கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சனநாயக அரசாங்கத்தின் மாதிரிகள்

Page 1

மண்கா វិញ្ញាតិ
តាក្វាfffg

Page 2
solidar
Funded by the Swiss Agency for Development and Cooperation

சனநாயக அரசாங்கத்தின் Imâffâbir
ஜோனி பி. பிராங் Gurf GDLuUmar
தமிழாக்கம் சோ. சந்திரசேகரன் மா. சுருனாங் டி. தனராஜ்
шашптPifir
எஸ்.அன்ரனி நோபேட் புவியியல்துறை கொழும்புப் பல்கலைக்கழகம்
பொதுசனக் கல்வி நிகழ்ச்சித்திட்டம் Innrírðir fisuGuðsh 1995

Page 3
SANANAYAKA ARASANGATHIN MATHIRKAL
(Models of Democratic Government) John P. Frank and Lary Diomond
Translated by : S.Sandarasegaran, M. Karunanithy and
D. Thanaraj
Edited by : S. Antony Norbert First Published 1995
© Copy Right : Marga Institute
Type Setting: Unique Typesetters, Wellawatte, Colombo - 6. Printing' : Unie Arts (Pvt) Ltd., Colombo - 13.
Please address inquiries and orders to:
Newton Fernando Asst. Director Communication / Publication Division Marga Institute P.O.BOX 601 61, Isipathana Mawatha, Colombo - 5, Sri Lanka.
ADVISORY COMMITTEE
Godfrey Gunatilleke Shelton Wanasinghe Newton Fernando S. Antony Norbert P.P.M., Gunatilleke Sarath Madduma
This Series of Publication has the Financial Support of the Canadian International Development Agency (CIDA).

பொருளடக்கம்
முன்னுரை
பகுதி 1
சனநாயக அரசாங்கத்தின் மாதிரிகள்
அறிமுகம்
1 சட்டவாக்கக்கிளை
1. கூட்டு. 2. சட்டமன்றத்தின் அதிகாரங்கள். 3. சட்டமன்ற அதிகாரத்தின் எல்லைகள்.
11 நிறைவேற்றுத்துறை
1. நிறைவேற்றுத்துறையின் தன்மைகள். 2. நிறைவேற்றுனரைத் தெரிவு செய்தல். 3. நிறைவேற்றுனரின் அதிகாரங்கள். 4. பிரதம நிறைவேற்றுனரின் அதிகாரங்களின்
மீதான வரையறைகள்.
நீதித்துறை அதிகாரம்
1. அறிமுகம்.
2. நீதிபரிபாலனம், 3. நீதிமன்றங்களுக்குரிய விசேட சலுகைகள்.
IV g5c5g5g5(ii366íT
W அரசாங்கததின் அதிகாரங்கள் மீதான எல்லைகள்
1. பேச்சு, பத்திரிகை மற்றும் சமயச் சுதந்திரம். 2. குற்றவியல் சட்ட நிர்வாகம்.
V சமத்துவம் பற்றிய அடிப்படை உரிமை
VII முடிவுரை
ll
16
19
23
25
30
31

Page 4
பகுதி II
அறிமுகம் தொடர்ந்து கடைப்பிடிப்பு, தேய்வு, செயலின்மை, புதிதாக்கம்
அறிமுகம் 34
ஆசியாவில் சனநாயகத்தின் சரிவு 37
1. தலைமைத்துவத்தின் பங்கு.
1 சனநாயக முன்னேற்றத்தையும் தோல்வியையும் விளக்குதல் 48
1. வரலாற்று, காலனித்துவ மரபுரிமைகள். 2. அரசியல் கலாசாரம். 3. இனத்துவப்பிளவும் பிணக்கும். 4. அரசும் சமூகமும் 5. அரசியற் கட்சிகளும் கட்சி முறைமையும். 6. அரசியல் நிறுவனங்கள். 7. சமஷ்டிவாதமும் பன்முகப்படுத்தலும். 8. சமூக, பொருளாதார அபிவிருத்தி. 9. பொருளாதாரச் செயலாற்றமும், சட்டபூர்வத்தன்மையும். 10. சர்வதேசச் சூழல்.
ஆசியாவில் சனநாயகத்தை நோக்கி 81
1. சனநாயத்தை நோக்கிய மாறுநிலை. 2. புதிய சனநாயகங்களை உறுதிசெய்தல். 3. சனநாயகத்தைப் புதுப்பித்தல், உயிர்ப்பித்தல்,
மீண்டும் சமநிலைப்படுத்தல்.
V முடிவுரை 90

முன்னுரை
சனநாயத்தின் இயல்பும் கருத்தும்பற்றித்தொடர்ச்சியான ஐந்து நூல்களை வெளியிடுவதற்கான மார்கா நிறுவகத்தின் முயற்சியில் இவ் வெளியீடு இரண்டாவதாகும். தகுதிவாய்ந்த படைப்புக்களைக் கொண்ட நூல்கள் அல்லது அவற்றில் சில அத்தியாயங்களின் மொழிபெயர்ப்பைக் கொண்டதாக இத் தொடர்கள் அமைந்திருக்கும். பிரசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சனநாயக சமூகத்தின் பிரதான அம்சங்களைக் கற்றுணர்ந்த ஆய்வுகளாக இக் கட்டுரைகள் விளங்குகின்றன. ஆரோக்கியமான சனநாயகம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை விரிவாகவும், அதுநிலைத்துநிற்பதற்குத் தேவையான பெறுமானங்களைச் சுட்டிக் காட்டுவதாகவும் இக் கட்டுரைகள் உள்ளன். ஏனைய மனிதநிறுவனங்கள் போன்று ஒரு சனநாயக முறைமையும் தன்னுள் குறைபாடுகளைக் கொண்டுள்ளதெனினும் இன்றும் இது ஒரு சிறந்த அரசாங்க அமைப்பாக உள்ளது என்பதில் பரந்தளவான உடன்பாடு காணப்படுகின்றது. இத் தொடரில் வரவிருக்கும் ஐந்து புத்தகங்கள் சனநாயகம் ஏன் இந்த அதிஉயர்நிலையைக் கொண்டுள்ளதென்பதை விளக்குகின்றதுடன் சனநாயக முறைமையின் சில சர்ச்சைக்குரிய பிரச்சினைகளையும் ஆராய்வதாக உள்ளது.
இன்று உலகின் பல பாகங்களிலும் செயற்பட்டு வரும் சனநாயக முறைமைகளானது ஒரே தன்மையுடையவை அல்ல. நிறைவேற்று விடயங்களிலும், அரசாங்கத்தின் செயற்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட சட்டவாக்கக் கருவிகளிலும் குறிப்பிடத்தக்க பல்வகைத்தன்மை காணப்படுகின்றது. பொதுவாக அவை அவற்றைப் பகிர்ந்துகொள்கின்றன என்பது அடிப்படையான தத்துவம் என்பதுடன் அதிலிருந்தே ஏனைய பொது அம்சங்களும் பெறப்படுகின்றது. மக்கள் தமது அரசாங்கத்தைத் தெரிவு செய்யத் தன்னாதிக்கமுடையவர்கள் என்பது தத்துவமாகும். இத் தொடரில் வெளியிடப்படும் ஐந்து நூல்களும் எல்லாச் சனநாயகங்களுக்கும் பொதுவான அத்தியாவசியமான கூறுகளை விளக்குகின்றதுடன் பல்வேறு சமூகங்களின் தேவைக்குப் பொருந்தும் வகையில் பல்வேறு அமைப்புக்களைப் பரீட்சிக்கவும் முற்படுகின்றது.
இம் முதலாவது அறிமுகத் தொகுதியானது ஒரு சுருக்கமான விளக்கத்தைக் கொடுக்கின்றது. சனநாயக செயற்பாடுகளின் வழிகளும், வெவ்வேறுபட்ட பகுதிகளின் சனநாயக முறைமையும் எவ்வாறு இடைத் தொடர்புகளைக் கொண்டுள்ளதென்பதையும், ஒன்றுக்கொன்று எவ்வாறு ஆதரவளிக்கின்றது என்பதையும் இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகள் மற்றும் சில வேறுபாடு கொண்ட மனிதப்

Page 5
பெறுமானங்களையுடைய ஏனைய அம்சங்கள் தொடர்பாக எல்லாச் சனநாயகச் செயற்பாடுகளும், அமைப்பும் (ஒழுங்கான முறையில் அரசாங்கங்களைத் தெரிவுசெய்தலும், பெரும்பான்மையோர் ஆட்சியையும் கொண்ட) எவ்வாறு காணப்படுகின்றதென்பதை இது விளக்குகின்றது. இத்தகைய அகப் பெறுமானங்களும், உரிமைகளும் பிரிக்கமுடியாத சாரமாகவும் , சனநாயகத்தின் மையமாகவும் விளங்குகின்றது. இவையில்லாமல் உண்மையான சனநாயகம் இருக்கமுடியாது. இலங்கையில் கடந்த இருபது வருட அனுபவமானது தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அல்லது சனநாயக ஆர்வமானது உண்மையான சனநாயக சமுதாயத்தை நிலை நிறுத்துவதற்குப் போதியதாக இருக்கவில்லை என்பதை வெளிக்காட்டுகின்றது. சக்திவாய்ந்த பெரும்பான்மை ஒன்று சனநாயகரீதியில் தெரிவு செய்யப்பட்டாலும், சனநாயக ரீதியான எதிர்க்கட்சியை அழிப்பதற்கும், ஒடுக்குவதற்கும் சனநாயக ரீதியற்ற வழிகளைப் பயன்படுத்த முற்பட்டது. இவ் அணுகுமுறையானது எதிர்கட்சியாக இருப்பதற்கு அதன் உரிமையை மறுப்பதாக உள்ளது.
ஒரு எதிர்கட்சி எப்பொழுது நாட்டின் பெரும் பகுதி மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக இருக்கின்றது. மறுவகையில் எதிர்க்கட்சி மக்களின் முடிவை ஏற்றுக்கொள்ளவும் , சனநாயகமுறைமையின் சட்டத்துக்குள் இயங்கவும் தயாராக இல்லை. கிடைக்ககூடிய எல்லாச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி, நாட்டுக்கு ஒரு நிலையான ஆட்சியைக் கொடுக்கத் தெரிவுசெய்யப்பட்ட கட்சிக்குப் பிரச்சினையை ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றது. இத்தகைய பலவீனங்களிற் சில ஒரு சனநாயக முறைமையின் உள்ளார்ந்த குறைபாடாகும். ஆனால் இலங்கையில் சனநாயக முறைமையின் பயனுறுதிவாய்ந்த செயற்பாட்டைத் திரிபுபடுத்தும்வகையில் முனைப்பானவையாகவும் அவை விளங்குகின்றன.
பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுபவர்கள் சலுகைகள், அனுகூலங்களைத் தமக்குரியதாக ஆக்கிக் கொள்கின்றனர். அதிக பெரும்பான்மையுடன் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் வழங்கப்பட்ட அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்பவர்களாகவும் தன்னிச்சையாக நடந்து கொள்பவர்களாகவும் காணப்படுகின்றனர். சனநாயகத்தில் பெரும்பான்மையினரின் ஆட்சி என்னும் கருத்தியலானது எப்பொழுதும் சிறுபான்மையினரின் உரிமைகளை மறுக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரச்சினைகளில் எல்லாச் சனநாயக முறைமைகளும் தொடர்ச்சியான போராட்டத்தைக் கொண்டிருப்பதுடன் தவறுகளைத் திருத்துவதற்கு வழிகளைத் தேடுவனவாகவும் உள்ளன. அவைகள் நிறுவனங்களையும் அமைப்புகளையும் ஸ்தாபிக்கவும் வடிவமைக்கவும் முயலுவதுடன் அவற்றின் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் மிகவும் பயன்படக்கூடிய முறையில், அவர்களை அதிகாரத்துக்குத் தெரிவு செய்த

மக்களுக்குப் பதில் சொல்லக் கூடியதாகவும் மாறுகின்றது. மார்கா நிறுவனத்தின் இவ் வெளியீட்டில் இத்தகைய முக்கியப் விடயங்களும், பிரச்சினைகளும் ஆராயப்படுகின்றதுடன் அவை எவ்வாறு சனநாயக முறைமைகளுடன் தொடர்புபடுகின்றதென்பதையும் உசாவுகின்றது. அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பும் உறுதியும் சனநாயக முறைமையின் அடிப்படையாக இன்று தோற்றம் பெற்று வருகின்றது.
இரண்டாவது தொகுதி சனநாயக முறைமையின் கீழ் விருத்திபெற்ற பல்வேறு அரசாங்க அமைப்புக்களை ஆராய்கின்றது. சனாதிபதி மற்றும் பாராளுமன்ற முறைமை ஆகிய இரு முக்கிய வடிவங்களில் ஐக்கிய அமெரிக்கா முன்னையதற்கும் ஐக்கிய இராச்சியம் பின்னையதற்கும் சிறந்த எடுத்துக்காட்டாகத் தரப்படுகின்றது. தேர்தல் முறைமையில் காணப்படும் வித்தியாசமான வேறுபாடுகளை ஆராய்ந்து, இப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கொடுக்க அவை எவ்வாறு முனைகின்றன என்பதையும் ஆராய்கின்றது.தேர்தற் செய்முறைகள் வேறுபாடு கொண்டவை. அவை நன்மைகளையும், தீமைகளையும் கொண்டிருக்கின்றன. உதாரணமாக இத்தாலி விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறையைக் கொண்டுள்ளது. பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஐக்கிய இராச்சியத்தில் தற்போது காணப்படும் பிரதேச ரீதியான தேர்தல் தொகுதி முறைகளும் சர்ச்சைக்குரிய தொன்றாகவே உள்ளன. தேசியஅடிப்படையில் பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, விகிதாசாரமின்றிக் குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆசனங்கள் வெற்றிபெறும் கட்சிக்குக் கொடுக்கப் படுகின்றது. இலங்கை இத்தகைய பிரச்சினையை விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு கொண்டிருந்தது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும், இது வாக்காளனுக்கும், அவனது பிரதிநிதிக்கும் இடையில் காணப்படுகின்ற தொடர்பைத் தடைசெய்கின்றது என்ற காரணத்தினால் குறை கூறப்பட்டு வருகின்றது. இத் தொடர்பானது தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர் தெளிவாக அடையாளம் செய்யப்பட்ட தொகுதி ஒன்றில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும்போது மிகவும் இறுக்கமாக இருக்கும். ஜேர்மனியில் விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறைமையும், தொகுதிப் பிரதிநிதித்துவமும் இணைந்த வகையிலான இரு முறைகளின் கலப்பைக் கொண்ட முறை காணப்படுகின்றது. அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கு வாதாடுபவர்கள் இம்மாதிரியை இலங்கைக்குப் பொருத்தமுடையதாகக் கூறுகின்றனர்.
மூன்றாவது தொகுதியானது தெரிந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைக் கொண்டிருப்பதுடன் அது கிரேக்க நகர அரசிலிருந்து நவீன காலம் வரைப்பட்ட பிரபல்யமான மெய்யியலாளர்களினதும் அரசியல்

Page 6
சிந்தனையாளர்களினதும் எழுத்துக்களில் பிரதிபலிக்கப்பட்ட சனநாயக கருத்துருவத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய தேடலாகவும் அமைகின்றது.
நாலாவது தொகுதியானது இலங்கையின் சனநாயகத்துக்கு முக்கியமான பல்லின, பண்பாட்டுச் சமுதாயங்களில் நிலையான செயற்பாட்டைக் கொண்டிருப்பதற்கான சனநாயக முறைமைக்கு அவசியமான பெரும்பான்மை ஆட்சியினரின் பிரச்சினை, நிறுவன மற்றும் பொறிமுறை தொடர்பான விடயங்களை எடுத்துரைக்கின்றது. உள்ளூர்ச் சமூகத்தின் பங்கு, பிரசைகள், நிறுவனங்கள் கொண்டிருக்கக்கூடிய பங்காற்றல் பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. பிரசைகளின் சனநாயகப் பங்களிப்பானது அவர்களது வாக்குகளை அளிக்கும்உரிமையுடன் மாத்திரம் இணைந்திருக்கவில்லை. ஆட்சி முறைமை, தேசியக் கொள்கை தொடர்பான முக்கிய விடயங்களில் நிலையான பொதுக் கலந்துரையாடல்கள் அவசியம். தேசியக்கொள்கைகளினை வடிவமைப்பது தொடர்பான பொதுவிடயங்களைக் கொண்ட கலந்துரையாடலில் அரசு சார்பற்ற நிறுவனங்களின் கூட்டுப் பங்களிப்பு அவசியமானது. எனவே சனநாயகச் செயற்பாட்டைப் பாதுகாத்தலும், விருத்திசெய்தலும் என்பது பிரசைகள், அரசியல் கட்சிகள், அரசு என்பதன் கூட்டான கடமையாகும். இந்நாட்டின் உண்மையான சனநாயக நிறுவனங்களைப் பேணுவதற்கும் கட்டியெழுப்பவும் தேவையான பிரதான முயற்சிகளைப் பொதுமக்கள் விளங்கிக் கொள்வதற்கு இது தொடர்பான வெளியீடுகள் பெரிதும் உதவும் என மார்கா நிறுவகம் உறுதியாக நம்புகின்றது.
கொட்பிரே குணதிலக
மார்கா நிறுவகம்.

பகுதி 1
சனநாயக அரசாங்கத்தின்
மாதிரிகள்
ஜோண் பி. பிராங்
தமிழாக்கம்
சோ. சந்திரசேகரன் தலைவர் சமூக விஞ்ஞானக் கல்வித்துறை கொழும்புப் பல்கலைக்கழகம்
மா. கருணாநிதி
விரிவுரையாளர் சமூக விஞ்ஞானக் கல்வித்துறை கொழும்புப் பல்கலைக்கழகம்
பொதுசனக் கல்வி நிகழ்ச்சித்திட்டம்
மார்கா நிறுவகம்

Page 7

சனநாயக அரசாங்கத்தின் மாதிரிகள்
அறிமுகம்
இங்கு கூறப்படும் விபரணமானது அமெரிக்க அமைப்பை அடிப்படை யாகக் கொண்டது. சட்டத்துறை (Legislative) நிறைவேற்றுத்துறை (Executive) நீதிபரிபாலனத்துறை (Judicial) ஆகியன ஒரு அரசின் மூன்று பகுதிகள் எனக் கருதப்படுகின்றது. சனநாயக சமுதாயத்தைக் கொண்டிருக்கும் அரசின் எல்லாப் பகுதிகளும் தாராளமாக அதிகாரங் களைக் கொண்டிருக்கவேண்டும். அதே நேரம் அவை எல்லைப் படுத்தப்பட்டதாகவும் இருக்கவேண்டும்.
சட்டவாக்கக்கிளை (The Legistative Branch)
1. 3, l'C (Composition)
(i)
(ii)
(iii)
சட்டவாக்கக் கிளை மாவட்ட ரீதியாகத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவேண்டும்.
மாவட்டங்கள் திட்டவட்டமான சமமான எண்ணிக்கையான வாக்காளர்களைக் கொண்டிருக்கவேண்டும். ஒரு மாவட்டம் இன்னொரு மாவட்டத்தைப் போல் இருமடங்கு வாக்காளர்களைக் கொண்டிருந்தால் பெரிய மாவட்டத்தில் உள்ள பிரசையின் வாக்கு சிறிய மாவட்டத்திலுள்ள பிரசையின் வாக்கில் அரை மடங்கு அதிகமாக இருக்கும் . இச் சமமின்மையைத் தவிர்ப்பதற்குச் சனத்தொகையிலாவது ஒரளவுக்குச் சமமான எண்ணிக்கை இருக்கவேண்டும்.
வயதினை அடிப்படையாகக் கொண்டு வரையறை செய்யப்பட்ட வயதுவந்தோர் அனைவரும் வாக்காளர்களாக உள்ளடக்கப்பட வேண்டும். குறைந்த வயதெல்லை எதுவென்பது முக்கியமல்ல. ஆனால் அவ்வயது குறிப்பிட்ட கலாசாரத்தின் வளர்ந்தோர் பருவத்துக்குரிய வயதுக்குக் கிட்டியதாக இருக்கவேண்டும். அமெரிக்காவில் குறைந்த வயதெல்லை 21 என இருந்து
11

Page 8
(iv)
(v)
(vi)
வந்ததெனினும் அண்மைக் காலத்தில் அது 18 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. எல்லா வாக்காளர்களும் அந்நாட்டின் பிரசைகளாக இருக்கவேண்டும். ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கியிருக்கவேண்டும். இனம், நிறம், சமயம் , சொத்துடைமை அடிப்படையில் எத்தகைய புற நடைகளும் இருக்கக்கூடாது.
தெரிவு செய்யப்பட்ட சட்டசபை உறுப்பினரின் பதவிக்காலம் ஒரு குறிப்பிட்ட நாட்டின் மரபுகளுக்கு ஏற்றவாறு அமைதல் வேண்டும். அமெரிக்காவில் தேசீய சட்டமன்றத்தின் (National Legislature) சேவைக்காலம் 2 வருடங்களாகும். மக்கள் விரும்பினால் இதனை மாற்றியமைக்கவும் முடியும்.
இதுவரை கூறப்பட்டவற்றிலிருந்து கருதுவது என்னவெனில் தெரிவுசெய்யப்பட்டசட்டசபை உறுப்பினர்களின் சேவைக்காலம் (Legislators) அமெரிக்காவின் அமைப்பில் நிரந்தரமாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கில அமைப்பில் நிறைவேற்றுத்துறையின் தலைமைத்துவம் சட்டசபை யிலிருந்தே தெரிவுசெய்யப்படுகின்றது. அத்துடன் சனாதிபதிக்குப் பதிலாகப் பிரதம மந்திரி பிரதம நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக இருப்பார். இவ்வாறான ஆங்கில நாட்டு முன் மாதிரியை ஒரு நாடு தெரிவு செய்தால் சட்டமன்றத்தின் காலம் வேறுவகையாக அமையலாம். இங்கிலாந்தைப் போன்று பதவிக்காலம் ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கலாம். பிரதம மந்திரி அவரது முக்கிய சில கொள்கை விடயங்களில் பெரும்பான்மை வாக்குகளைப் பெறமுடியாத விடத்து எந்நேரத்திலும் புதிய தேர்தல் நடைபெறலாம். இவ் அமைப்புகளில் ஒன்று அரசியலமைப்பு ரீதியானதாகவோ (Constitutional) அல்லது சனநாயக ரீதியானதாகவோ இருக்கும். ஆனால் தேர்தலில் மக்களின் குரலே இறுதியான அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.
சட்டமன்றத்துக்கு அதற்கு உரித்தான சில அங்கத்தவர்கள் தேவைப்படுகின்றனர், இவர்கள் மற்றத் துறைகளில் இல்லாதவர்களாவர். சட்டத்துறை அமைப்புக்களுக்குச் செயலாளர்கள் அவசியம், சட்டசபைக் குழுவுக்கும் ஆளணி தேவைப்படுகின்றது. பிரதம மந்திரிக்கு அவருடைய வேலைகளை நிறைவேற்றுவதற்குச் சில உதவியாட்கள் தேவைப்படுகின்றனர். இந்த அமைப்பு வழக்கமாகச் சிறியளவிலிருந்தே ஆரம்பிக்கிறது. தற்கால அமெரிக்க
12

அமைப்பில் சட்ட மன்ற ஆளணியினரின் தொகை ஒரளவு அதிகரித்துள்ளது. இது ஒரு அரசின் தேவைகளைப் பொறுத்ததாக உள்ளது. எனினும் ஒரு புதிய அரசு பல சட்டமன்ற ஊழியர்களைக் கொண்டிருக்காமலும் இருக்கலாம்.
2. சட்டமன்றத்தின் அதிகாரங்கள்.
ஒரு சட்டமன்றத்தின் அதிகாரத்தின் ஒருபகுதி ஒருநாட்டின் தேவைகளிலும் அதன் மரபுகளிலும் ஒரளவு தங்கியிருக்கும். எனினும் ஒரு சட்டமன்றம் உண்மையான சட்டமன்றமாக இருப்பதற்கு மூன்று அதிகாரங்கள் முக்கியமானவை. இவை இல்லாமல் ஒரு சட்டமன்றம் உண்மையான சட்டமன்றமாக இருக்கமுடியாது. அவையாவன:
(i) வரிகளை விதிப்பதற்கும் சேகரிப்பதற்குமான அதிகாரம்.
அரசுக்கு வருமானம் இருக்கவேண்டும்.
(ii) பணத்தைச் செலவு செய்வதற்கான அதிகாரம். இப்பணம் வரிமூலம் அல்லது கடன் மூலம் பெறப்படலாம். சட்டமன்றம் உண்மையான செலவீட்டையோ அல்லது உண்மையான கடனையோ உருவாக்கக்கூடாது. ஆனால் நிறைவேற்றுத்துறை இதனைச் செய்வதற்கு அதிகாரம் அளிக்கின்றது. நாடுபூராவும் சமமானமுறையில் வரி அறவிடுதல் நடைமுறையில் நல்ல வரையறையாக இருப்பதுடன், நாட்டின் ஒரு பகுதியில் என்ன வரி அறவிடப்படுகின்றதோ அதே வரி நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் அறவிடப்படவேண்டும் என்பதாகும்.
(iii) போரைப் பிரகடனம் செய்வதற்கும் நாட்டின் பொதுப்
பாதுகாப்பை வழங்குவதற்குமான அதிகாரம்.
சட்டமன்றத்தின் இன்னொருமுக்கிய அதிகாரமானது குறிப்பிட்டநாட்டின் முக்கியமான சட்டங்கள் யாவற்றையும் உருவாக்கும் அதிகாரம் மத்திய அரசு ஒன்றுக்கு உள்ளதா அல்லது சட்டத்தை ஆக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்துக்கும், நாட்டின் பிரதேசங்களுக்குமிடையே பகிரப்படுகின்றதா என்பதில் தங்கியுள்ளது. உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவில் வாஷிங்டனில் சமஷ்டி அரசாங்கம் (FederalGovernment) காணப்படுகின்றது. இது சமஷ்டி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துகின்றதுடன் 50 மாநில அரசுகளும் மாநில அதிகாரங்ககை நடைமுறைப்படுத்துகின்றது. இந்த அதிகாரங்களை வேறுபிரித்துக் கூறுவதற்கான ஓர் அமைப்பு இருக்கவேண்டும். இம்மாதிரியான பிரிவு இல்லாத ஒரு நாட்டில், உதாரமாக இங்கிலாந்தில் முழு அதிகாரமும் பாராளுமன்றத்திடமே
13

Page 9
உள்ளது. மாநில அதிகாரத்துக்கு அனுமதிக்கவேண்டிய தேவை இல்லை. ஆனால் சில அதிகாரங்கள் இன்றும் நகரங்களுக்கும் கவுண்டிகளுக்கும் (County) உள்ளது. ஒருநாட்டில் எந்தளவுக்கு அதிகாரம் மையப்படுத்தப் பட்டிருக்கின்றது என்பதை அந்நாட்டின் மரபுகளுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுவது சாத்தியமேயாகும். எனினும் சில இடங்களில் நாட்டின் மத்திய அரசில் அல்லது சில துணைப்பிரிவுகளில் பின்வரும் அதிகாரங்கள் அவசியமானவை. அவையாவன;
(அ)
(ஆ)
(3)
(FF)
நிறைவேற்றுத்துறைக் குற்றங்களைத் (executive Crimes) தெரிவு செய்யும் அதிகாரம் அதாவது எந்த நடத்தைகளை மாநில அரசு சகித்துக்கொள்ளாது அல்லது தண்டனைக் குட்படுத்தும் என்பதைத் தீர்மானிக்கின்ற அதிகாரம்.
தபால் தொடர்பு அமைப்பு (postal System) ஒன்றைத் ஸ்தாபிப்பதற்கும் பொதுப் போக்குவரத்திற்கு அல்லது தபால் தொடர்பிற்கு எந்தவொரு பாதையையும் அமைப்பதற்குமான அதிகாரம்.
போர் தொடர்பான அதிகாரம் . இராணுவத்தை ஸ்தாபிப்பதற்கான அதிகாரம் தேவையானது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கும் கூடுதலாக நீடித்து வைத்திருப்பதற்கு இடமளிக்காது. உதாரணமாக 2 வருடங்கள். இதனால் இராணுவம் சட்டமன்றத்தின் சுதந்திரமுடையதாக மாறமுடியாது. இது அரசாங்கத்துக்குச் சொந்தமாக ஒரு படை இருப்பதைத் தடைசெய்கின்றது.
நாட்டின் மரபுகளுக்கு ஏற்பவும் தேவைகளுக்கு அமையவும் உருவாகும் அதிகாரங்களும் உள்ளது. இது சட்டமன்றத்தினால் வழங்கப்படுகின்ற வேறு விசேட அதிகாரங்களை வினைத் திறனுள்ளதாக்குவதற்கு அவசியமானதும் குறிப்பிடப்பட்டதுமான எல்லாச் சட்டங்களையும் உருவாக்கச் சட்டமன்றத்துக்கு இடமளிக்கும். இது அரசியலமைப்பு மிகக் கனதியானதாக மாறுவதைத் தடுக்க உதவுகின்றது. உதாரணமாக இராணுவத்தினரை அதிகரிக்க வழங்கும் அதிகாரமானது இராணுவத்துக்குச் சீருடையையோ அல்லது ஆயுதம் வாங்குவதற்கோ அதிகாரம் அளித்ததாகக் கருதமாட்டாது. அவசியமானதும் குறிப்பானதுமான (necessary and prope) சட்ட மூலங்கள் அவசரத்தேவைகளை மாத்திரம் கவனத்திற் கொள்ளும்,
14

3. சட்டமன்ற அதிகாரத்தின் எல்லைகள்.
சட்டமன்றத்தின் மீதான சில விசேட வரையறைகள் இங்கு நோக்கப் படுகின்றன. அவையாவன;
(i)
ஆங்கில, அமெரிக்க அமைப்புகளில், அரசாங்கத்தின் கொடுங்கோலாண்மை (tyrannical power)அதிகாரத்தின் மீதான மிக அடிப்படையான எல்லை, ஒருவரைக் கைதுசெய்தலுடனும், சிறையிலடைத்தலுடனும் தொடர்பானது. எவரையும் சட்டப்படியன்றிக் கைது செய்யவோ, அல்லது சிறையி லடைக்கவோ முடியாது. அத்துடன் பின்னர் எடுக்கப்படக்கூடிய சட்டங்களுக்கும் எல்லைகள் உண்டு. 17ஆம் நூற்றாண்டில் 14ஆம் லூயி பிரான்சில் செய்ததுபோல் அல்லது ஸ்டாலினும், ஹிட்லரும், ரஷியாவிலும், ஜேர்மனியிலும் செய்ததுபோல் ஒர் அரசாங்கம் சிலரைத் தமது இஷ்டப்படி சிறையிலடைத்தால், ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளில் இந்த நிகழ்வானது ஆட்கொணர்வு மனு மன்றத்தில் (habeas corpus) ஆட்சேபிக்கப்படுகின்றது. இது அந்த அரசாங்கம் கைது செய்தவரை வழக்கு மன்றத்தில் ஆஜராக்குவதற்கும் அவருக்கு நீதி வழங்குவதற்குமுரிய கட்டளையை நீதிமன்றத்திடம் கோரும் விண்ணப்பமாகும். இக் குறிப்பிட்ட மனு ஆங்கிலேயர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் விசேடமானதாகும். ஆனால் இது அமெரிக்கர்களதும் ஆங்கிலேயர்களதும் மிக முக்கியமான புனிதமான தனியானஉரிமையாகும். ஐரோப்பிய மரபுகளிலுள்ள ஏனைய நாடுகளும் இதே மாதிரி ஒரு விடயத்துக்கு நீதிமன்றத்திடம் விண்ணப்பிக்கக் கூடிய இதே வகையான கருவிகளைக் கொண்டிருக்கக்கூடும். இவ்வாறில்லாவிட்டால் அவை இது போன்ற வேறு சில செயன்முறைகளைக் கண்டுகொள்ளவேண்டும். பொதுப் பாதுகாப்புக்குரிய பிளர்ச்சி அல்லது ஊடுருவல் போன்ற விடயங்களில் இவ்வாறான தேவை ஏற்படுமாயின் அது தவிர்ந்த எந்த ஒரு விடயத்திலும் ஆட்கொணர்வு மனுவில் தடங்கல்கள் காணப்படக்கூடாது என்பது அமெரிக்க அரசியல் அமைப்பில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எல்லை மிக நுணுக்கமாக விளக்கப்பட்டுள்ளது. கேபியஸ் ஹோபஸ் ஆட்கொணர்வு மனுவின்படி வழங்கப்படும் சலுகையின்படி பிரசை ஒருவரின் உரிமை திட்டமாக ஒருபொழுதும் மறுக்கப்படுவதில்லை. இதுபோன்ற சில அமைப்புக்கள் ஒவ்வொரு சுதந்திர அரசுக்கும் தேவையாகும்.
15

Page 10
(i) ஒரு நிகழ்வின் பின்னர் குற்றவிடயங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு எந்த அரசாங்கமும் அனுமதிக்கப்பட மாட்டாது. அதாவது ஒரு பிரசை சட்டப்படி சரியாக ஒரு விடயத்தைச் செய்திருந்தால் சட்டமன்றும் பின்னர் அதைக் குற்றமாக்குவதற்கு அனுமதிக்கமாட்டாது. ஒவ்வொரு பிரசையும் தான்ஒரு நடவடிக்கையைச் செய்யும் போது அது சட்டரீதியானதா அல்லது சட்டத்திற்கு முரணானதா என்பதை அறிவதற்குரிமையுள்ளவராவர். இந்த நோக்கத்திற்கான அமெரிக்க அல்லது ஆங்கிலேய சட்டமன்ற அமைப்பின்படி முன்னர் இருந்த சட்டத்தை அனுமதிக்கமுடியாது. ஐரோப்பிய நாடுகள் இப்பாதுகாப்பைப் பெறுவதற்கு வேறு கருத்தியலையும் அடையாளங்களையும் கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்களது முறை எதுவாயினும் சட்டமன்ற அமைப்புக்கள் இது குறித்துக்கட்டுப்படுத்தப்படவேண்டும்.
(i) பொதுத் திறைசேரியிலிருந்து பணத்தை எடுப்பதற்குச் சட்டமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலமன்றி வேறுவகைகளில் அனுமதியளிக்கப்படமாட்டாது. ஏதாவது முறையின் கீழ் ஒரு பிரதம மந்திரி அல்லது ஜெனரல் அல்லது யாராயினும் ஒருவர் என்ன தேவையாயினும் அதைத் திறைசேரியிலிருந்து பெறுவதற்குத் தான் தகுதியுடையவர் என்பது தடைசெய்யப்படவேண்டும் . ஆனால் சட்டமன்றத்தினால் அதிகாரமளிக்கப்பட்ட செலவுக்குரிய பணத்தை மாத்திரம் எடுக்கலாம்.
(iv) ஒருநாடு துணைப்பிரிவுகளைக் கொண்டிருந்தால் அவ்வாறான மாநில அரசுகள், மாகாணங்கள் அல்லதுநகரங்கள் - இவைகளில் ஒன்றாவது இராணுவத்தை அதிகரிக்கவோ போர் செய்யவோ பணத்தை ஆக்கவோ அல்லது வெளிநாடுகளுடன் தேசிய சட்டமன்றத்தின் உடன்பாடில்லாதுஉடன்படிக்கை செய்யவோ அனுமதிக்கப்படமாட்டாது.
நிறைவேற்றுத்துறை
1. நிறைவேற்றுத்துறையின் தன்மைகள்.
அமெரிக்க அமைப்பின் கீழ் அரசின் பிரிவுகள் 3 ஆகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன: (1) சட்டமன்றம். (2) நிறைவேற்றுத்துறை (3) நீதித்துறை.
16

ஆங்கில முறைமையின் கீழ் அரசாங்கத்தின் அமைப்பு அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரதம் மந்திரி சட்ட மன்றத்தினரின் ஒரு பகுதியாகவும், நிறைவேற்றுத் திணைக்களத்தின் தலைவராகவும் இருப்பார். பல ஐரோப்பிய நாடுகளில் இந்த அமைப்பு இணைந்ததாகக் காணப்படுகின்றது. அதனால் அங்குள்ள சனாதிபதி வரையறுக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருப்பார். பிரதம மந்திரி திணைக்களங்களுக்கூடாக நடைமுறைப்படுத்தக் கூடிய நிறைவேற்றுப் பொறுப்புள்ளவராக இருக்கிறார். ஆங்கிலேய அமெரிக்க முறைமைகள், உலகில் மிகப் பழமையான அரசியலமைப்பைக் கொண்ட அரசுகளாகும். அமெரிக்க அமைப்பு 1789 இலிருந்தும் ஆங்கில அமைப்பு 1689 இலிருந்தும் காணப்படுகின்றன. சில்வேளை இதைவிட முற்பட்ட காலங்களில் இருந்தும் இருக்கக்கூடும்என வரலாற்றுரீதியான வினாக்களை எழுப்பக் கூடுமெனினும் அவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை. ஓர் அமைப்பு இன்னொரு அமைப்பைவிடச் சிறந்தது என ஒருவரும் நிச்சயமாகக் கூறமுடியாது என்பது குறிப்பிடக்கூடிய அம்சமாகுமெனினும் நிறைவேற்றுஅமைப்பு எதுவாயினும் அது அதற்குரிய அதிகாரங்களைக் கொண்டிருக்கவேண்டும்.இதன் முக்கியத்துவமும் வரையறைகளும் கீழே தரப்படுகின்றன.
2. நிறைவேற்றுனரைத் தெரிவு செய்தல்.
எந்த அமைப்பு உபயோகப்படுத்தப்படுகின்றதென்பதில் இது தங்கியிருக்கும். வினைத்திறனுள்ள தலைமை நிறைவேற்றுனர் தேர்தல் மூலம் மக்களால் தெரிவுசெய்யப்படலாம் அல்லது பாராளுமன்ற அமைப்பில் உள்ளதுபோல் சட்டமன்ற அமைப்பொன்றால் தெரிவு செய்யப்படலாம். முதற்படியாக எந்த அமைப்பு விருப்புக்குரியதென்பது பற்றி முடிவு செய்யப்படவேண்டும். அத்துடன் தெரிவு செய்யும் நுட்பம் அந்த
முடிவிலிருந்து தொடரும்.
3. நிறைவேற்றுனரின் அதிகாரங்கள்.
நிறைவேற்றுனரின் 4 முக்கியமான அதிகாரங்கள் பின்வருமாறு. அவையாவன:
(i) நிறைவேற்றுனர் நாட்டின் இராணுவப்படையின் தலைவராக இருப்பார் . நாட்டைப் பாதுகாப்பதற்கும் போர் செய்வதற்குமான இறுதிப் பொறுப்பையும் அவரே கொண்டிருப்பார், நிறைவேற்றுனர் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இரு திசைகளில் குறித்த அதிகாரத்தில் அநேகமானவற்றைப் பகிர்ந்து அளிப்பார். எந்த வடிவமைப்பு
17

Page 11
(ii)
(iii)
(iv)
நாட்டின் மரபுக்குப் பொருத்தமானதோ அந்த வகையில், அமையும் முதலாவது - அவரது நேரடிப் பொறுப்பில் இயங்குகின்ற திணைக்களத்திற்கும், இராணுவம், கடற்படை, விமானப்படை, அதே போல் எல்லாப் பாதுகாப்பு அமைப்புக்களின் உருவாக்கத்திற்கும், செயற்பாட்டிற்கும் இரண்டாவதாக - அவர் தமது பிரதிநிதித்துவத்தை ஒன்றில் திணைக்களத்திற்கூடாக அல்லது நாட்டின் பாதுகாப்புகளைக் கருத்திற்கொண்டு தீர்மானங்களை எடுக்கும் பொறுப்புடைய இராணுவ அதிகாரிகளுடன் நேரடியாகவோ அமையலாம். ஒரு சனநாயக அமைப்பில் எல்லா இராணுவ விடயங்களுக்குமுரிய இறுதி அதிகாரம் பிரதம நிறைவேற்றுனரைச் சார்ந்ததாகவே இருக்கவேண்டும் என்பது முக்கியமானதாகும்.
நிறைவேற்றுனர் நிறைவேற்றுத் திணைக்களங்களுக்குரிய பிரதான தலைவர்களை நியமிப்பார். நியமனத்திற்குச் சட்ட மன்றத்தின் உறுதிப்படுத்துகையை வேண்டுகின்ற ஓர் ஒழுங்கு இருக்கலாம். அல்லது இல்லாதிருக்கலாம். இது நாட்டின் மரபுகளின் மீது முக்கியமாகத் தங்கியுள்ளதாகவுமிருக்கலாம். சட்டமன்றக் கிளை மூலமாக வெளிப்படுத்தப்படுகின்ற சட்டத்திற்கு உட்பட்டு, நிறைவேற்றுத் திணைக் களத் தலைவர்கள் மேலும் துணையான நியமனங்களைச் செய்வதற்குரிய அதிகாரங்களைப் பெறுவர். சட்டமன்றத்தால் வெளிப்படுத்தப்பட்ட சட்டத்தின் பிரகாரம் குறித்த திணைக்களங்களுக்குரிய கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதற்குரிய அதிகாரத்தையும் வழங்கும்.
வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகளைச் செய்யக்கூடிய அதிகாரத்தையும் பிரதம நிறைவேற்றுனர் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இவ்வாறான உடன்படிக்கைகள் சட்டமன்றத்திற்கு அங்கீகரிக்கப்படும் வரையில் செயற்படுத்துவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.
சட்டங்கள் உண்மையாக நிறைவேற்றப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்துவது நிறைவேற்றுனரின் முழுப்பொறுப்பாகும். அவர் சட்டமன்றத்துக்குத் தேசீய வரவு-செலவுத்திட்டத்தைப் பிரேரிக்கும் கடமையுடையவராக இருக்கவேண்டும். தேசிய வரவுசெலவுத் திட்டங்கள் செலவீடுகளுக்கான திட்டங்களையும் வரிவிதிப்பு (இது சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் வரை செயற்படுத்தப்படத்தக்கதாக அமையாதுபோனாலும்கூட, அவ்வாறே வரவு செலவுத்திட்டம் சட்டமன்றத்தினால் சில
18

திருத்தங்களுக்கு உள்ளானாலும் கூட) போன்ற கடமையுடையவராக இருப்பார். நிறைவேற்றுனர் இங்கு காணப்படும் எல்லா முன்னேற்பாடுகளையும் கண்காணிப் பதற்கும் , அவர் பொருத்தம் எனக் கண்டு நேரடியாகவோ அல்லது நாட்டின் வெளிநாட்டலுவல்கள் திணைக்களத் தலைவருக்கு ஊடாகவோ தொடர்புகொள்வதற்கும், முறையே நீதிபதிகளையும் , வெளிநாட்டுத் துTதுவர்களையும் நியமிக்கவேண்டும்.
4. பிரதம நிறைவேற்றுனரின் அதிகாரங்களின் மீதான
வரையறைகள்.
(i)
(ii)
நிறைவேற்றுனர் இங்கே காட்டப்பட்டதுபோல் அவருக்கு அதிகாரம் அளிக்கப்படாத அதிகாரங்களை நடைமுறைப்படுத்த லாகாது. சட்டத்துறையின் அதிகாரமின்றி எந்தவிதமான அதிகாரங்களையும் நடைமுறைப் படுத்தமுடியாது.
பிரதம நிறைவேற்றுனர் அவரது அதிகாரங்களை நடைமுறைப் படுத்துவதில் அரசாங்கத்தின் மீதுள்ள பொதுவரையறைகளில் வழங்கப்படும் ஏதாவது வாய்ப்புக்களை மீறலாகாது.
நீதித்துறை அதிகாரம்
1. அறிமுகம்
இரண்டு நோக்கங்களுக்காக ஒரு நாடு நீதிமன்றங்களைக் கொண்டிருக்கவேண்டும்.
(i)
(ii)
நாட்டின் சட்டங்களை அமுலாக்குவதற்கும், விசேடமாகக் குற்றவாளிகளைத் தண்டிக்கவும், வரி அறவிடவும், அரசுடன் பிரசைகளுக்கு ஏற்படும் பிணக்குளைத் தீர்த்துக் கொள்ளவும் நீதிமன்றங்கள் அவசியமானவை.
மேலும் நீதிமன்றங்கள் பிரசைகளுக்கிடையில் அல்லது வியாபாரங்களுக்கிடையில (Businesses) அல்லது வியாபாரங்கள் - பிரசைகளுக்குமிடையில் உள்ள சர்ச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு அவசியமானவையாகும். இது விபத்துக்கள் அல்லது ஒப்பந்தங்களிலிருந்து உருவாகும் சர்ச்சைகளாகவோ இருக்கலாம்.
19

Page 12
(iii)
(iv)
(v)
(vi)
ஒருநாட்டுக்குப் பல நீதிமன்ற அமைப்புக்கள் தேவைப்படலாம். சிறிய பிரச்சினைகளுக்கு மிக எளிய நீதிமன்றங்கள் தேவைப்படலாம். (உதாரணமாகப் பிரசை அவரது சகல கொள்வனவுக் கட்டணங்களையும் கட்டிவிட்டாரா, அவர் விற்ற பொருட்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரமுடையனவையா?) வேறு நோக்கங்களுக்கு மிக நுட்பமான நீதிமன்றங்களும், மிக வித்தியாசமான நீதிமன்றங்களும் தேவைப்படும். வாகனப் போக்குவரத்துக் குற்றங்களுக்குப்பொருத்தமான ஒரு நீதிமன்றம் ஒரு கொலை வழக்கைக் கையாளும் அல்லது தேசியக் கிளர்ச்சி தொடர்பான வழக்குகளை விசாரணை செய்யும் நீதிமன்றத்திலிருந்து மிகக் கூடியளவு வேறுபடலாம். குறித்தவகையான நீதிமன்றமாக இருப்பதற்கு ஏதாவது ஒரு யாப்பினால் இரு திசைகளில் வழிப்படுத்தப்படவேண்டும்.
முதலாவதாக இது உடனடியான உபயோகத்திற்கு இசைவானதாக இருக்கவேண்டும் . இந்தவகையான நீதிமன்றங்கள் மரபுகளின் அதாவது நாடு எதனை வழக்கமாகக் கொண்டது என்ற நாட்டின் மரபுகளின் ஒரு பகுதியாக அமையும்.
இரண்டாவதாக தேவை ஏற்படும்போது காலத்திற்குக் காலம் வேறு நீதிமன்றங்களை உருவாக்கச் சட்டமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் ஏற்பாடொன்று இருக்கவேண்டும்.
சில நீதிமன்றங்கள் வழக்குகளை விசாரணை செய்வதற்கும் வேறுசில விசாரணை மன்றுகளில் இருந்துவரும் ஆட்சேபங்களை விசாரிப்பதற்கும் அமைக்கப்படுதல் வழக்கமாகும். மரபுரீதியான நீதிமன்ற அமைப்புக்கள் திறமையாகச்செயலாற்றாது போனால் தவிர ஆரம்பத்தில் ஒழுகுவதற்கு அவையே சிறந்தவைகளாகும்.
இது நீதிபதிகளைத் தெரிவு செய்தல், அதனுடன் தொடர்பான நிபந்தனைகள் ஆகிய விடயங்களுக்கும் இடமளிக்கின்றது. சில நாடுகளில் நீதிபதிகள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். மேலும் வேறு சிலவற்றில் நாட்டின் பிரதம நிறைவேற்றுனரால் நியமிக்கப்படுவதன் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். சிலநாடுகளில் நீதிபதிகளின் பதவிக்காலம் ஆயுட்காலம் வரையானது. வேறு சிலவற்றில் நான்கு வருடங்களுக்கும் குறைவாக இருக்கலாம்.
ஆங்கில, அமெரிக்க அமைப்புக்களில் ஜூரிகளால் விசாரணை
மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும். இவை ஆங்கிலோ
அமெரிக்க மரபுகளுக்குத் தனித்துவமானது. இது முழுக்
20

கண்டத்துக்குமுரிய வழக்கல்ல. மேலும் இது ஐரோப்பிய வழக்கிற்கு விதந்துரைக்கப்பட்ட ஒன்றுமல்ல.
2. நீதிபரிபாலனம் (Jurisdiction)
குறித்த விடயங்களைக் குறித்த நீதிமன்றங்களின் கவனத்திற்கே கொண்டுவரப்படவேண்டும் என்பதற்குச் சட்டம் ஒன்று இருக்கவேண்டும். ஐக்கிய அமெரிக்க அரசியல் அமைப்பு மாநில நீதிமன்றங்களுக்கிடையில் மிக நுணுக்கமான வேறுபாடுகளை உருவாக்கின்றது. ஐரோப்பிய அமைப்பு கூட்டாட்சி அமைப்பாக இல்லாததினால் இந்தக் குறிப்பான வேறுபாடுகள் அவசியமில்லை. ஆனால் நீதிமன்றம் எதுவாக இருந்தாலும் வேலைகளைப் பிரித்தறிவதற்குத் தேவையான நுணுக்கமான எல்லைகள் அல்லது வரையறைகள் வரையப்படவேண்டும்.
3. நீதிமன்றங்களுக்குரிய விசேட சலுகைகள்.
நீதிமன்றங்கள் யாப்பின்படி அமைக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அவை சுதந்திரமாக இருக்கவேண்டும் என்பது முக்கியமானது. அத்துடன் அது நீதியானதும் தேர்வுக்கு இடமளிக்காததாகவும் இருக்கவேண்டும். சில குறிப்பிட்ட முன்னேற்பாடுகளையும் அது கொண்டிருக்கவேண்டும்.
(i) நீதிபதி பதவிக் காலம் இருந்தாலும் ( சில வருடங்கள் முதல் ஆயுள் பூராவும்) தனது பதவியிலிருந்து மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட காரணங்களின்றி நீக்கப்படலாகாது என்பதற்கான மிகத் தெளிவான முன்னேற்பாடுகளைக் கொண்டிருக்கவேண்டும். உதாரணமாக இலஞ்சம் வாங்குதலைக் குறிப்பிடலாம். ஒரு நீதிபதியின் தீர்ப்பை நிறைவேற்றுனர் விரும்பாத காரணத்துக்காக நீதிபதியானவர் மிக எளிதாக விலக்கப்படலாகாது. ஒரு நீதிமன்றம் இவ்வாறான சில பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாது சுதந்திரமாக இருக்கமுடியாது. மேலும் யாராவது நீதிபதி அகற்றப்படுவதற்கும், தீர்மானிப்பதற்குமுரிய மரபுரீதியான சில செயன்முறைகள் காணப்படவேண்டும். அமெரிக்க அமைப்பில் சட்டமன்றத்தினால் மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டும் உண்மையான விசாரணையும் மரபுரீதியான இவ்வாறான கருவியாகும். இவ்வகையான பிரச்சினைகளைக் கையாள வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு முறைகள் காணப்படுகின்றன. தவறு செய்கின்ற நீதிபதிகளைத் தண்டிப்பதற்கு ஒருநாடு அதன் மரபுரீதியான சில முறைகளைக் கொண்டிருக்கக் கூடும்.
21

Page 13
(ii)
(iii)
ஒரு நீதிபதியினது நஷ்டஈடு அவரது சேவைக்காலத்தில் குறைக்கப்படலாகாது என்பதற்குரிய ஒரு முன்னேற்பாடு இருக்கவேண்டும். ஒரு நீதிபதி சுதந்திரமாக இருப்பதாக இருந்தால் சட்டமன்றமும் நிறைவேற்றுனரும் அவரது முடிவில் திருப்தியில் லாதிருந்தாலும் கூட அவரது சம்பளத்தை நிறுத்துவதற்கு முடியாதிருக்கவேண்டும்.
பொதுவாக ஒரு கொடுங்கோண்மையைக் காட்டும் விடயம், அரசுடன் உடன்பாடற்ற பிரசைகளை இராஜத்துரோகக் குற்றத்தின் கீழ் குற்றஞ்சாட்டுதலாகும். வேறுநாடுகள் கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கான குற்றச்சாட்டுகளைக் குறிப்பதற்கு வேறு சொற்களைக் கொண்டிருந்தாலும் அவை எல்லாம் ஒரே விடயத்திற்குள்ளேயே அடங்குகின்றன. இராஜத்துரோகக் குற்றச்சாட்டின் மீது சில விசேட கட்டுப்பாடுகளை வைத்திருக்கவேண்டும்.
(அ) நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டால் ஒழிய, ஒருவரும்
இராஜத் துரோகக் குற்றத்திற்காக தண்டனைக்கு உட்படுத்தப்படலாகாது. அத்துடன் ஆட்கொணர்வு மனுப்படியான பாதுகாப்பில்லாது அல்லது அதற்கொப்பான உள்ளுர்ச் சட்டம் இல்லாமல் இராஜத்துரோகக் குற்றத்தின் மீது எந்த ஓர் நபரும் சிறையிலிடப்படலாகாது. மேலும் இது நீதிமன்றத்தினால் நடைமுறைப்படுத்தத்தக்கதாகவும் இருக்கவேண்டும்.
(ஆ) இராஜத் துரோகக் குற்றச்சாட்டு, ஒரு நாட்டுக்கு எதிராக
யுத்தம் செய்யும் விடயத்தில் வரையறுக்கப்பட்டதாக இருக்கவேண்டும். இரகசியப் பொலிசாரின் கொடுங் கோன்மையைத் தவிர்ப்பதற்கு சில நடைமுறைகள் மேற்கொள்ளப்படலாம். அதாவது இராஜத்துரோகக் குற்றச்சாட்டுக்கு உட்படும் ஒருவர் அக் குற்றச்சாட்டில் அல்லது செயலில் ஈடுபட்டதை இரு சாட்சியங்களினூடாக நிரூபிக்கப்படக்கூடியதாக இருக்கவேண்டும். அல்லது அவர் நீதிமன்றத்தில் அக் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் ஒருவர் இராஜத்துரோகக் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்படக்கூடாது. குற்றத்தை ஒப்புக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுதலுக்கு எதிரான பாதுகாப்பு விடயங்கள் அடுத்த பகுதியில் நோக்கப்பட இருக்கின்றது.
22

(iv)
(இ) ஒருநாட்டின் அரசியலமைப்பு அதன் அதிஉயர் சட்டமாக
இருக்கவேண்டும். இது சட்டமன்றத்தில் வெளிப்படுத்தப் படுகின்ற அனைத்துச் சட்டங்களையும் நிறைவேற்றுன ாரினால் நேர்மையான முறையில் வழங்கப்பட்ட கட்டளைகளையும் உள்ளடக்கும். சட்டமன்றத்தின் சட்டங்கள் “குறிப்பானதும் அவசியமானதும்” என்ற அடிப்படையில் அமைந்த சட்டங்களாகும் என்பது நினைவிற் கொள்ளத்தக்கது.
ஆங்கில, அமெரிக்க அரசியலைமப்புக்களுக்கிடையில் முக்கிய
வேறுபாடு ஒன்றுள்ளது. இது ஏனைய நாடுகளினால் கவனத்திற் கொள்ளப்படவேண்டியதாகும். ஆங்கில அமைப்பின் கீழ்
அரசியலமைப்பு என்பதற்கான அர்த்தமுள்ள இறுதிக் கூற்று சட்டமன்ற அமைப்பாகும். அதாவது சட்டமன்றத்தினால் வெளிப்படுத்தப்படுகின்ற ஒரு சட்டம் அரசியலமைப்பின்படி. பெறுமானமுடையது என்பதையே இது குறிக்கும்.
அரசியலமைப்பின் உறுதிப்படுத்துகை மீதான விவாதங்கள் குறித்த சட்டமானது இசைவாக்கப்பட முதலே எடுத்துக்
கொள்ளப்படவேண்டும். அமெரிக்க அமைப்பின் கீழ் ,
அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்படுகின்ற சட்டத்திற்கான இறுதித்தீர்மானம், நாட்டின் உயர் நீதிமன்றத்தினுடையதாக இருக்கும் . இதில் ஒவ்வொரு அமைப்பும் நன்றாகச்
செயற்படுகின்றது. அதற்குரிய குறைபாடுகளையும்
கொண்டுள்ளது. ஒரு புதிய முறைமையை மேற்கொள்கின்ற மூன்றாவது நாடு அரசியல் யாப்பின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கும் முறையை நாட்டினுடைய மரபுகளின்படி தெரிவு செய்துகொள்ளலாம். எந்தவொரு விடயத்திலும் இவ்வாறான ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
V திருத்தங்கள்
எந்தவொரு அரசியல் அமைப்பும் எதிர்காலத்திலுள்ள எல்லாப்
பிரச்சினைகளையும் எதிர்நோக்கியதாக இருக்கமுடியாது. அத்துடன் அதனை மாற்றுவதற்கான சில அமைப்புக்கள் அங்கு இருக்கவேண்டும். குறைந்த பட்சம், வழக்கம்போல அங்கு இரு தெரிவுகள் இருக்கமுடியும். ஒன்று ஒரு சிக்கலான திருத்த அமைப்புக்கு இசைவாக்குவதற்கான ஏற்பாடு - இதனால் அரசியலமைப்பு இலகுவாக மாற்றத்திற்குள்ளாக முடியாது. இது அமெரிக்க அமைப்பு மாதிரியாகும். சிக்கலான திருத்தங்களின்
23

Page 14
சிறப்பம்சம் காரணமாக, இந்த உலகின் மிகப் பழைமையான எழுதப்பட்ட அரசியலமைப்பு 26 முறை மட்டுமே திருத்தத்துக்குள்ளாக்கப்பட்டது. அவற்றிலுள்ள பத்துத் திருத்தங்கள் (amendments) மட்டுமே மூல அரசியலமைப்பின் பகுதியாகியுள்ளது.
திருத்தத்தின் மிக எளிமையான முறை சட்டமன்றத்தின் அனுமதியுடனும், அடுத்துவரும் தேர்தலில் வாக்காளர்களின் அனுமதியுடனும் ஏதாவது ஒரு திருத்தத்தை இசைவாக்குவதற்கு இடமளித்தலாகும். இந்தத் தெரிவுகளை உருவாக்குவதில் ஒரு நாடு ஒர் எளிமையான வினாவை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்கிறது. திருத்தம் இலகுவானதாயின் திருத்தங்கள் கூடியளவு எடுக்கப்படும். அத்துடன் அரசியலமைப்பு, நாட்டின் பொதுச் சட்ட அமைப்பிலிருந்து சிறிதளவு வேறுபட்டுள்ளதாகும் வரை வளர்ச்சியடைந்து செல்லும் பாங்குடையதாக மாறும். திருத்தங்கள் சிக்கலானதாக ஆக்கப்பட்டால் அரசியலமைப்பு தன்னளவில் மக்களுக்குச் சில விளக்கங்களைக் கொடுக்கக்கூடிய ஒர் எளிய ஆவணமாக எஞ்சிநிற்கும். அமெரிக்க அரசியலமைப்பின் மிகக்கூடிய நீடிப்புக்கு, திருத்தச் செயன்முறைகளில் உள்ள சிக்கல்தன்மையே காரணம் எனலாம்.
மறுபுறத்தில் ஓர் அரசியல்யாப்பு வருங்காலத்துக்கு ஏற்றவகையில் நிலைத்திருக்க வேண்டுமானால் அது நெகிழும் தன்மை கொண்டதாகவும் வளரும் ஆற்றலுடைய தன்மை கொண்டதாகவும் இருக்கவேண்டும். மக்களின் தேவைகளுடன் இணைந்ததாக அரசியல் அமைப்புவளர்ந்திருக்க முடியாதிருந்திருந்தால், அமெரிக்காவின் 18ஆம் நூற்றாண்டுக்குரிய அரசியலமைப்பு குதிரை வண்டி ஒட்டிய கிராமிய வாழ்க்கைக் காலத்திலிருந்து செறிவான நகரங்களைக் கொண்ட காலம்வரை கால இடைவெளிகளைக் கடந்து நிலைத்திருக்க முடியாது. இந்த நெகிழும் தன்மை, அரசியலமைப்பிற்கான மேலதிக வியாக்கியானங்கள், வினாக்களை அளிப்பதற்கும், அரசியலமைப்பை விரிவு செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ளப்படலாம். இதே நோக்கில் அவசியமானதும் குறிப்பானதும் என்ற அடிப்படையிலான சட்டமன்ற அதிகாரங்கள் ஓர் அரசியலமைப்பின் வாழ்தகவை நீடித்துவைத்திருப்பதற்குரிய கருவிகளாக அமைகின்றன. இந்த 20ஆம் நூற்றாண்டிலும் கூட சில அரசியல் அமைப்புகள் உருவாவதும் உடன் வீழ்ச்சியடைவதுமாக உள்ளன. திருத்தங்கள் மூலம் அல்லது மீளக் கட்டமைப்பதன் மூலம் ஏதேனும் ஒரு வகையில் வளருகின்ற ஆற்றலைக் கொண்டிருந்தாலொழிய எந்த ஓர் அரசியலமைப்பும் நீடித்திருக்கமுடியாது.
24

V
அரசாங்கத்தின் அதிகாரங்கள் மீதான எல்லைகள்
இங்கு விபரிக்கப்பட்ட அரசியலமைப்பானது ஒரு மிகையான அதிகாரங்களைக் கொண்ட ஒர் அரசாங்கத்தை உருவாக்குகின்றது. அவ்வாறான ஒர் அரசாங்கம் அதன் பிரசைகளைத் தவறான முறையில் பயன்படுத்துவதால் அதிகளவு சக்தியைக் கொண்டிருக்கமுடியும். இதனால் ஒரு வலிமையான அரசாங்கத்திற்கான பொறிமுறையைத் தரக்கூடிய ஏதாவது நல்ல திட்டம் அரசாங்கம் தொழிற்படுவதற்குத் தேவையான அளவு அதிகாரத்தை வழங்கவேண்டும். அத்துடன் மறுபுறத்தில் பிரசையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்குப் போதுமான கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்கவேண்டும். இந்தக் காரணத்துக்காக ஓர் அரசியல்யாப்பானது தெளிவான, எளிமையான, நடைமுறைப்படுத்தக்கூடிய உரிமை மசோதாக்களை (bilsofights) உடையதாக இருக்கவேண்டும். ஒருவருடைய கொடுங்கோண்மையை இன்னொருவருக்கும் பிரதியீடு செய்யக்கூடியதாக இருக்கக்கூடாது.
1. பேச்சு, பத்திரிகை மற்றும் சமயச் சுதந்திரம்.
உரிமைகளுக்கான மசோதாக்களின் முன்னேற்பாடுகள் சில கீழே குறிப்பிடப்படுகின்றன.
(i) மக்கள் சமயச் சுதந்திரம் உடையவராய் இருத்தல் வேண்டும். அதாவது இருவேறுபட்ட விடயங்கள்-அதேவேளை இரண்டும் முக்கியமானவை. முதலாவது இரண்டாவதைவிடச் சிறிது கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது.
(அ) எந்த ஒரு மனிதனும் தனது விருப்பத்திற்கு எதிராக எந்தச் சமயத்தையும் பின்பற்றுமாறு வேண்டப்படக்கூடாது. ஒரு சமயத்திற்குப் பதிலாக இன்னொரு சமயத்தைப் பின்பற்றுவதற்காக அல்லது எச்சமயத்தையும் சாராமல் இருப்பதற்காக ஒருவருக்குத் தண்டனை வழங்கவோ அல்லது ஊறு விளைவிக்கவோ அல்லது தண்டனைக் குரியவராக்கவோ முடியாது. ஒவ்வொரு மனிதனும் சொந்தச் சமயத் தெரிவுபற்றிச் சுயமாக நடந்துகொள்ளவேண்டும்.
(ஆ). மேலதிகமாக அமெரிக்கா மற்றும் ஆங்கில நாடுகளில் சுதந்திரமான பின்பற்றுதலுக்கு இடமுள்ளமையினால்
25

Page 15
(ii)
அங்கு சமய ஸ்தாபனங்கள் (establishments) எவையும் இருக்கமுடியாது. இதன் கருத்து எந்த ஒரு குழந்தையும் அதற்கு விருப்பு இல்லாவிடத்துச் சமயப்பாடசாலைக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்தமுடியாது. அத்துடன் முக்கியமாகப் பொருளாதார அடிப்படையில் ஒருவர் அவர் வரிகொடுப்பதற்குத் தெரிவுசெய்யாத சமயத்துக்கு கட்டாய வரி அறவிடுதல் மூலம் பங்களிக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது. சமயச் சுதந்திரம் நன்கு நிலைநாட்டப்பட்டுள்ள வேறு சில நாடுகளில் ஒரு பிரசை சமய சேவைகளில் பங்குபற்றுமாறு அல்லது ஒரு குறிப்பிட்ட சமய உண்மையை வெளிப்படையாகத் தெரிவிக்குமாறு வேண்டப்படா திருக்கலாம். ஆனால் தேசீய சமயக் கருமங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வரிசெலுத்துமாறு வேண்டப்படலாம்.
ஒரு நாடு அரச மதமொன்றுக்குக் கட்டாய ஆதரவை வழங்கவேண்டும் என்ற உறுதியான மரபைக் கொண்டிருந்தால் அதனைத் தொடர அது முடிவு செய்யலாம். ஆனால் எல்லோரிடமிருந்தும் பொதுவான வரியை அறவிடுதல் தூரதிஷ்டவசமானது எனலாம். ஒரு நாடு சுதந்திரமாகச் சமயத்தைப் பின்பற்ற இட்மளிக்கா விட்டால் உண்மையிலேயே எப்பொழுதும் அது சுதந்திரமாக இருக்கமுடியாது. சமயத்துக்கு ஆதரவு கொடுக்கும்வகையில் வரி அறவிடுதல் உண்மைச் சுதந்திரத்திலிருந்து விலகிச் செல்வதைக் குறிக்கும். ஆனால் ஒரு பிரசை ஏதாயினும் ஒரு குறிப்பிட்ட சமயத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதை அது உறுதி செய்வதாக உள்ளது. இவற்றுள் பின்னையது ஒருவனது மனச்சாட்சிச் சுதந்திரத்தை (freedom of conscience), 96rld T6D6hlds (Soul) (5.5-iding. ஆதரவு என்பது அவனுடைய சமயத்துக்கே வழங்கப்படுகின்றது.
ஒரு மனிதன் கூறுகின்ற அல்லது பிரசுரிக்கின்ற எவற்றுக்கும் தண்டனை வழங்கப்படக்கூடாது. வெளிப்படையாக அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால், உதாரணமாக ஆயுதந் தாங்கிய கலகக்காரருடன் சேர்ந்து தலைநகரத் தாக்குதல் போன்ற சட்டரீதியற்ற செயல்களுக்காக, அவர் தண்டனைக்கு உட்படுகிறார். ஆனால் ஆதரித்துப் பேசும் உரிமை என்பது வித்தியாசமானது. ஆதரவாகப் பேசுதலுக்கும் செயலுக்கு மிடையே வித்தியாசம் காண்பது எப்பொழுதும் இலகுவானதல்ல. நடைமுறை சார்ந்த அம்சம் என்ற வகையில் இவற்றுக் கிடையே வேறுபாடுகள் காண்பது நல்லது. மேலே எடுத்துக்
26

காட்டப்பட்டதுபோல இருந்தால் ஆட்கொணர்வு மனுமீதான பிரசையின் உரிமை அல்லது அதன் உள்ளூருக்குரிய வேறுபாடுகள் சுதந்திர மக்களின் மிக முக்கிய உரிமையாகும். இது பாரபட்சமான, முறையில் ஒருவரைச் சிறையிலிடு வதிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது. சுதந்திரமான மக்களின் அடுத்து முக்கியத்துவம் பெறும் உரிமைகளாகப் பேச்சுச் சுதந்திரத்தையும், பத்திரிகைச் சுதந்திரத்தையும் குறிப்பிடலாம். விழுமியங்கள் பற்றிய அளவீட்டில் இவை முதன்மையிடம் பெறுகின்றன. ஒருவர் தனது அரசாங்கத்தின் மீது திருப்தி யற்றவராகக் காணப்பட்டால், அதுபற்றிக் கூறுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. அல்லது திருப்தியீனத்துக்கான காரணத்தைத் தமது அயலவர்களுக்கு எடுத்துக் கூற விரும்பினால் அவ்வாறு செய்யவும் சகல விதமான உரிமையுண்டு.
பேச்சுச் சுதந்திரத்திற்கும் பத்திரிகைச் சுதந்திரத்திற்கும் துணையாக, மக்கள் ஒன்று கூடுவதற்கும், மக்களுடைய மனக் குறையைப் போக்குவதற்கு அரசாங்கத்துக்கு மனுச் செய்வதற்கும் உரிமை உண்டு. மக்கள் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதற்கு ஒன்று கூடாவிட்டால் பேச்சுச் சுதந்திரம் பெறுமதி மிக்கதாக இருக்கமுடியாது. தமது விரக்தியை அரசாங்கத்துக்குத் தெரிவிக்காமல் இருந்தாலும் பேச்சுச் சுதந்திரத்தினால் எவ்வித பயனும் இல்லை. இருப்பினும்ப்ேச்சுச் சுதந்திர உரிமை , ஒன்று கூடுவதற்கான உரிமை, மனக் குறைகளை மனுச் செய்வதற்கான உரிமை ஆகியனவெல்லாம் வழக்கமான ஒன்றாகக் கருதப்படுகின்றன. மேலே விபரிக்கப்பட்ட இவ்வாறான உரிமைகளெல்லாம் மக்களுடைய முக்கிய சமய மற்றும் அரசியல் சுதந்திரங்களாகும்.
2. குற்றவியல் சட்ட நிர்வாகம்.
ஒவ்வொரு சமுதாயத்திலும் மிகப்பழைய காலந்தொட்டு, நிலவிவந்த கொடூரச் செயல்களின் முக்கிய கருவிகள் எல்லாம் குற்றவியல் சட்டத்தின் (CriminalLaw) உபயோகத்தில் இடம்பெற்றுள்ளன. இதனுடைய பிரதான அடிப்படையாக இத்தகைய கொடூரச் செயல்கள் தனியாட்களின் சொத்துக்கள் பறிமுதலாகும் சந்தர்ப்பத்திலும் மற்றும் அவர் சிறையிலிடப்படும் போதும் வெளிக்காட்டப்படுகின்றது. ஒருவேளை சித்திரவதைக்குள்ளாகும்போது அல்லது எவ்வித முக்கியமான சட்டத்தையும் மீறாமல் இருக்கும்போது மரணமடைதல் அல்லது அவருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் இருக்கும்போது இது
27

Page 16
வெளிப்படலாம். இவ்விதமான துஷ்பிரயோகத்தை எந்தச் சுதந்திரநாடும் அனுமதிக்காது. அவற்றினுடைய கட்டுப்பாடுகள் அநேகமான சட்டங்களையும் அவை வன்மையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதையும் வேண்டிநிற்கின்றன. முன்னேற்றமடைந்த சமுதாய மொன்றின் முக்கிய தேவைகள் பின்வருமாறு;
(i)
(ii)
இரகசியப் பொலிசாரால் அல்லது பொதுமக்களால் ஒருவருடைய வீடு உடைக்கப்பட்டுத் தேடுதலுக்கு உட்படுத்தப்படக்கூடாது. தேடுதல் செய்வதற்கான பொருத்தமான காரணத்தினை நீதிமன்றம் காட்டுவதனை அடிப்படையாகக் கொண்டு அது நிகழலாம். அவ்வாறே எவ்வித கட்டளையுமின்றி ஒருவரைப் பொலிசார் கைது செய்யமுடியாது. அவ்வாறான நீதிமன்றக் கட்டளைகள் இன்றிக் குற்றச் செயல்புரிகின்றவர்களைப் பொலிசார் கைது செய்யக்கூடாது என அவை கூறவில்லை. ஒருவருடைய வீட்டை உடைப்பதை அல்லது குற்றங்கள் புரிவதைப் பொலிசார் கண்டால் நிச்சயமாக அவர்களைக் கைதுசெய்யலாம். முன்னைய சில சந்தர்ப்பங்களில் அவ்வாறான குற்றங்கள் புரியப்பட்டுள்ளன எனக் காட்டிக் கைது செய்வதற்கு முன்னர் அவை நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தப் படவேண்டும்.
நவீன காலத்தில் மிகவும் அச்சமூட்டுகின்ற விடயமாக உண்மையான அல்லது கற்பனை செய்யப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக வீட்டு உரிமையாளரைக் கைது செய்ய நடுச் சாமத்தில் பொலிசார் வீட்டுக் கதவைத்தட்டுதல் கூறப்படுகின்றது. இவ்வாறான அதிகாரங்கள் நேர்மையான அல்லது உரியவற்றைச் செய்யக்கூடியவாறு பாதுகாக்கப்பட வேண்டும். இச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசு செயலிழந்து போகக் கூடாது. இவ்வாறான துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான சிறந்த முறையாகக் கைதுசெய்தலை அல்லது தேடுதலை நியாயப்படுத்தும் கட்டளையொன்றினை உண்மையான சில சான்றுகளின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளலைக் கூறலாம்.
அரசாங்கத்தின் முக்கியமான சட்டங்களை ஒருவர் மீறினார் என்பதற்கான தகுந்த, எழுத்துமூலமான குற்றச்சாட்டுகளின்றி அவர் கைது செய்யப்படுதலாகாது. ஏதாயினும் ஒரு குற்றச் செயலை இழைத்தார் என ஒருவர் குற்றஞ்சாட்டப்படுமிடத்து, அதன் உண்மை இயல்பை அறிய அவருக்கு உரித்துண்டு. அக்குற்றச்சாட்டு வலுவற்றது எனின் ஆட்கொணர்வு மனு அல்லது அதற்கு இணையான சட்டப்படி அவர் விடுதலை செய்யப்படவேண்டும்.
28

(iii)
(iv)
(v)
(vi)
ஓர் அரசு அதன் பிரசைகளைத் துஷ்பிரயோகம் செய்யும் ஒரு வழியாக ஒரே குற்றச் செயலுக்காகப் பல முறை குற்றம் சாட்டப்படுவதைக் கூறலாம். ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு அவர் குற்றம் இழைக்கவில்லை எனக் கண்டால், அதே குற்றத்துக்காக அவர் மீண்டும் குற்றஞ்சாட்டப்படக்கூடாது. இவ்வாறு அரசாங்கம் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவதால் மக்களையும் அவர்களுடைய வாழ்க்கையையும் சிதைத்துவிடக்கூடாது.
ஒருவர் தமக்குச் சார்பாகச் சாட்சியமளிக்குமாறு வேண்டப்பட லாகாது. இன்று உலகின் எல்லாப் பகுதிகளிலும் கொடுங் கோலாட்சியாளரின் மாபெரும் துஷ்பிரயோகம் என்னவெனில் சிறைக் கைதிகளைத் துன்புறுத்துதலாகும். இது நிச்சயமாகத் தடைசெய்யப்படவேண்டியது. சித்தரவதை செய்வதைக் குறைக்கும் ஒரு வழியாக, தனியாள் ஒருவர் தானே பரிசீலிக்கச் சந்தர்ப்பம் வழங்காமல் இருத்தலாகும். அவ்வாறு அவர் செய்யவேண்டியதில்லை. அத்துடன் அவ்வாறு தன்னிச்சையாகக் குற்றத்தை ஒப்புக்கொள்ளுதல் நீதி மன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. சித்திரவதை செய்தலுக்கான தூண்டுதல் குறைக்கப்படுகின்றது.
ஒரு குற்றத்தின்பேரில் குற்றஞ்சாட்டப்படும் ஒவ்வொரு ஆளும் நாட்டின் சட்டப்படி நன்கு பரிசோதிக்கப்பட உரிமையுடையவர். இதன் பொருள் என்னவெனில், நீதிமன்றத்தின் ஒழுங்கு விதிப்படி, சட்டத்தில் தெரிவிக்கப்பட்டதுபோன்று மற்றும் எதிராளிக்கு என்னென்ன சுதந்திரங்கள் உண்டோ அவற்றையெல்லாம் அவர் எப்பொழுதும் அனுபவிக்க இடமளிக்கப்படவேண்டும். வழக்குகளுக்கான ஒழுங்குகள் நாட்டின் மரபுகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படலாம். ஆயினும் சட்டவுரிமைகள் எவற்றையும் மீறக்கூடாது. உதாரணமாக, குற்றச்சாட்டுக்கள் எவையுமின்றிச் சிறையில் வைத்திருப்பதி லிருந்து சுதந்திரம் அல்லது சித்திரவதையிலிருந்து விடுதலை ஆகியவற்றைக் கூறலாம்.
நீதிமன்றத்தில் ஒருவருடைய குற்றத்துக்கு எதிரான சாட்சியங்களை விசாரணை செய்யாமலும், அக் குற்றச்சாட்டுக்கான காரணங்களில் உள்ள உண்மைத் தன்மையைப் பரிசீலனை செய்யாமலும் எந்தவொருவரும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கமுடியாது. சாட்சியங்களை வைத்திருக்க ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. சாட்சி அவசியம் எனக் கண்டால் அச் சாட்சியை நீதிமன்றுக்கு
29

Page 17
வரவழைக்கலாம். அத்துடன் ஒருவர் வழக்கறிஞரை ஏற்பாடு செய்யவும் உரித்துடையவர்.
(vi) ஒரு குற்றத்துக்காகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை வழக்குக்காகச் சிறைச்சாலையில் நீண்டகாலம் தாமதித்து வைத் திருக்கப்படலாகாது. குற்றவாளி தப்பியோட முயற்சித்தார் அல்லது ஏனைய சில குற்றங்களைச் செய்ய எத்தனித்தார் என்ற காரணங்கள் எவற்றையும் நீதிமன்றம் சமர்ப்பிக்காவிட்டால், வேண்டிய காலத்தில் அவர்நீதிமன்றத்தில் தோற்றுவார் என்ற உறுதிப்பாட்டுடன் பிணையில் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்படலாம். தண்டம் உயர்வாக விதிக்கப்படக்கூடாது. நாட்டின் மரபுகளுக்குத் தக்க அது வரையறுக்கப்படல் வேண்டும் , குரூரமான அல்லது வழக்கத்துக்கு முரணான தண்டனை விதிக்கப்படக்கூடாது. எது வழக்கத்துக்கு முரணானது அல்லது குரூரமானது என்பது நாட்டின் மரபுக்கு அமைய அளவிடப்படும். உதாரணத்துக்கு, குறியிடுதல், வெட்டுதல் அல்லது அடித்தல் (whipping)போன்ற
தண்டனைகளுக்கு இடமளிக்கப்படக்கூடாது.
VI
சமத்துவம் பற்றிய அடிப்படை உரிமை
சுதந்திரமுள்ள சகல மக்களும் ஒரே விதமாக நடத்தப்படவேண்டும் என்பது அவர்களது அடிப்படை ஒழுக்கம் சார்ந்த உரிமையாகும். செல்வந்தர்களுக்கு ஒரு சட்டமும் ஏழைகளுக்கு இன்னொரு சட்டமும் அங்கு இருக்கமுடியாது. இந்தச் சமயத்துக்கு ஒன்று ஏனையதற்கு இன்னொன்று, நட்பு நாடுகளுக்கு ஒன்று, விமர்சிப்போருக்கு இன்னொன்று எனவும் சட்டங்கள் இருத்தலாகாது. சகல மக்களும் சமமாக வாழ்வார்கள் என்பதற்கு அரசு உத்தரவாதமளிக்கமுடியாது. அத்துடன் அது அரசின் பொறுப்புமன்று. சிலர் பிறப்புக் காரணமாக அல்லது ஆற்றல் அல்லது சந்தர்ப்பம் காரணமாக ஏனையவர்களிலும் பார்க்க நன்மையடைபவர்களாக இருப்பர். இவ்வாறான சமநிலையின்மைகளைப் பேண அரசும் இடமளிக்கலாம். எனினும் அவற்றை நீக்குவதற்கு முயற்சியும் எடுக்கலாம். உதாரணமாக, ஏழைகளுக்கு நிவாரணம் கொடுத்தல். ஆயினும் எச்சந்தர்ப்பத்திலாயினும் மேலதிக சமநிலையின்மைகளைத் திணிக்கக்கூடாது. மக்கள் எல்லோரும் சமமாக வ்ாழ நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பிரான்ஸ் நாட்டின் 1789ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் அடிப்படைக் கோட்பாடாகவும் இது அமைந்தது. 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட
30

அமெரிக்க அரசியல் யாப்பிலும் இது ஓரளவுக்கு இடம் பெற்றிருந்தது. அதிலே எந்தவொரு பிரசையும் சட்டத்தின் மூலம் வழங்கப்படும் சலுகைகளையும், பாதுகாப்பையும் மறுக்கப்படக்கூடாது என்றும் , அத்துடன் 1868 இல் முறைப்படி எழுதப்பட்ட அரசியல் யாப்பில் தனது அதிகார எல்லைக்குள் சட்டத்தின் மூலமான சமமான பாதுகாப்பை எந்தவொருவருக்கும் மறுக்கக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
V
முடிவுரை
சுதந்திரமான மக்களின் எந்தவொரு அரசாங்க அமைப்பும் கூடிய அல்லது குறைந்த அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரிவுகளைக் கொண்டிருக்கும். அவற்றுள் பிரதானமானவை பின்வருமாறு; இவையின்றிச் சுதந்திரம் நிலவமுடியாது.
1.
ஆட்சிநடத்துவதற்கு அரசாங்கம் சக்திமிக்கதாக விளங்க வேண்டும். சுதந்திரமான முறையில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் வரி அறவிடுவதற்கும் அவற்றைச் செலவு செய்வதற்கும் மற்றும் நாட்டைப் பாதுகாப்பதற்குமான அதிகாரமுடையவர்களாக இருக்கவேண்டும்.
நிறைவேற்றுனர்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரமுடையவர்களாக இருத்தல் வேண்டும். நீதித்துறைச் சட்டங்களுக்கு விளங்கங்கொடுக்கும் ஆற்றலுடையதாகவும், அவற்றை அமுல்படுத்துவதற்கு உதவுவதாகவும் இருத்தல் வேண்டும். பிரசைகள் தமது பிரதிநிதிகளுக்கு சுதந்திரமானமுறையிலும் சம உரிமையுடனும் வாக்களிக்க வேண்டும். ஆங்கில - அமெரிக்க ஆட்கொணர்வு மனு உரிமைக்கு ஏற்ப இணையான அம்சங்கள் சிலவற்றைக் கொண்டிருக்கவேண்டும். அவர்கள் பேச்சுச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் உரிமை LD63rdie56) passir Luibi LDgld Gafissi) (petition forredress of grievances) போன்ற உரிமையுடையோராயும் இருத்தல் வேண்டும். ஒரு செயலுக்காக அவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தால், அவர்கள் சட்டத்திற்கு அமையவே செயற்படலாம். வழக்குத் தொடரும் உரிமையும் உண்டு. சட்டமும் மக்களை எவ்வித பாகு பாடுமின்றி நடத்தவேண்டும். மக்கள் சகலரும் சட்டத்தின் மூலம் பாதுகாப்பைப் பெற உரித்துடையவர்கள்.
★女★
31

Page 18

பகுதி II
அறிமுகம் : தொடர்ந்து கடைப்பிடிப்பு, தேய்வு, செயலின்மை மற்றும் புதிதாக்கம்
லரி டையமன்ட்
தமிழாக்கம்
டி.தனராஜ் செயற்றிட்ட அதிகாரி
கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித்துறை தேசியக்கல்வி நிறுவகம், மகரகம.
பொதுசனக் கல்வி நிகழ்ச்சித்திட்டம் மார்கா நிறுவகம்

Page 19

அறிமுகம் : தொடர்ந்து கடைப்பிடிப்பு, தேய்வு, செயலின்மை
மற்றும் புதிதாக்கம்
அறிமுகம்
இக் கட்டுரையில் கூறப்படும் சனநாயக அரசாங்கம் தொடர்பானவை பரந்துபட்ட அநுபவங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக இந்தியா அபிவிருத்தியடைந்து வரும் உலகில் முக்கிய சனநாயக அரண்களில் ஒன்றாக ஆச்சரியப்படும்வண்ணம் நிமிர்ந்து நிற்கிறது. அந்நாட்டில் சனநாயக நிறுவனங்களிற் படிப்படியாக ஏற்பட்டுவரும் தேய்வு, இந்திராகாந்தியின் காலத்தில் அமுல் நடத்தப்பட்ட இரண்டாண்டு கால அவசரகால ஆட்சி மற்றும் அவரது மகனாக ராஜீவ் காந்தியின் காலத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் ஆகியவை சனநாயக முறைமையில் இந்தியாவுக்கிருக்கும் நம்பிக்கையை அசைக்க முடியவில்லை. அதேபோல பப்புவா நியூகினி மிகக் குறைந்தகாலமே ஒரு சுதந்திரநாடு என்னும் அந்தஸ்த்தைக் கொண்டிருந்தபோதும் அந்நாட்டிற் பலநூறு பிரிவுகள் இருந்தபோதும் உயிரோட்டமுள்ள ஒரு சனநாயக முறைமையைக் கட்டியெழுப்பியுள்ளது.
இந்தியா, பப்புவாநியூகினி தவிர வேறு எந்த ஆசியநாடுகளும் (அவை நமது ஆய்வுக்குட்பட்டவைகளாகவோ அல்லாதவைகளாகவோ இருக்கலாம்.) தொடர்ச்சியாகச் சனநாயக முறைமையை வெற்றிகரமாகப் பேணிவந்துள்ளன எனக் கூறமுடியாது. எனினும் துருக்கி இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் கடந்த 40 ஆண்டுகளாகத் தாராள சனநாயகத்தைப் (Liberal Democracy) பேணிவந்துள்ளது. அதன் பின்னர் இரண்டாம்இராணுவத் தலையீட்டுக்குப் பின்னர் துருக்கி ஒரு போட்டி நிறைந்த ( தாராள சிந்தை குறைவடைந்தபோதும்) சனநாயக முறைமையை உருவாக்கியுள்ளது. இன்று அந்நாடு சனநாயகத்தை உறுதிப்படுத்தும் பாதையில் விரைந்துநடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அண்மைக்காலத்தில் சனநாயகநிலை மாற்றம் (democratic transitions) பெற்ற பிலிப்பைன்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளின் தலைவிதி நிச்சயமற்ற நிலையிலேயே காணப்படுகிறது. எனினும் இந்நாடுகளில் அதிகாரத்துவ ஆட்சி நிச்சயமாக அகற்றப்பட்டுள்ளது. அண்மைக்காலத் தேர்தல்கள் சனநாயகத்தின்மீது மக்களும் கற்றோர் குழாமும் கொண்டிருக்கும் நம்பிக்கையை மீள உறுதிப்படுத்தியுள்ளன. சனநாயகத்தை உறுதிப்படுத்துவதில் இவ்விருநாடுகளும் வேறுபட்ட
35

Page 20
சவால்களை எதிர்நோக்குகின்றன. ஒரு நாட்டில் அரசியல் ஒழுங்கின்மை காணப்படுகிறது. இன்னொரு நாட்டில் மிகையான அதிகாரத்துவக் கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. எனினும் இவ்விருநாடுகளும் ஆசியாவில் சனநாயத்தின் எதிர்காலத்துக்குச் சோதனைக்களமாகத் திகழ்கின்றன.
பாகிஸ்தானில் ஏற்பட்டுவரும் சனநாயக மாற்றம் படிப்படியானது. அத்துடன் இராணுவத் தலைவரின் கட்டுப்பாடுகளுக்கும் தலையீடுகளுக்கும் உள்ளாகக் கூடியது. எனினும் அந்நாட்டில் அரசியல் அதிகாரம் இராணுவத்திடமிருந்து தெரிவுசெய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகளிடம் மாறிக்கொண்டிருக்கிறது. இங்கு ஆய்வுக்குட்பட்டுள்ள பத்துநாடுகளைத் தவிர ஆசியாவின் ஏனைய பகுதிகளில் சனநாயகத்துக்கான இயக்கங்கள் மிகவும் மெதுவாகவே முன்னேறுகின்றன. தாய்வானில் தீவிர கட்டுப்பாடுகளும், நிறுவன ரீதியான உயர்மட்ட வழிநடத்தல்களும் காணப்படுகின்றன. பங்களாதேஷ்சில் அரசியல் எதிர்துருவமாக்கலும் (political polarization) அரசாங்க எதிர்ப்பும் ஒடுக்கலும் காணப்படுகின்றன.
எஞ்சியுள்ள நான்கு ஆய்வுகளும் ஆசியாவிலுள்ள அரை சனநாயக (semi democratic) மற்றும் அதிகாரத்துவக் குழுக்கள் பற்றியன. இவைகள் பெரிதும் வேறுபட்ட தோற்றப்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன. இலங்கையிலும், மலேசியாவிலும் சனநாயகப் பண்புக்கூறுகளானது இனத்துவப்பாகுபாடுகள் , மற்றும் வன்முறைகள் காரணமாக நொறுக்கப்பட்டு இன்று தேய்ந்து மங்கி மறையும் நிலையிற் காணப்படுகின்றன. இனத்துவ வன்முறைபற்றிய அனுபவமும், பயமும் மலேசியாவில் அரசியல் மீளமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இம் மீளமைப்பில் மலே இனத்தவர்களுக்கு அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள கட்சிகளின் கூட்டமைப்பு ஊடாக உறுதியான பாராளுமன்றப் பெரும்பான்மையை உருவாக்கும் வண்ணம் போட்டித் தன்மையானது வரையறை செய்யப்பட்டுள்ளது. பேச்சுரிமை என்பது உணர்ச்சி பூர்வமான விடயங்களான இனத்துவப் பிணக்குகள் மற்றும் பேரினவாதம் ஆகியவற்றைத் தொட்டுவிடாதவண்ணம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான மீளமைப்பு பாராளுமன்ற சனநாயகத்தை ஒரு அரை சனநாயகத்தன்மைக்குக் குறைத்துவிட்டபொழுதினும் இனத்துவ சமாதானம், அரசியல் உறுதிப்பாடு மற்றும் சமூக பொருளாதார வளம் ஆகியவற்றையும் ஏற்படுத்தியுள்ளது என்பதையும் மறுக்கமுடியாது. இதற்கு மறுதலையாக, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் மிக வெற்றிகரமான சனநாயகங்களில் ஒன்றான இலங்கையில் ஓர் உள்நாட்டு யுத்தம் , காரணமாகச் சனநாயகம் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நாட்டில் தற்போதுள்ள இந்நிலைமையானது அரசியற் கட்டுக் கோப்பையும் சமூகத்தையும் சேதப்படுத்தியுள்ளதுடன் பல தசாப்தங்கள் சென்ற பின்னரும் கட்டியெழுப்பப்பட முடியாதவண்ணம் பொருளாதாரத் தையும் சீர்குலைத்துள்ளது.
36

தாய்லாந்திலும், இந்தோனேஷியாவிலும் மத்தியமயப்படுத்தப்பட்ட அதிகாரத்துவ அரசியல்பாங்கு காணப்படுவதாகக் கொள்ளலாம். இந்நாடுகளில் அதிகாரத்தின் பெரும் பகுதியை இராணுவமே கொண்டிருப்பதுடன் சமூகத்திலும் அரசாங்கத்திலும் சகல நிறுவனத் துறைகளிலும் ஊடுருவக்கூடிய வல்லமையையும் கொண்டுள்ளது. ஆனால் இங்கும் கூட சனநாயம் மற்றும் சனநாயகப்படுத்தல் தொடர்பாகப் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. தாய்லாந்தில் காணப்படும் பல்கட்சிப் பாராளுமன்ற முறைமையானது (பலவீனமான நிறுவனப்படுத்தலைக் கொண்டிருந்தபோதும் கூட) ஒரளவு பிரதிநிதித்துவத்தையும் , போட்டியையும், இராணுவ மேலாண்ம்ைக்கு எதிரான தடைகளையும் கொண்டுள்ளது. இந்தோனேஷியாவில் அரசியற் கட்சிகளும், தேர்தல் போட்டிகளும் இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகியுள்ளன. பாராளுமன்ற நிறுவனங்கள் இராணுவ ஆட்சியை மூடித்திரையிடுகின்றன. குடிசார், அரசியல் உரிமைகள் கடுமையாக நசுக்கப்படுகின்றன. சனநாயகப்படுத்தலுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே தென்படுகின்றன. எனினும் இந்தோனேஷியாவை வியட்னாமுடன் அல்லது சீனாவுடன் ஒப்பிட்டுவிடமுடியாது. அங்கு பன்மைவாதத்துக்குச் (pluralism) சார்பான உண்மையான வாய்ப்புகள் காணப்படுகின்றன. பொருளாதாரம் வளர்ந்து அரச கட்டுப்பாடுகள் தளர்ச்சியடையும்போது இவ்வாய்ப்புகள் வளர்ந்து, பெருகிச் சிலவேளை அரசியற் சுதந்திரம் கோரப்படவேண்டியும் ஏற்படலாம்.
சனநாயக அந்தஸ்துகள், அனுபவங்கள் பற்றிய இத்தகைய பாரிய வேறுபாடுகளானது நாடுகளைத் தொகுத்துப் பார்க்கும் போது தெளிவாகின்றன. கிழக்கு அல்லது தென்கிழக்கு ஆசிய் நாடுகளில் ஏதாவதொன்றைப் பொதுமைப்படுத்த முயல்வது மிகவும் சிக்கலான விடயமாகும். இந்நாடுகளில் பெளத்த, கன்பூசிய, முஸ்லீம், இந்து, கிறிஸ்தவ மரபுரிமைகள் மிகவும் மாறுபட்டவை. இந்த நாடுகளில் இம்மதங்களுக்கிடையேயான பிரிவுகளையும், கலப்புகளையும் பற்றிக் கூறவே வேண்டியதில்லை. தென்னாசியாவில் குறிப்பாக இந்தியாவில் வேறுபட்ட கலாசாரக், காலனித்துவ மரபுரிமைகளை நாம் காணமுடியும். அதே நேரத்தில் இவை ஏழ்மைநிறைந்த பொருளாதாரங்களாகவும் குறைவிருத்திச் சமூகங்களாவும் இருக்கின்றன. துருக்கியைப் பொறுத்தவரையில் ஒர் ஆசிய நாடு என்ற வரையறைக்குள் பருமட்டாகவே கொண்டுவரமுடியும். அதனை நாம் இத் தொகுதிக்குள் இணைத்துக் கொண்டதே மத்திய கிழக்கு அல்லது தென் ஐரோப்பா என்னும் தொகுதி இல்லாத காரணத்தினால்தான். இந்நாடுகளுக் கிடையிலான வித்தியாசங்களைப் பட்டியற்படுத்தினால் அது மிக நீண்டதாக இருக்கும். அவ்வித்தியாசங்கள் அவற்றின் இனத்துவ அமைப்பு, வகுப்புகள், பொருளாதாரம், மற்றும் அவற்றிற்கெதிரான சர்வதேச அச்சுறுத்தல்கள்
37

Page 21
மற்றும் பாதுகாப்பின்மைகள் முதலியவற்றைத் தழுவி நிற்கும். எனினும் இத்தகைய பாரிய வேறுபாடுகள் நமக்குப் பெரும் சவால்களாக விளங்குவதோடு அறிவுடைமைக்கு ஒரு சந்தர்ப்பத்தையும் வழங்குகின்றன. ஏனெனில் இந்த ஆய்வில் முன்வைத்த வினாவை ஆராய்வதற்கு (தீர்ப்பதற்கு அல்ல) நிறையத் தரவுகளை வழங்குகின்றது. அக்கேள்வி “ ஆசியாவிலும் வளர்முக நாடுகளிலும் சனநாயக அனுபவங்களின் வேறுபட்ட விளைவுகளை எவ்வாறு விளக்குவது?” என்பதே.
ஆசியாவில் சனநாயகத்தின் சரிவு
இத்தொகுதியிலுள்ள பத்து நாடுகளும் தாராள சனநாயகம் (நமது முன்னுரையில் கொடுக்கப்பட்டுள்ள வரைவிலக்கணம் சார்ந்த) தொடர்பான அனுபவங்களைப் பெற்றுள்ளன. இப்பத்து நாடுகளிலும்பப்புவா நியூகினி மட்டுமே இடையிற் தடங்கல் அல்லது சரிவுகளற்ற சனநாயத்தைக் கொண்டுள்ளது. ஆசியாவில் சனநாயகத்தின் தோல்வி பற்றித் தீர்மானமான கருத்துக்களைக் கொண்டுள்ளவர்கள், சனநாயகம் சரிவடைந்த சந்தர்ப்பங்களையும் செய்முறைகளையும் சிந்திக்கவேண்டும். சனநாயகத்தின் தோல்வியை நாம் எவ்வாறு வகைப்படுத்திய போதிலும் (குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளை இழத்தல், சனநாயக செய்முறை தற்காலிகமாகப் பாதிக்கப்படுதல் , சனநாயக முறைமை முற்றாக மாற்றப்படுதல் போன்றவை) ஒரு விடயம் தெளிவானது. அதாவது முன்னர் ஜரோப்பாவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் நடத்திய 4 தொகுதிகள் கொண்ட ஆய்வு காட்டியது போல ஆசியாவிலும் சனநாயகத்தின் சரிவு தவிர்க்கமுடியாத நிகழ்வுகள்அல்ல. மாறாக, அரசியல் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களின் தெரிவுகள், தீர்மானங்கள், விழுமியங்கள், மற்றும் நடவடிக்கைகள் சனநாயத்தின் வீழ்ச்சிக்குக் காலாக இருந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இராணுவமே சனநாயக முறைய்ை மாற்றியபொழுதினும் அதற்குக் காரணமான தெரிவுகள், தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் ஆரம்பத்தில் அரசியல் தலைவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன என்பதும் இங்கு குறிப்பிடப்படவேண்டியதாகும்.
ஆசியாவில் மட்டுமன்றிச் சகல நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் நடந்தேறியதைப் போலவே இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஆசியாவிலும் எதேச்சாதிகாரம் தோற்றம் பெற்றது. எவ்வகையிலேனும் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள யாராவது ஓர் ஆட்சியாளன் கொண்ட வேட்கையிலேயே எதேச்சாதிகாரத்தின் ஆரம்பத்தைக் காணலாம். இந்திராகாந்தி 1975ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆந் திகதி
38

அவசரகால ஆட்சியைப் பிரகடனம் செய்தமைக்குப் பல்வேறு வியாக்கியானங்கள் சொல்லப்படுகின்றன. இந்திராகாந்தி தனது நடவடிக்கைக்கு, ஒழுங்குக்கும் அபிவிருத்திச் செய்முறைக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தல், விரைவான அபிவிருத்திக்கு உறுதியான அரசு மற்றும் அரசியற் கட்டொழுங்கு முதலியவற்றைக் காரணம் காட்டினார். எனினும் அவரது சொந்த அரசியல் அதிகாரத்துக்கு எதிரான (1971 தேர்தல் முடிவுகள் தொடர்பான) நீதிமன்றத் தீர்ப்பும் எதிர்க்கட்சிகளின் தேர்தல் வெற்றிகளும் இதில் கணிசமான செல்வாக்குச் செலுத்தியுள்ளன என்பது உண்மையாகும். இது தொடர்பாக இத் தொகுதியில் எழுதியுள்ள ஜித்திரிந்திர தாஸ் குப்தா (Jyotirindra Das Gupta) பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“தனது கட்சியையும் தனது சனநாயக மேலாண்மையையும் உறுதிப்படுத்துவதற்குத் தனது வெகுஜன அபிமானத்தைப் பயன்படுத்தும் வகையிலான ஒரு நிறுவனம் சார்ந்த ஒரு முறையைப் பொறுமையுடன் உருவாக்குவதை அவர் தெரிவு செய்யவில்லை. மாறாகத் தனது எதிரிகளை நசுக்குவதற்கு நிச்சயமான வழிமுறையாக அரசியல் யாப்பிலுள்ள அவசரகால ஏற்பாடுகளையே அவர் தெரிவு செய்தார். 21 மாதங்களுக்குப் பின்னர் அவரது தெரிவு அவருக்கு எதிராகவே திரும்பியது.”
இந்திய அரசியல் யாப்பு அவருக்கு வழங்கிய அவசரகால அதிகாரங்களை அவர் துஷ்பிரயோகம் செய்திருக்கக்கூடும். ஆனால் அவரை அதிகாரத்தில் அமர்த்திய அரசியல் யாப்பு முறையைத் தூக்கியெறிய அவர் முற் படவில்லை. அதேபோல இலங்கையில் அமைதியாக ஆனால் உறுதியாக ஏற்பட்ட சனநாயத்தின் தேய்வு அரசியற் கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகளாலும் அவர்களின் தெரிவுகளாலுமே ஏற்பட்டது. சனநாயகம் என்ற பெயரில் அவர்கள் அரசியல் யாப்புச் செய்முறையின் கழுத்தைத் திருகினார்கள். இலங்கை பற்றிய தனது அத்தியாயத்தில் Desti ir56 FT FT uġ56ofsiivo (Urmila Phadnis) Ssir6(U5LDTgpy sal-gpyed ApTir.
"இலங்கைச் சனநாயத்தின் சீரழிவில் மிக முக்கியமான திருப்புமுனை 1970ஆம் ஆண்டுத் தேர்தல்களில் இடதுசாரி ஐக்கிய முன்னணி பெற்ற மாபெரும் வெற்றியாகும். அவர்கள் பின்னர் தமது மேலதிகமான பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி 1972 ஆம் ஆண்டில் ஒரு புதிய அரசியல்யாப்பை உருவாக்கியதுடன் (சனநாயகமற்ற முறையில்) தமக்கு வசதியாகத் தமது பதவிக்காலத்தையும் இரண்டு ஆண்டுகளால் நீடித்துக்கொண்டனர். அதேநேரத்தில்
39

Page 22
திருமதி. பண்டாரநாயக்காவின் ஐக்கிய முன்னணி அரசாங்கம் அவசரகால விதிகளைத் தாராளமாகப் பயன்படுத்திஉரிமைகள் மனுவைத் (Bill of Rights) தடைசெய்ததுடன் நிர்வாகத் துறையைக் கட்டுப்படுத்தக்கூடிய, சட்டவாக்கத்துறைக்கும் நீதித்துறைக்கும் உள்ள வலிமையையும் வரையறைப் படுத்தியது.”
இலங்கையில் 1952 ஆம் ஆண்டு முதல் பிரதான கட்சிகள் இரண்டும் மாறிமாறிப் பதவிக்கு வந்துள்ளன. இது ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இவ்வாறு நிலைத்த ஒருபாரம்பரியத்தைத் தூக்கியெறிந்தமை ஒரு பாரதூரமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது. 1977இல் ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் ஐக்கிய தேசியக்கட்சி மிகப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுப் பதவிக்கு வந்தபோது தானும் தனது பங்குக்கு ஒரு புதிய அரசியல் யாப்பினை (எதிர்க்கட்சி ஏற்றுக்கொள்ளாத) உருவாக்கியதுடன் தனது பதவிக்காலத்தையும் (இம்முறை 5 வருடங்கள்) நீடித்துக் கொண்டார். அத்துடன் சனாதிபதி முறை ஏற்படுத்தப்பட்டதால் சட்டவாக்கத் துறையினதும் நீதித்துறையினதும் சுதந்திரம் மேலும் பாதிக்கப்பட்டது. சனநாயக முறைமைக்கு எதிராகச் செய்யப்பட்ட இந்தத் துஷ்பிரயோகங்களுக்கு அமைப்புரீதியான பிரச்சினைகளும் சந்தர்ப்பங்களும் காரணமாயிருந் துள்ளன. அதே நேரத்தில் சூழ்நிலைகள் குறிப்பாகத் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான நெருக்கடி நிலைமைகளின் காரணமாகவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவேண்டியிருந்தன என வாதிடுபவர்களும் உள்ளனர். ஆனால் அவர்கள் ஒன்றை மனதிற் கொள்ளவேண்டும். அதாவது 1970ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னரே சிறுபான்மையினரான தமிழர்களின் உரிமை உணர்வுகள் தனிநாட்டுக் கோரிக்கையாக உருப்பெற்றன. அரசாங்கத்தின் பெரும்பான்மைச் சிங்களவர்களுக்குச் "சார்பான நடவடிக்கைகள்" (Affirmative Action) தமிழர்களுக்கு வேறு வழியில்லாத நிலையை உருவாக்கின.
மலேசியாவின் "அரை சனநாயகம்" (Semi Democracy) இலங்கையின் அனுபவத்துடன் பல வழிகளில் முரண்படுகிறது. இங்கு மக்களின் கருத்தொருமிப்புடன் மிகக் குறுகிற காலத்தில் வெளிப்படையாக மறுசீரமைப்பு நடைபெற்றது. இதன் பின்னணியில் இனத்துவப் பிரிவு காணப்பட்டது. மலேசியாவின் இனப்பிரச்சினைகள் அதன் விளைவாக ஏற்பட்ட கலவரங்கள், பலாத்கார நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தணிப்பதற்காகவும் ஒரு குறிப்பிட்ட இனத்தின் (மலே) மேலாதிக்கத்தை நிறுவுவதற்காகவுமே சனநாயக முறைமை உருவாக்கப்பட்டது. கட்சி அரசியல் இங்கு முக்கியத்துவம் பெறவில்லை. எவ்வாறெனினும்
40

“ஷக்கரியா ஹாஜி அகமது” (Zaharia Haji Ahmad) குறிப்பிடுவதுபோல இனரீதியான கட்சிகளைக் கொண்ட ஒரு முறைமையில் கட்சிகளையும் இனத்துவ மேலாண்மையையும் பிரிக்கமுடியாது. மலே தலைவர்கள் தமது சட்டதிட்டங்களை மாற்றுவதற்குக் காலாக இருந்தது இனக்கலவரங்கள் மட்டுமல்ல. உண்மையில் 1969ஆம் ஆண்டுத் தேர்தலின் பெறுபேறுகள் ஆளும் கூட்டணி (ஐக்கிய மலே தேசிய நிறுவனத்தின் (UMNO-United Malays National Organization) ஆதிக்கத்திலுள்ள) எதிர்காலத்தில் தேர்தல் தோல்வியை அடையக்கூடிய சாத்தியப்பாடுகளைக் காட்டிய காரணத்தினால் தான்.
பின்னோக்கிப் பார்க்கும்போது சனநாயகத்தின் செயலின்மையை விளங்கப்படுத்துவதற்கு எவ்வகையினும் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் பிலிப்பைன்ஸ் சனாதிபதி பேர்டினன்ட் மார்க்கோஸ் கொண்டிருந்த அவா மற்றும் நிர்வாகச்சதி முயற்சிகளை விடச் சிறப்பானது வேறொன்றிருக்கமுடியாது. இங்கு கார்ல் ஜாக்ஸன் (Karl Jackson) குறிப்பிடுவதுபோல மார்க்கோஸ் 1972ஆம் ஆண்டு செப்ரெம்பர் 23ஆம் திகதி ஊரடங்குச்சட்டத்தைப் பிறப்பித்தமைக்குக் காரணம் அரசியல்யாப்பு மாற்றத்தின் மூலம் தனது பதவிக்காலத்தை மேலும் நீடித்துக்கொள்ள முடியாமற் போனமையேயாகும். ஆனால் மார்க்கோஸ் தனது நடவடிக்கைக்குப் பல்வேறு காரணங்களைக் காட்டத்தவறவில்லை. அக்காரணங்களில் முதன்மையானது, தான் உறுதிகூறிய "புதிய சமுதாயத்தின்” கட்டுமானமாகும். “செல்வத்தை சனநாயகப்படுத்துவதற்கும்” “சமுதாயத்தைப் புரட்சிகரமானதாக் குவதற்கும்” சர்வாதிகார ஆட்சி வேண்டுமென அவர் வாதிட்டார். தற்போதுள்ள ஊழல் மலிந்த அரசியற் கலாசாரத்தையும் நிலச் சுவாந்தார்களின் அதிகாரத்தை உடைப்பதற்கும் , கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களைத் தோல்வியுறச்செய்யவும், விரைவான அபிவிருத்தியை ஊக்குவிக்கும் கட்டொழுங்கை விதைப்பதற்கும் சர்வாதிகாரம் மிகவும் முக்கியமானதெனக் கூறினார். ஆனால் அவரது நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக அமைந்தது பிலப்பைன்ஸில் மாத்திரமல்லாது தென்கிழக்கு ஆசியா முழுவதும், மேற்கத்தைய சனநாயத்தின் பொருத்தமான தொடர்பாகக் காணப்பட்ட எதிர்மறையான மனப்பான்மை எனக்கூறலாம். இங்கு ஜாக்ஸன் நிரூபித்துக் காட்டுவதுபோல ஊழல் நிறைந்த பிலிப்பைன்ஸ் சனநாயகம் செயலிழக்கத் தொடங்கிய ஒருகால கட்டத்திலேயே ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. (இதற்கு மார்க்கோஸின் சொந்தத் துஷ்பிரயோகங்களும் ஓரளவுக்குக்காரணம்) ஆரம்பக்கட்டத்தில் இவர்களுக்குப் பொதுமக்களின் ஆதரவு கிடைத்ததால் வெற்றியும் கண்டனர்.
இந்தப் பிலிப்பைன்ஸ் விடயம் ஆசியாவில் சனநாயகத்தின் சரிவுக்கு இரண்டு காரணங்களை வெளிக்காட்டுகின்றது. 1. அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் கட்டுக்கடங்காத தனிப்பட்ட குடும்ப வேட்கை,
41

Page 23
2. சனநாயக முறைமையின் (குறிப்பாக அரசியல்வாதிகளின் நடத்தை தொடர்பாக) இயக்கமின்மை. இவ்விரண்டு காரணங்களும் தென்கொரியா விடயத்திலும் கூட வெளிப்படையாகத் தெரிகின்றன. (வெவ்வேறு காலத்தில்) 1948ஆம் ஆண்டு சனநாயக அரசியல் யாப்பின் அடிப்படையில் உருவான முதலாவது கொரியக் குடியரசு வழமையான நிர்வாக, சதிமுயற்சியினால் தோல்வி கண்டது. இது தொடர்பாக இத்தொகுதியில் சுங் - ஜ7 - ஹான் (Sung-looHan) பின்வருமாறு எழுதுகின்றார். “றி (Rhee) தனது இறுதிக்காலம் வரை அதிகாரத்தைப் பிடித்துக் கொண்டிருக்க விரும்பினார். அதற்காக அரசியல் யாப்பு மாற்றங்கள், தேர்தல் குளறுபடிகள், மற்றும் எதிர்க் கட்சியை நசுக்குதல் போன்றவை தேவைப்பட்டன.”
இதற்கு முரணாக இரண்டாம் குடியரசின் தாராள சனநாயகத்தின் தோல்வி சனநாயக செயன்முறையின் தோல்வியால் ஏற்பட்டது. ஹான் சுட்டிக் காட்டுவது போல இத்தோல்விக்குச் சமூக, அரசியல் அமைப்பில் ஏற்பட்டிருந்த பிரிவுகள் மற்றும் விரிசல்கள் அடிப்படைக் காரணமாகும். ஆனால் அது முதிர்ச்சியடைந்து வெடித்தமைக்குப் பிரதம மந்திரி சாங் மயூனின் (Chang Mayon) பலவீனமான திறைமயற்ற தலைமைத்துவமும் அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளின் இறுக்கமான, விட்டுக் கொடுக்காத சனநாயகமற்ற நடத்தைகளுமே காரணம். இதனைத்தொடர்ந்து உருவான பார்க் சுங் ஹியின் (Park Chung Hee)ஆட்சி சனநாயகப் பாதையிலிருந்து வழுவி ஒடுக்குமுறையின் சர்வாதிகார ஆட்சியாக மாறியதற்குக் காரணம், தொடர்ந்து பதவியிலிருக்கப் பார்க் கொண்டிருந்த உறுதியாகும். எதிர்க் கட்சியை நசுக்குவதைப் பற்றியோ அரசியல் யாப்பை மாற்றியமைப்பது பற்றியோ அவர் கவலை கொள்ளவில்லை.
தனது சனநாயக சோதனைகளில் தொடர்ந்தும் தோல்விகளையே தழுவிக்கொண்டிருக்கும் பாகிஸ்தான்பற்றி நாம் இங்கு சிறப்பாகக் கவனஞ் செலுத்துதல் வேண்டும். இந்தியாவும் பாகிஸ்தானும் குடியேற்றவாத நிர்வாகத்தையும் அதன் மரபுரிமைகளையும் பங்கு கொண்டுள்ளன. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த இரத்தக்களரியுடனான பிரிவினைக்கு முன்னதாகப் பாகிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்தது. எனினும் இந்தியா சனநாயக வெற்றியைப் பெற்றுள்ளது என்பது இங்கு மனங்கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகும். ஆரம்பத்திலிருந்தே பாகிஸ்தானில் சனநாயக அரசியல் பிரதான அமைப்புரீதியான பிரச்சினைகளினால் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளது. இத் தொகுதியில் “லியா றோஸ்" (Leo Rose) குறிப்பிடுவது போல பாகிஸ்தானின் அரசியல் கற்றறிவாளர் குழுவினர் சனநாயகத்துக்கான ஆர்வத்தில் இந்தியாவுக்கு இரண்டாந்தரமானவர்களல்லர் . அதுமட்டுமல்லாமல் "மைறோன் வெய்னர் ” (Myron Weiner)
42

குறிப்பிடுவதுபோல தனது முதலாவது தசாப்தத்தில் பாகிஸ்தான் தனது வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற அரசாங்கத்தில் “போட்டியிடும் அரசியற் கட்சிகள், தேர்தல்கள், சுதந்திரப் பத்திரிகைகள், சுதந்திரமான நீதித்துறை மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம் ஆகியவையைக் கொண்டிருந்தது”. 1958இல் இம் முறைமை வீழ்ச்சியுற்ற வேளையில் நிறுவனரீதியான பலவீனங்களையும் குறைபாடுகளையும் வெளிப்படுத்தியது. அத்துடன் அரசியல் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கமுடியாத ஒரு துறையாகத் தலைமையின் தோல்வியையும் வெளிக்காட்டியது. சனாதிபதி "இஸ்கந்தர் மிர்ஸா” (President Iskandar Mirza) பிரதம மந்திரியுடனான அதிகாரப் போட்டியில் ஒரு நிர்வாக சதித்திட்டத்தின் மூலம் வென்ற பின்னரே சனநாயகம் ஒரு முடிவுக்கு வந்தது என்பதையும் அதன் பின்னரே இராணுவம் தலையிட்டது என்பதையும் இங்கு நினைவில் வைத்திருக்கவேண்டும். சுல்பிகார் பூட்டோவின் கீழ் சனநாயத்தின் இரண்டாவது தோல்விக்கும் அதுபோன்ற காரணமே வழி வகுத்தது. எவ்வாறெனில் பூட்டோ அதிகாரத்தைத் தனது கைகளில் கொண்டிருக்க எடுத்த உறுதிப்பாட்டினால் சனநாயக முறைமையை அதன் வழியில் இயக்குவதற்கான ஒரு சந்தர்ப்பத்தையேனும் வழங்க மறுத்துவிட்டார். 1977இல் திரும்பவும் இராணுவம் தலையிட்டுச் சனநாயகமற்ற, சட்டபூர்வமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சியை ஒப்படைத்தது.
இவ்விடயம் தத்துவார்த்த ரீதியில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் பல ஆசிய நாடுகளில் அவ்வாறு திரும்பத்திரும்ப நடந்திருக்கிறது. இராணுவம் தலையீடு செய்து (சில நாடுகளில் திரும்பத் திரும்ப) மக்கள் ஆட்சியைத் தூக்கியெறிந்ததுடன் சனநாயகம் தவறாக இயங்கியதை நாம் அறியக் கூடியதாக உள்ளது. அத்துடன் இராணுவம் தாக்கியபொழுது ஆட்சிக்குழுவினரின் சட்டபூர்வத் தன்மை மிக மோசமாகப் பாதிக்கப் பட்டிருந்தது. இப்பொதுத் தன்மையைத் தென்கொரியா (1961), பாகிஸ்தான் (1958, 1977) ஆகிய நாடுகளில் நடந்த சதிகளிலும் துருக்கியில் (1960, 1971, 1980) நடந்த மூன்று இராணுவத் தலையீடுகளிலும் இந்தோனேசியாவில் 1957இல் ஊரடங்குச் சட்டத்துக்கு இராணுவம் வழங்கிய ஆதரவிலும் 1966இல் சுகார்னோ நீக்கத்திலும்
காணலாம்.
இதே தன்மை 1962இல் இலங்கையில் தோல்வியைடந்த இராணுவச் சதியிலும் காணலாம். இக்காலகட்டத்தில் இலங்கையில் ஏற்பட்டிருந்த இனக்கலவரங்கள், தீவிரவாதக் கொள்கைகள் மற்றும் அவசரகால ஏற்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக இராணுவம் தனது கையைப் பலப்படுத்திக் கொள்ள முயன்றது. இங்கு இந்தோனேசியா விவகாரம் தொடர்பான தமது ஆய்வில் வூல்ப் சுன்ஹவுசன் (Ulf Sundhaussen) பின்வருமாறு எழுதுகிறார். "இராணுவமானது சட்டரீதியான அரசாங்கங்களுக்கு எதிரான தனது சதிகளின் மூலம் தனது அரசியல்
43

Page 24
அதிகாரத்தை அதிகரித்துக் கொள்ள முயலவில்லை. மாறாக எப்பொழுதேனும் சூனிய இடைவெளி ஏற்பட்ட போதெல்லாம் அதனை நிரம்புவதற்குக் குறிப்பாக 1957, 1966இல் முன்வந்தது. திறனற்ற ஊழல் மலிந்த அரசியல்வாதிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்குத் தான் முன்வருவதாகவே அது காட்டிக்கொண்டது. . . . . . ’ சுந் ஹவுசன் சுட்டிக் காட்டுவதைப் போல ஏழு ஆண்டுகாலப் பாராளுமன்ற சனநாயகத்தை இராணுவமானது ஆதரித்தது அல்லது பொறுத்துக் கொண்டது. இக் காலகட்டத்தில் தளம் பல் நிறைந்த கூட்டணி அரசாங்கங்கள், திரும்பத்திரும்ப ஏற்பட்ட இனப்பிணக்குகள் மற்றும் பொதுவாக ஊழல் மலிந்த சுயநலம் மிகுந்த அரசியலே காணப்பட்டது. பாராளுமன்ற முறைமை எவ்வித கூட்டணியையும் அமைக்க முடியாமல் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்த வேளையில் தான் இராணுவம் தலையிட்டது. எனவே இந்தோனேசியாவில் சனநாயத்தின் தோல்விக்கு இராணுவத்தின் தனிபட்ட, நிறுவனரீதியான, சித்தாந்தரீதியான அவா காரணமாக இருக்கவில்லை. அல்லது மக்களிடையே காணப்பட்ட சனநாயக ஆர்வமின்மை காரணமாக இருக்கவில்லை. மாறாக அரசியல் கற்றறிவாளர் குழுவினரின் "நடவடிக்கைகளும் மனப்பான்மைகளுமே" காரணமாக இருந்தன என சுன்ஹவுசன் கூறுகிறார். இதற்கு உதாரணமாக அரசியல்வாதிகள் தமது சுயநலன்களுக்காக இராணுவத்தை உதவிக்கு அழைத்ததைக் கூறலாம். பாகிஸ்தானில் பூட்டோவும், இலங்கைச் சதித்திட்டமும் இதற்கு நல்ல உதார்ணங்கள்.
இராணுவத்திற்குப் பொறுக்க முடியாமற் போன விடயங்கள் பொதுவாழ்வில் ஒழுங்கின்மை, அரசாங்க ஸ்தம்பிதம் மற்றும் அரசியல் எதிர்த்துருவமாக்கல்தான் என்று சுலபமாகக் கூறிவிடமுடியாது. ஆனால் குறிப்பாகப் பலவீனமான, பிரச்சினைகளான அரசாங்கங்கள் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இராணுவத்தை அழைக்க எடுத்த தீர்மானம் தான் இராணுவத் தலையீட்டுக்கான முக்கிய காரணம். இவ்வாறு இராணுவம் அரசியல் குழப்பத்துக்குள் இழுக்கப்பட்டபோது அது முழுமையாகத் தலையிட அவ்வளவு நேரம் எடுக்கவில்லை. துருக்கி பற்றிய அத்தியாயத்தில் "எர்குன் ஒஸ்புடூன்” (Brgun Ozbudun) பின்வருமாறு கூறுகிறார். “பாதுகாப்புப் படைகள் தவிர்க்க முடியாமல் அரசியல்மயமாக்கலுக்கு உட்படுதல் அல்லது ஒரு அரசியல் பிணக்கு இராணுவமயமாக்கலுக்கு உள்ளாகி அதனால் முழுமையான இராணுவத் தலையீட்டுக்கு வழி ஏற்படுதல் என்பது இராணுவச் சட்டத்தின் தீமைபயக்கும் பக்கவிளைவுகளில் ஒன்றாகும். உண்மையில் துருக்கியின் அண்மைக்கால வரலாற்றில் ஏற்பட்ட மூன்று இராணுவத் தலையீடு களுக்கும் முன்னோடியாக மக்கள் அரசாங்கங்களினால் கொண்டு வரப்பட்ட இராணுவச் சட்டங்களே காரணமாக இருந்திருக்கின்றன.
44

இவ்வாறான நெருக்கடி நிலைமைகளில் வேறு மாற்று ஏற்பாடுகள் இருந்திருக்கலாம். எனினும் அரசியல் தலைவர்கள் இராணுவத்தின் பக்கம் திரும்பியதை முற்றுமுழுதாக ஒரு தவறான தெரிவு என்றும் கூறிவிடமுடியாது. ஆனால் ஓர் அரசியல் பிணக்கை அவர்கள் பிழையான முறையில் அணுகி அது கட்டுக்கடங்காமற் செல்ல வழிவகுத்ததே பிழையானதாகும். இராணுவச் சட்டம் அல்லது இராணுவத் தலையீட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் துருக்கியில் நிலைமை சீரழிந்து அரசியல் எதிர்த் துருவமாக்கலும், பலாத்காரமும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. அரசாங்க செயற்பாடுகளின் ஏனைய தோல்விகள், நெருக்கடிகள், எதிர்ப்பையும் பகிஸ்கரிப்பையும் அடக்கமுயலுதல், அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கிடையில் பிணக்குகள். பாரதூரமான பொருளாதாரப் பிரச்சினைகள் ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளன. இதனால் 1980களில் பயங்கரவாதம் வெகுவாக வளர்ச்சியடைந்தது. இவ்வாறான எதிர்த்துருவத்தன்மைக்குப் பல்வேறு சமூக, கலாசார, அமைப்பு ரீதியான காரணிகளைப் பலரும் கூறமுடியும். ஆனால் ஒருவரேனும் சனநாயகத்தை அதன் அழிவுச் சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்காகத் தமது சித்தாந்த வேறுபாடுகளை விட்டுக்கொடுக்க முடியாத அரசியல் தலைவர்களின் பொறுப்பின்மை இதில் கொண்டுள்ள முக்கிய பங்கினை மறுத்து விடமுடியாது.
இதே போன்ற அரசியல் தலைமைத்துவத்தின் தோல்வியைத் தாய்லாந்தில் 1974-76 காலத்தில் ஏற்பட்ட சனநாயகத்தின் சரிவை ஆய்வு செய்த "சாய் - அனன் சமுதவனிஜா” (Chai-AnanSamudavania) சுட்டிக்காட்டுகின்றார். அடுக்கடுக்காக ஏற்பட்ட கோரிக்கைகளும், அரசியல் நிறுவனங்கள் இல்லாமையும் கட்சித்தலைவர்களுக்கு ஒரு பாரிய சவாலை ஏற்படுத்தின. ஆனால் அரசியற் தலைவர்கள் தமக்குள் கருத்தொருமைப்பாட்டுக்கான ஒரு தளத்தை ஏற்படுத்தியிருந்தால் அல்லது தமக்குள் உறுதியான ஈடாட்டம் ஏற்பட வழிசமைத்திருந்தால் இச்சவாலை முகங் கொடுக்கக்கூடிய சனநாயக நிறுவனங்களை விருத்தி செய்திருக்க முடியும். மாறாகத் தமக்கிடையில் நம்பிக்கையின்மையும் தமது குறுகிய கால சுயநலன்களுக்குக் கொடுத்த முக்கியத்துவமும் அவர்களால் உறுதியான அரசாங்கத்தை அமைக்க முடியாத நிலையை உருவாக்கியது. அவர்களது பயன்தராத அரசாங்கங்களால் சமுதாயத்தில் வளர்ந்த நெருக்கடியைத் தளர்ச்சியடையச் செய்ய முடியவில்லை. எனவே இச்சூழ்நிலை அதாவது வன்முறை, தீர்மானமின்மை, அரசியல் எதிர்த்துருவமாக்கல் ஆகியவை இராணுவத் தலையீட்டுக்குச் சாதகமான ஒரு களமாக அமைந்தது.
1. தலைமைத்துவத்தின் பங்கு
எந்தவொரு எழுத்தாளரும் தாம் ஆய்வு செய்யும் சனநாயகப் பரிசோதனைகளின் எதிர்காலம் பற்றி விளங்குவதற்காக வரலாற்றில்
45

Page 25
“மாமனிதன்” என்னும் கோட்பாட்டை முன்வைக்க மாட்டார்கள். எனினும் இங்கு ஆய்வு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு விடயத்திலும் அரசியல் தலைமைத்துவத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. தலைமைத்துவம் என்பதினால் நாம் கருதுவதாவது ஒரு நாட்டின் அரசியல் கற்றறிவாளர் குழுவினரதும் அதன் ஒரு சில உயர் அரசாங்க அல்லது கட்சித் தலைவர்களினதும் நடவடிக்கைகள், விழுமியங்கள், தெரிவுகள் மற்றும் திறன்களாகும். மார்க்கோஸ், றி, பூட்டோ, பண்டாரநாயக்கா, ஜயவர்தனா, சுகார்னோ, மற்றும் இந்திராகாந்தி போன்ற தற்பெருக்கீட்டு ஆர்வமும் எதேச்சாதிகாரத்தன்மையும் கொண்ட உத்தேசமான சனநாயகத் தலைவர்கள் சனநாயகச் செயற்பாடுகளை, சனநாயகத்தைச் சீரழிப்பதற்கு அல்லது அழிப்பதற்கே பயன்படுத்தினர்:
இங்கு பப்புவாநியூகினியின் பிரதம மந்திரியான "மைக்கல் சோமாரோ" மற்றும் அவருக்குப்பின்வந்த “ஜாலியஸ் சான்” ஆகியோர் பற்றிக் குறிப்பிட வேண்டும். தாம் தொடர்ந்தும் பதவியிலிருப்பதற்காக அவர்கள் தமது நாட்டின் அரசியல் விதிகளையும், அமைப்புகளையும் வளைக்க முயற்சி செய்யவில்லை. தமது பாராளுமன்றக் கூட்டணி தோல்வி கண்ட போது அவர்கள் உடனடியாகத் தமது பதவியை விட்டகன்றார்கள். இது ஆசிய அரசியலில் அசாதாரணமான நடத்தையாகும்.
“டேவிட் லிப்செட்” (David Lipset) தமது அத்தியாயத்தில் குறிப்பிடுவது போல பப்புவா நியூகினியில் காணப்படும் இந்த வேறுபாடு அதன் பாரம்பரிய கலாசாரம் காரணமாக உருவாகியது. கட்சிகளின் உயர் பீடங்களுக்கிடையே கருத்தொருமிப்பு மற்றும் விட்டுக்கொடுத்தல் போன்ற பண்புகளையும் அது வளர்த்துள்ளது. இத்தகைய தலைமைத்துவப் பாங்கு டெமிரல், எஸ்விட் (Demire,Ecevit) முதலிய பிரதான கட்சித்தலைவர்களின் பாங்குகளிலிருந்து முரண்பட்டது. தலைவர்களின் நடத்தை காரணமாக 1980இல் துருக்கியில் சனநாயகம் சரிந்தது. 1974 - 76 காலப்பகுதியில் ஒரு கருத்தொருமிப்பை உருவாக்க முடியாத காரணத்தால் தாய்லாந்திலும் இதே நிலைமை ஏற்பட்டது. இதே போல தென்கொரியாவின் பிடிவாதம் நிறைந்த எதிர்க்கட்சித்தலைவர்களான கிம் யங் சாம் (Kim Young Sam) மற்றும் கிம் டாய் யுங் (Kim Dae Jung) சனநாயகத்தின் வெற்றிக்கு உதவவில்லை. மலேசியாவில் ஆழமான இனத்துவப் பிரிவுகள் இருந்த போதும் ஒப்பீட்டளவில் 1971 - 1980 காலப்பகுதியில் இங்கு அரசியல் ஸ்திரநிலைமை காணப்பட்டது. இதற்கு அங்கு காணப்பட்ட கருத்தொருமிப்புச் சார்ந்த அரசியல் தலைமைத்துவமே காரணம் எனக் கூறலாம். இந்தச் சமநிலைமை தனது சொந்த அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்ள முனைந்த பொறுமையற்ற புதிய பிரதம மந்திரியினால்
தகர்க்கப்பட்டது.
46

மலேசியாவின் சுதந்திரத்துக்குப் பின்வந்த அதன் ஸ்தாபிதத்தலைவர்கள் சனநாயகத்துக்குத் தம்மை அர்ப்பணித்திருந்தனர். இதனால் அந்நாடு தென்கொரியா, இந்தோனேசியா முதலிய நாடுகளிலும் வேறுபட்டு நிற்கிறது. ஷக்கரியா (Zakaria) குறிப்பிடுவது போல மலேசியாவின் முதலாவது பிரதம மந்திரி துங்கு அப்துல் ரஹற்மான் (TunkuAbdul Rahman) பாராளுமன்ற சனநாயகத்தை ஒரு “முதன்மைக் கோட்பாடாக” (Priority principle) ஏற்றுக்கொண்டார். எனவே அந்த நெருக்கடியான காலகட்டத்திலும் இனரீதியான மேலாண்மைக்கு (chauvinism) அப்பால் நின்று அவரால் செயற்பட முடிந்தது. ஆரம்பகால மலேசியத் தலைவர்கள் சனநாயகத்தின் மீது காட்டிய ஈடுபாடு காரணமாகவே 1969 - 71 காலப்பகுதியில் சனநாயகம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டவேளையிலும் அந்நாடு முழுமையான சர்வாதிகாரப் போக்கில் விழுந்து விடாமற் காப்பாற்றப்பட்டதோடு பின்னர் சனநாயகத்தின் மீட்சிக்கும் வழிவகுத்தது. இதற்கு முரண்பாடான வகையில் பிரதம மந்திரி மகதிர் மொகமதுவின் (Mahathir Mohammed) எதிர்ப்புணர்வுத் தன்மை கொண்ட தலைமைத்துவமானது மலேசியாவின் அரைசனநாயக முறைமையில் 1971க்குப் பின்னரான காலத்தில் எப்போதுமில்லாதளவு பிரச்சினைகளை உருவாக்கியது.
சுதந்திரத்துக்குப் பின்னரான முதலிரண்டு தசாப்தங்களில் இந்தியாவின் வலிமையும் பொறுமையும் கொண்ட தலைவர்களினால் சனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் படிமுறையாகவும் திட்டமிட்ட வகையிலும் முன்னர் விலக்கப்பட்டிருந்த குழுக்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்கிச் சனநாயக நீரோடையில் பங்கு பற்ற வாய்ப்பளித்தனர். றோஸ் கூறுவதுபோல பாகிஸ்தானியத் தலைவர்கள் சனநாயகக் கோட்பாடுகளில் ஈடுபாடு காட்டவில்லை எனக் கூறமுடியாது. ஆனால் சூழ்நிலைகாரணமாக அவர்கள் அரசியல் ஸ்திரமின்மை என்னும் வலைக்குள் அகப்பட்டுக் கொண்டனர். குறிப்பாகப் “பாகிஸ்தானின் தந்தை'யான மொகமட் அலி ஜின்னாவின் தீர்மானத்தைக் கூறலாம். அதிக அதிகாரம் கொண்ட கவர்னர் ஜெனரல் பதவியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக அவரது தீர்மானம் நாட்டைச் சர்வாதிகாரப் போக்கில் திசைதிருப்பியது. (ஜவஹர்லால் நேரு சுதந்திர இந்தியாவின் பிரதம மந்திரியாகப் பதவியிலிருக்கத் தீர்மானித்தமை அந்நாட்டை சனநாயகப் பாதையில் திருப்பியது.)
நேரு மறைந்து ஈராண்டுகளுக்குப்பின்னர் அவரது மகளான இந்திராகாந்தி 1966இல் பிரதம மந்திரியாகப் பதவி ஏற்றார். இவரது தலைமைத்துவப் பாங்குகளும் , தெரிவுகளும் முரண்பாடானவைகளே. எனினும் இந்திராகாந்தி விட்ட தவறுகள் நேருவின் தலைமைத்துவப் பாணியில் முற்றாக இல்லை என்று கூறிவிட முடியாது. உண்மையில் 1975இல்
47

Page 26
இந்திராகாந்தியின் அவசரகாலப்பிரகடனம் ஒரு தசாப்தகாலமாக அரசியல் அதிகாரத்தை மத்திய மயப்படுத்துவதற்கும், தனிநபராக்கம் செய்வதற்கும் எடுக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு உயர்கட்டமேயாகும். இந்நிலைமை 1980இல் அவர் மீண்டும் பதவிக்கு வந்தபோது மேலும் விரைவுபடுத்தப்பட்டது.
இந்திய சனநாயகத்தில் இன்று இந்திய காங்கிரஸ் கட்சியும் இந்திய கட்சி முறையும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. பகிஸ்கரிப்பு, இனப்பிரிவினை, வன்முறை, மற்றும் அரசியல் நிறுவனங்களில் நெருக்கடி நிலைமை ஆகியவை இந்தியா எங்கும் பரவலாகக் காணப்படுகின்றன. சமகால இந்திய சனநாயக ஆய்வாளர்கள் இந்த நிலைமைக்கு 1966-77வரையும் பின்னர் 1980இல் இருந்து 1984இல் இந்திராகாந்தியின் மறைவு வரைப்பட்ட காலத்தில் அவரின் சுயநலமான பண்புகளும் அரசியல் நிறுவனங்களின் குறைபாடுகளுமே பிரதான காரணமாகக் கூறப்படுகின்றது.
போல் பிறாஸ் (Paul Brass) பின்வருமாறு கூறுகிறார். "இந்திராகாந்தி ஆட்சிக்கு வந்தபின்னர் பஞ்சாப் உட்பட இந்தியாவின் பல இடங்களில் ஏற்பட்ட குழப்பங்களுக்குக் காரணம் அதிகார மத்தியமயப்படுத்தலும் மாநில அரசியல் விவகாரங்களில் மத்திய அரசின் வரைமுறையற்ற தலையீடுமேயாகும்”. ஆனால் இந்திரா காந்தியினால் தெரிவு செய்யப்பட்டுப் பதவி உயர்த்தப்பட்ட அரசியல் தலைவர்களும் இக் குழப்பங்களுக்குக் காரணம். அவர்கள் தமது தலைமைத்துவப் பாணியை இந்திராவிடமிருந்தே பெற்றுக்கொண்டனர். கோஹ்லி (Kohi) கூறுவதைப் போல இந்தியாவில் நிறுவனரீதியான சீரழிவுக்கு "அரசின்மீது சுமத்தப்பட்ட அடுக்கடுக்கான நெருக்கடி மாத்திரமல்ல, நிறுவனங்கள் தமது சொந்த அதிகாரத்துக்குத் தடையாக இருக்கின்றன என்று கருதிய சுயநலமிக்க, அழிவு மனப்பான்மை கொண்ட தலைவர்களே காரணம்”. உண்மையில் இத்தகைய ஆய்வு முடிவு இத் தொகுதியிலுள்ள பல நாடுகளுக்குப் பொருத்தமானதாகும்.
48

சனநாயக முன்னேற்றத்தையும் தோல்வியையும் விளக்குதல்
1. வரலாற்றுக் காலனித்துவ மரபுரிமைகள்
ஆசியாவின் சனநாயக சோதனைகளின் வெற்றி அல்லது தோல்வி, தலைமைத்துவம், நடத்தை மற்றும் தெரிவுகளில் தங்கியுள்ளது எனக் கூறும்போது ஆசியாவின் சகல அரசியல் கற்றறிவாளர்களும் ஒரேவிதமான சமமான சவால்களுக்கு முகம் கொடுத்தனர் எனக் கொள்ளக் கூடாது. நமது ஆய்வுகளில் சனநாயகத்துக்கான வாய்ப்புப் பெரிதும் வேறுபட்டுக் காணப்படுகிறது. அதற்கு இத்தலைவர்கள் முதலில் சுவீகரித்துப் பின்னர் கையளித்த வரலாற்றுக், காலனித்துவ மரபுரிமைகளும் அமைப்புரீதியான ஊக்குவிப்புகளும், தடைகளும் காரணம் எனக் கூறலாம்.
இவற்றுள் மிக முக்கியமான வரலாற்றுக் காரணி காலனித்துவ அநுபவத்தின் தன்மையாகும். எமது பத்து ஆசிய நாடுகளில் நான்கு முன்னைய பிரித்தானிய காலனிகளும் (இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா.) ஒரு டச்சுக் காலனியும் (இந்தோனேஷியா) காலனித்துவத்துக்கு ஒருபோதும் உட்படாத இருநாடுகளும் (தாய்லாந்து, துருக்கி) ஆகியன அடங்கும். பிலிப்பைன்ஸ், பப்புவாநியூகினி ஆகியவற்றின் முன்னைய காலனித்துவ ஆட்சியாளர்கள் (ஐக்கிய அமெரிக்காவும், அவுஸ்திரேலியாவும்) ஆங்கில - சாக்ஸன் (Anglo-Saxon) சனநாயகப் பாரம்பரியங்களை உடையவர்கள். முன்னைய டச்சுக் குடியேற்றமான இந்தோனேசியாவும், தாய்லாந்து மற்றும் துருக்கியும் காலனியாதிக்கத்துக்கு உட்படவேயில்லை.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சுதந்திரத்துக்குப் பின்னர் வெற்றிகரமாகச் சனநாயகத்தைப் பின்பற்றுபவர்கள் பொதுவாக முன்னைய பிரித்தானிய காலனிகளே எனச் சனநாயகம் பற்றிய பல ஆய்வாளர்கள் அண்மையில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். வெய்னர் (Weiner) இவ்வெற்றிக்குப்"பிரித்தானிய மாதிரியின் இரண்டு கூறுகளைக்" காரணம் காட்டுகின்றார். ஒன்று பயன்தரு அதிகாரத்துவ முறைமையையும், நீதி நிறுவனங்களையும் கொண்ட சட்டவாட்சி. மற்றது ஒரு வகையான பிரதிநிதித்துவ முறைமையும் தேர்தல்களும். இது வரையறைக்குட்பட்ட வகையில் ஆட்சியில் பங்கு கொள்ளப் படித்தவர்களுக்கு ஓரளவு வாய்ப்பளித்தது. இதன் காரணமாகச்
49

Page 27
சுதந்திரமடைந்த போது பயன்தரு அரசியல் நிறுவனங்கள் இருந்தன என்று மட்டும் வெறுமனே கூறிவிடமுடியாது. இது ஒரு பொறுப்பான அரசியல் கலாசாரத்திற்கு வழிவகுத்தது. அதாவது அரசியல் மற்றும் ஆட்சியின் செயன்முறைகளில் ஒரு நம்பிக்கையும் ஈடுபாடும் ஏற்பட்டன. அதுமட்டுமல்லாமல் சட்டவாட்சிஒருதலைப்பட்சமான ஆட்சியைத் தடுக்கும் என்ற நம்பிக்கையையும் இந்த மரபுரிமை ஏற்படுத்தின.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் ஏற்பட்டநிறுவன அபிவிருத்திக்கு இந்தியா நல்லதொரு உதாரணமாகும். தொடர்ச்சியாக ஏற்பட்ட அரசியற் சீர்திருத்தங்கள் மேலோட்டமானவை எனினும் பிரித்தானியர்கள் அரசியல் தலைவர்களுக்குக் குறிப்பாக உள்ளூர், மாகாண மட்டங்களில், தேர்தல் செயன்முறைகள் மற்றும் சனநாயக நிறுவனங்கள் ஆகியவற்றில் சுதந்திரத்திற்கு முன்னரே பயிற்சி அளித்தனர். சுதந்திரத்திற்கு முன்னரான தேர்தல் வெற்றிகள் காங்கிரஸ் கட்சிக்குச் சனநாயகப் போட்டி மற்றும் ஆட்சிபுரிதலில் சிறந்த அநுபவங்களை அளித்தன. அத்துடன் ஒரு தேசிய சக்தி என்றளவில் அதனை நிறுவனமயப்படுத்தவும் உதவின. ஆனால் இந்தச் செயன்முறை சில வரலாறு மற்றும் புவியியல் விபத்துக்களால் பாகிஸ்தானில் நடைபெறவில்லை. இது அதனுடைய சனநாயகத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஆனால் மலேசியா, இலங்கை, பப்புவாநியூகினி ஆகிய நாடுகளில் சுதந்திரத்துக்குமுன்னர் நடந்த தேர்தற் போட்டிகள் அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் உருவாகுவதற்கு வழி வகுத்தது. இதன் மூலம் சனநாயக அநுபவமும் அவர்களுக்கு ஏற்பட்டது. இது சுதந்திரத்துக்குப் பின்னர் சனநாயக நிறுவனங்களின் தோற்றத்துக்கு வழிவகுத்தது. மக்களின் சனநாயக சார்புக்குக் குறிப்பாக கற்றறிவாளர்களிள் சனநாயக சார்புக்குக் கலாசாரரீதியாகச் சுதேசிய மரபுகளும் விழுமியங்களும் காரணிகளாக இருந்திருக்கலாம். ஆனால் பிரித்தானிய காலனித்துவ மரபுரிமை இதில் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
வெய்மர் (Weimer) குறிப்பிடுவதைப் போல சனநாயகத் தலைவர்கள் அதிகாரத்துவத்துடன் நடந்த வேளைகளில் கூட (உதாரணமாக இந்திராகாந்தியின் அவசரகாலச்சட்டம்) தமது நடவடிக்கைகளை சட்டம் மற்றும் அரசியல்யாப்பு ஆகிய வரம்புகளுக்குள் வைத்திருக்க வேண்டிய தேவையை உணர்ந்திருந்தனர். இலங்கையில் சனநாயகத்தின் தேய்வு புதுமையான விதத்தில் அரசியல்யாப்பு அடிப்படையிலேயே ஏற்பட்டது. எனவே அரசியல் யாப்பு முறைமையில் இந்நாடுகளுக்கிருந்த அக்கறை காரணமாகச் சனநாயகம் காப்பாற்றப்படாவிட்டாலும் அது முழுமையான அதிகாரத்துவமாக மாற்றமடைவதைத் தடுத்தது எனக் கூறலாம். இதே போன்ற தன்ைைமயை மலேசியாவில் தொங்கும் சனநாயக காலத்திலும் காணலாம். இக்காலத்தில் தேசியச் செயற்பாடுகள் கவுன்சில் (National
50

Operations Council) அரசியல் யாப்பின் கீழ் அரசினது பொருத்தமான பிரகடனத்தின்படி பாராளுமன்றத்தைச் சட்டப்படி தூக்கியெறிந்தது. பின்னர் திரும்பவும் ப்ாராளுமன்றச் சனநாயகத்தை நிலைநிறுத்துவதிற் கவனஞ் செலுத்தியது. "இங்கு நாம் ஆய்வு செய்கின்ற 4 நாடுகளில் சனநாயகத்தில் மிகக் குறைந்தளவு வெற்றி கொண்ட பாகிஸ்தானை எடுத்துக்கொண்டால் அங்கும் கூட அரசியல்தலைவர்களும் பொதுமக்களும் சனநாயகச் செயற்பாடுகளிற் காட்டும் ஆர்வம் கொஞ்சமும் ஆட்டங்காணவில்லை” என றோஸ் (Rose) கூறுகிறார். பாகிஸ்தானிய ஆட்சியாளார்கள் பொதுவாக அரசியல், சமூகப், பிரதேச நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதித்தே வந்துள்ளனர். ஒரு சனநாயக அரசியல் முறைமைக்கு மாற்று ஏற்பாடு ஒன்றினை அறிமுகஞ் செய்ய அவர்கள் முயலவில்லை.
பிரித்தானிய ஆட்சியிலிருந்து தொடர்ந்துவரும் இந்த கலாசார மரபுரிமைகளின் காரணம் பற்றி விளக்குகையில் றோஸ் (Rose) இவ்வாறு கூறுகிறார். பிரித்தானிய ஆட்சியில் தொடங்கிசுதந்திரத்திற்குப்பின்னரும் சனநாயக விழுமியங்கள் மிக ஆழமாக சமூகமயப்படுத்தப்பட்டிருந்தன. பிரித்தானிய கல்வி முறைமை ஒரு கற்றறிவாளர் (Elite) குழுவினை உருவாக்கும் நோக்கம் கொண்டிருந்த போதும் பிரித்தானிய சனநாயக கருத்துக்கள், பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் உயர்வு, பொது மக்களின் இறைமை போன்றவற்றை வேரூன்றச் செய்தது. நாம் இங்கு ஆய்வு செய்யும் நான்கு பிரித்தானிய காலனித்துவ நாடுகளிலும் சனநாயகத்தின் மீது ஒரு சித்தாந்த ரீதியான பற்றுதல் வளர்க்கப்பட்டது. பாடசாலைகளும், வெகுசனத்தொடர்புசாதனங்களும், அரசியல் நிறுவனங்களும் சனநாயகக் கலாசாரமயமாதலைத் தொடர்ந்தும் வளர்த்து வந்தன.
இதைப் போன்ற தாக்கத்தை பப்புவாநியூகினியிலும் 60 ஆண்டு கால அவுஸ்திரேலிய ஆட்சி ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியர்களைப் போல அவுஸ்திரேலியர்களும் சுதந்திரத்திற்கு முன்னர் தேர்தற் போட்டிகளில் அனுபவத்தைப்பெற்ற அவுஸ்திரேலியா சனநாயகத்துக்கு ஆற்றிய முக்கிய பங்களிப்பு மரபுரீதியான மெலனிசிய அரசியலின் சனநாயகப் பண்புகளைச் சுதந்திரத்துக்குப் பின்னரும் தொடர வழி செய்தமையாகும் என டேவிட் sólúGISL' (David Lipset) s-gálsprír.
பிரித்தானியர்களைப்போலவே அமெரிக்க காலனித்துவ ஆட்சியாளர்களும் பிலிப்பைன் மக்களைச் சனநாயக வழியில் விரிவாகப் பயிற்றுவித்தனர். இதன் காரணமாகச் சகலருக்கும் கல்வி, உயர்ந்த எழுத்தறிவு வீதம், அரசிய்ல் ரீதியாக செயற்படும் கற்றோர் குழாம் மற்றும் Tristy பத்திரிகை ஆகிய முக்கியமான அபிவிருத்திக்கான மரபுரிமைகள் ஏற்பட்டன. ஆனால் கலாசார மரபுரிமைகைளப் பொறுத்தவரையில் ஸ்பானிய காலனித்துவ
51

Page 28
ஆட்சியின் வேர்களை அதனால்த் தகர்க்க முடியவில்லை.
மேலும் லூசியன் பை (Lucian Pye) பின்வருமாறு வாதிடுகிறார். “அமெரிக்கர்கள் அறிமுகப்படுத்திய கட்சி அரசியல் தனியாட்களை அடிப்படையாகக் கொண்டிருந்ததே தவிர கோட்பாடுகளை அல்ல. இதனால் அதிகாரம் பற்றிய பாரம்பரிய பிலிப்பைன் மனப்பான்மையான ஆண்டான் அடிமை (Patron - Client) உறவு முறைகள் மேலும் வலியுறுத்தப்பட்டன. எனவே எதிர்பார்த்ததைப் போன்ற ஒரு பெரும் மாற்றத்தைப் பிலிப்பைன் மக்களின் சிந்தனையில் ஏற்படுத்தவில்லை."
பாகிஸ்தானில் சனநாயகக் கோட்பாடுகள் மீதான உறுதியான ஈடுபாடு உள்ளதெனினும் அதனுடைய சனநாயக அனுபவத்திற்கும் இந்தியாவின் சனநாயக அனுபவத்திற்கும் இடையில் காணப்படும் முக்கிய ஒப்பீட்டம்சங்கள் இத்தொகுதியிற் குறிப்பிடக் கூடியவை. இந்த இரு நாடுகளினதும் வெவ்வேறான வழிகளை அவற்றுக்குப் பொதுவான காலனித்துவ மரபுரிமைகளைக் கொண்டு ஒப்பிடமுடியாது. இங்கு பிரித்தானிய காலனித்துவ மரபுரிமையின் இரட்டைத்தன்மையை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். அபிவிருத்தியடைந்துவரும் உலகத்தில் ஏனைய காலனித்துவ ஆட்சிகளைப் போலவே பிரித்தானிய ஆட்சியும் அதிகாரத்துவம் நிறைந்தது.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சி சுதேசியக் கற்றோர் குழாத்தைச் சனநாயக மரபுகளிலும் விழுமியங்களிலும் ஈடுபாடு கொள்ளச் செய்தது. அவர்களின் பிரதிநிதித்துவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக விரிவு படுத்தியபோதிலும் தமது அதிகாரத்தை உறுதியாக வைத்துக்கொள்வதே அவர்களது அடிப்படை நோக்கமாக இருந்தது. உண்மையில் றோஸ் (Rose) குறிப்பிடுவது போலப் பாகிஸ்தானிய முதலாவது இராணுவ ஆட்சி (1958-1962) யும் அதன் பின்னர் வந்த ஆட்சிகளும் "பிரித்தானிய இராணுவச்சட்டமுறைகளையே பெரிதும்பின்பற்றின." இவ்வாறு ஒருபுறம் பாகிஸ்தானும் பங்களாதேசும் மறுபுறம் இந்தியாவும் பிரித்தானிய காலனித்துவத்தின் நிறுவன மரபுரிமைகளின் அடிப்படையிலேயே தம்மைக் கட்டியெழுப்பிக் கொண்டன. ஆனால் இரண்டும் வெவ்வேறான வழிகளிலேயே அதனைச் செய்தன. பாகிஸ்தான் பிரித்தானிய சாம்ராஜ்யத்தை உறுதிசெய்த நிறுவனங்களையும் இந்தியா பிரதிநிதித்துவ நிறுவனங்களையும் தமக்கு முன்மாதிரியாகக் கொண்டன.
எனவே அதிகாரத்துவமான காலனித்துவ ஆட்சிமுறையைக்கொண்டிருந்த நாடுகள் சுதந்திரத்துக்குப்பின்னர் சிறப்பான சனநாயக மரபுரிமைகளைக் கொண்டிருக்கவில்லை. முன்னைய பிரெஞ்சு, பெல்ஜிய, டச்சு, ஸ்பானிய காலனிகளை உதாரணமாகக் கூறலாம். ஜப்பானிய காலனித்துவ ஆட்சியின் காரணமாகக் கொரியா, மிகவும் முக்கியத்துவமும், அதிகாரத்து
52

வமும் நிறைந்த ஆட்சி முறையைக் கொண்டிருந்தது. இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னர் அதன் நிர்வாக அதிகாரத்தைக் கட்டுப்படுத்த எவ்வித நிறுவனங்களும் இருக்கவில்லை. இதன் காரணமாகவே றி (Rhee) சனநாயகத்தை அமுக்க முடிந்தது. இதன் காரணமாகவே கட்சிகள், அமுக்கக்குழுக்கள் முதலிய அரசியல் உள்ளீடுகள் வளர்ச்சியடையவுமில்லை. அதைப் போலவே இந்தோனேசியாவும் தனது சனநாயகம் நோக்கிய வளர்ச்சியில் வன்முறைகளையும் , பிணக்குகளையும் வெகுவாக எதிர்நோக்கியது. இலங்கை, மலேசியா, பப்புவாநியூகினி போல் அல்லாது இந்தியாவின் சுதந்திரத்துக்குப்பின்னரான அரசியல் அதனது காலனித்துவ அனுபவத்தையே பிரதிபலித்து நின்றது.
அதே நேரத்தில் படையெடுப்போ அல்லது குடியேற்றவாதமோ இல்லாத நிலையிற் பாரம்பரிய மரபுரிமைகளும் அரசியல் மரபுரிமைகளும் நிகழ்கால நடைமுறைகளில் மிக வலிமையோடு செல்வாக்குச் செலுத்துகின்றன. ஒட்டோமன் சாம்ராஜ்யத்தின் மத்தியமயப்படுத்தப்பட்ட மரபுகள் துருக்கியின் சனநாயகத்தின் உறுதிக்குத் தடையாக இருந்தன. அதே போல மத்திய மயப்படுத்தப்பட்ட அரச அதிகாரம் தாய்லாந்திலும் சனநாயக நிறுவனங்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தன. மரபுரீதியான சமூக அரசியல் அமைப்புகள் மத்திய மயப்படுத்தப்பட்டுப் பின்னர் இவை காலனித்துவ அரசாங்கத்தினால் மறுசீரமைப்புக்கு உட்படாமல் இருந்தால் அரசுடனான உறவுகளில் சமுதாயம் மிகவும் பலவீனமாகவே இருக்கிறது என வாதிட இடமுண்டு. எனினும் தொடர்ச்சியான படிப்படியான வளர்ச்சியில் பல நன்மைகளும் இல்லாமலில்லை. தாய்லாந்தைப்பொறுத்தவரையில் ஏனைய தென்கிழக்கு ஆசிய நாடுகளை விட அரசியல் ஒழுங்கு உருவாவதற்கு இந்நிலைமைகள் காரணமாக இருக்கின்றன. அரசியற் சட்டபூர்வத் தன்மையின் மூலமான முடியாட்சியுடன் அவர்கள் இணக்கத்தைப் பேணி வந்திருக்கின்றனர். இதே போலத் துருக்கியில் “முஸ்தபா கமாலின்” சனநாயக மதச்சார்பற்ற சீர்திருத்தங்கள் ஒரு காலனித்துவ சக்தியை விட உடனடியானதும் தீர்க்கமானதுமான ஒரு சடட்பூர்வத்தன்மையை உருவாக்கியுள்ளன.
துருக்கி மற்றும் தாய்லாந்தின் வரலாறுகள் மாறுபட்டிருந்தாலும் கூட அதாவது அவற்றிக்குக் காலனித்துவ அனுபவம் இல்லாவிட்டாலும் கூட் உலக அரசியற் போக்குகளும் சித்தாந்தங்களும் அவற்றைப் பாதிக்கவே செய்துள்ளன. இந்நூற்றாண்டில் இவ்விரண்டு நாடுகளின் அரசியல் வளர்ச்சியில் மற்ற நாடுகளின் சனநாயக வளர்ச்சியின் மீது ஈடுபாடும் கவர்ச்சியும் கொண்டுள்ள கற்றறிவாளர் குழுவினது தாக்கம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. உதாரணமாக கமால் குழுவின் தோற்றம் முதலாம் உலகப்போரின் பின்னர் ஏற்பட்ட சனநாயக ஈடுபாட்டின் காரணமாகவே எற்பட்டது. 1932 இல் தாய்லாந்தின் இறுக்கமான
53

Page 29
முடியாட்சியைக் கவிழ்த்த சதிமுயற்சியின் பின்னணியிலிருந்த இளைய இராணுவ அதிகாரிகளும் சில பொது மக்களும் "இங்கிலாந்திலும் பிரான்சிலும் கல்வி கற்ற சனநாயகத்தின்பால் நாட்டம் கொண்டவர் " சமகாலச் சுதந்திர அரசுகளில் சர்வதேச சித்தாந்த வேறு பாடுகளும் தாக்கங்களும் வெகுவாக அதிகரித்துள்ளன என்பதும் இங்கு குறிப்பிடவேண்டிய விடயமாகும்.
களாவர்.
2. அரசியற் கலாசாரம்
சம ஒப்பீட்டு அரசியல், சமூகவியலில் அரசியல் கலாசாரம் என்பது ஒரு வாத எதிர்வாதத்துக்குரிய விடயமாகும். ஆனால் நமது ஆசிய நாடுகள் சனநாயக அனுபவம் அதன் விளைவுகள் பற்றிய ஆய்வுகளுக்கு அரசியற் கலாசாரத்தின் பயன்பாட்டையும் முக்கியத்துவத்தையும் காட்டிநிற்கின்றன.
இங்கு ஆய்வு செய்யப்படுகின்ற ஒவ்வொரு நாட்டிலும் நவீன அரசியல் முறைமை மற்றும் அதிற் தனிப்பட்ட பிரசையின் பங்கு ஆகியவை தொடர்பாக அரசியல், அதிகாரம் , சட்டபூர்வத் தன்மை ஆகியவை பற்றிய தெளிவான சிந்தனைப் போக்கைக் காணலாம். இத்தகைய நம்பிக்கைகள், இலட்சியங்கள், மனப்பாங்குகள், விழுமியங்கள், மதிப்பீடுகள் நடத்தைகள் ஆகியவை பொதுவாகச் சர்வதேசத் தொடர்புகள் மற்றும் அந்நிய ஆட்சியினால் பாதிக்கப்படுகின்றன. எனினும் ஒவ்வொரு நாட்டினதும் அரசியற் கலாசார மரபுரிமைகள் இவற்றை இன்னும் அதிகமாகப் பாதிக்கின்றன. ஆசிய நாடுகளில் இவ்வரசியற் கலாசாரத்தை நாம் பொதுமைப்படுத்துவதற்கில்லை. ஒரு தனிப்பட்ட நாட்டிலும் கூட இதனைப் பொதுமைப்படுத்த முடியும் எனவும் கூறுவதற்கில்லை. அதேநேரத்தில் பை (Pye) கூறுவதைப்போல ஆசியாவின் தந்தைவழி (Paternalistic) அரசியல் கலாசாரங்கள் (தங்கியிருக்கும் உளவியல் அதிகாரத்தை வெளிப்படையாக விமர்சிப்பதில் விருப்பமின்மை மற்றும் ஒற்றுமையின்மை பற்றிய ஆழமான பயம்) முழுமையான ஒரு சனநாயக அரசாங்கத்தை ஏற்படுத்த முடியாமற் செய்கின்றன என்பதையும் நாம் ஏற்றுக்கொள்வதற்கில்லை. ஒவ்வொரு அரசியற் தலைவரும் ஒருநாட்டில் அரசியல் யாப்பு வழியாக வரும் அதிகாரத்தைத் துஸ்பிரயோகம் செய்வார்களெனில் அந்த நிலைமையை அத்தலைவர்களின் விழுமியங்கள் மற்றும் அபிலாசைகளின் அடிப்டையில் மாத்திரம் விளக்கிவிட முடியாது.
ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில் சனநாயகம் பற்றிய பல்வேறு பிரச்சினைகளும் அவர்களின் அரசியற் கலாசாரத்திலிருந்துதான் எழும்புகின்றன என்பதை மறுத்துவிட முடியாது. அதேநேரத்தில் ஆசியாவில் சனநாயக முன்னேற்றம், கலாசார அடிப்படைகளையும்
54

உறுதிப்பாட்டையும் கொண்டுள்ளது. அத்துடன் அந்த அரசியற் கலாசாரமானது காலப்போக்கில் செல்வாக்குகளுக்கும் காலத்தினூடான பரிணாம வளர்ச்சிக்கும் உட்படுகிறது.
1947ஆம் ஆண்டிலிருந்து இந்தியா சனநாயகத்தில் வெற்றி கண்டுள்ளது. டாஸ் குப்தா (DasGupta) “கருத்தொருமிப்பும் சகிப்புத்தன்மையும் நிறைந்த அரசியல் பாங்கும் திறமுறையும் ஆரம்ப கால இந்தியத் தேசியவாதத்திலிருந்தே வளர்ந்து வந்தமையே இவ்வெற்றிக்குக் தாரணமெனக்” கூறுகிறார். இந்திய அரசியற் கலாசாரத்தில் காந்தியின் சத்தியாக்கிரக சித்தாந்தம் மிக முக்கிய தாக்கத்தை விளைவித்துள்ளது. ஆனால் வெய்னர் (Weiner) இந்திய மரபுரிமைகளையும் பிணக்குகளைத் தீர்ப்பதில் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்குகளில் உள்ள நம்பிக்கையையும் இந்திய சனநாயகத்தின் வெற்றிக்குக் காரணங்களாகக் காட்டுகின்றார். காந்தி பிறப்பதற்கு முன்னரே அரசியல் சுதந்திரம் மற்றும் தாராண்மைவாதம் பற்றிய கருத்துக்கள் இந்திய அரசியல் கலாசாரத்தில் ஊன்றியுள்ளன. காந்தியின் மறைவுக்குப் பின்னர் கற்றறிவாளரின் சீனநாயக விட்டுக்கொடுக்கும் அரசியல் கலாசாரம் என்பது அரசியல் செயன்முறைகள் மற்றும் போட்டிகளில் மட்டுமல்லாது அபிவிருத்தி இலக்குகள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றிலும் கூட ஒரு பரந்த கருத்தொருமிப்புக்கு வழிவகுத்தது என குப்தா கூறுகிறார். பப்புவா நியூகினியாவில் சனநாயக வெற்றிக்கும் பாரம்பரிய கலாசாரத்தில் காணப்படும் சனநாயகத் தன்மைகள் ஆகியவற்றுக்கிடையே தெளிவான ஒத்திசைவைக் காணலாம். பாரம்பரிய கலாசாரத்தின் சனநாயக அம்சங்கள் என்ற விடயத்தில் பிரிவுபட்ட கருத்துப்பரிமாற்ற அடிப்படையிலான ஒழுக்கவிய்ல் காணப்படுகிறது என லிப்செட் (Lipse) கூறுகிறார். அத்துடன் மத்தியப்படுத்தப்பட்ட ஒருதலைப்பட்சமான ஆட்சிக்கு ஓர் இயல்பான எதிர்ப்பும் காணப்படுகிறது. இவ்வாறான மரபுகள், இனரீதியாக, பிரிவுபட்ட ஒரு அரசியலையும் தனிநபர் சார்ந்த ஓர் அரசியலையும் உருவாக்கியுள்ளன என்பது உண்மையே. அதேநேரத்தில் இவை அதிகாரமானது அரசியல் அல்லது தனிநபரில் குவிவதையும் தடைசெய்துள்ளது என்பதும் உண்மையாகும். சனநாயக பப்புவா நியூகினியாவில் கலாசார ரீதியாக உருவாகிய “கீழ்ப்படியாமை" ஒரு பரந்த கற்றறிவாளர். குழுவினரின் சுற்றோட்டத்தை நாட்டில் உருவாக்கியுள்ளது.
இத்தொகுதியில் பல எழுத்தாளர்கள் சனநாயகத்தின் கடினத் தன்மைகளினதும் பிரச்சினைகளினதும் கலாசார வேர்களைப் பற்றிக் கூறுகின்றனர். இரண்டாம் உலகப்போருக்குப் பின்வந்த துருக்கியத் தலைவர்கள் சனநாயகத்தையும் மதச்சார்பற்ற குடியரசையும் ஒத்துக்கொண்டுள்ளனர். ஆனால் அரசியல் எதிர்ப்புத்தொடர்பாக அவர்கள்
55

Page 30
சாதகமான கருத்துக்களைக் கொண்டிருக்கவில்லை. உண்மையில் அரசியல் எதிர்ப்புத் தொடர்பான இந்தச் சகிப்பின்மையின் வேர் ஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்தில் (Ottoman empire) காணப்படுகிறது என ஒஸ்புடுன் (Ozbudum)வாதிடுகிறார். அவர் மேலும் கூறுகிறார் “அரசியல் எதிர்ப்பையும் தேசத்துரோகத்தையும் வேறுபடுத்தும் கோடு மிகவும் மெல்லியது. இது அரசியலைத் தங்குதடையற்ற ஆட்சிக்கோட்பாட்டின் அடிப்படையில் பார்க்கும் மனப்பான்மை, அரசியற் தலைவர்கள் மத்தியில் விட்டுக்கொடுத்தல், ஏற்றுக்கொள்ளல் முதலிய பண்புகள் காணப்படாததன் அல்லது குறைவாகக் காணப்படுவதை விளக்குகிறது.” அரசியலில் கலாசாரத்தடைகள் தென்கொரியாவில் மிக அதிகமாவே காணப்படுகிறது. இங்கு “விட்டுக்கொடுத்தல் என்பது பலவீனத்தின் வெளிப்பாடாகவும் தீர்மானம் மேற்கொள்ள முடியாத தன்மையானது ஒருவரது எதிரிகளால் மட்டுமல்ல நண்பர்களாலும் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது”இப்படியான அரசியல் விளையாட்டுத் தென்கொரியாவின் சனநாயக அரசியலில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதுடன் அண்மைக்காலத்தில் சனநாயகம் நோக்கிய மாற்றத்தினைத் தடம்புரளச் செய்துள்ளது. கொண்பியூசியஸின் அடிப்படைகளான ஒழுங்கு, மதிப்பு, இணக்கம் ஆகியவற்றிலிருந்தும் , பிளவுபட்ட கொரியாவின் பாதுகாப்பு விடயத்திலிருந்தும் எழும் சித்தாந்த ஒருமைப்பாடு (ideiological uniformity) உண்மையில் கட்சி அரசியல் முறைமையில் ஏற்படக்கூடிய விவாதம், தெரிவு முதலிய நல்ல தன்மைகளை இல்லாமற் செய்தது.
மலேசியா விடயத்தில் சக்கரியா (Zaaria) பை (Pye) யுடன் ஒத்துப்போகிறார். அரசியற் பிணக்குகள் மற்றும் அதிருப்தி தொடர்பான விடயங்களில் காட்டப்படும் தடைகள். மலேசிய கலாசார விழுமியங்களின் வெளிப்பாடாகும். உறுதியான அதிகாரத்தை இக் கலாசார விழுமியங்கள் பாராட்டுகின்றன. ஆனால் அரசியல் எதிர்ப்பு ,பிளவு பற்றிய பாரிய பயம் நாட்டின் இனப்பிளவுகள், 1969ஆம் ஆண்டின் வன்முறை ஆகியவற்றின் பாதிப்பைக் கொண்டுள்ளது எனக் கூறலாம். தாய்லாந்தில் உறுதிப்பாடு, கருத்தொருமிப்புப் பற்றி இராணுவ அதிகாரத்திற் கற்றறிவாளர் குழு கவனம் கொண்டிருந்தனர். சனநாயம் பற்றிய அவர்களது கருத்தில் அரசியற் பிணக்குகள், சுதந்திரமான நலன்காப்புக் குழு முதலியன உள்ளடங்கவில்லை. ஆனால் தாராளமற்ற இக் கருத்துக்கள் நிலையாக இருக்கவுமில்லை. ஆனால் இத்தகைய தாராளவாதத்திற்கு எதிரான கருத்துக்கள் நிலையாக இருக்கவில்லை. இவை தாய்லாந்தின் பாரம்பரிய அதிகாரத்தின் எதேச்சாதிகார தன்மையின் வழிவந்தவை. அத்துடன் சனநாயக விழுமியங்களின் வரலாற்று ரீதியான பலவீனங்களுக்கும் உட்பட்டவை. அதுமட்டுமல்லாமல் தாய்லாந்தின் பல்கட்சி முறையின் குழப்பமான போட்டிக்கும் உட்பட்டவை. மலேசியாவில் உள்ள இனரீதியான அச்சுறுத்தலுடன் இதனை ஒப்பிடவும் முடியும்.
56

இந்தோனேசியா விடயத்தில் சனநாயத்திற்குப் பொருத்தமில்லாத யாவாவின் கலாசாரம் மற்றும் சமூக அம்சங்களைச் சுட்டிக்காட்டுவது இலகுவானது. மத்திய அதிகாரத்துக்கு ஏற்படும் எதிர்ப்பைச் சகிக்க முடியாமை மற்றும் அதிகாரத்துக்கான ஒழுக்க அடிப்படை இல்லாமை ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். ஆனால் கிராம மட்டத்திலேனும் சமத்துவம், சமூகநீதிமற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை தொடர்பான ஓர் உணர்வு வளர்ச்சியடைந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் சுதந்திரமடைந்த காலத்தில் இனரீதியான பிரிவுகளைச் சமாளிப்பதற்கு சனநாயக வழிமுறைகளின் தேவையை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கும்
அரசியற் குழுக்களிடையே வளர்ச்சி பெற்றிருந்தது.
இந்தோனேசியாவின் சனநாயக அபிவிருத்திக்கு இஸ்லாம் தடையாக இருக்கிறதா என்னும் கேள்வியும் கூட எழுப்பப்பட்டுள்ளது. இது இஸ்லாம் எவ்வாறு அரசியல் ரீதியாக விபரிக்கப்பட்டுள்ளது என்பதில் ஓரளவு தங்கியுள்ளது. மத்திய கிழக்கின் இஸ்லாமிய நாடுகளைப் பொறுத்தவரையில் எமது கருத்தைப் பொதுமைப்படுத்திவிட முடியாது. எனினும் இங்கு நாம் எடுத்துக் கொண்ட முஸ்லீம் நாடுகளைப் (இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், துருக்கி) பொறுத்தவரையில் சனநாயக அபிவிருத்தியை இஸ்லாம் நேரடியாகத் தடுக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. துருக்கியைப் பொறுத்தவரையில் இருபதாம் நூற்றாண்டில் அரசியலிலும் அரசிலிருந்தும் இஸ்லாம் பிரிக்கப்பட்டுவந்திருக்கிறது. இந்தோனேசியாவைப் பொறுத்தவரை முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக இருந்தபோதிலும் பல்லினத்தன்மை காணப்படுகிறது. அத்துடன் முஸ்லீம் சமூகம் கூட சாந்திரி (Santi) எனவும் அபன்கன் (Abangan) எனவும் பிளவுபட்டுள்ளது. இந்த இரு சமூகங்களிலும் பல உள் வேறுபாடுகளும் காணப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் இந்தோனேசியா உட்பட மற்ற முஸ்லீம் நாடுகளில் இஸ்லாமியக் கட்சிகள் தேர்தல்களில் உயர்நிலையை அடையவில்லை. (அரசியல் அமைப்பு இக் கட்சிகளுக்குத் துணையாக அமையவில்லை என்பது இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்).
பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய அரசாக 1947 ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது. பிரிவினையின் கொடுமைகளிலிருந்து மீண்டு ஒன்றுபடுத்தும் ஒரு சக்தியாக இஸ்லாம் விளங்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் “றோஸ்" கூறுவதைப் போலக் கடந்த நான்கு தசாப்தங்களாக அரசியலிலும்கொள்கை உருவாகத்திலும் இஸ்லாம் பாரிய முக்கியத்து வத்தைக் கொண்டிருக்கவில்லை. இஸ்லாமானது பாகிஸ்தானில் சனநாயக வளர்ச்சிக்கு உதவியாகவோ அல்லது தடையாகவோ இருக்கவில்லை. எனவே மதமும் அரசியலும் வெவ்வேறாக்கப்பட்டிருப்பது முக்கியமானதாகத் தென்படுகிறது. பாகிஸ்தானை உருவாக்கியவர்கள்
57

Page 31
நவீனத்துவவாதிகளாக இருந்தனர். அவர்கள் இஸ்லாமிய நிறுவனங் களுக்கு ஆட்சி அதிகாரத்தில் எவ்வித பங்கையும் வழங்கவில்லை. பின் வந்த அரசாங்கங்களும் அவர்களை அரசியல் ரீதியாக ஒதுக்கியே வைத்திருந்தன. அத்துடன் இஸ்லாமியக் குழுக்களும் தலைவர்களும் கூட "தூய்மைவாதிகள்" (Purists) எனவும் வெகுசனவாதிகள் (Populists) எனவும் தமக்குள்ளேயே பிளவுபட்டிருந்தன.
இவ்வாறு பல்வேறு ஆசிய நாடுகளைப் பற்றிய ஆய்வுகளிலிருந்து நாம் சேகரித்த சான்றுகள் அரசியல் கலாசாரதிற்கும் சனநாயக விளைவுகளுக்கும் தீர்க்கமான தொடர்புகள் உண்டு என்பதை நிச்சயப்படுத்தவில்லை. சனநாயக விளைவுகள் பல தரப்பட்ட சிக்கலான மூலங்களைக் கொண்டிருக்கின்றன என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. இதைப்பற்றித் தொடர்ந்து விளக்கலாம். அது மட்டுமல்லாமல் அரசியற் கலாசாரமும் கூட நடந்து முடிந்தவைகளால் மாத்திரமன்றி நிகழ்கால அனுபவங் களாலும் தீர்மானிக்கப்படுகிறது. அத்துடன் அரசியலமைப்புத்தொடர்பாக அரசியற் கலாசாரம் ஒரு தங்கியிருக்கும் மூலகமாகத் தொழிற்படுகிறது. இவ்வாறாக இந்திய தேசிய காங்கிரஸ் சுதந்திரத்திற்கு முன்பதாக உள்ள அறுபது ஆண்டுகளில் தேசிய உணர்வையும் அரசியல் செயற்பாட்டையும் வளர்த்த பொழுது இந்திய பொது மக்களின் சனநாயக விழுமியங் களையும் விதிகளையும் நியமங்களையும் வளர்ப்பதிலும் முக்கிய பங்கு கொண்டிருக்கிறது. அதேபோலத் துருக்கியில் கடந்த நான்கு தசாப்தங்களாகச் செயற்பட்டு வந்த சனநாயக முறைமை பல இடையூறுகள் ஏற்பட்டபோதிலும் துருக்கியின் இளந்தலைமுறையினருக்குச் சனநாயக விழுமியங்களைப் புகட்டியுள்ளது. அதேநேரத்தில் தாய்லாந்தில் இராணுவ அதிகாரத்துவக் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும் அவற்றுக்கு எதிரான கருத்துக்களே வளர்ந்துள்ளன என சாய் - அனன் (Chai Annan) என்பவர் கூறுகிறார். "கான்’ (Han) என்பவரின் கருத்துப்படி கொரிய யுத்ததிற்குப் பின்னர் கொரியாவில் ஏற்படுத்தப்பட்ட சனநாயகம் பற்றிய கல்வியானது சனநாயக ஈடுபாட்டை மக்களிடையே வளர்த்துள்ளது. இந்த சனநாயக ஈடுபாட்டை விரைவான நகராக்கம், நவீனமயவாக்கம், தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி ஆகியவை விரைவுபடுத்தியுள்ளன. சனநாயக விளைவுகளைப் பற்றி ஒரு கலாசார விளக்கம் கொடுப்பதில் வேறொரு சிக்கலும் உள்ளது. அதாவது சகல அரசியற் கலாசாரங்களும் ஓரளவுக்குக் கலவையாகவே காணப்படுகின்றன. இத் தொகுதியில் உள்ள பல நாடுகள் கொண்டுள்ள முக்கியமான விழுமியங்கள் சில ஒருபுறம் சன்நாயக வழியையும் வேறுசில அதிகாரத்துவ வழியையும் காட்டுகின்றன. இவ்வாறாகப் பிலிப்பைன்ஸ் அரசியலின் பாரம்பரியமான சந்தர்ப்பவாதப் பாங்கு சனநாயகத்தை மிகத் தெளிவாக இழிவுபடுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் அதன் சனநாயகத்தில் காணப்படுகின்ற வெகுசனத்தன்மையும் சனநாயகப் பங்கு பற்றலும் தாய்லாந்து அல்லது
58

இந்தோனேசியாவைப் போலல்லாது ஒரு அதிகாரத்துவ குழுவை அந்நாட்டில் நிறுவனமயப்படுத்துகின்ற தன்மையைக் கடினமாக்கியுள்ளது. இந்தியாவின் சனநாயக விழுமியங்களும் நியமங்களும் சில குறிப்பிட்ட பாரம் பரிய விழுமியங்களுடன் இணைந்து வந்துள்ளன. இந்தப் பாரம்மபரிய விழுமியங்கள் சனநாயகத்துக்குவாய்ப்பானவையல்ல என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உதாரணமாக (இணக்கமாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதில் உள்ள ஆர்வம்) சனநாயத்தில் உள்ள போட்டியையும் பிணக்கையும் குறைத்து மதிப்பிடுகின்றன. அத்துடன் பல கட்சிப் பாராளுமன்ற சனநாயகத்தைக் கேலியும் செய்கின்றன. அரசியற் கலாசாரத்தில் குறைந்தளவு சனநாயகத்தொகை கொண்ட வேறு சில துணைக் கலாசாரங்களும் கலந்து போயுள்ளன. உதாரணமாக தாய்லாந்தில் இராணுவ நம்பிக்கைகள் அரசியலில் கலந்திருப்பதைக் கூறலாம். இறுதியாக மாற்றங்கள், செய்முறையின் விளைவாகவும் கலப்பு ஏற்படுகின்றது. எமது ஆய்வானது இவ்விடயத்திற் கபிரியல் அல்மொண்ட்டின் (Gabriel Amond) கூற்றை உறுதிப்படுத்துகின்றது. அதாவது சகல அரசியல் முறைமைகளும் மாறுகின்ற முறைமைகளாகவோ அல்லது கலாசார மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற முறைமைகளாகவோ விளங்குகின்றன என அவர் கூறுகிறார்.
அரசியற் கலாசாரத்தின் இந்தக் கலவைத் தன்மையை ஆசியாவில் சனநாயக அபிவிருத்திக்குத் தடையாக இருக்குமென நாம் கருதவில்லை. அல்மொண்ட் அண்மையில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளார்: "அரசியற் கலாசாரம் அரசியல் மற்றும் அரசாங்க அமைப்புகளையும் அதன்செயற்பாடுகளையும்பாதிக்கின்றது; தடைகளை ஏற்படுத்துகின்றது; ஆனால் நிச்சயமாக அதனைத் தீர்மானிப்பதில்லை. எமது ஆய்வுகள் பலவற்றிற் கலாசார விழுமியங்களும் நம்பிக்கைகளும் சனநாயக அபிவிருத்தியையும் அதன் உறுதிப்பாட்டையும் சிக்கலாக்கியுள்ளன. ஆனால் ஒரு முழுமையான சனநாயகம் ஏற்படும் வழியை அவைகள் அடைத்து விடவில்லை. வெவ்வேறான கலாசாரங்களில் சனநாயகம் உள்வாங்கப்பட்டுள்ளது. ஆகவே அது வித்தியாசமாகக் காட்சியளிப்பதோடு வித்தியாசமாகச் செயற்படவும் கூடும். ஆனால் அதற்காக அது குறைந்த சனநாயகத் தன்மை கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியமற்றது.
3. இனத்துவப் பிளவும், பிணக்கும்
சனநாயகத்தைப் பாதிக்கும் எதிர்மறைக் காரணியான இனத்துவப்
பிளவுகள் ஆசியா தொடர்பான ஆய்வுகளிற் தாராளமாகக் காணப்படு
கின்றன. இலங்கையில் இனத்துவப்பிளவுகள் சனநாயகத்தின் சீரழிவுக்குக்
காரணமாக இருந்திருக்கிறது. அத்துடன் ஒரு வன்முறை எழுச்சிக்கும்
அதனை அழிப்பதற்கான அடக்குமுறைக்கும் காலாக இருந்திருக்கின்றது. 59

Page 32
பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, இனங்களுக்கிடையே கசப்புணர்வையும், அரசியலில் எதிர்துருவத்தன்மையுைம் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் எதேச்சாதிகாரம் மேலும் மேலும் அதிகரிக்கவும் காரணமாக இருந்துள்ளது. மலேசியாவில் இனத்துவப்பிளவானது சனநாயகக் கருத்து வெளிப்பாட்டிற்கும், போட்டிக்கும் வரையறைகள் விதிக்கக் காலாக இருந்துள்ளது. பாகிஸ்தானிலும் இந்தோனேசியாவிலும் சனநாயகத்தை நிலைநிறுத்த எடுக்கப்பட்ட ஆரம்ப முயற்சிகளின் தோல்விக்கும் நிலையற்றதன்மைக்கும் காரணமாக இருந்துள்ளது.
ஆனால் ஆழமான இனத்துவப் பிளவுகளின் மத்தியில் சனநாயகம் செல்லுபடியாகாது என்னும் முடிவு பொருத்தமற்றது. இந்தியா உலகத்திலேயே மிகவும் சிக்கலான இனத்துவ அமைப்புகளைக் கொண்ட நாடாகும். அதன் அரசியலானது இனத்துவ, மொழிவாரிப் பிணக்கு களுக்கும், கோரிக்கைகளுக்கும், தொடர்ந்துமுகம் கொடுத்துவந்துள்ளது. பப்புவாநியூகினியும் இனத்துவப் பிரிவுகளை உடைய நாடு. இந்தியாவைப் போலவே அதுவும் பிரிவினைவாத இயக்கங்களைக் கொண்டுள்ளது. ஆனால் இவ்விரண்டு நாடுகளிலும் சனநாயகம் உயிர்ப்பாக உள்ளது. அதுமட்டுமன்றி றோஸ் கூறுவதைப் போல இந்தியாவைப் போன்ற ஒரு பாரிய சிக்கலான இனத்துவ, சமூகப் பிளவுகளும் சிக்கல்களும் உள்ள நாட்டில் பங்குபற்றும் சனநாயகத்தை விடச் சிறந்த இன்னொரு அரசாங்கமுறை சிறப்பாக தொழிற்படக்கூடும் எனக் கூறுவதற்கில்லை. மறுதலையாக ஒப்பீட்டளவில் ஓரின நாடுகளான துருக்கியிலும் , தாய்லாந்திலும் அரசியல் எதிர்த்துருவத்தன்மையும், சனநாயகத் தேய்வும் தடுக்கப்படவும் இல்லை. எனவே இநவ்கு தெளிவாகத் தெரிவது என்னவெனில் இனத்துவப் பிளவு எவ்வளவு ஆழமானது என்பது முக்கியமல்ல, அது எவ்வாறு அமைந்துள்ளது என்பதுவும், எவ்வாறு சமாளிக்கப்படுகிறது என்பதுமே இங்கு முக்கியமானவைகள்.
இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை அதனுடைய சிக்கற் தன்மையின் குறுக்கு வெட்டுத் தன்மை ஒரு பாரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. டாஸ் குப்தா கூறுவதைப் போலப் பிரதான மதச் சமுதாயங்கள் பல மொழிவாரிச் சமுதாயங்களாகவும் அவை பின்னர் சாதி, வகுப்பு முதலிய தட்டுகளைக் கொண்டவையாகவும் அமைந்துள்ளன. இவ்வாறு பலவாறு வேறுபட்டுக்கிடக்கும் இப்பிரிவுகள் தமக்குள் முரண்படுகின்றன. காலப்போக்கில் முரண்பாடுகளைத் தீர்ததுக் கொண்டு வேறு புதிய முரண்பாடுகளைத் தோற்றுவித்துக் கொள்கின்றன. இதற்கு மாறாக இனத்துவப் பிரச்சினைகள் அதிகம் காணப்படுகின்ற இலங்கையிலும் மலேசியாவிலும் இனத்துவ, மத, பிரதேச, மொழிவாரிப் பிரிவுகள் மென் மேலும் அதிகரிக்கின்றன. இந்நாடுகளிற் பெரும்பான்மையினரான சிங்களவர்களும், மலேயர்களும் சமூக பொருளாதார ரீதியாகத் தாமும் பின்தங்கியுள்ளவர்களாகக் கருதுகின்றனர்.
60

இந்த எதிர்த்துருவத்தன்மை இனத்துவ அமைப்பின் மத்திய மயப்படுத்தற் தன்மையினால் மேலும் வளர்க்கப்படுகிறது. அதாவது சிற்சில குழுக்கள் ஏனைய குழுக்களிலும் பார்க்க மிகப் பெரியவை என்பதால் மத்திய அரசாங்கத்தில் அவற்றிடையே ஏற்படும் இடைத்தாக்கங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களுமே சனத்தொகையின் பெரும்பகுதியினர். மலேசியாவில் மலாயர்களும் சீனர்களும் முக்கிய பகுதியினர். எனவே வளங்கள் மற்றும் அதிகாரத்தைப் பகிர்வு செய்யும் எப்பிரச்சினையும் அல்லது கலாசார அடையாளங்களை உறுதிப்படுத்தும் எம் முயற்சியும் இனங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்துகின்றன. இதற்கு முரணான விதத்தில் பாரிய அளவு பன்முகப்படுத்தப்பட்ட இனத்துவ முறைமையில் இனங்களுக்கிடையே மிக இலகுவாக இணக்கங்கள் ஏற்பட முடியும். உதாரணமாக இந்தியாவில் இந்தி மொழியைப் பேசுவோர் சனத்தொகையின் 30 வீதமானோராவர். வேறு எந்த மொழிக்குழுவினரும் 10 வீதத்துக்கும் மேற்பட்டோரல்லார். இவ்வாறு இனங்கள் பரந்து காணப்படுவது காரணமாக இந்திய அரசியல் குஜாராத்தி, பெங்காளி, ஒரியா மற்றும் தெலுங்கு பேசும் குழுக்களுக் கிடையே உள்ள பகைமையை அடிப்படையாகக் கொண்டே சுற்றிச் சுழல்கிறது என்பது அர்த்தமற்ற கூற்றாகும்.
பப்புவாநியூகினி நிலைமை இனங்கள் பலவாறு சிதறுண்டு பரந்து காணப்படுவதற்கு சிறந்த உதாரணமாகும். இங்கு சுமார் 700மொழிகள் பேசப்படுகின்றன. (சனத்தொகை 3.5 மில்லியன் மட்டுமே) இதைத்தவிர பலநூறு குலப்பிரிவுகளும் இனக்குழுக்களும் அரசியல் அடையாள அலகுகளாகக் காணப்படுகின்றன. இதனால் அரசியலில் பலவிதமான கூட்டுக்களை உருவாக்குகின்றன. பப்புவா நியூகினியில் ஒப்பீட்டளவில் எதிர்த்துருவப் பிணக்குகள் காணப்படவில்லை. ஆனால் இவ்விரு நாடுகளிலும் அரசியல் அமைப்புகளின் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும். அத்துடன் இனத்துவப் பிணக்குகளைச் சமாளிப்பதில் ஆக்கபூர்வமான, நெகிழ்ச்சியுள்ள தலைமைத்துவத்தின் முக்கியத்துவமும் உணரப்படவேணடும். இரு நாடுகளிலுமே பாரதூரமான இனத்துவப் பிணக்குகளும் பிரிவினை இயக்கங்களும் பெரும் அச்சுறுத்தலாகக் காணப்படுகின்றன. எனினும் இப்பிணக்குகள் இனத்துவ மேலாண்மை, அடக்குமுறை, எதிர்ப்புகள் மூலமாகச் சமாளிக்கப்படவில்லை. மாறாகப் பேச்சுவார்த்தை மற்றும் பாதிக்கப்பட்ட குழுக்களுக்குக் கலாசார /அரசியல் பாதுகாப்பு வழங்குதல் ஆகிய முறைகள் மூலமே தீர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக 1960களில் இந்திமொழி தேசிய மொழியாக்கப்பட்டபோது மிக மோசமான பிணக்குகளும், வன்முறைகளும் தோன்றின. அவற்றைத் தீர்ப்பதற்காக அரசியற் தலைவர்கள் தமது தீர்மானத்திலிருந்து பின்வாங்கி நிலைமையைச் சமாளித்தனர். இந்தியாவின் சிறிய இனக்குழுக்கள் பயத்தின் காரணமாக ஒன்று சேர்ந்து பிரிவினைவாதம் தலைதூக்கிய
61

Page 33
போது அதனைச் சமாளிப்பதற்காகச் சிறு மாநிலங்கள் உருவாக்கப் பட்டதோடு அவற்றுக்குக் கூடிய தன்னாதிக்கம் வழங்கி அதிகாரத்தையும் பன்முகப்படுத்தினர். அதைப்போலவே பப்புவாநியூகினியில் பிரிவினை வாதம் மோசமாகத் தலைதுாக்கியபோது அதிகாரததைப் பன்முகப் படுத்தியதோடு 19 மாகாண அரசாங்கங்களை உருவாக்கி அதனைத் தீர்த்தனர்.
இவ்வாறு ஒப்பீட்டளவில் வெற்றிகரமாக இனத்துவமுகாமைத்துவமானது இலங்கையின் கசப்பான அனுபவங்களுடன் முரண்டுகிறது. இங்கு 1960 களிலும் 1970களின் ஆரம்பத்திலும் மிதவாத தமிழ்த் தலைமைத்துவத்தின் கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. இதன் காரணமாகத் தமிழர் மத்தியில் தீவிரவாதம் வளர்ந்ததோடு அதன் தொடர்ச்சியாக வன்முறை சார்ந்த பிரிவினை வாதமும் தலையெடுத்தது. இந்திய அனுபவத்திற்கு எதிர்மாறான வகையில் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மொழியின் பிரயோகத்திற்கு உத்தரவாதம் அளிக்க மறுத்ததோடு தமிழர்களுக்குப் பிரதேச சுயாட்சி வழங்கவும் மறுத்து வந்தனர். இந்தியாவிலேயும் கூட வித்தியாசமான அணுகு முறைகளும் பின்பற்றப்பட்டதை இங்கு குறிப்பிட வேண்டும். அசாம் மற்றும் பஞ்சாப் ஆகியவறின் பிரதேசவாத இயக்கங்களை அடக்குவதற்காக இந்திராகாந்தி ஒருதலைப் பட்சமான குறுகிய அடக்குமுறைகளைக் கையாண்டார். இதனால் அப்பிரதேசங்களில் மோசமான வன்முறை வெடித்தது. அதே வேளையில் ராஜீவ் காந்தியின் இசைந்து போகும் உத்தியின் காரணமாக அசாமில் நெருக்கடி நிலைமை பெரிதும் குறைக்கப்பட்டது. இதைப்போலவே பெரும்பான்மையினரான யாவா அாசியல்வாதிகள் சிறுபான்மையினங்களின் உரிமைகளை ஏற்றுக்கொள்ளாமல் அவர்களை அடக்க முயன்றதன் காரணமாக, ஒரு தசாப்தத்துக்கு மேலாகச் சிவில் யுத்தம் ஏற்பட்டதுடன் அது சனநாயகத்துக்கான அடிப்படையையும் தளர்ச்சியுறச் செய்ததாக சுன்தாஹவுசன் குறிப்பிடுகிறார்.
மலேசியாவைப் பொறுத்த வரையிலும் விட்டுக்கொடுக்கும் தன்மையானது இனத்துவ சமாதானத்தைப் பாதுகாத்தது எனக் கூறலாம். ஆனால் இது ஒரு பாரிய கூட்டிணைவின் விளைவாகவே ஏற்பட்டது. இக்கூட்டிணைவில் மலாயர்களின் அரசியல் மேலாதிக்கம் அமுக்கிவைக்கப்பட்டது. மலாயர்கள் தமது மேலாண்மையை வெளிப்படையான மேலாதிக்கத்தின் மூலமாகப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. மாறாக இசைந்துபோகும் கூட்டிணைவின் மூலமாகவும் அரசியல் நன்மைகளைப் பெறக்கூடிய இனத்துவப் பிரிவுகளின் மூலமாகவுமே சமாதானம் அடையப்பட்டது. மலேசிய அனுபவமானது இனத்துவப் பிணக்குகளை அமைதிப் படுத்துவதில் அரசியல் கட்சிகள் மற்றும் கட்சி முறைகளின் முக்கியத்து வத்தைக் காட்டுகிறது. இங்கு ஒரு பரந்த பல்லினத்தன்மையுள்ள கட்சிகளின் கூட்டுக்குப் பல காரணங்களைக் கூறலாம். ஒவ்வொரு இனக் குழுவிலும்
62

ஒரு பிரசித்தமான கட்சி இருந்தது. அத்துடன் மலாய்க் கட்சிக்குப் (UMNO) பாராளுமன்றத்திற் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு எதிராக இலங்கையில் உள்ள இரண்டு பெரும்பான்மைச் சிங்களக் கட்சிகளும் பெரும்பான்மையினரைத் திருப்திப்படுத்துவதில் ஒன்றையொன்று முந்துவதற்கு முயற்சிக்கின்றன. இதனால் இலங்கையில் ஒரு பல்லின கட்சிகளின் கூட்டமைப்பை உருவாக்க முடியவில்லை. அத்துடன் சிங்களக் கட்சிகள் தமிழர்களுடன்இணைவதற்கு அல்லது ஒத்திசைவாக நடந்து கொள்வதற்கு இந்நிலைமை தடையாக இருக்கிறது.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சி இனத்துவக் கோரிக்கைகளுக்கு இசைந்து செல்கிறது. தேசிய ரீதியாக இக் கட்சியின் செல்வாக்கு உயர் நிலையில் இருப்பது இதற்கான காரணங்களில் ஒன்று என்பது சந்தேகமில்லை. இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை ஒரு பாரிய சவால் ஏற்படவில்லை. அதனால் காங்கிரஸ் கட்சிக்கு இனவாதம் மற்றும் விட்டுக்கொடாமை ஆகியவற்றைத் துணைக்கழைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அத்துடன் இந்தி மொழி பேசுபவர்கள் ஒரு கட்சிக்குத் தேசிய பெரும்பான்மையைத் தாம் மட்டும் வழங்கக் கூடியவர்களுமல்லர். பாகிஸ்தானில் முஸ்லிம் லீக் கட்சிக்கு இந்தியாவில் காங்கிரஸ்கட்சிக்கு உள்ளதைப் போல ஒரு தேர்தற் தளமில்லை. அதனுடைய தலைமைத் துவமும் தொண்டர்களில் பெரும்பான்மையினரும் "முஜாகிர்கள்"(Muhajirs) (அகதிகள்) ஆவார்கள். இந்திய காங்கிரஸ் கட்சி செய்ததைப் போன்று சகல இனத்துவ, சமூக, பிரதேசக் குழுக்கிடையே ஒரு பரந்த ஆதரவுத் தளத்தைக் கட்டி எழுப்புவதை விடுத்து முஸ்லீம் லீக்கின் தலைவர்கள் கையாண்ட ஒருங்கிணைப்புக்கு எதிரான கொள்கைகளினால் பல பிரதான பிரதேசக் குழுக்கள் அந்நியப்படுத்தப்பட்டன. அடுத்துவந்த வருடங்களில் இனத்துவக் குழுக்களைத் தேசிய அரசியலில் ஒன்றிணைப்பதற்குப் பாகிஸ்தானில் அரசியற் தலைமைத்துவம் தவறியது. இதன் காரணமாக அரசியல் ஸ்திரமின்மையும் சனநாயகத் தோல்வியும் ஏற்பட்டு 1971இல் பாகிஸ்தான் இரண்டு நாடுகளாகப் பிளவுபட்டது.
சுருக்கமாகக் கூறுவதானால் இத்தொகுதியிலுள்ள ஆய்வுகள் உறுதியான பொதுமைப்பாட்டைச் சுட்டிக் காட்டுகின்றன. அண்மைக் கால இந்தியாவின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு டாஸ் குப்தா கூறுவதைப் போன்று சமூகத்தில் சமாதானத்தையும் அரசியல் ஸ்திரப்பாட்டையும் அரசாங்கமானது இனத்துவப் பிரச்சினைகளுக்கு இசைந்து போகும் உத்திகளைக் கையாள்வதன் மூலமாகப் பேண முடியும். ஆனால் அரசாங்கமானது அடக்குமுறையைக் கையாளும் பொழுது வன்முறை பெருகுகிறது. இதிலிருந்து ஒரு முக்கியமான உண்மையும் வெளிப்படுகிறது. அதாவது இனத்துவத்தலைவர்களுக்கு அதிகாரப்பங்கீடு
63

Page 34
செய்வதன் மூலம் அவர்களை அரசாங்கத்தின் விதிகளுக்கு உட்படுத்தக் கூடியதாக இருக்கும். இந்த நிலைமை சமத்துவமின்மையை நிச்சயம் குறைத்துவிடும் எனக் கூறமுடியாது. எனினும் இந்நிலைமையை சகித்துக் கொள்ளும் தன்ைைமயை வளர்க்கக்கூடும்.
4. அரசும் சமூகமும்
ஆசிய நாடுகளைப் பற்றிய ஆய்வுகளிலிருந்து அரசுக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவுக்குச் சனநாயகம் எவ்வளவு முக்கியமானது என்பதற்குப் பலவிதமான தெளிவான சான்றுகள் கிடைத்துள்ளன. எனினும் இக்காரணிகள் தர்மசங்டமான நிலைமையைத் தோற்றுவிக்கின்றன. அரசானது மிகையான வலிமையையும் மத்தியத்துவத்தையும் மேலாண்மையையும் கொண்டு விளங்கும் பொழுது அதிகாரத்துவமும் ஆதிக்கமும் அடக்குமுறையும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இதனால் தான் சனநாயம் பற்றிய பல கோட்பாடுகள் அரசுக்கு அப்பால்பொருளாதார சமூக அரசியல் நிறுவனங்களின் பன்முகப்பட்ட அமைப்பு இருக்க வேணி டுமென வலியுறுத்துகின்றன. மறுதலையாக அரசானது பலவீனமானதாக இருந்தால் சமூகம் எதிர்பார்க்கும் சமூகப் பொருளாதார நன்மைகளை வழங்க முடியாததுடன் ஒழுங்கையும் பேண முடியாது போய்விடும். எனவே பொதுவாக அரசுக்கும் சமூகத்துக்குமிடையில் ஒருவகையான சமநிலை பேணப்பட வேண்டும்.
ஆசியாவில் பல நாடுகளில் சமூகத்தின் மீது அரசின் மேலாதிக்கம் காணப்படுவதால் சனநாயகச் செயற்பாடுகளுக்கு அது சிரமங்களை ஏற்படுத்துகிறது. கடந்த அரை நூற்றாண்டுகாலமாகத் தாய்லாந்தினால் ஓர் உறுதியான சனநாயகத்தை விருத்தி செய்து கொள்ள முடியவில்லை. இதற்கான காரணம் சமூகத்தில் அதிகாரத்துவத்தின் மேலாதிக்கமும் இராணுவத்தின் செல்வாக்கும் எனக் கூறலாம். இவ்வாறான மத்தியத்துவப்படுத்தப்பட்ட அரச நிறுவனங்களின் மேலாதிக்கமானது இந்நாட்டில் தன்னாதிக்கமுள்ள நலன்காப்புக் குழுக்களையும் அரசியற் கட்சிகளையும் கிராமிய சங்கங்களையும் வளரவிடவில்லை. அவைகள் வளரத் தொடங்கிய பொழுது அதிகாரத்துவமும் இராணுவமும் அவற்றை முளையிலேயே கிள்ளியெறிந்து விட்டன. காலப்போக்கில் இது ஒரு வட்டமாக மாறிவிட்டது. பலவீனமான பயனற்ற சமூக நிறுவனங்களினால் மத்தியத்துவப்படுத்தப்பட்ட அரச அதிகாரத்தின் உறுதிப்பாட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதுமட்டுமல்லாது இராணுவ அதிகாரத்துவ அடக்குமுறையை எதிர்க்கவும் முடியவில்லை. இத்தகைய தோல்வியானது அரசுக்கும் சமூகத்துக்குமிடையிலான நிறுவனரீதியான இடைவெளியை உறுதிப்படுத்தியது. இதனால் 'அரசு சமூகத்தைவிட மேலாதிக்கம் பெற்றது. அதைப் போலவே அரசியற் கட்சிகளின் பலவீனமும் இந்த விஷ
64

வட்டத்தினை வளர்த்தது. அதாவது இராணுவத் தலையீட்டின் காரணமாகக் கட்சிகள் பலவீனமடைந்துள்ளன. ஏனென்ரில் இக்கட்சிகள் தம்மை நிறுவனமயப்படுத்திக் கொள்வதற்கான அனுபவத்தையும் தொடர்ச்சியையும் பெற முடியவில்லை. இவ்வாறான ஒரு வரலாற்றுச் செயல்முறை தென் கொரியாவிலும் காணப்படுகிறது. குடிசார் நிறுவனங்களின் தோல்வியானது இராணுவ மற்றும் அதிகாரத்துவத் தலையீட்டைச் சட்டபூர்வமாக்கியுள்ளதோடு அரசியற் செயல்முறையைப் பாதுகாப்பது தமது உரிமை மாத்திரமல்ல கடமையும் கூட என அவர்களை எண்ண வைத்துள்ளது. தாய்லாந்து இராணுவமானது சனநாயகப்பன்மைத் தன்மையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தொடர்பு சாதனங்கள் கிராமிய அபிவிருத்தி முதலிய சமூகப்பரப்புகளின் மீதும் தனது செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. இதனால் உண்மையான சனநாயக அரசாங்கத்தை விருத்திசெய்வது மேலும் சிக்கலாகியுள்ளது. இன்று தென்கொரியாவில் ஒரு முழுமையான சனநாயக அமைப்பை உறுதிப் படுத்துவதில் இதே அதிகாரத்துவ மேலாதிக்கவாதிகள் தடையாக இருக்கின்றனர்.
ஆனாலும் கூட அண்மைக்காலத்தில் தென்கொரியாவில் சனநாயக ரீதியான மாற்றம் ஏற்படுவதை அரசின் இராணுவ மயப்படுத்தப்பட்ட மத்தியமயப்படுத்தப்பட்ட தன்மை தடை செய்யவில்லை. ஆனால் தென்கொரிய சமூகத்தில் அரசின் இராணுவமயப்படுத்தப்பட்ட உயர்ந்த தன்மையைக் கடந்த காலத்தில் சனநாயகத் தோல்விகளுக்கும் பின்னர் அதிகாரத்துவத்தின் வலிமைக்கும் இன்றைய சனநாயக உறுதிப்பாட்டுக்கும் எதிரான சவால்களுக்கும் காரணமாக இருந்து வந்துள்ளது. தாய்லாந்தின் அரசியல் சமூகக் காரணிகள் மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல் ஆகியவையே அரசின் இறுக்கமான அதிகாரத்துக்குக் காரணமாக இருந்தன. சிறப்பாக பார்க் (Park) வருடங்களின் பொழுது சமூகம் இராணுவ மயப்படுத்தப் பட்டதோடு இராணுவமானது அரசியல் மயப்படுத்தப்பட்டது. இந்நிலையானது அதிகாரத்துவ ஆட்சிக்கு அடிப்படையாக அமைந்தது. இந்த நிலைமையில் உள்ளூர் அரசியலிலிருந்து இராணுவமானது எவ்வாறு விலக முடியும் என்பது கேள்விக்குரிய ஒன்றாகும். ஆனால் தென்கொரியாவில் சனநாயகம் தழைக்க வேண்டுமெனில் இராணுவத்தின் அதிகாரமானது கட்டுப்படுத்தப்பட்டு மக்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இராணுவம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
இந்தோனேசியாவில் இராணுவக் கட்டுப்பாட்டை மாற்றி அமைப்பது சிரமமானது. சுந்ஹவுசன் குறிப்பிடுவதைப் போல அதிகாரத்தைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்குத் தலைவர்கள் எவரும் தயாராக இருக்கவில்லை. எனவே இராணுவக் கட்டுப்பாட்டுக்கு மாற்றிடும் இல்லை. சுஹார்டோவின் "புதிய ஒழுங்கு"(NewOrder) 1960களின் நடுப்பகுதிகளில்
65

Page 35
அமுல்படுத்தப்பட்டது. அத்துடன் "இரட்டைச் செயற்பாட்டு” (Dual Function) தத்துவமும் சேர்ந்து அரச அதிகாரத்தில் இராணுவம் தீர்க்கமாக ஊடுருவ வழி செய்தது. சுந் ஹவுசன் குறிப்பிடுவதைப் போல "தன்னாதிக்கமுள்ள சமூக, தொழில்சார், கலாசார நிறுவனங்களும் தொழிற் சங்கங்களும் வர்தக நிறுவனங்களும் படிப்படியாக கழுத்து நெரிக்கப்பட்டன”. இந்நிலைமையானது மாற்றங்கள் ஏற்படுவதைத் தடுத்தது. ஏனெனில் இராணுவ அதிகாரிகள் அரசியல் மற்றும் நிர்வாகப் பங்குகளை ஆற்றுவதற்கு வேட்கை கொண்டிருந்தனர். இந்நிலைமையை மாற்றக்கூடிய வல்லமை வாய்ந்த சிவில் நிறுவனங்களும், இயக்கங்களும் ஏற்கனவே இராணுவத்தினரால் ஊடுருவப்பட்டுச் செயலற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தன. பாகிஸ்தானில் இராணுவ ஊடுருவல் அவ்வளவு ஆழமாகச் செல்லவில்லை. எனினும் அரசாங்கப் பதவிகளின் மீது தமக்கிருந்த கவர்ச்சி, ஆர்வம் ஆகியவற்றின் காரணமாக இராணுவ அதிகாரிகள் அரசாங்கத்திலிருந்து நீங்குவதற்குத் தயக்கம் காட்டினர்.
பாகிஸ்தானில் சனநாயகத்துக்கான இயக்கம் இந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறதெனில் அது பாகிஸ்தானிய இராணுவம் சமுதாயத்தில் சுதந்திரநிறுவனங்களையும் கருத்து வெளிப்பாட்டையும் அனுமதித்த காரணத்தினால் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதே நிலைமையினால்தான் பிலிப்பைன்ஸில் 1986இல் பெர்டினன்ட் மார்க்கோஸின் சர்வாதிகார ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சட்டத்தரணிகள், மாணவர்கள், அறிவுஜீவிகள், வர்த்தகர்கள் மற்றும் மனிதஉரிமை இயக்கங்களும், கத்தோலிக்கர்களினால் ஆதரிக்கப்பட்ட சுதந்திர தேர்தல்களுக்கான தேசிய இயக்கமும் (NAMFREL-National Movement for Free Elections) இப்பதவி கவிழ்ப்பில் முக்கிய பங்கு கொண்டிருந்தனர்.
ஆசிய சனநாயகத்தில் இராணுவத்தின் பங்கு மிக முக்கியமான பிரச்சினையாகும். ஆனால் இதனை நாம் அரசவாதம் (Statism) எனும் பிரச்சினையுடன் சமப்படுத்தக் கூடாது. சிவில் சமூகத்தின் மீது மத்திய அரசின் ஆதிக்கம் சனநாயகத்திற்குத் தடையாக இருக்க முடியும். மத்திய அரசானது சிவில் அரசாக இருந்தாலும் கூட இந்நிலைமை ஏற்படலாம். துருக்கியில் இந்நிலைமையானது சனநாயகம் ஆழமாக வேரூன்றுவதைத் தடுத்து விட்டது. உள்ளூர் அரசாங்க‘அமைப்புகள் போன்ற இடைநிலை அமைப்புகள் பலவீனமாகவும் தன்னாதிக் கமின்றியும் இங்கு காணப்படுகின்றன. அரசவாதமானது துருக்கிய அரசியலில் எதிர்த்துருவத் தன்மைக்கும், வன்முறைக்கும் காரணமாக அமைந்தது. ஒஸ்புடுன் (Ozbudin) குறிப்பிடுவதைப் போன்று துருக்கிய அரசின் மிதமிஞ்சிய அதிகாரமும் பொருளாதாரத்தில் அது கொண்டிருந்த அழுங்குப் பிடியும் பதவியில் இல்லாமலிருப்பதை முடியாத காரியமாக்கி விட்டிருந்தன. அதனால் எதிர்கட்சிகள் தோல்வியைப் பற்றிச் சிந்திக்கவும் தயங்கின.
66

இவ்விடயத்தில் ஆசிய நாடுகளுக்கு முற்றிலும் வித்தியாசமான ஒரு நிலையை பப்புவாநியூகினி முன் வைக்கிறது. தனிநப்ருக்கு இருக்கும் மரபுரீதியான தன்னாதிக்கமானது அரசின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி யுள்ளது. மாகாண அரசாங்கங்கள் ஊடாக அதிகாரமானது பன்முகப் படுத்தப்பட்டுள்ளது. அரசுக்கு அப்பால் செல்வத்தைத் தேடும் வாய்ப்பையும் நம்பிக்கையையும் தனியார் துறை முயற்சிகள் தாராளமாகவே வழங்குகின்றன. அத்துடன் அரசியலில் நிர்வாக யந்திரம் ஒரளவு தன்னா திக்கத்தை விருத்திசெய்துகொண்டதால் பதவியில் இருக்கும் கட்சி தனது விருப்பத்துக்கு ஏற்றவகையில் நிர்வாக யந்திரத்தை வளைக்கமுடியவில்லை.
இந்தியாவில் நிர்வாக யந்திரமானது சனநாயக ஆட்சியின் "இரும்புச் சட்டகமாகச்" சுட்டிக்காட்டப்படுகிறது. சுதந்திரம் அடைந்த காலத்தில் இவ்வாறான ஒரு பரந்த, பாரிய, சுதேசியமான ஒரு நிர்வாகக் கட்டமைப்பு பிரித்தானிய ஆட்சியின் ஒரு சிறந்த பங்களிப்பாக இந்தியாவுக்குக் கிடைத்தது (கடந்த இரண்டு தசாப்தங்களில் அதன் சுதந்திரமும், கண்ணியமும் பெரிதும் நலிவடைந்து விட்டன என்பது வேறு விடயம்.) இதைப் போலவே ஒரு காத்திரமான உள்ளிட்டு வெளியீட்டு நிறுவனங்கள் தான் இலங்கையிலும் மலேசியாவிலும் ஆரம்ப கால சனநாயக அபிவிருத்திக்கு உதவின.
இதைவிட இந்தியாவில் வேறு பல நிறுவனங்களும் சனநாயகத்தை வளர்த்தன. மொழிச் சீர்திருத்தம், சட்டச்சீர்திருத்தம், கல்வியை நவீனத்துவமாக்கல், பத்திரிகைச் சுதந்திரம், பெண்கள் உரிமை ஆகியவற்றுக்கான நிறுவனங்களும் இயக்கங்களும் இவற்றுள் சிலவாகும். இவ்வியக்கங்கள் 19 ஆம் நூற்றாண்டிலேயே காலனித்துவ ஆட்சியின் கீழ்த்தோன்றிவிட்டன. ஆனால் பின்னர் காந்தியின் " சத்தியாக்கிரகக்" கோட்பாட்டுடன் இவை பெரிதும் வலிமை அடைந்தன. தொழிற்சங்களும், மாணவ, விவசாய, வர்த்தக சங்கங்களும் இன்று அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டாலும் தமது நலன்களைக் காப்பாற்ற அவை தன்னாதிக்கத்துடனும் செயற்படுகின்றன. இதன் காரணம் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் புதிய தலைமைத்துவக் குழுக்களும் தோன்றியுள்ளன. இதுதொடர்பாக டாஸ் குப்தா குறிப்பிடுவது போல இந்தியாவின் இன்றைய சமூக அரசியலிற் பலவேறு பிரச்சினை - சார்ந்த இயக்கங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இவைகள் சமூக, அரசியல், சீர்திருத்தங்களுக்காகப் பல கட்சிகள், குழுக்கள் மற்றும் பொதுமக்களை இணைத்துத் தீவிரமான போராட்டங்களை நடத்துகின்றன.
இவ்வியக்கங்களில் பல இனத்துவத் தன்மை கொண்டவை. மொழி, நிலம் போன்ற கலாசார, பொருளாதார அம்சங்களை முன்னேற்றுவதற்காக
67

Page 36
முயற்சி செய்பவை. இவற்றின் கோரிக்கைகள் பெரும்பாலும் வள ஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்புமுதலியன தொடர்பானவை. வேறுசில இயக்கங்கள் சாதி, வகுப்பு சார்ந்தவை. அவை அடிப்படைச் சீர்திருத்தங்களுக்காகவும் பொருளாதார உரிமைக்காகவும் போராடுகின்றன. அதற்காக முழு உணர்வுகளை ஒன்றுதிரட்ட முயற்சி செய்கின்றன. இவ்வகையில் 1970களின் அவசரகாலநிலையைத்தொடர்ந்து உருவாகிய சிவில் உரிமை இயக்கங்கள் மிகவும் முக்கியமானது. இவற்றுட் பல பக்கச்சார்பற்றவை. நிலம், உழைப்பு, நகர வீடமைப்பு, அடக்குமுறை, பெண்ணடக்குமுறை முதலிய சமூக அநீதிகள் தொடர்பாகப் போராடுகின்றன. இத்தகைய பக்கம் சாராத தன்னாதிக்கமுள்ள இயக்கங்கள் அரசின் அதிகாரக் குவிப்பு மற்றும் பொறுப்புக் கூறலிலிருந்து தப்புதல் ஆகியவற்றிலிருந்து தப்பித்தல் ஆகியவற்றுக்கு எதிராக எப்போதும் விழிப்பாகச் செயற்படுகின்றன. அதேநேரத்தில் அரசியற் செயன்முறையில் பொதுமக்கள் பங்குபற்றலை விஸ்தரிப்புதற்கு உள்ள முறைசார்ந்த வழிகளுடன் முறைசாரா வழிகளைப் பெருக்குகின்றன. நீதிமன்றங்கள் போன்ற முறைசார்ந்த சனநாயக நிறுவனங்களை வலிமைப்படுத்துகின்றன. அத்துடன் அதிகார துஷ்ப்பிரயோகம் மற்றும் சிவில் உரிமைகளைப் பாதித்தல் முதலியவற்றுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் இந்திய சனநாயகத்தின் தரத்தை இம் மனித உரிமைகள் இயக்கங்கள் முன்னேற்றுகின்றன. இந்தியாவின் சமூக, பொருளாதார அம்சங்களில் சனநாயகத்தின் தாக்கமின்மையை இக்குழுக்களும், இயக்கங்களும் வெளிப்படுத்துகின்ற அதே வேளையில் இன்னொரு புறத்தில் கட்சி, அரசாங்கம் ஆகியவற்றுக்குப் புறம்பாக மாற்றீடான அரசியற் தளங்களையும் உருவாக்குகின்றன. அதன்மூலம் சனநாயகத்தை வலிமைப்படுத்திப் புத்துயிர் ஊட்டும் போராட்டம் தொடர்வதற்கு வழி ஏற்படுகிறது.
5. அரசியற் கட்சிகளும், கட்சி முறைமையும்
இங்கு ஆய்வு செய்யப்பட்ட பத்து நாடுகளும் பல்வேறுபட்ட கட்சிகளையும் கட்சி முறைமைகளையும் கொண்டுள்ளன. பாகிஸ்தான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய மூன்று நாடுகளும் பல்கட்சி அரசியலில் வெற்றியடைய முடியவில்லை. இவை பலவீனமான சிதறிய கட்சி முறைகளைக் கொண்டிருக்கின்றன. 1950களின் பிற்பகுதியில் இந்தோனேசியாவில் நூறு கட்சிகளுக்குமேற் காணப்பட்டன. தாய்லாந்தில் 1975ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களில் 42 கட்சிகள் போட்டியிட்டன. 1946ஆம் ஆண்டுக்கும் 1981ஆம் ஆண்டுக்குமிடையில் தாய்லாந்து அரசியலில் 143 கட்சிகள் வந்து போயின. பாகிஸ்தானில் ஆரம்பத்தில் முஸ்லீம் லீக் பிரதானமான ஒரே ஒரு கட்சியாக இருந்தது. ஆனால் முஸ்லீம் லீக் தலைவர்கள் இந்தியாவிலிருந்து வந்த அகதிகளாக
68

இருந்தனர். எனவே அவர்களால் உள்ளூரில் குறிப்பாகக் கிராமப்புறங்களில் ஒரு உறுதியான அரசியற் தளத்தை அமைக்க முடியவில்லை. இந்தியாவில் காங்கிரஸ் கட்சியைப் போல் அல்லாது முஸ்லிம் லீக்கினால் பாகிஸ்தானில் வேறுபட்ட சமூக இனத்துவப் பிரதேசக் குழுக்களின் முக்கிய தலைமை களைத் தன்னோடு இணைத்துக்கொள்ள முடியவில்லை. 1951ஆம் ஆண்டு பிரதம மந்திரி லியாகத் அலிகானின் படுகொலைக்குப் பின்னர் படிப்படியாகச் சிதறியது. இதனைத்தொடர்ந்து பாகிஸ்தானிய அரசியலில் மிகவும் பலவீனமான பாராளுமன்றக் கூட்டுக்கள் ஏற்பட்டன. இவற்றினால் உறுதியான நிலையான அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை. இத்தகைய சனநாயகத் தோல்வி தாய்லாந்திலும் இந்தோனேசியாவிலும் கூட ஏற்பட்டது.
தோல்வியடைந்த கட்சிமுறையில் இத்தகைய தீவிர பல்கட்சி முறை ஓர் முக்கியமான அம்சமாகும். அத்துடன் இக்கட்சிகளிற் பெரும்பாலானவை தமது நலன்களைத் தெளிவா முன்வைக்கவும் முடியவில்லை. அத்துடன் இக்கட்சிகளிற் பலவீனமான அமைப்பு, ஒழுங்கின்மை போன்றவை காரணமாகப் பாரதூரமான உட்பூசல்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக இக்கட்சிகளுக்கு (ஒன்றிரண்டைத் தவிர) ஒரு வெகுசனத் தளத்தை ஏற்படுத்திக் கொள்ளமுடியவில்லை. எனவே இவை அரசியற் கட்சிகள் என்பதைவிடத் தனிப்பட்ட சில குழுக்களின் அமைப்புக்களாகவே செயற்பட்டன. அத்துடன் இக்கட்சிகளின் உறுதியின்மை மற்றும் பல்கட்சிவாதத்தின் காரணமாக இவை தமக்குள் ஒத்துழைத்து இயங்கவும் முடியவில்லை.
இத்தகைய அரசியற் சிதறல் காரணமாக இம் மூன்று நாடுகளிலுமே தற்பொழுது ஒரு திருத்தியமைக்கப்பட்ட கட்சிமுறைக்கான இயக்கம் வலுவடைந்து வருகிறது. பாகிஸ்தானில் தற்பொழுது நடைபெறும் அரசியல் மாற்றமானது அரசாங்கமும் எதிர்க்கட்சியும் தமது கட்சியின் உறுதிப்பாட்டில் அக்கறை செலுத்துவதைக் காட்டுகின்றன. ஆளும் குழுவினருக்கு இத்தகைய வேலை மிகவும் இலகுவானது. ஒரு கட்சித் தளத்தைக் கட்டுதற்கான வளங்களை இவை கொண்டுள்ளன. ஆனால் “றோஸ்" என்பவர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஒரு பிரதான எதிர்க்கட்சியாக வலிமை பெறுவதையும் ஏனைய கட்சிகள் இக்கட்சியுடனோ அல்லது ஆளுகின்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியுடனோ அண்டியிருப்பதாகக் கூறுகிறார். இதன்மூலம் இங்கு இரு கட்சி முறை உருவாகிறது. த்ாய்லாந்திலும் இந்தோனேசியாவிலும் ஆளுகின்ற கட்சியினர் கட்சி உறுதிப்பாட்டை ஊக்குவிக்கின்றனர். தாய்லாந்திற் கட்சிகள் சிதறுண்டு கிடந்த பொழுதிலும் தற்போதைய யாப்பின் தேர்தல் ஏற்பாடுகள் சிறு கட்சிகளுக்கான வாய்ப்பை வழங்கவில்லை. இந்தோனேசியாவில் 1960ஆம் ஆண்டு அரசாங்கமே
69

Page 37
கட்சிகளின் எண்ணிக்கையைப் பத்தாகவும் பின்னர் 1973 இல் அவற்றை மூன்றாகவும் குறைத்தது. இதன் காரணமாக ஒரு நேர்மையான திறந்த அரசியல் முறைமை இந்நாட்டில் வளர்ச்சியடையும் வாய்ப்பு இல்லாமற் செய்யப்பட்டது.
துருக்கியில் கட்சிமுறையில் சனநாயகத் தோல்வி என்பது வேறுபட்ட ஒரு மாதிரியாகக் காணப்படுகிறது. இங்கு தேசிய அரசியலானது தீவிரமான எதிர்த் துருவத் தன்மையினைக் கொண்டுள்ளது. இந்நிலைமையானது பாராளுமன்றத்தில் தீவிர வலதுசாரிக் கட்சிகள் கொண்டுள்ள முக்கிய பங்கின் மூலம் பாராளுமன்றத்துக்கு வெளியே உள்ள இடது சாரிக் கட்சிகளின் செயற்பாடுகளின்மூலமும் பிரதிபலிக்கிறது. இதனால் இரண்டு முக்கிய கட்சிகளும் எதிர்த்துருவத்தன்மையை அடைந்துள்ளன. 1980ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடந்த சதி முயற்சிக்குப் பின்னர் துருக்கிய இராணுவமானது பாராளுமன்றத்தில் உறுதியான பெரும்பான்மையை ஏற்படுத்துவதற்காக இரண்டு அல்லது மூன்று கட்சிமுறையை உருவாக்கும் ஏற்பாடுகளைச் செய்தது.
இந்தியாவில் ஒரு கட்சி ஆதிக்கம் இருந்த போதிலும் சனநாயகப் போட்டிமுறை காணப்படுவதால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு இந்தியா ஒரு மாதிரியாக விளங்குகிறது. டாஸ் குப்தா கூறுவதைப் போல இந்தியாவில் சனநாயகத்தின் ஆரம்ப உறுதிப்பாட்டுக்கான ஒரு முக்கிய காரணி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேலாதிக்கம் அல்ல. மாறாகப் பல்வேறு விதமான சமூகக் குழுக்களையும் இயக்கங்களையும் கொண்ட ஒரு பல்லினத்துவப், பல்வகுப்புப், பல்பிரதேச அரசியல் முன்னணியை உருவாக்கிச் சனநாயகச் செயன்முறையில் பங்குபற்றச் செய்தமை யேயாகும்.
ஆனால் இந்தியக் கட்சிமுறையில் 1967க்குப் பின்னர் மாற்றங்கள் ஏற்பட்டன. சனநாயகப் பங்கேற்றல் என்பது பன்முகப்படுத்தப்பட்ட சமஷ்டி அமைப்பினால் மேலும் வலிமை பெற்றது. இதன் மூலம் தமிழ் நாட்டில் AIADMK, பஞ்சாப்பில் அகாலிதள் (AkaliDal) ஆகிய பிரதேசக் கட்சிகளும் கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கொம்யூனிஸ்ட் கட்சியும் அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொண்டன. இம் மாநிலங்களில் இக்கட்சிகள் வெற்றி பெற்றுத் தமது கட்டுப்பாட்டை வலுப்படுத்திக் கொண்டன. ஆனால் 1967ஆம் ஆண்டு இந்திரா காந்திபதவிக்கு வந்ததன் பின்னர் இந்திய சனநாயகமும் அதனை நிறுவனமயப்படுத்தலும் நலிவடைந்தன.
இந்திராகாந்தியின் தொடர்ச்சியான தேர்தல் வெற்றிகள் இந்தியாவில் ஒரு கட்சி ஆதிக்கம் தொடர்கின்றது என்பது போல மேலோட்டமாகக்
70

காட்டினாலும் உண்மையில் 1987க்குப் பின்னர் நிறுவனரீதியான சீரழிவிற்கு இந்தியக் கட்சிமுறை உட்பட்டது என்பதைப் பொதுவாக சகல ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். 1967 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியடைந்தது. இதிலிருந்து மீட்சியடைய இந்திராகாந்தி கையாண்டமுறை கட்சியை (அரசையும்) மத்தியமயப்படுத்தியதும் தனிநபர் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியதுமேயாகும். இதனால் கட்சியின் ஐக்கியம் மற்றும் நிறுவன் உயிர்த்துடிப்பு ஆகியவை நலிவடைந்தன. இதனால் கட்சி அரசியலில் போட்டித் தன்மை அதிகரித்தது. துரதிர்ஷ்டவசமாக 1980இல் மீண்டும் பதவிக்கு வந்த திருமதி இந்திராகாந்தி (1977 தோல்வியினால் அவர் திருந்திவிட்டார் என்று கூறப்பட்டபோதும்) தொடர்ந்தும் அதிகாரத்தைக் குவிப்பதிலேயே ஈடுபட்டிருந்தார். ஆக்கபூர்வமான நிறுவனமயப்படுத்தலை அவர் மேற்கொள்ளத் தவறினார். டாஸ் குப்தா குறிப்பிடுவதைப் போலப் பொதுக் கருத்துரீதியான உருமாற்றத்தின் (Plesbiscitarian transformation) அடிப்படையில் கட்சியை அடித்தளமாகக் கொண்ட அரசு என்பது அரசினை அடித்தளமாகக் கொண்ட கட்சி என ஏற்பட்டது.
1980க்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியானது எதிர்க்கட்சிகளுடனான தொடர்பில் எதிர்ப்பையும், பொறுமையின்மையையும் கடைப்பிடித்தது. அதைவிடச் சீரழிவு என்னவெனில் அமைப்புரீதியாக வீழ்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் உத்திமுறையாக இந்து வெறித்தனம் (Hinduchauvinism) கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்த நிறுவனரீதியான நலிவு காங்கிரஸ் கட்சியில் மாத்திரம் ஏற்படவில்லை. ஏனைய கட்சிகளிலும் இவ்வாறான உடைவும், பகைமையும், நிலையின்மையும் பெருகத் தொடங்கின. இத்தகைய பொதுவான வீழ்ச்சி காரணமாகவே இந்திய சனநாயத்தின் எதிர்காலம் பற்றி அரசியல் அவதானிகளிடையே விசனம் ஏற்பட்டுள்ளது. கட்சி நிறுவனமயப்படுத்தலின் முக்கியத்துவம் தாய்லாந்து, தென்கொரியா ஆகியவற்றின் விடயத்திற் சாதகமானதாக இருக்கவில்லை. இவ்விரண்டு நாடுகளிலுமே தொடர்ச்சியான இராணுவத் தலையீடுகளின் மூலம் தன்னாதிக்கமுள்ள கட்சிமுறை உருவாகவில்லை. இவ்விரண்டு நாடுகளிலும் கட்சிகளானது தமது உள்ளக ஒழுங்கமைப்பில் பலவீனமானவை. மக்களின் ஆதரவு குறைந்தவை; அத்துடன் அவற்றின் சாதனையும் பாராட்டக்கூடியவிதத்தில் அமையவில்லை. இவ்வாறு கட்சிகளின் அபிவிருத்தியின்மையும் இராணுவ - நிர்வாகத்தின் மேலாண்மையும் ஒரு நச்சுவட்டமாக மாறியுள்ளன. இந்நாடுகளில் இப்போது சனநாயகத்துக்கான புதிய வாய்ப்புகள் தோன்றியுள்ளன. பரந்த அடிப்படையிலான, கீழ்மட்டங்களில் ஊடுருவியுள்ள காத்திரமான கட்சி அமைப்பைக் கட்டியெழுப்புவது சனநாயகமயப்படுத்துவதற்குள்ள சவாலாகத் தென்படுகிறது.
71

Page 38
காங்கிரஸ் கட்சி தற்போது இந்து வெறித்தனத்தைத் தழுவி நிற்பது அபாயகரமானதாகும் . குறிப்பாக இலங்கை அனுபவம் இந்த அச்சுறுத்தலைத் தெளிவாக்குகிறது. இலங்கையில் முக்கிய இரு கட்சிகளும் பெரும்பான்மையினத்தவரின் வாக்குகளைப் பெறுவதில் போட்டியிடுகின்றன. மறுதலையாக மலேசியாவில் பெரும்பான்மை இனத்தவரிடையே ஒரு கட்சியின்மேலாண்மை இனத்துவ சமாதானத்துக்கு வாய்ப்பாக இருப்பதைக் காட்டுகிறது. அதாவது இந்த மேலாண்மையைக் கொண்டு ஒரு பரந்துபட்ட பல்லின, பல்கட்சிக் கூட்டிணைவை ஏற்படுத்த முடிகிறது. இந்திய சுதந்திரத்தை அடுத்துவந்த இரு தசாப்தங்களிலும் காங்கிரஸ் கட்சியிலும் இத்தகைய கூட்டிணைவு முயற்சிகள் வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டன. ஆனால் இப்போது வளர்ச்சியைடந்து வரும் தேர்தற் போட்டிகள் மற்றும் சிதறிய கட்சி முறையில் திரும்பவும் இப்படியான கூட்டிணைவு முயற்சிகள் மேற்கொள்ளப்படமுடியுமா என்பது கேள்விக்குரியது.
இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் தேர்தலுக்கும் கட்சி முறைகளுக்குமிடையே நெருங்கிய இணைப்புக் காணப்படுகிறது. இந்நாடுகளில் ஒன்று அல்லது இரண்டு கட்சிகளின் மேலாண்மை ஊக்குவிக்கப்படுகிற்து. அத்துடன் ஆகக் கூடிய வாக்குகளைப் பெற்ற அபேட்சகரையே ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளிலிருந்தும் தெரிவு செய்ததன் மூலம் வெற்றி பெற்ற கட்சியின் பலம் பல மடங்கு அதிகமாக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சி எப்போதுமே அறுதிப் பெரும்பான்மையைத் தேர்தல்களில் பெற்றதேயில்லை. 1977 தோல்வியைத் தவிர்த்துப் பார்த்தால் காங்கிரஸ் கட்சி தேசியரீதியாகப் பெற்ற வாக்குகள் 41 - 59 வீதம் மட்டுமே. இதன் மூலம் அது லோக சபையில் பெரும்பான்மையைக் கொண்டிருந்தது. இலங்கையிலும் மலேசியாவிலும் தேர்தல் விபரங்கள் ஒரே மாதிரியானவை. அதாவது மிதமான பன்முகத்தன்மை அல்லது பாரிய பாராளுமன்றப்பெரும்பான்மை ஏற்பட்டது. மலேசியாவில் கிராமியத் தேர்தற் தொகுதிகள் இத்தகைய பெரும்பான்மைப் பலத்தை மலாய்க் கட்சிக்கு (UMNO) ஏற்படுத்திக் கொடுத்தன.
இந்தியா, இலங்கை மற்றும் மலேசியா ஆகிய மூன்று நாடுகளும் ஆசியாவில் நீண்டகாலம் உறுதியான சனநாயகத்தைக் கொண்டுர்ள நாடுகளாகும். எனவே இந்நாடுகளில் காணப்படுவதுபோன்று ஓரிரு கட்சிகளின் அல்லது கட்சிக் கூட்டுகளின் தேர்தல் மேலாதிக்கம் சனநாயத்துக்குச் சாதகமானது என வர்திக்கலாம். ஆனால் உறுதியான பாராளுமன்றப் பெரும்பான்மை க்கும் அதிகார துஷ்பிரயோகத்துக்கும் (குறிப்பாக மூன்றில் இரண்டு அல்லது நாலில் முன்று பெரும்பான்மை இருக்குமிடத்து) இடையே ஒரு மெல்லிய நூலிழை மட்டுமே உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த
72

மூன்று நாடுகளிலுமே பாரிய பாராளுமன்றப் பெரும்பான்மையானது எதிர்க்கட்சிகளைப் பலமிழக்கச் செய்ததுடன் சனநாய்கம் நலிவடையவும் காரணமாக இருந்திருக்கிறது. எனவே ஒரு தேர்தற் தொகுதிக்கு ஒரு உறுப்பினர் என்ற முறை மூலம் பெறப்படும் உறுதிப்பாட்டைப் பேணும் பெரும்பான்மையின் நன்மைகளை அதிகார துஷ்பிரயோகம் என்னும் தீமை குலைத்துவிடுகிறதா என்பது இன்னும் நிச்சயமாகத் தெளிவாகவில்லை. இலங்கை பின்பற்றப் போகும் விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை ஒரு சிறந்த பரிசோதனைக்களமாக விளங்கலாம். ஒழுங்குபடுத்தப்பட்ட கட்சி முறைமைதான் நமது இலக்கு எனில் விகிசாரப் பிரதிநிதித்துவம் மூலம் நாம் அதனை அடைய முடியும் எனத் துருக்கியின் அநுபவம் விளக்கி நிற்கிறது.
6. அரசியல் நிறுவனங்கள்
ஆசிய நாடுகளில் அரசியல் நிறுவனங்களை விருத்தி செய்ய வேண்டிய தேவையுள்ளது. இந்நிறுவனங்கள் மக்களுடைய நலன்களைப் பிரதிபலிக் கின்றன. மேலும் அரசு அதிகாரத்தை மத்தியில் குவித்து வைப்பதையும் இவை தடை செய்கின்றன. இத்தொகுதியில் உள்ள அத்தியாயங்கள் சட்டவாக்கம், நீதித்துறை போன்றவை உட்பட பத்திரிகைகள் மற்றும் மக்கள் நலன் காப்புக் குழுக்கள் முதலிய முறைசாரா நிறுவனங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. ஆசிய நாடுகளில் சடடவாக்கத் துறைப் பிரச்சனைகளும் கட்சிகளின் பிரச்சனைகளும் ஒரே மாதிரி யானவையாகும். தாய்லாந்து, தென்கொரியா, பாகிஸ்தான் முதலிய நாடுகளில் அடிக்கடி ஏற்பட்ட இராணுவத் தலையீடுகள் நிறுனவனங்களின் தொடர்ச்சியைத் தடுத்து விட்டன. இதன் காரணமாக ஆழமான சனநாயக அனுபவங்களைப்பெறுவதும் தடுக்கப்பட்டது. மேலும் இந்தியா, இலங்கை முதலிய நாடுகளிலும், பாகிஸ்தானில் பூட்டோவின் காலத்திலும் பிலிப்பைன்சில் மார்க்கோசின் காலத்திலும் தலைமைத்துவத்தின் அளவில்லா அதிகார ஆசையின் காரணமாகச் சட்டவாக்கத் துறையின் தன்னாதிக்கமும் அதிகாரமும் நலிவடைந்தன. தாய்லாந்தின் சனநாயகம் Lubió “FITiu sessTsir Fypg56u6Org” (Chai-Anan Samuda-vanaja) sät6u(OLDT gy கூறுகிறார். நிறுவனக் கட்டமைப்பு, இயலளவு மற்றும் சட்டசபையின் அதிகாரம் ஆகியவை உறுதியான அரசியல் நிறுவனமயப்படுத்தற் செயற் பாட்டுக்கு மிகவும் முக்கியமானவையாகும்.
ஆசியாவிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் நீதித்துறையின் வலிமையும் தன்னாதிக்கமும் நிலவும் சனநாயகத்தின் தன்மைக்கு விகிதாசாரமானவை என்பது வியப்புக்குரிய விடயமாகும். சர்வாதிகார ஆட்சியாளர் சுதந்திரமும் மேலாண்மையுமுள்ள நீதிமன்றங்களை அனுமதிப்பதில்லை. ஆனால் இங்கு நாம் ஆய்வுக்கெடுத்துக்கொண்டநாடுகள் சிலவற்றில் வலிமையான
73

Page 39
நீதித்துறை இருப்பதுபோலத் தோன்றுகிறது. இவ்வாறான நாடுகளிற் சுதந்திரம், யாப்புரிமை முதலியற்றைப் பாதுகாக்க நீதித்துறைக்கு உண்மையான அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதால் பொதுவான சனநாயக வெற்றி அடையப்பட்டுள்ளது. இங்கு இதற்கு உதாரணமாக இந்தியா, துருக்கி, பப்புவாநியூகினி முதலிய நாடுகளைக் கூறலாம். ஆயினும் இதனைப் பொதுமைப்படுத்துவதற்கு நம்மிடம் போதுமான ஆதார்ம் இல்லை. துருக்கியில் பாராளுமன்றத்தின் ஒரு நடவடிக்கையை அரசியல் அமைப்புக்கு விரோதமானது எனத் தீர்மானிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டு. நீதித்துறையின் ஆளணியினர் நெருக்கடிகளிலிருந்தும் பயமுறுத்தல்களிலிருந்தும் பாதுகாக்கப் பட்டுள்ளனர். இந்தியாவில் உயர்நீதிமன்றமானது கடந்த காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் சுமார் நூறு நடவடிக்கைகளைச் சட்டவிரோதமானது என நிராகரித்துள்ளது. இதில் யாப்புச்சீர்திருத்தத்தை விமர்சிப்பதிலிருந்து உயர்நீதிமன்றத்தைத் தடை செய்யும் யாப்புத் திருத்தமும் கூட அடங்கும். 1975 - 1977 க்கு இடைப்பட்ட காலத்தில் நீதிமன்றங்களின் தன்னாதிக்கமும், நம்பிக்கையும் நலிவடைந்தன. கடந்த இரு தசாப்தங்களாக அரச நிறுவனங்கள் அரசியல்மயப்படுத்தப்பட்டுச் சீரழிந்ததால் நீதிமன்றங்கள் மேலும் பாதிக்கப்பட்டன. எனினும் மக்களின் நலன்களையும், மனித உரிமைகளையும் அரசிடமிருந்து பாதுகாப்பதில் நீதிமன்றங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளன. நீதிமன்றங்கள் நலிவடைந்து சனநாயக வீழ்ச்சிக்குச் சாதகமாக இருந்த நிலைமைக்கு இலங்கைநல்ல உதாரணமாகும். இலங்கையிற்சட்டங்களை விமர்சிக்கவும், நிறைவேற்றப்படவிருக்கின்ற மசோதா பற்றிக் கருத்துத் தெரிவிக்கவும் நீதிமன்றங்கள் அரசியலமைப்பினால் தடுக்கப்பட்டுள்ளன. இதைப் போன்ற நீதிமன்றங்களின் இயலாமை மற்றும் நீதித்துறையின் அதிகாரத்தை நலிவடையச் செய்ய நிர்வாகத்துறை தொடர்ந்து எடுத்து வந்த முயற்சிகளுமே இலங்கையில் சனநாயக வீழ்ச்சிக்கு ஏதுவாயிருந்த முக்கியமான காரணிகளாகும்.
7. சமஷ்டிவாதமும் பன்முகப்படுத்தலும்
நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல அதிகாரம் மத்தியில் குவிக்கப்பட்ட ஒரு அமைப்பில் சனநாயகம் சிறப்பாகச்செயற்படமுடியாது. அதிகாரத்தை மையத்தில் குவித்து வைத்தல் அடிப்படையில் சனநாயகக் கட்டுப்பாடு களுடன் முரண்படுகிறது. அத்துடன் உறுதியான நிலையான சனநாயகத்துடன் அதிகார மையக் குவிப்பு ஒத்துபோவதுமில்லை என்பது அனுபவரீதியான உண்மையாகும். ஆழமான இனத்துவப் பிரிவுகளைச் சமாளிப்பதில் சமஷ்டிவாதத்தின் அவசியம் பற்றி இந்தியாவின் அனுபவங்கள் சாதகமாகக் கூறவில்லை. இந்தியாவிற் தொடர்ச்சியாக எழுந்த இனத்துவ மற்றும் பிரிவினைவாதக் கிளர்ச்சிகளைத் தீர்ப்பதற்கு
74

உண்மையான தன்னாதிக்கமும் , அதிகாரப் பரவலாக்கமும் அத்தியாவசியமாக இருந்தன. இந்திராகாந்தி தொடர்ச்சியாகவும் உறுதியாகவும் மேற்கொண்டு வந்த அடிப்படைச் சனநாயக உரிமை களுக்கான விரோத நடவடிக்கைகள் உண்மையில் பஞ்சாப் முதலிய இடங்களில் இனத்துவப் பிளவுகளை வளர்த்ததோடு இனத்துவ அமைதிக்குத் தடையாகவும் இருந்தன. இனங்களுக்கிடையே சமாதான சகவாழ்வு ஏற்பட ஆகக் குறைந்த ஏற்பாடாகப் பப்புவாநியூகினியின் மாகாண அரசாங்கங்களுக்கிடையே உள்ளது போன்ற அதிகாரப் பகிர்வு செய்யப்படல் வேண்டும்.
இலங்கையைப் பற்றிய தமது அதிகாரத்தில் ஊர்மிளா பத்னிஸ் (Umila Padmis) பின்வருமாறு கூறுகிறார்:
"அதிகாரப் பகிர்வுக்கான மிகப்பெரிய அலகு மிக முக்கியமானதாகும். இலங்கையில் மாவட்டம் என்பது போதுமான அலகல்ல. தமிழர்களுடைய வன்முறைப் பிரிவினை இயக்கம் அவர்களுக்கு ஆகக்குறைந்தது ஒரு தன்னாதிக்கமுள்ள மாகாண அரசேனும் வழங்கப்படும்வரை திருப்தியடையாது. உண்மையில் முழுமையான ஒரு சமஷ்டி அமைப்பு இப் பிரச்சினையைத் தீர்க்க மிகவும் சிறந்தது. ஆனால் சிங்களவர்களுக்கு அது ஏற்புடையதாக இல்லை.”
இந்தோனேசியாவிலும் கூட வளர்ந்து வருகின்ற இனத்துவப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு சமஷ்டி அமைப்பே மிகச் சிறந்ததாக அம்ையும் என சுந்ஹவுஸன் கூறுகிறார். ஆனால் நாட்டைப் பலவீனப்படுத்துவதற்கு டச்சுக்காரர்களாற் கையாளப்பட்ட ஒரு தந்திரமாகச் சமஷ்டிவாதம் கருதப்பட்டதன் காரணமாக இலங்கையைப் போலவே இந்தோனேசியாவிலும் பெரும்பான்மை இனத்தினரால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனினும் இந்தோனேசியாவில் இப்போதுள்ள மாகாண அரசாங்கங்களிலும் கூட பன்முகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. நியமனங்கள், நிதி முதலிய விடயங்களில் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டைக் குறைப்பதன் மூலம் இதனைச் சாதிக்க முடியும். ஒருமுறைமை சார்ந்த சமஷ்டி அமைப்பிலும் கூட மாநிலங்களுக்கு வழங்கப்படும் தன்னாதிக்கத்தின் அளவு இனத்துவ மற்றும் பிரிவினை கோரிக்கைகளின் வேகத்தை நிச்சயமாகக் குறைக்க முடியும். ஆனால் பாகிஸ்தானில் பங்களாதேஷ் பிரிக்கப்பட்டதால் மேலும் நாடு துண்டாடப்பட்டுவிடலாம் என்ற அச்சம் அதிகாரப் பரவலாக்கத்திற்குத் தடையாக உள்ளது. ஆனால் இந்தியாவைப் போன்ற (மாநில வரவு செலவுத் திட்டத்தில் மூன்றிலிரண்டு பகுதி நிதி மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது) ஒருநாட்டில் இன்று வரிவசூலிப்பதில் மாநிலங்களுக்குக்
75

Page 40
கூடிய அதிகாரம் வழங்கப்பட வேண்டுமெனக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் இவ்வாறான அதிகாரத்தையே "பிரிவினைவாத இயக்கங்கள்’ நாடுகின்றன என “றோஸ்" கூறுகிறார்.
ஆனால் அதிகாரப் பன்முகப்படுத்தல் என்பது இனத்துவ சமாதானம் தவிர வேறு பரிமாணங்களையும் கொண்டுள்ளது. தாய்லாந்திலும் , தென்கொரியாவிலும் அதிகாரம் மத்தியில் வெகுவாகக் குவிக்கப் பட்டிருந்ததால் அதிகாரத்துவ, இராணுவ - நிர்வாக மேலாதிக்கம் தொடர்ந்திருந்தது. இந்த இருநாடுகளிலும் சனநாயகம் தழைக்க வேண்டுமெனில் தன்னாதிக்கமுள்ள உள்ளூராட்சி அமைப்புகள் நகரங்களிலும், கிராமங்களிலும் அமைக்கப்படவேண்டும். நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல இந்தியாவில் சனநாயத்தின் நலிவுக்கும், மார்க்கோஸ் காலத்தில் பிலிப்பைன்ஸில் அதன் அழிவுக்கும் மத்திய அரசாங்கத்துக்கு வெளியே உள்ள தன்னாதிக்கமுள்ள நிறுவனங்கள் ஒடுக்கப்பட்டதே காரணமாகும். அதிகாரம் பன்முகப்படுத்தப்பட்டிருக்கும்போது அது மத்திய அதிகாரத்தின் துஷ்பிரயோகத்துக்கு ஒரு தடைக்கல்லாக அமைகிறது. சனநாயக விழுமியங்களில் மக்களைப் பயிற்றுவிப்பதற்கு உள்ளூர் அதிகார மட்டங்களில் அவர்கள் பங்குபற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுதல் வேண்டும். மத்திய அரசாங்கத்தில் அதகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் தோல்வியடையும் கட்சிகள் உண்மையில் கீழ்மட்டங்களில் தம்மைச் சனநாயகரீதியாக உறுதிசெய்து கொள்ளுதல் வேண்டும். இந்தியா இதற்கு நல்ல உதாரணமாகும். எனவேதான்"ஒஸ்புருன்” துருக்கியில்உள்ளூராட்சி மன்றங்களுக்கு வரிவசூலித்தல் உட்பட அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென வாதிடுகிறார்.
8. சமூக, பொருளாதார அபிவிருத்தி
சனநாயகத்துக்கும் சமூக, பொருளாதார அபிவிருத்தியின்செயல்முறைக்கும் உள்ள உறவுபற்றித்தம்முள்முரண்படும் பலகோட்பாடுகள் நீண்டகாலமாக இழுபறிப்பட்டு வந்துள்ளன. நாம் ஆய்வு செய்த பத்து நாடுகளிலும் காணப்பட்ட சான்றுகள் இந்த இழுபறி தொடர்பாக ஒரு முடிவுக்கு வரப் போதாது எனினும் முக்கியமான கருத்துக்கள் இதிலிருந்து எழுவது உண்மையாகும். இவற்றுள் மிகவும் முக்கியமானது சனநாயகம் மிகக் குறைந்த அபிவிருத்தி மட்டத்தோடு இணைந்து போகக் கூடியது என்பதாகும். கடந்த நான்கு தசாப்தங்களாக இந்தியா இத்தகைய முரண்பாடான நிலைமைக்கு உதாரணமாகத் திகழ்ந்து வந்துள்ளது. தற்போது இந்திய சனநாயகத்தின் தரம் நலிவடைந்திருந்தாலும் அதன் காரணம் அரசியலே அன்றிச் சமூக, பொருளாதாரக் காரணிகளல்ல. இலங்கை அபிவிருத்தியின் கீழ்மட்டத்திலிருந்தபோதும் இன்னும் சனநாயக அரசியல் யாப்பினையே கொண்டுள்ளது. நமது பத்து ஆசியநாடுகளிலும்
76

மிகக் குறைந்த கல்வி மற்றும் கைத்தொழிலாக்கத்தைக் கொண்டுள்ள பப்புவாநியூகினி சுதந்திரமடைந்து பதின்மூன்று ஆண்டுகளாகச் சனநாயகத்தைப் பேணிவந்துள்ளது. எமது இந்தத் தொகுதியிற்சனநாயக மட்டத்துக்கும் பொருளாதார அபிவிருத்தி மட்டத்துக்கும் இடையிற் காணப்படும் தொடர்பு பற்றித் திட்டவட்டமான அளவுகோலை உருவாக்க முடியாதுள்ளது.
இது எந்த வகையிலும் சனநாயகத்துக்கும், உயர்மட்டச் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கும் இடையில் உள்ள நேர்முகத் தொடர்புகளைக் குறைத்து மதிப்பிடுவதாகாது. அதுமட்டுமின்றிச் சமூக, பொருளாதார மட்ட உயர்வினால் ஏற்படும் வருமானக் கல்வி விரிவாக்கம் அதிக அரசியல் பங்கேற்புக்கான கோரிக்கைகளை வலிமைப்படுத்து வதையும் நாம் மறுக்க முடியாது. இதற்கு நல்ல உதாரணம் தென் கொரியாவாகும். கடந்த இரு தசாப்தங்களில் வருடாந்தம் 7 வீதம் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த அந்த நாடு பாரிய சமூக மாற்றங்களை உருவாக்கியதோடு சனநாயகத்துக்கான கோரிக்கை களையும் வலிமைப்படுத்தியுள்ளது. சுங் - ஜா ஹான் கொரியாவில் ஏற்பட்ட மாற்றம் குறித்துப் பின்வருமாறு விளக்குகிறார்: மத்திய வகுப்பினர் பெருகியதோடு அரசியல் உணர்வும் மேம்பட்டமை, பன்முகத் தன்மை கொண்ட தன்னாதிக்கமுள்ள சிவில் சமூகம் உருவாகியமை, தகவல்களும், எண்ணங்களும் வேகமாகப் பரவியமை, கைத்தொழிலாக்கம் பெற்ற சனநாயகங்களுடன் ஏற்பட்ட பொருளாதாரத் தொடர்புகள், அதுமட்டுமல்லாமல், தாம் சனநாயக நாடாக மாறாதவிடத்துப் புதிதாகக் கைத்தொழிலாக்கம் பெற்ற நாடு என்னும் அந்தஸ்தைப் பெற முடியாது என்ற ஞானம் ஆகியவை தென்கொரியாவில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள் எனலாம்.
பாகிஸ்தானில் ஏற்பட்ட சமூக பொருளாதார அபிவிருத்தி மிகவும் மெதுவானது எனினும் கடந்த தசாப்தத்தில் ஏற்பட்ட இம்மாற்றங்களே 1980களின் பிற்பகுதியில் அந்நாட்டில் சனநாயத்துக்காக எழுந்த கோரிக்கைகளை ஊக்குவித்தனஎன றோஸ் குறிப்பிடுகிறார். உண்மையில் கிராமப்புறக் கற்றோர் குழுவிலிருந்து உருவாகியுள்ள புதிய இனக் கற்றோர் இயக்கத்தினர் எதிர்காலத்தில் அரசியல் கட்சிகளின் சமூக, பொருளாதாரத் தளத்தை விரிவுபடுத்துவார்கள் எனவும் அவர் எதிர்பார்க்கிறார்.
எனினும் வறுமை நிலையிலிருந்து இடைநிலை அபிவிருத்தியை நோக்கிச் செல்லும்போது நவீனத்துவம் சனநாயகத்தில் ஏற்படுத்தக் கூடிய நிலைத்தளம்பல்கள் பற்றியும் நமது ஆய்வு சான்று பகர்கிறது. இதில் மிக முக்கிய பிரச்சினை என்னவெனில் சமூக, பொருளாதார அபிவிருத்தி மரபுரீதியாக அதிகாரத்துக்குத் தலை வணங்கும் தன்மையை
77

Page 41
உடைத்தெறிவதாகும். தனிப்பட்ட, சமூகமட்டங்களில் புதிய நலன்களில் ஈடுபாடும், உணர்வுகளும், அரசியல் வல்லமைகளும் ஏற்படுகின்றன; கோரிக்கைகள் அதிகரிக்கின்றன. இதற்கு ஏற்றவிதத்தில் அரசியல் நிறுவனங்கள் விரிவடையாவிட்டால் அவை நொறுங்கி விடும் அபாயமும் உண்டு. கோரிக்கைகளும், நலன்களும் பெருக்கமடையும் போது சமூக, சித்தாந்தப் பிளவுகளும் ஏற்படுகின்றன. இது அரச நிறுவனங்களின் அமைதிப்படுத்தும் இயலளவைக் குறைக்கிறது. தென்கொரியாவைப்போல கடந்த மூன்று தசாப்தங்கள் இந்நிறுவனங்கள் அதிகாரத்துவம் மிக்கவையாக இருந்ததால் இத்தகைய சமூக பொருளாதார மாற்றங்கள் சனநாயகத்துக்கான கோரிக்கையைக் கீழிலிருந்து நெருக்குகின்றன. அதேநேரத்தில் இதுவரை அமுக்கி வைத்திருந்த கோரிக்கைகள், விரக்திகள், பிணக்குகளைத் தீர்க்கும் வண்ணம் புதிய சனநாயத்த்ையும் முன் வைக்கின்றன. ஆனால் இலங்கை, இந்தியாவைப் போல் இந்நிறுவனங்கள் ஏற்கனவே சனநாயகத் தன்மை கொண்டவைகளாக இருந்தால் அரசியல் யாப்புச் சனநாயகமே பிரச்சினைக்குள்ளாகிச், சட்டபூர்வமற்றதாகவும் மாறுகிறது. தாய்லாந்தின் அனுபவம் காட்டுவதுபோலப் புதிய சனநாயகத்தை எதிர்நோக்கும் சவால்கள் உடைந்து நொருங்கிய நிறுவனங்களும் , அதிகரித்த சமூகக் கோரிக்கைகளுமாகும். தாய்லாந்தில் சனநாயகத்தின் தோல்விக்கும் (1974 - 76) அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மிலேச்சத்தனத்துக்கும் நிகரான சனநாயக ஆட்சிக்கும் சனநாயக நிறுவனங்கள் இல்லாமையையே காரணம் என்பதைச் சாய் அணன் காரணமாகக் காட்டுகிறார். சனநாயகத்தின் இத்தகைய இரட்டைத்தனமான விளைவுகளுக்கு இலங்கை உதாரணமாகத் திகழ்கிறது. 1960களில் அந்நாட்டில் பெளதீக வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறிப்பாக வயதுவந்தோர் கல்வியறிவு, வாழ்வு எதிர்பார்ப்புக் காலம் ஆகியவற்றில் ஏற்பட்ட வளர்ச்சி (நமது ஆய்வுக்குட்பட்ட நாடுகளில் எந்த நாட்டிலும் இது ஏற்படவில்லை) சனநாயகத்துக்கு ஒரு சட்டபூர்வத் தன்மையையும் சர்வதேச கெளரவத்தையும் தேடித் தந்தது. (அட்டவணை 1) ஆனால் இத்தகைய வளர்ச்சி சனத்தொகைப் பெருக்கத்துக்கும் காரணமாக அமைந்தது. இதனால் தமது எதிர்பார்ப்புகளும் அபிலாசைகளும் நிறைவேறாததால் விரக்தியுற்ற கல்விகற்ற இளைஞர்கள் கிளர்ச்சி செய்தனர். 1971இல் சிங்கள பெளத்த இளைஞர்களினால் “ஜே.வி.பி” கிளர்ச்சி ஏற்பட்டது. பின்னர் தமிழ்ப் பிரிவினைவாதக் கிளர்ச்சி ஏற்பட்டது. "சமூக மாற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு சனநாயக அரசில் ஆளும் கட்சி சமூகக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்ற எதிர்பார்ப்ப்ை இளைஞர்கள் மத்தியில் தூண்டியது; அவர்களால் முடியாது எனக் கண்டபோது பல கிளாச்சிகளைத் தோற்றுவிக்கும் மனப்பான்மையை உருவாக்கியது” என ஜே. வி. பி கிளர்ச்சி பற்றி எழுதுகையில் "ஊர்மிளாபத்ணிஸ்" குறிப்பிடுகிறார்.
78

கடந்த இரு தசாப்தங்களாக இந்தியாவிலும் இது போன்ற ஒரு செயல்முறையே நடைபெறுகிறது. இந்திய சனநாயக நிறுவனங்களின் நலிவுக்கு அரசியற் தலைமைத்துவத்தின் மேலாதிக்கமுள்ள போக்கே காரணம் என அண்மைக்கால ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும் இந்தியாவின் பொருளாதார அபிவிருத்தி சனநாயகத்தினால் வழிநடத்தப்பட்டது. அதேநேரத்தில் அதனால் ஏற்பட்ட சலுகை பெற்ற வகுப்பினரதும் பிற்பட்ட வகுப்பினரதும் அரசியற் கோரிக்கைகள் சனநாயத்தில் தாக்கங்களையும் ஏற்படுத்தின. இவ்வாறு பிற்படுத்தப்பட்ட குழுவினரிலிருந்து வரும் அரசியற் கோரிக்கைகள் சனநாயகத்தை விரிவடையச் செய்கின்றன. இது அரசினை மேலும் பொறுப்புள்ளதாக மாற்றுகிறது. ஆனால் இவை சனநாயகத்தின் பரிணாம வளர்ச்சியில் பிரச்சினைகளையும் உருவாக்குகின்றன. அதாவது "ஹோலி" குறிப்பிடுவது போல அரசியல் நிறுவனங்கள் இப் புதிய கோரிக்கையாளர்களுக்கு இடம் ஒதுக்குதல் வேண்டும். இதற்காக அவர்களது அதிகாரங்கள் சிலவற்றை அவர்கள் தியாகம் செய்யவேண்டும். அல்லது தீர்க்கப்படாத இக் கோரிக்கைகளினால் சனநாயகமே வீழ்ச்சியடையும் நிலையும் ஏற்படலாம்.
9. பொருளாதாரச் செயலாற்றமும், சட்டபூர்வத்தன்மையும்
விரைவான, உறுதியான பொருளாதார அபிவிருத்தி ஆட்சியினரின் சட்டபூர்வத் தன்மையின் ஒரு முக்கிய மூலம் என அனுமானிக்கப்படுகிறது. இத்தகைய அனுமானத்துக்குச் சாதகமாகவும் எதிராகவும் பல சான்றுகளைக் கூறமுடியும். அபிவிருத்தியைச் சாதிப்பதன் மூலம் சனநாயகங்கள் மக்களின் ஆதரவையும் நன்மதிப்பையும் பெறுகின்றன. அதே நேரத்தில் அபிவிருத்திச் செயன்முறைகள் சனநாயகத்துக்குப் பல சவால்களையும் விடுகின்றன. அபிவிருத்தியைத் தொடர்ந்து எழும் பல எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது கஸ்டமான காரியமாகி விடலாம். சுஹார்ட்டோவின் புதிய ஒழுங்கு பொருளாதாரத் தோல்விகளையும் சமூக வாழ்வில் பல குழப்பங்களையும் தோற்றுவித்தது. இந்தோனேசியாவின் புதிய தலைமைத்துவத்தைக் கொண்டுள்ள இராணுவம் அதனுடைய சட்டபூர்வத்தன்மை குறித்த மக்களின் நம்பிக்கையினத்தை அகற்றுவதற்கு ஏதாவது ஆக்கபூர்வமாகச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.
10. சர்வதேசச் சூழல்
ஆசியாவின் சனநாயக எதிர்பார்க்கைகளுக்குப் பொருளாதாரத் தங்கியிருத்தலும் பலவீனமும் ஒரு சர்வதேசத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இக்காரணிகள் சமநிலையும், உறுதியும், உயிர்த்
79

Page 42
துடிப்பும் நிறைந்த பொருளாதார வளர்ச்சியைச் சிக்கலாக்கி விடுகின்றன. அத்துடன் ஒரு சனநாயக ஆட்சியின் செயற்பாடுகளிலுள்ள பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கி விடுகின்றன. எனினும் ஆசிய சனநாயகத்துக்கு நேரடியான சர்வதேசத் தாக்கம் அவற்றின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்னும் வடிவிலேயே வருகின்றது.
நாட்டின் இராணுவப் பாதுகாப்புக்கு, வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அல்லது உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு ஆகியவை பெரும் அச்சுறுத்தலாகக் காணப்படுகின்றன. இவை மறுதலையாக இராணுவத்தின் கரங்களை வலுப்படுத்துகின்றன. உண்மையில் அவை இராணுவ ஆட்சியை நியாயப்படுத்துதோடு சமூகத்தை இராணுவமயப் படுத்திவிடுகின்றன. மேலும் சிவில் உரிமைகளையும், சுதந்திரங்களையும் தேசிய பாதுகாப்பு என்னும் பெயரில் மட்டுப்படுத்துகின்றன. இத்தகைய நிலைமைகள் தென்கொரியாவில் சிங்மன் றியின் (Syagman Rhee) கீழான முதலாம் குடியரசிலிருந்து பார்க் (Park), சுன் டு வான் (Chun Doo Hwan) முதலியோரின் அதிகாரத்துவ ஆட்சிவரை தெளிவாகக் காணப்படுகின்றன. பிளவுபட்ட நாட்டில் எல்லையின் இருமருங்கும் காணப்படும் பதட்ட நிலையும், இராணுவத் தயார் நிலையும் தென்கொரியாவில் காணப்படுவதைப்போலத் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான் முதலிய நாடுகளிலும் காணப்படுகின்றன.
1970களில் தாய்லாந்தில் கம்யூனிஸ்ட் கிளர்ச்சியானது வெகுசன அரசியல் இயக்கங்கள் குறித்து வலதுசாரிகளிடையே'ஆதங்கத்தை ஏற்படுத்தியது. மறுதலையாக இப்பிரதேசத்தில் வியட்நாமின் எழுச்சியும் அச்சுறுத்தலும் இராணுவ மேலாதிக்கத்தை நியாயப்படுத்தியது. அண்மைக்காலத்தில் ஆப்கானிஸ்தானில் சோவியத் தலையீடும் அதனால் ஏற்பட்ட இலட்சக்கணக்கான அகதிகள் வருகையும் பாகிஸ்தானிலும் இந்த நிலைமையைத் தோற்றுவித்தது. இது பாகிஸ்தானில் படிப்படியாக சனநாயகம் தோன்றுவதைத் தடுக்கவில்லை எனினும் அச்செயல்முறையைச் சிக்ககலாக்கியதோடு அதன் வேகத்தையும் குறைத்தது. பாகிஸ்தானின் புவியியல் - இராணுவ நிலைய முக்கியத்துவம், இந்தியாவுடனான அதனுடைய போர்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் போது சனநாயக மாற்றத்துக்கு இராணுவப்போதுகாப்பு ஒரு சவாலாகவே விளங்கும். அத்துடன் சனநாயக மாற்றத்தைப் பூரணப்படுத்துவதைத் தடுப்பதற்கு ஓர் உடனடிக் காரணமாக இருப்பதோடு எதிர்காலச்சனநாயக ஆட்சிகளுக்கு ஒரு தீவிர பிரச்சினையாகவும் விளங்கும்.
பாகிஸ்தானின் அனுபவம் பாதுகாப்புப் பிரச்சினைகளில் அரசியல் தாக்கம்
தொடர்பாக இரண்டு படிப்பினைகளைக் காட்டுகிறது. முதலாவது
பாதுகாப்புக்கு எதிரான அச்சுறுத்தல் அரசியல் தலைமைத்துவத்தில்
80

ஒன்றிணைப்பை ஏற்படுத்துகிறது. சனாதிபதி வழியா உல் - ஹக்குக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட சதி முயற்சி பின்னர் கைவிடப்பட்டதற்கு ஆப்கானிஸ்தான் மீது சோவியத்யூனியனின் படையெடுப்புத்தான் காரணம் எனறோஸ் குறிப்பிடுகிறார். இந்தோனேசியா படையெடுக்கலாம் என்னும் அச்சம் 1964 இல் மலேசியாவின் பொதுத் தேர்தல்களில் இனத்துவப் பிளவுகளை மூடிமறைத்தது. அதே போல 1970களின் நடுப்பகுதியில் வியட்நாமிய அச்சுறுத்தல் பொதுத் தேர்தலில் அரசியல் ஒருமைப்பாட்டையும், இனங்களுக்கிடையிலான கூட்டுக்களையும் தோற்றுவித்தது. இரண்டாவதாக, தேசியப் பாதுகாப்பு என்பது ஆட்சியினரின் செயற்பாட்டில் மிக முக்கிய பரிமாணமாகும். ஒரு போரின் தோல்வி என்பது ஒர் ஆட்சியின் அத்திவாரத்தையே தகர்த்துவிடும். 1965இல் இந்தியாவுடனான போரின் தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் சனாதிபதி ஆயுப்கானுக்கு ஏற்பட்ட கதி இத்தகையதே. பிலிப்பைன்சின் கொம்யூனிஸ்ட்களின் சடுதியான வளர்ச்சியினால் சனாதிபதி மார்க்கோசுக்கும் இராணுவத் தலைவர்களுக்குமிடையே சந்தேகம் வளர்ந்தது. மறுதலையாக பிலிப்பைன்சின் முன்னைய சனாதிபதிறேமன் மக்சேசே (RaymonMagsaysay) 1950களில் குக் (Huk) கிளர்ச்சியை அடக்கி வெற்றிபெற்றமை அவருடைய ஆட்சிக்கும் சனநாயக முறைமைக்கும் நன் மதிப்பை உருவாக்கியது.
உண்மையில் பிலிப்பைன்சின் இராணுவ வெற்றி ஐக்கிய அமெரிக்காவின் இராணுவ ஆதரவுடனேயே ஏற்பட்டது. சுதந்திரம்பெற்ற காலம் தொடக்கம் பிலிப்பைன்சின் அரசியலில் ஐக்கிய அமெரிக்கா முக்கிய செல்வாக்குச் செலுத்தி வந்துள்ளது.ஆனால் வெளிநாட்டு அரசியல் மற்றும் இராணுவச் செல்வாக்கு இரண்டு வழிகளிலும் ஏற்படலாம். உதாரணமாக ஐக்கிய அமெரிக்கா மார்க்கோசின் வெளியேற்றத்தை உத்தியோகரீதியாகவும் வேறுவழிகளிலும் வற்புறுத்தியது. இதற்காகச் சகல இராணுவ உதவி களையும் இரத்துச் செய்துவிடப்போவதாகவும் பயமுறுத்தியது. அதே நேரத்தில் மார்க்கோசின் எதேச்சாதிகார ஆட்சியின்போது அமெரிக்கா அவரது ஆட்சியை வெகுவாக ஆதரித்ததோடு கோடிக்கணக்கான டொலர்களை சர்வதேசக் கடன்களாகவும் வழங்கி அவ்வாட்சிக்கு நன்மதிப்பையும் தேடித்தந்தது. இப்போதும் கூட அமெரிக்க அரசாங்கம் கொறோசோன் அக்கியுனோவின் சனநாயக அரசாங்கத்திற்குப் பல்வேறு பொருளாதார உதவிகளை வழங்கி வருகிறது. அதே நேரத்தில் அமெரிக்க இராணுவம் பிலிப்பைன்சில் உள்ள தனது தளங்களிலிருந்து வெளியேறுவதனால் பிலிப்பைன்சில் இன்னும் உறுதியான அரசியல் இரட்டைத் தன்மை குறைந்த எதிர்த்துருவத் தன்மையுள்ள சனநாயகம் ஏற்படலாம். இதேபோல ஐக்கிய அமெரிக்க - தென்கொரிய உறவினால் ஏற்படக்கூடிய மிகையான சர்வதேச உதவிகளில் தங்கியிருத்தல் தென்கொரியாவின் தேசிய உணர்வலைகளை எழுப்பி அரசியல்
81

Page 43
எதிர்த்துருவத் தன்மையை இன்னும் ஆழமாக்கி விடலாம் என ஆய்வாளர் கருதுகின்றனர். பப்புவாநியூகினியின் பொருளாதார வளர்ச்சிக்காக அவுஸ்திரேலியா நிபந்தனையற்ற உதவிகளிை வழங்குகிறது. எனினும் கூட இந்த உதவிகள் உளவியல் மற்றும் அரசியல் தாக்கங்களைப் பப்புவாநியூகினியில் ஏற்படுத்தக்கூடும்.
தென்கொரியாவின் அதிகாரத்துவ ஆட்சியாளர்களுக்கு ஐக்கிய அமெரிக்கா நீண்ட காலமாக ஆதரவு வழங்கியுள்ளது. இதனால் அண்மைக்காலத்தில் அந்நாட்டில் சனநாயகத்திற்கான கிளர்ச்சிவலிமையடைந்தது. இவ்வாறு எதிர்க்கட்சிகளின் சனநாயக இயக்கத்தை அடக்கி ஒடுக்கிவிடாமல் இருக்கச் சனாதிபதி "சுண்ணை" (Chun) அமெரிக்க இராஜதந்திர நெருக்குதல்களே இணங்கச் செய்தன. ஆனால் சனநாயகத்திற்கான சர்வதேச நெருக்குதல்கள் நுணுக்கமானவை. பிரதான முதலாளித்துவ கைத்தொழில் நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டுமானால் தாமும் சனநாயக நாடாக மாறவேண்டுமென்பது சனநாயகக் கோரிக்கைகளை முடுக்கிவிடும் உலகளாவிய நெருக்குதல்களாகும். பிலிப்பைன்சில் நடந்த ”மக்கள் சக்தி” (PeoplePower) கிளர்ச்சிகளும் ஆர்ப்பாட்டங்களும் கொரியாவின் சனநாயகக் கோரிக்கைக்கு ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கலாம்.
இவ்வாறான வேறுபட்ட விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு இரண்டு தற்காலிகமான முடிவுகளுக்கு நாம் வரக்கூடும். முதலாவது சனநாயகத்தின் மீதான சர்வதேசத் தாக்கம் பலவீனமான சிறிய நாடுகளின் மீது மிக அதிகமாக இருக்கிறது. எனவே இந்திய சனநாயகத்தைத் தீர்மானிக்கும் சக்திகள் பெரும்பாலும் உள்நாட்டிலிருந்தே எழுகின்றன. ஆனால் இலங்கையிலோ அல்லது மலேசியாவிலோ இவ்வாறு இல்லை. இரண்டாவது சர்வதேசச் செல்வாக்கு பிரதேச அல்லது உலகளாவிய போக்கு சனநாயகத்தை நோக்கியதாக இருக்கும் பொழுது அதுவும் சனநாயகத்திற்குச் சார்பானதாக இருக்கும். இச்சந்தர்ப்பங்களில் அந்நிய சக்திகள் சனநாயக வளர்ச்சியைத் தமது வெளிநாட்டுக் கொள்கையாகவும் கொண்டிருக்கும்.
ஆசியாவில் சனநாயகத்தை நோக்கி
ஆசியாவில் சனநாயகத்தின் பொதுவான முடிவுகளைக் கூறுவது இங்கு நமது நோக்கமல்ல. சனநாயக அரசாங்கங்களை உருவாக்கிப் பேணுவற்கான ஒரு வாய்ப்பாட்டை வழங்குவதும் நமது நோக்கமல்ல. ஏற்கெனவே நாம் குறிப்பிட்டதைப் போல ஆசியாவில் அரசியல்
82

அபிவிருத்தியை உருவாக்குவதிற் பல காரணிகள் செயற்படுகின்றன. இதற்காகப் பல பொதுக்கருத்துக்களை முன் வைக்கலாம். ஆனால் வேறுபட்ட காரணிகளில் எது முக்கியமானது என்பது பல்வேறு சூழ்நிலைகளுக்கேற்ப மாறுபடலாம்.
எனினும் நமது ஆய்வின் விளைவாக ஏற்படும் மிக முக்கிய கேள்வியை நாம் அசட்டை செய்துவிட முடியாது. அதாவது ஆசியாவின் சனநாயக அரசாங்கங்களை முன்னெடுத்து உறுதி செய்வது எவ்வாறு என்பதே அக்கேள்வியாகும். இக்கேள்வியை இன்று ஆசிய நாடுகள் முகங்கொடுக்கும் மூன்று வகையான சவால்களுக்கேற்றவிதத்தில் பிரிப்பது பயனுள்ளது. அச்சவால்களாவன: சனநாயகத்தை நோக்கிய மாற்றம், புதிய அல்லது உறுதியற்ற சனநாயகங்களை உறுதிசெய்தல், பலவீனமான அல்லது உடைந்து விட்ட சனநாயகங்களைத் திரும்பவும் புதுப்பித்தல் அல்லது சமநிலைப்படுத்தல்.
சனநாயகத்தை நோக்கிய மாறுநிலை (Transition to Democracy)
பத்து நாடுகள் பற்றிய ஆய்வுகளில் மூன்றில் இப்போது சனநாயகத்தை நோக்கி மாற்றம் பெறுவதில் ஏதோ ஒரு வகையில் பிரச்சினை தோன்றியுள்ளது. பாகிஸ்தானில் இப்பிரச்சினையானது சனநாயகத்தை எவ்வாறு நிறைவு செய்வது என்பதாகும்; தாய்லாந்தில் அதனை எவ்வாறு முன்னேற்றுவது என்பதும்; இந்தோனேசியாவிலோ அதனை எவ்வாறு தொடங்குவது என்பதாகும்.
உண்மையில் துருக்கிய சனாதிபதி "இனோனு'(nonu) மற்றும் “முஸ்தபா” காமெல் போன்ற சனநாயகத்துக்குத் தம்மை அர்ப்பணித்துள்ள தலைவர்களைக் கொண்டிருந்தமை மிகவும் நன்மை பயக்கக் கூடியது. இவ்வாறு இல்லாது விட்டால் கீழ்மட்டத்தில் ஒரு உறுதியான சனநாயக இயக்கம் இருப்பினும் அரசியல்ரீதியாகத் திறமையற்ற , மக்களிடம் செல்வாக்கற்ற தென் கொரியாவின் சுன் போன்ற தலைவர்கள் சமூக,பொருளாதாரப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாது. இறுதி நேரத்தில் அரசியல், பொருளாதாரப்பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாத மார்கோஸ் போன்ற தலைவர்களுக்கும் இது பொருத்தமானது. சரியான சந்தர்ப்பத்தில் சர்வதேச நெருக்கடியைக் கொண்டு வருவதன் மூலம் மார்க்கோஸ், சுன் முதலிய தலைவர்களைச் சீக்கிரம் வெளியேற்றவோ அல்லது அவர்களின் நடவடிக்கைகளைக் கட்டடுப்படுத்தவோ முடியும். ஆட்சியாளர்களினதும் எதிர்க்கட்சித் தலைவர்களினதும் தெரிவுகளும் தந்திரோபாயங்களும் முக்கியமானவை. அதினும் குறிப்பாக மாறுநிலை (Transition ) வேகமடையும் போது அவர்களிடையே உள்ள உள்ளகப் பிளவுகளும் சூழ்ச்சித் திட்டங்களும் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தக்
83

Page 44
கூடியவை. பாகிஸ்தானில் ஆட்சியாளரும், எதிர்க்கட்சிகளும் கவனமான யுத்தி முறைகளைக் கையாண்டு வன்முறை மோதல் களைத் தவிர்த் திராவிட்டால் சனநாயகம் இந்தளவுக்குக் கூட அங்கு தழைத்தோங்கியிருக்க முடியாது என றோஸ் குறிப்பிடுகிறார். பிலிப்பைன்ஸ் மற்றும் தென்கொரியாவின் விடயத்திலும் “ஓ - டொனல்” (O'Donnel) மற்றும் "ஸ்மிற்றர்” (Schmitter) ஆகியோர் றோஸ் கூறியதைப் போன்ற கருத்தினையே வலியுறுத்துகின்றனர். தாய்லாந்திலும் இந்தோனேசியாவிலும் நாம் மேற்கொண்ட ஆய்வுகள் “தொடர்ச்சியான சிறுசிறு சீர்திருத்தங்கள்” சனநாயக மாறுநிலையில் மிகப் பொருத்தமான படிமுறை என்பதற்குச் சான்று பகர்கின்றன. அத்துடன் ஆரம்பச் சனநாயகப்படுத்தலில் அதிகாரத்துவமிக்க ஆட்சியினர் தரும் மட்டுப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள எதிர்கட்சியினர் தயாராக இருக்கவும் வேண்டும்.
எனினும் பிலிப்பைன்சிலும் தென்கொரியாவிலும் சனநாயக மாற்றத்தில் உள்ள முக்கியத்துவம் பற்றி டொனல், ஸ்மிற்றர் ஆகியோர் சுட்டிக் காட்டுகின்றனர். இங்கு தன்னாதிக்கமுள்ள நலன் குழுக்கள் முதலில் தீவிரமாகச் செயற்பட்டன. பின்னர் இவை சனநாயகத்துக்கான "மக்கள் எழுச்சி"யாக மாறின. இதனைச் "சிவில் சமூகத்தின் உயிர்த்தெழுதல்" என அவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த இரண்டு நாடுகள் உட்படப் பல ஆசிய நாடுகளில் அரசின் கட்டுப்பாட்டுக்கு உள்ளாகாத தன்னாதிக்கமுள்ள கூட்டுச் சமூக வாழ்க்கையின் முக்கியத்துவம் வலியுறுத் தப்படுகிறது. இத்தகைய பன்முகப்பட்ட கட்டமைப்பு சனநாயகத்துக்கான உறுதியான அடித்தளத்தை இடுகிறது.
அதுமட்டுமல்லாமல் இத்தகைய மக்கள் எழுச்சி மற்றும் அரசியல் விழிப்புணர்வுசனநாயக மாற்றம் திரும்பவும் சிதைவடையாமல் காப்பாற்றக் கூடியது. அதைவிட முக்கியமானது பழைய அல்லது புதிதாகத் தோன்றக் கூடிய எதேச்சாதிகார அரசு சனநாயகத்தை அதன் ஆரம்பகாலங்களிலேயே தூக்கிஎறிந்து விடுவதையும் தடுக்க முடியும். இத்தகைய சூழ்நிலைகளுக்குப் பிலிப்பைன்ஸ் மிகச் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. அங்கு சனநாயக நிலைமாறு காலத்தின் முன்னும் பின்னும் தேர்தலில் செயன்முறைகளில்
வெகுசன இயக்கங்களை நம்பிக்கை கொள்ளச் செய்தன. கத்தோலிக்கத் திருச்சபையும் அதனோடு இணைந்த நிறுவனங்களும், பத்திரிகைகளும் மார்க்கோஸ்பின் இறுதிநாட்களில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தின. மார்க்கோசின் வீழ்ச்சிக்குப் பின்னர் சனநாயக மக்கள் நிறுவனங்கள் நாடெங்கும் பல்கிப் பெருகின. தாய்லாந்திலும் இந்தோனேசியாவிலும் இராணுவத் தலைவர்கள் சனநாயகம் ஸ்திரமடையும் முன்னரே தன்னாதிக்கமுள்ள மக்கள் இயக்கங்கள் தோன்றுவதைத் தடுக்க முயன்றனர்.
84

செய்யக் கூடியவற்றைத் தெரிவு செய்து இடைஞ்சல்களுக்கு மத்தியிலும் அவற்றைச் செய்து முடிக்கும் சாதுர்யம், ஆசியாவில் சனநாயகத்தை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஒன்றாகும். பாகிஸ்தானில் சனாதிபதி வழியாவின் பதவிக்காலம் 1990 இல் முடிகிறது. அதற்குள் முழுமையான சனநாயகத்தை அடைதல் சாத்தியமானது. ஆனால் அது அவரால் வடிவமைக்கப்பட்ட விதத்திலும் கால எல்லைக்குள்ளுமே சாத்தியமானது. அரசியல் அபிவிருத்திகள் (சிவிலியன் பிரதம மந்திரி மொகமட் சான் ஜனேஜோவின் திறன்களும் சுதந்திரமும், 1987 உள்ளூராட்சித் தேர்தல்களில் மக்களின் தீவிர பங்குபற்றல் முதலியவை) 1985 இல் தேர்தல்களைப் பகிஷ்கரித்த எதிர்கட்சிகளின் விவேக மின்மையையும், பின்னர் அரசியலில் தீவிர பங்கெடுக்க அவர்கள் எடுத்த முடிவில் விவேகத்தையும் காட்டி நிற்கின்றன. தற்போது மக்களின் முழுமையான பங்கேற்பு, கட்சிகளின் அபிவிருத்தி முதலியவை அரசியலிருந்து இராணுவம் முற்றாக விலகிச் செல்லும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
ஆனால் தாய்லாந்திலும், இந்தோனேசியாவிலும் இத்தகைய அபிவிருத்தி அண்மைக்காலத்தில் ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை. எனவே சனநாயக சக்திகள் நீண்டகால யுத்தியைக் கையாள வேண்டியுள்ளது. "சாய் அனன்” கூறுவது போல தாய்லாந்தில் சனநாயக செயன்முறையை உருவாக்குவதற்கு அரசியல் நிறுவனப்படுத்தல் மிகவும் முக்கியமானது. அரசியல் கட்சிகளும் ஆள்பவர்களும் தமது இயலளவு, செயற்பாடு, நம்பிக்கை, மதிப்பு ஆகியவற்றை விருத்தி செய்ய முடியாத பட்சத்தில் தற்போது அரசியலில் உள்ள இராணுவச் செல்வாக்கைக் குறைக்கவோ நீக்கவோ முடியாது. எனினும் நடைமுறை ரீதியாக அரசியலிலும், நாட்டின் பாதுகாப்பிலும் தற்போது இராணுவம் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தைப் படிப்படியாகவே நீக்க வேண்டும். இக்காலத்தில் சனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோர் எதிர்காலச்சனநாயகத்துக்கான உள்ளகக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இந்தோனேசியாவில் சனநாயகத்துக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகத் தென்படுகின்றன. ஆனால் சுந்ஹவுஸன் குறிப்பிடுவதுபோன்று புதிதாக உருவாகியுள்ள இராணுவத்தலைமையுடன் எதிர்க்கட்சியிலுள்ள சனநாயகத் தலைவர்கள் இணைந்து புதிய சனநாயக அரசியல்முறையை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் தென்படாமலில்லை. ஆனால் இம்முயற்சியில் இராணுவம், கிளர்ச்சிகள் அல்லது இடதுசாரி அரசாங்கம் ஏற்படும் என அச்சம் கொள்ள இடம் கொடுத்தலாகாது.
2. புதிய சனநாயகங்களை உறுதி செய்தல்
ஆய்வுக்குட்பட்ட நாடுகளில் மூன்று இத்தகைய சவாலுக்கு முகங் கொடுக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றிலும் சனநாயக முறையை இயங்க
85

Page 45
வைப்பதில் புதிய அரசியற்றலைவர்களின் திறமை முக்கியமானது. இவர்களின் செயற்பாட்டில் இரு அம்சங்கள் காணப்படுகின்றன. முதலாவது சனநாயகத்தை நடைமுறைரீதியாகச் செயற்படச்செய்தல் - இரண்டாவது இந்நாடுகள் முகங்கொடுக்கும். பொருளாதார, சமூக, பாதுகாப்புப் பிரச்சினைகளுக்குக் காத்திரமாக முகங்கொடுக்கும் வண்ணம் செயற்படச் செய்தல்.
துருக்கியைப் பொறுத்த வரையில் இது தொடர்பான வெற்றி வாய்ப்புக்கள் அதிகம். ஏனெனில் துருக்கிசனநாயக அனுபவத்தைக் கொண்டிருப்பதோடு தன்னுடைய புதிய முறையை நெருக்கடியில்லாமல் நீண்டகாலமாக நடத்திவந்துள்ளது. மேலும் புதிய அரசியல் யாப்பானது தனது இலக்கை அடைந்து வருகிறது எனக் கூறலாம். அதாவது சிறிய தீவிரக் கட்சிகளை வலுவிழக்கச்செய்து ஒரு உறுதிமிக்க குறைந்த எதிர்த்துருவத்தன்மையுள்ள அரசியற் கட்சி முறையை உருவாக்குவதே அதன் நோக்கமாகும். சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராக இருக்கும் வரையறைகளை நீக்கிச் சிவில் உரிமைகளை உறுதிசெய்து அரசாங்கத்தில் இராணுவத்தின் செல்வாக்கை மேலும் குறைப்பதன் மூலம் அரசாங்கத்தின் நன்மதிப்பு உயரும். அரசுக்கும் சமூகத்துக்கும் ஓர் ஆரோக்கியமான சமநிலையை உறுதி செய்வதன் மூலமாகச் சனநாயகத்தின் ஆழத்தை அதிகரிக்க முடியுமென "ஒஸ் புடுன்' கூறுகிறார். இதனைப் , பொருளாதாரத்திலுள்ள மத்திய நிர்வாகக் கட்டுப்பாடுகளைக் குறைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் தன்னாதிக்கமுள்ள நிறுவனங்களையும் வளர்ப்பதன் மூலம் அடைய முடியும். அதே நேரத்தில் புதிய ஏற்றுமதி நோக்குள்ள பொருளாதார வளர்ச்சி நியாயமான வருமானப்பங்கீட்டை ஒதுக்கிவிடக்கூடாது என மேலும் எச்சரிக்கிறார்.
தென்கொரியாவும் பிலிப்பைன்சும் இன்னும் கஷ்டமான சவால்களை எதிர்நோக்குகின்றன. ஆனால் தென்கொரியா தனது புதிய சனநாயகத்தை ஓர் ஆரோக்கியமான துடிப்புள்ள பொருளாதாரத்துடன் ஆரம்பித்துள்ளது. எனினும் நாம் முன்பு குறிப்பிட்டது போல அபிவிருத்தியின் வெற்றி பல பிரச்சினைகளை உருவாக்குகின்றது. புதிய சனநாயகத்தின் தலைவிதி சனநாயகத்தலைவர்களின் திறமையில் தங்கியுள்ளது. இவர்கள் நீண்டகால இராணுவ ஆட்சியின் காரணமாகத் தாம் ஒதுக்கப்பட்டுப் பின்னடைந் துள்ளோம் எனக் கருதும் மக்கள் இயக்கத்தைத் திருப்தி செய்யக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும். இத்தகைய தீவிர மக்கள் இயக்கத்தைச் சமாளிப்பது என்பது அவர்களது நலன்களை அரசியற் கட்சிகளில் நிறுவனரீதியாகப் பிரதிபலிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் தங்கியுள்ளது. அதாவது சனநாயக முறையானது அரசியல்ரீதியாகவும் சமூக, பொருளாதார ரீதியாகவும் இக்குழுக்களின் நலன்களைத் தன்னில் இணைத்துக்கொள்ள வேண்டும். சுங்யூகான் தனது அத்தியாயத்தில் கூறுவதைப் போல காத்திரமான அரசியற் கட்சிகள்
86

விருத்திசெய்யப்பட வேண்டும். அவைகள் மக்கள் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கிடையே உள்ள உறவுகளை விருத்தி செய்வதன் மூலமாக இராணுவத்தின் செல்வாக்கை அரசாங்கத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும்.
துருக்கியோடும் தென்கொரியாவோடும் ஒப்பிடும்பொழுது கொறோசான் அக்கியுனோ பதவியேற்றது முதல் எதிர்நோக்கிய சவால்கள் மிக அதிகமானவை. உண்மையில் அவருடைய அரசாங்கம் இரண்டு வருடங்களேனும் தாக்குப் பிடிக்குமா எனச் சந்தேகப்பட்டனர். அவர் எதிர் நோக்கிய மிக முக்கிய பிரச்சினை ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாகும். இத்தகைய ஆயுதக் கிளர்ச்சி கொம்யூனிஸ்டுகளால் மாத்திரமல்லாது மின்டானோவைத் தளமாகக் கொண்டிருந்த பிரிவினைவாத மோரோ Gg5fiu sú765606u (yp6šT60T68ofiuíl60TT9Júb (Moro National Liberation Front) மேற்கொள்ளப்பட்டன. இராணுவத்துக்குள்ளேயே விசுவாசமற்ற அதிருப்தியாளர்கள் 1987 இல் மூன்று சதிமுயற்சிகளை மேற்கொண்டனர். நாட்டின் பொருளாதாரம் சீரழிந்திருந்ததோடு அரசாங்கம் பாரதூரமாகக் கடன் பட்டிருந்தது. சமூக அநீதி, நில உரிமை தொடர்பான சமத்துவமின்மையும் பாரதூரமாகக் காணப்பட்டன. மக்கள் தொகையின் 60 வீதம் வறுமைக் கோட்டுக்கு கீழே இருந்தது. நாட்டில் சனநாயக நிறுவனங்கள் போதியளவு இருக்கவில்லை. இவ்வாறான பல பிரச்சினைகளுக்கு அக்கியுனோ முகங்கொடுக்கவேண்டியிருந்தது. நிர்வாக அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டுத் தேசிய சட்ட சபைக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கும் தேர்தல்களும் நடத்தப்பட்டன. ஆனால் கட்சி அமைப்பு அப்படியே இருந்தது. அக்கியுனோவின் அரசாங்கம் அரசியல்ரீதியாகப் பிளவுபட்டிருந்தது. 1992 ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்வரை புதிய அரசியலமைப்பின் தாக்கம் பரிசோதிக்கப்படவுமில்லை. அதற்கு முன்னதாக அக்கியுனோவின் அரசாங்கம் பொருளாதாரத்தைச் சீரமைக்க வேண்டும். இராணுவத்திற்கு மேலாக மக்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்துதல் வேண்டும். அத்துடன் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகளுக்கெதிராக மக்கள் அபிப்பிராயத்தைத் திசை திருப்புதலும் வேண்டும்.
இதை எழுதுகின்ற வேளையில் மூன்று பக்கங்களிலும் முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. கடந்த நான்கு வருடங்களில் முதன் முறையாக 1987 இல் உண்மையான தலாவீத வருமானம் அதிகரித்திருக்கிறது. இராணுவத்தில் காணப்படும் கட்டொழுங்கின்மைக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பள உயர்வு போன்றசீர்திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக்கெதிராகத் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன் திரும்பி வரும் கிளர்ச்சியாளர்களைச் சீர் திருத்தும் திட்டமும்
87

Page 46
மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில், வீட்டு வசதி, சுகாதாரம், கல்வி, நிலத் தேவைகள் முதலிய சமூக நல நடவடிக்கைகள் தீர்க்கமாக எடுக்கப்படவில்லை. ஆனால் அவையும் முக்கியமானவைகளே. “ஜக்சன்” (Jackson) குறிப்பிடுவது போல கொம்யூனிஸ்ட் கிளர்ச்சி சமூக, பொருளாதார, அரசியற் சீர்திருத்தங்கள் இன்றி ஒடுக்கப்பட முடியாத தாகும். இச் சீர்திருத்தங்கள் சமூக நீதியை உருவாக்கி உள்ளூராட்சியில் பங்குபற்றச் செய்வதன் மூலம் மக்களுக்கும் அவர்களது அரசியல் முறைமைக்கும் விசுவாசத்தை உருவாக்க முடியும். புதிய சனநாயக முறையில் மக்கள் நன்மதிப்புக் கொள்ள வேண்டுமெனில் மேற்சொன்ன முறையே கையாளப்படவேண்டும். நாம் ஆய்வுசெய்த நாடுகளுக்கிடையே பிலிப்பைன்ஸ் சனநாயக உறுதிப்படுத்தலின் சிரமம் மிகுந்த கடினமான அத்துடன் வஞ்சகமும் கூடிய இயல்புக்குச் சிறந்த உதாரணமாகும்.
3. சனநாயகத்தைப் புதுப்பித்தல், உயிர்ப்பித்தல், மீண்டும்
சமநிலைப்படுத்தல்
ஆய்வுக்குட்பட்ட நான்கு சிவிலியன் அரசியலமைப்புகளில் எல்லாமே பாரதூரமான சவால்களைக் கொண்டிருக்கின்றன. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலுள்ள நிலைமைகளில் சனநாயகத்தை நடைமுறைப் படுத்துவதைக் கருத்திற் கொள்ளும் பொழுது மேலே கூறப்பட்டது ஒரு கவலைக்குரிய கூற்றாகும். எனினும் சனநாயகம் பற்றிய நம்பிக்கையை அது தகர்த்துவிடவில்லை.
சனநாயகம் பற்றிய மிக முக்கிய பரிசோதனை இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. இந்திய சனநாயகம் நீண்ட காலமாகப் பாதுகாக்கப்படுவதோடு ஆசியாவில் செல்வாக்கு நிறைந்ததாகவும் விளங்குகிறது. ஆனால் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போல இந்தியாவின் சனநாயக நிறுவனங்கள் கடந்த இருபதாண்டு காலமாகத் தொடர்ச்சியாகச் சீரழிந்து வருகின்றன. இந்நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்பும் வல்லமையோ அல்லது தீர்க்கதரிசனமோ தமது பிரதமர் ராஜீவ் காந்தியிடம் இருப்பதாகப் பெருந்தொகையான இந்தியர்கள் நம்பிக்கை கொள்ளவுமில்லை. காங்கிரஸ் கட்சியின் தன்னாதிக்கத்தையும் கீழ் மட்டங்களில் அதன் வலிமையையும், ஒழுங்கமைப்பையும் கட்டியெழுப்புவதற்கு எதுவும் செய்யப்படவில்லை. இந்த நிலைமை 1987ஆம் ஆண்டு நடத்தப்பட்டபொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் ஹரியானாவில் அடைந்த படுதோல்வியிலிருந்து விளங்குகிறது. பிரதம மந்திரியானவர் பத்திரிகை விமர்சனங்களையும் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தில் ஊழலைக் களைவதற்கு முயற்சி செய்யவில்லை. அதற்குப் பதிலாக அவர் இந்த நல்ல சக்திகளைப் பழிவாங்குவதற்கு முயன்றார். 88

அந்நிய சக்திகளும் துரோகிகளும் நாட்டைக் குழப்புவதற்கு முயற்சிப்பதாகக் கூறினார். ஊழலுக்கு எதிராகப் போரிட்ட "இந்தியன் எக்ஸ்பிரஸ்" பத்திரிகையின் அலுவலகத்தில் தேடுதல் நடத்தினார். ஊழலுக்கு எதிரான தனது திறமை மிகுந்த அமைச்சரான வீ. பி. சிங் அவர்களை அரசாங்கத்திலிருந்தே விரட்டினார். “பாரத் வாரியவிவாலா" (Bharat Wariawwala) பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"இந்தியாவின் சீரழிவுக்குக் காரணமான பிரச்சினையையே சிங் எதிர்த்தார். வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரை இணைத்துக் காணப்பட்ட "606). F6örsi - Guitful" gy Tédui) (Licence-Permit Raj) முறை கடந்த இரண்டு தசாப்தங்களாக நுகர்வோரை ஏமாற்றப் பயன்படுத்தப்பட்டது. உற்பத்தியைக் குறைத்து இந்தியப் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்தது. எல்லாவற்றுக்கும் மேலாகச் சனநாயகச் செயன்முறையைத் தலைகீழாக்கியது. முன்னெப்பொழுதையும் விட இந்தியச் சனநாயக மறுசீரமைப்புக்கு அரசியல் முறையைச் சுத்தப்படுத்தும் திறன் கொண்ட அரசியல் தலைமைத்துவம் தேவைப்படுகிறது. கீழ்மட்டங்களிலிருந்து அரசியல் நிறுவனங்களை மீளவும் கட்டியெழுப்பவும் இனத்துவ வன்முறையை (குறிப்பாக பஞ்சாப்பில்) சனநாயகரீதியாகத் தீர்த்து வைக்கவும் வல்லமை கொண்ட தலைமைத்துவம் தேவைப்படுகிறது. ஆனால் அத்தகைய தலைமையை இந்திரா காந்தியின் சர்வாதிகாரத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த மக்கள் சனநாயக இயக்கத்தினால்தான் முடியும் போல் தெரிகிறது."
அண்மையில் மலேசியாவிலும் இத்தகைய சனநாயகச் சீரழிவு காணப்படுகிறது. பிரதம மந்திரி மகதிர்முகமட் அவர்களின் பிளவுபடுத்தும் மோசமான நிர்வாகம் சனநாயகமற்ற அரசியற் தலைமைத்துவம் சனநாயக நிறுவனங்களுக்குச் செய்யக் கூடிய கெடுதிகளுக்கு உதாரணமாக விளங்குகிறது. 1987இல் இவ்வாறான சீர்கேடு மேலும் மோசமடைந்த பொழுது ஆளும் கூட்டணியிலுள்ள முக்கிய கட்சியான உம்னோ (Unno) அதிலிருந்து விலகியது. கட்சிக் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற ஏற்பட்ட போராட்டத்தில் மகதிர் மயிரிழையில் வென்றார். மலாயர்களுக்கும் சீனர்களுக்குமிடையிலான இனத்துவத் தொடர்புகளும் வீழ்ச்சியடைந்தன. இவ்வாறான நெருக்கடிகள் சர்வாதிகார அடக்கு முறையை நியாயப்படுத்தியது. 1987 ஒக்டோபர் முதல் அரசாங்கத்தை விமர்சித்தவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். மூன்று பத்திரிகைகள் மூடப்பட்டன. பொதுக் கூட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும்
89

Page 47
தடைவிதிக்கப்பட்டது. நாட்டின் ஸ்தாபகத் தந்தையான "துங்கு அப்துல் றஃமானி”னால் இந்த நிலைமை சனநாயகமற்றதும் வெறுக்கத் தக்கதுமாகுமென வர்ணிக்கப்பட்டது. இவ்வாறான நடவடிக்கைகள் கட்சியமைப்பின் உயிரோட்டத்தைச் சிதைத்ததோடு சனநாயக கட்டமைப்புகளைப் பலவீனப்படுத்தியது. இந்நிலையில் பல சீர்திருத்தக் குழுக்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அத்துடன் நீதித்துறையை அரசியலிற் தலையிடாதிருக்குமாறு மகதிர் எச்சரித்தார். நீதித்துறை அரசாங்கத்தக்கு எதிராகப் பல தீர்ப்புக்களை மேற்கொண்டதே இதற்குக் காரணம். இவ்வாறான நிலைமைகளினால் சனநாயக நடைமுறைக்கு அடிப்படையாக இருக்கும் சனநாயக நிறுவனங்களைச் சீரமைக்கும் வாய்ப்பு மகதிர் காலத்தில் குறைவடைந்தது.
அரைகுறைச் சனநாயக நாடான இலங்கையில் இன்னும் பாரதூரமான நிலைமை காணப்படுகிறது. பல ஆண்டு காலமாக இனரீதியான இரத்தம் சிந்துதல், பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக இத்தகைய நிலைமை அங்கு தோன்றியுள்ளது. இருபதாயிரம் இந்தியத் துருப்புக்களின் தலையீட்டுக்குப் பின்னரும் வன்முறைப் போராட்டம் தொடர்ந்தது. தமிழர் கிளர்ச்சிக்கு இணையாக வன்முறையான சிங்கள இனவெறியும் தோற்றம் பெற்றது. இதன் பிரதிபலிப்பாக ஜனதா விமுக்திப் பெரமுன (JVP) புத்துயிர் பெற்றது. தமிழ்த் தீவிரவாதிகளைப் போலவே ஜே. வி. பி. யினரும் மிதவாத சிங்கள அரசியல்வாதிகளைப் படுகொலை செய்தனர். 1987 ஆகஸ்டில் சனாதிபதி ஜயவர்த்தனாவைப் படுகொலை செய்ய எத்தனித்தனர். 1989ஆம் ஆண்டின் தேர்தல்களை இரத்துச் செய்யப் போவதான சனாதிபதியின் பயமுறுத்தல், உள்நாட்டு யுத்தம் நாட்டின் அரசியல் நிறுவனங்கள் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்கு செய்த கெடுதியின் வெளிப்பாடாகும். ஏதாவதொரு வகையில் சமரச ஒப்பந்தத்தின்மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணுவதே இலங்கையில் சனநாயக சமநிலையைப் பேணுவதற்குத் தவிர்க்க முடியாத நிபந்தனையாகும். ஆனால் இலங்கையில் காணப்படும் அரசியற் சூழ்நிலை இதற்குச் சாதகமாக இருக்கவில்லை. ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது உயிருக்கஞ்சித் தமது வீடுகளுக்கே செல்லத் துணிவற்றிருக்கின்றனர். இவர்களின் வீடுகள் பல ஏற்கெனவே கிளர்சியாளர்களினால் எரிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் ஒரு சனநாயகத் தேர்தலை நடத்துவதோ, அப்படியே நடத்தினாலும் ஒரு தீர்வைக் காணுவதோ முடியாத காரியமாகும். இந்நிலையில் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளும் தற்காலிகமாகவேனும் இணைந்து இனப்பிர்ச்சினைக்கான ஒரு பொதுவான ஏற்பாட்டைச் சிங்கள மக்களுக்கு முன்வைக்க வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் தீவிரவாதிகளினால் அல்லது இராணுவ சதி முயற்சியினால் சனநாயகம் வீழ்ச்சியடையும்.
90

இன்றைய நிலையில் பப்புவாநியூகினி எதிர்நோக்கும் நெருக்கடியும் அபாயமும் வேறு எந்த நாட்டையும் விடப் பாரதூரமானது. 1987ஆம் ஆண்டுத் தேர்தலில் கட்சிமுறையானது நொறுங்கிச் சிதறும் தன்மையைக் காட்டியது. நான்கு பெரிய கட்சிகளும் 106 பாராளுமன்ற ஆசனங்களில் 20 ஆசனங்களை இழந்தன. சுயேட்சைகள் 40 வீதமான வாக்குகளைப் பெற்றதோடு தமது ஆசனங்களை எட்டிலிருந்து இருபத்திரெண்டாக உயர்த்திக்கொண்டனர். இந்நிலைமை தொடர்ச்சியாக ஏற்பட்ட தேர்தல் ஊழல்கள் வன்முறைகள் மற்றும் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்காக கொள்கையற்ற அரசியல் சந்தர்ப்பவாதத்தினாலும் இன்னும் மோசமடைந்தது. பப்புவாநியூகினியின் நிலை பல்வேறு விடயங்களில் தனித்துவமானது. எனினும் கட்சிகள் உடைந்து சிதறுவதும் அரசாங்கத்தின் இயக்கமின்மையும் ஆசியாவில் சனநாயகத்தை முடக்குகின்றன. அரசியல் ஊழல் மற்றும் சந்தர்ப்பவாதம் ஆகியவை தொடர்பாக மக்கள் அசட்டையாக இருக்கிறார்கள்.அரசியல்முறைமையில் அவர்களுக்கிருக்கும் நம்பிக்கை தேய்வடைகிறது. இந்நிலையில்பொறுப்புக் கூறக்கூடிய காத்திரமான அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கும் அரசியற் கட்சிகளை புத்தூட்டம் பெறச் செய்வதற்கும் அரசியற் தலைவர்கள் மீதான நெருக்கடி அதிகரிக்கிறது.
V
முடிவுரை
நாம் ஆய்வு செய்த இந்தப் பத்து நாடுகளினதும் சனநாயகச் செழிப்பில் ஏதாவதொரு பொதுத்தன்மை இருக்கிறது எனக் கொண்டால் அது காத்திரமான சனநாயகத்துக்குத் தன்மை அர்ப்பணித்துள்ள தலைமைத்துவத்தின் தேவையாகும். சனநாயகம் ஸ்திரப்படுத்தப்பட்டு ஆழமாக வேரூன்றியிருந்தால் திறமையற்ற தலைவர்களின் ஊழல் நிறைந்த துஷ்பிரயோகங்களிலிருந்து தப்பிக்க முடியும். காலப் போக்கில் இத்தலைவர்கள் தூக்கியெறியப்படக்கூடும். ஆனால் நீண்டகாலமாகச் சனநாயகமற்ற, திறமையற்ற தலைமைத்துவம் தொடருமாயின் சனநாயக முறைமையும் அதன் மீதான மக்களின் ஈடுபாடும் வீழ்ச்சியடையத் தொடங்குகின்றன. சனநாயக நிறுவனங்கள் நன்மதிப்பை இழந்து முறைசார்ந்த, முறைசாராத் தடைகளும் சமநிலைகளும் வழங்கும் பாதுகாப்பையும் இழந்து விடுமாயின் ஒரு சில ஆண்டுகளே கெடுதிகள் ஏற்படினும் அவைபாரதூரமானதாக்கத்தை ஏற்படுத்தும். அரசாங்கத்தின் தலைவர் அல்லது கட்சியின் ஒருசில முக்கிய தலைவர்களின் நடத்தை மிக முக்கியமானது. எனினும் ஊழல் சந்தர்ப்பவாதம் சனநாயக நியமங்களை
91

Page 48
அசட்டை செய்தல் முதலான நடத்தைகளும் மனப்பாங்குகளும் அரசியற் கற்றறிவாளர்களிடையே பரவுமாயின் அதனால் ஏற்படக்கூடிய சனநாயக கெடுதிகளை நாம் மறந்து விடக் கூடாது. எமது பத்து ஆய்வுகளிலும் அமைப்பு ரீதியான பிரச்சனைகளும் இடையூறுகளும் பாரிய அளவில் வேறுபடுகின்றன. எனினும் அரசியல்வாதிகளிடம் காணப்படுகின்ற புதுமை வேட்கை அல்லது இயக்கமின்மை ஒத்துழைப்பு அல்லது எதிர்ப்புணர்வு, பொறுப்புடைமை அல்லது பேராசை முதலியவை முக்கியமானவை. இவை இந்த ஒவ்வொரு நாட்டிலும் சனநாயகத்தின் எதிர்காலத்தில் நிச்சயமாகத் தாக்கம் விளைவிக்கக் கூடியவை.
அதே நேரத்தில் ஒரு விடயத்தைத் திரும்பவும் விதந்துரைப்பது பயனுடையதாகும். அதாவது மக்கள் தமக்குக் கிடைக்க வேண்டிய தலைவர்களையே பெறுகிறார்கள் என்னும் கூற்றுப் பெருமளவுக்கு எளிமைப்படுத்தப்பட்டது. உண்மையில் மக்கள் ஒன்று திரண்டால் தமக்கு வேண்டாத தலைவர்களை நீக்கிவிட்டுத்தாம் விரும்பும் தலைமைத்துவத்தை அடைய முடியும். ஆசிய அரசியற் கலாசாரத்தில் தலைமைத்துவத்துக்குத் தலை வணங்கிச் செல்வது நீண்டகாலமாக ஒரு பிரதான அம்சமாகக் கருதப்பட்டுவந்தது. ஆனால் அளவுக்கதிகமாக இசைந்து செல்லும் போது அதிகாரம் மிக இலகுவாகத் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. எமது ஆசிய நாடுகளின் ஆய்விலிருந்து மக்கள் கீழ்மட்டத்திலிருந்து தன்னாதிக்கமும், பன்முகத்தன்மையும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கவேண்டும் என்பது புலனாகிறது. இவ்வாறு முறைசார்ந்த அரசியலின் உள்ளும் வெளியும் ஒழுங்குபடுத்தப்பட்டிருத்தல் ஒரு பாதுகாப்பான சனநாயகத்தைப் பேணுவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் தவிர்க்க முடியாத நிபந்தனையாகும்.
YYYYY
92


Page 49
PRINTED BYUNIEAR
 

IS(PVT)LTD, TEL :330795