கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை மனித உரிமைகள் நிலை

Page 1


Page 2
|・8°30
-8.)
-r 30.
ጎ• Ögy
- 6'30
9:30
f
• ሳaሶጎ'” 00*8ω (χ)" soo so 83) ცებ ()3 "נין"
め? * 笠艺孝“” 6ᏙᎩᏝEI6ᎼᎣ ᎯᎦ ஓ” “ஜ27 பருத்தித்துறை இ assodasa, মৃত্যুহ மாவட்டம் SRILANKA علمي
**২yf>K ইহঁঠুত্ৰ buit எழுவைதீவு ک
g#**మైత్ర &eugĤ, (Aotipoj -- : gagawaiv689 KWASAN 8۔
நயினாதீவு م சம்பியன் பற்று 2100 - மீற்றர்களுக்கு மேல்
மன்டைதீவு No, ரி புங்குடுதீவு **கண்டிக்குளம் uiuasnyarw arfKST நெடுந்தீவு Y s. 150o - 21 oo !&ყbron 溶 பாலைதீவு" ళ్ళి * " பே Porr. ro. 900-1500 மீற்றர் கச்சதீஷ் பய்முனை
| |300 - 900 „ჰგpი
30 - 300 மீற்றர்
જ, 30 - மீற்றர்களுக்குக் கீழ்
*్క நதி
8yvTia انابه M»۲ او بالا s *"لالالماشانlق =ـــــــــ + --- --+ uxTasmaretéumaro
MT R L. L-iffissew ܢ ܢ ܚ -ܗܝ ܚ
போத்துக்கல் கு-7 ജ്ഞr ( ഗ്രന് Au CarrTభ7ణళ
கெரட்டியாகுடா
く 830
பங்கத்தெனியா
இந்து சமுத்திரம்
6'30E
سا"۱۳ به ۵ ساله பலாங்கொடை
SarfuLumá*
இந்து சமுத்திரக்
10 O '00
1; 10,00,000
79° 30' yo
8 80' 30
81°೦ 813ο 820
* தோப்பூர்
l.
சிசிலாம்பத்தை
palahgu
'' al-alu
flausyb v
همم ! "
۴م - - - ؟
இரந்த
திாறட்டுவ
umመፅgጫይ \
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கை
மனித உரிமைகள் நிலை
வெளியிடுவோர்
சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம் 3 கின்சி டெறஸ் கொழும்பு 8 இலங்கை

Page 3
பதிப்புரிமை சட்டத்துக்கும் சமூகத்துக்குமான
அறநிலையம் சித்திரை 1995
ISBN 955 - 9062 - 21 - 2
சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையத்தால் பின்வரும் ஆலோசகர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது.
சார்ள்ஸ் அபேசேகர, கன்னியா சம்பியன், சபீனா பெர்னாந்து, மரியோ கோமஸ், நீலன் திருச்செல்வம், டமறிஸ் விக்கிரம சேகர, சூரியா விக்கிரமசிங்க
ii

விடயங்கள் சமர்பித்தோர்
சட்டப்பின்னணி
அவசரகால ஒழுங்குவிதிகள்
குடியியல் அரசியல் உரிமைகள்
தனிமனிதனின் முழுமைக்கான மதிப்பு
கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம்
ஒழுங்கு சேருவதற்கான சுதந்திரம்
அரச சார்பற்ற நிறுவனங்கள் தொழிற்சங்கங்கள்
வடக்கு கிழக்கு யுத்தம்
பொருளாதார சமூக உரிமைகள்
பெண்கள் உரிமைகள்
சிறுவர் உரிமைகள்
இடம்பெயர்வும் தங்குவதற்கான உரிமையும்
குழு உரிமைகள்
சிறுபான்மையினர் உரிமைகள்
ஆதிவாசிகள் உரிமைகள்
கன்னியா சம்பியன்
சூரியா விக்கிரமசிங்க
பற்றிசியா கைன்ட்மன், சபீனா பெர்னாந்து, கன்னியா சம்பியன்
சார்ள்ஸ் அபேசேகர
சார்ள்ஸ் அபேசேகர பிராங்கிளின் அமரசிங்க
சட்டத்துக்கும் சமூகத்துக்குமான -9յթյ516576vաւծ
சுனில் பஸ்தியன்
பெண்களுக்கான ஆராய்ச்சி நிலையம்
நந்தினி சமரசிங்க
ஷாரியா டி சொய்ஷா
மரியோ கோமஸ்
கன்னியா சம்பியன்
தரிணி இராஜசிங்கம்

Page 4
விடயதானங்கள் பின்வருவோரால் திறனாய்வு செய்யப்பட்டு கருத்துரையும் வழங்கப்பட்டன
சுனிலா அபேசேகர கன்னியா சம்பியன் ராதிகா குமாரசாமி றொஹான் எதிரிசிங்க நிமல்கா பெர்னாந்து மரியோகோமஸ் பற்றிசியா கைன்ட்மன் சமன் கலேகம; எலிசெபத் நிசன் நீலன் திருச்செல்வம், நந்தினி சமரசிங்க குமுதினி சாமுவேல்; தீபிகா உடகம; யூ.ரி.எச்.ஆர்.
ஒருங்கிணைப்பாளர் கன்னியாசம்பியன்
நிருவாகம் டமறிஸ் விக்கிரமசேகர
ஒப்பு நோக்குனர் தர்ஷரினி மகாதேவா, ரஜிதா இப்ரகீம், சங்கரி விஜயரட்ணம்
குரியா விக்கிரமசிங்க (சி.ஆர்.எம்) சார்ள்ஸ் அபேசேகர (இன்போம்) திலக பெர்னாந்து (எல்எஸ்ரி); பிதம்பிராசா (ஐ.சி.இ.எஸ்) நடேசன் நிலையம் மனித உரிமைகள் நிலையம்; ராஜன் ஹரால் (யூ.ரி.எச்.ஆர்) பாக்கியசோதி சரவணமுத்து
மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பு சுமணவீர ராஜபக்ஷ
மொழி பெயர்ப்பு சரிபார்த்தல் கே. பாலகிட்னர்
கணணி அச்சமைப்பு அச்சுப் பதிப்பு. வரையறுக்கப்பட்ட யுனிஆர்ட்ஸ் தனியார் ஸ்தாபனம்
i v

முகவுரை
இவ்வறிக்கை இலங்கையின் மனித உரிமைகள் சம்பந்தமான ஓர் முக்கிய நீர் முகடாகக் காணப்படுகின்றது. இது மனித உரிமைகள் சம்பந்தமான தீவிர அக்கறையுடைய சேவையாளர்களாலும் அறிஞர்களாலும் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள வருடாந்த மீளாய்வு செய்யும் ஒர் முதன் முயற்சியாகும். இன்போம் சட்டத்தினூடாக மனித உரிமைகளுக்கான நடேசன் நிலையம் மற்றும் சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம் என்பவற்றின் அயரா முயற்சியின் பலனால் எழுந்ததே இவ்வறிக்கையாகும். இதேபோன்ற முயற்சிகள் பாகிஸ்தான் ( பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணைக்குழு) பங்களாதேசம் ( பங்களாதேசம் மனித உரிமைகளுக்கான ஒருங்கிணைப்பு சபை) நேபாளம் (ஐ. என்.எஸ்.இ.சி) ஆகிய நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை அறிக்கை இந் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமையை விளக்கமுற்படுவதுடன் இலங்கை தனது சர்வதேசக் கடப்பாடுகளுக்கமைய அதன் குடிமக்களினது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதிலுள்ள தனது கடமையை எந்தளவிற்கு நிறைவேற்றியுள்ளதென்பதையும் மதிப்பீடு செய்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அரசியலமைப்பு உத்தரவாதம், சட்ட ஆக்கங்கள், தற்போதைய அமுலாக்கம், இவ்வுரிமைகளை நடைமுறைப்படுத்துதல் ஆகியன எந்தளவிற்கு செயற்படுத்தப்படுகின்றதென்பதைப் பரிசீலித்துள்ளதுடன் அவற்றிலுள்ள தடைகளும் ஆராயப்பட்டுள்ளன. இவ்வறிக்கை சிவில், அரசியல் உரிமைகளில் தனது கவனத்தைச் செலுத்துவதனூடாக மனித மேன்மை, கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம், அரசியல் உரிமைகளைப் பிரயோகித்தல் என்பவற்றையும் பொருளாதார, சமூக கலாசார உரிமைகளினூடாக உணவு, சுகாதாரம், கல்வி, தொழிலாளர் உரிமை, ஒன்று கூடும் உரிமை ஆகிய விடயங்களையும் கவனத்திற் கெடுத்துள்ளது. மேலும் பெண்களின் உரிமைகள், சிறுவர் உரிமைகள், குழு உரிமைகள், இடம் பெயர்ந்தோரின் அவலம், உள்நாட்டு யுத்தத்தின் விளைவான மனிதாபிமான சட்டம் ஆகிய விடயங்களும் தனித்தனி அத்தியாயங்களில் ஆராயப்பட்டுள்ளன.
இவ்வறிக்கை ஒன்பது மாத காலத்தினுள் குறிப்பாகச் சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையத்தைச் சேர்ந்த ஊழியர்களின் தீவிர உழைப்பின் காரணமாகப் பூர்த்தியாக்கப்பட்டது. தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அவரவர்க்குரிய விஷேட தகைமையைக் கருத்தில் கொண்டு தனித்தனி அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவ்வுரைகளின் செம்மை, நோக்கு, விடயத்தெளிவு என்பவற்றைப் பரிசீலிப்பதற்காக வாசிக்கப்ப்ட்டன. அதன் பின்னரும் நடைமுறைச் சாத்தியமானளவிற்கு நடைமுறையிலும் அணுகுமுறையிலும் ஒரு சீராக அமைவதைக் கருத்திற் கொண்டு வரைவுகள் ஒன்று சேர்க்கப்பட்டு விரிவாகச் சரி பிழை பார்க்கப்பட்டன. எவ்வாறாயினும் சில அத்தியாயங்களுக்கிடையில் விடயங்களின் தொடர்பட்டிருப்பதுடன் சில தலைப்புக்கள் ஏனைய தலைப்புக்களைவிட மேலாக விரிவாக ஆராயப்பட்டுமிருக்கலாம். நாங்கள் மேலும் முக்கியமான வெளியீடுகளின் அட்டவணைகளையும், மனித உரிமைகள் சம்பந்தமான அறிக்கைகளையும், இலங்கையும் ஏற்றுக் கையொப்பமிட்டுள்ள சர்வதேச ஒப்பந்தங்களின் பட்டியலையும் இணைத்துள்ளோம். இலங்கையில் மனித உரிமைகளைச் சிறப்பாகப் பாதுகாப்பதையும் முன்னெடுப்பதையும் உறுதிசெய்வதற்கு இவ்வறிக்கை சமூக நிறுவனங்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் ஒர் முக்கிய தளமாக விளங்குமென்பதை எதிர்பார்க்கலாம். இவ்வறிக்கை சிங்களத்திலும், தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு அரசுசார்பற்ற நிறுவனங்களுக்கும் ஏனைய அக்கறையுடைய பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்படும்.
"அரசாங்கத்தின் எல்லா அமைப்புக்களும் அரசியலமைப்பில் பிரகடனம் செய்யப்பட்டும் அங்கீகரிக்கப்பட்டுமுள்ள அடிப்படை உரிமைகளை மதித்து பாதுகாத்தும் முன்னெடுக்குமென’ இலங்கை அரசியலமைப்பு ஆணையிடுகின்றது. இலங்கை பல சர்வதேச மனித உரிமை உடன்படிக்கைகளின் ஒப்பந்ததாரியாக இருப்பதுடன் அதனது உள்நாட்டுச் சட்டங்களும், கொள்கைகளும், செயற்பாடுகளும் அதனது சர்வதேச கடப்பாடுகளை உறுதி செய்வதாகவும் இருக்க வேண்டும். இவ்வறிக்கை அரசும்( இவ்வறிக்கையில் உண்மையான பரிசீலனைக்குட்பட்டுள்ள அரசசார்பற்றபங்காளிகளும்) மனித உரிமைகளை மதித்தும் பாதுகாத்தும் நடப்பதற்குத் தமது சர்வதேச மற்றும் அரசியலமைப்பின் கடப்பாடுகளை உயர்வாகப் பேணி நடப்பதை உறுதி செய்யும் தொடர்ச்சியான போராட்டத்தின் ஒர் பணிவுடமையான நடவடிக்கையாகும்.
சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம் Avaisna 3, 1994

Page 5
விடய அட்டவணை
சட்டப் பின்னணி அவசரகால ஒழுங்குவிதிகள். சிவில் அரசியல் உரிமைகள்.
I தனிமனிதனின் முழுமைக்கான மதிப்பு. II. கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம். III ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம் .
வடக்கு கிழக்கு யுத்தம் பொருளாதார சமூக உரிமைகள்.
I. வறுமையும் உணவூட்டமும் . 11. சுகாதாரம் III. B56ù6î IV. தொழிலாளர்களின் உரிமைகள்.
பெண்கள் உரிமைகள் சிறுவர் உரிமைகள் இடம்பெயர்வும் தங்குவதற்கான உரிமையும்.
1. உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் .
11. அகதிகளும் தாய்நாட்டுக்குத் திருப்பியனுப்புதலும்.
குழு உரிமைகள்
I. சிறுபான்மையினர் உரிமைகள் .
I. உள்நாட்டு உரிமைகள் .
புத்தக விவரணம்
பின்னிணைப்பு பின்னிணைப்பு
1
10
23
23
68
83
125
142
142
152
156
160
166
194
209
209
239
246
246
255
268
275
277

அத்தியாயம் 1
சட்டப்பின்னணி
(1) மனித உரிமைகளுக்கு அரசியல் கோவையின் பாதுகாப்பு
1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், தனது குடிமகனின் மேன்மையையும், நல்வாழ்வையும் பேணும் பொறுப்பு அரசினதாகும் என்பதை எடுத்துரைக்கின்றது. “அரசியலமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அரசின் சகல சாதனங்களினாலும் மேலாகப் போற்றப்பட்டு, உறுதியாக நிலைநாட்டப்படல் வேண்டுமென்பதுடன், அவை இதனகத்துப் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அத்தகைய விதத்திலன்றியும் அத்தகைய அளவுக்குத் தவிரவும், சுருக்கப்படவோ, வரையறுக்கப்படவோ, மறுக்கப்படவோ ஆகாது’ என 4 (உ) உறுப்புரையினால் இப்பொறுப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 11 ஆம் அத்தியாயத்தின் அடிப்படை உரிமைகள் 14 ஆம் உறுப்புரை மூலமாக 10 ஆம் உறுப்புரையைத் தெளிவுபடுத்துகின்றன. 13 ஆவது உறுப்புரை மூலமாக 10 ஆம் உறுப்புரையால் உறுதிசெய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் ஆவன: (அ) சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சிக்கேற்ப நடந்து கொள்வதற்கான சுதந்திரம், மதச்சுதந்திரம்; (ஆ) சித்திரவதைக்கு அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடாத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படாமை; (இ) சட்டத்தின் முன் சகலரும் சமமாக மதிக்கப்படுதலும் சகலருக்கும் சட்டம் சமமான பாதுகாப்பு வழங்கலும், இனம், மதம், மொழி, சாதி, ஆண், பெண், என்ற வேறுபாடு அரசியற் கொள்கை அல்லது பிறப்பிடம் என்ற அடிப்படையில் வேறுபாடு காட்டப்படுவதை இப்பிரிவு தடைசெய்கின்றது. (ஈ) விதிக்கட்டுப்பாடின்றிக் கைதுசெய்யப்படுதல், தடுத்துவைக்கப்படுதல், தண்டிக்கப்படுதல் என்பனவற்றிலிருந்து தனிவிலக்குரிமை. (உ) பின்னோக்கிய விளைவுகளை உண்டாக்கக்கூடிய தண்டனை பற்றிய சட்டவாக்கங்களைத் தவிர்த்தல்; (ஊ) நியாயமான வழக்கு நடவடிக்கை, தகுதிவாய்ந்த நீதிமன்றங்களினாலன்றி மரணதண்டனையோ மறியற்றண்டனையோ ஒருவருக்கு விதிக்கப்படாமை. இவை குடிமக்களுக்கும் குடிமக்கள் அல்லாதோருக்கும் சமமாகப் பொருந்தும்.
குடிமக்களுக்கு மட்டுமே சில உரிமைகள் நடைமுறைப்படுத்தக்கூடியதற்கான சுதந்திரத்தை அரசியலமைப்பின் 14 ஆவது உறுப்புரை உறுதி செய்கின்றது. இதனால் பேச்சுச் சுதந்திரம், கருத்துத் தெரிவிப்புச் சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம், தொழிற்சங்கமொன்றில் சேர்வதற்கான சுதந்திரம்,

Page 6
2 ஒருவரின் மதத்தையோ கலாசாரத்தையோ அனுசரிப்பதற்கான சுதந்திரம், தொழில்புரிவதற்கான சுதந்திரம், நடமாடுவதற்கான சுதந்திரம் இலங்கைக் குடிமக்களுக்கு வழங்கப்பட்டு, குடிமக்களல்லாதவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசியல் அமைப்பு, வாழ்வதற்குள்ள உரிமையைச் சிறப்பான முறையில் பாதுகாக்கப்படுவதைக் தெளிவான வார்த்தைகளால் குறிப்பிட்டுக் காட்டவில்லை. எனினும், “ சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கை முறைக்கு இணங்கத் தகுதிவாய்ந்த நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்படும் கட்டளைமூலமாகவன்றி, ஆள் எவரும் மரணதண்டனையினால் அல்லது மறியற்றண்டனையினால் தண்டிக்கப்படலாகாது” என இலங்கை அரசியல் அமைப்பு 13 (4) ஆம் உறுப்புரை கூறுகின்றது. அத்துடன் “ஆளொருவர் எந்தவித காரணமுமின்றித் தண்டிக்கப்படுவதிலிருந்து ஒரளவு பாதுகாப்பை வழங்குகின்றது”, “சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கை முறை” என்பதும், “சட்டத்தின் முறையான நடைமுறை”க்கு உரிமை என்பதும் ஒரே கருத்தை வெளியிடுவன அல்ல. சட்டத்தின் முறையான நடைமுறை போதுமானளவு நடைமுறைகள் நிறுவப்படுவதைத் தேவைப்படுத்துவதுடன் குடிமகனின் உரிமை மனம்போனபடி மீறப்படுவதைத் தவிர்ப்பதற்காக அத்தகைய நடைமுறைகளை அமுலாக்கலையும் தேவைப்படுத்துகின்றது. இந்திய உயர்நீதிமன்றம், “ சட்டத்தின் முறையான” தரத்தை ஏற்படுத்தியுள்ளது. இ.பீ.றோயப்பா எதிர் தமிழ்நாடு அரசு (1974), எஸ். சீ. 555, 583, 584 இல் நீதியரசர் பகவதி “ சட்டத்தின் முறையான நடைமுறை ” தரத்தை மேற்கொண்டுள்ளார். இக்கோட்பாடு மனேக காந்தி எதிர் யூனியன் ஒவ் இந்தியா எ. ஜ.ஆர் ( 1978) எஸ். சீ. 597 இலும் ஏனையவற்றிலும் எப்படியிருப்பினும் இந்தியாவின் பொருள் கோடலை இலங்கை உயர்நீதிமன்றம் மேற்கொள்ள மறுத்தது. எமது நாட்டில் இயற்கை நீதி அடிப்படை உரிமையல்ல என்றும் அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அமெரிக்க அரசியல் யாப்பில் காணப்படும் “முறையான நடைமுறை” யைத் தவிர்த்துள்ளார்கள் எனவும் காரணம் காட்டப்பட்டது. எல்மோர் பெரேரா எதிர் மேஜர் மொன்ரேகு ஜயவிக்ரம (1985) இ.ச.அறிக்கை 287
சில சூழ்நிலைகளின் கீழ் அடிப்படை உரிமைகள் மீது சில கட்டுப்பாடுகளை அங்கீகரிக்கும் 15 ஆவது உறுப்புரையின் எல்லைக்குள் (13 (4) ஆவது உறுப்புரை அமையவில்லை. எப்படியிருப்பினும் வாழ்க்கையும் சுதந்திரமும் சட்டத்தினால் நிறுவப்பட்ட ஏதாவதொரு நடவடிக்கை முறைக்குப் பின்னர் உரிமையிழக்கப்படக் கூடும் என்பதால், அவசரகாலப் பிரமாணங்களால் அங்கீகரிக்கப்பட்ட செயல்களிலுள்ள பரந்த கட்டுப்பாடின்மை 13 ஆவது உறுப்புரையினால் வழங்கப்பட்ட குறைந்தபட்ச பாதுகாப்பைச் சிறிது சிறிதாகக் குறைத்து இல்லாதொழித்துவிடுகின்றது. கருத்துத் தெரிவிப்பதற்கான சுதந்திரத்தை மட்டுமன்றி, தகவல்களுக்குமான சுதந்திரத்தை, சிவில் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சமுதாய ஆசாரம் உறுதிப்படுத்துகின்றது. மறுபுறமாகம் பார்க்குமிடத்து இலங்கை அரசியல் அமைப்பு தகவலுக்கான சுதந்தரத்தைச் சேர்ந்துக்கொள்ளவில்லை. விஸ்வலிங்க்ம் எதிர் லியனகே 2 இலங்கை ச.அ.123 (1984) இல் நீதியரசர் விமலரத்ன தகவலுக்கான உரிமையை எடுத்துக்காட்டியுள்ளார். பேச்சுக்கும் கருத்துத் தெரிவிப்பதற்கும் உள்ள சுதந்திரத்தின் அடிப்படை உரிமை செவிமடுப்பதற்கும் உள்ள சுதந்திரத்தையும் உள்ளடக்கியிருக்கின்றது என்ற கருத்தை நான்

3
கொண்டிருக்கின்றேன் எனவும் இதனால் பத்திரிகைச் சுதந்திரத்தையும் உள்ளடக்கியுள்ளது என அவ்வழக்கில் எடுத்துக் காட்டியுள்ளார். நீதியரசர் விமலரத்ன அவர்களை மீண்டும் மேற்கோள் காட்டுவதாயின், “சுதந்திரமான பத்திரிகை மட்டுமே பலதரப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தும் என்பதுடன், பொது முக்கியத்துவம் வாய்ந்த சகல விடயங்களின் மீதும் சுதந்திரமானதும் பொதுவானதுமான கலந்துரையாடலுக்கான உரிமையையும் மேப்படுத்தும். “ சர்வகட்சி மாநாடு தகவலுக்கான உரிமைக்கு வெளிப்படையான அங்கீகாரத்தையே விதப்புரை செய்தது.
அரசியலமைப்பு, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமைககளின் உத்தரவாதங்களை உரித்தாக்குகின்றது. மேலே எடுத்துக்கூறியது போன்று 13 ஆம் உறுப்புரை மூலமாக 10 ஆம் உறுப்புரையில் விபரிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் சட்டரீதியான மனிதர்கள் உட்பட சகல மக்களினாலும் அனுபவிக்கப்படுகின்றன. குடிமக்களினால் மட்டுமே அனுபவிக்கப்படுகின்ற உரிமைகளை 14 ஆம் உறுப்புரை விபரிக்கின்றது. கம்பனிகள், கூட்டுத்தாபனங்கள் போன்ற சட்டரீதியான மனிதர்களை விலக்கியே “ குடிமகன்’ என்பதற்கு உயர்நீதிமன்றம் பொருள் கொண்டிருக்கின்றது. ஆகவே, இவர்கள் 14 ஆம் உறுப்புரையின் பாதுகாப்புக்கு உரித்துடையவரற்றவராகின்றனர். (இவ்வடிப் படையிலேயே, ஜனதா பினான்ஸ் அன்ட் இனவெஸ்ற்மென்ற் லிமிடெட்டினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விண்ணப்ப இல. 116/82, மார்கழி 14,1982) எப்படியாயினும், தனிப்பட்டவர்களைப் போன்று, கம்பனியின் பணிப்பாளர்களும், பங்குதாரர்களும் தெளிவான தனியானதொரு ஊறொன்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் காண்பிக்கப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம் (வைத்திய கலாநிதி நெவில் பெர்நாந்து எதிர் லியனகே (1983) 2 இல சட்ட அறி. 214 )
(அ) அடிப்படை உரிமைகள் மீதான வரையறைகள்
மேலே குறிப்பிடப்பட்ட உரிமைகளும் சுதந்திரங்களும் எவ்விதமான சூழ்நிலைகளின் மீது வரையறுக்கப்படலாமென்பதை 15 ஆம் உறுப்புரை பட்டியல்படுத்தியுள்ளது. எவ்விதமான சூழ்நிலைகளின் கீழும் சுதந்திரங்கள் வரையறுக்கப்படுதலாகாது என 10 ஆம் 11ஆம் உறுப்புரைகள் கூறுகின்றன. இலங்கை அரசியலமைப்பின்படி மனச்சாட்சி, சிந்தனைச் சுதந்திரம், மத சுதந்திரம், சித்திரவதையிலிருந்து விடுதலை என்பன முழுமையான சுதந்திரங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும் 16 ஆம் உறுப்புரையின்படி இந்த உரிமைகளை வரையறை செய்யும் ஏதாவது எழுத்துமூலமான, எழுத்துமூலமற்ற சகல சட்டங்களும் அரசியலமைப்புக்கு முன்னர் இயற்றப்பட்டிருப்பின் அச்சட்டங்கள் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுடன் ஒவ்வாதனவாக இருப்பினும், தொடர்ந்தும் வலுவிலிருக்கும்.
12ஆம், 13 ஆம், 14ஆம் உறுப்புரைகளினால் உறுதிசெய்யப்பட்டுள்ள உரிமைகள், பல்வேறு காரணங்களுக்காக வரையறுக்கப்படக்கூடும் என்பதை 15 (7) ஆம் உறுப்புரையில் எடுத்துக்கூறப்பட்ட காரணங்கள் தவிர வேறு காரணங்களுக்காகக்

Page 7
4
குறிக்கப்பட்ட சுதந்திரங்களில் சில வரையறுக்கப்படலாம்.
தனது நியாயாதிக்கத்துக்கு அமைவாகவும், தனது எல்லைக்குள் இருக்கும் சகல மக்களுக்காகவும் பிரகடனப்படுத்தப்பட்ட உரிமைகள், மதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படுவதற்கு அரசை, சிவில் அரசியல் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் 2 (1) ஆம் உறுப்புரை கட்டுப்படுத்துகின்றது. வாழ்வதற்கான உரிமையை அல்லது சித்திரவதையை அல்லது மனிதாபிமானமற்ற முறையில் நடாத்தப்படுவதை அல்லது அடிமைத்தனத்தை அல்லது சேவகத்தை அல்லது கடந்தகாலத்தையும் உள்ளடக்கி இயற்றப்படும் சட்டங்களினால் தண்டிப்பதைத் தடைசெய்வதைத் தவிர்க்கும் சட்ட ஏற்பாடுகளிலிருந்து எவ்வித சட்டமீறல்களோ அனுமதித்தலாகாது. சட்டத்தின் முன் மனிதனொருவனாக மதிக்கும் உரிமை , மனச்சாட்சிச் சுதந்திரம், , சிந்தனை செய்வதற்கான சுதந்திரம், மத சுதந்திரம், என்பனவும் நிறைவான வார்த்தைகளால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. சிவில், அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் மீதான அமெரிக்க உடன்படிக்கை, மனித உரிமைகளைப் பேணுவதற்கான ஐரோப்பிய உடன்படிக்கை, அடிப்படைச் சுதந்திரங்கள் என்பனவற்றில் மதிப்புக் குறைக்கப்பட இயலாத உரிமைகள் நான்கு பொதுவாகக் குறிக்கப்பட்டுள்ளன. அவையாவன-; (அ) வாழ்வதற்கான உரிமை (ஆ) சித்திரவதையிலிருந்து தடைசெய்யப்படல் (இ) அடிமைத்தனத்திலிருந்து தடைசெய்யப்படல் (ஈ) கடந்த காலத்தை உள்ளடக்கி ஆக்கப்படும் சட்டங்களினால் தண்டனை விதிப்பதைத் தடை செய்தல்.
குறைக்கக்கூடிய உரிமைகளும் சுதந்திரங்களும் கூட நாட்டின் வாழ்வை அச்சுறுத்தக்கூடிய அரச அவசரகாலங்களிலும், அவற்றிலும் நிலைமை நீடித்திருக்கும் காலத்துக்குக் கண்டிப்பாகத் தேவைப்பட்டால் மட்டுமே குறைக்கப்படுதல் வேண்டும். எப்படியிருப்பினும் இன, மத ஒற்றுமை காரணமாக அல்லது தேசிய பொருளாதாரம் போன்ற காரணங்களால் இலங்கை அரசியலமைப்பின் கீழ் வரையறைகள் எந்தநேரத்திலும் விதிக்கப்படலாம். மேலும், 15 ஆம் உறுப்புரை, வரையறை நியாயமானதாக இருத்தல் வேண்டுமென்ற நிபந்தனையும் விதிக்கவில்லை. எப்படியிருப்பினும் நீதிமன்றங்கள், சட்டவழக்குகள் மூலம் ஒரு நியாயத்தின் தரத்தை உருவாக்கியுள்ளன (விக்கிரமபாகு பண்டு எதிர் சட்டமா அதிபர் மேன்முறையீடு 27,88: எஸ்.சீ.எம்.6.90. ஜோசப் பெரேரா எதிர் சட்டமா அதிபர் மே.நீ. விண்ணப்பம் 107 -109 86). அவசரகால ஒழுங்குவிதிகளினால் அடிப்படை உரிமைகள் எந்த அளவுக்கு மீறப்படுகின்றன என்பதை அளப்பதற்கு உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியாயமானதும். பகுத்தறிவுக்கு ஏற்றதுமான தொடர்பு தரத்தை உருவாக்கியுள்ளனர். இத்தரம் நாடு முழுவதிலும் பிரயோகிக்கப்படுமா என்பதைத் தெளிவாகக் கூறமுடியாது.
1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் ஒரு பகுதியாகவே பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் 155 (1) ஆம் உறுப்புரையில் வரையப்பட்டுள்ளது. நாட்டின் பிற சட்டங்களை மீறவோ, திருத்தவோ, இடைநிறுத்தவோ அவசரகால ஒழுங்குவிதிகளால்

5
இயலக்கூடும் என்றபோதிலும் அவை அரசியலமைப்பின் ஏற்பாடுகளை மீறவோ, திருத்தவோ, இடைநிறுத்தவோ இயலாதவை என 152 (2) ஆம் உறுப்புரை பிரகடனப்படுத்துகின்றது. இருப்பினும் தேசிய பாதுகாப்பு நலன்கருதி அல்லது பொது ஒழுங்கு நலன்கருதி 12, 13 (1), 214 ஆம் உறுப்புரைகள் 15 (7) ஆம் உறுப்புரையின்கீழ் வரையறைகளுக்கு அமைந்தனவாகவே இருக்கும். இவ்விதமான வரையறைகள் பொது ஒழுங்கு என்ற நோக்கத்துக்காக ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் என்ற வடிவத்தில் இருக்கலாம். வேறுவிதமாகக் கூறுவதானால், 155 (2) ஆம் உறுப்புரைக்கு முரணாக மேலே குறிப்பிடப்பட்ட உறுப்புரைகளினால் வழங்கப்பட்ட அரசியல் யாப்புப் பாதுகாப்பு அவசரகால ஒழுங்குவிதிகளினால் திருத்தப்படக்கூடியதாக உள்ளது. நாட்டில் குழப்பமேற்பட்டிருக்கும் காலங்களில், அடிப்படைச் சுதந்திரங்களின் பாதுகாப்புக்கு கட்டாயமாக இரண்டாந்தர நிலை வழங்கப்படல் வேண்டுமென்ற கருத்தை முன்னர் உயர்நீதிமன்றங்கள் தெரிவித்தன. (விஸ்வலிங்கம் எதிர் லியனகே (1984) 1 இலங்கை சட்ட அறிக்கை 305, 318:பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் சமயங்களில் சமூகமே இடர்ப்படும்போது, தனிப்பட்டவர்களின் சுதந்திரம் வரையறுக்கப்படல் வேண்டுமென்பது தீர்க்கமாக அங்கீகரிக்கப்பட்டதொன்று என குமாரணதுங்க எதிர் சமரசிங்க எவ், ஆர். டி. (2) 347 விண்ணப்பத்தில் நீதியரசர் சொயிசா குறிப்பிட்டார். அரசியலமைப்பின் 13 (1) , (2) ஆம் உறுப்புரைகளினால் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை இந்த அவசரகால ஒழுங்குவிதிகள் வலுவற்றதாக்கிவிடுகின்றன.
பின்னர் நடைபெற்ற வழக்குகளில் வரவேற்கத்தக்க போக்கொன்றைக் காணக்கூடியதாக இருந்தது. சட்டத்தினால் அல்லது அவசரகால ஒழுங்குவிதிகளினால் இடப்பட்ட வரையறைகளின் நியாயப்படுத்தலை நிறுவவேண்டிய பொறுப்பை அரசு கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் அவ்வரையறைகள் தெளிவாகவே நியாயமற்றவை என நீதிமன்றம் திருப்திப்படும் பட்சத்தில், 15 (7) ஆம் உறுப்புரையின் கீழ் கருதப்பட்டுள்ள அதிகார எல்லைக்குள் உட்படுத்தப்பட்டுள்ளன என்று கருத இயலாது என விக்கிரமபந்து எதிர் சட்டமா அதிபர் வழக்கில் நீதிமன்றம் கூறியது. ஜோசப் பெரேரா எதிர் சட்டமா அதிபர் மே.நீவின், 107109/86 முன்மாதிரியான தீர்ப்பில், தெளிவில்லாததாலும், பொலிஸ், விதிக்கட்டுப்பாடின்றியும் முரட்டுத்தனமாகவும் நடவடிக்கை எடுப்பதற்கு இடமளிக்கும் என்ற அடிப்படைகளில் பேச்சுச்சுதந்திரத்தில் தலையிடுதல் பற்றிய அவசரகால ஒழுங்குவிதியொன்றை உயர்நீதிமன்றம் நீக்கியது.
(ஆ) மனித உரிமைகளுக்குச் சட்டத்தினால்
நிலைபேறாக்கப்பட்ட பாதுகாப்பு
அரசியலமைப்புப் பற்றிய விடயங்கள், அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் என்பனவற்றின் மேல் உயர்நீதிமன்றத்தின் மீது நியாயாதிக்கத்தை 18 ஆம் உறுப்புரை வழங்குகின்றது. அரசியலமைப்புப் பொருள் கோடல் மீதான ஏகபோக நியாயாதிக்கத்தையும், அடிப்படை உரிமை மீறல்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்து பொருத்தமான நிவாரணத்தையும், இழப்பீட்டையும் தீர்மானிப்பதற்கு

Page 8
6
உயர்நீதிமன்றத்துக்கு 125 ஆம் உறுப்புரை முழு நியாயாதிக்கத்தை அளிக்கின்றது. பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சட்டமூலங்களின் சட்ட நுணுக்க மீளாய்வை அரசியல் யாப்பு அனுமதிக்கலில்லை. இருப்பினும் சட்டமூலங்கள் சட்டமாக்கப்படுவதற்கு முன்னர் உயர்நீதிமன்றம் பரிசீலனை செய்யலாம். அப்படியான சட்டமூலம் அரசியலமைப்புக்கு இசைவானதா அல்லதா என்பதை மீளாய்வதற்கான உயர்நீதிமன்றின் நியாயாதிக்கம் ஒன்றில் ஜனாதிபதியினால் அல்லது குடிமகன் ஒருவரினால் வேண்டப்படலாம். உயர்நீதிமன்றம் தானாகவே முயன்று செயற்படலாகாது (ஆர். கே. டபிள்யூ குணசேகர, “அடிப்படை உரிமைகளும் நீதி அணுகுமுறைகளும் 11இருவாரங்களுக்கொருமுறை மீளாய்வு 49 (சட்ட சமூக நம்பிக்கை,1உம் 16 மார்கழி 1992). உயர்நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தைக் குடியரசுத் தலைவர் வேண்டிக்கொள்ளும் சமயத்தில், சட்ட நுணுக்க ஆய்வுக்காக எந்த ஏற்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்ற நிரலைச் சட்டமா அதிபர் தயார் செய்து கொள்வார். சட்டமூலத்தின் முறைமைத் தகுதிமிது நீதிமன்றம் ஒருமுறை தீர்ப்பு வழங்கியதும், அச்சட்டமூலத்தைச் சட்டமாக்கும் பணியில் நீதிமன்றம் தொடர்ந்து பங்கு கொள்வதில்லை. சட்டமூலத்துக்கான திருத்தங்களை நுணுகி ஆய்வதற்கோ அன்றிச் சட்டமூலத்தை அங்கீகரிக்கச் செய்வதற்கான ஏதாவது நடவடிக்கை முறைக்கோ நீதிமன்றுக்கு அதிகாரமில்லை. சட்ட நுணுக்காய்வின் பின்னர் சட்டமூலமொன்று முறைமைத்தகுதியற்றது என்ற போதிலும், பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையை அச்சட்டமூலம் பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் அச்சட்டமூலம் அங்கீகரிக்கப்படலாம்.
அவசரமான சட்டமூலங்கள் மீளாவுக்காகத் தாமாகவே உயர்நீதிமன்றுக்கு ஆற்றுப்படுத்தப்படுகின்றன. நீதிமன்றம் தனது தீர்ப்பை 72 மணித்தியாலங்களுக்குள் வழங்கவேண்டும். குறுகிய கால அவகாச காரணத்தினால், அக்கறையுள்ள குடிமக்களாலும், அரசசார்பற்ற நிறுவனங்களாலும், சட்டமூலத்தினால் ஏற்படக் கூடிய விளைபயன்களைக் கிளப்பி, நீதிமன்று நுண்ணாய்வு செய்து, உதவு வதற்குப் போதிய கால அவகாசம் இல்லாமற் போய்விடுகின்றது. பல தடவைகளில் நிலையியற்கட்டளைகளை இடைநிறுத்தி அரசு சட்டமாக்குவதைத் துரிதப்படுத்தியுள்ளது.
உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டமூலங்களின் ஒழுங்குப்பத்திரங்கள் அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுகின்றன. இவ்வர்த்தமானிகள் எளிதில் கிடைப்பதில்லை. மாகாணசபைச் சட்டவாக்கங்கள், 76 (2) (3) ஆம் உறுப்புரைகளின் கீழ் நிறுவப்பட்ட சபைகளினால் வழங்கப்பட்ட ஒழுங்குவிதிகள், சட்டங்கள், பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான அவசரகாலச் சட்டவாக்கங்கள் போன்ற சார்புறுப்புச் சட்டவாக்கம் சட்டமியற்றப்பட்ட பின்னருங்கூட சட்ட மீளாய்வுக்கு அமைந்ததாகும்
நிறைவேற்று அல்லது நிர்வாகச் செயலொன்றினால் 11 ஆம் அத்தியாயத்தினால் உறுதிசெய்யப்பட்ட ஏதாவது உரிமை மீறப்படும் போது உயர்நீதிமன்றத்துக்கு விண்ணப்பம் செய்வதற்கான உரிமையை 17 ஆம் உறுப்புரை ஒவ்வொரு ஆளுக்கும் வழங்குகின்றது. 126(2) ஆம் உறுப்புரையின்படி தனிப்பட்ட ஒருவர் அல்லது அவரின்/

7
அவளின் சட்டத்தரணி மட்டுமே அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சுமத்தி உயர்நீதிமன்றத்துக்கு விண்ணப்பம் செய்யலாம். 1992, சித்திரை மாத இறுதியில் நடைமுறைக்கு வந்த உயர்நீதிமன்றின் புதிய விதிகள் அடிப்படை உரிமைகள் விண்ணப்பங்கள் தாக்கல் செய்வதற்காக முறை மன்றம் வரும் உரிமையின் வாய்ப்பெல்லையை விரிவாக்குவதற்கு முயற்சி செய்கின்றன. நீதிமண்டபத்தில் அமர்ந்திருக்கும் நீதியரசர் ஒருவர் அடிப்படை உரிமை அல்லது மொழி உரிமை மீறப்பட்டுள்ளதாக, மீறப்படுவதற்கான அச்சுறுத்தல் ஒன்று இருப்பதாக முதல் தோற்றத்திலேயே சட்டப்படி அமைந்திருக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்கள் தவிர்ந்த பிறரும் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்கு நீதிமன்றத்தின் புதிய விதிகளின் 44 ஆம் விதி அனுமதிக்கின்றது. இவ்விடயத்தில் நீதியரசர் தனது தற்றுணியைப் பிரயோகித்து அதை இரண்டு நிபந்தனைகள் இருப்பின் 126(2)ஆம் உறுப்புரையின் பிரகாரமும் அதன் கீழுமான எழுத்துமூல விண்ணப்பம் எனக் கையாளலாம். முதலாவதாகப் பாதிக்கப்பட்டவர் 126 ஆம் உறுப்புரையின்படி விண்ணப்பத்தை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கான வசதியற்றவராக இருத்தல் வேண்டும். இரண்டாவதாக மீறுகையினால் அல்லது மீறப்படலாம் என்ற அச்சுறுத்தலினால் பாதிக்கப்பட்டவருக்கு ஒரளவு தீங்கு ஏற்பட்டிருத்தல் வேண்டும்.
அரசியல் யாப்பினால் உறுதிசெய்யப்பட்டுள்ள உரிமைகள் நிறைவேற்று அல்லது நிர்வாகச் செயலொன்றினால் மீறப்படின் அரசியல் யாப்பின் கீழ் தனிப்பட்ட ஒருவரின் நீதிமன்ற நடவடிக்கை எழும். இந்திய, ஐக்கிய அமெரிக்க அரசியல் யாப்புக்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசின் செயலால் நியாயப்படுத்தக்கூடிய மீறுகையைவிட மிகவும் குறுகியதாகும். கடந்த காலத்தில் அரசுக்குச் சொந்தமான காப்புறுதிக் கம்பனியொன்றில் அடிப்படை உரிமைகள் மீறல் நியாயப்படுத்தக்கூடியது ஒன்று அல்ல எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. நிறைவேற்று அல்லது நிர்வாகச் செயல் என்பதற்குள் காப்புறுதிக் கம்பனியின் செயல் அடங்கவில்லை என்ற காரணமே இதற்குக் காட்டப்பட்டது. எயர்லங்கா அரசின் முகவர் என்பதால் அதன் செயல்கள் “நிறைவேற்று நிர்வாகச் செயல்" என்றே கருதல் வேண்டும் என ராஜரத்ன எதிர் எயர்லங்கா (1987) 2, இல. சட்ட அறிக்கை 128 இல் 126 ஆம் உறுப்புரையின் நியாயாதிக்கத்தை உதவியாகக் கொண்டு நீதியரசர் அத்துகோறளை தீர்ப்பளித்தார்.
கடைகள், உணவுச்சாலைகள், விடுதிகள், வணக்கத்துக்குரிய இடங்கள் என்பனவற்றில் இனம், மதம், மொழி, சாதி, ஆணா, பெண்ணா என்ற வேறுபாடு போன்ற அடிப்படையில் ஒருவர் செல்வதைத் தடைசெய்வதை விலக்கும் 12 (3) ஆம் உறுப்புரையின் கீழ் அமைந்தாலொழிய, தனிப்பட்ட கட்சிக்காரரொருவர் அரசியல் யாப்பின் கீழான தனியாரொருவரின் உரிமையை மீறும் சந்தர்ப்பத்தில் , அரசியல் யாப்பு மூலமாக எவ்வித நடவடிக்கையும் எழலாகாது. ஆகவே, அரசியல் யாப்பின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுதல் நிறைவேற்று அல்லது நிர்வாகச் செயலினால் மட்டுமே தொடங்கும் என்பதற்கில்லை.
1993இல் திருப்புமுனையை ஏற்படுத்திய தீர்ப்பொன்றில், தனிப்பட்ட முறையில் செயல்படுபவர் அல்லது செயல்படுபவர்களுக்கு நிறைவேற்று அதிகாரம் உள்ளவருக்கும் இடையில்

Page 9
8
போதுமானளவு உறவு இருப்பின் தனிப்பட்ட ஆட்களின் செயல்கள் அரசின் செயல்களாகக் கருதக்கூடும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மொகமட் பாயிஸ் எதிர் சட்டமா அதிபர், உயர்நீதிமன்ற இல. 89/91 விண்ணப்பத்தில் (1993.11.19 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது) விண்ணப்பதாரர் பொலிஸ் பாதுகாப்பிலிருக்கும்போது பாராளுமன்ற அமைச்சர்கள் இருவரினாலும்மாகாணசபை உறுப்பினர் ஒருவரினாலும் நையப்புடைக்கப்பட்டனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் அருகில் இருந்த இரு உறுப்பினர்களையும் மாகாணசபை உறுப்பினரையும் நையப்புடைப்பதற்கு அனுமதித்தனர். பாராளுமன்ற உறுப்பினர்களினதும் மாகாணசபை உறுப்பினரதும் தூண்டுதலின் பேரிலேயே விண்ணப்பதாரர் கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதையும் நீதிமன்றம் கண்டுகொண்டது. இப்படியான சூழ்நிலைகளில் நிறைவேற்று உத்தியோகத்தரும் தனிப்பட்ட ஆளொருவரும் குடிமகனின் அடிப்படை உரிமைகளை மீறியமைக்காகப் பொறுப்பேற்றல் வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. ( சிவில், அரசியல் உரிமைகள் அத்தியாயத்தில் ஆட்கொணர்வும் அடிப்படை உரிமை வழக்குகளும் என்ற தலைப்பின் பிரிவையும் பார்க்கவும்).
(i) இலங்கையின் சர்வதேசக் கடப்பாடுகள்
இரு பிரதான உடன்படிக்கைகள் (சிவில், அரசியல் உரிமைகள் மீதான, பொருளாதார, சமூக கலாசார உரிமைகள் மீதான) உட்பட பல்வேறு சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளுக்கு இலங்கை ஒரு சார்பு நாடாகும். அத்துடன் பெண்களின் உரிமைகள், தொழிலாளர்கள் உரிமைகள், சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒப்பந்தங்களுக்கும் ஒரு சார்பு நாடாகும். இலங்கை உறுப்பு நாடொன்றாக இருக்கும் சர்வதேச ஒப்பங்தங்களின் பட்டியல் பின்னிணைப்பு1இல் தரப்பட்டுள்ளது. இவ்வகையான கடப்பாடுகளுக்குப் பொறுப்பு நாடொன்றாக இருந்தும்கூட, இலங்கைச் சர்வதேசக் கடப்பாடுகளுக்கு இசைவாகத் தேசிய சட்டங்களை ஆக்குவதற்குச் சில சந்தர்ப்பங்களில் தவறியுள்ளதுடன், பல சந்தர்ப்பங்களில் சர்வதேசச் சட்ட ஒப்பந்தங்களின் தேவைகளை அமுல்படுத்தவும் தவறியுள்ளது.
சர்வதேச பிரதான ஒப்பந்தங்கள் பலவற்றை இலங்கை இன்றும் உறுதி செய்ய வேண்டியுள்ளது. உதாரணமாக, ஐசீசீபீ ஆர் ஒப்பந்தத்துக்கு ஆரம்பத்திலேயே விரும்பிக் கைச்சாத்திட்டவர்களில் இலங்கை சேர்ந்து கொள்ளவில்லை. தனிப்பட்டவர்களின் முறைப்பாடுகளைப் பரிசீலனை செய்வதற்கு, மனித உரிமைகள் குழுவின் சட்ட உரிமையை, விரும்பிக் கைச்சாத்திட்ட நாடு ஏற்றுக்கொண்டுள்ளது. இரண்டாவது விருப்பு மூலப்பிரதியானது மரணதண்டனையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை ஒன்றில் கைச்சாத்திடாத, அல்லது உறுதிப்படுத்தாத சர்வதேச ஒப்பந்தங்களில் முழுப் பட்டியலொன்றை, பின்னிணைப்பு 2 இல் பார்க்கவும்.
அடிப்படை'உரிமைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காகவே அரசியல் யாப்புக்கான 17 ஆவது திருத்தம் வரையப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவுக்கு 1991 இல் இலங்கை அறிவித்தது. இலங்கையிலுள்ள சகல பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சர்வகட்சி மாநாடு (ச.க.மா), 1990 இல், ஆறுமாதமாக ஆழ்ந்து ஆராய்ந்து விவாதித்துக் தற்போதுள்ள

அரசியல் யாப்புக்கு ஒரு 17 ஆவது திருத்தத்தை வரைந்தது.
இத்திருத்தம் முதலாவதாக தற்போதுள்ள அடிப்படை உரிமை பகுதியை பலப்படுத்தும் நோக்குடையது. சர்வதேச குடியுரிமை அரசியல் யாப்புடன் சர்வதேச சமூக பொருளாதார யாப்பையும் சமமாக்கி இந்நிலையை ஏற்படுத்த முற்பட்டது. இரண்டாவதாக விரிவானதும் பொதுவானதுமான கட்டுப்பாடுகளையும் (15 (7) ம் உறுப்புரையினால் அனுமதிக்கப்பட்ட பொது கட்டுப்பாடுகளையும் குறைவுபடுத்தும் அதிகாரங்களையும் குறைக்கும் நோக்குடையது. கட்டுபாடுகளை ஒவ்வொரு நிலைமைகளை ஆராய்ந்து நியாயப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது. மூன்றாவதாக பொதுக் கவனத்தை ஈர்க்கும் வழக்குகளினால் சனநாயக ரீதியில் விரிவுபடுத்தும் நோக்கத்தையுடையது.
உத்தேசிக்கப்பட்ட 17 ஆவது திருத்தம் 1990 மார்கழியில் அரசினால் வெளியிடப்பட்ட போதிலும் பாராளுமன்றத்தில் விவாதத்துக்காக இன்னும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 1991இல் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 49 ஆவது மாநாட்டில் மனித உரிமைகள் ஆணைக்குழுவொன்றை நிறுவுவதற்கு இலங்கை அரசும் பொறுப்பேற்றுக்கொண்டது. மனித உரிமைகள் ஆணைக்குழுவொன்றை நிறுவுவதற்காகச் சட்டவரைஞர் சட்டவரைவொன்றை வரைவதில் தற்சமயம் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இவ்வருடத்தில் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும், 1994 இறுதியளவில் ஆணைக்குழு நிறுவப்படும் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது.
ஓரங்காட்டலைத் தடைசெய்தல், சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்பனவற்றின் மீதான ஐ.நா.உய ஆணைக்குழுவுக்கு 1993 இல் இலங்கை அரசு அறிக்கைகளைச் சமர்ப்பித்தது (45 மாநாடு 1993 ஆவணி 11) அடிப்படை உரிமைகளுக்குத் தற்போதுள்ள அரசியல் யாப்பு உறுதிகளைப் பலப்படுத்தக்கூடிய அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக இலங்கை அரசு உப. ஆணைக்குழுவுக்குத் தெரிவித்தது. அரசியல் யாப்புச் சீர்திருத்தத்துக்காக விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்குப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் உள்ளடக்கிய பாராளுமன்றத் தெரிகுழுவொன்றுக்கு ஆணை வழங்கப்படும் எனவும் அரசினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை எடுத்துக்கூறியது.
இலங்கை அரசு தான் கைச்சாத்திட்ட உறுதிசெய்த ஒப்பந்தங்கள் சிலவற்றின் கீழான கடப்பாடுகளை அறிக்கையிடுவதில் கவனமற்றிருக்கின்றது. பொருளாதார, சமூக கலாசார உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை, வருடத்தில் இரண்டு அறிக்கைகளை எதிர்பார்க்கின்றது. இலங்கை அரசு இன்னும் ஓர் அறிக்கையைச் சமர்ப்பிக்கவேண்டிய நிலையில் இருக்கின்றது. பெண்களுக்கு எதிராக ஒரங்காட்டப்படுவதை ஒழிப்பதன் மீதான ஒப்பந்தத்தையோ அல்லது சகலவிதமான இன வேறுபாட்டை ஒழிப்பதன் மீதான ஒப்பந்தத்தையோ இலங்கை அரசு சமர்ப்பிக்கவில்லை.

Page 10
10
அத்தியாயம் 2
அவசரகால ஒழுங்குவிதிகள்
(1) அறிமுகம்
1993 இன் முழுக் காலப்பகுதியிலும் அவசரகால ஆட்சி தொடர்ந்திருந்தது. சாதாரணமாக சட்டவாக்க முறைகளிலிருந்து விலகியே அவசரகால ஒழுங்குவிதிகள் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் குடியரசுத் தலைவரின் கட்டளையினால் செய்யப்பட்டன. ஆகவே, சாதாரணமாகச் சட்டமியற்றும் முறையைப் போலல்லாது இவ்வேற்பாடுகள் சட்டமாவதற்கு முன்னர் பொது விவாதத்துக்குகோ அல்லது சட்டசபையில் விவாதிப்பதற்கோ எவ்வித சந்தர்ப்பமோ ஏற்படப் போவதில்லை.
வழக்கமாக, அவசரகால நிலை பிரகடனத்தின் மீது ( அல்லது சட்ட நுணுக்கமான சரியான பதங்களில் கூறுவதானால், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் மீதான 11ஆம் பாகம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படுகின்றது) அவசரகால ஒழுங்கு விதிகள் என்றழைக்கப்படும் (நாநாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) ஒரு தொகுதி ஒழுங்குவிதிகள் ஆக்கப்படுகின்றன. இவை, கைதுசெய்தல், தடுப்புக்காவலில் வைத்தல், எங்கும் சென்று ஊடுருவுதல் போன்ற பரந்த அளவிலான அதிகாரங்களை வழங்குகின்றது. அத்துடன் இவற்றின் கட்டுப்பாட்டு விதிகள் அடிக்கடி மாற்றக்கூடியவையாகவும் உள்ளன.
அவசரகால ( நானாவித ஏற்பாடுகளும், அதிகாரங்களும்) ஒழுங்கு விதிகள் தான் அவசரகால ஒழுங்கு விதிகள் எனவும், அங்கு வேறெதுவும் இல்லையெனக் கருதுவது பொதுவானதொரு தவறாகும். அவசரகால (சீர்குலையச் செய்யக் கூடிய அரசியல் நடவடிக்கைத் தடை) ஒழுங்குவிதிகள், அவசரகால ( பொருள்களைக் கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்தல்) ஒழுங்குவிதிகள், போன்ற குறிப்பிட்ட விடயங்கள் மீதான ஒழுங்குவிதிகள் போன்ற பலதரப்பட்ட ஒழுங்கு விதிகள் தற்போதுள்ளன என்பதுடன், இனிமேலும் ஆக்கப்படலாம். மிகவும் நுட்பமாகக் கூறுவதானால், அவசரகாலத்துக்கும் ஒழுங்குவிதிகளுக்கும் இடையிலுள்ள தொடர்பு பெரும்பாலும் சந்தேகத்துக்கிட மானதாகவுள்ளது. உதாரணமாக, பாடசாலை அபிவிருத்திச்சபைகளுழ் மாகாண கல்விச் சபைகளும் அல்லது அவசரகால (வாகனமோட்டுவதற்கான அனுமதிப்பத்திர செல்லுபடி) ஒழுங்குவிதிகள்.
அவசரகால ஒழுங்குவிதிகளைப் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்திருந்தல் மிகவும் சிரமமானதாகும். அரசினால் அவற்றின் எவ்விதப் பட்டியல்களோ, அட்டவணைகளோ பிரசுரிக்கப்படுவதில்லை. அரசாங்க வர்த்தமானியில் எண்ணற்ற பிற

11
அரசாங்க அறிவித்தல்களுக்கு இடையில் இவ்வொழுங்கு விதிகள் தாமாகவே பிரசுரமாகின்றன. அவற்றுக்குத் தனியானதொரு இலக்கமிடும் முறையும் இல்லை. இதன் பயனாகத் தனிப்பட்டமுறையில் இவற்றைச் சேர்த்து வைப்பவரால் கூட அவரது சேகரிப்புப் பூரணமானதா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள இயலாது.
மேலும் அவசரகால நிலை ஒழுங்குவிதிகள் ஆக்கப்பட்டவுடனேயே நடைமுறைக்கு வருகின்றன (அதாவது, குடியரசுத் தலைவரினால் கையொப்பமிடப்பட்டவுடன்). அத்துடன், அவை பிரசுரமாவதற்கும், அரசாங்க வெளியீடுகள் பணிமனையில் கிடைப்பதற்குமிடையில் காலதாமதமேற்படுகின்றது. பொதுமக்களில் ஒருவரோ அல்லது சட்டத்தரணி ஒருவரோ சென்று, தற்போது நடைமுறையிலுள்ள அவசரகாலநிலை ஒழுங்குவிதிகளைக் காண்பிக்கும்படி உரிமையுடன் கேட்பதற்கு அரசாங்க நிறுவனம் எதுவும் இல்லை.
(11) 1993 ஆம் ஆண்டில் நடைமுறையிலிருந்த
ஒழுங்குவிதிகள்.
1993 ஆம் ஆண்டில் பலதரப்பட்ட விடயங்கள் அவசரகால ஒழுங்கு விதிகளினால் கையாளப்பட்டன. இயன்றளவு நிச்சயப்படுத்திக் கொள்ளும் வகையில் அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் ஆக்கப்பட்டுள்ள அல்லது தொடர்ந்தும் நடைமுறையிலுள்ள விடயங்களின் பட்டியலொன்றை 24 ஆம் பக்கத்திலுள்ள பின்னிணைப்பில் பார்க்கவும். அவசரகால ஒழுங்குவிதிகளினால் கையாளப்பட்ட பலதரப்பட்ட விடயங்கள் பட்டியலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
(11) 1993 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் முக்கியமான
அவசரகால ஒழுங்குவிதிகளை மீளாய்வு செய்தல்
இவ்வாண்டில் அவசரகால ஒழுங்குவிதிகள் (நானாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) பல தடவைகள் திருத்தப்பட்டுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக உள்ளூர் மற்றும் சர்வதேச, குறிப்பாகக் கட்டாய, விருப்பின்றித் தலைமறைதல் மீதான ஐ.நா.செயற்குழு, சர்வதேச மன்னிப்புச் சபை, இலங்கைச் சிவில் உரிமை இயக்கம் என்பனவற்றின் பலத்த கண்டனங்களுக்கும் பதிலாகவே இந்தசமாற்றங்கள் செய்யப்பட்டன. 1992 ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் ஆய்வு நிலையம் நடேசன் நிலையத்துடன் இணைந்து அவசரகால ஒழுங்குவிதிகளை மீளாய்வு செய்வதற்குத் தொடங்கியபோது சீர்திருத்தம் செய்யப்படல் வேண்டும் என்பதற்கான வற்புறுத்தல் மேலும் அதிகரித்தது. அத்துடன் அரசுக்குப் பல விதப்புரைகளும் செய்யப்பட்டன. 1993 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இவ்வாய்வின் அறிக்கை பிரசுரிக்கப்பட்டது.
(அ) 1993 மாசியில் ஆக்கப்பட்ட அவசரகால (நாநாவித ஏற்பாடுகளும்
அதிகாரங்களும்) ஒழுங்குவிதிகளுக்குத் திருத்தங்கள்.

Page 11
12
1993, மாசியில் அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) ஒழுங்குவிதிகளுக்கு முதலாவது திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்த ஒழுங்குவிதிகள் தான் ஐனநாயக உரிமைகள் பாதுகாப்பு:இயக்கத்தின் ஆய்வு விடயப் பொருளாக இருந்தது. இவ்வியக்கம், தற்போது நடைமுறையிலுள்ள ஒழங்குவிதிகளின் மீளாய்வை முற்றாக உள்ளடக்கியிருக்கவில்லை என்பதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டது. அன்றியும் இயக்கத்தினால் ஆய்வு செய்யப்பட்ட துறைகளைத் தொடக்கூட இல்லையென்பது மட்டுமன்றி, அவைகளுக்கெதிராகச் சுமத்தப்பட்ட கண்டனங்களுக்கான மாற்று நடவடிக்கைகளும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
இத்திருத்தங்களின் விளக்கவுரையொன்றும் அவற்றின் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் (ஜ.உ.பா.இ) மதிப்பீடும் காணக்கூடியதாகவுள்ளன. “அவசரகால ஒழுங்குவிதிகளின் சமீபத்திய திருத்தங்க” எரில் (ஜஉபா. இ. ஆவணம் ஈ 03/2/93, அவ்வறிக்கையில் இயக்கம் பின்வருமாறு கூறிப் பூர்த்தி செய்கின்றது.
எத்தனையோ அவசரகால ஒழுங்குவிதிகள், வெறுக்கப்பட வேண்டியவை என்றாலும்கூட, பொருளளவில் நடைமுறைப்படுத்தப்படாத சட்டங்களாகவே உள்ளன. அதாவது, என்றுமே மேற்கொள்ளப்படவில்லை; அல்லது அரிதாகவே மேற் கொள்ளப்பட்டுள்ளன. இது வெளிப்படையாகவே விரும்பத்தக்கதெனினும் தேவையேற்படும்போது துஷ்பிரயோகம் செய்யக்கூடிய வாய்ப்பு வளம் என்றுமே இருப்பதால், இவ்வித நீக்கங்கள் அரசினால் வழங்கப்பட்ட பிரதான சலுகைகளை உள்ளடக்கியுள்ளன என்று ஒருவர் பெருமதிப்பளித்தலாகாது.
விடயங்களின் உட்பொருளின் மீதான சீர்திருத்தங்களைப் பொறுத்தவரையில் இவற்றைக் கூட்டுமொத்தமாக நோக்குமிடத்து மிகக் குறைவாக இருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்துகின்றது. கைது செய்து தடுப்புக்காவலில் வைப்பதற்கான அதிகாரத் துஷ்பிரயோகம், சித்திரவதை, காவலில் வைத்திருக்கும்போது கொடூரமாக நடத்துதல் போன்றவற்றிற்கெதிரான மிகவும் முக்கியமான பாதுகாப்புக்கள் பல தொடர்ந்தும் செய்யப்படாமலிருக்கின்றன. கொழும்பு பல்கலைக்கழக மனித உரிமைகள் ஆய்வு நிலையத்தினால் செய்யப்பட்ட அவசரகால ஒழுங்குவிதிகளின் விரிவான மீளாய்வின் விதப்புரைகளில் பல செயற்படுத்தப்படவில்லை என்பது கவலையளிக்கின்றது. கடந்த பல வருடங்களாகத் தேசிய, சர்வதேச அரச சார் பற்ற நிறுவனங்கள் தெளிவாகவும், குறிப்பாகவும் தெரிவித்த கண்டனங்களால் சுட்டிக்காண்பிக்கப்பட்ட தேவைகளை அரைவாசிக்கேனும் இத்திருத்தங்கள் மனமின்றிச் செய்யப்பட்டன போன்றதுமான சாயலைக் கொண்டிருக்கின்றன.
தொழிற்சங்க உரிமைகளை மட்டுப்படுத்தும் கொடுமையான சட்ட ஏற்பாடுகள் உதாரணமாக, (அவசரகாலச் சட்டமும் தொழிற்சங்க உரிமைகளும் ( ஜஉபா.இ.ஈ. 01/10/92) ஐ மேலும் பார்க்கவும்) நடைமுறையில் திருத்தப்படாமலே இருக்கின்றன. இதனால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் ஐனநாயக முறைகளைப் பலப்படுத்தவதுடன், சமூகம் தானாகவே நிறைபெறுவதற்குத் தேவையான கருத்துத்

13
தெரிவிப்பதற்கும் செயற்படுவதற்கும் சட்டரீதியானதும் சமாதானமுமான வழிகளும் கட்டுப்பாடின்றி இருத்தல் வேண்டும்.
(ஆ) 1993 ஆனி மாதத்தில் அவசரகால (நானாவித ஏற்பாடுகளும்
அதிகாரங்களும்) ஒழுங்குவிதிகளுக்குச் செய்யப்பட்ட திருத்தங்கள்.
அதன்பின்னர், 1993 ஆனி மாதத்தில் நீண்டகால நோக்கம் நிறைவேறக்கூடிய பாரிய மாற்றமொன்று செய்யப்பட்டது. அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) நீக்கப்பட்டு புதிய தொகுப்பொன்று சேர்த்துக் கொள்ளப்பட்டது.
கைது செய்து தடுத்துவைத்தல் தொடர்பான ஏற்பாடுகளில் சில முக்கியமான மாற்றங்களை இப்புதிய ஒழுங்குவிதிகள் செய்தன. சிவில், அரசியல் உரிமைகள் பிரிவு 1 தனி சுய நேர்மை மீதான அத்தியாயத்தில் இவை விரித்துரைக்கப்பட்டுள்ளன. (“புதிய அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் கைதுசெய்தலும் தடுத்து வைத்தலும்” என்பதையும் பார்க்க.) (நடேசன் நிலைய சட்ட சுருக்கம், 1993 புரட்டாதி 20) .
ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு இயக்கங்கள் மீளாய்வின் ஆக்கபூர்வமான அம்சங்களை வரவேற்கும் அதே வேளையில், ஏனைய கண்டனங்கள் கவனத்திலெடுபடாமலே இருப்பதையிட்டுத் தமது ஏமாற்றத்தைத் தெரிவித்தன. 1993 ஆம் வருடத்தில் செய்யப்பட்ட மீளாய்வுகள் பின்வரும் விடயங்களை உள்ளடக்கியிருக்கின்றன.
(1) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இடங்கள் பெயர் குறிப்பிடப்படல்
வேண்டுமென்பதுடன், பட்டியலொன்றும் வெளியிடப்படல் வேண்டும்.
(2) சந்தேகத்தின்மீது கைது செய்யப்படுதல்கள் உடனடியாக மனித உரிமைகள்
செயலணிக்குத் தெரிவிக்கப்படுதல் வேண்டும்
(3) வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்படுபவர்களை அண்மையிலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப்படல் வேண்டும்.
(4) கைதுசெய்யப்பட்டவர்களைப் பற்றி உயர் அதிகாரிக்கு 24 மணித்தியாலங்களுக்குள்
தெரிவிக்கப்படல் வேண்டும்.
(5) ஒருவர் கைது செய்யப்படும்போது, உறவினர்களுக்குப் பற்றுச்சீட்டொன்று
வழங்கப்படல் வேண்டும்.
(6) மேற்கொண்டு தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கு நியாயமான காரணம் உள்ளதா அல்லவா என்ற முடிவு, வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் 7 நாட்களுக்குள்ளும், நாட்டின் ஏனைய இடங்களைப் பொறுத்தவரையில் 48

Page 12
14
மணித்தியாலங்களுக்குள்ளும் எடுக்கப்படல் வேண்டும்.
(7) அப்படியான காரணம் எதுவும் இல்லாதவிடத்து, கைது செய்யப்பட்டவர் மஜிஸ்ரேட்
முன்னிலையில் கொணர்ந்து நிறுத்தப்பட்டு விடுவிக்கப்படல் வேண்டும்.
(8) விசாரணை செய்வதற்காகத் தடுப்புக்காவலில் வைத்திருத்தல் 60 நாட்களுக்கும் அல்லது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குப் புறத்தே இழைக்கப்பட்ட குற்றமொன்றிற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே கைது செய்யப்பட்டிருப்பின் 7 நாட்களுக்கும் வரையறுக்கப்படல் வேண்டும்.
(9) அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு முகாம்கள் இருப்பது பற்றியும் அவற்றின் முகவரிகளையும்
மஜிஸ்ரேட்டுக்குத் தெரிவித்தல் அவசியமானதாகும்.
(10) மஜிஸ்ரேட் இதை அறிவித்தல் பலகையில் காணவிடுவதற்காகத் தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கான இடங்களில் பொறுப்பதிகாரிகள், தடுப்புக் காவலிலுள்ளவர்களின் பெயர்ப்பட்டியலொன்றை 14 நாட்களுக்கு ஒரு முறை சமர்ப்பித்தல் வேண்டும்.
(11) மாதமொருமுறை மஜிஸ்ரேட் தடுப்பு முகாம்களுக்குச் சென்று பார்வையிடல் வேண்டுமென்பதுடன், மஜிஸ்ரேட்டின் கட்டளைப்படி தடுப்புக்காவலில் இருப்பவர்கள் தவிர, மற்றையவர்கள் மஜிஸ்ரேட் முன்னிலையில் நிறுத்தப்படு வதைப் பொறுப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தல் வேண்டும்.
(12) இப்பொழுது ஆளொருவர்பொருத்தமான மஜிஸ்ரேட்டுக்கு அறிவித்ததன் பின்னரும் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அதிகாரத்தின் கீழும் பொலிசாரினால், சிறைக்காவலிலிருந்து விசாரணை காரணங்களுக்காக 48 மணித்தியாலங்களுக்கு மட்டுமே அழைத்துச் செல்லப்படலாம் (முன்னர் 7 நாட்கள்). இருப்பினும், நீதிமன்றின் அனுமதி பெறப்படல் வேண்டுமெனவும், சிறைச் சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைதியுடன் உடன் செல்லல் வேண்டுமெனவும் பல்கலைக்கழக ஆய்வு நிலையம் விதப்புரை செய்தது)
(13) காவலிலுள்ள ஒருவர் மரணமடையும் சந்தர்ப்பத்தில், விசாரணையொன்று நடைபெறல் சட்டப்படியான ஆணையென்பதைக் கூறும் சாதாரண சட்டத்திலிருந்து விலகி நடப்பதற்கு இடமளிக்கும் அவசரகால ஒழுங்கு விதி மீளவும் சில வகைப்பட்டவற்றுக்கு அது மட்டுப்படுத்தக்கூடிய முறையில் வரையப்பட்டுள்ளது.
(14) முன்னைய அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) ஒழுங்குவிதிகளினால் ஆக்கப்பட்ட பல குற்றங்கள் தவிர்க்கப்பட்டமை. இருப்பினும் சில புதியவை ஆக்கப்பட்டுள்ளன.)
(15) சரணடைபவர்கள் 7 நாட்களுக்குள் சிறைச்சாலைக்குக் கையளிக்கப்படல் வேண்டும். ( முன்னர் அது 28 நாட்களாக இருந்தது. ஜஉபா.இ. நாட்டின் பல

15
இடங்களில் அது 24 மணித்தியாலமாக இருத்தல் வேண்டுமெனக் கருத்துத் தெரிவித்துள்ளது.) இப்பொழுதுள்ள சூழ்நிலைகள் பொலிஸ் சுப்பிரெண்டனுக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் அறிக்கையிடப்படல் வேண்டும். முன்னர் அப்படிக் கைதுசெய்யப்படுபவர்கள் காலவரையின்றித் தடுப்புக்காவலில் இருப்பதற்கு ஆளாகின்றார்கள். இது இப்பொழுது தீர்க்கப்பட்டுள்ளது (ஆனால், தடுப்புக்காவலுக்கான காலம் மனச்சாட்சிக்குக் கட்டுப்படாத அளவுக்கு இன்னும் நீண்டிருக்கின்றது.)
(16) அத்தியாவசிய சேவைகள், தொழிலாளர் பிணக்குகள் தொடர்பான அவசரகால ஒழுங்குவிதிகளில் ஏற்பட்டுள்ள திருத்தங்கள் ( இவை கீழே மேலும் முற்றாக விபரிக்கப்பட்டுள்ளன.)
கீழ்க்காணும் விடயங்களில் சிவில் உரிமைகள் சபைகள் ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளன.
(1) விசாரணை செய்பவர்களின் காவலில் நீண்டகாலத்துக்குத் தடுத்து வைத்தல், தொடர்ந்தும் இருப்பதற்கான ஏற்பாடு. அதாவது, பொலிஸ் காவல், வெளிப்படையான காரணங்களுக்காக இது விசேடமாகக் கொடுமைப்படுத்துவதற்குச் சாதகமாகவுள்ளது.
(2) குற்றத்தடுப்புக்காக ஆட்களைக் கைது செய்தல் ( ஒழுங்கு விதி 17) மனித உரிமைகள் செயலனிக்கு அறிவிக்கப்படல் வேண்டுமென்ற தேவைப்பாட்டைத் தவறவிட்டமை. ( குற்றமொன்றை இழைத்துள்ளதாகச் சந்தேகத்தின் மீது 18 ஆம் ஒழுங்குவிதியின் கீழ் கைது செய்யப்படும் ஆட்களுக்கு மட்டும் இது ஏற்புடையது.)
(3) அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் தடுத்து வைப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான
எவ்வித விதிகளையும் ஆக்குவதற்குத் தொடர்ந்தும் தவறியமை,
(4) குற்றத்தடுப்புக்காகத் தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கான கால வரையறையைச் சட்டக் கோப்பில் சேர்த்துக்கொள்வதற்குத் தொடர்ந்தும் தவறியமை ( அ-து) அவசரகாலநிலை அமுலில் இருக்கும்,வரைக்கும்.
(5) காவலிலுள்ள ஒருவர் மரணமடைந்தால், விசாரணைகள் செய்தல் வேண்டும் என்ற சாதாரண சட்டத்தை முற்றாக மீளவும் அமுல் படுத்தத் தவறியமை, ஆயுதம் தாங்கி எதிர்த்தமை காரணமாகவே மரணம் சம்பவித்தது எனப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரோ ஆயுதப்படையினரில் ஒருவரோ நம்புவதற்கான காரணம் இருக்கும் சந்தர்ப்பங்களில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், மரணமடைந்தவர் அரசுக்கெதிராக யுத்தம் செய்தாரென்பது திருப்தியற்றதாகவே கருதப்படுகின்றது.
(8) துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல், தூண்டிவிடுதல் போன்றவை தொடர்பான

Page 13
16
அவசரகால நிலையின்கீழான குற்றங்கள் நீக்கப்பட்டமையினாலேற்பட்ட நிவாரணம், 1993 மார்கழி 21 ஆந் தேதி மீண்டும் இவை அறிமுகப் படுத்தப்பட்டமையினால் சிறிதுகாலமே நடைமுறையிலிருந்ததென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
(இ) அத்தியாவசிய சேவைகள் தொழிற்பிணக்குகள்
தொடர்பான அவசரகால ஒழுங்கு விதிகளுக்குத் திருத்தங்கள்
அத்தியாவசிய சேவைகள் தொழிற் பிணக்குகள் தொடர்பான அவசர கால ஒழுங்குவிதிகளுக்கு 1993 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மாற்றங்களுக்குத் தனிப்பட்ட க்வனம் செலுத்தப்படுதல் அவசியமானதாகும். இத்துறையிலுள்ள ஒழுங்கு விதிகளின் ஐயப்பர்டு காரணமாகக் கடுமையான முறையே பின்பற்றப்படவேண்டுமென்ற கொள்கை இவ்விதிகளின் எதிர்த்து வாதாட முடியாத ஏற்பாடுகள் சிலவற்றை மீளாய்வு செய்ததால் அல்லது நீக்கிவிட்டதால் தண்டனையளவில் கடுமையைக் குறைத்துள்ளன (இம்மாற்றங்களுக்கு முக்கியத்துவமோ பெரும் விளம்பரமோ கிடைக்கவில்லை).
கீழே தரப்பட்டுள்ளவற்றை இம்மாற்றங்கள் உள்ளடக்கியிருக்கின்றன.
(1)“அத்தியாவசிய சேவைகள்” பட்டியல் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், இது விடயமான திருத்தம் பெருமளவில் தோற்றத்தில் உள்ளதேயன்றி உட்பொருளில் எதுவுமில்லை. வலது கையால் கொடுத்து இடது கையால் பறிப்பது போலவே இதுவும் உள்ளது. இப்படியாகவே அரசகட்டுபாட்டிலுள்ள “த அசோஸியேற்றட் நியூஸ்பேப்பர்ஸ் ஒவ் சிலோன் லிமிடெட்” அத்தியாவசிய சேவையொன்று என்பதிலிருந்து தவிர்க்கப்பட்டுள்ளது போன்றே முன்னர் விசேடமாகப் பட்டியற்படுத்தப்பட்டிருந்த மறுபுறத்தில் பொதுநிருவாக, மாகாண சபைகள் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பணிகளை உள்ளடக்கிய பகுதி சகல அமைச்சுக்கள், அரசாங்கத் திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் என்பனவற்றின் பணியென உள்ளடக்குவதற்காக மீளவும் வரையப்பட்டுள்ளது. பிற விடயங்களுள் இது அரசுடமையான இவை இப்போது தவிர்க்கப்பட்டவையென நுணுகி ஆராயாத வாசகர் கருதியிருக்கக்கூடிய ஒலிபரப்பு, தொலைக்காட்சிச் சேவைகளை “ அத்தியாவசிய சேவைகள்” என்ற பகுதிக்குள் மீண்டும் கொண்டுவருகின்றது. மேலும் கீழே தரப்பட்டுள்ள சகலதையும் உள்ளடக்கிய பகுதி திருத்தப்படாமலே இருக்கின்றது.
" (கே) உணவின் ஏதாவது ஒரு பொருள் அல்லது மருந்து அல்லது பொதுமக்களில் ஒருவருக்குத் தேவையான வேறு ஏதாவது பொருள் என்பனவற்றின் விற்பனை விநியோகம், பகிர்வு தொடர்பாகச் செய்யப்படுவதற்குத் தேவையான அல்லது அவசியமான

17
எவ்வகைப்பட்டதாயினும் சகல தேவைகளும்.
(2) அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர் ஒருவர் வேலைக்கு வரத்தவறிய குற்றம் (பதவியிலிருந்து தாமாகவே விலகிக்கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு இதனால் சுமத்தப்படுவதோடு வழக்குத் தொடருவதற்கும் பொறுப்பாவார்) என்பது, “முறையான காரணமின்றி” என்னும் சொற்களைச் சேர்ப்பதன் மூலம் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.
(3)தொழில் ஆணையாளருக்கும், தொழில் வழங்குநருக்கும் 14 நாள் முன்னறிவித்தல் கொடுக்கப்பட்டதன் மேல் பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கமொன்றினால் அத்தியாவசிய சேவையொன்றில் ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துச் செல்வதில் புரியப்பட்ட செயல்கள், தவறுகள் என்பன இப்போது பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதுடன், அவசரகால ஒழுங்குகளின் கீழ் இனிமேல் குற்றமாகக் கருதப்பட மாட்டாது.
(4) அத்தியாவசிய சேவைகளுடன் இணைந்து குற்றங்களுடன் தொடர்புடைய வற்றில்
சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் கடுந்தண்டனை தவிர்க்கப்பட்டுள்ளது.
(5)1989 ஆனி 24 ஆந் தேதிக்குப் பின் முளைத்த தீர்க்கப்படாத தொழிற் பிணக்குகள் யாவும், கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் நடுவர் தீர்ப்பின் மூலம் தீர்த்து வைப்பதற்காக ஆற்றுப்படுத்தப்படுகின்றன. அப்படியான பிணக்கொன்றின் கட்சிக்காரராகவுள்ள தொழிலாளி ஒருவர் அவரின் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவோ அன்றித் தாமாகவே விலகிக் கொண்டுள்ளதாகவோ கருதப்படமாட்டார். தொழிற் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதற்கு நடைமுறையிலுள்ள சட்டங்களைப் புறக்கணித்துக் கடுமையான அவசரகால ஒழுங்குவிதிகளை நாடியதை சிவில் உரிமைகள் இயக்கங்களும் தொழிற்சங்கங்களும் கடந்த காலங்களில் மீண்டும் மீண்டும் கண்டித்த பழக்கத்தைத் தீர்ப்பதற்கு இம்மீளாய்வு முயற்சிக்கின்றது. கைத்தொழிற் பிணக்குளின் கீழ், நடுவர் தீர்ப்புக்கு ஆற்றுப்படுத்தப்படுதல் என்பதன் பொருள், அத்தியாவசிய சேவைகள் சீர்குலைவதைத் திசைதிருப்புவதற்கான தேவையைச் சமாளிக்குமுகமாக விசாரணைகள் முடிவு செய்யப்படும் வரையில் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்புதல் வேண்டும் என்பதாகும். ஆயினும், இப்புதிய ஏற்பாட்டின் மிகவும் துரதிருஷ்டவசமான குறைபாடான வாக்கிய அமைப்பு, 1993 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஒழுங்கு விதிகள் ( கைத்தொழிற் பிணக்குகள்) என்பதன் கருத்து அது ஆவலுடன் எதிர்பார்த்த பயனைக் கொண்டிருக்கவில்லை.
மேலும், சனாதிபதியின் மனதில் தோன்றும் கருத்தின் மீதே முற்றாகத் தங்கியிருக்கும் கூட்டுத்தண்டனை விதிக்கக்கூடிய ஒருமித்த தண்டனை விதிக்கக் கூடிய பாரதூரமான சட்ட ஏற்பாடானது தொடர்ந்து அமுலில் உள்ளது. சனாதிபதியின் கருத்தில், அமைப்பு

Page 14
18
ஒன்றின் அங்கத்தவர்கள் அத்தியாவசிய சேவைகள் தொடர்பாகக் குற்றம் புரிகிறார்கள் என்ற சந்தர்ப்பங்களில் அவ்வமைப்பை அவர் தடை செய்யலாம். அவ்வமைப்பின் ஒவ்வொரு உறுப்பினரும் குற்றமொன்றுக்குக் குற்றவாளியாவதுடன், ஏதாவதொரு உறுப்பினர் அரச அல்லது கூட்டுத்தாபன ஊழியராயின் அவர் பதவியைத் தாமாகவே விட்டு விலகியதாகக் கருதப்படுவதுடன், அவ்வமைப்பின் வங்கிக் கணக்கும் செயலறச் செய்யப்பட்டுவிடும். 1992 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தனது “அவசரகாலச் சட்டமும் தொழிற்சங்க உரிமைகளும்” என்ற அறிக்கையில் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தது.
47 ஆவது ஒழுங்குவிதியில் கவனம் செலுத்தப்படவேண்டிய முரண்பாடு காணப்படுகின்றது. அவசரகால ஒழுங்குவிதியின் பொதுநோக்கங்கள் ஒன்றுபட்ட மக்கள் தொகுதியொன்றினால் குற்றமிழைக்கப்படுமிடத்து, பணிப்பாளர் ஒவ்வொருவரும் ( கூட்டிணைக்கப்பட்ட தொகுதியொன்றாக இருக்குமிடத்து (உ-ம்) கம்பனியொன்று) அல்லது பங்காளி ( அது பங்குடமையாக இருக்குமிடத்து) குற்றம் தமது அறிவுக்கு எட்டாமலும் அல்லது அதைத் தடுப்பதற்குத் தாம் முறையான கவனத்தைச் செலுத்தியுள்ளாரென்றும் நிரூபிக்காதவிடத்து அவர் குற்றம் புரிந்தவராகக் கருதப்படுவார். அப்படியாகத் தப்பித்துக் கொள்ளக்கூடிய வழியெதுவும் சாதாரண உறுப்பினர் ஒருவருக்குக்கூட வழங்கப்படவில்லை. குழு உறுப்பினரை மட்டும் தவிர்த்துக் கொள்ளவும். ( சனாதிபதியின் மனதில் தோன்றியபடி) அத்தியாவசிய சேவைகள் தொடர்பாகக் குற்றம் புரியும் அமைப்பின் ஏனைய உறுப்பினர்கள்.
(iv) முடிவுரை
அவசரகால நிலை ஒழுங்குவிதிகளைப் பொறுத்தவரையில் அதிருப்தியான குறிப்புடன் ஆண்டு ஒடி மறைந்தது.
முதலில் அவை என்றுமே அணுகமுடியாதபடி இருந்தன. 1993 பங்குனி மாதத்தில் மனித உரிமைகள் மீதான ஐ.நா. ஆணைக்குழுவின் கூட்டத்தில் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதி “பொதுமக்களின் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக சகல அவசரகால ஒழுங்கு விதிகளின் தொகுதிப் பதிப்பொன்றை ஆக்கி வெளியிடல்” மேற்கொள்ளப்படவில்லை.
1993 ஆணி மாதத்தில் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட மீளாய்வு செய்யப்பட்ட அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) சுற்றிவளைக்கும் மொழியில் இருப்பதுடன் அவற்றின் சட்ட ஏற்பாடுகள் சிலவற்றின் பொருளைப் புரிந்து கொள்வது கடினமாகவுள்ளது. சந்தர்ப்பத்தில் சிங்கள, ஆங்கில, தமிழ் பொருளடக்கம் வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவிக்கின்றன. மேலும் சந்தேகத்துக்கிடமான இடங்களில் தடுப்புக்காவலில் வைத்திருத்தல் இன்னும் தொடர்வதும், கைது

19
செய்யப்படுபவர்களுக்க "ப் பற்றுச்சீட்டு வழங்கல் அனுட்டிக்கப்படுவதிலும் பார்க்க அதிகமாக மீறப்படுவதும், தடுப்புக்காவலில் உள்ள ஆட்களின் பட்டியல் மாஜிஸ்ரேட் நீதிமன்ற அறிவித்தல் பலகைகளில் பார்வைக்காகத் தொங்கவிடப்படுதல் போன்ற உத்தரவாதங்கள் அமுல் படுத்தப்படாமலே இருப்பதும் நடைபெற்றுக்கொண்டிருப்பது போன்றவற்றிலிருந்து, ஆனி மாத மீளாய்வில் உள்ளடக்கப்பட்டுள்ள அப்படியான திருத்தங்களில் மதிப்பு.சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது.
1993 ஆம் ஆண்டில் இறுதியில் இராஜதுரோகத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பது தொடர்பான ஒழுங்குவிதிகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டமை மேலும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகின்றது. மேலும் தேசிய பாதுகாப்புக்குப்புறம்பான விடயங்களைக் கையாளுவதற்கு அவசரகால ஒழுங்குவிதிகளை நாடுவது தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது. இப்படியான ஏராளமான ஒழுங்குவிதிகள் நடைமுறையில் உள்ளன என்பது மட்டுமல்ல, புதிய ஒழுங்கு விதிகளும் ஆக்கப்படுகின்றன. வருடத்தின் ஆகக் கடைசியாக, 1993 மார்கழி 22ஆம் தேதி பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்குவிதிகள் அரச சார்பற்ற சபைகளைக் கண்காணிப்பதற்கும் ஆட்சிமுறையைத் திணித்தன. இவ்வொழுங்கு விதிகளின் கீழ் உள்ளடக்கப்பட்ட சபைகள் வருடாந்தம் 50,000 ரூபாவுக்கு மேலாகக் கொடைகளைப் பெறும் பட்சத்தில் பதிவு செய்யப்படுதல் கட்டாயமாக்கப்பட்டது. அச்சபைகளின் வரவு 100,000 ரூபாவை விஞ்சுமிடத்து, சகல வரவுகளும் செலவுகளும் அரச உத்தியோகத்தர் ஒருவரினால் கண்காணிக்கப்படல் வேண்டுமெனவும் மேலும் விதிக்கப்பட்டது. வரவுகள் பெற்ற விதமும் கொடுப்பனவுகள் செய்யப்பட்ட விதமும் (பெயர்களும் முகவரிகளும் உட்பட) வெளியிடப்படுதல் வேண்டும். இரகசியம் பேணுவதற்கான சட்ட ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இத்தகவலைப் பெற்றுக்கொள்வதற்கு எந்தவொரு மனிதனும் முற்படலாம்.
சிவில் உரிமைகள் இயக்கத்தின் கருத்துக்கள்:
அரசாங்க சார்பற்ற சகல அமைப்புக்களும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படலாம். எனினும், இந்நடவடிக்கையின் மூலகாரணமானது, சுதந்திரமானதும் ஜனநாயக ரீதியினாலானதுமான சமுதாயத்துக்கு அப்படியான சபைகளினால் ஆற்றப்படும் சேவைகளின் ஏற்பாட்டைத் தடைசெய்யும் சகல நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிப்பதற்கு யாரோ ஒரு பலம்வாய்ந்த தலைவரின் இப்படியான எண்ணத்தின் கடந்தகால நிகழ்ச்சிகளை உற்றுநோக்கில் அது தனித்திறம் வாய்ந்ததொன்று என்பதுடன், அவலமானதொன்றுமாகும். இது வேறு இடங்களில் சர்வாதிகார ஆட்சிகளைச் சின்னாபின்னப்படுத்தியதை நினைவுகூரும் வகையில் தற்காலத்தில் தானாகவே வெளிப்படுத்தக்கூடும்.

Page 15
20
பின்னிணைப்பு 1
1993 இல் நடைமுறையிலிருந்து அவசரகால ஒழுங்கு விதிகளுடன் கையாளப்பட்ட விடயங்கள்.
வங்கித் தொழில் (விசேட ஏற்பாடுகள்) (10.12.91 இன் 1692/9, 28.12.91 இன் 694/16, 694/17) பிறப்புக்களும் இறப்புக்களும் (1.8.89 இன் 569/10, 31.7.90 இன் 621/ 4, 26.9.90 இன் 629 / 8) வியாபார முயற்சிகள் (4.989 இன் 574/10) சிவில் அலுவல்கள் (21.8.89 இன் 572/5) குற்றவியல் நடவடிக்கைச் சட்டக் கோவை 5.2.91 (4) (26.12.91 இன் 694/8) கொழும்பு சர்வதேச விமான நிலையம் (20.12.93 இன்748/2) விசாரணை ஆணைக்குழுக்கள் (11.6.91 இன் 666/12, 28.6.91 இன் 668/7) சொத்துக்கள் பறிமுதல் செய்தல் (15.5.90 இன் 610/2) சுங்கங்கள் பிணை (27.8.90 இன் 625/2) சுங்கங்கள் உதவிச் சேகரிப்பாளர் நியமனம் (4.9.89 இன் 574/8) உணவு உப்பு (27.8.90 இன் 635/2) அரச தனியார் காணிகளில் அத்துமீறிக் குடியேறுதல் (27.10.89 இன் 581/22) புராதன சின்னங்கள், புதைபொக்கிஷம் தொடர்பான குற்றங்களுக்குத் தண்டனை அதிகரித்தல். (28.11.92 இன் 742/26) நிதிக் கம்பனிகள் (20.11.90 இன் 637/4, 26.12.90 இன் 642/6, 16.1.91 இன் 645/9, 30.1.92 இன் 699/20) காடுகள் (26.3.92 இன் 707/8) துப்பாக்கிகள் (2.8.93 இன் 778/4) அதிஷ்ட இலாப விளையாட்டுக்கள் ( 6.6.91 இன் 665/13) பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழு (10.9.92 இன் 731/19) மணி 8.சிமைகள் செயலணி (1.7.91 இன் 673/3, 10.8.91 இன் 674/17) குடிவரவு, குடியகல்வு உதவிக்கட்டுப்பாட்டாளர்கள் நியமனம் (4.9.89இன் 574/9)
கைத்தொழிற் பிணக்குகள் (28.9.93 இன் 786/7) வாகனமோட்டுவதற்கான அனுமதி அட்டை வழங்கல் (20.11.91 இன் 689/13, 15.3.93 இன்758/4 ஆல் வாபஸ் பெறப்பட்டது) கூட்டுச் செயலகச் சபை ( 9.10.92 இன் 735/22, 6.9.93 இன் 783/1 இன் 783/1 ஆல் வாபஸ் பெறப்பட்டது)

21
சுடுகலன்கள் அனுமதிப் பத்திரம் வழங்கல் (24.10. 89 இன் 581/8, 20.10.92 இன் 737/10, 2.12.93 இன் 795/23) சுடுகலன்கள் அனுமதிப்பத்திரம் வழங்கும் அதிகார சபை உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் சட்டம் (25.11.93 இன் 794/16) உள்ளூர் அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள் சட்டம்) 1988 ஆம் ஆண்டின் சட்டம். (30.11.89 இன் 588/7, 15.2.90 இன் 597/10, 9.3.90 இன் 600/17) உள்ளூராட்சி ( உள்ளூராட்சி அதிகார சபைகளின் பதவிக்காலங்கள்) (13.11.91 இன் 688/15, 28.11.92 இன் 742/25, 22.10.93 இன்789/13, 21.12.93 இன் 798/8) அத்தியாவசிய சேவைகளையும் வழங்கல்களையும் பேணல். (6.7.89இன் 565/17) உடுபுடவைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகளின் ஆகக்குறைந்த வருமானத்தைப் பேணல், (17.11.92 இன் 741/8) மல்லாகம். நீதிமாவட்டம் பிரிவு தொடர்பாக பெயரற்ற ஒழுங்குவிதி (14.9.93 இன் 784/11) நானாதவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும். (20.6.89 இன் 563/7, 17.6.93 இன் 771/16) (28.2.92 இன் 703/18, 7.9.92 இன்731/4) தடுப்புக்காவலில் உள்ளவர்களின் அடிப்படை உரிமைகளைக் கண்காணித்தல், (31,791 இன் 673/2, 10.8.91 இன்) அரச சார்பற்ற நிறுவனங்களின் வரவு செலவுகளைக் கண்காணித்தல் (22.12.93 இன் 798/14) மோட்டார் வாகனம் (மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல்) பணிக்கொடைக் கொடுப்பனவு ( 10.1.94 இன் 801/3) நஞ்சு, அபின் அபாயகரமான ஒளடதங்கள் சட்டம் திருத்தம் (11.2.92 இன் 701/5) பொலிஸ் (13.5.92 இன் 714/9) வெடிமருந்துகளை வைத்திருத்தல். (18.6.92 இன் 719/17) அரசைக் கவிழ்க்கும் அரசியல் நடவடிக்கை தடுத்தல் ஒழுங்குவிதிகள், (இல 1 இன் இல, 1991, (11.5.91 இன் 661/17) (8.4.93 இன் 761/11) ஆல் வாபஸ் பெறப்பட்டது ஆனால் (17.5.93 இன் 761/1 ஆல் மீண்டும் கொண்டு வரப்பட்டது கருவிகளும் உபகரணங்களும் இறக்குமதித் தடை செய்தல் (31.5.91, இன் 664/9, 3.6.91 இன் 665/3) பிரத்தியேக பஸ்ரதவாகனம் ( 15.3.91 இன் 653/22, 10.12.91 இன் 692/8) தடை செய்யப்பட்ட பகுதி, நிறுவப்பட்டது (16.10.92 இன் 736/17, 1.2.93 இன் 752/5, 17.09.93 இன் 784/20) படகுகளைப் பயன்படுத்தல் மீதான தடை (1.9.93 இன் 782/7) அச்சகங்களை மீண்டும் பதிவு செய்தல் (12.7.89 இன் 566/7)

Page 16
22
வாகனங்களைப் பொதுப் பணிக்கு எடுத்தல் நீக்கப்பட்டுள்ளது. (8.4.93 இன் 761/ 15, 10.6.93 இன் 770/16) ஆல் வாபஸ் பெறப்பட்டது. பொருட்களைக் கொண்டு செல்வதன் மீதான தடை, புதிய அறிவித்தலைப் பார்க்கவும். (9.8.91 இன் 674/16 (ஆனால் புதிதாக அறிவித்தலின்றி) (9.12.91 இன் 692/4) பாடசாலைகள் அபிவிருத்திச்சபைகளும் மாகாண சபைகள் கல்விச்சபைகளும். (12.2.92 geir 701/12) இலங்கை நிறுவகம் (31.7.91 இன் 673/2, 10.8.91 இன் 674/17) இலங்கை ரூபவாஹினி (27.10.89 இன் 581/21) உள்ளூர் அதிகார சபைகளின் பதவிக்காலம் (21.12.93 இன் 798/8) 1978 ஆம் ஆண்டின் பல்கலைக்கழகம் திருத்தம் (10.9.91 இன் 679/8) மெல்வண்ணக் கண்ணாடி பொருத்தப்பட்ட மோட்டார் வாகனங்களை உபயோகித்தல் (16.10.89 இன் 589/7) வெளியில் பொருத்தப்பட்ட மோட்டாருடன் வள்ளங்களை உபயோகித்தல் (17.10.91 இன் 684/8, 4.8.93 இன் 778/12) வாகனமோட்டும் அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் (31.8.90 இன் 625/ 18, ( 15.3.93 இன் 758/4) ஆல் வாபஸ் பெறப்பட்டது. இளைஞர் நலன்புரி நிதியம். (24.5.93 இன் 768/1)

23
அத்தியாயம் 3
குடியியல் அரசியல் உரிமைகள்
1. தனிமனிதனின் முழுமைக்கான மதிப்பு (1) பொருத்தமுடைய சர்வதேசத் தரங்கள்
தனிமனிதனின் முழுமைக்கான மதிப்பளிப்பது தொடர்புடைய உரிமைகளுக்குப் பொருத்தமான பல சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளில் இலங்கை உறுதி செய்துள்ளது. அத்துடன் இதன் விளைவாக அவ்வுடன்படிக்கைகளின் ஏற்பாடுகளுக்கு அமைவாகத் தேசிய சட்டங்களையும் கொண்டுவருவதற்கான தனது கடப்பாட்டையும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. 1990 ஆம் ஆண்டில் இலங்கை அரசினால் உறுதி செய்யப்பட்ட சிவில் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையும், (1994தை 3ஆம் திகதி உறுதி செய்யப்பட்ட) சித்திரவதை, மற்றும் கொடூர மனிதாபிமானமற்ற அல்லது தரங் கெட்டமுறையில் நடத்தப்படுதல் அல்லது தண்டனைக்கு எதிரான உடன்படிக்கை என்பனவற்றை இவ்விடத்தில் விசேடமாகக் குறிப்பிடுதல் வேண்டும்.
ஒப்பந்தங்களைப் போன்று அரசாங்கங்களினால் உறுதிப்படுத்தப்படாவிட்டாலும் ஐக்கிய நாடுகள் தீர்மானங்கள் பல சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தரங்களை விதித்துள்ளன. இவையும், ஏற்புடையன.
sláltvanaras
தடுப்புக்காவலில் உள்ள ஆட்களை நடாத்துவது பற்றியவை சிறைச்சாலையில் அல்லது ஏவ்வகைப்பட்ட தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள எல்லோாளினதும் பாதுகாப்புக்கான ஐ.நா.கோட்பாடுகள் சபை;(1989 மார்கழியில் மேற்கொள்ளப்பட்ட 4373 ஆம் இலக்க யூ என்ஜிஏ தீர்மானம்
(பூ என் ஜீ ஏ தீர்மானம் 43173 மார்கழியில் மேற்கொள்ளப்பட்டது) அவர்களைத் தடுப்புக்காவலில் வைத்திருப்பவர்களின் நடத்தை தொடர்பானது. சட்டத்தைச் செயல்படுத்தும் உத்தியோகத்தர்களில் நடத்தை ஒழுக்கக் சேவை (யுஎன்ஏ தீர்மானம் 341 169 1979 இல் மேற்கொள்ளப்பட்டது) தலைமறைவாவதிலிருந்து ஆட்களைப் பாதுகாத்தல் தொடர்பானது. பலவந்தமாகத் தலைமறைவாவதிலிருந்து ஆட்களைப் பாதுகாத்தல் மீதான பிரகடனம் (யு என் ஜீ ஏ. தீர்மானம் 4733 1992 மார்கழியில் மேற்கொள்ளப்பட்டது). மனம் போனபடியும் சுருக்கமுறை விசாரணையின் பின் மரணதண்டனை விதித்தலும் என்பனவற்றை விசேட சட்டரீதியாக விசாரணை செய்தலும் திறமையுடன் தடை செய்தலும் மீதான ஐ.நா கோட்பாடுகள் (யு என்ஜிஏ 441621989 மார்கழியில் மேற்கொள்ளப்பட்டது).

Page 17
24
(அ) ஆயுள் உரிமை
ஐசீசீபீஆர் 6 ஆம் உறுப்புரையால் மிகவும் அடிப்படை மனித உரிமைகளின், ஆயுளின் உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வதற்கு இயல்பாகவே உரிமை உள்ளது. இவ்வுரிமை சட்டத்தினால் பேணப்படல் வேண்டும். எவருமே மனிதனின் ஆயுளை மனம்போனபடி நீக்க இயலாது இவ்வுறுப்புரை எச் சந்தர்ப்பங்களிலும் வலுவிழக்கச் செய்ய முடியாத தொன்றாகும். (உறுப்புரை 4 ஐ சீசீ பீஆர்)
(ஆ) மனம் போனபடி கைது செய்தலும் தடுத்து வைத்தலும்
ஐசீசீஆர்பி 9 ஆம் உறுப்புரையினால் மனம் போனபடி கைது செய்தல், தடுத்து வைத்தல் என்பனவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை பேணப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் விடுதலைக்கும் தனிமனிதனாகப் பாதுகாக்கப்படும் உரிமையை உரித்துடையவர். எந்த ஒருமனிதனும் மனம்போனபடி கைதுசெய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கு ஆளாக்கப்படலாகாது. சட்டத்தினால் நிறுவப்பட்டுள்ளவாறான நடைமுறைக்கு அமையவும், அப்படியான குற்றச்சாட்டுகளின் மீதன்றித் தனது விடுதலையை இழக்கும்படி செய்யலாகாது.
9ஆம் உறுப்புரையில் பேணப்பட்டுள்ள உரிமைகளிலிருந்து மதிப்புக் குறைக்கப்படுதலை உடன்படிக்கை அனுமதிக்கின்றது. ஆனால் நாட்டு மக்களின் வாழ்வை அச்சுறுத்தக்கூடிய அவசரகால நிலைகளில் மட்டுமே அப்படிச் செய்யப்படலாம். நிலைமையின் நெருக்கடியைச் சமாளிப்பதற்குக் கண்டிப்பான தேவைக்குமட்டுமே மதிப்புக்குறைக்கப் படலாம் (உறு: 4ஐசீசீஆர்பி).
நாட்டின் பாதுகாப்பு நலன்கள் கருதிச் சில சந்தர்ப்பங்களில் ஆட்களைத் தடுப்புக்காவலில்
வைத்திருக்கவேண்டிய அவசியமேற்படுகின்றது. இதை சட்ட ஏற்பாடுகள் மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றன. அப்படியான தேவைக்கும் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை
பேணப்படுதலுக்கும் இடையில்உள்ள வேறுபாட்டை மனதில் கொள்ள அவர்கள் இப்படியான
சந்தர்ப்பங்களில் விழைகின்றார்கள்,
(இ) தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கான நிபந்தனைகள்
ஆளொருவர் கைது செய்யப்படும்போது கைது செய்யப்படுவதற்கான காரணத்தையும், குற்றச்சாட்டுகள் எவையேனுமிருப்பின் அக்குற்றச்சாட்டுகளையும் உடனடியாக அவருக்குத் தெரியப்படுத்தல் வேண்டுமென்பதை ஐசீசீஆர்பி 9ஆம் உறுப்புரை தேவைப்படுத்துகின்றது. தடுப்புக்காவலில் உள்ளவர் உடனடியாக நீதி உத்தியோகத்தர் முன்னிலையில் கொணரப்படல் வேண்டுமென்பதுடன் நியாயமான காலத்துள் நீதிமள்ற விசாரணைக்கு அல்லது விடுதலை செய்யப்படுவதற்கு அவர் உரித்துடையவர் எள்பதையும் அது மேலும் தேவைப்படுத்துகின்றது. சட்டவிரோதமாகக் கைதுசெய்யப்படுவதற்கு அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கு

25
எவராவது ஆளாகியிருப்பாராயின் நடைமுறைப்படுத்தக்கூடிய இழப்பீட்டு உரிமையைக் கொண்டிருப்பார் எனவும் உறுப்புரையில் மேலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமது சுதந்திரத்தை இழந்த சகல ஆட்களும் மனிதாபிமானத்துடன், மனிதனுடன் ஒன்றிணைந்த உயர்நிலைக்குள்ள மதிப்புடனும் நடாத்தப்படுதல் வேண்டுமென ஐசீசீஆர்பி 10 ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பாதுகாப்புக்கள், நாட்டு மக்களின் வாழ்க்கையை அச்சுறுத்தும் அவசரகால சூழ்நிலைகளில் காலத்துக்கு காலம் குறைக்கப்படலாம். ஆனால், நிலைமையின் அவசரகாலத்தால் தேவைக்கேற்பக் கண்டிப்பான அளவுக்கு மட்டுமே குறைக்கப்படலாம். (உறு: 4ஐசீசீஆர்பி)
(ஈ) சித்திரவதையிலிருந்து விடுதலை
சித்திரவதை விசேடமாகப் பாரதூரமான மனித உரிமைகள் மீறல் சர்வதேசச் சட்டத்தினால் கண்டிக்கப்படுகின்றது. “ எவரும், சித்திரவதைக்கு அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற, மதிப்புக்குறைவாக நடாத்தப்படுதலுக்கு அல்லது தண்டனைக்கு ஆளாகலாகாது” என ஐசீசீஆர்பி 7 ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வுரிமையானது எவ்விதமான சூழ்நிலைகளிலும் மதிப்புக் குறைக்கப்படலாகாது (உறு:4)
சித்திரவதை, ஏனைய கொடூரமாக, மனிதாபிமானமற்ற அல்லது தரக்குறைவாக நடாத்தப்படுதல் அல்லது தண்டிக்கப்படுதலுக்கு எதிரான ஐநா உடன்படிக்கையில் இலங்கை 1994தை 3 ஆம் தேதி கைச்சாத்திட்டது. (1984 மார்கழி 10 ஆம் நாள் பொதுச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு, 1987 ஆணி 26 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது). இப்படியான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமை வரவேற்கத் தக்கது. தமது நியாயாதிக்கத்தின் கீழுள்ள எந்தவொரு எல்லைப்பரப்பினுள்ளும் சித்திரவதைச் செயல்களைத் தடுப்பதற்கு சக்திவாய்ந்த சட்டவாக்க, நிர்வாக, நீதி அல்லது பிற நடவடிக்கைகளை இவ்வுடன்படிக்கையின் அங்கத்துவ அரசாங்கங்கள் மேற்கோள்ளல் வேண்டுமென்பதை இவ்வுடன்படிக்கை தேவைப்படுத்துகின்றது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் ாதுவாகவிருந்தாலும், யுத்தகாலமாக இருந்தாலும் சரி, உள்நாட்டில் அரசியல் கொந்தளிப்பாக இருந்தாலும் சரி அல்லது அவசரகால நிலையாக இருந்தாலும் சரி சித்திரவதையை நியாயப்படுத்துவதற்கொன்றாக மேற்கொள்ளலாகாது. மேலிடத்து உத்தரவு என்ற காரணம் காட்டிச் சித்திரவதையை நியாயப்படுத்தல் ஆகாது என்பதையும் இவ்வுடன்படிக்கை எடுத்துக்கூறுகின்றது.
இவ்வுடன்படிக்கையின் கீழ் அமைக்கப்பட்ட குழுவுக்கு இணங்கியொழுகாமைபற்றிய முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கத்தின் நியாயாதிக்கத்துக்கு அமைவாக, (உறு: 2) ஏனைய அரச சார்பினரையும், தனிப்பட்டவர்களையும் (உறு. 2) அனுமதிக்கக்கூடிய முறையில் 21, 22ஆம் உறுப்புரைகளின் கீழான மேலதிகப் பிரகடனங்களை இலங்கை அரசு இதுவரை செய்யவில்லை. இந்த நடவடிக்கை முறைகள் வலியுறுத்தி நடைமுறைப்படுத்தும் சர்வதேச இயந்திரத்தின் முக்கிய உறுப்புக்களாக அமைகின்றன. இப்பிரகடனங்களைச் செய்வதன் மூலம், உடன்படிக்கையின் ஏற்பாடுகளைத் தீவிரமாக அமுல்படுத்துவதில் தனது

Page 18
26
பொறுப்பைக் காட்டும்படி அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படுகின்றது.
சட்டத்தை அமுல்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கான ஒழுக்கக் கோவை “கட்டாயமாகத் தேவையேற்படும் போது தமது கடமையை நிறைவேற்றுவதற்குத் தேவையான அளவுக்கும் மட்டுமே” உடல்வலுவைப் பிரயோகித்தல் வேண்டும் என்பதையும் எதிர்ப்புத் தெரிவுக்கும் பட்சத்தில் மட்டுமே சுடுகலன்களைப் பயன்படுத்தல் வேண்டுமென்பதை அனுமதிக்கின்றது. (உறு; 3).
(உ) தலைமறைவுகள்
குடியியல் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையினால் பேணப்பட்ட எத்தனையோ உரிமைகளைக் கட்டாயத்தின் மீது தலைமறைவாகும் செயல் மீறுகின்றது. சகல மனிதர்களையும் பலாத்காரமாகத் தலைமறைவாவதிலிருந்து பாதுகாப்பதற்கான பிரகடனத்தின் மீதான 1 (2) ஆம் உறுப்புரையில் கீழ்க்கண்டவாறு வரையப்பட்டுள்ளது (ஐ.நா. பொதுச் சபையினால் 1992 மார்கழி மேற்கொள்ளப்பட்டது (யுஎன்ஜிஏ தீர்மானம்43/ 33)
சட்டத்தின் பாதுகாப்புக்குப்புறம்பாகவே கட்டாயத்தின் பேரில் தலைமறைவு ஆளொருவரை வைத்திருக்கின்றது. இதனால் அவரும் அவருடைய குடும்பத்தினரும் பாரதூரமான துன்பங்களுக்கு ஆளாகின்றார்கள். பிறவிடயங்களுள் சட்டத்தின் முன் மனிதனை மனிதனாக மதிக்கும் உரிமை, சுதந்திரத்துக்கான உரிமை, மனிதனின் பாதுகாப்பு சித்திரவதைக்கு அல்லது கொடூரமாக நடாத்தப்படுதலுக்கு ஆளாகாமல் இருக்கும் உரிமை, மனிதாபிமானமற்ற அல்லது தரங் கெட்டமுறையில் நடாத்தப்படுதல் அல்லது தண்டனை போன்றவற்றுக்கு ஆளாகாமல் இருப்பதற்கான உரிமை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் சர்வதேசச் சட்டங்களின் விதிகளை மீறுவதாக இது அமைகின்றது. வாழ்வதற்கான உரிமைக்கு அது பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றது அல்லது உரிமையை மீறுகின்றது. சூழ்நிலைகள் எதுவாயினும் சரி போரின் அச்சுறுத்தலாகட்டும், உள்நாட்டு அரசியல்கொந்தளிப்பாகட்டும், அல்லது பிற அரச அவசரகால நிலையாகட்டும், கட்டாயத் தலைமறைவுகளை நியாயப்படுத்துவதற்கான காரணங்களாகக் காட்டலாகாதெனப் பிரகடனத்தின் 7ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐசீசீபீஆர் கீழே தரப்பட்டுள்ள ஆகக்குறைந்தபட்ச உத்தரவாதங்களைத் தேவைப்படுத்துகின்றது.
தடுப்புக்காவலில் உள்ளவர்களை உடனடியாகத் தெரியப்படுத்தல் வேண்டும். அவர்களுக்கெதிரான குற்றச்சாட்டுக்களின் தன்மையை அவர்கள் புரிந்து கொள்ளக்கூடியதான மொழியில் தெரியப்படுத்தல் வேண்டும்.மட்டும்மிஞ்சிய தாமதமின்றி நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படல் வேண்டும். வழக்கறிஞருடன் தொடர்பு கொண்டு அவளின் சேவையைப் பெறுவதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படல் வேண்டும். எதிர்தரப்பு வாதத்தைத் தயார்ப்படுத்தக் கால அவகாசமும் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யச்

27
சந்தர்ப்பமும் வழங்கப்படல் வேண்டும் (உறு. 14(3) ).
(ஊ) நியாயமான நீதி விசாரணைக்கான உரிமை
“சட்டத்தினால் நிறுவப்பட்ட, தகுதிவாய்ந்த சுதந்திரமான, பட்சபாதமற்ற நீதிமன்றமொன்றினால் பகிரங்கமானதும் நியாயமானதுமான விசாரணைக்கு ஒவ்வொருவரும் உரித்துடையவர்” என குடியியல் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் 14 ஆம் உறுப்புரை தேவைப்படுத்துகின்றதுடன் சட்டத்தின் பிரகாரம் குற்றவாளியாக நிரூபிக்கப்படும் வரையில் ஒவ்வொருவரும் நிரபராதியாகவே கருதப்படுவர் எனவும் குடியியல் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் 14 ஆம் உறுப்புரை தேவைப்படுத்துகின்றது.
தேசிய அவசரகால நிலைமைகளில் மேற்படி உறுப்புரையிலிருந்து விலகிச் செல்வதை ஐசீசீபீஆர் உறுப்புரை 4 அனுமதிக்கின்றது. எனினும் ஏனைய சட்டங்களை முற்றுமுழுதாகக் கடைப்பிடிக்காமலிருப்பதுடன் இவையும் நிலைமையின் நெருக்கடியினால் கண்டிப்பாகத் தேவைப்படுத்தப்பட்ட அளவுக்கே இருத்தலும் வேண்டும்.
"செயல் அல்லது தவறு ஒன்று புரியப்பட்ட காலத்தில் அவை குற்றமாகக் கருதப்படாமல் இருக்குமேயானால், அக்குற்றங்களுக்காக எந்த ஒரு ஆளும் குற்றவாளியாகக் கருதப்படமாட்டார்” என ஐசீசீபிஆர் (உறு 15) கூறுகின்றது. இச்சட்ட ஏற்பாட்டிலிருந்து எவ்வித மதிப்புக்குறைத்தலும் செய்யலாகாது.
(1) மனித உரிமைகளைப் பேணுவதற்கான பொருத்தமான
இலங்கைத் தேசிய சட்டம்.
1978 ஆம் ஆண்டின் இலங்கை அரசியல் அமைப்பின் பொருத்தமான உறுப்புரைகளுடன் பொருத்தமான பிற தேசிய சட்டவாக்கங்கள் இப்பிரிவில் பரிசீலனைக்காக முக்கியமாகக் கவனம் செலுத்தப்படுகின்றது.
அடிப்படை உரிமைகள் அரகிலமைப்பின் கீழ் பேணப்படுகின்ற போதிலும் அரசியலமைப்பின் சில சட்ட ஏற்பாடுகள் ஐசீசீபி ஆர் அமைப்பின் கீழான இலங்கையின் கடப்பாடுகளைத் திருப்தி செய்யவில்லை. உதாரணமாக தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள், அவை அடிப்படை உரிமைகளுக்கு முரணாக இருப்பினும்கூட அமுலில் இருக்கும் எனக் கூறும் அரசியல் அமைப்பின் 16(1) ஆம் சட்ட ஏற்பாடு ஐசீசீபிஆர் உறுப்புரை உடன் ஒவ்வாததாக இருக்கின்றது.
(அ) வாழ்வதற்கான உரிமை
சில குழ்நிலைகளில் மரண தண்டனை இலங்கையில் சட்டப்படி நிறைவேற்றப்பட

Page 19
28
வேண்டியதொன்றாகும். எனினும் 1970 ஆம் ஆண்டின் பின்னர் சட்டப்படியான மரணதண்டனைகள் எதுவும் இலங்கையில் விதிக்கப்படவில்லை. மக்கள் உயிர்வாழ்வதற்கு உரிமையுடையவர்கள் என்னும் பொருள்பட இலங்கை அரசியல் யாப்பில் வெளிப்படையான பிரகடனமொன்று உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. எனினும் அரசியல் அமைப்புபாதுகாப்பை வழங்குகின்றது. “சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கை முறைக்கு இணங்க, தகுதி வாய்ந்த நீதிமன்றத்தினால் ஆக்கப்படும் கட்டளையின் மூலமாகவன்றி ஆள் எவரும் மரணதண்டனையினால் தண்டிக்கப்படலாகாது” என 13 (4) ஆம் உறுப்புரை குறிப்பிட்டுக் கூறுகின்றது.
சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கை முறை எப்படியிருப்பினும் அவசரகால ஒழுங்குவிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. குற்றவியல் நடவடிக்கைச் சட்டக்கோவையிலுள்ள காப்புவிதிகள் சிலவற்றை இவ்வவசரகால ஒழுங்குவிதிகள் புறக்கணிக்கின்றன (நியாயமான வழக்குவிசாரணை, கைதுசெய்தல், தடுத்துவைத்தல் மீதான பிரிவுகளைப் பார்க்கவும்).
(ஆ) கண்டபடி கைது செய்யப்படுதல் தடுத்து வைத்தல்
என்பவற்றிலிருந்து விடுதலை
சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடைமுறையின்படியன்றிஎந்த ஒரு ஆளும் தனது சுதந்திரத்தை இழத்தல் ஆகாது என 13 (1) ஆம் உறுப்புரை எடுத்துக்கூறுகின்றது. அப்படிக் கைது செய்யப்படுபவருக்குக் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணத்தைத் தெரிந்து கொள்வதற்கு உரிமையுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. 13 (5) ஆம் உறுப்புரை குற்றமின்மையின் இயல்புநிலையையும் 13 (6) முற்பட்ட தேதியிலிருந்து தண்டனை வழங்குவதற்காகச் சட்டமாக்கப்படுவதையும் தவிர்க்கின்றன. தகுதிவர்ய்ந்த நீதிமன்றத்தில் நியாயமான நீதிவிசாரணையில் குற்றமொன்றிற்காகக் குற்றம்சாட்டப்பட்ட ஆளொருவருக்கு அவரின் நிலைமையை எடுத்துக்கூறுவதற்கு அல்லது சட்டத்தரணி அவர் சார்பில் எடுத்துக்கூறுவதந்கு அருகதையுள்ளவர் என 13(3) ஆம் உறுப்புரை உரிமை வழங்குகின்றது. 13 (2) ஆம் உறுப்புரையின்படி தடுத்துவைக்கப்பட்டுள்ள சகல ஆட்களும் அண்மையிலுள்ள தகுதிவாய்ந்த நீதிமன்றின் நீதிபதியின் முன்னிலையில் கொண்டுவரப்படுதல் வேண்டுமென்பதையும் நீதிபதியின் கட்டளையின் பிரகாரமின்றி தொடர்ந்தும் தடுத்துவைக்கப்படுதல் ஆக்ாதெனவும் தேவைப்படுத்துகின்றது. (காலவரைபற்றிக் குறிப்பிடப்படாவிடினும்)
குற்றமொன்று புரிந்துள்ளாரென்ற சந்தேகத்தின் மீது பிடியாணையின்றிக் கைது செய்யப்படும் ஆளொருவர் இலங்கையின் பொதுக் குற்றவியல் சட்டத்தின் தேவைகளின் கீழ் அநாவசியமான காலதாமதமின்றி மஜிஸ்ரேட் முன்னிலையில் கீொண்டுவரப்படல் வேண்டும். அப்படிக் கைது செய்யப்படுபவர் நியாயமான சூழ்நிலைகளின் கீழல்லாது நீண்டகாலத்துக்குப் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்படுதலாகாதென்பதுடன், அப்படியான காலப்பகுதி கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து மஜிஸ்ரேட் முன்னிலையில் கொண்டுவரப்படுவதற்குப் பிரயாணம் செய்வதற்குத் தேவையான நேரம் நீங்கலாக 24 மணித்தியாலங்களை விஞ்சுதலுமாகாது. கைது செய்யப்படும் ஆளொருவருக்கு அவர்

29
(குற்றவியல் நடவடிக்கைச் சட்டக்கோவை பிரிவுகள் 36,37) கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரியப்படுத்தப்படல் வேண்டுமென்பதை குற்றவியல் நடவடிக்கைச் சட்டக் கோவையின் 23 (1) ஆம் பிரிவு தேவைப்படுத்துகின்றது.
தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொதுச் சுகாதாரம் அல்லது ஒழுக்கம் என்பனவற்றின் நலன் கருதி, சட்டத்தினால் குறித்துரைக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு, கண்டபடி கைது செய்யப்படுவதிலிருந்தும் தடுத்து வைக்கப்படுவதிலிருந்துமான சுதந்திரம் 15 ஆம் (7) உறுப்புரைக்கு உட்படுத்தப்பட்டதாகும். தேசிய பாதுகாப்பின் நலன்களுக்காக குற்றமின்மை பற்றி முன்கூட்டியே முடிவுசெய்தல், முந்திய தேதியிலிருந்து சட்டவாக்கத் தடை என்பன, 15 (1) ஆம் உறுப்புரையினால் கட்டுப்பாடுகளுக்கு அமைவதற்கான விதிமுறை செயப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தடைச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற முறை, தொடர்ந்தும் அமுலிலுள்ள அவசரகால நிலையின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் இரண்டினதும் சட்ட ஏற்பாடுகள் கண்டபடி கைது செய்தல், தடுத்துவைத்தல் ஆகியவற்றிலிருந்து விடுதலைபெறுவதற்கான உரிமை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சட்ட ஏற்பாடுகள் பின்வரும் பிரிவில் மேலும் விளக்கப்பட்டுள்ளன.
(இ) தடுத்து வைப்பதற்கான நிபந்தனைகள்
விரிவான சட்டத்தொகுதிகளும் விதிகளும் இலங்கைச் சிறைச்சாலைகள் செயல்படுவதை சிறைச்சாலைக் சட்டம், சிறைச்சாலை விதிகள் நெறிப்படுத்துவதுடன், அங்கு தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களின் பாதுகாப்புக் காப்பையும் வழங்குகின்றன.
சாதாரண கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் சிவிலியன் சிறைச்சாலைகள் நீங்கலாகப் பிறஇடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை நடாத்துவதற்கான ஆகக் குறைந்தபட்சத் தரங்களை விதிக்கத்தவறியமை இலங்கையின் சட்டவாக்கங்களிலுள்ள பாரதூரமான தவறாகும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழும் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் நிலையங்களில் அல்லது இராணுவ முகாம்களில் அல்லது பிற ஒழுங்கற்ற இடங்களில் அவர்களை விசாரணை செய்பவர்களால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
(ஈ) சித்திரவதையிலிருந்து விடுதலை
"எந்தவொரு ஆளும் சித்திரவதைக்கு அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்றதரங்கெட்ட நடத்தைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படல் ஆகாது" என இலங்கை அரசின் யாப்பின் 1ஆவது உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒப்புதல் வாக்குமூலமொன்றைப் பெறுவதற்காக, தெரிந்து வேண்டுமென்றே உாறு விளைவித்தல், சொத்துக்களை மீளக்கையளிக்கும்படி கட்டாயப்படுத்தல் என்பனவற்றைப்பற்றிஇலங்கை தண்டனைக் கோவையின் 321ஆம் பிரிவுவிளக்குகின்றது. அப்படியான செயல்களைப் புரிபவர்கள் 7 ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடிய மறியற்றண்டனைக்கும் அத்துடன் குற்றப்பணம் செலுத்துவதற்கும் ஆளாவார் எனவும் அப்பிரிவில் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

Page 20
30
(உ) தலைமறைவுகள்
தலைமறைவுகள் இன்றி இருப்பதற்கான உரிமையை எடுத்துரைக்கும் எவ்வித குறிப்பான சட்ட ஏற்பாடும் இலங்கைக் சட்டத்தில் உள்ளடக்கப்படாமை வியப்புக்குரிய தொன்றல்ல. ஆயினும் சித்திரவதை, கண்டபடி கைது செய்யப்படல் அத்துடன் தடுப்புக்காவலில் வைத்திருத்தல் போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளல், நீதிமன்ற நியாயமான வழக்கு விசாரணைக்கான உரிமையை நெறிப்படுத்தும் விதிகள், சிறைச்சாலைகளை இயங்கச் செய்வதை நெறிப்படுத்துவதற்காக வகுக்கப்பட்ட விதிகள், சிறைக்கைதிகளின் பாதுகாப்பை நெறிப்படுத்துவதற்கான விதிகள் போன்ற சகல விதிகளும் இங்கே ஏற்புடையனவாகும்.
தலைமறைவுகள் நிகழும் நாடுகளின் அரசுகளினால், எம்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்பதற்கு கட்டாயத்தின் பேரில் தலைமறைவாவதிலிருந்து சகலமக்களையும் பாதுகாத்தல் மீதான பிரகடனமும் விசேட சட்ட, தன்னிச்சை கேள்விமுறையற்ற மரணதண்டனைகளை விசாரணை செய்தலும் ஏற்புடையன. (அண்மைக் காலத்தில் எந்தவொரு பொதுநல அமைப்பு நாட்டிலும் ஏற்படாத பெருமளவு தலைமறைவுகள் இலங்கையில் ஏற்பட்டன. கட்டாயத்தின் மீது தலைமறைவானவர்கள் மீதான ஐ.நா. செயற்குழுவின் பரிசீலனைக்காக 1991 ஆம் ஆண்டில் மட்டும் 3,841 புதிய சம்பவங்கள் கிடைத்துள்ளன). தலைமறைவுகளுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் கொண்டுவருவதற்காக இந்த நாடுகளில் போராடும் வழக்கறிஞர்களும், நீதி கோருபவர்களும் இம்சைக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். இப்பிரச்சனைகளை இலங்கை அனுபவரீதியாகத் தெரிந்துகொண்டமையினால், மேற்கொள்ளப்படுவதற்குப் பொருத்தமான வழிகாட்டிகளுக்காகவும், தற்போதைய தேசிய சட்ட ஏற்பாடுகளை அளவிடக்கூடிய அளவுகோலொன்றாகவும் பயன்படுத்தக்கூடியதற்காகவும் அரசினால் இவ்விரு ஐ.நா. தீர்மானங்களும் பயனுறும் வகையில் கருத்தில் எடுத்துக் கொள்ள இயலுமானதாகும். இது செயப்பட்டதும், அவசரகால சட்டத்தின் பயன் இலங்கை அரசு சர்வதேச தேவைப்பாடுகளை மீறக்கூடியளவுக்கு இருப்பதைக் காணலாம்.
(ஊ) நியாயமான நீதிமன்ற விசாரணைக்கான உரிமை
தகுதிவாய்ந்த நீதிமன்றமொன்றினால் செய்யப்படும் நியாயமான விசாரணையில் குற்றமொன்றிற்காகக் குற்றம் சாட்டப்பட்ட எவரும் தமது சார்பில் வாதாடுவதற்கும் அல்லது அவர்சார்பில் வழக்கறிஞர் வாதாடுவதற்கும் உரிமையுள்ளவர், என அரசியல் யாப்பின் 13 (3) ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்டது போன்று 13 (5) ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாவது "குற்றவாளியாக நிரூபிக்கப்படும்வரையில் ஒவ்வொருவரும் நிரபராதியாகவே கருதப்படுதல் வேண்டும்" இருப்பினும் சில ஆதாரங்களை நிரூபிக்கும்பாரத்தைப்பிரதிவாதிமீதே சுமத்தும் பொறுப்பை அதே உறுப்புரை அனுமதிக்கின்றது. சாட்சியங்கள் கட்டளைச் சட்டம் (திருத்தப்பட்டவாறான 1895 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்கச் சட்டம்) மஜிஸ்ரேட் முன்னிலையில் கொடுக்கப்படாத வாக்குமூலம் தவிர, பொலிஸ் காவலிலுள்ள போது கொடுக்கப்பட்ட எந்தவொருவாக்குமூலமும் சாட்சியத்தில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாதென

31
எடுத்துரைக்கின்றது.
அரசியல் யாப்பினாலும் பொதுவான குற்றவியல் சட்டத்தினாலும் வழங்கப்பட்ட பாதுகாப்புக்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளும் அவசரகால ஒழுங்கு விதிகளும் குறைத்துவிடுகின்றன.
நீதிமன்ற நடவடிக்கைகளுடன் நேரடித்தொடர்பற்ற ஆட்களை நீக்கிவிடுவதற்கு நீதிபதி தமது தற்றுணியைப் பிரயோகிக்கலாம் போன்ற சில விதிவிலக்குகளுடன், ஒவ்வொரு நீதிமன்றின் அமர்வுகளும் பகிரங்கமாகவேநடைபெறும் என்பதுடன் எல்லோரும் அப்படியான அமர்வுகளுக்குச் சுதந்திரமாகச் சமூகமளிப்பதற்கு அரசியல் யாப்பின் 106 (1) ஆம் உறுப்புரையில் சட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
(i) இலங்கையின் நிலைபற்றி மேலேழுந்தவாரியான
கண்ணோட்டம்.
அ) அறிமுகம்
சர்வதேச சட்டங்களின் ஏற்புடைய தரங்களின் இச் சுருக்கமான விபரங்கள், அரசியல் அமைப்பு, இலங்கையின் சாதாரண குற்றவியல் சட்டம் என்பனவற்றிலிருந்து, எந்தவொரு மனிதனும் கண்டபடி கைது செய்யப்படலாகாது; குற்றவாளிக்குத் தெளிவாகத் தெரியப்படுத்தப்பட்ட குற்றத்தின் மீது நியாயமான பகிரங்க விசாரணைக்காக நீதிமன்றின் முன்னிலையில் துரிதமாகக் கொண்டுவரும் நோக்கத்துக்காக அன்றி எந்த ஒரு மனிதனையும் தடுப்புக்காவலில் வைத்திருத்தல் ஆகாது என்பன மனிதனொருவனின் சுதந்திரத்துக்கான உரிமையினதும், பாதுகாப்பினதும் பிரதான அம்சங்களாகும் என்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றன. தடுப்புக் காவலில் உள்ள காலத்தில் கைதி மனிதாபிமானத்துடனும் மனிதனுடன் உடன்பிறந்த கெளரவத்துக்கு மதிப்புடனும் நடாத்தப்படுவதற்கு உரித்துடையவராவர்.
இலங்கை உட்பட அநேக நாடுகள், மக்கள் தமது சுதந்திரத்தை இழப்பதற்கும், தடுப்புக்காவலில் வைத்திருக்கும் காலத்தில் அவர்களுடைய கவனிப்புக்குச் சீரான பாதுகாப்புக்கள் இன்றி நீண்டகாலத்துக்கு அவர்களைத் தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கும், அவர்களுக்கெதிராக எவ்விதக் குற்றச்சாட்டையும் சுமத்தாமல் இதைச் செய்வதற்கும் ஏற்றவகையில் அதிகாரிகளுக்கு அதிகாரங்களை வழக்கும் சட்டவாக்கங்களை இயற்றியுள்ளன. இது கவலைக்குரியதொன்றாகும். வழக்கு நடவடிக்கைகள் ஆரம்பமாகும் போது வழக்குகள் நியாயமற்றமுறையில் இருக்கக்கூடியதற்கான சட்டவாக்கங்கள் உள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஐசீசீபீ ஆர் இன் கீழ் பேணப்பட்ட உரிமைகளைப் பாதிக்கக்கூடியபாரதூரமான குறைபாடுகள் பயங்கரவாதத்தடைச்சட்டம் போன்ற நிரந்தரச் சட்டவாக்கத்திலும், 1989 ஆனி 20 ஆம் தேதி பிரகடனப்படுத்தப்பட்ட தற்போதைய அவசரகால நிலையின் கீழ் ஆக்கப்பட்ட அவசரகால ஒழுங்குவிதிகளிலும்

Page 21
32
உள்ளடக்கப்பட்டுள்ளன. இப்படியான குறைபாடுகளை நிரந்தரச் சட்டங்களில் உள்ளடக்கி சட்டமியற்றுவது ஐ சீசீபீஆர் தேவைப்பாடுகளுக்கு முரணானதாகும். 4 ஆம் உறுப்புரை உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலையின் போது மட்டுமே, மேற்படி உரிமைகளின் மதிப்புக்குறைவை அனுமதிக்கின்றது. ஆகவே நியாயப்படுத்தக்கூடியதும் ஒழுங்கானமுறையில் பிரகனடப்படுத்தக்கூடியதுமான அவசரகால நிலை அமுலில் உள்ளதைக் கருத்தில் கொள்ளாது ஐசீசீபீஆர் இனால் பேணப்பட்ட உரிமைகளைப் பறிக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்ற சட்டங்களின் சட்ட ஏற்பாடுகள், சர்வதேசச் சட்டங்களின் கீழ் இலங்கை அரசின் கடப்பாடுகளை மீறுவதாகவுள்ளன.
அவசரகால ஒழங்கு விதிகளுக்குக் கவனம் செலுத்தும்போது, அவசரகால நிலை பிரகடனப்படுத்தல், அதன்கீழ் ஒழுங்குவிதிகளை வெளியிடல் என்பன இலங்கையின் சட்டநடைமுறையின் தேவைகளுக்கும், அரசியல் அமைப்பின் 155ஆம் உறுப்புரைக்கும் எற்றவிதத்தில் செய்யப்பட்டுள்ளதைக் காணலாம். (பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 5) (1947ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்கச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது). தேசிய சர்வதேசச் சட்டத்தினால் தேவைப்படுத்தப்பட்டவாறே இவை பிரகடனப்படுத்தப்பட்டன. இருந்த போதிலும் நாட்டின் குறைந்தபட்சம் சிலபகுதிகளில் அவசரகாலநிலை நீடித்திருப்பதற்கான காரணங்கள் கேள்விக்குரியவனவாகும்.
" நாட்டின் எதிர்காலத்தை அச்சுறுத்தக் கூடிய பகிரங்க அவசரகால நிலையின் போது” மட்டுமே மேற்படி நடவடிக்கையை ஐசீசீபீ ஆரின் 4 ஆம் உறுப்புரை அனுமதிக்கின்றது. ஆகவே நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத இடங்களில் அவசரகால நிலையை நீடிப்பது நியாயப்படுத்தக்கூடியது ஒன்றல்ல.
அப்படியான அவசரகால நிலைமை ஏற்பட்டிருந்தாலும் கூட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைமுறைகள், நிலைமையின் அவசரதேவையைச் சமாளிப்பதற்கு உண்மையில் தேவைப்படுதலிலும் பார்க்க கூடுதலாக இருத்தல் ஆகாது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சட்டஏற்பாடுகளும் அவசரகால ஒழுங்குவிதிகளும் அளவுக்கதிகமான நோக்கெல்லைகளை உடையவை என்பதால் இத்தேவைப்பாட்டுக்கு எதிராகத் தவறிழைக்கின்றன.
இருந்தும், தற்போது இச்சட்ட ஏற்பாடுகள், நிறைவேற்று அதிகாரங்களை தனிப்பட்டவர்களினதும் சபைகளினதும் உரிமைகளை அல்லது உரிமைகளில் சிலவற்றைப் பிரயோகிப்பதற்கான சாதாரண சூழ்நிலையை வழங்குவதற்காக அமைந்துள்ளன.
தடுப்புக்காவலிலுள்ளவர்கள் தலைமறைவாகக் கூடியதும் அல்லது அவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்பதும் குறைந்துவருதல், சர்வதேசச் சட்டங்களினால் அரசியல் அமைப்பாலும் இலங்கையின் பொதுவான சட்டத்தாலும் தேவைப்படுத்தப்பட்டவாறு பாதுகாப்புக்கள் எவ்வளவுக்கு உள்ளன என்பது நேரடியான விகிதாசாரத்திலேயே தங்கியுள்ளதுடன் இவை வேறு சட்ட ஏற்பாடுகளினால் குறைக்கப்பட்டுள்ளன.

33
1991ஆம் ஆண்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நாடுகள் மீது ஐ.நா. விசேட தொடர்பதிகாரியினால் வரையப்பட்ட அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நாடுகளின் சட்டவாக்க அபிவிருத்திக்கான வழிகாட்டல்களில் விகிதாசாரத்தன்மையின் கோட்பாடுகள் பற்றிப் பெறுமதிமிக்க உதவி காணக் கூடியதாக இருக்கின்றது. இவ்வாவணத்தின் துணைகொண்டு நோக்குமிடத்து அரசு தனது அவசரகால சட்டவாக்கம்பற்றி மீண்டும் சிந்தித்துப்பார்த்தல் வேண்டுமெனக் கட்டாயப்படுத்தப்படுகின்றது.
(ஆ) கைது செய்தலும் தடுப்புக்காவலும்
கைது செய்யப்படுதல், தடுப்புக்காவலில் வைக்கப்படுதல் தொடர்பாக நிலைமையை நோக்குமிடத்து, அவசரகால நிலையின் கீழும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 1993 ஆம் ஆண்டில் பெருமளவில் குறைந்துள்ளது என்பதை அறிக்கையிடுவதில் மகிழ்ச்சியுண்டாகின்றது.
இறுதியில் தடுப்புக்காவலில் இருந்த சுமார் 5000 பேருடன் 1992ஆம் ஆண்டு ஒப்பிடுகையில் 1993 ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் 2000 பேர் அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என கருதக்கூடியதாக இருக்கின்றது.
ஜே.வி.பி யுடன் தொடர்புடையவர்களெனச் சந்தேகத்தின் மீது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களில் பலர் ஒன்றில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள், சட்டத்தை மீறுகின்ற குற்றச் செயலுக்காகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்கள் அல்லத விடுதலை செய்வதற்குத் முன்னோடியாகப் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
தடுப்புக்காவலில் உள்ளவர்களின் நிலைமைபற்றிப் பரிசீலனை செய்யும் குழுவின் தலைவர் நீதியரசர் ஐயலத், (செயல் முறைக்கு உட்படுத்துதல், வகைப்படுத்தல், புனர்வாழ்வுக்கும் விடுதலைக்கும் சந்தேகப்பேர்வளிகளை சரணடைந்தோரை விதப்புரை செய்தல் என்பனவற்றின் மீதான குழு) 2123 பேர் மட்டுமே தடுப்புக்காவலில் தொடர்ந்தும் வைக்கப்பட்டிருந்தார்கள் என அறிக்கையிட்டது ( புரட் 1993 நிலைமை அறிக்கை தகவல்) மனித உரிமைகள் செயலணி புள்ளிவிபரங்களின்படி அதன் கடைசி வருடாந்த அறிக்கையின்படி (ஆவணி 1993) புனர்வாழ்வு மற்றும் தடுப்புமுகாம்களின் 1545 பேர் அவசரகால சட்டங்களின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகக் கூறுகின்றது. 1994தை 20 ஆம் தேதிக்கான மனித உரிமைகள் செயலணிப்புள்ளிவிபரங்களின்படி பூசா தடுப்புமுகாம், மகஜின் சிறைச்சாலை களுத்துறை சிறைச்சாலை, மகர சிறைச்சாலை, வெலிகடை சிறைச்சாலைகளில் 1054 தடுப்புக்கைதிகளைப் பதிவு செய்துள்ளது.
எண்ணிக்கையில் ஊக்கமளிக்கக்கூடிய அளவுக்கு வீழ்ச்சியடைந்தபோதிலும், 1993 ஆம் ஆண்டில் தொடர்ந்தும் பலர் கண்டபடி கைது செய்யப்பட்டுள்ளார்கள். சிலர் சட்டத்தரணிகளையோ உறவினர்களையே அணுகமுடியாதபடி வெளித் தொடர்பின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

Page 22
34
பல சந்தர்ப்பங்களில் தடுப்புக்காவலில் உள்ளவர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள், சிலர் காவலிலிருக்கும் போதே கொல்லப்பட்டார்கள். 1992 ஆம் ஆண்டின் பிற்பகுதி தொடக்கம், நிரந்தர இராணுவ சேவையில்லாத தமிழர்கள், ஆயுதம் தரித்து, அரசினால் சம்பளம் வழங்கப்பட்டு கொழும்பில் தமது சொந்த தடுப்புமுகாம்களை நடத்தினார்கள் என அறிக்கைகள் கூறுகின்றன. இரகசிய தடுப்பு முகாம்களில், அரச பாதுகாக்கும் படையினர் தொடர்ந்தும் ஆட்களை வெளித் தொடர்பின்றி வைத்திருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.1993 ஆம் ஆண்டு ஆனி மாதம் பிரகடனம் செய்யப்பட்ட புதிய அவசரகால ஒழுங்கு விதிகள், இரகசிய தடுப்பு முகாம்களைச் சட்டவிரோதமாக்கியுள்ளன. இருப்பினும் தடுத்து வைத்திருப்பதற்கான சில இடங்கள் வர்த்தமானியில் தற்போது தேவைப்படுத்தப்பட்டவாறு வெளியிடப்படாமலே அது தொடர்கின்றது. த.ஈ.வி.பு ஆதரவாளர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் இலக்கமற்ற வாகனங்களில் தொடர்ந்தம் கடத்தப்பட்டு மறைமுகத் தடுப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அண்மையில் மனித உரிமைகள் செயலணியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட மறைமுகத்தடுப்பு முகாமொன்று கொனஹேனவிலுள்ள விசேட அதிரடிப்படையினரின் சுரங்க மறைமுகாமாகும்.
தெற்கில் தமிழர்களைக் கண்காணிப்பது பலப்படுத்தபட்டுள்ளது. 1993 வைகாசி தினத்தன்று ஜனாதிபதி பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, த.ஈ.வி.பு ஆதரவாளர்களைக் கண்டுபிடிப்பதற்காக வளைத்துக் தேடுதல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் விசேடமாகக் கொழும்பில் திரள்திரளாகக் கைது செய்யப்பட்டார்கள் . அரசாங்க அறிக்கைகளின்படி (சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகளையும் பாதுகாப்பையும் எடைபோடல் பெப்94 பக் 6) அவசரகால சட்டமாக்கலின் கீழ் 1993 ஆம் ஆண்டில் கொழும்பில் மட்டும் 15,000 க்கு அதிகமானோர் கைது செய்யப்பட்டார்கள். கிட்டத்தட்ட 3500 பேர் ஐப்பசி மாதத்தில் கைது செய்யப்பட்டர்கள். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள், அநேகமானவர்களுக்கெதிராகக் குறிப்பிடப்பட்ட சான்றுகள் எதுவுமில்லை. அவர்களுடைய பிறப்பு இனம்தான் ஒரே காரணம்,
பொதுவாக, அடையாளம் காணப்பட்டதும் தடுப்புக்காவலிலுள்ளவர்கள் ஓரிரு நாட்களுள் விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால், சரியான முறையில் பதிவுசெய்யப்பட்ட போதிலும் அநேக தமிழ் இளைஞர்கள் பலமுறைகளில் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டார்கள்.(அவசரகால நானாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) விடுதிகளின் சொந்தக்காரர் விடுதிகளின் தங்குபவர்களின் பட்டியலொன்றை நாளாந்தம் சமர்ப்பித்தல் வேண்டுமெனவும் வீடுகளின் சொந்தக்காரர் விருந்தினர் உட்பட, வீட்டிலுள்ள ஒவ்வொருவருடைய பெயர்களையும் உள்ளூர் பொலிஸ் நிலையத்தில்,பதிவு செய்தல் வேண்டுமெனவும் 23 ஆம் ஒழுங்கு விதி தேவைப்படுத்துகின்றது) சிலர் 2 மாதங்களுக்கு மேலாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதுடன் தடுப்புக் காவலிலிருக்கும்போது கொடுரமாக நடாத்தப்பட்டார்கள் எனவும் அறிக்கைகள் கூறுகின்றன. இதனால் தமிழ் சமூகத்தினரின் ஒரு பகுதியினரிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில சந்தர்பங்களில் இனந்தெரியாதவர்களினால், இலக்கத்தகடற்ற வாகனங்களில் இரவுநேரங்களில், கண்கள் கட்டப்பட்ட நிலையில் வீடுகளிலிருந்து கடத்தப்பட்டார்கள். மேலும் கொழும்பிலுள்ள பொலிஸ்

35
நிலையங்களில் அவர்கள் தமிழர்களுக்குப் புரியாத பொதுவாகச் சிங்கள மொழியில் கேள்விகள் கேட்கப்பட்டார்கள். அத்துடன் ஏதாவது ஆவணமும் பெரும்பாலும் சிங்களத்திலேயே இருந்தது (ம.உ, மனித உரிமைகளையும் பாதுகாப்பையும் எடைபோடல் பெப் 94 பக் 17) ஆவணம் எதுவும் இருந்தாலும் பெரும்பாலும் சிங்களத்திலேயே இருக்கின்றது.
வடக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் ( எல்ரிரிஈ) 2000 க்கும் அதிகமான கைதிகளைத் தடுத்துவைத்துள்ளார்களென உத்தியோகபூர்வமற்ற அறிக்கைகள் கூறுகின்றன.த.ஈ.வி.பு. ஐசீஆர்சி அமைப்புக்கோ அல்லது பிற மனித உரிமைகள் நிறுவனங்களுக்கோ தடுப்புக்காவலிலுள்ளவர்களை அணுக அனுமதி வழங்கவில்லை. அன்றியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் பற்றியோ அல்லது கைதிகளின் விதிபற்றியோ உறவினர்களுக்குத் தெரிவிப்பதும் இல்லை. நிதி திரட்டும் முயற்சியில் ஒர் அம்சமாக ஏராளமானோர்களைப் பணயக் கைதிகளாக த.ஈ.வி.பு வைத்திருப்பதாக நம்பப்படுகின்றது.
1990 ஆம் ஆண்டில் யுத்தக் கைதிகளாகப் பிடிபட்ட 30 பொலிஸ்காரரும், வெளிநாடுகளிள் வசதிகளுடன் வாழ்கின்றார்கள் என நம்பப்படுபவர்களின் உறவினர்களும், முஸ்லிம் வர்த்தகர்களும் இவர்களுள் அடங்குவர்.
1993 ஆனி மாதத்தில் அவசரகால ஒழுங்குவிதிகளுக்குத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது (நானாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) இவற்றில் வரவேற்கத்தக்க திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. பிறவிடயங்களுள் இவை இப்போது இரகசிய தடுப்புக்காவல்களைத் தடை செய்தன. தடுப்புக்காவல் இடங்கள் இருக்குமிடங்களும் முகவரிகளும் அறிவிக்கப்படல் வேண்டும். மனித உரிமைகள் செயலணிக்கு தடுப்புக்காவல் பற்றித் தெரிவித்தல் வேண்டும் கைது செய்யும் உத்தியோகத்தரினால் கைது செய்யப்படல் பற்றிப்பற்றுச்சீட்டு வழங்கப்படல் வேண்டும்) ஏனைய ஒழுங்குவிதிகள் நீதிவிசாரணையின்றி நீண்டகாலத்துக்கு தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கு அனுமதிவழங்குவதாலும் அரசாங்க சிறைச்சாலைகள் தவிர்ந்த வேறு இடங்களில் தடுத்து வைத்திருப்பதற்கு அதிகாரம் வழங்குவதாலும், அப்படியான இடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆகக்குறைந்தபட்சம் பாதுகாப்புக்களை வழங்கத் தவறுவதாலும் பாராட்டப்படுவதற்கு உகந்தவையல்ல. மேலும் திருத்தங்கள் சிக்கலாகவும் புரிந்து கொள்வதற்கச் சிரமமாக இருக்கின்றன. அத்துடன் இவற்றின் பொருளை மிக நுட்பமாகப் புரிந்து கொள்வது மிகவும் பொறுப்பான பணியாகும். இதனால்சட்ட நுணுக்கங்களில் பயிற்சியற்ற கைதி இத்திருத்தங்களைப் புரிந்து கொள்ளக்கூடிய சாத்தியம் இல்லை.
இவற்றின் சொல்வழு சிக்கல் காரணமாக இவ்வறிக்கையில் பின்னர் ஒரளவு விரிவாக இத்திருத்தம் விவாதிக்கப்பட்டுள்ளது.
1993 ஆணி மாதத்தில் தமிழ் அரசியல் தலைவர்களுடனான தனித்தனியாக இரு சந்திப்புக்களின் போது, தடுப்புக்காவலிலுள்ளவர்களைத் தடுத்து வைத்திருக்கும் இடங்களைப்பற்றி உறவினர்களுக்குத் தெரியப்படுத்துதல் வேண்டுமென்ற தேவைப்பாட்டை

Page 23
36
உள்ளடக்கிய புதிய பாதுகாப்பைச் செய்வதாக அரசு வாக்குறுதியளித்தது. 1993 ஆணி மாதத்தில் அவசரகால ஒழுங்குவிதிகளுக்குச் செய்யப்பட்ட திருத்தங்களினால் எழுத்தில் மட்டும் வழங்கப்பட்ட பாதுகாப்புக்கள், அரசின் வாக்குறுதிகள் இருந்தும் கூட, விடுதலை செய்யப்பட்டதற்கான சான்றிதழ் அரிதாகவே வழங்கப்பட்டது. (இவை நியாயமற்ற முறையில் மீண்டும் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கு உதவும்) கைது செய்யும் உத்தியோகத்தரினால் கைது செய்யப்படுதலைப் பதிவு செய்த பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்படவில்லை; அதிகாரமற்ற, அறிவிக்கப்படாத தடுப்பு முகாம்களில் ஆட்கள் தடுத்து வைக்கப்படுகின்றார்கள்; தடுப்புக்காவலில் வைத்திருத்தல் பற்றிக் குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தப்படுவதில்லை.
விசேட சட்ட, கண்டபடி சுருக்கமுறை விசாரணையின் பின்னர் தண்டனை விதித்தல்களின் மீதுள்ள பயனுறுவகையின் தடைசெய்தலும் விசாரணை செய்தலும் மீதான ஐ.நா கோட்பாடுகள் அரசாங்கங்களை,
தமது சுதந்திரம் பறிக்கபட்டவர்கள் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் காவலில் வைக்கப்படல் வேண்டுமெனவும்; அவர்கள் காவலில் இருப்பது பற்றியும் இடமாற்றங்கள் உட்பட அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது பற்றியும் உண்மைக்கொத்த தகவல், அவர்களுடைய உறவினர்களுக்கும், சட்டத்தரணிகளுக்கும் அல்லது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களுக்கும் தாமதமின்றி அறியத்தருதல் என்பனவற்றை உறுதிசெய்தல் வேண்டுமெனவும் தேவைப்படுத்துகின்றது.
சட்டப்படி தேவைப்படுத்தப்பட்டவாறு சகல தடுப்புக்காவலும் தமக்கு
அறிக்கையிடப்படவில்லையென்றும், சிறிய முகாம்களிலுள்ள மனித உரிமைகளும் கடமைகளும் உடைய மனித உரிமைகள் செயலணி உத்தியோகத்தருக்கு அறிக்கைளை
அனுப்புவதில் இராணுவத்தினர் அடிக்கடி உதாசீனம் செய்வதாகவும் இது விடயமாக
உறவினர்களே முதலாவதாகத் தொடர்பு கொள்கிறார்களென்றும் மனித உரிமைகள்
செயலணித் தலைவர் இவ்வமைப்பின் இரண்டாவது அறிக்கையில் (ஆகஸ்ட்-ஆகஸ்ட்
92/93 காலப்பகுதி) கவனத்திலெடுத்துள்ளார். இத்தொடர்பு கொழும்பு அலுவலகத்தில்
உள்ள 24 மணிநேர புதிய தொலைபேசி மூலம் பெரிதும் வசதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அபிவிருத்திகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. ஆட்களை விடுதலை செய்தல் பொதுவாகத் தாமதமின்றி நடைபெறுவதுடன், தடுப்புக்காவலிலுள்ளவர்கள் வள முகாம்களில் தொடர்ந்தும் வைக்கப்படுவதில்லை. வள முகாம்களில் தடுப்புக்காவலில் வைக்கப்படுபவர்கள் மிருகத்தனமாக நடத்தப்படுகின்றார்கள். எப்படியிருப்பினும் த்டுப்புக் காவலிலுள்ளவர்களின் உறவினர்களுக்குக் கைது செய்யப்பட்டமை பற்றி அறிவிக்கப்படுவதில்லை. விசாரணைகள் மேற்கொள்ளப்படும்போது தடுப்புக் காவல் பற்றிப் பல நாட்களுக்கு மறுக்கின்றனர். (மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்). அறிக்கை இலக்கம் 11, ஏப்ரல் 93, பக் :40) திருகோணமலையிலும் அபிவிருத்திகள் அறிக்கையிடப்பட்டுள்ளன.

37
திட்டமிட்ட ஊழலுக்கு அடக்கி ஒடுக்கும் சட்டம் வாய்ப்பளிக்கின்றது. கொழும்பில் அண்மையில் நடைபெற்ற கைது செய்தலின்போது நடைக்கடைகளிலே வேலை செய்யும் வாலிபர்கள் குறிவைக்கப்பட்டார்களென்றும் அவர்களின் விடுதலைக்காக சராசரி 5000 ரூபா கேட்கப்பட்டதென்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது. ( ஒல்சென் வரைபு பூரீலங்கா மீதான அறிக்கை ஜனவரி 10.1994, பக். 33, 34).
தமிழ் இளைஞர்கள் குறிப்பாக வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான திட்டங்களுடன் கொழும்பு வருபவர்கள் பணம் பறிக்கும் நோக்கத்துக்காகப் பல தடவைகளில் தடுத்து வைக்கப்படுகின்றார்கள் எனப் பொறுப்புள்ள இடங்களிலிருந்து கிடைத்த குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்த வழிகளின்படி தம்மால் புரிந்து கொள்ள இயலாத சிங்கள மொழியில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலமொன்றில் கையொப்பமிடுவதற்குத் தமிழ் இளைஞர்கள் நயமாக ஏமாற்றப்படுகிறார்கள். இது பின்னர் பணம் பறிப்பதற்காகப் பயன்படுகின்றது. சவூதி அரேபியா, ஜேர்மனி போன்ற நாடுகளிலிருந்து வரும் தமிழ் இளைஞர்களும் இவ்விதமாக ஏமாற்றப்படுகின்றார்கள்.
(இ) தடுப்புக்காவலின் நிலைமைகள்
1993 ஆம் ஆண்டில் மனித உரிமைகள் செயலணி தடுப்புக்காவல் நிலைமைகளைக் கண்காணித்து தடுப்புக்காவலிலுள்ளவர்களைப் பற்றிய மத்திய பதிவேடு ஒன்றைத் தயாரிக்கும் தனது முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டிருந்தது. மனித உரிமைகள் செயலணியுடன், ஜசீ.ஆர்.சி அமைப்பு (ஐசீஆர்சீ) 400க்கும் அதிகமான தடுப்புக்காவல் இடங்களை ஒழுங்காகச் சென்று பார்வையிட்டது. இவ்விரு அமைப்புக்களும் பார்வையிட்டபடியால், தடுப்புமுகாம்களின் நிலைமைகளில் குறிப்பிடத்தக்க அளவு திருத்தங்கள் ஏற்பட்டுள்ளன என அறிக்கையிடப்பட்டுள்ளது. எனினும்,தடுப்புக்காவலில் உள்ளவர்களின் உரிமைகள் தொடர்ந்தும் மீறப்படுகின்றன. (பேட்டி, தலைவர், எச்ஆர்ரிஎவ்) தடுப்புக்காவல் நிலைமை பற்றி ஓரளவு மேலே விளக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்ந்து வரும் உப பிரிவில் விவாதிக்கப்பட்டுள்ளது.
(ஈ) சித்திரவதை
தடுப்புக்காவலில் உள்ளவர்கள், காவலில் வைக்கப்பட்டுள்ள போது, படுமோசமாக நடாத்தப்படுவார்கள் அல்லது சித்திரவதை செய்யப்படுவார்கள் என்ற அச்சத்துக்குக் குறிப்பாகக் கவனம் செலுத்தும் போது, நாட்டின் வடக்குக் கிழக்கில் உள்ளவர்களாகட்டும், தெற்கில் உள்ளவர்களாகட்டும் தடுப்புக்காவலில் உள்ளவர்களின் இது தொடர்ந்து வருகின்ற தலைவிதியென அறிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. இராணுவத்தினர், பொலிசார், த.ஈ.வி.பு யினர், அரச படைகளுடன் இணைந்து செயற்படும் பலதரப்பட்ட தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்கள் கைதிகளைத் தவறாக நடாத்துவதாக அறிக்கைகள் கூறுகின்றன. விசாரணையின்போது அடிப்பது அன்றாட சம்பவமாகும். த.ஈ.வி.பு உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படுவர்களிடமிருந்து

Page 24
38
ஒத்துழைப்பைப் பலவந்தமாகப் பெறுவதற்காகவும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் சித்திரவதை பிரயோகிக்கப்பட்டதென அரச பாதுகாப்புப் படையினர் சில சந்தர்ப்பங்களில் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். (உப.ஆசிய கண்காணிப்புக் குழுவுக்கு 1991 மார்கழியில்).
சித்திரவதை அறிக்கைகளில் உள்ளடங்கியவை நீரில் அமிழ்த்துதல், கிருமிநாசினி அல்லது நில எண்ணெய் நிரப்பப்பட்ட பைகளைத் தலையில் சுமத்துதல், உலோகத்தினாலான பொல்லால் காற்குதியில் அடித்தல், சில சந்தர்ப்பங்களில் கடுமையாகத் தாக்குவதால் எலும்புகள் நொருங்கி விடுகின்றன, அல்லது பலத்த காயம் ஏற்படுகின்றது எனப் பல கைதிகளினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறப்புச் சிதைவுச் சம்பவம் ஒன்றும் முறையிடப்பட்டுள்ளது. பெண் கைதிகள் உடற்தாக்குதலுக்கு, அடிகளுக்கு, அவதூறுகளுக்கு, கற்பழிப்புக்குப் பலியானார்கள் என அறிக்கைகள் கூறுகின்றன.
(உ) தலைமறைவுகள்
தலைமறைவுகள் தொடர்பாக விபரங்களைப் பெற்றுக்கொள்வது சிரமமானதெனினும் தலைமறைவுகளை உறுதிப்படுத்துவதற்கான உத்தியோகபூர்வமான சில ஆவணங்களுள்ளன. 1992 புரட்டாதி 1 முதல் 1993 ஆவணி 31 வரையிலான காலப்பகுதியில் தலைமறைவானவர்கள் எனக் கூறப்படும் ஆட்களைப் பற்றி 2351 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக எச்ஆர்ரிஎவ் தனது இறுதி ஆண்டறிக்கையில் கூறுகின்றது. இவற்றுள் 733 மட்டக்களப்புப் பிராந்திய அலுவலகத்திலும் 689 கண்டியிலும் 296 கல்முனையிலும் 215 திருகோணமலையிலும் 203 அநுராதபுரத்திலும் 16 மாத்தறையிலும் 42 வவுனியாவிலும் 26 பதுளையிலும் 31 அம்பாறையிலும் இருந்து கிடைக்கப்பெற்றன. ( எச்ஆர்ரிஎவ் பின்னிணைப்பு 6) இவர்களுள் 116 பேர் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கக்கூடியதாக இருந்ததென அவ்வறிக்கை கூறுகின்றது. பெரும்பாலானோர் கிழக்கிலும் தெற்கிலும் ஒன்றில் பொலிஸ் நிலையங்களில் அல்லது இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அன்று தொடக்கம் பலரின் இருப்பிடங்களைக் கண்டுபிடித்து அவர்களின் உறவினர்களுகுத் தெரிவிக்கிப்பட்டுள்ளது.
மாசி மாதத்தின் நடுப்பகுதியில் றுகன் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் வனத்தை ஆறு என்ற இடத்திலுள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 விவசாயிகளைத் தடுத்து வைத்தார்கள். அன்று தொடக்கம் அவர்கள் எவரும் காணப்படவில்லை. இராணுவ பொலிஸ் mísi riffon GMT sisir நடைபெற்றுக்கொண்டிருப்பதாகக் கூறப்பட்ட போதிலும் எவ்வித முன்னேற்றமும் அறிவிக்கப்படவில்லை. ( எச்.ஆர்ரி ஏவ், ஏஆர், 1992/93 பக்கங்கள் : 21/22) தலைமறைவாதல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விருப்பத்துக்கு மாறாக ஆட்களைக் கடத்துதல் பற்றிய ஜனாதிபதி விசாரணைக்குழுவினால் பதிவுசெய்யப்பட்ட சம்பவங்கள் 649 ஆக 1991இல் இருந்தது. 1992 இல் 50 ஆக வீழ்ச்சியடைந்தது. 1993 தை 11 ஆம் தேதி முதல் புரட்டாதி 10 ஆம்

39
தேதிவரை 34 சம்பவங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
கட்டாயத்தின் பேரிலும் தன்னிச்சையின்றியும் தலைமறைவாதல் மீதான ஐ.நா.செயற்குழு 1992 கடைசியிலும் 1993 மாசியிலும் அது மேற்கொண்ட கண்காணிப்பு வருகையின் அடிப்படையில் அதன் இரண்டாவது அறிக்கையை வெளியிட்டுள்ளது. தலைமறைவாதல் தொடர்பாதத் தமக்குக் கிடைத்த முறைப்பாடுகள் 1991 இல் 146 ஆக இருந்து 1992 இல் 62 ஆகக் குறைந்துள்ளதாகக் குழு கூறுகின்றது.
புளொட் இயக்கத்தினால் காவல் புரியப்படும் பாதுகாப்புப் பரிசோதனை நிலையத்தின்மீது த.ஈ.வி.பு யினர் நடாத்திய தாக்குதலைத் தொடர்ந்து, த.ஈ.வி.பு இயக்கத்தினருக்கு எதிரான தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி என அழைக்கப்படும் ஆயதம் தாங்கிய குழு அரசபடைகளுடன் சேர்ந்து வவுனியா மாவட்டத்தில் பலரின் தலைமறைவுக்குப் பொறுப்பானது என நம்பப்படுகின்றது. வட மத்திய மாகாணத்தில் பொலநறுவை மாவட்டத்திலும் தலைமறைவுகள் நிகழ்ந்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. 15 தலைமறைவுகளுக்கு உள்ளூர் பொலிசே பொறுப்பானது என சாட்சியங்கள் கூறுகின்றன.
வடக்கு-கிழக்கில் ஏற்பட்ட தலைமறைகளுவுக்கு தஈ.வி.யு இயக்கமே பொறுப்பானதென அவதானிகள் கூறுகின்றனர். ஆனால் எத்தனை பேர் காணாமற்போனார்கள் என்பதைக் தீர்மானிக்க இயலாமலிருக்கின்றது. தடுப்புக்காவலிலுள்ளவர்களின் நிலைமை பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு முயற்சி செய்த போதெல்லாம் த.ஈ.வி.பு இயக்கத்தினர் வழக்கமாக மறுத்துள்ளார்கள். தஈ.வி.பு க்குப் போட்டியாகவுள்ள தமிழ்க் குழுக்களின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். த.ஈ.வி.பு இயக்கம் தனது படையில் களையெடுப்பதாகவும், நம்பிக்கையற்றவர்கள் எனக் கருதப்படுபவர்களை கொலை செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது. துரோகிகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. பாதுகாப்புப் படையினருடன் தொடர்புள்ளவர்கள் என தஈ.வி.பு குற்றஞ்சாட்டி 9 குடிமக்களை 1993 மார்கழியில் கொலை செய்ததாக அறிக்கைகள் கிடைத்துள்ளன.
(ஊ) நியாயமான நீதி விசாரணை
நியாயமான நீதி விசாரணை உரிமை என்பத்ற்குக் கவனம் செலுத்தும் போது, மட்டுமீறிய தாமதமின்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படல் வேண்டுமென ஐசீசீபீஆர் தேவைப்படுத்துகின்ற போதிலும் இலங்கையில் நீதி விசாரணைக்குக் கொண்டு வருவதில் தேவைக்கதிகமான காலதாமதமேற்படுவது வழக்கமானதாகும். நீதிமன்ற விசாரணையை எதிர்பார்த்து இருக்கும் கைதிகளுக்கும் தண்டனை பெற்றவர்களுக்கும் இடையில் உள்ள விகிதம் 1990 இல் 4:1ஆக இருந்தது. 1993 ஆம் ஆண்டின் இறுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டமையினால் இவ்விகிதாசாரம் அதிகமாயிருக்கக்கூடும். மக்கள், தண்டனை பெற்ற கைதிகளாகச் சிறைவாசம் செய்யும் காலத்தைவிடக் குற்றவாளிகளாகச் சிறைவாசம் செய்யும் காலம் கூடுதலாகவே உள்ளது. நீதிவிசாரணைக்காக வழக்குகளைக் கொண்டுவருவதில்

Page 25
40
ஏற்படும் தாமதம் வழக்கு விசாரணை நீண்ட நாட்களுக்கு நடைபெறுதல், பிணையாக அதிக தொகை செலுத்துதல் வேண்டுமென்ற கட்டளை, பிணையில் செல்வதற்கான சட்ட ஏற்பாடுகளிலுள்ள பற்றாக்குறை ஆகியவையே காரணங்களாகும். (சாந்த ஜே.பீரிஸ், “குற்றவியல் நீதிச் சீர்திருத்தம்’ 1992 இல் சட்டமும் சமூக நம்பிக்கைக்குமாகச் செய்யப்பட்ட வெளியிடப்படாத ஆய்வு) தடுப்பு முகாம்களிலும், சிறைச்சாலைகளிலும் வைக்கப்பட்டுள்ள ஏராளமான சிங்களவர்கள் எவ்வித வழக்கு விசாரணையுமின்றி 2 ஆண்டுகளுக்கு மேலாக வைக்கப்பட்டுள்ளார்களென அறிக்கைகள் கூறுகின்றன. ( ஏ.ஐ.மனித உரிமைகள் தொடர்பின் பொழிப்பு பெப்பிரவரி,94, பக்: (3).)
நீண்டகாலமாகக் காவலிலுள்ளவர்களில் பலர் கட்டுப்பாட்டை மீறத் துடிக்கின்றார்கள். 1993 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பூசா முகாமிலுள்ள 467 அரசியல் குற்றவாளிகள், குற்றஞ்சுமத்தப்படக்கூடியவர்களுக்கெதிராக ஒரு மாதத்துள் வழக்குத் தொடுக்கப்படல் வேண்டும் எனவும், மற்றையவர்கள் விடுதலை செய்யப்படல் வேண்டுமெனவும் கோரிக்கையை முன்வைத்து விண்ணப்பிப்பதற்குக் கிட்டதட்ட 600 கையொப்பங்களைப் பெற்றார்கள்
பின்னர் 10 பேருக்கு மேலான குற்றவாளிகள் தமது கோரிக்கைகளுக்குக் கவனத்தை ஈர்ப்பதற்காக உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்கள்; மஉசெஅ தலையிட்டது. காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டார்கள். 1994 தை 20 ஆந் தேதியன்று 138 பேர் மட்டுமே பூசா முகாமில் எஞ்சியிருந்தனர். (பேட்டி மஉசெஅ, தலைவர்) ஒரு சிறைச்சாலையில் மட்டும் ( களுத்துறை) 464 தமிழர்கள் வழக்கு விசாரணையின்றி 32 மாதங்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக 1993 ஆவணி மாதத்தில் அறிக்கையிடப்பட்டிருந்தது. 1993 ஆம் ஆண்டில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களில் சிலர் பல மாதங்களாக நீதி விசாரணைக்குக் கொண்டுவரப்படாமல் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள். (ஏ.ஐ.மனித உரிமைகள் தொடர்புகள் பொழிப்பு பெப்பிரவளி. 94, பக்:3)
அரசியலமைப்பின் 13 (3) ஆம் உறுப்புரை இந்த உரிமையை உத்தரவாதப்படுத்தியுள்ள போதிலும், பல தடவைகளில் காவல் கைதிகள் அவர்கள் கைது செய்யப்பட்டமைக்கான காரணங்களைத் தெரியாமலே விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
குற்றம் சுமத்துவதைக் கைவிடுதற்காகத் தங்களிடம் பேரம்பேசிப் பணம் கேட்கப்பட்டதாகக் காவல் கைதிகளின் உறவினர்கள் கூறுகின்றனர். குற்றஞ் சுமத்துவதற்கான காரணம் இல்லாவிடினும், எதிர்வாதம் செய்வது கால்த்தையெடுக்கும்; சிலவேளைகளில் வருடங்களாகும். வழக்கு நடவடிக்கைகள் நீண்ட காலத்தை எடுக்கும் என்ற அச்சம் பாரதூரமற்ற சிறிய தவறொன்றுக்குக் குற்றவாளி எனக் கூறுவதற்குக் கட்டாயப்படுத்துகின்றது.
பயங்கரவாதத் தடைச்சட்டம் அவசரகால ஒழுங்குவிதிகள் என்பனவற்றின் மீதான வழக்குகள் பெரும்பாலும் “குற்ற ஒப்புதல்களையே” ஆதாரமாகக் கொண்டவையாகும்.

41
1993 ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் இருந்தும்கூட, ( பொலிஸ் காவலிலுள்ள போது மஜிஸ்ரேட் முன்னிலையில் அன்றி) பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை நீதிமன்றங்களில் பயன்படுவதற்கு அவசரகால ஒழுங்கு விதிகள் (நானாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) தொடர்ந்தும் அனுமதிக்கின்றதுடன், ஒப்புதல் வாக்குமூலம் கட்டாயத்தின் பேரில் பெறப்பட்டதென்பதை நிரூபிக்கும் பொறுப்பைக் காவல் கைதியின் மேல் சுமத்துகின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டமும் இதையொத்த சட்ட ஏற்பாடுகளை உள்ளடக்கியிருக்கின்றது. பொலிஸ் திணைக்களத்தின் சகல மட்டங்களிலும் அரசியல் தலையீடு உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடுதல் வேண்டும். 1993 ஐப்பசியில் மஜிஸ்ரேட் சம்பா புத்திபால விசாரணை செய்த வழக்கொன்றில் 11 வயது சிறுமி ஒருத்தி தனது முன்னைநாள் எஜமானர் 65 வயதான ஒய்வுபெற்ற உதவிப் பொலிஸ் சுப்பிரெண்டென் தன்னைக் கற்பழித்ததாகக் குறிப்பிட்டாள். சான்றுகள் போதுமானதெனக் கருதிய மஜிஸ்ரேட், முன்னைநாள் பொலிஸ் சுப்பிரெண்டெனுக்கு எதிராகக் குற்றஞ்சுமத்தப்படல் வேண்டுமேன விதப்புரை செய்தார். சட்டமா அதிபர் வழக்கை வாபஸ்பெறும்படி பொலிசாருக்கு ஆலோசனை வழங்கியதுடன், மஜிஸ்ரேட் காலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சந்தேகப் பேர்வழி விடுவிக்கப்பட்டது “ சட்டத்தின்படி தவறானது” எனப் பொருள்பட இலங்கைச் சட்டத்தரணிகள் சபையின் எதிர்ப்பு உட்பட பொதுமக்களின் எதிர்ப்பு சட்டமா அதிபரின் செயலுக்கு வழிவகுத்தது (தகவல் நிலைமை அறிக்கை அக்டோபர் 93) அதன் பின்னர் இரகசியப் பொலிசாரை இவ்வழக்கைப் பற்றி ஆரம்பத்திலிருந்து விசாரணை நடத்தும்படி சட்டமா அதிபர் கேட்டுக்கொண்டார் ( தகவல் நிலைய அறி. நவம்பர் 93).
(iv) கைது செய்தல் தடுத்து வைத்தல் நியாயமான வழக்கு விசாரணை தொடர்பான அவசரகால ஒழுங்கு விதிகளின் ஏற்பாடுகளும் பயங்கரவாதத்
தடைச் சட்டமும்
(அ) அவசரகால ஒழுங்குவிதிகள் பொதுவாக
(அவசரகால ஒழுங்குவிதிகள் மீதான அத்தியாயத்தை வாசிக்கவும்)
தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக, பொதுமக்கள் அமைதியைப் பேணுவதற்காக, படைவீரர் கலகத்தை அடக்குவதற்காக, கலகம், உள்நாட்டு யுத்தம் அல்லது விநியோகங்களையும் சேவைகளையும் பேணுவதற்காக அவசர கால ஒழுங்குவிதிகளை வழங்குவதற்கு நிறைவேற்று அதிகாரம் படைத்தவருக்கு ( திருத்தப்பட்டவாறான 1947 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் அதிகாரமளிக்கின்றது. இதே போன்ற ஒழுங்கு விதிகள் முறையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலையின் கீழ் அரசியலமைப்பின் ஏற்பாடுகளைத் தவிர, ( அரசியலமைப்பு உறுப்புரை 155(2) எந்தவொரு சட்டத்தின் சட்ட ஏற்பாடுகள்

Page 26
42
தொழிற்படுவதை மீறுவதற்கு, திருத்துவதற்கு இயலக்கூடிய பலத்தைக் கொண்டிருக்கும். மேலும் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 8 ஆம் பிரிவு, எந்தவொரு அவசரகால ஒழுங்குவிதியின் அல்லது அதன் கீழ் ஆக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட ஏதாவது கட்டளை விதி அல்லது வழிகாட்டல் என்பனவற்றின் செல்லுபடியாகும் தன்மையை எதிர்ப்பதற்கு நீதிமன்றங்களுக்குள்ள நியாயாதிக்கத்தைத் தூக்கியெறிந்து விடுகின்றது.
நிறைவேற்று அதிகாரம் படைத்தவர், பாராளுமன்றத்தினால் சாதாரணமாகச் சட்டமியற்றும் வழிமுறையைத் தவிர்த்துக்கொள்வதற்கு அவசரகால ஒழுங்கு விதிகள் அதிகாரத்தைக் கொடுக்கின்றன. இதனால் பொதுக் கலந்துரையாடலையும் விவாதத்தையும் வீணாக்குகின்றது. அத்துடன், ஜனநாயக சமுதாயத்தில் மிகக் குறைந்த அளவிலேயே மட்டும் பயன்படுத்தப்படுகின்றது. அண்மைக்காலத்தில் இலங்கை அரசு அவசரகால அதிகாரங்களைப் பிரயோகிப்பதில் பொருத்தமான கட்டுப்பாட்டைச் செயற்படுத்தவில்லை என்பது கவலைக்குரியதாகும். அவசர காலத்துக்கு எவ்விதத் தொடர்புமில்லாத பல ஒழுங்குவிதிகள் இப்பொழுது சட்டப் புத்தகங்களில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, அவசர காலத்துடன் எவ்விதத்திலும் வெளிப்படையாகவோ அல்லது குறிப்பிடப்பட்டோ தொடர்பற்ற 1993 மார்கழியில் பிரகடனப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதிகள் தேவைப்படுத்துகின்றன. அரச சார்பற்ற நிறுவனங்களைப் பதிவு செய்தலும் அவற்றின் வரவு செலவைக் கண்காணித்தலும். பிற விடயங்கள் உட்பட, கைது செய்தல் தடுப்புக்காவலில் வைத்தல், வழக்கு விசாரணை நடைமுறை என்பன தொடர்பாகப் புதிய ஒழுங்கு விதிகள் 1993 ஆனி மாதத்தில் பிரகடனப்படுத்தப்பட்டன. அவசரகால ( நானாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) 1993 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஒழுங்குவிதி. இத்திருத்தங்கள் திருத்தப்பட்டவாறான 1989 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஒழுங்கு விதிகளை (நானாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) நீக்கி புதியவற்றைச் சேர்த்துக் கொள்கின்றன. முன்னைய ஒழுங்குவிதிகளின் அளவுகடந்த அதிகாரங்களைப் பற்றி தேசிய மட்டத்திலும் சர்வதேச மனித உரிமைகள் மட்டத்திலும் பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
கட்டாயத்தின்மீது அல்லது விருப்பத்துக்கு மாறாகத் தலைமறைவாதல் மீதான ஜ.நா. செயற்குழு 1991 இல் வருகைதந்து அறிக் கையொன்றைச் சமர்ப்பித்தது. அவ்வறிக்கையில், கைதிகளை நடாத்துவது தொடர்பாகவும், முறையான நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவசரகால சட்டவாக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேசத் தரங்களுக்கு ஏற்றவகையில் கொண்டுவரப்படவேண்டிய தேவையை எடுத்துக்கூறியது மட்டுமன்றி, கைதுசெய்வதற்கான காரணங்களும் அதிகாரங்களும் காவல் கைதிகளை இடமாற்றம் செய்வதற்கான காரணங்களும் தெளிவாகக் கட்டுப்படுத்தப்படல் வேண்டுமென்பதுடன், காவல் கைதிகளைக் கைது செய்வதைத் தொடர்ந்து நீதவான் முன்னிலையில் கொண்டு வருவதற்கான காலக்கெடுவும் பெருமளவும் குறைக்கப்படல் வேண்டுமெனவும் அறிக்கையிடப்பட்டது. 1992 ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழக மனித உரிமைகள் ஆய்வு நிலையம்

43
அவசரகால சட்டவாக்கம் பற்றிப் பரந்த ஆய்வொன்றை நடாத்தி, சீர்திருத்தத்துக்கான விதப்புரைகளை அரசுக்குச் சமர்ப்பித்தது. இவ்விதப்புரைகள் 1993 ஆம் ஆண்டு மாசி மாதம் வெளியிடப்பட்டன. 1993 பங்குனி மாதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத்தில் அரசு பிற விடயங்களுள் இவ்விதப்புரைகளைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாகவும் கைது செய்தல், தடுப்புக்காவலில் வைத்தல் தொடர்பான அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பாக மீளாய்வு செய்து திருத்தியமைப்பை மேற்கொள்வதாகவும் அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. இவ்வொழுங்கு விதிகள் பொதுமக்களுக்குக் கிடைக்கக்கூடியதாகவும், விழிபுணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் சகல அவசர கால ஒழுங்குவிதிகளையும் திரட்டி புத்தகவடிவில் தருவதற்கு அரசு பொறுப்பேற்றது. 1993 ஆம் ஆண்டின் திருத்தங்கள் இவ்விதப்புரைகளைக் கருத்திலெடுத்தே செய்யப்பட்டதென அரசு கூறுகின்றது.
பொதுவான விதப்புரைகள் பின்வருமாறு (சீஎஸ்எச்ஆர்)
(1) துரிதப்படுத்தப்படல் வேண்டுமென்பதற்காக அவசரகால அதிகாரங்கள், சாதாரண சட்டமியற்று நடைமுறைகளை எந்தச் சூழ்நிலையிலும் வளைத்துக் கொள்ளப் பயன்படுத்தக்கூடாது.
(2) தேசிய பாதுகாப்புடன் தொடர்பற்ற ஒழுங்குவிதிகள் நீக்கப்படல் வேண்டும்
(3) அடிப்படை உரிமைகளுக்குப் பாதுகாப்பளிக்காத அல்லது அதிக அதிகாரங்களைக்
கொண்ட ஒழுங்கு விதிகள் மீளாய்வு செய்யப்படல் வேண்டும்.
(4) பிரகடனப்படுத்தப்படும்போது, அவசரகால ஒழுங்கு விதிகளுக்குப் போதியளவு பிரசாரம் செய்யப்படல் வேண்டும். ஒவ்வொரு ஒழுங்கு விதியின் முகவுரையும் அவ்வொழுங்கு விதியின் நோக்கத்தைத் தெளிவாக்கல் வேண்டும். ஒழுங்குவிதிகள் உத்தியோகபூர்வமாகப் புத்தக வடிவில் வெளியிடப்படல் வேண்டும். திருத்தங்களும், திருத்தங்கள் செய்யப்பட்ட தேதிகளும் அட்டவணைப்படுத்தப்படல் வேண்டும்.
தனது பொறுப்புக்களைச் செயல்படுத்துவதற்கான அரசின் பொறுப்புணர்ச்சி ஏமாற்றமளிக்கின்றது. தேசிய பாதுகாப்புடன் எவ்வித தொடர்புமற்ற ஒழுங்கு விதிகளை நீக்கப்போவதாக அரசு அறிவித்துள்ள போதிலும் மேலே குறிப்பிட்டது போன்று 1993 மார்கழியில், அரச சார்பற்ற நிறுவனங்கள் பதிவு செய்யப்படல் வேண்டுமெனவும், அவற்றின் வரவு செலவுகள் கண்காணிக்கப்படல் வேண்டுமெனவும் தேவைப்படுத்திப் புதிய ஒழுங்கு விதிகள் பிரகடனம் செய்யப்பட்டன. இவ் வொழுங்குவிதிகளின் கீழ் அரசுக்கு விரிவான தகவல்கள் வெளியிடப்படல், வேண்டுமெனத் தேவைப்படுத்தப்படுகின்றது. இணங்கியொழுகுதல் மிகவும் பொறுப்பு வாய்ந்ததொன்றாகுமென்பதுடன், அ.சா.நி. செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்குத் தலையிடவும் செய்யும். பொதுமக்கள் பாதுகாப்புக்குப் பிரச்சினை வெளிப்படையாகத் தெரியவுமில்லை. அவ்விதமாக நியாயப்படுத்தக்கூடியதெனவும்

Page 27
44
குறிப்பிடப்படவுமில்லை. உண்மையில் அரசு தனது உத்தியோகபூர்வமான செய்தியறிக்கையில் தரப்பட்ட விளக்கம், “ சட்டத்தை ஆக்குவதற்கு நீண்டகாலம் செல்லும்” என்பது சீஎஸ்எச்ஆர் முதலாவது விதப்புரைக்கு மாறுபட்டதாகும்.
சீஎஸ்எச்ஆர் விதப்புரைகள் பலவற்றிலும், சில விதப்புரைகளுக்குத் திருத்தங்களினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. இத் திருத்தங்கள் வரவேற்கத்தக்கன. வெறும் திருத்தங்களைச் சட்டமாக்குவதால் மட்டும் நிலையில் மாற்றமேற்படப் போவதில்லை 1993 ஆம் ஆண்டில் பல சந்தர்ப்பங்களில் இத்திருத்தங்கள் எழுத்தளவிலே மட்டும் தொடர்ந்தும் இருந்தன. (உ-ம், மேலேயுள்ள பிரிவில் தடுப்புக்காவல் தலைறைவுகளில் மேலெழுந்தவாரியான கண்ணோட்டத்தைப் பார்க்கவும்) மற்றைய துறைகளில் இவ்வொழுங்கு விதிகளின் பொருளடக்கம் ஐசீசீபீ ஆரின் கீழான அரசின் கடப்பாடுகளுக்குக் குறைவாகவே தொடர்ந்தும் இருக்கின்றதுடன், எந்தவிதமான தடுப்புக்காவல் அல்லது சிறைத்தண்டனையின் கீழள்ள சகல மக்களையும் பாதுகாப்பதற்காக ஐ.நா. கோட்பாடுகள் சபையில் தேவைப்பாடுகளுக்கும் குறைவானவையாகவே இருக்கின்றன. உதாரணமாக, காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது ஏற்படும் மரணம் சம்பந்தமாக விசாரணை செய்யும் நடைமுறை திருப்தியற்றதாக இருக்கின்றது. விசாரணை செய்பவர்களின் பாதுகாப்பில் காவல் கைதிகள் நீண்ட காலத்துக்கு வைக்கப்பட்டிருத்தலை இவ்வொழுங்கு விதிகள் தொடர்ந்தும் அதிகாரமளிக்கின்றது. சாதாரண கைதிகளுக்கு ஏற்புடைய பாதுகாப்புக்களின்றி, சிவில் கைதிகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் தவிர பிற இடங்களில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் நடாத்தப்படும் முறை ஒழுங்குபடுத்தப்படாமல் தொடர்கின்றது.
கடந்த காலத்தில் ஒழுங்குவிதிகள் மனம்போனபடி வெளியிடப்பட்டன. அவை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக எவ்வித பிரசாரமும் மேற்கொள்ளப்பட் வில்லை. பிரசுரிக்கப்பட்ட பொருளடக்கம் பெரும்பாலும் கிடைக்காதபடியால் குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பாகச் சகல பொருத்தமான ஒழுங்க விதிகளும் உண்மையிலேயே காணப்பட்டுள்ளதாகச் சொல்வது மிகவும் சிரமமானதாகும்.
முதல் பார்வையில் இக்குறிப்பிடப்பட்ட சிக்கல் குறைந்தபட்சம் அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) ஒழுங்கு விதிகளைப் பொறுத்த வரையில் தீர்க்கப்பட்டுள்ளதாகத் தோன்றும். 1993 ஆனி மாதத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் ஒரே பாகத்தில் உள்ளடக்கப்பட்டு பகிரங்கமாகக் கிடைக்கக்கூடியதாக உள்ளது. உண்மையில் இது பயனுடையதாகும். எப்படியிருப்பினம் பலதரப்பட்ட அவசரகால ஒழுங்குவிதிகள் பிற விடயங்கள் தொடர்பாக இருப்பதால், தடுப்புகாவல் நடைமுறை தொடர்பான சில ஒழுங்கு விதிகள் இப்புதிய ஒழுங்கு விதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளமையினாலும் குழப்பம் தொடர்ந்தும் இருக்கக்கூடிய சாத்தியம் ஏற்படுகின்றது. மேலும் 1993 ஆனி மாதம் கொண்டு வரப்பட்ட திருத்தங்களின் தேவைப்பாடுகள் சிலவற்றை வழக்கறிஞர்களும் நீதிமன்றப் பணியாளர்களும்கூட அறிந்திருக்கவில்லை என்பது வெளிப்படையாகும். மிகவும் அண்மையில் எப்படியிருப்பினும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு பெருமுயற்சி

45
செய்வதாகத் தோன்றுகின்றது.
புதிய ஒழுங்கவிதிகள் புரிந்துகொள்வதற்கச் சுலபமானவை அல்ல என்பதால், கிடைக்கக்கூடிய எந்த உரிமைகளையும் மாற்று வழிகளையும் புரிந்து கொண்டு மேன்முறையீடு செய்வதில் ஏற்படும் சிரமங்கள் தொடர்ந்து வருகின்றன. மேலும், சிங்கள, தமிழ், ஆங்கில பொருளடக்கங்ளில் வேறுபாடு காணப்படுகின்றது.
கீழே ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட கருத்துத் தரப்பட்டுள்ளது.
(ஆ) 1993 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க அவசரகால ஒழுங்குவிதிகளின் (நானாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) 17 ஆம் ஒழுங்குவிதியின் கீழ் ஆட்களைத் தடுத்து வைத்தல்.
17 (1) ஆம் ஒழுங்குவிதி தடுப்புச் செலவொன்றாகத் தடுப்புக்காவலில் வைப்பதற்கு அதிகாரமளிக்கின்றது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தமக்குச் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் மீது அவர், தேசிய பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதை, பொதுமக்கள் பாதுகாப்பைப் பேணுவதை அல்லது அத்தியாவசிய சேவைகளையும் வழங்கல்களையும் சீர் குலைப்பதை ஆளொருவர் செய்வதிலிருந்து தவிர்க்க வேண்டுமென்பது அவசியம் எனக் கருதுமிடத்து, அவ்வாள் தடுத்து வைக்கப்படல் வேண்டுமெனக் கட்டளை பிறப்பிப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒழுங்குவிதியின் நோக்கெல்லைக்கு வரவேற்கத்தக்க சில கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், புதிய குற்றங்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டமையினால் அதன் நோக்கெல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
(26 ஆம் 25 ஆம் ஒழுங்கு விதிகளினால் உருவாக்கப்பட்டவை.)
முன்னர் 23 ஆம் ஒழுங்கு விதியில் உள்ளடக்கப்பட்ட குற்றங்கள் இப்போது 17 ஆம் ஒழுங்குவிதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
17 ஆம் ஒழுங்குவிதியின் கீழ் தடுப்புக்காவல் கட்டளை 3 மாதங்களுக்கு மேற்படாத காலத்துக்குச் செய்யப்படல் வேண்டும். அதன் பின்னர் அக்கட்டளை எத்தனை தடவையும் புதுப்பிக்கப்படலாம். மீண்டும் 3 மாத காலத்துக்கு மேற்படாமல் புதுப்பிக்கப்படலாம். 17 (1) செயலளவில் அவசரகால ஆட்சி தொடரும்வரையில் காலவரையின்றித் தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கான வழியை இது ஏற்படுத்துகின்றது. தடுப்புக்காவலில் இருக்கக்கூடிய சாத்தியத்தின் கால அளவை மட்டுப்படுத்தல் வேண்டுமென்ற சீஎஸ்எச்ஆர் விதப்புரையின் தேவைப்பாட்டை இது நிறைவு செய்யவில்லை.
இவ்வொழுங்கு விதியின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டவர்கள் எந்த ஒரு கட்டத்திலும் நீதிமன்றின் முன் கொண்டுவரப்படல் வேண்டுமென்ற தேவைப்பாடு இல்லை. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட ஆலோசனைக் குழுவுக்குக் காவல் கைதி ஒருவர் எதிர்ப்புக்களைத் தெரிவிப்பதற்கான சட்ட ஏற்பாடு

Page 28
46
செய்யப்பட்டுள்ளது. 17 (6). பாதிக்கப்பட்ட காவல் கைதிகள் இவ்வுரிமையைத் தெரிந்து கொள்வதற்கு ஆவன செய்யப்படல் வேண்டும், 17 (7).
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இக்குழுவின் விதப்புரைகளினால் கட்டுப்படுதல் வேண்டுமென்ற நியதி இல்லை. (17 (10). பெரும்பாலான காவல் கைதிகள், தாம் என்ன காரணத்தினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளோம். என்பது பொதுவாக அவர்களுக்குத் தெரியப்படுத்தப்படுவதில்லை. அல்லது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டத்தின் எந்த ஏற்பாடுகளின் கீழ் என்பதும் அவர்களுக்குத் தெரிவதில்லை. தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கான கட்டளையும் கையளிக்கப்படுவதில்லை. (1993 இறுதியிலும் இதுவிடயமாக மஉசெஅ. யின் விசாரணைகளின் பின்னர் தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கான கட்டளைகள் பெரும்பாலும் ஒழுங்காக வழங்கப்படுகின்றன.) மேலும் காவல் கைதிகளுக்கு ஆலோசனைக் குழுவின் விதப்புரைகளையோ அன்றிச் செயலாளரின் இறுதித் தீர்மானத்துக்கான காரணங்களையோ தெரியப்படுத்தப்படல் வேண்டுமென்ற தேவைப்பாடும் இல்லை.
காவல்கைதி சிறைச்சாலையில் வைத்திருக்கப்படல் வேண்டுமென்ற தேவை இல்லை. ஆனால், செயலாளர் அனுமதிக்கும் வேறு இடங்களில் வைக்கப்படலாம் (17 (4)). 1993 ஆனி 29 ஆம் தேதிய 773/8 ஆம் இலக்க வர்த்தமானியில் 343 இடங்கள் பெரும்பாலும் பொலிஸ் நிலையங்களால் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கீகாரமளிக்கப்படாத இடமொன்றில் ஒருவரைத் தடுத்து வைத்திருத்தல் குற்றச் செயலாகும். (19 (8)). முன்னைய ஒழுங்குவிதிகளைக் காட்டிலும் இவை தெளிவான முன்னேற்றம் உள்ளவையாகும். முன்னைய ஒழுங்குவிதிகள் இரகசிய இடங்களில் தடுத்து வைப்பதை அனுமதித்தன. இருப்பினும் ஆனி மாதத்தில் அட்டவணை வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னரும் பிற இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகின்றது. (மேலெழுந்தவாரியான கண்ணோட்டத்தைப் பார்க்கவும்) இருந்தும் மேற்கொண்டு இடங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை.
மஜிஸ்ரேட் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைகளுக்குள் உள்ள தடுப்புக்காவல் நிலையங்களின் இடமறிந்து அப்படியான நிலையங்கள் இருப்பது பற்றியும் அவற்றின் முகவரிகளும் மஜிஸ்ரேட்களுக்குத் தெரியப்படுத்தப்படல் வேண்டுமென 19 ஆம் ஒழுங்குவிதி தேவைப்படுத்துகின்றது. (19 (4) ). செயலாளரினால் அதிகாரமளிக்கப்பட்ட தடுப்பு முகாம் பொறுப்பதிகாரி 14 நாட்களுக்கு ஒரு தடவை தடுப்புக்காவலிலுள்ளவர்களின் பட்டியலொன்றை உள்ளூர் மஜிஸ்ரேட்டுக்குச் சமர்ப்பித்தல் வேண்டும். நீதிமன்ற அறிவித்தல் பலகையில் இப்பட்டியல் பார்வைக்காக வைக்கப்படுவதற்கு மஜிஸ்ரேட் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். (19) (5). 19(6) ஆம் ஒழுங்குவிதிகளின்படி மாதம் ஒரு முறை மஜிஸ்ரேட் தடுப்பு முகாம்களைப் பார்வையிடுதல் வேண்டும் என்பதுடன், நீதிமன்றின் கட்டளையின் பேரில் தடுப்புக்காவலில் உள்ளவர்கள் தவிர்ந்து ஏனையோர் அவ்வாறு பார்வையிட வரும் மஸிஸ்ரேட் முன்னிலையில் கொண்டுவரப்படுவதை உறுதிசெய்வதற்கு முகாம் பொறுப்பதிகாரி நடவடிக்கை எடுத்தல் வேண்டும். இத்தேவைப்பாடுகள் முன்னைய

47
நிலைமையிலும் பார்க்க முன்னேற்றமானவை என்றபோதிலும் தடுப்புக்காவலில் உள்ளவர்கள் கூடிய விரைவில் நீதிமன்றத்தின் முன்னர் கொண்டுவரப்படுதல் வேண்டும் என்ற விதப்புரைக்கு ஈடு செய்வதாகத் தெரியவில்லை. தடுப்புக்காவல் மீது மஜிஸ்ரேட் ஒருவருக்குத் தற்றுணிபு இல்லையென்பதுடன், (19() ஐ பார்க்கவும்) பார்வையிடுவதற்கு முன்னர் ஒரு மாதம் ஒடி மறைந்துவிடும். மேலும், 1993 ஆம் ஆண்டின் அரைவாசிக்கு முன்னராக, நீதிமன்ற உத்தியோகத்தர்களும் வழக்கறிஞர்களும் அறிக்கையிடும் தேவைப்பாடுகளைப்பற்றியும் அவை செயல்படுத்தப்படவில்லை என்பதையும் தெரிந்திருக்கவில்லை. புதிய ஒழுங்குவிதிகள் ஜனவரி (94, பக் :9)
17 ஆம் ஒழுங்கு விதியைப் பொறுத்தவரையில் தடுப்புக்காவலில் உள்ளவர்களைப் பற்றி மனித உரிமைகள் செயலணிக்கு அறிவித்தல் வேண்டுமென்ற தேவைப்பாடு இல்லை. இருப்பினும் எச்ஆர்ரிஎவ் இன் அமைப்பை உருவாக்கும் ஒழுங்குவிதிகள், (வர்த்தமானி இல. 673/2,1993.07.31) தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதால், தடுப்புக்காவலில் வைக்கப்படுவதைப் பணிக்கும் கட்டளையின் பிரதியொன்று இந்த அமைப்புக்கு அனுப்பிவைக்கப்படல் வேண்டுமென்பதைத் தேவைப்படுத்துகின்றது. ஆனால் எவ்வள்வு காலத்துள் இது அனுப்பு வைக்கப்படல் வேண்டுமென்பதைக் குறிப்பிடவில்லை. (1993 ஆனி மாத புதிய பாகத்தில் பொருத்தமான சகல தேவைப்பாடுகளும் உள்ளடக்கப்படவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.)
18 ஆம் ஒழுங்குவிதியிலிப்பது போன்று கைது செய்யும் உத்தியோகத்தர் பற்றுச்சீட்டொன்றைக் காவல் கைதியின் உறவினர்களுக்குக் கொடுத்தல் வேண்டும் என்ற தேவைப்பாடு 17 ஆம் உறுப்புரையின் கீழ் இல்லை. (கீழே பார்க்கவும்.) தடுப்புக்காவல் இடம் சிறைச்சாலையாக இருக்குமிடத்து, சிறைச்சாலைச் சட்டம், சிறைச்சாலை விதிகள், காவல் கைதி சிவில் கைதியாக இருந்தபோதிலும் ஏற்புடைத்ததாகும். இச்சட்ட விதிகளின் நோக்கெல்லைக்குள் உட்படுபவர்களுக்குப் பாதுகாப்புக்களையும் உரிமைகளையும் பேணுவதற்குச் சட்ட ஏற்பாடுகள் இவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனினும் இச்சட்ட ஏற்பாடுகளில் ஏதாவதொன்று ஏற்புடையதாகாது எனச் செயலாளர் பணிக்கலாம் அல்லது அவற்றைத் திருத்தலாம் அல்லது விரிவுபடுத்தலாம் (17(3) உம் அதன் பந்திகளும்) சிறைச்சாலைச் சட்டத்தையும் சிறைச்சாலை விதிகளையும் இடைநிறுத்துவதற்குச் செயலாளரின் அதிகாரத்தின் மீது எவ்வித கட்டுப்பாடும் இல்லையென்பதுடன், இத்தேவைப்பாடுகள் ஒரு தடவை இடைநிறுத்தப்பட்டதும் அல்லது சிறைச்சாலை தவிர வேறொரு இடத்தைத் தடுப்புக்காவல் இடமாகச் செயலாளர் அங்கீகரித்ததும் இலங்கையின் சட்டம் எவ்வித குறைந்தபட்ச தரத்தையும் வழங்கப் போவதில்லை. காவல் கைதிக்கு அவரின்/அவளின் விசாரணையாளரால் ஏற்படும் அபாயங்கள் வெளிப்படையானவை. பொலிஸ் பாதுகாப்பில் அல்லது இராணுவத்தினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும் காவல்கைதிகளின் நிலைமை மீதான சட்டப்படி கட்டுப்படுத்தும் விதிகளின் சட்ட ஏற்பாடு மிகவும் முக்கியமானது. போதுமானளவு தரங்களைச் சேர்த்துக் கொள்ளல் வேண்டுமெனச் சம்பந்தப்பட்ட தேசிய, சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்களும் ஐ.நா.

Page 29
48
அமைப்புக்களும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியபோதும், புதிய ஒழுங்கு விதிகள் அவற்றை வழங்கத் தவறிவிட்டன. பாதுகாப்புக்களுக்கான ஏற்பாடுகளிலுள்ள குறைபாடுகள் இலங்கையில் காவல் கைதிகளின் உரிமைகளைப் பேணுவதில் உள்ள Lille,6th штЈgiЛIJштет பற்றாக்குறையாகும். (17 ஆம், 18ஆம் ஒழுங்குவிதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிவிலியன் கைதிகள் தொடர்பான சாதாரண விதிகளைச் சிறிது மாற்றியமைப்பதற்கான அதிகாரம்.)
மனித உரிமை செயலணியினால் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வு செய்யப்பட்ட 17 ஆம் விதியின் மதிப்பீடு, 1992 -3 ஆவணி மாதத்தில் வெளியான வருடாந்த அறிக்கையில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
அதற்குப் புதுவடிவம் கொடுக்கப்பட்டிருக்கின்றபோதிலும் இதனால் ஏதாவது நன்மை கிட்டுமா என்பது ஐயத்துக்கிடமாகவே உள்ளதுடன், பழைய 17 ஆம் ஒழுங்குவிதிக்கும் புதிய 17 ஆம் ஒழுங்கு விதிக்கும் இடையில் எவ்வித தனிச்சிறப்பின்றி மாறுபாட்டை நாம் பெற்றுள்ளோம்.
(இ) 18 ஆம் ஒழுங்குவிதியின் கீழ் தடுப்புக்காவல் அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) ஒழுங்குவிதிகள் இல. 1.1993.
18 ஆம் ஒழுங்குவிதி, எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தர் மீது அல்லது ஆயுதப்படையினரில் ஒருவர் மீது, குற்றம்புரியும் அல்லது குற்றம் புரிந்த அல்லது குற்றம் புரிதலில் அல்லது குற்றம் புரியப்பட்டதில் தொடர்புடையவர் எனச் சந்தேகிப்பதற்கு நியாயமான காரணம் இருக்கும், அல்லது ஏதாவது அவசரகால ஒழுங்குவிதியின் கீழ் குற்றம் புரியும் ஆள் ஒருவரைச் சோதனை செய்வதற்கு, சோதனை செய்யும் நோக்கத்துக்காகத் தடுத்து வைப்பதற்கு அல்லது பிடியாணை இன்றிக் கைது செய்வதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது. குற்றச் செயலுடன் தொடர்புடைய எதனையும் சோதனையிடுவதற்கும் கைப்பற்றுவதற்கும் சட்ட ஏற்பாடும் இதில் உள்ளது. (18(1). இவ்வொழுங்கு விதியின் கீழ் கைது செய்யப்படும் ஆள் ஒருவரின் கிட்டிய உறவினருக்குக் கைது செய்யும் உத்தியோகத்தர் குறிப்பிடப்பட்ட படிவத்தில் கைது செய்யப்பட்டமையை ஏற்றுக் கொண்டு ஆவணத்தை வழங்கவேண்டுமென வேண்டப்படுகின்றது. இருப்பினும் குறிப்பிடப்பட்ட மாதிரிப் படிவத்தில் கைது செய்யப்படுவதற்கான காரணத்தை குறிப்பிடுவதற்கு இடம் ஒதுக்கப்படவில்லை என்பதுடன் எவ்வளவு காலத்துள் அத்தகைய சான்று வழங்கப்படல் வேண்டுமென்பதும் குறிப்பிடப்படவில்லை.
தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கான இடங்களை அனுமதிப்பது சிறைச்சாலைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட சட்டஏற்பாடுகளை நீக்குவதற்காகத் தற்றுணிபைப்பிரயோகத்தல், தடுப்புக் காவல் நிலையங்கள் அனைத்தினதும் அமைவிடங்களையும், அவற்றின் முகவரிகளையும் வெளியிடல், காவல் கைதிகளின் பெயர்ப்பட்டியலை உள்ளூர் மஜிஸ்ரேட்டுக்குச் சமர்ப்பித்தல் தொடர்ப்பான 17ஆம் ஒழுங்குவிதியின் மேலே குறிப்பிடப்பட்ட

49
சட்ட ஏற்பாடுகள் ஆகியவை (19 (4), (19 (5), (19(6), (19 (7) ), (19 (8) என்பனவற்றும் ஏற்புடையனவாகும்.
மேலும் 18ஆம் ஒழுங்குவிதியின் கீழ் கைதுசெய்தல்,7ஆம் பந்தி பொலிஸ் சுப்பிரெண்டென் அல்லது ஆணையிடும் உத்தியோகத்தர் (பொலிஸாரினால் அல்லது ஆயுதப்படையினரால் முறையே செய்யப்படும் கைது தொடர்பாக) எச் ஆர்ரிஎவ் க்கு உடனடியாகச் கைது செய்யப்பட்டமை தொடர்பாக அறிவித்தல் வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது.
அப்படியென குற்றம் தொடர்பான சகல தகவல்களும் “இவ்வறிவித்தலில் ஒவ்வொன்றாகக் காட்டப்படல் வேண்டுமென்பதுடன், செயலாளரினால் குறிப்பிடப்பட்ட படிவத்திலும் பூர்த்தி செய்யப்படல் வேண்டும் (1807) இப்புதிய தேவைப்பாடு வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும். எனினும், அது அமுலாக்கப்பட்டமை அரிதாகவே உள்ளதென எச்ஆர்ரி எவ்ஆண்டு அறிக்கை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது (ஆகஸ்ட் 92/93 காலப்பகுதிக்கான பக்கம் 12)
சில காரணங்களுக்காக கைது செய்யப்பட்டமை வடக்கு அல்லது கிழக்கிலா அல்லது நாட்டின் வேறு பகுதியிலா என்பதைப் பொறுத்து தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்காகப் பலவகைப்பட்ட காலப்பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் தெற்கில் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களுக்குச் சில பாதுகாப்புக்கள் ஏற்படக்கூடியதாக இருந்தன உதாரணமாக தெற்கில் ஆயுதப்படையினரின் காவலில் ஆண் ஒருவர் 24 மணித்தியாலங்களுக்கு காவலில் வைக்கப்படலாம்,எனக் காலவரையறை 18() ஆம் உபபிரிவு வரையறுக்கின்றது.
வடக்கு, கிழக்கில்புரியப்பட்ட குற்றமொன்றை விசாரணை செய்வதற்காக 60 நாட்கள் வரையும் தடுத்து வைக்கலாம் என்பதுடன், வடக்கு கிழக்கு அல்லாத வேறு இடத்தில் புரியப்பட்ட குற்றத்துக்கான வடக்கு கிழக்கு அல்லத இடத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டால் தடுத்துவைப்பதற்கு ஆகக் கூடிய காலம் 7 நாட்களெனவும் 19 (2) ஆம் ஒழுங்கு விதியின் உபவாசகம் கூறுகின்றது.
17ஆம் ஒழுங்கு விதியின் கீழ் தடுப்புக்காவல் வழங்கப்பட்ட கட்டளை வழங்கப்படாதவிடத்து அல்லது தகுதி வாய்ந்த நியாயாதிக்க நீதி மன்றின் முன்னர் ஆளொருவர் கொண்டுவரப்படாதவிடத்து தடுப்புக் காவலில் விசாரணையின் நோக்கத்துக்காக வைத்திருக்ககூடிய ஆகக் கூடிய காலத்தின் இறுதியில் ஆளொருவர் விடுதலை செய்யப்படல் வேண்டும்(இது நிகழ்ந்தால் தடுப்புக்காவலில் காலவரையுடன் கூடிய தடுப்புக் காவலிலிருந்து காலவரையற்ற நீடிப்புக்கு இடமளிக்கக்கூடிய தடுப்புக்காவலாக மாற்றப்படுகின்றது. சிறைச்சாலைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட சிறைச்சாலை ஒன்றில் அப்படியான ஆள் தடுத்து வைக்கப்படல் வேண்டும் என நீதிமன்றம் கட்டளையிடலாம். (199),
இவ்விதமாகத் தடுப்புக்காவலில் வைக்கப்படும் ஆளொருவர், இப்படியான தடுப்புக்காவலில்
தொடர்ச்சியான 3 மாதங்களுக்கு வைக்கப்படலாமென்பதுடன், சட்டமா அதிபரின் இசைவு இன்றி முன்னராக விடுதலை செய்யப்படலுமாகாது. (19) (10) (55). மூன்று மாத காலத்தின்

Page 30
50
பின்னர், சட்டமா அதிபர் வேறுவிதமாகப் பணித்தாலன்றி அவ்வாளை மஜிஸ்ரேட் பிணையில் விடுதலை செய்யலாம். சில குற்றங்கள் தொடர்பாகச் சட்டமா அதிபரின் எழுத்துமூலமான இணக்கம் ஏற்கனவே பெறப்படல் வேண்டும் என்ற தேவைப்பாடு இருந்தால் ஒழிய ( 55(3) அதன் பிரிவுகளும்).
வடக்கு, கிழக்கில் 7 நாட்களின் பின்னரும் பிற இடங்களில் 48 மணித்தியாலங்களுக்குப் பின்னரும், காவல் கைதியைத் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கு நியாயமான காரணம் எதுவும் இல்லாதவிடத்துமஜிஸ்ரேட் முன்னிலையில் காவல்கைதிகொண்டுவரப்பட்டு விடுதலை செய்யப்படல் வேண்டும் என்பதற்கான சட்டஏற்பாடு 19(3) ஆம் ஒழுங்கு விதியில் செய்யப்பட்டுள்ளது மேற்கொண்டு தடுப்புக்காவலில் வைத்திருப்பது பற்றி இச்சந்தர்ப்பத்தில் முடிவெடுக்கப்படல் வேண்டுமென மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மஜிஸ்ரேட் முன்னிலையில் கொண்டுவரப்படுதல் வேண்டும் என்ற தேவைப்பாடு விடுதலை செய்யப்பட்ட நேரத்தில் காவல் கைதியைப் பாதுகாப்பதில் உதவுகின்றது.
மேலே கவனத்திலெடுக்கப்பட்ட சட்ட ஏற்பாடுகளில் சில சீர்திருத்தங்கள் இருந்த போதிலும் (18 ஆம் 19 ஆஉறுப்புரைகள் எச்ஆர்ரிஎவ் வருடாந்த அறிக்கையில் (பக் 13) சாதகமான மதிப்பீட்டைப் பெறுகின்றன. “மாற்றங்கள்" முன்னர் தடுப்புக் காவலில் வைக்கப்படும்போது தலைவிரித்தாடியதுஷ்பிரயோகங்கள்மீது தடைகளாக இருக்கின்றன என்பதில் ஐயமில்லை").
மேலும் மாற்றங்களின் தேவை தொடர்ந்தும் இருக்கின்றது. . உதாரணமாக மிகவும் நீண்டகாலமாக இருந்துவந்த வடக்குகிழக்கில் பொலிஸ் அல்லது இராணுவ தடுப்புக்காவலின் கீழ் வைத்திருக்கப்படுவது இன்றும் அனுமதிக்கப்படுகின்றது. அவசரகால ஒழுங்குவிதியுடன் இணங்கி ஒழுகாமை அல்லது அவற்றை எவ்விதத்திலேனும் மீறுவது குற்றமாகும் (36() ). இருப்பினும் சில விதிவிலக்குகளுக்கு அமைவாகச் சட்டமா அதிபரின் இணக்கத்துடன் அல்லது இணக்கத்தினால் மட்டுமே வழக்குத் தொடுக்கப்படலாம்.
(ஈ) 1993 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க அவசரகால ஒழுங்குவிதிகள்
(நானாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) கீழ் வேறுவிதமான தடுப்புக்காவல்
39 ஆம் ஒழுங்குவிதியின் கீழ் அவசரகால ஒழுங்குவிதியின் கீழான குற்றமொன்றை விசாரணை செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது ஆயுதப்படையினரின் உறுப்பினர்கள், பிரதிப் பொலிஸ்மா அதிபரின் எழுத்துமூலமான அங்கீகாரத்துடன் 48 மணித்தியாலங்களுக்கு ஒருவரைத் தமது காவலில் மீண்டும் போறுப்பேற்கலாம் நீக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் பொலிஸ் ஒருவரை7நாட்களுக்கு இடத்துஇடம்கொண்டுசெல்லலாம் ஆகவே இரு ஒரு முன்னேற்றமானதாகும். இருந்தும் இது இன்னும் போதுமானளவு பாதுகாப்பை வழங்கத் தவறியுள்ளது. இதை அடையவேண்டுமெனில் காவல் கைதியுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர், இச்சூழ்நிலைகளின் கீழ் உடன்செல்லுதல் வேண்டுமெனத் தேவைப்படுத்துதல் விரும்பத்தக்கது.

S1
குற்றம் சுமத்தப்படாமலோ அல்லது நீதிமன்ற விசாரணை நடைபெறாமலோ காவல் கைதிகளைப் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைப்பதற்கான முன்னைய ஒழுங்குவிதிகளின் சட்ட ஏற்பாடுகளையே 20 ஆம் ஒழுங்கு விதியும் தொடர்ந்து குறிப்பிடுகின்றது. அத்துடன், பயங்காரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்திருக்கப்படுபவர்களையும் இப்படியான புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைப்பதற்கு முதன் முறையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அக்கட்டளையில் புனர்வாழ்வுக்கான காலம் தெளிவாகக் குறிப்பிடப்படல் வேண்டும் எனத் தேவைப்படுத்தப்பட்டுள்ள போதிலும்( 20(1) புனர்வாழ்வுக்கான ஆகக் கூடிய காலவரையறை குறிப்பிடப்பட வில்லை. அல்லது புனர்வாழ்வு முகாமின் இருப்பிடமும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இதனால் இதுவிடயமாகத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பது கடினமானதாகும்.
சரணடையும் ஆட்கள் தொடர்பாக புதிய நடைமுறைகளை 22 ஆம் ஒழுங்கு விதி வகுக்கின்றது. இந்நடைமுறைகள் ஏற்கனவே இருந்த நிலையைச் சீர்ப்படுத்துகின்ற போதிலும் திருப்திகரமானவையாக அமையவில்லை. சரணடையும் எல்லோரும் தடுப்புக்காவலில் வைக்கப்படுதல் வேண்டுமெனத் தேவைப்படுகின்றன. இருந்தும் பலர் எவ்விதமாக குற்றங்களையும் செய்திருக்கமாட்டார்கள். அத்துடன் தடுப்புக் காவலில் ஆட்கள் வைக்கப்பட்டிருக்கும் கால எல்லை அளவுக்கதிகமாகவுள்ளது.
(உ) பயங்கரவாதத் தடைச்சட்டம்
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கம் பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம், திருத்தப்பட்டவாறான 10 ஆம் இலக்கப் பயங்கரவாதத் தடைச்சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) இவ்வறிக்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே அது நடைமுறையில் இருத்தல் வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருந்தது. இருப்பினும் அதன் சட்டப்பெயரில் தற்காலிகமான தன்மையைக் காட்டக்கூடியதாக இருந்தாலும் கூட அது தற்போது நிரந்தரமான சட்டமாகிவிட்டது. சாதாரணமாகப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதையும், பொதுமக்கள் விவாதிப்பதையும் தவிர்த்து அவசரகால ஒழுங்குவிதியினால் சட்டத்துக்குத் திருத்தத்தைக் கொண்டுவருவது எவ்விதத்திலும் விரும்பத்தக்கதல்ல. எழுத்துவடிவத்திலுள்ள சட்டமொன்றுக்கு அவசரகால ஒழுங்குவிதியினால் திருத்தம் செய்யப்படுதல் சாதாரணமாக எதிர்பாக்கக்ப்படுவது அல்ல என்பதால் இத்திருத்தம் அத்துடன் எந்தச் சட்டத்துக்குச் செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுதல் கடினமானதாகும். மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் 53 ஆம் ஒழுங்கு விதிகளில் W ஆம் பகுதியில் நானாவிதப் பிரிவுகளில் உள்ளதே தவிர அது இருக்கவேண்டிய இடம் என எதிர்பாக்கப்படும் காரண காரியத் தொடர்புடைய சோதனையிடல், கைது செய்தல், தடுத்து வைத்தல் என்பவற்றைப்பற்றிக் குறிப்பிடும் 11 ஆம் பாகத்தில் இல்லை. சட்டத்தின் கீழுள்ள ஆட்கள் என்ற சட்டத்தின் கீழ் “ ஏதாயினும் சட்ட விரோதமான நடவடிக்கையில் தொடர்புகொண்டவராக அல்லது அதில்

Page 31
52
அக்கறை கொண்ட அல்லது தொடர்பு கொண்டவராக அல்லது அதில் அக்கறை கொண்டுள்ளாரென நியாயமான அளவுக்குச் சந்தேகிப்பதற்கு” என்பது மேற்கொண்டு எவ்வித நியாயாதிக்கமும் அற்று விடுவதுடன், மிகவும் பரந்த அதிகாரங்களைப் பிரயோகம் செய்வதற்கும் உட்பட்டதாக அமைந்துவிடும் {பிரிவு(9)}, “சட்டவிரோதமான நடவடிக்கை” என்பது மிகவும் பரந்த வரைவிலக்கணத்தைப் பெற்றுக்கொள்ளும் ஒரு பொதுக்கருத்தாகும் என்பதுடன் ஒப்பிடுகையில் சிறு குற்றங்களைச் சேர்த்துக்கொள்கின்றது (பிரிவு 2). ஏற்கனவே நடைமுறையிலிருந்த சட்டமெதனையும் குற்றம் செய்த நேரத்தில் மீறாமலிருந்த போதிலும், சட்டமாக்கப்படுவதற்கு முன்னால் புரியப்பட்ட குற்றங்கள் கூட சட்ட ஏற்பாட்டின் நோக்கெல்லைக்குள் அமைகின்றன (பிரிவு 31). ஐசீசீபீஆர் உறுப்புரை- 5 கடந்தகாலத்தையும் உள்ளடக்கிச் சட்டமியற்றுதலை மீறுகின்றது.
இவ்வகையான குற்றங்களைச் செய்வதற்குத் தயார் செய்தல், உதவியாக இருத்தல், சதிசெய்தல், தூண்டுதல் போன்ற குற்றச் செயல்களுக்கு 3 ஆம் பிரிவில் தண்டனைக்கான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வகையான குற்றங்களைச் செய்தவர் தொடர்பாக அல்லது செய்வதற்குத் தயாராகும் ஆள் தொடர்பாகச் சில தகவல்களைக் கொடுக்கத் தவறியவர்களுக்கான தண்டனை 5 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உட்செல்லல், சோதனையிடல், கைப்பற்றுதல் தொடர்பான விபரங்கள் 6 ஆம் பிரிவில் தரப்பட்டுள்ளன. கைது செய்து தடுத்துவைப்பதற்குப் பொலிசாருக்குப் பரந்த அதிகாரத்தை வழங்குகின்றது.
ஏதேனும் சட்டவிரோதமான நடவடிக்கையில் தொடர்புள்ளவர் என அல்லது அதில் அக்கறை கொண்டுள்ள அல்லது அதனுடன் தொடர்புள்ளவர் என அல்லது அதில் அக்கறை கொண்டுள்ளவர் என நியாயமான அளவுக்குச் சந்தேகத்துக்குள்ளாகும் ஆளொருவரை பொலிஸ் சுப்பிரெண்டென் ஒருவர் அல்லது அவரால் எழுத்துமூலம் அதிகாரமளிக்கப்பட்டுள்ள உதவி பொலிஸ் பரிசோதகர் தரத்துக்குக் குறையாத தரத்திலுள்ள வேறு பொலிஸ் உத்தியோகத்தர், வேறு எந்தச் சட்டத்திலும் முரணாக எது எப்படியிருப்பினும், பிடியாணை இன்றிக் கைது செய்வதற்கு அதிகாரம் அளிக்கின்றது. இச்சட்டம் கட்டிடங்களையும் வாகனங்களையும் பரிசோதனை செய்வதற்கும் ஆவணங்களைச் கைப்பற்றுவற்கும் அடையாளம் காண்பதற்காக வேறு நடவடிக்கை எடுப்பதற்கும் அனுமதிக்கின்றது (பிரி 6,7).
6(1) ஆம் பிரிவின் கீழ் கைது செய்யப்படும் ஆள் ஒருவர், 9 ஆம் பிரிவின் கீழான தடுப்புக்காவல் கட்டளையொன்று அவருக்கெதிராகப் பிறப்பிக்காவிட்டால் 72 மணித்தியாலங்களுக்குள் மஜிஸ்ரேட் முன் கொண்டுவரப்படுதல் வேண்டும்.
பொலிஸ் சுப்பிரெண்டென் தரத்துக்குக் குறையாத பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் செய்யப்படும் அத்தகைய விண்ணப்பத்தின் மீது அவ்வாளின் விசாரணை முடியும் வரைக்கும் மஜிஸ்ரேட் அவரைத் தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கான

53
கட்டளையொன்றைப் பிறப்பிக்கலாம். தடுப்புக் காவலில் உள்ளவரை அதற்கு முன்னர் விடுத்தலுக்கான கட்டளையைப் பிறப்பிப்பதற்கு மஜிஸ்ரேட்டுக்கு நியாயாதிக்கம் எதுவும் இல்லை. சட்டமா அதிபரின் இணக்கத்துடனே இது செய்யப்படலாம்.
6 (1) ஆம் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட ஆள் ஒருவரை அல்லது 7 (1) 7 (2) ஆம் பிரிவுகளின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தால் 7(3) ஆம் பிரிவின் கீழ் விசாரணை செய்யும் நோக்கத்துக்காக, எந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும் அவ்வாளை இடத்துக்கு இடம் அழைத்து செல்லாம். அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பாகக் கவனத்தில் எடுத்தபடி, விசாரணை செய்பவர்களின் பாதுகாப்பில் காவல் கைதிகளை வைத்திருத்தல் அபாயமானதாகும். இடத்துக்கு இடம் கொண்டு செல்லப்படுவதனால் அவர்களின் இருப்பிடங்களைத் தெரிந்து கொள்வதில் சட்டத்தரணிகளுக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படுவதுடன் கொடூரமாக அவர்கள் நடாத்தப்டுவதற்கும் சூழ்நிலையை உருவாக்கும்.
அமைச்சர் ஒருவர், எவரேனும் ஆள் ஒருவர், சட்டவிரோதமான செயலுடன் தொடர்புகொண்டுள்ளார் அல்லது அக்கறை கொண்டுள்ளார் என நம்புவதற்கு அல்லது சந்தேகப்படுவதற்கு காரணம் இருக்கின்றவிடத்து, அவ்வாளை அவரால் தீர்மானிக்கப்படும் நிபந்தனைகளுக்கு அமைவாக, அவ்வாகையான இடத்தில் தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்குக் கட்டளையிடலாமென்பதுடன், காவல்கைதிகள் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு ஆகக் கூடியதாக 18 மாதங்களுக்குத் தடுப்புக் காவலில் எவ்விதமாக குற்றமும் சுமத்தப்படாமல் வைக்கப்படலாம். தடுப்புக் காவலின் மேல் காவல் கைதிகள் மஜிஸ்ரேட் முன்னர் கொண்டுவரப்படுதல் வேண்டுமென்ற தேவைப்பாடு 9 ஆம் பிரிவின் கீழ் செய்யப்படவில்லை.
10 ஆம் பிரிவு, 9 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளை இறுதியானதெனவும் சட்டநடவடிக்கை மூலமாகவோ வேறுவிதமாகவோ எந்த ஒரு நீதிமன்றத்திலோ அல்லது மன்றங்களிலோ கேள்விக்குட்படுத்தப்படலாகாது என்பதை எடுத்துக் கூறுகின்றது. 11 ஆம் பிரிவு சட்டத்தின் கீழ், சந்தேகப் பேர்வழிகளின் நடமாட்டம், சங்கங்களுடன் அமைப்புக்கள் அவர்களின் நடத்தை, அரசியல் நடவடிக்கை என்பனவற்றின் கட்டுப்பாடுகளுக்கு அமைந்தவையாக இருக்கலாம் என்பதைக் கூறுகின்றது.
சனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூன்று பேரைக் கொண்ட ஆலோசனைக் குழுவுக்கு அவர்களைப் பாதிக்கும் தடுப்புக்காவல் தொடர்பாக அல்லது கட்டுப்பாடுகள் தொடர்பாக மேன்முறையீடு செய்வதற்கான சட்ட ஏற்பாடு 13 ஆம் பிரிவில் செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அதிகாரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள காவல்கைதிகள் சாதாரண சிறைச்சாலைகளில் மட்டுமல்ல; இராணுவ முகாம்களிலும் பொலிஸ் நிலையங்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். குற்றம் சுமத்தப்பட்டு நீதிவிசாரணையை எதிர்பார்த்து, வழங்கு நடவடிக்கைகளின் போது அமைச்சின் செயலாளர் ஏதாவதொரு இடத்தில் ஏதாவது நிபந்தனைகளின் கீழ் தான் பணித்தபடி காவல்கைதி வைக்கப்படல் வேண்டுமெனக் கட்டளையிடலாம். (15A) அவசரகால

Page 32
54
ஒழுங்குவிதிகள் பற்றியவைதான் மேலே கருத்தில் எடுத்து ஆராயப்பட்டன. இவற்றுள் பல ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச தரங்களுக்கு முரண்பட்டவை. இந்த ஒழுங்கு விதிகள் அவசரகாலநிலையில் இல்லாமல் நிரந்தரச் சட்டங்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட காரணத்தினால் தனது சர்வதேசக் கடப்பாடுகளை அரசு மீறியமையினால் இச்சட்டவாக்கம் சினமூட்டுவதாக அமைந்துள்ளது.
(ஊ) நியாயமான வழக்கு நடவடிக்கையைப்
பாதிக்கும்அவசரகாலச் சட்ட ஏற்பாடுகள்
அவசரகால ( நானாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) 52 ஆம் ஒழுங்கு விதி, பொலிஸ் பகுப்பாய்வாளர் ஒருவரினால் சான்றுபடுத்தப்பட்ட அறிக்கையொன்றை, அந்தப் பகுப்பாய்வாளர் இல்லாவிடில் குறிப்பிட்ட விடயத்தின் உண்மையில் முடிவான சான்று என நீதிமன்றில் பயன்படுத்துவதை அங்கீகரிக்கின்றது. இந்நடைமுறை சாட்சியங்களைக் குறுக்கு விசாரணை செய்ய விரும்பும் உரிமையைக் குற்றவாளிக்கு மறுக்கின்றது.
ஏனைய சட்ட ஏற்பாடுகள், குற்றவியல் சட்டத்தின் சாதாரண பாதுகாப்புக்களை அகற்றிவிடுகின்றன. இவை 50 ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்டுள்ள வாக்கு மூலத்தைச் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளல் பற்றியவைாகும். ( திருத்தப்பட்டவாறான 1895 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க) சாட்சியங்கள் சட்டத்தில் எவ்வித வாக்குமூலமும் மஜிஸ்ரேட் முன்னிலையில் கொடுக்கப்பட்டாலன்றி, பொலிஸ் பாதுகாப்பில் இருக்கும்போது கொடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளலாகாது என்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறுபுறமாகப் பார்க்குமிடத்து50 ஆம் உறுப்புரையின் கீழ் பொலிஸ் உதவி சுப்பிரென்டென் தரத்துக்குக் குறைவான உத்தியோகத்தர் முன்னிலையில் கொடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் தவிர எந்த ஆளினது வழக்கு விசாரணையின் போதும் அவசரகால ஒழுங்கு விதியின் கீழான குற்றமொன்றுக்காகப் பொலிஸ் பாதுகாப்பில் கொடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலமாக இருந்தால், அவை மஜிஸ்ரேட் முன்னிலையில் கொடுக்கப்படாவிட்டாலும் சாட்சியத்தில் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டுமென ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (50 (1)).
இருப்பினும் காவல் கைதி சாட்சியங்கள் கட்டளைச் சட்டத்தின் 24 ஆம் பிரிவின் கீழ் பொருத்தமற்றவை என நீரூபிக்கும் பட்சத்தில் அவை சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டா. ( வாக்கு மூலங்கள் பொருத்தமற்றவை, உதாரணமாக; கட்டாயத்தின் பேரில் பெறப்பட்டவை).அதை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு காவல் கைதியினுடையதாகும் ( 50(3) இவ்வகையாக குற்றச்சாட்டை நிரூபிப்பது காவல் கைதிக்குச் சுலபமானதொன்று அல்ல.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் உதவிப் பொலிஸ் சுப்பிரெண்டென் தரத்துக்குக் குறையாத தரத்திலுள்ளவர்கள் முன்னிலையில் செய்யப்பட்டாலன்றி காவல்கைதியின்

SS
ஒப்புதல் வாக்குமூலம், பொருத்தமற்ற வாக்குமூலம் எனக் குற்றவாளி நிரூபிக்கக் கூடியதாக இருந்ததால் அன்றி காவல் கைதி ஒருவரினால் செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படும் (5 16) அவசரகால ஒழுங்குவிதியில். இவ்வகையான சட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதைக் கவனத்திலெடுத்தால், இவ்வகையான காவல்கைதியினால் இதே போன்ற குற்றச்சாட்டொன்றை நிரூபிப்பது சுலபமானதொன்று அல்ல.
அத்துடன் பதசட்டத்தின் 18 ஆம் பிரிவில் சாதாரண குற்றவியல் சட்டத்தின் பாதுகாப்புகள் மீது மேலும் வரையறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை சிலவகைப்பட்ட ஆவணங்களைச் சான்றுகளாக ஏற்றுக்கொள்வதுடன் தொடர்புள்ளன. சாட்சியங்களின் Upp6tituTLITGOT வாக்குமூலங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டிய நடைமுறைகளைப் பற்றியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(எ) கணக்குக் காட்டுவதற்கான தேவை
கட்டாயத்தின் மீது அல்லது விருப்பத்துக்கு மாறாக தலைமறைவாதல்கள் மீதான ஐ.நா. செயற்குழுவின் அறிக்கையின் படி :
தலைமறைவுகளின் குறிப்பிடத்தக்கதொன்றுக்கு சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்ளல் ஒருவேளை தனிப்பட்ட மிகவும் முக்கியமான காரணமாகப் பங்களிக்கின்றது. மனித உரிமைகள் மீறல்களைப் புரிபவர்கள், நீதிமன்றங்களின் முன் கொண்டுவரப்பட்டு அவர்களின் குற்றச் செயல்களுக்குப் பதிலளிக்கும்படி செய்யப்படாவிட்டால் மிகவும் பொறுப்பற்றவர்கள் ஆகிவிடுவார்கள். ( மனித உரிமைகள் மீதான ஐ.நா. ஆணைக் குழுவின் 47 வது மாநாட்டு அறிக்கை பக் 85 பந்தி 406).
பாரதூரமான மனித உரிமை மீறல்களைச் செய்தவர்கள் அரச பாதுகாப்புப்படை உறுப்பினர்களாக இருந்தாலும் சரி இல்லாவிடினும் சரி, அப்பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் குழுக்களின் உறுப்பினர்களாகட்டும், அல்லது வேறுவிதமாக உத்தியோக தோரணையில் செயற்படுபவர்களாகட்டும் எல்லோரும் தமது செயல்களுக்குப் பதிலளித்தே ஆகுதல் வேண்டும். தண்டனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற காரணம்தான் இக் கொடூரமான செயல்கள் தொடர வழிவகுக்கின்றன என்பது தெளிவாகின்றது. (ஆயுதப்படையினருக்கு மன்னிப்பு வழங்கல் உதாரணமாகும்).
பிறரின் விடுதலைக்கு அல்லது ஆயுளுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களைப் புரிபவர்களைத் தண்டித்தல் திறமையுடன் மனித உரிமைகளைப் பாதுகாத்தலின் தவிர்க்க முடியாத அம்சமாகும் (இக்காரணங்களுக்காகவே ஐ.நா. உடன்படிக்கையின் 21, 22 ஆம் உறுப்புரைகளின் கீழ் மேலதிகப் பிரகடணங்களைச் செய்யும்படி இலங்கை அரசு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.)

Page 33
56
மனித உரிமைகளின் பொறுப்புக்களை அரசாங்கங்கள் மதிக்க வேண்டுமெனில் சர்வதேச மனித உரிமைகள் ஒப்பந்தங்களில் அரசுகள் உறுதிசெய்தல் வேண்டும். பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதற்காக அரசுகள் மேற்கொள்ளவேண்டிய முறைகளைப்பற்றி ஆழ்ந்து சிந்தனை செய்தல் வேண்டும். சில உடன்படிக்கைகளில் இத்தேவைப்பாடுகள் வெளிப்படையாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையின் 12 ஆம் உறுப்புரையில், அங்கத்துவ நாடொன்று தனது நியாயாதிக்க எல்லைக்குள் அப்படியான செயல்கள் புரியப்பட்டதற்கான நியாயமான காரணங்களை உண்டென நம்பப்படுகின்றவிடத்து உடனடியாகவும், பட்சபாதமற்ற முறையிலும் சித்திரவதை கொடூரடிாக நடாத்தப்படுதல் என்பனவற்றுக்கான விசாரணைகளை மேற் கொள்ளல் வேண்டும்.
சிவில் மனித உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் 3 ஆம் உறுப்புரையில், இவ்வுடன்படிக்கையின் உறுப்பினர்கள்:
(ஆ) இங்கே அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு மனிதனின் உரிமைகள், சுதந்திரங்கள் மீறப்பட்டுள்ள போது எது எப்படியிருப்பினும் அவ்வகையான மீறல்கள் உத்தியோக தோரணையில் நடந்து கொள்பவர்களினால் செய்யப்பட்டாலும் பயனுறு மாற்று நடவடிக்கையைப் பெறுவார்;
(ஆ) அவ்விதமான நிவாரணமொன்றைக் கோரும் எந்த ஆளும், தகுதிவாய்ந்த நீதி நிர்வாக அல்லது சட்டவாக்க அதிகாரிகளினால் அல்லது வேறு தகுதி வாய்ந்த அதிகாரிகளினால் அவருடைய உரிமை மேலும் தீர்மானிக்கப்படும்.
(இ) அவ்வகையான நிவாரணங்கள் வழங்கப்பட்டவுடன் அவை நடை
முறைப்படுத்தப்படுவதை தகுதிவாய்ந்த அதிகாரிகள் உறுதி செய்தல் வேண்டும்.
பாரதூரமான மனித உரிமைகள் மீறுதல்களை அங்கத்துவ நாடுகள் விசாரணை செய்தலுக்கான தேவைப்பாட்டையும் அக்குற்றங்களைச் செய்தவர்கள், அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுதல் வேண்டுமென்பதை ஐ.நா. மனித உரிமைகள் குழு வலியுறுத்துகின்றது (ம.உத் அறிக்கை 37 ஐ.நா. ஜீ ஏ.ஓ.ஆர் குறைநிரப்பு இல 40 பின்னிணைப்பு W. பொதுக் கருத்து 7 (16) பந்தி 1-1992 ஐப் பார்க்கவும்) மனித உரிமைகள் பாரதூரமாக மீறப்படுதல்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுதல் வேண்டுமென ஐ.நா. விசேட தொடர் பதிகாரிகளும் விசேட பிரதிநிதிகளும் அரசாங்கங்களை மீண்டும் மீண்டும் கேட்டுள்ளார்கள். அத்துடன் இந்த அறிவுறுத்தல்கள் ஐ.நா. பொதுக் சபைத் தீர்மானங்களாலும் மன்த உரிமைகள் ஆணைக்குழுவினாலும் உறுதிசெய்யப்பட்டன. 1993 ஆம் ஆண்டின் வியன்னா நகரில் நடைபெற்ற ஐ.நா. உலக மாநாட்டின் விதப்புரைகள்:
பாரதூரமான மனித உரிமைகள் மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு இடமளிக்கும் சட்டவாக்கங்களை நாடுகள் ஒழித்துக் கட்டுதல்

57
வேண்டும் என்பதுடன் அப்படியான மீறல்களுக்குச் சட்டப்படி வழக்குத் தொகுப்பதன் மூலம் சட்டம் ஒழுங்கான முறையில் நடைபெறுவதற்கு ஆணித்தரமான அடித்தளத்தை அமைத்தலும் வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக இலங்கை அரசாங்கம் தனது சர்வதேசக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக மனித உரிமைகளின் சட்ட ஏற்பாடுகளைச் செயல்படுத்துவதற்கான தேவையையும் அரசாங்க உத்தியோகத்தர்களே இவற்றுக்குக் கணக்குக் காட்டும்படி கேட்கப்படுவார்களென்பதையும் தாம் எற்றுக் கொண்டுள்ளதாகக் கூறுகின்றது. இலங்கையில் அண்மைக் காலத்தில் நிலவிய சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளக்கூடிய நிலையைப் பற்றி தேசிய சர்வதேச அமைப்புக்கள் எழுப்பிய கண்டனக் குரல்களுக்கு கவனம் செலுத்துவதற்கு பலவகையான நடவடிக்கைகளைத் இலங்கை அரசு எடுத்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. (ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் கூட்டம் ஜெனீவா)
அவசரகால ஒழுங்குவிதிகளை முதலில் நோக்கில்: அது முன்னிருந்த அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) ஒழுங்குவிதிகளைத் தடை செய்கின்றது. 71 ஆம் ஒழுங்குவிதி பாராட்டப்படத் தக்கது ( நடைமுறையில் ஒழுங்கு விதியின் செயற்பாட்டை ஏற்கனவே உண்மையில் நீதிமன்ற நடவடிக்கைகள் தடை செய்தன). சட்டமா அதிபரின் சம்மதத்தின் பேரில் அல்லது அவரால் தொடங்கப்பட்டால் ஒழிய எவ்வித சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கையும் அவசரகால சட்ட ஏற்பாடுகளின் கீழ் நல்லெண்ணத்துடன் புரியப்பட்ட எவ்வித செயல் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படல் ஆகாது என 17 ஆம் ஒழுங்கு விதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் கணக்குக் காட்டாமலிருப்பதற்கான சூழ்நிலைக்குச் சாதகமாக பிற சட்ட ஏற்பாடுகள் தொடர்ந்தும் நடை முறையிலுள்ளன. அச்சட்ட ஏற்பாடுகளும் ஒழித்துக் கட்டப்படுதல் வேண்டும். பாதுகாப்புப்படை உறுப்பினர்களால் நேர்ந்த மரணம் தொடர்பாகப் பட்சபாதமற்ற விசாரணையை உறுதி செய்வதற்கு 45 ஆம் 46 ஆம் உறுப்புரைகளிலுள்ள விசாரணை நடைமுறைகள் மரணவிசாரணைகள் பற்றியவை பற்றாக்குறைவானவையாகவே உள்ளன. உண்மையில் சட்டவிரோதமான கொலைகளை மறைப்பதற்கு அவை பயன்படுத்தப்படலாம். இந்த ஒழுங்கு விதிகள் குறைந்தபட்சம் தெற்கிலாவது நீக்கப்பட்டு சாதார்ண விசாரணை நடைமுறைகள் கொண்டுவரப்படாமலிருப்பது ஏனென்பதை புரிந்து கொள்ளுதல் கடினமானதாகும். சிலகாலமாகத் தேசிய, சர்வதேச அமைப்புக்கள் இவற்றை விதப்புரை செய்துள்ளன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பொறுத்தவரையில் 26 ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டவாறு மனித உரிமைகளை மீறுபவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்துக்
கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இச்சட்டத்தின் கீழ் நல்லெண்ணத்துடன் செய்யப்பட்ட அல்லது வழிகாட்டல்

Page 34
58
வழங்கப்பட்ட அல்லது கட்டளை பிறப்பிக்கப்பட்ட அல்லது கட்டளையின் பிரகாரம் செய்யப்பட்டதாக கருதப்பட்ட அல்லது செய்யப்பட்ட அல்லது செய்ததாகக் கருதப்பட்ட செயல்களுக்காக ஆளொருவருக்கு அல்லது உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராகக் குற்றவியல் அல்லது சிவில் நடவடிக்கைககள் அல்லது எவ்வித வழக்குத் தொடரலும் ஆகாது. سمبر
கடந்த 5 ஆண்டுகளையும் உள்ளடக்குவதற்காக இதன் கால வரையறை நீடிக்கப்பட்டுள்ள போதிலும் இன்னுமொரு சட்டம் இருப்பதால் பொதுவான கணக்குக்காட்டலை நிறுவமுடியாடில் இருக்கின்றது. அச்சட்டம் சட்ட விலக்குரிமையாகும் ( திருத்தப்பட்டவாறான 1982 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்கச் சட்டம்) சட்டரீதியாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அமைச்சர் ஒருவரால் பிரதி அமைச்சர் ஒருவரால் அல்லது பகிரங்க அலுவலர் ஒருவரால் புரியப்பட்ட தவறொன்றுக்காக சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் நோக்கத்துக்காக எவ்விதச் சட்ட நடவடிக்கையும் எடுத்தல் ஆகாது.
அவசரகால சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமை கைது செய்தல், தடுத்து வைத்தல் தொடர்பாகக் கண்காணிப்பதற்கெனப் பல சபைகளையும் பலதரப்பட்ட கொடூரங்கள் சம்பந்தமாக விசாரணை செய்வதற்காகப் பல ஆணைக்குழுக்களை நியமித்ததுமே கணக்குக் காட்டல் தொடர்பாக இலங்கை அரசு எடுத்த உருப்படியான நடவடிக்கையாகும். இது ஊக்கமளிக்கக் கூடிய ஒரு செயலாகும். பலசந்தர்ப்பங்களில் இவ்வமைப்புக்கள் திருப்தியற்றவையாகவே காணப்பட்டன. உதாரணமாக உரிமைகள் படுமோசமாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காலத்தை விசாரணை செய்வதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட வில்லை. தேங்கிக்கிடக்கும் ஆயிரக் கணக்கான வழக்குகளை விசாரணை செய்வதற்குப் பணியாட்களின் பற்றாக்குறையும் நடைமுறையில் உள்ள சிக்கல்களும் இவற்றைச் கவனித்திலெடுக்காமல் தடைசெய்கின்றன.
மனித உரிமைகள் செயலணி ஒன்றுதான் பயனுள்ள பணியை ஆற்றியுள்ளது. 1991 ஆவணி 23 ஆம் திகதி இது நிறுவப்பட்டது. 1973 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க இலங்கை நிறுவகச் சட்டத்தினாலும் 1991 ஆவணி 10, 1991 ஆடி 31 ஆம் தேதிய அவசரகால ஒழுங்கு விதியினாலும் இது அங்கீகரிக்கப்பட்டது.
செயலனியின் பணிகள் இவ்வறிக்கையில் குறிப்பிடப்படாமல் விடப்பட்டதுமன்றி மீண்டும் இங்கே குறிப்பிடப்படவில்லை. நீதி மன்றின் கட்டளையின் மீது காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் நீங்கலாக காவல் கைதிகளாக உள்ளவர்கள்ன் அடிப்படை உரிமைகளைக் கண்காணிப்பதே இதன் பிரதான பணியாகும். காவலில் வைக்கப்பட்டவர்கள் தொடர்பாகச் சரியான விரிவான பதிவேடொன்றைத் தயாரித்தலும் இதன் பணியாகும் என அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உத்தியோக பூர்வமான தடுப்பு முகாம்களுக்குச் சென்று காவல்கைதிகளை

59
இச்செயலனி பார்வையிடுகின்றது. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடங்களிலுள்ள விசாரணை நிலையங்களிலுள்ள அல்லது இராணுவக் காவல் அரண்களிலுள்ள அல்லது அவை போன்ற தற்காலிக உத்தியோக பூர்வமற்ற இடங்களிலுள்ள காவல்கைதிகளை அல்லது அவ்விடங்களிலிருந்து இடமாற்றம் செய்ய்ப்பட்டவர்களைப் பற்றிய விபரங்களைச் சேகரிக்கக்கூடிய ஒழுங்கேற்பாடு செயலனிக்கு இல்லை. இவ்விடங்களில்தான் பெரும்பாலும் சித்திரவதை ஏற்படுகின்றபடியால் மனித உரிமைகளின் செயலணி வளங்களும் ஏற்பாடுகளும் இவ்வகையான தடுப்புமுகாம்களையும் உள்ளடக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படின் வரவேற்கத்தக்கதாகும்.
ம.உ.செ.அணி பணியாற்றும் இடங்களில் ( கிழக்கிலும் தெற்கிலும்) அதன் பிராந்திய அலுவலகங்கள் உள்ளன என்பதுடன் கொழும்பைத் தலைமை அலுவலகமாகத் கொண்டு அதன் தலைவர் முகாம்களைச் சென்று பார்வையிடுகின்றார்.
காவல் கைதிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செயலணி உத்தியோகத்தர்கள் முதலில் சென்று பார்வையிடுவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளாமலே சென்று பார்வையிடுகின்றார்கள். போட்டியொன்றின் போது நீதியரசர் சொய்சா முன்னறிவித்தலின்றிச் சென்று பார்வையிடுவதால் பயன் ஏற்பட்டுள்ள தென்றும், காவல் கைதிகள் நடாத்தப்படும் முறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள தென்றும், காவல் கைதிகளைத் தொடர்ந்தும் தவறாக நடாத்தப்படுவது இன்னும் தொடர்கின்றதென்றும் குறிப்பிட்டுள்ளார். செயலணி உத்தியோகத்தர்கள் எல்லா நேரத்திலும் எல்லா இடங்களிலும் பார்வையிட இயலாது. நிதி பற்றாக்குறை காரணமாக நிதி திரட்டுவதில் தலைவருடைய நேரத்தின் பெரும்பகுதி செலவழிகின்றது. இலங்கையல்லாத மூலங்களிலிருந்து நிதியுதவி கிடைக்கின்றது. (அவுஸ்திரேலியா ஸ்தானிகர், பிரித்தானியா ஸ்தானிகர், றோயல் நோர்வே தூதுவர், பேட்டி தலைவர்), பாதுக்காப்புப்படையினர் பொறுப்பேற்றல் வேண்டும் என்பதற்கான நடவடிக்கை ாடுப்பதில் அரசு தவறியமையையிட்டுத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மனித உரிமைகளை மீறுபவர்களுக்குகெதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதை வெளிப்படையாகக் காண்பிப்பதற்கு உண்மையான விருப்பம் இல்லாவிடில் அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்ந்தும் இருக்கும் என்பது தவிர்க்க முடியாததாகும். அப்படியான விருப்பம் இருப்பதாக இதுவரை வெளிக்காட்டப்படவில்லை.
கணக்குக் காட்டுதல் பிரச்சினை தொடர்பாக அண்மையில் நிறுவப்பட்ட இன்னோர் அமைப்பு விருப்பத்துக்கு மாறாகக் கடத்தப்படும் ஆட்கள் பற்றிய சனாதிபதி விசாரணை ஆைைணக்குழுவாகும். இனம் தெரியாதவர்களினால் ஆட்கள் அவர்களின் இருப்பிடங்களிலிருந்து விருப்பத்துக்கு மாறாகத் கடத்திச் செல்லப்படுவதுடன் அவர்களின் இருப்பிடங்களும் தெரிவதில்லை என்ற குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்கான ஆணையுடன் இது நியமிக்கப்பட்டுள்ளது. 1991ஆம் ஆண்டு தை மாதம் 11 ஆம் தேதி 644/27 ஆம் இலக்க அவசரகால ஒழுங்கு விதியினால் இது நிறுவப்பட்டது. 1993 இல் அதன் நியமனம் 1995 ஆவணி வரை நீடிக்கப்பட்டது. 1988/

Page 35
60
1989 ஆம் ஆண்டுகளில் தான் பலர் தலைமறைவாகினர். 1991 தை 11 ஆம் தேதிக்குப் பின்னர் கடத்தப்பட்ட ஆட்களைப்பற்றியே குழு விசாரணை செய்வதற்கான ஆணை வழங்கப்பட்டமை கவலைக்குரியது. 1991 தைக்கு முன்னர் தலைமறைவானவர்களைப் பற்றியும் விசாரணை செய்தல் வேண்டும் எனத் தேசிய, சர்வதேச அமைப்புக்கள் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்தபோதிலும் இப்படிச் செய்யப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆமை வேகத்தில் நடைபெற்றபடியால் ஆணைக்குழுவினால் ஏற்பட்ட பயன் எதுவுமில்லை. 1991 ஆவணி மாதத்தில் பகிரங்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் ஆணைக்குட்படுத்தப்பட்ட 800 க்கு அதிகமான வழக்குகளில் 50 வழக்கு விசாரணைகளே பூர்த்தி அடைந்துள்ளன. இவற்றுள்ளும் 2 வழக்குகளே சட்டமா அதிபருக்கு வழக்குத் தொடுப்பதற்காகத் தலைவரினால் ஆற்றுப்படுத்தப்பட்டன. எந்தவொரு வழக்கும் இதுவரை விசாரணைக்கு வந்ததாகத் தெரியவில்லை. 1993 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆணைக்குழு அது நியமிக்கப்பட்ட காலம் தொடக்கம் காலத்துக்குக் காலம் 20 அறிக்கைகளைச் சனாதிபதிக்குச் சமர்ப்பித்ததுடன் 1993 இறுதியில் எதுவும் வெளியிடப்படவில்லை.
1993 ஐப்பசியில் சிரேட்ட பொலிஸ் உத்தியோகத்தரைத் தலைவராகக் கொண்ட பிரிவொன்று அமைக்கப்பட்டது. இது நிருவாக ரீதியான கட்டளை மூலம் அமைக்கப்பட்டது. பலவந்தமாக அல்லது தன்னிச்சையின்றித் தலைமறைவாகும் ஆட்களைப் பற்றித் தெளிவுபடுத்தப்படல் வேண்டுமென்ற ஐ.நா. செயற்குழுவின் வேண்டுகோளை விசாரணை செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. 1991 தை முதல் 1983 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட சம்பவங்களைப் பற்றி இப்பிரிவு விசாரணை செய்யத் தொடங்கியுள்ளதாக அரசு அறிவித்தது. இப்படிச் செய்வதால் முன்னைய காலப்பகுதியும் உள்ளடக்கப்படுகின்றது. இப்பிரிவினால் எவ்விதமான பயனும் ஏற்பட வில்லை என்பது நிரூபணமானாலும் கூட இது ஒரு வரவேற்கத்தக்க படியாகும். தற்போது 95 g. 60 L.L விசாரணை நடைமுறைகள் திருப்திகரமற்றவையாதலின் அதன் செயல் முறைகள் இன்னும் சீர்ப்படுதல் வேண்டும். அத்துடன் பொலிசாரினால் முன்வைக்கப்படும் சான்றுகளே பரிசீலனை செய்யப்படும். (மனித உரிமைகள் தொடர்பான பொழிப்பு பெப்பிரவரி 94.பக் 8).
மேலும் முன்னர் குறிப்பிடப்பட்டது போன்று பலவகைப்பட்ட அமைப்புக்களின் விதப்புரைகளை மேற்கொள்ளப் போவதாக அரசு அறிவித்தது. மனித உரிமைகளை மீதும் ஆட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அரசு உறுதியளித்தது. இவ்வுறுதிகளும் வரவேற்கத் தக்கன. கடந்தகாலங்களில் இவ்வுறுதிகளெல்லாம் எழுத்தளவில் அல்லது சொல்லளவில் மட்டுமே இருந்தன என்பது கவலைக்கிடமானது. இவை செயற்படுத்தப்படவே இல்லை. மேலெழுந்த கண்ணோட்டத்தில் சில உதாரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சில உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

61
கட்டாயத்தின் மீது அல்லது தன்னிச்சையின்றித் தலைமறைவாதல் மீதான ஐ.நா செயற் குழுவின் இரண்டாவது அறிக்கையில், ( 1993 பெப் வெளியிடப்பட்டது) 1991 ஆம் ஆண்டில் குழுவின் விதப்புரைகளை அரசு ஏற்றுக் கொண்ட போதிலும், அவற்றுள் சில விதப்புரைகளே செயற்படுத்தப்பட்டன.
1990 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்திலுள்ள அகதி முகாமிலிருந்த 158 பேரின் தலைமறைவுக்குப் பொறுப்பானவர்கள் எனக் கருதப்படும் 4 இராணுவ உத்தியோகத்தர்களை மனித உரிமைகள் செயலணி தனது 1993 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் பெயர்குறிப்பிட்டு அறிக்கையிட்டது. இச்சம்பவம் மிருகத்தனமாகவும், கோழைத்தனமாகவும், கொடூரமாகவும் இழைக்கப்பட்ட குற்றம்; இதற்கு முறையான விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும் ( பக் 24) எனத் தலைவர் அறிக்கையிட்டிருந்தும், இவ்வறிக்கையைத் தயாரித்தவர்களுக்குத் தெரிந்தவரையில், 1993 ஆம் ஆண்டின் இறுதியிலும் கூட 4 உத்தியோகத்தர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எம்பிலிப்பிட்டியாவில் 32 பாடசாலை மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு செவன முகாமில் தடுத்துவைக்கப்பட்டு 1989 இல் தலைமறைவானார்கள். பல ஆட்கொணர்வுமனுக்கள் முடிவுறாமலே இருக்கின்றன. தலைமறைவுடன் தொடர்புள்ள இராணுவத்தினரை செயலணி அடையாளம் கண்டுள்ளது. நேரில் கண்ட சாட்சியங்கள் உள்ளன. பொலிஸ் விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது இருந்தும் கூட பொறுப்பானவர்களாக இருக்கக்கூடும் எனக் கருதப்படும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விசாரணை செய்யப்படவுமில்லை குற்றம் சாட்டப்படவுமில்லை தொடர்ந்தும் தமது கடமைகளைச் செய்கின்றார்கள் (செயலணி வரு, அறி பக் 28 ஐ.நா. செயற்குழு அறிக்கை இ,சீனன் 4/1994/26 பந்தி 442).
சகல கைது செய்யப்படுதல்களைப்பற்றிச் செயலணிக்குத் தெரியப்படுத்துவதுடன் காவல் கைதிகளின் குடும்பங்களுக்கு பற்றுச் சீட்டுகள் வழங்கப்படல் வேண்டுமென்ற புதிதாகத் திருத்தப்பட்ட அவசரகால ஒழுங்குவிதிகளின் தேவைப்பாட்டைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மதிப்பதற்கு அடிக்கடி தவறி விடுகின்றனர் (செயலணி வரு, அறி. பின்னிணைப்பு 8).
மனித உரிமைகள் மீறல்களுக்குத் தமது பதில்களைக் கூறவேண்டும் எனப் பாதுகாப்புப்படையினரை உணரச் செய்வதற்கு அரசின் பொறுப்புப்பற்றி கவலை பிற சம்பவங்களினால் அதிகரிக்கின்றது. சில உதாரணங்கள் அடுத்த பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளன. ஒன்றுமட்டும் இங்கு தரப்பட்டுள்ளது.
காவல் கைதிகளின் உறவினர்களுக்குப் பற்றுச்சீட்டி வழங்கப்படுதல் வேண்டுமென்ற புதிய அவசரகால ஒழுக்குவிதியின் தேவைப்பாட்டைக் கடைப்பிடிக்கப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பெரும்பாலும் தவறிவிடுகின்றனர். இதுபற்றிச் செயலணிக்குத்

Page 36
62
தெரியப்படுத்தல் வேண்டுமென்பதையும் தவறவிடுகின்றனர்.
மனித உரிமைகள் மீறப்படுவதற்குப் பொறுப்பானவர்கள் பாதுகாப்புப் படை உறுப்பினர்களே என்பதை செய்வதற்கான அரசின் பொறுப்பை, சில சம்பவங்கள் அதிகரிக்கின்றன
1992 பங்குனி 12 ஆந்தேதி முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரேமதாச உடுகம்பொல, “ கறுப்புப் பூனைகள்” என்ற மரணப்படைகளை, ஆட்சியிலிருந்து ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் உபயோகித்து நூற்றுக்கணக்கான எதிராளிகளைக் கொலை செய்ததாகவும், தேர்தல்களில் மோசடி செய்ததாகவும் ஒரு சத்தியக் கடதாசி மூலம் குற்றம் சுமத்தியிருக்கின்றார். 1988/1989 ஆண்டுகளில் அநேக பொலிஸ், இராணுவ அதிகாரிகளினால் அநேகமான கொலைகளும், ஆட்கடத்தல்களும் செய்யப்பட்டுள்ளன என அவர் அதில் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார். இக்குற்றச் சாட்டுக்களைத் தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு சித்திரை மாதம் அரசாங்கத்திற்க எதிரான காரியங்களில் ஈடுபட்டார் என உடுகம்பலவுக்கு எதிராக அவரைக் கைது செய்யும்படி பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்து, நாட்டை விட்டு வெளியேறினார். அதனால் நீதிமன்றம் ஆணையிட்ட போது அவர் நீதிமன்றத்தின் முன்னால் ஆஜராகவில்லை. இந்த சத்திய கடதாசி எவ்விதி புலனாய்வுக்கும் உட்படுத்தப்படவில்லை.
1988 ஆம் ஆண்டு விஜேதாச லியனாராச்சி என்ற சட்டத்தரணியை தாக்கி மரணம் விளைவித்தது தொடர்பாக உடுகம்பல அதில் ஈடுபட்டதாக கூறப்பட்டதோடு அவரின் உடல் காயங்களுடன் பொலிஸ் பாதுகாப்பிலிருந்து பெறப்பட்டது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 3 பொலிஸ் அதிகாரிகளுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டவிரோதமாக நடந்து கொண்டதற்காக பொலிஸ் அதிகாரிகள் குற்றவாளிகளாகக் காணப்பட்டதாகவும், கொலை செய்ததற்காக அல்லவென ஊர்ஜிதம் செய்தது.
மேலும் கருத்து தெரிவித்த நீதிமன்றம் உடுகம்பலவின் சாட்சியங்களை நம்பாமல் புலனாய்வு செய்யும்படி பண்ரித்தது. இதற்குமாறாக எவ்வித புலன் விசாரணையும் செய்யப்படாமல், எவ்வித குற்றப்பத்திரிகையும் முன்வைக்கப்படாமல் இருந்தது. நாட்டை விட்டு வெளியேறியிருந்த உடுகம்பல 1993 இல் நாடு திரும்பிய போது அவருக்கெதிரா எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடுகம்பல நாடு திரும்பி3 வாரங்களில்தான் ஐ.தே.க எதிராகக் கொடுத்த சத்தியக்கடதாசியை வாபஸ் பெறுவதாக இன்னுமொரு சத்தியக்கடதாசியைக் கொடுத்தார். சட்டமா அதிபர் அவருக்கெதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்தார். அதைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு ஆடி 29 ஆந் தேதி உடுகம்பல இலங்கை துறைமுகக் அதிகார சபையின் உப தலைவராக நியமிக்கப்பட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய

63
சம்பவங்கள் இருக்கின்றன. அவற்றில் சில வருமாறு:
மஹர சிறைச்சாலையில் கைதிகளாக இருந்த ஐந்து பேரின் மரணம் தொடர்பாக எட்டு சிறைச்சாலை அதிகாரிகள் குற்றம் சுமத்தப்பட வேண்டும். இவ்வழக்குகள் விசாரிக்கப்படாமல் இருக்கின்றன.
ஜே.வி. பி. கொந்தளிப்பு காலத்தில் 3 பேரைத்தாக்கி கொலைசெய்தமைக்காக 2 பொலிஸ் அதிகாரிகளை மாத்தறை உயர்நீதி மன்றம் குற்றவாளிகளாகக் கண்டது. அவர்களுக்க 45 வருட கடுழியச் சிறைத்தண்டனையும் 3000 ரூபா அபராதமும் விதித்தது ( நிலை அறிவிப்பு அறிக்கை, 1993 அக்டோபர்) 1992 ஆவணி மாதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 35 பொதுமக்களை படுகொலை செய்தது தொடர்பாக 23 இராணுவ வீரர்களை மட்டக்களப்பு நீதிமன்றத்தின் முன்னால் ஆஜராக்க வேண்டியிருந்தது. இவ்வழக்கு சிங்கள மாவட்டமொன்றுக்கு மாற்றப்பட்டது. தமிழ் சாட்சிகள் இம்மாவட்டத்திற்குச் செல்லப் பயப்பட்டனர்.
1989 ஆம் ஆண்டு தடுப்பு முகாம்களை மதிப்பீடு செய்யும் அதிகாரத்தை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்ததைத் தொடர்ந்து பொலிஸ் நிலையங்களிலும், இராணுவ முகாம்களிலும் ஆட்கடத்தல் என்பது குறிப்பிடத்தக்களவு குறைந்தது. இது மனித உரிமைகள் பணிப்படையாகவே மேலே குறிப்பிடப்பட்டது.
(v) ஆட்கொணர்வு விண்ணப்பங்களும் அடிப்படை
உரிமை வழக்குகளும்
மேற்குறிப்பிட்டபடி மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் நம்பிக்கை இருக்குமானால், அரசாங்கப் பிரிவுகளாலேயே தனிப்பட்டவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமையைக் காணக்கூடியதாக இருக்கிறது. எனவே, இருபகுதிகளிலும் உடனடியாக ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் ( விசேட சந்தர்ப்பங்களில் அதற்கு மாற்று வழி அவசியமாகும்). வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் கவனத்தில் எடுத்துகொள்ளப்பட வேண்டும். இலங்ண்கயில் அவசரகால சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் அவர்களோ (அல்லது அவர்கள் சார்பாக மற்றவர்களோ மேன்முறையீட்டு நீதிமன்றத்திலோ அல்லது உயர் நீதிமன்றத்திலோ தங்களை தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்தான சட்ட பூர்வ காரணங்களைக் கேட்கவும், ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்யவும் முடியும்.
உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கான வசதி அரசியலமைப்பின் 126 ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . i ஆம் அல்லது iv ஆம் அத்தியாயத்தினால் வெளிப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட யாதேனும் அடிப்படை உரிமை அல்லது மொழியுரிமை, நிறைவேற்று அல்லது நிருவாக நடவடிக்கைகளினால் மீறப்பட்டது

Page 37
64
அல்லது மீறப்படவுள்ளது தொடர்பான எவ்வித குற்றச்சாட்டையும் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்கான தனியானதும் பிரத்தியேகமானதுமான நியாயாதிக்கத்தை உயர் நீதி மன்றம் கொண்டுள்ளது.
126 வது உறுப்புரையின் கீழ் இம்மீறல்கள் மீது முறைப்பாடு செய்வதற்கான ஒரு மாத கால வரையறை குறித்த தனது விளக்கத்தை நீதிமன்றம் தளர்த்தியுள்ளதுடன் சட்டவிரோதமான கைது செய்தல், தடுத்துவைத்தல் அல்லது சித்திரவதை அகியவற்றைப் பொறுத்தவரை தாம் கடுமை குறைந்த போக்கொன்றைக் கடைப்பிடிப்பதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது. சிறிவர்தன எதிர் ரொட்ரிகோ வழக்கில் (1986) 1 Sri L.R. 384 மனுதாரர் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்ட திகதியிலிருந்து நீதிமன்றத்திற்கு மனு செய்வதற்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்குள் காலம் விரைந்தோடும் என்று கருதப்பட்டது ( அரசாங்க சேவையில் ஒரு கோரிக்கை தொடர்பான கால எல்லையின் கடுமையான விளக்கத்திற்கு கமெதிகே எதிர் சிறிவர்தன (1988), Sri L.R. 384 ஐப் பார்க்க).
1993 இல் தடுத்து வைக்கப்பட்டவர்களின் சார்பில் 543 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு 343 அவ்வருடத்தில் கவனிக்கப்பட்டன; ஏனையவை முடிவுறாதுள்ளன. சிலவற்றுள் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் விடுவிக்கப் படவேண்டுமென ஆணையிடப்பட்டது. உதாரணமாக, 2 வருடங்களுக்கு மேலாக தடுப்புகாவலில் இருந்த பின்னர் 1993 பங்குனி மாதம் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் பவில் அந்தோனியின் விடயத்தில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது. பொதுவாக தடுத்துவைக்கப்பட்டவர் சிலரே விடுதலை பெறுகிறார்கள். காணாமற் போனவர்கள் தொடர்பாக 1993 இல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் பலனேதும் தரவில்லை ( எச்.ஆர்ரிஎஃப் தலைவருடன் பேட்டி),
தடுத்து வைக்கப்பட்டிருப்போரிடமிருந்து தாம் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானதெனக்கோரிப் பெறப்பட்ட கடிதங்களுக்கு கடந்த சில வருடங்களில் கடிதமூல நியாயாதிக்கமொன்றைப் பிரயோகிக்க உயர் நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது. ஒரு கடிதமானது மனுவொன்றாகவே கருதப்படுகிறது. தமக்கு வரும் கடிதங்களை உயர் நீதிமன்றம் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அனுப்பி வைக்கிறது. இச்சங்கம் அவற்றை மேலும் ஆராய்ந்து சட்ட விரோதத் தன்மையொன்று இருக்கக் காணப்படின், நீதிமன்றத்தில் கோரிக்கையொன்றை தாக்கல் செய்கிறது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான (541) விசேட வழக்குகள் இவ்வருடத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இத்தகைய 1989 வழக்குகள் (இவ்வெண்ணிக்கை முந்தைய ஆண்டுகளில் தீர்க்கப்படாதிருந்து 1993 இல் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளையும் உள்ளடக்கும்) விசாரிக்கப்பட்டன. அடிக்கடி ஒன்றுக்கு மேற்பட்ட முறைப்பாட்டாளர்கள் இக் கடிதங்களில் கைச்சாத்திடுகிறார்கள். 1990 லிருந்து 5500 பேர் அளவில் இவ்விதம் நிவாரணம்

65
கோரியுள்ளனரென மதிப்பிடப்படுகிறது. மேலும் 486 வழமையான அடிப்படை உரிமைகள் வழக்குகளும் 1993 தாக்கல் செய்யப்பட்டன. இவற்றுள் 226 வழக்குகள் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரானவையாகும். 757 வழக்குகள் விசாரிக்கப்பட்டன (உயர் நீதிமன்ற பதிவேட்டு அறிக்கை 1/3/94).
வழக்கு என்றுமே தீர்ப்பளிக்கப்படாமலே, உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்டிருத்தல், நிபந்தனையற்ற விடுதலை, குறுகியகாலப் புனர்வாழ்வைத் தொடர்ந்து விடுதலை போன்ற பல்வேறு நிவாரணங்களை காவல்கைதிகள் பெற்றுக் கொள்வதில் உதவியளித்துள்ளது. பிற சந்தர்ப்பங்களில் சட்டத்தரணிகளை நாடுதவற்கான உரிமை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இல்லாவிடில் காவல் கைதிகள் மீது குற்றம் சுமத்தப்படலாம். சிறைத்தண்டனை விதிக்கப்படாதிருக்கும் பட்சத்தில் அவள்/அவன் ஒன்றில் பிணையில் செல்வதற்கு உரித்துடையவராகிறான்/ள் அல்லது விடுதலை செய்யப்படுகிறான்/ள் (உயர்நீதிமன்றப் பதிவாளரின் அறிக்கை 1/3/94).
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பது சட்டமுறையானதா அல்லது சட்டமுரணானதா என்பதை ஒவ்வொன்றாக விசாரணை செய்வதற்கு ஆரம்பிக்கும்படி மனித உரிமைகள் செயலணியைப்பணித்து, மேல் நீதிமன்றம் 1993மாசி 26 ஆம் தேதி கட்டளையிட்டது. இதுவரை 70 பேரின் தடுப்புக்காவல் தொடர்பாக மனித உரிமைகள் செயலனி மேல் நீதிமன்றுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இக்காவல் கைதிகளில் 60 பேருக்கு அதிகமானோர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் ( ம.உ.செ.அ. தலைவருடன் பேட்டி). மனித உரிமைகள் செயலணி சம்பந்தப்பட்ட விடத்து, நிறைவேற்று அதிகாரிகள், மேல்நீதிமன்றின் துணையை நாடவேண்டிய அவசியமின்றித் தடுப்புக்காவல் கட்டளையை மீளாய்வு செய்யலாம் ( மேல்நீதிமன்றப் பதிவாளரின் அறிக்கை 1/3/94).
வழக்குகளுக்கு ஒருபோது தீர்ப்புகள் வழங்கப்படாதிருந்த நிலையில் உயர் நீதி மன்றத்தின் தலையீடு தடுப்புக் காவலிலிருப்போருக்கு அவர்கள் பல்வேறு விதங்களில் நிவாரணம் பெற்றுக் கொள்வதற்குதவியது. நிபந்தனையற்ற விடுதலை; விடுவிக்கப்பட்ட பின்னர் குறுங்கால மறுவாழ்வு, நீண்ட கால மறுவாழ்வு; பிற சந்தர்ப்பங்களில், சட்டத்தரணிகள் மூலம் வழக்காடும் உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மாற்றீடாக, தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கெதிராக குற்றஞ் சார்த்தப்படலாம் .
அடிப்படை உரிமைகளுக்கு அரசியல் யாப்பின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் 1993 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் சில கீழே தரப்பட்டுள்ளன.
ஹேரத் பண்டா எதிர் வசிகவற்த (உயர்நீதிமன்ற விண்ணப்பம் 270/93 (28/5/93 இல் தீர்மானிக்கப்பட்டது) . 11 ஆம் உறுப்புரையின் கீழ் மனுதாரரின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாகக் சார்த்தப்பட்டது. விண்ணப்பதாரரின் முறைப்பாட்டுக்கு வைத்திய சாட்சியம் தெளிவான ஆதாரமாக இருந்ததுடன், நீதிமன்றத்தின் முன்னருள்ள தகவலின்படி மனுதாரரை நீதிமன்றத்துக்குச் செல்வதைத்தடுப்பதற்கு எதிர்மனுதாரரினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதால் வழக்கை மனுதாரர் வாபஸ் பெறுவதற்கான முயற்சியை நீதியரசர் அமரசிங்க அனுமதிக்க மறுத்து விட்டார்.

Page 38
66
தில்லிமார் எதிர் வகிசத் (உ.நீவின் 988/92, 1993/7/19 இல் தீர்மானிக்கப்பட்டது) பொதுவானதெளிவற்ற சந்தேகம் தொடர்ந்து தடுத்துவைத்திருப்பதற்கான போதிய காரணம் அல்ல என்பதை நீதியரசர் விஜேயதுங்க தெரிந்து கொண்டார்.
இராசதுரை சுரேந்திரன் எதிர் பல்கலைக்கழக ஆணைக்குழு (உநீ.ம. விண்ணப்பம் 480/92, 93.3.26 இல் தீர்மானிக்கப்பட்டது).
பூகோள அடிப்படையில் திறமைக்கான பங்கீட்டை மீண்டும் பிரித்தபடியால் சட்டத்தின் முன் மனுதாரருடைய சமத்துவ அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக நீதி மன்றம் கருதியது. யாழ்ப்பாணத்திலிருந்து 28 மாண்வர்களை உப பிரிவுகளாகப் பிரித்தபடியால் இவர்கள் வேறுவிதமாகப் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றிருக்கக் கூடும். இவர்களுக்குப் பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ‘நீதி இழைக்கப்படுவதுமட்டுமன்றி இழைக்கப்பட்டதாகத் தெரியவும் வேண்டும் என நீதியரசர் பெனாண்டோ குறிப்பிட்டார். உயர்கல்வித் துறையால் இத்தேவைப்பாடு அதாவது பல்கலைக்கழக அனுமதி முறை அது வகுக்கப்பட்டாலும் செயற் படுத்தப்பட்டாலும் நியாயமானதாக இருப்பது மட்டுமல்ல; நியாயமானதாக இருப்பதாகத் தெரியவும் வேண்டும். மனுதாரருக்குத் தனிப்பட்ட முறையில் நிவாரணம் வழங்குவது போதுமானதல்ல என்றும் அனுமதிக்கான முழுத் திட்டமுமே நீக்கப்படுவது நியாயமானதும் சமனானதுமென நான் கருதுகிறேன் என்று நீதியரசர் பெனாண்டோ கூறினார்.
அமரதுங்க எதிர் சிறமல் (உநீ.வின் 468/92 93 தீர்மானிக்கப்பட்டது) பா அரசியல் கட்சிகளினால் ஒழுங்கு செய்யப்பட்ட எதிர்ப்பு ஊர்வலமொன்று பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டது. அரசுக்கு எதிரான கோஷங்களைக் கிளப்பியதால் ஊர்வலம் நிறுத்தப்பட்டதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்தது. அரசைக் கண்டிப்பதற்குக் குடிமகனுக்குள்ள உரிமையை நீதியரசர் பெனாண்டோ நிலை நிறுத்தினார். “ஜனநாயக வாழ்க்கை முறைக்கு அரசை, அரசியல் கட்சிகளை, கொள்கைகளை, திட்டங்களைக் கண்டிப்பதற்கோ அல்லது ஆதரிப்பதற்கோ உள்ள உரிமை அடிப்படையானதாகும் என அவர் குறிப்பிட்டார்.
தனிப்பட்ட ஒருவர் இன்னொருவரின் உரிமைகளை மீறுமிடத்து அரசியல் யாப்பின் கீழ் அரசியல் யாப்பு ரீதியாக எவ்வித நடவடிக்கையும் எழாது. கடைகள், உண்டிச்சாலைகள், ஹோட்டல்கள், வணக்கஸ்தலங்கள், முதலிய இன,மத, மொழி, சாதி, அல்லது பால் ரீதியான வகையில் வேறுபட்டுள்ள பொது இடங்களுக்கு தனிநபர் தொடர்பை தடைசெய்வதை நீக்கும் 12(3) உறுப்புரையின் கீழ் இச்சட்டம் வராதிருக்கும் போது தான் இது செல்லுபடியாகின்றது.
தனிநபருக்கும் நிறைவேற்றுநபருக்குமிடையே போதியளவு தொடர்பு இருப்பின் தனிநபர்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைள், அரசாங்க நடவடிக்கைகளாகக் கணிக்கப்படலாம் என்பதை ஏற்றுக்கொண்டது. மொகமட் பெயிஸ் எதிர் எஜி வழக்கில் (எஸ்.சி மேன்முறையீடு இலக்கம், 89/91 தீர்மானிக்கப்பட்டது. 9.11.93) மனுதாரர்

67
பொலிஸ் பாதுகாப்பில் இருந்தபோது இரு பாராளுமன்ற உறுப்பினர்களாலும் மாகாணசபை உறுப்பினர் ஒருவராலும் தாக்கப்பட்டார். பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினரும் மனுதாரரை தாக்கும் போது இவர்களுக்கு சார்பாய் அனுமதித்துள்ளார். மனுதாரர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர் ஆகியோரது தூண்டலினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக நீதிமன்றம் கண்டது. நீதிமன்று உறுதிசெய்தது;
உறுப்புரை 126 நிறைவேற்றுநரால் அல்லது நிர்வாக நடவடிக்கையால் உரிமைமீறல்பற்றி கூறுகிறது; இவ்வாறான நடவடிக்கை ஒர் நிறைவேற்று உத்தியோகத்தரால் அவசியப்படுத்தப்படுகின்றதென்பதை இது உறுதிசெய்வதாக இல்லை. நிறைவேற்றுநரின் அதிகாரத்தோடு ஒரு நடவடிக்கை பொலிஸ் உத்தியோகத்தர்களில், பரிசோதகர்களுக்கும் அது தொடக்கம் பதவியுயர்வு வழங்கப்பட்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
பிழையான கைது, பிழையான தடுத்துவைப்பு அல்லது மனித வதை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படின் சில குற்றமிழைத்தல்கள் தொடர்பாக நீதிமன்றம், அடிப்படை உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டுள்ள ( மீயுயர்நீதிமன்ற பதிவாளரின் அறிக்கை 13.94) அதிகாரிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படாததேன் என்பது பற்றி, பொலிஸ் மா அதிபரிடிம் விளக்கம் கோரியுள்ளது. அநுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு நபரின் அடிப்படை உரிமை மீறல் நடந்தபோது, இது செய்யப்பட்டுள்ளது. (தகவல் நிலையறிக்கை ஐப்பசி 93) காலத்திற்குக் காலம் இவ்வாறு செய்யப்படும் விசாரணைகள், அடிப்படை உரிமைகள் அவதானிக்கப்படுவது உறுதி செய்யப்படுவதற்கு போதாதுள்ளது எனத்தெளிவாகத் தெரிகின்றது.
உரிமை மீறலொன்று அவதானிக்கப்படுகையில், (உதாரணம், சட்டமுறையற்ற கைதும் தடுத்துவைத்தலும் அவதானிக்கப்படல், பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கையில் மோசமாக நடாத்தப்படுதல் அல்லது மனித வதைக்குட்படுத்தல் கண்டுபிடிக்கப்படல்) முறையான விசாரணையொன்று இதன் விளைவாக நடாத்தப்பட்டு, ஒருவரோ மேற்பட்டோ அரச அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக சாட்சியமிருப்பின், தண்டனைகள் விதிக்கப்படும். இதன் கீழான நடை முறைகள் இல்லாதிருப்பதுடன், பாரதூரமான வழக்குகள் கூட தொடர் நடவடிக்கைகளிலிருந்து விலக்குப் பெறுகின்றன (உதாரணமாக நோக்குக; பொறுப்புத் தன்மை தொடர்பான பிரிவில் மேலே விளக்கப்பட்ட உடுகம்பளை வழக்கு). இவ்வாறான தொடர் நடவடிக்கைகளின் பற்றாக்குறை குற்றமிழைத்தவரிலும் பார்க்க அரசாங்கத்தினால் வழங்கப்படும் நட்டஈட்டுக் கொடுப்பனவுடன் உரிமை மீறல்கள் இருப்பினும், பதில் சொல்லியே ஆகவேண்டுமென்று உண்மையாகவே மீறல்களைப் புரிபவர்களின் மீது கட்டுப்பாடாக அமையவில்லை. ஆகவே நாம் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் அவர்கள் தொடர்கின்றார்கள். மேலே குறிப்பிட்டது போன்று, கடந்த சில வருடங்களாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டமைக்காகப்

Page 39
68
பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை காவல் கைதிகளைச் சித்திரவதை செய்தமை, தவறாக நடத்தியமை தொடர்பானவை. பல வழக்குகளில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டமை நிரூபிக்கப்பட்ட போதிலும் குற்றவாளிகளால் செலுத்தப்படவேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நட்ட ஈடுகள் அரிதாகவே செலுத்தப்பட்டுள்ளன. அண்மையில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் நஷ்டஈடு வழங்குமாறு கட்டளையிடப்பட்டனர் (மீயுயர் நீதிமன்ற பதிவாளரின் அறிக்கை 1.3.94). அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதற்காக, (நிலையறிக்கை தகவல் ஐப்பசி 93) சட்டத்தரணி திரு ஆரியதிலக்கவிற்கு உடகம பொலிஸ் பொறுப்பதிகாரியை 5000 ரூபாவையும், அரசாங்கத்தை 10,000 ரூபாவையும் நட்டஈடாகச் செலுத்துமாறு மீயுயர் நீதிமன்று கட்டளைபிறப்பித்து, 1993 ஐப்பசியில் குறிப்பிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் இது பொதுவாகச் செய்யப்படுவதில்லை.
மேலும், ஒரு முறைக்குமேல் பொறுப்பானவர்களை அரசு தண்டிப்பதற்குத் தவறியதுமல்லாது, இவர்களுக்கு மேலதிக பதவியுயர்வுகளையும் வழங்கியுள்ளது. 1993 கார்த்திகை நிலை அறிக்கை, 11 பிரதம பரிசோதகர்களுக்கும், 1. 1. 80 க்கும் 31, 12. 92க்கும் உட்பட்ட காலப்பகுதியில் மீயுயர் நீதிமன்றத்தினால், பாரதூரமான அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றமிழைத்ததாகக் காணப்பட்ட, 87 தனி நபர் மேல் கடுமையான செயற்பாடுகளைக் கொண்டிருக்க முடியாததும், இயலாததாகவும் உள்ளது. மாறாக இவர்களுடைய நடவடிக்கைகளுக்கு உத்தியோகபூர்வ மன்னிப்பை வழங்கும் செயற்பாட்டினைக் கொண்டுள்ளது.
சட்டமீறல்கள் தொடர்பில் பிழைசெய்த தனிநபர்களைத் தண்டிப்பதே, இவை மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கான ஒரே வழியாகும். சர்வதேச சட்டங்களின் கீழான கட்டுப்பாடுகளை, அரசாங்கம் கெளரவிக்க வேண்டுமெனின், இங்க ஆராயப்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றி அது கூற வேண்டி உள்ளது. சர்வதேசச் சட்டங்களால் பாதுகாக்கப்பட்டுள்ள உரிமைகளை அரசாங்கம் கெளரவிக்கின்றதென்பதும், இவை மீறப்படுகின்ற போது, இவர்களுக்குப் பொருத்தமான தீர்வும் உரியவர்கள் சட்டத்துக்குமுன் நிறுத்தப்படுகின்ற நிலையாகிய இரண்டும் கிட்டுமென்ற நம்பிக்கையும் இலங்கை வாழ் மக்களுக்கு ஏற்படுதலே, வெற்றியின் உண்மையான சுட்டியாகும்.
11 கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம்
இவ்வத்தியாயம் முதலில் இலங்கையில் சுதந்திரமான கருத்து வெளிப்படுத்துகைக்கான உரிமைகள் அரசியலமைப்பு ரீதியாவும் சட்டபூர்வமாகவும் வகுக்கப்பட்டுள்ள கட்டமைப்பைக் காட்டுகின்றது. பின்னர் அவ்வுரிமையைப் பொதுவாகப் பாதிக்கின்ற வரையறைகளையும் கட்டுப்பாடுகளையும் குறிப்பிடுகின்றது. இதனைத் தொடர்ந்து ஆய்வாண்டில் சுதந்திரமான கருத்து வெளிப்படுத்துகைக்கான உரிமை எந்தளவிற்கு மதிக்கப்பட்டுள்ளது அல்லது அவமதிக்கப்பட்டுள்ளது என்பதை விபரமாகக் காட்டும் பதிவு காணப்படுகின்றது.

69
(1) தொடர்புடைய சர்வதேச நியமங்கள்
சிவில், அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கையின் ( ஐசிசிபிஆர்) 19 ஆம் உறுப்புரை சுதந்திரமாகக் கருத்து வெளிப்படுத்தும் உரிமைக்கு உத்தரவாதமளிக்கின்றது. சிவில், அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கைக்கிணங்க இவ்வுறுப்புரை பின்வரும் சுதந்திரங்களை உள்ளடக்குகின்றது.
எல்லைகளால் தடையுறாவண்ணம், எல்லா வகையான தகவல்களையும் கருத்துக்களையும் வாய்மூலமாகவேனும், எழுத்து மூலமாகவேனும் அல்லது அச்சு மூலமாகவேனும், கலை வடிவில் அல்லது வேறு ஏதேனும் சாதனங்கள் ஊடாகத் தேடுவதற்கும், பெறுவதற்கும் தெரிவிப்பதற்குமான சுதந்திரம். (உறுப்புரை 19(2).
(i) அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதங்கள்
1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 3 ஆம் அத்தியாயத்தின் 14 ஆம் உறுப்புரை ஒவ்வொரு பிரஜையினதும் “வெளியிடுதலுட்படப் பேச்சுச் சுதந்திரத்திற்கு” உத்தரவாதமளிக்கின்றது. இவ்வுறுப்புரை பிரஜைகள் சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமைக்கும் உத்தரவாதமளிக்கின்றது.
அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதில் விதிக்கப்படக்கூடிய மட்டுப்பாடுகள் அரசியலமைப்பின் 15 (2) ஆம் உறுப்புரையில் கூறப்பட்டுள்ளன. சுதந்திரமாகக் கருத்து வெளிப்படுத்தும் உரிமையைப் பற்றி அது கூறுவதாவது:
அடிப்படை உரிமையின் தொழிற்பாடும் பிரயோகமும், இனச்சுமுகவாழ்வு, மதச்சுமுகவாழ்வு என்பனவற்றின் நலன் கருதியோ அல்லது பாராளுமன்றச் சிறப்புரிமை நீதிமன்ற அவமதிப்பு மானநட்டம் அல்லது தவறுபுரியத் துண்டுதல் என்பன தொடர்பாகவோ சட்டத்தினால் விதிக்கப்படக் கூடியவாறான அத்தகைய மட்டுப்பாடுகளுக்கு அமைந்தனவாதல் வேண்டும்.
சிவில், அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கையின் கீழ் அனுமதிக்கப் பட்டுள்ளவற்றை விட இம்மட்டுப்பாடுகள் பெருமளவு பரந்தவை. சர்வதேச உடன்படிக்கையின் கீழ்
(அ) மற்றவர்களின் உரிமைகளையும் நற்பெயர்களையும் மதிப்பதற்கும்;
ஆ) தேசிய பாதுகாப்பை அல்லது பொதுமக்கள் மத்தியில் ஒழுங்கை அல்லது பொதுமக்களின் ஆரோக்கியத்தை அல்லது அவர்களின் பழக்க

Page 40
70
நடைமுறைகளைப் பாதுகாப்பதற்கு,
அவசியமானவையும் சட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்டவையுமான அத்தகைய மட்டுப்பாடுகள் மட்டுமே இருக்க வேண்டுமெனக் குறித்துரைக்கப்பட்டுள்ளது.
இலங்கைச் சட்டத்தின் கீழ் இன்றியமையாமை ஒரு தேவைப்பாடல்ல, உயர் நீதிமன்றம் 1982 ஆம் ஆண்டுத் தீர்ப்பொன்றில் கூறியுள்ளதாவது ; இலங்கையில் பேச்சுச் சுதந்திரத்துக்கான உரிமையின் தொழிற்பாடும், பிரயோகமும் ஏதேனும் நியாயுமான தேர்வுமுறையினால் மட்டுப்படுத்தப் படாத சட்டவரையறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. வரையறைகளை விதிக்கின்ற சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மையையோ நியாயமான தன்மையையோ கேள்விக்குட்படுத்த முடியாது. (மலல்கொட எதிராக சட்டமா அதிபர் (1982) 2 இலங்கைச் சட்ட அறிக்கைகள் 777)
அரசியலமைப்பில் தகவலைப் பெறும் உரிமைக்கு உத்தரவாதமளிக்கப்படவில்லை. ஆயின் உயர் நீதிமன்றம் சுதந்திரமான கருத்து வெளிப்படுத்துகைக்கான உரிமையில் விலக்க முடியாதவாறுஅறிந்து கொள்வதற்கான உரிமை உள்ளடக்கமாயுள்ளதென ஏற்றுக்கொண்டுள்ளது.
(ii) சுதந்திரமான கருத்து வெளிப்படுத்துகையைப்
பாதிக்கும் வேறு சட்டங்கள்.
இலங்கையின் அரசியலமைப்பு பாராளுமன்றச் சிறப்புரிமை தொடர்பிலும் பேச்சுச் சுதந்திரத்தின் மீது பரந்தளவு மட்டுப்பாடுகளை அனுமதிக்கின்றது. 1953 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, பாராளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம் குற்றமொன்றை உருவாக்கியுள்ளது- குழுவின் நடவடிக்கைக் குறிப்புக்களை, அவை பாராளுமன்றச் சபைக்கு அறிக்கையிடப்படுமுன்னர் வெளியிடும் குற்றம். இங்கு கூட எச்சரித்து நீக்குவதற்கான அதிகாரம் மட்டுமே பாராளுமன்றத்திற்கு உண்டு; உயர் நீதிமன்றம் மட்டுமே, வழக்கு விசாரணையொன்றின் பின்னர், குற்றப்பணம் அல்லது ஒரு காலத்துக்கான மறியற்றண்டனை விதிக்கலாம்.
குற்றங்களின் நோக்கெல்லையை விரிவாக்கும் பொருட்டு 1978 ஆம் ஆண்டில் இச்சட்டம் திருத்தப்பட்டது. இத்திருத்தத்தின் கீழ் பின்வருவன குற்றங்களாக்கப்பட்டன:
(அ) பாராளுமன்றச் சபையின் அல்லது குழுவொன்றின் விவாதம் அல்லது நடவடிக்கைக்குறிப்பு எதனதும் பொய்யான அல்லது உருத்திரிபான அறிக்கை எதனையும் வேண்டுமென்றே வெளியிடுதல் அல்லது பாராளுமன்றச் சபையில் அல்லது குழுவொன்றில் உறுப்பினரொருவர் ஆற்றிய உரை எதனையும் வேண்டுமென்றே தவறுபடக்காட்டுதல்;

71
(ஆ) பாராளுமன்றச் சபையினால் அல்லது குழுவொன்றினால், வெளியிடலாகாதெனத் தடைசெய்யப்பட்டுள்ள, பாராளுமன்றச் சபையின் அல்லது குழுவொன்றின் ஏதேனும் விவாதத்தின் அல்லது நடவடிக்கைக் குறிப்பின் அறிக்கை எதனையும் வேண்டுமென்றே வெளியிடுதல்;
(இ) பாராளுமன்றச் சபையின் நடவடிக்கைகளுக்கு அல்லது அதன் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் அவதூறான கூற்று எதனையும் வெளியிடுதல்;
(ஈ) எவரேனும் உறுப்பினர் தொடர்பில், உறுப்பினரென்ற வகையில் அவரது
நடத்தை பற்றிய அவதூறான கூற்று எதனையும் வெளியிடுதல்.:
1980 ஆம் ஆண்டின் சட்டம் மேலுமொரு குற்றத்தை உருவாக்கியுள்ளது “பாராளுமன்ற விவாதங்களின் அதிகார அறிக்கையிலிருந்து குறிப்பிட்ட சொற்கள் அல்லது கூற்றுக்கள் நீக்கப்பட வேண்டுமெனச் சபாநாயகர் கட்டளையிட்டதன் பின்னர் அத்தகைய சொற்களை அல்லது கூற்றுக்களைக் கொண்டுள்ள பாராளுமன்ற விவாதம் அல்லது நடவடிக்கை குறிப்பு எதனையும் அறிக்கை எதனையும் வேண்டுமென்றே வெளியிடுதல்”
1978 ஆம் ஆண்டில் சட்டம், இவ்விரிந்த நோக்கெல்லையுடைய குற்றங்களுக்குக் குற்றவாளிகளாகக் காணப்படுபவர்களுக்குக் குற்றவியல் தண்டனை அளிக்கும் அதிகாரத்தையும் பாராளுமன்றத்துக்கு வழங்கியது.
1978 ஆம் ஆண்டின் முதலில் தற்காலிக அடிப்படையிற் சட்ட மாக்கப்பட்டு, 1982 ஆம் ஆண்டில் நிரந்தரச் சட்டத்தின் ஒரு பகுதியாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம், "பயங்கரவாதம்” அல்லது “கவிழ்ப்பு” எனக் கருதப்படும் செயல்களுக்கு அரசாங்கம் தண்டனை வழங்குவதை இயலச் செய்தது.
இச்சட்டத்தின் கீழ் ஒரு குற்றமெனக் கொள்ளப்பட்டுள்ள செயல் எதனையும் செய்தல் அல்லது புலனாய்வு செய்தல் தொடர்பான விடயம் எதனையும் வெளியிடுவதைத் தடுக்கும் ஏற்பாடொன்றை இது உள்ளடக்கியுள்ளது. பிரிந்து செல்வதற்கு ஆதரவான கருத்துக்களுக்கு சாத்வீகமான முறையில் த்ரல் கொடுத்தல் கூட ஒரு குற்றமாகும்.
(அ) அவசரகால ஒழுங்குவிதிகளும் கருத்து
வெளிப்படுத்தும் சுதந்திரத்தின் மீது அவற்றின் தாக்கமும்
1989 தை முதல் ஆனி வரை தவிர, 1983 ஆம் ஆண்டு முதல் நாட்டில் அமுல் செய்யப்பட்டுள்ள அவசரகாலநிலைமையினால், அரசியலமைப்புரீதியான உத்தரவாதங்கள், அவற்றின் மட்டுப்பாடுகளில் உள்ளடக்கமாயுள்ள எல்லா வரையறைகளுடன், மேலும்

Page 41
72
பாதிக்கப்பட்டுள்ளன. இன முரண்பாட்டினால் தோற்றுவிக்கப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டு, 1947 இன் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தின் கீழான பிரகடனமொன்றின் மூலம் அமுல் செய்யப்பட்ட அவசரகால நிலைமை, அரசியலமைப்புத் தவிர்ந்த எல்லாச் சட்டங்களையும் புறக்கணித்து அரசாங்கம் ஒழுங்குவிதிகளை ஆக்குவதை இயலச்செய்ததுடன், சுதந்திரமாகக் கருத்து வெளிப்படுத்தும் உரிமை உட்பட அடிப்படை உரிமைகளின் தொழிற்பாட்டையும் பல்வேறு வழிகளிலும் பாதித்துள்ளது.
தகவுடைய அதிகாரியொருவரின் அபிப்பிராயப்படி,
தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு அல்லது பொதுசன ஒழுங்கைப் பாதுகாப்பதற்கு அல்லது சமுதாய வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்களையும் சேவைகளையும் பேணுவதற்கு கேடு விளைவிக்கின்ற அல்லது விளைவிக்கக் கூடிய ஏதேனும் விடயத்தை அல்லது கிளர்ச்சி கலகம் அல்லது உள்நாட்டுக் குழப்பம் ஏற்படுத்தும்படி அல்லது ஏதேனும் சட்டத்தை மீறும்படி ஆட்களைத் தூண்டுகின்ற அல்லது ஊக்குவிக்கின்ற விடயங்களை வெளியிடுதல்.
அவசரகால ஒழுங்குவிதிகளின் 14(1)ஆம் உறுப்புரையினால் தடை செய்யப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பினதும் பொதுமக்கள் ஒழுங்கினதும் அடிப்படையில் காலத்துக்குக் காலம் தணிக்கை அமுல்செய்யப்பட்டுள்ளது. சுதந்திரமாகக் கருத்து வெளிப்படுத்தும் உரிமையைப் பாதிக்கும் அவசரகால ஒழுங்கு விதிகள் காலத்துக்குக் காலம் வேறுபடுகின்றன. மீளாய்வு ஆண்டில் அமுலில் இருந்தனவும், சுதந்திரமாகக் கருத்து வெளிப்படுத்தும் உரிமையை ஏதோவொரு வகையில் பாதித்தனவுமான ஒழுங்கு விதிகள் கீழே தரப்பட்டுள்ளன:
i) அச்சகங்கள் யாவும் மாகாண, மாவட்ட அரசாங்க அதிகாரிகளிடம் மீளப் பதிவு செய்யப்பட வேண்டுமெனத் தேவைப்படுத்தும் 1989 இன் 1ஆம் இலக்க ஒழுங்குவிதி.
i) கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடாத்துதல், விளம்பரத் தட்டிகள், சுவரொட்டிகள், ஓவியங்கள் ஒட்டுதல் உட்பட அரசியல் நடவடிக்கை மீது வரையறைகளை விதிக்கும் 1991 இன் 1ஆம் இலக்க ஒழுங்குவிதி.
கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரத்தைப் பாதிக்கின்ற அரசாங்க நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பொருட்டு அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் கட்சிகள் ஒன்றுகூடியுள்ளன. பங்குனி மாதத்தில் கூட்டறிக்கையொன்றில் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கு அவை உறுதியளித்தன. மார்கழி மாதத்தில், தூண்டுதல் தொடர்பான அவசரகால ஒழுங்குவிதிகள் மீள அமுல்செய்யப்பட்டதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். புரட்டாதியில் பூரீ.ல.சு.க கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம் பற்றிய தனது கடப்பாட்டு நிலையை மீண்டும் உறுதிப்படுத்தும் புதிய

73
கொள்கைக் கூற்றொன்றை வெளியிட்டது. எனினும் சில நாட்களின் பின்னர், பூரீல.சு.க தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி முதற்கோலாசானுமாகிய திரு றிச்சட் பதிரன தமது கட்சி அதிகாரத்துக்கு வந்ததும் உபாலி பத்திரிகைகள் நிறுவனம் தேசியமயமாக்கப்படுமென அச்சுறுத்துவதற்கு இது தடங்கலாயிருக்கவில்லை. அவை ழரீ.ல.சு.கட்சிக்கு எதிரான போக்கில் திரும்பியுள்ளன என்று அவர் சாடினார். உதட்டளவில் மிகப் பகட்டாகக் கண்டனங்கள் தெரிவித்த போதிலும், பெரும்பாலான அரசியற் கட்சிகள் சுதந்திரமாகக் கருத்து வெளிப்படுத்தும் உரிமை மீது ஆழவேரூன்றிய மதிப்பைச் செயலில் காட்டுவதில்லை.
(ஆ) கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரத்துக்கு நீதிமன்ற
உறுதிப்படுத்தல்
எதிர்த்தரப்பு அரசியற் கட்சிகள் 1992 ஆடி 1 ஆந் திகதியன்று “ கோஷ எதிர்ப்பு” (ஜன கோஷ) ஒன்றினை ஒழுங்கு செய்தனர். பொதுமக்கள் மதியம் 12 மணிக்கு அந்நேரத்தில் அவர்கள் எங்கிருப்பினும் அங்கு ஏதேனும் வகையில் பெரும் கூச்சல் எழுப்புதல் மூலம், அரசாங்கத்துக்கான தமது எதிர்பை வெளிப்படையாகக் காட்டும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். இவ்வெதிர்ப்பு பொலிசாரால் பல்வேறு வகைகளிலும் தடுத்து நிறுத்தப்பட்டது.
எதிர்ப்பில் பங்குபற்றி பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட ஹொரனை பிரதேச சபையின் உறுப்பினரொருவர், ஆட்சியிலுள்ள அரசாங்கத்தைக் கண்டிக்கத் தமக்குள்ள அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதெனச் சாட்டி, உயர் நீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்தார். உயர் நீதிமன்றம் “ அரசாங்கத்தைக் கண்டித்தலானது அரசியலமைப்பின் 14 (1) (அ) ஆம் உறுப்புரையின் கீழான கருத்து வெளிப்படுத்தற் சுதந்திரத்தின் ஏற்கத்தக்கதொரு செயல்முறை” எனக் கூறி அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. அவருக்கு இழப்பீடாக 50,000 ரூபாய் செலுத்தும்படி அரசுக்குக் கட்டளையிடப்பட்டது. ( அமரதுங்க எதிராக சிறிமல், உ.நீ. மேல்முறையீடு 468/92 ( தீர்ப்பு 1993). எதிர்காலத்தில் இதே விதமான மீறல்கள் இடம்பெறாதவாறு இத்தீர்ப்பை எல்லாப் பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் கவனத்திற்குக் கொண்டு வரும்படியும் பொலிஸ் மா அதிபரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது (சட்டப் பின்னணி பற்றிய அத்தியாயத்தையும் பார்க்கவும்).
(iv) 1993 இல் பத்திரிகைத் துறை
இதன் பின்னணியைச் சுருக்கமாகக் கூறுகையில், 3 மொழிகளிலும் பெருவழக்கிலுள்ள நாளாந்த, வாராந்தப் பத்திரிகைகளும் பெருந்தொகையான வாராந்தச் செய்தித் திரட்டுப் பத்திரிகைகளும் உள்ளன. 1973 இல் லேக்ஹவுஸ் தொகுதி தேசியமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெருவழக்கிலுள்ள பத்திரிகைகளில், பிரதான தொகுதி அரசுக்குச் சொந்தமானது; ஏனைய 2 தொகுதிகள் தனியாருக்குச் சொந்தமானவை - ஒன்று பிரதம அமைச்சரின் மாமனாரின் தலைமையின் கீழும்

Page 42
74
மற்றையது பூரீ.ல.சு.க. தலைவரான திருமதி பண்டாரநாயக்கவின் சகோதரரின் தலைமையின் கீழும். இத்தொடர்புகள் பொதுவாக அவர்களின் புதினப்பத்திரிகைகளின் அரசியற் போக்குகளைத் தீர்மானிக்கின்றன. மொழியும் வாசகர் வட்டமும் கூட வேறுபாட்டை ஏற்படுத்துகின்றன.
வாராந்த செய்தித்திரட்டுப் பத்திரிகைகள், பொதுவாக மாணவர்கள், பெண்கள், பிள்ளைகள், சோதிடம் போன்ற பல்வேறு பிரிவுகளையும் சார்ந்தவர்களின் நலன்களில் ஆர்வங்காட்டும் வெளியீடுகளைக் கொண்டுள்ளன; சிங்களத்தில் ஐந்தும் தமிழில் ஒன்றுமாக அரசியல் நோக்குடைய செய்தித்திரட்டுப் பத்திரிகைகளும் காணப்படுகின்றன. இச்செய்தித்திரட்டுப் பத்திரிகைகள் அண்மைக்கால நேர்வொன்றாகும். 1991 இல் சனாதிபதிக்கெதிரான அரசியல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில் இவை மிகுந்த முக்கியத்துவம் பெற்றன. இவை நாளாந்தப் பத்திரிகைகளில் வழமையாக உள்ளடக்கப்படாத விடயங்களையும் செய்திகளையும் கையாள்வதுடன் தமது அணுகுமுறையில் கூடிய திறனாய்வும் கொண்டவை. இவை நியாயமான அளவு பரந்தகன்ற வாசகர் வட்டத்தைக் கொண்டுள்ளதுடன் ஒரளவு விளம்பர வருவாய் எதுவுமின்றியே தொடர்ந்தும் சமாளித்துச் செயற்படுகின்றன. சிலவற்றுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களிடம் (என்ஜிஒ) இருந்து ஆதரவு கிடைக்கின்றது. இச்செய்தித்திரட்டுப் பத்திரிகைகள் தற்போது ஒட்டுமொத்தமாக " மாற்றுப் பத்திரிகைகள்” என அழைக்கப்படுகின்றன.
இச்செய்தித் திரட்டுப் பத்திரிகைகளும், தனியாரால் நடத்தப்படும் 2 நாளாந்தப் பத்திரிகைகளும் ஆண்டின் ஆரம்ப காலத்தில், காலஞ்சென்ற சனாதிபதி ஆர். பிரேமதாச அவர்களையும், அவரது கொள்கைக்ளையும், நடவடிக்கைகளையும் பெருமளவு கண்டிப்பனவாக விளங்கின. திரு. பிரேமதாச தமது பகிரங்க உரைகள் பலவற்றில் பத்திரிகைகளைக் கண்டித்தார். தமது அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான சாதனைகளைப் புறக்கணித்து எழுதுவதன் மூலம் அவை ஒரு பக்கச் சார்பாகவும் நேர்மையற்றும் அறிக்கையிடுகின்றனவென அவர் குற்றஞ் சாட்டினார். தம்மைக் தனிப்பட்ட முறையில் தாக்குவதையே அவை பிரதான நோக்காகக் கொண்டுள்ளனவென அவர் கூறினார். இப்பத்திரிகைள், குறிப்பாக செய்தித்திரட்டுப் பத்திரிகைகள் அரசாங்கத்தின் உறுதிநிலைப்பாட்டைத் தகர்க்கும் சதிமுயற்சியின் ஓர் அங்கமென அவர் சாடையாகக் குறிப்பிட்டார்.
எவ்வித விளம்பர வருமானமுமற்ற இச்செய்தித் திரட்டுப் பத்திரிகைகள் வெளிநாட்டு நிதியுதவி கொண்டே நிலைத்துள்ளனவெனவும், எனவே இவை வெளிநாட்டுச் சக்திகளின் முகவர்களெனவும் அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்களும் பெருமளவு ஆவேசத்துடன் வாதிட்டனர். இச்சக்திகள் அரசாங்கத்தின் உறுதிநிலையைக் குலைப்பதை மட்டுமல்லாது சுதேசப் பண்புக் கூறுகளை அழிப்பதையும் இலங்கையைத் துண்டாடுவதையும் கடப்பாட்டுப் பொறுப்பாகக் கொண்டவை. அரசுக்குச் சொந்தமான பத்திரிகைகளும் பழித்துரைக்கும் பல்லவியிலும், தெரிந்தெடுத்த பட்சபாதமான அறிக்கையிடல் என்று அவர்கள் கூறுகின்ற மாற்றுப் பத்திரிகைகளின்

7s
அறிக்கையிடலையும் அவற்றின் நிதித்தளத்தையும் கண்டிப்பதிலும் இணைந்து கொண்டன. “சன்டே ஒப்சேவரில்” ஒரு பத்தி எழுத்தாளரான லங்காபுத்திர, 1993 தை 13 ஆந்திகதிய இதழில் பின்வருமாறு எழுதினார்.
நுகேகொட கூட்டத்தில் (சுதந்திர பத்திரிகை இயக்கத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்ட ஒரு பொதுக் கூட்டம்) பேசிய பெரும்பாலான பத்திரிகையாளர்கள் தனியொரு விளம்பரந்தன்னுமின்றி வாரப் பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் நடத்துகின்றனர். வெளியிடுதல் பற்றிய அறிவுள்ள எவரும் இது இப்பத்திரிகையாளர்களால் மட்டுமே செய்து காட்டக்கூடிய ஓர் அற்புதமென அறிவர். எனவே இவ்வற்புதங்களுக்கு நிதியுதவும் மறைமுகமூலமொன்றுள்ளதென்பது வெளிப்படையாகும்.
பத்திரிகைகளுக்கு உண்மையான தொல்லைகொடுத்தல் விரைவில் தொடர்ந்தது. வருமானவரிகள் தொடர்பான சட்டங்கள், அதிலும் குறிப்பாக வியாபார மொத்தவிற்பனை வருமானவரிச் சட்டங்கள் இணங்கியொழுகப்படுகின்றனவாவெனச் சோதிக்கின்றோமென்று உரிமை கொண்டாடியவாறு உண்ணாட்டிறை வரி ಖ್ವ ஒரே சமயத்தில் மாசி 1 ஆந்திகதி த சண்டே ரைம்ஸ்', ‘லங்காதீப (பெருவழக்கிலுள்ள நாளிதழ்கள்), , யுக்திய , லக்திவ', ' ராவய' ( தனியாரால் நிர்வகிக்கப்படும் வாராந்த செய்தித் திரட்டுப் பத்திரிகைகள்), ‘அத்த ( கம்யூனிஸ்ட் கட்சியின் வார இருமுறை வெளியீடு) ஆகியவற்றின் அலுவலகங்களுக்குச் சென்று பார்வையிட்டனர். யுக்திய அச்சிடப்படும் ஒரு வர்த்தக அச்சகமான நவமக’ அச்சகத்தின் கணக்குகளையும் அவர்கள் பரிசோதித்துப் பார்த்தனர் (இன்போர்ம், இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை: 1993),
அதே தினத்தில் தொழில் திணைக்கள உத்தியோகத்தர்களும் ராவய'வுக்குச் சென்று சட்டபூர்வமாகக் கட்டளையிடப்பட்ட குறைவெல்லை ஊதியம் வழங்கப்படுகின்ற தாவெனவும் சேமலாப நிதிக் கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ளனவாவெனவும் சோதித்துப் பார்த்தனர். அதே தினத்தில் மாநகரசபை அதிகாரிகளும், மின்சார சபை, நீர்வழங்கற் சபை அதிகாரிகளும் ராவய 'அச்சிடப்படும் வர்த்தக அச்சகமான லலிதகலா’ விடமிருந்து தமக்கு வருமதியூான பணக்கொடுப்பனவுகளைச் சோதித்துப் பார்த்தனர். இரு தினங்களின் பின்னர், மாசி 3 ஆந்திகதி உண்ணாட்டிறைவரி அதிகாரிகள், “சன்டேரைம்ஸ்’, ‘லங்காதீப ஆகியவற்றை வெளியிடும் விஜெய பிரசுரங்கள் அலுவலகத்திற்கும், ஐலண்ட்', 'திவயின’ ஆகியவற்றை வெளியிடும் உபாலி பத்திரிகைகள் நிறுவன அலுவலகத்திற்கும் சென்றனர் ( இன்போர்ம்: 1993).
மாசி 5 ஆந் திகதி இரவு 8.30 மணிக்கு ‘ லக்திவ' செய்திப் பத்திரிகை அலுவலங்கள் வரிவீதங்கள் செலுத்தப்படவில்லை அத்துடன்/அல்லது அவர்களது வளவின் ஒரு பகுதி அதிகாரமின்றிக் கீழ்க்குத்தகைக்கு விடப்பட்டுள்ளது என்ற சாட்டுதலின் பேரில் கொழும்பு மாநகர சபை அதிகாரிகளைக் கொண்ட திடீர்ப் பரிசோதனைக் குழுவினால்

Page 43
76
முத்திரையிட்டு மூடப்பட்டன. வெளியீட்டாளர்கள் பின்னர் இவ்விடயத்தில் அடிப்படை உரிமைகள் வழக்கொன்றைத் தாக்கல் செய்தனர். உயர்நீதி மன்றம் வளவைத் திறந்துவிடும்படி மாநகரசபைக்குக் கட்டளையிட்டது (இன்போர்ம் 1993).
இப்பார்வையீடுகளும் சோதனைகளும் இயக்கப்பட்ட முறை, அரசாங்கத்தைக் கண்டிக்கின்ற பத்திரிகைப் பிரிவினரை மிரட்டி அடக்கித் தொல்லைகொடுக்கின்ற ஒரு முயற்சியைக் காட்டுகின்றது. பட்சபாத நோக்கங்களுக்காக அரச நிறுவனங்களையும் அதிகாரிகளையும் வெளிப்படையாகப் பயன்படுத்தியமையும் சனநாயக நடைமுறைகளின் பால் அரசாங்கத்தின் புறக்கணிப்புக்கு ஓர் அடையாளமாகும். பத்திரிகைகளைக் கண்டிக்கும் அதேவேளையில் தமது பதவியில் முன்னிருந்தவர்கள் செய்தது போன்று தாம் பத்திரிகைகளை முத்திரையிட்டு மூடவோ அடக்கவோ மாட்டாரென்று திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்துள்ளார். எனினும் இந்நடவடிக்கைகள் மூலம் தாம் வேண்டியதைச் சாதிப்பதற்கு அரச எந்திரத்தைப் பயன்படுத்தத் தயங்கமாட்டாரென்பதை நிரூபித்துவிட்டார். இச்சோதனைகளின் விளைவாக வழக்கெதுவும் தொடரப்படாமை அவற்றின் அச்சுறுத்தும் நோக்கைப் புலப்படுத்துகின்றது.
ஏனைய ஆயின் மேற்கொண்டு, இவற்றுடன் கூடிய வன்முறைகளும், அடக்குமுறைகளும் கைக்கொள்ளப்பட்டன. 1992 புரட்டாதி நுவரெலியாவின் ஐ.தே.க. மேயர் சிங்களச் செய்தித்திரட்டுப் பத்திரிகையான யுக்திய’ வினால் தமது நகரம் களங்கப்படுத்தப்படலாகாது எனத் தீர்மானித்துவிட்டதாகத் தோன்றுகிறது. அவர் தமது காவலர்களுடன் வினியோகத்துக்குப் பொறுப்பாயுள்ள பத்திரிகை முகவரிடம் சென்று எல்லாப் பிரதிகளையும் கைப்பற்றி அவற்றை அழித்துவிட்டார். பத்திரிகை உடனடியாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் வழக்கொன்றைத் தாக்கல் செய்தது. ஆண்டிறுதி வரையிலும் இவ்வழக்கு முடிவடைய வில்லை (இன்போர்ம்:1993).
பலதடவைகளில் சம்பவங்கள் பத்திரிகைகளில் வெளிவராது மூடிமறைப்பதற்குச் சட்டத்தின் துணை நாடப்பட்டுள்ளது. இவற்றுள் பெரிதும் இகழ்ச்சிக்குரியது உடுகம்பொலவின் சத்தியக்கடதாசிகள் பற்றிய சம்பவமாகும். 1988 ஆம், 1989 ஆம் ஆண்டுகளில் தென்பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபராக விருந்த திரு. உடுகம்பொல, அப்பிரதேசத்தில் ஜே.வி.பி கிளர்ச்சியை அடக்குவதில் முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர். அவரது குடும்பம் ஜேவிபியினரால் கொல்லப்பட்டதுடன் அப்பிராந்தியத்தில் பயங்கரவாத ஆட்சியைக் கட்டவிழ்த்து விட்டவராக அவர் குற்றஞ்சாட்டப்பட்டார். பிந்திய காலத்தில் அவர் அரசாங்கத்துடன் முரண்பட்டதைத் தொடர்ந்து ஒய்வுபெறுவதற்கு விருப்பப்படியான வயதை அவர் எய்திய பின்னர் அவரது சேவை நீடிக்கப்படவில்லை. அவர் பின்னர் 1993, சித்திரையில் ஒரு தொடரான சத்தியக்கடதாசிகளை முடித்தார். இவற்றில் அவர் “ காணாமற்போன” பல ஆட்களின் பெயர்களையும் அதற்குப் பொறுப்பான விழிப்புக் குழுவினரின் விவரங்களையும் வெளியிட்டார் ( இன்போர்ம்: 1993),

77
யுக்திய', 'அத்த’, ‘லக்திவ' ஆகியவை இச்சத்தியக்கடதாசிகளை முழுமையாக வெளியிட்ட அதேவேளையில் சண்டே ரைம்ஸ்', ' தி ஐலன்ட் என்பவை இவற்றின் பிரித்தெடுத்த பகுதிகளை வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து முதல் 3 பத்திரிகைகளும், அரசாங்கத்தின் மீது பகைமையை அல்லது அவமதிப்பை ஏற்படுத்துகின்றனவெனவும், மக்கள் மத்தியில் வெறுப்பையும் உட்பூசலையும் உருவாக்குகின்றனவெனவும் அத்துடன்/ அல்லது அரசாங்க அதிகாரிகளை அவதூறுபடுத்துகின்றனவெனவும் சட்ட மா அதிபரால் குற்றஞ்சாட்டப்பட்டன. திரு. உடுகம்பொல தாமே தலைமறவாகிவிட்டதனால் இச்சத்தியக் கடதாசிகளின் தோற்றுவாயைக் கண்டறியும் முயற்சியில் பொலிஸ் அதிகாரிகள் இப்பத்திரிகை அலுவலங்களுக்கும் சென்று ஆராய்ந்து பார்த்தனர்.
சத்தியக்கடதாசிகளில் ஆற்றுப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பான பயன்முனைப்பான விவாதம், அவை நீதிமன்ற விசாரணை நிலையிலுள்ளன வென்ற அடிப்படையில் தடைசெய்யப்பட்டது. சனாதிபதி பிரேமதாசவின் படுகொலையின் பின்னர் அரசாங்கத்துடன் நட்புறவு பூண்ட திரு. உடுகம்பொல, தமது முந்திய சத்தியக்கடதாசிகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் வேள்வியறிவின் அடிப்படையில் மட்டுமே அமைந்தவையென்று கோருகின்ற புதிய சத்தியக்கடதாசிகளை முடித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பத்திரிகைகளுக்கு எதிரான வழக்குகள் மெள்ள விலக்கிக்கொள்ளப்பட்டன.
ஒன்றில் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் இன்றேல் அரசியற் சக்திகளுடன் தொடர்புடைய ஆட்கள் பத்திரிகையாளர்களுக்குத் தனிப்பட்ட தொல்லைகொடுத்த அனேக சம்பவங்கள் ஆய்வாண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெளிப்படுத்தும் சுதந்திரத்துக்குத் தம்மை ஒப்படைத்துள்ள பத்திரிகையாளர்களினதும் தொடர்பு சாதன ஆளணியினரதும் கூட்டமைப்பான சுதந்திர பத்திரிகை இயக்கம், ஐம்பதுக்குக் கூடிய அத்தகைய சம்பவங்கள் பற்றிக் குரலெழுப்பியுள்ளது. இவற்றில் குறிப்பிடத்தக்க சிலவற்றை நாம் கீழே குறித்துள்ளோம்:
'லங்காதிப'வுக்கான பத்திரிகை சாராத பொது எழுத்தாளரானறுவந்தி காரியவசம் ஆனி 9ஆந்திகதி இரத்மலானை தொழிற்சாலையொன்றில் வேலைநிறுத்தம் பற்றிச் செய்திசேகரிக்கும் வேளையில் லங்காதீப புகைப்படப்பிடிப்பாளரான ட்ட்லி விக்கிரமசிங்க, சனாதிபதி பிரேமதாசவின் படுகொலையின் பின்னர் பொலிஸ் பிரேத மனையில்; மட்டக்களப்பில் இடம்பெயர் சனாதிபதி செயலகம் பற்றிச் செய்திசேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் பொலிசாரால் தொல்லைப்படுத்தப்பட்ட சம்பவங்களை ஒன்றில் அறிக்கையிடாதவாறு, இன்றேல் அவற்றைப் புகைப்படமெடுக்காதாவாறு தடுக்கப்பட்டனர் (இன்போர்ம்: 1993).
"லங்காதீய புகைப்படப்பிடிப்பாளரான கமல் ஐயமன்ன, சித்திரை 5 ஆந்திகதி கொழும்பில் மாணவர் மறியல் போராட்டமொன்றின் போதும்;

Page 44
78
திவயின’ புகைப்படப்பிடிப்பாளரான சேன அம்பலாங்கொட , சித்திரை 20 ஆந்திகதிகளுத்துறையில் மாணவர் ஆர்ப்பாட்டமொன்றின் போதும் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டனர் ( இன்போர்ம் 1993). பிரதானமாக அரசியல் அல்லது ஊழல் தொடர்பாக செய்தி சேகரித்ததன் விளைவாக அனேக பத்திரிகையாளர்கள் கொலைப்பயமுறுத்தல் களுக்கு ஆளாகினர் (இன்போர்ம்: 1993)
1992 மார்கழி 10 ஆந்திகதி கொழும்பு, கொம்பனித்தெருவில் சர்வதேச மனித உரிமைகள் தினக் கொண்டாட்டத்திற்கு செய்திசேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் புகைப்படப்பிடிப்பாளர்களும் பொலிசாரால் தாக்கப்பட்டனர். இவ்விடயம் பிரசித்தி பெற்றதைத் தொடர்ந்து அதனைச் சமாளிக்க, தை 20 ஆந் திகதி, ஓய்வு பெற்ற முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரியூடர் தி அல்விஸ் அவர்களைத் தனி மனித குழுவொன்றாகச் சம்பவம் பற்றி விசாரணை செய்வதற்கு அரசாங்கம் நியமித்தது. அவர் ஆர்ப்பாட்டத்தின்போது சமுகமாயிருந்த அனேக பத்திரிகையாளர்களினதும் ஏனையோரினதும் சாட்சியத்தைக் கேட்டறிந்த பின்னர் மாசி 25 ஆந் திகதி தமது அமர்வுகளை முடித்துக் கொண்டார். இவ்வறிக்கை வெளியிடப்படவில்லை. அதில் அனேக பொலிஸ் உத்தியோகத்தர்கள் சட்டப்படி உரிமையற்ற பலாத்காரம் பிரயோகித்தமைக் குக் குற்றவாளிகளாகக் காணப்பட்டிருக்கலாம். அந்நேரத்தில் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்த பீ.பி.டி. கருணாரத்ன பங்குனி மாதத்தில் கட்டாய லிவில் அனுப்பப்பட்டார். அவரும் மேலும் பல உத்தியோகத்தர்களும் வழக்கு விசாரணையை எதிர்நோக்குவர் (இன்போர்ம்: 1993),
(அ) பாராளுமன்ற அறிக்கையிடல்
லங்காதீப' வின் பாராளுமன்ற அறிக்கையாளர்கள் கண்டிக்கப்பட்டு ஆடியில் ஒரு வாரத்திற்குப் பாராளுமன்றத்திற்கு வருவதிலிருந்து தடை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தின் பின்னர், பாராளுமன்ற நடவடிக்கைகளைக் குறிப்பெடுக்கும் அறிக்கையாளர்களுக்குக் குறித்த சில வழிகாட்டல்களை வழங்குவதாகப் பாராளுமன்றச் சிறப்புரிமைகள் குழு தெரிவித்தது. இவை குறிப்பாக, அக்கிராசனத்தினால் நீக்கும்படி கட்டளையிடப்பட்டு, பாராளுமன்ற நடவடிக்கைகளின் அதிகார அறிக்கையான ஹன்சாட்டில் இடம்பெறாத விடயங்களை அறிக்கையிடல் தொடர்பானவையாகும் (இன்போர்ம்: 1993).
ஹன்சாட் வெளிவருவதற்குப் பல நாட்கள் எடுப்பதனால் இது பாராளுமன்ற நடவடிக்கைகளை உடனடியாக அறிக்கையிடுவதில் சிக்கல்களைத் தோற்றுவித்திருக்கக் கூடும். கடுமையான கண்டனத்தைக் தொடர்ந்து பிரதம அமைச்சர், பாராளுமன்ற அமர்வுக்கு அடுத்த நாள் வெளியாகின்ற அறிக்கைள் தொடர்பில் பாராளுமன்றம் இசைந்து கொடுக்குமெனவும் ஆயின் தொடர்புடைய ஹன்சாட்' வெளியிடப்பட்ட பின்னர் வெளியாகின்ற அறிக்கை எதுவும் உத்தியோகபூர்வ அறிக்கையை ஒத்திருக்க வேண்டுமெனவும் அறிவித்தார்.

79
(ஆ) யுத்தத்தை அறிக்கையிடல்
வடக்கு கிழக்கு புத்தத்தைப் பற்றி எழுதுவதானது, அதிலும் குறிப்பாக இராணுவ அறிவிப்புக்களில் வெளிவரும் உத்தியோகபூர்வ விளக்கங்களைக் கேள்விக்குட்படுத்துகின்ற, அலசியாராய்ந்து அறிக்கையிடலானது, அனேக சிக்கல்களைச் சந்திக்கின்றது. த சண்டே ரைம்ஸ்’ பத்திரிகையின் பாதுகாப்புத்துறை நிருபரான திரு. இக்பால் அத்தாஸ், அதன் ஐப்பசி 10 ஆந் திகதிய இதழில் இராணுவத்தின் போர்த்திற நடவடிக்கையொன்றைப் பற்றித் திறனாய்வுக் கட்டுரையொன்றை எழுதினார். அவர், தொலைபேசியில் தம்மை இராணுவத்தளபதி ஜெனரல் சிசில் வைத்தியரத்ன என்று இனங்காட்டிக்கொண்ட அழைப்பாளரொருவர், தமக்கு ரயரில் எரிக்கும் கொலைப்பயமுறுத்தல் விடுத்ததாகச் சாட்டினார். இச்சம்பவத்தை முனைப்படுத்திக் காட்டிய செய்தித் திரட்டுப் பத்திரிகைகளும் அத்துடன், இது பற்றிக் கூற்றொன்றை வெளியிட்ட லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. பெர்னாட் சொய்சா அவர்களும் கூட அச்சுறுத்தப்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது ( இன்போர்ம்: 1993).
இவ்விடயம் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, திரு. அத்தாசுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அச்சுறுத்தல் விடுத்ததை இராணுவத் தளபதி திட்டவட்டமாக மறுத்துள்ளாரெனவும், அவர் செய்ததெல்லாம் ' பத்திரிகையின் பாதுகாப்புத்துறை பத்தியில் உண்மைகள் முற்றாக உருச்சிதைக்கப்பட்டுள்ளனவெனவும், இது ஆயுதப்படையினர் மத்தியில் கட்டுப்பாட்டுணர்ச்சியைக் குலைக்கக் கூடிய தாக்கமுடையதெனத் தாம் நம்புவதாகவும்" த சன்டே ரைம்ஸ்’ பதிப்பாசிரியரின் கவனத்துக்குக் கொண்டுவந்தமையே எனவும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார். திரு. அத்தாசின் வீட்டில், பின்னர் சிங்க படைவகுப்பணியின் பெயரைச் சாட்டி ஈமச்சடங்கு நிறுவனமொன்றினால் ஈமச் சடங்குக்கான மலர்வளையமொன்று ஒப்படைக்கப்பட்டது (இன்போர்ம்: 1993).
இராணுவமும் புரட்டாதியிலும், ஐப்பசிலும் யாழ்ப்பாணத்தில் போர்த்திற நடவடிக்கைகள் தொடர்பில் மறுதலையான அறிக்கையிடலென அழைக்கப்பட்ட அறிக்கையிடல் பற்றிய தனது மனக்கசப்பை வெளிப்படுத்தியது. ஏதோ ஒரு வகையான தணிக்கை வேண்டுமெனக் கூக்குரல் எழுப்பப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இது கவனத்திற்கொள்ளப்படவில்லை.
யுத்தத்தை அறிக்கையிடல் என்பது தகவலைப் பெறுவதற்கான வாய்ப்புப் பற்றிய வினாவுடன் பின்னிப் பிணைந்துள்ளது. வழமையான நடைமுறை வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் பத்திரிகைகளுக்கு ஒரு சுருக்க விளக்கம் விடுப்பதாகும். பாதுகாப்புத் துறைப் பேச்சாளர்களும் பிரசன்னமாயிருக்கும் சுருக்க விளக்கத்தின் போது அமைச்சரவைத் தீர்மானங்கள் அறிவிக்கப்படுகின்றன. இங்கு உள்நாட்டுப் பத்திரிகையாளர்களும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் அரசாங்கத்தினரிடமும் இராணுவப் பேச்சாளர்களிடமும் நேரடியாக கேள்வி கேட்பதற்கான வாய்ப்பும் இருந்தது. உள்நாட்டுப் பத்திரிகையாளர்களும்

Page 45
80
வெளிநாட்டு நிருபர்கள் சங்கமும் ஆட்சேபித்த போதிலும், ஆவணியில் இச் சுருக்க விளக்கங்கள் இடைநிறுத்தப்பட்டு அவற்றுக்குப் பதிலாக உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டன.
(V) இலத்திரனியல் தொடர்புசாதனங்கள்
வானொலி, தொலைக்காட்சி ஆகிய இரண்டும் 1993 வரை அரசின் ஏகபோக உரித்துக்களாக இருந்தன.
இவ்வாண்டில் இரு தனியார் வானொலி நிலையங்கள் அனுமதிக்கப்பட்டன. எனினும் இவை முற்றுமுழுக்கப் பொழுது போக்கு அலைவரிசைகள் என்பதுடன், அறிக்கைகளின்படி சுதந்திரமான செய்தி வெளியீடுகளை ஒலிபரப்புவதிலிருந்தும் தடைசெய்யப்பட்டுள்ளன. அரச வானொலி ஒலிபரப்பு செய்தி வெளியீடுகளை அவை மறுஒலிபரப்புச் செய்யலாம் (இன்போர்ம் 1993).
இரண்டும் அரச நிறுவனங்களுக்குச் சொந்தமானவையும் அவற்றால் தொழிற்படுத்தப்படுபவையுமான இரு தொலைகாட்சி அலைவரிசைகளே ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தன. இதன் பின்னர் 2 தனியார் அலைவரிசைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டுச் சம்பவங்களை உள்ளடக்கும் சுதந்திரமான செய்தி வெளியீடுகளை அவை ஒலிபரப்பலாகாதென்பது உரிமம் வழங்கப்படும் நியதிகளில் ஒன்றென அறியப்படுகின்றது; உண்மை என்னவெனில் அவை உள்நாட்டு நிகழ்வுகளைத் தவிர்த்து, சி.என்என்' அல்லது வேறு மூலங்ளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வதேச செய்திகளை மறு ஒலிபரப்புச் செய்கின்றனர் ( இன்போர்ம்: 1993).
மற்றுமொரு தனியார் அலைவரிசை, அறிக்கைகளின்படி அதிகாரமின்றி, ஹொங்கொங் ஸ்டார் ரிவி இடமிருந்து எடுக்கப்படும் இரு சேவைகளை அஞ்சல் செய்கின்றது. பீபீசி உலக சேவை, ஸ்டார் விளையாட்டு அலைவரிசை ஆகிய இச்சேவைகள் இரண்டும் 24 மணிநேர அடிப்படையில் ஒலிபரப்பப்படுகின்றன. இதனைத் தொழிற்படுத்துபவர், ஐயத்துகிடமின்றி அரச கட்டளையின் பேரில், இலங்கை தொடர்பான ஏதேனும் செய்திகள் வரத் தொடங்குகின்ற போதெல்லாம் பீபீசி செய்தி ஒளிபரப்பைக் குழப்பி விடுகின்றார். இக்கட்டளையின் கடுமையான சொற்பிரயோகம் காரணமாகப் போலும், வெளிநாட்டில் இலங்கைச் கிரிக்கெட் குழு பற்றிய செய்தி ஒலிபரப்புகள் கூடக் குழப்பப்பட்டுள்ளனவாகத் தெரியவந்துள்ளது.
புதிய வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் செய்திகள் மீதான அதன் ஏகபோக உரிமையைத் தொடர்ந்து வைத்திருக்க உறுதிபூண்டுள்ளதாகத் தோன்றுகிறது.
1993 ஆவணியில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய தகவல், ஒலிபரப்பு அமைச்சராகத் திரு. ரிறோன் பர்னாந்து நியமிக்கப்பட்டார். அவர்

81
வெளிப்படுத்தும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதே தமது நோக்கமெனப் பொதுமக்களுக்கு உறுதியளிப்பதுடன் தொடங்கினார். எனினும் அவரும் தொடர்புசாதனங்களுக்கும் விளம்பரப்படுத்தலுக்குமென ஒரு “கண்காணிப்புப் பிரிவு" அமைக்கப்பட வேண்டுமென எடுத்துரைத்தார். அதிர்ஷ்டவசமாக இப்பிரிவு பற்றி மேலும் செய்தி எதுவும் வெளிவரவில்லை. இதனைத் தொடர்ந்து சிறிது காலத்தினுள் சனாதிபதி அவர்கள், வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும், விடய தானத்தை தெரிவுசெய்வதிலும் அதனை முன்னிலைப்படுத்துவதிலும் அலைவரிசையினர் ஒரளவு தமது உசிதப்படி நடக்க அனுமதிக்கின்ற, புதிய வழிகாட்டல் தொகுதியொன்றை அறிவித்தார். எனினும் அலை வரிசையாளர் மத்தியில் இவை எவ்வித மாறுதலையும் உண்டுபண்ணியதாகத் தோன்றவில்லை. அவர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தின் கொள்கைகளையே, எனினும் ஒரளவு சாமர்த்தியத்துடன், அவ்வளவு முனைப்பின்றி முன்னரை விடக் கூடிய விழிப்புடன், வெளிப்படுத்தினர்.
இருந்தபோதிலும், இலத்திரனியல் தொடர்பு சாதனங்களைத் தனது சொந்த அனுகூலத்துக்குப் பயன்படுத்துவது அல்லது குறைந்த பட்சம் தனது எதிரிகளுக்குப் பயனளிக்காத முறையில் அவற்றைப் பயன்படுத்துவது பற்றிய அரசாங்கத்தின் அக்கறை, கற்பனையிலும் எண்ணிப்பார்க்க முடியாத ஒரு சம்பவத்தின் மூலம் வெளிப்படுகின்றது . வைகாசி 17 ஆந் திகதி மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறுமென்ற அறிவித்தலின்பின்னர் வெகுவிரைவில், வானொலியிலும் தொலைக்காட்சியிலும், அரசியற் கட்சிகளின் தேர்தற் சின்னங்களைக் குறிப்பிடுகின்ற எல்லா விளம்பரங்களையும் அத்துடன் நிகழ்ச்சிகளையும் கூட அரசாங்கம் தடைசெய்தது.
(wi) கலைகளில் வெளிப்படுத்தும் சுதந்திரம்
நாடகங்களைப் பகிரங்கமாக அரங்கேற்றுவதற்கும் திரைப்படங்களைத் திரையிடுவதற்கும் பொது அரங்காற்று அவையிடமிருந்து உரிமமொன்றைப் பெறுதல் வேண்டும். மேடை நாடகங்களுக்கு போதியளவு தாராளமாக உரிமம் வழங்கப்பட்ட அதே வேளையில் இறக்குமதியான திரைப்படங்களுக்கும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கும் ஒரே சீரான நியமங்கள் பிரயோகிக்கப்படாததனால் திரைப்படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பொது அரங்காற்றவை தொலைக்காட்சியில் காட்டப்படும் நாடகங்களிலும் தொடர் நிகழ்ச்சிகளிலும் கவனஞ் செலுத்துவதில்லை. அவற்றை மதிப்பிடுவதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான அதன் சொந்த உள்ளேற்பாட்டை அரச தொலைக்காட்சி அதிகாரசபை தோற்றுவித்துள்ளது. நிகழ்ச்சிப்பிரதிகள் மதிப்பீட்டாளர் குழுவொன்றினால் பரிசீலனை செய்யப்பட்டு, திருத்தங்களுடனோ, திருத்தங்களின்றியோ அங்கீகரிக்கப்பட்டன ; இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சிப்பிரதிகள் தயாரிப்புக்குச் சென்றன. மற்றுமொரு நடுவர்கள் குழு பூர்த்தியான படத்தைப் பார்த்து ஒளிபரப்பப்படுவதற்கு அவர்களின் அங்கீகாரம் அவசியமாயிருந்தது. ஆய்வாண்டில்

Page 46
82
இரு தொலைக்காட்சித் தொடர்கள் இடைநடுவில் நிறுத்தப்பட்டபோது இவ்வுள்ளேற்பாடுகளின் செயற்படுத்தும் திறனும் தற்சார்பும் பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டன.
அவசந்த'(தேய்பிறை), 24 வாராந்த அங்கங்களைக் கொண்ட ஒரு தொலைக்காட்சி நாடகம். அது பகுதியளவில் 1988/89 இல் நாட்டின் நிலைமையையும், மாணவர்கள் காணாமற் போனமையையும், இச்சம்பவங்களால் மனநிலை பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவியொருத்தியின் கதையூடாகக் காட்டியது. இது 15 அங்கங்கள் ஒளிபரப்பப்பட்ட பின்னர் தை 28 ஆந் திகதி சடுதியாக முடிவுக்குக்
கொண்டுவரப்பட்டது. “தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளினால்” இத்தொடரின் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதெனப் பார்வையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது ( இன்போர்ம்: 1993).
மஹாமேற பாமுல' (உயரிய மலையின் அடிவாரத்தில்), 14 அங்கங்களைக் கொண்ட ஒரு தொடர், சமுதாய உயர் மட்டங்களில் ஒழுக்கநெறிச் சிதைவையும் நிதி ஊழலையும், அவற்றில் ஈடுபட்டோர் தமது குற்றச்செயல்களை மூடிமறைப்பதற்குக் கைக்கொள்ளும், கொலை உட்பட்ட, பல்வேறு முறைகளையும் கருப்பொருளாகக் கொண்டது. தை 10 ஆந் திகதி பார்வையாளர்கள் இத்தொடரின் 10 ஆவது அங்கத்தை எதிர்பார்த்தபடி இருந்தனர்; அதற்குப் பதிலாக அவர்கள் கண்டதெல்லாம் மிக மோசமாக ஒட்டுப்போட்டுச் சமாளிக்கப்பட்டதும், புரிந்துகொள்ள முடியாத சடுதியான முடிவைக் கொண்டதுமான இறுதி அங்கத்தையாகும்.
இவ்விரண்டு தொடர்களும் காண்பிப்பதற்கு உகந்தவையெனத் தொலைக் காட்சி அதிகாரசபையின் உள்ளங்கீகார, தணிக்கை நடைமுறைகளைக் கடந்து வந்தவை. இருந்தபோதிலும் இவற்றைக் காண்பிப்பது, ஒலிபரப்புக்குப் பொறுப்பான அமைச்சரின் கட்டளையொன்றினால், திடீர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதுபற்றிப் பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டபோது, தகவல் இராஜங்க அமைச்சர் திரு. ஏ.ஜே. ரணசிங்க, இலங்கைத் தொலைக்காட்சி கூட்டுத்தாபனச் சட்டத்தின் 7(2) ஆம் உறுப்புரையைக் குறிப்பிட்டு இவ்விரு தொலைக்காட்சி நாடகங்களும் ' பண்புநல நியமங்களை மீறியுள்ளன" என்று கூறித் தமது செயலை நியாயப்படுத்தினார். தொலைக்காட்சித் திரைப்படத் தயாரிப்பாளர்கள் இளம் பிள்ளைகளின் உள்ளங்களைக் கெடுப்பதைத் தான் அனுமதிக்கத் தயாராயில்லையெனப் பகிரங்க உரைகளில் திரு. ரணசிங்க தெரிவித்துள்ளார் ( இன்போர்ம்: 1993),
இந்நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்நிகழ்ச்சிகள் அவற்றின் உட்பொருள் காரணமாக அமுக்கப்பட்டனவென ஏற்றுக்கொள்வது நியாயமானதே; தெற்கில் கிளர்ச்சியை அடக்குவதற்குக் கைக்கொள்ளப்பட்ட முறைகளையோ, உயர் மட்டங்களில் ஊழலையோ தொலைக்காட்சிப் பார்வையாளர்களுக்கு நினைவூட்டுவது விவேகமற்றதெனக் கருதப்பட்டிருக்கலாம்.

83
இவ்விரு தொடர்களுக்கும் இறுதி அங்கீகாரம் வழங்கிய உள்மீளாய்வுச் சபை தானே மாற்றீடு செய்யப்படுவதைக் கண்டது.
(wi) முடிவுரை
தற்போது நடைமுறையில் வழமையான சட்ட நியதிகளின்படியாகவேனும் அல்லது அவசரகால ஒழுங்குவிதிகளின்படியேனும் கூட, வெளிப்படையான தணிக்கை எதுவும் இல்லை. எனினும் மேலே அறிக்கையிடப்பட்ட உண்மைகள் சுட்டிக்காட்டுகின்றவாறு தொல்லைகொடுத்தல் மூலமாகவும், அச்சுறுத்தல் மூலமாகவும் அதற்கு இசைவற்ற கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு உணர்வுபூர்வமான முயற்சிகள் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செய்திப்பத்திரிகை வெளியிடும் ஆகப்பெரிய குழு, வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றை அரசு கட்டுப்படுத்துவதானது, வழமையில் வேறுபாடான கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு இச்சாதனங்களில் இடமில்லை என்றே கருத்தாகும். அரசைக் கண்டிக்கின்ற செய்திப்பத்திரிகைகள் உள்ளனவென்பது உண்மையாக இருந்தபோதிலும், ஆகக்கூடிய புழக்கத்திலுள்ள தொடர்பு சாதனங்கள் வழமையாக மாற்றுவகையான கருத்துக்கோணங்களுக்குச் சமமான அல்லது நியாயமான இடமளிப்பதில்லை.
i ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம்
அ. அரச சார்பற்ற நிறுவனங்கள்
(1) பின்னணி
அரசியலமைப்பு, 14 (1) (இ) ஆம் உறுப்புரையின் மூலம் ஒருங்கு சேரும் சுதந்திரத்திற்கு உத்தரவாதமளிக்கின்றது; எனினும் இது 15 (4) ஆம் உறுப்புரையின் நியதிகளின்படி “இனச்சுமுக வாழ்வு, மதச்சுமுகவாழ்வு என்பனவற்றின் நலன்கருதி அல்லது தேசியப் பொருளாதாரத்தின் நலன் கருதிச் சட்டத்தினால் விதிக்கப்படக்கூடியவாறான அத்தகைய மட்டுப்பாடுகளுக்கு அமைந்ததாக” இருக்கின்றது.
இப்பிரிவு அரச சார்பற்ற நிறுவனங்களை உருவாக்குவதற்கும், ஒழுங்கமைப்பதற்கும், செயற்படுத்துவதற்கும் இதுகாலவரை பிரயோகிக்கப்பட்டவாறு இக் குறிப்பிட்ட உரிமைபற்றியும் இச்சுதந்திரத்தைப் பிரயோகிப்பதற்கெதிராகக் கடந்த ஈராண்டுகளில் எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் பற்றியும் ஆராய்கின்றது.
அரசசார்பற்ற நிறுவனமொன்றை உருவாக்க விரும்புகின்ற தனிப்பட்டவர்களுக்கு அல்லது குழுக்களுக்குத் தற்போது அனேக சட்டபூர்வமான விருப்பத்தெரிவுகள்

Page 47
84
உள்ளன; கம்பனிகள் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கலாம். (அதாவது இலாப நோக்கமற்ற ஒரு கம்பனியாக) அல்லது நம்பிக்கைப்பொறுப்புக்கள் கட்டளைச் சட்டத்தின் நியதிகளின் படி நம்பிக்கைப்பொறுப்பொன்று உருவாக்கப்படலாம் அல்லது தொண்டுச் சமூகசேவை நிறுவனங்கள் ( பதிவு செய்தலும் மேற்பார்வையும்) சட்டம் போன்ற பல்வேறு பாராளுமன்றச் சட்டங்களின் கீழ் பதிவுசெய்யலாம் அல்லது எளிமையாகக் கூட்டிணைக்கப்படாத சங்கமொன்றாக அமைக்கலாம். இவ்விருப்பத் தெரிவுகள் ஒவ்வொன்றும் அதற்குரிய அரசாங்க அதிகார நிறுவனத்துடன் வெவ்வேறு மட்டங்களிலான உறவைக் கொண்டுள்ளது. இறுதியாகக் குறிப்பிடப்பட்ட மாதிரியான கூட்டிணைக்கப்படாத சங்கமொன்றுக்கு எவ்வகையான அரசாங்கத் தலையீடோ பதிவுசெய்தலோ தேவையில்லை бТ 60f16рф انے சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குழுக்கள் தமது குறிக்கோள்களுக்கும் தேவைகளுக்கும் பெரிதும் பொருத்தமான நிறுவன அமைப்பைத் தாமே சுதந்திரமாகத் தீர்மானிக்கலாம்.
கடந்த பத்தாண்டுகளில் அரச சார்பற்ற நிறுவனங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டுள்ளது; 1991 இல் இயங்குகின்ற மொத்தத் தொகையாகத் தோராயமாகக் கணிக்கப்பட்டவை சுமார் 3000 ஆகும். குடியுரிமை விழிப்புணர்வு அதிகரித்தமையும், உணரப்பட்ட தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்க நடவடிக்கை இல்லாத அல்லது போதாத அனேக பரப்புகள் காணப்பட்டமையும் இவ்வளர்ச்சிக்குக் காரணங்களாகக் கற்பிக்கப்படலாம். அரச சார்பற்ற நிறுவனங்கள் பல்வேறுபட்ட அகல்விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன; ஆராய்ச்சியும் பயிற்சியும், இடருதவியும் புனர்வாழ்வும், அபிவிருத்தி, கிராம முன்னேற்றம், பெண்களின் உரிமைகள், மனித உரிமைகள், சுற்றாடலைப் பாதுகாத்தல் ஆகிய பரந்துபட்ட நோக்கெல்லை கொண்ட விடயங்களை ஆதரித்துச் செயலாற்றுதல். எனினும் ஆகக்கூடிய தொகையான அரச சார்பற்ற நிறுவனங்கள் இடருதவி, புனர்வாழ்வு , அபிவிருத்தி ஆகிய துறைகளிலேயே செறிவாகக் காணப்படுகின்றன.
அரச சார்பற்ற நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பையும் அவற்றின் நடவடிக்கைப் பரப்பின் விரிண்வயும் தொடர்ந்து அவற்றின் மீது பொதுமக்களினதும் அரசினதும் அக்கறையும் மேலும் வலுப்பட்டது. பொதுமக்களில் சில பகுதியினர் அரசசார்பற்ற நிறுவனத்துறையை ஒரளவு அவநம்பிக்கையுடன் நோக்கத் தொடங்கினர்; அவை வெளிநாட்டு நிதியுதவியில் இயங்குவதனால் அவை வெளியிலிருந்து கிடைக்கும் கட்டளைகளுக்குக் கீழ்ப்பட்டவை; இது வெளிநாடுகளும், அவற்றின் முகவர் நிலையங்களும் நாட்டின் உள்விவகாரங்கள்ல் குறிப்பாக, இனப்பிரச்சினையில், தலையிட முயற்சிக்கின்றனவென்ற ‘ஹிஸ்டீரியா உச்சமாகி வந்த கட்டத்தில் அரசசார்பற்ற நிறுவனத்துறைக்குப் பெருகி வருகின்ற நிதி வளங்களைக் கண்டு அவற்றை அரசாங்கத் திட்டங்களையும் செயல்முறை ஏற்பாடுகளையும் நிறைவேற்றுவதற்கும் குறை நிரப்பியாக பயன்படுத்தும் ஆர்வத்துடன் அரசாங்கமும் இவற்றில் அக்கறை கொள்ளத் தொடங்கியது.

85
இப்பின்னணிச் சூழலில்தான், 1989/90 இல் அரசாங்கம், அதிகாரிகள் குழுவொன்றிடமிருந்து அரசசார்பற்ற நிறுவனத்துறை பற்றிய அறிக்கையொன்றைக் கோரியது; விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கான அடிப்படைக் காரணமொன்று வழங்க இவ்வறிக்கையே பயன்படுத்தப்பட்டது.
(ii) சனாதிபதி விசாரணை ஆணைக்குழு
அரச சார்பற்ற நிறுவனங்கள் பற்றிய சனாதிபதி விசாரணை ஆணைக்குழு காலஞ் சென்ற சனாதிபதி திரு. பிரேமதாச அவர்களினால் 1990, மார்கழி 14 ஆந் திகதி நியமிக்கப்பட்டது. ஆணைக்குழுவின் பணி, பின்னர் ஏற்பட்ட புதிய நிலைமைகளுக்கு அடிப்படையாக அமைந்ததனால் அது ஒரளவு விவரமாகத் தரப்பட்டுள்ளது.
ஆனைக்குழுவை நியமிக்கும் பணிமுறை ஆணைப்பத்திரம், அதன் பாயிரத்தில், முன்னர் கூறப்பட்ட அறிக்கையைக் குறிப்பிடுகின்றது. இவ்வறிக்கை ஒருபோதும் வெளியிடப்படவில்லை; இதன் பிரதிகளைக் கோரிய அ.சா.நி. களுக்கு அவை மறுக்கப்பட்டன. இருப்பினும் பணிமுறை ஆணைப்பத்திரம் ஆணைக் குழுவின் பிரதான கண்டுபிடிப்புக்கள் மூன்றைக் குறிப்பிடுகின்றது. அவை கீழே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன:
(அ) இன்று இலங்கையில் உள்நாட்டு, வெளிநாட்டு அ.சா.நி.கள் இரண்டும்
சேர்த்து, ஏறத்தாழ 3000 அ.சா.நி.கள் செயற்படுகின்றன;
(ஆ) சொல்லப்பட்ட நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் நிதிவளங்களையும்
கண்காணிப்பதற்கான கட்டமைப்பு எதுவும் தாபிக்கப்படவில்லை;
(இ) வெளிநாட்டு மூலங்களிலிருந்து பெறப்பட்டனவும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டனவுமான சில நிதிவளங்கள் கையாடப்படுகின்றன. அத்துடன்/அல்லது தேசிய பாதுகாப்புக்கும் பொதுசன ஒழுங்குக்கும் அத்துடன்/அல்லது பொருளாதார நலன்களுக்கும் கேடு விளைவிக்கத்தக்க நடவடிக்கைளுக்கும் அத்துடன் இலங்கை மக்கள் மத்தியில் இன,மத, கலாசாரச் சுமுகவாழ்வு பேணப்புடுவதற்கு ஊறு விளைவிக்கத்தக்க நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றனவெனச் சாட்டப்படுகின்றது.
இம்முடிபுகளே ஆணைக்குழு நியமிக்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தன. அது நடப்பிலுள்ள சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பினும் அல்லது பதிவு செய்யப்படாதிருப்பினும், அ.சா.நி.களின் நடவடிக்கைகள் பற்றி விசாரணை செய்து அவை பற்றிய தகவல்களைப் பெறும்படி கேட்கப்பட்டது. ஒன்றில் உள்ளாட்டு மூலங்களிலிருந்து இன்றேல் வெளிநாட்டு மூலங்களிலிருந்து இந்த அ.சா. நி. களுக்குக் கிடைக்கப்பெற்ற ஏதேனும் நிதிகள் கையாடப்பட்டுள்ளனவா, அத்துடன்/அல்லது “தேசிய பாதுகாப்புக்கும் பொதுசன ஒழுங்குக்கும்

Page 48
86
அத்துடன்/அல்லது பொருளாதார நலன்களுக்கும் கேடுவிளைவிக்கத்தக்க நடவடிக்கைகளுக்கும், இலங்கை மக்கள் மத்தியில் இன,மத, கலாசாரச் சுமுகவாழ்வு பேணப்படுவதற்கு 96TI gy விளைவிக்கத்தக்க நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றனவா ” என ஆணைக்குழு உறுதிப்படுத்த வேண்டியிருந்தது.
ஆணைக்குழு, "அத்தகைய நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் நிதிவளங் களையும் கண்காணிப்பதற்கும் கட்டுப்பாட்டுக்குட்படுத்துவதற்கும்’ தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களையும் அமைப்பு முறையான ஏற்பாடுகளையும் ஆராய்ந்து பார்த்து, அவை போதுமானவையாவெனத் தீர்மானிக்கும்படியும் கேட்கப்பட்டது.
பணிமுறை ஆணைப்பத்திரம் மேலே குறிப்பிடப்பட்ட எல்லா விடயங்கள் பற்றியும் அறிக்கையிடுமாறு ஆணைக்குழுவைத் தேவைப்படுத்தியது; இந்த ஆய்வின் நோக்கங்களுக்காகப் பணிமுறை ஆணைப்பத்திரத்தின் பிரிவுகளில் மூன்றை நாம் எடுத்துக்காட்டுகின்றோம்:
(அ) வெளிநாட்டு மூலங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற அல்லது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஏதேனும் நிதிகள் அத்தகைய ஏதேனும் நிறுவனத்தினால் முன்பே உறுதியளிக்கப்பட்ட குறிக்கோள்களைத் தவிர வேறு ஏதேனும் நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றனவா,
(ஆ) அத்தகைய ஏதேனும் நிறுவனம், இலங்கையில் சமூக, பொருளாதார இடர்ப்பாடுகளைச் சீர்படுத்தும் நோக்கங்கொண்டனவும், அவற்றின் கூட்டிணைத்தற் கட்டளைகளிலும் அமைப்பு விதிகளிலும் பகிரங்கமாக உறுதியளிக்கப்பட்டனவுமான குறிக்கோள்களைப் புறக்கணித்து, கட்டடங்கள், சாதனங்கள், வாகனங்கள், பணியாளர் மற்றும் அத்தகைய தாபன மேந்தலைச் செலவுகட்காக அளவுக்கதிகமான நிதிகளைப் பங்கீடுசெய்கின்றதா,
(இ) அத்தகைய நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் நிதிவளங்களையும் கண்காணிப்பதற்கு நனிடமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகள் போதியனவா, இன்றேல், அத்தகைய நிதிகள் கையாடப்படுவதையும் அத்துடன்/அல்லது தேசிய பாதுகாப்புக்கும் பொதுசன ஒழுங்குக்கும் அத்துடன்/அல்லது பொருளாதார நலன்களுக்கும் கேடு விளைவிக்கத்தக்க நடவடிக்கைகட்கும் அத்துடன் இலங்கை மக்கள் மத்தியில் இன,மத, கலாசாரச் சுமுகவாழ்வு பேணப்படுவதற்கு ஊறுவிளைவிக்கத்தக்க நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு அல்லது எவரேனும் ஆளினால் அல்லது குழுவினால் ஆற்றப்படும் ஊழியம் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்கு எத்தகைய சட்டவாக்க ஏற்பாடு தேவைப்படும்.
பணிமுறை ஆணைப்பத்திரம், அடிப்படையாக அமைந்துள்ள ஒருசில ஊகங்களைத் தெளிவுபடுத்துகின்றது; அ.சா.நி.கள் மோசமாக நிர்வகிக்கப்பட்டன. இவை

87
கருத்திட்டங்களுக்காகச் செலவிடுவதை விடக் கூடுதலாகத் தாபனத்திற்காகச் செலவிடுகின்றன; இவற்றின் நிதிகள் கையாடப்படுகின்றன அல்லது அரச விரோத நடவடிக்கைகளுக்காகத் திருப்பப்படுகின்றன; இவற்றின் ஊழியர்கள் சுரண்டப்படுகின்றர்; எனவே இவை கட்டுப்பாட்டுக்குட்படுத்தப்பட்டு, இவற்றின் நடவடிக்கைகள் அரசால் கண் காணிக்கப்படுவது அவசியமாகும்.
ஆணைக்குழு அதன் பணியை 1991 தை முதல் வாரத்தில் ஆரம்பித்து 1993 மார்கழி வரை தொடர்ந்தது. அது முதலில் " ஏதேனும் தகவல் அல்லது முறைப்பாடுகளைத் தெரிவிக்கவுள்ள” அல்லது பிரதிநிதித்துவங்கள் செய்ய விரும்புகின்ற எவரேனும் ஆளை அல்லது நிறுவனம் எதனையும்’ அதனுடன் தொடர்பு கொள்ளும்படி கோருகின்ற அறிவித்தலொன்றை 1991 தை 10 ஆந் திகதி செய்திப்பத்திரிகைகளில் வெளியிட்டது. இதன் பின்னர் ஆணைக்குழுவிவரமான வினாக்கொத்தொன்றை ஒரு தொகை அ.சா.நி. களுக்கு அனுப்பிவைத்தது. திட்டவட்டமாக இத்தொகை எவ்வளவென்பது இன்னமும் தெரியாது. சில. அ.சா. நி. களுக்கு அந்நிறுவனங்களைப் பற்றி மட்டுமல்லாது அவற்றில் பிரதான பதவி வகிப்பவர்களினதும் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களினதும் பிள்ளைகளினதும் சொத்துக்களைப் பற்றி மிகவும் விவரமான தகவல்களைக் கேட்கின்ற குறை நிரப்பு வினாக்கொத்துக்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
ஆணைக்குழு பிரதிநிதித்துவங்கள் செய்த சில ஆட்களிடமிருந்தும் அரசாங்க உத்தியோகத்தர்களிடமிருந்தும் அ.சா.நி. களைப் பற்றிப் பொதுவாகவும், பொது வாழ்வில் அவை வகிக்கும் நிலைபற்றியும் பகிரங்கமாகச் சாட்சியங்களைக் கேட்டது. வளர்ந்து வருகின்ற அ.சா. நிறுவனத்துறையொன்று உள்ளதென்பதையும் அது அரசினால் கண்காணிக்கப்படுதலும் கட்டுப்படுத்தப்படுதலும் அவசியமென்பதையும் உறுதிப்படுத்துவதே பெருமளவில் இச்சாட்சியங்களைப் பெறுவதன் உள்நோக்கமாயிருந்தது.
ஆணைக்குழு, புலன்விசாரணைகளை மேற்கொள்வதற்கு வாக்குமூலங்களைப் பதிவதற்குமெனப் பொலிஸ் பிரிவொன்றையும் உருவாக்கியது.
இதன்பின்னர் ஆனைக்குழு மூன்று அ.சா. நி. களுக்கு எதிரான குற்றச் சார்த்ல்களைப் பகிரங்கமாக வழக்குமுறையில் விளங்கியது. அவையாவன: வேர்ல்ட் விஷன், பொருள்ரீதியான தூண்டுதல்கள் வழங்கிக் கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றுவதாகக் சார்த்தப்பட்ட ஓர் அமெரிக்க அசா.நி) கண்தானச் சங்கம், ‘சர்வோதய'; பிரதானமாகக் கிராம அபிவிருத்தியில் அக்கறை கொண்ட ஆகப் பெரிய அரசசார்பற்ற இலங்கை நிறுவனம், ஆணைக்குழு "சர்வோதய'வுக்கு எதிராகச் சில குற்றங்களைச் சுமத்தி அவற்றை விசாரிக்கத் தயாராகும் வேளையில் அதன் பொது நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. அது ஏற்கனவே சேகரித்த விடயங்களின் அடிப்படையில் அதன் அறிக்கையை 1993 முடிவதற்குள் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு கேட்கப்பட்டுள்ளதாகப் பத்திரிகைகள் செய்திவெளியிட்டன.

Page 49
88
ஆணைக்குழுவின் பணி முறைகள் சர்வதேச சட்டவல்லுனர் ஆணைக்குழுவின் பிரதிநிதியொருவரால் கூர்ந்தாராயப்பட்டன. இப்பிரதிநிதியின் முடிபுகளிற் சில கீழே தரப்பட்டுள்ளன:
ஆணைக்குழு வெறுமனே பெயரளவிலன்றி உண்மையிலேயே அ.சா. நி. களை விதிமுறைக்குட்படுத்துவதுடன் தொடர்புடைய மெய்ந்நிகழ்வுகளைக் கண்டறிவதற் கான ஒர் ஊடகமாக இருக்க வேண்டும். அது அ. சா. நி.களை அச்சுறுத்துவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படக் கூடாது.
இப்பொதுக் கோட்பாட்டை மனதிற்கொள்கையில், ஆணைக்குழுத்தொழிற்பாடுகளின் பல்வேறு அம்சங்கள் மீளாயப்படுதல் அவசியமாகின்றது. இவற்றில் ஒன்று செயலாற்று நியதிகளின் மட்டில்லாத அகலநோக்கம். ஆணைக்குழு நடவடிக்கைகளின் மற்றுமிரு அம்சங்களுடன் ஒருங்குசேர்த்துப் பார்க்கையில் இது கடுமையாகக் கவலைதரும் காரணியாகத் தெரிகின்றது:
(அ) தனிப்படுத்திக் கூறாமல், பொதுமக்களில் எவரையும் சான்றளிக்க அழைக்கின்ற, 1991 தை மாதத்தின் பொது அறிவித்தல், (ஆ) ஆணைக்குழுவின் வழக்குமுறையான விளக்கங்களுக்கு வழங்கப்பட்ட உயர்மட்டப் பத்திரிகைக் கவனம்.
இம்மூன்று காரணிகளும், தனித்தனியாக இல்லாதுவிடினும் ஒன்றுசேர்ந்து, ஏற்றுக்கொள்ளமுடியாதவாறான அடக்கி ஒடுக்குகின்ற சூழ்நிலையைத் தோற்றுவிக்கின்றன.
மிகவும் முக்கியமான மற்றுமொரு பொதுவான காரணம், அ.சா.நி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தகவல் திரட்டுவதென்ற எல்லையைக் கடந்து குற்ற நடவடிக்கை தொடரும் களத்தில் இறங்கக் கூடாதென்பது. பெரிதும் உகந்த செயல் முறை. ஆணைக்குழுவுடன் இணைந்திருந்த பொலிஸ் பிரிவைக் கலைத்துவிட்டிருப்பதாகும். தற்போதுள்ள நிலைமையின்படி, ஆணைக்குழுவின் பொதுவான ஆதரவின் கீழ் பொலிசார் அ.சா. நி. களுக்குத் தொல்லை கொடுப்பதற்கு ஏற்கமுடியாதளவு கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
குறைந்தது ஒரு நிறுவனமாவது புலன்விசாரணை நடைமுறையின் நெறிமுறைக்கெதிராக முறையிட்டது ( அஞ்சலிகா பிளணிற்ஸ், ஜெரால்ட் நொயக், பொலிடிக்ஸ் இன் பூரீலங்கா: த கேஸ் ஒவ் சர்வோதய (கொன்ஸ்டன்ஸ் பல்கலைக்கழகம், ஜேர்மனி, 1992).
ஆணைக்குழு அதன் அறிக்கையை 1993, மார்கழி 11 ஆந் திகதி சனாதிபதியிடம் கையளித்தது. ஆணைக்குழுவின் பிரதான விதப்புரைகளுள் இரண்டைச் செயற்படுத்துவதற்காகத் தொடர்கின்ற அவசரகால நிலைமையின் கீழ் ஒழுங்குவிதிகளைப் பிரகடனப்படுத்துவதாக மார்கழி 24 ஆந் திகதி அரசாங்கம் அறிவித்தது. அவசரமாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டியுள்ளதனாலும்

89
பொருத்தமான சட்டங்களை ஆக்குவதற்குக் காலமெடுக்குமென்றும் எனவே இந்நடைமுறை நாடப்பட்டுள்ளதென்றும் அரசாங்கம் தெரிவித்தது.
(i) அ.சா. நி. கள் பற்றிய அவசரகால ஒழுங்குவிதி.
அரச சார்பற்ற நிறுவனங்களின் பெறுகைகளையும் பகிர்ந்தளிப்புக்களையும் கண்காணிக்கும் ஒழுங்குவிதி இல. 1 என எடுத்துக்காட்டப்படும் இந்த ஒழுங்குவிதி ஒர் அ.சா. நிறுவனத்தைப் பின்வருமாறு வரையறைப்படுத்துகின்றது:
தொண்டு அடிப்படையில் ஆட்களின் குழுவொன்றால் அமைக்கப்பட்டதும்,
(அ) அரசசார்பற்ற இயல்புடையதும்;
(ஆ) அதன் குறிக்கோள்களைக் கொண்டு நடாத்துவதற்குப் பொதுமக்களின் உதவுதொகையில், அரசாங்கக் கொடைகளில் அல்லது உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடைகளில் தங்கியிருப்பதும்;
(இ) துன்புறுவோரும் துயர் துடைத்தலை அல்லது அனாதைகளுக்கு, நோயுற்றவர்களுக்கு, வேண்டப்படாதவர்களுக்கு உடல் ஊனமுற்றவர்களுக்கு இழப்புற்றவர்களுக்கு, வசதியற்றவர்களுக்கு அல்லது வறியவர்களுக்கு உதவி புரிதலை அல்லது சமூகத்தை அபிவிருத்தி செய்தலையும் மேம்படுத்தலையும் அல்லது ஆராய்ச்சியையும் பயிற்சியையும் அல்லது சூழலைப் பாதுகாத்தலை அதன் பிரதான குறிக்கோளாகக் கொண்டுள்ளதுமான ஏதேனும் நிறுவனம். கூட்டுறவுச் சங்கங்களும் மரண நன்கொடைச் சங்கங்களும் ஆண்டொன்றுக்குப் பணமாகவும் பொருள்களாகவும் சேவைகளாகவும் 50,000 ரூபாய்க்குக் குறைந்த பெறுகைகளைக் கொண்ட அத்தகைய அ.சா.நி. களும் இதிலிருந்து விலக்கப்பட்டன.
இவ்வரைவிலக்கணத்தில் முதலில் கவனிக்கவேண்டியது, அது சமூக சேவை (தொண்டு) நிறுவனங்கள் கட்டளைச் சட்டத்தில் தரப்பட்டுள்ள சமூக சேவை நிறுவனங்களின் வரர்விலக்கணத்தை இருவெவ்வேறு பரப்புக்களான ஆராய்ச்சி, பயிற்சியுடனும், சூழலுடனும் சேர்த்துப் பின்பற்றுவதாகும்.
வருடாந்த பகிர்ந்தளிப்புக்களாக 100,000 ரூபாயை விஞ்சுகின்றனவாக இவ்வரைவிலக்கணத்தின் கீழ் வருகின்ற எல்லா அ.சா.நி களும் சமூக சேவைகள் பணிப்பாளரிடம் தம்மைப் பதிவு செய்துகொள்வதற்கும், அவை பெறுகின்ற பணம், பொருள்கள், சேவைகள் என்பவற்றின் விவரங்களையும், அத்தகைய பெறுகைகளின் மூலங்களையும், பணம், பொருள்கள், சேவைகள் என்பன பகிர்ந்தளிக்கப்பட்ட எல்லா விவரங்களையும் அவருக்குச் சமர்ப்பிப்பதற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இறுதித் தேவைப்பாடு வழமையான கணக்காய்வு செய்யப்பட்ட கணக்குகளின் கூற்றுக்கு அப்பால் வெகுதூரம் செல்கின்றது. ஒவ்வொரு பகிர்ந்தளிப்பின் விவரங்களையும்,

Page 50
90
அத்தகைய பகிர்ந்தளிப்புச் செய்யப்பட்ட ஒவ்வொரு ஆளினதும் பெயருடனும் முகவரியுடனும் வழங்கும்படி அ.சா. நி. நிர்பந்திக்கப்பட்டுள்ளது.
பொறுப்பான உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாண்டுகள் வரையான மறியற்றண்டனையும் குற்றப்பணமுமாக இணங்கியொழுகாமைக்கு விதித்துரைக்கப்பட்ட தண்டனைகள் மிகக் கடுமையானவை. பதிவு செய்யப்படாமை தானே ஒரு குற்றமாக்கப்பட்டுள்ளது.
(அ) ஏன் அவசரகால ஒழுங்குவிதிகள் ?
ஆணைக்குழுவின் விதப்புரைகளுக்கு இசைவாகச் சட்டங்களை ஆக்குவதற்குக் காலமெடுக்கும் என்ற அடிப்படையிலேயே அவசரகால நிலைமையின் துணை நாடப்படும் அவசியமேற்பட்டதென அரசாங்கம் நியாயப்படுத்தியது. எனவே அ.சா.நி. களைப் பதிவு செய்து அவற்றின் தொழிற்பாடுகளைக் கண்காணிக்க வேண்டிய மிக அவசரத் தேவை இருந்ததென்பதை ஒருவர் கருதிக்கொள்ளவேண்டும். இத்தேவை கட்டாயமாக தேசிய பாதுகாப்புடன் அல்லது பொதுசன ஒழுங்கைப் பேணுதலுடன் தொடர்புடைய ஒன்றாக இருக்க வேண்டும்; ஏனெனில் பொதுசனப் பாதுகாப்புக்கும் பொதுசன ஒழுங்குக்கும் எதிரான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு அல்லது அரசியற் கலகத்தை அல்லது கிளர்ச்சியை அடக்குவதற்கு அல்லது பொதுசன வாழ்வுக்கு அத்தியாவசியமான சேவைகள் பேணப்படுவதை உறுதிசெய்வதற்கு ஒழுங்குவிதிகள் வேண்டுமென்ற தேவை ஏற்படும்போது மட்டுமே பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் விடுக்கப்படலாம்.
பொதுவாக அ.சா.நி. கள் இடமிருந்தோ அல்லது குறிப்பிட்ட ஏதேனும் அ.சா. நி. இடமிருந்தோ மேற்படி அக்கறைகளுக்கு அச்சுறுத்தலோ அச்சுறுத்தலுக்கான அடையாளமோ கூட இக்கணத்தில் இல்லை.
பொதுமக்களின் தகவலுக்காக ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படவில்லை. ஒருசில சுருக்கமாக அரசாங்கக் கூற்றுகளிலிருந்தும், அறிக்கையின் சில கூறுகளாகப் பத்திரிகைகளில் வெளிவந்த பிரித்தெடுக்கப்பட்ட பகுதிகளிலிருந்தும்தான் நாம் அதனை அறியவேண்டியுள்ளது. பிரித்தெடுக்கப்பட்ட இப்பகுதிகள் தேசிய நலன் கருதியதான அவரசத் தேவை எதனையும் வெளிப்படுத்தவில்லை.
அனேக அ.சா.நி. கள் தேசிய பாதுகாப்புக்கு அல்லது பொருளாதாரத்துக்கு அல்லது பல்வேறு இன, மத, கலாசாரக் குழுக்களுக்கிடையிலான சுமுக உறவுகளுக்கு இடருண்டாக்கும் முறைகளில் செயற்பட்டன என்ற ஒரு சந்தேகமே ஆணைக்குழு நியமிக்கப்படுவதன் பின்னணியிலிருந்து ஊகமாகும்.
ஆணைக்குழு அதன் மூன்றாண்டுச் செயற்பாட்டில் இச்சந்தேகங்களில் ஒருசில வேனும் உறுதியான அடிப்படை கொண்டனவெனக் கண்டிருக்குமாயின் அவ்வுண்மை அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதுடன் மிகவும் பிரசித்தமாக

91
வெளிப்படுத்தவும்பட்டிருக்கும். எனவே இச்சந்தேகங்களுக்கு அடிப்படை ஆதாரமாக எதனையும் ஆணைக்குழு காணவில்லையென்று கருதிக் கொள்வது நியாயமானதே.
எனவே அ.சா.நி. களைக் கையாள அவசரகால ஏற்பாடுகளைப் பயன்படுத்துவதற்கான மறுக்கமுடியாத காரணம் எதனையும் அரசாங்கம் நிலைநாட்ட வில்லை என்று முடிவு செய்ய ஒருவர் நிர்ப்பந்திக்கப்படுகின்றார்.
(ஆ) உத்தேச புதிய சட்டங்கள்
புதிய சட்டங்கள் ஆக்கப்படுகின்றனவெனவும் அவை விரைவில் பாராளுமன்றத்தில் சம்ர்ப்பிக்கப்படுமெனவும் சனாதிபதி தமது அண்மைக்கால உரைகளில் தெரிவித்துள்ளார்.
சர்வோதய நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்தினால் 1994 சித்திரை 4 ஆந் திகதி ஒழுங்குசெய்யப்பட்ட விருது வழங்கும் வைபவத்தில் சனாதிபதி விஜேதுங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். அவரின் சமூகம், அ.சா.நி. ஆணைக்குழு நியமிக்கப்படுவதற்கு உடனடிக் காரணமென அனேகரால் காணப்பட்ட காலஞ்சென்ற சனாதிபதி பிரேமதாசவின் அரசாங்கத்திற்கும் சர்வோதய' வுக்கும் இடையிலான பிளவு, சீர்செய்யப்பட்டு விட்டதைக் காட்டியது. எனினும் பொதுவாக அ.சா. நி.கள் தொடர்பில் இளகிய மனப்பான்மைக்கான அறிகுறி தென்படவில்லை. அ.சா.நி. பயனுள்ள பணியாற்றுகின்றனவெனவும் அரசுக்கும் அ.சா.நி துறைக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு வறுமையை விரட்டுகின்ற அவர்களின் இணைந்த முயற்சியில் பெரிதும் விரும்பத்தக்கதெனவும் சனாதிபதி தெரிவித்தார்; எனினும் அவர், அ.சா. நி. களை விதி முறைக்குட்படுத்துவதற்குச் சட்டங்கள் தயாரிக்கப்படுகின்றனவெனவும் தெரிவித்தார். அத்தகைய சட்டங்கள் இரகசியமான முறையிலன்றிப் பகிரங்கமாக, அவற்றை ஆக்குவதில் அ.சா. நி. களின் கருத்துக்கள் கவனத்திற் கொள்ளப்பட்டு ஆக்கப்படும்.
சித்திரை 9 ஆந்திகதி கண்டி பெளத்த இளைஞர் சங்கத்தின் (வை.எம்.பீ.ஏ) 28 ஆவது ஆண்டுநிறைவுக் கொண்டாட்டத்தில் சனாதிபதி மீண்டும் அ.சா. நி, களைப் பற்றிப் பேசினார். இவ்விடயத்துடன் தொடர்புடைய அவரது பேச்சின் பகுதி கீழே தரப்பட்டுள்ளது:
நாட்டின் துரிதமான அபிவிருத்திக்கு அரசாங்கத்திற்கும் அ.சா.நி. களுக்குமிடையில் ஒத்துழைப்பும் உடனுழைப்பும் கொண்ட உறுதியான பிணைப்புக்கள் வேண்டப்படுகின்றன. எனினும் அண்மையில் நாட்டில் அ.சா.நி. களின் நடவடிக்கைகள் தொடர்பாகப் பொதுமக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்களவு அமைதியின்மை உருவாக்கப்பட்டது. இந் நிறுவனங்களின் செயற்பாடு பற்றி விசாரணை செய்வதற்கு 1990ல் சனாதிபதி ஆணைக்குழுவொன்று கூட நியமிக்கப்பட்டது. உள்ளதான பதிவுகளின்படி நாட்டில் தற்போது 2700க்கும் கூடுதலான அ.சா.நி.கள்

Page 51
92
இயங்குகின்றன. இந்நிறுவனங்கள் பெரிய அளவில் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் உதவியைப் பெறுகின்றன. இப்பணங்கள் வறியவர்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அபிவிருத்திக் குறிக்கோள்களைச் செயற்படுத்துவற்கும் செலவிடப்படுவதை உறுதிசெய்வதே அரசாங்கத்தின் வேட்கையாகும். எனினும் எந்தவொரு அ.சா. நிறுவனத்தினதும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் அல்லது அவற்றில் தலையிடும் நோக்கமெதுவும் அரசாங்கத்துக்கில்லை. மக்களின் பொது நலனுக்கு உகந்த முறையில் அ.சா.நி. களின் நடவடிக்கைகளை மறுசீரமைப்பதே அரசாங்கத்தின் ஒரேயொரு நோக்கமாகும். நல்ல நோக்கங்களினால் உந்தப்பட்டுச் செயற்படுகின்ற அ.சா.நி. களுக்கு அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பும் உதவியும் கிடைக்குமென்று இந்தச் சந்தர்ப்பத்திலே நான் கூறிவைக்க விழைகின்றேன்.
இக்கூற்றில் தொக்கி நிற்பவை கவலையளிக்கின்றன. நல்லெண்ணம், உடனுழைப்புப் போன்ற வெறும் கவர்ச்சிகரமான சொற்களை உரித்துவிட்டுப் பார்த்தால் இக்கூற்றில் பெரும்பாலான அ.சா.நி.கள் மக்களின் நலனுக்கு உகந்த முறையில் செயற்படுவதில்லை எனவும் எனவே சட்டத்தின் மூலம் இவற்றின் நடவடிக்கைகளை மறுசீரமைக்கத் “தூண்டுவது'அரசாங்கத்தின் கடமை என்ற பொருள் சுட்டுகின்றது. “நல்ல நோக்கங்’ களைக் கொண்ட அ.சா. நி. கள் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் இந்த நல்ல நோக்கங்களைத் தீர்மானிக்கும் நடுவர் யார்?.
அ.சா.நி.கள் அரச அல்லது அரசாங்கக் கட்டுப்பாடின்றி, சுதந்திரமும் சுயாதீனமும் கொண்ட சிவில் சமூகத்தின் கருவிகளாக இருக்க வேண்டுமென்ற எண்ணக்கரு இங்கில்லை.
மற்றுமொறு கவலையளிக்கும் அறிகுறி, கிறிஸ்தவ மதத்தைப் பரப்புகின்ற ஒரு சில நிறுவனங்களால் செய்யப்படுவதாகக் கூறப்படும் நெறிமுறையற்ற மதமாற்றங்கள் பற்றிய புதிய பிரச்சார அலையும் விமர்சனங்களுமாகும். இவை சகல அ.சா.நி. கள் மீதும் அரச கட்டுப்பாட்டு ஆட்சியைக் சட்டபூர்வமாக்குவதற்கும் நியாயப்படுத்துவதற்கும் முனைகின்றன.
அரசாங்கத்திற்கும் அ.சா.நி. களுக்கும் இடையிலான உறவு கோட்பாட்டின் அடிப்படயிலன்றிச் சந்தர்ப்பவாத அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. அவசரகால ஒழுங்குவிதியின் நியதிகளின் படி அ.சா. நி.கள் அழைக்கப்பட்டன; தெரிவுசெய்யப்பட்ட குறித்த சில அசா.நி. கள் பதிவுசெய்யப்படுவதைக் கையாள்வதற்கான புதிய அலுவலகமொன்று திறக்கப்படுவது தொடர்பான விழாவுக்கு ஒருசில அ.சா.நி கள் அழைக்கப்பட்டன; தெரிவுசெய்யப்பட்ட குறித்த சில அசா.நி. கள் பெயரிடப்படாது இவ்விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகச் செய்தி அறிக்கையொன்று தெரிவித்தது. அரசாங்கம் உண்மையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில அ.சா. நி.களைக் கலந்தாலோசிக்கக் கூடும். எனினும் அ.சா.நி. ஆணைக்குழு தானே சுட்டிக் காட்டியவாறு, அமைப்பு ரீதியாகவும் குறிக்கோள்களிலும் அ.சா. நிறுவனத்துறை மிகப்

93
பரந்தளவில் வேறுபட்டிருந்த போதிலும் எவ்விதத்திலேனும் உண்மையான பிரதிநிதித்துவ முறையில் இத்துறையினரைக் கலந்தாலோசிப்பதற்கு மனப்பூர்வமான முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் தெரியவில்லை.
அரசாங்கம் ஒளிவுமறைவின்றிச் செயற்படுவதாக் கோரியபோதிலும் ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடும் பொறுப்பை அது தவிர்த்துக்கொண்டது. இது பொதுமக்களின் பார்வைக்கு அது கிடைக்காதென்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. அரசாங்கம் புதிய சட்டத்துக்கு ஆதாரமாகக் கொண்டுள்ள பொருள் பொதுமக்களிடமிருந்து மறைக்கப்படுகின்றது; உத்தேச சட்டத்தின் அவசியத்தை அல்லது அதன் போதியதன்மையைப் பொதுமக்கள் தீர்மானிப்பதற்கான பின்னணி எதுவும் இருக்கப்போவதில்லை. இந்த அளவிற்கு இச் சட்டத் தயாரிப்பு பகிரங்கமானதாகவன்றி இரகசியமானதாகவே இருக்கின்றது.
குறித்த சில நடவடிக்கைகள் திட்டவட்டமாக அரச கட்டுப்பாட்டின் கீழ் அமையவேண்டுமென்பதை அசா,நிகள் ஏற்றுக்கொள்கின்றன. உதாரணமாக முறையான, சுகாதார தரங்கள் பேணப்படுவதை உறுதிசெய்வதற்கு, அனாதை இல்லங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் மருத்துவ நிலையங்களுக்கும் வைத்தியசாலைகளுக்கும் தரங்கள் நிர்ணயிக்கப்படவேண்டும்; இது கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனினும் மேற்பார்வை செய்யவேண்டிய தேவை, நடவடிக்கையின் தன்மை காரணமாக எழுகின்றதேயொழிய, அதன்னச் செயற்படுத்துபவர், அவர் தனிப்பட்ட ஆளாயிருப்பினும் ஓர் அ.சா. நிறுவனமாக இருப்பினும் ஒரு வர்த்தக முயற்சியாக இருப்பினும், அரசாகக் கூட இருப்பினும், யார் என்ற காரணத்தினாலல்ல. இவ்வகையான மேற்பார்வை வழமையான சட்டத்தின் கீழ் இருக்கலாம் என்பதுடன் இருக்கவும் வேண்டும்.
பதில் சொல்ல வேண்டிய பொறுப்புடைமை என்ற கருத்துப்படிவம் அரச கட்டுப்பாட்டுக்கான அடிப்படையாக வலியுறுத்தப்படுகின்றது. இது ஒரு நியாயமான வாதமாகத் தென்படலாம். பதில் சொல்ல வேண்டிய பொறுப்புடைமை அத்தியாவசியமான சில சந்தர்ப்பங்கள் நிச்சயமாக இருக்கத்தான் செய்கின்றன.உதாரணமாக அரச தொழிற்பாடுகளில் அல்லது அரசாங்க அமைப்புக்களின் தொழிற்பாடுகளில் வேறு சில நடவடிக்கைகளின் விடயத்தில் இப்பொறுப்புடைமை வெவ்வேறு அளவுகளில் விரும்பத்தக்கதாயுள்ளது. எனினும் இப்பொறுப்புடைமை தனிப்பட்ட ஒருவரின் அல்லது தனிப்பட்டவர்களின் குழுவொன்றின் சுயமாக வெளிப்படுத்தும் உரிமையில் அல்லது அந்தரங்கத்தில் தலையிடுவதற்கான ஒரு நாசகரமான போர்வையாகவும் பயன்படுத்தப்படலாம்.
அ.சா.நி. கள் எல்லாம் தமது உறுப்பினர்களுக்கும், நன்கொடையாளர்கள் எவருமிருப்பின் அவர்களுக்கும், சட்டபூர்வமான பொது நலன் சம்பந்தப்பட்டிருப்பின் பொதுமக்களுக்கும் மேலும் சட்டபூர்வமான அரசாங்க நலன் சம்பந்தப்பட்டிருந்தால் மட்டும் அரசாங்கத்திற்கும் பதில்சொல்லும் பொறுப்பைக் கொண்டுள்ளன. இது

Page 52
94
உதாரணமாக ஒர் அ.சா.நி. வரிவிலக்கைக் கோரும்போது அல்லது முறைப்படி அரச கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டிய நடவடிக்கையொன்றில் ஈடுபடும்போது மட்டுமே எழக்கூடும். அ.சா. நி.கள் எல்லாம் அரசாங்கத்துக்குப் பதில் சொல்ல வேண்டியனவாக ஆக்கப்படவேண்டுமென்பதைக் காட்டுவதற்கு ஆதாரமாக எந்தவொரு நிகழ்வினமும் முன்வைக்கப்படவில்லை.
பதில் சொல்ல வேண்டிய பொறுப்புடைமை என்ற கருத்துப்படிவம் அ.சா.நி.களின் சட்டபூர்வமான உரிமைகளிலும் சுதந்திரங்களிலும் குறுக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றதென்பது அவசரகால ஒழுங்குவிதியில் வகுத்துரைக்கப் பட்டுள்ள சில தேவைப்பாடுகிளிலிருந்து தெரியவருகிறது. அ.சா.நி.கள் பெற்ற நன்கொடைகளின் மூலங்களையும் அவை பகிர்ந்தளிக்கப்பட்ட அல்லது சேவைகள் ஆற்றப்பட்ட “ ஆட்களின் பெயர்களையும் முகவரிகளையும் அவ்வாட்களை இனங்காண்பதற்கு அவசியமான அத்தகைய வேறு விவரங்களையும்’ அரசாங்கத்துக்கும் அதேவகையில் அவர்களைப் பற்றித் தகவல் அறிய விரும்பும் பொதுமக்களில் எவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டுமெனத் தேவைப்படுத்தப் பட்டுள்ளன. இது வழமையான கணக்காய்வு நடைமுறைகளுக்கப்பால் வெகுதூரம் செல்வதுடன் வியாபார நிறுவனங்களிடமிருந்தோ, வேறு நிறுவனங்களிடமிருந்தோ வேண்டப்படுவதுமில்லை. இது அந்தரங்கத்தன்மை என்று கருதப்படுவதை மீறுகின்றதுடன் முரட்டுத்தனமாகத் தலையிடுகின்ற ஒரு முயற்சியுமாகும்.
அரசியலமைப்பினால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரத்திலிருந்து கோட்பாடு ரீதியான விடயமொன்று எழுகின்றது. இதுகாலவரை ஆட்கள் ஒருங்குசேர்வதற்கும் தமது அக்கறைகளை மேம்படுத்துவதற்கான வழிகளில் செயற்படுவதற்குமான சுதந்திரத்தைக் கொண்டிருந்தனர்; இவ்வொருங்கு சேரல்கள், கூட்டிணைக்கப்படாத சங்கங்கள், இலாப நோக்கமற்ற கம்பனிகள் அல்லது சங்கங்கள் போன்ற பல்வேறு வடிவங்களைப் பெற்றுள்ளன. இச் சுதந்திரத்தை மட்டுப் படுத்துவதற்குப்போதிய காரணம் அல்லது நியாயம் எதனையும் அரசாங்கம் காட்டவில்லை.
(ஆ) தொழிற்சங்கங்கள்
(1) ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம் பற்றிய சர்வதேச தொழில் நிறுவனக் (ஜஎல்ஓ) கோட்பாடுகளும் இலங்கையில் அவற்றின் பிரயோகமும்.
இப்பகுதி ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம் பற்றிய ஐஎல்ஓ உடன்படிக்கைகளைகுறிப்பாக இவ்வுரிமையின் கருப்பொருளைக் கொண்டுள்ள 87 ஆம், 98 ஆம் இலக்க உடன்படிக்கைகளை- நோக்கவும் இவ்வுரிமை எந்த அளவிற்கு இலங்கையில் கிடைப்பதாயுள்ளதென்று மதிப்பிடவும் விழைகின்றது.

95
ஜஎல்ஓ 1919 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது. 25 ஆண்டுகள் கடந்த பின்னர், பிலடெல்பியாவில் அதன் 26 ஆவது கூட்டத்தொடரில் பிலடெல்பியா பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது வலியுறுத்துவதாவது தொழில் என்பது ஒரு சரக்கல்ல; கருத்துத்தெரிவிக்கும் சுதந்திரமும் ஒருங்குசேரும் சுதந்திரமும் தொடர்ந்த முன்னேற்றத்துக்கு அத்தியாவசியமானவை; எந்த இடத்திலாவது காணப்படும் வறுமை எல்லா இடத்திலும் சுபீட்சத்துக்கு இடரேற்படுத்துகின்றது; இல்லாமைக்கெதிரான யுத்தம் ஒவ்வொரு நாட்டினுள்ளும் அத்துடன் இடைவிடாத, ஒன்றுபட்டுத் திட்டமிட்ட சர்வதேச முயற்சி மூலமும் நடத்தப்படவேண்டும்.
இந் நிறுவனம் சமூக நீதியைச் சாதிப்பதற்கு ஒரு வழிமுறையாக ஒருங்கு சேரும் சுதந்திரத்தை வலியுறுத்துகின்றது. நீடித்த சமாதானத்தை நிலை நாட்டுவதற்கு இதுவே ஒரே வழியென அது காண்கின்றது. உண்மையிலேயே ஐஎல்ஒ அமைப்புவிதிகளின் பாயிரம் கூறுவதாவது: “சமூக நீதியின் அடிப்படையில் அது அமைந்திருந்தால் மட்டுமே நீடித்த சமாதானம் நிலைநாட்டப்படலாம்'
(i) ஐஎல்ஓ கருவிகளும் அவற்றின் தாக்கமும் (அ) ஐஎல்ஓ கருவிகளின் வகைகள்
ஐஎல்ஓ இரு வகையான கருவிகளைக் கைக்கொள்வதன் மூலம் தொழில் நியமங்களை நிறுவியுள்ளது. இவற்றில் முதலாவதான “உடன்படிக்கைகள்' சர்வதேச ஒப்பந்தங்களை ஒத்தவை. இவை ஐஎல்ஓ உறுப்பு நாடுகளால் சுயவிருப்ப அடிப்படையில் உறுதிசெய்யப்படுகின்றன. உறுதிசெய்யப்பட்டதன் பேரில் உறுப்புநாடு உடன்படிக்கையால் விதிக்கப்பட்ட நியமங்களுக்கிணங்கத் தனது சட்டத்தைக் கொண்டு வருவதற்கான பொறுப்பை ஏற்கின்றது. உறுதி செய்யப்பட்டதன் பின்னர் உறுப்பு நாடு என்ன முறையில் அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுகின்றதென்பதை ஜஎல்ஓ கண்காணிக்கின்றது.
“விதப்புரைகள்’ இரண்டாவது வகைக் கருவியாக அமைகின்றன. இவை கடப்பாடாயமைந்தனவல்ல என்பதுடன் உறுப்பு நாடுகள் இவற்றை உறுதிசெய்யவேண்டுமென எதிர்பார்க்கப்படவ்மில்லை. இவை தேசியக் கொள்கையை வகுக்கின்ற சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படுத்தும் எண்ணங்கொண்டவை.
மேலும் சர்வதேச தொழில் மாநாடு “தீர்மானங்களை” நிறைவேற்றும் தகுதியுடையது. 1952 இல் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் தொழிற்சங்க இயக்கத்தின் சுதந்திரம் தொடர்பானதாயுள்ள அதே வேளையில் 1970 இல் நிறைவேற்றப்பட்ட மற்றொன்று தொழிற்சங்க உரிமைகளையும் சிவில் உரிமைகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தையும் பற்றிக் குறிப்பிடுகின்றது.
விதப்புரையொன்றுக்கும் தீர்மானமொன்றுக்கும் இடையிலான வேறுபாடு

Page 53
96
என்னவெனில், தீர்மானமொன்றைச் செயற்படுத்துவதற்கு அரசாங்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றித் திரும்ப அறிக்கையிடவேண்டுமென்ற கடப்பாடு எதனையும் அது உருவாக்குவதில்லை. ஆயின் விதப்புரையைப் பொறுத்தமட்டில் அவ்விதப்புரை ஏற்படுத்தியுள்ள செயல்விளைவு பற்றி உறுப்பு நாடு அறிக்கையிட வேண்டிய நடைமுறையொன்றுள்ளது. தீர்மானங்கள் திட்டவட்டமாக நிறுவனத்தின் கொள்கையை நிலைநாட்டுவதிலும் அதன் கோட்பாடுகளை நிறைவேற்றுவதில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வழிகாட்டுவதிலும் “ குறிப்பிடத்தக்க செயல்விளைவை ஏற்படுத்துகின்றன”(பிறீடம் ஒவ் அசோசியேஷன்- எ வேக்கர்ஸ் எடியுகேஷன் மனுவல், 2 ஆவது திருத்திய பதிப்பு, 1987, பக்கம் 6).
(ஆ) உடன்படிக்கைகளை உறுதிசெய்தலும் அவற்றின் VIL தாக்கமும்
உடன்படிக்கையொன்றின் ஏற்பாடுகளை ஓர் அரசு கெளரவிக்கக் கட்டுப்படுவதற்கு முன்னர் அது அவ்வுடன்படிக்கையை உறுதிசெய்வது அவசியமானபோதிலும், நடைமுறையில் ஐஎல்ஓ உடன்படிக்கைகளை உறுதிசெய்யாத நாடுகள் கூட அவற்றில் விதிக்கப்பட்டுள்ள நியமங்களை ஒர் அடையாளக் குறியாகப் பயன்படுத்துகின்றன. மறு தரப்பில், உடன்படிக்கைகளை உறுதிசெய்துள்ள சில அரசாங்கங்கள் அவ்வுடன்படிக்கைகளின் தேவைகளுக்கு ஏற்புடையதாகத் தமது சட்டங்களைக் கொண்டு வரவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இச்சந்தர்ப்பங்களில் ஐஎல்ஓ சம்பந்தப்பட்ட அரசாங்கத்திடம் இவ்விடயத்தை எழுப்பி, அதன் தேசிய சட்டத்திலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, ஏன் உரிய முறையில் இணங்கியொழுகப்பட வில்லையென விசாரணை செய்கின்றது.
(i) ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம் என்ற விடயத்தில்
ஐஎல்ஓ உடன் படிக்கைகளும் விதப்புரைகளும்
இணைத்துருவாக்குவதற்க்ான உரிமையென்ற விடயத்தில் முதலாவது ஐஎல்ஓ உடன்படிக்கை 1921 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது (உடன்படிக்கை இல, 11). ஒருங்குசேர்வதற்கான உரிமை (கமத்தொழில்) உடன்படிக்கை என்ற இவ்வுடன்படிக்கை கமத்தொழிலில் ஈடுப்பட்டுள்ளவர்கள் (உடன்படிக்கையின் பிரயோகம் கூலி வேலையாட்களுக்கென வரையறைப்படுத்தாது குடிவாரப் பயிர்செய்கையாளர், பயிர்ச்செய்கையாளர், பங்கு பெற்றுப் பயிர்செய்பவர்கள் போன்றவர்களையும் உள்ளடக்குன்றது). கைத்தொழில் தொழிலாளரைப் போன்று ஒருங்கு சேர்வதற்கான அதே உரிமைகளைக் கொண்டிருக்க வேண்டுமென்ற கோட்பாட்டை வகுத்தமைக்கின்றது.
1927 இல் சர்வதேச தொழில் மாநாடு ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம் பற்றிய

97
வரைவுப் பத்திரமொன்றை வாதிட்டு ஆராய்ந்தது எனினும் இதில் முக்கியமான ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரமும் இணைத்துருவாக்குவதற்கான உரிமையைப் பாதுகாத்தலும் பற்றிய உடன்படிக்கை (இல.87) 1948 இல்தான் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1949 இல் இணைத்துருவாக்குவதற்கும் கூட்டுப் பேரத்திற்குமான உரிமை உடன்படிக்கை (இல. 98) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
(iv) ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரத்தின் அடிப்படைத்
தேவைகள்
(அ) தெரிவுசெய்யும் சுதந்திரம்
87 ஆம் இலக்க உடன்படிக்கையின் 2 ஆம் உறுப்புரை நிறுவனங்களின் மூலைக்கல்லென அழைக்கப்படலாம். அது தொழிலாளர்களும் தொழில்தருநர்களும் எவ்வித வேறுபாடுமின்றி நிறுவனங்களைத் தாபிப்பதற்கும், தமது விருப்பத்தெரிவின்படி நிறுவனங்களில் சேருவதற்கும் உரிமை கொண்டவர்களெனவும் இதற்கு முன்கூட்டிய அதிகாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டுமென்ற வரையறை இருத்தலாகாதெனவும் விதித்துரைக்கின்றது.
(ஆ) தொழிற்சங்கங்களின் அமைப்புவிதிகள்
தொழிற் சங்கங்கள் தமது சொந்த அமைப்பு விதிகளை வகுத்துக்கொள்வதற்கான சுதந்திரம் கொண்டிருக்க வேண்டுமென 87 ஆம் இலக்க உடன்படிக்கை விதித்துரைக்கின்றது. நிறுவனத்தின் அமைப்புவிதிகளில் உள்ளடக்கப்பட வேண்டிய விவரங்களை ஒர் அரசின் சட்டம் குறித்துரைக்குமாயின், அது தன்னிலையிலேயே இக் கோட்பாட்டை மீறவில்லை. தொழிற்சங்கத்தின் அமைப்புவிதிகளை ஏற்றுக்கொள்வதற்குத் தேவையான பெரும்பான்மையைத் தேசிய சட்டம் வகுத்துரைக்கலாம். எனினும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைக்குக் கீழ்ப்பட்டவையென்ற சட்டத்தின் ஏற்பாடு, ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரக் கோட்பாட்டுக்கு ஒவ்வாததெனக் கருதப்பட்டுள்ளது (பிறீடம் ஒவ் அசோசியேஷன், டைஜஸ்ட் ஒவ் கேசஸ், ஐஎல்ஓ 2 ஆவது (திருத்திய) பதிப்பு 1987, பக், 44; அத்துடன் 162 ஆவது அறிக்கை, நேர்வு இல. 685, 781, 806, பந்தி 33, 3 ஆம் பதிப்பு பக், 71 பந்தி 356;அத்துடன் பந்தி 286, பிறிடம் ஒவ் அசோசியேஷன் டைஜஸ்ட் 3 ஆம் பதிப்பு, பக் 60 ஐப் பார்க்கவும்).
முன்மாதிரியான அமைப்பு விதிகளைச் சுமத்துவது ஆட்சேபத்துக்குரியதாயினும் அவை உருவாகின்ற கட்டத்திலுள்ள புதிய தொழிற் சங்கங்களுக்கு வழி காட்டியாகப் பின்பற்றத்தக்க மாதிரியாக மட்டுமிருப்பின் ஆட்சேபத்துக்குரியதல்ல ( 6 ஆவது அறிக்கை நேர்வு இல, 11 பந்திகள் 107 உம் 108 உம், 66 ஆவது அறிக்கை நேர்வு இல 298, பந்திகள் 518 உம் 518 உம், 168 ஆவது அறிக்கை, நேர்வு இல825 உம் 849 உம், பந்தி 147, பக் 61).

Page 54
98
(இ) பதவியினரைத் தெரியும் உரிமை
நிறுவனங்கள் தமது சொந்தப் பிரதிநிதிகளைத் தெரிவதற்கான சுதந்திரம் கொண்டிருக்க வேண்டுமென்பது அடிப்படை உரிமையொன்றாகும். தகுதிபெறுவதற்கான மூலப் பிரமாணங்களை அல்லது தேர்தல் நடைமுறைகளை வகுப்பதில் அரச அதிகாரிகள் தலையிடமுடியாது. பதவிக்கான ஒரு வேட்பாளர் நிறுவனம் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலைச் சார்ந்திருக் வேண்டுமென்று அல்லது வேட்பாளரொருவர் உண்மையிலேயே அத் தொழிலில் ஊழியத்தில் இருக்க வேண்டுமென்று சட்டத்தில் வகுத்துரைக்கப்படுமாயின் அவ்வெல்லை வரையறை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. அத்தகைய கட்டுப்படுத்தலுக்கெதிரான வாதங்களில் ஒன்று அவ்வாறு எல்லைவரையறுக்கப்படும் சங்கங்கள் தகைமை பெற்ற ஆட்களின் பயனை அல்லது இளைப்பாறிய தொழிலாளரின் அனுபவத்தை இழக்கக் கூடுமென்பதாகும் (14 ஆவது அறிக்கை, நேர்வு இல. 105, பந்திகள் 135-137, 101 ஆவது அறிக்கை, நேர்வு இல 526, பந்தி 521 ஆகியவை).
குறிப்பிட்ட அரசியல் தொடர்புகள் காரணமாக ஆட்களைப் பதவி வகிப்பதிலிருந்து தடுக்கின்ற சட்டவாக்க ஏற்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை (202 ஆவது அறிக்கை, நேர்வு இல. 911 பந்தி 139). அரசாங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவராயிருப்பவர் அதேசமயத்தில் அரசின் ஊழியத்திலுள்ள தொழிலாளர்களின் பல்வேறு வகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொழிற்சங்கமொன்றின் தலைவராகவும் இருப்பது 98 ஆம் இலக்க உடன்படிக்கையின் 2 ஆம் உறுப்புரைக்கெதிராகத் தலையிடுகின்ற சாத்தியத்தை உருவாக்குகின்றது ( 84ஆவது அறிக்கை, நேர்வு இல. 415 பந்தி 62).
குற்றவியல் தவறொன்றுக்குக் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டமை, அது சம்பந்தப்பட்டவரின் நேர்மை பற்றி ஐயமெழுப்பினாலன்றி, அவ்வாள் பதவி வகிப்பதைத் தடைசெய்யலாகாது (133 ஆவது அறிக்கை, நேர்வு இல 668. பந்தி 298). அத்துடன் பதவியினர் ஒருவர் ஆகக் கூடியது எத்தனை ஆண்டுகள் கடமைபுரியலாம் என்றோ பதவியினர் ஒருவர் எத்தனை தடவைகள் மீளத்தெரியப்படலாம் என்றோ அரசு வகுத்தமைக்கமுடியாது (201 ஆவது அறிக்கை, நேர்வு இல. 842, பந்தி 51).
(ஈ) மறுசீரமைத்தல், அலுவலர்களை நீக்குதல்,
செயலாற்றுவதற்கான உரிமையை இல்லா
தாக்குதலும் இடைநிறுத்தலும்
தொழிலாளர்களின் அல்லது தொழில்தருநர்களின் நிறுவனங்கள் தமது நிருவாகத்தையும் நடவடிக்கைகளையும் ஒழுங்குசெய்தவற்கும் தமது நிகழ்ச்சித்திட்டங்களை வகுப்பதற்கும் உரிமை கொண்டுள்ளனவென 87 ஆம் இலக்க உடன்படிக்கையின் 3 ஆம் உறுப்புரை கூறுகின்றது. இவ்வுறுப்புரையின் இரண்டாம்

99
பகுதி இவ்வுரிமை சட்டபூர்வமாகக் கையாளப்படுவதைத் தடைசெய்கின்றதான அரசாங்க அதிகாரிகளின் தலையீட்டை விலக்குகின்றது. தொழிலாளர்களினதும் தொழில்தருநர்களினதும் நிறுவனங்கள் நிருவாக அதிகாரிகளினால் கலைக்கப்படவோ இடைநிறுத்தப்படவோ முடியாது ( உடன்படிக்கை இல. 87 உறுப்புரை 4).
தொழிற்சங்மொன்றைக் கலைத்தலானது தொழிலாளர்களின் தொழில்ரீதியான பிரதிநிதித்துவம் தொடர்பில் மிகப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதனால், தொழில் உறவுகளின் நலன் கருதி இவ்வகையான செயல்கள் இறுதிவழிமுறையாக மட்டும் மேற்கொள்ளப்படுவது விரும்பத்தக்கது (பிறீடம் ஒவ் அசோசியேஷன், பக் 51, 153 ஆவது அறிக்கை, நேர்வு இல, 763, 786, 801 பந்தி 219 ஜஎல்ஓ டைஜஸ்ட் 3 ஆம் பதிப்பு, பக் 92 பந்தி 486).
செயலாற்றுவதற்கான உரிமை இல்லாதாக்கப்பட்டமை எதனையும் பற்றிச் சட்ட நீதிமன்றமொன்றில் கேள்வி எழுப்பக்கூடிய வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதுடன் மேன்முறையீடொன்றும் வெறுமனே நிறைவேற்று அதிகாரிகளால் அல்லது நிருவாக அதிகாரிகளால் தீர்வு செய்யப்படலாகாது (47 ஆவது அறிக்கை, நேர்வு இல, 194 பந்தி(II) ; 58 ஆவது அறிக்கை, நேர்வு இல, 251 பந்தி 611, டைஜஸ்ட் 3 ஆம் பதிப்பு பக், 58). மேலும் தொழிற்சங்கத்தலைவர்கள் நாட்டின் தண்டனைச் சட்டங்களால் தண்டிக்கப்படக்கூடிய செயல்களைப் புரிந்திருக்கிறார்களென்ற கடுமையான சந்தேகம் இருப்பின், அது காரணமாகவே நிறுவனத்தின் சட்டபூர்வமான முக்கியத்துவம் அங்கீகரிக்கப்படுதல் தடுக்கப்படலாகாது (129 ஆவது அறிக்கை, நேர்வு இல514, பந்தி 115).
(உ) கூட்டுச் சேருவதற்கான அல்லது இணைவற்கான
உரிமை
தொழிற்சங்கங்கள் கூட்டிணைப்புகளுடன் சேருவதற்கும், சர்வதேச அமைப்புக்களுடன் இணைவதற்குமான உரிமையை 87ஆம் இலக்க உடன்படிக்கையின் 5 ஆம் உறுப்புரை வழங்குகின்றது. ஒரேயொரு கூட்டுக்குழு மட்டுமே இருக்கலாமெனச் சட்டம் ஏற்பாடு செய்ய முடியாது. ஏனெனில் இது ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரக் கோட்பாட்டை மீறக்கூடும் (பிறீடம் ஒவ் அசோசியேஷன், ஐஎல்ஓ டைஜஸ்ட் 3 ஆம் பதிப்பு, அத். Wi, பக், 96).
(ஊ) அரசியல் உறவுகள்
தொழிற்சங்கங்களை தொழில்ரீதியான விடயங்களுக்கென அல்லது வேலை தொடர்பான பிரச்சினைகள் என்று கூறக்கூடிய விடயங்களுக்கென வரையறைப்படுத்த முடியாதென ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நிச்சயமாக நாட்டின் பொருளாதார நிலைமைகள் அல்லது சர்வதேச பொருளாதார நிலைமைகள் போன்ற அகல்விரிவான விடயங்கள் தொழிலாளரின் ஊதியத்தில் அல்லது அவர்களின் தொழிற் பாதுகாப்பில் விளைவுகளை ஏற்படுத்துவதனால் அவை தொழிலாளருடன்

Page 55
100
தொடர்புடையவையே எனவே தொழிற்சங்கங்கள் அரசியல் உலகுடன் பிணைப்பொன்றைக் கொண்டிருத்தல் அவசியமாகும். சட்டத்துக்கு முரணான வகையில் செய்யாத வரையில், அவை அரசாங்கத்தின் நிதிக் கொள்கை பற்றியும் ஏனைய கொள்கைகள் பற்றியும் தமது கருத்துக்களைத் தெரிவித்தல் வேண்டும். தொழிற்சங்கங்கள், ஏனைய வேறு அமைப்புக்களைப் போன்று, நீதிமுறையான கட்டுப்பாட்டுக்கு அமைய வேண்டியது நியாயமானபோதிலும் தொழிற் சங்கங்களின் அரசியல் நடவடிக்கை மீதான பொதுத் தடைவிதிப்பு எதுவும் 87 ஆம் இலக்க உடன்படிக்கையின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது. சர்வதேச தொழில் மாநாடு 1952 இல் தொழிற்சங்க இயக்கத்தின் சுதந்திரம் பற்றிய தீர்மானமொன்றை நிறைவேற்றியது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தொழிற்சங்கங்கள் தத்தமது நாடுகளின் தேசிய சட்டத்துக்கும் நடைமுறைக்கும் இணங்கவும் தமது உறுப்பினர்களின் தீர்மானத்தின் படியும், தமது பொருளாதார சமூக இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறையாக அரசியல் கட்சியொன்றுடன் உறவுகளைத் தாபிப்பதற்கு அல்லது அரசியலமைப்பு ரீதியான அரசியல் நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானிக்கும்போது, அவ்வரசியல் உறவுகள் அல்லது நடடிவக்கைகள், நாட்டின் அரசியல் மாற்றங்கள் எவ்வாறிருப்பினும் தொழிற்சங்க இயக்கத்தின் தொடர்ச்சியை அல்லது அதன் சமூக அல்லது பொருளாதாரச் செயற்பாடுகளை விட்டுக்கொடுக்கும் இயல்புடையனவாக இருக்கக்கூடாது(பிறீடம் ஒவ் அசோசியேஷன், பக் 62).
உடன்படிக்கையின் கீழான தமது உரிமைகளைப் பிரயோகிக்கும் போது நிறுவனங்கள் நாட்டின் சட்டத்தை மதிக்கவேண்டுமென 87 ஆம் இலக்க உடன்படிக்கையின் 8 ஆம் உறுப்புரை எச்சரிக்கின்றது. அரசாங்கங்கள் தமது பொருளாதார சமூகச் கொள்கைகளைச் செயற்படுத்துவதற்குத் தொழிற்சங்கங்களைப் பயன்படுத்த முயலக் கூடாது ( பிறிடம் ஒவ் அசோசியேஷன், பக்கம் 63; அத்துடன் பக். 54, பந்தி 254 ஐப் பார்க்கவும்). ஏனையவற்றுடன் ஒப்பிடுகையில் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்குச் சாதகமாக அல்லது பாதகமாக நடப்பதன் மூலம் தாம் சேர எண்ணங்கொண்ட நிறுவனம் பற்றிய தொழிலாளரின் விருப்பத்தெரிவில் அரசாங்கம் மாற்றம் ஏற்படுத்தக் கூடும். வேண்டுமென்றே இவ்வகையில் செயற்படும் ஒரு அரசாங்கம் மேற்படி கோட்பாட்டை மீறுகின்றது.
(W) இணைந்துருவாக்குவதற்கும் கூட்டுப்
பேரத்துக்குமான உரிமை
98 ஆம் இலக்க உடன்படிக்கை, “ இணைந்துருவாக்குவதற்கும் கூட்டாகப் பேரம் பேசுவதற்குமான உரிமைக் கோட்பாடுகளின் பிரயோகம் தொடர்பான உடன்படிக்கை” எனப் பெயரிடப்பட்டுள்ளது. 1993 இல் மாநாட்டின் 80 ஆவது கூட்டத்தொடரின்

101
முன்னர் இவ்வுடன்படிக்கையை உறுதிசெய்து விட்ட 116 நாடுகளில் இலங்கையும் ஒன்று. (இலங்கை இவ்வுடன் படிக்கையை 1992, மார்கழி 13 ஆந் தேதி உறுதிசெய்தது). இவ்வுடன்படிக்கையின் 1 ஆம் 2 ஆம் 3 ஆம் உறுப்புரைகள், இலங்கை உறுதிசெய்யாத 87 ஆம் இலக்க உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டவற்றை மீண்டும் வலியுறுத்துவனவாகவும் மேலும் தெளிவுப்படுத்துவனவாகவும் தோன்றுகின்றன. உறுப்புரை 1 பின்வருமாறு கூறுகின்றது:
(1) தொழிலாளர்கள் தமது தொழிற் தொடர்பில் தொழிற்சங்கத்துக்கெதிரான பாரபட்ச நடவடிக்கைகளுக்கெதிராக போதிய பாதுகாப்பை அனுபவித்தல் வேண்டும்,
(2) அத்தகைய பாதுகாப்பு குறிப்பாக -
(அ) தொழிலாளி ஒருவரின் தொழில்வாய்ப்பு, அவர் தொழிற்சங்கமொன்றில் சேரக்கூடாது அல்லது தொழிற்சங்க உறுப்புரிமையை விட்டு விடவேண்டுமென்ற நிபந்தனைக்கு அமைய இருக்கின்ற;
(ஆ) தொழிலாளி ஒருவரின் தொழிற்சங்க உறுப்புரிமை காரணமாக அல்லது வேலை நேரத்துக்கு அப்பால் அல்லது தொழில்தருநரின் ஒருப்பாட்டுடன் வேலை நேரத்தில் தொழிற்சங்க நடவடிக்கை க்ளில் பங்குபற்றிய காரணத்தினால் அவர் வேலைநீக்கப்படுவதற்கு அல்லது வேறுவகையில் தீங்கிழைக்கப்படுவதற்கு ஏதுவாகின்ற,
திட்டமிடப்பட்ட செயல்கள் தொடர்பில் ஏற்புடையதாக இருத்தல் வேண்டும்.
உறுப்புரை 2 கூறுவதாவது:
(1) தொழிலாளர்களினதும் தொழில்தருநர்களினதும் நிறுவனங்கள், ஒன்று மற்றதில் அல்லது ஒன்றின் முகவர்கள் அல்லது அதன் தாபனத்திலுள்ள, கடமையிலுள்ள அல்லது நிருவாகத்திலுள்ள உறுப்பினர்கள் மற்றதில் குறுக்கிடுகின்ற செயல்களுக்கெதிரான போதிய பாதுகாப்பை அனுபவித்தல் வேண்டும்.
(2) முக்கியமாக, தொழிலாளர்களின் நிறுவனங்களைத் தொழில்தருநர்களின் அல்லது தொழில்தருநர்களின் நிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் நிலைநாட்டுவதற்கு ஆதரவாகத் திட்டமிடப்பட்ட செயல்கள் அல்லது தொழிலாளர்களின் நிறுவனங்களை தொழில்தருநர்களின் அல்லது தொழில்தருநர்களின் நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்குடன் அவற்றுக்கு நிதிமுறையில் அல்லது வேறு வழிமுறைகளில் ஆதாரமளிக்கின்ற செயல்கள் இவ்வுறுப்புரையின் கருத்தின் கீழ் குறுக்கிடுகின்ற செயல்களாகக் கருதப்படுதல் வேண்டும்.

Page 56
102
உறுப்புரை 3 கூறுவதாவது:
முற்போந்த ஏற்பாடுகளில் வகுத்துரைக்கப்பட்டவாறு இணைந்துருவாக்கு தற்கான உரிமை மதிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்குடன், தேவையானவிடத்து, தேசிய நிலைமைகளுக்குப் பொருத்தமான துணை அமைப்பு நிறுவப்படுதல் வேண்டும்.
5 ஆம் உறுப்புரையும் முக்கியமானது. அது பின்வருமாறு படிக்கப்படுகின்றது:
(1) இவ்வுடன்படிக்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உத்தரவாதங்கள் எந்தளவிற்கு ஆயுதப் படைகளுக்கும் பொலிசுக்கும் ஏற்புடையதென்பது தேசிய சட்டங்களால் அல்லது பிரமாணங்களால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.
(2) சர்வதேச தொழில் நிறுவனத்தின் அமைப்புவிதிகளில் 19 ஆம் உறுப்புரையின் 8 ஆம் பந்தியில் தெளிவுறுத்தப்பட்ட கோட்பாட்டின் பிரகாரம் ஏதேனும் உறுப்புநாடு இவ்வுடன்படிக்கையை உறுதி செய்தலானது, இவ்வுடன்படிக்கையில் உத்தரவாதமளிக்கப்பட்ட ஏதேனும் உரிமையை ஆயுதப்படைகளின் அல்லது பொலிசின் உறுப்பினர்கள் அனுபவிப்பதற்கு ஏதுவாயிருக்கின்ற நடப்பிலுள்ள சட்டம், தீர்ப்பு, மரபு அல்லது ஒப்பந்தம் எதனையும் பாதிப்பதாகக் கருதப்படலாகாது.
பேரம் பேசும் நோக்கத்திற்காகத் தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பதென்ற வினாவும் மிகவும் முக்கியமானது. ஐஎல்ஓ நிபுணர்கள் குழு இவ்வங்கீகாரம் அரசினால் கட்டுப்பாட்டுக்குட்படுத்தப்படலாம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும் அத்தகைய கட்டுப்பாட்டுக்குட்படுத்தலானது “ ஒருபக்கச் சார்பான அல்லது துஷ்பிரயோகத்துக்கான வாய்ப்பைத் தவிர்க்கும் பொருட்டு கொள்குறியுடன் முன்கூட்டியே நிலைநாட்டப்பட்ட மூலப்பிரமாணத்தின் அடிப்படையில்’ அமைந்திருக்க வேண்டுமென அது வலியுறுத்தியுள்ளது. (பிறீடம் ஒவ் அசோசியேஷன் அன்ட் கலெக்டிங் பார்கெயினிங் றிப்போட் i (பகுதி 4 பீ) 1983, பக்.97, பந்தி 295) கூட்டுப் பேரத்திற்கான நோக்கத்துக்கென தொழில்தருநர்கள் தமது ஊழியத்திலுள்ள தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நிறுவனங்களை அங்கீகரிக்க வேண்டுமெனக் குழு தெரிவித்துள்ளது ( பிறீடம் ஒவ் அசோசியேஷன் அன்ட் கலெக்டிவ் பார்கெயினிங் றிப்போட் ii) ( பகுதி 4 பீ) 1983, பக், 98, பந்தி 296).
(IV) இலங்கையில் தொழிற்சங்க உரிமைகள் -
பொதுவாகத் தொழிற்சங்கங்களின் கட்டமைப்பும் உறுப்பாண்மை உரிமைகளும்
தற்போதுள்ள அரசியலமைப்பு ( 1978 புரட்டாதி 7 ஆந்திகதி முதல் செயற்படுவதாக, 1978/9/1 ஆந் தேதிய அதிவிசேட வர்த்தமானி) ஒருங்கு சேர்வதற்கான சுதந்திர

103
பின்வரும் உத்தரவாதங்கள் பிரத்தியேகமாகக் குறிப்பிடப்படுகின்றன:
(1) சித்திரவதை, மனிதாபிமானமற்ற இழிவான நடாத்துகை அல்லது தண்டனை
என்பனவற்றிலிருந்து விடுதலை (உறுப்புரை 11);
(2) அரசியல் கொள்கை காரணமாக ஒரங்காட்டுதல் (உறுப்புரை 12 (2));
(3) எதேச்சையாகக் கைது செய்யப்படாமலும், கட்டுக்காவலில் வைக்கப்படாமலும், தடுத்துவைக்கப்படாமலும், சொந்தச் சுதந்திரம் பறிக்கப்படாமலும் இருப்பதற்கான சுதந்திரம். சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கைமுறைக்கு இணங்க மட்டுமே இவை பறிக்கப்படலாம் ( உறுப்புரை 13).
(4) வெளியிடுதலுட்படப் பேச்சு சுதந்திரமும் கருத்து தெரிவித்தற் சுதந்திரமும், அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம், தொழிற் சங்கமொன்றை அமைக்கவும் அதிற்சேரவும் உள்ள சுதந்திரம், தடையின்றி நடமாடுவதற்கான சுதந்திரம் (உறுப்புரை 14).
எனினும் இவ்வுரிமைகள், தேசியப்பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு, பொதுமக்கள் சுகாதாரத்தை அல்லது ஒழுக்கத்தைப் பாதுகாத்தல் என்பனவற்றின் நலன்கருதி அல்லது மற்றவர்களின் உரிமைகள், சுதந்திரங்கள் என்பனவற்றுக்கு முறையான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துக்காக அல்லது சனநாயகச் சமூகத்தின் பொதுச் சேமநலத்தின் நீதியான தேவைப்பாடுகளை ஈடுசெய்யும் நோக்கத்துக்காகச் சட்டத்தினால் விதிக்கப்படக்கூடியவாறான அத்தகைய மட்டுப்பாடுகளுக்கு அமைந்துள்ளன (உறுப்புரை 15 (7)). சட்டம்' என்ற சொல்லின் பிரயோகம் பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பான ஒழுங்குவிதிகளையும் உள்ளடக்குகின்றது.
ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம், இனச்சுமுக வாழ்வு, மதச்சுமுக வாழ்வு, தேசியப் பொருளாதாரம் என்பனவற்றின் நலன்கருதிச் சட்டத்தினால் விதிக்கப்படக்கூடிய மட்டுப்பாடுகளுக்கு அமைந்துள்ளது ( உறுப்புரை 15 (4)). அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், இனச்சுமுகவாழ்வு, மதச் சுமுக வாழ்வு என்பனவற்றின் நலன்கருதிச் சட்டத்தினால் விதிக்கப்படக்கூடிய மட்டுப்பாடுகளுக்கு அமைந்துள்ளது (உறுப்புரை 15 (3).
வெளியிடுதலுட்படப் பேச்சுச் சுதந்திரமும், கருத்துத் தெரிவித்தற் சுதந்திரமும் இனச் சுமுகவாழ்வு, மதச் சுமுக வாழ்வு என்பனவற்றின் நலன்கருதியோ அல்லது பாராளுமன்றச் சிறப்புரிமை, நீதிமன்ற அவமதிப்பு, மானநட்டம் அல்லது தவறு புரியத்தூண்டுதல் என்பன தொடர்பாகவோ சட்டத்தினால் விதிக்கப்படக்

Page 57
104
அடிப்படை உரிமையொன்று மீறப்பட்டமைபற்றிய அல்லது உடனடியாக மீறப்படவுள்ளமை பற்றிய ஏதேனும் பிரச்சினையை விசாரணை செய்வதற்கும் தீர்மானிப்பதற்குமான பிரத்தியேக நியாயாதிக்கம் உயர்நீதிமன்றத்துக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது (உறுப்புரை 17, 118 (ஆ) உம் 126 (1) உம்).
பேச்சு, கருத்துத் தெரிவித்தல், அமைதியான முறையில் ஒன்று கூடுதல், ஒருங்கு சேருதல் ஆகிய சுதந்திரங்களும் தொழிற் சங்கமொன்றில் சேருவதற்கான உரிமையும் ஆயுதப்படைகள், பொலிஸ் படை, பொது அமைதி பேணும் ஏனைய படைகள் ஆகியவற்றுக்கு ஏற்புடையனவாக்கும் போது, அத்தகைய படையினர் தத்தமது கடமைகளை முறையாகப் புரிதல், அவர்கட்கிடையே ஒழுக்கக் கட்டுப்பாட்டினைப் பேணுதல் என்பனவற்றின் நலன் கருதிச் சட்டத்தினால் விதிக்கப்படக்கூடியனவான அத்தகைய மட்டுப்பாடுகளுக்கு அமைந்தனவாக இருத்தல் வேண்டுமெனவும் அரசியலமைப்புக் கூறுகின்றது (உறுப்புரை 15 (8).
அரசியலமைப்பின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரகால ஒழுங்குவிதிகளை ஆக்குவதற்குள்ள தத்துவமானது, அரசியலமைப்பினது ஏற்பாடுகள் தவிர்ந்த, ஏதேனும் சட்டத்தினது ஏற்பாடுகளின் தொழிற்பாட்டை ஒதுக்கித் தள்ளுகின்ற, திருத்துகின்ற அல்லது இடை நிறுத்திவைக்கின்ற சட்டப்பயன் கொண்ட ஒழுங்குவிதிகளை ஆக்குவதற்கான தத்துவத்தையும் உள்ளடக்குகின்றது (உறுப்புரை 155 (2)). தேசிய பாதுகாப்பு ஆகியவை சம்பந்தப்பட்ட குறிப்பிடப்பட்ட நிலைமைகளில் அடிப்படை உரிமைகள் மீது மட்டுப்பாடுகள் விதிக்கப்படலாமென அரசியலமைப்புத்தானே ஏற்றுக்கொண்டுள்ளதனால், அரசியலமைப்பின் 15 (7) ஆம் உறுப்புரை உள்ளடக்கியுள்ள அங்கீகரிக்கப்பட்ட மட்டுப்பாடுகளினுள் வருகின்ற சூழ்நிலைகளில் அவசரகால ஒழுங்குவிதிகளை ஆக்குகின்ற உரிமையில் இவ்வுறுப்புரை குறுக்கிடவில்லை.
(ஆ) தொழிற்சங்கங்கள் கட்டளைச்சட்டம்
1970 இன் 24 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 1958 இன் 18 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 1948 இன் 15 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 1946 இன் 3 ஆம் இலக்கக் கட்டளைச்சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான 1935 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்கத் தொழிற் சங்கங்கள் கட்டளைச்சட்டமே, இலங்கையில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்க உரிமைகள் பற்றிய பிரதான நிறைவேற்றுச் சட்டமாகும்.
தொழிற் சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒரு “ தொழிற் சங்கம்” என்பது பின்வரும் குறிக்கோள்களில் ஒன்றை அல்லது அதற்குக் கூடியவற்றைக் கொண்டுள்ள தொழிலாளர்களின் அல்லது தொழில் தருநர்களின், தற்காலிகமான அல்லது நிரந்தரமான ஏதேனும் கூட்டுக்குழு அல்லது செயற் கூட்டுறவு என்று பொருள்படும்: தொழிலாளர்களுக்கும் தொழில்தருநர்களுக்கும் இடையிலான, அல்லது

105
தொழிலாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான, அல்லது தொழில்தருநர்களுக்கும் தொழில்தருநர்களுக்கும் இடையிலான உறவுகளைக் கட்டுப்பாட்டுக்குட்படுத்துதல்; அல்லது ஏதேனும் தொழிலை அல்லது வியாபாரத்தை நடத்துவதில் வரையறையான நிபந்தனைகளை விதித்தல்; அல்லது தொழிற் பிணக்குகளில் ஒன்றில் தொழிலாளரை இன்றேல் தொழில்தருநர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துதல்; ஏதேனும் தொழிலில் அல்லது கைத்தொழிலில் வேலை நிறுத்தங்களை அல்லது கதவடைப்புக்களை ஊக்குவித்தல் அல்லது அவற்றுக்கு நிதியுதவி ஒழுங்கு செய்தல், அல்லது வேலைநிறுத்தத்தின் போது அல்லது கதவடைப்பின்போது அதன் உறுப்பினர்களின் ஊதியத்துக்கு அல்லது வேறு நலன்களுக்கு ஏற்பாடு செய்தல். தொழிற் சங்கமென்பதன் பொருள் 2 அல்லது அதற்குக் கூடிய தொழிற்சங்கங்களின் கூட்டிணைப்பையும் உள்ளடக்குகின்றது.
கட்டளைச் சட்டத்தில் “தொழிலாளி” என்ற சொல்லின் வரைவிலக்கணம் -
தொழில்தருநர் ஒருவரிடம் ஏதேனும் முறைமையில் ஒப்பந்தமொன்றில், அவ்வொப்பந்தீம் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ கூறப்பட்டிருப்பினும் சரி அல்லது எழுத்துமூலமாகவோ வாய்மூலமாகவோ கூறப்பட்டிருப்பினுஞ்சரி அல்லது தானே செய்து முடிக்க வேண்டிய ஏதேனும் வேலைக்கான அல்லது தொழிலுக்கான ஒப்பந்தமொன்றில் ஈடுபட்டுள்ள அல்லது வேலை செய்கின்ற ஒருவரென்று பொருள் கூறுகின்றது. அது அத்தகைய ஊழியத்தில் வழக்கமாகவுள்ள எவரேனும் ஆளை அத்தகைய ஆள் குறிப்பிட்டதொரு நேரத்தில் ஊழியத்தில் இருந்தாலுஞ்சரி இல்லாது விடினுஞ்சரி, உள்ளடக்குகின்றது.
கட்டளைச் சட்டத்தில் “ தொழில்தருநர்கள்’ என்ற சொல்லுக்குப் பொருள் வரையறுக்கப்படவில்லை. எனினும் அச்சொல், தொழிலாளர்களை ஊழியத்தில் அமர்த்தும் எவரேனும் ஆட்கள், நிறுவகங்கள், கம்பனிகள் போன்றவற்றை உள்ளடக்க வேண்டுமென எவரும் ஏற்றுக்கொள்ளலாம்.
“ தொழிற் சங்க” த்தின் வரைவிலக்கணம் “ தொழிற் பிணக்கு ’ களைக் குறிப்பிடுகின்றது. கட்டளைச் சட்டத்தில் அத்தகைய தொழிற் பிணக்கு என்பது எவரேனும் ஆளின் தொழில் அல்லது தொழிலின்மை அல்லது தொழில் நியதிகள் அல்லது தொழில் நிலமைகள் தொடர்பில் தொழில்தருநர்களுக்கும் தொழிலாளருக்கும் இடையில் அல்லது தொழிலாளருக்கும் தொழிலாளருக்கும் இடையில் உள்ளதொரு பிணக்கெனப் பொருள் வரையறை செய்யப்பட்டுள்ளது.
கட்டளைச் சட்டத்தின் கீழ் தொழிற் சங்கங்களின் பதிவாளரொருவர் நியமிக்கப்படுகின்றார். தற்போது தொழில் ஆணையாளரே தொழிற்சங்கங்களின் பதிவாளராகச் செயற்படுகின்றார். தொழிற்சங்கங்கள் தொழில் திணைக்களத்தால் பதிவு செய்யப்படுகின்றன. தொழிற்சங்கமொன்றைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் விதித்துரைக்கப்பட்டபடிவமொன்றில் செய்யப்படுகின்றது.

Page 58
106
தொழிற்சங்கமொன்றைப் பதிவுசெய்வதற்கு அதில் ஆகக்குறைந்தது7 உறுப்பினராதல் இருத்தல் வேண்டும். கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கும் அதன் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கும் தொழிற்சங்கம் இணங்கியொழுகியுள்ளதெனப் பதிவாளர் திருப்தியடையாவிட்டால் அல்லது தொழிற்சங்கத்தின் குறிக்கோள்கள் அல்லது விதிகள் எதுவும் சட்டத்துக்கு மாறானதென அல்லது ஏதேனும் சட்டத்தின் ஏற்பாட்டுக்கு முரணானதென அவர் அபிப்பிராயப்பட்டால் அதன் பதிவீடு மறுக்கப்படலாம் ( பகுதி 14).
பதிவுச் சான்றிதழொன்று பின்வருஞ் சூழ்நிலைகளில் பதிவாளரினால் மீளப்பெறப்படலாம் அல்லது இரத்துச் செய்யப்படலாம்: தொழிற்சங்கத்தின் வேண்டு கோளின் பேரில்; பதிவுச் சான்றிதழ் மோசடியாக அல்லது தவறாகப் பெறப்பட்டதெனப் பதிவாளர் திருப்தியடைந்தால்; தொழிற் சங்கத்தின் குறிக்கோள்களில் அல்லது விதிகளில் ஏதேனுமொன்று சட்டத்துக்குமாறானதாகவிருந்தால்; தொழிற்சங்கத்தின் அல்லது அதன் நிறைவேற்றற் குழுவின் அமைப்பு விதி சட்டத்துக்கு மாறானதாகவிருந்தால்; தொழிற்சங்கம் வேண்டுமென்றே அல்லது பதிவாளரின் அறிவித்தலின் பின்னரும் கட்டளைச்சட்டத்தின் ஏதேனும் ஏற்பாட்டை மீறியிருந்தால்; அல்லது அத்தகைய ஏற்பாட்டுக்கு ஒவ்வாத விதி எதனையும் தொடர்ந்து செயற்பட அனுமதித்திருந்தால்; அல்லது 38 ஆம் பிரிவினால் தேவைப்படுத்தப்பட்டவாறான விடயம் எதற்கும் ஏற்பாடு செய்கின்ற விதி எதனையும் நீக்கியிருந்தால் ( 38 ஆம் பிரிவு தொழிற்சங்கங்களைப் பதிவு செய்வதற்கான விதிகளையும் அதிலிருந்து பார்வைக்கு வைப்பதையும் பதிவாளருக்கு அனுப்பிவைப்பதையும் கூறுகின்றது); தொழிற்சங்கத்தின் நிதிகள் சட்டத்துக்கு மாறான முறையில் அல்லது சட்டத்துக்குமாறான குறிக்கோளில் அல்லது சங்கத்தின் விதிகளால் அங்கீகரிக்கப்படாத குறிக்கோளில் செலவிடப்பட்டால், அல்லது தொழிற்சங்கம் இல்லாதொழிந்து போனால் (பிரிவு 15(1) ).
தொழிற்சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் பதிவீடு மீளப்பெறப்படும் சந்தர்ப்பத்தில் தவிர, பதிவாளர் பதிவுச் சான்றிதழை மீளப்பெறுவதற்கு அல்லது இரத்துச் செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள காரணங்களைக் குறித்துரைக்கின்ற 2 மாதங்களுக்குக் குறையாத முன்னறிவித்தல் வ்ழங்கக் கடமைப்பட்டுள்ளார். அத்தகைய அறிவித்தலைப் பெற்ற தொழிற்சங்கம் காரணம் காட்டுவதற்கு ஏற்பாட்டில் இடமளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நேரும்போது பதிவாளர் அச்சூழ்நிலைகளில் தாம் அவசியமெனக் கருதுகின்றவாறான அத்தகைய விசாரணையை நடத்தலாம் (15 (4) ஐப் பார்க்கவும்). சான்றிதழை மீளப்பெறுகின்ற அல்லது இரத்துச்செய்கின்ற பதிவாளரின் கட்டளை எதுவும் அதனால் பாதிக்கப்படுகின்ற தொழிற்சங்கத்திடம் கையளிக்கிப்படவேண்டும். பதிவுசெய்ய மறுப்பதற்கெதிராக அல்லது பதிவீட்டை இரத்துச் செய்வதற்கெதிராக அத்தகைய மறுப்பு அல்லது கட்டளைத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் மாவட்ட நீதிமன்றத்துக்கு மேன்முறையீட்டு மனுவொன்றின் மூலம் மேன்முறையீடு செய்யலாம் ( பிரிவு 16). மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கெதிராக மேன்முறையீடு தாக்கல் செய்யப்படலாம் (பிரிவு 17).

107
பதிவு செய்யப்படாது செயற்படுகின்ற தொழிற்சங்கமொன்று சட்டத்துக்கு மாறான சங்கம் என்பதுடன் தொழிற்சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான ஏதேனும் விடுபாட்டுரிமைகளுக்கோ சிறப்புரிமைகளுக்கோ உரித்துடையதுமல்ல (பிரிவு 18 (அ).
பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கமொன்றுக்கு அல்லது அதன் அலுவலருக்கு அல்லது அதன் உறுப்பினருக்கு எதிராக, அத்தொழிற்சங்கத்தின் உறுப்பினர் ஒரு தரப்பாயுள்ள தொழிற் பிணக்கொன்று பற்றிய எண்ணங்கொண்டு அல்லது அதற்குத் துணையாகச் செய்த ஏதேனும் செயல் தொடர்பில், அத்தகைய செயல் தொழில் ஒப்பந்தமொன்றை முறிக்கும்படி வேறு எவரேனும் ஆளைத் தூண்டுகின்றது அல்லது வேறு எவரேனும் ஆளின் வர்த்தகத்தில், வியாபாரத்தில் அல்லது தொழிலில் குறுக்கிடுகின்றது. அல்லது வேறு எவரேனும் ஆள் தமது மூலதனத்தை அல்லது தொழிலைத் தமது விருப்பப்படி கையாளும் உரிமையில் குறுக்கிடுகின்றது என்ற அடிப்படையில் மட்டும் எந்தவொரு சிவில் நீதி மன்றத்திலும் ஏதேனும் வழக்கு நடவடிக்கை அல்லது சட்டநடவடிக்கை தொடரமுடியாது (பிரிவு 26).
தொழிற் பிணக்கொன்று பற்றிய எண்ணங்கொண்டு அல்லது அதற்குத்துணையாக தொழிற் சங்கத்தினால் அல்லது அதன் சார்பில் புரியப்பட்ட ஏதேனும் பொல்லாங்குக் குற்றந் தொடர்பில் அத்தொழிற்சங்கத்துக்கு அல்லது அதன் உறுப்பினர்களுக்கு அல்லது அதன் அலுவலர்களுக்கு எதிராக வழக்கு நடவடிக்கை எதுவும் தொடரமுடியாது ( பிரிவு 27).
(இ) அரசாங்க ஊழியர்களின் ஒருங்கு சேர்வதற்கான
உரிமை:
ஐஎல்ஓ வகுத்துள்ள கோட்பாடுகள்.
87 ஆம் உடன்படிக்கையிலுள்ள நியமங்கள் “ எவ்வித வேறுபாடுமின்றி” எல்லாத் தொழிலாளருக்கும் ஏற்புடையனவாதலால் அவை அரசாங்க ஊழியர்களுக்கும் ஏற்புடையனவே. தனியார் துறை, அரசாங்கத்துறை ஆகிய இரண்டிலுமுள்ள தொழிலாளர் தமது நலன்களைப் பாதுகாக்க அதே உரிமைகளைக் கொண்டிருக்க வேண்டும் ( 181ஆவது அறிக்கை நேர்வு இல. 865 பந்தி 205; 190 ஆவது அறிக்கை நேர்வுகள் இல. 672,768,802 ஆகியன, பந்தி 76, டைஜஸ்ட் 3 ஆம் பதிப்பு, பக், 45). அரசாங்க ஊழியர்களின் ஒவ்வொரு வகுதிக்கும் வெவ்வேறு நிறுவனங்கள் தாபிக்கப்படவேண்டுமெனக் குறித்துரைக்கும் ஏற்பாடுகள், தொழிலாளர் தமது சொந்த விருப்பத் தெரிவின்படி நிறுவனங்களைத் தாபிப்பதற்கும் அவற்றில் சேருவதற்குமான அவர்களின் உரிமைக்கு முரண்பட்டவை (பந்திகள் 125, 126 பிறீடம் ஒவ் அசோசியேஷன் அன்ட் கலெக்டிங் பார்கெயினிங், றிப்போட் (ii) (பகுதி 4 பீ) 1983, பக் 42 ), குறிப்பு: கூட்டுச் சேருவதற்கான உரிமை வரையறை செய்யப்பட்டுள்ள நாடொன்றுக்கு உதாரணமாக இலங்கை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது (பந்தி 245,பக் 76).

Page 59
108
ஏனையவற்றுடன், அனேக நாடுகளில் அரசாங்க சேவை நடவடிக்கைகள் குறிப்பிடத்தக் களவு விரிவடைந்துள்ளதுடன் அரசாங்க அதிகாரிகளுக்கும் அரசாங்கத்துறையிலுள்ள ஊழியர்களின் நிறுவனங்களுக்குமிடையில் உரமான தொழில் உறவுகளின் அவசியத்தின் பொருட்டும், தொழில் உறவுகள் ( அரசாங்க சேவை) உடன்படிக்கை, 1978 (இல. 151) ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வுடன்படிக்கை பொலிஸ், ஆயுதப்படைகள், கொள்கை வகுத்தலையும் செயலாட்சியையும் கடமையாகக் கொண்டவர்களென வழமையாகக் கருதப்படும் உயர்மட்ட ஊழியர்கள் அல்லது மிக அந்தரங்கத் தன்மையான கடமைகளை ஆற்றுகின்ற ஊழியர்கள் தொடர்பான தேசியச் சட்டங்களில் தலையிடும் நோக்கங் கொண்டதல்ல.
விசேட கடமைகள் அல்லது பொறுப்புக்கள் காரணமாக குறிப்பிட்டவகுப்புக்களைச் சேர்ந்த அரசாங்க ஊழியர்கள் சில வேலைகளில் வழமையான ஒருங்கு சேர்வதற்கான உரிமையிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். சில சமங்களில் அவர்கள் கீழ்ப்பணியாளர்களுடன் கூடிச் சேருவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர். அத்தகைய ஆட்கள் தமது சொந்த நிறுவனமொன்றைக் கொண்டிருந்தால் இது ஏற்கத்தக்கதென ஐஎல்ஓ காண்கின்றது. ஆயின் கீழ்ப்பணியாளர்களுடன் நிறுவனமொன்றில் சேர்வது பற்றிய ஏதேனும் வரையறை முக்கியமான செயலாட்சி அல்லது கொள்கை வகுக்கும் பதவிலுள்ளவர்களின் விடயத்தில் மட்டுமே விதிக்கப்பட வேண்டும். மேற்பார்வையிடும் பணியாளரின் விடயத்தில் அவர்கள் உண்மையிலேயே தொழில்தருநரைப் பிரதிநிதித்துவப்படுத்தினால் மட்டும் அவர்களின் தவிர்ப்பு கவனிக்கப்படலாம் ( பந்தி 131, பக், 43, பிறிடம் ஒவ் அசோசியேஷன் அன்ட் கலெக்டிவ் பார்கெயினிங், றிப்போட் III (பகுதி 4பீ).
87 ஆம் உடன்படிக்கையின் 9 ஆம் உறுப்புரை தனிப்பட ஆயுதப்படைகளையும் பொலிசையும் பற்றிக் கூறுகின்றது. இப்படைகளில் ஊழியம் புரியும் ஆளணியினரின் உரிமைகள் தேசியச் சட்டங்களினாலும் ஒழுங்கு விதிகளினாலும் கட்டுப்படுத்தப்படுகின்றனவென அது கூறுகின்றது. இதன் விளைவாக விதிக்கப்படும் வரையறை எதுவும் உடன்படிக்கைக்கு முரண்பட மாட்டாது (145 ஆவது அறிக்கை, நேர்வு இல, 778, பந்திகள் 19 உம், 20 உம்: 207 ஆவது அறிக்கை, நேர்வு இல. 971, பந்தி 52, பக், 46).
தொழிற்சங்கத்துக்கெதிரான ஒரு பக்கச் சார்புக்கெதிராக, அதிலும் குறிப்பாக அரசாங்க ஊழியர்களின் நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதன் அல்லது அத்தகைய நிறுவனங்களின் நடவடிக்கைகளில் பங்குபற்றுவதன் விளைவாக வேலைநீக்கப்படுவதற்கு அல்லது தீங்கிழைக்கப்படுவதற்கு எதிராகப் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. அரசாங்க ஊழியர்களின் நிறுவனங்கள் அரசாங்க அதிகாரிகளிடமிருந்து பூரண சுதந்திரத்தைக் கொண்டிருக்க வேண்டும். அரசாங்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் அத்தகைய நிறுவனத்தை வைத்திருப்பதற்காக அதன் மீதான ஏதேனும் கட்டுப்பாடு அல்லது அதற்கு வழங்கப்படும் நிதியுதவி அல்லது வேறுவகையான ஆதரவு, இவ்வுடன்படிக்கையை மீறுவதாக அமையும்.

109
உடன்படிக்கையின் 7 ஆம் 8 ஆம் உறுப்புரைகள், அரசாங்க அதிகாரிகளுக்கும் தொழிலாளர் நிறுவனங்களுக்குமிடையில் சுதந்திரமான பேச்சுவார்த்தைகளை ஊக்கப்படுத்தி, தொழில் நியதிகளையும் நிபந்தனைகளையும் தீர்மானிக்கும் நடைமுறைகளையும், தொழில் நியதிகள் தொடர்பான பிணக்குகளின் விடயத்தில் பொருத்தமான இணக்க இயந்திரத்தைத் தாபிக்கின்ற நடைமுறைகளையும் முன்வைக்கின்றன.
(ஈ) இலங்கையில் அரசாங்க ஊழியர்கள்
மேலே கூறப்பட்ட 151 ஆம் இலக்க உடன்படிக்கையை இலங்கை உறுதி செய்யவில்லை. அரசாங்க ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் தொடர்பில் இலங்கைச் சட்டத்தின் கீழ் விசேட ஏற்பாடுகள் செய்யப்படுன்றன. தொழிற்சங்கங்கள் கட்டளைச்சட்டத்தின் கீழ் அரசாங்க ஊழியர்கள், அரசாங்கத்தின் ஊழியத்திலுள்ள ஆள் எவரையும் அவரது ஊழியக்காலம் எவ்வளவாக இருப்பினும், உள்ளடக்குவதாக வரையறுக்கப்பட்டுள்ளது (பிரிவு 19). கட்டளைச்சட்டத்தின் நோக்கத்துக்காக 2 ஆம் பிரிவில் “தொழிற்சங்கம்” என்ற வரைவிலக்கணத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள குறிக்கோள்களில் ஒன்றை அல்லது அதற்குக் கூடியவற்றை அதன் குறிக்கோளாக அல்லது குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டுள்ள அரசாங்க ஊழியர்களின் சங்கம் அல்லது கூட்டுறவு ஒவ்வொன்றும் ஒரு தொழிற்சங்கமாகும் (1970 இன் 24 ஆம் இலக்கச் சட்டத்தின் 2 ஆம் பிரிவினால் திருத்தப்பட்ட்வாறு, பிரிவு 20 ).
பின்வரும் ஆட்களைக் கொண்ட ஏதேனும் சங்கம் அல்லது கூட்டுறவு ஒரு தொழிற் சங்கமாகக் கருதப்படமாட்டாது என்பதுடன் தொழிற்சங்கங்கள் கட்டளைச்சட்டம் அவற்றுக்கு ஏற்புடையனவுமல்ல: நீதிமன்ற அலுவலர்கள்; ஆயுதப்படைகளின் உறுப்பினர்கள்; பொலிஸ் அலுவலர்கள்; சிறைச்சாலை அலுவலர்கள், கமத்தொழிற் படைப்பிரிவுக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட கமத்தொழிற் படைப்பிரிவின் உறுப்பினர்கள் (பிரிவு 20 (2).
பதிவாளர் இப்பகுதி ஏற்புடையதாயுள்ள எந்தவொரு தொழிற்சங்கத்தையும், அச்சங்கத்தின் விதிகள், சங்கத்தின் உறுப்புரிமைக்கான தகைமையை அல்லது ஊதியத்துக்காகவேனுஞ்சரி மதிப்புக்காகவேனுஞ்சரி வழங்கப்படுகின்ற ஏதேனும் பதவிக்கான தகைமையை, ஏதேனும் குறித்தவொரு அரசாங்கத்திணைக்களத்தில் அல்லது ஏதேனும் குறித்தவொரு அரசாங்கச் சேவையில் ஊழியத்திலுள்ள அல்லது வெவ்வேறு திணைக்களங்களில் ஊழியத்திலிருந்தாலும் அவர்கள் ஈடுபட்டுள்ள வேலையின் இயல்பின் நிமித்தம் அரசாங்க ஊழியர்களில் குறித்தவொரு வகுப்பை அல்லது வகுதியைச் சேர்ந்தவர்களாயுள்ள அரசாங்க ஊழியர்களுக்கு மாத்திரமென வரையறை செய்கின்ற ஏற்பாடொன்றைக் கொண்டிருந்தாலன்றி, பதிவுசெய்யலாகாது. எனினும் அத்தகைய ஏற்பாடு 2 ஆட்களை உறுப்பினர்களாக அல்லது பதவி வகிப்பதற்கு, அத்தகைய 2 ஆட்களில் ஒருவரைத் தலைவராக அல்லது செயலாளராக மற்றவரை உறுப்பினராக வெளியிலிருந்து தெரிவுசெய்வதற்கு அனுமதிக்கலாம்.

Page 60
110
சமாதான அலுவலர்களின் அல்லது அரசாங்கப் பதவிநிலை அலுவலர்களின் தொழிற்சங்கமொன்றின் விடயத்தில் மேற்படி தேவைப்பாடுகளுக்கு மேலதிகமாக, அத்தொழிற்சங்கம் வேறு ஏதேனும் தொழிற்சங்கத்துடன், அது அரசாங்க ஊழியர்களினதாயினுஞ் சரி வேறுவகையினதாயினுஞ் சரி, உறுப்பாக இணைக்கப்பட, அல்லது ஒருங்கிணைக்கப்பட, அல்லது கூட்டுக்குழுவாகச் சேரக் கூடாதென அறிவிக்கின்றதும் அத்துடன் அத்தொழிற்சங்கம் கட்டளைச்சட்டத்தின் 47 ஆம் பிரிவின் கருத்துக்குட்பட்ட ஏதேனும் அரசியற் குறிக்கோளை அல்லது அரசியற் கட்சிசார்ந்த நிதியைக் கொண்டிருக்கக் கூடாதென அறிவிக்கின்றதுமான ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன (1970 இன் 24 ஆம் சட்டத்தால் திருத்தப்பட்டவாறு பிரிவு 21).
தொழிற்சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் கடைப்பிடிக்கப்படாது விடின் அரசாங்க ஊழியர்கள் தொழிற்சங்கம் எதனதும் பதிவுச் சான்றிதழை மீளப்பெறும்படி அல்லது இரத்துச் செய்யும் படி பதிவாளரைப் பணிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்துக்குச் சட்டமா அதிபர் விண்ணப்பங்கள் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் 34 ஆம் பிரிவின் நியதிகளின்படி சமாதான அலுவலர்களின் அல்லது அரசாங்கப் பதவிநிலை அலுவலர்களின் தொழிற்சங்கமொன்று ஒருங்கிணைக்கப்படமுடியாது அல்லது 47 ஆம் பிரிவின் நியதிகளின்படி அரசியற்குறிக்கோள்களையும் அரசியற் கட்சி சார்ந்த நிதியையும் கொண்டிருக்க முடியாது ( 1970 இன் 24 ஆம் சட்டத்தால் திருத்தப்பட்டவாறு பிரிவு 22(2). இவற்றுக்கு மேலதிகமாக "அத்தியாவசிய அரசாங்க சேவைகள்’ தொடர்பில் 1979 இன் 61 ஆம் இலக்க அத்தியாவசிய அரசாங்க சேவைகள் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விசேட் ஏற்பாடுகள் உள்ளன.
அரசாங்க ஊழியர்களும் அவர்களின் ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரமும் பற்றிய விசேட ஏற்பாடுகள், 87 ஆம் இலக்க ஐஎல்ஓ உடன்படிக்கையின் 2 ஆம் 5 ஆம் உறுப்புரைகளின் ஏற்பாடுகளை மீறுகின்றன. அவ்வுடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்யவில்லை.
(உ) கூட்டுப்பேரம்
இலங்கையில் கைத்தொழிற் பிணக்குகள் சட்டத்தின் ( 1950 இன் இல43) ஊடாக கூட்டுப் பேரத்துக்கு நியதிச்சட்ட முறையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தின் II ஆம் பகுதி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கூட்டு ஒப்பந்தங்களினதும் ஒப்பந்தக் குறிப்புத்தொகுதிகளினதும் சட்ட்ப்பயன்பற்றிக் கூறுகின்றது. பேரம் பேசும் முகவர்களாகத் தொழிற் சங்கங்களை அங்கீகரிக்கின்ற பிரச்சினை காரணமாகக் கூட்டுப் பேரம் இலங்கையில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தொழில்தருநர் ஒருவர் பேரம் பேசுவதற்கு மறுப்பாராயின், தொழிலாளர்களும் அவர்களின் தொழிற்சங்கமும் கைத்தொழிற் பிணக்குகள் சட்டத்தின் கீழ் நிவாரணம் தேடுவதற்கு அல்லது தொழிற்சங்க நடவடிக்கையை

111
நாடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
(Wi) வேலைநிறுத்தம் செய்யும் உரிமை
(அ) ஐஎல்ஓ கோட்பாடுகள்
வேலை நிறுத்தஞ் செய்யும் உரிமையானது, “ தொழிலாளர்களும் அவர்களின் நிறுவனங்களும் தமது பொருளாதார, சமூக நலன்களை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அவர்களுக்குள்ள இன்றியமையாத வழிமுறைகளில் ஒன்றாகும்” (பிறீடம் ஒவ் அசோசியேஷன், பக் 62/63; 4 ஆவது அறிக்கை நேர்வு இல. 5 பந்தி 27; பிறீடம் ஒவ் அசோசியேஷன் டைஜஸ்ட் ஒவ் டிசிஷன்ஸ் 3 ஆம் பதிப்பு, பந்தி 362, பக் 73). வேலைநிறுத்தஞ் செய்யும் உரிமை தனிப்பட்ட ஒரு தொழிலாளிக்கு வேலைசெய்யுமிடத்தில் கூடுதல் சிறந்த தொழில் நியதிகளை உறுதிப்படுத்தும் ஒரு வழிமுறையாக மட்டுமல்லாமல் தேசியமட்டத்தில் பொருளாதார, சமூக இயல்புடைய மாற்றங்களை உண்டுபண்ணுகின்ற ஒரு வழிவகையாகவும் கண்டறிப்பட்டுள்ளது. இருப்பினும் ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம் பற்றிய குழு குறிப்பிட்டுள்ளதாவது:
அரசியல் நிலைமாற்றங்களிலிருந்து தொழிற் சங்கங்கள் பாதுகாக்கப்படும் பொருட்டும், அவை அரசாங்க அதிகாரிகளில் தங்கியிருத்தலைத் தவிர்க்கும் பொருட்டும், அவை தமது உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்காமல் தமது நடவடிக்கைகளின் பரப்பை வாழ்க்கைத் தொழில் சார்ந்த துறைகளுக்கும் தொழிற் சங்கத் துறைகளுக்கும் மட்டுப்படுத்த வேண்டியது விரும்பத்தக்கது. ( 6 ஆவது அறிக்கை நேர்வு இல.2, பந்தி 1012; 10ஆவது அறிக்கை நேர்வு இல. 857 பந்தி 266, பந்தி 351, டைஜஸ்ட் ஒவ் டிசிஷன்ஸ், 3 ஆம் பதிப்பு, பக். 71).
அத்துடன் தொழிற் சங்கங்கள் அரசியல் ரீதியாக இணையத் தீர்மானிக்கும் போது “ அத்தகைய அரசியல் உறவுகள் தொழிற்சங்க இயக்கத்தின் தொடர்ச்சியை விட்டுக்கொடுக்கும் அத்தகைய இயல்புடையனவாக இருக்கக் கூடாது' ( 6 ஆவது அறிக்கை நேர்வு இல, 40, பந்தி 563 ஆகியவை, பக், 71, பந்தி 352), வேலைநிறுத்த நடவடிக்கை, உறுப்பினர்களை சமூக பொருளாதார முறையில் பாதிக்கின்ற விடயங்கள் தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்குடையதாக இருக்கும் வரையில் அது நியாயப்படுத்தப்படலாம். மற்றபடி அரசியல் சார்பான ஒரு வேலைநிறுத்தமென்று கருதப்படக் கூடியதை நியாயமானதெனக் காட்டுவதற்கு உறுப்பினர்களின் சமூகபொருளாதார நலன்களென்ற மூலப்பொருள் அவசியமானதொரு

Page 61
112
மூலப்பொருளாயிருக்கும் (172 ஆவது அறிக்கை நேர்வு இல. 885, பந்தி 385; 181ஆவது அறிக்கை நேர்வு இல. 899 பந்தி 242, பந்தி 388).
87 ஆம் இலக்க உடன்படிக்கையின் 10 ஆம் உறுப்புரை " நிறுவனம்’ ஒன்றை வரையறுத்துக் கூறும்போது, தொழில்தருநர்களினதாயினுஞ் சரி, தொழிலாளரின தாயினுஞ்சரி, அத்தகைய குழுக்களின் நலன்களை மேம்படுத்தும் நோக்குடனும் பாதுகாக்கும் நோக்குடனும் ஒன்றுபட்டு உருவாக்கப்பட்ட எல்லா நிறுவனங்களையும் அணைத்துக்கொள்கின்றது. இந்நோக்கத்துக்காக நிறுவனத்தால் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும், மனமாரச் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தமொன்றினால் தடைசெய்யப்பட்டாலன்றி, உடன்படிக்கையால் பாதுகாக்கப்படும். இப்பாதுகாப்பு தொழிற்சங்கமொன்றால் விடுக்கப்படும் வேலைநிறுத்த அழைப்புக்கு நீடிக்கப்படும் அதே அளவுக்கு, தொழில்தருநர்களின் நிறுவனமொன்றால் விதிக்கப்படும் “ கதவடைப்புக்கும்’ நீடிக்கப்படும்.
முற்றுமுழுக்க அரசியல் ரீதியான வேலைநிறுத்தங்களும் பேச்சுவார்த்தைகள் நடை பெறுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்னர் திட்டமிடப்பட்டுத் தீர்மானிக்கப்பட்ட வேலைநிறுத்தங்களும், ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரக் கோட்பாடுகளின் நோக்கெல்லைக்குள் அடங்குவனவல்ல (139 ஆவது அறிக்கை நேர்வுகள் இல.277744 பந்தி 124; 153 ஆவது அறிக்கை நேர்வுகள் இல, 763,786 , 801 பந்தி 177, பந்தி 372). சட்ட விளக்கமூலமொன்றின் பொருள்கோடலில் வேறுபாடு காரணமாகச் சட்ட முரண்பாடொன்றின் தீர்வு தகவுடைய நீதிமன்றுக்கு விடப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில் வேலைநிறுத்தமொன்றைத் தடைசெய்தல், ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரக் கோட்பாடுகளை மீறுவதாகக் கொள்ளப்படமாட்டாதென வலியுறுத்தப்பட்டுள்ளது (139 ஆவது அறிக்கை நேர்வுகள் இல. 737- 744, பந்தி 372 டைஜஸ்ட் ஒவ் டிசிஷன்ஸ், பிறீடம் ஒவ் அசோசியேஷன் கமிட்டி, 3 ஆம் பதிப்பு).
பகிஷ்கரிப்பொன்றில் அனேக சந்தர்ப்பங்களில் தொழிற்சங்கமொன்று சம்பந்தப்படுகின்றபோதிலும், தொழில்தருநருக்கெதிரான அப்பகிஷ்கரிப்புக்குக் காரணமான பிணக்கில் அதன் உறுப்பினர்கள் நேரடியாகச் சம்பந்தப்படாததனால், சட்டத்தின் மூலம் பகிஷ்கரிப்புக்களைத் தடைசெய்தலானது தொழிற்சங்க உரிமைகளில் குறுக்கிடுகின்றதென்ற கட்டாயமில்லை ( 87 ஆவது அறிக்கை நேர்வு இல, 408, பந்தி 253, பந்தி 376).
கைத்தொழிற்பிணக்குகளில் வேலைநிறுத்தத்துக்கு முன்னர் கட்டாய இணக்கத்தையும் நடுவர்தீர்ப்பு நடைமுறையையும் நாடவேண்டுமென்று விதிக்கின்ற சட்டங்கள் ஒருங்குசேர்வதற்கான சுதந்திரத்தை மீறுவனவாகக் கருதப்பட முடியாது (119 ஆவது அறிக்கை, நேர்வு இல. 611, பந்திகள் 97 உம் 98 உம், பக். 75, பந்தி 374). வேலைநிறுத்தமொன்றுக்கு அழைக்க முன்னர் தொழில் தருநர்களுக்கு முன்னறிவித்தல் வழங்க வேண்டிய கடப்பாடுகளும் (87 ஆவது அறிக்கை, நேர்வு இல. 408, பக்.75, பந்திகள் 253/376), வேலை நிறுத்தத்தை இரகசிய வாக்கெடுப்பின் மூலம்

113
தீர்மானித்தலும் (4 ஆவது அறிக்கை, நேர்வு இல. 5, பந்தி 27 என்பன, பந்தி 378,பக். 76) ஆட்சேபத்துக்குரியனவல்ல. தனியார் துறையில் தகுதிகாண்நிலையிலுள்ள ஊழிய உழைப்பாளிகளுக்கு வேலைநிறுத்தஞ் செய்யும் உரிமை விலக்கப்பட்டுள்ளமை வேலைநிறுத்தஞ் செய்யும் உரிமைக்கு முரண்பாடானது (160 ஆவது அறிக்கை நேர்வு இல. 851, பந்தி 197, பக்.76 பந்தி 381).
வேலைநிறுத்தஞ் செய்யும் உரிமையை வரையறை செய்வதும் பிணக்கொன்றைக் கட்டாய நடுத்தீர்ப்புக்கு ஆற்றுப்படுத்துவதும் அத்தியாவசிய சேவைகள் தொடர்பில், அச்சொற்றொடரின் உண்மையான கருத்தின்படி மட்டும், நியாயப்படுத்தப்படலாம். அதாவது சேவைகள் தடைப்படுமாயின் உயிருக்கும், தனிப்பட்ட பாதுகாப்புக்கும் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கும் அபாயமுண்டாக்கக்கூடிய அத்தகைய சேவைகள் (217 ஆவது அறிக்கை, நேர்வு இல. 1089, பந்தி 241, பக்.79, பந்தி 389).
வைத்தியசாலைத் துறை ஓர் அத்தியாவசிய சேவையென ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரக் குழு கொண்டுள்ளது (199 ஆவது அறிக்கை, நேர்வு இல. 910, பந்திகள் 117, 409 என்பன, பக். 80). நீர் வழங்கல் ஓர் அத்தியாவசிய சேவை ( 234 ஆவது அறிக்கை, நேர்வு இல, 179, பந்திகள் 295, 410, பக். 80) விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களும் அத்தியாவசிய சேவையொன்றை ஆற்றுகின்றனர் (211 ஆவது அறிக்கை, நேர்வு இல 1074, பந்திகள் 365, 412, பக் 80). எனினும் அத்தியாவசிய சேவைகளின் வரைவிலக்கணத்தின் கீழ் ஆசிரியர்கள் வருவதில்லையெனக் கொள்ளப்பட்டுள்ளது (221 ஆவது அறிக்கை, நேர்வு இல. 1097, பந்திகள் 84, 404, பக். 80). அத்துடன் போக்குவரத்தும் (199 ஆவது அறிக்கை, நேர்வு இல. 943, பந்திகள் 172, 407, பக். 80) பொதுவாக இவ்வகுதியினுள் அடங்குவதில்லை.
வேலைநிறுத்தமொன்றில் பங்குபற்றியதற்காகத் தொழிலாளர்களை வேலைநீக்கஞ் செய்தல், அவர்களை மீண்டும் வேலைக்கமர்த்த மறுத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்தல் ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரத்தை மீறுவதாகக் காணப்பட்டுள்ளது. வேலைநீக்கம் வெறுமனே வேலை நிறுத்தத்தில் பங்குபற்றிய காரணத்தினாலெனின், தொழிற் சங்க நடவடிக்கைகளில் பங்குபற்றியமைக்காகத் தொழிலாளர் தண்டிக்கப்பட்டுள்ளனரெனக் கருதவேண்டியுள்ளது. இது இணைந்துரு வாக்குவதற்கும் கூட்டுப்பேரத்துக்குடிான உரிமை உடன்படிக்கையின் 1 ஆம் உறுப்புரையை மீறுவதாகும் (214 ஆவது அறிக்கை, நேர்வுகள் இல 988, 1003 பந்தி 507:217 ஆவது அறிக்கை, நேர்வு இல. 823, பந்தி 510, பக். 85, பந்தி 43).
வேலைநிறுத்தங்கள் மீதான ஒரு பொதுத் தடை, தமது உறுப்பினர்களின் நலன்களைப் பாதுகாக்கத் தொழிற்சங்கங்களுக்குக் கிடைப்பதாயுள்ள வழிவகைகளைக் கடுமையாக மட்டுப்படுத்துகின்றது. அத்தகைய தடை, ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம் பற்றிப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளுக்கு ஒவ்வாததென, உடன்படிக்கைகளினதும் விதப்புரைகளினதும் பிரயோகம் பற்றிய நிபுணர்கள் குழு வலியுறுத்தியுள்ளது ( 149 ஆவது அறிக்கை, நேர்வுகள் இல. 676, 803, பந்தி 79

Page 62
114
என்பன, பக் 81, பந்தி 416). அத்தகையதொரு பொதுவான தடை மிகக் கடுமையான தேசிய அவசரகால நிைைமயொன்றின் போது, அதுவும் வரையறுக்கப்டட ஒரு காலத்துக்கு மட்டும், நியாயப்படுத்தப்படலாம் (78 ஆவது அறிக்கை, நேர்வு இல. 364, பந்தி 84 என்பன, பக். 82, பந்தி 423).
யுத்தகாலத்தில் தொழிற்சங்க உரிமைகளை வரையறுக்கும் உரிமையை ஐஎல்ஓ அங்கீகரிக்கின்றது ( 17 ஆவது அறிக்கை, நேர்வு இல. 73, பந்தி 72, பக். 82, பந்தி 421). “கடுமையான தேசிய அவசரகால நிலைமை’யின் போது மிகவும் பாரதூரமான சூழ்நிலைகளில் அத்தியாவசிய சேவைகளைப் பேணும் பொருட்டுத்தவிர, கட்டாய சேவைக்குத் தொழிலாளர்களைத் திரட்டுவதோ, அழைப்பதோ விரும்பத்தக்க தல்லவெனக் கருதப்பட்டுள்ளது (236 ஆவது அறிக்கை, நேர்வு இல. 1270, பந்தி 620, பக், 82, பந்தி 425). நிபுணர்களின் குழு, போக்குவரத்து, புகையிரதப் பகுதி, தொலைத்தொடர்புகள், மின்சாரம் என்பவை தொடர்பான சேவைகளின் நிறுத்தம் சமூக வாழ்வின் அமைதியைக் குலைக்குமென்று ஏற்றுக்கொண்டுள்ள அதே வேளையில் அத்தகைய நிறுத்தங்கள் “கடுமையான தேசிய அவசரகால நிலைமை” யைத் தோற்றுவிக்கக் கூடுமெனக் கூறுவது கஷ்டமானதென முடித்துள்ளதை நாம் காண்கின்றோம் (2 ஆவது அறிக்கை, நேர்வு இல. 33, பந்தி 133; 93ஆவது அறிக்கை, நேர்வுகள் இல. 470, 481, பந்தி 274, 275, பக். 82, பந்தி 426). எனினும் அத்தகைய சேவைகளைப் பேணுவதற்கு ஆயுதப் படைகளை அல்லது வேறு ஆட்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்திற்குள்ள உரிமையை நிபுணர்கள் குழு ஏற்றுக்கொண்டுள்ளது ( 13 ஆவது அறிக்கை, நேர்வு இல. 82, பந்தி 1122; 30 ஆவது அறிக்கை, நேர்வு இல. 177 பந்தி 83, பக். 82 பந்தி 427).
' குடிசனத்தின் வழமையான வாழ்க்கை நிலைமைகளுக்கு ஆபத்தேற்படுத்துகின்ற கடுமையான தேசிய நெருக்கடி” யொன்றைத் தடுப்பதற்கு ஆகக்குறைந்த சில சேவைகளைப் பேணவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்படலாம் (பந்தி 415, பக் 81), அத்தகைய ஆகக் குறைந்த சேவைகள், “உயிர், தனிப்பட்டபாதுகாப்பு அல்லது முழுச்சனத்தொகையின் அல்லது அதனொரு பகுதியின் ஆரோக்கியம் அபாயத்துக்குள்ளாவதைத் தவிர்ப்பதற்கு” உண்மையிலேயே அவசியமான தொழிற்பாடுகளுக்கென எல்லைப்படுத்தப்படவேண்டும் (204 ஆவது அறிக்கை, நேர்வு இல, 252, பந்தி 162 என்பன, பக். 81 பந்தி 415). அத்தகைய சேவைகளை வரையறுப்பதில் தொழிலாளர் நிறுவனங்களும் தொழில்தருநர்களும் அரசாங்க அதிகாரிகளும் சம்பந்தப்படவேண்டுமெனக் குழு விதந்துரைக்கின்றது.
வேலைநிறுத்தமொன்று தேசிய சமூகத்துக்கு கடுமையான இன்னல் ஏற்படுத்தக்கூடிய தென்ற வரையில், சிவில் சேவையில் அல்லது அத்தியாவசிய சேவைகளில் வேலைநிறுத்தஞ்செய்யும் உரிமை வரையறுக்கப்படலாம் அல்லது தடைசெய்யவும் படலாம். ஆயின் இம் மட்டுபடுத்தல்களுடன் இணைந்ததாக “ ஈடுசெய்யும் உத்தரவாதங்கள் ” வழங்கப்பட வேண்டுமெனக் குழு எற்றுக் கொண்டுள்ளது (236 ஆவது அறிக்கை நேர்வு இல. 1140, பந்திகள் 144, 387, பக். 77, அத்துடன் பார்க்க

15
எசென்ஷல் சேவிசஸ்- சிவில் சேர்விஸ் அன்ட் அதர் அண்டரேகிங்ஸ், பந்திகள் 393 - 412, பக். 78. ), ஈடுசெய்யும் உத்தரவாதத்துக்கு ஓர் உதாரணம் ஒத்திசைவான கதவடைப்பில்லை என்ற உரிமை.
(ஆ) இலங்கையில் வேலை நிறுத்தங்கள்: முன்னுரை
பிணக்கொன்று இல்லாதபோதிலும் “வேலை நிறுத்த” மொன்று இடம்பெறலாம். அதற்குத் தேவையானதெல்லாம் ஒத்திசைவுடன் அல்லது கூட்டுறவுடன் அல்லது பொதுவான புரிந்துணர்வுடன் செயற்படுவதுதான் (பிரிவு2, தொழிற்சங்கக் கட்டளைச்சட்டம், அத். 174, பாகம் Vi லெஜிஸ்லேடிவ் எனக்மண்ட்ஸ்"). வேலைநிறுத்தமொன்று பொதுமக்கள் பாதுகாப்புக்கட்டளைச் சட்டத்தை அல்லது கைத்தொழிற் பிணக்குகள் சட்டத்தை அல்லது 1979 இன் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பகிரங்கச் சேவைகள் சட்டத்தை மீறினாலன்றி இலங்கையில் அது சட்டமுரணானதல்ல.
(இ) இலங்கையில் வேலைநிறுத்தங்கள்: பொதுமக்கள்
பாதுகாப்புக் கட்டளைச்சட்டம்
பொதுவில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமையில், பொது மக்கள் பாதுகாப்பின் நலன் கருதியும் பொதுசன ஒழுங்கைப் பேணும் பொருட்டும் அல்லது சமூகவாழ்க்கைக்கு அத்தியாவசியமான வழங்கல்களையும் சேவைகளையும் பேணும் பொருட்டு, அவ்வாறு செய்வது தக்கதென சனாதிபதி கருதுமிடத்து, பொதுசன பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அவசியமான அல்லது உகந்ததான அத்தகைய அவசரகால ஒழுங்குவிதிகளை ஆக்குவதற்கான தத்துவத்தை சனாதிபதி கொண்டுள்ளார் (1949 இன் 22 ஆம், 1953 இன் 34 ஆம் 1959 இன் 8 ஆம், 1978 இன் 6 ஆம் இலக்கச் சட்டங்களால் திருத்தப்பட்டவாறான 1947 இன் 25 ஆம் இலக்கக் கட்டளைச் சட்டம், பிரிவு 2). இத்தத்துவத்தின் பிரயோகத்திற்கான உதாரணங்களாவன:
(1) 1987 இன் 5 ஆம் இலக்க அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் தத்துவங்களும்) ஒழுங்குவிதி ( 1987 5. 18 ஆந் தேதிய அரசாங்க வர்த்தமானி 454/5 உம் 6 உம்) இது காரணமாகச் சனாதிபதி பின்வருவனவற்றை அத்தியாவசியச் சேவைகளாகப் பிரகடனப்படுத்தினார்: மத்திய வங்கியால் வழங்கப்படும் சேவைகள்; வங்கித்தொழில் நிறுவனங்கள்; சுகாதார அமைச்சின் சேவைகள்; எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப் பொருள்கள் என்பனவற்றின் வழங்கலும் விநியோகமும் தொடர்பான சேவைகள்; மின்சாரச் சேவைகளும் புகையிரதச் சேவைகளும்,
(2) தேசிய பாதுகாப்பின் நிமித்தமும் பொது ஒழுங்கினைப் பேணும் பொருட்டும் 18 தொழிற் சங்கங்கள் தடைசெய்யப்பட்டமை (1987 இன் 5 ஆம் ஒழுங்கு விதியைப் utftës 85) ;

Page 63
116
(3) குறித்துரைக்கப்பட்ட சில சேவைகள் அத்தியாவசியமானவையெனவும் கட்டளை விடுக்கப்பட்ட தினத்திலிருந்து ஒரு நாள் முடிவுற்ற பின்னரும் வேலைக்குச் சமுகமளிக்கத் தவறும் எவரும் தமது பதவியை வறிதாக்கியவராகக் கருதப்படுவாரெனவும் கூறும் 1980, ஆடி 16 ஆந் தேதி ஆக்கப்பட்ட கட்டளை (1980 ஆடி 16 ஆம் தேதிய அரசாங்க வர்த்தமானி இல. 97/7 பிரிவு 41 (1));
(4) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான 44 (அ) (i) (அ) ஆம் ஒழுங்கு விதி (1989 ஆனி 20 ஆந் தேதிய அரசாங்க அதிவிசேட வர்த்தமானி 563/7) ஆள் எவரும் தமது சட்டபூர்வமான தொழில், வர்த்தகம் ஆகியவற்றில் ஈடுபடுகின்றமைக்காக அவருக்கெதிராக சரீர அச்சுறுத்தல் அல்லது கொலைப்பயமுறுத்தல் விடுக்கும் துண்டுப்பிரசுரங்கள் பற்றிக் கூறுகின்றது. மேற்படி குற்றம் புரிய முயலுதல், உதவிபுரிதல், சூழ்ச்சிசெய்தல் என்பவற்றை ஒழுங்குவிதி 45 உள்ளடக்குகின்றது;
(5) 1990 தை மாத ஒழுங்குவிதிகள் (1990 தை 6 ஆந் தேதிய அரசாங்க அதிவிசேட வர்த்தமானி 591/20, ஒழுங்கு விதிகள் 2-5) வேலைத்தலங்கள் உரிய முறையில் செயற்படுவதைத் தடுக்கும் அரசியல் அல்லது வேறு நடவடிக்கைகள், அத்தகைய இடங்களுக்குள் அனுமதியின்றி உட்பிரவேசித்தல், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் என்பவற்றை நடத்துதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றது. முன்னனுமதியற்ற சுவரொட்டிகள், பதாகைகள்,சித்திரங்கள் ஆகியவற்றையும் இவ்வொழுங்கு விதிகள் தடைசெய்தன;
(6) ஏற்றுமதிகளையும் அத்துறையில் சேவையாற்றுவோரையும் 1992 ஆவணி மாத ஒழுங்குவிதிகள் உள்ளடக்கின. ஏற்றுமதிகளுக்கு எவ்வித இடையூறோ தடங்கலோ ஏற்படுவதைத் தடுப்பதே இதன் நோக்கமாகும் (1992 ஆவணி 22 ஆந் தேதிய அரசாங்க அதிவிசேட வர்த்தமானி 728.20 ஒழுங்கு விதிகள் 2-7, 9). சனாதிபதி இக்கட்டளைச் சட்டத்தின் கீழ் தமது தத்துவங்களைப் பிரயோகிக்கையில் ஏதேனும் சட்டத்தைத் திருத்துவதற்கு அல்லது இடை நிறுத்திவைப்பதற்கு அல்லது மாற்றியமைப்பதற்கு உரித்துடையவராவார் ( பிரிவு 52 (ஈ) ). அவ்வாறு ஆக்கப்பட்ட அவசரகால ஒழுங்குவிதி எதுவும் நீதிமன்றம் எதிலும் கேள்விக்குட்படுத்தப்படலாகாது (பிரிவு 8).
(ஈ) இலங்கையில் வேலை நிறுத்தங்கள்:
கைத்தொழிற் பிணக்குகள் சட்டம்
ஒரு வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்கும் திகதிக்குக் குறைந்தது 21 நாட்களுக்கு முன்னர் வேலைநிறுத்தஞ் செய்யும் வேலையாளால் அல்லது அவரது சார்பில் விதித்துரைக்கப்பட்ட முறையில் படிவத்திலும் வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்க விருக்கும் எண்ணத்தைப் பற்றித் தொழில்தருநருக்கு எழுத்து மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தாலன்றி, ஏதேனும் அத்தியாவசியக் கைத்தொழிலில் ஏற்படும் கைத்தொழிற் பிணக்கொன்று தொடர்பாக ஏதேனும் வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்க

117
அல்லது தொடர அல்லது அதிற்பங்குபற்ற அல்லது அதற்குதவிபுரியும் ஏதேனும் செயலைச் செய்யலாகாதெனக்கைத்தொழிற் பிணக்குள் சட்டத்தின் (1950 இன் 43 ஆம் சட்டம்) 32 (2) ஆம் பிரிவு கூறுகின்றது.
ஓர் ‘அத்தியாவசியக் கைத்தொழில்’ என்பது சமுதாயவாழ்வுக்கு அத்தியா வசியமானதொரு கைத்தொழிலென அமைச்சரின் கட்டளையினால் பிரகடனப்படுத்தப்பட்டு அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒரு கைத்தொழிலென வரையறுக்கப்பட்டுள்ளது (பிரிவு 48). மேற்படி 32 (2) ஆம் பிரிவை மீறுவது ஒரு குற்றமாகும் (பிரிவு 40 (1) (ஈ) ).
கூட்டு ஒப்பந்தமொன்றின் அல்லது தீர்வொன்றின் அல்லது நடுநிலைத் தீர்ப்பொன்றின் நியதிகளையும் நிபந்தனைகளையும் மாற்றியமைப்பதற்கென வேலை இடைநிறுத்தஞ் செய்தல் அல்லது வேலை நிறுத்தஞ் செய்தல் அல்லது வேலைநிறுத்தத்துக்கோ வேலை இடைநிறுத்தத்துக்கோ வேலையாட்களைத் தூண்டிவிடுதல் (பிரிவு 48) என்பவையும், ஒரு தொழில் மன்றின் கட்டளையொன்றை மாற்றுவதற்கென வேலைநிறுத்தமொன்றில் பங்கு பற்றுதல் அல்லது தொழில் இடைநிறுத்தம் அல்லது வேலைஇடைநிறுத்தஞ் செய்தல் என்பவையும் குற்றங்களாகும் (பிரிவு 40 (1) (ஊ)). கைத்தொழிற் பிணக்கொன்று தீர்வுக்காக ஒரு கைத்தொழில் மன்றுக்கு அல்லது மத்தியஸ்தருக்கு அல்லது தொழில் மன்றுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட பின்னர் வேலை நிறுத்தமொன்றை ஆரம்பித்தல் அல்லது தொடருதல் (பிரிவு 40 (1) (எம்), ஒர் அத்தியாவசியக் கைத்தொழிலில் ஏற்படும் ஏதேனும் கைத்தொழிற் பிணக்குத் தொடர்பாக 32 (2) ஆம் பிரிவுக்கு முரணாக வேலையாள் ஒருவரை வேலை நிறுத்தமொன்றை ஆரம்பிக்கும்படி அல்லது தொடரும்படி அல்லது அதில் பங்குபற்றும்படி அல்லது அதற்குதவி புரியும் ஏதேனும் செயலைச் செய்யும்படி தூண்டுதல் (பிரிவு 40 (1) (என்), அவ்விடயம் ஒரு கைத்தொழில் மன்றுக்கு அல்லது ஒரு மத்தியஸ்தருக்கு அல்லது தொழில் மன்றுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட பின்னர் வேலையாள் ஒருவரை வேலை நிறுத்தமொன்றை ஆரம்பிக்கும்படி அல்லது தொடரும்படி அல்லது அதற்குதவி புரியும் ஏதேனும் செயலைப் புரியும்படி தூண்டுதல் என்பவை குற்றங்களாகும் (பிரிவு 40 (1) (ஒ).
1958 ஆம் ஆண்டில் நீக்கப்பட்ட உள்ளிருப்பு வேலைநிறுத்தச் சட்டம் (1955 இன் 12 ஆவது சட்டம் ) வேலை நிறுத்தமொன்றில் பங்குபற்றுபவர்களையும் அத்தகைய வேலைநிறுத்தத்துக்கு உதவு புரிவதற்காக அவ்விடத்தினுள் தங்கியிருப்போரையும் கைது செய்வதற்கும் அகற்றுவதற்கும் ஏற்பாடு செய்ததென்பது கவனிக்கத்தக்கதொன்றாகும். அத்தகைய செயலைப் புரியுமொருவர் தவறொன்றுக்குக் குற்றவாளியாவதுடன் குற்றப்பணம் அத்துடன்/அல்லது மறியற்றண்டனைக்கும் ஆளாவார்.
(உ) இலங்கையில் வேலை நிறுத்தங்கள்: அத்தியாவசிய
அரசாங்க சேவைகள்
இச்சட்டத்தின் அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட சேவைகளுள் எதையேனும்

Page 64
118
வழங்குவதில் ஈடுபட்டுள்ள ஏதேனும் அரசாங்கத் திணைக்களத்தில், பகிரங்கக் கூட்டுத்தாபனத்தில், உள்ளூர் அதிகார சபையில் அல்லது கூட்டுறவுச் சங்கத்தில் ஊழியத்திலுள்ள ஏதேனும் வகுதியினரது சேவை தடையுறுவதற்கு அல்லது இடையூறுபடுத்தப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும், அவ்வகுதியினரால் வழங்கப்படும் சேவைகளைத் தொடர்ந்து பேணுதல் சமுதாய வாழ்வுக்கு அத்தியாவசியமானதாகவும் சனாதிபதி கருதுமிடத்து அச்சேவையை ஓர் அத்தியாவசிய அரசாங்க சேவையாக அவர் பிரகடனப்படுத்தலாம் (பிரிவு 2, அத்தியாவசிய சேவைகள் சட்டம்).
அத்தகைய கட்டளையில் உள்ளடக்கப்புட்டுள்ள ஒருவர் தமது வேலைத்தலத்துக்குச் சமுகமளிக்கத் தவறுமிடத்து அல்லது மறுக்குமிடத்து அல்லது அவரது மேலாளர்களால் பணிக்கப்படும் அத்தகைய வேலையை ஆற்றத் தவறுமிடத்து அல்லது அச்சேவையை நடத்துவதற்கு எவரேனும் ஆள் தடைசெய்யுமிடத்து அல்லது இடையூறு செய்யுமிடத்து அல்லது அவ்வேலையைச் செய்யாது தவிர்க்கும்படி எவரேனும் ஆளைத் தூண்டி ஊக்கப்படுத்துமிடத்து அல்லது மேற்படி ஏதேனும் செயலைப் புரியும்படி வேறு எவரேனும் ஆளை ஊக்குவிக்குமிடத்து அவர் தவறொன்றுக்குக் குற்றவாளியாவார் (பிரிவு 2 (2) (அ), (ஆ) ).
இச்சட்டத்தின் கீழான குற்றமொன்றுக்கு எவரேனும் ஆளுக்கெதிராக வழக்குத் தொடரப்படுகையில், குற்றத்துக்குக் காரணமான செயல் அல்லது செய்யாமை தொழிற் சங்கமொன்றினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தமொன்றுக்கு உதவி புரிவதற்கானதென நிறுவுவது எதிர்தரப்பு வாதமாக அமையமாட்டாது (பிரிவு 6). சட்டத்துக்கான அட்டவணை பின்வரும் சேவைகளை உள்ளடக்குகின்றது: உணவுப் பண்டங்களின் அல்லது பானங்களின் வழங்கல், பேணுகை, விநியோகம்; பெற்றோலியப் பொருள்கள், வாயு உட்பட எரிபொருள்களின் வழங்கல் அல்லது விநியோகம்; மின்சாரம் வழங்கல்; பயணிகளுக்கு அல்லது சரக்குகளுக்கான பகிரங்கப் போக்குவரத்துச் சேவைகள்; நீர் வழங்கல்; அஞ்சல், தொலைபேசி, தந்தி, ஒலிபரப்புச் சேவைகள்; சகல கூட்டுறவுச் சங்கங்களினாலும் யூனியன்களினாலும், வழங்கப்படும் சேவைகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் நோக்கங்களுக்காகத் துறைமுகமென வரையறுக்கப்பட்டுள்ள ஏதேனும் துறைமுகத்தில் கப்பல்களிலிருந்து உணவுப் பண்டங்களை அல்லது பானங்களை அல்லது நிலக்க்ரியை அல்லது எண்ணெயை அல்லது எரிபொருளை இறக்குதல், ஏற்றிச் செல்லுதல், வெளியேற்றுதல், தரையிறக்குதல், களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல், அகற்றுதல் என்பன தொடர்பில் செய்வதற்கு அவசியமான அல்லது தேவையான எவ்வகையிலுமான சேவை, வேலை அல்லது தொழில்; வைத்தியசாலைகளிலும் மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் அவற்றையொத்த நிறுவனங்களிலும் நோயாளரைப் பேணுதல், உபசரித்தல், பராமரித்தல் அவர்களுக்கு உணவூட்டுதல், அவர்களைக் குணப்படுத்துதல் என்பன தொடர்பில் அவசியமான அல்லது தேவையான எவ்வகையிலுமான சேவை, வேலை அல்லது தொழில்; நீர் வழங்கல், மின்சாரம், வடிகால், சாக்கடை அமைப்பு, தீயணைப்பு, நோயாளர் வண்டிச் சேவைகள், (மலம் அகற்றி ஒழித்தல் உட்பட) கழிவகற்றிப் பேணுதல், தெருப்பெருக்குதல் என்பவற்றுக்காக உள்ளூர் அதிகார சபையினால் பராமரிக்கப்படும் ஏதேனும் பொறுப்பு முயற்சி; பெருஞ்சாலைகள், பாலங்கள், மதகுகள், விமானத்தளங்கள்,

119
துறைமுகங்கள், இருப்புப் பாதைகள் உட்பட பெருஞ்சாலை இருப்புப் பாதைகள் அல்லது வான்மூலம் போக்குவரத்துச் சேவைகளுக்கான வசதிகளை ஏற்பாடு செய்தலும் பராமரித்தலும்.
(Wi) தொழிற் சங்கங்களும் சிவிற் சுதந்திரங்களும் (அ) ஜஎல்ஓ கோட்பாடுகள்
தொழிற் சங்கங்கள் தன்னுரிமையும் சுதந்திரமும் கொண்டனவாக விளங்குவதற்கு மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஐஎல்ஓ ஆட்சிச் சபையின் ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம் பற்றிய குழு உணர்ந்துள்ளது (6 ஆவது அறிக்கை, நேர்வு இல, 2, பந்தி 1012, 7 ஆவது அறிக்கை, நேர்வு இல.56, பந்தி 68, டைஜஸ்ட் ஒவ் கேசஸ் 3 ஆம் பதிப்பு, பக். 19 பந்தி 68). எனவே 1970 இல் சர்வதேச தொழில் மாநாடு (ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம், ஐஎல்ஓ, பக். 93 தொழிற் சங்கங்களும் சிவிற் சுதந்திரங்களில் அவற்றின் தொடர்பும் பற்றிய தீர்மானம், 54 ஆவது கூட்டத்தொடர்) கூறியதாவது :
தொழிலாளர்களுக்கும் தொழில்தருநர்களின் நிறுவனங்களுக்கும் அளிக்கப்படும் உரிமைகள், குறிப்பாக மனித உரிமைகள் பற்றிய சர்வதேசப் பிரகடனத்திலும் சிவில், அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கையிலும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ள சிவிற் சுதந்திரங்களை மதிப்பனவாக அமைய வேண்டும். அத்தகைய சிவிற் சுதந்திரங்கள் இல்லாதுவிடின் அது தொழிற்சங்க உரிமைகள் பற்றிய கோட்பாட்டை முற்றிலும் அர்த்தமற்றதாக்கிவிடுகின்றது.
இத்தீர்மானம் பின்வருவனவற்றை விசேடமாக வலியுறுத்துகின்றது: ஒருவரின் சுதந்திரத்துக்கும் பாதுகாப்புக்குமான உரிமையும் விதிமுறையற்றுக் கைது செய்து தடுத்துவைப்பதிலிருந்து விடுதலையும்; கருத்துச் சுதந்திரமும் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரமும் அதிலும் குறிப்பாகத் தலையீடு ஏதுமின்றிக் கருத்துக் கொள்வதற்கும் எல்லைகளால் தடையுறாவண்ணம் எந்தவொரு தொடர்புச் சாதனத்தின் ஊடாகவும் தகவலைத் தேடுவதற்கும், பெறுவதற்கும், வழங்குவதற்குமான சுதந்திரம்; ஒன்று கூடுவதற்கான சுதந்திரம்' சுதந்திரமானதும் பாரபட்சமற்றதுமான ஒரு தீர்ப்பு மன்றத்தினால் நேர்மையான வழக்குவிசாரணைக்கான உரிமை; தொழிற்சங்க நிறுவனங்களின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான உரிமை (தீர்மானத்தின் 2 ஆம் உறுப்புரை).
தொழிற்சங்க உரிமைகளைப் பிரயோகித்தல் அல்லது அவற்றில் பதவிவகித்தல் வழமையான குற்றவியற் சட்டம் செயற்படுத்தப்படுவதிலிருந்து சட்டவிலக்குரிமை யளிக்காது ( பந்தி 105, பக் 25, டைஜஸ்ட் ஒவ் டிசிஷனஸ், ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரக் குழு, 3 ஆம் பதிப்பு), ஆயின் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஆட்கள்

Page 65
120
எல்லோரும் தாமதமின்றி நீதிமன்றத்தின் முன்னர் கொண்டுவரப்படவேண்டும். இவ்வுரிமை, 1980 இல் இலங்கை அரசாங்கத்தால் உறுதி செய்யப்பட்ட சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட ஆட்கள் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களென அரசாங்கம் நம்பினால் அவர்கள் வழமையான நீதி நடைமுறைப்படியான சகல பாதுகாப்புக்களுடனும் நீதிமன்றங்களில் துரிதமாக விசாரிக்கப்பட வேண்டுமெனக் குழு வலியுறுத்தியுள்ளது (பந்தி 114, பக். 27). அத்துடன் அவசரகால நிலைமைகளின் கீழ் தடுத்துவைத்தல் கூட நியாயமான காலத்தினுள் பிரயோகிக்கப்படும் வழமையான நீதி முறைக் காப்பு விதிகளுக்கமைய இருத்தல் வேண்டும் (பந்தி 128, பக் 31).
அரசின் தலையீடின்றிக் கூட்டங்களை நடத்துவதற்கான சுதந்திரம் தொழிற்சங்க உரிமைகளின் பிரயோகத்தில் இன்றியமையாத ஓர் ஆக்கக்கூறாகும். எனினும் இவ்வுரிமை பொதுசன ஒழுங்கைக் குலைக்காமல் அல்லது அதற்கொரு அச்சுறுத்தலாக அமையாமல் பிரயோகிக்கப்படவேண்டும் (பந்தி 114, பக். 33). தொழிற்சங்கங்கள் முன்னங்கீகாரத் தேவையின்றியும் குறுக்கீடின்றியும் தொழிற்சங்க விடயங்களைக் கலந்தாலோசிப்பதற்குத் தமது சொந்த வளவினுள் சுதந்திரமாகக் கூட்டங்களை நடத்துவதற்கான உரிமையும் தொழிலாளரின் பிரதிநிதிகள் தமது கடமைகளை ஆற்றுவதற்கு வேலைத்தலங்களுக்குச் செல்வதற்கான உரிமையும் அடிப்படையில் முக்கியமானவையெனக் கருதப்படுன்றன (பந்திகள் 142, 143, பக் 33).
ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம் பற்றிய குழு எப்போதும் தொழிற்சங்க நோக்கங்களைக் குறிக்கோளாகக் கொண்ட ஆர்ப்பாட்டங்களையும் வேறு உள்நோக்கங்கொண்ட ஆர்ப்பாட்டங்களையும் திட்டவட்டமாக வேறுபடுத்திக் காட்டியுள்ளது (பந்தி 154, பக். 35). மே தினக் கூட்டங்களை நடத்துவதற்கான உரிமை எப்போதும் உறுதியாக நிலைநாட்டப்பட்டுள்ளபோதிலும், பொதுசன ஒழுங்கை உறுதிப்படுத்துவதற்கு அதிகாரிகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மதிப்பளிக்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் பகிரங்க இடங்களில் குழப்பங்களைத் தவிர்க்க வேண்டும் ( பந்தி 156- 159, பக். 35). பொதுசன ஒழுங்கைப் பேணுவதற்குப் பொறுப்பாயுள்ள அரசாங்கமே பாதுகாப்புத்துறையில் அதன் அதிகாரங்களைப் பிரயோகிக்கையில், தொழிற்சங்கக் கூட்டங்கள் உட்படக் கூட்டங்கள் எவையேனும் பொதுசன ஒழுங்குக்கும் பாதுகாப்புக்கும் இடருண்டாக்குமாவெனத் தீர்மானிக்கவும் அது அவசியமெனக் கருதும் ஏதேனும் தடுப்பு நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் (பந்தி 161, பக். 36). இது அவசரகால அதிகாரங்களின் கீழ் பொதுக்கூட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசுக்குள்ள உரிமையையும் உள்ளடக்குகின்றது (பந்தி 165, பக். 36).
பத்திரிகைகள் மூலம் அல்லது வேறுவகையில் கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமை தொழிற்சங்க உரிமைகளின் இன்றியமையாத ஓர் அம்சமாகும். தொழிற்சங்கப் பத்திரிகைகளை வெளியிடுவதற்கு முன்னங்கீகாரம் பெறப்படவேண்டுமென்ற கடப்பாட்டைச் சட்டம் விதிக்குமிடத்து, அது கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்துக்கான உரிமையை மீறுகின்றதா என்ற கேள்வி, அத்தகைய அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான நிபந்தனைகளிலும் அது வழங்கப்படுகின்ற அல்லது

121
மறுக்கப்படுகின்ற காரணங்களிலும் தங்கியுள்ளது (பந்தி 176, பக். 38), பொதுவானதொரு தணிக்கை விதிப்பானது பிரதானமாகத் தொழிற்சங்க உரிமைகளை விட சிவிற் சுதந்திரங்களுடன் தொடர்புடைய ஒரு விடயமாகும். எனினும் கைத்தொழிற் பிணக்கொன்றின் போதான பத்திரிகைத் தணிக்கையானது அப்பிணக்கில் நேரடி விளைவு ஏற்படுத்தக் கூடியதெனவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் உண்மைகளை அறியச் செய்வதிலிருந்து தடுப்பதன் மூலம் அத்தரப்பினருக்குத் தீங்குவிளைவிக்கக் கூடுமெனவும் அவதானிக்கப்பட்டுள்ளது ( பந்தி 182, பக். 39).
இயல்பில் “அரசியல்’ ரீதியானதுக்கும் “தொழிற்சங்க” ரீதியானதுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைத் தெளிவாக அறிந்துகொள்வதிலுள்ள கஷ்டத்தை ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம் பற்றிய குழு அவதானித்துள்ளது (பந்தி 185, பக் 40).
அவசரகால நிலைமையொன்று உள்ளபோது, தொழிற்சங்கங்கள் சட்டத்தை எதிர்த்துள்ளனவென்றும் தமது உறுப்பினர்களின் சமூக- பொருளாதார ஆக்க நலன்களுக்கென வரையறுக்கப்பட்ட தமது குறிக்கோள்களிலிருந்து விலகியுள்ளனவென்றும் எண்பிக்கத்தக்க காரணங்கள் இருந்தாலன்றி அரசாங்கத்தால் தொழிற்சங்கமொன்றுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படலாகாது (பந்திகள் 192-195, பக் 41).
(ஆ) இலங்கையில் பொதுசன அமைதி
ஆகியவற்றுக்கெதிரான குற்றங்கள்
தொழிற்சங்கங்கள் கூட்டங்களையும் ஊர்வலங்களையும் ஒழுங்கு செய்வதற்கான சுதந்திரத்தின் மீதான சில மட்டுப்பாடுகள் தண்டனைச் சட்டக்கோவையிலும் (1883 இன் 2 ஆவது கட்டளைச்சட்டம், பிரிவு 138 ஆகியன). பொலிசுக்கட்டளைச் சட்டத்திலும் (1885 இன் 16 ஆவது கட்டளைச் சட்டம், பிரிவுகள் 77 உம் 78 உம்) உள்ளடக்கப்பட்டுள்ளன.
(இ) இலங்கையில் வெளியிடுவதற்கான சுதந்திரம்:
பத்திரிகைப் பேரவை சட்டம்
ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரத்துடன் ஒன்றிணைந்ததாக ஏதேனும் விடயத்தை வெளியிடுவதற்குத் தொழிற் சங்கமொன்றுக்குள்ள உரிமை, இலங்கைப் பத்திரிகைப் பேரவைச் சட்டத்தினால் ( 1973 இன் 5 ஆம் இல. சட்டம்) விதிக்கப்பட்டுள்ள வரையறைகளுக்கு உட்பட்டுள்ளது. ஏதேனும் செய்திப் பத்திரிகையில் தெய்வ நிந்தனையான விடயத்தை அல்லது வேறு வகையில் தண்டனைச் சட்டக் கோவையின் 479 ஆம் பிரிவின் கருத்தினுள் வருகின்ற அவதூறான கூற்றை வெளியிடுகின்ற அல்லது வெளியிடச் செய்கின்ற அல்லது பொதுசன ஒழுக் கத்துக்கு ஊறுவிளைவிக்கவெனத் திட்டமிட்டு விளம்பரமொன்றை அல்லது ஏதேனும் இழிவான அல்லது ஆபாசமான கூற்றை அல்லது விடயத்தை வெளியிடுகின்ற ஒவ்வொரு ஆளும்

Page 66
122
தவறொன்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டும் ( 1973 இன் 5 ஆம் இல, சட்டத்தின் 15 (1) ஆம் பிரிவு ).
செய்திப் பத்திரிகையொன்றின் மூலம் குற்றமொன்று இழைக்கப்படுமிடத்து, சம்பந்தப்பட்ட ஆள்தாம் அறியாதவகையில் குற்றம் இழைக்கப்பட்டதாகவும் அக்குற்றம் இழைக்கப்படுவதைத் தடுப்பதற்குத் தாம் உரிய முயற்சியினை மேற்கொண்டதாகவும் நிறுவக் கூடுமானாலன்றி, அப்பத்திரிகையின் உரிமையாளர், வெளியீட்டாளர், அதனை அச்சிடுபவர், அதன் பதிப்பாசிரியர், அப்பத்திரிகை எழுத்தாளர் ஆகிய அனைவரும் அதற்குப் பொறுப்பாவர் ( பிரிவு 14). இச்சட்டம் உத்தியோகபூர்வ ஆவணங்களையும் அமைச்சரவைத் தீர்மானங்களையும் வெளியிடுவது தொடர்பான குற்றங்களையும் விதித்துரைக்கின்றது (பிரிவு 16).
(ஈ) இலங்கை பெருந்தோட்டங்கள் தொடர்பான
விசேட ஏற்பாடுகள்
தொழிற்சங்கமொன்றின் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியொருவர், வேண்டப் படுமாயின் தம்மை அடையாளம் காட்டும் சான்றிதழொன்றைக் காண்பித்து, பெருந்தோட்டமொன்றில் வதிகின்ற தொழிற்சங்க உறுப்பினர்களைச் சந்திக்கும் நோக்கத்துக்காகவும் அத்தகைய தோட்டங்களில் வேலைசெய்கின்ற அத்தகைய தொழிற்சங்க உறுப்பினர்களின் கூட்டங்களை நடத்துவதற்கான அல்லது அக் கூட்டங்களில் உரையாற்றுவதற்கான நோக்கத்துக்காகவும் நியாயமான நேரங்களிலெல்லாம் அத்தகைய பெருந்தோட்டங்களினுள் பிரவேசிப்பதற்கான உரிமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
எனினும் இரண்டாவது நோக்கத்துக்காகப் பெருந்தோட்டமொன்றினுள் பிரவேசித்தலானது, அவ்வாறு உட்பிரவேசிக்கும் நோக்கம் பற்றிய எழுத்திலான முன்னறிவித்தலைக் குறைந்தது ஒரு கிழமைக்கு முன்னராவது அத்தோட்டத்துக்குப் பொறுப்பானவருக்கு வழங்கினாலன்றி, அத்தகைய அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியின் உரிமையாகக் கோரப்படலாகாது ( 1970 இன் 25 ஆம் இல. தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பெருந்தோட்டங்களினுள் பிரவேசித்தற் சட்டம், பிரிவு 2). அவ்வேற்பாடுகளின் கீழ் ஏதேனும் உரிமையைப் பிரயோகிக்கின்ற தொழிற்சங்கமொன்றின் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியொருவரை வேண்டுமென்றே தடை செய்கின்ற ஆள் எவரும் தவறொன்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டும் என்பதுடன் நீதிவான் நீதிமன்றம் முன்னரான சுருக்க விசாரணையில் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டதன் பேரில் மூன்று மாதங்களுக்கு மேற்படாத மறியற்றண்டனைக்கு அல்லது 5,000 ரூபாவை விஞ்சாத குற்றப்பணத்துக்கு அல்லது இரண்டுக்கும் ஆளாதலும் வேண்டும் ( பிரிவு 2(2).
வெளித்தோற்றத்தில் சட்டமானது தொழிற்சங்க உத்தியோகத்தர்களுக்குப் பெருந்தோட்டங்களினுள் பிரவேசிக்கும் உரிமையை வழங்குவதாகத் தோற்றுகின்ற போதிலும் உண்மையில் இச்சட்டம் பெருந்தோட்டங்களினுள் பிரவேசிப்பதன் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதுடன் தொழிற்சங்க உத்தியோகத்தர்கள்

123
பெருந்தோட்டமொன்றினுள் பிரவேசிப்பது கூட்டமொன்றை நடத்தும் நோக்கத்துடனெனில், ஒரு கிழமைக்கான முன்னறிவித்தல் வழங்கப்படவேண்டுமென்ற சட்டக் கடப்பாட்டையும் ஏற்படுத்துகின்றது.
(ix) சர்வதேச நியமங்களும் இலங்கையும்
இலங்கை 87 ஆம் இலக்க உடன்படிக்கையை உறுதிசெய்யவில்லையென ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிற் சங்கங்கள் கட்டளைச்சட்டத்தில் உறுப்புரிமை தொடர்பாகவும் கூட்டிணைப்பதற்கான உரிமை தொடர்பாகவும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத வரையறைகள் இருப்பதை நாம் அவதானித்துள்ளோம். உண்மையில் ஐஎல்ஓ இவ்விடயம்பற்றிப் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்துள்ளது (பந்திகள் 125 உம் 126 உம் ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரமும் கூட்டுப்பேரமும் - அறிக்கை II ( பகுதி 4 பீ) 1983 பக். 42; குறிப்பு: கூட்டிணைப்பதற்கான உரிமை மட்டுப்படுத்தப்பட்டுள்ள நாட்டுக்கோர் உதாரணமாக இலங்கை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது பந்தி 245 பக். 76).
எனினும் அரசாங்க ஊழியர்களைக் கூட்டிணைப்பதில் மட்டுப்பாடு உள்ள போதிலும் 1954 இல் உருவாக்கப்பட்ட அரசாங்க சேவைத் தொழிலாளர் தொழிற்சங்கக் கூட்டிணைப்பு பகிரங்கமாகத் தொழிற்படுவதுடன் அதிகார பூர்வமானது போன்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது ( ஆர். கியர்னி, டிரேட் யூனியன்ஸ் அன்ட் பொலிடிக்ஸ் இன் பூரீலங்கா', 1971 கலிபோனியா பல்கலைக்கழக அச்சகம், பக். 105). முழுநேரக் கூட்டிணைப்பு வேலையை ஆற்றுவதற்கென அரசாங்க ஊழியரை விடுவிப்பதற்குத் தாபனக் கோவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசாங்கத்தால் சம்பளம் வழங்கப்படுவதுடன் புகையிரத ஆணைச்சீட்டுகளும் அல்லது போக்குவரத்து அனுமதிச்சீட்டுகளும் வழங்கப்படுகின்றன (பார்க்க அத் XXV, பக் 83, தாபனக் கோவை, எவ்ஈஎஸ் வெளியீடு, 1989).
தொழிற் சங்கமொன்றில் சேருவதற்கான உரிமை அரசியலமைப்பின் மூலமாகவே ஐயத்துக்கிடமின்றி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எஸ். ஆர். த. சில்வா அவர்களும் ஈ.எவ் ஜீ. அமரசிங்க அவர்களும் ( மொனோகிறாஃப் நம்பர் 10, கலெக்டிவ் பார்கெயினிங் பை ஈ. எவ், சி. 1988, அத். 7 பக் 14. எடுத்துக்காட்டல் ஜீ. கெயர், பிறீடம் ஒவ் அசோசியேஷன் அன்ட் எகொனமிக் டிவலப்மன்ற் , ஜஎல்ஓ, 1977, பக். 18-20) ஒருங்கு சேர்வதற்கான உரிமை ஒரு தனிப்பட்ட உரிமையாகவும் அதே அளவில் ஒரு கூட்டுரிமையாகவும் உள்ளதென எழுதுகின்றனர்.
கூட்டுரிமை என்ற வகையில் அது சங்கமொன்றின் உறுப்பினராயிருப்பதை விடப் பெருமளவு கூடியதை உள்ளடக்குகின்றது. தொழில் உறவின் மீது கூடிய அதிகாரத்தைக் கோரும் உரிமையை அது உள்ளடக்குகின்றது. ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரத்துடன் ஒன்றிணைந்ததாகக் கூட்டாகச் செயற்படும் உரிமை இருந்தாலன்றி ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம் நடைமுறையில் பயனற்றதென எஸ். ஆர். த. சில்வா குறிப்பிடுகின்றார். 87 ஆம் இலக்க உடன்படிக்கைக்கும் 98 ஆம் இலக்க உடன்படிக்கைக்கும் இடையிலான இணைப்பு முக்கியமான தொன்றாகும். இலங்கை

Page 67
124
ச0 ஆம் உடன்படிக்கையை உறுதிசெய்துள்ள போதிலும் அரசாங்க ஊழியர்களின் உரிமைகள் மீதுள்ள வரையறைகள் இவ்வுறுதிப்படுத்தலின் மதிப்பைக் குறைக்கின்றனவெனக் கூறலாம்.
தொழிற்சங்கங்கள் கட்டளைச் சட்டம் கூட்டிணைப்புக்களையும் ஏனைய தொழிற் சங்கங்களையும் வேறுபடுத்திக் கூறாததனால், அவை பதிவுசெய்யத் தவறுவதன் விளைவுகளை ஏற்றுக்கொள்ள விரும்பினாலன்றி, அத்தகைய நிறுவனங்கள் எல்லாம் பதிவுசெய்யப்பட வேண்டிய அவசியமேற்பட்டுள்ளது (பதிவு செய்யப்படாத அத்தகைய நிறுவனங்கள் சட்டபூர்வமற்றவையெனத் தொழிற்சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் 18 ஆம் பிரிவு கணிக்கின்றது). எனவே அரசியலமைப்பில் கருதப்பட்டவாறு அரசாங்க ஊழியர்களுக்குத் தொழிற்சங்கமொன்றில் சேருவதற்கான சுதந்திரத்துக்கு முழு உத்தரவாதம் வழங்கப்படவில்லையென அல்லது அவர்கள் ஓரளவு ஒப்பின்மையால் பாதிக்கப்படுகின்றனரென ஒருவர் வாதிடலாம். இவ்வரையறைகள் “ தொழிலாளி ஒருவர் தொழிற்சங்கமொன்றில் சேரக்கூடாதென்ற நிபந்தனைக்கு அமையத் தொழில் வழங்கும்.” திட்டமிடப்பட்ட செயல்கள் தொடர்பில் போதிய பாதுகாப்பு வழங்குவது பற்றிய 98 ஆம் இலக்க உடன்படிக்கையின் 1(2) ஆம் உறுப்புரையின் கீழான ஊழியரின் உரிமைகளுடன் விளைவுத்தொடர்புடையதாகவும் காணப்படலாம்.
குணரத்ன எதிராக மக்கள் வங்கி (உ.நீ மேன்முறையீடு 58/84, மாவட்ட நீதிமன்றம் கொழும்பு A/87/2, 1986, 1ழரீ. எல்.ஆர். 336) வழக்கில், ஒருவர் விரும்பும் தொழிற் சங்கத்தில் சேருவதற்கான உரிமை பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், அரசின் விடயத்தில் நல்ல காரணம் உள்ளபோது இந்நியதிக்கு விதிவிலக்கு வழங்க நீதிமன்றம் முயற்சித்தது. எனினும் ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம் பற்றிய ஐ எல் ஓ குழு, இவ்வுரிமை மீதான வரையறைகள் மிகவும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே விதிக்கப்படலாமெனவும் அவ்வாறு அனுமதிக்கக் கூடியவற்றையும் செயலாட்சி நிலையில் உள்ளவர்கட்கும் பொலிசாருக்கும் பாதுகாப்புப் படையினருக்குமென மிகக் குறுகிய நோக்கெல்லைக்குள் திட்டவட்டமாக வகுத்துள்ளதெனவும் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம்:
பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம், அத்தியாவசிய பகிரங்க சேவைகள் சட்டம், கைத்தொழிற் பிணக்குகள் சட்டம் என்பனவற்றின் பயன்பாடு தொடர்பில், ஜஎல்ஓ வகுத்துள்ள பின்வரும் கோட்பாடுகள் கவனிக்கப்படவேண்டும்:
(1) அத்தியாவசிய சேவைகள் சமுதாய வாழ்க்கையைப் பேணுவதற்கு உண்மையில் எது அத்தியாவசியமானதென்ற அடிப்படையில் தெரிவுசெய்யப்படவேண்டும், அத்துடன்
(2) மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பொருட்டு மட்டுமே அவசரகால நடவடிக்கைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் அவை அத்தகைய நடவடிக்கைகள் அத்தியாவசியமான காலப்பகுதிக்கு மட்டுமென வரையறுக்கப்படவும் வேண்டும்.

125
அத்தியாயம் 4
வடக்குக் கிழக்கு யுத்தம்
1. யுத்த நடத்துகை (1) அறிமுகம்
1993 இல் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் இராணுவத்தினாலும் த.ஈ.வி.பு (தமிழீழ விடுதலைப் புலிகள்) யினாலும் படுகொலை செய்யப்படுவது இடம்பெறவில்லை. 1992 இல் இவ்வித படுகொலைகள் இடம் பெற்றிருந்தன. மொத்தத்தில், முந்தைய ஆண்டில் இடம் பெற்ற இழப்புக்களை காட்டிலும் குறைவான இழப்புக்களே இடம் பெற்றன. ( 1992 இல் 3000 மேற்பட்ட போரிலீடுபட்டிருந்தோரும் பொது மக்களும் உயிரிழந்திருந்தனர்.) ஆயினும் அரசாங்கமும் த.ஈ.வி.பு யினரும் இப்பூசலுக்கு இராணுவத் தீர்வொன்றையே தொடர்ந்து பின்பற்றுகின்றனர். இதன் விளைவு பொதுமக்கள் மற்றும் போரிலீடுபட்டோரின் உயிரிழப்பாகும். இவ்வுயிரழப்புகள் ஆண்டிறுதியில் அதிகரித்தன. போர்க்களத்தில் மாள்வோர் அதிகமாக இள வயதினராகவும் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களுமாகவேயுள்ளனர்.
இராணுவ மற்றும் பாதுகாப்பு ஆளணியினரையும் நிறுவனங்களையும் த.ஈ.வி.பு யினர் தொடர்ந்து மறைந்திருந்து தாக்கினர். அரசாங்கப் படையினர் கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்களாலும் வெறியாட்ட முறையிலான தாக்குதல்களினாலும் பதிலடி கொடுக்கின்றனர். 1993 ஆம் ஆண்டு முழுவதிலும் இராணுவம் வடக்கில் தொடர்ந்து குண்டுமாரி பொழிந்தது. கடற்படை கரையோரப் பகுதியையும் யாழ்ப்பாணக் கடலேரியில் போக்குவரத்தையும் தொடர்ந்து தாக்கியது. இத்தாக்குதலின் பெரும் பழுவை யாழ்ப்பாண தீபகற்பமே அனுபவித்தது.
(i) இப்பூசலில் இடம்பெற்ற சிறப்புச் சம்பவங்கள்
இவ்வருடத்தில் இராணுவம் பலதாக்குதல்களை மேற்கொண்டது; கடற்படை, ஆகாயப்படை மற்றும் தரைப்படை ஆகியன ஈடுபடுத்தப்பட்டன. கீழே ஓர் உதாரணம் தரப்பட்டுள்ளது.
சாவகச்சேரியை நோக்கி முன்னேறும் தனது முயற்சியில் இராணுவம் "ஒபரேஷன் யாழ்தேவி” என்றழைக்கப்பட்ட தாக்குதலை ஐப்பசியில் ஆரம்பித்தது. இந்த நடவடிக்கையே 1993 இல் மிக அதிகளவிலான இழப்புக்களை ஏற்படுத்தியது. படை

Page 68
126
வீரர்கள், த.ஈ.வி.பு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் இராணுவத்தினராலும் தஈ.வி.பு யினராலும் கூறப்படும் எண்ணிக்கைள் பெருமளவில் ஒன்றுக்கொன்று வேறுபடுவதால் சரியான எண்ணிக்கையைத் தருவது சிரமமாக உள்ளது. ஒரு சில வட்டாரங்களின்படி, இந் நடவடிக்கை துவங்கி மூன்று தினங்களுக்குள் 150 தஈ.வி.பு யினரும் 91 பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர். வேறு வட்டாரங்களின்படி, இந் நடவடிக்கை தொடங்கி மூன்று தினங்களுக்குள் 150 த.ஈ.வி.பு யினரும் 91 பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர். வேறு வட்டாரங்களின்படி, 350 த.ஈ.வி.புனரும் 118 படைவீரர்களும் கொல்லப்பட்டனர். 135 படைவீரர்களும் 84 த.ஈ.வி.பு யினரும், இவ்விராணுவ நடவடிக்கையின்போது 100 பொதுமக்களும் கொல்லப்பட்டனரென த.ஈ.வி.பு யின் இலண்டன் கிளை கூறுகிறது. (இன்போர்ம், அக்டோபர்).
சோதனை நிலையங்களையும் இராணுவமற்றும் பொலீஸ் படையினரையும் பதுங்கியிருந்து. தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தும் தமது உத்தியை தஈ.வி.பு தொடர்ந்து மேற்கொண்டது; வைகாசி 29 ஆம் தேதி த.ஈ.வி.பு யினருக்கும் இராணுவத்தினருக்குமிடையே மட்டக்களப்பு - பொலனறுவை எல்லையில் ஏற்பட்ட மோதலில் 5 படைவீரர்கள் மாண்டனர்.
இரு தினங்களுக்குப் பின்னர் வவுனியாவுக்கருகே இராணுவத்தினரும் புளொட் உறுப்பினர்கரும் கடமையிலிடுபட்டிருந்த நொச்சி மோட்டை சோதனை நிலையத்தை த.ஈ.வி.பு தாக்கியபோது 15 சிவிலியன்கள் மாண்டனர். ( இன்போர்ம்மே).
சித்திரையிலும், கார்த்கையிலும் த.ஈ.வி.பு யினால் இரு பாரிய தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
த.ஈ.வி.பு சித்திரை மாதம் முல்லைத்தீவு வெலிஓயாவில் நடத்திய தாக்குதல் ஏறத்தாழ 19 இராணுவத்தினரின் சாவில் போய் முடிந்தது. (இன்போர்ம், ஏப்ரல்) ஆண்டின் முக்கிய இராணுவப் பின்னடைவு த.ஈ.வி.பு யின் பூநகரித் தாக்குதலின் போது ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினருக்கு ஆளணி ரீதியாகவும் உபகரண ரீதியாகவும் பிரமாண்டமான இழப்புக்கள் ஏற்பட்டன. பாதுகாப்புத்துறை வட்டாரங்களின் படி பாதுகாப்பு படையினர் 19 அதிகாரிகள் உட்பட 754 பேரை இழந்தனர். இவர்கள் மூன்று நாள் யுத்தம் ஒன்றில் கொல்லப்பட்டார்கள்; அல்லது த.ஈ.வி.பு யினரால் சிறைபிடிக்கப்பட்டார்கள். 600 பேர் காயமுற்றதாகக் கூறப்படுகிறது. எனினும், கொல்லப்பட்டோர் அல்லது காணமற்போனோரின் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாகுமென நம்பப்படுகிறது. இம் முகாம்களில் தாக்குதலுக்கு முன்பிருந்தோர் தொகை ஏறத்தாழ 1800 எனக் கூறப்படுகிறது. மாண்டவர்களுள் 47 பேர் பூநகரியிலேயே அடக்கஞ் செய்யப்பட்டனரென்றும், 147 பேர் கிளிநொச்சியில் மாவட்டச் செயலாளரினால் தகனஞ் செய்யப்பட்டனரென்றும் அறிவிக்கப்பட்டது. (இன்போர்ம், நவம்பர்) பூநகரியில் கொல்லப்பட்டவர்கள் அல்லது காணாமற் போனவர்களுள் பெரும்பாலானோர் இத்தாக்குதலுக்கு சற்று முன்னர் அங்கு வந்து சேர்ந்த பயிற்சியற்ற புது நியமனங்களாகும். (யுனி எய்ச் ஆர், அறிக்கை இல 12, பக் 10-13) தஈ.வி.பு தாம் 480

127
பேரை இழந்ததாக அதன் வானொலி மூலம் அறிவித்தது. இலங்கைப் பாதுகாப்பு வட்டாரங்களின்படி த.ஈ.வி.பு இழப்புக்கள் ஏறத்தாழ 700 ஆக இருந்திருக்க வேண்டும். (இன்போர்ம், நொவம்பர்).
(i) பொதுமக்கள் மீதான தாக்கம்
வடக்குக் கிழக்கில் பொதுமக்கள் சிறப்பாக வடக்கின் பொதுமக்கள் இவ்வருடத்தில் விமானப்படை குண்டுகளுக்கும் இராணுவ கடற்படை துப்பாகிகளுக்கும் இரையாகி தாங்கொனா துயரங்களைத் தொடர்ந்து சுமந்தனர்.
மேலும், அவர்களுடைய அன்றாட வாழ்க்கை கொடூர சிரமங்களினால் தொல்லையுறுவதாயிற்று. த.ஈ.வி.பு பற்றரிகள், தீப்பெட்டிகள், சீமெந்து, சவர்க்காரம் மற்றும் ஒரு சில மருந்து வகைகள் ஆகியவற்றை தம் தேவைக்காக பயன்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு அரசாங்கம் இப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வடக்கிற்கு கொண்டு செல்லல்படுவதை தடைசெய்தது. ( பொருட்களை கொண்டு செல்வது மீதான அவசரகாலப் பிரமான கட்டுப்பாடுகள் 3 : 674,16, 9,8,91) இது தவிர தீபகற்பத்தில் மின்சாரம் இல்லை; எனவே வடக்கிலுள்ள பொதுமக்கள் தொலைச் பேசிச் சேவைகளின்றி நாட்டின் ஏனைய பகுதிகளிருந்து துண்டிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டவர்களாயினர். யாழ்ப்பாணத்திலிருந்து வருவதற்கு அங்கு செல்வதற்குமான பயணத்தில் தீவிர அனர்த்தங்களை எதிர்கொள்ளவேண்டியதாயிற்று.
உணவு வழங்கல்கள் அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. உணவுப் பொருட்கள் பாதுகாப்பாக கப்பலில் ஏற்றிச் செல்லப்படுவதற்கு ஐசீஆர்சீ உதவுகின்றது. அரசாங்கத்திற்குச் சொந்தமான படகுகளில் செஞ்சிலுவையொன்று பொறிக்கப்படுவதோடு கப்பற் பொதிகளை பருத்தித்துறை இறங்கு துறையில் அரசாங்க அதிபரிடம் கையளிப்பதற்காக ஐசிஆர்சீ அவற்றுடன் கூடச் செல்கிறது.
1993 இல் கப்பலில் உணவுப் பொருட்களை வடக்கிற்கு கொண்டு செல்வது தொடர்ந்து சிரமங்களை எதிர் நோக்கியது. சில சமயங்களில் கப்பற் பொதிகள் கொழும்பு கப்பற் தளத்திலிருந்து காணாமற் போய் விடுவதுண்டு. தரைமார்க்கமாகக் கொண்டு செல்வது கொள்ளை இலாபம் அடிப்பதற்கு இடமளிப்பதோடு உணவுப் பொருட்களின் பொரும் பகுதியை தஈ.வி.பு எடுத்துச் செல்வதாகவும் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. 1993 இல் யாழ்ப்பாணத்தில் பொருட்களின் விலைகள்; சிறப்பாக அரசாங்த்தினால் வழங்கப்படாத பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்தன. (யு எஸ் சிஆர் “ மக்கள் சமாதானத்தை விரும்புகிறார்கள்” பக் 8).
இன்னல்கள் அதிகரித்தல், அரசாங்கம் மன்னாருக்கு வடக்கே திருகோணமலைவரையிலான கடலோரப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதைத் தடுத்தமையினால் 90,000 மீனவக் குடும்பங்கள் தமது ஒரேயொரு ஜீவனோபாயத்தையும் இழந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. (இன்போர்ம், செப்டெம்பர்) யாழ்பல்கலைக்கழக

Page 69
128
வைத்திய பீடம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கலக வைத்திய பீடம் யாழ்ப்பான மாவட்டத்தில் சிறுவர்களின் ஊட்டச்சத்து நிலை பற்றிய ஆய்வொன்று மேற்கொண்டு, 44,000 ற்கு மேற்பட்ட சிறுவர்கள் இம்மாவட்டத்தில் ஊட்டச்சத்து இன்மையால் வாடுவதாக கண்டுள்ள்து (இன்போர்ம், ஏப்ரல்).
சுகாதார வசதிகளை பேணுவதிலிருந்த சிரமங்கள் மற்றும் வைத்திய சாலைகளிலும் ஏனைய சிகிச்சை நிலையங்களிலும் அத்தியாவசிய மருந்துகளும் உபகரணங்களும் இன்மை ஆகியவற்றினால் 1993 ஆம் ஆண்டு வடக்கில் சுகாதார சேவைகள் தொடர்ந்தும் ஓர் தீவிரமான பிரச்சினையாகவே இருந்து வந்தது. அண்மைய ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் தொழிற்படும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை குறைவடைந்திருக்கிறது. மேலும் போரினால் சின்னாபின்னப்பட்டிருக்கும் தீபகற்பத்திலிருந்து பல வைத்தியர்கள் வெளியேறிவிட்டமையால் மக்கள் தொகைக்கான வைத்தியர் விகிதம் குறைவானதாகவே உள்ளது.
இதன்விளைவாக பலர், குறிப்பாக யாழ்ப்பாண நகருக்கு வெளியே வசிப்பவர்கள் மருத்துவ உதவியைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். வைத்திய சாலையொன்றிக்கு செல்வதற்காக யாழ்ப்பாணத்திற்குப் பயணஞ் செய்வது பாதுகாப்பு அல்லது போக்குவரத்துப் பிரச்சனைகள் நிமித்தம் சில சமயங்களில் சாத்தியமற்றதாகி விடுகிறது. நிலைமை இவ்வாறிருந்தும், கிளிநொச்சி வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சைக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு அனுமதி வழங்க ஜே.ஒ.சி மறுத்துவிட்டது. ( இன்போர்ம் ஜுலை) அடிப்படை மருந்துகள் கிடைக்காமையால் சிலர் இறக்கிறார்கள். மிகவும் பிணிவாய்ப்பட்டிருப்போர் சில சமயங்களில் ஐசிஆர்சீ யினால் கொழும்புக்கு கொண்டு வரப்படுவதுண்டு.
யாழ்ப்பாணத்தில் நெருப்புக்காய்ச்சல் மற்றும் மலேரியாவினால் பெரும் எண்ணிக்கையிலானோர் பீடிக்கப்பட்டமை பற்றி அண்மையில் அறிவிக்கப்பட்டடுள்ளது. குறிப்பாக மலேரியா கடுமையாகப் பரவுவதோடு ஒரு சில மாதங்களுக்குள் 1,140 மலேரியா பீடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. ( இன்போர்ம், ஏப் யெச் ஆர் ஓவர் வியூ)
மேலும் இப்பகுதி பொதுமக்கள் குறிப்பிடத்தக்க மனோதத்துவ பிரச்சினைகளினால் பாதிப்புற்றுள்ளனர். எவ்வேளையிலும் குண்டுத்தாக்குதலுக்காளாகலாம் என்ற எண்ணமும், தம்மை நோக்கி நெருங்கிவரும் மிக் குண்டு வீச்சு விமானங்கள், புக்காரோ, சியா மெகெட்டி மற்றும் எஃப்.7 ஆகியவற்றின் இரைச்சலும் இவ் விமானங்களினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான குண்டு வீச்சகளின் நினைவுகளும் இம்மக்களை பீதிகொள்ளச் செய்கின்றன; குறிப்பழக சிறுவர்கள் பாதிப்படைவதாக அறிவிக்கப்படுகின்றது (யுஎஸ் சி ஆர், பக்.8).
(ii) யாழ்ப்பாணத்துக்குப் போய் வரும் பயணம்
சராசரிப் பொதுமக்களுக்கு யாழ்ப்பாணத்திற்குப் போவதும் அங்கிருந்து வருவதுமான

129
பயணம் சராசரி பொது மக்களுக்கு ஒரு தீவிர பிரச்சினையாகவே உள்ளது. யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பல பொதுமக்கள் பல்வேறு காரணங்ளுக்காக கொழும்புக்கு வரவேண்டியேற்படுகிறது. அவ்வாறு வரும் பொழுது அவர்கள் இராணுவத்தினதும், த.ஈ.வி.பு யினது கடும் துன்புறுத்தல்களை அனுபவிக்கவும் நேரிடுகிறது.
யாரும் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படுமுன்னர் த.ஈ.வி.பு யிடமிருந்து அதற்கான அனுமதி பெற்றாகவேண்டும். அவர் மீண்டும் திரும்ப வருவதை உத்தரவாதப்படுத்துமுகமாக ஏறத்தாழ ரூபா 50,000/-கொடுக்க இணங்குதல் அல்லது ஓர் ஆண்பிள்ளையை அங்கே விட்டுச் செல்லுதல் ஆகிய இரண்டில் ஏதாவதொன்றைச் செய்தாலொழிய இவ்வனுமதி வழங்கப்பட மாட்டாது. எனினும் இந்நிபந்தனைகள் எப்போதும் இறுக்கமாயிருப்பதில்லை. ( இன்போர்ம் ஜுலை, இன்போர்ம் அக்டோபர் நேர்முகங்கள்) தவிர த.ஈ.வி.பு யின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு யாரும் செல்வதாயின் அதற்கு முன்னர் அவர்களின் சம்மதத்தைப் பெற்றாக வேண்டும் (இன்போர்ம், அக்டோபர்).
யாழ்ப்பாணத்திலிருந்து தெற்கே வருவதற்கான வழி ஒன்றில் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள ஆனையிறவு ஊடாக அல்லது த.ஈ.வி.பு யினால் இயக்கப்படும் கிளாலி பாதையூடாகவே அமைந்தள்ளது. பொதுமக்கள் ஆனையிறவுப் பாதையையே உபயோகிக்க வேண்டுமென இராணுவம் விரும்புகிறது. ஆனால் தஈ.வியுயோ கிளாலிப் பாதையைப் பயன்படுத்த வேண்டுமென விரும்புகிறது. யாழ்ப்பாணத்தில் த.ஈ.வி.பு யின் கட்டுப்பாட்டின் கீழ் வாழ்வதாலும், ஆனையிறவு ஊடாக பயணஞ் செய்வதாயின் அவ்வாறு பயணஞ் செய்தபின் மீண்டும் அவர்கள் அவ்வாறு பயணஞ் செய்தபின் மீண்டும் அவர்கள் த.ஈ.வி.பு யினால் கட்டுப்படுத்தப்படும் எல்லையை எதிர் நோக்கவேண்டியிருப்பதாலும், பொது மக்களுக்குக் கிளாலிப் பாதையூடாக பயணஞ் செய்வதைத் தவிர வேறு வழி கிடையாது. ஆனையிறவுப் பாதையில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்ற அச்சமும் நிலவுகிறது (இன்போர்ம், ஜனவரி/பெப்ரவரி).
கிளாலிப் பாதையூடாகச் செல்வதில் அபாயங்களிருந்தும் தினமும் நூற்றுக்கணக்கானோர் இதனைக் கடக்க முனைகிறார்கள். சில சம்பவங்கள் அங்கே சுருக்கமாக கீழே தரப்படுகின்றன:
மாசி 28 ஆம் திகதி முன்னரே பல மணித்தியாலங்களாக ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தும் ஆயிரக்கணக்கானனோர் கிளாலியை கடப்பதிலீடுபட்டரென அறிவிக்கப்படுகிறது (இன்போர்ம், மார்ச்).
புரட்டாதி 25 ஆம் திகதி படகுச் சேவை சில நாட்களுக்கு இடை நிறுத்தப்பட்டபோது 3000 ற்கு மேற்பட்டோர் கிளிநொச்சியில் போக்கிடமின்றி தத்தளித்தனர் ( இன்போர்ம்,
அக்டோபர்).
1993 ஜனவரி 02 ஆம் திகதி கிளாலியிலிருந்து ஏரியைக் கடந்து கொண்டிருந்த படகுத்

Page 70
130
தொகுதி மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியபோது 50 பேர் மாண்டுபோயினர். இதில் சில வயது முதிர்ந்த பெண்களும் பிள்ளைகளும் இருந்தனர். ஒரு முழுக் குடும்பமும் கொல்லப்பட்ட சம்பவமும் இதில் உண்டு. கொல்லப்பட்ட ஏனையோருள் கிளிநொச்சி டி எம் ஒ டாக்டர் சத்தியசீலனும், கிளிநொச்சி பிராந்திய கல்விப் பணிப்பாளர் திரு. தர்மராஜாவும் அடங்குவர். கடற்படையினர் படகுகள் மீது துப்பாக்கிப் பிரயோகஞ் செய்த பின்னர் அப்படகுகளிலேறி இறந்த சில உடல்களை வெட்டிக் குதறினர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. அறிக்கைகளின் படி சில உடல்கள் வெட்டிக் கொத்தப்பட்ட அடையாளங்களைக் கொண்டிருந்தன ( இன்போர்ம், ஜனவரி; யுரிஎய்ச் ஆர் அறிக்கை இலக்கம் 12, பக். 5).
இச் சம்பவத்திற்கு பின்னர், இவ்வேரியில் நடை பெறும் யுத்தம் ஒரு குறிப்பிட்ட கால வரையறையினுள் கட்டுண்டிருப்பதாகத் தோன்றுகிறது. இரு தரப்பினரிடையேயான துப்பாக்கிப் பிரயோகம் மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இடம் பெறும். பொது மக்கள் போக்குவரத்துப் படகுகள் இரவு 10 மணிக்கும் நள்ளிரவு 12 மணிக்குமிடையே புறப்பட்டு காலை 5 மணிக்குள்ளாக ஏரியைக் கடந்து விடும். (யுரிஎய்ச்ஆர் அறிக்கை இலக்க 12, பக், 3) எனினும் இவ்வொழுங்கு எல்லா நேரங்களிலும் நிலைக்க வில்லை பொதுமக்கள் இழப்புகள் தொடர்ந்தன. பங்குனி 23 ஆம் திகதி ஒரு மருத்துவ மாணவன் மகாப் பொல புலமைப்பரிசிலைப் பெறுவதற்காக வவுனியா வரும் வழியில் ஏரியில் கொல்லப்பட்டார் (யுரிஎய்ச் ஆர் அறிக்கை இலக்கம் 11, பக். 34).
சித்திரையில் கிளாலிப் படகு மார்க்கம் ஷெல் தாக்குதலுக்குள்ளானதில் 3 பேர் இறந்தனர். மேலும் பலர் காயமுற்றனர். காயமுற்றோர் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். சித்திரை 19 ஆம் திகதி கிளரலிப் படகு மார்க்கத்தில் நடைபெற்ற ஷெல் தாக்குதல் இவ்வேரியூடாக வடக்கிற்கும் வடக்கிலிருந்தும், மேற்கொள்ளப்படும் எல்லாப் போக்குவரத்துக்களையும் நிறுத்தியது (இன்போர்ம், ஏப்பிரல்), வைகாசி மாதம் வவுனியா, தாண்டிக்குளம் சாதாரணச் சாவடியில் த.ஈ.வி.பு விற்கும் புளொட் டிற்குமிடையேயான மோதலினாலும் ஏரியில் இராணுவத்தின் முழுமையான முற்றுகையினாலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கிளிநொச்சியில் போக்கிடமின்றித்தத்தளித்தனர் ( இன்போர்ம், மே).
யாழ்ப்பாணக் கடலோரியில் பொதுமக்கள் மீதான அடுத்த பாரிய தாக்குதல் ஆடி 28ம் திகதி இடம்பெற்றது. இயந்திரக் கோளாறு காரணமாக இரண்டு படகுகள் காலை 2.30 மணிக்குச் சற்றுப் பிந்தியே புறப்பட்டன. அதிகாலைக்குச் சற்று முன்னர், ஆனையிறவிலிருந்து வந்த" தேடுவளக்கொளி”இப்படகுகளில் பட்டு பிரகாசித்தபோது படகோட்டிகள் கடலில் குதித்து நீந்திச் சென்றர். சிறிது நேரத்தின் பின்னர் மருண்டு ஒலமிட்ட பயணிகள் 5 கடற்படைத் துப்பாக்கி படகுகளினால் தாக்கப்பட்டனர். இப்படகுகள் பல்வேறு திசைகளிலிருந்தும் அவர்களை நோக்கிச் சுட்டன. இதற்குள் அதிகாலையாகிவிட காட்சிப் புலன் தெளிவாகியது.
ஆண், பெண், இருபாலாரையும் கொண்ட இப் பொதுமக்கள் தாங்கள் பொதுமக்கள் என்பதை ஆங்கிலத்திலும், தமிழிலும், சிங்களத்திலும் சத்தமிட்டு கூறினர்.

131
சபாநாதன் என்ற பெயரையுடைய 63 வயதான முதியவர் ஒருவர் தாம் பொதுமக்கள் என்பதை தாக்குதல் புரிந்தோருக்கு உணர்த்து முகமாக படகின் முகப்பில் எழுந்து நின்றார். அவர் தலையில் சூடு விழுந்தது. அவரது மனைவியும் காயமுற்றாராகினும் உயிர் தப்பிக் கொண்டார். அதன் பின்னர், கடற்படையைச் சேர்ந்த ஒருவர் படகிலேறினார். காயமுற்றோரில் ஒருவரான இளம் பெண் ஒருவர் முழந்தாளிட்டு அவரிடம் மன்றாடினார். கடற்படைப் படகிலிருந்தோருடன் சிங்களத்தில் சுருக்கமாக பேசிக் கொண்டதன் பின்னர் அவர் படகில் அடிப்பாகத்தை தண்ணிர் பீறிடும் வரை பல தடவைகள் கொத்தினார். தனது படகிற்குத் திரும்பிச் செல்லுமுன், மண்ணெண்ணெயை ஊற்றினார். இதன்பின் கடற்படைப் படகு இரத்த வெள்ளத்தில் தலைகுப்புற கிடந்த இரண்டு சிறுவர்கள் உட்பட காயமுற்றவர்களையும் இறந்தவர்களையும் அவ்விடத்திலேயே விட்டு ஒரு சிறுவனை தம்முடன் கூட்டிக் கொண்டு அவ்விடத்தை விட்டு விரைவதற்கு முன்பதாக அதிலிருந்து தீப்பந்தமொன்று அவலமுற்ற படகினுள் வீசியெறியப்பட்டது. 65 வயதான மனிதரொருவரும் முன்னர் கடற்படையைச் சேர்ந்த மனிதருடன் மன்றாடிய இளவயதுப் பெண்ணுமாகிய இரு பயணிகளும் அத்தீப்பந்தத்தை வெளியே வீசியெறிந்து தீயை அணைத்ததோடு கடற்படை அவ்விடத்தை விட்டகன்று பல மணித்தியாலங்களுக்குப் பின்னர் தஈ.வி.பு படகை கரையேற்றும் வரை அதனை நீரில் முழ்காது மிதந்தபடியே வைத்திருக்கவும் செய்தனர். எல்லாமாக 8 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 6 பேர் காயமுற்றனர். கடலில் பாய்ந்த 6 பேருக்கு என்ன நிகழ்ந்ததென்று உடனடியாகத் தெரியவில்லை (யுரிஎய்ச் ஆர் அறிக்கை இலக்கம், 12, பக், 2ாஸ்பி அறிக்கை இலக்கம் 5, பக், 15, 16).
கடற்படை, இராணுவம் ஆகியவற்றின் துப்பாக்கிகள் மட்டுந்தான் பொதுமக்கள் எதிர்நோக்கிய ஆபத்துக்கள் அல்ல; ஆவணி மாதம் 12 ஆந் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உட்படப் 19 பேர் நடுக்கடலில் படகொன்று கவிழ்ந்தபோது இறந்தனர் (இன்போர்ம், ஆகஸ்ட்). கடலேரியில் பொதுமக்களுக்கான படகுச் சேவையை நடத்துவதன் மூலம் தஈ.வி.பு பெருந்தொகைப் பணத்தை ஈட்டிய போதிலும், நம்பகமற்ற இயந்திரங்கள் பொருத்திய கடற்பிரயாணத்துக்குதவாத படகுகளினாலும் பாதுகாப்பு முறைகளும் பிரமாணங்களும் இல்லாமையினாலும் அவர்கள் எதிர்நோக்கிய ஆபத்துக்கள் அதிகரித்தன. ( யூரினச்ஆர் அறிக்கை இலக்கம் 12, பக். 6).
11 சருவதேச மனிதாபிமானச்சட்டக் கோட்பாடுகளின்
மீறல்கள்
(1) அறிமுகம்
1949 ஆவணி 12 ஆம் தேதிய ஜெனீவா உடன்படிக்கைகள் நான்கும் அவற்றின் மூலம் பத்திரங்கள் 1 மற்றும் 11 உம் யுத்த காலங்களின்போது அனுசரிக்கப்பட வேண்டிய மனிதாபிமான விதிகளைக் குறித்துரைக்கின்றன. யுத்த காலங்களிலும் தனிமனித கெளரவத்திற்கு மதிப்பளித்தல் வேண்டும், மனிதத்துவக் கோட்பாடுகள் பாதுகாக்கப்படுதல் வேண்டும் எனும் கோட்பாட்டின் அடிப்படையிலேயே ஜெனிவா

Page 71
132
ஒப்பந்தங்கள் அமைந்துள்ளன. இவ்வாறாக இவ்வொப்பந்தங்கள் எதிரிகளை நடத்தும் விடயத்திலும் இவ்விதிகள் பின்பற்றப்படல் வேண்டுமெனக் கோருகிறது. காயமுற்ற மற்றும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்ட வீரர்கள் அடங்கலாக போரில் நேரடியாக ஈடுபடாதவர்களைப் பாதுகாப்பதற்கே இவ்விதிகள் முக்கியமாக தொழிற்படுகின்றன. 1949 ஆவணி 12 ஆம் தேதிய ஜெனிவா ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட நாடுகளுள் இலங்கையும் ஒன்று ஆனால் அது இரண்டு மேலதிக மூல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட வில்லை.
ஜெனிவா உடன்படிக்கை விதிகளின் பிரயோகம் இரு தரப்பினருக்குமிடையே பகைமை மூண்டதைத் தொடர்ந்து உடனடியாகவே கோரப்பட்டது. ஜெனிவா உடன்படிக்கை பின்வருவனவற்றை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தடை செய்கின்றது. கொலை, சித்திரவதை, சரீரத்தண்டனை, வெட்டுதல், தனிப்பட்ட கெளரவத்தை இழிவுபடுத்தல், பணயக் கைதிகளைப் பிடித்தல், கூட்டுத் தண்டனை, தான்தோன்றித்தனமான உயிர் பறித்தல், பாதுகாக்கப்பட்ட ஆட்களுக்கும் சொத்துக்களுக்கும் எதிரான பழிவாங்கல் நடவடிக்கை மற்றும் கொடிய அவதூறான நடத்துகை (1-iv (3). 1.11. (12) / 111 (13)/ iv (32-34), 1 (46) 11 (47)
மேலும், ஒரு பூசலிலீடுபட்டுள்ள அனைத்துத் தரப்பாரும் காயமடைந்தவர்களை எடுத்துச் சென்று கவனித்தல் வேண்டுமேனவும் அவர்களுக்கு வீண் காலதாமதமின்றி மருத்துவப் பராமரிப்பும் கவனிப்பும் வழங்கப்படுதல் வேண்டுமெனவும் ஜெனீவா உடன்படிகைகள் 1 உம் 11 உம் கோருகின்றன. இவர்களுடைய உயிரைப் பறிப்பதற்கான முயற்சிகளேதும் மேற்கொள்ளப்படலாகாது (1(12), 11(12) இந்நிபந்தனை எதிரிதரப்பு ஆயுதப்படையின் காயமுற்ற, பிணியுற்ற அல்லது கப்பல் சிதைந்து தத்தளிக்கும் உறுப்பினர்களுக்கும் பொருந்துவதாகும். (1 (12,15) ;1 (12,18) இராணுவ, மற்றும் சிவில் மருத்தவ துறைசார்ந்தவர்கள், கூறுகள் மற்றும் செஞ்சிலுவை இலச்சினையை அல்லது வெண்ணிற பின்னணியுடன் செவ்விளம்பிறைச் சின்னத்தை ஏந்திய போக்குவரத்துச் சாதனங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படுவதோடு அவரவர் வேலைகளில் உதவிபுரியப்படுதலும் வேண்டும் (1 (19-37); 1 (22 -40).
யுத்தக் கைதிகள் காருண்யமாக நடத்தப்பட வேண்டுமென ஜெனீவா உடன்படிக்கை i விதித்துரைக்கிறது. யுத்த காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்புத் தொடர்பான விதிகளை ஜெனீவா உடன்படிக்கை iv விபரிக்கின்றது. போரினால் பாதிப்புற்றுள்ள பொதுமக்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்வதையும், உணவும் பொருட்கள், மருந்து மற்றும் உடைகள், முதலியன அனுப்பபடுவதையும் அனுமதிக்குமாறு சகல தரப்பினரையும் உடன்படிக்கை iv உறுப்புரை 23 கோருகிறது.
ஜெனீவா உடன்படிக்கைகள் பெரும்பாலும் சருவதேச ஆயுதப் பிணக்குகளுக்கே பொருந்துவதாகும். ஜெனீவா உடன்படிக்கை நான்கிலும் கைச்சாத்திட்ட நாடொன்ற வகையில் இலங்கை அரசாங்கமானது ஏனைய சருவதேசத் சமுதாயத்துடன் இணைந்து இவ்வுடன்படிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள மனிதத்துவ கோட்பாடுகளுக்கு ஆதரவளித்துள்ளது. ஆகையால் அது சருவதேச தன்மையைக் கொண்டிராத ஓர்

133
ஆயுதப் பகைமையில் ஈடுபட்டிருக்கும் போதிலும் இவ்வுடன்படிக்கையின் விதிகளை கடைப்பிடிக்குமென எதிர்ப்பாக்க முடியும்.
இலங்கையில் தற்போதுள்ள பிணக்கு தொடர்பாக அரசாங்கம் குறைந்தது நான்கு உடன்படிக்கைகளுக்கும் பொதுவானதான உறுப்புரை 3 ற்குக் கட்டுபட்டுள்ளது. பொது உறுப்புரை 3 “சருவதேசத் தன்மை கொண்டிராத ஆயுதப் பிணக்கிற்கு தெளிவாகப் பொருந்துகிறது. மேலும் அரச படைகளுக்கு பொருந்துவதுபோலவே ஆயுதமேந்திய எதிர்த் தரப்பிற்கும் உறுப்புரை 3 பொருந்துகிறது.” (சர்வதேச மல்லாத) பிணக்கின் இரு தரப்பினரும் . கட்டுப்படுவர்’ எனவே த.ஈ.வி.பு உம் இவ்வேற்பாட்டிற்குக் கட்டுப்பட்டவர்களாவர்.
இலங்கை அரசாங்கத்திற்கும் த.ஈ.வி.பு இற்கும் பொருந்துவதான பொது உறுப்புரை 3 இன் ஏற்பாடுகள் பின்வருமாறு:
பிணக்கில் தீவிர பங்கேற்காதவர்கள் பாதுகாக்கப்படுவர்; பொதுமக்கள், ஆயுதங்களை கீழே போட்ட ஆயுதப்படையாளர்கள், நோய்வாய்ப்பட்டோர், காயமுற்றோர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் இவர்கள் வேறுபாடுகளின்றி மனிதாபிமானத்துடன் நடத்தப்படவேண்டும்.
இவர்களைப் பொறுத்தவரையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் பின்வரும் நடவடிக்கைள் தடை செய்யப்படுகிறது : மனிதர்/உயிர் மீதான வன்முறை, கொலை, வெட்டுதல், கொடிய நடத்துகையும் சித்திரவதையும், பணயக் கைதி பிடித்தல், தனி மனித கெளரவத்திற்கு இழிவேற்படுத்தல், குறிப்பாக அவமரியாதைபடுத்துவதும் தாழ்வுபடுத்துவதுமான நடத்துகை; முறையாக ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றமொன்றினால் நேர்மையான விசாரணை நடத்தி ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பு இன்றி தண்டனை வழங்கலும் அவற்றை நிறைவேற்றுதலும்:
காயமுற்றோரும், நோய்வாய்பட்டோரும் மற்றும் கப்பல் சிதைந்து தத்தளிப்போரும் பராமரிக்கப்படுதல் வேண்டும்.
மேலும், நான்கு உடன்படிக்கைளின் ஏனைய ஏற்பாடுகளை சிறப்பு ஒப்பந்தங்கள் மூலம் நடைமுறைக்குக் கொண்டுவர பிணிக்கிலீடுபட்டுள்ள தரப்பார் முயற்சி மேற்கொள்ளவேண்டும்.
ஆயுதப் பிணக்கின் போது பொது மக்களின் பாதுகாப்பு பற்றி ஜெனீவா உடன்படிக்கையின் மூலம் பத்திரம் 1 விளக்குகிறது. இம்மூலப் பத்திரம் கண்மூடித்தனமான தாக்குதல்களைத் தடைசெய்வதோடு பொதுமக்கள் இழப்பினை தவிர்க்கம் பொருட்டு, பொது மக்களையும் போரிலீடுபட்டோரையும் கவனமாக வேறுபடுத்திக் காணவேண்டுமெனக் கோருகிறது (பிஐஉறு. 48,51) பொதுமக்கள் மீது பதிலடித் தாக்குதல் நடந்துவதும் உறுப்புரை 51(6) னால் தடை செய்யப்படுகிறது. மூலப் பத்திரம் 1 இல் இலங்கை கைச்சாத்திடாத போதிலும், மூலப்பத்திரம் 1 இன்

Page 72
134
கோட்பாடுகள், அம்மூலப்பத்திரமானது பொது உறுப்புரை 3 இல் “உயிர் மீதும் ஆள் மீதுமான வன்முறை” (உறுப்பு 3(1) (அ) க்கும் “ தனிப்பட்ட கெளரவத்திற்கு இழிவு ஏற்படுத்தல்” (உறுப்பு 3(1)ஈ) லுக்கும் எதிரான தடையை விபரிக்கின்றது என்ற அளவில் இலங்கைக்கு பொருந்துவதாய் அமைகிறது என விவாதிக்கலாம். பாதுகாக்கப்பட்ட ஒருவர் சந்தேகத்துக்குரியவராகும் போதும் அல்லது உண்மையாகவே பகைச் செயல்களில் ஈடுபடும் போதும் மூலப்பத்திரம் 1 இன் 45 (3) ஆம் உறுப்புரை தொடர்பாகவுமான ஜெனீவா உடன்படிக்கை iv இன் 5 ஆம் உறுப்புரை செயற்படும் ஒரு சில சந்தர்ப்பங்களிலன்றி மனிதாபிமான கையாட்கள் அவதூறுக்குள்ளாவதில்லை. தவிர பரஸ்பரத்துவ கோட்பாடு மனிதாபிமானச்சட்டங் (உடன்படிக்கைகள் சட்டம் தொடர்பான ஜெனீவா உடன்படிக்கையின் 60 (5) ஆம் உறுப்புரை) களுக்குப் பொருந்தாது.
(i) அரசாங்கத்தால் மனிதாபிமானச் சட்டக்
கோட்பாடுகள் மீறப்பட்டமை
(அ) காயமுற்றோர் மற்றும் நோய்வாய்ப்பட்டோருக்கான
பராமரிப்பு
பொது உறுப்புரை 3 (2) காயமுற்றோரையும் நோய்வாய்ப்பட்டோரையும் பராமரிக்குமாறு பிணக்கிலீடுபட்டிருக்கும் சகல தரப்பினரையும் கோருகிறது. ஆயினும், வடக்கிற்கு மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்வது மீதான அரசாங்கத்தின் கட்டுபாடுகள் அத்தியாவசிய மருந்துகள் தேவைப்படுபவர்கள் உயிரிழக்கச் காரணமாகின்றன. கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அறுவைச் சிகிச்சை வசதிகளை ஏற்பத்துவதற்கான அனுமதியை ஜே.ஒசி வழங்க மறுத்தமையும் காயமுற்றோரும், நோய்வாய்ப்பட்டோரும் அநாவசியமாக இறப்பதற்கும் துன்புறுவதற்கும் காரணமாகிறது. பங்குனி 13 ஆம் திகதி ஊரங்குச் சட்டம் அமுலில்ருந்தபோது கிளி நொச்சியிலிருந்து வவுனியாவுக்கு ஒரு நோயாளியை ஏற்றிவருவதற்காக அம்பியுலன்ஸ் வண்டியொன்றை ஐசிஆர் சிக்கு வழங்க இராணுவம் மறுத்தது. இதன் விளைவாக ஒரு பெண் மரணமானார் ( இன்போர்ம், Loriřě).
(ஆ) கண்மூடித்தனமான குண்டு வீச்சும் பதிலடித்
தாக்குதல்களும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் கண்டபடி குண்டு வீசுவதும் ஷெல்தாக்குதல் நடத்துவதும் ஒரு சாதாரண நிகழ்வாகும் பலாலி மற்றும் மண்டைதீவு இராணுவ முகாம்களிலிருந்து கண்டபடி நடத்தப்படும் ஷெல் தாக்குதல்கள் பொதுமக்களுக்கு குண்டு வீச்சைக் காட்டிலும் கூடுதலான ஆபத்தை விளைவிப்பனவாய் உள்ளன. ஏனெனில் புகலிடம் தேடிக்கொள்ளுமாறு மக்களுக்கு முன் கூட்டியே எச்சரிக்கை செய்ய முடியாது போய் விடுகிறது. ஷெல்கள் வழமையாக பொதுமக்கள் வாழும் பகுதிக்குள்ளேயே

135
ஏவப்படுகின்றன. இது பல பொதுமக்களைப் பலி கொள்கிறது. ( உயிர்மீது அல்லது பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைக் கெதிரான தடை பொது உறுப்புரை 3 இன் மீறல்) ஐ.சி. ஆர் சியினால் கண்காணிக்கப்படும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையைச் சுற்றிலுமுள்ள பாதுகாப்பு வலயத்திலும் ஷெல்கள் வீழ்ந்துள்ளன.
தமது குண்டு வீச்சுத் தாக்குதல்களின் போது தஈ.வி.பு நிலைகளை நோக்கியே தாம் குறிவைப்பதாக வான்படை கூறுகிறது. எனினும், தஈ.வியுஇன் துப்பாக்கிகளுக்கு தப்பும் முகமாக அவர்கள் மிக உயரப் பறப்பதனால் அவர்களால் த.ஈ.வி.பு நிலைகளைச் சரியாக அடையாலங் காண முடியாது போகிறது. தேவாலயங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், சந்தைகள் போன்ற சிவிலியன் கட்டிடங்கள் அடிக்கடி வெளிப்படையாவே தாக்கப்பட்டுள்ளன ( இது அரசாங்கம் சர்வதேச பிணக்குகளில் கடைப்பிடிப்பதற்கு மேற்கொண்ட கடப்பாடுகளை மீறியமையாகும். (1(19-37) 11 (2240) இத்தகைய நிகழ்வுகள் பூநகரியில் நிகழ்ந்தது போன்ற இராணுவ பின்னடைவுகளைத் தொடர்ந்து உடனடியாக அதிக கடுமை மிக்கவையாக இருக்கின்றன. (மீண்டும் சர்வதேச பிணக்குகளில் கடைப்பிடிப்பதற்காக மேற்கொண்ட கடப்பாடுகளை மீறியமை); (1 (46) 11 (47) 1 (13) iv , (33).
த.ஈ.வி.பு நிலைகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளில் பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதிகள்'தவிர்ந்து கொள்ளப்படும் என இராணுவமும் வான்பட்ையும் மீண்டும் மீண்டும் வழங்கும் வாக்குறுதிகள் நடைமுறையில் பின்பற்றபடவில்லை. (இன்போர்ம், மே, யு எஸ்சிஆர், யுரி எய்ச் ஆர் பொதுவாக).
(இ) கண்மூடித்தனமான தாக்குதல்களின் சிறப்புச்
சம்பவங்கள்
தை 6 ஆம் திகதி யாழ்ப்பாணம் வட்டுக் கோட்டையில் விமானத் தாக்குதலொன்றில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; 13 பேர் காயமுற்றனர் (இன்போம் , ஜனவரி).
மாசியில் வவுனியாப்பகுதியில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சுக்கள் பல பொதுமக்கள் உயிரிழப்புக்குக் காரணமாகியது. வவுனியாவிலிருந்து 16 கிலோ மீற்றர் தொலைவில் ஒமந்தையில் த.ஈ.வி.பு நிலைகளென சந்தேகிக்கப்பட்ட இலக்குகளை வான்படை குண்டு வீசித் தாக்கியபோது2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; 14 பேர் காயமுற்றனர். மாசி மாதம் பிற்பகுதியில் அதிகாலையில் இலுப்பக்கடவை தாக்கப்பட்டதில் 3 பொதுமக்கள் மாண்டனர்; பெரும் எண்ணியிலானோர் காயமுற்றனர் (இன்போர்ம், பெப்ரவரி).
சித்திரை 22 ஆம் திகதி யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு விமானத் தாக்குதலுக்கும் ஷெல் தாக்குதலுக்கும் உள்ளானது. ஒருவர் உயிரிழக்கப் பலர் காயமுற்றனர். தவிர, பல
கட்டிடங்கள் கடுமையாகச் சேதமுற்றன (இன்போர்ம், ஏப்ரல்),
ஆடி மாதம் 27 ஆம் திகதி காலை 7.45 மணியளவில் இரண்டு வான்படை ஜெட்

Page 73
136
விமானங்கள் (கோப்பாய் பகுதியிலுள்ள கல்வியங்காட்டில்) பல குண்டுகளை போட்டன. அக்குண்டுகளுள் நான்கு இராஜா வீதிக்கப்பாலிருந்த குடியிருப்புக்களின் மீது விழுந்தன. அஜித் (9), கஜேந்திரன்(9), செல்வகாந்தி (11) என்னும் பெயர்களையுடைய மூன்று பாடசாலைச் சிறுவர்களும் கே. சண்முகநாதன் (65) என்ற பெயருடைய வயோதிபரொருவரும் அடையாளங் காண முடியாதவாறு கருகிச் சிதைந்தனர். மேலும் இருவரும் இக்குண்டுகளினால் கொல்லப்பட்டனர் ( யுரிஎய்ச் ஆர், விஷேட அறிக்கை இலக்கம் 5, பக். 15, 16)
ஆடி 31 ஆம் திகதி வான்படை ஜெட்விமானங்கள் மீண்டும் தோன்றி வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியில் குண்டுமாரி ப்ொழிந்தபோது இறந்தவர்களுள் ஒரு மாணவரும் அடங்குவார். ( யுரிஎய்ச் ஆர், விஷேட அறிக்கை இலக்கம் 5, பக். 15, 16).
புரட்டாதி மாதம்- சாவகச்சேரியை நோக்கி முன்னேற நடத்தப்பட்ட “யாழ்தேவி’ இராணுவ நடவடிக்கையின் போது 40 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாகவும் அவர்களுள் 20 பேர் பொது மக்கள் தங்கியிருந்த புகலிடமொன்றை குண்டொன்று தாக்கியபோது இறந்ததாகவும் நம்பப்படுகிறது (யுரி எய்ச் ஆர் வெளியிடப்படவில்லை)
வடக்கில் அதன் குண்டு வீச்சு நடவடிக்கைகளை அதிகரித்ததன் மூலம் பூநகரி விவகாரத்துக்கு இராணுவம் பதிலடி கொடுத்தது. எல்ரிரிஈ கோட்டைகள் என வர்ணிக்கப்பட்ட பல்வேறு பகுதிகள் விமானத்திலிருந்து தாக்கப்பட்டன. இத்தாக்குதல்களின் கடுமையைப் பொதுமக்களே அனுபவித்தனர். கார்த்திகை மாதம் 11 ஆம் திகதி வான்படையினரால் யாழ்ப்பாணக் கச்சேரி ( அரசாங்க அலுவலகம் ) தாக்கப்பட்டு அரசாங்க அதிபர் காயமுற்றார். ( இன்போர்ம் நவம்பர், டிசெம்பர் யுரி எய்ச் ஆர் அறிக்கை, இலக்கம் 12, பக். 1).
மார்கழி மாதம்- கடுமையான குண்டுத்தாக்குதல் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலும், யாழ்ப்பாண மாவட்டத்திலும் பல கடைகளும் வீடுகளும் சேதமடைந்தன (இன்போர்ம், டிசம்பர்), த.ஈ.வி.பு தங்கியிருப்பதாக கருதப்பட்ட வீடுகளுக்கு யாழ்ப்பாணத்தில் குண்டு வீச்சுக்கு குறிவைக்கப்பட்டது. இவ்வீடுகள் நெருக்கமாக அமைந்திருந்த பொது மக்கள் குடியிருப்புகளுக்கும் பாடசாலைகளுக்கும் மத்தியில் இருந்தன. சில சமயங்களில் இப்பாடசாலைகள் மாணவர்கள் நிரம்பியிருந்த போது தாக்கப்பட்டன (யுரிஎய்ச் ஆர் அறிக்கை, இலக்கம் 12, பக். 1).
(ஈ) பதிலடித் தாக்குதல்களின் சிறப்புச் சம்பவங்கள்
(1(46) 11 (47); 111 (13) iv (33 இன் மீறல்)
தை 22 ஆம் திகதி மன்னார் பேசாலையில் எல்ரிரிஈ யினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றில் 2 பொலீசார் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலையடுத்து இராணுவத்தினர் மிருகத்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு பொதுமகன் கொல்லப்பட மேலும் 5 பேர் காயமுற்றனர். இறந்த பொதுமகன் யு என் எய்ச்சி ஆரினால் நடத்தப்படும் அகதிமுகாமொன்றிற்கு வெளியே

137
சிற்றுண்டிகள் விற்றுக் கொண்டிருந்த ஒரு முஸ்லிமாவார் ( யுரிஎய்ச் ஆர் அறிக்கை இலக்கம் 11, பக். 84).
பங்குனி 15ஆம் திகதி மன்னார் பேசாலையில் பொலீஸ் ரோந்துப்படையொன்றின்மீது எல்ரிரிஈ தாக்குதல் நடத்தி 3 பொலீசார் இறந்ததையடுத்து அவ்விடத்திற்கு இராணுவம் விரைந்து வாகனங்களை நிறுத்தி பயணிகளை அடித்துத் துன்புறுத்தியதோடு ரூ. 14,000 விலையுள்ள புது பயணிகள் ஊர்தி ஒன்றையும் தீயிட்டுக் கொளுத்தியது. பனை மரங்களை வெட்டி கரிசலிலுள்ள பொலீஸ் காவல்நிலையத்தை அரண்படுத்துமாறு பயணிகள் பலவந்தப்படுத்தப்பட்டனர் ( யுரிஎய்ச் ஆர் அறிக்கை, இலக்கம் 11, பக். 84).
சித்திரை 13 ஆம் திகதி மன்னார் நகரிலுள்ள பொலீஸ் காவலரண்மீது த.ஈ.வி.பு துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டனர். சிறிது நேரத்தில் தள்ளடி இராணுவ முகாமிலிருந்து மன்னார் நகர்மீது கடும் ஷெல் தாக்குதல் தொடர்ந்தது; இத்தாக்குதல் மறுநாள் வரை நீடித்தது. சன்னங்களால் காயமுற்ற சிறுவன் ஒருவன் ஷெல் சூடு நடந்து கொண்டிருந்தமையால் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட முடியாத நிலையில் இரத்தப் பெருக்கிலேயே உயிரிழந்தான். காயமுற்ற ஏனையோர் ஹெலிகொப்டர் மூலமாக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர் ( யுரிஎய்ச் ஆர் அறிக்கை இலக்கம் 12, பக்.7).
ஆடி 4 ஆம்திகதி காலை 10 மணியளவில் எல்ரிரிஈ பதுங்கியிருந்து தாக்கியதில் ஒரு உப இன்ஸ்பெக்டர் உட்பட 5 பொலிசார் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலையடுத்து நண்பகலளவில் நகரின் கோடியில் அமைந்திருந்த கட்டப்பொருள் கூட்டுத்தாபன பொலீஸ் சோதனை நிலையத்தில் பொலீசார் ஒரு பேருந்தை நிறுத்தினர். பேசாலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் அப் பேருந்து வண்டியில் இருந்தனர். பயணிகள் அடிக்கப்பட்டனர்; தடுத்து வைக்கப்பட்டனர்; இதன் பின் ஐ சி ஆர்சி அவ்விடத்திற்கு வந்தது. சிறுவர்கள் விடுவிக்கப்பட்டனர். எனினும் பெரியவர்கள் மூன்றுபேர் ஐசிஆர் சியும், யுஎன்எய்ச்சி ஆரும் தள்ளடி இராணுவ முகாம் பிரிகேடியரது அலுவலகத்தில் இம் மூவரைப்பற்றி விசாரித்த போது இவர்கள் கைது செய்யப்படவில்லையெனக் கூறப்பட்டது. இம்மூவரும் இப்போது காணாமற் போனோர் வரிசையில் அடங்குகிறார்கள் (யுரினய்ச் ஆர் அறிக்கை, இலக்கம் 12, பக்.7-9).
(உ) பொதுமக்கள் மற்றும் சம்ய நிறுவனங்கள் மீதும்
நடத்தப்பட்ட தாக்குதல்களின் சிறப்புச் சம்பவங்கள்:
கிளிநொச்சியில் புனித தெரசா பாடசாலைக்கருகே த.ஈ.வி.பு முகாம் ஒன்று உள்ளது. 1993 மாசி 12 ஆம் தேதி காலை 8 மணிக்குச் சற்றுப் பின்னர் சிறுவர்கள் பாடசாலைக்குப் போய்க் கொண்டிருந்தபோதும் வீதியில் பாதசாரிகள் நிரம்பி வழிந்தபோதும் ஜெட் குண்டுவீச்சு விமானமொன்று குண்டொன்றைப் போட்டது. அக்குண்டு த.ஈ.வி.பு முகாமில் விழாது பல பாடசாலைச் சிறுவர்களையும் பொதுமக்களையும் தாக்கி காயப்படுத்தியது. அப்பிள்ளைகளுள் 3 பேரை ஐசிஆர்சி

Page 74
138
வவுனியா ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றது. விமானப்படை ஆடி மாதம் மீண்டும் இப்பாடசாலை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அதன்மீது குண்டு வீசியது. இக்குண்டு வகுப்பறையிலிருந்து 25 யார் தூரத்தில் பள்ளிக்கூட வளவில் விழுந்தது. ஆயினும் அது வெடிக்கவில்லை. பிறிதொரு சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது விமானப்படை விமானம் பாடசாலையொன்றின் அருகே குண்டு ஒன்றை போட்டபொழுது ஆறு சிறுவர்கள் கொல்லப்பட்டனர் (யுரிஎய்ச் ஆர் அறிக்கை, இலக்கம் 11, பக். 83, அறிக்கை இலக்கம் 12, பக்.2, இன்போர்ம் ஏப்ரல் ). த.ஈ.வி.பு யினர் பொதுமக்களுடன் கலந்து இருப்பதோடு சில நேரங்களில் பொது மக்களையும் சிறுவர்களையும் கவசமாகப் பாவிப்பதற்காக பாடசாலைகளுக்கருகிலேயே வசிக்கிறர்ர்கள். தஈ.வி.பு நிலைகளை இலக்கு வைத்து குண்டு போடுதல் ஜெனீவா உடன்படிக்கைகளுக்கு எதிரானதொன்றல்ல வெனினும், பாடசாலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு குண்டு போடுவது ஜெனீவா உடன்படிக்கைகளை மீறிய செயலாகும். இவ்விடங்களில் குண்டு குறிதவறுவதும், த.ஈ.வி.பு விற்குப் பதிலாக சிறுவர்களும் பொது மக்களும் கொல்லப்படுவதும் பெருமளவு சாத்தியமாகவுள்ளது.
ஜீவோதயம் பண்ணை வெஸ்லியன் மிஷனால் நடத்தப்படுகிறது. அது வயது முதிர்ந்த மதகுரு ஒருவரினாலும் அவரது பாரியாராலும் நிருவகிக்கப்படுகிறது. இப்பண்ணைக்கு 3 மைல் வடகிழக்கே அரசாங்க மிருக வளர்ப்பு, நிலையமொன்று அமைந்துள்ளது. இங்கு ஒரு காலத்தில் ஐபிகேஎஃப் தங்கியிருந்தது. பின்னர் இந்நிலையம் த.ஈ.வி.பு யினால் குறுகிய காலம் பாவிக்கப்பட்டது. ஆயினும் பண்ணை தஈ.வி.யு யினால் பாவிக்கப்பட வில்லை. இரண்டு மாத காலத்தில் இப்பண்ணை 4 தடவைகள் குண்டுத்தாக்குதலுக்குள்ளானது. ஆடி 15ஆம் தேதி சியா மெசெட்டி பயிற்சி விமானங்கள் 4 குண்டுகளைப் போட புக்காரா ஜெட் விமானங்கள் மேலும் 5 குண்டுகளைப் போட்டன. குண்டுகள் அனைத்தும் கட்டிடங்களைச் சுற்றிலுமுள்ள வளவினுள் விழுந்தன ( யுரி எய்ச் ஆர் அறிக்கை, இலக்கம் 12, பக். 1).
ஆடி 14 ஆம் திகதி சியாமெசெட்டி பயிற்சி விமானங்கள் மீண்டும் 4 குண்டுகளை ஜீவோதயம் பண்ணைமிது போட்டது. இக்குண்கள் கன்று மேடையையும் விடுதியையும் தாக்குவதை மயிரிழையில் தவிர்த்து அப்பால் விழுந்தன. ஆடி 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் கிளிநொச்சி பகுதி மேலுமொரு குண்டுத் தாக்குதலை அனுபவித்தது (யுரிஎய்ச் ஆர் அறிக்கை, இலக்கம் 12, பக். 1, இன்போர்ம், ஆடி). “இத்தவறு" குறித்து திருச்சபை அதிகாரிகளினால் ஜே ஒசி விற்கு எடுத்துக் கூறப்பட்டிருந்தும் குண்டுத் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமிருந்தன.
ஜிவோதயம் பண்ணை மீண்டும் ஆடி 26 ஆம் திகதி தாக்கப்பட்டது. புக்கார ஜெட் விமானங்கள் 4 குண்டுகளைபோட்டன. அவற்றுள் 2 பண்ணைக்கு வெளியிலும் 2 பண்ணையுள்ளே தேவாலயத்திற்கு மிக அருகிலும் விழுந்தன. ஆடி 29 ஆம் திகதிமாலை 5 மணி அளவில் மீண்டும் குண்டுகள் பொழியப்பட்டன. அதே விளைவுகள்; குண்டுகளின் எண்ணிக்கை எல்லாமாக 17 ஆகும் இக்குண்டுகள் நிலத்தில் பாரிய குழிகளை ஏற்படுத்தின. அதிர்வலைகள் கட்டிடங்களுக்குச் சேதம் விளைவித்தன.

139
ஒவ்வொரு குண்டுத் தாக்குதலின் பின்னரும் திருச்சபை பேச்சாளரினால் ஜே ஒசிக்கு வாய்மூலம் அறிவிக்கப்பட்டும் ஒரு பலனுமில்லை (யுரி எய்ச் ஆர் அறிக்கை, இலக்கம் 12, பக்-1).
1993 கார்த்திகை 13 ஆம் தேதி காலை 7.15 அளவில் 2 சுப்பர் சோனிக் ஜெட் விமானங்கள் நகருக்கு மேலாகப் பறந்தன; ஒன்று திடீரென யாழ்ப்பாணம் குருநகர் புனித ஜேம்ஸ் தேவாயலயத்திற்கு மேலாக தாழ்ந்து, தனிச் சிறப்புமிக்க ஐபீரிய கட்டடக் கலையிலமைந்த மூன்று பிரமாண்டமான கோபுரங்களுடன் கம்பீரமாக நிமிர்ந்து நின்ற தேவாலயத்தின் மீது 2 குண்டுகளைப் போட்டது. இக்குண்குள் இப்பாரிய கட்டிடத்தைத் தவிடு பொடியாக்கியதோடு குரு மடத்திற்கும் பங்கு மண்டபத்திற்கும் கடும் சேதம் விளைவித்தன. ஒன்பது பேர் அவ்விடத்திலேயே உயிரிழந்தனர்; எல்லாமாக 29 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வனைவரும் பிரார்த்திப்பதற்காக வந்திருந்த ஆண்களும், பெண்களும் மற்றும் பிள்ளைகளுமான கத்தோலிக்கராவர். இவ்வாலயத்திற்கு அருகில் எவ்விடத்திலும் த.ஈ.வி.பு முகாம்களோ அல்லது சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகளோ இருக்கவில்லை. பூநகரி அனர்த்தத்தின் பின்னர் கிளிநொச்சியிலுள்ள புனித தெரசா தேவாலயமும் மீண்டும் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது. பூநகரி சம்பவத்திற்குப் பின்னர் கடுமையான குண்டுத்தாக்குதலில் எல்லாமாக 26 பேர் கொல்லப்பட்டதுடன் 71 பேர் காயமுற்றனர். புனித ஜேம்ஸ் தேவாலய பங்குக் குரு அருட் திரு. ஆர். எம். ஜி. நேசநாயகம் அவர்களால் அமெரிக்கத் தூதுவருக்கு எழுதப்பட்ட கடிதம் யாழ்ப்பாண ஆயர் மேன்மை தங்கிய கலாநிதி செளந்தர நாயகம் அவர்களால் சனாதிபதிக்குக் எழுதப்பட்ட கடிதம்; இன்போர்ம் டிசெம்பர்).
(i). அரச தரப்பற்றோரால் செய்யப்பட்ட
துஷ்பிரயோகங்கள்
தாம் ஜெனீவா உடன்படிக்கைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக தஈ.வி.பு 1988 இல் கூறியது ( A1 இலங்கையில் மனித உரிமைகளின் ஓர் மதிப்பீடு). ஆயினும், தஈ.வி.பு உம் இதர போராளிக்குழுக்களும் சருவதேச மனிதாபிமானச் சட்டக் கோட்பாடுகளை தொடர்ந்து மீறுகின்றன. நான்காவது ஜெனீவா உடன்படிக்கையின் 51 ஆம் உறுப்புரை “பாதுகாக்கப்பட்டவர்கள்’ ஆயுதப்படையிலோ அல்லது துணைப் படைகளிலோ சேவையாற்றும்படி ஆக்கிரமிப்புச் சக்தி வற்புறுத்துவதைத் தடை செய்கிறது. அவ்வுறுப்புரை தாமாக படைகளில் சேர்தலை கட்டாயப்படுத்தும் நோக்கில் வற்புறுத்தல் பிரயோகித்தல் அல்லது பிரசாரம் செய்தல் ஆகியவற்றையும் தடை செய்கிறது. நம்பகமான வட்டாரங்களின்படி தஈ.வி.பு ஆளணி 13,14 வயது இளம் சிறுவர்களையும் கொண்டதாயுள்ளது (இன்போர்ம், எய்ச் ஆர் ஒவர்வீயூ).
பிரசாரக் கூட்டங்கள் மூலமாக தஈ.வி.பு மனோதத்துவ அழுத்தத்தைப் பிரயோகிக்கிறது. இவ்வழுத்தமானது சில நேரங்களில் பாடசாலை நேரத்தில் குறுக்கிட்டு வகுப்பறைக்கும் கொண்டு செல்லப்படுகிறது. சமூக விரோதிகள் மட்டுமே கல்வியை நாடுகிறார்கள்

Page 75
140
என்று சிறுவர்கள் உணரும்படி செய்யப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. மேலும், அரசாங்கம் காட்டும் மனப்போக்கும் பொதுமக்களுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளும் மிகவும் வயது குறைந்த இளைஞர்கள் தாமாக இயக்கத்தில் சேர்தலைக் தூண்டும் மேலுமொரு ஊக்குவிப்பாக அமைகிறது.
முன்னர் குறிப்பிட்டவாறு ஜெனீவா உடன்படிக்கைகளின் பொது உறுப்புரை 3 சருவதேச பிணக்குகளுக்கும் இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்ட அரசுகளுக்கும் மட்டுமன்றி சருவதேசத்தன்மையற்ற ஆயுதப்பிணக்குகளுக்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுக்களுக்கும் கூட பொருந்துவதாகும்,
1993 இல் பொது உறுப்புரை 3 ற்கு முரணாக த.ஈ.வி.பு இனால் பல பொது மக்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டனர். இராணுவத்தினரோடு இணைந்து செயற்பட்ட தமிழ்க் குழுக்கள் குறித்து முறைப்பாடுகள் நிலவின. இக்குழுக்கள், விசாரணைக்காக ஆட்களை கைது செய்தல் தடுத்து வைத்தலோடு தங்கள் சொந்த நடவடிக்கைகளை நடத்துதலையும் புரிந்ததாகத் தெரிகிறது.
இக்குழுக்கள் தாம் செய்வதற்காக தண்டனை பெறுவதிலிருந்து பாதுகாக்கப்பட ஒரு சூழ்நிலையில் தொழிற்படுவதாகக் காணப்பட்டமையால் அவற்றின் நடவடிக்கைகள் பிரசைகள் மத்தியில் தீவிர பாதுகாப்புக் கவலையை ஏற்படுத்தின (இன்போர்ம், ஜுலை).
உயிருக்கெதிரான அல்லது பொதுமக்களுக்கெதிரான வன்முறைகளை பொது உறுப்புரை 3 தடை செய்கிறது. த.ஈ.வி.பு தாம் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், பாதுகாப்பதாகவும் கூறும் மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை சிறிதும் பொருட்படுத்தாது அவர்களை தமது நடவடிக்கைகளையும் தாக்குதல்களையும் நிறைவேற்றுவதற்கு ஒரு கவசமாகப் பயன்படுத்துகிறது.
(அ) த.ஈ.வி.பு. இனால் பொது உறுப்புரை 3 மீறப்பட்டச்
சிறப்புச் சம்பவங்கள்
நோய்வாய்ப்பட்டோர் அல்லது காயமுற்றோர் மீது நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் பொது உறுப்புரை 3 (1) தடை செய்கிறது. முதலாவது ஜெனீவா உடன்படிக்கையின் 24 வது உறுப்புரை “ காயமுற்றோர் அல்லது நேய்வாய்பட்டோரை தேடுவதில், அல்லது சேகரிப்பதில் எடுத்துச் செல்வதில் அல்லது அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பிரத்தியாகமாய் ஈடுபட்டுள்ள மருத்து வத் துறை சார்ந்தோர், . மருத்துவ கூறுகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் நிருவாகத்தில் பிரத்தியேகமாய் ஈடுபட்டுள்ள ஆளணியினர். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் மதித்துப் பாதுகாக்கப்படுதல் வேண்டும்” என்று கூறுகிறது.
ஆடி 4 ஆம் தேதி மு.ப. 10 மணிக்கு மன்னாரில் பொலீஸ் உய இன்ஸ்பெக்டரொருவர்

141
காயமுற்ற சகா ஒருவரை தள்ளடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று திரும்பி வருகையில் த.ஈ.வி.பு யினால் அப் பொலிஸ் குழு மறைந்திருந்து தாக்கப்பட்டது உப இன்ஸ்பெக்டரும் 4 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டனர். முன்னே சென்ற அம்பியுலன்ஸ் வண்டியிலிருந்த ஆஸ்பத்திரி பணியாள் ஒருவர் காயமுற்றார் (யுரிஎய்ச் ஆர் அறிக்கை, இலக்கம் 12, பக். 7).
பொதுஉறுப்புரை3 உயிருக்கும்,பொதுமக்களுக்கும் எதிரான வன்முறையை தடைசெய்கிறது.
1993 சித்திரை 6 ஆம் தேதிய ஜலண்ட் பத்திரிகையின்படி வெலிகந்த, சூரிய வெவயில் எச்.ஈ.ரணவீர (45), வின்னி ரணசிங்க (19) என்னும் பெயர்களையுடைய இரு புல்டோசர் இயக்குநர்களை த.ஈ.வி.பு கொன்றது (யுரி எய்ச் ஆர் அறிக்கை, இலக்கம் 11, பக். 84).
கார்த்திகை மாதம் தஈ.வி.பு மாகாவலிபி வலயத்திலுள்ள, அருணபுர, அரலகன்வில எனும் கிராமத்தை தாக்கியும், பொலநறுவை மாவட்டத்திலுள்ள வெலிகந்த எனும் இடத்தைத் தாக்கியும் மூன்று பேரைக் கொன்றதுடன், மேலும் 5 பேரைக் காயப்படுத்தியது.
மார்கழி மாதம் மாளிகாதென்னைக்கு அருகிலுள்ள கிராமமொன்றை தஈ.வி.பு தாக்கியது. 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் ( இன்போர்ம், டிசெம்பர்).
புரட்டாதி 31 ஆம் திகதி வவுனியாவுக்கருகில் நொச்சிமோட்டையில் அமைந்திருந்த சோதனை நிலையமொன்றைத் தாக்குவதற்கு த.ஈ.வி.பு பொதுமக்களை கவசமாக உபயோகித்தது. இத்தாக்குதலின்போது பல பொதுமக்ள கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமுற்றனர் ( யுரி எய்ச் ஆர் அறிக்கை, இலக்கம் 12, பக். 11).

Page 76
142
அத்தியாயம் 5
பொருளாதார சமூக உரிமைகள்
1. வறுமையும் உணவூட்டமும்
(1) அறிமுகம்
அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளின் முழு அளவிலான செயலுருவாக்கத்தைப்படிப்படியாக எய்தப் பெறுவதற்காக 1980 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையை உறுதி செய்ததுடன் தனக்கிருக்கும் உச்ச அளவான மூலவளங்களையும் இச்செயலுருவாக்கத்திற்காகப் பயன்படுத்த நடவடிக்கை யெடுக்கவும் ஒப்புக்கொண்டது.
அவ்வுரிமைகள் இவ்வத்தியாயத்தில் ஆராயப்படுகின்ற உரிமைகளையும் உள்ளடக்குகின்றன. பசியிலிருந்துவிடுதலைபெறும்உரிமையை உள்ளடக்கியபோதிய வாழ்க்த்ைதரத்திற்கான உரிமை (பிரிவுக்கூறு 11) உள, உடல் நலத்தின் அதியுயர் தரத்தை அனுபவிப்பதற்கான உரிமை (பிரிவுக்கூறு 12); கல்விக்கான (கட்டற்ற சமுதாயமொன்றில் வினைத்திறமையோடு பங்குபெற அனைத்துமக்களையும் இயலச் செய்கின்ற கல்விக்கான) உரிமை (பிரிவுக்கூறு 13), தொழில் புரிவதற்கான உரிமை(பிரிவுக்கூறு 6);தொழில் புரிவதற்குரிய நீதியின் பாற்பட்ட அனுகூலமான நிபந்தனைகளை அனுபவிப்பதற்கான உரிமை (பிரிவுக்கூறு 7) ஆகிய உரிமைகள் மீதான இலங்கையின் தற்போதைய உறழ்நிலையே இங்கு ஆய்வுக்குட்படுத்தப் பட்டுள்ளன. (தொழிற் சங்கங்களை அமைக்கவும் அதில் இணைந்துகொள்வதற்குமான உரிமை, அவ்வாறான தொழிற் சங்கங்கள் கட்டுப்பாடின்றி இயங்குவதற்கான உரிமை என்பன (பிரிவுக் கூறு 8) அதற்கென ஒதுக்கப்பட்ட பிறிதொரு அத்தியாயத்தில் ஆராயப்படும்).
ஒப்புதலளித்து உறுதிசெய்யும் அரசுகள் இவ்வுரிமைகளை அனுபவித்தலில் ஆணுக்கும் பெண்ணுக்குமுரிய சமத்துவத்தை (பிரிவுக்கூறு3) உறுதிப்படுத்தவும், வேறுபாடுகளெதுவுமற்ற விதத்தில் (பிரிவுக்கூறு2)அவ்வுரிமைகளின் நடைமுறையாட்சிக்கு உத்தரவாதமளிக்கவும் ஒப்புக் கொள்கின்றன.
தற்போது வடக்குக் கிழக்கு மாகாண்ங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக இலங்கையின் சமூக பொருளாதார உரிமைகளின் தற்போதைய உறழ்நிலை பற்றி அறிக்கை தயாரிக்கும் ஒருவர் இம்மாகாணங்களில் இருந்து இற்றை வரையிலானதகவல்களைப்பெறுவதில் பெரும் குறைபாட்டை எதிர்கொள்ளவேண்டியுள்ள விடயம் தொடக்கத்திலேயே கவனிக்கற்பாலது. தரவுகள் கிடைக்காமை சிக்கலைத் தோற்றுவிக்கிறது. இவ்வுரிமைகளின் உறழ்நிலை பற்றிய திருத்தமான மதிப்பீடுகளைச் செய்வதானால் அதன் பொருட்டு ஒரு செயல் நுட்பமொன்றை நிறுவுவது அவசியமாகிறது. இத்தகவல்களின் குறைபாட்டினால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் காணப்படும் சமூக பொருளாதார உரிமைகளின் உறழ்நிலையே இங்கு ஆய்வுக்குட்படுகிறது.

143
நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும்“உள்ளக இடம்பெயர்ந்தோர்”என வகைப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரங்கள் மட்டுமல்ல அங்குள்ள மீதமுள்ள சனத்தொகையின் வாழ்க்கைத் தரங்கள் கூட வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இங்கு மனதில் கொள்ள வேண்டிய விடயம் யாதெனில்,வடக்குகிழக்குநிலைமைகள் திருத்தமாக ஆய்வுசெய்யப்பட்டு எமது ஆவணங்களில் பதியப்பட்டிருப்பின், இலங்கையில் இவ்வுரிமைகள் எவ்வாறு அநுபவிக்கப்படுகின்றன என்பதன் ஒட்டுமொத்தத் தோற்றம் இங்கு குறித்துக் காட்டப்பட்டுள்ள தொகைகளிலும் பார்க்க மிக மோசமானதாக இருக்கும் என்பதாகும். (வடக்கு - கிழக்கு சச்சரவு பற்றிய அத்தியாயத்தில் அப்பகுதிவாழ் பிரசைகளின் நிலைமை பற்றி ஒரளவு விபரிக்கப்பட்டுள்ளது).
இச் சச்சரவுக்கு சமாதானமான தீர்வொன்றில்லாமல் சமூக பொருளாதார உரிமைகளைத் திருப்திகரமாக நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதில் இலங்கை நம்பிக்கை கொள்ள முடியாது என்பதை மனதிற் கொள்ள வேண்டும். அத்தீர்வு ஏற்படும் வரையில் (1981ஆம் ஆண்டின் குடிசனக் கணக்கின்படி இலங்கையின் சனத்தொகையில் 14 சதவீதத்தைக் கொண்டிருக்கும்) வடக்கு கிழக்கு வாழ் மக்களின் பொருளாதார சமூக உரிமைகள் நிலைநாட்டப்பட முடியாது. இதனால், முழுமொத்தமாக நோக்குகையில், இலங்கையில் இவ்வுரிமைகளின் உறழ்நிலை அல்லது தரம் கட்டாயமாகப்பாதிப்புக்குள்ளாகிறது.
(i) "வறுமையும்" மிகக் குறைந்த படித்தரமும்
வறுமை என்பது பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் மீதான சர்வதேசக் கூட்டு ஒப்பந்தத்தில் பொதிந்துவைக்கப்பட்டுள்ள சகல சமூக பொருளாதார உரிமைகளையும் மறுதலிக்கின்ற ஒட்டுமொத்தமானதொரு அடையாளமாகும். மக்கள் மத்தியில் போதியளவு மூலவளங்களும் சக்தியும் இல்லாமையை இவ்வறுமையானது பிரதிபலிப்பதோடு போதிய வாழ்க்கைத் தரம்,உடல்நலம்,கல்வி என்பவற்றின் மீதான உரிமைகளை மறுப்பதில் நேரடியான தாக்கம் கொண்டதாகவும் விளங்குகிறது. ஆகவே இலங்கை அரசானது இவ்வுடன்படிக்கை மட்டில் தனது கடப்பாடுகளை நிறைவேற்ற அதனால் கடைப்பிடிக்கப்படும் கொள்கைகள் எவ்வளவுதூரம் உதவக்கூடும் என்பதற்கு "வறுமையின் அளவை" விளங்கிக் கொள்ளல் ஒரு முக்கிய அளவுமானியாகும்.
வறுமையின் அளவை மதிப்பிடுவதில் குறிப்பாக, சனத்தொகையின் ஒரு குறித்த பிரிவினர் "வறுமைக் கோட்டிற்கு" மேலே இருப்பதற்கு நிறைவேற்றப் படவேண்டியுள்ள அதிகுறைந்த தேவைகள் எவையென்பதை வரையறை செய்வதில் நடைமுறைசாராத, ஆராய்ச்சி முறையிலமைந்த பல சிக்கல்கள் உள. பரந்த அளவில் கைக்கொள்ளப்படும் முறையாதெனில் அதிகுறைந்த உணவூட்டற்தரத்தை ஒரு வெட்டுப்புள்ளியாக உபயோகித்தலாகும்.
வறுமைக்கோட்டை அளவிடுவதில் உணவூட்டற்தரத்தை அளவுகோலாகப்பயன்படுத்துவதற்கு இருவகையான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை: (1) ஏனைய தேவைகளைப்பூர்த்தி செய்வதற்கு போதிய உணவூட்டம் ஒரு முக்கிய நிபந்தனையாதலால் அது தன்னில் தானே ஒரு அவசிய தேவையெனக் கருதப்பட முடியும்; (2) ஆகக்குறைந்தது எவ்வளவு என்பதை வரையறுத்துக் கூறுமுடியுமாதலால் உணவூட்டல் ஒரு பயனுள்ள படித்தரமாகும்.

Page 77
144
பல காரணங்களை முன்னிட்டு முதலாவதுவாதம்தடுத்துரைக்கப்பட்டபோதிலும் உணவூட்டத்தை அடிப்படையாகக் கொண்டவறுமையின் அளவீடுகள் வழக்கிலுள்ளன. இதற்கு முக்கிய காரணம் அளவிடக் கூடியதான அதிகுறைநிலை எதுவென அவை காண்பிக்கின்றமையாகும். இருந்த போதிலும் உண்மையில் இவ் அளவீடுகள் எதைக் காட்டுகின்றனவென்றால் சனத்தொகையின் என்ன விகிதத்தினர் ஆகக் குறைந்ததொரு உணவூட்டற்தரத்தை இன்னமும் அனுபவிக்காதுள் ளனர்என்பதையே ஆகும்.வறுமையின் ஒட்டுமொத்த நிலையுடன் அவை சமப்படுத்தப்பட முடியா.
ஆகக்குறைந்த உணவூட்டற்தரமுறைமையின் அடிப்படையில்"வறுமைக்கோட்டை"நிர்ணயிக்கப் பயன்படுத்தப்படும் இருவழிமுறைகளை நாம் பரந்த அளவில் இனங்காணமுடியும். முதலாவது வழிமுறையானது அதிகுறைந்த உணவூட்டற் தேவையோடுதொடர்புடைய வரவு அல்லது செலவு மட்டத்தைத் தீர்மானித்தல் ஆகும். ஆனால் இவ்வழிமுறையானதுஉழைத்த அல்லது செலவழித்த நிதி மூல வளங்களின் அளவுகளுக்கும் எய்தப்பெற்ற உணவூட்ட அளவுகளுக்குமிடையே ஒரு தொடர்பைக் கருதுகோளாகக் கொண்டுள்ளது. அவ்வாறான ஒரு தொடர்பு பற்றிப் பல எழுத்தாளர்கள் கேள்விக்கணை தொடுத்துள்ளார்கள்.இரண்டாவது வழிமுறை இத்தொடர்பைக் கருதுகோளாகக் கொள்ளவில்லை. பதிலாக, தேவைப்படும் குறைந்தபட்ச அளவை கலோரி அளவுக்கு மாற்றப்பட்ட உண்மையான நுகர்வின் அளவோடு ஒப்பு நோக்க அது முனைகிறது. அளவீடுசெய்வதில் ஆராய்ச்சிமுறைசார்ந்த சிரமங்கள் உள. அத்துடன், குறைந்தபட்ச அளவை வயது, பால், செயற்பாடு ஆகிய துணைக்கூறுகளின் அடிப்படையில் பொருந்துமாறு அமைக்க வேண்டியுள்ளத்ால், தேசிய மட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்திற்குப் பயன்படுத்தக் கூடிய குறைந்தபட்ச அளவு எதுவெனத்தீர்மானிப்பதும் கடினமானதாகும்.
இத் தேவைகள் இந்த ஆராய்ச்சி முறைமையின் மீதான அடிப்படைக் கேள்விக்கு இட்டுச் செல்கின்றன. அதாவது மாறக்கூடிய சமூகக் காரணிகளைக் கணக்கிலெடுக்காமல் குறைந்த பட்ச உணவூட்டத்தின் அளவுபற்றிக் கருத்துரீதியில் பேசுவது கடினமானது எனும் வாதத்திற்கு இட்டுச் செல்கின்றன.
குறைந்தபட்ச அளவு சமூக ரீதியில் தீர்மானிக்கப்படுகிறது. சில .ழுத்தாளர்கள் உடலின் இயற்கைச் செயற்பாடுகளை இயக்கத் தேவையான, அடிப்படை உயிர்பொருள் மாற்ற வீதத்திற்கு (Basic Metabolic Rate-BMR) (ssDorustST sGeoTflessfsir gets)6 si6Oyugigs & Ongsir மூலம் இச் சிக்கலை மேற்கொள்ள முயற்சித்துள்ளார்கள். எனினும், சமூக பொருளாதார உரிமைகள் விடயத்தில் ஒரு நாடு தனது பிரசைகள் மட்டில் தனக்கிருக்கும் கடப்பாடுகளை எவ்வாறுபூர்த்திசெய்யலாம் என்பதை விளங்கிக்கொள்வதற்காக அத்தகைய உயிரியல்ரீதியான முடிவுகள் அத்தகைய கருத்துரைகளின் பெறுமானம் எத்தகையதாகும் என வினவுகின்றன.
பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையால் ஆராயப்படுகின்ற பிறவிடயங்களான கல்வி,உடல்நலம், உறைவிடம் போன்றவற்றிற்கு எமது கவனத்தைத் திருப்பும்போது, உணவூட்டற் தராதரங்களின் குறைந்த பட்ச அளவைக் கண்டறிவதில் எதிர்கொள்ளப்படும் சிக்கல்கள் அதிகரிக்கின்றன. இவ்விடயங்களில் குறைந்தபட்ச அளவு என்பது சமுதாயம் ஒவ்வொன்றினதும் தனித்துவப் பண்புகளைத் தழுவியதாகவும் அவற்றில் தங்கியிருப்பதாகவும் இருப்பது தெளிவு. பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை மேம்படுத்தும்பொருட்டு காலத்துக்குக் காலம் குறிப்பிட்ட இலக்குகளை முன்வைக்கும்பல்வேறுஜநா.முகவர்நிறுவனங்களால் அறிவிக்கப்படும் இலக்குகளைக் கொண்டு

145
இக்குறைந்தபட்ச அளவீடுகளை நிர்ணயிக்க முடியாது.உதாரணமாக, கல்வித்துறையில் சர்வதேச ஆரம்பக் கல்வியானது ஒரு விரும்பத்தகுந்த இலக்காக அறிவிக்கப்பட்டதுடன் நாடுகள் இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டன (உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிக்கையில் நாடுகளால் பொறுப்பேற்கப்பட்ட கடப்பாடுகளில் இதுவும் ஒன்று). சில நாடுகளின் உண்மையான கொள்கை உருவாக்கல் நடைமுறையில் இதுஎதைஉணர்த்துகிறதென்றால் சனத் தொகையின் வறியதரப்பினர்க்குக் குறைந்தபட்ச ஆரம்பக்கல்வியை வழங்குகின்ற அதேவேளை அதே சமுதாயத்தின் ஏனைய தரப்பினர்க்கு உலகம் வழங்கக்கூடிய அதிசிறந்த கல்வியைப்பெறக் கூடியவாறான ஒரு குறிக்கோளைக் கைக்கொள்ளலாம் என்பதே.
குறைந்தபட்ச அளவீடுகள் பற்றிய கருத்தானது வறியவர்கள் நலம் காக்க சமுதாயத்தில் ஏற்படக் கூடிய வளர்ச்சிக்குரிய மாற்றங்களை ஊகிக்கின்ற ஒரு கருத்துப்பாங்கிணைப்புகுத்துகின்றது. சமுதாயத்தில் காணப்படும் ஒழுங்கமைப்புமுறைகள் உறவுமுறைகளோடு பெரிதும் தொடர்புடைய தாகக் காணப்படுகின்ற, வறியவர்களின் நிலைமைகளுக்கு அடியத்திவாரமாக விளங்கும் காரணிகளை அது நோக்குவதில்லை. இந்த ஒழுங்கமைப்புமுறைகளிலும் உறவுமுறைகளிலும் மாற்றமொன்று ஏற்படாமல் வறியவர்களுக்கு நன்மைகள் வந்து குவியும் என எதிர்பார்ப்பது 85.60TLD.
குறிப்பிட்ட குறைந்தபட்ச அளவீடுகளைக் கூர்ந்தாராய்வதன் மூலம் வளர்முக நாடுகள் சமூக பொருளாதார உரிமைகள் மட்டில் தமது கடப்பாடுகளைப் பூர்த்தி செய்கின்றனவா என்பதை நிச்சயப்படுத்த எடுக்கும் முயற்சிகளும், இப்படித்தரங்களுக்கமைய அந்நாடுகள் முன்னேற்றங் கண்டுள்ளனவா என்பதை மதிப்பீடு செய்ய எடுக்கும் முயற்சிகளும் கருத்துரீதியாக இடர்பாடு களைக் கொண்டுள்ளன என நாம் வாதிடலாம். இக்கருத்து ரீதியான இடர்ப்பாடுகளின் காரணமாகச் சமுதாயமொன்றின் செயல் நிறைவேற்றத்தைத் திருப்திகரமாக அளவிடும் வழிமுறையாக இது அமையவில்லை.
வெவ்வேறு சமூகக் குழுமங்கள் மத்தியில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளைப் பிரதிபலிக்கும் குறிகாட்டிகளே நாம் முக்கியமாக நோக்க வேண்டியவையாகும் என நாம் வாதிடலாம். குறித்த ஒரு சமுதாயம் உண்மையாக வழங்கக் கூடிய படித்தரங்களை இவ்வேற்றத்தாழ்வுகள் ஒருபுறம் காட்டிநிற்க, அதே சமயம் மறு புறத்தில் சமுதாயத்தின் குறித்த பிரிவினர்க்கு அவர்களின் அடிப்படை உரிமைகளை தொடர்ச்சியாக மறுத்துவரும் நடப்பிலுள்ள ஒழுங்கமைப்பு முறைகளினதும் தொடர்புகளினதும் பிரதிபலிப்பாகவும் அவை விளங்குகின்றன.
இந்த அணுகுமுறையில்"வறுமை" எனும் பதம் பல்வேறு வகைப்பட்ட மூலவளங்கள் மட்டிலும் அதிகாரங்கள் மட்டிலும் உரிமைகள் மறுக்கப்பட்டதான பொதுவான ஒருநிலையையே கருதுகிறது. இந்நிலைமையினால் குறிப்பிட்ட சில பொருண்மிய பயன்களை அடைவதிலும் தங்கள் சொந்த வாழ்க்கையையே கட்டுப்படுத்துவதிலும் அவர்கள் பெரும் சிரமப்பட வேண்டியுள்ளது. சனத்தொகையின் குறித்த சில பிரிவினரின் நலன் பேணும் தொடர்ச்சியான ஒரு தொகுதித் தொடர்புகளை அல்லது அமைப்புகளை இந்நிலைமை கொண்டிருக்கிறது. சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் இத்தகைய தொடர்புகளினதும் அமைப்புகளினும் செயற்பாட்டின் பிரதிபலிப்பே,
எனவே, நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவீடு எதுவெனத் தேடிக்கொண்டிருப்பதை விட சமூகத்தில் உள்ள எற்றத்தாழ்வுகள்மீதும் எவருடைய வாழ்க்கைப்படித்தரங்கள் குறிப்பிடக் கூடிய

Page 78
146
அளவுகுறைவானதாய் உள்ளதோ அந்த மக்கட்குழுக்கள் மீதும் எமதுபார்வையைச் செலுத்தி அதன்பிறகு இந்நிலைமைகள் மீதான கொள்கைகளின் தாக்கத்தைப்பற்றிச் சிந்திப்பதுதான் முக்கியம். பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் தேவைகளைப்பூர்த்திசெய்ய விரும்பும் அரசாங்கங்கள் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து அதன்விளைவாக, சார்புடைய பலவகையான உரிமை இழப்புக்களை உருவாக்கிவருகிற மேற் போந்த நிலைமைகள், தொடர்புகள், அமைப்புகள் என்பவற்றில் மாற்றங்களைக் கொண்டு வரும் வகையில் குறித்துரைக்கப்பட்ட கொள்கைகளை இயற்றவேண்டும்.
(i) உணவூட்டம்
ஏற்கனவே கூறியுள்ளதுபோல உணவூட்டத்தில் காணப்படும் நிறைவைக் கொண்டே வறுமைக் கோட்டின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. இக்கண்டுபிடிப்புகள் சனத்தொகையின் எவ்விகிதத்தினர் தேவைப்படுகிற குறைந்த பட்ச உணவூட்டத்தைப் பெறாதுள்ளனர் என்பது பற்றிய விபரங்களைத் தருகின்றன. இலங்கையில் மத்திய வங்கியால்(1953,1963,1973,1978/79, 1981/82, 1986/87 ஆகிய ஆண்டுகளில்) தயாரிக்கப்பட்ட நுகர்வோர் நிதி மதிப்பீட்டுத் தரவுகளின் மீதும் குடிசனக் கணக்கெடுப்பு, புள்ளி விபரத் திணைக்களத்தால் (1969/70, 1980/81 1985/86 ஆகிய ஆண்டுகளில்) தயாரிக்கப்பட்ட வேலை வறுமை, சமூக பொருளாதார மதிப்பீட்டின் மீதும் நடத்திய ஆய்வினை அடிப்படையாகக் கொண்டே இவ்விபரங்கள் பெறப்பட்டுள்ளன. 1990க்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகள் வடக்குக் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கவில்லை. அத்துடன் 1986/87ஆம் ஆண்டுக்கான தரவுகளை உபயோகிப்பதில் சில பிரச்சினைகள் உள.
போதியளவு உணவூட்டற்படித்தரங்களைப் பெறாத மக்கட்தொகையினர் மட்டில் கைவசமுள்ள ஆய்வுகள் பல விபரங்களைத்தருகின்றன.பின்வருபவை அவ்வாறுகிடைத்த சில விபரங்களாகும்
eLaur 1
குறைந்த பட்ச உணவூட்டற் தரத்தைப் பெறாத சனத்தொகையின்
விகிதம்
78/79 80/81 81/82 85/86
குணரத்ன (1985) 22. 3 23.6
ஆனந்த் & ஹரிஸ் (1985) 22.7 21.9
urT6ITFT & é£IGasTTeij (1985) 24.
கான் (1989) 11. 8 39.2 12. 2 28.6
குணரத்ன (1989) 19 .. 5
நாணயக்கார & பிரேமரத்ன (1989) T 57. 3 44 .. 7

147
வெவ்வேறுவிதமான கணிப்பீட்டு முறைகள் கைக்கொள்ளப்பட்டதன் காரணமாக உணவூட்டத் தின் போதியஅளவுக்கான விகிதங்கள் இங்கு வேறுபடுகின்றன.செலவினங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டுமேற்கொள்ளப்பட்ட ஆய்வுபோதியஅளவுஉணவூட்டத்தைப்பெறாத மக்களின் விகிதத்தை அதிகுறைந்த எண்ணால் காட்டுவதையும், வருமானங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வில் அவ்விகிதம் சற்று அதிகரித்திருப்பதையும், நுகர்ச்சித் தன்மைகளின் நேரடி அளவீட்டை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுஅதியுயர்ந்த விகிதத்தைக் காட்டுவதையும் அவதானிக்கலாம். இவ்விகிதங்கள் குறைந்த பெறுமானமான 18% இலிருந்து கூடிய பெறுமானமான 57.3% வரை வேறுபடுகின்றன. குறைந்த பட்ச கலோரியளவின் கணிசமான உயர் விகிதத்தைப் பயன்படுத்தும் ஆய்வுமுறை புறக்கணிக்கப்படுமிடத்து, இலங்கையின் சனத்தொகையில் கிட்டத்தட்ட நாலிலொரு வீதமானோர் குறைந்தபட்ச உணவூட்டற் தரத்தைப் பேணக்கூடிய அளவிலானதொரு வருமானத்தைப் பெற்றுக் கொள்வதில்லை என்னும் உண்மையையே இத்தரவுகள் பருமட்டாகக் காட்டுகின்றன.
போதிய உணவூட்டம்பற்றியமற்றொரு விவாதம் உணவூட்டற் தரத்தின் மீது தற்போது கடைப் பிடிக்கப்படும் அபிவிருத்திக் கொள்கைகளின் தாக்கத்தோடு தொடர்புடையதாய் உள்ளது. இலங்கையின் சுதந்திரமான கொள்கைக்ளின் ஆரம்பகாலம்(அதாவது 1980களின் ஆரம்பகாலம் வரை) மீது மேற்கொள்ளப்பட்ட கிடைக்கக் கூடிய ஆய்வுகள் சனத்தொகையின் வறிய பிரிவினருடைய உணவூட்டற் படித்தரங்கள் படிப்படியாக மோசமடைந்து வந்துள்ளன எனும் பொதுவான முடிவையே கொண்டுள்ளன.
உதாரணமாக, 1985இல் வெளியிடப்பட்ட "யுனிசெப்” (Unicef) அறிக்கை பின்வரும் முடிவை அறிவிக்கிறது:-
“சனத் தொகையின் கீழ்மட்ட 30 வீதத்தினர் 1969/70இல் இருந்து கலோரி நுகர்வில் தங்குதடையின்றிய வீழ்ச்சியைக் கொண்டிருந்தனர்.1981/82இல் நடுவிலுள்ள 20 வீதத்தினர் எய்தப் பெற்றிருந்த கலோரி நுகர்வு 1969/70 இல் அவர்கள் எய்தியிருந்த அளவுக்கு அண்மித்ததாய் இருந்தது. மேல் உள்ள 50 வீதமானோர் 1973இல் ஏற்பட்ட ஆரம்பவிழ்ச்சிக்கு பின்னர் 1978/79க்கும் 1981/82க்குமிடைப்பட்ட காலத்தில் தாம் உள்வாங்கிய கலோரியளவில் துரிதமாய் முன்னேறி 1969/70இல் அவர்கள் எய்தியிருந்ததை விடவும் உயர்நிலைக்குச் சென்றிருந்தனர்.”
இதே போன்று ஜெயவர்த்தன எல். எற் அல் (கொள்கைகள் நிகழ்ச்சித்திட்டகளை நிலைப்படுத்தலும் சரிப்படுத்தலும் : இலங்கை, வைடர், ஹெல்சிங்கி, 1987) என்பாரும் சனத் தொகையின் வறியபிரிவினர் மீதான அறிக்கையில் பின்வரும்முடிவுகளை வெளிப்படுத்துகிறார்.
"கலோரி நுகர்வுபற்றிமேற்கொள்ளப்பட்ட ஆய்வு: ()1978/79க்குப்பிந்திய உடனடிக்காலங்களில் எல்லாவகைச் செலவினங்களிலும் நுகர்ச்சியின் அளவு வீழ்ச்சிகண்டது என்றும் (2) இவ்வீழ்ச்சி 1981/82க்குள்ளும் தொடர்ந்ததுடன் அவ்வீழ்ச்சியின் தாக்கத்தை கீழ்மட்ட 30சதவீதத்தினர் தாங்க நேர்ந்ததுஎன்றும்(3) நகர்ப்புற, பெருந்தோட்ட வதிவிடங்களைச்சார்ந்தோர் கூடிய அளவு வஞ்சிக்கப்பட்டனர்என்றும்(4)தோட்டத்தொழிலாளர்களே மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்

Page 79
148
என்றும் (5) மிக மோசமான வறியநிலையிலுள்ளோரின் (அதாவது 80%க்கும் அதிகமான தமது உழைப்பைஉணவுக்கெனச் செலவழித்தும் சராசரிக்கலோரித்தேவையின் 80%க்கும்குறைவான அளவையேழர்த்திசெய்யக்கூடிய நிலையில் உள்ளோர்)நூற்றுவீதம் 1978/79க்கும்1981/82க்கு மிடைப்பட்டகாலத்தில் அதிகரித்தது என்றும் புலப்படுத்துகிறது"
எனினும் 1985/86 வரைக்குமானதும் செலவினங்களை அடிப்படையாகக் கொண்டதுமான உலகவங்கியால் தயாரிக்கப்பட்ட அறிக்கை 1981/82க்கும் 1985/86க்கு மிடையிலான காலப்பகுதியில் சிறிது முன்னேற்றம் இருந்ததாகத் தெரிவிக்கின்றது. இம்மதிப்பீடுகளின்படி முதலாம் இரண்டாம் தசவீதத்திகள் மட்டுமே 1981/82 இல் கூட 2200 கலோரி அளவிலான உணவூட்டநிலையைக் கொண்டுள்ளன. இவ்விரண்டு தசவீதத்திகளில் இரண்டாவதன் நிலை 1981/82தொடக்கம் 1985/86 வரை முன்னேற்றம் கண்டுள்ளது.இதேபோன்று கீழேதரப்பட்ட அட்டவணையில் உள்ளவாறு “உணவூட்டலில் அபாய வரவுக்குட்பட்டோர்” என்றும் “கடும் வறுமைக்குட்பட்டோர்’ என்றும் வரையறுக்கப்பட்ட வகுப்பினரில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக உலகவங்கியால் பின்பற்றப்பட்ட அணுகுமுறை தெரிவிக்கின்றது.
gpLalaan 2 வறுமைக்குட்பட்ட /கடும் வறுமைக்குட்பட்ட குடும்பத்தினரின் நூற்று வீதம் தீவு அடங்கலானது
1980/81 1985/86
உணவூட்டலில் அபாயவரவுக்குட்பட்டோர் *
கடும் வறுமைக்குட்பட்டோர் **
நபரொருவருக்கு நாளொன்றுக்கு2000 கலோரிகளுக்குக் குறைவாக நுகர்கின்ற, தமது மொத்த வருமானத்தின் 80% இலும் குறைவான அளவை உணவுக்காகச் செலவிடுகின்ற குடும்பத்தினர்.
** நபரொருவருக்கு நாளொன்றுக்கு 2000 கலோரிகளுக்கு குறைவாக நுகர்கின்ற, தமது மொத்த வருமானத்தின் 80% இலும் அதிகமான அளவை உணவுக்காகச் செலவிடுகின்ற குடும்பத்தினர்.
போதிய உணவூட்டல் தொடர்பாக நிலவும் பிரதேச வேறுபாடுகளை யூனிசெப்ஆய்வறிக்கை கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிடுகிறது. தத்தமது உணவூட்டற் படித்தரங்களுக்கமைய மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன (படம் 1,யூனிசெப்அறிக்கை).

அட்டவனை 3
149
ufas CLTEFLITST மோசமான ஒரளவு சிறந்த LAL.Lutes GT TallLisles GT T திருகோணமலை மொனறாகலை யாழ்ப்பாணம் மட்டக்களப்பு அம்பாந்தோட்டை முல்லைத்தீவு அம்பாறை மாத்தறை மன்னார்
பதுளை காலி 666 fluum நுவரேலியா இரத்தினபுரி அநுராதபுரம் கண்டி கேகாலை பொலநறுவை மாத்தளை குருநாகலை கம்பஹா
புத்தளம் கொழும்பு
களுத்துறை
உணவூட்டற் படித்தரங்கள் மீதான மிகக் குழப்பம் தரும் தகவல்கள் இடர் நோக்கு நிலையில் உள்ள சில குறிப்பிட்ட குழுக்களின் பிரச்சினைகளை ஆராயும் அறிக்கைகளில் இருந்தே வருகின்றன. எண்பதுகளின் இறுதிக் காலகட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட இவ்வறிக்கைகள் கருவுற்றதாய்மார்கள் மத்தியில் காணப்படும் உணவூட்டமின்மையால் ஏற்படும் கடுமையான பிரச்சினைகளை எடுத்தியம்புகின்றன. இத்தாய்மாருக்குப்பிறக்கும் குழந்தைகள் எடைகுறைந்து காணப்படுவதற்கும் இவ்வுணவூட்டமின்மையே காரணமாகும்.யூனிசெப்ஆய்வறிக்கையின் வார்த்தைகளில் கூறுவதானால்:
“எடை குறைந்து பிறக்கும் குழந்தையானது மலைபோல் தன் முன்னேயுள்ள வாழ்க்கைப் போராட்டத்தைத் தனது முதல் பிறந்த தினத்தன்றே ஆரம்பிக்க நேரிடுகின்றது. நோய்த்தாக்கத்துக்கெதிராகப்போதியதடுப்பு:நடவடிக்கைகள் எடுக்கப்படாத ஒருநிலையில் அது பிறக்கிறது. மிகப் பெரும்பாலான அத்தகைய சந்தர்ப்பங்களில், சொந்த மற்றும் சுற்றுப்புறச் சுகாதாரத்தை நலிவடையச் செய்து நோய்களை உருவாக்கும் காரணிகளைக் கொண்ட ஒரு சூழ்நிலைக்குள் தள்ளப்படுகிறது”
கீழ்க்காணப்படுபவை இலங்கையில் குழந்தைகளினதும் பெண்களினதும் நிலைபற்றிய விசேட யூனிசெப்அறிக்கையின்மீது செய்யப்பட்ட ஆய்வில் காணப்படும் முக்கிய அம்சங்களாகும்.
(1) கருவுற்றிருக்கும்தாய்மாரில் 65% ஆனோர் குருதிக்குறைபாட்டுநிலையில் உள்ளனர்
என்பது ஒருமதிப்பீட்டில் இருந்துமட்டும் தெரியவருகிறது.

Page 80
150
(2)
(3)
(4)
(5)
கருவுற்றதாய்மார் நிறைகுறைந்து காணப்படுகின்றனர். டபிள்யூ.எச்.ஒஎனப்படும் உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட உள்வாங்கும் சக்தியின் அளவு நாளொன்றுக்கு 2550 Kcalஆக இருக்கையில், கம்பஹாமர்வட்டத்தில் 127 கருவுற்ற தாய்மார் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி (1988/89) அவர்களது சராசரி நாளாந்த உள்வாங்கு அளவு 2050 Kcal ஆகவே காணப்பட்டது. கருத்தரிப்பதற்கு முன்னால் இப்பெண்களுள் பெரும்பாலானோர் அளவிலும் தரத்திலும் குறைபாடு கொண்ட உணவை உட்கொண்டு குறைந்த உடல்நலத்தோடிருந்தனராதலால் அவர் களுள் 22% ஆனோர் குறைந்த பிறப்பு எடை கொண்ட குழந்தைகளையே (அதாவது 2500 கிராம்களிலும் குறைவானது) பிரசவித்தனர் என்பது ஆச்சரியப் படத்தக்க தொன்றல்ல.
குறைந்த பிறப்புஎடைகொண்ட குழந்தைகளைப்பிரசவித்ததாய்மாருள் 46% ஆனோர் கர்ப்பகால எடை அதிகரிப்பாக 6 கிலோகிராம்களையே கொண்டிருக்கக் காணப்பட்டனர். (அதாவது அபிவிருத்தியடைந்த நாடுகளில் அவதானிக்கப்பட்ட கர்ப்பகால எடை அதிகரிப்பின் அளவில் அரைவாசி)
4வைத்தியசாலைகளில் குறைந்த பிறப்பு எடையுடன் பிறந்த குழந்தைகள் அவதானிக் கப்பட்டுப்பின்வரும் தொகைகள் பெறப்பட்டன:
பெரியாஸ்பத்திரி, காலி - 1989 தை/மாசி மாதத்தில் பிறந்த 506
குழந்தைகளில் 24.3% ஆனவை.
பெரியாஸ்பத்திரி, அநுராதபுரம் - 1989 ஆனி/ஆவணி காலப்பகுதியில் பிறந்த
454 குழந்தைகளில் 28% ஆனவை.
பெரியாஸ்பத்திரி,மட்டக்களப்பு 1989 சித்திரை/ஆனி காலப்பகுதியில் பிறந்த
487 குழந்தைகளில் 20.5% ஆனவை. 1989 ஐப்பசி/மார்கழி காலப்பகுதியில் பிறந்த
441குழந்தைகளில் 25.2% ஆனவை.
பெரியாஸ்பத்திரி, பதுளை
கொழும்பு மாவட்டத்தில் 7 தொடக்கம் 10 வயது வரையிலான ஆரம்பப் பாடசாலைப் பிள்ளைகள் மீது நடாத்தப்பட்ட உணவூட்டற் படித்தரமதிப்பீட்டின்படி 10 வீதத்திற்கும் குறைவான ஆண் ப்ெண்பிள்ளைகளே“சாதாரண"மட்டத்திலான உணவூட்டத்தைப் பெறுகிறார்கள். இம்மதிப்பீடு 1988 மாசிமாதம் நடாத்தப்பட்டது.
வெளிப்படையான காரணங்களின்படி நோக்கின் மேற்போந்த நிலைமைகள் சனத்தொகையின் உயர் வருமானக் குழுவினரைவிட வறிய பிரிவினரையே பெரிதும்பாதிக்கின்றன. இலங்கையின் இன்றையநிலைமைபற்றி"யூனிசெப்அறிக்கையில் (இலங்கையில் குழந்தைகளும்பெண்களும் -படிநிலை ஆய்வு, பூனிசெப், கொழும்பு 1991) கூறப்பட்டவாறு:
“இலங்கையின் சனத்தொகையில் பெரும்பாலானோர் குறைந்த வருமானத்துடனேயே வாழுகின்றனர். பொருட்கொள்வனவு செய்யும் அவர்களது திறன் ஒரே சீராக வீழ்ச்சிகண்டு வருகின்றது. வறிய பிரிவினர் அனைவரும் இடர்நோக்குநிலையை எய்தியுள்ளனர். உணவூட்டற்

151
திறனாய்வுகள்யாவும் அவர்கள் மிகவும் பாதகமான முறையில் பாதிப்புற்றதையே காட்டுகின்றன. இத்தகைய நிலைமை வறிய கருவுற்ற பெண்களையும், பாலூட்டும்தாய்மார்களையும், குழந்தைகள் மற்றும் ஆரம்பப் பாடசாலைச் சிறார்களையும் மேலும் தீவிரமான இடர்காண் நிலைக்குத் தள்ளுகின்றது"
இந்த உடன்படிக்கையின் கீழ் இலங்கை அரசின்கடப்பாடுகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள விளைவு யாதெனில், நியாயபூர்வமான ஆரோக்கியமான சூழ்நிலையில் தமது வாழ்வை ஆரம்பிக்கும் உரிமை இக்குழுவினர்க்குமறுக்கப்பட்டுள்ளது என்பதேயாகும்.
(iv) “செல்வந்த"ருக்கும் “வறியவரு”க்கு மிடையே பெரிதாகிக் கொண்டுவரும் இடைவெளி
அடிப்படை உணவூட்டற்தரம்பற்றி திட்டவட்டமான முடிவுகளுக்கு வருவது கடினமாய் இருக்கும் அதேவேளை பல்வேறுபட்ட சமுதாயக்குழுக்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகள் விரிவடைந்து செல்வது தெளிவாகத் தெரிகிறது. வருவாய்க்குழுவினரை அடிப்படையாகக் கொண்டு செய்த கணிப்புக்களாயினும் சரி செலவினக் குழுவினரை அடிப்படையாக கொண்டு செய்த கணிப்புகளாயினுஞ் சரிஎக்கணிப்பும் இந்த உண்மையை உறுதிசெய்கிறது.
அட்டவணை 4
மேல்மட்டத் தசவீதத்தி (90%-100%) கீழ்மட்டத் தசவீதத்தி (0%-10%) என்பவற்றின் உணவூட்டல் தரங்களுக்கிடைப்பட்ட இடைவெளி (கலோரிகளில்)
69/70 78/79 80/81 i 81/82 85/86
வருவாய்க் குழுவினர் 552 1961 2040 2035 செலவினக் குழுவினர் 2030 2290 2339 2339
வேறுபட்ட பல மதிப்பீட்டாய்வுகளிலிருந்து பெறப்பட்ட வருவாய் பங்கீடு பற்றிய தகவல்கள் வளர்ந்துவரும் இந்த ஏற்றத்தாழ்வுகளை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
"1973 இல் 15.1 சதவீதமாக இருந்த 40% கீழ்மட்ட வருமானம் பெறுவோரின் வருவாய்ப் பங்கு 1978/79 இல் 12.1 சதவீதத்திற்கும் 1981/82இல் 1.8 சதவீதத்திற்கும் 1985/86 இல் 71 சதவீதத்திற்கும் வீழ்ச்சி கண்டதை இங்கு தெளிவாகக் காணக் கூடியதாய் உள்ளது. இதற்கு மாறாக மேல்மட்ட நூற்று வீதத்தினரின் வருவாய்ப்பங்கானது 30% இருந்துமுறையே 39.1% 417%,493% ஆகிய சதவீதத்திற்கு உயர்ந்திருந்தது. வருமானம் பெறுவோரின் மேல்மட்ட 10 வீதத்தினர் பெற்றிருந்தவருவாய்ப்பங்கானது 40% கீழ்மட்டவருமானம்பெறுவோரின் வருவாய்ப்பங்கு 1978/79இல் 16:1சதவீதமாகவும் 1981/82இல் 153 சதவீதமாகவும் 1986/87 இல் 14.1 சதவீதமாகவும் வீழ்ச்சி கண்டது" (சமன் கெலெகம வினால்

Page 81
152
எழுதப்பட்ட "சொத்துரிமையும் வருமானப் பகிர்வும்: இலங்கையின் போக்குகள்” பிறவாடா தொகுதி2இலக்கம் 8, 1993 புரட்டாதி/ஐப்பசி),
இதுபற்றி ஆராயும் போது 1983 ஆம் ஆண்டிற்குப் பிந்திய தரவுகள் வடக்கு கிழக்கை உள்ளடக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது. இப்பகுதிகளில் ஏற்பட்ட அழிவுகளையும் அதனால் மக்களின் வருமானம் மீதான உடனிணைந்த தாக்கத்தையும் கணக்கிலெடுப் போமானால் மிகக்குறிப்பிட்த்தக்க அளவு ஏற்றத்தாழ்வுகள் அதில் ஏற்படக் கூடும்.
வருமானங்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் விரிவடைவது ஒருபுறமிருக்க சனத்தொகையின் வறிய பிரிவினருடைய உண்மையான வருமானங்கள் வீழ்ச்சி கண்டிருப்பதும் கண்கூடு. பெறக்கூடிய தகவல்களிலிருந்து அறியக்கிடப்பது என்னவெனில்:
1978/79 தொடக்கம் 1986/87 வரையிலான காலப்பகுதியில் முதல் ஐந்து தசவீதத்திகளைச் சார்ந்தவர்களின் உண்மையான வருமானம் தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டுள்ளது. அதேவேளை மேல்மட்ட தசவீதத்திகளைச் சார்ந்தவர்கள் 1981/82 இலும் 1986/87 இலும் தங்களது உண்மையான வருமானத்தில் திருப்திகரமான முன்னேற்றம் கண்டுள்ளனர்(சமன்கெலேகம,1993)"
1985/86 இன் தொழிலாளர் சக்தி மற்றும் சமூக பொருளாதார விடயம் பற்றிய மதிப்பீட்டில் தரப்பட்டுள்ளவரவுசெலவுத் தரவுகளின்படி20 சதவீதத்திற்கும் சற்றுஅதிகமான குடும்பத்தினரே மாதாந்தம் ரூபா 2,500க்கும் மேலான வருமானத்தைக் கொண்டுள்ளனர். ரூபா 2500 என்பது பின்னர் ஜனசவியத்திட்டத்திற்கெனப்பிரயோகிக்கப்பட்ட வெட்டுப்புள்ளியாகும்.
சராசரி மாத வருமானங்கள் பற்றிய தரவுகளிலிருந்து மேலும் அறியக் கூடியதாய் இருப்பது யாதெனில், மாதாந்த மொத்த வருமானததில் 40 சதவீதம் 13 சதவீத குடும்பத்தினரையே சென்றடைகிறது என்பதாகும்.
சனத்தொகையின் பெரும்பாலானோரின் வருமான மட்டங்களும் வறிய பிரிவினரின் உண்மையான வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியும் எதை உணர்த்தி நிற்கின்றனவென்றால் இலங்கைவாழ் மக்களில் பெரும்பான்மையானோர்தரமான ஒரு வாழ்க்கைக்குத் தெவையான போதிய ஒரு வருமானத்தைப் பெறமுடியாதிருப்பதனால் அடிப்படை சமூக பொருளாதார உரிமைகள் அவர்களுக்குமறுக்கப்பட்டுள்ளது என்பதாகும்.
1 சுகாதாரம்
(i) முன்னுரை:
அண்மைக்காலங்களில் சுகாதாரம் பற்றிய புள்ளிவிபரங்களின் நம்பகத் தன்மையானது கேள்விக்குரியதாய் விளங்குகின்றது. முதலாவதாக, சுகாதாரம்பற்றிய பெரும்ளவு தகவல்கள் விதிமுறைக்குட்பட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட ஆவணங்களிலிருந்தே கிடைக்கப் பெறுகின்றன. அதாவது சுகாதாரம் பற்றிய சகல பிரச்சினைகளும் இவ்விதிமுறைக்குட்பட்ட

153
சுகாதார நிறுவனங்களுக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லையாதலால், சுகாதார நிலைமைகள் பற்றிய பல விடயங்கள் பதிவு செய்யப்படாமல் போவதுண்டு. இரண்டாவதாக, சில அண்மைக்கால சுகாதார தகவல் வெளியீடுகள் விதிமுறைக்குட்பட்ட இந் நிறுவனங்களால் பதிவிலிடப்பட்ட தரவுகள் நம்பகத் தன்மை வாய்ந்தவையல்ல எனச் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பிரச்சினைகளின் விளைவாகத் தோன்றியுள்ள நிலைமைகள் எய்தப்பெற்றுள்ள சுகாதாரப் படித்தரங்களைப் பாதிக்கலாம். ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மதிப்பீடுகள் இந்த நிலைமைகளை எவ்வளவு தூரம் உள்ளடக்குகின்றன என்பது தெளிவில்லை.
(i) தற்போதைய நிலைமை :
கீழே தரப்பட்டுள்ள அட்டவணையானது 1945 க்குரிய (சுதந்திரம் பெறும் முன்னர்) புள்ளி விபரங்கள்,1950ஆம் ஆண்டுதொடக்கம் நான்கு தசாப்த ஆண்டுகளுக்கான புள்ளிவிபரங்கள், 2000 ஆம் ஆண்டிற்கான சுகாதார அமைச்சின் இலக்குகள் என்பவற்றின் சுருக்கத்தைத் தருகின்றது.
அட்டவணை 5
சுகாதாரப் புள்ளி விபரங்கள்
ஆண்டு மதிப்பிடப்பட்ட பருமட்டான பருமட்டான மகப்பெற் குழந்தை புதிதாகப்
நடு-வருட பிறப்பு இறப்பு |றின்போது களின் பிறந்த சனத்தொகை வீதம் வீதம் தாய்மாரின் வீதம் இறப்புவீதம்
Co00) வீதம்
1945 6, 650 36.6 21.9 16.5 140. O 75.5
1950 7,678 30. 4 12.6 5, 6 82, O 49.2
1960 9, 896 36, 6 8, 6 3.0 57. O 34.2
1970 12, 516 29.4 7, 5 1.5 47.5 29, 7
事980 14, 747 28.4 ' 6.2 O. 6 34.4 22.7
1990 16,993 21 , ვ* 6, 2* 0,5** |17,5*116,2***
1989 **1986 *米*1985
(ஆதாரம்: சுகாதார அமைச்சு)

Page 82
5.
சுதந்திரமடைந்த பின்னர் இக்குறிகாட்டிகளில் இலங்கையால் எய்தப் பெற்ற குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இத்தரவுகள் காட்டுகின்றன. நலன்புரிமுறைமைக்கு இது ஒரு சான்றாகும். எனினும் அண்மைக்காலங்களில் அடைந்த முன்னேற்றத்தின் விகிதம்மந்தநிலையில் இருந்ததும் இங்குபுலனாகின்றது.எனினும் குழந்தைகளினதும்புதிதாகப்பிறந்த குழந்தைகளினதும் இறப்பு விகிதத்தைப் பொறுத்த வரையில் எண்பதுகளில் அடைந்த முன்னேற்றமானது குறிப்பிடத்தக்கதொரு விதிவிலக்காகும். இதற்கு முக்கியமாகத் தோட்டத்துறையில் ஏற்படுத்தப்பட்ட நலன்புரி வசதிகளில் காணப்பட்ட முன்னேற்றத்தைக் காரணமாகக் குறிப்பிடலாம்.
இக்குறிகாட்டிகளில் பிரதேசவாரியாகக் காணப்படும் வேறுபாடுகள் முக்கியமாகக் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவையாகும். தேசிய சராசரியிலும் பார்க்கக் குறைவான படித்தரங்களையுடையமாவட்டங்கள் மூன்றுகுறிகாட்டிகளின் கீழ்இனங்காணப்பட்டுள்ளமையை கீழ் தரப்பட்டுள்ள அட்டவணை காட்டுகிறது.
g|Lahamar - 6
பல்வேறு மாவட்டங்களிலும் காணப்படும் இறப்பு விகிதங்கள்
மாவட்டம் மகப்பேற்றின் குழந்தைகள் புதிதாகப்பிறந்த போதுஇறக்கும் இறப்பு குழந்தைகளின் தாய்மார்விகிதம் விகிதம் இறப்புவிகிதம்
கொழும்பு O 300 22.5
கண்டி 0.8 3.7 25.0
மாத்தளை 0.6
நுவரேலியா 0.6 49.1 32.
வவுனியா 1.7
முல்லைத்தீவு 1. O
மட்டக்களப்பு 0.8
திருகோணமலை 1.1 ·
குருனாகலை 23. 8 18. 3
அநுராதபுரம் 0.7 26.1 17.2 பொலநறுவை O. 9 m -
பதுளை o 27, 3 2.7
இரத்தினபுரி -- 29.0 22.8
இலங்கை 23.5 23.2 16.2
(ஆதாதரம்:சுகாதார அமைச்சின் தரவுகளிலிருந்துதொகுக்கப்பட்டது)

155
கீழ்க்காணும் முடிவுகளுக்கு நாம் வருவதற்கு இத்தரவுகள் அனுமதிக்கின்றன:
1. 3குறிகாட்டிகளிலும் தேசிய அளவிலான சராசரியிலும்பார்க்க மிகமோசமான நிலையில் நுவரேலியா, கண்டி, அநுராதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களும் உள. இவற்றுள் முதலிரண்டும் செறிவான தோட்டத் தொழிலாளர் சனத் தொகையைக் கொண்ட மாவட்டங்களாகவும், பின்னையது புதியநீர்பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் குடியேறியுள்ள பெருந்தொகையான மக்களைக் கொண்ட உலர்வலய மாவட்டமுமாகும்.
2. எந்தெந்த மாவட்டங்களில் குழந்தைகளின் இறப்பு விகிதம் தேசிய சராசரியிலும் பார்க்க மோசமானதாய் உள்ளதோ அங்கெல்லாம் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதமும் மோசமானதாகவே உள்ளது. கீழ்க்கண்டபடி குழுக்களாக இம்மாவட்டங்களைப் பிரிக்கலாம்.
米 கண்டி, நுவரேலியா, பதுளை, இரத்தினபுரி-பெருந்தோட்டச்சனத்தொகையைக்
கொண்டவை. குருநாகலை, அநுராதபுரம்-உலர்வலயமாவட்டங்கள்
கொழும்பு
முழுமாவட்டத்திற்குமான குறிகாட்டியைக் கீழ்நோக்கி இட்டுச் செல்லக் காரணமாயமையும் குறை படித்தரங்களைக் கொண்ட ஒரு சமூக பொருளாதாரக் குழு மேற்சொன்ன ஒவ்வொரு பிரிவிலும் உள்ளது.பெருந்தோட்டங்களைக் கொண்டமாவட்டங்களில்தோட்டத்தொழிலாளர் குழுவும், உலர் வலயப்பகுதிகளில் ஒர் இடத்தில் உள்ள விவசாயிகள்/விவசாயத்தொழிலாளர்குழுவும்,கொழும்பு மாவட்டத்தைப்பொறுத்தவரையில் சேரி வாழ்மக்களுமே அச்சமூக-பொருளாதாரக் குழுவாகும்.
சுகாதாரப்புள்ளிவிபரங்களிலிருந்து இனங்காணப்படக் கூடிய கவலை தரக்கூடிய மற்றுமொரு சமுதாயப் போக்கு யாதெனில், குறிப்பிட்ட வயதினரிடையே ஏற்படும் மரணங்களுக்குத் தற்கொலையும், தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்ளும் காயங்களுமே காரணமாக அமைகின்றன என்பதாகும்.தற்கொலைதான்மரணத்திற்குக் காரணமாக அமையுமிடத்து அதுபற்றிப்பெறப்படும் தகவல்களில் பிழைகள் இருக்கக்கூடிய நிலையுண்டு என்பது கவனிக்கற்பாலது. சனத்தொகையின் 100,000 பேரில் இறந்தோர் எத்தனைபேர் என்ற விடயத்தை எடுத்துக் கொண்டால் ஆண்களின் மரணத்தின் காரணம் பெரும்பாலும் தற்கொலையாக இருப்பது தெளிவுறத் தெரிகிறது. குறிப்பாக 15-24 வயதுக் குழுவினர் 25-44 வயதுக் குழுவினர் ஆகியோருள் ஆண் பெண் இருபாலாருள்ளும் தற்கொலையே முக்கியகாரணமாக இருக்கிறது. இப்படியானபல அடிப்படையான காரணங்கள் இருக்கக்கூடுமென்பதை ஆராய்ச்சிசெய்வோரும் கொள்கை உருவாக்கலில் ஈடுபடுவோரும் கவனத்திற்கெடுத்துக்கொள்வது அவசியம்.
கல்வியைப் போன்றே சுகாதாரத்திற்கும் அரசாங்கத்தால் செலவழிக்கப் படும் பணம் நீண்டகாலமாகத் தேக்க நிலையில் உள்ளது. கீழ்க்காணும் அட்டவணை தேறிய உண்ணாட்டு உற்பத்தி(GDP)யின் என்ன நூற்றுவீதம் செலவுசெய்யப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகின்றது.

Page 83
156
ger Llanasanar 7
தேறிய உண்னாட்டு உற்பத்தியிலிருந்து செலவு செய்யப்பட்ட நூற்றுவிதம்
% %
1985 1. 3
1986 1.5
1987 2.1
1988 1.9
1989 2. 2
1990 1.7
. (ஆதாரம்:மத்தியவங்கி அறிக்கைகள்) III கல்வி
(i) அறிமுகம்
இலங்கையைப்பொறுத்தவரையில்கல்வி ஒரு வெற்றிகரமான விடயமாக இருந்துவந்துள்ளதுடன் சுதந்திரமடைந்ததன் பின்னர் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளது, எனினும் தற்போது கல்விக்கென ஒதுக்கீடு செய்யப்படும் அரசாங்க மூலவளங்களின் பங்கு குறைந்து கொண்டே போவது ஒரு பாரிய விடயமாகும். உறுதியாகக் கூறுமிடத்து கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டாலும் அதிகரித்து வரும் கல்வித் தேவைகளுக்கேற்ப அந்நிதி ஒதுக்கீடு உள்ளதா என்பதுதான் சிந்திக்க வேண்டிய விடயமாகும். கீழ் காட்டப்பட்ட அட்டவணைப்படி தேறிய தேசிய உற்பத்தியில் இலங்கை கல்விக்கெனச் செலவழித்த விகிதம் மூன்றுதசாப்தங்களுக்கு முன்பு செலவழிக்கப்பட்ட விகிதத்திலும் பார்க்க குறைவாக இருப்பதோடு கடந்த சிலவருடங்களாக வளர்ச்சியுறாத மந்த நிலையிலேயே இருந்து வந்துள்ளது.
glalaan 8
கல்விக்கான செலவினங்கள் (தேறிய உண்ணாட்டு உற்பத்தியின் %)
1978 2. 7 1985 2 .. 8
1979 2. 7 1986 2.9 1980 2, 8 1987 2.7
1981 2, 4 1988 2.9
1982 2.5 1989 3. 3
1983 2. 6 1991 3. 1
1984 a 2, 2
(ஆதாரம்:மத்திய வங்கியின் அறிக்கைகள்)
 

157
அட்டவணை 9
கல்விக்கான செலவினங்கள் (தேறிய தேசிய உற்பத்தியின் %)
1960
3.
(ஆதாரம்:மனித முன்னேற்றத்திற்கான அறிக்கை, 1990)
(i) தற்போதைய நிலை :
கல்வியின் எய்துநிலையில் நியாயபூர்வமான மதிப்பை நாடு முன்னர் பெற்றிருந்த போதிலும், மேற்குறிப்பிட்ட மந்த நிலை காரணமாக அண்மைக்காலங்களில் கல்விக்கான மூலவள ஒதுக்கீட்டில் பல அண்டை நாடுகள் இலங்கையை விஞ்சிவிட்டன. போதிய மூலவளங்களைக் கல்விக்கென ஒதுக்கீடு செய்யாமல் விட்டமை மக்களுக்கு வழங்கப்படும் கல்விச் சேவைகளின் தரத்திலும், அதன் விளைவாக எந்த அளவிற்கு கல்வித்துறைத் தேவைகளை நாடு நிறைவேற்றி வருகிறதோ அந்த அளவிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்செலவினங்களின் குறைபாட்டால் கல்வியானது ஒன்றில் மந்த நிலையை அடைந்துள்ளது அல்லது படிப்பறிவு பங்கேற்புவிகிதம், கல்வித்தரங்கள் முதலாம் அடிப்படை அம்சங்களில் நாடு பின்னோக்கிச் சென்றுள்ளது.
அட்டவனை 10
படிப்பறிவு விகிதங்கள்
மொத்தம் ஆண் Guair தீவடங்கலாக 84.2 88, 6 80.0 நகரப்புறம் 89. 92, 4 86.1 கிராமப்புறம் 84, 6 88, 5 80, 7 தோட்டப்பிரதேசம் 59.4 74.5 45.9
(ஆதாரம்:தொழிற்சக்தி மற்றும் சமூகப்பொருளாதாரமதிப்பீட்டாய்வு 1985/86 குடிசனப் புள்ளிவிபரத்திணைக்களம்)

Page 84
158
1985/86இல் படிப்பறிவுவிகிதம் 842% ஆக இருந்ததாக அறிவிக்கப்படுகிறது. இது 1981இல் பதிவுசெய்யப்பட்ட 872% இலும் கீழிறங்கிய ஒரு வீழ்ச்சி நிலையாகும். இப்படிப்பறிவு வீழ்ச்சி ஆண்கள் (1981 இன் 91.8% இலிருந்து 1985/86 இன் 88.6%க்கு) பெண்கள் (1981 இன் 832% இலிருந்து 1985/86 இன் 80.0%க்கு)ஆகிய இருபாலாரிலும் அவதானிக்கப்பட்டுள்ளது.
தோட்டப்பிரதேசங்களில் படிப்பறிவில் காணப்படும் இடைவெளி மிகவும் குறிப்பிடத் தக்கது. பெரிதாகப்புகழப்பட்ட இலவசக்கல்விமுறை பல்லாண்டுகளாக நடைமுறையில் இருந்தபோதிலும் சனத்தொகையின் அரைப்பகுதிக்குச் சற்றுக் குறைவான தோட்டப் பிரதேச மக்கள் இன்னமும் வாசிக்கவோ,விளங்கிக்கொண்டுஒருசிறுவாக்கியத்தைத்தானும் எழுதவோமுடியாத நிலையில் உள்ளனர். மதிப்பீட்டாய்வுகளின் நோக்கத்திற்காக மேற்சொன்ன இரு நிபந்தனைகளையே படிப்பறிவின்" வரைவிலக்கணம் உள்ளடக்குகிறது.பொதுவாக இலங்கையைப்பொறுத்தமட்டில் சிறுபராயம் தொடக்கம் இருபதுகள் வரை படிப்பறிவு அதிகரித்துப்பின்வயதுமுதிர்ந்துசெல்லப் படிப்பறிவுகுறைகிறது. படிப்பறிவின் பிரிவுகல்வி மூலமாகவே நிகழ்கிறது. எனினும் வளர்ந்தோர் கல்வி மட்டில் போதிய முயற்சிகள் எடுக்காமை முதியவர்கள் மத்தியில் காணப்படும் மிகக்குறைந்த படிப்பறிவினால் வெளிப்படுத்தப்படுகிறது.
கல்வித்தரங்கள் பற்றிக் குறிப்பிடுகையில் 1985/86இல் வெளியான தொழிலாளர் சக்தி மற்றும் சமூக பொருளாதார மதிப்பீட்டாய்வு பின்வருமாறு கூறுகிறது:
“மதிப்பிடப்பட்ட 13.7 மில்லியன் தொகையான 5க்கும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பிள்ளைகளில் 121% அல்லது 16 மில்லியன் பிள்ளைகள் ஒருபோதும் பாடசாலைக்குச் சென்றதில்லை. அவர்களுள் மூன்றிலொருவீதமானோர் (34.8%)ஆரம்பக்கல்வியை மட்டுமே பெற்றுள்ளனர். 5.3 மில்லியன் அல்லது 39.1% ஆனோர் நடுத்தரக் கல்விவரை கற்றிருக்கின்றனர்.1% ஆனோர் க.பொ.த (சா/த) அல்லது அதற்குச் சமனான பரீட்டையில் சித்தியெய்தியுள்ளனர்.க.பொ.த (சா/த)க்கு மேற்பட்ட கல்வித் தராதரத்தைப்பெற்றவர்கள் இவர்களுள் 4மில்லியன் அல்லது 3% இனரேயாவர்."
தோட்டப்பிரதேசமக்களைப்பொறுத்தமட்டில் 43.8% ஆன பெண்கள் பாடசாலைக்குஒருபோதும் சென்றதில்லை. மேலும் அவர்களுள் ஒரு குறிப்பிட்ட சிறு விகிதத்தினரே (9.6%),1980களில் கூட, 5ம் வகுப்பிற்கும் மேல் முன்னேறியிருந்தனர்.
ஆரம்பக் கல்வியையும் நடுத்தரக் கல்வியையும் புகட்டுவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. எனினும், பங்கேற்புவிகிதங்களின் தரவுகள் காட்டுவதன் பிரகாரம், மொத்தமாக ஒப்பிடுகையில் இடைநிலை மற்றும் உயர்தரங்களில் போதிய முன்னேற்றத்தை அது அடையவில்லை.

159
9LRamsar 11
கல்வியின் பல்வேறு தரங்களில் பங்கேற்பு
ஆரம்பக்கல்விக்குச் நடுத்தரக்கல்விக்குச் உயர்கல்விக்குச் நாடுகள் சேர்த்துக் சேர்த்துக் சேர்த்துக்
கொள்ளப்பட்டோரின் கொள்ளப்பட்டோரின் கொள்ளப்பட்டோரின்
தேறிய விகிதம் தேறிய விகிதம் தேறிய விகிதம் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண்
伶86-88 1986-88 1986-88 1986-88 1986-88 1986-88
இலங்கை 105. 102 63 69 4.7 3.2
மலேசியா 102 iO2 59 59 7.6 6.1,
சிங்கப்பூர், 118 - 113 70 73 13.3 103
இந்தியா 113 81 50 27 12.3 5.2.
பாக்கிஸ்தான் 51 25 26 11 6.8 3.1
(ஆதாரம்:மனித முன்னேற்ற அறிக்கை,1990)
அதிகரித்து வருகின்ற, கல்வியைக் கைவிடுவோரின் எண்ணிக்கை இன்னுமொரு பாரிய விடயமாகும். இதன் விளைவாக முதலாம் ஆண்டில் நுழைவோருள் ஒரு சிறிய விகிதத்தினரே இலங்கையின் கல்விமுறைமையின் படி 10வருடங்களுக்கு நீடிக்கும் கல்வியூட்டற் காலத்தை நிறைவுசெய்கின்றனர். இக்கல்விமுறையானதுபாரிய சமத்துவமற்றபண்புகளைக் கொண்டதாய் உள்ளது.இச்சமத்துவமற்ற அமைப்புக்கும் மக்கட்தொகையின் பெரும்பாலானோரின் கல்விசார் தேவைகளை அரசாங்கத்தால் நிறைவேற்றிவைக்க முடியாமற் போனமைக்கு ஒரு நெருங்கிய தொடர்புண்டு. கல்விக்கான அரசாங்க செலவினங்களின் பெரும்பகுதி நடைமுறை அமைப்புக்களைத்தொடர்ந்துஇயங்கவைப்பதற்குஉயயோகிக்கப்பட்டதேயொழியக்கல்வியில் ஏதும் புதிய அபிவிருத்தியை ஏற்படுத்தும் பொருட்டுச் செலவினங்கள் மேற்கொள்ளப்படவில்லை. அதாவது, இதிலிருந்து புலனாகும் உண்மையாதெனில், ஏற்கனவே அபிவிருத்தி செய்யப்பட்ட, பாடசாலைகள் தங்கள் தரத்தை தொடர்ந்தும் பேணவும் பராமரிக்கவும் கல்விக்கான மூலவளங்களின் பெருமளவை விழுங்கி, விடுவதால், அபிவிருத்தி செய்யப்படாத பாடசாலைகளின் மேம்பாட்டிற்கென மிகச்சிறிதளவே ஒதுக்கப்படுகின்றன.
கிடைக்கப் பெற்ற புள்ளி விபரங்கள் இவ் வேற்றத் தாழ்வுகளை மாவட்ட ரீதியில் எடுத்துக் காட்டுகின்றன. எனினும் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்துள்ளேயே இன்னும் கூடிய இடைவெளி இருக்கக்கூடும் கொழும்புமாநாகரிலேயே பின்தங்கிய சேரிப்சேரிப்பாடசாலைகளுக்கும் சகல வசதிகளும் பொருந்திய பாடசாலைகளுக்குமிடையே காணப்படும் இடைவெளி இதற்கொரு உரைகல்லாகும்.

Page 85
160
அண்மைக் காலத்தில் புகுத்தப்பட்ட கல்விக் கொள்கைகளில் சில இவ்வேற்றத் தாழ்வுகளை அதிகரிக்க முனைகின்றன. மிக மோசமான வருமானப் பகிர்தலின் தரங்கள் பாடசாலை முறைமைக்குள்ளும் பிரதிபலிக்கின்றன. பணக்கார வர்க்கத்திற்குச் சேவை செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு"சர்வதேசப்பாடசாலைகள்" என்று அழைக்கப்படும்பாடசாலைகள் அதிக அளவில் புதிதாய் முளைத்துள்ளன. நாட்டில் நிலவும் நடைமுறைகளின்படி பார்த்தாலுங் கூட, பணக்கார வர்க்கத்தினரின் நிதிமூலவள வசதிகளின் காரணமாக அவர்களால் அடையக்கூடிய கல்விநிலை வறியவர்க்கத்தினரால் எட்டப்படக் கூடிய கல்வி நிலையினின்றும் மிகவும் வேறு பட்டே காணப்படுகின்றது.
IV தொழிலாளர்களின் உரிமைகள்
(1) தொழிலாளர் திறன்/வேலை செய்நிலை/
வேலையில்லா நிலை
காலாண்டுத் தொழிலாளர் திறனாய்விலிருந்து எடுக்கப்பெற்ற தொழிலாளர் திறன், வேலை செய்வோர். வேலையற்றோர் என்பனவற்றின் அண்மைக்கால மதிப்பீடுகள் கீழேதரப்படுகின்றன.
அட்டவணை 12
தொழிலாளர் திறன் மதிப்பீடுகள்
1990 1991 காலாண்டுகள் (காலாண்டுகள்) 1ஆவது 2ஆவது 3ஆவது 4ஆவது 1ஆவது ட்டுப் 6Trif ண்ணிக்கை0வருடங்கள்& 13. 11.4 11.6 11.6 117
மொத்ததொழிலாளர் திறன் 7.0 6.0 6.1 5.9 6.0
(மில்லியனில்) பங்கேற்புவீதம் (%) 53.3 52.5 52.3 50.7 51.
வேலைசெய்வோர் | 6.0 5.0 5.2 5.0 5.1 எண்ணிக்கை (மில்லியன்) வேலை செய்வோர் வீதம் (%) 85.6 83.8 84.8 83.7 85.9
வலையற்றோர்எண்ணிக்கை | 10 1.0. 0.9 1.0 0.8
(மில்லியன்) வேலையற்றோர் வீதம் (%) 144 16.2 15.2 16.3 14.1
(ஆதாரம்:காலாண்டு தொழிலாளர் திறன் மதிப்பீடுகள் - குடிசனக் கணக்கு புள்ளி விபரங்கள் திணைக்களம்)
1990 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து பின்னர் வரும் தகவல்கள் வடக்கையும் கிழக்கையும் உள்ளடக்க வில்லை. இப்பகுதிகளுக்குரிய புள்ளி விபரங்களை உள்ளடக்காமல் நாட்டின் தொழிலாளர் திறன் 5.9 மில்லியனுக்கும் 6.0 மில்லியனுக்கும் இடையில் உள்ளது.

161
தொழிலாளர் திறனின் போக்கில் குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில்,பெண்கள் தரப்பின் பங்கேற்பு வீதத்தில் உள்ள அதிகரிப்பாகும்.
1981இன் குடிசனக் கணக்கெடுப்பில் இது 17.6% ஆக இருந்தது.1990 இல் இது 37.6% ஆக உயர்ந்துள்ளதென இலங்கை தொழிலாளர் திறனின் காலாண்டு அறிக்கை தெரிவிக்கின்றது. அதாவது, தொழில் பற்றி எழும் பிரச்சினைகள் பால் பரிமாணத்துடன் அதிக அளவு தொடர்புடையதாய் உள்ளதுஎனக் கருதப்பட இடமளிக்கின்றது.
வேலையற்றோர் பற்றிய நம்பத்தகுந்த கணக்கு விபரங்களைப் பெற்றுக் கொள்வது மிகக் கடினமானதொன்றாக இருக்கிறது. வேலையற்றோர் பற்றிய கணக்கு விபரம் அறிய 1987 இல் மேற் கொள்ளப்பட்ட ஒரு ஆய்வானது தொழிலாளர் தொகையின் 114 மில்லியனுக்கும் 117 மில்லியனுக்குமிடைப்பட்ட ஒரு தொகையினர் வேலையற்றிருப்பதாக முடிவுக்கு வந்தது. இது 1745%க்கும் 179%க்குமிடையிலான ஒரு நூற்றுவீதமாகும்.
1970இல் 25% ஆக உயர்ந்து காணப்பட்ட வேலையற்றோர் தொகை 1980 இல் 10% ஆகக் குறைந்திருந்தது எனப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 1991 இன் முதலாம் காலாண்டுக்கான இலங்கைத்தொழிலாளர் திறன் மீதான மதிப்பீடுகளின்படி தொழிலாளர் திறனின் 14.1%ஆனோர், அதாவது கிட்டத்தட்ட0.8 மில்லியன் ஆட்கள் வேலையில்லாதிருந்தனர்.
இலங்கையில் வேலையில்லாப்பிரச்சினை தெளிவான சில பண்புகளை உறுதியாகக் காட்டுகிறது. புவியியல் ரீதியில் வேலையில்லாத் திண்டாட்டமானது ஈரவலய மாவட்டங்களான கொழும்பு கம்பஹா,களுத்துறை, கண்டி, நுவரேலியா, காலி மாத்தறை, இரத்தினபுரி கேகாலை ஆகியவற்றில் செறிவாய் உள்ளது. அதாவது வேலையற்றிருப்போரில் சுமார் 70% ஆனோர் இம்மாவட்டங்களில் செறிந்து வாழ்கின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் இளைய வயதினர் மத்தியில் பெரிய பிரச்சினையாக உள்ளது. வேலையற்ற ஆண்களின் விகிதத்தை விட வேலையற்ற பெண்களின் விகிதம் மிக அதிகமாய் இருப்பதோடுபடித்தோர் மத்தியில் வேலையில்லாத்திண்டாட்டம் இன்னும் அதிகமாய்க்காணப்படுகிறது.
செறிந்த மக்கட்தொகையைக் கொண்டஈரவலயப்பகுதிகளில் வாழும் ஓரளவுகல்வித்தரமுடைய இளைய சமுதாயத்தினர் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு முக்கிய பிரச்சினையாய் உள்ளது. அவர்கள் எய்தியுள்ள கல்வித்தரத்திற்கேற்பஈரவலயப்பயிர்ச்செய்கையில் அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் மிகவும் குறைவாய் இருப்பதால் நிலையான வருமானம் தரக்கூடிய கட்டமைப்புக்குட்பட்ட வேலைவாய்ப்பை முக்கியமாக நாடிச் செல்ல வேண்டியுள்ளது.
வேலையற்றிருப்போரில் 35% ஆனோர் 20 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட வயதுக் குழுவைச் சார்ந்த இடைநிலைக் கல்வியுடைய அல்லது திறந்த கல்விவாய்ப்பின் மூலமாக கல்வித்தகைமை பெற்ற இளைஞர்கள் என்றும், வேலையற்றிருக்கும் பெண்கள் (20.8%) வேலையற்றிருக்கும் ஆண்களை (10.8%) விட இரு மடங்காய் உள்ளனர் என்றும் 1985/86க்கான தொழிலாளர் திறன்பற்றிய மதிப்பீட்டாய்வு எடுத்துக்காட்டுகின்றது.
வேலையில்லாப் பிரச்சினை பூதாகரமாய் உருவெடுத்த காலப்பகுதியான அறுபதுகளின் நடுப்பகுதியில் இருந்து உயர்கல்விபெற்றும் வேலையற்றிருப்போரின் கணிசமான அளவு அரசியல் மட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு விடயமாய் இருந்தது. 1993 இல் வேலையற்ற பட்டதாரிகள் 7000 பேர்வரையில் இருந்தார்கள்.

Page 86
162
அண்மையில் எடுக்கப்பட்ட சீராக்கல் நடவடிக்கைகள் வேலையில்லாப் பிரச்சினையைப் பொதுவாகவும் வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினையைக் குறிப்பாகவும் கருத்தில் கொண்டுள்ளதாகக் காணப்படுகிறது. அரசாங்கக் கூட்டுத் தாபனங்களைத் தனியார் மயப்படுத்தலும் அரச நிர்வாக இயந்திரத்தின் செலவினங்களைக் குறைத்தலும் அவற்றுள் முக்கியமானவை. இந்த நடவடிக்கைகளின் விளைவாகக் காலப் போக்கில் புதிய வேலை வாய்ப்புக்களைத் தோற்றுவிக்கக்கூடிய அரசதுறையின் ஆற்றல் வெகுவாகக் குறையும். கடந்த காலங்களில் புதிய வேலைவாய்ப்புக்களைத் தோற்றுவிக்கும் முக்கிய மூலகர்த்தாவாக அரச துறை இருந்துள்ளது. எதிர்காலத்தில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்க அரசுக்கு இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஆற்றல் சிங்கள மொழியில் கல்விகற்ற பட்டதாரிகள் மட்டில் மிகப்பெரியதாக்கத்தை உண்டுபண்ணும் ஏனெனில் இவர்களின்பிரதான வேலை கொள்பவராகப் பாரம்பரியமாக அரசு துறையே இருந்து வந்துள்ளது. ஆங்கில மொழியில் புலமை இல்லாத காரணத்தால் தனியார்துறையில் உள்ள உத்தியோகங்களைப்பெறஇப்பட்டதாரிகளால் போட்டியிட முடியாதுள்ளது. இதனால் எதிர்காலத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும் பிரதான காரணியாய் அமையக்கூடிய சமுதாயக் கிளர்ச்சிக்கு வழிகோலக்கூடிய அதியுயர்மனவிரக்திக்கு இதுஇட்டுச் செல்லக் கூடும்.
அரச பாடசாலை முறையில் வழங்கப்படும் கல்விக்கும் முகாமைத்துவ நிர்வாக மட்டங்களில் இப்போது தோன்றியுள்ள தொழிற் சந்தையில் போட்டியிட இளைய தலைமுறையினரை இயலச் செய்யக்கூடிய கல்விக்கும் இடையே பெரும் ஏற்றத்தாழ்வுஇருப்பது போல் தோன்றுகிறது. தாராள கொள்கைகளின் கீழ் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் பரந்துபட்ட ஏனைய மக்கட் தொகையினர்க்கும் கிட்டும் வகையில் இவ்விடைவெளிகளை நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், சமுதாயச் சீர்குலைவுக்கான நிலைமைகள் தோன்றக் கூடும்.
(i) தொழிற்சங்கங்களும் தொழிலாளர் கிளர்ச்சியும்
கைத்தொழில் தொடர்புகளும்
(தொழிற்சங்கங்களின் உரிமைகள், அவசரகாலச் சட்டங்கள் ஆகிய அத்தியாயங்களுக்கு வாசகரின் கவனம் ஈர்க்கப்படுகிறது) இலங்கைத் தொழிலாளர்வர்க்கம் தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும் கூட்டாகப் பேரம் பேசுவதற்குமான உரிமைகளை அனுபவித்து வருகின்றனர் என்ற உண்மை ஒருபுறமிருக்க, தேவையேற்படும் போதெல்லாம் இத்தொழிற்சங்க நடவடிக்கைகளை அடக்கி ஒடுக்கும் வகையில் அரசாங்கம் பாரிய அதிகாரங்களைக் கொண்டுள்ளமை இங்கு கவனிக்கற்பாலது. வேலை நிறுத்தங்களையும் வேலையை ஸ்தம்பிதமடையச் செய்யும் வேறு நடவடிக்கைகளையும் தடைசெய்வதற்கு இரண்டுமுக்கிய சட்டவரைவுகள் அரசாங்கத்திற்கு உதவுகின்றன.பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA), 1989இன் அவசரகால சேவைகள் சட்டம் (ESA) ஆகிய இவ்விரு சட்டங்களுக்குக் கீழும் “அத்தியாவசிய சேவைகளில்” வேலை நிறுத்தம் செய்வது சட்ட விரோதமானது என்று அரசாங்கம்பிரகடனம் செய்யமுடியும்.
சகல அரச சேவைகளும் நாட்டின் கைத்தொழில் மற்றும் விவசாய நடவடிக்கைகளின் முக்காற்பங்குக்கும் அதிகமான சேவைகளும் அத்தியாவசியசேவைகளாகப் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளன.தற்போதுள்ள அவசரகாலநிலைமையின்படி வேலைநிறுத்தம்செய்யும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டிருப்போர் எந்தவித உதவியுமின்றி சட்ட ரீதியாக வேலை நீக்கம் செய்யப்படலாம் (மனித உரிமைகள் மீதான ஐக்கிய அமெரிக்க நாட்டின் அரச திணைக்கள அறிக்கை - 1992). இத் தடைகள் சர்வதேச தொழில் நிறுவனத்தின் 29ம் ஒப்பந்தத்தை மீறுகின்றன.

163
1990இல் உருவாக்கப்பட்ட (வேலை கொள்வோர், வேலை செய்வோர், அரச பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கிய)"தேசிய தொழில் ஆலோசனைக்குழு'எனும் முக்கூட்டு சபையானது நியாயமான தொழில்சார் முறைப்பாடுகளை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் குதிக்கும் தொழிலாளர்கள் தக்க பரிகார மேதுமின்றி வேலை நீக்கம் செய்யப்படலாகாது என்பதற்காக அவசரகால சேவைகள் சட்டத்தில் (ESA) திருத்தங்கள் கொண்டுவரபரிந்துரை செய்தது. நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரவையின் துணைக்குழுவுக்கு இப்பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டது (1992க்கான ஐக்கிய அமெரிக்காவின் அறிக்கை) அவ்வாறு செய்தும்கூட 1993இறுதிவரை இந்நிலைமைகளில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.
இலங்கையில் 1000க்குச் சற்று அதிகமான தொழிற்சங்கங்கள் உள்ளன. அவற்றுள் பெரும்பாலானவற்றில் 100க்கும் குறைவான அங்கத்தவர்களே உளர். மொத்தத் தொழிலாளர் திறனில் நாலிலொரு பங்கினர் தொழிற்சங்கங்களில் அங்கம் வகிக்கின்றனர். தொழிற் சங்க உறுப்பினர்களாய் இருப்போரில் 86% ஆனோர் 10 மிகப்பெரிய தொழிற்சங்க சம்மேளனங்களில் ஏதாவது ஒன்றில் அங்கம் வகிக்கின்றனர் (1992க்கான ஐக்கிய அமெரிக்காவின் அறிக்கை).
கீழ் காணப்படும் அட்டவணை 1987 தொடக்கம் 1991 வரை இலங்கையில் இருந்த தொழிற்சங்கங்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.
geg Leala auf 13
தொழிற்சங்கங்கள்
1987 1988 1989 1990 1991
பதிவு செய்யப்பட்டவை 77 100 82 83 86
ரத்து செய்யப்பட்டவை 120 54 27 55 140 இயங்குபவை 903 949 1004 1032 1083
(ஆதாரம்:தொழிற்திணைக்களம்)
பின்வரும் அட்டவணை 198க்கும் 1991க்குமிடையில் இடம்பெற்ற வேலை நிறுத்தங்களின்
Lalanauw 14
வேலைநிறுத்தங்கள் 1987 1988 1989 1990 1991 எண்ணிக்கை 68 64 52 16 33
ஈடுபட்ட தொழிலாளர் 22,64820,206 42,843 65,937 63,630
இழக்கப்பட்ட
மனித நாட்கள் 44,826 36,501838,888.193,666 48,696
(ஆதாரம்:தொழிற்திணைக்களம்)

Page 87
164
(i) தொழிலாளர் வர்க்கத்தின் விரிவு
தொழிலாளர் வர்க்கத்தை இன்னதுதான் என்று வகைப்படுத்திக் காட்டும் சனத்தொகையின் விகிதாசார விரிவே அண்மைக்கால முன்னேற்றங்களின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். பாதுகாப்பளிக்கக் கூடிய நிறுவனங்கள் இல்லாமையும், கூலி வேலை மீது அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்ற நிலைப்பாடும் குறிப்பிடத்தக்க சமூக ஈடுபாட்டைக் கொண்டுள்ளன. இருமுக்கியபோக்குகள் இதற்குக்காரணமாயுள்ளன:(அ) தொழிலாளர் திறனுள் பெருந்தொகையான பெண்களின் பிரவேசம்(உதாரணமாக, ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட விரிவடைந்து வரும் ஆடைக் கைத்தொழிற்துறையில் ஏறத்தாழ 80% ஆனோர் பெண்கள்). (ஆ) பாரம்பரிய சிறுகைத்தொழிற் பிரிவில் உள்ள விவசாயத் தொழிலாளர் என வகைப்படுத்தப்படக்கூடியவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட உயர்வு என்பவையே அவ்விரு போக்குகள். இத் தொழிலாளர் குழுவுடன் தோட்டத் தொழிலாளர்களையும் சேர்க்குமிடத்து இலங்கையின் சனத்தொகையின் குறிப்பிடத்தக்க அளவை விவசாயத் தொழிலாளர்கள் கொண்டிருப்பர்.இலங்கையில் மனிதஉரிமைகளை முன்னேற்றம் அடையச்செய்யவேண்டுமாயின் கூலித் தொழிலைப்பாதுகாத்தல் ஒரு அவசிய நடவடிக்கையாகும்.
பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சேவைகள் சட்டம் என்பவற்றால் விதிக்கப்பட்டதும் மேலே விவரிக்கப்பட்டதுமான இடர்ப்பாடுகளுக்குமேலதிகமாக, இலங்கையில் தொழிலாளர்கள் அனுபவிக்கும் பாதுகாப்பு, உலக வங்கி போன்ற பல்நோக்குடைய கடன்வழங்கு முகவர் நிறுவனங்களால் விடுக்கப்படும் கோரிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஏனெனில் அவர்களது நோக்கில் இப்போதைய தொழில் சட்டவரைவுகள் தொழிலாளர்க்கு மித மிஞ்சியபாதுகாப்பளிப்பதாக அவர்கள் கருதுவதால்சட்டவரைவுகளில் நெகிழ்ச்சிஉண்டாக்குமாறு அவர்கள் கோருகிறார்கள். இது உள்நாட்டு வெளிநாட்டுத் தனியார் முதலீட்டை அதிகரிக்கும் நோக்கத்தைக் கொண்டகொள்கை ஆலோசனையின் ஒருபகுதியாகும்.இக் கோரிக்கைகளின் முக்கிய இலக்கு 1971 ஆம் ஆண்டின் “தொழிலாளர்களின் வேலைச் சட்ட”த்தை இல்லாதொழிப்பது அல்லது முடிவுக்குக் கொண்டுவருதலாகும். ஏனெனில் “விரும்பியபோது கூலிக்கமர்த்தி விரும்பியபோது சீட்டுக்கிழிக்கும்" கொள்கையைக் கடைப்பிடிக்கும் வேலை கொள்வோரை அவ்வாறு செய்யமுடியாமல் இச்சட்டம் திணறடிக்கிறது.15க்கு மேற்பட்டோரை வேலைக்கமர்த்தும் எந்த ஒரு வேலை கொள்வோருக்கும் இது பொருந்தும். தொழிற்சாலை போன்றவற்றை மூடிவிடல் மூலமாக வேலையை முடிவுக்குக் கொண்டு வருதலை உள்ளடக்குமுகமாக 1976இல் இச்சட்டம் திருத்தப்பட்டது. உலக வங்கியோ இச்சட்டத்தை இல்லாதொழிக்கக் கேட்கிறது. மேலும் இலங்கை கொண்டுள்ள 40க்கும் அதிகமான தொழில் சட்டவரைவுகளைக் காரணப்படுத்தப்படக்கூடியவாறுசீர்திருத்த வேண்டும் என்றகோரிக்கையும் எழுந்துள்ளது.
ஏற்றுமதியை நோக்காகக் கொண்ட துறைகளில் ஒன்றிணைந்த, நன்கு வடிவமைக்கப்பட்ட தொழிலாளர்வர்க்கமொன்றுஉருவாகுவதைத்தடுப்பதில் அரசாங்கம்அக்கறைகொண்டிருந்தது. ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயங்களில் தொழிற்சங்கங்கள் உருவாதல் கிஞ்சித்தும் ஆதரிக்கப்படவில்லை. ஏற்கனவேநிறுவப்பட்டதொழிற்சங்கங்கள் நியாயபூர்வமானதொழிற்சங்க நடவடிக்கைகளை இவ்வலயங்களில் மேற்கொள்வதில் பெரும் சிரமப்படுகின்ற வேளை அவ்வாறான நடவடிக்கைகளில் தனிநபர் தொழிலாளர்கள் ஈடுபடும்போதும் சிரமங்களை எதிர்

165
நோக்க வேண்டியுள்ளது. அத்துடன் பெருந்தோட்டத்துறை சாராதபயிர்ச் செய்கை மற்றும் பலவகையான சிறுதொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஒன்றிணையாதுள்ளனர்.மேலும் தொழிற்சங்கங்கள் உருவாகாத மற்றுமொரு இடம் அரசசார்பற்ற நிறுவனங்கள் தம்விரிவாக்கப் பணியை மேற்கொள்ளும் பிரதேசமாகும்.
வேலைத்தல ஆரோக்கியம் தொடர்பாக நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்கள் மிகவும் பலவீனமுற்றுக் காணப்படுகின்றன. உள்ள சட்டவாக்கம் தேசிய மட்டத்திலான குறைந்தபட்ச வேதனம் என்னவென்பதை வரையறுத்துக் கூறவில்லை எனினும்,
கைத்தொழிற்துறை, வர்த்தகம், சேவைகள், விவசாயம் (பெருந்தோட்டம்) ஆகிய துறைகளில் உள்ள 100 வகையான தொழில்களுக்குரிய குறைந்த பட்ச வேதனம் மற்றும் வேலை நிபந்தனைகள் என்பவற்றை38 சம்பளசபைகள் நிர்ணயித்துள்ளன (ஐக்கிய அமெரிக்க அறிக்கை, 1992).
இத்தொழிலாளர்கள் ஊழியர் சேமலாபநிதிவசதிகளுக்கும் வேலையிலிருந்து இளைப்பாறும்போது கொடுக்கற்பாலதான சமூகப்பாதுகாப்புக் கொடுப்பனவுஒன்றிற்கும் உரித்துடையவர் ஆவர்.
15க்கும் அதிகமானோரை வேலைக்கமர்த்தும் நிறுவனங்களில் தொழில் புரியும் பெரும்பான்மையான முழுநேரத் தொழிலாளர்கள் வாரமொன்றிற்கு 45 மணித்தியாலங்களுக்கு(5%நாள் வேலை-வாரம்)மேல் வேலைசெய்வதைத் தொழில் நுட்பரீதியாகத் தடைசெய்யும் சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றனர். அத்தகைய தொழிலாளர்கள் சட்டப்படி 14 நாட்கள் வருடாந்த விடுமுறையும் 14 தொடக்கம் 21 நாட்கள் வரையான வைத்திய விடுமுறையும் பெறுகின்றனர். பெண் தொழிலாளர்க்கு மகப்பேற்று விடுமுறையும் உண்டு (1992க்கான ஐக்கிய அமெரிக்க அறிக்கை : கடைமற்றும் அலுவலகங்கள் சட்டம்).
பெரும்பாலான மேற்போந்த வசதிகள் நீண்டகாலப் போராட்டம் மற்றும் வேலை நிறுத்த நடவடிக்கைகளின் மூலம் தொழிலாளரால் வெல்லப்பட்டவையாகும். இவற்றின் முறையான செயற்படுத்தலானது இரண்டு விடயங்களில் தங்கியுள்ளன: (அ) போதிய தொகையினரைக் கொண்ட தொழிலாளர் அணி (ஆ) தொழிற் திணைக்கள இயந்திரத்தின் இயங்கு சக்தி என்பவையே அவை தொழிலாளருக்குவழங்கப்பட்டுள்ள பாதுகாப்பைத் தளர்த்திமுதலீடுகளைக் கவருவதையே குறியாகக் கொண்டதாக அரசாங்கத்தின் ஒட்டுமொத்தமான கொள்கைகள் விளங்கும் தற்போதைய சூழ்நிலையில், தொழிலாளர்களின் உரிமைகளைச் செயற்படுத்து வதென்பது தொழிலாளரின் பேரம் பேசும் சக்தியிலேயே பெரிதும் தங்கியுள்ளது.

Page 88
166
அத்தியாயம் 6
பெண்கள் உரிமைகள்
(1) அறிமுகம்
இலங்கையில் பெண்களின் உரிமைகள் சட்டத்தின் மூலம் பலமாகப் பாதுகாக்கப்படுகிறது. பாலியல் சமத்துவம் பற்றிய காரணங்களை முன்னிட்டு வேறுபாடு காட்டப்படுவதினின்றும் விடுதலை பெறுதல் உள்ளிட்ட சகல அடிப்படை மனித உரிமைகளுக்கும் 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு:உத்தரவாதமளிக்கின்றது(பிரிவு27(2)(h).
இலங்கை, பெண்களுக்கெதிரான எல்லாவிதமான வேறுபாடு காட்டலையும் இல்லாதொழிப்பதற்கான உடன்படிக்கைக்கு 1981(CEDAW) குழந்தைகளின் உரிமைகள் பற்றிய உடன்படிக்கைக்கு 1989இலும் ஒப்புதல் அளித்ததன் மூலம் இலங்கையின் சட்டம் மற்றும் அதன் நடைமுறை என்பவற்றை இவ்வுடன்படிக்கைகளில் கூறப்பட்ட சட்டதிட்டங்களுக்கு அமைவானதாக ஆக்கும் கடப்பாடுகளைப் பொறுப்பேற்றது. அரசியல் உரிமைகள், கல்வி பெறும் உரிமை, சுகாதாரம் பேணல், வேலைவாய்ப்பு குடும்பஉறவுகள், வன்செயல்மற்றும் துஷ்பிரயோகம் என்பவற்றுக் கெதிராகப் பாதுகாப்பு ஆகிய வாழ்க்கையின் சகல அம்சங்களையும் இவ்வுடன்படிக்கைகள் உள்ளடக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.1993இல் “பெண்களின் உரிமைகள்” எனும் அங்கீகார அறிக்கையை அரசு பின்பற்றியதெனினும் நடைமுறைப்படுத்தல் விடயத்தில் அவ்வறிக்கை சக்தி இழந்ததாகக் காணப்படுகிறது.
(i) சமூக பொருளாதார உரிமைகள்
(“சமூக பொருளாதார உரிமைகள்' எனும் அத்தியாயத்தின் பால் வாசகரின் கவனம் ஈர்க்கப்படுகிறது) இலங்கையைப்பொறுத்தவரையில், பொதுக்கல்வி,உடல்நலம்பேணல், அரசியல் ஈடுபாடு முதலாம் விடயங்களில் பாலியல் சமத்துவத்தைப் பேணுவதில் சட்டவரை வாக்கங்களை விட, 1931இல் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வதேச வாக்குரிமையும் 1940 களிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த நேர் சமூகவியல் கொள்கைகளும்பாரியதாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளன.
(அ) படிப்பறிவும் கல்வியும்
வேறுபாடு காட்டல் பற்றிய அறிக்கை (CEDAW) யின் 10ஆவது பிரிவின்படி "ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே சமத்துவம் காணப்படல் வேண்டும் என்ற அடிப்படையில் கல்வித்துறையில் ஆண்களைப் போன்று பெண்களும் சம உரிமை பெறுவதை உறுதிப்படுத்தும்வகையில் பெண்களுக்கெதிரான சகல வேறுபாடு காணலையும் களைவதற்குப் பொருத்தமான சகல நடவடிக்கைகளையும் எடுக்கும்படி” அவ்வுடன்படிக்கை அரசாங்கத் தரப்பைத் தேவைப் படுத்துகின்றது.

167
1939 ஆம் ஆண்டின் கல்விக்கட்டளை கட்டாய கல்விக்கான விதிமுறைகளை அழுத்தமாகக் கூறுகையில் அவ்விதிமுறைகள் இப்பொழுதுதான்-1994இல் தான் ஒழுங்குமுறையாக எடுத்துக் கூறப்படுகிறது. எனினும் 1945இல் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச ஆரம்ப, நடுத்தர, உயர்தர (பல்கலைக் கழகம் உட்பட)க் கல்வி, போதனா மொழியாகத் தேசிய மொழிகளை மாற்றயமை, புலமைப்பரிசில்களை ஏற்படுத்தியமை, இலவச பாடப்புத்தகங்கள், இலவச உணவு, அண்மையில் வழங்க ஆரம்பிக்கப்பட்ட இலவச சீருடை, கலப்புக் கலவிமுறையைக் கொண்டுள்ள 96% வீத பாடசாலைகளை உள்ளடக்கிய தீவடங்கலான பாடசாலைக் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்தி ஆகியவை பொதுவான கல்விக்கு ஆண்பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும், ஆண்களையும் பெண்களையும் சமவாய்ப்புவசதிகளோடு இட்டுச் செல்கின்றன.
1963 காலப்பகுதியில் பாடசாலைகளில் ஆண் பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் சம அளவில் இருந்தனர். அட்டவணை1காட்டுவதன்படி 1983 குடிசனக் கணக்கெடுப்பின் போது5முதல் 14 வயது வரையான சிறார்களுள் 83.7% வீதமான ஆண்களும் 83.6% வீதமான பெண்களும்;15 முதல் 19 வயதுவரையானோருள் 412% வீதமான ஆண்களும் 42.7% வீதமான பெண்களும் கல்வி நிறுவனங்களில் இருந்துள்ளார்கள். நகர்ப்புறமாயினும் சரி, கிராமப்புறமாயினுஞ் சரி ஆரம்ப, இடைநிலைப் பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளும் போது பாலின ஏற்றத்தாழ்வுகள் மிகவும் குறைவாகவேகாணப்படுகின்றபோதிலும் முஸ்லிம் சமூகத்தினரிடையே குறிப்பாகக் கிழக்கிலே அவ்வாறில்லை.
sepčLahamour 1
கல்வி கற்றலில் பங்கேற்பு வீதம் - நகர்ப்புற, கிராமப்புறப் பகுதிகள் (95) alugu மொத்தம் நகர்ப்புறம் ayurupi
பொத்தம் ஆண் பெண் | மொத்தம் 1 ஆண் பெண் மொத்தம் ஆண் பெண்
05 - 09 84.4 84.5 84.2 86.6 86.4 86.9 83.8 84.1 83.5
Κ0 - 4 82.4 82.9 8.8 85.2 86.4 84.4 816 82.1 811
05 - 14 83.7 83.7 83.6 85.9 86.4 85.6 82.7 83.1824 15 - 9 41.9 412 42.7 46.7 44.9 48.0 40.6 40.0241.3
20 - 24 8.9 8.7 9.0 - 9.7 9.4 102 8.7 9.1 8.7
05 - 24 55.8 56.0 55.6 56.5 55.3 57.3 55.7 | - 56.з.| 55.1
(ஆதாரம் : 1981 குடிசனக் கணக்கெடுப்பு அறிக்கையைத் தழுவியது)

Page 89
168
1991இல் நிலைமையில் சிறிது மாற்றம் ஏற்பட்டது அப்போது பாடசாலை ஆட்தொகைக் கணக் கெடுப்பின்படி (அட்டவணை 2) 5-14 வயதுக் குழுவில் 88.3% ஆண்பிள்ளைகளும் 87.5 பெண்பிள்ளைகளும்;15-9வயதுக்குழுவில் 375 ஆண்களும் 426 பெண்களும்பாடசாலைகளில் இருந்துள்ளார்கள்.
geLaMamaur 2
பாலின அடிப்படையில் குறித்துரைக்கப்பட்ட வயதில் பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டோர் விதம், 1991 (வடக்கையும் கிழக்கு மாகாணத்தில் ஒரு பகுதியையும் புறந்தள்ளி சனத்தொகையின் வீச்சை அடிப்படையாகக் கொண்டது)
வயதுக்குழு ஆண் பெண் மொத்தம்
5 - 9 ஆண்டுகள் 90 ... 1 87. 3 88 .. 7
10-14 ஆண்டுகள் 86. 6 87.5 87. 1
5 - 14 ஆண்டுகள் 88. 3 87. 4. 87 - 9
15 - 19 ஆண்டுகள் 37.5 42. 6 39 . 9
20-22 ஆண்டுகள் 3. 1 4. 6 3. 8
5 - 22 ஆண்டுகள் 62. 1 53. 4 62.8
(ஆதாரம்:1991இன் பாடசாலை ஆட்தொகைக்கணணக்கு கல்வித்திணைக்களப்புள்ளிவிபரம்பகுதி)
உண்மையில், ஜீ.சீ.ஈ உயர்தரப்புரீட்சைக்கு இட்டுச் செல்லும் அதியுயர் இரு தரங்களில் உள்ள மாவணவர் தொகையின் ஏறத்தாழ 58 வீதத்தினர் பெண்களாவர். இப்போக்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடித்தது. பெருந்தோகையான தரவுகளின்படி பாடசாலையை விட்டு விலகுவோரில் ஆண்கள்தொகை சற்றுக்கூடியதாக இருந்தது.பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 1980கள்வரை கல்விசார்ந்த பிரதான அபிவிருத்திநடவடிக்கைகளிலிருந்து பிரித்தொதுக்கப்பட்ட குழுவினராக இருந்துவந்துள்ளமையால் கல்விக்கான வழிவாய்க்கால்களைப்பொறுத்தமட்டில் அப்பிரிவினரே மிகவும் பாதிப்படைந்தார்கள். தோட்டப் பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்க்கும்போது இருந்துவந்த பாலின ஏற்றத்தாழ்வுகள் மிகவேகமாக வீழ்ச்சிகண்டு வருவதாக அண்மையில் மேற்கொண்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.(ஆரம்பக்கல்வியின் தரமுன்னேற்றம் பதுளை ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டம்”சீடர்,கொழும்பு; எஸ்.ஜெயவீர 1990; “நிழற் தோற்றத்தில் ஒரு பெண் குழந்தையின் கல்வி: இலங்கையில் ஒரு பெண் குழந்தையாய் இருத்தல்"எஸ்.ஜெயவீர, சென்வோர்; 1990,1994).

169
இருப்பினும் சர்வதேசத் தரத்திலான ஆரம்பக்கல்வியை இலங்கை இன்னும் எய்தவேண்டியுள்ளது. பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லாமல் இருக்கும் சம்பவங்கள் நகர்சார்ந்த அண்டைப்புறங்கள் (வீதிச் சிறார்கள் உட்பட), தொலைதூரத்தில் உள்ள கிராமங்கள், தோட்டங்கள் ஆகியவற்றில் வாழும் மிகக் குறைந்த வருமானமுடையோர் மத்தியிலே மிக அதிகமாகக் காண்ப்படுகின்றன. பாடசாலைக்குச் செல்லாத பிள்ளைகள் நலன் கருதி முறைசாராக் கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்ட போதிலும் பாதிப்புக்குள்ளானோரில் 5% க்கும் குறைவான பிள்ளைகளையே இவ்வசதிகள் சென்றடைகின்றன. இத்தகைய நிலையங்களில் இருக்கும்பிள்ளைகளில் 52% ஆனவர்கள் பெண்குழந்தைகள்.
மூன்றாந்தர அல்லது உயர்நிலையை எடுத்துக் கொண்டால் பிரதான நுழைவழியாக இருப்பது பல்கலைக்கழகத்துறையாகும் 8 பல்கலைக்கழகங்கள், ஒரு திறந்த பல்கலைக்கழகம்,புதிதாகத் தொடங்கப் பட்டுள்ள இணைந்த பல்கலைக் கழகக் கல்லூரிகள் என்பவற்றை இது உள்ளடக்குகின்றது. 8 பல்கலைக் கழகங்களிலும் கல்விபயிலும் மாணவிகளின் நூற்றுவீதம் 1970 இலிருந்து 40% தொடக்கம் 44% வரை ஏறி இறங்குகிறது (அட்டவணை 3).
9pLaasut 3
பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்ப்பு
ஆண்டு மொத்தம் ஆண்கள் பெண்கள் பெண்கள் %
1942 904 813 91 10.1%
1950 2,036 1,655 38 18.7% 1960 4, 723 3,587 1,136 24.1%
1970 11.813 6,570 5,423 44.4%
1980 17,494 10,544 6,950 39.7%
1990 * 31,447 17,926 13,521 42.9%
*1987-89 காலப்பகதியில் ஏற்பட்ட கிளர்ச்சி, வன்செயல்கள் காரணமாக பல்கலைக் கழகங்கள் மூடப்பட்டிருந்தமையால் அக்காலப்பகுதிக்குத் தேர்வான மாணவர்கள் அதிகரித்துக் காணப்படும் இந்த ஆட்சேர்ப்புஎண்ணிக்கீையில் அடங்குவர்.
(ஆதாரம்: பல்கலைக்கழக சபையின் அறிக்கைகள்
இலங்கைப்பல்கலைக்கழகம் பல்கலைக்கழகமானிய ஆணைக்குழு)
கலை, சட்டம், முகாமைத்துவம், விவசாயம், மருத்துவம் சார்ந்த கல்வி நெறிகளில் பெண் மாணவர்கள் நன்கு பிரதிநிதித்துவம் செய்யப்பட்டாலும்(42%-52%) பொறியியல் நெறியில் மிகக் குறைவாகவே பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறார்கள்ள (12%)(அட்டவணை4)

Page 90
170
g"LRJanow 4
பல்கலைக்கழக மாணவர்களின் பீடரீதியிலான பகிர்வு
1985/86 1990/91 பீடங்கள்
மொத்தம் பெண்கள் பெ% மொத்தம்பெண்கள் பெ% மருத்துவம் 2,345 1,009 43.02 3,615 1,523 42.1
பல்வைத்தியம் 289 161 55.7 398 192 48.2
கால்நடைவைத்தியம் 170 73 42.9 261 118 45.2
Molksmuth 775 279 36.0 1,502 624 41.5
பொறியியல் 1,762 264 14.9 3,054 365 甘.9
கட்டிடக்கலை 108 49 45.4 28 100 35.6
விஞ்ஞானம் 3,125 1,306 48 5,795 2,410 41.6
முகாமைத்துவ நெறிகள் 3,367 1,426 42.3 5,905 2,626 44.5
சட்டம் 461 219 47.5 967 512 52.9 சமூகவியல்
மானுடவியல் 6.511 3,377 51.9 9,666 5,051 52.3
மொத்தம் 18,913 8,160 43.1 31,447 13,521 42.9 மொத்தம்
விஞ்ஞானம் தழுவிய 5,449 1,835 33.7 9,111 2,922 32.1 நெறிகள்
மொத்தம் விஞ்ஞானநெறிகள் 3,125 1,306 4.1.8 5,795 2,410 46 மொத்தம் கலைசாநத 10,339 5,019 48.5 16,538 8,189 49.5 நெறிகள்
(ஆதாரம்:புள்ளிவிபரக் கைநூல், 1985,1990, பல்கலைக் கழகமானிய ஆணைக்குழுவின் திட்டமிடல்பிரிவு)
வாழ்க்கைத் தொழிற்பயிற்சிநிலையங்களில் மத்திய, உயர்மட்டங்களில் இருக்கும் பெண்களின் நூற்று வீதம் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ள வேளையில் பாலின ஏற்றத்தாழ்வுகள் விரிவடைந்தும் செல்கின்றன. பெண்கள் பின்னல்,கைவேலை, ஆடைதயாரிப்பு சேவைகள் பிரிவு ஆகியவற்றின்பயிற்சித்திட்டங்களிலும் ஆண்கள் தொழில்நுட்பம்சார்ந்தபயிற்சிநெறிகளிலும் செறிந்த அளவில் ஈடுபட்டுள்ளனர்.

171
1950களில் இருந்து கல்வித்துறை வாய்ப்புகள் விரிவடைந்துசெல்வதால் ஏற்பட்ட உடனடித்தாக்கம் என்னவெனில் பொது மக்களிடையே இருந்த படிப்பறிவின் தரம் உயர்ந்து வந்தமையாகும். குறிப்பாக படிப்பறிவு விகிதத்தில் இருந்த பாலின வேறுபாடுகள் 1946 ஆண்டுக் குடிசனக் கண்க்கெடுப்பின் போது 30% ஆக இருந்து 1981 இல் நடந்த கடைசிக் குடிசனக் கணக்கெடுப்பின் போது 8% ஆகக் குறைவடைந்தது. ஆண்களின் படிப்பறிவு வீதம் 1946இல் 76.5% ஆக இருந்து 1981இல் 90.5% ஆகவும் அதே காலப்பகுதியில் பெண்களின் படிப்பறிவு வீதம் முறையே 45.2% இலிருந்து 828% ஆக உயர்ந்தது (அட்டவணை 5).
சனத்தொகையில் 30 வயதுக்குக் குறைந்தவர்களுள் ஆண்,பெண் இருபாலாரினதும்படிப்பறிவு வீதம் ஒரே அளவானதாக இருந்தது. 1981 குடிசனக் கணக்கெடுப்பின்படி இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியிலும் இந்திய வம்சாவழித் தமிழ் பெண்கள் மத்தியிலும் படிப்பறிவு வீதம் குறைவானதாக இருந்தது. 1980 களில் இருபாலாரினதும் படிப்பறிவு வீதம் தேக்கநிலையில் இருந்தமை கவனிக்கற்பாலது. கல்வி நிறுவனங்களில் சேருதல், படிப்பறிவு ஆகியவை தொடர்பாகக் கிடைத்த பரந்துபட்ட தரவுகள் முக்கிய விடயமான பிரதேசவாரியான மற்றும் வகுப்பு வாரியான ஏற்றத்தாழ்வுகளை மறைத்துவிடுகின்றன.

Page 91
172
(torņrts mỡșul listasiņ109&] 'quisoşlanovnogặştırılŷs yough qiữąjun @ęupnog ș1998 #1@ :quusq#f@) SLLYYLYYYYLLLLLTYLL LLLST 0LL LLLL LL LLL LL LLLLLLL LLL LLL KKK LLLS
LLLLLLYL LLLLLS 0LL LLLTL LMT LLT TL LLLLLLL 00LLL LLLLS KK KYS f@nsuș07 wuŋooŋɔɔ pʊʊotoșlasso șújhọuulsae? Qşıso şTī£95ị@ro #
6的寸9:917291:sse)
Govae.0,818,5)1:sfē tooɓooos/9·999ņoĝĝinne)
zur Tulos ojo)no ZrO86"6/|(28Z 336799"89ᎭᏃᏣOssyIsoro 9,880’68 iį,06916ዜኾነ86-880,6ZZolo/1ņos, 9:78$(780'98878ZoZ.ዜኸ0ሥ.iyo91'09q1$$1nne)
:qsih, sullisto # 4980168:68Zoo918 || Z.za . || Iv,Assoloro tፖሪ6o £§66:266726£T068T!5§ 88svo 1ņos, !'68ƐƐ6AT58A106z 99//89:28Zo/qī£$1nne,
|-:ņújhụosí
0′08872811861850/179§§§zgi>Iraero 9,889°06658006998998/08§ 9Z复动 ሯኽy8G98寸%8었z 33 SÐA89/0,698:29ņoĝĝinne,
:qsĜợışı Teş
98/986į芒86亡Z8/18616/'816||4/6į.Ɛ96||ƐƐ61 -9,76|| @yıņģun6)ņņổn60pıņện60pıņĝon60yıņốn | Øyıņģui || 605 som I &)sıņốn Ino e qrs tỷ lệo „ | logo@‘urto * 역법(德宮.|| ur정 * 석면 환함.旨的学图Isosh@Iægði?Isosh@ fosffr fféin meling,(şırı ıssımoğų sus@sts
G issusits-Tso

173
(ஆ) சுகாதாரம்
பெண்களுக்கெதிரான வேறுபாடுகளைக் களைதல் பற்றிய உடன் படிக்கையின் 12 ஆம் பிரிவின்படி குடும்பத்திட்ட சேவைகளுக்கும் உடல் நலம் பேணலுக்குமான வழிவகைகளின் பயன்பாட்டில் வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல கருத்தரிப்பு காலம், மகப்பேற்றுக்காலம், மகப்பேற்றுக்குப் பிந்திய காலம் என்பவற்றின்போது அவற்றுடன் தொடர்புடைய பொருத்தமான சகல சேவைகளையும், தேவைப்படின் இலவச சேவைகளையும், கர்ப்பகாலத்திலும்பாலூட்டல்காலத்திலும்போதிய அளவுஉணவூட்டத்தையும் அவர்கள் பெறுவது உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என்பதையும் தேவைப்படுத்துகின்றது.
இலவச மருத்துவ சேவைகள், (1978 வரை) உணவு மானியங்கள் ஆகியன வழங்கப்பட்டதன் விளைவாக பெண்களின் உடல்நலப்படித்தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது.
1981இல் ஆண்களுக்கு 67.7 வருடங்களாகவும் பெண்களுக்கு 72.1 வருடங்களாகவும் கணிக்கப்பட்டவாழ எதிர்பார்க்கப்படும் காலம்1991இல் ஆண்களுக்கு 70,1வருடங்களாகவும் பெண்களுக்கு 748 வருடங்களாகவும் உயர்வடைந்திருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது(உடல்நல ஆண்டறிக்கை, 1991), இறப்பு விகிதம் குறைந்திருப்பதுடன் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கான தரவுச் சுட்டிகள் சிறப்பாய் இருக்கின்றன.1982-87 வரையான காலப்பகுதியில் 1000 குழந்தைகளில் ஆண் குழந்தைகளுக்கான இறப்பு விகிதம் 312 ஆகவும் பெண் குழந்தைகளுக்க்ான இறப்பு விகிதம் 18.8 ஆகவும் இருந்தன. 5வயதுக்குட்பட்ட 1000 குழந்தைகளில் ஆண்களின் இறப்பு விகிதம் 40.6 ஆகவும் பெண்களின் இறப்பு விகிதம் 27.8 ஆகவும் இருந்தன. (மக்களியல் சுகாதார மதிப்பீட்டாய்வு, 1987). 1980 களிலும் 1990களிலும் தாய்மரணம் 1000க்குக் 0.6 ஆக இருந்துள்ளது. பிரதேச ரீதியாகவும் வகுப்பு ரீதியாகவும் வேறுபாடுகள் நிலவுவதால் கல்வி தொடர்பான புள்ளிவிபரங்களைப் போன்று இங்கு தரப்படும் மாண்தர (Macro Level) விபரங்களும் எச்சரிக்கையோடு விளங்கிக் கொள்ளப்படவேண்டும். உதாரணமாக, அதியுயர்ந்த சேய் மரண வீதங்கள் நகர்ப்புற அயலண்டைகளிலும் உண்டு; அது போல் பெருந்தோட்டத்துறையிலும் உண்டு. 1960களில் இருந்துசனத்தொகையைக் கட்டுப்படுத்தும்முறைகள் பரந்த அளவில் உபயோகிக்கப் பட்டு வந்துள்ளதுடன் கருத்தடை சாதனங்களைக் கைக்கொள்வோர் 60%ஆகவும் இருக்கின்றனர். ஆண் மலடாக்கலைவிடப் பெண் மலடாக்கலே விரும்பப்படுவதால் பெருந்தோகையினரான பெண்கள் குலபதியாட்சிக்குட்பட்ட சமூக அமைப்பில் தங்கள் இனப் பெருக்க உரிமையை உபயோகிக்க முடியாமல் உள்ளனர்.
இனப்பெருக்கல்தொழில்நுட்பமுறைகள்பரவலாக உபயோகிக்கப்படுவதில்லை.ஆனால்டெபோபுறோவெராபோன்ற நாட்பட்ட மருந்துகளைக் குவித்துவைத்தலும் அவற்றை உபயோகித்தலும் போன்ற நடவடிக்கைகளால், பயன்தரக்கூடிய ஒழுங்குபடுத்தப்பட்ட செயன்முறைகள் இல்லாத போது பெண்கள் ஆபத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது கருவழித்தல்மீதுள்ள சட்டபூர்வமான தடைகள் சமத்துவமற்ற பாலினப் பின்புலத்தில் பெண்களின் இடர்நோக்கு நிலையை மேலும் அதிகரிக்கின்றன. மறுபுறம்,பெண்கள் நீண்டகாலத்தைக் கல்வியில் செலவிடுவதாலும், அதிக எண்ணிக்கையில் தொழிற்சந்தையில் புக முயற்சிப்பதாலும் அவர்கள் தம் குடும்பத்தின் அளவு மிகவும் சிறிதாகிறது. கிட்டத்தட்ட இரண்டு தசாப்பதங்களாக பெண்களின் திருமண வயது எறத்தாழ 25 ஆக இருந்து வந்துள்ளது.

Page 92
174
(இ) தொழிலாளர் திறனில் பங்கேற்பு
('பொருளாதார சமூக உரிமைகள்"(தொழிலாளர் உரிமைபற்றிய பகுதி) பற்றிய அத்தியாயத்தின் பாலும், "சங்கம் அமைக்கும் சுதந்திரம்” பற்றிய அத்தியாயத்தின் பாலும் வாசகரின் கவனம் ஈர்க்கப்படுகிறது)
உடன்படிக்கையின் 1ஆவது பிரிவின்படி வேலை பெறுவதில் சம வாய்ப்புக்கான வசதிகள் இருக்கவேண்டும் எனக் கூறும்போது, அது. “வேலை பெறும் விடயங்களில் தெரிவு செய்யப்படுவதற்காக சமமான நியதிகளையே பிரயோகிக்கவேண்டும் என்ற கருத்தையும் (ஈ) சமமான வேதனத்திற்கான உரிமையையும் (உ) வேலை செய்யும் நிலைமைகளில் தமது இனப் பெருக்கல் கடமைகளைப்பாதுகாத்தல் உள்ளிட்ட உடல்நலப்பாதுகாப்புக்கான உரிமையையும்” அவ்வசதிகள் உள்ளடக்குகின்றன.
கைத்தொழிற் சமூகங்களிலிருந்து கைமாறப்பட்ட பயன்நிறை தொழிலின் வகைப்படுத்தப்பட்ட முறைகள், சொந்த வீட்டிலேயே பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களையும் விவசாயத்தின் முறைசாராப் பிரிவுகளில் வேலையிலிடுபடும் பெண்களையும் உள்ளடக்கி யிராததால், உத்தியோக பூர்வமான தொழிலாளா திறன் தரவுகள் பெண்களின் பங்கேற்பைக் குறைத்துமதிப்பிடுகின்றன. எனவே,பொருளாதார நடவடிக்கைகளில் ஆண்களின்விதம் 68.6% என்றும் பெண்களின் வீதம் 32.5% என்றும் குறிப்பிடும் 1985/86 இன் தொழிலாளர் திறன் மதிப்பீட்டாய்வு பொருளாதார நடவடிக்கையில் பெண்களின் உண்மையான பங்கேற்பைப் பிரதிபலிக்கவில்லை. உண்மையில் கூறப்போனால் 1960களிலிருந்துபெண்களின் தொழிலாளர் திறன் ஆண்களின் தொழிலாளர் திறனை விட அதிதுரிதமாக அதிகரித்துள்ளது எனலாம்.
அட்டவணை 6.
வேலையில்லாமையின் விகிதங்கள்.
ஆண்டு மொத்தம் ஆண் பெண் 1963' 7.3 8.9 7. S 1969/702 13.9 11. 4 21.2 1971 18.7 14.3 31.1 1973 24.0 18.9 36.3 1973 17.4 13.7 26.8 1975 19.9 14.3 32.9 1978/79 14.7 9, 2 24.9 1980/81 15.8 12.4 23 Ն 1981 - 17.8 13.2 31.8 1981/82 11.7 7.8 21.3 1985/86" 14.1 10.8 20.8 1990? 14. O 9. 1 23.4

175
(ஆதாரங்கள்: 1. இலங்கைக் குடிசனத்தொகை மதிப்பீடு 1963 2. இலங்கையின் சமூக பொருளாதார மதிப்பீட்டாய்வு, குடிக்கணக்கெடுப்பு புள்ளிவிபரத்
திணைக்களம் 1969/70 3. இலங்கைக் குடிசனத்தொகை மதிப்பீடு 4. நுகர்வோர் நிதியும், சமூகப் பொருளாதார மதிப்பீட்டாய்வும்,கொழும்பு, மத்தியவங்கி 1973 5. இலங்கையில் தொழிலாளர் திறனில் பங்கேற்புவிகிதத்தை நிர்ணயிக்கும் காரணிகள்,1973,
இலங்கை மத்திய வங்கி, கொழும்பு, 1975 6. காணி மற்றும் காணிப் பயன்பாடுபற்றிய மதிப்பீட்டாய்வு 1975, இலங்கை மத்திய வங்கி,
கொழும்பு 7. நுகர்வோர் நிதியும் சமூக பொருளாதார மதிப்பீட்டாய்வும் 1978/79, இல. மத்திய வங்கி 8. தொழிலாளர் நிதியும் சமூகப்பொருளாதார மதிப்பீட்டாய்வும், குடிக்கணக்கு புள்ளிவிபரத்
திணைக்களம் 1982 9. இலங்கைக் குடிசனத்தொகை மதிப்பீடு 1981 10. நுகர்வோர் நிதியும் சமூக பொருளாதார மதிப்பீட்டாய்வும் 1981/82:இலங்கை மத்தியவங்கி 11. தொழிலாளர் திறனும் சமூக பொருளாதார மதிப்பீட்டாய்வும் 1985/86, இலங்கை குடிசனக்
கணக்கு புள்ளிவிபரத்திணைக்களம் 12. தொழிலாளர்திறன் மதிப்பீட்டாய்வு, 1990 முதற்காலாண்டு, குடிக்கணக்கு புள்ளிவிபரவியற்
திணைக்களம்) வேறுபாடுகளிலிருந்து விடுதலைபெறுதல் என்பது அரசியல்யாப்புமூலம் உத்தரவாதமளிக்கப்பட்டி ருந்தாலும் வேலை பெறுவதற்கான வாய்ப்பு:ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் சமமற்றதாகவே காணப்படுகிறது. 1960களில்நாட்டில் வேலையில்லாப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த காலத்தில் இருந்து வேலையற்றிருக்கும் பெண்களின் விகிதம் வேலையற்றிருக்கும் ஆண்களைவிடக் குறைந்த பட்சம் இரட்டிப்பானதாகவே இருந்து வருகிறது. 1969இல் வேலையற்றிருந்த ஆண்களினதும் பெண்களினதும் விகிதங்கள் முறையே 14%,212% ஆகவும் 1981/82இல் அவ்விகிதங்கள் முறையே 78%, 213% ஆகவும் 1990 இல் அவ்விகிதங்கள் முறையே 9.1%, 23.5% ஆகவும் இருந்துள்ளன (அட்டவணை 6). 1990 இல் நகர்ப்புறத்து ஆண் பெண் வேலையற்றோர் விகிதங்கள் (பெருந்தோட்டத் துறை உள்ளடங்கலாக) முறையே 8.6% ஆகவும் 218% ஆகவும் இருந்தன (தொழிலாளர் திறன் மதிப்பீட்டாய்வு1990,முதலாம் காலாண்டு). நடுத்தரப்படிப்பைமுடித்து(O/L) பாடசாலையைவிட்டு வெளியேறிய ஆண், பெண் இருபாலாருழ் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்குள்ளேயும் வேலையின்மையால் ஆண்களை விடப்பெண்களே கூடிய இடர்நோக்கு நிலையில் இருந்தனர்.
அலுவலகத் தொழிலாளர் திறனைப் பொறுத்தவரையில் 1980 களில் பெண்களினது (ஆண்களினதும் தான்)வேலையின்மை நிலை மோசமடைந்திருந்தது.1981இல் பெண்களின் தொழிலாளர் திறனில் 79.4% ஆனோர் ஒழுங்காகச் சம்பளம் கொடுக்கப்பட்ட வேலைகளில் அமர்ந்திருந்தனர். ஆனால் 1990இல் இத்தகையோரின் வீதம் 55.6% ஆகக்குறைந்தது. மேலும் 1981இல் வேதனமில்லாக் குடும்பத் தொழிலில் ஈடுபட்டிருந்த ஆண்களின் வீதம் 28% ஆக இருந்தபோது அவ்வாறான பெண்களின் வீதம் 65% ஆகவும் அதே வீதங்கள் 1990இல்முறையே 75% ஆகவும் 25.1% ஆகவும் இருந்தன (அட்டவணை7). இவ்வகையிலும் ஆண்களை விடப் பெண்களே கூடுதலாகத் தீங்கிழைக்கப்பட்டுள்ளனர்.

Page 93
176
சிறு தொகையினரான பெண்கள் விசேடத்துவம் வாய்ந்த பதவிகளை வகிப்பவர்களாகவும் இன்னும் சிலர் தொழிலதிபர்களாகவும் விளங்குவது தெளிவாகத் தெரிகின்ற போதிலும், பெரும்பான்மையான பெண்கள் விவசாயம், கைத்தொழில், சேவைகள் போன்ற துறைகளில் குறைந்த தராதரங் கொண்ட, குறைந்த திறமை கொண்ட தொழில்களிலேயே தொடர்ந்தும் செறிந்திருக்கக் காணப்படுகின்றனர்.
அட்டவணை 7
வேலை நிலை
1981 1985/86 1990 1992
வேலைநிலை
வேலைகொள்வோர் 2.4 1.2 3.0 0.9 4.4 1.2 1.6 0.8
ஊதியத்திர்
வேலை செய்வோர் 62.3 79.4 58.2 58.4 59.5 55.6 58.7 61.2
சுயதொழில் செய்வோர் 32.5 12.6 29.6 177 28.4 18.1 31.6 14.2
சம்பளமற்ற குடும்பத்
தொழிலாளர்கள் | 28 | 6.5 | 9.2 | 230 7.7 25.1 8.2 23.8
மொத்தம் 100.0 100.0 00.0 100.0 100.0 100.0 100.0 100.0
1. வடக்குமாகாணம் நீங்கலான தரவுகள் 2. வழமையான ஊழியர்-ஆண்:265; பெண்:29.6
அமைய ஊழியர் - ஆண்:347; பெண் :289
(ஆதாரம் :
இலங்கைக் குடிசனக் கணக்கெடுப்பு 1981
தொழிலாளர் திறன், சமூக பொருளாதார மதிப்பீட்டாய்வு1985/86,1990 தொழிலாளர் திறன்மதிப்பீட்டாய்வு19924ஆம் காலாண்டு, (வடக்கு கிழக்கு மாகாணங்கள் நீங்கலாக) குடிசனத் தொகை புள்ளிவிபரவியல் திணைக்களம்.
(ஈ) பெண்களின் தொழில் உரிமை மீறல்
தொழிற் சட்டங்களைச் செயற்படுத்துகை மிகவும் நலிவுற்றிருப்பதால் பொருளாதாரத்தின் சகல துறைகளிலும் பெண்களின் பொருளாதார உரிமைகள் மீறப்படக்கூடியபோக்கே தென்படுகிறது. ஒழுங்காக நிறுவப்படாத அல்லது முறை சாராத துறைகளில் தொழில்புரியும் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் தொழில் சட்ட வரைவின் அதிகார எல்லைக்கு அப்பாலேயே இருக்கக் காணப்படுகின்றனர்.

177
பெண்களுக்கெதிரான வேறுபாடுகளைக் களைவதற்கான உடன்படிக்கையின் 14 ஆம் பிரிவு கிராமப்புறங்களில் வாழும் பெண்கள் மட்டில் முக்கிய கவனஞ் செலுத்துவதுடன் பொருளாதாரத்திற்கும் சமுதாயத்திற்கும் இப்பெண்களால் ஆற்றப்பட்ட பங்களிப்புக்கு உரிய மதிப்பளித்து அவர்களால் எதிர் கொள்ளப்படும் தனித்துவமான பிரச்சினைகளுக்குத் தக்க பரிகாரம் காணுமாறு அரசாங்கத்தை தேவைப்படுத்துகின்றது. அப்படியிருந்தும் இலங்கையில், தோட்ட மற்றும் விவசாயத்துறையில் உள்ள பெண்களுக்கெதிராக சம சம்பளம்,காணியுரிமை கொள்ளல் போன்றவற்றில் வேறுபாடுகள் காட்டப்பட்டு அநீதியிழைக்கப்படுகிறது. 1935 ஆம் ஆண்டின் காணி அபிவிருத்திச்சட்டம் விவசாயக் குடியேற்றங்களில் வாழ்ந்த பெண்களின் காணியுரிமைகளைப் பறித்தது. காணிமூலவளங்களில் கட்டுப்பாடற்ற தன்மையானது கடன் பெறுதல், பயிற்சி, தொழில்நுட்பம் போன்றபொருளாதார வளர்ச்சிக்குரிய சாதனங்களுக்கான வழி வாய்க்கால்களைப் பெண்களுக்கு மறுக்கக் கூடிய தன்மைகளையே கொண்டுள்ளது. பெருந்தோட்டத்துறையில் உள்ள பெண்கள் 1984 இல் சம்பள விடயத்தில் சமத்துவம் பெற்ற போதிலும் அச்சம்பளத்திற்காக ஆண்களை விட அதிக மணித்தியாலங்கள் வேலை புரிய நேரிட்டது.
கைத்தொழிற்துறையானது பெண்களின் மலிவான ஊழியத்திலேயே பெரிதும் தங்கியிருந்தது. ஏற்றுமதி அபிவிருத்தி வலயங்களில் சர்வதேச தொழிற் பிரிவானது பெண்களை இடைநிலைத்திறன்ம கொண்டதீவிர வேலைப்பிரிவுகளுக்கு மட்டும் கட்டுப்படுத்திப்பதவிவழி உயர்ந்து செல்வதற்கான சந்தர்பங்களைக் கூட வழங்காது, சார்பு நோக்கின், குறைந்த சம்பளங்களிலேயே வைத்திருந்தது."கைத்தொழிற்துறையில்சமாதானம்" பேணுவதற்காக (வேலை நிபந்தனைகள், இரவு வேலை அனுமதிக்கப்படுமிடத்துப்பெண்களின் பாதுகாப்பு:உத்தரவாதம் போன்ற விடயங்களோடு தொடர்புடைய) தொழிற்சட்டங்கள் தொழில் வலயங்களில் மென்மையாகவே கடைப்பிடிக்கப்படுவதுடன் தொழிற் சங்கங்கள் அமைப்பதும் தடைசெய்யப்படுவதால் மலிவு ஊழியத்தை நாடும் தொழிலதிபர்களின் செலவினக் குறைப்பு நடவடிக்கைகளால் பெண்கள் இடர்நோக்குநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
கைத்தொழிற்துறையில் கீழ் ஒப்பந்தம் செய்தல் 1980களிலும் 1990களிலும் அதிகரித்துக் காணப்படுகிறது. வீட்டுக்கைத்தொழிற்துறைகளில் பெண்களுக்கு மிகவும் குறைந்த பாதுகாப்பே வழங்கப்படுகிறது. சம்பளத்தைக் குறைத்து அதன்மூலம் அநீதியான முறையில் நன்மைகளைப் பகிர்வுசெய்யும் கீழ் ஒப்பந்த முறையில் பெண்கள் அடிமட்டத்திலேயே உள்ளனர்.
சேவைகள் வழங்கு துறையில் பெரும்பான்மையான பெண்கள் மிகவும் குறைந்த சம்பளத்திலேயே இருக்கின்றனர். வீட்டுப் பணிபுரியும் பெண்கள் பாரம்பரியமாகப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். அவர்களது ஓரங்கட்டப்பட்ட நிலையாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் சேவை ஒப்பந்தச் சட்டம்பற்றிய அவர்களது அறியாமையாலும் (ஒரு மாதமுன்னறிவித்தல், ஒரு மாதச் சம்பளம், தொழில் நீதி மன்றத்திற்குச் செல்லும் உரிமை முதலியவற்றை இச்சட்டம் வலியுறுத்துகின்றது) அவர்களுக்குரிய பாதுகாப்-பபுமறுக்கப்படுகிறது.(எஸ். குணசேகர,1993 இலங்கையின் பெண்கள் நிலைமையில் பெண்களும் சட்டமும், சுகாதார மகளிர் விவகார அமைச்சு)

Page 94
178
மலிவு வீட்டு வேலைக்கு வளமிக்க வெளிநாடுகளில் காணப்படும் தேவைக்குப்பதிலளிக்கும் விதத்தில் பணிப்பெண்களாக வெளிநாட்டு வேலையை நாடும் பெண்கள் வேலை முகவர்களின் மனச்சாட்சியற்ற ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. சட்டபூர்வமான தொழில்தருஒப்பந்தங்கள் மற்றும் இலங்கைக்கும் இலங்கையில் இருந்து வேலைத் திறனைப் பெற்றுக் கொள்ளும் நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு இணக்கப்பாடுகள் போன்றவை இல்லாமையால் அந்நிலைமையானது பெண்களிடமிருந்து அளவிக்கு மீறி வேலை வாங்கும்நிலைமைக்குபாலியல் துஷ்பிரயோகத்திற்கும் வழியமைத்தது.தலையாயவருவாய் தேடும் சக்திமிக்க நபர்களாகப் பெண்கள் விளங்கும் போதும், குடும்பத்தின் ஆண் பெண் உறுப்பினர்களின் செயற்பாடுகள் மறுதலையிாக விளங்கும்போதும் எழுகின்ற சுயநலப்போக்குக் கொண்ட பாலின உறவுமுறைகள் குடும்பத்தைச் சீரழிப்பதுடன் அதுகாறும் அவர்கள் சேமித்த பணத்தைக் கரைத்துக் குடும்பத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லக் கூடிய வாய்ப்புக்களை மட்டுப்படுத்துகின்றன.
வேலை பெறுபவரின் குறைந்தபட்ச வயது பற்றிப் பெரும்பான்மையான கட்டளைச் சட்டங்கள் தெளிவாகக் கூறவில்லை. அத்துடன் 12 வயதுக்குக் குறைவானவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடைசெய்யும் சட்டம் வீட்டுப்பணி செய்வோரையும், தோட்டத்துறை அல்லது விவசாயத்துறையில் இருப்போரையும் நகர்ப்புற முறை சாராப் பிரிவுகளில் இருப்போரையும் கட்டுப்படுத்தவில்லை. குழந்தைகளை வேலைக்கமர்த்தல் பரவலாகக் காணப்படுவதுடன் வீட்டுப்பணியில் குழந்தைகள் மீதான துஷ்பிரயோகத்திற்குப்பெண் குழந்தைகளே பெரும்பாலும் பலியாகின்றார்கள். எனினும் இதுதொடர்பாக இதுவரையில் ஒரேயொருவழக்குமட்டுமே தொழிற் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (குணசேகர, சாவித்திரி, "இலங்கையின் பெண்கள் நிலைமையில் பெண்களும் சட்டமும்” சுகாதார மகளிர்விவகார அமைச்சு, 1993), (குழந்தைகளின் உரிமை பற்றிய அத்தியாயத்தையும் பார்க்க). தற்சமயம் குழந்தைகளை வேலைக்கமர்த்தலுக்கெதிராகப் பிரசாரம் செய்யப்படுவதுடன் நன்னடத்தை மற்றும் குழந்தைகள் நலம் பேணு திணைக்களம் புதிய சட்ட ஒழுக்குமுறைகளைத் தயாரிப்பதில் தற்போது ஈடுபட்டுள்ளது.
முடிவாக, தொழிற் சட்டங்களைக் கடுமையாக அமுல் நடத்த முடியாத அல்லது பிரயோகிக்க முடியாத தொழில் துறைகளிலேயே பெண்கள் செறிந்த அளவில் வேலை செய்வதால், மனித உரிமைகளுக்கும் பாலின சமத்துவத்திற்கும் அரசியல் யாப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தபோதிலும், பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் பாதுகாப்புமறுக்கப்பட்ட நிலையிலேயே உள்ளனர். இதுபற்றிய கண்காணிப்பு முறைகள் பலவீனம் அடைந்துள்ளன. தங்களது உரிமைகளைப்பற்றிய அறிவும் பெண்களிடம் இல்லை; பரிகாரம் காண்பதற்கும் சமத்துவம் தேடுவதற்குமான சட்டரீதியான ஆலோசனைகளையும் உதவியையும்பெறுவதற்குரிய வழிவாய்க்கால்களும் அவர்களுக்கு மிகவும் குறைவு.

179
(உ) பெண்களின் தொழில் உரிமைகளைப்
பாதுகாப்பதற்கான சர்வதேச நியதிகள்
பொது, தனியார் மற்றும் முறை சாராத் துறைகள் அனைத்திலும் வேலைக்கமர்த்தப்பட்டுள்ள பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற “பெண்களுக் கெதிரான சகலவிதமான வேறுபாடுகளையும் களைதல்” (CEDAW) பற்றிய ஐ.நா. உடன் படிக்கைக்கு இலங்கை ஒப்புதல் அளித்து உறுதிப்படுத்தியுள்ளது.1993இல் தொகுக்கப்பெற்ற'பெண்களின் உரிமைச் சாசனம் வேலை பெறுதல் தொடர்பாக மேற்சொன்ன ஐ.நா. உடன்படிக்கையில் தரப்பட்ட ஏற்பாடுகளை உள்ளடக்குவதுடன், இச்சாசனத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஆணைக்குழு, உரிமை மீறல்கள் மற்றும் வேறுபாடு காட்டல் பற்றிய முறைப்பாடுகளைப் பெற்று அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதை தனது செயற்பாடுகளில் ஒன்றாகவும் கொண்டுள்ளது. எனினும் இச்சாசனம் சட்ட வலுவற்றது.
சர்வதேச தொழிற் சம்மேளத்தின் உடன்பாடுகளை ஏற்றுக் கொண்டு உறுதிப் படுத்துவதில் கணிசமான தாமதம் ஏற்பட்டிருக்கிறது. கதிர்வீச்சுப்பாதுகாப்புஉடன்படிக்கை (இல.15)1986 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெண் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பான மேலும் மூன்று உடன்படிக்கைகள் 1993 சித்திரையில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவை ; சம பெறுமதியான வேலைகளைச் செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வேதனம் செலுத்தப்படுதற்கான உடன்படிக்கை (இல.100),மகப்பேற்றுப் பாதுகாப்புக்கான உடன்படிக்கை (12 வார விடுமுறை, மகப்பேற்று சலுகைகள், கடமையின் போது குழந்தை பேணுதற்கான இடைவேளைகள் என்பவற்றை இவ்வுடன்படிக்கை தேவைப்படுத்துகின்றன) (இல.103), தொழில்புள்ளிவிபரங்கள் பற்றிய உடன்படிக்கை (இல. 160) என்பனவாகும். வேலை பெறுவதிலும் பதவி வகிப்பதிலும் காணப்படும் வேறுபாடுகள் பற்றியt1ஆம் இலக்க உடன்படிக்கையானது இன்னமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
பெண்கள் இரவில் வேலை செய்வதைத் தடைசெய்யும் ஐ.எல்.ஓ உடன்படிக்கைகளை முன்னர் ஏற்றுக் கொண்டிருந்த இலங்கை பின்னர் ஏற்றுமதி அபிவிருத்தி வலயத்தில் உள்ள தொழிலதிபர்களின் நெருக்குதலின் விளைவாக 1984இல் அதிணின்றும் விலகிக் கொண்டது (வாபஸ் பெற்றது (இல. 4,41,89 ஆகியன).
(ஊ) பெண்களின் தொழிலுரிமைகள் தொடர்பான
இலங்கையின் சட்டவாக்கம்
மேற் சொன்னவாறு விலகிக் கொண்ட போதிலும், சர்வதேச தராதரங்களுக்கமைவான சட்டவாக்கங்களில் இலங்கை நீண்டகால வரலாற்றைக் கொண்டுள்ளது.மகப்பேற்றுசலுகைகள் கட்டளை,தொழிற்சாலைகள் கட்டளை, கடை மற்றும் அலுவலக ஊழியர் சட்டம், பெண்கள், சிறு பராயத்தினர். குழந்தைகளை வேலைக்கமர்த்தல் தொடர்பான சட்டம்; ஊழியர் சேமலாப நிதிச்சட்டம், கணிப்பொருள், கணிப்பொருட் சுரங்கச் சட்டம்; சம்பளச் சபைக் கட்டளைகள்; தொழிலாளியின் நட்டஈட்டுக் கட்டளைச் சட்டம் என்பனவே அவை,

Page 95
180
இச்சட்டங்கள் நியாயபூர்வமானமணித்தியால அளவு வேலையையும், வேலை நிபந்தனைகளையும், நன்மைகளையும், கடமைநேரப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முனைகின்றன. தொழில் சம்பந்தமான விடயங்கள் “லேபர் ட்டிறபுனல்’ எனப்படும் விசேட நீதிமன்றங்களின் நியாயாதிக்கத்தின் கீழ்வருகின்றன. தொழில் சம்பந்தமான விடயங்களில் உரிமைமீறல்கள் இடம்பெறும்போது ஏற்ற பரிகாரம் காண இத்தொழில் நீதிமன்றங்களைப் பயன்படுத்த முடியும். தமது உரிமைகள் எவை என்பதையும், தொழில் நீதிமன்றங்களின் செயற்பாடுகளைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கும், சட்ட ஆலோசனைகளைப் பெற்று வழக்குத் தொடர்வதற்குமான வழிவகைகள் எவை என்பதையும் பெண்கள் அறிந்திருப்பதிலேயே இந்நீதிமன்றங்களின் பயன்பாடு அமைந்துள்ளது.
அண்மைக்காலங்களில் பெண் தொழிலாளாகளின் உரிமைகள் தொடர்பாக கண்கூடான சில அபிவிருத்திகள் ஏற்பட்டுள்ளன. 1984 இல் பெருந்தோட்டத்துறையில் சமமான வேலைக்குச் சமமான சம்பளம் என்ற நியதி அரச கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு சம்பள நிர்ணயசபையின் கட்டளைச் சட்டத்தினூடாக அமுலாக்கப்பட்டது. சம்பள நிர்ணய சபையின் கட்டளைச் சட்டத்தின் அதிகார எல்லைக்குட்பட்ட 18 கைத் தொழிற்துறைகளில் 16 துறைகளில் சம்பளத்தில் பாலின சமத்துவம் அமுலாக்கப்பட்டதுடன் மீதமுள்ள துறைகளிலும் அந்நியதியை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முதலிரண்டு பிரசவங்களுக்கு 6 வாரங்களாக இருந்த மகப்பேற்று விடுமுறை 12 வாரங்கள் அல்லது 3 மாதங்களாக 1987இல் தனியார்துறையிலும் 1988 இல் அரசாங்க சேவையிலும் நீடிக்கப்பட்டது. பாலூட்டிப் பேணும் இடைவேளைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் தொழிலாளர்களின் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நலம் பேணும் சேவைகளை உறுதிப்படுத்ததுமுகமாகத் தொழிலாளருக்கு அறிமுகப்படுத்தக்கூடிய சட்டத்திட்டங்கள் இன்னும் அமுலாக்கப்பட வேண்டியுள்ளன.
அண்மைக்காலத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி தனியார்துறையில் உள்ள ஒரு பெண்தொழிலாளிமுதல் இரண்டு பிரசவங்களுக்கு சம்பளத்தோடு கூடிய 3 மாத மகப்பேற்று விடுமுறைக்கும், ஏனைய பிரசவங்களுக்கோ அல்லது பிறக்கும் குழந்தை இறந்தாலோ சம்பளத்தோடு கூடிய 6 வாரகால மகப்பேற்றுவிடுமுறைக்கும் உரித்துடையவராகிறார். தனியார் துறையில் உள்ள கைவேலையாட்கள் தமது மகப்பேற்றுவிடுமுறைக்கும் உரித்துடையவராகிறார். தனியார் துறையில் உள்ள கைவேலையாட்கள் தமது மகப்பேற்றுவிடுமுறைக் காலத்தின்போது மகப்பேற்றுப்படியொன்றையும்பெறுகிறார்கள். அரச துறைகளில் உள்ள பெண் தொழிலாளர்களும் இப்போது அதுபோன்ற நன்மைகளை அனுபவிக்கின்றார்கள். மேலும் அரச துறையானது மகப்பேற்றின் கடைசிமாதங்களில் உள்ள பெண்களைப்பின்னர் கடமைக்குச் சமூகமளிக்குமாறு கூறி நேரகாலத்தோடு கடமைதயினின்றும் விடுவிக்கின்றது. இந்த ஏற்பாடானது பெண்களின் வேலையில் எதிர்மாறான தாக்கத்தை ஏற்படுத்தியதற்கான அறிகுறி காணப்படவில்லை.
ஊழியர் சேமலாப நிதி மூலப் வழங்கப்பட்ட வசதிகள் பெண் தொழிலாளர்களுக்கும் நீடிக்கப்பட்டது. காயமுற்ற பெண்கள் நேரடியான அதிக நியாயபூர்வமான இழப்பீட்டுத்தொகையைப் பெற்றுக் கொள்வதை இலகுவாக்கும் பொருட்டு 1980 இல் 'பெண்கள் இழப்பீட்டுக் கட்டளைச் சட்டம் திருத்தப்பட்டது.

181
பெண்களுக்கு சமமான பாதுகாப்பு வழங்கப்படுமென்று இலங்கையியன் அரசியல் யாப்பு உத்தரவாதமளித்த போதிலும், அதுமட்டுமல்ல, பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தெள்ளிய திட்டமிட்ட பிரசார நடவடிக்கைகள் கடந்த இரண்டு தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த போதிலும், பாலின ரீதியில் வேறுபாடுகள் காட்டப்பட்டதாகக் குற்றஞ் சாட்டி, சம பாதுகாப்புக் கோரிக்கைகளின் கீழ் இதுவரை எந்த ஒரு வழக்கும் நீதிமன்றங்களின் முன் வரவில்லை. எனினும் தமது தொழில் உரிமைகளைப்பாதுகாப்பதற்காக அடிப்படை உரிமைகள் ஏற்பாட்டை அரசியல் யாப்பில் புகுத்துமாறு பெண்கள் கோரிக்கை விடுத்த சம்பவங்கள் உள. பெண்கள் தம் நிலையை முன்னேற்றுமுகமாகப் பெண்களுக்கான சிலமுன்னுரிமை ஏற்பாடுகளை அரசியல் யாப்பு உள்ளடக்கியபோதிலும் பாலின வேறுபாட்டைக் கொண்ட சமுதாயப்போக்கின் மீது அதனால் போதியளவு செல்வாக்குப் பிரயோகிக்கவோ, அன்றேல் சமுதாயத்தின் சகல மட்டங்களிலும் பெண்களுக்கு எதிராக அதிகரித்த அளவில் இடம்பெறும் உரிமைமீறல்களைத் தடுத்துநிறுத்தவோ அதனால் முடியவில்லை.
(i) அரசியல் உரிமைகள் : அரசியலில் பெண்களின் பங்கேற்பு
பெண்களுக்கெதிரான வேறுபாடுகளைக் களைவதற்கான உடன்படிக்கை (CEDAW)யின் 7ஆம் 8ஆம் பிரிவுகளின் படி அரசாங்கங்களைத் தெரிவு செய்தல், அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை உருவாக்கல், அரசாங்கப்பதவிகளை வகித்தல் என்பன போன்ற நடவடிக்கைகளில் பங்குபற்றுவதற்கான பெண்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமும், முன்னேற்றமும், பாதுகாப்பும் தேவைப்படுத்தப்படுகின்றன.
1931இல் சர்வதேச வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஆண்களும் பெண்களும் பொதுத்தேர்தல்களில் வாக்காளர்களாக ஆர்வமுடன் பங்கு பற்றியுள்ளனர். பொதுமக்கள் மத்தியில் அரசியல் சிந்தனைகள் எப்போதும் உயர்வாகவே இருந்து வந்துள்ளன. நாடு அமையின்மையும்வேன்முறையும் கலந்த ஒரு சூழ்நிலையில் இருக்கையில் 1988இல் 55.8% ஆகக் குறைந்திருந்த அந்த ஒரு சந்தர்ப்பத்தை தவிர, வாக்களித்த (18 வயதுக்கும் அதற்கு மேற்பட்ட) வாக்காளரின் நூற்று வீதம் எப்போதும் 80%க்கும் அதிகமாகவே இருந்தது. பாலின ரீதியில் வாக்களித்தோரின்தரவுகள் வேறுவேறாகக் கிடைக்காவிடினும் பெண்களும் ஆண்களைப் போன்றுமும்முரமாக வாக்களிக்கக் காணப்பட்டனர்.
அரசியல் அமைப்புகளில் பெண்கள் பங்குபற்றுவதற்கெதிரான சட்டபூர்வமான தடைகள் ஏதும் இல்லையெனினும் மத்திய (பாராளுமன்ற) மற்றும் உள்ளூர் மட்டங்களில் சட்ட வரைவில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. உலகின் முதல் பெண் பிரதமர் இலங்கையினின்று தோன்றினாலும் தேர்தல்களில் ஆசனங்களுக்குப் போட்டியிடும் பெண் அபேட்சகர்களின் எண்ணிக்கை எப்போதும் 2%க்கும் 3%க்கும் இடைப்பட்டதாகவே இருந்து வந்துள்ளது:1977 தேர்தலில் 19%; 1989 தேர்தலில் 3.2%
இவ்விரு ஆண்டுகளிலும் தெரிவுசெய்யப்பட்ட பெண்களின் நூற்றுவீதம் தெரிவுசெய்யப்பட்ட ஆண்களின் நூற்று வீதத்தைவிட உயர்வாகவே இருந்தது. மேலும் இப்பெண்கள் மொனராகலை, வவுனியா, புத்தளம் ஆகிய பின் தங்கிய மாவட்டங்களிலிருந்தே தெரிவானார்கள். எனவே பெண்களைத் தமதுபிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்வதில் வாக்காளர்கள் எவ்வித தயக்கமும் காட்ட வில்லை என்று தோன்றுகிறது. தற்போதைய நிலையில் பாராளுமன்ற உறுப்பினருள் 5.8% ஆனோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது (அட்டவணை8). 1988 இல் உருவாக்கப்பட்ட 8 மாகாணசபைகளிலும், பழைய மாநகர மற்றும் நகர சபைகளிலும், 1987இல் நிறுவப்பட்ட பிரதேச சபைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே இருந்துள்ளது(அட்டவணை9)

Page 96
182
(quisoạluosusố sự sắļos):ųúlsēsīs)
·les-TrıņTung) lạ951 119oqgošņos),
6”?!ZTOZ9"|Źty | Zɛ92 || ț7/9Z ] ` țy'Z§ 29 | 090€| || 988€!!66! ±关8ኸ!ƐƐį | 990/ | 861//86||
· 19'endo o oặ915. Ɛ"ZZክነ‛ty8| 61 || ● || gss (191CoŽ! | 6sv | Ozy1861 Isoonuso ($#@!ņossilo ттошл (п) 0'919°9||§“Z9GCZįț7Z8′Z0ț7Ɛ!!?! | €9ț74!66! *Zoo| 8Ɛ96寸86/86į. Z 8료ļ0’9?.AT!9尹子8Zț¢ £(vozƐƐ£984 || 9684£86į. 19ønose soos (s) 8‛ክpዜ!”846°Z910?40Z9°9Zț70ļļļ || ZGį į!66! -*Þ’9ZZ649和呼9Z864. ፱ኸ!!4,22$1| 80ƐƐƐƐZG“ZALŽዜty0ዜ | 890ዜ£861 19ønnso sosiaen (s) 引) ሯ‛ty8Gozo || 25:2 || & || vzo. Li Zoo || 6oz89 || 592 - || Z.zɛ,| 6861 - ·19șnusolması olan z ዜኽ}ሪtyኽ!QSZļ | 196ļ90ZZoo/9A1041 | W91||686|| 9°82!“ZZ£?fy呼949946ኸዔsoļ.Zț7299.).-//6! qúışın@uturi į SL LS S SLS YLSLS 0S0LLSLLLYLYYYL0SLLL LLLLSYYLYL {8}_1_0_1_(9)(g)(v)(c)(z)(1)· 19'orgunfis@. 취키의司히TT월에리히判司 quilae), toujočo ! quilaevussoooroussoņlunsoirtųssootsussolpoļogor,”qoçurts-Tse
hŋoorgın œursorgins)? (issours-i-so
g læssis-i Tıkā”

183
அட்டவணை 9
சட்டமியற்றும் சபைகளில் அமைச்சர்கள் / தவிசாளர்கள்
மொத்தம் ஆண் பெண்பெண்% மொத்தம் ஆண் பெண் பெண்%
1. பாராளுமன்றம் 1977 பாராளுமன்றம் 1989 UT) T615unairpth
1988 மார்கழியில் உள்ளபடி 1991 மார்கழியில் உள்ள படி
கபினட்
அமைச்சர்கள் 28 26 2 7.1 24 23 1 4.2
6,6060TLE
அமைச்சர்கள் 69 66 3 4.3 52 47 5 9.6 மொத்த
அமைச்சர்கள் 97 92 5 5.2 76 70 6 7.9 2. மாகாண சபைகள் 1989 சபைகள் 1991 மார்கழிநிலை
அமைச்சர்கள் 35 32 3 8.6 3. உள்ளூராட்சி
மன்றம் (1983) (1991)
(1) மாநகரசபை நகரபிதா * 12 12 - 12 12 - பிரதிநகரபிதா 12 11 1 8.3 12 12 (i) நகரசபை
தவிசாளர் 39 39 - 39 39 -
பிரதித்தவிசாளர் 39 38 1 2.6 39 39 || ست
(i)பிரதேச சபைகள்
தவிசாளர் 257 255 2 0.8 பிரதித்தவிசாளர் 257 256 1 0.4 (iv) கிராமோதய + சபை (1987) 4193 4152 41 0.97
* ஒரு மாநகரசபை 1987-89 இல் ஒரு பெண் நகரபிதாவைக் கொண்டிருந்தது
+ கிராமோதய சபைகள் என்பன கிராமங்களில் கொத்தணியொன்றைப்பிரதிநிதித்துவப்
படுத்துவதற்காக நியமிக்கப்படும் சபைகளாகும். (ஆதாரம்: தேர்தல் திணைக்களம்
உள்ளூராட்சி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு)
சட்டமியற்றும் குழுமங்களில் பெண்களின் கூடுதலான பிரதிநிதித்துவத்திற்கு இருக்கக் கூடிய தடைகள் - அபேட்சகர்களை நியமிக்கும் விதத்திலும், பால்வகை விடயங்களுக்குக் கொடுக்கப்படும் குறைந்த முக்கியத்துவத்திலும் அரசியல் கட்சிகள் கொண்டிருக்கும் கண்மூடித்தனமான கொள்கைகளிலிருந்தே தோன்றுகின்றன. மேலும் அரசியல் அரங்கில் துலாம்பரமாகப்பங்குபற்ற வேண்டும்என்ற ஆர்வம் பெண்கள்மத்தியில் இல்லாதிருப்பதுடன் தத்தம் குடும்பத்துள்ளேயே வேறுபாடுகள் கொண்ட பால்வகைப் பரிமாணங்களால்

Page 97
184
தோற்றுவிக்கப்பட்ட நேரம் சம்பந்தப்பட்ட இக்கட்டுநிலைகளும் அங்கு நிலவுகின்றன. சமுதாய அமைப்புகளில் பாரம்பரிய ஆண் வர்க்கத் தலைமைத்துவம் ஒரு திணறடிக்கும் காரணியாக இருந்தாலும் கடந்த தசாப்தத்தின் வன்செயல்களின்போதுபகிரங்க அரசியல் வாழவில் ஈடுபடப் பெண்கள் அதிக அளவுதயக்கம் காட்டினர்.
ஒரு ஆண் அங்கங்ததவரோடு ஏற்படுத்தும்தொடர்புகளூடாகவே பெரும்பான்மையான பெண்கள் பாராளுமன்றத்துள்நுழைகின்றனர். எனினும் தங்கள் சொந்த செயற்பாடுகள் மூலமாகத் தங்கள் பதவிகளை அவர்களால் தக்கவைத்துக்கொள்ளமுடிந்தது.
பாராளுமன்ற அமைச்சர்கள்,மாகாணசபை அமைச்சர்கள், நகரபிதாக்கள், உள்ளூராட்சிமன்றத் தவிசாளர்கள்என்போர்மத்தியில் பெண்களின் பிரதிதித்துவம்மிகக் குறைவாகவேஇருந்துள்ளது சகல மட்டங்களையும் சார்ந்த76 அமைச்சர்களில் 6 பேர் (7.9%) பெண்களாய் இருந்த வேளை அவர்களுள் ஒருவர் மட்டுமே மந்திரிசபை அமைச்சர்ாய் (-சுகாதார மகளிவிவகார அமைச்சர்) இருக்கிறார் (மந்திரிசபை அமைச்சர்களில் இது 42%).1960 தொடக்கம் 1965 வரையும்பின்னர் 1970 தொடக்கம்1977 வரையுமான காலத்தில் வகிக்கப்ப்ட்ட பிரதம அமைச்சர் பதவியைத் தவிரப் பெண் அமைச்சர்கள் சுகாதாரம், சமூக சேவைகள், கிராமிய அபிவிருத்தி போன்ற மட்டுப்படுத்தப்பட்ட நலன்புரி நோக்குக் கொண்ட அமைச்சுகளுக்கே நியமிக்கப்பட்டார்கள். தற்சமயம்மாகாணசபைகள் ஒருபெண் முதல் அமைச்சரைக் கொண்டுள்ளன,பெண் தவிசாளர், பெண் நகரபிதா அல்லது பிரதிநகரபிதா ஆகிய பதவிகளும் அபூர்வமாகப் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டன.
இதில் சுவையான விடயம் யாதெனில் பிரதான ஜனநாயகக்கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அரசியலில் பெண்கள் அதிக அளவு தீவிரமாக விளங்கியுள்ளார்கள் என்பதாகும். உதாரணமாக த.ஈ.வி.பு ஐயும் ம.விமுயையும் குறிப்பிடலாம். எனினும் இங்கும் பிரதான தலைமைத்துவப்பதவிகளில் அவர்களைக் காணமுடியவில்லை.
(v) பெண்களும் குடும்பமும்
பெண்களுக்கெதிரான வேறுபாடுகளைக் களைவதற்கான உடன்படிக்கையின் 16ஆம்பிரிவு திருமணம் மற்றும் குடும்பத் தொடர்புகள் விடயத்தில் ஆண்கள் அனுபவிக்கும் அதே உரிமைகளைப் பெண்களம் அனுபவிப்பதை அரசாங்கங்கள் உறுதிப்படுத்தவேண்டும்என்பதைத் தேவைப்படுத்துகின்றது.
பல இனங்களையும், பல மதங்களையும் கொண்ட சமுதாயமாகத்திகழும் இலங்கை, குடும்பத்துறையை ஆட்கொண்டியக்கும் கண்டிச்சட்டம் தேசவழமைச்சட்டம்(வடக்கு வாழ்தமிழ் மக்கள்மீதுபிரயோகிக்கக்கூடிய வழக்கில் உள்ள சட்டநெறிக்கோவை) முஸ்லிம் சட்டம் ஆகிய தனது சொந்தச் சட்டங்களில் தனது பன்மைவாதத்தைப் பிரதிபலிக்கின்றது. எனினும் பெண்கள்மீது எதிர்மறையான தாக்கத்திற்கு ஆதரவு நல்கும் கருத்துக்களை, உதாரணமாக ஆணே குடும்பத்தின் தலைவன் என்ற கருத்து முறைதவறிப்பிறக்கும் ஒரு குழந்தையின் விடயத்தில் தாயே பெற்ற பொறுப்பை முற்றுமுழுதாக ஏற்கவேண்டும் என்ற கருத்து சட்டப்படி பிறந்த குழந்தையொன்றின் குடியுரிமைதந்தையின் வழியில்தான் இருக்கவேண்டும் மனவிையின்

185
வாழ்விட உரிமை அவளின் கணவனின் வாழ்விட உரிமையில் தங்கியிருக்க வேண்டும் என்ற கருத்து. என்பன போன்ற கருத்துக்களைத் தழுவியதாக இருந்தபோதிலும், ஒட்டுமொத்தமாக நோக்கின் சமத்துவவாத அணுகுமுறையைக் கொண்ட அந்தப்பொதுவான ஒரு சட்டத்தினாலேயே பெரும் பான்மையான குடிமக்கள் ஆளப்படுகின்றனர். (“குழந்தைகள் உரிமை" பற்றிய அத்தியாயத்தையும் பார்க்க.)
பெண்கள் திருருமணம் செய்வதற்கான சராசரி வயது தற்காலப்போக்கில் 25 வருடங்களாகும். எனினும்"திருமணங்கள் கட்டளைச் சட்டம்"திருமணத்திற்கான செயல்திறன் கொண்ட வயதாக 12 வயதை விதிக்கிறது; இதையே கண்டிச் சட்டமும் பின்பற்றுகிறது. முஸ்லிம் சட்டம் திரும்ணத்திற்கான செயல்திறன் கொண்ட வயதொன்றை விதிக்கவில்லையெனினும் சிறுபராயத் திருமணங்களை ஒரளவு அனுமதிக்கக் கூடும்.
முஸ்லிம் சட்டத்தை தவிர, மற்றைய சட்டங்களில் திருமண ஒப்பந்தம் ஒன்றிற்கு இரு திறத்தாரும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது அவலசியயமாகும்.பலமான குடும்ப ஆட்சித்தலைவருக்குரிய பெறுமானங்களைப் பிரதிபலிக்கும் முஸ்லிம் சட்டத்தின் கீழ் மணப்பெண் திருமணத்திற்கான சம்மதத்தைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை; மாறாக அவளின் சார்பில் அவள் தந்தையே சம்மதம் தெரிவிக்கின்றார். பேச்சு வார்த்தை நடாத்தி ஒழுங்கு பண்ணிச் செய்யப்படும் திருமணங்களில், மணப்பெண்ணின் சம்மதம் பெறப்படாத கட்டாயக் கல்யாணங்களாக அமைந்த சில சம்பவங்களும் உண்டு.
பொதுவான சட்டத்தில் அல்லது கண்டிச் சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளுக்கு மாறாக முஸ்லிம் சட்டத்தின் கீழ் பல பெண்களை மணக்கும் முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு ஆண் 4 திருமண ஒப்பந்தங்கள் வரை செய்யமுடியும். பலதார மணம் செய்தல் நடைமுறைக்கு மிகவும் ஒத்துவராத ஒன்றாகும். மேலும் ஆண் தனது மனைவியை ஒரு பக்கசார்பாக விலக்கிவைக்கவும் முடியும், கண்டிச் சட்டத்தின் கீழ் ஒருபெண் பல ஆடவர்களை மணந்து கொண்ட நிகழ்வுகள் நடைமுறையில் இருந்துள்ளன.
திருமணங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் “திருமண வழு" எனப்படும் உரோமானிய டச்சுக் கோட்பாடு விவாகரத்துக்கு இன்னமும் ஒரு அடிப்படையாக விளங்குகையில், விவாகரத்துஅல்லது மணமுறிவுவிடயத்தில் முஸ்லிம் சட்டத்திலும் கண்டிச் சட்டத்திலும்"சீர்படுத்த முடியாத முறிந்து போன திருமணம்” என்னும் கருத்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சொத்து விடயத்தில், பொதுச்சட்ட ஏற்பாடுகளின் கீழ் (மணமான பெண்களின் சொத்துக்கள் கட்டளைச் சட்டம், 1923) பெண்களம் ஆண்களும் சம உரிமைகள் கொண்டுள்ளனர். மரண சாசனம் எழுதாமல் இறக்கிற பெற்றோர் விடயத்தில் (தந்தை அல்லதுதாய்) அவர்களின் ஆண், பெண் குழந்தைகள் யாவரும் அவர்களின் சொத்துக்களை சமமாக உரிமை வழியாய் அனுபவிக்க முடியும். திருமணமொன்றின் மூலம் பிள்ளைகள் இல்லாத பேர்து இறந்து விடும் கணவன் விடயத்தில் அவனது சொத்தில் பாதியை மட்டுமே அவனது விதவைமனைவி உரிமை வழியாய் அனுபவிக்க முடியும். அத்தகைய சந்தர்ப்பங்களில் மீதிப் பாதிச்சொத்து கணவன் வழிக்குடும்பத்தால் அனுபவிக்கப்படும். சுதேச கண்டிச்சட்டமும், தேசவழமைச் சட்டமும் பெண்களின் சுதந்திரமான சொத்துரிமைகளை அங்கீகரிக்கின்றன.

Page 98
186
அரச காணிகளில் அல்லதுகுடியேற்றநிலக்காணிகளில்உரிமைமாற்றம்செய்தல்காணிஒதுக்கீடு செய்தல் போன்ற விடயங்களோடு தொடர்புடைய 1935 ஆம் ஆண்டுவரை பின்னோக்கிய காலப்பகுதியின் சட்டவாக்கம், 1981 இல் சில திருத்தங்கள் உட்புகுத்தப் பட்டிருப்பினும், பெண்களுக்கெதிரான வேறுபாடுகளை அவை கொண்டுள்ளன.
(V) பெண்களுக்கெதிரான வன்செயல்கள் (அ) பெண்களுக்கெதிரான வன்செயல்கள்:
பொதுவான நிலைமை
பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் பற்றிய முறைப்பாடுகள் அதிகரித்துக்கொண்டு செல்வதுடன் சகல மட்டங்களிலும் அவை இடம் பெறுவதாகத் தோன்றுகின்றன. அலுவலகங்களில், அலுவல் நேரங்களுக்குப்புறம்பாக, பாலியல் தொந்தரவுகள் நிகழ்வதென்பது வழமைக்குமாறானதொன்றல்ல என்று தெரிகிறது. சிலசமயங்களில் தவறான முறையில் நட்புக் கொண்டாடவிழையும் ஆண் உயர்அதிகாரியுடன் ஒத்துழைக்கமறுக்கும் பெண்கள் தொந்தரவுக் குட்படுத்தப்படுவதுடன் தமது வேலையையே இழக்கும் மிரட்டலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறார்கள்.
(சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள பெண்களின் பணிபுரியும் நிலைபற்றிய சில ஆய்வுக்கட்டுரைகளைத் தவிர) இது விடயத்தில் புத்தகங்கள் மற்றும் தன்னிலையான, அனுபவத்தால் அறியப்பட்ட தரவுகள் இல்லாமை, இது விடயமான அறிவின்மையும்
அக்கறையின்மையும் பிரதிபலிக்கின்றது.
சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் பெண்கள் ஒரு விசேட பிரிவுக்குள் அடங்குகின்றார்கள். அவர்களுள் பெரும்பான்மையானோர் முதல் தடவையாகத் தங்கள் வீட்டை விட்டுப் புறப்படுள்ளதால் தாம் புதிதாகக் கண்ட சுதந்திரத்தையும் உள்ளக் கிளர்ச்சியோடு கூடிய தனிமைப்படுத்தலையும் எவ்வாறு சரிவரக் கையாள்வதென அறியாது மிகவும் இடர்நோக்குநிலையில் உள்ளனர். கட்டுநாயக்கா மற்றும் ஜா-எல பகுதிகளில் இருந்து அறிவிக்கப்படும் கற்பழிப்பு சம்பவங்கள் அப்பகுதியில் இடம் பெறும் பாலியல் துஷ்பிரயோகங் களுக்கு சான்று பகர்கின்றன.
வேலையினிமித்தம் வெளிநாட்டுக்கு இடம்பெயர்ந்துசெல்லும் பெண்களும், தங்கள் உரிமைகள் தொடர்பான அலோசனைகளையோ அல்லது உரிமை மீறல்களுக்கெதிராக மேல்மனுக்களை ஏறெடுக்க உதவிகளையோ பெறமுடியாதநிலையில் பாலியல் தொந்தரவுகளுக்குள்ளாகின்றார்கள். கல்வி நிறுவனங்களில் கூடப்பாலியல் தொந்தரவுகள் இடம்பெறுகின்றன:
"மகியங்கனை மாவட்டத்தின் ஒதுக்குப்புறமான ஒரு கிராமத்திலே அமைந்த சிறியதொரு பாடசாலையில் பணிபுரியும் திருமணமான ஒரு பாடசாலை ஆசிரியர் மதியப்பாட வேளையின் போது(டின் ஏஜ்) பருவவயதில்இருந்தமாணவியொருவரை ஆளில்லாவகுப்பறையொன்றிற்குச் செல்லுமாறுகட்டண்ளயிட்டு அங்கு அவள்மீது பாலியல் குற்றமிழைக்க முயற்சித்தார்"(திவயின’ நாளிதழ் 29/06/1992),
பொதுமக்களைச் சென்றடைந்த சில செய்திகளில் இப்த்திரிகைச் செய்தியும் ஒன்றாகும். பெரும்பான்மையான இத்தகைய சம்பவங்கள் பாதிக்கப்பட்டவரின் கல்விவாய்ப்புகள்,கொளரவம் என்பனவற்றிள்கு ஊறுவிளைவிக்கக் கூடும் என்ற காரணத்தினால் வெளியரங்கமாக

187
அறிவிக்கப்படுவதினின்றும் தடுக்கப்படுகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மாணவிகள் தங்கள் கல்விப்பயணத்தைத் தொடர்வதா அன்றேல் அவர்களின் ஆசிரியர்களின் பாலியல் தேவைகளுக்கு அடிபணிவதா என்பதைத் தெரிவுசெய்யவேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் இம்மாதிரியான குற்றச்சாட்டுகளுக்குப்பரிகாரம் காணலும் ஆலோசணை வழங்கும் ஏற்பாடுகளும் இல்லையென்றுமாணவர்களும் முறைப்படுகின்றார்கள்.
(ஆ) வீடுகளில் வன்முறை
"விமன் இன்நீட்(டபிள்யு.ஐ.என்)எனப்படும் ஆபத்தில் உதவும் நிறுவனம்நகர்ப்புறத்தே வாழும் குறைந்த வருமானங்களைக் கொண்ட பல்லினக் குழுக்களைச் சேர்ந்த 200 பெண்கள் மீது நடத்திய ஆய்வில் பின்வருவனவற்றைக் கண்டறிந்தது:
பாதிப்புற்ற 60% ஆனோர் வீட்டு வன்முறைகளுக்குள்ளாகியிருந்தனர். பாதிப்புற்ற 24% ஆனோர் தமது சீவனோபாயத்திற்கு யாரிலும் தங்கியிருக்கவில்லை. வன்முறைக்கு ஆளானோரில் 33% ஆனோர் தம் சொந்த வீடுகளில் வசித்தார்கள். 36% ஆனோர் தமது கணவனுக்கோ அல்லது அவரின் குடும்பத்தினர்க்கோ சொந்தமான வீடுகளில் வசித்தார்கள். 5% ஆனோர் கணவுன் மனைவி இருவருக்கும் சொந்தமான கூட்டுரிமைகொண்ட வீடுகளில் வசித்தார்கள்.26% ஆனோர்வாடகை வீடுகளில் வசித்தார்கள்.98% ஆனோர் தாய்மார்கள். இத்தாய்மாரில் 42% ஆனோர்தாங்கள் கருவுற்றிருந்த காலத்தில் நையப்புடைக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். துன்புறுத்தப்பட்ட பெண்களில் 29% ஆனோரின் கூற்றுப்படி அவர்களின் குழந்தைகளையும் அவர்களுடைய கணவன்மார் அடித்துத் துன்புறுத்தியதாகத் தெரிகிறது(கே. விஜேதிலக்க, "வீட்டு வன்முறை - ஒரு சத்தமற்றஅழுகை" சென்வோர், 1992 இல் நடந்த சென்வோரின் 3 ஆம்மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை).
இன்னும் சில மேலதிக தகவல்கள் மேற்படி ஆய்விலிருந்து பெறப்பட்டன. நிதிநிலைமைகளில் தங்கி இருப்பினும் சரி, இல்லாவிட்டாலும் சரி, வீட்டு வன்முறைகள் தொடரத்தான் செய்தன. வீட்டு வன்முறை காரணமாகத் திருமணம் முடித்த வீட்டில் இருந்து வெளியேறிய 38% ஆன சகல பெண்களும் முடிவில்லாத்தொந்தரவுகளை அனுபவிப்பதற்காகத்தங்கள் கணவன்மாரிடம் திரும்பிவந்தனர். அவர்களின் கூற்றுப்படி, திருமணம் முடித்த வீட்டை விட்டு வெளியேறியது பிரச்சினைக்கு ஒரு தற்காலிக தீர்வைக் காண்பதற்கே, அதாவது: ஒருதனிப்பெண்ணாக இருந்து சிக்கலான, சொந்த, சமூக ரீதியிலான இடர்கள்ால் சுமையேற்றப்பட்ட ஒரு நிலையை எதிர் கொள்வதைவிட, வீட்டுவன்முறையால் ஏற்படும் வேதனையைத் தாங்கிக்கொள்வதுமேல் என்றே அவர்களுக்குத் தோன்றியது.
துஷ்பிரயோகங்களுக்குள்ளாகும்பெண்கள் பெரும்பாலும் அவர்கள் சொந்தவீட்டில்உடல்ரீதியான உபாதைகளுக்கே ஆளாகின்றனர். இவற்றுள் கூடிய நூற்றுவீதமான சம்பவங்கள் அறிவிக்கப்படாததால், வெளித் தெரிவதில்லை, வீட்டு வன்முறை பலவகைப்பட்ட வடிவங்களில் உள. மனைவி தாய்,சகோதரிமகள்,மருமகள்,மைத்துணி-ஏன்? வீட்டு வேலைக்காரி.போன்ற பல பாத்திரங்களில் பெண்கள் வீட்டுக் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் மனைவி என்ற நிலையை வகிப்பவர் வீட்டுக் கொடுமைக் தள்ளாவது சர்வசாதாரண விடயமாகும்.

Page 99
188
வீட்டுப் பெண் கொடுமைக்குள்ளாவதற்க வேறு பெண்கள் தூண்டுகோலாக அமைந்திருந்த சந்தர்ப்பங்கள் உள.தனக்கு ஆதரவாய் இல்லாத மருமகளுக்தெதிராக தனதுமகனான அவளது கணவனை ஏவி விட்டுவன்முறைத் தர்பார் நடத்தும் மாமியார் போன்று பல அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத, வெளிச்சத்திற்கு வந்த, வெளிச்சத்திற்கு வராத பல சம்பவங்கள் உள. சில சமயங்களில் இந்த ஏவுதல் வெளியேயுள்ள பெண்/பெண்களிடமிருந்துவருகின்றன.
பாதுகாப்பற்ற, தன்னைத்தானே காத்துகொள்ளமுடியாத பெண்கள் வீட்டுவன்முறையில் ஆரம்ப இலக்காக அமையும் சந்தர்ப்பங்களும் உள. அவர்கள் தங்கள் குடும்பஅங்கத்தவர்களுடன் வாழும் வேலைக்காரப்பெண்களாக, திருமணம் செய்யாததனித்த பெண்களாக, விதவைகளாக அல்லது விவாகரத்துப்பெண்களாக இருக்கவும் கூடும். குடும்பமற்றும் சமுதாய ஆதரவு இல்லாதபோது இவ்வகுப்பைச் சார்ந்த பெண்கள் மிகக்கூடிய இடர்நோக்குநிலையை அடைகிறார்கள்.
(இ) நெருக்கடி நிலைமைகள்
சமுதாயப் பரிமாணங்களில் பழுது ஏற்படும் வேளைகளிலும் சமுதாயத்தின் தற்போதைய உள்ளமைப்புகள் அடிப்படைத்தேவைகளைப்பூர்த்திசெய்யமுடியா வேளைகளிலும் பெண்களும் குழந்தைகளும் அதிக இடர்நோக்குநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.கடந்த இருதசாப்தங்களாக இலங்கையின் வடக்குக் கிழக்கில் இருக்கும் யுத்த நிலைமை காரணமாகவும், இலங்கையின் ஏனைய பாகங்களில் இளைறஞர்கள் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டதன் காரணமாகவும் பல்லாயிரக் கணக்கானமக்கள் வீடு வாசல்களை இழக்கவும் பலவித மனித உரிமைகளையும் பறிகொடுக்கக் கூடிய இடர்நோக்குநிலையில் வாழவும் நேரிட்டது.
ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்பட்டுச் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் அல்லது
மிருகத்தனமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் சில குடும்பங்களும் குழுமங்களும் தங்கள்
பெண்கள் கற்பழிக்கப்படுவதை கொலைசெய்யப்படுவதிலும் பார்க்கமிக மோசமான ஒரு குற்றச்
39 KK - 4 , 3 KK
செயலாகக் கருதுகிறார்கள்.இவ்வாறானமனஉணர்வுகள்“கெளரவம்","கற்பு","உரித்துடைமை" “தங்கியிருத்தல்"என்பனபோன்ற சமூகக் கருத்துப்படிவங்களை அடிப்படையாகக் கொண்டவை.
(ஈ) கற்பழித்தல் ஒரு குற்றம்
தண்டனைக் கோவையின் பிரிவு 363 இன்கீழ் ஒரு பெண்ணுடைய விருப்பத்திற்கெதிராகவோ அல்லது அவளின் சம்மதமின்றியோ அல்லது அவளின் சம்மதத்தை காயம் அல்லது கொலைப்பயமுறுத்தல் மூலம் அல்லது சூழ்ச்சி அல்லது மோசடி மூதலம் பெற்றோ அவளுடன் ஒரு ஆடவன் உடலுறவுகொள்வானாயியன், அல்லது அப்பெண் 12வயதிற்குக் கீழ்ப்பட்டவளாயின் அவன் அப்பெண்ணைக் கற்பழித்த குற்றத்திற்கு ஆளாகின்றான். கற்பழித்தல்என்பது அபராதத் தொகையுடன் 20 வருடங்களுக்கு மேற்படாத சிறைவாசத்தால் தண்டிக்கப்படக் கூடிய ஒரு குற்றமாகும் (பிரிவு 364), 12 வயதுக்கும் 14 வயதுக்குமிடைப்பட்ட பெண்பிள்ளைகளுடன் மேற்கொள்ளப்படும் உறவும் சிறைவாசம் ஒன்றினால் தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும் (பிரிவு 364A). மணவாழ்வில் நடைபெறக் கூடிய கற்பழிப்பு சட்டத் தாற்பரியங்களில் இருந்து வெளியகற்றப்பட்டுள்ளது.

189
சட்ட வாக்க இவ்வாறிருந்தும் தேசிய செய்திப் பத்திரிகைகள் அநேகமாகத் தினந்தோறும் கற்பழிப்பு சம்பவங்கள் பற்றிய செய்திகளைத் தாங்கி வருகின்றன. 1990 இல் 369 கற்பழிப்பு சம்பவங்கள் பற்றிப்போலீசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.1991இல் முதல் 9 மாதங்களில் மட்டும் அறிவிக்கப்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள் 286 ஆகும். எனினும் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவங்களின் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். செவ்வி காணப்பட்ட போலிஸ் அதிகாதிகளால் இக்கூற்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கற்பழிப்பில் பாதிக்கப்பட்ட பெண் நீதிகேட்டு வழக்குத் தாக்குதல் செய்யப்போதிய உதவிகள் இருந்தாலும், கற்பழித்தல் சம்பவத்தின்போதும் அதன்பினனரும் அப்பெண்ணுக்கு ஏற்பட்ட மாறாத உணர்ச்சி பூர்வமாதாக்கங்களும் மனஉளைச்சல்களும் அப்பெண்ணை நீதிநிவாரணம் தேடுவதினின்றும் வழமையாகத் தடுத்துவிடுகின்றன.
போலிசாரின் கூற்றுப்படி, நகர்ப்புறங்களிலிருந்து கற்பழிப்பு சம்பந்தமான முறைப்பாடுகள் மிக அபூர்வமாகவே செய்யப்படுகின்றன. பல்வேறு காரணங்களுக்காக, வழக்குத் தொடுப்பதற் கெதிரான ஆலோசனைகளைப்பொலிசார்வழங்குவதால்,பொலிசாரிடம் செய்யப்படும் கற்பழிப்பு தொடர்பான முறைப்பாடுகளில் ஐந்திலொரு வீதமானவைநீதிமன்றம் வரை செல்வதில்லை. (கே. விஜேதிலக்க,'போர்ட்நைட்லிறிவியூவெளியீடுஇல.9,பக்கங்கள் 3-6,லோ அன்ட்சொசைட்டி ட்றஸ்ட் தை 1, 1991), குற்றம் பற்றிய முறைப்பாட்டைச் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பின், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் சந்தேகநபருக்குமிடையே ஏற்கனவே தொடர்புகள் இருந்திருப்பின், குறிப்பிட்ட கற்பழிப்புசம்பவத்திற்குப்போதிய ஆதாரங்கள் இல்லாதிருப்பின்,பாதிக்கப்பட்ட பெண் மருத்துவபரிசோதனைக்குத் தன்னை உட்படுத்த மறுப்புத் தெரிவித்திருப்பின். இப்படியான சந்தர்ப்பங்களில் இவ்வாறு நிகழ்கிறது.
(உ) சட்டமாக இயற்றப்பெற்ற கற்பழித்தல் குற்றம் பிரிவு 363 இன் கீழ் பாதிக்கப்பட்ட பெண் 12 வயதுக்குட்பட்டிருந்தால், அவள் சம்மதம் தெரிவித்திருப்பினும் அது கருத்திற் கொள்ளப்படாததுடன், அவள் மீது புரியப்பட்ட எந்த ஒரு பாலியல்உடலுறவும் கற்பழித்தல்எனும்குற்றமாகவே கருதப்படும் சிறுபராயத்தினரைப்பாதுகாக்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பினும் இவ்வாறான கற்பழிப்புக்கள் அதிகரித்து வருவது கண்கூடு,
இப்படியானசம்பவங்களில் சிறுவயதுப்பிள்ளைகள் பொதுவாகக் கற்பழிக்கப்படுவது அவர்களின் நண்பர்களால் அல்லதுகுடும்பதறவினர்களாலாகும்.
(ஊ) வேலியை பயிரை மேய்தலும் முறைதகாக் கல்வியும்
கற்பழித்தல்எனும் குற்றம் பொதுமக்கள் பார்வைக்குப்படாத தனிமையான இடங்களிலும் இருண்ட மறைவிடங்களிலுமே இழைக்கப்படுகிறதுஎனும் பொதுவான எடுகோளுக்குமாறாகப் பாதுகாப்புத் தரவேண்டிய புகலிடங்களான வீடுகள், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், மனநோயாளர் விடுதிகள், பாடசாலைகள் என்பனவற்றின் நான்கு சுவர்களுக்குள்ளும் சாதாரணமாக ஒருவர் நினைக்கக் கூடிய அளவிலும் பார்க்கக் கூடிய அளவில் அக்குற்றம் இழைக்கப்படுகிறது. நெருங்கிய உறவினரிடையேயான முறைதகாக்கல்விஅசாதாரணமான ஒன்று அல்ல என்றாலும் பொதுவாக அதுபற்றி வெளியே முறைப்பாடு செய்யப்படுவதில்லை. இம்முறைதகாக் கல்வி

Page 100
190
தொடர்பாக 1988 முதல்-1991வரையான காலப்பகுதியில் 8 சம்பவங்களே அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுள்ளும் கூட பெரும்பான்மையானவை கற்பழிப்புமுறைப்பாடு என்றில்லாமல், கொலை என்றே பொலிசாரிடம் முதலில் அறிவிக்கப்பட்டன.
புள்ளிவிபரத் தகவல்கள் இல்லாதவிடத்து, எத்தனை பெண்கள் இவ்வாறுபாதுகாப்புகொடுக்க வேண்டியவர்களாலேயே கற்பழிக்கப்பட்டார்கள் என்று தீர்மானிப்பது கடினம்.
(எ) கற்பழிப்பு விடயங்களைக் கையாளக் கூடிய
சட்டத்தின் செயல் விளைவுதிறன்
பெண்களுக்கெதிராக வேறுபாடுகள்காட்டுதலை அரசியல்யாப்புதடைசெய்தபோதிலும் விளைவு திறன் கொண்ட பாதுகாப்பு நடவடிக்கையின்மை காரணமாகப் பெண்கள் சமத்துவமற்ற முறையிலேயேநடாத்தப்பட்டுவருகிறார்கள்.
பாலியல் பலாத்காரங்கள், வீட்டு வன்முறையும் கற்பழிப்பும் போன்ற சில வெகு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக வழக்கிலுள்ள சட்டங்களைக் கூராய்வு செய்து பார்க்கின்ற அப்பிரச்சினைகளோடு செயல் தொடர்பு கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகளில் உள்ள குறைபாடுகள் தெற்றெணப்புலனாகும். பயன்படுத்தப்படக்கூடிய சிலபயனுள்ள ஏற்பாடுகள் அதில் உள. எடுத்துக் காட்டாக, தண்டனைக் கோவையின் 343-345பிரிவிகள் பாலியல் பலாத்கார விடயங்களில்பயன்படுத்தப்படக்கூடியவை. குறிப்பாகப் பிரிவு 345 ஆனது, பெண்ணை மானபங்கப்படுத்தும் நோக்குடன் அவளைத் தாக்குதல் அல்லது கண்டனைக்குரியவாறு அவள்மீது வலுவாற்றலைப் பிரயோகித்தல் போன்றவற்றுடன் செயற்றொடர்புகொள்ளத்தக்க வண்கயில் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக, பாலியல் பலாத்காரம் உடலூறு எதையும் ஏற்படுத்தாதிருந்தால் சட்டம் மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையே வழங்குகிறது. வேலைத்தளங்களில், பாடசாலைகளில் அல்லது நிறுவனங்களில் உள்ள உயர் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் நுண்ணய சூழ்ச்சித் திறமிக்க மிரட்டல்களுக்கெதிராக சட்டரீதியான பரிகாரமேதும் இல்லை.
வழிவாய்ப்பு என்பது சட்டமுறைமையொன்றின் நடுநிலைப் பண்பையும் செயல் விளைவு திறனைம்ே நிர்ணயிப்பதில் ஒரு பிரதான ஆக்கக்கூறாகும்.நல்லாதரவுநல்கும் சட்டஏற்பாடுகள் இருந்தாலும் கூட, குறிப்பிட்ட நிறுவனங்கள், ஆளணியினர், சட்ட அமுலர்க்கலின் நிருவாக இயந்திரங்கள் ஆகியவற்றுக்குச் செல்வதற்கான வழிவாய்ப்புகள் சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மறுக்கப்படுமாயின், அச்சட்ட முறைமையால் அந்தச் சமுதாயத்திற்கு நீதி கிடைக்காது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் சட்ட நடைமுறைகளை நாடுவதில் மிகவும்மட்டுப்படுத்தப்பட்ட வழிவாய்ப்புகளையே கொண்டுள்ளனர்.
சட்டநடைமுறைபற்றிய அறியாமை, மட்டுப்படுத்தப்பட்ட நிதிநிலைமை, பாலினரீதியிலமைந்த சமூகக் கண்ணோட்டத்தின்படி அவர்களுக்குள் புகுந்துகொண்ட குற்றஉணர்வுமற்றும் வெட்க உணர்வு ஆகியவைசட்டநிவாரணம் தேடுவதினின்றும்பாதிப்புற்றபெண்களைக் கட்டாயமாகத் தடுத்துவிடுகின்றன.

191
பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்களுக்குப் பதில் கூறு மனித எதிர்ச் செயல்கள் நடைமுறையில் உள்ள சமுதாய விழுமியங்களால் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அடியத்திவாரமானவை அதிகார இயங்காற்றலும், குடும்ப அந்தரங்கமுமாகும். மனைவியின் மீது நடாத்தப்படும் தாக்குதலோடு செயற்றொடர்பு கொள்வதற்கான தெளிவான சட்டம் எதுவும் இல்லை; அத்துடன், கொலை போன்ற பாரதூரமான விடயங்களைத்தவிர, மனைவி மீதான துஷ்பிரயோததை ஒரு குற்றமாக நோக்குவதற்குத் தயக்கம் காட்டும் பொலிசாரினதும்நீதிநிலைத் துறையினரதும் போக்கு தொடர்ந்த வண்ணமுள்ளது. எனவே, திருமண வாழ்வில் கொலை நீங்கலான தாக்குதல் எதையும் தன் மனைவி மீது மேற்கொள்ளும் கணவன் ஒருவன் கைது செய்யப்படுவதோ, வழக்குத் தொடரப்படுவதோ அன்றேல் தீர்ப்பிடப்படுவதோ பொதுவாக நிகழ்வதில்லை.
சட்ட அமுலாக்கல் அதிகாரிகளால் பாதிப்பின் உளரீதியான தாக்கத்தை உணர்ந்து கொள்ள முடியாமற்போவதற்கான முக்கியகாரணங்களில் ஒன்று அவர்கள் விடயத்தைச்சரியாக விளங்கிக் கொள்ளாமையாகும். இது தொடர்பாக அவர்களினதும் பொதுமக்களினதும் சமூக விழிப்பு நிலையை உயர்த்துவதுமிகமுக்கியமானதாகும்.
இலங்கையில் பாலின அடிப்படையில் வன்முறையால் பாதிப்படைந்தவர்களுக்கான ஆதரவுதரு கட்டமைவுகள் இல்லை.
இன்னுமொரு பாரிய பிரச்சினையாக விளங்குவதுயாதெனில், தங்கள் உரிமைகளைப்பற்றியும், பாதிப்புக்குள்ளாகும்போது எங்கே செல்வது,யாரிடம் செல்வது என்பதுபற்றியும் வன்முறையால் பாதிப்புற்ற பெண்கள் மத்தியில் காணப்படும் அறியாமையாகும். சட்ட உதவிகள் பெறலாம் எனுங்கருத்து வலுப்பெற ஆரம்பித்துள்ள போதிலும், அவ்வாறு கிடைக்கப் பெறும் உதவி, இலங்கையில், உரிமையாலன்று ஆனால் அருளிரக்கத்தாலேயே என்றுதான் இன்னுங்கருதப்பட்டு வருகிறது. வன்முறையால் பாதிப்புற்றவர்களுக்கு உதவக்கூடிய சட்டத்துறைசார்ந்த நிபுணர்கள் குறைந்த தொகையினராய் இருப்பதோடு, சேவை செய்யவதற்கான அர்ப்பண ஈடுபாடும் அவர்களிடம் இல்லை.
முறைப்பாடுகள் இறுதியாக நீதிமன்றநடவடிக்கைக்குவரும்போதுபாதிப்புற்றவர்கள் விரக்தியான அனுபவங்களைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். கற்பழிப்புக்கிலக்கானவர்கள் நீதி மன்ற விசாரணைகளுக்கூடாக நீண்ட காலத்தைச் செலவிட நேரிடலாம். வடமத்திய மாகாண மாவட்ட நீதிமன்றமொன்றில் 1980 இல் கற்பழிப்புசம்பவம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று இன்னும் பூர்த்தியாகாத நிலையில் இருப்பதாக ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது.
1991-1992 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள் பற்றிய ஆய்விலிருந்து தெரியவருவது என்னவெனில் பொலிஸ் அதிகாரிகள், தாம்பெறும் முறைப்பாடுகளில் கற்பழிப்பு தொடர்பானவைவரும்போது அவற்றுக்கு உடனடிக் கவனம்செலுத்திஒத்துணர்வுடன் செயல்பட ஆரம்பித்துள்ளார்கள் என்பதாம்.

Page 101
192
சந்தேக நபரைக் கற்பழிப்பு சம்பவமொன்றில் குற்றவாளியாகக் காண நீதி நிலைத்துறை பெரும்பாலும் தயக்கம் காட்டிவருகிறது.இதில் நுண்ணாய்வுடைய விடயம் யாதெனில் அநேகமாக எல்லாக் கற்பழிப்புசம்பவங்களிலும்கண்கண்டநேரடிச்சாட்சிஇல்லாமையாகும்.இலங்கையின் சட்டங்களுக்கு வலியுறுத்தும் பாங்குடைய ஆதாரங்கள் தேவையில்லை. எனினும் நீதிநிலைத்துறையானது, வலியுறுத்தும்பாங்குடைய ஆதாரங்களெதுவுமின்றிச் சந்தேகநபரைக் குற்றவாளியாகத் தீர்ப்பிடும் ஆபத்துப்பற்றிமுறைகாண்ண ஆயத்தை எச்சரித்துள்ளது(கிங் எதிர் அனா ஷெரீப், 42என்.எல்.ஆர்.169,171இல்).
நிதிச் சலுகைகள் உத்தரவாதமளிக்கப்படாதபோது பாதிப்புற்றவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஈடுபடக்கூடிய வழக்கறிஞர்கள் இல்லாமையானது நீதிகேட்டு நீதிமன்றம் செல்கையில் பாதிப்புற்ற பெண்கள் எதிர்நோக்கும் மற்றுமொரு பெரிய இடர்ப்பாடாகும்.
மேற்போந்த விடயங்களனைத்தையும் ஒன்றுசேர்த்துப்பார்க்கின் மிகக் குறைந்த அளவிலான சம்பவங்களே வழக்குத்தாக்கல் செய்யப்படும் நிலையை அடைகின்றன. அத்துடன் கற்பழிப்புக் குற்றச்சாட்டுகள் கொண்ட சம்வங்களுள் ஒரு சிலவே வெற்றிகரமாக நிரூபிக்கப்படுகின்றன.

193
அத்தியாயம் 7
சிறுவர் உரிமை
() அறிமுகம்
“குழந்தைகள் உரிமை” எனும் துறைச் சொல் வழக்கு இலங்கைக்குப் புதிதாய் இருப்பினும் குழந்தைகளின் பாதுகாப்பில் இலங்கை நீண்டதொருபாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.நாட்டின் வழமையான சட்டங்கள் பாதுகாவல், மகவேற்பு ஆதாரத்திற்கான கடப்பாடு ஆகிய ஏற்பாடுகள் மூலமாகக் குழந்தைகள் பாதுகாப்புக்கு ஏற்பிசைவுஅளித்தன. ஒல்லாந்தர்காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டதும், மீந்திருக்கும் பொதுச் சட்டமாக இன்னும் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வருவதுமான"உரோமானிய ஒல்லாந்துச்சட்டத்தில், பராயத்துக்குவராதபிள்ளைகள் தொடர்பாக அரசுக்கும் நீதிமன்றங்களுக்கும் ஒரு பாதுகாப்புப் பங்கினை வகிக்க வகை செய்யும் “உயர் பாதுகாவலர்”என்னும் கருத்துப்படிவம் காணப்படுகிறது. பிரித்தானியர் காலத்தில், சுகாதார்ம், கல்வி,இளம்பிராயத்தினர் நீதிநெறிபற்றியும் அநாதைகள் என்ற காரணத்தாலோ அல்லதுதகுந்த பராமரிப்பைப் பெற்றோரால் வழங்க முடியாத காரணத்தாலோ தகுந்த பெற்றோர் பராமரிப்பை இழந்திருந்த குழந்ண்தகள் பற்றியும் செயல் தொடர்புகொள்ளும் நலன்புரிச்சட்டவாக்கமொன்று புகுத்தப்பட்டது.மிக அண்மைக் காலத்தில், குழந்தைகளினதும் இளைஞர்களினதும் நலன்கள் விசேட கவனத்துடன் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறும் அரச கொள்கையின் ஆணையிடும்கோட்பாடொன்றை அரசியல்யாப்புவிபரித்துள்ளது(அரசியல்யாப்புபிரிவு27(2) (C)).
எனவே, இலங்கையில் குழந்தைகளுக்கான கணிசமான அளவு சட்டப்பாதுகாப்புசிலகாலமாக இருந்துள்ளது.இருப்பினும் குழந்தை உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கைக்குஇலங்கை ஒப்புதல் அளித்து அங்கீகாரம் வழங்கியதோடு குழந்தைகள் உரிமை இலங்கையில் ஒரு புதிய பரிமாணத்தை எடுத்துள்ளது அவ்வுடன் படிக்கையின் நிபந்தனைகளின்படி அதில் காணப்படும் ஏற்பாடுகள் உள்ளூர்ச்சட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படவேண்டும். இந்த மீளாய்வின் போது இலங்கைச்சட்டம் சர்வதேச உடன்படிக்கையில் பொதியப்பெற்றுள்ள கோட்பாடுகளுக்கமையக் கூர்ந்தாராயப்படும். (i) இலங்கைக் குழந்தையின் தற்கால வரலாறு (அ) உடல் நலம்
இலங்கையில் சேய் மரணம் அதிகரித்த நிலையில் காணப்படுவதுடன் அம்மரண வீதம் 1000 பிறப்புக்களுக்கு 19.3% என மதிப்பிடப்பட்டுள்ளளது (அனுவல் ஹெல்த் புளட்டின், 1992). தேயிலைத்தோட்ட மக்கள் மத்தியிலும்,நகர்ப்புற ஏழைகள் மத்தியிலும், வறிய உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் உயர்ந்த சேய் மரண வீதங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன (இலங்கைக் குழந்தைகளுக்கான செயற்திட்டம் (1991) பக்கம்3).1000பிரசவங்களின் போதுதாய்மரணம் 05 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது(அதே நூல் பக்கம்2)

Page 102
194
வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் குழந்தைகளின் நூற்றுவீதத்தைக் காட்டும் சரியான புள்ளி விபரங்கள் இல்லையெனினும் இலங்கைக் குழந்தைகளில் 45% ஆனோர் இந்நிலையில் இருப்பதாகப் பருமட்டான மதிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது. ஊட்டச்சத்துக் குறைந்து காணப்படும் குழந்தைகளின் நூற்றுவீதம் வறுமையோடு முழுமையாகப் பிணைந்துள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வளர்ச்சிக்குறைபாட்டுக்கு இட்டுச் செல்லப்பட்ட குழந்தைகள் 36.4%எனவும்பலங்குன்றிப்போகும்நிலைக்குத் தள்ளப்பட்ட குழந்தைகள் 184% எனவும் 1988/1989 புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டித் தயாரிக்கப்பட்ட அண்மைக்கால அறிக்கையொன்று தெரிவிக்கின்றது(குழந்தை உரிமைகள்உடன்படிக்கையின் செயற்படுத்துகை பற்றிய மார்க்க நிறுவனத்தின் அறிக்கை (1994) அட்டவணை 1, பக்.4). குழந்தைகளில் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு, குழந்தையின் அபிவிருத்தியையே தடுத்துவிடக்கூடிய சிலபாரம்பரிய நம்பிக்கைகளோடு தொடர்புபட்டுள்ளது பாரம்பரியமாகக் கருவுற்றதாய்மார், சில உணவுவகைகளை உண்பதினின்று தடுக்கப்படுகின்றனர். தாயின் ஊட்டச் சத்துக் குறைபாட்டிற்கும் எடைக்குறைவான பிள்ளைபிறப்பதற்கும்இதுவழியமைக்கின்றது.பால்குடியை மறக்கச்செய்வதில் ஏற்படும் தாமதம் அபிவிருத்தியைக் குன்றச் செய்கிறது. பூப்பெய்தும் பெண் பிள்ளைக்குக் குறிப்பிட்ட சில உணவுவகைகளைக் கொடுக்காமல் அவளைத் தனிமைப்
படுத்துதலும் அவளின் அபிவிருத்தியைப் பாதிக்கின்றது
சர்வசாதாரணமாக வரக்கூடிய சில குறிப்பிட்ட நோய்கள் தெய்வீகத்தோடு தொடர்புடையன என்று பாரம்பரியமாகக் கருதப்படுவதால் அந்நோய்களைக் குணமாக்கக் கூடிய புரதச் சத்துக்களை உட்கொள்வதும் சமூகத்தால் தடுக்கப்பட்டுள்ளது. நீண்ட கால அடிப்படையில் இதுவும்பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்(கலாநிதி அபேகுணவர்த்தனவின் செவ்வியூனிசெப்). வடக்கில் ஊட்டச்சத்துக்குறைபாடுள்ள குழந்தைகள்பற்றி அறிய வடக்கு கிழக்குயுத்தம்பற்றிய அத்தியாயம்காண்க)
சர்வதேச ரீதியில் பால்கட்டல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மூலம் இளம்பிள்ளை வாதம், சின்னம்மைபோன்ற நோய்களிலிருந்து சிறுவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் மலேரியா, யானைக்கால்நோய் என்பன மீண்டும்தலைதூக்கியுள்ள இவ்வேளையில் “டெங்கு"எனப்படும் இரத்தசோகைக் காய்ச்சலும் பரவ ஆரம்பித்துள்ளது(செயற்திட்டம்(1991) பக்3)
(சமூக பொருளாதார உரிமைகள் பற்றிய அத்தியாயத்தில் சுகாதாரம்பற்றிய பகுதியைக் காண்க)
(ஆ) கல்வி
இலங்கையில் சிறுவர்கள் இலவசக் கல்விக்குரிய வாய்ப்பைக் கொண்டுள்ளனர். கல்விக்காக அரசாங்கத்திடமிருந்து வருடாந்தம் சராசரியாக சுமார் 1780 ரூபாய் பெறுமதியான உதவியை ஒவ்வொரு குழந்தையும் பெறுகிறது (குழந்தை உரிமைகள் மீதான உடன்படிக்கையைச் செயற்படுத்தல் பற்றிய அறிக்கை,(1994), அட்டவணை2பக்கம் 6). இதில் சிந்திக்க வேண்டிய விடயம் யாதெனில், எந்த ஒரு தருணத்திலும் 5க்கும் 14வயதுக்குமிடைப்பட்ட சிறுவர்களுள் கிட்டத்தட்ட 14% ஆனோர் பாடசாலையை விட்டு வெளியேறியவர்களாக இருக்கின்றனர் என்பதாகும்(செயற்திட்டம்(1991) பக்கம்3). கல்விப்பெறுபேறுகளைப் பொறுத்தமட்டில் பெரிய வசதிகள் படைத்தபாடசாலைகளுக்கும் சிறியதொலைதூரத்திலமைந்த அல்லது தோட்டப்புறப்

195
பாடசாலைகளுக்குமிடையே பெரியஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன(அதே நூல்).பொதுவான கருத்துக்குமாறாக, இலங்கையில்,குறிப்பிட்ட வயதிற்குக் குறைந்தபிள்ளைகளுக்குக்கல்வியைக் கட்டாயமாக்குவதற்கானனந்தச்சட்டத்திட்டங்களும் கிடையாது.(எம்கோமஸ்,கட்டாயக்கல்வியும் சட்டமும் (1989)12ஆம் பாகம், இலங்கை சமூக விஞ்ஞானங்கள் சஞ்சிகை, பக்கம் 43). எனவே நாட்டில் எய்தப்பட்டுள்ள உயர்நிலைபடிப்பறிவுமட்டங்கள், கட்டாயக் கல்வியினால் ஏற்பட்ட ஒரு விளைவன்றிமாறாக அண்மைக்கால சலுகைத் திட்டங்களான இலவச மதிய உணவு இலவச பாடப்புத்தகங்கள், இலவ்சசீருடைகள் உள்ளிட்ட இலவச கல்வியின் விளைவே எனக் கொள்ளலாம். 1992இல் மதிய உணவுக்காக 1500 மில்லியன் ரூபாயும் பாடசாலைச் சீருடைத் திட்டத்திற்காக 600 மில்லியன் ரூபாயும் செலவழிக்கப்பட்டது (குழந்தை உரிமைகள் மீதான உடன்படிக்கையின் செயற்படுத்தல் பற்றிய அறிக்கை (1994) மார்க்க, அட்டவணை2 பக்கம்6).
இலவசக்கல்வியும் நடைமுறையில் உள்ள பற்பல சலுகைத் திட்டங்களும் நாட்டில் பரந்த அளவிலான கல்விக்குப்பெருமளவுபங்களிப்புச் செய்துள்ளமை உண்மையேயாயினும், கட்டாயக் கல்விக்கான சட்டதிட்டங்களும் அதைக் கண்காணிக்கும் நடைமுறைகளும் இருந்திருப்பின் மாணாக்கர் அதிகரித்த அளவில் கல்விக் கூடங்களுக்குச் சமூகமளித்திருப்பர். பாடசாலைக்கு முன்னதான கல்விபயில் வசதிகள் நாட்டின் இல்லை (செயற்திட்டம் 1991) பக்கம்3). சற்றுவயது முதிர்ந்த பிள்ளைக்கு வாழ்க்கைத் தொழில் பயில் கூடங்களின் குறைபாடு கவலைப்படத்தக்கதாகும். கற்கைக்கான ஆற்றல்களைக் கொண்டிராத பிள்ளைகளுக்கென்று நிறுவப்பட்டுள்ள பாடசாலைகளும் மிக அரிது. அங்கவீனமுற்ற குழந்தைகள் மட்டிலும் போதிய கரிசனை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அங்கவீனமுற்றகுழந்தைகளில் 16% ஆனவர்களே அரசாங்கத்தாலும், அரச சார்பற்ற நிறுவனங்களாலும் கவனிக்கப்படுகின்றனர் (செயற்திட்டம் (1991), பக்கம் 3).
அங்கவீனமுற்ற குழந்தையானது தன்னில் தானே நம்பிக்கை கொள்வதற்கும், சமுதாய முழுமையாக்கலில்தானும்ஒருபங்குஎன்பதை உணர்ந்துகொள்வதற்குமானவிசேட கல்வியையும் பயிற்சியையும் அக்குழந்தைக்கு வழங்க வேண்டிய கடப்பாட்டைக் குழந்தை உரிமைகள் மீதான உடன்படிக்கை அரசாங்கத்தின் மீது சுமத்துகின்றது. (i) கடின சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகள் (அ) ஆயுதம் தாங்கிய சண்டையில் ஈடுபடும் குழந்தைகள்
1991இல் இலங்கையில் 487,000 குழந்தைகள் ஆயுத மோதலால் பாதிப்படைந்துள்ளதாகக் கணக்கிடப்படுகிறது(செயல்திட்டம்(1991)பக்4).மிக அண்மைக்கால அறிக்கையொன்றுஅவ்வாறு பாதிப்புற்றகுழந்தைகள் தொகை 400,000 எனக் கூறுகிறது. ஆயுதச் சண்டையால் பாதிப்புற்ற குழந்தைகள் பின்வரும்பல்வகைப்பிரிவுக்குள் அடங்குவர்.
கைவிடப்பட்ட அநாதைச் சிறுவர்கள் பெற்றோர் இருவரில் ஒருவரைமட்டும் உடைய குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் வாடும் சிறுவர்கள் ஆயுத வன்முறைகளுக்குமுகங்கொடுத்துவாழ்வதால் ஏற்பட்ட உணர்ச்சிபூர்வ உளவியல்ரீதியான பிரச்சினைகளால் வாடும் சிறுவர்கள்.

Page 103
196
5. ஆங்கவீனமுற்ற சிறுவர்கள் 6. பாடசாலைக்குச் செல்லும்வாய்ப்பை இழந்த சிறுவர்கள்
இச் சிறுவர்களைத் திணறடிக்கும் கடின சூழ்நிலையின் பாரிய தன்மையும் சிக்கல் நிறைந்த தன்மையும் இப்பிரச்சினைக்குத் துரிதமான இலகுவான தீர்வைக் காணமுடியாதவாறு செய்து விடுகின்றன. பெரும் எண்ணிக்கையிலான முகாம்கள் அல்லது நலன்புரி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ள போதிலும் அதிமுக்கிய தேவைகள் மட்டுமே இங்கு கவனிக்கப்படுகின்றன. அத்தியாவசியபொருட்கள் ஒழுங்காக விநியோகிக்கப்பட்டுவருகின்றன எனினும், பாதுகாப்புக் காரணங்களுக்காக எரிபொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதுடன் அப்பகுதிகளில் மின்விநியோகமும் கிடையாது(குழந்தைஉரிமைகள் மீதான உடன்படிக்கைபற்றிய அறிக்கை, பக்கம் 60).
சண்டையால் அதிர்ச்சிக்குள்ளாகி நிலைகுலைந்துபோயுள்ள சிறுவர்களையும் குடும்பங்களையும் புன்ரமைப்பதற்கு சில குறிப்பிட்ட முக்கியமான ஆக்கக் கூறுகள் தேவை. அவை : உயிர்வாழ்வதற்கான முக்கிய தேவைகளை வழங்கல்; இக்குடும்பங்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதை இலகுவாக்கல், சுகாதார அபிவிருத்தியை இலகுவாக்கல்; போர்ச் சூழலைச் சமாளித்துக் கொள்ளும் சக்திகொண்ட சிறுவர்கள், வளர்ந்த பிள்ளைகளின் திறமை மற்றும் நிதியுதவிகள் கொண்டு, அங்கவீனமுற்ற அல்லது அதிர்ச்சியால்பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கல் என்பவற்றைஉள்ளடக்குகின்றன (நெருக்கடி, சண்டைகள் மத்தியில் வாழும்இலங்கைக் குழந்தையின் வரலாறு,யூனிசெப், 1990).
உயிர்வாழ்வதற்குவேண்டிய அடிப்படைத்தேவைகளுக்காக அரச மூலவளங்கள் பயன்படுத்தப்படும் அதேவேளை அதிர்ச்சித்தாக்கத்துக்குள்ளான குழந்தைகளின் உணர்வார்ந்த தேவைகளும் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டியுள்ளன. இப்பிரச்சினை தொடர்பாக சில நிகழ்ச்சித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதிலும்(குழந்தை உரிமைகள் மீதான உடன்படிக்கை பற்றிய அறிக்கை (மார்க்க) 1994, பக்கம் 61), இன்னும் செய்யப்பட வேண்டியவை நிறைய உள்ளன. நிச்சயமாக இலங்கைக்கு இது ஒரு புதிய பிரச்சினையாக இருப்பதுடன் அதைத் தீர்த்துவைக்கும் விடயத்தில் நிறைய மூலவளங்கள் தேவைப்படுகின்றன. இதுதொடர்பான நிபுணத்துவம் கூடத் தேவைப்படுகிறது எனினும் அது உடனடியாகக் கிடைப்பதாயில்லை.
(ஆ) சீரழிந்த குடும்பங்களில் வாழும் குழந்தைகள்
பெற்றோரில் ஒருவரை மட்டுமே உடைய அல்லது சீரழிந்த குடும்பங்களில் வாழும் குழந்தைகள் பற்றிப்போதியதாவுகள் இல்லை. பெற்றோரில் ஒருவரை மட்டுமேயுடைய குடும்பங்களில் உள்ள குழந்தைகளில் சில அரசாங்கத்தால் நடாத்தப்படும் வீடுகளிலும் தொண்டர் நிறுவனங்களால் நடாத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட 150 வீடுகளிலும் இருப்பதாகக் கருதப்படமுடியும். முறைகேடாகப் பிறக்கும் குழந்தைக்கு சமுதாயத்தால் குத்தப்படும் முத்திரையானது அக்குழந்தையைக் குடும்பப்பாங்கான சூழ்நிலையில் வளர்க்க எடுக்கும்முயற்சிக்குத் தடையாக உள்ளது. முறையாகப்பிறந்த, முறைகேடாகப் பிறந்த குழந்தைகளிடையே வேறுபாடுகளைக் காட்டுவதுபோலவே சட்ட முறைமைகளும் இருப்பதால் சமுதாயப்பார்வையிலே இவர்களின் பிறப்புக்கேற்றவாறு மதிப்பளிக்கும் ஒருமுறையொன்று வலிதாய் உருவாகிவருகிறது.

197
(இ) தெருச்சிறார்கள்
தெருச்சிறார்கள் சுமார் 10,000 வரையில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது (மேல்மாகாண நன்னடத்தைத் திணைக்களத்தைச் சேர்ந்த திரு. கமகே அவர்களுடனான செவ்வி). இச் சிறுவர்களுக்காகப்பகல் பராமரிப்புநிலையங்களும் விளையாட்டுக் குழுக்களும் வெளிநாட்டு உதவியுடன் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களால் நடாத்தப்படுகின்றன. அண்மையில் தெருச்சிறார்களுக்காக இரண்டு குடியிருப்பு வீடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நன்னடத்தை அதிகாரிகளின் கருத்துப்படி இவ்வீட்டுத் திட்டத்தால் ஏற்பட்ட நன்மை யாதெனில், தெருவோரத்தின் விரும்பத்தகாத சூழ்நிலையில் இருந்து சிறுவன்/சிறுமி அப்புறப்படுத்தப் படுகின்றனர்என்பதாகும்.இதற்கு எதிர்வாதமாக:பகல்பராமரிப்புநிலையங்கள்,விளையாட்டுக் குழுக்கள் போன்றவை பாதுகாப்பு, சுகாதாரம், உணவூட்டம், உணர்வுசார்ந்த அபிவிருத்தி, வாழ்க்கைத் தொழிற்பயிற்சி, மருத்துவ உதவி போன்ற அடிப்படைத் தேவைகளை அமைப்பு முறைக்குட்படாமலேயே வழங்கி வருகின்றனவே அது பெரிய நன்மையில்லையா?” என்று கேட்கப்படுகின்றது(தெருச்சிறார்கள் திட்டம்பற்றிய ஒரு செவ்வி (சிறுவர்பராமரிப்புநிதியம்) (ஐக்கிய இராச்சியம்)
(ஈ) சிறுவரை வேலைக்கமர்த்தல்
வேலைக்கமர்த்தப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை சுமார் 500,000 (ஐந்துலட்சம்) என மதிப்பிடப்பட்டுள்ளது. வறுமையேஇதற்கான முக்கியகாரணமாகும்(செயற்திட்டம்(1991),பக்கம் 4). இவர்களுள் 75% ஆனோர் தோட்டப்புறங்களையும், நகர்ப்புறங்களையும் சார்ந்தவர்கள். சிறுவர்கள் முறைசாராப்பிரிவிலேயே வேலை செய்வதுடன், சட்டத்தினால் பாதுகாப்பின்றியும் விடப்பட்டுள்ளனர். இவர்களுள் கணிசமான தொகையினர் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது(அதே நூல்)
இலங்கையின் தொழிற்சட்டத்திலே ஒர் அம்சம்யாதெனில் வேலையின் தன்மையைப்பொறுத்தும் எந்தெந்த வேளையில் சிறுவன்/சிறுமி அவ்வேலையில்ஈடுபடவேண்டும் என்பதைப்பொறுத்தும் நிர்ணயம்செய்யப்படவேண்டியவேலைக்கமர்த்தலுக்கானபலவகைப்பட்டகுறைந்தபட்சவயதுகள் ஆகும். இது உடன்படிக்கையில் காணப்படுகிற, இதனோடு தொடர்புடைய பிரிவுக் கூறுக்கு முரணானதல்ல (பிரிவுக் கூறு 32). சம்பளமற்ற வீட்டு வேலை சிறுவர் தொழில் வலுவின் ஒரு ஆக்கக்கூறு ஆகும் அண்மையில் வெளிவந்த அறிக்கையொன்றுதெரிவிப்பதுபோல,"நாட்டில் உள்ள, சிறுவரை வேலைக்கமர்த்தலுக்கு ஆதரவளிக்கின்ற, சிக்கலான சமூக அமைப்புகள் நேரடியான சட்டஅமுலாக்கலுக்கு உகந்தவிையாக இல்லை"(சிறுவர்உரிமைகள் மீதான உடன் படிக்கை பற்றிய அறிக்கை, பக்கம் 55). வேலைக்கமர்த்தப்பட்டுள்ள குழந்தைகள் விடயம் இவ்வத்தியாயத்தின் பிரிவு(Vi)இல் விரிவாக ஆராயப்பட்டுள்ளது
(w) சட்ட முரண்பாட்டுக்குட்பட்ட சிறுவர்கள்
சிறுவரினதும் நாட்டில் குற்றவியல் சட்டத்தை மீறியுள்ளோரினதும் நலன்களைப் பாதுகாக்கும் சட்ட ஏற்பாடுகள் தாராளமாக உள்ளன. குற்றமொன்றிற்கு எந்தத் தீர்ப்பையளிப்பது என்பதில் பல விருப்பத் தேர்வுகள் இருப்பினும் அவர்களை இளவயதுக் குற்றவாளிகளாக நிறுவன அமைப்புக்குட்படுத்தும் இயல்பே நாடப்படுகிறது. இதற்கென சிறப்பாக உருவாக்கப்பட்ட காவல்

Page 104
198
வீடுகள், அத்தாட்சி பெற்ற பாடசாலைகள், அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் என்பன நாட்டில் காணப்படுகின்றன.1922இல் குற்றம்புரிந்த73 சிறுவர்கள் வழக்கு விசாரணைக்குட்படுத்த முன் 4காவல் வீடுகளில்வைக்கப்பட்டிருந்தார்கள்.ஹிக்கடுவைகெப்பிட்டிப்பொலை,ரண்முத்துகலை ஆகிய இடங்களில் உள்ள அத்தாட்சி பெற்ற பாடசாலைகளில் 153 சிறுவர்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். இவற்றுக்கு மேலதிகமாக மக்கோன எனுமிடத்தில் கத்தோலிக்க சிறுவர்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட பாடசாலையொன்றும் உளது. 16 வயதுக்கு மேற்பட்ட இளவயதுக் குற்றவாளிகள் வத்துப்பிட்டிவெலை எனும் இடத்தில் உள்ள சிறப்புப் பாடசாலை யொன்றிற்கு அனுப்பப்படுகின்றனர் (சிறுவர் பராமரிப்பு நன்னடத்தை ஆணையாளர் திருமதி பத்மாரணசிங்க அவர்களுடனான செவ்வி).அத்தாட்சிபெற்றபாடசாலைகளில் அனுமதிபெற்றோர் தொகை அண்மைக் காலமாகக் குறைந்துள்ளது. 1979இல் 308 பேர் அனுமதிக்கப்பட்டனர். 1991 இல் வெளியிடப்பெற்ற அறிக்கையொன்று, இவ்வெண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு இளவயதில் குற்றமிழைப்போர் தொகை குறைந்துள்ளதுஎன்பது காரணமல்ல; மாறாக அவ்வாறு குற்றமிழைப் போரைப் புலன் விசாரணை செய்து கண்டுபிடிப்பதில் காட்டப்படும் ஆர்வம் குறைந்துள்ளது என்பதே காரணம் என்று தெரிவிக்கின்றது(செயல்திட்டம் (1991) பக்.4)
ஒரு குறிப்பிட்ட வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறுவர்கள் குற்றமிழைப்பதற்கான இயல்திறம் அற்றவர்கள் என்று இலங்கைச் சட்டம் கருதுகிறது. ஆகவே8 வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறுவர்கள் குற்றம் இழைக்கக்கூடிய இயல்திறம் அற்றவர்கள் எனக் குற்றவியல் கோவை விதந்துரைக்கிறது(1883 இன் 2 ஆம் இலக்கக் குற்றவியல் கோவை (திருத்தப்பட்டவாறு) பிரிவு 76) தாம் செய்வது இன்னதென்றும் அதன் விளைவுகள் இன்னதென்றும் விளங்கிக் கொள்ளக்கூடிய போதிய முதிர்ச்சியை அடையாத8 வயதுக்கு மேற்பட்ட 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் குற்றவியல் ரீதியில் அவற்றுக்குப்பொறுப்பேற்க முடியாதவர்கள் ஆவர். ஆனால் 12வயதுக்கு மேற்பட்டோர் தாம்புரியும் குற்றத்திற்கு முழுப்பொறுப்பும் உடையவர்கள்.
உடன் படிக்கை வலியுறுத்துவது யாதெனில் குற்றவியல் சட்டத்தை மீறும் சிறுவர்களும், பெரியோர்களும் வெவ்வேறு விதமாக நடத்தப்படவேண்டும் என்பதும் குற்றமிழைப்போர் சிறுவராயின் அவர்களுக்குச் சில சலுகைகள் காட்டப்படவேண்டும் என்பதுமாம்.
உடன்படிக்கையின் 40ஆவதுபிரிவைப்பொறுத்தவரையில், நாட்டின் குற்றவியல் சட்டங்களை மீறியுள்ள சிறுவர்கள் தொடர்ப்ாக இலங்கைச் சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.ஆகவுே அட்டவணைப்படுத்தப்பட்ட குற்றங்கள் தவிர்ந்த ஏனைய குற்றம் ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட இளவயது நபரொருவர் தொடர்பான எந்தவொரு வழக்கையும் விசாரித்துத் தீர்ப்பளிக்கக் கூடிய சிறப்பாக உருவாக்கப்பட்ட இளவயதினர்க்கான நீதிமன்றங்கள் தேவை (சிறுவர், இளவயதினர் கட்டளைச்சட்டம் 1939, இல. 48 பிரிவு 4 (1)) ஒரு சிறுவன்/சிறுமி அதாவது 14 வயதுக்குட்பட்ட நபரொருவர் சிறைப்படுத்தப்பட முடியாது. ஒருகாவல் வீட்டிலோ அல்லது அத்தாட்சி பெற்ற ஒரு பாடசாலையிலோ தடுத்து வைக்கப்பட முடியாத அளவுக்கு அடங்காதவர்களாகவும் ஒழுக்கங் கெட்டவர்களாகவும் இருக்கின்றனர் என்று நீதிமன்றம் அத்தாட்சிப்படுத்தினாலன்றி14க்கும்16க்குமிடைப்பட்ட இளவயதினரைச் சிறையிலிடமுடியாது (அதே நூல்பிரிவுகள்23(1,23(2) பாரியதண்டனை நடைமுறைகளுக்குமாற்றீடான முறைகள் நடைமுறைச் சட்டத்தில் உள்ளன. சில குறிப்பிட்ட குற்றச் செயல்களுக்குக் கசையடிமூலம்

199
தண்டனை வழங்கும் முறையானது, உடன்படிக்கைக்கு ஒவ்வாத வகையில், தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படுவதுவருந்தத்தக்கது(பிரிவு29().
இலங்கைச்சட்டத்தில் காணப்படும் குறிப்பிட்ட சில நடைமுறைத் தேவைகள்,உடன்படிக்கையில் பொதியப்பட்டுள்ள கோட்பாடுகளுடன் ஒத்துப் போகும் தன்மை கொண்டவையாய் உள்ளன. அதன்படி, பொலிஸ் நிலையங்களில், குற்றம் புரியும் இளம் பராயத்தினர் ஏனைய குற்றம் புரிந்தவர்களிடமிருந்து வேறாகப் பிரித்து வைக்கப்படுதல் வேண்டும் (பிரிவு 13). சிறுவன் புரிந்ததாகக் கூறப்படும் குற்றம் எத்தன்மையது என்பதை, எளிய புரிந்து கொள்ளும் மொழியில் அவனுக்கு விளக்கிக் கூறவேண்டிய கடமையை சட்டம்நீதிமன்றத்தின் மீது சுமத்துகின்றது. நீதிமன்ற நடவடிக்கைகள் மறைவாக நடத்தப்படுவதோடு, வழக்கில் தொடர்புடைய தரப்பினர், சாட்சிகள், வழக்கறிஞர்கள் ஆகியோர்மட்டுமே அவ்விடத்தில் சமூகமளிக்கமுடியும்(பிரிவு/(3) எனினும் தீர்ப்பளிப்பதில் தாமதங்கள்,நிறுவன அமைப்புமுறைக்கு ஆதரவளிப்பதாகத்தோன்றும் தீர்ப்பிடல் கொள்கைகள் என்பன, அதில் காணப்படும் கவனமீர்க்கும் விடயங்களாகும்
(V) இலங்கைச் சிறுவரின், அரசியல் யாப்புரீதியிலமைந்த
உரிமைகள்
இலங்கையில் வாழும் சிறுவர்கள், வளர்ந்தோரைப் போன்று, அரசியல்யாப்பின் கீழ்குறிப்பிட்ட சில உரிமைகளைக் கொண்டுள்ளனர். மிகவும் அடிப்படையான உரிமைகள் “நபர்'களுக்கே பிரயோகிக்கப்படக்கூடியனவாய் இருப்பதால் எல்லாச் சிறுவர்களுக்கும் அவை பொருந்தும். சர்வதேச ரீதியில் சகலசிறுவருக்கும் பிரயோகிக்கக் கூடிய, அரசியல் யாப்பின் கீழ்வருகிற உரிமைகளாவன:
1. சிந்தனை, மனச்சான்று, மதம் என்பவற்றில் சுதந்திரத்திற்கான உரிமை(பிரிவுக் கூறு 10)
2. சித்திரவதைக்கோ, கொடூரமான, மனிதத் தன்மையற்ற, கீழ்த்தரமான முறையில் நடத்தப்படுதலுக்கோ, அல்லதுதண்டிக்கப்படுதலுக்கோஉட்படுத்தப்படாதிருக்கும்உரிமை
3. சட்டத்தின்கீழ் சமத்துவத்திற்கும், சமமான பாதுகாப்புக்கும், இனம்,மதம், மொழி, சாதி, பால், அரசியல் அபிப்பிராயம்,பிறப்பிடம் ஆகிய காரணங்களால் எவ்வித வேறுபாட்டிற்கும் உட்படாதிருத்தலுக்குமான உரிமை
4. சட்டநடவடிக்கையால் தீர்மானிக்கப்பட்டுக்கைதின் காரணத்தை கூறினாலன்றிவேறெச் சந்தர்ப்பத்திலும்கைதுசெய்யப்படாதிருக்கும் உரிமை குற்றஞ்சாட்டப்பட்ட ஒருசிறுவன், தகுதிவாய்ந்த ஒரு நீதிமன்றத்திலே நியாயமான வழக்குவிசாரணை யொன்றிலே தனது நிலைப்பாட்டைத்தானாகவோ அல்லதுஒரு வழக்கறிஞர் மூலமாகவோ வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கோர உரித்துடையவன். சட்டத்தால் நிறுவப்பட்ட ஏற்பாடுகளுக்கமையவே தண்டனையும் வழங்கப்படமுடியும் அத்துடன் ஒருசிறுவன், வேறு எந்த ஒரு நபரையும் போன்று, குற்றமற்ற ஒருவனாகவே கருதப் படுவானாயினும் சில உண்மைகளை நிரூபிக்கும்படி அவன் கேட்கப்படலாம். பல நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்ட பொதுவான சட்டக்கோட்பாடுகளின் கீழ் ஒரு குறிப்பிட்ட செயல் குற்றமானது என்றாலொழிய, புரிந்த வேளையில் அதுகுற்றமற்றதாயின் அதைப்புரிந்த சிறுவன் குற்றவாளியாகக் கருதப்பட முடியாது(பிரிவுக்கூறு 10).

Page 105
200
அரசியல்யாப்புரீதியிலான இவ்வுரிமைகள் எவ்வித பிரசாவுரிமை வேறுபாடுகளுமின்றிஎல்லாச் சிறுவருக்கும்பிரயோகிக்கற்பாலது. எனினும்,அரசியல் யாப்பில் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள உரிமைகள் பிரிவுக்கூறு 157) இல் சொல்லப்பட்ட தடை வரம்புகளுக்குட்பட்டவை என்பது கவனிக்கத்தக்கது('சட்டப்பின்னணி"பற்றிய அத்தியாயத்தையும்நோக்குக).
சிறுவர் விடயத்தைக் குறிப்பிடத்தக்க வகையில் ஆராயும் உடன்படிக்கையின் ஏற்பாடுகள், அவ்வுரிமைகளின் தன்மையைத் தரமாகவும் ஆழமாகவும் ஓரளவுக்கு எடுத்தியம்புகின்றன. அதன்படி, உடன் படிக்கையின் 14ஆம் பிரிவுக் கூறு சிந்தனை, மனச்சான்று, மதம் என்பவை மட்டில் சுதந்திரத்திற்கான உரிமையைச் சிறுவர்கொண்டுள்ளனர்என்பதை அங்கீகரிக்கும் அதே வேளை, சிறுவர் இவ்வுரிமைகளை அனுபவிக்கும் பொருட்டு அவர்களை நெறிப்படுத்துவதில் பெற்றோருக்குள்ள பங்கையும் அங்கீகரிக்கின்றது. சிறுவனின் இயல்திறனை வெளிக்கொணரத்தக்க வகையில் பெற்றோரின் நெறியாள்கை அமையுமாயின் அதனை உடன்படிக்கை பெரிதும் மதித்து அங்கீகரிக்கின்றது. சிறுபான்மைக் குழுவினரின் சிறுவர்கள் தமதுசொந்தமதம் மொழிஎன்பவற்றை அனுபவிக்க உரிமையுடயவர்களாய் இருத்தல் வேண்டும் என்ற முக்கியகோட்பாட்டை உடன்படிக்கையின் 30ஆம்பிரிவுக்கூறுவலியுறுத்துகின்றது(சிறு பான்மையினர்மீதான ஐ.நா. பிரகடனத்தையும் காண்க).
ஒரு நாட்டின் குற்றவியல் சட்டங்கள் சிறுவரால் மீறப்படுதல் தொடர்பாகவும், அவற்றுக்கான தண்டனை தொடர்பாகவும் குறிப்பிடுகையில் எந்தச் சிறுவனும்/சிறுமியும் சித்திரவதைக்கோ, கொடூரமாக நடத்தப்படுதலுக்கோ, தண்டிக்கப்படுதலுக்கோ உட்படுத்தப்படலாகாதுஎன்னும் வாக்கியத்தை அதில் ஒருங்கிணைத்துள்ளது. மேலும், மரண தண்டனை மற்றும் விடுவித்தலுக்கான இயல்தகவற்ற ஆயுட்காலச்சிறைவாசம் என்பவற்றுக்கு உடன்படிக்கையில் ஆதரவுமறுக்கப்பட்டுள்ளது(பிரிவுக் கூறு 37), கைதுசெய்தல்,தடுத்துவைத்தல், சிறையிலிடல் என்பவைசட்டஏற்பாடுகளுக்கமைவாக இருப்பதோடு,உடன்படிக்கையின் கூற்றுப்படி, அதுவே இறுதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாகவும் இருத்தல் வேண்டும். அவர்களின் அதிசிறந்த நலனுக்குக் குந்தகமாய் இருக்கும் வேளைதவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் விடுதலைமறுக்கப்பட்ட சிறுவர்கள்வயதுவந்தோரிடமிருந்துபிரித்துவைக்கப்பட்டுஇருப்பதுடன், விதிவிலக்கான சந்தர்ப்பங்களைத் தவிர, ஏனையவேளைகளில் தமதுகுடும்பங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படவேண்டும்.
இலங்கையின் அரசியல்யாப்பில் எல்லா"ஆட்களுக்கும்"வழங்கப்பட்ட உரிமைகளுக்குப்புறம்பாக “குடிமக்களுக்கு” மட்டுமே வழங்கப்பட்டுள்ள உரிமைகளும் உள்ளன. எனவே குடிமக்களாயிருக்கும் சிறுவர்கள் மேலதிகமாகப் பின்வருவனவற்றிற்கும் உரிமை கொண்டுள்ளனர்.
(1) பேச்சுச்சுதந்திரம் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரம்(பிரிவுக்கூறு 14(1)(அ)
(2) அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம்(பிரிவுக்கூறு 14(1)(ஆ)
(3) சங்கம் அமைக்கும் சுதந்திரம்(பிரிவுக் கூறு 14 (1) (இ)
(4) பொதுவிடங்களிலும் தனிமையிலும் தமதுமதத்தை அநுசரிக்கும் சுதந்திரம் (பிரிவுக்
கூறு 14 (1) (உ)

201
(5) தமது கலாச்சாரத்தை அநுபவிக்கவும், அனுசரிக்கவும் தமது சொந்த மொழியை
உபயோகிப்பதற்குமான சுதந்திரம் (பிரிவுக் கூறு14(1)(ஊ)
இவ்வுரிமைகள் யாவும்உடன்படிக்கையின் பிரிவுக்கூறுகளிலும் கருத்துப்பெறுகின்றன. முன்னர் இனங்காணப்பட்ட அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடையவாறு உடன்படிக்கையின் பிரிவுக் கூறுகள்மிகத்தெளிவாயுள்ளன.அதன்படி உடன்படிக்கையில் சொல்லப்பட்டதற்கமையகருத்துத் தெரிவிக்கும் சுதந்திரமான்துசிறுவன்/சிறுமி தகவல்களையும் கருத்துக்களையும் நாடவோ, அல்லதுபெற்றுக்கொள்ளவோ, அல்லதுநாட்டின் எல்லைப்புறத்தைக் கருத்திற்கொள்ளது.அக் கருத்துக்களையும் எண்ணங்களையும் கலைவடிவில் அல்லது சிறுவன்/சிறுமியின் விருப்பத்தேர்வான எந்த ஒருதொடர்புசாதனம்மூலம்வாய்மொழியாகவோ எழுத்துமூலமாகவோ அல்லது அச்சுயந்திரம்மூலமாகவோபரப்பவோ இடமளிக்கும்உரிமையை உள்டக்குகிறது(பிரிவுக் கூறு 13). கலாச்சார உரிமைகள் மட்டில் சிறுபான்மையினச் சிறார்கள் பற்றி உடன்படிக்கையில் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. சிறுபான்மைக் குழுவைச்சார்ந்த இனத்தைச் சார்ந்த,மதத்தைச் சார்ந்த அல்லது மொழியைச் சார்ந்தவர்களை அவ்வாறான உரிமைகளைத்தம் குழுவின் ஏனைய அங்கத்தவர்களுடன் சேர்ந்து அனுபவிக்க அனுமதிக்குமாறு அரசாங்கம்எதிர்பார்க்கப்படுகிறது (பிரிவுக் கூறு 30).
குடிமக்களாகிய சிறுவர்கள், குடிமக்களல்லாத சிறுவர்கள் என்று வேறுபடுத்திப் பார்ப்பதும், குடிமக்களாய் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குக் கூடிய உரிமைகளை வழங்குதலும் இலங்கையின் அரசியல்யாப்பில் ஒருஅம்சமாகவிளங்குகிறது.சிறுவர்களை இவ்வாறாக இரண்டு பிரிவாக வகைப்படுத்தலானது உடன்படிக்கைக்கு ஒவ்வாததாய் உள்ளது. நாட்டின் அதிகார எல்லைக்குட்பட்ட சிறுவர்கள் அனைவர்க்கும்,பிறப்பு அந்தஸ்துஎன்பவற்றின் அடிப்படையிலான வேறுபாடுகள் உள்ளடங்கலாக, எவ்வித வேறுபாடுகளும்இல்லாமல்,உடன் படிக்கையிற் கூறிய சகல உரிமைகளும் பிரயோகிக்கப்பட வேண்டும் என உடன்படிக்கையின் 2ஆம்பிரிவுக் கூறு எடுத்துரைக்கிறது
(wi) குடும்பச்சட்டத்திலுள்ள உரிமைகள்
குடும்பச்சட்டத்தில் ஒரு பிள்ளைக்கு இருக்கும் உரிமைகள் இப்பிரிவில் ஆராயப்படுகின்றது. பெற்றோருக்குரிய பொறுப்புக்களை அவர்கள் நிறைவேற்றத் தவறும் போது பிள்ளைகளுடைய உரிமைகளும், பெற்றோர்களுடையதும் ஒன்றோடொன்று, எதிரெதிர் மோதிக்கொள்வதைக் குறிப்பாக ஆராய்கின்றது
(அ) கூட்டுப்பொறுப்பின் எண்ணக்கரு
உடன்படிக்கையின் 18ஆம் உறுப்புரைநியதிகளின் கீழ்பிள்ளையின் அபிவிருத்திக்கும்,வளர்ப்பு முறைக்கும்பெற்றாருக்குப் பொதுவான பொறுப்புக்கள் உள்ளன. பொருத்தமான சந்தர்ப்பத்தில் அரசாங்கம் சட்டரீதியான பாதுகாவலர்களுக்கும் பெற்றாருக்கும் இவர்களதுபிள்ளை-வளர்ப்புப் பொறுப்புநடவடிக்கைகளுக்கு உதவிகளை வழங்க வேண்டியுள்ளது.மேலும்,தொழில் பார்க்கும் பெற்றார்,குழந்தை பராமரிப்பு சேவைகளிலிருந்தும் வசதிகளிலிருந்தும் நன்மையடைவதனை உறுதிசெய்யுமுகமாக, தேவையான எல்லாப் பொருத்தமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கவேண்டியுள்ளது(உறுப்புரை18).

Page 106
202
பெற்றாரின் கூட்டுப்பொறுப்பு எண்ணக்கருவானது இலங்கைச் சட்டத்தில் போதியளவு அபிவிருத்தியடையவில்லை.பொதுச்சட்டத்தின் கீழ்சட்டரீதியான ஒருபிள்ளை பற்றிதந்தைக்கே எல்லாவிடயங்கள் தொடர்பாகவும் தீர்மானம் மேற்கொள்ள முடியும் பிள்ளையின் இயற்கையான பாதுகாவலர் என்ற வகையில் இவரே பிள்ளையின் சமய,மற்றும் சமயச்சார்பற்ற கல்வி,பிள்ளை யாரோடு கூட்டுச் சேரவேண்டுமென்பனபற்றிதீர்மானிப்பார். பிள்ளையின் சொத்தை தந்தை நிருவகித்து பிள்ளை ஒப்பந்தஞ்செய்வதற்கும், சட்டரீதியாக வாதாடுவதற்கும் உதவியளிப்பார். இதற்கு மாறாக, தந்தை மரணமடைந்துவிட்டால் அல்லது வலிதற்றவராகிவிட்டால் தாயின் பொறுப்புக்கள் வலுவடைகின்றன.
பொதுச்சட்டத்தின் கீழ் சட்டமுறையற்றபிள்ளை, சட்டரீதியான பிள்ளைக்கு நேர் மாறாகக் காணப்படுகிறது. சட்டமானது பிள்ளையின் தாயையே இயற்கையான பாதுகாவலராக இனங்கண்டு சட்டரீதியான பிள்ளை தொடர்பில் தந்தையால் நடைமுறைப்படுத்தப்படும் உரிமைகள் அனைத்தும் சட்டமுறையற்றபிள்ளையைப்பொறுத்தளவில் தந்தைக்குஎந்தவிதமான பங்குமிருப்பதாக விதிமுறைச்சட்ட அமைப்பு:இனங்காணவில்லை. நுழைவுரிமையும்பாதுகாப்பும் தொடர்பான கேள்விகள் எழும்போது, சட்டமுறையற்றபிள்ளையின் தந்தையானவர், நுழைவுரிமையும் பாதுகாப்பும் தொடர்பாக,தவிர்க்கப்படமுடியாத காரணங்களை சான்றாகக் கூறவேண்டுமென்பதை பொதுச்சட்டத்தில்உள்ள கொள்கைகளின் அண்மைக்காலகருத்துக்கள் G66fůLuGğjé£6vTp6oT (BVP 1991 (4) SA113 (T) BVS 1993 (2) SA211 (w) SVS 1993 (2) SA 200 (w) )
அதேபோல் பெற்றாரின் கூட்டுப்பொறுப்பு எண்ணக்கரு, பொதுச்சட்டத்தில் பிரதிபலிக்கவில்லை. இது விடயத்தில் உள்ளூர் சட்டத்தில் தெளிவான கொள்கைகளும் இல்லை. இலங்கையில் பொதுச்சட்டத்திற்கு மேலதிகமாக, குறிப்பிட்ட சில பிரிவினர்க்கு குடும்ப விவகாரங்கள் தொடர்பாக விசேட சட்டங்கள் நடைமுறையில் உள்ள்ன (பெண்களின் உரிமைகள் பற்றிய அத்தியாயத்தில் இதுபற்றி மேலும் பார்க்க) ஆகவே இலங்கை சர்வதேசக் கடப்பாடுகளை கெளரவிக்க வேண்டுமாயின் பெற்றாரின் கூட்டுப் பங்களிப்புப் பற்றிய புதிய சட்டங்களை அறிமுகஞ்செய்தல் அவசியமாகும்
(ஆ) பிள்ளையின் படிவளர்ச்சி திறன்
பிள்ளை பற்றிய தீர்மானங்கள் எடுக்கும் போது பிள்ளையின் படிவளர்ச்சித் திறனை ஏற்கும் தேவையைஉடன்படிக்கை வலியுறுத்துகின்றது தீர்மானங்கள் மேற்கொள்ளும்போதுபிள்ளையை பங்கு பெறச் செய்யும் இவ்வெண்ணக்கருவானது இலங்கைச் சட்டத்தில் குறைந்தளவே அபிவிருத்தியடைந்துள்ளது. குறித்த சில சூழ்நிலைகளில் நிறைவயதடைதல் எல்லை அதிகரிக்கப்படலாமென்பதை பொதுச்சட்டம்இனங்காணுகின்றது. பிள்ளையின்படிவளர்ச்சித் திறனுடன் அடங்கிய நெறிப்படுத்தல் எண்ணமானதுபொதுக்கருத்துரீதியாகவித்தியாசமானது
பல்வேறுபட்ட காரணங்களுக்காக நிறைவயதடையும் எல்லை வேறுபடுவதற்குரிய,ஆரம்பகால எண்ணக்கருக்களை, சுதேச சட்டங்கள் கொண்டிருப்பதுடன், அந்த மட்டில், இவ்வெண்ணக்கருக்களுக்குரிய வித்துக்கள் உள்ளூர் சட்டவாக்கங்களில் காணக்கூடிய தாயுள்ளன. இவ்வெண்ணக் கருக்கள் அர்த்தபுஷ்டியுள்ளவையாக இருக்க வேண்டுமாயின் சட்டவாக்க மாற்றங்கள் அவசியமாகின்றன.

203
(இ) உதவி
உதவியளிக்கின்ற பெற்றாரின் கடமையும் உதவியைப்பெறுகின்ற குழந்தையின் உரிமையும் நாட்டின், பொதுச்சட்டம், விசேட சட்டம் ஆகிய இரண்டிலும் மிக வலுப்பெற்றுள்ளது. உதவியளிக்கும் அடிப்படைக் கடப்பாடு பெற்றாருடையதாயிருக்கும் அதே வேளையில், அரசாங்கமும் இக்கடப்பாடுகளை நிறைவேற்றும் பெற்றாருக்கும்,பிள்ளைக்குப் பொறுப்பாயிருப் பவர்களுக்கும் உதவி வழங்கக் கடமைப்பட்டிருப்பதை உடன்படிக்கை இனங்கண்டுள்ளது (உறுப்புரை-27)
இலங்கைச் சட்டத்தில் ஒர் அதிருப்திகரமான அம்சம் என்னவென்றால் இது தந்தையிடமே உதவிவழங்கும் அடிப்படைச் சட்டப்பிணைப்புகளை முதனிலைக் கூற்றாகக் கொண்டிருப்பதைப் பிரதிபலித்தலாகும் பெற்றார் இருவரினதும் உதவியளிக்கும் கடமைபற்றி தெளிவாகக்காட்டும் உடன்படிக்கைக்கு இதுமாறுபட்டதாயுள்ளது(உறுப்புரை27).
குற்ற விசாரணைகளையே பிரதானமாகக் கொண்ட நீதவான் நீதிமன்றங்களிடம், பராமரிப்புக் கடப்பாடுகளை அமுல்செய்யும் நடவடிக்கைகள் வழங்கப்பட்டிருப்பது இலங்கைச் சட்டத்தின் இன்னுமோர் அதிருப்திகரமான அம்சமாகும். இவ்வகையான கோரிக்கைகளுக்கு துரித பொறுப்புத்தீர்வு வழங்குவதே இதை நியாயப்படுத்துவதாகத் தெரிகிறது என்றாலும் பெருமளவு குற்றங்கள்தொடர்பான செயற்பாடுகளைக் கொண்டிருக்கும் நீதிமன்றமொன்றில் இவ்வாறான வழக்காடல்கள் மேற்கொள்ளக்கூடாது என்பது தொடர்பாக அதிகம் கூற வேண்டிஉள்ளது.
அந்தரங்கத்தில் தலையிடுதலிலிருந்து பாதுகாக்கும் உரிமையை இந்த உடன்படிக்கை பிள்ளைகளுக்கு வழங்குகின்றது(உறுப்புரை16).செயற்பாடுகளுக்குஊறுவிளைவித்தலின் கீழ் வரும் சட்ட நியதிகளின்படி பொதுச்சட்டமானது பிள்ளைகளுக்குநிவாரணம் வழங்கும் அதே சந்தர்ப்பத்தில் பெற்றாரோ, சட்டபூர்வ பாதுகாவலரோ அல்லது வேறொருவரால் அந்தரங்க உரிமைகள் மீறப்பட்டாலன்றி சட்டபூர்வ அந்தஸ்து குறைவாக உள்ள நீதிமன்றில், நிவாரணம் தேடுவதிலிருந்து இது பிள்ளையை தடுக்கின்றது. இதன்பிறகு, பெற்றாரோ பாதுகாவலரோ, பிள்ளையின் உதவிக்கு அடுத்த நண்பராகவோ, பாதுகாவலராகவோவரமுடியும்
அதிக வாய்ப்புகள் இருக்கும் நிலைமையான,- பெற்றார் ஒருவரால், அந்தரங்கம் மீறப்படுதல் பற்றி போதியளவு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.இவ்வகையான சூழ்நிலைகளில், சட்டபூர்வ அந்தஸ்தைவழங்கவோ, சட்டரீதியானபிரதிநிதித்துவத்தைபிள்ளைக்கு வழங்கும்முறையையோ இலங்கைச் சட்டம் கொண்டிருக்கவில்லை.
(உ) தத்தெடுத்தல்
ரோமன்டச்சு சட்டம்தத்தெடுத்தலை அறிந்திருக்கவில்லை.தத்தெடுத்தல்பற்றிய பொதுச்சட்டம் முழுமையாக சட்டபூர்வமானது விசேட சட்டங்களின் இரண்டான தேசவழமைச் சட்டமும், கண்டியச் சட்டமும், தத்தெடுத்தல், குடும்பத்தை வளரச்செய்யும் ஊடகமாகக் கண்டன. தேச வழமைச்சட்டக்கோவை(1806ன் இல.18)யின்பிரமாணங்கள் தத்தெடுத்தலைப்பொறுத்தளவில்

Page 107
204
வழக்கிலிருந்துஉபயோகமற்றுப்போயின, எனத் தெரிகிறது. மறுபக்கத்தில் கண்டிய சட்டத்தில் தத்தெடுத்தல்பற்றிவலியுறுத்தும்கொள்கைகள் சட்டபூர்வ அறிமுகத்தைக் கொண்டவையாகத் தெரிகின்றன. புதிய சட்டவாக்கம் தத்தெடுக்கப்பட்ட பிள்ளையை இயல்பான பிள்ளையுடன் சமப்படுத்த முயலுகின்றது (1938 ன் இல. 39 பிரிவு 7 கண்டிய சட்டப்பிரகடனமும் திருத்தக் கட்டளைச்சட்டமும்).
விசேட சட்டங்களின் கீழோ அல்லது பொதுச்சட்டங்களின் கீழோ தத்தெடுக்கப்பட்டால், அனைத்துத் தத்தெடுத்தல்களையும் உள்ளாட்சிசெய்யும் பொதுக்கொள்கையானதுபிள்ளையின் நலனுக்கானதாகவே இருத்தல் வேண்டும் (1941ன் இல.24-பிரிவு 4 (b) பிள்ளைகளைத் தத்தெடுத்தல் கட்டளைச் சட்டம்) இதுஉடன்படிக்கையின் 21ஆம் உறுப்புரைக்குஅமைவானதும், அடிப்படையானதுமாகும். தற்போதுள்ள உள்ளூர் தத்தெடுப்புகளுக்குரிய அதே பாதுகாப்பும் நியமங்களும் நாடுகளுக்கிடையிலானதத்தெடுப்புகளுக்குக் கிடைக்க வேண்டுமென்பதை உடன் படிக்கை வெளிப்படுத்துகிறது. இலங்கையின் அண்மைக்கால சட்டவாக்க முயற்சிகள், நாடுகளுக்கிடையிலான தத்தெடுத்தல் தொடர்பாக கவனஞ்செலுத்தியிருப்பதுடன், உள்ளூர் தத்தெடுத்தல் தொடர்பாக சட்டங்களை காலத்துக்கேற்றவாறு புதுப்பிக்காது, பிறநாட்டு தத்தெடுத்தலைச்சீர்செய்யும்போக்கைக்கொண்டிருக்கிறது.
குடும்பச் சட்டத்தில், சாதாரணமாக, ஒருவர் குறிப்பிடக்கூடிய பாரம்பரிய பகுதிகளான, அதாவது பாதுகாப்பு,உதவி, நீதிமன்றத்தில் பிள்ளைசார்பாக பிரதிநிதித்துவம் செய்தல்,சொத்துக்களை நிருவகித்தல் ஆகியன தொடர்பான குடும்பச்சட்ட அதிகார எல்லையில், இலங்கைச் சட்டம் அதிகம் அபிவிருத்தியடைந்துள்ளது பெற்றோரின் கூட்டுப்பொறுப்பு,பிள்ளையின் படிவளர்ச்சித் திறன் மற்றும் அந்தரங்க உரிமை, ஆகிய எண்ணக்கருக்களில் குறைந்தளவே அபிவிருத்தியடைந்துள்ளது.உடன்படிக்கையைஇலங்கை உறுதிசெய்தது குடும்பச்சட்டத்திற்கு புதிய கவன ஈர்ப்பைத் தருகிறது.இலங்கையருக்கு கலாசாரரீதியில் வேறுபட்டதாகவோ அல்லது கலாசார ரீதியில் வேறொரு தன்மைகொண்டிருக்கின்றதென்று உணர்த்தப்படுவதாகவோ இருப்பினும், புதிய எண்ணக்கருக்களும் கருத்துக்களும் உள்ளூர்ச் சட்டங்களுக்கு சேர்க்கப்பட வேண்டும்
(VII) தகாத குற்றமிழைக்கப்பட்டப் பிள்ளையின்
உரிமைகள்
பிள்ளைக்கு பெற்றாரோ, பாதுகாவலரோ இல்லாத போது அல்லது பாதுகாப்பும் கவனிப்பும் வழங்கத் தகுதியற்ற பெற்றாரோ, பாதுகாவலரோ இருக்கும் போது கவனிப்பும் பாதுகாப்பும் வழங்கும் தேவையைப்பற்றிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதவானோருவர் (1939ன் 48 ஆம் இலக்கம்) பிள்ளைகள், இளவயதுநபர்கள் கட்டளைச்சட்டத்தின் 34 ஆம் பிரிவின் கீழ் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளார்; தகாத நட்பைக் கொண்டிருக்கிற, அல்லது ஒழுக்கக் கேடுகளுக்குட்படுகிற அல்லது கட்டுப்பாட்டை மீறுகின்ற சந்தர்ப்பங்களிலேயே"கவனிப்புத் தேவைப்படும்”பிள்ளையென்று இது கணிக்கப்படுகின்றது.

205
குறித்த சில குற்றங்களிழைக்கப்பட்ட குழந்தைகளும் இதே வீட்டில் குற்றம் இழைக்கப்பட்ட நிலையில் வாழும்பிள்ளைகளும், "கவனிப்புத்தேவைப்படுகின்ற”வகைக்குட்படுகின்றன (இபிட் பிரிவு 34 (1) (b) ). நெருக்கமான உறவுடைய இரு நபர்கள் கூடி வாழ்தலை தடைசெய்யும் திருமணப்பதிவு பற்றிய கட்டளைச் சட்டத்தினை மீறும் வகையில், இருநபர்களுக்கிடையில் கூடி வாழும் நிலையிலிருக்கும் வீட்டில் வாழும் பெண் பிள்ளைகள் இவ்வகைக்குள் வரும் ஏனைய பிள்ளைகளாவர்.
கட்டளைச் சட்டத்தின் 77 ஆம் பிரிவு, பிள்ளையொன்றுடன் இடத்துக்கிடம் வழமையாக அலைந்து திரியும் ஒரு நபருக்குத் தண்டம் விதிக்கின்றது (குறிப்பு:இப்பிரிவு நடைமுறைப்படுத்தப் படவில்லை). பிள்ளையொன்றுக்கு 77 ஆம் பிரிவின் கீழ் குற்றமிழைக்கப்பட்டிருப்பின், இப்பிள்ளை கவனிப்பும், பாதுகாப்பும் தேவைப்படும் பிள்ளை என்பதைக் கட்டளைச் சட்டம் உள்ளடக்குகின்றது.
கவனிப்பும்பாதுகாப்பும்பிள்ளையொன்றுக்குத் தேவை என்று காணப்படின், நீதிபதியொருவர் பிள்ளையை அங்கீரிக்கப்பட்ட அல்லது அத்தாட்சிப்படுத்தப்பட்ட பாடசாலைக்கு அனுப்புதல் வேண்டுமென உத்தரவிடலாம். அல்லது பிள்ளை 12 வயதையடைந்திருந்தால், பொருத்தமான நபர் ஒருவருக்கு அவர் உறவினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், பிள்ளையைக் கவனித்துக் கொள்ளுமாறு உத்தரவிடுவார். பெற்றோர் ஒருவரை சரியான கவனிப்பை மேற்கொள்ளும் வகையில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தச் செய்து, வேறெந்தத் தொடர்புகளுடனோ, அன்றியோ 3 வருடத்துக்கு மேற்படாத ஒரு குறித்த காலத்துக்கு, ஒரு நன்னடத்தை உத்தியோகத்தரின் மேற்பார்வையின் கீழ் வைக்குமாறும் நீதவானொருவர் உத்தரவிடலாம் (Shifs 35 (1)).
யாதுமொரு பாதுகாவலர் பிள்ளைக்குக் குற்றமிழைப்பதை, முறைகேடாக நடாத்துவதை (பிரிவு 71) குற்றமாகக் கருதச் செய்யும் பொதுப்பிரமாணங்களும் உண்டு. எவ்வாறாயினும் இவை சட்டமாக்கப்பட்டுபல வருடங்கள் கழிந்துவிட்டபோதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பிள்ளைகளுக்கு பாரதூரமான குற்றமிழைத்தல், பாலியல் குற்றமிழைத்தல்கள் பற்றிகுற்றவியல் கோவை (1883 இன் இல, 2) யில் விபரிக்கப்பட்டுள்ளன. முக்கிய குற்றங்கள் கற்பழித்தல் (பிரிவு363), இளம் பெண் பிள்ளைகளை வேட்கையுடன் கற்பழித்தல் (பிரிவு 364 (a) செயற்கையான குற்றங்கள், தாக்குதல், (பிரிவு 345), பாரதூரமான காயம் (பிரிவு 311) பிள்ளையை தாசித்தொழிலுக்குத் தூண்டல் (பிரிவு 360 a) என்பனவாகும்.
குற்றவியல் கோவையில் பாலியற் குற்றமிழைத்தலை, தொடர்ந்தும் பாதுகாத்து, விரிவுபடுத்துவது, சட்டத்தை அமுல்படுத்த உதவுவதாகவும், பாலியல் அத்துமீறல்கள் எனும் விடயத்திற்கு முன்னுரிமையளிப்பதை உறுதிசெய்யும் வகையில் இருக்குமென்பதையும் பிள்ளைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு அண்மையில் நியமிக்கப்பட்ட உரிய குழு சுட்டிக்காட்டுகிறது. ஏனைய சட்டவாக்கங்களுக்கு கீழான குற்றங்களைக் குறைந்த முக்கியத்துவமுடைய குற்றங்களாகக் கருதமுடியும் என்பதை குழு சுட்டிக்காட்டுகிறது ( P. I பிள்ளைகளை தொழிலுக்கமர்த்தல் தொடர்பான அறிக்கை- (உரிய குழு).

Page 108
206
தற்போதுள்ள குற்றங்கள் சிலவற்றையும் வகைப்படுத்தி குற்றவியல் கோவையின் புதிய குற்றங்களாகக் காட்டுவது தற்போதைய சிந்தனையாகும். பிள்ளையைவிட குற்றமிழைத்தவர் மேல் அதிகம் கவனஞ் செலுத்துதலை இது காட்ட வேண்டும். அவ்வாறான குற்றமொன்று இழைக்கப்பட்ட பிள்ளைக்கு விசேட கவனிப்புத் தேவையென்ற விடயத்தை கவனித்தல் முக்கியமானது. தடுப்பு நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தன என்பதைத் தெளிவாகக்காட்டும் கட்டமும் இதுவாகும்.
(VIII) சட்டமுறையற்ற வகையில்
தொழிலுக்கமர்த்தப்பட்ட பிள்ளைகளின் உரிமைகள்
பிள்ள்ைகளைத் தொழிலுக்கமர்த்தல் தொடர்பாக, சட்டத்தொடர்களின் கூட்டு உண்டு. பிள்ளையொன்று தொழிலின் தன்மைக்கும் நேரத்திற்கும் அமைய அத்தகைய தொழிலில் ஈடுபடுவதற்குரிய மாறுபட்ட குறைவான வயதெல்லைகள் பற்றி இவை குறிப்பிடுகின்றன. தொழிற்தன்மையைக் கருத்திற்கொள்ளாது பொருத்தமான குறைவான வயதெல்லையை, குழு இதன் அண்மைய அறிக்கையில் பரிந்துரைசெய்துள்ளது. சர்வதேச ஒப்பந்தங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ள நியமங்களுக்கும், சர்வதேச தொழில் அமைப்பின் நியமங்களுக்கும் ஏற்புடையதாயுமுள்ள 15 வயதை இவர்கள் ஆலோசிக்கின்றனர் (பிள்ளைகள் தொழிலுக்கு அமர்த்தப்படல் தொடர்பான குழுவின் அறிக்கை 1,2).
தொழிற் பயிற்சிக்கும், திறன்களை அபிவிருத்தி செய்யவும், சேர்த்துக்கொள்ளும் போது, குழுவின் கவனத்தில், இவ்வதிகரித்த வயதெல்லை ஏற்புடையதல்ல.
சிறுவர்களைத் தொழிலுக்கமர்த்தலுக்குரிய காரணிகளை இல்லாமற் செய்வதும், நடவடிக்கை மேற்கொள்வதும், பிள்ளைகளைத் தொழிலுக்கமர்த்துவதால் ஏற்படும் விளைவுகளைச் சமூகத்திற்கு அறியச் செய்வதுமே பிள்ளைகள் தொழிலுக்கமர்த்தப் படுவதை இல்லாதொழிப்பதற்குத் தெளிவாகத் தெரியும் முக்கியமான காரணிகளாகும். இவ்விரு நடவடிக்கைகளும் நீண்டகால நடவடிக்கைகளாகும்.
இலங்கையிலுள்ள சட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து அமுல்படுத்த வேண்டும். குறிப்பாக தொழில் திணைக்களமும், இதன் பெண்கள், பிள்ளைகள் நிறுவகமும், குறைந்த உத்தியோகத்தர்களைக் கொண்டிருப்பதுடன், வளங்கள் பற்றாக்குறையாக இருப்பதையும் குழு கண்டுள்ளது. மாகாண மட்டத்தில் கண்காணிப்புக் குழுவொன்றை அமைப்பது குழு செய்த சிபாரிசுகளில் ஒன்றாகும். தற்போதுள்ள தொழில் ஆணையாளர் மாத்திரமின்றி, சிறுவர்நல, நன்னடத்தைத்திணைக்களமும்பொலிஸாரும் வீடுகளைப்பரிசோதனை செய்துசிறுவர்தொழிற் பிரமாணங்களை மீறும் நபர்களை, சட்டத்தின் முன் நிறுத்தும் வகையில் அதிகாரமளிக்கப்பட வேண்டுமென்பது மற்றையதாகும்(முன் கூறப்பட்ட பந்தியில் பக்கம்4)

207
தொழிலுக்கமர்த்தப்பட்டுபாதிக்கப்பட்ட சிறுவர்களை, பாதுகாப்புத் தேவைப்படும்பிள்ளைகளகக் கருதி இவர்கள் மேல் விசேட கவனஞ் செலுத்த வேண்டும் என்பது குழு செய்த பெறுமதி வாய்ந்ததொரு தீர்மானமாகும் (பக். 7). சிறுவர் இளவயதினர் கட்டளைச் சட்டம், பாதுகாக்கப்பட்டவர்கள், உள்ளடங்கத்தக்கதாக திருத்தப்பட வேண்டுமென்பது குழு செய்த அடுத்த சிபாரிசு ஆகும். இங்கு பிள்ளை, பெற்றாருக்கு, அல்லது தாயரிப்புப் பெற்றாருக்கு ஒப்படைக்கப்படுவதை அல்லது கடைசித் தெரிவாக நிறுவகத்திலேயே இருக்கச் செய்வதற்கு உறுதிசெய்தலை வலியுறுத்துகின்றது. இச்சந்தர்ப்பத்தில் நிறுவகமயப்படுத்தல் எனப்படுவது சட்டத்துடன்முரண்படும் சிறுவர்களைவகைப்படுத்தலுக்கு ஒத்ததாகக் கருதக்கூடாதுஎன்பதைக் குழுவலியுறுத்துகின்றது.
சிறுவர்களின் உரிமைகள் பற்றிய உடன்படிக்கையை இலங்கை, உறுதிசெய்தலானதுஉள்ளூர் சட்டத்திற்கு ஒரு அறிமுகத்தைக் கொடுத்து சிறுவர்களினது சுகாதாரம், கல்வி அல்லது உடல், உள, ஆன்மீக ஒழுக்கங்களுக்கு பயமுறுத்தல் விடுக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படும் உரிமையைக் கொண்டுள்ளனர்என்பதை(உறுப்புரை)தெரிந்துகட்டுப்படச்செய்கிறது.அரசாங்க தரப்பில், இதன் சர்வதேச கடப்பாடுகள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், மதிப்பீடு செய்யப்பட்டுள்ள அரை மில்லியன் எண்ணிக்கையைக் கொண்ட, தற்போது இலங்கையில் தொழிலுக்கமர்த்தப்பட்டுள்ளபிள்ளைகளுக்குநிலையானதும் சாதகமானதுமான முயற்சிகள் அவசியமாகின்றது
(IX) முடிவுரை
பிள்ளைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுதல் பற்றி இலங்கை அடிப்படை வரைச்சட்டமொன்றைக் கொண்டிருக்கும் அதே வேளையில், பிள்ளை அபிவிருத்தியில் மாறுபட்டுள்ள தன்மை, ஆயுதப் போராட்டத்திலும் தொழில் செய்வதிலும் ஈடுபட்டுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கையின்படி, இலங்கை எதிர்நோக்கியுள்ள தற்போதைய நெருக்கடி ஆகிய இரண்டாலும் ஏற்படுத்தப்பட்டுள்ளபுதிய சவால்களுடன் நிறுவனங்கள் ஈடுகொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டுமாயின் இவை பலப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது. உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள உரிமைகள் இலங்கையிலுள்ள பிள்ளைகளுக்கு யதார்த்தமுள்ளதாக இருக்கவேண்டுமெனின் தற்போதுள்ளசட்டம்அமுல்படுத்தப்படுவதும் சட்ட மறு சீரமைப்பில், உணர்வு ரீதியான ஸ்திரமான ஆரம்ப முயற்சியொன்றும் விரைவாகத் தேவைப்படுவதாகத் தெரிகின்றது

Page 109
208
அத்தியாயம் 8
இடம் பெயர்வும் தங்குவதற்கான உரிமையும்
1. உள்நாட்டில் இடம் பெயர்ந்தோர்
() அறிமுகம்
பெருந்தொகையான இலங்கையர்களின் இடம்பெயர்வும்நிலைகுலைவும் இத்தசாப்தம் கண்ட மிகத் தீவிர மனிதாபிமான மனித உரிமைப்பிரச்சனைகளில் ஒன்றாகும். ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் நிர் மூலமாக்கப்பட்டு தமது இருப்பிடங்களைக் கைவிட்டு புகலிடம் தேடி ஒடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட நிகழ்வுகள் உலகளாவிய பிரதிபலிப்பை ஏற்படுத்தின.சிலர் பிற நாடுகளில் புகலிடம் தேடிச்சென்றுள்ளனர்.ஏனையோர் இலங்கையினுள் ஏனையஇடங்களுக்கு நகர்ந்துள்ளனர்.இவ்வத்தியாயத்தின் முதற்பகுதிஉள்நாட்டில் இடம்பெயர்ந்தோரைப்பற்றிய தாகும். இரண்டாம் அத்தியாயத்தில் வெளிநாடுகளுக்குபுகலிடம் தேடிச் செல்வோரைப்பற்றி ஆராயப் பட்டுள்ளது. நாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதியில் சுதந்திரத்தமிழர் தாயகம் அமைப்பதற்குப்போராடும் தமிழ்கொரில்லாக்களுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான மோதல் உள்நாட்டினுள் அல்லது வெளிநாட்டிற்குப் புலம் பெயர் வதற்குரிய முக்கிய காரணியாக அமைந்துள்ளது. (அ) வெளிநாட்டு அமைப்புக்களின் வருகையும் அவற்றினது
அறிக்கைகளும்
இரண்டு சர்வதேச அரச சார்பற்ற குழுக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கு 1993ம் ஆண்டு இலங்கைக்கு வருகைதந்தன:ஆசியாவாச் என்ற அமைப்பும் அகதிகளுக்கான யூஎஸ் கமிட்டி(யூ.எஸ்.ஸி. ஆர்) என்பதுமாகும். இக்குழுக்கள் அரசாங்கத்துடனும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடியதுடன் நலனோம்பல் நிலையங்களிற்குச் சென்று இடம் பெயர்ந்த சிலருடனும் உரையாடியது. ஆசியா வாச் தனது அறிக்கையை ஆவணி1ந் திகதி பின்வரும் தலைப்பில் வெளியிட்டது; இலங்கைத் தமிழரை சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதை நிறுத்திவைத்தல் (ஆசியாவாச்பகுதி 5வெளியீடுt) யூ.எஸ்.சி.ஆர்வெளியிட்ட அறிக்கையான மக்களுக்குசமாதானம் வேண்டும்:யுத்தத்தில் சீர்குலைந்திருக்கும்இலங்கையில் அகதிகளை சொந்த நாட்டிற்குத் திருப்பிஅனுப்புதலும் ஒருங்கிணைத்தலும் எனும் தலைப்பில் 1994ம் ஆண்டின் முற்பகுதியில் வெளியிடப்பட்டது. இது இலங்கையைப் பற்றியூ.எஸ்.சி.ஆர் முன்னர்வெளியிட்ட அறிக்கையின் விளைவாகும் அவ்வறிக்கை இலங்கை:அகதிகள் நிறைந்த தீவுஎனும் தலைப்பில் 1991ஐப்பசி மாதம் வெளியிடப்பட்டது
இவ்வறிக்கைகளும் சம்பந்தப்பட்டுள்ள அ. சா.நி. பிரதிநிதிகளுடனான பேட்டிகளும் மற்றும்
ஏனைய அசா.நிறுவன அறிக்கைகளும் இவ்வத்தியாயத்தின் பெரும்பாலான தகவல்களுக்கு ஆதாரமாகவுள்ளன. அத்துடன் ஏனைய துறைகளான ஐநா, மற்றும் அரசாங்கம் ஆகியனவும்

209
விரிவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான ஐநாவின் விசேட பிரதிநிதியாகிய கலாநிதிபிரான்சிஸ்டெங்க் அவர்களின் பணிமுக்கிய மூலமாக அமைந்துள்ளது அரசாங்கம்விசேடபிரதிநிதியை உத்தியோகபூர்வமாகமுன்னர் அழைக்கமறுத்ததைத்தொடர்ந்து இவர் 1993 கார்த்திகை (10-17 கார்த்) இலங்கை அரசினது அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகைதந்தார்.
கலாநிதிடெங்க் கொழும்பு, புத்தளம், அனுராதபுரம்,திருக்கோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள அகதிமுகாம்களுக்குவிஜயம் செய்தார். அவர் அ.சா.நிமற்றும் அரசாங்கப் பிரநிதிகளையும் சந்தித்தார்.ஐ.நா. தகவல் நிலையம் இவ்வருகையைத் தொடர்ந்துவெளியிட்ட அறிக்கை (இவ்வறிக்கை பிரதான தினப்பத்திரிகைகள் வெளியிடவில்லை)யில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
தனதுபல்வேறு இடங்களின் விஜயத்தின் போதுஇடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்குதல்,ஏனைய வசதிகளை அளித்தல் போன்றவற்றில்வளங்களின் கட்டுப்பாடும் ஏனைய விநியோகக் கஷ்டங்களும் இருந்தபோதிலும் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு தனது மனதைக்கவர்ந்ததாக கலாநிதி டெங்க் அமைச்சர்களிடம் கூறினார். இருப்பினும் தொடருகின்ற யுத்தம் இச் செயற்பாட்டிற்கு ஒர் பிரதான இடையூறுமோதல் நடைபெறும்போது சில இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடத்துக்கு திரும்பச் செல்லுவதில் முன்னேற்றம் இருக்காதென்பதையும் அவர் குறிப்பிட்டார். இடம் பெயர்ந்தமைக்கான அடிப்படைக் காரணியை இல்லா தொழிப்பதன் மூலம் மட்டுமே உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் பிரச்சனைகளுக்கு முடிவானதீர்வைக் காணலாமென்றுதனக்குத்தென்படுகின்றதென கலாநிதிபெங்க் கூறினார். எப்படியாயினும் அரசியல் தீர்வு காணப்படாத நிலையில் இடம் பெயர்ந்தோரைமீளக் குடியமர்த்தல்மிகச்சிக்கலான நடைமுறையாகும் சம்பந்தப்பட்ட எல்லோருடைய உணர்வு கலந்த ஒத்துழைப்பும் தேவை. இத்தகைய ஒர் நடைமுறையானது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டோ, அவசரப்பட்டோ செய்யக் கூடியதன்று.
விசேடப் பிரதிநிதியின் இலங்கையைப்பற்றிய அறிக்கை 1994 மாசி, பங்குனி மாதங்களில் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 50வது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பின் இணைப்பாக வெளியிடப் பட்டது (இ/சி என். 4/1994/44/gL/25/1/1994, Toil. டேங்க் இடம் பெயர்ந்தோரின் பின்னணி பற்றிய கூற்று:இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் 1993/94ன் தீர்மானத்தைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்டது. இதன்பின்னர் டெங்க் இலங்கை அறிக்கையென அழைக்கப்படுகின்றது). அவ்வறிக்கையில் பின்வரும் கருத்தினை வெளியிட்டுள்ளர்;
மனிதஉரிமைகளைப் பாதுகாக்கும்நிலைப்பாட்டில் இலங்கையில் ஏனையமக்களிலும் பார்க்க இடம் பெயர்ந்தோர் சில வகைகளில் கூடிய பாதிப்புகளுக்குட்படும் சூழ்நிலையைப் பிரதிநிதியால் உறுதிப்படுத்த முடிந்தது. அவர்கள் பலவந்தமாக மீளகுடியமர்த்தப் படலாம். மிக இலகுவில் சுற்றிவளைப்புக்குட் படுத்தப்படல்,

Page 110
210
சர்வாதிகாரமான முறையில் தடுத்துவைத்திருத்தல்,கைதுசெய்தல், அவர்களதுஉலர் உணவு நிராகரிக்கப்படுதல் அல்லது தொழில் வாய்ப்பு பெறமுடியாத அடிக்கடி நிகழ்வுகள் என்பனவாகும் இடம்பெயராத மக்கள் மோதலின் அழிவுத்தாக்கத்தின் மத்தியிலும் அதிக தன்னம்பிக்கையும் எதிர்த்தாக்குப்பிடிக்கக் கூடியவர்களகவும் இருப்பதும் இனங்காணப்பட்டுள்ளது (பந்தி135).
பிரதிநிதிபின்வருமாறு முடித்துள்ளார்:
யுத்தத்திற்கு அரசியல் தீர்வு எய்தினாலன்றி உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரின் பிரச்சனைகளைத்தீர்ப்பதற்கு அல்லதுமோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் எள்ளளவுநம்பிக்கையும்இருக்கமுடியாதுமோதலில் சம்பந்தப்பட்ட பகுதியினர் யுத்தம் தொடர்வதற்கான தமது எண்ணங்களையும் இலங்கை மக்களின் நலன்களுக்கு விளைவிக்கும் ஆபத்துக்களையும்மிகக் கவனமாகச் சீர்தூக்கிப்பார்க்கவேண்டும் (பந்தி146).
(ஆ) இடம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை
இடம் பெயர்ந்தோரின் சரியான எண்ணிக்கை தெளிவில்லை. சிறிது காலத்துக்கு முன் 011 மில்லியன் மக்கள் புத்தத்தின் காரணமாக (யூஎஸ்.சி.ஆர் அறிக்கை 1991 பி.பி. 2, 18) இடம் பெயர்ந்துள்ளதாகக் கணிப்பிடப்பட்டது 17மில்லியன் மக்களைக் கொண்டுள்ள ஒருநாட்டிற்கு இதுபெருந்தொகையாகவுள்ளது இருப்பினும்எண்ணிக்கை ஒரளவு இப்போதுகுறைந்துள்ளது. இலங்கை அரசு வெளியிட்ட புள்ளி விபரத்தில் 600,000த்திற்கு சிறிது குறைவாக அறிக்கையிடப்பட்டுள்ளது(டெங்பின்னணி கூற்றுஇலங்கை அறிக்கை).
அரசினது தரவுகள் உதவி பெறுவோரை அடிப்படையாகக் கொண்டது. இடம் பெயர்ந்த எல்லோருமே அரசாங்கத்தின் உதவிகளை பெறாதவர்களாகவும் இருக்கலாம்; அதுபோல உதவி பெறுபவர்களில் சிலர் இடம்பெயர்ந்தவர்கள் பற்றிய அரசாங்கத்தின் வரைவிலக்கணத்துக்குள் உட்படாதவர்களா கவும் இருக்கலாம். மேலும் உள்ளூர் அரசாங்க உத்தியோகத்தர்களால் கொடுக்கப்படும்எண்ணிக்கையின் அடிப்படையிலேயே அரசாங்க உதவிகள் வழங்கப்படுகின்ற படியால்,தஈ.வி.புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களுக்கு அனுப்பப்படும்பொருட்களின் அளவைமுடிந்தவரை அதிகரிப்பதுதஈ.வி.புலிகளுக்கு நன்மை பயப்பதாக இருக்குமென்பதால் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் உள்ள பிரதேசங்களில் இவ்வெண்ணிக்கையின் பிசகின்மை பற்றிவினாவெழுப்பப்பட்டுள்ளது
பெருந் தொகையான இடம் பெயர்ந்தோர் தமது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் வதிகின்றனர்; ஏனையோர் நலனோம்பல் நிலையமெனக் கூறப்படும் அரசாங்க ஆதரவுடன் இயங்கும் முகாம்களில் வாழ்கின்றனர். பெரும்பாலும் இடம் பெயர்ந்த முழுத்தொகையினருமே அடிப்படைப்பங்கீட்டுப்பொருட்களுக்கும் ஏனைய பிரதான தேவைகளுக்கும் அரசாங்கத்தில் தங்கியுள்ளனர்.வியுலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் வாழும் 300,000 அளவிலான மக்களும் இதில் அடங்குவர்.

211
(இ) "இடம் பெயர்ந்த நபர்கள்" பற்றிய வரைவிலக்கணம்
இலங்கையின் நிலையில் இடம் பெயர்ந்தோரைப்பற்றி திருப்தியானதும் சரியானதுமான ஓர் விளக்கம் ஏற்படுத்துவதுமிகக் கடினமென விசேட பிரதிநிதிகூறியுள்ளார்.உள்நாட்டில் இடம் பெயர்ந்த பெருந்தொகையினர் விசேடமுகாம்களில் அமர்த்தப்பட்டுள்ளதாலும் அவர்களுக்கு உதவியும் பாதுகாப்பும் சிறப்பாகத் தேவைப்படுவதாலும் அவர்களை இலகுவில் இடம் பெயர்ந்தோராக இனம்காணலாம். இதில் சம்பந்தப்பட்ட பெரும்பாலானோர்1983 அல்லது1990ல் நடந்த பலாத்காரச்சம்பவங்களினால் சிதறியோடியவர்களக இருக்கும் அதேவேளை ஏனையோர் அதே போன்ற கட்டாயச் சூழ்நிலைகளால் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் (உ+ம் குறிப்பிட்ட பிரதேசத்தில் இராணுவநடவடிக்கை, நிலக்கண்ணிகள்) (பந்தி134).
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அவரது 1993ம் ஆண்டு அறிக்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரைப்பின்வருமாறு வரையறைசெய்துள்ளர்
இராணுவ மோதல்,உள்நாட்டுக்குழப்பம், தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள் அல்லது மனிதர்களாலோ அன்றி இயற்கையாலோ ஏற்படுத்தப்படும் அழிவுகள் காரணமாக பெரும் எண்ணிக்கையினர் தீடீரென அல்லது எதிர்பாராதவிதமாகத் தமதுவீடுகளைக் கைவிட்டு ஓடி தமதுநாட்டின் ஏனைய பிரதேசங்களுக்குள் இருப்பவர்கள் (டெங் இலங்கை அறிக்கைபந்தி132)
இவ்வரையறையானது எப்படியிருப்பினும் “பொருத்தமுடைய இடம் பெயர்ந்தோரை” உள்ளடக்கவில்லை.அதாவதுஉடலால் அல்லது பிரதேசம்சார்ந்துஇடம்பெயராதோராகவிருந்தும் ஆனால் இடம் பெயர்ந்தோருக்குரிய சகல அம்சங்களையும் உடையோர். உதாரணத்திற்கு வன்முறையிலிருந்து தப்பியோட விரும்பும் பகுதிமக்கள் த. ஈ. பு. களினால் வெளியேற அனுமதிக்கப்படாதோர் இடம்பெயயர்ந்தவர்களுக்கான பொருத்தமுடையோருக்குள் அடங்குவர்.
இலங்கையின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் ஐந்துவிரிவான பிரிவினுள் அடங்குகின்றனர்: (1) இடம்பெயர்ந்து முகாம்களில் வதிவோர் (2) இடம்பெயர்ந்து முகாம்களுக்கு வெளியில் வதிவோர் (3) அரசாங்கத்தால் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆனால் இன்னமும்முகாம்களில் இருக்கின்றோர் (4) மீளக்குடியமர்த்தப்பட்டுமுகாம்களுக்குவெளியில் வதிவோர் (5) இந்தியாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்டோர்
(i) பங்கீட்டுணவு
1994தை 20 ஆம் திகதியிடப்பட்ட ஆவணத்தில் 1993 கார்த்திகை 30 ஆம் திகதியிலுள்ள எண்ணிக்கையின் படிக்கு இடம் பெயர்ந்தோர் சம்பந்தப்பட்ட பல அரசாங்க முகவர் நிறுவனங்களுள் ஒன்றாகிய மீள கட்டமைப்பு, புனர் வாழ்வு அமைச்சு தாங்கள் நலன் ஓம்பல் நிலையங்களுக்குஉள்ளேயும் வெளியேயும் 573372 நபர்களுக்கு பங்கீட்டுணவுவழங்குவதாகக் கோரியுள்ளது அமைச்சின் புள்ளிவிபரப்படி 71877 குடும்பங்கள் (236,542 நபர்கள்) 493 நலன் ஓம்பல் நிலையங்களில் வாழ்கின்றனர் (அகதி முகாம்களென பெரும்பாலும் அழைக்கப்படுகின்றது). இந் நிலையங்களுக்கு வெளியில் 73,364 குடும்பங்கள் வாழ்கின்றனர் (336,830 நபர்கள்).

Page 111
212
குடும்பத்தின் எண்ணிக்கைக்கமைந்ததான விழுக்காட்டு முறையில் உள்ளூர், கூட்டுறவு கடைகளில் தமது உலர் உணவு வகைகளை வாங்குவதற்கு வசதியாக கூப்பன்கள் வழங்கப் பட்டுள்ளன. பங்கீட்டுணவுவழமையாக அரிசி, பருப்பு, பாசிப்பயறு, தேங்காய் எண்ணெய், சீனி என்பனவாகும். முகாம்களுக்கு வெளியில் வதிவோர் தமது கூப்பன்களை உதவி அரசாங்க அதிபரிடம் பெறுவர் (உள்ளூர் அதிகாரிகள்) (டெங்க் இலங்கை அறிக்கை, பந்தி55).
நாட்டின் 25நிருவாக மாவட்டங்களில் 6ற்கு உணவுஉதவிவழங்குவதில் உலக உணவு திட்டமும் (டபிள்யூ எவ், பி) சம்பந்தப்பட்டுள்ளது. கொழும்பு, புத்தளம், அனுராதபுரம், குருநாகல், பொலநறுவைமாவட்டங்களிலுள்ள 162 நிலையங்களில் ஏறத்தாழ 55,000 நபர்களுக்கு உலக உணவுத்திட்டம் உதவிவழங்குகின்றது(டபிள்யூஎவ்யி ஆவணம்). அரசும் வி.புலிகளின் கட்டுப் பாட்டிலுள்ள பிரதேசங்களுக்கு உணவு வழங்குகின்றது.ச.தே.செ. சங்கம், ஏனைய சர்வதேச நிறுவனங்கள் உள்ளூர் அ. சா. அமைப்புக்கள் என்பன போக்குவரத்து விநியோகம் ஆகிய உதவிகளை வழங்குகின்றன. மக்கள் சிலவேளைகளில் அரசு வழங்கும் தமதுபங்கீட்டுணவை காய்கறிபோன்றஏனையவற்றைவாங்குவதற்காக விற்கின்றனர்.என்னோடு நடத்தியபேட்டியின் போதுஓர் நிவாரணம் வழங்கும் அதிகாரி அகதிகளுக்கு வழங்கப்படும் உணவுகலோரி அளவில் மிகக் குறைவு என்றார்.ஆனாலும் இடம்பெயர்ந்தோர்மத்தியில் பாரதூரமான போஷாக்கின்மை இல்லை என்பதும் அவர் நிலைப்பாடு.பெரும்பாலான இடம்பெயர்ந்தோர் தமதுபங்கீட்டுப்பற்றாக் குறையை வேறு வழிகளின்மூலம் பதிலீடு செய்கின்றனர் என்பது அவரது கருத்து இடம் பெயர்ந்தோர்மத்தியில் சேவையாற்றும் அரசசார்பற்ற அமைப்புப் பிரதிநிதியும் இக் கருத்திற்கு உடன்பட்டார். உள்ளூர் அதிகாரிகள் உண்மையாக வழங்கும் நிவாரணம் தொடர்பான நடைமுறையில்தாராள அதிகாரஉரிமைஉடையவர்களாக இருக்கின்றனரென பிரான்சிஸ்டெங்க் குறிப்பிட்டுள்ளார்; (பந்தி 66)
(i) முகாம்களின் நிலை
பெரும்பாலான சமூக சேவை ஊழியர்களும் ஏனைய அவதானிப்பாளர்களும் அரசாங்கம் பங்கீட்டுணவு விநியோகிப்பதில் போற்றுதற்குரிய பணியாற்றுகின்றதென அங்கீகரித்துள்ளனர். இருப்பினும் முகாம்நிலைமைகளை மேலும் முன்னேற்றலாம் என்பதை அவர்கள் ஏற்றுள்ளனர். நலன் ஓம்பல்நிலையங்கள் பலவற்றில் நிலவும்வாழ்க்கை நிலைமை“முன்னேற்றத்திற்கு ஏங்கும் நிலை” என ஐ.நா. விசேடப்பிரதிநிதி கூறினார்; இருப்பினும் வளங்களின் பற்றாக்குறை, இடநெருக்கடி ஆகியவற்றையும்தான் உணர்வதாகவும் குறிப்பிட்டார்(டெங்க் சென்றபின்னர் ஐ.நா தகவல் நிலையம் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையுடன் இலங்கை அறிக்கையையும் பார்க்கவும்பந்திகள் 57-59)
திருக்கோணமலையிலுள்ள கிளப்பன் பேக் முகாம்போன்ற சிலமுகாம்கள் மோசமான வாழ்க்கை நிலைக்கு பிரபல்யம் பெற்றவையாக மாறியுள்ளன (யூ.எஸ். சி. ஆர், மக்களுக்கு,வேண்டும் சமாதானம்பந்தி 1-12).
வசதிகள் பற்றாக் குறையும் குடிதண்ணிர்த் தட்டுப்பாடும் குறிப்பிட்ட பிரச்சனைகளாக இனங்காணப்பட்டுள்ளன (டெங்க் இலங்கை அறிக்கை பந்தி 60). முகாம்நிலைமைகளிலும் வேறுபாடுகள் உண்டு தற்காலிக நிலைமாற்றுமுகாம்களுக்கு ஆரம்பத்தில் அனுப்பப்படுகின்ற இந்தியாவில் இருந்துதிரும்பிவருபவர்களுக்குக்கூடியவசதிகள் கிடைக்கின்றன. அதேபோன்று

213
சில உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களுக்கும் கிடைக்கின்றன. ஆனால் திருகோணமலை கிளப்பன்பேர்க் முகாமில் அமர்த்தப்பட்டுள்ளதாயகம் திரும்பிவந்தோர்.அந்த முகாம்களில் உள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் அனுபவிக்கும் வெறுக்கத்தக்க சூழ்நிலைகளையே தாமும் அநுபவிக்கின்றனர். புத்தளம் மாவட்டத்திலுள்ள சிலமுகாம்கள் இவற்றிலும் பார்க்க நன்றாக இருப்பதுடன் கொழும்பிலுள்ள முகாம்களை விடவும் நிச்சயமாக சிறந்ததாகவும்உள்ளன.
ஒரு குறிப்பிட்ட முகாமில் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம் பெயர்ந்த சில முஸ்லிம்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.இதற்குரியகாணியைஒரு உள்ளூர்கொடைவள்ளல் வழங்கியிருப்பதற்கு நன்றிகூறவேண்டும். இவர்கள் சிறுகுடிசைகளை அமைத்துள்ளார்கள். சிலரிடம் மோட்டார் சைக்கிள், தொலைக்காட்சிப்பெட்டிகள் கூட உண்டு புத்தளம்மாவட்டத்திலுள்ள பல முகாம்கள் ஏனையவற்றுடன் ஒப்பிடும்பொழுது இடவசதிகூடியதாக இருப்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது. யூஎன்எச்.சி.ஆர்னால் நிர்வகிக்கப்படும்பகிரங்கநிவாரண நிலையங்கள் உட்பட்டமுகாம்களும் ஏனையவற்றைவிடவசதியாக உள்ளன (ஒ.ஆர்சிஸ்)
(iv) நிவாரணச் செலவு
திரும்பிவந்த அகதிகளுக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர்களுக்கும் அரசு நிவாரண உதவி வழங்குகிறதுநிவாரண ஏற்பாடும்மீளக்குடியமர்த்தலும்புனர்நிர்மாண மீளக்குடியமர்த்தல்,சமூக நலனோம்பல் அமைச்சினால் ஒருங்கிணைக்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் மீளக்குடி யமர்த்தல் புனர்நிர்மாணம் இடம்பெயர்ந்தோருக்கான நிவாரணம் ஆகியவற்றிற்கு முடிவுற்ற 1992ம் ஆண்டுவரை உத்தேசமர்கயூஎஸ்.$319மில்லியன் செலவழிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் 1953 மில்லியன் ரூபாய்கள் (உத்தேசம் யூஎஸ். $ 40.7 மில்லியன்) 1992ல் செலவிட்டுள்ளது. இத் தொகையில் ரூபா 1844 மில்லியன் (யூஎஸ்.$348 மில்லியன்) உணவு போக்குவரத்துவிநியோகம் ஆகியவற்றுக்குச் செலவிடப்பட்டுள்ளது(யூஎஸ்.சி.ஆர்.ப.1)
“மீளக்குடியமர்த்தல் புனர்நிர்மாணம்” எனக்குறிப்பிட்ட விடயத்திற்கு ரூபா 1669 மில்லியன் செல்வழிக்கப்பட்டுள்ளது (348 யூஎஸ். $). அரசாங்கம் 1992ம் ஆண்டில் உள்நாட்டில் இடம் பெயர்ந்த நபர்கள் மற்றும் திரும்பிவந்தோருக்கான நிவாரணம், மீளக்குடியமர்த்தல் தொடர்பாக ரூபா 3623 மில்லியன் மொத்தம் செலவுசெய்துள்ளது(யூஎஸ் $755மில்லியன்).இவ்வறிக்கை தயாரித்த நேரம்1993க்கான தொகையைப் பெறமுடியவில்லை.
உள்நாட்டு அரசாங்க கட்டமைப்பில் நிலவும் குழப்பநிலை காரணமாக பணக் கொடுப்பனவுகள் சிக்கலாக்கப்பட்டுள்ளன.உள்நாட்டு அரசாங்க அமைப்பு முழுமையான ஒரு மாற்றத்திற்குட் படுத்தப்பட்டது. அரசாங்க அதிபர் முறை பெரும்பாகச் செயலாளர்கள் முறையால் ஈடு செய்யப்பட்டது எப்படி இருப்பினும் இவ்வுத்தியோகத்தர்களின் சரியான கட்டுப்பாடுகள்,பணிகள் தொடர்பாக குழப்பநிலை இன்னமும்நிலவுகின்றது. அரசாங்கம்மோசமான நிதிப்பற்றாக்குறைப் பிரச்சனைக்குள் மூழ்கியுள்ளது. நிதி ஒதுக்கப்பட்டு இருந்தும் கூட திறை சேரியிலிருந்து நேரடியாக பணத்தைப் பெற்றுக்கொள்வதில் அரசாங்கமுகாமைநிலையங்கள் சிரமப்படுகின்றன (டெங் இலங்கை அறிக்கை பந்தி 68)

Page 112
214
இடம் பெயர்வு தொடர்கின்றவரை, இடம் பெயர்ந்த மக்களுக்கான உணவுப் பங்கீடே ஆகக்குறைந்த முழுமையான உதவியாக இருப்பதால் இதன் அவசியத் தேவை தொடர்ந்தும் இருக்கும் என பிரான்சிஸ் டெங்கருதுகின்றார். உறை விடத்தின் தரம் போன்ற ஏனைய சேவைகள் மேலும் முன்னேற்றப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் (டெங் இலங்கை அறிக்கை பந்தி147)
(v) ஊழல்
எல்லாயுத்தங்களிலிருந்தும்மக்கள்பணம்ஈட்டிக்கொள்வார்கள். இலங்கையின் இனமோதலும் இதற்குஒருவிதிவிலக்கன்று.இத்தகையமோதல்களல்கிடைக்கும்பண ஆதாயம்இம்மோதலை நீடிப்பதற்குரிய பலமான ஒரு தூண்டு கோலாக உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் ஊழல் நிலவுவதாக சமூகசேவைஊழியர்கள்கூறுகின்றனர்.குறிப்பிடத்தக்க இலாபம்ஈட்டும்விடயமாக உணவுவிடயம் உள்ளது இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவுஉண்மையாகவே தேவையான மக்களுக்குகிடைக்காமல் போகலாம் சில சந்தர்ப்பங்களில் கொழும்பிலிருந்துஅனுப்பப்படுவதற்கு முன்னதாகவேசூறையாடப்பட்டு விடுகின்றது. அகதிகளுக்கான ஐக்கிய அமெரிக்க குழு தனது அறிக்கையில் ஊழல் கட்டுக்கடங்காமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இவ்வூழல் சம்பந்தமான கூற்றுக்களுக்கு ஆதாரமாக மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் தமது அறிக்கையில் கூறியுள்ளனர். இருப்பினும் ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது மிகவும் கடினம்
வடக்குக்கு உணவுப்பொருட்கள் கொண்டு செல்வது தொடர்பான மிகப்பெரிய ஒரு ஊழல் மோசடியை மீளக்குடியமர்த்தல், புனர்நிர்மாணம், சமூகநலனோம்பல் அமைச்சு 1993ஆவணி மாதம் கண்டுபிடித்தது. மோசடி செய்யப்பட்ட தொகை 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக இருக்கலாம் என முதல் மதிப்பீடுகளில் கூறப்பட்டது.
கொழும்பில் உள்ள களஞ்சியசாலைகளிலிருந்துஎன்றுமே அனுப்பாத உணவுக்கும் அரசாங்கம் கொடுப்பனவு செய்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CD) மேற்கொண்ட விசாரணையில் இரண்டுவருடகாலமாகஇம்மோசடி நடைபெற்றுள்ளதுஎனத் தெரியவந்துள்ளது (நிலைமை தெரிவிப்பு அறிக்கை,1993ஆவணி) விசாரணை நடவடிக்கைகளின் முடிவுகளை இன்னமும் பகிரங்கப்படுத்தவில்லை. அதிஉயர்மட்டத்தில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்டுள்ளத னாலேயே தாமதம் ஏற்படுவதாக ஊகிக்கப்படுகின்றது.
வடக்குக் குடா நாடு சிலகாலமாக இலங்கை அரசாங்கத்தினால் பொருளாதாரத் தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.பலபொருட்களை விடுதலைப்புலிகள் அரசாங்கத்துடனான யுத்தத்திற்கு உபயோகிக்கலாம் என்றதன் அடிப்படையில் “தடைசெய்யப்பட்ட”பொருட்களாகப்பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன.இவற்றுள் சில மண்ணெண்ணெய் நீங்கலாக மருந்துப்பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் தேய்வு நீக்கிகள் என்பனவும் அடங்கும்
தரைப்பாதையினூடாகத் தொடர் வாகனங்களின் மூலம் அல்லது கடல் மார்க்கமாக உணவும் ஏனைய அடிப்படைத் தேவைகளும் அரசாங்கத்தினால் அனுப்பப் படுகின்றன. உணவு வாகனங்களை வடக்குக்கு வீதி ஊடாகவும் கடல் மார்க்கமாகவும் பாதுகாப்பாக அழைத்துச்

215
செல்வதில் செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபட்டுள்ளது(வடகிழக்குநிலைமைகளை விவாதிப்பதற்கு வடகிழக்குயுத்தம்பற்றிய அத்தியாயத்தையும்பார்க்கவும்).
தற்போதைய நடைமுறை அமைப்பில்பெருமளவுதிறமையீனம் காணப்படுகின்றது.இலங்கையின் கிழக்கு கரையில் உள்ள திருகோணமலையில் அரைக்கப்படும் கோதுமைமா மேற்குக் கரையோரத்தில் உள்ளகொழும்புக்கு அனுப்பப்பட்டு திருகோணமலையைக் கடந்து செல்ல வேண்டிய வடக்கிலுள்ள யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் கப்பல் மூலம் அனுப்பப்படுகின்றது. இத்தகைய ஏற்பாடுகள், நிவாரண வழங்கல் செலவை அதிகரிப்பதுடன் வர்த்தகர்கள் அடிக்கடி பெரும் இலாபம் ஈட்டுவதற்கும் வழிசெய்கின்றது
இடம்பெயர்ந்த நபர்களுக்கு ஒதுக்கப்பட்டு செலவுசெய்யும் நிதி தொடர்பாகக் கணக்கு ஆய்வு முறைகளை அறிமுகப் படுத்துவது அரசாங்கத்துக்கு நன்மை பயக்கும் என்பதில் எந்தவித ஐயுறவுமில்லை.இதற்கு குறிப்பிடத்தக்க நிதிவளமும்,மனித வளமும் தேவைப்படும் அதேவேளை தற்போதைய அமைப்புமுறையில் இருக்கும் குறைபாடுகளை இனம்காண்பதுடன் பதில் சொல்ல வேண்டியபொறுப்பிற்கும் துணைபுரியும் செலவழிக்கப்படும்நிதியின் காரணமாகத் தொடர்ந்து ஏற்படும் தாக்கம்பற்றிய ஒர்மதிப்பீடுமிகப்பெறுமதி உடையதாகவும் இருக்கும்.
(v) பெண்கள்
அகதிமுகாம்களை நாடி ஒடுவதும் இத்தகையதற்காலிக வசிப்பிடங்களில் நிச்சயமற்றதான தங்கியுருப்பும், பெண்களில் விசேட தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. 'வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறதை'உறுதிப்படுத்தும் அடிப்படைச்சுமைபெண்களிடம்பாரப்படுத்தப்பட்டுள்ளது (எஸ். அபயசேகரா,பெண்களுக்குஇடம்பெயர்வுஏற்படுத்திய அநுபவம் இலங்கை நிலைப்பாடு "இடம்பெயர்வும் ஜனநாயகமும்" கொழும்புப்பல்கலைக்கழகம் சட்ட உதவி நிலையம் ஒழுங்கு செய்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை, 1993 ஆவணி கொழும்பு யூ எஸ். சி. ஆர் அறிக்கை),பெண்ணினுடையமனநிலையும்உடல் ஆரோக்கியமும்தனதுவிட்டைவிட்டுஓடியதன் விளைவாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நெருக்கடி மிக்க அகதி முகாம்களில் வெறுமனே உயிர்வாழ்வதற்காகக் கடும்பிரயாசைகளின்மத்தியில் தனதுகுடும்பத்தையும்பேணி வாழவேண்டியுமுள்ளாள். பெரும்பாலும் தமக்கென்ற தனி ஒதுக்கிடமும் விசேட பாதுகாப்பும் இல்லாத காரணத்தினால் பெண்கள் குறிப்பாகப்பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொருகுடும்பமும் தமக்கென கோரக்கூடிய ஒரேயொரு ஒதுக்கிடம் பழைய சேலைகளாலும், பழைய படுக்கை விரிப்புக்களினாலும் உருவாக்கப்பட்ட தனியிடங்கள் மட்டுமே
இம் மோதல் ஏற்பட்ட பிறிதோர் விளைவு பாரிய எண்ணிக்கையிலான விதவைகளாகும் (யூஎஸ்.சி.ஆர் அறிக்கை,பக். 12). கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரு சமூக சேவையாளர் தனது மாவட்டத்தில் மட்டும் 8000த்திற்கும் மேற்பட்ட விதவைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளர். இது ஒருமிகைப்படுத்தியகூற்றாக இருக்கலாமெனினும் அதிக எண்ணிக்கையினர் உள்ளனர் என்பதுமிகத் தெளிவு பெண்களுக்கான அசா. நிறுவனத்தலைவியின் மதிப்பீட்டின்படி 1990 ஆண்டில் மேலும் புதிய மோதல்கள் ஏற்படுவதற்குமுன் 4000ற்கும் மேற்பட்ட விதவைகள் இருந்தனர் என்றும் தற்போதுஇத்தொகை மேலும் அதிகரித்துள்ளதென்றுமதிப்பிட்டுள்ளதாக யூஎஸ்சி ஆர்அறிக்கையிட்டுள்ளதுஇன்போம் (INFORM)தனது 1993ஆவணிஅறிக்கையில் மட்டக்களப்புமாவட்டத்தில் மட்டும்உத்தேசமாக 18000விதவைகள் இருப்பதாகமதிப்பிட்டுள்ளது

Page 113
216
பெண்கள் தங்கள் கணவன்மாரை இழந்ததுமட்டுமன்றி, புத்திரர்களையும் இழந்துள்ளனர். சில சந்தர்ப்பங்களில் தமது கணவன் அல்லதுபிள்ளைகள் உயிருடனிருக்கிறார்களஎன்பதுகூட அவர்களுக்குத் தெரியாதுள்ளது. அவர்கள் எளிதாகக் காணாமல் போயிருப்பர் (டெங் இலங்கை அறிக்கை, பந்தி.64). அத்தகைய, பெண்களின் ஜீவனோபாயத்திற்கும், சுயபாதுகாப்பிற்கும் விசேடமாக அகதிமுகாம்களில் உத்தரவாதமில்லாதுள்ளது
குடும்பத்தின் உழைப்பாளிகளாகவுள்ள கணவன்மாரை அல்லது புத்திரர்களை இழந்த பெண்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை அரசு கொண்டுள்ளது. கணவன்மாரை இழந்த பெண்களுக்கு ரூபா 50,000 (ஏறத்தாழ $1,040) ஒரு மகனை இழந்தவருக்குரூபா 25000 கொடுக்கப்படுகின்றது.இருப்பினும் விண்ணப்பிக்கும் நடைமுறை மிகச்சிக்கல் நிறைந்தது குறிப்பிடத்தக்க தொகைப்பெண்கள் விண்ணப்பிக்காமலிருக்க முடிவு செய்துள்ளனர் அமைச்சு அறிக்கையும் யூ.எஸ்.சீ.ஆர் அறிக்கையும்(அசா.நிபிரதிநிதியுடன் இணைந்து) ஆனால் பெண்கள் விண்ணப்பித்தாலும் கூட நஷ்டஈடு பெறுவதில் பலர் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒரு குடும்ப உறுப்பினரைக் கொண்டுள்ள குடும்பங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு கஸ்டப்படுகின்றன; அவர்கள் வருமானத்தை உறுதிசெய்ய வேண்டியுள்ளது. அகதிமுகாமில் பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டியுள்ளதுடன் அங்கு பிள்ளைகளைக் கவனிப்பாரற்றும் விடுவதால் எண்ணற்ற ஆபத்துக்களையும் இது தோற்றுவிக்கும்(டெங் இலங்கை அறிக்கை பந்தி 64).
(vi) உயிர்வாழ்வதற்கான உரிமையும், சுதந்திரமும்,
தற்பாதுகாப்பும்.
பெருந்தொகையானகைது, காணாமல் போதல், விசாரணைகள், தாக்குதல்கள் என்பன இலங்கையில்1993ஆம் ஆண்டிலும் மேலும்தொடர்ந்தன(குடியியல் அரசியல் உரிமைகள்பற்றிய அத்தியாயத்தின் தனிமனித கெளரவம் தொடர்பான பகுதியைப் பார்க்க). இடம்பெயர்ந்தோர் குறிப்பாகச் சுற்றிவளைப்பு, கட்டாயத்தடுப்புக்காவல், கைது நடவடிக்கை ஆகியவைகளுக்கு எளிதில் ஆளாகின்றனர்(பெங்இலங்கை அறிக்கைபந்திகள் 77,135).சில பெண்கள் கற்பழிக்கப் பட்டதாகவும்முறையிட்டுள்ளனர் (ஐபிடி). திருக்கோணமலை மாவட்டத்திற்கு திரும்பிவந்தோர், பலவந்தக்கைது இழிவான வார்த்தைகள், அடிஉதை, துன்புறுத்தல், அடிக்கடி சுற்றிவளைப்பு ஆகியவற்றுக்குட்படுவதாக முறையிட்டுள்ளனரென ஆசியாவாச்அறிக்கையிட்டுள்ளது.ஆசியா வாச்சின் 1993 ஆவணி 11இல் வெளியிட்ட அறிக்கையின் பகுதி Vஇல் துன்புறுத்தல், பயமுறுத்தலிற்கான உதாரணங்களை வழங்கியுள்ளது.இனித்தொடரும்பந்திகளில் ஆசியாவாச் அறிக்கை என வழங்கப்படும்
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுள் இருக்கும் கிராமங்களுக்குச் செல்ல விரும்பும் தாயகம் திரும்பிவந்தோருக்கு இராணுவத்தாக்குதலுக்குட்பட வேண்டிய சாத்தியக் கூறு உண்டு. இராணுவம், விமானப்படை, கடற்படை என்பன விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுள்இருக்கும் பிரதேசங்களில்எதிர்பாராததாக்குதல்களை காலத்துக்குக்காலம்மேற்கொள்கின்றனர்.இவற்றுள் விமானத்தாக்குதல், கடற்படையினரின் ஏவுகுண்டு (செல்) தாக்குதல், சிலவேளைகளில்

217
தரைப்படையின் கவச வண்டிகளின் உதவியுடன் நடக்கும் தாக்குதல் என்பனவும் அடங்கும். (ஆசியாவாச்அறிக்கை,ப9).
மனிதஉரிமைக்கான ஐநா ஆணைக்குழுவினால் நிறுவப்பட்ட வலுக்கட்டாயமாகத் திணிக்கப் பட்ட அல்லது சுயவிருப்பின்றிக் காணாமற்போவோர் சம்பந்தமாக ஆராய்ந்த செயற்குழுவானது இடம்பெயர்ந்தோர் தடுப்புக் காவலுக்கும் காணாமற் போவதற்கும் இலகுவில் உட்படுவதாக ஆணைக்குழுவின் 50வது கூட்டத்தொடரில் (1994) சமர்ப்பித்த தனது அறிக்கையில் கூறியுள்ளது (ஐ.நா. ஆவணம் இ/சி என்.4/1994/26,பந்தி440) “நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்கள்’ தடுப்புக்காவலிலுள்ளதாகவும் இவர்களுட் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தமக்குமுறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக செயற்குழுகூறுகின்றது.
இடம் பெயர்ந்த நபர்கள் அரசசார்பான தமிழ்குழுக்களின் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகின்றனர். தமிழ் ஈழ விடுதலை அமைப்பு (டெலோ), ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பிடிபி), தமிழ்ஈழமக்கள் விடுதலை முன்னணி (புளொட்) போன்ற அமைப்புக்களினால் தாம் துன்புறுத்தப்படுவதாகவும்பலர்முறையிட்டுள்ளனரென ஆசியாவாச்கூறியுள்ளது. விடுதலைப் புலிகளின் அனுதாபியென இக்குழுக்களினால் சந்தேகிக்கப்படும் எந்த நபரும்துன்புறுத்தலுக்கு உட்படவேண்டியுள்ளார். நிவாரண ஊழியர்களும் இக்குழுக்களினால் துன்புறுத்தப்பட்டுள்ளனர் (ஆசியாவாச் அறிக்கை, ப.10)
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழர் அடிக்கடி சுற்றிவளைக்கப்படுகின்றனர் (இதுசம்பந்தமாக குடியியல், அரசியல் உரிமைகள் பற்றிய அத்தியாயத்தைப்பார்க்க, சுயகெளரவம்பற்றிய பிரிவு) இவற்றிற்கு கொழும்பிலும், தெற்கிலும் இருக்கும் இடம்பெயர்ந்த மக்கள் அடிக்கடி உட்படுத்தப் படுகின்றனர்.
1993 ஆண்டு இரண்டு பாரிய சுற்றிவளைப்புக்கள் இடம் பெற்றன. ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச எதிர்கட்சி அரசியல் தலைவர் லலித் அத்துலத்முதலி ஆகியோரின் கொலைகளைத் தொடர்ந்து முதலாவது சுற்றிவளைப்பு நடைபெற்றது. இரண்டாவது ஐப்பசி மாதத்தில் இடம் பெற்றது.இதன் விளைவாக 1993ஆம் ஆண்டின் இறுதி அரையாண்டுப்பகுதியில் 15000க்கும் மேற்பட்ட தமிழர் கொழும்புப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர் (இலங்கை மனித உரிமைகளையும் பாதுகாப்பையும் சமநிலையாக்கல், சர்வதேச மன்னிப்பு சபை, மாசி 1994), இனங்காண முடியாத குழுக்கள்க்ாலைக்கருக்கல்நேரங்களின்போதுகொழும்பில் அடையாளமி டப்படாதவாகனங்களில் சென்று தமிழ் இளைஞர்களையும் சிலவேளைகளில் வயதுமுதிர்ந்த தமிழர்களையும் ஏற்றிச் சென்றுள்ளனர். கைதுசெய்யப்பட்ட பெரும்பாலோர் 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டபின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.வழமையாகப்பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்படுவர்.பெரும்பாலும்டசின் கணக்கில் சிறுஅறைகளுள் நெருக்கி அடைக்கப்பட்டனர். மலசல கூடம், சுகாதாரவசதிகள் பெரும்பாலும்படுமோசமானவையாக இருந்தன. இச்சுற்றிவளைப்புக்களில், விசேடமாக ஐப்பசியில் நடந்த சுற்றிவளைப்புகள் மனக்குழப்பம் தருவதாகும். ஏனெனில் ஜெ.வி.பி. காலத்தின் 1989/90 காலப்பகுதியில் இயங்கிய துணை இராணுவப்பிரிவுகள் போன்ற பல அமைப்புக்கள் இன்னும் இயங்குகின்றன அல்லது அவற்றை குறுகியகால அவகாசத்துள் அழைக்க முடியும்

Page 114
218
கொழும்பில் இருக்கும் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் மிகமோசமான சூழ்நிலைகளுக்கு ஆளாகியுள்ளனர்.அத்துடன் பொலிஸ்,பாதுகாப்புப்படைகளின் துன்புறுத்தலுக்குஉள்ளாகின்ற பலமான சாத்தியங்களும் உண்டு. அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் முகாம்களைக் கட்டுப்படுத்தும்ஈபிடிபிஅமைப்பினரின் துன்புறுத்தலுக்கும்இடம்பெயர்ந்தோர் உட்படுத்தப்படு கின்றனர்(மேலும் பார்க்க,ஆசியாவாச்அறிக்கை ப. 8-12). இடம்பெயர்ந்தோர்தஈவிபுகளின் (இபிட்பக்12) அவதூறுக்கும் ஆளாகியுள்ளனர்.ஆசியாவாச் சென்ற ஒவ்வொரு மாவட்டத்திலும் த.ஈ.வி.புகளின் தவறான செயல்களை முறையிடும்போது அவர்களால் ஒற்றுக்கேட்கப்படுமென்ற மனப்பயத்தை முறையிடுவோரிடம் காணமுடிந்ததாகக் கூறியுள்ளது (இபிட்ய,12-13)தஈ.வி.புலிகளின் கட்டளைகளுக்குப்பணியாத நபர்கள் காணமல் போயுள்ள சந்தர்ப்பங்களையும் ஆசியாவாச் ஆவணமாக வெளியிட்டுள்ளது.
(wi) யூ.என். எச். சி. ஆர் அமைப்பும் பொது நிவாரண நிலையங்களும் (ஓபிண் றிலிப் சென்ரேர்ஸ்)
(அ) பொது நிவாரண நிலையங்கள் நிறுவுவதற் கேதுவான
காரணிகள் (ஒ. ஆர்.சி) உலகளவியமட்டத்தில் உள்நாட்டிற்குள்ளேயே25மில்லியன் இடம்பெயர்ந்த மக்கள் இருக்கின்ற போதிலும் இம்மக்களின் நெருக்கடிநிலைக்குக் கவனம் செலுத்துவதற்கு உலகளாவியமுகவர் அமைப்பு இன்னும் நிறுவப்படவில்லை.
யூஎன்எச்.சி.ஆர் சட்டதிட்டங்கள்உள்நாட்டில்இடம்பெயர்ந்தோரைக் கையாள்வதற்குவேண்டிய அதிகாரத்தை தனது அலுவலகத்துக்குத் தெளிவாக வழங்க வில்லை. இருப்பினும், இலங்கையிலுள்ள இவ்வலுவலகம் இம்மக்களின் சில தேவைகளில் கவனம் செலுத்தியுள்ளது இதன்பிரதிபலிப்பில் ஒன்று திறந்தநிவாரண நிலையங்களை உருவாக்கியமையாகும்(ஒஆர்சி). இந் நிலையங்கள் மடு, மன்னார்தீவு ஆகிய இரு இடங்களிலும் 1991 புரட்டாதி காலப் பகுதியிலிருந்துஇயங்குகின்றன (யூஎஸ்.சி.ஆர்அறிக்கை 1991) ஆரம்பத்தில்இந்நிலையங்கள் தற்காலிக உறைவிடமாகவும்இந்தியாவிற்குஒடிச்செல்வதற்குமாற்றுவழியாகவும்கருதப்பட்டது. ஆனால் அவைஇடம்பெயர்ந்தி மக்களின் நீண்ட காலத்தங்குமிடமாக மாறியுள்ளன. பாரதூரமான மனிதாபிமான பிரச்சனைக்கு ஒர் தனித்துவமான பிரதிபலிப்பாகவும் தடையற்ற பாதுகாப்புக்குஒர்உதாரணமாகவும் இடம்பெயர்ந்தோர்தமதுநாட்டைவிட்டுஓடும்நிர்ப்பந்தத்தி லிருந்துபாதுகாப்புவழங்கும்புகலிடமாகவும்யூஎன்.எச்.சி.ஆர்தனது பொதுநிவாரண நிலையங் களைக் கருதுகின்றது.(டபிள்யு.டி.கிளாரன்ஸ், ஓ.ஆர்.சி.பிறந்த நாட்டில் தாக்குதலின்போது அவசரநிவாரணத்துக்கும் கண்கணிப்புக்குமான ஓர் நடைமுறைச்சாத்தியஅணுகுமுறை(99) 3 அகதிகள் சட்டம்பற்றிய சர்வதேச வெளியீடு,ப322)
பொது நிவாரண நிலையங்கள் என்பவை ஆயுதபாணிகள் பிரவேசிக்க கூடாதென்ற விதிக்குட்பட்ட சில அடிப்படைச் சட்டங்களுக்கு மோதலில் ஈடுபட்டுள்ள இருபகுதியினரும் குறிப்பறிந்து ஏற்றுள்ள தாக்குதலுக்குட்படாத நிலையங்களாகும். அவை தற்காலிகப்

219
புகலிடங்களாகவும் இடம்பெயர்ந்தோர் தடையின்றி வரவும் வெளிச்செல்லவும் நியாயமான பாதுகாபப்பு சூழலில் அத்தியாவசிய நிவாரண உதவிகளைப் பெறக் கூடியனவாகவும் கருதப்படுகின்றன.
எவ்வாறாயினும் அடிப்படைச் சட்டங்கள் பல சந்தர்ப்பங்களில் மீறப்பட்டுள்ளன. மடு முகாமிற்கருகாமையில் விடுதலைப்புலிகளின் தாக்குதலைத்தொடர்ந்துமடுபொதுநிவாரண நிலையத்தைப்பாதுகாப்படைகள் 1993மாசியில் தாக்கினரென அகதிகளுக்கான யூஎஸ்.குழு “மக்கள் வேண்டுவது அமைதி” என்ற தனது அண்மைய அறிக்கையில் கூறியுள்ளது. தஈ.வியு போராளிகள் 1992 புரட்டாதி மாதம் பகிரங்கமாக நிலையத்தினுள் ஆயுதங்களுடன் காணப்பட்டனர். பேசாலை முகாமில் 3 நபர்கள் உள்ளூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இன்னும் அவர்களைக் காணவில்லையென்ற ஒரு சம்பவத்தையும் யூ. எஸ். குழு சுட்டிக்காட்டியுள்ளது. பொலிசார் அவர்கள் கைதுசெய்யப்பட்டதை மறுத்துள்ளனர். (ப13)
(ஆ) ஒ. ஆர்.சி. பொது நிவாரண நிலையம் மடு
மடுவிலுள்ள பொ.நி.நிலையம் ஒரு கத்தோலிக்க ஆலயத்தின் பரந்த இடப்பரப்பில் நிறுவப்பட்டு ள்ளது. கத்தோலிக்க மதத்தினரும் ஏனைய சமயங்களைச் சேர்ந்தவரும் அடிக்கடியாத்திரை செய்யும் இடமாக இதுமுன்னர் இருந்தது. வவுனியாவிற்குமேற்கேயுள்ள மன்னார்மாவட்டத்தில் அமைந்துள்ளதுடன் தற்போதுதஈவியுலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியாகவுமுள்ளது இங்கு 2முகாம்கள் உள்ளன. ஒன்று மடு ஆலயத்திலும் மற்றையதுமடு ஆலயத்துக்கு 10 கி.மீட்டர் தொலைவிலுள்ள பாலம்பட்டியிலும் நிலையத்தின் பொறுப்பில் 30,000க்கும் சிறிது அதிகமான மக்கள் உள்ளனர். இத்தொகையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் உட்பட இந்தியாவிலிருந்து திரும்பிவந்தோரும் அடங்குவர். மடுமுகாம்பெரும்பாலும்இடம்பெயர்ந்தோருக்கான அடிப்படைச் சேவைகள் வழங்குகின்றது. இடம் பெயர்ந்த பலர் பொ.நி. நிலையத்திற்கு வடக்கேயும் மடு முகாமிற்குமத்தியிலும் அமைந்துள்ள கிராமங்களுக்கிடையில்போவதும் வருவதுமாகவுள்ளனர்.
பாதுகாப்புப் படையினர் (ஓ.ஆர்.சி) பொது நிவாரண நிலையம் பின்பற்றும் நடுநிலையைப் பெரும்பாலும் கெளரவித்துள்ளனர். அண்மித்த இடங்களில் குண்டு வீச்சு தாக்குதல் நடந்துள்ளதெனினும்பொதுநிவாரண நிலையத்தின்மீதுகுண்டுவீசப்படவில்லை. இதேபோன்று தஈ.வி.புலிகளும் 1992 வரை இந்த நடுநிலை நிலைப்பாட்டை மதித்தனர். ஆனால் 1992 புரட்டாதி காலத்திலிருந்து த.ஈ.வி. புலிகளின் நிலைப்பாடு மாற்றமடையத் தொடங்கியது. புலிகள் உறுப்பினர் தமதுகோலவுடையில் முகாமிற்குள் பிரவேசிக்க ஆரம்பித்தனர்;அவர்கள் தகவல் நிலையம் ஒன்றை நிறுவியதுடன் தஈ.வி.புலிகளின் கொடியையும் பறக்க விட்டனர். யூ.என்.எச்.சி.ஆர். 1992 இறுதிக் காலப்பகுதியில் மடுவிலிருந்து வெளியேறப் போவதாகப் பயமுறுத்தியது முகாமிற்குள் எந்த ஆயுத பாணிகளும் இருப்பதற்கான தடைக்குட்பட்ட அடிப்படைச்சட்டங்களை மதித்துநடக்கதஈ.வி.புலிகள் சம்மதித்தனர்.இதனைதஈ.வியுஏற்றுக் கொள்வதற்கு தூண்டுகோலாக அமைந்த முக்கிய காரணிசங்குப்பிட்டிப்பாதையைமீண்டும் திறப்பதற்காக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் அவர்கள் ஈடுபட்டிருந்தும் இதற்கு யூஎன்.எச்.சி.ஆர் இனது சமரசமுயற்சி தேவையாகவிருந்ததுமாகும் (ஆசியாவாச்அறிக்கை யூ.என்.எச்.சி.ஆர் இணைந்து)

Page 115
220
இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் மடுவிலுள்ள பொதுநிவாரண நிலையத்தில் 1993ஆம் ஆண்டு ஒரு வகைச் சண்டையில் ஈடுபட்டனர். வவுனியா மாவட்டத்தின் அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களிலிருந்துமடு பொதுநிவாரண நிலையத்தில் தங்கியிருந்த 5700 ஆட்களின் பங்கீட்டுணவை1993 ஆவணியில் அரசாங்கம் நிறுத்தியது.இம்மக்கள் மீள் குடியேற்றப்படவேண்டுமென்பது அரசின் நிலைப்பாடு. இதற்கு முன்னர் வவுனியாவிலிருந்து வந்த பல இடம்பெயர்ந்த மக்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இடங்களுக்குத் தாம் செல்வதற்கு உதவுமாறுபூன்.எச்.சி.ஆரிடம் வேண்டினர். ஆனால் அரசாங்கம் வி.புலிகளின் கட்டுப்பாட்டுள் இருக்கும் பிரதேசங்களுக்கு மீண்டும் செல்ல இடம்பெயர்ந்த மக்களுக்கு அனுமதியளித்திருந்த போதிலும் விபுலிகள் அம்மக்களை அனுமதிக்கவில்லை. (உதாரணம் யூஎஸ்.சி.ஆர்அறிக்கை, ப. 13 பார்க்க)
மடுமுகாமில் வசித்தோர் 6எதிர்ப்புப்போராட்டங்களை ஆவணிமத்திஐப்பசிஇறுதிக்குமிடையில் நடத்தினர். இக்கிளர்ச்சியின் விளைவாகப் யூ.என்.எச்.சி.ஆர். வாகனம் ஐப்பசி 30 இல் சேதமாக்கப்படடது.இத்தகைய கிளர்ச்சிகள் விபுலிகள் அங்கீகாரமின்றி நடக்கமுடியாதென்று சில அவதானிப்பாளர் ஒத்துக்கொள்கின்றனர். சிலர் விபுலிகளின் தூண்டுதலென்கின்றனர் (யூஸ்.சி.ஆர் அறிக்கை பக். 13). யூ.என்.எச்.சி.ஆர் தனது ஊழியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமின்றித் தனது மனிதாபிமான சேவைக்கான ஆணையை தொடரமுடியாதெனக் கண்டு மடுவில் தனது நடவடிக்கைகளை கார்த்திகை 4இல் தற்காலிகமாக நிறுத்தியது (யூ.என்.எச்.சி.ஆர்பத்திரிகை அறிக்கை,1993 கார்த்திகை10)
அரசாங்கம் சுகாதார வசதிகளும் ஏனையநிலைமைகளும்முனைப்பாக வீழ்ச்சியடைந்தபோதும் அங்குவதிவோருக்கு உணவைத் தொடர்ந்தும் விநியோகித்தது(யூ.என்.எச்.சி.ஆர் விபுலிகள் மத்தியில் 1994 முற்பகுதியில் நடந்த பேச்சுவார்த்தை காரணமாக மடுவில் யூ.என்.எச்.சி.ஆர் தமதுபணிகளை மேற்கொள்ள வழியேற்பட்டதுடன் யூ.என்.எச்.சி.ஆர் அங்கு தமதுபணிகளை 1994மாசி20இல் மீண்டும் ஆரம்பித்தனர்)
(x) மீளக்குடியமர்த்தல்
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தல் இடம்பெயர்வு ஏற்படுத்திய எத்தகைய பிரதிபலிப்புடனும்உள்ளர்ந்த தொடர்புடையது அகதிகளைப்பொறுத்த விடயத்தில் தீர்வுக்கான 3 சாத்தியக் கூறுகள் உள்ளன. (1) அவர்களது சொந்த இடங்களுக்குத் திரும்பிச்செல்லுதல் (2) அவர்கள் ஒடிச் சென்றுள்ள இடங்களின் உள்ளூர்மக்களுடன் இணைதல் (3) இவற்றுக்கு புறம்பான ஓர் மூன்றாவது பிரதேசத்தின் மீளக்குடியமர்தலாகும்.
இடம் பெயர்ந்தோர் தமது சொந்த வதிவிடங்களில் சுயமாக மீண்டும் குடியமரின் மட்டுமே சாதாரண நிலை திரும்பியுள்ளதற்குரிய சிறந்த சான்றாகக் கருதலாம்.
தமது இருப்பிடங்களுக்கு மீண்டும் செல்வதற்குரிய சாதகமான சூழ்நிலை இருப்பின் மட்டுமே இருபகுதியினருடனும்சம்பந்தப்படாத மூன்றாமவர்களல்வாக்குவிக்கப்படும்மீளக்குடியமர்தல் இடம் பெறவேண்டும் மக்கள் அகதிகளாக ஓடுவதற்கு தூண்டு கோலாயமைந்த ஆரம்பக் காரணிகள் அகற்றப்பட்டிருக்க வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் இடையூறுமின்றி தமது

221
வாழ்க்கையை மீள ஆரம்பிக்கக் கூடிய பாதுகாப்பான ஓர் சூழ்நிலையில் திரும்பச் செல்லக் கூடியதாக இருக்க வேண்டும்
மீளக்குடியமர்தல்தொடர்பான அரசின்அணுகுமுறைகள்குழப்பமானதாகவுள்ளது அமைதிநிலை நிலவுகிறதென்று காட்டிக்கொள்வதற்காக அரசாங்கம்1992தொடக்கம்மீளக்குடியமர்தல்முயற்சி களைத் தீவிரப் படுத்தியுள்ளது. மீளக் குடிமர்த்தலுக்கான சுமுக நிலையைப் பாதிக்கும் மோதல்களும் சூழ்நிலைகளும் தொடருகின்றபோதும்மீளக்குடியமர்த்தும்முயற்சிகள் தீவிரமாகி யுள்ளன. மீளக்குடியேறுமாறு இடம்பெயர்ந்த மக்களுக்கு கடுமையான நெருக்குதல் கொடுக்கப் படுகின்றது (பார்க்க உதாரணம், டெங் இலங்கை அறிக்கை, ப. 21-23).
சில பிரதேசங்களை பாதுகாப்புப்படையினரால் விடுவிக்கப்பட்ட இடங்களாகப் பிரகடனப் படுத்துவது அரசாங்கத்தின் அணுகுமுறையாகவுள்ளது மீளக்குடியமர்தலுக்குப்பொருத்தமான ஒரு பிரதேசம் இருக்கிறதாவென்பதை அமைச்சு தீர்மானிக்கின்றது. அத்தகைய பிரதேசம் விடுவிக்கப்பட்ட பிரதேசமெனப் பாதுகாப்புப் படையினர் வழங்கும் உத்தரவாதத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது(டெங் இலங்கை அறிக்கை பக்.21). எவ்வாறாயினும் அரசாங்கம் பல இடங்களை துப்பரவாக்கப் பட்டவையென்று குறிப்பிட்டிருப்பினும் பெரும்பாலான இடங்கள் மீள்குடியமர்வுக்கு பொருத்தமற்றவையென அதிகமான (என்ஜிஒ) அசா.நி.வனப்பணிப்பாளர்கருதுகின்றார்.
இத்தகைய விடுவிக்கப்பட்ட இடங்களில் மீள்குடியேறுதலைபாதுகாப்புப்படையினர் தீவிரமாக ஊக்குவிக்கின்றதுடன் இடம்பெயர்ந்தோரிடம் அவர்களது சொந்த இருப்பிடங்களுக்கு சென்று பாதுகாப்பாக வாழலாமென்றும் அடிக்கடி கூறப்படுகிறது.இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் ஆசியா வாச் தான் நடத்திய உரையாடலின் போது அரசாங்கம் மக்களைத் தமது இருப்பிடங்களுக்கு மீண்டும் செல்லுமாறு கட்டாயப்படுத்த முடியாதிருப்பினும் இயன்றளவு அதிகமான மக்களை திரும்பவும் செல்லுமாறு தூண்டுவதில் முயற்சி செய்வதாகக் கூறினரென அறிவித்துள்ளது. இலங்கை ஆயுதப்படைகளும், விடுதலைப்புலிகளும் மீள்குடியமர்தல் நடவடிக்கைகளில் அதிக அக்கறையை வெளிப்படுத்தியுள்ளனரென ஆசியாவாச் தனது அறிக்கையில் கூறியுள்ளது எதிர்ப்பக்கத்தினரின் பாரியதாக்குதலுக்கு எதிரான அரணாகக் குடிமக்கள் விளங்குவதுடன் இருபகுதியினரும் பெருந்தொகையான மக்களின் குடியமர்வை வரவேற்கின்றனர். இராணுவம் கிராமங்களிலுள்ள குடிமக்களை மனிதக் கேடயமாகப் பாவிப்பதாகக் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பிரான்சிஸ்டெங் கூறுகின்றார் (பந்தி73)
முகாம் வாழ்க்கை இடம்மாறிச்செல்வதற்கான அல்லதுஓர் தற்காலிக நடவடிக்கையாகும். அது குறிப்பிட்ட காலம் செல்லும்பொழுது பிறரில் தங்கி வாழும் மனோபாவத்தையும் வளர்க்கும். மக்களை அவர்களது சொந்தஇருப்பிடங்களுக்குமீண்டும் அனுப்புவதின் பெறுமதியைநிராகரிக்க முடியாது. இருப்பினும் இடம்பெயர்ந்த மக்கள் தமது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பவும் சமூகத்துடன் மீண்டும் ஒன்றிணையக் கூடிய முறையிலும் செய்யப்படவேண்டும் குறுகிய அற்ப அரசியல் நோக்கங்களை எய்துவதற்கான தூண்டுகோலாக அமையக்கூடாது

Page 116
222
மீளக்குடியமர்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கியநோக்கம்அத்தகைய நடவடிக்கையில் அகதிகள் பங்குபற்றுவதாகும். ஆனால் இலங்கை அரசின் மீள்குடியமர்த்தல் நடவடிக்கை அ.சா. நிறுவனங்களின் (என்.ஜி.ஓ) ஆட்சேபணைக்கு மத்தியில் சில இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது(இன்போம் அறிக்கை, டெங் இலங்கை அறிக்கை). அரசாங்கத்தின் மீள்குடியமர்த்தல்நிகழ்ச்சித்திட்டம் ஒன்றிணைந்தஉதவித்திட்டமென்று உத்தியோகபூர்வமாக கூறப்படுகின்றது (யூ.எ.இ). நேரடியான பண மானியமும் ஏனைய மறைமுக உதவிகளையும் வழங்குவதனூடாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் தமது முன்னைய சொந்த இடங்களில் மீண்டும்வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு உதவிடும் குறிக்கோளைக் கொண்டுள்ளது. w
ஒன்றிணைந்த உதவித் திட்டத்தின் கீழ்வரும் தேவைகளுக்காக மானியங்கள் வழங்கப்படுகின்றன:
மீளக்குடியமர்வுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூபா 2000 பொருளாதாரமுயற்சிகளை மீண்டும் ஆரம்பிக்கரூபா 2500க்கு குறைவான மாதாந்த வருமானம் உள்ள ஒரு குடும்பத்துக்கு ரூபா 4000
米 மாதாந்தவருமானம் ரூபா 1500 பெறும் ஒரு குடும்பத்திற்குத் தமது சேதமாக்கப்பட்ட
உறைவிடத்தைத்திருத்துவதற்கு புனர்நிர்மானத்துக்கு ரூபா 15,000 (ரூபா 700க்கும் 1500க்கும் இடைப்பட்டவருமானமுடையோருக்கு மேலும் ரூபா 15,000 கடனாகப்பெறும் உரித்துடையர்)
சலுகைவட்டிவீதத்தில் ரூபாத250,000 கடனாகச் சில சூழ்நிலைகளில் வழங்கப்படுகின்றது - சேதமாக்கப்பட்ட வீடுகளைத்திருத்தவும் பொருளாதாரமுயற்சிகளுக்கும் a.
அரசாங்க புள்ளி விபரங்களின்படி அரசு மீள்குடியமர்த்தலுக்கும் புனர் நிர்மானப் பணிகளுக்குமென 1993ஆம் ஆண்டுரூபா2361மில்லியன் ரூபாய்களைஒதுக்கியது(உத்தேசம் ஐ.அ டொலர் 47 மில்லியன்). 1994இல் ரூபா 1887 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது(உத்தேசம் ஐ.அ டொலர் 38 மில்லியன்).
மீளக் குடியேறும் குடும்பங்களுக்கு அரசினால் 3 மாதங்களுக்கு பங்கீட்டுணவு வழங்கப்படுகின்றது. இது 6 மாதங்கள் வரையும் நீடிக்கப்படலாம். உறுதியளிக்கப்பட்ட பண உதவிகள் வழங்கப்படவில்லையென்ற மனக்குறைநிலவுவதாக கலாநிதி டெங்குறிப்பிட்டுள்ளர். உணவுப்பங்கீடு தொடர்ந்து வழங்கப்படும் அதவேளை மீளக்குடியமர்வுமானியம் வீடுகளைப் புனரமைப்பதற்கான நிதி,உற்பத்திமுயற்சிகள்மானியம் தொடர்ந்து வழங்கப்படுவதாக இல்லை (பக்.91 பந்தி23) திருகோணமலை மாவட்டத்தில் 32,062குடும்பங்கள் மீள்குடியமர்வுஉதவிக்கு உரித்துடையவராக விருந்தும் 21627க்குஇன்னமும்மானியம் வழங்கப்படவில்லை (இபிட்).
மீளக் குடியமர்த்தலுக்கான நிதியம்திறைசேரியினால் வழங்கப்படுகின்றது. இந்நிதி பெரும்பாகச் செயலாளர்கள்என அழைக்கப்படும் உள்ளூர் அதிகாரிகளினூடாகவிநியோகிக்கப்படுகின்றது ஏனைய அரச நிறுவனங்களும் இந்நிகழ்ச்சித் திட்டத்தில் சம்மந்தப்பட்டுள்ளன. வீடமைப்பு தொடர்பான விடயங்களில் தேசிய வீடமைப்பு அதிகாரசபை சம்பந்தப்பட்டுள்ளதை ஓர்

223
உதாரணமாகக் கூறலாம் அரசமுகவர்நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதனாலும்திறைசேரியில் நிலவும் கடுமையான பணவரத்துக் குறைவும் சேர்ந்ததன் விளைவாக மானியங்கள் கொடுப்பனவுகள் வழங்குவதில் அடிக்கடிகாலதாமதம் ஏற்பட்டுள்ளது.
மீள்குடியமர்வு வழிகாட்டி ஆணைகளை புனர்நிர்மாண, புனர்வாழ்வு, சமூக நலனோம்பல் அமைச்சு1993ஆம் ஆண்டுவெளியிட்டது.இவ்வழிகாட்டிகள் அசா.நிறுவனங்களினதும்,இடம் பெயர்ந்தோருக்கு சேவையர்ற்றும் ஏனைய அமைப்புக்களின் ஆலோசனையுடனும்வரையப்பட்டது
மக்களை, அவர்களது முன்னைய சொந்த இருப்பிடங்களில் வெறுமனே அமர்த்துவது மாத்திரமின்றி, அச்சமின்றி வாழக்கூடிய இணக்கமான சூழ்நிலையையும் உருவாக்குவதுடன், இடம்பெயர்ந்தோர் தமதுஅன்றாட வாழ்க்கையைமீண்டும் நம்பிக்கையுடன் ஆரம்பிப்பதற்குத் தேவையான சமூக பொருளாதார உசாத்துணைகள் வழங்குவதை உள்ளடக்கியதாகவும் மீளக் குடியமர்த்தல் இருக்க வேண்டுமென வழிகாட்டியில் கூறப்பட்டுள்ளது
தமது சொந்த இருப்பிடங்களுக்கு சுயமாகச் செல்லும் தன்மையே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான குறிக்கோளென வழிகாட்டி மேலும்கூறுகின்றது. துரதிட்டவசமாக எவ்வித அர்ப்பண்த் துடனும் இக்குறிக்கோள் முன்னெடுக்கப்படவில்லை. போற்றுதற்கரிய மீளக்குடியமர்த்தல் வழிகாட்டல்களை அப்பட்டமாக அலட்சியப்படுத்தி அரசின் மீளக்குடியமர்த்தல் நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது இடம்பெயர்ந்தோருடன் நடத்திய பல கலந்துரையாடலின் போது மீண்டும் செல்வதற்கு மிகத்தெளிவாகத் தமது தயக்கத்தை வெளிப்படுத்தினரென பிரான்சிஸ் டெங் சான்றுகள் சமர்ப்பித்துள்ளார் (பந்தி,88).இருப்பினும் நிதி உதவிவழங்கப்படின் அவ்வாறு செல்வதற்கு விருப்புடையவர்களாக வேறு சிலர் இருந்தனரெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் (பந்தி,93).
(x) கொழும்பு அகதி முகாம்களை மூடுதல்
இடம்பெயர்ந்த ஆட்கள் வசித்த கொழும்பிலுள்ள முகாம்களை மூடும் துரித திட்டத்தில் அரச்ாங்கம் 1993இல் ஈடுபட்டது. அதே ஆண்டு 3 முகாம்கள் மூடப்பட்டன. 1993 மார்கழி மாதத்தின் போது 7 முகாம்கள் கொழும்பில் இருந்தன.
முகாம்களை மூடுவதற்கு இரண்டு முக்கியகாரணிகள் தூண்டுகோலாக அமைந்தன.முதலாவது காரணிகமுகமான சூழ்நிலை தோன்றியுள்ளதென்றளண்ணத்தை ஏற்படுத்துவதற்கான விருப்பு இரண்டாவது குறிப்பாக ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் படுகொலையும், விடுதலைப்புலிகள் அதில் சம்பந்தப்பட்டுள்ளனரென்றசந்தேகமும் இம்முகாம்கள் பாதுகாப்புக்கு ஆபத்தானவையென்ற கவலையை ஏற்படுத்தியது. இதற்கு மேலதிகமான ஓர் பரிமாணமும் உள்ளது. அவசரகால விதிகளைப் பாவித்து இடம் பெயர்ந்த ஆட்களைக் குடியமர்த்தப் பல கட்டிடங்கள் பெறப்பட்டன. இவ்விதிகள் 1993இல் மீண்டும் புதுப்பிக்கப்பட வில்லை. இதன் காரணமாக இக்கட்டிடங்கள் சிலவற்றின் உரிமையாளர் அரசாங்கத்துக்குஎதிராகநீதிமன்றத்தை நாடி மீண்டும் உரிமைபெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது.

Page 117
224
கொட்டாஞ்சேனை விவேகானந்தா முகாமில் 1991இலிருந்துவசித்துவந்தவர்களிடம் ஆனி 16ந்திகதி முகாம் மூடப்படுமென்றும் அத்திகதிக்குமுன் வெளியேறவேண்டுமென்றும் சமூக சேவைத்திணைக்களத்தினால் ஆனிமாத முற்பகுதியில் கூறப்பட்டது. மட்டக்களப்புபிரதேச மக்களிடம் தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச்செல்வதற்கு வசதியாக வாகனவசதி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அங்கு வசித்தோர் ஆட்சேபித்தனர். முகாமை ஆனி16இல் மூடிவிடும்முயற்சிதோல்விகண்டது. ஆயினும்பாதுகாப்புப்படையினரின் துணையுடன்ஆனி 30 ஆம் திகதி பிப. 3 மணிக்கு பேருந்துகள் வருவிக்கப்பட்டன. மட்டக்களப்பை சேராத குடும்பங்கள் கொழும்பின் ஏனைய நலனோம்பல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர். மட்டக்களப்பைச்சேர்ந்த ஏனையோர்பெரும்பாலும்பலாத்காரமாக பேருந்துகளில் ஏற்றப்பட்டனர்.
மாணிக்கப்பிள்ளையார் கோயில் முகாம் என்ற கொழும்பில் அமைந்திருந்த பிறிதொருமுகாமும் யூலை 30ம்திகதி மூடப்பட்டது. மட்டக்களப்பைச் சேராத ஏனையோர் கொழும்பில் ஏனைய நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர். இம்முகாம் ஓர் இந்து ஆலயத்தின் நிலப்பகுதிக்குள் அமைந்திருந்தது. கோயில் பரிபாலன சபை வருடாந்த வேல்விழா (இந்து சமய விழா) நடத்துவதற்கு வசதியாக இடத்தைத் திருப்பி ஒப்படைக்குமாறு கேட்டதன் காரணமாக முகாம் மூடவேண்டியுள்ளதென்று காரணம்கூறப்பட்டது அகதிகளுக்கான யூஎஸ். குழுவினர்கொழும்பு மோதரயில் பிறிதொரு முகாமிற்கு விஜயம் செய்துமாணிக்கப்பிள்ளையார் முகாமில் முன்னர் வசித்துமட்டக்களப்புக்குச் சென்று பின்னர் மீண்டும் கொழும்புக்குத் திரும்பியுள்ள சிலருடன் உரையாடியதாகத் தமது அறிக்கையில் கூறியுள்ளனர். இததகவலை “இன்போம்” உறுதிப்படுத்தியுள்ளதுமுகத்துவாரத்திலுள்ள பல அகதிகள்தாங்கள் மட்டக்களப்புக்குமீண்டும் செல்வதற்கு அஞ்சுவதாக யூஎஸ்.சி. ஆர்க்குக் கூறியுள்ளனர். மோதரமுகாம்ஐப்பசிமாதம்மூடப்பட்டது. இம்முகாம்மூடப்படுவதற்குமுன்னர்பொலிசார்அங்கு சென்று 18 வயதுக்கும் 40வயதுக்கும் உட்பட்ட 90 நபர்களை வி.புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கைதுசெய்தனர். இவர்களில் 4 பேர் தடுத்துவைக்கப்பட மிகுதிப்பேர்கள் அடுத்த நாள் விடுவிக்கப்பட்டனர். இது அகதிகளுக்கு நெருக்குதல் கொடுத்து வெளியேற்றுவதற்குக் கையாளப்பட்ட ஓர் நடவடிக்கையென சிலரால் கருதப்பட்டது(இன்போம் அறிக்கை). சமூக சேவைத் திணைக்களத்தினர் இம்முகாம் விரைவில் மூடப்படுமென்பதை றிவிக்கவும்ஒவ்வோர்குடும்பத்துக்கும்ரூபா2000ஆரம்பக்கொடுப்பனவுசெய்வதற்கும்விஜயம் செய்தனர். இக்கொடுப்பனவை 148 குடும்பங்களில் பெரும்பாலானோர் ஏற்க மறுத்ததுடன் முகாமைவிட்டுவெளியேறவும் தாம் தயாரில்லையெனவும் கூறினர் இன்போம் அறிக்கை),
(x) கொழும்பிலுள்ள முகாம்களை மூடுதல் :
ஓர் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு
கொழும்பிலுள்ள ஓர் முகாம் 1993ஆம் ஆண்டில் மூடப்பட்டதற்கு வழிசமைத்த நடவடிக்கைகள் இப்பகுதியில் ஓரளவு விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இடம் பெயர்ந்த மக்கள் இலகுவாகத் தாக்குதலுக்குட்படுவதையும்.தமதுவாழ்க்கையைப்பாதிக்கும்விடயங்கள் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்வதற்கு பங்கு பற்ற இயலாமையையும் இவ்விவரங்கள் வெளிப்படுத்துகின்றன. இவ்விவரங்கள் யாவும் இன்போம் மனித உரிமைகளுக்கான குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை முழுமையாக இல்லாவிடினும் பெருமளவு தழுவியும் 1993 ஆவணி 11இல்

225
வெளியான ஆசியாவாச்அறிக்கையிலுள்ள தகவல்களை இணைத்தும் வெளியிடப்படுகின்றது (முகாம்கள் முடப்படுவதுதொடர்பான இன்போம்விசேட அறிக்கை).
விவேகானந்தா முகாமில் தங்கியிருந்தவர்களிடம் மட்டக்ளப்பு பாதுகாப்பான மீட்கப்பட்ட பிரதேசமாகப் பிரகடனம் செய்துள்ளதால் இவர்கள் மீண்டும் மட்டக்களப்புக்கு அனுப்பப்படுவ ரென்றும் முகாம் ஆனி 16ந்திகதி மூடப்படுமென்றும் சமூகசேவை திணைக்கள உத்தியாேகத்தர்களால் ஆனி 10ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே தினத்தன்று (ஆணி10) இலங்கை பாதுகாப்பு படையினர் மிகப்பாரிய “கடல்காற்று” என்ற புனைபெயரில் வியுலிகளுக்கெதிரான"தேடி அழித்தல்”நடவடிக்கையை மேற்கொண்டனர்.இந்நடவடிக்கையில் விமானப்படை, கடற்படை உதவியுடன் 3000 தரைப்படையினர் ஈடுபட்டனர் (ஆசியாவாச்).
இக்கட்டத்தின் போது 109 குடும்பங்களைச் சேர்ந்த 348ஆட்கள் இம்முகாமில்வதிவோராகப் பதிந்திருந்தனர். இம்முகாம் 1991 பிற்பகுதியிலிருந்து இயங்கிவருவதுடன் கொழும்பிலுள்ள சமூகசேவைத் திணைக்களத்தினால் நிருவகிக்கப்பட்டும் வருகின்றது. விவேகானந்தா மண்டபத்தில் வசித்த பெரும்பாலான குடும்பங்கள் மட்டக்களப்புக்கு மீண்டும் செல்வது பாதுகாப்பானதன்றுஎன எண்ணினர்.அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி 46 குடும்பத்தலைவர்கள் கையொப்பமிட்ட ஒர் விண்ணப்பத்தை ஆனி 16ம் திகதி சமூகசேவைப்பணிப்பாளருக்கு சமர்ப்பித்தனர்.
சமூகசேவை திண்ைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் ஆனி 15 மாலைநேரம் சென்று இவர்களை ஏற்றிச்செல்வதற்கு 16 ஆந்திகதிகாலை ஓர் பேருந்துவருமெனத் தெரிவித்தார். மேலும்இம்முகாமிற்குவழங்கப்படும்உணவும்ஏனையவசதிகளும்16ஆந்தேதிகாலையிலிருந்து துண்டிக்கப்படுமென்றும் அறிவித்தார். இவ்வதிகாரிதங்களிடம் முகாம் அமைந்த இவ்விடம்மூடி முத்திரையிடப்படுமெனக் கூறியதாகவும் இங்கு வசித்தவர்கள் கூறினர்.
இம்மக்களைமட்டக்களப்புக்கு ஏற்றிச்செல்வதற்கென ஆணி16ஆம் திகதிகாலை 6மணிக்கு15 பேருந்துகள் வந்தன. அங்கு வசித்தோர் செல்வதற்கு மறுத்தனர். முகாமுக்கு அண்மையில் ஒர் பொலிஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அதேபோன்று ஒர் இராணுவ வண்டியும் நின்றது. முகாமுக்குள் சில இராணுவத்தினர்பிரவேசித்தனர்.
அ.சா. நிறுவனப்பிரதிநிதிகள் பலர் அங்கு சமூகமளித்திருந்தனர். இராணுவ அதிகாரியுடன் பிரதிநிதிகள் உரையாடினர். இம்முகாமின் பாதுகாப்பு, கட்டுப்பாட்டுக்குப் பொறுப்பாக விருந்த ஈழம்மக்கள் சனநாயகக் கட்சியின் (ஈபிடிபி)உறுப்பினரொருவரும்முகாமுக்கு வருகைதந்தார். (ஈயிடியியும் அரசுக்கெதிராக யுத்தம்செய்யும்ஒர் இயக்கமாக விருந்தது.1987இந்திய இலங்கை உடன்படிக்கையின் பின்னர் ஏனைய சில தீவிர இயங்கங்களுடன் சேர்ந்து பிரதான அரசியல் நீரோட்டத்தில் இணைந்தது. பின்பு விபுலிகளுக்கெதிரான போரில் இவர்களை அரசாங்கம் தம்முடன் இணைத்துக் கொண்டது. கொழும்புமுகாம்களின் பாதுகாப்பும் பொறுப்புஈ.பி.டி.பி. வசம் ஒப்படைக்கப்பட்டது). இந்த அகதிகளிடம்ஈபிடிபிஉறுப்பினர் போவதற்கு விருப்பமாவென வினவினார்.சிலபார்வையாளர்களின் கருத்தின்படிபோவதற்குவிருப்பம் தெரிவித்தோர்ஈபிடிபி ஆதரவாளர்களாகும்.

Page 118
226
முகாமில் இப்பிரயாணம் சம்பந்தமான கருத்து வேறுபாடு நிலவுவதைக் கண்ணுற்ற சமூக சேவைத்திணைக்கள அதிகாரிகள் பேருந்துகளைத் திருப்பியனுப்பியதுடன் திரும்பிச் சென்று விட்டனர்.
இந்நிலையில் முகாமில் பதட்டமும் எதிர்காலம்பற்றிய அவநம்பிக்கையும் நிறைந்த சூழ்நிலை நிலவியது அன்றுஎவ்வித உணவும் அவர்களுக்குவழங்கப்படவில்லை. அறிமுகமில்லாத ஆட்கள் சிலர் அங்குவந்துஉணவுப்பொட்டலங்களை அவர்களுக்கு வழங்கினர். இச்சமயத்தில் அவர்கள் தமதுபிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும்வரை உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்போவதாகத் தெரிவித்துஉணவுப்பொட்டலங்களை ஏற்றுக்கொள்ளவில்லைசிறுவர்நோயாளிகள்முதியோர் மட்டுமேஉணவுப்பொட்டலங்களைப் பெற அநுமதிக்கப்பட்டனர். இவ்வுணவைஏற்றுக்கொள்ளத் தயக்கம்காட்டியதற்கான ஒருபகுதிக் காரணம்ஈபிடிபி வழங்கியிருக்கலாமென்ற ஐயப்பாடாகும் கொட்டாஞ்சேனைப் பிரதேசத்திலுள்ள சில நலன் விரும்பிகளால் இவ்வுணவு அன்பளிப்பு செய்யப்பட்டதென்றுபின்னர் தெரியவந்தது.
ஈபிடிபிஉறுப்பினர்கள் பலர்ஆனி17ஆம் திகதிமுகாமிற்கு வருகைதந்தனர். அவர்கள் உணவு வழங்குவதற்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்வதாக உறுதியளித்ததுடன் முகாமில் வசிப்பவர்களுக்குமதிய உணவும் கொண்டு வந்தனர். ஆனால் ஒரு சில வயதுவந்தோரும் சிறுவர்களும்மட்டுமே உண்டனர்.இவ்வுணவுஈபிடியிஇயக்கத்தினரின் அல்லதுசமூகசேவைத் திணைக்களத்தின் அன்பளிப்பாக இருக்கலாமென்றஐயப்பாடுமக்களிடம் தொடர்ந்துநிலவியது அத்துடன் மட்டக்களப்புக்கு போவதற்கு இணங்கவைப்பதற்கான ஓர் தந்திரோபாய நடவடிக்கையாக விருக்கலாமெனவும் எண்ணினர்.
இக்காலகட்டத்தின் போதுஈயிடியிஆதரவாளர்களுக்கும் ஏனையோருக்குமிடையில் முகாமில் பல மோதல்கள் இடம்பெற்றன.இச்சூழ்நிலை சிறுகுழுக்கள் உருவாகுவதற்குஇட்டுச் சென்றது வெளிப்படையாக ஈ.பி.டி.பி இயக்கத்தை எதிர்க்கின்றவர்கள் முகாமுக்குகொண்டு வரப்பட்ட உணவைப் பெற மறுத்து தங்களது உணவை சமைத்து உண்டனர். ஓர் கர்ப்பிணிப் பெண் ஆனி17ஆம் திகதியன்று மயக்கமுற்று வைத்திய சாலையில் அநுமதிக்கப்பட்டார். இதனால் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. மட்டக்களப்புக்குச்செல்வதற்குத்தாமாக முன்வந்த குடும்பங்களின் எண்ணிக்கை ஆனி18ஆம் திகதி அளவில் 15 அல்லது20 என்ற நிலையில் குறைவாக இருந்தது.
மட்டக்களப்பின் பிரதான இடங்கள்தஈ.வி.புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் ஆனி 20ஆந் திகதி பத்திரிகைகளுக்கு அறிவித்தது. மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து வெளியேறிய தமிழ், முஸ்லிம் மக்களிடம் விசேடமாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலிருந்து ஓடிச் சென்றவர்களை திரும்பவந்து அவ்விடங்களில் வீடுகளை அமைக்குமாறு அதுஅழைப்பு விடுத்தது சமூகசேவைத்திணைக்களம்ஆனி30ஆம் திகதியன்று முகாம்மூடப்படுமென ஆணி24ல் அறிவித்தது.
முகாமிற்கு ஆனி 30 காலை மு.ப. 3 மணிக்கு பேருந்துகள் மீண்டும் கொண்டு வரப்பட்டன. இச்சம்பவத்தின் போது இராணுவம், பொலிஸ் உட்பட பாதுகாப்புப் படையினரும், ஈ.பி.டி.பி உறுப்பினர்களும், சமூகசேவைத்திணைக்கள அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.

227
மட்டக்களப்பில் மீண்டும் குடியேற விருப்பம் தெரிவித்த 38 குடும்பங்கள் முதலாவதாக பேருந்துகளில் ஏற்றப்பட்டனர். இக்கட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேராத பிற மாவட்டத்தைச் சேர்ந்த 21உறுப்பினர்களைக் கொண்ட7குடும்பங்கள் கொழும்பிலுள்ளமோதர முகாமுக்கு அனுப்பப்பட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 40 குடும்பங்கள் திரும்பிச் செல்வதற்குமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இருந்தபோதும்பேருந்துகளில் ஏறுமாறு கேட்கப்பட்டனர். அவர்களை குறோ ஐலண்ட் முகாமுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்பட்டது ஆனால் தங்களை மட்டக்களப்புக்கு பலவந்தமாக அனுப்புவதற்காக வாகனங்களில் ஏற்றும் ஓர் முயற்சியென எண்ணி இதை நம்பவில்லை.
பொலிசார் இவர்களின் பொதிகளை பலவந்தமாகப் பறித்து பேருந்துகளுள் எறிந்தனர். சிலபேர் தமது உடமைகளை எடுப்பதற்கு உள்ளே ஏறினர். வெளியில் நின்ற ஏனையோர் பலவந்தமாக பேருந்தினுள் தள்ளப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது சிலர் தாக்குதலுக்குள்ளாகினர். சமூக சேவைப் பணிப்பாளர் “நீங்கள் ஒன்றும் பேசமுடியாது, பேருந்தினுள் ஏறவும்” எனக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது (இன்போம் அறிக்கை).
பேருந்து மு.ப. 6மணிக்கு கொட்டாஞ்சேனையிலிருந்து புறப்பட்டது. மட்டக்களப்புக்குச் செல்வதற்கு விரும்பாத ஆட்கள் குறோஜலண்ட் முகாமிற்கோ அன்றி மோதர முகாமிற்கோ கொண்டுசெல்லப்படவில்லை மோதர முகாமில் ஆனி30ந் திகதியன்று முய830,மணியளவில் விசாரித்தபோதுமட்டக்களப்பைச்சேராத21ஆட்கள் மட்டுமே விவேகானந்தா முகாமிலிருந்து அங்குகொண்டுவரப்பட்டிருந்தனர்.
விவேகானந்தா முகாமிலிருந்த வவுனியா மாவட்ட 6 குடும்பங்கள் ஆனி 30 பிற்பகல் புகையிரதத்தில் வவுனியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சமூகசேவைதிணைக்களஅதிகாரிகள் ஆனி 1ஆந் திகதி அறிவித்தனர். மோதர முகாமில் மீண்டும் 27பேர் அமர்த்தப்பட்டனர்.23 குடும்பங்களைக் காணவில்லையென அறிவிக்கப்பட்டது
மட்டக்களப்பு பெரும்பாகச் செயலாளர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் அமைப்புக்கள் மீளக்குடியமர்த்தல் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மக்களின் பாதுகாப்பும், இடரின்மையும்உறுதிசெய்தபின்புமட்டுமே ஆரம்பிக்கவேண்டுமெனக் கோரியதாக ஆணி 30ஆந் திகதி வெளியான வீரகேசரி (தமிழ் தினசரி புதினப்பத்திரிகை) தெரிவித்தது. மேலும் மட்டக்களப்பு நகரிற்கு அண்மையிலுள்ள நாவலடியில் மீளக்குடியமர்வோருக்கான தங்குமிடவசதி நிருமாணிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது
விவேகானந்தாமுகாமிலிருந்த ஆட்களைஏற்றிவந்தவாகனங்கள் ஆணி30ஆந்திகதிமுய030 மணிக்குமட்டக்களப்பைச்சென்றடைந்ததாக ஆடி10ஆந்திகதி அங்கிருந்துவந்த அறிக்கைகள் தெரிவித்தன. இம்மக்கள் நாவலடி தற்காலிக முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு 750 குடும்பங்களுக்கு 6 மலசலகூடங்களும் 1 கிணறும் இருந்தது. சமையற் கூடவசதிகள் இருக்கவில்லை,முதல் 3 நாட்களுக்கும் சமைத்த உணவு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது

Page 119
228
கிடுகுமட்டைகளல் கட்டப்பட்டு தரைக்குமண்பரப்பியசிறிய மழைத்துமிக்கும்நிலைக்கமுடியாத கூரைகளைக் கொண்டுள்ள 2 நீண்டகுடிசைகளில் 59 குடும்பங்களைச் சேர்ந்த 195 பேர்கள் நெருக்கி அமர்த்தப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து சென்ற பல நிவாரணத் தொண்டர் ஊழியர்கள் ஆடி5ஆந்திகதி தெரிவித்தனர்.விவேகானந்தாவில் 3 வருடமுகாம் வாழ்க்கைச் சூழ்நிலையை அநுபவித்த மக்களுக்குத் தன்னும் இங்குள்ளநிலைமை நெருக்கடிமிக்கதாகவும் சகிக்க முடியாததாகவும் இருந்தது.
முகாமிலிருந்துஅரைமைலுக்கப்பால் கிணறு இருந்தது பிரதான வீதிக்கு 4மைல் நடந்துசெல்ல வேண்டும்.இதேபோன்று இம்மக்களது பங்கீட்டுணவைப்ப்ெற்றுக்கொள்ளுமாறுபணிக்கப்பட்ட உள்ளூர் கூட்டுறவுக்கடையும் தூரத்தில் இருந்தது.
சமைத்த உணவுவினியோகம் ஆடி2ஆந்திகதி வெள்ளிக்கிழமையன்று இடைநிறுத்தப்பட்டது ஒவ்வொரு நபருக்கும் ஒரு நாளைக்கு ரூபா 11/= பெறுமதியான உணவுப்பங்கீட்டு அட்டை வழங்கப்பட்டது. சீனி, மா, அரிசி மட்டுமே இதன்மூலம் கொள்வனவு செய்ய முடிந்தது. இவ்வட்டைகள் 15 நாட்களுக்குச் செல்லுபடியாகும் நாவலடி முகாமிலுள்ளமக்கள்பங்கீட்டுணவுக் கடைக்கு ஆடி 3ஆந் திகதி சனிக்கிழமை சென்றபோது இப்பங்கீட்டட்டைகளுக்கு உணவுப் பொருள் வழங்குவதற்குரிய அறிவுறுத்தல் கிடைக்கவில்லையெனக் கூறப்பட்டது. முகாம் மக்களுக்கு கிழமை இறுதி இரண்டு நாட்களும் உணவு வழங்கும் பொறுப்பு சமூகநலன் விரும்பிகளினதும் கடமையாக அமைந்தது.
முகாமிற்கு அண்மித்த எவ்விடத்திலும்பாடசாலை இருக்கவில்லை. இதனால் இவர்கள் தமது பிள்ளைகளின் கல்வியைத் தொடர்வதில் அக்கறையிருந்தால் தினமும் 6மைல் தூரம் நடந்து செல்ல வேண்டும்
விவேகானந்தா சபைக்குச் சொந்தமான இடத்தில் முகாம் அமைந்திருந்தாலும் அவர்கள் தமது கட்டிடத்தை ஒப்படைக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தியதாலும்முகாமைமூடவேண்டியிருந்த தென்று காரணம் கூறப்பட்டது. சுமுக நிலை நிலவுகின்றதென ஒரு தோற்றத்தை முன்னெடுப்பதற்கான விருப்பத்தினால் அரசாங்கம் முகாம்களை மூடுவதற்குஉந்தப்பட்டதென்று கொழும்பிலுள்ள முகாம்களில் சேவையாற்றும் அசா. நிறுவனப்பிரதிநிதிகள் கருதினர்.
சமூக சேவைத் திணைக்கள அதிகாரிகள் ஆடி 5ஆந் திகதியன்று மேலும் 2 முகாம்களில் வாழ்ந்தவர்களிடம்(சரஸ்வதிமண்டபம், பம்பலப்பிட்டிபிள்ளையார்கோயில் மண்டபம்,கொழும்பு 4) முகாம்கள் மூடப்படவுள்ள தென்றும், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்கள் எல்லோரும் 1993 ஆடி 15க்கும் 20க்கும்மிடையில் மட்டக்களப்புக்கு அனுப்பப்படுவரென்றும் தெரிவித்தனர். மாணிக்கப்பிள்ளையார் கோயில் முகாம் ஆடிமாத இறுதியில் மூடப்பட்டது. இருப்பினும் சரஸ்வதிமண்டபமுகாம்மூடப்படவில்லை. அசா.நிறுவனப்பிரதிநிதிகள் தமிழ் பாராளுமன்றஉறுப்பினர்கள்மற்றும் ஏனையோர்மேற்கொண்ட ஆதரவுதிரட்டலின்காரணமாக மூடுதல் தடைப்பட்டது மோதரமுகாம் என அழைக்கப்பட்ட கொழும்பிலுள்ள பிறிதொருமுகாம் ஐப்பசிமாதம் மூடப்பட்டது. இங்கிருந்த பெரும்பாலான அகதிகள் மட்டக்களப்பிலுள்ள நாவலடி தற்காலிக முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

229
(xii) கிழக்கு மாகாணத்தில் மீளக்குடியமர்த்தல்
கிழக்குமாகாணம்3மாவட்டங்களைக்கொண்டுள்ளது. அவை திருக்கோணமலை, மட்டக்களப்பு அம்பாறை அரசாங்கத்தின் நிலைப்பாடுயாதெனில் கிழக்குமாகாணத்தில் பெரும்பகுதி அரசின் கட்டுப்பாட்டிலுள்ளதுடன் அங்கு வாழ்க்கை பெரும்பாலும்சுமுகநிலைக்குத்திரும்பியுள்ளதெனப் தாகும் உள்ளூராட்சிமன்றதேர்தல்கள் பெருமளவுசுமுகமாகநடைபெற்றதானதுஅரசாங்கத்தின் இந்தநிலைப்பாட்டை மேலோங்க வைத்துள்ளது எப்படியிருப்பினும் எல்லோரும் இக்கணிப்பீட்டை ஏற்கவில்லை.
திருக்கோணமலைப் பட்டணம் பகற்பொழுதில் மிகச் சுறுசுறுப்பாக இயங்குவதுடன் (டெங் இலங்கை அறிக்கை, பந்தி70) கொழும்புக்குச் செல்லும் பிரதான சாலையும்பகற்காலத்தில் போக்குவரத்துக்குதிறந்துவிடப்பட்டுள்ளது கொழும்பிலிருந்துஅடிக்கடிவாகனப்போக்குவரத்து நடைபெறுகின்றது.திருக்கோணமலையின் வடக்கே இருக்கும் நிலாவெளியிலுள்ள உல்லாசப் பிரயாணிகள் விடுதி மீண்டும் திறக்கப்பட்டு உல்லாசப் பிரயாணிகளையும், ஏனையோரையும் கவர்ந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் த.ஈ.வி.புலிகளின் நடவடிக்கைகள் காணப்படுவதுடன் இப்பிரதேசங்கள் மீளக்குடியமர்த்தலுக்கு உகந்ததாகவும்இல்லை(யூஎஸ்சி ஆர்பக், 67). இம்மாவட்டத்தில் முன்பொருகால்பெருந்தொகை முஸ்லிம்மக்கள் வாழ்ந்தனர். தமிழர்களுக்கும்முஸ்லிம்களுக்கும்1990இல் கலவரம்மூண்டதைத்தொடர்ந்து பெரும்பாலான வர்கள் வெளியேறி விட்டனர்.மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பள்ளிவாசலை 1990 ஆகஸ்ட் மாதம் விபுலிகள் தாக்கினர்.பலமுஸ்லிம்கள் அந்த இடங்களை விட்டு வெளியேறிச்சென்றனர் அவர்கள் தமது பாதுகாப்புக்கு நம்பிக்கையான உத்தரவாதமின்றி மீண்டும் திரும்பிவரப் பின்நிற்கின்றனர்.
அம்பாறை மாவட்டம் பெரும்பாலும் அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இடம்பெயர்ந்த பெரும்பாலான சனத்தொகையினர் அங்கு மீண்டும் குடியேறியுள்ளனர்.
(xiii) மன்னார்தீவில் மீளக்குடியமர்த்தல்
இலங்கையின் வடமேற்குக்கரையிலிருக்கும் மன்னார்த்தீவு வி.புலிகளின் கட்டுப் பாட்டிலிருக்கின்ற பிரதேசத்திற்கு அண்மித்ததாக இருந்தும் 1992ஆம் ஆண்டு மீட்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி மீளக்குடியமர்த்தலுக்குத் தயாராக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது அரசாங்கம்புதினப்பத்திரிகைகள் மூலமாக மக்களை மீளக்குடியேறுவதற்கு வருமாறு விளம்பரப்படுத்தியது ஓர் இலவசபடகுச்சேவை வழங்கப்பட்டதுடன் இடம்பெயர்ந்த சிலரும் அங்கு மீண்டும் திரும்பச் சென்றனர். எப்படியிருப்பினும் 1993 சித்திரை 13ஆம் திகதி மன்னாரில் விபுலிகள் இராணுவம், பொலிஸ், காவலரண்கள் மீது நான்கு தனித்தனித் தாக்குதல்களை மேற்கொண்டதைத் தொடர்ந்து மன்னார்த் தீவில் வன்செயல் மூண்டது. இராணுவத்தினர் தீவு மீது இரவில் அதிகளவு நேரம்பதிலுக்கு ஏவுகுண்டு தாக்குதல்களை மேற்கொண்டனர். இதனால் பலர் விபத்துக்குள்ளயினர்.

Page 120
230
(xiv) முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தல்
வடமாகாணத்திலிருந்து 100,000 முஸ்லிம்மக்கள் அளவில் விபுலிகளினால் வெளியேற்றப்பட் டுள்ளனர். வி.புலிகள் அவர்களை வெளியேறுமாறு கட்டளையிட்டதனால் அவர்கள் 1990ஆம் ஆண்டு ஐப்பசிமாதம் வெளியேறநிர்ப்பந்திக்கப்பட்டனர். (சிறீலங்கா. அகதிகள் நிறைந்ததீவு யுஎஸ்.ஸி.ஆர்பக் 2528)
அவர்கள் புத்தளம், கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள முகாம்களில் தஞ்சம் புகுத்துள்ளனர்.அரசாங்கம்1991ஆம் ஆண்டுகொழும்புக்குத்தெற்கேயுள்ள பாணந்துறை என்ற ஒரு இடத்தில் முஸ்லிம்களை மீளக்குடியமர்த்துவதற்கென ஒரு திட்டத்தை முன்னெடுத்தது. எப்படியிருப்பினும் இதற்காக ஒதுக்கப்பட்ட இடம் சதுப்பு நிலமாக இருந்ததால் முறையான மீளக்குடியமர்த்தல் ஆரம்பிக்குமுன் மண் நிரப்பவேண்டி இருந்தது. இத்தீவில் சில முஸ்லிம்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாக 1993 இறுதியில் அறிவிக்கப்பட்டது.
(xv) குடியேற்றம்
அரசாங்ததின் மீளக் குடியமர்த்தும் திட்டமானது குடியேற்றங்கள் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பாக நாட்டின் வடக்குகிழக்குப்பிரதேசத்தில் நிலத்துக்கான யுத்தம் இனப்போராட்டத்துக்கான ஒர் முக்கிய காரணியாகும். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் கிழக்குமாகாணத்தின் இனச்செறிவைமாற்றுவதற்காக சிங்களவர்களை அங்கு குடியேற்றுகின்றனரென்று அரசு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தெற்கில்நிலவும் நிலப்பற்றாக்குறை காரணமாக அரசாங்க உதவியுடனும் சுயமாகவும் கிழக்கில் அபிவிருத்தியடையாதபிரதேசங்களில் சிங்களமக்கள் இடம்பெயர்வதற்கு இட்டுச்செல்லப்படுவர் என்ற எதிர்க்கருத்துமுன்வைக்கப்படுகின்றது எப்படியிருப்பினும் இப்பிரச்சனை சிங்களவர்க ளுக்கும் தமிழர்களுக்கும் மத்தியிலுள்ள உறவை சீர்குலைத்துள்ள ஆழமான உள்ளார்ந்த ஓர் விடயமாகும் மீளக்குடியமர்த்தல் என்ற போர்வையில் “குடியேற்றத்திட்டங்கள்”தொடரப்படுகின்றதென்ற கவலைநிலவுகின்றது. மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணப்பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யூரிஎச்.ஆர்)1993 ஆம் ஆண்டு சித்திரைமாதம்"காணியும் மனித உரிமைகளும்; கிழத்தின் மீளமுடியாச்சிக்கலும்"என்றதலைப்பில்வெளியிட்டதமதுஅறிக்கையில் இக்கவலையைம்ேலும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாண யூரிஎச்.ஆர்.பின்வருமாறுகுறிப்பிட்டுள்ளது மீளக்குடியமர்த்தல் என்ற போர்வையில் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலம் தமிழர்களை ஆங்காங்கே பொறிக்குள் சிக்கவைக்கும் நடவடிக்கைகளில் துரிதமாக இராணுவமும்நிர்வாகமும் ஈடுபடுகின்றது.தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாதநிலையில் சொத்துரிமை அரசகாணிப்பங்கீடு வழிபாட்டிடங்கள்சம்பந்தப்பட்ட காணரிச்சட்டங்கள் தட்டிக் கேட்க ஆளின்றி துணிச்சலுடன் மீறப்படுகின்றன. பெரும்பாலான நடவடிக்கைகள் யாவும் இரகசியமாக மூடிமறைக்கப்பட்டுள்ளது பாதுகாப்பின்மை காரணமாக தமிழர்கள் கைவிட்டுச்சென்றஇடங்களுக்குதிடீரெனப்பொதுமக்களிற்கு முன்பின் தெரியாத சிங்களப்பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. (பக்.1314).இவ்வறிக்கை குடியேற்றம்தொடர்பான பல ஆதாரங்களையும் பல இடங்களுக்கு சிங்களப்பெயர்கள் சூட்டப்பட்டதையும் ஆவணப்படுத்தியுள்ளது.

231
(xvii) இடம் பெயர்ந்தோரும் தொழில் செய்வதற்கான
உரிமையும்
இப்பிரிவு சட்டக்கல்லூரி மாணவர்கள் பரிசோதனை ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் சமர்ப்பித்த “உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்:தொழில் செய்வதற்கான உரிமை”சட்ட உதவு நிலையம், கொழும்புப் பல்கலைக் கழகம் மார்கழி 1993 என்ற தலைப்பில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சமர்ப்பித்த ஆய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது
சிறுவர்களுக்குக் கல்வியைப் போன்று இடம்பெயர்ந்தவர்களுக்குத் தொழில் முக்கியம். இது க்கியமாகத்ே ப்படும் 6शाé o ற்கும்மேலாக அவர் ய வாம்வில் சுமுக நிலையும், சுதந்திர உணர்வும் ஏற்படுவதற்குஉதவுகின்றது.
பெரும்பாலான இடம்பெயர்ந்தோர் தொழில் இன்றி உள்ளனர். தொழில் வாய்ப்பு வசதிகள் மிகக்குறைவுசிலபேர் குறிப்பாக கொழும்பில் உள்ள முகாம்களில்வதிவோர் அன்றாடக்கூலியாட் களகவும் வீட்டுப்பணியாளர்களாகவும் தொழில் பெற்றுள்ளனர்.கிராமப்புறங்களில் உள்ள இடம் பெயர்ந்தோர்மத்தியில் தொழில் இல்லாதோர் விகிதம் மிக அதிகமாக இருந்தது ஆண்களை விடபெண்களே தொழில் பெற்றுள்ளதாகக் காணப்படுகின்றது.ஆண்களிலும்பார்க்க பெண்கள் தொழில்நாட்டத்தில்அதிக ஆர்வம்உள்ளவர்களாகக்காணப்பட்டனர்.நகரவர்த்தகர்கள் குறைந்த சம்பளத்தில்கூலியாட்களைத்தேடிமுகாம்களுக்குவருவதாக அறிவிக்கப்பட்டதுகொழும்பிலுள்ள குறோஐலண்ட் முகாமிலிருந்து இச்சம்பவம் புகார் செய்யப்பட்டது (இன்போம் அறிக்கை). புத்தளத்திலுள்ள ஒருகுறிப்பிட்ட முகாமில் உள்ளூர்வாசிகளைவிட இடம்பெயர்ந்தோர்குறைந்த கூலிக்குத் தொழில் செய்ய இணங்கினர் எனச் சொல்லப்பட்டது. இச்சம்பவம் அங்கு பிணக்குகளை ஏற்படுத்தியது(டெங்,பந்தி63).
புத்தளம் பிரதேசத்திலுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கு சில. அசா நிறுவனங்கள் தொழிற் பயிற்சியை வழங்குகின்றன. இடம் பெயர்ந்தோர்தும்புப்பொருள் உற்பத்தியில்ஈடுபட்டுள்ளதுடன் வெங்காயம்,மிளகாய், கெக்கரிப்பயிர்ச்செய்கை,கோழி, இறால்ப்பண்ணை, வீட்டுப்பணியாள் ஆகிய தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். பெண்களை விட ஆண்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகின்றது
ஆசிரியர்களாகச்சேவையாற்றிய இடம்பெயர்ந்தவர்களில் சிலர்முகாம்களுக்கு அண்மையிலுள்ள அரசாங்கப்பாடசாலைகளில் ஆசிரியர்களாகத்தொழில்புரிகின்றனர்.
இடம்பெயர்ந்தவர்கள்,பொலிசாருக்கு இலவசமாகவேலைசெய்யவேண்டுமெனக்கேட்கப்பட்ட தாக அறிவிக்கப்பட்டுள்ளது (பகுதிV,ஆசியாவாச்அறிக்கையைப்பார்க்க).
அரசாங்கத்திடமுள்ள வளங்களின் பற்றாக்குறை காரணமாக, வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களும்,தொழில்வாய்ப்பிற்கானவசதிகளும்அரசாங்கத்தின்நிகழ்ச்சிநிரலில்முன்னுரிமை யுடையதாக இருக்கவேண்டும் என (பிரான்சிஸ்டெங்;தனது இலங்கை பற்றிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் (பந்தி, 148), பலரது மனக்குறை தொழில் வாய்ப்பு பற்றிய விடயத்தை சுற்றி சுழன்றபோதும் தொழில் வாய்ப்புக்கள் மிக அரிதாகவே உள்ளன. (பந்தி,63),

Page 121
232
(xvii) இடம் பெயர்ந்தவர்களும் சுகாதாரம், கல்வி
உரிமைகளும்
அதிகமான முகாம்களில் சுகாதார வசதிகள் பெரும்பாலும் இல்லை. இருப்பினும் இடம்பெயர்ந்தோர் அண்மையிலுள்ள அரசவசதிகளை நாடக்கூடியதாகவுள்ளது. சுகாதார வசதி
அறியாதிருக்கின்றனர்.எப்படி அவ்வசதிகளை நாடிச்செல்வதென்றும் தெரியாதுள்ளனர்.
இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் போன்ற அமைப்புக்கள் நடமாடும் சுகாதார சிகிச்சைநிலையங் களை நடத்துவதில் ஈடுபட்டுள்ளன. யூ.என்.ஐ.சி.எச், ரோட்டரிக்கழகம் போன்ற ஏனைய அமைப்புக்கள் இடம்பெயர்ந்தமக்களுக்குசுகாதாரம்கல்வி முதலிய உதவிகளை வழங்குகின்றன. மெடிசின்ஸ் சான்ஸ் புறோண்றியேர்ஸ், ஒக்ஸ்பாம், சிறுவர் பாதுகாப்பு நிதியம் ஆகிய அமைப்புக்களும் இடம்பெயர்ந்தவர்களுக்குசுகாதார சேவைஊடதவிவழங்குகின்றன.
யூஎன்ஐசிஎப்1990ஆம் ஆண்டு ககாதார கூட்டமைப்பை உருவாக்கி இடம்பெயர்ந்தோருக்கு சுகாதாரஉதவிகள் வழங்குவதற்குநிதிசேர்த்ததுநிதிஉதவி1992இறுதியில் தேய்வுற்றபோதிலும் இவ்வமைப்பு 1993இல் தொடர்ந்தும் இயங்கியது
கொழும்பிலுள்ள முகாம்களுக்கு குடி.பத்திட்ட சங்கத்தின் அதிகாரிகள் பலமுறை விஜயம் செய்தனர். முகாமில் வசித்த சிலர் எயிட்ஸ் தடுப்பு தொடர்பாகவும் கருத்தடை தொடர்பாகவும் விழிப்புணர்வைவெளிப்படுத்தினர்.
சுகாதாரவசதிகளிலும்பார்க்க கல்வி வசதிகளுக்கான வாய்ப்புசிறிது உயர்வாகவுள்ளது இடம் பெயர்ந்த சிறுவர்களுட்பெரும்பாலானோர் அரசாங்கப்பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். தற்போதைய கல்வித்தரப் போற்றக்கூடியதாக இருப்பதுடன் தொடர்ந்தும் இந்நிலை பேணப்பட வேண்டுமெனக் கலாநிதி பெங்குறிப்பிடுகின்றார். (பந்தி 62149).
சில முகாம்களில் பாலர் பாடசாலைக் கல்விநிலையங்கள் இருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் முகாம்களிலுள்ளேர் இவற்றைநடத்துகின்றனர்.அசா.நிறுவனங்கள் பாலர்பாடசாலைக்கல்வி நிலையங்களையும், ஏனைய கல்வி வசதிகளையும் வழங்கி உதவியுள்ளனர். கல்விகற்பதற்கு யூ.என்.ஐ.சி.எப் அமைப்புப் உதவி வழங்குவதுடன் இடம்பெயர்ந்த சிறுவர்களுக்கு பாடசாலை உடைகளை வழங்குவதிலும் ஈடுபட்டுள்ளது (டெங்,பந்தி.17).
சில பாடசாலை விசேடமாக முகாம்களிலுள்ள சிறுவர்களுக்கென மாலை நேர வகுப்புக்களை நடத்துகின்றன.இருப்பினும்இடம்பெயர்ந்த சிறுவர்களுக்கும் உள்ளூர் சிறுவுர்களுக்குமிடையில் மனக்கொந்தளிப்பு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு புத்தளம் ட்டத்தில்இடம்பெயர்ந்தோருக்கு அளவுக்கதிகமான உதவிவாய்ப்புக்கள் வழங்கப்படுவதாக உள்ளூர் மக்கள் கருதுவதால் பதட்டநிலை உருவானது (உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்: அவர்களது தொழில் செய்யுமஉரிமைபந்தி, 4).

233
பாடசாலைக்கல்வி போன்ற எதிர்கால நலன் நடவடிக்கைகள் இடம்பெயர்வு காரணமாகச் சிறுவர்களுக்கு ஏற்படும் உளவியல் தாக்கங்களிலிருந்து விடுவிப்பதற்கான ஓர் வலுமிக்க செயல்திட்டமாகக் கருதப்படுகின்றது (டெங்,பந்தி.17).
(xviii) மீளக் குடியமர்த்தலுக்கான வழிகாட்டிகள்
அரசின் மீளக்குடியமர்த்தல் கொள்கையை மதிப்பீடு செய்வதற்கு உகந்த முறையில் சர்வதேச அளவுகோல்கள் இல்லாமலுள்ளது எவ்வாறாயினும் அகதிகள் சட்டத்தின்படி ஒரு நபர் தமது சொந்த ஊருக்குச் சுயமாகவே திரும்பிச் செல்வதற்கு சம்மதிக்க வேண்டுமென்பது அதன் அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டுமென்று ஊகிக்க முடியும் அத்துடன் மக்கள் இருப்பிடங்களை விட்டு ஆரம்பத்தில் ஒடிச்செல்வதற்கு ஏதுவாக இருந்த காரணிகள் முற்று முழுதாக அகற்றப்பட்டிருக்க வேண்டுமென்ற விதி மீளக்குடியமர்த்தல் நடவடிக்கைக்குரிய அடிப்படைக்கோட்பாடாகவும் இருக்கவேண்டும்.இக்கோட்பாடுகள் அங்கு சேவையாற்றும் அசா. நிறுவனங்களின் ஆலோசனையுடன் அரசு வரைந்துள்ள மீளக்குடியமர்த்தல் வழிகாட்டி நெறிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும் தற்போதைய மீளக்குடியமர்த்தல் நிகழ்ச்சித்திட்டம் இவ்வழிகாட்டலைப் புறக்கணித்துஅமுல் நடத்தப்படுகின்றது மீளக்குடியமர்த்தலை ஆரம்பிக்க முன்பு சம்பந்தப்பட்ட மக்களுடன் கலந்தாலோசித்தல், பாதுகாப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் உத்தரவாதமளித்தல், அடிப்படை உசாத்துணைகளை வழங்குதல் மற்றும் குடியமர்த்தலுக்கு முன்பதாக ஏனைய வசதிகளை வழங்குதல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை உதாரணமாகக் கூறலாம.
அத்துடன்(அடுத்தஉபபிரிவைப்பார்க்க) போராட்டம்நடக்கும் சூழ்நிலையில் அரசாங்கம்மீளக்குடி யமர்த்தலைவற்புறுத்துவது சர்வதேசச் சட்டத்தின் கீழ் அரசாங்கம் ஏற்றுக்கொண்ட எண்ணற்ற உரிமைகளை மீறுவதாகும். அவையாவன சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமையும் குடியிருப் பதற்குவிரும்பியஇடத்தைத் தெரிவுசெய்யும்உரிமையும்(குடியியல், அரசியல்உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை,உறுப்புரை 12 ஐசிசியிஆர்) இலங்கை 1980இல் ஒப்புதல் அளித்தது). சர்வதேச மனித உரிமைச்சட்டம்சார்ந்த கொள்கைகளுள் குறிப்பாக மோதல்களில் தீவிரபங்கு பற்றாதவர்களின்உயிருக்கும் உடலுக்கும்வன்முறைக்கெதிராகப்பாதுகாப்புவழங்கும்உரிமையும் இவ்வற்புறுத்தல் காரணமாக மீறப்படுகின்றது (பொதுஉறுப்புரை3,1949 ஆவணி12இல் 4வது ஜெனீவாமகாநாடு)
தற்போதைய மீளக்குடியமர்த்தல் நடைமுறை சம்பந்தமாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலுமுள்ள பல அசா.நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
ஐ.நா.விசேட பிரதிநிதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அரசாங்க அதிகாரிகள் எந்தப்பிரதேசத்திலும் வன்முறைக்குரிய சாத்தியத்தை முழுமையாக அகற்ற முடியாதென்று கூறினர். (டெங் இலங்கை அறிக்கை; பக்கம் 24, பந்தி 97). பகைமை மோதல்கள் மீண்டும் ஆரம்பித்தால் மீளக்குடியமர்ந்த மக்கள் திரும்பவும் இடம்பெயர வேண்டியநிலையேற்படுவதை அவதானித்தபிரான்சிஸ்டெங் பின்வருமாறுகுறிப்பிடுகின்றார்:

Page 122
234
எதிர்பாராத துன்பகரமான முடிவுகளின் எடுத்துக்காட்டாக ஏற்படும் திடீர் பலவந்த இடம்பெயர்வு எல்லாவற்றையும் மூழ்கடிக்கக் கூடியதாக இருப்பதால் மீண்டும் இச்சம்பவங்கள்ஏற்படாதிருப்பதற்குவேண்டியசகலநடவடிக்கைகளும்மேற்கொள்ள வேண்டும். எனவே சமாதானம் ஏற்படுத் தினாலன்றி ஒருவர் தமது சொந்தப் பிரதேசத்துக்கு மீண்டும் சென்று குடியேறும் பணிஇடர் நிறைந்த தொன்றாகவே முடிவுறும் (டெங் இலங்கை அறிக்கை பக் 30 பந்தி.125).
மீளக்குடியமர்த்தல்கொள்கையின் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட வேண்டிய பல விடயங்களை பிரான்சிஸ்டெங்பட்டியலிட்டுள்ளார். அவையாவன:இடம்பெயர்ந்தவர்கள்முகாமிலிருப்பதற்குப் பதிலாகத் தாம் தண்டிக்கப்படுவதையோ அன்றி பலியாக்கப் படுவதையோ எதிர் கொள்ள விரும்புவதற்கக் காரணமாக அமையும் ஆபத்துக்களும் மனிதாபிமானமற்ற சூழ்நிலைகளும் முகாமிலேற்படுவதுதடைசெய்யப்படல்;சொந்த இருப்பிடம் அமைந்த இடங்களின் பாதுகாப்பு நலனோம்பல் சம்பந்தமாகத் தேவையான தகவல் ஏற்பாடு;இடம்பெயர்ந்தோர்மீளக்குடியமர்ந்த பின்பு கிடைக்கக் கூடிய உதவிகளும் நன்மைகளும் தொடர்பான போலியான தகவல்களை அவர்களுக்கு வழங்குவதைத் தவிர்த்தல்; மீளக்குடியமர்த்தல்பணிகளை நடைமுறைப்படுத்தும் பொழுது போதிய கால அவகாசமும் இணக்கமும் அமைவதுடன் இறுக்கமான கால வரையறைகளைத் தவிர்த்தல்,
பின்வரும் கருத்துக்களை அவர் தெரிவிக்கின்றார்: உண்மையான கருத்துயாதெனில் ஒருநபர் ஆயுதமோதல் அல்லதுதொடர்ச்சியான மனித உரிமை மீறல்களின் போதுதான் தாக்குதலுக்கு இலக்காகக் கூடுமென்ற நியாயமான ஆதாரபூர்வ அச்சம் காரணமாக அடிக்கடிதப்பியோடியவராக இருப்பர். விளையும் வன்முறைகளுக்கு அரசாங்கம் எவ்விதத்திலும் பொறுப்பில்லையென்று விவாதிக்கப்படினும் இடம் பெயர்ந்தோரை ஆபத்தான சூழ்நிலைக்குள் மீண்டும் அனுப்புதலென்பதுபலியாக்கப்படுவதற்கும்தாக்குதலுக்கு இலக்காக்கப்படுவதற்கும் சமமான வலுமிக்க நடவடிக்கையாகும்.இத்தகைய சூழ்நிலையில் ஒர் இடம்பெயர்ந்த நபர் தனது சொந்த நாட்டுப் பாதுகாப்பில் மேலும் நம்பியிருக்க முடியாதென்று விவாதிக்கலாம்.(பந்தி138)
(x) சர்வதேச அளவுகோல்கள்
இடம்பெயர்ந்த ஆட்களை குறிப்பிட்டபாதுகாப்புக்குரியபிரிவினராகக் கொள்வதற்குநேரடியாகப் பொருந்தக்கூடிய சர்வதேச அளவுகோல்கள் நடைமுறையிலில்லை. எப்படியிருப்பினும் சர்வதேச மனித உரிமைச் சட்டக்கோட்பாடுகள் ஏனைய இலங்கையர்களுக்குப்பொருந்துவதுபோன்று இடம்பெயர்ந்த ஆட்களுக்கும் பொருந்துவதாகும். சில ஏற்பாடுகள் தற்போது மிகப் பொருத்தமுடையன (முன்குறிப்பிட்டுள்ள நடமாடுவதற்குரிய சுதந்திரமும் ஒருவர் தமது வதிவிடத்தைதெரிவுசெய்வதற்கான உரிமையும்)ஆகும் அவையாவன:உயிருக்குஉத்தரவாதமும் (உறுப்புரை 6, ஐசிசிபி ஆர் தொடர்ந்து சுய கெளரவத்துடன் வாழ்வதற்குரிய உரிமையும்) திருப்தியான வாழ்க்கைத்தரம, தேவையான உணவு,உடை, வீடு,மற்றும் வாழ்க்கை வசதிகளின் தொடர்ச்சியான முன்னேற்றம் (உறுப்புரை 1,பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் உடன் படிக்கை)

235
ஏனைய சர்வதேச சாசனங்கள் உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரைப் பாதுகாப்பதற்குப் பிரயோகிக்கும் கோட்பாடுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் மனித உரிமைகளுக்கும், பெருந்தொகையாக மக்கள் வெளியேற்றத்துக்குமான (1991) ஐ.நா.பொதுச் சபைத் தீர்மானமும் (45/153) பலவந்த வெளியேற்றத்துக்கான ஐநா உய ஆணைக்குழுத் தீர்மானமும் (1991) ஐ.நா. பொ.ச. தீர்மானம் பொருத்தமுடைய சர்வதேச சாசனங்களின் பயன்மிக்க அமுலாக்கத்தையும் சிறப்பாக மனித உரிமைகள் சாசனம் அகதிகளும் இடம்பெயர்ந்த ஆட்களும் பெருவாரியாகக்குவிவதைத் தவிர்க்கவும்பங்களிப்புச் செய்யுமென்பதால் இதன் அமுலாக்கத்தை உறுதிசெய்யுமாறும் எல்லா அரசாங்கங்களையும் வற்புறுத்துகின்றது. அத்துடன் மனித உரிமைகளையும், பெருந்தொகை மக்கள் வெளியேற்றப்பிரச்சனைகளையும் மீள்பரிசீலனையில் வைத்திருக்க வேண்டுமென்றும் முன் எச்சரிக்கை முறையொன்று உருவாக்க உதவவேண்டு மென்றும் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவிடம் மேலும் வற்புறுத்துகின்றது
உய-ஆணைக்குழுதீர்மானம்பலவந்த வெளியேற்றங்களை மனிதஉரிமைகளைமீறும்செயலென ஏற்றுக்கொள்வதுடன் இச்செயல்களை இல்லாதொழிக்குமாறும் அரசாங்கங்களை வற்புறுத்துகின்றது. பலவந்தமாக வெளியேற்றும் செயல்களில் ஆட்களையும் குடும்பங்களையும் குழுக்களையும் அவர்களது இல்லங்களிலிருந்தும் சமூகச் சூழலிலிருந்தும் சுய விருப்பின்றி வெளியேற்றுதல் சம்பந்தப்பட்டுள்ளதுடன் இதன் விளைவாக உலகெங்குமுள்ள மக்களின் உயிர்களும் தனித்துவம் அழிக்கப்படுவதும் வதிவிடமின்மை அதிகரிப்பு ஆகிய பாதிப்புக்கள் ஏற்படுவதையும் அத்தீர்மானம் வெளிப்படுத்துகின்றது.
இச் சர்வதேச சாசனங்களிலிருந்து இடம் பெயராதிருப்பதற்குரிய உரிமை அல்லது ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையாளர் தேர்ந்துள்ள கூற்றின்படி,"இருப்பதற்கான உரிமை” யுட்பட குறிப்பிட்ட உயர் அளவுகோல்களை அனுமானிக்க இயலுமானதாகவுள்ளது.
ஒருநாட்டின் நிலவரம் தொடர்சியான அல்லது திட்டமிட்ட ஆயுதமோதல்கள் நிறைந்ததாக அமையின் சர்வதேச மனிதாபிமானச் சட்டக் கோட்பாடுகளின் பங்களிப்பு இடம்பெறும். இக் கோட்பாடுகள் யுத்தத்தில் சம்பந்தப்பட்ட அரச மற்றும் அரச சார்பற்ற இருபகுதியினர் மீதும் கடப்பாடுகளை நிர்ப்பந்திக்கின்றது. அத்துடன் இவை சர்வதேசத் தன்மையுடைய, சர்வதேசத் தன்மையற்றமோதல்களின் இருவேறு நிலைமைகளுக்கும்பொருந்தும்(வடகிழக்குயுத்தம்பற்றிய அத்தியாயத்தையும்பார்க்க)
இக்கோட்பாடுகள் ஆகஸ்ட்1949இன் நான்குஜெனிவாமகாநாட்டு ஒப்பந்தங்களிலும்,1977இன் மேலதிக இரண்டு ஒப்பந்தக் குறிப்புக்களிலும் காணப்படுகின்றன. மனிதாபிமானக் கோட்பாடுகளின் முக்கியஇலட்சியம்வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதும் மோதலில்ஈடுபட்டுள் ளவர்களின் அதிகார துஷ்பிரயோகத்திலிருந்தும் மக்களைப் பாதுகாப்பதாகும். இலங்கையும் ஜெனீவா மகாநாட்டு ஒப்பந்தகங்களின் ஓர் பங்காளி ஆனால் மேலதிக இரண்டு ஒப்பந்தக் குறிப்புக்களின் பங்காளியல்ல. இலங்கையில் தற்போது நடைபெறும் யுத்தம் போன்ற சர்வதேசத்தன்மையில்லாத மோதல் சம்பவங்களுக்கு நான்கு ஜெனீவா மகாநாட்டு ஒப்பந்தங்களின் பொதுஉறுப்புரை3,நேரடியாகப்பொருந்தும் மனித உரிமைப்பாதுகாப்புக்குரிய அடிப்படையான அளவுகோல்களை இது விதித்துள்ளது. இதனை மோதலில் ஈடுபட்டுள்ள இருபகுதியினரும் மோதலில் சம்பந்தப்படாதோர் தொடர்பாகக் கடைப்பிடிக்கக் கடப்பாடுடையர்

Page 123
236
ஜெனிவா மகாநாட்டு ஒப்பந்தங்கள் பொருத்தமான ஏனைய கடப்பாடுகளையும் விதித்துள்ளது. குடிமக்கள்மத்தியில் அளவுக்குமீறிய இழப்புக்களை விளைவிக்கும் தாக்குதல்களையும் அல்லது அனாவசி முறையில் காயங்களை ஏற்படுத்தும் ஆயுதப்பாவனைகளையும் அல்லது வகைதொகையற்றபாதிப்புக்களை எத்தகைய நடவடிக்கைகளையும்தடைசெய்தல்.
சட்டபூர்வ ஆட்சியைமுன்னெடுக்கஉதவக்கூடியபுதிதாக உருவாகும் ஏனைய கோட்பாடுகளும் உள்ளன.(உதாரணத்துக்குப்பார்க்க:ஜொவிகாபர்நோஜிக்'உதவிபெறும்உரிமையின்பரினாம வளர்ச்சி-முடிவறிக்கை”சர்வதேச மனிதாபிமானச் சட்டநிறுவனம், மனிதாபிமானச் சட்டப் பிரச்சனைகளுக்கான XViவது வட்டமேசை அறிக்கை,24/9/1992).
உள்நாட்டுமோதல்நிலைமைகளின் போது அமுல்படுத்தக் கூடிய சர்வதேச அளவுகோல்களை அபிவிருத்தி செய்வதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. திரு. தெடோர் மெறோன் “உள்நாட்டு பூசல்கள் சம்பந்தமான மாதிரித் திட்டப்பிரகடனம்" ஒன்றை வரைந்தார். இதில் உள்நாட்டு பூசல்கள் வன்செயல்களும் நிலவும் காலங்களில் பிரயோகிக்க வேண்டிய குறுக்க முடியாத இழிபேற்படுத்தாத மனிதநேய மனிதாபிமான நெறிகள் விதித்துரைக்கப்பட்டுள்ளது (1988)262ஐ.சி.ஆர் சி. பக்கம்9).
கான்ஸ் பீற்றர் காசர் என்பவரால் “உள் நாட்டு குழப்பங்கள். கொந்தளிப்புக்களின் போது மனிதாபிமான நடவடிக்கை” எனுத் தலைப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுபிறிதொருமுயற்சி மேற்கொள்ளப்பட்டது ஒழுக்கநெறிக்கோவைகக்கான ஆலோசனை(262ஐசிஆர்.சி.மீளாய்வு பக்கம்38) இதைத்தொடர்ந்து"குறைந்தளவிலான மனிதாபிமான அளவுகோல்கள்பிரகடனம்” எனும் தலைப்பில் துர்க்கு என்பவரது பத்திரம் வெளியானது (85 சர்வதேச சட்டத்துக்கான அமெரிக்க வெளியீடு (1991) பக்கம் 375). இதில் உள்நாட்டு குழப்பங்களின் போது அல்லது அவசரகால நிலைமைகளின் போது குறைந்தளவிலாவது மதித்து ஒழுக வேண்டிய சில அடிப்படைக்கோட்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.இதில் மனிதஉரிமை சட்டம் மனிதாபிமானச் சட்டம், உட்பட பற்பல துறைகளிலிருந்தும் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.உள்நாட்டில் இடம் பெயர்ந்தமக்கள் தொடர்பான நிலையை முன்னேற்றுவதைக் கருத்தில் கொண்டு உலகளாவிய வேறு அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன.பலவந்த இடம்பெயர்வுபெருந்தொகை வெளியேற்றம், சுய விருப்பற்ற இடம்பெயர்வு போன்ற விடயங்கள் உலகளாவிய பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன் இப்பிரச்சனைகளுக்கு உலகளாவிய கூட்டுப்பிரதிபலிப்பையும் முதன்முதலாக காண்கின்றோம்.
மனித உரிமைகளுக்கான ஐ.நா. ஆணைக்குழுவின் 48வது கூட்டத் தொடர் உள்நாட்டில் இடம்பெயர்ந்த ஆட்களின் விடயத்தை பரிசீலனை செய்து அறிக்கையிடுவதற்கு ஒரு விசேட பிரதிநிதியை நியமிக்குமாறு செயலாளர் நாயகத்திடம் வேண்டியது (பிரான்சிஸ் டெங் இதைத் தொடர்ந்துநியமிக்கப்பட்டார்). ஐ.நா. ஆணைக்குழு உள்நாட்டில் இடம்பெயர்ந்த ஆட்களின் பாரதூரமானபிரச்சனைகளும் அவர்களதுதுன்பங்களும்சர்வதேச சமூகத்திற்கேற்படுத்தியுள்ள தாக்கத்தையிட்டு ஆழ்ந்த கவலையடைகின்றது.மேலும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தமக்களுக்கு நிவாரண உதவியும்பாதுகாப்பும் அவசியமென்பதை அங்கீகரிக்கின்றது (1993) அகதிகள் சட்டம் பற்றியய5 சர்வதேச வெளியீடு, பக்கம் 257),

237
ஆணைக்குழுவின் 1993இல் நடந்த 49வதுகூட்டத்தொடரில் இடம்பெயர்ந்த நபர்கள்தொடர்பாக ஒரு தீர்மானமும், மனித உரிமைகள் தொடர்பாகவும், பெருந்தொகையான மக்கள் வெளியேற்றம் தொடர்பாகப் பிறிதொரு தீர்மானமும் நிறைவேற்றியது.
இடம்பெயர்ந்த ஆட்கள்தொடர்பான ஆணைக்குழுவின் தீர்மானம் விசேட பிரதிநியின்பணியை மேலும் 2 வருடங்களுக்கு நீடித்துஇடம்பெயர்ந்தோரின் பொதுவான பிரச்சனைகளை நன்றாக விளங்கி தேவையான விடத்து பாதுகாப்பை மேலும் முன்னேற்றுவதையும் இடம்பெயர்ந்த ஆட்களுக்குவேண்டிய உதவிகளுக்கான வழிவகைகளை இனங்கண்டு அவற்றுக்குநீண்டகாலத் தீர்வுகாணுவதைக் குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றுமாறும் பணித்தது. இத்தீர்மானம் மேலும் அரசாங்கங்கள் பொருத்தரமானவிடத்து பிரதிநிதியை வரவழைக்குமாறும் யூஎன்.எச்.சி.ஆர் அமைப்பை அப்பிரதிநிதியுடன் ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டது. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுடைய பாதுகாப்புக்கும் உதவிக்கும் பொறுப்பான அமைப்பு யாதும் ஐ.நா. அமைப்பினுள் தற்போது இல்லை. இத்தேவைக்கு ஐ.நா. விடம் ஓர் செயற்திட்டம் இருக்க வேண்டுமென விசேட பிரதிநிதி விதந்துரைத்துள்ளார். அவர் இரு மாற்றுவழிகளைக் கூறியுள்ளார். தற்போது இருக்கின்ற ஐ.நா. சபையினது ஓர் அமைப்பின் அதிகாரத்தை விஸ்தரித்தல் அல்லது தனியான அமைப்பொன்றினை உருவாக்குதல்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் முகம் கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பாக சர்வதேச கரிசனைக்குரியஒர் அடிப்படையை தற்போதுள்ள மனிதஉரிமைகள்,மனிதாபிமானமற்றும் அகதி அரசாட்சிகள்ஏற்படுத்தியுள்ளனவென்று விசேட பிரதிநிதிதமதுஅறிக்கையில்குறிப்பிட்டுள்ளர். ஆனால் ஐக்கியநாடுகளில் பெரும்பாலான நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படாமலிருந்தன னெறுவெளிப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டுஇடம்பெயர்வுசம்பந்தமான மனிதஉரிமைகள்,மனிதாபிமான விடயங்களை விரிவான ஆவணங்களாக ஒருமுனைப்படுத்தும் பொருத்தமான சர்வதேச சாசனங்களும், அளவுகோல்களும் தொகுக்கப்பட வேண்டுமென்று அவர் விதந்துரைத்துள்ளார். உள்நாட்டி இடம்பெயர்வை முனைப்பாகக் கருதிய தான திட்டவட்டமான சட்ட வரைவுகள் உருவாக்க. வேண்டுமென்று மேலும் விதந்துரைத்துள்ளார். எவ்வாறாயினும் தனது இறுதி ஆய்வில் பெரும்பாலும் சட்டத்தின் குறைபாடுகளால் அல்லவென்று குற்றமிளைப்ப்வர்களினதும் சர்வதேச சமூகத்தினதும் அரசியல்மனத்திட்பமின்மையேஒரளவுகாரணமென்றும் கருத்துக்கூறியுள்ளார். உண்மையாகவேஇவ்வத்தியாயத்தின் கவனத்திற்கெடுக்கப்பட்ட எல்லாமக்களும் பெரும்பாலும் இலங்கை பிரஜைகளாகவிளங்குவதோடு இந்த நாட்டின் உள்நாட்டு அதிகாரஎல்லைக்குள்ளும் அமைகின்றனர், எனவே, அரசியலைப்பின் Iஆம் அத்தியாயத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு அவர்கள் உரித்துடையர்: மனித வாழ்வையும் சுயகெளரவத்தையும் பேணும் அடிப்படை அளவுகோல்களை உறுதிசெய்யும் பொறுப்பு, தற்பாதுகாப்பு, உறைவிடம், உணவு உடை, அடிப்படைச் சுகாதாரம் சமூக அமைப்பின் மூலக்கூறாகிய தனிமனிதனதும் குடும்பத்தினதும் கெளரவம் ஆகியவை தேசிய அரசாங்கங்களின் பொறுப்பிலுள்ளது அரசுகள் தற்போதுள்ள சர்வதேசக் சட்டக் கோட்பாடுகளின்படி கருணையுடன் நடத்துவதையும் இவ்வடிப்படைத்தேவைகளை வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும் (டெங் அறிக்கை முடிவுரைகள்).

Page 124
238
1 அகதிகளும் தாய்நாட்டிற்கு திருப்பியனுப்புதலும் (1) அறிமுகம்
கடந்தப்பத்தாண்டில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு ஒடியுள்ளனர். ஒரு வருடத்தின் பின்னர் பெரும்பாலும் மீளக்குடியமர்த்தல் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பித்த ஆண்டாக 1993 அமைந்தது.தென்இந்தியாவிற்கு ஒடிச்சென்ற எண்ணற்ற ஆட்கள் ஆவணி புரட்டாதி மாதங்களில் மீண்டும் திருப்பியனுப்பப்பட்டனர். ஐரோப்பாவிலும் தமிழ் அகதிகளையும் அரசியல் தஞ்சம் நாடுவோரையும் திருப்பியனுப்புவது தொடர்பான விவாதங்கள் 1993 முழுவதும் நடைபெற்றன."இத்திருப்பியனுப்பும் நடவடிக்கைகள் 1994இல் ஆரம்பிக்க கூடும். இத்திருப்பியனுப்புதலின் பொருத்தமுடைமை பற்றி அரச கார்பற்ற நிறுவனங்கள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளன. ஐரோப்பாவிலிருந்து மேலும் தாய்நாட்டிற்கு திருப்பியனுப்புதல் தொடர்பாகக் கருத்துக் கூறுவதற்குப் பொதுமான தகவல்கள் இவ்வறிக்கை எழுதும்போது கிடைக்கவில்லை. தென்இந்தியாவிலிருந்து 1993இல் இடம்பெற்ற திருப்பியனுப்புதல் சம்பந்தமாக இவ்வறிக்கை கவனம் செலுத்துகின்றது. 1983 ஆடி மாதம் இடம்பெற்ற இனக்கலவரத்தைத் தொடர்ந்துமுதலாவது அகதிகள் குழு இந்தியாவுக்குத்தப்பி ஒடிச்சென்ற காலந்தொடக்கம் இந்திய அரசு உதவிகள் வழங்கி வருகின்றது. பங்கீட்டுணவும், உதவிப்பணமும், இருப்பிடமும் இந்திய அரசு வழங்கியது. 1993 சித்திரையில் உள்ளபடி தமிழ்நாட்டில் 132 அகதிமுகாம்கள் இருந்தன.(ஆசியாவாச்அறிக்கை)
இந்திய அரசினால் யூ.என்.எச்.சி.ஆர் இற்குக் கொடுத்த புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் 106, 400இலங்கை அகதிகள் வாழ்கின்றனர். முகாம்களில் 76,400 உம்முகாம்களுக்கு வெளியே 30, 000ம்யூஎச்.சி.ஆர் சான்றுகளை மேற்கோள்காட்டி 98,000 அளவில் முகாம்களுக்கு வெளியில் வசிப்பதாகக் கூறியுள்ளது (யூ.எச்.சி.ஆர்.பக்.22).
இந்தியப்பிரதமர் ராஜிவ்காந்தி 1991வைகாசிமாதம் கொலை செய்யப்பட்டதற்கு விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டு வீச்சாளர் மீது குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து முடுக்கிவிடப்பட்ட நடிவடிக்கையின் காரணமாக பல்லாயிரக் கணக்கான இலங்கையர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டதைக் காண்க் கூடியதாக விருந்தது. முதலாவது அகதிகள் தொகையை தை 20 ஆந் திகதி திருப்பியனுப்புவதற்கான ஒப்பந்தமொன்றை இலங்கை அரசுடன் தான் மேற்கொண்டுள்ளதாக இந்திய அரசாங்கம் 1992 தை முற்பகுதியில் அறிவித்தது. தாய் நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்கான முழு நிதியமும் இந்திய அரசினால் வழங்கப்பட்டது
அரச சார்பற்ற நிறுவனங்களும் ஏனைய நிவாரண முகவர் அமைப்புக்களும் ஆட்சேபணை தெரிவித்திருந்தும்யூஎன்.எச்.சி.ஆர் இந்நடவடிக்கையில் பங்காற்ற அனுமதிக்கப்படவில்லை. 1992 வைகாசிமாதமளவில் ஏறத்தாழ 23000 அகதிகள் தாய்நாட்டிற்குத் திருப்பியனுப்பப்பட்டு இலங்கையில் தற்காலிக இடங்கடப்பு முகாம்களில் அமர்த்தப்பட்டனர். இத்திட்டம்பருவகால மழையும், கடும்கடல் கொந்தளிப்பும் காரணமாக 1992 ஐப்பசிமாதம் இடைநிறுத்தப்படுவதற்கு முன்பதாக 29,102 அகதிகள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டனர்.

239
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையாளர் 1992 வைகாசி மாதம் தாய்நாட்டுக்குத் திருப்பியனுப்பும் நடைமுறை தொடர்பான கவலைக்குரிய பல விடயங்கள் பற்றி இந்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இந்திய அரசு அதே ஆண்டு ஆடி மாதம் யூ.என்.எச்.சி.ஆர் அமைப்பிற்கு வரையறைக்குட்பட்ட அநுமதியளிக்க இணங்கியதுடன் தாய்நாட்டுக்குத் திருப்பியனுப்பும் நடைமுறையைக் கண்காணிப்பதற்கும்முகாம்களுக்குள் கட்டுப்பாட்டிற்குட்பட்டநுழைவுரிமையை வழங்குவதற்கும் இணங்கியது.
(ப்) பலவந்தமாகவா இன்றேல் சுயவிருப்பின் பேரிலா
தாயகத்திற்குத் திருப்பியனுப்பப்படுகின்றனர்?
தாய்நாட்டிற்குத் திருப்பியனுப்பும்நடைமுறை உலகளவியரீதியில் தொடங்கப்பட்டிருப்பதானது மிகவும் விரும்பப்படும் இத்தீர்வுக்கு பெரு ஆதரவாக இருக்கின்றது. அபிவிருத்தியடைந்த நாடுகளின் அமைதிக்குப்பங்கேற்படாதிருப்பதையும் எமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளபடி தமது நிதியின்மை காரணமாக நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோராதிருப்பதையும் உறுதிசெய்வதாக, உலகளவியஅகதிகொள்கையின் உட்காரணிஅமைந்துள்ளது (பி.எஸ்.சிம்னி,சுயவிருப்பத்தின் படி தாயகம் திருப்பி அனுப்புவதில் யூ.என்.எச்.சி.ஆர் பங்கும் கூற்றுக்களின் கருத்தும் (1993) அகதிகள் சட்டம்பற்றிய449/4595 சர்வதேச வெளியீடுகள்),
தற்காலிக இடங்கடப்பு முகாம்களிலிருந்து வெளியேறி அகதிகள் தமது பிரயாணத்தை ஆரம்பிக்கும் இடத்தில் வைத்து சென்னையில் அலுவலகம் அமைக்க அனுமதியளிக்கப்பட்ட யூ.என்.எச்.சி.ஆர் அமைப்புக்கு அகதிகளுடன் நேர்முகக் கலந்துரையாடலுக்கு ஒர் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஆயினும் முகாம்களுக்குள் செல்ல யூ.என்.எச்.சி.ஆர் அமைப்புக்கு அனுமதி வழங்கப்பட வில்லை. எனவே பிரயாணம் ஆரம்பிக்கும் இடத்தில் வைத்தும் அகதிகளை தாயகத்துக்குத் திருப்பியனுப்புவதற்குப் பதிவு செய்த பின்னருமே யூ.என்.எச்.சி.ஆர் அமைப்பினால் சுயவிருப்பின் பேரில் தாயகத்துக்குத்திருப்பியனுப்பும் நடைமுறையின் தன்மையை நேரடிக் கலந்துரையாடல் மூலமாக உறுதிசெய்யமுடியும்
மண்டபம் முகாமைச் சேர்ந்த 48 குடும்பங்கள்தாம் தாயகத்துக்குத் திருப்பியனுப்பும் இடங்கடப்பு முகாமிருக்கும் நிலையத்துக்குப் பலவந்தமாக அனுப்பப்பட்டதாக 1992 ஆவணி மாதம் யூஎன்.எச்.சி.ஆர் அமைப்பிடம்முறையிட்டனர். தாயகத்துக்கு அகதிகளைப்பலவந்தமாக அனுப்பு வதாக இந்தியநீதிமன்றம் ஒன்றுதீர்ப்புவழங்கிஇச்செயலைநிறுத்துமாறும்பணித்தது.ஆயினும் யூஎன்.எச்.சி.ஆர் அமைப்பின் பங்களிப்பு:அகதிகள் சுயவிருப்பின் பேரில் வெளியேறுகிறார்கள் என்பதை உறுதிசெய்யுமென தமிழ்நாடுஅரசாங்கம்பின்னர்வாதிட்டது நீதிமன்றம்இடைக்காலத் தடையுத்தரவை நீக்கியதைத் தொடர்ந்துதாயகத்திற்குத்திருப்பியனுப்பும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.இந்த 48குடும்பங்களையும் அவர்களதுமுன்னைய முகாம்களுக்குமீண்டும் அனுப்பமுன்புகிழமைக்கணக்காக மிக மோசமானநிலைமையில் வைத்திருந்ததாகவும் அரசாங்க அதிகாரிகளால் அவர்களதுவாழ்க்கை இன்னலுக்குள்ளக்கப்பட்டதென்றும்தெரிவிக்கப்பட்டது (யூஎஸ்.சி.ஆர்.பக்26)

Page 125
240
ஓராண்டு இடைவெளியின் பின் தமிழ்நாட்டிலிருந்து அகதிகளை இலங்கைக்கு அனுப்பும்பணி 1993இல் மீண்டும் ஆரம்பமானது. இவ்வாறு திரும்பிவரும் பெரும்பாலான அகதிகள் 1990 இலிருந்து தமிழ்நாட்டில் வாழ்ந்தனர். தாயத்துக்குத் திருப்பியனுப்ப முன்னதாக இந்திய அரசாங்கம் திரும்பிச் செல்வதைத் தூண்டும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் பலவற்றை ஆரம்பித்தது. இந்தியாவையும், இலங்கையையும் சேர்ந்த சர்வதேசக் குழுக்கள் குறைகூறின. ஆயினும்1992இன் திருப்பியனுப்பும் நடைமுறைக்கெதிராகக் குறைகூறப்பட்டளவிற்கு 1993இல் இருக்கவில்லை.
அகதிகள் சுயவிருப்பின் பேரில் செல்கிறார்களென்பதை உறுதி செய்ய முடிந்தாலன்றிதாயம் திருப்பியனுப்பும் நடைமுறையை நிறுத்துமாறு இந்திய இலங்கை அரசுகளிடம் திருப்பியனுப்பும் நடைமுறை ஆரம்பிக்கச் சற்றுமுன்னதாக ஆசியாவாச் தனது அறிக்கையில் வேண்டிக் கொண்டது. சென்னையில் இவ்வமைப்பு நடத்திய நேர்முகக் கலந்துரையாடலைத்தொடர்ந்து சுய விருப்பின் பேரில் இடம்பெறவில்லையென்ற முடிவிற்கு வந்தது. ஆயினும் அகதிகள் தமது தற்றுணியின்படி தாயகம் திரும்புகின்றனரென முடிவுசெய்ததுதாயகம் திரும்பிய பெருபாலான அகதிகள் தமதுசுயவிருப்பின்படி சென்றனர் என யூஎஸ்.அகதிகள் குழு கருதியது (யூஎஸ்.சி. ஆர்1994அறிக்கை).
சுய விருப்பம் தொடர்பான மாறுபட்ட கருத்துக்களின் காரணமாக முரண்பாடான விளக்கங்கள் தொன்றியுள்ளன. தாயகம் திரும்பிச் செல்வது சம்பந்தமாக அறிவுடமையுடனும் விவேகமாகவும் தீர்மானிப்பதற்கு வேண்டியபோதுமான தகவல்கள் அகதிகளுக்கு அளிக்கப்படவில்லையென்று ஆசியாவாச் அமைப்பும் யூஎஸ்.குழுவும் கவலை தெரிவித்தன.
இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் அகதிகளின் அன்றாட வாழ்க்கையில் மேலும் துன்பங்களை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் தாமாகவே திரும்பிச் செல்லத் தூண்டிய செயல்கள் தாயகத்துக்குத் திருப்பியனுப்பும் நடவடிக்ககைளுக்கு உதவுவதாக அமைந்தன.தமிழ்நாட்டு அரசாங்கம் புதுதில்லியின் அறிவுறுத்தலிற்கமைய இவ்வளவு காலமும் அகதிகளுக்குப் பணியாற்றிய அசா.நிறுவனங்களை 1993 வைகாசி 27ம் திகதியன்று அகதிமுகாம்களுக்குள் செல்ல விடாது தடுத்தது
இந்திய அசா. நிறுவனங்கள் இல்ங்கை அகதிகளுக்கு நிவாரணமும் உதவியும் வழங்குவதில் முக்கியபங்காற்றின. அவர்கள் முகாம்களைப் பராமரித்தல், கர்ப்பிணித்தாய்மாருக்கு உதவுதல், பாலூட்டும் தாய்மாருக்கும், வயது வந்தோருக்கும் உதவுதல், கல்வி சுகாதார சேவைகள் வழங்குவதற்கு உதவுதல், வருமானத்தை ஏற்படுத்தும் கருத்திட்டங்களை உருவாக்குதல் ஆகிய பணிகளில்ஈடுபட்டனர்.முகாம்களின் நிலைமைசீர்கேடடையத் தொடங்கியது
தமிழ்நாட்டு அரசு பாதுகாப்புகாரணங்களைக் காரணம்காட்டி அகதிகளின் நடமாட்டத்துக்குக் கட்டுப்பாடுகள் விதித்தது. இக்கட்டுப்பாடுகளில் அகதிகள் வெளியேசென்று திரும்பி வருவதற்கும் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது (உதாரணம்-தொழில் தேடிச் செல்லுதல்) பல சர்வதேச உள்நாட்டு அசா.நிறுவனங்கள் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு மிகக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தன.

241
இந்தியாவிலுள்ள நிலைமைகளை விடவும் தாயகத்திலுள்ள தற்காலிக முகாம்களின் நிலை நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டது (ஆசிகுளம் செட்டிகுளம்) இச்சூழ்நிலை தமது சொந்த இருப்பிடங்களுக்கு மீண்டும் செல்லும் எண்ணமின்றிதற்காலிக முகாம்களில் பெரும்பாலும் தங்கியிருக்கும் விருப்பமுள்ள அகதிகளைத் தாயகம் மீண்டும் செல்வதற்கு தூண்டுவதாக 969 NLD.
தாயகம் திருப்பியனுப்பும் பணி ஆவணி 13இல் ஆரம்பித்து 1993 புரட்டாதி 7இல் முடிவுற்றது. தமிழ்நாட்டிலிருந்து இலங்கையின் கிழக்குக் கரையோரத்திலுள்ள திருக்கோணமலைக்கு 7 கப்பல்கள் 6927 அகதிகளை ஏற்றிச்சென்றன. இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். ஆயினும் 125 முஸ்லிம்களும், 5 சிங்களவர்களும் இருந்தனர். யூன்.எச்.சி.ஆர் தனது அறிக்கையில், சுயவிருப்பின் பேரில் செல்வதாக சில அகதிகள் பத்திரங்களில் கையொப்பமிடப் பலவந்தத்திற்குள்ளாக்கப்பட்டனரென்றும் குறிப்பிட்டுள்ளது. இக்கூற்று யூ.என்.எச்.சி.ஆர் வெளிக்களஊழியர்கள் சென்னையில் நடத்திய நேர்முகக் கலந்துரையாடலின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. இத்தகைய சம்பவங்கள்மிகவும் அரிதெனவும் அமைப்பு தெரிவித்தது
69உறுப்பினரைக் கொண்ட 19 குடும்பங்கள்தாம் வலுக்கட்டாயமாகத் தாயகத்துக்குத்திருப்பி அனுப்பப்டுவதாக தெரிவித்தனர் என்று யூ.என்.எச்.சி.ஆர் பதிவுசெய்தது. யூ.என்.எச்.சி.ஆர் தலையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். சிலர் தமது முன்னைய முகாம்களின் அதிகாரிகளால் கொடுமைப்படுத்தப்படலாமென்ற அச்சத்தின் காரணமாகவேறுமுகாம்களுக்கும்மாற்றப்பட்டனர்.156ஆட்களைக்கொண்டபிறிதொருகுழுவும் தாயகத்துக்குத்திரும்பிச்செல்லுமாறு தம்மைபலவந்தப்படுத்தியதாக முறையிட்டது இவர்களைத் திருப்பியனுப்புதல் தற்காலிகமாகப் பின்போடப்பட்டதாயினும் பின்னர்தாம் திரும்பிச் செல்ல விரும்புவதாகச் சர்வதேச அமைப்பிடம் அறிவித்ததைத் தொடர்ந்து தாயகத்துக்கு அனுப்பப்பட்டனர். தமது நாடுக்குச் சென்ற 6927 ஆட்களில் 3308 அல்லது 478 வீதத்தினர் தமது சொந்த இருப்பிடங்களுக்குச் சென்றுள்ளதாகவும் இல்லையேல் தமது நண்பர்கள் உறவினர்களுடனோ வசிப்பதாகவும்யூஎன்.எச்.சி.ஆர் தெரிவித்தது திருக்கோணமலையில் வந்திறங்கியமக்களை இவ்வமைப்புநேரில் கலந்துரையாடியபோது அவர்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியதுடன் தமது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் மீண்டும் இணைய விரும்புவதாகவும் தாம் பலவந்தமாக அனுப்பப் படவில்லையென்று தமக்குக் கூறியதாகவும் யூ.என்.எச்.சி.ஆர் தெரிவித்தது
7 கப்பல்களில் வந்திறங்கிய 6927 அகதிகளில் 4509 எண்ணிக்கையினர் கிளிநொச்சி, முல்லைத்தீவுயாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியாவில் இராணுவம்மீட்காத இடங்களையும் சேர்ந்தவர்களாவர். இவர்களில் மீட்கப்படாத இடங்களைச் சேர்ந்தவர்கள் அரச கட்டுப்பாட்டின் கீழ்இருக்கும் வவுனியாவிலுள்ளதற்காலிக முகாமிற்கு அனுப்பப்பட்டனர்.
மீண்டும் திரும்பிவந்த மக்கள் ஒன்றிணைய உதவுவதற்கும் தற்காலிக முகாம்களில் அவர்கள் தங்கியிருக்கும்போதுஉதவுவதற்கும்யூஎன்.எச்.சி.ஆர் ஆற்றும்விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

Page 126
242
(தமது கிராமங்களுக்குச் செல்ல முடியாதவர்கள்) தமது கிராமங்களுக்கு மீண்டும் சென்றவர்களைக் கண்காணிக்க அதன் பணிவிஸ்தரிக்கப்படவில்லை.
வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த தாய்நாட்டுக்குத் வந்த 4927 அகதிகளில் 1626 பேர் 1993 புரட்டாதி நடுப்பகுதியில், தமது இருப்பிடங்களுக்கு சென்றனர் என யூ.எஸ். குழு தெரிவித்தது.2971 பேர் வவுனியாவிலுள்ள ஆசிகுளம்,வேப்பங்குளம் தற்காலிக முகாம்களுக்கு சென்றனர். தாய்நாட்டுக்கு திருப்பியனுப்புதல் சுயவிருப்பிற்கமைய நடைபெறவில்லையென ஆசியா வாச் முடிவு செய்துள்ளது. அறிவுடைமையுடனும், விவேகத்துடனும் முடிவு செய்வதற்கு வேண்டிய தகவல்கள் அகதிகளுக்குக் கிடைக்கவில்லை என்றகாரணத்தின் அடிப்படையில் இவ்வாறுமுடிவு செய்யப்பட்ட (1993ஆவணி11அறிக்கை). அகதிகள் தமது தாயக நிலைமைகளை அறிந்து கொள்ள இலங்கையிலுள்ள தமதுநண்பர்கள் உறவினர்களிடமிருந்துவரும்கடிதங்கள் மூலமாகப் பெறும்அத்தியாவசியத் தகவல்கள் அவர்களுக்கு உதவியாகவிருந்ததென்று யூஎன்.எச்.சி.ஆர் தெரிவித்தது
ஆசியா வாச் இக்கூற்றை மறுத்துள்ளதுடன் இருநாடுகளுக்குமிடையில் நடைபெறும் கடிதத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதுதொடர்பாகப் பலமுறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தமது நாட்டில் நிலவும் நிலைமைகள் சம்பந்தமான சரியான தகவல்களைப் பெற அகதிகளுக்கு நம்பிக்கையான வழிமுறைகள் இல்லையென்றும் அறிக்கையில் கூறியுள்ளது அகதிகள் தமது தாய்நாட்டுக்குத் திரும்பிச்செல்ல தூண்டப்படுகிறார்கள் என்ற ஊகத்தை வலுப்படுத்தும் காரணிகள் இருப்பதாகவும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. சில அகதிகள் காரணமின்றி கைது செய்யப்பட்டதாகவும் அவர்களது பங்கீட்டுணவுமறுக்கப்பட்டதாகவும் அவர்களிடம் திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவிக்கும் பத்திரங்களில் எதற்குக் கையொப்பமிடுகிறோம் என்றதை உணராமல் அவர்களைப் பலவந்தப்படுத்தி கையொப்பமிட வைத்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச அமைப்புக்கள் எவற்றுக்கும் அகதி முகாம்களுக்குட் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லையென்றும் ஆசியாவாச் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது
ஆசியாவாச்பின்வருமாறு கூறியுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகள் மறைமுகமாகவும் சில சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவும் திரும்பிச் செல்லுமாறு பலவந்தப்படுத்தப்படுகின்றனர். முகாம்களின் திருத்த வேலைகளை மேற்கொள்ளாது சீர்குறைந்த நிலையில் வைத்திருப்பதும், உதவிப்பணத்தையும் உணவையும் நிறுத்திவைத்தலும், தாயகம் திரும்பிச் செல்வதை ஊக்குவிக்க உதவிடும் நெருக்குதல்களுட் சிலவாகும். இவ்வறிக்கையில் விவரிக்கப்பட்டவாறு பொலிசாருக்கு இலவசமாக வேலைசெய்தல், வி.புலிகளாலும் அரசசார்புடைய ஆயுதக் குழுக்களாலும் அச்சுறுத்தப்படுதல் விமானக்குண்டு, ஏவுகுண்டுத்தாக்குதல்களுக்குக் தப்பி ஓடுதல் போன்ற முகாமிலுள்ள நிலைமைகளுக்குட்படவேண்டுமென்பதை அகதிகளுக்குமுன்கூட்டியே தெரிந்திருப்பின் பலர் தாயகம்திரும்பிச் செல்வதற்குத் தீர்மானித்திருக்கமாட்டார்கள். (ஆசியாவாச்அறிக்கை 1/8/1993,பக்.18)

243
அகதிகளுக்கான யூஎஸ் குழு சுய விருப்பின் பேரில் அகதிகள் தாயகம் திரும்புகின்றனரென்ற முடிவுக்கு வந்தது. இம்முடிவுதாயகம் வந்த தமிழ் குடும்பங்களுடன் அக்குழு நடத்திய நேர்முகக் கலந்துரையாடலின் அடிப்படையில் கூறப்பட்டது
அவ்வறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
அதிகமானோருடன் நடத்திய கலந்துரையாடலின் போது தாம் தாயகத்திற்குத் திரும்பும் தீர்மானத்ன்த சுயவிருப்பின் பேரிலும் வெளியார் நெருக்கடி பெரும்பாலும் இன்றியும் மேற்கொண்டதாகக் கூறினர். பலர் தமது குடும்பங்களுடன் இணைவதற்கும் இன்றேல் குடும்பத்திலுள்ளவர்களின் நோய் போன்ற தனிப்பட்ட காரணங்களாலும் தாயகத்திற்குத் திரும்பிச் செல்வதாகக் கூறினர். வேறு சிலர் திரும்பிச்செல்வது பாதுகாப்பானதென்று தமது உறவினர்களும், நண்பர்களும் தெரிவித்ததாகவும் கூறினர். மேலும் சிலர் நிலைமைகள் சிறப்பில்லாதிருந்தாலும் கூடத் தமது சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லப்போவதாகக் கூறினர். சில குடும்பங்கள் பங்கீட்டுணவுநிறுத்தப்படுமென்ற அச்சுறுத்தல்,இன்றேல்தொடர்ந்தும் தொழில் செய்ய விடாதுதடுத்தல்,போன்ற பல்வகை நெருக்கடிகளை இந்தியாவில் தம்மீதுதிணித்துநடவடிக்கைகள் தமதுஇத்தீர்மானத்துக்கு வழிவகுத்தனவென்று கூறினர். எனினும் ஒரேயொருகுடும்பம்மட்டும் இந்நெருக்குதல்களை தாம் திரும்பி வருவதற்கான அடிப்படைக் காரணமெனக் கூறியது. (பக் 26)
எவ்வாறாயினும் இந்திய அரசாங்கம் அகதிகளைத் திரும்பிச் செல்லவைக்கும் நோக்கில் அவர்களுக்கு நெருக்குதல்களைக் கொடுக்கும் சில நடவடிக்கைகள் 1993 வைகாசி மாதம் அறிமுகப்படுத்தியதாகவும் இவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது. ( பக்.23) தமிழ் நாட்டிலுள்ள அகதிகளுக்குதவுவதற்கான அகதிகளால் நடத்தப்படும் ஈழம் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தைச் ( ஒபர்) சேர்ந்த திரு. எஸ்.சி. சந்திரகாசன் தன் மறுப்புரையில் தாயகம் திருப்பியனுப்பப்படுவோரில் மூன்றிலொருபகுதியினர்மட்டுமே சுயவிருப்பின்பேரில் செல்வதாகக் கூறியுள்ளதையும் அவ்வறிக்கையில் மேற்கோள்காட்டியுள்ளது ஏனையோர்தமது நாட்டில் நிலவும் நிலைமைகள் தொடர்பாகப் போதிய தகவல்கள் கிடைக்கப்பெறாதவர்களாகவும் இன்றேல் அகதிகள் தாய்நாட்டுக்குத் திரும்பிச்சென்றதும் அவர்களுக்குஅங்கு கிடைக்கவுள்ள சிறப்பான உதவிகள் பற்றிய ஓர் தோற்றத்தை உருவகப்படுத்தும் துண்டுபிரசுரங்களை யூஎன்.எச்.சி.ஆர் விநியோகித்தமையினாலும் தவறாக வழிநடத்தப்பட்டனர். (யூ.எச்.சி.ஆர்யக்.25)
(i) தாயகம் திரும்புவோருக்குரிய உதவிகள்
திரும்பி வருவோருக்கென இலங்கையிலுள்ள 6 முகாம்களுக்கு யூ.என்.எச்.சி.ஆர் நிதி வழங்குகின்றது. மன்னார் மாவட்டத்தில் 3 முகாம்கள், வவுனியாவில் 2 முகாம்கள், திருக்கோணமலையில் 1மேலும்,இவர்கள் குடும்பங்களுடன் ஒன்றிணைவதற்கும்உதவுகின்றது. அரச கட்டுப்பாட்டிலுள்ள இடங்களுக்குத் திரும்பிச்செல்பவர்கள், அரசாங்கம் மீளக்குடியேறியவர்களுக்கு வழங்கும் அதே உதவிகளுக்கு உரித்துடையர். இவ்வுதவிகளில் பொருளாதார நடவடிக்கை, உற்பத்தி முயற்சிக்கான மானியம், மீளக்குடியமர்வு நிதி உதவி வீட்டுமானியம் மூன்று மாதங்களுக்கான பங்கீட்டுணவுஎன்பன அடங்கும். (6 மாதங்களுக்கு நீடிக்கப்படலாம்யூஎச்.சி.ஆர்)

Page 127
244
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள இடங்களுக்கு மீண்டும் செல்வேர் மீளக்குடியமர்வு வீட்டுமானியம் ரூபா 5000/- (யூஎஸ். $100) மற்றும் அரசாங்க பங்கீட்டுளவு என்பவற்றுக்கு உரித்துடையர் மேலும் சிறு நுண்திட்டங்களுக்கும் அன்றேல் துரித பயன்பெறும் கருத்திட்டங்களுக்கும் ( யூ.என்.எச்.சி.ஆர் உதவி வழங்குகின்றது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள இடங்களுக்குமீண்டும்செல்வோர்தற்காலிக ம்களில் 2கி தரித்திருப்பர். இக்காலத்திற் தாயகம் திரும்பியதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் ஆராயப்படும்.(யூ.எஸ்.சி.ஆர்)
(iv) சர்வதேச நெறிகள்
சர்வதேச அகதிகள் சட்டத்தை மீண்டும் மலினப்படுத்தாக் கொள்கை அதன் அடிநாதமாக விளங்குகின்றது அகதிகளதுஉயிருக்கோ இன்றேல் அவர்களுதுஅடிப்படைச் சுதந்திரத்துக்கோ அச்சுறுத்தல் விளைவிக்கும் நாடுகளுக்கு அகதிகளை மீண்டும் திருப்பியனுப்புவதை இக்கோட்பாடு தடைசெய்கின்றது. ( உறுப்புரை 33 ஐப்பார்க்க அகதிகள் தொடர்பான உடன்படிக்கையும் 1967ஆம் ஆண்டு மூலப்பிரதியும்).இலங்கை அரசாங்கமோ அல்லையேல் இந்திய அரசாங்கமோ 1951 ஆம் ஆண்டு உடன் படிக்கையை உறுதிசெய்யவில்லை. எவ்வாறாயினும் சர்வதேச் சட்டங்களை மீண்டும்மலினப்படுத்தாக்கொள்ளை சர்வதேசக் சட்ட மரபாக பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
தாயகம் திரும்புமாறு அகதிகள்மீது மேற்கொள்ளப்படும் நெருக்குதல்கள் சர்வதேசக் சட்டத்திலுள்ள இப்பாதுகாப்பை மீறுவதாகும். அவர்களை வெளிப்படையாக அச்சுறுத்தி, பயமுறுத்தி, நெருக்குவதன் மூலமோ இன்றேல் முகாம் நிலைமைகளை சீர்குலைத்து, பங்கீட்டுணவைத் துண்டித்துமுகாம்களுக்குச் செல்வதை மேலும் கடினமாக்கி முகாம்களுக்கு வெளியே தொழில் செய்வதைக் கட்டுப்படுத்தி இல்லையேல் தடைசெய்து சூழ்ச்சியாக மேற்கொள்ளப்படும் எத்தகைய செயல்களும் சட்டத்துக்கு முரணானவை. இவ்வாறு மனித உரிமைகளுக்கான சட்ட அறிஞர்கள் குழு 1992 இல் வெளியிட்ட சுருக்கப்பத்திரத்தில் விவாதித்துள்ளது.
இதன் தர்க்க நியாயம் வெளிப்படையானது. ஓர் அகதி நாடு திரும்பியதும் தண்டிக்கப்படமாட்டார் என்றால்மட்டுமே உண்மையான சுயவிருப்பத்துடன் தாயகம் திரும்புவார் என்பதை ஊகிக்க முடியும். ஆதலால் அகதிகள் சுதந்திரமாகவும் நெருக்குதலின்றியும் தமதுவிருப்பை வெளிப்படுத்துவதுமுக்கியம் சுயவிருப்பின்படி தாயகம்திரும்புவதாயின் அத்தகைய தீர்மானம்விவேகமுடையதாகவும் தகவல்களின் அடிப்படையிலும் அமையவேண்டும். (அகதிகளைத் தாயகம் அனுப்புவதை ஊக்குவித்தல் சம்பந்தமான பொதுக்கோட்பாடுகள்:மனிதஉரிமைகளுக்கான் சட்ட அறிஞர்கள் குழுவெளியிட்ட சுருக்கப்பத்திரம் வைகாசி,1992,பக்.6)

245
அத்தியாயம் 9
குழு உரிமைகள்
1. சிறுபான்மையினர் உரிமைகள்
(1) தொடர்புடைய சர்வதேச சட்டங்கள்
தேசிய இன்றேல் இன, சமய, மொழிச்சிறுபான்மையினங்களைச் சேர்ந்த ஆட்களின் உரிமைகள் பற்றிய பிரகடனத்தில் (ஐ.நா. பொதுச்சபையின் 47/135ஆவது 1992 மார்கழி 18ம் திகதிய தீர்மானம்) விவரிக்கப்பட்ட உரிமைகளில் பின்வரும் உரிமைகளும் அடங்கும்.
தமது கலாச்சாரத்தைப் பேணுதல் (உறுப்புரை2(1) தமதுமத வழிபாட்டைப்பின்பற்றுதல் (உறு2(1) தனிப்படவும் பொதுவிடங்களில் தமதுதாய்மொழியில் கருமமாற்றுதலுட்படதமது தாய்மெர்ழியைக் கற்பதற்குத் தேவையான வசதிகள் கிடைத்தலும் அல்லது தமதுதாய் மொழியில் அறிவறுத்தல்களைப்பெறுவதற்குமான தேவையான வசதிகள் (உறு. (2) உம் 4(3),
★ தமது கலாச்சார சமய சமூக பொருளாதாரமற்றும்பொதுவாழ்வில்பயனுடையமுறையில்
பங்குபற்றுதல் (உறு2(2)
Ar தமது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திலும், அபிவிருத்தியிலும் முழுமையாகப்
பங்குபற்றுதல் (உறு.4(5)
இவை ஒப்பந்தமாக இல்லாது பிரகடனமாக அமைந்ததால் சிறுபான்மையினர் பற்றிய ஐ.நா. பிரகடனம் அதன் ஆவலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதேயன்றி சர்வதேச ஒப்பந்தங்களுக்கு இருக்கும் கட்டுப்படுத்துகின்ற வலு அதற்கில்லை. எவ்வாறாயினும் ஐ.சி.சி.பி.ஆர் எல்லா அரசுகளையும் பங்காளிகளாகக் கட்டுப்படுத்துகின்றது. உறுப்புரை 27 (ஐசிசியிஆர்)இல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது"இன, மத,மொழி சிறுபான்மையினர்வாழும் நாடுகளில் அத்தகைய சிறுபான்மையினங்களைச் சேர்ந்த ஆட்கள் தமது சமூகத்தைச் சேர்ந்த ஏனையோருடன் சமூக வாழ்வில் ஒன்றிணைதல் தமது சொந்த கலாச்சாரத்தை பின்பற்றுதல், தமதுசொந்த மத நம்பிக்கையை வெளிப்படுத்துதல் பின்பற்றுதல் அல்லது தமதுதாய்மொழியில் கருமமாற்றுதல் ஆகிய உரிமைகள் அவர்களுக்குமறுக்கப்படமாட்டாது"
மனிதஉரிமைகளுக்கான குழுதனது50வதுகூட்டத்தொடரில் சமூக அரசியல்உடன்படிக்கையின் 27வது உறுப்பிரை தொடர்பான ஓர் பொது தீர்மானத்தை மேற்கொண்டது. (ஜ.சி.சி.பி.ஆர். சி/50/சிஆர்பி1/வெளிப்படுத்தல் 1(1994 பங்குனி 28) அதில் 27வது உறுப்புரையின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட உரிமைகள் ஐ.சி.சி.பி.ஆர். உறுப்புரைகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பேற்பாடுகளைவிட தெளிவானதும் புறம்பானதுமென நிலை நாட்டியது. “அரசின்

Page 128
246
பங்களிப்பு சிறுபான்மையின் தனித்துவத்தைப்பேணுவதும் அவர்களது கலாச்சாரம்மத வழிபாடு, மொழி ஆகியவற்றை முன்னேற்றுதலும்” எவ்வித ஐயப்பாடுமின்றி உறுதியானதாக இருக்க வேண்டுமென குழு எதிர்பார்க்கின்றது. மேலும் கூறப்பட்டுள்ளதாவது. இத்தகைய அரசின் நடவடிக்கைகள் 27 வது உறுப்புரையின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட உரிமைகளை அனுபவிப்பதற்குஇடையூறாகவோ தடையாகவோஇருக்கும்நிலைமைகளை நீதியாகச்சீர்செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படின் ஒப்பந்தத்தின் கீழ் இவை சட்டபூர்வமான தனித்துவத்தை நிலைப்படுத்துவதாக அமையும் குழு பின்வறுமாறு முடிவுசெய்தது.
இவ்வுரிமையைப் பேணுவதன் மூலம் சம்பந்தப்பட்ட சிறுபான்மையினரின் கலாச்சார சமய சமூகத்தனித்துவம் அழிக்கப்படாதுநிலைநிறுத்தப்படுவதுடன் தொடர்ச்சியான வளர்ச்சியும் உறுதிசெய்யப்படும். இதனால் சமூகக் கட்டமைப்புமுழுமையானதாகச் செழிப்படையும். இதன்படி இவ்வுரிமைகள் உள்ளவுள்ளவாறு பாதுகாக்கப்பட வேண்டுவதுடன் ஒப்பந்தத்தில் கீழ் கூறப்பட்டுள்ள ஒரு தனிநபருக்கும் எல்லோருக்கும் வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட ஏனைய உரிமைகளுடன் கலக்கிக் குழப்பக் கூடாதெனக் குழு கருத்துக் கூறியுள்ளது. எனவே இவ்வுரிமைகளை அனுபவிப்பதை உறுதிசெய்து பாதுகாக்க வேண்டிய கடப்பாடு சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு உண்டு. மேலும் அவர்கள் இவற்றை நிறைவேற்றுவதற்கு வேண்டி மேற்கொண்ட நடவடிக்கைகளையும்தமதுஅறிக்கைகளில் சுட்டிக்காட்டவேண்டும்.
எல்லா உறுப்பு நாடுகளையும் கட்டுப்படுத்தும் ஐ.நா. சாசனத்தின் 55 வது உறுப்புரையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது" ஐக்கிய நாடுகள் நிறுவனம். இன, பால், மொழி, சமய வேறுபாடின்றி எல்லோரது அடிப்படை உரிமைகளையும் மனித உரிமைகளையும் உலகளாவ மதித்து நடப்பதையும்பின்பற்றுவதையும் ஊக்குவிக்கும். மேலும் 56 வது உறுப்புரையில் எல்லா உறுப்பு நாடுகளும் கூட்டாகவும் தனித்தும் 55 வது உறுப்புரையில் கூறப்பட்ட நோக்கையடைவதற்கு நிறுவனத்துடன் தாமாக முன்வந்து ஒத்துழைக்க வாக்குறுதியளிக்கின்றனர்.”இலங்கை பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையில் ஒப்பமிட்ட நாடென்ற காரணத்தால்( ஐ.சி.இ.எஸ்.சி.ஆர்) இவ்வுடன்படிக்கையில் காணப்படும் உரிமைகளை இன, நிற, மொழி, மத, தேசிய இன்றேல் சமுதாய தோற்றுவாயான குடிப்பிறப்பு அந்தஸ்து ஆகிய வேறுபாடுகளின்றிசெயற்படுதவற்கு உத்தரவாதமளிப்பதகாக உறுதியளித்துள்ளது(உறுப்புரை22)
வியென்னாப்பிரகடனமும் செயல்படுத்தல் நிகழ்ச்சித்திட்டமும்“தேசிய அல்லதுஇனமதமொழிச் சிறுபான்மைக்கள், சமுதாயத்தின் அரசியல், பொருளாதார, சமூக, மத, கலாச்சார வாழ்வியலும் அவர்களதுநாட்டின் பொருளாதாரமுன்னேற்றத்திலும் அபிவிருத்திப்பணியிலும் முழுமையாகப் பங்குபற்றுவதற்கேதுவாக அவர்களுக்குவசதிகள் செய்துகொடுக்க நடவடிக்கைகள்எடுக்குமாறு அரசாங்கங்களை ஊக்குவிக்கின்றது ( பகுதி 1 (27). மேலும் சகல அரசாங்கங்களும் எல்லாவிதமான இனவாதத்தை முன்னெடுத்தல், பிற நாட்டினரை வெறுத்தல், இல்லையேல் இதனுடன் தொடர்புடைய சகிப்பின்மை ஆகியவற்றுக்குஎதிரான நடவடிக்கைகளைஉடனடியாக மேற்கொண்டு தடுத்து எதிர்த்துப் போராடுவதற்கு வேண்டிய கடுமையான கொள்கைகளை அபிவிருத்தி செய்யவேண்டுமெனவும் தேவையானவிடத்து தண்டனை வழங்குவதுட்பட பொருத்தமான சட்டங்களை உருவாக்கியும்அத்தகைய நிகழ்வுகளுக்கெதிராகப்போராடக்கூடிய

247
தேசிய அமைப்புக்களை உருவாக்க வேண்டுமெனவும் உலக மகாநாடு வற்புறுத்தியது
(பகுதி(20).
(i) இலங்கையில் சட்டப் பாதுகாப்பு
இலங்கை அரசியலமைப்பின் அத்தியாயம் II இல் எல்லா ஆட்களும் பிரஜைகளும் அடிப்படை உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் உரித்துடையரென கூறுகின்றது."உறுப்புரை 12(2)இல் இன, மத, மொழி, சாதி பிறந்த இடம் இல்லையேல் அத்தகைய எந்தவொரு காரணத்தைக் கொண்டு ஒரு பிரஜைமீதும் வேறுபாடுகாட்டப்படமாட்டாது'எனக் கூறப்பட்டுள்ளது.தனிப்பட்ட முறையில் வேற்றுமை காட்டுவதைக் கூட உறுப்புரை 12(3) தடை செய்கின்றது. எந்தவொரு ஆளையாவது இன, சமய, மொழி, சாதி, பால் இல்லையேல் வேறு எத்தகைய ஒரு காரணத்திற்காவாவது வியாபார இடங்கள், பொது உணவு விடுதிகள், பொது பொழுது போக்கிடங்கள், தனது மதத்துக்குரிய பொது வழிபாட்டிடங்களுக்குள் செல்வது தொடர்பான இடையூறு, கட்டுப்பாடு, தண்டனை போன்ற நிலைமைகளுக்கு உட்படுத்தக் கூடாது. இனவேற்றுமை ஒழித்தலும் அடிப்படை உரிமைகளை கண்காணித்தலுக்குமான ஆணைக்குழு 1986இல் நிறுவப்பட்டது.
மேலும் அரசியலமைப்பின் 13வது16வது திருத்தத்தின் மூலம்தமிழ்மொழிஉத்தியோகமொழியாக ஆக்கப்பட்டதைத் தொடர்ந்து சிங்களத்துடன் தமிழும் நிர்வாக மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் ஆக்கப்பட்டுள்ளது. இத்திருத்தங்கள் அரசாங்க அதிகாரிகள் என்ற நிலையில் அரச உத்தியோகத்தர்கள் தவிர்ந்த வேறெந்தவொரு நபரும் சிங்களத்தில் அல்லது தமிழில் தொடர்புகொள்ளவும் பதிலைப் பெறவும் உரிமையளிக்கின்றது
அரசியலமைப்பின்படி அரசாங்கத்தின் நேரடியான கொள்கையும் அடிப்படைக் கடமைகளும்என்ற 27ஆவதுஉறுப்புரையில் (0)"மக்களின் கலாச்சாரத்தையும் மொழியையும் அபிவிருத்திசெய்ய அரசு உதவும் (1) எல்லா மத நம்பிக்கைகளையுடைய மக்களும் தமது மதக்கோட்பாட்டின் உண்மைப்பயனைப் பெறுவதற்கு வேண்டிய பொருளாதார சமூகச் சூழலை அரசு ஏற்படுத்தும்" எனக் கூறப்பட்டுள்ளது.ஆயினும் இலங்கை ஓர்மதச்சார்பற்றநாடன்று 9வது உறுப்புரைபுத்த சமயத்துக்கு அதிமுக்கிய இடம் அளிக்கின்றது. அத்துடன் புத்தசாசனத்தைப் பாதுகாத்து முன்னெடுக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கின்றது எவ்வாறாயினும் ஏனைய எல்லா மதங்களுக்கும் மதச்சுதந்திரமும் வழிபாட்டுரிமையும் தமது மத நம்பிக்கையை விருத்தி செய்வதற்கான உத்தரவாதமும் அளிக்கப்பட்டுள்ளது
அரசியலமைப்பில் உத்தரவாதமளித்தபடி ஒருவர் தமதுமொழி உரிமையைச் செயல்படுத்துவது மிகவும்கடினமாகவுள்ளது.சிங்களத்துடன்தமிழுக்கும்சமநிலைவழங்கப்பட்டுள்ளதாகக்கூறினும் அரசியலமைப்பிலுள்ள பலவகைக் கூற்றுக்கள் தமிழ்மொழிக்கு இரண்டாந்தர நிலையை வழங்குகின்றது. சிங்களத்துக்கும் தமிழுக்குமிடையில் ஆட்சி அதிகாரத்தை அரசியலமைப்பு ஏற்றுக்கொள்கின்றது. மேலும் முரண்பாடுகள் ஏற்படும்போது சிங்கள மொழி வாசகமே ஏற்றுக்கொள்ளப்படுமென்று பெரும்பாலான சட்டங்கள் தற்போதுவழி செய்கின்றன. மேலும் அரசியலமைப்பு மூன்று மொழிவாரிப்பிராந்தியங்களை அங்கீகரிப்பதுபோல் தோன்றுகிறது.

Page 129
248
முதலாவதாகக் தமிழ் நிர்வாகமொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும்இருக்கும் வடக்குகிழக்கு. இரண்டாவதாக சிங்களம் நிர்வாகமொழியாகவும் நீதிமன்ற மொழியாவும் இருக்கும் நாட்டின் ஏனைய பகுதிகள். மூன்றாவது இருமொழிகளும் உத்தியோக மொழிகளாகச் செயற்படும் சிங்களவர்களும்தமிழர்களும்தொகையாக வாழும்இருமொழிப்பிராந்தியங்கள்.மேற்குமாகாணம் மத்தியமாகாணம், சப்ரகமுவா,ஊவா மாகாணங்களின் பல உதவி அரசாங்க அதிபர், பிரிவுகளில் இத்தகைய நிலையே நிலவுகின்றது. இருமொழிப்பிராந்தியங்களில் இருமொழிக் கொள்கையை செயற்படுத்த சனாதிபதி நிர்வாகக்கட்டளை வெளியிடவேண்டும், ஆயினும் அவர் இதனைச் செய்யத்தவறியுள்ளார்.
இலங்கை சகலவிதமான இனவேற்றுமைகளையும் இல்லாதொழிக்கும் சர்வதேச உடன்படிக்கையின் ஒர்பங்காளிபெரும்பாலும்ஐநா.உறுப்பினர் என்றரீதியில் ஏனைய சர்வதேச சமூகத்துடன் இணைந்து சிறுபான்மையோர் தொடர்பான ஐ.நா. பிரகடனத்தில் கூறப்பட்ட கொள்கைகளுக்குதன்னையும்பங்காளியாக்கிக்கொண்டுள்ளது.இலங்கை பொருளாதாரசமூக கலாச்சார உரிமைகள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ஒர் பங்காளி என்ற ரீதியில் அத்தீர்மானங்களின் ஏற்பாடுகளை தேசிய சட்டத்தில் சேர்த்து அத்தகைய சட்டங்களை அமுல்நடத்துவதற்குத்தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் ஐக்கியநாடுகள் சாசனம் எல்லாஉறுப்பு நாடுகளையும் கட்டுப்படுத்துகின்றது.
(i) நாட்டின் பொதுவான நிலை
சிறுபான்மையினரின் உரிமைகளை வழங்காது ஏமாற்றியதன் பின்விளைவாக இலங்கை அரசாங்கத்தின் ஆயுதப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையிலான 10 ஆண்டுகால உள்நாட்டுயுத்தம் 1993இலும் மேலும் தொடர்கின்றது. பெரும்பாலான தமிழர்கள் ஆயுதமோதலில் தீவிரமாகப் பங்குபற்றாதிருந்தும் ஒருவர் இளம் ஆணாகவும் யாழ்ப்பாணத் தமிழராகவுமிருப்பின் விசாரணைக்குட்படுத்துவதற்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவார். (தெற்கில் தமிழர்களைக் கைதுசெய்துதடுத்துவைப்பது தொடர்பாக விரிவாக ஆராய்வதற்கு குடியியல் அரசியல் உரிமைகளைப்பற்றிபிரிவைப்பார்க்கவும்).
இலங்கைபல்லின பல்சமயச்சமூகமென்பதை இலங்கை இந்திய ஒப்பந்தம் அங்கீகரித்துள்ளது தேசிய பல்லினச் சிந்தனையின் தனித்துவத்தை முன்னெடுக்கும் நோக்கில் ஜனாதிபதி பிரேமதாச பொது நிகழ்ச்சிகளிலும், ஆலயங்கள், பள்ளிவாசல்கள், கோவில்கள் வழிபாட்டின் போதும்மூன்றுமொழிகளிலும் உரையாற்றினார். அவர் 1993இல் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்துபல்லினச் சமுதாயக் கருத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகச்சிறுபான்மையினர் உணர்கின்றனர். சனாதிபதி டி.பி. விஜயதுங்கவின் தலைமை அரசியல் அமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு சனாதிபதி பிரேமதாச உருவாக்கிய உள்நாட்டு பாதுகாப்புக் குழுக்களைக் கலைத்துஅதிக சகிப்புத்தன்மையும் சனநாயகச் சூழ்நிலையும் புதிய ஆட்சியில் உருவாக்கப்படுமென்றஒர் எண்ணத்தைத்தோற்றுவித்தது.ஆயினும்முன்னையசனாதிபதியின் கொள்கைகளிலிருந்துதாம் வேறுபட்டவரெனபுதிய சனாதிபதியின் தெரிவிப்புசிறுபான்மையினர் மத்தியில் துரதிஷ்டமான பாதிப்பை ஏற்படுத்தியது

249
வடக்கு கிழக்கு போராட்டம்பயங்கரவாத நடவடிக்கையென்றும் இலங்கையில் இனப்பிரச்சனை இல்லையென்ற அவரது வியாக்கினமும் இதற்கு அடிப்படையாக இருந்தது. பெரும்பான்மை சமூகத்திடம் சிறுபான்மையினர் அநீதியான கோரிக்கைகள் விடுக்கின்றனரென்று தனது நம்பிக்கையை சனாதிபதி விஜயதுங்க மீண்டும் மீண்டும் தெளிவாக வெளிப்படுத்தினார். சனாதிபதியைத் தவறாகப் புரிந்துகொண்டனரென அரசு பின்னர் கூறிய போதும் சிறுபான்மையினர் பல்சமூக பல்லின அரசியல் சமூகக் கட்டமைப்பில் அரசின் கடப்பாடு தொடர்பான ஈடுபாட்டைச் சந்தேகிக்கின்றனர்.
(அ) பாகுபாடு
இனவேற்றுமையை இல்லாதொழிப்பதும் அடிப்படை உரிமைகளை கண்காணிப்பதற்குமான ஆணைக்குழு1986இல் உருவாக்கப்பட்டது"அரசாங்கத்துக்கு50 வீதப்பங்குரிமையுள்ள அரச பொதுக்கூட்டுத்தாபனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், அரச அல்லது பொதுக்கம்பனிகள் பொறுப்பேற்றுள்ளவியாபாரப்பொறுப்புக்கள்என்பவற்றில் இனமத,மொழி, சாதி, பால், அரசியல் கொள்கை அல்லது பிறந்த இடம் ஆகிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு வேறுபாடு காட்டப்படுவதை இல்லாதொழிக்கும்பொறுப்பு:ஆணைக்குழுவின் பணியாகும்"(வேறுபாடுகளை இல்லாதொழிப்புதற்கும் அடிப்படை உரிமைகளை கண்காணிப்பதற்குமான ஆணைக்குழு இலங்கை வருடாந்த அறிக்கை 1992)
குழுமுன்முறையிடப்பட்ட பெரும்பாலான பாகுபாட்டுக்குற்றச் சம்பவங்களின் இன, மத,மொழி சாதி, பால், அரசியல் கொள்கை அல்லது பிறந்த இடம் சம்பந்தமாக நிரூபிக்கப்பட்டவைகளை விட அநீதி அல்லதுநியாயமற்றநடவடிக்கைளுக்கான ஆதாரங்களே அதிகம் காணப்பட்டதாக குழுதனது 1992ம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
குழு தனது அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதென்றும் 1986இல் உருவாக்கப்பட்ட பிரமாணங்களின் கீழ் நிறுவப்பட்டதால் அப்பிரமாணங்களைத் திருத்துவதன் மூலம் குறைப்பாட்டை நிவர்த்திசெய்யலாமென்றும் தனதுமுன்னையமுடிவை1992இன் அறிக்கையில் குழுமீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஊழியர் பற்றாக்குறை, ஏனைய துணைவசதிகள் இன்மை காரணமாக தனது பணிகள் தடைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. தொடர்ச்சியான பாகுபாட்டு நடவடிக்கைகள் சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்வதிலுள்ள அதன் இயலாமை காரணமாகக்குழுதோல்வியுற்றுள்ளதையும் வெளிப்படையாகக் காணக்கூடியதாகஇருக்கின்றது
(ஆ) கல்வி
யுத்தத்துடனும் அவசரகாலப் பிரமாணங்களுடனும் நேரடியாகச் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குப்புறம்பாக சிறுபான்மையினரின் கல்விமொழிதொடர்பான முக்கியஉரிமைப் பிரச்சினை எழுந்துள்ளது. இத்துறைகளிலும், சட்ட அமுலாக்கத்திலும் அரசியல் ரீதியான அர்ப்பணிப்பிலும் நடைமுறையில்பாகுபாடுகாட்டப்படுவதை இணங்காணமுடியும்

Page 130
250
யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்தின் 1992/93 கல்வி ஆண்டில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான பிரச்சனையில் இவ்விடயம் முன்வைக்கப்பட்டது பேராதனை, சிறிஜயவர்த்தனபுர, களனி, றுகுணு பல்கலைக்கழகங்களின் மருத்துவபீடங்களுக்குமேலதிகமாக 5மாணவர்களை சேர்க்கலாமென்று தீர்மானித்த பல்கலைக்கழக மானியக்குழு ( யூஜி.சி) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு 408 மாணவர்களை மட்டுமே அனுமதிக்கத் தீர்மானித்துயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனதுபல்வேறு கல்வித்துறைகளுக்கும் கல்விமொத்தம் 180 மாணவர்களை அனுமதிக்க முடியுமெனக் கணக்கிட்டது.
ஆணைக்குழுவின் அறிக்கை கல்வி ஆண்டு1992/93 அனுமதியை50% வீதத்துக்குமதிகமாகக் குறைந்துள்ளது அனுமதித் தகைமையில் வெட்டுப் புள்ளிப் பிரச்சினையும் வடக்குகிழக்கில் நிலவும் சூழ்நிலையும் ஏனைய பிரதேசங்களின் நிலையும் வாக்குவாதத்தின் முக்கிய அம்சமாகக் கோடிட்டுக் காட்டப்பட்டது கொழும்புப்பல்கலைக்கழகத்தின்மருத்துவபீடமாணவர்அனுமதிக்கு ஆகக் குறைந்த புள்ளியாக 266 இருக்கையில் யாழ்ப்பாணத்துக்கு 261 புள்ளிகள் ஏன் என யாழ்ப்பான பல்கலைக்கழக செனெட் சுட்டிக்காட்டியது. வடக்குக் கிழக்கு மாணவர்கள் இராணுவநடவடிக்கைகள், விமானக்குண்டு வீச்சுக்கள் உட்பட எத்தகைய சோதனைமிகுந்த சூழ்நிலைகளில் கடினமாக உழைக்க வேண்டியுள்ளரென்பதை இப்புள்ளி நிர்ணயத்தில் கவனத்திற்கெடுக்கவில்லையென்று வாதிட்டது
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவர் பேராசிரியர் அசண்முகதாஸ் இவ்விடயம் சம்பந்தமாக கல்வி அமைச்சருக்குக் கடிதம் எழுதினார். சித்திரை 1992 ல் நடைபெற்ற க.பொதய உயர்தரப்பரீட்சையில் மாணவர்கள் முன்னரிலும்பார்க்க குறைந்த பெறுபேறுகளைப் பெற்றதற்கு வடக்கில் நிலவும் சூழ்நிலைகளைக் காரணம் காட்டி மாணவர்களுக்கு சலுகை வழங்குமாறுபேராசிரியர் சண்முகதாஸ் வேண்டுகோள்விடுத்தார்.கடந்த ஐந்து ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட புள்ளிகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களை அனுமதிக்குமாறு சங்கம் விதந்துரைத்தது
மாறுபாடான தரநிர்ணயத்தினை மேற்கொண்டுபுள்ளியிடுதல் தொடர்பாக அடிப்படை உரிமை வழக்கு மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முறைப்பாட்டாளரான இராஜதுரை சுரேந்திரன் எனும் மாணவன் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தன்னை பொறியியல் துறைக்கு அனுமதிக்க மறுத்தன் மூலம் சட்டத்தின் முன் தனது சமஉரிமைக்கான அடிப்படை உரிமையை ஆணைக்குழுமீறியுள்ளதென்றுமுறையிட்டார்.
திரு. சுரேந்திரன் இப்பரீட்சையில் 276மொத்தப் புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதிக்குத் தேவையான ஆகக் குறைந்த தகுதிகளையீட்டியதன் காரணமாக முன்னுரிமை ஒழுங்கின்படிபொறியியல் துறை1பொறியியல் துறைI. சட்டம் ஆகிய பாடநெறிகளைத் தெரிவுசெய்து பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்தார். பல்கலைக்கழக மானியக்குழு தன்னை அனுமதிப்பதில்லையென்றமுடிவை மேற்கொண்டதன் மூலம்பல்கலைக்கழகங்களில் பட்டதாரிக் கல்வித்துறைக்குமணவர்களை அனுமதிப்பது தொடர்பான சட்டங்களை பின்பற்ற அது தவறியுள்ளதென்பது அவரின் நிலைப்பாடாகும். குறிப்பாக 2ம் 29 ம் விதிகள் பின்பற்றபடவில்லை.

251
தகுதியடிப்படையிலும், மாவட்டத்தினடிப்படையிலும் சேர்க்கப்படும் பங்கினர்பற்றி விதி2இல் கூறப்பட்டுள்ளது 29வது விதியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
க.பொ.த.ப (உத) பரீட்சைப் பெறுபேறுகளின்படி அனுமதி வழங்கப்படும்போது ஒர் குறிப்பிட்ட ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பரீட்சை நடத்திருப்பின் அவ்வாண்டு நடைபெற்ற எல்லாப் பரீட்சைகளின் பெறுபேறுகளும் கூட்டாகப்பரிசீலிக்கப்படும்
தகுதியின்படியேனும், இல்லையேல் தகுதியினதும் மாவட்டத்தினதும் அடிப்படையிலேனும், அனுமதிவழங்கப்படுவதாயின் தனக்கு அனுமதிகிடைத்திருக்கவேண்டுமென்று திருசுரேந்திரன் நிரூபித்தார். ஆவணிமாதம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை விடவும் சித்திரைமாதம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு அதிக காலம் இருந்ததன் காரணமாக விதிகளைப் பின்பற்றுவதிலிருந்துவிலகிச் சென்றதாக உதவிவழக்குத்தொடுனர் முன்வைத்த காரணத்தை நீதியரசர்மாக் பர்ணாந்து ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அவர் எதிர்த்தரப்பினர் சமர்பித்த ஆவணங்கள் அவர்களது நிலைப்பாட்டை வலுப்படுத்தவில்லையென்பதைக் காண்பித்தார். நீதிமன்றம் சுரேந்திரனின் சார்பாகத்தீர்ப்பளித்தது
(இ) மொழி
தமிழை உத்தியோக மொழியாகவும் ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகவும் ஆக்குவதே அரசியலமைப்பின் 13ஆம் 16ஆம் திருத்தங்களின் ஒன்றிணைந்த வலுவாகவுள்ளது. அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் 18வது உறுப்புரையில் சிங்களம் அரசகரும மொழியாகவிருக்கும் எனும் பந்தியைத் தொடர்ந்து"(2) தமிழ்மொழியும் அரசகருமமொழியாக விருக்கும்என்றும்(3) ஆங்கிலம்இணைப்பு:மொழியாகவிருக்குமென்றும்(4)இவ்வத்தியாயத்தின் ஏற்பாடுகளை அமுல்நடத்துவதற்குவேண்டியவற்றைசட்டப்படிபாராளுமன்றம் வழங்கும்"என்றும் கூறப்பட்டுள்ளது
எவ்வாறாயினும்தாம் தெரிவுசெய்யும் அரசகருமமொழியில் அரசுடன் தொடர்புகொண்டு தமது கருமங்களை நிறைவேற்றமுடியாதுள்ளதையிட்டு தமிழர்கள் விரக்தியடைந்துள்ளனர். தமிழ் மொழியில்உத்தியோகபூர்வக் கடிதங்களைப்பெற்றுக்கொள்வதிலும் அஞ்சல் அலுவலங்களுடனும் ஏனைய திணைக்களங்களுடனும் கருமங்களைபூாற்றுவதற்குத்தொடர்புகொள்வதிலும்பொலிஸ் நிலையங்களில்பத்திரங்களை நிரப்புவதிலும் தமிழர்கள் பெரும் சிரமம்படுகின்றனர்.இருமொழித் தொடர்புக்கான வசதிகள் பற்றாக்குறையாகவுள்ளது தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குக் க்டுமையான பற்றாக்குறை நிலவுகின்றது. அரசகருமமொழி ஆணைக்குழு அண்மையில் தலையிட்டதைத்தொடர்ந்துபொலிஸ்திணைக்களம்தனதுகொள்கையைமீளய்வுசெய்வதைப் பரிசீலிக்கின்றது. ஆயினும் கொள்கை மாற்றம் மேலும் சில ஆண்டுகளுக்கு நடைபெறமாட்டாதென எதிர்பார்க்கப்படுகிறது.நீதிமன்றங்களில் தமிழ்மொழிஉபயோகத்திற்குத் தேவையான வசதிகள் பற்றாக்குறையாக இருப்பது கவலைக்கிடமானதாகும்

Page 131
252
13வது 16வது திருத்தங்கள்1988இல் மேற்கொள்ளப்ப்ட்டபோதிலும் 1991மார்கழி வரை அவை அமுல்படுத்தப்படவில்லை. அரசகருமமொழி ஆணைக்குழு 1991ஆம் ஆண்டின் 18ஆம்இலக்க சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு அதன் அதிகாரங்களும் நோக்கங்களும் அதில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அச்சட்டம் 1991வைகாசி-27இல் அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1991 ஆம் ஆண்டினிறுதியில் ஆணைக்குழு செயல்படத் தொடங்கியது. ஆணைக்குழுவில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஒய்வுபெற்ற நீதியரசர் உட்பட 6 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் எல்லோரும்பகுதிநேரச் சேவையாளர்களாகக் கடமையாற்றுகின்றனர்.முறைப்பாடுகள் யாவும் தலைவருக்கு அனுப்பப்படும். அவற்றை அவர் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பார். பெரும்பாலான முறைப்பாடுகள் யாவற்றையும் முறையான விசாரணைக்குட்படுத்தாது இணக்கமான முறையில் தீர்த்துவைக்கப்படுகின்றன. ஆணையாளருக்கு 1993 இல் 240 முறைப்பாடுகள் கிடைத்தன. இவற்றில் 8 முறைப்பாடுகள் தவிர்ந்த ஏனையவை சமரசமாகத் தீர்த்துவைக்கப்பட்டன.
தலைவர் தனிநபர்களிடமிருந்தும் பாராளுமன்ற அமைச்சர் அரச உத்தியோகத்தர்கள் அரசியல் அமைப்புக்கள் ஆகியவற்றிடமிருந்தும் முறைப்பாடுகளைப் பெறுகின்றார். தலைவர் ஒரு முறைப்பாடு கிடைத்ததும் திணைக்களங்கள் நிறுவனங்களின் பணிப்பாளர்களுடன் தொடர்பு கொண்டும், சில சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுக்குரிய அமைச்சர்களுடன் தொடர்பு கொண்டும் அவர்களுடாகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுகின்றார். அரச திணைக்களங்களும், நிறுவனங்களும் தமது பணிகளில் இணங்கியொழுகுகின்றனராவென்பதை உறுதிசெய்வதற்கு நேரடியாக விஜயம் செய்து பார்வையிடுவதற்கும்ஆணைக்குழுவிற்கு அதிகாரமுண்டு(அரசகருமமொழிகள் ஆணையாளர் டெஸ்மன் பெர்ணாந்துவுடன் நேர்முகக் கலந்துரையாடல்). அரச திணைக்களங்களும், நிறுவனங்களும் உத்தியோக மொழிப்பாவனை சம்பந்தமான சட்டங்களுடன் இணங்கியொழுகுகின்றனராவென்பதையும் அவற்றை அமுல் நடத்துவதில் முகம்கொடுக்க வேண்டியுள்ள இடையூறுகளையும்தெரிவிக்குமாறு500கேள்விக்கொத்துக்களை அவர்களுக்கு திரு.பெர்ணாந்து1993 இல் அனுப்பிவைத்தார்.
இத்தகைய முன் முயற்சிகளுக்கு மத்தியிலும் சிறுபான்மையினர் தமது விருப்பு மொழியில் கருமங்களைச் செய்வதில் தொடர்ந்து இடைஞ்சல்படுகின்றனர். உறுப்புரை 13,16 அமுலாக்கத்திற்குத் தேவையான ஒழுங்கான திட்டமின்மையே இதற்கான காரணமாகும். ஆணைக்குழுவிற்கு அரசமொழிக்கொள்கையை அமுல்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து செயற்படுத்துவதற்கும் அவற்றுடன் இணங்கியொழுகாத அரசாங்க உத்தியோகத்தர்களைத் தண்டிப்பதற்கும் இவ்வாணைக்குழுவை ஏற்படுத்திய 18வது சட்டவிதிகளின் கீழ் விரிவான அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
எனவே இச்சட்டம் ஒர் தீவிர ஆணைக்குழுவைமணக்கண் முன் தோற்றுவிக்கிறது. ஆயினும் ஆணைக்குழுவானதுதீவிரமின்றியும் தனதுகவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட விடயங்களை மட்டுமே கவனித்தும் பெரும்பாலும் மந்தகதியில் செயற்படுகின்றது. அரச சார்பற்ற நிறுவனமொன்றுபொலிஸ் திணைக்களங்கள்,நீதிமன்றங்கள்,அஞ்சல் அலுவலகங்கள் போன்ற பொதுமக்களுடன் அதிகதொடர்பு வைத்திருக்கும் பல்லின மக்கள் கலந்து வாழும்

253
பிரதேசங்களையும் திணைக்களங்களையும் நிறுவனங்களையும் பிரதானமாகத் தெரிவுசெய்து அவை இணங்கியொழுகுவதற்குரிய கால எல்லையையும் வகுத்து உத்தியோக மொழிச் சட்ட ஏற்பாடுகளை கட்டங்கட்டமாக அமுலாக்குவதற்கென ஓர் ஆலோசனைநிகழ்ச்சித்திட்டத்தையும் வரைந்தது. ஆணைக்குழு இன்னமும் இவ்வாலோசனைத் திட்டத்தை அமுலாக்கவோ இல்லையேல் தனது சொந்த அமுலாக்கல் திட்டத்தை வரையவோ இல்லையேல் வருடாந்த அறிக்கையை வெளியிடவோ இல்லை. ஆணைக்குழு நேரில் விஜயம் செய்து பணிகளைப் பார்வையிடுதல், அதன் ஆணை என்பன தொடர்பாகப் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி இல்லாதுள்ளது.
கலாச்சார மத தனித்துவம்
சிறுபான்மையினரைப்பற்றியபிரகரடத்தின் உறுப்புரை1(1)இல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது அரசாங்கம் சிறுபான்மையினர்நிலைத்து வாழ்வதையும் தேசியத்தனித்துவத்தையும் இன்றேல் அவர்களது இன, கலாச்சார, மத, மொழித் தனித்துவத்தையும் அவர்களது பிரதேசத்தினுள் பாதுகாப்பதுடன் அத்தகைய ஏதுவான சூழ்நிலைகளையும் ஊக்குவிக்கும் அரசாங்கம் சமூக கலாச்சாரஒருங்கிணைப்பு:அமைச்சின்கீழ் இந்து இஸ்லாம் சமயங்களை முன்னேற்றுவதற்கென 2அமைச்சுக்களை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் கொள்கையைநடைமுறைப்படுத்துவதில் தமக்குத் தரப்பட்ட ஆணையின்படி அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் அளவிற்கேற்ப பெரும்பாலும் சுதந்திரமாக இவ்விரு அமைச்சுக்களும் செயற்பட முடிகின்றது. தமிழ்மொழி, கலாச்சாரம் நுண்கலைகளை அபிவிருத்தி செய்வதும் இந்துசமய பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் பணியில் அடங்கும்.இதனை அடையும் நோக்கில் வருடாந்தம் இலக்கியப்பரிசுகள் வழங்குவதனூடாகவும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்தல் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய இப்பிராந்தியநாடுகளின் ஒத்துழைப்புடன் தொழில்நுட்பச் சொற்களைத் தமிழ்மொழியில் அபிவிருத்திசெய்தல், இந்து சமயம் தமிழ்மொழிப்பாடப்புத்தகங்களை வெளியிடுதல், ஆலயங்களை புனர்நிர்மாணித்தல், ஆலயங்களில் சமயப்பாடசாலைகள் நிறுவுதல் ஆகிய பணிகளில் அமைச்சு பொதுவாக ஈடுபட்டுள்ளது. அமைச்சு பல சர்வதேச தேசிய மற்றும் மாவட்ட ரீதியில் கலாச்சார நடவடிக்கைகளை ஒழுங்குசெய்தும்,முன்னின்று நடத்தியும் ஊக்குவித்தும்பணியாற்றியுள்ளது
(iv) இன மோதலுக்கான தீர்வு
பத்தாண்டுகளுக்கும்மேலாக இடம்பெறும்இனமோதலுக்குமுடிவகாணும்நோக்கில்பலதீர்வுகள் முன்வைக்கப்பட்டதை 1993 இல் காணக்கூடியதாக இருந்தது. இந்த யுத்தம் அளவிடமுடியாத துன்பங்களை ஏற்படுத்தியிருந்தும் அரசாங்கமோ அன்றி அரசியல் அறிஞர்களோ இம்மோதலிற்குத்தீர்வுகாண்பதற்கான புதிய அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்வதாக இல்லை. அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று 1993ஆவணியில் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்திடமும் இலங்கை அரசாங்கத்திடமும் தீர்வுக்கான ஆலோசனை ஒன்றை சமர்பித்தது. ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் யுத்தநிறுத்தம் இராணுவநடமாட்டமற்றபிரதேசங்களை உருவாக்குதல், வடக்குகிழக்கில் தேர்தல் நடத்துதல் ஆகிய ஏற்பாடுகள் இவ்வாலோசனையில் காணப்பட்டன.

Page 132
254
ஜனாதிபதி விஜயதுங்கவும் பிரதமந்திரி விக்கிரமசிங்கவும் இவ்வாலோசனைக்குத் தமது கடுமையான முரண்பாட்டைத் தெரிவித்ததுடன் பொதுசனத் தகவல் சாதனங்களும் சிங்கள தேசியவாதக் குழுக்களும் பிரதிகூலமாக எதிரொலித்தன. (இன்போம் நிலைமை அறிக்கை (ஆகஸ்ட் 1993) பக்.4) அமைச்சர் தொண்டமானின் முன் முயற்சியால் உள்நாட்டில் உருவான சமாதானத்திட்டங்கள் போன்றவையற்றிய தகவல்களும் அதே ஆண்டில் பயனற்றுப்போயின அங்கிளிக்கன் தேவாலயத் தலைவர் வணக்கத்துக்குரியகெனத்பெர்னான்டோ தலைமையில் ஒர் பிரதிநிதிகள் குழுவும் பெளத்தத் துறவிகள் குழுவும் சமாதான முன்முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றன.இம்முயற்சிகள் யாவும் அரசாங்கத்தினால் உதாசீனம் செய்யப்பட்டது அவை அதிகாரபூர்வஊக்குவிப்பையும் பெறவில்லை.
நாட்டில் சமாதானத்தையும் அரசியல் உறுதிப்பாட்டையும் உருவாக்கும் வழிவகைகளை விதந்துரைப்பதற்கென 1991 ஆவணி மாதம் இனமோதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுஅமைக்கப்பட்டது.ஐக்கிய தேசியக்கட்சி, சிறீலங்கை சுதந்திரக் கட்சி மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய இக்குழு “ வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குஇருதனித்தனி நிருவாக்கூறுகளை உருவாக்கவேண்டும்" எனவும்:இந்திய அரசியலமைப்பிலுள்ளது போன்ற ஒர் அதிகாரப்பங்கீட்டு திட்டத்தை ஏற்படுத்துவதெனவும்: (ஒருங்கிணைநிரல்) பட்டியல் IIIஇல் மேலும் அதிகாரப்பங்கீட்டு விடயங்களை சேர்ப்பதெனவும்: இல்லையேல் அப்பட்டியலை நீக்கிவிடுவதெனவும்; கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு சூழ்நிலைகள் சாதகமாகவுள்ள இடங்களில் உள்ளூர் ஆட்சிமன்றத்தேர்தல்களை நடத்துவற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்வதெனவும்; 1991 கார்த்திகை 12 இல் விதந்துரைத்தது. தமிழ்க்கட்சிகள் இக்கருத்தொருமைப்பாட்டின் பங்காளிகளல்லவென்பது குறிப்பிடத்தக்கது. இப்பெரும்பான்மையோர் அறிக்கையில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் திரு. எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களும் உடன்பாடின்மை காரணமாக கையொப்பமிடவில்லை. தமிழ் கட்சிகள் 1993 இன் முற்பகுதியில் தெரிவுக்குழுவிலிருந்து விலகிக்கொண்டன. அதிக அதிகாரப்பரவலாக்கத்தின் முன்நிபந்தனையாக வடக்குகிழக்கு இணைப்பு துண்டிக்கப்படவேண்டுமென்ற பெரும்பான்மைத் தீர்மானமானது இனமோதலைமுடிவுக்குக் கொண்டு வருவதற்கு இருமாகாணங்களின் இணைப்பும் இன்றியமையாத அடிப்படை நிபந்தனையென்ற தமிழர் கருத்துடன் மாறுபடுகின்றது.
11. ஆதிவாசிகள் உரிமைகள் : இலங்கை வேடர்கள்
(1) அறிமுகம்
வேடுவர்கள் இலங்கையின் ஆதிவாசிகள், பண்டைய மக்கள் மற்றும் பழ்ங்குடியினர் என்றே இந்நாட்டின் முக்கிய இனத் தொகுதியினரால் பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றனர். இவ்வேடர்கள் இப்போது பிற நாட்டுக் காடுகளில் வாழும் மக்கள் தற்கால நடைமுறைகளின் எல்லைகளில் இருப்பது அல்லது மற்ற இனத்தொகுதிகளுடன் இரண்டறக் கலந்துவிட்டமை போன்று, அவர்களுடைய கலாசாரத்திலிருந்துமாறுபட்டுவரும்நிலையில் அல்லது ஏற்கனவே மாற்றமடைந்துள்ளநிலையில் காணப்படுகின்றனர்.

255
வேடர்கள்'மகாவம்சம்'எனப்படும் சிங்களவரலாற்று நூலின்படி, யக்கர்கள், நாகர்கள் ஆகிய இந்நாட்டு ஆதிவாசிகளின் மரபில் வந்தவர்கள் என்றே கருதப்படுகிறது. இந்த ஆதிவாசிகள் பின்னர் குடியேறி ஆதிக்கம்பெற்ற இந்து-ஆரிய சிங்களவர்களால் அடக்கியொடுக்கப்பட்டுக் காடுகளுக்குள் தள்ளப்பட்டனர் என நம்பப்படுகிறது.
இலங்கைத் தேசிய சிந்தனையிலும் சிங்களவரலாற்றிலும்வேடர்களை ஆதிவாசிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டும் அவர்கள்ால் கோரப்பட்டும் வந்த அந்தஸ்து அவர்களுடைய பூர்வீக நிலங்களுக்காகிய உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை. தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்களால் 1950 ம் ஆண்டுகளிலிருந்து காடுகள் விவசாயத்திட்டங்களுக்காக அழிக்கப்பட்டமை காரணமாக வேடர்களின் நிலங்கள் மேலும் அபகரிக்கப்பட்டன.
சில வேடுவர் குழுக்கள் அபிவிருத்தி நடைமுறைகளில் விருப்பத்துடன் பங்குபற்றித் தம்பாரம் பரியத் தாயகத்தையும் வாழ்க்கை முறைகளையும் விட்டுக்கொடுத்துவந்த பொழுதிலும் சில குழுக்கள் இந்த நடைமுறைகளை எதிர்த்துவந்தன. வேடுவர்களின் இந்த எதிர்ப்பு குறிப்பாலுணர்த்தவனவாகவும் தீவிர வடிவங்களிலும் தென்படலாயிற்று. முக்கிய உள்ளூர்க் குடிமக்களுடன் ஒன்றுசேரமறுத்தமை அரசியலில் தீவிரமாய் ஈடுபட்டமை கூட்டுநிலவுரிமைக்கு வலியுறுத்தியமை ஆகியவற்றிலிருந்து இவைதென்படலாயின.
1980ம் ஆண்டுகளில் வேடர் சமுதாயத்தின் சில தொகுதிகளுக்கிடையில் தங்கள் நிலங்களை வைத்திருப்பதற்காகியபோராட்டத்துடன் தொடர்புடைய“கலாசாரப்புத்துணர்ச்சி”ஏற்படலாயிற்று இந்தக் குழுக்கள் தேசியமட்டத்தில் அரசியல் ஈடுபாடுடையனவாகக் காணப்பட்டன.காட்டுத் தாயகங்களிலிருந்துவலிந்துவேறிடங்களில் குடியேற்றியதனால்வேடர் கலாசாரம்பாதிக்கப்பட்டு விட்டது என வாதித்தனர். அவர்களுடைய மரபு வழியான கிராமங்களிற் பல உல்லாசப் பிரயாணிகள் தேடிவரும் மெய்யான“இன”காட்சிக் கூடங்களாகிவிட்டன.ஆயினும் உல்லாசப் பிரயாணத் தொழில், வேடர் கலாசாரம்புத்துணர்ச்சிபெறுவதற்குஉதவியுள்ளது.
இதே நேரத்தில், வேறு வேடர் குழுக்கள் அல்லது தனிப்பட்டவர்கள் உள்ளூரிலுள்ள முக்கிய இனமக்களுடன் இரண்டறக் கலந்து"பண்டைய","நாகரிகமற்ற" என்ற சிறப்புரிமைபெற்ற வேடர்களின் தனி அடையாளத்தையே இல்லாமற் செய்துவருகின்றனர். வேடர் இனப் புத்துணர்ச்சி, இரண்டறக் கலத்தல் ஆகிய இந்த இரண்டு நடைமுறைகளும் காட்டில் வாழும் வேடர்சமுதாயத்தைக் கூறுகளக்கிவிட்டன.
மெய்யான வேடர்கள் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமுள்ள பலர், வேடர் இனப்புத்துயிர்ப்பு அண்மையில் ஏற்பட்டிருக்கிறது என்பது காணிக்கு உரிமை கோரும் சிலருக்கு உதவுவதாகவும் அவர்களுடைய கலாசாரத்தை உல்லாசப் பிரயாணிகளுக்கு விலைப்படுத்துவதற்காகவும் செய்யப்படும் நேர்மையற்ற நடைமுறையாகும் என்கின்றனர்.
உள்நாட்டு மக்களின் உரிமைகள் பற்றிய சர்வதேச கலந்துரையாடல்களில் ஏராளமான உள்நாட்டுத்தொகுதிகளின் கூட்டு உரிமைகள், மக்களும் நிலப்பரப்பும் ஒன்று சேர்ந்திருப்பது பல்வேறுவகைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன

Page 133
2256
என விவாதிக்கப்படுகிறது (வெப்பமண்டலக் காடுகளிலுள்ள உள்நாட்டு மரபுக் குழுக்களைச் சேர்ந்த மக்கள் பற்றிய சர்வதேச கூட்டமைப்பின் அறிக்கைகள், பினாங் 1992, பார்க்க. இதனை எம். பர்னான்டோ எழுதிய ‘இலங்கை வேடர், ஒரு சமூக சட்ட ஆய்வு என்ற நூலில் அவர் எடுத்துக்காட்டியுள்ளர். இந்த நூல் இலங்கைப்பல்கலைக்கழகச் சட்ட உதவி நிலையத்தினால் 1983ல் வெளியிடப்பட்டது). இதுவேடர்களிடையில் கலாசார இன்பபுத்துணர்ச்சிநடைமுறைக்கு வழிவகுத்துள்ளது.இதனை ஒரளவில் உண்மையான நிலையைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.
எவ்வாறாயினும் வேடர்கள் உள்நாட்டு மக்கள், தூய்மையானவர்கள் பழைய பண்புள்ளவர்கள், தேசியமற்றும் சர்வதேச அபிவிருத்திநடைமுறைகளினாலும் சந்தைப்பொருளாதாரத்தினாலும் பாதிக்கப்படாதவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுடைய மரபுவழித் தாயகக் கோரிக்கையைத் தீர்மானிக்க முடியாது. இதைவிட, வேடர் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கொண்டு பார்க்குமிடத்துவேடர்களின் மெய்யானநிலைக்கோரிக்கையையும்உள்நாட்டுமக்களும் அவர்கள் கலாசாரமும்மாற்றமடையவில்லை என்ற கருத்தையும்ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது மேலும் வரலாற்றுரீதியாக ஒரமாக்கப்பட்ட கலாசாரத் தொகுதிகள் எவ்வாறு தம் வாழ்க்கை முறைகள் சம்பந்தமான தேசியத் தீர்மானங்களைச் செய்வதில் பங்குபற்றலாம் எனவும் அவர்கள் கேட்கின்றனர்.
இந்தப் பிரிவு இலங்கைத் தேசிய உணர்ச்சியில் வேடர்கள் பற்றிய கருத்து, கட்டமைப்பு ஆகியவற்றின் வரலாற்றைத் தேடத்தொடங்கி அவர்களை விருத்தியடையச் செய்யவும் ஒன்றிணைக்கவும் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் சிலவற்றை விளக்குகின்றது.மேலும், வேடர்களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில்ஏற்பட்டபோராட்டங்களை ஆராய்வதுடன் வேடர்கள் முன்னர் பயன்படுத்திய காட்டுநிலங்களை மீண்டும் பயன்படுத்துவதற்கெதிராகச் சூழல் பாதுகாப்பாளர்காட்டும்காரணங்களை இது எடுத்துக்காட்டுகிறது.இந்த நிலங்களிற்சில இப்பொழுது காட்டுவளம்மற்றும்காட்டுமிருகப்பாதுகாப்புத்திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ்வருகின்றன.
இதே வேளை இந்தக் கட்டுரை வேடர்களின் அடையாளம் பற்றியகருத்துநிலையானதாயும் அசையாததாயுமில்லாமல் உருவாகியும் தர்க்கத்துக்குரியதாயுமுள்ள நடைமுறையாகும் எனத் தெரிவிக்கிறது.பல்வேறு வேபர் சமுதாயங்கள் அடைந்துள்ள மாற்றங்களை தேசிய அபிவிருத்தி, மனிதஉரிமைகள் பற்றிய அண்மைக்கால சர்வதேச கலந்துரையாடல்கள், உள்நாட்டுமக்களின் கூட்டு உரிமைகள், கலாசார மற்றும் சுய வேறுபட்ட தன்மை ஆகியற்றுடன் தொடர்புபடுத்தி இக்கட்டுரை கருத்துவெளியிட்டுள்ளது.
2. வேடர்கள் யார்?
சிங்களவழக்கிலும் நாட்டுக்கதைகளிலும்சொல்லப்படும்“வேடர்”என்ற சொல்நாகரிகமடையாத அல்லது போதிய நாகரிகமேற்படாத மக்களைக் குறிக்கும். இது டாவின் குறிப்பிட்டவாறான
சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள இனம் எனப் பொருள்படுவதாகும். இன்று வேடர் என்ற இனத்திற்கு புத்துயிரளிக்க முனைபவர்கள் தங்களை'வன்னியர் அல்லது ‘காடு வாழ்மக்கள்

257
என்றே குறிப்பிடுகின்றனர். வேறு சிலர் தம் வேட்டுவத்தன்மையை நீக்குவதற்காக முக்கிய உள்ளூர் இனத்தொகுதிகளின் மொழி, பழக்க வழக்கங்கள் மற்றும் தன்மைகளைப் பின்பற்ற விரும்புகின்றனர். எனினும், இந்த மக்களைக் குறிப்பிடுவதற்குப் பொதுவாக “வேடர்”என்ற சொல் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதனால் இந்த அறிக்கையிலும் சில மட்டுப்படுத்தல்களுடன், அதுவேபயன்படுத்தப்படுகிறது.
வேடர்கள் இலங்கயையில் 3 பிரதேசங்களில் பரந்து வாழ்கின்றார்கள். இவர்கள் முக்கியமாக நாட்டின் தென் கிழக்குப்பகுதியில் கரையோரத்திலிருந்து உட்புறமாகவுள்ள மொனராகலை, பதுளை, அம்பாறை,மட்டக்களப்புமாவட்டங்களில் வாழ்கிறார்கள். இந்தத் தொகுதியினர் பயிர்ச் செய்கையில் அதிகம் ஈடுபடுவதில்லை (சீஜிசெலிக்மன், பி.சா.செலிக்மன ஆகியோர் எழுதி 1911ல் கேம்பிரிச் பல்கலைக்கழக அச்சகத்தினால் வெளியிடப்பட்ட“வேடர்கள்” என்ற நூலைப் பார்க்க; இது இத் தொகுதி வேடர்களைப் பற்றி எழுதப்பட்ட மிகப் பழைய மனித வரலாற்று நூலாகும்.) இவர்கள் மிகத் தூர இடங்களிலுள்ள பாறைக் குகைகளில், அடர்ந்த காடுகளுள் அல்லது சிறு கிராமங்களுள் வாழ்கிறார்கள், இந்தத் தொகுதியான வேடர்கள் தனிமையில் வாழ்வதனால் தங்கள் கலாசார பாரம்பரியங்களை, மற்ற வேட்டுவ சமுதாயங்களிலும் பார்க்க பேணிவந்துள்ளார்கள். இதனால் வேடர் பற்றிய பல ஆராய்ச்சியாளர்கள் இத்தொகுதியினரை முக்கியமாக ஆராய்ந்ததில் ஆச்சரியமில்லை எனலாம்.
வேடர்களில் இரண்டாம் தொகுதியினர் அனுராதபுரம்மாவட்டத்தில் காணப்படுகின்றனர் (ஜேம்ஸ் பிறவுஸ்எழுதிய அனுராதபுர வேடர்கிராமங்கள் இலங்கையிலுள்ளஒருசமுதாயத்தின் மனிதரியல் வரலாறு என்ற தலைப்புடன் 1978 ல் வெளிவந்த நூல் குடிமக்கள் பற்றிய மிகப்பழைய ஆய்வு நூல்களில் ஒன்றாகும்) அனுராதபுரம் வேடர்கள் ஈரகால நெல் பயிரிடுவதுடன் கிழக்கு வகைகளையும்பயிரிட்டுவந்தார்கள். இவர்கள் பெரும்பாலும் தம் இனத்தவருள்ளேயே விவாகம் செய்பவர்களாகையால் வேறு பிரதேசங்களிலிருந்த வேடர்களுடன் அதிகம் தொடர்பில்லாதிருந்தனர்.
மூன்றாவது பெரிய தொகுதியான வேடர்கள் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் வாழைக்சேனைக்கும்திருகோணமலைக்குமிடையில் காணப்படுகின்றனர்.இவர்கள் பொதுவாகக் கரையோரவேபர்கள்எனக்குறிப்பிடப்படுவர்.ழற்றைய இருதொகுதியினர் போலல்லாது இவர்கள் தமிழ் பேசுபவர்களாகவும் பொதுவாக இந்துக்களாகவும் வாழ்கின்றனர். இவர்கள் ஓரளவு உள்ளூர்ப் பொருளாதாரத்துடன் இணைந்தவர்களாகவும் பெரும்பாலும் கடற்றொழிலிலும் சேனைப்பயிர்ச்செய்கையிலுமீடுபடுபவர்;இடைக்கிடைகூலித்தொழிலும் செய்வர். கரையோரப் பகுதியில் வாழும் வேடர்களுக்கும் உள்ளுர்ப் பகுதிகளில் வாழும் வேடர்களுக்கும் எவ்வித தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இவர்களும் தொடக்கத்தில் உள்ளூர்ப் பகுதிகளிலிருந்தே கரையோரப்பகுதிக்கு வந்தனர் என்றே நம்பப்படுகிறது.
நகரப் பகுதியிலுள்ள பெரும்பாலான கல்வியாளர்களிடையில் நிலவும் பொதுவான கருத்து,

Page 134
258
வேடர்கள் மறைந்துபோகக்கூடிய அபாயநிலையைனதிர்நோக்கியுள்ள ஒருவர்க்கம் என்பதாகும். (பின்வரும் நூல்களைப் பார்க்க:தர்மதாச, கே.என்.ஓ. எஸ்.டபிள்யு. ஆர்தஏ.சமரசிங்க எழுதிய மறையும் பழங்குடியினர். இலங்கை வேடர்கள் இடைமாறும் நிலையில், இன ஆய்வுக்கான சர்வதேசநிலையமும்நொருட்டும், விக்காஸ்வெளியீட்டு இல்லம்,1990;ஜேசெனரத்னவேடர்கள், அபிவிருத்தியும் அரசும்,தாச்சிட் பஷியோ இல. 6 இல்,1986).
இந்தக் கருத்துக்கள் பெரும்பாலும் குடித்தொகைமதிப்புஎண்களை அடிப்படையாகக் கொண்டே தெரிவிக்கப்பட்டுள்ளன எனத் தெரிகிறது. 1911குடித் தொகை மதிப்பின்படி நாடு முழுவதிலும், மொத்தம் 5342 வேடர்கள் இருந்தனர். 1921 இல், அதாவது பத்து ஆண்டுகளின் பின்னர், நாடு முழுவதிலும் 4510 வேடர்கள் இருந்தனர் என மதிப்பிடப்பட்டது. 1963 இல் நடைபெற்ற குடித்தொகை மதிப்பின்படி 400 வேடர்களை மாத்திரமிருந்தனர். 1963 பின் நடை பெற்ற தேசிய குடித்தொகை மதிப்புப் படிவத்தில் வேடர்கள் தனி இனமாகப் பிரித்துக் காட்டப்படவில்லை. பதிலாக “பிறஇனத்தவர்” என்றபிரிவுக்குள் அப்படிவத்தில்வேடர்கள் சேர்க்கப்பட்டனர்.ஆனால் ஜேம்ஸ் பிறவ் என்ற மனிதரியல் ஆய்வாளர் தேசிய குடிமதிப்பீட்டுப் படிவத்தில் ஆபத்துக்குள்ளாகிய கலாசாரத் தொகுதியாகிய வேடர், 1970ல், அனுராதபுரம்மாவட்டத்தில் மாத்திரம் 5800 பேர் இருந்ததைத் தான் எண்ணிக் கணக்கெடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
“கலாசார அழிவுக்கு" அல்லது தொடர்ந்து வாழ்தல் என்ற கோட்பாட்டுக்கு ஆளாகியிருக்கும் வேடர் எத்தனைபேர் வாழ்கிறார்கள் என்ற எண்ணிக்கை, அவர்களின் தொகையை எண்ணிப் பார்ப்பவர்களையும் அவர்கள் பற்றிய வரைவிலக்கணழ்கூறுபவர்களையும் பொறுத்துமாறுபடும். 1911 ம் ஆண்டுக் குடிமதிப்பீட்டில் வேடர்கள் காட்டில் வாழ்பவர்களாயும் வேட்டையாடுபவர்களையுமுள்ள ஆதிக் குடியினர், சிங்களவர்களிலும் தமிழர்களிலிருந்தும் வேறுபட்ட பல்வேறு சமய நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையுமுடையவர்கள் எனக் காட்டப்பட்டுள்ளது. இத்தன்மைகள் இப்பொழுதும் அவர்களிடையில் காணப்படுகிறது. வேடர்களின் கலாசாரத் தனித் தன்மை பற்றிய கருத்துடையவர்கள் அவர்கள் பற்றிய கணக்கெடுக்கும்பொழுதுகரையோரப்பகுதியிலுள்ள வேடர்களை வேடர்களாக இப்பொழுது கணிப்பதில்லை.
மேற்குறிப்பிட்டவகையான மனப்பான்மையுள்ளவர்கள் வேடர்கள் பற்றிய கணக்கெடுககும பொழுதுவேடர் சமுதாயம் அடைந்துள்ள கலாசார மாற்றங்கள் பற்றியோ மற்ற இனங்களுடன் இரண்டறக் கலந்து விட்டமை பற்றியோ கவனிப்பதில்லை. கணக்கெடுக்கும் வேறுசிலர் அத்தகைய கலாசாரத் தனித்தன்மைபற்றிய வரைவிலக்கணம் போதியதாக வில்லை எனக் கருதுகின்றனர். வேடர் யார், வேடரல்லாதவர் யார்என்பதைத்தீர்மானிப்பதற்குக் கலாசாரத்தனி அடையாளம்பற்றிய இக்கருத்துகணக்கெடுப்பவர்களை வசப்படுத்தியிருக்கிறது.
வேடர் கலாசார முறையில் இரண்டறக் கலத்தல் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வந்திருக்கிறது; இப்பொழுதும் நடைபெற்றுவருகிறது. பழைய சிங்களப் பாட நூல்களிலும்

259
“கொஹொம்ப கங்காரிய’ போன்ற பெயர்பெற்ற கிரியைகளிலும் வேடர் பற்றிக் குறிப்பிடப்படுவதனால் முக்கிய கலாசாரத் தொகுதிகளுடன் இவர்கள் எவ்வளவுக்குக் கலந்து கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். சமய மற்றும் சிங்களவரும் வேடர்களும் கலந்துகொள்வது பற்றிப்பல்வேறு மனிதரியல் ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன (தர்மதாச கே.என்.ஓ.மறைந்துவரும்பழங்குடியினர்,1990;ஜிஒபயசேகர,பத்தினித்தெய்வவழிபாடு டெல்ஹி, மொத்திலால் பனார்சித்ாஸ், 1984, பார்க்க) இவற்றிலிருந்து வேடர்கள் உள்நாட்டுச் சமுதாயங்களுடன் இரண்டறக் கலந்துவிடுவதுபற்றிய நீண்ட வரலாற்றைக் காணலாம்.
3. வேடர்களின் சமூக-பொருளாதாரக் தோற்றம்
வேடர்கள் பற்றிய அண்மைக்கால ஆய்வுகள் (ஜேபிறவுஅனுராதபுரத்தில் வேடர் கிராமங்கள்; இலங்கையிலுள்ள ஒரு சமுதாயம் பற்றிய மனிதரியல் வரலாறு, சியற்றின், உவாஷிங்டன் பல்கலைக்கழக அச்சகம், 1978:ஜேடாட், கரையோர வேடர்கள்; மறைந்துவரும்பழக்குடியினரின், ஒரப்பரிமாணம், கே.என்.ஓ.தர்மதாசாவும் எஸ்.டபிள்யு. ஆர்.த.ஏ. சமரசிங்காவும், விக்காஸ் வெளியீட்டு இல்லம்1990)இப்பொழுதுள்ளபல்வேறுவேடர் சமுதாயங்களிலுள்ள பொதுத்தன்மை இந்நாட்டின் சமூக அரசியல் நிலைமையில் அவர்களுடைய ஒரமான நிலையாகும் எனக் குறிப்பிடுகின்றன.
கரையோர வேடர்பற்றி ஆய்வுசெய்த ஜோன் டாட் என்பவர் பின்வருமாறு எழுதுகிறார்.
வேடர்களின் ஒரு குறிப்பிட்ட கலாசார, இன, தொழில் அல்லது மொழித்தன்மைகள் மாத்திரமன்றி அவர்களுடைய மிகத் திட்டமான இயல்பு, பலகாலமாக அவர்களிற் காணப்படும் அடையாளம் ஆகியன அவர்களுடைய ஒரமான நிலையைக் காட்டுகின்றன (டாட் 1990 பக்.77)
வேடர்களின் பொருளாதார ஒரத்தன்மை பல்வேறுபரிமாணங்களைக் கொண்டுள்ளது.ஒன்று, இவர்கள் வாழும் இடங்களின் தன்மை:இந்த இடங்கள் நகரங்களிலிருந்துதூரத்திலும் மக்கள் நெருங்கி வாழாத, பொருளாதார உற்பத்திகள் குறைந்த பிரதேசமாகவுமுள்ளன. மூலதனம் இல்லாமை, கூடிய பய்ன் விளையக்கூடிய அல்லது பெரிய அளவிலான முயற்சிகளில், உதாரணமாக நெற்பயிர்ச்செய்கையில், ஈடுபட உதவக்கூடிய திறமை இல்லாமை, கல்வியறிவு பெறக்கூடியவசதிகளில்லாமை போன்ற குறைபாடுகள் அவர்கள் சமூக முன்னேற்றமடைவதற்குத் தடையாக விருக்கின்றன. ஆனால் வேடர்கள் சேனைப்பயிர்ச் செய்கையில் ஈடுபடுபவர்களாகையால் சாதி முறைமையினாலும் தொழிலாளர் மற்றும் பரிமாற்ற உறவுகளினாலும் பாதிக்கப்பட்ட சிங்களக் கிராமத்தவர்களுக்கில்லாத ஓரளவு சுதந்திரமும் தன்னாட்சி உரிமையும் உடையவர்களாகக் காணப்படுகின்றனர். வேடர் சிலர் உள்ளூரிலுள்ள உயர்சாதிமரபில் வந்தவர்களுடன் இரண்டறக் கலந்துவிட்டனர். ஆனால் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவந்தவர்கள் உள்ளூர்க் காணிகளைக் கட்டுப்படுத்திவரும் முக்கிய உயர் சாதியினர் மற்றும் சிறப்புக் குழுவினரின் அதிகார மட்டத்திற்கு அப்பால் இப்பொழுதும் வாழ்ந்து வருகின்றனர்.

Page 135
260
இவ்வாறு ஓரளவு சுயாட்சி நிலையில் இருந்து வரும் வேடர் சந்தைப்பொருளாதாரத்திற்கு அப்பாலும் தனிப்பட்ட சொத்துரிமை இல்லாமலும் வாழ்ந்துவருகின்றனர். இதேவேளை, வேடர் சமுதாயத்திற்கு வெளியிலிருந்துவரும் நெருக்குதல்கள்,முக்கியமாக அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையிடுதல், மீளக் குடியமர்த்தும் திட்டங்கள் ஆகியன இச்சமுதாயம் சிங்களவர் அல்லது தமிழர் சமுதாயத்துடன் இரண்டறக் கலந்துவிடும் நடைமுறைகளை வேகப்படுத்திவிட்டன.இந்த ஒருங்கிணைப்பின் விளைவாக வேடர்களிடையில் வேறுவகையான ஒரு பொருளாதார ஓரமாக்கல் ஏற்பட்டு அவர்களுடைய சுயாட்சிநிலைமையும் பாதிக்கப்பட்டுவிட்டது.
வேடர்கள் முக்கிய நீரோட்டமாயுள்ள சமுதாயத்துடன் ஒருங்கிணைவதற்கு மேலதிகமான ஒரு நிலையும் தோன்றியுள்ளது. வேடர் சமுதாயத்திலுள்ள முதியவர்கள் தம் பழைய முறைகளை அப்படியே பின்பற்றிவர விரும்பும் அதேவேளை இளைய சமுதாயத்தினர் உள்ளூர்க் குடிமக்களுடன் திருமணங்கள் மூலம் ஒன்றுசேர விரும்புகின்றனர் என்பதே இந்த நிலையாகும்
4. அண்மையிலேற்பட்ட காணித்தகராருகளின் பின்னணி
இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் புதிய நிலங்கள் பயன் படுத்தப்பட்டமை காரணமாக, காடுகளில் வாழ்ந்து, வேட்டையாடியும் சேனைப்பயிர்ச்செய்கையிலீடுபட்டும் வந்த வேடர்கள் பலரின் வாழ்க்கைமுறைபாதிக்கப்படலாயிற்று, சுதந்திரத்திற்குப்பின்வந்த சகாப்தத்தில் கல்ஒயா, துரித மகாவலி அபிவிருத்தி போன்ற பாரிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்காகக் காடுகள் அழிக்கப்பட்டமைவேடர் சமுதாயத்தின் வாழ்க்கை முறைக்கு உதவிவந்த காட்டுப்பகுதிகளையும் பாதிக்கலாயிற்று.
இந்தஉருவமாற்றங்களின் விளைவாக குடிமதிப்புகளிற்தரப்பட்டவேடர்களின் எண்ணிக்கையிலும் அவர்கள் பற்றிய அண்மைக்கால மனிதரியல் ஆய்வுகளிற் காட்டப்பட்ட சமூக, பொருளாதா அமைப்புகளிலும்பெரும்மாற்றங்களேற்படுவனவாயின் 1930களிலும்1940களிலும்தொடங்கப்பட்ட நிலம்சம்பந்தமான மாற்றங்கள், புதிய நிலங்களில் சிங்கள, தமிழ்க் குடியேற்றவாசிகளின் வருகை காரணமாக தொடர்ந்துஎற்படலாயின.இந்தமாற்றங்களின் விளைவாகவேபர்கள் தம்தாயகமாகப் பயன்படுத்திய காட்டு நிலங்களின் பரப்பளவு குறையவே அவர்களின் வாழ்க்கை முறையும் பாதிப்படலாயிற்று
5. வேடர்கள் பற்றிய அரசாங்கக் கொள்கை
1950களின்முற்பகுதியில்வேபர்களின் ஒரத்தொகுதிகளைதேசிய அபிவிருத்தித்திட்டங்களுடன் இணைந்து அவர்களை மற்ற மக்களுடன் ஒன்று சேர்க்கும் கொள்கை வகுக்கப்பட்டதுடன்
இலங்கை அரசாங்கம் வேடர் சமுதாயங்களில் தலையிடுவதாயிற்று. அதே வேளை, வேடர்களிடையிற் காணப்பட்ட போசாக்கின்மை, வறுமை, நோய் ஆகியவற்றை ஒழிப்பதற்கென

261
வேடர் நலன்புரி திட்டம் ஒன்றும் தொடக்கப்பட்டது. இதற்கென வேடர் நலன்புரிஉத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டதுடன் வேடர் நலன்புரி செயற்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. 1951ல், வேடர்களின் வாழ்க்கை நிலைமைகளைத் திருத்தமடையச் செய்வதற்கென பின்தங்கிய சமுதாயங்களின் அபிவிருத்திச் சபை என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது. ரொடியர்,கின்னரயர் என்ற பிற பின் தங்கிய தொகுதிகளும் இந்த அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டன. இந்தச் சபையின் தலைவராக கிராம அபிவிருத்தி அமைச்சின் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட்டார். இவருடன்பல்வேறு மாகாணங்களிலுள்ள அரசாங்கஉத்தியோகத்தர்களும்தனிப்பட்டமனிதரியல் ஆய்வாளர் இருவரும் இந்தச் சபையில் சேர்க்கப்பட்டனர்.
இந்தச் சபையின் கடமைகளில் ஒன்று கல்ஒயா அபிவிருத்தித் திட்டத்தின் விளைவாகப் பரம்பரைத் தாயகத்தையும் வாழ்க்கை வழிவகைகளையும் இழந்த வேடர்களின் நலனைக் கவனிப்பதாகும். இந்தத் திட்டம் 1950ம் ஆண்டுகளின் முற்பகுதியில் பூர்த்தியடைந்த பொழுது வேடர் சுற்றித்திரிந்த பகுதிகள் பல செனநாயக்க சமுத்திர நீர்த்தேக்கத்துள் வந்தன அல்லது இயற்கையான நீர்த்தேக்கம் பகுதியாக்கப்பட்டன. (வேடர் சுற்றித் திரிந்த காட்டுப்பகுதி அனுராதபுரத்திலிருந்து கிழக்குக் கரையோரத்தை நோக்கிச் சென்று பின்னர் தெற்கேயுள்ள அம்பாந்தோட்டை வரை செல்லும் பகுதியாகும்). இடம் பெயர்ந்த வேடர்களுக்கெனப்புதிய குடியேற்றத்திட்டமொன்றுதம்பனைக்குக் கிட்டவுள்ள கந்தெகன்விலையில் உருவாக்கப்பட்டது. 1955ல் திறக்கப்பட்ட இத்திட்டத்தில் 27 புதிய வீடுகள் இருப்பிட வசதிகளை இழந்த குடும்பங்களுக்கென ஒதுக்கப்பட்டன. இவர்களுக்கு 2 ஏக்கர் நெற் காணியும் 2 ஏக்கர் மேட்டு நிலமும்பயிர்ச் செய்கைக்காக கொடுக்கப்பட்டன. வேடர்கள் உள்ளூர்ச் சிங்கள மக்களுடனும் தமிழ்மக்களுடனும் ஒன்றுசேரவசதிசெய்வதற்காகவேஇப்புதிய குடியேற்றம் உருவாக்கப்பட்டது.
காடுகளில் வாழ்ந்த வேடர்களை விவசாயப்பகுதிகளிலுள்ள மக்களுடன் ஒன்று சேரச்செய்வதே அவர்களுடைய நிலைமையையும் அந்தஸ்தையும் திருத்தடையச் செய்வதற்காகிய வழியென்றே இலங்கை அரசாங்கம் கருதியது இவர்களைத்தேசியநீரோட்டத்துள்கொண்டுவருவதே முக்கிய நோக்கமாகவிருந்தது
6. விரைவுபடுத்தப்பட்ட மகாவெலித் திட்டமும் மதுறு
ஒயாப் பிணக்கும்.
1983ல் மதுரு ஒயா தேசியப்பூங்கா துரித மகரவலி அபிவிருத்திட்ட அமைப்பிற்குள் (இது ஒரு பெரிய நீர்ப்பாசன குடியேற்றத்திட்டமாகும்) உருவாக்கப்பட்டது. இந்தப் பூங்கா மகாவலித் திட்டத்தின் விளைவாக இடம்பெயர்ந்த காட்டுமிருகங்களுக்கு வாழ்விட வசதியளிப்பதற்கும் நீரேந்துபரப்பைக் காப்பாற்றுவதற்குமாகஉருவாக்கப்பட்டது.இந்தப்புதிய பூங்காப்பகுதியிலிருந்து 5 வேடர் குடியேற்றங்களையும் அகற்றவேண்டியதாயிற்று. இவற்றுள் தம்பன, கந்தெகன்வில என்ற வேடர்குடியேற்றங்களும் அடங்கியிருந்தன. 206 வேடர்குடும்பங்கள் அவர்கள் பாரம்பரிய தாயகங்ளிலிருந்து அகற்றப்பட்டுமகாவலித்திட்டத்தின் நிருவாகத்தின் கீழுள்ள வேறுபகுதிகளில் மீளக்குடியேற்றப்பட்டன.வயதுமுதிர்ந்த குலத்தலைவனாகியதிசகாமியும்7குடும்பத்தவர்களும் மாத்திரம் அவ்விடத்தைவிட்டுநீங்கமறுத்துவிட்டனர்.இவர்கள் தங்களை வேடவன்னியெற்றோ எனக் கூறிக்கொள்கின்றனர்.

Page 136
262
புதிய பூங்கா நிலங்கள் எனக் குறிப்பிடப்படும் பகுதி இப்பொழுது காட்டு விலங்குத் திணைக்களத்தில், 1938ம்ஆண்டின் தாவரவிலக்கினம் பாதுகாப்புத் கட்டளைச் சட்டத்தின் கீழ் நிருவகிக்கப்படுகிறது. இந்தப் பூங்கா, அரசாங்கத்தின் கருத்துப்படி, சூழல் முறைமையைச் சமநிலையில் வைத்திருப்பதற்காக எஞ்சியுள்ள காட்டைப் பாதுகாக்கத் தேவைப்படுகிறது. மகாவலித்திட்டம் போன்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் பொருட்டுக் காடுகள் பல அழிக்கப்பட்டு விட்டமையினால் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதாயிற்று எனச் சொல்லப்பட்டது.
தங்கள்தாயகம்மீது தங்களுக்கு வழக்கமான (பாரம்பரிய) உரிமைகளுண்டுஎனக்கூறியவண்ணம் அந்நிலத்திலேயேதொடர்ந்திருந்த வேடர்களுக்கும் காட்டுவிலங்குத்திணைக்களத்திற்பிடையில் உடனடியாகவே போராட்டம் தொடங்கியது. 1938ம் ஆண்டின் தாவர விலங்கினக் கட்டளைச் சட்டத்தின் படி எவரும் “தேசியப்பூங்காவிலுள்ள தாவர விலங்கினங்களைப் பார்வையிடுவதற்கன்றி அங்கு செல்லமுடியாது” எனவும் "அங்குள்ள மிருகம் எதனையும் வேட்டையாடவோ, கொல்லவோ, கொண்டு செல்லவோ கூடாது” அவ்வாறே “தேசியப் பூங்காவிலுள்ளதாவரம் எதனையும்சேதப்படுத்தவோஎடுத்துச்சொல்லவே அழிக்கவோ கூடாது" எனவேநிலங்களை நிருவகிப்பதற்காகிய கட்டளைச்சட்டத்தின்படி வேடர்கள் அப்பூங்காவிலிருக்க முடியாது வேடர்களின் முக்கியவருவாய்வழிகள் வேட்டையாடுதல், உணவுசேகரித்தல்,விவசாய மாற்றம் செய்தல் ஆகியனவாயிருந்த பொழுதிலும் இப்பூங்காவில் அவர்கள் தம் வாழ்க்கைத் தொழில் எதிலும் ஈடுபட அனுமதிக்கப்படவில்லை.
வேடர்களுக்கும்காட்டுவிலங்கு அதிகாரிகளுக்குமிடையிலேற்பட்ட முரண்பாட்டைத் தீர்ப்பதன் பொருட்டு அமைச்சரவை 1500 ஏக்கர் நிலத்தில் சரணாலயம் ஒன்றைத் தாபிக்க 1990 ஆணி மாதம் தீர்மானித்தது. இது மதுரு ஓயாத் தேசிய பூங்காவுடன் தொடர்பில்லாததாகும். இச்சரணாலயத்தில் இடம்பெயர்ந்த வேடர் கிராமங்கள் ஐந்துக்கும் இடமளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. தேசிய பூங்கா சம்பந்தமான பிரமாணங்களைப் போலல்லாது, சரணாலயங்களுக்காகிய கட்டளைச் சட்டம் அந்நிலங்களில் முன்னர் வாழ்ந்த மக்களின் உரிமைகளை ஒப்புக்கொண்டது. சட்டமுறைப்படி அல்லது வழக்கத்தின்படி அல்லது பழகிவிட்ட படியாக மீன்பிடித்துவந்தவர்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. அங்கே வேடர்கள் வசிக்க அனுமதிக்கப்பட்ட பொழுதிலும், வளங்களைப் பயன்படுத்தும் முறைபற்றிச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.பாரம்பரியமான வேட்டையாடும்முறைகளும் உணவுசேகரிக்கும் முறைகளும்மாத்திரம் அனுமதிக்கப்பட்டன. துப்பாக்கி வகைகள்,சங்கிலி வாட்கள் அல்லதுவேறு நவீன கருவிகள் அனுமதிக்கப்படவில்லை.
வனியற்றோர் நம்பிக்கை நிதியம் என்பதனையும் காட்டு விலங்குப்பாதுகாப்புப்பணிப்பாளரின் தலைமையில் அமைச்சரவை தாபித்தது. இந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக கலாசார அமைச்சின் பிரதிநிதி, சம்பந்தப்பட்ட அரச முகவராண்மைகளின் பிரதிநிதிகள், கலாசார சேவைகள் என்பதன் பிரதிநிதியுட்பட்ட2அரசசார்பற்றநிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இருப்பர். இந்த நிதியத்தின் பணிவேடர்தம்கலாசாரத்தைப்பேணவும்"வேடர் வணியெற்றோ"

263
என்பதன் நலன்களைக் கவனிக்கவும்உதவுவதாகும்.இந்த நோக்கத்திற்காகச் சரணாலயத்தில் ஒருகலாசார நிலையம் நிறுவப்பட வேண்டும் எனவும் விதந்துரைக்கப்பட்டது.
சில காலத்தின் பின்னர் வேடர்கள் சிலர் விரைவுபடுத்தப்பட்ட மகாவெளி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அவர்கள் மீளக் குடியேற்றப்பட்ட பகுதிகளைவிடுத்து வெளியேறத் தீர்மானித்தனர். அவர்கள் தங்கள் பாரம்பரியமான கிராமங்களுக்குத் திரும்பினர்; ஆனால் அவர்கள் கந்தெகன் வில்ல என்ற கிராமத்தைக் கைவிட வேண்டுமெனக் காட்டு விலங்குத் திணைக்களத்தினால் கேட்கப்பட்டனர். சரணாலயம் 5 வேடர் கிராமங்களில் சில பகுதிகளை மாத்திரம் கொண்டுள்ளது என அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் வேடர்கள் தமது5 பாரம்பரிய கிராமங்கள் தமக்கு மீளக் கொடுக்கப்பட்டுவிட்டதாகக் தமக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றனர். மேலும் தமக்கு ஒதுக்கப்பட்ட பகுதியை விபரிப்பதற்கு அரசாங்கம்பயன்படுத்திய“ஏக்கர்" என்ற சொல்லின் கருத்துத் தமக்கு விளக்கவில்லை எனவும் கூறினார்.
வேறு28 வேடர்கள் தம்புதிய வாழ்க்கை முறை தமக்கு மகிழ்ச்சியைத தரவில்லை எனக்கூறித் தம்பாரம்பரிய கிராமங்களுக்குத் திரும்பமுயன்றபொழுதுமகாவெலிகாணிகாணிஅபிவிருத்தி அமைச்சு அதனைத் தடைசெய்தது.இதுபற்றிஒரு தேசியபத்திரிகைஇந்த அமைச்சை நேர்முகம் கண்டபொழுது காடுகளைப்பாதுகாப்பதே தேசியக்கொள்கை எனவும்,வேடர்கள்தாம்பாரம்பரிய வாழ்க்கை முறையைப் பின்பற்றவெனத்திரும்பி வருவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் அப்பத்திரிகைக்குத்தெரிவிக்கப்பட்டது.
இந்தப்போராட்டத்தின்போது2 வேடர்கள் கைதுசெய்யப்பட்டனர்.இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கு முகமாக திசகாமி உண்ணா விரதம் மேற்கொண்ட பொழுது அரசாங்கம் வேடர்களுடைய பிரச்சினைகள் யாவற்றையும் பரிசீலனை செய்வதாக வாக்குறுதியளித்தன் விளைவாக அந்த உண்ணாவிரதம் 1992 வைகாசிமாதம் கைவிடப்பட்டது. அப்பொழுதுவேடர்களுக்கு மேலும் 10, 000 ஏக்கர் நிலம் தேசிய பூங்காவுக்குள் வழங்கப்பட வேண்டுமெனவும் சரணாலயம் தங்கள் வாழ்க்கைத்தேவைகளை நிறைவேற்றக்கூடியதாகப்பெரிதாகவில்லை எனவும் அரசாங்கத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை காட்டு விலங்குத் திணைக்களமும் சூழலோடு தொடர்புடைய சில அரச சார்பற்ற நிறுவனங்களும் எதிர்த்தன; வேடர்கள் இப்பொழுது தம் பாரம்பரியமான வழக்கங்களைக் கைவிட்டுவிட்டனர், எனவும் வேட்டையாடுவதற்கு இப்பொழுது துப்பாக்கி வகைகளைப் பயன்படுத்துகிறார்கள் எனவும் இப்பகுதிக்கு வரும் உல்லாசப் பிரயாணிகளிடமிருந்துபணம் பெற முனைகிறார்கள் எனவும் இவர்கள் இவ்வேடர்மீதுகுற்றம் சாடடினா,
வேடர்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. வன்னியெற்றோ நம்பிக்கை நிதியம் செயற்படமுடியாதிருக்கிறது. காட்டு விலங்குத் திணைக்களத்திற்கும் வேடர்களுக்குமிடையில் தொடர்ந்துபிணக்குகளிலிருப்பதனால் கலாசார சேவைகள் என்ற அரச

Page 137
264
சார்பற்ற நிறுவனம் (வன்னியேற்றோ நம்பிக்கை நிதியத்தில் நிதிகளாவிருக்கும் நிறுவனத்திலொன்று) சனாதிபதியைத் தலையிடுமாறு வேண்டியது. சனாதிபதி இப்பொழுது வேடர்களின் கலாசாரத்தைப் பேணுவதற்காகியதிட்டத்தைத் தாயாரிக்கும்பொறுப்பைகலாசார சேவைகள் என்றநிறுவனத்திடம் கொடுத்துவிட்டார். இதன்பின் கலாசார சேவைகள் நிறுவனம் சர்வதேச, அரசாங்க முகவராண்மைகளுள் ஒன்றாகிய சர்வதேச தொழில் அமைப்பிடம் தொழினுட்ப வழிப்படுத்தலை வழங்குமாறு கேட்டது. இதன் பின் சில விதப்புரைகளுடன் கூடிய ஓர்அறிக்கைதயாரிக்கப்பட்டது(தொமெய்மனுவெலா,"வேடர்களின் கலாசாரப்பாதுகாப்புக்கும் அபிவிருத்திக்குமாகிய ஒரு திட்டம்"எல்.எஸ்.ரீ.இருவாரமீளாய்வு தொகுதி 4, வெளியீடுஇல. 69, 1993)
இதேவேளை, வேடர்கள் சம்பந்தமான இந்தப் பிணக்கின் போது அவர்கள் அரசியல் மயமாக்கப்பட்டிருக்கிறார்கள். இதனை கே.என்.ஓ.தர்மதாச (1990,பக்.149)"உயர் தொழில்’ வேடர்கள் எனக்குறிப்பிட்டு, இவர்கள் தம்" இனத்தன்மையை"உல்லாசப்பிரயாணிகளுக்கு விற்பதுடன் காசுப்பொருளதாரத்துடன் ஒரளவுஒருங்கிணைந்தும்விட்டனர் என வாதிக்கிறார். இந்த வேடர்கள் மதுரு ஒயாப் பகுதியிலுள்ள தம்பனையிலும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றனர். இந்தப் பிரதேசம் 1977ம் ஆண்டின் விரைவுபடுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்துள் வருகின்றது தம்பனை இப்பொழுதுவேடர்களின் அரசியல் ஈடுபாடுகளுக்கான மையமாகவும் மிக “உண்மையான" வேடர் கிராமமாகவும் திகழ்கிறது. வேடர்கள் சிலர் அரசியல் மயமாக்கப்பட்ட பொழுதிலும் அதேவேளை இனப் புத்துணர்ச்சியேற்படுவதையும் காணலாம். இதன் விளைவாக வயது முதிர்ந்த தம்பனை வேடர் சிலர்தம் இன உணர்ச்சியுடன் பேசுவதையும் காணலாம்
7. இரண்டறக் கலத்தலிருந்து சூழ்நிலை வேறுபட்ட
தன்மையைப் பாதுகாத்தல் வரை
சென்ற சில ஆண்டுகளில் சூழல் விடயங்கள் உள்ளூர்ச் சமுதாயத்தின் தேவைகளுடன் கவனிக்கப்படுதல் வேண்டும் என்பது பற்றிய ஒரு புதிய அணுகுமுறை பாதுகாப்புச் சமுதாயத்தினரிடையில் ஏற்றுக்கொள்ளப்படும் நிலை எழுந்துள்ளது வேடர்கள் எதிர்நோக்கும் பிணக்குள் மற்றும்இடர்பாடுகள் பற்றித்தொடர்புச்சாதனங்கள்மக்களின் கவனத்தைஈர்ப்பத்தில் முக்கியபங்கெடுத்துள்ளன:எழுப்பப்பட்டமுக்கியவிடயங்களவனபுதியகுழலுக்கேற்பப்பெளதிக மற்றும் உளரீதியாகச் சீர்செய்ய வேண்டிய பிரச்சினை; இளைய பரம்பரையினர் கல்வி,வேலை வாய்ப்பு ஆகியவற்றின்மூலம் பெரிய சமூகத்துடன் இணையும் பொழுதுவேடரின் தனித் தன்மை நீங்கிவிடும் என்ற பயம்; வேடர் வேறிடங்களில் குடியேறும்பொழுது அவர்கள் சுரண்டப்படுவதுடன் தகாத முறையிலும் நடத்தப்படுவர் என்ற பயம் ஆகியனவாம்
1992ல் கொழும்புப்பல்கலைக்கழகத்திலிருந்து புதிய குடியேற்றப்பகுதிகளுக்குச் சென்ற ஓர் ஆராய்ச்சிக் குழு அரசாங்கம் வேடர்களுக்குப் பல வாக்குறுதிகளை அளித்ததாயினும் வ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என் Iந்துள்ளது. ஒவ்வொருகுடும்பத்துக்கும்

265
நிலம் கொடுக்கப்படும் எனவும் ஒவ்வொரு பிள்ளையும் விவாகம் செய்யும் பொழுது அப்பிள்ளைக்கு ஒரு காணித்துண்டு கொடுக்கப்படும் எனவும் சுகாதாரம்,கல்விமற்றும் குடும்ப திட்ட சேவைகள் வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டதாயினும் அவற்றில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவும் சொந்த வீடுகள் கட்டுவதற்கென ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ1500/- மாத்திரம் கொடுக்கப்பட்டதெனம் வேடர்கள் இக்குழுவுக்குத் தெரிவித்துள்ளனர்.
எனினும் அரசாங்கம் கொள்கையில் இப்பொழுது சில மாற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது 1950ம் ஆண்டுகளில் வேடர்களை இரண்டறக் கலக்கச் செய்வதிலும் ஒருங்கிணைப்பதிலும் கவனம்செலுத்தப்பட்டது.இப்பொழுதுவேடர்கள் தமக்குச் சுயநிர்ணயுஉரிமை வேண்டும் எனவும் தங்கள் பாரம்பரிய வாழ்க்கை முறை பாதுக்கப்படுதல் வேண்டு எனவும் வற்புறுத்துவது ஏற்றுக் கொள்ளப்படுகிறதுபோலத் தெரிகிறது.
இந்த மாற்றம் திசகாமியினதும் அவருடைய குழுவினதும் தீவிரப்போக்கினாலும் சர்வதேச சமுதாயத்தினதும்பல்வேறு அபிவிருத்திகளுக்கு நிதிவழங்கும் நிறுவனங்களாகிய உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச தொழில் அமைப்பு ஆகியவற்றின் நெருக்குதலினாலும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிறுவனங்கள் கலாசாரம் மற்றும் பல்வகைச் சூழல் ஆகியவற்றைப் பே சியத்தைத் கருத்திற்கொண்டே அபிவிருத்திப்பணிகள் நடைபெறுதல் வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
1989ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச தொழில் அமைப்பின் 169ம் இலக்க உடன்படிக்கையின் படி, தேசிய அரசாங்கங்கள் தனி அடயாளமுள்ள சமூகங்களுக்கு மதிப்பளித்து அவற்றின் அபிவிருத்தி சம்பந்தமான முன்னுரிமைகள்பற்றி அவற்றுடன் கலந்தாலோசித்து அவற்றை மரியாதையுடனும் மதிப்புடனும் நடத்த வேண்டும் என்பதுடன், அவற்றை நேரடியாகப் பாதிக்கும் தேசிய, மற்றும்மாநில அபிவிருத்தித் திட்டங்கள், நிகழ்ச்சிநிரல்களில் அவைபங்குபற்றுதலும் வேண்டும்
மேலும், இந்தச் சர்வதேச தொழில் அமைப்பின் உடன்படிக்கை உள்நாட்டு மக்கள் தங்கள் நிலங்களுடனும் ஆள்புலத்துடனும் கொண்டுள்ளவிசேட தொடர்பை அங்கீகரிக்கிறது. எனவே, புறநடையான சூழ்நிலைகளில் மாத்திரம், அதுவும் அச்சமூகத்தினரின் சுதந்திரமான, அறிவு பூர்வமான சம்மதத்துடன், அல்லது தேசிய சட்டங்கள், பிரமாணங்கள் மூலம் ஏற்படுத்தப்பட்ட பொருத்தமான நடைமுறைகள் மூலம், உள்நீர்ட்டு மற்றும் மரபுக் குழுவாயுள்ள மக்களை இடம் பெயரச் செய்யலாம் புறனடையான சூழ்நிலையில் இம்மக்களை இடம்பெயரச்செய்யும்போது, இயலுமாயின்,தற்காலிகமானதாயிருத்தல் வேண்டும் தஇவ்வாறில்லாவிடின் அம்மக்களுக்குப் போதிய நட்டஈடு கொடுத்தல் வேண்டும்
மிக அண்மையில், வெப்பமண்டலக் காடுகளிலுள்ள உள்நாட்டு-மரபுக்குழுமக்களின் சர்வதேச சம்மேளனத்தினது, 1992 பினாங்கில் கைச்சாத்திடப்பட்ட, அறிக்கை உள்நாட்டு அல்லது மரபுக்குழுமக்களும் ஆள்புலமும் ஒன்றிணைந்திருப்பதுபற்றிவலியுறுத்தியுள்ளது பணிப்புரை பின்வருமாறு கூறகிறது:

Page 138
266
இதன் நோக்கம். அபிவிருத்தி நடைமுறையின் போது, முக்கியமாக வங்கியேநிதிவழங்கும் திட்டங்களில்,உள்நாட்டுமக்கள் பாதிக்கப்படலாகாதுஎன்பதை உறுதிப்படுத்துதல்.உள்நாட்டு மக்கள் சம்பந்தமான விடயங்கள் பற்றிய உபாயம் உள்நாட்டு மக்களே அறிவுபூர்வமாகப் பங்கு பற்றுதலை அடிப்படையாகக் கொண்டிருந்தல் வேண்டும் என்பதே வங்கியின் கொள்கையாகும்
வேடர் சமுதாயம் அபிவிருத்தித்திட்டங்களினால் எவ்வாறு பாதிக்கப்படும், அவர்கள் இந்தத் திட்டங்களில் தாமாகவே விரும்பிப் பங்குபற்ற வேண்டும் என்பவற்றை அவர்களுக்கு அறிவுக்க வேண்டும்; இதனை இலங்கை அரசாங்கம் முன்னரிலும் பார்க்கக் கூடிய அளவில் ஏற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. எனினும்,அரசாங்கத்தின் கூற்றுக்களுக்கும் அதன் செயற்பாடு களுக்குமிடையில் குறிப்பிடத்தக்க முரண்பாடுகள் காணப்படுகின்றன. இதுவரை, மீளக்குடியமர்த்தப்பட்டவேடர்களுக்குப்போதிய நட்டஈடுவழங்கப்படவில்லை.உதவியளிப்பதாகக் கூறிய வாக்குறுதி பேணப்படாமை, நம்பிக்கை நிதியம் பயனளிக்காமை ஆகிய இரண்டையும் சேர்த்துப் பார்க்குமிடத்து அரசாங்கம் சர்வதேச தொழில் அமைப்பின் 169ம் இலக்க உடன்படிக்கைக்கும் அதன் வேண்டுகோள்களுக்கும் வாய்ப்பேச்சளவில் மாத்திரம் இணங்கியுள்ளது தெளிவாகிறது. இலங்கையில் கூட்டு (இனங்களின்) உரிமை என்பதுபற்றிய ஒருபொதுக்கருத்து அரசாங்கமட்டத்தில் இல்லாமையால்வேடர்களின் கூட்டுஉரிமை”என்பதை விளக்குவதும் அவர்களுக்கு உறுதியளிப்பதும் ஒரு பிரச்சினையாகிவிட்டது.
(8) முடிவுரை: உள்நாட்டு மக்களும் அவர்கள் அடையாளமும்
காடு வாழ் உள்நாட்டு மக்களிற் பலர் தங்கள் நிலங்களையும் வளங்களையும் சுரண்டுவதுடன் வலிந்தெடுக்கும் தன்மையுமுள்ள வர்த்தக முயற்சிகள் சம்பந்தமாக அரசாங்கங்களுடன் போராட்டம் நடத்துகின்றனர். இவ்விடயம்சம்பந்தமான உதாரணங்கள் தென் அமெரிக்க, தென் கிழக்குஆசிய நாடுகள் பலவற்றிலுண்டு.
வேடர்கள் தாங்கள் இலங்கையின் ஆதிவாசிகள் எனவற்புறுத்திக் கூறுகின்றனர்; இதனைத் தேசியவாழ்க்கையில் எவரும்மறுப்பதாகத் தெரியவில்லை.ஆனால் சில வேடர்கள் தாங்களும் தங்கள் வாழ்க்கைமுறையும் தான் மெய்யான, வரலாற்றுரீதியாக மாற்றமடையாத கலாசார அடையாளங்களாகும் எனக்கூறுவது விவாதத்துக்குரிய விடயமாகும். திசகாமியின் தலைமையிலியங்கும் ஒரு வேடர் குழு இவ்வாறு கூறுவதுடன் தங்கள் தாயகம் தங்களிடம் திருப்பித் தரப்பட வேண்டும் எனவும் வற்புறுத்துகிறது. ஆயினும் இவர்களுடைய கிராமம் உல்லாசப் பிரயாணிகளை ஒரளவு கவரும் இடமாக மாறிவருகிறது. உல்லாசப் பிரயாணத் தொழிலுடனும்உள்ளூர்ச் சந்தைப்பொருளதாரத்துடனும் இவர்கள் இப்பொழுது ஒன்றிணைந்து வருவதனால் மரபுவழியான காட்டு நிலங்களிலேயே தங்கள் சீவியம் தங்கியிருக்கிறது என இவர்கள் சொல்வதுபொருத்தமற்றதாகுமெனப்பலர் கருதுகின்றனர்.
வேடர்களின் நிலங்கள், கலாசாரவளங்கள்,தனிஅடையாளம் ஆகியன அகற்றப்பட்டுவிட்டதுடன், அவர்கள் சந்தைப் பொருளாதாரத்திலும் கூடிய அளவில் பங்குபற்றும் அதேவேளை தாங்கள் தெளிவான, மாற்றமடையாத கலாசாரதனித்தன்மையுடன் வாழ்வதாகச் சொல்வது அவர்களின் முரண்பட்ட தன்மையைக் காட்டுகிறது. இந்த முரணான தன்மையே வேடர்களுக்கும்

267
அரசாங்கத்துக்குமிடையிலான சச்சரவுக்குக் காரணமாகும். வேடர்களின் தனித்தன்மை, செயலாற்றும் முறையில், நிலஉரிமையோடு சம்பந்தப்பட்டதாயுள்ளது.
வேடர் சமுதாயம் பிளவுபட்ட நிலையிலிருப்பதனால் அவர்கள் உரிமைகள் சம்பந்தமாக ஒரேவகையான திருத்தியான ஒரு கொள்கையை வகுப்பது கடினமாகும்."கூட்டு அடையாளம்" எனும்போது உள்நாட்டுச் சமுதாயங்களும் கூட்டுச் சமுதாயங்களும் மாற்றமடையக் கூடும், பிளவுபடக் கூடும் உருமாற்றம் பெறக்கூடும் என்பவற்றையும் கருத்திற்கொள்ளுதல் வேண்டும். வன்னியெற்றோ வேடர்களின் நிலம்பறிபோன பொழுதுபாரம்பரியவாழ்க்கைமுறையைத் தாங்கள் இழந்துவிட்டதாகவும் அதனால் தங்கள் பிழைப்பும்போய்விட்டதுஎனவும் அவர்கள் கூறுவதில் உண்ம்ையிருக்கிறது
கூட்டு அடையாளங்கள் என்பன, அவை காடுகளாயினும் நகரச் சுற்றாடலாயினும் கட்டாயமாக அந்தந்த இடத்தில் பெளதிக வடிவில் நிலை பெற்றுவிடும் எனக் கூற முடியாது என்பதனை மேற்குறிப்பிட்டமுரண்பட்ட நிலை சுட்டிக்காட்டுகிறது எவ்வாறாயினும் கலாசார அடையாளங்கள் எவ்வாறு உருவாகின்றன, பின்னர் எவ்வாறு உருமாற்றம் பெறுகின்றன என்பனவும், ஈற்றில் கலாசாரப் பாதுகாப்பு என்பது சமூக மாற்றத்தை மறுத்தல் என்ற கருத்தினால் மட்டுப்படுத்தப் படுகிறதுஎன்பதும் பூரணமற்ற கருத்துக்களாகும் என்றே கொள்ளுதல் வேண்டும் வேடர்கள் சிலர் தங்கள் தாயகத்தை விட்டுச் சென்று அபிவிருத்தி மற்றும் ஒன்றுசேரும் நடைமுறையில் ஈடுபடுவதுமற்ற வேடர்கள் தம் நிலம், கலாசாரம் அல்லது கூட்டு அடையாளம் என்பனவற்றிற்கு உரிமை கோருவதற்குக் குந்தகம் விளைவிக்க மாட்டாது
இந்த அறிக்கை வேடர் அடையாளத்தை வரையறுத்து கூறுவதில் இடர்ப்பாடு இருக்கிறது என்பதை வலியுறுத்தியுள்ளது. இந்தஇடர்ப்பாட்டுக்குக்காரணம்வேடர்களின்"கூட்டுஉரிமைகள்" பற்றிய நிலவும் வாதங்களை வேடர் சமுதாயங்கள் அடைந்துள்ள மாற்றங்கள் பற்றிப்போதிய அளவில் விளங்கிக்கொள்ளமல்முன்வைக்க முடியாமையாகும் வேடர்களின் அடையாளம்பற்றி வரையறுத்துக் கூறுவதும் முக்கியமாகும். இவர்கள் பொதுவாக ஒரமாக்கப்பட்டும் தேசிய சமுதாயத்துள்தனியுரிமைஇல்லாத அந்தஸ்துடனும்வாழ்கிறார்கள்.அத்துடன் எந்த இனத்துக்கும் புறம்பான கூட்டுநிலஉரிமைகளை அங்கீகரிப்பது அரசாங்கத்துக்குச் சிக்கலையும் ஏற்படுத்தும்; இந்த அரசாங்கம்நாட்டின் வடகிழக்கில்புறம்பான ஆள்புல உரிமைகள் வேண்டும்எனக்கோரும் குடிமக்களில் ஒருசாராருடன் ஒர் இனப் போராட்டத்தில் ஏற்கனவேஈடுபட்டிருக்கிறதுஎன்பதும் கருத்திற்கொள்ளற்பாலது

Page 139
268
BIBLIOGRAPHY
A Plan of Action for the Children of Sri Lanka, National Planning Dept., Sri Lanka: Ministry of Policy & Implementation, 1991.
UNICEF A Profile of the Sri Lankan Child in Crisis and Conflict, 1990,
ABEYSEKEPE, Sunila, Displacement as Women Experience It. The Sri Lankan Case (Paper presented at "Displacement & Democracy", a Meeting organised by the Legal Aid Centre, Univ. of Colombo, Aug. 1993).
Amnesty International, ' Sri Lanka-Arbitrary arrests of hundreds of Tamil people" (ASA 37/WU 03/93), London, 1993.
Amnesty International, "Sri Lanka- New emergency regulations" (Al Index: ASA 37/04/94), London, 1994.
Amnesty International, "Sri Lanka- Summary of human rights concerns" (Al Index: ASA 37/09/94), London, 1994.
Amnesty International, "Sri Lanka-Balancing human rights & Security: abuse of arrest & detention powers in Colombo" (Al Index: ASA 37/10/94), London, 1994.
Amnesty International, "Sri Lanka-Secret detention in Colombo. The case of Arulappu Jude Arulrajah" ( AI Index: ASA 37/13/94), London, 1994.
AMARATUNGA, Chanaka (ed.), Ideas for Constitutional Reform, Colombo: Council for Liberal Democracy, 1989.
Annual Health Bulletin, Sri Lanka: 1992.
Asia Watch, Halt Repatriation of Sri Lankan Tamils, 11th August 1993, Val 5. Issue 11.
BROWJ., The Vedda Villages of Anuradhapura: the Historical Anthropology of a Community in Sri Lanka Seattle: Univ. of Washington Press, 1978.
CANAGARETNAM, Ignatius, DIG Police Crime, Role of the Enforcement Authorities in the Prevention of Violence Against Women, 1992.
Centre for the Study of Human Rights (CSHR) ( University of Colombo) (k the Nadesan Centre, Review of Emergency Regulations, Colombo: 1993.
CSHR, University of Colombo, Recommendations for reform of emergency legislation.
CENWOR, Education of the Girl Child, Shadowy Vistas: On being a Girl Child in Sri Lanka, 1993.
Ceylon ( Constitution) Order in Council, Ch. 379 Revised Legislative Enactments of Ceylon.

269
CHIMNI, BS, " The Meaning of Words and the Role of UNHCR in Voluntary Repatriation", 5 International Journal of Refugee Law, 1953.
Civil Rights Movement of Sri Lanka statement on "Emergency Regulations on the Monitoring of NGOs".
Civil Rights Movement of Sri Lanka, "The inaccessibility of Emergency Regulations" ( E 01/2/92), Colombo.
Civil Rights Movement of Sri Lanka, "The Prevention of Disappearances' and the work of the Human Rights Task Force" ( E 01/11/92), Colombo.
Civil Rights Movement of Sri Lanka, 'Human Rights and our International Obligations - Sri Lanka's record on ratification of international agreements " (E 01/12/92), Colombo.
Civil Rights Movement of Sri Lanka, "Reported mass graves at Suriyakanda" (E 01/01/94), Colombo.
Commission for the Elimination of Discrimination and Monitoring of Fundamental Rights - Sri Lanka, Annual Report 1992. Constitution of the ILO and Standing Orders of the International Labour Conference, May 1977.
DANIDA (Ministry of Foreign Affairs, Sri Lanka : an assessment of the Sri Lanka situation (a report of a FactFinding Missions visiting Sri Lanka), LST Fortnightly Review, Vol. III, No, 59, I June 1993.
DART, John, The Coast Veddas: Dimensions of Marginality in 'The Vanishing Aborigines', edited by KNO Dharmadasa and Samarasinghe, Vikas Publishing House, 1990.
DHARMADASA, KNO, and Samarasinghe, SWR De A, The Vanishing Aborigines: Sri Lanka's Veddas in Transition, International Centre for Ethnic Studies in association with NORAD, Vikas Publishing House, 1990.
DE SILVA, K.M. (ed), Sri Lanka: Problems of Governa. Kandy ICES, 1993.
DESILVA, SR & AMERASINGHE E FG, Collective Bargaining, Monograph no. 10, Colombo: The Employers Federation of Ceylon.
DENG, Francis, Profiles in Displacement: Sri Lanka, ( E/CN.4/1994/44/Add 1 25 January 1994).
DENG, Francis Press Release soon after his departure from Sri Lanka, released by the United Nations Information Centre, Colombo, 17th Nov 1993.
DENG, Francis, Protecting the Internally Displaced: A Challenge for the United Nations ( Study Presented to the 49th Session of UN Commission on Human Rights).
DIAS, Clarence, Taking Human Rights Seriously: The Much Neglected Case of Development-Displaced People (Paper presented at "Displacement and Democ

Page 140
270
racy", a meeting organised by the Legal Aid Centre, University of Colombo, August 1993).
FERNANDO, Marina, The Veddas of Sri Lanka: A Socio Legal Study, Legal Aid Centre, Univ. of Colombo, 1993. Freedom of Association, A Workers Education Manual, 2nd revised edition, 1987.
Freedom of Association and Collective Bargaining, General, Survey by the Committee of Experts, Report III ( Part 4 B) 69th Session 1983, Report 1984.
ILO, Freedom of Association, & Economic Development, 1977
Freedom of Association, ILO Digest 3rd Edition, Ch. VI.
GOMEZ, Mario, Compulsory Education and the Law, Vol. 12 Sri Lanka Journal of Social Sciences, 1989.
GOONESEKERA, Savithri, "Women and Law", Status of Women, Sri Lanka: Ministry of Health and Women's Affairs, 1993.
GOONESEKERE, R.K.W., Fundamental Rights and the Constitution- a case book, Colombo: Low and Society Trust, 1988.
GOONETILLEKE, Bernard, National Statement, LST Fortnightly Review, Vol.III, No.57, 1 May 1993.
Guidelines for the Development of Legislation in States of Emergency ( E/CN.4/ Sub. 2/1991/28).
Human Rights Task Force, Annual Report ( 10 Aug. 1992-10 Aug. 1993), Colombo: 1993.
ICRC Bulletin { April 1993, No. 207, "Sri Lanka: A postcard in the colours of suffering ", Geneva: 1993.
ICRC, Summary of the Geneva Conventions of August 12, 1949 and their additional protocols.
INFORM, The human rights situation in Sri Lanka: 1993, a brief overview, Colombo,
INFORM, Special dossier on NGO Commission de Emergency Regulations, Colombo: 1993.
INFORM, Special dossier on mass graves at Suriyakanda: 1993, Colombo, INFORM, Special dossier on impunity: 1993, Colombo.
INFORM, Special Reports on the Closure of the Colombo Camps. INFORM, Situation Report: January 1993- December 1993, Colombo.
JAYAWARDENA. L. et, al Stabilisation and Adjustment Policies and Programmes: Sri Lanka: WIDER, Helsinki, 1987.

271
JAYA WEERA, Swarna, Quality Development of Primary Education: Badulla Integrated Rural Development Programme, SIDA, Colombo: 1990 .
KEARNEY, Robert, Trade Unions & Politics in Sri Lanka, Univ of California Press, 1971.
KELAARTS., " The Role and Importance of NGOs in Sri Lanka " (unpublished study for Law and Society Trust), 1993.
KELEGAMA, Saman, Distribution of income and Ownership of assets: trends in Sri Lanka, Pravada, Vol. 2 No. 8, Sep./Oct. 1993.
Labour Force Survey 1985/86, Department of Census, Census 1981 Lanka Sama Samaja Party, The only possible approach to a solution of Sri Lanka's ethnic crisis, LST Fortnightly Review, Vol. III, No. 55, 16 March 1993.
Legal Aid Centre, Displaced Persons: Their Right to Work, a report of law students based on field work, Univ. of Colombo, Dec. 1993.
Joint NGO statement on the human rights situation in Sri Lanka ( at the 49th session of the UN Commission on Human Rights, Geneva, March 1993) LST Fortnightly Review Vol. III, No. 55, 16 March 1993.
MARAPANA, Tilak, National Statement ( 49 th session of the UN Commission of Human Rights, Geneva, March 11, 1993), LST Fortnightly Review, Vol. III, No. 55, 16 March 1993.
MEHTA, "The mediating role of the trade union in underdeveloped countries Economic Development and Cultural Change, Oct 1957.
Ministry of Policy Planning and Implementation, Dept. of Census and Statistics, statistical Pocket Book of the Democratic Socialist Republic of Sri Lanka, 1993.
Ministry of Reconstruction, Rehabilitation and Social Welfare, Rehabilitation d. Resettlement of Displaced Persons, Colombo, 9 Nov. 1993.
Ministry of Reconstruction, Rehabilitation and Social Welfare, Report on Displaced Persons in Welfare Centres and Outside Centers as at 30 Nov. 1993.
Movement for Inter-Racial Justice and Equality, Statement of Dec. 1993.
NEFF Steven, Sri Lanka: The Activites of the Presidential Commission of Inquiry in Respect on Non Governmental Organisations ( Report of a Mission to Sri
Lanka in May June 1991 on behalf of the International Commission of Jurists).
OBEYESEKERE G, The Cult of the Goddess Pattini, Motilal Banarsidass, Delhi: 1984.
OLSEN, Draft report on Sri Lanka, 1994.
PEIRIS, Shantha, " The Reform of the Criminal Justice System", unpublished paper researched for LST in 1992.

Page 141
272
PLATTNER, Denis, The Protection of Displaced Persons in Non-International Armed Conflicts, International Review of the Red Cross,
Report on the Implementation of the Convention on the Rights of the Child, Colombo: Marga Institute, 1994.
SENARATNE, Jagath, Of Veddas, Development and the State in the ' Thatched Patio' No. 6, ( ICES, 1986).
SHARVANANDA, Justice S., Fundamental Rights in Sri Lanka ( a commentary), Colombo: 1993.
Social Scientists Association, Facets of Ethnicity in Sri Lanka, edited by Charles Abeysekera and Newton Gunasinghe, Colombo: 1987.
Street Children Project, An Overview, Save the Children Fund (UK).
Technical Committee, Report on Child Employment.
TRUCHEL VAM, Neelan, Fundamental Rights in Sri Lanka- a commentary by S. Sharvananda: a review, LST Fortnightly review, Vol. IV. No 64, 16 Sept. 1993.
TOMEI, Manuela "A Plan for the Cultural Preservation and Development of the Veddas", LST Fortnightly Review, Vol. IV. Issue No. 69, 1993.
UN Working Group on Enforced or Involuntary Disappearances, Question of Enforced or Involuntary Disappearances, (E/CN.4/1994/26, 22 Dec. 1993).
UNHCR, Press Release, 10 Nov. 1993, Colombo.
UNHCR, Repatriation of Refugees from India to Sri Lanka, 28 Jan. to 19 Feb 1994; 13 Aug. to 17 Sep. 1993, Colombo.
UNICEF, Children and Women in Sri Lanka- a Situation analysis, Colombo: 1991.
UNICEF, Sri Lanka: The Social impact of economic policies during the last decade a special study, Colombo: 1985.
University Teachers for Human Rights (Jaffna), The bombing in Jaffna (Special report no. 1) de Operation Major (special report no.2 - provisional), Jaffna: UTHR (Jafna), 1990.
University Teachers for Human Rights (Jaffna), Rays of hope amidst deepening gloom ( report no. 10), Jaffna. UTHR (Jaffna), 1993.
University Teachers for Human Rights ( Jaffna), Rays of hope amidst deepening gloom ( report no. 10) Jaffna. UTHR (Jaffna), 1993.
University Teachers for Human Rights (Jaffna), A sovereign will to self-destruct ( report 12) Jaffna. UTHR (Jaffna), 1993.
University Teachers for Human Rights (Jaffna); Land, human rights & the Eastern predicament, Jaffna. UTHR (Jaffna), 1993.
US Committee for Refugees, People Want Peace: Repatriation and Reintegration in War-Torn Sri Lanka, Washington D.C. 1994.

US Committee for Refugees Sri Lanka: Island of Refugees, Washington D.C.: 1991.
U.S. Department of State, Human Rights Country Report, Washington D.C. G.P.O.
U.S. Department of State, Country reports on human rights practices for 1992, Washington D.C. G.P.O. 1994.
WIJAYATILAKE, Kamalini, A Socio-Legal Overview of Rape, Colombo; CENWOR, 1991.
WIUETILAKE, Kamalini, Domestic Violence, A Silent Cry, Colombo ; CENWOR, 1992.
World Bank, Sri Lanka Sustaining the Adjustment Process, Sep.1990.
World Food Programme, Mini brief, WFP Assistance unto Sri Lanka, Colombo: WFP Office.
Letter to His Excellency the president of the Republic of Shri Lanka, From the Rt. Rev Dr. Thomas Savundaranayagam, re aerial bomb-attack on St.James' R.C. Church Jaffna, dated 16 Nov 1993.
Letter to His Excellency the President of the Republic of Shri Lanka, From Rev. Fr. R.M.G. Nesanayagam, Parish priest, St. James' Church Jaffna, re bombing and destruction of the St. James' Church, Gurunagar, Jaffna, dated 01/12/93.
Organizations for Human Rights in Sri Lanka, letter to the Secretary, Working
Group on Enforced or Involuntary Disappearances at the Centre for Human Rights, re the discovery of mass graves at Suriyakanda.
NATIONAL LEGAL INSTRUMENTS
Adoption of Children Ordinance No. 24 of 1941.
Children and Young Persons Ordinance No. 48 of 1939.
Code of Criminal Procedure Act.
Evidence Ordinance, Ordinance No. 14, 1985, as amended.
Kandyan Law Declaration and Amendment Ordinance No 39 of 1938.
Pemal Code Sri Lanka.
273

Page 142
27.4
INTERNATIONAL INSTRUMENTS
Body of Principles for the Protection of all Persons Under any Form of Detention or Imprisonment, UNGA Res 43/173, 9 Dec. 1988.
Code of Conduct for Law Enforcement Officials, UNGA Res 34/169, 17 Dec. 1979.
Convention Against Torture and Other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment, UNGA Res 39/46, Dec. 1984,
Convention on the Prevention and Punshment of the Crime of Genocide, UNGA Res 260 A (III), 9th Dec. 1948.
Convention against Torture and Other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment, UNGA Res 39/46, 10 Dec. 1984.
Convention on the Rights of the Child.
Declaration on the Protection of All Persons from Enforced Disappearances, UNGA Resolution 47/33, 1 adopted Dec. 19927.
ICRC, The Geneva Conventions of August 12 1949.
ICRC, Protocols additional to the Geneva Conventions of 12 August 1949, Gerገe1›d 1977,
International Covenant on Economic, Social and Cultural Rights, UNGA Res 2200 A (XXI), 16 Dec. 1966.
International Covenant on Civil and Political Rights, UNGA Res 2200 A (XXI), 16 Dec. 1966.
Universal Declaration of Human Rights, UNGA Res 217A (III), 10 Dec. 1948.
Vienna Declaration and Programme of Action, (25 June 1993).
ILO Convention No. 87: Convention Concerning Freedom of Association and Protection of the Right to Organise, ( 4 Jul 1950).
ILO Convention No. 98: Convention concerning the Application of the Principles of the Right to Organise and to Bargain Collectively, ( 18 Jul. 1951).

275
APPENDIX I
Un human rights instruments ratified by Sri Lanka (as of 4 Jan 1994)
1. International Covenant on Economic, Social and Cultural Rights.
2. International Covenant on Civil and Political Rights.
3. Declaration regarding Article 41 of the above.
4. Convention on the Prevention and Punishment of the Crime of Genocide.
S. Slavery Convention as amended,
6. Supplementary Convention on the Abolition of Slavery, the Slave Trade and
Institutions and Practices Similar to Slavery,
7. Convention for the Suppression of the Traffic in Persons and of the Exploitation of
the Prostitution of others.
8. ILO Convention (no. 29) Concerning Forced Labour.
9. ILO Convention ( no. 98) concerning the Application of the Principles of the
Right to Organize and Bargain Collectively,
0. ILO Convention ( no. 135) concerning Protection and Facilities to be Afforded to
Workers' Representatives in the Undertaking
11. Convention on the Nationality of Married Women,
12. Convention on the Rights of the Child
3. Geneva Convention for the Amelioration of the Condition of the Wounded, Sick
and Shipwrecked Members of the Armed Forces in the Field.
14. Geneva Convention for the Amelioration of the Condition of the Wounded, Sick
and Shipwrecked Members of the Armed Forces at Sea,
Geneva Convention relative to the Treatment of Prisoners of War
6 Geneva Convention relative to the Protection of Civilian Persons in Time of War.
| 7 International Convention on the Elimination of All Froms of Racial Discrimina
tion.
8, International Convention on the Suppression and Punishment of the Crime of
Apartheid.
9 Convention on the Elimination of All Forms of Discrimination against Women.
20. UNESCO Convention against Discrimination in Education.

Page 143
276
21.
22
23
ILO Convention ( no. 100) concerning Equal Remuneration for Men and Women Workers for Work of Equal Value.
ILO Convention on Maternity Protection (no. 103).
ILO Convention on Labour Statistics (no. 160).

277
APPENIOIXII
UNHUMAN RIGHTS INSTRUMENTS NOTRATIFIED BYSRI LANKA
1.
2.
10.
11.
12.
13.
14. 15.
I6
17.
18.
19,
20,
Optional Protocol to the International Covenant on Civil and Political Rights.
Second Optional Protocal to the above aiming at the abolition of the death penalty.
Convention on the Non-Applicability of Statutory Limitations to War Crimes and Crimes against Humanity,
ILO Convention (no. 105) concerning the Abolition of Forced Labour
Convention against Torture and Other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment. -
Declaration regarding Article 21 of the above (relating to the entertainment of complaints by one State Party against another).
Declaration regarding Article 22 of the above (relating to the entertainment of complaints by individuals).
Convention on the International Right of Correction.
ILO Convention (no. 102) concerning Minimum Standards of Social Security
Convention relating to the Status of Refugees,
Protocol relating to the Status of Refugees, Convention on the Reduction of Statelessness.
International Convention on the Protection of the Rights of All Migrant Workers and Members of their Families.
ILO Convention (no. 97) Concerning Migrant Workers, ILO Convention (no 143) concerning Migrations in Abusive Conditions and the Promotion of Equality of Opportunity and Treatment of Migrant Workers.
ILO Convention (no. 87) concerning Freedom of Association and Protection of the Right to Organize.
ILO Convention (no. 12) concerning Employment Policy.
ILO Convention (no. 141) concerning Organisations of Rural Workers and Their Role in Economic and Social Development,
ILO Convention (no. 151) concerning Protection of the Right to Organize and Procedures for Determining Conditions of Employment in the Public Service.
Convention on the Political Rights of Women,

Page 144
278
22
23.
25.
26.
27
Convention on Consent to Marriage, Minimum Age for Marriage and Registration of Marriages.
Protocoladditional to the Geneva Conventions of 12 August 1949, and relating to the Protection of Victims of International Armed Conflicts (Protocol. 1).
Protocol Additional to the Geneva Convention of 12 August 1949, and relating to the Protection of Victims of Non- international Armed Conflicts (Protocal II).
Declaration regarding Article 14 of the International Convention on the Elimination of All Froms of Racial Discrimination,
International Convention against Apartheid in Sports.
Protocol Instituting a Conciliation and Good Offices Commission to the UNESCO Convention against Discrimination in Education,
ILO Convention (no. III) concerning Discrimination in respect ofEmployment and Occupation.


Page 145
இந்த அறிக்கை 1993ம் ஆண்டை மையமா
நிலையை அடுத்த சம்பவங்கள் விபரமாக
இவ்வறிக்கையில் மனித உரிமைப் பாது ஒழுங்குவிதிகள், குடியியல் அரசியல் உரிை சமூக கலாச்சார உரிமைகள், பெண்களி பெயர்வும் தங்குவதற்கான உரிமையும் ஆராயப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை இலங்கையிலுள்ள ம மைல்கல்லாக விளங்குவதுடன், ஒரு சில மனித உரிமை அபிமானிகள் ஆகியோரின் அற நிலையத்தால் வெளியிடப்பட்டது.
சட்டத்துக்கும் சமூகத்து
ാ
 

கக் கொண்டு இலங்கையில் மனித உரிமை
அடக்கியுள்ளது.
காப்பு சட்ட யாப்பு முறைகள், அவரசகால கள், வடக்கு கிழக்கு யுத்தம், பொருளாதார ன் உரிமைகள், சிறுவர் உரிமைகள் இடம் குழு உரிமைகள் ஆதிய விடயங்கள்
ரித உரிமை இயக்கத்தின் ნკა (Ub முக்கிய த்தி ஜிவிகள், சமூக சிந்தனையாளர்கள் சார்பில் சட்டத்துக்கும் GeUpởệgiỏ(öLI 60
அறநிலையம்
டெறஸ்
ISBN 955 - 9062-21-2