கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புகள்: 1990 களின் வளர்ச்சி

Page 1
ຫຼິ
 


Page 2

பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கள் -1990 களின் வளர்ச்சி
மா.சின்னத்தம்பி. B.A.; B.PHIL. Hons. Dip.Ed; M.A விரிவுரையாளர் யாழ் பல்கலைக் கழகம்
1997

Page 3
முதற்பதிப்பு ஆனி, 1997.
பதிப்புரிமை: ஆசிரியருக்கு.
ത്ത
పోయి O/-
பதிப்பாளர்:
சூரீ லங்கா புத்தகசாலை,
234, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்,
விற்பனையாளர்:
லங்கா புத்தகசாலை, G.L1/2 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, கொழும்பு - 12 341942

அணிந்துரை
கல்வியியற்துறை விரிவுரையாளர் திரு மா.சின்னத்தம்பி பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கள் 1990களின் வளர்ச்சி" என்ற நூலை வெளியிடுவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியற் சிறப்புப் பட்டதாரியான இவர் முதுகலைமானிப்பட்டத்தையும் பெற்றுள்ளார். நீண்டகாலம் பொருளியல் ஆசிரியராகவும், யாழ்ப்பாணக் கல்லுாரிபட்டதாரித் திணைக்களத்தின் பொருளியல் விரிவுரை யாளராகவும் பணியாற்றிய இவர் பட்டப்பின் கல்விடிப்ளோமாவையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். யாழ், தொழில்நுட்பக் கல்லுாரியின் பகுதி நேரப் பொருளியல் விரிவுரையாளராகவும் திரு.சின்னத்தம்பி பணியாற்றி வருகின்றார்.
திரு.சின்னத்தம்பி ஏற்கனவே பல பொருளியல் பாடநூல்களை எழுதி அனுபவம் பெற்றவராவார். 1990களில் உலக பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்பற்றிய பின்னணியில் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கள் பற்றி அதிக சிரத்தையுடன் இந் நுாலை எழுதியுள்ளார். இந்நூல்கல்வியுலகில் நல்ல வரவேற்பைப் பெறும் என நம்புகிறேன்.
எதிர்காலத்தில் தொடர்ந்து இவ்வாறான மேலும் பல நூல்களை திரு.சின்னத்தம்பி வெளியிடுவதன் மூலம் தமிழ் மொழிக்கும்கல்வியுலகுக்கும் சேவையாற்றவேண்டுமெனக் கேட்டு கொள்வதோடு அவரது இம்முயற்சிவெற்றிபெறவும்வாழ்த்துகிறேன்
பேராசிரியர். பொ. பாலசுந்தரம்பிள்ளை. உபவேந்தர் உபவேந்தர் அலுவலகம். யாழ்.பல்கலைக்கழகம். யாழ்ப்பாணம்,

Page 4
III அணிந்துரை
ஒரு காலத்தில் உலக நாடுகளிடையே ஒப்பந்தங்களும் உடன் படிக் கைகளும் இராணுவ நலப் பின்னணியில் அரசியலடிப்படையிலாயினவாயமைந்தன. அந்தப் போக்குக்குப் பதிலாக அண்மைக்காலங்களில் பொருளாதார ரீதியிலான தொகுதிகள் தோன்ற ஆரம்பித்துள்ளன. அவை தமது கட்டமைப்புக் களின் வாயிலாகவும் , செயற்பாட்டு வீச்செல்லைகளுடாகவும் தம்முள் அடங்கும் அங்கத்துவ நாடுகளினதும் புவியியல் எல்லைகளை உள்வாங்கிப் பிராந்திய மட்டத்தில் உயர்ந்துள்ளன. இத்தகைய ஒத்துழைப்புக்கள் 1990க்குப் பிற்பட்ட காலத்தில் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளன. இந்த வளர்ச்சியை - விளக்குவதாக அமைகின்றது. "பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்புக்கள் -1990களின் வளர்ச்சி" என்னும் இந்நூல்.
எமது நாட்டில் பள்ளிக்கூட மட்டம் - க.பொ.த (உயர்தரம்), பல்கலைக்கழக மட்டம் இரண்டிலும் பொருளியற் பாடப் பரப்பில் சமகால விருத்தி நிலையைக் காட்டும் வகையில் பிராந்தியப் பொருளாதார அமைப்புக்கள் பற்றிய அறிவு எதிர் பார்க்கப்படுகின்றது. இவ்வமைப்புக்கள் அண்மைக்காலத் தோற்றங்கள் என்ற காரணம் போலும் இவை சழ்பந்தமான தகவல்களைப் பெறுதற்கு எமது மாணவர் சிரமப்பட வேண்டியுள்ளது. கிடைக்கின்ற சில படைப்புக்களும் ஆங்கிலத்தில் காணப்படுவது அவர்கள் நிலையை மேலும் சிக்கலாக்குகின்றது. இது சம்பந்தமான தரமான நூல்கள் தமிழில் இல்லை என்ற குறையைப் போக்குவதற்குத் திரு.மா. சின்னத்தம்பி அவர்களின் இவ் ஆக்கம் அமைந்துள்ளது.
பிராந்திய ஒத்துழைப்புக்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டி ஒருங்கிணைத்து நூலுருவில் வெளியிடுவதன் மூலம் திரு.சின்னத்தம்பி கல்வியுலகில் காலத்துக்கேற்ற பங்களிப்பு செய்துள்ளார். இந்நூல் மாணவருக்குமட்டுமன்றி, ஆசிரியர்களுக்கும் சமூகவியல் விஞ்ஞானிகளுக்கும், மற்றைய பொருளியல் ஆர்வலர்க்கும் பெரும் பயனை அளிக்கும் என்பது திண்ணம்.
இந்நாலினை ஆக்கும் சகல தகுதிகளும் திறன்களும திரு.சின்னத்தம்பிக்கு உண்டு. பொருளியல் சிறப்புப் பட்டத்தையும் முதுகலைப் பட்டத்தையும் பெற்றவரான திரு.சின்னத்தம்பி அத்துறையில் நீண்ட அனுபவமுடையவர். எமது துறையில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் அவள் தமது அனுபவங்களின் வழியில் இந்நூலை வடிவமைத்துள்ளார்.

I
எளிமையான மொழிநடை, தெளிவான விளக்கங்கள், தேவையான இடங்களில் தகவல்களின் அடிப்படைகளைத் தொடர்புபடுத்த ஆங்கிலப் பதங்களின் உபயோகம் என்பன வாசகள் மட்டத்தில் இதற்கொரு வரவேற்பை ஏற்படுத்தும் என்பது உறுதி. இதைப்போன்ற நூல்கள் எமது மொழியில் வொளியிடப்படுவது இன்றைய காலகட்டத்தின் அவசியத் தேவையாகும். இப்படியான தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பங்காற்றும் படைப்பாளிகளைப் போற்றி உற்சாகமளிப்பது எல்லோரதும் கடமையாகும்.
திரு.சின்னத்தம்பியின் இந்த முயற்சியைப் பாராட்டி, அவர் இத்துடன் நின்றுவிடாது மேலும் பல நூல்களை வெளியிட்டுக் கல்வியுலகுக்குத் தொடர்ந்தும் பணியாற்ற வேண்டுமென வாழ்த்துகிறேன்.
கல்வியியற்துறை, பேராசிரியர் வ.ஆறுமுகம் யாழ் பல்கலைக்கழகம்.
தலைவர், கல்வியியற்துறை
யாழ்ப்பாணம்.

Page 5
IV முனனுரை
நாட்டின் நெருக்கடிமிக்க சூழ்நிலையில் வழமையான வேலைகளுக்குப் புறம்பாகச் கிடைத்த ஓய்வு நேரத்தின்போது திட்டமிட்ட வகையில் மேற்கொண்ட வாசிப்புக்களின் விளைபொருளே இந்நூலாகும்.
சமகாலத்தில் சர்வதேச உள்நாட்டுச் சஞ்சிகைகள், வெகு சனத்தொடர்பு சாதனங்கள் போன்ற பலவும் தமது கவனத்தைக் குவித்த உருகுவே சுற்றுப் பேச்சுவார்த்தை, டங்கல் அறிக்கை, ஐரோப்பிய யூனியனுக்கான ஒற்றைச் செலாவணி, சார்க், ஆசியான் அமைப்புக்களின் அதிகரித்துவரும் முக்கியத்துவம் போன்ற பல்வேறு விடயங்களுக்கிடையிலும் தொடர்பு காண என் அறிவுசார் உணர்வு முனைந்ததன் வெளிப்பாடாகவே இந்த நூலை எழுதத்துணிந்தேன்.
கல்லூரி மாணவர், ஆசிரியர், பல்கலைக்கழக மாணவர், சமூக விஞ்ஞானங்களில் ஆர்வமுடையோர் போன்ற பல தரத்தினருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்குடன் பல விடயங்களை அதிக சிரமத்துடன் தேடி இணைத்துள்ளேன்.
1990களின் மாற்றங்கள் "உருகுவே முறைமை” யை உருவாக்கியிருப்பதாகவும், அத்ன் முக்கிய பரிமாணமாகவே பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்களிலான அபிவிருத்தி ஏற்பட்டிருப்பதாகவும் கருதி அதன் அடிப்படையில் இந்த நூலை எழுதியுள்ளேன்.
இந்த நூலை எழுதுவதற்குரிய ஊக்கத்தைத் தந்ததோடு பெறுமதிமிக்க அணிந்துரையை வழங்கிய உப வேந்தர் பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்களுக்கும், கல்வியியற்துறைத் தலைவரும், எனது ஆசானுமாகிய பேராசிரியர் வ.ஆறுமுகம் அவர்கட்கும் எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
இந்நூலை எழுதுங்காலத்து எனக்குரிய சில பணிகளையும் மேலதிகமாகப் பொறுப்பேற்று, காலத்தை எனக்குக் கடனாகத் தந்த எனது மனைவி சசிலேகாவுக்கும், பல நிலைகளில் எனக்குதவிய பிள்ளைகள் சர் மிலி, ஷராணி, சாளினி ஆகியோருக்கும் எனது நன்றிகள் உரித்தாகும்.

V இந்நூலை எனக்காக வெளியிடும் நிறுவனத்துக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்.
இறுதியாக வாசகராகிய நீங்கள் இந்நூல் தொடர்பான தவறுகள், அபிப்பிராயங்களைத் தெரியப்படுத்துமிடத்து அடுத்த பதிப்பில் அவற்றைச் செம்மைப்படுத்துவேன் என்பதை நன்றியுணர்வுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
மா.சின்னத்தம்பி 12-04-1997 கல்வியியல்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.

Page 6
VI பொருளடக்கம்
1. அறிமுகம்:
1990களில் உலகப் பொருளாதார தோற்றப்பாடு
2 அத்தியாயம் 1
உருகுவே சுற்றும் ஒப்பந்தமும
3. அத்தியாயம் 2
பிராந்திய வர்த்தகத் தொகுதிகள்
4.அத்தியாயம் 3
ஐரோப்பிய சங்கம்
5. அத்தியாயம் 4
ஆசிய நாடுகளுக்கிடையிலான பிராந்திய ஒத்துழைப்புக்கள்
6. அத்தியாயம் 5
7.
அமெரிக்க, ஆபிரிக்க பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கள்
References
I
14
23
40
63
70

VII அறிமுகம்
1990 களில் உலக பொருளாதாரத் தோற்றப்பாடு.
1917 இல் சோவியத் புரட்சிக்குப் பின் சோவியத் யூனியன் உருவாக்கப்பட்டு உலகில் இரண்டு முகாம்கள் - முதலாளித்துவ, சமவுடைமை - அரசியல், பொருளாதார, சமூகவியல் ரீதியான தனித்தன்மைகளோடு இயங்கி வந்தன. அரசு தலைமை தாங்கும் பொருளாதார திட்டமிடல் அடிப்படையிலான சமவுடைமை நாடுகளின் எழுச்சி முதலாளித்துவத்துக்கு அறைகூவலாகவும், அதே சமயம் முதலாளித்துவம் முழுமையாக உடைந்து போகாத தன்மை - தேவையான ஒட்டுக்கள், இணைப்புக்கள் என்பவற்றைச் செய்வதன் மூலமாக - சீராக்கிக் கொள்வதற்கான வழிகாட்டல்களையும் வழங்கி வந்தது. வளர்முக நாடுகளுக்கான வர்த்தகம், முதலீடு, உதவி போன்ற பல நிலைகளிலும் இரண்டு முகாம்களும் தமக்கே உரிய முறைமைகளை வடிவமைத்து அமுல்படுத்தி வந்தன.
1930 களில் ஏற்பட்ட உலகப் பெருமந்தத்தில் முதலாளித்துவம் பலமான அதிர்ச்சிக்குள்ளான போது முதலாளித்துவக் கட்டமைப்பு அடியோடு குலைந்து போகாதிருக்க ஜோன் மேனாட் கெயின்ஸ் தனது "பொதுக் கொள்கை" மூலமாக முதலாளித்துவத்திலான அரசின் தலையீட்டை வரவேற்றார். இதன் பின் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பவற்றின் தோற்றத்தினால் "பிறெற்றன் வூட்ஸ் அமைப்பு" உருவாகிப் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, உறுதி, அபிவிருத்தி என்பவற்றில் வழிகாட்டல்களையும், வரையறைகளையும் வழங்கி வந்தன.
1973 இல் இத்தகைய பிறெற்றன் வுட்ஸ் அமைப்பு உடைந்து போகலாயிற்று. இதன்பின் உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. வளர்ச்சி என்பதற்குப் புறம்பாக அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்தல் என்பதும் வறுமைத் தணிப்புக்கான உபாயங்களை ஊக்குவித்தல் என்பதும் முக்கியத்துவம் பெற்றது. உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் உலகின் வர்த்தகம், நாணய நிதி நிலைமை தொடர்பான நெருக்கடிகளுக்கேற்ப பல விஷேட நிதி ஏற்பாடுகள் மேற்கொள்வதன் மூலம் உலக பொருளாதார முறைமை சிதைவுறாது பாதுகாக்க முயன்றன. வளர்முக நாடுகளுக்கு உரிய முறையில் உதவுவதற்கென சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தைத் தோற்றுவித்தன. ஒப்பெக் வசதி நிதி, நம்பிக்கைநிதி, ஈடு செய் நிதி போன்ற பல சிறப்பு நிதி மூலங்களை உருவாக்கியும் உதவி

Page 7
VIII வந்தன. எனினும் மூன்றாம் உலகின் ஆதரவை முற்று முழுதாக முதலாளித்துவ முகாம் பெற்றுக் கொள்வதற்கு சமவுடைமைத் தொகுதி நாடுகள் தடையாகவே இருந்து வந்தன.
இதே காலகட்டத்தில் வளர்ச்சியின் "புதிய ஒளி" கிழக்காசிய நாடுகளில் தென்பட்டது. ஜப்பான் கைத்தொழிலில் தனித்தன்மை கொண்ட வளர்ச்சி மாதிரியைப் பின்பற்றியது. சீனாவும் 2000 ஆண்டைத் தொடரும் தசாப்தத்தில் உயர் வளர்ச்சி பெறுவதற்கான அடிப்படைகளை ஒழுங்கான முறையில் இட்டுக்கொண்டிருந்தது.
சோவியத் யூனியன் கைத்தொழில், தொழில் நுட்பம், நுகர்வோர் நல சமத்துவம் போன்ற பல விடயங்களில் சிறப்பானதாகத் தோன்றிய போதிலும் தன் உணவுத் தேவைக்காக அமெரிக்காவில் தங்கியிருந்ததோடு, உள்நாட்டுப் பொருளாதார, நிர்வாக ரீதியில் விருத்தியடைந்து வந்த முரண்பாடுகளினாலும் பாதிக்கப்பட்டிருந்தது. பன்முகப்பட்ட காரணிகளின் கூர்மையான உதைப்புக்களினால் சோவியத் யூனியன் 1990 இல் உடைந்து போகலாயிற்று. 1917 - 1990 வரையில் நிலவிய உலக பொருளாதார ஒழுங்கு முறையில் பல துல்லியமான மாற்றங்கள் ஏற்படலாயின.
1990 களில் உலகின் பொருளாதார பரப்பில் ஏற்பட்ட பிரதான காட்சிக் கோலங்களாகப் பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்புத் தொகுதிகளைக் குறிப்பிடுவது பொருத்தமானது. 1990 களில் உலகப் பொருளாதாரத்தில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க மாற்றங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடமுடியும்.
1. "கற்றினால் அதிக பிரயத்தனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வந்த உருகுவே சுற்றுப் பேச்சுவார்த்தைகள் உருவாக்கிய பாதுகாப்பு பற்றிய உணர்வுகள் வளர்முக நாடுகளிடையே வலுப்பெற்றமை,
2. 1989 இல் உலக வங்கி கட்டமைப்பு சீராக்க நிகழ்ச்சித் g5 LIts b6ft (Structural Adjustment Programmes) u6)6 si60sbulb விதந்துரைத்தமை.
3. 1990 களில் சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட்ட உடைவுகள், மாற்றங்கள் என்பவற்றால் அநேகமாக எல்லா நாடுகள் சந்தைப் பொறிமுறையை நோக்கி நகர்தல்.

IX 4. பசுபிக் வளையத்தில் புதிய கைத்தொழில் நாடுகள் உயர் தொழில் நுட்பத்துடன் வளர்ச்சியடைந்தமை.
5. ஜப்பான், சீனா, போன்ற நாடுகளில் துரித வளர்ச்சிக்கான அடையாளங்கள் துல்லியமாகத் தெரிந்தமை.
6. இந்தியாவின் தாராளமயமாக்கல், அந்நிய முதலீட்டுக்கான அனுமதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டமை.
இத்தகைய பின்னணியில் உலக ரீதியில் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கள் வளர்ச்சியடைந்தன. ஏற்கனவே இருந்தவை விரிவடைந்து வலுவுற்றன. வேறுபல புதிதாக தோற்றம் பெற்றன. இத்தகைய பொருளாதார ஒத்துழைப்புக்களின் இன்றியமையாத அம்சமாகவே தடையற்ற வர்த்தகத் தொகுதிகள் (FreeTrade Blocks) விளங்குகின்றன. இத்தகைய பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கள் நாடுகளின் அரசியல் எல்லைகளை உடைத்துக்கொண்டு பொருளாதார எல்லைக் கோடுகளை வரைந்தன. தத்தமக்கென பொருளாதாரப் பாதுகாப்பு அரண்களை அமைத்துக் கொண்டன.
அரசியல் ரீதியிலான முதலாளித்துவ, கம்யூனிச முகாம்கள் என்ற இரு நிலைப்பட்ட தன்மை குலைந்து பனிப்போர் முடிவுற்றதாகத் தோன்றிய காட்சிகளுடாக இப்புதிய "பிராந்திய ஒத்துழைப்பு முகாம் கள்" முதலாளித் துவ சந்தைப் பொறிமுறையென்ற போர்வையைப் போர்த்தியபடி உலக அரங்கில் மேல் எழும் காட்சிகள் தெரிந்தன.
அரசியல் யுத்தங்கள் போல், வர்த்தக யுத்தங்களும் வளர்ச்சி பெற்றன. அரசியல் யுத்தங்கள் ஏதோ ஒருவகையில் வர்த்தக யுத்தங்களுடன் தொடர்புபடும் போக்கு பிராந்திய பொருளாதார முகாம்களின் எழுச்சியை ஊக்குவிப்பதாயும் இருந்தது.
இத்தகைய பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஏற்பாடுகளை அரசியல் வாடை" இல்லாமல் காட்டும் விருப்பத்துடனேயே "முகாம்" என்பதற்குப் பதிலாக "தொகுதி” என்று பயன்படுத்தப் படுகின்றது. இத்தகைய பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான கட்டமைப்புக்கள் பெரிதும் பிராந்திய கட்டற்றவர்த்தக தொகுதிகளாகவே காட்சியளிக்கின்றன.
66

Page 8
X 1990 களில் உலக ரீதியில் வர்த்தக, பொருளாதார ரீதியாக கூட்டு நடவடிக்கைகளாக - நிகழ்ந்த மாற்றங்களை விளங்கிக் கொள்வதற்கு வசதியாகவே புவியியல் ரீதியிலான "கண்டங்கள் சார்ந்த பகுப்பு" அணுகு முறையில் பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்புக்கள் தொகுத்து நிரல்படுத்தப்பட்டுள்ளன. அவை,
1. ஐரோப்பா சார்ந்த பொருளாதார ஒத்துழைப்பு
2. ஆசியா சார்ந்த பொருளாதார ஒத்துழைப்பு
3. அமெரிக்கா, ஆபிரிக்கா சார்ந்த பொருளாதார
ஒத்துழைப்புக்கள்.

அத்தியாயம் 1 உருகுவே சுற்றும் ஒப்பந்தமும்,
1. அறிமுகம்:
1948 இல் “கற்” (GAT) உருவாக்கப்பட்ட பின் ஏற்படுத்தப்பட்ட அகல் விரிவுப் பண்புடைய ஒப்பந்தமாக உருகுவே சுற்றுப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட பல் பக்க வர்த்தக ஒப்பந்தம் அமைகின்றது. தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தைகளின் விளைவாக உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் 1996 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகின்றது.
இதன்படி வர்த்தகப் பண்டங்களுக்கு மாத்திரமல்லாது இதுவரை "கற்” றின் கீழ் உள்ளடக்கப்படாதிருந்த சேவைகளுக்கும் மதிநுட்ப சொத்துரிமைக்கும், வர்த்தகத்துடன் தொடர்புடைய முதலீட்டு அம்சங்களுக்கும் பொருந்தக்கூடிய விதிகள் உருவாக்கப்பட்டன.
சர்வதேச வர்த்தக விதிகளை இவை பலமாகத் தாக்கியுள்ளன. "கற்” றுக்குப் பதிலாக உருவாக்கப்பட்ட உலக வர்த்தக நிறுவனத்தில் கையொப்பமிட்ட 120 க்கும் மேற்பட்ட நாடுகளின் வர்த்தக உறவுகளைக் கண்காணிப்பதற்குரிய ஏற்பாடுகளை இது உருவாக்கியது.
இந்த உருகுவே ஒப்பந்தம் இயன்றளவுக்குத் தடையற்ற சர்வதேச வர்த்தகத்திற்கான சூழ் நிலையை உருவாக்க முயன்றதோடு, உலகப் பொருளாதாரத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி வளர்முக நாடுகளுக்குப் புதிய வாய்ப்புக்களை வழங்கவும் முயல்கின்றது. சில நாடுகளில் பாதகமான விளைவுகளை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் விருத்தியடையும் போட்டிச் சூழ் நிலையில்நாடுகள் முயற்சிகளை மேற்கொள்வதைப் பொறுத்து நன்மைகளைப் பெற முடியுமென்னும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உருகுவே சுற்றுப் பேச்சுவார்த்தை, ஒப்பந்தங்களின்படி பின்வரும் அம்சங்கள் குறிப்பிடத்தக்கனவாயுள்ளன.
2. வியாபாரத்தைத் தாராளமயப்படுத்தல்
கைத்தொழில் நாடுகளும், வளர்முக நாடுகளும் தமது சந்தைகளைத் திறந்து விடுதற்குரியதாகப் பின் வரும்

Page 9
-2- நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
- இறக்குமதித் தீர்வைகளைக் குறைத்தல் - மற்றப் பிரதேசங்களுக்குச் சலுகை ஏதுவும் இல்லாதவகையில் உயர்த்த முடியாத வகையில் அமைந்த பிணைக்கப்பட்ட
தீர்வைகளை உயர்த்துதல்.
- தீர்வையற்ற தடைகளைப் னேற்றுதல்அகற்ஐதல்
வியாபாரத்தைத் தாராளமயமாக்கும் நடவடிக்கைகள் பின்வரும் அம்சங்களோடு தொடர்புடைய வகையில் மேற்கொள்ளப்படுகின்றன.
(அ) கைத்தொழில் உற்பத்திகள்
கைத்தொழில் நாடுகள் தமது கைத்தொழிற் பண்டங்கள் மீது பின்பற்றிவரும் சராசரி தீர்வையான 5% தை 3.6% மாகக் குறைக்க உடன்பட்டன. தீர்வைக் குறைப்பு நடவடிக்கைகள் மரப்பொருட்கள், உலோகம், மின்சாரமல்லாத இயந்திரவகை, கணிப்பொருள் உற்பத்தி போன்றவற்றைப் பாதிக்கும். பாதுகாப்புக் குறைந்த பண்டங்களின் தீர்வைக் குறைப்புச் சலுகையைப் பயன்படுத்திக் கைத்தொழில் நாடுகளுக்குள் வளர்முக நாடுகளின் பண்டங்கள் அதிகம் விற்கப்படும்.
கைத்தொழில் நாடுகளில் உணர்வூட்டும் துறைகளாக விளங்கும் புடவை, சீனி, தோல், இறப்பர், பாதணி, போக்குவரத்து உபகரணங்கள் போன்றன உயர் வான தீர்வைகளினாற் பாதுகாக்கப்படுகின்றன.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் இறக்குமதித் தீர்வை நடைமுறைகளினால் பாதிக்கப்படமாட்டா. அவர்களைக் "கற்” கட்டுப்படுத்துவதில்லை. இந்தியா தவிர பிற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் குறிப்பிடப்பட்டதை விடக் குறைந்ததீர்வைகளையே நடைமுறையிற் கொண்டிருப்பதால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.
மாற்றமடைந்து வரும் பொருளாதாரங்கள் பலவும் இறக்குமதியாகும் கைத்தொழிற் பொருட்கள் மீதான தீர்வைகளைக் குறைக்கவும், பிணைக்கப்பட்ட தீர்வைகளை உயர்த்தவும் உடன்பட்டன. குறைக்கும் தீர்வை வீதங்கள் நாடுகளைப் பொறுத்து வேறுபடும்.

-3-
(ஆ) விவசாய உற்பத்தி
கைத்தொழில் நாடுகள் விவசாய உற்பத்திகளின் இறக்குமதிக்குத் தீர்வைகளைக் குறைக்க வேண்டி ஏற்படும். அத்தகைய விவசாய உற்பத்திகளுக்கான தொகைரீதியான கட்டுப்பாடுகளையும் தவிர்க்க வேண்டும்.
உலக வர்த்தகத் தில் விவசாய உற்பத் தி யை தாராளமயமாக்குவதற்கு அவற்றிற்கு வழங்கப்படும் மானியங்களை குறைக்க வேண்டுமென்று கூறப்பட்டது. உற்பத்திக்காக உள்நாட்டு ஆதரவு நடவடிக் கைகளையும் 6 வருட காலத் துள் குறைக்கவேண்டும். இதனால் விவசாய உற்பத்திகளைப் பாதுகாப்பதற்கு நாடுகளுக்கு ஏற்படும் செலவுகள் குறையும் என்று கூறப்பட்டது.
விவசாய உற்பத்தித் துறைகளில் வினைத் திறன் அதிகரிக்கும்போது கைத்தொழில் அபிவிருத்தியடைந்து வருகின்ற மாற்றத்துக்குட்படுகின்ற பொருளாதாரங்கள் எல்லாவற்றிலும் வியாபார வாய்ப்புக்களை அதிகரிக்க இத்தகைய நடைமுறைகள் உதவும்.
சிறப்பாக வளர்முக நாடுகளைப் பொறுத்தவரை கைத்தொழில் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட மட்டங்களில் 2/3 பங்கானதாகவே உள்நாட்டு ஆதரவுத் திட்டங்கள், மானியங்கள், தீர்வை தொடர்பான குறைப்புக்கள் நிர்ணயிக் கப்பட்டன. இவற்றை இவை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதிக்கப்படும் காலமும் 10 வருடமாக அமைக்கப்பட்டுள்ளது. சிலவகை உற்பத்தி மீதான தீர்வை நிர்ணயங்களிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. மிக வறிய நாடுகள் எல்லா வகையான குறைப்புக்களிலிருந்தும் விலக்குப் பெற்றுள்ளன. நடைமுறையில் விவசாய உற்பத்திகளுக்கான எல்லாவகைத் தீர்வைகளும் பிணைக்கப்பட்டுள்ளன.
(9) gfig06Julip b60)L86i (Non Tariff Barriers)
தடையற்ற உலக வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கு தீர்வைகள் தொடர்பான குறைப்புக்களைவிட தீர்வையற்ற தடைகள் அகற்றப்படுவதன் அவசியம் உணரப்பட்டது.
தீர்வைக் குறைப்பு மூலமான நலன்களை வளர்முக நாடுகள் பெற முயன்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் வளர்ச்சி பெற்ற கைத்தொழில் நாடுகள் தீர்வையற்ற கட்டுப்பாடுகளைப்

Page 10
-4ܗ பயன்படுத்தியே அவற்றைப் பாதிக்கச் செய்தன. 1993 இல் ஐரோப்பியச் சமூகம், யப்பான், அமெரிக்கா போன்றன தம் இறக் குமதியில் 14% தைத் தர் வையல் லா தடைகளுக்குட்படுத்தியிருந்தன.
உருகுவே ஒப்பந்தம் தீர்வையற்ற தடைகளாக அமையும் நடவடிக்கைகளைத் தடை செய்தது. அவை,
- இறக்குமதியாகும் பண்டங்களின் தொகைமீது கட்டுப்பாடுகள் விதித்தல்
- சுய விருப்பின் அடிப்படையில் தடைவிதித்தல் - அதை ஒத்த பிற நடைமுறைகள்
இத்தகைய நடைமுறைகள் தொடர்பாக காணப்படும் தடைகள் அனைத்தும் 4 - 5 வருட காலத்துள் அகற்றப்படும் என்றும் தெரிவித்தது.
(HE) பல்நார் ஒப்பந்த விதிகளை அகற்றுதல்
துணிவகை புடவைகளுக்கான இறக்குமதி
அனுமதிப் பங்குகள் (Quotas) பற்றிய ஒப்பந்தமான பல்நார் ஒப்பந்தம் 1974 இலிருந்து நடைமுறைக்கு வந்தபோது நான்கு வருடங்களுக்குரியதாக இருக்குமென்றே கூறப்பட்டது. பல்நார் ஒப்பந்த பிராந்தியம் உலக துணி, புடவை வியாபாரத்தில் பெரும் பங்கினை வகிப்பதாயிருந்தது.
பல்நார் ஒப்பந்தத்தில் இருபக்க பேச்சுவார்த்தைகளினால் தீர்மானிக்கப்பட்ட அனுமதிப்பங்குகள் (கோட்டாக்கள்) பத்து வருட காலத்துள் அகற்றப்பட்டுவிடும். அவை படிப்படியாகக் "கற்” றுக்குள் கொண்டுவரப்பட்டுவிடும். பல நாடுகள் இதற்குத் தயக்கம் காட்டுவதால் படிப்படியாகவே இவை ஒருங்கிணைக்கப்படும். வினைத்திறன் மிக்க உற்பத்தியாளர்கள் அகன்று செல்லும் உலக சந்தையைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உற்பத்தியாளர் நிலையைப் பலமானதாக்குவதற்குரிய நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்.
3. புதிய விடயங்களுக்கு வழிகாட்டல்
முதன்முதலாக சேவைகளில் வர்த்தகம், மதிநுட்ப சொத்துரிமை வர்த்தகம் தொடர்பான முதலீடுகள் என்பன தொடர்பாகவும் விதிகளைத் தீர்மானிக்கவும் "கற்” முயற்சி செய்தது.

-5-
(9) சேவைகளின் வர்த்தகம்: உலகப் பொருளாதாரத்தில் சேவைகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதனால் இந்த ஒப்பந்தத்தில் சேவைகளின் வர்த்தகம் உள்ளடக்கப்பட்டது. 1982 - 92 காலப்பகுதியில், வணிகப் பொருட்களின் வளர்ச்சி 71% மாயிருந்தபோது சேவைகளின் வளர்ச்சி 95% மாயிருந்தது.
உருகுவே ஒப்பந்தமானது சேவைகள் வர்த்தகம் மீதான பொது of Libbud (The General Agreement on Trade Services - GATS) 6660B அறிமுகப்படுத்தியது. இதில் பின் வருவன தொடர்பான பொதுக்கடமைப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
- சாதகநிலை கொண்டுள்ள நாடுகளின் விதிகள் - வெளிப்படையான பண்புக்குரிய கோரிக்கைகள் - தேசிய சட்டங்கள், விதிமுறைகள்
உள்நாட்டில் இயங்கும் சேவைகளில் ஈடுபடுகின்ற கம்பனிகளுக்கு வழங்கப்படும் அதே வசதிகளை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கும் வழங்க வேண்டுமென்று விதந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகள் இதனைப் பெரிதும் விரும்பவில்லை.
பின்வரும் துறைகளை இது உள்ளடக்கத் தவறியுள்ளது.
- கட்புல சாதன சேவைகள்
- கடற் போக்குவரத்து - நிதிச் சேவைகள்
இதனால் மிகப்பெரிய சந்தை வாய்ப்புக்களை உடனடியாக உருவாக்க முடியாது. எனினும் எதிர் காலப் பேச்சு வார்த்தைகளுக்கான அடிப்படையை இது உருவாக்கியுள்ளது.
மதிநுட்ப சொத்துரிமை:
(Intellectual Property Rights)
சர்வதேச ரீதியிலான கொடுக்கல் வாங்கல்களின் மதிநுட்ப சொத்துரிமை முக்கியத்துவம்பெற்று வளர்ந்து வருகின்றது. குழு 7 ஐச் சேர்ந்த கைத்தொழில் நாடுகள் அறிவுசார் செயற்பாடுகளினால் வெளிநாடுகளிலிருந்து 1980 இல் 7.1 பில்லியன் டொலர்களையும் 1991இல் 30 பில்லியன் டொலர்களையும் பெற்றிருந்தன. மதிநுட்ப சொத்துரிமை தொடர்பான வர்த்தகம் பற்றிய ஒப்பந்தம்(The Agreement on Trade-Related Intellectual Property Rights- TRIPS) அறிவுசார்ந்த உரிமைகளில் பாதுகாப்பு தொடர்பானநியமங்களை

Page 11
-6-
நிர்ணயம் செய்கின்றது. பதிப்புரிமை, கைத்தொழில்வடிவங்கள், வர்த்தகக் குறியீடுகள், புவியியற் குறிகாட்டிகள், ஆக்கவுரிமைகள் போன்ற விடயங்கள் பற்றிய நியமங்களை உள்ளடக்குகின்றது. மிகைநலன் பெறுகின்ற நாடுகளை நிர்வாகித்தல்தொடர்பான விதிகளையும் இது அறிமுகப்படுத்தியது. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு கைத்தொழில் நாடுகளுக்கு ஒரு வருடமும் வளர்முக நாடுகளுக்குப் பதினொரு வருடங்களும் அனுமதிக்கப்பட்டது. மாற்றமடைந்துவரும் பொருளாதாரங்களுக்கும் இதற்கெனப் பதினொரு வருடங்கள் வழங்கப்படுகின்றன. கைத்தொழில் நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகள் தமது ஆராய்ச்சி அபிவிருத்தி நடவடிக்கைகள், முதலீடுகள் என்பனவற்றை அதிகரிக்க வேண்டுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
வர்த்தகம் சார்ந்த முதலீட்டு அளவீடுகள்
(Trade - Related Investment Measures)
வர்த்தகத்தை மட்டுப்படுத்தக்கூடிய உள்நாட்டு உள்ளடக்கம், வர்த்தகத்தைச் சமனாக்கும் கோரிக்கைகள் போன்றவற்றை வர்த்தகம் சார்ந்த முதலீட்டு அளவீடுகள் மீதான ஒப்பந்தம் தடை செய்கின்றது. இத்தகைய தடைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கைத்தொழிற் பொருளாதாரங்களுக்கு இரண்டு வருடங்களும் வளர்முக நாடுகளுக்கு 5-7 வருடங்கள்வரையும் தேவைப்படும்.
4. வலுவான விதிகள்:
(Stronger Rules)
உருகுவே சுற்று ஒப்பந்த நாடுகள் தமது உள்நாட்டில் விற்கமுடியாத பண்டங்களை வெளிநாடுகளில் அதன் உற்பத்திச் செலவு மட்டத்திலும் குறைவான விலைக்கு விற்பதன்முலம் சந்தையைக் கைப்பற்றுதல், கைத்தொழில்களுக்கு மானியம் வழங்குதல் போன்ற பல விடயங்கள் தொடர்பான அம்சங்களை கண்டறிவதற்கு முயற்சிப்பதாகவும் அவைபற்றிய சர்வதேச விதிகளை வலுவானதாக்குவதாயும் வடிவமைக்கப்பட்டது.
குவித்தலுக்கெதிரான நடைமுறை
(Anti Dumping Measures)
வளர்ச்சியடைந்த கைத்தொழில் நாடுகளான ஐரோப்பிய சமூகம், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் தம் நாட்டுக்குள் குவிக்கப்படும் பண்டங்களில் 3.7% மானவற்றில் இத்தகைய முறையைப் பின்பற்றின. 1988 இல் இத்தகைய பிரயோகம் 2.4% மான பண்டங்களின் மீது மாத்திரமே பின்பற்றப்பட்டிருந்தது.
1979 இல் "கற்”றினால் நடாத்தப்பட்ட டோக்கியோ சுற்றுப்பேச்சு

-7-
வார்த்தைகளின் போது இவ்வாறு பண்டங்களைக் குவித்தல் தொடர்பான பல விடயங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. எனினும்
- குவித்தலுக்கான மேல் எல்லையை நிர்ணயித்தல்
- சேதங்களைக் கணிப்பீடு செய்தல்
- விசாரணை நடத்துதல்
- குவித்தலுக்கெதிரான நடைமுறைக்குரிய காலப்பகுதி.
போன்ற விடயங்களில் முடிவு எடுக்காது விட்டுச் சென்றது. உருகுவே பேச்சுவார்த்தை வர்த்தகப் பாதுகாப்பைச் சிதைத்து விடாதவாறு குவித்தலுக்கெதிரான நடைமுறைகள் பற்றிய விதிகளையும் அறிமுகப்படுத்தியது.
கைத்தொழில் மானியம்:
(Industrial Subsidies)
கைத்தொழில் உற்பத்திகள் தொடர்பான மானியங்கள் பற்றிய விதிகளில் முக்கியமான மாற்றங்களை உருகுவே ஒப்பந்தம் வழங்குகின்றது. ஏற்றுமதிக்கான மானியங்கள், இறக்குமதிப் பண்டங்களுக்கெதிராக உள்நாட்டுப் பண்டங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் என்பவற்றைத் தடை செய்கின்றது.
உற்பத்தி மானியங்கள், கைத்தொழில் நட்டங்களை ஈடு செய்யும் உதவிகள் என்பன உலக வர்த்தக நிறுவனத்தின் கடமைகளைப் பாதிப்பனவாக அமையுமிடத்து அவற்றை ஒழுங்குபடுத்தவும் முடியும்.
பாதிக்கப்படக் கூடிய பிரதேசங்களுக்கும், ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கும் சிலவகை மானியங்கள் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு வளர்ச்சியடைந்த நாடுகளைவிட வளர்முக நாடுகளுக்கு கூடுதலான காலப்பகுதி அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரம் டொலரிலும் குறைந்த தலா வருமானம் பெறும் நாடுகளுக்கு ஏற்றுமதி மானியங்களைத் தவிர்ப்பதிலிருந்து விலக்குமளிக்கப்பட்டுள்ளது.
5. வளர்முக நாடுகளின் மீதான செயல் விளைவுகள். உருகுவே சுற்றுப் பேச்சுவார்த்தையின் அடிப்படையிலமைந்த இவ் ஒப்பந்தம் வளர்முக நாடுகளில் ஏற்படுத்தக்கூடிய செயல் விளைவுகள் பற்றித் திருப்தியற்ற அபிப் பிராயங்கள் உருவாகியுள்ளன.
இத்தகைய எல்லாப் பிரேரணைகளும் முழுமையாக

Page 12
-8-
நடைமுறைப்படுத்தப்படும் போது உலக வர்த்தகம் 510 பில்லியன் டொலர்களினால் அதிகரிக்குமென்றும் அதில் 116 பில்லியன் வளர்முக நாடுகளிலும், மாற்றமடைந்துவரும் பொருளாதாரங்களிலும் ஏற்படுமென்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தாராளமயமாக்கப்படும் உலக வர்த்தக மாற்றங்களினால் பெரும்பாலான வளர்முக நாடுகள் நன்மையடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வளர்முக நாடுகளிலிருந்து கைத்தொழில் நாடுகள் இறக்குமதி செய்யும் பண்டங்கள் (பல்நார் ஒப்பந்தம் உட்பட) மீது பிரயோகிக்கும் தீர்வையற்ற தடைகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் 18% திலிருந்து 42% - 5.5% வரையில் குறைவடையும் என்றும் முக்கியமான ஏற்றுமதி வாய்ப்புக்களை உருவாக்குமென்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. புடவை, ஆடைகளின் ஏற்றுமதி தொடர்பாகப் பல்நார் ஒப்பந்த நடைமுறைகள் படிப்படியாக முடிவடையும்போது வளர்முக நாடுகளின் இத்தகைய ஏற்றுமதி 80%லும் கூடுதலாக அதிகரிக்கமுடியும்.
விவசாயப் பண்டங்களின் ஏற்றுமதியில் வினைத்திறன் பெற்றுள்ள நாடுகள் தாராளமயப்படுத்தப்படும், விரிவடைந்து செல்லும் உலக சந்தையினால் நிச்சயம் நன்மையடையும். ஆர்ஜன்தீனா, அவுஸ்திரேலியா, பிறேசில், கனடா, சிலி, கொலம்பியா,பிஜி, ஹங்கேரி, இந்தோனேஷியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, உருகுவே போன்றன இவ்வாறு நன்மையடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சீனி உற்பத்தியாளர்களான கியூபா, டொமினிக்கன் குடியரசு, பிறேசில் போன்றனவும் நன்மை பெறுவர்.
விவசாயத்தில் விருத்தியடையக்கூடிய வாய்ப்புக்களைக் கொண்டுள்ள சீனா, கென்யா, மெக்சிக்கோ, தென்னாபிரிக்கா போன்றன தேவையான சீரான நடைமுறைகளைக் கையாளுமிடத்து நன்மையடைவர் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் பாதகமான சுமைகளே தம்மீது அதிகமாகச் சுமத்தப்படும் என வளர்முக நாடுகள் கவலை நிரம்பிய எதிர்ப்புணர்வை வெளிக்காட்டியுள்ளனர். உணவு விலைகள் தொடர்பான பாதிப்புக்கள், முன்னுரிமை அகற்றப்படுவதன் தீமைகள் என்பனவற்றால் பாதிக்கப்படும். புதிய வாய்ப்புக்களினால் பெறக்கூடியதாக விதந்துரைக்கப்படும் நலன்களை வளர்முக நாடுகள் பெறுவதற்கு நீண்ட காலத்திற்குக் காத்திருக்கவேண்டியேற்படும். நீண்டகாலம்மென்பது நிச்சயமின்மைகளுடன் நெருக்கமாகத் தொடர்புடையதென்பதையும் மனங்கொள்ளவேண்டும். இத்தகைய பாதிப்புக்குரிய பிரதான அம்சங்களைப் பின்வருமாறு விளக்க (ԼԶlգեւյլք.

-9-
1. உணவு விலைகள்
உருகுவே ஒப்பந்த சிபார் சுப் படி விவசாய உற்பத்திகளுக்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த மானியங்கள் குறைக்கப்படும்போது, உலக சந்தையில் அவற்றின் விலைகள் அதிகரிக்க முடியும். இவற்றை இறக்குமதி செய்யும் வளர்முக நாடுகள் இதனால் பாதிக்கப்படும். மிகவும் பாதுகாக்கப்பட்ட பண்டங்களான கோதுமை, அரிசி, இறைச்சி, பால் உற்பத்திகள், சீனி போன்றவற்றின் விலைகள் 2000ஆம் ஆண்டளவில் 4% லிருந்து 10% ற்கு அதிகரித்துவிடும்.
வளர்முக நாடுகள் தமது பிரதான ஏற்றுமதிப் பண்டங்களாகக் கருதும் துணி, ஆடைகள் தொடர்பான குறைந்தளவு இறக்குமதித் தீர்வைகளினாற் பெறக்கூடிய இலாபங்களை உணவு இறக்குமதி விலை உயர்வின் நட்டங்கள் இல்லாமல் செய்துவிடும். மானியங்கள் குறைப்பினால் வினைத்திறன் மிக்க உற்பத்தியாளர்களும் நிரம்பல் தொடர்பான நிச்சயத் தன்மையை உறுதிசெய்ய முடியாமையினால் எதிர்பார்க்கப்படும் விலைகள் தொடர்பான நன்மைகளையும் உறுதி செய்ய முடியாது. விவசாய உற்பத்திப் பண்டங்களின் வியாபாரம் தாராளமயமாக்கப்படும்போது பெரியளவில் விலை அதிகரிக்காமலே புவியியல் ரீதியான நிரம்பல் இடமாற்றங்கள் நிகழவும் வாய்ப்புண்டு.
2. முன்னுரிமை:
முன்னுரிமைகளுக்கான பொது முறைமை (General System of Preferences-GPS) களின் கீழ் பல வளர்முக நாடுகள் கைத்தொழில் நாடுகளின் சந்தைகளைப் பெற்று நன்மையடைந்து வந்திருந்தன. லோம் ஒப்பந்தம், கரீபியன் வடிநில முனைப்புப் போன்றவற்றினாலும் பல்நார் ஒப்பந்த ஏற்பாடுகளினாலும் பல வளர்முக நாடுகள் பெற்றிருந்த நன்மைகளை, முன்னுரிமைகளைக் குறைக்கச்செய்யும் உருகுவே ஒப்பந்த நடைமுறைகள் இழக்கச் செய்துவிடும்.
முன்னுரிமைச் சலுகையின் கீழ் கூடிய அனுகூலங்கள் பெற்றிருந்த ஆசியா, இலத்தீன் அமெரிக்க நாடுகள் முன்னுரிமைக் குறைப்பு நடவடிக்கைகளினால் அதிகம் பாதிக்கப்படும். எனினும் தாராள வர்த்தகத்தினால் விவசாய, புடவை உற்பத்திகளின் மூலம் அவைகள் நன்மைபெற முடியும்.
வளர்ச்சி குன்றிய வளர்முக நாடுகளில் ஆபிரிக்க, கரிபிய, பசுபிக் நாடுகள் பல்நார் ஒப்பந்தத்தின் கீழ் பெற்றிருந்த நன்மைகளை இழக்கவேண்டி ஏற்படும். உப-சகாரா நாடுகளின் நலன்களும் முன்னுரிமைக் குறைப்பு நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டுவிடும்.

Page 13
-10கைத்தொழில்மய நாடுகள் தமது வர்த்தகப் பங்காளர்களுக்கு இயன்றளவு சந்தைசாா பாதுகாப்புக்களை வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டபோதிலும், விவசாய உற்பத்திகள் மீதான தீர்வைமுறையினால் அவை பாதிக்கப்படவும் இடமுண்டு.
புதிய வாய்ப்புக்கள்: வளர்முக நாடுகளின் அபிவிருத்திக்கு வெப்பவலய விவசாய உற்பத்திகள், புடவை, ஆடைவகை என்பனவற்றின் ஏற்றுமதி விரிவாக்கம் அவசியமானது. இத்தகைய துறைகளின் உற்பத்திப் பெருக்கம், ஏற்றுமதி விரிவு என்பவற்றிற்கு உருகுவே ஒப்பந்தப்படியான நடைமுறைகள் உதவும். சந்தை வாய்ப்புக்கள் விரிவடைவதை பயன்படுத்தியே வளர்முக நாடுகள் விவசாய மானியக் குறைப்பு கட்டணங்களை ஈடு செய்து முன்னேற்றமடைய வேண்டும்.
தீமைதரும் விளைவுகள்: இந்தியா போன்ற நாடுகள் இந்த உருகுவே ஒப்பந்த நடைமுறைகளினால் பல தீமைதரும் விளைவுகள் ஏற்படும் என எதிர்ப்புக்குரல் கிளப்பியுள்ளன. அவை,
1. மதிநுட்ப சொத்துரிமை ஒப்பந்தத்தின் கீழ் பல்தேசிய கூட்டுத்தாபனங்கள் வளர்முக நாடுகள் பலவற்றிலும் தொழில்நுட்பரீதியிலான தனியுரிமையைப் பெற்றுக்கொள்ளும். அப்போது பதிப்புரிமைக் கட்டணமாக ஏராளமான அன்னியச் செலவாணி இந்த நாடுகளிலிருந்து வெளிப்பாயும். இது சென்மதி நிலுவைச் சமநிலையைக் குறைக்கச்செய்யும். உள்நாட்டுக் கைத்தொழில்களையும், அவற்றின் செயற்பாடுகளையும் இடமாற்றம் செய்யவேண்டிய அபாய நிலைகளையும் தோற்றுவித்துவிடும்.
2. சேவைகள் வர்த்தகம் பற்றிய ஒப்பந்தம் மூன்றாம் உலகின் சேவைத்துறைகளை வெளிநாட்டு வங்கிகள், நிதிநிறுவனங்கள், தொழில், உயர் தொழில் நிறுவனங்கள் என்பவற்றுக்குத் திறந்துவிடும் நிலைமையை உருவாக்கிவிடும். இதனால் உள்நாட்டின் சிறிய, நடுத்தரத் தொழில் முயற்சிகள், உள்நாட்டு, உயர் தொழில் நிறுவனங்கள் என்பவற்றின் வளர்ச்சி தடைப்பட்டுவிடவும், இதனால் அபிவிருத்தி வேகம் குறையவும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.
3. இப்புதிய ஒப்பந்தத்தின்படி மூன்றாம் உலகநாடுகளின் சிறு விவசாயிகள் இதுவரை பயன்படுத்தி வந்த மரபுவழியான

-11விதையரினங்களுக்குப் பதிலாக பல தேசியக் கூட்டுத்தாபனங்களின் பதிப்புரிமையுள்ள விதைகளையே பயன்படுத்துமாறு நிர்ப்பந்திக்கப்படுவர். இதனால் உற்பத்தி தொடர்பான பாதிப்புகள் ஏற்படும்.
அவ்வாறே உணவுப் பொருட்களின் விலை சில நாடுகளில் வீழ்ச்சியடைய முடியும். இதன் காரணமாக உள்நாட்டு விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படும்.
பல்பக்க வர்த்தக நிறுவனத்தை உருவாக்குவதால் தெற்குலக நாடுகள் தமக்கிடையே கொண்டிருக்கும் சுயமான தொடர்புகள், தாமாகப் பிணக்குகளைத் தீர்த்துக் கொள்ளும் நடைமுறைகள் என்பன பாதிக்கப்படும். தெற்குலக நாடுகளிடையே காணப்படும் பரஸ்பர நல்லிணக்கமும் பாதிக்கப்படமுடியும்.
16. உலக வர்த்தக நிறுவனம்
(World Trade Organisation -WTO)
அறிமுகம்:
உருகுவே சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் 1993
டிசம்பரில் உடன்பாடு காணப்பட்டு 1994 ஏப்பிரல் மாதத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவை 1995 இலிருந்து நடைமுறைக்கு வரும்போது வியாபாரம் தொடர்பான கண்காணிப்பு வேலைகளிலும், பிணக்குகளைத் தீர்ப்பது தொடர்பான வேலைகளிலும் பொறுப்புடைய நிறுவனமாகவே உலக வர்த்தக நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதுவரை “கற்" அமைப்பு செய்துவந்த பணிகள் அனைத்தும் 1995 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து உலக வர்த்தக நிறுவனத்துக்கு மாற்றப்பட்டு விட்டது.
இதுவரை விபரிக்கப்பட்ட உருகுவே சுற்று ஒப்பந்தப் பிரேரணைகள் அனைத்தையும் நடைமுறைப் படுத்தும் பொறுப்புடையதாக உலக வர்த்தக நிறுவனம் செயற்படும் என்பது கவனிக்கத்தக்கது.
உருகுவே சுற்று ஒப்பந்தத்தின் வெளிப்படைக் காட்சிகளில் ஒன்றாகத் தொழிற்படுவது "கற்றுக்குப் பதிலாக உலக வர்த்தக நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்வாகும்.
தோற்றம்:
1948இல் உலக வர்த்தக நிறுவனம் ஒன்றை
உருவாக்கும் முயற்சி தோல்வியடைந்ததின் பின் 1994ஆம் ஆண்டு 125 நாடுகள் ஒப்பமிட்டு உருவாக்கப்பட்டதே உலக வர்த்தக நிறுவனமாகும்

Page 14
-121986 - 1993 வரை நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின்
விளைவாகவே இது உருவாகியது. 1995 ஜனவரி முதலாம்
திகதியிலிருந்து இது செயற்படலாயிற்று.
girols asp:
125 அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வாக்கு உண்டு. எந்தவொரு நாட்டுக்கும் இரத்து அதிகாரம் இல்லை. பொதுச்சபையொன்று இதற்குப் பொறுப்பாக செயற்படும். இப் பொதுச் சபைக்கான உறுப்பினர் அங்கத்துவ நாடுகளின் அமைச்சர்கள் மகாநாட்டில் தெரிவு செய்யப்படுவர். இந்த மகாநாடு இரண்டு வருடங்களுக்குகொரு தடவை கூட்டப்படும்.
நோக்கங்களும் தொழிற்பாடுகளும்:
அங்கத்துவ நாடுகளிடையே காணப்படும் வர்த்தகம் தொடர்பான பாரபட்சமான பல்வேறு தடைகளையும் அகற்றுவதன்மூலம் - வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை எல்லா நாடுகளுக்கும் வழங்குவதன்மூலம் - நாடுகளின் அபிவிருத்திக்கு உதவும் நோக்கத்துடன் பல்வேறு தொழிற்பாடுகளையும் மேற்கொள்ளுகின்றது. அவற்றைப் பின்வருமாறு குறிப்பிடமுடியும்.
1. விவசாய உற்பத்திகள், கைத்தொழில் உற்பத்திகள் தொடர்பானவர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு வசதியாக ஏற்கனவேயுள்ள ஒப்பந்தங்களை உள்ளடக்கும் வகையில் தீர்வை, தீர்வையல்லாத் தடைகளையும், மானியங்களையும் ஏனைய ஊக்குவிப்புக்களையும் படிப்படியாக அகற்றும்படி பார்த்துக்கொள்ளுதல்.
2. பல்வேறு வகையான சேவைகள் வர்த்தகத்தின் விஸ்தரிப்புக்கு உதவக்கூடிய வகையில் தடைகளையும், முன்னுரிமைச் சலுகைகளையும் அகற்றுமாறு பார்த்துக் கொள்ளுதல். உள் நாட்டு நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குமிடையிலான பாரபட்சமான நடவடிக்கைகளை அகற்றுதல்
3. புலமைத்துவ சொத்துடைமை தொடர்பான வர்த்தகம் தொடர்பாகவும் உலகரீதியில் தங்குதடையற்ற அசைவுக்கு ஏற்றமாதிரியான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல். இவை தொடர்பான இலாபங்களை உறுதிப்படுத்துதல்.

-134. அங்கத்துவ நாடுகளிடையே வெளிநாட்டு முதலீடுகள் தங்குதடையின்றி நகள்வதற்கு ஏற்ற வகையில், அங்கத்துவ நாடுகள்தற்போது பின்பற்றிவரும்பாரபட்சமான கட்டுப்பாடுகள், வரையரைகள் என்பவற்றை நீக்குமாறு பார்த்துக் கொள்ளுதல். உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக நிலவும் பாரபட்சம் படிப்படியாக அகற்றப்படுவதை உறுதிப்படுத்துதல்.
தாராளமயமாக்கல், சர்வதேசமயப்படுத்தல் என்ற கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றதாக உலக நாடுகளுக்கிடையே நிலவும் பாரபட்சமான நடவடிக்கைகளை அகற்றுதலில் அதிக அக்கறை செலுத்தும்.
நாடுகளிடையே நிறைபோட்டியை விருத்தியடையச் செய்வதன் மூலம் நாடுகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்து உலக வர்த்தக நலன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும்.
"தரிறமை தான் முன்னோக் கசித் தள்ளும் " என்ற கருதுகோளினடிப்படையில் உலக வர்த்தக நிறுவன செயற்பாடுகள் இருப்பதால், அதற்கேற்ப நாடுகளும் தமக்கிடையே பல்வேறு பிராந்திய ஒத்துழைப்புக்களையும் அதனடிப்படையில் பிராந்திய வர்த்தகத் தொகுதிகளையும் உருவாக்குவதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. 1990 களைத் தொடரும் தசாப்தத்தின் பொருளாதாரக் கோலம் அதுவேயாகும்.

Page 15
-14அத்தியாயம் 2 JITbg5u 6) fig55E5 Qg5.T(55 (Regional Trade Blocks)
2.1அறிமுகம்:
காலத்துக்குக் காலம் உலகின் பல்வேறு பிராந்தியங்களிலும் ஏற்பட்ட அரசியல், பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்கள் நாடுகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான நிலைமைகளை ஊக்குவித்து வந்துள்ளன.
1990 களில் தொடக்க காலத்திலும் உலகில் பலவேறு மாற்றங்கள் முனைப்புடன் இடம்பெற்றன. இதனடிப்படையில் ஐரோப்பாவிலும், மேற்கு அரைக்கோளத்திலும் பிராந்திய வர்த்தக தொகுதிகள் விரைவுபடுத்தப்பட்ட முறையில் உருவாகின.
1947 இல் உருவாக்கப்பட்ட "கற்” (GATT) அமைப்பு இடைவிடாது ஏழு ஆண்டுகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் விளைவாக “கற்றின் இயக்குனர் நாயகமான ஆர்தர் டங்கல் (Arthur Dunkel) தயாரித்த அறிக்கையின் அடிப்படையில் உருகுவே dising gubgbid (Urugay Round Agreement) 60.855 FIT55L JULg). "கற்”றுக்குப் பதிலாக உலக வர்த்தக நிறுவனம் (World Trade Organisation-WTO) 1995 2,3606 fu f65 (55g5 GFuuò uLg5 தொடங்கியது. டங்கல் அறிக்கையின்படி உருகுவே சுற்று ஒப்பந்தம் 1996இல் நடைமுறைக்கு வருவதாக தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி உலக வர்த்தக நிறுவனத்தில் கையொப்பமிட்ட 120க்கு மேற்பட்ட நாடுகளின் வியாபாரம் தொடர்பான சர்வதேச விதிகள், ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் உருவாக்கிய விரக்தி உலகின் பல பகுதிகளின் பிராந்திய வர்த்தகத் தொகுதிகள் உருவாவதற்கு ஊக்கமளித்திருந்தது.
உலக வர்த்தகத்தில் அதிகளவு சார்பு நிலைகளைப் பெறுகின்ற நாடுகளை நோக்கி வர்த்தகத்தைத் தாராளமயமாக்குவது பற்றிய ஐயுறவுகள் பல நாடுகளிடையே உருவானது. உலகின் தடையற்ற வர்த்தக நன்மைகள் அனுபவிக்கும் அதேசமயம் தமது நீண்டகால நலன்களை இழந்து விடாத வகையிலும் உதவக்கூடய உபாயங்கள் பற்றி நாடுகள் சிந்திக்கவும், செயலாக்கம் பெறவும் விரும்பின. இவற்றின் செயல் விளைவுகளாகவே உலகின் பல பிராந்தியங்களிலும் உருவான பிராந்திய வர்த்தகத் தொகுதிகள் அமைகின்றன.

-15
2.2 பிராந்திய வர்த்தகத் தொகுதி
புவியியல் ரீதியில் தொடர்பு கொண்ட இறைமை கொண்ட பலநாடுகள் தமக் கிடையில் பொதுவான இணக்கப்பாடுகளைக் கண்டறிந்து, தமக்கிடையே பொருளாதார ரீதியிலான கூட்டுமுயற்சி, ஒத்துழைப்பு என்பவற்றை வலுப்படுத்தக்கூடியதான பொது நிபந்தனைகளை வரையறைத்து உருவாக்கிக் கொள்ளும் ஏற்பாடு இதுவாகும்.
பொருளாதார ஒத்துழைப்பு முதன்மையானதாக இருப்பினும் இவற்றின் கூட்டிணைப்புக்கு தூண்டுதல் தருவனவாக புவியில் பண்புகள், மொழி, இனம், கலாச்சாரம், அச்சுறுத்தும் பிரச்சினைகள் தொடர்பான பொதுமைகள் காணப்படுகின்றன.
தனித்தனி அரசாங்கங்களும், பொருளாதார நிறுவனங்களும் ஒவ்வொரு நாட்டிலும் காணப்படுகின்ற போதிலும் இவற்றின் உழைப்பு, மூலதனம், தொழில்முயற்சி போன்ற காரணிகள் தடையற்ற முறையில் இந்த கூட்டுப்பிரதேசங்களில் நகரமுடியும். தொழில்நுட்பம், விஞ்ஞான விளைவுகள் என்பனவும் இவ்வாறே தங்குதடையின்றி அசையமுடியும்.
வணிகப் பண்டங்களும் ஒரு நாட்டிலிருந்துமற்றைய நாட்டிற்குள் நுழையும்போது முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட சுங்கத்தீர்வைகளில் குறைப்பு அல்லது விலக்கு அல்லது இரண்டும் வழங்கப்படுகின்றது.
தீர்வையற்ற தடைகளும் இந்த கூட்டுப் பிரதேசத்துள் அகற்றப்படும் . தொகை ரீதியரிலான கட்டுப் பாடுகள் , சுயவிருப்பின்படியான ஏற்றுமதித் தடைகள், பண்டங்கள் குவித்தலுக்கெதிரான நடைமுறைகள் போன்ற பலவும் தீர்வையில்லாத தடைகளாகக் கருதப்படுகின்றன. இக்கூட்டுப் பிராந்தியத்துள் இத்தகைய தடைகளும் அகற்றப்பட்டு விடுவதுண்டு.
தமது பொருளாதாரங்கள் நலன்பெறக்கூடியவாறு ஒத்துழைப்பு அமைப்புக்கு வெளியேயுள்ள நாடுகளுடனான தொடர்புகள் பொதுவாகத் தீர்மானிக்கப்படும். வெளிநாட்டு வியாபாரத்துக்குட்படும் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான தீர்வைகள் தொகைகள் சலுகைகள் என்பனவற்றைப் பொதுவாகத் தீர்மானித்துக் கொள்வர். வெளிநாடுகளிலான (வர்த்தகத் தொகுதியில் அங்கம் வகிக்காத நாடுகள்) முதலீடுகள் கடன்கள், நன்கொடைகள்

Page 16
-16தொடர்பாகவும் பொதுவான கொள்கையையும், நடைமுறைகளையும் பின்பற்றுவர்.
உலகநாடுகளிடையிலான பேச் சுவார்த்தையின் போது "கூட்டுப்பலமாக” இத்தகைய பிரதேச வர்த்தகத் தொகுதிகள் விளங்குவதால் பேரம்பேசும் வல்லமையையும் அதிகரித்துக் கொள்ள அவை உதவுகின்றன.
பிரதேச வர்த்தகத்தொகுதியின் அங்கத்துவ நாடுகள் தமக்குரிய அபிவிருத்தி நிதியைப் பெற்றுக்கொள்ள ஏதுவாக தமக்கென சிறப்பான அபிவிருத்தி வங்கிகளையும் உருவாக்கிக் கொள்ளுகின்றன.
தனித்தனியாக விருத்தி செய்யமுடியாத நிலையில் காணப்படும் பொருளாதார, சமூக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், நவீனமயப்படுத்தல் என்பனவற்றிலும் கூட்டுநடைமுறைகளை சிக்கனமாகவும் பயனுறுதி மிக்க வகையிலும் ஏற்படுத்திக் கொள்கின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பொதுவான நீண்டகாலச் செயற்திட்டங்களை உள்ளடக்கியதுமான செயற்பாடுகளிலும் பிரதேச வர்த்தகத் தொகுதிகள் பொதுப்படையாகவே கொள்கைகளை வடிவமைத்துச் செயற்பட்டு வருகின்றன.
இத்தகைய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்புக்களின் வலு, பரப்பு, வளர்ச்சி நிலை என்பவற்றிற்கேற்ப தனித்தன்மையான செயற்பாடுகளிலும் அவை ஈடுபட்டு வருகின்றன. ஐரோப்பிய சங்கங்களின் செயற்பாடுகளின் விரிவாக்கம் இத்தகைய அம்சங்களைக் காட்டுகின்றது.
உலக அரங்கில் இரண்டு நாடுகளுக்கிடையிலான தொடர்பு, ஒத்துழைப்பு, உதவி என்பதற்குரிய இடத்தை இரண்டு பிரதேச வர்த்தக அமைப்புக்கள் எடுத்துக் கொள்வது பொதுவான காட்சியாகி வருகின்றது.
ஒவ்வொரு நாட்டுக் கூட்டிணைப்பு அமைப்புக்களும் தமது அங்கத்துவ நாடுகளின் முழுப் புவியியற்பரப்பையும் கட்டற்ற வர்த்தக 66)u LDT B (Free Trade Area - FTA) - Jabl60, Li (655, சலுகைகளையும், உதவிகளையும், நிபந்தனைகளையும் பிரயோகித்து வருகின்றன.

-17
உலகப் பொருளாதாரத்தில் பிராந்திய வர்த்தகத் தொகுதிகளின் முக்கியத்துவம் கூர்மையடைந்து வருகின்றது.
அண்மைக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள பிராந்திய வர்த்தக தொகுதிகள்.
1.
2.
3.
6.
7.
8.
9.
ஐரோப்பிய சமூகம் EC European Community-1957 Safu JT6ÖT ASEAN Association of South East Asian Nations -1967 எ பெக் APEC Asia-Pacific Economic Co-Operation -1989
. ğFITL"ğ6 SAIDC
Southern African Development Community -1980
. FITT65 SAARC
South Asian Association for Regional Co-Operation -1985 bT.. BIT NAFTA North American Free Trade Agreement -1992 எக்கோ ECO Economic Co-Operation Organisation -1985 Li 616mo H e BSER
Black Sea Economic Region -1992 (8LD(353 MERCOSUR
Southern Common Market -1991
10. if 69 d'f 6Tio CACM
Central American Common Market -1994
23 நோக்கங்கள்:
உலகில் பல்வேறு பிராந்திய வர்த்தகத் தொகுதிகள்
நாடுகளிடையிலான கூட்டு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மூலமாக பொதுவான பாதுகாப்பு, பேரம் பேசும் வல்லமை என்பனவற்றை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்டன. இத்தகைய வர்த்தகத் தொகுதிகள் உருவாக்கப்பட்டமைக்குப் பல்வேறு காரணங்கள் அடிப்படையாக விள்ங்கின.
1.
பல நாடுகள் கூட்டிணையும்போது தனிப்பட்ட நாடுகள் தமது
நிலையான செலவுகளைப் பரவலாக்க முடிவதால் அளவுத்திட்ட சிக்கனங்களினாற் பெறக்கூடிய பொருளாதார நலன்களை எதிர்பார்த்து நாடுகள் ஒன்றிணைகின்றன.
வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் காரணமாக கற்றல், ஆராய்ச்சி
அபிவிருத்தி என்பவற்றில் ஏற்படக்கூடிய பொருளாதார

Page 17
-18வளர்ச்சியையும் நாடுகள் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்த்து இணைகின்றன.
(2) நாடுகளிடையிலான குடித்தொகை நகர்வுகள், அரசியல் ரீதியிலான பிணைப்புக்கள் தொடர்பான பொருளாதாரமல்லாத விடயங்களினால் கிடைக்கும் நலன்களை எதிர்பார்த்தும் நாடுகள் ஒன்றிணைகின்றன.
(3) இத்தகைய நாடுகளின் கூட்டிணைப்பில் பெரிய நாடுகளுடன் இணைந்து கொள்வதால், தமது உள்நாட்டுச் சந்தையிலும் பார்க்க மிகப்பெரிய சந்தையைப் பெறுவதால் தமது உற்பத்திகளுக்குச் சந்தைப் பாதுகாப்பைப் பெறமுடியும் என எதிர்பார்க்கின்றன.
(4) ஒரு பக்கம் சார்ந்த உள்நாட்டுக் கொள்கைச் சீர்திருத்தங்களில் கூடிய கவனம் செலுத்துவதற்கு நாடுகள் விரும்புமிடத்து இத்தகைய கூட்டிணைப்புக்கள் விரும்பப்படுகின்றன.
(5) உருகுவே சுற்று பேச்சு வார்த்தைகளில் நிகழ்ந்தது போல் தமது பேச்சுவார்த்தைகள் பொதுவாக மேற்கொள்ளப்படுவதை அவதானித்து, அதனடிப்படையில் ஏற்பட்ட விரக்தியினால், எதிர்காலத்தில் நிகழக்கூடிய பல்பக்க வர்த்தக பேச்சு வார்த்தைகளின் போது தமக்குரிய பேரம்பேசும் வல்லமையை அதிகரித்துக் கொள்ள இத்தகைய கூட்டிணைப்பு அவசியம் என உணர்கின்றன.
(6) பிராந்திய வர்த்தக தொகுதிகள் பல புதிதாக ஆரம்பிக்கப்படுவதால், அல்லது ஏற்கனவே இருப்பவற்றை ஆழமானதாக மாற்றுவதால் மூன்றாம் நிலையில் உள்ள நாடுகளின் வர்த்தகத்தைப் பன்முகப்படுத்த முடியும். இறக்குமதிகளிலும் பார்க்க ஏற்றுமதியில் கூடிய அக்கறையைப் பிராந்திய வர்த்தகத் தொகுதி நாடுகள் வெளிப்படுத்துமிடத்து, இதில் இணையாது விடுபடும் நாடுகள் பாதிக்கப்படும். இத்தகைய நிலைமைகளில் இறக்குமதி செய்யும் நிலையிலுள்ளோரும் பிராந்திய வர்த்தக தொகுதிகளாக ஒன்றிணைவதற்கான தூண்டுதல்களைப் பெற முயல்கின்றன.
(7) வளர்ச்சியடையாத நிலையில் கைத்தொழில்கள் - குழந்தை நிலைக்கைத்தொழில்கள் - அதிகளவிற் காணப்படுகின்ற பல நாடுகள் தமது தொழில்களுக்குப் பாதுகாப்பான சந்தையைப்பெற விரும் புகலின்றன. 95 D gll கைத் தொழில் களைப்

-19போதியளவுவிருத்தியுறச் செய்வதற்கான சர்வதேச ரீதியிலான போட்டித்தகுதியைப் பெற்றுக்கொள்வதற்காக இத்தகைய பிராந்திய வர்த்தகத் தொகுதிகளில் இணைந்து கொள்ள அதிகம் விரும்புகின்றன.
இத்தகைய பிராந்திய வர்த்தகத் தொகுதிகளில் இதில் அங்கத்துவம் பெறுகின்ற நாடுகளுக்குத் தனிப்பட்ட முறையிலோ அல்லது உலக நாடுகளுக்குப் பொதுவான முறையிலோ பொருளாதார நலன்கள் ஏற்படும் என்பதற்குக் கோட்பாடு ரீதியிலான விளக்கம் எதுவும் இல்லை. ஆயினும் பல செயல் விளைவுகள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடனேயே நாடுகள் இத்தகைய பிராந்திய வர்த்தகத் தொகுதிகளில் ஒன்றிணைகின்றன. 24 வர்த்தக ரீதியிலான விளைவு
நாடுகள் பிராந்திய வர்த்தகத் தொகுதிகளாக ஒன்றிணைவதால் அங்கத்துவம் பெறும் நாடுகளின் வர்த்தக விரிவாக்கம், பொருளாதார வளர்ச்சி என்பவற்றில் இத்தகைய தொகுதி வழங்கக்கூடிய உதவிகள் மட்டுப்படுத்தப்பட்டனவாகவே காணப்படும்.
இரண்டு நாடுகள் தமக்கிடையே வர்த்தக ரீதியிலான தடைகளைக் குறைக்கும் போதும் அங்கத்தவரல்லா மூன்றாம் நாட்டின் வணிகப் பொருட்கள் மீது தீர்வைகளை விதிக்கும் போதும், இவற்றின் விளைவுகளாக பின்வரும் வர்த்தக மாதிரி நிலைகள் உருவாகின்றன.
(1) வர்த்தக உருவாக்கம் (Trade Creation) (2) வர்த்தக பன்முகவாக்கம் (Trade Diversion)
வர்த்தக உருவாக்கம் குறிப்பிட்ட பிரதேசத்துக்கான நலன்களை விரிவுபடுத்தும். ஆனால் வர்த்தக பன்முகவாக்கம் ஒப்பீட்டு ரீதியில் குறைந்தளவு நலன்களையே தரமுடியும்.
பிராந்திய வர்த்தகத் தொகுதியில் இணைந்துள்ள நாடுகளில் ஒன்றிலிருந்து மற்றையது பண்டங்களை இறக்குமதி செய்யும்போது - தீர்வை விலக்குகளின் காரணமாக - இறக்குமதி செய்யும் நாட்டின் நுகர்வோருக்கு மலிவான விலையில் பண்டங்கள் கிடைக்கும். இந்த நிலையில் உள்நாட்டின் உற்பத்திக்கான பதிலீடாக இறக்குமதிகள் அமையமுடியும். அங்கத்தவரல்லாத நாட்டின் பண்டத்துக்குப் பதிலீடாகவும் அங்கத்துவ நாட்டின் பண்டத்தை நுகர்வோர் ஏற்றுக் கொள்வர். இந்த வகையில்

Page 18
-20அங்கத்துவ நாட்டில் வர்த்தக விளைவு ஏற்படுகின்றது. அங்கத்துவ நாடொன்றிலிருந்து இறக்குமதி செய்வதால் விலை வீழ்ச்சியுறுதல் என்பதும் நுகள்வோர் நலன் உயர்கின்றதென்பதும் பிராந்திய வர்த்தக தொகுதியின் குறிப்பிடத்தக்க நன்மையாகும். அங்கத்துவ நாட்டின் இறக்குமதி அதிகரிப்பினால் உள்நாட்டு உற்பத்தி தொடர்பாலும் நன்மையேற்பட முடியும்.
அங்கத்துவ நாட்டின் இறக்குமதிகள் உள்நாட்டின் உற்பத்திக்குப் பதிலீடாகும்போது, உள்நாட்டின் உற்பத்தி நிறுவனங்கள் தமது திறமையை உயர்த்த வேண்டும். திறமையற்ற பொறிகளை அகற்ற வேண்டும் திறமையை அதிகரிப்பதற்கேதுவான முறையில் வெளிநாட்டு முதலீடுகளையும் வரவேற்கலாம். இத்தகைய தொடர் நிகழ்வுகளினால் அங்கத்துவ நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட முடியும். "செய்வதன் மூலமாகக் கற்றுக்கொள்ளுதல்" உற்பத்தித் தரத்தை மேம்படுத்துதல், உற்பத்தி வேறாக்கத்தை அதிகரித்தல் போன்ற இயக்கப்பண்பு நிறைந்த நன்மைகள் ஏற்படமுடியும்.
அங்கத்துவம் பெறாத நாடு தனது பண்டங்களுக்குரிய முன்னைய சந்தைகளைப் பேண முடியாத நிலையில் வர்த்தக பன்முகவாக்கத்தில் கவனஞ் செலுத்த வேண்டி ஏற்படும். இதனால் முன்னைய வர்த்தக உருவாக்கத்திலும் பார்க்க குறைந்தளவு நலன்களையே வர்த்தக பன்முகவாக்கத்தினால் நாடுகள் பெற்றுக்கொள்ளும். 2.5 கட்டற்ற வர்த்தகத்தை மேம்படுத்துதல்:
பிராந்திய வர்த்தகத் தொகுதிகள் உருவாக்கப்பட்டு, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், உலகில் கட்டற்ற வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு இத்தகைய தொகுதிகள் உதவ முடியும். இதற்கு இசைவான பல காரணிகள் கூறப்படுகின்றன அவை:-
(1) உலக வர்த்தக நிறுவனத்தின் அங்கீகாரம்
"கற்றின் XXIV ஆவது பகுதி, பிராந்திய வர்த்தகத் தொகுதிநாடுகள் -அங்கத்துவ நாடுகள் - தமக்கிடையே வர்த்தகத்தை அதிகரிக்க சுங்கச் சங்கங்கள் பல்வேறு வகையான தடைகளையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. தற்போது பிராந்திய வர்த்தகத் தொகுதிகள் சிலவகை வர்த்தகத்தை தவிர்த்து வருகின்றன. சிறந்த வர்த்தகம் என்பது கட்டற்ற உலக வர்த்தகத்துக்கு ஆதரவு தரும் நோக்கமுடையதாகவே அமையமுடியும் என்று கூறப்படுகின்றது.

-21
(2) தீர்வைக் குறைப்புக்கள்
அதிக நலன் பெறுகின்ற - சார்பு நிலைகளைப் பெறுகின்றநாடுகள் தமது தீர்வைகளைக் குறைக்குமிடத்து பிராந்திய வர்த்தகத் தொகுதியின் அங்கத்துவ நாடுகள் தமது வர்த்தகத்தைப் பன்முகப்படுத்துவதற்கெதிரான இடர்களை மிகவும் குறைவாகவே எதிர்கொள்ள வேண்டியேற்படும். இந்த ஊக்கம் கட்டற்ற வர்த்தக வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும்.
(3) தாராளமாகக் கிடைத்தல் பற்றிய விதிகள்:
பிராந்திய வர்த்தக ஏற்பாடுகள் பண்டங்கள் தாராளமாகக் கிடைப்பது பற்றிய விதிகளின் படி பல் பக்க வர்த்தக செய்முறையினடிப்படையில் வர்த்தக தாராளமாக்கலை மேற்கொள்ளமுடியும். இது உலக நாடுகள் மட்டத்தில் வர்த்தகம் தாராளமயமாவதற்கு உதவும்.
(4) கட்டற்ற உண்மை விதிகள்:
சலுகையுடைய தீர்வைமுறைக்கு தகுதியுடைய பண்டங்களை நிர்ணயித்துக் கொள்வதற்கு ஏற்ற உண்மையான விதிகள் அவசியமாகின்றன. அத்தகைய நிலை மூன்றாம் நிலையில் உள்ள நாடு, குறைந்த வெளிவாரியான வர்த்தகத் தடைகள்மூலம் சலுகை பெறும் வர்த்தக தொகுதியின் அங்கத் துவ நாட்டின்வர்த்தகத்தைப் பாதிக்கச் செய்ய முடியாது. சலுகை பெறுவது தொடர்பான நிபந்தனை வெளிப்படையாக இருக்குமிடத்து பிரதேசத்தின் உள்ளிட்டு வழங்குநர்களைப் பாதுகாப்பதும், பிரதேச வர்த்தக ஏற்பாட்டின்படி முதலீடுகளைப் பன்முகப்படுத்துவதும் சாத்தியமாவதால் கட்டற்ற வர்த்தகம் ஊக்குவிக்கப்படும்.
(5) வலுவான ஒருங்கிணைப்பு
நாடுகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் வலுவானதாக இருக்குமிடத்து வர்த்தகத்தை தாராளமயப்படுத்துவதும், முதலீடுகளைப் பன்முகப்படுத்துவதும் சாத்தியமாகும். சூழல் பாதுகாப்புக்குரிய முன்னுரிமை, ஊழியர் தராதர நிர்ணயம் , வரிக் கொள்கை போன்றவற்றில் பிரதேசங்களுக்கிடையில் வேறுபாடுகள் காணப்பட இடமுண்டு. பிராந்திய வர்த்தக ஏற்பாடுகள் வள ஒதுக்கீடு தொடர்பாக நலன்களை அதிகரிக்கச் செய்யக்கூடியன. நாடுகளிடையிலான ஒருங்கிணைப்புகள் பிரதேச வர்த்தக தொகுதியில் வலுவானதாக்கப்படுமிடத்து கட்டற்ற வர்த்தகம் மேம்படமுடியும்.

Page 19
-22(6) எதிர்பதுக்கல் நடவடிக்கையை மட்டுப்படுத்தல்
பண்டங்களை உள்நாட்டு விலையிலும் பார்க்கக் குறைந்த விலையில் ஏனைய நாட்டுச்சந்தைகளில் அதிகம் விற்பதைத் தடை செய்வதைக் குறைத்தல் அவசியம். பிராந்திய வர்த்தகதொகுதியின் அங்கத்துவ நாடுகள் இவ்வாறு பாதுகாக்கப்படுமிடத்து கட்டற்ற வர்த்தகம் அதிகரிக்கமுடியும்.
உருகுவே சுற்று ஒப்பந்தம் உலக ரீதியில் கட்டற்ற வர்த்தகத்தை ஊக்குவிக்க விரும்பும் நிலையில், மிகச் சிறிய வறிய நாடுகள் தமக்கு ஏற்படக்கூடிய பாதகமான செயல்விளைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் அதேசமயம் மிகப்பெரிய சந்தைகளுள் நுழைந்து கொள்ளவும் கூடியவாறு கட்டற்ற வர்த்தகத்தை மேம்படுத்த முயல் கின்றன. உருகுவே ஒப்பந்தப் படி அனுமதிக்கப்படும் பல்வேறு அம்சங்களும் பிரதேச வர்த்தகத் தொகுதிகளைத் தூண்டுவதாயும், அவற்றினூடாக கட்டற்ற வர்த்தகத்தை மேம்படுத்துவதாயுமிருப்பதை மேற்குறிப்பிட்ட காரணிகள் தெளிவுபடுத்துகின்றன.
பெரிதும் கைத் தொழில் நாடுகளின் பேராதரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் "கற்றின் உருகுவே சுற்றில் அங்கத்துவ நாடுகளான 117 வளர்முக நாடுகள் தமது வர்த்தகத்தைப் பூரணமாக கட்டற்றதாக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
விபரிக்கப்பட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையிலும் கட்டற்ற வர்த்தகம் விரிவடைவதற்கும், மேம்படுத்துவதற்கும் பிராந்திய வார்த்தகத் தொகுதிகள் பெரிதும் உதவுமென எதிர்பார்க்கப் படுகின்றது.

-23அத்தியாயம் 3 ஐரோப்பிய சங்கம் ( Europen Union)
3.1 பின்னணி:
இரண்டு உலக யுத்தங்களினால்ஏற்பட்ட உறுதியற்ற அரசியல் நிலைகளால் வலுவான கூட்டு அமைப்புக்களை உருவாக்குவதுபற்றிய சிந்தனை தோன்றியது.
1951இல், இரும்பு, உருக்கு, நிலக்கரி வளங்கள் தொடர்பான கட்டுப்பாட்டினை ஏற்படுத்த விரும்பி பிரான்ஸ், மேற்குஜேர்மனி, இத்தாலி, ஒல்லாந்து, பெல்ஜியம், லக்சம்பேக் என்ற ஆறு நாடுகளும் ஐரோப்பிய நிலக்கரி, உருக்குச் சங்கத்தைத் தொடங்கின. 1957இல் இதே ஆறு நாடுகளும் அணுசக்திச் சமூகத்தை (Atomic Energy Community) உருவாக்கியதோடு இவற்றிடையே பொதுச்சந்தையாக ஐரோப்பிய பொருளாதார சமூகத்தை (EEC) உருவாக்கவும் முயன்றன. இந்த மூன்று அமைப்புக்களும் இணைந்து 1957ஆம் ஆண்டு ரோம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐரோப்பிய சமூகம் உருவானது. தற்போது ஐரோப்பிய சங்கம் (European Union) என்று அழைக்கப்படுகின்றது. 3.2 அங்கத்துவ நாடுகள்
இந்த நாட்டுக் கட்டமைப்பில் தொடக்கத்தில் ஆறு நாடுகளே இருந்தபோதிலும் 1973இல் பிரித்தானியாவும் சேர்ந்து கொண்டது. 1990 அளவில் இதில் 12 நாடுகள் அங்கம் வகித்தன. அவை,
பிரான்ஸ் டென்மார்க் பெல்ஜியம் ஸ்பெயின் ஜேர்மனி ஐரிஸ் குடியரசு ஒல்லாந்து போர்த்துக்கல் இத்தாலி கிறீஸ் லக்சம்பேக் பிரித்தானியா
ஐரோப்பிய சமூகம் உருவாக்கிக்கொண்ட ஐரோப்பிய கட்டற்ற 6irg5535 lig(35ELD (European Free Trade Area -EFTA) 6T6Tug56) சேர்ந்து கொள்வதற்குப் பின்வரும் நாடுகள் விரும்பின,
1. அவுஸ்திரியா 4. நோர்வே 2. பின்லாந்து 5. சுவீடன் 3. ஐஸ்லாந்து
இவ்வாறு ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஐரோப்பிய பொருளாதார பிராந்தியத்தை (European Economic Area) g (56). Tisdais GasT6irot (36.6067(6GLD6örg

Page 20
-24விரும்பப்பட்டது. தற்போது ஐரோப்பிய சமூகத்தில் 15 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. முன்னைய 12 நாடுகளுடன் சுவீடன், பின்லாந்து, அவுஸ்திரியா என்பனவும் இணைந்துள்ளன.
3.3 துணை நிறுவனங்கள.
ஐரோப்பிய சமூகத்தில் நான்கு பிரதான துணை நிறுவனங்கள்காணப்படுகின்றன.
(9) 960)6001855(g (The Commission)
ஐரோப்பிய சமூகத்தின் பிரதான அமைப்பாக காணப்படும்.இதில் நான்கு வருடங்களுக்குப் பணியாற்றும் ஏழுஅங்கத்தவர்கள் இடம்பெறுவர். ஐரோப்பியசமூகத்தின் விதிகளுக்கமைய செயற்படாத அங்கத்தவர் மீது ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உடையது. இது பின்வரும் கடமைகளை மேற்கொள்ளுகின்றது.
கொள்கைப் பிரேரணை
& Lld
ஐரோப்பிய சமூக நலன் மேம்படுத்தல் தேசிய நோக்குகளை அங்கீகரித்தல் கழக முடிவுகளை நடைமுறைப்படுத்தல் ஐரோப்பிய சமூகத்தின் கொள்கைகளை நாளாந்தம் மேற்பார்வை செய்தல் h
(ஆ) 960LD58 fab6fair Blp85D (The Council Ministers)
தீர்மானங்களை மேற்கொள்ளும் பொறுப்புடைய அமைப்பு இதுவாகும். ஐரோப்பிய சமூக அங்கத்தவர்களான அரசாங்கங்களின் விருப்பங்களோடு ஆணைக்குழு தீர்மானிக்கும் கொள்கைகளை இணக்கமடையச் செய்வதில் இக்கழகம் அக்கறையுடன் செயற்படும். பிரேரணைகள், சமரசத் திட்டம் என்பன ஆணைக்குழுவுக்கும் வழங்கப்படும். இவ்வாறே ஆணைக்குழுவிடமிருந்தும் இக்கழகத்துக்கு வந்து சேரும்.
இக்கழகம் விவசாயம், நிதி, கைத்தொழில், சுற்றுச்சூழல் தொடர்பான கொள்கைகளை ஆராய்வதில் அதிக கவனம் செலுத்தும். ஏகமனதாகத் தீர்மானம் மேற்கொள்ளவேண்டிய பல விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதுண்டு. ஒற்றை ஐரோப்பியச் சட்டம் 1987, பற்றிய வாக்களிப்பு நிகழ்ந்தது. வரிவிதிப்பு, மக்கள் இடப் பெயர்வு, தொழிலாளர் பிணக்குகள் போன்ற விடயங்கள் பற்றியும் இது ஆராய்ந்து வருகின்றது.

-25
அரச தலைவர்கள் பங்குபற்றும் இதன் கூட்டம் வருடம் இருதடவை நடைபெறும். இதற்கு ஆறு மாதகாலத்துக்கு ஒரு தலைவர் தெரிவு செய்யப்படுவர். அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான உறவுகளைச் சுமூகமாகப் பேணுவதில் இக்கழகம் கவனம் செலுத்தும்.
(9) g6yATÜîlu u UJITJITGLDGöABD (The European Parliment)
ஐந்து வருடம் பதவிக்காலத்திற்கு உரியதாக அங்கத்துவ நாடுகளிலிருந்து தெரிவுசெய்யப்படும் 567 உறுப்பினர் இதில் இடம்பெறுவர். ஐரோப்பிய சமூகத்தின் கொள்கைகளை விவாதித்தல், ஐரோப்பிய சமூகத்தின் பாதீட்டை (Budget) ஆராய்தல் போன்றவற்றில கவனம் செலுத்தும்.
1987.96) fib60B g(3) TujuuéF 3FL-gbg|L6 (Single Market Act of 1987) இதன் அதிகாரங்கள் வலுப்பெற்றன. ஆணைக்குழு தயாரித்த பிரேரணைதொடர்பான முதல் அபிப்பிராயத்தை இப்பாரளுமன்றம் தெரிவிக்கும்.அதன் பின் அமைச்சர்களின் கழகம் முடிவுகளை மேற்கொள்ளும்.
(HF) 55up6órgio (The Court of Justice)
ஒவ்வொரு அங்கத்துவ நாட்டிலிருந்தும் ஒவ்வொரு உறுப்பினரும்
பதின் மூன்று நீதிபதிகளும் ஒரு தலைவரும் இதில் இடம்பெறுவர். இவர்கள் தவணைக்காலம் ஆறு வருடங்களாக இருக்கும்.
ரோம் ஒப்பந்தத்தின் அடிப்படையில், நிர்வாகம் செய்வதற்கும், தனியார் நிறுவனங்கள், ஐரோப்பிய சமூகத்தின் நிதிநிறுவனங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கும் இந்நீதிமன்றம் அதிகாரம் பெற்றது.
(2) 663FL pilgol60 IsleB6i (Special Institutions)
சிறப்பான கொள்கைகளுக்காக விசேட நிறுவனங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
1. பொருளாதார, சமூகசபை 2. ஐரோப்பிய முதலீட்டு வங்கி போன்றன இவ்வாறு ஏற்படுத்தப்பட்டவையாகும். 34 பொருளாதார நோக்கங்கள் (Economic Objectives)
ஐரோப்பிய சமூகத்தின் அங்கத்துவ நாடுகளுக்கிடையே ஒன்றிணைந்த செயற்பாடுகளையும்; நல்லுறவையும் ஏற்படுத்தும் தலையாய நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றது.

Page 21
-26ஐரோப்பிய சமூகத்தின் பிரதான நோக்கங்களைப் பின்வருமாறு
குறிப்பிடலாம்.
1.
3.
4.
35' Lib 6irg5535 lips b5u (FreeTrade Area) (p60B60)uj6ilds galgu 6lg660)Lu JilliabiF 31515ID (A Customs Union) 696.60s) நிறுவி அதன் மூலமாக உள்ளார்ந்த ரீதியில் கட்டற்ற வர்த்தகம் நடாத்தப்படுகின்ற போதிலும் வெளிநிலையில் தெளிவான தீர்வைகளை விதிப்பதில் கவனம் செலுத்தப்படுகின்றது. வெளிநாடுகளிலிருந்து ஐரோப்பிய சமூக அங்கத்துவ நாடுகளுக்குப் பண்டங்கள் குவிந்துவிடாதவாறு தேவைக்கேற்ப தீர்வைகளை சுங்கச் சங்கத்தின் மூலம் விதித்து உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாத்துக் கொள்ளுதல்.
அங்கத்துவ நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைந்த வகையில் பொதுவான சந்தை (A Common Market) அமைப்பை உருவாக்கி, அங்கத்துவ நாடுகளின் பொருட்களும், சேவைகளும் இதற்குள் தடையின்றி அசைவதற்கு ஊக்கமளிப்பதன் மூலமாக பேரளவுச் சந்தையின் அனுகூலங்கள் அனைத்தையும் அங்கத்துவ நாடுகள் பெற்றுக்கொள்ள உதவுதல்
அங்கத்துவ நாடுகள் ஏற்கனவே தமக்கெனத் தனியாக வரிகள், சேம நலன்கள், சென்மதி நிலுவைச் சமனிலை உருவாக்கம், தொழில்வாய்ப்புக் கொள்கை போன்ற விடயங்கள் பற்றிய கொள்கைகளை வடிவமைத்துள்ளன. இதனால் பொதுச் சந்தையின் விலைமுறையின் தொழிற்பாடு பாதிக்கப்படும் என்பதால், இவற்றிடையிலான முரண்பாடுகளை அகற்றும் வகையில் வெளிவாரியான பொதுத்தீர்வைகளை அங்கத்துவ நாடுகள் அனைத்தும் அங்கத்தவரல்லாத நாட்டிலிருந்து உள்வரும் இறக்குமதிகள் மீது விதித்தல், பொதுவான விவசாயக் கொள்கையை பின்பற்றச் செய்தல். போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தும். இதன் மூலமாக ஒற்றைச் & b 605 (Single Market) g g (56). It is E. (Upuusis fgbgb6) நோக்கமாகும்.
அங்கத்துவ நாடுகளிடையே வர்த்தக ரீதியிலான தடைகள், ஆட்கள், மூலதனம் என்பவற்றின் அசைவுக்கெதிரான தடைகள் என்பவற்றை அகற்றுதல்.
வர்த்தம் தொடர்பான போட்டியினால் எழக்கூடிய சீரழிவுகளை தடுக்கும் வகையில் விலை நிர்ணயம், சந்தைப் பகிர்வு,

-27. ஆக்கவுரிமை என்பனவற்றை உள்ளடக்கக்கூடிய பொதுவான விதிகளை அறிமுகப்படுத்துதல்.
பொதுவான வர்த்தகக் கொள்கையைப் பின்பற்றச் செய்தல், கப்பற் கட்டணம், அனுமதிப் பத்திரங்களின் வரிவிதிப்பு, பணிபுரியும் நிலைமைகள் என்பவற்றை ஒழுங்கு படுத்துவதன் மூலம் சமத்துவ அடிப்படையில் எல்லா அங்கத்துவ நாடுகளும் நலன் பெறும் வகையில் தடையற்ற பண்ட அசைவை உறுதிப்படுத்துதல். இதற்கேற்ப போக்குவரத்து நிறுவனங்களும் தமக்கிடையே சமத்துவ அடிப்படையில் போட்டியிடுதற்குரிய வசதிகளும் அனுமதிக்கப்படுகின்றன.
5. வரிவிதிப்பில் பொது முறையைப் பின்பற்றுதல்.
வர்த்தக ரீதியிலான தடைகளை அகற்றும் வகையிலும், எல்லா அங்கத்துவ நாடுகளும் ஒரேமாதிரியாக விதிக்கக்கூடிய மாதிரியிலும் வரி விதிப்பைக் கையாள ஊக்கமளித்தல். கூட்டிய பெறுமதி வரிமுறையை பின்பற்றச் செய்தல்.
7. நாணய மாற்றுவிகித உறுதியைப் பேணுதல்.
அங்கத்துவ நாடுகள் தனித்தனியாக நாணய மாற்று விகிதங்களை வேறுபடுத்துவதன் மூலம் இறக்குமதி, ஏற்றுமதி தொடர்பாக வேறுபட்ட அனுகூலங்கள் பெறுவதைத் தவிர்க்கும் வகையில் குறுகிய எல்லைக்குள் அங்கத்துவ நாடுகள் நாணயமாற்று விகிதங்களைப் பேணுமாறு பார்த்துக்கொள்ளுதல். இதற்கு நாடுகள் இணங்கியுள்ளன. ஐரோப்பிய நாணயமுறை (European Monetary System) 96 Tas gog60)60 நடைமுறைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது.
8. பொதுவான பிராந்தியக் கொள்கை.
அங்கத்துவ நாடுகளில் வேலையின்மை, உற்பத்தி, சூழல் பாதுகாப்பு போன்ற விடயங்களில் பாரபட்சமான கொள்கைகளைப் பின்பற்றாது ஒரே மாதிரிக் கொள்கையைப் பின்பற்றுமாறு செய்தல், நாடுகளிடையில் சமத்துவ முன்னேற்றத்துக்கு இவை உதவுமாறு பாதுகாத்துக் கொள்ளுதல். 9. பொதுவான சமூகக் கொள்கை

Page 22
-28அங்கத்துவ நாடுகளிலான தொழில்வாய்ப்பு, வேலைநிலைமைகள் மக்களின் சமூக ரீதியிலான வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கவல்லன. இதன் காரணமாக இவற்றைப் பேணுவது தொடர்பான பொதுவான கொள்கையைப் பின்பற்றுவதற்காக சமூக நிதியிலிருந்து உதவிகள் வழங்கப்படுகின்றன.
35. ஐரோப்பிய சமூகத்தின்படிமுறை வளர்ச்சி 1957இல் ரோம் உடன்படிக்கையின் கீழ் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய சமூகம் இன்று தனக்கென ஒற்றைச் சந்தையை உருவாக்கவும் மத்தியவங்கி ஒன்றை உருவாக்கவும். ஐரோப்பிய செலாவணி ஒன்றை உருவாக்கவும் கூடியளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இத்தகைய வளர்ச்சியை மூன்று பிரதான கட்டங்களாக விளக்க முடியும்.
முதலாவது கட்டம் (1958 - 1969) இக்காலப் பகுதியில் அங்கத்துவ நாடுகளிடையிலான தீர்வைகள் அகற்றப்பட்டன. அங்கத்துவ நாடுகளிடையிலான இறக்குமதித் தொகைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. அங்கத்தவரல்லாத நாடுகள் தொடர்பாக வெளிவாரியான தீர்வைகளை ஏற்படுத்திக் கொள்வதில் அங்கத்துவ நாடுகள் ஆறும் உடன்பட்டன. அங்கத்துவ நாடுகள் தமக்கிடையில் பொதுவான விவசாயக் கொள்கையை உருவாக்கிக் கொள்வதிலும் உடன்பாடு கண்டன.
இரண்டாவது கட்டம் (1970 - 1980 ன் முற்பகுதிவரை) இக்காலப்பகுதியில் நிறுவன மட்டங்களிற் பிரதான மாற்றங்கள் ஏற்பட்டன. பிரித்தானியா அங்கத்துவம் பெற்றமை குறிப்பான வளர்ச்சியாகும். ஐரோப்பிய கழகத்தில் இரு அங்கத்தவர்கள் இடம் பெறலாயினர்.
மூன்றாவது கட்டம் (1980 - இன் பிற்பகுதியிலிருந்து)
இக்காலப்பகுதியிலிருந்து அங்கத்தவரல்லாத அயல் நாடுகளுடன் ஐரோப்பிய சமூகம் நெருக்கமான தொடர்பு உருவாக்கப்பட்டது. ஒற்றைச் சந்தையை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் தொடங்கியதனால் நாடுகளிடையிலான ஒருங்கிணைப்பைப் பலப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய சமூகத்தில் வியாபாரம், பொருளாதார வளர்ச்சி என்பவற்றைத் தூண்டியுள்ளது. பணம், பண்டங்கள் ஆகியவற்றின் நகர்வு, மறைமுக வரிகளை இசைவுடையதாக்கல், உள்நாட்டு ஒழுங்குபடுத்தும் தடைகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பரந்தளவில் பண்ட அசைவை ஊக்குவிக்கும்

-29
வகையில் போட்டியை ஊக்குவித்தது. பொதுவான விவசாயக் கொள்கை 1992 இல் சீர்திருத்தப்பட்டது. உற்பத்தியாளர்களின் கேள்வி நிலைமைகளுக்கேற்ப செயற்படுவதற்கு உதவும் வகையில் அச்சீர்திருத்தம் அமைந்தது.
அங்கத்துவ நாடுகளிற் காணப்படும் மிக வறிய நாடுகளின் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குப் போதுமான அளவு நிதி ஒதுக்கப்படுகின்றது.
ஒற்றைச் சந்தைசார் வசதிகளை முழுமைப்படுத்துவதற்கான கடைசித் திகதியாக 1992 தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஒற்றைச் சந்தை நிகழ்ச்சித் திட்டம் அங்கத்துவ நாடுகளின் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதோடு, அங்கத்துவ நாடுகளின் நலன்களையும் அதிகரிக்கும். இவற்றின் மெய் வருமானத்தை 3.4% வரையில்அதிகரிக்கச் செய்யுமென்றும் நம்பப்பட்டது.
அங்கத்துவ நாடுகளின் தயாரிப்புத்துறை தொடர்பாகச் சமநிலையை உருவாக்குவது கடினமாகவே இருந்துவருகின்றது. ஆனால் பொது விவசாயக் கொள்கை காரணமாக வர்த்தகப் பன்முகப்படுத்தல் ஏற்பட்டது.
அங்கத்துவ நாடுகள் தமக்கெனப் பொருளாதார, நாணயச் சங்கத்தை நிறுவ இணங்கியதோடு, ஒற்றைச் செலாவணியை உருவாக்கும் நடவடிக்கையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
ஐரோப்பியச் சமூகத்தைச்சேர்ந்த நாடுகளின் கீழ் குடியேற்ற நாடாக இருந்த ஆபிரிக்க, கரிபிய, பசுபிக் நாடுகளுக்கு (African, Caribean, Pacific Countries) 660)6OTuu 66rst(p35 BTOBB6061T6L 65535 ரீதியிலான சலுகைகளையும், உற்பத்தி உதவிகளையும் வழங்கி வருகின்றது. லோம் ஒப்பந்தத்தின்கீழ் இயன்றளவு உதவிகளை 2000 ஆண்டுவரை வழங்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எனினும் ஆபிரிக்க, கரிபிய, பசுபிக் நாடுகள் சுயமாக வளர்ச்சியடையும் முயற்சிகளில் அதிக கவனம் செலுத்தி முன்னேற வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளது.
இத்தகைய படிமுறை வளர்ச்சி நிலைமைகளின் ஊடாக குறிப்பிடத்தக்க உலக பொருளாதார, அரசியல் சக்தியாகவும், உலகின் கட்டற்ற வர்த்தக தொகுதியில் சிறப்பானதாகவும் வளர்ந்துள்ளது. 36. அண்மைக்கால அபிவிருத்திகள்.
1991 இல் நெதர்லாந்தின் தலைநகரான மாஸ்றிச் (Maastricht)

Page 23
-30சில் ஐரோப்பிய சமூக அங்கத்துவ நாடுகளின் அரச தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் பின்வரும் பிரதான விடயங்கள் தொடர்பான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன
1. Qsb60s& Fib605 (Single Market) 60)u 2-((56). T850556)
2. QUIT(b6|TTg5TJ bf600TuéF Fries (Economic, Monetary Union -
EMU) த்தை உருவாக்குதல்.
3.பின்வரும் விடயங்களை நோக்கி நகர்வதற்கான நகல் திட்டம்
வரைதல்.
3.1 பொதுவான நாணயக்கொள்கை. 3.2 சுயேச்சையான ஐரோப்பிய மத்தியவங்கியினால் கட்டுப் படுத்தப்படும் ஐரோப்பிய சமூகத்துக்கான 9is603&Gd6)T6).j60ii. (European Community Currency) யை உருவாக்குதல்.
ஐரோப்பிய சமூகத்தில் அங்கத்துவ நாடுகளில் விலை உறுதியை உட்ருவாக்கும் நோக்கம் கொண்ட ஐரோப்பிய நாணய யாப்பு உருவாக்கப்பட்டது. அங்கத்துவ நாடுகளில் பொருளாதார தராதர நிலைமைகளை மதிப்பிடுவதற்கு பணவீக்கம், வட்டிவீதம். நாணய மாற்று விகித உறுதிப்பாடு, அரசிறை நிலைமைகளின் நீடித்திருக்கும் தன்மை போன்ற பலவற்றையும் கவனத்திற் கொள்ள முடியும் என்று கருதப்பட்டது. இவற்றில் இணக்கம் காணப்பட்டாற்தான் ஒற்றைச் சந்தை, நாணயச் சங்கம் போன்ற விடயங்களிலான நலன்களை உறுதிசெய்ய முடியும் என்றும் கருதப்பட்டது.
முதலாவது கட்டத்தில் (Stage 1) அங்கத்துவ நாடுகள் எல்லாம் நாணய மாற்றுப் பொறிமுறையில் உடன்படுவதும் , ஏற்றுக்கொள்ளப்பட்ட வகையில்தமது நாணய மாற்று விகிதங்களைப் பேணுவதும் ஏற்கப்பட்டது. இது 1991 -94 காலப் பகுதிக்குரியதாகக் கருதப்பட்டது.
இரண்டாவது கட்டத்தில் (Stage 11) ஒருங்கிணைந்த தடைகளுக்குள்ளேயே உறுதியான நாணய மாற்று விகிதத்தை உருவாக்கவேண்டும். பணவீக்கம், சென்மதி நிலுவை, இறைக் கொள்கை என்பவற்றை ஒழுங்குபடுத்துவதன் மூலமாக ஒற்றைச் செலாவணியை ஏற்படுத்துதலும், அதன் மூலமாக நாணயப்

-31பரிமாற்றுதல் தொடர்பான செலவுகளைத் தவிர்க்க முயற்சிக்கப்படும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1994 - 1996 காலப்பகுதிக்குரியதாக அது அமைவதாயிற்று. அங்கத்துவ நாடுகள் தாம் பின்பற்றிய தேசிய கட்டுப்பாட்டு அதிகாரங்களை ஐரோப்பிய சமூகத்தின் பணி அடுக்கு நிறுவனங்களுக்குக் கைமாற்றுவதற்கு உடன்படவேண்டிய நிலையை இவை உருவாக்கின.
ep6óp6)gł 35LLüb (Stage 111) 1997 - 1999 5T6Dü பகுதிக்குரியதாக இருக்கும். இக் காலப்பகுதிக்குள் அங்கத்துவ நாடுகள் நாணயமாற்று விகிதங்களைப் பொதுவானதாக நிர்ணயிப்பதும், ஒற்றைச் செலவாணியை வழங்குதலும் அவசியம் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைத் தீர்மானங்கள் தொடர்பாகப் பின்வருவன முக்கியத்துவம் பெறுகின்றன. இவைபற்றி ஓரளவு அறிந்திருத்தல் அவசியமாகும்.
1.69si6OB& F5605 (Single Market) 2. g6.js Liu LD55u 6irids (European Central Bank) 3. is60s& Gaf6)T660s ( Single Currency)
ஒற்றைச் சந்தை:
ஐரோப்பிய சமூக நாடுகள் அனைத்தும் தனது பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தி என்பவற்றை மேம்படுத்தவும், பொருளாதார உறுதித் தன்மையை பேணுவதற்கும் தமக்கிடையே பாதுகாப்பு மிக்க பொதுவான சந்தையை - ஒற்றைச் சந்தையை - ஏற்படுத்தத் தீர்மானித்தன.
சுங்கத் தீர்வைகளை ஒழுங்குபடுத்துவதற்கிருந்த ஏற்பாடுகள் மாத்திரம் பாதுகாப்பான ஒற்றைச் சந்தையை உருவாக்கப் போதுமானவை அல்லவெனக் கருதப்பட்டது. இதனால் தீர்வையில்லாத வகையில் காணப்படும் பலவேறு தடைகள் 9|60)Luist6TTLD 35|T600TL J'L60T. 916O)6),
1. போக்குவரத்துத் தொடர்பான பாதுகாப்பு 2. உற்பத்தி நியமங்கள் 3. ஏற்கத்தக்கதான உயர் தொழில் தகுதி 4. பொதுக் கொள்ளளவு முறைகள் 5. வங்கிகளின் நிதிச் சேவைகள்

Page 24
-326. காப்புறுதி நிறுவன சேவைகள் 7. மூலதன நகர்வுகள் தொடர்பான பலவேறு தடைகளையும் கவனத்திற் கொண்டன.
இவ்விடயங்களில் ஒருமித்த இணக்கத்தை உருவாக்குதல் அவசியம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. பொதுவான கட்டுப்பாடுகளை மீளவும் மாற்றியமைத்தல் பொதுவான ஒற்றைச் சந்தையை உருவாக்க உதவும் என்று கருதப்பட்டது.
ஒற்றைச் சந்தையின் அனுகூலங்கள்:
வர்த்தகம் மீதான தடைகளை அகற்றுவதன் மூலமாக கட்டற்ற சந்தையின் அனுகூலங்களை முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியும். 340 மில்லியன் மக்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய வசதிமிக்க சந்தையாக ஐரோப்பிய சந்தை அமையும். ஐரோப்பிய சமூகத்துக்கு வெளியே உள்ள நாடுகள்தமது ஏற்றுமதியை அதிகரிக்கவும் இச் சந்தை உதவும்
கட்டுப்பாடுகளை அகற்றுவதன் மூலமாக இச்சந்தை சார்ந்த இரண்டு மில்லியன் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்க முடியும். ஐரோப்பிய சமூகத்தின் நிறுவனங்கள் இச்சமூகத்துக்கு வெளியே மூதலீடு செய்வதால் ஏனைய தொழில் வாய்ப்புக்களும் உருவாகும்.
ஒற்றைச் சந்தையை உருவாக்குமிடத்து மின்சாரப் பொருட்கள் மோட்டார் வாகனங்கள், மருந்துவகை, உணவு, குடிபானம், விமானசேவை, நிதிச்சேவை என்பன தொடர்பாக நுகர்வோர் அதிகளவு தெரிவு செய்யும் வாய்ப்புக்களைப் பெறுவதோடு இத்தகைய பண்டங்களின் விலை வீழ்ச்சியடைவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எவ்வாறாயினும் பேரளவான நிறுவனங்கள் குறைந்த உற்பத்திச் செலவு கொண்டதாக செயற்படுமிடத்து சிற்றறிவு நிறுவனங்கள் தொழிலை மூடவேண்டி ஏற்படலாம். சில வறிய பிரதேச மேம்பாட்டுக்கு ஐரோப்பிய சமூகம், சமூக, விவசாய, வழிகாட்டு நிதியை வழங்கி உதவ வேண்டியிருக்கும்.
ஐரோப்பிய மத்தியவங்கி
(ஐரோப்பிய சமூகத்திற்கான மத்தியவங்கி) முறைமை ஐரோப்பிய சமூகத்துக்கான நாணயக் கொள்கையை உருவாக்கு வதற்கு உதவியாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.1979 மார்ச்மாதத்தில்ஜரோப்பிய நாணய

-33முறைமை உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐரோப்பிய மத்திய வங்கியின் உருவாக்கம் பற்றிய கருத்து 1988இன் பின் வலுவானது.
அங்கத்துவ நாடுகளின் மத்தியவங்கிகளும், ஐரோப்பிய மத்தியவங்கியும் இணைந்ததாக மத்தியவங்கிகளின் ஐரோப்பிய (p60sb60)LD(European System of Central Banks) 960)LD615Tulig).
உருவாக்கப்படும் ஐரோப்பிய மத்திய வங்கி அரசியல் ரீதியில் சுயமானதாக இயங்குவதாகவும், தேசிய அரசாங்கங்களிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெறுவதாகவும்இருக்கும். சுதந்திரமாகத் தொழிற்படுவதாகவும் காணப்படும்.நாணயக் கொள்கையைப் பயனுறுதிமிக்கதாக்கக் கூடிய கருவிகளையும் கொண்டிருத்தல் அவசியம் என்றும் கருதப்பட்டது.
மத்தியவங்கியின் முடிவுகளை மேற்கொள்ளும் அங்கத்தவர்கள் தனிப்பட்ட முறையில் சுதந்திரமானவர்களாக இருக்க வேண்டுமென்றும் இதற்குதவும் வகையில் அங்கத்தவர் நியமனம் நீண்டகாலத்திற்குரியதாக இருத்தல் அவசியம் என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
மத்தியவங்கியின் தொழிற்பாடுகள் தொடர்பான சுதந்திரம் தொடர்பாக உடன்பாடு ஏற்படுவதில் சிரமங்கள் தென்பட்டன. நாணய பரிமாற்று விகிதங்கள் தொடர்பான கொள்கை அங்கத்துவ நாடுகளின் தொழில் வாய்ப்பு, வளர்ச்சி என்பவற்றைப் பாதிக்கக்கூடியதாக இருப்பதால், பரிமாற்று விகிதம் தொடர்பான முடிவுகள் மேற்கொள்ளும் அதிகாரம் அங்கத்துவ அரசாங்கங்களின் கைகளிலேயே இருக்க வேண்டும் மென்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. பரிமாற்று விகிதம் கொள்கை தொடர்பான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளினால் தீர்மானிக்கப்படும்.
ஐரோப்பியசமூகத்துக்கான ஒற்றைச் செலவாணியை நிர்வகிப்பது தொடர்பான நடவடிக்கைகளினால் ஐரோப்பிய மத்திய வங்கியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
ஒற்றைச் செலவாணி
1969 இல் ஐரோப்பிய சமூகத்தின் ஆறு அங்கத்துவ நாடுகள் உச்சி மகாநாட்டை நடாத்தியதைத் தொடர்ந்து வேணர் குழு (Werner Committee) நிறுவப்பட்டமையானது ஐரோப்பிய

Page 25
-34
பொருளாதார நாணயச் சங்கம் உருவாக்கத்துக்கு அடித்தளம் இட்டது. 1973 இல் பிறெற்றன்வூட்ஸ் அமைப்புக் குலைந்துபோக 1973 - 74 இல் எண்ணெய் விலை உயர்ந்தபோது அதனால் ஏற்பட்ட பொருளாதார உறுதியின்மை நிலைமை கூடியளவான நாணய ஒருங்கிணைப்பைத் தடை செய்வதாக அமைந்தபோது "டுயச் வலயம்" (DMZones) உருவானது. பெல்ஜியம், லக்சம்பேக், நெதர்லாந்து, நோர்வே, சுவீடன், அவுஸ்திரியா போன்ற நாடுகள் இவ்வலயத்தைச் சுற்றிக் குழுவாக மாறலாயின. 1979 இல் ஐரோப்பிய நாணயச் சங்கம் பற்றிய புதிய திட்டத்தை வடிவமைப்பது பற்றித் தீர்மானிக்கப்பட்டது. 1989 ஏப்பிரல் மாதத்தில் ஒற்றைச் செலாவணியை உருவாக்குவதற்கான மூன்று கட்டங்கள் பற்றிப் பிரேரிக்கப்பட்டது.
85. LLD 1: எல்லா அங்கத்துவ நாடுகளும் நாணயமாற்றுப் பொறிமுறையில் இணைதல் 1991 - 1993)
கட்டம் 11: ஒடுங்கிய தடைகளுக்குள்ளே உறுதியான நாணய மாற்று விகிதத்தை உருவாக்க முயலுதல் 1994 - 1996)
கட்டம் 111: ஐரோப்பிய சமூகத்துக்கான ஒற்றைச் செலாவணியை உருவாக்குதல் (1997 - 1999).
இவ்வாறான ஒற்றைச் செலாவணி ஐரோப்பிய செலாவணியின்
பெறுமதியை உறுதியாகப் பேணுதற்கு ஐரோப்பிய மத்திய வங்கியின் உருவாக்கம் அவசியம் என்று உணரப்பட்டிருந்தது.
ஒற்றைச் செலாவணியை உருவாக்குவதால் நாணயங்களைப் பரிமாற்றுவதற்காக ஏற்படக்கூடிய செலவுகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என வலுவாக நம்பப்படுகின்றது. 3.7ஐரோப்பிய சமூகமும் மூன்றாம் உலகும்
உலகின் மிகப்பெரிய நாட்டுக் கூட்டிணைப்பு என்ற வகையில் மட்டுமன்றி வலிமை மிக்க கைத்தொழில் நாடுகள் பலவற்றை உறுப்பு நாடுகளாகக் கொண்டது என்ற அடிப்படையிலும் உலகின் முக்கிய பொருளாதார சக்தியாக ஐரோப்பிய சமூகம் விளங்குகின்றது.
1990 களில் சோவியத்யூனியன் குலைவைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட மாறுதல்களினால் புதிய ஜனநாயகப் பிராந்தியங்கள் உருவாகின. ஒன்றிணைந்த ஜேர்மனியின் உருவாக்கமும் ஐரோப்பிய சமூகத்தின் பரப்பையும், பலத்தையும்,

-35பொறுப்புணர்வையும் அதிகரிக்கச் செய்தது. உலக ரீதியில் அரசியல் யுத்தம் வர்த்தக யுத்தம் போன்ற பல நிலைகளிலும் உலகின் சமநிலையைப் பாதுகாப்பதில் வலுவுடையதாக இந்தக் கட்டமைப்பு விளங்குகின்றது.
மூன்றாம் உலகு தனது பொருளாதார அபிவிருத்தி, வளர்ச்சி என்பவற்றுக்கு தனது வர்த்தகம், முதலீடு, உதவி தொடர்பான சாதகமான நகள்வுகளையே பெரிதும் நம்பியுள்ளது. இத்தகைய விடயங்களில் மூன்றாம் உலகு தொடர்பாக குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கக் கூடியதாக ஐரோப்பிய சமூகம் விளங்குகின்றது.
வர்த்தகத் தொடர்புகள்:
உருகுவே சுற்று நடவடிக்கைகள் பலவீனமான வளர்முக நாடுகளை, குறிப்பாக வறிய நாடுகளை - அதிகம் பாதிக்குமென நம்பப்பட்டது. 1990 இன் முடிவில் பனிப்போர் முடிவுற்ற பின் வளர்முக நாடுகளுக்கான செல்வந்த நாடுகளின் அபிவிருத்தி உதவிகளும் வீழ்ச்சியுறலாயின. உதவிவழங்குநர்களிடையே களைப்புணர்வு (Donor Fatigue) தென்பட்டது. ஐரோப்பிய சமூகத்தின் புதிய அங்கத்தவர்களாக இணைந்துகொள்ளும் பேரார்வம் ஐரோப்பிய நாடுகளிடையே அதிகரித்து வரலாயிற்று. இவை ஐரோப்பாவை முழுமைப்படுத்துவனவாகத் தென்படலாயின.
இத்தகைய பின்னணி மாறுதல்களினால் மூன்றாம் உலக நாடுகளின் வர்த்தகம் பாதிக்கப்படும் என இந்நாடுகள் நம்புகின்றன. எனினும் ஐரோப்பிய சமூகம் மூன்றாம் உலக நாடுகளுக்கான வர்த்தக நலன்களை இயன்றளவு பேண முயன்று வருகின்றது.
1990 களில் லத்தீன் அமெரிக்கா, ஆசியான் நாடுகள் என்பவற்றுடன் ஐரோப்பிய சமூகம் தன் வர்த்தகத்தை அதிகரித்தபோது ஆபிரிக்க நாடுகளுடனான வர்த்தகம் குறைவடையலாயிற்று. எனினும் மூன்றாம் உலகுக்கான ஐரோப்பிய ஏற்றுமதியின் வளர்ச்சி 6% மாயும் மூன்றாம் உலகிலிருந்தான இறக்குமதி 45% மாயும் காணப்பட்டது. வளர்முக நாடுகளுக்கான ஐரோப்பிய சமூகத்தின் ஏற்றுமதி 285 பில்லியன் டொச் மார்க் (285 Bion DM) ஆகவும் வளர்முக நாடுகளிலிருந்து சமூகம் இறக்குமதி மொத்தமான 300 பில்லியன் டொச் மார்க் ஆகவும் காணப்பட்டது. இது மூன்றாம் உலகுக்கு வர்த்தக மிகை நிலை ஏற்படுவதைக் காட்டுகிறது. இவற்றுள் ஜேர்மனியே முதன்மையான பங்களிப்பை வழங்கி வருகின்றது.

Page 26
-369|L6)6O)6001: 3.1 ஐரோப்பிய சமூக நாடுகளின் மூன்றாம் உலகுக்கான ஏற்றுமதியும் மூன்றாம் உலகிலிருந்தான இறக்குமதியும் 1991 (பில்லியன் டொச் மார்க்)
நாடுகள் ஏற்றுமதி இறக்குமதி
ஜேர்மனி 71 68 பிரான்ஸ் 62 52 இத்தாலி 39 44
ஐரோப்பிய சமூகத்தின் கைத்தொழிற் பொருட்களின் ஏற்றுமதியில் 82% வளர்முக நாடுகளுக்குச் செல்லுகின்றது. உணவு ஏற்றுமதியில் 7% வளர்முக நாடுகளுக்குச் சென்றது. வளர்முக நாடுகளின் முடிவுப் பொருட்களின் ஐரோப்பிய சமூகத்திற்கான ஏற்றுமதிகள் படிப்படியாக அதிகரித்துள்ளன.
1980 - 22% 1985 - 38% 1991 - 54%
வளர்முக நாடுகள் மூலப் பொருட்களை ஐரோப்பிய சமூகத்துக்கு ஏற்றுமதி செய்யும்போது மூலப்பொருட்களின் விலைகள் தளம்பலடையும்போது ஏற்படும் நட்டங்களை ஈடுசெய்வதற்கென லோம் ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விஷேட நிதி ஏற்பாடே "ஸ்ரபெக்ஸ்" (Stabex) ஆகும். மூலப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடையும்போது அதை ஈடு செய்ய இந்த நிதி உதவும். 45 வகையான தயாரிக்கப்படாத அல்லது ஓரளவு தயாரிக்கப்பட்ட விவசாயப்பண்டங்களுக்குரியதாக இது அமைந்தது. Sîrfä535T, 35fîuu, Lugii îlä5 5T(B+56TIT 60 (ACP Countries) 70 நாடுகள் இதில் சிறப்பான அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ள வசதியளிக்கப்பட்டது.
லோம் ஒப்பந்தம் முதலில் 1975 இல் கைச்சாத்திடப்பட்டது. 1995 இல் 4ஆவது லோம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்கீழ் ஆபிரிக்க, கரீபிய, பசுபிக் நாடுகளுக்கு அதிக சலுகைகளையும் உதவிகளையும் ஐரோப்பிய சமூகம் வழங்கி வருகின்றது. இந்நாடுகளிலிருந்து சமூகம் செய்யும் இறக்குமதி 4.8% தால் அதிகரித்தபோது இந்நாடுகளுக்கான சமூகத்தின் ஏற்றுமதி 4.3% இனால் மாத்திரமே அதிகரித்தது

-37
லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூகத்துக்கான ஏற்றுமதி 16% இனால் அதிகரித்தபோது இறக்குமதி 2.2% இனால் மட்டுமே அதிகரித்தது.
ஒபெக் நாடுகளிலிருந்து சமூகத்தின் இறக்குமதி 4.2% இனால் அதிகரித்தபோது சமூகத்தின் ஏற்றுமதி 11% அதிகரிப்பைக் காட்டியது.
ஆசியான் நாடுகளுக்கான சமூகத்தின் ஏற்றுமதி அதிகரிப்பு 7.5% மாயும் இந்நாடுகளில் இருந்தன. இறக்குமதி அதிகரிப்பு 19% ஆயும் காணப்பட்டது. ஆசியான் நாடுகள் 5.5 பில்லியன் டொச் மார்க் (1991) மிகையைப் பெற்றிருந்தன.
ஆபிரிக்க, கரிபிய, பசுபிக் நாடுகளுக்கு விசேட உதவியை வழங்கி வருவதற்கு புதிய உலக வர்த்தக நிறுவன (WTO) ஏற்பாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன. இத்தகைய 70 நாடுகளுக்கு 1889 பில்லியன் டொலர்களை அடுத்துவரும் 5 வருடங்களுக்கு உதவியாக வழங்குவதற்கு 1996 இல் மொறிசியஸில் கைச்சாத்திட்ட புதிப்பிக்கப்பட்ட லோம் ஒப்பந்தம் வகை செய்கின்றது. எனினும் இந்தச் சலுகைகளைத் தொடர்ந்து வழங்க முடியாதென விளக்கப்பட்டுள்ளது.
உதவித் திட்டங்கள்
ஐரோப்பிய சமூகம் வளர்முக நாடுகளுக்கு உதவி வழங்குதல் தொடர்பாக பின்வரும் நோக்கங்கள் கொண்டுள்ளது.
1.அபிவிருத்தி குன்றிய நாடுகளுக்கும், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கும் நீடித்த பொருளாதார சமூக அபிவிருத்திக்கு உதவுதல்.
2. சர்வதேச பொருளாதாரத்துள் அபிவிருத்தியடைந்த நாடுகள் படிப்படியாக இணக்கம் அடைதற்கு ஏற்ற உதவிகளை வழங்குதல்.
3. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வறுமையைப் போக்குவதற்கு உதவியளித்தல். வறிய நாடுகளான உப சகாரா நாடுகள் சுயமான பிராந்தியப் பரிமாணம் பெறக்கூடியதாகவும், சர்வதேச பொருளாதாரத்துடன் நீண்டகாலத்தில் அப்பிரதேசம் இணையக்கூடிய வகையிலும் உதவிகளை வழங்கி வருகின்றது.

Page 27
سم38سه உணவுப் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, குடித்தொகை, மனிதவள அபிவிருத்தி, பொருளாதார உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்ற விடயங்களில் உதவுகின்றது.
மத்தியதரைப் பிரதேச நாடுகளில் குடும்பக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்கள், தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டங்கள் போன்றவற்றுக்கு உதவி வருகின்றது.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தனியார் துறைக்கான ஊக்குவிப்பு, முதலீட்டு மேம்பாடு, சுற்றுச் சூழல் உதவி போன்ற பல வழிகளில் உதவியளிக்கின்றது.
ஆசிய நாடுகளிலும் வர்த்தக, முதலீட்டு உதவிகளோடு சுற்றுச் சூழல் பேணுதல் தொடர்பான உதவிகளையும் அதிகரித்து வருகின்றது.
இவ்வாறு பல்வேறு வழிகளிலும் வளர்முக நாடுகளுக்கான ஐரோப்பிய சமூகத்தின் உதவிகளும் ஒத்துழைப்புக்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 3.8இலங்கையும் ஐரோப்பிய சமூகமும்:
இலங்கை நீண்டகாலமாக ஐரோப்பிய நாடுகளுடனான அரசியற். பொருளாதாரத் தொடர்புகளை பேணிவருகின்றது. இலங்கையின் நோக்கில் ஐரோப்பிய சமூகம் சர்வதேச வர்த்தகம், முதலீடு, உதவி என்ற பல அடிப்படையிலும் முக்கியத்துவம் உடையது. ஆனால் ஐரோப்பிய சமூகத்தின் பார்வையில் இலங்கை முக்கியமானதாக விளங்கவில்ல்ை. ஐரோப்பிய சமூக்த்தின் இறக்குமதியில் இலங்கையின் பங்கு 1990 இல் 0.4% மாக மாத்திரமே காணப்பட்டது.
இலங்கை - ஐரோப்பிய சமூக வர்த்தக உறவுகளில் அண்மைய ஆண்டுகளில் இலங்கை சாதகமாக நிலையை அனுபவித்து வருகின்றது. இவற்றை அட்டவணை 32 காட்டுகிறது.

-39அட்டவணை3.2 இலங்கை - ஐரோப்பிய சமூக வர்த்தகம் (மில்லியன் ரூபா)
வருடம் இலங்கையின் இலங்கையின் வர்த்தக மீதி
ஏற்றுமதி இறக்குமதி
1985 7,622 6474 -- 1 148
1986 7,673 7623 -- 50
1989 12,553 13,996 - 1463
1990 15,468 19,359 -- 3891
ep6)LD: (Economic Review January 1993 Kelegama s Article)
இலங்கையின் பிரதான ஏற்றுமதியான தயாரிக்கப்பட்ட ஆடை, புடவைகளின் ஏற்றுமதிகளின் அதிகரிப்பு இதற்குப் பெரிதும் உதவிற்று. இலங்கையின் ஆடை, புடவை, தேயிலை, தெங்கு உற்பத்தி, றப்பர் என்பவற்றின் ஏற்றுமதியில் 25% திலும் கூடுதலானவை ஐரோப்பிய சமூகத்துக்கே செல்கின்றன. 1994 இல் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 16.7% மும், இறப்பர் ஏற்றுமதி 33.6% மும் ஐரோப்பிய சமூகத்துக்கு ஏற்றுமதியாயின.
இவற்றில் ஜேர்மனி, பிரித்தானியா என்பன முக்கியமான கொள்வனவாளராகக் காணப்படுகின்றனர்.
இலங்கை ஐரோப்பிய சமூக நாடுகளிலிருந்து மின்சார உபகரணங்கள், இயந்திர உபகரணங்கள் போன்றவற்றைப் பெருமளவில் இறக்குமதி செய்கின்றன. எனினும் இங்கிருந்து இலங்கை இறக்குமதி செய்யும் பங்கு வீழ்ச்சியடைந்தே வருகின்றது. 1987 இல் மொத்த இறக்குமதியில் 17.3% தை ஐரோப்பிய சமூகத்திலிருந்து பெற்ற போதிலும் 1990 இல் இது 14.7% மாக வீழ்ச்சியுற்றிருந்தது.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை இறக்குமதி செய்வதில் இந்நாடுகள் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் உள்ளன. மொத்த ஆடை ஏற்றுமதியில் 25.0% லும் கூடுதலான தொகையை அவை இறக்குமதி செய்கின்றன. பல்நார் ஒப்பந்தத்தின் கீழ் இதற்கான அனுமதிப்பங்கு 33% தினால் அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் உருகுவே ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐரோப்பிய சமூக சந்தையைப் பேணுவதற்காக ஹெங்கொங், தைவான், தென்கொரியா போன்ற கைத் தொழில்மய நாடுகளுடன் போட்டியிடவேண்டியதாகவே இருக்கும் என எதிர் பார்க்க முடியும்.

Page 28
-40அத்தியாயம் 4
ஆசிய நாடுகளிடையிலான பிராந்திய ஒத்துழைப்புக்கள்.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் குறிப்பிடத்தக்களவு
மக்களையும், உற்பத்திசார் வளங்களையும் கொண்டதாக ஆசியப் பிரதேசம் விளங்குகின்றது.
1990 களில் ஏற்பட்ட மாற்றங்கள் கணிசமாக ஆசியப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளன. புதிய கைத்தொழில்மய நாடுகளின் துரித முன்னேற்றம், யப்பான், சீனா என்பவற்றின் துரித வளர்ச்சி. இந்தியாவில் திறந்த பொருளாதாரச் செயலாற்றம் . சோவியத்யூனியனில் சிதைவினால் உருவான புதிய நாடுகளில் செயற்பாடுகள் தொடர்பான பல முன்னேற்றங்கள் உலக பொருளாதாரக் காட்சிகளில் முக்கியமாகத் தென்படலாயின்,
இத்தகைய மாற்றங்களுடன் இணைந்து பல பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புக்களிலும் முன்னேற்றங்கள் தென்பட்டன. அத்தகைய அமைப்புக்களில் பின்வருவன முக்கியமானவை.
4.1 தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்புச் சங்கம் (சார்க்) 4.2 தென்கிழக்காசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்) 4.3 பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம். 4.4 ஆசிய - பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (எபெக்) 4.5 கருங்கடல் பொருளாதாரப் பிராந்தியம். இவைபற்றி விரிவாக நோக்குதல் அவசியமாகின்றது.
4.1 தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்புச் சங்கம்.
SOUTH ASIAN ASSOCIATION FOR REGIONAL CO-OPERATION (SAARC)
1. பின்னணி:
உலக ரீதியில் நாடுகளிடையே பரஸ்பர நல்லுறவுகளின் அடிப்படையில் பல பிராந்திய ஒத்துழைப்பு அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு தென்னாசியாவைச் சேர்ந்த நாடுகள் தமக்கிடையே உருவாக்கிக்கொண்ட அமைப்பே
தென்னாசியப் பிராந்திய ஒத்துழைப்புச் சங்கம் (சார்க்) ஆகும்.
1980 இல் அப்போதைய வங்காள தேச ஜனாதிபதி தெரிவித்த யோசனையின் அடிப்படையில் 1981ல் கொழும்பில் நடந்த வெளிநாட்டுச் செயலாளர்களின் முதலாவது கூட்டத்தைத் தொடர்ந்து பல ஆய்வுக் குழுக்கள் உருவாக்காப்பட்டன. பின்னர்

-41
பல படிமுறை வளர்ச்சிக் கட்டங்களின் மூலமாக 1985 பெப்பிரவரியில் டாக்கா (பங்களாதேஷ்) வில் நடைபெற்ற உச்சி மகாநாட்டுடன் தோற்றம் பெற்றது.
2. அங்கத்துவ நாடுகள்:
வரலாறு, கலாச்சாரம் என்பவற்றால் தொடர்புபட்ட தென்னாசிய நாடுகளான இந்தியா, இலங்கை, மாலைதீவு, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான் என்பனவே இச்சங்கத்தின் அங்கத்தவர்களாவர்.
இந்த நாடுகள் சில பொதுவான பிரச் சனைகளை கொண்டுள்ளனவெனினும் புவியியற் பரப்பு, பொருளாதார வலிமை, அரசியல் முறைமை தொடர்பாக வேறுபாடுகளையும் கொண்டுள்ளன.
இந்தியாவும், பாகிஸ்தானும் ஓரளவு கைத்தொழில்மயமாகிவரும் நாடுகள். இவற்றின் தலா வருமானம் குறைவானதாகத் தென்பட்டாலும் கைத்தொழில் வளர்ச்சியில் குறிப்பிடத் தக்கனவாயுள்ளன.
இலங்கை அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரமாக உள்ளபோதிலும் சமூகரீதியிலான வாழ்க்கைத்தரத்தில் சிறப்பான நிலையிற் காணப்படுகின்றது. ஏனையவை வறுமை நிலையைக் கொண்டுள்ளதோடு, பின் தங்கிய பொருளாதாரமாகவும் காணப்படுகின்றன.
நீண்ட காலத்தில் அங்கத்துவ நாடுகள் தமக்கிடையிலான ஒத்துழைப்பு உதவிகளின் மூலம்தமது வேறுபாடுகளைக் குறைக்க முடியுமென்ற நம்பிக்கையுடன் இணைந்து செயற்படுகின்றன.
3. பொருளாதார நோக்கங்கள்:
தென்னாசிய நாட்டு மக்களின் பொருளாதார, சமூக வாழ்வை மேம்படுத்துவதோடு, கலாச்சார மேம்பாட்டுடன் கூடியவகையில் ஆத்ம விசுவாசத்தைக் கட்டியெழுப்பும் வகையில் பொருளாதார, சமூக, அரசியல் நோக்கங்களுடன் செயற்பட்டு வருகின்றது.
இவற்றுள் பொருளாதார நோக்கங்களே இங்கு முக்கியத்துவம் உடையனவாகக் கொள்ளப்படுகின்றன. அவை,
1. பொருளாதார அபிவிருத்தி:
தென்னாசியா உலகின் மிக வறிய பிராந்தியங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. உலகின் மிக வறிய நாற்பத்திரண்டு நாடுகளின் பட்டியலில் சார்க் நாடுகள் இடம் பெறுகின்றன.

Page 29
-429ILL660)6OT 4.1 சார்க் நாடுகளின் தலா வருமானம்.
நாடுகள் தலாவருமானம் - 1992
அமெரிக்க டொலரில்)
இலங்கை 540 இந்தியா 310 பங்களாதேஷ் 220 பாகிஸ்தான் 420 நேபாளம் 170 பூட்டான் 180 மாலைதீவு 500
Source: World Development Report 1994
சார்க்கின் அங்கத்துவ நாடுகளில் மிக வறிய நாடுகளின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் வகையில் பொருளாதார ஒத்துழைப்புத் தொடர்பால் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளுதல். இயன்றளவு பொருளாதார அபிவிருத்தி தொடர்பான சமமின்மையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் அக்கறை செலுத்துதல்.
2. குடித்தொகை மேம்பாடு
இந்த அங்கத்துவ நாடுகளில்குடித்தொகை வளர்ச்சி, சிசுமரணம், சுகாதாரக் கேடுகள் என்பன போன்ற பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. குடித்தொகை வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதும், சிசு மரணத் தைக் கட்டுப் படுத் துவதும் அவசியமென உணரப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியினால் உருவாகும் தொழில் வாய்ப்புக்களுடன் ஒத்துச் செல்லும் வகையில் குடித்தொகைப் பெருக்கத்தை சீராக்கும் செயற்திட்டங்களிற் கவனம் செலுத்தும்.
3. விவசாய அபிவிருத்தி
இப்பிராந்திய நாடுகளில் விவசாயமே முதன்மையான துறையாகக் காணப்படுகின்றது. உணவு நிரம்பல், கைத்தொழில் உள்ளீடு, தொழில் வாய்ப்பு, நிலவுரிமை, ஏற்றுமதி, விலைமட்ட உறுதி போன்ற பல்வேறு பொருளாதார மாறிகளுடன் விவசாய அபிவிருத்தி மிக நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ளது.

-43இதனால் இப்பிரதேச விவசாய அபிவிருத்திக்கான பிராந்திய ஒத்துழைப்பு முன்னுரிமையுடையதாயுள்ளது. வங்காள தேசத்தில் (டாக்கா நகரில்) விவசாய தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விவசாய விஞ்ஞானிகளை இப்பிராந்திய நாடுகளிடையே பரிமாற்றம் செய்வதன் மூலமாக இப்பிரதேச விவசாய அபிவிருத்தியைத் தூண்டுவதில் கவனம் செலுத்தப்படுகின்றது.
அரிசி, கோதுமை, எண்ணெய்விதை, தோட்டப்பயிர்ச் செய்கை, மீன்பிடித் தொழில், காட்டுச் செய்கை, தொழில் நுட்பப் பரிமாற்றம், விலங்கு வளர்ப்பு, கமப் பொறியியல், அறுவடையின் பின்னான தொழில் நுட்பம் போன்ற பல விடயங்களில் அக்கறை செலுத்துகின்றது.
பின்வருவன தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்களைத் தயாரித்துச் செயற்படுத்துவதில் அக்கறை செலுத்துகின்றது.
1. தாவர நார் வளர்ப்பு. 2. உருமாற்ற தொழில் நுட்பம்.
3. நீடித்த விவசாயம். 4. விவசாயம் சார்ந்த சிறிய நடுத்தரக் கைத்தொழில். 5. விவசாய ஆராய்ச்சி முகாமை 6. கால்நடை வைத்தியமும், பாற்பண்ணைக்கல்வியும்.
இவ்வாறான செயற்பாடுகளினால் இப்பிராந்தியம் முழுவதும் விவசாய அபிவிருத்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்
4. முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு. (Preference Trading Arrangement-PTA)
சார்க் அமைப்பில் ஒன்பது வருட முன்னேற்றங்களின் பிரதான கட்டமாக அமைவது முன்னுரிமை வர்த்தக ஏற்பாடாகும். 1994இல் ஏற்பாடுபற்றி ஒப்பந்தத்திற் கைச்சாத்திடப்பட்டது.
பரஸ்பர வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு இத்தகைய பிராந்திய ஒத்துழைப்பு அவசியமென நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்தது. இத்தகைய ஏற்பாட்டின் பிரதான நோக்கம், அங்கத்துவ நாடுகளிலிருந்து பெறப்படும் இறக்குமதி தொடர்பான தீர்வைகளையும், ஏனைய தீர்வையற்ற கட்டுப்பாடுகளையும் அகற்றுவதாகும். இதன்மூலம் இறக்குமதிகள் அதிகரிக்கும். பரஸ்பர

Page 30
-44வர்த்தகம் விரிவடையும். இதனால் வர்த்தகமும், அபிவிருத்தியும் இந்த நாடுகளில் அதிகரிக்கும்.
இந்த அங்கத்துவ நாடுகளில் இவர்களுக்குத் தேவையான அனைத்தும் உற்பத்தி செய்யப்படுகின்றனவா? அல்லது இவற்றின் உற்பத்தியைக் கொள்வனவு செய்வதற்குரிய தகைமையுடையதாக தென்னாசிய சந்தை காணப்படுகின்றதா? இந்த நாடுகளின் வர்த்தக அபிவிருத்திக்கு தீர்வைகளும், தீர்வையற்ற கட்டுப்பாடுகளும் மாத்திரமே தடையாக உள்ளனவா? இத்தடைகளை அகற்றுதல் மாத்திரம் இவற்றின் வர்த்தக அபிவிருத்தியை மேம்படுத்தப் போதுமானதா? என்பன போன்ற பல கேள்விகளைப் பல ஆய்வாளர்கள் எழுப்பியுள்ளனர்.
தென்னாசியச் சந்தை அளவிற் சிறிதாக இருப்பதுவே முக்கியமான பிரச்சனையாகும். உலக வர்த்தகத்தில் 3.0%தும் குறைவானதாகவே இவை காணப்படுகின்றன. இந்த நாடுகளின் பண்ட இணைவுத் தன்மை மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதால் இவற்றுக்குரிய சந்தை போதுமானதாக இல்லை. ஆசியான் அமைப்பு இந்த வகையிற் சிறப்பானது. இங்கு அங்கத் துவ நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 16.0% வரையிற் காணப்பட்டது. இத்துடன் சார்க்கின் அங்கத்துவ நாடுகளிடையிலான வர்த்தகத்தின் பங்கு 1980 இல் 3.2% மாகவிருந்து 1990 இல் 2.7% மாக வீழ்ச்சியுற்றது.
இந்த நாடுகள் பெரிதும் அடிப்படையில் விவசாய நாடுகளே. இவற்றின் தயாரிப்புத் துறையில் வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டது. அத்துடன் இவை ஏறக்குறைய ஒரே மாதிரியான பண்டங்களையே உற்பத்தி செய்து வருகின்றன. இத்தன்மை இப்பிராந்திய வளர்ச்சியை வர்த்தகம் தொடர்பாக மட்டுப்படுத்தியுள்ளது.

-45அட்டவணை 4.2 சார்க் நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தின் பிரதான பண்டங்கள்
பெறுமதி
Lj60öTLtd (மில்லியன்
டொலர்)
1. பருத்தி 66.4 2 அரிசி 62.6 3. வெண்மையாக்கப்பட்ட பருத்தித் துணி 41.1 4. தேயிலை 29.8 5. சணலும் சணல் உற்பத்தியும் 28.3 6. மண்ணிற் நெய்யப்பட்ட பருத்தி 23.7 7. கருவாடு 13.5 8. காய்கறி வகை 12.2 9. இயந்திர உதிரிப்பாகம் 10.6 10 பேரீச்சம் பழம் 8.9
ep6)LD: Table 2. Economic Review. (Dr.J.B. Kelegamas Article)
இப்பிராந்தியத்திடையிலான வர்த்தகத்தில் இயந்திரப் பொருட்களின் பங்கு மிகவும் குறைவாக இருப்பதை அட்டவணை 4.2 காட்டுகின்றது.
இப்பிராந்திய நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தில் இந்தியாவங்காள தேசவர்த்தகம் முதன்மையானது. இந்தியா-நேபாள வர்த்தகத் தொடர்பு இரண்டாவது முக்கியத்துவமுடையது. நேபாளமும் அதற்கடுத்த மாலை தீவும் தென்னாசிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு கொள்கின்றன. இந்தியாவின் பங்கு குறைவானதாகும்.
அதன் மொத்த ஏற்றுமதியில் 3.0% குறைவான பங்கு இறக்குமதியில் 10% இலும் குறைவான பங்குமே தென்னாசிய நாடுகளுடன் காணப்படுகின்றது.
சார்க் நாடுகள் அண்மைக் காலத்தில் புதிய ஏற்றுமதிக் கைத்தொழில்களை ஆரம்பித்துள்ளன. இதனால் ஏற்றுமதிப் பன்முகப்படுத்தல் முயற்சிகளில் அதிக கவனம் செலுத்துகின்றன. தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதியில் பெரும்பாலான சார்க் நாடுகள்

Page 31
-46ஈடுபட்டு வருகின்றன. உலக சந்தையில் அவை தமக்கிடையே போட்டியிடுகின்றன.
இத்தகைய நிலைமைகள் தென்னாசியப் பிராந்திய நாடுகளிடையே கட்டற்ற வர்த்தகப் பிராந்திய அபிவிருத்திக்கு உதவிடுமா என்ற கேள்வி எழுகின்றது. உலகின் ஏனைய பகுதிகளில் வளர்ச்சி அடைந்துள்ள பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஏற்பாடுகளின்படி உருவான, கட்டற்ற வர்த்தகத் தொகுதி அமைப்புகளுடன் எந்தளவு தொடர்புபட்டு உதவிகளைப் பெற முடிகின்றதோ, அந்தளவுக்கே சார்க்கின் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடும் வெற்றியளிக்கும் என நம்ப முடியும்.
5. சார்க்கும் இலங்கையும்.
சார்க் அமைப்பில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி நிலைமைகள் மேம்பட்டனவாகவே காணப்படுகின்றன. சார்க் நாடுகளின் தலா வருமானத்தில் இலங்கையின் தலா வருமானம் உயர்வானது. (அட்டவணை 4.1) பொருளாதார வளர்ச்சியின் சராசரியும் மிகவும் குறைவானதாக இல்லை. இனக் கலவரம் தொடர்பாகப் பாதிப்புக்களில்லாதிருப்பின் பொருளாதார வளர்ச்சி வீதம் இதனிலும் கூடுதலாகவே காணப்படும்.
gel L6160)600T 4.3 பொருளாதார வளர்ச்சி வீதம் வருடாந்த சராசரி
(1980-1992)
நாடுகள் வளர்ச்சி வீதம்
இந்தியா 3.1 இலங்கை 2.6 பாகிஸ்தான் 3.1 வங்காளதேசம் 1.8 ԱւԼT6ն 6.3 நேபாளம் 2.0 மாலைதீவு 6.8
மூலம்: உலக அபிவிருத்தி அறிக்கை 1994 அட்டவணை 4.3 ஒப்பிட்டு ரீதியிலான இலங்கையின் பொருளாதார வளர்ச் சி வீத சராசரி நிலையைத் தெளிவுபடுத்துகின்றது.

-47சார்க் நாடுகளின் உற்பத்திக் கட்டமைப்பு நிலையும் ஒப்பிடத்தக்கதாயுள்ளது. அட்டவணை44 இதனைக் காட்டுகின்றது. விவசாயத்துறையின் பங்களிப்பு இலங்கையில் 30% லும் குறைவாகவே காணப்படுகின்றது. அவ்வாறே கைத்தொழிற் துறையின் பங்களிப்பும் 25% மாகக் காணப்படுகின்றது.
அட்டவணை 4.4 சார்க் நாடுகளின் உற்பத்திக் கட்டமைப்பு (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக) 1992
மொத்த உள்நாட்டு மொத்த உள்நாட்டு நாடுகள் உற்பத்தி உற்பத்தியின் வீதம்
(மில்லியன் டொலரில்)
விவசா கைத் சேவை
uJLib தொழில்
இந்தியா 214,598 32 27 40 இலங்கை 8,769 26 25 49 UTé6rog5TGir 41,904 27 27 46 வங்காள தேசம் 23,783 34 17 49 ԱւL-T6ծ 238 42 27 31 நேபாளம் 2,763 52 18 30
மாலைதீவு MAMMMM Av000 --- anaus
மூலம்: உலக அபிவிருத்தி அறிக்கை 1994
சேவைகள் துறையின் பங்களிப்பு 49%மாக காணப்படுகின்றது. இந்தியாவுடன் ஒப்பிடும்போது பேரளவுக் கைத்தொழில், பாரக் கைத்தொழில்கள் என்பன வளர்ச்சி அடையாத நிலையிலும் கைத்தொழில் மயமாக்கம் நோக்கி நகள்வதைக் காணமுடிகின்றது.
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் சார்க் நாடுகள் பலவற்றுடன் ஒப்பிடும்போது மகிழ்ச்சி தருவனவாகவே அமைந்திருந்தன. சுதந்திரத்துக்கு முன்பிருந்த சமூக நலனோம்பு செயற்திட்டங்களில் அரசாங்க நிதியில் கணிசமான பங்கு திருப்பப்பட்டுள்ளது. சுதந்திரத்தைத் தொடர்ந்து 1980 கள் வரை கணிசமான கவனம் செலுத்தப்பட்டு வந்தது. யுத்த நிலைமையின் நிதிச்சுமையுடனும் கூட வறுமை தணிப்பு முயற்சி தொடர்ந்தன. இவற்றால் சார்க் நாடுகள் பலவற்றிலும் பார்க்க இலங்கையின்

Page 32
-48
அபிவிருத்தி நிலைமை மேம்பட்டதாகவே தென்படுகின்றது.
அட்டவணை 4.5 இதனைத் தெளிவாகக் காட்டுகின்றது.
9|LL6),60)600T 4.5 சார்க் நாடுகளின் அடிப்படைக் குறிகாட்டிகள்
வருடாந்த ஆயுள் வளர்ந் பெண்கள் | வருடா பணவீக்க எதிர்பார் I தோர் எழுத்தறி ந்த
நாடுகள் வீதம் க்கை எழுத்தறி வின்மை (கடன்)
(1980- 1992) வின்மை (1990) வட்டி%
1992) (1990) (1992)
இந்தியா 8.5 61 52 66 18.9 இலங்கை 11.0 72 12 17 13.0 பாகிஸ்தான் 7.1 59 65 79 ------ வங்காளகேசம் | 9.1 55 65 78 15.0 ԱԼԼT6մ 8.7 48 62 75 17.0 நேபாளம் 9.2 54 74 87 14.4
மாலைதீவு -- a--- 62 W WM س---- ـــــــــــــــــــــ ---
மூலம்: உலக அபிவிருத்தி
அறிக்கை 1994.
இலங்கையின் வருடாந்த பண வீக்க வீதம் தவிர ஏனைய குறிகாட்டிகள் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி நிலைமை மேம்பட்டதாக இருப்பதைக் காட்டுகின்றன. சமூகத் துறைகளிலும் சிறப்பான முன்னேற்றத்தை இலங்கை கொண்டுள்ளது.

-499IL6)6O)600T 4.6.
சார்க் நாடுகளின் சமூக அபிவிருத்திக் குறிகாட்டிகள்
சிசுமரண மருத்துவர் ஆசிரியர் மின்சார நாடுகள் விகிதம் ஒருவருக்கான ஒருவருக்கான வசதிபெறும்
(1992) ஆட்கள் மானவர். ஆர (56tbu
(1990) ம்பக் கல்வி சதவீதம்
(1991) (1984)
இந்தியா 79 2460 60 54 இலங்கை 18 5516 12 15 பாகிஸ்தான் 95 2940 41 31 வங்காளதேசம் | 91 ·· 63
பூட்டான் 129 13,110 s « «» som ------ நேபாளம் 99 16,830 39 30
மூலம்: உலக அபிவிருத்தி அறிக்கை 1994 கல்வி வசதி, நலத்துறை வசதிஎன்பவற்றைப் பொறுத்தவரை இலங்கை சிறப்பான வளர்ச்சி நிலையைக் கொண்டுள்ளது. இலங்கை அரசின் அதிகரித்த செலவினங்களினால் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்த முடிந்தது. இதனடிப்படையில் நோக்கும்போது தலா வருமானக் குறைநிலையுடன் தொடர்பின்றி உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை இலங்கையர் பெற்றுள்ளனர்.
சார்க் அமைப்பில் அங்கத்துவம் பெறுவதால் கிடைக்கும் உதவி, ஒத்துழைப்புக்களினால் இலங்கை வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான அனுகூலங்களை அதிகம் பெற்றுக்கொள்ளும்.
6. இலங்கை-சார்க் வர்த்தக நிலைமை. சார்க் நாடுகளுக்குரிய பொதுவான வர்த்தகப் பண்பான விவசாய ஏற்றுமதியில் மிகுதியாகத் தங்கியிருக்கும் பண்புடையதாகவே இலங்கையும் காணப்படுகின்றது.
சார்க் நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையின் வணிகப்பொருள் வர்த்தகம் அமைந்திருக்கும் முறையை அட்டவணை 4.7 காட்டுகின்றது.

Page 33
-50அட்டவணை 4.7. சார்க் நாடுகளின் வர்த்தகப் பாங்கம்-1992
வருடாந்த வளர்ச்சி வர்த்தக மாற்று
நாடுகள் வீதம் 1980-1992 விகிதம் (1987=100)
ஏற்றுமதி இறக்குமதி
இந்தியா 5.9 1.9 92 இலங்கை 6.5 2.5 90 பாகிஸ்தான் 11.1 3.6 77 வங்காளதேசம் 7.6 1.4 O2 LT66 - ----- ----- நேபாளம் 9.7 4.5 97
மூலம்: உலக அபிவிருத்தி அறிக்கை 1994.
1980-92 வருடகால சராசரி ஏற்றுமதி, இறக்குமதிகளின் வளர்ச்சிவீதம் தொடர்பாக இலங்கையின் நிலைமை மனநிறைவு தரத்தக்கவகையில் அமையவில்லை. ஏற்றுமதியின் வளர்ச்சி வீதம் (இந்தியா தவிர) ஒப்பீட்டு ரீதியில் குறைவாகவே காணப்படுகின்றது. வர்த்தக மாற்று விகித நிலைமையையும் ஒப்பிடும்போதும் (பாகிஸ்தான் தவிர) திருப்தியானதில்லை.
சார்க் நாடுகளுக்கான இலங்கையின் பிரதான ஏற்றுமதி தேயிலையாகும். இதிற் பெரும் பகுதி பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியாகின்றது. இரண்டாவது பிரதான ஏற்றுமதி தேங்காய் எண்ணெய். இதிற் பெரும்பகுதி வங்காள தேசத்திற்கு ஏற்றுமதியாகின்றது. எள்ளு விதை (பாகிஸ்தானுக்கு), மிளகு (இந்தியாவுக்கு) என்பன ஏனைய ஏற்றுமதிகளாகும்.
சார்க் நாடுகளிலிருந்தான இலங்கையின் இறக்குமதிகளும், இறக்குமதியை அனுப்பும் நாடுகளும் பின்வருவன.
கருவாடு, அரிசி பாகிஸ்தான் பருத்தித்துணி, பருத்தி இந்தியா, பாகிஸ்தான் மரக்கறிவகைகள் இந்தியா, பாகிஸ்தான் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் இந்தியா மருந்துவகை இந்தியா
சீனி, இயந்திர உதிரிப்பாகங்கள் இந்தியா யுத்தக்கருவிகள் பாகிஸ்தான்

-51இலங்கையின் ஏற்றுமதிச் சந்தைகளில் சார்க் நாடுகளில் முதன்மையானதாக இந்தியாவும் அதற்கடுத்துப் பாகிஸ்தானும் காணப்படுகின்றன. இலங்கையின் இறக்குமதியை அனுப்பும் மிகப்பெரிய சந்தையாக இந்தியாவும் அடுத்துப் பாகிஸ்தானும் காணப்படுகின்றன.
அட்டவணை 4.8 சார்க் நாடுகளுடனான இலங்கை வர்த்தகம் -1990
நாடுகள் இருபக்க வர்த்தகப் பெறுமதி
(மில்லியன் டொலர்)
இலங்கை-இந்தியா 48 பாகிஸ்தான்-இலங்கை 102 வங்காளதேசம்-இலங்கை 18
Table 3. Economic Review, June 1994 (Dr. J. B. Galagamas Article) அட்டவணை 4.8 சார்க் நாடுகளுடன் இலங்கை மேற்கொள்ளும் வர்த்தகப் பெறுமானங்களைக் காட்டுகின்றன. இலங்கை-இந்தியா இருபக்க வர்த்தகம் முதன் மையானதாக இருப்பது வெளிப்படையாகின்றது.
SL6)63)600T 4.9
சார்க் நாடுகளுடனான இலங்கையின் வர்த்தகம்-1990 (மில்லியன் டொலரில்)
நாடுகள் இலங்கையின் இலங்கையின்
ஏற்றுமதி இறக்குமதி
இந்தியா 20 118 பாகிஸ்தான் 33 51 வங்காளதேசம் 10 9 மாலைதீவு 7 6
மொத்தம் 70 184
சார்க் நாடுகளுடனான வர்த்தகம் இலங்கையின் தேவைகளை நிறைவேற்றுவதாக உள்ள போதிலும் இலங்கைக்குச் சாதகமாக

Page 34
-52இல்லை என்பதை அட்டவணை 4.9 தெளிவாகக் காட்டுகின்றது. இலங்கையின் உலக வர்த்தகத்தில்தென்னாசியாவுடனான வர்த்தகத்தின் பங்கு 5.6% மாக இருந்தது. சார்க் நாடுகளுக்கான இலங்கையின் ஏற்றுமதிப் பங்கு வீழ்ச்சியடைந்து வருகின்றது. 1980இல் இலங்கையின் ஏற்றுமதி 74 மில்லியன் டொலரிலிருந்து 1990 இல் 70 மில்லியன் டொலராக வீழ்ச்சியுற்றது.
இலங்கையின் மரபுவழி ஏற்றுமதியான தேயிலையைப் பொறுத்தவரை இந்தியா, வங்காளதேசம் போன்ற நாடுகளுடன் போட்டியிடவேண்டியிருந்தது. பாகிஸ் தானே பிரதான கொள்வனவாளராக இப்பிராந்தியத்தில் விளங்கியது. 1980 களிலிருந்து இலங்கையின் முதன்மையான செலாவணி உழைக்கும் துறையாக இருக்கும். தயாரிக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதியைப் பொறுத்தவரையிலும், வெட்டு வைரங்களைப் பொறுத்தவரையிலும் இந்தியாவுடன் போட்டியிட வேண்டிய நிலையிலேயே காணப்படுகின்றது. சுற்றுலாத்துறையைப் பொறுத்தும் கடந்த ஒரு தசாப்தமாக இடம் பெற்றுவரும் யுத்த நிலைமைகளினாலும் இந்தியாவுடன் போட்டியிட முடியாத நிலையிலேயே இலங்கை விளங்குகின்றது. எனினும் சார்க் அமைப்பில் இருப்பதன் மூலம் இத்தகைய நெருக்கடிகளின் பாதக விளைவுகளை இயன்றளவு தவிர்த்துக் கொள்ளுவதற்கு இலங்கை முயற்சிக்க முடியும்.
கல்வி அபிவிருத்தி, சுகாதார மேம்பாடு, கிராமிய அபிவிருத்தி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பெண்கள், சிறுவர்களின் முன்னேற்றம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு வானியல் முன்னேற்றம் போன்ற பல துறைகளிலும் இலங்கை அதிக நன்மைகளைப் பெற்று, முன்னேறுவதற்கு நீண்டகாலத்தில் சார்க்கமைப்பு உதவும் என எதிர்பார்க்க முடியும்.
7. எதிர்காலம்
உலக குடித்தொகையின் 1/5 பங்கு சார்க் நாடுகளிடையே காணப்படுகின்றது. 1980 களில் இப்பிராந்திய நாடுகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 1980-90 காலப்பகுதியில் இப்பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டுற்பத்தி வருடாந்தம் 4.8% (சராசரி) த்தினால் வளர்ச்சியடைந்துள்ளது. தாழ்ந்த வருமானமுள்ள நாடுகளில் இது 4.3% மாகக் காணப்பட்டது.
இப்பிராந்தியத்தில் வருமானக் குறைநிலை, வறுமை, சமூக நலத் துறைவிருத்தியடையாமை, தொழிலின் மை போன்ற பிரச்சனைகள் இன்னமும் குறைந்து விடவில்லை. இவற்றுடன்

-53
பின்வரும் பிரச்சனைகளையும் எதிர்கொண்டுள்ளன.
1. இயற்கைவள தேய்மானம் 2. இனத்துவ முரண்பாடுகள் 3. அதிகரிக்கும் பாதுகாப்புச் செலவு 4. குடித்தொகை அழுத்தம்
மரபுவழியான உதவி நிறுவனங்கள் பொருளாதாரங்களில் தடையற்ற சந்தைப் பொறிமுறையை செயற்பட அனுமதிக்க வேண்டுமென்றும், உலக ரீதியில் காணப்படும் சமமின்மையை அகற்ற சீராக்கல் தந்திரோபாயங்களைப் பின்பற்ற வேண்டுமென்றும் விதந்துரைத்துள்ளன.
இத்தகைய பின்னணியில் சார்க் நாடுகள் எதிர் காலத்தில் பின்வருவனவற்றில் அதிக கவனம் செலுத்தி செயற்பட வேண்டும். 1. உலக நிலமைக்கேற்ப தென்னாசிய கட்டமைப்பை
செயற்படுத்தல். 2. வளங்களின் பயன்பாட்டில் (மனிதவளம், பெளதிகவளம்
இரண்டிலும்) புத்தி சாதுர்யமாக செயற்படுதல். 3. கைத்தொழில்மயமாக்கத்துடன் நவீன மயமாக்கத்தை
பொருத்தமாக ஒன்றிணைத்தல். 4. வறியோரின் உற்பத்தித்திறனை உயர்த்திக் கொள்ளவும், சேமிப்புத்திறனை மேம்படுத்தவும் கூடியவகையில் வறுமை தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல். 5. ஏனைய பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புக்களுடன்
சீரான உறவுகளைப் பேணுதல்.
42தென்கிழக்காசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்)
(Association of South East Asian Nations (ASEAN)
1.தோற்றம்:
தென்கிழக்காசியப் பிரதேசத்தில் கம்யூனிச பரவலுக்கெதிராக உருவாக்கப்பட்ட பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு ஆசியான் ஆகும். கம்யூனிஸ்ட் அல்லாத இப்பிராந்திய நாடுகளிடையே பொருளாதார, சமூக, கலாச் சார ஒத்துழைப்புக்களுக்கும், அபிவிருத்திக்கும் என இவ்வமைப்பு 1967ல் உருவாக்கப்பட்டது. 1984இல் புரூனேயும் இதில் இணைந்தது.
இதன் மத்திய தலைமைச் செயலகம் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் உள்ளது.
இந்த அமைப்பில் மியான்மார், கம்போடியா, லாவோஸ்,

Page 35
-54
வியட்நாம் போன்ற நாடுகளும் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தியாவைச் சேர்த்துக்கொள்ளும் முடிவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தென்கிழக்காசிய நாடுகள் முழுவதையும் இதில் சேர்ப்பதற்கு
மணிலா மகாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
2. நோக்கங்கள் இந்த அமைப்பு பல்வேறு நோக்கங்களுடன் செயற்பட்டு
வருகின்றது. இதன் பொருளாதார நோக்கங்கள் வருமாறு.
1.
3.
தென் கிழக் காசிய நாடுகளிடையே பொருளாதார முன்னேற்றத்தைத் தூண்டுதலும் பொருளாதார உறுதித் தன்மையைப் பேணுதலும். வர்த்தகம், போக்குவரத்து, தொடர்பாடல், விவசாயம், விஞ்ஞானம், நிதி, கலாச்சாரம் போன்ற விடயங்களில் இந்த நாடுகளிடையே கூட்டு வேலைத் திட்டங்களை நிறைவேற்றுதல். பிராந்திய அங்கத்துவ நாடுகளிடையே முன்னுரிமை வர்த்தக ஏற்பாடுகள் மூலம் நாடுகளிடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துதல்.
பொருளாதார வர்த்தக நிலையம். ஆசியான் நாடுகளில் பொருளாதார நிலைமை ஒப்பீட்டு ரீதியில்
சிறப்பானதாகவே காணப்படுகின்றது. அட்டவணை 4.10 இதனைத் தெளிவாகக் காட்டுகிறது.
♔'_Lഖങ്ങിങ്ങ് 4.10 ஆசியாவின் அங்கத்துவ நாடுகளின் குடிததொகையும் தலாவருமானமும்-1994
நாடுகள் குடித்தொகை தலாவருமானம்
(மில்லியன்) (அமெரிக்க டொலர்)
தாய்லாந்து 58 1,840 மலேஷியா 19 2,790 சிங்கப்பூர் 2.8 15,750 பிலிப்பைன்ஸ் 64 770 புரூனே 0.3 16,000 இந்தோனேஷியா 184 670
மூலம்: உலக அபிவிருத்தி அறிக்கை - 1994 ஆசியான் நாடுகளின் வர்த்தகப் பண்டங்கள் ஒன்றுடன் ஒன்று

-55இணைந்து காணப்படுவதால் அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தில் முன்னேற்றம் காணப்படுகின்றது. இந்த அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் இவற்றின் உலக வர்த்தகத்தில் 16% மாகக் காணப்படுகின்றது.
gdu JT6 Ellists 6irg535i Sy(355td (Asean FreeTrade Area -AFTA) ஒன்றை 2006ஆம் ஆண்டில் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை 1992 ஜனவரி 28இல் இந்நாடுகள் கையெழுத்திட்டன. ஆசியான் அங்கத்துவ நாடுகளிடையே தீர்வை முன்னுரிமை கொடுக்கப்படும் பண்டங்களின் எண்ணிக்கை 1976இல் 71ஆக இருந்தது. 1990இல் இது 20,000ஆக அதிகரித்தது.
அங்கத்துவ நாடுகளிடையே வர்த்தக முன்னுரிமை வழங்குவதன் மூலம் வர்த்தக வளர்ச்சியை ஏற்படுத்த இவை விரும்புகின்றன. பொதுவாக வர்த்தக முன்னுரிமை என்பது தீர்வை முன்னுரிமைகள், தீர்வையல்லாத முன்னுரிமைகள் என்ற இரண்டையும் உள்ளடக்குகின்றன. இறக்குமதித்தீர்வை என்பவற்றில் காணப்படும் தடைகளைத் தவிர்த்தலே இதில் முக்கியமானதாகும்.
ஆசியான் பெரிதும் தீர்வைச் சலுகைகளையே வழங்குகிறது. தீர்வையல்லா சலுகைகள்ை பற்றி பாங்கொக் ஒப்பந்தத்தின்போது பேசப்பட்ட போதும் அது மறுக்கப்பட்டது.
ஆசியானில் 400 மில்லியன் மக்கள் உள்ளனர். இந்த நாடுகளின் பொருளாதாரம் இதுவரையில் 7% வளர்ச்சியைப் பெற்றுள்ளது எனினும் ஆசியாவின் வர்த்தகப்பெறுமதியில் அதன் அங்கத்துவ நாடுகளின் பங்கு 19.4% வே அண்மைக் காலத்திலும் காணப்படுகின்றது.
கட்டற்ற வர்த்தகப் பிரதேசத்தை ஆசியான் உருவாக்கி நலன்பெற வேண்டுமாயின் கம்யூனிச எதிர்ப்புணர்வை விட்டு சீனாவையும் இணைத்துக்கொள்ள வேண்டும். உலகின் மிகப்பெரிய வர்த்தக சந்தையை அப்போது உருவாக்கிக்கொள்ள முடியும். 1980இல் மேற்கொண்ட சீர்திருத்தங்களின் அடிப்படையில் சீனா உலகின் வெளிநாட்டு முதலீடுகளுக்கான முதலாவது சேர்விடமாகவும் மாறியுள்ளது. இது ஆசியான் நாடுகளுக்கான வெளிநாட்டு முதலீடுகளைக் குறைக்கச் செய்யும். சீனாவின் தலா வருமானம் 327 டொலராகவுள்ளபோதிலும் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% தைக் கொண்டுள்ளது. இதன் குடித்தொகை 1162.2 (1992இல்) மில்லியனாக இருப்பதன்

Page 36
56அடிப்படையில் உருவாகும் சந்தையின் பரிமாணத்தைப் புரிந்துகொண்டு ஆசியான் செயற்படவேண்டும் என்ற கருத்து வலுப்பட்டு வருகின்றது. ஐரோப்பிய யூனியன், நஃப்றா போன்றவற்றுடன் போட்டியிட ஆசியான்-சீனா இணைப்பு அவசியமாகும்.
ஆசியான் யப்பானின் நல்லாசியுடன் வளர்ந்துவருவதும் குறிப்பிடத்தக்கது. அத்தகைய உதவிகளில் பின்வரும் பொருளாதார உதவிகள் முக்கியமானவை.
1) ஆசியானின் கைத்தொழிற் செயற்திட்டத்துக்கென ஒரு மில்லியன்
டொலரை ஃபுகுடா நிதியிலிருந்து வழங்கியுள்ளது. 2) ஆசியான் மனிதவள அபிவிருத்திச் செயற்திட்டத்துக்கென 100
மில்லியன் டொலரை வழங்கச் சம்மதித்துள்ளது. 3) ஆசியான்-ஜப்பான் ஒத்துழைப்புக்கென 38 மில்லியன் யென்
வழங்கியுள்ளது. 4) ஜப்பானின் நேரடி முதலீடு ஆசியான் நாடுகளுக்குள் அதிகரித்து
வருகின்றது. (4) எதிர்காலம் கிழக்காசிய நாடுகள் ஜப்பான் என்பன தாராள வர்த்தகத்தினால் வளர்ச்சி அடைந்தவை.
ஆசியான் எதிர்காலத்தின் புதிய கைத்தொழில்மய நாடுகளுடன் மட்டுமன்றி சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளையும் இணைத்துப் பலமான-விரிவான பொருளாதார ஒத்துழைப்பு பிராந்தியமாக வளர்ச்சியடைவது பற்றிச் சிந்திப்பது அவசியமாகின்றது.
ஏனைய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புக்களுடனான வர்த்தக-முதலீட்டுத் தொடர்புகளையும் பலமானதாக்குவதைப் பொறுத்தே ஆசியாவின் எதிர்கால முன்னேற்றம் அமையுமென |5ւDLI(լքlգամ),
43. பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம்.
Economic Co-operation organisation (Eco) 1. தோற்றம் 1965 ஆம் ஆண்டில் பாகிஸ்தான், ஈரான், துருக்கி போன்ற நாடுகளினால் உருவாக்கப்பட்ட அபிவிருத்திக்கான பிராந்திய ஒத்துழைப்பின் வழி வந்ததாகவே இந்த நிறுவனம் அமைகின்றது.

-57
1990 களில் பனிப்போர் முடிவுற்று சோவியத் யூனியன் சிதைவுற்று பல முஸ்லீம் தனிநாடுகள் உருவானபோது மத்திய ஆசிய இஸ்லாமிய நாடுகளிடையே உருவான புதிய முனைப்பாகவே பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம் அமைகின்றது.
36t)6OTLfuji i GuTg5& Fib605 (Islamic common market) 6T6 g|LD இஸ்லாமியத் தொகுதி என்றும் அழைக்கப்படுகின்ற இந்த அமைப்பு மத விடயங்களுடன் எவ்வித தொடர்பும் அற்றதாகும். பொருளாதார ஒத்துழைப்பை மாத்திரமே இது வலியுறுத்துகின்றது. இஸ்லாமிய மாதிரியிலான பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனமாக்க வேண்டுமென்ற ஈரானின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. துருக்கியே இதில் பிரதான பங்கேற்கின்றது.
1985 இல் இப் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனத்தைத் துருக்கி, பாகிஸ்தான், ஈரான் என்பன இணைந்து உருவாக்கின. 1990 இல் கைத் தொழிலுக்கான கூட்டுச் சம்மேளனம் உருவாக்கப்பட்டது.
1993 பெப்ரவரியில் பாகிஸ்தான நகரான கியூட்டாவில் அங்கத்துவ நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களின் முதலாவது மகாநாடு கூட்டப்பட்டபோது பலவேறு துறையிலான ஒத்துழைப்புக்குரிய வழிகாட்டும் விடயங்களில் முடிவுகள் ஏற்பட்டன. இந்த மகாநாடே இந்த அமைப்பின் செயற்பாடுகளுக்குரிய அடிப்படையை வழங்கியது.
2. அங்கத்துவ நாடுகள்.
ஆரம்பத்திலிருந்த இஸ்லாமிய நாடுகளுடன் சோவியத் யூனியனின் சிதைவுக்குப் பின் மத்திய ஆசியாவைச் சேர்ந்த துருக்கி மொழிபேசும் நாடுகளும் இணைந்தன. தற்போது பின்வரும் பத்து நாடுகளும் இதில் அங்கத்துவம் பெற்று செயற்பட்டு வருகின்றன. துருக்கி, பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான், அஸர்பஜான், டேக்மெனிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், கஸகஸ்தான், கேள்ஜிசியா, ரஜிசிஸ்தான்.
3. பொருளாதார நிலைமை:
ஏழு மில்லியன் சதுர கிலோ மீற்றர் பரப்பளவையும், 300 மில்லியன் குடித்தொகையையும் கொண்டுள்ள இந்த வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பு தொகுதி ஐரோப்பிய சமூகத்துக்கு அடுத்த இரண்டாவது பெரிய தொகுதியாக அமையுமென நம்பப்படுகின்றது. எனினும் வளங்கள், பொருளாதார வலிமை என்பவற்றில் ஐரோப்பிய சமூகத்தைவிடப் பின்தங்கியதாகவே

Page 37
-58
காணப்படுகின்றது. அட்டவணை 4.11 இவற்றின் தலா வருமான, குடித்தொகை நிலைமையைக் காட்டுகின்றது.
9|LL6)60)603T 4.11 அங்கத்துவ நாடுகளின் தலா வருமானம், குடித்தொகை
1992
நாடுகள் தலாவருமானம் குடித்தொகை
அமெரிக்க டொலர்) I (மில்லியன்)
துருக்கி 1,980 58.5 பாகிஸ்தான் 420 119.3 ஈரான் 2,200 59.6 ஆப்கானிஸ்தான் -- 21.5 அஸர்பஜான் 740 7.4 டேர்க்மெனிஸ்தான் 1,230 3.9 உஸ்பெக்கிஸ்தான் 850 21.5 கஸகஸ்தான் 1,680 17.0 கேள்ஜிசியா 820 4.5 ரஜிசிஸ்தான் 490 5.6
மூலம்: உலக அபிவிருத்தி அறிக்கை 1994 பெரும்பாலான நாடுகள் உயர்ந்த தலாவருமானம் கொண்டுள்ளன. 4. பிரச்சனைகள் இந்தக் கூட்டமைப்பின் முக்கிய பிரச்சனைகளாகப் பின்வருவன
அடையாளம் காணப்பட்டுள்ளன.
1.
2.
தயாரிக்கப்பட்ட சாத்தியக்கூற்று அறிக்கையின்படி திரட்டப்பட்ட நிதி மூலதனம் 300,000 டொலராக மாத்திரமே காணப்படுகின்றது. இவற்றுக்குரிய ஆதார நிதியும் ஈரான், துருக்கி, பாகிஸ்தான் என்பவற்றினாலேயே வழங்கப்பட்டுள்ளது. இவை கூடுதலான வளப்பற்றாக்குறையை எதிர் கொள்கின்றன. என்பதை இது காட்டுகின்றது.
இந்த அங்கத்துவ நாடுகளிடையே உட்கட்டமைப்பு வசதிகள் போதியளவுக்கு விருத்தியடையவில்லை. இது வர்த்தக வளர்ச்சிக்குப் பாதகமாகவேயுள்ளது. 2000 ஆண்டளவில் அங்கத்துவ நாடுகளிடையே பெருந்தெரு வலையமைப்பை ஏற்படுத்தும் நோக்குடன் செயற்படுகின்றது. தொடர்பாடற்துறை

-59அபிவிருத்திக்கும் அதிக நிதியை வேண்டி நிற்கின்றமையும் கவனிக்கத்தக்கது.
3. பிராந்திய நாடுகளிடையிலான வர்த்தகம் இங்கு புறக்கணிக்கத்தக்கதாகவே காணப்படுகின்றது. கியூட்டா மகாநாட்டில் அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்குத் தீர்வைகளைக் குறைப்பது, தீர்வையல்லாத கட்டுப்பாடுகளைக் குறைப்பது தொடர்பாகவும் இணக்கம் காணப்பட்டது. இவை சீராக மேற்கொள்ளப்படுவது தொடர்பாகப் பிரச்சனைகள் காணப்படுகின்றன.
4. சோவியத்யூனியன் உடைவின்பின் உருவான மத்திய ஆசிய நாடுகளின் சந்தையைப் பயன்படுத்துவதில் பாகிஸ்தான், ஈரான், துருக்கி போன்ற நாடுகளிடையே கடுமையான போட்டி நிலவுகின்றது. 5. எதிர்காலம் இந்த நாடுகள் தமக்குத் தேவையான மூலதனத்தை எவ்வாறு திரட்டிக் கொள்கின்றன என்பதைப் பொறுத்தும் அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான சந்தையைப் பெற்றுக்கொள்வது, வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான தீர்வை, தீர்வையில்லாத தடைகள் தொடர்பான இணக்கப்பாடுகளை அடைந்து கொள்வது என்பதைப் பொறுத்தும் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனத்தின் எதிர்கால வெற்றி தங்கியுள்ளது. 44 ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு. (Asia-Pacific Economic Co-Operation- APEC)
1. தோற்றம்:
ஆசிய-பசுபிக் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னணி நாடுகள் இணைந்து 1989 இல் இந்த “எபெக்” (AIPEC) அமைப்பை உருவாக்கின.
இவற்றின் முதலாவது உச்சி மகாநாடு ஐக்கிய அமெரிக்காவில் (சியட்டல் நகரில்) 1993 நவம்பரிலும் இரண்டாவது உச்சி மகாநாடு 1994 நவம்பரில் இந்தோனேஷியாவிலும் (போகோர் நகரில்) நடைபெற்றது.
2. அங்கத்துவம்:
ஆரம்பத்திலேயே “எபெக்" அமைப்பில் அங்கத்தவர்களாக பின்வரும் நாடுகள் (12) இணைந்திருந்தன.
அவஸ்திரேலியா, புரூனே, கனடா, இந்தோனேசியா, ஜப்பான்,

Page 38
-60
தென்கொரியா, மலேஷியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, ஐக்கிய அமெரிக்கா.
1991இல் சீனா, ஹொங் கொங், தைவான் போன்றனவும் அங்கத்தவராக இணைந்தன. பின்னர் பப்புவா நியூகினி, மெக்சிகோ, சிலி என்பனவும் இணைந்து கொண்டன. இவ்வாறு முன்னணி நாடுகள் 18 இதில் அங்கம் வகிக்கின்றன.
3. நோக்கங்கள்:
போகோர் பிரகடனத்தின்படி பின்வரும் நோக்கங்களுடன் இயங்கிவருகின்றது.
1. ஆசிய பசுபிக் பிரதேசத்தில் பல்பக்க வர்த்தகத்தை
மேம்படுத்துதல்.
2. 2020 ஆம் ஆண்டளவில் இப்பிரதேசத்தில் தடையற்ற வர்த்தகம்,
முதலீடு என்பவற்றை நிலைபெறச் செய்தல்.
3. வர்த்தகம், முதலீடு தொடர்பாக காணப்படும் தடைகளை
இயன்றளவு குறைத்தல்.
4. அங்கத்துவ நாடுகளிடையே பண்டங்கள், சேவைகள், மூலதனம் என்பன தொடர்பாக தடையற்ற அசைவை ஊக்குவித்தல்.
5. "கற்” குறிப்பிடுவதன் அடிப்படையிலேயே பல்பக்க தொடர்புகளின்
மூலமாக வர்த்தகத்தை தாராளமயப்படுத்தல்.
இத்தகைய நோக்கங்களை நடைமுறைப்படுத்தும்போது "எபெக்” அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் பொருளாதார தகுதிநிலை கவனத்திற் கொள்ளப்படும். கைத்தொழில் நாடுகள் தடையற்ற வர்த்தகம் , முதலீடு என்பவற்றிற்கான நடைமுறைகளை 2010 ஆம் ஆண்டுக்கு முன்னும், வளர்முக நாடுகள் 2020 ஆம் ஆண்டுக்கு முன்னும் பூர்த்தி செய்தல் வேண்டும்.
4.செயலாற்றம்:
அங்கத்துவ நாடுகளில் கூட்டு முயற்சிகளில் ஈடுபடக்கூடிய தயார் நிலையிலுள்ள நாடுகள் முதலில் நடவடிக்கைகளில் பங்கு கொள்ளலாம். ஏனைய நாடுகள் அதனைத் தொடர்ந்து ஈடுபடலாம்.
அங்கத்துவ நாடுகளில் வளர்முக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி என்பவற்றிற்குத் தேவையான உதவிகளை வளர்ச்சி பெற்ற கைத்தொழில் நாடுகள் வழங்கிவரும்.
புதிய கைத்தொழில்மய நாடுகள் அனுபவித்துவரும் செழிப்பு

-61மட்டத்தை அங்கத்துவ வளர்முக நாடுகள் பெறுவதற்குப் போகோர் பிரகடனம் வகை செய்கின்றது. அங்கத்துவ நாடுகளின் அபிவிருத்திக் கட்டங்களிடையே காணப்படும் இடைவெளியைக் குறைப்பதற்கு நாடுகள் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமாக எல்லா நாடுகளுக்கும் முழுமையான முன்னேற்றத்தை பெறுவதற்கு இந்த ஏற்பாடு உதவும்.
அங்கத் துவ நாடுகளிடையே எழக் கூடிய பல்வேறு பிணக்குகளையும் (வர்த்தகம், பிற விடயங்கள் தொடர்பான) தீர்ப்பதற்கு வசதியாகத் தன்னார்வ ஆலோசனைப் பிணக்கு BG5606 uT6 it (3.3606) (Voluntary Consultative Dispute Mediation Service) யை உருவாக்குவது பற்றிப் பரிசீலிப்பதற்கும் போகோர் பிரகடனம் இடமளிப்பதாயுள்ளது. உலக வர்த்தக நிறுவனத்தின் (WTO) பிணக்குகள் தீர்க்கும் பொறிமுறைக்கும் இது உதவியாக அமையுமென நம்பப்படுகின்றது.
5. எதிர்காலம்:
இந்த "எபெக்" ஏற்பாடு விதந்துரைக்கப்பட்டவாறு செயற்படுவது
பற்றிய அவநம்பிக்கை பல நாடுகளிடம் நிலவுகிறது. பல நாடுகள்
தமக்கு ஏற்றவாறு தப்பித்துக் கொள்ளவும் இந்த ஏற்பாடு இடமளிக்கிறது.
எவ்வாறு இருப்பினும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் வறிய நாடுகளுக்குமிடையிலான இடைவெளி பெரியளவில் குறைந்துவிடாதென்றும் , இடைவெளி தொடர்ந்து நிலவும் என்றும் கருதப்படுகின்றது.
உண்மையான முயற்சிகளை நடுநிலையுணர்வுடன் மேற்கொண்டாலன்றி “எபெக்” எதிர்காலம் பற்றிய எதிர்பார்க்கைகளை முழுமையாக நிறைவேற்ற மாட்டாதென நம்பவேண்டும். 45 கருங்கடற் பொருளாதாரப் பிராந்தியம்
(Black sea Economic Region)
தோற்றம்:
கருங்கடலைச் சார்ந்திருக்கும் நாடுகளான துருக்கி, ரூமேனியா, பல்கேரியா, முன்னைய சோவியத் யூனியன் என்பன கருங்கடற் பொருளாதார பிராந்தியம் ஒன்றை உருவாக்குவது பற்றிய தொடக்கப் பேச்சுவார்த்தைகளில் 1990 இல் முதன்முதலாக ஈடுபட்டன. இவை தமக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பு, அபிவிருத்தி என்பவற்றுக்கான அடிப்படையைக் கண்டறிந்தன.
1990 இல் சோவியத் யூனியன் சிதைவுபட அதற்குப் பதிலாக

Page 39
-62ஆர்மீனியா, அஸர்பஜான், ஜோஜியா, மோல்றேவியா, ருஸ்யா, உக்கிரேன் போன்றன இதில் 1991 இல் இணைந்து கொண்டன. பின் கிறீஸ், அல்பேனியா என்பனவும் இணைந்து கொண்டதன் மூலம் அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
1992 ஜூன் 26 இல் அங்காரா (துருக்கி) வில் 11 நாடுகளின் அரசுத் தலைவர்கள் இப் பொருளாதாரப் பிராந்தியத்தை உருவாக்க ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
நிகழ்ச்சித் திட்டங்கள்:
இப்பிராந்தியத்தில் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, வர்த்தகம், சுரங்கம், கைத் தொழில், விவசாயம், வலு, சுற்றுலா, பொதுநலத்துறை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் போன்ற 18 விடயங்கள் தொடர்பான விபரமான நிகழ்ச்சித் திட்ட வரைபு மேற்கொள்ளங்பட்ட்து.
கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி சுங்கத் தடைகளை அகற்றுதல், பிராந்திய அபிவிருத்தி வங்கி ஒன்றை உருவாக்குதல், போக்குவரத்து உட்கட்டமைப்பை ஏற்படுத்துதல் போன்றன முக்கியமானவையாகக் காணப்படுகின்றன.

-63அத்தியாயம் 5 அமெரிக்க, ஆபிரிக்க பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கள்
அமெரிக்க கண்டங்களையும், ஆபிரிக்க கண்டத்தையும் சேர்ந்த பல பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புக்கள் தொடர்பாகவும் பல முன்னேற்றங்கள் 1990 களைத் தொடர்ந்து ஏற்பட்டன. அவைபற்றியும் கவனஞ் செலுத்துவது அவசியமாகும்.
அவ்வாறான பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்புக்களில் பின்வருவன முக்கியமானவை.
5.1 வடஅமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (நா."ப்றா) 5.2 தென்னாபிரிக்க அபிவிருத்திச் சமூகம் (சாட்க்) 5.3 தென்பகுதிப் பொதுச் சந்தை (மேர்கோசர்)
வட அமெரிக்க தடையற்ற வர்த்தக வலயம்
(North American Free Trade Area - NAFTA)
1. தோற்றம்:
1992ஆம் ஆண்டு டிசம்பர் 17ம் திகதி கனடா, ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோ போன்ற நாடுகளின் அரசாங்கங்கள் கையொப்பமிட்டு வட அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (North American Free Trade Area - NAFTA) g (56miss60, 1994 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து இவ் ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதாயிற்று.
360 மில்லியன் நுகர்வோர் இங்கு காணப்படுவதோடு இவ்வலய நாடுகளின் கூட்டான பொருளாதாரச் செயற்பாடு வருடாந்தம் 6000 பில்லியன் டொலர்வரை காணப்படும். இந்த அடிப்படையில் உலகின் மிகப்பெரிய பொருளாதார வலயமாக இது விளங்குகின்றது.
1994 ஜனவரியிலிருந்து இலத்தீன் அமெரிக்காவின் ஏனைய நாடுகளுக்கும் இச் சந்தையைத் திறந்துவிடுவதாகவும் உடன்பாடு காணப்பட்டிருந்தது.
2. நோக்கங்கள்
ஐரோப்பிய சமூகத்தின் தொடர்ச்சியானதும், ஆழமானதுமாகிய விளைவுகளின் முன்னேற்றங்களைக் கருத்திற் கொண்டு உருவானதோடு, உருகுவே பேச்சுவார்த்தை அடிப்படையில்

Page 40
-64
கலந்துரையாடப்பட்ட விடயங்களையும் கவனத்திற் கொள்வதாகவே இதன் நோக்கங்கள் அமைகின்றன. அத்தகைய நோக்கங்களைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.
1.
2.
பொதுவான மிகப் பெரிய சந்தையின் அனுகூலங்களை இதன் அங்கத்துவ நாடுகள் பெற்றுக்கொள்ள உதவுதல். தாராளமயப்படுத்தப்பட்ட வர்த்தக வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உதவும் வகையில் கட்டம் கட்டமாக தீவைகளைக் குறைத்துக் கொள்ளுதல். தீர்வையல்லாத தடைகளை இயன்றளவு படிப்படியாக இல்லாமற் செய்வதன்மூலம் பொதுச் சந்தையின் அனுகூலங்களை உறுதிப்படுத்துதல். வணிகப் பண்டங்கள் தொடர்பாக மட்டுமன்றி முதலீடு, மதிநுட்பச் சொத்துரிமை என்பன தொடர்பாகவும் தடையற்ற வர்த்தக வளர்ச்சிக்குரியவற்றை மேற்கொள்ளுதல். இதன் மூன்று அங்கத் துவ நாடுகளும் நன் மை பெறக்கூடியவகையில் இறக்குமதி, ஊழியம், சுற்றுச்சூழல் போன்ற விடயங்கள் தொடர்பாகத் தனிப்பட்ட நிபந்தனைகளையும் ஏற்றுச் செயற்படுதல். பொதுவான உற்பத்தி சார்ந்த நலன்களைப் பேணும் வகையில் தனிப்பட்ட நாடுகள் தமது சிறப்பான துறைகள் தொடர்பாக பின்பற்றிவந்த கட்டுப்பாடுகள், சிறப்பேற்பாடுகள் என்பவற்றைக் கைவிடுவதற்கும் இணங்கிச் செயற்படுதல்.
3. அங்கத்துவ நாடுகள்: நா.'றாவில் உயர்ந்த வருமானம் கொண்ட கனடா, ஐக்கிய
அமெரிக்கா என்பனவும், மெக்சிக்கோவும் அங்கம் வகிக்கின்றன. இவற்றின் குடித்தொகை, தலாவருமானம் என்பவற்றை
அட்டவணை 5.1 காட்டுகின்றது.
அட்டவணை 5.1 நா.'றாவின் அங்கத்துவ நாடுகள் குடித்தொகை, தலாவருமானம்-1992.
நாடுகள் குடித்தொகை தலாவருமானம்
(மில்லியனில்) (அமெரிக்க டொலர்)
ஐக்கிய அமெரிக்கா 255.4 23,240 560TLs 27.4 20,710 மெக்சிக்கோ 85.0 3,470
மூலம்: உலக அபிவிருத்தி அறிக்கை 1994

-654. பொருளாதார செயல் விளைவுகள்
இந்தத் தடையற்ற வலயத்தில் மூன்று நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. சந்தைப் பாதுகாப்பு, சந்தை விரிவாக்கம் என்பவற்றின் அடிப்படையில் மூன்று நாடுகளுமே சில விட்டுக் கொடுப்பனவுகளைச் செய்வதும் நலன்களைப் பேணுவதும் அவசியம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அங்கத்துவ நாடுகளில் கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இரண்டும் "குழு 7" ச்சேர்ந்த கைத்தொழில்மய நாடுகளாகும். ஆனால் ஒப்பிட்டு ரீதியில் மெக்சிக்கோ வளர்ச்சி குன்றியதாகும். அத்துடன் மெக்சிக்கோ தன் ஏற்றுமதியிற் பெரும் பங்கை வட அமெரிக்காவுக்கே அனுப்பிவந்தது.
1990 இல் மெக்சிக்கோ தனது ஏற்றுமதியில், 7% தை வட அமெரிக்காவுக்கும் 13% தை மேற்கு ஐரோப்பாவுக்கும் 6% தை கிழக்காசியாவுக்கும் அனுப்பியது இதன்படி மெக்சிக்கோ அதிக நன்மையைப் பெறக்கூடிய வகையில், அமைப்பு ரீதியிலான மாற்றங்களை மேற்கொள்வது அவசியமாகும். மெக்சிக்கோ பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
1. மெக்சிக்கோ பின்பற்றிவந்த பாதுகாப்புத் தீர்வைக் கொள்கையை
நிரந்தரமாகக் கைவிட்டுவிடவேண்டும்.
2. மெக்சிக்கோ தனது சோள உற்பத்தித் துறையை தாராளமயப்படுத்தும் வகையில் வர்த்தக ரீதியிலான தடைகளைக் குறைக்கவேண்டும்.
3. போக்குவரத்துச் சாதனத்துறை தொடர்பாகத் தனது உள்நாட்டுச் சேர்க்கைவர்த்தகம் தொடர்பான தனி ஏற்பாடுகளைக் கைவிடவேண்டும்.
அமெரிக்காவும் மெக்சிக்கோவும் தமக்கிடையே பல இருபக்க ஒப்பந்தங்களையும் செய்து கொள்வர். மெக்சிக்கோவின் புடவை ஆடையுற்பத்திகளுக்கு அமெரிக்கா தனது சந்தையை தாராளமாக அனுமதிக்கும்போது அமெரிக்காவின் பூங்கனிச் செய்கையின உற்பத்திகளுக்கு மெக்சிக்கோ அனுமதியளிக்கும் வகையில் தடைகளை அகற்ற வேண்டும்.

Page 41
-66தொழில்வாய்ப்புத் தொடர்பான நலன்களும் இந்த ஒப்பந்த நடைமுறையில் முக்கியமானவை. மெக்சிக்கோ அமெரிக்க தொழில் அமைச்சுடன் தனது தொழிலாளர் நலன்கள், தொழிற்பாதுகாப்பு நியமனங்கள் பற்றிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்.
சுற்றுச் சூழல் தொடர்பாக மெக்சிக்கோவும் ஐக்கிய அமெரிக்காவும் சுற்றுச் சூழல் திட்டமொன்றை ஏற்படுத்துவதில் உடன்பாடு காணுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
வட அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தினால் அங்கத்துவ நாடுகள் மூன்றும் நன்மையடையுமெனினும் ஒப்பீட்டு ரீதியில் மெக்சிக்கோ கூடுதலான நன்மைகளைப் பெறமுடியுமென்று நம்பப்படுகின்றது. அவ்வாறு மெக்சிக்கோ பொருளாதார ரீதியில் பெறக்கூடிய நன்மைகளைப் பின்வருமாறு விளக்க முடியும். 1. இந்த ஏற்பாடு காரணமாக இப்பிராந்தியத்துள் ஒப்பீட்டு ரீதியாகக் குறைந்த கூலி காணப்படுவதால், வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக தொகையை முதலீடு செய்யும். தனியே அமெரிக்க நிறுவனங்களன்றி ஜப்பானிய, ஐரோப்பிய நிறுவனங்களும் முதலீடு செய்யும். வாஷிங்டன் சர்வதேச பொருளாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி அமெரிக்காவில் 130,000 புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கப்படும்போது மெக்சிக்கோவில் (1995இல்) 600,000 தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படும். இதனால் மெக்சிக்கோ மக்களின் வருமானமும் உயர்ந்து வாழ்க்கைத்தரமும் அதிகரிக்கும்.
2. மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி ஏனைய இரு அங்கத்துவ நாடுகளையும் விட மெக்சிக்கோவின் மெய்வருமான நலன்கள் உயர்ந்தனவாகக் காணப்படும். அமெரிக்காவின் உண்மை வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 0.3% னால் அதிகரிக்கும். ஆனால் கனடாவில் இவ் அதிகரிப்பு 0.07% மாகவே காணப்படும்.
3. மெக்சிக்கோ தனது புடவை, ஆடை ஏற்றுமதிக்கு மிகப் பெரிய அமெரிக்க சந்தையை ப்ெற்றுக்கொள்ள முடிவதால் ஊழியச் செறிவான இத்துறையினால் தொழில் வாய்ப்புக்களை உறுதிப்படுத்த முடிவதோடு அன்னியச் செலவாணி உழைப்பையும் பெற்றுக்கொள்ள முடியும்.
4. சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பாக அதிக நிதியும், தொழில் நுட்பமும் தேவைப்படும் நிலையில் தனது எல்லைப் பிரதேசப்

-67பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் இணைந்து செயற்படுவதால் அதிகளவு நன்மைகளைப் பெற்றுக் கொள்வது சாத்தியமாகின்றது. 5. எதிர்காலம்:
இத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் மூன்று அங்கத்துவ நாடுகளினதும் விவசாயம், போக்குவரத்து சாதனத்துறை, புடவையும் ஆடையும், வலு, நிதிச்சேவை, தொடர்பாடல் போன்ற பல துறைகளிலும் அபிவிருத்தி ஏற்பட முடியும். தடையற்ற சந்தையினால் எதிர்பார்க்கப்படும் நன்மைகளை இப் பொருளாதாரங்கள் பெற்றுக்கொள்ளும். சிலவகையான உற்பத்திப் பொருட்களைப் பொறுத்தவரை தனிப்பட்ட நாடுகளில் பாதிப்பு ஏற்படும். எனினும் ஏனைய நலன்களினால் அவை ஈடுசெய்யப்பட முடியும் என்று நம்பப்படுகின்றது. வடஅமெரிக்காவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பூரணமாக நடைமுறைக்கு வருவதற்கு பதினைந்து வருடங்களாவது செல்லுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. முக்கியமான துறைகள் தொடர்பாக பெறுபேறுகளை நீண்ட காலத்திலேயே மதிப்பிட முடியுமென்று நம்பப்படுகின்றது.
5.2. தென்னாபிரிக்க அபிவிருத்திச் சமூகம்.
Southern African Development Community (SADC)
1. தோற்றம்:
1980இல் ஏற்படுத்தப்பட்ட தென்னாபிரிக்க அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மகாநாட்டின் வழியாக நிறுவப்பட்டதே தென்னாபிரிக்க அபிவிருத்திச் சமூகமாகும்.
நிறவேற்றுமைக் கொள்கை கொண்ட தென்னாபிரிக்காவில் தங்கியிருப்பதை விரும்பாத ஆபிரிக்க நாடுகளே இந்த அமைப்பை உருவாக்கின.
2. அங்கத்துவ நாடுகள்:
பின்வரும் ஆபிரிக்க நாடுகள் (10) இதில் அங்கத்துவம் கொண்டுள்ளன.
(1) தன்சானியா (2) LD6)T6)
(3) 3LDLiuT (4) அங்கோலா (5) ஸிம்பாப்வே (6) பொற்ஸ்வானா (7) நமீபியா (8) மொஸாம்பிக்
(9) சுவாஸிலாந்து (10) லெசொத்தோ 3. நோக்கங்கள்: தென்னாபிரிக்காவில் தங்கியிராது இந்த அங்கத்துவ நாடுகள்

Page 42
-68தமக்கிடையே பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு பின்வரும் நோக்கங்களுடன் இயங்குகிறது.
(1) தெற்கு ஆபிரிக்க நாடுகளிடையே எவ்வித கட்டுப்பாடுமின்றி
வர்த்தகத்தை மேற்கொள்ள ஊக்குவித்தல்.
(2) ஊழியர் இதன் அங்கத்துவ நாடுகளிடையே தங்குதடையின்றி
அசைவதற்கு உடன்படுதல்
(3) அபிவிருத்தியைத் தூண்டுதற்குரிய வகையில் அங்கத்துவ
நாடுகளிடையே பிராந்திய ஒத்துழைப்பை வளர்த்தல். 4. எதிர்காலம்: தென்னாபிரிக்காவில் நிறைவேற்றுமைக் கொள்கை கைவிடப்பட்டு
தேசிய காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததால் இதன் முக்கியத்துவம்
குறைந்து விட்டதாகக் கூறப்படுகின்றது.
இந்த நாடுகளில் சிறந்த உட்கட்டமைப்பும், திறன் மிக்க ஊழியமும் கொண்ட சில அங்கத்துவ நாடுகளை நோக்கியே முதலீடுகள் நகரும். இதனால் பின்தங்கிய அங்கத்துவ நாடுகள் முதலீடுகளைப் பெறுவதோ, அபிவிருத்தியைத் துரிதப்படுத்துவதோ சாத்தியமில்லையென கருதப்படுகின்றது.
கல்வித்தகைமை நிறைந்த திறன் கொண்ட ஊழியம் விருத்தி குன்றிய நாடுகளுக்குள் நுழைவதனைத் தொடர்ந்து பல பிரச்சனைகள் ஏற்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்குலக நாடுகளின் உதவி எந்தளவுக்கு இந்த அமைப்பு நாடுகளுக்குக் கிடைக்கும் என்பதில் சந்தேகம் நிலவுகின்றது. அவ்வாறு உதவி வராவிடில் எதிர்பார்க்கப்படும் இலக்கினை இவை அடைவது கடினமாகும்.
53. தென்பகுதிப் பொதுச்சந்தை
Southern Common Market - (MERCOSUR)
1. தோற்றம்:
தென்னமெரிக்க நாடுகள் தமக்கிடையே சங்கங்களிடையிலான பேதங்களை அகற்றவேண்டுமென்ற வகையிலும் : இந்த நாடுகளிடையிலான இடைவெளிகளைக் குறைக்கும் நோக்குடனும் உருவாக்கப்பட்டது. இவை ஐரோப்பிய சமூகத்துடன் 1991 மார்ச்சில் பொதுவான பொருளாதார ஒப்பந்தம் தொடர்பாக உடன்பாட்டுக்கு வந்தன. இது 1995 இலிருந்து நடைமுறைக்கு வரலாயிற்று.

-69
2. அங்கத்துவம்: இப்பிராந்தியம் 200 மில்லியன் குடித்தொகையைக் கொண்டதாகவும் 1200 மில்லியன் (டொச் மாக்) மொத்த உள்நாட்டு உற்பத்திப் பெறுமதி கொண்டதாகவும் காணப்படுகின்றது. பொருளாதார வளர்ச்சிக்குரிய இயலுமையை இப்பிராந்தியம் போதியளவிற் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் அங்கத்துவம் கொண்டுள்ள நாடுகளின் தலாவருமானம், குடித்தொகை என்பவற்றை அட்டவணை 5.2 காட்டுகின்றது.
9|LL6)60600T 5.2 அங்கத்துவ நாடுகளின் தலாவருமானம், குடித்தொகை -1992
நாடுகள் தலாவருமானம் குடித்தொகை
அமெரிக்க டொலர்) (மில்லியன்)
பிறேசில் 2,770 1540 பறகுவே 1,380 4.5 உருகுவே 3,340 3.1 ஆர்ஜென்ரீனா 6,050 33.0
மூலம்: உலக அபிவிருத்தி அறிக்கை 1994
சிலி, பொலிவியா போன்ற நாடுகள் இதில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளன.
இதன் அங்கத்துவ நாடுகளிடையே தீர்வைகளை 75% குறைப்பதென்றும் பொதுவான வெளித்தீர்வை முறையை 1995 இலிருந்து பின்பற்றுவதென்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
3. எதிர்காலம்:
இந்த அமைப்பைச் சேர்ந்த நாடுகள் மிக இறுக்கமாக மூடப்பட்ட வகையிலான பிராந்திய தொகுதியை உருவாக்குமிடத்து ஏனைய நாடுகளுடனான அதன் வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது.
இந்த அமைப்பு நஃப்றா (NAFTA) ஐரோப்பிய சமூகம், என்பவற்றுக்கடுத்த பெரிய பொருளாதாரப் பிரதேசமாக காணப்படுகின்றது. அமெரிக்காவிலும் பார்க்க இந்த நாடுகள் ஐரோப்பிய சமூகத்துடன் கொண்டிருக்கும் வர்த்தகத் தொடர்புகளே முக்கியமானவையாக இருப்பதால் அத்தகைய தொடர்பு பாதிக்கப்படும்போது இதன் எதிர்கால முன்னேற்றம் என்பதும் நிச்சயமற்றதாகிவிடும்.

Page 43
-70REFERENCES
CHEPRAKOV, The Common Market Conspiracy, Moscow, Progress Publication
GERMAN FOUNDATION FOR DEVELOPMENT (DSE), BONN
- EC Trade with Third World" D+c.1/1993
- "A Development Policy for the year 2000", Dtc, 1/1993
- Development Report, D+c, 1/1994
- Facts and Trends, DC, 3/ 1994
- Facts and Trends, DC, 47 1994
- Facts and Trends, DC, 1/ 1995
-News and People, DC, 21 1995
- 20 years Development Co-Operation - The History of the lome
Conventions", Dic, 5/1995
- Development Report, D+c, 2/1996
HABERMEIER AND HONST UNGERER, 1992 "A single Currency for the European Community" Finance and Development, (september) WASHINGTON D.C WORLD BANK
HARMSEN, RICHARD, 1995 "The Uruguay Round: A boon for the world Economy" Finance and Development, (March) WASHINGTON D.C., WORLD BANK
JUNZ. HB AND BOONEKAMP CLEMENS, 1991 "What is at stake in the uruguay Round" Finance and Development (JUNE) WASHINGTON, D.C. World Bank
KELEGAMA, 1994 " The SAARC PREFERENTIAL Trading Arrangement, Economic
Review (May-June) Colombo. Peoples Bank.
KELEGAMA, SAMAN, 1993 "The European Community and its Impact on Trade with Developing Countries: with special reference to Sri Lanka" Economic Review, (JANUARY), Colombo, Peoples Bank.

-71 - MAHOTIERE, STUART dela, 1961 "The Common Market". LONDON, Hodder and stoughton
PANAGARIYA, ARVIND, 1994. "East Asia: A New Trading Blocks" FINANCE AND Development (MARCH) WASHINGTON, D.C., world Bank.
Research Department, 1995. "Structural Adjustment: The small Producers Dilemma", Economic Review (Jan/Feb) Colombo, Peoples Bank
SHIELLS, CLINTON, 1995 "Regional Trade Blocks: Trade Creating or Diverting?" Finance and Development (MARCH), WASHINGTON. D.C., World Bank.
STEINBACH, UDO 1995 "Insearchofa New Role in Asia" D&C, 4/1995.

Page 44


Page 45
KALL vNLa con un 4-9078
 

வெளியிடுவோர்
Design woo Graphics