கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இன்றைய வளை குடாப் போர்

Page 1
போர் - தந்திரோபா
உதயகுமா 。@ تحقیقی
"rAMIL INSTITU;
 
 

ன்றைய
குடாப் போர்
யங்கள் - விளைவுகள் - தாக்கங்கள்
ňr, B. Sc. (Mech. Eng.). Ex - Legioner
French Foreign Legion.
TE OF STRATEGIC STUDIES
UDUV

Page 2

இன்றைய
வளை - குடாப் போர்
பகுதி 2
போர் - தந்திரோபாயங்கள் - விளைவுகள் - தாக்கங்கள்
ao. A. a -suus5Iorra, B. Sc. (Mech. Eng.),Ex - Legioner
French Foreign Legion.
TAMIL INSTITUTE OF STRATEGIC STUDES UDUV,

Page 3
First Print : Feb. 1991
(Gopy Right : A. S. UYAKUMAR
Erinted by Thuruvan Press, Jaffna, Ceylon,
Published by : Tamil Institute of Strategic Studies, Uduvil.

முன்னுரை
வளைகுடாப் போரின் காலம் நீள, நீள, அது சிறிது சிறிதாக உலக மக்களின் கவனத்தையும், ஒருவித ஆவலையும், பயத்தினையும் ஏற்படுத்தி வருகிறது. உலகின் வெவ்வேறு பாகங்களில் வாழும் மக்கள் இப்போரினை வெவ்வேறு விதமாகவே அணுகுகின்றனர், அது பற்றி அக்கறையெடுக்கின்றனர். ஒரு நாட்டில் வசிப்பவர்களிடையே கூட, இப்போர் தொடர்பாக வேறுபட்ட அணுகுமுறைகளும், சிந்தனைகளும் காணப்படுகின்றன. இன்று தமது விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் போராடிவரும் இலங்கைத் தமிழ்பேசும் மக்களை எடுத்துக்கொண்டால், அங்கு வேறுபட்ட அணுகுமுறைகளும், சிந்தனை களும், கருத்துக்களும் காணப்படுவதை நாம் அவதானிக்க முடியும்,
சிலர் நேற்று நடைபெற்ற போரில் எத்தனை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : ஈராக் ஸ்கட்" (SCUD) ஏவுகணைகளை இஸ்ரே லிற்குள் ஏவியதா, சவுதி அரேபியாவிற்குள் ஏவியதா: ஈராக்கியர்கள் என்ன செய்தார்கள் : அமெரிக்கர் என்ன செய்தனர் என்பவற்றை மாத்திரம் அறியும் ஆவலில், இன்று காலையில் தினசரிகளை வாங்கிப் படிக்கின்றனர். ஆங்கிலத்தில் ஒரளவு தேர்ச்சியுள்ளவர்கள் B. B. C. Voice of America, ரேடியோக்கஜில் இசய்திகளை மாத்திரம் கேட்ட பின்பு, ரேடியோவை நிறுத்துகின்ற்னர். *சிறு பகுதியினர்கள் செய்தி யின் பின்னர் வரும் கலந்துரையாடல்களையும் கேட்கின்றனர். ஆனல், வீடுகளிலும், பாடசாலைகளிலும், வேலைத்தலங்களிலும், சந்திக்கும் இடங்களிலும் வளைகுடாப் போர் பற்றி வெவ்வேறு விதமாகவும், வெவ்வேறு மட்டங்களிலும் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன, எதுவிதத்திலும், இக் கலந்துரையாடல்களில் என்னென்ன குறிக் கோள்களை அடைய இருசாராரும் இந்தப் போரில் ஈடுபட்டுள்ளனர், இப்போரின் விளைவுகள் எப்படி இருக்கும்; இப்போரின் முடிவுகள் எப்படியான அரசியல், பொருளாதார, சமூக ரீதியிலான தாக்கங் களைப் பூகோள ரீதியில் ஏற்படுத்தலாம் : இலங்கைத் தமிழ்பேசும் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக முன்னேற்றங்களில் இவைகள் எப்படியான தாக்கங்களை ஏற்படுத்த முடியும் இந்த வளைகுடாப் போர் எப்படியான அரசியல் அனுபவத்தினை எமக்குத் தருகிறது என்பவைகளைப் பற்றிப் பேசுபவர்கள் மிகவும் குறைவாகவே உள்வரனர்.
இவைகள் பற்றிப் பிறரிடமிருந்து சரியாக அறியவும், தாமாக ஆராயவும் சாதாரண ஒருவர் முற்படுவாராயின், அவர் பெரும் விரக்தி படையும் நிலைதான் இங்கு எழும். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. யாழ் குடாவில் வெளியாகும் தமிழ்த் தினசரிகளையும்

Page 4
IV
சஞ்சிகைகளையும் எடுத்தால், அவைகள் இவைபற்றிய ஆய்வுகளைச் செய்யாத நிலைதான் காணப்படுகிறது. சாதாரண மக்களின் அடிப் படையறிவையும், ஆராயும் தன்மையையும் வளர்க்க இங்கு பரி வட்டங்களும், விவாதக் குழுக்களும் கிராம, பட்டின மட்டங்களில் இல்லாதிருக்கின்றன. ஓர், இரு ஆய்வுச் சமர்ப்பணங்களும், கலந் துரையாடல்களும் நடைபெற்ருலும் கூட, பெரும்பான்மையான சாதாரணமக்கள் இவைகளில் பங்குபற்ற முடியாத நிலையும், இவை களில் ஆராயப்பட்டவைகளைப் பின்னர் அறியமுடியாத நிலையும் தான் தொடர்கிறது.
இவைகள் தொடர்பாகத் தானகவே ஆராய ஒருவர் முற்பட் டால், அவர் மிகவும் பரிதாபமான நிலையில்தான் இங்கு இருக்க வேண்டியுள்ளது. இலங்கையின் கல்வித்திட்டத்தின் கீழ் ஒருவர் என்னென்ன விடயங்கள் தொடர்பாக எந்தெந்தக் கைநூல்களில் விபரங்களை அறியலாம் என்பதே பெரும்பான்மையினருக்குத் தெரியா துள்ளது. மறுபுறத்தில், இப்படியான கைநூல்களை இங்கு பெற்றுக் கொள்வதும் கடினமாகவே உள்ளது. இவற்றிற்கு மேலாக, இவைகள் இங்கு கிடைத்தாலும், பெரும்பான்மையினருக்கு ஆங்கிலத்தில் தேர்ச்சி குறைந்த நிலையில், அவற்றைப் பயன்படுத்தவும் முடியாத நிலைதான் பெரிதும் காணப்படுகிறது. மேலும், வெவ்வேறு விடயங் கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய கைநூல்கள் இங்கு தமிழில் வெளியிடப்படாத நிலையில், சாதாரண ஒருவர் தானுக ஆய்வினை நடாத்தத் தேவையான அடிப்படை விபரங்களையும், விளக்கங்களை யும் சுலபமாகப் பெற்றுக்கொள்ள முடியாதே போகிறது.
எதுவிதத்திலும், இன்றைய வளைகுடாப் போர்பற்றி ஆராய அல்லது விளக்கமாக அறிந்துகொள்ள முற்படுபவர்களில் ஒரு பகுதி யினருக்கு வளைகுடா நாடுகள் பற்றியும், அவை எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான அடிப்படைகள் பற்றியும் ஒருவித விளக்கங்கள் இருக்கக்கூடிய சந்தர்ப்பங்கங்கள் உள்ளன. ஆனல், இவர்களுள் கணிச மான பகுதியினருக்கு இன்றைய நவீன ஆயுதங்கள் தொடர்பாகவும், போர்ச் சாதனங்கள் தொடர்பாகவும், ஆகவே, இராணுவ - தந்தி (3а тити ћi ai air தொடர்பாகவும், சாதாரண விபரங்கள் எனக் கருதப் படுபவைகளை இராணுவ நடவடிக்கைகளுடனும், போர்த் தந்திரோ பாயங்களுடனும் தொடர்புபடுத்தி ஆராய்வது தொடர்பாகவும் போதிய விளக்கங்கள் இல்லாது இருக்கலாம். உதாரணமாக ; ஈராக் கியர்களிடம் இருக்கும் ருசிய ஸ்கட் (SOUD) எறி - ஏவுகணையின் (Balistie Missile) பெயர் யாழ் குடாவின் தினசரிகளில் ஸாட் ", * ஸ்காட்" என மாறி, மாறி, ஈற்றில்தான் ஸ்கட் " (SCUD) எனச்சரியாக வந்தது !

Vy
இந்த நிலையில், இருபகுதியினரும் பயன்படுத்தக்கூடிய விதத்தில், வளைகுடாப் பிரச்சனையானது " இன்றைய வளைகுடாப் போர் " என்ற தலைப்பின் கீழ் கீழ்வரும் இரு வெவ்வேறு பகுதிகளாக வெளியிடப் படுகிறது.
(1) வளைகுடா - சில அடிப்படை விபரங்களும், விளக்கங்களும்
- பகுதி 1 (2) வளைகுடா - போர் - தந்திரோ பாயங்கள் - விளைவுகள்,
தாக்கங்கள் - பகுதி II
பகுதி 11 ஆகிய இந்த நூலில், வளைகுடாப் போருக்கான கார ணங்கள், குறிக்கோள்கள் பயன்படுத்தக் கூடிய தந்திரோபாயங்கள்; பயன்படுத்தப்படும் தந்திரோபாயங்கள் ; போர்க் காலத்தில் ஏற் படுத்தப்படுகின்ற விளைவுகள், போரின் பின் ஏற்படக்கூடிய தாக்கங் கள் விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் போராடும் மக்கள் பெறக் கூடிய அனுபவங்கள் என்பவைகள் ஆராயப்படுகின்றன.
இந்த நூல் சாதாரண மக்களுக்கு, இயலுமானவரை, அடிப் படைகளை விளக்கும் நோக்கத்தினைக் கொண்டதால், எளியமுறையில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளதுடன், சில சிக்கலான விடயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. எதுவிதுத்திலும், இப்படியான ஆய்வுகளை ஒருவர் தானகவோ அல்லது ஆடிட்டாகவோ நடாத்துவதற்குத் தேவையான அடிப்படை விளக்கங்களைக் கொடுக்கும் ஒரு முன்னேடி யாக இந்நூல் அமையும் என்பது எமது கருத்து. வருங்காலத்தில் தமிழ் பேசும் மக்கள் வெவ்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆழமான, விஞ் ஞான ரீதியான சிறந்த ஆய்வுகளை நடாத்தத் தேவைப்படும் அடிப் படை விபரங்கள் அடங்கிய தமிழ் கைநூல்கள் உருவாக்குப்பட வும் இது ஒருவித ஊக்கியாக அமையும் என்று நம்புகிருேம்.
எது விதத்திலும், இந்நூல் தொடர்பாக முற்போக்கான விமர்சனங் களை ஆய்வு நிறுவனம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. இவை எமது முன்னேற்றத்திற்கு பெரும் உதவியாகவிருக்கும் என நம்பப் படுகிறது.
இந்த நூலின் இறுதிப் பகுதியில், இந்த ஆய்வினை மேற்கொள்ள வும், இது போன்ற ஆய்வுகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தக் கூடிய வெவ்வேறு கைநூல்கள், சஞ்சிகைகள் பற்றிய விபரங்களும், அவைபற்றிய குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. இவைகள் தந்திரோபாய ஆய்வுகளை நடாத்த முற்படுபவர்களுக்கு பெருமளவில் பயன்படக் கூடியவை.
இந்த நூலை மிகவும் குறுகிய காலத்தில் திருப்திகரமான முறை யில் அச்சிட்டு, வெளியிட நிறைந்த மனத்துடன் செயற்பட்ட துருவன் அச்சகத்தாருக்கு எமது நன்றியைத் தெரிவிக்கின்ருேம். 10 பெப்பிரவரி, 1991. Tamil Institute of Strategic Studies
Uduvi

Page 5
சமர்ப்பணம்
இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் அடிப்படையறிவை உயர்த்த அரும்பாடுபட்டவர்களுக்கும், இன்று அரும்பாடுபடுபவர்களுக்கும் இது சமர்ப்பணம்.

alsTs as
போர் - தந்திரோபாயங்கள் - விளைவுகள் - தாக்கங்கள்
நுளைவு:
வளைகுடா நாடுகளின் வரலாறுகளைப் பார்க்கும் போது, அவை களின் உள்ளூர்களில், அன்று முதல், அதிகார போட்டியின் காரண மாகக் கொலைகள், ஆட்சிக் கவிழ்ப்புக்கள் என்பவை சர்வ சாதாரண மாக அங்கு நடைபெற்று வந்துள்ளதையும், வெவ்வேறு குழு இனங் களும், பின்னர் நாடுகளும் தத்தமது அதிகாரத்தைப் பரவலாக்கும் நோக்கில் தம்முள் பாரிய போர்களை நடாத்தி, அழிவுகளை ஏற்படுத்தி வந்துள்ளன என்பதையும் அறிய முடிகிறது. அரேபியாவில் கிறீஸ்து வுக்குப் பின்னர் 600ஆம் ஆண்டுகளில் இசுலாம் உருவாக்கப் பட்டதைத் தொடர்ந்து, அரபுக்களின் ஆதிக்க விஸ்தரிப்பானது மேற்கே மத்திய கிழக்கு நாடுகள், வட - மத்திய ஆபிரிக்கா, ஸ்பெயின் என்பவைகளிலும், பிரான்சின் ‘தூர் (Tour) எனும் இடம் வரையும், கிழக்கே இந்திய உபகண்டம் வரையும் சமயத்தின் பெயரில் மேற் கொள்ளப்பட்டது. முதலாவது உலக யுத்தத்தில் இவைகளின் பெரும் பகுதி ஐரோப்பிய நாடுகளால் தமது ஆதிக்கத்தினுள் கொண்டுவரப் பட்ட பின்னரும், 1930ஆம் ஆண்டுகளில் வளைகுடாப் பகுதிகளில் பெற்ருேலியமும், இயற்கை வாயுவும் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும், உலகின் சக்தித் தேவைக்கு இவை இன்று மிக முக்கியமாக் இருந்து வரும் நிலையிலும், வளைகுடாவின் அரசியல் உலகிற்கு மிக முக்கிய மாகியுள்ளது.
மறுபுறத்தில், இசுலாமிய அரபுகளது அரசியலானது கிறீஸ்தவர் களின் புனித நகரங்களான ஜெருசலேம், பெத்லஹேம், நசரெத் என்பவைகளுடனும், பாலஸ்தீன உருவாக்கத்துடனும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், இன்று பெற்ருேலிய வளமும், பாரிய செல்வ மும் இருந்துவரும் வளைகுடா இசுலாமிய நாடுகளினதும் அரசியல் கிறிஸ்தவ மேற்கு நாடுகளுக்கு மிக முக்கியமானதாகவும் ஆகியுள்ளது.
வளைகுடாப் பகுதியில் 1988ஆம் ஆண்டுவரை போர்கள் நடை பெற்றுவரும் போதிலும், 1990 ஆகஸ்ட் மாதத்தில் குவைத்தானது ஈராக்கினல் கைப்பற்றப்பட்டு, ஈராக்கின் 19ஆவது மகாணமாக்கப் பட்ட பின்னர், ஈராக்கிற்கும், அமெரிக்கா - அதன் சினேக நாடுகளுக்கு மிடையே 1991 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் போரானது ஏனைய போர்களிலும் பல விதங்களில் வேறுபட்டதாகவே அமைந் துள்ளது. இவற்றில் முக்கியமானவை பின்வருமாறு :

Page 6
(1)
(2)
(3)
(4)
(5)
viii
இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் இப்போரிலேயே பூமியின் வடகோளத்தில் இருக்கும் கிறிஸ்தவ நாடுகளான அமெரிக்கா, மேற்கு-ஐரோப்பிய நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ருசியா என்பவைகள் அமெரிக்காவின் தலைமையில் இணைந்து, வேறு சில சினேக நாடுகளையும் இணைத்து, தெற்கே யுள்ள ஒரு நாட்டுடன் நேரடியான போரில் இறங்கியுள்ளன :
இந்தப் போரானது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை யினது (Security Council) ஒருவித தீர்மான அடிப்படையின் கீழும், மறைமுக ஒத்துழைப்புடனும், பங்குபற்றலுடனும் நடாத்தப்படும் ஒரு போராகும்
விஞ்ஞானமும், இராணுவ - தொழில் நுட்பங்களும் வெகுவாக முன்னேறி, நவீன போர் விமானங்கள், அணு - குண்டுகள், இரசாயன - விஷவாயுக் குண்டுகள், நவீனபாதை காட்டப்பட்ட குண்டுகள், பாதைகாட்டப்பட்ட ஏவு - கணைகள் (Guided Missiles), STs) – grasäNT 56r (Ballistic Missiles), B676r 6rGlavé ருேனிக் கருவிகள், சாதனங்கள் என்பவைகளை இரு சாரா ரும் கொண்டிருக்கும் நிலையில் நடாத்தப்படும் நேரடி யுத்த LDIrgith உலகின் பெரும் பங்கான கண்டுபிடிக்கப்பட்ட பெற்ருேலிய வளம் வளைகுடாவில் இருக்கும் நிலையிலும், உலகின் பெரும் பான்மையான நாடுகள் தமது சக்தித் தேவைக்கு பெற்ருேவி யத்தினில் தங்கியிருக்கும் நிலையிலும், இன்றைய வளைகுடாப் போரானது உலகின் பொருளாதார நிலையையும், வருங்கால அரசியல் போக்கினையும் நிர்ணயிக்கும் ஒரு போராகவே உள்ளது சிலுவை யுத்தங்களின் பின்னர் பூமியின் வட கோளக் கிறீஸ் தவ நாடுகள் இணைந்து, பைபிளில் கூறப்பட்டதுபோல் (?), எல்லாம்வல்ல இறைவனின் (கிறீஸ்தவ கடவுளின்) அதிகாரம் நிலைநாட்டப்பட நடைபெறும் போராகவும் இது தோற்ற மளிக்கிறது.
சுருங்கக் கூறினல் : இன்றைய வளைகுடாப் போரானது உலகின் அரசிய்ல், பொருளாதாரம், ஒழுங்கு முறை, விஞ்ஞான-தொழில் நுட்ப முன்னேற்றங்கள், சமய மேலாதிக்க போக்கு என்பவைக்கு அரசியல், இராணுவ, இராஜ தந்திர செயற்பாடுகளுடாக விடப் பட்ட பெரும் சவாலாகவே உள்ளது.
இந்த நிலையில், இப்போரில் வெற்றிபெற இருசாராரும் பயன் படுத்தக்கூடிய இராணுவ - அரசியல் - இராஜதந்திர செயற்பாடுகள்,

ix
எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்பவையும், இப்போரில் எந்தச் சாரார் கள் இராணுவ - அரசியல் ரீதியில் வெற்றிபெறச் சந்தர்ப்பங்கள் உள்ளன : இப்போரினல் ஏற்படக்கூடிய தாக்கங்கள் எவை, இவற்றி லிருந்து விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் போராடும் மக்கள் பெறக்கூடிய பாடங்கள் எவை என்பவைகள் இங்கு சுருக்கமாகவும், விளக்கமாகவும் ஆராயப்படுகின்றன.
இங்கு மேற்கொள்ளப்படும் ஆய்விற்குத் தேவையான முக்கிய சில அடிப்படை விபரங்களும், விளக்கங்களும் பகுதி -1 இல் தரப் பட்டிருக்கும் போதிலும், இராணுவ சம்பந்த விடயங்கள் தொடர் பாகச் சில மேலதிக விபரங்களும், விடயங்களும் தேவையாகவே உள்ளன. அவைகள் இயலுமான வரை இங்கு சுருக்கமாகத் தரப்பட் டுள்ளன. எது விதத்திலும், வரலாற்று ஆய்வுகளை நடாத்துவதுபோல் இந்த ஆய்வில் குறிப்பிடப்படும் விடயங்களுக்கு " ஆதாரங்கள் " தரப்படவில்லை. " ஆதாரங்கள்" இல்லாது ஆய்வுகள் இருக்க முடியாது எனச் சிலர் கருத்துத் தெரிவிக்கலாம். ஆனல், எதுவுமே தெரியாதவர் களுக்கு சகலதிற்கும் " ஆதாரங்கள் ' கொடுக்கவேண்டியே நேரிடும். அப்படியாயின், இந்த நூலில் கூறப்படுபவைகளுக்கு ‘ ஆதாரங்கள் கொடுக்க முற்பட்டால், இந்த நூலின் பெரும்பகுதி அவற்றிற்கே செலவாகும். இன்று அச்சுக்கடுதாசிகள் தட்டுப்பாடான நிலையில், சகலதிற்கும் " ஆதாரங்கள் ' தேவைப்படும் ஒரு சிறிய பகுதியிருக் காக, பெரும் பகுதியினர்கள் நூலின் பக்கங்களை வீணுக்குவது பய னற்றதாகும். ஆகவே, இவர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் இப் புத்தகத்தின் இறுதியில் இணைப்பு என்ற தலைப்பின் கீழ் பல்வேறு tull- விடயங்கள் தொடர்பான விபரங்களை அறியப்பயன்படுத்தக் கூடிய கைநூல்களும், அவற்றினைப் பற்றிய சில விபரங்களும் தரப் பட்டுள்ளன.
இறுதியாக, இந்த நூல் தொடர்பாக வாசகர்களிடமிருந்து முற்போக்கான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெப்பிரவரி 10, 1991 அ. சி. உதயகுமார்

Page 7

வளைகுடாப் போருக்குக் கூறப்படும் காரணங்களும்,
உண்மையான நோக்கங்களும்
பூகோளத்தில் நடைபெறும் சம்பவங்களை மேலோட்டமாக மாத்திரம் பார்க்கும் ஒருவருக்கு, இன்று வளைகுடாவில் நடைபெறும் போரானது ஈராக் 1990 ஆகஸ்டில் குவைத்தினை அதனது இராணுவ பலம்கொண்டு கைப்பற்றி, அதனை ஈராக் அத்னது 19ஆவது மாகாண மாக ஆக்கியமையால் ஏற்பட்டபோர் என்றே தோற்றமளிக்கும். அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும், அவற்றின் வெகு ஜனத்தொடர்பு சாதனங்களும் இதனையே முதலில் உலகிற்குக் கூறி, தாம் எடுக்கவிருந்த இராணுவ நடவடிக்கைகளுக்கு நியாயப்படுத்தலில் ஈடுபட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக, 1991 பெப்பிரவரி 1ஆம் திகதியன்று, அமெரிக்க ஜனதிபதி ஜோர்ஜ் ப்புஷ், ஈராக்கிய கொடுங் கோலனுன் சதாம் ஹ"செயினது கொடுமைகளையும், அக் கொடுங் கோலனல் தாம் உலகில் உருவாக்கவிருக்கும் " புதிய ஒழுங்கு முறை’க்கு வரும் ஆபத்தினையும் அனுமதிக்க முடியாது என்று கூறிஞர் !.
பூகோளத்தில் நடைபெறும் சம்பவங்களை வரலாற்று ரீதியில் மாத்திரம் பார்க்கும் ஒருவருக்கு, வரலாற்றில் அரபுக்கள் இப்படி யான பலாத்கார இணைப்புக்களிலும், போரில் தோல்விகண்ட அரபுக் கள் மேற்கு நாடுகளை உதவிக்கு அழைத்தமையும் அன்றுமுதல் நடை பெற்றுவரும் ஒரு விடயமென்றே தோன்றும். இவற்றிற்கு மேலாக, ஈராக்கினதும், குவைத்தினதும் அரசியல் வரலாற்றினை எடுத்துக் கொண்டால், பல தசாப்தங்களாக ஈராக் குவைத்தினை உரிமை கோரியே வந்துமுள்ளது. இந்த நிலையில், குவைத்தின் வேண்டு கோளுக்கிணங்க அமெரிக்காவும், அதன் சினேக நாடுகளும் குவைத்தின் உதவிக்கு அங்கு சென்றதில் எந்தவித வியப்பும் இல்லை எனிலாம்"
பூகோளத்தில் நடைபெறும் சம்பவங்களை மனித உரிமைகள் என்பதுடன் தொடர்பு படுத்தி மாத்திரம் பார்ப்பவருக்கு, குவைத்து மக்களின் விருப்புக்கு முரணுக ஈராக் குவைத்தினைப் பலாத்காரமான முறையில் ஈராக்கின் 19ஆவது மாகாணம் ஆக்கிக்கொண்டமை, உண்மையில், குவைத்து மக்களின் சுதந்திரத்தையும், இறைமையை யும் பறிக்கும் ஒரு நடவடிக்கை என்றும், இது குவைத்து மக்களின் அடிப்படை மனித உரிமைகளை நிராகரிக்கும் செயற்பாடு என்றும் தோன்றமுடியும். அமெரிக்க, மேற்கு-ஐரோப்பிய நாடுகளும், அவற்றின் வெகுஜனத் தொடர்பு சாதனங்களும் இதனையே உலகிற்குக் கூறுகின்றன. ஆனல், அமெரிக்காவின் வரலாற்றையும், சோவியத் யூனியன், இந்தியக்குடியரசு, இலங்கை, மற்றும் பல நாடுகளின்

Page 8
- 2 -
வரலாறுகளை பார்த்தால், ஈராக்கு குவைத்திற்கு எதனைச் செய்ததோ அதையே அவர்கள் செய்து ஐக்கிய அமெரிக்கா, சோவியத் யூனியன், இந்தியக் குடியரசு, சிறீ-லங்கா குடியரசு என்பவற்றை உருவாக்கி யுள்ளனர்.
மறுபுறத்தில், சதாம் ஹ"செயின் தானும் மனித உரிமைகளைக் காப்பாற்றும் நடவடிக்கையில்தான் ஈடுபட்டிருப்பதாகக் கூறுகிருர், இஸ்ரேல் ஆனது பாலஸ்தீன மக்களின் அடிப்படை மனித உரிமைகளை நிராகரித்து, பாலஸ்தீன மக்களின் விருப்புக்கு முரணுகப் பாலஸ் தீனத்தை ஆக்கிரமித்துக் கைப்பற்றி, அதனை இஸ்ரேலின் ஒரு பகுதி யாக இணைத்துள்ளது எனச் சதாம் ஹ"செயின் கூறுகிருர், அவர் அங்கு பாலஸ்தீன மக்களின் சுதந்திரமும், இறைமையும் பறிக்கப் பட்டு விட்டது எனக் கூறுகிறர். பாலஸ்தீனம் இஸ்ரேலுடன் இணைக் கப்பட்டது சரியாயின், குவைத் ஈராக்கின் 19ஆவது மாகாணம் ஆக்கப்பட்டதும் சரியானதாகிறது. குவைத் ஈராக்கின் 19ஆவது மாகாணம் ஆக்கப்பட்டது பிழையாயின், பாலஸ்தீனம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டதும் பிழையானதாகிறது. அப்படியாயின், அதற்கான தீர்வு மனித உரிமைகள் அடிப்படையில் காணப்படவேண்டும். இதற்குத் தீர்வு காணப்பட்டால், தனது படைகளைக் குவைத்திலிருந்து எடுக்கத் தான் தயார் என்றும் சதாம் ஹ"செயின் கூறினர். ஆனல், அமெரிக்காவும், அதன் கிறிஸ்தவ சினேக நாடுகளும் இது சதாம் ஹ"செயினின் போலிக் கோரிக்கை என உலகிற்குப் பிரசாரம் செய்தன !
பூகோளத்தில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு "உலகின் ஒழுங்கு முறை" என்பதன் அடிப்படையில் தான் தீர்வுகாண வேண்டும் எனக் கருதும் ஒருவருக்கு, சதாம் ஹ"செயின் தானுகவே பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முற்படுவது உலக ஒழுங்கு முறை"க்கு முரணுனே செயற் பாடு என்றே தோன்றும். அமெரிக்காவும், அதன் சினேக நாடுகளும், அவற்றின் தலைவர்களும், வெகுஜனத் தொடர்பு சாதனங்களும் இதனையே உலகின் மக்களுக்குக் கூக்குரலிட்டுக் கூறுகின்றன. சதாம் ஹ"செயினும் அதே ' உலக ஒழுங்கு முறை'யை நிலைநாட்டவே தானும் முன்னின்று செயற்படுவதாகக் கூறுகின்ருர், அவர் : இன்று உலக ஒழுங்கினை நிலைநாட்டும் (?) ஐக்கிய நாடுகள் (United Nations) சபைதான் அன்று பாலஸ்தீனத்தினையும், இஸ்ரேலையும் உருவாக்கியது. ஆனல், இன்றைய "உலக ஒழுங்குமுறை"க்கு முரணுக இஸ்ரேலியர் கள் பாலஸ்தீனத்தைத் தமது விருப்பப்படி இஸ்ரேலுடன் இணைத் துள்ளனர். இது "உலக ஒழுங்கு முறை"க்கு முரணுனதாகும். ' உலக ஒழுங்கு முறை உலகில் நிலைநாட்டப்பட வேண்டும். பாலஸ்தீனம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டமை உலக ஒழுங்கு முறை’க்கு முர

- 3 -
ணுனதாயின், இஸ்ரேல் பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறவேண்டும். பாலஸ்தீனம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது "உலக ஒழுங்கு முறை யுடன் ஒத்துப் போகுமாயின், குவைத் ஈராக்குடன் இணைக்கப்பட்ட தும் உலக ஒழுங்குடன் ஒத்துப் போகும் விடயம்தான் என்கிருர் ! இது மாத்திரமல்ல. சதாம் ஹ"செயின் அமெரிக்காவும், அதன் சினேக நாடுகளும் ஈராக்கின் மீது போர் தொடுப்பது " உலக ஒழுங்கு முறைக்கு முரணனதென்று கூறி, உலக ஒழுங்கு முறை நிலை நாட்டப்பட உலக நாடுகள் முன்வரவேண்டும் என்கிருர். ஐக்கிய நாடுகளின் " பாதுகாப்பு சபை'யினது தீர்மானங்களில், ஈராக் ஜனவரி 15 இற்குமுன் குவைத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும், அப்படியில்லாவிட்டால், இராணுவ நடவடிக்கைகள் மூலம் வெளி யேற்றப்படலாம் என்றுதான் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. ஜனவரி 15ஆம் திகதியின் பின்னர் ஐக்கிய நாடுகள் ஈராக்கிற்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அமெரிக்காவும்: அதன் சினேக நாடுகளும் தாமாகவே இராணுவ நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இது " உலக ஒழுங்கு முறை"க்கு முரணுன்து என்றும், உலகில் * ஒழுங்கு முறை நிலைநாட்டப்படல் வேண்டும் என்றும் சதாம் ஹ"செயின் உலக நாடுகளுக்கு அறைகூவல் விட்டுள்ளார். ஆனல் ஈராக்கிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தன. இவற்றை யெ ல் லாம் பார்க்கும்போது, "அடிப்படை மனித " உரிமைகள்", "சுதந்திரம் ’, ‘இறைமை", "உலகின் ஒழுங்கு முறை என்ற பதங்கள் தொடர்பாக புதிய விளக்கங்கள் இன்று உருவாக்கப் படுகின்றன என அமெரிக்காவும், அதன் சினேக நாடுகளும் சதாம் ஹ"செனுக்கும், உலகிற்கும் கூறுவதாகவே அமைகிறது! இதுபற்றிச் சற்று ஆழமாகவே பார்க்கவேண்டியுள்ளது.
இரண்டாவது உலக யுத்தத்திலிருந்து 1975ஆம் ஆண்டுவரை மாத்திரம், அமெரிக்கா வேறு நாடுகளை அதனது இராணுவ பலம் கொண்டு 215 தடவைகள் மிரட்டியுள்ளதாக வோர்ஷிங்டனுள்ள Brookings Institution என்ற ஆய்வு நிலையத்தின் அறிக்கைகள் கூறு கின்றன. 1946ஆம் ஆண்டுமுதல் 1982ஆம் ஆண்டுவரை மாத்திரம்) அமெரிக்கா ஏறக்குறைய 250 தடவைகள் அதனது படைகளைப் பயன் Lu6ğ8) uygirgitgi 67607 US Chief of Naval Operations eğ56îqöğ5 Admiral James Watkins தனது உறுதிமொழி கொடுப்பின் போது கூறியுள்ளார். 1954ஆம் ஆண்டில் அமெரிக்க ஆகாயப்படையின் உதவியுடன், அமெரிக்க உளவு ஸ்தாபனமான C. 1. A. இனல் பயிற் றப்பட்ட கிளர்ச்சிக்காரர் கெளத்தமாலா அரசைக் கவிழ்த்து, ஆட் சியைக்கைப்பற்றப் படையெடுத்தனர். 1958ஆம் ஆண்டில் 14,000 அமெரிக்கப் படைகள் லெபனணினுள் புகுந்தன. 1965ஆம் ஆண்டில் அமெரிக்க மரீன் (Marines) படையும், பராப்படையினரும் (Para

Page 9
- 4 -
troopers) தமது பொம்மையாட்சியை நிறுவ டோமினிக்கன் குடியரசினை (Dominican Republie) படையெடுத்தனர். 1983ஆம் ஆண்டில் அமெரிக்க படைகள் குட்டி கிரெனடா (Grenada) தீவினை ஆக்கிரமித்தன. 1986ஆம் ஆண்டில் அமெரிக்கப்படைகள் லிபியா மீது விமானத் தாக்குதலை நடாத்தியிருந்தன. 1987இல் வளைகுடாவில் அமெரிக்கக் கடல்படை ஈரானிய கடல் படைமீது தாக்குதலை நடாத்தியிருந்தது. 1989இல் அமெரிக்கப்படைகள் குட்டிப் பணுமாவை ஆக்கிரமித்திருந்தன. இதைப் போலவே பிரான்சு, பிரித்தானியா, நெதர்லாந்து போன்ற அமெரிக்க சினேக நாடுகளும் பல ஆக்கிரமிப்புக்களைச் செய்துள்ளன.
இப்படியான அமெரிக்காவும், அதன் சினேக நாடுகளும் இன்று குவைத் தொடர்பாக மக்களின் "அடிப்படை உரிமைகள்’ ‘சுதந்திரம்', 'இறைமை", "ஜனநாயகம்’, ‘உலக ஒழுங்கு முறை" என்ற பதங்களை அடிக்கடி பயன்படுத்துவது சதாம் ஹீசெனுக்கு மாத்திரமின்றிச் சுய மாகச் சிந்திக்கும் எவருக்கும் பல கேள்விகளை எழுப்பவே செய்யும். மறுபுறத்தில், இந்த அமெரிக்கா குவைத் தொடர்பாக எழுப்பி வரும் போலிக் கூக்குரலை பெரும்பான்மையான உலக நாடுகளின் அதிகாரத்தி லிருக்கும் ஆளும் வர்க்கங்கள் ஏற்று, ஆமோதிப்பது சாதாரண ஒரு வருக்குப் பெரும் குழப்பத்தினையே ஏற்படுத்த முடியும். இதை விட ருசியா, சீன என்பவைகளது ஆளும் வர்க்கங்கள் கூட, இவற்றை ஏற்றுத் தலையாட்டுவது மூன்ரும் உலக நாடுகளில் தம்மைத் தாமே மார்க்சீயவாதிகள், கம்யூனிஸ்ட்டுக்கள் என்று வருணித்து வருபவர் களுக்குப் பெரும் குழப்பத்தினையே ஏற்படுத்த முடியும்.
இந்த நிலையில், இன்று, வளைகுடா நாடுகளின் குட்டி ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும், செக்கோ சிலோ வாக்கியா, யூகோசிலாவியா, ருமேனியா, மற்றும் கிழக்குஐரோப்பிய நாடுகளும், ருசியாவும், ஐப்பானும் என, மொத்தம் 28 நாடுகள் போர் தொடங்கியிருப்பது ஏன் என்ற முக்கிய கேள்வி எழுகிறது. மறு புறத்தில், இந்தப் போருக்கு உலகின் பெரும்பான்மை யான நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் எந்தவித எதிர்ப்பையும் தெரி விக்காது, மெளனமாக இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. இந்த இரண்டு கேள்விகளுக்கும் பலர் பலதரப்பட்ட விளக்கங்களைக் கொடுக்கலாம். ஆனல், முதலாவது கேள்வியை எடுத்துக் கொண்டால், அதற்கான உண்மையான விளக்கத்தினை இன்று அமெரிக்க ஜனதிபதி ஜோர்ஜ் ப்புஷ்தான் உண்மையில் கொடுக்க முடியும். ஆனல் அவரிட மிருந்து இதற்கான நேரடி விளக்கம் கிடைக்கவே மாட்டாது. ஏனெனில், இப்படியான உண்மை விளக்கங்கள், தந்திரோபாய ரீதி யில், அவர்களுக்குத் தமது குறிக்கோள்களை அடைவதில் பாரிய தாக்கங்களையே ஏற்படுத்தும், இந்த நிலையில், நாம் அவற்றை ஆராய்ந்து கண்டு பிடிப்பதே ஒரேயொரு வழி.

- 5 -
பொதுவாகக் கூறினல், ஒரு நாடோ அல்லது ஒரு அமைப்போ அல்லது இவற்றின் தலைமைப் பீடங்களோ பகிரங்க அறிக்கைகளை விடும் போதும், நாள் காட்டியில் முற்கூட்டியே குறிக்கப்பட்ட நாட்களில் கலந்து கொள்ளும் கூட்டங்களிலும், வைபவங்களிலும் பேசும் போதும், அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் போதும், தமது அறிக்கைகளையும், பேச்சுக்களையும் மிகவும் கவனமாகத் தயாரித்தே பேசுவர் அல்லது சமர்ப்பிப்பர். ஆனல், இவர்கள் முன் கூட்டியே திட்டமிடாத சாதாரண கூட்டங்களில் பேசும் போதும், பேட்டிகளின் போதும் அவர்களது அபிலாஷைகளும், அவர்களது உள்மனத்தில் வைத்திருப்பவையும் உணர்ச்சி வசப்படும் சந்தர்ப்பங்களில் வெளி வருவதை பெரும்பாலும் காணமுடியும். இந்த வெளிக்காட்டல்கள் ஒரு, இரு சொற்களுடாகவும், சில வேளைகளில் ஒரு வசனமூடாகவுமே பெரும்பாலும் வெளிவருவதை நாம் காண முடியும். இந்த நிலையில், அமெரிக்க ஜனதிபதி, உப-ஜனதிபதி, அரச செயலர், பாதுகாப்பு செயலர் என்பவர்களது வாயிலிருந்து வெளிவருபவைகளை எல்லாம் மிகவும் கவனமாக ஆராய வேண்டியுள்ளது.
ஈராக்கின் மீது போரை ஆரம்பித்து இரண்டு வாரங்களுள் அமெரிக்க பாதுகாப்புச் செயலர், அரச செயலர், உப-ஜனதிபதி என்போர்கள் சில சந்தர்ப்பங்களில் இந்தப் போரின் நோக்கங்களை வெளிப்படுத்தும் விதத்தில் சில சில சொற்களையும், சொற் தொடர் களையும் பயன்படுத்தியிருக்கும் போதிலும், 1991 பெப்பிரவரி 1ஆம் திகதியன்று அமெரிக்க ஜனதிபதி பேசிய பேச்சு அமெரிக்காவினது குறிக்கோளினை சற்று அழுத்தமாகப் பிரதிபலித்துள்ளது.
வளைகுடாப் போரில் பங்கு பற்றும் படையினரது குடும்பத் தினரின் முன்னிலையில் இராணுவத் தளத்தினில் பாரிய கரகோஷங் களின் மத்தியில் பேசிக் கொண்டிருந்த அமெரிக்க ஜனதிபதி ஜோர்ஜ் ப்புஷ், ஈராக்கிய ஜனதிபதி என்னென்ன செய்கிருர், செய்ய முற்படுகிருர் என்று ஒவ்வொன்ருகக் கூறி, அவற்றில் வெற்றியடைய மாட்டார், ஈற்றில் அமெரிக்காவே வெல்லும் எனப் பாரிய கரகோஷ மத்தியில் கூறி: "உலகில் நாம் உருவாக்க முற்படும் "புதிய உலக ஒழுங்கு முறை"க்குக் கொடுங்கோலன் சதாம் ஹ"செயின் மூலம் வரும் ஆபத்தினை அனுமதிக்க முடியாது" என உணர்ச்சிவசமாகக் கூறினர். இவருடைய இந்தப் பேச்சு Voice of Americaவில் ஒலி பரப்பாகியது.
இதிலிருந்து அமெரிக்கா, மற்றும் சினேக நாடுகளும் உலகில் * புதிய ஒழுங்கு முறை (New World Order) யினை உருவாக்கச் செயற் படுவதையும், அதற்குச் சதாம் ஹ"செயின் இன்று பெரும் ஆபத்தினை உருவாக்குகிருர் என்பதையும் அறிகிருேம். இந்த நிலையில், எமக்கு இரண்டு முக்கிய கேள்விகள் இங்கு எழுகின்றன. அலையாவன :

Page 10
- 6 -
(1) அமெரிக்காவும், மேற்கு - ஐரோப்பிய நாடுசஞம் இன்று உரு வாக்க முற்படும் " புதிய உலக ஒழுங்கு முறை ' (New World Order) srg/? (2) இவர்களது " புதிய உலக ஒழுங்கு முறை"க்குச் சதாம் ஹ்" செயின் என்ன ஆபத்தினை, எப்படி உருவாக்கிருர்? என்பவையே! அமெரிக்காவும், அதன் சினேக நாடுகளும் தாம் உருவாக்க இருக்கும் "புதிய உலக ஒழுங்கு முறை எது என்பது பற்றிய விபரங் களை, அதை உருவாக்க முன்பே, உலகிற்குப் பகிரங்கமாகக் கூறுவது, அவர்கள் தமது குறிக்கோளினை அடைவதில் தந்திரோபாய ரீதியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும். ஏனெனில், அவர்கள் தமது இலா பங்களை நிலை நாட்டவும், அதிகரிக்கவுமே ' புதிய உலக ஒழுங்கு முறை "யினை உருவாக்க முற்படுகிருர்களேயன்றி, உலகத்தின் நன் மைக்காக அல்ல! ஆகவே, இந்தப் " புதிய ஒழுங்கு முறை எதுவாக இருக்க முடியும் என்பதை நாமே ஆராய்ந்து அறிய வேண்டியுள்ளது. இதனை ஆராய்வதற்குச் சரியான தரவுகள் தேவைப்படுகின்றன. ஆனல் எமக்கு அந்தத் தரவுகள் ஏற்கனவே கிடைத்துள்ளன. அந்தத் தரவுகள் தான் அமெரிக்கா உருவாக்க விருக்கும் " புதிய ஒழுங்கு முறை"க்குச் சதாம்ஹஉசெயின் பெரும் ஆபத்தாக இருப்பதென்பது;
இந்த நிலையில், சதாம் ஹ"செயினின் செயற்பாடுகள் எவை?; இவைகள் இறுதியில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்த வல்லது? : இந்த விளைவுகளில் எவைகள் உண்மையில் அமெரிக்க ‘நலன்களுக்கு" ஆபத்தினை உருவாக்கலாம்? என்பவற்றை ஆராய்ந்தே நாம் அமெரிக் காவினதும் மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் ' புதிய உலக ஒழுங்கு முறை உருவாக்கம் என்ன? அதன் குறிக்கோள்கள் எவையாக இருக்கும் என்பவற்றைச் சரியாக அறிய முடியும்.
இன்றைய நிலையில், சதாம் ஹ"செயினினது செயற்பாடுகள் இரண்டு முக்கிய விடயங்களாகவே உள்ளன. அவையாவன :
(1) பாரிய பெற்ருேலிய வளமுள்ள குவைத்தினை ஈராக்கின் 19
ஆவது மாகாணம் ஆக்கியமை ;
(2) பாலஸ்தீனத்தை உருவாக்க முற்பட்டமை.
இதில் முதலாவதை எடுத்துக் கொண்டால், அது உலகின் சக்தித் தேவைக்கு அத்தியாவசியமான பெற்ருேலிய வளத்துடன் தொடர் புடையதாகவே உள்ளது. பொதுவாகக் கூறினல் : உலகின் இயற்கை வளங்களுடன் தொடர்புடையது. இந்த நிலையில் நாம் உலகின் சக்தித் தேவைக்குப் பெற்ருேலியம் எவ்வளவிற்கு முக்கியமானது; உலகின் பெற்ருேலிய வளம் எவ்வளவு உள்ளது ; ஈராக், குவைத்து, மற்றும் வளைகுடா நாடுகளில் எவ்வளவு பெற்ருேலிய வளம் உள்ளது;

- 7 -
இவைகள் உலக தேவைக்கு எவ்வளவு காலம் பயன்பட முடியும் என்பவைகள் மிகவும் கவனமாக ஆராயப்பட வேண்டியுள்ளன. இவைகள் அனைத்தும் பல விடயங்களை உள்ளடக்குவதால், அவற்றினை இங்கு ஆராயாது, முன் கூட்டியே, ' இன்றைய வளைகுடாப் போர்’ என்பதன் பகுதி -1இல் * வளை - குடா - சில முக்கிய விபரங்களும், விளக்கங்களும் " என்ற தலைப்பின் கீழ் ஆராயப்பட்டுள்ளன.
பகுதி - இனைப் பார்த்தால், வளைகுடா நாடுகளின் சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் என்ற நான்கு நாடுகள் மாத்திரம் 1972ஆம் ஆண்டில் * கண்டு பிடிக்கப்பட்ட பெற்ருேலியத்தின் 310 பில் வியன் பீப்பா பெற்ருேலியத்தைக் கொண்டிருந்தன என்பது தெரிய வரும். 1972ஆம் ஆண்டில் உலகின் மொத்த " கண்டு பிடிக்கப்பட்ட பெற்ருேலிய வளம் 558.1 பில்லியன் பீப்பாக்களாகக் கணிக்கப்பட் டிருந்தது. அதாவது, 1972ஆம் ஆண்டில் உலகின் கண்டு பிடிக்கப் பட்ட " பெற்ருேலிய வளத்தின் 55%மானது வளைகுடாவின் 4 நாடு களிலுமே இருந்தது. எதுவிதத்திலும், 1973ஆம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட பெற்ருேலிய நெருக்குவாரத்தின் பின்னர் (முழுவிபரங் களுக்கும் பகுதி I இனப் பார்க்கவும்) அலாஸ்கா, வடகடல், மற்றும் பல பகுதிகளில் பெற்ருேலிய வளங்கள் கண்டு பிடிக்கப்பட்ட போதும், சவுதிஅரேபியாக்கடல் பிராந்தியத்திலும் பாரிய பெற்ருேலியவளம் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்றைய நிலையிலும், உலகின் " கண்டு பிடிக்கப்பட்ட பெற்ருேலிய வளத்தின் அரைப் பங் கிற்கு மேலானது வளைகுடா நாடுகளில் தான் உள்ளது.
1979ஆம் ஆண்டின் பின்னர் ஈரான் ஆனது அமெரிக்காவினது கைகளில் இருந்து மாறியதைத் தொடர்ந்தும், ஈராக் குவைத்தினை இணைத்த நிலையிலும், சவுதி அரேபியாவின் பெற்ருேலிய வளமளவு வளைகுடாப் பெற்ருேலிய வளம் அமெரிக்காவினது செல்வாக்கிலிருந்து விலக்கப்பட்டு விட்டது. இது நீண்ட காலக் கண்ணுேட்டத்தில் அமெ ரிக்காவிற்கும், மேற்கு-ஐரோப்பிய நாடுகளுக்கு சக்திப் பிரச்சனையை எதிர் நோக்கவே வைக்கும்.
இதை விட, சதாம் ஹ"செயினின் செயற்பாடுகள் பாலஸ்தீனத் தினை உருவாக்க இசுலாமிய நாடுகளை ஒருங்கிணைப்பதாகவே உள்ளது. இந்த நிலையில், இசுலாமிய ஒருங்கிணைப்பு முயற்சி வெற்றி பெறுமே யாயின், வளைகுடாவின் அரசர்கள் ஆட்சி நாடுகளில் இது அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தவும் முடியும். அப்படியாயின் சவுதிஅரேபி யாவும் அமெரிக்க ஆதிக்கத்திலிருந்து தவறி, உலகின் பெற்ருேலிய வளங்களின் அரைப்பங்கிற்கு மேலான பெற்ருேலியத்தையுடைய சவுதிஅரேபியா, குவைத், ஈரான், ஈராக் என்பவை அமெரிக்காவின தும், மேற்கு-நாடுகளினதும் செல்வாக்கிலிருந்து விலகி விடும்.

Page 11
- 8 -
மறு புறத்தில், யார் வளைகுடா நாடுகளை தனது ஆதிக்கத்தினுள் கொண்டு வருகிருரோ, அவரே காலப்போக்கில் மேற்கு நாடுகளின் பொருளாதாரத்தையும், உலகின் பொருளாதாரத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் சந்தர்ப்பங்கள் உருவாகும். பொதுவாகக் கூறினல் : வளைகுடாவின் இயற்கை வளங்களை யார் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வருகிருரோ அவரே அமெரிக் காவினதும், மேற்கு-நாடுகளதும் பொருளாதாரத்தினை நிர்ணயிக்கும் சந்தர்ப்பங்கள் உருவாகும்.
இந்த நிலையில், சதாம் ஹ"செயின் பாலஸ்தீனத்தினை உருவாக்க இசுலாமியரை அமெரிக்காவிற்கும், மேற்கு-நாடுகளுக்கும் எதிராக மாற்றி, இசுலாமின் பெயரில் இந்த நாடுகளில் தனது செல்வாக்கினை உயர்த்தி, குவைத்தினை இணைத்தது போல் சவுதி அரேபியாவையும் இணைத்து, அல்லது, அங்கு அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவாரே யாயின், மேற்கு-நாடுகளின் பொருளாதாரம் சதாம் ஹ"செயினினல் நிர்மானிக்கப்படுமேயன்றி, மேற்கு நாடுகளால் அல்ல. இது அமெரிக்கா உருவாக்கவிருக்கும் " புதிய உலக ஒழுங்கு முறை"க்கு ஆபத்தினை உருவாக்குமென அமெரிக்கர்கள் கருதினல், அமெரிக்கரின் " புதிய உலக ஒழுங்கு முறை” யானது உலகின் இயற்கை மூலவளங்கள் தொடர்பானதாக இருக்க வேண்டியும் உள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா உருவாக்க இருக்கும் " புதிய உலக ஒழுங்கு முறை "யின் கீழ், உலகில் இருக்கும் மூலவளங்கள் அவை எந்தெந்த நாட்டுப் பிராந்தியங்களுள் உள்ளனவோ, அந்தந்த நாடுகளுக்கு அவை உரித் தானவையல்ல! மேற்கு நாடுகளின் தேவைக்கு ஏற்றவாறு, அவை கள் வழங்கப்படவே வேண்டும்!! என்பதேயாகும்.
இது தொடர்பாக அமெரிக்கா அதனது கொள்கையைப் பல கால கட்டங்களில் முன்னர் வெளிக்காட்டியே வந்துள்ளது. 1973ஆம் ஆண்டில், அமெரிக்காவானது வளைகுடாவின் பெற்ருேலிக்கிணறுகளைத் தான் கைப்பற்றவும் தயங்கமாட்டாது என்று பகிரங்கமாகத் கூறி யிருந்தமை அவதானிக்கப்படவேண்டும். இதைவிட, வடதுருவம், தென்-துருவம் என்பவைகளின் இயற்கை வளங்களின் உரிமைகள், கடல் வலையத்தில் காணப்படும் வளங்களின் உரிமைகள், கடல் அடியின் படுக்கைகளில் காணப்படும் கனியங்களின் உரிமைகள், அண்டவெளியில் காணப்படும் கிரகங்களில் இருக்கும் வளங்களின் உமைகள், பயன்பாடுகள் என்பவைகள் தொடர்பாக ஐக்கிய நாடுக ளால் ஏற்படுத்தப்பட்ட உடன்பாடுகளின் போது அமெரிக்காவினதும், மேற்கு நாடுகளினதும் கருத்துக்களும், கொள்கைகளும் இவற்றினை வலியுறுத்தியே வந்துள்ளது. மூன்ரும் உலக நாடுகளின் அரசுகளும், வெகுஜனத் தொடர்பு சாதனங்களும், ஆய்வு நிலையங்களும் (?) இவைகள் பற்றி அதிக கவனம் செலுத்தாத நிலையிலும், மக்களுக்கு அறியக்கொடுக்காத நிலையிலிலும், இவைபற்றி இந்த நாடுகளின் பெரும்பான்மையான மக்களுக்கு எந்தவித விளக்கமற்ற நிலைதான் தொடர்கிறது.

- 9 -
இரண்டாவதை எடுத்துக்கொண்டால், பாலஸ்தீனத்தை அமைக் கும் முயற்சியானது, ஒருபுறத்தில், ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் அமெரிக்காவினதும், மேற்கு-நாடுகளினதும் இயற்கை வளத் தேவை களில் பாதிப்புக்களை ஏற்படுத்துகையில், மறுபுறத்தில் மேற்கு-நாடு களின் ஆத்மீக நலன்களுக்கும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்த முடியும், பாலஸ்தீனம் உருவாக்கப்படுவது மேற்கு நாடுகளின் சமயமான கிறீஸ் தவத்திற்கு முக்கியம்வாய்ந்த நகரங்களும் பிரச்சனைகளை எதிர்நோக்க வைக்கும் சந்தர்ப்பங்களை உருவாக்க முடியும். சமயங்கள் உருவாகாத ஐரோப்பாவில் அன்று வாழ்ந்தவருக்கும், அவர்களின் சந்ததியினருக் கும், தூர, ஆசியாவில் உருவாகிய கிறிஸ்தவம் கிடைத்த நிலையில், அந்தக் கிறிஸ்தவ உருவாக்கத்தில் முக்கியம் வாய்ந்த நகரங்களான ஜெருசலேம், பெத்லஹேம் என்பவை தமது ஆதிக்கத்தினுள் இல்லா திருந்தால், அவர்கள் தமது செயற்பாடுகளுக்கு ' கடவுள் இன் ஆணையும், ஆசியும் கிடைக்கப்பெற்றது" என்ற ஒருவித விளக்கத் தினைக் கொடுக்கமுடியாதே போகும். இந்த நிலையில், ஆதிக்க விஸ் தரிப்புப் போட்டியில் அன்று தம்முள் போட்டிபோட்ட ஐரோப்பியர் கள் கிறிஸ்த சமயத்தின் முக்கிய புனித ஸ்தலங்களைத் தத்தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கும் போட்டியிலும் அன்று ஈடுபட்டு வந்தனர்.
இந்தப் போட்டியின் தொடர்ச்சியாக ஐரோப்பிய நாடுகளும், ருசியாவும் அன்றுமுதல் இந்த நகரங்களில் ஆச்சிரமங்களைக் கட்டி, அவற்றை நடாத்தியும் வந்தன, வருகின்றன. சில தசாப்தங்களுக்கு முன்னர் இஸ்ரேல், பாலஸ்தீனம் என்பவைகள் உருவாக்கப்பட்ட போது கூட, ஜெருசலேம், உலகின் சகல (?) நாடுகளுக்கும் பொது வாக, ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் கொண்டுவரவேண்டும் எனவும் இந்த நாடுகள் கருதின.
இந்த நிலையில், இசுலாமியர்கள் இசுலாமின் பெயரில் இணைக்கப் படுவதும், பாலஸ்தீனம் உருவாக்கப்படுவதும் அமெரிக்காவினது * புதிய உலக ஒழுங்குமுறை"க்கு ஆபத்தினை ஏற்படுத்தும் என இந்த மேற்கு நாடுகள் கருதினுல், உலகில் கிறீஸ்தவ ஆதிக்கத்தினை நிலை நாட்டுவதும் அமெரிக்காவின் " புதிய உலக ஒழுங்கு முறை உருவாக் கத்தின் ஒரு அங்கமாகவே இருக்க வேண்டும். இந்த முடிவுக்கு நாம் வருவது, எமது ஆய்வு பிழையான அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டுள்ளது என்ற ஒரு தோற்றத்தினைக் கொடுக்கலாம். சிலர் இதை * ஆதாரம் " அற்ற, வழிதவறிய ஆய்வு எனவும் கூறலாம். ஆனல், இந்த முடிவு சரியானது என உறுதிப்படுத்தப் பல ஆதாரங்கள் இருக்கவே செய்கின்றன.
2

Page 12
- 10 -
உலக வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட சிலுவை யுத்தங்களும், காலனித்துவ வாதிகளால் மேற்கொள்ளப்பட்ட பலாத்கார கிறீஸ்தவ பரப்பல்களும், பிற சமயங்களையும், கோயில்களையும் அழித்த நட வடிக்கைகளும், ஹிட்லர் - வத்திக்கான் ஒப்பந்தமும், யூத இன அழிப்பும் மாத்திரம் எமது முடிவு சரியானது என்பதை நிருபிக்கப் போதுமானது அல்ல என ஒரு வாதமும் முன்வைக்கப்படலாம். ஆனல், காலத்திற்குக் காலம், அமெரிக்க ஜனதிபதிகள், இந்த நூற்றண்டில் எமது முடிவை வலியுறுத்தியே வந்துள்ளனர்.
1917ஆம் ஆண்டில், அமெரிக்காவினது ஆதிக்கச் செல்வாக்கினை மேற்குப் பூகோளத்திலிருந்து ஐரோப்பா மீதும் செலுத்த, அமெரிக் காவை முதலாவது உலக யுத்தத்தில் ஈடுபடுத்தும் போது, அன்றைய அமெரிக்க ஜனதிபதியான வூட்ருோ வில்சன் அமெரிக்க மக்களுக்குக் கூறியவை மிகவும் முக்கியமானதாகும். அவர் : ** கேடான பழைய முறைகளில் இருந்து உலகத்தினைக் காப்பாற்ற ' கடவுள் " இனல் அனுப்பப்பட்ட உயர்வான, சீரிய கொள்கைகளுடையவர்களென்ருல், அது அமெரிக்கரே' என்று கூறினர். இவருடைய பேச்சானது, உலகின் கேடான் பழக்கங்களில் இருந்து அதை மாற்றிப் புதிய ஒழுங்கு முறையினை உலகில் நிலைநாட்ட, ' கடவுள் " இனுல் அனுப் பப்பட்ட " மேசையா ' வே அமெரிக்கர் என்பதை உறுதிப்படுத்துவ தாக அமைகிறது. இவர் அரசியல் - பொருளியத்தில் (Politica Economy) பேராசிரியராகி, பின்னர் ஜனதிபதியாகு முன்னர், அமெரிக்கப் புரட்சிப் போரின் போது கொலம்பியாவில் (தென் " கரோலினவில்) வேத சாஸ்த்திரம் (Theology) கற்பித்து வந்தமை யும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனதிபதிகளுள் வூட்ருே வில்சன் மாத்திரம் இப்படி யான கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை. ஜப்பானின் மீது இரு அணு - குண்டுகளைப்போட உத்தரவிட்டவரும் அமெரிக்க உளவு ஸ்தாபனமான சீ. ஐ. ஏ. (C. 1. A ) இனது உருவாக்கம், ஸ்பைக்மனின் கோட்பாட்டு அடிப்படையில் (1942) முன்வைக்கப்பட்ட (கம்யூனிச விஸ்தரிப்பினை அடக்கும்) * Containment Policy " உருவாக்கம் , வட - அத்திலாந்திக் சினேக நாடுகளின் (NATO) உருவாக்கம் என்பவை யூடாகப் பூகோள ரீதியில் அமெரிக்க ஆதிக்க விஸ்தரிப்பு நடாத்தப் பட முற்பட்டகாலத்தில், அமெரிக்க ஜனதிபதியாக இருந்தவருமான ஹரி எஸ். ட்ருமன் ஒருமுறை தனது கருத்தைத் தெரிவிக்கையில் : ** அமெரிக்காவினது வெளிநாட்டுக் கொள்கைகள் கிறீஸ்தவத்தின் * மலைப் போதனை அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளன' என்ருர் இங்கும் அமெரிக்க ஜனதிபதி ட்ருமன், அமெரிக்காவானது ப்பைபிளில் கூறப்பட்டவைகளை உலகில் நிலைநாட்டும் "புனித " செயற்பாட்டில் ஈடுபட்டுவருகிறது என்பதை உலகிற்கு வலியுறுத்த முற்பட்டுள்ளார்.

- 11 -
வூட்ருே வில்சனும், ஹரி எஸ். ட்ருமனும் மாத்திரம் அமெரிக் காவையும், அதன் கொள்கைகளையும், செயற்பாடுகளையும் * மேசையா " , " கடவுள்" (கிறிஸ்தவ), "ப்பைபிள் ' (Bible) என்ப வைகளுடன் இணைத்துக்கொள்ளவில்லை. அண்மைக்காலத்தில் அமெரிக்க ஜனதிபதியாகவிருந்த ருொணுல்ட் ரீகன், இஸ்ரேலுக்குத் தீவிரமாக ஆதரித்து வந்தது மாத்திரமன்றி, உலக நிகழ்வுகளை "Armageddon என்பதுடன் இணைத்து, அமெரிக்காவினை * கடவுள் " என்பதுடன் கிட்டநெருங்கியதாக ஆக்கமுற்பட்டிருந்தார்.
ருசியாவை "Evil Empire", அதாவது : “ சாத்தான் சாம்ராஜ்ஜம் என வருணித்த ருெணுல்ட் ரீகன், ருசியாவை மிகவும் தீவிரமாக எதிர்த்துவந்தார். 1982ஆம் ஆண்டில், ஜனதிபதி ரீகனுடன் கலந் துரையாடலை நடாத்திய பின்னர், பத்திரிகையாளருக்குப் பேட்டி யளித்த அலபாமா செனேற்றர் Howell Hettin மிகவும் முக்கியமான ஒரு விடயத்தினைக் குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்ட விடயம் பின்வருமாறு : '. ப்பைபிள் தொடர்பாகவும் எமது கதை சிறிது சென்றது. ப்பைபிளில் கூறப்பட்டபடி, மத்திய கிழக்கிலேயே (Middle East) * Armageddon தொடங்கும் என்ற உண்மை பற்றியும் நாம் பேசினேம். அவர் (ஜனதிபதி) ப்பைபிளினையும், Armageddon இனையும் வைத்து (உலக அரசியல் தொடர்பாக) வியாக்கியானம் செய்தபோது, ருசியா இதில் சம்பந்தப்படப்போவதாகவும் குறிப்
L " IT iii. ’’ - New York Times.
நீகனின் வியாக்கியானத்தை விளங்குவதற்கு "Armageddon என்ருல் என்னவென்பதை விளங்கிக்கொள்ளவேண்டும். Armageddon? என்ருல்:
பூமியினதும், முழு உலகத்தினதும் மன்னர்கள், ஒருபுறத்தில் ஒன்று திரண்டு போருக்குத் தயாராகுகையில், சகலவல்லமையுள்ள ‘கடவுள்' தன்னை நிலைநாட்டிக்கொள்ளப்போரை நடாத்தும் இடமாகும்.
Revelation.
இதன்படி பார்த்தால், ப்பைபிளில் குறிப்பிடப்பட்டதை உலக அரசியலுடன் இணைத்து வியாக்கியானம் செய்த நீகன், "சாத்தான்' சாம்ராஜ்ஜமான ருசியாவையும், இசுலாமிய அரபு நாடுகளையும் சகல வல்லமையுமுள்ள அமெரிக்கா தன்னை நிலைநாட்டிக்கொள்ள மத்திய கிழக்கில் சந்திக்கவுள்ளது எனக் கருதினர்!
இவற்றைத் தொடர்ந்து, அமெரிக்காவினது உளவு ஸ்தாபன
மான சி. ஐ. ஏ. (0. 1. A.) இனது டைரக்டராக இருந்துவந்த இன் றைய ஜனதிபதி ஜோர்ஜ் ப்புஷ்உம் கிறிஸ்தவத்திலும், ப்பைபிளி

Page 13
- 12 -
னும் உள்ள ஆழ்ந்த நம்பிக்கையை வெளிக்காட்டி வந்துள்ளதுடன், உலக நாடுகளில் "(கிறிஸ்தவ) மத சுதந்திரம் நிலைநாட்டப்படத் தீவிர மாகச் செயற்பட்டே வந்துள்ளார்.
இவற்றைப் பார்க்கும்போது, அமெரிக்காவினது " புதிய உலக ஒழுங்குமுறை" என்பது, அடிப்படையில், கீழ்வரும் விதத்தில் அமைக் கப்பட்டுள்ளதாகவே உள்ளது.
(1) அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ், பூமியின் வட பகுதியின் வெள்ளையரது அரசியல், பொருளாதார, சமய ஆதிக்கத்தை உலகில் முழுமையாக நிலைநாட்டுவது;
(2) மனித, இயற்கை வளங்களுடைய 'கறுப்புத் தென் பூமியா
னது வட பூமியினருக்கு அடிமையாக்கப்படுவது.
இந்த நிலையில், சதாம் ஹீசெயினின் செயற்பாடுகள், உண்மை யில், விஞ்ஞான, தொழில் நுட்ப, பொருளாதார முன்னேற்ற மடைந்த வட பூமி வெள்ளையரின் "புதிய ஒழுங்கு முறை" உருவாக் கத்திற்குத் தென் பூமிக் * கறுப்பர் "ஆல் விடப்பட்ட பெரும் சவாலாக உள்ளது. இந்தச் சவாலை முறியடிக் காது விடுவது அமெரிக்கா, மேற்கு - கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ருசியா (?) யப்பான் (?) என்பவை விடும் பெரும் ஆபத்தான பிழையாகவே அவைக்கு அமையும். எதுவிதத்திலும், இங்கு ருசியாவினதும், யப்பானினதும் நிலைப்பாடுகள் சற்று அவதானிக்கப்படவேண்டியவை ut inreg5 D.
ருசியாவைப் பொறுத்தமட்டில் அங்கு கிறிஸ்தவம், இசுலாம் என்பவைகளைப்போல் "தெய்வத்தன்மை அற்றதும், ஒரு தனிநபரான யூத இனத்தைச் சேர்ந்த கார்ல் மார்க்ஸ் (Karl Marx) இனது போதனை யான ‘மார்க்சீய’ அடிப்படையே பின்பற்றப்பட்டு வந்தது. அண் மைக் காலங்களில் உருவாக்கப்பட்ட தீவிரவாத சமயம் (?) என்ற அடிப்படையில், முதலாம் நூற்றண்டிலும், ஏழாம் நூற்றண்டிலும் உருவாக்கப்பட்ட சமயங்களான கிறிஸ்தவம், இசுலாம் என்பவை களிஞல் அது பாரிய எதிர்ப்பையே எதிர்நோக்கி வந்தது. கிறிஸ் தவம், இசுலாம் என்பவைகளும், தனிநபர் போதனை அடிப்படையி லும், "தெய்வீகத்தன்மை (Divinity) அற்ற அடிப்படையிலும் உரு வாகியிருக்கும்போதிலும், இருசமயங்களிடையேயும் பாரிய முரண் பாடுகளும், போர்களும் நடைபெற்றே வந்துள்ளன.
இந்த நிலையில், இன்று, மார்க்சீய மார்க்கத்தினைப் பின்பற்றி வந்த ருசியா எப்படிக் கிறிஸ்தவ மார்க்கத்தினைப் பின்பற்றிவரும் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மேலாதிக்கத்தினை ஏற்க

--سے 3 سے
முடியும் என்பது உண்மையில் ஆராயப்படவேண்டியதே. ஆனல், இதற்கான விடையை நாம் சுலபமாக ஆராய்ந்தறிய முடியும்.
கிறிஸ்தவம், இசுலாம் என்பவைகள் தனிநபர் போதனை அடிப் படையிலும், "தெய்வத்தன்மை அற்ற அடிப்படையிலும் உருவாகி யுள்ள நிலையில், இச்சமயங்களில் திரிபுவாதங்களும், பூசல்களும் இருந்தேவந்துள்ளன. வியாக்கியானங்கள் வேறுபட்டவையாகவே இருந்துவந்தன, இருக்கின்றன. இந்தநிலையில் கிறிஸ்தவத்தில் இன்று 180இற்கு மேலான பிரிவுகளும், இசுலாமில் 18இற்கு மேலான பிரிவுகளும் இருப்பதுடன், புதிய வியாக்கியான அடிப்படையில் பிரிவுகள் புதிதாக ஆரம்பித்தவண்ணமே உள்ளன. இவற்றைப் போலவே, தெய்வத்தன்மை இல்லாதும் தனிநபர் போதனை அடிப் படையிலும் உருவாக்கப்பட்ட மார்க்சீயத்திலும் திரிபுவாதங்களும், பூசல்களும் உருவாகியதுடன், புதிய வியாக்கியான அடிப்படைகளில் பிரிவினைகளும் ஏற்பட்டுவந்துள்ளன. ருசியாவில் "மார்க்சீயம்" விதிவிலக்காக இருக்கவில்லை. இதற்கு மற்றுமொரு முக்கிய காரணம் என்னவென்றல், மார்க்சீயம் அங்கு பரப்பப்பட முன்னர், ருசியா. வில் திரிவுவாதங்களும், பூசல்களும் இருந்துவந்த கிறிஸ்தவம் பரவி யிருந்தமையே.
திரிவுவாதம், பூசல்கள், இராணுவ பலத்துடனன நிரந்தர ஆட்சி யாளர்கள், மக்களின் அடிப்படையறிவு உயர்த்தப்படாதநிலை என் பவைகள் ருசியாவின் சமுகத்தினை அசைவற்றதாக்க ஆக்கியதுடன், சமூகத்தில் வெற்றிடத்தையும் ஏற்படுத்தியது. இதனுல் ஒரு கட்டத் தில், அங்கு பொருளாதார, அரசியல், சமுக முன்னேற்றம் ஸ்தம் பிதமடைந்து, சீரழிவுகள் ஏற்படத் தொடங்கின. மக்களின் அடிப் படையறிவு மட்டம் உயர்த்தப்படாது இருந்துவந்தமை, இந்தச் சீரழிவுகளை மேலும் வேகமாக்க உதவின. இதனைத் தடுத்து நிறுத்தி, ருசிய "சாம் ராஜ்ஜம் கிழக்கில் உடைந்து விழாது பார்ப்பதாயின், அங்கு மாற்றங்கள் ஏற்படவேண்டியிருந்தன. இந்த மாற்றங்களை ஏற்படுத்த, அதன் ஆட்சிப்பீடத்தில் இருந்துவந்தவர்கள் தீர்மா னத்தை எடுத்து, அதை நடைமுறைப்படுத்தவும் வேண்டியிருந்தது. இவற்றுக்கு மேலாக, அங்கு பொருளாதாரத்தினையும் முன்னேற்ற வேண்டியிருந்தது.
ருசியாவில் மாற்றங்களை ஏற்படுத்தும் மனஉறுதி பூண்ட மிஹ்கைல் கோர்பச்சேவ் அதிகாரத்திற்கு வந்து, பெறெஸ்ரொய்க்கா, "கிளாஸ் நோஸ்ற் என்ற புதிய புனரமைப்பு, வெளிப்படைக் கொள்கைகளை முன்வைத்தார். ஆனல், இவைகள் மூலம் அரசியல், சமூகமாற்றங் களை மாத்திரம் ஏற்படுத்த முடியுமாக இருந்ததுவேயன்றி, பொரு

Page 14
- 14 -
ளாதார முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமாக இருந்த நவீன தொழில் நுட்பங்கள், முதலீடுகள் என்பவைகளை உருவாக்கமுடியாதே இருந்தது. இதற்கு கோர்பச்சேவ் நவீன தொழில் நுட்பங்களிலும், பொருளாதாரத்திலும் முன்னேறியிருந்த மேற்கத்தைய நாடுகளையே நம்பிருக்கவேண்டியிருந்தது. இந்தச் சூழ்நிலை கிறிஸ்தவ நாடுகளுக்குத் தமது சமய (மார்க்க) ஆதிக்கத்தினை விஸ்தரிக்கவும், ருசியர்கள் கடைப்பிடித்துவந்த மார்க்சீய மார்க்கத்தினை முறியடிக்கவும் ஒரு வாய்ப்பினைக் கொடுப்பதாகவே அமைந்தது. அதாவது, மேலோட்ட மாகக்கூறினல், கம்யூனிசத்தினை முறியடிக்கப் பெரும் வாய்ப்பினைக் கொடுத்தது. மறுபுறத்தில் பார்த்தால், சாதாரண மக்களுக்குப் பழக்கமான, முதலாளித்துவத்தைப் பரப்ப வழிகிடைக்கச் செய்தது.
கிறீஸ்தவம் முதலாளித்துவத்துடன் இரண்டறக் கலக்கப்பட்டிருப் பதைப் போல், மார்க்சீயம் கம்யூனிசத்துடன் இரண்டறக் கலக்கப் பட்டுள்ளது. ருசியாவில் கம்யூனிசத்தினை முறியடிக்க மேற்கு நாடுகள் முற்படும் போது அவர்கள், உண்மையில், தெய்வத்தன்மை அற்றதும், தனிநபர் போதனையுமான கிறீஸ்தவத்தினைப் பரப்புவதன் மூலம் மற்று மொரு தெய்வத்தன்மையற்ற, தனிநபர் போதனையுமான மார்க்சிய சமயத்தினை முறியடிக்கவே முற்படுகின்றனர். இதனைச் சுலபமாக விளங்குவதாயி ன், கோர்பச்சேவ் இனது " பெறெஸ்ரொய்க்கா", * கிளாஸ் நோஸ்ற் என்பவைக்கு என்ன நடைபெற்றன, நடை பெறுகின்றன என்பதை விளங்க வேண்டும்.
ருசியாவில் மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறேன், பொருளா தாரப் பிரச்சனைகளை எதிர் நோக்கும் எமக்கு நவீன தொழில் நுட்பங் களையும், நிதியுதவிகளையும் தாருங்கள் என கோர்பச்சேவ் அமெரிக் காவையும், மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் கேட்ட போது, அவர் களிடமிருந்து விடப்பட்ட முதலாவது கோரிக்கை : ருசியாவில் ** (கிறிஸ்தவ) சமயச் சுதந்திரம் * கொடுக்கப்பட வேண்டும் என்பதே ! அதாவது, கிறிஸ்தவத்திற்குப் போட்டியானதும், ஆபத்தை விளை விக்கும் என அஞ்சப்படும் தனிநபர் போதனை அடிப்படையிலான மார்க்சீயத்தினை முறியடிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதே !
பாரிய பிரச்சனைகளை எதிர் நோக்கி வந்த கோர்பச்சேவ் இதற்குச் சம்மதித்தார். ருசியாவில் மீண்டும் கிறீஸ்தவக் கோயில் களும், * கடவுள் ‘இன் பிரதிநிதிகளும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினர். * கிறிஸ்மஸ் உம் ஒரு சிறு பகுதியினரால் கோலாகலமாகக் கொண்டா டப்பட்டது. இவைகள் தொடர்பான டெலிவிஷன் நிகழ்ச்சிகள் மணித்தியாலக் கணக்கில் அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் காட்டப்பட்டன. கோர்பச்சேவ் எதிர் பார்த்த நவீன தொழில் நுட்பங்களுக்கும், நிதி உதவிகளுக்கும், முதலீடுகளுக்கும்

- 15 -
பதிலாக * பிற்ஸா (Pizza) உணவுக் கடைகளும், உணவுப் பொருள் கொள்வனவிற்கான கடன் வசதிகளும் மாத்திரமே கிடைத்தன! மேற்கிலிருந்து, அன்று காலனித்துவ காலத்தில் கிறிஸ்தவ மதம் பரப்பும் படையெடுப்புக்கள் நடைபெற்றது போல், இங்கும் பாரிய கிறீஸ்தவம் பரப்பும் படையெடுப்புக்கள் தயாராகின!
இக்கட்டத்தில் ருசியாவின் ஆட்சிப் பீடத்தில் இருந்தவர்களுக் கிடையே ஒரு முக்கிய கேள்வி எழுந்தது. அது என்னவென்றல் ; ருசியாவில் தனிநபர் போதனையான, ‘தெய்வத்தன்மை யற்ற மார்க் சீயம் பின்பற்றப்படுவதா, அல்லது, மற்றுமொரு தனிநபர் போதனை யான, தெய்வத் தன்மை யற்ற கிறிஸ்தவம் பின்பற்றப்படுவதா? என்பதே. இக்கேள்வி தொடர்பாக, ருசியாவின் ஆட்சிப் பீடத்தில் இருப்பவர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் எழுந்தன. இது பற்றிய தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படாத நிலையில், அமெரிக்க ஜனதிபதி ஜேர்ஜ் ப்புஷ் ருசியாவிற்கு அதன் பொருளாதார நெருக்கு வாரங்களைக் குறைக்க உதவும் வகையில் நிதி, மற்றும் உதவிகளைச் செய்யாது தடுத்தார். மேற்கு - ஐரோப்பிய நாடுகளையும் இப்படியான உதவிகளைச் செய்யாது விடும்படி அறைகூவல் விடுத்தார். ருசியாவின் ஆட்சிப்பீடத்தில் இருந்தவர்கள் அமெரிக்காவினதும், மேற்கு ஐரோப் பாவினதும். ஆதிக்க விஸ்தரிப்பு பற்றித் தீர்க்கமான முடிவுகள் எடுக் காத நிலையில், முதலீடுகளும், தொழில் நுட்பங்களும் ருசியாவிற்குக் கிடைக்கவில்லை. ஆனல் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் உதவிகள் மாத்திரமே கிடைத்தன. இந்த உதவிகளை அமெரிக்கா அதனது வெளிநாட்டுக் கொள்கையை கிறீஸ்தவத்தின் மலைப் போதனை அடிப்படையில் செய்தது, இது மனிதாபிமான அடிப்படையிலான உதவியென்றும் வாதிட வரலாம். ஆனல், பாரிய உணவுத் தட்டுப் பாட்டில் குளிர் நாடான ருசியாவில் மக்கள் பஞ்சத்தில் இறந்த பின்பு, அங்கு மேலாதிக்கம் ' என்பதற்கு இடமே இருக்காது என் பதையும் நாம் அவதானிக்க வேண்டும்.
ருசிய ஆட்சியாளர்கள் தமது உடனடிப் பிரச்சனையினை ஜேர் மனிய இணைப்பு ' என்பதன் கீழ் ஓரளவிற்குத் தற்காலிகமாகத் தீர்த்துக் கொண்டனர். ஆணுல், முக்கிய பிரச்சனையான : மார்க்சீய மார்க்கம் நிராகரிக்கப்பட்டுக் கிறீஸ்தவம், ஆகவே முதலாளித்துவம், அங்கு நிலை நாட்டப்படுவது தொடர்பாக இன்னும் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவில்லை. ருசியாவில் எந்த மார்க்கம் கடைப்பிடிக் கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தினைப் பொறுத்தே அமெரிக்கா வினதும், மேற்கு - ஐரோப்பாவினதும் " புதிய உலக ஒழுங்கு முறை ? யினை ருசியா முழுமையாக ஏற்குமா, இல்லையா என்பதைத் திட்ட வட்டமாகக் கூற முடியும். இந்த முடிவுக்கு ஏற்ற படியே இன்றைய

Page 15
- 16 -
வளைகுடாப் போர் தொடர்பான ருசிய செயற்பாடுகளும் அமையும். அதைத் தொடர்ந்து, உலக நாடுகளினது வளைகுடாப் போர் தொடர் பான உண்மை நிலைப்பாடுகளும் பகிரங்கமாக வெளிவரும்
அமெரிக்காவின் " புதிய உலக ஒழுங்கு முறை உருவாக்கம் தொடர்பாக ஜப்பானிய நிலைப்பாடும் மிகவும் கவனமாக ஆராயப் பட வேண்டியே உள்ளது.
ஜப்பானிலும் கிறிஸ்தவம், இசுலாம், மார்க்சீயம் என்பவைகளைப் போல், தனிநபர் போதனையான, " தெய்வத்தன்மை "யற்ற பெளத்த சமயமே பின்பற்றப்பட்டு வருகிறது. இங்கும் கிறீஸ்தவம், இசுலாம், மார்க்சீயம் என்பவற்றில் ஏற்பட்டதைப் போல், பெளத்தத்தில் பிரிவுகள் ஏற்பட்டு, அவை தொடருகின்றன. எது விதத்திலும், ஜப்பானியர் கடைப் பிடித்து வந்த " சின்ரோயிசும் மார்க்க ஆதிக் கமும், மக்களின் அடிப்படையறிவு உயர்த்தப்பட்ட நிலையும் ஜப் பானைப் பொருளாதார முன்னேற்றமுடைய நாடாக இன்று உருவாக்கி யுள்ளது. எது எவ்வாறயினும், இராணுவபலம் அற்ற நிலையில், இன்றைய ஜப்பானின் " பாதுகாப்பு அமெரிக்கரது கைகளில் தான் முழுமையாக வைக்கப்பட்டுள்ளது. உலகில் அணு குண்டுகளின் அனு பவத்தினைப் பெற்றவர்கள் என்ற நிலையில், அமெரிக்கரின் " புதிய உலக ஒழுங்கு முறையினையும், கிறீஸ்தவ ஆதிக்க நிலை நாட்டலையும் பற்றிய முடிவை அவர்கள் ஆழமான ஆராய்வின் பின்னரே எடுக்க முடியும். மேலும், ஜப்பானின் " பாதுகாப்பு" பிரச்சனை அதன் அயல் நாடுகளான ருசியா, சீன என்பவைகளுடனுன உறவுகளிலும் தங்கி யுள்ளது. ருசியாவுடனன குரில் தீவுகளதும், ஏனைய தீவுகளதும் பிரச்சனைகள் தொடர்பாகவும், சீனு - ஜப்பானின் முன்னைய கசப்பான அனுபவங்கள் தொடர்பாகவும், அமெரிக்காவிடம் இரண்டாம் உலக யுத்தத்தின் போது நிபந்தனையற்ற சரணுகதி அடைந்தது தொடர் பாகவும் சுமூகமான தீர்வுகள் ஏற்படும் வரை, ஜப்பான் அமெரிக் காவின் "புதிய உலக ஒழுங்கு முறை" என்பது தொடர்பாகத் தீர்க்கமான முடிவை எடுக்கவே முடியாது. இந்த நிலையில், ஜப்பா னில் அமெரிக்காவினதும், மேற்கு - ஐரோப்பிய நாடுகளினதும் " புதிய உலக ஒழுங்கு முறை" உருவாக்கத்தின் ஒரு அங்கமாகிய கிறிஸ்தவ ஆதிக்கம் நிலைநாட்டப்பட முக்கியமான கிறீஸ்தவம் பரப்பும் நட வடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. இது தொடர்பாக கருத்து வேறுபாடுகளும் பாரிய அளவில் ஏற்பட்டே உள்ளது. உலக வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் இன்று அமெரிக் காவினதும், மேற்கு - ஐரோப்பிய நாடுகளதும் கட்டுப்பாட்டில் இருப்ப தால், இந்தக் கருத்து முரண்பாடுகள் பெருமளவில் உலகமக்கள் அறியவில்லை. பரிதாப நிலையிலிருக்கும் ஜப்பான் மெளனமாகவே இருக்க வேண்டியுமுள்ளது.

- 17 -
அமெரிக்காவினதும், மேற்கு-ஐரோப்பாவினதும் ' புதிய உலக ஒழுங்குமுறை" உருவாக்கக் கொள்கைகள் தொடர்பாக ருசியாவின தும், ஜப்பானினதும் நிலைப்பாடுகள் பற்றிப் பார்த்த எமக்கு புதிய உலக ஒழுங்குமுறை உருவாக்க முயற்சி இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் எப்படியான தாக்கங்களை ஏற் படுத்தும், இன்று ஏற்படுத்துகின்றன என்பது ஓரளவிற்கு விளங்கக் கூடியதாகவே உள்ளது. எதுவிதத்திலும், தனிநபர் போதனையையும், தெய்வத்தன்மையற்ற சமயத்தையும் பின்பற்றும் ஜப்பானியரதும், ருசியரதும் நிலை இதுவானுல், அடிப்படையே வேறுபட்ட இலங்கைத் தமிழ் சமூகத்தினது விடுதலைப்போராட்டம் " புதிய உலக ஒழுங்கு முறை ' உருவாக்க முயற்சியினல் எப்படியாகப் பாதிக்கப்படும் என் பதை ஒருவர் சுலபமாக விளங்கமுடியும்.
இவை ஒருபுறமிருக்க, வளைகுடாப் போர் பற்றித் தொடர்ந்து Lurrfful Gutuntutb.
மேலே ஆராயப்பட்டவைகளைப் பார்க்கும் போது, தமது "புதிய உலக ஒழுங்குமுறை ' உருவாக்கத்திற்குப் பெரும் ஆபத்தினை ஏற் படுத்தும் சதாம் ஹ"செயினையும், அவரின் குறிக்கோள்களையும் அழிப்பதே அமெரிக்காவினதும், மேற்கு-ஐரோப்பிய நாடுகளினதும் முழுமுதல் நோக்கமாகவிருக்கும். இதனை நேரடியாகச் செய்ய முற் படுவது உலகத்தின் ஐயப்பாட்டினை அதிகரிக்குமாகையால், சதாம் ஹ"செயின் அழிக்கப்படுவதற்கும், அவரது குறிக்கோள்கள் அழிக்கப் படுவதற்கும் முதலில் எந்தவித முக்கியத்துவமும் கொடுக்கப்படாது, குவைத் மீட்பு' என்பதையே உலக அரங்கின்முன் வைத்து, உலக நாடுகளையும் தம்முடன் இணைத்த பின்னரே, அமெரிக்கா அதனது உண்மையான நோக்கங்களை நிறைவேற்ற வேண்டும். இங்கு சர்வதேச வெகுஜனத்தொடர்பு சாதனங்களின் பயன்பாடுகளும் மிகமிக முக்கிய மாகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவினதும், மேற்கு-ஐரோப்பிய நாடுகளதும் போர் குறிக்கோள், காலம் செல்லச் செல்ல, கீழ்த் தரப்படும் விதமாகவே அமையும். அவையாவன :
(1) குவைத்திலிருந்து ஈராக்கியப் படைகளை வெளியேற்றுவது;
(2) குவைத்தில் பாரிய தரைப்போரை நடாத்தி, ஈராக்கியரை வெளியேற்ற முற்படுவது குவைத்து மக்களுக்கும், குவைத்திற் கும் பாரிய அழிவைத் தேவையற்ற முறையில் ஏற்படுத்தும் என்ற விளக்கத்தின் கீழ், ஈராக்கினைத் தாக்கி, அதைக் கைப்பற்றுவதன் மூலம் குவைத்தினை மீட்பதே சுலபம் எனக் கூறி, ஈராக்கின் மீது படையெடுப்பை நடாத்துவது;

Page 16
- 18 -
(3) இப்போரில் ஈராக்கிய மக்களைக் கொல்வதிலும் சதாம் ஹ"செயினைக் கொல்வது போரை முடிவுக்குக் கொண்டுவர சுலபமாக இருக்குமெனக் கூறி அவரைக் கொல்வது; அல்லது பாரிய அழிவின் பின்னர் அவர் கைப்பற்றப்பட்டால், கொடுங் கோலனின் பொறுப்பற்ற தன்மையால் ஈராக்கிய மக்கள் படு கொலைக்குள்ளானர்கள் எனக்கூறி அவரைத் தூக்கிலிடுவது.
இவற்றில் முதலாவதை மாத்திரம் ஈற்றில் செய்துமுடிப்பது, அமெரிக்காவும் மேற்கு-ஐரோப்பிய நாடுகளும் இப்போரில் தமது மூக்குகள் உடைக்கப்படாது பார்த்துக்கொண்டமைக்குச் சமனுக அமையும். இவைகள் மூன்றிலும் இரண்ட்ாவதையும், மூன்ருவதை யும் செய்து முடிப்பது, இந்த நாடுகள் தமது குறிக்கோள்களை முழுமையாக அடைய வழிவகுத்துள்ளதாக அமையும். இன்றைய நிலையில், இன்று வளைகுடாவில் நடைபெறும் போரின் முடிவில் இவைகள் மூன்றிலும் எது சாத்தியமானது என்பதையே நாம் இங்கு ஆராயவேண்டியுள்ளது. இதற்குத் தரையமைப்பு, எல்லைகள், சுவாத் தியம், போக்குவரத்து, நீர் - உணவு - எரிபொருள் - ஆயுத விநி யோகங்கள், படைபலம், ஆயுதபலம், பயிற்சி, அனுபவம், மன உறுதி, போருக்கான முன்னேற்பாடுகள், போரின் போது கையாளப் படும் இராணுவ - அரசியல் - இராஜதந்திர செயற்பாடுகள், சதாம் ஹ"செயினின் குளுதிசயங்கள் என்பவற்றைப் பொறுத்து, போர் ஈற்றில் எப்படியான முடிவுக்கு வரமுடியும் என்பதை ஆராயவேண்டி யுள்ளது.
ஆயுத நடவடிக்கைகளின் குறிக்கோள்களும், தந்திரோபாயங்களும் :
இன்றைய வளைகுடாப் போரில் அமெரிக்காவினதும், அதன்
சினேக நாடுகளினதும் குறிக்கோளானது, முக்கியத்துவ வரிசையில்,
கீழ் வருவனவாக அமையமுடியும்.
(1) சதாம் ஹ"செயின் கைப்பற்றப்படுவது அல்லது கொல்லப்
படுவது
(2) ஈாாக்கினைக் கைப்பற்றுதல் ;
(3) குவைத்தினைக் கைப்பற்றுதல்,
இவை ஒவ்வொன்றினையும் இராணுவ நடவடிக்கைகள் மூலம் செய்வதற்கு அமெரிக்காவும், மேற்கு-ஐரோப்பிய நாடுகளும் திட் டங்களை வகுத்துச் செயற்படுகையில், சதாம் ஹீசெயினும், ஈராக் கியர்களும் அமெரிக்கரது திட்டங்களை முறியடிக்கும் திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டியுள்ளது, இப்படி இருசாராரும் தமது

- 19 -
திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், எதிரியினது தட்டங்களை நடைமுறைப்படுத்தாது தடுக்கவும் முற்படும்போது, சில "கட்டுப் படுத்தல்கள் • மனிதரின் குணுதிசயங்களாலும், தொழில் நுட்பத்தி ஞலும், இயற்கையாலும் ஏற்படுத்தப்படுகின்றன. இந்தக் "கட்டுப் படுத்தல் ‘களை எப்படி நீக்கி, குறிக்கோள்களை அடையமுடியும் என்ப தில்தான் தந்திரோபாயங்கள் முக்கியமாகின்றன.
இந்தநிலையில், நாம் முதலில் சதாம் ஹ"செயினைக் கைப்பற்று வது அல்லது கொலை செய்யும் திட்டத்தினை ஆராய்வோம்.
சதாம் ஹாசெயினைக் கைப்பற்றுதல் அல்லது கொலைசெய்தல்:
சதாம் ஹ"செயினைக் கைப்பற்றுவதாயினும் சரி, கொலை செய்வ தாயினும்சரி, அங்கு இரண்டு முக்கிய விடயங்களை அவதானிக்க வேண்டும்.
(1) சதாம் ஹ"செயின் தங்கும் இடம் குறிப்பாகக் கண்டுபிடிக்கப் படவேண்டும், அல்லது அவரின் அசைவுகளை முன்கூட்டியே அறியவேண்டும்;
(2) சதாம் ஹ"செயினை யாரைக்கொண்டு கொலை செய்வது, அல் லது கைப்பற்றுவது என்பது தீர்மானிக்கப்படவேண்டும்.
இவைகள் இரண்டிலும் முதலாவதைச் செய்வதாயின், அமெரிக் காவும், மேற்கு நாடுகளும் கீழ்வருவனவற்றையே பயன்படுத்தமுடியும்.
(1) ஈராக்கிலிருக்கும் தமது தூதரங்களையும், சினேக நாடுகளின் தூதரங்களையும், வெளிநாட்டுப் பிரஜைகளையும், சர்வதேச அமைப்புக்களான CRC மற்றும் Red Cross ஐக்கிய நாடுகள் சபையின் உப அமைப்புக்களான UNHCR, UNICEF போன்ற வற்றில் செயற்படுபவர்களையும், சர்வதேச வெகுஜனத் தொடர்பு சாதன நிருபர்களையும் பயன்படுத்துவது:
(2) ஈராக்கின் பிரஜைகளைப் பயன்படுத்துவது;
(3) பிறநாட்டுப் பிரஜைகளைப் பயன்படுத்துவது.
இந்தநிலையில், சதாம் ஹ"செயினும், ஈராக்கின் தந்திரோபாய வகுப்பாளர்களும் முதலில் இரண்டு முக்கிய விடயங்களைச் செய்ய
வேண்டியுள்ளது. அவையாவன:
(1) மேலே குறிப்பிட்டவைகளில் (1) இலும், (3) இலும் குறிப்
பிட்டவர்களை ஈராக்கிலிருந்து வெளியேற்றுவது,

Page 17
(2) சதாம் ஹ"செயினுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிக ரித்து, உள்ளூர்களில் உள்ள எதிரிகள் எனக் கருதப்படுபவர் களையும் கண்காணிப்பது.
இவற்றினை ஈராக்கியர்கள் பெரும்பாலும் செய்தேஉள்ளனர். முதலாவதைப் பொறுத்தமட்டில் ருசிய ஆலோசகர்களையும், ஒரு அமெரிக்க நிருபரையும் தவிர்ந்த ஏனையோர்கள் ஈராக்கிலிருந்து, இன்றைய நிலையில், வெளியேறிவிட்டனர் என்றே கூறவேண்டும்.
இப்படியான சூழ்நிலைகளில், ஈராக்கிற்கும், குவைத்திற்கும் வெளியே இருந்துகொண்டு, சதாம் ஹ"செயினின் தங்கும் இடங்களை யும், அசைவுகளையும் , அறிவதாயின் அவர்கள் ஈராக்கிய பிரஜை களையே நம்பியிருக்கவேண்டியுள்ளது. அப்படியாயின், ஈராக்கிய பிரஜைகளுடன் முன்கூட்டியே தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தால், இத்திட்டத்தினை ஒரளவுக்கு நடைமுறைப்படுத்த முடியும். எதுவிதத் திலும், இப்பிரச்சனையைத் தீர்ப்பதாயின் இரண்டு வழிகளைக் கடைப் பிடிக்க முடியும், அவையாவன :
(1) ஈராக், குவைத் என்பவற்றினுள் உளவாளிகளை ஊடுருவ
விடவேண்டும்;
(2) படையெடுப்புக்கள் மூலம் உள்ளே செல்லவேண்டும்.
இவற்றில் உளவாளிகளை ஊடுருவ விடுவதைப் பெரும்பாலும் நான்கு வழிகளில் செய்ய முடியும். அவையாவன :
(1) சர்வதேச அமைப்புக்களான CRC, ஐக்கிய நாடுகளின் உப
அமைப்புக்கள் ஊடாக ஊடுருவுவது;
(2) வெகுஜனத்தொடர்பு சாதனங்களின் நிருபர்கள் என்ற போர்
வையில் ஊடுருவுவது;
(3) கிறிஸ்தவ குருமாரின் போர்வையில் ஊடுருவுவது; (ஈராக்கில் ஏறக்குறைய 5% இனர் கிறீஸ்தவர்கள்)
(4) அரபுநாடுகளின் பிரஜைகளைக்கொண்டு ஊடுருவுவது.
இவற்றில் முதலாவதைப் பொறுத்தமட்டில், ஈராக், குவைத் என்பவற்றில் இருக்கும் உணவு, மருந்து, உடைப் பற்ருக் குறைகள் என்பதையும், போரின்போது "போர்க்கைதிகளை' (Prisoners of War, Pow) காரணம் காட்டியும் ஊடுருவல்களைச் செய்யலாம். இவை கள் இரண்டினையும் காரணம் காட்டி ஊடுருவுவதில் இதுவரை தோல்வி நிலையே காணப்படுகிறது. அண்மையில் ஈராக்கினல் கைப்பற்றப் பட்ட வெளிநாட்டு விமான ஒட்டிகளின் பிரச்சனை தொடர்பாகப்

- 2 -
பாரிய பிரசாரங்கள் செய்து, பின்னர் ICE0இனல் மேற்கொள்ளப் பட்ட முயற்சி தோல்வியை அடைந்தது.
இரண்டாவது முயற்சியில், அங்கு சென்ற நிருபர்களை ஈராக்கிய படையினரே வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்றனர் ஏனைய இரண்டிலும் ஊடுருவல்களை நடாத்தச் சந்தர்ப்பங்கள் உள்ளன. எதுவிதத்திலும், இந்த நான்கு வழிகளையும் பயன்படுத்தி ஊடுருவல் கிளை மேற்கொண்டாலும். அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடு களும் எவ்வளவு தூரத்திற்கு வெற்றியடையலாம் என்பது, உண்மை யில், சதாம் ஹ"செயினின் பாதுகாப்பு ஒழுங்குகள் எவ்வளவிற்குப் பலவீனமானது என்பதில்தான் தங்கியுள்ளது. ஆனல், கடந்த 11 ஆண்டுகள் காலம் ஜனதிபதியாக இருந்துவரும் சதாம் ஹ"செயினின் பாதுகாப்பு ஒழுங்குகள் மிகவும் இறுக்கமானவை என்றே உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
அடுத்ததாக, சதாம் ஹ"செயினின் தங்குமிடங்களை அமெரிக்கர் கள் அறிந்துகொண்டாலும், யாரைக்கொண்டு அவரைக் கொலே செய்வது, அல்லது, கைப்பற்றுவது என்பது முக்கிய கேள்வியாகிறது. இதனை உண்மையில், மூன்று விதமாகவே செய்ய முடியும்.
(1) அமெரிக்க, சினேக படையினரைப் பயன்படுத்துவது; (2) ஈராக்கியப் படையினரைக் கொண்டு செய்வது;
(3) ஈராக்கிய, வெளிநாட்டுப் பிரஜைகளைக் கொண்டு செய்வது.
அமெரிக்க, சினேகப் படையினரைப் பயன்படுத்துவது :
இவற்றுள் முதலாவதை எடுத்துக் கொண்டால், இதனை இரண்டு விதமாகச் செய்யமுடியும்.
(1) குறிப்பிட்ட இடத்திற்கு விமானங்கள், ஹெலிகொப்டர்கள் என்பவைகள் மூலம் சென்று, சதாம் ஹ"செயினைக் கைப் பற்றுவது, அல்லது தாக்கி அழிப்பது: (2) பாரிய படையெடுப்பின் ஒரு பகுதியாக இதைச் செய்வது.
இவற்றில் கைப்பற்றுவதை எடுத்துக்கொண்டால், சதாம் ஹாசெ யின் தனிமைப் படுத்தப்பட்ட இடத்தில்தான் இது சாத்தியமாகும். எதுவிதத்திலும் 1980ஆம் ஆண்டில் அமெரிக்கர்கள் ஈரானில் இப்படி பணயக்கைதிகள் மீட்பில் எடுத்த முயற்சி படுதோல்வி யடைந்தமை அவதானிக்கப்பட வேண்டும். மறுபுறத்தில், மக்கள் வாழும் நகரங்க ளில் இப்படியான முயற்சிகள் தோல்வியடையவே சாத்தியக்கூறுகள் அதிகமுண்டு. ஆனல், சதாம் ஹ"செயின் இருக்கும் இடத்தினை விமானங்கள் மூலமும், ஹெலிக்கொப்டர்கள் மூலமும் குண்டுகள்,

Page 18
- 22 -
ஏவுகணைகள் என்பவற்றை வீசித் தாக்கி அழிப்பது சாத்தியமானது. இன்று இலக்கினைக் குறிப்பாக அடிக்கும் விதத்தில் லேசர் கதிர்மூலம் பாதை காட்டப்படும் நவீன குண்டுக்ள் உள்ளன, நவீன ஏவுகணை களும் உள்ளன.
ஆனல், சதாம் ஹ"செயின் தகுந்த பாதுகாப்பு அரண்களை அமைத்து, அவற்றில் தங்கியிருந்தால், நியூற்றேன் குண்டுகளும், சாதாரண மரபு ரீதியான குண்டுகளும் (Conventional) அதிக பலன ளிக்கமாட்டா. இங்கு சிறிய அணுகுண்டுகளே சிறந்தவை. இவைகள் இன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சதாம் ஹ"செயினை இப்படிக் கொலைசெய்வது சாத்தியமானது.
இவற்றுடன் ஒப்பிடும்போது, சதாம் ஹ"செயின் அசையும்போது அவரைக் கைதுசெய்வதுதான் அவரைக் கைப்பற்றச் சுலபமான வழியாகிறது. ஆனல், ஈராக்கிற்கும், குவைத்திற்கும் வெளியே இருந்துகொண்டு, சதாம் ஹ"செயினின் அசைவுகளைப் பற்றிய தகவல் களை எடுப்பது சற்றுக் கடினமானது. இங்குதான் தொலைத்தொடர்பு களை ஒட்டுக்கேட்பது முக்கியமாகிறது.
பாரிய படையெடுப்பின் ஒரு பகுதியாக இதனைச் செய்ய முற்படும் போது, படைகள் தரைமார்கமாகவே முன்னேறவேண்டியுள்ளது. இரண்டாவதாக, அப்படிப் படைகள் முன்னேறினலும், சதாம் ஹ"செயின் தப்பிக்கொள்ள முடியுமா, இல்லையா என்பது முக்கிய கேள்வியாகிறது. இங்குதான் ஈராக் பூகோளத்தில் அமைந்திருக்கும் விதமும், ஈராக் நாட்டின் எல்லைகளும், எல்லை நாடுகளும், அவற்றுட ஞன உறவு நிலைகளும், சதாம் ஹ"செயினின் குணுதிசயங்களும் முக்கியமாகின்றன.
பகுதி - 1இல் விபரித்தபடி, ஈராக்கிற்கு வடக்கில் துருக்கி எல்லை யும், கிழக்கில் ஈரானிய எல்லையும், வட - மேற்கே சிரிய எல்லையும் ; மேற்கே யோர்தானிய எல்லையும், தென் - மேற்கே சவுதி அரேபியா எல்லையும், தென் - கிழக்கே குவைத், கடல் எல்லைகளும் உள்ளன. அதன் அயல் நாடுகளைப் பொறுத்த மட்டில், சவுதி அரேபியா, சிரியா, துருக்கி என்பவைகள் அமெரிக்காவுடன் இணைந்துள்ளன. ஜோர்தான், ஈரான் என்பவைகள் அமெரிக்காவுடன் இணையவில்லை. ஜோர்தான் சதாம் ஹ"செயினைச் சற்று ஆதரிககையில், ஈரான் நடுநிலைமை வகிப்பதாகக் கூறுகிறது. இவற்றையும், ஈராக்கிற்கு இருக்கும் சினேக நாடுகளையும் பொறுத்தமட்டில், சதாம் ஹ"செயின் அமெரிக்கப் படைகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளச் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. அமெரிக்கர்கள் சதாம் ஹ"செயினின் நிலைமையை எந்தக் கட்டத்திலும் ஹிட்லரின் நிலைமையுடன் ஒப்பிடமுடியாது. ஹிட்லரைப் பொறுத்த மட்டில், பேர்லின் ஆனது கிழக்கிலிருந்து

- 23 -
ருசியப் படைகளினலும், மேற்கிலிருந்து , " சினேக படைகளாலும் சூழப்பட்டது. அது மாத்திரமல்ல, ஹிட்லரைப் பொறுத்தமட்டில் அவருக்கு விமானத்தில் தப்பியோடக்கூட எந்தவொரு சினேக நாடும் அருகில் இருக்கவில்லை. இவற்றிற்கு மேலாக, சதாம் ஹ"செயினின் கடந்தகால வாழ்க்கையைப் பார்த்தால், அவர் தோல்வியைக் கண்டு மனம் சலித்தவர் அல்ல. அவர் பாலைவனத்தில் நாடோடி களைப் போல் திரிந்து வாழ்ந்து, மீண்டும் தனது குறிக்கோள்களை அடையச் செயற்பட்டே உள்ளார். வெற்றிகண்டும் உள்ளார். (பகுதி I இனப் பார்க்கவும்) இந்த நிலையில், சதாம் ஹ"செயினைத் தமது படைகளைக்கொண்டு அமெரிக்கர்கள் கைப்பற்றுவது அதிகம் சுலபமாக இருக்குமென்பதற்கு இல்லை.
இவைகளைப் பார்க்கும் போது சதாம் ஹ"செயினைக் கைப்பற்று வதிலும் பார்க்க, அவரைத் தமது விமானப் படைகளைக் கொண்டு தாக்கிக் கொல்வதே ஒப்பிடுகையில் சுலபமானது. ஆனல், இங்கும் அவர் தங்குமிடங்களையும், அவர் அசையும் விபரங்களையும் அறிவது கடினமாகிறது.
ஈராக் படைகளையும், பிரஜைகளையும், வெளிநாட்டுப் பிரஜைகளையும் பயன்படுத்துவது :
ஈராக்கியப் படைகளையும், பிரஜைகளையும் கொண்டு சதாம் ஹ"செயினைக் கொலைசெய்வதை எடுத்துக்கொண்டால், சதாம் ஹ"செ யின் தனக்கு எதிரியெனக் கருதியவர்களைப் பெரும்பாலும் அழித்தே வந்துள்ளார். (பகுதி - 1 இனப் பார்க்கவும்). எது விதத்திலும், இராணுவத்தினரைக் கொண்டு இப்படியான முயற்சிகளை இன்றைய நிலையில் தூண்டிவிடுவதற்கும், பலவித ஆலோசனைகளைக் கூறவும் அங்கு வெளிநாட்டுத் தூதரகங்கள் இல்லாதே காணப்படுகிறது. இந்த நிலையில், இன்று, ஊடுருவல்களை ஈராக்கினுள் நடாத்திய பின்பே, அமெரிக்கர்கள் இதனைச் செய்ய முயற்சிக்க வேண்டும்.
மறுபுறத்தில், ஈராக்கினுள் படையெடுத்த பின்னர் அமெரிக்கர் கள் அதிகார அவாவுள்ள இராணுவ அதிகாரிகளைப் பயன்படுத்தி, ஆட்சிக் கவிழ்ப்பினையும் நடாத்தி, அவர்களைக் கொண்டே சதாம் ஹ"செயினைக் கைப்பற்றவும் முடியும். இது சதாம் ஹ"செயினின் தோல்வி நிச்சயமானது என்பதைத் தெரிந்த நிலையில்தான் பெரும் பாலும் சாத்தியமானது. அதாவது, ஈராக்கின் மீது அமெரிக்க, மேற்கு - ஐரோப்பியப் படைகள் படையெடுத்த பின்னரே சாத்திய மானது. இந்த நிலையில், அமெரிக்கப் படைகள் எவ்வளவு தூரத் திற்கு வெற்றிகரமாகத் தரைத் தாக்குதல்களை நடாத்தி, வெற்றி யடைகின்றனர் என்பதில்தான் இது தங்கியுள்ளது. மேலும், ஈராக்கிய மக்களைத் தமது பிரசாரங்கள் மூலம் சதாம் ஹ"செயினுக்கு எதிராகத் திருப்புவதிலும் அவர்களது வெற்றி தங்கியுள்ளது.

Page 19
- 24 -
வெளிநாட்டுப் பிரஜைகளைப் பயன்படுத்துவதைப் பொறுத்த மட்டில், அமெரிக்கர் வெளிநாட்டுப் பத்திரிகைகள், மற்றும் வெகு ஜனத்தொடர்பு சாதன நிருபர்கள். சர்வதேச அமைப்புக்களில் செயற்படுபவர்கள் போன்ருேரையே பயன்படுத்த முடியும். ஆனல், இவர்கள் சதாம் ஹ"செயினினை நேரே சந்திக்க எவ்வளவு சந்தர்ப்பங் கள் உள்ளன என்பது முதல் கேள்வியாகின்றது. அடுத்ததாக, அப் படிச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும், பாதுகாப்பு நட வடிக்கைகளை முறியடித்து, ஒருவர் எவ்வளவு தூரத்திற்கு கொலையை வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்பதும் கேள்விக்குரியதே.
இவைகளில் இருந்து நாம் வரக்கூடிய முடிவுகள் எவைகளென் றல், சதாம் ஹீசெயினைக் கொலை செய்வதும், கைப்பற்றுவதும் உடனடியாகச் செய்யமுடியாத ஒரு விடயமாகும். எது விதத்திலும், நீண்ட காலக் கண்ணுேட்டத்தில், இதனைச் செய்யச் சில முன்னேற் பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. ஈராக்கிற்கு எதிரான போரின் தொடக்க காலத்தில் உளவாளிகளை ஊடுருவ விடும் அமெரிக்கர்கள், காலப்போக்கில் தமது திட்டங்களைக் கீழ்வரும் நடவடிக்கைகள் மூலமே நடைமுறைப் படுத்தமுடியும்.
(1) சதாம் ஹ"செயின் தங்குமிடம், அல்லது அவரது அசைவுகளை அறிந்து விமான, ஹெலிக்கொப்டர், ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்தி அவரை அழித்தல் ; (2) ஈராக்கிய படைகளைப் பயன்படுத்தி, ஆட்சிக் கவிழ்ப்பு
நடாத்தி, அவரைக் கைப்பற்றி அழித்தல். (3) தமது படைகள்கொண்டு கைப்பற்றி அழித்தல் :
இன்றைய நிலையில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், எல்லை வழிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், ஊடுருவல்களை சவுதி அரேபியா, ஜோர்தான், துருக்கி, சிரியா, ஈரான் எல்லைகளு டாகவே நடாத்த முடியும். இப்படி ஊடுருவினுலும், ஈராக்கினுள் நுழைந்தவர்கள் தொடர்புகளை ஏற்படுத்தச் சிலகாலம் எடுக்கும். ஆகவே, நேரடிப் போரில் தரைமார்க்கமாக முன்னேறும் போது தான் இவற்றைத் துரிதமாகச் செய்ய முடியும். இந்த நிலையில், தரைப்போர் தொடங்கும் வரையும் இந்த முயற்சிகள் தொடர்கை யில், தரைப்போர் தொடங்கிய பின்பு தொடர்புகளை ஈராக்கினுள் ஏற்படுத்தும் முன்னேற்பாடுகளும் தொடரவேண்டியுள்ளன.
ஆகவே தரைப்போரானது சிறிது காலம் தாமதித்தே தொடங்க வேண்டும். அதுவரை விமானத்தாக்குதல்களை நடாத்த முடியும். இந்த தரைப்போரை ஆரம்பிக்கும் காலதாமதிப்பு ஒரு குறிப்பிட்ட காலம்வரை அமெரிக்கருக்குச் சாதகமாகவே அமையும். அமெரிக்கா

- 25 -
வும், ஐரோப்பிய நாடுகளும் பாரிய அளவில் தமது படைகளை ஈராக்கின் எல்லைப் புறத்தில் குவித்த பின்னர், தரைப்போர் எப் போதும் ஆரம்பிக்கலாம் என்ற எதிர்பார்ப்பின் கீழ், ஈராக்கிய படைகள் எப்போதும் தம்மைப் பாதுகாக்க உஷார் நிலையிலேதான் இருக்க வேண்டும். ஒரு போர் வீரனே, அல்லது, ஒரு படையோ குறிக்கப்பட்ட ஒரு கால எல்லைவரையுமே உஷார் நிலையால் ஏற் படும் அழுத்தங்களைத் தாங்க முடியும். ஒரு கால எல்லையின் பின்னர், மனேரீதியாகப் பாதிக்கப்பட்ட நிலையில், ஒன்றில் அவர்கள் அசட் டையாகும் நிலையோ அல்லது பொறுமை இழக்கும் நிலையோ தான் ஏற்படும். ஆனல், ஒரு நாட்டினுள் படையெடுக்கவிருக்கும் போர் வீரனுக்கு இப்படியான பாதிப்புக்கள் குறைவாகவேதான் இருக்கும். எது விதத்திலும், நீண்டகாலம் படையெடுப்பு ஆரம்பமாகாது இருக்குமேயானல், இவர்கள் மத்தியில் அசட்டைத் தன்மை அதி கரிக்கும். இரு சாராரும் இப்பிரச்சனையினை தற்காலிகமாக இல்லாது செய்வதற்குப் போர் பயிற்சிகள் (War Manoeure) செய்வது வழமை. சிறு சிறு தாக்குதல்கள் நட7த்துவது வழமை இவற்றைவிட, முழுமையான போர் ஆரம்பிக்கப்படாது நீண்ட காலம் செல்லுமேயாயின், ஈராக் ஆனது அரசியல் ரீதியில் நன்மை யடையச் சந்தர்ப்பங்கள் அதிகம் உருவாகுவதுடன், ஈராக்கிய படை வீரருக்கு மனேநிலை உயர்த்தப்படவும் சந்தர்ப்பங்கள் உண்டு. இந்த நிலையில், ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், தரைப் படைகளை அனுப்பி, முழுமையான போர் ஆரம்பிக்கப்படும்வரை, அமெரிக்கர்கள் தமது உளவாளிகளின் ஊடுருவல்களைச் செய்வதுடன், விமானப்படைமுலம் தாக்குதல்களை நடாத்தி, எதிரியின் ஆயுதபலம், படைபலம், அத்தியா வசியப் பொருட்கள், போக்குவரத்து, தொலைத் தொடர்பு என்பவற் றைக் குறைக்கவும், செயலற்றதும் ஆக்கவேண்டும், எதிரி கணிசமான அளவில் பலவீனப்பட்டுவிட்டான் என்பதை அறிந்ததும், . பாரிய தரைத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட முடியும். எது விதத்திலும், இந் தத் தீர்மானத்தினை எடுப்பதில் தப்புக் கணிப்பீடுகள் இருக்குமேயா யின், போர் எதிரிக்குச் சாதகமாகவும், தாக்குதலை நடத்தும் படை பாரிய அழிவை எதிர்நோக்கும் நிலையும் ஏற்படும். ஈராக்கினையும், குவைத்தினையும் கைப்பற்றுதல் :
ஒரு நாட்டினை இராணுவ ரீதியில் கைப்பற்றுவதாயின், அதன் தரையும், ஆகாய எல்லையும் பூரண இராணுவக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டு, எதிரிகளின் இராணுவ நடவடிக்கைகள் தொட ராது நிறுத்தப்பட வேண்டும். இந்த நிலையில், குவைத், ஈராக் என் பவைகளைக் கைப்பற்றுவதாயின், ஒரு கட்டத்தில், அமெரிக்கா, மேற்கு நாடுகளின் படைகள் இந்த நாடுகளுள் தரைமார்க்கமாக அனுப்பப்பட வேண்டியுள்ளது. இங்குதான் ஈராக், குவைத் என்பவை களின் பூகோள அமைப்பு முக்கியமாகிறது.
4

Page 20
ஈராக்கிற்கும், குவைத்திற்கும் மேற்கே சவுதி அரேபியா உள்ளது. ஈராக்கிற்கு வடக்கே துருக்கியும், வடமேற்கே சிரியாவும் உள்ளன. இரு நாடுகளுக்கும் தென்கிழக்கே கடல் எல்லையுள்ளது. ஈராக்கின் மேற்கில் ஜோர்தானும், கிழக்கே ஈரானும் உள்ளன. ஈரானினதும், துருக்கியினதும் எல்லைகளிலேயே மலைப்பிராந்தியங்கள் உள்ளன. ஏனைய எல்லைகள் தட்டையான மணல் பிராந்தியமாகவும், அரை வணுந்தர மாகவுமே உள்ளன, ஈராக்கின் எல்லை நாடுகளுள் சிரியா, துருக்கி, சவுதி அரேபியா என்பவை அமெரிக்காவுடன் இணைந்துள்ளன. ஆனல் சவுதி அரேபியாவில்தான் அமெரிக்க பிரித்தானிய, மற்றும் மேற்கு ஐரோப்பிய விமான, தரைப்படைகள் பாரிய அளவில் உள்ளன. நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கியில் அமெரிக்க, பிரித் தானிய, ஜேர்மனிய, பெல்ஜியம் விமானப் படைகளும், ஏவுகணை களும், ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளும் உள்ளன, இங்கு தரைப் படைகள் இல்லையேன்றே கூறப்படுகிறது.எது விதத்திலும், பெப்பிரவரி 6ஆம் திகதியன்று வெளியான செய்திகளின்படி, ஜெர்மனியில் உள்ள அமெரிக்கா டாங்கிகளை ஒஸ்திரியா ஊடாக ரயிலில் கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியப்படுகிறது. இவை வளைகுடா யுத்தத்திற்கே பயன்படுத்தப்படவுள்ளன. இந்த டாங்கிகள் சிரியா, துருக்கி என்பவைக்குக் கொண்டுசெல்லப்படு கின்றனவா, அல்லது சவுதி அரேபியாவிற்குக் கொண்டுசெல்லப்படு கின்றனவா என்பது சரியாகத் தெரியவில்லை. இவற்றைவிட, அமெரிக் காவினதும், மேற்கு நாடுகளதும் கடல் படைகள் பாரசீகக் குடாவில் நிற்கின்றன. விமானப் படைகள், தரைப்படைகள் என்பவையும் பாஹ்றெயின், ஒமான், கட்டார், ஐக்கிய -91 TLH , எமிறேட்டுக்கள் போன்ற வளைகுடாச் சிறு நாடுகளிலும் உள்ளன.
குவைத்தினது தென் - கிழக்கே கடல் எல்லையுண்டு. ஈராக்கின் தென் கிழக்கு மூலையிலும் சிறு கடல் எல்லையுண்டு.
மொத்தத்தில், அமெரிக்க, மேற்கு நாடுகளின் படைகள் குவைத் தினுள் நுளைவதென்றல் அவை கடல் வழியாகவும், சவுதி அரேபி யாவின் தரை எல்லையூடாகவும் நுளைய முடியும். இதை விட, ஈராக் கின் கடல் எல்லையூடாக ஈராக்கினுள் நுளைந்து, பின்னர் தரை மார்க்கமாகக் குவைத்தினுள் நுளைய முடியும், அமெரிக்க, சினேக படைகள் ஈராக்கினுள் நுளைவதாயின், தற்போதய நிலையில், சவுதி அரேபிய தரை எல்லையூடாகவும், கடல் எல்லையூடாகவும், துருக்கி யூடாகவுமே நுளைய முடியும். அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய படை கள் ஏறக்குறைய இலங்கையின் வடக்கு- கிழக்கு மாகாணமளவு பரப்பளவுள்ள குவைத்தினைச் சற்றுச் சுலபமாகக் கைப்பற்றினுலும், பாரிய நிலப்பரப்பையுள்ள ஈராக்கினையும், சற்றுத் தூரமாகவுள்ள பாக்தாத்தினைக் கைப்பற்றச் சற்று நீண்ட காலம் எடுக்கலாம்.

- 27 -
எதுவிதத்திலும், ஒரு நாட்டின் படைகள் எதிரி நாட்டின் பிராந் தியத்தினுள் நுளைந்து, போரை நடாத்தி, எதிரி நாட்டின் சகல பிராந்தியங்களையும் பூரண இராணுவ கட்டுப்பாட்டினுள் கொண்டு வர முற்படும் போது, அவை பல பிரச்சனைகளை எதிர் நோக்க வேண்டி நேரிடும். அவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு:
(1) தரையமைப்பும், சுவாத்திய நிலையும் ; (2) எதிரியின் தரைப்படை வலிமை : (3) எதிரியின் விமானப்படை வலிமை
(4) தமது படைகளின் உணவு - நீர்-எரிபொருள் - மருந்து - ஆயுத
வினியோகம், மருத்துவ வசதிகள்
(5) சர்வதேச அரசியல், இராஜதந்திர அழுத்தங்கள்.
இவைகள் பற்றி ஒவ்வொன்ருகவும், ஒருங்கிணைத்தும் சுருக்க Lorrs' LuntritiCurrib.
தரையமைப்பும், சுவாத்தியமும் :
தரைப்படை மூலம் போரை நடாத்தும் போது, தரையமைப்பு மிகவும் முக்கியமாகிறது. ஈராக்கின் தரையானது பெரும்பாலும் வனந்தர, அரைவனந்தரப் பிராந்தியமாகவே உள்ளது. குறிப்பாக : சவுதி அரேபிய எல்லை. குவைத்தும் பெரும்பாலும் மணல் பிராந்திய மாகவும், அரைவனந்தரப் பிராந்தியமாகவும் தான் உள்ளது. இந்த நிலையில், கவச வாகனங்களும், ட்ரக்கு வண்டிகளும், டாங்கிகளும் இப் பிராந்தியத்தில் பெருமளவில் பயன்படுத்த வேண்டியுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்சு என்பவைகளைப் பொறுத்த மட்டில், அவைகளிடம் நவீன டாங்கிகளும், கவச வாகனங்களும், ட்ரக்கு வண்டிகளும் உள்ளன. ஆனல், இவைகள் பெரும்பாலும் இந்த நாடுகளால் எதிரியெனக் கருதப்பட்ட ருசியருக்கு எதிராக ஐரோப்பாவிலும், ருசியாவிலும் பயன்படுத்தவே செய்யப்பட்டவை' இந்த நிலையில் இந்த டாங்கிகள் எவ்வளவு தூரத்திற்கு மணல் பிராந்தியத்தில் திறமையாக செயற்பட முடியும் என்பது ஆராயப் படவேண்டும். இவை பற்றி பின்னர் பார்க்கப்படும்.
அடுத்த முக்கிய பிரச்சனை என்னவென்றல், அது சுவாத்திய மாகும். குவைத், ஈராக் போன்ற நாடுகளில் இப்போது குளிர் காலமாகும். பகலில் வெப்பம் சற்று அதிகமாக இருந்தாலும், இரவில் மிகவும் குறைவாகவே வெப்பம் உள்ளது. இக்காலத்தில் முகில்களும் சற்று அதிகமாகவே இருக்கும்; இதனுல் விமானத் தாக்குதல்கள் பாரிய அளவில் பாதிக்கப்படும். ஏப்பிரல் - மே தொடக்கம் அங்கு வெப்பம் 120°F ஆக வருவதுடன், மிகவும் வேக

Page 21
- 28 -
மான காற்றும், மணல் மழையும் இருக்கும். இந்த நிலையில், தரைப் போரை அமெரிக்கர்கள் ஏப்பிரல் - மே மாதத்திற்கு முன்னர்ே முடிவுக்குக் கொண்டுவர வேண்டியுள்ளது. எதுவிதத்திலும், ஈராக், குவைத் என்பவைகளில் வெப்பம் அதிகரித்துவரும் நிலையில், அமெரிக்க, மேற்கு - ஐரோப்பியப் படையினர்கள் எப்படித்திறமையாகப் போரை நடாத்துவர் என்பதும் ஆராயப்படவேண்டியே உள்ளது. இதனையும் நாம் பின்னர் விரிவாகப்பார்க்கலாம்.
இவற்றைவிட, ஈராக்கிய படைகள் தமக்குப் பாதுகாப்பினை ஏற்படுத்திக் கொள்வதிலும், மரங்கள், காடுகள் அற்ற மணல், அரை வனந்தரப் பகுதிகள் பிரச்சனைகளையே ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக இராசாயன, விஷவாயு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமே யானல், அது கூடிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்கள் உண்டு. இதைவிட, ' நியூற்றேன் குண்டுகள் ' (Neutron Bombs) இப்பிராந்தியத்தில் பாரிய மனித அழிவை ஏற்படுத்தும் சந்தர்ப்பங் களும் அதிகம் உண்டு. நியூற்றேன் குண்டுகள் மனிதரை மாத்திரம் கொல்லும், நியூற்முேன் கதிர்கள் உடலில் பாயும்போது, மனிதர் கொல்லப்படுகின்றனர். பொருட்கள் அழிக்கப்படமாட்டா. இந்த நிலையில். இந்தப் போரில், ஈராக்கியர்கள் அமெரிக்க, மேற்கு - ஐரோப்பியப் படைகளுக்கு எதிராக இரசாயன, விஷவாயுக் குண்டு களைப் பயன்படுத்தினல், அதனைப் பிரசாரத்திற்குப் பயன்படுத்துகை யில், அமெரிக்கர்கள் சுலபமாக எவரும் கண்டுபிடிக்கமுடியாத நியூற்றேன் குண்டுகளைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களும் காணப் படுகின்றன. விஷவாயுக்கள் பயன்படுத்தும்போது, காற்றின்திசையும் முக்கியமாகிறது.
தரைப்படை வலிமை :
ஈராக்கின் தரைப்படை வலிமையை எடுத்துக்கொண்டால், நாம் படைபலம், ஆயுதபலம், பயிற்சி, மனுேநிலை, போர் அனுபவம் என்பவைகளை எல்லாம் கவனத்தில் எடுக்கவேண்டும்.
பகுதி - 1 இல் கூறப்பட்டபடி, ஈராக்கிடம் மொத்தம் 10 லட்சம் படைகள்வரை உள்ளது. ஆனல், இவற்றுள் 5 லட்சம் வரையே நிரந்தர படையினர்களாகும் (Reguler torce). இந்த 5 லட்சம் படைனருள் ஏறக்குறைய 125,000 முதல் 150,000 பேர்வரை ஈராக் கின் அதிசிறந்த படையினராகும் (Elite Forces). இந்தப் படைப் L9ff60061 “Republican Guards” GT Gör gp -9y Googpu'lurf. glu'Lu GML. L'u fflaai) இளம், பலம்வாய்ந்த, விவேகமான, உயர் பயிற்சியுள்ளவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஈராக்கியத் தரைப்படையிடம் 6,000 டாங் கிகள் உள்ளன. இந்த டாங்கிகள் பெரும்பாலும் ருசிய டாங்கிகளே.

- 29 -
ஈராக்கியப் படைகள் ஈரானுடன் 8 வருடங்கள் போர் நடாத்தி அனுபவம் பெற்றவர்கள். இவற்றைவிட, ஈராக்கிடம் தந்திரோ பாய ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இரசாயன, விஷ வாயுக் குண்டுகளும், அவற்றை நீண்டதூரம் வீசக்கூடிய எறி ஏவுகணைகளும் (Balitic Missiles உள்ளன. (முழு விபரங்களுக்குப் பகுதி - 1இனைப் பார்க்கவும்.)
ஈராக்கியர்கள் தமது ஏவுகணைகளை ருசியரிடமிருந்தே பெற்றுள் ளனர். ஆனல் இடைத்தரத் தாக்கல் தூரமுடைய ஸ்கட் ’ (SCUD) ஏவுகணைகளும், குறுகிய தாக்கல் தூரமுடைய FROG ஏவுகணை களும் என்னென்ன எண்ணிக்கைகளில் ஈராக்கிடம் உள்ளன என்பது தெரியவில்லை. இந்த எண்ணிக்கை விபரங்கள் உண்மையில் ருசியருக் கும், ஈராக்கியருக்கும் மாத்திரமே தெரியும். ஆஞல், இந்த ஏவு கணைகளை ஈராக்கியர்கள் தாமாகவே விசேட இழு - வண்டிகளில் பொருத்தி, ட்ரக்குகளில் இழுத்துச் செல்லக் கூடியதாகச் செய்துள் ளனர். இந்த நிலையில், ஈராக்கியரிடம் எத்தனை அசையக்கூடிய (Mobile) ஏவுகணைகள் உள்ளன என்ற விபரம் ருசியருக்குமே தெரி யாது. தந்திரோபாய ரீதியில் மிகமுக்கியமாக விருக்கும் அசைக்கக் கூடிய ஏவுகணைகளை இரகசியமாக உருவாக்கிய ஈராக்கியர்கள், போரைப் பொறுத்தமட்டில், எவரையும் முழுமையாக நம்பாத நிலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ருசிய SOUD, EROG ஏவுகணைகளைவிட, ஈ ராக்கியர்கள் TAMMUZ - I, TAMMUZ - II GT Görp GT só? - Gray35&ONT 55&srt uqub 35 IT DIT S, உருவாக்கி, 1989இல் பரீட்சித்துள்ள நிலையில், ஈராக்கியரிடம் எத் தனை எறி - ஏவுகணைகள் உள்ளன என்பது எவருக்கும் தெரியாத மர்மமாகவே உள்ளது,
தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இரசாயன, விஷ வாயுக் குண்டுகளைவிட, ஈராக்கியர்கள் அணுக் குண்டினை உற்பத்தி செய்யும் அளவிற்கு முன்னேறியுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்ற னர். (முழுவிபரங்களுக்கும் பகுதி - 1 இனப் பார்க்கவும்) ஆனல், இவர்களிடம் அணு - குண்டுகள் இருக்கிறதா, இல்லையா என்பதோ அல்லது இவர்களிடம் எந்த அளவுகளில் இரசாயன, விஷவாயுக் குண்டுகள் உள்ளன என்பதோ ஒருவருக்கும் தெரியாது. இவைகள் எல்லாம் அமெரிக்காவிற்கும், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும்: இராணுவ தந்திரோபாய ரீதியில் பெரும் பிரச்சனைகளையே ஏற்படுத்து கின்றன.
ஈராக்கிடம் அணு - குண்டுகள் இல்லையா, இருக்கின்றதா, என் னென்ன அளவுகளில் இரசாயன, விஷ வாயுக் குண்டுகள் உள்ளன;

Page 22
- 30 -
எங்கெங்கே இவைகளின் உற்பத்தியாலைகள் உள்ளன ; ஈராக்கிடம் GLDIT55lb 6T552.0T SCUD, FROG, TAMMUZ stays&0075 air a giraft got, அவற்றுள் எத்தனை நில அடியினுள் உள்ளன, எத்தனை அசைக்கக்கூடிய இரகத்தினைச் சார்ந்தவை என்பவற்றை யெல்லாம் சரியாக அறிந்து, அவற்றை விமான, ஏவுகணைத் தாக்குதல்களால் அழித்தபின்னரே அமெரிக்கரும், மேற்கு ஐரோப்பியரும் தமது தரைப்படைத் தாக் குதல்களை ஆரம்பிக்கவேண்டும். ஆரம்பிக்கமுடியும். இல்லாவிட் டால், அவர்கள் பாரிய அழிவினை எதிர்நோக்கி, தரைப் போரில் தோல்வியைத் தழுவும் சந்தர்ப்பங்களும் எழும். இதை மாற்றி யமைக்க அவர்கள் அணுக்குண்டுகளையும் பயன்படுத்தும் ஆபத்தும் எழலாம்!
எதுவிதத்திலும், மேலே குறிப்பிட்ட ஆயுதங்களைத் தாம் முற்ருக விமானத் தாக்குதல்கள்மூலம் அழித்துவிட்டோம் எனக் கணிப்பிட்டு, அமெரிக்கர்கள் தரைப்படையை நகர்த்தும்போது, ஈராக்கியர்கள் எவருக்கும் தெரியாது வைத்திருந்த அசைக்கக்கூடிய ஏவுகணைகள் மூலமும், விஷவாயுக்கள், இரசாயன குண்டுகள் என்பவை மூலம் தாக்குதல்களை தடாத்துவார்களேயாயின், ஆயிரக்கணக்கான அமெரிக் கரும், ஐரோப்பியரும் கொல்லப்படுவர்.
இந்தநிலையில், அமெரிக்கரும், மேற்கு ஐரோப்பியரும் எதிர் நோக்கும் பெரிய பிரச்சனை என்னவென்றல், தமது விமானப்படை குண்டுவீச்சுக்களாலும், ஏவுகணைத் தாக்குதல்களாலும் ருசிய ஸ்கட், PROG, மற்றும் TAMMUZ ஏவு - கணைகள் அனைத்தையும் அழித்து விட்டோம் என்பதை எதைக்கொண்டு உறுதிப்படுத்துவது என்பதே! விமானப்படைத் தாக்குதலின் பின்னர் இஸ்ரேல் மீதும், சவுதி அரே பியாமீதும் ஈராக் தாக்குதல்களை ஏவுகணைகளைக் கொண்டு நடாத் தாதுவிட்டால், அமெரிக்கர் சகல ஏவுகணைகளும் அழிக்கப்பட்டு விட்டன எனக் கருத முடியாது. ஏனெனில், போர் யுக்தி அடிப்படை யில் ஈராக் தாமாகவே ஏவுகணைகளை ஏவாது விடலாம். இப்படி ஏவுகணைகளை இஸ்ரேல் மீதும், சவுதி அரேபியாமீதும் ஏவுவதை ஈராக் நிறுத்தி வைப்பதைப் பிழையாகக் கணிப்பிட்டு, அமெரிக்கர் தரைப் படைகளை அசைக்க முற்படும்போது, ஒர், இரு ஏவுகணைகளை ஈராக் மீண்டும் ஏவுமேயாயின், அமெரிக்கா அதனது தரைப்படை அசைவை நிறுத்தவேண்டும். இது பாரிய உட்பிரச்சனைகளை இராணு வத்தினுள் ஏற்படுத்தும்.
இப்படியான சிக்கல் நிறைந்த பிரச்சினைக்கு ஒரளவிற்குத் தீர்வு காண ஒரேயொரு வழிதான் உள்ளது. அந்தவழி என்னவென்ருல் அமெரிக்கர்கள் ருசியரிடம் அவர்கள் எத்தனை ஏவுகணைகளை ஈராக்

- 31 -
கிற்கு விற்றனர் என்பதைக் கேட்டு அறிவதே! இந்த விபரங்கள் கேட்கப்பட்டதற்கான ஆதாரங்கள் 1991 பெப்பிரவரி 1ஆம் திகதி வெளிவந்தது. அமெரிக்கர்கள் இந்த விபரங்களே ருசியரிடம் கேட்ட போது, ருசியர்கள் தாம் அந்த விபரங்களைக் கொடுக்கமுடியாது என்றும், அது ஆயுத விற்பனை இரகசிய கடைப்பிடிப்பிற்கு முரணுன தென்றும் கூறுயதாக ருசியா அதிகாரி தெரிவித்தார்.
ருசியரது இந்தப் பகிரங்க அறிவிப்பு எவ்வளவிற்கு உண்மையாக இருக்கும் என்பது, உண்மையில், ருசிய - ஈராக்கிய உறவுகளையே பொறுத்தது. எதுவிதத்திலும் ருசியாவிடம் வாங்கிய ஏவுகணைகளில் எத்தனையை அசைக்கக்கூடியவிதமாக ஈராக்கியர் மாற்றினர் என்பது ருசியருக்குத் தெரியாதநிலை இருக்குமேயாயின், ருசியர்கள் உண்மையை அமெரிக்காவிற்கு இரகசியமாகக் கூறியிருந்ததாலும், அது அமெரிக் காவிற்கு அதிக பலனளிக்கப்போவதில்லை. எதுவிதத்திலும், இது அமெரிக்கர்கள் ஈராக்கிய ஏவுகணைகள் எவ்வளவு தூரத்திற்கு விமா னத் தாக்குதல்களால் அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதைத் திட்ட வட்ட விதமின்றி எடைபோடச் சற்று உதவ முடியும். மொத்தத்தில் அமெரிக்கரும், ஐரோப்பியரும் தமது விமான ஒட்டிகளின் பேச்சுக் களைப் பெருமளவில் நம்பவேண்டியுள்ளது. இவைகள் எல்லாம் அமெரிக்காவையும், ஐரோப்பிய நாடுகளையும் பெரும் இக்கட்டான சூழ்நிலைகளில் தள்ளி, தரைப்போர் தொடங்குவது பிற்போடப்பட வேண்டியதாக நேருடும். மேலும் தரைப்போர் ஆரம்பிக்கப்பட்டார் லும், அமெரிக்க, ஐரோப்பிய படைகள் இரசாயன - விஷவாயுக் குண்டுகளிலிருந்து தம்மைக் காப்பாற்ற விசேட முகமூடிகளையும் உடைகளையும் அணியவேண்டியுள்ளது. லட்சக்கணக்கான படை வீரருக்கு இவற்றை விநியோகிப்பது ஒருபுறத்தில் இருக்க, இந்த உடைகளுடன் எவ்வளவு நாட்கள், வெய்யிலில், படைகள் திறமை யாகப் போரிட முடியும் என்பது முக்கிய கேள்வியாகிறது,
இந்த நிலையில், அமெரிக்கர்கள் இரண்டு விதமாகவே இப்பிர்ச சனையினைத் தீர்க்க முடியும். அவையாவன :
(1) உளவு வேலைகள், வேறு வழிகள் மூலமும் ஈராக்கினது தீர்வி
ஏவுகணைகளைக் கண்டறிந்து அவற்றை அழிப்பது : (2) ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களைப் பயன்படுத்துவது.
இன்று நிலத்தில் இருக்கும் 10 cm அகலமான பொருட்களை சற்றலைட்டுக்களையும், விமானங்களையும் பயன்படுத்திப் படங்கள்
எடுக்கும் சக்திவாய்ந்த கமிராக்கள் உருவாக்கப்பட்டிருக்கும் போதி லும், நில அடியில் பொருத்தப்பட்டிருக்கும் ஏவுகணைகளைக் கண்ட

Page 23
- 32 -
றிந்து, அழிப்பது சற்றுக் கடினமானதே. மேலும், அசைக்கக்கூடிய ஏவுகணைகளை அவை ஏவுகைக்கு ஆயத்தப்படுத்தும்போது கண்டறி வதன் மூலமோ, அல்லது ஏவுகணை ஏவப்பட்டவுடன் கண்டறிவதன் மூலமேதான் அழிக்கமுடியும். இந்த இரு சந்தர்ப்பங்களிலும், ஈராக்கின் பிராந்தியங்கள் மீது கண்காணிப்பு விமானங்கள் நிரந்தரமாகப் பறக்கவிட வேண்டியுள்ளது. இது மிகவும் கடினமான விடயம். மறு புறத்தில், இப்படிக் கண்டுபிடிக்கப்பட்டாலும், அங்கு தாக்குதல் களை நடாத்தும் விமானங்களும் தேவைப்படுகிறது.
ஏவுகணைகளை இஸ்ரேல் மீதோ, அலலது சவுதி அரேபியா மீதோ எப்போது ஏவப்போவது என்பதை ஈராக்கியர்தான் தீர்மானிக்கின் றனர். அது ஒருவார இடைவெளியின் பின்னரும் இருக்கலாம், இரு வாரங்களின் பின்னரும் இருக்கலாம். ஆனல் கண்காணிப்பை நடாத் தும் அமெரிக்கர் தினமும் கண்காணிப்பு வேலையைச் செய்ய வேண் டியே உள்ளது. இது மிகவும் கடினமானதும், செலவானதும் ஒரு விடயமாகும்.
இவற்றுக்கு மேலாக, சகல ஏவுகணைகளையும் கண்டு பிடித்து அழிப்பதற்கு எடுக்கும் நாட்களை உண்மையில் ஈராக்கியர்களே நிர்ண யிக்கின்றனர். அமெரிக்கரல்ல. சுருங்கக்கூறினல், இந்த முயற்சி ஒரு நீண்ட கால முயற்சியே. அதாவது தரைப்போரின் ஆரம்பம் கிழமைக் கணக்கில் பிற்போடப்படும். இது அரசியல் மாற்றங்கள் ஏற்படச் சந்தர்ப்பங்கள் அளிக்கும் ஒரு விடயமாகும்,
இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, கணிசமான எண்ணிக்கையான ஏவுகணைகளை அழித்த பின்பு, ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களைப் பயன் படுத்திக்கொண்டு போரைத் தரையில் ஆரம்பிக்கலாம். ஆனல், இங்கு சில முக்கிய பிரச்சனைகள் எழவே செய்கின்றன. அவையாவன :
(1) ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் எவ்வளவு தூரத்திற்கு நம்
பிக்கையானவை ? (2) ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் எவ்வளவு தூரத்திற்கு குறுகிய தாக்கல்தூர ஏவுகணைகளுக்கு எதிராகவும், நடுத்தரதாக்கல் தூர ஏவுகணைகளுக்கு எதிராகவும் சிறந்த முறையில் பயன் படுத்த முடியும் ? (3) ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் எவ்வளவு தூரத்திற்கு எதிரி
களால் அழிக்கப்படாத முறையில் பயன்படுத்த முடியும் ? இன்றைய ஈராக் - அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய போரைப் பொறுத்தமட்டில், இவைகள் மூன்றும் சற்று விளக்கமாக ஆராயப் படுவது மிக முக்கியமாகிறது,

- 33 -
ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் நம்பிக்கையானவையாக இல்லா விட்டால், விளைவுகள் பாரிய அழிவில்தான் முடியும். எதிரியினல் ஏவப்படும் ஏவுகணைகளை இந்த ஆயுதங்கள் எதிரியின் எல்லைப் பகுதி யிலோ அல்லது கணிசமான தூரத்திலேயே செயலற்றதாக ஆக்க வேண்டும். இந்த நிலையில், எதிரி தனது ஏவுகணையினை ஏவினல், இந்த ஆயுதங்கள் உரிய நேரத்தில் அதைக் கண்டறிந்து, எதிரியின் ஏவு - கண நோக்கிச் சென்று, அதைத் தாக்கிச் செயலிழக்கச் செய்ய வேண்டும். அப்படியாயின், ஏவுகணை எதிர்ப்பு ஆயுதத்தின் நம்பிக்கை யான தன்மை இரண்டு முக்கிய விடயங்களை உள்ளடக்க வேண்டும். s9| @0) @i uLI f7" @f60F :
(1) இந்த ஆயுதம் எந்தவித தவறுதல்களும் இல்லாது, எதிரி தனது ஏவு - கணைகளை ஏவியவுடன் இயங்கி, எதிரியின் ஏவு கணையினைச் செயற்படாது செய்யத் தயாராக வேண்டும் :
(2) எந்தவித தவறுதல்களும் இல்லாது, எதிரியின் ஏவு-கணே
யினைச் செயலற்றதாக்க வேண்டும்.
மனிதரால் உருவாக்கப்பட்டவைகள் எப்போதும் 100% சரியாகச் செயற்படும். எனக் கூறமுடியாது. ஆயுதங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் அவற்றைக் களப் பரீட்சைகள் செய்தே அவற்றின் நம் பிக்கை தன்மையை (Reliability) எடை போட முடியும். ஆயுதங் களை நிஜப்போரில் பரீட்சிப்பதன் மூலமே அவற்றின் நம்பிக்கைத் தன்மையை எடைபோட முடியுமாகையால், அவற்றைப் போர்களில் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் முதலில் கிடைக்க வேண்டும். ஏவு கணை எதிர்ப்பு ஆயுதங்கள் இதுவரை நிஐப்போர்களில் பரீட்சிக்கும் சந்தர்ப்பங்கள் எந்த நாடுகளுக்கும் கிடைக்கவில்லை. ஆணுல், ஈராக் அமெரிக்க போர் இவ்வரிய சந்தர்ப்பத்தினை அமெரிக்கருக்கு வழங்கி யுள்ளது .
எது விதத்திலும், அமெரிக்கர்கள் தமது ஏவு - கணை எதிர்ப்பு ஆயுதங்களை இப் போரின்போது ஏதோ ஒரு வகையில் களப்பரீட்சை செய்தே அவற்றைத் தரைப் போரின் போதும் பயன்படுத்தப்பட முடியும். தரைப்போருக்கு முன்னர் அமெரிக்கர்கள் தமது ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களை பரீட்சிக்க ஈராக்கின் இஸ்ரேல், சவுதி - அரேபியா மீதான ஏவு - கணைத் தாக்குதல்கள் பெரும் உதவியாக இருந்தன. அமெரிக்கா அதன் ஏவு - கணை எதிர்ப்பு ஆயுதங்களில் ஒரு ரகமான Patriot' anti-Missile Missile System 55&OT gaiGira,5u p&pril களிலும், சவுதி அரேபிய நகரங்களிலும் நிலைநிறுத்திப் பரீட்சித்தனர். அதாவது, அமெரிக்கர் தமது ஏவுகணை எதிர்ப்பு ஆயுதத்தினை ருசிய SOUD என்ற இடைத்தர தாக்கல்தூர ஏவுகணைக்கு எதிராகப் பரீட் சித்தனர்.

Page 24
- - 34 حس
Patriot anti-Missile Missile System goioGuaiyub, F65. 9/Girl யாவிலும் நிலைநிறுத்திய பின்பும் ஈராக்கின் SOUD எறி - ஏவுகணை கள் இஸ்ரேலிய நகரங்களிலும், சவுதி அரேபிய நகரங்களிலும் விழவே செய்தன. இவை அமெரிக்க * Patriot ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களின் நம்பிக்கையற்ற தன்மையே எடுத்துக் காட்டின. -9y@LDífhóé 35 Patriot anti - Missile Missile System (up56ớav GT Sri நோக்கிய பிரச்சனைகள் எதுவாக இருக்கலாம் என்பதைத் துருக்கியில் இருமுறை நடைபெற்ற சம்பவங்கள்மூலம் உறுதிப்படுத்த முடியும்.
துருக்கியில் நிலைநிறுத்தப்பட்ட Patriot ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங் களில் அமெரிக்கராலும், நெதர்லாந்தாலும் நிலை நிறுத்தப்பட்டவை இரு தடவைகள் பிழையாக, அல்லது தவறுதலாக ஏவப்பட்டன. ஒரு தடவை, இவைகள், ஈராக்கினுள் குண்டுவீசிய பின்பு துருக்கிற்குத் திரும்பிய அமெரிக்க சினேக விமானங்களுக்கு எதிராகக் கிளம்பின. விமானங்கள் பலசிரமங்களுடன் தப்பித்துக் கொண்டன. இதுதொடர் பாக ஒரு விசாரணையும் நடாத்தப்பட்டது இரண்டாவது தடவை அமெரிக்க Petriot ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் தவறுதலாக இயங் கியதாக அறிவிக்கப்பட்டது. இவைகளில் இருந்து நாம் சில முடிவு களுக்கு வரமுடியும். அவையாவன:
(1) துருக்கியில் நிலைநிறுத்தப்பட்ட ஏவுகணை எதிர்ப்பு ஆயுதம் முழுத்தன்னியக்கமாக (Ful Automatic) இயங்கிவிடப்பட்டி ருந்தது.
(2) இந்த ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் முழுத் தன்னியக்கமாக இயங்க விடும் போது, விமான என்ஜின்களின் வெப்பத்தினலே யோ, அல்லது வேறு காரணமாகவோ இயங்கத்தொடங் கின்றன.
இந்த நிலையில், அமெரிக்கர்கள் இந்த ஏவுகணை எதிர்ப்பு ஆயுதத் தினை முழுத் தன்னியக்கமாக இயக்காது, Manual ஆகவே இயக்க வேண்டும். மேலும், இந்த ரக ஏவுகணை எதிர்ப்பு ஆயுதமானது தரைப்போர் நடக்கும்போது, குண்டுவீச்சு விமானங்கள் பாரிய அளவில் பயன்படுத்தப்பட்டால், Ful Automatic ஆகப் பயன்படுத்த முடியாது! இஸ்ரேல், துருக்கி, சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் Patriot ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள், இப்பிரச்சனைகளால், Manual ஆக இயக்கப்பட்டதற்கான ஆதாரங் களும் உள்ளன. அவைகளுள் ஒன்று, ஈராக்கினல் பின்னர் ஏவப் பட்ட SOUD ஏவுகணைகளில் ஒருசில ஏவுகணைகள் ஏவுகணை எதிர்ப்பு ஆயுதத்தினல் முறியடிக்கப்பட்ட போதும், ஒரு சில ஏவுகணைகள்

- 35 -
இஸ்ரேலினதும், சவுதி அரேபியாவினதும் நகரங்களுள் விழவே செய்தன.
இப்பிரச்சனையானது அமெரிக்க ஏவுகணிை எதிர்ப்பு ஆயுதம் நம் பத்தகுந்தது அல்ல என்ற ஒருவித தோற்றத்தினை அரபு நாடுகளுக் கும், ஏனைய நாடுகளுக்கும் ஏற்படுத்தியது. இதனல் இந்த ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் மூலம் அமெரிக்கர்கள் ; ' நாம் உங்களை ஈர்ாக்கிய ஏவுகணைகளில் இருந்து காப்பாற்றுகிருேம் ' என்பதை சவுதி அரேபியா, இஸ்ரேலிய மக்களுக்குக் கூறமுடியாது செய்தமை ஒருபுறமிருக்க, வருங்காலத்தில் இந்த ஆயுதங்களை அரபு நாடுகளுக் கும், ஏனைய நாடுகளுக்கும் அமெரிக்கா விற்று, பாரிய இலாபத்தினைப் பெற முடியாதே செய்தது. இந்த நிலையில், அமெரிக்கருக்குத் தமது ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் நம்பிக்கையானவை என்ற தோற்றத் தினைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களை டெல் அவிவ், றியாட் என்ற நகரங்களில் நிலைநாட்டி, அவற்றை Manual ஆக இருக்கும்போது” அங்கு தந்திரோபாய ரீதியில் பெரும் பிரச்சனை எழுகிறது. ஈராக் கியரின் ஏவுகணைகளை இந்த இலக்குகளில் இருந்து மிகவும் தூரத்தி லேயே கண்டுபிடித்தால்தான், ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களைக் கையாளுபவர்கள் தமது ஏவுகணையினை ஏவி, ஈராக்கியரது ஏவுகணை களை இலக்கிலிருந்து சற்றுத் தூரமாக முறியடிக்க முடியும். கால தாமதம் ஏற்பட்டால், ஈராக்கியரின் ஏவுகணையும், குண்டும் நகரங்களை அண்மித்து, அவை நாசம் செய்யப்பட்டாலும், நிலத்தில் விழும் பகுதிகளில் மக்களுக்கும், கட்டிடங்களுக்கும் காயம், அழிவு என்ப வற்றை ஏற்படுத்தும். இக்காரணத்தால் தான், சவுதி அரேபியாவி லும், இஸ்ரேலிலும் ஈராக்கியரினது ஏவுகணைகள் முறியடிக்கப்பட்ட பின்னரும், பொதுமக்கள் காயப்பட்டு, இறந்ததுடன், கட்டிடங்களும் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், ஈராக்கியர் தமது ஏவுகணைகளை ஏவி, சிறிது நேரத்தினுள் அவை ஏவப்பட்டமை கண்டுபிடிக்கப்படுமேயானல், * Patriot ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களை இயக்குபவர்கள் அவற்றைச் சற்று முன்கூட்டியே இயக்கி, அந்த ஏவுகணைகள் அழிக்கப்படுவதை நிட்சயமாக்கிக் கொள்ளலாம். மதுபுறத்தில், ஈராக்கினுள் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் எந்த இடங்களில் இருந்து ஏவப்படுகின்றன என்பதையறிந்து, அவற்றைத் தாக்கியும் அழிக்கமுடியும், இப்படிச் செய்வதாயின், ஈராக்கின் எல்லைப் பகுதிக்குள், Intra - Red Sensorg பொருத்தப்பட்ட விமானங்கள் எப்பொழுதும் பறக்கவிடப்பட்டு, ஏவுகணை ஏவப்பட்டவுடனேயே அதை அறிந்து, இஸ்ரேலிற்கும்,

Page 25
- 36 -
சவுதி அரேபியாவிற்கும் அறியவைத்து, எதிர் நடவடிக்கைகளைத்
துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இதனையே இன்று அமெரிக்கர்கள் செய்து வருகின்றனர். Infra Red Sensors ஏவுகணையிலிருந்து வெளியா கும் வெப்பத்தினைக் கண்டறியும்.
இன்றைய நிலையில், அமெரிக்க Patriot ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் நகரங்களை அமெரிக்கர்கள் ஓரளவிற்குப் பாதுகாக்க முடியும். இது பாரிய சிரமமான, செல வான காரியமானலும், எதிர்காலத்தில் அவற்றை விற்று இலாப மெடுப்பதுடன் ஒப்பிடும் போதும், தமது ஏவுகணை எதிர்ப்பு ஆயுதத் தினைப் பரீட்சித்து, மாற்றங்களை ஏற்படுத்தச் சந்தர்ப்பங்கள் கிடைத் ததை ஒப்பிடும் போதும், அமெரிக்கருக்கு இது வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது. எது விதத்திலும், ஏனைய நகரங்களைப் பாதுகாப்ப தென்ருல், அங்கும் இந்த ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் நிலைநிறுத் தப்படவேண்டும்.
இவைகள் அனைத்தையும் பார்க்கும் போது, அமெரிக்கர்கள் இந்த ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களை நம்பித் தரைப்போரை ஆரம் பிப்பது புத்திசாதுரியமான செயற்பாடாக இருக்க முடியுமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
அடுத்ததாக, அமெரிக்கரது ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள், தரைப்போரை நடாத்தும் போது, ஈராக்கியரது குறுகிய தாக்குதல் தூர, நடுத்தர தாக்குதல்தூர ஏவுகணைகளுக்கு எதிராக எவ்வளவு தூரத்திற்குச் சிறந்த முறையில் பயன்படுத்த முடியும் என்பதும் இங்கு ஆராயப்படவேண்டும். இடைத்தர தாக்கல்தூர ஏவுகணைகளின் (Intermediate Range Missiles) Luol digitptib, s2.5Gas Lusoil. Gibulb அதிகமானதால், அவற்றைப் பறக்கும் போதே கண்டுபிடித்து அழிப்பது சற்றுச் சுலபமானது. மேலும் இடைத்தர தாக்கல்தூர ஏவுகணை களதும், கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளதும் War Head இலக்கை நோக்கி மிகவும் வேகமாக வருவதால், அதனை ஏதாவது ஒரு பொருளைக் கொண்டு அடித்து, அழிப்பது சுலபமாகும். ஆனல், குறுகிய, நடுத்தர தூரத்திலுள்ள இலக்குகளைத் தாக்கும் போது, ஏவுகணைகளின் பறப்பு நேரங்கள் குறைவானவை. War Head இலக்கை நோக்கிச் செல்லும் வேகமும் குறைவானது. இந்த நிலையில், தரைப் போரை நடாத்தும் போது, அமெரிக்காவின் Patriot ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் சிறப்பாகச் செயற்பட முடியாத சந்தர்ப்பங்களே அதிகம் காணப்படுகின்றன. ஏற்கனவே, முழுத் தன்னியக்கமாக இயங்கும் போது பிரச்சனை எதிர்நோக்கும் Patriot ஏவுகணை எதிர்ப்பு ஆயுதம்,

- 37 -
தரைப்படைகள் நகரும்போது விமானப் பாதுகாப்புக்கள் பாரிய அளவில் வழங்கப்படவேண்டிய நிலையில், அமெரிக்கருக்கு அதிக பயன்படமாட்டாத ஆயுதமர்கவே உள்ளது. தரைப்போரை நடாத்த முற்படும்போது, அமெரிக்கர்கள் ஈராக்கியரது SOUD, மற்றும் ஏவுகணைகளையும், விஷவாயு, இரசாயனக் குண்டுகள், இவற்றை உற்பத்திசெய்யும் ஆலைகள் என்பவற்றை அழித்த பின்னர் ஆரம்பிப் பதே புத்திசாதுரியமானது. இது தரைப்படைத் தாக்குதல்களைச் சற்றுப் பின்போடவ்ே செய்யும்.
இவை ஒருபுறமிருக்க, ஈராக்கியரைப் பொறுத்த மட்டிலும் சில அடிப்படைப் பிரச்சனைகள் இருக்கவே செய்கின்றன.
(1) அவர்கள் விஷவாயு, இரசாயன ஆயுதங்களை ஏவுகணைகள் மூலம் ஏவக்கூடிய வழிமுறைகளைச் செய்துள்ளனரா என்பது சரியாகத் தெரியவில்லை.
(2) ருசிய ஏவுகணைகளின் இலக்கினைக் குறிப்பாக அடிக்கும்
தன்மை (Accuracy) அற்றநிலை.
அணு - குண்டுகள், விஷவாயுக்கள், இரசாயன ஆயுதங்கள் என் பவற்றை நகரங்களைத் தாக்கப் பயன்படுத்தும் போது, ஏவுகணைகள் இலக்கினைக் குறிப்பாக அடிக்கும் தன்மை அதிகம் தேவையற்றபோதும், தரைப் போரைப் பொறுத்தமட்டில் இது முக்கியமானதாகிறது. மேலும், ஒப்பிடுகையில், விஷவாயுக் குண்டுகள், இரசாயனக் குண்டுகள் என்பவைகளிலும் அமெரிக்கா, பிரான்சு, மற்றும் சில நாடுகளிலும் இருக்கும் " நியூற்றேன் ' குண்டுகள் தரைப்போரில் சிறந்த பயனைக் கொடுக்கக்கூடியவையாகும்.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது, வளைகுடாவில் நடைபெற வுள்ள தரைப் போரானது, பெரும்பாலும் இராணுவ-தொழில் நுட்ப களப், பலப் பரீட்சைகளாகவே இருக்கும் எனக் கூற முடியும்.
இரு தரப்பினரும் தத்தமது எதிரிப்படைகளின் இராணுவ வலிமை யைக் குறைத்தே தரைப் போரில் வெற்றியடையும் சந்தர்ப்பங்களை அதிகரிக்க வேண்டிய நிலையில், எதிரிகளின் டாங்கிகள், கவச வாகனங் கள், தொலைத்தொடர்பு வசதிகள், படையினர்கள் என்பவற்றை அழிக்க வேண்டியுள்ளது. இங்கு விமானப்படையின் பயன்பாடு முக்கியமாகிறது. இதைவிட, தற்பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் ஈராக் எப்படியாக Defence Lines அமைந்துள்ளன என்பதும் முக் கியமானது. பொதுவாகக் கூறினல், இப்படியான தரைப்போர்களில் வலிந்து தாக்கும் (Offensive) படையினரில் 3 முதல் 6 வரை பாதிக்கப் பட்டால், தற்பாதுகாப்பு நடவடிக்கையில் (Defense) ஈடுபடும் படையினருள் ஒருவர் பாதிக்கப்படுவர். எது விதத்திலும், நவீன
6

Page 26
- 38 -
போரில் இந்த விகிதாசாரம் எப்படி அமையும் என்பதை மதிப்பீடு செய்யவும் இந்த போர் மிகவும் வசதியாகவே உள்ளது. மேலும், தொழில் நுட்பம் முன்னேறியுள்ள காலத்தில், கண்ணிவெடிகளும், அகழிகளும் அமைக்கப்பட்ட ஒரு மரபு ரீதியான தரைப் போராக வுமே இது உள்ளது.
தரைப் போரைப் பொறுத்தமட்டில் இரு தரப்பிலும் உள்ள படைகளின் எண்ணிக்கைகளும், அவற்றின் போர் அனுபவமும், மன வலிமையும் மிகவும் முக்கியமாகிறது. ஈராக்கியரது படைகளின் எண்ணிக்கையான படைகளை இங்கு அமெரிக்கரும், சினேகநாடுகளும் கொண்டுள்ளனர். ஆனல், ஈராக்கியப் படைகள் குவைத், ஈராக் என்ற இரண்டையும் பாதுகாக்க வேண்டியிருக்கும் நிலையில், அவர் களது படைகள் பாரிய பிரதேசத்துக்குச் சிதறப்பட்டிருக்கும். ஆனல், அமெரிக்க, மேற்கு - ஐரோப்பிய படைகள் சில தெரிந்தெடுக்கப்பட்ட புள்ளிகளுடாகவே உட்புகமுடியுமாகையால், படையின் செறிவு கூட வாகவிருக்கும். இது ஈராக்கியரை வாய்ப்புக் குறைந்த நிலைக்குத் தள்ளுகிறது. எது விதத்திலும், இப்படியான தரைப்போர்களில் படையினரின் பயிற்சி, அனுபவம் என்பவை மிக முக்கியமாகும்.
போர் பயிற்சியைப் பொறுத்தமட்டில் பெரும்பான்மையான அமெரிக்க, மேற்கு - ஐரோப்பியப் படைகள் வணுந்தர, அரை வணுந் தர போர்களுக்கு ஏற்ற விதத்தில் பயிற்றப்படாத நிலைதான் பெரி தும் காணப்படுகிறது. பிரான்சு அதனது படைகளுக்கு ட்ஜிபுத்தியி லும், சாட்இலும் வனுந்தர, அரை - வனந்தரப் போர்ப் பயிற்சிகளை அளித்து வருகிறது. அமெரிக்கா அதனது விசேட படைகளுக்கு அங் குள்ள அரை - வஞந்தரப் பகுதிகளில் பயிற்சி அளித்து வருகிறது. ஆனல், பிரித்தானியருக்கு இதற்கான வசதிகள் இல்லையென்றே கூற வேண்டும். ஈராக்கியர்கள் தமது படைகளுக்குத் தமது நாட்டின் தரையான வணுந்தர, அரை வனந்தர பூமியில் பயிற்சியைக் கொடுக் கின்றனர். இது ஈராக்கியரை அமெரிக்க, ஐரோப்பிய படைகளிலும் வாய்ப்பான நிலையில் வைக்கிறது.
போர் அனுபவத்தினைப் பொறுத்தமட்டில், 1980- 1988 வரை ஈராக்கியர்கள் தொடர்ச்சியாகப் போரில் ஈடுபட்டே வந்துள்ளனர். ஆனல், அமெரிக்கரும், ஐரோப்பியரும் தமது நவீன டாங்கிகளைக் கொண்டு எவ்வளவு தூரத்திற்கு வனுந்தர அரை - வனந்தரப்போரில் திறமையாகப் போரிட முடியும் என்பது கேள்விக் குரியதே. அமெரிக்கர்கள், பிரித்தானியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் இரண்டாவது உலக யுத்தத்தில் இப்படியான பிராந்தியங்களில் போர் இட்டு வெற்றியடைந்தது உண்மைதான். ஆனல், இன்று போரிடுகிறவர்கள்

-- 39 --
இவர்களின் அடுத்த சந்ததியினரே இவர்களது நவீன டாங்கிகளும் ஐரோப்பிய தரைக்கும், சுவாத்தியத்திற்கும் ஏற்றவாறே பெரும் பாலும் உருவாக்கப்பட்டவை. பிரான்சினைப் பொறுத்தவரையில் அது சாட்டில் சிறிது காலம் போரிட்டு சற்று அனுபவமும் உண்டு. டாங்கிகள் பரீட்சிக்கவும்பட்டன. இஸ்ரேல் ஊடாகவே அமெரிக்கா, பிரித்தானியா என்பவை தமது டாங்கிகளை வனந்தரங்களில் பரீட் சித்தனர். இது இசுரேலியர்களுக்கு வனந்தரப்போர் தொடர்பாக வும், டாங்கிகளைக் கையாளவும் அனுபவத்தினைக் கொடுத்ததுவே யன்றி, அமெரிக்கருக்கும், ஏனைய நாட்டுப் படைகளுக்குமல்ல ருசிய டாங்கிகள் அமெரிக்க, ஐரோப்பிய டாங்கிகளிளும் தரம்குறைந்தவை எனக் கருதப்பட்டாலும், அவற்றை வனந்தரப் பகுதிகளில் சிறந்த முறையில் கையாளும் அனுபவத்தினை ஈராக்கியர்கள் கொண் டுள்ளனர்.
சிறு ஆயுதங்களைப் பொறுத்தமட்டிலும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆயுதங்கள் வனந்தரத்தில் சிறப்பாகச் செயற்படமாட் டாத நிலைதான் காணப்படுகிறது. மேற்கு நாடுகளின் சிறு ஆயுதங் களைப் பயன்படுத்தி, போரின்போது அவற்றில் பிரச்சனைகளை எதிர் நோக்கிய இசுரேலியர்கள், ருசிய ஆயுதங்களைச் சிறு சிறு திருத்தங் கள் செய்து, உருவாக்கிப் பயன்படுத்திவருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்க, மேற்கு நாடுகளின் சிறு ஆயுதங்களும்இன்றைய வளை குடாப் போர் ஒரு பெரும் களப்பரீட்சையாகவே உள்ளது.
வைகள் அனைத்தையும் ஆராயும் போது, அமெரிக்காவினதும், ஐரோப்பிய நாடுகளினதும் வெற்றியானது இராணுவ - தொழில்துட்ப முன்னேற்றம், தந்திரோபாயங்கள் என்பவற்றில் தான் பெருமளவில் தங்கியுள்ளது. குறிப்பாக:
(1) எவ்வளவு தூரத்திற்கு அவர்கள் ஈராக்கியரின் ஏவுகணைகள், டாங்கிகள், ஆயுதத் தொழிற்சாலைகள், அணு-விஷவாயு-இரசா யன ஆயுத உற்பத்தியாலைகள், ஆயுதக் கிடங்குகள், தொலைத் தொடர்புகள், Republican Guards படைப் பிரிவுகள் என்பவற் றை யெல்லாம் கண்டறிந்து, தரைப் போரை ஆரம்பிக்கு முன்னர், இவற்றை முற் கூட்டியே அழிக்கின்றனர்; (2) ஈராக் எங்கெங்கு, எவ்வளவு பலமான படைகளை வைத்திருக் கின்றனர் என்பவற்றை அறிந்து, அழித்து அவற்றிற்கு ஏற்ற வாறு கேந்திர புள்ளிகளுடாகத் தமது படைகளை நகர்த்துதல்; (3) எவ்வளவு தூரத்திற்கு ஈராக்கியரின் விமானப் படைகளையும், விமானத் தளங்களையும் முன்கூட்டியே அழித்துச் செயலற்ற தாக ஆக்குதல்.

Page 27
- 40 -
இவைகளைத் திருப்தி கரமாகச் செய்யவும், போரின் போது ஏற் படக் கூடிய நடைமுறைச் சிக்கல்களை அறிந்து கொள்ளவும் காலம் சிறிது எடுக்கும். ஆகவே தரைப் போர் ஆரம்பிக்கப்பட சில வாரங் கள் எடுக்கும்.
தரைப் போரை ஆராயும் போது, விமானத் தாக்குதல்கள் மிக முக்கியமான தென்பதை அறிந்தோம். ஆகவே, தரைப் போருக்கு உதவியாகவிருக்கும் விமானப் படைபற்றியும் இங்கு கவனமாக ஆராய வேண்டியுள்ளது.
விமானப் படைப் பலம்:
விமானப் படைகளைப் பொறுத்தமட்டில், அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் வளைகுடா, மற்றும் துருக்கிப் பகுதிகளில் 1,700 இற்கு மேற்பட்ட பலதரப்பட்ட விமானங்கள் உள்ளன. பார சீகக் குடாக் கடலில் விமானம் தாங்கிக் கப்பல்களில் மாத்திரம் 400 விமானங்கள் வரையுள்ளன. இவற்றைவிட, பாஹ்றெயின், ஒமான், கட்டார், UAE என்பவற்றிலும், சவுதிஅரேபியாவிலும், துருக்கியிலும், இந்து சமுத்திரத்திலுள்ள டியகோ கார்சியாத்தீவிலும் குண்டுவீச்சு, போர் விமானங்கள் உள்ளன. B-52 என்ற பாரிய 8 என்ஜின்களைக் கொண்ட குண்டுவீச்சு விமானங்கள் டியாகோ கார்சியாவில் இருந்து தாக்குதல்களில் ஈடுபடுகின்றன. இவைகள் குறுகிய, நீண்டதாக்கல் தூரங்களையுடைய ஏவுகணைகளையும், குறுாஸ் மிசைல்களையும் (Cruise Missiles) காவக்கூடியதுடன், அணு - ஆயுதங்களையும் வீசக்கூடியவை.
பாரிய B - 52 குண்டு வீச்சு விமானங்கள் இலக்கினைக் குறிப்பாக அடிக்கப் பயன்படுத்த முடியாது. இவை பெரும் பிரதேசத்தினைத் தாக்கவே உகந்தவை. இவற்றின் பயன்பாடு ஈராக்கில் நகரங்களும், பொது மக்களும் பாரிய அளவில் பாதிக்கப்படும் நிலையை வெளிக் காட்டுகிறது. பெப்பிரவரி முதற் தொடக்கத்தில் B - 52 விமானம் ஒன்று இந்துசமுத்திரத்தினுள் வீழ்ந்ததாகவும், அதன் ஒட்டிகளில் மூவரே மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இது இந்த விமா னங்கள் டியாகோ கார்ஷியாத்தீவு தளங்களில் இருந்து செயற்படு வதை உறுதிப்படுத்துவதாக அமைவதுடன், இந்துசமுத்திரத்தினை யும், அதன் நாடுகளையும் அமெரிக்கா ஆதிக்கம் செய்ய டியாகோ கார்ஷியா நிரந்தரத் தளங்கள் எவ்வளவிற்குப் பயன்படவுள்ளது என்ப்தையும் அறிய உதவுகிறது.
B - 52 குண்டுவீச்சு விமானங்களைவிட 8 - 111 குண்டு வீச்சு விமானங்கள் சவுதி அரேபியா, துருக்கி, ஒமான் என்பவைகளில் இருந்து செயற்படுகின்றன. ஒலியிலும் வேகமாகப் பறக்கும் இந் தக்குண்டு வீச்சு விமானங்கள் அணு - குண்டுகளையும், ஏவுகணைகளை யும் Cruise Missiles களையும் காவக்கூடியவை.

- 41 -
B - 52 லிருந்தும், F - 111 விமானங்களில் இருந்தும் ஏவப்படும் Air Launched Cruise Missiles (ALCM) 6 Faial 6T6 giTurógigs Isthug, மானவை என்பது கேள்விக்குரியதே. இவைகள் இப்போரிலேதான் நிஜக்களப் பரீட்சைகள் செய்யப்படுகின்றன. தரையில் நடாத்தப் படும் தாக்குதல்களில், இவைகள் எவ்வளவு தூரத்திற்கு முற்கூட் டியே தெரிவு செய்யப்பட்ட இலக்குகளைக் குறிப்பாக அடிக்கவல்லன என்பது மிகவும் முக்கியமானது. அமெரிக்காவின் Patriot ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களைப் போலவே, அமெரிக்காவின் ATOM களும் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன. பல ALOMs இலக்குகளைக் குறிப் பாக அடிக்காது போனமை அமெரிக்காவினயேயே ஏற்கப்பட்டுள் ளது. அமெரிக்க ALOMகள் போரின்போது, கீழிருந்து விமான எதிர்ப்பு பீரங்கிகள் செயற்படும் நேரத்திலும் Surface-to - Air Missile; ஏவப்படும் நேரத்திலும் பாதைகள் மாறும் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. இந்த நிலையில் தரையிலுள்ள இலக்குகளைத் தாக்கும்போது, குறுாஸ் மிசைல்கள் எவ்வளவிற்கு நம்பத்தகுந்தவித மாக இலக்குகளை அழித்திருக்க முடியும் என்பது கேள்விக்குரியதே.
எதுவிதத்திலும் அமெரிக்கா அதனது, AICM களை இந்த நிஜப் போரில் பரீட்சிப்பமை, அவர்கள் தமது ALOMs இன் நம்பத்தகும் தன்மையை எடைபோடவும், திருத்தங்கனை ஏற்படுத்த உதவும் வகையிலும் இருந்தாலும், அமெரிக்க AICMsஇன் உண்மைநிலை அமெரிக்கருக்கும், ருசியருக்கும், உலகிற்கும் தெரியும் நிலையும் ஏற் பட்டுள்ளது. இவற்றுக்கு மேலாக, ALOMsஇன் பயன்பாடுகள்மூலம் ஈராக்கின் இராணுவ ஸ்தலங்களைவிட, பொது மக்களும் பாரிய அளவில் பாதிக்கப்படுவதும் உறுதியாகிறது.
B - 52, F - 111 என்ற பாரிய குண்டுவீச்சு விமானங்களைத் தவிர, அமெரிக்காவும், மேற்கு - ஐரோப்பிய நாடுகளும் பலதரை தாக்கும் Giuditaris&T (Ground Attack Air Crafts) Liu áruGasgsgåroarif grotiuit (Harrier) Guit(G) Gl-T (Tornado), g5-2, it (Jaguar), அமெரிக்க 8-15, F-16, பிரெஞ்சு மிராஜ்ஷ் (Mirage) விமானங்களும் பயன்படுத்துகின்றன. இந்த விமானங்கள் லேசரால் வழிகாட்டப் Gub gador 5 air (Lascr. Guided Bombs), Air - to - Air Missiles மற்றும் அணுக் குண்டுகளையும் காவக்கூடியவை. இந்த விமானங்கள் இலக்கினை அண்மித்துச் சென்றும், தாழப் பறந்தும் தரைத் தாக்கு தலை நடாத்த முடியும். இவற்றின் பயன்பாடே ஈராக்கிய இலக்கு களைப் பெரும்பாலும் குறிப்பாக அடிக்க உதவியிருக்க முடியும். ஆனல் நிலத்தில் இருந்து விமான எதிர்ப்புப் பீரங்கிகளின் வெடி தீர்ப்பின் மத்தியிலும், Surfac-to-Air ஏவுகணைகளின் மத்தியிலும் இந்த விமான ஒட்டிகள் எவ்வளவு தூரத்திற்கு இலக்குகளை குறிப் பாக அடித்திருக்க முடியும் என்பது கேள்விக்குரியதே.
7

Page 28
- 42 -
அமெரிக்க, பிரித்தானியா, பிரெஞ்சு, ஜேர்மனிய, நெதர்லாந்திய, இத்தாலிய, ஸ்பாரிய, பெல்ஜிய விமானங்களும், விமானிகளும் இப் போரில் எவ்வளவு தூரத்திற்குச் சிறந்த முறையில் தாக்குதல்களை நடத்தியிருக்க முடியும் என்பது முக்கிய கேள்வியாகிறது.
வியட்நாமிய யுத்தத்தின் பின்னர் (1975) அமெரிக்காவானது பாரிய விமானத்தாக்குதல்களில் ஈடுபடவில்லை. இதைவிட, இன்று போர் விமான ஒட்டிகளாக இருப்பவர்கள் பெரும்பாலும் புதிய தலைமுறையினரே. இவர்கள் பாரிய நிஜப்போரைச் சந்திக்கவே யில்லை ! பிரித்தானிய விமானங்களும், விமான ஒட்டிகளும், சிறிய எண்ணிக்கையில், 1982ஆம் ஆண்டிலே ஆர்ஜன்டீனுவுடன் நடாத்தப் பட்ட போரில் அனுபவத்தைச் சிறிது பெற்றனர். பிரெஞ்சு விமானி கள் சிறிய அளவில் சாட்டில் நடைபெற்ற போரில் அனுபவத்தினைப் பெற்றனர். ஏனைய நாட்டவர்கள் விமானப் போர் அனுபவத்தைப் பெறவே இல்லை. இந்த நிலையில், ஈராக்கின் மீதான விமானத் தாக்குதல்கள், உண்மையில், சகல விமானிகளுக்கும் நிஜப்போர் அனுபவத்தினைக் கொடுக்கும் ஒரு முயற்சியே! இரண்டாம் உலக யுத்தத்தில் பயன்படுத்திய குண்டுகளிலும் கூடிய குண்டுகள் ஈராக்கி லும், குவைத்திலும் 3 கிழமைகளுள் போடப்பட்ட போதும், அதனல் ஈராக்கியப் படைப் பலத்தின் 15%-20% விமானத்தையே நாசப்ப்டுத்தி யுள்ளதாக மேற்கு - நாடுகள் கணிப்பீடு செய்தமை இதனை உறுதிப் படுத்தும் வகையில் அமைகிறது. இந்த நிலையில், விமானத்தாக்கு தல்கள் சிறிது காலம் தீவிரப்படுத்தப்பட்ட பின்னரே தரைப் போர் ஆரம்பிக்கப்படலாம் என்று பிரித்தானிய விமானப்படை அதிகாரி கூறியுள்ளார்.
ஆனல், மூன்று கிழமைகளில் நடாத்தப்பட்ட குண்டு வீச்சுக்கள் ஈராக்கின் பொருளாதாரத்தினைப் பத்து ஆண்டுகள் பின்தள்ளியுள்ள தாக, அண்மையில், ஈராக் தொடர்பான போர்பற்றிப் பகிரங்க மாகக் கருத்துத் தெரிவித்தமைக்கு பதவிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி கருத்துத் தெரிவித்துள்ளார்.
இவைகள் ஒருபுறமிருக்க, ஈராக்கின் மீது விமானத் தாக்குதல் களை நடாத்தத் தொடங்கி 3 கிழமைகளாகக் குவைத்திலும், ஈராக் கிலும் காலநிலை விமானத்தாக்குதல்களுக்கு ஏற்றவாறே இருந்தன. குளிர் கால்ம் ஆகிய படியால், இன்றைய நிலையில், அங்கு முகில் கூட்டங்கள் தான் விமானங்களின் பறப்பிற்குப் பிரச்சனையாகச் சில சில நாட்களில் இருந்தன. ஆணுல், ஏப்பிரல் - மே மாதம் தொடங்குமே யாயின் அங்கு வேகமான காற்று வீசத்தொடங்குவதுடன், மண்' மழையும் தொடங்கிவிடும். அதாவது : காற்றிற்கு மேலெழும் மண் ஆனது முகில் போலக் காவிச்செல்லப்பட்டுப் பின்னர் நிலத்திற்கு

- 43 -
விழுவது. இப்படியான காலம் மே தொடக்கம் அக்டோபர் வரை யிருக்கும். இக்காலத்தில் வெப்பமும் 120°F வரை இருக்கும், இக் காலத்தினில் விமானங்கள் தாழ்வாகப் பறந்து தாக்குதல்களை நடாத்த முடியாது. ஆனல், B-52 போன்ற குண்டுவீச்சு விமானங்கள் உயரப்பறந்து, பிராந்திய அழிப்பில் ஈடுபட முடியும். இவற்றைப் பார்க்கும்போது, அமெரிக்கரும், மேற்கு - ஐரோப்பியரும் தரைப் போரினை ஏப்பிரல் - மேஇற்கு முன்னரே முடிவிற்கு கொண்டுவர வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படுமாயின், வளைகுடாப் போர் ஒரு நீண்ட கால யுத்தமாகவோ மாற்றமடையலாம்.
ஈராக்கியரைப் பொறுத்தமட்டில், அவர்களிடம் ஏறக்குறைய 700 விமானங்கள்வரையுள்ளன. இவை பெரும்பாலும் ருசிய MiG, Su, Tu ரக விமானங்களும், சிறிய எண்ணிக்கையான (Mirage Frence) விமானங்களுமாகும், சுருங்கக் கூறினல், அமெரிக்க, ஐரோப்பிய படைகள் ஆகாயத்தில் வலிமை கூடியதாகவே உள்ளன. இவர்களி டம் நவீன Air-to-Air Missiles களும் இருப்பமை ஈராக்கிய விமா னங்கள் ஆகாயச் சண்டையில் பாரிய இழப்புக்களை சந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்களையே ஏற்படுத்தும். இந்த நிலையில், ஈராக்கியர்கள் தந்திரோபாய ரீதியில்தான் ஆகாயப் போரை நடாத்த வேண்டியுள் ளது. ஈராக்கும் போரின் முற்பகுதியில் விமானங்களை பயன்படுத்த முற்படுமேயானல், அது அதனது விமானப்படையின் கணிசமான பகுதியை போரின் முற்பகுதியிலேயே இழக்க நேரிடும். இது, தரைப் போர் ஆரம்பமான பின்னர் அமெரிக்கருக்கு எதிராகவும், தமது தரைப் படைகளுக்கு ஆதரவாகவும் தந்திரோபாய ரீதியிலான போரை நடாத்த முடியாது செய்யும். இந்த நிலையில், அமெரிக்கர்கள் தமது விமானப்படைத் தாக்குதல்களை நடாத்தும்போது, ஈராக்கியர் கள் தமது விமானங்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில், நிலத்திலிருந்து விமான எதிர்ப்புப் பீரங்கிகள் elpa) (plb, Surface - to air missiles eupa (pub gyGulf dias, gCBTIt lit u விமானங்களைச் சுட்டுவீழ்த்த வேண்டும். இப்படிச் செய்வது பிரசாரப் போருக்குச் சிறந்ததாகவே அமையும். முதலில் நடைபெறும் விமானத் தாக்குதலின்போது, அமெரிக்க, ஐரோப்பிய படைகள் கூடிய எண் ணிக்கையான விமானங்களை இழந்ததுபோன்ற ஒரு வித தோற்றத் தினையே இது கொடுக்கும். இவற்றுக்கு மேலாக, அமெரிக்க, மற்றும் விமானிகள் கைப்பற்றப்பட்டு, அவர்கள் பிரசாரத்திற்கு ஈராக்கினல் பயன்படுத்த முடியும். இது அரசியல் ரீதியில் இலாபங்களை ஈராக் கிற்குக் கொடுக்கும்.
எது விதத்திலும், காலப்போக்கில், ஈராக்கியரது இந்தத் தந்தி ரோபாயம் பயனற்றதாகப் போவது மாத்திரமன்றி, ஆபத்தானதா வும் வரும் சந்தர்ப்பங்கள் உண்டு. ஈராக்கிய விமானங்கள் எங்கெங்கு

Page 29
- 44 -
மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை அமெரிக்கர்களும், ஐரோப் பியரும் அறிந்தால், அவர்கள் விசேட குண்டுகளைப் போட்டு அவற்றை அழிக்க முடியும், இதைவிட, தரைப்போரின்போதோ, அல்லது ஈராக், குவைத் என்பவை கைப்பற்றப்படும்போதோ இந்த விமானங்கள் அழிக்கப்படலாம், அல்லது அனைத்து விமானங்களும் கைப்பற்றப் படலாம். இது ஈராக்கில் சதாம் ஹ"செயின் ஆட்சி முழுமையாக நீக்கப்பட வழிவகுக்கும். சதாம் ஹ"செயின், ஈராக் கைப்பற்றப்பட்டு, அமெரிக்காவின் பொம்மை ஆட்சி அங்கு நிறுவப்பட்டாலும், அதற்கு எதிராகப் போராடி ஆட்சியைக் கைப்பற்றுவதாயின், விமானங்களில் ஓர் பகுதி அயல் நாடு ஒன்றில் வைக்கப்படவேண்டியே உள்ளது.
இன்றைய நவீன உலகத்தில் இப்படியான முயற்சி நடைமுறை யில் சாத்தியமா என்ற கேள்வி இங்கு எழலாம். ஆனல், அரபுகளின் வரலாறுகளும், சதாம் ஹ"செயினின் வரலாறும் இது சாத்தியமென்றே நிரூபிக்கின்றன. (விபரங்களுக்கு பகுதி -1 இனப்பார்க்கவும்)
இப்படியான நடவடிக்கைகள் தொடர்பாக ஈரானும், ஜோர்தா னும் ஈராக்கிற்கு முக்கியமாகின்றன. இந்த இரு நாடுகளிலும் எந்த நாட்டில் விமானங்களை விடுவது குறுகிய காலக் கண்ணுேட்டத்திலும், நீண்ட காலக் கண்ணேட்டத்திலும் அரசியல், இராணுவ தந்திரோபாய வெற்றியை சதாம் ஹ"செயினுக்கும், ஈராக்கிற்கும் கொடுக்கும் என் பதை ஆராய்ந்தே சதாம் ஹ"செயின் திட்டங்களை நடைமுறைப் படுத்தவேண்டியுள்ளது,
ஜோர்தான், ஈரான் என்ற இரு நாடுகளையும் எடுத்துக்கொண்டால் ஜோர்தான் ஈராக்குடன் சுமூக உறவு நிலையைக் கொண்டே வந் துள்ளது. இந்த நிலையில், ஜோர்தானில் ஈராக் விமானங்களை விடு வதே 8 வருடங்கள் போரை நடாத்திய ஈரானில் விடுவதிலும் சிறந்த தென்ற முடிவுக்கு திடீரென ஒருவர் வரலாம். ஆனல், தந்திரோபாய ரீதியில் இது பிழையான முடிவே.
இராணுவ தந்திரோபாய அடிப்படையில் இதனை ஆராய்ந்தால், ஜோர்தான் ஆனது இஸ்ரேல், சிரியா, ஈராக், சவுதி அரோபியா என்பவைகளால் சூழப்பட்ட ஒரு நாடாகும். இந்த நிலையில், அங்கு விமான்ங்களை விட்டால் அவை இஸ்ரேலினுலோ, அல்லது அமெரிக் கராலோ அழிக்கப்படலாம். ஆணுல், விமானங்களை ஈரானில் விட்டால் அவைகள் அமெரிக்கரால் அழிக்கப்பட்டால், ஈரானிய மக்களின் எதிர்ப்பு அமெரிக்கா மீது அதிகரிக்கும். ஜோர்தான் ஈராக்கிற்கு எதி ர்ானதாக இல்லாத நிலையிலும், அது காலப் போக்கில் இசுலாமின்கீழ் இணைக்கக் கூடியதாகவும் இருப்பதால், ஈரானிகில் விமானங்களை விடு வது ஈரானையும் வளைகுடாப் போரினுள் இழுக்கவும் உதவும். ஈரானில்

- 45 -
ஏற்கனவே இசுலாமிய தீவிரவாதிகள் அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் போரில் ஈடுபட வேண்டும் எனக் கோரிவரும் நிலையில், ஈரானினுள் விமானங்களைப் புகவிடுவது ஈராக்கிற்கு இலாபத்தினையே கொடுக்கும். ஈரானில் இன்று இருக்கும் மிதவாத ஆட்சியாளர்களுக்கு இது பெரும் பிரச்சனையையே கொடுக்கும்.
ஈராக்கில் பெரும்பான்மையினர்கள் சீயா இசுலாமியராக இருப் பது, சீயா இசுலாமிய நாடான ஈரான் காலப் போக்கில் ஈராக் கியரைப் போரில் ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்திற்குள் தள்ளும். இதனல், மிதவாத ஈரான் ஆட்சியாளர்களை ஈராக்போர் தொடர் பாக ஏதோ ஒரு விதத்தில் செயற்படவும் இது தள்ளும். ஏனெனில், போர் விஸ்தரிக்கப்படுமேயாயின், ஈரானினும் நிலைமைகள் மோச மடையும்.இது ஈரானின் ஆளும் வர்க்கங்களைத் தமது அதிகாரம்பற்றிச் சிந்திக்கவும் வைக்கும்.
இவற்றை யெல்லாம் எடைபோடும் போது, ஈராக் அதனது விமானங்களையும், ஒட்டிகளையும் ஈரானில் தஞ்சம் புகவிடுவதே தந்தி ரோபாய நீதியில் சிறந்ததாகும். இதன் மூலம் ஈராக் அதனது எதிரி நாடான ஈரானையும் வளைகுடாப் போரில் ஒருவித பங்குபற்றலே. ஏற்படுத்துறையில், ஜோர்தான், ஈரான் என்ற இரு நாடுகளைக் காலப்போக்கில் வளைகுடாப் போர் தொடிர்பாகச் செயற்படி வைக்க முடியும். இதனையே ஈராக் செய்தது. இதுவரையில் ஏறக்குறைய 140 ஈராக்கிய விமானங்கள் ஈரானில் தஞ்சம்புகுந்ததாக மேற்கு நாடுகள் கூறுகின்றன. தவிர்க்க முடியாதபடி, இந்த விமானங்களை யும், ஒட்டிகளையும் பாதுகாக்கச் சம்மதித்த ஈரானிய ஆட்சியாளர் கள், இந்த விமானங்கள் போர் முடியும்வரை தமது கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற உறுதிமொழியை அமெரிக்காவிற்குக் கொடுத்துள் ளனர். எதுவிதத்திலும் போர் பெரிதாகுமேயானல், ஈரானும் போரினுள் இழுக்கப்படலாம் என்ற அச்சம், ஈரானியரை அமை தியை நிலைநாட்டப் பெரும் முயற்சியை எடுக்க வைத்துள்ளது. இன்று ஈரான் வளைகுடாச் சமாதானம் தொடர்பாக ஒருதிட்டத் தையும் முன்வைத்துள்ளது.
ஈரான் வளைகுடா தொடர்பாக ஒரு சமாதானதிட்டத்தினை முன் வைக்கையில், ஜோர்தான் மக்கள் ஹ"செயின் அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஈராக்கினை அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டினர். இது வளைகுடா தொடர்பாக புதிய கருத்துக்களை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
இவைகள் ஒருபுறமிருக்க, எதிரியின் விமானப் படையினைப் பய னற்றதாக ஆக்குவதாயின், எதிரியின் விமானத் தளங்களும், ஒடு பாதைகளும் அழிக்கப்படவேண்டும். இதைவிடத் தொலைத்தொடர்பு
8

Page 30
- 46 -
வசதிகள், எரிபொருள் குதங்கள் என்பவையும் அழிக்கப்படவேண் டும். ஆனல் இங்கு எழும் பிரச்சனை என்னவென்றல், ஈராக், குவைத் என்பவைகள்மீது பாரிய தரைமார்க்கமான தாக்குதல்களை நடாத்தும்போது அமெரிக்காவும், அதன் சினேக நாடுகளும் தமது படைகளுக்கு ஆயுதங்கள், எரிபொருட்கள், குடிநீர், உணவு, மருந்து கள் என்பவற்றை விநியோகிக்க வேண்டியதுடன், மருத்துவ வசதி களையும் ஏற்படுத்தவேண்டியுள்ளது.
குவைத்தினைப் பொறுத்தமட்டில் இவற்றைக் கடல்மூலமும், எல்லையூடாகவும், விமானங்களைப் பயன்படுத்தியும் செய்யமுடியும். குவைத்தானது 17,818 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண் டுள்ளதாலும், இதனை 2 - 3 மணி நேரங்களில் கடக்கக்கூடியதாகை யாலும், குவைத்தின் விமான தளங்களும், விமான நிலையங்கள் அழிக்கப்பட்டாலும், அமெரிக்கர்கள் தமது அத்தியாவசிய தேவைப் பொருட்களை தரைமார்க்கமாகத் தமது படைகளுக்கு விநியோ கிக்க முடியும். மேலும் குவைத்தின் ஜனத்தொகை ஏறக்குறைய யாழ்குடாவின் ஜனத்தொகை யாதலால், பொது மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் விநியோகமும் தரைமார்க்கமாகச் சுலபமானமுறையில் செய்யமுடியும். ஆனல் 438, 317 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள ஈராக்கில் அமெரிக்கர்கள் தமது படைகளுக்கு அத்தியாவசியப் பொருட்களைத் தரைமார்கமாக மாத்திரம் விநியோ கிப்பது சற்றுக் கடினமானதுடன், காலதாமதமும் ஏற்படும். குறிப் பாக மருத்துவ வசதிகள் இந்தநிலையில், ஈராக்கின் சகல விமான நிலையங்களையும் குண்டுவீசி அழிப்பது குறிப்பாக ஓடுபாதைகளை அழிப்பது, சற்றுப் பிரச்சனைக்குரியதே.
எதுவிதத்திலும், இன்று விஞ்ஞானம், தொழில் நுட்பம் என்ப வைகள் முன்னேறியுள்ள நிலையில், திடீர் விமான ஓடுபாதைகள் அமைக்கும் முறைகள் இன்று உருவாக்கப்பட்டே உள்ளன. பாரிய விமானங்கள் ஏறி - இறங்கக்கூடிய ஓடுபாதைகள் ஒருசில நாட் களில் அமைக்கப்பட முடியும். இதனையும், முக்கிய பொருட்களின் விநியோகப்பிரச்சனையையும் எடைபோட்டே அமெரிக்கர்கள் ஈராக் கின் சகல விமான ஓடுபாதைகளையும் அழிப்பதுபற்றித் தீர்மானத்தை எடுக்கவேண்டும் .
இவற்றையெல்லாம் பார்க்கும்போது, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஈராக்கின் விமானங்களைவிட ஏறக்குறைய 2 மடங்குகள் அதிகமான நவீன விமானங்களைக் கொண்டிருக்கும்போதிலும், ஈராக் கின் விமானப்படைகளிடமிருந்து எந்தவித எதிர்ப்புக்களும் இல்லா திருக்கும் போதிலும், அமெரிக்க, ஐரோப்பிய விமீானத்தாக்குதல்கள் பெரும் தோல்வியையே தழுவியுள்ளது. மூன்று வார விமானத்

- 47 -
தாக்குதல்களில் ஈராக்கிலும், குவைத்திலும் இரண்டாவது உலக யுத்தத்திலும் அதிகமான குண்டுகள் வீசப்பட்டும், நவீன ஏவுகணை கள், குறுரஸ் மிசைல்கள் என்பவையெல்லாம் பயன்படுத்தப்பட்ட போதும், அமெரிக்கரும், ஐரோப்பியரும் ஈராக்கின் பலதரப்பட்ட சிவிலியன் தொழிற்சாலைகளையும், உற்பத்தி ஆலைகளையும், பாலங் களையும், எண்ணெய்க் கிணறுகளையும் அழிக்க முடிந்ததேயன்றி, ஈராக் கின் இராணுவ பலத்தின் 15% - 80% மானதையே அழிக்கமுடிந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தோல்விக்கு முக்கிய காரணங் கள் பின்வருமாறு :
(1) ஈராக்கியர்கள் போர் தொடர்பாக எடுத்திருந்த முன்னேற்
Lurt(6)56its
(2) அமெரிக்க, ஐரோப்பிய நவீன தொழில் நுட்ப ஆயுதங்கள் எதிர்நோக்கிய நடைமுறைச் செயற்பாட்டுப் பிரச்சினைகள்: (3) அமெரிக்க, மேற்கு - ஐரோப்பிய விமான ஒட்டிகளின் அனு
பவமற்ற நிலை. இவைகள் அனைத்தும் அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடு களும் தமது விமானத் தாக்குதல்களைத் தொடர வேண்டிய நிர்ப் பந்தத்திற்குத் தள்ளிய அதே வேளையில், தமது விமானப்படை ஒட்டிகளது பயிற்சிகள் பற்றியும், தமது Cruise Missiles மற்றும் ஆயுதங்கள் பற்றியும் மறுகணிப்பீடு செய்ய வேண்டியுமுள்ளது.
போருக்கான அத்தியாவசியத் தேவைப் பொருட்களின் விநியோகம் :
தரைப்போரை நடாத்தும் போது உணவு, குடிநீர், எரிபொருள், மருந்து வகைகள், ஆயுத விநியோகம், மருத்துவ வசதிகள் என்பவை இன்றியமையாததாகின்றன. 5 லட்சம் படைகள் வரை அமெரிக் காவும், அதன் சினேக நாடுகளும் சவுதி அரேபியாவிலும், ஏனைய நாடுகளிலும் வைத்திருக்கும் போது இந்த விநியோகம் அதிக பிரச் சனையாக இல்லாது போனலும், தரைப்போர் தொடங்குமேயானல், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் பெரும் பிரச்சனையாகவே இருக்கும். அதிலும், முன்னர் குறிப்பிட்டதைப் போல், குவைத்தினில் தரைப்பேர்ரை நடாத்தும் போது விநியோகப் பிரச்சனையை ஒரள விற்குச் சுலபமாகச் செய்ய முடியும். ஆனல் பரந்த பிரதேசமான ஈராக்கில், இது பாரிய பிரச்சனையாகவே இருக்கும்.
குவைத், ஈராக், சவுதிஅரேபியா போன்ற நாடுகளில் முக்கிய பிரச்சனையாகவிருப்பது நீரே இந்த நாடுகளில் கடல் நீரை உப்பு நீக்கியே பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. ஈராக்கினில் யூப்பிறட் டிஸ், டைகிறிஸ் நதிகளில் இருந்து நீர் கிடைக்கப்பெற்றலும், யூப்

Page 31
- 48 -
பிறட்டிஸ் நதியிலிருந்தே பாரிய நீர் ஒழுக்கு உண்டு. ஆனல், பகுதி 1இல் கூறப்பட்டபடி, யூப்பிறட்டிஸ் நதியிலும் நீர் ஒழுக்கு குறை வாகவே இன்று உள்ளது. மேலும், ஈராக்கின் மின்சக்தி நிலையங்க்ள் பாதிக்கப்பட்ட நிலையில், நீர் விநியோகம் ம்ேலும் பாதிக்கப்பட் டுள்ள்து.
நீர் விநியோகப் பிரச்சனையினை சவுதி அரேபியா, பாஹ்றெயின் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு உருவாக்கி, அங்கு தங்கியிருக்கும் அமெரிக்க மற்றும் படைகளுக்கும், மக்களுக்கும் நீர் பிரச்சனையினை ஏற்படுத்துவதாயின், வளைகுடா கடல் பகுதியுள் பெற்ருேலியத்தினை இறைக்க முடியும். இது வளைகுடாவின் கடல் பகுதியில் இருந்து நீரைப் பெறுவதைத் தற்காலிகமாக நிறுத்திஞலும், காற்று வீச்சினைப் பொறுத்து வெவ்வேறு பகுதிகளையும், கரையோரங்களையும் அடைந்து, பாரிய Ecological பிரச்சனைகளை நீண்ட காலத்திற்கு ஏற்படுத்தும். ஈராக்கியர் இதைச் செய்தார்களோ இல்லையோ, ஏறக்குறைய 1மில் லியன் பீப்பா எண்ணெய் கடலினுள் கலந்துள்ளது. இதனுல் சவுதி அரேபியாவின் கடல்நீர் சுத்திகரிக்கும் Plantsகளில் சில செயற்படாது நிறுத்தப்பட்டு, பெப்பிரவரியின் இரண்டாவது வாரமே மீண்டும் இயக்கப்பட்டன.
இவை ஒரு புறமிருக்க, பாரிய தரைப்போரை நடாத்த முற்படும் அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஆயுதங்கள், உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் விநியோகங்களையும் செய்ய வேண்டியே உள்ளது. அமெரிக்காவும், சினேக நாடுகளும் ஈராக்கின் மீதான படையெடுப்பை ஐரோப்பாவில் இரண்டாம் உலக யுத்தத்தின் போது நடாத்திய " நோர்மண்டி படையெடுப்புடன் ஒப்பிட முடியாது. அன்று ஹிட்லரின் அதிகாரத்திற்குட்படுத்தியிருந்த பிரெஞ்சு மக்களும், ஏனைய நாட்டு மக்களும் அமெரிக்க, பிரித்தானிய படைகளுக்கு ஆதரவு கொடுத்தனர். ஆனல் இங்கு அப்படியல்ல. அங்கு தரை ரயில் போக்குவரத்துக்கள் சிறந்த முறையில் இருந்தன. ஆனல், இங்கு அப்படியல்ல! அன்று பிரான்சில் மின்சக்தி விநியோகம் இருந் தது ஆனல், இன்று ஈராக்கில் அது இல்லை. மொத்தத்தில், ஈராக் கினைப் பொறுத்தமட்டில், அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் அமெரிக்காவிற்கும், சினேக நாடுகளுக்கும் பெரும் பிரச்சனையாகவே இருக்கும்.
குவைத்தின் மீது தரைப்போரை நடாத்தும் போதும் குவைத் மக்களின் ஒத்துழைப்பு அதிகம் இருக்குமென்றும் கருத முடியாது. ஈராக் குவைத் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, குவைத்தின் சந்தர்ப்வாத வர்க்கங்கள் நாட்டைவிட்டு வெளியேறியே உள்ளனர். இந்த நிலையில், நிலைமைகள் சற்று வேறுபட்டதாகவே இருக்கும்.

- 49 -
மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவதைப் பொறுத்த மட்டில், இன்று சில மணி நேரங்களில் போர்களங்களில் வைத்தியசாலைகளை அமைக்கும் முறைகள் கண்டு பிடிக்கப்பட்டே உள்ளன; ஆனல், இது வரையில், அமெரிக்கரும், ஐரோப்பியரும் தமது திட்டங்களையெல்லாம் ஐரோப் பாவில் ருசியருக்கு எதிரான போர்களில் பயன்படுத்தும் விதத்தில் தான் உருவாக்கியுள்ளனர். அதாவது திடமான தரை, பணிவிழும் குளிர் சுவாத்தியத்திற்கு ஏற்றவாறு ஆனல் இங்கோ மணல், அரை வனந்தரத் தரையும், வெப்பமும், மணல் மழையும் உள்ளன். இவற் றையெல்லாம் பார்க்கும் போது, ஈரர்க்கின் மீதான தரைப் போரைப் பொறுத்த மட்டில், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அத்தி யாவசியப் பொருட்களின் விநியோகத்தினைப் பொறுத்த மட்டில் பெரும் சவாலையே எதிர் நோக்குகின்றனர். இவற்றை எப்படியாகத் திறமையான முறையில் சமாளிக்கின்றனர் என்பதைப் பொறுத்தே அவர்களது ஈராக்கியருடன் நடாத்தும் தரைப்போரின் வெற்றி பெரிதும் தங்கியிருக்கும். w
அரசியல்-இராஜதந்திர அழுத்தங்கள் :
இன்றைய உலகினது முறைமையாக்கும் போக்கின் காரணமாக, ஒரு நாடோ அல்லது இனமோ " நீதியான, நியாயமான, தர்ம மான போராட்டத்தினைத் தாம் நடாத்துகிருேம் ' என்று கூறுவ தால், உண்மையில் எந்தவித கருத்தும் ஏற்படமாட்டாதென்றே கூற வேண்டும். உலக நாடுகளில், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை யில், எத்தனை நாடுகள், அதாவது ஆட்சிப் பீடத்தில் இருப்பவர்கள், எந்த விடயத்தினைச் சரி ' என்கிருர்களோ, அந்த விடயம் மாத்திரம் சரியாகிறது; எதனைப் ' பிழை" என்கிருர்களோ, அது பிழையாகிறது. இப்படியான உலக ஒழுங்கு முறையில், பாதிக்கப்படும், சுரண்டப்படும் நாடுகள் உலகில் கூடிய எண்ணிக்கையானதாக இருக்கும் நிலையில், பூகோள ரீதியில் பாரிய சுரண்டல்களிலும், ஆதிக்கம் செலுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடும் பலம் வாய்ந்த நாடுகளுக்கு எதிரான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அந்தத் தீர்மானங்களால் இந்த நாடு கள் கட்டுப்பட வேண்டிய நிலை ஏற்படுவது, இந்த நாடுகளின் பூகோள ரீதியிலான ஆதிக்க விஸ்தரிப்புக்கு ஒருவித தடைகளை ஏற்படுத்த முடியும். இந்த நிலையில், சகல அதிகாரங்களையும் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் கைகளில் விடாது, அவற்றில் சிலவற்றைப் பிரத்தி யேக சபையின் கைகளில் விட்டு, அந்த சபை விவாதிக்கும், தீர் மாணிக்கும் விடயங்களை முழுமையாக நிராகரிக்கும் உரிமையைப் பலம் பொருந்திய நாடுகள் தமது கைகளில் வைக்க வேண்டியுள்ளது.

Page 32
- 50 -
இப்படியான ஒரு முக்கிய சபையே ஐக்கிய நாடுகளின் " பாது காப்புச் சபை " (Security Council) ஆகும். ஐ. நாவின் பாதுகாப்புச் சபையில் வல்லரசுகளான அமெரிக்கா, ருசியா, பிரித்தானியா, பிரான்சு, சீன என்பவைகளுக்கு வீற்டோ" (Webo) அதிகாரம் கொடுக் கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, உலகின் குறிப் பிட்ட பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பாக எந்த வித விவாதங்களையும், தீர்மானங்களையும் சபை எடுக்கும் அதிகாரம் நிராகரிக்கப்படலாம். இந்தப் பாதுகாப்பு சபையின் முக்கிய ஒரு தன்மை என்னவென்முல், அமெரிக்கா, ருசியா, பிரித்தானியா, பிரான்சு, சீனு என்பவைகள் நிரந்தர அங்கத்துவம் வகிக்கின்றன. இதில் தெரிவு செய்யப்பட்ட 10 அங்கத்துவ நாடுகளும் உள்ளன. இந்த நாடுகளை ஐ. நா. பொதுச்சபையே தெரிவு செய்கிறது. இந்த நிலையில், “ பாதுகாப்பு சபை'யில் அங்கத்துவ நாடுகளாகத் தெரிவு செய்யப்படும் நாடுகள் தமக்கு ஆதரவாக இருக்கக் கூடிய வகையில் அமையும் விதத்தில், தேர்தல்களின் போது வாக்களிக்கப்பட இந்த 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளும் பொதுசபையில் ஆதரவு தேடு கின்றன. மொத்தத்தில், பாதுகாப்பு சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள், பொதுவாக, அமெரிக்கா, ருசியா என்பவைகளின் ஆதிக் கத்தினை உலகில் ஏற்கும். நாடுகளாகவே இருக்கும். சில நாடுகள் அமெரிக்காவையும், மேற்கு நாடுகளையும் சற்றுச் சாய்ந்து இருக் கையில், வேறு சில நாடுகள் ருசியாவையும், சீனவையும் சற்றுச் சாய்ந்து இருக்கும் நிலை தான் பெரிதும் காணப்படுகிறது.
பொருளாதார, இராணுவ பலம்வாய்ந்த 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்படும் " பாதுகாப்பு" பிரச்சனைகளில் தமது நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தமது * வீற்டோ " அதிகாரங்களைப் பயன்படுத்துகின்றன. மொத்தத்தில், சிறிய நாடுகள் பார்வையாளர்களாகவும், உலகின் ஒருவித " ஒழுங்கு முறை'யின்கீழ் ஆதிக்கத்தினுள் உள்ளாக்கப்படுபவையாகவுமே இது பயன்படுகிறது. இந்த உலக ஒழுங்கு முறையை நாடுகள் எல்லாம் ஏற்றநிலையில், தத்தமது குறிக்கோள்களை அடைய, உலக நாடுகள் * பாதுகாப்புச் சபை ’, ‘ பொதுச் சபை " என்பவைகளூடாகச் செயற் படுகின்றன. இந்த நிலையில், சதாம் ஹ"செயினும், ஈராக்கிய மக்களும் பாலஸ்தீன மக்களின் உரிமைபற்றி அதிகம் பேசுவதோ, அல்லது அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கத் தாம் முற்படு வதோ சரி என்றும், நீதி என்றும், தர்மம் என்றும் கூக்குரலிட்டா லும், “ பாதுகாப்புச் சபை தீர்மானிப்பதே உலக முடிவு இது இன்றைய "உலக ஒழுங்கு முறை” யாகும்.
இதற்கு எதிராகச் செயற்படுவதாயின், சதாம் ஹ"செயி தும், ஈராக்கியரும் தம்மை இராணுவ ரீதியில் பலப்படுத்தித் தயமைப்

- 51 -
பாதுகாக்கத் தயாராக இருக்கவேண்டும். மறுபுறத்தில், அவர்கள் பொருளாதார ரீதியிலும் பலமுள்ளவராக இல்லாது போனல், தமது முயற்சியில் ஈற்றில் தோல்வியையே தழுவவேண்டி நேரிடும். எது விதத்திலும், "உலக ஒழுங்கு முறை'யின் கீழ் எவையெவைகள் சரி எனவும், பிழை எனவும் ஐக்கிய நாடுகளால் ஏற்கனவே தீர்மானிக் கப்பட்டுள்ளனவோ, அவற்றையும் பயன்படுத்தவேண்டியே உள்ளது. இவற்றல் மாத்திரம் வெற்றிகிடைக்குமென்பதற்கில்லை. வெற்றி, உண்மையில், இராணுவ - பொருளாதார பலத்தில் தான் தங்கியுள் ளது. ஆனல், இவற்றையும் பயன்படுத்தாது விட்டால், ஈராக் தனிமைப்படுத்தப்பட்டு, அழியவேண்டியே நேரிடும். அப்படி அழிக் கப்பட்டதும் சரியானதென உலகம் தலையாட்டும் !
இவற்றிலிருந்து நாம் அறியக் கூடியது என்னவென்றல், இரா ணுவ - பொருளாதார பல்த்தினைத் தனக்கு ஏற்படுத்தி, உலகின் ஒழுங்கு முறையின் போலித்தன்மையை முறியடிக் முற்படும் ஒரு நாடோ, அல்லது, ஒரு இனமோ இன்றைய உலக ஒழுங்கு முன்ற யினையும் - சரியாக அறிந்து, அந்தப் போலி ஒழுங்குமுறையினையும் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இங்குதான் சர்வதேச இராஜதந்திரம் முன்வருகிறது.
இந்த நிலையில், இன்றைய வளைகுடாப் போரை எடுத்துக் கொண்டால், ஈராக்கும், அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள் இரண்டு முக்கிய விடயங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அவை
if 66ðIT
(1) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையிலும், பாதுகாப்புச் சபை யிலும் தீர்மானங்களை எடுக்கும் நாடுகளின் ஆளும் வர்க்கங் களும், அந்த நாடுகளின் மக்களும் ஈராக்கின் நடவடிக்கை களைச் சரியெனக் கருதவைப்பதற்கு ஈராக் தகுந்த பிரசாரங் களைச் செய்யவேண்டும்; அமெரிக்கரும், ஐரோப்பிய நாடுகளும், தமது நடவடிக்கைகளைச் சரியென நியாயப்படுத்தப் பிரசாரம் செய்யவேண்டும்.
(2) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையிலும், பாதுகாப்புச் சபையிலும் தீர்மானங்களை எடுக்கும் நாடுகளுக்கும், அவற்றின் மக்களுக்கும் "உலக ஒழுங்கு முறை ', அதாவது ஐ. நாவின் அடிப்படைத் தீர்மானங்கள், எப்படி மீறப்படுகின்றன என் பவைகளை விளக்கப் பிரசாரம் செய்வது.
இவைகள் இரண்டையும் சிறப்பாகச் செய்வதற்கு தொலைத் தொடர்பு வசதிகளும், வெகுஜனத்தொடர்பு சாதனங்களும் மிகமிக

Page 33
- 52 -
முக்கியமானதுடன், சர்வதேச இராஜதந்திர செயற்பாடுகள் பற்றியும் பரந்த அறிவு இருக்கவேண்டும்.
போரின்போது எதிரியின் தொலைத்தொடர்பு வசதிகள் அனைத்தும் துண்டிப்படுமேயானல்,இராஜதந்திரோபாய ரீதியில் பாரிய வெற்றியை அடையமுடியும். இதைவிடப் பிரசாரங்களைச் சர்வதேச ரீதியில் செய்வதற்கு வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் மிக முக்கியமய கின்றன. ரேடியோக்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் என்பவை மிக முக்கியமாகின்றன.
இந்த இரண்டு விடயங்களை எடுத்துக் கொண்டால், அமெரிக்கா வும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் மிகவும் வாய்ப்பான நிலையிலே உள்ளன. சர்வதேச பிரசாரத்தில் ரேடியோவின் பயன்பாட்டை எடுத்துக்கொண்டால் அமெரிக்க *Voice of America"; பிரித்தானிய "British, Broad Casting Corporation; Luirgit gait 'Radio France International " மற்றும் நாடுகளின் ஒலிபரப்புக்கள் உலகின் சகல மூலைகளையும் அடைகின்றன. அதேபோல், மேற்கு நாடுகளின் பத்திரி கைகளும், சஞ்சிகைகளும் உலகின் சகல பாகங்களையும் அடைகின்றன. தமிழீழப் பத்திரிகைகளில் இன்றைய வளைகுடாப் போர் தொடர் பாக வெளிவரும் (தமிழாக்கக்) கட்டுரைகள் மேற்கு நாடுகளின் பிரசாரத் திறமைக்குச் சிறந்த உதாரணமாகவே அமைகின்றன. ஆஞல், ஈராக்கின் பிரசாரங்கள் மிகவும் குறைவென்றே கூறவேண்டும்.
சர்வதேச இராஜதந்திரத்தைப் பொறுத்தமட்டில், இன்றுவரை அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளுமே வெற்றியடைந் துள்ளன எனக் கூறவேண்டும். அவைகளின் பாரிய முதல் வெற்றி யானது குவைத் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் ஈராக்கினைக் குவைத்திலிருந்து வெளியேறவேண்டுமென்ற தீர்மானத்தினை நிறைவேற்றியமையும், ஈராக்குடனன வியாபாரத் தடையினை ஏற்படுத்தியமையும், ஈராக் குறிப்பிட்ட கால எல்லைக்குள் வெளியேரு விட்டால் இராணுவ நடவடிக்கைமூலம் வெளியேற்றப் படலாம் என்ற தீர்மானமும் ஆகும்,
இந்தத் தீர்மானங்கள் தொடர்பாகப் பாரிய பிரசாரத்தினைச் செய்த அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் உலகினை ஒருவித மாயையுள் வீழ்த்தி, ஐக்கிய நாடுகளின் பெயரில் தாமாக இராணுவ நடவடிக் கையில் இறங்கின.
இந்தத் தீர்மானங்களை எடுத்த போது, பொருளாதார, உணவுத்
தட்டுபாடுகளை எதிர்நோக்கிவந்த ருசியாவும், சீருறவும் தமது பிச்சா பாத்திரங்களை நிரப்புவதில்தான் அக்கறை கொண்ட நிலையில், மேற்கு

- 53 -
நாடுகளுடன் சேர்ந்து பாடின. பெரெஸ்முெய்க்கா, கிளாஸ் நோஸ்ற் என்ற கொள்கைகளை முன்வைத்த ருசியா அதனது முன்னைய ஆக்கிர மிப்புக்களுக்குப் ** பாவ மன்னிப்பு " கோருவதற்கு ஈராக்கினை ஆக்கிர மிப்பாளர் என உலகிற்குக் காட்டவேண்டியுமிருந்தது. இவற்றிற் கெல்லாம் பிச்சையாக அமெரிக்கா 1000 மில்லியன் தானிய, உணவுக் கொள்வனவிற்கான கடன் கொடுத்தது. வேறு நாடுகளும் உதவிகள் செய்தன.
சீனுவின் நிலை இன்னும் வேறுபட்டதாகவிருந்தது. சீனு அதனது பிச்சையைக் கேட்டு வாங்குவது போல் அதன் செயற்பாடுகள் அமைந் தன. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை குவைத் தொடர்பாகத் தீர்மானத்தினை எடுக்க முற்பட்டபோது, சீன குவைத் விவகாரம் தொடர்பாகச் சிந்தித்தே தான்முடிவை எடுக்கவேண்டும் எனப் பகிரங் கமாக அறிவித்தது. இது தொடர்பாகப் பாரியபிரசாரங்கள் மேற் கத்தைய ரேடியோக்களால் மேற்கொள்ளப்பட்டன. ஈற்றில், அமெரிக்க ஜேர்ஜ் ப்புஷ் உடன் சிலிமணி நேரம் சீனுவின் தூதுவர் பேசினர், சீன வாக்கெடுப்பில் பங்குபற்ருது நின்று கொண்டது. இவை மாத்திர மல்ல. இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தியா என்பவைகளிடம் இராணு வத் தளபாடங்களையும், ஆயுதங்களையும் பெற்று, இவைகளின் நேரடி உதவிகள் கிடைக்கமுடியாது இருந்துவந்த சிறீ-லங்காவிற்கு திடீரெனச் சீன ஆயுதங்களையும் கொடுத்தது, கடனுதவியும் செய்தது! இதைப் போலவே, மேற்கு நாடுகளுக்கு முக்கியமாகவிருக்கும் பர்மாவிற்கும் சீன ஆயுதவிற்பனை செய்தமை குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில், அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் பாரிய வெற் றியை அடைந்தன. ஈராக்கினைப் பொறுத்தமட்டில், பிரசாரங்களும், இராஜ தந்திர செயற்பாடுகளும் சற்றுக் காலதாமதமாகவே மேற் கொள்ளப்படுகின்றன.
அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தமது விமானத் தாக்குதல்களைத் தமது வெகுஜனத் தொடர்பு சாதனங்களுடாக: GasilicosGd5. Lull - gadgi Jigit (Selected Targets), Precision Bombing என்று உலகத்திற்கு மெஸ்மரிசம் போல் வருணித்து, உலகின் எதிர்ப்பைக் குறைத்துக் கொண்டன. ஆனல், ஈராக்கின் பிரசார இயந்திரம் அமெரிக்கரது பாரிய B - 52 விமானக் குண்டு வீச்சுக்கள் பற்றியும், அமெரிக்காவினது Patriot ஏவு - கணை எதிர்ப்பு ஆயுதங்களினதும், Cruise Missiles களதும் தொழில்நுட்பப் பிழைகள் குறித்தும், அவை இலக்குத்தவறிச் சிவிலியன்களின் இடங்களைத் தாக்குவது தொடர்பாகவும் டெலிவிஷன்களூடாகவும், சஞ்சிகைக ளூடாகவும், பத்திரிகைகளூடாகவும் பாரிய பிரசாரத்தை ” மேற் கொண்டு, சர்வதேச ரீதியில் எதிர்ப்புக்களை முதலில் உருவாக்கவில்லை.
9

Page 34
- 54 -
எதுவிதத்திலும், காலம் செல்லச் செல்ல சிவிலியன் அழிவுகள் தொடர்பான விபரங்கள் உலகிற்கு வெளியாக்கப்பட்டு, பெப்பிரவரி இரண்டாம் கிழமையே அது வேகத்தினை எடுக்கத் தொடங்கியது.
ஈராக்கினது முக்கிய நோக்கம் அரபு, இசுலாமிய நாடுகளைத் தனக்கு ஆதரவாகவும், அமெரிக்காவிற்கு எதிராகவும் ஒன்றிணைப்ப தாக இருந்ததால், பிரசாரங்கள் அரபுப் பாஷையில் மேற்கொள்ளப் படுவதுடன், பாலஸ்தீன விடுதலைப் போராட்டம், இசுலாம் என்ப வைகளுடன் தொடர்பு படுத்தியும், இஸ்ரேலிற்கு எதிராகவுமே இருந்து வருகிறது. " பாலஸ்தீனம் " " இசுலாம் P. I. O. என்ற பதங்களைக் கேட்டாலே ஒருவித வெறுப்பு ஏற்படும் அளவிற்கும், ஒருவர் இவற்றைப் "பயங்கரவாதம் " என்பதுடன் இணைக்கும் அள விற்கும், மேற்கு நாடுகள் பாரிய பிரசாரங்களைச் செய்து, உலகினை மாற்றியுள்ளனர். இவற்றைவிட, பாலஸ்தீன மக்களின் விடுதலையை வென்றெடுக்கும் உண்மை நோக்கத்திலா இதுவரை காலமும் P. T. 0. வும், வேறு அமைப்புக்களும் செயற்பட்டு வந்தன என்ற ஒரு கேள்வி பாலஸ்தீன மக்களிடையேயும், இசுலாமிய அரபு மக்களிடையேயும் ஐயப்பாடுகளை ஏற்படுத்தும் விதத்திலேதான் " பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் தொடர்பான விடயங்கள் நடைபெற்று வந்துள்ளன.
இன்று " பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் " பாலஸ்தீனத்திற்கு, தூர, வெளிநாடுகளில் தான் உள்ளன. பாலஸ்தீன மக்கள் தமது பிராந்தியத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர். பாலஸ் தீன மக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் மத்தியிலும், பாலஸ்தீன விடுதலை (?) இயக்கங்களினதும், P. L. 0 வினதும் உதவிகள் இன்றி யும், தொடர்புகள் குறைந்த நிலையிலும், தமது விடுதலைக்குச் செயற் படுகின்றனர் என்பது வெளிநாடுகளில் தூர இருப்பவர்களுக்கு தெரி யாத நிலைதான் காணப்படுகிறது. பாலஸ்தீன மக்களுக்கு அவர்களை சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவம் செய்ய எவரும் இல்லாத நிலையில், அவர்களுக்கு, P. L. O. தேவைப்படுகிறது. P. L. O. வும் வேறு " பாலஸ்தீன விடுதலை இயக்கங்களும் தம்மை நிலைநாட்டிக் கொள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் அல்லலுறும் பாலஸ்தீன மக்கள் தேவையாக உள்ளது. மொத்தத்தில், உண்மையில், இரு சாராரும் தனித்தனியே பிரிந்த நிலையில் இருந்ததாலும், அவர்களின் * நலன்கள். அவர்களை உலக அரங்கின் முன்பு, இணைக்கப்பட்ட ஒருவித தோற்றத்தினையே கொடுக்கவைக்கிறது. இதுவே பாலஸ்தீன விடுதலை வெற்றிபெறமுடியாமலிருக்க முதலாவது காரணமாகும்.
உலகில் இன்று செல்வம்கொண்ட விடுதலை அமைப்பென்ருல்,
அது P, T, O என்றே கருதப்படுகிறது. P. L. O, மொத்தம் 10,000 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளதாகவும் "கணிப்பிடப்

- 55 -
பட்டுள்ளது. ஆனல், அதன் உருவாக்கத்தின் முக்கிய நோக்கத்தினை (?) பொறுத்தமட்டில், அது பாலஸ்தீனத்திலிருந்தும், பாலஸ்தீன மக்க ளிடமிருந்தும் தூர விலகியே இருக்கிறது !
இந்த நிலையிலும், இசுலாமிய அரபு நாடுகள் பாலஸ்தீனப் பிரச் சனையைக் கடந்த காலங்களில் தமது நலன்களுக்குப் பயன்படுத்தி வந்த நிலையிலும், பாலஸ்தீன விடுதலை தொடர்பான கோஷங்கள் மூலம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் பாலஸ்தீனரும், அரபு நாடுகளின் மக்களுமே ஒருங்கிணைவரன்றி, இசுலாமிய அரபு நாடுகளின் ஆட்சிப்பீடத்தில் இருப்பவர்கள் அல்ல! இசுலாமிய அரபு நாடுகளின் ஆட்சிப்பீடத்தில் இருப்பவர்கள் மக்களால் ஒருவித நெருக்குவாரத்தினுள் தள்ளப்பட வைப்பதாயின், இஸ்ரேலியரைப் பயன்படுத்துவதே சற்றுச் சுலபமானதாகும்.
சதாம் ஹ"செயினைப் பொறுத்தமட்டில், அவர் இந்த முயற்சியில் தான் ஈடுபட்டார். ஆனல், இஸ்ரேலினைப் போருக்குள் சம்பந்தப் படுத்துவதாயின் இஸ்ரேல் தாக்கப்பட வேண்டியே இருந்தது. இதனை ஈராக்கியர்கள் தமது ஏவுகணைத் தாக்குதல்கள்மூலம் செய்யப்பட்ட னர். ஆனல், அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் பாரிய பிரசாரங்களைச் செய்ததின்மூலம் அதனை முறியடித்துள்ளன. இஸ் ரேலினை ஈராக் மீது தாக்காது தடுத்ததின்மூலமும், பிரசாரங்களைச் செய்ததின்மூலமும், அமெரிக்கரும், மேற்கு ஐரோப்பியரும் தமது கிறீஸ்தவ மக்களையும், உலக கிறீஸ்தவ மக்களையும் ஈராக்கிற்கு எதி ராக அணிதிரட்டியதுடன், தமக்கு ஆதரவையும் தேடிக்கொண்டன. கடந்த காலங்களில் ஆக்கிரமிப்பு வேலைகளில் ஈடுபட்டு வந்த இஸ்ரேல், தன்னைச் சர்வதேச அரங்கில் பக்குவமடைந்த நாடாகக் காட்டிக் கொண்டுள்ளது. இவற்றுக்கு மேலாக, அமெரிக்காவானது தான் கிறீஸ் தவ நகரங்களையும், இஸ்ரேலிய மக்களையும் வருங்காலத்தில் ஏவு கணைத் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றுவதாகவும் காட்டிக்கொண் டது. இவைகள் அமெரிக்காவிற்குக் கிடைத்த வெற்றிகளாகும்.
ஈரரக்கானது அமெரிக்கரது ஏவு - கணை எதிர்ப்பு ஆயுதங்கள், குறுாஸ் மிசைல்ஸ் என்பவற்றில் தொழில்நுட்பப் பிரச்சனைகள் இருந்த போதும் , அவை தொடர்பான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு, தாக்கங்கள் ஏற்படுத்தப் படாதும், இஸ்ரேலினைப் போரினுள் இழக்க முடியாதும் போன நிலையில், அமெரிக்கா தன்னைப் " போர் விஸ் தரிக்கப்படுவதை ' விரும்பாத ஒரு நாடு என்றும், ஜோர்ஜ் ப்புஷ் தான் நிதானமாகச் செயற்படுபவரென்றும் உலகிற்கும், அமெரிக்க மக்களுக்கும் காட்டக் கூடியதாக இருந்தது. ஈராக்கின் இந்த முயற்சி களும், அவை தோல்வியடைந்தமையும் உண்மையில், இஸ்ரேலிற்கே பாரிய வெற்றியையும், இலாபத்தையும் கொடுத்துள்ளது. இஸ்ரேல்

Page 35
- 56 -
உலக நாடுகளின் நன்மதிப்பை ஏற்படுத்த வழிவகுக்கப்பட்டுள்ளதுடன் அமெரிக்க செனேட், காங்கிரஸ், பொதுமக்கள் இஸ்ரேலில் மேலும் நம்பிக்கை வைக்க வழிவகுத்துள்ளது. ஆனல், இவைகளைவிட,இஸ்ரேல் தனக்கு ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களையும் பெற்றுள்ளது ! காலப் போக் கில், இஸ்ரேல் ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களையும் உருவாக்குமேயானல், போரைப் பொறுத்தமட்டிலும், பாதுகாப்பைப் பொறுத்தமட்டிலும் தானகவே முடிவுகளை எடுக்கக்கூடிய நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்ள முடியும். மொத்தத்தில், இஸ்ரேல் தனது பிரசாரங்களையும், இராஜதந்திர செயற்பாடுகளையும் தனது குறிக்கோள்களை அடையத் திறம்படச் செய்துள்ளது என்றே கூறவேண்டும். எதுவிதத்திலும், இஸ்ரேலின் இறுதி நிலைப்பாடு ஈராக் இஸ்ரேலின்மீது இரசாயன விஷவாயுக் குண்டுகளை அதனது ஏவுகணைக்கொண்டு ஏவுகிறதா, இல்லையா என்பதில்தான் பெரிதும் தங்கியுள்ளது !
உப-முடிவுகள்:
1991 ஜனவரி நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வளைகுடாப் போர் தொடர்பான இராணுவ, அரசியல், இராஜதந்திர செயற்பாடுகளை யும், தந்திரோபாயங்களையும் பொறுத்தமட்டில், மேலே ஆராயப் பட்டவைகளிலிருந்து, சில முக்கிய முடிவுகளுக்கு நாம் வர முடியும். அவையாவன:
(1) அமெரிக்காவினதும், மேற்கு நாடுகளினதும் விமானக் குண்டு வீச்சுக்கள் ஈராக்கின் பொருளாதாரத்தினைப் பெரிதும் பாதிக் கும் நடவடிக்கையாக இருந்ததேயன்றி, ஈராக்கின் இராணுவ வலிமையை 20% இனல் கூடக் குறைக்கவில்லை. இதனல், பாரிய விமானக் குண்டுவீச்சுக்கள் தொடர்கின்றன. தரை மார்க்கமான போர் ஆரம்பிப்பது பின்போடிப்படவேண்டி யுள்ளது:
(2) முதலாவதில் கூறப்பட்டதும், ஈராக்கிடமிருக்கும் தந்திரோ பாய ரீதியில் முக்கியமான விஷவாயுக்கள், இரசாயன ஆயு தங்கள், எறி - ஏவுகணைகள் என்பவை முற்றுக அழிக்கப்படாத நிலை காணப்படுவதால், அமெரிக்கர்கள் மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மறுபுறத்தில், விமானக் குண்டு வீச்சுகள் மாத்திரம் போரை முடிவுக்குவர முடியாத நிலையில், தரைப்போர் ஆரம்பிக்கப்படுவதும் மிக அவசியமாகிறது;
(3) இலும், 2 இலும், குறிப்பிட்டவைகளைப் பார்க்கும்போது, அரசியல் ரீதியான மாற்றங்கள் அமெரிக்காவிலும், சர்வதேச ரீதியிலும் ஏற்படச் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் :

- 57 -
(4) ஈராக்கின் சதாம் ஹ"செயின் கொல்லப்படுவதும், ஆட்சி கவிழ்க்கப்படுவதும் சற்றுக் கடினமாகையாலும், ஈராக் இரா ணுவ ரீதியில் கைப்பற்றப் படுவதில் அமெரிக்க, ஐரோப்பிய படையினர்கள் பெரும் எண்ணிக்கையாகக் கொல்லப்படுவது இந்த நாடுகளின் ஆட்சிப் பீடத்தில் இருப்பவர்களுக்கு பெரும் பிரச்சினையைக் கொடுக்குமாகையால், அமெரிக்க, ஐரோப்பிய தலைவர்கள் வளைகுடா தொடர்பாகப் மாற்றுத் திட்டங்களை முன்வைக்க வேண்டியுள்ளது. அமெரிக்க, மேற்கு - ஐரோப்பிய நாடுகளின் திட்டங்கள் :
\geml P வளைகுடாப் போரானது கடந்த 3 கிதங்களாக நடைபெற்ற போதும், அதன் விளைவுகள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைத் தமது திட்டங்களை கீழ்வரும் விதமாக மாற்ற வைத்துள்ளது. அவையாவன : (1) சதாம் ஹ"செயினைக் கொலைசெய்யவும், ஆட்சியைக் கவிழ்க்க வும், ஈராக்கினைக் க்ைப்பற்றவும் முயற்சிகளைத் தொடருகையில் இரண்டாவது திட்டத்தினைச் சற்றுத் தீவிரப்படுத்துவது ; (2) இரண்டாவது திட்டமாக, குவைத்தினை இராணுவ ரீதியில்
மீட்க முற்படுவது; (3) வளைகுடாப் போரினைத் தரைப்போர் நடத்தாது முடிக்க சமாதான முயற்சிகளைத் தந்திரோபாய ரீதியில் இசுலாமிய, ஏனைய நாடுகளுடாக ஊக்குவிப்பது.
சதாம் ஹ"செயின் கொல்லப்பட முடியாத நிலையும், ஆட்சி கவிழ்க் கப்பட முடியாத நிலையும் ஏற்படுமாயின், அது அமெரிக்க நலன் களுக்கு ஆபத்தினையே மீண்டும் ஏற்படுத்தும். இந்த நிலையில், ஈராக் கினைப் பொருளாதார ரீதியில் பாதிக்கச் செய்வது மிக முக்கியமா கிறது. ஆகவே, ஈராக்கின் பொருளாதார இலக்குகள் மீதான விமா னத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். மறுபுறத்தில், வளைகுடாவில் ஈராக்கிற்கு எதிராக அரசியல் - இராணுவ ரீதியில் ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தக் கூட்டமைப் பினை இரண்டு வழிகளில் செய்யமுடியும். அவையாவன :
(1) அமெரிக்கா, மேற்கு - ஐரோப்பிய நாடுகள் நேரடியாகப் பங்கு பற்ருத விதத்தில் ஈராக்கிற்கு எதிரான வளைகுடா நாடுகளை யும், சிரியா, துருக்கி எகிப்து என்பவைகளையும் இணைந்து உருவாக்குவது
(2) இந்தக் கூட்டமைப்பில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளும் இணைந்து, தமது படைகளை வளைகுடாவில் நிரந்தரமாகத் தங்க வழிவகுப்பது. 10

Page 36
- 58 -
இவற்றுள் முதலாவதை எடுத்துக்கொண்டால், இசுலாமிய நாடு களைக் கொண்டே மேற்கு நாடுகள் அரசியல் - இராணுவ கூட்ட மைப்பினை உருவாக்க வேண்டியுள்ளது. ஆனல், இங்கு பல சிக்கலான பிரச்சனைகள் உருவாகும் சந்தர்ப்பங்களே உள்ளன. சவுதி அரேபியா, குவைத், கட்டார், பாஹ்றெயின், UAE, சிரியா, யோர் தான், துருக்கி, ஈரான் என்ற நாடுகளைப் பொறுத்தமட்டில், ஈரான், துருக்கி என்பவை கள் ஒவ்வொன்றும் 40 மில்லியனுக்கு மேற்பட்ட ஜனத்தொகையைக் கொண்டதுடன் இராணுவ வலிமையும் கொண்டவை. ஏனையவை உண்மையில் 10 - 15 மில்லியனுக்குக் குறைந்த ஜனத் தொகையையே கொண்டுள்ளவை. இதைவிட, இந்த நாடுகளிடையே பல பிரச்சனை களும் உள்ளன. துருக்கிக்கும், சிரியாவிற்குமிடையே நீர் தொடர் பாகவும், கேர்டிய இன மக்கள் தொடர்பாகவும் பாரிய பிரச்சனை கள் உள்ளன. துருக்கியின் புதிய அணைத் திட்டங்கள் யூபிறட்டிஸ் நதியின் நீர் ஒழுங்கினைத் தடைசெய்வதால், சிரியாவிற்கும் துருக்கிக் கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. முழு விபரங்களுக்கும் பகுதி - இனைப் பார்க்கவும். கேர்டிய மக்களின் விடுதலைப் போராட் டத்திற்கு ஆயுதங்கள், நிதியுதவிகள் வழங்கிவந்தமையும் துருக்கிக் கும், சிரியாவிற்குமிடையே விரிசலை அதிகரித்திருந்தது. இந்த நிலை யில், துருக்கியும், சிரியாவும் இப்பிரச்சனைகளைத் தீர்த்தே கூட் டமைப்பில் இணைய முடியும். அல்லது முரண்பாடுகள் கூட்டமைப் பில் தொடரும். இதற்கான ஒருவித முயற்சியும் அண்மையில் எடுக் கப்பட்டு வருகிறது.
ஈரானை எடுத்துக்கொண்டால், ஈரானின் இசுலாமியத் தீவிரவா வாதம் சவுதி அரேபியருக்கும், ஏனைய வளைகுடா நாடுகளின் மன்னர் களுக்கும் பெரும் பீதியையே ஏற்படுத்திவந்தது. ஈரானின் இசுலா மியத் தீவிரவாதிகள் மெக்காவின் புனித பிராந்தியத்தினையும், “கபா' (KABA) இனையும் கைப்பற்றும் நோக்கத்தில் செயற்பட்டே வந்த னர். இதனல் மெக்காவில் 600இற்கு மேற்பட்ட ஈரானியர்கள் ஒரு தடவை மாத்திரமே கொல்லப்பட்டனர். அண்மையில்கூட, சில ஈரானிய பத்திரிகைகள் அமெரிக்கர் சவுதி அரேபியாவில் தங்கியிருப் பது, மெக்காவின் புனிதத்தன்மைக்கு மாசு ஏற்படுத்தியுள்ளது எனக் கூறி, இவ்வருடம் மெக்காவிற்கும், மெதீனவிற்கும் யாத்திரை போக வேண்டாமென உலக இசுலாமியருககு அறைகூவல் விடுத்திருந்தது.
மெக் காப்பிரச்சனை ஈரானில் இசுலாமிய தீவிரவாதம் அன்று இருந்த போதுதான் பெரும் பிரச்சனையாக இருந்தது. இன்று ஈரானில் மிதவாதிகளே ஆட்சியில் உள்ளனர். இதைவிட 8 வருட போரின் பின்னர் ஈரான் பாரிய தொழில் நுட்ப, முதலீட்டுப் பிரச்சனை தளையும், பொருளாதாரப் பிரச்சனைகளையும் எதிர்நோக்கியே வருகி

-- 59 -س-
றது. இவற்றுக்கு அது மேற்கு நாடுகளையும், சவுதி, குவைத் என்பவை கஃாயுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. மறுபுறத்தில் சதாம் ஹ"செ யினும், அவரது ஆட்சியும் முறியடிக்கப்படாவிடின், நீண்டகால எதிரியான ஈராக்பற்றி ஈரான் சற்றுச் சிந்திக்கவேண்டியுமே உள்ளது. இந்த நிலையில். சவுதி அரேபியாவிற்கும் ஈரானுக்குமிடையே ஒருவித புரிந்துணர்வுகளை ஏற்படுத்தமுடியும். ஆஞல், மெக்காவினது பிரச் சினைக்கு ஒருவித தீர்வு காணப்படவேண்டியுள்ளது. இந்த முயற்சியில் ஈரானிய தலைவர்கள் இன்று ஈடுபட்டுவருகின்றனர்.
ஏனைய நாடுகளைப் பொறுத்தமட்டில், அவைகள் சிறிய மன்ன ராட்சிகள் நடைபெறும் நாடுகளே. இவைக்ளின் ஆளும் வர்க்கங் களைப் பொறுத்தமட்டில், அவர்களது "பாதுகாப்பு ", ஆகவே நாட் டின் பாதுகாப்பே, முதலில் முக்கியமானதாகும். இந்த நிலையில், சவுதி அரேபியாவின் ஒருவித வாக்குறுதி இருக்குமேயாயின், அவை சவுதி அரேபியாவுடன் ஒரு கூட்டமைப்பையும், சவுதி அரேபியா இணைந்தால், ஈரானுடன் ஒரு கூட்டமைப்பினையும் உருவாக்கத் தயா ராகவே இருப்பார். மீண்டும், இங்கு, ஈரான்-சவுதி அரேபிய உறவுநிலை முக்கியமாகிறது.
இராணுவ தந்திரோபாய ரீதியில். சிரியா, துருக்கி என்பவை வளைகுடாவிலிருந்து தூரஉள்ள நிலையில், "பாதுகாப்பு" தொடர்பாக அதிக பலனை அளிக்கமாட்டா. வரலாற்றில் துருக்கிய ஆதிக்க விஸ் தரிப்பினை அரபு, இசுலாமிய நாடுகள் மிகவும் சுலபமாக மறக்கவும் முடியாது. அத்துடன் சிரியாவினது கடந்தகால அரசியலும் சவுதி அரேபியா, மற்றும் நாடுகளுடன் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கவில்லை.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது, சிரியா, அல்லது துருக்கி யின் தலைமையின் கீழோ, அல்லது ஈரானின் தலைமையின் கீழோ வளைகுடா நாடுகளுக்குக் கூட்டமைப்பினை உருவாக்குவது சற்றுக் கடினமானதாகவே இருக்கும். இப்படியான ஒரு அமைப்பு முறையும், அதன் கீழ் வளைகுடாவில் "அரசியல் உறுதிநிலை"யை ஏற்படுத்தும் வரை, அமெரிக்க, ஐரோப்பிய படைகளை அங்கு வைத்திருப்பதே சுலபமானது. இன்றைய "உலக ஒழுங்குமுறை'யின் கீழ் அமெரிக்க, ஐரோப்பிய படைகள்ே ஐ. நாவின் படைகளென்றும் உலகிற்குக் காட்டப்பட்டுள்ளது. அப்படியாயின், வளைகுடாவில் "அரசியல் உறுதி நிலை ஏற்படும்வரை ஐ நா. படைகள் (அமெரிக்க, ஐரோப்பிய படைகள்) அங்கு தங்கியிருக்க வழிவகைகளும் செய்யப்படலாம்.

Page 37
- 60 -
இந்த யோசனையைச் சவுதி அரேபியாவினதும், குவைத்தினதும் ஆளும் வர்க்கங்கள் ஆதரிக்கும். ஆனல், ஈரான், மற்றும் இசுலாமிய நாடுகள் இதனை எதிர்க்கலாம். இந்த எதிர்ப்புக்களை அமெரிக்கா வும், ஐரோப்பிய நாடுகளும் மிகவும் சுலபமாக முறியடிக்கமுடியும்.
தற்போதைய போர் சூழ்நிலையில், ஈரான் மற்றும் அரபு நாடு களும், ஏனைய நாடுகளும் அமெரிக்க, ஐரோப்பிய படைகள் ஐ. நா. படையென்றே ஏற்றுள்ளன. அப்படி ஒருவித தோற்றத்தினை கொடுக் கவே அமெரிக்கா தன்னுடன் 27 நாடுகளைச் சேர்த்துள்ளது. இந்த நாடுகள் தாம் ஐ. நா. வின் முடிவுக்கு ஏற்ப போரில் ஈடுபடுவதாகக் காட்ட வெவ்வேறு பங்களிப்புக்களையும் செய்கின்றன. உதாரண மாக : ரூமேனியா, யூகோசிலாவியா, செக்கோசிலோவாக்கியா என் பவைகள் 50 முதல 200 வரை தமது விசேட படைகளை அனுப்பி யுள்ளன. ஜப்பான் நிதியுதவி செய்வதுடன், மருத்துவ வசதிகளை யும், போக்குவரத்து விமானங்களையும் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியினதும், ராஜீவ் காந்தியினதும் தயவில் அதிகாரத்தில் குந்தி யிருக்கும் இந்தியப் பிரதமர் சந்திரசேகர், தனது வருங்காலத்தினைக் கருதி, ஐ. நா. முடிவுக்கேற்ப, 40இற்கு மேற்பட்ட அமெரிக்க விமா னங்களுக்கு பம்பாயில் எரிபொருள் விநியோகித்து, அமெரிக்கா விற்கு வால் ஆட்டுவதுடன், அமெரிக்க எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி ‘சமாதானத்தீர்வு' பற்றிச் சற்றும் உரத்தும் பேசுகிருர்,
இலங்கை அரசும் ஐ. நா. வின் முடிவுக்கேற்ப, போரில் ஒருவித மாகப் பங்கேற்றுத் செயற்படுகிறது. ஜப்பானிய விமானங்களுக்குக் கொழும்பில் எரிபொருள் விநியோகிக்க முடிவுசெய்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க - ஐரோப்பிய படைகள், ஐ. நா. வின் படைகல் என்று இந்தியா, இலங்கை நாடுகள் உட்படப் பல நாடுகள் ஆமோ தித்துள்ளன. தலையாட்டச் சம்மதம் தெரிவித்துள்ளன!
இந்த நிலையிலும், வளைகுடாவின் மன்னர் நாடுகள் ஏற்கும் நிலையிலும், அமெரிக்கப் படைகள் நிரந்தரமாகத் தங்கப் போவதை இன்றைய "உலக ஒழுங்குமுறை" சரியென்றே கூறவைக்க முடியும். இப்படி, அமெரிக்க மற்றும் படைகள் வளைகுடாவில் தங்குவதை சில இசுலாமிய அரபு நாடுகள் தீவிரமாக எதிர்த்தாலும், அது அமெரிக்கா விற்கே வெற்றியாக அமையும். ஏனெனில், தமது "பாதுகாப்பிற்கு" ஆபத்து ஏற்படலாம் என்ற பயத்தினுல், இந்த மன்னர்கள் ஐ.நா. படைகளை (அமெரிக்க படைகளை) அங்கு தங்கும் படி கோருவர்!

- 61 -
இவற்றை யெல்லாம் பார்க்கும் போது, ஈராக்கினைத் தரைப் படை கொண்டு கைப்பற்றி, சதாம் ஹ"செயினை அழிக்காது விட்டா லும், குவைத் மீட்கப்பட்டால், அது அமெரிக்காவின் "புதிய உலக ஒழுங்குமுறை" உருவாக்கத்தின் முதல் வெற்றியாகவே அமையும்! ஏனெனில்:
(1) உலகின் பெற்ருேலிய வளத்தின் காற் பங்கிற்கு மேற்பட்டது அமெரிக்காவினது ஆதிக்கத்தினுள் தொடர்ந்தும் இருக்கும்.
(2) பாரிய அழிவுகளை அடைந்த ஈராக் தனது பொருளாதார பிரச்சனையைத் தீர்க்க 20 வருடங்கள் எடுக்குமாகையால், அது கூடிய பெற்ருேலியத்தினை இறைக்க வேண்டி நேரிடும். இது மேற்கு நாடுகள் வளைகுடாவின் பெற்முேலியத்தினை உலக சந் தையில் மேலதிகமாக இறைக்க வைத்து, அதனை மலிவாகப் பெறவழிவகுக்கும்;
(3) உலகின் கிறீஸ்தவ மேலாதிக்கத்திற்கும், புதிய உலக ஒழுங்கு முறைக்கும் ஏற்பட்ட உடனடி ஆபத்து முறியடிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் குவைத் தினை இராணுவ ரீதியில் மீட்பது மிக மிக அவசியமானது. அடுத்த தாக, சந்தர்ப்பங்களை உருவாக்கி, கைப்பொம்மை நாடுகளைக் கொண்டு தகுந்த நேரத்தில் ' சமாதானம் " கோரி மேளங்களை அடிக்க வைத்து, குவைத் மீட்புடன் போரை நிறுத்த வேண்டும்.
மற்றைய புறத்தில், இதே வெற்றிகளை அமெரிக்கா போரை நடாத்தாதே இப்போது அடையமுடியும்
பாரிய விமானத் தாக்குதல்களை நடாத்தி, ஈராக்கினுள் பொரு ளாதார அழிவுகளை ஏற்படுத்திய பின்னர், தனது பொம்மை நாடு களைக் கொண்டு, ' சமாதானம் கோரி மேளங்களை அடிக்க வைத்து சதாம் ஹ"செயினை குவைத்தை விட்டு வெளியேற வைத்தால் இதனைச் சுலபமாகச் செய்யமுடியும்.
இங்கு தான் உலகில் ? சமாதானம் ' விரும்பும் (?) நாடுகளும், அவற்றின் ஆளும் வர்க்கங்களும் என்ன திட்டங்களை முன் வைக் கின்றனர் என்பது முக்கியமாகிறது.

Page 38
- 62 -
இன்று ஈரான், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, துனீசியா, அல்ஜீரியா, மற்றும் சில நாடுகள் " சமாதானம் பற்றிப் பேசு கின்றன. இவற்றில் ஒன்ருவது அமெரிக்கா ஐ. நாவின் பெயரில் ஈராக்கின் மீது போர் தொடுத்தது பற்றி, இன்று போல், ஒடித் திருந்து செயற்படவில்லை. இந்த நாடுகளின் போலிக் கூக்குரலிற்குத் தகுந்த காரணங்கள் உள்ளன. இவைகள் அனைத்தினதும் ஆட்சி யாளர்கள் தமது நாடுகளில் பாரிய அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சனைகளையும், கிளர்ச்சிகளையும் எதிர் நோக்கி வருகின்றனர். ருசியா, சீனு என்பவையும் இதற்கு விதிவிலக்கல்ல.
அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தமது குறிக் கோளை அடைய முற்படுகையில், அவற்றை முறியடிப்பதாயின், சதாம் ஹ"செயினும் இரண்டு முக்கிய காரியங்களைச் செய்ய வேண்டி யுள்ளது. அவையாவன :
(1) போலிச் சமாதான திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வராது காலத்தை இழுத்து, அமெரிக்காவினையும், மேற்கு ஐரோப்பாவினையும் தரைப் போருக்கு இழுப்பது;
(2) தரைப்போரில் அமெரிக்கர்கள் கு வைத் தினை மீட்காது
பார்ப்பது.
இந்த இரண்டிலும் இரண்டாவதை எடுத்துக் கொண்டால், முன்னர் ஆராய்ந்த படி, இப் போர், உண்மையில் இன்றைய நவீன உலகத் தில் மேற் கொள்ளப்படும் ஒரு முக்கிய போராகவே காணப்படுகிறது. இப் போரில் அமெரிக்கரும், மேற்கு ஐரோப்பியரும், முன்னர் குறிப் பிட்டபடி, சவுதிஅரேபிய தரை எல்லை வழியாகவும், கடல் வழியாகவு மே குவைத்தினுள் நுளைய வேண்டும். இதற்கு அவர்கள் 17,000 மேலதிக மரீன் படைகளை அனுப்பியுள்ளனர். டாங்கிகளையும் அனுப்பு கின்றனர். இந்தப் 17,000 மரீன் படையில் ஏறக்குறைய அனைவரும் போரையே காணுதவர்கள்! எது விதத்திலும், நவீன டாங்கிகள், விமானங்கள், ஏவுகணைகள், குறுாஸ் மிசைல்ம்கள், நவீன எலெக்ட் ருேனிக் சாதன்ங்கள், சற்றலைட்டுக்கள், நவீன தொலைத்தொடர்பு வசதிகள் எல்லாவற்றுடனும், ஏறக்குறைய 5 லட்சம் படைகளைக் கொண்டும் 17,818 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள குவைத்தினை கைப்பற்ரு விட்டால், சதாம் ஹ"செனுக்கும், ஈராக்கிய மக்களுக்கும், இன்றைய "உலக ஒழுங்கு முறை "யின் கீழ் சுரண்டப்பட்டும், நசுக் கப்பட்டும் வரும் மக்களுக்கும் இது ஒரு பாரிய வெற்றியாகவே அமை (ALD.

- 63 -
குவைத் மீட்கப் படாது போனல், அமெரிக்க்ாவினதும், மேற்கு நாடுகளினதும் புதிய உலக ஒழுங்கு முறை உருவாக்க முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்படும். ஆனல், போர் வளைகுடாவிலிருந்து மத்திய கிழக்காசியாவிற்கு மாற்றம் செய்யப்படும்!
குவைத்தினை, இராணுவ நடவடிக்கையின் போது, முழுமையாக மீட்க முடியாது என்பதைத் தெரிந்து கொண்டால், அமெரிக்கர்கள் குவைத்தில் தரைப்போரை நடாத்தும் வேளையில், ஈராக்கின் தரைப் பிராந்தியத்தின் ஒரு பகுதியையும் கைப்பற்றி, அதைப் பேரம் பேசி குவைத்தினை வெற்றிகரமாக மீட்டது போன்ற தோற்றத்தினை உல கிற்குக் கொடுக்கலாம்.
போரும் அதன் தாக்கங்களும் :
பெற்றேலியம் ;
இன்றைய வளைகுடாப் போரானது உலகின் பெற்குேலியத்தின்
விலையினை முதலில் 40 வரை உயர்த்திய போதும், இப்போது ஒரு
பீப்பா 20 டொலர் விலையை சீராக அடைந்துள்ளது. போர் பெற்முேலிய
விலையை உயர்த்தாது இருப்பதற்குப் பலமுக்கிய காரணங்கள் உள்ளன.
அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு:
(1) பெற்ருேலியத்தின் விலை கூடிய விலைக்கு ஏறுவதும், சீராக இல்லாது பாரிய இடைவெளியில் கூடிக் குறைவதும் பொரு ளாதாரத்தினைப் பெருமளவில் பாதிக்குமாகையால், அமெரிக் காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இதைக் கட்டுப்படுத்தத் திட்டங்களை முன்கூட்டியே செய்தமை. (பகுதி - 1 இனப் பார்க்கவும்)
(2) சவுதி அரேபியாவையும், வேறு நாடுகளையும் கொண்டு மேலதிக பெற்ருேலியத்தினை இறைத்து, உலக தேவையைப் பூர்த்தி செய்து வருபமை :
(3) மேற்கு - நாடுகள் தமது சேகரிப்பிலிருக்கும் பெற்ருேலியத்தினை நிலைமைக்கு ஏற்றவாறு வெளிவிட்டு, பெற்ருேலியத்தின் விலையைக் குறைத்து வருபமை ;
(4) பெற்ருேயம் தொடர்பாகத் தேவையற்ற விதத்தில் பீதியைக் கிழப்பாது இருக்க, வெகுஜனத் தொடர்பு சாதனங்களையும், கம்பணிகளையும் அறிவுரை கூறியிருப்பமை.

Page 39
- 64 -
வளைகுடா யுத்தமானது ஈராக், குவைத் என்ற இரு நாடுகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும், பாரசீகக் குடாவிலும், ஏனைய கடல் பிராந்தியங்களில் கடல் போக்குவரத்து பாதிக்கப்படாது இருந்துவரும் நிலையிலும், பெற்ருேலிய விநியோகம் சுமூகமாக நடை பெற்று வருகிறது. இதற்கு முக்கிய மற்றுமொரு காரணம் ஈராக்கியக் கடற்படை பலமற்றதாக இருப்பதும், அமெரிக்க, ஐரோப்பிய கடற் படை மிகவும் பலம் பொருந்தியதாக இருப்பதுமே.
இந்த நிலையில், உலகச் சந்தையில் பெற்ருேலிய விலை தரைப் போர் ஆரம்பிக்கப்படும் போது தற்காலிகமாகச் சற்று உயர்ந்து, போரின் போக்கைப் பொறுத்த்ே அது மேலும் உயரும், அல்லது விழும். ஈராக்கியப் படைகள் தரைப் போரில் தோல்வியைத் தழுவத் தொடங்கினல், பெற்ருேலிய விலையில் வீழ்ச்சி ஏற்படும். ஈராக்கியப் படை போரில் நின்று பிடித்து, அவை சவுதி அரேபிய எல்லைகளுள் சற்று நுழைந்தால், பெற்ருேலிய விலை சிறிது உயரும். இந்த விலை மாற்றங்கள் தற்காலிகமானவையே. நீண்டகால நோக்கில் பார்த்தால், உலக சந்தையில் பெற்ருேலிய விலை நிரந்தரமாக உயரும் சந்தர்ப் பங்கள் குறைவாகவே இருக்கும். ஆணுல், வளைகுடாப் போர் விஸ் தரிக்கப்படுமேயானல், பெற்ருேலிய விலை உயர்ந்து கொண்டே போகும்.
இலங்கை போன்ற மூன்ரும் உலக நாடுகளில் இன்றைய வளை குடாப் போர் பாதிப்புக்களை அதிகம் ஏற்படுத்தவில்லை. மக்களும் பெற்ருேலிய விலை மாற்றங்களைச் சிறிது க்ாலம் உணரவும் மாட்டார் கள். ஏனெனில் இலங்கை போன்ற நாடுகளில் பெற்றேல், டீசல், மண்ணெய், மற்றும் பெற்ருேலிய அடிப்படைப் பொருட்கள் என்ப வற்றின் விலைகள் முன்கூட்டியே உயர்த்தப்பட்ட நிலையில் வைக்கப் பட்டுள்ளன. உலக சந்தையில் பெற்ருேலிய விலையில் ஏற்றம், வீழ்ச்சி ஏற்பட்டால், அதன் தாக்கங்கள் எப்படியிருக்கும் என்பதை பகுதி - 1 இலிருந்து விரிவாகவும், விளக்கமாகவும் பார்க்கலாம்.
அமெரிக்கா :
பெற்ருேலியத்தைத் தவிர, வளைகுடாப் போர் இன்று பல நாடுகளின் ஆளும் வர்க்கங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கவுள்ளது. அமெரிக்காவின் ஜனதிபதித் தேர்தல் 1992ஆம் ஆண்டில் நடைபெற வுள்ளது. வளைகுடாவின் தரைப்போர் நடைபெற்று, பெரும் எண் ணிக்கையான அமெரிக்கர்கள் கொல்லப்பட்டால், ஜோர்ஜ் ப்புஷ் அடுத்த ஜனதிபதித் தேர்தலையிட்டுச் சிந்திக்கவேண்டியே நேரிடும். தரைப்போர் ஜோர்ஜ் ப்புஷ் இன் தேர்தல் நிலைமைகளைப் பெரிதும் பாதிக்கக் கூடியதாகவே அமையும், ஆனல், ஜோர்ஜ் ப்புஷ் உம்,

- 65 -
பிரித்தானியப் பிரதமர் தட்சர் ப்போக்லன்ட் யுத்த வெற்றியைப் பயன்படுத்தியதுபோல், இந்தப் போரில் வெற்றிபெற்றல், அடுத்த தடவையும் ஜனதிபதியாகலாம்.
குறுகிய காலக் கண்ணுேட்டத்திலும், நீண்டகாலக் கண்ணுேட் டத்திலும் அமெரிக்காவானது பொருளாதார இலாபங்களையே அடையும் சந்தர்ப்பங்கள் உள்ளன.
இன்றைய வளைகுடாப் போருக்கான செலவுகளின் பெரும்பகுதி களை சவுதி அரேபியாவும், குவைத்தும், ஏனைய மன்னர்களுமே பொறுப்பேற்றனர். இவைகளைவிட, யப்பான், ஜேர்மனி, மற்றும் நாடுகளும் மில்லியன் கணக்கான நிதியைக் கொடுக்கின்றன, ஒவ்வொரு நாட்டுப் படைகளையும் அந்தந்த நாடுகளே பராமரிப்ப தாலும், விஷவாயு - இரசாயன ஆயுதங்களிலிருந்து பாதுகாக்கும் விசேட முகமூடிகள், வெளி உண்டகள் என்பவற்றைப் பெருமளவில் அமெரிக்காவே விநியோகிப்பதாலும், இப்போரினல் பல அமெரிக்கக் கம்பனிகள் பாரிய இலாபத்தினை அடைகின்றன.
இவற்றைவிட, குவைத்தில் மீண்டும் வீடுகள், கட்டிடங்கள், தொழிற்சாலைகள் என்பவற்றைக் கட்டும் வேலைகளுக்கு என குவைத் துடன் ஏற்கனவே அமெரிக்க கம்பனிகள் + 700 மில்லியன்களுக்கு ஒப்பந்தங்களைக் குவைத்தின் அரசுடன் எழுதியுள்ளன, இவற்றைவிட வேறு பெருந்தொகையான ஒப்பந்தங்களும் பல விடயங்கள் தொடர் பாக எழுதவேண்டியே உள்ளது. பாஹ்ஹெயினும் கடல், அதன் எல்லைகள் பெற்ருேலியத்தினுல் மாசுபடுத்தப்பட்டதை நீக்க ஒப்பந் தங்களை அமெரிக்க, மற்றும் கம்பணிகளுடன் எழுதவுள்ளது.
பல லட்சம் படைகளைப் பல மாத காலங்கள் வளைகுடாவில் நிறுத்தி வைத்தமையாலும், போரினலும் பாரிய செலவுகள் சவுதி அரேபியாவிற்கும், குவைத்திற்கும் ஏற்பட்டிருக்கும் நிலையில் அண்மை யில், சவுதி அரேபியா 38,000 மில்லியன்களை ஐரோப்பிய, அமெரிக்க வங்கிகளிடமிருந்து வட்டிக்குக் கடனக எடுக்கும் நிலையும் ஏற்பட்டுள் ளது. மொத்தத்தில் இச் செலவுகளையெல்லாம் நிவர்த்தி செய்வ தற்கு, இந்த நாடுகள் கூடிய பெற்ருேலியத்தினை இறைக்கவும் வேண் டும். சுருங்கக் கூறினல், தரைப்போர் தொடங்கி, குவைத் மீட்கப் பட்டாலென்ன, "சமாதானம் மூலம் ஈராக் குவைத்தை விட்டு வெளி யேறினலென்ன, அமெரிக்காவிற்கே இரண்டுவிதமாக வெற்றி கிடைக்கும்.

Page 40
- 66 -
(1) வளைகுடாவை மீண்டும் கட்டியெழுப்புவதால் கம்பனிகள்
அடையும் பொருளாதார இலாபங்கள்
(2) நீண்டகாலம் பெற்றேலியம் தொடர்ச்சியாகவும், மலிவாக
வும் மேற்கிற்குக் கிடைக்கும்.
இவைகள் எல்லாம் சவுதி அரேபியா, குவைத் மக்கள் சுகபோக வாழ்வை இழக்கவே செய்யும். இது மக்களிடமிருந்து மன்னர்களுக்கு அரசியல் பிரச்சனைகளையும் ஏற்படுத்தச் சந்தர்ப்பங்களை அதிகரிக்கும்,
இவற்றிற்கு மேலாக, சமாதான வழியில் (?) ஈராக்கியப் படை களைக் குவைத்திலிருந்து வெளியேற வைத்தால், ஜோர்ஜ் ப்புஸ் உம் அமெரிக்காவும், மேற்கு - ஐரோப்பிய நாடுகளும் பாரிய வெற்றியை அடைவர். இந்த நிலையில், தத்தமது நாடுகளில் அரசியல் - பொரு ளாதார - சமூகப் பிரச்சனைகளைப் பாரிய அளவில் எதிர்நோக்கும் ஆளும் வர்க்கங்களே ' சமாதானம் ' உருவாக்கப்படத் தீவிரமாக ஓடித்திருந்து, சில பிரேரணைகளையும், பேச்சு வார்த்தைகளையும் முன்வைத்து நடாத்த வேண்டும். இங்குதான் ருசியா, ஈரான், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, அல்ஜீரியா, துனீசியா போன்ற நாடுகளின் செயற்பாடுகள் ஆராயப்படவேண்டியுள்ளது.
இந்தியா :
இந்தியாவைப் பொறுத்தமட்டில் சந்திரசேகரின் அரசு ராஜீவ் காந்தியினதும், சாங்கிரஸ் கட்சியினதும், தயவிலேதான் ஒடுகிறது. நாட்டின் வெளிநாட்டுப் பண வருகையும், சேகரிப்பிலிருத்த பணமும் வறண்டுவிட்டது. 87ஆம் ஆண்டில் இந்தியா ஒரு நாளேக்குச் சராசரி 15 மில்லியன்கள் வெளிநாட்டுப் பணத்தை வளைகுடா நாடுகளில் இருந்து பெற்றுவந்துள்ளது. இன்று, அங்கு வேலை செய்தவர்கள் வெளியேறியுள்ளனர். 1987/88 டிசெம்பரில் இந்தியாவிடம் $ 6.454 மில்லியன்கள் தான் சேமித்து வைத்திருந்த பணமாக இருந்தது. 1986ஆம் ஆண்டில் $ 41,000 மில்லியன்கள் கடனுடையதாக இருந்தது. இன்று கொப்பரைகள் வறண்டு, கடனும் கூடியுள்ளது. இவற்றிற்கு மேலாக உள்ளூர்க் கிளர்ச்சிகளும் இந்தியாவில் அதிகரித்துள்ளது. பொருளாதார சமூக முன்னேற்றங்களுக்கான வழிவகைகள் மேற் கொள்ளப்படுவதற்கு இந்தியாவிற்கு முதலீடுகள், நிதி உதவிகள், தொழில் நுட்பங்கள் தேவை. இதற்குச் சந்திரசேகரின் அரசு மேற்கு நாடுகளையே பெரிதும் நம்பியிருக்கவேண்டும். இதன் விளைவே 40 இற்கு மேற்பட்ட அமெரிக்க விமானங்களுக்குப் பம்பாயில் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டமை. இவற்றிற்கு மேலாக, தேர்தலை 93ஆம் ஆண்டில் எதிர்நோக்கும் சந்திரசேகர், இந்தியாவின் பொருளாதார

--- 67 -x--ه
பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டிய அதேவேளையில், தன்னை நிலைநாட்டிக் கொள்ளக்கூடிய விதத்தில் சில கவர்ச்சியான காரியங் களையும் செக்யவேண்டியுள்ளது. இங்குதான் ஒரு எறியில் பல மாங்காய்களை விழுத்த எடுக்கும் முயற்சியான ' சமாதான முயற்சி முன்வருகிறது! இந்தியா அமெரிக்க விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பாக ஈராக் பலத்த ஆட்சேபனையும், கவலையும் தெரிவித்த நிலையில், இந்தியாவினது ' சமாதானத் திட்டங்களை ஈராக் எவ்வளவிற்கு ஏற்கும் ஏன்பது கேள்விக்குரியதே. உள்ளூர் அரசியலைப் பொறுத்தமட்டில், சந்திரசேகர் தன்னை வருங்கால அரசியலில் நிலைநாட்டிக்கொள்ள முற்படுவதை முறியடிக்கவும், இசு லாமியரின் வாக்குகளை இழுக்கவும் ராஜீவ் காந்தி அமெரிக்க விமானங் களுக்கு எரிபொருள் விநியோகிப்பதைத் தீவிரமாக எதிர்த்தார்.
பாகிஸ்தான் :
இன்று பாரிய அரசியல், பொருளாதார, சமூகப்பிரச்சனைகளை எதிர்நோக்கிவரும் பாகிஸ்தானிய அரசு, உள்ளூர்க் கிளர்ச்சிகளையும் எதிர்நோக்கி வருகிறது. பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற் கான உதவிகளுக்குப் பாகிஸ்தான் வளைகுடா நாடுகளையே, குறிப்பாக குவைத், சவுதி அரேபியா, பாஹ்றெயின், கட்டார். U AB, ஒமான் போன்றவற்றையே, பெரிதும் நம்பியிருக்க வேண்டியுள்ளது. இந்த நிலை யில், பாகிஸ்தான் தனது 12,000 படைகளை சவுதி அரேபியாவிற்கு அனுப்பியது. ஆனல், காலப்போக்கில் இசுலாமிய தீவிரவாதிகள் ஈராக் கிற்கு ஆதாரவாகப் படையினைத் திரட்டியனுப்ப முடிவு செய்தனர், பாகிஸ்தானிய படைத்தலைவரும் பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு ஆதரவாகப் படைகள் அனுப்பியது தொடர்பாகப் பகிரங்க. ஆட் சேபனை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானிய ஆட்சியாளர்கள் இன்று மேலதிகமான பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். இவற்றிற்கு ஒருவித தீர்வுகளைக் காணுவதென்றல், ' சமாதானம் தொடர்பாக ஒரு திட்டத்தினை முன்வைத்து, ஒருவித போலி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இதே இன்று நடைபெற்று வருகின்றது. 12,000 துருப்புக்களை சவுதி அரேபியாவுற்கு அனுப்பிவிட்டு, சமாதான திட் டத்தினை முன்வைத்துள்ள பாகிஸ்தானின் முயற்சியைச் சதாம் ஹ"செயினும், ஈராக்கிய மக்களும் எவ்வளவு தூரத்திற்கு ஏற்பர் என்பது கேள்விக்குரிய விடயமே !
சிறீலங்கா :
பாரிய பொருளாதாரப் பிரச்சனைகளையும், அரசியல் பிரச்சனை களையும், உள்ளூர் கிளர்ச்சிகளையும் எதிர்நோக்கிவரும் சிறீ லங்காவின் சிங்கள ஆளும் வர்க்கங்கள் அமெரிக்கா, மேற்கு - ஐரோப்பியா நாடு கள், ஜப்பான் என்பவற்றின் நிதி, மற்றும் உதவிகளைத்தான் நம்பி

Page 41
- 68 -
நாட்டையே ஆளுகின்றனர். மறுபுறத்தில், பிரதான ஏற்றுமதிகளுள் ஒன்றன தேயிலை ஏற்றுமதியிலும், பல நாடுகள் இன்று போட்டி போடும் நிலையில், கணிசமான வருமானத்தினை வளைகுடா நாடுகளிலி ருந்துதான் பெறுகிறது. அடுத்த முக்கிய வெளிநாட்டுப் பண வருவாய் வெளிநாடுகளிலிருந்து இலங்கைப் பிரஜைகள் அனுப்பும் பணம் இதில் கணிசமான பங்கு வளைகுடா நாடுகளில் இருந்துதான் கிடைக்கப் பெறுகிறது. வடக்குக் கிழக்கில் நடைபெறும் போரினல் இப்பகுதி களுக்கு அனுப்பப்படும் பணம் குறைந்த நிலையில், வளைகுடாப் பணம் முக்கியமாகவிருந்தது.
வளைகுடாப் போரினல் இன்று இந்த வருமானம் முழுமையாக நின்றுவிட்டது. தமிழரின் போரை எதிர்நோக்கிவரும் சிறீ லங்கா அரசிற்குப் பொருளாதார நெருக்குவாரமும் மேலதிகமாக ஏற்பட் டால், நாடு இரண்டாகப் பிரியும் ஆபத்து ஏற்படும் என்ற காரணத் தினுல், அமெரிக்கா, மேற்கு - ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் என் பவை வளைகுடாப் பிரச்சனையைச் சாட்டுதல் செய்து, பாரிய அளவில் பணவுதவியைச் செய்தன. இந்த நிலையில், சிங்கள ஆளும் வர்க்கங்கள் மேற்கு -நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கச் செயற்பட வேண்டி யுள்ளது. இதன் விளைவுகளே ஜப்பானிய விமானங்களுக்கு கொழும் பில் எரிபொருள் விநியோக முடிவும், இந்தியாவுடன் இணைந்து * சமாதான முயற்சியில் ஈடுபடுவதுமாகும். இந்திய அரசும், சிறீ லங்க அரசும் தம்மை " அணிசேரா நாடுகள்" என்ற போர்வையின் கீழ் செயற்பட முற்பட்டாலும், இரு ஆளும் வர்க்கங்களும் உண்மை யில் யார் என்பதை சதாம் ஹ"செயினும், ஈராக்கிய மக்களும் அறி வார்கள்.
ஈரானினது நிலைமையும் ஏற்கனவே ஆராயப்பட்டுள்ளது. இந்த நிலையில், " அணிசேரா நாடுகளின் ' சமாதானத் திட்டம் எவ்வள விற்கு வெற்றியடையும் என்பது கேள்விக்குரியதே. துனிசியா, அல்ஜீரியா என்பவைகளது ஆளும் வர்க்கங்களும் பாரிய எதிர்ப்பினை இசுலாமிய தீவிரவாதிகளிடமிருந்து எதிர்நோக்கிவரும் நிலையில், வளைகுடாப்போர் தொடர்பாக ஏதாவது ஒரு முயற்சியை எடுத்துத் தமது மக்களைத் திருப்திப்படுத்த வேண்டியுள்ளது. இவர்களது முயற் சிகள் தமது அதிகாரத்தினைப் பாதுகாப்பதாகையால், வளைகுடா தொடர்பாக எந்தவித முற்போக்கு விளைவுகளையும் இவர்கள் ஏற் படுத்த முடியாது.
ருசியா :
ருசியாவினதும், கோர்பச்சேவ் இனதும் நிலைமைகள் ஏற்கனவே
ஆராயப்பட்டது. எது விதத்திலும், வளைகுடாப் போர் தொடர்பாக
ருசியா மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. உள்நாட்டில், அரசி

- 69
யல், பொருளாதார, சமூக பிரச்சனைக்ளை எதிர்நோக்கி வருகிறது. அமெரிக்காவையும், மேற்கு நாடுகளையும் ஆதரிக்காவிட்டால், உள் நாட்டுப் பிரச்சனைகள் தீர்க்கப்படமாட்டாது. ஆனல், வளைகுடாப் போரில் அமெரிக்காவை முழுமையாக வெற்றியடையவிட்டால், ருசிய சாம்ராஜ்ஜம் நிலைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மறுபுறத்தில், ஈராக்கினை ருசியா பகிரங்கமாகவோ, அல்லது மறை முகமாகவோ ஆதரித்து, ஈராக் போரில் வெற்றியடையுமேயானல், முடிந்து போனது எனக் கூறப்பட்ட ' பணிப் போர் ' (Cold war) மீண்டும் ருசியாவிற்கும், அமெரிக்காவிற்குமிடையே ஆரம்பமாகும். இது ருசியாவின் பொருளாதாரத்தை மீண்டும் பாதிக்கும். இந்த நிலையில், எதனைச் செய்வது தமக்குச் சிறந்தது என்பதை ஆராய்ந்தே ருசியாவின் ஆட்சிப் பீடத்திலிருப்பவர்கள் முடிவை எடுக்க வேண்டி யுள்ளது.
ருசியா எப்படியான முடிவை எடுக்குமென்பது சரியாகத் தெரி யாத நிலையில், ருசிய - அமெரிக்க * பனிப்போர் மீண்டும் உருவாகினல் தாம் பாதிக்கப்படுவோம் எனக் கருதும் நாடுகள் முற்கூட்டியே சில நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியுள்ளது. பனிப்போர் மீண்டும் ஆரம்பமாகினுல், விரிசல் நிறைந்த பிராந்தியமாகப் போவது முதலில் இந்து சமுத்திரமே. அப்படியாயின், இந்து சமுத்திரத்தின் சண்டி யன் ஆகவிருக்கும் இந்தியா பெரும் பிரச்சனையினுள் விழும் சந் தர்ப்பங்கள் அதிகமுண்டு. குறிப்பாக, இலங்கையில் தமிழ்பேசும் மக் களின் போராட்டம் 1 ஆகவே, இலங்கையின் பிரச்சனையை, நாடு பிரிக்கப்படாமல், முடிவுக்குக் கொண்டுவருவது மிக முக்கியமாகிறது. திருகோணமலை கடற்படை - விமானப்படைத் தளங்களும் முக்கியமா கின்றன. இவை தொடர்பாக சந்திரசேகர் அரசு முன்கூட்டியே ஆவன செய்வதில் தீவிரமாக முற்படுவர். அதேவேளையில் " சமாதா னம் ' பற்றி ஓடியும் திரிய வேண்டியுள்ளது.
பனிப்போர் மீண்டும் தொடங்குவதையிட்டுப் பீதியடைபவை களில் இந்து சமுத்திர நாடுகள் முன்னிற்கையில், ஐரோப்பாவின் ஜேர்மனியும் பெரும் இக்கட்டான சூழ்நிலைக்கே தள்ளப்படும். ஜேர் மனியர்கள் இதை ஆராய்ந்தறிந்து, வளைகுடாப் போர் தொடர் பாக மிகவும் கவனமாகவே செயற்பட்டு வருகின்றனர்.
ஜேர்ம்ணி :
ஜேர்மனியானது இன்று ருசியத் தயவில் ஒன்ருகியுள்ள ஒரு
நாடாகும். இரண்டாம் உலக யுத்தத்தில் தோல்வியடைந்ததின்
பின்னர், அதன் சோக, விரக்தி உணர்வுகள் இன்று மறையத்
தொடங்கியுள்ளன. ஆனல் வளைகுடாப் போர் ஜேர்மனியரை ஒரு
வித பீதியினுள் வீழ்த்தியுள்ளது. 80%இற்கு மேற்பட்ட ஜேர்மனியர்
s

Page 42
-م- 70 --
கள் தமது நாடு வளைகுடாப் போரில் நேரடியாகப் பங்கு பற்ற்க் கூடாது என்று கருதினர். ஜேர்மனியும் இப்போர் தொடர்பாக குறைந்த மட்டத்திலே தான் செயற்பட்டது.
அமெரிக்காவினதும், பிரித்தானியாவினதும் பலத்த கண்டனங் களுக்குள்ளான ஜேர்மனி, தெரிந்தெடுக்கப்பட்ட விதமான உதவி களையே கொடுக்க முற்பட்டது. ஜப்பானியரைப் போல், ஜேர்மனி யரும் தமது படைகளை அனுப்புவதைத் தமது " அரசியல் அமைப்பு' (Constitution) அனுமதிக்காது, எனக் கூறித் தப்பிக் கொண்டனர்" ஜேர்மனியின் போக்கினை நேட்டோ " நாடான துருக்கி கூட வன்மை யாகக் கண்டித்தது. நேட்டோ அமைப்பிற்குப் பெரும் துரோகத்தினை விளைவிப்பதாகக் குற்றம் சாட்டியது. ஈற்றில் ஜேர்மனி தனது 18 போர் விமானங்களைத் துருக்கியிற்கு அனுப்பியது. அங்கும், அவை வலிந்து தாக்குதலிற்குப் பயன்படுத்தப்பட மாட்டாது எனக் கூறி, துருக்கியைப் பாதுகாக்க மாத்திரமே பயன்படும் என்றும் கூறியது. இதனல் பாரிய பிரச்சனை ஏற்பட்டது.
எதுவிதத்திலும், ஜேர்மனி தனக்கு ஏற்படக் கூடிய ஆபத்தின் மூலகாரணத்திற்குத் தீர்வினைக் காண வேண்டியுள்ளது. இதனல் அது 2 விடயங்களைச் செய்ய வேண்டியிருந்தது. அவையாவன :
(1) இஸ்ரேலின் பாதுகாப்பு : (2) பாலஸ்தீனப் பிரச்சனைக்குச் சுமூகமrன தீர்வு.
இதில் முதலாவதற்கு, ஜேர்மனி, அமெரிக்காவிடமிருந்து பெற்ற தனது ஏவுகணை எதிர்ப்பு ஆயுதமான * Patriot இனை இஸ்ரேலிற்கு வழங்கியது. ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் இஸ்ரேலிற்கு வழங்கப் பட்டதன் மூலம், இஸ்ரேல் நீண்ட கால நோக்கில் ஈராக்கிடமிருக்கும் ஏவுகணைகள் மூலமோ அல்லது சவுதிஅரேபியா சீனுவிடமிருந்து பெற்றுக் கொண்ட Silkworm" ஏவுகணைகள் மூலமோ, அல்லது வேறு எந்த நாட்டினது ஏவுகணை மூலமோ ஆபத்தினை எதிர் நோக் காது தன்னைப் பாதுகாக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் தொடர்ந்து நிலைத்து நிற்கும் சந்தர்ப்பங்கள் உருவாகியுள்ளது. இஸ்ரேலிடம் ஏற்கனவே அணு - ஆயுதங்கள், இரசாயன-விஷ வாயு ஆயுதங்கள். இடைத்தர தாக்கல் தூர எறி-ஏவு as 2007 56ir (Intermediate Range Ballistic Missiles); (5.5u 5rtisai) STp 6Ts) gJ6) Gäsoor G 6r (Short Range Ballistic Missiles) 2-6r 6rsor.
இவற்றினைப் பார்க்கும் போது, ஜேர்மனியர்கள் "பாலஸ்தீனப் பிரச்சனையினை சுமூகமாக, நேரடியான முடிவினை ஏற்படுத்த முற்பட முடியும். இது ஜேர்மனி சமாதானத்தை உலகில் நிலைநாட்டப் பாடு

---- 71 س
படுவதாக உலகிற்குக் காட்டும் அதே வேளையில், தனது பிரச்சனை யைத் தீர்க்கவும் வழியமைப்பதாகிறது. இந்தச் சிக்கலான பிரச்சனை ஜேர்மனியரால் தீர்க்கப்பட முடியுமா, இல்லையா என்பதும் உண்மை யில் சதாம் ஹ-செயினின் கைகளிலும், பாலஸ்தீன ம்க்களின் கை களிலும், இஸ்ரேலிலும் ருசியாவின் கைகளிலும் தான் பெருமளவில் தங்கியுள்ளது.
வளைகுடாப் போரால் விடுதலைக்குப் போராடும் மக்கள் பெறும் அனுபவங்கள்:
வளைகுடாப் போரானது அரசியல், இராணுவ, இராஜதந்திர தந்திரோபாய ரீதியிலான செயற்பாடுகள் தொடர்பாக சில முக்கிய பாடங்களைத் தருகிறது, அவற்றில் முக்கியமான சில பின்வருமாறு :
(1) விடுதலைக்குப் போராடும் மக்கள் தமது விடுதலைப் போராட் டத்தினை பூகோள அரசியலுடன் இணைத்து ஆராய்ந்தே, தமது அரசியல், இராஜதந்திர தந்திரோபாயங்களை வகுத்துச் செயற்பட வேண்டியுள்ளது;
(2) உலகின் "ஒழுங்கு முறை பற்றி விளங்கி, அதற்கேற்ற விதத் தில் தமது இராஜதந்திர செயற்பாடுகளையும், பிரசாரங்களை யும் செய்ய வேண்டியுள்ளது;
(3) ஒரு போரில், இராணுவ - பொருளாதார பலமே இறுதி முடி வைத் தீர்மானிப்பதால், இவற்றை உருவாக்கத் திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டும் ;
(4) போரின் இறுதியில் தரைப்போரே முடிவை நிர்ணயிப்பதாக இருந்தாலும், போரில் வெற்றியடையத் தந்திரோபாய ரீதி யில் முக்கியத்துவம் வாய்ந்த ஆயுதங்களை ஆராய்ந்தறிந்து, அவற்றைத் தாமாகவே உருவாக்க வேண்டும், அல்லது அவற் றை பெற்றுக் கொள்ள வேண்டும் ;
(5) போராட்டத்தில் வெற்றிபெறத் தேவையான கருமங்களை மக்களும், ஆயுதம்தரித்த போராளிகளும் இயல்பாகச் செய்ய மக்களதும், போராளிகளதும் அடிப்படையறிவை உயர்த்தத் திட்டங்களை வகுத்துச் செயற்படவேண்டும். அதாவது : பூகோள அரசியல், இராணுவ தந்திரோபாயங்கள்; பொரு ளாதாரம், சமூகம், தொலைத்தொடர்புகள், பாதுகாப்பு, சர்வதேச அமைப்புக்கள், இராஜதந்திர செயற்பாட்டு முறை கள், விஞ்ஞானம் - தொழில் நுட்பம் என்பவை பற்றிய அறிவை உயர்த்த வேண்டும். விடுதலைக்குப் போராடும் மக்கள் இருக்கும் நாடு, வல்லரசுகளி னதும், பிராந்திய வல்லரசுகளினதும் நலன்களுக்கு, ஆகவே பூகோள

Page 43
- 72 -
அரசியல் - இராணுவ தந்திரோபாய ரீதியில், எவ்வளவு முக்கிய மானது என்பதைப் பொறுத்து, மேலே குறிப்பிட்டவைகள் முக்கி யத்துவம் பெறுகின்றன.
வல்லரசுகளது ஆதிக்க விஸ்தரிப்பிற்கு மிகவும் தேவையான ஒரு நாட்டில், விடுதலைக்குப் போராடும் மக்களின் அடிப்படையறிவு குறைவாக இருக்குமாயின், அவர்கள் வல்லரசுகளாலும், அவற்றின் வெகுஜனத்தொடர்பு சாதனங்களாலும், கைப்பொம்மைகளாலும், கைக்கூலிகளாலும் ஏமாற்றப்படவும், திசைதிருப்பப்படவும் அதிக வாய்ப்புகளுண்டு. ஆகவே, வல்லரசுகளும், அவற்றின் கைப்பொம் மைகளும், கைக்கூலிகளும், இவைகளின் வெகுஜனத்தொடர்பு சாதனங்களும் மக்களின் அடிப்படையறிவு உயர்த்தப்படாது பார்ப்பர், முறியடிப்பு வேலைகளிலும் தீவிரமாக ஈடுபடுவர். இந்த நிலையில், விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் போராடும் மக்கள் தமது அடிப் படையறிவை உயர்த்திக்கொள்ளத் திட்டங்களை வகுத்துச் செயற்படி வேண்டியுள்ளது.
இரண்டாவதை எடுத்துக்கொண்டால், இராஜதந்திர செயற் பாடுகளும், பிரசாரங்களும் "உலக ஒழுங்கு முறை” யின் கீழ் ஏற் கனவே தீர்மானிக்கப்பட்டவைகளின் அடிப்படையில், எதிரிக்கு அரசியல், இராஜதந்திர, பொருளாதார, மனோரீதியான தாக்கங் களைக் கொடுக்கும் விதத்திலும், உலக மக்களின் ஆதரவைத் தேடும் விதத்திலும் அமையவேண்டும். மேலும், இந்தச் செயற்பாடுகள் உரிய காலத்தினைக் கடந்தால் பயனற்றதாகுவதுடன், எதிர்விளைவு களையும் கொடுக்கலாம். ஆகவே, இராஜதந்திர செயற்பாடுகளும், பிரசாரங்களும் சர்வதேச ரீதியில் உரிய காலத்தில் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படவேண்டும். இங்குதான் வெகுஜனத் தொடர்பு சாதனங்களும், தொலைத்தொடர்புகளும் மிகமுக்கியமா கின்றன,
மூன்ருவதில் இராணுவ பலத்தினை எடுத்தால், பிராந்திய பரப் பளவு, தரையமைப்பு, தரை - எல்லைகள், கடல் எல்லைகள், போக்கு வரத்து வசதிகள், குடிகள் அமைப்பு என்பவற்றை ஆராய்ந்து, அவற்றிற்கேற்ற விதத்தில் படைகளைத் தயாரிக்க வேண்டியுள்ளது. இராணுவ பலத்தினைப் பொறுத்தமட்டில், தகுந்த படைப்பலம், ஆயுதபலம். பயிற்சி, அனுபவம், மனேநிலை என்பவற்றைக் கவனத்தில் கொண்டு, நடைமுறைத்திட்டகளை வகுத்துச் செயற்பட வேண்டி யுள்ளது.
பொருளாதாரப் பலத்தினைப் பொறுத்தமட்டில், போர்ச் சூழ் நிலைகளைப் பொறுத்து, குறைந்தமட்டத் தன்னிறைவை ஏற்படுத்தத் திட்டங்களை வகுத்துத் செயற்படவேண்டும். சூழ்நிலைகளுக்கேற்றவாறு,

- 73 -
பொருளாதாரப் பலத்தினை எப்படி அதிகரிக்க முடியும் என்பதை ஆராய்ந்து, திட்டங்களை வகுத்து நடைமுறைப் படுத்தவேண்டும்.
நான்காவதை எடுத்துக் கொண்டால், போரின் போது ஏதிரி பாரிய தாக்குதல்களைத் தரை, கடல், ஆகாயமார்க்கமாக நடாத்தத் தயங்கவைக்கக் கூடியவை எவை என்பதைக் கண்டறிந்து, அவற்றைப் பயன்படுத்தத் தேவைப்படுபவைகளைத் தயாரிக்க வேண்டும், அல்லது பெற்றுக்கொள்ள வேண்டும் ; அந்த இராணுவ நடவடித் கைகளை நடைமுறைப்படுத்தத் தயார்படுத்தல்களைச் செய்யவேண்டும். இப்படி யான ஆயுதங்களை ' தந்திரோபாய் ஆயுதங்கள் " (Strategic Weapons) என்று கூறுவர். அமெரிக்காவையும், ருசியாவையும் பொறுத்த மட்டில், இவைகளுக்கிடையே நடைபெறும் போரில் நியூக்கிளியர் ஆயுதங்களும், எறி - ஏவுகணைகளும், விமானங்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும், குறுரஸ் மிசைல்களும் " தந்திரோபாய ஆயுதங்களா கும். வளைகுடாப்போரில், ஈராக்கின் விஷவாயு - இரசாயன ஆயுதங்க ளும், எறி - ஏவுகணைகளும் தந்திரோபாய ஆயுதங்களாகும் ". இலங்கையின் வடக்குக் கிழக்குப் போரில் சிறீ - லங்கப் படைகள் விமானக் குண்டுவீச்சு, Artillery Shelling என்பவற்றைத் தந்திரோ பாய ரீதியில் பயன்படுத்தப்படுகின்றன. இலங்கைத் தமிழ்ப்பேசும் மக்கள் தம்மீது சிறீலங்க இராணுவம் விமான, பீரங்கித் தாக்குதல் களை நடாத்துவதைத் தவிர்க்க, அல்லது குறைக்க வேண்டுமாயின், இராணுவ நடவடிக்கைகளை வடக்குக் கிழக்குத் தவிர்ந்து விக்கு, எப்படி, எவை கொண்டு நடாத்துவது என்பது ஆராயப்பட வேண்டும்.
விடுதலைக்குப் போராடும் மக்கள் தமது போராட்டத் தின் இராணுவ நடவடிக்கையில் வெற்றி பெறுவதாயின் தந்திரோபாய ரீதியில் முக்கியமான ஆயுதங்களை ஆராய்ந்தறிந்து, அவற்றை உரு வாக்கி, உற்பத்தி செய்யவேண்டும், இவற்றைத் திட்டமிட்டமுறை யில் செய்வதில்தான் வெற்றி பெருமளவில் தங்கியுள்ளது.
ஐந்தாவதை எடுத்துக் கொண்டால், இத்திட்டங்கள் விடுதலைப் போராட்டத்தின் போதும், அதன் பின்னரும் பயன்படும் வகையில், ஆழமான் ஆராய்வின் பின்னர் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இவற்றையெல்லாம் ஆராயும் போது, விடுதலைப்போராட்டத்தின் வெற்றியானது அரசியல் - இராணுவ - இராஜதந்திர தந்திரோபாய வகுப்பாளர்கள், அறிவாளிகள், தொழில் நுட்பவியலாளர்கள், தொழில்துறையாளர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், விரிவுரை யாளர்கள், ஆசிரியர்கள், புத்திஜீவிகள், தொழிலாளிகள், விவசா யிகள், மாணவர்கள் அனைவரையும் தேவைகளுக்கேற்றவிதத்தில் செயற்படவைப்பதென்பதிலேதான் பெருமளவில் தங்கியுள்ளது.
3

Page 44
இணைப்பு
பூகோளத்தில் நடைபெறும் வெவ்வேறு சம்பவங்கள் தொடர் பாகவும், வல்லரசுகளினது பூகோள அரசியல், பொருளாதார, இராணுவ தந்திரோபாயங்கள் தொடர்பாகவும் ஆய்வுகளை நடாத்த முற்படும்போது, பலதரப்பட்ட அடிப்படை விபரங்களும், சில குறிப் பிட்ட விபரங்களும் முக்கியமாகின்றன. இவைகளைச் சுலபமாகவும், சரியாகவும் பெற்றுக்கொள்ள முடியாதுபோனல், ஆய்வுகளை நடாத்த முடியாதேபோகும். இந்த நிலையில், இந்த விபரங்களைப் பெறுவ தற்குப் பயன்படுத்தக்கூடிய கைநூல்கள், வருட நூல்கள், வெளி யீடுகள், அறிக்கைகள், சஞ்சிகைகள், நூல்கள் பற்றிய விபரங்களும், அவை தொடர்பான சில குறிப்புகளும் இங்கே தரப்படுகின்றன. இவற்றைப் பெற்று, விசேட நூலகத்திலோ, அல்லது ஒரு ஆய்வு நிறுவனத்திலோ வைப்பதன் மூலம், பாரிய நன்மையையே நாம் அடைவோம்.
1. நாடுகள், பிராந்தியங்கள் தொடர்பான பொது விபரங்கள் : (a) World Fact Book:
இந்த வருடாந்தக் கைநூலானது அமெரிக்க உளவு ஸ்தாபன மான CIA யினுல் பிரசுரிக்கப்படுகிறது. அரசாங்க அதிகாரிகளுக்கும், காங்கிரஸ், செனேற் சபை அங்கத்தவர்களுக்கும் அரசியல் - இராணுவ பொருளாதாரத் தீர்மானங்களை வெளிநாடுகள் தொடர்பாக எடுக்க உதவும் வகையில் விபரங்கள் சுருக்கமாக இந்தக் கைநூலில் கொடுக் கப்பட்டுள்ளது,
இதில் உலகநாடுகள் அனைத்தினதும் விபரங்கள் தரப்பட்டுள்ளன. நாடு அமைந்திருக்கும் இடம், பரப்பளவு, நாணயம், சுவாத்தியம், தரை தொடர்பாகக் காடுகள், குளங்கள், கடல்கள், வணுந்தரம், அரை வஞந்தரம், விவசாய நிலம், விவசாயம், வளங்கள்,கைத்தொழில்கள் GNP, I G D P, கல்வியறிவுநிலை, கடன் மற்றும் பொருளாதார விபரங்கள், வெவ்வேறு இனங்கள், சமயங்கள், மொழிகள், அரச மொழி, பேசத் தெரிந்த மொழிகள், பிரதான ஏற்றுமதி, இறக்குமதி என்பவைகள் தரப்பட்டுள்ளன. படைகள் பற்றிய சுருக்கமான விபரங் களும் தரப்பட்டுள்ளன.
இவற்றைவிட, தொலைத்தொடர்பு வசதிகள், துறைமுக எண்ணிக் கைகள், விமான ஒடுபாதைகளின் விபரங்கள், ரயில் - மோட்டார் பாதைகளின் நீளங்கள், அரசியல் கட்சிகள், அரசு, ஆட்சி முறை, கடைசி தேர்தல் விபரங்கள், மற்றும் சில விபரங்கள் தரப்பட்டுள்
6 GT

- 75 -
இந்தக் கைநூலில் நாடுகளின் வரலாறுகள், அரசியல் வரலாறுகள் தரப்படவில்லை.
இந்தக் கைநூலினை பொதுநூல் நிலையங்கள், சர்வகலாசாலை நூல் நிலையங்கள், ஆய்வு நிறுவனங்கள் என்பவை CTA இன் வெளி யீட்டுவாரியத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். இது A - 4 அளவுகளு 60-lugil.
(b) Area Hand Books :
இது உலகின் வெவ்வேறு பிராந்தியங்களின் நாடுகளைத்தரும் ga(5 60) 15 bitarte,5lb. 2-5ntur6007 LDIT 5, Area Hand Book for the Indiara Ocean Territories; Paeific Territories...... எனப் பிரிக்கப்பட்டுள்ளது g) is is 605DT 6 US Government Printing Office, Washington DC இனல் வெளியிடப்படுகிறது.
(c) QUID :
பல்வேறுபட்ட விடயங்களை அறிய ஒரு சிறந்த கைநூல் என்ருல் அது " uெid வருடாந்தக் கைநூலாகும். ஆனல், இது பிரெஞ்சுப் பாஷையில் வெளியிடப்படுகிறது. இது வெவ்வேறு பிரிவுகளை உள்ள டக்கும் ஒரு கைநூல். சாதாரண அகராதியின் அளவில் இருக்கும் இந்தக் கைநூலில், சக்தி, தேசிய பாதுகாப்பு, நாடுகள், விவசாயம், மூலவளங்கள், சமயங்கள், பாஷைகள், இனங்கள், கணிப்பொருட்கள், உலோகங்கள், ஆயுதங்கள், இலக்கியங்கள், எழுத்தாளர்கள், கலைகள், விளையாட்டுக்கள், கிரகங்கள், வான சாஸ்திரம், அண்டவெளி, இரசா யணம், பெளதீகம், மருத்துவம், கணிதம், சினிமா, நடிகர்கள். எனப் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் மிகவும் விளக்கமாக, ஆனல் சுருக்கமாக மேலும் பிரித்து, விளக்கப்பட்டுள் ளது. உதாரணமாக சக்தி பற்றிய பிரிவில் சகலவிதமான சக்திகள் பற்றியும் தேவையான முழு விபரங்களும் தரப்பட்டுள்ளன. பெற். ருேலியம், இயற்கை வாயு, வேறு வாயுக்கள், நிலக்கரி, நிலஅடிவெப் பம், நில அடி கொதிநீர் சுனை, காற்று, நீர், கடல் அலை, அணுசக்தி, சூரிய வெளிச்சம் என்பவற்றிலிருந்து சக்தி பெறுவது தொடர்பான முழு விபரங்களும் ஆழமாகத் தரப்பட்டுள்ளன.
வெவ்வேறு நாடுகளைப் பற்றிய வரலாறுகள், அரசியல் வரலாறு கள், மற்றும் முழு விபரங்களும் தரப்பட்டுள்ளன. சுருங்கக்கூறினல், கைநூலிற்கு எடுத்துக்காட்டாக இது உள்ளது. ஆனல், இது பிரெஞ்சு மொழியில்தான் உள்ளது. பிரான்சு பற்றிய முழுவிபரங்களும் தரப் பட்டுள்ளன.

Page 45
இந்தக் கைநூல் வருட முடிவில் அக்டோபரில் பொதுவாக வெளியாகும். இதன் விலை 200 பிரெஞ்சு பிராங்குகள்வரையிருக்கும்.
(d) ASA Year Book :
Sjö 5 GAJBL ilir jö35ởi GM 5 BITổi, Far Eastern Economic Review என்ற சஞ்சிகையினல் வெளியிடப்படுகிறது. இதிலிருந்தும் சில விப ரங்களை ஒருவர் சுலமாக அறிய முடியும்.
(e) Reader's Digest Almanac and Year Book:
இதுவும் வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பிரசுரிக்கப்படும் வருடாந்தக் கைநூலாகும். இதில் நாடுகளின் வரலாறும், அரசியல் வரலாறும் ஓரளவிற்கு தரப்பட்டுள்ளன. சுருங்கக் கூறினல், இது அமெரிக்கா பற்றிய விபரங்களைத் தரும் ஒரு கைநூலாகும். குறிப் பிட்ட வருடத்தில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற முக்கிய சம்ப வங்களும் ஒரு பிரிவாகத் தரப்பட்டுள்ளன.
குறிப்பு :
gjö35 5 God glömt 6iv 5 6f6Jub C. II A. g)6Orgil World Fact Book, Quid என்பவைகள் இரண்டும் உண்மையில் போதுமானவை. பிரெஞ்சு தெரி யாதவர்கள் Quid இற்குப் பதிலாக ஏனைய நூல்களைப் பயன்படுத்தி ஞலும், தேவையான முழு விபரங்களையும் பெறுவது சற்றுக் கடின மாகவே இருக்கும்.

77
(1) இராணுவ தந்திரோபாய ஆய்வுக்குத் தேவைப்படும் அடிப்படை
விபரங்களுக்கான கைநூல்கள் :
(a) Military Balance Year Book :
" 1992)ğ/ International Institute of Strategic Studies 676örp 63)6övrlı — னில் அமைந்திருக்கும் தந்திரோபாய ஆய்வு நிறுவனத்தினல் வருடாந்தம் வெளியிடப்படும் கைநூலாகும். இராணுவ தந்திரோபாய ஆய்வுகளுக்குத் தேவைப்படும் அடிப்படை விபரங்களைத் தரும் சிறந்த கைநூல் என்ருல் அது இதுவே! இது இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும், தந்திரோபாயங்கள் தொடர்பாகவும் ஒரளவிற்கு விளக்கமுள்ளவர்களுக்கே பெரிதும் பயன்படும்.
ஒவ்வொரு நாட்டினது தரைப் படையின் எண்ணிக்கை, பயன் படுத்தும் முக்கிய ஆயுதங்கள், டாங்கிகள், ஏவுகணைகள் என்பவற்றின் விபரங்கள் : கடற்படையின் எண்ணிக்கை, சகலவிதமான போர்க் கப்பல்கள், ஆயுதங்கள், ஏவுகணைகள்; விமானப்படையின் எண்ணிக்கை, விமானங்கள், ஏவுகணைகள், ஹெலிக் கொப்டர்கள்; தந்திரோபாய ரீதியான படைகள் (Strategic Forces) தொடர்பான விபரங்கள், எறி - ஏவுகணைகள், நீர்மூழ்கிக்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் ஏவு-கணைகள் மற்றும் விபரங்கள் தரப்பட்டுள்ளன.
முக்கிய விமானங்கள், ஹெலிக்கொப்டர்கள், ஏவுகணைகள் என்ப வைகளின் பெயர்கள், குணதிசயங்கள் என்பவை அட்டவணை வடிவில் தரப்பட்டுள்ளன.
இவைகளைத் தவிர, இராணுவ பலத்துடன் தொடர்பான மனித பலம், பொருளாதார பலம் என்பவற்றை அறியத் தேவையான சுட் டெண்கள், விபரங்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டினதும் பரப்பளவு, ஜனத்தொகை ஆண்-பெண், வெவ்வேறு வயதெல்லைகளுள் ஜனத்தொகை, நாணயம், கடன், GDPIGNP, பாதுகாப்பிற்கான செலவு, பல ஆண்டுகளாகப் பாதுகாப்புச் செலவு எப்படி இருந்து வந்துள்ளது என்பதை விளக்கும் அட்டவணைகள், மற்றும் விபரங்கள் தரப்பட்டுள்ளன.
மேலும் அணு-குண்டுகள், விஷ-வாயுகள், இரசாயன குண்டுகள், கிருமி-ஆயுதங்கள் போன்றவற்றின் விபரங்களும், கட்டுப்படுத்தல்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் பற்றியும் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
இந்தக் கைநூல் பொதுவாக வருடமுடிவில் அக்டோபரில் வெளி யிடப்படும். இதன் விலை E20முதல் 825வரையாகும். எவரும் இந்தக் கைநூலை ஆய்வு நிறுவனத்திலிருந்தோ அல்லது புத்தகசாலைகளில் இருந்தோ பெற்றுக் கொள்ளமுடியும்,

Page 46
سمسمـ 78 ـ
(b) ஆயுத உருவாக்க அடிப்படைகள் :
காலால் படைகளின் சகல ஆயுதங்களும் உருவாக்கும் அடிப்படைகள் தொடர்பாக நூல்கள் வெளிவருவது மிகமிகக் குறைவு. ஆனல், இராணுவ- கல்லூரிகளில் பயில்பவர்கள் (அதிகாரிகள்) பயன்படுத்து வதற்கென சில பிரத்தியேக நூல்கள் தயாரிக்கப்பட்டு, வெளியிடப் பட்டுள்ளன. பிரித்தானிய இராணுவ-கல்லூரி ஒன்றில் கற்பிக்கும் விரிவுரைகள் புத்தகவடிவில் வெளியிடப்படுகிறது. இதனை Brasey's Series என்று பொதுவாகக் குறிப்பிடுவர். இதில் 8 நூல்கள் தரைப் போருக்குப் பயன்படுத்தும் ஆயுதங்கள், மற்றும் பலவிடயங்களை உள்ளடக்குகின்றன. சிறு ஆயுத உருவாக்க அடிப்படைகளில் ரைபிள் முதல் பாரிய பீரங்கி வரையான உருவாக்க அடிப்படைகள் பறப்பு s6ir (Ballistics); Explosives, G35 TL L-IT iš 5 6ir (Cartridges), GM35-6T só குண்டுகள் (Hand Grenades), கண்ணி வெடிகள் (Mines): மோட்டார், மோட்டார் ஷெல்கள், பீரங்கி ஷெல்கள், ராக்கட்டுக்கள் போன்ற வற்றின் உருவாக்க அடிப்படைகள் இலக்குகளை கண்டறிவதற்கான முறைகள், கருவிகள், சாதனங்கள் என்பவற்றின் அடிப்படைகள், மற்றும் சில விடயங்கள் தொடர்பாக இந்த நூல்கள் விளக்கங்களைத் தருகின்றன.
சிறு ஆயுத உருவாக்கங்கள் தொடர்பாக வெளியிடப்படும் நூல் களில், இன்று, இவை மட்டுமே, சாதாரண ஒருவரும் பெறக்கூடிய தாகவுள்ளன. வெவ்வேறு நாடுகளின் இர்ாணுவங்கள் தமது படை களுக்கும், அதிகாரிகளுக்கும் பல கைநூல்களைத் தயாரித்துள்ளன. இவைகளும் மிகவும் பயன்தரக் கூடியவை. ஆனல் Brasey's Series இலுள்ள 4 நூல்கள் சாதாரண ஒருவருக்குப் போதுமானவை. இவை கள் ஒவ்வொன்றும் E6- 8ே வரையிருக்கும். பொதுவாக இவை புத்தக சாலைகளில் கிடைக்கமாட்டாது. இவற்றை வெளியீட்டாரிடமிருந்து தான் பெறவேண்டும். அல்லது ஆயுதங்கள், போர்சாதனங்கள் தொடர்பான விசேட புத்தகசாலைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
(c) Jane's Infantry Weapons Year Book:
காலால் படைகளின் ஆயுதங்கள் தொடர்பாக வெளிவரும் வரு டாந்தக் கைநூல்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாக இருப்பது இத்தக் கைநூலே. வருடாவருடம் வெளியிடப்படும் இந்தக் கைநூலை பாரிய புத்தகசால்ையில் இருந்தும், வெளியீட்டாரிலிருந்தும் (Jame Publishers) ஏறக்குறைய 5ே0-860 இற்கு வாங்க முடியும்.
இதில் உலகின் ஒவ்வொரு நாட்டினலும் உருவாக்கப்படும் சகல காலால் படை ஆயுதங்கள் பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.

مسس۔ 79 --
பிஸ்டல்கள் முதல் பீரங்கிகள் வரைக்கும் விபரங்கள் தரப்பட்டுள்ள துடன், மோட்டார்கள் (Mortars), கண்ணி வ்ெடிகள் (Mines), கைக் gairGsair (Hand Grenades); Flares Smoke Bombs; Anti Riots Materials, Surface - to - Air Missiles; Body Armour ; Training, &quipment என்பவற்றின் விபரங்களும், சில அடிப்படை விளக்கங் களும் தரப்பட்டுள்ளன. இவற்றைவிட, ஆயுத உற்பத்திக் கம்பனி களின் பெயர்களும், விலாசங்களும் தரப்பட்டுள்ளன. காலால் படை களின் ஆயுதங்கள் பற்றிய விபரங்களுக்கு இக்கை நூல்ஒன்று மட்டும் போதுமானது.
குறிப்பு:
Janes Series gav LÁ35ägub 35 ÜLuổiv 35 air (Surface Ships), päri மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள், மற்றும் பல விடயங்கள் தொடர் பான கைநூல்களும் உள்ளன. ஆனல், விலையுடனும், புத்தகத்தின் பருமன், நிறை என்பவற்றுடன் ஒப்பிடும் போது, சிறிய, விலை குறை வான, போதிய விபரங்கள் உள்ள கைநூல்கள் இன்று டாங்கிகள், விமானங்கள், ஹெலிக்கொப்டர்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள், ஏவுகணை கள் என்பவை பற்றிப் பெற முடியும். இவைகள் ஒவ்வொன்றும் கூடியது 8 20 வரையே இருக்கும்.
(d) SIPRI YEAR BOOK :
gjö S5 6ưQ5L-IT fö35i GTM ngistra)IT GOWg Stockholm International Peace Research Institute இனல் வருடா வருடம் அக்டோபர் மாதமளவில் வெளியிடப்படுகிறது. இது ஏறக்குறைய கி 40 வரையிருக்கும்.
S1PRI Year Book ஆனது, சர்வதேச அமைதி தொடர்பாக ஆராயும் ஒரு நூல் என்ற முறையில், அது ஆயுதங்களால் அமைதி குலைக்கப்படுவது தொடர்பாக ஆராய்கிறது. இந்த நிலையில், இந்தக் கைநூலில் வெவ்வேறு நாடுகளின் வருடா வருட ஆயுதக் கொள் வனவு, ஆயுத ஏற்றுமதி, ஆயுத உற்பத்தி, புதிய ஆயுத உருவாக்கங் கள், விஷவாயு - இரசாயன ஆயுத உருவாக்கங்கள், நியூக்கினியர் ஆயுத உருவாக்கங்கள் என்பவற்றின் விபரங்கள் பற்றியும், புதிய இராணுவத் திட்டங்கள் பற்றியும், அவை தொடர்பான ஆய்வுகளும் தரப்பட்டுள்ளன.
(e) விண்வெளியின் இராணுவப் பயன்பாடுகள் :
இன்றைய நவீன உலகில் விண்வெளியானது இராணுவ நடவடிக் கைகளுக்கும், ஆதிக்க விஸ்தரிப்பிற்கும் பாரிய அளவில் பயன்படுத் தப்படுகிறது. இது தொடர்பாக வெளிவந்த நூல்களுள் சிறந்த நூல்களில் ஒன்று JANE வெளியீட்டாரால் பிரசுரிக்கப்பட்ட நூலாகும். இதில் ஏவுகணை உருவாக்க போட்டி, பூமி முழுவதினையும் கண்காணிக்

Page 47
- 80 ܚ
கவும், உளவு வேலைகளைச் செய்யவும் சற்றலைட்டுக்களின் பயன் பாடுகள், மூலவளங்களைச் சற்றலைட்டுக்களைப் பயன்படுத்திக் கண்டறி தல், வேறு பல முக்கிய விடயங்கள் விளக்கமாக ஆராயப்பட்டுள்ளன. இந்த நூல் 2ே0 வரையிருக்கும். உலகின் சிறந்த புத்தகசாலைகளி லுய, Jane வெளியீட்டாரிடமிருந்தும் (Britain) எவரும் நூலைப் பெற்றுக் கொள்ளலாம். (iv) இராணுவ, பாதுகாப்பு சம்பந்தமான சஞ்சிகைகள அறிக்கைகள் :
Jane's Defense Weekly; Air - Force Magazine Aviation Week & Space Technology; Air et Cosmos (French); US Naval War College Reviews; US Naval Institute Proceedings; Defense Monitor, Asian Defense journal; Defense of Japan; Army; Soldiers of Fortune; US Defense Annual Report By The US Secretary of Defense ; Adelphi Papers, International Institute of Strategic Stddies; London ; US Department of State Bulletin ; ucsbgtb éghai (5tb ஆய்வு நிறுவனங்களின் ஆய்வுகளும், அறிக்கைகளும்:
Heritage Foundation, Washington; Brookings Institution, USA ; Institute of Defense Studies and Analyses, New Delhi;
பொருளாதாரம், அரசியல் தொடர்பானவை:
Middle East Review; Middle East Insight; Petroleum News; Petroleum Economist; Strategic Digest (New Dalhi) ; Strategic Materials Management; Sea Technology; International Financial Statistics Year Book (IMF); Indian Journal of International Law ; American Journal of International Law; Reports of the US Senate, Congress Sub - Committees on Politics & Defense; Keesing's Contemporary Archives.


Page 48
வளைகுடா நாடுகளும் அயல் நாடுகளும்
TURKEY
TEHRAN
AFGHANISTAN - ஆப்கான BAHRAN - பாஹ்றெ
IRAN - ஈரான் | IRAG -- prgrrrق
ORDAN - ஜோர்தா
KUWAT - குவைத்
| OMAN - ខ្មាំ ចាំ
PÅAKSTAN == பாகிஸ்தா PERSAN GULE - பாரசீகக் QUATAR 一 cm_i_srsた
SAUDI ARÀBIA ---- சவுதி அ SYRIA . ܢ TORKEY - துருக்கி UAE قع ہےgئی;G)}IL کے
USSR ருசியா