறார்கள். அதிகச் சூட்டை உடல் எதிர்கொள்ளும் தருணங்களில் ஆபத்பாந்தவனாக இது கைகொடுக்கும். தன்னிச்சையாக வெளியேறும் வியர்வை, சூட்டை வாங்கி, ஆவியாகி உடனடியாகவே வெப்ப நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. இதனால் தான் கத்திரி வெய்யிலிலும் நாம் காய்ந்து போகாமல் இருக்கிறோம்.
தண்ணிரின் இன்னுமொரு அதிசயம் அது உறைந்து பனிக் கட்டியாகும் போது நிகழுகிறது. சூடேறும்போது விரிவடைவதும்
146
பொ. ஐங்கரநேசன்
குளிரடையும் போது சுருங்கிக் கொள்வதும் பொருட்களின் பொதுவான நடத்தை விதி. ஆனால், தண்ணிர் குளிர்ந்து பனிக் கட்டியாகும் போது ஆச்சரியப்படும் வண்ணம் அளவில் பன்மடங்காக விரிகிறது. கனவளவில் கூடுவதால் அடர்த்தியில் குறையும் பணிக்கட்டி ஒரு தக்கையைப் போலத் தண்ணிரில் மிதக்கிறது. நீரின் அசாத்தியமான இந்த இயல்புதான் குளிர்ப்பிரதேசங்களின் நீர்ச் சூழலில் உயிர்வாழ்வைச் சாத்தியமாக்கியுள்ளது. பனிக்கட்டியின் கனதி, தண்ணிரிலும் கூடுதலாக இருந்திருப்பின் அங்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்பதைக் கற்பனையில் பாருங்கள். கடுங்குளிர் காலங்களில் நீர் நிலைகள் எல்லாம் அடி ஆழத்தில் இருந்து உறைய ஆரம்பித்து முழுவதுமே பணியால் நிறைந் திருக்கும். மாறாக, உறைந்த பனிக்கட்டிகள் நீரில் மிதக்க ஆரம்பித்து விடுவதால்தான் எஞ்சியுள்ள நீரில் உயிரினங்களால் தப்பிப் பிழைக்க முடிகிறது. நீரை மூடி மிதக்கின்ற பனி, ஒரு நல்ல வெப்பத் தடுப்பும் (Insulator) ஆகும். ஒரு கம்பளிப் போர்வையாக உள்ளேயிருக்கும் நீரை மேலும் மேலும் குளிரேறவிடாமல் தடுத்தும் உயிரினங்களைப் பாதுகாக்கிறது.
தண்ணிர் ஒரு மிகச் சிறந்த கரைப்பான் (solvent) என்ற ரீதியிலும் உயிர்களின் இருப்புக்கு இன்றியமையாததாக உள்ளது. உடலினுள்ளே கலங்களை உள்ளும் புறமுமாக எந்நேரமும் நீராட்டிய வண்ணம் உள்ள தண்ணிர் தன்னில் வெல்லங்கள், உப்புகள், அமினோஅமிலங்கள், நொதியங்கள் என்று எண்ணிலடங்காத இரசாயனங்களைக் கரைத்து வைத்திருக்கிறது. ஒரு பொருள் பெரிதாக உள்ள போது கொண்டி ருக்கும் மேற்பரப்பை விட மிகச்சிறிய துகள்களாகும்போதுள்ள கூட்டுப் பரப்பு அதிகமாகும். மேற்பரப்பு அதிகரிக்கும் போது தாக்குதிறனும் அதிகரித்துச் செல்லும். இந்த அறிவியல் விளக்கத்தின் அடிப்படை யிலேயே கலங்களில் உயிர் இரசாயனத் தாக்கங்களை வீறுடன் நிகழ்த்த வேண்டித் தண்ணிர் பதார்த்தங்களைக் கரைத்து வைத்துப் பரிமாறுகிறது. உமிழ் நீர், கண்ணிர், வியர்நீர், சிறுநீர், செந்நீர், நிணநீர் எல்லாமே கரைசல்கள்தாம். இவற்றிலெல்லாம் தண்ணிர், தான் கரைத்தவற்றைக் காவிச் செல்லும் போக்குவரத்துத் தொழிலையும் சேர்த்துச் செய்கிறது. உயிர் இரசாயனத்தில் நீரின் பயன்பாடு கரைப்பதுடனும் காவுவதுடனும் மாத்திரம் முற்றுப் பெறுவதில்லை. அதுவே ஒரு தாக்கு பொருளாகவும் பங்கேற்கிறது. சமிபாட்டு வினைகள் எல்லாமே நீரின் பங்களிப்பை நேரடியாக வேண்டி நிற்பவைதாம். இவை போன்ற காரணங்களால் தான், உடலில் நீரின் அளவு
147
Page 76
ஏழாவது ஊழி
குறையும்போது அனுசேபத்தாக்கங்கள் ஒவ்வொன்றாகத் தடைப்பட்டுப் போய், கடைசியில் மூச்சும் நின்று போகிறது.
கண்ணுக்குத் தெரியாத ஒரு சவ்வை இழுத்து விரித்தது போலத் தண்ணிரின் மேற்பரப்பில் ஒரு இழுவிசை தொழிற்படுகிறது. எல்லாத் திரவங்களினது மேற்பரப்புகளிலுமே இழுவிசை நிலவுகின்ற போதும் நீரின் மேற்பரப்பு இழுவிசை (Surface tension) மிக அதிகம். நீர்மூலக் கூறுகளுக்கு இடையேயுள்ள அதிகக் கவர்ச்சி விசையே இதற்குக் காரணம். இப்படி, நீருக்கு மேற்பரப்பு இழுவிசை அதிகமாக இருப்பதாலேயே, பரப்பளவைக் குறைக்கும் விதமாக ஒரு நீர்த்துளி கோளஉருப் பெறுகிறது. இயேசு கிறிஸ்துவைப் போல, நீர்ப்பூச்சிகளால் தண்ணிரில் எந்தப் பதட்டமும் இல்லாமல் நடந்து செல்ல இயலுகிறது. ஒரு தையல் ஊசியால் அமிழ்ந்து போகாமல் மிதக்க முடிகிறது. மேற் பரப்பு இழுவிசைதான் ஆதித் தண்ணிரில் முதற்கலம் உருவாகுவதற்கு வேண்டிய வேதிப் பொருள்களை ஒருங்குதிரளச் செய்து உயிரேற்றிக் கொடுத்தது. இன்றும், காயப்பகுதிகளில் குருதிக் கலங்களைத் திரட்டி இரத்தப் பெருக்கைத் தடுக்கும் இன்னோரன்ன உயிர் காப்புப் பணிகளைத் தொடர்ந்தவாறுதான் உள்ளது.
நீருக்கு மருத்துவ குணமும் இருக்கிறது. இதனை ஜப்பானியர்கள் 16 ஆம் நூற்றாண்டிலேயே அறிந்திருந்தனர். அக்காலத்தில் வெந்நீர்க் குளியல் ஜப்பானில் ஒர் சிகிச்சையாகவே நடைமுறையில் இருந்தது. உரோமர்கள் நீரை ஆவியாக்கிக் கிடைக்கும் நீராவியில் நனைந்தனர். இந்த நீராவிக் குளியலுக்கென அவர்கள் 'ஸ்பா' (spa) எனப்படும் மருத்துவ நிலையங்களை உருவாக்கி வைத்திருந்தனர். உலகம் பூராவும் இன்று ஸ்பாக்கள் உள்ளன. பிரான்ஸில் மட்டும் வருடாந்தம் 6 இலட்சம் பேர் வரை இவ்வாறு விசேட நிலையங்களில் நோய்தீர வேண்டிக் குளிக்கிறார்கள். விஞ்ஞானமும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளது. நீரின் வெப்பநிலை, அதன் மென்மையான அசைவு, கரைந்துள்ள சில கனிமங்கள் என்பன நீருக்கு இந்த மருத்துவ சக்தியைக் கொடுக்கின்றன. இந்த நீரில் நோயாளி அனுபவிக்கும் மன ஆறுதல் நிலைகூட நோய் தீரக் காரணம் என்கிறார்கள்.
நவீன மருத்துவமும் நீர்ச்சிகிச்சையில் நாட்டம் கொண்டுள்ளது. இதற்கு வித்திட்டவர்களில் ஈரானிய மருத்துவர் எவ், பற்மன்ஜெல் எட்ஜ் (F. Batmanhelid) குறிப்பிடத்தக்கவர். 1979இல் ஈரானியப் புரட்சி நடந்தபோது கைது செய்யப்பட்ட இவர், இரண்டரை வருட காலத்தை
148
பொ.ஐங்கரநேசன்
அரசியல் கைதியாகச் சிறையில் கழிக்க நேர்ந்தது. அப்போது நீரின் குணப்படுத்தும் ஆற்றலைக் கண்டறியும் ஆய்வுகளைச் சக கைதிகளிடம் மேற்கொண்டார். தண்டனைக் காலம் முடிந்த பின்னரும்கூட ஆய்வுகளுக்கு என நான்கு மாதங்கள் சிறையில் தங்கியிருந்தார். இக்கால இடைவெளியில், மன உளைச்சலால் குடல் அழற்சி நோய் (PepticUlcer) கண்டு அவதிப்பட்ட சுமார் 3000 கைதிகளுக்கு இவர் வழங்கியது வெறும் தண்ணீர் மாத்திரம்தான். "உங்களுக்கு நோய் இல்லை தாகம் தான் உள்ளது. தாகத்துக்கு மருந்துகளை எடுக்காதீர்கள்" என்று சொல்லி, மூன்று மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை இரண்டு குவளைகள் நீரைப் பருகவைத்தார். வியக்கும்படியாக எல்லோருமே குணமாகினர். இன்று குடல் அழற்சி சரும அழற்சி முடக்கு வாதம் மார்பு வலி, ஆஸ்த்மா உயர் இரத்த அழுத்தம், கொலஸ்திரோல் போன்ற பல்வேறு நோய்களுக்கு மருத்துவர்களால் தண்ணிர் ஒரு மருந்தாகவே பரிந்துரை செய்யப்படுகிறது.
தண்ணிரின் இத்தனைச் சிறப்புகளுக்கும் காரணம் அதன் இரசா யணம்தான். இரண்டு ஐதரசன் அணுக்கள் ஒரு ஒட்சிசன் அணுவுடன் இணைந்து நீர் மூலக்கூறு (H,0) தோன்றுவது நீர் இரசாயனத்தின் அரிச்சுவடி. இந் நீர் மூலக்கூறு மின் தன்மையில் நடுநிலையானது. எனினும், ஐதரசன் அணுக்களுடன் பகிர்ந்து கொண்டது போக, மீதமாக உள்ள இலத்திரன்களால் ஒட்சிசன் அணுவில் மறையேற்றமொன்று செறிந்திருக்கும். இதன் தூண்டுதலால் ஐதரசன் அணுக்களிலும் நேரேற்றம் உருவாகிறது. இப்படி, ஒரு நீர் மூலக்கூறிலேயே ஒரு முனையில் "நேர் என்றும் எதிர்முனையில் 'மறை என்றும் இயங்குவது இருமுனைவுத் தன்மை (Dipolar Nature) எனப்படுகிறது. இதன் காரணமாகத் தண்ணிரில், நீர்மூலக்கூறு ஒன்றின் அணுக்களில் ஒட்சிசன் அருகாக உள்ள வேறோர் நீர்மூலக்கூறின் ஐதரசனை இழுக்க, ஐதரசன் பிறிதோர் நீர் மூலக்கூறின் ஒட்சிசனால் கவரப்படுகிறது. நீர் மூலக்கூறு களுக்கு இடையேயான இந்த மின் கவர்ச்சியை இரசாயனவியலாளர்கள் ஐதரசன் பிணைப்பு என்கிறார்கள். பிற திரவங்கள் எதற்கும் இல்லாத நீரின் தனித்துவமான கவர்ச்சி - பிணைப்பு - இது. ஐதரசன் பிணைப்புகள் தோன்றிய வேகத்திலேயே உடைந்து, இடம்மாறி மீண்டும் பிணைந்து என்று தண்ணிரில் எப்போதுமே இருந்து வருவதால் கவர்ச்சியால் கட்டுண்டு கிடக்கும் நீர்மூலக் கூறுகளைப் பிரிப்பது இலகுவான ஒன்று அல்ல. இதனாலேயே, நீரைச் சூடுபடுத்த அதிக வெப்பம் தேவைப் படுகிறது. ஆவியாதலின்போது பெரும் வெப்பம் மறைக்கப்படுகிறது.
49
Page 77
ஏழாவது ஊழி
நீரின் மேற்பரப்பில் அதிக விசை உஞற்றப்படுகிறது. குளிரில் நீர் விரிகின்றது. இப்படி, நீர் மூலக்கூறு களுக்கு இடையேயான கவர்ச்சி தண்ணீருக்குப் பல சிறப்புகளை வழங்கி இருப்பதாலேயே தண்ணிர் உயிருடனும், உயிர் தண்ணிருடனும் இரண்டறக் கலந்துள்ளது. தண்ணிர் சடமாக இருந்தபோதும் அதனை 'உயிர்நீர் என்று அழைப்பது மிகையானதல்லவன்றோ?
15O
15
பாழாகும் யாழ்ப்பாணக் கிணறுகள்
"குழிகொள் சின்னி குழாஅல் உண்டலின்
சேறிகிளைத் திட்ட கலுழ்கண் ஊறல்
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை"
- LIDDsigsgy (325: 4-5) யாழ்ப்பாணத்துக்குரிய பெருமைகளுள் அதன் கிணறுகளும்
ஒன்று. யாழ்ப்பாணத்தில் பொங்கிப் பாயும் பேராறுகள் இல்லை. நிரம்பித் ததும்புகின்ற பெருங்குளங்கள் இல்லை. பெய்ந்து கொட்டு கின்ற அடை மழையும் குறைவு. அப்படி இருந்தும் வரலாற்றுக் காலம் முதலே குடாநாட்டில் ஈழத்தமிழர்கள் அடர் குடியேறியமைக்கும், அவர்களின் நிமிர்ந்த வாழ்வுக்கும் காரணமே கிணறுகள்தாம். கல்லுப் பொழிந்து கட்டிய கிணறுகளும், இயற்கையின் தான்தோன்றிக் கிணறுகளும் நிலமடந்தையின் முலைச் சுரப்பிகளாக தெளிந்த நீரைச் சுரந்துகொண்டிருக்கின்றன. பருகமட்டுமல்ல சமைக்க, சுத்திகரிக்க, பாசனம் செய்யவென எல்லா நீர்த்தேவைகளையுமே ஆறு, அணை களின்துணை எதுவும் இன்றித் தனியொரு வளமாக ஈடுசெய்து வருகின்றன.
நல்ல தண்ணிருக்கு அறிவியலாளர்கள் நிறமும் சுவையும் இல்லை என்பார்கள். ஆனால், குடாநாட்டு மக்களுக்கு இந்தக் கிணறுகளின் நீர் ‘பச்சைத் தண்ணீர்; வாயூறவைக்கும் கருப்பஞ்சுவை நீர். அவர்களிலும் திருநெல்வேலி, கோண்டாவில், கட்டுவன் போன்ற வலிகாமப் பகுதி வாசிகளுக்குத் தங்களின் கிணறுகள் குறித்த பெருமிதங்கள் இன்னும் அதிகம். கட்டுவன் விவசாயிகள் நாள் பூராவும் இறைத்தாலும் வற்றவே வற்றாது என்று மார்தட்டுவார்கள். கிணறு களில் கைகளினால் நீர் மொண்டு குடித்ததாகவும் பலர் தங்கள் கிணறு களைச் சிலாகிப்பதுண்டு. இது, மிகைப்பட்ட புனைவு போல இருந்தா லும் நீரூற்றுக் கூடிய, மாரியில் நீர்முட்டுகின்ற தொட்டனைத் தூறும் கிணறுகள் ஏராளம் உள்ளன. ஆனால் இந்தப் பெருமைகள் எல்லாம் விரைவில் பழங்கதைகள் ஆகிவிடும் போல. அண்மைக் காலமாக
151
Page 78
ஏழாவது ஊழி
யாழ்ப்பாணக் கிணறுகளில் தென்படத் தொடங்கியிருக்கும் மாறுதல் கள், மிகக் கடும் நீர் நெருக் கடியை நோக்கி யாழ்ப்பாணம் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்குக் கட்டியம் சொல்வனவாகவே உள்ளன.
குடாநாட்டின் வற்றவே வற்றாது என்றிருந்த அநேகமான கிணறுகளில் நீர் மட்டம் வரவரக் கீழிறங்கிச் செல்ல ஆரம்பித்துள்ளது. தேன்சுவை போய் பல கிணறுகளில் தண்ணிர் வெகு வேகமாக உப்பாகி வருகின்றது. கண்ணுக்கும் நாவுக்கும் தெரிய வந்திருக்கும் இந்தக் கோளாறுகளை விட, கண்ணுக்குப் புலப்படாத புற்று நோயாக இரசாயனங்களும் கிருமிகளும்கூட குடிநீரை அரித்து வருகின்றன. இவை வெறுமனே அனுமானங்கள் அல்ல. ஆய்வின் முடிவுகள். வடக்கு-கிழக்கின் சூழல் முகாமைத்துவம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் 'அபிவிருத்திக்கும் திட்டமிடுதலுக்குமான செயலகம் கடந்த 2003 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில், இரசாயனத்துறைப் பேராசிரியை திருமதி.ரா.மகேஸ்வரன் அவர்கள் 'கிணற்று நீரின் தரம் பற்றியும், சமூக மருத்துவத்துறைப் பேராசிரியர் ந.சிவராஜா அவர்கள் நீர் மாசின் ஆரோக்கியக் கேடுகள் பற்றியும் இரண்டு முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருந்தனர். இவற்றில், யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலுமுள்ள கிணறுகளின் நீரில் நைத்திரேற்று, பொஸ்பேற்று, குளோரைட்டுப் போன்ற வேதிகளும், இ. கோலி (E.Coli), கோலி ஃபோர்ம்கள் (Coliom) போன்ற மலக்கிருமிகளும் ஆபத்தான அளவுக்குப் பெருகியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் அவலம் என்னவெனில், நீரின் அளவிலும் தரத்திலும் ஏற்பட்டு வரும் மிக மோசமான இந்தப் பின்னடைவுகளுக்குப் பின்னால் தங்கள் தண்ணிர் குறித்துக் கர்வம் கொள்ளும் யாழ்ப்பாணத்தவர்களின் அரூப கரங்களே இருப்பதுதான்.
யாழ்குடா நாட்டின் அடித்தளம் புவிச்சரித வரலாற்றில் 'மயோசின் (Miocene) காலத்துக்குரிய சுண்ணாம்புப் பாறைகளால் ஆனது. மயோசின் காலப் பகுதியில் குடாநாடு கடலின் கீழ் அமிழ்ந்திருந்த தாகவும், கடல்வாழ் உயிரினங்களின் உடல்களே இறுகி இவ்வாறு சுண்ணக் கற்பாறைகளாகப் பலம் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு ஆதாரமாக, கிணறுகள் தோண்டும்போது பாறைகளில் சிப்பிகள், சங்குகள் போன்ற ஒட்டுடலிகளின் சுவடுகள் பதிந்திருப்பதை இப்போதும் காணலாம். இயல்பாகவே மூட்டுகளையும், உடைவுகளை யும் கொண்டுள்ள இம் மயோசின் பாறைகள், மழை நீரை உட்புகவிடக்
152
நன்னீரை நச்சாக்கும் வேளாண் வேதிகள்
யாழ்ப்பாணம்
Page 79
ஏழாவது ஊழி
கூடியவை. இவ்வாறு புகுந்து பாறைகளின் உள்ளே உள்ள வெடிப்பு களிலும், பள்ளங்களிலும், தேங்குகின்ற நீரை நிலத்தடி நீர் (Underground Water) என்கிறோம். இந் நிலக்கீழ் நீர் அதற்கும் கீழே, குடாநாட்டைச் சூழ உள்ள கடலிலிருந்து ஊடுருவியிருக்கும் உவர்நீரின் மேல் ஒரு வில்லை போல மிதந்து கொண்டிருக்கிறது. மாரிக் காலத்தில் தரைக்குக் கீழே சேமிக்கப்படும் மழைநீரின் அளவுக்கு ஏற்ப இந்நன்னீர் வில்லை விரிவடைந்தும், கோடைகாலத்தில் சுருங்கியும் கொள்கிறது. உச்சபட்ச மாக வில்லையின் தடிப்பு 25 மீற்றர்கள் வரையில் உயருகிறது. இவ்வில்லையிலுள்ள நீரே, நாம் கிணறுகளைத் தோண்டும் போது பாறைகளிலுள்ள துளைகளினூடாக ஊறி வருகின்றது.
ஊற்றுக்கண்கள் போன்று பாறைகளில் அமைந்துள்ள சிறு துளைகள், வெடிப்புகள் மழைநீருடன் சேர்ந்து வரும் அமிலப் பதார்த்தங்களால் இரசாயன அழிதலுக்கு உட்பட்டுச் சில சமயங்களில் பெரிய குகைகளாக உருமாறிவிடுகின்றன. இக்குகைகள் சில அடி முதல் பல மைல்கள் நீளம் வரை தொடர் குகையாக இருக்கும். குகை மேலும் அரிக்கப்பட குகையின் மேற்பரப்பு இடிந்து விழுந்து விடும். இப்படி தொடர்குகைப் பகுதியின் மேற்பரப்பு இடிந்து விழுந்த குகைப் பள்ளங் களே புத்தூர் நிலாவரைக் கிணறு, குரும்பசிட்டி பேய்க் கிணறு, புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு, ஊரணி வற்றாக் கிணறு போன்ற இயற்கை தோண்டித் தந்த பெருங்கிணறுகள் ஆகும். இவற்றில் நிலா வரைக் கிணறு பிரசித்தமானது. இதிலிருந்து பத்து மணித்தியாலங்களில் 40,000 கலன்கள் நீர் வரை தோட்ட நீர்ப்பாசனத்துக்குப் பெற முடியும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சனத்தொகை குறைவாக இருந்தவரைக்கும் கிணறுகளுக்கும் சேதாரம் எதுவும் இல்லை. ஆனால், தமிழீழத்தின் மொத்த நிலப்பரப்பில் 5.4 விழுக்காடேயான (984 சதுர கிலோமீற்றர்) குடாப்பரப்பு இன்று தாங்குகின்ற தலைச்சுமை அதிகம். தமிழீழத்தின் மொத்தச் சனத்தொகையில் 35.4 விழுக்காட்டினர் குடாநாட்டிலேயே திரண்டு வாழ்கின்றனர். 1995 இடப்பெயர்வுக்கு முன்னர் எட்டு இலட்சம் பேர் செறிந்திருந்தனர். இப்போதும் ஐந்தரை இலட்சத்துக்கும் அதிகமானோர் குழுமியுள்ளனர். சனத்தொகை அதிகரிப்புடன், பயிர் செய்யும் நிலப்பரப்பும் அதிகரிக்க நீர்ப்பயன் பாடும் பன்மடங்கு அதிகரித்து வந்துள்ளது. இன்று சுமார் 62,000 கிணறுகளும். 5,000 குழாய்க்கிணறுகளும் அனுதினமும் தண்ணிரை இறைத்துக் கொண்டிருக்கின்றன. முன்னோர்களால் நீர்ப்பாசனம் செய்யப் பயன்பட்டு வந்த துலாப்பட்டைகள் கைவிடப்பட்டு,
154
பொ. ஐங்கரநேசன்
நீர்ப்பம்பிகள் மிகக் குறுகிய நேரத்தில் மிகப் பெருமளவு நீரை வெளியேற்றி வருகின்றன. ஆனால் செலவழிக்கப்படும் அளவுக்குத் தரைக்கீழ் நீர் மீளவும் சேமிக்கப்படுவதில்லை.
யாழ்குடாவில் வருடத்தின் பெரும்பகுதி வறண்டதாக இருக்க, ஐப்பசி தொடங்கி மார்கழி வரையான மூன்று மாத காலமே தொடர் மாரிக்காலமாகும். கோடைமழை - மாரி மழையென வருடமொன்றில் பெய்கின்ற மொத்த மழைவீழ்ச்சியின் அளவே 48 அங்குலங்கள்தாம். கிடைக்கின்ற இந்தக் குறைந்த பட்ச மழை நீரிலும், பெரும்பகுதி குடாநாட்டின் சமதரை காரணமாகக் கடலில் கலந்துவிடுகிறது. குடி யிருப்புகளுக்காகவும், விவசாயத்துக்காகவும் தாழ்நிலங்கள் நிரவப் பட்டமையும் மழைநீர் கடலை நோக்கி ஓடுவதை முடுக்கி விட்டுள்ளது. எஞ்சிய மழை நீரிலும் ஒரு பகுதி ஆவியாகிக் காற்றில் கரைய, நிலத்தடி நீராக வைப்பில் இடப்படுவது பெய்கின்ற மழையின் 30-32 விழுக்காடு மாத்திரமே. தரைக்குக் கீழே இறங்குகின்ற இந்த நீரின் அளவையும் வேகத்தையும் விட வெளியே அகற்றப்படும் நீரின் அளவும் வேகமும் அதிகமாக இருக்கிறது. நீர்ச்சமன்பாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்தக் குழப்பம் காரணமாகவே கடல்நீர் நன்னீர் வில்லையினுள் புகத் தொடங்கியுள்ளது. காரைநகரில் குடிநீர் வழங்கு திட்டத்தின் கீழ் மிகை நுகர்ச்சிக்கு ஆளான கிணறுகள் உட்பட யாழ்ப்பாணத்தின் பல நல்ல தண்ணிர்க் கிணறுகள் இந்த விளக்கத்துக்கான சாட்சியங்களாக இன்று உப்புக்கரித்துக் கொண்டிருக்கின்றன.
குடாநாட்டின் உவரேறாத கிணறுகள் குறித்தும் அதிகம் நம்பிக்கைகள் கொள்வதற்கு இல்லை. ஆபத்துகள் வேறு வடிவங்களில் ஒளிந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் செறிவு வேளாண்மையில் வீண்விரயத்துடன் பெருமளவு நீரை பயன்படுத்துவதைப் போன்றே எவ்வித கண்காணிப்புகளும், கட்டுப்பாடுகளும் இன்றி மிக அதிகள விலான செயற்கை உரங்களும், பீடை கொல்லி இரசாயனங்களும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. மெல்லிய மண்படைகளுக்கூடாகக் கடைசியில் இவற்றின் போக்கிடம் தரைக்கீழ் நீர்தான். அதிலும் நைதரசன் பசளைகள் நைத்திரேற்று ஆக மாறித் தண்ணீருடன் இலகு வில் கலந்து விடுகிறது. நீர்வேதி மாசுக்களில் நைத்திரேற்று சாதாரண மானதல்ல. ஒரு புற்றுநோய்த் தூண்டி. இதனாலேயே உலக சுகாதார நிறுவனம் ஒரு இலிற்றர் அளவில் 50 மில்லிகிராம்களுக்கும் மேலாக நைத்திரேற்றைக் கொண்டுள்ள நீர், குடிப்பதற்கு உகந்ததல்ல என எச்சரித்துள்ளது. ஆனால் கோண்டாவில், உரும்பிராய், வல்வெட்டித்
155
Page 80
ஏழாவது ஊழி
துறை, வேலணை போன்ற விவசாயக் கிராமங்களிலெல்லாம் கிணற்றுத் தண்ணிரில் நைத்திரேற்று அனுமதிக்கப்பட்ட அளவையும் விடப் பன்மடங்கு அதிகமாக இருப்பது பேராசிரியை திருமதி.ரா.மகேஸ்வரனின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. தொண்டைப் புற்றுநோய் இலங்கையின் தேசிய அளவுடன் ஒப்பிடும்போது வடபகுதியில் இரட்டிப்பு மடங்காக இருப்பதன் சூத்திரதாரி இந்த நைத்திரேற்றுத் தான். நைத்திரேற்று, குருதியில் ஒட்சிசன் கொண்டு செல்வதில் தடங்கலை உண்டு பண்ணி நீலக்குழந்தைகள் (Blue babies) பிறப்பதற்கும் காரணமானது. யாழ்ப்பாணத்தில் விவசாய இடுபொருள்களின் பாவனை உச்சத்தில் இருந்த 80களின் தொடக்கத்தில் நீலக்குழந்தைகள் பிறந்தமை பதிவாகியுள்ளது. பொஸ்பேற்று, கல்சியம் போன்றவைகூட தம் பங்குக்கும் கெடுதல்களைச் செய்து வருகின்றன. குடிநீரில் அதிகரிக்கும் இந்த உப்புகளால் அண்மைக்காலமாக யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற வரும் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இவற்றைவிட, முகத்தைச் சுழிக்க வைக்கும் இன்னொரு அசிங்கத் தையும் சுமந்தவாறே குடிநீர் தொண்டையினுள் இறங்குகின்றது. யாழ் மாவட்டத்தில் 45 விழுக்காடு மக்களுக்கு அடிப்படை மலசலகூட வசதிகள் இல்லை என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. இவர்கள் ஒவ்வொரு நாளும் சுமார் 45,000 கிலோ எடையுள்ள மலத்தை வெளி களில் கழித்துக் கொண்டிருப்பதாக சமூக மருந்துவத்துறைப் பேராசிரியர் ந.சிவராஜா குறிப்பிட்டுள்ளார். பாவனையில் இருக்கும் மலசல கூடங்களும் பாதுகாப்பானவை அல்ல. கழிவுக் குழிக்கும் கிணற்றுக்கும் இடையே ஆகக்குறைந்த தூரம் 15 மீற்றர்களாவது இருத்தல் வேண்டும். ஆனால், குடாநாட்டின் குடி நெருக்கம் அதற்கு இடம் தராததால் இடைவெளி மிகக் குறைவாகவே உள்ளது. நுண்துளைகளைக் கொண்ட சுண்ணாம்புக்கற்கள் இயல்பாகவே சிறந்த ஒரு வடிகட்டி இல்லை என்பதால் கழிவுநீர் தடையின்றிக் கிணற்று நீருடன் சங்கமமாகிறது. மலக்கிருமிகளான இ. கோலி, கோலி ஃபோர்ம்கள் குடாநாட்டுக் குடிநீரில் தாராளமாகக் கலக்கின்றன. பாசையூர், குருநகர், கொட்டடி, நாவாந்துறைப் பகுதிகளில் கிணற்று நீரில் குடிப்பதற்கு மட்டுமல்ல வேறு எந்த வீட்டுத் தேவைகளுக்குமே பயன்படுத்த முடியாத அளவுக்கு இந்தக் கிருமிகள் பல்கிப் பெருகியுள்ளன. இவ்வாறு மலக்கிருமிகள் குடிநீர்க் குவளைவரை வந்து சேர்வதால்தான் தைபோயிட்டு, செங்கண் மாரி, வயிற்றோட்டம் போன்ற நீரினால் காவப்படும் நோய்களினால்
156
பொ.ஐங்கரநேசன்
அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம் முன்னிலை வகிக்கிறது.
இரகசியமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலத்தடி நீரைப் பற்றி குடா நாட்டின் பொதுப்புத்தி அறிந்துவைத்திருப்பதற்கும், அதனைப் பயன் படுத்துவதற்குமான இடைவெளி மிக அதிகமாக இருப்பதே இந்த நீரியல் அவலங்களுக்கான அடிப்படைக் காரணங்கள் ஆகும். போர் இதனை மேலும் ஆழப்படுத்தியுள்ளது. குடாநாட்டின் பெரும் பகுதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தால் ஆக்கிர மிக்கப்பட்டு, இப்பிரதேசங்களில் இருந்தவர்கள் வலுக்கட்டாயமாக விரட்டப்பட்டுள்ளனர். இடம்பெயரும் அகதி வாழ்க்கை அகச்சூழலுக்கு மட்டுமல்ல, சுற்றுச் சூழலுக்கும் எல்லாவிதத்திலும் கேடானதுதானே. குறுக்கப்பட்ட எல்லையில் மக்கள் அடைந்து வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருப்பதால் அப்பகுதிகளில் கிணறுகள் தொடர்ச்சியாகச் சுரண்டப் பட்டு தண்ணிர் மேலும் மேலும் வாய்க்கு எட்டாத ஒன்றாகவே ஆகிவருகிறது.
இஸ்ரேலிய நீரியல் நிபுணர் கலாநிதி ஏறட் (Dr. Arad) 1965இல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார். யாழ்ப்பாணத்தின் கடல் நீரேரிகளையும், பெருமளவு நீரை இறைத்துக்கொண்டிருக்கும் கிணறு களையும் பார்வையிட்ட பின்னர் குடாநாடு பாலைவனமாகும் என்று எச்சரிக்கை விடுத்தார். நன்னீர் பற்றாக்குறைவாகும் தேசம், அதுவும் இயற்கையாகவே வறண்ட நிலையில் உள்ள ஒரு பகுதி தகுந்த நீர்மேலாண்மை இல்லையேல் இறுதியில் பாலையாவதிலேயே முடியும். முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற்றிரிந்து பாலை என்பதோர் படிவங்கொண்ட சிலப்பதிகாரக் காட்சிகள் உலகில் ஏராளம் உண்டு. யாழ்ப்பாணக் கிணறுகள் விடுத்துவரும் எச்சரிக்கைக் குறிகளைத் தொடர்ந்தும் புறந்தள்ள முடியாது.
15ア
Page 81
16
யாழ்ப்பாணம் பாலையாகுமா?
முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற்றிரிந்து நல்லியல்பிழந்து நடுங்கு துயருறுத்துப் பாலை என்பதோர் படிவங் கொள்ளும்"
- சிலப்பதிகாரம்
சிட்டெரிக்கும் கொதிமணல், சுழன்றடிக்கும் மணற்காற்று, பால் வடிக்கும் கள்ளிச் செடிகள், கண்களை ஏமாற்றும் கானற் சுனைகள் உள்ள நிலங்களைத்தாம் நாம் பாலை என்று படித்து வைத்திருக்கிறோம். ஆபிரிக்காவில் சஹாரா, அவுஸ்திரேலியாவில் விக்டோரியா, சீனாவில் கோபி, இந்தியாவில் தார் என்று எங்கோ வெகு தொலைவில் இருப்பதால் அவை எம்மைத் தீண்டாது என்றும் நம்பிக் கொண்டிருக் கிறோம். ஊடகங்களும் பள்ளிப்பாடங்களும் பாலைவனங்கள் பற்றி மனதில் ஏற்றி வைத்திருக்கும் இந்தப் படிமங்களுக்கு அப்பால் எமது பார்வை விரிவதேயில்லை. இதனாலேயே யாழ்ப்பாணம் பாலைவன மாகும் என்று நீரியல் அறிஞர்கள் விடுத்த எச்சரிக்கைகள் எம்மைச் சுடவில்லை. எமது கால்களுக்குக் கீழேயே நிலத்தடிநீர் நல்லியல் பழிந்து பாலை கருக்கொள்வதை உணராமல் தண்ணிரைத் தொடர்ந்தும் பாழ்படுத்தி வருகிறோம்.
இன்றைய பாலைவனங்கள் பலவும் ஒரு காலத்தில் செழித் தோங்கிய பகுதிகள்தாம். சஹாரா பாலைவனம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னால் 2700 ஆண்டுகள் வரையிலும் நாடோடிக் குழுமங்கள் ஆடு, மாடுகள் வளர்க்கும் பசும்புல் வெளியாக இருந்துவந்துள்ளது. கோபி பாலைநிலத்தில், புகழ்பெற்ற டுன்ஹாங் நகரம் மண்மூடிக் கிடக்கின்றது. தார்ப்பாலையை அண்டியே சிந்துவெளி நாகரிகம் தழைத்திருந்தது. உலக நாகரிகங்கள் பலவற்றை வயிறு புடைக்க விழுங்கித் தீர்த்த பிறகும் பாலைகள் உறங்கிக் கிடக்கவில்லை. அருகேயுள்ள நிலங்களிலெல்லாம் தமது வெப்பக் கரங்களினால் இறுகப் பற்றி வருகின்றன. அத்தோடு இதுவரையில் பாலை படராமல் இருந்த வறண்ட நிலங்களிலும்கூட நகம் பதிக்க ஆரம்பித்துள்ளன.
158
பொ. ஐங்கரநேசன்
பூமியின் மேற்பரப்பில் 40 விழுக்காடு அளவு மழை வீழ்ச்சி குறைந்த வறண்ட வலயங்கள் (DryZones) ஆகும். ஏறத்தாழ 2 பில்லியன் பேர் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உலக மக்கள் தொகையில் இது மூன்றிலொரு பங்கு. இவர்களில் பெரும்பாலானோர் மிகக் கடுமை யான வாழ்க்கையில் உழலுவதோடு, எதிர்காலம் நிச்சயம் இல்லாத சூழலியல் விளிம்பிலும் நின்று கொண்டிருக்கின்றனர். வறண்ட நிலங்களையும் பாலைநிலங்களையும் பிரிப்பது இந்த மெல்லிய விளிம்பு தான். மக்கள்தொகை காரணமாகவும், வறுமையின் காரணமாகவும் அமைந்த முறையற்ற நில, நீர்ப்பயன்பாடுகள் கால நிலைக் காரணிகளோடு சேர்ந்து வறண்ட நிலங்களை மேலும் மேலும் காய வைத்துப் பாலையை நோக்கித் தள்ளி வருகின்றன. உலக அளவில் 20 விழுக்காடு வறண்ட நிலங்கள் இப்படிப் பாலையாகிக் கொண்டிருக்கின்றன. இதில், அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தென் ஆசிய, ஆபிரிக்க சஹாராப் பகுதிகள்தாம். ஏற்கனவே அரசியல் பொருளாதார, சமூகக் காரணிகளினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப் பட்ட இப்பகுதிமக்கள் சூழலியல் அகதிகளாகவும் இடம் பெயரும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். சூடானில் குடிக்க ஒரு வாய் நீர் இன்றிப் பெய்யும் சிறுநீரைக் குடிக்கின்ற அவலங்களும் உண்டு. இவை போன்ற கசப்பான முன்னுதாரணங்களே வறண்ட நிலமான யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீரியல்புகளில் ஏற்பட்டுவரும் பாதிப்புகள் குறித்து அச்சப்பட வைத்துள்ளன.
ஆனால், குடாநாட்டின் நீர்வளம் மீதான நம்பிக்கைகளை இழக்க வேண்டியதில்லை. பாலைவன நாடான இஸ்ரேல் கடந்த சில ஆண்டு களில் நீர் மேலாண்மையில் (Watermanagement) உலகுக்கே வழிகாட்டியப்ாக மாறி இருக்கிறது. வேளாண் உற்பத்தியை இருக்கின்ற நீர்வளத்தைக் கொண்டே அது ஆறு மடங்காக உயர்த்திச் சாதனை புரிந்திருக்கிறது. நில மீட்புக் குறித்த பிரக்ஞை கொண்டிருந்த ஒரு சமூகம் 'சொட்டு நீரும் எங்கள் சொத்தே' என்று உணர்வு கொள்வது இயல்பானதே. யாழ்ப்பாணத்திலும் வற்றி, உவரேறி, நஞ்சு வேதிகளும் கிருமிகளும் குடியேறி குணம் அழிந்து கொண்டிருக்கும் குடிநீரை அதற்குக் காரணமான குடாநாட்டுக் குடிகளின் மூலமே மீட்புச் செய்ய இயலும்.
பொல்லாப் பொருளாதார உலகம், "காசைத் தண்ணீராகச் செலவு செய்யாதே' என்று சொல்லி அச்சடித்த காகிதத்துக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளது. வெள்ளைத் தங்கமான தண்ணிரே உலகில் விலை மதிப்பற்ற செல்வம். ஆனால் இயற்கை தந்த வெகுமதி
159
Page 82
ஏழாவது ஊழி
யாக இலவசமாகக் கிடைப்பதாலும் நிலத்தினடியில் இரகசியமாகக் கிடப்பதாலும் அதன் அருமை பெருமைகளை, அளவுக் கணக்குகளைத் தெரியாமல் தான்தோன்றித்தனமாகச் செலவு செய்து வருகிறோம். குடிப்பது, குளிப்பது, சமைப்பது, துவைப்பது போன்ற வீட்டுத் தேவை களுக்கென யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் சராசரியாக 150 இலீற்றர் வரையான நீரைப் பயன்படுத்தி வருகிறார்கள். அமெரிக்கர் ஒருவர் பயன்படுத்தித் தீர்க்கும் 635 இலீற்றர்களுடன் ஒப்பிடுகையில் குறைவுதான் என்றாலும் இந்த அளவும் மிதமிஞ்சியதே. ஒருவர் நாளாந்தம் 40 இலீற்றர்கள் நீருடனேயே ஆராக்கியமாக வாழ முடியும் என்பது சர்வதேச நியம அளவு (Safe Water 2000 Programme), நீர் நெருக்கடிமிக்க சென்னையில் அடித்தட்டு மக்களில் ஒருவரைக் கேட்டால் இந்த நியம அளவில் இரண்டு நாட்களைத் தள்ளிவிட முடியும் என்று சொல்வார். நாமும் வீட்டுத் தேவைகள் முதல் தோட்டப்பாசனம் வரையான எல்லா நீர்த்தேவைகளிலுமே கடும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தால், பெருமளவு நீரை மீதப்படுத்தலாம். அத்தோடு, குடாநாட்டில் சாத்தியமான இடங்களிலெல்லாம் நீர்ச் சேமிப்பையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுதல் ஒரு தேசியக் கடமையாகும்.
யாழ்ப்பாணத்தில் பண்டைத் தமிழ்அரசு காலம் தொடங்கி குளங்கள் வகித்த பங்கு ஈடுஇணை இல்லாதது. கிழக்கிலங்கையில் 12ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த குளக்கோட்டன், குளங்களுக்கும் கோயில்களுக்கும் பெரும் தொண்டு செய்ததாலேயே அப்பெயரைப் பெற்றான். கந்தளாய்க் குளத்தைத் திருத்திக் கட்டி அங்கு மக்களைக் குடியேற்றிய குளக்கோட்டனின் ஆட்சி, யாழ்ப்பாணத்திலும் இருந்ததாக யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்கள் கூறுகின்றன. அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் குளக்கோட்டனால் பல குளங்கள் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. நல்லூரைத் தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாணஅரசு உருவாகியபோது பல குளங்கள் வெட்டப் பட்டமைக்கு ஆதாரங்கள் உண்டு. யாழ் நகரின் ஆரியகுளமும் அதனுடன் தொடர்புடைய காளிங்கராயன் கால்வாயும் முறையே யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்தியாலும், யாழ்ப்பாண அரசில் அமைச்சராக இருந்த காளிங்கராயனாலும் கட்டுவிக்கப் பட்டவை. யாழ்ப்பாண அரச காலத்தின் ஆலயங்களில் ஒன்றான, பிரசித்தி பெற்ற கல்வியங்காடு பூதவராயர் கோயிலின் அருகில் பண்டாரக் குளம் உள்ளது. பண்டாரம் என்பது அரசனைக் குறிக்கும்.
16Օ
Page 83
ஏழாவது ஊழி
இப்படி, மழையேந்தும் மடிகளாகக் கட்டப்பட்ட ஏராளமான குளங்கள் விவசாயப் பொருளாதாரத்திலும், நிலத்தின் கீழே நீரைச் சேமித்து வைப்பதிலும், வெள்ளப்பெருக்குகளைத் தவிர்ப்பதிலும் பெரும் பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றன.
ஆனால், இந்தக் குளங்களையெல்லாம் நாம் கழித்துத் தூர்த்த தன்றி வேறு எங்கு நீர் சேர்த்தோம்? கண் எதிரிலேயே, 1992 இல் ஸ்ரான்லி வீதி - கஸ்தூரியார் வீதிச் சந்திப்பில் இருந்த வண்ணான்குளம் மறைந்தது. யாழ் மாநகரசபை வணிகக் கட்டிடங்கள் அமைப்பதற்காக அதை கழிவுகளால் எறிந்தே கொன்றது. ஒவ்வொரு குளமும் ஓர் உயிர்ச்சூழல் என்பதால் அதனை இல்லாது ஒழிப்பது என்பது உயிர்க் கொலையன்றி வேறு என்ன? இன்று யாழ் மாநகர சபை எல்லையினுள் எஞ்சியிருக்கும் 36 குளங்களிலும் பெரும்பாலானவை பாதி தூர்ந்து, கழிவுநீர் மண்டி நகரின் புண்களாகக் கிருமிகள் மொய்த்துக் கொண்டிருக்கின்றன. அண்மையில், யாழ் நகரின் மையப்பகுதியில் மணிக்கூண்டுக் கோபுரத்துக்கு அருகாமையில் உள்ள புல்லுக்குளத்தில் பிராணவாயு பற்றாக்குறைவாலோ அல்லது நஞ்சேறியோ பெருவாரி யான மீன்கள் இறந்து மிதந்தமை குறிப்பிடத்தக்கது. குடாநாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள அநேகமான குளங்களின் நிலையும் தேய்ந்து குட்டைகளான கதைதான்.
மழைநீர் கடல்நீரேரிகளினூடாக ஒடிக் கடலில் கலந்து வீணாகு வது பற்றிக் காலனித்துவ காலத்திலேயே சிந்திக்கப்பட்டது. இவ்வாறு ஒடுகின்ற மழைநீரைப் பயன்படுத்தி உப்பாறு, தொண்டைமனாறு கடல் ஏரிகளிலுள்ள நீரை அலசிப் படிப்படியாக நன்னீரேரிகளாக்கலாம் என்ற திட்டத்தை 1947 இல் பிராந்திய நீர்ப்பாசனப் பொறியியலாளராக இருந்த வெப் (WEBB) என்பவர் வடிவமைத்தார். இதன் முதற்கட்ட மாகத் தொண்டைமனாறு வங்கக் கடலுடன் சங்கமிக்கும் இடத்துக்குக் குறுக்காக மடைக் கதவுகளைக் கொண்ட அணைகட்டும் பணி 1949இல் ஆரம்பாகி 1953இல் நிறைவடைந்தது. செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு மேற்கே இன்றும் எலும்புக்கூடாகக் காணப்படும் காற்றாலை, தொண்டைமனாறு ஏரியில் இருந்து உப்பு நீரைக் கடலினுள் பாய்ச்சுவதற்காக நிறுவப்பட்டதுதான். இதேபோன்று உப்பாற்று ஏரி வேலைகளும் தொடர்ந்து இடம்பெற்று யாழ் கண்டி வீதியில் அரியாலை அணை நிர்மாணிக்கப்பட்டது. தொண்டைமனாறு வெளிக்கள நிலையம் யாழ் மத்திய கல்லூரி உயர்தர வகுப்பு மாணவர் களைப் பெரிதும் பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம்
162
பொ. ஐங்கரநேசன்
இத்திட்டங்களினால் விளைந்த நல்ல பயன்களை ஒரு தசாப்தத்துக்குள் ளாகவே அறிய முடிந்தது. தொண்டைமனாறு கடல்நீரேரியின் உவர்ப்புத் தன்மை படிப்படியாகக் குறைவடைந்ததோடு, கரணவாயில் உவர் தரையாக இருந்த பகுதிகள் நல்ல விளை நிலங்களாகவும் மாறியிருந்தன.
ஆனால், இத்திட்டத்தை மேலும் செம்மைப்படுத்த பூரீலங்கா அரசிடம் இருந்து ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை. அணைகளையும், மதகுகளையும் பழுது நீக்குவதற்கேனுங்கூடப் போதிய நிதி ஒதுக்கப்பட வில்லை. அரசின் திட்டமிட்ட அலட்சியங்களும், மீன்பிடித் தேவை களுக்காக விரும்பியவாறு துருசுகளை மூடித்திறக்கும் எமது மக்களின் அணுகுமுறைகளுமாகச் சேர்ந்து அருமந்த இந்தத் திட்டத்தை 1977இல் இருந்தே அடியோடு செயலிழக்கச் செய்துவிட்டன. மெல்ல நன்னீராக மாறத் தொடங்கிய கடனீரேரிகள் மீண்டும் உவராக மாறத் தொடங்கி விட்டன. இப்பகுதிகளில் இப்போது அதிகளவில் விளையும் உப்பே இந்தச் சீரழிவுகளுக்கான கதைகளைச் சொல்லுகிறது.
ஊர்த்தலையாரிக்குக் கட்டுப்பட்டு வீட்டுக்கு ஒருவர் சிரமதானம் செய்து குளங்களை ஆழப்படுத்திய காலம் ஒன்று இருந்தது. இன்று பொது வேலைகளை அரசசார்பற்ற நிறுவனங்களிடம் கையளித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டோம். சமூகப்பணி என்றால் அது அரச சார்பற்ற நிறுவனங்களின் கொழுத்த சம்பளத்துடன் பார்க்கும் ஒர் உயர்தரத் தொழில் என்றாகிவிட்டது. ‘எங்களது என்ற உணர்வுடன் வெகுமக்கள் பங்கேற்காத எந்த ஒரு திட்டமும் நீடித்த பலனைத் தந்ததில்லை. மீண்டும் குளங்களையும், அதற்கான வரத்துக் கால்வாய்களையும் பழுது நீக்குகின்ற பணிகளைக் கூட்டுப் பொறுப்பாகச் செய்ய முன்வர வேண்டும். மழை நீரைத் தங்கவிடாது தெருவுக்குத் திருப்பி விடும் போக்கினை விடுத்து, அதனை வரம்புகள் - குழிகள் அமைத்துத் தேங்கி நிற்க அனுமதிக்க வேண்டும். செல்வி ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது குடியிருப்புகள் தோறும் மழைநீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டமை இங்கு நினைவுகூரத்தக்கது. குளங் களையும், தரவைகளையும் மீறிச் செல்லும் மழையை, உப்பாற்றிலும், தொண்டைமனாற்றிலும் வழி மறிக்கும் வகையில் கடல் நீரேரித் திட்டத்தின் புனர் நிர்மாணத்திலும் அதிக அக்கறை கொள்வதும் அவசியம் ஆகும். எங்கெல்லாம் பெய்யும் மழைநீரைப் பெயராது சேமிக்க முடியுமோ அங்கெல்லாம் குடாநாட்டின் நிலத்தடிக்குக் கணிசமான நீரைப் பருக்கிவிட முடியும்.
163
Page 84
ஏழாவது ஊழி
ஆனால், வெறுமனே நீரைச் சேமிப்பதால் மாத்திரம் பிரச்சினை தீர்ந்து விடப் போவதில்லை. அதன் தூய்மை கெடாது காப்பதுவும் அவசியம். இக்கட்டுரைக்கான தகவல்களைத் திரட்டிய பொழுது, அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பெயர் வெளியிட விரும்பாத பணியாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் அடைக்கப்படும் புட்டிக் குடிநீரிலேயே மலக்கிருமிகள் இருப்பதைக் கண்டறிய நேர்ந்த அவலத்தைக் குறிப் பிட்டார். அந்த அளவுக்குக் கிருமிகள் வியாபிக்கக் காரணம் சனத் தொகைக்கு ஏற்ப கழிவகற்று வசதிகள் இல்லாததுதான். சனத்தொகை அதிகரிப்பு கழிவுக்குழிகளுக்கும் கிணறுகளுக்கும் இடையேயான வெளியைக் குறைத்து வருகிறது. குடி அடர்த்தி ஒரு சதுர கிலோமீற்றர் பரப்பளவில் 2,500 பேர்களுக்கு மேல் தாண்டும்போது கழிவுக்குழிகளின் நம்பகத்தன்மை சரியத் தொடங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனாலேயே, குடிமனைகள் நெருங்கியுள்ள யாழ் மாநகரசபைக்குட் பட்ட பகுதிகளில் கிணறுக்குக் கிணறு கிருமிகளின் தொற்று சர்வ சாதாரணமாக உள்ளது.
குடாநாட்டின் சனத்தொகை இந்த நூற்றாண்டின் கால்வாசிப் பகுதியில் 9 இலட்சத்தையும், நடுப்பகுதியில் 10 இலட்சத்தையும் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ஏற்கனவே நெருக்கியடித்துக்கொண்டிருக்கும் யாழ் மாநகரசபை, நல்லூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இடங்களில் சனங்கள் மொய்த்துப் போய் இருப்பார்கள். இந்நிலையில் குடிநீர் நாற்றம் எடுக்காமல் இருப் பதற்கான ஒரே பரிகாரம் பாரம்பரிய கழிவுக்குழிகளைக் கைவிடுவது தான். கொழும்பு போன்ற மாநகரங்களில் உள்ளதைப் போன்று குழாய்களின் மூலம் கழிவுகளைத் தொலைவுக்கு எடுத்துச்சென்று அகற்றுகின்ற பாதாள சாக்கடைத்திட்டம் இதற்கு மாற்றாக அமையும். ஆனால் 80களின் நடுப்பகுதியில் குடாநாட்டின் மீது விமானத்திலிருந்து மலப் பீப்பாய்களைத் தள்ளிவிட்ட பூரீலங்கா அரசிடமிருந்து கழிவுக் கூடங்களுக்கான தீர்வை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.?
மக்கள் தொகை அதிகரித்து வருவதால் குடாநாடு புதிய நீர் மூலங்களைத் தேட வேண்டிய நிர்ப்பந்தத்திலும் உள்ளது. உலகில் நீர்ப்பற்றாக்குறைவான தேசங்கள் பிரதான நகரங்களில் மக்கள் செறிவைக் குறைக்கும் வகையில் நிர்வாக மையங்களைப் பரவலாக்கி துணைநகரங்களை உருவாக்கியும், கடல்நீரைக் குடிநீராக்கியும், அண்டை அயலிலிருந்து நீரைத் தருவித்தும் சமாளித்து வருகின்றன. குடாநாட்டின் நீர்பற்றாக்குறைவு தொடர்பாக ஆசிய அபிவிருத்தி
164
பொ. ஐங்கரநேசன்
வங்கி திட்டஅறிக்கை ஒன்றைத் தயாரித்து அண்மையில் தேசிய நீர்வளங்கள் மற்றும் வடிகால் சபையிடம் கையளித்துள்ளது. அதில் வன்னிப் பெருநிலப்பரப்பின் பாரிய நீர்த்தேக்கமான இரணைமடு விலிருந்து குழாய்களின் மூலம் யாழ்ப்பாணத்துக்கு நீரை எடுத்துவரப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு பிரமாண்ட குழாய் வழியாகத்தான் நீர் வழங்கப்படுகிறது. ஆனால் இது போன்ற நீர்ப் பங்கீடுகள் உலகில் பல பூசல்களும் மோதல்களும் இடம் பெறுவதற்கும் காரணமாக இருந்து வருகின்றன. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் தீர்வை எட்டாத நிலையில், பூறிலங்கா அரசு இரணைமடு நீர் விநியோகத்தை ஒரு பகடைக் காயாகப் பயன்படுத்தாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
யாழ் குடாநாட்டின் தேசியச் சொத்தான நீர்வளத்தை மீட்சி செய்யும் எத்தனங்களில் தனிநபர் நீர்ச்சிக்கனம், மழைநீர்ச் சேகரிப்பு தவிர ஏனையவை யாவும் பாரிய கட்டுமானப்பணிகளையும், பெரும் செலவையும் வேண்டி நிற்பவை. இவற்றின் நடைமுறைச் சாத்தியம் தமிழர்களின் அரசியல் விடுதலையிலேயே தங்கியுள்ளது. அதுவரையில், தமிழர்களின் அரசியற் தன்னாட்சி தாமதப்படும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு பிடி மண்ணாக யாழ்ப்பாணம் தன் நீர்ப்பிடிப்பை இழந்து கொண்டே இருக்கும். இதற்கான பொறுப்பு நம் ஒவ்வொருவரையுமே சாரும.
165
Page 85
17
நீர்ப் போர் மூளுமா?
இயற்கை வளங்களை நாங்கள் அழிக்கும்போது வளப்பற்றாக்குறைவு ஏற்பட்டு கடைசியில் அவற்றைப் பெறுவதற்காகப் போராட வ்ேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதால் அமைதி நோக்கில் சுற்றுச்சூழல் மிக முக்கியமானது."
- வங்காளி மாதாய் (பசுமைப்போராளி - கென்யா)
தண்ணிர் இயல்பாகவே தீயை அணைக்கக் கூடியதேயல்லாமல் தீயை மூட்டிவிடக் கூடியது அல்ல. ஆனால், பெயரிலேயே குளிர்ச் சியைக் கொண்டிருக்கும் இந்தத் 'தண்ணீர் இனிமேல் நாடுகளுக் கிடையே போரை மூட்டிவிடும் "எரி எண்ணெய் ஆக இருக்கப் போகிறது என்ற அச்சம் இப்போது சர்வதேச அளவில் தொற்றிக் கொண்டுள்ளது. ஆம் தண்ணிர் காரணமாகப் போர்கள் மூளும் என்று பல்வேறு நாடுகளின் அரசுத் தலைவர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்அதிகாரிகளும் எச்சரிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
1979இல் எகிப்திய அதிபர் அன்வர் சதாத், "எகிப்து இனி சண்டை யில் இறங்க நேரிட்டால் அதற்குக் காரணம் நைல் நதி நீராகத்தான் இருக்கும்" என்று பிரகடனம் செய்தார். பின்நாளில் ஐ.நா. பொதுச் செயலாளராகப் பதவி வகித்த பூட்ரோஸ் பூட்ரோஸ் காலி 1989இல் எகிப்தின் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது, "எகிப்தின் தேசியப் பாதுகாப்பு நைல் ஆற்றின் பள்ளத்தாக்குகளில் உள்ள எட்டு ஆபிரிக்க நாடுகளின் கரங்களிலேயே தங்கியுள்ளது' என்று அமெரிக்க காங்கிரஸ் முன் பேசும்போது அறிவித்தார். 1990இல் ஜோர்டான் மன்னர் ஹசேன், "இஸ்ரேலுக்கும் ஜோர்டானுக்கும் இடையில் உருவாக்கி வைத்திருக்கும் சமாதான உறவு சிதறுவதானால், அது இரண்டு நாடுகளும் தண்ணிரைப் பகிர்ந்து கொள்வதில் உருவாகும் பிரச்சினையால் மாத்திரமே ஏற்படும்" என்றார். 2002இல் அப்போதைய ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அனான் 'உலகத் தண்ணீர் தினம் தொடர்பான தனது அறிக்கையில் "நீர் விவகாரங்களில் பெரும் வன்முறைக்கான வித்துகள் புதைந்து
166
பொ. ஐங்கரநேசன்
போயிருக்கின்றன என்ற அச்சத்தை நீர்வள ஆதாரங்களின் மீது தேசிய அளவில் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டிகள் கொண்டுள்ளன" எனக் கோடிட்டுக் காட்டியுள்ளார். தற்போதைய பொதுச் செயலாளர் பான் கி மூனும் தன் பங்குக்கு, "நீர்ப் பற்றாக்குறைவு பொருளாதார - சமூக நலன்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதோடு முரண்பாடுகளை யும் போர்களையும் மூளச் செய்யும் வீரியமான எரிபொருளாகவும் இருக்கின்றது" - என எச்சரித்து வருகிறார்.
சோமாலியாவின் உள்நாட்டுப் போரின்போது கிணறுகளைப் பாறைக் கற்களால் நிரப்பியும், தண்ணிர்க் குழாய்களைச் சேதமாக்கியும், நீரைப்பம்பும் இயந்திரங்களைச் சூறையாடியும் நகரங்களின் குடிநீர் வழங்கு அமைப்பு முழுவதுமே துவம்சம் செய்யப்பட்டது. வளைகுடாப் போரில் ஈராக் குவைத்தில் இருந்த உப்புநீரைக் குடிநீராக மாற்றும் இயந்திரங்களைத் தகர்த்துக் குடிநீருக்குப் பஞ்சம் உண்டாக்கியது. பதிலுக்கு பாக்தாத் நகரத்துக் குடிநீர் வசதிகளை நேசநாட்டுப் படை குறிவைத்துத் தாக்கியது. பொஸ்னியாவிலும் செர்பியர்கள் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்குக் கடைப்பிடித்த தந்திரங்களில் தண்ணிரும் ஒன்றாக இருக்கிறது. சராஜிவோவில் மின்விநியோகத்தைத் துண்டித்துத் தண்ணிர் இறைக்கும் இயந்திரங்களுக்குக் கட்டாய ஓய்வைக் கொடுத்து, கிணறுகளைத் தேடிக் கூட்டம் கூட்டமாக அவர்களை இடம்பெயர வைத்தார்கள். குளக்கரைகளில் நீர் தேடிவரும் காட்டு விலங்குகளைக் காத்திருந்து வெடிவைத்துப் பிடிப்பதைப் போல கிணறுகளைச் சூழக் குழுமிய முஸ்லிம்கள் செர்பியர்களால் ஏவுகணைகளால் சாகடிக்கப் பட்டிருக்கிறார்கள். இக்காலப் பகுதியில், சாம்பியாவின் தலைநகரம் லுசாக்காவில், அந்நகரின் மூன்று மில்லியன் மக்களுக்கும் குடிநீரைக் கொண்டு செல்லும் பிரதான நீர்க்குழாய் கிளர்ச்சிக்காரர்களால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இப்படி, போரின்போது போர் அறவியலை யும் மீறி நீர்நிலைகளை நிர்மூலமாக்குவது காலந்தோறும் நடைபெற்றே வருகிறது.
ஆனால், போரில் ஒரு உத்தியாக நீர்நிலைகளைத் தாக்கி அழிப்பதைப்போல அல்லாமல், தண்ணிருக்காக நடக்கும் போர்கள் மிகவும் அரிதாகவே நிகழ்ந்துள்ளன. 4500 ஆண்டுகளுக்கு முன்னர் யூப்பரட்டிஸ் (Eupharates), தைகிறிஸ் (Tigris) நதிகள் பொறுத்து இரண்டு மெசப்பத்தோமிய நாடுகள் (தற்போதைய ஈராக்கின் தென்பகுதி) போரிட்டதாக வரலாறு கூறுகிறது. அதன் பின்னர், பல நாடுகள் நீர் தொடர்பான கொந்தளிப்புகளால் உராய்ந்து கொண்டபோதும்
167
Page 86
ஏழாவது ஊழி
குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு நீருக்கான போர் எங்கேயும் ஏற்பட வில்லை. ஆயினும், ‘ஓநாய் வருகிறது என்பது போல, கடந்த மூன்று தசாப்தங்களாகக் கேட்டுக் கொண்டிருக்கும் 'நீர்ப்போர் ஒலமும் ஒருநாள் உண்மையிலேயே அரங்கேறிவிடுமா?
தன் மீது போர்த்தியுள்ள நீராடை காரணமாக 'நீலக்கோள் என அழைக்கப்படும் புவியில் தண்ணிருக்குப் பற்றாக்குறை என்பது நம்பமுடி யாத ஒன்று போலவே தோன்றும். ஆனால், உண்மை நிலவரம் கலவரப் படுத்துவதாகவே உள்ளது. பூமியில் உள்ள நீரில் 97.5 விழுக்காடு நீர், கடல் நீராக உப்பேறிக் கிடக்கிறது. எஞ்சிய தண்ணிரிலும் பெரும்பகுதி கைகளுக்கெட்டாத வெகு ஆழத்தில் நிலத்தடி நீராகவும், அன்டார்ட்டிக்காவிலும் கிறீன்லாந்திலும் பனிப்பாறைகளாகவும் சிறைப் பட்டு இருக்க - வெறும் 0.26 விழுக்காடு நீர் மாத்திரமே இலகுவில் வசப்படும் நீராக இருக்கிறது. இது, பூமியில் உள்ள மொத்த நன்னீரில் 0.007 விழுக்காடு ஆகும். இருக்கின்ற இந்தச் சொற்ப அளவு நீருக்கும் ஆபத்து என்பதுதான் இன்றுள்ள பிரச்சினையே. நீர்வள ஆதாரங்களை உலகளாவிய ரீதியில் 1975 முதல் மதிப்பிட்டு வரும் ஐ.நா. கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைவனம் (யுனெஸ்கோ) நீரின் அளவும் தரமும் அச்சம் ஊட்டும் அளவுக்குப் படியிறங்கி வருவதைப் புள்ளி விபரங்களுடன் அறிவித்துள்ளது.
சென்ற நூற்றாண்டில் உலக மக்கள் தொகைப் பெருக்க வீதம் இரட்டிப்பாக உயர நீர்த்தேவையோ ஆறுமடங்காக எகிறியுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருக்குக் கிடைத்து வந்த நீரின் அளவில் பாதிதான் இன்று நமக்குக் கிடைக்கிறது. 1950இல் வேளாண்மை, தொழிற்துறை, வீடுகள் ஆகியவற்றின் தேவைகளுக்குப் போக ஒருவருக்குச் சராசரியாக 450 கனமீற்றர் என்னும் அளவில் இருந்த உலகின் நீர்வள இருப்பு இன்று 200 கனமீற்றர் அளவாகக் குறைந்து விட்டிருக்கிறது. இந்த அளவும் இன்னும் 25 ஆண்டுகளில் 130 கனமீற்றராக வற்றிப்போய்விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்னீர் கையிருப்புக்கும், உலக மக்கள் தொகைக்கும் இடையி லான விகிதத்தைப் பார்க்கும் போது நீர் இருப்பு போதுமான தாகவே தோன்றும். ஆனால் நாடுகளிடையே பகிரப்பட்டிருக்கும் நீரின் அளவில் பெரும் ஏற்றத் தாழ்வு நிலவுகிறது. இயற்கையின் இந்த ஒரவஞ்சனையால் அமெரிக்காவில் உள்ள ஒருவர் நாளொன்றுக்கு 425 இலீற்றர்கள் நீரை அனுபவிக்க மடகஸ்காரின் கிராமப் பகுதியிலுள்ள
168
Page 87
ஏழாவது ஊழி
ஒருவருக்கு 10 இலீற்றர்கள் அளவு நீர் மட்டுமே பயன்படுத்தக் கிடைக்கிறது. இது, ஒருவர் உயிர் வாழத் தேவையான ஆகக்குறைந்த அளவு நீராகும். இப்படி மிகவும் வறண்ட பகுதிகளில் இன்று 46கோடி மக்கள் குடிநீர்ப் பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள். இங்கு பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் தினமும் நீரைத்தேடி 15 கிலோமீற்றர்கள் வரையில் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது.
நீர் வேட்கை இத்துடன் அடங்கிவிடுவதாக இல்லை. எதுவிதத் திலும் அதிகரிக்கச் செய்யமுடியாத நீர்வள ஆதாரங்களை, இவற்றை ஒட்டிய சூழலை உகந்தமுறையில் முகாமைத்துவம் செய்யத் தவறின் இந்த நூற்றாண்டின் கால்வாசியின்போது உலகில் மூன்றில் இரண்டு பகுதியினர் கடுமையான நீர்ப்பற்றாக்குறைவால் தவிக்க நேரிடும். மேலும், சனத்தொகை அதிகரிப்பும் இதே கதியிலேயே தொடருமாயின் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தண்ணீர்ப் பஞ்சத்தினால் உலகின் எல்லாப் பகுதிகளுமே அல்லாட வேண்டி வரும் எனவும் யுனெஸ்கோ எச்சரித்துள்ளது.
தண்ணிர்ப் பற்றாக்குறை மட்டுமல்ல, தண்ணிரின் தரம் பற்றிய யுனெஸ்கோவின் கணிப்புகளும் பீதி ஊட்டுவனவாகவே உள்ளன. இன்று உலகின் ஐந்தில் ஒரு பகுதி மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது. அரைவாசிப்பேர் அளவில் அடிப்படைச் சுகாதார வசதிகள் இன்றித் திண்டாடுகிறார்கள். முறை யான கழிப்பிட வசதிகள், வடிகால் அமைப்புகள் இல்லாததால் கழிவுகள் குடிநீருடன் தடையின்றிக் கலந்து விடுகின்றன. இந்தத் தொற்றுள்ள நீர் ஒன்று காரணமாகவே வளர்முக நாடுகளின் அரைவாசிப்பேரளவில் வயிற்றோட்டம், மலேரியா என்று நீர் சார்பு நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த நோய்கள் ஆண்டுதோறும் ஐம்பது இலட்சம் பேரை, அதுவும் குறிப்பாக மூன்றாம் உலகின் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பரிதாபமாகப் பலிவாங்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தொகை இதுவரையில் போர்களினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விடப் பத்து மடங்கு அதிகமாகும்.
நீரின் தூய்மையைத் தம் பங்குக்குத் தொழிற்சாலைகளும் பலாத்காரம் செய்கின்றன. தொழிற்சாலைக் கழிவுகளுடன் வந்து சேரும் இரசம், கட்மியம், குரோமியம், ஈயம் போன்ற பார உலோகங்களும், சயனைட்டு வேதிகளும் 'குடம் பாலுக்குத் துளி விஷம் போல நீரைப் பாவனைக்கு உகந்ததல்லாததாக்கி விடுகின்றன. இரசத்தில் ஒரு
17O
பொ. ஐங்கரநேசன்
மில்லிகிராமில் ஆயிரத்தில் ஒரு பங்கே ஒரு இலிற்றர் நீரை நஞ்சூட்டப்
போதுமானது என்று உலக சுகாதார அமைவனம் கணக்கிட்டுள்ளது. தொழிற்சாலைக் கழிவுகளினாலும் அதிகம் பாதிக்கப்படுவது ஏற்கனவே நீர்ப் பற்றாக்குறைவில் உள்ள மூன்றாம் உலக நாடுகள்தான். கடுமையான சட்ட விதிகளினால் கைத்தொழில் நாடுகளிலிருந்து விரட்டப்படும் தொழிற்சாலைகள் 'உலக மயமாக்கல்' என்னும் கதவு களினூடாக மூன்றாம் உலக நாடுகளினுள் நுழையத் தொடங்கி யிருப்பது அவற்றின் நீர் ஆதாரங்களை மேலும் மேலும் நச்சு வளையத் தினுள் தள்ளுவதாகவே உள்ளது. இதற்கு சீனா ஒரு உதாரணம். பிரசித்திபெற்ற அதன் மஞ்சள் ஆறு 10 விழுக்காடு அளவுக்கு, ஆற்றங்கரையில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிற் சாலைகள் வெளி யேற்றும் கழிவுகளால் சாக்கடையாக மாறிவிட்டது. இதே நிலைதான் சீனாவின் யாங்க்ஷே ஆறுக்கும். 2006ஆம் ஆண்டுத் தரவுகளின்படி, அந்த ஒர் ஆண்டில் மட்டுமே யாங்க்ஷே ஆற்றில் 26 பில்லியன் தொன்கள் கழிவுநீர் கலக்க விடப்பட்டுள்ளது. சீனாவின் பிரதான இரண்டு ஆறுகளுமே மாசுபட்டிருப்பதால் 78 விழுக்காடு சீன மக்கள் தொற்றுள்ள நீரையே பருகி வருகின்றனர்.
உலக நீர்ப்பயன்பாட்டில் 80 விழுக்காடு நீரை விழுங்கிக் கொண்டிருக்கும் வேளாண்மையும் நன்னீர் ஆதாரங்களின் இருப்புக்கு வேட்டு வைப்பதாய் உள்ளது. இதில் 20 விழுக்காடு நீர் மட்டுமே பயிர்களைச் சென்றடைகிறது. மீதி 60 விழுக்காடு நீர் குழாய்களில் கசிவு, ஆவியாதல் என்று வீணாகிப் போவதுடன் தேங்கி நின்று ஆவியாகும் இடங்களில் உப்புக்களைத் தேக்கியும் வருகிறது. இப்படி, உலகின் நீர்ப்பாசன நிலைகளில் 30 விழுக்காடு நிலம் இனிமேலும் பயிர்களைத் தாங்க முடியாத அளவுக்கு உவர்ப்பேறி உள்ளது. அளவுக்கு மிஞ்சி வேகமாக நீரை இறைத்துத் தள்ளுவதாலும் நன்னீர் வில்லை யினுள் கடல் நீர் புகுந்து உப்புக்கரிக்க ஆரம்பித்துள்ளது. 'பசுமைப் புரட்சி ஒருபுறம் குடிநீரில் உப்பேற்றிக் கொண்டிருக்க, இன்னொரு புறம் இறால்வளர்ப்பு 'நீலப்புரட்சியில் கடல்நீர் உள்வாங்கப்படு வதாலும் குடிநீர் உவராகி வருகிறது.
வேளாண் வேதிகளின் பிரயோகம் வரம்பை மீறிய இடங்களிலெல் லாம், குடிநீரில் வேளாண் வேதிகளும் குடியேறியுள்ளது. இன்று குடிநீரை அதிகம் அச்சுறுத்தும் வேளாண் வில்லன் பசளைகளில் இருந்து வந்து சேரும் 'நைத்திரேற்தான். இலீற்றருக்கு 50 மில்லி கிராம்களிலும் அதிகமாகக் குடிநீரில் 'நைத்திரேற் கலக்குமாயின் அது 'நீலக்குழந்தை
1ア1
Page 88
ஏழாவதுஉஊழி
நோயை (இரத்தத்தில் ஒட்சிசன் காவப்படுவதில் தடங்கல் ஏற்பட்டு குழந்தை இறத்தல் - methaemoglobinemia) ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
திரவத் தங்கமான நீர் வள ஆதாரங்கள் இப்படி அளவிலும் தரத்திலும் வேகமாகக் கீழ் இறங்கி வருவதால் அதனைப் பங்கு போட்டுக் கொள்வதில் நிலவும் கடுமையான போட்டியே நீர்ப் போர் பற்றிய அச்சத்தை உருவாக்கியுள்ளது. அதுவும், ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஒரு நதி நீரைப் பங்கு கொள்ளும் இடங்களில் நீர்ப்போர் அபாயம் அதிகம் உணரப்பட்டுள்ளது. எதியோப்பியாவில் உற்பத்தியாகி எகிப்தினால் பெரும் தாகத்துடன் குடிக்கப்படும் நீல நைலின் நீர் குறித்து நெடுங்காலமாக வாக்குவாதங்கள் நடந்து வருகின்றன. நீல நைலின் 2 விழுக்காடு நீரை மட்டுமே பயன்படுத்தும், வறட்சியால் வதங்கும் எதியோப்பியா தனது எல்லையினுள் அணைகளைக் கட்ட முயன்ற போதெல்லாம் 86 விழுக்காடு நீரை நுகர்ந்து கொண்டிருக்கும் எகிப்து படை மிரட்டல் விடுத்து அணை முயற்சிகளுக்கு அணை போட்டு வந்துள்ளது. இந்தியாவும் - வங்காளதேசமும் கங்கை ஆற்றுக்காகவும், மெக்சிக்கோவும் அமெரிக்காவும் கொலராடோ ஆற்றுக்காகவும், ஹங்கேரியும் - ஸ்லோவேக்கியாவும் டான்யூப் ஆற்றுக்காகவும், தாய் லாந்தும் - வியட்நாமும் மேகாங் ஆற்றுக்காகவும் பரஸ்பரம் வெறுப்பு நஞ்சைக் கக்கி வருகின்றன. இந்தியாவில், தமிழகமும் கர்நாடகமும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டுக்காக நரம்பு புடைக்க முறைத்துக் கொள்வதையும் இன்னொரு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
இன்று சுமார் 300 ஆறுகள் நாடுகளின் தேசிய எல்லைகளைக் கடந்து பாய்ந்து கொண்டிருக்கின்றன. உலக மக்கள் தொகையில் 40 விழுக்காட்டினர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் கைநனைக்கும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலேயே வாழ்கின்றனர். பல்வேறு மொழி, பண்பாட்டுப் பாரம்பரியங்களை ஒருங்கிணைத்துப் பாயும் இந்த நீர் ஆதாரங்களினுள்ளே போர் அபாயத்தையும் தாண்டி அமைதிக்கும் ஒத்துழைப்புக்குமான மெல்லிய இழையோடிக் கொண்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை.
பகைமைக்கான மற்றைய காரணங்கள் அப்படியே இருப்பினும் பல நாடுகளிடையே நீர் பொறுத்து இணக்கம் உண்டாகியுள்ளது. இதுவரை பன்னாட்டு நீர்ப்படுக்கைகள் பொறுத்து 150 உடன்படிக்கை கள் செய்து கொள்ளப்பட்டுள்ளன. காஷ்மீரிலுள்ள இமயமலைப்
1ア2
பொ.ஐங்கரநேசன்
பகுதியில் உற்பத்தியாகி பாகிஸ்தானை ஊடறுத்து ஒடும் சிந்து நதி தொடர்பாக இந்தியத் துணைக் கண்டம் இந்தியா - பாகிஸ்தான் என்று பிரிவினையானது முதல் சச்சரவுகள் இருந்து வந்துள்ளன. பிரிவினை யான மறு ஆண்டே இந்தியா சிந்து நதி நீரைத் தடுத்து நிறுத்தியபோது போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியது. உலக வங்கியின் முயற்சியினால் 1960இல் சிந்து நதி நீரைச் சமமாகப் பகிர்ந்து கொள்ளும் உடன்படிக்கை கையெழுத்தானது. அதன் பின்னர், இரண்டு நாடுகளுக்கும் இடையே இரண்டு முறை போர்கள் நிகழ்ந்த போதும் சிந்துநதி நீர் பொறுத்துக் கூட்டுறவு முறியவில்லை. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பீரங்கிச் சூடு கேட்டுக் கொண்டிருக்கின்ற போதிலும், ஒஸ்ஸோ உடன்படிக்கை யின் அடிப்படையில் இரண்டு தரப்பினரும் மேற்குக்கரைப் பகுதியில் தண்ணிர் தங்குதடையின்றி கிடைக்க முறையாகக் கூடிப்பேசி வருகிறார்கள். இந்நீர்த் தூதாண்மையில் மாய மந்திரம் ஏதும் இல்லை. நீர் உற்பத்தியைச் சண்டைபோட்டு அதிகரிக்கச் செய்ய இயலாத நிலையில் நீருக்கான உரிமையை விடவும் தேவையின் அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒத்துழைப்பதைத் தவிர இவர்களுக்கு வேறுவழி இருக்கவில்லை.
முதல் உயிரி தோன்றிய நாளில் இருந்து புவியில் உயிர்ப் பசையை ஒட்டி வைத்திருக்கும் நீர்வள ஆதாரங்கள் இன்று பற்றாக்குறை காரணமாக முரண்பாடுகளின் மூலவளமாக மாறி இருக்கும் அதே சமயம் ஒத்துழைப்புக்கான ஊக்கியாகவும் இருக்கிறது. இதனாலேயே ஐ.நா. கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைவனம், மிகெயில் கோர்பச்சேவ் தலைமையிலான சர்வதேச பசுஞ்சிலுவை அமைப்புடன் (Green Cross International) இணைந்து தண்ணீரைப் "போர் வாய்ப்பிலிருந்து ‘சமாதான வாய்ப்புக்கு நகர்த்தும் திட்டமொன்றைப் பாரிய அளவில் சமீபத்தில் முன்னெடுத்துள்ளது. கொள்கை வகுப்பாளர்களையும், நீரியல் அறிஞர்களையும், பிரச்சினைகளைச் சரியாகக் கையாளக்கூடிய மாணவர்களையும் பயன்படுத்திச் சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் நீர் நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் எதிர்கொண்டு நீர்ப்போரைத் தடுப்பதே இப்புதிய கூட்டுத்திட்டத்தின் நோக்கமாகும். போரா - சமாதானமா? தீர்வு நம்மிடமே!
173
Page 89
18
முற்றுகையில் மழைக்காடுகள்
காடு நம் தாய்
தாயிடத்தில் நாம்
பால் குடிக்கலாமே தவிர,
அவளின் இரத்தத்தையே
உறிஞ்சிவிடக் கூடாது"
- கவிஞர் அறிவுமதி பூமி, மத்திய கோட்டுப் பகுதியில் மரங்களினால் நெருக்கி நெருக்கி இழைத்து வைத்திருக்கும் பச்சை வண்ணக் கோட்டைகள்தான் மழைக்காடுகள். அடர்ந்து, நெடிதுயர்ந்த இவை பல மாடிகளைக் கொண்டவை. ஒவ்வொரு அடுக்குகளிலும் வகைவகையான மரங்கள். விதானத்தில் வானத்தைத் தொடுகின்றவாறு பெரும் மரங்கள் இராஜகம்பீரம் காட்ட, கீழே உள்ள அடுக்குகளைக் குறுநில மன்னர் களாக உயரத்தில் குறைந்த மரங்கள் ஆட்சி செய்கின்றன. சூரியன் அதிகம் உச்சம் கொடுக்கும், அடைமழையுடன் கூடிய நிலங்களில் நிமிர்ந்துள்ளதால் வெப்ப மண்டல மழைக்காடுகள் அல்லது அயன மண்டல மழைக்காடுகள் (TropicalRain Forests) எனப் பெயர் பெறும் இவை வெறுமனே மரங்களின் கூடாரங்கள் அல்ல. இவற்றைச் சிறு அளவில் கொண்டிருக்கும் நாடுகள் மீதுகூட மற்றைய நாடுகள் பொறாமைக் கணைகளை வீசும் அளவுக்கு இவை பூமியின் உயிர்ச் சுரங்கங்களாகவும், பூமியின் உயிர்ப்பசையை ஈரம் உலராது பாதுகாக்கும் பெரும் அரண்களாகவும் திகழுகின்றன.
மழைக்காடுகள் இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா,
வெனிசுலா, கொலம்பியா, பொலிவியா, பெரு, பிறெசில். என்று வெப்பமண்டல நாடுகளிலேயே காணக் கிடைக்கின்றன. விரல்விட்டு எண்ணக் கூடிய சில நாடுகளில் மாத்திரமே இருந்தாலும், ஒட்டு மொத்தப் பூமியினதும் உயிரினப் பரம்பலில் இவற்றின் கொள்ளளவு பிரமாண்டமானது. "மனிதர்களினால் கண்டறியப்பட்ட ஏழு கண்டங் களை விடவும், இன்னமும் கண்டறியப்பட வேண்டிய எட்டாவது கண்டம் ஒன்றும் இருக்கிறது" என வில்லியம் பீப் என்னும் அறிஞர்
174
பொ. ஐங்கரநேசன்
1917 ஆம் ஆண்டு அறிவித்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் குறிப்பிட்டது கடலில் மிதக்கும் ஏதோ ஒரு நிலத்திணிவை அல்ல; காடுகளின் கூரையை. ஆம்! நூறு - இருநூறு அடி உயரத்தில் இலட்சக்கணக்கான சதுரமைல்கள் பரவிக் கிடக்கும் காடுகளின் கூரையில் மனிதர்களின் பார்வைக்கு வராமலேயே பறவைகள் பூச்சிகள் போன்ற எண்ணிறந்த உயிரிகளைக் கொண்ட ஒரு தனி உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. எப்போதாவது தவறி விழும்போது, அதுவும் மரக்கிளைகளெதிலும் சிக்கிக் கொள்ளாதிருந்தால் மாத்திரமே இவற்றுக்குத் தரை என ஒன்று இருப்பது தெரிய வரும். இப்படி உச்சி முதல் மரக்கால் வரை மழைக்காடுகளின் ஒவ்வொரு அணுவிலும் ஏதோ ஒர் உயிரினம் ஒட்டி உறவாடுகிறது. உலகில் இதுவரை 1.4 மில்லியன் தாவர, விலங்கு இனங்கள் பெயரிடப்பட்டுள்ளன. இன்னமும் பன்மடங்கு ஜீவராசிகள் அடையாளம் காணப்படாமல் உள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை, சூரியன் நுழையவே தயங்கும் இந்த அடர்காடுகளில்தான் அடைக்கலம் பெற்றுள்ளன. இவற்றிலும் பெரும்பாலானவை உலகின் வேறு எந்தப் பகுதிகளிலும் இல்லை என்னும் அளவுக்கு அந்தந்தக் காடுகளில் மாத்திரமே (Endemic Species) கரந்துறைகின்றன.
மழைக்காடுகளின் தனித்துவமான இந்த உயிர்ப் பல்வகைமைக்கு இலங்கையின் சிங்கராஜவனம் பரிச்சயமான ஒர் உதாரணம். இலங்கைத் தீவில் பூத்துச் சொரிகின்ற 3,210 மர இனங்களில், 916 இனங்கள் மண்ணின் மைந்தர்கள் - இலங்கைக்கே உரித்தான உள்நாட்டுத் தாவரங்கள். இந்த எண்ணிக்கையில் 139 இனங்கள் சிங்கராஜவனத் திலேயே காணப்படுகின்றன. சிங்கராஜாவின் மொத்த மரத்தொகை யுடன் ஒப்பிடுகையில் இது 60 விழுக்காடுக்கும் அதிகம். இவற்றில் ஒன்றான நாக மரத்தையே (Mesua ferea) பூரீலங்கா தனது தேசிய மரமாகத் தேர்வு செய்துள்ளது. இலங்கையில் வதியும் 407 புள்ளினங்களில் 23 இனங்கள் இலங்கைக்கு மாத்திரமே சொந்தக்காரர்கள். இவற்றில் 19 இனங்கள் சிங்கராஜாவின் பெருமைக்குரிய குடிகள். இப்படி உயிர் உலகின் சகல பிரிவுகளிலும் கணிசமான இனங்களைக் கொண்டிருப்ப தோடு அவற்றிலும் பெரும்பாலானவற்றைத் தனக்கே தனக்கெனப் பொத்தியும் வைத்திருப்பதால் சிங்கராஜவனத்தை பூரீலங்கா அரசு ஒதுக்கிடமாகப் பிரகடனப்படுத்திப் பாதுகாத்து வருகின்றது. மனிதனின் கைபடாமல் உலகில் அரிதாக எஞ்சியிருக்கும் கன்னிக் காடுகளில் ஒன்றான இதனை 'யுனெஸ்கோவும் உலக இயற்கைப் பாரம்பரியப்
1/5
Page 90
ஏழாவது ஊழி
| SirG5g-LDITag (World Natural Heritage Site) G5Ifa Gay Ligi GLCD60LDI படுத்தியுள்ளது.
உயிரினச் செழிப்புமிக்க மழைக்காடுகள், அவற்றின் ஆரோக்கி யத்துக்கு வேண்டிய அருமருந்துகளையும் தம்மகத்துள்ளேயே கொண்டிருக்கின்றன. ஹோலி டப்ளின் என்ற கானுயிர் ஆய்வாளர், ஆபிரிக்கக் காடுகளில் உள்ள கர்ப்பிணி யானைகள் ஈனும்நாள் நெருங்கும்போது குறிப்பிட்ட மரமொன்றின் தழைகளை உண்பதன் மூலம் பிரசவத்தைச் சுகமாக்கிக்கொள்வதைத் தான் கண்டதாகத் தெரிவித்துள்ளார். ஆச்சரியப்படும்படியாக, கென்யாவில் கர்ப்பிணிப் பெண்கள் மகப்பேற்று ஒளடதமாக அதே மரத்தின் இலைகளைச் சாறு பிழிந்து குடித்து வருகின்றனர். எவரிடமிருந்து எவர் கற்றுக் கொண்டது? பிரசவத்திற்கு மட்டுமல்ல கருத்தடைக்கும் காடுகள் மருந்து தருகின்றன. இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு பழங்குடியினார் கருத்தடைக்கு 'பஞ்சோரி (Vicoa indica) என்னும் செடியின் தழைகளைக் காய வைத்துப் பொடியாக்கி சாப்பிடுகிறார்கள். அமெரிக்காவின் ஜார்ஜியா மருத்துவக் கழகத்துடன் பெங்களூர் மருத்துவ நிபுணர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இது வெற்றிகரமான கருத்தடை முறை என்பது நிரூபணமாகியுள்ளது.
மலேரியாக் காய்ச்சல் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தபோது பெரு நாட்டுப் பழங்குடிகள் சிங்கோனா (Cnchona) மரத்தின் மரவுரியில் இருந்து சுலபமாகத் தீர்வு கண்டு கொண்டிருந்தனர். அந்த மரவுரியில் இருந்தே பின்னர் குயினைன் மருந்து வந்தது. பட்டிப் பூச்செடியில் இருந்து குருதிப் புற்று நோயைத் தணிவிக்கும் வின்பிளாஸ்ரின் (Vinblastin), வின்கிறிஸ்ரின் (Vinchristin) என்னும் இரண்டு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. பட்டிப்பூ போல புற்று நோய்க்கு எதிரானவை என அடையாளம் காணப்பட்ட மூவாயிரத்துக்கும் அதிக மான மூலிகைகளில் எழுபது விழுக்காடு வரை மழைக்காடுகளிலேயே காணப்படுகின்றன. ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பெயர்பெற்ற நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் 550 தொடங்கி 700 வகையான மருத்துவத் தாவரங்கள் இருக்கலாம் என மதிப்பிடப் பட்டுள்ளது. இவற்றில் 108 தாவரங்கள் சிங்கராஜா பகுதிகளில் காணப்படுகின்றன. இவையெல்லாம் சில உதாரணங்கள்தாம். இதுவரையில் கண்டறியப்பட்டவைகளுடன், மனிதனை இன்னமும் வாட்டிவதைத்துக் கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்தாகக் கண்டறியப்படவேண்டிய ஏராளமான தாவரங்களையும்
176
Page 91
ஏழாவது ஊழி
கொண்டிருக்கும் முழு உலகுக்குமான மருத்துவ அலுமாரியாக இயற்கை, மழைக்காடுகளையே உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.
உலகம் பூராவும் உள்ள மழைக்காடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான இனக் குழுமங்களாக 140 மில்லியன் பழங்குடியினர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குக் காடுகள்தான் உலகம். விலங்குகள்தான் உறவு. இவர்களின் கலாச்சாரமும், வாழ்க்கை முறையும் மழைக்காடுகளின் நிலைத்திருத்தலில் வகிக்கும் பங்கு பிரதான மானது. ஏராளமான இரகசியங்களைப் பூட்டி வைத்திருக்கும் மழைக் காட்டின் ‘சாவி, காடுகளின் பாதுகாவலர்களாகிய இந்தப் பழங்குடி யினரின் கைகளிலேயே இருக்கிறது. பல நூற்றாண்டு காலப் பட்டறிவின் ஊடாக இவர்கள் தேர்வு செய்து பயன்படுத்தும் தாவர, விலங்கு இனங்களே புதிய ரக இனங்களாக வெளியுலகுக்கு ஆராய்ச்சி யாளர்களால் அறிமுகம் செய்யப்படுகின்றன. உணவுக்காக நாம் இன்று பெரிதும் நம்பியிருக்கும் அரிசி, கோதுமை, சோளம் போன்ற தானியங்களின் மூதாதைகள் இவர்களது தெரிவுகள்தாம். 1970களில் ஆசிய நாடுகளில் நெற்பயிர்களை மஞ்சள் புல் என்னும் நோய் தாக்கி அழித்தபோதும் இவர்களது அனுபவம் கை கொடுத்தது. நோயை எதிர்கொள்ளக் கூடிய மரபணுக்களைத் தேடிச் சோர்ந்த விஞ்ஞானி களுக்குக் கடைசியில் வட இந்தியக் காடுகளில் வாழும் கோண்டு (Gond) இனப் பழங்குடிகள் நெல் வழங்கினர். இவர்கள் பயிரிட்டு வந்த காட்டுநெல் ரகம் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருந்தது. தாய்லாந்தின் 'லுஆ (Lua) பழங்குடியினர் மட்டுமே 75 உணவுப் பயிர்களையும், 21 வகையான மூலிகைச் செடிகளையும் அடையாளம் கண்டு பயிரிடுகின்றனர். இதிலிருந்து உலகம் பூராவும் உள்ள மழைக் காட்டுப் பழங்குடிகளிடம் நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய மரபணு வளங்கள் வகைதொகை இல்லாதது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
பல்வகைப்பட்ட உயிரிகளின் மரபணுத் தடாகம் (Genepool)ஆக இருப்பதுடன் மட்டும் மழைக்காடுகளின் முக்கியத்துவம் முற்றுப் பெறவில்லை. பூமியின் தட்ப வெப்ப நிலையைச் சமநிலைப்படுத்து வதிலும் பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றன. மழைக்காடுகள் பெரும் நீர் அணைகள் போன்றவை. காடுகளை ஊடறுக்கும் காட்டாறு களை விட, கண்ணுக்குத் தெரியாத பேராறாக காட்டுமரங்களின் வேர்கள் நிலத்தின் அடியில் பெருமளவிலான நீரைப் பிடித்து வைத்திருக்கின்றன. ஒவ்வொரு சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள காடும்
178
பொ.ஐங்கரநேசன்
அதன் அடியில் 50 ஆயிரம் முதல் இரண்டு இலட்சம் கன இலிற்றர்கள் வரையான நீரை ஈர்த்து வைக்கக்கூடியது. இந்த நீரை உறிஞ்சி, ஆவியாக விசிறி, காற்றைக் குளிரூட்டி, மீண்டும் மழை நீராக நிலம் நோக்க வைக்கின்றன. இந்நீர்ச்சுழற்சி தாவரங்கள் யாவற்றுக்கும் பொதுவான போதும், மழைக்காடுகளில் அதிக வினைத்திறனுடன் நிகழ்ந்தேறுகிறது.
பூமியை நனைக்கும் மழையில் பாதிக்கும் மேல் மழைக்காடுகளின் மீதுதான் விழுகிறது. ஆண்டொன்றுக்கு 5000 மில்லி மீற்றர்கள் வரையான மழைவீழ்ச்சி கொங்கிறீற் கட்டிடங்களைப் போல அல்லாது தாவரங்கள் மழையுடன் நன்றாக இணக்கம் காணக்கூடியவை. அதிலும் மழைக்காட்டு மரங்களில் கால்வாய் போன்ற இலை நரம்புகள், நீர் சொட்டக்கூடிய கூர்ந்த இலை நுனிகள் என்று இசைவாக்கங்கள் அதிகம். வானத்திலிருந்து பூமிக்குக் கங்கை பாய்ந்த போது அதன் வேகத்தில் காடுகளும் நிலங்களும் கரைந்து போகாமல் தடுப்பதற்காக சிவபெருமான் கங்கையைச் சடை முடியில் தாங்கியதாக ஒரு புராணக் கதை உண்டு. அதுபோலப் பூமியை அறையும் மழையைக் காட்டுக் கூரைகள் தாங்குவதனால் மழைநீர் வேகம் அடக்கித் தரையைத் தொடுகின்றது. இதன் மூலம் கனமழையினால் ஏற்படக் கூடிய மண்ணரிப்பு, மண்சரிவு, திடீர் வெள்ளப் பெருக்குகள் போன்ற அனர்த்தங்கள் தவிர்க்கப்படுகின்றன.
மழைக்காடுகள் பூமியின் காபன் வடிகட்டிகளாக இயங்குவதன் மூலமும் தட்ப வெப்ப நிலையைக் கட்டுக்குள் கொண்டு வருகின்றன. மரங்களின் ஒளிச்சேர்க்கையின் போது கரிக்காற்றான காபன் ஈரொக்சைட்டு வாயு உறிஞ்சப் பட, உயிர் ஆதாரமான ஒட்சிசன் வெளியேறுகின்றது. உயிரிகளின் இருப்புக்கு வளியில் ஒட்சிசன் வாயுவை நிரப்பிக் கொண்டிருக்கும் தாவரங்களின் வேதிவினை எந்த அளவுக்கு இன்றியமையாததோ, அந்த அளவுக்குத் தாவரங்கள் கரிக்காற்றைக் (காபன் ஈரொக்சைட்டு) கழிவகற்றுவதும் இன்றியமை யாதது. தொழிற்சாலைகளும், வாகனங்களும் காபன் ஈரொக்சைட்டை இடைவிடாது வளிமண்டலத்துள் கக்கிக் கொண்டிருக்கின்றன. காபன் ஈரொக்சைட்டு வாயுதான் சூரியக் கதிர்களைச் சிறைப்பிடித்துப் பூமி குளிர்ந்து போகாமல் கதகதப்பாக வைத்திருப்பதும். ஆனால், அதுவே அளவுக்கு அதிகமாகும் போது பூமி கொதிக்க ஆரம்பித்து விடுமே! நஞ்சுண்ட கண்டர்களாக, மழைக்காடுகள் கரியமிலவாயுவைக் குடித்து வருவதால்தான், உயிரினங்கள் அவிந்து போகாமல் காப்பாற்றப் படுகின்றன.
179
Page 92
ஏழாவது ஊழி
ஆனால், பூமியின் நல்லாட்சி ஆணையமாக மழைக்காடுகள் இவ்வளவைச் செய்தும் என்ன? மனச்சாட்சி இல்லாத மனிதர்கள் இவற்றைக் கண்டுகொள்வதாக இல்லை. உயிர்ப் பல்வகைமையை - பல்லினத்துவத்தை ஒம்பும் மழைக்காடுகள் மனிதப் பிராணிகளுக்கும் சேர்த்து நிழல் தந்து கொண்டிருக்கின்றன. அப்படி மனிதர்களையும் அரவணைத்ததுதான் தவறு போலும். மனிதர்கள் மழைக்காடுகளை முற்றுகையிட்டு நிகழ்த்தி வரும் சூழலியற் படுகொலைகள் அவ்வாறு தான் நினைக்கவைக்கிறது.
மனிதர்களுக்கும் மரங்களுக்கும் இடையிலான உறவு, மனித வரலாற்றினுடைய பழமையின் அளவுக்கு மிகப் பழமையானது. உணவும் நிழலும் நோய் நீக்கும் மருந்தும் தருவதால் மரங்களைப் பண்டைய மனிதர்கள் இறையாக வழிபட்டனர். ஆலமரத்தை அகநானூறு கடவுள் மரம் என்கிறது. வில்வமரம் சிவனுக்கு, அரசமரம் கணபதிக்கு, கடம்பு மரம் கண்ணனுக்கு என ஒவ்வொரு மரத்தையும் ஒவ்வொரு தெய்வத்துக்கென அதர்வண வேதம் ஒதுக்கியது. இதன் தொடர்ச்சியாக மரத்துக்கு அடியில் உருவ வழிபாட்டுக்கும் வழி பிறந்தது. தலவிருட்சமே தலப்பெயர்களாகவும், மூலவர் பெயர்களாக வும் விளங்கத் தொடங்கியது. நைமிசாரண்யம் புண்ணிய தலத்தில் இறைவனைத் தனி மூர்த்தியாக இல்லாமல் ஆரண்ய (காடு) வடிவத்தில் கண்டனர். ஆனால் இவையெல்லாம் பழம் கதையாகி இன்று வெறும் சடங்குகளாக மட்டுமே நீடிக்கின்றன.
இன்றயை நவீன தொழில்நுட்ப மனிதன் இயற்கையில் இருந்து விலகி வெகுகாலமாகிவிட்டது. அவனது பார்வையில் மரங்கள் என்பவை எரிபொருளுக்கான விறகுகள். அழகிய தளபாடங்களுக்கான மூலப் பொருள்கள். அவனது நகர மன நிலையில் காடுகள் என்பவை அபிவிருத்திப் பாதையின் குறுக்காக நிற்பவை. பெருகிவரும் அவனது சனத்தொகைக்கு வேண்டிய குடியிருப்பு, பண்ணை நிலங்களை வீணே அடைத்துக் கொண்டு கிடப்பவை. பழங்குடிகள் அநாகரிகமானவர்கள்; காடுகளை விட்டு அகற்றப்பட வேண்டியவர்கள். காடுகளின் உயிர்ம, கனிய வளங்கள் அனைத்தும் அவனால் மட்டுமே அனுபவிக்கப்பட வேண்டியவை. மொத்தத்தில் காடுகள் என்பவை அவனால் ஆக்கிரமிக்கப்படவேண்டியவை, அவ்வளவுதான்!
மனிதர்கள் மழைக்காடுகளை முற்றுகையிட்டு, மழுங்கச் சிரைத்துக்கொண்டிருக்கும் சூழலியற் படுகொலை கடந்த நூற்றாண்டில்
18O
பொ. ஐங்கரநேசன்
இருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் நிலப்பரப்பில் 12 விழுக்காடு அளவுக்கு நிலை கொண்டிருந்த மழைக்காடுகள் இன்று வெறும் ஐந்து விழுக்காடுதான் என்னுமளவுக்கு வெகுவாகச் சுருங்கி விட்டிருக்கிறது. நிமிடமொன்றுக்கு 50 தொடங்கி 100 ஏக்கர் பரப்பளவுள்ள காடுகள் அழிக்கப்படுவதாகச் செய்மதித் (Satelite) தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தின் அளவைக் காட்டிலும் பரந்த பரப்பளவுள்ள காட்டுப் பகுதி காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. காடுகள் இப்படித் திகைக்கவைக்கும் வேகத்தில் அழிக்கப்படுவது, மழைக்காடுகளையும் அவற்றை அண்டிப் பிழைக்கும் உயிரினங்களையும் உலகை விட்டு விரைவிலேயே மறையச் செய்துவிடும் என்ற அச்ச நிலையை சூழலியலாளர்களிடையே ஏற்படுத்தி உள்ளது.
உலகின் மிகப் பெரிய மழைக்காடு அமேசன் காடுகள் ஆகும். தென் அமெரிக்க நாடான பிறேசிலில் அமேசன் நதிப்பகுதிகளில் அடர்ந்திருக்கும் இக்காடுகள், உலகின் மொத்த மழைக்காடுகளில் மூன்றிலொரு பங்குக்கு வியாபித்தவை. அமேசன் காடுகள் குறித்து பிறேசிலைச் சேர்ந்த ஆய்வாளர் ஃபிலிப் ஃபொன்ஸைட் தெரிவிக்கை யில், ‘இக்காடுகள் இன்ன வருடத்தில் மறையும் என்று எவரும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் ஏதாவது உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இவை மறைந்து விடும்" என எச்சரித்து உள்ளார். அமேசன் காடுகளுக்கு ஆரம்பம் முதலே ஆபத்துத்தான். ஐரோப்பிய சமூகத்தினரின் தேவைகளை ஈடு செய்யும் கரும்புச் சாகுபடிக்கென போர்த்துக்கீசர்களால் ஒரு பகுதி ஏற்கனவே அழித்து ஒழிக்கப்பட்டது. இந்த வனப்படுகொலைக்கு சுதேசிகள் ஒத்துழைக்கவில்லை. இதனால் ஆபிரிக்க அடிமைகளை அழைத்து வந்து நிறைவேற்றினார்கள். இப்போது சுதந்திர பிறேசிலில், அமேசன் வாசிகளின் துணையுடன் அமெரிக்க - ஐரோப்பிய சமூகங்களுக்காகக் காடு முன்னரை விட வேகமாகக் கபஸ்ரீகரம் செய்யப்படுகிறது.
அமேசன் காடுகளின் அழிவுகள் குறித்த உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களைப் பிறேசில் அரசாங்கம் 2005ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளது. இதன்படி, 1978 - 2004 ஆம் ஆண்டு வரைக்குமான 25 ஆண்டுகளில் சுமார் 5,30,000 சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவுள்ள காடு காணாமல் போயிருக்கிறது. இதில் ஆகஸ்ட் 2003 தொடங்கி ஆகஸ்ட் 2004 வரையான ஒரு வருடத்தில் மட்டுமே 26,000 சதுர கிலோமீற்றர்களுக்கும் அதிகமான காட்டுப் பரப்பு துப்பரவு
181
Page 93
ஏழாவது ஊழி
செய்யப்பட்டுள்ளது. இந்த அளவு, இஸ்ரேல் நாட்டின் பரப்பளவை விடப் பெரியது. அமேசன் காடுகள் இப்படிக் கடுகி மறைவதை காடுகளினுள்ளே அமைக்கப்பட்டுவரும் மாட்டுப் பண்ணைகளும், சோயாப் பண்ணைகளும் பெருமளவுக்கு உந்துவிக்கின்றன.
பிறேசிலில் இருந்து மிகப் பெருமளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி யாகிறது. இதில் பெரும்பங்கு ஐரோப்பிய, அமெரிக்கர்களின் துரித உணவுக் கடைகளில் 'ஹம்பேர்கர் (Hamburger)தயாரிப்பிலும் அவர்களது செல்லநாய்களின் உணவாகவுமே செலவாகிறது. உலக நாடுகள் பலவற்றிலும் கால் நடைகளில் "பாதம் மற்றும் வாய் நோய் (Foot and Mouth Disease) பரவிய போது பிறேசில் அந்நோயை வெற்றிகர மாக எதிர்கொண்டது. இந்த நன்மதிப்போடு, பிறேசிலின் குறைவான நாணய மதிப்பும், அமேசன் நதியூடாக இலகுவில் மேற்கொள்ளக்கூடிய வாணிபப் போக்குவரத்தும் சேர்ந்து பிறேசில் இறைச்சிக்குச் சர்வதேசச் சந்தையில் அதிக வரவேற்பைப் பெற்றுக் கொடுத்துள்ளன. இதனால் பிறேசில்வாசிகள் மழைக்காடுகளை மாட்டுப் பண்ணைகளாகக் கரைத்து வருகின்றனர்.
அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் உண்ணுகின்ற கோழி களும் அமேசன் காடுகளைக் கொன்று கொழுத்தவைதாம். இவற்றின் தீனியில் இடம் பெறும் சோயா அவரை அமேசன் காடுகளிலேயே விளைவிக்கப்படுகிறது. இந்த வாணிபத்துக்கென அமெரிக்க வேளாண் நிறுவனங்களில் ஜாம்பவானான கார்கில் (Gargil) அமேசன் பகுதிகளில் 13 சோயா மையங்களைத் திறந்து வைத்துள்ளது. இம்மையங்களின் மூலம் சோயா விதைகளையும் வேளாண் இரசாயனங்களையும் வழங்கி விவசாயிகளை முழு வீச்சில் சோயாச் சாகுபடிக்குத் திருப்பிவிட்டுள்ளது. விளையும் சோயாவைக் கொள்வனவு செய்து, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலுள்ள கோழிப்பண்ணைகளுக்கு விநியோகித்தும் வருகின்றது. இவற்றில், உலகின் மிகப்பெரும் துரித உணவு நிறுவனமான மக்டொ னால்டும் (McDonald) அடக்கம். கார்கில் இதற்கென அமேசனில் சொந்த மாக ஒரு துறைமுகத்தையே கட்டியுள்ளது. மொத்தத்தில் அமெரிக்கர் களினதும், ஐரோப்பியர் களினதும் அதிதீவிர அசைவப் பசிக்குக் கிள்ளுக்கீரைகளாக அமேசன் காடுகள்தான் பலியாகி வருகின்றன.
அமேசனின் இந்தப் பேரழிவுக்கு பிறேசிலின் காணிச் சட்டங் களும் ஒரு காரணம். பிறேசிலின் தேச வழமைச் சட்டத்தின் படி, ஒருவர் தேடுவாரற்ற ஒரு பொதுக்காணியைக் குறைந்த பட்சம் ஒரு
182
பொ. ஐங்கரநேசன்
வருடமும் ஒரு நாளும் பயன்படுத்துவாராயின் அந்தக் காணி அவருக்கே உரிமையாகிவிடுகிறது. இதனால் நிலம்ற்ற ஒரு பிறேசில் வாசி நான்கைந்து கால் நடைகளுடன், அல்லது ஒரு சில பைகள் சோயா அவரையுடன் ஒரு காட்டுத்துண்டுக்கு இலகுவில் சொந்தமாகிவிட முடியும். 1995 - 98 காலப்பகுதியில் மட்டுமே பிறேசில் அரசாங்கம் ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் குடும்பங்களுக்கு இவ்வாறு காட்டில் நிலம் ஒதுக்கிக் கொடுத்துள்ளது.
துர்அதிர்ஷ்டவசமாக, பிறேசிலைப் போன்றே மழைக்காடுகளைக் கொண்ட நாடுகள் பலவும் அதிகளவு சனத்தொகைப் பெருக்கம் கொண்ட நாடுகளாகவும், தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய நாடுகளாகவும் இருக்கின்றன. வறுமையால் வாடும் இம்மக்களுக்குக் குடியிருப்புகளுக்கெனவும், உணவுச் சாகுபடிக்கெனவும் காடுகளிலேயே இடம் தேட வேண்டியுள்ளது. இலங்கையில் 70 விழுக்காடு மக்கள் நகரங்களுக்கு வெளியே வாழ்பவர்களாகவும், இவர்களில் கணிசமான் அளவினர் விவசாயத்தில் ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர். காடு கொன்று கழனியாக்கும் இவர்களது சேனைப் பயிர்ச்செய்கை முறையால் இலங்கைத்தீவும் தன்னுடைய காட்டுத்துகிலை இழந்து நிர்வாணமாகி வருகிறது. வெப்ப மண்டல மழைக்காடுகள், அதன் நீட்சியாக வெப்ப மண்டல உலர் காடுகள் என்று இலங்கையின் நிலப்பரப்பில் 1956ஆம் ஆண்டில் 44 விழுக்காடாக இருந்த அடர்காடுகள் இன்று வெறும் 23.9 விழுக்காடாகக் குறுகியுள்ளது. அதிலும் 2.6 விழுக்காடு நிலப்பரப் பிலேயே கன்னித்தன்மையை இழக்காத முதன்மைக் காடுகள் உள்ளன.
ஆனால், காடகன்ற பூமி விவசாயத்துக்குப் பொருத்தமானது அல்ல. இதனால் சில வருடச் சாகுபடிக்குப் பின்னர் கைபடாத புதிய கன்னிக் காடுகளை நோக்கி விவசாயிகளின் படையெடுப்பு மீளவும் தொடங்கி விடுகிறது. காடுகள் தம்மைத் தாமே பழுது நீக்கக் கூடியவை. மரங்கள் மழிக்கப்பட்ட நிலம் நாளடைவில் நாற்புறமும் இருந்து பரவி வரும் காடுகளினால் சூழப்பட்டு மறுபடியும் மரங்கள் அடர்ந்த பூமியாகிவிடும். ஆனால் சாகுபடி கைவிடப்பட்ட நிலங்கள் பெரும் பாலும் மேய்ச்சல் தரையாகத் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதால், இரண்டாம் தரமாகக் காடுகள் உருவாகுவதற்கான வாய்ப்பும்
முளையிலேயே பறிபோய்விடுகிறது.
வெட்டுமர (Timber) வியாபாரமும் மழைக்காடுகளை அச்சுறுத்தும் மற்றுமொரு முக்கிய காரணமாக இருக்கிறது. மரங்களை வெட்டி
183
Page 94
ஏழாவதுஉஊழி
விற்கும் நாடுகளில் முன்னணியில் இருப்பது மலேசியாதான். ஏறத்தாழ 330,000 சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவைக் கொண்ட மலேசியாவில், அதன் ஐந்தில்முன்று பாகம் மழைக்காடுகளால் மூடப்பட்டுள்ளது. இங்குதான் உலகின் மிகப் பெரிய பூக்களைப் பூக்கும் 'றவ்லேசியா (Rafessia) அபாரமாகக் காணப்படுகிறது. இத்தாவரம் ஒரு அற்புதமான சாதி. எவர் கண்ணிலும் படாமல் நிலத்துக்குக்கீழே பிறமரங்களின் வேர்களில் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து கொண்டு பூக்களை மட்டும் நிலத்தின் மேல் மலர்விக்கின்றன. ஒவ்வொரு பூவும் உச்சபட்சமாக 100 சென்ரிமீற்றர் விட்டத்தையும், 10 கிலோ எடையையும் கொண்டிருக்கும். இதையே மலேசியாவின் சபா (Sabah) மாநிலம் தனது மாநில மலராகத் தெரிவு செய்துள்ளது. மலேசிய அரசு அளவு கணக்கில்லாமல் மரங்களை வெட்டுவதற்கு உரிமம் வழங்கிவருவதால் அரிவு இயந்திரங்கள் இந்த அரிய காடுகளைச் சுடுகாடுகளாக்கிக் கொண்டிருக்கின்றன. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியும் ‘போய்ஸ் காஸ்காட் (Boise cascade) என்னும் அமெரிக்கப் பன்னாட்டு மரவிற்பனை நிறுவனத்துக்குத் தனது காடுகளின் கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. மரம் வெட்டும் உரிமத்தை சர்வதேச நிறுவனங்களுக்கு விற்பதால் கிடைக்கக்கூடிய அந்நியச் செலாவணி ஏழை நாடுகளை வனப்படு கொலைக்குச் சுலபத்தில் சம்மதிக்க வைக்கிறது. பல சமயங்களில் வெளிநாட்டுக் கடன்களை அடைப்பதற்கு இந்த நாடுகளுக்கு இருக்கும் தேசியச் சொத்துகளில் மழைக்காட்டு மரங்களும் ஒன்றாக இருக்கிறது.
ஆனால், இவையெல்லாம் வீண் கனவு காடுகளை அழிப்பதினால் மறைவது ஆயிரக்கணக்கான தாவர விலங்கின வகைகளும், ஈடுசெய்யப் பட முடியாத பாரம்பரிய வளமுமே தவிர வறுமை அல்ல. மாறாக பூமி சந்தித்து வருவது சுட்டெரிக்கும் வெப்பம், கடும் வறட்சி, திடீர் வெள்ளம் போன்ற சமநிலைக் குலைவுகளையும்; இவற்றினால் ஏற்படும் பஞ்சம், பட்டினிகளையும்தாம். பெருகிவரும் தனது சனத்தொகைக்குக் குடியிருக்க இடம் இல்லாததால் சீன அரசு 1998 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் காடுகளை அழித்து அதில் குடியமர்த்தியது. அடுத்து வந்த பருவ மழையின் போது காடுகளின் தடுப்பு இல்லாததால் யாங்க்ஷே ஆற்றுப் படுக்கையில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல இலட்சம் வீடுகள் மூழ்கின. சென்ற நூற்றாண்டின் மிகப்பெரிய வெள்ளம் என அது வர்ணிக்கப்படுகின்றது.
இதனாலேயே இயற்கை விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், சூழல்வாதிகள், சமூகவியலாளர்கள் என்று பல்வேறு தரப்பினரதும்
184
பொ. ஐங்கரநேசன்
கவனஈர்ப்பை மழைக்காட்டுச் சூழல் பெற்றிருக்கிறது. வருகின்ற தலை முறைகளுக்காக மழைக்காடுகளை எப்படிக் காப்பது என்பது இவர்கள் எல்லோரினதும் கவலையாக இருந்தாலும், தேசங்களுக்கு இடையே நிலவும் குறுகிய மற்றும் எதிர்மறையான மனப்பான்மைகளையெல்லாம் தாண்டி மழைக்காடுகளைக் காப்பாற்றுவதற்குரிய சர்வதேசியத்தை எட்டுவது என்பது அவ்வளவு இலகுவான ஒன்றாக இல்லை. கொள்கைகளை வகுப்பதிலும் நிறைவேற்றுவதிலும் வழமை போலவே இதிலும் நாடுகளுக்கிடையேயான அரசியலே பெரும்பங்கு வகிக்கிறது.
1960களில் நச்சுக்கழிவுகளின் சேர்க்கையினால் இனப்பெருக்கும் ஆற்றல் குறைந்து அமெரிக்காவின் தேசியச் சின்னமான கழுகுகள் (Bald eagle) பேரழிவைச் சந்தித்தன. அதன் காரணமாக சுற்றுச்சூழல் நடவடிக் கைகளில் தீவிரநாட்டம் கொள்ள ஆரம்பித்த அமெரிக்க அரசியல், இன்று பிற நாடுகளின் வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் 'சூழல் வல்லாண்மை'யைப் பெற்றிருக்கிறது. தூய்மையான மழைக்காடு களினூடே நெடுஞ்சாலை அமைப்பதற்கு பிறேசிலுக்கு கடனுதவி வழங்க வேண்டாமென அமெரிக்கா ஜப்பானைக் கேட்டுக் கொண்டுள்ளது. காடுகளுக்குச் சேதத்தை உண்டுபண்ணும் திட்டங் களுக்கு கடனுதவிகளைக் கொடுப்பதை உலகவங்கியும் நிறுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளது.
ஆனால், வடக்கு அமெரிக்கப் பகுதிகளில் பலகோடி டொலர் வருமானமுள்ள மரம் வெட்டும் தொழிலைத் தடுக்க அமெரிக்கா முன்வரவில்லை. மரம் வெட்டுவதை ஒரு தொழிலாக அங்கீகரித்து மானியங்களையும் வழங்கி வருகிறது. பூமியைச் சூடாக்கும் காப னிரொட்சைட்டு வாயுவை தொழிற்சாலைகள் வெளிவிடும் வீதத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா இன்னமும் ஒத்துழைப்பை வழங்கவில்லை. இந்நிலையில் அன்றாடத் தேவைகளுக்காக விறகு வெட்டுகின்ற, விவசாயத்துக்காகக் காடுகளை அழிக்கின்ற ஏழை நாடுகளினால்தான் சூழல் பாதிக்கப்படுகின்றது என வளர்ந்த நாடுகள் வாதிடுகின்றன.
"பசியால் மரணித்துக் கொண்டிருக்கும் ஒருவன் தன்னுடைய அந்த அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு முன்னால் எப்படி சூழல் பாதுகாப்பைப் பற்றிச் சிந்திக்க முடியும்? உங்கள் நாடுகள் வெளியேற்றும் கரிக்காற்றை ஜீரணிக்கும் சக்தி எங்கள் காடுகளுக்கு உண்டு என்று நீங்கள் நினைத்தால் எங்கள் காடுகளைக் காப்பாற்று வதற்கும் காடுகளை நம்பி வாழ்க்கை நடத்தும் மக்களுக்காவும் நீங்கள்
185
Page 95
ஏழாவதுஉஊழி
என்ன செய்யப் போகிறீர்கள்?' - என்று அடுக்கடுக்கான கேள்விகளை வளர்ந்த நாடுகளை நோக்கி மூன்றாம் உலக நாடுகள் பிறேசிலில் 1992இல் நடந்த பூமி உச்சிமாநாட்டின் போது எழுப்பின. இன்னமும் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன.
அமெரிக்கா 1970 ஏப்ரல் 22இல் ஆரம்பித்து வைத்த 'பூமி தினம் பல்வேறு நாடுகளிலும் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பங்குக்கும் வருடம் தோறும் ஜூன் - 5ஆம் திகதி 'உலக சுற்றாடல் தினம்’ ஆக உலகம் பூராவும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இந்தக் களேபரங்களின் மத்தியிலும் மழைக்காடுகள் மழுங்கத்துடைக்கப்படும் அவலம் மட்டும் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பணக்காரநாடுகளின் 'மதப்புக்கும் ஏழை நாடுகளின் வறுமைக்கும் இடையே தனது 'தலை'விதியைக் கொடுத்துவிட்டு இரண்டு தரப்புக்கும் இடையே நிகழும் இழுபறியில் மழைக்காடுகள் மொட்டையாகிக் கொண்டிருக்கின்றன. அதுவும் வருடத்துக்கு 17,000 தாவர - விலங்கு இனங்களைப் பூமியை விட்டு நிரந்தரமாகவே அழித்துக் கொண்டு!
186
19
கண்டல்களைக் காப்போம்
"பூமியில் ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கு ஏற்றாற்போல ஓர் இடமுண்டு பேராசைப்பட்டு அதையெல்லாம் மனிதன் ஆக்கிரமிப்புச் செய்ய ஆரம்பித்தால் அதன் விளைவுகளைத் தலைமுறை தாண்டியும் நாம் அனுபவிப்போம்."
- பொக்கூடன் (தன்னார்வ கண்டல்வனக் காப்பாளர் - கேரளா)
உயிர்வளங்களை மற்றைய நாடுகளிடம் கிள்ளித் தெளித்த இயற்கை, வெப்பமண்டல நாடுகளிடம் அவற்றைத் தாராளமாக அள்ளிக் கொடுத்திருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் கண்டற் காடுகள். விஞ்ஞான மொழியில் உவர் சதுப்பு நிலக்காடுகள் என அழைக்கப்படும் இக்காடுகள் உலகில் வெப்ப, மற்றும் இடைவெப்ப நாடுகளில் ஆற்று நீரும் கடல்நீரும் ஆரத்தழுவுகின்ற நதிமுகத் துவாரங்களை அண்டிய பகுதிகளில் காணப்படுகின்றன. நன்னீர் கலப்பதால் கடல்நீரின் உப்புச்செறிவு இலிற்றருக்கு 35 கிராம்கள் என்ற நியம அளவில் இருந்து 20 கிராம்களுக்குக் கீழாகக் குறையும்போது, அந்த உவர் நீர்ச் சேற்றில் கண்டற் தாவரங்கள் (Mangroves) பெரும் உவப்போடு குடியேறிப் பெருகுகின்றன.
உலகின் மிகப்பெரிய கண்டற்காடு, இந்தியாவில் மேற்குவங்கத் தில் ஆரம்பித்து வங்காள தேசத்தின் தென்மேற்குவரை நீண்டு செல்லும் சுந்தரவனம் ஆகும். கங்கை பிரம்மபுத்திரா, மேக்னா நதிகளின் கழிமுக வாய்களில் வங்காள விரிகுடாவைப் பார்த்தவாறு காணப்படுகிறது. ஏறத்தாழ 10,000 சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவுள்ள சுந்தரவனத்தில் பெரும்பகுதி - 60 விழுக்காடு - வங்காள தேசத்தினுள் அமைந்துள்ளது. இரண்டு வங்கங்களிலும் இக்காட்டினை 'சுந்தர்பான்ஸ் (Sunderbans) என அழைக்கிறார்கள். "சுந்தர்பான் என்ற வங்கமொழிச் சொல்லின் விளக்கம் ‘அழகிய காடு' என்பதாகும். இதன் பொருள்படவே தமிழிலும் அழகொழுக, 'சுந்தரவனம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. சுந்தரி மரங்களை (Heritera) அதிகளவில் கொண்டிருப்பதால் சுந்தர்பான்ஸ் என்ற பெயர் உருவானது எனச் சொல்வோரும் உளர். உலகின் இரண்டாவது
187
Page 96
ஏழாவது ஊழி
பெருங்கண்டற்காடு தமிழகத்தில் சிதம்பரத்தின் அருகே பிச்சாவரத்தில் உள்ளது. தில்லை மரங்கள் பெருமளவில் காணப்படுவதால் தில்லைவனம் என அழைக்கப்படும் இது, 53 திட்டுகளையும் வகிடு பிரித்தது போன்று ஒடிக்கொண்டிருக்கும் 4,000க்கும் மேற்பட்ட உவர் நீரோடைகளையும் கொண்டுள்ளது. எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி திரைப்படத்தில் இயந்திரப் படகுகளில் துரத்தும் சண்டைக்காட்சிகள் இடம்பெற்ற தண்ணிர்க்காடு இதுதான். அதன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான பிச்சாவரம், பின்னர் எம்.ஜி.ஆரது ஆட்சிக்காலத்தில் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டது. இங்குள்ள தில்லை மரமே சிதம்பரம் நடராசர் கோவிலின் தலவிருட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரம் அலைமோதுகின்ற இலங்கைத்தீவிலும் கரையோரங்களை அண்டி வெகுசில இடங்களில் கண்டற்காடுகள் காணப்படுகின்றன. இவற்றின் மொத்தப் பரப்பளவு இலங்கையின் பரப்பளவில் 0.2 விழுக்காடு அளவினதேயாயினும் புத்தளம், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளில் கண்டல் களின் விசாலிப்பு அதிகம். கலா ஓயா, மீ ஒயா, மூங்கில் ஆறு ஆகிய நதிகள் கடலைத்தேடி வந்தடைகின்ற புத்தளம் ஏரி இலங்கையின் கண்டல்காடுகளில் அரைவாசிக்கும் மேற்பட்ட அளவைத் தாங்குகிறது. இலங்கையில் கண்டல்களின் பரம்பலில், புத்தளத்துக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் யாழ் குடாநாடு உள்ளது. யாழ்குடாநாட்டில் பேராறுகள் இல்லாதபோதும் வழுக்கியாறு, தொண்டைமனாறு, உப்பாறு என்று மழைநீரைக் காவிவரும் சிற்றாறுகள் உண்டு. இந்த மழைநீர் சென்றடைகின்ற - மூன்று பெரும் தீவுகளாக வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி பிரதேசங்களைப் பிரிக்கும் - ஆழமற்ற கடல்நீரேரிகள் குடாநாட்டில் கண்டற்காடுகளின் முகவரிகளாக உள்ளன. அதிக அளவில் கண்டல் மரங்களையும் (தமிழகத்தில் இதனைச் சுர புன்னை என்கிறார்கள்) கண்ணா மரங்களையும் கொண்டிருப்பதால் கண்டற் காடுகள் எனவும் கண்ணாக் காடுகள் எனவும் பெயர்பெற்ற இக்காடுகள் ஊரவர்களினால் களப்புக்காடுகள் எனவும் அழைக்கப் படுகின்ற்ன.
நதிகளின் முகத்துவாரங்களிலும் கடல் நீரேரிக் கரைகளிலும் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இந்தக் காட்டுவளம் மேற்கொள்ளும் பகீரதத்தனங்கள் இயற்கையை நேசிக்கும் எவரையும் வியப்பில் ஆழ்த்தும். சுழன்றடிக்கும் உப்புக்காற்றுக்கும் வற்றிப்பெருகும் ஒத அலைகளுக்கும், அதுவும் சகதித்தரையில் நின்றவாறு ஈடுகொடுப்ப
188
Page 97
ஏழாவது ஊழி
தென்பது இலேசானதல்ல. பாதகமான இந்தச் சூழ்நிலைகளைத் தமது வேர்க்கால்களினால் மாத்திரம் எதிர்கொள்ள முடியாத கண்டல் (Rhizophora), சிறுகண்டல் (Ceriops) போன்ற மரங்கள் தண்டில் இருந்து ஏராளமான மிண்டிவேர்களையும் கிளைகளில் இருந்து தாங்கும் விழுது வேர்களையும் உருவாக்கித் தம்மை நிலைப்படுத்திக் கொள்கின்றன. தொடர்ச்சியாகத் தேங்கும் நீர், சுவாசிக்கத் தடையாக இருப்பதால் கண்ணா மரங்கள் (Avicemia) ஈர்ப்பு விசைக்குக் கீழ்ப்படியாமல் நிலத்துக்கு மேலாக நிமிரும் மூச்சு வேர்களைத் தோற்றுவித்துத் தம்மை ஆசுவாசப் படுத்துகின்றன. கடல்நீரை ஆற்றுநீர் எவ்வளவுதான் குளிப்பாட்டி னாலும் உவர்ப்பை முழுமையாகக் கழுவிவிட முடியுமா என்ன? கழிமுகங்களிலும் கடல்நீரேரிகளிலும் உப்புச் செறிவு உயிர்வினை களுக்குப் பாதகமான உயர்ந்த அளவுகளிலேயேதான் உள்ளது. கண்டற் காட்டுத் தாவரங்கள் உப்பை வடிகட்டும் வேர்களையும், உப்பைக் கழிவகற்றும் இலைகளையும் கொண்டியங்கி இந்த உவர்ப்பை எளிதில் புறந்தள்ளி விடுகின்றன.
குஞ்சு பொரிக்கும் வரை முட்டைகளை வாயில் சுமந்து அடை காக்கும் மீன்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோன்ற சர்வ எச்சரிக்கைமிக்க மரங்களைக் கண்டற் சூழலில் காணலாம். விதைகள் முளைப்பதற்கு உவரல்லாத நீரும்,பிராணவாயுவும், தகுந்த வெப்பநிலையும் ஒருங்கே அமையப் பெற்றிருத்தல் அவசியம். ஆனால், கண்டல் நிலங்களில் அவ்வப்போது வற்றிப்பெருகும் அலைகளினால் (Tida Waves) இந்த நிபந்தனைகள் சரிவரக் கூடிவருவதில்லை. இதனால் கண்டற் தாவரங்களால் ஏனைய சூழல்களில் வளரும் தாவரங்களைப் போல விதைகளை 'அம்போவென வீசிவிட்டு வாழாதிருக்க முடிவ தில்லை. விதைகளை வேர்கொள்ளும்வரை சுமந்து, அதன்பிறகே அவற்றைப் பத்திரமாகத் தண்ணிரில் இறக்கிவிடுகின்றன. கூர் தீட்டிய கிட்டித்தடி போன்ற வேர் சேற்றுத்தரையினுள் ஊடுருவியதும் இலைகள் துளிர்க்கத் தொடங்கிவிடும். தாய்மரத்தில் பழங்கள் இணைந்திருக்கும் போதே வித்துகள் முளைப்பதைத் தாவரவியலாளர்கள் 'சீவசமுறை முளைத்தல் (Viviparousgemination) என்கிறார்கள். இந்தச் சிறப்பு முளைப்பை கண்டல் (Rhizophora), உப்புக்கண்டல் (Buguerg போன்ற மரங்களில் பார்த்து வியக்கலாம்.
கண்டற்தாவரங்கள் உவர்சதுப்பு நிலச்சூழல் விடுக்கும் கடுமை யான சவால்களை எதிர்கொள்ளுவதற்காகக் கொண்டிருக்கும் தகவமைப்புகளால் மாத்திரம் சிறப்புப் பெறவில்லை. கரையோர
190
பொ.ஐங்கரநேசன்
உயிர்ச்சூழலுக்கு இவை ஆற்றிவருகின்ற பங்களிப்பும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. கண்டல் மரம், செடிகள் சேற்றாந்தரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குடியேறி அடர்வனமாக ஆட்சி பெற்றதும் அந்தப் பசுமைக்குடைகளின் கீழ் பெருவாரியான உயிரினங் களுக்கு ஊட்டம் அளிக்கின்றன. கூடவே, கரையோரச் சூழலுக்குக் கற்பனைக்கும் எட்டாத அளவுக்குப் பாதுகாப்பை வழங்கும் இயற்கை அரண்களாகவும் தொழிற்படுகின்றன.
கண்டற்தாவரங்கள் அவை வளர்கின்ற நீர்நிலைகளை வளப் படுத்துவதன் மூலம் கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவூட்டுகின்றன. உதிர்ந்து சொரியும் இவற்றின் இலைகள் 'பிளாந்தன்கள் (Planktons) எனப்படும் மிதவை உயிரிகள் பல்கிப் பெருகச் சிறந்த இயற்கைப் பசளைகள் ஆகின்றன. தண்ணீரில் மிதக்கின்ற நுண்ணிய தாவர, விலங்கு உயிரிகளையே 'பிளாந்தன்கள் எனப் பெயரிட்டுள்ளார்கள். உக்கிப்போன இலைத் துகள்களும் பிளாந்தன்களும் சிறிய கடல் உயிரினங்களுக்கு, குறிப்பாக இறால்களுக்குப் பிடித்தமான உணவுகள் ஆகும். இப்படிப் பிளாந்தன்களைச் சிறிய மீன்களும், சிறிய மீன்களைப் பெரிய மீன்களும் இரையாக்குவதன் மூலம் கண்டற்சூழல் மறைமுக மாகக் கடலுக்கே விருந்தளித்து வருகிறது. பல்வேறு கண்டற்தாவர இனங்களும் கற்றைகளாக உருவாக்குகின்ற பல்வேறு வேர்வகைகளும், கண்டல் மரங்களிலுள்ள தனின் (Tanin) சேர்வைகளினால் சிவப்பேறிய கண்டல்நிலநீரும் கடல்வாழ் உயிரினங்கள் ஒளிந்துவாழ ஏற்ற உருமறைப்புகளாக உள்ளன. இறால், நண்டு, மீன்களின் குஞ்சுகள் இந்தக் கண்டல் தொட்டில்களில்தான் மறைந்து வளர்ந்து பின்னர் இனப்பெருக்கலுக்காகக் கடலை நாடி இடம்பெயருகின்றன. இதனா லேயே கண்டலுடன் சேர்ந்த கடல்நீரேரிகளும், அவற்றை அண்டிய கடற்பகுதிகளும் அதிகளவில் இறால்களும் மீன்களும் பிடிபடும் இடங்களாக விளங்குகின்றன.
கண்டற்காடுகள் ஒம்புகின்ற உயிரினங்கள் இறால்கள், நண்டுகள், நத்தைகள், மீன்கள் போன்ற சிற்றுயிரிகளுடன் முற்றுப் பெறுவதில்லை. இவற்றைத் தொடக்கமாகக் கொண்டு நீளும் உணவுச்சங்கிலிகளின் கண்ணிகளாக ஆமைகள், கடற்பாம்புகள், நீர் உடும்புகள், கீரிப் பிள்ளைகள், காட்டுப்பூனைகள், நண்டுதின்னிக் குரங்குகள், சதுப்பு முதலைகள் என்று பெரும் உயிர்ப் பல்வகைமைக்கே உறைவிடம்ாக உள்ளது. யாழ்ப்பாணத்து நீர்நிலைகளில் ஊர்வன ஆய்வாளரான ரோம் விட்டேகர் (RomWhitaker) 1977ஆம் ஆண்டு ஆய்வுகளை மேற்கொண்ட
191
Page 98
ஏழாவதுஉஊழி
போது அங்கு முதலைகள் இருப்பது பதிவாகவில்லை. யாழ்ப்பாணத்தில் முதலைகள் முற்றாகவே அழிந்துவிட்ட நிலையில் இப்போது, கண்டல்மரங்கள் வேர்க்கால்களை நனைக்கும் தொண்டமனாறு ஏரியில் முதலைகள் தென்பட ஆரம்பித்துள்ளன. 'செம்மூக்கன் எனப்படும் உவர் நீர் முதலையும், 'சாணக்கன் எனப்படும் நன்னீர் முதலையும் குடியேறி யிருப்பதாகப் பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர். மேற்கு வங்கத்தினதும் வங்காள தேசத்தினதும் சுந்தரவனப் பகுதிகளில் உணவுச் சங்கிலியின் உச்சப்படியில் அரிய வங்காளப்புலிகள் (BengalTiger-Pantheratigris bengalensis) வாழுகின்றன. புலிகளின் உப இனங்களில் ஒன்றான இதனையே வங்கதேசமும், இந்தியாவும் தமது தேசிய விலங்காக்கிக் கொண்டுள்ளன.
கண்டற்சூழல் நீர்ப்பறவைகளுக்கும் பெரும் வரப்பிரசாதம். தீனி பொறுக்க ஏற்ற இடமாகக் கண்டல் ஏரியும், குஞ்சு பொரிக்க ஏற்ற மறைப்பாகக் கண்டல் மரங்களும் ஒருங்கே அமையப் பெற்றிருப்பதால் உள்ளூர்ப் பறவைகளும் வலசைப் பறவைகளும் கூட்டம் கூட்டமாகக் கண்டற்பிரதேசங்களைத் தேடிவருகின்றன. இவற்றில், நீண்ட கழுத்தும் இறக்கைகளில் இளஞ்சிவப்பு வர்ணம் பூசிய அழகான பூநாரைகளும் (Flamingos) அடக்கம். பூநாரைகளுக்குக் கண்டல்நீரிலுள்ள பிளாந்தன்களி லொன்றான நீலப்பச்சை அல்காக்களும், அவற்றை உண்ணும் தேவதை இறால்களும் (Shrimps) மிகவும் பிடித்தமான ஆகாரங்களாகும். இவற்றிலுள்ள'கரற்றினோயிட்டுகள் (Carotenoids) என்னும் நிறப்பொருளே பூநாரையின் இளஞ்சிவப்பு நிறத்துக்குக் காரணம். ஆயிரக்கணக்கான பூநாரைகள் சொல்லி வைத்தாற்போல ஒரே நேரத்தில் தலையை சேற்றுநீரினுள் சாய்த்து உணவை வடிகட்டி உறிஞ்சுவது கோடி அழகு பெறும். இந்தக் கண்கொள்ளாக் காட்சியை ஈழத்தில் சுண்டிக்குளம் கடல் நீரேரியில் ஒருதடவை பார்த்திருக்கிறேன். இப்பகுதி ஆங்கி லேயரின் ஆட்சியின்போது - 1938இல் - பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வலசைப்பறவைகளான பூநாரை களைத் தமிழகத்தில் பழவேற்காடு பறவைகள் சரணாலயத்திலும் கோடிக்கரை வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயத்திலும் (Point Calimere wildlife and Birds Sanctuary) 5/TGOOTourTib. G5s,ITLq did,60J pra00Trrauugiggit ஒரு பகுதியாக முத்துப்பேட்டை கண்டற்காடுகள் அமைந்துள்ளது. இவ்வாறு உலகின் பிரசித்திபெற்ற பறவைகள் சரணாலயங்கள் பல கண்டற்சூழலில்தான் உள்ளன.
கண்டற்காடுகள் மனிதனது தேவைகளுக்கும் தமது பங்களிப்பை நல்கத் தவறவில்லை. கண்டல்களின் மரப்பட்டைகளை அவித்துப்
192
பொ. ஐங்கரநேசன்
பெறப்படும் 'தனின் சாயம் தோல்பதனிடுதலில் பயன்படுகிறது. கயிறுகள், வலைகள் போன்ற மீன்பிடி உபகரணங்களை இச்சாயத்தில் தோய்த்துப் பாவிப்பதன் மூலம் நீண்டநாட்களுக்குப் பழுதின்றிப் பேணமுடியும். உறுதியானதும், பூச்சிகளின் தாக்குதல்களிலிருந்தும் தப்புவிக்கக் கூடியதுமான கண்டல், கண்ணா போன்ற மரங்கள் சிறந்த வெட்டு மரங்களாகப் பயன்படுகின்றன. மீன்பிடி வளையங்கள், மீன்பிடிக் கம்புகள், கப்பல்கட்டும் பலகைகள், உறுதியான கைப்பிடிகள் போன்றவை இவற்றில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன. தூரக்கிழக்கு நாடுகளில் கண்டல் வெட்டுமரங்கள் முக்கியமான ஏற்றுமதிப் பொரு ளாகும். கண்டற்சூழலில் வாழும் பெரும்பான்மையான தாவரங்கள் மருத்துவப் பெறுமதி உடையவை. சிறந்த மூலிகைகளாகப் பயன்படு கின்றன. தில்லை மரத்தின் சாம்பல், சவர்க்காரம் போன்ற ஒரு துப்புரவாக்கியாக துணிவெளுக்கப் பயன்படுவதுடன் பாத்திரங்களைப் பளிச்சிடவைக்கவும் பாவிக்கப்படுகிறது.
கண்டற்காடுகளை, கடலையும் நிலத்தையும் பிரிக்கின்ற எல்லை களில் எழுந்துநிற்கும் 'எல்லைக்காவலர்கள் என்று சொன்னால் மிகை யாகாது. ஆம்! சமுத்திரங்கள் ஆவேசத்தோடு உயர்த்தும் அலைக் கரங்களையும் சமுத்திரங்களில் மையங்கொண்டெழும் புயல்களையும் எதிர்கொண்டு கரையோரப் பகுதிகளைக் காப்பாற்றும் உயிர்க்கேடயங் களாகவும் கண்டற்காடுகள் தொழிற்படுகின்றன. கரையை மோதவரும் கடல்அலைகளின் சீற்றத்தை ஏறத்தாழ 90 விழுக்காடு குறைத்துவிடும் வல்லமை கண்டல் மரங்களுக்கு உண்டு. இவ்வாறு அலைகளின் வேகம் ஆற்றப்படுவதால் கரையோரமண் கடலினுள் வாரிச் செல்லப்படுவதை இக்காடுகள் தடைசெய்கின்றன. இதனாலேயே முத்துப்பேட்டையைச் சுற்றியுள்ள கண்டற்காடுகளை அப்பகுதி மக்கள் தொன்று தொட்டு அலையாத்திக் காடுகள் என்றே அழைத்து வருகிறார்கள். அலைகளின் வேகத்தைத் தணிக்கும் இதுபோன்ற காடுகள் இல்லாததாலேயே சென்னையின் அருகே எண்ணுரர் போன்ற கரையோரப் பகுதிகள் மக்கள் இடம்பெயரும் அளவுக்குப் பெரும் அரிப்புக்கு ஆளாகி வருகின்றன.
அலையாத்திக் காடுகள் என்ற பெயரின் காரிய காரணத் தொடர்பை 2004, டிசம்பர் 26 அன்று உலகை உலுக்கிய கடற்கோள் (Tsunam)இன்னும் அதிக வலியுடன் ஆழமாகவே விளக்கிச் சென்றுள்ளது. இந்தோனேசியாவுக்கு அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்ப மானது கடற்கோளாக உருவெடுத்ததில் இந்து சமுத்திர நாடுகளின் கரைகளில் இரண்டரை இலட்சம்பேர் வரையில் பலியாகின்றனர்.
193
Page 99
ஏழாவது2ஊழி
பனையளவு உயரத்துக்கு எழுந்த ஆழிப்பேரலைகள் வாழ்வாதாரங் களைப் புரட்டிப்போட்டதில் மில்லியன் கணக்கானோர் ஏதிலிகளா யினர். பலநூற்றாண்டுகளுக்கு வரலாறு நினைவில் வைத்திருக்கப்போகும் இந்தத் துயரச்சம்பவம் நிகழ்ந்த பின்னர், கடற்கோளால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பேணலுக்கான sia/Gigg airp5ulb (International Union of Conservation of Nature and Natural Resources -IUCN) ஆய்வுகளில் ஈடுபட்டது. இதில், கண்டற்காடுகள் செழித்திருந்த கரையோரப்பகுதிகளில் கடற்கோளின் தாக்குதல் வெகுவாக மட்டுப் படுத்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. உதாரணத்துக்கு, இலங்கை யின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள கப்பு ஹென்வுல (Kapuhenwala), வாண்டுறுப்பா (Wanduruppa) என்னும் இரண்டு கரையோர சிங்களக் கிராமங்களைக் குறிப்பிடலாம். கண்டல் மரங்கள் அடர்ந்திருந்த கப்பு:ஹென்வெலவில் ஆழிப்பேரலையினால் இரண்டே இரண்டு பேர்களினது உயிர்களை மட்டுமே பறிக்க முடிந்திருக்கிறது. ஆனால், கண்டல்கள் குறைந்த வாண்டுறுப்பா கிராமத்தில் 6000 பேர் வரையில் பலியாகி உள்ளனர். அலைகளின் ஆக்ரோஷத்தைத் தணிவிக்கும் அலையாத்திக் காடுகளின் ஆற்றலை எடுத்தியம்ப இதைவிட வேறு
என்ன உதாரணம் வேண்டும்?
மரங்கள் எல்லாமே காற்றுத் தடுப்புகள்தாம். அவற்றிலும், கண்டற்காடுகள் மணிக்கு 100 முதல் 120 கிலோமீற்றர்கள் வேகத்தில் வீசும் புயற்காற்றைக்கூடக் கரையிலேயே தடுத்து அதன் வேகத்தைக் குறைக்கும் ஆற்றல் உடையவை. இப்படிப் புயல் தடுப்பு அரண்களாக விளங்குவதாலேயே, புயல்கடக்கும் பாதையில் உள்ள கண்டற்காடுகளை ஒட்டிய பிரதேசங்கள் அழிவில் இருந்தும் பெருமளவில் பாதுகாக்கப் படுகின்றன. இந்த இயற்கைப் பயன்பாடு தெரியாமல் வங்காளதேசம் தனது சுந்தரவனத்தைச் சீர்குலைத்ததால் 1991ஆம் ஆண்டு புயலினால் பேரழிவைச் சந்திக்க நேர்ந்தது. சுந்தரவனத்தினால் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு இல்லையென்றான கிராமங்களில் சுதந்திரமாகப் புகுந்த புயல் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்களைக் கொன்று குவித்தது. கணக்கற்ற கால்நடைகள் புயல்வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டன. இவை மட்டுமல்லாது, உப்புநீர் புகுந்து விவசாய நிலங்களையும் பயிர்ச் செய்கைக்கு ஏதற்றதாக்கியது.
கண்டற்காடுகள் ஆற்றிவருகின்ற பங்களிப்புகள் எவ்வளவுதான் இன்றியமையாதனவாக இருந்தபோதும், ஆழிப்பேரலை தாண்டவ மாடும் வரை இந்த முக்கியத்துவங்கள் எதுவும் பொதுப்புத்தியில்
194
பொ.ஐங்கரநேசன்
உறைக்கவேயில்லை. இன்றைய பொருளாதார மனிதன் தனது தேவை களுக்கு முன்னால் வேறு எதுவுமே தேவையில்லையென்று பூமியைத் தனக்கேற்ற ஒரு கிரகமாகவே துப்புரவு செய்ய விரும்புகிறான். இயற்கை விதிகளுக்கு முரணான அவனது இந்தச் சிந்தனை மரபு, கண்டற் சூழலைப் பயனற்றுக் கிடக்கும் சகதி நிலங்களாகவே கருதி அழித்து வருகிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் சுந்தரவனத்தின் பரப்பளவு 19,200 சதுர கிலோமீற்றர்கள். இன்று அதன் அரைவாசியாகச் சுருங்கிக் கிடக்கிறது. அணைகள் கட்டுவதற்கென சுற்றயல் மாநிலங்களிலிருந்து கொண்டு செல்லப்பட்ட தொழிலாளர்கள் பின்னர் நிரந்தரமாகவே அங்கு குடியேறியதால் நேர்ந்த கதி இது. கிழக்குப் பாகிஸ்தான் வங்காள தேசமாகத் தனிநாடு கோரிப் போராடியபோது, அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்த பல்லாயிரக்கணக்கான அகதிகளும் தம் பங்குக்கும் சுந்தரவனத்தை அபகரித்தார்கள். மனிதாபிமானத்தின் பெயரால் இந்தச் சூழற்படுகொலைக்கு இந்தியா அனுமதி வழங்கியது.
யாழ்ப்பாணத்தில் நாவாந்துறையில் உள்ள 'கண்ணாபுரம் கிராம மும் கண்டல் நிலங்களை மேடுறுத்தி உருவாக்கிய ஒருகுடியேற்றம்தான். 1970களின் பிற்பகுதியில் 'கண்ணாக் காடுகளை அழித்து அவற்றின் பெயராலேயே இந்தக் குடியிருப்பை உருவாக் கினார்கள். யாழ்குடா நாட்டில் தொண்டைமனாறு தொடங்கி மண்டலாய் வரைக்கும் நீண்டிருந்த கண்டற் காடுகள் தொண்டைமனாறில் இருந்து படிப்படி யாக அழிக்கப்பட்டு நாகர்கோவிலை அண்டிய பகுதிகளுக்குக் குறுக்கப்பட்டுவிட்டது. எஞ்சிய இக்காட்டுப்பகுதியையும் போர் கபளிகரம் செய்துவிட்டிருக்கிறது. குடாநாட்டுக்கான தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் வனவள வன்னிப் பெருநிலப்பரப்பில் இருந்து விறகுகளை எடுத்துவர இயலாதநிலை, பூரீலங்கா அரசின் வாயு எரிபொருளுக்கான தடை, மின்சாரத்தடை, இவற்றுக்கெல்லாம் மேலாகக் குடாநாட்டில் அப்போது அதிகரித் திருந்த மக்கட்பெருக்கம் என்று எல்லாமுமாகச் சேர்ந்து இக்காட்டு வளத்தையே எரிபொருளாகத் தீயின் நாக்குகளுக்கு இரையாக்கியுள்ளன. 1994 காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் குடாநாட்டின் கண்டற்காடுகள் அழிப்பிற்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு காடழிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்று, தோலிருக்கச் சுளை விழுங்கும் கதையாகக் காடுகளின் உள்ளே பச்சை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு, காயவிடப்பட்டு, பட்டமரங்களாக வெளியே எடுத்துச் செல்லப்படுகின்றன. இலங்கைத் தீவின் பெரிய
195
Page 100
ஏழாவதுஉஊழி
கண்டற்காடுகள் என்ற பெருமையைப் பெற்றுள்ள புத்தளம் காட்டுப் பகுதியிலும் 34 விழுக்காடு பரப்பு இறால் பண்ணைகளால் விழுங்கப் பட்டு விட்டது. இப்படிக் குடியிருப்புகள், இறால் பண்ணைகள், சுற்றுலா வாசஸ்தலங்கள், விறகுகள் போன்ற மனிதத் தேவைகளினால் கடந்த 50 வருடங்களுக்குள் உலகின் கண்டற்காடுகளில் மூன்றிலொரு பங்கு காற்றில் கரையும் கற்பூரமாகக் காணாமற் போயுள்ளது.
இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய்' என்று ஆழிப்பேரலை உரத்துப் போதித்த பின்னர் கண்டற்காடுகள் குறித்த விழிப்புணர்வு ஓரளவு ஏற்பட்டுள்ளது. வெகுசன ஊடகங்களும் இது குறித்துப் பேசத் தொடங்கியுள்ளன. ஆனால், இந்த ஞானோதயம் வெறுமனே விழிப்புணர்வுப் பரப்புரையோடு நின்று விடுதல் ஆகாது. மீந்திருக்கும் கண்டற்காடுகளைக் காப்பாற்றுவதோடு, 'நிலமீட்பு என்று மனிதன் ஆக்கிரமித்து நிற்கும் கண்டல் நிலங்களை மீட்புச் செய்து, மீளவனமாக்கலையும் மேற்கொள்ளுதல் வேண்டும். அதுவும் விரைவாக தவறின், பூமி வெப்பம் அடைவதால் கொந்தளிக்கத் தொடங்கி யிருக்கும் கடல்களின் சீற்றங்களை முன்னைவிட அதிகமாகவே அனுபவிக்க வேண்டியிருக்கும்.
196
20
படையெடுக்கும் பார்த்தீனியம்
'எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த ஆகும்"
- தொல்காப்பியம் போர்கள் எல்லாமே சூழலுக்குக் கேடானவை. ஈழத்தின் மீதான
அடுத்தடுத்த போர்களில் அதன் சுற்றுச் சூழல் மோசமாகப் பாதிக்கப் பட்டுவரும் அதே வேளை, அதன் மீது சத்தம் இல்லாத இன்னொரு யுத்தம் தொடுக்கப்பட்டுள்ளது. இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் போது அதனோடு சேர்ந்து வந்த பார்த்தீனியம், இன்னுமொரு அந்நிய இராணுவமாக ஈழத்தின் இயற்கைச் சூழலைச் சூறையாடி வருகிறது. இந்திய இராணுவம் ஈழத் தமிழர்களின் அரசியற் சூழலில் ஏற்படுத்தி விட்டிருக்கும் காயங்களுக்குக் காலம் சில வேளைகளில் களிம்பு தடவக் கூடும். ஆனால் இந்தப் பச்சை இராணுவம் சுற்றுச் சூழலில் ஏற்படுத்தி வரும் ரணங்கள் காலா காலத்துக்கும் ஆற்ற முடியாத பெரும் வலிகளாகவே இருக்கப் போகின்றன.
பார்த்தீனியச் செடிகள் இந்தியாவிலிருந்து ஈழத்துக்குள் நுழைந்த போதும் இவற்றின் தாயகம் இந்தியா அல்ல. மெக்சிக்கோ வளைகுடாக் கரையை அண்டிய வெப்பமண்டல அமெரிக்க நாடுகளே இவற்றின் பூர்வீகம். அமெரிக்காவில், 1954இல் அபரிமிதமாகக் கோதுமை விளைந்தபோது அதைக் கடலில் கொட்டாமல் வறுமையால் வாடும் ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்பிவைக்க முடிவு செய்தார்கள். வல்லரசுகளின் உதவிகளிலேகூட ஏதேனும் ஒரு உபத்திரவம் ஒளிந்து கொண்டிருக்குமே. அப்படி, மும்பைத் துறைமுகத்தில் வந்திறங்கிய கோதுமைத் தானியங்களோடுதான் இந்தியாவுக்குள் பார்த்தீனிய விதைகளும் கலந்து வந்திறங்கின.
இந்திய இராணுவம் ஈழத்தில் புகுந்தபோது அவர்களது இராணுவ வாகனங்களுடனும் உணவுக்காகக் கொண்டுவரப்பட்ட செம்மறி ஆடுகளுடனும் கடுகு விதைகளுடனும் அங்கிருந்து சேர்ந்து
Page 101
ஏழாவது ஊழி
வந்த பார்த்தீனியம் விதைகளே ஈழமண்ணில் பார்த்தீனியச் செடிகளுக் கான முதல் விதைப்பு. காங்கேசன்துறை முதல் திருகோணமலைத் துறைமுகம் வரை இந்திய இராணுவம் பாசறைகள் அமைத்த இடங்களிலெல்லாம் பார்த்தீனியச் செடிகளும் சேர்ந்தே குடியேறின. இன்று இந்திய இராணுவம் இல்லை. ஆனால் அது அழைத்து வந்த பார்த்தீனியச் செடிகள் பல்கிப் பெருகி முகாம்கள் இருந்த பகுதிகளி லெலாம் இயற்கைச் சூழலைத் தமது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. அங்கிருந்தவாறே, ஓர் இராணுவத்தைப் போன்று பசுமைப்போர் வையுள் தம்மை உருமறைத்தவாறு பயிர்ச்செய்கை நிலங்கள், கைவிடப் பட்ட காணிகள், வீதியோரங்களிலெலாம் புதிதுபுதிதாக நிலையெடுத்து வருகின்றன.
பார்த்தீனியம் (Parthenium hysterophorus) மூக்குத்திப் பூண்டு, சீதேவியார் செங்கழுநீர், செவ்வந்தி போன்ற தாவரங்களின் குடும்பத்தைச் (Asteraceae) சேர்ந்த ஒரு செடி. ஒன்றரை மீற்றர் உயரத்துக்கும் மேலாக வளரக் கூடியது. இலைகள் மிருதுவான மயிர் களால் மூடப்பட்டு, ஆழமான சோணைகளாகப் பிளவுண்டிருக்கும். வெண்ணிறமான பூக்கள் சிறிய மூக்குத்திகள் போலச் செடி பூராவும் நிறைந்திருக்கும். ஈழத்தில் சமீபத்தில் நுழைந்த அந்நிய இனம் என்பதால், பொது மக்கள் இலகுவில் விளங்கிக் கொள்ளுவதற்கு ஏற்ற தமிழ்ப் பெயர் இதற்கு இல்லை. விஞ்ஞானப் பெயராலேயே அழைக்கப் படுகிறது. இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பரவியதால், கம்யூனிஸ்டுகள் இதனை 'காங்கிரஸ் களை என்று அழைத்தார்கள். பதிலுக்கு எதற்கும் உதவாத இதற்கு 'கம்யூனிஸ்ட் களை என்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று காங்கிரஸ்காரர்கள் அழைக்க இரண்டு பெயர்களுமே நிலைத்துவிட்டன. ஆனால் இந்த அந்நியக் களையை வெறுமனே 'களை என்று சொல்லுவது அதன் பராக்கிரமங்களைக் குறைத்து மதிப்பது போலாகிவிடும். களைகளுக்கெல்லாம் தாதாவான அரக்கக்களை இது.
உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழற் பிரச்சினை களில் அதிகம் ஆபத்துத் தருகின்ற ஒன்றாக அந்நிய இனங்களின் ஊடுருவல் உள்ளது. உயிரினங்களின் புலப்பெயர்வு புவி வரலாற்றுக் காலம் முதலே நிகழ்ந்து வருகின்ற ஒன்றுதான். ஆனால், மனிதன் உலகைச் சுற்ற ஆரம்பித்ததிலிருந்து இது தறிகெட்ட வேகத்தில் நிகழ்ந்து வருகிறது. உயிரினங்கள் அவை பரிணாமித்த இயற்கை வாழிடங்களிலிருந்து பிடுங்கப்பட்டு அவை தேவைப்படாத புதிய
198
Page 102
ஏழாவது ஊழி
சூழலுக்குள் விடப்படுகின்றன. குறிப்பாக ஐரோப்பிய வெள்ளையர்கள் வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா கண்டங்களில் குடியேறியபோது தங்களுடன் ஏராளமான தாவர, விலங்கு இனங்களையும் எடுத்துச் சென்றார்கள். இன்று எமது சமையலில் இரண்டறக் கலந்துவிட்ட பச்சை மிளகாய் தென் அமெரிக்க நாடுகளிலிருந்தும், வெங்காயம் பெர்ஷியா எனப்படும் தற்கால ஈரானில் இருந்தும் இறக்குமதியான இனங்கள்தாம். ஆனால், மிகுந்த அவதானத்துடன் தேர்வு செய்யப் படாத அந்நியன்கள் எல்லாமே உள்ளூரின் உயிர்ப் பல்வகை மைக்கும் (Bio diversity), பொருளாதாரத்துக்கும் பெரும் நாசம் தருவனவாகவே உள்ளன. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அவர்கள் அழைத்து வந்த செடிகொடி இனங்களைக் கட்டுப்படுத்துவதற் கென்றே ஆண்டுதோறும் 50 மில்லியன் டொலர்கள் செலவழித்து வருகிறார்கள். அண்மையில் அவுஸ்திரேலியாவின் மேற்கு மாநிலத்தில் கரும்புத் தவளைகளை எதிர்கொள்வதற்கு இராணுவமே அழைக்கப் பட்டுள்ளது. ஒரு பதச்சோறாக அவுஸ்திரேலியாவைப் பாடாய்ப்படுத்தி வரும் கரும்புத்தவளைகளைப்பற்றி விளங்கிக்கொண்டாலே, பார்த் தீனியத்தின் நாசகாரித்தனத்தைச் சுலபத்தில் புரிந்துகொள்ள முடியும். கரும்புத்தவளை இனம் (Bufo manus) தென் அமெரிக்க மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தது. அரை அடி நீளத்துக்கும், நான்கு இறாத்தல் எடைக்கும் மேலாகக் கொழுத்து வளரக்கூடிய இராட் சதத் தவளை இனம் இது. தவளை இனங்களில் பகாசுரன் என்பதால் கரும்புகளைத் தாக்கும் வண்டுகளை அழிப்பதற்காக 1935 இல் குயின்ஸ்லாந்துக்கு எடுத்து வந்தார்கள். பொதுவாகத் தவளை இனங்கள் எல்லாமே இரைகளின்மேல், அவற்றின் அங்க அசைவுகளை அடை யாளம் கண்டே தங்களுடைய பசை நாக்கை வீசுகின்றன. ஆனால் கரும்புத் தவளைகள் வாசனையின் மூலமும் இரைகளைக் கண்டறியும் வல்லமை பெற்றவை. இதனால், அசையும் அசைவ இரைகள், அசையாத சைவ உணவுகள் என்று அனைத்தும் உண்ணிகளாக (Camivores) வாய்க்குள் அடங்கக் கூடிய எல்லாவற்றையுமே விழுங்கிப் பெருக் கின்றன. நாய்களுக்குச் சமைத்துப்போடும் உணவுகளைக்கூட இவை விடுவதில்லை. உணவு ஒரு பிரச்சினையாக இல்லாதபோது சந்ததிப் பெருக்கத்துக்கு ஏது தடை? தண்ணிரைக் கண்டபோதெல்லாம் இவை கலவிக்குத் தயாராகின்றன. பெண் தவளை ஒரு தடவையில் 36,000 முட்டைகள் வரையில் இடுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
2OO
பொ.ஐங்கரநேசன்
இவற்றுக்கெல்லாம் மேலாக, கரும்புத் தவளைகளுக்கு அவுஸ்திரேலியாவில் இயற்கை எதிரிகள் என்றும் எதுவுமே இல்லை. இவை பரிணாமித்த பூர்வீக நாடுகளில் இவற்றுக்கு இரையைத் தந்த இயற்கை, இவற்றை இரையாக்கவும் உயிரினங்களைப் படைத்து எண்ணிக்கையை எப்போதுமே ஒரு சமநிலையில் பேணி வருகிறது. இயற்கையின் கணக்கு இது. ஆனால் வலுக்கட்டாயமாகப் புகுத்தப் பட்ட புதிய சூழலில் இரைகளைத்தவிர இரைகெளவிகள் இல்லாததால் கரும்புத்தவளைகள் கற்பனைக்கும் எட்டாத எண்ணிக்கையில் பெருகி வருகின்றன. தாய்நிலமான தென் அமெரிக்காவில் 100 சதுரமீற்றர் பரப்பளவில் 20 தவளைகள் தென்பட, குயின்ஸ்லாந்திலோ அதே அளவு பரப்பில் 2000 தவளைகள் வரையில் விளைந்துபோயுள்ளன. இதில் இருந்து புகுந்த இடத்தில் புதிய இனங்களின் விஸ்வரூபத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
கரும்புத் தவளைகள் படையெடுக்கும் இடமெல்லாம் உயிர்ச் சூழலுக்குக் கெடுகாலம்தான். குண்டோதரர்களாக அளவுக்கணக் கின்றிப் பூச்சி புழுக்களை விழுங்கி வருவதால், இயற்கை தன்னுடைய சமநிலை கருதி மில்லியன் கணக்கான ஆண்டுகளாகப் பேணிவந்த பூச்சி களெல்லாம் கெதியில் அழியத் தலைப்பட்டுள்ளன. இவற்றின் குறைவு அனைத்தும் உண்ணிகளான இந்த வந்தேறு குடிகளைப் பாதிக்கப் போவதில்லை. ஆனால் இந்த இரைகளை மட்டுமே நம்பி வாழுகின்ற உள்ளூர்த் தவளை, தேரை இனங்கள் பட்டினி கிடக்க நேருகிறது. பசியால் மடிவதோடு, இந்தப் பெருந்தவளைகளுக்கு இரையாகியும் அவை மடிகின்றன. கரும்புத்தவளைகள் தவளைகள் உலகின் கருநாகம் போன்றவை. இவற்றின் கண்களுக்குப் பின்புறமாக பெரிய நஞ்சுச் சுரப்பிகள் உண்டு. இவை சுரக்கின்ற நஞ்சு (Bufo toxin) தவளைகளை விழுங்க முயலும் பாம்புகள், பூனைகள் போன்ற விலங்குகளைச் சில நொடிகளில் சாகடிக்கும் அளவுக்கு வீரியமானது. முட்டைகள், வாற்பேய்கள் என்று கரும்புத்தவளைகளின் எல்லாப் பருவங்களிலுமே இந்த நஞ்சு ஊறிக் கிடக்கிறது. இதனால் இவற்றை உண்ணுகின்ற மீன்களும் இறந்து வருகின்றன. முதலைகளுக்கும் இதே கதிதான். தவளைகளைப் பிடித்து விழுங்கியதில் விக்டோரிய ஏரியில் இருந்த முதலைகளில் முக்காற் பங்குக்கும் மேலாக அழிந்து போனது. உணவுச் சங்கிலிகளின் மூலம் நஞ்சு கடத்தப்படுவதால், நன்னீர் ஆமைகளை அதிக அளவில் உண்ணுகின்ற அவுஸ்திரேலிய அபோரிஜின் பழங் குடிகள் இவற்றால் பாதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
2O1
Page 103
ஏழாவது ஊழி
குயின்ஸ்லாந்தின் உயிர்ப்பல்வகைமையைக் கரும்புத் தவளைகள் ஒற்றை இனமாக நின்று வேட்டையாடிவருவதைத் தாமதமாகவே அறிய நேரிட்டது. அதற்குள் தவளைகள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் பெருகிவிட்டிருந்தன. பிராணிகள் நல அமைப்புகளின் எதிர்ப்புகளையும் மீறிக் கண்டதும் தடியால் அடித்துக் கொல்ல ஆரம் பித்தார்கள். அதி ஊதாக்கதிர்களைப் பாய்ச்சி அழிக்க முயன்றார்கள். ஆனால் தவளைகள் விழவிழப் புதிய தவளைகள் வரிசைகட்டி வந்து கொண்டேயிருந்தன. கிருமியுத்தமாக ஒரு வகை வைரஸ், கரும்புத் தவளைகளின் மீது ஏவப்பட்டது. கரும்புத்தவளைகளோடு உள்ளூர்த் தவளை இனங்களையும் வைரஸ் பாதித்தமையால் அம்முறையும் கைவிடப் பட்டது. எல்லா அஸ்திரங்களும் தோல்வி கண்டுவிட்ட நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தவளைகளின் மரபணுக்களில் கை வைக்கும் எத்தனங்களில் இறங்கியுள்ளது. கிருமி நோய்களுக்குப் பதிலாக, தவளைகளின் மரபணுக்களில் மாற்றங்களை ஏற்படுத்தி பாரம்பரிய நோய்களை உண்டுபண்ணும் ஆய்வுகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன. இது வரையில் தவளைகளை ஒழிப்பதற்கெனப் பல மில்லியன் டொலர்கள் செலவழிக்கப்பட்டபோதும் தவளைகளின் பாய்ச்சலை ஒர் அடியேனும் தடுத்தபாடில்லை. ஆண்டுக்கு சராசரியாக 30 கிலோ மீற்றர்கள் பரவி, இப்போது மேற்கு மாநிலத்தின் எல்லை களைத் தட்டத் தொடங்கியுள்ளன. மேற்கு மாநிலத்தைத் தவளைகளின் முற்றுகையில் இருந்து தடுக்கும் தீவிர முயற்சிகளில் மாநில அரசாங்கம் குதித்துள்ளது. கரும்புத்தவளைகளின் கலவிக் கூப்பாடுகள் வெகு தொலைவில் ஒலிக்கும்போதே கர்ண கடூரமாக இருக்கும். ஒலிவாங்கிச் சாதனங்களின் மூலம் இந்தக் இரைச்சல்களைப் பதிவுசெய்து, தவளைகளின் ஊடுருவல்களை அடையாளம் கண்டு அழிக்கும் பணிக்கு இராணுவம் அழைக்கப்பட்டிருக்கிறது.
கரும்புத்தவளைகளின் சூழல்விரோத நடவடிக்கைகளுக்குப் பார்த்தீனியம் எது விதத்திலும் குறைந்தது அல்ல. மிகப்பெரும் எண்ணிக்கையில் பரவி, நெருக்கமாக முளைத்து, நிமிர்ந்து சடைத்து, விரைவிலேயே பச்சை இராட்சதக் கம்பளம் போல நிலத்தை மூடிவிடு கின்றது. இவற்றின் மூர்க்கத்தனமான வளர்ச்சியின் கீழ் சுதேசியச் செடிகொடிகளினால் தலையெடுக்க முடிவதில்லை. தண்ணிருக்காகவும், வெளிச்சத்துக்காகவும், வேர்ப்பிடி மண்ணுக்காகவும் போராடிச் சரிகின்றன. இவற்றின்மேல் பார்த்தீனியம் நஞ்சூட்டியும் வருகின்றது. கரும்புத் தவளைகளுக்குத் தலையில் மட்டும்தான் விஷம். ஆனால்
2O2
பொ.ஐங்கரநேசன்
பார்த்தீனியத்துக்கு உச்சி முதல் வேர்க்கால் வரை விஷம். உடம்பு பூராவும் இருந்து பார்த்தீனின் (Parthenin), அம்புரோசின் (Ambrosin) போன்ற நஞ்சு வேதிகளைச் சுரக்கின்றது. இந்த நஞ்சுகளிடம் தாக்குப் பிடிக்கமுடியாமல், பார்த்தீனியம் படையெடுத்த இடங்களிலெல்லாம் உள்ளூர்ச் செடி இனங்கள் இல்லாது போகின்றன. கடைசியில் "எதற்கும் அடங்காமல் எதனையும் அடக்காமல் பல்லூழி காலமாக இயற்கைச் சமநிலையில் பெரும் பங்காற்றி வந்த உள்ளூர் இனங்களின் சாம்பல் மீது நின்று கொண்டு பார்த்தீனியம் கோலோச்சத் தொடங்குகின்றது.
வேளாண்மையில் பயிரோடு சேர்ந்து வளருகின்ற எந்த ஒரு பூண்டும் உற்பத்தியைப் பாதிக்கின்றபோது, கெடுசெடி பார்த்தீனியத்தின் பயங்கரவாதம் எவ்வளவு அதிகமாக இருக்கும்? நெடுநெடுவென வளர்ந்து பயிர்களின் தேவைகளைத் தட்டிப் பறிப்பதோடு, மண்ணில் கசியவிடும் நஞ்சுகளின் மூலமும் வளர்ச்சியைக் குறுகத் தறித்து விடுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையில் செல்வி மஞ்சுளா செல்வராஜா அவரையினப் பயிர்களில் பார்த்தீனிய நஞ்சுகளின் தாக்கம் குறித்து ஒர் ஆய்வினைச் செய்திருந்தார். அதில் உழுந்து, பயறு போன்ற பயிர்களுக்கு அருகாமையில் பார்த்தீனியம் சகவாசம் செய்யும் போது பயிர்களின் வளர்ச்சி வெகுவாகத் தடைப்படுவது அவதானிக்கப் பட்டுள்ளது. அவரையினப் பயிர்களின் சிறப்பாக அவற்றின் வேர்களில் இரைசோபியம் (Rhizobium) பக்ரீறியங்களைக் கொண்ட வேர் முடிச்சுகள் (Rootnodules) காணப்படுகின்றன. இவை, நைதரசன் வாயுவைத் தாவரங் களால் உறிஞ்சக் கூடிய அயனிநிலைக்கு மாற்றித் தருவதுடன் வளியில் நைதரசனின் சமநிலையைப் பேணியும் வருகின்றன. பார்த்தீனிய நஞ்சுகள் இந்த வேர்ச் சிறுகணுக்களையும் விட்டுவைப்பதில்லை என்பதும் இதே ஆய்வில் முடிவாகியிருக்கிறது.
மனிதர்களிலும், குறிப்பாக ஒவ்வாமையால் (allergy) அதிகம் பாதிக்கக் கூடிய தன்மையுடைய நபர்களில் பார்த்தீனியம் சுலபத்தில் தன் குணத்தைக் காட்டிவிடுகிறது. பார்த்தீனியம் பரவியுள்ள இடங்களில் காற்றில் மிதக்கும் மகரந்தங்களில் பார்த்தீனியத்தினுடையவைதான் பெரும் பங்கு. இம்மகரந்தங்களும் தம்மீது நச்சினைப் பூசி வைத்துள்ளன. இதனைச் சுவாசிக்க நேர்பவர்களில் ஆஸ்த்மா போன்ற சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன. அத்தோடு பார்த்தீனியச் செடியைத் தொடர்ச்சியாகத் தொட நேர்கிறபோது பலருக்குத் தோலில் அரிப்பு, தடிப்பு அவதிப்படும் அளவுக்கு ஏற்பட்டுவிடுகிறது. பார்த்தீனியம் மிகப் பெருமளவில் ஆக்கிரமித்துள்ள இந்தியாவில் இதன் தாக்கம் கடுமையாக
2O3
Page 104
ஏழாவது ஊழி
உணரப்பட்டுள்ளது. எந்தவித சிகிச்சைக்கும் கட்டுப்படாத ஒவ்வாத விளைவுகளைப் பொறுக்க முடியாமல் பெங்களூர் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக புதுவை காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் தாவரவியற்துறைப் பேராசிரியர் எம். பி. இராமன் தனது கட்டுரை ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.
பார்த்தீனியத்தின் முற்றுகைக்குள் ஆளாகியுள்ள நாடுகள் எல்லாம் அவற்றை விரட்டுவதற்குக் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்ட போதும் தொடர்ந்தும் பின்னடைவுகளையே சந்தித்து வருகின்றன. களைகொல்லி இரசாயனங்களின் பிரயோகம் பசுமைப் புரட்சியினால் ஏற்கனவே நொந்து போய் இருக்கும் மண்ணை மேலும் மேலும் நஞ்சில் குளிக்கவைக்கும் செயல் என்பதால் உயிரியல் ரீதியாக ஒடுக்குவதற்கே (Biological Control) பெரிதும் விரும்பப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் கங்காருவைப் பயிர் நிலங்களில் நுழையவிடாது தடுக்கும் வேலியாக நாகதாளி எனப்படும் முட்கள்ளிச் செடியை அறிமுகப்படுத்தினார்கள். நாகதாளி விவசாய நிலங்களையெல்லாம் மூடி வளர்ந்தது. அதனை அழிப்பதற்கு ஆர்ஜென்டைனாவிலிருந்து ஒரு வகை அந்துப் பூச்சியை (Cactoblastis cactorum) வரவழைத்து அதில் வெற்றியும் கண்டார்கள். நன்றிக்கடனாக இந்த பூச்சிக்கு குயின்ஸ்லாந்தில் நினைவுக்கல்வெட்டு கூட நிறுவப்பட்டுள்ளது. இப்படி உயிரியல் ரீதியான அழிப்புக்கு உலகில் பல உதாரணங்கள் இருந்தபோதும், கரும்புத்தவளைகள் போன்ற பின்விளைவுகளைக் கொடுத்த படுபாதகமான உதாரணங்களே அதிகம் உள்ளன. இதனால் பார்த்தீனியத்தை அழிப்பதற்கான போரில் பின்நோக்கித் திருப்பிச் சுடாத உயிர் ஒன்றை இறக்கி விடுவதில் மிகுந்த நிதானம் தேவைப்படுகிறது. பார்த்தீனியத்தின் மீது ஏவிவிடுவதற்கென இந்தியாவில் ஒருவகை வண்டுகளை (Chrysomelid beete) மெக்சிக்கோவி லிருந்து தருவித்துச் சோதித்துப் பார்த்தார்கள். இவை, பார்த்தீனியத் தோடு சூரியகாந்தி போன்ற பயிர்களையும் துவம்சம் செய்ததால் சோதனை முயற்சிகளோடு பின்வாங்க நேரிட்டது.
இந்நிலையில் ஈழத்தில் பார்த்தீனியத்தை ஒடுக்குவதற்கு எம் முன்னால் உள்ள ஒரே தீர்வு அவை பெரும் எடுப்பில் சூழ்ந்து கொள்வத்ற்கு முன்னால் கைகளினால் பிடுங்கி அழிப்பதுதான். வடக்கு கிழக்கிலிருந்து தென் இலங்கைக்குள் பார்த்தீனியத்தின் பயணத்தைக் கட்டுப்படுத்துவதில் பூரீலங்கா அரசு மிகுந்த கரிசனையுடன் செயற்பட்டு வருகிறது. பார்த்தீனியம் செடிகள் வீட்டு வளவுகளிலோ, பயிர்ச் செய்கை நிலங்களிலோ காணப்பட்டால் தண்டனைக்குரிய
2O4
பொ.ஐங்கரநேசன்
குற்றம் என அறிவித்து அதனைப் பிரச்சாரப்படுத்தி வருகிறது. ஆனால் ஈழத்தில் இந்திய இராணுவம் மீளவும் இலங்கை இராணுவத்திடம் கையளித்துச் சென்றுள்ள இராணுவ முகாம்களிலிருந்தும் கண்ணி வெடி வயல்களிலிருந்துமே பார்த்தீனியம் பெரிதும் படையெடுத்துக் கொண்டிருக்கிறது. மேலும், பார்த்தீனிய விதைகள் முளைப்பதற்குத் தேவையான சூழ்நிலைகள் இல்லாதவிடத்துச் சாதகமான சூழ்நிலை வரும்வரை 20 வருடங்கள்கூட கும்பகர்ண உறக்கத்தில் கிடந்து முளைக்கக்கூடியன. இதனால் இவற்றைக் கைகளினால் பிடுங்கி ஒழிப்பது என்பது இலேசானதும், ஒரே தடவையில் சாத்தியமானதும் அல்ல. மலேரியாவை ஒழித்துக்கட்டுவதற்குத் தனியான துறை இயங்கி வந்ததைப் போல ஈழத்தில் பார்த்தீனியத்தின் ஒழிப்புக்கும் ஒரு பசுமைப் படை அவசியம் தேவைப்படுகின்றது. ஈழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் உட்கட்டுமானங்களில் இன்றைய இக்கட்டான சூழலில்கூட இது தவிர்க்க முடியாத ஒன்று. தவிர்க்கக் கூடாத ஒன்றும்
܀-ܚܬܗܿ
2O5
Page 105
21
வாழை go Luljj வாழுமா?
"சிலம்பில் போகிய செம்முக வாழை
அலங்கல் அம்தோடு அசைவளி உறுதொறும்
பள்ளி யானைப் பரூஉப்புறம் தைவரும்"
— ежtртgуру (зо2: 1-з) உலகின் மிகப்பழமையான பழங்களில் ஒன்று வாழைப்பழம். ஏறத்தாழப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தென்கிழக்கு ஆசியா வில் உணவாகப் பயன்பட ஆரம்பித்ததாக நம்பப்படும் பழங்களின் இந்த மூத்தகுடி, இப்பொழுது தன் அந்திமகாலத்தை நெருங்கிக் கொண்டி ருக்கிறது. ஆம்! உணவாக மட்டுமல்லாமல், பல்வேறு வகையான சடங்குகளிலும் இடம் பெற்றுவரும் வாழையின் ஈமச் சடங்கு இன்னும் ஐந்து, பத்து வருடங்களில் இடம்பெறப் போகிறது என்று சங்கு ஒலித்திருக்கிறார்கள் மேற்குலகின் பழச்செய்கையியல் விஞ்ஞானிகள். விஞ்ஞான மொழியில் "மியூசா (Musaparadisaca) என்று பெயரிடப்
பட்டுள்ள வாழை மரத்தில் (உண்மையில் வாழை பிரமாண்டமான ஒரு செடிதான்) பச்சை வாழை, செவ்வாழை, கப்பல், கதலி, இதரை, மொந்தன், சாம்பல் மொந்தன், பூவன் என்று உள்ளூர்ச் சந்தைக்கு வரும் பழங்களுடன் இன்று உலகச் சந்தையை ஆக்கிரமித்திருக்கும் 'கவென்டிஷ் வரை ஏறத்தாழ 500 வகைகள் அறியப்பட்டுள்ளன. இலங்கையில் மட்டுமே 28ரக வாழைகள் பயிராகின்றன. தமிழில், இவை எல்லாமே 'வாழை' என்ற பொதுச்சொல்லால் விளிக்கப்படினும் ஆங்கிலத்தில் இருவேறு பெயர்கள் உண்டு. அப்படியே பழங்களாக உண்ணத்தக்கவை 'பனானா (Banana) என்றும் அவித்தோ, பொரித்தோ சமைத்தோ பரிமாறும் ரகங்கள் 'பிளான்ற்றின் (Plantain) என்றும் அழைக் கப்படுகின்றன. இந்த இரண்டு தரப்புகளினதும் தாயகம் இந்தோ - மலேசியப் பகுதிகள்தான். இங்கிருந்து கடலோடிகளினால் ஐந்தாம் நூற்றாண்டளவில் மடகஸ்காருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து வெப்ப மண்டல நாடுகளையெல்லாம் வாழிடமாக்கிக் கொண்டுள்ளன.
2O6
பொ. ஐங்கரநேசன்
அப்பிள், ஸ்ரோபெர்ரி, தோடை, திராட்சை மா, பலா, அன்னாசி என்று வகைவகையான பழங்கள் விதவிதமான சுவைகளில் கிடைத் தாலும் பந்தியில் முந்தியிருப்பது வாழைப்பழம்தான். வாழைப்பழத்துக் கெனச் சிறப்பான சில குணாதிசயங்கள் உண்டு. பெரும்பாலான பழங்கள் குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டுமே பருவகாலப் பழங்களாக விளை கின்றன. ஆனால் வாழை, குலை தள்ளுவதற்கு எம்மாதமும் சம்மதம். வாழை தன் வாழ்நாளில் ஒரேயொருமுறை மாத்திரமே பூத்துக் கணிகிறது. இருந்தபோதும் அந்த ஒரு குலையிலேயே நூற்றுக்கும் அதிகமான பழங்களைப் பரிமாறி விடுகிறது. இலங்கையிலும், இந்தியாவிலும் பிரபலமான பூவன் வாழை அதன் நீண்ட தாரில் 350க்கும் மேலான பழங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருப்பதைக் காணலாம். ஒற்றைக்குலையுடன் தாய்வாழை இறந்துபட்டாலும், வாழையடி வாழையாக அது ஈன்ற மகவுகள் அடுத்தடுத்துப் பூப்படைந்து குலைகளைத் தருவதற்குத் தயாராக இருக்கும். எப்போதும் எவ்வளவும் கிடைக்கும் என்பதால் விலையும் கனிவாக இருக்க, சாப்பாட்டு மேசையில் வாழைப்பழங்களுக்கு ஒருபோதுமே பஞ்சம் இருப்பதில்லை.
ஏறத்தாழத் தன் எடையில் முக்கால் விழுக்காடு தண்ணிரைச் சேமித்து வைத்திருக்கும் வாழைப்பழம் காபோவைதரேற்று, புரதம் பொற்றாசியம், மக்னீசியம், பொஸ்பரஸ், கல்சியம் என்பனவற்றுடன் கணிசமான அளவு விற்றமின்கள் 'ஏ', 'பி 6 மற்றும் 'சி'யையும் கொண்டுள்ளது. காபோவைதரேற்றில் வெல்லங்களுடன் நார்களும் உண்டு. நீரில் கரையாத இந்நார்கள் நீரை உறிஞ்சி வைத்திருந்து, முக்கல் முனகலின்றி மலத்தை வெளியேற்றுவதற்குச் சிரம பரிகாரம் செய்கின்றன. மேலும், இவற்றில் இதயநோய்களுக்கு வித்திடும் கொழுப்போ, கொலஸ்திரோலோ, சோடியமோ கின்டயாது. இவ்வளவுமே போதுமே! வாழைப்பழத்தை அமோக வாக்குகளால் பழங்களின் அரசியாக முடிசூட வைப்பதற்கு
வாழை பயிராகாத நாடுகளில் கூட முன்னணியில் இருப்பது வாழைதான். அமெரிக்கர் ஒருவர் ஆண்டொன்றுக்கு உண்ணும் அப்பிளின் எடை சராசரியாக 16.7 இறாத்தல்கள். ஆனால், வாழைப் பழத்தின் அளவு 26.2 இறாத்தல்களாக இருக்கிறது. பிரித்தானியா ஆண்டுதோறும் ஏழு பில்லியன் வாழைப்பழங்களை இறக்குமதி செய்து தின்று தீர்க்கிறது. இப்படிப் பூமிப்பந்து பூராவுமே, உணவுக்குப் பின்னான ஒரு உப உணவுப் பொருளாகப் பிற பழங்களையெல்லாம் புறந்தள்ளி, வாழை மஞ்சள் புன்னகையை வீசிக் கொண்டிருக்கிறது.
2O7
Page 106
ஏழாவது ஊழி
உலக அளவில் பழங்களின் முதல்வியாக வாழை அதிக அளவில் ருசிக்கப்பட்டாலும், மாச்சத்தின் தேவை கருதி அதன் காய்நிலைப் பயன்பாடே பெருமளவுக்கு அதிகம். உலகில் விளைவிக்கப்படும் வாழையில் 85 விழுக்காடு காய்களாகவே நுகரப்படுகிறது. மாச்சத்தை வழங்குவதில் அரிசி, கோதுமை, சோளத்துக்கு அடுத்த நான்காவது இடத்தில் வாழை இருக்கிறது. வளரும் நாடுகளில், குறிப்பாக உகண்டா, கென்யா, தன்சானியா, புறூண்டி, ருவாண்டா போன்ற வறிய ஆபிரிக்க நாடுகளில் வாழைதான் வயிற்றை நிரப்பும் காமதேனு. வேகவைத்தோ, பொரித்தோ, மாவாகவோ (Banana Flour) பயன்படுத்துகிறார்கள். இவர்களில் உகண்டா வாசிகளுக்கு வாழையை விட்டால் வேறு கதியே இல்லை. ஒருவர் தினமும் குறைந்தபட்சம் ஒரு கிலோ அளவிலாவது வாழைக்காயை உணவாக்குவார். நாம் 'உணவு என்று சுட்டுவதை இவர்கள் மற்றுக் (Matooke) என்ற சொல் கொண்டு அழைக்கிறார்கள். ஆபிரிக்காவின் 'சுவாகிலி மொழியில் இதன் பொருளே 'வாழை என்பதுதான். அந்த அளவுக்கு ருவாண்டாவின் வாய்களுக்கு உணவு என்றாலே அது 'வாழைதான் என்றாகிவிட்டது. வாழை ஜின், வாழை 'பியர் என்று அவர்களது குடிபானங்களும் வாழை மயப்பட்ட வையாகவே உள்ளன.
நளபாகத்தில் வாழைப்பூ வாழைத்தண்டுக்குங்கூட இடமுண்டு. 'உணவே மருந்து என்று சித்தர்களின் மருத்துவத்தில் சொல்வார்கள். இவற்றுக்கு அது சாலப்பொருந்தும். சுவை மிகுந்த கறிகளாகவும் அதே சமயம் மருந்துகளாகவும் பயன்படுகின்றன. வாழைத்தண்டுச் சாறு சிறுநீரகங்களில் தோன்றும் கற்களைக் கரைக்கக்கூடிய ஒரு ஒளடத பானமாகப் பரவலாக அறியப்பட்டது. வாழை இலையில் விருந்தோம்பு வது ஈழத்திலும் இந்தியாவிலும் பண்பாடாகவே நீடிக்கிறது. தஞ்சாவூரில், திருவையாற்றில் 'பூவன் வாழையின் ஒரு ரகத்தை 'இலை வாழையாக வாழை இலைகளுக்கென்றே பராமரித்து வருகிறார்கள். ஓர் இலையில் இரண்டுபேர் படுத்தெழும்பலாம். அந்த அளவுக்கு நீளஅகலமானது. அதனை, வெட்டி வைத்தால் 15 நாட்களுக்குக்கூட பசுமை மாறாமல் இருக்கும். இலத்தின் அமெரிக்காவில் இலை குடை யாகவும் கைகொடுக்கிறது. காம்பைக் கையில் பிடித்து, இலையைத் தலைக்கு மேலால் குதிக்கால்வரை தொங்கவிட்டவாறு, அதற்குள் ஒதுங்கியபடி மழையில் விரையும் பாதசாரிகளை அங்கு சர்வ சாதாரண மாகப் பார்க்க முடியும். வாழை இலைகளிலிருந்தும் வாழை மடல்களி லிருந்தும் பட்டு நூல் போன்ற சாயலில், மெல்லிய நார்களையும் பிரித்
2O8
Page 107
ஏழாவதுஉஊழி
தெடுக்க முடியும். இவை கயிறு, மேசை விரிப்பு, தரைவிரிப்பு கைப்பை போன்ற கைவினைப் பொருள்கள் இழையவும், ஆடைகள் நெய்யவும் உபயோகமாகிறது. இப்படிப் பன்முகப் பயன்பாட்டைக் கொண்டிருப்ப தால் உள்ளூர்முதல் உலகச் சந்தைவரை வாழை ஒரு பணங்காய்ச்சி மரமாகவே விளங்குகிறது.
வாழை உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2003ஆம் ஆண்டின் ஐ.நா. உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் (FAO) தரவுகளின்படி, உலகளாவிய வாழை விளைவிப்பில் இந்தியாவின் பங்களிப்பு 23 விழுக்காடு. இதில் பெரும்பங்கை, இந்தியாவின் 113 கோடி வாய்களுமாகச் சேர்ந்து உள்ளூர் சந்தைகளிலேயே காலியாக்கி விடுகின்றன. இலங்கையில் ஆண்டுதோறும் நாலரை இலட்சம் மெட்ரிக் தொன் அளவுக்கு வாழை விளைகிறது. நெல்லைவிட வாழையில் இலாபம் அதிகமென்பதால் இலங்கையில் பல நெல் வயல்கள் வாழைச் செய்கைக்கு மாறி வருவதும் குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதியில், தென்அமெரிக்க நாடான ஈக்குவடோர் முன்னணியில் உள்ளது. உலகில் ஏற்றுமதியாகும் வாழைப்பழங்களில் 30 விழுக்காடு இதனுடையதுதான். தென்அமெரிக்காவில் ஈக்குவடோர், பிரேசில், கொலம்பியா, வடஅமெரிக்காவில் பனாமா ஹோண்டுராஸ், கோஸ்ராறிக்கா, கவுதமாலா, ஆபிரிக்காவில் உகாண்டா, கம்போடியா, ஆசியாவில் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, சீனா என்று பல வெப்பவலய நாடுகள் வாழைப் பழ வாணிபத்தில் பெருமளவுக்கு அந்நியச் செலாவணியைச் சம்பாதித்து வருகின்றன. அதுவும் பனாமா, ஹோண்டுராஸ், கோஸ்ராறிக்கா நாடுகளை 'வாழைக் குடியரசுகள் (Banana Republics) என்று வர்ணிக்கும் அளவுக்கு அந்நாடுகளின் கஜானாவை வாழைப்பழம்தான் நிரப்பி வருகிறது.
ஏழை-பணக்காரன், கீழைத்தேசம்-மேற்குலகு என்ற பேதமின்றி சகல தரப்பினரையும் சுவைஞர்களாகக் கொண்டிருக்கும் இந்த வாழைப் பழமே, இனி 'எட்டாக்கனி ஆகப் போகின்றது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உலகளாவிய வாழை ஆராய்ச்சியாளர்களின் இணையம் பிரான்சில் இயங்கிவருகிறது. இதன் தலைவர் எமிலி ஃபிறிசன் (Emile Frision) வாழை உலகின் முடிக்குரிய நாயகி போல விளங்கும் கவென்டிஷ், 2013ஆம் ஆண்டளவில் தன் வாழ்வை முடித்துக் கொள்ளப் போவதாக அறிவித்துப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். உகண்டாவின், தேசிய வாழை ஆராய்ச்சித் திட்டம். ஆப்பிரிக்காவின் வாழைகளினது ஆயுள் குறித்து ஐயம் எழுப்பியுள்ளது. இந்த
21Ο
பொ.ஐங்கரநேசன்
அறிவிப்புகள் வாழைப் பிரியர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளதோடு, வாழை ஏற்றுமதி - இறக்குமதியாளர்களை அதிகமாகவே கலவரப் படுத்தியும் உள்ளது.
உயிர்ப் பல்வகைமை மிக்க வெப்ப மண்டல நாடுகளில் வாழையின் பல்வேறு வகைகள் இருந்த போதும் சர்வதேசப் பழமாகப் பிரசித்தி பெற்றது "கவென்டிஷ் (Cavendish) வாழைதான். பொதுவாக வாழை பழுக்க ஆரம்பித்ததுமே விரைந்து, கனிந்து, தோல் கறுத்து வனப்பை இழந்து விடுகின்றன. வாழை வாணிபத்தில், அதுவும் தொலைதூர ஏற்றுமதியில் இது ஒரு பெரும் இடர்பாடு. ஆனால் 'கவென்டிஷ் பழம் இழைய அமைப்பில் உறுதியானது. எவ்வித மாசுமறுவும் இல்லாமல், இப்போதுதான் சந்தைக்கு வந்தது போன்ற வாளிப்புடன் நீண்ட நாட்களுக்கு இருக்கும். அத்தோடு உயரம் குறைந்த மரமாகவும் இருப்பதால் எந்தக் காற்றுக்கும் புயலுக்கும் தலைசாய்க்காமலும் தாக்குப் பிடிக்கிறது. இவற்றால் வாழைப்பழ ஏற்றுமதியில் ஈடுபடும் நாடுகள் எல்லாம் இதற்கு மட்டுமே செங்கம்பள வரவேற்புக் கொடுத்து வருகின்றன. அதேபோல, வேறு வாழைகளை உருக்குலையாமல் தருவிக்க முடியாது என்பதால் மேற்கு நாடுகளின் அங்காடிகள் எல்லாம் கவென்டிஷ் பழங்களுக்கு மாத்திரமே கதவு திறக்கின்றன. இதனால் வாழை விளையாத கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாட்டினருக்கெல்லாம், 'வாழை என்றால் அது 'கவென்டிஷ் மட்டுமேதான். இந்நிலையில் கவென்டி ஷின் மரணம் என்பது, ஏழை வாழை நாடுகளில் பொருளாதாரத்தின் முதுகுத் தண்டின் மீது அடியாக அல்ல, நிமிர முடியாத இடியாகவே இறங்கும். நாளடைவில் வெள்ளையர்கள் அவர்களது அப்பிளுக்கு மீளவும் திரும்பி விட முடியும். ஆனால், ஆபிரிக்காவில் வாழ்ையின் அழிவு அவர்களை உணவுக்கே அல்லாடச் செய்யக் கூடியது. வரலாற் றின் கறுப்புப் பக்கமாக அமைந்துவிட்ட ஐரிஷ் உருளைக்கிழங்குப் பஞ்சம் போல, இதுவும் பல மில்லியன் கணக்கான ஆபிரிக்கர்களைப் பட்டினியில் தள்ளிவிடும் என அஞ்சப்படுகிறது.
இந்துப் பண்பாட்டில் வாழை கடவுளுக்கு ஒதுக்கப்பட்ட பழம் மாத்திரமல்ல, கருவளத்தின் குறியீடும் கூட, வாழையடி வாழையாகக் குட்டிகளை ஈன்று சந்ததிகளைப் பெருக்குவதால்தான் திருமணச் சடங்குகள் வாழைகளால் ஆசீர்வதிக்கப்படுகின்றன. ஆனால் இப்போது சபிக்கப்பட்ட பழம்போல, வாழை அகால மரணத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் அச்சப்பட ஆரம்பித்திருப்பதற்குக்
211
Page 108
ஏழாவது ஊழி
காரணங்கள் என்ன? பல்வேறு பண்பாடுகளிலும் பழங்களின் சொர்க்க மாக நம்பப்பட்டுவரும் வாழைகளுக்கு ஏன் இந்த அவலம்? அவற்றைப் புரிந்து கொள்வதற்கு வாழைகளின் மரபு மூலம் குறித்துக் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டும்.
I
வாழை சாப்பாட்டு மேசைக்கு வருமுன்னர், காட்டு வாழைச் செடியாக இருந்த காலத்தில் சந்ததியைப் பெருக்கிக் கொள்வதற்கு அதனிடம் விதைகள் இருந்தன. அதுவும் பழத்தை ரசித்துச் சுவைக்க முடியாத அளவுக்கு வாயை நெருடும், கடினமான, ஏராளமான விதைகள். இதற்குப் பிராயச்சித்தம் போல், அரிதிலும் அரிதாக வாழை இனங்கள் விதைகள் இல்லாத பழங்களையும் அதிசயமாக உருவாக்கின. இரண்டு வேறுபட்ட வாழை இனங்களின் கலப்பில் (Musaacuminata(n)+ Musababisanam) முளைகொண்ட மகள் வாழையில் தாயிடமிருந்து ஒன்று - அதற்கு இணையாகத் தந்தையிடமிருந்து ஒன்று என இரண்டு இரண்டாக இருக்கவேண்டிய நிறமூர்த்தங்கள் (chromosomes) சிலசமயங்களில், ஒரு விபத்துப்போல மூன்று மூன்றாக அமைந்தன. பிறப்புரிமைக்குளறுபடிகளால், பெற்றோரில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு புதிய இனமாக உருவெடுத்த மகள் வாழையால் (Musa paradisaca(nm) இயற்கையாகக் கலவி செய்ய இயலாமற் போனது. ஆனால், ஆண் கருவின் சேர்க்கை இல்லாமலே பெண் பூ பழங்களைக் கனிந்தது. இதனை அறிவியற் தமிழில் மிகவும் பொருத்தமாகக் 'கன்னிக்கனியம் (Parthenocarpy) என்கிறார்கள். ஆண் கலப்பு இல்லாததால் விதைகள் இல்லாமல் உருவாகிப் பழங்கள் உண்பதற்கு வசதியாக இருந்ததால் பழங்குடியினர் 'சிக்கெனப் பிடித்துக் கொண்டனர். கற்காலத்தில் வாழ்ந்த பயிர்ப்பெருக்கவாளர்கள் இந்த வாழையின் தண்டுகளை வெட்டிப் பதியம் போட்டு. பதியம் போட்டு. இப்படித் தொடர்ந்ததன் விளைவுதான் இன்று உலகம் பூராவும் காணப்படும் விதைகளைத் தொலைத்த வாழைகள்.
ஆதிக்குடிகள் கண்டறிந்து அறிமுகம் செய்து வைத்த அதே வாழைதான் வாழையடிவாழையாக இன்றளவும் உணவாகிறது. இனக்கலப்பு செய்ய இயலாதவையாக இருப்பதால் பதியம் போட்டுப் பெருக்கிய இந்த வாழைகள் எல்லாமே மரபணு அமைப்பில் நகலெடுத்தது போல ஒரே மாதிரி இருப்பதுடன், நிறமூர்த்தங்களின் தப்புத்தாளங்களில் பிறந்த தமது 'ஆதித்தாய் வாழையின் மரபணு
212
பொ. ஐங்கரநேசன்
அமைப்பையும் ஒத்துக் காணப்படுகின்றன. பிரச்சினை இங்கேதான் ஆரம்பாகியுள்ளது. பயிர்களில் இலிங்க இனப்பெருக்கலின் போது ஆண் - பெண் கலப்பில் மரபணுக்களின் ஒழுங்கமைவு புதியதாக நிகழ்கிறது. இந்தச் சந்ததிகள் மரபணுக்களின் பன்முகத் தன்மையைக் கொண்டிருப் பதுடன் நோய்களுக்கு எதிராகத் தம்மைத் தகவமைத்துக் கொள்ளு கின்றன. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரே மரபணு அமைப்பி லேயே தொடரும் வாழைகள் பூமியில் புதிது புதிதாக உருவாகும் நோய்க்கிருமிகளை எதிர்கொள்ள இயலாத நிலைக்கு ஆளாகியுள்ளன. இன்று எல்லாப் பயிர்களை விடவும் கிருமிகளின் தாக்குதலுக்கு அதிகம் முகங்கொடுக்க முடியாமல் திண்டாடுவது வாழைகள்தாம். எல்லா வாழைகளும் அச்செடுத்தது போல ஒரே மாதிரி இருப்பதால் ஒன்றில் தொற்றுகின்ற நோய் முழு வாழைகளையுமே பீடித்து விடுகிறது. இதனால் வாழைச்சருகில் பற்றிய தீப்பொறியாக அனைத்து வாழைகளுமே அழிந்து போக நேரிடும்.
இதற்கான சமிக்ஞைகள் ஏற்கெனவே தோன்றிவிட்டன. ஒரு புதிய வகைப் பங்கஸ் நோய் (Black Sigatoka) வாழை இலைகளில் கபிலப் புள்ளிகளாக உருவாகி, விரைவிலேயே இலை முழுவதிலும் வியாபித்து, காய்களைப் பிஞ்சிலேயே பழுக்க வைத்து வருகின்றது. அதுவும், வாழைகளின் அரசியாகத் திகழும் கவென்டிஷ் வாழையையே அதிகம் குறிவைத்துத் தாக்குகிறது. இந்நோய் முதன்முதலில் - 1963இல் - பிஜி யின் வாழைகளில்தான் தென்பட்டது. அப்போது அதன் வீரியம் குறித்து அவ்வளவாகத் தெரியவரவில்லை. ஆனால், பத்து ஆண்டுகளில் பிஜித் தீவின் வாழைகள் முழுவதையும் பதம்பார்த்தது. காற்றினால் பரவுவதால் இதனிடம் இருந்து தற்காத்துக் கொள்ளுவது இயலாததொன்று. வெகுதொலைவிலுள்ள இடங்களுக்குங்கூட, வாழைச் சருகுகளினால் பொருட்களைப் பொதிசெய்து அனுப்பும்போது சேர்ந்து போய் விடும். இதனால், இன்று எல்லைதாண்டிய பயங்கரவாதமாக உலகின் வாழை வயல்களிலெல்லாம் ஊடுருவி முன்னேறி வருகிறது. உகண்டாவில் 40 விழுக்காடு வயல்கள் அழிவைச் சந்தித்து விட்டன. உலகின் வாழை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் 90களின் கடைசியில் முற்றுகையை ஆரம்பித்த இந்நோய் இதுவரை 70 விழுக்காடு வயல்களை வெறுமையாக்கியுள்ளது. ஹோண்டுராஸில் மூன்று மில்லியன் பெட்டி வாழைப்பழங்கள் அளவுக்கு ஆண்டுதோறும் பங்கஸ் சாப்பிட்டு வருகிறது. இந்த இழப்பு நீடிப்பின், வாழைக்குடியரசு ான்னும் மகுடத்தைக் ஹோண்டுராஸ் விரைவிலேயே இழந்துவிடும்.
213
Page 109
ஏழாவதுஉஊழி
உண்மையிலேயே வாழைகளுக்கு எமகண்டம்தான் போலும். பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல, ஒரு காலத்தில் வாழைகளைப் போட்டுத்தாக்கிய "பனாமா நோயும் மீளவும் தலை காட்டத் தொடங்கியுள்ளது. பனாமா நோய் (Panama Disease) அல்லது வாழை வாடல் (Bananawi) எனப்படும் இந்தக் கொடும்பிணி, மண்ணில் கரந்துறையும் 'ஃபியூசாறியம்' (Fusatium) எனப்படும் பங்கசுவால் ஏற்படுவது. வேர்களினூடாகத் தொற்றி, தண்டினுடாக இலைகள் வரை முன்னேறும் ஃபியூசாறியம், தான் கடந்து வந்த பாதைகளிலெல்லாம் ஒரு வகைப் பிசின் அல்லது ஜெலியைச் சுரந்து வைக்கும். இந்தப் பிசின், வாழையினுள்ள நீர் வழிகளில் அடைப்பை ஏற்படுத்தும். வாழை இலைகள் பழுத்து மஞ்சளாகி, வாடித்தொங்கி, கடைசியில் மரமே மரணித்துப் போகும். 1950களில் வெளிக்கிளம்பிய இந்நோய் அக்காலத்தில் நட்சத்திர அந்தஸ்துப் பெற்றிருந்த குறொஸ் மைக்கெல் (Grosmiche) என்ற வாழையைப் பனாமாவில் மட்டுமல்ல, உலக அளவில் அழித்துவிட்டுத்தான் கட்டுக்குள் அடங்கியது. குறொஸ் மைக்கெல் இருக்கும் வரை 'கவென்டிஷ் வாழைக்கு இரண்டாம் இடம்தான். அதிர்ஷ்டவசமாக 'கவென்டிஷ் வாடல் நோய்க்கு எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருந்ததால் அந்தப் பிரளயத்தில் தாக்குப் பிடித்து குறொஸ் மைக்கெலின் இடத்துக்கு உலக வாழையாக உயர முடிந்தது. ஆனால் ஃபியூசாறியம் பங்கசுவின் இந்தச் சுற்றில் 'கவென்டிஷ் தப்பிப் பிழைக்க முடியுமா என்பது சந்தேகம்தான். 'கவென்டிஷ் அப்போதிருந்ததைப் போலவே இப்போதும் எந்தப் பரிணாமமும் இல்லாமல் மரபணு அமைப்பில் மாறாது இருக்க, பனாமாநோய்ப் பங்கஸ் புதிய அவதாரம் எடுத்துள்ளது. புதிய குலவகைக் கிருமியாக (TR4-TropicalRace4) விகாரம் பெற்று, முன்பைவிட அதிக வீரியத்துடன் களத்தில் குதித்திருக்கிறது. இதன் தாக்குதலில் பிறந்த வீடான மலேசியா உட்பட தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றில் 'கவென்டிஷ்' இப்போதே வழித்துத் துடைக்கப் பட்டுவிட்டது.
இன்று அதிக அளவில் பங்கஸ் கொல்லிகளின் தெளிப்புக் குள்ளாகும் உணவுப் பயிர் கவென்டிஷ் வாழைதான் என்னுமளவுக்கு பங்கசுக்களின் பரவலைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகம் பூராவுமே மிகப்பெருமளவில் நச்சு வேதிகள் விசிறப்படுகின்றன. இது வாழை உற்பத்திச் செலவை அதிகரிக்கச் செய்திருப்பதுடன் பல இடங்களில் மிகவும் பாதகமான உடல்நலக் கோளாறுகளையும் உருவாக்கி வருகிறது. வாழைக்குடியரசுகளில் ஒன்றான கோஸ்ரா றிக்காவின் வாழைத்
214
பொ. ஐங்கரநேசன்
தோட்டப் பணியாளர்களில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆண்களில் ஐந்து பேரில் ஒருவர் மலட்டுத் தன்மைக்கு ஆளாகி இருப்பதும், பெண்களில் குருதிப் புற்றுநோய் தோன்றுவதற்கான நிகழ்தகவு இரட்டிப்பாக அதிகரித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால், இவ்வளவு விலை கொடுத்தும், "பங்கஸ் கிருமிக்கு எதிரான இந்தப்போரில் கடைசியில் வெல்லப்போவது பங்கஸ்தான் என்பது உறுதியாகத் தெரிகிறது" என வாழை ஆராய்ச்சியாளர்களின் இணை யத்தின் தலைவர் எமிலி ஃபிறிசன் இயலாமையுடன் தெரிவித்துள்ளார்.
எமிலி ஃபிறிசனின் கருத்தை நிராகரிப்பதற்கு இல்லை. பங்கசுக் களின் கடந்தகால நெட்டூரம் அதற்கு ஆதாரம், பனாமா நோய் மத்திய, தென்அமெரிக்கப் பகுதிகளில் கைவரிசையை ஆரம்பித்த காலத்தில் பங்கஸ் கொல்லி மருந்துகளை வருடத்தில் 10 தொடங்கி 12 தடவைகள் தெளிக்க வேண்டியிருந்தது. நாளடைவில், ஒரு வாரத்திலேயே 10-12 தடவைகள் என்று நச்சு மழையாகப் பொழியவேண்டியதாயிற்று. நஞ்சு களைப் பயன்படுத்தப் பயன்படுத்த பங்கசுக்களும் அவற்றுக்கு எதிர்ப்புத் தன்மையை வளர்த்துச் சென்றதே இதற்குக் காரணம். பங்கசுக் களை அழிக்க முடியாமல் நிலம்தான் நஞ்சேறியது. இதில் நிலமெனும் நல்லாள் தவிர இன்னுமொரு படுகொலையும் அரங்கேறியது. மண்ணி லிருந்து பங்கசுக்களை விரட்ட முடியாமல் வேறு இடங்களுக்குப் பின்வாங்கிச் செல்ல, விடாக்கண்டன் போல பங்கசுக்கள் அங்கும் துரத்தின. இதனால் புதிய, புதிய இடங்களைப் பெறுவதற்காக மத்திய, தென் அமெரிக்க நாடுகளின் மழைக்காடுகள் பெருமளவுக்குப் பலியாக்கப்பட்டன. இப்போதும் அந்நாடுகளில் முகாமிட்டிருக்கும் ஷிகுயிட்டா (Chiquita). டோல் (Dole) போன்ற அமெரிக்கப் பன்னாட்டுப் பழ உற்பத்தி நிறுவனங்கள் தயக்கமில்லாமல் இந்தச் சூழலியற் படுகொலையை அரங்கேற்றின. ஆனால், பொருளாதாரத்தினதோ அல்லது சுற்றுச்சூழலினதோ நிலைத்த தன்மைகளைப் பேண முடியாத சந்திப்பு ஒன்றில் உலகம் பங்கசுக்களிடம் மண்டியிட்டது. தன்னுடைய பிரியமான குறொஸ் மைக்கல் பழத்தைக் குற்றுயிருடன் கைகழுவியது.
இந்நிலையில், அழிவின் விளிம்பை நோக்கித் துரத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வாழைப்பழத்தைக் காப்பாற்ற நம்முன்னால் உள்ள ஒரே வழி வாழையின் பாரம்பரிய அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி நோய்க் கிருமிகளுடன் போரிடக்கூடிய வீரியக்குட்டிகளை உருவாக்கு வதுதான். இதுநாள் வரையில் வாழை குறித்து அதிகம் அக்கறை கொள்ளாதிருந்த ஆராய்ச்சி உலகு இப்போதுதான் வாழையின் மீட்புக்
215
Page 110
ஏழாவது ஊழி
குறித்துக் கவலை கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இதன் ஒரு கட்டமாக, இயற்கையாகவே பீடைகளையும் நோய்களையும் எதிர்கொள்ளும் திராணியுள்ள காட்டுவாழை இனங்களினதும் பயிரிட்டு வரும் வாழை ரகங்களினதும் மரபணு வரைபடங்களைத் தயாரிக்கும் முயற்சியில் பிறப்புரிமையியல் விஞ்ஞானிகள் இறங்கியிருக்கிறார்கள். காட்டு வாழை இனங்களிலிருந்தோ அல்லது வாழைக்கு எதுவிதத்திலும் தொடர்பில்லாத காட்டுப்பூச்சி இனமொன்றிலிருந்தோகூட நோய் எதிர்ப்பு மரபணுக்கள் கண்டறியப்படும் பட்சத்தில், அடுத்த கட்டமாக மரபணுப் பொறியியல் மூலம் அவை மலட்டு வாழைகளின் மரபணுத் தொகுதிக்குள் இடம் மாற்றும் முயற்சிகள் தொடரும். உடல்நலம், சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு காரணங்களினால் மரபணு மாற்றுப் பயிர்களை உலகம் இன்னமும் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. தங்கள் அபிமான வாழைப்பழத்தை எவரும் பிரிய விரும்பாத இன்றைய இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி, வாழைப்பழத்தின் மூலமே மரபணு மாற்ற உணவுகளைத் தொண்டையில் திணித்து விடும் முயற்சியில் வெற்றிபெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் பன்னாட்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
இலிங்க இனப்பெருக்கலின் மூலமும் வாழையில் புதிய இனங் களை உருவாக்கும் முயற்சிகளும் இல்லாமல் இல்லை. பயிரிடப்பட்டு வரும் வாழைகள் எதுவுமே சுயமாக இனக்கலப்பில் ஈடுபட முடியாத போதும், வலுக்கட்டாய உறவில் அரிதாகவேனும் அவற்றை கருக்கொள்ள வைக்க முடியும். ஹோண்டுராஸில் 300க்கும் அதிகமான வாழை வகைகளைத் தனது வயலில் கொண்டிருக்கும் பெர்னாண்டோ அக்யுலர் (FemandoAquio) என்னும் இயற்கை விஞ்ஞானி இந்தச் சோதனை முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார். ஆண் பூவின் மகரந்தங்களை இன்னொரு வாழையின் பெண்பூவுக்கு தூரிகையால் இடம்மாற்றும் செயற்கை மகரந்த சேர்க்கையில் ஆச்சரியப்படும் படியாக விதைகள் உருவாகியுள்ளன. ஆனால், 300 பழங்களுக்கு ஒரு விதை என்ற அளவில் மிகச் சொற்பமான விதைகளே உருவாகின. உள்ளங்கையளவுக்குச் சேகரித்த விதைகளை சோதனைக்குழாய்களில் முளைக்க வைத்ததில், மூன்றிலொரு பங்கு விதைகளே துளிர்விட்டுள்ளன. மனந்தளராத விக்கிரமனாக மீண்டும் மீண்டும் இனக்கலப்பை மேற்கொண்டு வரும் பெர்னாண்டோ நோய்களுக்குத் தாக்குப் பிடிக்கக் கூடிய, கவென்டிஷின் தரத்துக்கு நிகரான புதிய வாழை இனத்தைப் பிறப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.
216
பொ.ஐங்கரநேசன்
இலிங்க இனப்பெருக்கம் இல்லாமல் மரபணு மாற்றத்தொழில் நுட்பத்தின் மூலமோ, அல்லது மலட்டு வாழைகளில் இலிங்க இனப்பெருக்கத்தின் மூலமோ புதிய குல வகைகளை உருவாக்குவது இலேசான ஒன்றல்ல. பெருங்காலத்தையும் பணத்தையும் விழுங்கக் கூடிய இந்த ஆய்வுகள் முற்றுப் பெறும் வரையில், "பழம் நழுவிப் பாலில் விழ வேண்டாம்; நோயில் விழாமல் இருந்தாலே போதும்" என்று இயற்கையிடம் மன்றாடுவோமாக!
27
Page 111
22
இயற்கை விரித்த வலை
"கொலை வல் வேட்டுவன் வலைபரிந்து போகிய கானப் புறாவின் சேவல் வாய்நூல் சிலம்பிஅம் சினை வெரூஉம் அலங்கல் உலவைஆம் காடு இறந்தோரே'
- நற்றிணை (1897-10)
அரக்னி - ஒரு நெசவுப் பெண்மணி. தையற் கலையில் படு தேர்ச்சி பெற்ற இறுமாப்பு. கண்ணில் படுவோரையெல்லாம் போட்டிக்கு அழைத்தாள். போதாத காலம், ஒரு தடவை கிரேக்கக் கடவுளான ஏதினாவுக்குச் சவால் விட்டிருக்கிறாள். கடைசியில் தோற்றுப்போய் அவமானத்தால் தூக்கு மாட்டிக் கொண்டு செத்துப்போக, கிரேக்கக் கடவுளுக்குச் சரியான கோபம். அரக்னியை உயிர்ப்பித்து, தோல்வியைத் தாங்க முடியாத அளவுக்கு கர்வமா உனக்கு? என்று கண்டித்த கடவுள் கடைசியில், ஒரு பாடமாக இருக்க நீயும் உன் சந்ததிகளும் சதா தொங்கிக் கொண்டே இருக்க வேண்டும்" என்று சாபமிட்டு அரக்னியை சிலந்தியாக உருமாற்றி விட்டார். இது சிலந்தி பற்றிய கிரேக்கத்தின் ஐதிகக் கதை.
இந்தப் புனைவின் அடிப்படையிலேயே ஆய்வாளர்களும் சிலந்திகளை விலங்கு உயிரிகளின் பாகுபாட்டில் 'அரக்னிடாக்கள் (Arachnida) என்று வகுப்புப் பிரித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே, நூலில் ஊஞ்சல் கட்டி ஆடும் இந்த அரக்னிகள் சாபங்கள் அல்ல. இயற்கையின் வரப்பிரசாதங்கள். அவற்றின் அருமை தெரியாமல் நாங்கள்தான் அவற்றைச் சபித்துக் கொண்டிருக்கிறோம். அருவருப்பும், பயமும் கொள்கிறோம். பூச்சிக்கொல்லி நஞ்சுகளினால் தினம் தினம் சாகடித்து வருகிறோம்.
குண்டூசியொன்றின் தலையளவு தொடங்கி, நமது உள்ளங்கை அளவு பருமன் வரை இதுவரையில் சுமார் நாற்பதினாயிரம் சிலந்திகள் பெயரிடப்பட்டுள்ளன. உலகின் உயிரினப் பல்வகைமை (Bio diversity) மிக்க 25 நாடுகளில் ஒன்று என்ற பெருமையைப் பெற்றிருக்கும்
218
பொ.ஐங்கரநேசன்
இலங்கையில் மட்டுமே 560க்கும் அதிகமான சிலந்தி இனங்கள் அடை யாளம் காணப்பட்டுள்ளன. இலங்கையின் கழனிகளிலும், காடுகளிலும் கண்டறியப்படாமல் இன்னமும் பெருவாரியான இனங்கள் கரந்துறை கின்றன. இப்படி உலகம் பூராவும், இதுவரையில் பதிவு செய்யப்பட்ட சிலந்தி இனங்களின் எண்ணிக்கையை விடவும் நான்கு மடங்கு அதிகமான சிலந்திகள் பார்வைக்கு வராமல் இருப்பதாக சிலந்தியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எங்களிற் பலரும் சிலந்திகளைப் பூச்சிகளென்றுதான் தவறாகக் கருதிக் கொள்கிறோம். மூட்டுக் காலிகள் என்ற அளவில் இரண்டுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் இருந்தாலும், இரண்டும் வேறு வேறா னவை. பூச்சிகளில் உள்ளதைப் போன்று சிலந்திகளில் செட்டைகளோ, கூட்டுக் கண்களோ, உணர்கொம்புகளோ இருப்பதில்லை. பூச்சிகளுக்கு மூன்று சோடிக் கால்கள். சிலந்திகளில் நான்கு சோடிகள். கண்களும் நான்கு சோடிகள். பூச்சிகளில் அரிதாகப் பட்டாம்பூச்சிகள், பட்டுப் பூச்சிகள் என்று சிலவற்றில் கூண்டுப்புழுக்கள் பட்டு இழைகளை நெய்கின்றன. சிலந்திகளில் எல்லாமே இழைகளை நூற்க வல்லவை. மேலும், பூச்சிகளில் சைவம் - அசைவம் என்று இரண்டு தரப்புகளும் இருக்க, சிலந்திகளோ சாப்பாட்டு விடயத்தில் படு கறாரான அசைவப் பேர்வழிகளாக உள்ளன. பூச்சிகளையே பெரிதும் வேட்டையாடு கின்றன. இவை போன்ற தனித்துவமான குணவியல்புகளால் சிலந்திகள் அண்மைக் காலமாக உயிரியலாளர்கள், சூழலியலாளர்களிடையே அதிக அளவில் கவனிப்புக்கு ஆளாகியுள்ளன.
சிலந்திகளின் குணாம்சங்களில் பொதுப்பார்வைக்கு அதிகம் தென்படுவது வீடுகளினுள்ளே இவை இழைகளினால் பின்னிவைத் திருக்கும் வலைகள்தாம். அதுவும், ஒட்டடை அல்லது நூலாம்படை என்று அவற்றை அறுத்தெறிவதுடன் அவை பற்றிய கரிசனையும் எம்மில் அறுந்து போய்விடுகிறது. ஆனால், சிலந்தி இழைகள் நாம் நினைப்பது போல ஒன்றும் சாதாரணமானவையல்ல. கிரேக்க கடவுளுக்குச் சவால் விட முடிந்ததோ இல்லையோ, இந்த இழைகள் மனிதனின் உயர் தொழில்நுட்ப இழைகளுக்குச் சவால் விட வல்லவை.
இழைகளை உருவாக்குவதற்கென்று சிலந்திகளின் வயிற்றுப் புறத்தில் ஏராளமான சுரப்பிகள் உள்ளன. மொத்தம் ஏழு வகைகள். ஒரு சிலந்தியிலேயே எல்லா வகைகளும் இருப்பதில்லை. எந்த வகை யான இழைகள் தேவை என்பதைப் பொறுத்து எண்ணிக்கையும் வேறு படுகிறது. ஒவ்வொரு வகையும் குறிப்பிட்ட ஒரு தொழிலுக்கான இழை
219
Page 112
ஏழாவது ஊழி
களைச் சுரக்கின்றன. சுரப்புத் திரவம் வெளிவந்ததுமே அதிலுள்ள புரத மூலக்கூறு தன்னுடன் தானே மீளவும், மீளவும் இணைந்து பாரிய புரதச்சங்கிலியாக (Polymerization) நீண்டு இறுகிவிடுகின்றது. இந்தப் புரதநாருக்கு 'ஃபைபுரோனின் (Fibronin) என்று பெயர் சூட்டிய விஞ்ஞானிகளால் இந்த மாயம் எப்படி நிகழுகின்றது என்பதை இது வரையில் விளக்க முடியவில்லை.
இதைவிட ஆச்சரியம் சிலந்தி இழைகளின் தாங்கும் பலம். சாதாரணமாக மனிதர்களால் 10 சென்ரிமீற்றர் தூரத்தில் தெளிவாகப் பார்க்கக்கூடிய ஒரு பொருளின் தடிப்பு 25 மைக்குரோன்கள். ஒரு சிலந்தி இழையின் தடிப்பு இந்த நுண்ணிய அளவை விடவுமே நூறு மடங்குகளால் நுண்ணியது. சராசரியாக 0.15 மைக்குரோன்கள் (ஒளி பட்டுப் பிரதிபலிப்பதாலேயே எங்களால் காணமுடிகிறது). அப்படி யிருந்தும் சிலந்தி இழைகள் அதே பருமனுடைய உருக்கு இழைகளிலும் பார்க்க உறுதி வாய்ந்தவை. மனிதர்களின் தயாரிப்பான நைலோன் நார்களைவிடவும் அதிக இழுவைத் தன்மை கொண்டவை. பென்சில் அளவு தடிப்புக் கொண்ட சிலந்தி இழையால் ஒரு ‘போயிங் 747 விமானத்தின் பறத்தலைக்கூட இழுத்து நிறுத்தி விட முடியுமாம். இவைமட்டுமல்ல, கம்பளியுடன் ஒப்பிடும்போது சிலந்தி இழைகள் அதிக நீரையும் உறிஞ்ச வல்லவை. காற்றில் இழைகள் உலர்ந்து உடைந்து போகாமல் இருக்க இந்த நீர்ப்பிடிப்பு உதவுகிறது. பங்கசுக்கள், பக்ரீறியங்கள் போன்றவற்றினால் சிதைந்து போகாமல் இருப்பதற்கென "பொற்றாசியம் ஹைட்ரஜன் பொஸ்பேற்' என்னும் பாதுகாப்புப் பூச்சை யும் தடவி வைத்திருக்கிறது. இந்த உயிர் நுட்ப இழைகளைச் சிலந்திகள் வலை பின்னுவதற்கு, இரைகளைப் பொதிசுற்றுவதற்கு முட்டைக் கூடுகள் கட்டுவதற்கு ஆபத்தான தருணங் களில் விரைந்து தப்பிப் போக நூலேணி செய்வதற்கு. என்று பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றன.
சிலந்தி இழைகளின் பிரத்தியேகமான இந்த இயல்புகள் உயிர்த் தொழில் நுட்பத்தில் பல ஆய்வுகளை முடுக்கிவிட்டிருக்கிறது. 'பரசூட்டில் (Parachute) பயன்படுத்தப்படும் இழைகள், இராணுவத்துக்கு குண்டு துளைக்காத உடைகளைத் தயாரிப்பது போன்றவற்றில் அமெரிக்காவில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. செயற்கை இதயம், செயற்கை குருதிக் குழாய்கள், ஒட்சிசன் ஊடுருவக்கூடிய தொடுகை வில்லைகள், அறுவைச் சிகிச்சையின் போது பாகங்களைத் தைப்பதற் கான இழைகள் ஆகியவற்றைத் தயாரிப்பதற்கும் முயன்று வருகிறார்கள்.
22O
·
కిక్తిక్స్ წჭწწ. 数
କ୍ଳୀଙ୍କି ଜ୍ଞା წჭწჭჭწ.
Page 113
ஏழாவதுஉஊழி
இரைகெளவிகளான சிலந்திகளினால் உணவை முழுமையாக விழுங்க முடியாது. இதனால் மற்றைய விலங்குகள் தங்களது இரைப்பைக்குள் சமிபாட்டை நிகழ்த்த, சிலந்திகள் தமது உடலுக்கு வெளியே, பிடிபடும் இரைகளுக்குள்ளேயே சாதுரியமாக சமிபாட்டை முடித்துவிடுகின்றன. பிடிபட்ட பூச்சியினுள் முதலில் தம்முடைய இரண்டு தாடைகளிலுமுள்ள ஊசிக்குழல் போன்ற அமைப்புக்களினால் நஞ்சுகளைப் பாய்ச்சுகின்றன. நஞ்சுகள் விரைந்து செயற்பட்டுப் பூச்சியின் நரம்புகளுக்கும் தசைகளுக்கும் இடையே நிகழ்கின்ற செய்திப் பரிவர்த்தனையைத் துண்டித்துப் பூச்சியை உணர்விழக்கச் செய்து விடும். அதன் பின்னர், சிலந்திகள் பூச்சியினுள்ளே நொதியங்களைத் துப்புகின்றன. மயங்கிக் கிடக்கும் பூச்சியின் புற ஒட்டுக்கு உள்ளேயே அதன் உள்ளுறுப்புகள் சீரணமாகிக் கரைந்து போக கடைசியில் அந்தப் புரதச்சாற்றைச் சிலந்திகள் உறிஞ்சிக் குடிக்கின்றன. சில சிலந்தி இனங்கள் சிறு பறவைகளுடன்கூடப் போராடிப் பணியவைக்கும் அளவுக்குப் பலம் கொண்டவை.
சிலந்திகள் தமது இரைகளைப் சிறைப்பிடிப்பதற்குக் கையாளு கின்ற உத்திகள் மதிநுட்பம் வாய்ந்தவை. முக்கோணச் சிலந்தி (Triangle Spider) தனது முக்கோண வடிவ வலையைப் பின்னி முடித்து விட்டு, அந்த வலையை இயக்கக் கூடிய ஒரு இழையை மட்டும் தன்வசம் வைத்துக்கொண்டு காத்திருக்கும். பூச்சி வலையில் வந்தமர்ந்த அதே கணத்தில் சிலந்தி தான் வைத்திருந்த இழையை விட, வலை ஒரு போர்வையைப் போல இரையை மூடிக்கொள்ளும். இனி அந்த வலையை மீறிப் போவதென்பது பூச்சிக்கு முடியாத காரியம். 'டினோப்சிஸ் (Denopsis) என்னும் இன்னுமொரு சிலந்தியினம் தன் முன்னங்கால்களுக்கிடையில் வலையைப் பிடித்த வண்ணம் பூச்சிகள் வரும் பாதையில் தலைகீழாகத் தொங்கியவாறு தவம் கிடக்கிறது. பூச்சிகள் அருகே வந்ததுமே வலையை வீசி ஒரே அமுக்காக அமுக்கி விடுகிறது. வலையில் விழும் இரைதொடர்பாகவும் சிலந்திகள் எச்சரிக்கையாய் இருக்கின்றன. குளவிகள் போன்ற தனக்குப் பாதகமான கொடிய பூச்சிகள் வலையில் விழுந்தால் சிலந்திகள் கிட்ட நெருங்கு வதே இல்லை. வலையை அறுத்துத் தப்பிப் போகவும் செய்கின்றன.
எல்லாச் சிலந்திகளும் வலை பின்னுவது இல்லை. 'போலாஸ் (Bolas) என்னும் சிலந்தி, தூண்டில் போடுவது போல ஒர் இழையை இரையை நோக்கி வீசுகிறது. இழையின் முனை, குமிழ் போலப் பருத்துப் பசைத் தன்மையாக இருக்கும். இதிலுள்ள 'பெரோமோன்களால்
222
பொ.ஐங்கரநேசன்
(Pheromones) கவரப்பட்டுப் பூச்சி அப்படியே வந்து ஒட்டிக்கொள்ளு கிறது. 'டாரன்டுலா (Tarantula) என்னும் புலிநகச் சிலந்தி இனங்கள் (இதனைப் புலி முகச் சிலந்தி என்றும் அழைப்பர்) மரப் பொந்துகளி னுள்ளும், சுவர் வெடிப்புகளினுள்ளும் வாழுகின்றன. உடம்பில் உள்ள உரோமங்களின் மூலம் இவற்றை இலகுவில் அடையாளம் காணலாம். பூமியில் இன்று உயிர்வாழுகின்ற சிலந்திகளில் ஆதிச்சிலந்திகளான இவை (Primitive Spiders) இரையாடலிலும் பழைய பாணியையே பின்பற்றுகின்றன. ஒரு காட்டுப் பூனை போல பதுங்கிப் பதுங்கிச் சென்று இரை எதிர்பாராத சமயம் அதன்மேல் பாய்ந்து நஞ்சைப் பாய்ச்சி விடுகின்றன. சிலந்திகளிலேயே மிகப் பெரிய ‘கோலியாத் சிலந்தி இந்த ‘டாரன்டுலா வகையைச் சேர்ந்ததுதான். கால்களை அகலப்பரப்பிய நிலையில் இதன் பருமன் ஒரு சாப்பாட்டுத் தட்டு அளவில், சுமார் 11 அங்குலம் வரையில் இருக்கும். இது சிறு பறவைகள், பாம்புகள், தவளைகளைக் கூட மயக்கித் தனது வளைகளுக்குள் இழுத்து வந்து விடுகிறது. டாரான்டுலாவைச் சேர்ந்த இன்னுமொரு சிலந்தி இனமான "பொறிக்கதவு'ச் சிலந்தி (Trapdoor Spider) பூச்சிகளைப் பிடிக்கக் கையாளுகின்ற முறை மிகவும் தந்ததிரமானது. நிலத்தில் குழி தோண்டி அதனுள் மறைந்து வாழும் இவை குழியின் வாசலை இழைகளையும் மணலையும் கலந்து செய்த கதவொன்றினால் மூடி, இரைகளைப் பொறி வைத்துப் பிடிக்கின்றன.
சிலந்திகளின் இழைகள், இரையாடும் முறைகள் மட்டுமல்ல அவற்றின் இனச் சேர்க்கையும் கூடத் தனித்துவமானது. ஆண் சிலந்திகள் உருவத்தில் சிறியவை. தவறுதலாக இவற்றை இரையென நினைத்துப் பெண் சிலந்திகள் தாக்கவும் கூடும் என்பதால் தப்பும் தூரத்தில் நின்று கொண்டு தம் இச்சையைத் தெரிவிக்கின்றன. சில ஆண் சிலந்திகள் பெண் சிலந்தியின் வலையைத் தட்டி உள்ளே வரலாமா என்று உத்தரவு கேட்கும். சில நடனமாடித் துணையை வசியம் செய்யும். சில, பரிசுப் பொருளாகப் பூச்சிகளைப் பிடித்துப் பொதி செய்து கொண்டும் செல்கின்றன.
உண்மையில் சிலந்தி இனங்களில் ஆண்களுக்குக் கலவி என்பது பெரும் திண்டாட்டமான ஒன்றாகும். மற்றைய ஆண்களில் இருப்ப தனைப் போன்று கலவியில் ஈடுபடுவதற்கு வசதியாக ஆணுறுப்பு என ஒன்று சிலந்தியில் இருப்பதில்லை. இழைகளைக் கொண்டு சிறிய 'கைக்குட்டை ஒன்றை நெய்து, வயிற்றுப் பகுதியில் உள்ள துவாரத் திலிருந்து சொரியும் விந்துகளை முதலில் அதில் ஏந்திக் கொள்ளுகிறது.
223
Page 114
ஏழாவதுஉஊழி
பின்னர் அதிலிருந்து, தலையில் ஐந்தாவது சோடிக்கால்கள் போல இருக்கும் சிறிய குழாய்கள் மாதிரியான (Palps) அமைப்புகளினுள் விந்துகளை நிரப்பி பெண்ணின் இனம்பெருக்கல் துவாரத்தினுள் செலுத்துகின்றது. சிரமங்கள் இத்தோடு முடியாது.
தன்னின உண்ணிகளான சிலந்திகளில் இனச்சேர்க்கையின் பின்னர் பெண், பெரும்பாலும் ஆணைத் தனக்கு இரையாக்கி விடுகிறது. ஆண் சிலந்திகள் முன் எச்சரிக்கையாகப் பெண்களின் கொடுக்குகளைக் கெட்டியாகப் பிடித்தவாறு கலவியில் ஈடுபட்டாலும், தப்பித்துப் போவதென்பது கடுமையான ஒன்றாகவே உள்ளது. 'பாரம்பரியத்தில் வேறுபாட்டைக் காண்பிக்கும் எச்சங்களே வாழ்க்கைப் போட்டியில் தப்பிப் பிழைப்பதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன என்ற டார்வினுடைய பரிணாமக் கோட்பாட்டைப் பெண் சிலந்திகள் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கின்றன. இனக்கலப்பு முடிந்த உடனேயே ஆணை அழித்து விடுவதன் மூலம், சிலந்திகள் தமது சந்ததியில் ஒரே மாதிரியான இளசுகள் மீளவும் மீளவும் தோன்றுவதைத் தடைசெய்துவிடுகின்றன. தேள்களிலும், வெட்டுக்கிளிகளிலும்கூட இந்தப் பழக்கம் உண்டு. வெட்டுக்கிளிகளில், ஆணின் தலை துண்டிக் கப்பட்ட பின்னரும்கூட முண்டம் கலவியைத் தொடரும் விந்தையைக் காணமுடியும்.
நமது வீடுகளிலேயே கைக்கெட்டிய தூரங்களில் சிலந்திகள் இருந்தபோதும், அவை பற்றிய பயம் காரணமாக அவற்றின் உலகத்தை நம்மால் புரிந்து அனுபவிக்க முடியாமல் இருப்பது பெரும் சோகம். உண்மையில் சிலந்திகளின் நஞ்சுகள் குறித்த பயம் மிகைப்படுத்திய ஒன்று. சிலந்திகள் எல்லாமே நஞ்சுகளைக் கொண்டிருந்த போதும் நஞ்சின் வீரியம் அவற்றின் இரைகளைக் கொல்லும் அளவிலேயே இருக்கிறது. சிலந்திகளில் மிகப் பெரிதான கோலியாத் பறவை தின்னிச் சிலந்தியின் விஷம்கூட மனிதர்களில் உச்சபட்சமாக ஒரு குளவி கொட்டிய தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. ஆனால், இது உடலை உதறும்போது காற்றில் பரவும் இதன் உரோமங்கள் கண்களிலும், உதடுகளிலும் பட்டு எரிச்சலைத் தருகின்றன. அமெரிக்காவில் காணப்படும் 'கறுப்பு விதவைச் சிலந்தி (Blackwdow), அவுஸ்திரேலியாவின் 'புனல் வலைச் சிலந்தி (Funnel Web Spider) போன்ற சில இனங்களே மனிதர்களை விஷமூட்டக்கூடியவை. அதுவும் குழந்தைகளைக் கடித்தால் மட்டுமே மரணம் நிகழ்கிறது. இவையெல்லாம் உலகில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இருப்பதை எண்ணி நாம் ஆறுதல்
224
பொ.ஐங்கரநேசன்
கொள்ளலாம். சிலந்திகள் இரைகளுக்கென ஒதுக்கிவைத்திருக்கும் நஞ்சுகளை வீணாக்க விரும்புவதில்லை. தற்காப்புக்கென மனிதர்களைக் கடிக்க நேரிடும்போது முதற் கொட்டு அநேகமாக ஒரு வெற்று வேட்டுப் போல, நஞ்சில்லாத உலர் கடியாகவே இருக்கிறது. பரிணா மத்தில் ஆதிச் சிலந்திகள் ஆதிமனிதர்களில் ஏற்படுத்திய பயம்தான் பரம்பரைக் காரணிகளில் ஆழப் பதிந்து போய், இப்போதும் சிலந்திகள் என்றாலே பயப்பட (Archno phobia) ஆரம்பித்து விடுகிறோம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால், இந்தப் பயங்களையெல்லாம் தாண்டி இப்போது மேலை நாடுகளில் சிலந்திகளைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்ப வர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இவர்களுக்கு கால்களில் மஞ்சள் வரிகளைக் கொண்ட புலிச் சிலந்திகளின் மேல் பிரியம் அதிகம். மிக அரிதான இந்தப் புலிச்சிலந்தி இனம் (Poecilotheria regals) இலங்கையின் உலர் காடுகளிலும், இந்தியக் கானகங்களிலும் காணப்படுகிறது. பறவைகளையும் பிடிக்கக்கூடிய இவை, மரப் பொந்துகளினுள் இழைகளினால் கூடு கட்டி வாழுகின்றன. இலங்கை இந்தியக் காடுகளில் இருந்து கடத்தப்பட்டு வெளிநாட்டுச் சந்தையில் 600 டொலர்கள் வரையில் விலை போவதாகக் கூறப்படுகிறது. இதனால், வனஉயிரிகளைக் கடத்துவதைத் தடுப்பது தொடர்பான நாடுகளுக்கு இடையேயான சர்வதேச ஒப்பந்தத்தில் (CITES - Convention On International Trade in Endangered Species) gigsil LadigauligaOuulb பின்னிணைப்பாகச் சேர்த்திருக்கிறார்கள்.
சிலந்திகளைக் கண்ணாடிக் கூண்டுகளுக்குள் அடைத்து அழகுபார்க்கும் இந்த எல்லைக்கு நாங்கள் போக வேண்டியதில்லை. அற்புதமான பூச்சிக்கொல்லிகளான இவற்றை அவற்றின் இயற்கை வாழிடங்களில் அனுமதித்தாலே போதும். அவையும் பயன் பெற்று, நாமும் பயன் பெறலாம். இலங்கையில் குருநாகல் மாவட்டத்தின் நெல் வயல்களில் பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி எதிரிசிங்க என்பவர் 1995 - 1998 காலப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வில், சிலந்திகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோது நெற்பயிரைத் தாக்குகின்ற பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்ததுடன் நெல்விளைச்சலும் அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இயற்கையின் பரிணாம ஆற்றல் அளப்பரியது. இயற்கை பெருவாரியாக உள்ள பூச்சிகளின் எண்ணிக்கையைச் சமநிலையில் வைத்திருப்பதற்காகவே சிலந்திகளை, பூச்சிகளுக்கு அடுத்தபடியாக
225
Page 115
ஏழாவது2ஊழி
அதிக எண்ணிக்கையிலும், பூச்சியுண்ணிகளாகவும் படைத்திருக்கிறது. இதனாலேயே சீனாவின் பயிர் நிலங்களில் பூச்சிகளை அழிக்க சிலந்திகளை ஏவிவிடுகின்றனர். அங்கு குளிர் காலங்களில் இளஞ் சிலந்திகள் குளிரில் விறைத்துப் போகாமல் இருக்க வயல்களில் அவற்றுக்குக் கூடுகள் அமைத்துக் கொடுக்கின்றனர். குளிர் முடிந்ததும் புதிய சிலந்திகள் போர்வீரர்கள் போலப் படையாகப் புறப்பட்டுப் பயிர்களைத் தாக்கும் பீடைப் பூச்சிகளை உணவாக்கி அழிக்கின்றன. அங்கு பயிர்ச்சேதங்கள் வெகுவாகக் குறைந்திருப்பதோடு, பூச்சிக் கொல்லி இரசாயனங்களின் பாவனையும் வெகுவாகக் குறைந்துள்ளது.
அளவுக்கு மிஞ்சிய கிருமிநாசினிகளை உபயோகிப்பதால் பயிர் செய் நிலங்களிலிருந்து சிலந்திகளை விரட்டியடித்த எமக்கும் இப்போது மீண்டும் சிலந்திகளின் உதவி தேவைப்படுகிறது. சூழலை நச்சாக்காத இந்தப் பீடைக்கட்டுப்பாட்டு முறைக்கு உகந்த சிலந்தி வகைகளைத் தெரிவு செய்யும் பணியும், அவற்றைப் பெருகச் செய்யும் பணியும் நமது சூழலியாளர்களுக்கும், விலங்கியலாளர்களுக்கும் உரியது.
226
23
சுதந்திரத்தின் சிறகுகள்
"விடுபடத் துடிக்கும் வேட்கை எனது மெல்லிய சிறகுகளில்; கிழிந்தது கூடு முட்டையில் தொடங்கிய விடுதலை முயற்சி வண்ண வண்ணமாய் எனது சிறகுகளில்."
- கவிஞர் இன்குலாப் பூவுலகில் உள்ள உயிரினங்களில் எல்லாவற்றையும் விட மிகப் பெருமளவில் காணப்படுபவை பூச்சிகள். இதுவரையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பூச்சி இனங்கள் பெயரிடப்பட்டுள்ளன. இன்னமும் மனிதர்களால் கண்டறியப்படாமல் பூமியின் இண்டு இடுக்குகளிலெல்லாம் குறைந்தபட்சம் இரண்டு மில்லியன் தொடங்கி அதிகபட்சம் 10 மில்லியன் வரையான பூச்சி இனங்கள் இருக்கலாம் என்பது பூச்சியியலாளர்களின் குத்துமதிப்பீடு. இப்படி, உயிரினங்களின் உலகத்தினுள்ளே தனக்கென ஒரு பெரும் இராச்சியத்தை விரித்து வைத் திருக்கும் பூச்சிகளில் இயற்கை ஆர்வலர்களால் பெரிதும் இரசிக்கப் படுபவை வண்ணத்துப் பூச்சிகளே. பல வண்ணங்களையும் வடிவங் களையும் கொண்ட சிறகுகளால் ஒர் இளவரசியைப் போல இவை சிங்காரித்திருக்கும் அழகே தனி, சூரிய ஒளியில் சிறகுகள் சிந்தும் வண்ணச் சிதறல்களை என்றும் தணியாத விருப்புடன் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். அண்மையில், வண்ணத்துப் பூச்சிகளின் இந்த அழகுக்கும் மேலாக அவற்றிடம் இருந்து இயற்கையின் விந்தைகளை வியக்கும் புதிய அனுபவமொன்று எனக்கு வாய்த்தது.
எனது இளைய மகள் பைரவி சிறுவயது முதலே உயிரிகளை அவதானிப்பதில் தீராத விருப்புக் கொண்டவர். படிப்பு மேசையில் வண்ணமீன்கள், வண்ணத்துப் பூச்சிகள், கம்பளிப்புழுக்கள், வெட்டுக் கிளிகள், பச்சோந்திகள், குள்ள ஆமைகள் என்று எப்போதும் மூன்று நான்கு சிற்றுயிர்கள் அவரது கண்காணிப்பு வளையத்துள் இருந்தவாறே இருக்கும். அண்மையில் வீட்டுக்கு அருகாமையில் உள்ள செவ்வலரி (Nerium odorum) மரத்தில் இருந்து செம்மஞ்சள், வெள்ளை மற்றும் கறுப்பு
227
Page 116
ஏழாவது ஊழி
வரிகளைக் கொண்ட அழகான கம்பளிப்புழுக்கள் இரண்டை அவை அமர்ந்திருந்த இலைகளுடன் சேர்த்து எடுத்து வந்து கண்ணாடிப் பெட்டியொன்றில் வைத்திருந்தார். இந்தியா, இலங்கை, மியான்மர் Ligj656fiao 'gj5ugët 5T5lb' (Common Indian Crow - Euploea Core) 6Taipi அழைக்கப்படும் கறுப்பு நிறமான வண்ணத்துப் பூச்சி பரவலாக காணப் படுகிறது. அதன் குடம்பிப் புழுக்களே அவை. அலரி இலை ஆகாரத் தில் கொழுத்த அவை ஒருவாரத்திலேயே தங்கமும் வெள்ளியும் கலந்த தகதக நிறத்தில் கூண்டுப்புழுக்களாக உருமாறின. வாழ்க்கைச் சக்கரத்தில் கூண்டுப்புழுவின் அடுத்த உருமாற்றம் வண்ணத்துப் பூச்சிகளின் விடுதலைதானே!
கூண்டுப் புழுவொன்றில் இருந்து, கம்பளிப்புழு கூண்டில் அடைபட்டு எண்ணி நான்காவது நாள் வண்ணத்துப்பூச்சியின் சுதந்திரமான சிறகசைப்பு நிகழ்ந்தது. வண்ணத்துப்பூச்சி உள்ளே மடித்துக் குறுக்கி வைத்திருந்த சிறகுகளை விரித்து நீட்டி நெம்பியதில் கூடு கிழிய, கூண்டைவிடப் பன்மடங்கு பெரிதான உருவத்துடன் வெளியே வந்தது. வண்ணத்துப் பூச்சிகள் பிறக்கும்போதே முழுவளர்ச் சியுடனேயே பிறக்கின்றன. அவற்றின் வளர்ச்சி கம்பளிப்புழுக்களாக இருக்கும்போதே நிகழ்ந்து முடிந்து விடுகிறது. உருமாற்றங்களை வரிசைக் கிரமமாக ஒளிப்படங்களில் சிறைப்படுத்திக் கொண்டு வண்ணத்துப் பூச்சியை பறக்கவிட்ட மகள், இரண்டாவது புழுக் கூண்டின் உடைப்புக்காகக் காத்திருந்தார். அப்போதுதான் அந்த ஆச்சரியம் அரங்கேறியது. கூண்டுப்புழுவில் இருந்து இப்போது வண்ணத்துப் பூச்சி வெளியே வரவேயில்லை. மாறாக, நுளம்புகளின் தோற்றத்தில் வேறு ஒருவகைப் பூச்சி நான்கு ஒவ்வொன்றாக வெளியே வந்தது. கீரை விதைபோட சுரைச்செடி முளைத்தது போன்ற ஆச்சரியத் தையும் குழப்பத்தையும் மகள் வீட்டிலிருந்த எல்லோரிலும் பற்ற வைத்தார்.
வண்ணத்துப் பூச்சிகளும், அவற்றின் பருவங்களும் பொதுவாக குறைந்த ஆயுளைக் கொண்டவை. இதனால் இவற்றின் நடத்தைகளை அறிந்து கொள்வதற்கு ஒருவர் அதிக காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், காக வண்ணத்துப்பூச்சியின் விருந்துத் தாவரம் - செவ்வலரி - வீட்டு வளவினுள்ளேயே இருந்தமையாலும் அடுத்த தடவை கம்பளிப்புழுவை செவ்வலரி மரத்தில் விட்டு வைத்தே அவதானிப்பது என முடிவு செய்தோம். முட்டைகள் பொரித்து கம்பளிப்புழுக்கள் உலாவ ஆரம்பித்ததும் சொல்லிவைத்தது போல எங்கிருந்தோ வந்த குளவி ஒன்று அவற்றைச் சுற்றி நோட்டமிடத்
228
Page 117
ஏழாவதுஉஊழி
தொடங்கியது. கம்பளிப்புழுவைக் குளவி ஆகாரமாக்கப் போகின்ற தெனவே நினைத்தோம். ஆனால், குளவி ஒர் உலங்குவானூர்தி போல கம்பளிப்புழுவின் மேல் மெதுவாக இறங்கியது. நாம் பார்த்துக் கொண்டேயிருக்க தனது சூலிடப்படுத்தியினால் கம்பளிப் புழுவின் முதுகின் மேல் துளையிடத் தொடங்கியது. யுரேகா என்று கூவாத குறையாக நமது கூண்டுப்புழு குளவிகளைப் பிரசவித்தமைக்கான சூட்சுமத்தைக் கண்டறிந்து கொண்டோம். காகக்கூட்டினுள் குயில் முட்டைகள் மாதிரி, இந்தக் காக வண்ணத்துப்பூச்சியின் கம்பளிப் புழுவினுள் குளவியின் முட்டைகள். வண்ணத்துப்பூச்சி பாதி விருத்தியி லேயே பரிதாபமாகப் பலியாகிப் போக, குளவிகளோ பத்திரமாகப் பொரித்து வெளியேறிவிடுகின்றன. எதற்காக இப்படி? எவ்வாறு இது சாத்தியமாகிறது.
கம்பளிப்புழுக்களைக் குளவிகள் பலாத்காரமாகத் தமது முட்டை களைச் சுமக்க வைக்கும் உத்தியின் பின்னால் உள்ள காரணங்களை அறிவியல் ஆய்வு இலக்கியங்களில் தேடியபோது அமெரிக்காவில் இதேபோன்றதொரு அவதானம் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. புளோரிடாவில் உள்ள அமெரிக்க விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளில் ஜேம்ஸ் தும்வின்சன் (Dr. James Tuminson) ஒருவர். இவர் சில வருடங்களுக்கு முன்னர் கோதுமைப் பயிர்களில் பீடிக்கும் கம்பளிப் புழுக்களினுள்ளே ஒரு வகைக் குளவி இனம் முட்டைகளைப் பத்திரப்படுத்துவதைக் கண்டறிந்துள்ளார். நாங்கள் அடைந்த அதே குழப்பமும் ஆச்சரியமும் கலந்த மனோ நிலையை அவரும் அனுபவித்திருப்பார் போலும். உடனடி யாகவே காரிய - காரண தொடர்புகளை ஆராயும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
பூக்கும் தாவரங்கள் பச்சையப் பசியோடு அலையும் பூச்சிகளி டமிருந்து தப்பித்துக் கொள்வதற்குத் தற்காப்பு இரசாயனங்களைத் தம்மில் கொண்டிருக்கின்றன. தேயிலையில் 'தனின் (Tamin), வேம்பில் 'அசடி றாக்ரின் (Azadirachtin), காந்தளில் 'கொல்கிசின் (Colchicine), ஊமத்தையில் 'ஆட்ரோப்பைன்’ (Atropine), மஞ்சள் அலரியில் "தெவற்றைன் (Thevetine), செவ்வலரியில் 'ஒலியாண்ட்றின் (Oleandin) போன்றவை பூக்கும் தாவரங்களில் காணப்படக்கூடிய நஞ்சு வேதிகளில் சில உதாரணங்கள் ஆகும். செவ்வலரி இலையொன்றில் இருக்கக்கூடிய 'ஒலியாண்ட்றின் குழந்தையொன்றை மரணத்துக்குக் கூட்டிச் செல்லப் போதுமானது. ஆனால், பரிணாமப் பாதையில் பூக்கும் தாவரங்களுடன் பூச்சிகளும் சேர்ந்து பயணித்ததில் சில பூச்சியினங்கள் இந்த நஞ்சுகளுக்கு
23O
பொ. ஐங்கரநேசன்
எதிரான ஆற்றலை வளர்த்துக் கொண்டுள்ளன. காக வண்ணத்துப் பூச்சியின் கம்பளிப்புழு இந்த விடயத்தில் முன்னெச்சரிக்கை உணர்வு மிக்கது. அலரி இலையின் நரம்புகளை முதலில் கடித்துத் துண்டித்து நச்சுப் பாலின் ஊற்றை திசைதிருப்பி விட்டே இலைகளை உண்ணத் தொடங்குகின்றது. தாவரங்களின் இரசாயன ஆயுதங்கள் செயலிழந்து போகும் நிலையில் தாவரங்கள் பூச்சிகளின் எதிரிகளுடன் கைகோர்த்து விடுகின்றன. கம்பளிப்புழு இலையைக் கடிக்க ஆரம்பித்ததும், கம்பளிப்புழுவின் உமிழ்நீருடன் இலையிலுள்ள இரசாயனங்கள் வினைபுரிந்து ஒருவித மணத்தைக் காற்றில் பரப்புகின்றன. இந்த மணம் என்பது உதவிகோரி ஆபத்பாந்தவன்களை அழைக்கும் சமிக்ஞை. மணத்தை வைத்து சுற்றுவட்டாரத்திலுள்ள குளவிகள் கம்பளிப் புழுக்களைக் குறிவைத்து வந்து சேர்ந்து விடுகின்றன.
குளவி இனங்களில் சில கம்பளிப்புழுக்களை அலேக்காகத் தூக்கிச் சென்று, தங்கள் குடம்பிப் புழுக்களுக்கான ஆகாரமாகக் கூடுகளில் அடைத்து வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு அவ்வாறில்லை. கம்பளிப் புழுவுக்குள்ளேயே முட்டைகளை அடைவைத்து விட்டு (அப்படியே திரும்பி ஆள்காட்டித் தாவரத்துக்கு ஒரு நன்றியும்(?) சொல்லிவிட்டு) பறந்துபோய் விடுகின்றன. இதன் மூலம் குளவிகளின் இளந்தைகளுக்கு வேண்டிய பாதுகாப்புக்கும் உணவுக்கும் பூரண உத்தரவாதம் கிடைப்பதோடு, தகவல் அனுப்பிய தாவரத்துக்கும் உதவி செய்ததும் ஆகிறது. குளவிகளின் முட்டைகள் பொரித்து வளரும்போது நேர வெடிகுண்டுகள் போல உள்ளிருந்தே கம்பளிப் புழுவைக் காலி செய்து விடுகின்றன. 'எதிரியின் எதிரி எனக்கு நண்பன்' என்பது போல, தாவரமும் குளவியும் கூட்டுச் சேர்ந்து கொண்டு வண்ணத்துப் பூச்சியைத் தீர்த்துக் கட்டுவது இயற்கையின் எண்ணற்ற தற்காப்பு விந்தைகளில் ஒன்றல்லாமல் வேறென்ன? செவ்வலரி - காக வண்ணத்துப்பூச்சி - குளவி என்ற மூன்று இனங்களுக் கிடையேயான தற்காப்பு யுத்தத்தில் வண்ணத்துப் பூச்சிகள் தோற்றுப் போனாலும், உயிர்ப்பின்னலில் தங்களின் இழை அறுந்து போகாமல் தற்காத்துக் கொள்வதில் வண்ணத்துப் பூச்சிகளும் ஒன்றும் சளைத்தவை அல்ல.
II
பூமியில் கடல் மட்டம் தொடங்கி மலைமுகடுவரை, குளிர்ப் பிரதேசம் தொடங்கி வெப்பவலயம் வரை எங்கெல்லாம் பூமி பூத்துக் குலுங்குகிறதோ அங்கெல்லாம் வண்ணத்துப் பூச்சிகளும் வாசம்
231
Page 118
ஏழாவதுஉஊழி
செய்கின்றன. பனிஅடர்ந்த துருவப் பிரதேசங்களில் அண்டார்ட்டிக் காவில் மாத்திரம் இவை காணப்படுவதில்லை. வடதுருவமான ஆர்க்டிக் பகுதிகளில் இறக்கைகளின்மேல் பணிஉறையாமல் தடுப்பதற்காக உறையெதிர் வேதிகளைச் சுரந்து கொண்டு சஞ்சாரம் செய்கின்றன. பிற உயிரினங்களைப் போன்றே வண்ணத்துப் பூச்சிகளிலும் பெரும் எண்ணிக்கையான இனங்கள் வெப்பவலய நாடுகளில், அங்கும் மழைக்காடுகளிலேயே அதிகளவில் காணப்படுகின்றன. குளிர்ந்த பிரித் தானியாவில் 65 வண்ணத்துப் பூச்சி இனங்கள் மாத்திரமே தென்பட, தென் அமெரிக்காவின் அமேசன் காட்டுப்பகுதிகளிலோ 7,500க்கும் அதிகமான இனங்கள் ஆபரணங்களின் புதையலைப்போலக் கொட்டிக் கிடக்கின்றன. இந்தியாவில் ஏறத்தாழ 1200 இனங்களும், இலங்கைத் தீவில் 244 இனங்களும் உள்ளன. இலங்கையில் உள்ள வண்ணத்துப் பூச்சிகளில் 24 இனங்கள் இலங்கைக்கே உரித்தான உள்நாட்டுக்குரிய இனங்கள். இப்படி உலகம் பூராவும் சுமார் 17,500 வண்ணத்துப்பூச்சி யினங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
வண்ணத்துப்பூச்சிகள் உடல் வலுவில் நலிந்தவை. அப்படி யிருந்தபோதும் வலிய சூழல்களிலெல்லாம் வெற்றிகரமாகப் பரம்பி யிருப்பதற்கு அவற்றின் சிறகுகளே பிரதான காரணம். பறத்தலுக்கான காற்றாடி என்பதற்கும் அப்பால், சிறகுகள் வண்ணத்துப்பூச்சியின் இருப்பில் பல்வேறு இன்றியமையாத பங்களிப்புகளைச் செய்து வருகின்றன. வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளின் நிறத்தின் நதிமூலம் விஞ்ஞானிகளுக்கு இன்னமும் முழுவதும் புரிபடாத ஒரு புதிராகவே நீடிக்கிறது. மண்ணிறம், கறுப்பு போன்ற மங்கலான வண்ணங்களுக்கு மெலனின் நிறப்பொருள்களையும் நீலம், பச்சை, சிவப்பு போன்ற பிரகாசமான புளோரொளிர்வு (Fluorescent) நிறங்களுக்குச் செதில்களையும் காரணம் சுட்டுகிறார்கள். வண்ணத்திகளின் இரண்டு சோடிச் சிறகுகளின் மீதும் ஒடுகள் வேய்வதனைப்போல ஒன்றன் மேலொன்றாக ஏராளமான செதில்கள் அடுக்கப்பட்டிருக்கின்றன. பெரிய வண்ணத்துப்பூச்சி யொன்றின் சிறகுகளில் ஒரு மில்லியன் தொடங்கி ஒன்றரை மில்லியன் வரையான செதில்கள் காணப்படலாம். அந்த அளவுக்கு நுண்ணியவை. பளிங்குத்தன்மையுடையவை. சிறகுகளைத் தொட்டால் கைகளில் துகள்களாக ஒட்டிக்கொண்டு வருபவை இவைதாம். செதில்கள் சூரிய ஒளியில் இருந்து அதிஉள்தாக்கதிர்களை உறிஞ்சி மீளவும் காலுகின்ற தன்மையுடையவை. அவ்வாறு காலும் அதிஊதாக்கதிர்களே செதில் களின் பளிங்குருக்காரணமாக புளோரொளிர்வு நிறங்களாக சிறகுகளில் ஜொலிக்கின்றன. இந்த ஒளிகாலும் உயிர்நுட்பத்தை வைத்தே
232
பொ.ஐங்கரநேசன்
வண்ணத்துப்பூச்சிகள் தொலைவில் உள்ள தமது இனத்தைச் சேர்ந்தவை களை, அவற்றில் ஆண் - பெண் வேறுபாடுகளையெல்லாம் கண்டறிந்து உறவு கொள்கின்றன. மனிதன் தொலைக்காட்சி, கணினி போன்ற தனது இலத்திரனியல் சாதனங்களில் இப்போதுதான் புகுத்தியிருக்கும் 'ஒளிகாலும் டயோட் (Light Eming Diode-LED) தொழில் நுட்பத்தை 30 மில்லியன் வருடங்களுக்கு முன்பே வண்ணத்திகள் தமது சிறகுகளில் செயற்படுத்த ஆரம்பித்துவிட்டமையை என்னவென்பது?
வண்ணத்திப்பூச்சிகள் சிறகுகளில் தமது தற்காப்புக்காகவும் தகவமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. பல வண்ணத்துப்பூச்சி இனங்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தாவரத்தில் அல்லது நெருங்கிய இனத் தாவரங்களின் பூக்களில் உணவு தேடும் பழக்கமுடையவை. இதனால் அப்பூக்களின் நிறங்களை ஒத்த நிறத்தில், ஏறத்தாழ சிறகு முளைத்த பூக்களாகவே தென்படுவதன் மூலம் இரைகெளவிகளிலிருந்து தம்மை உருமறைப்புச் செய்து கொள்கின்றன. கந்தகக்கல் வண்ணத்துப்பூச்சி 356f6ởT (Brimstone Butterfly - Gonepteryx rhamni) SFpg5356ir, Goa uGifji LusëøOF நிறத்தையும் நரம்புகளையும் கொண்டு பார்ப்பதற்கு இலைகள் போன்று பொய்த்தோற்றம் காட்டும். இரைகெளவிப் பறவைகள் வண்ணத்துப் பூச்சிகளைச் செயல் இழக்கச் செய்யும் விதமாக முதலில் அவற்றின் தலைப்பகுதியையே குறிவைத்துத் தாக்குகின்றன. இதனால், சில வண்ணத்துப்பூச்சி இனங்கள் பறவைகளை ஏமாற்றும் விதமாக சிறகு களின் பின் விளிம்பில் சிறிய கட்புள்ளிகளை (Eyespots) கொண்டிருக்கும். பறவைகளும் தலை என நினைத்து வால்சிறகைப் பிடிக்க முயல, சிறிய சேதாரத்துடன் வண்ணத்துப் பூச்சிகள் தப்பித்து விடுகின்றன. இலங்கை யின் பத்தனைப் புல்வெளிகளில் இத்தகைய வண்ணத்துப்பூச்சிகளை (Jewel-four ring, Ypthima singala) sFjols-T5ITU600TLDIT5ő 5T60TGvITLb. egyL-jö5 அமேசன் காடுகளின் இருளில் ஆந்தை வண்ணத்துப்பூச்சி என்ற ஓர் இனம் (OwButterfy-Calgomemon) உண்டு. அளவில் பெரியது. பின் சிறகுகள் இரண்டிலும் வயிற்றுப்புறத்தில் கண்போன்ற ஒவ்வொரு பெரிய வட்டவடிவ அடையாளத்தைக் கொண்டிருக்கிறது. பறவைகளைக் கண்டதும் இவை சிறகுகளை உயர்த்த ஏதோ ஆந்தைகள்தான் முழிகளை உருட்டி மிரட்டுவதாகப் பறவைகள் பயந்தோடிவிடுகின்றன. இந்த வண்ணத்துப்பூச்சிகளில் பலவற்றைக் கனடாவில் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள வண்ணத்துப்பூச்சிகளின் பூங்காவில் பார்த்திருக்கிறேன். ஒரு சாண் அகலத்துக்குப் பெரியவை. தொட்டாலும் எந்தப் பதட்டமும் இல்லாமல் தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த அப்பிள் பழத்துண்டுகளில் இருந்து சாற்றை உறிஞ்சிக் கொண்டிருந்தன.
233
Page 119
ஏழாவதுஉஊழி
வண்ணத்துப்பூச்சிகளில் சில ஆலகண்டர்கள். கம்பளிப்புழுக் களாக இருக்கும்போது விருந்துச் செடிகளின் இலைகளில் சேகரித்த நஞ்சுகளை உடலில் சேமித்து வைத்திருக்கின்றன. வடஅமெரிக்கப் பகுதிகளில் சர்வாதிகாரி எனப்படும் வண்ணத்துப்பூச்சி (Monarch - Danus plexipus) மிகப் பிரபலம். வட அமெரிக்க வண்ணத்துப்பூச்சி இனங்களில் பெரியது என்பதாலும், பெருமளவு பிரதேசங்களை ஆக்கிரமித்திருப்ப தாலும் இப்படி ஒரு பெயர். இவை எருக்கலைச் செடிகளின் நஞ்சை 606iggjoirotraor. Lugait Garrig algorgoodS (Passion vine butterfly-Heliconius Sara) ஃபஷன் இலைகளின் (கொடித்தோடை இனத்தாவரங்கள்) சயனைட் நஞ்சை ஒரு சயனைட் வில்லை போலவே தேக்கி வைத்திருக் கிறது. இவற்றை ஒரு தடவை விழுங்கும் பறவைகள் வாந்தி, எரிச்சல் என்று அவதிப்படுவதால் சூடுகண்ட பூனைபோல இன்னொரு தடவை வாய்வைக்க நினைப்பதேயில்லை. நஞ்சு வண்ணத்துப்பூச்சிகள் எல்லாம் கடும் வண்ணங்களில் பளிச்சென்று இருக்கும். இது, 'ஆபத்து கிட்ட நெருங்காதே' என்பதற்கான எச்சரிக்கை, நஞ்சு இல்லாத இனங்கள் கூட சர்வாதிகாரி போலவோ, கொடித்தோடை வண்ணத்துப் பூச்சி யைப் போலவோ வேடம் போடுகின்றன. அசலையும் போலிகளையும் வேறுபிரித்தறியமுடியாமல் பறவைகளும் நஞ்சு வண்ணத்துப் பூச்சிகள்தாம் என நினைத்து இவற்றை நெருங்குவதில்லை.
வண்ணத்துப்பூச்சிகள் அமர்ந்திருக்கும்போது சிறகுகளை விரித்து வைத்திருப்பதையும் சிலநேரங்களில் நிமிர்த்தி மூடிவைத்திருப்பதையும் பார்த்திருப்பீர்கள். மனிதர்கள் நாங்கள் மாறாத உடல் வெப்பநிலை கொண்டவர்கள். சூடான வேளைகளில் வியர்த்தும் குளிரான நேரங்களில் உடலினுள்ளே உணவை எரித்தும் உடல்வெப்பநிலையைச் சீராக்கிக் கொள்கிறோம். ஆனால், வண்ணத்துப்பூச்சிகள் சூழலுக்கு ஏற்பத் தமது உடல்வெப்பநிலையைச் சமப்படுத்திக் கொள்ளும் உயிரிகள். உடலுக்குச் சூடேற்ற வேண்டிய தருணங்களில் இறக்கைகளை அகலப்பரப்பி வெய்யில் காய்கின்றன. உடலில் வேண்டிய அளவு வெப்பம் சேர்ந்ததும் சூரிய வெப்பம் மேலும் படாதவாறு இறக்கைகளை ஒட்ட மூடிக் கொள்கின்றன. எனினும் அளவுக்கு மீறிய கோடை யையோ, உறைகுளிரையோ இவற்றால் தாங்கமுடிவதில்லை. இத்தகைய, தட்பவெப்ப நிலை மாற்றங்களின்போது கூட்டம் கூட்டமாக இடம் பெயருகின்றன.
சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த முனைவர் கிஃப்ற் சிரோன்மணி கல்லூரி அமைந்துள்ள தாம்பரம் பகுதியின் வண்ணத்துப்பூச்சி இனங்கள் கோடைகாலத்தின்போது
234
பொ.ஐங்கரநேசன்
நீலகிரிமலைப் பிரதேசங்களுக்கும், கடல் கடந்து இலங்கைக்கும் இடம்பெயர்வதாகக் குறிப்பிட்டுள்ளார். வட அமெரிக்க நாடுகளில் காணப்படும் மோனார்க் (Monarch) வண்ணத்துப்பூச்சிகள் போன்று உலகில் வேறு எந்த வண்ணத்துப்பூச்சிகளும் இடம் பெயர்வதில்லை. மில்லியன் கணக்கான எண்ணிக்கையில் நெடும் தொலைவு பயணப்படும் இவை, வலசைப் பறவைகள்போல புறப்பட்ட இடத்துக்கே திரும்பியும் வருகின்றன. கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் குளிர் உறைக்கத் தொடங்கும்போது அங்கிருந்து புறப்படும் மோனார்க் வண்ணத்திகள் மெக்சிக்கோவைச் சென்றடைகின்றன. இந்தப் பயணத்தில் 4,500 கிலோ மீற்றர்களுக்கும் மேலாகக்கூடக் கடக்க நேர்கிறது. மெக்சிக் கோவில் உள்ள காடுகளும் மலைக்குகைகளும்தான் இவற்றின் குளிர் வாசஸ்தலங்கள். அங்கு நெடும் தூக்கத்தில் காலத்தைக் கழித்துவிட்டு, தாய் நிலங்களில் வசந்தம் துளிர்விட ஆரம்பிக்கும்போது மீளவும் திரும்பி விடுகின்றன. இவற்றின் ஆயுள் 8-9 மாதங்கள் வரையில் நீண்டு இருப்ப தால் நெடிய பயணம் சாத்தியமாகிறது. மோனார்க் வண்ணத்திகளின் இடப்பெயர்வில் இன்னுமொரு ஆச்சரியம் நிலவுகிறது. திரும்பிய வண்ணத்துப்பூச்சிகள் சோடி சேர்ந்து முதலாவது சந்ததியை உருவாக்கி விட்டு இறந்துவிடுகின்றன. இவற்றின் ஆயுள் பெற்றோரைப்போல கெட்டி அல்ல; அதிகபட்சம் 3 மாதங்கள் வரையில்தான். இப்படி, அடுத்த குளிர் உறைக்கத் தொடங்குவதற்கிடையில் நான்காவது அல்லது ஐந்தாவது சந்ததி தோன்றிவிடுகிறது. குளிர் ஆரம்பிக்கும்போது பிறக்கும் கடைசிச் சந்ததி வண்ணத்துப் பூச்சிகளே நீண்ட ஆயுள் என்ற வரத்தை இயற்கையிடம் வாங்கிக் கொண்டு மீளவும் மெக்சிக்கோவுக்குப் படையெடுக்கின்றன. இதில் அதிசயம் என்னவெனில் மூத்த வண்ணத்துப்பூச்சிகளின் வழிகாட்டுதல் எதுவுமின்றி, இவற்றின் பாட்டியோ, கொள்ளுப்பாட்டியோ மெக்சிக்கோவில் எங்கு முகா மிட்டிருந்தனவோ அதே இடத்துக்கே இவையும் சென்றடைவதுதான். ஆண்டுதோறும் இந்த விந்தையைக் காத்திருந்து வியப்பது இப்பகுதிகளில் ஒரு அறிவுசார் பொழுதுபோக்காக வளர்ச்சியடைந்து வருகிறது. மோனார்க் போல மஞ்சள், செம்மஞ்சள் வர்ணங்களை இலகுரக கிளைடர் விமானங்களின் இறக்கைகளில் பூசிக்கொண்டு, வண்ணத்துப்பூச்சிகளுடன் சேர்ந்து பறந்துவிட்டும் திரும்புகிறார்கள்.
வண்ணத்துப்பூச்சிகளின் பெருந்திரளான இடப்பெயர்வை இலங்கையில், உள்ளூரிலேயே கண்டுகளிக்கலாம். இத்தகைய வாய்ப்பு ஒன்று 2004ஆம் ஆண்டில் எனக்குச் சித்தித்தது. தொண்டைமனாறு கடல் நீரேரியில் பழுதடைந்திருக்கும் மடைக்கதவுகளை
235
Page 120
ஏழாவதுஉஊழி
புனரமைப்பதன் மூலம் கடல்நீரேரியை நன்னீரேரியாக மாற்ற முயலும் பாரிய திட்டமொன்றை அப்போது வடக்கு - கிழக்கு மாகாண சபை முன்வைத்திருந்தது. இதன் சாதக பாதகங்களைத் தெரிந்து கொள்ளவென யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற கள ஆய்வில் நானும் கலந்து கொண்டிருந்தேன். தரவுகளைச் சேகரிப் பதற்காகத் தொண்டைமனாறு முகத்துவாரம் தொடங்கி, இராணுவத் தின் உயர்பாதுகாப்புவலயம் நீங்கலாக சுண்டிக்குளம் வரை பயணித் தோம். அப்போது, முள்ளியானுக்கும் சுண்டிக்குளத்தும் இடையேயான ஒரு பற்றைக்காட்டு வெளியில் இலட்சக்கணக்கான வண்ணத்திகள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தன. அத்தனை சிறகுகளும் ஒரு சேரப் படபடத்ததில் காற்று சுவர்க்கோழிபோல இரைந்தவாறு இருந்தது. வண்ணத்துப்பூச்சி மழையில் நனைந்தவாறே இயற்கையின் அந்த எழிலார்ந்த கோலத்தை இரசித்தோம். வண்ணத்துப் பூச்சிகளின் இந்த இடப்பெயர்வை, அவை கதிர்காமத்துக்கும் பூரீபாதமலைக்கும் புனிதயாத்திரை போவதாகச் சொல்லும் வழக்காறு இலங்கையின் ஈரின மக்களிடையேயும் நிலவுகிறது.
அழகான சிறகுகளால் எனது இளம்பிராயத்து நினைவுகளில் அமர்ந்துவிட்ட வண்ணத்துப்பூச்சி இனங்களில் பலவற்றை இன்று என்னால் காணமுடியவில்லை. மரங்களை அழிப்பதாலும், வேளாண் நஞ்சுகளாலும் வண்ணத்துப்பூச்சிகளும் வேகமாக அழிவைச் சந்தித்து வருகின்றன. பூக்கும் தாவரங்களுக்கும் வண்ணத்துப்பூச்சிகளுக்கும் இடையிலுள்ள தொடுப்பு மிகவும் நெருக்கமானது. பூக்கள் வண்ணத்துப் பூச்சிகளுக்கு மகரந்த அழுது படைக்க வண்ணத்துப் பூச்சிகள் பிரதியுப காரமாக மகரந்த சேர்க்கையை நடாத்திக் கொடுக் கின்றன. மகரந்த சேர்க்கையை நிகழ்த்துவதில் தேனீக்களுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இவை உள்ளன. வண்ணத்துப்பூச்சிகளின் முக்கியத்துவம் காரணமாக அவற்றைப் பாதுகாக்கும் பல்வேறு முயற்சிகளில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலமும் மோனார்க் வண்ணத்துப்பூச்சிகளின் குளிர்காலத் தங்கிடங்களில் ஒன்று. இங்கு, பசுபிக் குரோங் நகராட்சியின் 352வது சட்டப்பிரிவு வண்ணத்துப்பூச்சிகளைக் கொல்வதையும் பிடித்துத் துன்புறுத்துவதையும் தண்டனைக்குரிய குற்றமாக்கியுள்ளது. பிரான்சின் வடமேற்குப் பகுதியில் 200 ஏக்கர்கள் பரப்பளவு வண்ணத்துப்பூச்சி களின் சரணாலயமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. வண்ணத்துப்பூச்சி களுக்கென அமைக்கப்பட்ட உலகின் முதலாவது பெரிய சரணாலயம் இதுவாகும். இப்பகுதியை அண்டி வாழுகின்ற மக்கள், விவசாயத்தில்
236
பொ. ஐங்கரநேசன்
கிருமி நாசினிகளையும் பூச்சி நாசினிகளையும் உபயோகிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சமீபத்தில் இந்தியாவில் முதல் முறையாக வண்ணத்துப் பூச்சிகளுக்கென பிரத்தியேகமாகக் கேரளாவில் கொல்லம் அருகே ஒரு பூங்கா நிறுவப்பட்டுள்ளது. 3.5 ஹெக்டயர்கள் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் 150க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள் சுதந்திரமாகச் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நாமோ, வண்ணத்துப்பூச்சி பறக்குது பார் என்பதை விடுத்து இன்று 'வண்ணத்துப்பூச்சி வயசென்ன ஆச்சு என்பதோடு நின்று கொண்டிருக்கிறோம். சிந்திக்க வேண்டிய ஒன்றல்லவா இது?
237
Page 121
24
காணாமற் போகும் கடற்குதிரைகள்
பகுத்தறிவதில் மனிதனைப் போன்ற உயிரினம் பூமியில் இதுவரை இருந்ததில்லை. ஆனால், மனித உயிரினம் இயற்கையின் சிறிய தவறோடு படைக்கப்பட்டிருக்கிறது.
நோம் சாம்ஸ்கி (உயிரியலாளர் - தத்துவவாதி) கடற்குதிரைகள் என்ற வார்த்தையை முதன்முதலில் கேள்விப் படுபவர்கள், அவற்றைக் கடலில் வாழுகின்ற ஒருவகைக் குதிரை என்று தான் நினைப்பார்கள். குறைந்தபட்சம், கடற்பசு என்று அழைக்கப்படும் டுயூகங் (Dugong) போல, கடற் சிங்கம் என்று அழைக்கப்படும் சீல் (Sea) விலங்கைப்போலக் கடற்குதிரைகளும் ஒரு பருத்த உடலிப் பாலூட்டி என்றாவது எண்ணத்தோன்றும். ஆனால், கடற்குதிரைகளைப் பற்றி அறிய வரும்போது நொடியில் அவை ஏமாற்றிவிடும். ஆம் ! கடற் குதிரைகள் குதிரைகளின் இனமோ, பாலூட்டியோகூட அல்ல. இரண்டு கைகளுக்குள்ளும் அடக்கிவிடக் கூடிய சிறிய வகை மீன்கள். ஆனால், எதிர்பார்ப்பை ஏமாற்றினாலும் எவரும் எதிர்பார்த்திராத விந்தை களையும் வித்தைகளையும் இவை கொண்டிருக்கின்றன. இதனால் கடற்குதிரைகளை அறிந்தவர்களுக்கு அவை எப்போதுமே ஆச்சரியங்கள் ததும்புகின்ற உயிரிகள்தாம்.
கடற்குதிரைகள் பாரை, கெளுத்தி போன்ற முள்ளு மீன்களின் கூட்டத்தைச் சேர்ந்தவைதாம் என்றாலும் உருவத்திலும், உயிரியலிலும் மீன்களிலிருந்து பெருமளவில் வேறுபட்டவை. குதிரையிடமிருந்து தலை, கங்காருவிடமிருந்து வயிற்றுப் பை, குரங்கிடமிருந்து வால் என்று உறுப்புகளை வாங்கி ஒட்டுவேலை செய்தது போன்ற விசித்திரமான தொரு நிமிர்ந்த தோற்றம். கண்களும் பச்சோந்திகளினதைப் போன்றவைதாம். முகத்தில் இரண்டு தாடைகளும் இணைந்த குழல் மூக்கும், தலையின் உச்சியில் எலும்புகள் சூட்டியிருக்கும் சிறிய கிரீடமும் பொது மீன்களில் காணக் கிடைக்காத வினோதங்கள்.
238
பொ.ஐங்கரநேசன்
மீன்களின் தனித்துவ அடையாளமான செதில்களும் இவற்றிடம் இல்லை. எப்போதுமே சாய்த்து வைத்திருக்கும் இதன் தலையையும், சுருண்டிருக்கும் வாலையும் நிமிர்த்தி நீட்டிப் பார்த்தாலே மீன்களுக் குரிய சாயல் தெரியும். இவற்றின் பின்னணியில் இந்த மீன் சாதியை விளங்கவைக்க, கடற்குதிரை என்பதைத் தவிர வேறு எந்தப் பெயர் பொருத்தமாக இருக்க முடியும்?
கடற்குதிரைகளுக்கு அறிவியல் மொழியிலும் 'ஹிப்போகம்பஸ் (Hippocampus) என்று சரியாகத்தான் பெயரிட்டிருக்கிறார்கள். உரோமானியர்களின் கடல் தெய்வம் நெப்டியூன் சவாரி செய்யும் குதிரையின் பெயர்தான் ஹிப்போகம்பஸ். இரண்டு சதம மீற்றர் உயரமுடைய 'குள்ளக் கடற்குதிரை (Hippocampus dense) தொடங்கி 37 சமீ உயரத்துக்கும் மேலாக வளரக்கூடிய அவுஸ்திரேலியாவின் 'பெருத்த 6ìJuớìịnplẻ ở L-ịò (996)g” (Hippocampus abdominalis) 6/60g, இதுவரையில் 34 இனங்கள் அறியப்பட்டுள்ளன. வெப்பவலய, இடை வெப்பவலயக் கடல்களின் கரையை அண்டிய ஆழமற்ற பகுதிகளில் புற்படுக்கை களிலும், பவளப் பாறைகளிலும் இவை வாழுகின்றன. நீரோட்டத்தில் அள்ளுண்டு போகாதவண்ணம் ஆதாரங்களை வாலினால் பற்றியவாறு இவை இரையாடும் அழகே தனி. இவற்றுக்குப் பற்களோ, இரைப்பையோ இல்லை. இருந்தபோதும் தீனியில் பேராசை மிக்கவை. கால்கடுக்கக் காத்திருந்து, நீர்த்தத்திகள் போன்ற சிறிய கிறஸ்தேசியன்கள் (Crustaceans) அருகில் வந்ததும் குழல்வாயால் அப்படியே அலேக்காக உறிஞ்சி உள்ளே இழுத்து விடுகின்றன.
கடற்குதிரைகளின் நீந்து முறைமையும் வினோதமானது. எல்லா மீன்களும் உடலை நீர்மட்டத்துக்குக் கிடையாக வைத்து நீந்தும்போது, இவை மட்டும் உடலை நிலைக்குத்தாக வைத்து அசைகின்றன. எனினும் கடற்குதிரைகள் நீச்சலில் கத்துக்குட்டிகள்தாம். அடர்ந்த கடற் தாவரங்கள், பவளப் பாறைகளினூடாக இவற்றின் நடமாட்டத் துக்கு அகல விரித்த செட்டைகள் இடையூறாக இருக்கும் என்பதால் இயற்கை வாற்செட்டையையும், இடுப்புச் செட்டைகளையும் அடியோடு கத்தரித்து வைத்துள்ளது. இருக்கின்ற சிறிய முதுகுச் செட்டையினதும் மார்புச் செட்டைகளினதும் உதவியுடன் இவற்றால் ஒருவிதத் துள்ளலுடன் மெதுவாகவே நீந்த முடியும். ஆனால், இந்தப் பின்னடைவைக் கண்கள் சரி செய்து விடுகின்றன. பச்சோந்திகளைப் போன்றே இவற்றாலும் உடலை அசைக்காமல் சகல திசைகளிலும் பார்க்க முடியும். இரண்டு கண்களும் ஒரே நேரத்திலேயே வெவ்வேறு
239
Page 122
ஏழாவது ஊழி
திசைகளில் சுழன்று காட்சிகளைப் படம் பிடிக்கின்றன. இதனால் இரைகளைப் பார்த்ததும் உறிஞ்சுவதற்கோ, இரைகெளவி எதிரிகளைக் கண்டதும் தப்புவதற்கோ கடற்குதிரைகளால் எளிதில் தயாராக முடிகின்றது. தாக்கவோ, எளிதில் தப்பி ஓடவோ இயலாத இவை உருமறைப்பு (Camouflage) செய்வதில் தேர்ந்த வல்லுநர்கள். ஆபத்தை உணர்ந்ததும் தோலின் நிறத்தைச் சூழலின் நிறுத்துக்கு மாற்றி எதிராளியின் கண்களை ஏமாற்றிவிடுகின்றன.
கடற்குதிரைகளின் இனப்பெருக்க நடவடிக்கைகள்தாம் அவற்றின் மற்றைய எல்லா இயல்புகளிலும் பார்க்கச் சிறப்பு வாய்ந்தவை. தரையில் வாழுகின்ற விலங்குகளில் பரிணாமத்தின் உச்சிப்படியில் இருக்கும் பாலூட்டிகள் குட்டிகளைக் கருப்பையில் சுமந்து, உரிய வேளை வந்ததும் பத்திரமாகத் தரையிறக்கி விடுகின்றன. நீர் வாழ்வனவற்றில் பெரும்பாலானவை முட்டைகளையும் விந்துகளையும் தண்ணிரில் விட்டுவிட்டு, இரண்டையும் தண்ணீர் சேர்த்துவைக்கும் என்ற நம்பிக்கையில் அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பி விடுகின்றன. அரிதாகச் சில உடலினுள்ளேயே கருக்களைத் தாங்கிக் குட்டிகளை ஈனும் போது அவை ஆச்சரியம். அதிலும் ஆணே குட்டிகளை ஈன்றால்? அந்த ஆச்சரியத்திலும் ஆச்சரியத்தைக் கடற்குதிரைகளில் காணலாம். இங்கு ஆண்தான் தாய்மையடைகிறது. சோடி சேர்வதற்கு மூன்று நான்கு நாட்களுக்கு முன்னால் ஆண் கடற்குதிரைகளின் வயிற்றுப்புறத்தில் கங்காருவினுடையதைப் போன்றதொரு பை (Brood Pouch) உருவாகும். பெண் இதனுள்ளே ஆயிரக்கணக்கான முட்டைகளை இறக்கி விட அவற்றின் மேல் விந்துகளைப் பெய்து கருத்தரிக்க வைக்கும். பை, ஒரு தாயின் கருப்பையைப் போலவே, உட்புறத்தில் பஞ்சுபோன்று மெது மெதுப்பாகி, போசணைகளைச் சுரந்து விருத்தியடையும் குட்டிகளைப் பராமரிக்கிறது. கர்ப்ப காலம் பொதுவாக இரண்டு வாரங்கள். இதன் பின்னர், ஓர் இரவில் ஆண் கடற் குதிரை உப்பிய பையை எக்கி எக்கி நூற்றுக்கணக்கான குட்டிகளைத் தண்ணிரில் பிரசவிக்கும். இப்படி ஒர் ஆம்பிளை அம்மா உயிரிகளின் உலகில் வேறு எங்கும் இல்லை. கடற் குதிரைகளின் உறவான குழாய் மீன்களில் (Pipe Fishes) ஆண்கள் முட்டை களை வயிற்றுப் பகுதியில் ஒட்டி வைத்திருந்தாலும் தாய்மையின் அடை யாளமாக இவற்றினதைப் போன்றதொரு தெளிவான பை கிடையாது.
கடற்குதிரைகளின் காதல் சிருங்காரம் இன்னும் சுவையானது. பிடித்த துணையைத் தேடிக் கொண்டதும் ஒன்றன் மேலொன்று அன்பைச் சொரிய ஆரம்பித்து விடுகின்றன. கடற்புற்களின் புதர்
24O
Page 123
ஏழாவதுஉஊழி
மறைவிலோ, பவளப்பாறைகளின் இடுக்குகளிலோ வழமையாகச் சந்திக்கும் இடத்தில் முதலில் வந்து சேரும் ஆண் குதிரை பெண்ணின் வருகைக்காகத் தவம் கிடக்கும். பெண் வந்து சேர்ந்ததும் இரண்டிலும் ஒளிர்கின்ற பிரகாசத்தைப் பார்க்க வேண்டுமே உண்மைதான். இவற்றின் உடல்நிறம் சடுதியில் வெளிர் மஞ்சளாகவோ அல்லது வெள்ளை யாகவோ மாறிவிடுகிறது. கைலாகு கொடுத்து வாழ்த்துச் சொல்வது போல, ஆண் தனது வாலினால் பெண்ணின் வாலைப் பற்றிக் களி நடம் புரிய ஆரம்பித்துவிடும். இதில் எப்போதும் ஒரு தாளலயம் இருக்கும். இப்படி ஒரே இடத்தில் தினமும் சில நிமிடங்களாவது சந்தித்து நடனமாடி, உறவைப் பலப்படுத்திக் கொள்கின்றன. ஆண் கருப்பையை உருவாக்கி உறவுகூடித் தாய்மையடைந்த பின்னருங்கூட பெண் வந்து வாழ்த்துச் சொல்லிவிட்டுச் செல்லும். இந்தக் காதல் சோடிகளை எந்த வில்லனாலும் பிரிக்கமுடியாது. இலண்டனைச் சேர்ந்த புகழ் பெற்ற விலங்கியல் ஆய்வாளர் சார்லெற் அலென்புறோக் (Charlotte Uhlenbroek)'asauriiga,615 Lair Gudgói (Talking with animals) GTGirgilb நூலை எழுதியுள்ளார். அதில், காதலனின் கருப்பையில் காயம் ஏற்பட்டதால் முட்டைகளை இடமுடியாத பெண் கடற்குதிரை, காயம் குணமாகும் வரை இரண்டு மாத காலம் காத்திருந்து கலவி செய்ததாக அலென்புறோக் வியப்புடன் பதிவு செய்திருக்கிறார். அந்தப் பெண் கடற்குதிரை வேறு எந்த ஆணிடமும் மையல் கொள்ளாமல், விபத்தின் வயப்பட்டிருந்த தன் இணையைத் தினமும் வந்து நலம் விசாரித்துச் சென்றிருக்கிறது. குழுப்புணர்ச்சிக் குணம் மிகுந்த விலங்குகளிடையே, கடற் குதிரைகளின் ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற இல்லறம் இன்னமும் உயிரியல் விஞ்ஞானிகளுக்குப் புலப்படாத ஒன்றாகவே இருக்கிறது.
அதிகம் காதல் வயப்படும் கடற்குதிரைகளுக்கு இன்று அதுதான் அதிக ஆபத்தைத் தேடித் தருவதாக ஆகியுள்ளது. அருவமாகவோ, உருவமாகவோ உலகின் அத்தனை உயிரிகளுக்கும் ஆபத்தாய் வருவது மனிதன்தானே. மற்றைய விலங்குகளுக்கு வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்களைப் புணர்ச்சிப் பருவமாக ஒதுக்கிக் கொடுத்த இயற்கை, மனிதனுக்கு வருடம் பூராவுமே கலவியில் நாட்டத்தைக் கொடுத் திருக்கிறது. இயற்கை தவறு விட்டிருந்தால் அநேகமாக அது இதுவாகத் தான் இருக்கும். பாலியல் நினைவுகள் எப்போதுமே மனிதனைப் பிடரியில் உந்துகிறது. கடற்குதிரைகள் கலவியில் ஈடுபடுவதற்குச் சில தினங்கள் முன்பிருந்தே சரசமாடி உளவியல் ரீதியாகத் தயார் செய்கின்ற
242
பொ.ஐங்கரநேசன்
சங்கதி அவனுக்குத் தெரிய வந்ததுமே, பாலுணர்வைத் தூண்டும் கடற்குதிரை லேகியங்கள் சந்தைக்கு வந்துவிட்டன.
மக்கள் தொகையில் எல்லோரையும் முந்திவிட்ட சீனர்களின் பாரம்பரிய மருத்துவத்தில் கடற்குதிரைகளின் பங்கு பெரியது. ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை போன்றவற்றுடன், ஆஸ்துமாக கொலஸ்திரோல், கண்டக்கழலை தைரோயிட்டு), சிறுநீரகக் கோளாறு களுக்கும் சிகிச்சையளிக்கக் கடற்குதிரைகளைப் பொடி செய்து பயன் படுத்துகிறார்கள். இதற்காக சீனா மட்டுமல்ல, சீனர்கள் அதிகமாக வாழுகின்ற தாய்வான், சிங்கப்பூர், மலேசியா, ஹொங்கொங் போன்ற நாடுகளும் மிகப்பெருமளவில் உலர் கடற்குதிரைகளைக் கறுப்புச் சந்தையில் இறக்குமதி செய்கின்றன. ஹொங் கொங்கில் ஒரு கிலோ உலர்ந்த கடற்குதிரை, அவற்றின் தரத்தைப் பொறுத்து 1200 அமெரிக்க டொலர்கள் வரை விலைபோகிறது. பாரம்பரிய மருத்துவச் சந்தைக்கு என்றே ஆண்டுதோறும் ஏறத்தாழ 56 மெற்றிக் தொன் எடையுள்ள 20 மில்லியன் கடற் குதிரைகள் சாகடிக்கப்படுவதாகப் புள்ளவிபரங்கள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் சீன பாரம்பரிய மருத்து வத்தை அங்கீகரித்திருப்பதால், வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம். இது தவிர, அலங்கார வளர்ப்புக்கென்றும் ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கடற்குதிரைகள் பிடிக்கப்படுகின்றன. இதில் பெரும்பங்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இப்படி அளவுக் கணக் கின்றிக் கடற்குதிரைகளை நுகர்வது, கடலில் அவற்றின் இருப்பையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது.
கடலில் நஞ்சுகளைக் கழிப்பதாலும், கட்டுப்பாடில்லாத மீன்பிடி முறைகளாலும், ஏற்கனவே பல மீன்களைத் தொலைத்தாகிவிட்டது. வர்த்தக ரீதியாக மீன்களில் பிரபலமான, மத்தி (Tuna) உட்பட 40 வகையான மீன் இனங்களைக் காண்பது இப்போது அரிதிலும் அரிதாக உள்ளது. இதேநிலை நீடித்தால் 2048 ஆம் ஆண்டளவில் கடலில் மீன்களே இருக்காது என்று அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'சயன்ஸ்' (Science-Nov. 2006) அறிவியல் இதழில் பேராசிரியர் போறிஸ் வேர்ம் (Boris Worm) எழுதிய ஆய்வுக் கட்டுரையொன்றில் எச்சரிக்கப் பட்டுள்ளது. இது, வெறும் மிரட்டல் அல்ல. உலகின் பாதுகாக்கப் பட்ட 48 கடற்பிராந்தியங்களில் ஆயிரம் ஆண்டுகாலக் கடலியல் வரலாற்றை, நான்கு ஆண்டுகளாக ஆய்வு செய்தே இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. அமுதசுரபிகளாகக் கருதப்பட்ட மீன்களுக்கே இந்தக்கதி என்றால் கடற்குதிரைகள் எம்மாத்திரம்?
243
Page 124
ஏழாவதுஉஊழி
கடற்குதிரைகள் பிற மீன்களைப் போன்றவை அல்ல. ஆயுள் குறைந்தவை. சிறிய இனங்கள் ஒரு வருடம் வரையிலும் பெரிய இனங்கள் மூன்று வருடங்கள் வரையிலும் உயிர்வாழுகின்றன. பாலியல் முதிர்ச்சி எய்துவதற்கு ஒரு வருடம் ஆகிறது. சோடி சேர்வதில் இணை மாறாத விசுவாசமான உறவு. பிள்ளைப் பராமரிப்பிலும் அதிக நாட்கள் செலவிடுவதால் மீண்டும் கருத்தரிப்பதற்கான இடைவெளி அதிகமாக வுள்ளது. இதனால் ஒரு காதல் சோடியினால் ஒரு வருடத்துக்கு உச்ச பட்சமாக ஆயிரம் குட்டிகளுக்கு மேல் பெற்றெடுக்க முடியவில்லை. இலட்சக்கணக்கான குஞ்சுகளைப் பொரிக்கும் ஏனைய மீன்களுடன் ஒப்பிடுகையில் இது சாதாரணம். இதனாலேயே கடற்குதிரைகளால் மனிதனின் அளவுக்குமீறிய நுகர்வுக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பெருவாரியக் கடற்குதிரைகள்துள்ளித்திரிந்த இந்தியா, இந்தோனேசியா. பிலிப்பைன்ஸ், தாய்லாந்துக் கடல்களில் ஐந்து வருடங்களில் 25 தொடங்கி 75 விழுக்காடுகள் குதிரைகள் காணாமல் போயிருப்பதாக இந்தியாவின் தேசியக் கடலியல் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த ஆர். ஏ. பூரீபாதா என்பவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச இயற்கை மற்றும் இயற்கை வ.ப பாதுகாப்பு ஒன்றியம் (International Union for the Conservation of Nature and Natural Resources - IUCN) கடற்குதிரைகளைத் தனது சிவப்புப் பட்டியலில் ஆபத்திலுள்ள விலங்குகளாக அறிவித்துள்ளது. அழிந்து வரும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வாணிப உடன்படிக்கை (Conventiononinternational Trade in Endangered Species of Wild Fauna and Flora-CITES) 5L. pg560J gaOTi56061T அளவுகடந்து அறுவடை செய்வதைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டமூல மொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகக் கானுயிர் நிதியம், சர்வதேச அளவில் இடம் பெற்றுவரும் உயிரினங்களின் கடத்தலைக் sadorassroof isoalaoT sco, pip1616073605 (Trade Records Analysis of Flora and Fauna in Commerce - TRAFFIC) d coastdisugirangi. g6/6/66) LDL lib, கடற்குதிரை இனங்களின் தெளிவான விபரங்கள் அடங்கிய கையேடு ஒன்றைத் தயாரித்து உலக நாடுகளின் சுங்கப்பகுதிகளுக்கு வழங்கி யுள்ளது. ஆனால், இந்தச் சட்ட திட்டங்கள் எதுவும் கடற்குதிரைகளின் வர்த்தகத்தைப் பெரிய அளவில் தடுத்ததாகக் தெரியவில்லை.
சர்வதேச ரீதியில் கடற்குதிரை வர்த்தகத்தில் 77 நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இறக்குமதியில் சீனாவுக்கு முதலிடம் எனில் ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் வனஉயிர்ப் பாதுகாப்புச் சட்டம் 1972 இன் அட்டவணை 1இல் அழியும் ஆபத்திலுள்ள
244
பொ. ஐங்கரநேசன்
உயிரினங்களின் பட்டியலில் கடற்குதிரைகள் இடம்பெற்றுள்ளன. கடற்குதிரைகளைப் பிடிப்பது சட்டபூர்வமாகத் தடை செய்யப் பட்டுள்ளது. எல்லாம் ஏட்டளவில்தான். 2007 பெப்ரவரியில் தூத்துக்குடியிலிருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தப்படவிருந்த 50 கிலோ எடைகொண்ட கடற்குதிரைகளைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஆகஸ்ட் 2006இல் சென்னை சர்வதேச விமானநிலையத்தினுள் அநாதரவாகக் கிடந்த பொதியொன்றினுள் 10 கிலோ எடையுள்ள கடற்குதிரைகளைச் சுங்கத்துறையினர் கைப்பற்றி யுள்ளனர். இது சிங்கப்பூருக்கோ, கோலாலம்பூருக்கோ கடத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இன்னுமொரு தடவை, ஜூலை 2004 இல் சென்னைத் துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூருக்குச் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பலில் சந்தேகத்திற்கிடமான பொருளொன்று கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, கப்பல் சென்னைத் துறைமுகத்திற்குத் திரும்பி அழைக்கப்பட்டது. அதில் மிளகாய் வற்றல் மூட்டைகளுக்குக் கீழே சர்வதேசச் சந்தையில் ரூபா 13 கோடி பெறும் 2.24 தொன்கள் உலர வைக்கப்பட்ட கடற்குதிரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உலர்ந்த கடற்குதிரைகளின் வாடையை மறைப்பதற்காகக் கடத்தல்காரர்கள் சாதுரியமாக மிளகாய் வற்றலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவையெல்லாம் எப்போதாவது வெளித் தெரியவருகின்ற சில உதாரணங்கள்தாம். ஆண்டுதோறும் குறைந்த பட்சம் 3.6 தொன்கள் எடையுள்ள 1.3 மில்லியன் கடற்குதிரைகளாவது இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இது, கடற்குதிரை வியாபாரத்தில் 30 விழுக்காடு.
இந்தியாவில் கடற்குதிரைகளின் வேட்டைக்காடாக மன்னார் வளைகுடா திகழுகின்றது. இந்தியா - இலங்கைக்கு இடையே சேதுத்திடலின் தென்பகுதியிலுள்ள கடலே மன்னார் வளைகுடா (Gulf of Mannar) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலகின் உயிர்ப் பல்வகைமை மிக்க கடற்பிராந்தியங்களில் இதுவும் ஒன்று. 10 வகைத் திமிங்கிலங்கள், 2 வகை டொல்பின்கள், ஒரு வகைக் கடற்பசு, 5 வகை ஆமைகள், 6 வகை முத்துச்சிப்பிகள், 56 வகை நண்டுகள், 450 வகை மீன்கள், 104 வகையான பவளப்பாறைகள், 12 வகையான கடற்புற்கள். என்று 3600க்கும் அதிகமான உயிரினங்கள் இங்கு காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய மீன் பிடியின் அளவு சராசரியாக, ஒரு வருடத்தில் சதுரகிலோமீற்றருக்கு 9
245
Page 125
ஏழாவது ஊழி
தொன்கள் ஆகும். மன்னார் வளைகுடாவில் வெகு அதிகம் - 14 தொன்கள். அந்த அளவுக்கு மன்னார் வளைகுடா செழிப்புமிக்கது. இதனால், தூத்துக்குடியிலிருந்து இராமேஸ்வரம் வரையுள்ள 21 சிறிய பவளத் தீவுகளை உள்ளடக்கிய பிரதேசத்தை இந்திய அரசு பாதுகாக்கப்பட்ட கடற்பூங்காவாக அறிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் முதலாவது கடற்பூங்கா என்ற பெருமையைப் பெற்றி ருக்கும் இங்கு பவளப்பாறைகளின் குடை நிழலிலும், கடற்புற்களின் படுக்கைகளிலும் 25 வகையான கடற்குதிரை இனங்கள் குடித்தனம் செய்கின்றன. சமீபத்தில்கூட புதிய கடற்குதிரை இனமொன்றைத் தூத்துக்குடியிலுள்ள மீன் வள ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது. 1986 இல் மன்னார் வளைகுடாவைத் தேசியப் பூங்காவாகப் பிரகடனம் செய்த இந்திய அரசு, இதுகாலம் வரையில் கண்காணிப்பைப் பலப்படுத்த எதுவும் செய்யாதது கடத்தல்காரர்களுக்குப் பொக்கிசத்தில் கைவைக்க வாய்ப்பாக உள்ளது.
மன்னார் வளைகுடாவின் இன்னொரு முனையிலுள்ள இலங்கைத்தீவின் கரைகளிலும், கடற்குதிரைகளின் பாடு திண்டாட்டம் தான். இலங்கையில் காணப்படக்கூடிய 21 கடற்குதிரை இனங்களும் சிவப்புப்பட்டியலிலேயே உள்ளன. இருந்தபோதும், இலங்கை இன்னமும் கடற்குதிரைகளின் வாணிபத்தில் ஈடுபடும் நாடுகளில் ஒன்றாகவே உள்ளது. இலக்குடன் பிடிக்கப்படும் கடற்குதிரைகளைவிட, பொருத்தமற்ற மீன்பிடி வலைகளில் உப பிடிபாடுகளாகச் (By Catch) சிக்கி உயிர்விடும் கடற்குதிரைகள் இங்கு அதிகம். இக் கட்டுரைக்கான தரவுகளைத் திரட்டும் நோக்குடன் மத்திய சுற்றாடல் அதிகாரியான நண்பர் தி. திருக்குமரனுடன் மார்ச் 2006இல், யாழ்ப்பாணம் காக்கைதீவுக் கடற்பகுதிக்குச் சென்றிருந்தேன். ஏ. 9 பாதை மூடப் படாததால் தென் இலங்கைக்கு அனுப்புவதற்கென பெருமளவு இறால்களைப் பிடித்துக் கரையிலேயே உலர்த்திக் கொண்டிருந்தார்கள். உலக அளவில் நுகரப்படும் கடல் உணவில் கடல்களில் பிடிக்கப்படும் இறால்களின் பிரதிநிதித்துவம் 2 விழுக்காடு மட்டுமே. ஆனால், கடலில் இறால் பிடிப்பில் மூன்றிலொருபங்கு இறால்கள் அல்லாத உப பிடிபாடுகள்தான். பெருவாரியான கடற்குதிரைகளும் இறால்களோடு சேர்ந்து காய்ந்து கொண்டிருந்தன. கடற்குதிரைகளின் உயிரியல், வணிக முக்கியத்துவம் தெரியாத அந்த உள்ளூர் மீனவர்கள், யாரோ ஒருவர் வந்து கடற்குதிரைகளைப் பொறுக்கிச் சென்று அங்கு நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினர் வசம் வழங்கிவருவதாகச்
246
பொ. ஐங்கரநேசன்
சொன்னார்கள். அன்றாடம் ஆட்கடத்தல்கள், துப்பாக்கிச் சூடுகள் என்று அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்ற மண்ணில் கடற்குதிரைகளின கடத்தல் பற்றிச் சிந்திப்பதற்கு எவரால் இயலும்?
கடற்குதிரைகள் ஒரு வகையில் இராணுவத்தின் கவச வாகனங்களை ஞாபகப்படுத்துபவை. இவற்றின் வாயிலிருந்து வால் வரை எலும்புகள் இணைந்து கவசம் போல மூடியிருக்கும். அசைவியக்கம் குறைந்த இந்தப் பிராணிகள் கடல் விலங்குகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றும் பொருட்டு இயற்கை செய்து கொடுத்த ஏற்பாடுதான் இது. ஆனால், உலகின் எல்லா உயிரினங்களைப் போலவுமே கடற் குதிரைகளினாலும் தங்களை மனிதனிடம் இருந்து மட்டும் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.
247
Page 126
25
கேட்குமா இனித்
தவளைச் சத்தம்?
இயற்கை எதையுமே வீணாகப் படைப்பதில்லை"
- அரிஸ்டாட்டில் (கிமு 384 - 322)
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் ஒதுக்குப் புறமான அடர்காட்டுப் பகுதியொன்றிலிருந்து அப்போதுதான் கண்டறியப் பட்ட தவளை இனமொன்றை நீரில்லத்தில் வைத்துக் கண்காணித்து வந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியம் தாளமுடியவில்லை. ஏற்கனவே, ஒன்றன் விரலை இன்னொன்று தொட்டவாறு வளையம் போல மிதந்து வித்தைகாட்டிய தவளைகள் இப்போது இன்னுமொரு ஆச்சரியத்தை அரங்கேற்றின. தண்ணீரின் மேற்பரப்புக்கு வந்த பெண் தவளையொன்று விருத்தி முற்றுப் பெறாத தன் குஞ்சுகளை -வாற் பேய்களை - ஒரு மாய வித்தைக்காரன் போலத் தனது வாய்க்குள்ளிருந்து ஒவ்வொன்றாக வெளியே துப்பிக் கொண்டிருந்தது.
வியப்பு மேலிட, தவளையைச் சோதித்துப் பார்த்ததில், இரைப் பையில் இன்னும் சில வாற்பேய்கள் பிரசவத்துக்குத் தயாராக இருந்தன. இயற்கையின் சூட்சுமம் புரியத்தொடங்க, யுரேகா. யுரேகா எனக் கூவிய ஆக்கிமெடிஸின் குதூகலம் இந்த இயற்கை விஞ்ஞானிகளிலும் தொற்றிக்கொண்டது. இயற்கையை நம்பி, முட்டைகளை 'அம்போ என்று தண்ணிரில் வீசிவிட்டுப் போகும் தவளைகளின் மத்தியில், கருமுட்டைகளை விழுங்கி அவை தலைப் பிரட்டைகள் (வாற்பேய்) ஆகும் வரை இரைப்பைக்குள் பொத்தி அடைகாக்கும் இந்த விசித்திர மான கவனிப்பு இதுவரையில் தவளைகளில் மட்டுமல்ல; முது கெலும்புப்பிராணிகள் எதிலுமே அவதானிக்கப்படாத ஒன்று. உயிரின வரலாறு உற்சாகம் ததும்ப இந்தப் புதிய தவளை இனத்தைப் (Gastric breeding Frog -Rheobatrachus) பதிவு செய்து கொண்டது. - இது நடந்தது 1973 இல்,
ஆய்வுகள் இப்போது இயற்கை விஞ்ஞானிகளிடம் இருந்து மருத்துவ விஞ்ஞானிகளுக்குக் கைமாறியது. விழுங்குகின்ற எதையுமே
248
பொ. ஐங்கரநேசன்
உருக்குலைத்துக் கூழாக்கி விடும் வீரியம் கொண்ட இரைப்பை நொதிகள் ஒரு ஆறு வார காலத்துக்கு - முட்டைகள் தலைப் பிரட்டை கள் ஆகும் வரை - எப்படித் தமது சமிபாட்டுத் தொழிலை மறந்து போகின்றன? முட்டைகளை ஊறு செய்யாமல் அதன் அடைகாத் தலுக்குத் துணை போகின்றன? இரைப்பையில் கருமுட்டைகளைச் சுமக்கும் புதிய தவளை இனத்தின் இந்த உடற்றொழிலியல் மாற்றத்துக் கான புதிரை விடுவிப்பதன் மூலம், குடலையே குடல் சாப்பிடும் மனிதனின் குடற்புண் நோய்க்குத் (அல்சர்) தீர்வுகாண மருத்துவ விஞ்ஞானிகள் முயன்றனர். ஆனால் மனிதர்களுக்குக் கற்றுத் தருவதற்கு ஏராளமானவற்றைக் கொண்டிருந்த தவளை இனம் ஆய்வுகளின் நடுவிலேயே அழிந்து போய்விட்டது. அவுஸ்திரேலியாவில் மட்டுமே பெரும் எண்ணிக்கையில் காணப்பட்ட அந்த புதிய இனத் தவளைகள் காப்பகங்களிலேனும் இல்லாத அளவுக்கு பூமியிலிருந்து முற்றாகவே மறைந்து போய்விட்டன - இது நடந்தது 1981 இல்.
மனிதனுக்குத் தெரிய வந்து ஒன்பதே வருடங்களில், எந்தச் சுவடையும் விட்டுவைக்காமல் மறைந்து போன இந்த அற்புதத் தவளை இனம் தவளைகள் எதிர் கொண்டுவரும் அச்சுறுத்தல்களுக்கு ஒரு உதாரணம்தான். கிழக்கு அவுஸ்திரேலியாவின் மலைப் பகுதிகளில் இருந்து மேலே குறிப்பிட்ட தவளை இனத்தைவிடவும், இன்னும் 13 இனங்கள் காணாமல் போய்விட்டிருக்கின்றன. கலிபோர்னியாவின் சியரா நிவாடா (Serra Nevada) பகுதிக்கு உரித்தான ஏழு இனங்களில் ஐந்தின் எண்ணிக்கை வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளன. கோஸ்ரா றிக்காவின் (Costa Rica) தேசியப் பூங்காவில் இருந்த 50 உள்நாட்டுத் தவளை - தேரை இனங்களில் 20 இனங்கள் வரையில் 1987 கணக் கெடுப்பில் பதிவாக முடியாதபடி அழிந்து போயுள்ளன. இவற்றுள், உயிர் என்பதற்கும் மேலாக ஒர் ஆபரணமாகவே ஜொலித்து வந்த சிவப்பும் பொன் நிறமும் கலந்த தங்கத்தேரை இனம் ஒன்றும் (Costa Rican Golden toad - Bufo peroglences) gyLislb. l 9Gp6Faólaór gyu GvIT6öTLT ஒதுக்கிடத்தில் கோரஸ் பாடிக்கொண்டிருந்த 13 தவளை இனங்களில் இப்போது எட்டு இனங்களின் குரல் ஒலிப்பதேயில்லை. இப்படி, 1980 இல் இருந்து இயற்கையான வாழிடம் - ஒதுக்கிடம் என்ற வேறுபாடு இன்றி உலகம் பூராவுமே தவளைகள் - தேரைகள் - சலமான்டர்கள் என்று பெருவாரியான அம்பீபியாக்களைப் பூமி தொலைத்துக் கொண்டிருப்பதாக இயற்கை விஞ்ஞானிகள் கவலைதோயப் பதிவு செய்துள்ளனர்.
249
Page 127
ஏழாவது ஊழி
அம்பீபியாக்கள் (Amphibians) - பரிணாமத்தின் பாதையில் நீரில் இருந்து நிலத்துக்குக் குடிபெயர்ந்த முதல் முதுகெலும்புப் பிராணிகள். ஊரும், பறக்கும், பாலூட்டும் பிராணிகளின் பரிணாமத்துக்கு அடித்தளம் இட்டவை இவைதாம். தண்ணிருக்கும் தரைக்குமாகத் தாவித் திரியும் இந்த ஈரூடக வாழிகளில் சுமார் 5,000 இனங்கள் இதுவரையில் அறியப்பட்டுள்ளன. இதில் தவளைகளும் தேரைகளுமே மிக அதிகம், ஏறத்தாழ 4500 இனங்கள். பனிப்பாளங்கள் அடர்ந்த அண்டார்ட்டிகா தவிர, காடுகள் - புல்வெளிகள் - பாலைவனங்கள் - நன்னீர்ப்பரப்புகள் என்று உலகின் பெரும்பாலான சூழல் நிபந்தனை களில் வாழும் அம்பீபியாக்களில் அரைவாசி இனங்கள் மத்திய, மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன. வடக்கு அமெரிக்காவில் ஒரு மரத்தேரை இனம் (Rama Sylvatica) உறைய வைக்கும் கடும் குளிரிலும் தப்பிப் பிழைக்க வல்லது. அதன் உடலிலுள்ள நீரில் 65 விழுக்காடு பனியாகத் திண்மித்த பின்பும்கூட, உறையெதிர் பதார்த்தம் ஒன்றைச் சுரந்து மீதி நீரை உறையவிடாமல் தடுத்து உயிரைத் தக்க வைத்துக் கொள்கிறது. உலர் காடுகளிலுள்ள சில தவளை இனங்கள் தோலில் மெழுகு போன்ற சுரப்புக்களைப் பரவி வறட்சியைத் தாக்குப்பிடிக்கின்றன. 200 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றி, இடையில் டைனொசோர்களை அழித்தது போன்ற கடுமையான சூழற்காரணிகளையெல்லாம் தாண்டித் தப்பிப் பிழைத்த இந்த அம்பீபியாக்கள் இப்போது மட்டும் அழியத் தொடங்கியிருப்பதுதான் சுற்றுச் சூழலியலாளர்களைக் கலவரப்படுத்தியுள்ளது.
ஏன் இந்த அழிவு? "பூமியின் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்படத் தொடங்கியிருப்பதைக் காட்டும் ஓர் உயிர்க்குறிகாட்டி தான் (Bioindicator) அம்பீபியாக்களின் மறைவு' என்று அபாய அறிவிப்புச் செய்திருக்கும் சூழல் விஞ்ஞானிகள் அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டுள்ளார்கள். பிறந்த நீரையும் மறந்து விடாமல் புகுந்த நிலத்தையும் விட்டு விடாமல் தன் வாழ்க்கையைப் பூர்த்தி செய்வதற்கு நீரும் - நிலமும் என்று அல்லாடித் திரியும் அம்பீபியாக்கள், இரண்டில் எந்த ஒரு சூழல் பாதிக்கப்பட்டாலும் அழிந்து விடும் இக்கட்டான நிலையிலேயே உள்ளன. இந்த வாழிடங்களை மனிதன் அளவுக்கு மீறிச் சிதைக்க ஆரம்பித்திருப்பதுதான் அம்பீபியாக்களின் மறைவுக்கான பிரதான காரணங்களாய் இருக்கின்றன.
அநேக அம்பீபியாக்கள் காட்டுப் பிராணிகளாக இருப்பதால் காடழிப்பு அம்பீபியாக்களையும் அழிவை நோக்கி அழைத்துச்
25O
Page 128
ஏழாவதுஉஊழி
செல்கிறது. காடழிவினால் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பு, வளியில் ஈரப் பற்றுக் குறைவு போன்ற சீதோஷ்ண மாற்றங்களும் மற்றைய பிராணிகளை விடத் தோலினால் சுவாசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள அம்பீபியாக்களை மிக மோசமாகப் பாதிக்கின்றன. (தவளை, தேரைகளில் நுரையீரலுடன் உபரியாக அவற்றின் தோல் சுவாச உறுப்பாகப் பயன்பட பெரும்பாலான சலமான்டர்கள் தோலினால் மட்டுமே சுவாசிக்கின்றன. எப்போதுமே இந்தத் தோல் ஈரலிப்பாயும் மெல்லியதாயும் இருப்பது அவசியம்). பூமியில் இருந்து 14 மில்லியன் ஹெக்டயர் பரப்பளவுள்ள - கிறீஸ் நாட்டை விடவும் பெரிய அளவிலான - காடுகள் வருடந்தோறும் வழித்துத் துடைக்கப்படு கின்றன. அம்பீபியாக்களின் உலகப் பரம்பலில் அரிய இனங்களின் பிரதான வாழிடங்களில் ஒன்றாக இருக்கும் இலங்கையில் தாக்கம் வெளிப்படையாகவே தெரிகிறது. கடந்த 150 ஆண்டுகளில் 96 விழுக்காடு மழைக்காடுகள் அழிக்கப்பட்டுவிட வெறுமனே 750 சதுர கிலோமீற்றர் மழைக்காடுகளே எஞ்சியுள்ளன. மீந்திருக்கும் அடர் காடுகளில் இலங்கை, பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானிகள் குழு 1993ஆம் ஆண்டிலிருந்து தவளைகளைத் தேடி வந்தது. 2002ஆம் ஆண்டு நேச்சர் அறிவியல் ஆய்வேட்டில் இவர்கள் சமர்ப்பித்த கட்டுரையில் 100 புதிய தவளை இனங்கள் வரையில் கண்டறிந்ததாகத் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆச்சரியப்படும்படியாக இவற்றில் பல இனங்கள் தலைப்பிரட்டை களை உருவாக்காமல் நேரடியாகவே முட்டைகளிலிருந்து தவளைக் குஞ்சுகளைப் பிரசவிக்கின்றன. ஒரு தவளைப் புதையல் எனத் தங்கள் கண்டறிதலை அவர்கள் குறிப்பிட்டாலும், இதற்கு முன்னர் இலங்கையின் பதிவுகளிலிருந்த தவளை இனங்களில் பெரும்பாலான வற்றை அவர்களால் எங்கேயும் காணமுடியவில்லை.
இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளின் அம்பீபியன்கள் தொடர்பாக இதுவரையில் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்ப வில்லை. பொருண்மிய மதியுரையகம் வடக்குக் கிழக்கில் சூழல் முகாமைத்துவம் தொடர்பான சர்வதேசக் கருத்தரங்கு ஒன்றினை 2003ஆம் ஆண்டின் இறுதியில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் தவளைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றைப் படித்த யாழ் பல்கலைக்கழக விலங்கியல் துறையைச் சேர்ந்த செல்வி அ. பாலசுப்பிரமணியன் யாழ் குடாநாட்டில் தான் மேற்கொண் களஆய்வில் 13 அம்பீபியன் இனங்களை அடையாளம் கண்டதாகத்
252
பொ. ஐங்கரநேசன்
தெரிவித்துள்ளார். ஆனால் கண்டல்காடுகள் உள்ள தென்மராட்சி கிழக்குப் பகுதியில் பூரீலங்கா இராணுவம் நிலைகொண்டிருப்பதால் இவரால் அங்கு ஆய்வுகளை மேற்கொள்ள முடியவில்லை. அத்தோடு குடாநாட்டின் தவளை இனங்கள் தொடர்பான பழைய பட்டியல் எதுவும் இல்லாததால் அழிந்து போன இனங்கள் குறித்தும் சரியாக அறிந்துகொள்ள முடியவில்லை.
காடழிப்பைப் போலவே புற்தரைகள் ஆக்கிரமிக்கப்படுவதும், உலகின் பெரும்பாலான ஆறுகள் அணைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததும் அம்பீபியன்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளன. கலி போர்னியாவில் புல்வெளிகள் பண்ணைகளாலும் குடியிருப்புகளாலும் நிரவப்பட்டதால் சலமான்டர் இனமொன்றும் (Tiger Salamander), ஆறுகளுக்குக் குறுக்காகக் கணக்கற்று எழுந்துள்ள அணைகளால் ஏற்படும் வெள்ளப் பெருக்குகளாலும் வண்டல் படிவுகளாலும் அரோயோ (AToyo) தேரை இனமும் அழிவின் வளையத்துக்குள் இழுத்து வரப்பட்டுள்ளன.
வாழிடங்களின் இந்த அபகரிப்புகளுக்கும் அப்பால், அம்பீபியன் களின் வாழிடங்களில் நாம் சேர்ப்பித்து வரும் வேதி நஞ்சுகளும் அவற்றை வெகுவாகப் பலி கொண்டு வருகின்றன. இந்த அனர்த்தம் முதன் முதலில் 1995இல் அமெரிக்காவின் மினசோட்டாவில் கவனத்துக்கு வந்தது. வேளாண் பண்ணைகளுக்கு அணித்தாக உள்ள நீர்த்தேக்கங்களில் தவளைகள் மூன்று கால்கள், ஐந்து கால்கள், ஒற்றைக் கண் என்று குரூரமான உறுப்புத் திரிபுகளுடன் தத்தளித்தன. தாவிப் பாய இயலாமல் பாம்புகள், பறவைகளிடம் சுலபத்தில் இரையாகி மடிந்தன. இவற்றை விட மோசமான இன்னொன்றும் நிகழ்ந்தது. ஆண் தவளைகள் பெண் துணையை அழைக்கும் கலவிக் குரல் சுருதி மாறி கலகக் குரலாகவே ஒலித்தது. இதனால் பெண் தவளைகள் விலகிச் சென்றதில் இனவிருத்தி வீழ்ச்சி கண்டது. தவளைகளை ஆராய்ந்ததில் இத்தனைக்கும் காரணம் அமெரிக்கர்கள் பயன்படுத்தி வந்த அட்ராசின் (Atrazine) என்னும் களைகொல்லிதான் என்பது தெரியவந்தது.
நீருடன் கலக்கும், களைகொல்லிகள், பூச்சிகொல்லிகள் செயற்கை உரங்கள், தொழிற்சாலைக் கழிவுகள், அமில மழை போன்ற நச்சுவேதிகள் பொதுவாக உயிரினங்களை அச்சுறுத்துகின்ற போதிலும் அதை விடச் சற்று அதிகமாகவே அம்பீபியன்களைப் பாதிக்கின்றன. இதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. இவற்றின் மெல்லிய
253
Page 129
ஏழாவதுஉஊழி
தோல்களும், ஒடுகளற்ற முட்டைகளும் நச்சுவேதிகளின் ஊடுரு வலுக்குத் தடைசொல்ல முடியாதவையாயே உள்ளன. குடிநீரில் இருக்கலாம் என அங்கீகரிக்கப்பட்ட குறைந்தளவு நைத்திரேற்றுக்கள் கூடப் பல அம்பீபியா இனங்களுக்கு விஷமாகவே உள்ளன. அமெரிக்காவின் புள்ளித் தவளை இனம் (Oregon SpotedFrog) தொலைந்தது நைத்திரேற்றுகளால்தான். இந்த மெல்லிய தோலுடலிகளை இயற்கை யும் வஞ்சிப்பதாயே உள்ளது. துருவப் பகுதிகளில் ஒசோன் படலம் தேய்வுறுவதும், தவளை - தேரை இனங்களின் இனப்பெருக்கமும் துர்அதிர்ஷ்டவசமாக ஒரே காலப் பகுதியிலேயே நிகழ்வதால், அப்போது ஊடுருவும் அதிஊதாக் கதிர்கள் ஒடுகளற்ற முட்டைகளைச் சாகடித்து விடுகின்றன.
இவை எல்லாவற்றையும்விட, சமீப ஆண்டுகளாக உலகம் பூராவுமே தவளை - தேரை இனங்கள் 'கைற்றிட்' என்னும் பங்கசுவின் தொற்றுதலுக்கு ஆளாகிப் பெருவாரியாக இறக்கத் தொடங்கியிருப் பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆபத்தில் இருந்து பனாமாவின் தேசிய விலங்கான தங்கத்தேரை இனம்கூட (Atelopus zetek)தப்ப முடியவில்லை. அம்பீபியன்களின் உலகில் அபூர்வமான இனம் இது. எல்லாத் தேரைகளைப் போலவுமே இணையைத் தேடுவதற்கு உரத்துக் குரலெழுப்பினாலும், எங்கே கேட்காது போய்விடுமோ என்ற ஐயுறவில் சைகை செய்வது போன்று முன்கால்களை உயர்த்திக் காட்டியும் இணையின் கவனத்தை ஈர்க்கிறது. முன்னர் இவை வாழ்ந்த இடங்களில் நீர் அலைகளின் சத்தம் மிகுதியாக இருந்து அவை எழுப்பும் கூக்குரல் அமுங்கிப் போனதால், மேலதிகமாக இந்தக் கையசைக்கும் இயல்பூக்கம் விருத்திபெற்றிருக்கலாம். பிரகாசமான மஞ்சள் தேரையைத் தங்களது அதிர்ஷ்டப் பிராணியாக பனாமா வாசிகள் கொண்டாடுகின்றனர். பனாமா அரசு வெளியிடும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டுகளில் இதன் உருவம் பொறிக்கப்படுகிறது. ஆனால், தேரைக்கு மட்டும் இப்போது துரதிர்ஷ்ட காலம். பங்கஸ் நோய் தாக்கியதில் அழியும் நிலைக்கே போய்விட்டது.
கொள்ளைநோய் போல அம்பீபியாக்களைக் கொன்று குவித்து வரும் கைற்றிட் (Chytrid) ஒன்றும் புதியது இல்லை. ஆனால், இது கால வரையில் தாவரங்களிலும் பூச்சிகளிலும் மட்டுமே கைவரிசையைக் காட்டி வந்த கைற்றிட் பங்கசுக்கள் இப்போது முதன் முதலாக முதுகெலும்புப் பிராணிகளான அம்பீபியாக்களை ஏக காலத்தில் தாக்க ஆரம்பித்திருப்பதுதான் சூழல் விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்
254
பொ. ஐங்கரநேசன்
கியுள்ளது. தட்ப - வெப்ப மாற்றங்களும், அதிஊதாக் கதிர்களின் ஊடுருவலும் அம்பீபியாக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து விட்டிருப்பதாலேயே இலகுவில் கிருமிகளின் தொற்றுதலுக்கு ஆளாகுவதாக நம்பப்படுகிறது.
பிற இடங்களில் இருந்து தருவிக்கப்பட்ட அந்நிய உயிரினங் களால் உள்ளூர் அம்பிபியன்கள் அழியும் உதாரணங்களும் பதிவாகி யுள்ளன. கலிபோர்னியாவின் சான்ரா மொனிக்காவில் நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்காக 'கம்பூசியா (Gambusta) மீன் இனம் அறிமுகப் படுத்தப்பட்டது. சாப்பாட்டுப் பிரியர்களான இவை நுளம்புகளை அதிகமாகவே சாப்பிட்டுவிட, கடைசியில் ஆகாரம் இல்லாமல் அப்பகுதிகளில் உள்ள அம்பீபியன்கள் (Californianewt, Pacific Frog) வெகுவாகக் குறைய ஆரம்பித்து விட்டன. இது போதாதென்று கம்பூசியா, நுளம்புகளுக்கு நிகராக தவளைகளின் முட்டைகளையும் தலைப் பிரட்டைகளையும்கூட வேட்டையாடி வருகின்றது. இயற்கையை அதன் போக்குக்கு விடாமல் மனிதன் தன் விருப்பத்துக்கு இடம் மாற்றியதில் தவளைகளே தவளைகளுக்கு எமனாகவும் மாறி விட்டுள்ளன. அமெரிக்காவில் இருந்து பல நாடுகள் உணவுக்காகத் தருவித்து வளர்த்த தவளை இனமொன்று (Bulfog-Rana catesbelana) 20 சென்ரி மீற்றர் நீளமும் அரை கிலோ எடையும் கொண்டது. இந்த மண்டூகம் எதிர்ப்பட்ட உள்ளூர் அம்பீபியன்களையெல்லாம் விழுங்கித் தீர்த்து வருகிறது.
அம்பீபியாக்களின் அழிவு வெறுமனே. ஒரு சில இனங்களின் மறைவு அல்ல. மாறாகச் சூழற்தொகுதிகளின் நிலைத்தலுக்குத் தண்ணிரில் தலைப்பிரட்டைகள் முதல் தரையில் தவளைப் பருவம் வரை அம்பீபியாக்களின் வகிபாகம் இன்றியமையாதது ஆகும். தலைப் பிரட்டைகள் நீரில் மிதக்கும் அல்காத் தாவரங்களை உணவாக்கி அவற்றின் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் தண்ணிரில் ஒட்சிசன் வாயுவின் அளவைப் பேணி வருகின்றன. தவளைகள் இல்லாத ஏரி, குளங்களில் அல்காக்கள் பெருகி மூடி மறைப்பதால், அடிஆழத்தில் உள்ள தாவரங்களின் ஒளிச் சேர்க்கை பாதிக்கப்பட்டு விடுகிறது. ஒளிச் சேர்க்கை உணவை மட்டுமல்ல; உலகின் சுவாசத்துக்குப் பிராண வாயுவைத் தரும் பிரதான வேதிவினை மாற்றமும் இதுதானே. இதனால், நீரில் ஒட்சிசன் குறையத் தொடங்க. கடைசியில் அந்த நீர்ச் சூழலே இறந்து போய்விடுகிறது.
255
Page 130
ஏழாவது2ஊழி
தண்ணிரில் அம்பீபியாக்களிடம் அல்காக்களின் கட்டுப்பாட்டை ஒப்படைத்த இயற்கை, தரையில் அவற்றிடம் பூச்சிகளின் கட்டுப் பாட்டை ஒப்படைத்திருக்கிறது. அம்பீபியாக்களின் பிடித்தமான உணவு பூச்சி, புழுக்களாக இருப்பதால் இயற்கையான பீடை கொல்லிகளாகப் பணியாற்றுகின்றன. 1000 தவளைகள் கொண்ட ஒரு சிறு குளம் வருடமொன்றுக்கு 4.8 மில்லியன் பூச்சிகளை அழிக்கப் போதுமானது. இந்தியாவும், வங்காளதேசமும் தவளைக் கால்களை உணவாக ஜப்பானியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் ஏற்றுமதி செய்த காலப் பகுதிகளில் - தவளைகள் அளவுக்கு அதிகமாக அறுவடை செய்யப் பட்டு விட - அங்கு பயிர்களின் உற்பத்தி மிக மோசமாகப் பாதிக்கப் பட்டதோடு, மலேரியா கட்டுக்கடங்காமல் பெருகியதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்தே 1979 இல் இந்தியாவும் 1990 இல் வங்காளதேசமும் தவளை ஏற்றுமதிக்குத் தடை விதித்தன. ஆனால், இன்றளவும் இந்தோனேஷியாவில் ஆண்டுதோறும் மில்லியன்
கணக்கான தவளைகள் ஏற்றுமதிக்காகக் கொல்லப்பட்டு வருகின்றன
தண்ணீரில் அல்காக்களையும் தரையில் பூச்சிகளையும் உணவாக்கும் இந்த அம்பீபியன்கள் தாமும் பிற விலங்குகளுக்குப் பெருமளவில் உணவாகின்றன. சில பாம்பு இனங்களுக்குத் தவளை களும் தேரைகளும் மட்டுமேதான் உணவு. பறவைகள், பாலூட்டி களுடன் ஒப்பிடும்போது உணவை உடல் இழையங்களாக மாற்றும் ஆற்றல் அம்பீபியன்களுக்கு அதிகமாகவே உள்ளது. இதனால் ஒளிச்சேர்க்கையின் மூலம் சூழற்தொகுதியினுள் நுழையும் சக்தியில் கணிசமான பங்கு இவற்றின் ஊடாகவே உணவு வலைக்குள் நகர்த்தப்படுகின்றன. இவற்றின் ஈரூடக வாழ்வுத் தன்மையினால் தண்ணீருக்கும் தரைக்குமான ஒரு 'போசணைப் பாலம் (Nutrient bridge) ஆகவும் தொழிற்படுகின்றன.
அம்பீபியாக்களிடம் இன்னுமொரு அதிசயம் புதைந்து கிடக்கிறது. மெல்லிய தோலினூடாக நுழையும் கிருமிகளை அழிக்கவல்ல நுண்ணுயிர்க் கொல்லி இரசாயனங்கள் தொடங்கி, உணவாக்க வரும் இரைகெளவிகளை விரட்டவென கடும் நஞ்சுகள் வரைக்கும் ஏராளமான இரசாயனங்களைப் பொத்தி வைத்திருக்கின்றன. நஞ்சுகளின் வீரியத்தைச் சாதாரணமாக எண்ணிவிடவேண்டாம். பனாமாவின் தங்கத்தேரை ஒன்றில் இருந்து கசியும் நஞ்சின் மூலம் 90 மனிதர்களைக் கொன்று விடமுடியும். "நாங்கள் ஆபத்தானவர்கள். கிட்ட வராதே" என்று எதிரிகளை எச்சரிக்கும் விதமாக நஞ்சுகளைக்
256
பொ. ஐங்கரநேசன்
கொண்டிருக்கும் இனங்கள் கடும் சிவப்பு, மஞ்சள் என்று பிரகாசமான நிறங்களில் ஒளிர்கின்றன. இந்த நச்சுகள்ை வேட்டையாடிகள் அம்பு நுனி விஷமாகவும், பழங்குடிகள் பாரம்பரிய மருந்துகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். நவீன மருத்துவமும் தவளை நஞ்சுகளிலிருந்து வலி நிவாரணிகளைத் தயாரிக்க முயன்று வருகிறது. இந்த வலி நிவாரணிகள் "மோர்பினை (Morphine) விடவும் வீரியம் மிக்கதாகவும், மோர்பினைப் போலப் போதை தராதவை யாகவும், பக்க விளைவுகள் அற்றவையாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
இயற்கை தன் சமநிலைக்கு அம்பீபியன்களின் பணி அவசியம் என்பதாலேயே, எதிரிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இந்தப் பலமற்ற அப்பாவிப் பிராணிகளை ஒரு நடமாடும் இரசாயனத் தொழிற்சாலையாகவே ஆக்கிவைத்திருக்கிறது. ஆனால், மனிதப் பிராணிகளின் சூழல் விரோதப் போக்கு ஒட்டு மொத்த அம்பீபியன் களையுமே இன்று அழிவின் விளம்பில் நின்று குரல் கொடுக்க வைத்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அம்பீபியாக்களின் ரசிக்கும் படியில்லாத தோற்றம், தொட்டவுடன் பாய்ச்சும் சிறுநீர், இரவுநேரக் கூச்சல் சமுகத்தில் இவை பற்றிய பாராமுகத்தை உருவாக்கிவிட்டிருப்ப தால் ஒரு புலியைப் போல, ஒரு திமிங்கிலக் குட்டியைப் போல சூழல் அரசியலில் இவற்றினால் இன்னமும் உரிய கவனிப்பைப் பெற இயலவில்லை.
257
Page 131
26
ஆசியாவின் கடைசிச் சிங்கங்கள்
"காட்டுயிரிகளில் கொடியது ஏதுமில்லை. மற்றைய உயிரினங்களைப் பொழுதுபோக்குக்காகவும், விருதுகளுக் காகவும், பொருளிட்டவும் பெருமளவில் தாக்கி அழித்தது மனிதர்கள்தாம்."
- சு தியடோர் பாஸ்கரன் (சூழலியல் ஆய்வாளர் - தமிழ்நாடு)
சிங்கங்களை ஆபிரிக்கக் கண்டத்துக்கு உரித்தான விலங்குகள் என்றுதான் பெரும்பாலானோர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. ஆசிய நாடுகளிலும், மேற்கே பாலஸ்தீனம் முதல் கிழக்கே இந்தியாவில் பாலமு வரைக்கும் சிங்கங்கள் ராஜாக்களாகக் கோலோச்சிய காலமும் ஒன்று இருந்தது. இருநூறு வருடங்களுக்கு முன்புவரைகூட பாலமுவில் (தற்போதைய ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு மாவட்டம்) சிங்கங்கள் உலாவித் திரிந்துள்ளன. அவை எல்லாம் மனிதர்களினால் கொன்றொழிக்கப்பட்டு, இப்போது இந்தியா வின் கிர் சரணாலயத்தில் மாத்திரம் 300 தொடங்கி 350 வரையான சிங்கங்கள் தஞ்சம் அடைந்திருக்கின்றன. இவற்றின் கர்ச்சனையும் அபயம் வேண்டிய ஈனஸ்வரமாகவே ஒலிப்பதால் சிங்கங்கள் ஆபிரிக்காவின் அடையாளம் என்பதுபோல ஆகிவிட்டது.
பூனைக் குடும்பத்தின் பெரும்பூனைகளான சிங்கங்களில் ஆபிரிக்காவில் வாழ்பவை ஆபிரிக்கச் சிங்கங்கள் எனவும், ஆசியாவில் வசிப்பவை 'ஆசியச் சிங்கங்கள்' எனவும் அழைக்கப்படுகின்றன. வாழிடங்களின் அடிப்படையிலான இந்த வகைப்படுத்தல் மேலோட்ட மானதுதான். ஆபிரிக்கச் சிங்கங்களிடையே வித்தியாசங் களைக் கொண்ட ஏழு உபஇனங்கள் இருப்பது அறியப்பட்டுள்ளது. ஆசியச் சிங்கங்களில் தனித்த ஒரேயொரு உபஇனம் மட்டுமே உண்டு. அறிவியல் மொழியில் இதற்கு, இது முன்னர் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்ட பெர்ஸியாவை (தற்போதைய ஈரான்) நினைவிருத்தும்
258
பொ. ஐங்கரநேசன்
விதமாக Panthera le0 persica' எனப் பெயரிட்டுள்ளார்கள். ஆசியச் சிங்கங்களை ஆபிரிக்கச் சிங்கங்களிலிருந்து சுலபமாக வேறுபிரித்து அறியமுடியும். சிங்கங்களைக் காட்டு ராஜாக்களாக உருவகப்படுத்தி யமைக்கு ஆண் சிங்கங்களில் மதாளித்து வளர்ந்திருக்கும் பிடரிமுடியும் ஒரு காரணம். பிடரியில் இருந்தும், முகத்தைச் சுற்றியும் தோன்றி தொண்டையையும் முன்னம் மேற்கால்களையும் மறைத்தவாறு சடைத்துத் தொங்கும் பிடரிமயிர்கள், ஆசியச் சிங்கங்களில் ஆபிரிக்கச் சிங்கங்களை விடவும் நீளத்தில் சற்றுக் குறைந்தவை ஆகும். இதனால், ஆசியச் சிங்கங்களில் காதுகள் பிடரிமயிர்களினுள், மறைக்கப்படாமல் வெளித்தெரியக் கூடியவாறு உள்ளன. மேலும், ஆசிய ஆண்-பெண் சிங்கங்கள் இரண்டிலுமே வயிற்றுப் பகுதியில் தொங்குதோல் போன்று தோல் மடிப்பொன்று நீளத்துக்குக் காணப்படுகிறது. மற்றபடி, ஆசிய - ஆபிரிக்கச் சிங்கங்களின் உடற்பருமன்களைப் பொறுத்தவரையில் பெரிய வேறுபாடுகள் இல்லை. இரண்டு வகைகளுமே அதிகபட்சமாக 8 தொடங்கி 10 அடிகள் வரையில் வளரக் கூடியவைதாம்.
ஆபிரிக்கச் சிங்கங்களில் இருந்து பரிணாமப் பாதையில் சுமார் ஒரு இலட்சம் வருடங்களுக்கு முன்னர் கிளைபிரிந்ததாக நம்பப்படும் ஆசியச் சிங்கங்கள் ஈரான், ஜோர்டான், சிரியா, துருக்கி, ஆப்கானிஸ் தான், இந்தியா போன்ற ஆசிய நாடுகளையும் தாண்டி ஐரோப்பாவிலும் பரவியிருந்ததாக வரலாற்று நூல்களில் அறியமுடிகிறது. பேர்ஸியப் பேரரசன் ஷேர்செஸ் கி.மு. 480களில் கிரேக்கத்தின் மீது (தென்கிழக்கு ஐரோப்பா) படையெடுத்துச்சென்றான். சேனை மாசிடோனியாவை அண்மித்தபோது, சேனையில் இருந்த ஒட்டகங்கள் வழியில் எதிர்ப்பட்ட சிங்கங்களால் தாக்கி இரையாக்கப்பட்டதாக கிரேக்க வரலாற்றாசிரியர் ஹிறோடோற்றல் (Herodotus) பதிவு செய்திருக்கிறார். கி.மு. 485 முதல் 424ஆம் ஆண்டுவரையில் வாழ்ந்த ஹிறோடோற்றஸ் முதன் முதலில் வரலாற்றை இயன்றளவு செம்மையாக எழுதிச் சென்றவர் என்பதால் மேற்குலகில் 'வரலாற்றின் தந்தை' எனப் போற்றப்படுபவர். இவர், சிங்கங்கள் ஒட்டகங்களைத்தவிர சேனையில் இருந்த மனிதர்களையோ அல்லது பிற கால்நடைகளையோ தாக்க முற்படவில்லை என்ற ஆச்சரியமான தகவலொன்றையும் குறிப் பிட்டுள்ளார். சிங்கங்கள் கொடூரமான ஆட்கொல்லிகளாகக் கருதப் பட்டுவரும் நிலையில், அந்தக் காலத்தில் அல்லது அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த சிங்கங்களின் மனிதர்களைப் பகைமை கொள்ளாத நடத்தை சிந்தனைக்கு உரியது. ஆனால், கி.பி. 100ஆம் ஆண்டு முடிவதற்
259
Page 132
ஏழாவது ஊழி
குள்ளாகவே ஐரோப்பாவில் இருந்த சிங்கங்களுக்கு மனிதர்கள் முடிவு கட்டிவிட்டனர். தொடர்ந்த வேட்டையில் ஆசியாவில் இந்தியா நீங்கலாக உள்ள இதர பகுதிகளில் இருந்த சிங்கங்கள் படிப்படியாக ஒழிக்கப்பட்டு, 1941இல் ஈரானில் இருந்த கடைசிச் சிங்கமும் உயிரைவிட்டது.
காட்டு ராஜாக்களின் அழிவுக்கு நாட்டு ராஜாக்களே கால்கோள் இட்டனர். விலங்குகளின் அரசனான சிங்கங்களை வேட்டையாடுவது ராஜவம்சத்து வழக்காறாக இருந்து வந்துள்ளது. இது மன்னரின் பராக்கிரமத்தை வெளிப்படுத்தும் வீர தீரமாகவும், குடிகளைப் பாதுகாப்பதற்காகப் போராடும் வல்லாண்மை பெற்றவர் என்பதை உணர்த்தும் குறியீடாகவும் கருதப்பட்டது. கி.மு. ஏழாம் நூற்றாண்டில் மெசப்பத்தோமியாவில் (தற்போதைய ஈராக்) ஆசிரியாவை (ASyria) ஆண்ட மன்னர் - ஆஷர் மனிப்பால். இவர் சிங்கவேட்டையாடுகின்ற காட்சி தத்ரூபமான புடைப்புச் சிற்பமாக பிரித்தானிய அருங்காட்சி யகத்தில் உள்ளது. இதனை நான் பார்த்திருக்கிறேன். இற்றைக்கு 2650 ஆண்டுகளுக்கு முன்னர் வெண்கலத்தில் வடிக்கப்பட்ட அந்தப் புடைப்புச் சிற்பத்தின் செய்நேர்த்தி வியக்கவைத்தது. ஆயினும், நிராயுதபாணியான சிங்கராஜாவை வில், அம்பு, கட்டாரிகள் சகிதம் ஆயுதபாணியாக மன்னர் எதிர்கொள்வதில் உள்ள பராக்கிரமத்தை மட்டும் ரசிக்க மனது ஒப்பவில்லை.
இஸ்லாமிய அரசர்கள் இந்தியாவில் ஊடுருவி முகலாய அரசை நிறுவியதும் சிங்க வேட்டையை இந்தியாவிலும் சிரத்தையுடன் தொடர்ந்தனர். முகலாயச் சக்கரவர்த்திகளின் வேட்டை விளையாட்டுக் கெனத் தனியாகக் காடுகளை ஒதுக்கி வைத்ததும் உண்டு. அக்பர் உத்தரப்பிரதேசத்திலுள்ள மீரட்டுக்கு ஒருதடவை சென்றிருந்தபோது, அந்தப் பயணத்தில் மாத்திரமே ஏழு சிங்கங்களைக் கொன்றுள்ளார். தாஜ்மகால் புகழ் ஷாஜகான் மன்னர் அவரது சிங்கவேட்டைக்காகவும் வரலாற்றில் வாழ்கிறார். அவரது பணியாளர்கள் சிங்கங்களை விரட்டி வந்து சுற்றுவேலி அமைக்கப்பட்ட தோப்பொன்றில் ஒதுக்கிவிட, அங்கு யானை மீதமர்ந்து ஷாஜகான் சிங்கங்களை வேட்டையாடியதாக முகலாய வரலாறு 'பெருமையுடன் பேசுகிறது. முகலாய ஆட்சிக்குப் பின்னான பிரித்தானியர்களின் வருகை சிங்கங்களுக்குப் பேரழிவுக் காலமாக அமைந்தது. இக்காலப் பகுதியில் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும் பரவலாகக் கிடைக்கத் தொடங்க பிரித்தானிய அதிகாரிகள், அரச பரம்பரையினர், ஜமீன்தார்கள் என்று எல்லோரும்
26O
Page 133
ஏழாவதுஉஊழி
சகட்டு மேனிக்குச் சுட்டுத தளளனாரகள். வேட்டையாடிகள் பெருகிய தோடு, சனத்தொகைப் பெருக்கத்தால் சிங்கங்களின் வாழிடங்களும் சுருங்க நாடளாவ வாழ்ந்த சிங்கங்கள் குஜராத்தின் கிர் வனப் பகுதியில் மாத்திரம் மிஞ்ச நேர்ந்தது.
குஜராத்தின் கத்தியவார் குடாவில் அரபிக் கடலை ஒட்டியவாறு ஜுனாகாத் மாவட்டம் உள்ளது. சுதந்திரத்துக்கு முன்னர் நவாப்புகளின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த சமஸ்தானம் இது. இங்குதான் உலகின் கடைசி ஆசியச் சிங்கங்கள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் "கிர் (Gi) காடு உள்ளது. சிங்கங்கள் காட்டு ராஜாக்கள் என வர்ணிக்கப்பட்ட போதும், உண்மையில் இவை புலிகளைப் போன்று அடர்ந்த மழைக் காடுகளில் வசிக்கும் விலங்குகள் அல்ல. உலர்ந்த முட்புதர்க்காடு களிலும், சவான்னாப் புல்வெளிகளிலும், பாலை நிலங்களிலுமே வாழ் கின்றன. கிர் காடு இத்தகைய சூழல்களைப் பகுதியளவில் கொண்ட ஒரு கலப்புக் காடுதான். உணவுச் சங்கிலியின் உச்சப்படியில் இருக்கும் ஊனுண்ணிகள் என்பதால், சிங்கங்கள் இரையாடுவதற்கு பெரிய நிலப்பரப்பு தேவைப்படுகிறது. உதாரணத்துக்கு, ஆபிரிக்க சிங்க மொன்றுக்கு அது வரிக்குதிரை, ஒட்டகச் சிவிங்கி போன்ற பெரிய இரைகளை உணவாக்குவதால் 20 தொடங்கி 200 சதுர கிலோமீற்றர்கள் வரையான வேட்டை நிலம் தேவைப்படுவதாகக் கணித்துள்ளார்கள். கிர் சிங்கங்கள் உணவாக மான், காட்டெருது, கழுதைப்புலி போன்ற விலங்குகளையே நம்பியிருப்பதால், ஆபிரிக்கச் சிங்கங்களை விடவும் ஒப்பீட்டளவில் சற்றுச் சிறிய நிலப்பரப்பை வேண்டி நிற்கின்றன. ஆனால், மனித இனம்தான் மற்றைய உயிரினங்களுக்காக எந்த ஒரு இடத்தையும் விட்டுவைக்கத் தயாராக இல்லையே! மக்கள் பெருக்கம் பயிர்ச்செய்கைக்காகவும் குடியிருப்புகளுக்காகவும் கிர்காட்டுப் பரப்பையும் அபகரிக்க ஆரம்பித்ததால் இரை விலங்குகள் குறைந்து காட்டு ராஜாக்கள் பட்டினி கிடக்க நேரிட்டது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குஜராத்தின் மேற்குப் பகுதியில் நிலவிய கடும் வறட்சியும் கிர் சிங்கங்களை மிக மோசமாகப் பாதித்தது. புல்பூண்டுகளெல்லாம் கருகி தாவர உண்ணிகள் அழிய, இரை இல்லாத சிங்கங்கள் காடோரக் கிராமங்களுக்குள் புகுந்து வளர்ப்புக் கால்நடைகளை வேட்டையாடத் தொடங்கின. தடுக்கப் போன மனிதர்களையும் அடித்துப் பசியாறின. இந்தப் பிணக்கில் மனிதர்கள் சிங்கங்களை நஞ்சூட்டியும், மின்சாரம் பாய்ச்சியும், சுட்டும் கொன்றதில் 1910ஆம் ஆண்டில் கிர் காட்டில் 20க்கும் குறைவான
262
பொ.ஐங்கரநேசன்
சிங்கங்கள் மாத்திரமே தப்பிப் பிழைத்தன. சிங்கங்களை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டிய அவசரத்தை வலியுறுத்தும் விதமாகவே இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டதாகவும், அப்போது 100 சிங்கங்கள் வரையில் எஞ்சியிருந்ததாகவும் ஒரு தகவல் உண்டு.
இயற்கையின் படைப்பில் சிங்கங்கள் கொடூரமான ஆட்கொல்லி விலங்குகளாகப் பிறக்கவில்லை. சிங்கங்களும் மனித விலங்குகளும் ஏககாலத்தில் இல்லாவிடினுங்கூட, ஒரு குறைந்த கால இடை வெளியில் ஆபிரிக்காவின் புல்வெளிகளில் பிறந்து சேர்ந்தே பரிணா மித்துள்ளன. ஆபிரிக்காவுக்கு வெளியே சேர்ந்தே இடம் பெயர்ந் துள்ளன. இதனால், சிங்கமும் மனிதனும் ஒன்றையொன்று பார்த்துப் பயம் கொள்ளவில்லை. பகையாளிகளாக இல்லாமல் பங்காளிகளாகவே இரைகளை வேட்டையாடின. வேட்டையில் இரை சிக்காதபோது ஒன்றின் இரையை மற்றது களவாடிப் புசித்திருக்குமேயல்லாமல், ஒன்றையொன்று தாக்கிக் கொல்லவில்லை. சிங்கங்கள் மனிதர்களுடன் இணக்கமாகவே இருந்துள்ளன என்பதற்கு, "ஷேர்செஸ் அரசனின் படைகளில் இருந்த வீரர்களைத் தவிர்த்து வழக்கமான இரைகளான ஒட்டகங்களை மாத்திரமே சிங்கங்கள் சாகடித்தன என்ற வரலாற்றுப் பதிவை மீளவும் குறிப்பிட முடியும். இதுமட்டுமல்லாமல், புராதனக் காலத்தில் சிங்கங்களை மனிதர்கள் செல்லப் பிராணிகளாக வளர்த்த தாகவும், போர்க்களங்களில் அரசர்களுக்கு அவர்களின் வளர்ப்புச் சிங்கங்கள் பாதுகாப்பை வழங்கியதாகவும் வரலாற்று நூல்களில் சான்றுகள் உள்ளன. சிங்கங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில் நிலவிய சுமூகமான உறவில் முதலில் முரண்பாடுகளை வளர்த்தது மனிதர்களேயன்றி சிங்கங்கள் அல்ல. சிங்கங்களின் வாழிடங்களை ஆக்கிரமித்துச் சிங்கங்களைக் கொன்று குவிக்கத் தொடங்கியதன் பின்னரே அவை ஆட்கொல்லிகளாக அவதாரம் எடுத்தன. இங்கு யார் குற்றவாளி?
சிங்கங்கள் கொல்லப்பட வேண்டியனவல்ல என்று சொல்லி கிர் காடுகளில் அவற்றைக் காப்பாற்ற முனைந்தவர்களில் ஜுனாகாத் சமஸ்தானத்தின் கடைசி நவாப் முகமட் மகாபற்கான்ஜி (MuhamadMahabat Khanர்-I) முதன்மையானவர். ஆங்கிலேய ஆட்சியின் போது குஜராத்தில் நூற்றுக்கணக்கான சமஸ்தானங்கள் பிரித்தானியர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாமல் நவாப்புகளின் ஆட்சியின் கீழ் விடப்பட்டிருந்தன. இதில் ஜுனாகாத் சமஸ்தானத்தை 1911-1947வரை முகமட் மகாபற் கான்ஜி நிர்வகித்து வந்துள்ளார். நவாப் நாய்களின்
263
Page 134
ஏழாவதுஉஊழி
மீது தீராத விருப்புக் கொண்டவர். நாய்களின் மீதான பரிவு கிர்காட்டுச் சிங்கங்கள் பெரும் அவலத்தைச் சந்தித்தபோது சிங்கங்களின் மீதும் திரும்பியது. சிங்கவேட்டையைத் தடைசெய்து அழிவின் வாயில் இருந்து அவற்றை மீட்டெடுத்தார். எனினும் 1947ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது, இவர் ஜுனாகாத் சமஸ்தானத்தைப் பாகிஸ்தானுடன் இணைத்துக் கொள் வதற்கு எடுத்த முடிவானது சிங்கங்களுக்குப் பாதகமாக அமைந்தது.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, நூற்றுக்கணக்கான சமஸ்தானங்கள் அவற்றினுடைய விருப்பத்தின்பேரில் இந்தியா வுடனோ, பாகிஸ்தானுடனோ ஐக்கியமாகிவிடலாம் எனவும், அல்லது சுயாதீனமாகவே இயங்கலாமெனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தன. ஜுனாகாத் ஒரு பக்கம் அரபிக் கடலாலும், மற்றைய மூன்று பக்கங்களும் இந்தியாவாலும் சூழப்பட்டு பாகிஸ்தானுடன் நேரடியான எல்லைத் தொடர்புகள் அற்றிருந்த ஒருசமஸ்தானம். ஜுனாகாத் குடிகளில் இஸ்லாமியர்கள் 20 விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருந்தனர். எனினும் ஜுனாகாத் பாகிஸ்தானுடன் கடலால் இணைந்திருப்பதாகக் கூறி நவாப் பாகிஸ்தான் சார்பு நிலையை எடுத்தார். இதனை பெரும்பான்மையான இந்துக்கள் ஏற்றுக் கொள்ளாததால் ஜுனாகாத் சமஸ்தானம் எங்கும் குழப்பங்கள் ஏற்பட்டன. காங்கிரஸ் கட்சியும் நவாப்புக்கு எதிரான கலகங்களைத் தூண்டி விட்டது. சமஸ்தானத்தின் நிர்வாகம் சீர்குலைந்தபோது, காத்திருந்ததுபோல வேட்டையாடிகள் சிங்கங்களைக் கொல்லத் தொடங்கினர். சிங்கங்களின் இரட்சகர் என்று பெயரெடுத்திருந்த நவாப் முகமட் மகாபற் கான்ஜி, தனது முடிவால் சிங்கங்களுக்கு இத்தகைய ஒரு விபரீதம் நேரும் என எதிர்பார்த் திருக்கவே மாட்டார். கலவரங்களை எதிர்கொள்ளமுடியாத கையறு நிலையில் ஜுனாகாத்தைக் கைவிட்டு நிரந்தரமாகவே கராச்சிக்குப் பயணமானபோதுகூட சிங்கங்களின் நினைவு அவரைவிட்டு அகலவில்லை. விமானம் ஏறியபோது, கிர்னார் மலையை நோக்கி "எனது சிங்கங்களை இனி யார் காப்பாற்றுவார்கள்?" என்று கண்ணீர் மல்கியதாகப் பதிவுகளில் இருந்து அறியமுடிகிறது.
வனவிலங்குகளின் மீது, அவற்றிலும் சிங்கங்களின் மீது கரிசனை கொண்டவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அசோகச் சக்கரவர்த்தியும் தவிர்க்க முடியாத ஒருவராக உள்ளார். இந்தியாவில், மெளரியப் பேரரசை கி.மு. 269ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 37 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் அசோகர். இவரது ஆட்சிக்காலத்தின் முற்பகுதி
264
பொ.ஐங்கரநேசன்
இரத்தத்தால் தோய்ந்தது என்று சொல்லுமளவுக்கு உக்கிரமான போர்கள் நிறைந்தது. அசோகன் கலிங்கத்தை (தற்போதைய ஒரிஸா மற்றும் ஆந்திராவின் வடக்கு கரையோரத்தை உள்ளடக்கிய பகுதி) வெற்றிகொண்ட போரில் ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப் பட்டனர். இந்தப் போரில் ஏற்பட்ட கொடூரமான அனுபவங்கள் அசோகனின் போர் வெறியைத் தணித்து, அவரைப் புத்தமதத்தின் தீவிர உபாசகனாக மாற்றியது. அகிம்சையைப் போதிப்பவராக மாறினார். மனிதர்களின் மீது காட்டிய அன்பை அளவு குன்றாது விலங்குகளின் மீதும் சொரிந்தார். மனிதர்களுக்குப் போலவே விலங்குகளுக்கும் மருத்துவச் சாலைகளை அமைத்தார். வேட்டையாடுவதை அறவே தவிர்த்தார். யாகங்களில் உயிர்கள் பலியிடப்படுவதைத் தடை செய்தார். உணவுக்காகவேனும், குறைந்தபட்சத் தேவைகளுக்கு அதிகமாக உயிரினங்களைக் கொல்லக் கூடாது எனக் கட்டுப்பாடுகளை விதித்தார். புத்த தர்மநெறிகள் அனைவரையும் சென்றடைய வேண்டும். என்பதற்காகத் தனது அறிவிப்புகளைப் பாறைகளிலும், தூண்களிலும் வெட்டுவித்தார். இத்தகைய கல்வெட்டுகளை அசோகனின் ஆட்சி நிலவிய பகுதிகளில் அவரது உயிர் நேயத்துக்கான சாட்சிகளாக இப்போதும் காணலாம்.
விலங்குகளில் சிங்கங்களின் குணநலன்கள் அசோகனின் தனிக்கவனத்துக்கு உரியதாக இருந்திருக்க வேண்டும். தனது கற்தூண்கள் சிலவற்றில் சிங்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இவற்றில் சாரநாத்தில் (தற்போதைய உத்தரப்பிரதேசத்தில் வாரணாசிக்கு அருகில் உள்ளது) நிறுவிய கற்தூணின் தலைப்பகுதியில் அமைக்கப்பட்ட சிங்கங்கள் பிரசித்தமானவை. கவிழ்ந்த தாமரைப் பூவின்மேல் தர்மச் சக்கரம் பொறிக்கப்பட்ட பீடமொன்றின் மீது நான்கு சிங்கங்கள் ஒன்றுக்கு ஒன்று முதுகு காட்டியவாறு கம்பீரமாக நிமிர்ந்து உட்கார்ந் திருக்கின்றன. மெளரியர்கள் காலத்துக் கலைநயம் மிளிருகின்ற இந்த அரிய சின்னம், சாரநாத் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அசோகர் சிங்கங்களைத் தெரிவு செய்தமைக்கான காரணத்தை அவரது கூற்றாக பதிவுகளில் காணக்கிடைக்கவில்லை. நான்கு சிங்கங்களும் கெளதமபுத்தரின் வாழ்க்கையின் நான்கு படிநிலை களைச் சுட்டுவதாகவும், பேரரசரின் ஆட்சி நாற்றிசையும் பரவியிருந் ததைக் காட்டுவதாகவும் இருவேறாக விளக்கம் தருகிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் தனக்கான தேசிய அடையாளங்களைத் தேடியபோது இந்த அசோகச் சின்னத்தையே தனது இலச்சினையாகத்
265
Page 135
ஏழாவது ஊழி
தெரிவு செய்தது. தாமரைப் பூவைத் தேசிய மலராகவும், சிங்கத்தைத் தேசிய விலங்காகவும், தீர்மானித்தது. ஆனால், சிங்கமே புலியைவிட இந்தியாவுக்கு மிகவும் சுதேசியமானது என்று சொல்லிச் சிங்கத்தைத் தேசிய விலங்காக அறிவித்த இந்தியா, 1973இல் சிங்கத்தைக் கைகழுவி வரிப்புலியைத் தனது தேசிய விலங்காக வரித்துக் கொண்டது.
சிங்கத்தைத் தேசிய அடையாளமாகக் கொண்டிருக்கும் இன்னு மொரு நாடு பூரீலங்கா. அதற்கும் சிங்கங்களுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றி இவ்விடத்தில் சிலவற்றைக் குறிப்பிடுவது பொருத்தமானது. பூரீலங்கா தனது தேசியக் கொடியில் வாளேந்திய சிங்கத்தைப் பொறித்தும், தனது மழைக்காட்டுக்கு சிங்கராஜ வனம் என்று பெயர் சூட்டியும் சிங்கத்தை முதன்மைப்படுத்தியபோதும், இலங்கைத் தீவில் வரலாற்றுக் காலத்தில் சிங்கங்கள் ஒரு போதும் வாழ்ந்ததில்லை. ஆனால், 1939ஆம் ஆண்டு பேராசிரியர் பீரிஸ் தெரணியகல இரத்தினபுரியில் சிங்கப்பற்கள் இரண்டினது புதைபடிவங் களைக் கண்டெடுத்ததாகத் தெரிவித்திருக்கிறார். பேராசிரியர் பீரிஸ் தெரணியகல இலங்கைத் தேசிய அருங்காட்சியகத்தின் இயக்கு நராகவும், பின்னாளில் வித்தியோதயாப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடாதிபதியாகவும் பணியாற்றியவர். இவர் தான் கண்டெடுத்த தொல்லியற்சான்றுகளின் அடிப்படையில், இலங்கையில் வரலாற்றுக் காலத்துக்கு முன்னர் - தோராயமாக 39,000 வருடங்களுக்கு முன்பு - சிங்கங்கள் வாழ்ந்துள்ளன என்ற முடிவுக்கு வந்திருந்தார். இதனைத் தனித்த ஒரு உபஇனமாகக் கருதிய இவர், இதற்கு "சிங்களச் சிங்கம் என்ற பொருள்பட, Pantheraleosinhaleyus'எனப் பெயரிடவும் செய்தார். இலங்கைச் சிங்கம் -zeylaneyus என்று பெயரிடுவதற்குப் பேராசிரியரின் இதயத்தில் இடமிருக்கவில்லைப் போலும். சிங்களச் சிங்கங்கள் தொடர்பாக வேறு உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. மற்றபடி, சிங்களவர்கள் சிங்கத்தைத் தமது தேசிய அடையாளமாக்கிக் கொண்டது அவர்களது இனம் மற்றும் மதத்தின் பாற்பட்ட ஒன்றாகும்.
சிங்களவர்கள் தமது வரலாற்று நூலாகப் பெரிதும் போற்றும் மகாவம்சம், சிங்கள இனத்தின் மூலவேராக விஜய மன்னனைச் சுட்டுகிறது. தம்பபன்னியை (தாமிரபரணி என்பதன் பாளி மொழிச் சொல்) தலைநகராகக் கொண்டு கி.மு. 543 முதல் 505 வரை 38 ஆண்டுகள் ஆட்சி செய்த விஜயன் இலங்கையின் பூர்வீகக் குடி அல்லர். இவரது துர்நடத்தைகள் காரணமாகத் தோழர்கள் எழுநூறு
266
பொ.ஐங்கரநேசன்
பேர்களுடன் லாலா நாட்டில் இருந்து கப்பலேற்றி நாடு கடத்தப் பட்டபோது இலங்கைத் தீவில் கரையொதுங்கியவராவார். லாலா நாடு தற்போதைய மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. விஜயனை நாடு கடத்திய அவரது தந்தையும், லாலா நாட்டு அரசருமாகிய சிஹபாகுவே (சிங்கபாகு) இங்கு கவனத்துக்கு உரியவர். இவர் ஒரு சிங்கத்துக்கு மகனாகப் பிறந்தவர். ஆம் வங்க இளவரசி ஒருவரைச் சிங்கமொன்று தூக்கிச் சென்று கடிமணம் புரிந்ததில் சிங்கபாகு பிறந்ததாகவும் இவரது கை, கால்கள் சிங்கத்தின் அவயவங்களை ஒத்திருந்தனவாகவும் மகாவம்சம் குறிப்பிடுகிறது. சிங்குபாகுவின் பெயராலேயே இலங்கையில் விஜயனினதும் அவரது தோழர்களினதும் வழித்தோன்றல்களும், விஜயனின் ஆட்சிக்கு உட் பட்டவர்களும் தங்களைச் சிங்களவர்கள் என அழைக்க ஆரம்பித்தனர்.
சிங்களவர்கள் தங்களது தேசியத்தைச் சிங்கத்துடன் அடை யாளப்படுத்த விரும்பியமைக்கு அவர்கள் பின்பற்றுகின்ற பெளத்த மதமும் ஒரு காரணம் ஆகும். அசோகச் சக்கரவர்த்திபுத்த நெறிகளைப் பரப்பும் நோக்கில் இலங்கைக்குத் தனது மகள் சங்கமித்திரையைப் போதி மரக்கிளையுடன் அனுப்பி வைத்ததாக மகாவம்சம் கூறுகிறது. அசோகச் சக்கரவர்த்தி பெளத்த போதனைகளைப் பதிப்பித்த கல்தூண்களின் தலைகளில் இருந்த சிங்கங்கள் இலங்கையின் சிங்களத் தலைமைகளில் செல்வாக்குச் செலுத்தியிருக்கும் என்பது திண்ணம். எவ்வாறாயினும், இலங்கை பல்லினத்துவமுடைய ஒரு தீவு. அதன் தேசியக் கொடியில் பெரும்பான்மையைப் பிரதிநிதித்துவம் செய்யும் சிங்கத்தைப் பொறித்தமையானது இன-மத சமத்துவத்தை வேண்டிய அசோகரின் போதனைகளுக்கு முரணானதாகும். அதுவும், சிங்கத்தை வாளேந்த வைத்தமை கொல்லாமையை வலியுறுத்தும் பெளத்தமதக் கோட்பாடு களுக்கு முற்றிலும் விரோதமானது. இந்தப் பேரினவாதச் சிங்கம் தானே, 'தமிழனைக் கொல்வோம்' என்பதன் குறியீடாக நின்று இன்றுவரை தமிழர்களை நரவேட்டையாடி வருகிறது. சிங்களத் தேசியம் கற்பனைக்கு இடங்கொடாது, சிங்களவர்களினதும் தமிழர்களினதும் பூர்வீக நிலங்களில், இலங்கைக் காடுகளின் அரசனாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுத்தைப்புலியை இலங்கையின் பொதுவான குறியீடாகத் தேர்வு செய்திருந்தால் தமிழர்கள் தங்களுக்கான தனியான தேசிய அடையாளங்களைத் தேடவேண்டிய அவசியம் நேர்ந்திராது. இலங்கைத் தீவு இத்தனை இரத்தக்களரிகளையும் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கியமும் நேராமல் போயிருக்கும்.
267
Page 136
ஏழாவதுஉஊழி
தேசியச் சின்னங்களிலும், தேசியக் கொடிகளிலும் சிங்கங்கள் கொண்டாடப்படும் அளவுக்கு, உயிரோடு எஞ்சியிருக்கும் ஆசியச் சிங்கங்களைப் போற்றுவார் யாரும் இல்லை. குஜராத்தில் சிங்கங்கள் தஞ்சம் அடைந்திருக்கின்ற கிர் காடு 1965ஆம் ஆண்டு முதல் சரணாலயமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றபோதும் ஆசியாவின் கடைசிச் சிங்கங்களைக் காப்பாற்ற இது மாத்திரமே போதுமானது அல்ல. ஏறத்தாழ 11,400 சதுர கிலோ மீற்றர்கள் பரப்பளவில் 350 சிங்கங்கள் வரையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இது கிர்காடு தாங்கக் கூடிய சிங்கங்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அதிகமாகும். மேலும், சிங்கங்களுக்கு மட்டுமல்லாமல் அதிக அளவில் சிறுத்தைகள், காட்டுப் பூனைகள், முதலைகள் போன்ற ஊனுண்ணிகளுக்கும் சேர்த்தே சரணாலயம் உணவளிக்க வேண்டியுள்ளது. இதனால் இடப் பற்றாக்குறைக்கும் உணவுப் பற்றாக்குறைக்கும் முகங்கொடுக்க நேரும் சிங்கங்கள் காட்டு எல்லையை விட்டு வெளியேறி அலையவும் தலைப்பட்டுள்ளன. காட்டினுள்ளே கால்நடைகளை வளர்த்துப் பிழைக்கும் மல்தாரிகள் எனப்படும் பழங்குடியினர் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களது எருமைகளைச் சிங்கங்கள் அவ்வப்போது இரையாடினாலும் இவர்கள் சிங்கங்களை இம்சிப்பது இல்லை. இரைவேட்டையை இயற்கையின் நியதிகளில் ஒன்றாகவே ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், சுற்றயலில் கால்நடை வளர்ப்பிலும் பயிர்ச்செய்கையிலும் ஈடுபட்டுவரும் குடியேறிகள் காட்டை விட்டேகும் சிங்கங்களைக் கொல்வதற்குப் பின் நிற்பதில்லை. 2007 ஆம் ஆண்டு கிர் சரணாலயத்தில் அகாலமாக இறந்த 32 சிங்கங்களில் ஆறு சிங்கங்கள் வேலிகளில் மின்சாரம் பாய்ச்சியே கொல்லப் பட்டுள்ளன. எட்டு சிங்கங்கள் கள்ளவேட்டைக்காரர்களிடம் சிக்கியும், ஐந்து சிங்கங்கள் பாதுகாப்பாற்ற கிணறுகளில் விழுந்தும், ஒருசிங்கம் வாகனத்தில் அடிபட்டும், மீதி பன்னிரெண்டு சிங்கங்களும் அடை யாளம் தெரியாத காரணங்களாலும் அநியாயமாகப் பலியானதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
கிர்காட்டில் தப்பிப் பிழைப்பதற்கான போட்டியில் ஒடிக் கொண்டிருக்கும் சிங்கங்களைப் பிடரியில் பிடித்து இழுக்கும் இன்னு மொரு பாதகம் அவற்றின் அக இனக்கலப்பு. கிர் காட்டுக்குள்ளே 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உயிர் பிழைத்த அற்ப சொற்ப சிங்கங்களில் இருந்துதான் இப்போதுள்ள 350 வரையான சிங்கங்களும் தோன்றியுள்ளன. மீளவும் மீளவும் ஒரே கூட்டத்தினுள்ளேயே நிகழும்
268
பொ.ஐங்கரநேசன்
அக இனக்கலப்பால் ஆண் சிங்கங்கள் வீரியம் இழந்து வருவதும், இவை உருவாக்கும் விந்தணுக்களில் 80 விழுக்காடு வரையில் உருத்திரிபுற்றுச் செயலிழந்திருப்பதும் ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. குருளைகளின் மரண விழுக்காடும் அதிகமாகவே உள்ளது. எதிர்காலச் சந்ததிப் பெருக்கத்துக்கு உத்தரவாதம் அற்றிருக்கும். நிலையில், அக இனக்கலப்பால் கிர் சிங்கங்கள் இன்னுமொரு பேராபத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. அக இனக்கலப்பால் எல்லாச் சிங்கங்களுமே நகலெடுத்ததுபோன்று ஒரே மாதிரியான மரபணுச் சேர்க்கையைக் கொண்டுள்ளன. எல்லா இயல்புகளிலும் - நோயெதிர்ப்பு ஆற்றல் உட்பட - ஒரே விதமாகவே உள்ளன. இதனால், கால் நடை களில் இருந்து ஏதாவது நோய் சிங்கமொன்றுக்குத் தொற்றுமிடத்து பஞ்சில் இட்ட நெருப்பாக அந்நோய் எல்லாச் சிங்கங்களையும் பற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. இந்த எச்சரிக்கை வெறுமனே ஊகம் அல்ல. 1994ஆம் ஆண்டு தான்சானியாவின் செறென்கெற்றி தேசிய்ப் பூங்காவில் நாய்களில் இருந்து பரவிய நோயால், பூங்காவில் இருந்த 2500 வரையான சிங்கங்களில் சுமார் மூன்றிலொரு பங்கு சிங்கங்கள் செத்து விழுந்தன. கொள்ளை நோய் மாத்திரமல்ல; கடும் வறட்சி, காட்டுத்தீ போன்ற இயற்கை அனர்த்தங்கள்கூட ஒரே இடத்தில் குழு மியிருக்கும் அத்தனை சிங்கங்களையும் கொத்தாகக் காவு கேட்கலாம்.
கிர் சரணாலயத்திலும் எதிர்காலம் நிச்சயம் அற்றிருக்கும் சிங்கங்களைக் காப்பாற்றுவதற்கு, இரண்டாவதாக இன்னுமொரு சரணாலயம் தேவையெனக் காட்டுயிர் ஆய்வாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த உயிரியலாளர் ரவி செல்லம் அவர்கள் தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக கிர் காடுகளில் சில ஆண்டுகளைச் செலவிட்டவர். இவரது தலைமையிலான ஆய்வுக்குழு மத்திய பிரதேசத்திலுள்ள குனோ (Kuno) காட்டை சிங்கங்களின் இரண்டாவது சரணாலயத்துக்கு ஏற்ற இடமாகத் தெரிவு செய்துள்ளது. கிர் காட்டில் இருந்து குறைந்தபட்சம் 3 ஆண் சிங்கங்களையும் 5 பெண் சிங்கங்களையும் இங்கு இடம் மாற்றினாலே போதுமானது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திரமோடி அவர்கள் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் தர மறுத்து வருகிறார். குஜராத் மாநிலத்தினுள்ளேயே கிர் சரணாலயம் அமைந்துள்ளதால், குஜராத்தின் பெருமையை எதற்காகவும் இழந்து விடமுடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியா குடியரசான போது காடுகள் மற்றும் காட்டுயிர்கள் தொடர்பான அதிகாரங்கள் மாநிலங்கள் வசம்
269
Page 137
ஏழாவதுஉஊழி
வழங்கப்பட்டு விட்டன. இதனால், இவ்விடயத்தில் மத்திய அரசும் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது.
அசோகச் சக்கரவர்த்தி முதல் ஜுனாகாத் நவாப் வரை பலரது தீவிர முயற்சிகளானால் தப்பிப் பிழைத்திருக்கும் இந்த விலங்குகளின் பெருமிதத்தை, குஜராத் முதல்வரின் தற்பெருமிதத்துக்காக அழியவிடப் போகிறோமோ? இயற்கை ஒரு போதும் மன்னிக்காது.
27O
27
புலிகள் அழியலாமா?
"பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெளும் புலிதாக் குறின்"
- திருக்குறள் (ஊக்கமுடைமை, 599)
காட்டு ராஜாவாகக் கர்ச்சித்துக் கொண்டிருந்த சிங்கத்தை
அழிவின் குகைக்குள் அடைத்து விட்டுப் புலியைத் தேசிய விலங்காக முடி சூடி அழகு பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா, விரைவிலேயே புலியையும் அழிவின் குழிக்குள் தள்ளிவிடும் போன்றே தெரிகிறது. ஆம்! இந்தியக் கானகங்களில் வாழுகின்ற புலிகள் பற்றிய அண்மைக் காலக் கணக்கெடுப்புகளைப் பார்த்தால் புலிகளுக்கும் ராஜயோகம் இருப்பதாகத் தெரியவில்லை. உலகில் காணப்படும் சுமார் 6000 புலிகளில் 3700 புலிகள் இந்தியக் கானகங்களிலேயே நடைபோடுவதாக இந்தியா பெருமைப்பட்டு வந்தது. ஆனால், அந்தப் பெருமிதத்தில் இடி இறங்கியதைப் போன்று இந்திய காட்டுயிர் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில், இந்தியாவில் ஏறத்தாழ 1500 புலிகள் மாத்திரமே எஞ்சியிருப்பதாக அறிவித்துள்ளது. இது, புலிகளின் ராஜாங்கம் என்று நம்பப்படும் இந்தியாவிலேயே அதன் இருப்பு கேள்விக்குறியாகி வருவதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் புலிகளின் சரணாலயங்களில் ராஜஸ்தான் சரிஸ்கா தேசியப்பூங்கா பழம் பெருமை வாய்ந்தது. இங்கு, 2005ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புலிகள் இருப்பதற்கான எந்தத் தடயங்களும் இல்லை என்ற தகவல் வெளியாகியது. சூழலியலாளர்கள் விவகாரத்தைப் பற்ற வைக்க, பிரதமர் மன்மோகன்சிங் காணாமற்போன புலிகளைக் கண்டறிய மத்திய புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டார். விசாரணை யில், "நீர் ஆதாரங்களைத் தேடிக் காட்டின் அடர்பகுதிகளுக்குள் புலிகள் இடம் பெயர்ந்திருக்கலாம்' என்ற சரணாலய அதிகாரிகளின் மழுப்பல் களையும் மீறி, அங்கு ஒரு புலியேனும் இல்லை என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. அவை வனவிலங்குக் கடத்தல்காரர்களின் வேட்டைக்குப் பலியாகி விட்டிருந்தன. புலிகள் இந்தியாவின் தேசிய
271
Page 138
ஏழாவது ஊழி
விலங்கு மட்டுமல்ல; உலகில் வேகமாக அழிந்துவரும் இனங்களிலும் ஒன்று. இதனால், உள்நாட்டிலும் உலக அளவிலும் கடுமையான கண்டனங்களை எதிர்கொள்ள நேரிட்ட இந்திய அரசு தன்மீது விழுந்த தேசிய அவமானத்தைத் துடைக்கும் முயற்சிகளில் உடனடியாகக் களம் இறங்கியது. கடத்தல்காரர்கள் பலரைக் கைது செய்து, புலி உறுப்புகள் பலவற்றை மீட்டது. இந்திய அளவில் புலிகளின் உண்மை நிலையை அறியத் தனிக்குழுவை அமைத்தது. இந்தியக் காட்டுயிர் நிறுவனமும் (Wildlifeinstitute of India) புலிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் பணியில் இறங்கியது. இது தொடர்பான ஆய்வறிக்கையை இந்தியக் காட்டுயிர் நிறுவனம் 2007ஆம் ஆண்டு சமர்ப்பித்தது. அவ்வறிக்கையிலேயே, இந்தியா இதுவரையில் கணக்குக் காட்டிவந்த புலிகளில் பாதியளவுப் புலிகளே இருப்பது அம்பலத்துக்கு வந்திருக்கிறது.
இந்திய அரசு சொல்லிவந்த புலிகளின் எண்ணிக்கைக்கும் (3,700) இந்தியக் காட்டுயிர் நிறுவனம் வெளியிட்டுள்ள புலிகளின் எண்ணிக்கைக்கும் (1,500) இடையில் காணாமற் போயுள்ள புலிகள் அத்தனையுமே வேட்டைக்குப் பலியானவையாகக் கருதமுடியாது. இந்தப் பெரும் வேறுபாட்டுக்கு ஆரம்பம் முதலே கணக்கெடுப்பில் நேர்ந்து வந்த குளறுபடிகளும் ஒரு காரணம். சரணாலயங்களில் புலிகளின் குடித்தொகையை அவற்றின் காலடித் தடங்களை வைத்தே கணக்கெடுத்து வந்துள்ளார்கள். ஆனால், புலிகளின் ஆய்வாளர் உல்லாஸ் கரந்த், இம்முறை துல்லியமானது அல்ல என்று சொல்லி ஏற்கனவே அரசின் புள்ளி விபரங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு ஆளாக்கியுள்ளார். புலிகளின் பாதுகாப்புத்திட்டத்தின் முன்னாள் இயக்குநர் பீகே. சென்னும், அரசு மிகைப்படுத்திய எண்ணிக்கையையே கூறி வந்துள்ளதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். இவர் 1992இல் பீகார் பாலாமு (Palamau) புலிகள் ஒதுக்கிடத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்ற போது நிகழ்ந்த சம்பவம் ஒன்று நினைவு கூரத்தக்கது. இவருக்கு முன்னர் பதவியில் இருந்த அதிகாரி 69டபுலிகள் இருந்ததாகக் கணக்குக்காட்டி விட்டுச் சென்றிருந்தார். ஆனால் பீகே. சென் கணக்கெடுத்து, 40 புலிகளுக்கு மேல் இல்லை என்ற சொல்லவர, துண்டுவிழுந்த 29 புலிகளுக்குமான கொலைப்பழியை ஊடகங்கள் பீகே. சென் மீதே சுமத்த ஆரம்பித்தன. இந்த நிலையில் உண்மையான எண்ணிக்கை குறைவாக இருப்பின் அதனை வெளிப்படுத்த எவர் முன்வருவார்? இதனால், இந்தியக் காட்டுயிர் நிறுவனம் தில்லுமுல்லுகள் நிகழ இயலாத கணக்கெடுப்பு முறை ஒன்றை நோக்கி நகர நேர்ந்தது.
272
Page 139
ஏழாவது ஊழி
மனிதரில் ஆளாளுக்கு கை ரேகைகள் மாறுபடுவதைப்போல புலிக்குப் புலி உடம்பில் வரிகள் வேறுபட்டிருக்கும். காடுகளில் ஆங்காங்கே தானியங்கி புகைப்படக்கருவிகளைப் பொருத்தி புலிகளைப் பதிவு செய்து வரிவித்தியாசங்களை அவதானித்ததன் மூலம் புலிகளைச் சரியாக அடையாளங் கண்டு கணக்கெடுத்துள்ளார்கள்.
இந்தியாவில் புலிகள் அழிவைச் சந்தித்துக் கொண்டிருப்பதும் சந்தைக்கு வருவதும் அதற்கெதிரான நடவடிக்கைகளில் இந்தியா ஆக்ரோசமாகக் குதிப்பதும் இதுதான் முதல் தடவையல்ல. 1990ஆம் ஆண்டிலிருந்து வருடத்துக்கு 300 புலிகள் வரை கொல்லப்படுகின்றன் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையை 1996 தொடங்கி 2001 வரை புலிகள் பாதுகாப்புத்திட்டத்தின் இயக்குநராக இருந்த பீகே. சென் தனது பதவிக்காலத்தின் போதே வெளிப்படுத்தியிருந்தார். அதனை மெய்ப்பிக்கும் வகையில் 2000ம் ஆண்டின் பெப்ரவரியில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஹா பகுதியில் புலிகளினதும், சிறுத்தை களினதும் ரூபா 22 கோடிப் பெறுமானமுள்ள 115 தோல்கள் கடத்தல் காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன. ஒரே தடவையில் இவ்வளவு பெரும் தொகையான பெறுமதியில் இந்தியாவில் புலியுறுப்புகள் கைப்பற்றப்பட்டது இதுதான் முதல் தடவை. இதற்கு முன்பும், பின்னரும் பல்வேறு மாநிலங்களிலும் புலியுறுப்புக் கடத்தல் சம்பவங்கள் ஏராளமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிந்திய செய்தியாக 2009 மார்ச் மாதத்தில் தமிழ்நாடு நீலகிரியில் 3 இலட்சம் ரூபா மதிப்புடைய புலித்தோல் ஒன்றைக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. இது, நீலகிரி வனப்பகுதியில் வேட்டையாடப்பட்டுக் கேரளாவுக்குக் கடத்தப்படவிருந்த புலித்தோல் ஆகும்.
இந்தியாவில் மட்டுமல்ல; உலகில் உள்ள புலிகளுக்கெல்லாம் இது போதாத காலந்தான். இந்தியா, சீனா, ரஷ்யா, மியான்மர், நேபாளம், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், மலேசியா, சுமாத்திரா போன்ற சில நாடுகளில் மாத்திரமே புலிகள் வாழுகின்றன. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கெல்லாம் சுமார் ஒரு இலட்சமாகப் பெருகியிருந்த வரிப்புலிகள் இன்று அதிக பட்சம் 6,000 என்றளவில் அருகி வந்திருக்கின்றன. வரிப்புலியின் (Panthera tigris) ஒன்பது உப இனங்களில் கஸ்பியன், ஜாவா, பாலி என்ற மூன்றும் 1940களில் அடியோடு அழிந்துவிட்டன. தென்சீனப்புலி தன்னுடைய கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. எஞ்சிய 5 உபஇனங்களின் (சைபீரியன், சுமாத்திரன், மலேய, இந்தோ - சீன, வங்காளப்புலிகள்)
274
பொ. ஐங்கரநேசன்
உறுமல்களும் ஈனஸ்வரமாகவே ஒலித்துக் கொண்டிருக்கின்றன. புலிகளின் தாயகம் என்று நம்பப்படுகின்ற சீனாவில் 120க்கும் குறைவான புலிகளே அவற்றின் இயற்கையான வாழிடங்களில் மீந்திருக்கின்றன. அதிலும் வரிப்புலிகளில் கம்பீரமும், கவர்ச்சியும் மிக்க இராஜபுலியாகக் கருதப்படும் வங்காளப்புலிகளின் எண்ணிக்கை வெறும் 30 மாத்திரமே.
இந்தியாவில் அந்நியராட்சி தான் கால்கொண்ட இடங்களிலெல் லாம் ஆளுமையின் அடையாளங்களில் ஒன்றாக வேட்டையை அறிமுகப்படுத்தியது. கார்டன் கம்மிங் என்ற ஆங்கிலேயப் பிரபு நர்மதை நதிக்கரைக் காடுகளில் 1863-64க்கு இடைப்பட்ட ஓராண்டு காலத்தில் 73 புலிகளை வேட்டையாடினார். கேர்ணல் நைட்டிங்கேல் ஹைதராபாத்தில் 300 புலிகள்வரை களமாடியிருக்கிறார். பெரிய பிரித்தானியாவின் ஐந்தாவது ஜோர்ஜ் மன்னருக்கு இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட வேட்டை விருந்தின்போது, அவர் 11 நாட்களில் 39 புலிகளைச் சுட்டுத் தீர்த்திருக்கிறார். ரைஸ் என்ற ஆங்கிலேயர் ராஜஸ்தானில் 31குட்டிகள் உட்பட 158 புலிகளைக் கொன்று அந்த அனுபவங்களை ஒரு புத்தகமாகவே எழுதியுள்ளார். இவர்களை அடி யொற்றி உள்ளுர் ராஜாக்களும், நிலச்சுவான்தார்களும் வகைதொகை யின்றிப் புலிகளைக் கொன்று குவித்தார்கள். உதய்ப்பூர் மகாராஜா மட்டுமே தன் வாழ்நாளில் சாகடித்த புலிகள் 1000த்துக்கும் அதிகம்.
முடியாட்சியில் அபிவிருத்தியின் பெயரால் புலிச்சாவுகள் அரங்கேறின. காட்டுப் பயிர்ச்செய்கை, காடுகளை ஊடறுக்கும் பெருந்தெருக்கள் என்று புலிகளின் வாழிடங்களை அபகரிக்க, அபகரிக்கப் புலிகளின் இரை விலங்குகள் குறையத் தொடங்கின. புலிகள் பற்றிய ஆய்வாளர் உல்லாஸ் கரந்த், சராசரி வளர்ச்சியுடைய புலி ஒன்று உயிர்வாழ ஆண்டொன்றுக்கு 3,000 கிலோ ஊனுணவு தேவைப்படுதாகக் கணித்துள்ளார். இதனைப் பெற அது வாரா வாரம் ஒரு காட்டெருமையையோ அல்லது மானையோ வேட்டையாட வேண்டியுள்ளது. இதன்படி, ஆண்டுதோறும் 50 இரை விலங்குகள் தேவைப்படுகிறது. புலி ஒன்று வேட்டையில் 50 இரைகளை அறுவடை செய்யவேண்டுமாயின், அதனைத் தொடர்ச்சியாக வழங்குவதற்குப் பத்து மடங்கு அதிகமாக - 500 விலங்குகளாவது - பெருகியிருக்க வேண்டும். காடகன்ற பூமியில் இத்தனை இரைகளுக்கும் எங்கே போவது? காடுகளை விட்டேகி ஆடு, மாடுகளை இரைதேடிய புலிகளைக் கிராமவாசிகள் தீர்த்துக் கட்டினார்கள். காடுகள் துண்டாடப்பட்டதால் தனித்தனித் தீவுகளான புலிகள் (Population
2ア5
Page 140
ஏழாவதுஉஊழி
Fragmentation) கிர் காட்டுச் சிங்கங்களைப் போன்றே திரும்பத் திரும்பச் சொந்தத்துக்குள்ளேயே இனக்கலப்பு செய்ய வேண்டிய பரிதாபத்துக்கு ஆளாகின. இதில் வீரியம் குறைந்த, குறைபாடுடைய குருளைகளை ஈன்றதனாலும் புலிகள் எண்ணிக்கையில் சரிந்தன.
உலகில் புலிகள் வெகுவாகக் குறைந்ததையடுத்து, சர்வதேச இயற்கை மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) வேகமாக J9goigs/6)JGujLb 3}60Ti66flaôT (Endangered Species) Lul-Lqu656) 1969-glb ஆண்டு புலிகளைச் சேர்த்துக்கொண்டது. புலிவேட்டை சட்ட பூர்வமாகத் தடைசெய்யப்பட்டது. இருந்தும் புலிவேட்டை நின்ற பாடில்லை. மனிதனின் பராக்கிரம சாகசங்களை வெளிக்காட்டுவதற்காக நடாத்தப்பட்ட வேட்டை இன்று மனிதனுக்குப் பராக்கிரமம் கொடுக்கவேண்டி நீளுகிறது.
போதைப்பொருள் வியாபாரத்துக்கு அடுத்தபடியாகக் கள்ளச் சந்தையில் காட்டுயிர் வியாபாரத்திலேயே பெரும்பணம் புரள்கிறது. புலிகள் வேட்டையாடப்பட்டு தோல், நகம், பல், எலும்பு, கண், மூளை, ஆணுறுப்பு, மீசைமுடி என்று ஏறத்தாழ அவற்றின் எல்லாப் பாகங்களுமே சர்வதேச கடத்தல்காரர்களினால் சீனா, திபெத், பூட்டான், மத்தியகிழக்கு போன்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படு கின்றன. புலியுறுப்பு மருந்துகள் நோய்களைக் குணமாக்குவதுடன் வீரியத்தையும் கொடுக்கின்றன என்ற நம்பிக்கை சீனர்களிடையே <ՉԱՔ வேரூன்றியுள்ளதால் அவர்களது பாரம்பரிய மருத்துவத்தில் இவற்றுக்கு எப்போதும் ஏகப்பட்ட வரவேற்பு. புலி எலும்புப் பொடியை மூட்டுவலி நிவாரணி, வாத நிவாரணி என்று நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகளில் பயன்படுத்துகிறார்கள். ஆணுறுப்பைத் திராட்சை ரசத்தில் ஊறவைத்து, உலர்த்திப் பொடி செய்து வீரிய மாத்திரைகள் தயாரிக்கிறார்கள். புலி எலும்புப் பொடியின் 100 கிராம் அளவு 600 அமெரிக்க டொலர்களாகவும், வீரியமாத்திரைகளடங்கிய 100 கிராம் பொதி 27,000 அமெரிக்க டொலர்களாகவும் விலைபோகிறது. திபெத்தியர்கள் அவர்களது புத்தாண்டு மற்றும் குதிரைத் திருவிழாவின்போது 'சூபா (Chuba) என்னும் ஆடம்பர ஆடைகளை அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆடைகளின் பெரும்பகுதி புலித் தோலைக் கொண்டே வடிவமைக்கப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் புலித்தோல் ஒன்றின் விலை 5,000 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
276
பொ. ஐங்கரநேசன்
பல நாடுகளின் காடுகளில் இருந்தும் புலிகள் வழித்துத் துடைக்கப் பட்ட நிலையிலேயே, சர்வதேச வன விலங்குக் கடத்தல் காரர்களின் பார்வை அண்மைக்காலமாக இந்தியா மீது திரும்பியிருக்கிறது. இந்தியாவின் காடுகளில் மட்டுமல்லாது, புலிகளின் காப்பகங்கள் வரைகூட அவர்களது 'ஒக்ரோபஸ் கரங்கள் நீண்டிருப்பதாக அரிய விலங்குகளையும் அவற்றின் உறுப்புகளையும் கடத்துவதைப் புலனாய்வு செய்யும் பன்னாட்டு அமைப்பு (Trafic) எச்சரிக்கை செய்துள்ளது. இதற்கு ஆதாரம் இல்லாமலும் இல்லை. ஒருதடவை மேகாலயாவில் பறிமுதல் செய்யப்பட்ட வனவிலங்கு உறுப்புகளில் சரணாலயத்தில் இருந்த வங்காளப்புலி ஒன்றின் பாகங்களும் சிக்கியிருக்கின்றன.
உத்தரப்பிரதேசம், இமாலயம், ஜம்மு-காஷ்மீர் பகுதிகளின் கண்காணிப்புக் குறைவான எல்லைகள் கடத்தல்காரர்களின் சட்ட விரோத வாணிபத்துக்கு வசதியாக உள்ளன. நேபாளம் - பூட்டான் - திபெத் ஊடாகச் சீனாவைத் தரைவழியாகவே கடந்து விடுகிறார்கள். உரத் தயாரிப்பில் பயன்படும் கால்நடை விலங்குகளின் எலும்புகளுடன் புலி எலும்புகளையும் கலந்து விடுவதால் பாதுகாப்பு அதிகாரிகள் கையைப் பிசைந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக உயர் அதிகாரிகளினதும், அரசியல்வாதிகளினதும் ஆசீர்வாத மிருப்பதால் இந்த வன மாஃபியாக் கூட்டத்துக்குக் காரியத்தைக் கனகச்சிதமாகச் செய்து முடிக்க இயலுகிறது.
இலண்டனில் இயங்கும் சுற்றுச்சூழல் புலனாய்வு நிறுவனம் (EIAEnvironmental investigation Agency) gg, Cogsit jurroot -glpidió05Gustairoop 90களின் இறுதியில் வெளியிட்டது. "புலிகளைப் பாதுகாக்க வேண்டு மென்ற உணர்வு வரவர இந்திய அரசியல் தலைவர்களிடையே குறைந்து வருவதாகக் குறைப்பட்ட அந்த அறிக்கை, புலிகளின் காப்பகங்களில் நிலவுகின்ற சீர்கேடுகளையும் சுட்டிக்காட்டியது. கடத்தல் கும்பலை எதிர்கொள்ளும் அளவுக்கு வணக்காவலர்களுக்குத் தேவையான ஆயுதங்கள், வாகனங்கள் போன்றவற்றைக் கொள்வனவு செய்ய நிதி இல்லாது சரணாலயங்கள் திண்டாடுகின்றன. காவலர்கள் பலருக்கு ஒழுங்கான சீருடைகள் கூட இல்லை. பலருக்குப் பலமாதங்களாக ஊதியம் கூட வழங்கப்படவில்லை. புலிகளைப் பாதுகாப்பதற்கென ஒதுக்கப்பட்ட நிதி வேறெங்கோ போய்ச் சேர்ந்திருக்கிறது" என்று அந்த அறிக்கை இந்தியாவின் மெத்தனத்தைச் சற்றுச் சூடாகவே கண்டனம் செய்தது.
277
Page 141
ஏழாவது ஊழி
இதில் சோகம் என்னவெனில், பல வருடங்களுக்கு முந்திய இந்த அறிக்கையையே தற்போது புலிகளின் உண்மை நிலை அறியும் குழுவும் பெரிதும் பிரதிபலித்திருப்பதுதான். இக்குழுவில் அங்கம் வகிக்கும் வால்மிக் தபார், "53 வயதுடைய வனக்காவலர்களால் எவ்வாறு 20வயது டைய ஆயுதபாணி வேட்டையாடிகளை எதிர்கொள்ள முடியும்?" என்று கேள்வியெழுப்பியிருப்பதுடன், கடந்த 20 ஆண்டு களாகப் புதிதாக ஆட்சேர்ப்பு எதுவும் இடம்பெறவில்லையெனவும் விசனப்பட்டுள்ளார். இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமும், "நல்ல நிர்வாகத்துக்குக் கூடுதல் பணம்தேவை. ஆனால் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தில் ஒவ்வொரு சரணாலயத்துக்கும் ஆண்டு தோறும் ஒரு கோடிக்கும் சற்று அதிகமான பணத்தை மட்டுமே ஒதுக்க முடிகிறது" என்று தன் இயலாமையை ஒப்புக் கொண்டிருக்கின்றது.
"புறொஜெக்ற் டைகர் (ProjectTiger) என்னும் புலிகள் பாதுகாப்புத் திட்டம் 1973இல் பிரதமர் இந்திரா காந்திய அவர்களால் செயல்வடிவம் பெற்றது. அழிந்து வரும் புலிகள் குறித்து முதன்முதலில் தீவிர அக்கறை காட்டிய உலகத் தலைவர்களில் இவரும் ஒருவர். ஒன்பது சரணாலயங் களை ஏற்படுத்தி அத்துறையைத் திறம்படச் செயற்பட வைத்தார். (1973இல் இந்தியாவில் 1800வரை இருந்த புலிகள் 1988இல் 4500வரை பெருகியிருந்ததாகச் சில புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.) ஆனால் 1984இல் இந்திரா காந்தியின் படுகொலை புலிகளுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் முதலாவது ஒதுக்கிடமாக 1973இல் ராஜஸ்தான் ரான்தம்பூர் காடுகள் அறிவிக்கப்பட்டபோது அங்கு இருந்த புலிகள் 14 மட்டுமே. காடுகளின் உள்ளே இருந்த கிராமங்களை அப்புறப்படுத்தித் தேசியப்பூங்காவாக அது மாற்றப்பட்ட பின்னர் 1987இல் 42 புலிகளாகப் பெருகியிருந்தன. ஆனால், இப்போது 20க்கும் கீழாகக் குறைந்துவிட்டிருக்கிறது. சரிஸ்கா கணக்கெடுப்பில் 2003ஆம் ஆண்டில் 28ஆக இருந்த புலிகள், 2004இல் 18புலிகளாகத் தேய்ந்து, 2005இல் ஒன்றுமே இல்லை என்றாகியுள்ளது. ஒன்பது வாழிடங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட புலிகள் பாதுகாப்புத் திட்டம் இப்போது நாடு பூராவும் 28 வாழிடங்களாக விரிவடைந் திருந்தாலும், புலிகளைப் பாதுகாக்க ஆட்சியாளர்களுக்கு இதற்கு அப்பாலும் விரிந்த பார்வை தேவைப்படுகிறது.
சுனித்தா நாராயண் தலைமையிலான புலிகளின் உண்மை நிலை அறியும் குழு (Tiger Task Force), சரணாலயங்களாகவும், தேசியப் பூங்காக்களாகவும் ஒதுக்கப்பட்டிருக்கும் காடுகளை அண்டிவாழும்
278
பொ.ஐங்கரநேசன்
உள்ளுர்ச் சமூகம் காடுகளினுள்ளே நுழைவதில் அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை மறுஆய்வு செய்யவேண்டும் என்பதைத் தனது முதன்மைப் பரிந்துரையாக வைத்திருக்கிறது. காடுகளினுள்ளே அரசு மேற்கொண்டு வரும் கனியவள அகழ்வு, வெட்டுமரங்கள் தறிப்பு, அணைக்கட்டுகள் நிர்மாணம், சுற்றுலா விஸ்தரிப்பு போன்ற பாரிய திட்டங்கள் நாட்டின் சூழலையே புரட்டிப்போடும்போது இயற்கை யுடன் இசைவுற வாழும் வனக்குடிகளைக் காடுகளுக்குத் தீங்கு என்பது முரண்நகையான ஒன்றுதான். பாதுகாக்கப்படும் காடுகளின் உள்ளேயும், எல்லைகளிலும் 3.5மில்லியன் பேர்வரையில் வாழ்ந்து கொண்டிருக்கி றார்கள். அன்றாட சீவனோபாயத்துக்குக் காட்டு வளங்களைச் சேகரிப் பதில் மரபார்ந்த உரிமைகளைக் கொண்டிருக்கும் இவர்கள், அதற்கு இயலாதவாறு சுற்றுச்சூழல் மற்றும் வனவள அமைச்சின் சட்டங்களி னால் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களது கோபம் புலிகளின் மீது திரும்புவதும் கடத்தல்காரர்களுடன் சகவாசம் கொள்வ தும் தவிர்க்க இயலாமல் நேரிடுகிறது. இதனாலேயே எஞ்சியுள்ள புலிகளின் பாதுகாப்பில் இச்சமூகத்தின் பங்களிப்பை உண்மைநிலை அறியும் குழு பலமாகப் பரிந்துரை செய்துள்ளது.
காட்டுப்புலிகளைக் காப்பாற்ற வேண்டுமானால் புலி உறுப்பு வாணிபத்துக்கு 1993ஆம் ஆண்டு முதல் இருந்து வரும் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை அண்மைக்காலமாகச் சீனா வலியுறுத்தி வருகிறது. சீனாவில் காடுகளில் இருந்து புலிகள் அகன்றபோதும், பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. அரச மற்றும் தனியார் பண்ணைகளில் 5,000 புலிகள் வரையில் உள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்காக இந்தப் பண்ணைகள் இயங்கி வருகின்றன எனச் சொல்லப்பட்டபோதும், பண்ணைகளின் வாசலிலேயே புலி எலும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒளடதபானங்கள் (Tonics) விற்கப் படுவதைக் காணலாம். புலிகளைப் பராமரிப்பதற்கு ஆகும் பெரும் செலவை ஈடுகட்டுவதற்காகவே புலியுறுப்பு வாணிபத்துக்கு விதிக்கப் பட்டுள்ள தடையை நீக்குமாறு சீனா கோரி வருகிறது. ஆனால், சட்ட பூர்வ வியாபாரத்தால் காடுகளில் உள்ள புலிகளைக் காப்பாற்றிவிட முடியாது. மாறாக, விரைந்து அழியவே வகை செய்யும். பண்ணைகளில் புலியொன்றை வளர்ப்பதற்கு வருடத்துக்கு 40,000 சீன யுவான்கள், அதாவது 5,200 அமெரிக்க டொலர்கள் செலவாகிறது. ஆனால், அதிகச் செலவின்றிக் காடுகளில் ஒரு புலியை வேட்டையாடி விடமுடியும். இதனால், தடை நீக்கப்படுமிடத்து கடத்தல்காரர்கள் இன்னும் அதிகத்
279
Page 142
ஏழாவது ஊழி
துணிச்சலுடன் இந்தியக் காடுகளில் களமிறங்கி விடுவர். இதனால், சீனாவின் தடை நீக்கக் கோரிக்கைக்கு எதிராகச் சர்வதேசக் கருத்தா தரவைத் திரட்டும் முயற்சியிலும் இந்தியா இறங்கி ஆகவேண்டும்.
புலிகளின் பாதுகாப்பில் வெகுசன விழிப்புணர்வை ஊட்டுவதில் வெகுசன ஊடகங்களின் பங்களிப்பும் பெரிதும் அவசியமாகிறது. புலிகளின் வாழிடங்களை அபகரிக்கும் திட்டங்களினால் புலிகள் வெளியேறித்தாக்க ஆரம்பிக்கும் போது, 'இரத்தவெறி பிடித்த புலிகள் என ஓங்கிக்குரல் கொடுக்கும் ஊடகங்கள் சூழலின் நிலைத்திருத்தலில் புலிகளின் முக்கியத்துவம் பற்றிக் கண்டுகொள்வதேயில்லை. புலிகள் பல்லினத்துவம் மிக்க காட்டுச்சூழலின் உணவுக் கோபுரத்தில் முடிக்குரிய இனம். காட்டில் புலிகளின் ஆட்சி நிலவுகிறதெனில் அங்கு மான், மரை, பன்றி போன்ற இரைக்குடிகள் இன்புற்றிருக்கின்றன என்பதே பொருள். இந்தத் தாவர உண்ணி செழித்து வாழ்வது என்பது வளமான காடுகளின் அடையாளம். பூமித்தாயின் நுரையீரலே இந்தக்காடுகள் தாமே! எனவே, புலிகள் ஒழித்துக்கட்டப்பட வேண்டிய உயிரினம் அல்ல; எங்களைப் போல இயற்கையன்னையின் புதல்வர்கள் தாம் என்பதைத் தொடர்பு ஊடகங்கள் மக்கள் மனதில் பதியவைத் தாலே புலிகளின் பாதுகாப்பில் இந்தியா பாதித்தூரம் கடந்துவிடலாம்.
புலிகள் இந்தியாவின் தேசிய விலங்கு என்பதற்கும் அப்பால், உலகில் கணிசமான புலிகள் இந்தியாவிலேயே இருப்பதாலும் - புலிகளின் அழிவு மிக வேகமாக இந்தியாவிலேயே இடம் பெற்றுவருவதாலும் புலிகள் முற்றாகவே மறைந்து போவதைத் தடுக்கும் தார்மீகப் பொறுப்பும் இந்தியாவிடமேயே இருக்கிறது. சரிஸ்கா உலுக்கியதில் துயில் கலைந்திருக்கும் இந்தியா, வழமைபோல வெற்று ஆரவாரங்களுடனேயே அடங்குமானால், விலங்குக் காட்சிச் சாலைகளின் கூண்டுகளில் இருக்கும் புலிகள் கூட மிஞ்சாது.
28O
28
குரங்குகளில் மனிதர்களும் மனிதர்களில் குரங்குகளும்
"மனிதர்கள் தங்களின் கொடூரமான செயல்களுக்கு மிருகத் தன்மையானது என்று சொல்லி மிருகங்களின் மீது பழி போடவே விரும்புகிறார்கள். ஆனால் தங்களின் கருணையான செயல்களை மாத்திரம், அவற்றை மனிதர்களினால் மட்டுமே செய்ய இயலும் என்பதைப்போல மனிதத் தன்மையானது என்று சொல்லித் தங்களை மெச்சிக் கொள்கிறார்கள்."
- பிரான்ஸ் டீ வால்
மனிதர்களுக்கு எப்போதுமே குரங்குகளின் மீது ஈர்ப்பு அதிகம். அதுவும் மனிதக் குரங்குகள் எனப்படும் வாலில்லாக் குரங்குகளைக் காண நேரிடும்போது அவர்களை அறியாமலேயே உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. விலங்குக் காட்சிச் சாலைகளில் இவற்றுக்கெனத் தனியான இரசிகர்கள் பட்டாளமே உண்டு. மனிதர்களுக்கு மனிதக் குரங்குகளின் மீது மட்டும் ஏன் இப்படி ஒரு நாட்டம்? மற்றைய விலங்குகளைவிட மனிதக் குரங்குகளின் உடலமைப்பும் செயற்பாடுகளும் அதிகளவில் மனிதர்களினதை ஒத்துக்காணப்படுகின்றன. இதனாலேயே மனிதக் குரங்குகளைக் காண நேரும்போதெல்லாம் மனிதர்கள் அவற்றில் தங்களைக் காண விழைகிறார்கள். ஒருசாரார் பழங்களைக் கொடுத்துப் பரிவுகாட்ட, இன்னொரு சாரார் அவற்றைச் சீண்டியும், சிகரெட் புகைக்கக் கொடுத்தும் மற்றும் இன்னோரன்ன மனிதப் பழக்கங்களை அவற்றின்மேல் சுமத்தியும் குதூகலிக்கிறார்கள். இந்நடத்தைகள் புறவயமானவை அல்ல. மனிதர்களின் மனவகக் குகைகளில் மறைந்திருந்து சமயம் பார்த்து வெளிப்படுகின்றன.
உயிரிகளின் பாகுபாட்டு மொழியில் 'ஏப்ஸ் (Apes) என்று அழைக் கப்படும் வாலில்லாக் குரங்குகளில் உலகில் இன்று "Sugit (Gibbon), "ஒராங்குட்டான் (Orangutan),'கொரில்லா (Gola),"சிம்பன்சி (Chimpanzee), 'போனபோ’ (Bonobo) என ஐந்து இனங்கள் உயிர்வாழ்ந்து கொண்டிருக் கின்றன. இவற்றின் தாயாதிகளும் மனிதர்களின் தாயாதிகளும்
281
Page 143
ஏழாவது ஊழி
வெவ்வேறு காலப்பகுதிகளில் தோன்றியனவாயினும் ஒரே மூதாதியில் இருந்தே பரிணாமித்து வளர்ந்தவை. இதனால் வாலில்லாக் குரங்குகள் யாவும் தங்களுக்கிடையே பொதுவான இயல்புகள் பலவற்றைப் பகிர்ந்து கொண்டிருப்பதுடன் மனிதர்களுடனும் பல இயல்புகளில் ஒத்துப் போகின்றன. கிபன், ஒராங்குட்டான் ஆகிய இரண்டு வர்லிலிகளினதும் தாயாதிகள், மூதாதியில் இருந்து மிக வெகுகாலத்துக்கு முன்பே, ஏறத்தாழ 15 மில்லியன் வருடங்களுக்கு முன்பே தனிக்குடித் தனம் பிரிந்து வெவ்வேறு பரிணாமப் பாதைகளில் பயணிக்க ஆரம்பித்து விட்டன. அதன் பின்னரே கொரில்லாக்களும், அதற்கும் பிறகே சிம்பன்சிகளினதும் மனிதர்களினதும் தாயாதிகளும் பரிணாமத்தின் தனித்தனியான பாதைகளில் செல்லத் தலைப்பட்டன. இக்காலப்பகுதி 5 தொடங்கி 8 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. சிம்பன்சிகளின் பாதையில் இருந்து 1.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர்தான் போனபோக்களின் பாதை கிளைத்தது. வாலில்லாக் குரங்குகளில் மிகவும் இளையவை போனபோக்கள்தான். பிந்திப் பரிணாமித்த காரணத்தால் சிம்பன்சிகளும் போனபோக்களும் மற்றைய மூன்று வாலில்லாக் குரங்கு இனங்களிலும் பார்க்க, மனிதர்களுக்கு மிகவும் நெருங்கிய இயல்புகளைக் கொண்டிருக்கின்றன. மனிதக் குரங்குகள் என்ற பெயருக்கேற்ற பெரிதும் பொருத்தமான இனங்கள் இவைதாம்.
அண்மைக்கால மரபணுவியல் ஆய்வுகளும் சிம்பன்சிகளுக்கும் போனபோக்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான பாரம்பரிய நெருக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளன. உயிரிகளின் பாரம்பரியத்துக்கு காரணம் மரபணு மூலக்கூறுகளான டீ.என்.ஏ. (DeoxyriboNucleicAcid) ஆகும். இம்மூன்று இனங்களினதும் டீ.என்.ஏ. மூலக்கூறுகள் ஆச்சரியப்படத் தக்கவகையில் 96 விழுக்காடு அச்சுஅசலாக ஒரே மாதிரி இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றின் மரபணு மூலக்கூறுகளில் உள்ள வேறுபாடு என்பது, இரண்டு மனிதர்களின் மரபணு மூலக்கூறுகளில் இருக்கக்கூடிய குறைந்தபட்ச வேற்றுமையைவிட 10 மடங்குகள் மாத்திரமே அதிகம். அதுவும், இந்த வித்தியாசங்கள் மூளைவிருத்தி, மணநுகர்வு, நோய் எதிர்ப்பு, இனம்பெருக்கல் போன்ற சிலவற்றுடன் தொடர்பான மரபணுக்களில் மாத்திரமே அறியப்பட்டுள்ளன. இதனால்தான் மனிதன் மொழி, பண்பாடு என்று பரிமாணத்தின் உச்சிக்குத் தன்னை உயர்த்திக் கொண்ட பின்னரும் இன்றளவும் அவன் சமூக நடத்தைகளில் சிம்பன்சி களும் போனபோக்களும் சேர்ந்த கலவையாகவே உள்ளான்.
282
Page 144
ஏழாவது ஊழி
சிம்பன்சிகளும் போனபோக்களும் ஏறத்தாழ 1.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர்தான் தமது பொது மூதாதியில் இருந்து கிளைத்துப் பிரிந்தவை. பூமியில் உயிரிகளின் 350 மில்லியன் ஆண்டுகள் காலப் பரிணாமப் பாதையுடன் ஒப்பிடுகையில் 1.5 மில்லியன்கள் என்பது வெகுதூரம் அல்ல. இதனால் இரண்டு குரங்குகளும் அநேக இயல்புகளில் ஒன்றையொன்று ஒத்துப் போகின்றன. இந்த ஒற்றுமை காரணமாக போனபோக்கள் சிம்பன்சிகளின் ஒரு உப இனமாகவே கருதப்பட்டு அண்மைக் காலம்வரை 'குள்ளச் சிம்பன்சி' என்ற பெயர் கொண்டே அழைக்கப்பட்டன. போனபோக்கள் உலகின் பார்வைக்கு அவை வாழும் ஆபிரிக்கக் காடுகளில் இருந்து அறிமுகமாகவில்லை. 1928இல் பெல்ஜியத்தின் அருங்காட்சியகம் ஒன்றில் இருந்து கிடைத்த அதனது தலையோடுதான் உலகத்துக்கு அதன் முதல் அறிமுகம். தலையோட்டைக் கண்டெடுத்த விலங்கியலாளர்தான் அதன் சிறிய உருவத்தை தவறாகப் புரிந்து கொண்டு குள்ளச் சிம்பன்சி (Pygmy Chimpanzee) என்று வகைப்படுத்தினார். 1954ஆம் ஆண்டிலேயே இவை சிம்பன்சி இனத்தில் (Pantrogodytes) இருந்து வேறுபட்ட புதிய இனமாக (Pampaniscus) அறிவிக்கப்பட்டன. அப்போதே போனபோ என்ற பெயரும் சூட்டப்பெற்றது. அந்தவகையில் விஞ்ஞானத்தில் கடைசியாகக் கண்டறியப்பட்ட பெரிய பாலூட்டி என்ற பெருமை போனபோ குரங்குகளுக்கே உரியது.
சிம்பன்சிகளினதும் போனபோக்களினதும் தாயாதிகள் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாக இருந்தபோதும், இவை இரண்டுக்கும் இடையே ஒற்றுமைகள் உள்ள அளவுக்கு அநேக இயல்புகளில் துல்லியமான வித்தியாசங்களும் காணப்படுகின்றன. போனபோக்கள், சிம்பன்சிகளிலும் பார்க்க மெலிந்த தோற்றம் உடையவை. சிம்பன்சி களை விடவும் ஒடுங்கிய தோள்களையும் மெல்லிய கழுத்தையும், சிறிய தலையையும், தலையில் நீண்ட முடிகளையும் கொண்டிருக்கின்றன. மற்றைய பெண் குரங்குகள் தட்டையான மார்பகங்களை வைத்திருக்க போனபோ பெண்கள், மனிதப் பெண்களினது அளவுக்கு இல்லா விடினும் ஒரளவுக்குப் பெரிய மார்பகங்களைப் பெற்றுள்ளன. தரையில் இடம்பெயரும் வேளைகளில் கால்வாசிநேரம் அவற்றின் நெடிய கால்கள் இரண்டிலும் நின்று நிமிர்ந்தவாறே தளிர்நடை போடுகின்றன. இவைபோன்ற பல இயல்புகளில் போனபோ குரங்குகள் சிம்பன்சிகளை விடவும் அதிக அளவில் மனித உருவுடன் ஒத்துப்போகின்றன. இவற்றுக்கும் மேலாக மனிதர்களில் உள்ளவாறே, சக அங்கத்தவர்களை
284
பொ.ஐங்கரநேசன்
முகத்தைப் பார்த்து வித்தியாசம் தெரிந்து கொள்ளும் வண்ணம் போனபோ குரங்குகளும் ஒவ்வொன்றும் தனித்துவமான முகவார்ப்பைக் கொண்டிருக்கின்றன. சமூகத் தொடர்பில் இன்றியமையாத இந்தக் 'காண்பிய அடையாளம், பரிணாம வளர்ச்சியில் போனபோக்களுக்கும் மனிதர்களுக்கும் கிடைத்திருக்கும் பெறுமதிமிக்க ஒரு பரிசு.
சிம்பன்சிகளும் போனபோக்களும் அவற்றின் சமூக நடத்தை களில்கூடப் பெருமளவு வேறுபாடுகளை வெளிப்படுத்து கின்றன. அமெரிக்காவில் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் 'பிறைமேற்றுகள் தொடர்பான ஆராய்ச்சி மையம் (Yerkes National Primate Research Centre) ஒன்று இயங்கி வருகிறது. பிறைமேற் என்பது தேவாங்கு, குரங்கு, மனிதக்குரங்கு, மனிதன் ஆகிய நால்வகை உயர்பாலூட்டி களையும் ஒருமித்துச் சுட்டுகின்ற ஒரு பாகுபாட்டு அலகு. இந்த பிறைமேற் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் பிரான்ஸ் டீ வால் (Frans de Wall) சிம்பன்சிகளினதும் போனபோக்களினதும் சமூக நடத்தைகளை விரிவாக ஆராய்ந்து தகவல்களை வெளியிட்டுள்ளார். இவை ஆச்சரியம் தருவதோடு, மனித நடத்தைகள் பற்றிய புரிதலுக்குப் புதிய வெளிச்சம் பாய்ச்சுவனவாகவும் இருக்கின்றன.
சிம்பன்சிகள் ஆணாதிக்க சமூக அமைப்புள்ளவை. ஐம்பதுக்கும் அதிகமான உறுப்பினர்களைக்கூட கொண்டிருக்கும் ஓர் சிம்பன்சிக் கூட்டம் தன்னகத்தே சிறுசிறு குழுக்களைக் கொண்டு இயங்குகிறது. ஒவ்வொரு சிறு குழுவையும் சிற்றரசர் போல ஒரு ஆண் வழிநடத்தும். இந்த எல்லாக் குழுக்களுக்கும் சேர்த்து பேரரசர் போல ஒரு ஆண் சிம்பன்சி தலைமையேற்கும். இது அல்பா ஆண் (Alpha Male) என ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறது. இந்தப் பதவியைக் கைப்பற்று வதற்கு வன்முறைகளுடன் கூடிய போட்டி நிலவும். கடைசியில் தன் புஜபல பராக்கிரமத்தையும் புத்திசாலித்தனத்தையும் பெண் சிம்பன்சி களின் முன்னால் நிரூபித்துக் காட்டும் ஆணே வெற்றி பெறுகிறது. தலைமைத்துவத்தை ஏற்ற ஆண் உணவு, கலவி என்று எல்லாவற்றிலும் முன்னுரிமையை அனுபவிக்கிறது. இனப்பெருக்க விடாயிலுள்ள பெண் சிம்பன்சிகளிடம் பிற ஆண்கள் நெருங்குவதற்குத் தான் கலவியில் ஈடுபடவிரும்பாத வேளைகளில்கூட இது அனுமதிப்பதில்லை. பெண் சிம்பன்சிகளும் அல்பா ஆணுடன் கலவியில் ஈடுபடவே விளைகின்றன. அத்தோடு, குழுவிலுள்ள பிற ஆண்களினால் அதிகம் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகாமல் இருப்பதற்காகவும் அல்பா ஆணின் அரவணைப்பில் இருக்கவுமே பெரிதும் விரும்புகின்றன. இதனால்,
285
Page 145
ஏழாவது ஊழி
சிம்பன்சி அரசியலில் பல ஆண்கள் அல்பா ஆணுடன் முரண்பட விரும்புவதில்லை. "அரசியலில் நிரந்தரப் பகைவர்களும் இல்லை; நிரந்தர நண்பர்களும் இல்லை" என்று சொல்லும் நமது அரசியல்வாதி களைப்போலக் கைகுலுக்கிவிட்டுக் கூட்டுச் சேர்ந்து கொள்கின்றன. பதவியை எப்பாடுபட்டாவது தக்கவைத்துக் கொள்ள விழையும் தலைமையும், கூட்டணிக் குரங்குகளை கூட்டுவேட்டை, பிரதேச பாது காப்பு போன்றவற்றில் இணைத்துக் கொள்வதோடு சலுகைகளையும் வழங்குகிறது. இன்னொரு தொகுதி இளந்தாரிகளோ தலைவரை விரட்டி அல்லது கொன்றுவிட்டு அதிகாரத்துக்கு வரத் தருணம் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும்.
சிம்பன்சிகள் ஊன் உண்ணுபவை. வேறு சிறிய குரங்குஇனங்களை உணவுக்காக வேட்டையாடும் சிம்பன்சிகள் தமது இனத்துக்குள்ளேயே கொலைகளை அரங்கேற்றுவதற்கும் தயங்குவது இல்லை. ஆண் சிம்பன்சிகள், தமது குழுவில் மற்றைய ஆண்களுக்குப் பிறக்கும் குட்டிகளைத் தாயிடமிருந்து ஈவிரக்கமின்றிப் பிடுங்கிக் கொன்று போட்டு விடுகின்றன. தனது பரம்பரையைத் தவிர வேறு எதுவும் இருக்கக் கூடாது என்ற உந்துதலிலேயே ஆண்சிம்பன்சிகள் இவ்வாறு நடந்து கொள்கின்றனவாம். ஆண் சிம்பன்சிகள் ஒன்றுசேர்ந்து தமது எல்லைகளில் கூட்டு ரோந்து செல்லும்போது வேறு குழுக்களைச் சேர்ந்த சிம்பன்சிகள் தனியனாக எதிர்ப்பட்டால் போதும், மூர்க்கத்தனமாகத் தாக்கிக் கொன்று தின்று விடுகின்றன. கற்களைத் தூக்கி வீசித் தாக்குவதும் உண்டு. சில சமயங்களில் பிற குழுக்களின் எல்லைகளினுள் வலிந்து ஊடுருவித் தாக்கிவிட்டும் திரும்புகின்றன. சிம்பன்சிகள் தமது வாழ்புலம் குறித்த தீவிரமான உணர்வுடன் செயற்படுவதால் அவற்றினால் அயலிலுள்ள பிற சிம்பன்சிக் குழுக்களுடன் நட்புறவைக் கொஞ்சமேனும் கொண்டிருக்க முடியவில்லை. கோரைப் பற்களை உயர்த்திக் காட்டியவாறு ஒரே கர்புர்ர்ர்ர்.
போனபோ குரங்குகளின் சமூகத்தில் பெண்குரங்குகளே தலைமை யேற்கின்ற்ன. சிம்பன்சிகளில் அல்பா ஆண் முழுக் கூட்டத்தின் மீதும் செலுத்துவதைப்போன்ற எதேச்சதிகாரம் இவைகளிடத்தில் இல்லை. தலைவி, ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லாமே சம அளவில் உரிமைகளை அனுபவிக்கின்றன. சிம்பன்சிகளிடமும் போன போக்களிடமும் தமது குழுவில் பலவீனமானவற்றுக்கு உதவி செய்வதும், கிடைத்த உணவைப் பகிர்ந்து உண்பதும் பொதுவான குணநலன்கள். ஆனால், அதையும் தாண்டிய இரக்க சுபாவம் போனபோக்களிடம்
286
பொ. ஐங்கரநேசன்
அதிகம். ஒரு தடவை ஆண் போனபோ ஒன்று நோய்வாய்ப்பட்டபோது சிகிச்சைக்காக வேறொரு நகரிலுள்ள விலங்கியல் பூங்காவுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இடமாற்றத்தால் சஞ்சலம் அடைந்த அந்தக் குரங்கை அங்கிருந்த போனபோக்கள் தடவிக் கொடுத்து ஆசுவாசப் படுத்தின. அதன்கையைப் பிடித்து அழைத்துச் சென்று கட்டிலில் படுக்கவும் வைத்தன. பிரித்தானியாவில் உள்ள ஒரு விலங்கியல் பூங்கா வில் அடிபட்டு விழுந்த ஒரு பறவையைப் போனபோ குரங்கொன்று பக்குவமாக மரக்கிளைக்கு எடுத்துச் சென்று இறக்கைகளை விரித்துப் பறக்க விட்டுள்ளது. இந்த உதாரணங்களைத் தனது ஆய்வுகளில் குறிப்பிட்டிருக்கும் பிரான்ஸ் டீ வால், போனபோக்களின் கருணை குறித்து வியப்புறுகின்றார். ஆம்! போனபோக்கள் காய்கனிகளையே அதிகம் உண்ணுகின்ற பழவுண்ணிகள் (Frugivorus). இதனால், இவை சிம்பன்சிகளைப் போன்று கூட்டு வேட்டையாடுவதில்லை. அது மாத்திரமல்ல; கலவி மோதல்களோ, பாலியல் வல்லுறவுகளோ சிசுக் கொலைகளோகூட இவற்றிடம் இல்லை. வன்முறைகளை நிராகரிக்கும் போனபோக்கள், மனிதர்கள் பார்த்தால் பொறாமை கொள்ளும் அளவுக்கு எந்நேரமும் கொஞ்சல், தழுவல், கலவி என்று பொழுதை அன்பு பொங்கக் கழிக்கின்றன.
சிம்பன்சிகளில் இரத்தம் தெறிக்கும் வன்முறைகள் அவற்றின் அடையாளமெனில், போனபோக்களில் காதல் சொட்டும் கலவி முறைகள் கவனத்தை ஈர்க்கின்றன. சிம்பன்சிகளில், பெண் இனப்பெருக்க விடாய்க்கு வருகின்ற காலங்களில் மாத்திரமே ஆணும் பெண்ணும் சோடி சேருகின்றன. ஆனால், போனபோக்களில் மனிதர்களைப் போன்றே நாளின் ஒவ்வொரு மணித்துளியும் கலவிக்கு உகந்த நேரம்தான். வேறு எந்த விலங்குகளிலும் இல்லாத மாதிரி, வேறு வேலையே இல்லாத மாதிரி ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒரு தடவை ஏதோ ஒரு பாலியல் நடவடிக்கையில் இறங்கிவிடுகின்றன. ஆம் ஆணும் பெண்ணும், ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் என்று ஈரின, ஓரினச் சேர்க்கைகளில் மாத்திரம் அல்லாது சுய இன்பத்திலும்கூட போன போக்கள் திளைக்கின்றன. அமெரிக்காவில் விஸ்கோன்சின் மாநிலத்தின் மில்வாகி நகர விலங்கியற் பூங்காவில் (Milwaukee Country Zoo) உள்ள லொமோகோ என்ற பெயருடைய ஆண் போனபோ இந்த விடயத்தில் இன்னும் ஒருபடிமேலே. சீருடை தரித்த பெண் வழிகாட்டிகளைக் காணநேருகின்ற போதெல்லாம், கிளர்ச்சி பெற்று வெட்கதுக்கம் எதுவுமே இல்லாமல் பலபேர் முன்னிலையில்
287
Page 146
ஏழாவதுஉஊழி
சுயமைதுனத்தில் ஈடுபடுவதாகப் பெண் பணியாளர் ஒருவர் மிகுந்த வெட்கத்துடன் தெரிவித்துள்ளார். மனிதர்களைப் போல முகத்தை முகம் பார்த்துக் கலவி செய்யக்கூடிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில விலங்குகளில் போனபோக்களும் ஒன்று. போனபோ பெண்கள் தமது மகன் உறவைத் தவிர வேறு எந்த ஆணுடனும் எந்த நேரமும் சரசத்துக்குச் சித்தமாயுள்ளன. போதாக்குறைக்கு இவற்றில் 'பிறெஞ்ச் கிஸ் (Frenchkiss) எனப்படும் நாக்குகளால் துழாவும் முத்தங்களும் வேறு. மனிதர்கள் சளைத்தார்கள் போங்கள்!
காதல் பிசாசுகள் போல போனபோக்கள் காமுற்றும், எவரும் எதிர்பார்க்க முடியாதபடி அவற்றின் இனம்பெருக்க விழுக்காடு மிகக்குறைவானதாகவே உள்ளது. சிம்பன்சிகளைப்போல ஐந்து அல்லது ஆறு வருட இடைவெளிகளிலேயே காத்திருந்து ஒரு குட்டியைப் பெற்றெடுக்கின்றது. இவற்றில் பாலுறவு என்பது வெறுமனே சந்ததிப்பெருக்கத்துக்கான இயங்கியல் அல்ல. அதற்கும் அப்பால் சமூக வாழ்வியக்கத்தில் பிரதான பங்களிப்பைச் செய்து வருகிறது. நாம், "வணக்கம்" சொல்லி வரவேற்பதைப் போலவும், "காலை சாப்பீட்டீர் களா?" "ஐயையோ என்ன பலமாக அடிபட்டுதா?" என்று நலம் விசாரிப்பதைப் போலவுமேதான் போனபோக்களுக்குப் பாலுறவும். கைகுலுக்குவதுபோல, போகிறபோக்கில் பெண் போனபோ ஒன்று தனது யோனியால் இன்னொரு பெண் போனபோவின் யோனியை உரசிவிட்டுப் போவதை சர்வசாதாரணமாகக் காணலாம். இவை போன்ற சரசமாடல்களெல்லாம் போனபோக்களின் குடும்ப உறவுகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய இடைவெளிகளைக் குறைக்க உதவுகின்றது. மன இறுக்கத்தை தளர்த்தி மகிழ்ச்சி நிலவச்செய்கிறது. மொத்தத்தில் போன போக்களின் காமசூத்திரம்தான், சிம்பன்சிகளைப் போல அல்லாமல் அவை சமாதானச் சகவாழ்வு வாழ்வதற்கான அருமருந்தாக இருக்கிறது.
ஒன்றுவிட்ட சகோதரர்களான சிம்பன்சிகளும் போனபோக்களும் இப்படி எதிரும் புதிருமாக சண்டைப் பிரியர்களாகவும் சமாதானப் புறாக்களாகவும் பரிணாமித்தமைக்கு அவற்றின் வாழிடச் சூழலையே பிரதான காரணமாக ஆய்வாளர்கள் சுட்டுகிறார்கள். சிம்பன்சிகள், போனபோக்கள் இரண்டினது தாயகமுமே இருண்ட ஆபிரிக்கக் கண்டம்தான். இங்கு, சிம்பன்சிகள் மழைக்காடுகளில் காணப்பட் டாலும், அடர்த்தி குறைந்த காடுகளிலும், அவற்றை அண்டிய சவான்னா வெளிகளிலுமே அதிகம் சஞ்சரிக்கின்றன. அனைத்தும் உண்ணிகளான இவை, இறைச்சி உண்ணுவதிலும் தீவிர விருப்புடை
288
பொ.ஐங்கரநேசன்
யவை. இதனால் காட்டுப் பன்றிகள், பபூன் குரங்குகள், மறி மான்கள் போன்றவற்றைத் தேடி இரையாடுவதற்கென ஒரு குறைந்தபட்ச நிலப்பரப்பேனும் இவற்றுக்கு வேண்டியிருக்கிறது. மேலும் இவை வாழுகின்ற சூழலையே இன்னுமொரு மனிதக்குரங்கான கொரில்லாக் களும் பங்குபோட்டுக் கொள்கின்றன. வலியன பிழைக்கும் இந்த வாழ்க்கைப் போட்டியில் சிம்பன்சிகள் இரையாடுவதற்குத் தமக்கான ஒரு பிரதேசத்தை வரையறை செய்து கொள்வதோடு, அதைத் தமது ஆளுகைக்குள் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகின்றன. சிம்பன்சிகள் எதிர்கொண்ட இந்த நெருக்கடிகள்தான் பரிணாமத்தில், 'எல்லையை மீறி யார் வந்தவன்? என்று தன் இனத்தையே குதறித் தின்ன வைத்துள்ளது.
போனபோக்கள் காட்டுவெளிகளில் அல்லாமல் அடர்ந்த காடுகளினுள்ளேயே வாசம் செய்பவை. கொங்கோ குடியரசில் இவை காணப்படுகின்ற காடுகள், அமேசன் காடுகளுக்கு அடுத்த உலகின் இரண்டாவது பெரிய மழைக்காடுகள். இங்கு கைக்கெட்டிய தூரத்திலெல்லாம் காய்களும் கனிகளும் நிறைந்திருக்க, பழ உண்ணிகளான இவற்றுக்கு உணவுக்காக தனது இனத்துக்குள்ளேயே அடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமற் போயிற்று. இதனாலேயே போனபோக்களின் பரிணாமத்தில், சிம்பன்சிகளில் உள்ளதனைப் போன்ற மூர்க்கத்தனமான பிராந்திய பாதுகாப்பு நடத்தைகள் விருத்திபெறவில்லை. அத்தோடு, பிறைமேற்றுகளில் இளந்தைகளின் சாவுக்கு பிரதான காரணமாய் அமைந்த சிசுக் கொலைகளையும் கலவிச் சுகத்தின் மூலம் மறக்கக் கற்றுக் கொண்டன. பெண் போனபோக்கள் எல்லா ஆண்களுடனும் உறவு கொள்ளப்போக ஆண்களுக்குத் தமது குட்டி எது? பிறர் குட்டி எது? என்று வேறு பிரித்தறிய முடியாமல் போனது. இதன்மூலம் போனபோக்களின் பரிமாணப் பாதையில் இருந்து கொடூரமான சிசுக்கொலை நடத்தைகள் தூக்கி வீசப்பட்டு அவை சாந்த குணாளர்களாக மாறியுள்ளன.
மனிதர்களில் ஒரு குழுவினர் இன்னொரு குழுவினரை ஈவிரக்க மின்றி வதைத்து இனப்படுகொலை செய்து வருகின்றனர். அதேசமயம் இன்னொரு சாரார் சாத்வீகமான முறைகளில் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ள விரும்புகிறார்கள். மனிதர்களின் இந்த இரு துருவ நடத்தைகளையும் சிம்பன்சிகளினதும் போன போக்களினதும் நடத்தைப் பின்னணிகளில் இருந்தே ஆய்வாளர்கள் புரிந்து கொள்ள முயல் கின்றனர். பரிணாமக் கல்வியில் முன்னர் சிம்பன்சிகளே மனிதர்களுடன்
289
Page 147
ஏழாவதுஊழி
ஒப்பிட்டு ஆராயப்பட்டன. இப்போது போனபோ குரங்குகளின் நடத்தைகள் பெருமளவில் மனிதர்களை ஒத்திருப்பது தெரியவந்ததை யடுத்து, சிம்பன்சியும் போனபோவும் பெற்றெடுத்த கலப்புஇனத்தில் இருந்து மனிதன் பரிணாமத்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதில் முடிவுக்குவர இன்னமும் நீண்ட கால ஆய்வுகள் தேவைப்படும். ஆனால் அதற்கு முன்பாகவே இந்த மனிதக்குரங்குகள், குரங்கு மனிதர்களினால் அழிந்துபோகும் பரிதாபநிலையே ஆபிரிக்காவில் நிலவுகிறது.
ஒருகாலத்தில் ஆபிரிக்காவின் மேற்குக் கரையோரத்தில் செனிகலில் ஆரம்பித்து, கிழக்கே தான்சானியாவரை பூமத்திய கோட்டுப் பகுதிகளில் உள்ள அத்தனை ஆபிரிக்க நாடுகளிலுமே சிம்பன்சிகள் பரவியிருந்தன. இன்று பலநாடுகளில் முற்றாக அற்றுப்போய் சியராலி யோன், லைபீரியா, கபொன், காமிரோன், ருவாண்டா, புறூண்டி, தான்சானியா போன்ற சில நாடுகளிலேயே எஞ்சியுள்ளன. இங்கெல்லாம் சேர்த்து இரண்டு இலட்சம் வரையான சிம்பன்சிகள் இருக்கலாம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு குத்து மதிப்பீடுதான், இந்த எண்ணிக்கை ஒரு இலட்சம் வரையினதாகக்கூட இருக்கலாம் என்று இன்னொரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொங்கோ குடியரசின் காடுகளில் மாத்திரமே காணப்படும் போனபோக்களின் நிலை இதைவிடக் கவலைக்கிடமானது. 1984இல் சுமார் ஒரு இலட்சமாக இருந்த இவற்றின் எண்ணிக்கை இன்று 5000க்கும் கீழாக வீழ்ச்சியடைந்து விட்டது.
மனிதக் குரங்குகளின் வாழ்விடங்களைக் காடுகளின் அழிப்பு வேகமாகச் சுருக்கி வருகிறதெனின், இன்னொருபுறம், மனிதரில் குடிகொண்டிருக்கும் சிம்பன்சித்தனம் இவற்றைத் துரத்தித் துரத்தி வேட்டையாடி வருகிறது. ஆபிரிக்க நாடுகளில் வறுமை காரணமாக காட்டுவிலங்குகளை வேட்டையாடி உண்ணும் பழக்கத்தை நீண்ட காலமாகவே கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்டு இறைச்சியைக் குறிக்க சர்வதேச அளவில் 'புதர் இறைச்சி (Bush Meat) என்ற பதம் பிரயோகிக்கப்படுகிறது. புதர் இறைச்சிகளில் எல்லாவகையான காட்டுவிலங்குகளின் இறைச்சிகளும் அடங்குமாயினும் ஆபிரிக்காவில் பெரிதும் ருசிக்கப்படுவது கொரில்லா, சிம்பன்சி, போனபோக்கள் போன்ற மனிதக் குரங்குகள்தாம். போதாக்குறைக்கு றுவாண்டா, கொங்கோ போன்ற நாடுகளில் இடம்பெற்றுவரும் உள் நாட்டுக் கலவரங்கள் அகதிகளையும் படையினரையும் காடுகளுள் இடம்பெயர்த்
29O
பொ.ஐங்கரநேசன்
துள்ளது. பசித்து அலைகின்ற இந்த வாய்களும் வாய் வைப்பது மனிதக்குரங்குகளின் மீதுதான். மனிதக் குரங்குகள் உடல் அமைப்பிலும் நடத்தையிலும் மனிதர்களை ஒத்துக் காணப்படுவதால் பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வுக்கூடங்களில் சிம்பன்சிகள், போனபோக்கள் போன்றவற்றையே பயன்படுத்தித் தமது மருந்துகளைச் சோதித்துப் பார்க்கின்றன. அதுமட்டுமல்லாமல் மருத்துவ ஆராய்ச்சி என்ற போர்வையில் இரசாயன, உயிரியல், அணுஆயுதங்களின் தயாரிப்பில் அவற்றின் விளைவுகளும் இவற்றின் மீதே பரீட்சித்துப் பார்க்கப்படுகின்றன. இவற்றுக்காகவும் சர்வதேசக் கடத்தல்காரர்களால் ஆபிரிக்கக் காடுகளிலிருந்து பெருமளவுக்கு இவை பிடிக்கப்பட்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகின்றன. கொங்கோவில் ஏழைக் குடியானவர்கள் விலைமதிப் பில்லாத போனபோ குரங்குகளை, ஒன்றுக்கு 200அமெரிக்க டொலர்கள் என்ற பேரத்தில் பிடித்துக் கொடுத்து வருகின்றனர். அழிந்துவரும் விலங்கினங்களாகவே பிரகடனப்படுத்தப்பட்ட சிம்பன்சிகளையும், போனபோக்களையும் காப்பாற்றுவதற்கு ஆபிரிக்க நாடுகளில் இயங்கி வரும் தன்னார்வ அமைப்புகள் இவை மனிதர்கள்தான்; ஆனால் நிர்வாணமான மனிதர்கள் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் யாரும் கேட்பதாக இல்லை. பாதுகாப்புக் கடமையில் இருக்கும் காவல்துறையினர்கூடச் சுட்டுப் புசித்து விடுகின்றனர். புதர் வேட்டையும், சட்டவிரோதக் கடத்தலும் கேட்பாரின்றி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தவாறு உள்ளது.
மூர்க்கத்தனமான சுபாவம் கொண்ட குரங்கு இனங்களையும் பரம சாதுவான சுபாவம் கொண்ட குரங்கு இனங்களையும் குட்டிப் பருவத்திலிருந்தே சேர்த்து வளர்ப்பதன் மூலம் முரட்டுக் குரங்குகளுக்கு சாத்வீகமான சமூக நடத்தைகளை கற்றுக் கொடுக்க முடியுமென்று 'பிறைமேற் ஆய்வாளர் பிரான்ஸ் டீ வால் தனது ஆய்வுகளின் மூலம் நிரூபித்துள்ளார். ஆனால், சமாதான சகவாழ்வு நடத்தைகளைப் போதிக்க மனித வரலாறு பூராவும் மகான்களும் மகாத்மாக்களும் தோன்றியும் மனிதர்கள் தங்களது மனங்களில் குடியேறியிருக்கும் சிம்பன்சிகளை இன்னமும் கீழே இறக்கி விடுவதாகவே இல்லை. இயற்கைச் சூழலின் மீதும் சகமனிதர்களின் மீதும் அவனது வன்முறை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
29
Page 148
29
தந்திர விதைகளும் தற்கொலை விவசாயிகளும்
"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்."
- திருக்குறள் (குற்றங்கடிதல், 435)
இயற்கை சில சமயங்களில் வெள்ளம், புயல், கடும் வறட்சி, பூமி அதிர்ச்சி என்று சில மணி நேரங்களிலேயே - ஏன் சில நிமிடங் களுக்குள்ளாகவே கூட அப்பிராந்தியத்தின் உணவுப் பயிர்களை, சேமிப்பு உணவுகளையெல்லாம் வழித்துத் துடைத்துக் கொண்டு பசியாறி விடுகிறது. பேரழிவைத் தொடர்ந்து பட்டினிச் சாவில் இருந்து தப்ப, எதனைச் செய்தேனும் எதையாவது புசிப்பதற்குத் தயாராகப் பசிவெறியுடன் அலையும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கும் போதுதான் அதுவரை சாதாரணமாகத் தெரிந்த உணவுப் பருக்கைகளின் பிரமாண்டம் தெரியவரும். இதைப் புரிந்து கொண்டுதான் உலகம் பூராவுமே போராட்டங்களை ஒடுக்கும் ஒரு கருவியாக உணவு விநியோகத்தின் மீது ஆட்சியாளர்கள் கைவைத்து வருகின்றனர். இப்போது இவற்றையெல்லாம் மிஞ்சிவிடும் வகையில் இன்னொன்றும் சேர்ந்து கொண்டுள்ளது. பசித்தவனுக்குப் பரிமாறுகிறோம் என்று சொல்லிக் கொண்டே தட்டில் எஞ்சியுள்ளதையும் தட்டிப் பறிக்கும் முயற்சியில் மேற்குலகின் பன்னாட்டு நிறுவனங்கள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன.
'ldstairfrtairGLIT (Monsanto - USA), 'g-guitairp' (Dupont - USA), "s9jáĥG3p1TLJ G3uurTGJö' (Agrobiotech - USA), “-I9y6ĥvo Jnr @)gr6oĥ35rro (AStrazeneca - U.K) என்று பகாசுரத்தனமான பன்னாட்டு நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளில் முகாமிட்டு மரபணு மாற்றப்பயிர்களை உருவாக்கி வருகின்றன. தாவரம் ஒன்றின் மரபணுக்களுடன் அதனுடன் சம்பந்தமே இல்லாத இன்னொரு தாவரத்தின் அல்லது விலங்கின் மரபணுக்களை புகுத்திச் செயற்கையாகத் தயாரிக்கப்படும் புதிய ரகப் பயிர்களே மரபணு மாற்றியப் பயிர்கள் (GeneticallyModifiedcrops) எனப்படுகின்றன. தங்க அரிசி,
292
பொ. ஐங்கரநேசன்
Btஅரிசி, Bt பருத்தி, Btகத்தரி, Btதக்காளி என்று நீளும் பட்டியல் இந்த ரகங்கள்தாம். அதிக மகசூல், உயர் ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு, குறைந்த நீர்ப்பாசனம், குறுகிய கால அறுவடை என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களினால் கவரப்பட்ட அரசும், மக்களும் இந்த உயிரித் தொழில் நுட்பத்தைத் தங்களுக்கு உணவிட வந்த அட்சய பாத்திர மாகவே கருதுகின்றனர். ஆனால், உண்மைநிலை அவ்வாறானதாக இல்லை. இந்த மந்திர விதைகளின் பின்னால் தந்திரங்களே ஏராளமாக உள்ளன.
மரபணு மாற்றப் பயிர்களில் அண்மைக்காலமாக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட உயிர் தங்க அரிசி டஃபோடில்ஸ் பூச்செடியில் இருந்து விற்றமின்'ஏ'க்குக் காரணமான மரபணுக்களை பக்ரீறியங்களின் மூலம் விதை நெல்லுள் இடம் மாற்றி விளைவிக்கப்பட்ட அரிசி மணிகளே தங்க அரிசி ஆகும். விற்றமின் ‘ஏ’ முன்னோடியான பீற்றா கரோட்டினைக் (Provitamin A-Beta carotene) கொண்டிருப்பதால் சாதாரண வெள்ளை அரிசியில் இருந்தும் வேறுபட்டுத் தங்க மஞ்சள் நிறமாகக் காணப்படுகிறது. ஏழு ஆண்டுகளில் 2.6 மில்லியன் டொலர்கள் செலவழித்து சுவிற்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட இந்த விற்றமின் நெற்பயிர் இப்போது ஆசிய ரகங்களுடன் இனம் கலப்பதற்காகப் பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. விற்றமின் ‘ஏ’ பற்றாக்குறைவுக்கு ஆண்டுதோறும் ஒரு மில்லியன் குழந்தைகளின் உயிரையும், சுமார் மூன்றரை இலட்சம் குழந்தைகளின் பார்வையையும் பலிகொடுத்துக் கொண்டிருக்கும் ஏழை நாடுகளுக்குத் தங்க அரிசியின் வருகை பொன்னான வாய்ப்பு என இந்த அரிசிக்கான காப்புரிமையை வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனம் (Syngenta) அறிவித்துள்ளது.
ஆனால், தங்க அரிசிக்கான வரவேற்பு பிரகாசமாக இல்லை. இயற்கையிலேயே. கரட், முருங்கைக்காய், பச்சைக்கீரை வகைகளில் உடலுக்கு அவசியமான பிற கூறுகளுடன் சேர்ந்து பீற்றா கரோட்டின் அதிகளவில் காணப்படுகிறது. ஏழைகளின் கைக்கெட்டக்கூடிய இவற்றைத் தவிர்த்துப் பெரும் செலவில் தங்க அரிசியைப் பரிந்துரை செய்திருப்பதற்குக் கடுமையான ஆட்சேபம் கிளம்பியுள்ளது. இதனை "குருட்டைப் போக்குவதற்குக் குருட்டுத்தனமான அணுகுமுறை" ଜTଟ୪T சுற்றுச்சூழல்வாதியான டாக்டர் வந்தனா சிவா கண்டனம் செய்துள்ளார். மேலும், விற்றமின் ‘ஏ’யைத் தங்க அரிசி மூலம் பெற வேண்டுமாயின் ஒரு நாளில் உள்ளெடுக்கும் வழமையான அரிசியை விட 12 மடங்கு
293
Page 149
ஏழாவது ஊழி
அதிகமான அரிசியை உட்கொள்ளவேண்டும் எனக் கணிப்பிட்டுள்ள 'பசுமை அமைதி இயக்கம் இதனை 'முட்டாள்களின் உணவு எனச் சாடியுள்ளது. இந்த முரண்களுடன் மரபணுமாற்ற பயிர்களுக்கே உரிய பிரச்சினைகளும் பெரும் எதிர்ப்பாகச் சேர்ந்து கொள்ள அரிசிகளின் அரசியின் வருகை இப்போது தாமதமாகியுள்ளது.
உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கினர் மிதமிஞ்சிய உணவை அனுபவித்து வருகின்றனர். அடுத்த மூன்றிலொரு பங்கினர் பற்றாக்குறைவான உணவை உண்ணுகின்றனர். எஞ்சிய மூன்றிலொரு மக்களோ, பட்டினியுடனேயே படுக்கைக்குச் செல்கின்றனர். இந்நிலை யில் ஏழை நாடுகளில் பசியால் வாடிக்கொண்டிருக்கும் மக்களுக்குத் தீர்வாக மரபணுமாற்றிய பயிர்களை முன்வைத்திருப்பதன் மூலம், விரல்விட்டு எண்ணக்கூடிய பன்னாட்டு நிறுவனங்கள் உலகின் ஒட்டுமொத்த உணவு விநியோகத்தையுமே கையகப்படுத்த முனைந்து வருகின்றன. காலனி ஆதிக்கக் காலத்தில் இராணுவத் தொழில்நுட்பம் மூலம் நிகழ்த்திய ஆக்கிரமிப்புகளை இன்று இரத்தம் சிந்தாமல் உயிர்த்தொழில்நுட்பத்தின் மூலம் சாதித்துக் கொள்கின்றன.
மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமே காணக்கிடைக்கின்ற தாவர வகைகளைத் தமதாக்கிக் கொள்ளவும் (பாசுமதி அரிசி, மாதுளை, மிளகு, பாகற்காய், வேம்பு என்று பறிபோனவை ஏராளம்), மரபு வழிப் பயிர்களை வழக்கொழிந்துபோகச் செய்வதன் மூலம் (மொட்டைக் கறுப்பனும், காடைக்கழுத்தனும், சீரகச் சம்பாவும் ஐ.ஆர். 8 இன் வருகையுடனேயே தொலைந்து போய்விட்டன) உணவுக்காக நிரந்தரமாகவே தங்களைச் சார்ந்திருக்கச் செய்யவும் பன்னாட்டு நிறுவனங்கள் தமது புதியரக கண்டுபிடிப்புகளுக்கு அறிவுச் சொத்துரிமையைப் பெற்று வருகின்றன. அறிவுச் சொத்துரிமையின்படி (Intelectual Property Rights) ஒரு பொருள் கண்டுபிடிக்கப்படுமாயின் வேறு ஒருவரால் அது கண்டுபிடிக்கப்படவோ, உற்பத்தி செய்யவோ, மேம்படுத்தவோ முடியாது. மண்ணுக்குப் பரிச்சயமான, நோய் எதிர்ப்புத் த்ன்மைகளை உடைய, அதிகளவு கவனிப்புத் தேவையற்ற உள்ளூர்ரக விதைகளைத் தவிர்த்துப் பன்மடங்கு விலையில் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து புதியரக - மரபணுமாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் பெற்றுக்கொள்ளும் விவசாயி சாகுபடியின் பின்னர் மறுஉற்பத்திக்கென கைப்பிடியளவு விதைகளையேனும் எடுத்து வைக்க முடியாது. அவ்வாறு சேமிக்கும் போது அறிவுச்சொத்துரிமை குறுக்கே வந்து நிற்கும். புதிய வடிவுரிமைச்சட்டம் விவசாயிகள் ஒவ்வொரு
294
Page 150
ஏழாவது2ஊழி
ஆண்டும் விதைக்காகப் பன்னாட்டு நிறுவனங்களிடமே கையேந்த வேண்டிய பரிதாப நிலையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.
ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் இதனுடன் மட்டும் திருப்தி அடைவதாய் இல்லை. பெரும்பாலான காப்புரிமைச் சட்டங்கள் 20 ஆண்டுகளில் செல்லுபடியற்றதாகி விடுகின்றன. இதனால் மூளையைக் கசக்கி எந்தக் காலத்திலும் காலாவதியாக முடியாத ஒர் உத்தியைக் கண்டறிந்துள்ளன. அறுவடைக் காலத்தின் போது விதைகளின் உள்ளே உள்ள முளையம் தானாகவே இறந்துபோகும் அளவுக்குக் குரூரமான அந்தத்திட்டத்தை பிறப்புரிமைப் பொறியியல் நிறைவேற்றிக் கொடுத் திருக்கிறது. மரபணுக்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் விதைகளைத் தற்கொலைக்குத் தூண்டும் இந்த உயிரித்தொழில்நுட்பம் 'டேர்மினேற்றர் (Teminator) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு விவசாயி இந்த விதைகளை மறுசெய்கைக்கு எனச் சேர்த்து வைக்கும் வாய்ப்பு இயல்பாகவே இல்லாமற் போகிறது, வித்துக்கள் இறந்து விடு வதால் மறுபடியும் மறுபடியும் விதைகளுக்காகப் பன்னாட்டு நிறுவனங் களையே சார்ந்திருத்தல் நூற்றுக்குநூறு உறுதிப்படுத்தப்படுகிறது.
பன்னாட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு தடவையும் விதைகளை உற்பத்தி செய்வதென்பதும் இலேசானதல்ல. இதற்காகத் தமது நீர் - நில வள ஆதாரங்களைப் பெருமளவில் விலையாகக் கொடுக்க வேண்டி யிருக்கிறது. அத்துடன் மூன்றாம் உலக நாடுகளின் பண்ணைகள் வரை கொண்டு சேர்ப்பதிலும் சிரமங்களை எதிர்நோக்கு கின்றன. இந்தப் பின்னடைவுகள் எல்லாம் இப்போது இன்னுமொரு புதிய ரக விதையை உருவாக்க வைத்துள்ளன. "ட்ரெயிற்றர் (Traitor) எனப்படும் இந்த ரக விதைகளை விவசாயி அறுவடையின் பின்னர் மறு நடுகைக்கெனத் தாராளமாகச் சேமித்து வைக்கலாம். காப்புரிமைச் சட்டங்கள் எதுவும் கைது செய்யாது. அப்பாடா என்கிறீர்களா? அதுதான் இல்லை. "டேர்மினேற்றர் ரக விதைகள் தற்கொலை விதைகள் என்றால் இந்த 'ட்ரெயிற்றர் ரக விதைகள் முளைக்கத் தெரியாத விதைகள். மரபணுக் களை மாற்றியமைப்பதன் மூலம் இந்த விதைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. இவற்றை முளைக்க வைக்க வேதிப் பொருட்கள் தேவைப்படுகின்றன. மோசடித்தனமாகப் புகுத்தப் பட்ட கொலைகார மரபணுக்களின் கட்டளைப்படி உருவாக்கப்படும் 'பார்னேஸ் (Bamase) என்னும் இரசாயனம் முளைத்தலுக்குத் தடை சொல்லுகின்றது. இதனைச் செயல் இழக்கச் செய்யும் மரபணுக்களைத் தூண்டுவதற்குரிய வேளாண் வேதிப்பொருட்களை வழங்கினால் மட்டுமே இந்த விதைகளினால் வெளியுலகை எட்டிப் பார்க்க முடியும்.
296
பொ.ஐங்கரநேசன்
முளைப்பதற்கு மட்டுமல்ல; வளரச் செய்ய, அப்புறம் பூக்களை உருவாக்க பூச்சிகளில் இருந்தும் நோய்களில் இருந்தும் தப்பிக்க வைக்க என்று அதன் எல்லாவற்றுக்குமே வேளாண் வேதிப்பொருட்களை நம்பி யிருக்கும்படி மரபணுரீதியாகவே இந்த விதைகள் நிர்ப்பந்திக்கப் படுகின்றன. மொத்தத்தில் வேதிப்பொருட்களுக்கே போதையாகிப் போய்விட்ட இந்தவகைத் தாவரங்களுக்குத் தேவையான உரங்கள், களைகொல்லி, பூச்சிகொல்லி என அத்தனை வேளாண் இடுபொருட் களையும் அதே பன்னாட்டு நிறுவனங்களே தயாரித்து விற்பனையும் செய்கின்றன. பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டும் தொழில் நுட்பத்தால் பன்னாட்டு நிறுவனங்கள் கோடி கோடியாகச் சம்பாதிக்கின்றன. இவற்றில் மான்சான்டோ மாத்திரமே ஆண்டுதோறும் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் தாண்டி தனது காப்புரிமை பெற்ற விதைகளையும், இடுபொருள்களையும் விற்பனை செய்து வருகிறது என்பதிலிருந்து இந்தச் சர்வதேச வர்த்தகத்தின் பரிமாணத்தை புரிந்து கொள்ளலாம்.
விவசாய - உயிர் நுட்பத்துறையில் இன்று இராட்சதப் பலம் பெற்றுத் திகழும் மான்சான்டோ நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழுவே 1982இல் முதன்முதலாகத் தாவரங்களின் மரபணுமடியில் கைவைத்தது. கடந்த இரண்டு தசாப்தங்களிலும் விவசாயத்தின் மற்றையதொழில் நுட்பங்களைவிட இந்தப் பிறப்புரிமைப் பொறியியல் (Genetic Engineering) மிகவும் வேகமாக முன்னேறிவிட்டிருக்கிறது. இன்று இப்படி மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் உலகில் 40 மில்லியன் ஹெக்டயர் நிலப்பரப்பில் (சோயாஅவரை, சோளத்துக்கே முதலிடம்) பயிரிடப்படு கின்றன. இதில் 99 விழுக்காடு பரப்பு அமெரிக்கா, ஆர்ஜென்டைனா, கனடா ஆகிய மூன்று நாடுகளிலுமே அடங்கியிருக்கிறது.
மனித வரலாறு பூராவுமே நல்ல இனங்களைத் தேர்வு செய்வதும், இனங்களுக்கிடையே கலப்பு நிகழ்த்துவதன் மூலம் அதிக பயன்தரக் கூடிய புதிய கலப்பு இனங்களை உருவாக்குவதும் நிகழ்ந்துதான் இருக் கிறது. ஆனர்ல் இது இயற்கை அனுமதித்த எல்லைகளுக் குள்ளேயே - நெருங்கிய இனங்களுக்கிடையில் - நடந்தது. ஆனால் இன்றைய உயிரித் தொழில்நுட்பம் இனங்களுக்கிடையே இயற்கை பேணி வந்த தடைகளை உடைத்துக்கொண்டு செயற்படத் தொடங்கியுள்ளது. பெருமளவு நைதரசன் பசளை தேவைப்பட்ட நெற்பயிர்களுடன் பக்ரீறிய மரபணுக்களைக் கலந்து நெற்தாவரங்களையே நைதரசன் பதிக்க வைத்தமை இதன் ஆரம்ப உதாரணங்களில் ஒன்று. அப்புறம்
297
Page 151
ஏழாவது ஊழி
புகையிலைத் தாவரங்களில் மின்மினிப் பூச்சிகளின் மரபணுக்கள் புகுத்தப்பட்டு இருளில் கண்சிமிட்ட வைக்கப்பட்டது வேடிக்கையான இன்னொரு கட்டம். இப்போது உச்சமாக, ட்ரெயிற்றர் உயிர் நுட்ப விதைகளில் எலிகளின் மரபணுக்கள் நுழைக்கப்பட்டு முளைக்க விடாது தடுக்கப்படுகின்றன. இந்த மரபணு மாற்றமைவு உயிரித் தொழில் நுட்பம் சமூகம் - பொருளாதாரம் சார்ந்த வினாக்களுக்கு அப்பால் சுகாதாரம் சுற்றுச் சூழல் தொடர்பான கேள்விகளையும் இப்போது எழுப்பத் தொடங்கியிருக்கிறது.
மரபணுக்களே புரதத்தொகுப்புக்குக் காரணமாக உள்ளன. தாவரங்களில் புகுத்தப்பட்ட மரபணுக்களின் கட்டளையின் பேரில் உருவாக்கப்படும் புரதங்கள் மனித நுகர்வுக்கு உரியவை என்ற எந்த உத்தரவாதமும் இதுவரையில் தரப்படவில்லை. மாறாக மரபணு மாற்றிய தாவரங்கள் உருவாக்கும் புரதங்கள் பெரும்பாலான அந்நியப் புரதங்களைப் போன்று ஒவ்வாமை நோய்களை (Alergy) உண்டு பண்ணி வருகின்றன. அமேசன் காடுகளின் பிறேசில் கொட்டை (Brazilnut) இதனை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. பிறேசில் கொட்டை மர விதைகள் கடுமையான ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியவை. புரத அளவை அதிகரிக்கச் செய்வதற்காக இதன் மரபணுக்கள் சோயாவில் புகுத்தப் பட்டன. ஆனால், இம் மரபணு மாற்ற சோயாவும் பிறேசில் கொட்டை யைப் போன்றே ஒவ்வாமையை ஏற்படுத்தியதையடுத்து விற்பனை யிலிருந்து தவிர்க்கப்பட்டது. பிறேசில் கொட்டையின் ஒவ்வாமை முன் கூட்டியே தெரிந்த ஒன்று. ஆதலால், சோயாவின் ஒவ்வாமைக்கான காரணி பிறேசில் கொட்டை மரபணுக்கள்தான் என்பதை அறிந்து விலக்கி வைப்பது இதில் சாத்தியமாகியது. ஆனால் மனித உடலுக்கு பரிச்சயம் இல்லாத, அதன் ஒவ்வாமை விளைவுகள் பற்றித் தெரிந்திராத நுண்ணங்கிகளின் மரபணுக்களே இன்று பயிர்களில் பெருமளவில் நுழைக்கப்படுகின்றன.
தேர்ந்து எடுத்துப் புகுத்தப்படும் மரபணுக்களுடன் வேண்டப் படாத பிற மரபணுக்களும் சமயத்தில் மாசாகச் சேர்ந்து கொள்கின்றன. மரபணு மாற்ற உற்பத்தியில் அரைவாசிக்கும் மேலான இடத்தைப் பெற்றிருக்கும் சோயா உணவுகளில் அநாமதேய டி.என்.ஏ. (DNA) இழை ஒன்று தொடர்ந்தும் வந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்களான 'மான்சான்டோ வினாலும் அடையாளம் காட்ட வியலாத நிலையில், பசுமை அமைதி இயக்கம் டி.என்.ஏ இழையின் உருவை இணையத் தளத்தில் வெளியிட்டு அதன் மூல உயிரியை
298
பொ.ஐங்கரநேசன்
அடையாளம் காண சர்வதேச விஞ்ஞானிகளிடம் வேண்டுகோள் வைத்துள்ளது. இன்னொரு வகையான மரபணுக்கள் குறித்தும், கவலை எழுந்துள்ளது. மரபணு மாற்றச் செயன்முறைகளில் மரபணு மாற்றப்பட்டுள்ளதைச் சரிபார்க்கும் ஒரு குறிகாட்டியாக (marker genes) நுண்ணுயிர்க் கொல்லிகளுக்கு (antibiotics) எதிர்ப்பைக் காட்டும் மரபணுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. உற்பத்திகளில் இந்த மரபணுக்கள் எந்த விளைவுகளையும் கொண்டிராத போதும் அதனுடன் சேர்ந்து வந்து உடலில் தங்கி விடுகிறது. நாளடைவில் உடலில் நுழையும் நுண்ணங்கிகளில் இந்த மரபணுக்கள் ஒட்டிக்கொண்டு நுண்ணுயிர் கொல்லி மருந்துகளால் நோய்களுக்குப் பதில் சொல்ல முடியாத நிலையை உருவாக்கிவிடும் என எச்சரிக்கப்படுகிறது.
நஞ்சில் குளிப்பாட்டும் பூச்சிகொல்லிகள், கிருமி நாசினிகள் போன்ற வேதிப் பொருட்களின் பிடியிலிருந்து பூமியை விடுவிப்பதும் மரபணு மாற்றப் பயிர்களின் முகவிலாசங்களில் ஒன்று. ஆனால், பூச்சிகளுக்கும், கிருமிகளுக்கும் எதிர்ப்புத்தன்மை கொண்டதாக வடிவமைக்கப்பட்ட பயிர்கள் சூழலில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கி வருகின்றன. பொதுவாகப் பூச்சி எதிர்ப்பைக் கொண்டதாக மாற்றியமைக்கப்படும் பயிர்களில் "பசிலஸ் துறிஞ்சியென்சிஸ் (Bacillus thuringiensis-Bt) என்னும் பக்ரீறியங்களின் மரபணுக்களே பொருத்தப் படுகின்றன. Bt பயிர்கள் எனப்படுபவை இவைதாம். இவற்றை பூச்சி எதிர்ப்புப் பயிர்கள் என்று சொல்வதைவிடவும் பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்யும் பயிர்கள் என்பதே மிகவும் பொருத்தமானது. பக்ரீறிய மரபணுக்களின் கட்டளைக்கு ஏற்ப தாவரங்கள் நச்சுகளைச் சுரக்க வைக்கப்படும். ஆனால் நஞ்சுகள், பீடைகளை மட்டுமன்றி சூழல் நட்புமிக்க வண்ணத்துப் பூச்சி போன்றவற்றையும் மண் நுண்ணங்கி களையும் சேர்த்தே அழித்து வருகிறது. சுரந்து கொண்டே இருக்கும் நச்சுகளுக்கு நாளடைவில் பீடைகள் இசைவாக்கம் பெறவும் கூடும்.
மரபணு மாற்றிய பயிர்கள் தொடர்பாக உயிரியலாளர்களுக்கு இன்னொரு விதமான கவலையும் இருக்கிறது. மரபணு மாற்றப் பயிர்களில் இருந்து காற்றினாலோ, பூச்சியினாலோ காவப்படும் மகரந்தங்களின் மூலம் மரபணுக்கள் அதன் நெருங்கிய இனத்தாவரங் களுக்கு மாற்றப்படுவது தெரியவந்துள்ளது. களைகொல்லிகளுக்கு எதிர்ப்பைக் காட்டும் மரபணுக்கள் நெருங்கிய களைஇனங்களுடன் கலக்க நேரிடின் அக்களைகளும், களை கொல்லிகளிடம் சாகாவரத்தை வாங்கிச் சண்டித்தனம் செய்ய ஆரம்பித்துவிடும். அதுமட்டுமல்லாமல்
299
Page 152
ஏழாவது ஊழி
டேர்மினேற்றர், ட்ரெயிற்றர் ரகத் தாவரங்களில் இருந்து பரவும் மகரந்த மணிகள் நெருங்கிய தாவரங்களுடன் மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்தின் அவையும் மலட்டு விதைகளையே உருவாக்கிவிடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. ஊஹசம், நான் இந்த ரக விதைகளைப் பயன்படுத்த மாட்டேன் என்று அடம்பிடிப்பதிலும் அர்த்தம் இருக்கப் போவதில்லை. உள்ளூரில் ஆராய்ச்சி என்று சொல்லிப் பன்னாட்டு நிறுவனங்கள் ஆரம்பித்து வரும் பண்ணைகளில் இருந்து காற்றும் பூச்சிகளும் காவிவரும் மகரந்தங்களாலேயே மரபுப் பயிர்கள் மலடாகும் வாய்ப்பு இருக்கிறது.
மரபணுமாற்றம் செய்யப்பட்டு வரும் பயிர்களின் ஆதிக்கத்தினால் வருடம் ஒன்றுக்கு இரண்டு விழுக்காடு அளவான மரபுப் பயிர்கள் துடைத்தெறியப்பட்டுக் கொண்டிருப்பதாக எவ்.ஏ.ஒ. (FAO - Food and Agriculture Organization) தெரிவித்திருக்கிறது. ஒன்றுடன் ஒன்று சார்ந்து இயங்கும் உயிர்க்கோளத்தில் இப்படி மரபுப்பயிர்களின் தொடர்பு இடை அறுவது உயிரிகளின் பல்வகைமையில் பெரும் பாதிப்பை உண்டுபண்ணும் எனச் சுற்றுச்சூழலியலாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். அறுந்து போன உறவுகளுக்காக மட்டும் இல்லாமல், பரிணாமத்தில் இனி வரவிருக்கின்ற உயிரினங்களுக்காக இயற்கை விட்டிருக்கின்ற இடங்களையெல்லாம் மனிதனின் இந்தப் புனைவுகள் அடைத்துக் கொண்டு வருவதாகவும் கவலை கொள்ளுகின்றனர்.
மரபணு மாற்றப் பயிர்களின் குறுகிய காலச் சாதகங்களைவிட அதன் பின்னால் மறைந்து நிற்கும் நீடித்து நிலைக்கக் கூடிய பாதகங்கள் அதிகமாகவே இருப்பதால், இந்தத் தந்திர விதைகளைத் தமது நாடுகளில் பயிரிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் பூரணமாகத் தடை விதித்துள்ளது. ஆஸ்திரியாவும், லக்ஸம்பேர்க்கும் இந்தரக விதைகளினதும் உணவினதும் இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளன. மரபணு மாற்ற உணவு விற்பனையில் உள்ள அவுஸ்திரேலியா, ஜப்பான், பிரிட்டன் போன்ற பலநாடுகளில் நுகர்வோரின் தெரிவுரிமை கருதி இவை மரபணு மாற்ற உற்பத்திகள்' என முத்திரை குத்தப்படுகின்றன. இந்த அடையாளப் படுத்தல் இதுவரையில் நடைமுறையில் இல்லாத, மரபணு மாற்றப் பயிரிடலில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவிலும் கூட முத்திரை யிடக்கோரி 90 விழுக்காடு நுகர்வோர் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிரான குரல்கள் வலுக்க ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து பன்னாட்டு
3OO
பொ. ஐங்கரநேசன்
நிறுவனங்களின் பார்வை மூன்றாம் உலக நாடுகளின் மீது முன்னையதை விட அதிகமாகத் திரும்பியிருக்கிறது. தமது ஆராய்ச்சிப் பண்ணை களையும், பயிர்ச்செய்கைகளையும் மூன்றாம் உலக நாடுகளில் விஸ்தரிக் கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளன. ஆபிரிக்காவில் தென்ஆபிரிக்காவையும் ஆசியாவில் இந்தியாவையும் நுழைவாசல் களாகக் கொண்டு களம் இறங்கியிருக்கின்றன. உலகமயமாக்கல் இவர் களுக்கான கதவுகளை இங்கே அகலத்திறந்து விட்டிருக்கிறது. இங்கிருந்து கொண்டே மூன்றாம் உலக நாடுகள் முழுவதையும் விரை வில் தனது விஷக்கொடுக்கின் பிடிக்குள் கொண்டு வந்துவிடும்.
முளைக்கத் தெரியாத இந்த விதைகளைப் போலவே, தற்கொலை செய்துகொள்ளும் இந்த விதைகளைப் போலவே, இவற்றைப் பயிரிடும் விவசாயிகளும் பிழைக்கமுடியாமல் தற்கொலைக்குத் தள்ளப்படு கின்றனர். இதற்கு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் விவசாயிகள் ஒரு பரிதாப உதாரணம். மகாராஷ்டிராவில் Bt பருத்தியை பயிரிட்ட விவசாயிகள் கொத்துக் கொத்தாகத் தற்கொலை செய்து வருகின்றனர். மரபணு மாற்றப்படாத 450 கிராம் உயர் ரக பருத்தி விதையின் விலை உச்சபட்சமாக 300 ரூபாய்கள்தான். ஆனால் இதே அளவு எடையுள்ள Bt பருத்தி விதையின் விலை 1750 ரூபாய்கள். அதுமட்டுமல்லாமல் புழுக்களால் பாதிக்கப்படாது என்று அறிமுகப் படுத்தப்பட்ட Biபருத்தி புழுக்களால் மோசமாகத் தாக்கப்பட்டதால் விவசாயிகள் கிருமிநாசினிகளுக்கு எனவும் பெருந்தொகை பணத்தை செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர். கடைசியில், கடன் சுமை அழுத்த அதிலிருந்து விடுபடுவதற்கு அவர்கள் முன்னால் உள்ள ஒரே தீர்வு தற்கொலையாகவே உள்ளது. 2006 ஆம் ஆண்டில் 4,453 விவசாயிகள், கழுத்தில் சுருக்குமாட்டியோ, பீடை கொல்லி நஞ்சுகளை அருந்தியோ தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதே ஆண்டில் இப்படி இந்தியா பூராவும் 17,000க்கும் அதிகமான விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இது தொடர் கதையாகவே நீடிக்கிறது.
மரபணு மாற்றிய விதைகளின் பின்னால் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் தந்திரங்களும், மரபணுமாற்றிய விதைகளின் வன் முறைகளும் அம்பலமாகிய பின்பும், ஐக்கிய நாடுகள் சபை பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பர வாகனமாக செயற்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகள் மரபணு மாற்றிய உணவுப் பொருள்களின் இறக்கு மதிக்கு விதிக்கும் கெடுபிடிகள் உலகவர்த்தக நிறுவனத்தின் விதிகளுக்கு முரணானது என அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையிடம் தொடர்ந்து
3O
Page 153
ஏழாவது ஊழி
முறைப்பாடு செய்து வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல்களின்போது தேர்தல் நிதியாகப் பெருமளவு பணத்தை மான்சாண்டோ வழங்கி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால், ஐக்கியநாடுகளின் GLD blurt G.5 g) 'll (plb (United Nations Development Programme) g5601.gif 2001ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டு அறிக்கையில் மூன்றாம் உலக நாடுகள் உயிர்த் தொழில்நுட்ப விவசாயத்தை முழுமையாக அனுபவிப்பதற்கு ஏதுவாகப் பணக்கார நாடுகள் மரபணு மாற்றப் பயிர்கள் தொடர்பாகத் தாம் கொண்டிருக்கும் பயங்களை ஒதுக்கி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. கூடவே, 'பசுமைப் புரட்சியை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்த ராக்ஃபெல்லர் நிறுவனமும் (Rockfeler foundation) மரபணு மாற்றிய உயிரிகள் பற்றிய அறிவிப்பைச் செய்துள்ளது. வேளாண்மையில் மரபணு மாற்றிய விதைகளின் வரவு இரண்டாவது பசுமைப் புரட்சி எனவும், முதல் புரட்சியில் ஏற்பட்ட தவறுகளை இரண்டாவது பசுமைப்புரட்சி சரி செய்துவிடும் எனவும் தெரிவித்துள்ளது.
உலக மயமாக்கல் அமைதிக் காலத்தில் நிகழ்ந்து வரும் போர். இதன் வடிவங்களில் ஒன்றே பசுமைப் புரட்சியாகும். நாடுகளின் கலாச்சாரமாக இருந்த விவசாயத்தை (Agriculture) தமது பிடியின் கீழ் பெரும் வாணிகமாக (Agribusiness) கொண்டுவரப் பன்னாட்டு நிறுவனங்கள் பசுமைப் புரட்சியைக் கையில் எடுத்தன. களைகொல்லிகள், பூச்சிமருந்துகள், பசளைகள் என வேதிப்பொருட்கள் புடைசூழக் கலப்பின விதைகள் அறிமுகம் ஆகியது. ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் வேளாண் நிலங்கள் எல்லாம் இந்த வீரிய விதைகளின் பிடிக்குள் வந்தது. இதில் அதிகம் முற்றுகையானது ஆசிய நாடுகள்தாம். ஆசிய நெல்களின் விளைபரப்பில் 75 விழுக்காடு நிலத்தை புதிய கலப்பின ரகங்கள் எடுத்துக் கொண்டன. மரபுப் பயிர்கள் மெல்ல ஒரம் கட்டப்பட்டன. அதிக தாகம் கொண்ட பயிர்களினால் நிலத்தடி நீர் இறங்கியது. ஆழ்குழாய்க் கிணறுகளில் நீர் உவர் ஏறியது. ஒற்றைப் பயிர்ச்செய்கை அதுவரை பார்த்திராத களைகள், பூச்சிகள் நோய்களைக் கொண்டு வந்து சேர்த்தது. வறண்ட தரை வேதி நஞ்சுகளால் நனைந்தது. மொத்தத்தில் கலப்பின விதைகள் பசுமைப்புரட்சி நடத்திய இடமெல் லாம் இனிமேலும் அவற்றைத் தாங்க இயலாத கட்டாந்தரையாக மாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு, பசுமைப் புரட்சியை வேகமாக முன் னெடுத்த, இந்தியாவின் உணவுக் கூடை என அழைக்கப்பட்ட பஞ்சாப் பூமிபஞ்ச பூமியாக மாறிவரும் சாட்சியம் ஒன்றே போதுமாகும். சுற்றுச்
3O2
பொ. ஐங்கரநேசன்
சூழல் தரம் இழந்ததில் புரட்சி பொய்த்து அங்கும் விவசாயிகள் அதிகமாகத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பலர் சிறுநீரகங்களை விற்று வாழ்க்கை நடத்த வேண்டியதாயிற்று. இதனாலேயே, பசுமைப்புரட்சியின் வன்நுகர்ச்சிக்கு ஆளான தரைகளில் கலப்பினப் பயிர்கள் இனிமேலும் தாக்குப் பிடிக்க முடியாததில் மரபணு மாற்றிய பயிர்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் இரண்டாவது சுற்றாகத் தரை இறக்கியுள்ளன.
பசுமைப்புரட்சி உலகின் உணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்ததை மறுப்பதற்கில்லை. 1970இல் இருந்து இரண்டு தசாப்த காலத்துக்குள் உலகின் தனி ஒருவருக்கான உணவின் அளவு 11 விழுக்காடால் அதிகரித்தது. பசித்திருப்போர் 16 விழுக்காடால் குறைந் தனர். ஆனால் இது பெரு நோக்கில்தான். நாடுகளை அணுகி ஆராயும் போது நிலைமை வேறாக இருக்கிறது. தென்அமெரிக்காவில் ஒருவருக் கான உணவு உற்பத்தி 8 விழுக்காடால் உயர, பசி கிடப்போரும் 19 விழுக்காடால் உயர்ந்தனர். தென் ஆசியாவில் தலா உணவு உற்பத்தி 9 விழுக்காடால் அதிகரிக்க அதனுடன் சேர்ந்து பசியால் வாடுவோரும் அதே அளவால் அதிகரித்தனர். சீனாவைத் தவிர, எல்லா நாடுகளுமே உற்பத்தி அதிகரித்தபோது அதனுடன் சேர்த்துப் பட்டினியையும் அறுவடை செய்தன. ஆனால், பத்தாண்டு காலம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட கலாச்சாரப் புரட்சியை முன்னெடுத்த சீனாவில் மட்டும் பட்டினி வெகுவாகச் சரிந்தது. பட்டினி எண்ணிக்கை 406 மில்லியனிலிருந்து 189 மில்லியனாகக் குறைந்தது. பசுமைப் புரட்சியா - சீனப் புரட்சியா என்பதை விட, 'மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிப்பதற்கு ஏற்ற வகையில் நாடுகளின் அரசியல், பொருளாதார, கலாச்சார மேம்படுத்துகையுடன் கூடிய உணவு உற்பத்தி முறையே பட்டினிக்கான தீர்வாக இருக்க முடியும் என்பதே இப்புள்ளி விவரங்கள் அப்போது உணர்த்திய பாடமாகும்.
அதிகரிக்கும் உணவு உற்பத்தி முறையை விட வாங்கும் திறனையும், வளங்களையும் பட்டினியால் வாடும் மக்களை நோக்கி திருப்புதலே இன்றைய பட்டினிக்கான தீர்வாகும். ஆனால் மீண்டும் தவறான பிரச்சினைக்குத் தவறான ஒரு தீர்வாகவே மரபணு மாற்றிய விதைகள் பன்னாட்டு நிறுவனங்களால் முன் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே கலப்பு இனங்களும், போரும், இடப்பெயர்வும் நமது பாரம்பரிய வித்துக்களில் பலதைப் பராமரிப்பின்றிப் பறித்துவிட்ட நிலையில் எஞ்சியுள்ளதைப் பாதுகாக்க நமது சமூகப் போராளிகளும்
3O3
Page 154
ஏழாவதுஉஊழி
சுற்றுச் சூழலியலாளர்களும் கடுமையாகவே போராட வேண்டி இருக்கும். இந்தப் போராட்டம் ஒன்றுதான் பாரம்பரிய விதைகளை மட்டுமல்லாமல், பாரம்பரிய வேளாண்அறிவுமிக்க தேசியச் சொத்தான நமது விவசாயிகளையும் மரணத்திலிருந்து பாதுகாக்கும்.
3O4
30
பறிபோகும் பாரம்பரிய மருத்துவம்
"அறிவியலும் தொழில் நுட்பமும் மானுட நேயம் கொண்டதாகவே இருக்கவேண்டும். ஆனால் இப்போதைய உயிரியல் தொழில்நுட்பமானது முற்றிலும் மானுடவிரோத மாகவே உள்ளது."
- பேராசிரியர் எம்.டி. நஞ்சுண்டசுவாமி (கர்நாடக விவசாயிகள் இயக்கத் தலைவர்) யாழ்ப்பாணக் குடாநாட்டில் யாழ்நகரை அண்டியிருக்கும் ஒரு சிற்றூர் ஆனைக்கோட்டை அவ்வப்போது அங்கே கண்டெடுக்கப்படும் புராதன காலத்துத் தடயங்களினால் தொல்லியல் ஆய்வாளர்களின் கவனத்துக்கு ஆளாகி வந்த ஆனைக்கோட்டை, அண்மைக்காலமாக சர்வதேச மருத்துவ விஞ்ஞானிகளால் உச்சரிக்கப்படும் இடமாகியுள்ளது. ஆனைக்கோட்டை வயல்வெளிகளில் காணப்படுகின்ற பங்கஸ் ஒன்றி லிருந்து உயிர்காக்கும் மருந்தொன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருப்பதன் மூலம் மருத்துவ இலக்கியங்களில் ஆனைக்கோட்டை இடம் பிடித்திருக்கிறது. பொதுப் பார்வைக்கு இது ஆணைக்கோட் டைக்கு சிறப்புத்தரும் செய்தியாகவே தோன்றும். ஆனால், இந்தக் கண்டுபிடிப்பின் பின்னாலுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் தந்திரமும் வாணிபமும் முழு இலங்கைத்தீவுக்கும் அவமானகரமான செய்தியையே சொல்லி நிற்கிறது.
ஆனைக்கோட்டை வயல்வெளிகளிலுள்ள ஊட்டச்சத்து மிகுந்த மண்ணில் பழுப்பு அல்லது பழுப்பும் கறுப்பும் கலந்த நிறத்தில் ஸ்ரெப்ட்டோஸ்பொறான்ஜியம் ஃப்ரஜிலிஸ் (Streptosporangium fragis) என்னும் பூஞ்சணம் வளர்கிறது. மூன்று தசாப்தங்களுக்கு முன்னர்தான் இது புதியவகைப் பங்கஸ் என அடையாளம் காணப்பட்டு மேற்குறித்த பெயர் சூட்டப்பட்டது. அதற்குள் 'ஸ்ரெப்டோஸ்பொறான்ஜியம் ஆனைக்கோட்டையில் இருந்து அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப் பட்டு, அதன் சுரப்புகளிலிருந்து "ஃப்ரஜிலியோமைசின் (Fragiomycin)
3O5
Page 155
ஏழாவது ஊழி
என்னும் மருந்து கண்டறியப்பட்டுள்ளது. அலெக்ஸாண்டர் ஃபிளெமிங், பெனிசிலியம் பூஞ்சணத்தில் இருந்து கண்டறிந்த பெனிசிலினைப்போல இதுவும் பக்ரீறிய நோய்களுக்கு எதிராக வெற்றிகரமாக வினையாற்றக்கூடிய ஒரு நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotic) ஆகும். இந்த இடத்தில், மனுக்குலத்தைப் பிணிகளில் இருந்து விடுவிக்கும் ஒரு கண்டுபிடிப்பு குறித்து என்ன எதிர்க்கருத்து இருக்க முடியும் என்ற கேள்வி எழலாம். ஆனால், இங்கு விமர்சனம் மருந்தின் மீது அல்ல; மருந்தைக் கண்டுபிடித்த அறிவியலாளர்களின் அறநெறி குறித்தும், அறிவியலாளர்களைப் பின்னணியில் இயக்கி வருகின்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தின் வணிகநெறி குறித்துமே ஆகும்.
அமெரிக்காவில் பிலடெல்பியாவைச் சேர்ந்த "சிமித் கிளைன் பெக்மான் நிறுவனமே (Smith Cine Beckman Corporation) பிலடெல்பியாவின் விஞ்ஞானிகள் குழுவின் மூலம் ஸ்ரெப்டோஸ் பொறான்ஜியம் பூஞ்சணத்தில் இருந்து நுண்ணுயிர் கொல்லி மருந்தைத் தயாரித் துள்ளது. மருந்துக்கான காப்புரிமையையும் (Patent) பெற்று வைத்துள்ளது. காப்புரிமை ஆவணங்களில் பூஞ்சணத்தின் விளைமூலம் ஆனைக் கோட்டை என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, எப்போது, எப்படி, யாரால் அமெரிக்காவுக்குத் தருவிக்கப்பட்டது போன்ற விபரங்கள் எல்லாம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன. அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் பேராசிரியர் ஒருவர் உள்நாட்டுத் தாவர இனங்கள் சிலவற்றின் மரபணுக்களைக் கடத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானார். கொழும்பு ஊடகங்கள் இதுபற்றிப் பரபரப்பாகப் பேசியபோதே ஆனைக்கோட்டைப் பூஞ்சணம் பற்றிய செய்தியும் வெளிச்சத்துக்கு வர நேர்ந்தது. இதனை அம்பலப்படுத்திய தென்னிலங்கையைச் சேர்ந்த ஜெகாத் குணவர்த்தனா என்பவர் தனக்குத் தெரிந்த இலங்கை விஞ்ஞானி ஒருவரிடம் பிலடெல்பியா விஞ்ஞானிகள் இதுவரையில் வெளியுலகத்துக்குத் தெரியவராத புதிய நுண்ணங்கி ஒன்றைப் பெற்றுத்தருமாறு கோரிய தாக தெரிவித்திருக்கிறார். அதன் மருத்துவப் பெறுமதி உறுதியாகும் பட்சத்தில் இலங்கைவாசிக்குப் பெருந்தொகைப் பணமும் அமெரிக்கா வில் பணியும் குடியுரிமையும் வழங்குவதாக உத்தரவாதமும் அளிக்கப் பட்டிருந்ததாம். ஆக, ஆனைக்கோட்டையில் இருந்து அமெரிக்கா வுக்குப் பங்கசுவைக் கடத்திச் சென்றது ஓர் அமெரிக்க விஞ்ஞானி யாகவோ அல்லது இலங்கை விஞ்ஞானியாகவோதான் இருக்க முடியும். வருங்காலத்தில் இலங்கை இந்தப் பங்கசுவில் இருந்து நுண்ணுயிர்க்
3O6
Page 156
ஏழாவது ஊழி
கொல்லி மருந்தைத் தயாரிக்க முடியாது. மருந்துக்கான காப்புரிமை களைப் பெற்று வைத்திருக்கும் சிமித் கிளைன் பெக்மான் நிறுவனம் அதற்குக் குறுக்காக வந்து நிற்கும். அமெரிக்க நிறுவனத்துக்கு உரிமத் தொகையாகப் பெருமளவு பணமும், இலாபத்தில் பங்கும் வழங்குவதற்கு இலங்கை சம்மதிக்கும் பட்சத்திலேயே அது சாத்தியமாகலாம். இலங்கை தனது மண்ணுக்கே உரித்தான உயிரி ஒன்றில் இருந்து பயன்களைப் பெறுவதற்கு அமெரிக்காவுக்குப் பணம் செலுத்த நிர்ப்பந்திக்கும் அறம் தப்பிய இந்த ஏற்பாட்டை உயிரியற் கொள்ளை அல்லது மரபணுக் கொள்ளை என்பதைத் தவிர வேறு எந்த வார்த்தைகளால் விளிக்க முடியும்?
1995ஆம் ஆண்டில் அமெரிக்க மிசிசிப்பி மருத்துவ பல்கலைக் கழகம் காயங்களைக் குணப்படுத்துவதற்கான ஆற்றல் மஞ்சள் தூளில் அடங்கியிருப்பதைக் கண்டுபிடித்ததாக அறிவித்தது. அத்தோடு நிற்கவில்லை. மஞ்சள்தூளைக் காயங்களின்மீது பிரயோகிக்கவும், காயங் களை ஆறச்செய்வதற்கு வாயினால் உள்எடுப்பதற்கும் காப்புரிமை களைப் பெற்று மஞ்சளின் மகிமைகள் இனிமேல் தனக்குத்தான் எனவும் உரிமை கொண்டாடியது. அமெரிக்காவின் மருத்துவச் சாதனையாக இந்தச் செய்தி சர்வதேசத் தகவல் ஊடகங்களில் வெளியானபோது இந்தியர்கள் அதிர்ந்து போனார்கள். இருக்காதா பின்னே? தொன்றுதொட்டு இந்தியர்களினது நளபாகத்தில் பயன்பட்டு வருகிறது என்பதையும் தாண்டி, காயங்களை ஆற்ற, இரத்தத்தைச் சுத்திகரிக்க, சாதாரணத் தடிமனுக்கு, தோலில் ஏற்படும் தொற்று நோய்களுக்கு என அவர்களது பாரம்பரிய மருத்துவத்திலும் மஞ்சள் பிரதான இடத்தைப் பெற்று வருகிறது. இந்நிலையில், மஞ்சளை விற்கவும் விநியோகிக்கவும் உரிமை எங்களுக்குத்தான் என்று திடுதிப்பென மிசிசிப்பி மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்தபோது இந்திய அளவில் இதுபெரும் பிரச்சினையாகவே உருவெடுத்தது.
சூழலியலாளர்களின் போராட்டங்களையடுத்து, இந்திய அரசு மஞ்சளின் மீதான காப்புரிமையை மீள்பரிசீலனை செய்யுமாறு அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் முறையீடு செய்தது. அமெரிக்கா தனது சட்டத் திட்டங்களுக்கு அமைய வழங்கிய காப்பு ரிமையை இரத்து செய்வதென்பது இலேசான ஒன்றல்ல. காப்புரிமை வழங்கப்பட்ட கண்டுபிடிப்புகள் காப்புரிமை கோரிய காலத்துக்கு முன்பாக ஏற்கனவே பயன்பாட்டில் இருந்தவைதான் என்பதற்கு வலு வான ஆதாரங்கள் இருந்தால் மாத்திரமே வழங்கிய காப்புரிமையைச்
3O8
பொ. ஐங்கரநேசன்
செல்லாததாக்க முடியும். இந்தியப் பண்பாட்டு, பாரம்பரிய வேருடன் இணைந்ததாக மஞ்சளின் பயன்பாடு இருந்தபோதும், சிகிச்சைக்கென வாய்மூலமும் வெளிப்பூச்சாகவும் மஞ்சளைப் பயன்படுத்தி வருவதை நிரூபிப்பதற்கான அச்சு ஆவணங்கள் எதுவும் இல்லை. கடைசியில் சமஸ்கிருதம், உருது, ஹிந்தி மொழிகளில் நூறு ஆண்டுகளுக்கு முந்திய பதிவுகளில் இருந்து அதிர்ஷ்டவசமாக சில ஆதாரங்கள் கிட்டியது. அவற்றைத் திரட்டி அமெரிக்கா மஞ்சள் மீது பெற்றிருந்த காப்புரிமையை இரத்து செய்வித்து, மஞ்சள் மீதுள்ள தனது பிடியை இந்தியா ஒருவாறாக நிலைநாட்டியது.
இந்தியாவுக்கு மஞ்சளைப் போலவே வேம்பு குறித்த கசப்பான அனுபவங்களும் இருக்கின்றன. இந்தியர்களின் வாழ்வியலில் பூச்சிக்கொல்லி, கிருமி கொல்லி மற்றும் கருத்தரித்தலைத் தவிர்க்கும் விந்துகொல்லியாக வேம்பு பல ஆயிரக்கணக்கான வருடங்களாக இடம் பிடித்து வருகிறது. விதம்விதமான பற்பசைகளும் பற்தூரிகைகளும் " சந்தைக்கு வந்துவிட்ட பின்பும் அவற்றால் இந்தியக் கிராமங்களில் வேப்பங்குச்சிகளை வெல்ல முடியவில்லை. வேம்பின் அறிவியற் பெயரே 'அசடிறாக்ரா இன்டிக்கா (Azadirachta indica) என்பதுதான். வேம்பின் முக்கியத்துவங்களை அறிந்த றொபேட் லார்சன் என்னும் அமெரிக்க மரவியாபாரி வேம்பின் விதைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து, 'மார்கோசான் - ஒ' (Margosan-0) என்னும் பங்கஸ் கொல்லியைப் பிரித்தெடுத்தார். இதற்கான காப்புரிமையையும் 1985இல் ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொண்டார். அதன்பின்னர், பங்கஸ் கொல்லி மருந்தைத் தயாரிக்கும் உரிமையை அவர் ‘கிரேஸ் அன்ட் கோ' (W.R. Grace & Co) என்னும் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனத்துக்கு விற்றுவிட, அந்நிறுவனம் வேப்பம் விதைகளை இந்தியாவிலிருந்து அள்ளுகொள்ளையாக இறக்குமதி செய்ய ஆரம்பித்தது. அதுவரை ஒரு தொன் முன்னூறு ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்த வேம்பின் விதைகள் நான்காயிரம் ரூபாவைத் தொட்டது. எளிய பூச்சிக்கொல்லியாகப் பயன்பட்டுவந்த வேப்பம் விதைகள் கைக்கெட்டாத தொலைவுக்குப் போனதில் விவசாயிகள் வீதிக்கு இறங்கினார்கள்.
இந்தியாவின் பிரபலமான சுற்றுச்சூழல்வாதியான திருமதி வந்தனா சிவா ஐரோப்பிய ஒன்றியத்தின் பசுமைக் கட்சியினருடன் இணைந்து மியூனிச்சில் ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்துடன் கடுமையாக வாதாடினார். ஏறத்தாழ 20 வருடகால விடாப்பிடியான
3O9
Page 157
ஏழாவது ஊழி
சட்டப் போராட்டத்தின் முடிவில், 2005ஆம் ஆண்டு "கிரேஸ் அன்ட் கோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த காப்புரிமை விலக்கிக் கொள்ளப்பட்டது. இது இந்தியாவின் பாரம்பரிய அறிவுக்குக் கிடைத்த அங்கீகாரமெனினும் இதையிட்டு இந்தியா அதிகம் ஆசுவாசப்படுவதற் கில்லை. வேம்பின் பல்வேறு இரசாயனங்களுக்கு அமெரிக்க, ஜப்பான் நிறுவனங்கள் காப்புரிமைகளை வாங்கி வைத்திருக்கின்றன. இப்படி, இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தில் நீரிழிவு தொடங்கி மூட்டுவாதம் வரைக்கும் பல்வேறு நோய்களுக்குப் பயன்பட்டுவந்த பாகல், நாவல், நெல்லிக்காய், சீயக்காய், கடுகு, மிளகு, இஞ்சி, ஆமணக்கு, அமுக்கிராக் கிழங்கு என்று இருபதுக்கும் அதிகமான தாவரங்களுக்கு, அவற்றின் பல்வேறு மருத்துவப் பண்புகளுக்கு ஏற்ப வெவ்வேறு காப்புரிமை களைப் பெற்று வைத்துள்ளன.
ஆபிரிக்காவின் மத்திய மற்றும் தெற்குப் பிரதேசங்களில் 'பிஜியம்' (Pygeumaticanum) என்ற மரம் இயற்கையாகவே வளருகிறது. இதன் மரப் பட்டையில் இருந்து பிழியப்படும் சாறு ஆபிரிக்க நாட்டு மருத்துவத்தில் மிகப்பிரபலம். அறுபது வயதைக் கடந்த ஆண்களில் பொதுவாகவே ஏற்படும் 'புறோஸ்றேற்' (Prostate) சுரப்பி வீக்கத்துக்கு (Oldmen's disease) நல்ல தீர்வாகப் பயன்படுத்துகிறார்கள். இது பிரெஞ்ச் நிபுணர் ஒருவருக்கு தெரியவர உடனேயே அதற்குக் காப்புரிமையும் பெற்று விட்டார். பிரான்ஸ், ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் இம் மருந்து விற்பனையில் சக்கை போடு போடுகிறது. ஆண்டு விற்பனை 220 மில்லியன் டொலர்களையும் தாண்டிச் சென்றுவிட்டது. இதனால் பிஜியம் மரங்கள் வேகவேகமாகத் தோல் உரிக்கப்பட்டதில், இன்று அந்த மரங்கள் ஆபிரிக்காவில் இருந்து மறையும் நிலைக்கே வந்துவிட்டன.
ஆனைக்கோட்டை பூஞ்சணம் முதல் ஆபிரிக்காவில் பிஜியம் வரை இங்கே எடுத்தாளப்பட்டவை மூன்றாம் உலக நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கொண்டுவரும் மரபணுக் கொள்ளை களில் சில உதாரணங்கள்தாம். ஏறத்தாழ எல்லா மூன்றாம் உலக நாடுகளிலுமே பாரம்பரிய மருத்துவத்தில் விஞ்ஞானிகள் எதிர் கொள்ள வேண்டிய சவால்கள் மிகவும் கடுமையாகவே இருக்கின்றன. இருக்கின்ற குறைந்தபட்ச வசதிகளைக் கொண்டு பாரம்பரிய மருத்துவ முறைகளை நவீனப்படுத்தி உலக அரங்கில் உரிமை கோருவதற்கு இவர்கள் மூளையைக் கசக்கிக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. அதே சமயம் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து இந்த மூலிகைகளைக்
31Ο
பொ. ஐங்கரநேசன்
காப்பாற்றவும் இவர்கள் நிறையவே போராட வேண்டியிருக்கிறது. இந்நாடுகள் எல்லாம் இன்று பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களின் முற்றுகைக்குள் ஆளாகியிருக்கின்றன.
பன்னாட்டு நிறுவனங்கள் ஆங்கில மருந்தொன்றை ஆய்வுகளின் மூலம் புதிதாகக் கண்டறிந்து விற்பனைக்குக் கொண்டுவருவதற்கு எட்டில் இருந்து 12 ஆண்டுகள் செலவாகிறது. அது மட்டுமல்ல, ஏறத்தாழ 350 மில்லியன் அமெரிக்க டொலர்களும் செலவாகிறது. இந்த மருந்து வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் மூன்று - நான்கு ஆண்டுகளிலேயே முதலிட்ட தொகை திரும்பப் பெறக்கூடியதாய் இருப்பதால் பணம் என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தடையாக இருப்பதில்லை. ஆனால், பொதுவாக இந்த நிறுவனங்களுக்கு இருக்கும் பிரச்சினை ஆய்வுகளை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதுதான். அமெரிக்காவில் விற்பனையாகும் கால்வாசிக்கும் மேற்பட்ட மருந்துகள் 40 வகையான தாவரங்களில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன. இது ” வரைக்கும் 2,65,000 பூக்கும் தாவர இனங்கள் பெயரிடப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் ஒரு வீதத்திற்கும் குறைவான தாவரங்கள்தான் இதுவரையில் அவற்றின் மருத்துவப் பண்புகள் பற்றி ஆராயப் பட்டுள்ளன. இந்நிலையில் மீதமுள்ள தாவரங்களில் மருத்துவ ஆராய்ச்சியை எங்கிருந்து தொடங்குவது என்பதற்கு வளர்ச்சியடைந்த நாடுகள் மோசடித்தனமான அணுகுமுறைகளைக் கையாண்டு வ்ருகின்றன. மூன்றாம் உலகநாடுகளின் பாரம்பரிய மருந்துகளை, பழங்குடியினரின் மருத்துவப் பழக்கங்களைக் கண்டறிந்து அதற்கு அவர்கள் பயன்படுத்தும் தாவரங்களின் மரபணுக்களை எவருக்கும் தெரியாமல் திருடிச்சென்று விடுகின்றனர். அதிலிருந்து உயிர்தொழில் நுட்பத்தின் மூலம் புதிய தாவரங்களை உருவாக்கி - மருந்துகளைப் பிரித்தெடுத்து - தங்களது சொந்தக் கண்டுபிடிப்பாக காப்புரிமையும் செய்துகொள்கின்றனர்.
இதற்காக உலகின் பல நாடுகளுக்கும் மருத்துவ விஞ்ஞானிகள் பன்னாட்டு நிறுவனங்களால் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்கள் பழங்குடியினர் பற்றிய ஆராய்ச்சியாளர்கள், தாவரவியல் அறிஞர்கள், தொண்டு நிறுவனப் பணியாளர்கள், சுற்றுலாப்பயணிகள் என்ற போர்வையில் சாவகாசமாகப் பயணம் செய்கின்றனர். இக்கொள்ளை யர்கள் மிகவும் நவீனமானவர்கள். மடிக்கணினியும் கையுமாக அலைந்து கொண்டிருக்கும் இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதென்பது இலகுவானதல்ல. தொன்கணக்கில் மூட்டை முடிச்சுகளாக இவர்கள்
311
Page 158
ஏழாவது ஊழி
மாதிரிகளை எடுத்துச்செல்ல வேண்டியதில்லை. பரந்து விரிந்த ஆலமரம் தொடங்கி பருமனில் நுண்ணிய பக்ரீறியங்கள் வரைக்கும் அவற்றின் பாரம்பரியப் பொருளான டீ.என்.ஏ. (DNA) யில் மில்லி கிராம்கள் அளவு கொண்டு சென்றாலே போதும். அவர்களுடைய உயிர்நுட்ப ஆய்வுக் கூடங்கள் அவற்றை முழு உருவில் வளர்த் தெடுத்துக் கொடுத்துவிடும்.
மருத்துவ இரகசியங்களைக் கண்டறிவதற்காக எந்தக் கடுமையான காடுகளினுள்ளும் நுழைவதற்கு இவர்கள் தயங்குவது இல்லை. பழங்குடி யினரிடமும் உள்ளூர் இயற்கை வைத்தியர்களிடமும் நாகுக்காகப் பேசி அவர்களிடமிருந்து இரகசியங்களைக் கறந்து விடுகின்றனர். சக மருத்துவர்களிடம் பரம இரகசியம் பேணும் நமது நாட்டு வைத்தியர்கள் இந்த நவீன கொள்ளையர்களின் முன்னால் பரிதாபமாகத் தோற்றுப் போய் விடுகின்றனர். இந்தியாவில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சிரா முல்லையா என்பவர் ஒரு நாட்டுவைத்தியர். ஆஸ்த்மா, காக்கை வலிப்பு, பாம்புக்கடி போன்றவற்றுக்கு மலைகளில் இருந்து இவர் கொண்டுவரும் மூலிகை மருந்துகள் வெகு பிரசித்தமானவை. இவரது சிகிச்சை முறைகளைப் பற்றிக் கேள்விப்பட்ட ஜேர்மன் நிறுவனம் ஒன்று தனது பிரதிநிதியொருவரை அனுப்பி மூலிகைகள் பற்றியும், மருத்துவமுறைகள் பற்றியும் அறிந்து கொண்டது. அதற்காக அந்த அப்பாவி மருத்துவருக்குக் கொடுக்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் ஐந்து அமெரிக்க டொலர்கள் மாத்திரமே. இப் போது அந்த ஜேர்மன் நிறுவனம் முல்லையாவின் மருத்துவ முறைகளின் அடிப்படையில் மருந்துகளைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருக் கிறது. உயிரினங்களின் மரபணுக்களைச் சேகரித்து வைத்திருக்கும் மூன்றாம் உலகநாடுகளின் மரபணு வங்கிகளும் (Gene Bank) இவர் களுடைய இலக்குகளில் ஒன்று. இதற்கு உள்ளூர் ஆய்வாளர்களும் அரசியல் பிரமுகர்களும் தெரியாமலோ அல்லது தெரிந்தும் பணத்துக் காகவோ சோரம் போய்விடுகின்றனர் என்பதுதான் சோகமான விடயம். நவீன விஞ்ஞானம் மனித உடலின் நோய்க்கான மரபணுக்களைக் கண்டறிவதிலும் அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் நோய் களைக் களையும் முயற்சிகளிலும் அதி தீவிரமாக இறங்கியிருக்கிறது. பழங்குடிகள் இயற்கையாகவே சில நோய்களுக்கு எதிர்ப்புத்தன்மை யைக் கொண்டிருக்கின்றனர். பழங்குடியினரின் இந்த நோய் எதிர்ப்பு இரகசியங்களைக் கண்டறிவதற்காக அவர்களது குருதி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மேற்குலகின் ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வட அத்திலாந்திக்கில் உள்ள "ட்ரைஸ்ரான் (Tristan)
312
பொ. ஐங்கரநேசன்
என்னும் தீவின் பழங்குடியினர் ஆஸ்த்மா என்றாலே என்னவென்று அறியாதவர்கள். இவர்களிடம் சேகரிக்கப்பட்ட குருதிமாதிரிகளை அடிப்படையாகக் கொண்டே ஆஸ்த்மாவால் அவதிப்படுவோர்களில் அந்த நோய்க்குக் காரணமான மரபணு (Asthmagene) 1997இல் அமெரிக்க விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டது. மரபணுக்களை அடையாளம் காண்பதோடு மாத்திரம் இவர்கள் நிறுத்திக் கொள்ள விரும்புவதில்லை. மனித மரபணுக்களுக்கு உரிமை கொண்டாடவும் தலைப்படுகிறார்கள். 1990ல் பனாமா பழங்குடிப் பெண்ணின் மரபணுவுக்கு அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் முதல் தடவையாக காப்புரிமையைப் பெற்றார். சர்வதேச அளவில் இது அம்பலமானதையடுத்துப் பின்னர் விலக்கிக் கொள்ளப் பட்டது. இருந்தும் மரபணுக்களுக்கு காப்புரிமை கோரும் முயற்சி இன்றளவும் தொடர்கின்றன. பழங்குடி மக்களின் மரபணுக் களுக்குக் காப்புரிமை கோரி ஒரு டசினுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அமெரிக்கக் காப்புரிமை அலுவலகத்தில் காத்துக்கிடக்கின்றன. 'வம்பயர் புரொஜக்ட் என விமர்சிக்கப்பட்ட மனித ஜீனோம் திட்டத் துக்கு மரபணுக்களைப் பெறுவதற்குத் தெரிவு செய்யப்பட்ட மனிதக் குழுமங்களில் இலத்தீன் அமெரிக்க இந்தியர்கள், கலஹாரியின் 'சான்' போன்ற பல பழங்குடிகளும் அடங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை உயிர்ப்பல்வகைமை தொடர்பாகவும், ஒரு நாட்டில் இருந்து பாரம்பரிய அறிவைப்பெறும் பட்சத்தில் அந்த சுதேசிய மக்களுடன் பயன்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாகவும் 1992இல் ரியோ பூமி மாநாட்டின் போது உடன்படிக்கைகளை உருவாக்கியது. ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் எதுவும் ஐ.நா.வின் ஏனைய உடன்படிக்கைகளைப் போலவே இதையும் கண்டுகொள்வதாக இல்லை. எவருடைய மருத்துவ அறிவையேனும் திருடி, எவருடைய வளத்தையேனும் கொள்ளையடித்துக் கோடிகோடியாக இலாபம் குவிப்பதில் மாத்திரமே கருத்தாய் இருக்கின்றன. அதற்கு அவை கையில் எடுத்திருக்கும் ஆயுதம் - காப்புரிமை. ஏ.கே.47 பற்றியும், தரைக் கண்ணிகள் பற்றியும் தெரிந்து வைத்திருக்கும் இன்றைய தலைமுறை பொருளாதாரத்தில் பூகம்பத்தை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கும் காப்புரிமை என்ற இந்த உயிர்க்கண்ணிகள் பற்றியும் அறிந்திருத்தல் அவசியம். அப்போதுதான் பொருளாதாரப் போர்க்களத்தில் அவற்றை இலாவகமாக எதிர்கொள்ள முடியும்.
Page 159
31
காப்புரிமை என்னும் பொருளாதார ஆயுதம்
"ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தேறிய காலனியாதிக்கத்தின் மறுபிரவேசம்தான் காப்புரிமை, ஆனால் ஒரேயொரு வித்தியாசம், காலனியாதிக்கத்தின் போது நிலத்தை ஆக்கிரமித்தார்கள். மறுகாலனியாதிக்கத்தின் போதோ நிலத்தில் உள்ள உயிரிகளை அபகரிக்கிறார்கள்."
- முனைவர் வந்தனா சிவா (பெளதீகவியல் விஞ்ஞானி - சூழலியல்வாதி)
மனிதர்களைத் தாக்குகின்ற தொற்றுநோய்களில் இது வரையில் உலகில் இருந்து அறவே ஒழிக்கப்பட்ட ஒரேயொரு தொற்று நோய் பெரியம்மை மாத்திரம்தான். 1967ஆம் ஆண்டில்கூட இருபது இலட்சத்துக்கும் அதிகமானோரைக் கொன்றுபோட்டு, மேலும் பல இலட்சக் கணக்கானவர்களில் பார்வையைப் பறித்தெடுத்த பெரியம்மை நோயை உலகில் இருந்தே விரட்டியது சாதாரணமான ஒன்றல்ல. இந்தப் பெருமை, அம்மை நோய்க்கு எதிராக 'அம்மைப் பால் கட்டும் தடுப்பு முறையைக் கண்டுபிடித்த இங்கிலாந்தைச் சேர்ந்த எட்வேர்ட் ஜென்னர் (Edward Jenner) என்னும் மானுடநேயம் மிக்க மருத்துவரையே சாரும். இவரது கண்டுபிடிப்புக்கும் அப்பால், அறிவியலில் இவர் காண்பித்த அறநெறியே இதனைச் சாத்தியமாக்கியது எனலாம்.
எட்வேர்ட் ஜென்னர் 1796ஆம் ஆண்டில் அம்மைப்பால் கட்டுதலைக் கண்டுபிடித்தபோது, ஜென்னரைக் கெளரவிக்கும் முகமாக இங்கிலாந்து அரசு அவரது கண்டுபிடிப்புக்குக் காப்புரிமையை வழங்க முன்வந்தது. ஆனால் ஜென்னர், காப்புரிமையைப் பெறின் மருந்தைக் குறைந்த விலையில் வெகுசனங்களிடம் சேர்ப்பிப்பது இயலாததாகி விடும். கண்டுபிடிப்பின் பயனாளிகள் சமூகமே அல்லாமல் தனிமனித னான நான் அல்ல, என்று கூறிக் காப்புரிமையை நிராகரித்துவிட்டார். அம்மைப்பால் தடுப்பு மருந்தை உலகத்துக்குத் தனது கொடையாக அளித்து விட்டுப் போனார். இதனாலேயே தங்கு தடையில்லாமல்
314
பொ.ஐங்கரநேசன்
எல்லா நாடுகளினாலும் அம்மைப்பால் தடுப்பு மருந்தைத் தயாரிக்க முடிந்து அம்மை நோயை அடியோடு அகற்ற முடிந்தது.
இன்று பெரியம்மை நோய் வைரஸ்கிருமிகள் அமெரிக்காவினதும் ரஷ்யாவினதும் ஆய்வுக்கூடங்களில் மாத்திரம் பலத்த பாதுகாப்பின் மத்தியில் சிறை வைக்கப்பட்டுள்ளன. இரண்டு நாடுகளுமே கிருமிகளைப் பயன்படுத்தி உயிரியல் ஆயுதங்களைத் தயாரிப்பதில் கைதேர்ந்தவை என்பதால் இந்நாடுகளின் கையிருப்பில் உள்ள அம்மை வைரஸ்களையும் அழிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. அதே வேளை, நோயியல் ஆய்வாளர்களில் ஒரு சாரார், தொற்றுநோய்கள் தொடர்பான பயன்மிக்க மருத்துவ அறிவை எதிர்கால ஆய்வாளர் களுக்குப் போலியோ வைரசுகள் வழங்கக்கூடும் என்பதால் வைரஸ் இருப்பு தொடர்ந்தும் பாதுகாக்கப்படவேண்டும் என வாதிட்டு வருகின்றனர். இது தொடர்பான இறுதி முடிவை 2011ஆம் ஆண்டில் எடுப்பதற்கு ஐக்கியநாடுகள் சபை தீர்மானித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த எட்வேர்ட் சால்க் (EdwardSak) என்னும் உயிரியலாளர் மனிதவாழ்வை முடக்கிப்போடும் இளம்பிள்ளைவாத நோய்க்கு 1952ஆம் ஆண்டு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார். கொல்லப்பட்ட போலியோ வைரஸ் கிருமிகளைக் கொண்ட இம்மருந்து ஊசிமூலம் செலுத்தப்படுவதாகும். இதன் தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் கழித்து 1957இல் அல்பேர்ட் சபின் (AlbertSabin) என்னும் ஆய்வாளர் உயிருள்ள வைரசுகளைக் கொண்ட, வாயினால் உள்ளெடுக்கப்படும் போலியோ சொட்டு மருந்தைக் கண்டுபிடித்தார். எட்வேர்ட் ஜென்னரைப் போன்றே, இருவரும் தங்களது கண்டுபிடிப்பு களுக்குக் காப்புரிமையைப் பெற மறுத்துவிட்டனர். இவர்களின் தாட்சண்யத்தினாலேயே உலக சுகாதார நிறுவனமும் ஐக்கியநாடுகள் குழந்தைகள் நலநிதியமும், றோட்டறிக் கழகமும் இணைந்து போலியோ சொட்டுமருந்தை உலகம் பூராவும் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கமுடிகிறது. உலகையே முடமாக்கிவிடும் வேகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொள்ளைநோயாகப் பரவிக் கொண்டிருந்த இந்தநோய் இன்று இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான், நைஜீரியா ஆகிய நான்கு நாடுகளுக்குள் மாத்திரம் முடக்கப்பட்டுள்ளது. இந்நாடுகளிலும் தடுப்பு மருந்து முகாம்கள் தீவிர சிரத்தையுடன் இடம்பெறும் பட்சத்தில் அம்மைநோயைப் போன்று இளம்பிள்ளைவாதமும் உலகில் இருந்தே விரைவில் வழித்துத் துடைக்கப்பட்டுவிடலாம்.
315
Page 160
ஏழாவது ஊழி
எட்வேர்ட் சால்க் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காண லொன்றில், "சூரியனுக்கு யாராவது காப்புரிமை கோரமுடியுமா? அது போலவே, கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமை கோரமுடியாது" என்று தான் காப்புரிமையைப் பெற விரும்பாததற்கான காரணத்தை விளக்கியுள்ளார். 'புதிய கண்டுபிடிப்புகள் என்பவையும் இயற்கையில் ஏற்கனவே இருந்தவைதாம். பேரறிவால் ஒர் அறிஞர் இயற்கையின் கருவறைகளைத் தட்டித் திறந்து புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்ததும் அந்தச் செல்வம் அனைத்தும் உலகம் முழுமைக்கும் சொந்தமாகி விடுகிறது என்பதே எட்வேர்ட் சால்க்கினுடைய பதிலின் சாராம்சம் ஆகும். ஆனால், காலனித்துவத்தின் நீட்சியாக இன்று பன்னாட்டு நிறுவனங்கள் தலையெடுத்ததன் பின்னர் மருத்துவம், விவசாயம் போன்ற உயிர்காக்கும் துறைகளில் நிகழ்த்தப்படும் கண்டு பிடிப்புகள்கூடப் பொதுக்களனில் (Public Domain) அனுமதிக்கப்படு வதில்லை. கண்டுபிடிப்புகளின் பயன்கள் சமுகத்தின் அடிமட்டம் வரைக்கும் பாய இயலாதவாறு காப்புரிமை என்னும் அறிவுச் சொத்துரிமை அவற்றுக்குக் குறுக்கே அரணாக எழும்பி நிற்கிறது.
மனித வரலாறு நெடுகிலும் கூர்மதியாளர்கள் புதிய கண்டு பிடிப்புகளை அறிமுகப்படுத்தி வந்துள்ளனர். இக்கண்டுபிடிப்புகளி னுாடாகவே கற்கால மனிதன் நவீன யுகத்துக்குப் பயணிக்க முடிந்தது. சிக்கிமுக்கிக் கல்லில் மூட்டிய தீ இன்று தீக்குச்சிகளின் தலையில் அடை வைக்கப்பட்டிருப்பதைப் போல, கற்கோடரி கனரக ஆயுதங்களாகப் பரிணாமித்ததைப் போல, களிமண் பதிவுகள் கணினிகளுக்கு இடம் மாற்றப்பட்டதைப் போல காலத்துக்குக் காலம் கண்டுபிடிப்புகள் மேம்பாடுற்று வந்துள்ளன. கூடவே கண்டுபிடிப்புகளுடன் சேர்ந்து மனிதவாழ்வும் மேம்பாடு அடைந்து வந்துள்ளது.
புதிய கண்டுபிடிப்புகள் என்பவை சமூகத்தை மேம்படுத்துவதற் காகவே நிகழ்த்தப்படுகின்றன என்பதன் அடிப்படையில் கண்டுபிடிப் பாளர்கள் வரலாற்றுக்காலம் முதலே பரிசுப் பொருட்கள், பணமுடிப்பு கள், பட்டங்கள் அளித்துப் பாராட்டப்பட்டு வந்துள்ளனர். அந்தப் பிரதியுபகாரத்தின் பிந்திய வடிவமே அறிவுச் சொத்துரிமை ஆகும். கண்டுபிடிப்பாளர் ஒருவர் தனது கண்டுபிடிப்புக்காகச் செலவிட்டிருக்கக் கூடிய அறிவு மற்றும் பொருட் செலவுகளை அவருக்கே திரும்பிப் போய்ச் சேரும் வகையில், அவரது கண்டுபிடிப்பு அவரே அவருக்குத் தான் என்று பிறர் எவரும் சொந்தம் கொண்டாட முடியாதபடி வழங்கும் பிரத்தியேக உரிமையே அறிவுச் சொத்துரிமை (Intelectual Prop
316
Page 161
ஏழாவதுஉஊழி
erty rights - IPRS) எனப்படுகிறது. புதிய கண்டுபிடிப்புகளுக்கு மாத்திரம் அல்லாமல் ஒருவருடைய எண்ணம், எழுத்து, வரைகலை, இசை திரைப்படம் போன்ற படைப்பாக்க வெளிப்பாடுகளுக்கும்கூட (Creative Expressions) இது பொருந்தும்.
அறிவுச் சொத்துரிமைபற்றி நன்றி முலாம் பூசி வர்ணிக்கப் படினும் இதனை வெறுமனே கைமாறு என்று எளிமைப்படுத்திவிட முடியாது. இது கண்டுபிடிப்பாளரின் பொருளாதார அபிலாசைகளை முற்று முழுதாகப் பாதுகாக்கும் ஒரு வணிக ஒப்பந்தம் ஆகும். அதுவும், இன்றைய உலகமயமாக்கல் சூழலில் உரிமங்கள் பணம் கறக்கும் காமதேனுக்களாகவே விளங்குகின்றன. இதனால் ஒருவரின் அறிவுச் சொத்தை எவரும் கையாட இயலாதவாறு வணிகக் குறியீடு (TradeMark), சேவைக்குறியீடு (Servicemark), பதிப்புரிமை (Copyright) வணிக இரகசியங்கள் (TradeSecrets) போன்றவற்றுடன் இவற்றுக்கெல்லாம் மேலாகக் காப்புரிமை (Patent) என்னும் வலுவான பாதுகாப்புக் கவசத்தையும் அறிவுச் சொத் துரிமை உள்ளடக்கியுள்ளது. இவற்றில், மற்றவர்களின் உற்பத்திகளில் இருந்து தன்னுடையதை வேறுபடுத்திக் காட்டும் வணிகக்குறியீட்டை (ஒருவார்த்தை அல்லது குறியீடு, அல்லது இரண்டினதும் சேர்க்கை) ஒருவர் தனது தயாரிப்புகளில் முதன் முதலில் பயன்படுத்துவதன் மூலம் தனக்குரியதாக்கிக் கொள்ள முடியும். அதுபோன்றே சேவை நிறுவனங்கள் விளம்பரங்களில் பிரபலப்படுத்துவதன் மூலம் தமக்கென ஒரு சேவைக்குறியீட்டை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். இவற்றைப் போல அல்லாமல் காப்புரிமை என்பது அரசினால் வழங்கப்படும் உச்ச பட்சப் பாதுகாப்பு. இதனால், அறிவுச் சொத்துரிமையில் அதன் ஏனைய அம்சங்களைவிட காப்புரிமை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
காப்புரிமை தொடர்பான விதிமுறைகள் தேசியச் சட்டங்கள் மற்றும் சர்வதேச உடன்பாடுகளைப் பொறுத்து நாட்டுக்கு நாடு வேறுபடலாமெனினும் அடிப்படையில் பொதுவான கோட்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. காப்புரிமை கோரும் பொருள் அல்லது செயன் முறை இருப்பதைக் கண்டறிந்ததாக (Discovery) இல்லாமல் புதுமையான (Nove) கண்டுபிடிப்பாகவும் (Invention), கைத்தொழில் பிரயோகம் உரியதாகவும் இருக்கவேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் கண்டுபிடிப்பாளர் அதனைப் பயன்படுத்த, விற்க அல்லது உற்பத்தி செய்யவென அது தொடர்பாக உள்ள அனைத்து வணிக நலன்களையும் அனுபவிக்கும் உரிமையை அரசு வழங்குகிறது. கண்டுபிடிப்பாளருக்கு அல்லது அவரது சட்டபூர்வமான நியமனிக்கு (Assignee) ஒரு குறிப்பிட்ட
3.18
பொ.ஐங்கரநேசன்
கால எல்லைவரை அரசு வழங்கும் இந்த ஏகபோக உரிமையே காப்புரிமை ஆகும். 17 வருடங்கள் என்றிருந்த காப்புரிமையை அனுபவிக்கும் காலஅளவு, அறிவுச் சொத்துரிமை தொடர்பான உருகுவே உடன்படிக்கையின்படி 1995 ஜூன் 8ஆம் தேதியின் பின்னர் 20 வருடங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியினுள் வேறொருவர் காப்புரிமையைக் கொண்டிருப்பவரின் உரிய அனுமதியின்றி அவரது கண்டுபிடிப்பை வணிகரீதியாகவோ அல்லது ஆய்வுரீதியாகவோதன்னும் பயன்படுத்த முனைந்தால் பொது மற்றும் குற்றவியல் தண்டனைச் சட்டங்களின் கீழ் தண்டிக்கப்படுவார். மில்லியன் டொலர்கள் அபராதத்தோடு சிறைத் தண்டனையையும் கூட அனுபவிக்க நேரலாம்.
கண்டுபிடிப்பாளரின் வணிக நலன்களைப் பேணும்பொருட்டு, கண்டுபிடிப்பாளருக்கும் சமூகத்துக்கும் இடையே அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இவ்'அறிவுச் சொத்துரிமை ஒரு நியாயமான உடன்படிக்கையாகவே தோன்றும். இதனை மறுப்பதற்கு இல்லை. இயற்கையின் மர்மத்திரைகளை விலக்கிக் கண்டுபிடிப்புகளை அரங்கேற்றுவது இலேசான காரியம் அல்ல. இதற்கு அறிவியலாளர்கள் கொடுத்து வருகின்ற விலை அதிகம். கருமமே கண்ணாயினர்களாக ஆய்வுகளை ஒரு தவம் போலவே மேற்கொள்ள வேண்டியிருப்பதால் இவர்களால் ஆய்வுகளைத்தவிர வேறு எவற்றின்மீதும் கவனம் செலுத்த இயலுவதில்லை. புற உலகை மறக்கும் அளவுக்குச் சிந்தனை வயப் பட்டிருந்த காரணத்தினாலேயே கணிதமேதை ஆக்கிமெடிஸ் குளியல் தொட்டியில் இருந்து இறங்கி நிர்வாணமாகத் தெருவில் ஓடினார் என்கிறது வரலாறு. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானி எனப் போற்றப்படுபவர் அல்பேர்ட் ஐன்ஸ்ரீன் குடும்ப நலனில் அக்கறை செலுத்த இயலாதவாறு சர்வகாலமும் இயற்பியலிலேயே மூழ்கியிருந் தமையால் மனம் கசந்த இவரது மனைவி இவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்று குழந்தைகளுடன் பிரிந்து போனார். இப்படி, ஆய்வுகளின் மீதே முழுக்கவனத்தையும் புதைப்பதால் அறிவியலாளர்கள் தனிப்பட்ட'வாழ்வில் பல இழப்புகளைச் சந்திக்க நேர்கிறது.
அறிவியலாளர்கள் மூளையைக் கசக்கி உழைப்பதோடு அல்லாமல் பல சமயங்களில் தமது உயிரையும் பணயம் வைத்தே கண்டுபிடிப்பு களை நிகழ்த்தவேண்டியிருக்கிறது. அம்மைநோய்த் தடுப்புமருந்து ஆய்வின் ஒரு கட்டமாக எட்வேர்ட் ஜென்னர், கொடிய அம்மை வைரஸ் கிருமிகளைத் தனது ஒன்றரை வயது மாத்திரமே நிரம்பப்பெற்ற
319
Page 162
ஏழாவது2ஊழி
பச்சிளம் பாலகனின் புயங்களில் செலுத்திப் பரிசோதித்துப் பார்த்திருக் கிறார். சோதனையில் குழந்தை தப்பிப் பிழைத்ததால் ஜென்னர் மாபெரும் கண்டுபிடிப்பாளர். அம்மைக்குப் பலியாகியிருந் தால் ஜென்னர் கொலையாளியாகக் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனைக்கு ஆளாகியிருப்பார். வெறிநாய்க்கடிக்கு (Rabies) மருந்து கண்டுபிடித்த லூயிபாஸ்டர் தனது உடலினுள் வெறிநாய்க்கிருமிகளை ஏற்றிப் பார்த்தே மருந்தின் நம்பகத்தன்மையை உறுதிசெய்தார். அல்பேர்ட் நோபல் "டைனமைற்" வெடிமருந்ததைக் கண்டுபிடித்தவர். டைனமைற்றின் முன்னோடியாக "நைட்ரோ கிளிசரீன்' என்னும் வெடிமருந்தைத் தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் இவரது சகோதரர் உட்பட எட்டுப்பேரைப் பலிகொடுக்க நேர்ந்தது. இந்தவெடி விபத்தும் துர்மரணங்களும்தான் அல்பிரட் நோபலை பாதுகாப்பாக எடுத்துச் செல்லத்தக்க டைனமைற் வெடிமருந்து பற்றிச் சிந்திக்க வைத்தது எனலாம். அணுக்கதிர் வீச்சு மூலகங்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்ட மேரிகியூரி அம்மையார் தொடர்ச்சியாகக் கதிர்வீச்சுக்கு ஆட்பட்டதால் கடைசியில் புற்றுநோய்க்குப் பலியாகினார். இப்படி உயிர்வருத்திக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் அறிவியலாளர்கள் அவற்றை அறிவுத் திருடர்களிடமிருந்து பாதுகாக்கவேண்டிய நிர்ப்பந்த மும் உள்ளது. பிறரது கண்டுபிடிப்புகளில் சில நகாசு வேலைகளைச் செய்து அவற்றைத் தம்முடையதாகப் பிரகடனம் செய்யும் வித்தகத் திருட்டு அறிவியல் வரலாறு நெடுகிலும் நீள்கிறது. இவற்றின் அடிப்படையில் அறிவியலாளர்கள் தங்களது கண்டுபிடிப்புகளின் மீது காப்புரிமை பெறுவதிலும், இதன்வழி பொருளாதார அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதிலும் உள்ள நியாயப்பாடுகளை எவரும் புறந்தள்ளிவிட (lfDL q?-ULufğ5l.
ஆனால், அமெரிக்க உச்சநீதிமன்றம் 1980இல் வழங்கிய தீர்ப்பு ஒன்று காப்புரிமை கோருவதில் அதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நெறிமுறைகள் பிறழ்வதற்கான தொடக்கமாக அமைந்துவிட்டது. ஆனந்த மோகன் சக்ரபர்ட்டி (Ananda Mohan Chakrabarty) என்னும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்க நுண்ணுயிரியலாளர் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பக்ரீறிய இனமொன்றுக்கு உரிமம் கோரி விண்ணப்பித்திருந்தார். இயற்கையின் படைப்புகளான தாவர - விலங்குகளுக்கு, மொத்தத்தில் உயிரினங்களுக்கு எவருமே உரிமை கொண்டாட இயலாது. இதற்கேற்ப இருப்பவற்றைக் கண்டறிந்ததாக (Discovery) இல்லாமல் புதிய கண்டுபிடிப்புகளுக்கு (Inventions) மாத்திரமே
32O
பொ. ஐங்கரநேசன்
காப்புரிமை என்பதே விதியாக இருந்து வந்தது. இதனைக் காரணம் காட்டி மரபணு மாற்றிய பக்ரீறிய இனத்துக்கு அமெரிக்கக் காப்புரிமை நிறுவனம் உரிமம் வழங்க மறுக்க, மனுதாரர் நீதிமன்றத்தின் படியேறினார். பக்கச்சார்பாகத் தீர்ப்பு அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே நீதிதேவதை கண்களில் கறுப்புத் திரையிட்டிருக் கின்றாள். ஆனால், சில தருணங்களில் அவளது காதுகளும் செவிடாகி விடுகின்றன போலும். மேற்குறிப்பிட்ட பக்ரீறியா, பெற்றோலிய மாசுக் களை அகற்றுவதற்காக அவற்றைத் தின்று சீரணிக்குமாறு உருவாக்கப் பட்ட பக்ரீறிய இனமாகும். இங்கு பக்ரீறிய இனமொன்றினுள் வேறு பக்ரீறிய இனங்களிலிருந்து பெறப்பட்ட மரபணுக்கள் பிறப்புரிமைப் பொறியியலால் இடம்மாற்றப்பட்டனவேயல்லாமல் புதிய மரபணுக்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை. மரபணுமாற்று உயிர்களைப் புதிய கண்டுபிடிப்புகள் எனக் கருதிக் காப்புரிமை வழங்கின் வேதியியலில் மூலகங்களுக்கும் காப்புரிமை வழங்க வேண்டிவரும் என்ற, அமெரிக்க காப்புரிமை ஆணையாளரின் வாதம் நீதியின் காதுகளில் விழவேயில்லை. "உயிரா - உயிரற்றதா என்பதற்கும் அப்பால் இந்த உயிரை ஒரு மனிதக் கண்டுபிடிப்பாகவே பார்க்க வேண்டியுள்ளது" என்று கூறி, மரபணு மாற்றிய பக்ரீறிய இனத்துக்கு காப்புரிமை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு மரபுகளையும் மீறி மரபணுக்களை எதிர்கால பொருளாதாரத்துக்கான பெரும் மூலவளமாக அடையாளம் காட்டியது. இதனால், உயிர்களுக்குக் காப்புரிமை கோரும் வேக ஒட்டம் அமெரிக்காவில் இருந்து உயிர்ப் பல்வகைமைமிக்க வெப்பமண்டல நாடுகளை - மூன்றாம் உலக நாடுகளை நோக்கி ஆரம்பமாகியது.
உலகில் உள்ள உயிரினங்களில் 5 தொடங்கி 7 விழுக்காடுவரை கொண்டிருக்கும் கோஸ்ரா றிக்காவுடன் அதன் உயிர்வளத்தைப் பயன்படுத்தவென மேர்க் (Merck) எனும் அமெரிக்கப் பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டது. 1991இல் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் கோஸ்ராறிக்காவின் மழைக்காடுகளை"மேர்க் நிறுவனத்துக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது. ‘மேர்க் அங்குள்ள தாவரங்கள், விலங்குகள், நுண்ணங்கிகள் என அத்தனை உயிரினங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தவும், கண்டுபிடிப்பு களை நிகழ்த்தவும், அவற்றுக்குக் காப்புரிமைகளைப் பெறவும் பரிபூரண உரிமையை வழங்கியது. இதற்கு ‘மேர்க் நிறுவனம் கோஸ்ராறிக்காவுக்கு அதன் உயிர்ப்பல்வகைமை தொடர்பான திட்டமொன்றுக்கு வழங்கிய
321
Page 163
ஏழாவது ஊழி
தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே. ஏறத்தாழ கோஸ்ராறிக்காவின் ஐந்து இலட்சம் தாவர - விலங்கு இனங்களுக்கும் என தலா இரண்டு டொலர்கள் வீதம் வழங்கிய இந்தத் தொகை, அந்த ஆண்டில் ‘மேர்க் சம்பாதித்த 8.6 பில்லியன் டொலர்களுடன் (மில்லியன் அல்ல பில்லியன்கள்) ஒப்பிடும்போது மிகச் சொற்பமே. இருந்தும், இவ்வொப்பந்தம் அமெரிக்காவாலும் உலகவங்கியாலும் மூன்றாம் உலகநாடுகளின் உயிர்வள ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கான 'மாதிரி ஒப்பந்தம் ஆக வர்ணிக்கப்பட்டது. இதன்படி, உலகின் மொத்த உயிரினங்களையே 20 மில்லியன் டொலர்களுக்குள் வாங்கிவிட முடியும். ஆனால், இந்த மிகக் குறைந்த விலை நிர்ணயம்கூட பெரும் பாலும் நடைமுறையில் இருப்பதில்லை. சுதேசிகள் தமது பாரம்பரிய அறிவின்மூலம் பயன்படுத்திவரும் மருத்துவத் தாவரங்களை அவர்களின் மூலமே அடையாளம் கண்டு, அவற்றிலிருந்து பெறப்படும் மருத்துவத் தயாரிப்புகளுக்கு அறிவுச் சொத்துரிமை கோரும் பன்னாட்டு நிறுவனங்கள் சுதேசிகளின் பாரம்பரிய அறிவுக்கு ஈடாக எதனையுமே கொடுப்பதில்லை. இப்படி, உயிர்க்கொள்ளையினால் ஆண்டு தோறும் 45 பில்லியன்கள் அளவு அமெரிக்க டொலர்களால் மூன்றாம் உலக நாடுகள் ஏமாற்றப்படுவதாக "கிறிஸ்ரியன் எய்ட் (Christian Aid) என்ற நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
அறிவியலின் நீண்ட நெடும் பயணத்தில், அறிவியலாளர் ஒருவரின் கண்டுபிடிப்பு அஞ்சலோட்டம் போல இன்னொருவரது ஆய்வின் தொடக்கமாக அமைந்து வருகிறது. ஹென்றி பெக்குரெல் (Henry Becquerel) என்னும் விஞ்ஞானி யுரேனியம், அணுக்கதிர்களை வீசுகின்றது என்பதைக் கண்டறிந்ததன் பின்னர்தான் மேரி கியூரியும் (Marie Curie) அவரது கணவர் பியேரி கியூரியும் (Pierie Curie) "பொலோ னியம்', 'றேடியம்' என்ற இரண்டு கதிர்த்தொழிற்பாட்டு மூலகங்களைக் கண்டுபிடித்தனர். பெக்குரெலின் ஆய்வுத்தடங்கள் இல்லையேல் கியூரி தம்பதியினரால் இந்த இரண்டு புதிய மூலகங்களையும் தேடிக்கண்ட டைந்து உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்க முடியாது. இதனால்தான், இயற்பியல் மற்றும் வேதியியலுக்கென இரண்டு தடவைகள் நோபல் பரிசு பெற்ற தகைமையுடைய கண்டு பிடிப்பாளராக இருந்தபோதும் மேரிகியூரி தனது கண்டுபிடிப்புகளுக்கு ஒரு போதும் காப்புரிமை கோர விரும்பியதில்லை. "காப்புரிமை பெற்றால், எனது ஆய்வுகளை யாராவது தொடர்ந்து மேற்கொண்டு புதிதாக ஏதாவது கண்டுபிடிக்க முயலும் போது அதற்குத் தடைகள் உருவாகிவிடும். ஆதலால், என் கண்டு
322
பொ.ஐங்கரநேசன்
பிடிப்புகள் அனைத்தும் அறிவியல் உலகம் முழுமைக்கும் சொந்தமாகிவிடவேண்டும்" என்று உயில் எழுதி வைத்தார். ஆனால், இன்றைய உலகமயச் சூழலில் மேரி கியூரி அம்மையார் போன்ற பெருந் தகையாளர்களைக் காண்பது அரிது. ஆய்வுகளைப் பொதுக்களனில் தொடர்ந்து முன்னெடுக்க இயலாதவாறு அறிவியற் சமூகம் பன்னாட்டு நிறுவனங்களோடு கைகோர்த்துக் கொண்டு காப்புரிமையை ஒரு கடிவாளமாகவே பயன்படுத்தி வருகிறது.
1980களில் அறிவியலில் உயிரித் தொழில்நுட்பம் (BoTechnology) ஒரு தனிப்பெரும் துறையாக வளர்ச்சிபெற ஆரம்பித்ததும் பன்னாட்டு நிறுவனங்களது கவனமும் உயிரித்தொழில்நுட்பத்தின் மீது திரும்பியது. இனி, 'மரபணுக்கள்தான் பணம்' என்பதைத் தெரிந்து கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள், உயிர்நுட்ப விஞ்ஞானிகளைக் செங்கம்பளம் விரித்துப் பணிக்கு அழைத்தன. பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களில் இருந்த ஆய்வாளர்கள் பலரும் இடம்மாறி வந்தார்கள். பல நிறுவனங்கள் அவர்களுக்குப் பங்குகளைப் பரிசளித்தன. இப் பங்குகளின் சந்தைமதிப்பு மிகப்பெரியது. 1980இல் அமெரிக்க நீதிமன்றம் மரபணுமாற்றிய பக்ரீறிய இனத்துக்கு காப்புரிமை வழங்கப் பணித்ததும் சான் பிரான்சிஸ்கோவிலுள்ள ஜெனென்ரெக் (Genentech) என்னும் புதிய உயிர்நுட்ப நிறுவனம் ஒரு மில்லியன் பங்குகளை ஒவ்வொன்றும் 35 டொலர்கள் விலையில் விற்க முன்வந்தது. "ஜெனன்ரெக் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம். அப்போது சந்தையில் எந்த ஒரு பண்டத்தையேனும் அது அறிமுகப்படுத்தியிருக்கவில்லை. அப்படி இருந்தும் அறிவிப்பு வெளியான 20 நிமிடங்களில் பங்கொன்றின் விலை 89 டொலர்களை எட்டியது. அன்றைய ஒரு நாளின் முடிவில் 'ஜெனென்ரெக் பங்குச் சந்தையில் ஈட்டிய தொகை 36 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இந்த ஒர் உதாரணமே உயிர்த்தொழில்நுட்ப நிறுவனங்களின் சந்தைப் பெறுமதியை உணர்த்தப் போதுமானது. ஆய்வாளர்களே நிறுவன உரிமையாளர்களுமாகினார்கள். இப்படி, ஆய்வாளர்கள் தொழில்முனைவோர்களாகவும் அவதாரம் எடுத்ததில், ஆய்வுகளில் வணிகாபிமானம் முன்னுரிமை பெறப்பெற காப்புரிமை விதிகளது எல்லைகளும் அகன்று சென்றன. இன்று, ஒரு மரபணுமாற்ற உயிரியின் எல்லா இனங்களுக்குமே சேர்த்து ஒட்டுமொத்தமாக அகன்ற காப்புரிமைகளைப் (BroadSpecies Patents) பெறமுடியும்.
பகாசுரப் பன்னாட்டு நிறுவனமான "மொன்சான்டோ உலகின் மிகமுக்கிய உணவுப்பயிர்களில் ஒன்றான சோயா அவரையைத்
323
Page 164
ஏழாவது ஊழி
தன்பிடியின்கீழ் கொண்டுவந்துள்ளது. எல்லாவிதமான மரபணு மாற்றச் சோயாச்செடிகளுக்கும் சோயாவிதைகளுக்குமாகச் சேர்த்து அகன்ற காப்புரிமையை வாங்கி வைத்திருக்கிறது. 1994இல், "அக்றாசெடஸ் (Agracetus) என்னும் பிறிதொரு அமெரிக்க நிறுவனமே முதன்முதலில் மரபணுமாற்றிய சோயாஅவரைக்கு அகன்ற காப்புரிமையைப் பெற்றது. 'அக்றாசெடஸ் நிறுவனம், 'அக்றோபக்ரீறியம் ரியூமிஃபேசியன்ஸ்' (Agrobacterium tumiacens) என்னும் பக்ரீறியாவின் மூலம் வேறுமரபணுக் களை சோயாவினுள் இடம்மாற்றி சோயாவின் மரபணுக்களை மாற்றி யமைத்தது. இதற்கு அகன்ற காப்புரிமையைக் கோரியதன் மூலம், இன் னொருவர் மேற்குறிப்பிட்ட பக்ரீறியாவைப் பயன்படுத்தி சோயாவின் மரபணுக்களை மாற்றுவதைத் தடைசெய்து, மரபணு மாற்றப்பட்ட சோயா இனங்களின் மீது தனது ஏகபோக உரிமையை நிலைநாட்டியது. அக்றோபக்ரீறியம் ரியூமிஃபேசியஸ் மண்ணில் இயற்கையாகவே காணப்படுகின்ற, தாவரங்களில் வேர்களினூடாக சுலபத்தில் தொற்றி விடுகின்ற பக்ரீறிய இனம். இதனால் மரபணு மாற்றத் தொழில்நுட்பத் தில் வேறு மரபணுக்களை ஏற்றித் தாவரங்களினுள் அனுப்புகின்ற ஒரு மரபணுக்காவியாக இந்தப் பக்ரீறியா பயன்படுத்தப்படுகின்றது. இதில் 'அக்றாசெடஸ் நிறுவனம் முந்திக் கொண்டது. விசனமடைந்த 'மொன் சான்டோ, இந்தக் கண்டு பிடிப்பில் புதுமை இல்லை என்றது; அக்றோ செடெசுக்கு வழங்கப்பட்ட அகன்ற காப்புரிமை உயிர்நுட்பவியலில் அதன் எதேச்சாதி காரத்துக்கு வழிகோலிவிடும் என்று வழக்கும் தொடர்ந் தது. ஆனால் விரைவிலேயே 'அக்றோசெடெஸ் நிறுவனத்தை அது பெற்று வைத்திருந்த சோயாவுக்கான அகன்ற காப்புரிமைகளுடன் சேர்த்து 'மொன்சான்டோ வாங்கிக் கொண்டது. அது மாத்திரமல்லா மல், மரபணுமாற்ற பருத்திக்கான அகன்ற காப்புரிமையும் "மொன்சான் டோவின் வசமே உள்ளது. இதேபோன்று உயர்ந்த செறிவில் எண்ணெய் மற்றும் ஒலியிக் அமிலத்தை (Oleic acid) கொண்டிருக்கும் சூரியகாந்தியின் ரகங்கள் எல்லாவற்றுக்கும் 'சன்ஜின் (Sungene) நிறுவனமும், சோள வகைகள் எல்லாவற்றுக்கும் டியூபான்ற் (Dupont) நிறுவனமும் உரிமை பாராட்டுகின்றன. இதில் வேடிக்கையென்னவெனில், மெக்சிக்கோவில் காலங்காலமாகப் பயிரிடப்பட்டுவரும் சோளத்தாவரங்கள் மரபணு மாற்றங்கள். எதுவும் இன்றி இயற்கையாகவே அதிக அளவில் எண்ணெயையும் ஒலியிக் அமிலத்தையும் கொண்டிருப்பதுதான்.
1987இல், அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புற்றுநோய் ஆய்வுகளுக்காக சந்ததிதோறும் புற்றுநோய் தோன்றும்
324
பொ. ஐங்கரநேசன்
வகையில் மரபணு மாற்றிய சுண்டெலிகளை உருவாக்கி காப்புரிமை பெற்றார்கள். உடலில் கட்டிகளுடன் பரிதாபமாக அலையும் இந்தப் புற்றுநோய்ச் சுண்டெலி வகையே (Oncomouse) உலகில் முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட விலங்கு ஆகும். இப்போது இதற்கான காப்புரிமையை வைத்திருக்கும் "டியூபான்ற் நிறுவனம், சுண்டெலிகள் மாத்திரம் அல்லாது புற்றுநோய்க்கு ஆளாகும் வகையில் மரபணு மாற்றியமைக்கப்படும் மனிதன் தவிர்ந்த எல்லா முலையூட்டிகளும் தனது காப்புரிமைக்குக் கட்டுப்பட்டவை என்று கூறி வருகிறது. இதே போன்று, 'பயோசைற் (Biocyte) என்னும் அமெரிக்க நிறுவனம் மனிதனின் தொப்புள் கொடியிலுள்ள எல்லாக்கலங்களின் மீதும் உரிமம் பெற்று வைத்துள்ளது. மனித மரபணுக்களைச் செம்மறி ஆட்டின் முலைச்சுரப் பிக்குள் புகுத்தி அது சுரக்கும் பாலுடன் சேர்த்தே மனிதனில் குருதியை உறையச் செய்வதற்குத் தேவையான மருந்து இரசாயனம் (alpha-1- antitypsin) உற்பத்தி செய்யப்படுகிறது. நடமாடும் இந்தச் சிறிய மருந்துத் தொழிற்சாலைக்கு பீபீஎல். (Pharmacuetical Proteinsttd) எனப்படும் ஸ்கொட் லாந்தைச் சேர்ந்த நிறுவனம் காப்புரிமையைப் பெற்று வைத்துள்ளது. இந்நிறுவனம் படியாக்கல் (Cloning) முறையில் "டாலி என்னும் செம்மறி யாட்டை உருவாக்கிய ‘றோஸ்லின் இன்ஸ்ரிரியூட்'டின் வணிகச் செயற்பாடுகளைக் கவனிக்கும் சகோதர நிறுவனம் ஆகும். இப்போது "பீ.பீ.எல் நிறுவனம் படியாக்க முறையில் மனிதனை உருவாக்கு வதற்கான சாத்தியக் கூறுகள் நெருங்கிவரும் நிலையில் படியாக்க முறையில் உருவாக்கப்படும் அனைத்து முலையூட்டி களுக்குமாக அகன்ற காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது.
போட்டாபோட்டியில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் ஏகபோகமாக நலன்களை அனுபவிக்கும் நோக்கிலேயே, தமது வணிகப்புலத்தை அடுத்தவர் பங்குபோட்டுக் கொள்ள இயலாதவாறு காப்புரிமைகளைப் பெற்றுக் குவித்துவருகின்றன. ஆனால், இத்தகைய பரந்த அளவிலான காப்புரிமைகள் அறிவியலின் வளர்ச்சிப் போக்குக்கு ஆதரவானவை அல்ல. சாமுவேல் மோர்ஸ் (Samuel Morse) தந்தி உலகின் முன்னோடியாகக் கருதப்படுபவர். மின்காந்தத்தைப் பயன்படுத்தி குறியீட்டு முறையில் செய்திகளைப் பரிமாறும் தந்திக்கருவியை இவரே கண்டுபிடித்தார். இவ்வுபகரணத்துக்குக் காப்புரிமம் பெற்ற மோர்ஸ், தொலைத்தொடர்பில் மின்காந்தத்தைப் பயன்படுத்துவது குறித்தும் அகன்ற உரிமம் பெறமுயன்றார். ஆனால் மின்காந்தச் சக்திக்கு உரிமம் வழங்கப்படின் அதனைப் பயன்படுத்தி மோர்ஸ் கண்டுபிடித்ததைவிட
325
Page 165
ஏழாவதுஉஊழி
மேம்பட்ட கருவிகளையோ, செய்தி அனுப்பும் முறைகளையோ இன் னொருவர் கண்டுபிடிப்பதற்கு அவ்வுரிமம் தடையாக அமைந்துவிடும் என்று சொல்லி அமெரிக்க உச்சநீதிமன்றம் மோர்சுக்கு அகன்ற உரிமம் தருவதை நிராகரித்தது. மின்காந்தத்தைப் பொதுக்களனில் அனுமதித்ததாலேயே, தந்தி உபகரணத்தையே காலக்குப்பைக்குள் வீசும் அளவுக்கு அதனைவிட வினைத்திறன் வாய்ந்த தொலைஅச்சு இயந்திரம் (Teleprinter), தொலைநகல் இயந்திரம் (TeleFax) போன்ற தகவல்பரிமாற்ற சாதனங்களைப் பிற ஆய்வாளர்களால் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால், காப்புரிமை விதிகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் அகன்ற காப்புரிமை களுக்கும் வழிகோலியிருப்பதால் அத்துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்கோ, புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்து வதற்கோ இயலாதவாறு கதவுகள் அடைக்கப்பட்டு வருகின்றன. இதனூடாக நுழைவதற்கு காப்புரிமைகளைக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்குக் கட்டணமாக மிகப் பெருந்தொகையைச் செலுத்த வேண்டியிருக்கிறது.
மரபணுக்களில் ஏற்படும் திரிபுகளே புற்றுநோய்களுக்கான காரணம் ஆகும். அமெரிக்காவிலுள்ள 'மிரியாட் ஜெனெக்ரிக்ஸ் (Myrad Genectics) GT6örgyub igauearib LDTjLü LügyGg5Tüáig5áj (Breast Cancer) காரணமான BRCA-1, BRCA-2 என்னும் இரண்டு மரபணுக்களின்மீது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காப்புரிமையைக் கொண் டுள்ளது. இந்தக் காப்புரிமை இரண்டு மரபணுக்களையும் இம்மரபணுக் களால் உருவாக்கப்படும் புரதங்களையும் பிரித்தெடுப்பதற்கும், நோயைக் கண்டறிவதற்குத் தேவையான சாத்தியமான எல்லாச் சோதனைகளையும் மேற்கொள்ளுவதற்கும், மரபணுக்களில் மாற்றங்களை உண்டு பண்ணி புற்றுநோய் சிகிச்சை முறைகளை விருத்தி செய்வதற்குமான பிரத்தியேக உரிமைகளை (Exclusive rights) 'மிரியாட் நிறுவனத்துக்கு வழங்கியிருக் கிறது. அதுமாத்திரமல்லாமல், எதிர்காலத்தில் இம்மரபணுக்களில் இருந்து புதிய அறிதல்களைப் பெறநேர்ந்தால் அந்த அறிவும் 'மிரியாட் நிறுவனத்துக்கே சொந்தமாகும் வகையிலும் உரிம நீட்சி பெற்றதாகும். ஒரு நிறுவனத்துக்கு இதைவிட ஏகபோகம் வேறு என்ன இருக்கமுடியும்? காப்புரிமை விதிகளின்படி, அமெரிக்க - ஐரோப்பியப் பெண்கள் மார்புப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டா என்பதைக் கண்ட றியும் மரபணுச்சோதனைகளை'மிரியாட் நிறுவனத்தின் மூலம் மாத்திரமே மேற்கொள்ள முடியும் அதுவும் மரபணு மாதிரிகளை அமெரிக்காவுக்கே அனுப்பி வைக்க வேண்டும். இந்தச் சோதனைக்கென மிரியாட் ஒவ் வொருவரிடமும் ஏறத்தாழ 3000 அமெரிக்க டொலர்களை அறவிட்டு வருகிறது.
326
பொ.ஐங்கரநேசன்
ஐரோப்பாவில் 'மிரியாட் காப்புரிமை பெற்ற 2001ஆம் ஆண்டு முதலே அதன் கொள்ளை விலைச் சோதனைக்குக் கடுமையான ஆட் சேபனை கிளம்பியது. பிரான்சின் கியூரி புற்றுநோய் ஆய்வு நிறுவனம், ஜேர்மனியின் பசுமை அமைதி இயக்கம் போன்ற பல்வேறு அமைப்பு களின் இடைவிடாத போராட்டங்களின் காரணமாக, ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம் 'மிரியாட் நிறுவனத்துக்கு வழங்கிய காப்புரிமையில் இப்போது சில திருத்தங்களைச் செய்துள்ளது. இதன்படி, 'மிரியாட்' மரபணுக்களின் மீது கொண்டிருக்கும் உரிமையைத் தொடர்ந்து அனுபவிக்க முடியும். ஆனால், மார்புப் புற்றுநோயைக் கண்டறிவதற்காகச் செய்யப்படும் சோதனைகளில் ஐரோப்பாவில் ஏகபோகம் கொண்டாட முடியாது. ஐரோப்பிய ஆய்வு மையங்கள் புற்றுநோய்க்குக் காரணமான மரபணுக்களில் ஏற்படும் திரிபுகளைக் கண்டறிவதற்குப் புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தவோ, அவற்றைப் பயன்படுத்தி மரபணுச் சோதனைகளைச் சுயாதீனமாக மேற்கொள்ளவோ (Մ գպւհ. இந்தத் திருத்தங்கள் செய்யப்படாத கனடாவிலும், ஒன்ராறியோ அரசாங்கம், 'மிரியாட்டின் சோதனைகளுக்குள் சிக்காத மரபணுக் குளறுபடிகளையெல்லாம் கண்டறியத்தக்க புதிய முறை களைப் பயன்படுத்தித் தனது மருத்துவ மையங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஆகும் செலவு 'மிரியாட்டுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தின் மூன்றிலொரு பங்கு மாத்திரமே. எனினும் ஆய்வு நிதியைப் பயன்படுத்தி இந்தச் சோதனைகளைப் பொது மக்களுக்கு இலவசமாகவே செய்து வருகிறது. 'மிரியாட் நிறுவனம் இதை ஆட்சேபித்து, மரபணு மாதிரிகளைத் தன்னிடமே அமெரிக்கா வுக்கு அனுப்பிவைக்குமாறு பலதடவை வக்கீல் அறிவித்தல்கள் கொடுத்தும் ஒன்ராறியோ அரசாங்கம் கண்டு கொள்வதாகவே இல்லை. வல்லாண்மையும் பொருளாண்மையும் மிக்க ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளால் அந்நாடுகளே பிறப்பித்த காப்புரிமை விதிகளைத் தமக்கேற்றவாறு மாற்றியமைக்கவோ அல்லது அத்துமீறவோ முடிகிறது. ஆனால், ஏழை நாடுகளால்?
பல்லுயிரிய வளங்கொழிக்கும் வெப்பமண்டல நாடுகள் யாவும் துர்அதிர்ஷ்டவசமாக அடுத்தவரிடம் கையேந்தும் வறிய நாடுகளாகவே உள்ளன. இந்த ஏழ்மையை வாய்ப்பாகப் பயன்படுத்தி, தங்கள் டொலர் களையும் பவுண்டுகளையும்விடப் பெறுமதிமிக்கவை மரபணுக்கள்தான் என்பதைப் புரிந்து வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், இந்நாடுகளின் உயிர்ப்பல்வகைமையைப் பேரம் பேசிவருகின்றன.
327
Page 166
ஏழாவது ஊழி
பன்னாட்டு நிறுவனங்கள் என்பவை காலனித்துவ காலத்துக் 'கிழக் கிந்தியக் கம்பெனியின் புதுக்கிய வடிவமே தவிர வேறல்ல. பிரித்தானிய ஏகாதிபத்தியமும் கிழக்கிந்திய நிறுவனமும் ஒன்றையொன்று ஒம்பியவாறு குடியேற்ற நாடுகளைச் சுரண்டிக் கொழுத்தன என்பதுதானே வரலாறு. பிரித்தானியாவின் 'மான்செஸ்டர் - டி 73 (Manchester-D73) ரக பருத்தியின் வாழ்வுக்காக 'டாக்கா மஸ்லீன் (Dhakka Musin) துணி பூண்டோடு அழிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மஸ்லின் துணிக்கு 80 விழுக்காடு உச்சவரியும், இங்கிலாந் தில் இருந்து இறக்குமதியாகும் மான்செஸ்டர் பருத்திக்கு வெறும் 4 விழுக்காடு வரியும் விதிக்கப்பட்டதில் மஸ்லின் துணி நெசவு நசிந்தே போனது. இந்தத் துணியை நெய்த நெசவாளர்களின் கட்டை விரல்களைக் கூட கிழக்கிந்திய நிறுவனத்தின் துரைமார்கள் வெட்டி வீசியுள்ளனர். ஈவிரக்கம் அற்ற அதே சுரண்டலையே இன்றைய பன்னாட்டு நிறுவனங்கள் தொழில்நுட்ப யுகத்துக்கு ஏற்ப நவீன முறையில் மேற்கொள்ளுகின்றன.
பன்னாட்டு நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளின் உயிர்வள ஆதாரங்களைத் தமதாக்கிக் கொள்ளவும், இதன்மூலம் உலகின் ஒட்டுமொத்த உணவு - மருந்துகளின் உற்பத்தியையும் விநியோகத் தையும் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குமான ஓர் ஆயுதமாகவே அறிவுச் சொத்துரிமையைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. கிழக்கிந்திய நிறுவனம் பிரித்தானிய அரசிடம் இருந்து தொடர்ந்து சலுகைகளைப் பெறும் பொருட்டு ஆட்சிக் கட்டிலில் உள்ளவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கையூட்டு கொடுத்துக் கொண்டே இருந்துள்ளது. அதே போன்றே பன்னாட்டு நிறுவனங்கள் குறிப்பாக அமெரிக்காவில், அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் நிதிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிரதியுபகாரமாக, முறையான சர்வதேச காப்புரிமைச் சட்டம் இல்லாததால் தமது கடின உழைப்பால் உருவான கண்டுபிடிப்புகளை வறிய நாடுகள் அப்படியே பிரதி செய்து விடுகின்றன எனக் கூறிப் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாக மேற்குலகு வர்த்தகம் தொடர்பான அறிவுச் சொத்துரிமை விதிகளை வகுத்துக் கொடுத்துள்ளது.
1994ggi) GlassroorGauTul. LTRIPS (Trade Related Aspects of Intellectual Property Rights) எனப்படும் வர்த்தகம் தொடர்பான இவ்வறிவுச் சொத்துரிமை விதிகள் காப்புரிமையின் பெயரால் நிகழும் உயிர்க்கொள் ளைக்குச் சட்டரீதியான அனுமதி வழங்குவனவாகவே உள்ளன. ரியோ
328
பொ.ஐங்கரநேசன்
டி ஜெனிரோவில் நிகழ்ந்த புவி உச்சிமாநாட்டில் வலியுறுத்தியதைப் போன்று, சுதேசிகளின் அறிவைப் பயன்படுத்தி உயிரிகளை அடையாளம் கண்டு காப்புரிமை பெறும் பட்சத்தில் நலன்களை அவர்களுடன் பகிர்வது தொடர்பாகவோ, அல்லது உயிர்வளங்களைப் பயன்படுத்தும் முன்னர் உயிர்த்தொழில்நுட்ப நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட நாடுகளிடம் அனுமதி பெறவேண்டும் என்பது பற்றியோ இவ்விதிகள் எதுவுமே பேசவில்லை. மாறாக, கைத்தொழில் நாடுகளின் காப்புரிமை விதிகளுக்கு இசைவாக மூன்றாம் உலக நாடுகளும் உயிரினங்களுக்கு உரிமை வழங்குவதைத் தமது காப்புரிமை விதிகளில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பதையே அதிகம் வலியுறுத்துவதாக உள்ளன. சுதந்திரமான வர்த்தகத்துக்குக் குறுக்காக உள்ள தடைகளையெல்லாம் களைவதற்காகவே உலக வர்த்தக நிறுவனம் (WTO) உருவாக்கப்பட்டது. அதன் நிர்வாகத்தின் கீழேயே வர்த்தகம் தொடர்பான அறிவுச் சொத்துரிமை விதிகளும் (TRPS) இருப்பதால், உலக வர்த்தக நிறுவனத்தின் கடுமையான நிர்ப்பந்தங் களையும் மீறிப் பன்னாட்டு நிறுவனங்களின் காப்புரிமைக் கொள்ளையில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வது வறிய நாடுகளுக்குப் பெருஞ் சவாலாகவே இருக்கப் போகிறது.
329
Page 167
32
எதனோல் பெற்றோல் மாற்றா - ஏமாற்றா?
"அந்நிய நாட்டிடம் அல்ல; சூழலுக்கு உங்கள் கடனைச் செலுத்துங்கள் மக்களை அல்ல; பசியை எதிர்த்துப் போராடுங்கள்"
- %Lýh_6ö ở5/76i)LớUTT
பூமி சூடாகுவது இன்று எல்லோருமே முகங்கொடுத்துவரும் எரியும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் நிலையில், இதற்கான தீர்வாக ‘எதனோல் எரிபொருள்' என்னும் மாற்று எரிபொருள் திட்டத்தை அமெரிக்கா உலக நாடுகளுக்கு முன்னால் வைத்துள்ளது.
மார்ச் 9, 2007 அன்று, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ், பிறேசிலில் அதிபர் லூலா டா சில்வாவுடன் 'உயிர் எரிபொருள் Q5Tl-jLIngor Lifigia:orifa al ţiglb (Memorandum ofunderstandingtoAdvance cooperation on Biofuels) ஒன்றைச் செய்து கொண்டுள்ளார். எதனோல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள அமெரிக்காவும் பிறேசிலும் செய்து கொண்டிருக்கும் இவ்வொப்பந்தத்தில் உயிர் எரிபொருளாக எதனோலை மேம்படுத்திப் பாவனையை விரிவுபடுத்துவதில் பரஸ்பரம் இரண்டு நாடுகளும் ஒத்துழைப்பது பற்றி விரிவாகப் பேசப்பட்டுள்ளது. எதனோல் எரிபொருளின் அடுத்த தலைமுறையை உருவாக்குவது, மூன்றாவது தரப்பாக மத்திய அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளில் எதனோல் எரிபொருள் உற்பத்தியில் தனியார் துறையை ஊக்குவிப்பது, எதனோல் எரிபொருளின் சந்தையைச் சர்வதேச அளவில் விஸ்தரிப்பது ஆகிய மூன்று குறியிலக்குகளைக் கொண்ட இந்த ஒப்பந்தம், கைச்சாத்தான நாள் முதலே செயற்பாட்டுக்கு வந்துள்ளது.
தாவரங்களில் இருந்தும் விலங்குகளில் இருந்தும் பெறக்கூடிய எல்லாவகையான எரிபொருள்களுமே 'உயிர் எரிபொருள்கள் (Biofuels) என்று வகை பிரிக்கப்பட்டாலும், வாகனங்களை இயக்கக் கூடிய உயிர் டீசல் (Biodiese), எதனோல் (Ethanol) ஆகியனவற்றுக்கே அந்தப் பெயர் பெரிதும் நிலைத்துவிட்டது. உயிர் டீசலினதும் எதனோலினதும்
33O
பொ.ஐங்கரநேசன்
பயன்பாடு உலகுக்கு ஒன்றும் புதியது அல்ல. ஜெர்மனியைச் சேர்ந்த றடோல்ப் டீசல் (RudolfDiese), டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தபோது அதனை பெற்றோலிய டீசலில் அல்லாமல், நிலக்கடலை எண்ணெயில் இயக்குவதற்கேற்ற விதத்திலேயே வடிவமைத்தார். Gaspairg5 8Guntil (Henry Ford) (3Guntil LDSc piaos (Ford model-Tcar) உருவாக்கியபோது அதனை எதனோலிலேயே ஓடவைத்தார். பெற்றோலியப் பொருள்களின் பற்றாக்குறைவும் உச்ச விலையுமே இதற்குக் காரணங்களாக இருந்தன. இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயின் தாராள வருகையுடன் உயிர் எரிபொருள்களின் மவுசும் குறைந்தது. ஆனாலும், உலகச் சந்தையில் அவ்வப்போது கச்சா எண்ணெயின் விலை உச்சத்துக்கு ஏறுவதால், உயிர் டீசலும் பெற்றோலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தொடர்ந்தும் பாவனையில் இருந்தவாறுதாம் உள்ளன.
அமெரிக்கா பிறேசிலுடன் செய்து கொண்டுள்ள இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், உயிர் எரிபொருள்களின் உற்பத்திக்குப் புதுவேகம் பாய்ச்சியுள்ளது. பூமியின் வெந்த மண்ணைக் குளிர்விக்கும் முயற்சியாக ஏறத்தாழ எல்லா நாடுகளுமே எதனோலை வார்க்க ஆரம்பித்துவிட்டன. ஆனால் கோளத்தைக் காத்தல் என்ற பெயரில் செய்து கொள்ளப் பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தில் பசுமையைவிடப் பாசாங்குகளே அதிகம். அமெரிக்கா இதுகாலவரை 'உலகை உய்விக்கவெனச் செய்து கொண்ட எல்லா உடன்படிக்கைகளையும் போலவே இதுவும் அமெரிக்க வல்லாண்மையைத் தொடர்ந்தும் நிலைநிறுத்தி, அதன் நுகர்வுவெறிக் கலாச்சாரத் தைப் பல்வேறு தளங்களிலிருந்தும் பாதுகாக்கும் விதமாகவே அமைந்துள்ளது.
உயிர் எரிபொருள் ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க அதிபர் ஒருவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றுடன், அதுவும் இடதுசாரியாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் லூலாவுடன் கைகோர்த்திருக்கிறார். பனிப்போர் முடிவுக்கு வந்தததைப் போலத் துளிர்விட்டிக்கும் இந்த உறவு தென்அமெரிக்கப் பகுதிகளில் இலேசாகப் பரவிவரும் சிவப்பு அரசியலை நீர்த்துப் போகச் செய்யும் அமெரிக்காவின் புதிய வியூகம் என அரசியல் அவதானிகள் கருது கின்றனர். பிறேசிலுக்கு அருகாமையில் உள்ள வெனிசுலா எண்ணெய் வளத்தில் உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதன் அதிபர் ஹியூகோ சாவேஸ், கியூப அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் விசுவாசி; தீவிர இடதுசாரிப் போக்குடையவர். "வெனிசுலா மீண்டும்
331
Page 168
ஏழாவது ஊழி
அமெரிக்காவின் காலனி ஆதிக்கத்துக்கு ஆட்பட அனுமதியோம்' என்று சொல்லி, பன்னாட்டு நிறுவனங்கள் உறிஞ்சிக் கொண்டிருந்த எண்ணெய் வளத்தைச் சமீபத்தில் நாட்டுடைமை ஆக்கியுள்ளார். பெற்றோலிய எரிபொருளைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி அமெரிக்காவைச் சாவேஸ் கடுமையாக எதிர்த்துவந்த நிலையிலேயே அவரது தோழர் லூலாவுடன் அமெரிக்கா எதனோல் எரிபொருள் உறவு பூண்டிருக்கிறது. இது, சாவோஸினதும், ஃபிடல்காஸ்ட்ரோவினதும் இடதுசாரித் தனத்துக்குக் கரிபூசுகின்ற அமெரிக்காவின் முயற்சியாகவே கருதப்படுகிறது.
அமெரிக்காவின் எதனோல் திட்டத்துக்கு, ஃபிடல் காஸ்ட்ரோ தெரிவித்த விமர்சனம் மிகக் கடுமையானது. குடல் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு படுக்கையில் ஒய்வில் இருந்தவாறே, இது தொடர் பாகக் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்திப்பத்திரிகையான 'கிரான்மா (Gramma)வில் ஆசிரியத் தலையங்கம் தீட்டியுள்ளார். அதில், எரிபொருளாக எதனோலைச் சர்வதேசியமயப்படுத்தும் அமெரிக்கக் கனவை, ‘சர்வதேசியமயப்படும் படுகொலை' என்று காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். எதனோலை கரும்பில் இருந்தும் சோளம் போன்ற உணவுத் தானியங்களில் இருந்துமே பெறவேண்டியிருப்பதால், உணவின்றிச் சுமார் 3 பில்லியன் பேர் இறக்க நேரிடும் என்பது அவர் கணக்கு. இதனைக் காஸ்ட்ரோவின் வழமையான அமெரிக்க எதிர்ப்பு அரசியலாக மட்டுமே எடுத்துக் கொள்வதற்கு இல்லை. கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதியில் சி.ஐ.ஏ.யின் நூற்றுக்கும் மேற்பட்ட கொலை முயற்சிகளில் இருந்து தப்பிய காஸ்ட்ரோ 80 வயதைக் கடந்தவர். வல்லரசிய எதிர்ப்பில் மாத்திரம் அல்லாமல், இதற்கூடான பட்டறிவின் மூலம் கரும்புப் பயிர்ச் செய்கை, இயற்கை வேளாண்மை, சுற்றுச் சூழல் பற்றிய ஆழ்ந்த ஞானமும் வாய்க்கப் பெற்றவர். இவற்றின் பின்னணியிலேயே எதனோலை உலகமயமாக்கும் 'உயிர் எரிபொருள்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்' மீதான காஸ்ட்ரோவின் எதிர்ப்பு நோக்குதற்குரியது.
உலகில் எதனோலைப் பயன்படுத்திவரும் நாடுகளில் பிறேசில் முன்னணியில் இருக்கிறது. அங்குவிற்பனையாகும் பெற்றோலில் 23 விழுக்காடு எதனோல் கலந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். பொதுவாக எல்லா ரக மகிழுந்துகளுமே பெற்றோலில் 15 விழுக்காடு எதனோல் வரை சிரமமின்றி ஏற்றுக் கொள்கின்றன. அதற்குமேல் எதனோலின் அளவை அதிகரிப்பதாயின் இயந்திரங்களில் திருத்தங்கள்
332
samarssons வாடும் ஓர் ஆபிரிக்கக் குழந்தை
(GESTUUT
Page 169
ஏழாவது ஊழி
செய்யப்படல் வேண்டும். நூற்றுக்கு நூறு எதனோலில் இயங்கக்கூடிய வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பிறேசில் அரசு வரிவிலக்குகளை வழங்கியுள்ளது. இதனால், இப்பொழுதே அங்கு 40 விழுக்காடு மகிழுந்துகள் கலப்பில்லாத எதனோலில்தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. பிரித்தானியாவில் பெற்றோலில் 10 விழுக்காடு அளவு எதனோல் சேர்க்கப்படுகிறது. எதனோல் 10 விழுக்காடும் பெற்றோல் 90 விழுக்காடும் கொண்ட இந்த எரிபொருள் கலவை E10 என்ற பெயரில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விற்பனையில் உள்ளது. அமெரிக்காவில் இது 15 விழுக்காடு ஆகும். 2017ஆம் ஆண்டளவில் பெற்றோலிய எரிபொருள்களின் பாவனையை 20 விழுக்காடு அளவால் குறைக்கத் தீர்மானித்திருக்கும் அமெரிக்கா, அதனை எதனோலினாலேயே ஈடுகட்டவுள்ளது. இப்படி எதனோ லினால் பெற்றோலை மாற்றீடு செய்யவும், அதனையே அறிவிக்கப் படாத எரிசக்திக் கொள்கையாக உலகம் பூராவும் நடைமுறைப் படுத்தவுமே அமெரிக்கா விரும்புகின்றது.
அமெரிக்கா விரும்பும்போது ஐரோப்பா என்ன ஆசியா என்ன? ஐரோப்பிய ஒன்றியம் தனது அங்கத்துவ நாடுகள் எல்லாம் 2010ஆம் ஆண்டுக்கு இடையில் போக்குவரத்தில் பயன்படுத்தும் எல்லா எரி பொருள்களும் ஆகக் குறைந்தது 5.75 விழுக்காடு உயிர் எரிபொருளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்தியாவும் தன் பங்குக்கு பெற்றோலிலும் டீசலிலும் கலந்து வந்த எதனோலை 5லிருந்து 10 விழுக்காடாகச் சமீபத்தில் உயர்த்தியுள்ளது. அது தனக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 70 விழுக்காடை இறக்குமதி செய்தே பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. முற்று முழுதாகக் கச்சா எண்ணெய்க்குப் பிறநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கை, இந்தியாவின் தொழில்நுட்ப உதவியுடன் காட்டாமணக்கு விதைகளிலிருந்து உயிர் டீசலைத் தயாரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளது. காட்டாமணக்கைப் பயிரிடுவதற்கென புத்தளத்தில் 5000 ஏக்கர்கள் அளவு நிலத்தை ஒதுக்கி வைத்திருக்கிறது. எரிபொருளுக்குப் பிறநாடுகளை நம்பியிராத சுயசார்புத் தன்மை, ஒப்பீட்டளவில் மலிவானவிலை போன்ற காரணங் களினால் பாவனைக்கு வந்த உயிர் எரிபொருள், இப்போது பூமியின் வெந்த புண்களுக்கும் மருந்து என்று சொல்லும் போது 'உயிர் எரிபொருள் பொருத்தமான மாற்று என்பதை அப்பாவிப் பொதுப்புத்தி ஏற்றுக்கொள்ளவே செய்யும். ஆனால், உயிர் எரிபொருள்களின் நடைமுறை வரலாறு இதனை அவ்வளவு சீரணிப்பதாக இல்லை.
334
பொ. ஐங்கரநேசன்
எதனோல் எரிபொருள் என்பது வேறு எதுவும் அல்ல; மதுபான வகைகளில் உள்ள அதே எதைல் அல்ககோல்தான். ஆனால் தண்ணீர் சேர்க்கப்படாத நீரற்ற எதைல் அல்ககோல் (Unhydrous ethyl alcohol). மதுபானத்தைத் தயாரிப்பது போன்றே எதனோல் எரிபொருளும் வெல்லம் அல்லது மாப்பொருளை நொதிக்க வைத்தே வடிக்கப்படு கின்றது. கரும்பும் சோளமுமே இவற்றுக்கான பிரதான மூலப்பயிர்கள். எதனோல் உற்பத்தியில் தொடர்ந்தும் முதலிடம் வகிக்கும் பிறேசில் அதன் ஆண்டு உற்பத்தியான 17 பில்லியன் இலிற்றர்கள் முழுவதையும் கரும்பில் இருந்தே தயாரிக்கிறது. எதனோலுக்கெனவும் சர்க்கரைத் தேவைகளுக்கெனவும் ஏறத்தாழ 15 மில்லியன் ஏக்கர்கள் நிலப்பரப்பில் கரும்பை விளைவித்து வருகிறது. பிறேசிலை விடச் சற்றுக் குறைவான அளவிலேயே எதனோலை உற்பத்தி செய்து இரண்டாவது இடத்தில் இருக்கும் அமெரிக்கா, எதனோலைச் சோளத்தானியத்தில் இருந்தே பெறுகிறது. அங்கு 78 மில்லியன் ஏக்கர்கள் விஸ்தீரணமுடைய நிலத்தைச் சோளம் ஆக்கிரமித்துள்ளது. மூன்றாவது இடத்தை எட்டியுள்ள கம்யூனிச முதலாளி சீனாவில், எதனோலை சோளத்தில் இருந்தும் கோதுமையில் இருந்தும் பிரித்தெடுக்கிறார்கள்.
அரபு நாடுகளில் அமெரிக்கத் தலையீடு, கடந்த சிலவருடங் களாக பெற்றோலிய கச்சா எண்ணெயின் விலையை ஏற்றி வைத்திருக் இறது. அதேபோல, அமெரிக்கா பிறேசிலுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் எதனோலின் கச்சாப்பொருளான சோளத்தின் விலையும் எகிறத் தொடங்கியுள்ளது. சோளத்துக்கான கேள்வி அதிகரித்திருப்பதால் உணவுப் பயிர் என்ற நிலையில் இருந்த சோளம் திடீரென ஒரு பணப்பயிராக முடிசூடியிருக்கிறது. ஐக்கிய நாடு களின் உணவு மற்றும் விவசாயத்துக்கான நிறுவனத்தின் தரவுகள்ன்படி 2000ஆம் ஆண்டில் 88 அமெரிக்க டொலர்களாக இருந்த ஒரு மெற்றிக் தொன் சோளத்தின் விலை 2007ஆம் ஆண்டில் 177 அமெரிக்க டொலர்கள். இரட்டிப்பு விலையேற்றம் சாதாரணமான ஒன்றல்ல. எதனோலை பெற்றோலுக்கான மாற்றாகக் கொண்டாடுவதன் ஏமாற்றம் முதலில் இங்கேதான் உருவாகியுள்ளது. சோளம், உலகின் பிரதான உணவுத்தானியங்களில் ஒன்று. குறிப்பாக தென்அமெரிக்க மற்றும் ஆபிரிக்க வறிய மக்களின் வயிற்றை நிரப்புவது சோளம்தான். இப்போது வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளைச் சோளத்தால் நிரப்ப ஆரம்பித்ததும் இவர்களின் வயிறுகள்தான் முதலில் பசியால் எரியத் தொடங்கியிருக்கிறது. இதற்கான காட்சிகள் இப்போதே அரங்கேறத்
335
Page 170
ஏழாவது2ஊழி
தொடங்கியுள்ளன. மெக்சிக்கோவில் சோளத்தில் இருந்து தயாரிக்கப் படும் ரொட்டியின் விலை ஒரே இரவில் 50 விழுக்காடால் அதிகரித்தது. அன்றாட உணவின் விலையேற்றத்தால் அவதிப்பட்ட மெக்சிக்கோ வாசிகள் ஆயிரக்கணக்கில் வீதியில் இறங்கிப் போராடினார்கள். ரொட்டிக்குக் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. மேலும், சோளச் செய்கையை ஒருமில்லியன் ஹெக்டர் பரப்பளவால் விஸ்தரிப்பதாகவும் உறுதிகூறி மக்களை அமைதிப்படுத்தியது.
தற்போதுள்ள எதனோல் உற்பத்தியால் உலகின் பெற்றோல் தேவையில் வெறும் 2 விழுக்காடு அளவை மாத்திரமே ஈடுகட்ட முடிகிறது. இந்தச் சொற்ப அளவை எட்டுவதற்கே, மில்லியன் ஏக்கர்களில் விவசாய நிலங்களைச் செலவழிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு நாடும் காலக்கெடு வைத்து 15 விழுக்காடு, 20 விழுக்காடு என்று எதனோலை உயர்த்திச் செல்ல விழையும்போது, இன்னும் இன்னும் புதிய நிலங்களைத் தேடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உயிர் டீசல் பெறப்படுகின்ற காட்டாமணக்குப் போல அல்லாது எதனோல் பயிர்களான கரும்பு, சோளம், கோதுமை, பீற்றுரட், திராட்சை எல்லாமே செழிப்பான நிலங்களிலேயே வளரக்கூடியவை. இதனால், புதிய வளமான நிலங்களுக்கான தேடுதலில் முதற்கட்டமாகத் தாரை வார்க்கப்படுவது, ஏற்கெனவே செய்கையில் உள்ள பயிர் நிலங்கள்தாம்.
அமெரிக்காவில் அயோவா (Iowa) மாநிலம் மிசூரி, மிஸிசிப்பி ஆறுகளை எல்லைகளாகக் கொண்ட ஒரு விவசாய மாநிலம். அங்கு சோளத்தையும் சோயா அவரையையும் சுழற்சி முறையில் பயிர்செய்து கொண்டிருந்தனர். இப்போது சோளத்துக்குக் கிடைத்துவரும் கவனிப்புகளால் ஒரேயடியாகச் சோளத்துக்குத் தாவிவிட்டார்கள். பிறேசிலில் 'சித்திரஸ் (தோடை) பழச்செய்கையாளர்கள் அதைக் கைவிட்டு கரும்புக்கு மாறும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள். இவை சில உதாரணங்கள்தாம். இப்படி, உணவுப்பயிர்கள் சோளத்தினால் மெல்ல ஓரங்க்ட்டப்படுவதால் சோளத்தோடு சேர்ந்து பிற உணவுப் பொருள்களும் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பண்ணை விலங்குகளின் தீவனத் தானியங்களும் இவற்றில் அடங்குமாதலால் அசைவ உணவுகளின் விலையேற்றத்துக்கும் வழி கோலியிருக்கிறது. உயிர் எரிபொருள்களை உயர்த்திப்பிடிக்கத் தொடங்கியபிறகு ரோக்கியோவின் உணவுச்சாலைகளில் பன்றியிறைச்சியுடன் கூடிய
336
பொ.ஐங்கரநேசன்
மதியச் சோற்றுணவு 400 யென்களிலிருந்து 450 யென்களாக அதிகரித்து விட்டது. ஆசியாவின் அமெரிக்காவாகக் கருதப்படும் ஜப்பானிலிலேயே இந்த நிலை என்றால் ஏற்கெனவே பட்டினிக்கு உயிர்களைப் பலிகொடுத்துவரும் ஏழை நாடுகளின் கதி?
எதனோல் எரிபொருள் ஏழைநாடுகளின் வயிறுகளை இன்னு மொரு விதத்தில் கொதிக்க வைத்துள்ளது. உணவுக்கு அல்லாடுகின்ற நாடுகளுக்கு வசதி வாய்ப்புமிக்க நாடுகள் உணவு உதவி செய்ய வேண்டும் என்ற சர்வதேச உடன்பாடு 1960 முதல் அமுலில் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் இந்த 'உலக உணவுத் திட்டம் ஆண்டு தோறும் மில்லியன் கணக்கானவர்களைப் பட்டினிச்சாவில் இருந்து காப்பாற்றுகிறது. குறிப்பாக எரித்திரியா, எதியோப்பியா, சோமாலியா, றுவாண்டா, ஆப்கானிஸ்தான், வடகொரியா போன்ற நாடுகள் இந்த நன்கொடை உணவையே பெரிதும் நம்பியிருக்கின்றன. உணவு வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா தன்பங்குக்குப் பெரிதும் சோளத்தையே இங்கு அனுப்பிவைக்கிறது. ஆனால் அண்மைக் காலமாகச் சோளத்தைப் பெருமளவில் எதனோ லுக்கு ஒதுக்க வேண்டியிருப்பதால், தானமாக வழங்கும் சோளத்தில் கைவைக்கத் தொடங்கியுள்ளது. 2001ஆம் ஆண்டில் அமெரிக்கா அனுப்பி வைத்த சோளத்தானியங்களின் எடை 8,47,000 மெற்றிக் தொன்கள். 2004இல் இது 3,00,500 மெற்றிக் தொன்கள். பாதியளவிலும் குறைவு. வருங்காலத்தில் மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது. இந்த அவலங்களையெல்லாம் ‘சர்வதேசிய மயமாகும் படுகொலை' என்னும் ஃபிடல் காஸ்ட்ரோவின் விமர்சனத்தை விடவும் வேறு எந்தப் பொருத்தமான வார்த்தைகளால் சுட்டிவிடமுடியும்?
உயிர் எரிபொருள் வெந்துகொண்டிருக்கும் பூமியின் அவலத்தை யேனும் போக்குமா என்பதும் ஐயப்பாடே. டீசல், பெற்றோல் போன்ற புதுப்பிக்க முடியாத எரிபொருள்களைப் போன்றே உயிர் டீசல், எதனோல் போன்ற எரிபொருள்களைப் பயன்படுத்தும்போதும் பச்சை வீட்டு வாயுக்கள் வெளியேறத்தான் செய்கின்றன. ஆனால், அவ்வள வற்றையும் புதிதாக வளர்ந்து கொண்டிருக்கும் உயிர்எரிபொருள் மூலப்பயிர்கள் அப்படியே உறிஞ்சிவிடுவதால் வளிமண்டலத்தில் உயிர்எரிபொருள்களினால் கலக்கும் கரியமில வாயுவின் தேறிய அளவு பூச்சியமாகிவிடுகிறது. இதை 'காபன் நடுநிலை' (Carbon Neutro) என்கிறார்கள். இதனாலேயே உயிர் எரிபொருள்களுக்குப் பசுமை முகம் கிடைத்தது. ஆனால், நடைமுறையில் உயிர் எரிபொருள்களும்
337
Page 171
ஏழாவது ஊழி
சுடத்தான் செய்கின்றன. மூலப்பயிர்களை விதைப்புச் செய்வதில் இருந்து எரிபொருளாகத் தயாரிக்கும் வரையான செயற்பாடுகள் - நீர் விநியோகம், உரத்தயாரிப்பு உட்பட - எல்லாமே சக்திச் செலவுமிக் கவை. இவற்றில் வெளியேறுகின்ற காபனைச் சேர்த்துக் கணக்கிடும் போது, உயிர் எரிபொருள்களின் காபன் நடுநிலை தவறிவிடுகிறது. முற்றாக இயலாது போனாலும், பெற்றோலிய எரிபொருள்களுடன் ஒப்பிடுகையில் 60 விழுக்காடு காபன் வெளியேற்றத்தையேனும் தடுக்க முடியும் என்று ஒரு கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது. உயிர்எரிபொருள் பயிர்களைக் கட்டாந்தரைகளில் பயிரிடும் வரைக்கும்தான் இந்த ஆறுதலும். ஆனால், எரிபொருளுக்காக மழைக்காடுகளைப் பலியிட எந்தநாடும் தயங்குவதாகத் தெரியவில்லை. மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் உயிர் டீசல் தயாரிப்பதற்காக மழைக்காடுகளை அழித்தே எண்ணெய்ப் பனைகளைப் (OiPalms) பயிரிட்டு வருகிறார்கள். இப்படி காபன் உறிஞ்சிகளான மழைக்காடுகள் இல்லாது போவதால் தேங்கும் காபனையும் சேர்த்துக் கணக்கிட்டால் பெற்றோலிய எரி பொருள்களின் கரித்தனத்துக்கு உயிர் எரிபொருள்கள் எந்தவகையிலும் சளைத்ததில்லை என்றாகி விடுகிறது.
எண்ணெய்ப் பசிக்கு உணவுத் தானியங்களைப் புசிக்கக் கொடுக்கும் அமெரிக்க விருப்பு இவ்வளவு அவலங்களையும் சுமந்து நிற்கும் போது இதனை எவ்வாறு பெற்றோலுக்கான மாற்று என்பது? உலகசனத் தொகையில் வெறுமனே 4.5 விழுக்காட்டினை மாத்திரமே கொண்டிருக்கும் அமெரிக்கா, உலகின் பெற்றோலிய எரிபொருள்களின் உற்பத்தியில் காற்பங்கைப் பயன்படுத்துகிறது. பெற்றோலுக்குப் போதையாகிவிட்டதைப்போல நாளாந்தம் 1.5 பில்லியன் இலீற்றர்கள் பெற்றோலைக் குடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நுகர்வு வெறிக் கலாச்சாரத்தில் எதுவித சிக்கனத்தையும் கடைப்பிடிக்க விரும்பாத தாலேயே பூமியின் வெப்ப உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரும் ஐ.நா.வின் கியோட்டோ ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்றுக் கொள்ள வில்லை. தனது தலைமைத்துவத்தின் கீழ் இல்லாத எந்த ஒரு ஒப்பந்த மும் இயங்குவதற்கு அமெரிக்கா ஒரு போதுமே அனுமதித்ததில்லையே. இதனாலேயே ஐக்கிய நாடுகள் சபையின் கால நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மாற்றாக தனது தலைமைத் துவத்தின் கீழ் நாடுகளை அணிதிரட்ட 'உயிர் எரிபொருள் என்னும் பச்சை நிறப் பதாகையை இப்போது உயர்த்திப் பிடித்துள்ளது. இந்த
338
பொ. ஐங்கரநேசன் ஏமாற்றைப் புரிந்தோ புரியாமலோ ஏறத்தாழ எல்லா நாடுகளுமே அமெரிக்காவைப் பின்பற்றி எதனோல் முழக்கத்தை எழுப்பத் தொடங்கியுள்ளன. இது, மந்திர வாத்தியனின் ஊதுகுழலிசைக்கு மயங்கி அவன் பின்னால் அணிவகுத்த குழந்தைகளின் கதைபோலவே ஆகப் போகிறது.
339
Page 172
33
மிதிவிசைப் பயணம்
"மிகவும் நாகரிகமடைந்த ஒரு போக்குவரத்துச் சாதனம் மிதிவண்டி, அதன் இதயம், எப்போதும் தூய்மையான அன்பால் நிரம்பியிருக்கிறது. ஆனால் மற்றைய வாகனாதிகளோ இரவில் அழுத்தும் கெட்ட கனவுகளாக நாளாந்தம் மிரட்டிக் கொண்டேயிருக்கின்றன."
- ஐரிஸ் முர்டோக் (எழுத்தாளர், தத்துவவியலாளர் - அயர்லாந்து)
நண்பர் ஒருவர் சமீபத்தில் தனது மகனுடன் எனது வீட்டுக்கு வந்திருந்தார். மகன் ஏழாவது வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார். உரையாடல், மகன் குறித்துத் திரும்பியபோது நண்பர் மகனிடம், அவனது இலட்சியம் என்ன என்பதை என்னிடம் தெரிவிக்குமாறு வேண்டினார். மருத்துவராகவோ, பொறியிலாளராகவோ அல்லது கணினியில் வல்லுநராகவோ ஏதேனும் ஒரு வழக்கமான விருப்பத்தை மகன் வரித்துக் கொண்டிருப்பார் என்றே நான் எதிர்பார்த்தேன். ஆனால் மகனோ, உண்டியலில் பணம் சேர்த்து வருவதாகவும் அதனைக் கொண்டு விரைவிலேயே ஒரு "மோட்டார் சைக்கிள் வாங்குவதும், பின்னர் 'நானோ கார் ஒன்று வாங்குவதுமே தனது கனவாக இருப்ப தாகவும் குறிப்பிட்டார். ஏமாற்றத்தையும் விட நுகர்வுக் கலாச்சாரத்தின் மீதான கோபமே என்னுள் அதிகமாக ஏற்பட்டது.
நண்பரின் மகனது வயதொத்த எனது பருவத்தில் போக்குவரத்துச் சாதனம் குறித்த என்னுடைய கனவு எப்பாடுபட்டாவது ஒரு மிதிவண்டிக்குச் சொந்தக்காரன் ஆகிவிட வேண்டும் என்பதாகவே இருந்தது. உண்ண மறுப்பு, பணிய எதிர்ப்பு என்று வீட்டில் ஒத்துழை யாமை இயக்கம் நடத்தியதன் பேரில் என்னுடைய பதினாறாவது வயதிலேயே அது சாத்தியமாகியது. நான் பதினோராவது வகுப்புக்குத் தரமுயர்த்தப்பட்டபோது பாவித்த பழைய 'றலி மிதிவண்டியொன்றை அப்பா வாங்கித் தந்தார். ஆனால் இன்றைய பிள்ளைப் பிராயத்தின் கனவே எடுத்த எடுப்பில் மோட்டார் வாகனங்களில் பறப்பதாகவே உள்ளது. இவர்களின் இலட்சியமே இதுவென்றால் சம்பாதிக்கும் இளம்
34O
பொ.ஐங்கரநேசன்
தலைமுறையினர் குறித்துச் சொல்லவே வேண்டியதில்லை. ஒரு நொடி தாமதமானாலும் கப்பலே மூழ்கிவிடும் என்பது போல, பொதுத் துறைப்போக்குவரத்து வாகனங்களுக்கேனும் காத்திருக்க அவகாசம் இல்லாதவர்களாக மோட்டார் சைக்கிள்களிலும் கார்களிலுமாக நேரத்தை முந்த விரைந்து கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு வட்டியில்லா வாகனக்கடன், தவணைக் கட்டண சலுகைகள், இலட்ச ரூபாய்க்கு நானோ கார் போன்ற வணிகத் தூண்டில்கள் பொருளாதார அடிமட்டத்திலுள்ளவர்களையும் கொழுவி இழுக்க, அவர்களது மனங் களிலிருந்துங்கூட மிதிவண்டிகள் ஒரம் போகத் தொடங்கி விட்டன.
மோட்டார் சைக்கிள்கள், கார்கள் போன்ற மோட்டார் வாகனங்கள் எதனது பயன்பாட்டையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. ஆனால், மோட்டார் வாகனங்கள் ஒரு போக்குவரத்துச் சாதனம் என்பதற்கும் அப்பால் தனிமனிதர் ஒருவரின் மதிப்பைப் பறைசாற்றும் . அடையாளமாகவே பெரிதும் பயன்படுகிறது. மோட்டார் வாகனங்கள் அவசியம் இல்லாதபோதுகூட அநேகம்பேர் அவற்றில் வலம் வருவதை சர்வசாதாரணமாகக் காணலாம். நடந்தே செல்லக்கூடிய தூரத்தை நாலுபேர் பார்க்க ஹிரோ ஹோண்டாவிலும் டாடா சுமோவிலும் சவாரித்துக் கடக்கவே நமது சமூகத்தின் மனப்பாங்கு விரும்புகிறது. உலகமயமாக்கல் முன்னிறுத்தும் நுகர்வுக் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு இது. ஒரு பொருளை அதன் தேவை கருதி பயன்படுத்துபவர்கள் உபயோகிப்பாளர்கள். ஆனால், தேவையோ இல்லையோ காணும் பொருள்களையெல்லாம் வாங்கி அனுபவிக்கத் துடிப்பவர்கள் நுகர்வோர்கள். உலகமயமாக்கல் உபயோகிப்பாளர்களை வெறிபிடித்த நுகர்வோராக மாற்றுவதில் வெற்றிகண்டுள்ளது, இதற்கான தரகுவேன்ல யைத் திட்டமிட்டு வடிவமைக்கப்படும் விளம்பரங்கள் செய்து கொடுத்து வருகின்றன. வெள்ளித்திரை நட்சத்திரங்களோ, துடுப்பாட்ட வீரர்களோ தொடர்பு ஊடகங்களில் தோன்றி, "வாங்கி ஒட்டு கண்ணா ஒட்டு என்று மூளைச் சலவை செய்யும் போது வாகனங்கள் அத்தியாவசியம் இல்லாத சாதாரண பாதசாரிகள்கூட மோட்டார் வாகனங்களின் உபாசகர்களாக ஆகிவிடுகிறார்கள்.
மோட்டார் வாகனங்கள் மீதான பெரும் மோகம், போரினால் கடும் நிதிநெருக்கடிகளுக்கு ஆளாகித் தவிக்கும் இலங்கைத் தீவின் குண்டுங்குழியுமான தெருக்களிலேயே பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. பூரீலங்கா காவல்துறையின் போக்குவரத்துக் கண்காணிப்புப் பிரிவின் தரவுகளின் படி இலங்கையில் 2001ஆம் ஆண்டில் 8,000க்கும்
341
Page 173
ஏழாவது ஊழி
சற்றுக்குறைவான மோட்டார் சைக்கிள்கள் புதிதாகப் பதிவுசெய்யப் பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகம். ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கும் இந்த அதிகரிப்பு சாதாரண மான ஒன்றல்ல. கார்களும் இரட்டிப்பு மடங்காக அதிகரித்துள்ளன. இந்தியாவில் ஹீரோ ஹோண்டா நிறுவனம் இப்போது ஆண்டுதோறும் சுமார் 4 மில்லியன் மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்து தள்ளுகிறது. இந்த எண்ணிக்கையை 2010ஆம் ஆண்டளவில் 12 மில்லியனாக உயர்த்துவதற்கும் திட்டமிட்டுள்ளது. மாருதி சுசூகி நிறுவனம் ஏப்ரல் 2007 தொடங்கி மார்ச் 2008 வரையான நிதியாண்டில் மாத்திரம் 7,64842 கார்களை விற்பனை செய்துள்ளது. மாருதி சுசூகி தவிர ஹிந்துஸ்தான் மோட்டேர்ஸ், மஹிந்திரா, டாடா, ரொயோட்டா, ஃபியட், ஃபோர்ட், ஹோண்டா, ஹையுண்டாய், மிற்சுபிஸி என்று இந்தியாவில் முகாமிட்டுள்ள உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார் தயாரிப்புத் தொழிற்சாலைகளின் உற்பத்தியையும் சேர்த்துக் கணக்கிட்டால் இந்தியத் தெருக்களில் ஆண்டுதோறும் புதிது புதிதாக இறக்கிவிடப்படும் கார்களின் எண்ணிக்கை மில்லியனையும் தாண்டிவிடும்.
அரசுகளும் நாட்டின் பொருளாதார வெற்றியின் அடையாளமாக மோட்டார் வாகனங்களையே கருதுகின்ற்ன. இதனாலேயே, சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் பொதுமக்களிடம் இருந்து நிலங்களைக் கையகப்படுத்தி மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங் களுக்கு வழங்குவதுடன் எல்லாவிதமான வசதிகளையும் செய்து கொடுத்து வருகின்றன. ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டுவரும் டாடாவின் 'நானோ (Nano) இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, டாடா நிறுவனத்துக்கு முதலில் மேற்கு வங்கமே பட்டுக் கம்பளம் விரித்தது. மேற்குவங்க அரசு, சிங்கூர் என்னும் இடத்தில் 997 ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்திக் கொடுத்ததோடு ஒரு விழுக்காடு வட்டியில் 200 கோடி ரூபாய்களைக் கடனாகவும் வழங்க முன்வந்தது. மேலும், 10 வருட காலத்துக்கு வரிவிலக்கும் அளித்துள்ளது. இதன்மூலம் மேற்கு வங்க அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு 500 கோடி ரூபாய்கள். இவை மட்டுமல்லாமல், கொல்கத்தா நகருக்கு வெளியே டாடா நிறுவன ஊழியர்களின் குடியிருப்புகளுக்கெனவும் 250 ஏக்கர் நிலத்தையும் ஒதுக்கிக் கொடுத்தது. டாடா நிறுவனத்தின் அறிக்கையொன்றின்படி, சிங்கூரில் 997 ஏக்கர் பரப்பில் டாடா வெறும் 100 ஏக்கரில் மாத்திரமே
342
Page 174
ஏழாவது ஊழி
தொழிற்சாலையை உருவாக்கிவிட்டு மீதி இடத்தை நானோ காருக்கு உதிரிப்பாகங்கள் தயாரித்துத்தரும் பிற நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கவிருந்தது. டாடா நிறுவனத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் தொடர் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்ததும், இப் போது காத்திருந்ததுபோல குஜராத் அரசு டாடாவை அரவணைத்துக் கொண்டு விட்டது. அங்கும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து பெருந் தொகையைப் பெற்றுக் கொண்டே டாடா ஒரு இலட்ச ரூபாய்க்கு நானோ காரை வழங்க முன்வந்துள்ளது. இந்தத் தகவல்களை மேற்கு வங்கத்தின் முன்னாள் நிதி அமைச்சரும் இடதுசாரி சிந்தனையாளருமான அசோக் மித்ரா அம்பலப்படுத்தியுள்ளார். டாடா அறிவித்துள்ள இலட்ச ரூபாய் விலையில் பதிவுக்கட்டணம், சாலைவரி போன்ற எதுவும் அடங்கவில்லை. டாடாவின் காட்சியறையொன்றில் இருந்து நானோ கார் சாலையில் இறங்கும்போது மேற்குறித்த கட்டணங்களையும் உள்ளடக்கி அதன்விலை 1,35,000 ரூபாய்களாக ஏறிவிடுகிறது. எது எப்படியோ, நடுத்தர வர்க்கத்தின் வரப்பிரசாதம் என்று ஊடகங்களால் விதந்துரைக்கப்படும் நானோ காரின் வருகை ஏற்கெனவே வாகன நெரிசலில் பிதுங்கிக் கொண்டிருக்கும் இந்தியத் தெருக்களை மேலும் மேலும் திணறடிக்கப் போகின்றது என்பது திண்ணம். இதில், மிதிவண்டிகளின் 'கிணிங் கிணிங் மணியோசையை யார் காதில் வாங்கிக் கொள்ளப் போகிறார்கள்?
மிதிவண்டிகள் ஐரோப்பாவின் 19ஆம் நூற்றாண்டுக் கண்டு பிடிப்பு. வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு புதுமை விரும்பிகள் பரீட்சார்த்தமும் பழுதுபார்ப்புமாக மேற்கொண்ட முயற்சிகளின் கூட்டுவடிவம்தான் மிதிவண்டி அறிமுக காலத்தில் முற்று முழுதாக மரத்தினாலான ஈருருளியை, அதில் அமர்ந்திருப்பவர் தனது கால்களைத் தரையில் அழுத்தி உந்திப் பெறப்படும் உந்து விசையினாலேயே ஒட்டி வந்தார். இந்த உந்துவண்டி (Push Bike) முதன் முதலில் 1861இலேயே மிதிவண்டியானது. பிரான்சில் பாரிஸைச் சேர்ந்த பியாறி மைக்கோஷ் (Pierre Michaம்) என்னும் உலோகக் கைவினைஞர் மிதி அலகை (Pedal) பொருத்தும் முறையை ஆரம்பித்து வைத்தார். ஆனால், இவர் மிதியலகைப்பொருத்தியது முன்சக்கரத்துடன். இதனால் முன்சக்கரம் பெரிதாக அமைந்ததோடு சவாரியும் அசெளகரியமாகி விபத்துக்களை யும் சந்திக்க நேர்ந்தது. ஒரேயளவான இரண்டு சக்கரங்களுக்கு நடுவே இடம்பெறுமாறு அச்சாணியொன்றில் மிதியலகைப் பொருத்தி அதனை சங்கிலியொன்றால் பின்சக்கரத்துடன் தொடுக்கின்ற புதிய வடிவம்
344
பொ. ஐங்கரநேசன்
1885இல் பிரித்தானியாவில் அறிமுகமாகியது. இதுவே இன்றைய மிதிவண்டிகளின் தாய் உருவம். இதில் எட்ை சமமாகப் பகிரப்பட்ட தால் சவாரி சுலபமானதாகவும் பாதுகாப்பானதாகவும் ஆகியது. இதனை வெற்றிகரமாக வடிவமைத்த ஜோன் கெம்ப் ஸ்டார்லி (John KempStarley) என்ற ஆங்கிலேயர் 'றோவர் என்ற பெயரில் தனது மிதிவண்டிகளைச் சந்தைக்குக் கொண்டு வந்தார். இக்காலப்பகுதியை ஒட்டி டன்லப் இறப்பர் ரயர்களும் அறிமுகமாக, அவற்றை மாட்டிக் கொண்டு மிதிவண்டிகள் உலகை வலம்வரத் தொடங்கின.
மிதிவண்டிகளில் மோட்டார் இயந்திரங்கள் இல்லாத காரணத் தால் அவை பயன்பாட்டுக்கு வந்து வெகுகாலமாகியும் அவை வாகனமா இல்லையா என்ற கேள்வி நீடித்தது. 1968இல் ஐக்கியநாடுகள் சபை இதற்கான பதிலைத் தெளிவுபடுத்தியது. அந்த ஆண்டில் ஐ.நா. உருவாக்கிய வீதிப்போக்குவரத்துத் தொடர்பான வியன்னா ஒப்பந்தம் மிதிவண்டியை ஒரு வாகனம்தான் என்றும், அதில் சவாரி செய்பவர் ஏனைய வாகனங்களின் சாரதி போன்ற ஒரு ஒட்டுநர்தான் என்றும் பிரகடனப்படுத்தியது. மேலும், இவ்வொப்பந்தம் மிதிவண்டிகளில் பயணிப்பவர்களினதும் வீதிகளில் பயணிப்பவர்களினதும் பாதுகாப்பு கருதி மிதிவண்டிகள் முற்பகுதியில் ஒளிவிளக்கொன்றையும் பிற்பகுதியில் ஒளித்தெறிப்பியொன்றையும் (Reflector) கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. இதனால், மிதிவண்டிப்போக்குவரத்து தொடர்பாக உலகநாடுகள் வரன்முறைகளை உருவாக்கி அவற்றை நிறைவு செய்ய சட்ட ரீதியாக வகை செய்துள்ளன. சில நாடுகள் ஒளிவிளக்குகளுடன் மேலதிகமாக மிதிவண்டிகள் மணியையும் (Bel) கொண்டிருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன. அமெரிக்காவில் அரிசோனா, ரெக்சாஸ், நியூமெக்சிக்கோ உள்ளிட்ட மாநிலங்கள் பலவற்றில் 18 வயதுக்குக் குறைவான மிதிவண்டி ஒட்டுநர்கள் தலைக்கவசம் அணிந்தாக வேண்டும். மேலும், அமெரிக்க மாநிலங்களில் காவல்துறை மிதிவண்டி களைப் பதிவு செய்து வண்டிகளுக்கு இலக்கத் தகடுகளை வழங்கி வருகின்றது. இலங்கையில் மிதிவண்டிகளுக்கு இலக்கத் தகடுகளை வழங்குகின்ற அதிகாரம் மாநகர மற்றும் பிரதேச சபைகளிடம் வழங்கப்பட்டுள்ளது.
மிதிவண்டிப் போக்குவரத்து தொடர்பாகச் சில சட்டவிதிகள் இருந்தாலும், போக்குவரத்துச் சாதனங்களில் மிகவும் சுதந்திரமானது மிதிவண்டிகள்தான். மிதிவண்டிகளில் சவாரிப்பதற்கு வயதெல்லை, சாரதி அனுமதிப்பத்திரம் போன்ற கட்டுப்பாடுகள் இல்லாததால்
345
Page 175
ஏழாவதுஊழி
மாத்திரம் இவை சுதந்திரமானவையல்ல. மனிதன் எவ்வளவுதான் விமானத்தில் உயர உயரப் பறந்தாலும் அவனது முதல் இறக்கை விரிப்பு மிதிவண்டியைச் சவாரிப்பதற்குக் கற்றுக் கொள்ளும்போதுதான் நிகழ்கிறது. மிதிவண்டியின் இருக்கையில் உடலைச் சமநிலைப்படுத்த படாத பாடுபட்டு, விழுந்து சிராய்ந்து, கடைசியில் சொந்தக் கால்வலுவில் காற்றைக் கிழித்துச் செல்லும்போது அவனில் விண்ணை உரசும் தன்நம்பிக்கை குடியேறுகிறது. தன் நம்பிக்கைதானே சுதந்திர உணர்வின் சுவாசம்! அதிலும் மிதிவண்டிகள் அறிமுகமானபோது அவற்றில் சவாரித்த மேற்குலகப் பெண்கள் தங்களைச் சுதந்திரப்பறவை களாகவே உணர்ந்தார்கள். அதுவரை காலமும் அணிவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட ஆடைகளிலிருந்து விடுபட்டு சவாரிக்கு வசதியான, நவீனமான ஆடைகளுக்கு மெல்ல மாறிக் கொண்டார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சி ஆண்களை வெளியே அலுவலகங்களுக்கு அனுப்பிவிட்டு, பெண்களை வீட்டுப் பணிகளைக் கவனிக்கும் இல்லத்தரசிகளாக முடக்கி வைத்தது. இதை எதிர்த்து, ஆண்களுக்கு நிகராகச் சம்பாதிக்கும் உரிமை, அரசியலில் பங்கேற்கும் உரிமை, எல்லாவற்றுக்கும் மேலாகத் தங்களைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் உரிமை போன்றன வற்றை வலியுறுத்திப் பெண்விடுதலை அமைப்புகள் போராடி வந்தன. மிதிவண்டியின் வருகையுடன் பெண்விடுதலை அமைப்புகள் தாங்கள் முன்னிறுத்திய புதுமைப்பெண்ணின் குறியீடாக மிதிவண்டியுடன் சேர்ந்த பெண் உருவத்தையே பயன்படுத்த ஆரம்பித்தன. பிரித்தானி யாவில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1897இல், பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டபோது அதை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மிதிவண்டியில் செல்லும் புதுமைப்பெண்ணின் உருவத்தையே தூக்கிலிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள்.
மோட்டார் வாகனங்களின் வேகம், சொகுசு ஆகியன மோட்டார் வாகனங்களைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தைத் தோற்றுவித்திருக்கிறது. ஆனால், ஆண் - பெண், பெரியவர் - சிறியவர், செல்வந்தர் - வறியவர் என்ற வேறுபாடுகளையெல்லாம் கடந்து வெற்றிகரமான ஒரு போக்கு வரத்துச் சாதனமாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் பயணப்பட்டுக் கொண்டிருப்பது மிதிவண்டிகள்தான். இன்று உலகில் ஒரு பில்லிய னுக்கும் அதிகமான மிதிவண்டிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் படி உலக சனத்தொகையில் 6 பேரில் ஒருவர் மிதிவண்டி யொன்றுக்கு சொந்தக்காரராக உள்ளார். இவற்றில் அரைவாசியளவு
346
பொ. ஐங்கரநேசன்
வண்டிகள் புதிய பொருளாதார வல்லரசாக உருப்பெற்று வரும் சீனக்குடியரசிலேயே ஒடிக் கொண்டிருக்கின்றன. மிதிவண்டிகளின் உற்பத்தியிலும் முதலிடத்தில் இருப்பது சீனாதான். உலகில் ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் சுமார் 100 மில்லியன் மிதிவண்டிகளில் சராசரியாக 50 மில்லியன் வண்டிகள் சீனாவிலேயே தயாராகின்றன. சீனாவைத் தொடர்ந்து இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், தைவான், ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்த ஐந்து நாடுகளினதும் உற்பத்திகளைச் சேர்த்தால் அது உலகில் ஆண்டுதோறும் உற்பத்தியாகும் மிதிவண்டிகளின் எண்ணிக்கையில் 87 விழுக்காடுக்குச் சமனாகும். அந்த அளவுக்கு இந்நாடுகளில் மிதிவண்டித் தொழில் மிகச் செழிப்போடு திகழுகிறது.
போக்குவரத்தில் எல்லா வாகனங்களையும்விட மிதிவண்டி களுக்குச் சிறப்புச் சேர்ப்பது சுற்றுச்சூழலை மாசுறுத்தாத அவற்றின் தூய்மையான சுபாவம்தான். எரிபொருளைக் குடிக்காததால் இவை மற்றைய வானங்களைப் போன்று இரைச்சலையும் புகையையும் மென்று துப்புவதில்லை. இன்று மிகப்பெரும் அச்சுறுத்தலாகப் பூமி அனுபவித்து வரும் வெம்மைக்கு மோட்டார் வாகனங்கள் கக்கிக் குவிக்கும் கரியமில வாயுவே காரணமாக உள்ளது. இதனால், சூழல் விழிப்புணர்வு பெற்ற ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் வாகனங்கள் பற்றிய ஒளிவட்டம் மங்கத் தொடங்கி மிதிவண்டிகளின் மீது கவனம் திரும்பத் தொடங்கியுள்ளது. பொதுப்போக்குவரத்தில் மிதிவண்டிகளுக்கென தனியான பாதைகள் ஒதுக்கப்பட்டு மிதிவண்டிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. சில இடங்களில் மோட்டார் வாகனங் களுக்குக் காட்டாத சலுகைகளாக மிதிவண்டிகள் ஒரு வழிப்பாதைகளில் நுழையவும், சமிக்ஞை விளக்குகளைப் பொருட்படுத்தாது பயணிக்கவும்
E-L அனுமதிகள் உண்டு.
மிதிவண்டிப் போக்குவரத்துக்கு பிரான்ஸ் முன்மாதிரியான திட்டமொன்றை 2007ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. பாரிஸ் நகரில் புகையிரத நிலையங்களை அண்டி, திருட்டைத் தடுக்கும் பாதுகாப்பான பொறிமுறைகளுடன் 20,000 மிதிவண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சேவையில் வாடிக்கையாளராகச் சேர்ந்து கொள்ளும் ஒருவர் அவருக்கு வழங்கப் படும் காந்த அடையாளஅட்டையின் மூலம் எந்த நிலையத்தில் இருந்தும் ஒரு மிதிவண்டியைத் திறந்து எடுத்துச் செல்ல முடியும். பயணத்தின் முடிவில் அதனை வேறு ஒரு நிலையத்தில்கூட விட்டுச்
347
Page 176
ஏழாவது ஊழி
செல்லலாம். பாரிஸ் நகரின் வாகன நெரிசலைக் குறைக்கும் விதமாகவும் அமைந்த இந்தச் சேவைக்குக் கிடைத்த வரவேற்பையடுத்து இலண்டன் மாநகரமும் இதே போன்ற முயற்சியில் இறங்கியுள்ளது. இலண்டனில் 2012ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக இதனை விரைந்து முடிக்கவென 500 மில்லியன் பவுண்டுகள் நிதியை மாநகரசபை ஒதுக்கி இருக்கிறது.
மேற்கு நாடுகள் பொதுத்துறை போக்குவரத்தில் மிதிவண்டி களையும் இணைத்து தமது தெருக்களுக்குப் பசுமை பூசிக்கொண்டிருக்க, நாமோ மோட்டார் வாகனங்களின் மீது தீராக் காதல் கொண்டலை கிறோம். மிதிவண்டிகள் மிகவும், சிறந்த, எளிய போக்குவரத்து வாகனங் கள் மாத்திரமல்ல, சிறந்த, எளிய உடற்பயிற்சிச் சாதனங்களும்கூட. மிதிவண்டியில் சவாரிக்கும்போது உடலிலுள்ள தசைகளும் எலும்பு களும் இயங்கி உடற்பயிற்சி தருகின்ற அதே கட்டுறுதியையும் ஆரோக்கியத்தையும் அதிகரித்த ஆயுளையும் உடலுக்கு வழங்கு கின்றன. மிதிவண்டியில் கடக்கக் கூடிய தூரத்தையேனும் மிதிவண்டி யில் பயணித்து சுற்றுச் சூழலின் நலத்துடன் எமது நலனையும் சேர்த்துப் பாதுகாக்கலாமே!
348
34
ஊமையாகும் மொழிகளும் மரணிக்கும் உயிர்ச்சூழலும்
"குவாரனி மொழி மறைந்துவிட்டால் இந்த உலகம் அழியக்கூடாது என்று யார் இறைவனிடம் வேண்டுவார்கள்"
- குவாரனிப் பழமொழி - பராகுவே "a ன் பெயர் மனாரி. அமேசனில் வாழுகின்ற பெருமைக்குரிய செவ்விந்தியக் குடிகளில் ஒன்றான ஜாப்பரோ இனக்குழுமத்தைச் சேர்ந்தவன். ஜாப்பரோ மொழியில் மனாரி என்றால் காட்டில் வாழு கின்ற பெருத்த பல்லி என்று பொருள். உத்தியோக ரீதியிலான தேவை களுக்கு எங்களைப் பதிவு செய்ய நேரிடும் போது ஸ்பானிஷ் பெயரி லேயே பதிவுகளை மேற்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப் படுகிறோம். இதனால் எனக்குப் பார்ரொலோ உஷிகுவா என்ற ஸ்பானிய மொழிப் பெய்ரும் உண்டு. எங்கள் குல மருத்துவப் பரிகாரிகள் மிகுந்த ஆற்றல் வாய்ந்தவர்கள். அவர்கள் ஐநூறுக்கும் மேற்பட்ட தாவரங் களிலுள்ள மருத்துவ இரகசியங்களை அறிந்து வைத்திருந்தார்கள்' - என்று சொல்லும் மனாரி, ஜாப்பரோ (Zaparo) செவ்விந்தியக் குடிகளின் கடைசி மருத்துவப் பரிகாரியின் மகன். அந்தக் குலகுரு 1997ஆம் ஆண்டு இறந்து விட்டபின்னர், ஈக்குவடோரில் வாழுகின்ற ஜாப்பரோக்களின் தலைவனாக மனாரி இருந்து வருகிறார்.
தென் அமெரிக்க நாடுகளிலொன்றான ஈக்குவடோரில் அமேசன் பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் பாஸ்டசா (Pastaza) மாகாணத்தில் ஜாப்பரோக்கள் உள்ளனர். ஈக்குவடோரின் தலைநகரான குவிட் டோவுக்குத் தெற்கே 240 கிலோமீற்றர்கள் தூரத்தில் ஒடிக்கொண்டி ருக்கும் கொனாம்போ (Conambo) ஆற்றின் கரைகளில் வாழ்ந்து வருகிறார்கள். முன்னொரு காலத்தில் மிகப்பெரும் தொகையில் செழித் திருந்த இவர்களின் இன்றைய எண்ணிக்கை சுமார் 170. அவர்களிலும் ஒருவரே ஜாப்பரோ மொழியை உச்சரிக்கிறார். ஆம்! ஒரேயொருத்தர்
349
Page 177
ஏழாவது ஊழி
மாத்திரம்தான். இவரது மரணத்துடன் ஜாப்பரோ மொழியும் முடிவுக்கு வந்துவிடும்.
ஜாப்பரோக்களின் இந்த வீழ்ச்சிக்குக் காரணமான அவலங்கள் அனைத்தும் கொனாம்போ ஆற்றின் வழியாகவே அவர்களிடம் வந்து சேர்ந்தன. குடியேறிகள், இறப்பர் செய்கை அடிமை வியாபாரம், போர், எண்ணெய்த் துறப்பணம், நவீனத்துவம் என்று எல்லாமே இவர்களின் எண்ணிக்கையை அருகச் செய்தன. "வெள்ளை இறப்பர் வணிகர்கள் எங்கள் காடுகளுக்கு வந்தபோது வேலை செய்வதற்கென எங்கள் மக்களை அடிமைகளாகப் பிடித்துப் போனார்கள். சந்தைகளில் அவர் களைப் பண்டங்களைப் போல விற்பனை செய்தார்கள். மேலும், வெள்ளையர்கள் தங்களுடன் கூடவே நோய்களையும் காவி வந்தார்கள். முற்றிலும் புதிய அந்த நோய்களைக் குணப்படுத்தும் முறைகள் எமது பரிகாரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. இதனால் எண்ணுக் கணக்கில்லாமல் ஜாப்பரோக்கள் மடிய நேரிட்டது' என்று மனாரி கூறுகிறார்.
ஜாப்பரோக்கள் ஈக்குவடோரில் இருந்து அதிகார பூர்வமாக அற்றுப்போய்விட்டார்கள் என்று ஈக்குவடோரில் இருந்து வெளியான அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜாப்பரோக்களின் துடிப்பு இன்னமும் முழுமையாக அடங்கிவிடவில்லை. மீண்டும் உயிர்த்தெழுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் பண்பாட்டையும், வேட்டையாடுபவர்கள் - சேகரிப்பவர்கள் (Hunters and Gatherers) என்ற வகையில் தங்களது மரபார்ந்த வாழ்க்கை முறையையும் தக்க வைப்பதற்குப் போராடி வருகிறார்கள். மனாரி தலைமையில், பாஸ்டசாபூர்வகுடிகளின் அமைவனத்தின் (Pastazaindigenous Peoples Organization-OPP) ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகின்ற அவர்களது போராட்ட நடவடிக்கைகள் யாவும் எப்பாடுபட்டாவது ஜாப்பரோ மொழியைச் சாக விடாது காப்பாற்றுதல், ஜாப்பரோக்களுக்கெனத் தனியான ஆள்புலத்தைத் தீர்க்கமாக வரையறை செய்தல் மற்றும் பெரு நாட்டின் எல்லையினுள் வதியும் ஜாப்பரோக்களுடன் உறவுகளை ஏற்படுத்துதல் ஆகிய மூன்று விடயங்களை முதன்மைப்படுத்துகின்றன. எனினும், இது வரையிலான விளைவுகள் எதுவும் அதிக உற்சாகம் தருவதாக இல்லை.
ஸ்பானியப் பேரரசு பதினாறாம் நூற்றாண்டளவில் தன் எல்லை களை விரிவுபடுத்திச் சென்றபோது தென்அமெரிக்க நாடுகள் பலவும் அதன் ஆளுகைக்குள் அகப்பட்டன. இதனால் ஈக்குவடோர், பெரு
35O
Page 178
ஏழாவதுஉஊழி
உட்பட பல அமெரிக்க நாடுகளில் இன்றளவும் ஆட்சி மொழியாக ஸ்பானிஷ் மொழியே அதிகாரம் செலுத்தி வருகிறது. ஸ்பானிஷின் முற்றுகைக்குள் குரல் ஒடுங்கிய ஜாப்பரோக்கள், ஈக்குவடோர் மீது பெரு அடிக்கடி மேற்கொண்ட படையெடுப்புகளாலும் மேலும் மேலும் சிறுபான்மையினர்களாக ஆக்கப்பட்டார்கள். ஈக்குவடோரையும் பெருவையும் பிரிக்கும் நீண்ட எல்லை அடர்ந்த பெருங்காடுகளாலும் உயர்ந்த மலைகளாலும் ஆனது. கடைசியாக 1941இல் இப்பகுதிகளில் மூண்ட எல்லைப் போரில் பெரு, ஈக்குவடோரின் பல இடங்களைக் கைப்பற்றியது. அப்போது இரண்டாவது உலக யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த காலம். உலக யுத்தத்துக்குள் பிரவேசித்திருந்த அமெரிக்கா, அமெரிக்க நாடுகள் எல்லாவற்றையும் இணைத்து அகண்ட அமெரிக்கக் கண்டம் ஒன்றை உருவாக்கித் தலைமை தாங்குவது பற்றிய கனவில் மிதந்து கொண்டிருந்தது. இந்த மிதப்பில் இரண்டு தரப்புகளையும் பிறேசிலின் தலைநகர் றியோ டி ஜெனிரோவுக்கு அழைத்துப் பேசிஅமைதி ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியது. 1942 ஜனவரி 29இல் கைச்சாத்தான 'றியோ உடன் படிக்கை என்னும் இந்த ஒப்பந்தம் பெரு ஆக்கிரமித்திருந்த ஈக்கு வடோரின் சில பகுதிகளில் பெரு தொடர்ந்து நிலைகொள்ள வழிகோலியது. அதுவரையில் ஈக்குவடோரின் மக்களாகத் தங்களை நினைத்துக் கொண்டிருந்த ஜாப்பரோக்களில் ஒரு பகுதியினர் ஒரே நாளில் பலவந்தமாகப் பெருநாட்டின் குடிகளாகத் துண்டாடப் பட்டார்கள். இப்போது, அப்பகுதிக்குள் ஈக்குவடோர் ஜாப்பரோக்கள் நுழைவதற்குத் தூதரகங்களின் அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டி யிருக்கிறது.
ஈக்குவடோரிலுள்ள ஜாப்பரோக்களில் சிலரைப் பெருவிலுள்ள ஜாப்பரோ பரிகாரிகளிடம் அனுப்பி மருத்துவ வழிமுறைகளைப் பயிலு விப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இச்சமுதாயம் உயிர்பிழைக்க வேண்டுமாயின் இது அவசியமாகும். ஏனெனில் 1997இல் இவர்களின் கடைசி மருத்துவக் குலகுருவும் இறந்தபோது, ஜாப்பரோக்கள் தங்கள் மரபுகள் பற்றிய தகவல்கள், மூலிகைச் செடிகளின் குணப்படுத்தும் ஆற்றல்கள், காடுகளின் இரகசியங்கள் என்பனவற்றைத் தெரிந்து வைத்திருந்த ஒரேயொரு அறிவு ஆதாரத்தையும் இழந்துவிட்டார்கள். "என் தந்தை இறந்ததில் இருந்து எங்களைக் கவனிக்க யாரும் இல்லை. எங்களிற் பலர் நோய்வாய்ப்பட்டு இறந்து வருகிறார்கள்" என்று மனாரி கண்கலங்குகிறார்.
352
பொ. ஐங்கரநேசன்
ஈக்குவடோர் ஜாப்பரோக்கள் எல்லைகடந்து சென்று பெருவிலுள்ள தங்களது தொப்புள்கொடி உறவுகளைச் சந்திப்பதற்கு அனுமதிக்கும்படி, பெருவிலுள்ள ஈக்குவடோர்துதரகத்தின் பண்பாட்டு அதிகாரிக்கு மினாரி ஒரு வேண்டுதல் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ள விடயங்களே அவரது கூற்றுகளாக மேலே உள்ள பந்திகளில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை வெறுமனே மனாரியின் கதையோ அல்லது ஜாப்பரோ மொழியின் அவலங்களோ மாத்திரம் அல்ல.
உலகில் முதலாம், இரண்டாம், மூன்றாம் உலக நாடுகள் என்ற வகை பிரித்தலின் கீழ் இன்று 193 நாடுகள் உள்ளன. இரண்டாவது உலக யுத்தத்தின் முடிவில் புதிய அரசுகளின் உதயத்துடன் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மூலம் வளர்ச்சி பெற்ற நாடுகள் முதலாவது உலகம் என்றும், கம்யூனிச நாடுகள் இரண்டாவது உலகம் என்றும், இந்த இரண்டு உலகங்களிலிருந்தும் வேறுபட்ட சமூக, பொருளாதார அரசியற் பின்னணிகளுடன் கூடிய நாடுகள் மூன்றாவது உலகம் என்றும் அழைக்கப்படத் தொடங்கின. (சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப்பின்னர் இரண்டாம் உலகம் என்ற வகை பொருளற்றுப் போனது.) இந்த வகைப்பாட்டுக்குள் அடங்கியுள்ள உலகின் அனைத்து நாடுகளிலும் ஜப்பான், போர்த்துக்கல் என்று பத்துக்கும் குறைவான நாடுகளே 'ஒரு தேசிய இனம் ஓர் அரசு' (One Nation one state) என்ற வரையறைக்குள் அடங்கக் கூடியனவாக உள்ளன. ஏனைய அரசுகள் யாவும் பல்தேசிய அரசுகள் (Multinational States). இலங்கைத் தீவில் சிங்களவர், தமிழர், இஸ்லாமியர், பறங்கியர், மலாயர், வேடர் என்று ஆறு தேசிய இனங்கள் எனில் இந்தியாவில் 380 தேசிய இனங்கள்; உச்சபட்சமாக இந்தோனேசியாவில் 670 தேசிய இனங்கள். ஆயினும் இலங்கையில் சிங்களமும், இந்தியாவில் இந்தியும், இந்தோனேசியாவில் இந்தோனேசிய மொழியும்தானே ஆட்சிப்பலத்துடன் உள்ளன. இப்படி, உலகம் பூராவும் இன-மொழிப் பெரும்பான்மையின் கீழ் சுமார் 5000 தேசிய இனங்கள் அதிகாரம் செய்யப்படுவதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. அண்மைக்காலமாகச் சமூகவியல் ஆய்வாளர்களால் 'நான்காவது உலகம்' (The Fouth World) என்று தனியான வகையினதாக நோக்கப்படும் இந்த 5000 வரையிலான சிறுபான்மைத் தேசிய இனங்களின் மொழிகளிலும் பெரும்பாலானவை, ஜாப்பரோ மொழியைப் போல அழிவின் விளிம்பிலேயே வந்து நிற்கின்றன.
353
Page 179
ஏழாவதுஉஊழி
I
மொழிகள் மாண்டுபோவது ஒன்றும் புதியது அல்ல. மொழிகள் மிகக் குறைந்த ஆயுட்காலத்தையும் மிக அதிகமான மரண வீதத்தையும் கொண்டவை. பாஸ்கி, எகிப்தியம், சீனம், கிரேக்கம், ஹிப்ரூ, இலத்தீன், பாரசீகம், சமஸ்கிருதம், தமிழ் போன்ற மிகச் சில மொழிகள் மட்டும் தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகவும் வாழ்ந்து வருகின்றன. மூல வேர் மொழிகளிலிருந்து மொழிகள் கிளைகளாகப் பிரியத் தொடங்கியதில் இருந்து குறைந்தது 30,000 மொழிகள் எந்தச் சுவட்டையும் விட்டு வைக்காமல் தம் வாழ்க்கையை முடித்துக் கொண்டன. ஆயினும், 'மொழிப்போர் காரணமாக இதுவரை சந்தித்திராத அளவு கடும்வேகத்தில் மொழிகள் இப்போது அழியத் தொடங்கியுள்ளன. பெரும்பான்மையையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ள பராக்கிரம மொழிகளை எதிர்கொள்ள இயலாமல் உலகம் முழுவதும் மாதந்தோறும் இரண்டு மொழிகளாவது மரணத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் இன்று உலகில் பேசப்படும் 6,700 வரையிலான மொழிகளில் 50 தொடங்கி 90 விழுக்காடு மொழிகள் வழக்கொழிந்து போய் விடும் என மொழியியல் வல்லுநர்கள் எதிர்வு கூறியிருக்கிறார்கள்.
குடியேற்ற ஆதிக்கம் தொடங்கியதில் இருந்தே மொழிகளுக் கிடையேயான மோதல்களும் ஆரம்பமாகிவிட்டன. ஸ்பானிஷ் படையெடுப்பு ஈக்குவடேர், பெரு, பொலிவியா, நிக்கரகுவா போன்ற அமெரிக்க நாடுகளிலெல்லாம் சுதேசிய மொழிகளை ஊமையாக்கியது என்றால் போர்த்துக்கீச மொழி பிறேசிலின் தேசிய மொழிகளைப் பதம் பார்த்தது. போர்த்துக்கீசரின் குடியேற்றம் படிப்படியாக அந்நாட்டில் பேசப்பட்டு வந்த மொழிகளில் 540 மொழிகளை அழித்து விட்டிருக் கிறது. இந்த எண்ணிக்கை பிறேசிலில் பேசப்பட்ட மொழிகளில் முக்கால் பகுதியாகும். ஏறத்தாழ இதே காலப்பகுதியில் ஈழத்தை ஆக்கிரமித்திருந்த போர்த்துக்கீசத்தால் அலுமாரி அலவாங்கு, யன்னல், கோப்பை, களிசான், கதிரை, குசினி என்று தமிழ்மொழியில் கலப்படம் செய்ய மாத்திரமே முடிந்தது. ஆனால், பிறேசிலில் இன்று போர்த்துக்கீச மொழி ஆட்சிமொழியாக அரியணையிலேயே ஏறி அமர்ந்துவிட்டது. அவுஸ்திரேலியாவில் 1788ஆம் ஆண்டில் வெள்ளையர்கள் காலடி வைத்தபோது கேட்டுக் கொண்டிருந்த 250 அபோரிஜினல் (Aborigina) மொழிகளில் இப்போது 20 மொழிகள் மாத்திரமே எஞ்சியுள்ளன. 1960கள் வரையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் அபோரிஜின்
354
பொ.ஐங்கரநேசன்
பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளைக் கட்டாயமாகப் பிடுங்கித் தங்கிடங்களில் வைத்ததன் மூலம் புதிய தலைமுறைகளை அபோரிஜன் மொழிக்கு அந்நியமாக்கியது. அமெரிக்காவில் வெள்ளைக் குடியேறிகள் அம்மை நோய்க் கிருமிகளை ஏவிப் பூர்வகுடிகளைக் கொன்றொழித்த போது பெரும்பாலான அமெரிந்திய மொழிகளும் சேர்ந்து புதையுண்டன. இப்படி, உலகைச் சுற்றிவந்த ஐரோப்பாவின் குடியேற்ற ஆதிக்கம் மொழியியல் மாறுபாட்டை வெகுவாகக் குறைத்தது.
காலனித்துவம், நாட்டு அரசுகளைத் தேசிய இனங்களிடம் கையளித்துப் போனதுவும் பெரும்பான்மைத் தேசிய மொழிகள் வலுப் பெறவும் மற்றைய மொழிகள் ஒதுக்கப்படுவதற்கும் காரணமாகின. பெரும் தேசியவாத அரசுகள், காலனியத்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் தம்முடன் சேர்ந்தொலித்த பிற தேசிய இனங்களின் குரலை ஒடுக்கித் தமது ஒற்றைக் குரலையே அரசின் குரலாக உரத்துப் பேசின. இவை சிறுபான்மைத் தேசிய இனங்களைத் "தேசிய இனம் என்ற சொல்லால் விளிப்பதில்லை. சிறுபான்மையினர், இனக்குழுமம், பழங்குடி, ஆதிவாசிகள் போன்ற பெயர்களைச் சூட்டி அவர்களை உளவியல் ரீதியாகக் கட்டிப்போட்டன. கல்வி, தொடர்புச் சாதனங்கள், அரசுப் பணிகள் ஆகியவற்றில் ஆட்சிமொழியை நிறுவும் பெரும் முயற்சிகளின் மூலம் தேசிய மொழிகளை ஒழித்துக்கட்ட கங்கணங் கட்டின. இலங்கையில் தனிச்சிங்களச் சட்டம், இந்தியாவில் இந்தித் திணிப்பு போன்றவை இத்தகைய உதாரணங்கள்தாம். பல்தேசிய நாடுகள் பலவற்றில் மொழிச்சீர்மை என்ற பெயரில் இன்றளவும் இந்த வல்லாண்மை நீடிக்கவே செய்கிறது. மறுதலிக்கும் மக்கள் மீது பயங்கர வாதிகள், பிரிவினைவாதிகள், கிளர்ச்சியாளர்கள் என்ற முத்திரைகள் ஒட்டப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நிகழ்த்த இராணுவம் ஏவிவிடப் படுகிறது. இன்று, உலகின் மூன்றில் இரண்டு பங்கு இராணுவத்தின் தேசியக் கடமையே, சிறுபான்மைத் தேசிய இனங்களின் குரலை
r ) in
ஒடுக்குவதுதான். 21 י יולי
கடந்த நூற்றாண்டிலிருந்து விரைவான உலகமயமாக்கலுடன் இணைந்து ஆங்கிலத்தின் பயன்பாடு கடும் வேகமெடுத்திருக்கிறது. முதலாம் உலகப்போரை 1919இல் முடிவுக்குக் கொண்டுவந்தவர்சேல்ஸ் (Versales) உடன்படிக்கை பிரெஞ்ச் மொழியுடன் சேர்த்து ஆங்கிலத்திலும் எழுதப்பட்டது. அன்று முதல் தூதாண்மையிலும், பொருளாதார உறவுகளிலும் தொடர்பாடல் மொழி என்ற ஏகபோகத்தை ஆங்கிலம் ஏற்படுத்தி வருகிறது. 'குளோபல் றீச் (Global Reach) என்னும் சந்தைத்
355
Page 180
ஏழாவது ஊழி
தொடர்பாடல் நிறுவனத்தின் 2006ஆம் ஆண்டுப் புள்ளி விபரங்களின் படி தினமும் இணையத்தைப் பயன்படுத்துபவர்களில், ஆங்கிலம் வழி தொடர்பாடுபவர்களே அதிகமாக (300 மில்லியன்கள்) இருப்பதுடன், இணையத்தின் உள்ளடக்கங்களிலும் ஆங்கிலமே அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது. 90 விழுக்காடு உலக மொழிகளால் இதுவரையில் இணையத்தளத்தில் ஏற முடியவில்லை. தங்கள் தாய் மொழியைவிட ஆங்கிலத்திலேயே அதிகமாகத் தொடர்பாட மக்கள் மேன்மேலும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். உலகமயமாக்கம் செஞ்சீனப் பெருஞ் சுவரையும் தாண்டி சீனாவின் குக்கிராமங்கள் வரை இப்போது ஆங்கிலத்தைக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது. அங்கு ஆண்டுக்கு இரண்டு கோடிப்பேர் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று வருகிறார்கள். உலகில் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகப் பேசுபவர் களைவிடத்துணைமொழியாகப் பேசுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியுள்ளது. இப்படி ஆங்கிலத்தைப் பூகோளமயப் படுத்துவது, உலகளாவிய ஒரு சீர்மைக்குத் தவிர்க்க முடியாத போக்கு எனவும் நிதி ஆதாரங்களை மீதப்படுத்தி மிக அதிகமான மக்கள் ஒருவரோடு ஒருவர் நேரடித் தொடர்பு கொள்வதற்கான ஒரு வழிமுறை என்றும் சொல்லப்படுகிறது.
சுதேசிய மொழிகளைக் கொன்று விடும் நோக்கில் ஆங்கிலம் பரப்பப்படவில்லை என்று சொல்லப்பட்ட போதும், ஒரு மொழியைக் கொல்வதற்குச் சுலபமான வழி இன்னொரு மொழியைக் கற்பிப்பதுதான் என்பதே வரலாறாக உள்ளது. பல தலைமுறைகளாகப் பயன்பாட்டில் உள்ள மொழிகள் மற்றைய மொழிகளை ஒழித்தே வந்திருக்கின்றன. பள்ளிகளில் கற்பிக்கப்படாத மொழிகள் வீட்டு மொழிகளாகவும் வாய்மொழிகளாகவும் அடங்கி ஈற்றில் ஒரேயடியாகக் காற்றில் எந்தச் சலனமும் இல்லாமல் கரைந்து போய் விடுகின்றன. சுதந்திர நாடாக இருந்த ஹவாய் தீவை அமெரிக்கா 1898இல் தனது மாநிலங்களில் ஒன்றாக இணைத்ததும் பாடசாலைகளில் ஹவாய் மொழியைக் கற்பிப்பதைத் தடை செய்தது. இதன்முலம் ஹவாய் மொழி ஏறத்தாழ அழிந்துவிடும் நிலைக்கே சென்றது. இது போன்றே, அலாஸ்காவின் தேசிய இனங்களின் குரல்வளைகளும் அமெரிக்க ஆங்கிலத்தால் நெரிக்கப்பட்டது. ரஷ்யாவிடமிருந்து அலாஸ்காவை வாங்கிய அமெரிக்கா, அங்கு வாழ்ந்து கொண்டிருந்த எஸ்கிமோ, அலூற், இந்தியப் பூர்வகுடிகளின் மொழிகளை நாகரிகமற்ற மொழியெனப் பிரகடனம் செய்து பள்ளிகளில் தடை விதித்தது. வீடுகளில்
35s
பொ.ஐங்கரநேசன்
பெற்றோர்கள் குழந்தைகளுடன் தாய்மொழிகளில் உறவாடுவதையும் தடுத்து இளைய தலைமுறை முழுவதையும் ஆங்கில மயப்படுத்தியது. இன்று, அலாஸ்காவின் இயாக் (yak) குடிகளில் இயாக் மொழியை மேரி ஸ்மித் என்னும் ஒரேயொரு மூதாட்டி மட்டுமே உச்சரித்து வருகிறார். எஸ்கிமோக்களின் இனூற் மொழியைத் தவிர அலாஸ்காவின் எல்லா மொழிகளுக்குமே பெரும்பாலும் இதே கதிதாம். முன்னாள் சோவியத் ஒன்றியமும் கல்வி மொழியாகவும் அரசகரும மொழியாகவும் ரஷ்ய மொழியைத் திணித்து மொழிப்படுகொலைகளை வெற்றிகரமாக நிறைவேற்றியது. இன்று ரஷ்யாவின் சனத்தொகையில் 90 விழுக்காட்டினர் ரஷ்ய மொழியையே பேசித் திரிகின்றனர். ரஷ்யாவின் நூறு வரையான ஏனைய தேசிய மொழிகளில் ஏறத்தாழ 70 மொழிகள் மரணத்தருவாயில் வந்து நிற்கின்றன.
பூகோளத்தில் மொழிகளின் பகிர்மானமும் அவற்றின் அழிவுக் கான காரணங்களில் ஒன்றாக உள்ளது. றேமண்ட் ஜி. கோர்டன் என்னும் மொழியியல் அறிஞர் தனது "உலகின் மொழிகள் (Ethanologue:Languagesof the World, 15th ed, 2005) என்னும் நூலில் மொழிகளை அட்டவணைப் படுத்தியுள்ளார். இதன்படி, உலகில் அதிகமானோர் பேசுகின்ற முதல் பத்து மொழிகளாக மண்டாரின், ஆங்கிலம், ஸ்பானிஷ், ரஷ்யன், அராபிக், ஜேர்மன், வங்காளி, போர்த்துக்கீசம், பிரெஞ்ச் ஆகிய மொழிகள் உள்ளன. முதலிடத்தில் உள்ள சீன மொழியான மண்டாரினைத் தாய்மொழியாகவும் (873 மில்லியன் பேர்கள்) துணை மொழியாகவும் (178 மில்லியன் பேர்கள்) மொத்தம் 1051 மில்லியன் மக்கள் பேசிவருகின்றனர். ஆங்கிலத்தை 510 மில்லியன் பேர் கொண்டாடுகின்றனர். தமிழ் 18வது இடத்தில் உள்ளது. அதனை தமிழ்கூறும் நல்லுலகெங்கும் முதன் மொழியாக 68 மில்லியன் பேர்களும் துணை மொழியாக 9 மில்லியன் பேர்களுமாக 77 மில்லியன் மக்கள் பேசிவருகிறார்கள். இப்படி, உலகின் முன்னணி 100 மொழிகளைப் பேசுவோர்களின் மொத்தத் தொகைக்குள் மனித குலத்தின் 90 விழுக்காட்டினர் அடங்கி விடுகின்றனர். மீதமுள்ள 10 விழுக்காட்டினரின் நாவுகளிலேயே சுமார் 6,600 மொழிகளும் நடமாடிக் கொண்டிருக்கின்றன. இவற்றிலும் பாதிக்கு மேற்பட்ட மக்கள் பப்புவா நியூகினியா (820 மொழிகள்), இந்தோனேசியா (742), நைஜீரியா (516), இந்தியா (427), மெக்சிக்கோ (297), கமரூன் 280), அவுஸ்திரேலியா (275), பிறேசில் (200) என எட்டு நாடுகளில் மாத்திரமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இப்படி, மொழிகளின் பகிர்மானம் மக்கள்
35ア
Page 181
ஏழாவது ஊழி
அடர்த்திக்கு இணையாக இல்லாததால் ஆங்கிலமும் பெரிய வட்டார
மொழிகளும் சிறுபான்மை மொழிகளை மேலும் மேலும் நெருக்கித்
தள்ளுகின்றன. மொழிகளுக்கிடையேயான இந்தக் (கை)கலப்பில்
குறைந்த பட்சம் ஒரு இலட்சம் பேர்களாலேனும் பேசப்படாத
மொழிகள் மாண்டுவிடும் என்பது மொழியியலாளர்களின் அளவுகோல்.
துர்அதிர்ஷ்டவசமாக, இன்று உலகின் பாதி மொழிகளைப் பத்தாயிரத்
துக்கும் குறைவானவர்களே பேசிவருகின்றனர். அவற்றிலும் சுமார் 500 மொழிகளை வெறும் பத்துக்கும் குறைவானவர்களே திக்கித்
திணறியேனும் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்காவில் இயங்கிவரும் 'வாழும் மொழி (Livingtongue Insttute for Endangered Languages) 6 TaörggpJLb gšp/6n160TLb go Gu6$hai), மொழிகள் அழிவபாயத்தில் உள்ள பகுதிகளை அடையாளங்கண்டு அண்மையில் அறிவித்துள்ளது. இவற்றில் ஐந்து, பேரழிவு அபாயத்தில் உள்ள பகுதிகளாகும். எல்லாமே பூர்வ குடிகள் வாழ்ந்து வரும் பிரதேசங்கள். மொழிகளின் புதைகுழியாக முதலிடத்தில் இருப்பது, மொழிகளின் புதையல்களில் ஒன்றான வடக்கு அவுஸ்திரேலியா, இங்கு பேசப்படு கின்ற 275 வரையான மொழிகளுமே அழிவின் விளிம்பில் நின்றவாறு தாம் குரலெழுப்பிக் கொண்டிருக்கின்றன. இம்மொழிகளில் மகாடி G5 (Magati ke), urtapi (Yawuru), -9Cup.jtLrti (Amurdag) Gal drty956fait மரணங்கள் இன்றோ நாளையோ நிகழ்ந்துவிடக்கூடும். மகாடி கே, யாவுறு மொழிகளைப் பேச 3 பேர்களும் அமுர்டாக் மொழியைப் பேச ஒரேயொருவரும் மட்டுமே உள்ளனர். இரண்டாவதாக மொழிகள் அதிகமாகப் பலியாகிவரும் பகுதி: ஈக்குவடோர், பெரு, பிறேசில், பொலிவியா நாடுகளை உள்ளடக்கிய மத்திய தென் அமெரிக்கா. இங்கு அன்டீஸ் மலைத்தொடரில் இருந்து அமேசன் வடிநிலம் வரை விரவியுள்ள 113 மொழிகளில் பெரும்பாலானவை ஸ்பானிஷ், போர்த்துக்கீச மற்றும் வலிமையான ஒருசில சுதேச மொழிகளுக்கும் வழிவிட்டு ஒதுங்கத் தொடங்கியுள்ளன. மூன்றாவது: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா, அமெரிக்காவின் ஒறிகன் ஆகிய இடங்களை அடக்கிய வடமேற்கு பசுபிக் பீடபூமி. இங்கு கேட்கும் 54 மொழி களையுமே ஆங்கிலம் அதட்டி ஒடுக்கிக் கொண்டிருக்கிறது. வனவிலங்கு களுக்குச் சரணாலயங்களை ஒதுக்குவதுபோல அமெரிக்க அரசு, அமெரிக்காவின் பூர்வ குடிகளுக்கு ஒறிகன் மாநிலத்தில் ஒதுக்கிடங்களை அமைத்துக் குடியமர்த்தியது. அங்கு ஒலித்த சிலெற்ஸ் டீ-ணி (SietzDeeN) என்ற மொழி ஒருவரது குரல் நாணிலேயே ஊசலாடுகிறது.
358
பொ.ஐங்கரநேசன்
நான்காவது பகுதியாக சைபீரியா உள்ளது. இங்கு பேசப்படும் மொழிகளில் ரஷ்ய மொழியின் முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் குறைந்தது 30 மொழிகளாவது உயிர்விடும் நிலையில் உள்ளன. ஐந்தாவது: அமெரிக்காவின் ஒகலகாமா, ரெக்ஸாஸ், நியூ மெக்ஸிக்கோவை உள்ளடக்கிய பகுதி. ஒறிகனைப் போல ஒகலகாமாவும் அமெரிக்காவின் பூர்வகுடிகள் வலுக்கட்டாயமாகக் குடியேற்றப்பட்ட மாநிலம். இங்கு 40 மொழிகளின் குரல்கள் அடங்கிக் கொண்டிருக் கின்றன. மரணத்தின் குகையினுள் வெகுதொலைவு சென்று விட்ட இம்மொழிகளை மீட்டெடுப்பது இனியும் இலேசானது அல்ல. சாவிலிருந்து தப்புவிக்க முடியாது போனாலும், அவற்றின் கடைசி வார்த்தைகளை ஆவணங்களாகவேனும் காப்பாற்றும் முயற்சியில் ‘வாழும் மொழிகள் நிறுவனம் இறங்கியுள்ளது. உலகம் பூராவும் உள்ள காடு மலைகளெல்லாம் அலைந்து, அழிந்து கொண்டிருக்கும் மொழி களின் கடைசி நாக்குகள் உதிர்க்கும் வாக்கு மூலங்களைப் பதிவு செய்து வருகிறது.
I
மொழிகள், ‘புலப்படுத்தவெனவும் புரிந்து கொள்ளவெனவும் மனித இனம் தன் பரிணாமப் பாதையில் கண்டறிந்த அற்புதமான ஒரு சாதனம். ஆனால், மொழிகளுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்கள் வெறுமனே தகவல் தொடர்புகளுக்கான கதவுகளை மாத்திரம் அடைத்து விடவில்லை. இது பண்பாட்டுக்கும் உயிரினங் களுக்கும் ஏற்பட்டிருக்கும் பெரும் அச்சுறுத்தலும் ஆகும். ஒரு மொழி ஒரு பகுதியில் தோன்றி வளர்கின்றபோது, அந்த மொழியைப் பேசுகின்ற இனத்தின் பண்பாட்டுச் சூழலுடனும் அந்த இனம் வாழுகின்ற உயிர்ச்சூழலுடனும் ஒன்றாகச் சேர்ந்தே பயணிக்கிறது. ஒன்றையொன்று ஒம்பியவாறு பரிணாமிக்கிறது. இதனால், இவற்றில் ஒன்றின் அழிவு மற்றையவற்றையும் நிராதரவாக்கி அழித்து வருகிறது.
மொழி பண்பாட்டினுடைய மிகப்பெரும் கருவூலம். உணவுப் பழக்கவழக்கங்கள் - வேளாண் முறைகள் - ஆடை அணிகலன்கள் - திருமண வைபவங்கள் - மரணச் சடங்குகள் போன்ற பண்பாட்டு வாழ்க்கை முறைகளையும், விருந்தோம்பும் பண்பு - மூத்தோரைக் கணம் செய்தல் - மணஉறவுகளைத் தீர்மானித்தல் போன்ற பண்பாட்டு வாழ்வியற் சிந்தனைகளையும், இவற்றின் அடி ஆதாரமாக விளங்குகின்ற தாவரங்கள் - விலங்குகள் - காலநிலை போன்ற உயிர்ச்சூழல் பற்றிய
359
Page 182
ஏழாவதுஊழி
அறிதல்களையும் சொற்களாகத் தேக்கித் தன்னில் வைப்பிலிட்டுள்ளது. இவை பல ஆயிரம் ஆண்டுகாலச் சேமிப்புகள். அந்தந்தக் காலகட்டங் களுக்கும் இடங்களுக்கும் ஏற்ப நிலவிய வாழ்க்கை முறைகளையும், வாழ்வியற் சிந்தனைகளையும், இயற்கை அறிதல்களையும், புலப்படுத்த வும் புரிந்துகொள்ளவும்கூடிய புதுப் புதுச் சொற்களாக உருவாக்கி, தொடர்ந்து சொற்களின் களஞ்சியமாக மொழி பரிணாமித்து வருகிறது.
சொற்களில் ஒன்று அழியும் போது அந்த மொழியைப் பண் பாட்டுவெறுமை சூழத் தொடங்குகிறது. இதனை வேற்று மொழி களிலுள்ள அதே பொருளைச் சுட்டும் சொற்களினால் முழுமையான அர்த்த பரிமாணங்களுடன் இட்டு நிரப்ப முடிவதில்லை. தமிழின், 'பெரியப்பா, 'சித்தப்பா ஆகிய தந்தையொருவரின் அண்ணன் - தம்பி உறவு முறைகளை விளிப்பதற்கு இணையான வார்த்தைகள் இதுவரையில் ஆங்கிலத்தில் இல்லை. அதுமட்டுமல்ல, இச்சொற்கள் தொல்தமிழ்ச் சமூகத்தில் சகோதரர்கள் பலர் ஒரு பெண்ணுடன் மண உறவு கொண்ட, இன்று காலாவதியாகிவிட்ட பண்பாட்டின் வரலாற்றைச் சொல்லும் சுவடுகளாகவும் உள்ளன. இந்தச் சொற்களில் உறைந்து போயிருக்கும் தொல்தமிழர்களின் கூட்டுத்திருமண உறவை எந்த மொழிச் சொற்களினால் வெளிக்கொணர முடியும்? இப்படி எல்லா மொழிகளிலுமே ஒவ்வொரு சொல்லிலும் அந்தந்த இனத்துக்குப் பிரத்தியேகமான சமூகவியல், மானுடவியல், சூழலியல் வரலாறு உறைந்துபோயுள்ளது. இதனால், ஒரு மொழி அழியும் போது உலகின் பன்முகப் பண்பாட்டின் ஒரு முகம் பரிதாபமாக இறந்து போகிறது.
மொழிகளைச் சிதைத்து உலகப் பொதுவான ஒரு ஒற்றைப் பண்பாட்டைக் கட்டியமைப்பதை 'உலக மயமாக்கம் வெகுவேகமாகச் செய்து வருகிறது. இங்கு ஒற்றைப் பண்பாடு என்பது மேற்கின் முகம் சார்ந்ததே. கடைக்கோடியில் உள்ள குக்கிராமங்கள் வரை மோருக்கும் எலுமிச்சம் சாறுக்கும் பதிலாக பெப்ஸியையும் கோகோ கோலாவையுமே உலகமயமாக்கம் சிபாரிசு செய்கிறது. பிட்டுக்கும் இட்டலிக்கும் பதில் பிஸ்ஸாவைப்பும், ஹாம்பேர்கரையும், இசைகளில் கூட றொக்கையும் ஜாஸையுமே பலவந்தப்படுத்துகிறது. முதலாளித்துவத்தின் இந்த வர்த்தகத்துக்குக் குறுக்காக, சோவியத்தின் வீழ்ச்சியின் பின்னர் இன்று உலகில் எந்த அரசியல் சித்தாந்தங்களும் இல்லை. இருக்கின்ற ஒரே தடை, தேசிய இனங்களின் பன்முகப் பண்பாடு மாத்திரம்தான். இதனைத் தகர்க்கும் விதமாகவே ஆங்கிலம், ஒரு மொழிப்போரை தேசிய இனங்களின் மொழிகளின் மீது தொடுத்து வைத்துள்ளது. இந்த
36O
பொ. ஐங்கரநேசன்
மொழி ஆதிக்கம் மிகவும் நுட்பமானது. இராணுவ, அரசியல் மேலாதிக் கங்களைப் போல அல்லாது மிகவும் அமைதியாக ஒரு அப்பாவியைப் போல இருந்தவாறே மேற்குலகின் வணிக நலன்களுக்குச் சாதகமான விதத்தில் ஒற்றைப் பண்பாட்டுச் சூழலைக் கட்டமைத்து வருகிறது.
பண்பாட்டுப் பல்வகைமை உலகின் உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாக்கும் ஆதாரங்களில் ஒன்று. இதனை விளங்கிக் கொள்வதற்கு நமது உணவுப் பண்பாடு மிகப்பொருத்தமான உதாரணம். ஆசியர்களின் உணவில் அரிசி முதலிடத்தைப் பிடிக்கிறது. அதேபோல ஆபிரிக்கர் களின் உணவில் சோளமும், ஐரோப்பியர்களின் உணவில் கோதுமையும் முதன்மை பெறுகின்றன. பிரதான உணவில் இத்தகைய தானிய மாறு பாடுகள் இருக்கும் அதே சமயம் இவை ஒவ்வொன்றுக் குள்ளேயுமே எத்தனை வகையான தெரிவுகள்! ஒருவருக்குப் பொன்னி அரிசியும், இன்னொருவருக்குச் சம்பா அரிசியும் பிடித்தமாக இருக்கிறது. சம்பாவுக்குள்ளேயே சீரகச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, கட்டைச் சம்பா என்ற பேதங்கள். இப்படி இந்தியாவில் மாத்திரமே ஒரு இலட்சம் அரிசி ரகங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பச்சை இலை வகைகளில் முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, புளிச்சக்கீரை, அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, முடக்கொத்தான், பொன்னாங்கண்ணி என்று நாளுக்கு ஒரு கீரை எமது உணவில் இடம்பிடித்து வருகிறது. அன்டீஸ் பகுதிகளில் உருளைக் கிழங்கிலேயே மூவாயிரம் வரையான வகைகளைப் பயிரிடுகிறார்கள். இடத்துக்கும் சமூகத்துக்கும் ஏற்ப நிலவும் மாறுபட்ட உணவுப் பழக்கங்களே உலகில் இவை போன்ற பல்லினப் பயிர்கள் நீடித்திருப்பதற்கான உத்தரவாதத்தைத் தந்து கொண்டிருக்கின்றன. உணவுப் பழக்கங்களைப் போன்றே பண்பாட்டின் எல்லா அம்சங்களுமே ஏதோவொரு பரிமாணத்தில் உலகில் உயிர்ப் பல்வகைமையின் நிலைத்திருத்தலில் இன்றியமையாத பங்களிப்புகளைச் செய்து வருகின்றன.
மொழிகள், பண்பாட்டின் உறைவிடமாக விளங்கி உலகின் உயிர்ப் பல்வகைமையைப் (Biodiversity) பாதுகாத்துவரும் அதேசமயம், சுற்றுச்சூழலுடன் நேரடியாகவும் உயிரோட்டமான உறவுகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு பகுதியில் நிலவுகின்ற மொழி, அப்பகுதியின் சுற்றுச்சூழல் விபரங்களைத் தன்னில் பதிவு செய்து கொள்கிறது. தமிழின் சங்க இலக்கியங்கள் சூழல் அறிவில் மிகப்பெரிய தகவல் களஞ்சியங்களாகவே விளங்குகின்றன. அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகைத் திணைகளையும் ஆச்சரியம் தரும்
361
Page 183
ஏழாவது2ஊழி
வகையில் மிகவும் நுட்பமான தரவுகளோடு பதிவு செய்து வைத்துள்ளன. தொல்காப்பியம் 'புல்லும் மரனும் ஓரறிவினவே எனத் தாவரங்களை ஓரறிவுடையனவாகச் சொல்கிறது. தாவரங்களும் மனிதர்களைப்போல ஆபத்தை அருகிலுள்ள தாவரங்களுக்கு அறிவிப்பதை, சாவின் தவிப்பை அனுபவிப்பதை அண்மைய ஆய்வுகள் உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. குறிஞ்சிப்பாடல் 99 வகையான மலர்களின் பெயர் களை அடுக்கிப் பாடியுள்ளது. தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் பாடப்படும் நாட்டுப்புறப்பாடல் ஒன்றில் 120 வகையான நெற்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒரு சில நாட்களில் உதிர்ந்துவிடக் கூடிய மலர்களின் ஆயுளையே நனை முகை, மொக்குள் அரும்பு, போது, மலர், வீ என ஏழு பிரிவுகளாகத் தமிழ் வகுத்து வைத்துள்ளது. ஹவாய் மொழியில் மீன்களுக்கு அவற்றைப் பிடிக்கும் முறைகள், மருத்துவப் பயன்கள், இனப்பெருக்க காலம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. பசுபிக்திவு மீனவர்கள் 300க்கும் அதிகமான மீன்கள் பற்றிய தகவல்களை, விஞ்ஞான இலக்கியங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பனவற்றை விடப் பன்மடங்கு மேலாக அறிந்து வைத்திருப்பதாக ஆர்.இ. ஜோகன்னஸ் என்னும் கடல் உயிரியலாளர் குறிப்பிடுகிறார்.
உலகில், இதுவரையில் சுமார் 175 இலட்சம் தாவர - விலங்கு இனங்கள் பெயரிடப்பட்டுள்ளதாகவும், இன்னமும் 90 விழுக்காடு உயிரினங்கள் பார்வைக்கு வராமல் இருப்பதாகவும் அறிவியலாளர்கள் கூறி வருகின்றனர். அறிவியலாளர்களால் அறியப்படாமல் இருக்கும் இவ்வுயிரினங்கள் விஞ்ஞான மொழியில் பெயரிடப்படாது இருக்கலாம். ஆனால், இவற்றில் மிகப்பெரும்பாலானவை அவை வாழுகின்ற இடங்களிலுள்ள மக்கள் பேசிவருகின்ற மொழிகளில் அர்த்த பூர்வமாகப் பதிவாகியே உள்ளன. அத்திலாந்திக், பசுபிக் கடல்களில் காணப்படு கின்ற சாமன் (Salmon) மீன்கள் இனப்பெருக்க காலத்தில் ஆறுகளுக்கு வலசை போகின்றன. ஆற்றுநீரில் சிறுகற்களைக் கொண்ட படுக்கை களில் குழிதோண்டி முட்டைகளை இட்டு மூடி விட்டு, மீளவும் கடலுக்கே திரும்பிவிடும். பின்லாந்து நாட்டின் ரெனோ ஆற்றில் இதனை அவதானித்த வெளிநாட்டு ஆய்வாளர்கள் தங்களது கண்டு பிடிப்பாக அறிவித்தனர். ஆனால், அப்பகுதிப் பழங்குடியினரின் சயாமி மொழியில் இந்த ஆற்று நீர்ப்படுக்கைகளைக் குறிப்பதற்கு 'சாமன் மீனின் முட்டைப்படுக்கை என்பதாக ஒரு தனிச்சொல்லே இருந்து வந்துள்ளது. இதைப் போன்றே ஆய்வாளர்கள் பலரும் கண்டறிந்ததாகச்
362
பொ.ஐங்கரநேசன்
சொல்லப்படும் எல்லா உயிரினங்களும் ஏற்கெனவே ஏதோ ஒரு மொழியில் பேசப்படுபவையாகவே உள்ளன.
மொழிகள் சுற்றுச்சூழலின் மிகச்சிறந்த ஆவணக் காப்பகங்கள் என்பதற்கும் அப்பால், உலகில் உயிரினங்களின் பரம்பலுடனும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருக்கின்றன. அண்மையில் 'ரெறாலிங்குவா (reாainqua) என்னும் மொழிகளைக் காப்பாற்றுவதற்கான பன்னாட்டு அரச சார்பற்ற நிறுவனமும், உலகக் கானுயிர் நிதியமும் (WorldWidifeFund-WWF) இணைந்து உலகின் மொழிப்பல்வகைமையையும் உயிர்ப்பல்வகைமையையும் ஒரு சேரச் சுட்டுகின்ற உலக வரைபட மொன்றை வெளியிட்டுள்ளன. இதில் உலகில் அதிக மொழிகளைப் பேசுகின்ற முதல் எட்டு நாடுகளான பப்புவா நியூகினியா, இந்தோ னேசியா, நைஜீரியா, இந்தியா, மெக்சிக்கோ, கமரூன், அவுஸ்திரேலியா, பிறேசில் ஆகிய நாடுகள் யாவுமே அதிக எண்ணிக்கையான உயிரினங் களையும் கொண்டிருப்பது உறுதிபடத் தெரியவந்திருக்கிறது. உயிர்ப்ப்ல் வகைமைமிக்க 80 விழுக்காடு நாடுகள் அதிக எண்ணிக்கையான மொழி களைக் கொண்டிருக்கின்றன. இதற்கு மாறாக உலக மொழிகளில் வெறும் மூன்று விழுக்காடு மொழிகளுக்கு மாத்திரமே சொந்தமான ஐரோப்பிய நாடுகளில் உயிர்ப்பல்வகைமையும் குறைவாகவே காணப்படுகிறது.
மொழிகளுக்கும் உயிரினங்களின் பரம்பலுக்கும் இடையே நிலவிவரும் இன்னுமொரு பந்தமும் குறிப்பிடத்தக்கது. உலகில் பேசப்பட்டு வருகின்ற மொழிகளில் மிக அதிக அளவிலானவை அவை தோன்றிய தாய்நாடுகளைத் தவிர வேறு எங்கும் பேசப்படுவதில்லை. ஏறத்தாழ 80 விழுக்காடு மொழிகள் இப்படி உள்நாட்டுக்குரிய மொழிகளாகவே (Endemic Languages) ஒலித்து வருகின்றன. அது போல இந்நாடுகளில் வாழ்ந்து வருகின்ற உயிரினங்களிலும் பெரும்பாலானவை அந்நாடுகளுக்கு மாத்திரமேயுரிய இனங்களாகவே (Endemic Species) பெருமை சேர்க்கின்றன. உதாரணமாக, சுமார் 275 வரையான உள்நாட்டுப் பூர்வகுடி மொழிகளைக் கொண்ட அவுஸ்திரேலியாவில் காணப்படுகின்ற முதுகெலும்புப் பிராணிகளில் 11,346 இனங்கள் அவுஸ்திரேலியாவுக்கு மாத்திரமே சொந்தமானவை. அங்கு பூத்துச் சிரிக்கின்ற தாவரங்களிலும் 90 விழுக்காடு அந்த மண்ணுக்கே உரித் தானவை. உலகின் மொழிப்பல்வகைமைக்கும் உயிர்ப்பல்வகைமைக்கும் இடையேயான இந்த நெருக்கங்கள் மொழிகளும் உயிரினங்களும் ஒன்றாகவே சேர்ந்து பரிணாமித்து வந்துள்ளன என்பதற்கான கண்முன்னான சாட்சிகளாகும்.
363
Page 184
ஏழாவதுஉஊழி
பரிணாமப்பாதையில் ஒன்றாகவே கைகோர்த்துப் பேசிவந்த மொழிப்பல்வகைமையும் உயிர்ப்பல்வகைமையும் துர்அதிர்ஷ்டவசமாக ஒன்றாகவே சேர்ந்து மடியவும் ஆரம்பித்துள்ளன. உலகில், தேசிய மொழிகளின் அழிவுக்குக் காரணமாக இருக்கும் பெருந்தேசிய இன, மொழிவாத அரசுகளே உயிர்ப்பல்வகைமையின் அழிவுக்கான பிரதான காரணமுமாய் இருக்கிறது. பூர்வீகமாகவே ஒரு பகுதியில் வாழ்ந்துவரும் தேசிய இனங்களுக்குக் காடுகள், மலைகள், ஆறுகள் என ஒரு தேசியச் (5p6) (Nation Environment) g(Dig. 6) figs/Giro1.g. gig,60607 giggidgpai) (State Environment) அத்துமீறி ஆக்கிரமித்து வருகிறது. அனல்மின் திட்டங்கள், அணைக்கட்டுகள், குடியேற்றங்கள், தொழில் நகரங்கள் என்ற அபிவிருத்தி முகத்துடன் அரசுச் சூழல் தேசியச்சூழலை அபகரித்து வருவதே உலகின் உயிர்ப்பல்வகைமையின் மறைவுக்கான பிரதான காரணமாகும். இப்போது மொழிகளின் அழிவும் சேர்ந்து உயிர்ச்சூழலின் அழிவை விரைவுபடுத்தியுள்ளது. இன்னமும் வெளியுலகுக்குத் தெரியவரவேண்டிய உயிரினங்கள் பற்றியும், அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்கள் பற்றியும் விலாவாரியான அறிவைப் பொத்தி வைத் திருக்கும் மொழிகள் ஊமையாகிப் போவது, புதிய உயிரினங்களைக் கண்டறிய வேண்டிய பாதைகளையும் அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களை மீட்டெடுக்க வேண்டிய பாதைகளையும் ஒருசேர அடைக்கத் தொடங்கியிருக்கிறது.
ஒரு தேசிய இனத்தின் மொழி, அந்த இனத்தின் பண்பாடு, அந்த இனம் வாழ்ந்து வருகின்ற தேசியச் சூழல் ஆகிய மூன்றும் தனித்தனியான பிண்டங்களாகப் பிரிக்க முடியாதவை; இரத்த நாளங்களைப் போல ஒன்றினுள் ஒன்று கிளைத்து வளர்பவை. இவை ஒவ்வொன்றினதும் ஆரோக்கியமுமே மூன்றினதும் முழுமையான ஆரோக்கியமாகவும், மூன்றினதும் முழுமையான ஆரோக்கியமே ஒவ்வொன்றினது ஆரோக்கியமுமாகவும் இருப்பவை. ஆனால் இன, மொழி, பண்பாடு சார்ந்து அடையாளப்படும் சாதாரண ஒருவர் சுற்றுச்சூழல் பற்றி அக்கறை கொள்ளுமளவுக்கு சூழலியலாளர்கள் மொழி, பண்பாடு குறித்து அதிகம் கரிசனைப்படுவதில்லை. இதனை, ஆங்கில மொழியறிவைப் போன்றே சூழலியற்கல்வியும் தந்திருக்கும் உளவியல் மனோபாவும் எனலாம். தேசிய இனப் போராட்டங்களிலும் மொழியுரிமைப் போராட்டங்களிலும், சூழலியலாளர்களும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டிய காலம் இது.
364
35
ஏழாவது ஊழி
நாம் கண்ணால் பார்க்க முடிகிற ஒரு செடியை, ஒரு வண்ணத்துப் பூச்சியை நம் பேரக்குழந்தைகளுக்கு வெறும் புகைப்படத்தில் மட்டுமே காட்ட முடியும் என்றால், அதைவிட வலிதரும் விடயம் வேறு என்னவாக இருக்க முடியும்?"
கிறெப்க் ஹில்டன் ரெய்லர் (ஆய்வாளர் - உலக நிலைகாப்பு ஒன்றியம்) "மலட்டுக் கோள்களுக்கு நடுவே பெறுதற்கரிய மக்கட் பேற்றைப் பெற்றிருக்கும் ஒரே கிரகம் நமது பூமித்தாய் மாத்திரம்தான். ஆனால், தன் மடி நிறைய உயிரினங்களைத் தாலாட்டும் பூமி இப்போது தனது உயிர்வளத்தைக் காவு கொடுக்கும் கால ஊழிக்குள் வேகமாகப் பிரவேசிக்கத் தொடங்கியுள்ளாள்' என்று உயிரியலாளர்கள் சமீப காலமாகக் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
பூமி தன் மீது உயிர்ப் பசையைப் பூசி ஏறத்தாழ 3.5 பில்லியன் வருடங்கள் ஆகின்றன. இந்த நீண்ட உயிர்வரலாற்றில், இதுவரையில் பூமி ஆறு பேரழிவுகளைச் சந்தித்திருக்கிறது. இதில் கடைசியாக நிகழ்ந்த இப்போதும் அதிகம் பேசப்படும் ஊழித்தாண்டவம் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் அரங்கேறியது. கிறித்தேசியஸ் யுகத்தின் (Cretaceous Era) கடைசிக் காலத்தில் நிகழ்ந்த இந்தப் பிரளயத்தின்போதே அன்று பூமியில் ராஜாங்கம் நடத்தி வந்த டைனொசோர் இனங்கள் அடியோடு அழிந்தன. அண்ட வெளியில் இருந்து வந்த இராட்சத விண்கற்கள் பூமியை மோதி வெடித்ததால் கிளம்பிய தூசி மண்டலம் சூரியனை மறைத்ததில் சக்திப்பாய்ச்சல் தடைப்பட்டுப் பூமி இருண்டு குளிர, இனங்கள் இனங்களாகப் பெரும் எண்ணிக்கையில் தாவரங்களும் விலங்குகளும் செத்து மடிந்தன என்று இந்த ஊழிமரணங்களுக்குப் புதைபடிவ ஆய்வாளர்கள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
அதிர்ஷ்டவசமாக, இந்தப் பேரழிவுகளிலும் பூமி தன் தாய்மை யைப் பேணியே வந்திருக்கிறது. தப்பிப் பிழைத்த உதிரி உயிரிகளில்
365
Page 185
ஏழாவது ஊழி
மெல்ல மெல்லப் பரிணாமம் (Evolution)நிகழ்ந்ததில் இலட்சக்கணக்கான ஆண்டுகளில் பூமி, மீண்டும் புதிய புதிய உயிரினங்களால் அழகு பெற்றது. நகருயிர்களின் தலைவன் டைனொசோர்களின் அழிவுக்குப் பிறகு பாலூட்டிகள் ஆட்சி பெற்றிருக்கும் இன்றைய பூமியில் இதுவரையில் சுமார் 18 இலட்சம் தாவர, விலங்கு இனங்கள் பெயரிடப்பட்டுள்ளன. ஆனால், இருப்பதில் பெரியதும் அதிக அளவில் ஆராயப்பட்டதுமான பாலூட்டிகளேகூட இன்னமும் முழுமையாக அறியப்படவில்லை. சமீபத்தில் வியட்நாம் - லாவோஸ் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் பசுவை ஒத்த புதிய இனப் பாலூட்டி விலங்கொன்று கண்டறியப்பட்டுள்ளது. பூச்சிகளில் இது வரையில் அறியப்பட்ட சுமார் 10 இலட்சம் இனங்களைவிடவும் 8 மடங்கு அதிகமான இனங்கள் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இப்படி, இன்னமும் தெரியவர வேண்டிய, பெயரிடப்படவேண்டிய 125 இலட்சம் வரையான இனங்களைப் பூமி அடர்காடுகளிலும், ஆழ்கடல்களிலும் பொத்திவைத்திருப்பதாக உயிரியல் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். விலைமதிக்க முடியாத இந்த 'உயிர்ப் புதையலே இப்போது பேரழிவின் அடுத்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
உண்மையில், உயிர்க்கோளத்தை அழிவின் வாயில் இருந்தும் மீட்டெடுப்பது என்பது கைமீறிப்போகும் தருணத்தில்தான் இருக்கிறது. இந்தக் கட்டுரைத் தொகுப்பைப் பூரணமாகப் படித்து முடிப்பதற்குள் உலகில் ஏதாவது ஒர் இனம் பரிதாபமாகத் தன் கதையை முடித் திருக்கும். மணித்தியாலத்துக்கு ஒரு இனம் என்ற கதியில் பூமி தன் உயிர்ப்பைப் பறி கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது எச்சரிப்பதற்கான மிகைப்படுத்தல் அல்ல. பல தசாப்தங்களாக உயிரியலாளர்கள் இருண்ட காடுகளின் "இண்டுஇடுக்கு களிலெல்லாங்கூட திரட்டிய தகவல்களின் முடிவாகவே இந்தப் பதைக்க வைக்கும் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த உயிரினங்கள் எதுவும் திடீரென ஒரே நாளிற் காணாமற் போய்விடுவதில்லை. எண்ணிக்கையில் படிப்படியாகக் குறையத் தொடங்கி, ஒரு நிலையில் அழிவில் இருந்தும் இனிமேலும் தானாக மீள முடியாது என்னும் அளவுக்கு 'அபாய எல்லை'க்குள் இறங்கி விடுகிறது. இப்படிப் பத்து வருடங்களில் பாதிக்குக் கீழாகவும் அழிந்து விடும் இனங்களை அல்லது வீரியத்துடன் இனப்பெருக்கக் கூடிய அங்கத்தவர்களை 250க்கும் குறைவாகக் கொண்டிருக்கும் இனங்களை
366
பிகாவில்குழைந்துவரும்
Page 186
ஏழாவதுஉஊழி
'அழியும் இனங்கள் (endangered) என்று உயிரியலாளர்கள் வரையறை செய்திருக்கிறார்கள். அழியும் இனங்கள் விரைவில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுக்குச் சுருங்கி 'வாழும் மரணம் (Living dead) என்றாகி, கடைசியில் காப்பகங்களிற்கூட ஒரு பிரதிநிதியையேனும் விட்டு வைக்காமல் பயணிப் புறாவைப் போன்றோ அல்லது 'டோடோ பறவையைப் போன்றோ கூண்டோடு அழிந்து (Extinct) விடுகின்றன.
பூமியில் இருந்து நிரந்தரமாகவே விடைபெறுவதற்குக் காத்திருக்கும் அழியும் உயிரினங்களில் சீனாவின் பண்டா கரடி, ஆபிரிக்காவின் மலைக் கொரில்லாக்கள், இந்தியப் புலிகள், நீலத் திமிங்கிலங்கள் என்ற நட்சத்திர அந்தஸ்துப் பெற்றிருக்கும் வெகு சில இனங்கள் மட்டுமே ஊடகங்களின் கவனிப்புக்கு ஆளாகி வருகின்றன. ஆனால், ஈனஸ்வரம் எழுப்பிக் கொண்டிருக்கும் இனங்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு செல்கிறது. உலக நிலை காப்பு ஒன்றியத்தின் (The WorldConservationunion) மதிப்பீட்டின்படி பாலூட்டும் இனங்களில் நாலில் ஒரு பங்கும், பறவைகளில எட்டில் ஒரு பங்கும் அழியக் கூடிய அபாய நிலையை எட்டியுள்ளன. ஊர்வனவற்றில் ஐந்தில் ஒரு பங்கும், நீரிலும் நிலத்திலும் வாழக் கூடிய தவளை - தேரை போன்றவற்றில் மூன்றில் ஒரு பங்கும், எல்லா வகை மீன்களிலும் - குறிப்பாக நல்ல தண்ணிரில் வாழ்பவை - 34 விழுக்காடும் அதே போன்று அழிவின் விளிம்பில் வந்து நிற்கின்றன. இந்த விபரங்கள் எல்லாம் நன்றாக நமக்குத் தெரிந்த முள்ளந்தண்டு உயிரினங்கள் பற்றியவைதாம். இன்னும் போதுமான ஆய்வுகள் செய்யப்படாத குழுக்களில் 500 வகைப் பூச்சிகள், 400 வகையான நண்டு போன்ற மேலோடு உள்ள பிராணிகள், 900 வகை நத்தை, சிப்பி போன்றவை குறித்தும் அச்சம் இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இன்று பூமிக்குப் பசுமைப் போர்வையை வழங்கிக் கொண்டிருக்கும் பூக்கும் தாவரங்களிலும் சுமார் எட்டில் ஒரு பங்கு அழிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், பூமிக்கோள் எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கும் இந்த ஏழாவது பேரூழிக்கான கால்கோள் கடந்த யுகங்களைப் போல அண்ட வெளியில் இருந்து வரவில்லை. இம்முறை பூமியின் பிந்திய பிரசவிப்பான மனிதனே பூமித்தாயின் உயிர்த்துகிலை உரியும் அவலம் நேர்ந்திருக்கிறது. விண்ணில் இருந்து பூமிக்கு வரக்கூடிய அபாயங்களை விண்ணிலேயே எதிர்கொண்டு அழிப்பதற்கு மனிதன் தயாராகி விட்டிருக்கும் இன்றைய நிலையில், பூமிக்கு ஆபத்து அவனாலேயே
368
பொ.ஐங்கரநேசன்
என்பது முரண்நகையாக இருப்பினும் யதார்த்தம் அதுவாகத்தான் உள்ளது.
உயிர்வாழ்தலில் 'உண்ணுவதும் உணவாவதும்', 'வலிந்தவை பிழைப்பதும் நலிந்தவை அழிவதும் இயற்கையின் நியதிகளாகும்போது பரிணாமப் பாதையெங்கும் இனங்களின் மறைவும் தவிர்க்க முடியாததாகிறது. புவிச்சரிதவியற் காலம் நெடுகிலும் இனங்கள் ஒவ்வொன்றும் சராசரியாக ஒரு மில்லியன் வருடங்கள் வரை வாழ்ந்துள்ளன. இவற்றில், 'ஒரு வருடத்துக்கு மில்லியனில் ஓர் இனம் (Species milion year) என்ற கதியில் இயற்கை களையெடுப்பு நிகழ்த்தி வந்துள்ளது. கூடவே, இதே கதியிலேயே பரிணாமத்தில் புதிய இனங்களையும் பிரசவித்து வந்துள்ளது. ஆனால், 'பழையன கழிதலிலும் புதியன புகுதலிலும் பருமட்டாகவேனும் ஒரு சமநிலையைப் பேணி வந்த பூமியில் மனிதனின் வருகைக்குப் பின்னரேயே நிலைமை எதிர்மாறாகியது. இனங்களின் அழிவு வீதம் படிப்படியாக அதிகரித்து இப்போது பெரும் சூறையாடலைப் போல 1000 மடங்குகளாக எகிறியிருப்பதுடன், புதிய உயிரினங்கள் தோன்றும் வீதமும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தரையில் வாழும் வேறு எந்தப் பெரிய விலங்கைவிடவும் மனிதர்கள் நூறு மடங்கு அதிகமாகக் காணப்படுகிறார்கள் - சுமார் 670 கோடிகள். ஒரு பெரு வெடிப்பாக நிகழ்ந்திருக்கும் இந்தச் சனத்தொகைப் பெருக்கமே இதுவரை இல்லாத அளவுக்குப் பூமியின் உயிரினச் சமநிலையைத் தள்ளாட வைத்திருக்கிறது. பண்டா கரடி உணவாக மூங்கில் தளிர்களை மாத்திரமே நம்பியிருக்கிறது. புலி பசித்தாலும் புல்லைப் புசிக்காததாயினும், புல்லை உண்ணும் புள்ளிமானையே இரையாடுகிறது. இவ்வாறு, நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒன்றையொன்று சார்ந்து வாழுமாறு தன் பரிணாமப் பாதையெங்கும் இயற்கை பின்னிவந்த உயிர்வலையில், மனிதன் ஒவ்வொரு கண்ணியாக அறுத்தெறியத் தலைப்பட்டிருக்கிறான். இதனால், தனி ஒரு மனித இனத்தின் தேவைகளுக்கு - இன்னும் சொல்லப் போனால் அவனது பேராசைமிக்க விரய நுகர்வுக்கு - உலகின் ஒட்டுமொத்த உயிரினப்பல் வகைமையுமே பலிக்கடாவாகியுள்ளது.
உயிரினப் பல்வகைமை (Bio Diversity) என்னும் சொற்றொடர் 1980களில் அமெரிக்க அறிவியலாளர்களால் உருவாக்கப்பட்டது. வெளிப்படையான தொனிப்பைவிட இது அர்த்தப் பரிமாணங்களில் இன்னும் ஆழம் நிறைந்தது. மழைக்காடுகள் - பவளப்பாறைகள் - சதுப்பு
369
Page 187
ஏழாவது ஊழி
நிலங்கள் - சவான்னாப் புல்வெளிகள் - கடல்நீரேரிகள் என்று பூமியின் பல்வகைப்பட்ட சூழற்தொகுதிகளையும், இவற்றின் கூறுகளாக இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு தூங்கு மூஞ்சிமரம் - கழுதைப்புலி - வெளவால் மீன் - பறக்கும் அணில் - பாண் பூஞ்சணம் என்று பல தரப்பட்ட இனங்களையும் குறிக்கிறது. தவிரவும், இனங்களுக் கிடையேயான பல்வகைமையைப் போல இனத்துக்குள்ளேயும் உண்டு. உருளைக்கிழங்கில் சுமார் 3000 வகைகள் தென் அமெரிக்காவின் ஆண்டீஸ் மலைப்பகுதியில் பயிராகிறது. சேலம், கிளிச்சொண்டு, அம்பலவி, அல்போன்சா என்று-மா இனத்தில் சுமார் 1000 இனங்கள் உண்டு. இப்படி ஓர் இனத்தின் அங்கத்தவர்களுக்கிடையே இருக்கக் கூடிய மாறுபாடுகளுக்குக் காரணமான மரபணுக்களையும் சேர்த்தே உயிரினப் பல்வகைமை முழுமை பெறுகிறது. சூழற்தொகுதிகள் - இனங்கள் - மரபணுக்கள் என்று உயிரினப் பல்வகைமையின் எல்லாப் படிகளிலுமே இன்று மனிதனின் பிடி அகோரமாக இறுகத் தொடங்கியுள்ளது.
சூழற் தொகுதிகளில் முதலிலும், அதிக அளவிலும் பாதிப்புக்கு ஆளாகியது பூமியின் உயிர்நாடியாக விளங்கும் மழைக்காடுகள் (Rain Forests) தாம். பூமத்தியரேகையை ஒட்டி வெப்பமண்டல நாடுகளில் வானளாவி நிற்கும் இந்தப் பச்சை அடுக்கு வீடுகளில்தான் உலகின் அரைவாசி உயிரினங்கள் வாசம் செய்கின்றன. உலகின் மிகச்சிறிய தீவுகளில் ஒன்றான பியூட்ரோ றிக்கோ (Puerto Rico) இலங்கைத் தீவின் பரப்பில் ஏழில் ஒரு பங்களவு மாத்திரமே ஆனது. இம் மழைக்காட்டுத்தீவு ஏறத்தாழ 3,000 தாவர இனங்கள், 232 பறவை இனங்கள், 61 ஊர்வன இனங்கள், 25 தவளை, தேரை இனங்கள், 16 வெளவால் இனங்கள் போன்றவற்றின் தாயகமாக விளங்குகிறது. இதில் இருந்து, உலக மழைக்காடுகளின் உயிர்ச்செழிப்பைப் புரிந்து கொள்ளலாம். அதுவும், மழைக்காட்டுயிரிகளில் பெரும்பாலானவை தாம் வாழும் குறிப்பிட்ட அந்தப் பிரதேசங்களைத் தவிர வேறு எந்தப் பகுதிகளிலும் காணப்படாத இனங்கள் (Endemic) ஆகும். தான் கொண்டிருக்கும் உயிரினங்களோடு உலகின் மீதி உயிரினங்களின் இருத்தலிலும் பங்காற்றிக் கொண்டிருக்கும் மழைக்காடுகள் வேளாண் தேவைகளுக்கும், நகரமயமாக்கலுக்கெனவும் பெரும்அளவில் சூறையாடப்படுகின்றன. நூறு வருடங்களுக்கு முன்னால் பூமியின் நிலப்பரப்பில் 12 விழுக்காடாக இருந்த மழைக்காடுகள் இப்போது சரி பாதியளவே எஞ்சியுள்ளன. நூலிழையில் தன்னைத் தக்க வைத்துக்
37Ο
பொ.ஐங்கரநேசன்
கொண்டிருக்கும் இந்தக் காட்டுத் துகிலும் செக்கனுக்கு ஒரு ஏக்கர் என்ற அளவில் (வருடத்துக்கு இங்கிலாந்தும் வேல்ஸும் இணைந்த பரப்பளவால்) துச்சாதன மனிதனிடம் தன்னை இழந்து கொண்டிருக் கிறது. இதனால், ஆண்டுதோறும் 17,000 இனங்கள் எந்த எச்சங் களையும் விட்டு வைக்காமல் பூவுலகில் இருந்து மறைந்து கொண்டிருப் பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பெரும் எண்ணிக்கையான இனங்களுக்குப் புகலிடம் அளிப்பதால் 'கடலின் மழைக்காடுகள் என்று வர்ணிக்கப்படும் 'பவளப் பாறைகளும்' (Coralreefs) பாரிய அழிவைச் சந்திக்கத் தொடங்கியுள்ளன. வெப்ப வலயக் கடலின் ஆழம் குறைந்த கரையோரப் பகுதிகளில் மைல் கணக்காகப் படுத்துக் கிடக்கும் பவளப் பாறைகள் நட்சத்திர மீன், கடற்குதிரை, கடல் அனிமனி, கடற் பஞ்சு. என்று கடலின் இரண்டு மில்லியன் இனங்களுக்கு இனிய இல்லங்களாக விளங்குகின்றன. கடல் மீன் இனங்களிலும் கால்வாசிப் பங்கு இங்கு சஞ்சாரம் செய்கின்றன. பவளப்பாறைகள் ஜெலிமீன்களின் கூட்டத்தைச் சேர்ந்தவை. கல்சியம் காபனேற்றுச் சுவர் சூழ்ந்த இடம் பெயரமுடியாத முடவன் உயிரிகள் ஆகும். இதனால் அல்காக்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு - அவற்றைத் தம்மில் வளர இடம் கொடுத்து அவற்றிடம் இருந்து உணவைப் பெற்று - ஏறத்தாழ 195 மில்லியன் வருடங்களாகப் பூமியில் நிலை கொண்டிருக்கின்றன. ஆனால், கிறித்தேசியஸ் யுக ஊழியைக்கூடத் தாக்குப் பிடித்த இந்தப் பவளப்பாறை இனங்களினால் மனிதனின் சூழல் விரோதப் போக்குகளிலிருந்து மட்டும் தப்பிக்க முடியவில்லை. ஏற்கனவே கடலில் கலக்கும் கழிவுகள், டைனமைற் வெடிகள் - சயனைட் நஞ்சுகளைப் பயன்படுத்தும் மீன் பிடி முறைகள், நங்கூரங்களின் காயப்படுத்தல்கள், கப்பற் போக்குவரத்துக்குத் தகர்க்கப்படும் நிர்ப்பந்தம் போன்றவற்றால் அவதிக்குள்ளாகி வந்த பவளப்பாறைகள் இப்போது பூமி சூடாகத் தொடங்கியதையடுத்து மிகவும் மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. மனிதன் மேற்கொண்டு வரும் காடழிப்பினாலும், அவன் கரித்துத் தள்ளும் எரிபொருட் களினாலும் குவியும் கரியமில வாயு பூமியைச் சூடுபடுத்தி (Global Waming) வருகிறது. இதில், கடல் நீரின் வெப்பநிலை உயர்ந்து அல்காக்களை அழித்துவிட, பவளப்பாறைகள் உணவூட்டல் இன்றி, நிராதரவாக மடிய ஆரம்பித்துள்ளன. இதுவரையில் இந்து சமுத்திரப் பரப்பில் மட்டுமே ஐம்பது விழுக்காடுக்கும் அதிகமான பவளப்பாறைகள் இப்படி அழிந்து பட்டிருக்கின்றன. ஆண்டொன்றுக்கு வெறும் 10 சதமமீற்றர் அளவால்
371
Page 188
ஏழாவதுஉழிை
மட்டுமே வளரக்கூடிய பவளப் பாறைகளால் இப்பேரழிவில் இருந்தும் மீண்டெழுவது என்பது இயலாத ஒன்றாகும். இந்தக் கடற்காடுகளின் அழிவும் தரையில் மழைக்காடுகளின் மறைவும் இப்போதுள்ள கதியிலேயே தொடருமாயின் 2100 ஆம் ஆண்டளவில் உலகின் உயிரினங்களில் பாதியளவு பூமியில் இருந்து நிரந்தரமாகவே காணாமற்போய்விட்டிருக்கும்.
காடுகள், கடல்கள், மலைகள், பாலைவனங்கள் என்று வாழிடச் சூழல்களைத் தனது 'ஒக்ரோபஸ் பிடிக்குள் கொண்டு வந்ததன் மூலம் இனங்களின் இருந்தலுக்குச் சாவு மணி அடித்த மனிதன், அவற்றைத் தானே சங்காரம் செய்யவும் தவறவில்லை. இதற்குப் பெரிதும் காட்டப்படும் உதாரணம் ஐக்கிய அமெரிக்காவின் பயணிப்புறாக்கள் (PassengerPigeons) ஆகும். வானில் கூட்டங்களாகப் பறக்க ஆரம்பித்தால் பல மணி நேரங்களுக்குப் பகலில் இருளைக் கொண்டு வந்துவிடுமளவுக்கு 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பயணிப் புறாக்கள் பல்கிப் பெருகி இருந்தன. ஆனால் அவற்றின் வாழிடங்களை அழித்ததோடு, தீவிர வேட்டையிலும் இறங்கியதில் 1896இல் இரண்டரை இலட்சமாகக் குறைந்து, 1914இல் காப்பகத்தில் இருந்த கடைசிப் புறாவும் உயிரைவிட்டது. புலி உறுப்பு மருந்துகள் நோய்களைக் குணமாக்குவதுடன் வீரியத்தையும் தருகின்றன என்ற நம்பிக்கை சீனாவில் இன்றளவும் நீடிக்கிறது. இதனால் புலிகளின் தாயகம் என்று நம்பப்படும் சீனாவின் கானகங்களில் இன்று 30 வரையிலான புலிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. புலியைத் தேசிய மிருகமாக்கிப் பெருமைப் படும் இந்தியாவில் புலிகள், காப்பகங்களிலேயே கொல்லப்பட்டு அவற்றின் உறுப்புகள் கடத்தப்படும் அவல நிலை உள்ளது. கொம்பு களுக்காக வேட்டையாடப்பட்டதில் காண்டாமிருகத்தின் ஐந்து இனங்களும் அழியும் நிலைக்கு வந்துள்ளன. தந்தங்களுக்காகக் கொன்று போட்டதில் ஆசிய, ஆபிரிக்க யானைகள் இரண்டுமே அழிவின் படுகுழிக்குள் தள்ளப்பட்டு வெகுகாலமாகி விட்டது. இவை ஒரு சில உதாரணங்கள்தாம். வாழிடங்களின் சீர்குலைவால் மறைந்த இனங்களுக்கு அடுத்தபடியாக மனிதனின் வேட்டைக்குப் பலியான இனங்கள்தான் அதிகம். கடந்த 400 ஆண்டுகளில் மறைந்த விலங்கினங் களில் 23 விழுக்காடு மனித வேட்டைக்கே இரையாகியுள்ளன.
மனிதனின் வேட்டைவெறி தரையோடு மட்டும் அடங்கிய பாடில்லை. ஆழ்கடல் வரையிலும் தாண்டவமாடுகிறது. உலகின் முதல் உயிரி கடலில் தோன்றியது என்ற அடிப்படையில் எமது நாடி
372
பொ.ஐங்கரநேசன்
நாளங்களில் கடல்நீர்தான் ஒடிக்கொண்டிருக்கிறது. ஆனால், உறவை மறந்தவர்களாகக் கடலையே கருவாடாக்க' எத்தனித்து வருகிறோம். கடலில் ஒர் அடிக்கும் குறைவான நீளமுடைய குள்ளச் சுறாதொடங்கி 50 அடி நீள திமிங்கிலச் சுறாவரை 350 சுறா இனங்கள் உள்ளன. காடுகளில் கோலோச்சும் சிங்கம் அல்லது புலியைப் போல கடலை ஆட்சி செய்பவை இவைதாம். கடல் உணவுச் சங்கிலியின் உச்சப் படியில் அமர்ந்திருந்து கடலின் உயிர்ப்பல்வகைமையின் சமநிலையில் பெரும் பங்களிப்புச் செய்து வருகின்றன. ஆனால், இது பற்றிய எந்தக் கரிசனையும் இல்லாது ஆண்டுதோறும் குறைந்தபட்சம் நூறு மில்லியன் சுறாக்களாவது கொல்லப்படுவதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இறைச்சிக்காக மாத்திரமன்றி, செட்டைகளில் இருந்து 'ரசம் செய்வதற்காகவும் சாகடிக்கப்படுகின்றன. உல்லாச உணவு விடுதி களில் ஒரு குவளை ரசம் 150 அமெரிக்க டொலர்கள் வரை விலை போவதால் கல்பகோஸ், கோஸ்ராறிக்கா, மெக்சிக்கோ, ஈக்குவடோர் போன்ற பல நாடுகளில் கடலோடிகள் செட்டைகளின் மீதே குறியாக இருக்கிறார்கள். செட்டைகளை வெட்டியெடுத்த பின்னர் சுறாக்களை உயிருடன் கடலில் வீசிவிட்டுவர, அவை நீந்த முடியாமலும் இரத்தப் பெருக்காலும் பரிதாபமாகப் பலியாகின்றன. சுறாக்கள் உணவுச் சங்கிலியின் உச்ச நுகரி என்பதால் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவை. அத்தோடு, இலட்சக்கணக்கான முட்டைகளை இட்டுப் பெருகும் மீன்களைப்போல அல்லாது பெரும்பாலான சுறாக்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை இரண்டு குட்டிகளையே ஈனுகின்றன. இதனால் மனிதனின் பெருமெடுப்பிலான வேட்டைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பல சுறா இனங்கள் அழிவபாயத்தை நெருங்கிவிட்டி ருப்பதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அது மாத்திரமல்ல, செய்மதி தொழில்நுட்பங்களின் வழிகாட்டுதல்களுடன் மேற்கொள்ளப் படும் மிதமிஞ்சிய மீன்பிடியால் வர்த்தகப் பெறுமதிமிக்கTuna, Cod, SWOrd fish, Martin போன்ற பாரிய மீன் இனங்களும் 90 விழுக்காடால் வீழ்ச்சியடைந்திருப்பது அறிய வந்துள்ளது.
மனிதன் உலகம் சுற்ற ஆரம்பித்தபோதே மலைகள், வனாந் தரங்கள், கடல்கள் என இயற்கை போட்டு வைத்திருக்கும் எல்லை களையும் தாண்டி உயிரினங்களை இடம் பெயர்க்க ஆரம்பித்து விட்டான். இவ்வாறு ஒரு சூழலின் தேவைகளையொட்டிப் பரிணா மித்த உயிரினங்களை அவை வேண்டப்படாத புதிய சூழலுக்கு இடம் மாற்றுவதும் உயிர்ப்பல்வகைமையை அழித்துவரும் பெருங்காரணிகளில்
373
Page 189
ஏழாவதுஉாழி
ஒன்றாக உள்ளது. புதிய சூழலில் இயற்கை எதிரிகள் இல்லாததால் கட்டற்றுப் பெருகும் அந்நிய இனங்கள் (Allen Species), கடைசியில் உள்ளூர் இனங்களையே காவுகொள்ள ஆரம்பித்து விடுகின்றன. டச்சுக்காரர்கள் 17ஆம் நூற்றாண்டில் மொறிசியஸ் தீவில் காலடி வைத்தபோது நாய், பூனை, பன்றி போன்ற அந்தத் தீவுக்குப் பரிச்சயமில்லாத பிராணிகளையும் கூட்டிச் சென்றனர். அதுவே, தீவின் தனித்துவமான அடையாளமாக வாழ்ந்து வந்த டோடோ பறவை இனத்துக்கு முடிவுரை எழுதியது. டோடோ (Dodo) சுமார் ஒரு மீற்றர் உயரமும் 20 கிலோ எடையும் உள்ள பறக்க முடியாத ஒரு பறவை. தீவில் இரைகெளவி விலங்குகள் இல்லாததால் பறக்கத் தெரியாத பறவையாகவே பரிணாமித்து விட்ட இதனை, வந்தேறி இரை கெளவிகள் எந்தச் சிரமமும் இன்றி இரையாடி முடித்தன. பசுபிக் கடலிலுள்ள குவாம் தீவைப் பாடாய்ப்படுத்துகின்ற மண்ணிற LDTuluntblastensib (Brown tree Snakes) இங்கு குறிப்பிடத்தகுந்தவை. இந்த மரப்பாம்புகளின் தாயகம் நியூகெனியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகும். இரண்டாம் உலகயுத்த காலப்பகுதியில் இராணுவத் தளபாடங்களுடன் சேர்ந்து இப்பாம்புகளிற் சிலவும் குவாம் தீவில் நுழைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. 10 அடி நீளம் வரையில் வளரக்கூடிய இந்தப் பெரிய பாம்புக்கு குவாம்தீவில் அதனை இரையாக்கக் கூடிய எதிரிகள் இல்லை. மாறாக, இரையாகப் பெருவாரியான பறவைகள் காத்திருந்தன. இதைத்தான் குருசந்திர யோகம் என்பார்கள் போலும். தீவே, பாம்புகளின் வயற்காடாகியது. ஒரு சதுரமைல் பரப்பளவில் 13,000 என்ற அடர்த்தியில் மரப்பாம்புகள் விளைந்ததாகக் கணக்கிட்டிருக் கிறார்கள். நச்சு மரப்பாம்புகளின் படையெடுப்பினால் குவாம் மக்கள் பட்டுவரும் அவதிகளுக்கும் அப்பால், அந்தத் தீவின் 11 சுதேசியப் பறவை இனங்களில் 8 இனங்கள் கூண்டோடு அழிந்து போய்விட்டன. இப்படி, உலகம் பூராவுமே மனிதன் திட்டமிட்டோ, தற்செயலாகவோ பரப்பிவரும் அந்நிய உயிரினங்களின் ஆக்கிரமிப்பால் உள்ளூரின் உயிர்ப்பல்வகைமை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.
இயற்கையின் பன்முகத்தன்மையைப் பசுமைப்புரட்சியும் பதம் பார்க்கிறது. மனிதன் தொன்று தொட்டுப் பயன்படுத்தி வந்த 7000 உணவுத்தாவரங்களுக்குப் பசுமைப் புரட்சியின் நாயகர்களான கோதுமை, சோளம், நெல் என்று மூன்று இனங்களுமாகச் சேர்ந்து ஒரம் போ சொல்லிவிட்டன. இந்த இனங்களிலேகூட இருந்த ரகங்கள் கைவிடப்பட்டுப் பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கிக் கொடுத்த
374
பொ.ஐங்கரநேசன்
கலப்பு இனங்கள், மரபணுமாற்றப் பயிர்கள் என்று ஒரே மாதிரியான மரபணு அமைப்பைக் கொண்ட இனங்களே உலகம் பூராவும் பயிராகின்றன. இலங்கையில் ஒரு காலத்தில் 2000 வகையான நெல் ரகங்கள் இருந்ததாகப் பதிவுகளில் அறியக்கிடக்கிறது. பூச்சிகள், பீடைகள், வறட்சி போன்றவற்றுக்கு எதிராக இயற்கை தேர்வு செய்து கொடுத்த இந்த மரபணு வளங்கள் வழக்கொழிய - விளைச்சலை மட்டுமே கருத்திற்கொண்ட வீரிய இனங்கள் பெருமளவில் வேளாண் வேதிகளை வேண்டி நிற்கின்றன. இந்த நச்சு இரசாயனங்களும் தம் பங்குக்கும் இனங்களின் உயிரைக் குடித்து வருகிறது. தோட்ட நிலங்களில் உள்ள பூச்சி, புழுக்கள் நஞ்சேறி இறக்க இயற்கையான பீடை கொல்லியாக நம் வீட்டுத் தோட்டங்களில் நடைபயின்று கொண்டிருந்த செண்பகப் பறவை இரை இல்லாமல் மாயமாக மறையத் தொடங்கியிருப்பது இதற்கு உதாரணம் ஆகும்.
உலகுக்கு உணவளிக்கவல்ல அட்சய பாத்திரமாக பன்னாட்டு நிறுவனங்கள் தற்போது மரபணுமாற்றிய உயிரினங்களைக் கையில் எடுத்திருக்கின்றன. உயிரித் தொழில்நுட்பத்தின் பிந்திய பிறப்பாக ஒர் இனத்தின் மரபணுத் தொகுதியினுள் பிறிதொரு இனத்தின் மரபணுக் கூறுகளைச் சேர்த்துப் பிறப்பிக்கப்படும் உயிரிகளே மரபணு மாற்றிய plu?fazair (Genetically Modified Organisms-GMO)sgguh (3)uugb605u5)aöt Ggsjayág ஆட்படாது மனிதனது தெரிவில் உருவாகும் இத்தகைய செயற்கை உயிரிகளாலும் இயற்கையின் பல்வகைமை கேள்விக்கு உள்ளாகியுள்ளது. எப்போதும் விதைகளுக்குத் தம்மிடம் கையேந்தும் வகையில் மலட்டு விதைகளை (Terminator Seeds), அல்லது வேளாண்வேதிகளில் தோய்ந் தாலன்றி சுயமாக முளைக்கத் தெரியாத விதைகளை (Traitor Seeds) உருவாக்குமாறு பன்னாட்டு நிறுவனங்கள் பயிர்களில் மரபணுக்களை மாற்றியமைத்து வருகின்றன. தமிழில், 'பன்றியுடன் சேரும் கன்றும் பவ்விதின்னும் என்னும் பழமொழி உண்டு. அதுபோல, இந்தத் தந்திரப் பயிர்களின் மகரந்தங்கள் அருகிலுள்ள நெருங்கிய தாவர இனங்களுடன் கலக்க நேரின் அவற்றின் விதைகளும் உயிர்ப்பை இழப்பது அறியப்பட்டுள்ளது. மரபணுக்கள் மாற்றப்பட்ட உணவுயிரிகள் உயிர்ப்பல்வகைமையின் மீது விடுத்திருக்கும் சவாலுக்கு சாமன் (Salmon) மீன்களும் ஒரு சாட்சி. சாதாரண சாமன் மீன்களின் முட்டைகளில் வளர்ச்சியைத் தூண்டுவிதமான மாற்றங்களைச் செய்து ஆறுமடங்குகள் வரை பெரிதாக வளரும் சாமன்கள் வடிவமைக்கப்படுகின்றன. கடலில் வளர்க்கப்படும் இடங்களிலிருந்து தப்பிச்செல்லும் இவை, உருவத்தில்
375
Page 190
ஏழாவதுஉஊழி
பெரிதாக இருப்பதால் சாதாரண சாமன் மீன்களுடன் கொஞ்சம் வல்லுற வாகவே இனக்கலப்புச் செய்கின்றன. இதில் சிறிய சாமன் இனங்கள் உருவாக்கும் எச்சங்கள் இனப்பெருக்கப் பருவத்தை அடையும் முன்பே பலியாகிவிடுகின்றன. இதனால், மரபணு மாற்றிய சாமன்களின் தொற்றுதல் உள்ள கடற்பகுதிகளில் இயற்கையினச் சாமன்கள் சில சந்ததிகளின் பின்னர் முற்றாகத்துடைக்கப்பட்டுவிடும் அபாயம் உள்ளது. இவ்வாறு வாழிடச்சூழல், இனங்கள், மரபணுக்கள் என்று உயிர்ப்பல்வகைமையின் எல்லாப் படிகளுமே மனிதனின் வலிய காலடிகளின் கீழ் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றன.
மனிதன் உயிர்ப்பல்வகைமையின் மீது தொடுத்திருக்கும் இந்தப் போரில் (வேறு எந்த வார்த்தைகளால் விளிப்பது?) கண் எதிரிலேயே இனங்கள் கரைவது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு இந்த ஊழியின் முடிவில் மனித விலங்கும் தப்பிக்கப் போவதில்லை என்பது கசப்பான உண்மையாகும். மனிதனின் உயிர் வாழ்தலுக்கான பிராணவாயு பெருமளவு கடலின் பல்வகைமை மிக்க அல்காக்களின் ஒளிச்சேர்க்கையின் போதே வெளிவிடப்படுகிறது. பூமியின் கால நிலையை, நீரியற் சுழற்சியின் போக்கைக் காடுகளே - குறிப்பாக உயிர்ப் பல்வகைமை மிக்க அமேசன் காடுகளே - தீர்மானிக்கின்றன. பல சமூகங்கள் இன்னும் 40 விழுக்காடு உணவுகளைக் காடுகளிலிருந்தே பெற்றுக் கொள்கின்றன. 80 விழுக்காடு சனத்தொகை தாவரங்களையும் விலங்குகளையும் அடிப்படையாகக் கொண்ட மருந்துகளையே தனது சுகவாழ்வுக்கு நம்பியிருக்கிறது. மொத்தத்தில் மனித நாகரிகமே உயிரினப்பல்வகைமை என்ற தூண்களின் மீதுதான் கட்டியெழுப்பப் பட்டுள்ளது.
1992 ஜூன் இல் பிறேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த புவி உச்சி மாநாட்டின்போது உயிரினப் பல்வகைமை குறித்த ஒப்பந்தம் (Convention on Biological Diversity) D (56 urtešs’ulu "Ligj. Duf60TÜ Lu6vadu605 மைகளைப் பாதுகாத்தல், உயிரினங்கள் அழிந்து விடாத வகையில் அவற்றைப் பயன்படுத்துதல் உயிரினப்பல்வகைமை தரும் நன்மைகளை நியாயமான முறையில் பகிர்ந்து அனுபவித்தல் ஆகிய மூன்றையும் இலக்குகளாகக் கொண்டு ஒப்பந்தம் அமைந்தது. மரபணு வள ஆதாரங்களைப் பயன்படுத்துதல், அதிலிருந்து உருவாகும் தொழில் நுட்ப அறிவுப் பரிமாற்றம், மரபணுக்களை மாற்றம் செய்து உண்டாக் கும் உயிர்ப் பொருள்களின் வணிகம் போன்றவை பற்றி ஒப்பந்தம் விரிவாகப் பேசுகிறது. வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்குப் போதிய
376
பொ. ஐங்கரநேசன்
தொழில் நுட்ப அறிவையும் அளித்து, நிதி உதவியும் செய்தால் ஒழிய ஏழை நாடுகள் உயிரினப் பல்வகைமையைப் பாதுகாக்க இயலாது என்பதையும் குறிப்பிடுகிறது. 1993 டிசம்பரில் அமுலுக்கு வந்த இந்த ஒப்பந்தத்தை இதுவரை 191 நாடுகள் கையொப்பம் இட்டு ஏற்றுறுதி செய்துள்ளன. ஆனால், சூழல் வெப்பமடைதலுக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் கியோட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட அடாவடித்தனமாக மறுத்துவரும் அமெரிக்கா, அது போன்றே இந்த ரியோ உடன்படிக்கையையும் நிராகரித்து வருகிறது. மரபணுமாற்ற உயிர்ப்பொருள் வணிகத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட ஆவணம் ஒன்றை 2000 ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி 130 நாடுகள் ஏற்றுக் கொண்டன. ஆனால் மரபணுமாற்ற உயிர்ப்பொருள்களை பெருமளவில் தயாரிக்கும் அமெரிக்கா இதிலிருந்தும் விலகிக் கொண்டது. ஒப்பந்தங்கள் உருவாகி இத்தனை ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் உலக அளவிலும் உள்ளூர் அளவிலும் அதற்குப் போதிய ஒத்துழைப்பின்றி உயிரினங்களின் அழிவு பேரவலமாகத் தொடர்கிறது என்பதே சுற்றுச் சூழலியலாளர் களினதும், உயிரியலாளர்களினதும் கவலையாக இருக்கிறது.
மண்ணுள் உறையும் பக்ரீறியாவிலிருந்து கடலில் மிதக்கும் இராட்சதத் திமிங்கிலங்கள் வரை, மனிதன் உட்பட இயற்கையின் பார்வையில் எல்லா இனங்களுமே சமமானவை. ஒவ்வொன்றும் தம்மளவில் முக்கியத்துவம் உடையவை. இதில் மனித இனம் மட்டும் தனது இருப்புக்காக எல்லா இனங்களையும் ஒரேயடியாகக் காவுகேட்டது என்பது இயற்கை நெறிகளை மட்டுமல்லாது அறநெறிகளையும் மீறிய ஒன்றாகும். "பூலோகத்தில் அதர்மங்கள் தலை தூக்கும்போது நெஞ்சு பொறுக்க முடியாமல் பூமாதேவி வெடிப்பாள் பிரளயம் பிரிட்டு உயிரினங்களைக் காவு கொள்ளும்' - என்று நமது புராணங்கள் சொல்லுவதை நம்பித்தான் ஆகவேண்டும் போல உள்ளது.
377
Page 191
36
கோழிகளைக் கொல்ல
இராணுவம்
"இயற்கையை ஆதிக்கம் செய்யும்போது முதல் தலைமுறையில் எமக்கு ஆதாயம் இருப்பது போலவே தோன்றும். ஆனால், அடுத்தடுத்த காலங்களில் இயற்கையே எமக்கு எதிராகத் திரும்பும்."
- ஏங்கெல்ஸ்
மனிதர்கள் இயற்கையை வெற்றிகொண்டுவிட்டதாகப் புளகாங்கிதம் கொள்ளும்போதெல்லாம், இயற்கையை விட மேலானது எதுவும் இல்லை என்ற உண்மை துரத்தி வந்து பிடரியை அறையவே செய்கிறது. இயற்கையில் சுதந்திரமாக மேய்ந்து திரிந்த ஆடு, மாடு, பன்றி, கோழி, வாத்து என எல்லாவற்றையும் கூண்டில் சிறை வைத்து, எள்ளளவு இடத்திலேயே கொள்ளை இலாபம் பெற முனையும் மனிதனின் தொழிற்சாலை முறையிலான விலங்கு வேளாண்மையிலும் இப்போது அதுதான் நடந்தேறியிருக்கிறது. பசுக்கிறுக்கு, சார்ஸ் என்று விலங்குப் பண்ணைகளில் இருந்து விஸ்வரூபம் பெற்ற நோய்களின் நீட்சியாக இன்று பறவைக் காய்ச்சல் உலகைக் கதிகலங்க அடித்துக் கொண்டிருக்கிறது.
ஏவியன் இன்ஃபுளூஎன்சா அல்லது "பறவை ஃப்ளூ (Avian influenza or Bird Flu) என அழைக்கப்படும் பறவைக் காய்ச்சல் 2003ஆம் ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் தென்கொரியாவின் கோழிகளில் அடையாளம் காணப்பட்டது. முழுமையாக ஐந்து ஆண்டுகள் முடி வதற்குள்ளாகவே தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, லாவோஸ், இந்தோனேசியா, சீனா, ஜப்பான், தாய்வான், பாகிஸ்தான் கஸகிஸ்தான், மலேஷியா, ரஷ்யா, மொங்கோலியா, துருக்கி, இந்தியா, இங்கிலாந்து, குவைத், நைஜீரியா, கிறீஸ், ஜேர்மனி என்று வரிசையாக, பூமிப்பந்தில் பல்வேறு நாடுகளையும் பீடித்துள்ளது. இதுவரையில் கோழிகளில் 411 பேர் வரையில் தொற்றுதலுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் 256 பேர் பலியாகியுள்ளனர். ஃப்ளூவின் மனிதவேட்டை இத்தோடு
378
பொ. ஐங்கரநேசன்
ஒய்ந்துவிடும் போலத் தெரியவில்லை. 150 மில்லியன் பேர் வரையில் காவு கொள்ளும் உலகப் பெரும் கொள்ளை நோயாக விரைவில் உருவெடுக்கும் அபாயம் இருப்பதாக அண்மையில் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது.
பறவைக்காய்ச்சல் 'A' வகை இன்ஃபுளுஎன்சா வைரஸ் கிருமிகளின் தாக்குதலால் ஏற்படுகின்றது. இது ஒற்றைக் கிருமியல்ல; ஆளணிகளுடன் கூடிய ஒரு பெரிய படை. அவற்றில் இருக்கக்கூடிய இரண்டு புரதங்களின் (Hemagglutinin, Neuraminidase) அடிப்படையில் HA, NA என்று இரண்டு உபவகைகளாக நுண்ணுயிரியல் விஞ்ஞானிகள் அணி பிரித்திருக்கிறார்கள். இந்த ஒவ்வொரு அணியிலுமே மேலும் வித்தியாசம் வித்தியாசமான வைரசுகள் உண்டு. HAயில் 16 வகைகளும் NAயில் 9 வகைகளும் இருப்பதாகக் கணக்கெடுத்து வைத்திருக் கிறார்கள். அத்தோடு, இரண்டு புரதங்களையுமே தம்மகத்தே கொண்ட வைரசுகளையும் அடையாளம் கண்டு H5NI, H9N2, H7N7 என்று பெயர் சூட்டியுள்ளனர். இவை அத்தனையுமே பறவைகளைத் தாக்கக் கூடியவை. இவற்றில் இப்போது களத்தில் இறங்கியிருப்பது உள்ளதில் உக்கிரமான, அதிவேகமாகப் பரவக் கூடிய H5N1 வகை வைரஸ் ஆகும். H5N1 வைரசுகள் கோழிகளில் தொற்றிக் கொண்டதும் சமிபாட்டு உறுப்புகள், சுவாச அமைப்புகள், நரம்புமண்டலங்களைக் குறிவைத்துத் தாக்க ஆரம்பிக்கின்றன. இதனால் முதலில், கோழிகள் தீனி பொறுக்குவதில் நாட்டம் இல்லாமலாகி, முட்டைகள் இடுவதைக் குறைத்துக் கொள்கின்றது. இறக்கைகளை முள்ளம்பன்றிகளாகச் சிலிர்த்துக் கொள்ளும். இருமலும், தும்மலும், வயிற்றோட்டமும் சேர்ந்து கொள்ள, நோயின் குணங்குறிகள் தோன்றிய அதே நாளிலேலேயே அநேகமாக மரணித்தும் விடுகின்றன.
நோய்த்த கோழிகளின் உமிழ் நீர், மூக்கு நீர், எச்சம் போன்றவற்றி லிருந்து மட்டுமல்ல, அவை இடும் முட்டைகளின் உள்ள்ேயும் வெளியேயும் இருந்தும்கூட வைரசுகள் படைதிரளுகின்றன. ஒரு கிராம் அளவு கோழிஎருவில் 10 இலட்சம் பறவைகளைத் தாக்கக் கூடிய அளவு வைரஸ் கிருமிகள் செறிந்து காணப்படுகின்றன. கோழியின் இறப்பின் பின்னருங்கூட எருவில் 105 நாட்கள் வரையில் இந்த வைரசுகள் கெரில்லாக்களாகக் கரைந்துறைந்து வீரியம் கொள்ளுவதும் நிரூபணமாகியுள்ளது.
கோழிகளில் இருந்து H5N1 வைரசுகள் நேரடியாகத் தொற்றியதில் இதுவரை பலர் மரணித்திருந்தாலும், கோழிகளுக்கிடையே பரவும் அதே
379
Page 192
ஏழாவது ஊழி
வேகத்தில் இந்த வைரசுகளால் மனிதர்களில் இருந்து மனிதர்களுக்குப் பரவ முடியாது என்பது ஆறுதலான செய்தி. ஆனால், இதையிட்டு அதிகம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுவதற்கு இல்லை. மனிதர்களைச் சாதாரண ஃப்ளுக்காய்ச்சல் வைரசுகள் அடிக்கடி தொந்தரவு செய்து வருகின்றன. இந்த வைரசுகளிலும் H1N1, H1N2, H3N2 என்று மூன்று வகைகள் உண்டு. இவற்றின் மரபுக் கூறுகளிலும் கணிசமானபங்கு பறவை ஃப்ளூவைரசுகளில் இருந்து வந்து சேர்ந்ததுதான். இந்தப் பின்னணியில், மனிதர்களை இலகுவில் பற்றிக் கொள்ளும் சாதா மனித ஃப்ளூக் காய்ச்சலும் பறவை ஃப்ளூவும் ஒரே நேரத்தில் ஒரு மனிதனைத் தாக்க நேரிடின் இரண்டு வகை வைரசுகளின் மரபணுக்களும் ஒருங் கிணைந்து புதியதொரு உப வைரசாக விகாரம் பெறும் அபாயம் இருப்ப தாக உலக சுகாதார நிறுவனம் கவலை கொண்டுள்ளது. அப்படி நிகழின், அதற்குப் பிறகு மனிதர்களிடையே ஃப்ளூ காட்டுத் தீயாகப் பரவும் பெரும் வேகத்தைக் கட்டுப்படுத்துவது என்பது இயலாத ஒன்றாகிவிடும்.
உலக சுகாதார நிறுவனம் ஊதியிருக்கும் இந்த அபாயச்சங்கை ஆமோதித்து நுண்ணுயிரியல் துறை வல்லுநர்கள் பலரும் மறு ஊதுதல் செய்திருக்கிறார்கள். அமெரிக்காவின் ஆயுதப்படைக் கல்லூரியின் மூலக்கூற்றுப் பீடையியல் துறையின் தலைமை விஞ்ஞானி டாக்டர் ஜெப்ரி ரோபென்பேகர் (Dr. JeferyTaubenberger), 1918 ஆம் ஆண்டின் ஸ்பானிஷ் ஃப்ளூ நோய்க்கு இதுபோன்று பறவை ஃப்ளூ - மனித ஃப்ளூ இணைப்புப் பெற்றெடுத்த புதிய வைரஸ்தான் காரணம் எனத் தெரிவித்திருக்கிறார். ஸ்பானிஷ் ஃப்ளூவை வரலாறு அவ்வளவு சுலபத் தில் மறந்து விடாது. முதலாவது உலகயுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த காலப்பகுதி அது. கப்பல்களிலும், பாசறைகளிலும், பதுங்கு குழிகளிலும், மருத்துவமனைகளிலும் மில்லியன்கணக்கான துருப்புகள் நெருக்கிய டித்துக் கொண்டிருந்த சூழ்நிலை புதிய ஃப்ளூ வைரசுவுக்கு வாய்ப் பாகிப் போனது. பஞ்சில் இட்ட தீயாக வெகு சுலபத்தில் சுமார் 50 மில்லி யன் பேரைத் தின்று தீர்த்ததன் பின்னரே ஸ்பானிஷ் ஃப்ளூ பசியாறியது.
கடந்த காலங்களில் மனிதர்களைப் பெருமளவில் அழித்த ஃப்ளூ காய்ச்சல்களின் கால அட்டவணையும் பல விஞ்ஞானிகளில் பதற்றத் தைத் தொற்றவைத்துள்ளது. அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களுக்கான தேசிய ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோனி எஸ், ஃபெளசி (Dr. Anthony S, Fauc) அடுத்த ஃப்ளூ வின் முற்றுகைக்கு ஆளாக வேண்டிய காலகட்டத்துக்கு மனிதர்கள் மறுபடியும் வந்திருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளார். கடந்த 20 ஆம்
38O
Page 193
ஏழாவதுஉளழி
நூற்றாண்டில் ஸ்பானிஷ் ஃப்ளூ, ஏசியன் ஃப்ளூ, ஹொங்கொங் ஃப்ளூ என்று மூன்று ஃப்ளூக்கள் மனுக்குலத்தைக் காய்ச்சி எடுத்திருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் சராசரியாக 30 ஆண்டு கால இடைவெளியில் ஏற்பட்டமைதான் விஞ்ஞானிகளைக் கலவரப்படுத்தி யிருக்கிறது. இந்த ஒவ்வொரு 30 ஆண்டுகால ஃப்ளூ அற்ற உலகுக்கும் அதற்கு முந்திய ஃப்ளூ தொற்றுதலில் மனிதஉடல் உருவாக்கிக் கொண்ட ஃப்ளூ எதிர்ப்பு ஆற்றல்தான் காரணம் என நம்பப்படுகிறது. கடைசியாக ஏற்பட்ட ஹொங்கொங் ஃப்ளூ 1968இல் மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைப் பறித்துவிட்டுப் பின்வாங்கியது. 40 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில், ஃப்ளூவுக்கு எதிராக மனிதர்கள் பெற்றுக் கொண்ட நிர்ப்பீடனம் (Immunity) காலாவதியாகியிருக்கும் என்ற கணிப்பில் ஃப்ளூவின் அடுத்த சுற்றுப் பிரளயத்தை இவர்கள் விரைவில் எதிர்பார்க்கிறார்கள்.
பறவை ஃப்ளூ வைரசுகளில் இருந்து மனித ஃப்ளூ வைரஸ் விகாரிப்பதற்கும், அவற்றை எதிர்கொள்ள மனிதர்கள் திராணியற்ற நிலையில் மனித ஃப்ளூ பெருங்கொள்ளை நோயாக வியாபிப்பதற்கும் சாத்தியங்கள் கதவருகில் என்ற எச்சரிக்கை உலக நாடுகளைப் பீதியுள் ஆழ்த்தியுள்ளது. ஏறத்தாழ எல்லா நாடுகளுமே ஃப்ளூவின் முற்றுகையை முறியடிப்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகளில் குதித்திருக்கின்றன. நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தைக் கத்ரீனா புரட்டிப் போட்டபோது வாளாவிருந்ததாக விமர்சனங்களுக்கு ஆளான அமெரிக்கா, ஃப்ளூ விவகாரத்தைத் தள்ளிவிடத் தயாராக இல்லை. தடுப்பு மருந்து ஆய்வுப் பணிகளை மிக வேகமாக முடுக்கி விட்டுள்ளது. ஃப்ளூ நோய்க்குச் சந்தையில் இருக்கும் ரமிஃப்ளூ (Tamfu) என்னும் மருந்து சாமானியர் களின் வாய்க்கு எட்டாத அளவுக்கு உச்ச விலை போகின்றது. அமெரிக்காவில் இம்மருந்தை ஒரு தடவை பயன்படுத்த ஆகும் செலவு 60 டொலர்கள் ஆகும். இதற்கான காப்புரிமையை சுவிற்சர்லாந்தின் பகாசுர மருந்து உற்பத்தி நிறுவனமான 'ரோக் (Roche) தன்வசம் வைத் திருக்கின்றது. இந்நிலையில் காப்புரிமைப் பிரச்சினை களையெல்லாம் கண்டுகொள்ளாமல், மில்லியன் கணக்கான இந்தியர்களின் உயிர்களைக்
இந்தியாவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான சிப்லா அறிவித் திருக்கிறது. பறவை நோய்த் தீவிரம் மிக்க தென்கிழக்காசியாவின் களநிலையை ஆராயும் பொருட்டு பல் தேசிய மருத்துவ வல்லுநர்கள் குழு அங்கு முகாமிட்டுள்ளது. தொற்றுள்ள நாடுகளில் மேலும்
382
பொ. ஐங்கரநேசன்
தொற்றுதலைத் தவிர்க்கும் பொருட்டு போர்க்கால வேகத்தில் இராணுவம் கோழிகளை வேட்டையாடி வருகிறது. பல நாடுகள் கறிக்கோழிகள், முட்டைகள், பறவை இறக்கைகளின் இறக்குமதிக்குத் தடைகளை விதித்துள்ளன.
நோய்தாக்கிய நாடுகளின் கோழிகளுக்குக் கதவடைப்புச் செய் வதன்மூலம் மற்றைய நாடுகள் இந்த அபாய வளையத்தில் இருந்து தப்பித்துவிடும் என்பதும் நிச்சயமானது அல்ல. ஏவியின் ஃப்ளூ வைரசுகள் கோழிகளை மட்டும் அல்லாமல் ஏறத்தாழ எல்லாப் பறவை களையுமே பீடிக்கக்கூடியவை. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட வைரஸ் மாதிரிகளைத் தாவரங்களிலும், விலங்குகளிலும் இருந்து சேகரித்து ஆராய்ந்ததில் ஃப்ளூ வைரசுகளின் நதிமூலம் வாத்துகளும் அவற்றின் மூதாதையர்களும்தான் என்பது அறியவந்துள்ளது. அதுவும், தங்கள் நாடுகளில் குளிர் விறைக்கத் தொடங்கும்போது வலசை புறப்படும் (Migration) நீர்ப் பறவைகளில் இக்கிருமிகளின் வீரியம்குறைந்த சாது" ரகங்கள் இயல்பாகவே வாசம் செய்கின்றன. ஆண்டுதோறும் நாடு விட்டு நாடு பெயரும் இந்தப் பறவைகள் தங்கள் நெடும் பயணத்தில் தங்கிச்செல்லும் இடங்களிலெல்லாம் எதிர்ப்படும் உள்ளூர்ப்பறவை களிடம் வைரசுகளைப் பரிமாறிச் செல்கின்றன. அப்படி, வலசைப் பறவைகளின் வீரியம் குறைந்த வைரசுகள் பண்ணைப் பறவைகளைப் போய் அடைந்ததும், அங்கு விகாரம் பெற்றுப் போட்டுத் தாக்கத் தொடங்கு வதாகப் பிரித்தானியாவைச் சேர்ந்த பறவை ஃப்ளூ நிபுணர், டாக்டர் டெனிஸ் அலெக்ஸாண்டர் (Dr. Dennis Alexander) கண்டறிந்துள்ளார்.
வலசைப்பறவைகள் சாதுக் கிருமிகளை விதைப்பதோடு மட்டு மல்லாமல், பண்ணைப் பறவைகளிடம் இருந்து வீரியம் மிக்க வைரசு களை வாங்கி விநியோகிப்பதற்கும் சாத்தியம் இருப்பதாக ஆய்வாளர் கள் கவலை கொண்டுள்ளனர். வலசைபோகும் பறவைகளின் இடைத் தங்ககமாக நிலவும் துருக்கியின் மன்யாஸ் மாவட்டத்திலுள்ள ஒரு பண்ணையில் 2005 ஒக்ரோபர் மாதத்தின் முதல் வாரத்தில் பறவை ஃப்ளூ தாக்கி 1870 வான்கோழிகள் கொத்துக் கொத்தாக செத்து விழுந்தமை குறிப்பிடத்தக்கது.
ஃப்ளூ வைரசுகளின் உறைவிடங்களாக விளங்கும் வலசைப் பறவைகள், வைரசுக்களுக்குத் தம்மளவில் எதிர்ப்பைக் கொண்டிருப்ப தாகவே இதுவரை நம்பப்பட்டது. அந்த நம்பிக்கையை மீள்பரிசீலனை செய்யும் தருணமும் இப்போது வந்திருக்கிறது. 2005 மே மாதத்தில் மத்திய சீனாவின் கின்ஹாய் (Qinha) ஏரியில் ஆயிரத்துக்கும் அதிகமான
383
Page 194
ஏழாவது ஊழி
வலசைப் பறவைகள் H5NI வைரசுகளால் தாக்குண்டு இறந்து போயிருந்தன. தொடர்ந்து ரஷியாவின் சைபீரியாவிலும், மொங்கோலி யாவிலும் ஏரிகளில் காட்டுத் தாராக்கள், வாத்துகள் ஃப்ளூகாய்ச்சல் கண்டு மரணித்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அபாய அறிவிப்பாக எடுத்துக் கொண்ட விஞ்ஞானிகள், இந்த நாடுகளிலிருந்து பயணப்படும் பறவைகளின் வலசைப் பாதையில் இருக்கும் தென்கிழக்கு ஆசியா தொடங்கி ஐரோப்பியா வரையுள்ள நாடுகளைத் தொற்றுதல் குறித்து எச்சரித்திருக்கின்றனர். இலங்கையிலும் சைபீரீயன் தாராக்கள் போன்ற பிற நாட்டுப் பறவைகள் தேன்நிலவுக்கு வந்து செல்லும் சுண்டிக்குளம், நாகர்கோவில் கண்டற்காடுகள் என்று பல இயற்கைச் சரணாலயங்கள் இருப்பது கவனம் கொள்ளத்தக்கது.
கொடிய H5N வைரசுகளின் தொற்றுதலுக்கு ஆளான வலசைப் பறவைகள் அதிக நாட்களுக்கு உயிர்வாழ முடியாதபோது அவற்றால் எவ்வாறு பெருந்தொலைவுக்கு வைரசுகளைப் பரப்ப முடியும் என்று கேள்வி எழுப்பும் பறவையிலாளர்களும் உள்ளனர். ஃப்ளூவை நாடு விட்டு நாடு தூவும் காரணிகளில் வலசைப் பறவைகளின் பங்கு குறைவு என்று சொல்லும் இவர்கள் பறவைகளின் சட்டவிரோத வாணிபத் தையே பெரிதும் குற்றம் சுமத்துகின்றனர். இன்று நோய் வலயமாக விளங்கும் தென்கிழக்காசியாவில், பண்ணைப் பறவைகளின் கடத்தல் வியாபாரம் கொடிகட்டிப் பறந்தமையையும் மறுப்பதற்கில்லை. ஆனால், வலசைப்பறவைகள் வில்லன்களா அல்லது அப்பாவிகளா என்பதைச் சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்க நாடுகள் தயாராக இல்லை. ஐரோப்பிய ஒன்றியம் வலசைப் பறவைகளைத் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியா, வலசைப்பறவைகள் வந்து கூடுகட்டிக் குடும்பம் நடத்தும் ஏரிகள், சரணாலயங்களுக்கு அருகே உள்ள பண்ணைகளில் உள்ள கோழிகளின் சுரப்புகளைத் தொடர்ச்சியாக ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறது.
கோழி ஃப்ளூ உலகுக்கு ஒன்றும் புதியது அல்ல. முதன்முறையாக 1878 ஆம் ஆண்டளவில் கோழி பிளேக் என்ற பெயரில் இத்தாலியில் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் 1924-25 ஆண்டுகளிலும் 1929 ஆம் ஆண்டிலும் இந்நோய் அமெரிக்காவில் பாதிப்பை ஏற்படுத்தியது. மீண்டும் 1983-84இல் அமெரிக்காவில் தலைகாட்டியது. அப்போது ஃப்ளூ, பெனிசில்வேனியா மாநிலத்துக்குள் மட்டுமே அடங்கியிருந்தபோதும் 65 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள 70 இலட்சம் பறவைகளின் அழிவுக்குக் காரணமானது. இதுவரையில்
384
பொ. ஐங்கரநேசன்
பறவை ஃப்ளூ வைரசுகள் கோழிகளுக்கு மட்டுமே சாத்தான்கள் என்றுதான் எல்லோரும் நம்பியிருந்தனர். ஆனால், 1997 ஆம் ஆண்டு ஹொங்கொங்கைத் தாக்கியபோது - பரவுகையைத் தடுப்பதற்காக 1.4 மில்லியனுக்கும் மேலான கோழிகளைக் கொல்ல வைத்ததுடன் வரலாற்றில் முதற்தடவையாக ஆறு பேரின் உயிர்களையும் சேர்த்து எடுத்தது. கோழிகளையும் தாண்டி மனிதர்களில் கை வைத்த இந்தச் சம்பவத்தின் பின்னர்தான் கோழிகளிலிருந்து மனிதர்களுக்கும் ஃப்ளூ பாயும் என்ற கசப்பான உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
இப்போது வழமை போலவே ஆசியாவிலிருந்து பறவைக் காய்ச்சல், தனது அடுத்த சுற்றை ஆரம்பித்து முழு உலகையும் மிரட்டிக் கொண்டிருக்கிறது. அதனை அடக்குவதற்கு ஆரோக்கியமான கோழிகளையும் மனிதநேயமற்ற முறையில் காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லுவதைத் தவிர வேறு தடுப்புகள் இல்லாத நிலையே நீடிக்கிறது. இதுவரையில் ஃப்ளூ வைரஸ் தொற்றுவதை முன்கூட்டியே தடுப்பதற்கான வெற்றிகரமான தடுப்புமருந்துகள் கண்டறியப்பட வில்லை. ஓர் ஆண்டில் H5NI வகை வைரசுவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை அடுத்த ஆண்டில் அதே வைரசுக்கு எதிராகப் பயன்படுத்த முடியாத அளவுக்கு வைரஸ் கிருமிகள் விரைவாகவே தமது அமைப்பில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்களுக்கு ஆளாகின்றன. மாற்றத்துக்குள்ளான புதிய வைரசுக்கு எதிரான மருந்துகளைக் கண்டறியும் முயற்சியில் முன்னணி மருந்து நிறுவனங்கள் இப்போது முழு மூச்சாக ஈடுபட்டு வருகின்றன. மாற்றத்துக்கு ஆளான வைரஸ், மேலும் மாற்றங்களுக்கு ஆளாகாத வரைக்குமே இந்தக் கண்டுபிடிப்புகளின் பயன்களும் சாத்தியமாகும்.
தொன்றுதொட்டு ஒரு பண்பாடாகவே நிலவிவந்த பிராணி வளர்ப்பும், பறவை வளர்ப்பும் இன்று உற்பத்தி எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொண்ட கைத்தொழில் வேளாண் வர்த்தகமாக மாற்றம் கண்டிருக்கிறது. கோழிகளை அசைய இடமில்லாமல், சுகாதார மற்ற சூழலில் நிறுத்தி வைத்து, மருந்துகளாலும் ஓமோன்களினாலும் ஒம்புகின்ற உயிர்நெறி பிறழ்ந்த தசை உற்பத்தித் தொழிற்சாலைகளே நோய்க் கிருமிகளுக்கான பெருக்கிடங்களாக விளங்குகின்றன. இதனை மட்டும் வசதியாக மறந்துவிட்டு, கோழிகள் தாக்க ஆரம்பிக்கும்போது அதனை நொந்துகொள்வதால் என்ன பயன்?
385
Page 195
37
seIOOF6JLDIT?...oOof6JLDIT?
"செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணா உயிரின் தலைப்பிரிந்த ஊன்"
- திருக்குறள் (புலால் மறுத்தல் 258)
ஒரு பிடி உணவு தன்னும் 'மச்சம் இல்லாமல் உள் இறங்காது என்று சொல்பவர்களுக்குப் போதாத காலம் போலும். அண்மைக் காலமாகப் பண்ணை விலங்குகளில் இருந்து விஸ்வரூபம் பெற்றுவரும் பறவைக்காய்ச்சல் பசுக்கிறுக்குப் போன்ற நோய்கள் தீவிர ஊன்விரும்பி களான இவர்களை இலைதழைகளை உண்ணவைத்திருக்கிறது. இந்தப் பந்திமாற்றம் 1990களில் மேற்குலகின் பசுக்களைக் கிறுக்குப் பீடித்த தோடு ஆரம்பமாகியது. அக்காலப் பகுதியில் ஜேர்மனியில் 3 மில்லியன் களுக்கும் அதிகமானவர்கள் அசைவத்தில் இருந்து சைவத்துக்குத் தாவியுள்ளனர். இத்தாலியில் ஏறத்தாழ ஒரு மில்லியன் பேர் இப்படிச் சைவ உணவுக்குத் திரும்பினர். இந்த எண்ணிக்கைகள் நிலையானது அல்லவென்றாலும் இவர்களிற் கணிசமான தொகையினர் நிரந்தர மாகவே அசைவ உணவுகளில் இருந்து விடுபட்டுள்ளனர்.
உண்பவர்கள் மாத்திரமல்ல; ஊன் உற்பத்தியாளர்களின் நிலையும் இறங்குமுகம்தான். நோய் அறியப்படும் போதெல்லாம் அண்டை நாடுகள் உஷாராகி பண்ணை விலங்குகள் தொடர்பான அனைத்து இறக்குமதிகளுக்கும் தடைவிதித்து விடுகின்றன. இதனால் உள்ளூர்ச் சந்தையில் மட்டுமல்லாது உலகச் சந்தையிலும் விற்பனையில் பாரிய சரிவு ஏற்படுகிறது. 90களில் பிரித்தானியாவில் ஏற்பட்ட பசுக்கிறுக்கு பிரித்தானியாவின் பண்ணை வருவாயில் 90 விழுக்காட்டைப் பட்டுப் போகச் செய்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர நோய் வெளிக்கிளம்பும் ஒவ்வொரு தடவையும் மனிதர்களுக்குத் தாவிவிடும் என்ற பீதியில் ஆரோக்கியமான விலங்குகள் எல்லாமே நஞ்சூட்டியும் மின்சாரம் பாய்ச்சியும் ஈவிரக்கமற்றுக் கொன்று குவிக்கப்படுகின்றன. 2006 பெப்ரவரியில் மகாராஷ்டிராவில் கோழிப்பண்ணை அதிபர் ஒருவர் பறவைக் காய்ச்சலுக்குப் பலியானதாக வெளியான தகவலைத் தொடந்து மகாராஷ்டிராவில் மட்டுமே 8 இலட்சம் கோழிகள் உயிருடன்
386
பொ.ஐங்கரநேசன்
புதைக்கப்பட்டன. எதிர்காலத்தில் இந்த நோய்கள் மீளவும் தாக்காது என்பதற்கோ ஏதாவது ஒரு புதியகிருமி புதிய நோய் ஒன்றைக் கிறுக்கிவிட்டுச் செல்லாது என்பதற்கோ எந்த உத்தரவாதமும் இல்லை. இவை போன்ற இழப்புகளை இனி மேலும் தாங்க இயலாத தொழில்முறைப் பண்ணையாளர்கள், தமது பண்ணைகளுக்குக் கதவடைப்புச் செய்வது தவிர்க்க முடியாததாக ஆகிவருகிறது.
இந்த நோய்கள் அரசியல் தளத்தில் இருந்தும் அசைவ உணவு முறைக்கு நெருக்குதல்களைத் தந்து வருகின்றன. மேற்கு நாடுகளில் உள்ள பண்ணைகள் பெரிதும் அரசின் மானியங்களிலேயே கொழுத்து வளர்ந்தவை. சமீபத்திய நோய்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வில் வலுப்பெற்றுவரும் பசுமை அரசியல் இந்த நிதி ஊட்டத்துக்குக் குறுக்காக நிற்கிறது. குறிப்பாக பசுக்கிறுக்கு நோயைத் தொடந்து ஜேர்மன், இத்தாலி, டென்மார்க் அரசுகள் நியமித்த வேளாண் அமைச்சர்கள் யாவருமே பசுமைக் கட்சிகளைச் சார்ந்தவர்கள். இவர்கள் அரசு அளித்துவரும் மானியங்களை நிறுத்துவதோடு பாரிய தொழில் முறைப் பண்ணைகளுக்கு முடிவுகட்டப் போவதாகவும் அறிவித்திருக் கிறார்கள். இப்படி, விலங்குப் பண்ணைகளில் விளையும் நோய்கள் சமூக - பொருளாதார - அரசியல் தளங்களில் ஏற்படுத்தும் அதிர்வுகள் மும்முனைத்தாக்குதல்களாக அசைவப்பிரியர்களை சைவ உணவுகளை நோக்கி வலுக்கட்டாயமாகத் தள்ளி வருகின்றன.
VK. காலத்துக்குக் காலம் பூதாகரமாகக் கிளம்பும் பறவைக்காய்ச்சல் (Birds flu), LigiSoig (MadCOW), GSITLDruf (Foot and Mouth Disease) Gustairp நோய்களைவிட மனிதர்களைத் தாவர உணவுகளை நோக்கி இழுக்கும் நெருக்கடிச் சுழல் ஒன்றும் கண்ணுக்குத் தெரியாமல் மையம் கொண்டுள்ளது. பெருகிவரும் சனத்தொகைக்கு உணவிடுவதற்கு ஆடு - மாடு - பன்றிப் பண்ணைகள், இறால் - மீன் வளர்ப்புகள் என அதிகரித் துள்ள அசைவ உணவு உற்பத்திக்கு ஆகும் செலவே இந்த நெருக்கடிச் சுழலை உருவாக்கிவிட்டிருக்கிறது. இங்கு, செலவு என்பது பணம் சம்பந்தப்பட்டது அல்ல; மாறாக இயற்கைச் சமநிலை, இயற்கை வளம், மனித உடல் நலம் சம்பந்தப்பட்டது ஆகும்.
மனிதன் பாலுக்காகவும் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் கால்நடைகளையும் பறவைகளையும் மண்ணுடனான பிணைப்பு அறு படாமல் வளர்த்த காலம் ஒன்றிருந்தது. அப்போது தோட்டவெளிகளில் அவை சுதந்திரமாக மேயவிடப்பட்டன. புல்லை வெட்டவோ, கனிய உரங்களுக்கோ தேவை இல்லாதவாறு அவை முன்னிருந்து புற்களைக்
387
Page 196
ஏழாவது ஊழி
களைந்து பின்னிருந்து எருவைப் பரப்பின. ஆனால் இன்று நாம் வளர்த்து வருபவை இயற்கையின் தேவை ஒட்டிப் பரிணாமித்தவையோ அல்லது இயற்கைச் சூழலில் வளர்பவையோ அல்ல. மனிதன் தன்னுடைய உணவுத்தேவைகளுக்காக சதையை மட்டுமே கருத்தில் கொண்டு கலப்பு இனப்பெருக்கம் செய்தவை. சூரிய ஒளிபுகாத 'கொங்கிறீற் கூண்டுகளில் அடைத்து வளர்க்கப்படுபவை. ஆதலால் மனிதன் தனக்கான தானியங்களோடு இவற்றுக்கான தீவனங்களையும் சேர்த்தே சாகுபடி செய்ய வேண்டியுள்ளது. பிரச்சினை இங்கேதான் ஆரம்பமாகிறது.
உலகில் அறுவடையாகும் தானியங்களில் ஏறத்தாழப் பாதியளவு பண்ணை விலங்குகளுக்கெனவே விளைவிக்கப்படுகிறது. இதனைப் பயிரிடுவதற்குப் பெரும் பிரதேசம் வேண்டியுள்ளது. பூமியின் நிலப்பரப்பில் 29 விழுக்காடு அளவு இதற்குச் செலவாகிறது. பண்ணை விலங்குகளுக்கான நிலப்பயன்பாடு ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிகம். அந்நாடுகளின் விவசாய நிலத்தின் முக்கால் பங்கு பண்ணைத் தீவனங்களுக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ளது. தவிரவும் ஐரோப்பிய கால்நடைகளுக்கென்றே தென்அமெரிக்கா, தாய்லாந்து போன்ற மூன்றாம் உலக நாடுகளிலும் பல மில்லியன் ஏக்கர்கள் பரப்பளவில் சோயா, மரவள்ளிச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. விலங்கு களுக்கு உணவிடும் நிலங்களுக்கான தேடுதலில் துகிலுரியப்படுவது காடுகள்தான். உலகின் மழைக்காட்டுவளம் தீய்ந்து போவதில் வெட்டுமரங்களுக்கு அடுத்தபடியாக அசைவப் போசணை முறையின் கைங்கரியமே அதிகளவுக்கு உள்ளது. மாட்டிறைச்சி கொண்டு தயாரிக் கப்படும் 'ஹம்பேர்கர் (Hambarge) உணவின் ஒவ்வொரு துண்டுக்கும் மழைக்காட்டு வளத்தின் 5 சதுர மீற்றர் துண்டளவு பலியாகி வருகிறது.
அசைவ உணவில் இருந்து சைவத்துக்குத் திரும்புவதைக் காட்டு வளம் மட்டுமல்ல; தண்ணிரும் நிர்ப்பந்திக்க ஆரம்பித்திருக்கிறது. ஒரு கிலோ இறைச்சியைப் பெறுவதற்குப் பண்ணை மாடொன்றுக்கு ஏழு கிலோ தானிய உணவு ஊட்டப்படவேண்டியிருக்கிறது. இந்த ஏழு கிலோ தானியத்தை விளைவிக்கக் கொஞ்ச நஞ்சமல்ல ஏழாயிரம் இலீற்றர்கள் தண்ணீரைச் செலவு செய்ய வேண்டியுள்ளது. இப்படி உலகம் பூராவுமே மனிதனுடைய தானிய உணவுகளுக்காகப் பயன் படுத்த வேண்டிய தண்ணீரின் பெரும்பகுதி பண்ணை விலங்குகளின் உணவுற்பத்திக்கென திருப்பி விடப்படுகிறது. இதனால், மில்லியன் கணக்கான கிணறுகள் காயத் தொடங்கிவிட்டன. இறைக்கப்படும் நீரின் அளவை மழை ஈடுசெய்ய முடியாமையினால் இந்தியா, சீனா,
388
rossessissy. பெங்களூரு
Page 197
ஏழாவது ஊழி
அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற நாடுகளில் குடிதண்ணிருக்கான தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவின் ரெக்ஸாஸ், ஒகல காமா, கன்சாஸ் ஆகிய மூன்று தானிய உணவு உற்பத்தி மாகாணங்களி லும் நிலத்தடி நீர்மட்டம் 100 அடிகளுக்கும் கீழாக இறங்கியுள்ளது. கிழக்கு ஆபிரிக்காவிலுள்ள சோமாலியாவின் சில பகுதிகளில் சிறுநீரைக் குடிக்குமளவிற்குத் தண்ணிர்ப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கங்களுக்குப் பண்ணை விலங்குகளின் பயிர்நிலங்களுக்குப் பாயும் நீரின் அளவைக் குறைப்பதை அல்லது நிறுத்துவதைத் தவிர வேறு வழி இருக்கப்போவதில்லை.
இவை மட்டுமல்ல, இந்தப் பண்ணைகளில் இருந்து வெளி யேறும் மிருகக்கழிவுகளினால் ஏற்பட்டுவரும் சூழல் மாசுபாடுகளும் அசைவ உணவுகளால் ஏற்பட்டு வரும் உடல் நலக்கேடுகளும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டியவைகளாகவே உள்ளன.
பண்ணை விலங்குகளின் கழிவுகள் மண்ணுக்குக் கனிய வளத்தைக் கொடுக்கும் இயற்கைப் பசளைகள் என்பதை மறுப்பதற்கு இல்லை. வீட்டுப்பண்ணைகளும் வீட்டுத்தோட்டங்களும் அவ்வாறான கொடுத்து வாங்கல்களினால்தான் ஒன்றையொன்று சமநிலைப்படுத்திக் கொண்டன. ஆனால், அதுவே ஒரு எல்லைக்கு அப்பால் பல சூழலியற் சீர்குலைவுகளுக்கும் காரணமாகிவிடுகிறது. யாழ்ப்பாணம் வரணியில் தென் இந்தியத் திருச்சபைக்குச் சொந்தமான 1600 கோழிகளைக் கொண்ட பண்ணை இயங்கிவருகிறது. இந்தச் சிறுபண்ணையில் இருந்தே ஆண்டுக்கு 7200 கிலோகிராம் கழிவுகள் வெளியேறுகிறது. இதில் இருந்து பெரும் தொழில்முறைப் பண்ணைகளில் குவியும் கழிவு களின் பிரமாண்டத்தை உணர்ந்து கொள்ளமுடியும். அமெரிக்காவில் மனிதக் கழிவுகளை விடவும் பண்ணைக்கழிவுகளின் அளவு 130 மடங்கு கள் அதிகம். பெல்ஜியத்தில் ஆண்டுதோறும் 205 மில்லியன் கிலோ கிராம்கள் விலங்குக் கழிவுகள் குவிந்துவருகின்றன. அப்புறப்படுத்து வதற்கு இடமின்றி அவ்வளவும் விவசாய நிலங்களிலேயே மீளவும் மீளவும் பிரயோகிக்கப்படுகின்றன. இதில் அரைவாசியையேனும் பயிர் களினால் உறிஞ்ச முடிவதில்லை. இப்படி, அபரிதமாகக் கழியும் கனிய வளங்கள் நீரில்லங்களில் போய்ச் செறிகின்றன. மிதமிஞ்சிய போசணை யில் முதலில் அல்காக்கள் செழித்துப்புரளும் பெரும் பசும்போர்வையாக வளர்ந்து நீரின் மேற்பரப்பை மூடி உள்ளே ஊடுருவும் ஒளியைத் தடை செய்யும். இதனால் நீரடித்தாவரங்களின் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட பிராணவாயு குறைந்து நீர்ச்சூழல் கடைசியில் உயிரை விட நேருகிறது.
390
பொ. ஐங்கரநேசன்
கழியும் நைத்திரேற்றின் ஒரு பகுதி குடிநீருடன் உடலை அடைந்து அங்கு நைத்திரைற்று ஆக மாற்றமடைகிறது. நைத்திரைற்று ஒரு புற்றுநோய்த்தூண்டி (Carcinogen) ஆகும். இன்னுமொரு பகுதி நைத்தி ரேற்று அமோனியா வாயுவாக மாற்றமுற்று காற்றில் கரைகின்றது. அமோனியா காளான்கள், வண்ணத்துப்பூச்சிகள், நகருயிர்கள் போன்றவை தாங்கிக்கொள்ள முடியாத ஒரு நஞ்சு ஆகும்.
இன்று கொதிநிலையில் உள்ள ஒரு சூழலியல் பிரச்சினையாக கருதப்படும் பூமி வெப்பமடைதலிலும் கழிவுகளின் பங்கேற்பு உள்ளது. பூமியை கரியமிலவாயுவுக்கு அடுத்தபடியாக மெதேன் வாயுவே அதிகளவில் வேகவைக்கிறது. உலக உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் (FAO) அறிக்கையின்படி உலகளவில் வளியில் கக்கப்படும் மெதேன்வாயுவில் 16 விழுக்காடுக்கான ரிஷிமூலம் விலங்கு வேளாண்மை ஆகும். அசைபோடும் மாடு, ஆடு, செம்மறி ஆடு போன்ற விலங்குகளின் சமிபாட்டின்போதும் அவற்றின் எருவில் இருந்தும் இந்த அளவு மெதேன் வாயு விடுதலையாகிறது.
பண்ணைக் கழிவுகள் இயற்கையை மிதமிஞ்சி போசிப்பதைப் போல, பண்ணை இறைச்சிகளும் மனிதனை அளவுக்கதிகமாகப் போசித்துவருகிறது. மாமிச மோகம் மனித வரலாற்றில் இதுவரை இல்லாதளவிற்கு உடல் எடையையும் பருமனையும் அதிகரிக்க வைத்துள்ளது. பசுபிக் தீவு வாசிகளே உலகில் அதிகம் பெருத்தவர்கள். இப்படிக் கொழுத்து வருவதற்கு இவர்கள் கப்பல் கப்பலாக இறக்குமதி செய்து உண்ணும் 'கொழுப்பு மிகுந்த இறைச்சி உணவுகளே பிரதான காரணமென உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா விலும் பிரித்தானியாவிலும் வயதானவர்களில் 60 விழுக்காடுக்கு அதிக மானோர் உடல் பெருத்து அவதிப்படுகிறார்கள். மதநம்பிக்கைகளும் அறநெறி - பண்பாட்டு விழுமியங்களும் பொருளாதாரக் காரணிகளும் ஆசிய சமூகத்தை அசைவ உணவுகளில் இருந்து ஓரளவுக்கேனும் தள்ளி வைத்திருந்தது. ஆனால், இங்கும் கடந்த சில தசாப்தங்களாக மேற்குமய மாக்கல் இறைச்சிகளைத் திணித்து வருவதால் 'குண்டாதல் ஒரு பிரச்சினையாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளது. உடல் பருத்தவர்கள்
தசைச் சுமையை மட்டுமல்ல; புற்றுநோய், நீரிழிவு, இரத்த அழுத்தம்,
இதயத்தாக்குப்போன்ற நோய்களுக்கான வாய்ப்புகளையும் சேர்த்தே சுமந்து திரிகிறார்கள். மேலும் அதிக இறைச்சி மற்றும் பால் உற்பத்திக் காக இந்த விலங்குகளில் செலுத்தப்படும் ஓமோன்கள், செய்யப்படுகின்ற மரபணு மாற்றங்கள் போன்றவையும் புதிய புதிய நோய்களுக்குக் கால்கோள்களாகலாம்.
391
Page 198
ஏழாவது ஊழி
மனிதனின் இறைச்சி மோகம் தனக்கும் தான் சார்ந்த இயற்கைக் கும் பெரும் கேடு விளைவிப்பதில் இருந்து அவன் தப்பித்துக்கொள்ள ஒரே வழி அசைவர்கள் சைவர்களாக மாறுவதுதான். இறைச்சியில் இருந்து கிடைக்கும். அதே அளவு, அதே வகைப் புரதங்கள் சைவ உணவில் கிடைக்குமா? என்ற மாமிசப்பிரியர்களின் கடைசிக் கேள்விக்குப் பதில் இல்லை என்பதுதான். ஆனால், இறைச்சிகளில் இருக்கும் தேவைக்கு அதிகமான அளவு புரதங்கள்தான் தாவர உணவு வகைளில் இல்லையே தவிர ஆரோக்கியமான வாழ்வுக்குத் தேவையான அளவுக்குப் புரதத்தைக்கொண்ட ஏராளமான தாவர உணவுவகைகள் இருக்கின்றன. இறைச்சியில் இருக்கக்கூடிய ஒரு சில அமினோ அமிலங் கள்தான் எல்லா தாவர உணவுகளிலும் இல்லையே தவிர அவையும் பல்வேறு தானியங்களிலும் அவரைகளிலும் பரந்து காணப்படுகின்றன. எனவே, அசைவ உணவுக்கு நிகரான போசணைப்பெறுமதிமிக்க சைவ உணவைப் பெறுவது ஒரு பிரச்சினை அல்ல என்பது ஊட்டச்சத்து ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
மனிதனை மாமிச உண்ணி விலங்குகளுடன் ஒப்பிடுகையில் அவன், தாவர உண்ணிகளுக்கே மிகவும் அணித்தாக இருப்பது தெரியவரும். நாய், பூனை, புலி போன்றவற்றில் இருப்பது போன்ற விருத்திபெற்ற வேட்டைப்பற்கள் மற்றும் உகிர்கள் மனிதனில் இல்லை. ஒப்பீட்டளவில் ஊன்உண்ணிகளின் உணவுக்குழல் நீளம் குறைந்தவை. தாவர உணவுகளிலும் பாக்க ஊன்உணவுகள் விரைவில் பழுதடைந்து விடும் என்பதாலேயே சீரணத்தை விரைந்து முடிப்பதற்காக உணவுக் குழல் சிறுத்துக் காணப்படுகிறது. மனிதனில் தாவர உண்ணிகளைப் போன்று குடல் நீளமாக உள்ளது. இவை மட்டு மல்லாமல், இறைச்சிச் சமிபாட்டுக்கு அதிக நீர் தேவைப்படாததால் ஊன்உண்ணி விலங்குகள் நீரை நாவினால் நக்கியே அருந்துகின்றன. ஆனால், மனிதன் ஆடு மாடு போல தண்ணிரை உறிஞ்சிக் குடிக்கின்றான். இப்படி உடலமைப் பியல் உடற்றொழிலியல் ரீதியான காரணங்களைக் காட்டி மனிதனை தாவர உண்ணிகளுக்கே அதிகம் நெருக்கமானதாகச் சொல்பவர்கள் உண்டு.
இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் இந்த நூற்றாண்டு முடிவதற்குள்ளாகவே மனிதர்கள் சைவ உணவுக்கு அதிகம் நெருக்க மாவது குறைந்தபட்சம் இறைச்சிக்காகச் செய்யப்படும் பெரும் உற்பத்தியை யேனும் நிறுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.
392
38
உலகப் பசிக்கு உருளைக்கிழங்கு
உணவுத்தேவை ஒவ்வொருவருக்கானதெனினும் அந்த அனுபவம் உலகப் பொதுவானது"
- ஜேம்ஸ் பியர்ட் (சமையற்கலை எழுத்தாளர், அமெரிக்கா)
உலக மக்கள் தொகை ஏறத்தாழ 6.8 பில்லியன்கள். ஆம்!, பூமித்தாய் இன்றைய தேதியில் உணவூட்டவேண்டிய மனித வாய்களின் எண்ணிக்கை 6.8 பில்லியன்கள். இந்த எண்ணிக்கை அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு ஆண்டு தோறும் சராசரியாக 100 மில்லியன்கள் என்ற அளவால் பெருகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பில் மிகப்பெரும்பகுதி, ஏறத்தாழ 95 விழுக்காடு அதிகரிப்பு மூன்றாம் உலக நாடுகளிலேயே நிகழவுள்ளது. ஏற்கனவே இந்நாடுகள் பலவற்றில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இனிமேலும் உணவு விளைவிக்க இடமில்லை என்னும் அளவுக்கு வளமான நிலங்கள் எல்லாம் பயிரிடப்பட்டு விட் டன. இவ்விளைநிலங்கள்கூட, பசுமைப்புரட்சி என்னும் கொடுங்கன வால் ஆண்டுக்கு ஆண்டு நஞ்சேறி, மேன்மேலும் வேளாண்மை செய்ய முடியாதபடி தம் உயிர்வளத்தை செயற்கை இரசாயனங்களிடம் காவு கொடுத்து வருகின்றன. பாதி உயிர்போய் விட்ட இந்த விளைநிலங் களேனும் நாளை தப்பிப்பிழைக்கும் என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை. வேளாண்குடிகளின் கண்ணிரையும் செந்நீரையும் மீறி இந் நிலங்கள் 'தொழில் நகரங்கள்', 'சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்னும் பெயரால் இயந்திரப் பிசாசுகளிடம் அரசுகளால் தாரை வார்க்கப் பட்டு வருகின்றன. இவற்றுக்கெல்லாம் மேலாகத் தண்ணிர்த் தட்டுப் பாடும் சேர்ந்து கொள்ள, உலகின் உணவு உற்பத்தி என்றும் இல்லாத கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளது. இந்நிலையில் நாளுக்கு நாள்
மக்கள் தொகைப் பெருக்கம் உலகின் உணவு வழங்கலுக்கு விடுத் திருக்கும் இந்தச் சவால் சாதாரணமானதொன்றல்ல. சனத்தொகைப்
393
Page 199
ஏழாவது ஊழி
பெருக்கத்தால் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகளில் தலையானது இதுதான். ஒருபுறம் பசியும் பட்டினிச் சாவுகளும் எனில், இன்னொரு புறம் நிலத்தைச் சக்கையாகப் பிழிந்து நீரை அடியொற்ற உறிஞ்சுவதால் ஏற்படும் சுற்றுச் சூழலின் சீரழிவுகள். இவற்றையெல்லாம் எதிர்கொள்ள வென உலகப் பசிக்கு ஐக்கிய நாடுகள் சபை உருளைக் கிழங்கைச் சிபாரிசு செய்துள்ளது. உருளைக்கிழங்கை உணவாக அதிக அளவில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை உலகுக்கு, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளுக்கு உரத்துச் சொல்லும் விதமாக 2008ஆம் ஆண்டை ‘சர்வதேச உருளைக்கிழங்கு ஆண்டு (International Year of the Potato) எனவும் ஐ.நா. பிரகடனம் செய்துள்ளது.
உருளைக்கிழங்கின் வரலாறு தென் அமெரிக்காவின் ஆன்டீஸ் மலைப்பகுதியில் அமைந்துள்ள 'ரைற்றிகக்கா (Ticaca) என்னும் ஏரியின் கரைகளில் இருந்து ஆரம்பமாகிறது. பெருநாட்டினதும் பொலிவியா வினதும் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரிக்கரையில் 8000 ஆண்டுகளுக்கு முன் வேட்டையாடிகளும் விதைசேகரிப்பவர்களும் (Hunters and Gatherers) உருளைக் கிழங்குகளை நடுகை செய்ததாகத் தெரியவந்துள்ளது. இக்கிழங்குகளை தென் அமெரிக்கக் காடுகளில் வளரும் காட்டு உருளைக்கிழங்குச் செடிகளில் இருந்து இவர்கள் தேர்வு செய்திருக்கக் கூடும். பெருநாட்டை மையமாகக் கொண்டு இன்கா (Inca) பேரரசு நிலவிய காலப்பகுதியில் அம்மக்களின் வாழ்வில் உருளைக் கிழங்கு பிரதான இடத்துக்கு உயர்ந்தது. சோளத்துக்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்தபோதும், தங்களது ஆள்புலத்தில் உணவுப்பாது காப்புக்கான உத்தரவாதமாக உருளைக்கிழங்கையே கொண்டாடி னார்கள். வேளாண்மை பாதிக்கப்பட்டு உணவுப் பற்றாக் குறைவு ஏற்படும் வேளைகளில் பயன்படுத்தவென உருளைக்கிழங்குகளை உலர்த்தி, உறையவைத்துப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரப்படுத்தும் கலை அவர்களுக்குக் கைகூடியிருந்தது. இதற்கென நாடெங்கும் அரச களஞ்சிய அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. நோய் களை மாற்றவும் காயங்களை ஆற்றவும்கூட உருளைக்கிழங்குகளையே நம்பியிருந்தார்கள். நேரத்தையும், உருளைக்கிழங்கு அவிவதற்கு எடுக்கும் கால அளவைக் கொண்டே இன்காக்கள் அளவிட்டுள்ளனர். 1532ஆம் ஆண்டில் ஸ்பானியர்களின் படையெடுப்புடன் இன்கா பேரரசு முடிவுக்கு வந்தபின்பும், ஆன்டீஸ் மலைத்தொடர் நாடுகளில் உருளைக் கிழங்கின் பிரபலம் இன்னும் குறைந்தபாடில்லை. இப்போதும் பெரு, பொலீவியாவை ஒட்டிய ஆன்டீஸ் பகுதிகளில் மூவாயிரத்துக்கும்
394
Page 200
ஏழாவது ஊழி
அதிகமான உருளைக்கிழங்கு வகைகள் பயிராகின்றன. உருளைக்கிழங்கு என்னும் ஒர் இனத்தினுள்ளேயே இத்தனை பேதங்கள் இருப்பது இயற்கை, பூமியின் உயிர்ப்பல்வகைமைக்கு வழங்கிய மிகச்சிறந்த கொடையாகும்.
தென்அமெரிக்காவில் ஸ்பானிஷ் மேற்கொண்ட படையெடுப் புக்குப் பிறகே உருளைக்கிழங்கு வெளியுலகத்துக்கு அறிமுகமானது. ஸ்பானியர்கள் 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருளைக்கிழங்குகளை ஸ்பெயினுக்கு எடுத்துச் சென்றதன் பின்னர் அங்கிருந்து மெதுவாக இத்தாலி, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜேர்மனி என்று பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணமானது. மேற்கு ஐரோப்பாவில் சுற்றுப்பயணத்தில் இருந்த ஜார் (Zar) பேரரசர் 1697இல் ஐரோப்பாவில் இருந்து ஒரு சாக்கு மூடையளவு உருளைக் கிழங்குகளைத் தனது நாடான ரஷ்யாவுக்கு அனுப்பிவைத்தார். ஆனால், அறிமுகமாகி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ரஷ்யர்கள் உருளைக்கிழங்குகளைத் தீண்டவே யில்லை. அவற்றைச் சூனியக்கிழவியின் அல்லது சாத்தானின் படைப்பு என்றும் நஞ்சு என்றும் ஒதுக்கி வைத்தார்கள். ஆனால், இன்று ரஷ்யர் ஒருவர் வருடமொன்றுக்கு சராசரியாக 140 கிலோ உருளைக்கிழங்கு களைத் தின்று தீர்க்கிறார். ரஷ்யா மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகள் யாவுமே முதலில் உருளைக்கிழங்குகளை அவற்றின் ஒழுங்கற்ற உருவம் காரணமாகச் சந்தேகத்துடனும் பயத்துடனும்தான் பார்த்தன. பைபிளில் உருளைக் கிழங்கு குறித்து எதுவும் சொல்லப்படாததும் அச்சத்துக்கு ஒரு காரணம். மனித நுகர்வுக்கு ஏற்றதல்லாததாகக் கருதி கால்நடை விலங்குகளுக்கு மாத்திரமே, அதுவும் வேறு ஆகாரம் கிடைக்காதபோது உண்ணக் கொடுத்தன. அயர்லாந்து மாத்திரமே எந்தத் தயக்கமும் இல்லாமல் உருளைக்கிழங்கை இருகை நீட்டி வரவேற்று உணவாகப் பயன்படுத்திய முதல் ஐரோப்பிய நாடு ஆகும்.
உருளைக்கிழங்கில் எல்லாப் பூக்கும் தாவரங்களையும் போல தற்காப்பு நஞ்சு இருக்கத்தான் செய்கிறது. இந்த நஞ்சு வேதியின் பெயர், சொலானின் (Solanin) உருளைக்கிழங்குச் செடி பூராவும் சொலானின் பரவி இருந்தாலும், உருளைக்கிழங்கில் தோலின் கீழும், அரும்பு களிலுமே அதிக அளவில் காணப்படுகிறது. உருளைக்கிழங்கில் சொலானின் அதிகம் செறிந்து காணப்படும் பகுதிகள் பச்சை நிறமாகக் காணப்படும். இத்தகைய கிழங்குகள் உண்பதற்கு ஏற்றவை அல்ல. பச்சை பாரித்த கிழங்குகளை உண்டதால் சில மரணங்கள் நேர்ந்தமை அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. மற்றபடி, சாதாரணமாக உருளைக் கிழங்கில் உள்ள சொலானின் நஞ்சு சமைக்கும்போது உயர் வெப்பநிலை
396
பொ.ஐங்கரநேசன்
யில் அழிந்து போவதால் சமைத்த உருளை முழு அளவில் பாதுகாப்பான உணவாகும்.
உருளைக்கிழங்கு இன்று உலகில் அதிகம் உண்ணப்படும் உணவு களின் வரிசையில் சோளம், கோதுமை, அரிசிக்கு அடுத்த நான்காவது இடத்தில் உள்ளது. உலகில் ஏறத்தாழ 1,95,000 சதுரகிலோ மீற்றர்கள் பரப்பளவில் ஆண்டு தோறும் 315 மில்லியன் தொன்கள் அளவுக்கு உருளைக் கிழங்குகள் விளைந்து வருகின்றன. இவற்றில் அரைவாசியளவு வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடுகளிலேயே சாகுபடியாகிறது. உருளைக்கிழங்கு உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பது சீனாதான். இங்கு ஆண்டுக்கு 70 மில்லியன் தொன்கள் சாகுபடியாகிறது. இது உலகின் மொத்த அறுவடையில் 20 விழுக்காடு. சீனாவைத் தொடர்ந்து ரஷ்யா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, உக்ரெயின், ஜேர்மனி, போலந்து, பெலாரஸ், நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. பிரான்ஸ் உற்பத்தியில் பத்தாவது இடத்தில் இருந்தாலும் அதிகளவில் உருளைக்கிழங்கை ஏற்றுமதி செய்யும் ஐரோப்பிய நாடு களில் முதலாவது என்ற பெருமையைக் கொண்டிருக்கிறது. 2006ஆம் ஆண்டில் பிரான்ஸ் உற்பத்தி செய்த 4.5 மில்லியன் தொன்களில் ஏறத்தாழ 1.5 மில்லியன் தொன்கள் கிழங்குகள் அப்படியே ஏற்றுமதி யாகியுள்ளன. பிரான்ஸில் இருந்து உருளைக்கிழங்குகளை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு உருளைக்கிழங்குகளோடு பிரான்ஸ் அவ்வப்போது கையெறிகுண்டுகளையும் சேர்த்து அனுப்பி வைப்பது மிகவும் பிரசித்தம். சமீபத்தில்கூட, இத்தாலியில் 74 வயது மூதாட்டி ஒருவர் உருளைக் கிழங்குகளை மண் நீக்கிக் கழுவிச் சுத்தம் செய்தபோது அவற்றில் ஒன்று கையெறி குண்டாக (Grenade)இருப்பதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார். அதுவும் செயலிழக்காத குண்டு. இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்கா பயன்படுத்திய ரகத்தைச் சேர்ந்த குண்டு. கடைசியில், காவல்துறையினர் வந்து அதை பத்திரமாக மீட்டு வெடிக்க வைத்துள்ளனர். இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜேர்மனியிடம் வீழ்ச்சி கண்ட பிரான்ஸ், பின்னர் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் உதவியோடு விடுதலை பெற்றது. இக்காலப் பகுதியில் பெருவாரியாகப் பயன்படுத்தப்பட்ட கையெறி குண்டுகள்தான் நிலத்தின் கீழ் புதை யுண்டிருந்து உருளைக் கிழங்குகளோடு குண்டுகளாக சமையலறைகள் வரையிலும் சென்று மிரட்டி வருகின்றன.
உருளைக்கிழங்குகள் நிலத்தின் கீழே தோன்றினாலும் இவை வற்றாளங் கிழங்குகள் போன்றோ, கரற். பீற்றுட் கிழங்குகள் போன்றோ
397
Page 201
ஏழாவது ஊழி
வேரின் பகுதிகள் அல்ல; தண்டின் பகுதிகள். உருளைச் செடியின் நிலத் துக்குக் கீழாக வளரும் தண்டுகளில் உணவுச் சேமிப்பால் திரண்டுருண்ட முனைப்பாகங்களைத்தான் உருளைக்கிழங்குகள் என்கிறோம். தண்டில் அரும்புகள் காணப்படுவதனைப் போன்று, உருளைக்கிழங்கின் மேல் 'கண்கள் எனப்படும் குழிகளினுள் அரும்புகள் காணப்படுவது இதற்கான ஆதாரங்களில் ஒன்று. இந்த வகைத் தண்டுக்கிழங்குகள் முகிழ்கள் (Tubers) என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. உருளைக் கிழங்குச் செடியின் அறிவியற் பெயரே 'சொலானம் ரியூபறோசம் (Solanum tuberoSum) 6 TGóT_g g5/TGóT.
உருளை முகிழ்கள், அதாவது உருளைக்கிழங்குகள் அவற்றின் போசணைப் பெறுமதி காரணமாக ஊட்டச்சத்தாளர்களால் 'மறைந் திருக்கும் புதையல்' என வர்ணிக்கப்படுகின்றன. ஒவ்வொரு உருளைக் கிழங்கும் அதன் எடையில் 75 விழுக்காடு வரையில் தண்ணிரையும் 25 விழுக்காடு வரையில் மாப்பொருளையும் கொண்டுள்ளது. இவை தவிர கணிசமான அளவில் இரும்பு, செப்பு, மகனீசியம், பொற்றாசியம், பொஸ்பரஸ், அயடீன் போன்ற அத்தியாவசியமான கணிப்பொருள்களும் விற்றமின் 'சி' விற்றமின் 'பி6’ போன்றவையும் காணப்படுகின்றன. நடுத்தர அளவுடைய உருளைக்கிழங்கொன்றில் உள்ள விற்றமின் 'சி, வளர்ந்த ஒருவருக்கு நாளாந்தம் தேவைப்படுகின்ற விற்றமின் ‘சி’யின் பாதியளவை ஈடுசெய்யப் போதுமானது. மேலும், உடல் அதிகம் எடை போடுவதற்குக் காரணமான சோடியம் இல்லை என்னுமளவுக்கு மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுவதும், கொலஸ்திரோல் அறவே இல்லாததும் இதன் சிறப்பான குணாம்சங்கள். இவற்றின் காரணமா கவே, ஒரு காலத்தில் தீண்டத்தகாதனவாகப் பார்க்கப்பட்ட உருளைக் கிழங்குகளால் இன்று பிரதான உணவுகளின் வரிசையில் நான்காவது இடத்தைப் பிடிக்க முடிந்திருக்கிறது.
தமிழர்களின் வாழ்வியலில் உருளைக்கிழங்கு நெல்லரிசிச் சோற்றுடன் சேர்த்து உண்ணப்படும் ஒரு உப உணவாகவே பெரிதும் நீடிக்கிறது. அதுவும், உச்ச விலை காரணமாக ஈழத்தமிழர்களுக்கு 'நல்ல நாள் பெருநாளுக்கான ஒரு அரிதான கறியுணவு மாத்திரமே. ஆனால் உலகின் பல்வேறு சமூகங்களும் உருளைக்கிழங்கை வெவ்வேறு நள பாகங்களில் தனித்த உணவாகவே பயன்படுத்தி வருகின்றன. அமெரிக்கர் களினதும், பிரித்தானியர்களினதும் காலை உணவில் 'வெதுப்பி உருளைக் கிழங்குகள் (Baked Potatoes) மிகவும் பிரபலம். கென்யாவில் ஆபிரிக்கர்கள் மதிய உணவாக உருளைக்கிழங்கை அவித்துப் பிசைந்து உண்கிறார்கள்.
398
பொ. ஐங்கரநேசன்
இப்படி, உலகில் அறுவடையாகும் உருளைக்கிழங்குகளில் மூன்றில் இரண்டு பங்கு சமைத்த கிழங்காகவோ, "சிப்ஸ் (Chips) எனப்படும் சீவல் பொரியல்களாகவோ ஏதோ ஒரு வகையில் உணவாகவே நுகரப்படுகிறது. கிழங்கை அப்படியே சமைத்து உண்பதைவிட பதப்படுத்தப்பட்ட வேறு வடிவங்களில் உண்ணும் போக்கு சமீப காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொழில் முறையில் பதப்படுத்தப்பட்ட 'பிறெஞ்ச் ஃபிறைஸ் (French Fries) உலக அளவில் ஆண்டுதோறும் 11 மில்லியன் தொன்கள் விற்பனையாகி வருகிறது. உருளைக்கிழங்குத் துண்டுகளைக் கொதி கொழுப்பில் அமிழ்த்தி ஆழ வறுத்தெடுத்துச் சுவைக்கும் முறை முதன் முதலில் 1830களில் பிரான் சிலேயே பழக்கத்துக்கு வந்தது. ஆனால், இன்று 'பிரெஞ்ச் ஃபிறைஸ் பிரான்ஸின் அடையாளம் அல்ல. துரித உணவகங்களின் தனித்துவம். அவற்றிலும் உலகம் முழுக்கக் கிளைகளை விரித்திருக்கும் அமெரிக்கா வின் மக்டொனால்ட் துரித உணவகம் 'பிரெஞ்ச் ஃபிறைஸ் என்னும் உருளை வறுவல்களினால் அள்ளுகொள்ளையாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.
உருளைக்கிழங்குகளின் பயன்பாடு மனித உணவு என்பதற்கு அப்பாலும் நீண்டு செல்கிறது. ஐரோப்பிய உலகில், முதன் முதலில் பண்ணை விலங்குகளின் உணவாகவே ஏற்றுக் கொள்ளப்பட்ட உருளைக்கிழங்குகள் இன்று வரையிலும் அங்கு அந்தத் தேவைக்கும் சேர்த்தே பயிராகிறது. ரஷ்யக் கூட்டமைப்பு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் விளைகின்ற உருளைக்கிழங்குகளில் பாதியளவுக்கு மேல் அவர்களின் பண்ணை விலங்குகளைக் கொழுக்க வைப்பதற்கே செலவாகிறது. தினமும் அவர்களின் பன்றிகள் ஒவ்வொன்றுக்கும் 6 கிலோ அவித்த உருளைக்கிழங்குகளும் மாடுகள் ஒவ்வொன்றுக்கும் 20 கிலோ பச்சை உருளைக்கிழங்குகளும் ஊட்டப்படுகிறது என்பதில் இருந்து இதன் பரிமாணத்தைப் புரிந்து கொள்ளலாம். உருளைக்கிழங்கு மாப்பொருள் நூற்றுக்கு நூறு உயிர்மச்சிதைவுக்கு (Biodegradable) ஆளாகக் கூடியது. இதனால் ஒருமுறை பயன்படுத்திவிட்டு வீசக்கூடிய (Disposable) உணவுத் தட்டுகள், குவளைகளின் தயாரிப்பில் உருளைக்கிழங்கு மா பிளாஸ்ரிக்குக்குப் பதிலாகக் கை கொடுத்து வருகிறது. அண்மைக்கால மாக, பெற்றோலுக்கு மாற்றாக எதனோலை எரிபொருளாக உலகம் பயன்படுத்த ஆரம்பித்திருக்கும் நிலையில் எதனோல் தயாரிப்பாளர் களின் கவனமும் மாச்சத்து மிகுந்த உருளைக்கிழங்குகளின் மீது திரும்ப ஆரம்பித்துள்ளது. கனடாவில் உருளை வயல்கள் மிக்க மாநிலம் நியூ
399
Page 202
ஏழாவது ஊழி
புறுரன்ஸ்விக். இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் 44,000 தொன்கள் உருளைக்கிழங்குக் கழிவுகளை நொதிக்க வைத்து 5 மில்லியன் இலீற்றர்கள் வரையான எதனோலை வடித்தெடுக்கலாம் என கண்டறிந்திருக்கிறார்கள்.
உருளைக்கிழங்குகள் வெறுமனே அவற்றில் நிறைந்திருக்கும் போசணைப் பெறுமானங்களினால் மாத்திரம் சிறப்புப் பெறவில்லை. சோளம், கோதுமை, அரிசி போன்ற தானியப் பயிர்களில், அத்தாவரங் களின் உடலில் ஏறத்தாழ 50 விழுக்காடு அளவே உண்ணத்தக்க பகுதிகள் - தானியங்கள் - ஆகும். ஆனால் உருளைக்கிழங்குச் செடியின் உடலில் 85 விழுக்காடு வரையில் கிழங்குகள் பங்கெடுக்கின்றன. அத்துடன் உருளைச் செடிகள் குறைந்த பகலை விரும்புகின்ற குளிர் பிரதேசத்துத் தாவரங்கள் என்ற நிலையில் இருந்து வெகுவாக மாறி இன்று நெடும்பகலுக்கும் இசைவாக்கம் பெற்று விட்டன. இதனால் உருளைக்கிழங்குகள் எந்த நாட்டிலும் எந்தக் கடுமையான சூழல் நிபந்தனைகளிலும் வளரக்கூடியவையாக உள்ளன. இதற்கு பயிர்ப் பெருக்கவியலாளர்களின் பல நூற்றாண்டுகால தேர்ந்து இனப்பெருக்கும் முயற்சிகளே காரணம். ஆன்டீஸ் மலைப்பகுதி விவசாயிகள் உறை பனியையும் எதிர்த்துத் தாக்குப்பிடிக்கக் கூடிய உருளைக்கிழங்கு இனங்களைக் கூட விருத்தி செய்திருக்கிறார்கள். மேலும், பிரதான உணவுப் பயிர்கள் விதைகளின் மூலமே தங்களைப் பெருக்கிக் கொள்ள உருளைச் செடிகள் கிழங்குகளின் மூலமே சந்ததியைப் பெருக்கிக் கொள் கின்றன. இலிங்கக் கலப்பில் உருவான விதைகளிலிருந்து தோன்றும் மகள்கள் பெற்றோர்களிலிருந்து மாறுபட்ட எதிர்மறையான மகசூலை யும் தரலாம். ஆனால் பதியம் போடும் உருளைக்கிழங்குகள் நம்பிக்கைக்கு மோசம் செய்யாதவை. இதனால் உருளைக்கிழங்கு விவசாயிகள் தமக்குப் பிடித்தமான கிழங்குகளைத் தேர்வு செய்து அடுத்த போகத்துக்கென பத்திரப்படுத்த முடியும். இன்று உலகில் அறுவடையாகும் கிழங்குகளில் ஏறத்தாழ 5 தொடங்கி 15 விழுக்காடு கிழங்குகள் இப்படி மீள்நடு கைக்கே பயன்படுகின்றன. இவை போன்ற காரணங்களினாலேயே நிலப் பற்றாக்குறைவும், மிதமிஞ்சிய வேலையாட்களும் மிகுந்த மூன்றாம் உலக நாடுகளுக்கு பசியையும் வறுமையையும் எதிர்கொள்ளும் உணவாக ஐ.நா. உருளைக்கிழங்குகளை உரத்துச் சிபார்சித்துள்ளது.
உருளைக்கிழங்கை உலகப் பொதுவான உணவாக முன்னிறுத்த விழையும்போது, உணவில் பல்வகைத் தன்மை நிராகரிக்கப்படுவதில் உள்ள அபாயங்களையும் விளங்கிக் கொள்ள வேண்டும். துர்அதிர்ஷ்ட
4OO
பொ. ஐங்கரநேசன்
வசமாக, உருளைக்கிழங்கின் வரலாற்றிலேயே ஒற்றை உணவின் அவலங்களை எடுத்துப் புலம்பும் இருண்ட பக்கங்களும் உண்டு. ஐரோப்பிய நாடுகளெல்லாம் உருளைக்கிழங்கு குறித்து ஐயுறவு கொண்டிருந்தபோது, முதன்முதலில் உருளைக்கிழங்குகளுக்குத் தனது சமையலறையைத் திறந்துவிட்ட நாடு என்ற பெருமையைப் பெற்றது அயர்லாந்து. பின்னாளில், அதே உருளைக்கிழங்குகளாலேயே அயர்லாந்து எவரும் எதிர்பார்த்திராத பெரும் சிறுமைகளையெல்லாம் சந்திக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
அயர்லாந்து, அத்திலாந்திக் சமுத்திரத்தில் அமைந்துள்ள உலகின் 20ஆவது பெரிய தீவு. பெரிய பிரித்தானியாவில் இருந்து இடையே ஐரிஸ் கடலால் பிரிக்கப்பட்டுள்ளது. 1801ஆம் ஆண்டில் இருந்து ஒப்பந் தம் ஒன்றின் மூலம் அயர்லாந்தை நிர்வகிக்கும் முழு ஆளுகையையும் பிரித்தானியா தன் வசமாக்கிக் கொண்டது. அழகிய அயர்லாந்தின் வளங்கள் அனைத்தையும் பிரித்தானியாவே ஆண்டனுபவித்தது. அயர்லாந்திலிருந்து பிரித்தானியாவுக்கு உணவுகள் போய்ச்சேர்ந்தன. பிரித்தானியர்கள் சுவைக்கும் இறைச்சிகளுக்கான மாடுகள் அயர்லாந்தின் வளமான தரைகளிலேயே மேய்ந்து வளர்ந்தன. அயர்லாந்துவாசிகளுக் கான பயிரிடும் பரப்பு விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால், வளங் குறைந்த மண்ணிலேயே கூடிய விளைச்சலைத் தரக் கூடிய உருளைக்கிழங்குகளை அயர்லாந்துவாசிகள் தங்களுடைய பிரதான உணவாக்கிக் கொண்டனர். நாளொன்றுக்கு ஒருவர் 10 இறாத்தல் கிழங்குகளை உண்ணும் அளவுக்கு அவர்கள் உருளைக்கிழங்குகளையே பெரிதும் சார்ந்திருந்தார்கள்.
அயர்லாந்தின் உருளைக்கிழங்குகளை 1845இல் ஒட்டுண்ணிப் பங்கஸ் தாக்கத் தொடங்கியது. பீற்றொப்தெரா இன்வெஸ்ரான்ஸ்' (Phytopthora infestans) என்னும் இப்பூஞ்சணம் இலைகளை வெளிறச் செய்து, கிழங்குகளை அழுகவைத்தது. பத்து, நூறு என்று பரவி எல்லா உருளைச் செடிகளுமே அழிந்து போய்விட்டன. அயர்லாந்துக்கு 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருளைக்கிழங்குகள் அறிமுகமாகியதில் இருந்து பல தடவைகள் நோய்களின் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளன. ஆனால், அப்போதெல்லாம் அயர்லாந்து மக்கள் உண்ண வேறு உணவு இருந்தது. இப்போது உருளைக்கிழங்குகளை நோக்கி முற்று முழுதாகத் திரும்பிவிட்ட நிலையில், உருளைக்கிழங்குகளின் அழிவு அவர்களின் அழிவாகவே அமைந்தது. பட்டினியாலும், வாடிவதங்கிய உடலில் தொற்றிக் கொண்ட நோய்களினாலும் ஏறத்தாழ 1 மில்லியன் பேர்
4O1
Page 203
ஏழாவது ஊழி
செத்து மடிந்தார்கள். அதற்கும் அதிகமான மக்கள் உணவு ஏதிலிகளாக நாட்டை விட்டு இடம் பெயர்ந்தார்கள். 1845-1852 காலப்பகுதியில் அயர்லாந்தின் சனத்தொகை 25 விழுக்காடு வீழ்ந்தது. வரலாற்றில் உலகின் பெரும் பட்டினிச்சாவு என்று பதியப்பட்டுவிட்ட இந்தத் துன்பியல் நிகழ்வின்போதுகூட, அயர்லாந்தில் இருந்து பிரித்தானியா தனக்குவேண்டிய உணவுகளை எந்தக் குற்ற உணர்வுமின்றிப் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் சென்றுகொண்டுதான் இருந்தது. தொடர்ந்து சனத்தொகையில் சரிவைச் சந்தித்துவந்த அயர்லாந்து 70 ஆண்டுகளின் பின்பே, ஆரம்பத்தில் இருந்த மக்கள் தொகையின் அரைவாசியுடன் நிலைக்கு வந்தது. அயர்லாந்தின் மேற்குப் பகுதியில் சனத்தொகையின் வீழ்ச்சி இப்போதுதான் - 2006ஆம் ஆண்டில் - நிலைக்கு வந்துள்ளது, நெடிய 160 ஆண்டு காலங்கள் கழித்து.
மூவாயிரத்துக்கும் மேலான வகைகளைத் தன்னில் கொண்டிருப் பதன் மூலம் ஓர் இனத்துக்குள்ளே இருக்கக்கூடிய உயிர்ப்பல்வகை மைக்கு சிறந்த உதாரணமாக விளங்கும் உருளைக்கிழங்கே, உலகில் உணவுப் பல்வகைமையின் இன்றியமையாமையை வலியுறுத்தும் எடுத்துக்காட்டாகவும் உள்ளது.
4O2
39
தாங்குமா இந்தப் பூமி?
"மக்கள் தொகையின் நலன்களுக்கு சுற்றுச் சூழலைப் பலிகொடுத்து வருவதற்குப் பதிலாக சுற்றுச்சூழல் உயிர் பிழைத்திருப்பதற்கு மக்கள் தொகையையே நாம் கட்டுப்படுத்தியாக வேண்டும் 卢列
- சேர் டேவிட் அட்டன்பரோ (இயற்கையியலாளர் - இங்கிலாந்து)
மனித குலம் இன்று எதிர்நோக்குகின்ற தலையாய பிரச்சினை பயங்கரவாதம் அல்ல. அதைவிடப் பயங்கரமான அச்சுறுத்தல் சத்த மில்லாத ஒரு சுனாமியாக உருவெடுத்துவரும் அதன் சனத்தொகை தான். பூமிப்பந்தின் மேற்பரப்பு எங்கும் சனசமுத்திரம் பெருக்கெடுத் தோடுகின்ற வேகத்தைப் பார்த்தால் விரைவிலேயே குடித்தொகை வெடிப்பு (Population Explosion) ஏற்பட்டு உலகைப் பட்டினிக்குப் பலி கொடுத்துவிடும் என மேற்குலகின் மக்கட் தொகையியல் அறிஞர்களும் அரசியல்வாதிகளும் எச்சரித்து வருகின்றனர். 'குடித்தொகைக் குண்டு குறித்துப் பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே பேசப்பட்டு வந்தபோதும், இப்போது ஏற்பட்டிருக்கும் உலகளாவிய உணவுத்தட்டுப்பாடு குடித்தொகைக் குண்டு விரைவிலேயே வெடித்து விடுமோ என்ற அச்சத்தை உலகம் பூராவும் தோற்றுவித்துள்ளது.
பூமி மனிதர்களுக்கு மாத்திரமே உரித்தான கிரகம் போன்று, பூமியை இன்று 6.8 பில்லியன் (680 கோடி) மக்கள் தொகையினர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். மிகத் துல்லியமாகக் குறிப்பிடு வதாயின், இக்கட்டுரையை இற்றைப்படுத்திக் கொண்டிருக்கும் இந்நேரத்தின் போதுள்ள (2010 ஒகஸ்ட் 21, 17:08) சனத்தொகை 6,863,755,072. வேறு எந்த முலையூட்டி இனங்களாலும் எட்டமுடியாத எண்ணிக்கை இது. ஐம்பத்தினட்டு ஆண்டுகளுக்கு முன்னர் - 1950இல் - இந்தத் தொகை வெறுமனே 2.5 பில்லியன்கள் மாத்திரம்தான். இடைப்பட்ட காலத்தில் மருத்துவ விஞ்ஞானத்தில் ஏற்பட்ட வளர்ச்சி 'மரண கண்டம்' என்ற நிலையில் இருந்த பிரசவத்தில் தாயினதும்
4O3
Page 204
ஏழாவது ஊழி
சேயினதும் உயிருக்கு உத்தரவாதம் வழங்கியதோடு, இன்னொருபுறம் மரணத்தின் வயதெல் லையையும் தள்ளிப் போட்டது. மருத்துவப் புரட்சியுடன் உணவுற் பத்தியில் பசுமைப்புரட்சியும் சேர்ந்து கொள்ள சனத்தொகை மளமளவென்று பெருக ஆரம்பித்தது. இப்போது, தினமும் 3,60,470 குழந்தைகள் பிறந்து கொண்டிருக்கின்றன. 1,50, 688 மரணங்கள் சம்பவித்துக் கொண்டிருக்கின்றன. இந்தக் கூட்டல் கழித்தல்களால் உலக சனத் தொகை நாளாந்தம் 2,09, 782 எண்ணிக்கையால் உயர்ந்தவாறு உள்ளது. சனத்தொகை அதிகரிப்பு இதே வேகத்திலேயே நிகழின், 2050ஆம் ஆண்டில் சனத்தொகை வெகுசுலபமாக 9.2 பில்லியன்களைத் தாண்டிச் சென்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்த சனத்தொகை அதிகரிப்பு வேகத்தை சனத்தொகை இரட்டிப்பாக அதிகரிக்க ஆகும் கால அளவைக் கொண்டே ஆய்வாளர்கள் சுட்டி வருகின்றனர். மனித வரலாற்றில் ஒரு மைல்கல் போல, சனத்தொகை 1804ஆம் ஆண்டிலேயே ஒரு பில்லியனைத் தொட்டது. இந்த எண்ணிக்கையை அடைவதற்கு மனிதனுக்குப் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் தேவைப்பட்டன. ஆனால், 123 வருடங் களில் - 1927இல் - உலக சனத்தொகை 2 பில்லியன்களாக இரட்டித்துக் கொண்டது. 4 பில்லியன்களாக அடுத்த இரட்டிப்பு 1974இல் நிகழ்ந் தேறியது. இந்த இரட்டிப்புக்கு 47ஆண்டுகள் மாத்திரமே ஆனது. பின்னர் 1987இல் 5 பில்லியன்கள், 1996இல் 6 பில்லியன்கள் என்றாகிய சனத்தொகை, இதோ வெகுவிரைவிலேயே 2011ஆம் ஆண்டளவில் 7 பில்லியன்களையும் 2025ஆம் ஆண்டளவில் 8 பில்லியன்களையும் எட்டிப்பிடிக்க உள்ளது. இப்படி சனத்தொகைப் பெருக்கம் 1:2:4:8 என்று கேத்திரகணித விரிவில் விரைந்து எகிற, நிலத்தின் உற்பத்தி சக்தியோ 12:3:4 என்று எண்கணித விரிவில் ஆமை வேகத்திலேயே அதிகரிக்கிறது. குறுகிய கால இடைவெளிகளில் மடை உடைத்தது போன்று பெருகிவரும் சனத்தொகைக்கு உணவிட நிலமடந்தையின் உற்பத்தி வேக்ம் காணாது என்பதாலேயே, 'குடித்தொகை வெடிப்பு உலகைப் பட்டினியின் வாய்க்குள் தள்ளிவிடும் என்று அபாயச் சங்கு ஊதப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் இயங்கி வருகின்ற சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் 1994ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், "21ஆம் நூற்றாண்டின் முதல் கால்வாசிப்பகுதி பூர்த்தியாகும் முன்பே உலகம் இதுவரை சந்தித்திராத அளவுக்குத் தானியப் பற்றாக்குறைவால்
4O4.
Page 205
ஏழாவது ஊழி
அவதிப்படும், என்று காலக்கெடு விதித்து எச்சரித்திருந்தது. மேலும், இந்தப் பஞ்சத்துக்கு வளர்முக நாடுகளின் சனத்தொகை அதிகரிப்பையே காரணம் காட்டியிருந்தது. இதனை மெய்ப்பிப்பதுபோல, 2008ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே உலக அரங்கில் பட்டினியின் அவலக் காட்சிகள் அரங்கேறத் தொடங்கிவிட்டன. அரிசி, கோதுமை யின் விலை இரட்டிப்பாகவும் சோளத்தின் விலை மும்மடங்குகளாகவும் எகிறியது. ஏற்கனவே உண்ண உணவு கிடைக்காததால் பட்டினிக்கு உடலைத் தின்னக் கொடுத்து நாளாந்தம் 40,000பேர் வரையில் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். 850 மில்லியன் மக்கள் பசித்து அழுகின்ற வயிறுகளுடனேயே இரவில் தூங்கச் செல்கிறார்கள். இவர்களில் 820 மில்லியன் பஞ்சப் பராரிகள் வளர்முக நாடுகளிலேயே உள்ளனர். இந்நிலையில், விண்ணைத் தொட்ட விலைவாசி இவர் களுக்குக் கிடைத்து வந்த அரைகுறை உணவையும் தட்டிப் பறித்ததில் ஏழை நாடுகள் பலவற்றில் உணவுக் கலவரங்கள் வெடித்தன.
பசியில் பற்றியெரியும் வயிறுகள்தான் எதையும் செய்யத்துணி யுமே! வங்காள தேசத்தில் விலைவாசியைச் சமாளிக்க ஊதிய உயர்வு கோரி பல்லாயிரக்கணக்கில் திரண்ட தொழிலாளிகள் கண்ணில்பட்ட வாகனங்கள், கடைகள் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிச் சூறை யாடினார்கள். பாகிஸ்தானும் தாய்லாந்தும் தானியக் கொள்ளையைத் தடுப்பதற்காகத் தமது களஞ்சியங்களின் பாதுகாப்பை இராணுவத்திடம் ஒப்படைத்தன. எகிப்திலும் ஹெயிற்றியிலும் கலவரக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சிலர் பலியாகியு முள்ளனர். இதில் ஹெயிற்றியின் சோகம் பெரியது. ஹெயிற்றியின் சில பிரதேசங்களில் பசியின் கொடுமை தாங்காத அன்றாடங் காய்ச்சிகள் களிமண்ணில் உப்பைக் கலந்து உருட்டி விழுங்கி வயிற்றை நிரப்பி வருகின்றனர். அந்த அளவுக்கு உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்தியா நிலைமையைச் சமாளிப்பதற்காகத் தனது தானிய ஏற்று மதியைப் பெருமளவுக்குக் குறைத்துக் கொண்டது. இலங்கையிலோ, போருடன் இப்போது விலைவாசியும் சேர்ந்து பாடாய்ப் படுத்துவதில் 30 விழுக்காடு மக்களுக்கு அன்றாட உணவு கிடைப்பதில்லையென ஐ.நா.வின் உலக உணவு நிகழ்ச்சி திட்டம் தெரிவித்துள்ளது. இப்படி, ஏழை நாடுகள் எல்லாமே பட்டினியின் அவலத்தை முன்பைவிட ஏதோ ஒரு பரிமாணத்திலேனும் அதிகமாக அனுபவிக்கத் தொடங்கியுள்ளன. அகோரமான இந்தப்பசி உதவி வழங்கும் அமைப்புகள் விட்டெறியும் உணவுப் பொதிகளினால் உடனடியாக அடங்கிவிடப் போவதில்லை.
4O6
பொ. ஐங்கரநேசன்
2015ஆம் ஆண்டு வரை உலகை வாட்டிவதைக்கின்ற அபாயம் இருப்ப தாக உலக வங்கியின் தலைவர் ரொபேர்ட் ஷோலிக் (Robert Zoelick) எச்சரித்துள்ளார்.
இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பிறகு இப்போது உலகத்தை ஆட்டிப் படைக்கத் தொடங்கியிருக்கும் உணவுப் பஞ்சத்துக்கு, 'இந்தியாவின் நடுத்தரவர்க்கம் அதிகம் உண்பதே காரணம்' என அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் கருத்துரைத்துள்ளார். இவரது கூற்றும் வாஷிங்டன் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையும் சாராம்சத்தில் ஒன்றுதான். இரண்டுமே, வளர்முகநாடுகளின் வாய்களையே உலகின் உணவையெல்லாம் தின்று தீர்ப்பதாகக் குற்றம் சுமத்துகின்றன. உலகின் மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சியடைந்த பணக்கார நாடுகளில் இருப்பவர்களின் தொகை சொற்பமே. உலகின் 680 கோடிப்பேரில் ஐரோப்பிய நாடுகளில் 12 விழுக்காட்டினரும், மத்திய அமெரிக்காவில் 5 விழுக்காட்டினரும் மட்டுமே உள்ளனர். மிகப்பெரும் பங்கு வளர்முக நாடுகளிலேயே உள்ளது. ஆசியாவில் 61 விழுக்காட்டினரும், ஆபிரிக்காவில் 13 விழுக் காட்டினரும், இலத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளில் 9 விழுக்காட்டினரும் வாழுகின்றனர். உலகில் அதிக சனத்தொகையைக் கொண்ட நாடு சீனா. இதன் மக்கள் தொகை 133 கோடி. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவின் மக்கள் தொகை 115 கோடி. இந்த இரண்டு நாடுகளினதும் சனத்தொகையைச் சேர்த்தாலே, அது உலக சனத்தொகையின் மூன்றிலொரு பங்கை விஞ்சிவிடும். இந்தப் புள்ளி விபரங்களை முன்னிறுத்தியே உலகின் உணவு நெருக்கடிக்கு வளர்முக நாடுகளிலுள்ள அதிக சனத்தொகையை அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
அமெரிக்கா சொல்லி வருவது போல தற்போது ஏற்பட்டிருக்கும் உலகளாவிய உணவு நெருக்கடிக்கு வளர்முக நாடுகளின் சனத் தொகையை மாத்திரம் ஒரேயடியாகக் குற்றம் சாட்டிவிட முடியாது. கம்யூனிச முகாம்களின் சரிவுக்கு முன்னர் மூன்றாம் உலக நாடுகள் என்றும், பின்னர் வளர்முக நாடுகள் என்றும் பெயர் சூட்டப்பெற்ற இந்நாடுகளை என்ன பெயர் கொண்டு அழைத்தால்தான் என்ன? பெரும் பாலானவை இன்றும் ஏழைநாடுகள்தானே. 115 கோடி சனத்தொகை யுள்ள இந்தியாவில் 83 கோடிப் பேர் நாளொன்றுக்கு 60 ரூபாவுக்கும் குறைந்த வருமானத்திலேயே காலம் தள்ளுகின்றனர். இப்படி, இந்நாடுகளின் தனிநபர் வருமானம் மிகக்குறைவாக இருப்பதால் ஒருவர்
4O7
Page 206
ஏழாவதுஉஊழி
தனது ஊதியத்தின் பெரும்பகுதியை உணவுக்காகவே செலவிட வேண்டியிருக்கிறது. இந்தோனேசியர் ஒருவர் தனது வருவாயின் பாதியளவை உணவுக்கு ஒதுக்குகிறார். வியட்நாமிலும் நைஜீரியாவிலும் சாப்பிடுவதற்காக ஒருவர் முக்கால்பங்கு வருமானத்தை அழ வேண்டி யுள்ளது. மீதி அற்பசொற்ப பணத்தில்தான் ஆடை, மருத்துவம், கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகள் எல்லாம். ஆனால், அமெரிக்கர் ஒருவர் தனது வருமானத்தில் 12 விழுக்காடு பணத்தை மாத்திரமே உணவுக்காகச் செலவிட்டு வருகிறார். அதுவும் இந்தத் தொகைக் குள்ளேயே வயிறார மட்டும் அல்ல; அதற்கும் மேலாகவே, மூக்கு முட்ட அவரால் ஒரு பிடி பிடிக்க முடிகிறது.
அமெரிக்காவின் விவசாயத்துறை வெளியிட்டுள்ள 2007 ஆம் ஆண்டின் புள்ளி விபரங்களின்படி, அமெரிக்கர் ஒருவர் சாப்பிடும் தானிய உணவு ஆண்டுக்கு 1046 கிலோ ஆகும். இதில் ஐந்தில் ஒரு பங்கு தானியமே இந்தியர் ஒருவருக்கு உண்ணக் கிடைக்கிறது. உலகிலேயே அதிக அளவில் இறைச்சி சாப்பிடுபவர்களும் அமெரிக்கர் கள்தாம். அமெரிக்கர் ஒருவர் ஆண்டுக்கு 40 கிலோ மாட்டிறைச்சியை வயிறு புடைக்க உட்கொள்ள, இந்த அளவு இந்தியருக்கு 16 கிலோ ஆகவும் சீனருக்கு 6 கிலோ ஆகவும் இருக்கிறது. இதே போன்று, அமெரிக்கர் ஒருவர் ஆண்டுக்கு 78 கிலோ பால் குடித்துவர, இது இந்தியாவில் 38 கிலோ ஆகவும் சீனாவில் 13 கிலோ ஆகவும் உள்ளது. இப்படி, ஏழை மக்களது உணவையும் சேர்த்து ஏப்பமிட்டுவரும் அமெரிக்கா அதேசமயம் மறைமுகமாகவும் அவர்களது உணவைத் தட்டிப் பறிக்கிறது. ஒரு கிலோ இறைச்சியைப் பெறுவதற்குப் பண்ணை மாடொன்றுக்கு ஏழுகிலோ தானியங்களை உண்ணக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அமெரிக்கர்களின் இறைச்சித் தேவைக்கென வளர்த்து வரும் கால்நடை விலங்குகளுக்கு ஊட்டப்படும் தானியங்களில் ஆண்டு தோறும் 850 மில்லியன் மக்களுக்கு உணவூட்டலாம் என கோர்னெல் பல்கலைக்கழகத்தின் விவசாயத்துறைப் பேராசிரியர் டேவிட் பிமென்ரெல் (David Pimente) தெரிவித்துள்ளார். அது மாத்திரம் அல்லாமல், உலகில் பெரும்பகுதி மக்களின் வயிறுகள் வெறுமையாகக் கிடந்து துடிக்க, அமெரிக்கர்கள் எந்த மனச்சங்கடமும் இல்லாமல் தங்கள் வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளைச் சோளத் தானியங் களால் நிரப்பி வருகிறார்கள். 2007ஆம் ஆண்டு அமெரிக்காவில் அறு வடையான சோளத்தில் 20 விழுக்காடு சோளம், எதனோல் எரிபொருள் தயாரிப்புக்கே செலவிடப்பட்டது. ஆனால் அமெரிக்கா தனது இடாம்
408
பொ. ஐங்கரநேசன்
பீகமான வாழ்க்கை முறையை அம்பலப்படுத்துகின்ற புள்ளிவிபரங் களையெல்லாம் நாசுக்காக மறைத்துக் கொண்டு, ஏழை மக்களின் பசித்த வாய்களையே உலகப் பட்டினிக்கான முழுமுதற் காரணியாகக் காட்டி வருகிறது.
கீழைத் தேசங்களுக்கும் அவற்றைச் சுரண்டித் தம்மை மேம் படுத்திக் கொண்ட மேற்கு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார இடைவெளி மிகப்பெரியது. இந்த ஏற்றத்தாழ்வான பொருளாதாரக் காரணிகளே இப்போதைய உணவு நெருக்கடிகளில் பெரும் பங்காற்று கின்றன வெனினும் 'சனத்தொகைக் குண்டு பற்றிய அச்சுறுத்தலையும் அதிகம் புறக்கணிப்பதற்கில்லை. சனப்பெருக்கத்தின் அபாயம் குறித்து முதலில் எதிர்வு கூறியவர்களுள் இங்கிலாந்தைச் சேர்ந்த பொருளியல் நிபுணரான தோமஸ் மல்தூஸ் (Thomas Mathus) குறிப்பிடத்தக்கவர். இவர் வாழ்ந்த காலப்பகுதியில் (1766–1834) உலக சனத்தொகை அதிகமில்லை; ஏறத்தாழ ஒரு பில்லியன்தான். எனினும், "சனப்பெருக்கம் கேத்திரகணித விரிவில் அதிகரிக்க உணவுப் பெருக்கம் எண்கணித விரிவிலேயே நகரும் என மதிப்பிட்ட மல்தூஸ், "இந்த ஒத்திசைவின்மையால் உலகம் பஞ்சம் பட்டினியால் அழிய நேரிடும்' என்று முன்னெச்சரித்திருந்தார். மேலும், 'சனத்தொகைப் பெருக்கம் உணவுப் பஞ்சம், நோய், யுத்தம் போன்றவற்றால் கட்டுப்படுத்தப்படும் வரை தொடரும்' எனவும் தெரிவித்தார் இது, 'மல்தூஸின் கொள்கை எனப்படுகிறது. மல்தூஸின் கொள்கையை சரியென நிரூபிப்பதுபோல 1845இல் அயர்லாந்துப் பஞ்சம் உலகை உலுக்கியது. அயர்லாந்தில் 1700-1841 கால இடை வெளியில் சனத்தொகை 3 மில்லியனில் இருந்து 8 மில்லியனாக உயர்ந்தது. உருளைக் கிழங்குதான் இங்கு பிரதான உணவு. 1845இல் உருளைக் கிழங்கில் ஏற்பட்ட பங்கஸ் நோய்த்தொற்று உற்பத்தியில் பெரும் வீழ்ச்சியை உண்டு பண்ணியதால் கடும் பஞ்சம் ஏற்பட்டது. ஒரு மில்லியன் பேர் வரையில் பட்டினியால் செத்தொழிந்தார்கள். இதைவிட அதிகமானோர் ஏதிலிகளாக இடம் பெயர்ந்தார்கள். சடசட வென சரியத் தொடங்கிய சனத்தொகை 1916இல்தான் பஞ்சத்துக்கு முன்பிருந்த சனத்தொகையில் அரைவாசியுடன் - 4.2 மில்லியன் - நிலைக்கு வந்தது. அயர்லாந்தின் சனத்தொகை இப்போதும் திட்டமிட்டு ஏறக்குறைய இதே அளவில் பேணப்பட்டு வருகிறது.
சனத்தொகை அதிகரிப்பின் அகாலமான அந்திமத்தை விளக்கும் எடுத்துக்காட்டாக அலாஸ்கா பல்கலைக்கழகத்தின் காட்டுயிர் ஆராய்ச்சிப் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வு ஒன்றும் உள்ளது. அலாஸ்
4O9
Page 207
ஏழாவது ஊழி
காவின் பீரிங் கடலில் சென், மத்தியூ (St. Matthew)தீவு அமைந்திருக்கிறது. ஆளரவம் இல்லாத இந்தத் தீவு அமெரிக்காவுக்குச் சொந்தமானது. 1944ஆம் ஆண்டு இங்கு கொண்டுபோய் 29துருவ மான்களை (Reindeers) விட்டுள்ளனர். துருவ மான்களுக்குப் பிடித்த உணவான 'இலைக்கன்கள் (Lichens) தீவில் செழித்துக் கிடந்ததால், துருவ மான்களுக்குத் தீவு சொர்க்கமாகிப் போனது. அளவுக் கணக்கில்லாமல் பெருக ஆரம்பித்தன. 1963இல் அவற்றின் எண்ணிக்கை 6,000 ஐத்தாண்டியது. ஆனால் அத்தனை மான்களின் உணவுத் தேவையை அந்தச் சிறிய தீவிலுள்ள இலைக்கன்களால் ஈடுகட்ட முடியவில்லை. உணவுக்குப் பெரும் தட்டுப் பாடாகிப் போக, 1964இல் 42 துருவ மான்களைத் தவிர மற்றையவை யாவும் அழிந்து போயின. அயர்லாந்துப் பஞ்சம், அலாஸ்காவில் மான்களின் அழிவு போன்ற சம்பவங்கள் மல்தூஸின் கொள்கையை வழிமொழிந்தபோதும், மல்தூஸ் அவர் காலத்தின் பின்னர் உணவுற் பத்தியில் ஏற்பட்டிருக்கக்கூடிய விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி குறித்துக் கருத்தில் எடுக்கவில்லை என்று வாதிடும் ஆய்வாளர்களும் உண்டு. பயிர்ச்செய்கையில் புகுந்திருக்கும் மரபணுமாற்றம் போன்ற நவீன உயிரித் தொழில்நுட்பங்களால் முழு உலகுக்கும் அமுது படைத்து விட முடியும் என்று நம்பும் இவர்கள் மல்தூஸின் எதிர்வு கூறலை நிராகரிக்கின்றனர். ஆனால், மனிதனின் தொழில்நுட்ப அறிவாற்றல் உற்பத்தியைப் பெருக்கும் என்பதைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டாலும்கூட, இயற்கையின் மீது மனிதன் தொடுத்துள்ள போரில் அவனது சேனையைத் தக்கவைக்க இயலாது என்பதே யதார்த்தம்.
மனித இனம் மற்றைய உயிரினங்களுக்கு மாத்திரம் அல்லாது, தனது அடுத்த சந்ததிக்குக்கூட விட்டுவைக்க மனமில்லாதவாறு இயற்கையைச் சூறையாடி வருகிறது. சனத்தொகை அதிகரிக்க அதிகரிக்க இயற்கை வளங்கள் வேகவேகமாகத் தீர்ந்து வருவதோடு, இன்னொருபுறம் வளங்களின் தேய்வால் சுற்றுச்சூழலும் கழிவுகளால் நிரம்பி வழிகிறது. இந்த சூழற்சீர்கேடுகளும் உணவுற்பத்தி மற்றும் மனித சனத்தொகைய்ைப் பாதிக்கவல்லன. இதற்கு பெற்றோலிய வளத்தையும் காபன் உறிஞ்சிகளான காட்டு வளத்தையும் ஏககாலத்தில் அழித்துத் தள்ளுவதால் போக்கிடமின்றி வளி மண்டலத்தில் குவியும் கரியமில வாயு ஒரு வலிய எடுத்துக்காட்டு. கரியமில வாயு பூமியைச் சூடுபோட்டு வருவதால் (Global Warming) நிலவும் வறட்சி காரணமாக தானிய உற்பத்தி கடும் சரிவைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் நிகழ்த்திய ஒரு ஆய்வில், 1981-2002 வரையான
41O
பொ. ஐங்கரநேசன்
காலப்பகுதியில் உயர் வெப்பம் காரணமாக உலகின் கோதுமை, சோளம், பார்லி ஆகிய தானியங்களின் மொத்த் விளைச்சல் ஆண்டுக்கு 40 மில்லியன் தொன்கள் அளவால் வீழ்ச்சியடைந்தது தெரியவந்துள்ளது. ஒரு பாகை பரனைற்று (degreefahrenheit) வெப்பநிலை உயர்வே உலகளாவிய தானிய உற்பத்தியில் 5 விழுக்காடு வரையில் சரியச் செய்துவிடும். வாகனங்களும் தொழிற்சாலைகளும் வளியில் திணித்துக் கொண்டிருக் கிற மாசுக்களால் மனிதர்களின் ஆயுளிலும் சரிவுதான். வளிமாசுக்களால் ஆண்டுதோறும் இரண்டு மில்லியன் பேர்வரையில் மரணத்தை உரிய வயதுக்கு முன்னரேயே சந்திக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படி, மனிதர்கள் தங்களின் அசுர எண்ணிக்கைப் பலத்தால் இயற்கையின் மீது மேற்கொள்ளும் ஒவ்வொரு வல்லுற வுக்கும் இயற்கையிடம் இருந்து எதிர்விளைவுகள் உண்டு. இவற்றை யெல்லாம் கருத்தில் கொள்ளும்போதே மனித இனம் சந்திக்கும் பேரவலத்தின் முழுப்பரிமாணமும் தெரியவரும்.
மல்தூஸின் கொள்கையை நம்பும் ஆய்வாளர்களில் வியன்னாவில் "ரோம் கழகம் (Club of Rome) என்ற பெயரில் இயங்கிவரும் பன்னாட்டுப் புலமையாளர்கள் குழுமமும் (ThinkTank) ஒன்று. அரசியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் போன்ற சர்வதேச விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் சனத்தொகை வளர்ச்சி வீதம், உணவுற்பத்தி ஆகியவற்றின் தரவுகளோடு கைத்தொழில் வளர்ச்சி, இயற்கை வளங் களின் தேய்வு, சூழல் மாசுக்கள் ஆகியனவற்றின் தரவுகளையும் கணினி யில் ஏற்றி ஆய்வு செய்து பார்த்துள்ளனர். 2100 ஆம் ஆண்டளவில் உலகப் பொருளாதாரம் அதிதாழ் மட்டத்தை அடைய, உலகின் மரண வீதம் அதி உயர்மட்டத்தை அடையும் என்பதே அந்த ஆய்வில் கணினி யின் முடிவாக இருந்துள்ளது. அதிகரித்த தொழில்நுட்ப வளங்கள், அதிகரித்த உணவுற்பத்தி என கணினிக்கு மிகைப்படுத்திய தரவுகளை ஊட்டியபோதும் கணினி அழிவு வரும் என்ற சோகமான கணிப்பையே தந்துள்ளது. மேலும், அழிவினால் சனத்தொகை 8பில்லியனைத் தாண்டாது எனவும் கணினி கணித்துள்ளது. அதாவது, 8பில்லியனுக்கு மேற்படாது உலக சனத்தொகையைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பின் 2100 ஆம் ஆண்டளவில் உலகம் அழிவினைச் சந்திக்க வேண்டி நேராது என்பதே இதன் பொருளாகும். ரோம் கழகம் 1972இல் தனது ஆய்வறிக்கையை வளர்ச்சியின் எல்லைகள் (Limistogrowth) என்ற பெயரில் நூலாக வெளியிட்டபோது முழு உலகமுமே அதிர்ச்சியடைந்தது என்றால் மிகையில்லை. இந்நூல் 30க்கு மேற்பட்ட மொழி பெயர்ப்பு
411
Page 208
ஏழாவது2ஊழி
களில் 3 மில்லியன் பிரதிகள் வரை விற்று கின்னஸ் சாதனை படைத்தது. மல்தூஸின் கொள்கையைப் போன்றே, மல்தூஸின் கொள்கையைப் பிரதிபலித்த ரோம் கழகத்தின் ஆய்வறிக்கை மீதும் விமர்சனங்கள் எழுந்தன. இருந்தபோதும், ரோம் கழகம் தனது ஆய்வு முடிவுகளின்மீது இற்றைவரையில் விடாப்பிடியான நம்பிக்கை கொண்டுள்ளது.
பெருகிவரும் சனத்தொகை காரணமாக மனித இனம் 2100 ஆம் ஆண்டளவில் பெரும் அழிவைச் சந்திக்க நேரும் என்பதில், 2100 ஆம் ஆண்டு என்ற காலக்கெடு விவாதத்துக்கு உரியதாக இருக்கலாம். ஆனால், மனித குலத்துக்கு அதனது தொகையே கேடு என்பதில் இன்னொரு கருத்துக்கு இடம் இருக்க முடியாது. மனிதன் உட்பட தனது அத்தனை படைப்புகளுக்கும் படியளக்கவேண்டிய இயற்கை இன்று மனிதச் சுமையைத் தாங்க முடியாமல் சமநிலை தளம்பித் தள்ளாடுவது கண்கூடு. இந்தப் பிரச்சினைக்குரிய தீர்வு இயற்கை வளங் களின் தாங்கும் எல்லைக்கு அப்பால் சனத்தொகையை அதிகரிக்க விடாது பிறப்பைக் கட்டுப்படுத்துவதுதான். சராசரியாக உலகக் குடும்ப மொன்று இரண்டு குழந்தைகளைக் கொண்டதாகும் வகையில் பிறப்புக்குறைப்பை மேற்கொள்ளவேண்டும் என்பதைத் தனது ஆய்வின் முடிவாக ரோம் கழகம் முன்மொழிந்துள்ளது. இதன் அடிப்படை யிலேயே அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் உலகளாவிய உணவு நெருக்கடிக்கு விடையாக வளர்முக நாடுகள் தமது சனத்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. வளர்முக நாடுகளுக்கு நிதியுதவிகள் வழங்குவதற்கு அந்நாடுகள் இறுக்கமான பிறப்புக்கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என உலக வங்கி நிர்ப்பந்தித்திருப்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
ஆனால், இந்தக் கட்டாயங்கள் எதனாலும் வளர்முக நாடுகளின் சனப்பெருக்கத்தை பெருமளவுக்குக் குறைத்துவிட இயலவில்லை. இதற்கு இந்தியா ஒரு சாட்சி. உலகிலேயே முதன் முதலாகக் குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி வெகுசன ஊடகங்களின் மூலம் விழிப் புணர்வுப் பரப்புரையை முன்னெடுத்த நாடு இந்தியா தான். 'நாம் இருவர் நமக்கு இருவர் என்று அளவில் சிறுத்த குடும்பங்களுக்கு சலுகைகள் வழங்கியும், குக்கிராமங்கள் வரை கருத்தடை முகாம்களை முன்னெடுத் தும் வருகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அகிம்சா தேசம் என்று சொல்லப்படுகிற இந்தியா பலாத்காரமாகவும் கருத்தடை அறுவைச் சிகிச்சைகளை செய்து பார்த்தது. இந்திராகாந்தி அம்மையார்
412
பொ. ஐங்கரநேசன்
பிரதமராக இருந்தபோது, 1975-77 காலப்பகுதியில் மானுடமே வெட்கித் தலைகுனியும் விதமாக ஏழை எளிய மக்கள் தெருநாய்கள் போல இழுத்துச் செல்லப்பட்டு மலடுகள் ஆக்கப்பட்டார்கள். ஆனாலும் என்ன? பாரதமாதாவின் சனப்பாரம் குறைந்தபாடில்லை. சீனாவின் சனத்
தொகையை விரைவில் முந்திவிடும் வேகத்தில் பெருகிக் கொண்டிருக்கிறது.
வளர்முக நாடுகளின் வள ஆதாரங்களைச் சுரண்டிக் கொழுத்து வாழும் மேற்கு நாடுகள் தங்களைப் போன்ற பணக்கார நாடுகளுக்கே உலகம் சொந்தம் என்று கருதுகின்றன. இதனால் ஏழைநாடுகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் தங்களது உணவைத் தட்டிப்பறிக்க மேலதிகமாக வந்து சேர்ந்த ‘ஒரு வாய்' என்றே பார்க்கின்றன. ஆனால், ஏழை நாடுகள் பிறப்பைக் கொண்டாட வேண்டியுள்ளது. ஒவ்வொரு குழந்தையின் வருகையையும் அன்றாட வருமானத்துக்குக் கைகொடுக்க வந்த 'இரண்டு கைகள் ஆகவே நினைக்கின்றன. இந்த வித்தியாசம் இருக்கும் வரையில் ஏழை நாடுகளில் குடும்பக் கட்டுப்பாடு என்பது யதார்த்தபூர்வமானதல்ல. மாறாக, வளர்ந்த நாடுகளுக்கு இணையாக ஏழை நாடுகளின் வாழ்க்கைத் தரத்திலும் கல்வியறிவிலும் ஏற்படும் வளர்ச்சியே அதன் மக்கள் தொகையைக் தானாகக் கட்டுக்குள் கொண்டுவரும்.
ஏழை நாடுகள் இந்த உயரத்தை எட்டுவதற்கு வளர்ச்சியடைந்த நாடுகள் கொஞ்சம் கீழே இறங்கிவர வேண்டும். இதற்கு, வளர்ச்சி யடைந்த நாடுகள் அதிகம் இழக்க வேண்டியதில்லை. தங்களின் ஆடம் பரமான மிகை நுகர்ச்சியைச் சற்றுக் குறைத்துக் கொண்டாலே போதுமானது. ஆனால் அப்படிச் செய்யுமா என்பதுதான் பிரச்சினையே. மனிதன் தன் பெருக்கத்தைத் தானே கட்டுப்படுத்துவதற்குத் தவறின் மனிதனுக்கு உவப்பல்லாத வழிகளில் இயற்கை தன் கணக்கைத் தானே சரி செய்துவிடும். அது, பஞ்சமும் பட்டினியும் கொள்ளை நோய்களு மாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. கடற்கோள்கள், கடும் புயல்கள் போன்ற இயற்கைச் சீற்றங்களாகவோகூட இருக்கலாம்.
413
Page 209
40
தேசிய வாசம் வீசும் கார்த்திகைப் பூ
"கார்த்திகைப் பூவின் நிறத்தில் இவள் கட்டுற சேலைகள் இருக்கும் கார்த்திகை மாதம் கல்லறை நாளில் தாயவள் மேனி சிலிர்க்கும்"
- கவிஞர் புதுவை இரத்தினதுரை
இலங்கைத் தீவின் இயற்கை மலர்களிடையே கார்த்திகைப் பூவுக்கெனத் தனித்துவமான சில வசீகரங்கள் உண்டு. காத்திருந்தது போல ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் இது அரும்பத் தொடங்கும். இதன் வெளிர்பச்சை நிறப் பூ முகை மூப்பெய்துகையில் மஞ்சளாகி, முனையில் இருந்து இரத்தச் சிவப்பேறி, பாதிமஞ்சள் பாதிசிவப்பு என்று பிரகாசித்துப் பின்னர் முற்றிலும் 'குருதிப் பூவாக நிறம்மாறும். கார்த்திகையில் மொட்டவிழும் பொலிவும், நெருப்பென சுவாலிக்கும் மஞ்சள் - சிவப்பு நிறப் பூவிதழ்களும், குறிப்பிட்டுச் சொல்லும்படியான வாசம் எதுவும் இல்லாத இந்தப் பூவுக்கு இப்போது ஈழத்தில் சிறப்பானதொரு வாசத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன. ஆம்! ஈழத்தமிழர்கள் தங்கள் தாயகத்தின் தேசியப் பூவாகக் கார்த்திகைப் பூவைத் தெரிவுசெய்து தமிழன்னையின் முடியில் சூட்டியிருப்பதின் மூலம் அதற்குத் தேசிய வாசம் கிடைத்திருக்கிறது.
எல்லா நாடுகளுமே தேசிய அரசியலில் தேசியக்கொடி, தேசிய கீதத்துக்கு அடுத்தபடியாக, மக்களை எழுச்சி கொள்ளவைத்து ஒருங் கிணைக்கும் வசியக் குறியீடுகளாகச் சில உயிர்க்கூறுகளைப் பயன் படுத்துகின்றன. தங்களுடைய அரசியல், பண்பாடு, இயற்கைச் சூழல்களின் வெட்டு முகங்களைப் பிரதிபலிக்கும்படியான மலர், மரம், மிருகம், பறவை போன்றவற்றைத் தெரிவுசெய்து தங்கள் தேசிய முகவரிகளாக்கிக் கொள்கின்றன.
ஐக்கிய அமெரிக்கா தனது தேசிய மலராக 1986ஆம் ஆண்டு ரோஜாப்பூவை அங்கீகரித்தது. அமெரிக்கர்களின் பண்பாட்டில்
44
பொ. ஐங்கரநேசன்
மற்றைய எல்லாப் பூக்களையும் விட அன்பின் குறியீடாக ரோஜா அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அமெரிக்காவின் தேசியப் பறவையாக, வட அமெரிக்காவின் ஒரேயொரு கழுகு இனமான மொட்டந்தலைக்கழுகு 1782ஆம் ஆண்டிலிருந்தே இருந்து வருகிறது. உணவுச் சங்கிலியின் உச்சப்படியில் இருப்பதால் மற்றைய எல்லாவற் றையும் இரையாக்கக்கூடிய வல்லாண்மையைப் பெற்றிருக்கும் மொட்டந்தலைக் கழுகை அமெரிக்கர்கள் சுதந்திரத்தின் குறியீடு ஆகக் கருதுகிறார்கள். அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களும்கூடத் தங்களுக்கெனத் தனியான மலர்களைத் தேர்ந்து வைத்துள்ளன.
இந்தியா தேசிய மலராக இந்துத்துவ அரசியலின் வெளிப்படை யாகத் தாமரைப் பூவை ஏற்றுக் கொண்டுள்ளது. அதன் தேசிய அரசியற்கட்சிகளில் ஒன்றான பாரதீய ஜனதாக் கட்சியின் சின்னமாகத் தாமரைப் பூ இருப்பது குறிப்பிடத்தக்கது. தேசிய மரமாகப் பண்டைய நீதி-நிர்வாக முறையான பஞ்சாயத்து இன்றளவும் கூடுகின்ற இடமாக நிலவும் ஆலமரம் விளங்குகின்றது. தேசிய விலங்காகத் தனது கானகங் களில் மட்டுமே ஒதுங்கிவிட்ட வரிப்புலியையும், தேசியப் பறவை யாகத் தன்னையே தாயகமாகக் கொண்ட அழகொழுகும் மயிலையும் அடையாளப்படுத்தியுள்ளது. இவற்றுடன், நூற்றுக்கு மேற்பட்ட மாங்கனி வகைளைக் கொண்டிருக்கும் பெருமையில் தேசியப் பழமாக மாம்பழத்தையும் சுவைக்கிறது.
பூரீலங்கா தனது பெளத்த பண்பாட்டுச் சூழலுக்கும் இயற்கைச் சூழலுக்கும் அமைவாகத் தேசிய மலராக நீலோற்பலத்தையும் (Nymphaea Stelata), தேசிய மரமாக மெசுவா எனப்படும் நாகமரத்தையும் (Mesua ferea, தேசியப்பறவையாகக் காட்டுக் கோழியையும் அறிவித்துள்ளது. இலங்கைக்காடுகளில் கரந்துறையாத சிங்கத்தை தேசியக் கொடியில் வாளேந்த வைத்த பின்னர் பூரீலங்கா அரசால் வேறு எதனையும் தேசிய விலங்காகக் கொள்ள முடியவில்லை. இதனால் பெரஹரா போன்ற பெளத்த விழாக்களில் முக்கியத்துவம் பெறும் யானையைக் கலாச்சார விலங்காகக் கொண்டாடுகிறது. யானைகளின் கூட்டத்தில் அரிதாக வெள்ளை யானைகள் பிறப்பது உண்டு. வெள்ளை யானை பெளத்த மதத்தில் கெளதம புத்தரின் முற்பிறப்பாகப் போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, தங்களுக்கெனத் தனி அடையாளங்களைத் தேடிக் கொள்ளும் நாடுகளின் நீண்ட பட்டியலின் தொடர்ச்சியாக 2003ஆம்
415
Page 210
ஏழாவது ஊழி
ஆண்டு மாவீரர் காலப்பகுதியையொட்டித் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர் தாயகத்தினுடைய தேசிய மலராகக் கார்த்திகைப் பூவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இலங்கையில் சிங்களத் தேசியம் தமிழர்களது அடையாளங்களை அங்கீகரிக்காது அழித்தொழிக்கத் தலைப்பட்ட பின்னர், அவற்றைத் தூக்கி நிறுத்தும் எதிர்ப்பு அரசியலாகத் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் முளைவிட்டது. தேசியப் போராட்டம் தன் பரிணாமப் பாதையில் காலத்துக்கு காலம் சமூக-வரலாற்றுக் கூறுகளால் தமிழ்த் தேசியத்தின் இருப்பை நிறுவி வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இப்போது, தமிழ்த் தேசியப்பலத்துக்கு மேலும் பல்பரிமாண வலிமை சேர்க்கும் வகையில் தேசிய மலராகக் கார்த்திகைப்பூவைத் தன்னுள் அடங்கிக் கொண்டிருக்கிறது.
கார்த்திகைப் பூச்செடி பழந்தமிழ் இலக்கியங்களில் காந்தள் என்றும் ஆங்கிலத்தில் 'Glory Lly அல்லது "Tiger Claw என்றும் சுட்டப் பெறுகிறது. அறிவியல் மொழியில் 'குளோரியேசா சுப்பேர்பா (Gloriosa Superba) என அழைக்கப்படுகிறது. கார்த்திகைப் பூவைக் கண்ணுற்ற ஆய்வாளர்கள் இருவரில் ஒருவர் கண்கவர் வனப்பு (Glorious) என்றும் மற்றையவர் அழகின் உச்சம் (Superb) என்றும் வியக்க அதுவே 'Gloriosa Superba' என்று பெயரானதாகச் சொல்லப்படுகிறது. கார்த்திகைப் பூ பற்றிய இவ்வர்ணனை மிகையானது அல்ல. இதன் அழகு கண் கொட்டாமல் பார்க்கத் தூண்டும். கண்வலிக்கும் அளவுக்கு என்பார் களே, அந்த அளவுக்கு மீளவும் மீளவும் பார்க்க வைக்கும். இதனால் தமிழகக் கிராமங்களில் கண்வலிப்பூ என்றும் உச்சரிக்கப்படுகிறது. கண்நோக்கும் பூவே கண்நோகும் பூவாக மருவிப் பின்னர், கண்வலிப் பூவாகத் திரிந்ததாகச் சொல்பவர்களும் உண்டு.
கார்த்திகைப் பூச்செடி தன் இலைநுனிகளை நூற்சுருளாக்கிக் கொழுகொம்புகளைப் பற்றி வளரும் ஒரு தந்தேறி (Tendri Climber) வகையாகும். பொதுவாக ஐப்பசியில் முளைவிட்டு, கார்த்திகையில் பூத்துக்குலுங்கி மார்கழியில் மறையும் இந்தச் செடி மீதிக்காலங்களில் மண்ணுள் நிலங்கீழ்த் தண்டாகத்(Rhizome) துயிலுகிறது. வெண்ணிறச் சதைப்பிடிப்பான இக்கிழங்கு தன் ஒரு நுனியை 'ஏர்முனையாக வளைத்து மண்ணினுள் நங்கூரமிட்டுக் கொள்ளும். இதனால் கலப்பைக் கிழங்கு எனவும் பெயர் பெற்றுள்ளது.
கார்த்திகைச் செடியின் ரிஷிமூலமாகத் தென் ஆபிரிக்கா நம்பப்படுகிறது. ஆபிரிக்க நாடுகளுடன் இலங்கை, இந்தியா, மலேசியா
416
Page 211
ஏழாவது ஊழி
போன்ற நாடுகளின் இயற்கைச் சூழலில் உள்நாட்டுக்குரிய (Endemic) இனங்களில் ஒன்றாக நிலைபெற்றுள்ளது. தாவரவியலாளர்களால் இதுவரையில் ஆறு இனங்கள் பெயரிடப்பட்டுள்ளன. பிரதானமான இரண்டு இனங்களில் ஒன்றான 'Gloriosa Superba' ஆபிரிக்க-ஆசிய நாடுகளிலும், பூவிதழ்களில் வெண்மை கலந்த 'Gloriosa rothSchidiana' ஆபிரிக்காவிலும் அதிகமாகப் பரவியுள்ளன. வெப்பவலயச் செடியான இதன் மீது இடைவெப்பவலய மேற்கு நாடுகளுக்கும் மோகம் அதிகம். வெப்பக் குடில்கள் (Hot Houses) அமைத்து அதனுள் அலங்காரச் செடிகளாக வளர்த்து வருகின்றன. அமெரிக்கா அதனுடைய இயற்கைத் தாவரமாக இல்லாத போதும் தனது அஞ்சல் தலை ஒன்றில் கார்த்திகைப் பூவைப் பொறித்து அழகு பார்த்துள்ளது.
கார்த்திகைப் பூ பண்டைத் தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்க மான பூக்களில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. ‘காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்' என்று காந்தள் மலர்மாலை அணியும் வழக்கத்தைப் பதிற்றுப்பத்து அத்தாட்சிப்படுத்துகிறது. "மரகதமணித் தாள்செறிந்த மணிக் காந்தண் மென்விரல்கள் என்று காந்தளைப் பெண்களின் விரல்களுக்குச் சிலப்பதிகாரம் உவமை செய்கிறது. 'காந்தண் முழுமுதல் மெல்லிலை குழைய முயங்கலும் இல்லுய்த்து நடுதலும்' என்று தலைவனுடைய மலையில் இருந்து மழைநீர் கொண்டுவந்து சேர்த்த காந்தட்கிழங்கை நட்டுவளர்த்துத் தன்னை ஆற்றுப்படுத்தும் நாயகி பற்றிக் குறுந்தொகை கூறுகிறது. "சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த கடவுட் காந்தளுள்ளும் எனத் தெய்வங்களுக்குக் காந்தள்பூ சூட்டப்படுவதை அகநானூறு தெளிவு படுத்துகிறது. 'வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும்' என்று காந்தள் மலரணிந்து வெறியாடு வதைத் தொல்காப்பியம் சித்திரிக்கிறது. தமிழரின் போர்க்கடவுள் முருகனுக் குரிய பூவாகக் காந்தளைப் புறப்பொருள் வெண்பாமாலை சிறப்பித்துக் கூறுகிறது. இப்படி, கார்த்திகைப்பூவில் வாய் நனைக்காத புலவர்களே இல்லை என்னும் அளவுக்குப் பழந்தமிழ் இலக்கியங்கள் பூராவும் கார்த்திகைப் பூ இறைந்து கிடக்கிறது.
தமிழ்ப் பண்பாட்டுக்கு நெருக்கமான பூவாக இருப்பதும், தமிழர் தாயகமான் வடக்கு-கிழக்கின் இயற்கைச் சூழலுக்குரிய ஓர் உள்நாட்டு இனமாக இருப்பதும் தேசியப் பூவின் தேர்வில் கார்த்திகைப் பூவின் அடிப்படைத்தகுதிகள் ஆகும். இவற்றுடன் தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் தேசியக்கொடியின் சிவப்பு-மஞ்சள் வண்ணங்களைப்
418
பொ. ஐங்கரநேசன்
பிரதிபலிக்கும் பூவிதழ்களும், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பாங்கில் கார்த்திகையில் பூ விரியும் அதன் அழகும் சிறப்புத் தகைமை களாகச் சேர்ந்து கொள்ள கார்த்திகைப் பூ ஈழத்தமிழர்களின் தேசிய மலராக மலர்ந்துள்ளது.
கார்த்திகைப் பூவைத் தேசிய மலராகத் தேர்வு செய்தமை குறித்து எதிர்மறையான விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. கார்த்திகைப் பூச்செடியில் இயற்கையாகவே "கொல்கிசின் (Colchicine) என்னும் நச்சு இரசாயனம் காணப்படுகிறது. கொல்கிசின் நஞ்சினை 'சயனைட் குப்பிகள் அணியும் புலிகளுக்குப் பொருத்தப்பாடு உடைய இயல்பாகக் காட்டியும், சில சமயங்களில் கார்த்திகைக் கிழங்கு தற்கொலைக் காரணி யாக அமைவதைத் தற்கொலைப் போராளிகளான கரும்புலிகளுடன் ஒப்பிட்டும் இந்த விமர்சனங்கள் அமைகின்றன.
கார்த்திகைப் பூ இனங்களில் ஒன்றைத்தான் (Gloriosa rothschldiana) ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான சிம்பாப்வே தனது தேசியப் பூவாக தேர்வு செய்துள்ளது. பல்வேறு காலனித்துவ நாடுகளின் பிடியின் கீழும், பின்னர் சிறுபான்மை வெள்ளை இனத்தின் அடக்குமுறையின் கீழும் அடிமைப்பட்டிருந்த சிம்பாப்வே 1980ஆம் ஆண்டிலேயே பிரித்தானி யாவிடமிருந்து பூரணமாக விடுதலை பெற்றது. தேசியப் பூக்களின் தேர்வில் நஞ்சு ஒரு பின்னடைவு அல்ல என்பதற்கு இன்னும் பல உலகநாடுகளின் தேசியப் பூக்கள் சாட்சிகளாக உள்ளன. மலர்களின் ஏற்றுமதியில் முன்னணியில் திகழும் ஒல்லாந்து (Holand) நச்சுப் பூண்டான ரியூலிப்பின் (Tulp) மலரையே அரவணைத்துக் கொண்டிருக்கிறது. ரியூலிப்பின் ஒரு குமிழிலுள்ள (குமிழ் - வெங்காயம், உள்ளி போன்ற நிலங்கீழ்ச் சேமிப்பு) நஞ்சின் அளவே மனிதனை மரணத்துக்கு அழைத்துச் செல்லப்போதுமானது. பிரான்சின் பிரபல்யமான அதன் தேசிய மலர் ஐரிஸ் (Fleur dels) ஏறத்தாழ அதன் எல்லாப்பாகங்களிலுமே நஞ்சினைத் தடவி வைத்துள்ளது. வேல்ஸ்சின் டஃபோடில் (Dafodi) பூவும், அதன் குமிழும் அபாயகரமான அளவுக்கு நஞ்சினைக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் லூசியானா, மிசிசிப்பி மாநிலங்கள் தங்கள் மாநில மலராகத் தெரிவுசெய்து வைத்திருக்கும் மக்னோலியா (Magnolia) பூக்களும் விசத்தன்மையானவை.
மேற்கூறிய உதாரணங்கள் மட்டுமல்ல; பூக்கும் தாவரங்கள் எல்லாமே தமது ஏதேனும் ஒரு பகுதியில், ஏதேனும் ஓர் அளவில், ஏதேனும் ஒரு வகையான நச்சினைச் சேமிப்பில் கொண்டுள்ளன.
419
Page 212
W ஏழாவதுஉஊழி
தாவரங்களின் இராச்சியத்தில் ஏனைய தாவரங்களை ஒரங்கட்டி, பூக்கும் தாவரங்கள் (Angiosperms) ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பதற்கு இந்த நச்சு வேதிகளே உதவுகின்றன. பச்சைய வெறியோடு அலையும் பூச்சிகளில் இருந்தும், மேய்ச்சல் விலங்குகளில் இருந்தும் பூக்கும் தாவரங்கள் தம்மைத் தற்காத்துக்கொள்ளும் ஆயுதங்களாக இவை விளங்குகின்றன. சிங்கோனா மரவுரியில் 'குயினைன், கோப்பியில் கஃபின், கொக்கோவில் “கொக்கொயின், ஒப்பியம் செடியில் "மோர் பின், புகையிலையில் 'நிக்கொற்றின், பட்டிப்பூவில் 'வின்கிறிஸ்ரின், செவ்வலரியில் (Nerium) ஒலியாண்ட்றின்', ஆமணக்கில் 'றிசின் வேதிப்போர் நஞ்சுகளில் சில உதாரணங்களாகும். செவ்வலரி இலையொன்றில் ஒரு குழந்தையை மரணிக்க வைக்கும் அளவுக்கு ஒலியாண்ட்றின் செறிந்துள்ளது. இரண்டு ஆமணக்கம் விதைகளிலுள்ள 'றிசின் ஒரு மனிதனைக் கொல்லப் போதுமானது.
நமக்கு மிக நெருக்கமான உணவுத்தாவரங்களிலேகூட நஞ்சுகள் கரந்துறைகின்றன. பீச் பழத்தின் விதையில் 'சயனைட்’ சேமிப்பு உள்ளது. பச்சைத் தக்காளியில் "ரொமாற்றின் நஞ்சு பரவியிருக்கிறது. உருளைக் கிழங்குச் செடியின் துளிர்களிலும், அதன் பச்சைக்கிழங்குத் தோல்களிலும், கத்தரியின் இலைகளிலும் 'சொலானின் விஷம் ஒளிந்துள்ளது. இப்படி இதுவரையில் கண்டறியப்பட்ட பத்தாயிரத்துக் கும் அதிகமான தாவர நஞ்சுகளில் ஒன்றாகவே கார்த்திகைப் பூச்செடியில் 'கொல்கிசின் உருவாகிறது.
கார்த்திகைப் பூச்செடியின் மற்றைய பாகங்களைவிடக் கிழங்கில் 'கொல்கிசின் கொஞ்சம் அதிகமாகத் திரளுவதால் கிழங்கை உட் கொள்ள நேரின் மரணம் சம்பவிக்கிறது. கார்த்திகைச்செடி பயிர்ச் செய்கை நிலங்களிலும் வளருவதால் வற்றாளைக் கிழங்கு என நினைத்துத் தவறுதலாக கார்த்திகைக்கிழங்கைச் சாப்பிட்டுப் பலியான சம்பவங்கள் ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ளன. மரணத்தை விளைவிக்கும் கொல்கிசின் பாரம்பரிய மருத்துவத்தில் அருமருந்தாகவும் உள்ளது. கார்த்திகைக் கிழங்குப்பசை ஊமைக்காயங்கள், தசைச்சுளுக்கு, வயிற்றுநோ, மூலம், முடக்குவாதம் தொழுநோய் போன்ற உபாதை களுக்கும், கருச்சிதைவு - பிரசவ வலியைத் தூண்டவும், பேன் கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதற்குத் தேள்கடி, பாம்புக் கடியைக் குணப்படுத்தக்கூடிய விசமுறிவு ஆற்றல் இருப்பதும் அறியப் பட்டுள்ளது. இந்தியாவில் வீடுகளினுள் பாம்புகள் நுழைவதைத்தடுக்கும் நோக்குடன் சாளரங்களில் கார்த்திகைக் கிழங்கைப்போட்டு வைக்கும்
42O
பொ. ஐங்கரநேசன்
நடைமுறை உள்ளது. ஆயுர்வேத, யுனானி முறைகளைத் தொடர்ந்து ஆங்கில மருத்துவமும் கொல்கிசினைச் சேர்த்துக் கொள்ளத் தொடங்கி யுள்ளது. மருத்துவப் பெறுமதி காரணமாகத் தமிழகத்தில் கார்த்திகைப் பூச்செடிகளைப் பெரும் பண்ணைகளில் பணப்பயிராகப் பயிரிட்டு வளர்க்கிறார்கள். இதன் விதைகளையும், கிழங்குகளையும், இவற்றி லிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளையும் ஏற்றுமதி செய்வதின் மூலம் ஆண்டொன்றுக்கு 10 கோடி ரூபாய்கள் அந்நிய செலாவணியாகத் தமிழகத்துக்குக் கிடைக்கிறது.
இந்தப் பின்னணியிலேயே உலக அரங்கில் ஈழத் தமிழினத்தின் குறியீடாக, வேறு எந்தப்பூவை விடவும் பொருத்தமான தேர்வாகக் கார்த்திகைப்பூ சிறப்புப் பெற்றுள்ளது. ஆனால் கார்த்திகை பூ சொல்லும் செய்தியை, அது கமழும் தேசிய வாசத்தை நுகர்வதற்குப் பேரினவாதம் தயாராக இல்லை. இலங்கைத் தீவின் ஒரே ஒரு பூ நீலோற்பலம்தான் என்று அதன் நாசி வழிகள் எங்கும் நீலோற்பலத்தால் அடைத்து வைத்திருக்கிறது.
இயற்கை, அதன் பரிணாமப் பாதைக்குத் குறுக்காக நிற்கும் எதனையும் தூக்கி எறிந்து தன் பல்லினத்துவத்தை நிலைநிறுத்தும் பேராற்றல் பெற்றது என்பதை வரலாறு பூராவும் நிரூபித்தே வந்துள்ளது.
ܚ
421
Page 213
41
விடுதலைச் சூழலியல்
இயற்கை எனது நண்பன்
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்
வரலாறு எனது வழிகாட்டி A7V
- வே. பிரபாகரன்
மனிதன் தன்னை இந்தப் பூமியை ஆளப்பிறந்த ஒப்பற்ற
உயிரினமாக நினைத்து இறுமாப்புறுவதில் பெருவிருப்பம் கொண்டுள் ளான். பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் தனக்கு அடிமை யானவை எனவும், இயற்கை வளங்கள் அத்தனையும் தனக்கு உடமை யானவை எனவும் கருதத் தலைப்பட்டுள்ளான். இதனால், அவனை அறியாமலேயே இயற்கைச் சூழலின் ஒர் அங்கமாகிய அவனும் அடிமைப்பட்டிருக்கிறான். இந்த அடிமைத் தளையில் இருந்து இயற்கையையும் அவனையும் ஒருசேர விடுதலை செய்யும் விதமான புதியதொரு சிந்தனைப் பள்ளி தோன்றியுள்ளது. மனிதனது சிந்தனையில் மாற்றத்தைக் கோரும், புத்தாயிரம் ஆண்டுக்கான இந்தப் புதிய சிந்தனைப் பள்ளியை விடுதலைச் சூழலியல் (Liberation Ecology) என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
மனிதன் மற்றைய விலங்குகளில் காணக்கிடைக்காத பல தனித்துவமான இயல்புகளைக் கொண்டிருக்கிறான் என்பதில் மறுப்பேதும் இல்லை. ஏனைய உயிரினங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட சூழலில் மாத்திரம் வாழுவதற்கான தகைமைகளைப் பெற்றிருக்கும்போது, மனிதனால் பூமியின் எந்த ஒர் இடத்திலும் கோலோச்ச முடிகிறது. வலது கைப்பிரயோகம் அதிக அளவுக்கு உள்ள அவனால், சுட்டு விரலையும் பெருவிரலையும் மடித்து ஒருவளையம் போலத் தொடமுடிகிறது. கையிலும், மூளையிலும் நேரிணையாக ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக அவனால் கருவிகளை இயக்கவும் பேசவும் முடிகிறது. சக மனிதர்களுடன் அந்நியோன்னிய உறவைப் பேணவும், நினைத்த மாத்திரத்தில் காதல் வசப்படவும் முடிகிறது. இவை போன்ற உயிரியல் ரீதியான தனித்தன்மைகளைத் தவிரவும், மனிதன் பண்பாட்டுப்
422
பொ.ஐங்கரநேசன்
பிரக்ஞையைக் கொண்டிருப்பதாலும் பிற உயிரினங்களில் இருந்து வேறுபடுகிறான்.
மனிதனின் வளர்ச்சிப்பாதையின் ஒரு கட்டத்தில் உயிரியற் பரிணாமம் பண்பாட்டுப் பரிணாமத்துக்கெனவும் ஒரு பாதையை விட்டுக் கொடுத்தது. முன்னையதை விட பிந்திய பரிணாமம் விரைவாகப் பரிமாணித்தது. கற்காலத்தில் இருந்து மனிதனது உயிரியலில், உடலமைப்பில் அதிக மாற்றம் ஏற்படவில்லை. ஆனால், அறிவு பன்மடங்குகளாகப் பெருகிவந்துள்ளது. காலத்துக்குக் காலம் அவன் தேடித்திரட்டிய அறிவு, அடுத்தடுத்த தலைமுறைகளுக்குள் பண்பாட்டுவேராக ஊடுருவுகிறது. முதலில் வாய்வழியாகக் கசிந்த இந்தப் பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சி, ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவன் எழுதக் கற்றுக் கொண்டபோது வேகம் எடுத்தது. தகவல் பரிமாற்றம் கணினிகளினூடாக நிகழும் இன்றைய இலத்திரனியல் யுகத்தில், பண்பாட்டுப் பரிணாமம் மேலும் ஆர்முடுகி வருகிறது. ஆனால், உயிரியல் மற்றும் பண்பாட்டுப் பரிணாமங் களினூடாக மனிதன் விருத்திசெய்திருக்கும் சிறப்பியல்புகளினால் மாத்திரம் அவன் பூமியின் உச்சமான உயிரினம் ஆகிவிடமுடியாது.
மனிதன் தனது சிந்தனை மற்றும் மொழி குறித்தே அதிக கர்வம் கொள்கிறான். ஆனால், அவனது சிந்தனை மற்றும் மொழி, இரண்டுமே எல்லைகளுக்கு உட்பட்டவைதாம். மனம், புறச்சூழலில் உள்ள ஒருபொருள் குறித்தே சிந்தனை கொள்கிறது. பொருளின்றேல் சிந்தனை இல்லை. ஆனால், மனித மனமானது புறச்சூழலின் மீது ஏற்றப் பட்டிருக்கும் காலம், இடம், மற்றும் காரண காரியத் தொடர்புகளி னுாடாகவே ஒருபொருளைத் தரிசிக்கும்படியான அமைப்பைக் கொண்டிருக்கிறது. இதனால், ஒரு பொருளை யதார்த்தத்தில் எதுவாக இருக்கிறதோ அதுவாக அல்லாமல், எதுவாகத் தோற்றமளிக்கிறதோ அதுவாகவே காணவிழைகிறது.
மனிதனது தலையாய கண்டுபிடிப்பான மொழியும் நிறைவான தல்ல. அவுஸ்திரேலியப் பழங்குடியினரின் மொழியில் 'வட்டம்', 'கனம் போன்றவற்றைக் குறிக்கும் வார்த்தைகள் இல்லை. நிலாவைப் போல, பாறாங்கல்லைப் போல என்று உவமை காட்டியே 'வட்டம்', 'கனம் ஆகியவற்றை விளக்க முற்படுவர். எஸ்கிமோக்கள் 'பனி குறித்துப் பேசுகின்ற சொற்கள் அத்தனைக்கும் இணையான சொற்கள் இன்னொரு மொழியில் இடம் பெற்றிருப்பதில்லை. "சித்தப்பா, 'பெரியப்பா' என்ற தமிழின் உறவுமுறைகளை அதே அர்த்தச் செறிவுடன் விளிக்கவல்ல
423
Page 214
ஏழாவது ஊழி
வார்த்தைகள் மிகவும் வளர்ச்சியடைந்த, சர்வதேச மொழி என்று போற்றப்படும் ஆங்கிலத்தில் இல்லை. எழுவாய் - செயப்படு பொருள் - பயனிலை என்ற இலக்கண அமைப்பைக் கொண்டுள்ள மொழிகளில், 'நான் என்ற தன்முனைப்பு அதிக அழுத்தம் பெற்றுள்ளது. இது, இயற்கையின் ஒர் அங்கமாகவே மனிதன் உள்ள நிலையில் மனிதனை இயற்கையில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கவும், மனிதனுக்கும் மற்றைய எல்லாவற்றுக்குமான உறவுநிலையை குறைத்து மதிப்பிடவும் தூண்டுகிறது. ஆனால், தமிழ் - சீன மொழிகளில் 'நான் (1) இல்லாமல் இருக்கிறேன் (am) என்ற நிகழ்கால வினை தனியாக இயங்க முடியும். இவ்வாறு எல்லா மொழிகளும் ஏதோ ஒரு பரிமாணத்தில் வரையறை களைக் கொண்டனவாகவே பேசப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மனிதனுடைய சிந்தனையினதும் மொழியினதும் வரையறைகள் அவனை ஒரு எண்ணக் கரு - மொழிநிலைப்பட்ட குகையினுள் தள்ளிவிடுகின்றன. அந்த எல்லைகளுக்குள் நின்று கொண்டு அவனால் மேலே உள்ள வானத்தினதோ, கீழே கடலினதோ யதார்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. இயற்கை பற்றிய அவனது மட்டுப்படுத்திய அறிவு, வளங்களைத் தனக்குரியதாக, தனக்கு மட்டுமேயுரியதாகக் கருதி வாரிச் சுருட்டுகிறது. காட்டுத்துகில் களைந்து பூமியை நிர்வாணமாக்குகிறது. புகைக்கரியால் பூமியைச் சூடுபோடுகிறது. செரிமானமாகாத பிளாஸ்ரிக் (Plastic) கழிவுகளை ஊட்டி ஊட்டி மண்ணை மரிக்கச் செய்கிறது. இரசாயனங்களால் நிலத்தை, நீரை, காற்றை நஞ்சேற வைக்கிறது. ஒசோன் கூரையில் துளையிடுகிறது. அணுக்களைப் பிளந்து கதிர் வீசுகிறது. தீன் பறவைகள், விலங்குகளில் ஒமோன்களை அடைத்து அவற்றின் இயல்புக்கு மீறி உடல் எடையை எகிறச் செய்கிறது. பல இனங்களை இல்லாது ஒழித்துவிட்டு, இன்னும் எண்ணுக்கணக்கில்லாத இனங்களை அழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக 'பிறப்புரிமைப் பொறியியல், 'குளோனிங் என்று இயற்கையின் படைப்புத் தொழிலைத் தனதாக்க எத்தனிக்கின்றது. இந்தச் செயற்கைத் தேர்வு, இயற்கை இதுகாலவரை தனது தேர்வின் மூலம் புதிய இனங்களைப் பிரசவித்து வந்த பரிணாமப் பாதையின் கதவுகளை ஒவ்வொன்றாக அடைக்கத் தொடங்கியுள்ளது.
அறிவியல் என்பது மனுக்குலத்தின் மேம்பாட்டுக்கானவற்றைக் கண்டறிவதற்கென உருவான ஒரு துறை. ஆனால் அதுவே இன்று சக மனிதர்களை மட்டுமல்லாது, இயற்கையையும் பணிவிக்க முயலும்
424
Page 215
ஏழாவது ஊழி
அறத்துக்குப் புறம்பான நுகர்வியம் சார்ந்த, எதேச்சாதிகாரமான சிந்தனைப் போக்காக உருவெடுத்துள்ளது. இந்த அடக்கு முறைகளுக்கு எதிராகப் பூமி அவ்வப்போது தனது எதிர்ப்பைக் காட்டிவருகிறது. காலம் தப்பிய கனமழை, வெள்ளப்பெருக்கு, நாவறளும் கடும் வறட்சி, பெரும்புயல், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் இந்த எதிர்ப் புணர்வின் வெளிப்பாடுகள்தாம். முன்பை விட அடிக்கடி நிகழ்ந்து, அதிக எண்ணிக்கையில் உயிர்களைக் காவு கொண்டு வரும் இயற்கை யின் இந்தப் பழிவாங்கல்களுக்கு உலகின் எந்தக் கண்டமும் தப்புவதாக இல்லை. ஒட்டு மொத்தமாகப் பூமி ஒருநாள் காட்டப் போகும் கடும் எதிர்ப்பின் முன்னால் மக்கள் கூட்டமே இல்லாது போகவும் நேரிடலாம்.
இயற்கையின் இந்த அனர்த்தங்களுக்கான காரணங்கள் பற்றிய தேடல்கள் இல்லாமல் இல்லை. இருந்தும் சுற்றுச்சூழற் கரிசனை உள்ளவர்களிற் பெரும்பாலானோரின் கண்ணோட்டம் ஆழமானதாக இல்லாமல் மேலோட்டமான சூழலியமாகவே (Shalow Environmentalism) உள்ளது. சூழல் நெருக்கடிகளுக்கு மனிதனின் இயற்கை பற்றிய எண்ணக் கருவை அல்லாமல், - பெருகிவரும் மக்கள் தொகை, மிதமிஞ்சிய கைத்தொழில் வளர்ச்சி, பொருத்தமில்லாத தொழில் நுட்பங்கள் போன்றவற்றையே காரணங்களாகச் சுட்டுகிறார்கள். இவர்களின் அளவு கோல் மனிதன். மனிதனுக்குப் பயன்படுகின்றவை என்ற அளவிலேயே ஒவ்வொன்றினதும் பெறுமதியை மதிப்பீடு செய்கிறார்கள். இயற்கை யுடன் இப்போது கொண்டிருக்கும் சொத்து உறவுகளை எதுவிதத்திலும் குழப்ப விரும்பாத இவர்கள் தங்களுக்கான ஒரு சிறப்பு இடமாகவே இந்தக் கோளினைத் துப்பரவு செய்ய விரும்புகிறார்கள். வளங்களின் உச்சப் பயன்பாட்டை இந்தத் தலைமுறையும் பெற்று, வருங்காலச் சந்ததியும் அனுபவிக்க வேண்டி - 'பரிபாலனப் பகுதிகளை (Conservation areas) உருவாக்கி, "நிலைத்து நிற்கும் அபிவிருத்தி (Sustainabledevelopment) குறித்துப் பேசுகிறார்கள். சிலர் இன்னும் ஒரு படிமேலே சென்று சில இனங்களை, சில வாழிடங்களை, சில சூழற்தொகுதிகளை 'உள்ளது உள்ளவாறு அப்படியே நிலைகாப்பு (Preservation)ச் செய்ய விரும்பு கிறார்கள். இது சூழலின் இயங்கியற் பரிணாமத்தின் (Dynamic Evolution) முக்கியத்துவத்தை நிராகரிக்கின்ற ஒரு போக்கு ஆகும். உண்மையில் மேலோட்டமான இந்தச் சூழலியம், ஏற்கனவே இந்தச் சமூகத்துக்கும் - இயற்கைக்கும் இடையே நிலவிவரும் ஆண்டான் - அடிமை உறவு முறையின் நீட்சியே தவிர வேறல்ல.
426
பொ. ஐங்கரநேசன்
மேற்குறித்த வரலாற்றுப் பின்புலத்தை வழிகாட்டியாகக் கொண்டே எமது பண்டைய அறிவுத்தேட்டத்தையும், நவீன ஆழ்நோக்குத் தெளிவுகளையும் இணைத்துப் புதிய சிந்தனைப் பள்ளியாக பீட்டர் மார்ஷல் (Peter Marshal) என்னும் தத்துவஞானி விடுதலைச் சூழலியலை முன்மொழிந்துள்ளார்.
விடுதலைச் சூழலியல் பூரண முழுமை கொண்டது. இது வலைப்பின்னல் போல அமைந்த ஒன்றுடன் ஒன்று உறவு கொண்ட இயற்கையை அங்கீகரிக்கிறது. மனிதனே மையம் என்பதனை நிராகரித்து, வலைப்பின்னலில் அவனும் ஓர் இழை - சக உயிரினங் களில் அவனும் ஒர் இனம் - என்ற அளவில் ஏற்றுக் கொள்கிறது. மனிதர்களைப் போலவே, பிற விலங்குகளும், தாவரங்களும் இப்பூவுலகில் வாழ உரிமை உள்ளவை; மனித வாழ்க்கை அளவுக்கு இவற்றினது வாழ்க்கையும் பெறுமதி மிக்கவை; பரஸ்பரம் பயனுள்ளவை எனப் பகர்கிறது. எல்லா உறுப்புகளும் எப்படி ஒர் உடலில் ஒருமித்து இயங்குகின்றனவோ, அது போலப் பல்வகைமையும் (Diversity) இணைந்த ஒரு முழுமையான திருவுயிராக - கிரேக்கர்கள் பூமியை உருவகப்படுத்திய 'கயா (Gaia) என்னும் பெண் தெய்வத்துக்கு நிகராக - இயற்கையைக் காணும் விடுதலைச் சூழலியல், இவற்றில் ஒன்றின் இழப்பே முழுமைக்கும் பங்கம் சேர்க்கும் என எச்சரிக்கிறது.
விடுதலைச் சூழலியல் மிகவும் ஆழமானது. சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கான வேர்களைத்தேடி பிரபஞ்சத்தின் தொடக்கப் பாதை வரை பயணிக்கிறது. 'கடல்நீர் எங்கள் உதிரத்தில் உள்ளது. மூர் (Moo) தரை எங்கள் உதரத்தில் உள்ளது. நட்சத்திரங்கள் எங்கள் மூளையில் உள்ளன. இயற்கையை நாங்கள் உணருகிறோம் இயற்கை எங்களை உணருகிறது. எதுவித்திலும் இயற்கைக்கு நாங்கள் அந்நியமானவர் களல்லர் - என்று இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒன்றை, உறவினை ஏற்படுத்த விழைகின்றது. தத்துவம் அஸி" (Tatwamas) 'நீ அதுவாகிறாய் என்னும் பிரபலமான சமஸ்கிருதச் சொற்றொடரை ஆழமாக உள்வாங்கி, மனிதனில் மற்றைய படைப்பு களையும், மற்றைய படைப்புகளில் மனிதனையும் காணும் விடுதலைச் சூழலியல் அனைத்தின் மீதும் பரிவு கொள்ள வேண்டுகிறது. இதன் அர்த்தம் 'இரை கௌவி - இரை உறவை மாற்றுவது என்பது அல்ல. வாழுவதற்காக ஒர் இரையைப் பலியிடுவதை ஏற்றுக்கொண்டு மகிழ்வு வேட்டையை, ஒரு சிறு கிளையானாலும் வேண்டுமென்றே ஒடிக்கும் உயிர்வதையைத் தீர்க்கமாக மறுக்கின்றது. மேலும், தம்மில்
427
Page 216
ஏழாவது ஊழி
மற்றையவற்றையும், மற்றையவற்றில் தம்மையும் காணுபவர்களால் பூமி எங்கள் வீடு; அது எங்களைக் கவனித்துக் கொள்ளும் என்ற பாது காப்புணர்வைப் பெற முடியும் என நம்பிக்கை ஊட்டுகிறது. இந்த அச்சத் தவிர்ப்பின் மூலம், ஒரு நாயுடனானதைப் போன்ற நெருக்கமான பிணைப்பை, நட்புணர்வை மனிதன் பிற கானுயிர்களிடத்திலும் வளர்த்தெடுக்க விடுதலைச் சூழலியல் பாதை திறக்கிறது.
விடுதலைச் சூழலியல் சமூகம் சார்ந்தது. இன்றைய சுற்றுச் சூழல், சமூக நெருக்கடிகளுக்கான காரணங்களாக, இயந்திரத்தனமான, அதிகாரம் மிக்க உலகக் கண்ணோட்டத்தை மட்டுமல்லாது சமூகத்தின் உள்ளே நிலவுகின்ற ஏற்றத் தாழ்வு மிக்க அடுக்கு முறைமையையும் மேலாண்மையையும் காண்பிக்கின்றது. நவீன தொழில்நுட்பம், கைத்தொழிற் பெருக்கம், விஞ்சிச் செல்லும் சனத்தொகை என்பன வற்றுக்கும் மேலாக, மனிதன் மற்றவர்கள் மீது செலுத்தும் ஆதிக்க முறைமையையே அதிகம் பழி கூறுகிறது. பெண்வழிச் சமூகத்தில் பெண் ஆணின் மீதும், ஆண்வழிச் சமூகத்தில் ஆண் பெண்ணின் மீதும், சமத்துவமும் சத்தியமும் அற்ற சமூகத்தில் ஆணும் பெண்ணும் ஒருவர் மீது மற்றொருவர் என்றும் மனிதர்கள் மனிதர்கள் மீது காண்பிக்கின்ற மேலாதிக்கமே, ஒரு கண்ணாடி போல இப்படி இயற்கையின் மீதும் வெளிப்படுவதாக நிறுவுகிறது. இந்த ஆதிக்க உணர்வு மனிதனுடனே கூடப்பிறந்தது அல்ல; பரிணாம மார்க்கத்தில் அவன் பெற்றுக் கொண்ட, கற்றுக் கொண்ட இயல்புகளில் ஒன்றுதான் என நம்புகிறது. எல்லா மனிதர்களிடத்திலும் ஆதிக்க - போர் முனைப்புகள் இருந் தாலும், கூடவே அவர்களில் சமத்துவமும், அகிம்சையும் கரந்துறை வதாகச் சொல்லும் விடுதலைச் சூழலியல், சமூக - பண்பாட்டு - அரசியற் பின்புலங்களே இப்படி ஒருவர் செலவில் மற்றொருவரை வாழ நிர்ப்பந்திப்பதாகக் காரணப்படுத்துகிறது.
விடுதலைச் சூழலியல் விடுதலைப்பண்பு மிக்கது. பிரெஞ்சுப் புரட்சி முன்னிறுத்திய சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவத்தை அபிலாசைகளாகக் கொண்டு இயற்கையின் மீதும், சமூகத்தின் மீதும், மானுடத்தின் மீதும் அழுத்திக் கொண்டிருக்கும் கட்டுகளில் இருந்து அவற்றை விடுவிக்கப் பிரயத்தனம் செய்கிறது. அணுக்களைப் பிளக்கும் ஆழமான தலையீடுகள், மரபணுமாற்றம், படியாக்கம் (cloning) போன்ற பரிணாமப்போக்கை இயக்கும் முயற்சிகள் என்று விஞ்ஞானிகள் தங்கள் அறிவை இயற்கையின் மீதான ஆதிக்கமாகப் பிரயோகிப்பதை அடியோடு நிறுத்த உத்தரவிடுகிறது. உடலில் கிருமிகளுக்கும், வயலில்
428
பொ. ஐங்கரநேசன்
களைகளுக்கும் காட்டில் ஓநாய்களுக்கும் முழுமையின் ஆரோக்கி யத்தை மோசமாகப் பாதிக்காத எல்லைவரைக்கும் சுதந்திரம் தருகிறது. மலேரியா போன்ற கொள்ளை நோய்க்கிருமிகளைக் கட்டுக்குள் கொண்டுவரும் அதே சமயம், அடைப்புக்குள் வந்து விட்ட பின்னர், இன்று ஆய்வுக்கூடங்களிலே மாத்திரம் இருக்கும் பெரியம்மை வைரஸாக இருப்பினும்கூட அவற்றை உலகில் இருந்து இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைக் கடுமையாக ஆட்சேபிக்கிறது. ஆரோக்கியமான ஒரு மனிதஅங்கி நோய்த்தொற்றுதலுக்கெதிரான ஆற்றலை இயற்கையாகவே கொண்டிருக்கிறது. அதுபோல், ஆரோக்கியமான இயற்கைச் சூழலும் தீங்கான ஊடுருவல்களில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என நிம்மதியுறும் விடுதலைச் சூழலியல், ஓர் உயிரின் ஆரோக்கியத்தை அது தாங்கும், சகித்துக் கொள்ளும் ஒட்டுண்ணிகளைக் கொண்டே அளவீடு செய்கிறது.
இந்த விடுதலைச் சார்பு, காலாகாலத்துக்கும் நிலைத்திருக்கும் நிலத்தின் மீது அற்ப ஆயுளைக் கொண்ட மனிதன் கொண்டாடும் சொத்துரிமை பற்றி நகையாடுகிறது. காற்று, கடல் போன்று நிலத்தையும் அனைத்துக்குமான பொதுக் கருவூலமாகக் கருதி, பெரும் உயிர்ப் பல்வகைமையை (Biodiversity) நோக்கிப் பரிணாமத்தின் செல்திசை அமையும் வகையில் நிலச் சீரமைப்புக்கான புதிய ஒழுக்க நெறிகளை வகுக்கிறது. நிலப்பரப்புகளைக் கையகப்படுத்தி அவற்றையும், அவை தாங்கும் சமுதாயங்களையும் சீரழித்துக் கொண்டிருக்கும் பாரிய, பாரிய வேளாண் வணிக நிறுவனங்களிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து, விளைச்சலில் மட்டுமல்லாது நில ஆரோக்கியத்தைச் சீராட்டிப் பேணுவதிலும் பெருமையுறும் குடியானவர்களிடம் மீளப் பகிர்ந் தளிக்கப் பரிந்துரை செய்கிறது. இதுவரை மனிதனின் கை அதிகம் படாத பகுதிகளில் இருந்து இயன்ற அளவுக்கு அவனைப் பின்வாங்கச் சொல்கிறது. இதன் மூலம், 'தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும் இயற்கையின் திறன் மூலம் அப்பகுதிகளை அவற்றின் தொடக்க நிலைக்குத் திரும்ப வழிகோலுகிறது.
இயற்கையின் மீது மனிதனது "கிடுக்கிப் பிடியைத் தளர்த்தும் அதே சமயம், மனிதன் மீதிருக்கும் தளைகளையும் களையக் கோருகிறது. இதற்கான பெறுவழியாக, பன்னாட்டு நிறுவனங்கள் தாம் விரும்பிய வாறு நாடுகளைக் கையாளுகை செய்யும் 'உலகமயமாக்கல் என்னும் மூக்கணாங் கயிற்றினைக் கழற்ற எத்தனிக்கிறது. சமுதாயத்தில் எல்லோரையும் அழுத்திக் கொண்டு, சிலரின் கைகளில் உள்ள
429
Page 217
ஏழாவதுஉஊழி
அதிகாரங்களையும், செல்வத்தையும் கட்டிக்காக்கும் 'மைய அரசு முறைமையை அடியோடு நிராகரிக்கிறது. தன்னார்வமான மக்கள் குழுக்கள் தம்மைத் தாமே நிர்வகித்துக் கொள்ளும் அதிகாரப் பரவலாக்கலை முன்வைக்கிறது. மிகச்சிறந்த ஆட்சி என்பது மிகக் குறைவாகவே ஆளுவது, அதை விட மிகச் சிறந்த நிலை ஆளுமையே இல்லாது இருப்பது என எல்லாவகையான கட்டுகளையும் அவிழ்க்க அவாவுகிறது.
இப்படி, இயற்கையை விடுவிப்பதன் மூலம் நாங்கள் எங்களையும், எங்களை விடுவிப்பதன் மூலம் நாங்கள் இயற்கையையும் விடுவிக்கக் கோரும் விடுதலைச் சூழலியல் இரண்டினதும் ஒருங்குசேர் நிலையிலேயே பரிணாமத்தின் சாத்தியங்களை "மொட்டவிழ் மலராக விரிக்கவும், அதை அனுபவரீதியாக உணரவும் முடியும் என்கிறது. இறுதியாக, காலம் என்னும் பெருங்கடலில் தன்னெழுச்சியாகச் செல்லும் பரிணாமக் கப்பலில் மனிதன் ஒட்டுநனாக இன்றிச் சக இனங்களில் ஒருவனாக நிகழ்த்தும் பயணம் இனிமையாகக் கழியும் என வாழ்த்துகிறது.
அறிவியல் - தொழில் நுட்பத்தின் வழியாகப் பெளதீகச் சொகுசுகளை அடைவதை மட்டுமே குறியாகக் கொண்ட மேற்குலக வாழ்க்கையின் தெறிவினையாக கொள்கையளவில் விளக்கப்பட்டி ருக்கும் விடுதலைச் சூழலியல், சுவையான கற்பனை என்றே எண்ணத் தோன்றும். இயற்கையையும், மனிதனையும் விடுவிக்க முனையும் இதன் நடைமுறைச் சாத்தியங்கள் பற்றிச் சந்தேகங்கள் இல்லாமல் இல்லை. அதே சமயம், சமீப காலமாகச் சுற்றுச் சூழல் தொடர்பாக முகிழ்த்து வந்திருக்கும் ஒழுக்க நெறிகளை மறுப்பதற்கும் இல்லை. பிரெஞ்சுப் புரட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட முதலாவது உரிமைப்பிரகடனம் வெள்ளைத்தோல் மனிதர்களை, அதுவும் சொத்துள்ள ஆண்களை மட்டுமே கவனத்தில் எடுத்தது. இருபதாம் நூற்றாண்டிலேயே மேற்குலகம், பெண்களினதும் வெள்ளையர்கள் அல்லாதவர்களினதும் உரிமைகளை ஏற்றுக் கொண்டது. இந்த உரிமைகள் இப்போது எல்லோருக்கும் பொதுவானது என்பதாக மட்டுமல்லாமல், விலங்கு களின் உரிமைகளையும் உள்வாங்கி அகலித்து, தாவரங்கள் பற்றியும் பேசத்தொடங்கியுள்ளது.
அதுபோல அரசு இல்லாத சமூகம் என்பதும் வெறும் யூற்றோப்பியக் கனவு (Utoplandream) அல்ல. ஆற்றங்கரையோர நாகரிகங்
43O
பொ. ஐங்கரநேசன்
களின் நிலைபேற்றின் வரையிலும், அதற்குப் பின்னர் ஏற்றத்தாழ்வுமிக்க சொத்துடைமைகள் தோன்றும் வரையிலும் அது மனிதவரலாற்றின் அனுபவமாக இருந்து வந்திருக்கிறது. அரசோ ஆளுகையோ இல்லா மல், 'புலி புறம்காக்கும் குருளை போலத் தங்களைக் காப்பாற்றும் பராக்கிரமம் பொருந்திய பிரதானி ஒருவரின் கீழ், அல்லது இறையைச் சேகரித்துப் பகிர்ந்து தரும் திறமையும் வசீகரமும் மிக்க தலைமைத் துவத்தின் கீழ் மக்கள் அளவோடு நுகர்ந்து வளமோடு வாழ்ந்திருக் கிறார்கள். இந்த வரலாற்றுப் புரிதல்களுடன், ஒரே ஆற்றில் மீளவும் கால் நனைக்காது, பழையனவற்றின் நல்ல இயல்புகளைத் துணைக்கு அழைத்துக்கொண்டு முன்னோக்கிப் பயணிக்கவே விடுதலைச் சூழலியல் பணித்துள்ளது.
ஒரு மாற்றத்துக்கான காற்று மேற்கில் இருந்து மெல்ல வீசத்தொடங்கியுள்ளது. நானிலம், ஐந்திணை என்று இயற்கையோடு ஒட்டிய வாழ்விற் சிறந்து விளங்கிய பாரம்பரிய மரபுகளை காலனித் துவத்தின் கீழ் படிப்படியாகத் தொலைத்து, இன்று பேரினவாதத்தின் கீழும், உலகமயமாக்கலின் கீழும் திணறிக்கொண்டிருக்கும் எம்மீதும் அது தவழட்டும்!
43
Page 218
இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பிரசுரமான இதழ்கள்
தினக்குரல் இலங்கை
கூடம்
இலங்கை
é95 ibi
தமிழகம் பசுமைத் தாயகம் தமிழகம்
சாளரம் இலக்கியமலர் தமிழகம் கருஞ்சட்டைத் தமிழர் தமிழகம்
தாமரை
தமிழகம்
தாமரை
பிரான்ஸ்
அருவி
இலண்டன்
வைகறை
4.32
Page 219
Page 220
"சூழலியல் வெறுமனே கல்வி என்பார்களே; அதுபோல அங்கமாகவே அனுபவித்து 6 சொல்லும் பொ.ஐங்கரநேசன் பல்வேறு சூழலியற் பிரச்சிை
இயற்கைச் சூழல் அனுபவித் இனமாக மனிதனையே கா தப்புவதற்கு மனிதன் புவியி: கூட்டாண்மை உறவுக்குத் தி
பொ.ஐங்கரநேசன் யாழ் பல்க பெற்றவர். சென்னைக் கிறித்த6 தொடர்பியலில் முதுநிலைப் தொடர்பான ஆய்வுகளை பே பணியாற்றி வருகிறார்.
|6606ు: గ్రా. 1000
சேமமடு
அல்ல; அது வாழ்க்கை, இரத்தமும் சதையும் இயற்கையில் தோய்ந்து அதன் ஒரு பாழுகின்ற வாழ்க்கைதான் சூழலியல்" என்று இந்நூலில், புவிக்கோளை அச்சுறுத்தி வரும் னகளையும் விரிவாக விளக்கியிருக்கிறார்.
து வரும் அத்தனை துயரங்களுக்கும் ஒற்றை "ணம் சுட்டும் இவர், பேரழிவில் இருந்து ன் மீது மேலாண்மை செய்வதை விடுத்துக் ரும்ப வேண்டும் என வலியுறுத்துகிறார்.
லைக்கழகத்தில் முதுவிஞ்ஞானமாணி பட்டம் பக் கல்லூரியில் இதழியல் மற்றும் பொதுசனத் பட்டயப்படிப்புப் பயின்றவர். சுற்றுச்சூழல் ற்கொள்வதோடு, சூழல் இதழியலாளராகவும்
ISBN 55-57-73-3
||
||
317 ά ή 55 Ια 57 ή 83
CBCN: 2010-09-01-079