கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலிங்கர் நடராசா (நினைவு மலர்)

Page 1


Page 2


Page 3

de Dulf
அறுபத்துமூவர்
பண்டிதர் சி. அய்புத்துரை
யாழ் இணுவில் காலிங்கர் நடராசா அந்தியேட்டித் தின நினைவு வெளியீடு
2003-10 18

Page 4
2 சிவமயம்
சமர்ப்பணம்
அன்பைச் சொரியும் அப்பாவாய் அறிவை வளர்க்கும் ஆசானாய் துன்பந் தெரியா தெமை0ளர்த்த தூயன் அப்பா நினைவாக இன்றிந் நூலை நெட்டிலைப்பாய் இறைஇல் சுமுகன் தாள்களிலே ஒன்றி வைத்து வணங்கினமே உயர்வாம் அமைதி வேண்டினமே
மனைவி பிள்ளைகள் ந. மங்கையர்க்கரசி ந. கணேசலிங்கம் ந. அமிர்தலிங்கம். புகையிரதநிலை/விதி க. சண்முகாதேவி நெட்டிலைப்பரப்பிள்ளையர் கோவிலடி, ந. முத்துலிங்கம் கேரண்டாவில் மேற்கு, ந. சண்முகலிங்கம் கோனர்டாவில் ந. சிவராஜலிங்கம்
நி சத்தியதேவி ந. சத்தியலிங்கம்
02
 

தேய்பி திதியாய்த் - தேற்றமுறு
காலிங்கள் மைந்தன் நடராஜா கண்ணுதல்தாள் வாலிதென நேர்ந்தான் வகுத்து

Page 5

2. சிவமயம்
பதிப்புரை
சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும்
இனியெதிர் காலத்தின் சிறப்பும் இன்றெழுந் தருளப் பெற்றபே றிதனால்
எற்றைக்குந் திருவருள் உடையோம் நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
நற்றமிழ் வேந்தனும் உய்ந்து வென்றிகொள் திருநீற் றொளியினில் விளங்கும் மேன்மையும் படைத்தன மென்பார்.
என்னுந் திருப்பாடல் சேக்கிழார் தந்த பெரிய புராணத்துள்ளது. எங்கள் அப்பாவின் வாயில் இது அதிகமாகத் தவழுவதுண்டு. சென்ற காலமும் எதிர்காலமும் சிறப்பானவை எனவே நிகழ்காலம் நம் உணர்விற் படவேண்டியது. திருநீற்றொளியுள் எல்லாம் அடக்கம். அப்பாவின் நெற்றியில் வெண்ணிறு எந்த வேளையும் பளிச்சிட்டுக் கொண்டே இருக்கும். அத்தகு கோலத் திருவைத் தமதாக்கிக் கொண்ட அப்பா நினைவாகப் பெரிய புராணங் காட்டும் திருத் தொண்டர்களின் வரலாற்றைச் சுருக்கமாக வெளியிடுதல் நல்லதாகலாமோ என்று சிந்தித்தோம். அது பாடசாலை மாணவர்க்கு உதவலாம் என்பது எமது எண்ணம். இந்த எமது எண்ணத்தைப் பண்டிதர் சி. அப்புத்துரை அவர் களிடம் சொல்லி ஒன்று எழுதி உதவுமாறு வேண்டினோம். எமது வேண்டுகோளை அவர்கள் நிறைவு செய்து தந்தார்கள். பாடசாலைகளிற் பயிலும் பிள்ளைகளுக்குப்
O3

Page 6
பெரும் பயன் தரக்கூடிய அத்தொகுப்பை நன்றியுடன் பெற்றுள்ளோம். அதனை அப்பாவின் அந்தி யேட்டித்தின வெளியfடாக குவது அவர் ஆதி மசா நீ தரிக் கு வாய்ப்பளிப்பதாகும் என்னும் நினைவுடன் செயற் பட்டுள்ளோம்.
இந்த வெளியீட்டிற்கு நெட்டிலைப்பாய்ப் பிள்ளையார் ஆலயப் பிரதம சிவாசாரியார் சிவறி தா. ஹரிஹர சுப்பிரமணிக் குருக்கள் ஆத்மசாந்தியுரை வழங்கி யுள்ளார்கள். இணுவிலைச் சேர்ந்த வித்தியாலய முன்னாள் அதிபர் செ. சோதிப்பெருமாள் அவர்கள் ஆத்ம" சாந்திப் பிரார்த்தனையுரை வழங்கியுள்ளார்கள். கொழும்புத் தமிழ்ச் சங்க உதவிச் செயலாளர் சமூகஜோதி ஆ. கந்தசாமி அவர்கள் நல்லடியார் நடராசா என்னுந் தலைப்பிற் கட்டுரை வழங்கியுள்ளார்கள். கொழும்பு கீதா பதிப்பகத் தினரின் கலைவண்ணத்துடன் நூல் வெளியாகியுள்ளது. எல்லோருக்கும் நன்றி கூறும் அதேவேளை நெட்டிலைப் பாய் விநாயகன் திருவருள் எல்லோருக்கும் கிடைப்பதாக என்றும் வேண்டுகின்றோம்.
மனைவி பிள்ளைகள் மருமக்கள்
ந. மங்கையர்க்கரசி ந. கணேசலிங்கம் மங்களேஸ்வர்
ந. அமிர்தலிங்கம். சுகிர்தராணி
புகையிரதநிலைய வீதி க. சண்முகாதேவி 35Q135JTg.T
நெட்டிலைப்பார்பிள்ளையர்கோவிடி, ந. முத்துலிங்கம் ஜீவா
கோரர்டரவில் மேற்கு, ந.சண்முகலிங்கம் சிவவதனி
கே77ர்ட/வி ந. சிவராஜலிங்கம் ரஜனி
நி சத்தியதேவி நிரஞ்சன். ந. சத்தியலிங்கம்
04

확2-- சிவமயம்
cup56260)
பெரியபுராணமெனுந் திருத்தொண்டர் புராணக் கருத்துக்கள் சின்னஞ் சிறு வயதினரான மாணவ மணிகளின் உள்ளங்களிற் பதிந்துவிட்டால் பலரை நல்லவர்களாக, பண்புள்ளவர்களாக எதிர்காலத்திற் சிவநெறிச் செல்வர்களாகக் காணும் வாய்ப்பினைப் பெறுவோம். இந்த நம்பிக்கையால் அறுபத்து மூவர் சரிதங்களையும் சிறிய சிறிய வரலாறுகளாக எழுதி வெளியிட விரும்பினோம். அதேவேளை அவர்கள் வாழ்க்கையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகளையும் குழந்தைகளுக்குக் காட்டவேண்டுமென்றும் விரும்பினோம். இந்த எண்ணங்களுடனாகி இருந்தவேளை இணுவில் காலிங்கர் நடராசா அவர்கள் இயற்கை எய்தியதை ஒட்டி அவர்கள் ஆத்மசாந்தி அமைதிகாண விரும்பி ஒரு நல்ல நூல் இந்த வகையில் வெளிவருதல் நல்லதென அமரர் நடராசா அவர்கள் மூத்த புதல்வன், நீர்கொழும்பு விஜய ரத்தினம் இந்து மத்திய கல்லூரி அதிபர் கணேசலிங்கம் அவர்கள் எம்மிடம் குறிப்பிட்டு அபிப்பிராயங் கோரினார் கள். நல்ல சிந்தனை, அப்படி ஒன்று எழுதவேண்டுமென்று நினைந்த என் நினைவும் இந்த உங்கள் அபிப் பிராயத்துடன் நிறைவாகிவிடும் என்று சொல்லி அவர்கள் வேண்டியதை நிறைவாக்கிக் கொடுத்தேன்.
இந்த நூல் பாடசலைகளில் மத்தியதர வகுப்புக்களிற் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பெரும்பயனுடையது. உயர்தர வகுப்பு மாணவர்களும் பயன்காண முடியும்.
()S

Page 7
புராண நூலை முழுமையாகக் கற்றுக் கொள்ள வாய்ப்பில்லாத முதியவர்களுக்கும் பெரியபுராணச் செய்திகளை ஒரளவு கண்டுகொள்ள இந்த நூல் வாய்ப்பானதாக அமையலாம்.
பெரிய புராணத்தில் நல்ல ஈடுபாடுடையவர்களுள் சிறந்தவரான பண்டிதர் வ. பேரின்பநாயகம் அவர்கள் இந்நூலைப் பொறுமையுடன் பார்த்து பொருத்தமான அறுபத்துமூவர் நூற்பாயிரம் என்னுந்தலைப்பிலாய அணிந்துரை வழங்கியுள்ளார்கள். அந்த அணிந்துரையில் உலகெலாம் என்று தொடங்கும் பெரியபுராணக் கடவுள் வாழ்த்துப் பற்றிய உட்கிடையை - அது, நூலை உட்படுத்தியுள்ள நுட்பத்தைக் காட்டுவது ஆனந்தந் தருவது. இந்த நூலாக்கத்திற்கான ஆலோசனைகளை வழங்கியவர் இளவாலை சித்தாந்த பண்டிதர் சைவப்புலவர் சு. செல்லத்துரை அவர்கள். இவர்கள் எல்லோருக்கும் நன்றி கூறுவதுடன் வரதராஜவிநாயகர் திருவருள் நிறைவாகக் கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன்.
சி. அப்புத்துரை
மயிலங்கூடல், இளவாலை. Tel: 231083
18/19th Lane,
Wasala Road,
Colombo-13
Sri Lanka,
O6

2
அகில இலங்கைத் திருமுறை மன்றத் தலைவர் பண்டிதர் வ. பேரின்பநாயகம் வழங்கிய
அறுபத்துமூவர் நூற்பாயிரம்
உலகெ லாமுணர்ந் தோதற் கரியவ னிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதிய னம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்
உலக முய்யவும் சைவம் நின்றோங்கவும் அலகில் நம்பியாரூரர் திருவாய் மலர்ந்தருளியது திருத்தொண்டத் தொகை. ஜம்புல வழியடைத்த செம்புலப் பெரியோர் அறுபத்து மூன்று தனியடியாரும் ஒன்பது தொகையடி யாரும் திருத்தொண்டத் தொகையில் விளக்கம் பெறுகின்ற னர். ‘வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாஞ் சிறுமை தப்பித் தாழ்வெனும் தன்மையோடு சைவமாம் சமயஞ் சாரும் ஊழ் பெறலரிது’ என விதந்தோதப்பட்ட உயர் நிலை, அறுபத்துமூவர் சரித்திரத்திலும் வெளிப்படுகிறது. ஒடும் செம்பொனும் ஒக்க நோக்கும் உண்மைநிலை தெரியவருகிறது.
வாழ்வு வேறு சமயம் வேறு என்றில்லாமல், அன்றாட வாழ்விலே சிவநெறி வாழ்வு வாழ்ந்த வரலாறு அறுபத்து மூவர் வரலாறு. சிவவாக்காகிய தில்லைவாழ் அந்தணர் என்ற சொற்றொடரை முதலாகக் கொண்டது திருத் தொண்டத் தொகை. பொல்லாப் பிள்ளையாரின் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெற்ற பெரியவர்களின் வரலாறுகளை திருத்
07

Page 8
தொண்டர் திருவந்தாதியாக வகுத்துக் கூறினர். தொன்று சீர்த் திருத்தொண்டத் தொகைவிரி இன்றெனாதரவாலிங் கியம்புகேன் எனச் சேக்கிழார் பெருமான் உலகறிய விரித் திருக்கிறார். திருத்தொண்டர்களின் வரலாறு கூறுமுகமாகச் சேக்கிழார் சைவநுட்பங்களையெல்லாம் தெரிவித்திருக் கிறார். ‘உலகெலாம்' என்று இறைவனே அடியெடுத்துக் கொடுக்கச் சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தைப் பாடியருளினார். உலகெலாமுணர்ந்தோதற்கரியவன் என்ற காப்புச் செய்யுள் சைவத் தமிழ் நுட்பங்களையெல்லாம் விரித்துரைக்கின்றதாக விளங்குகிறது. அப்பாடல் அறுபத்தி மூன்று எழுத்துக்களைக் கொண்டுள்ளது. இது அறுபத்து மூன்று தனி அடியாரை நினைவு படுத்துகின்றது. அப் பாடலில் காணப்படுகின்ற கூட்டெழுத்து ஒன்பதும் ஒன்பது தொகையடியாரைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. அருவம் உருவம் அருவுருவம் ஆகிய வடிவங்களிற் பலகாட்சி கொடுக்கும் இறைவன் அருட்டன்மை படிப்போர் ஆற்றலுக்கமைய வெளிப்படுமாறு பாடல் காணப்படுகிறது. பத்திச்சுவை நனிசொட்டும் பாடல்கள் பெரியபுராணப் பாடல் கள். தொகை வகை விரியாகத் திருத்தொண்டத்தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி, திருத்தொண்டர் புராணம் ஆகிய மூன்றும் அறுபத்து மூவரையும் ஒன்பது தொகையடியாரையும் எடுத்துச் சொல்லுகின்றன.
பத்தியரூபமாக செய்யுள் வடிவிலே இருக்கின்ற இதனைப்படித்து அறிய எல்லோருக்கும் வாயப்புக் கிடையாது என்பதால் கத்திய ரூபமாக பூரீலழரீ ஆறுமுகநாவலர் பெரியபுராண வசனம் வெளியிட்டார். இந்நாளில் அவற்றை ஆராயப்வாகப் படித்தறிய அவகாசமின்மையால் எளிமையான சுருக்கமான நூல் இப்போது இன்றியமையாததே. காலத்தினாற் செய்த
08

உதவியாகப் பண்டிதர் சி. அப்புத்துரை அவர்கள் அறுபத்து மூவர் வரலாற்றினைச் சுருக்கமாகவும் இலகுவாக விளங்கக் கூடியதாகவும் தந்துள்ளார்.
இந்நூல் ஆறாம் ஆண்டிற் பயில்பவர் தொடக்கம் பல்கலைக்கழகம் புகும் மாணவர் வரையில் பலருக்கும் பயன்படக்கூடியதாகும். சைவத்தமிழ் நூல்களில் நல்லாட்சி பெற்றவரான பண்டிதர் சி. அப்புத்துரை அவர்களுக்குத் தமிழுலகம் நன்றி சொல்லக் கடப்பாடுடையது. தமிழ் மக்களும் தமிழ் பயிலும் மாணவர்களும் ஆர்வமுடன் கற்றுப் பெரும்பயன்பெறவேண்டுமென திரு. இணுவில் காலிங்கர் நடராசா அவர்கள் நினைவாக அறுபத்து மூவர் என்ற இந்நூல் வெளிவருகிறது. யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற உள்ளத்தோடு அறுபத்து மூவர் நூலை எழுதியுதவிய பண்டிதர் சி. அப்புத்துரை அவர்களுக்கும் நினைவு வெளியீடாக வெளியிடுகின்ற வெளியீட்டாளர்க்கும் அகில இலங்கைத் திருமறை மன்றம் சார்பாக நன்றி தெரிவிக்கின்றேன். நினைவுக்குரியரான அமரர் திரு. காலிங்கர் நடராசா அவர்களின் ஆத்மா காத்தல் பெருமானின் குரைகழல் நீழலில் என்றென்றும் இன்புற்றிருக்கப் பிரார்த்திக்கின்றேன்.
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட மன்று ளாரடி யாரவர் வான்புகழ் நின்ற தெங்கும் நிலவி யுலகெலாம்.
வ. பேரின்பநாயகம்
09

Page 9
சுந்தரமூர்த்திநாயனார் தேவாரம் திருத்தொண்டத் தொகை
திருச்சிற்றம்பலம்
தில்லைவா ழந்தணர்த மடியார்க்கு மடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியே னில்லையே யென்னாத வியற்பகைக்கு மடியே
னிளையான்றன் குடிமாற னடியார்க்கு மடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியே னல்லிமென் முல்லையந்தா ரமர்நீதிக் கடியே
னாரூர னாரூரி லம்மானுக் காளே. (1
இலைமலிந்த வேனம்பி யெறியத்தற் கடியே
னேனாதி நாதன்ற னடியார்க்கு மடியேன் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற் கடியேன்
கடவூரிற் கலையன்ற னடியார்க்கு மடியேன் மலைமலிந்த தோள்வள்ளன் மானக்கஞ் சாற
னெஞ்சாத வாட்டாய னடியார்க்கு மடியே னலைமலிந்த புனன்மங்கை யானாயற் கடியே
னாரூர னாரூரி லம்மானுக் காளே. (2
10

மும்மையா லுலகாண்ட மூர்த்திக்கு மடியேன்
முருகனுக்கு முருத்திர பசுபதிக்கு மடியேன் செம்மையே திருநாளைப் போவாற்கு மடியேன்
றிருக்குறிப்புத் தொண்டர்தம் மடியார்க்கு மடியேன் மெய்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதையை மழுவினா லெறிந்த வம்மையா னடிச்சண்டிப் பெருமானுக் கடியே
னாரூர னாரூரி லம்மானுக் காளே. (3
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்ற னடியார்க்கு மடியேன் பெருநம்பி குலச்சிறைத னடியார்க்கு மடியேன்
பெருமிழலைக் குறும்பற்கும் பேயர்க்கு மடியே னொருநம்பி யாப்பூதி யடியார்க்கு மடியே
னொலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற் கடியே னருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியே
னாரூர னாரூரி லம்மானுக் காளே. (4
வம்பறா வரிவண்டு மணநாற மலரு
மதுமலர்நற் கொன்றையா னடியலாற் பேணா வெம்பிரான் சம்பந்த னடியார்க்கு மடியே
னேயர்கோன் கலிக்காம னடியார்க்கு மடியே னம்பிரான் றிருமூல னடியார்க்கு மடியே
னாட்டமிகு தண்டிக்கு மூர்க்கற்கு மடியே னம்பரான் சோமாசி மாறனுக்கு மடியே
னாரூர னாரூரி லம்மானுக் காளே. (5
11

Page 10
வார்கொண்ட வனமுலையா ஞமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியற்கு மடியேன் சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கு மடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற் கடியேன் கார்கொண்ட கொடைக் கழறிற் றறிவார்க்கு மடியேன் கடற்காழிக் கணநாத னடியார்க்கு மடியே னார்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோ னடியே
னாரூர னாரூரி லம்மானுக் காளே. (6
பொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற் கடியேன் மெய்யடியா னரசிங்க முனையரையற் கடியேன்
விரிதிரைசூழ் கடனாகை யதிபத்தற் கடியேன் கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோ னடியார்க்கு மடியே னையடிகள் காடவர்கோ னடியார்க்கு மடியே
னாரூர னாரூரி லம்மானுக் காளே. (7
கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொ டிருந்த
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கு மடியே னிறைக்கொண்ட சிந்தையா னெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாற னடியார்க்கு மடியேன் றுறைக்கொண்ட செம்பவள மிருளகற்றுஞ் சோதித் தொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியே னறைக்கொண்ட வேனம்பி முனையடுவாற் கடியே
னாரூர னாரூரி லம்மானுக் காளே. (8
12

கடல்சூழ்ந்த வுலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்க னடியார்க்கு மடியேன் மடல்சூழ்ந்த தார்நம்பி யிடங்கழிக்குந் தஞ்சை
மன்னவனாஞ்செருத்துணைதன் னடியார்க்குமடியேன் புடைசூழ்ந்த புலியதண்மே லரவாட வாடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்குமடியே னடல்சூழ்ந்த வேனம்பி கோட்புலிக்கு மடியே
னாரூர னாரூரி லம்மானுக் காளே. (9
பத்தராய்ப் பணிவார்க ளெல்லார்க்கு மடியேன்
பரமனையே பாடுவா ரடியார்க்கு மடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கு மடியேன்
றிருவாரூர்ப் பிறந்தார்க ளெல்லார்க்கு மடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கு மடியே னப்பாலு மடிசார்ந்த வடியார்க்கு மடியே
னாரூர னாரூரி லம்மானுக் காளே. (10
மன்னியசீர் மறைநாவ னின்றவூர்ப் பூசல்
வரிவளையாண் மானிக்கு நேசனுக்கு மடியேன் றென்னவனா யுலகாண்ட செங்கணார்க் கடியேன்
றிருநீல கண்டத்துப் பாணனார்க் கடியே னென்னவனா மரணடியே யடைந்திட்ட சடைய
னிசைஞானி காதலன் றிருநாவ லூர்க்கோ னன்னவனா மாரூர னடிமைகேட் டுவப்பா
ராரூரி லம்மானுக் கன்பரா வாரே. (11
திருச்சிற்றம்பலம்.
13

Page 11
s
கோண்டாவில் நெட்டிலைப்பாய் பிள்ளையார் கோவில் பிரதான சிவாச்சாரியார்
சிவறிதா, ஹரிஹர சுப்ரமணியக் குருக்கள்
ஆத்மசாந்தியுரை
கா. நடராசா அவர்கள் இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும் நெட்டிலைப்பாய்ப் பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்து வருபவர். தினமும் காலையில் நெட்டிலைப்பாய்ப் பிள்ளையாருக்குப் பூக்கள் கொணர்டுவந்து தருவதை நியமமாகக் கொணர் டவர். திருவலகிடுதல் போன்ற ஆலயத் திருத்தொண்டுகள் செய்பவர். தேவார, திருவாசகங்களைப் பண்ணோடு ஒதுபவர். இறையன்பும் பக்தியும் பண்பும் நிறைந்தவர். குருபக்தியுடைய வர். இத்தோடு தம் குடும்பத்தாருக்குச் செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் நிறைவுறச் செய்தார். இத்தகைய பண்பாளர், பத்திமான் கடமை உணர்வு உடையவர் ஆகிய நடராசா அவர்கள் எம்ன்ம விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அமரர் நினைவாக அறுபத்துமூவர் என்னும் பெரியபுராணச் செய்திகளை வெளிக்கொணரும் நூலொன்று வெளிவர இருப்பது மகிழ்விற்குரியது. அமரரின் ஆத்மசாந்திக்கு அது பயன்பாடுடையது. அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு மானசீகமாக ஆறுதல் கூறி அவர் ஆத்மா சாந்தியடைய விநாயகப் பெருமானை வேண்டி அமைகிறேன்.
தா. ஹரிஹரசுப்ரமணிக் குருக்கள்
நெட்டிலைப்பாய்ப் பிள்ளையார் கோவில்
14

s
இணுவை வித்தியாலய முன்னாள் அதிபர் திரு. செ.சோதிப்பெருமாள் ஜே.பி. அவர்கள் வழங்கிய ஆத்மசாந்திப்பிரார்த்தனையுரை
இணுவில் கிழக்கு மஞ்சத்தடியைப் பிறப்பிட மாகவும், வதிவிடமாகவும், கடந்த இரண்டு வருடங்களாகக் கோண்டாவில் மேற்கில் வசித்வருமாகிய திரு. காலிங்கர் நடராசா அவர்களின் திடீர் மறைவு கேட்டு அதிர்ச்சி யுற்றேன். அன்னாருடன் ஐம்பது வருடங்களுக்கு மேலாக அன்னியோன்னியமாகப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.
அமரர் அவர்கள் பாடசாலையிற் கல்வி கற்ற பின் விவசாயச் செய்கையிலும், கைத்தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். அத்தோடு கூட்டுப்பிரார்த்தனைகளிலும் ஈடு பட்டு வந்துள்ளார். நாடகம், கூத்து நிகழ்ச்சிகளில் பிற்பாட்டுப் பாடியும் மக்களை மகிழ்வித்தவர். அன்னார் உறவினர் செல்வி. மங்கையர்க்கரசி என்பவரைத் திருமணம் செய்து நல்ல பிள்ளைகளைப் பெற்ற குடும்பஸ்தராக விளங்கினார். சகல பிள்ளைகளையும் கல்விகேள்விகளில் சிறந்த வர்களாக்கினார்.
மூத்தமகன் பட்டதாரி. அவர் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்துக் கல்லூரியில் அதிபராகவும், மூன்று ஆண்கள் வெளிநாடுகளிலும், ஒருவர் கோண்டாவிலிலும் தொழில் புரிகின்றனர். இளைய மகன் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்றார். ஒருமகள் கனடா விலும், மற்றொருமகள் இணுவிலிலும் இருக்கிறார்கள்.
15.

Page 12
திரு. நடராசா அவர்கள் எல்லோருடனும் அன்பாக வும் பண்பாகவும் பழகுபவர். சகலருக்கும் உதவி செய்யும் மனப்பான்மையுள்ள ஒரு பெரியார். கடந்த நாற்பது வருடங்களாக அவரின் அயலில் வாழும் சந்தர்ப்பம் கிடைத்ததினால் தினமும் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அடிக்கடி விட்டுக்கு வந்து குடும்பத்தவர் களின் சுகநலம் விசாரித்துச் செல்வார்.
அவரின் பிள்ளைகள் எல்லோரும் என்னிடம் கல்வி கற்றவர்கள். அவர்களின் கல்வி பற்றி அடிக்கடி கலந்துரையாடுவார். பிள்ளைகளின் கல்வியில் மிக ஊக்கமுடையவராக இருந்தவர்.
அன்னார் பிள்ளைகளின் கல்வி, நாடகம், கூத்து, திருமுறை ஒதுதல், ஒழுக்கம் ஆகியவற்றிலும் கவனஞ் செலுத்தினார்.
அவரின் மறைவு ஈடு செய்ய முடியாதது. அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இணுவில் சிவகாமி அம்மனையும், கந்தப்பெருமானையும் வணங்குகின்றேன.
அமரர் நடராசா நினைவாக அறுபத்துமூவர் என்னுந் தலைப்புடன் பெரியபுராணம் பேசும் அடியார்களின் வரலாறு வெளிவரவுள்ளதாக அறிகிறேன். மிக உயர்வான சிந்தனை. அமரர் நடராசாவின் ஆத்மசாந்திக்கு இது பெரிதும் பயன்படும்.
‘ஓம்சாந்தி
செ. சோதிப்பெருமாள்
16

நல்லடியார் நடராசர்
ஈழவள தேயத்தின் யாழ்குடா நாட்டின் நடுப்பகுதியில் யாழ் நகரில் இருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் பெருவீதியில் நான்காவது மைல்கல் தூரத்தில் நல்ல செம்மண் நிலத்தில் பல்வேறு வகையான பயிர்கள் நிறைந்த சோலையான விவசாயப் பூமியே இணுவில் கிராமம் ஆகும்.
பண்டைய அரசர்களாற் கட்டப்பட்டுப் போற்றி வளர்க் கப்பட்ட அருள்பெற்ற திருத்தலங்களாகச் சிவகாமியம்மன் கோவில், பரராசசேகரப்பிள்ளையார் கோவில், செகராச சேகரப் பிள்ளையார் கோவில், இணுவில் கந்தசாமி கோவில், காரைக்காற் சிவன் கோவில், மஞ்சத்தடி சிவன் கோவில் என்பவற்றைத் தன்னகத்தே கொண்டது இக்கிராமம். பல சிற்ப வேலைப்பாடுகளை உடைய இணுவில் கந்தசாமி கோவில் மஞ்சம் உலகத்திற் சிறப்பு வாய்ந்ததும் பெரியதும் ஆகும்.
செந்தமிழும், சிவநெறியும் ஏற்றமுற்று விளங்குவதற்கு உறுதுணையாக விளங்கிய பலரைத் தன்னகத்தே கொண்டது இணுவிற் கிராமம். ஈழவள நாட்டிற்குப் பெருமை தேடித் தந்த சின்னத்தம்பிப் புலவரை பல பேராசிரியர்களை, வைத்தியர்களை, கல்விமான்களை உருவாக்கியது இக்கிராமம். உலகப் புகழ் தவில், நாதஸ்வர, வயலின் வித்துவான்களையும் சாகித்திய மண்டலப் பரிசில் பெற்ற கலைஞர்களையும், பிரபல நாவல் ஆசிரியர்களையும், எழுத்தாளர்களையும் இசைக் கலைஞர்களையும் தன்னகத்தே கொண்டு பெருமை
17

Page 13
கண்டது இக்கிராமம். அத்தோடு நாட்டுக்கூத்துக்கு யாழ்நகரில் பெயர் பெற்ற இடம் இது. ஆன்மிகத் துறையில் அதிக ஈடுபாடுகொண்டு சைவநெறி வழுவாது வாழும் மக்களையுங் கொண்டது.
தாங்கள் எவ்வளவுதான் துன்பங்களை அனுபவித் தாலும் தங்கள் மொழியும் சமயமும் சிறந்து விளங்க வேண்டும் என்பதிலும் எவ்வளவு இன்னல்களை அனுபவித்தாலும் தங்களைத் தாங்களே ஆளும் உரிமை பெற வேண்டும் என்பதிலும் உறுதியுடையவர்கள் இவர்கள். பெரும்பான்மையாக விவசாயிகளைக் கொண்ட இக்கிராம மக்கள் நீண்ட கால உறுதியான கொள்கையும், நம்பிக்கையும் உடையவர்களாகத் திகழ்வது குறிப் பிடத்தக்கது.
கி.பி. 13ஆம் நூற்றாண்டில காலிங்க அரசன் இணுவிலில் இருந்து கொண்டு நல்லூரைத் தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாணத்தை அரசாட்சி செய்தான் என்றும், பாண்டிய மன்னரின் மந்திரியாகக் கடமை புரிந்து பல அரிய பணிகளைச் செய்தவன் என்றும் நாம் வரலாற்று ரீதியாக அறியக்கூடியதாக உள்ளது. அவரது திருப் பெயரை உடைய காலிங்கர் என்பவருக்குப் புத்திரராகப் பிறந்து பெரும் பணி செய்யும் பேறு பெற்றவர் தான் bLJT&T.
இவர் முழுக்க முழுக்க விவசாயத்தில் ஈடுபட்டிருந் தாலும் சைவநெறி வழுவாது வாழ்ந்தவர். மிக்க கடவுள் பக்தி உடையவர். இணுவில் சிவகாமியம்மன் கோவிலில் பண்ணிசையுடன் தேவாரத் திருப்பதிகங்கள் பாடி வருபவர். பண்ணிசைக்குழு அங்கத்தவராகவும் விளங்கியவர்.
18

திருவெம்பாவை, நவராத்திரி, சிவராத்திரி, கோவில்களின் வருடாந்த உற்சவங்கள் எதுவாக இருந்தாலும் தேவாரத் திருப்பதிகங்கள் பாடிக் கொண்டிருப்பதைக் காணலாம். இணுவில் ஞான வைரவர் இவரது குலதெய்வம்.
இவர் மங்கயர்க்கரசியைத் துணைவியாராக ஏற்றுக் கொண்டவர். சான்றோனாகப் பெரும்பணி செய்யும் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி அதிபர் கணேசலிங்கம், செல்வச் சிறப்புடன் சுவிஸ் நாட்டில் வாழும் அமிர்தலிங்கம், கனடா சண்முகாதேவி, சுவிஸ் முத்துலிங்கம், கோண்டாவில் நகரில் வர்த்தகப் பணி செய்யும் சண்ம "லிங்கம், சுவிஸ் சிவராசலிங்கம், கோண்டாவில் சத்தியதேவி, கல்வி கற்றலே பெரும் பேறாக ஏற்றுக் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவில் கல்வி கற்கும் சத்தியலிங்கம் ஆகியவர்களைப் புத்திரர்களாகப் பெற்றவர்.
இவர்கள் அனைவரும் அமரரது கடவுள் பக்தியினால் எவ்வித குறைவுமின்றிச் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருகின்றனர்.
‘மேலைக்கு வித்துமாகி விளைந்தவை உணவுமாகி
ஞாலத்த நிகழுமாப் போல் நாம் செய்யும் வினைகளெல்லாம் ஏலத்தான் பவமாய்ச் செய்த இதம்அகிலங் கட்கெல்லாம்
மூலத்ததாகி என்றும் வந்திடும் முறைமையானே
என்று சிவஞானசித்தியார் உரைக்கின்றது.
கமக்காரன் தனது தோட்டத்தில் ஒரே நாளில் பயிரிடும்
கீரை, கத்தரி, குரக்கன், நெல், வாழை, தென்னை என்பன
ஒரே காலத்தில் பலன் தருவது இல்லையே. அவற்றிற்குங்
காலம் உண்டு. வினைகள் இப்பிறப்பில் அனுபவித்தாலும்
19

Page 14
மறுபிறப்பிலும் காரணமாக இருக்கும் என்பதை உணர்ந்த நடராசா அவர்கள் நல்ல கருமத்தைச் செய்து வந்தவர். துன்பம் ஏற்பட்டாலும் அது தமக்கு நல்லனவாக வரப் போகின்றது என்பதை உணர்ந்து வாழ்ந்தவர். சமூக சேவைகளிற் கூட அதிக ஈடுபாடு உடையவர். மரணச் சடங்குகளில் திருப்பொற்சுண்ணம், தேவார திருவாச கங்களைப் பாடுவதைத் தமது கடமையாக ஏற்றவர்.
வாரந்தோறும் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் கோவில்களுக்குச் சென்று வரும் இவர் நாள்தோறும் கோண்டாவில் நெட்டிலைப்பாய் பிள்ளையார் கோவிலுக் குப் பூக்கள் கொண்டு சென்று கொடுத்துப் பிள்ளையாரை வணங்கி வருபவர். இவ்வாறு இவர் செல்லும் போது இறுதியாக அங்கு பிள்ளையாரை வணங்கி வருகையில் வாசலில் மயக்கமுற்று வீழ்ந்து இரண்டு தினங்களில் இறைவன் திருப்பாதம் சென்றடைந்துள்ளார் அந்தப் பெருமகன் ஆத்மா சாந்தியடைய நாமும் இறைவனை வேண்டுவோமாக.
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி.
சமூகஜோதி ஆழ்வாப்பிள்ளைகந்தசாமி ஜே.பி. உதவிச் செயலாளர். கொழும்புத் தமிழ்ச் சங்கம்.
20

சிவமயம்
தொகையடியாருடன் அறுபத்துமூவர்
தில்லைவாழ் அந்தணர் (6)ՖTaօ36աւջան)
நடராஜப் பெருமானுடைய திருத்தொண்டர்கள் தில்லைவாழந்தணர். முறைப்படி எரியோம்பி உலகிற்கு நன்மை செய்வதுதான் அந்த அந்தணர்களது பெருந்தவம் எனலாம். அறத்தைப் பயன் என நினைந்து வேதங்களை வேதாங்கங்களை அவர்கள் பயில வேண்டும். குற்றமற்ற மரபில் வந்த அவர்கள் உயர்ந்த ஒழுக்கமுடையவர்கள். விபூதி அவர் உயர்திரு. அவர்கள் மானம் பொறுமை என்பவற்றை உடையவர்களாகிச் சிவனை வழிபடக் கூடிய பேறு பெற்வர்கள். எனவே இனிப் பிறப்பு இருப்பதற்கு நியாயமில்லை. தில்லைக்கூத்தனே சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குத் ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடியெடுத்துக் கொடுத்தமையால் தில்லைவாழ் அந்தணர் பெருமை சொல்லுந்தரத்ததோ!
21

Page 15
திருநீலகண்ட நாயனார்
தில்லையிற் குயவர் குலத்திலே தோன்றியவர் திருநீலகண்டர். சிவபத்தி சிவனடியார் பத்தியில் தோய்ந்தவர். சிவனடியார்களுக்குத் திருவோடு கொடுக்குந் திருத்தொண்டைத் தனதாக்கிக் கொண்டவர். இறைவன் திருநீலகண்டத்திடமாக மிகுந்த பற்றுக்கொண்டமையால் அடிக்கடி திருநீலகண்டம் திருநீலகண்டம் என்று சொல்லும் வழக்கினை உடையவர். அதனால் அவர் பெயரே திருநீலகண்டர் என்றாயது.
அழகிய மங்கை நல்லாள் ஒருத்தியைத் திருமணஞ் செய்திருந்த நீலகண்டர் ஒருமுறை மனப் பெலவீனத்தாற் பரத்தை ஒருத்தியை அணைந்து இன்பம் அனுபவித்து வீடு சென்றார். நிலைமையை உணர்ந்துகொண்ட இல்லாள் அவர்க்கு வேண்டியன எல்லாஞ் செய்தாளேனும் தம்மைத் தீண்ட மட்டும் அனுமதிக்கவில்லை. ஒருமுறை மனைவியை இரந்து, தழுவ முயன்றார் நீலகண்டர். ‘எம்மைத் தீண்டுவீராகிற் திருநீலகண்டம்' என்று நீலகண்டத்தின் மேல் ஆணை யிட்டுவிட்டாள் மனைவி. திருநீலகண்டத்திடம் பெரும்பற்றுக் கொண்ட அடியவர் மனைவி எம்மை என்று பெண்பாலினர் அனைவரையும் சேர்த்துச் சத்தியம் செய்தமையால் யாரையும் மனத்தாலும் தீண்டாதவராகி இல்லறம் சுமுகமாக நடப்பது போன்று வெளி உலகிற்குக் காட்டி நடந்து வந்தார்.
திருநீலகண்டரின் பெருமையை உலகிற்கு உணர்த்த விரும்பிய இறைவன் சிவவேடந் தாங்கி நாயனாரிடம் வந்து ஒரு ஒட்டைக்கொடுத்து அதன் பெருமையைச் சொல்லித் தான் மீண்டு வரும்வரை பாதுகாப்பாக வைத்துத் தரும்படி கூறிச்செல்கின்றார். மீண்டு வந்து கேட்டபோது வைத்த இடத்திலோ மற்றை இடங்களிலோ
22

ஒட்டைக் காணவில்லை. செய்வதறியாது திகைத்த நீலகண்ட்ர் அந்த ஒட்டைக் காணவில்லை என்றும் அதற் காகப் புதியதொரு ஒடு தருகின்றேன் என்றுஞ் சொல்லிப் பணிந்துநின்றார். கடின வார்த்தைகளால் வைத சிவவேட தாரியாகிய குயவர் ‘நீ சொல்வது உண்மையானால் உன் மகனின் கையைப் பிடித்துக் கொண்டு இந்தக் குளத்தில் இறங்கி மூழ்கிச் சத்தியம் செய்துகொடு என்கின்றார்.
‘எங்களுக்கு மகனில்லையே, என்று நீலகண்டர் சொல்ல உமது மனைவியின் கையைப் பிடித்து இந்தக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்யும்’ என்கின்றார் சிவயோகியார். மனைவியைத் தீண்டுவதில்லை என்று சத்தியம் செய்து கொடுத்ததைக் கூறி அதையும் மறுக்கி றார் நீலகண்டர். "நீ ஏமாற்றப் பார்க்கின்றாய், வா, தில்லைவாழந்தணர்களிடம் செல்லுவோம்’ என்று அங்கு அழைத்துச் சென்று முறையிடுகின்றனர். வழக்கைக் கேட்ட அந்தணர்கள் நீலகண்டரைச் சத்தியம் செய்யுமாறு பணிக்கின்றனர். திருப்புகலிச்சரர் குளத்தில் இருவரும் ஒரு தண்டின் இருபுறமும்பற்றி இறங்கினர். அப்போது சிவயோகியார் மனைவியின் கையைப் பற்றுமாறு பணித்தார். சத்தியம் தடையாயுள்ளமையைக் குறிப்பிட்ட நீலகண்டரும் மனைவியும் குளத்தில் மூழ்கி எழுந்தனர். முதுமை நிலைமாறி இளமைச் செவ்வியுடன் வெளிவந்த இருவரும் அங்கிருந்த சிவயோகியாரைக் காணாது திகைத்தனர். அந்தவேளை சிவபெருமான் உமையம்மை யுடன் காட்சி கொடுத்து ஐம்புலன்களையும் வென்ற அன்பர்களே இந்த இளமை நலம் நீங்காது எம்முடனாகி இருங்கள் என்று அருள்புரிந்து மறைந்தருளினார்.
அவர் முத்தியடைந்த திருநாளர் தை விசாகம்
23

Page 16
இயற்பகை நாயனார்
சோழ நாட்டின் காவிரிப்பூம் பட்டினத்தில் வணிகர் குலத்திற் பிறந்தவர் இயற்பைகையார். சிவனடியார் என்று அவரைச் சார்பவருக்கு வேண்டுவதை இல்லை என்னாது கொடுக் கும் மனப்பக் குவம் உள்ளவர் அவர் . இயற்பகையாரது திருத்தொண்டின் உயர்வை உலகறிய வைக்க விரும்பிய சிவபெருமான் ஒருமுறை சிவவேதிய ராகித் திருநீற்று மேனியுடன் காமுகனாகிய கோலத்துடன் அவர் பக்கலணைகின்றார். சிவனடியாரைக் கண்ட இயற்பகையார் அவரை வரவேற்று உபசரித்துப் பணிந்து அவர் வேண்டுதலை எதிர்பார்த்து நிற்கின்றார். ‘ஒரு பொருள் நாடி உம்மிடம் வந்தோம்’ என்ற அடியவரை நோக்கி, ‘எம்மிடமுள்ளது எதுவானாலும் அது சிவனடியார் உடமையே! சொல்லுங்கள், தருவோம்’ என்கின்றார் இயற்கை. எந்தவித சிந்தனையும் இல்லாதவன் போல உமது மனைவியை விரும்பி வந்தோம், அவளை எமக்குத் தந்துவிடும்' என்றார் சிவனடியார். கேட்டு மகிழ்ந்த இயற்பகையார் நடந்தவற்றைத் தன் துணைவி யாரிடங் கூறி அனுப்பி வைக்கின்றார். கணவன் பணிப்பை ஏற்று அவர் விருப்பை மதித்து நங்கை சிவனடியாராகிய காமுகர் பக்கல் வந்து நிற்கின்றாள். இந்த ஊரெல்லை வரை எங்களுக்குத் துணையாக நீங்கள் வரவேண்டும் என்று அடியவர் கேட்டதற்கிணங்கப் போர் வீரனாகி அவர்களை அழைத்துச் செல்லுகின்றார் இயற்பகையார். இடையேவந்தெதிர்த்த உறவினரை வெட்டி வீழ்த்திப் பாதுகாப்பாக ஊரெல்லைவரை அழைத்துச் செல்கின்றார். திருச்சாய்க்காடு என்னும் இடத்தை அடைந்ததும், ‘நீர் திரும்பிச் செல்லலாம்’ என்கின்றார் அடியவர். தன்
24

மனையாளை விட்டுத் திரும்பிப் பாராதே சென்று கொண்டிருந்தார் இயற்பகை. அவர் மனவைராக்கியத்தை வியந்த இறைவன் ‘இயற்பகை முனிவா ஒலம், இவ்விடம் விரைந்து வருக’ என்கின்றார். ஒடோடி வந்த இயற்பகை. யாரோ துன்பஞ் செய்துவிட்டார்களா’ என்று எங்கும் பார்க்கின்றார். மனைவியைத் தவிர்ந்த வேறு யாரையும் அங்கு காணாது திகைக்கின்றார். சிவபெருமான் உமையம்மையோடு இடபாரூடராய்க் காட்சி கொடுத்து அவர்கள் இருவரையும் தம்முடன் சேர்த்துக் கொண்டனர். இறந்துபட்ட உறவினரும் விண்ணடைந்து இன்பமெய்தினர். ‘இல்லையே என்னாத இயற்பகை' என்னுஞ் சுந்தரர் பாராட்டைப் பெற்றவர் இயற்பகையார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் மார்கழி உத்தரம்,
இளையான்குடி மாற நாயனார்
இளையான்குடி என்னுந் திருப்பதியில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் மாறன் என்னும் பெயருடையவர். வேளாண்மைப் பெருஞ் சொத்துடைய இவர் சிவனடியார் களை உபசரித்து அமுது செய்விப்பவர். எந்த வேளை யிலும் அந்தொண்டு தவறிவிடக்கூடாதென்னும் உறுதியுடன் செயற்பட்டவர். அவர் மன உறுதியை உலகினர்க்கு உணர்த்தத் திருவுளங்கொண்ட சிவபெருமான் மாறனாரை வறுமையில் வாடச் செய்தார். அந்தவேளையும் சலிப்படை யாத மாறனார் தமது தொண்டினைத் தொடர்ந்தார். தமது பொருள்களை விற்றுக் கிடைத்த பொருள் கொண்டு சிவனடியரை உபசரித்தார்.
25

Page 17
ஒருநாள் மழை, சிவனடியார் யாரும் வரவில்லை. உணவும் இல்லை. பசியுடனான இரவு. தூக்கமும் வரவில்லை. சிவபெருமான் சிவனடியார் வேடந்தாங்கி வந்து கதவைத் தட்டினார். திறந்து சிவனடியான்ரப் பார்த்து மகிழ்ந்த மாறனார் அவரை வரவேற்று உபசரித்து இருத்தி விட்டு மனைவியுடன் ஆலோசிக்கின்றார். துணைவியார் கொடுத்த யோசனைப்படி இருட்டிலே வயல் சென்று அன்று காலை விதைத்த நெல் மழை வெள்ளத்தில் ஒரு பக்கமாய் ஒதுங்கியிருந்ததை வாரிப் பெட்டியில் போட்டுக் கொண்டு வந்து மனைவியிடங் கொடுத்தார். விறகு இல்லாமையால் வீட்டுக் கூரையின் உட்புறமாகப் பிடுங்கி நெருப்புண்டாக்கி நெல்லை வறுத்து அரிசியாக்கிச் சாதம் சமைத்தார். வீட்டுக் கோடியில் நின்ற குப்பைக் கீரை கொண்டு கறியமுதாக்கி அடியவரிடஞ் சென்று பெரியீர், திருவமுது செய்ய எழுந்தருள்க’ என்று அழைத்தனர். அந்தவேளை சிவனடியார் சோதியாய் எழுந்து தோன்ற மாறனாரும் துணைவியாரும் திகைத்து வைத்தகண் வாங்காது பார்த்து நின்றனர். சிவன் உமாதேவியாருடன் இடபவாகனத்திற் காட்சி கொடுத்து ‘அன்பனே, அறுசுவை உணவை நாடோறும் அடியவர்க்கு உதவிய அப்பனே! நீ உன் மனைவியுடன் நமதுலகை அடைவாயாக’ என்று
அருள்செய்து தம் அருளுருவை மறைத்தருளினார்.
அவர் முத்தியடைந்த திருநாளர் ஆவணி மகம்.
26

மெய்ப்பொருள் நாயனார்
சேதிநாட்டின் மன்னர் மெய்ப்பொருள் நாயனார். தலைநகராகிய திருக்கோவலூரில் மலாடர் சாதியில் மலையமான் வழித் தோன்றலாக வந்தவர். சிவனடியார் களின் திருவுருவே மெய்ப்பொருள் என்று கொண்டு வாழ்ந்தவர். தன் செல்வமெல்லாம் சிவனடியார்களுக்கு என்று கொடுத்து வாழ்ந்தவர். முத்தநாதன் என்றொரு மன்னன் சேது நாட்டைத் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டு வரப் பலமுறை முயன்றான். முடியாது போகவே வஞ்சனை யாற் கவர நினைந்தான். உடல் முழுவதும் விபூதி பூசிச் சடை தாடி முதலியவற்றுடன் புத்தகக் கவளிகை கொண்டு அரண்மனையை அடைந்து ‘இறைவன் அருளிய ஆகமம் ஒன்று எம்மிடம் உண்டு. நாம் தனிமையில் அதனை உங்களுக்கு அறிவுறுத்தலாம் என்று சொல்லி ஒரு தனியி டஞ் சென்றமர்ந்தனர். வேறு யாருமில்லாத அந்தச் சூழலில் கவளிகையிலிருந்து புத்தகமொன்றை எடுப்பது போன்று நடித்து மறைத்து வைத்திருந்த உடைவாளை எடுத்து நினைந்தவாறே செய்துவிட்டான். அந்த நிலை யிலும் அவன் மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் என்று கொண்டு மன்னர் வணங்கினார். முன்பே ஐயத்துடனிந்த காவலன் தத்தன் வாளினால் அவனை வீழ்த்தப் புகுந்தான். தத்தா, இவர் சிவனடியார். எம்முடையவர். என்று சாய்ந்த மன்னரைத் தாங்கிய தத்தன் மன்னரை நோக்கி என்பணி என்ன என்று கேட்டான். ‘வழியில் தீங்கு நேராதவாறு
27

Page 18
இவரை அழைத்துச் சென்று கொண்டு போய்விடு' என்றான் மன்னவன். அழைத்துச் சென்று நாட்டின் எல்லையிடமாக விட்டுத் திரும்பிய தத்தன் செய்தி கேட்டபின் நாயனார் தில்லைக்கூத்தன் திருவடிகளை அடைந்தார். ‘வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருள்' என்பது சுந்தரர் பாராட்டு.
இவர் முத்தியடைந்த திருநாளர் கார்த்திகை உத்தரம்,
விறன்மிண்ட நாயனார்
சேரநாட்டின் செங்குன்றுாரில் வேளாளர் குலத்திற் பிறந்தவர் விறன்மிண்டர். சிவனடியார்களிடம் அளப்பரிய பரிவுடைய விறன்மிண்டர் சிவன் திருவடிகளிடத்து எல்லையில்லாத பற்றுக் கொண்டவர். திருத்தொண்டர் களைப் பணிந்த பின்பே சிவனை வணங்குவது அவர் வழக்கம். ஒருமுறை பல தலங்களையுந் தரிசித்துத் திருவாரூரை அடைந்தபோது அங்கு வந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாசிரிய மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அடியார்களை வணங்காது ஒதுங்கி நேராகத் தியாகேசரை வணங்கச் சென்றார். அதைப்பார்த்து நின்ற விறன்மிண்டர் வன்தொண்டர் நடைமுறையைப் பொறுக்கமாட்டாதவராய்த் ‘திருத்தொண்டர்களுக்கு வன்றொண்டனும் புறம்பு, அவனை ஆண்ட சிவனும் புறம்பு’ என்றார். விறன் மிண்டருக்குச் சிவனடியாரிடம் இருந்த அன்புறுதியைக் கண்டு நம்பியாரூரர் திருத்தொண்டத் தொகையைத
28

திருவாய் மலர்ந்தருளினார். கேட்ட விறன்மிண்டர் பெரிதும் மகிழ்ந்தார். தமது கணங்களுக்குத் தலைவராய் இருக்கும் பெரு வாழ்வைச் சிவபெருமான் விறன்மிண்டருக்கு அளித்தருளினார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் சித்திரைத் திருவாதிரை.
அமர்நீதி நாயனார்
சோழநாட்டிற் பழையாறை என்னும் நகரில் வணிகர் குலத்தில் தோன்றியவர் அமர்நீதி நாயனார். அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதி’ என்று சுந்தரமூர்த்தி நாயனாராற் பாராட்டப் பெற்றவர். சிவனடியார்களுக்குத் திருவமுதுங் கீழ்க் கோவணமுங் கொடுத்து உதவியவர். அந்தச் சேவைக்கெனத் திருநல்லூரில் மடமொன்று தாபித்து அடியர்க்குத் தொண்டு செய்தவர். அவரது உத்தம குணத்தை எல்லோர்க்கும் வெளிப்படுத்தவும் அவருக்கு அருளவும் விரும்பிச் சிவபெருமான் பிரமச்சரிய அந்தணனாகி அவ்விடம் வந்து ஒரு கோவணத்தைக் கொடுத்துப் பாதுகாப்புடன் வைக்கும்படி சொல்லி நீராடச் சென்றவர் மீண்டு வந்து கேட்கின்றார். மாயமாக மறைந்துவிட்ட அதனை எங்கும் கண்டுகொள்ள முடியாத நிலயில் ஒரு புத்தம் புதிய கோவணத்துடன் அந்தணரிடம் வந்து கூனிக் குறுகிறின்று நடந்ததைச் சொல்லுகின்றார். புதியதை ஏற்றுக்கொள்ளும்படியும் வேண்டுகின்றார். கோபத்துடன் வைத அந்தணர் வார்த்தைகளைப் பொறுக்க முடியாது, இருந்த கோவணத் தொகுதயை துணி
29

Page 19
மணிகளைப் பொருள் பண்டங்களை எல்லாங் கொடுத்தார். அந்தணர் தம்மிடம் இருந்த மற்றொரு கோவணத்தை ஒரு தராசின் ஒரு தட்டிலே இட்டு நாயனார் கொடுத்த வற்றை மறு தட்டிலே வைத்தார். நாயனார் பொருள்கள் ஏறிய தட்டுச் சமன் செய்யாது மேலெழுந்தது. உடனே நாயனார் அந்தணரிடம் அங்கீகாரம் பெற்று சிவநாமத்தை உச்சரித்தபடி தானும் மனைவியும் மகனும் அந்தத் தட்டில் ஏறி நின்றனர். அப்போதுதான் தராசின் இரு தட்டுக்களும் சமன் செய்து காட்டின. அவ்வேளை அந்தணனை அங்கு காணவில்லை. இறைவன் உமையம்மையுடன் வானிடைக் காட்சி கொடுத்தார். இறைவன் திருவிளையாடலைத் தராசில் நின்றபடியே கண்ட நாயனார் குடும்பத்துடனாகிப் பணிந்து நின்றார். சிவபிரான் அவர்களுக்கு உயர் சிவபதமளித்துச் சிவபுரியிற் சேர்த்துக்கொண்டார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் ஆனிப் பூரம்.
எறிபத்த நாயனார்
சோழர் அரசிருக்கையில் கொங்கு நாட்டில் கருவூரில் அங்கே உள்ள ஆனிலை என்னுந் திருக்கோயிலை வழிபடுபவராகிச் சிவனடியார்களுக்குத் துன்பம் விளைவிப்போரைத் தீங்கு செய்பவர்களைத் தன்னிடம் உள்ள மழு என்னும் படைக்கலத்தால் எறிந்து தாக்கிப் பாதுகாக்கும் ஒருவர் எறிபத்தர். ஆனிலை ஆலயத்துள்ள இறைவருக்குப் பூமாலை கட்டிச் சென்ற சிவகாமியாண்டார் என்ற சிவனடியார் கொண்டு சென்ற பூக்கூடையை
30

வேந்தரரின் பட்
ஆ.எத சேuதிஷ் க்கோஷ்
ଖୁଁy]
薄;乳,、忍
ஜிே.ஆர்
ஆஷ்ரேயுள் டாகர்
é. ப்ே ே
பச்டேடர் சிந்த புகழ்ச்சோழர் இான்று கண்டதும் &
கோள். **ள் அடிகளின்
ந்து சிங்கி இந்த நிகழ்விந்து 14:ள்ஈள்
*உங்கள் திருத்தொண்டின் மாண்பை உலகிற்குக் காட்ட வேண்டித் திருவருளால் இவையாவும் நடந்தன என்று ஓர் அசரீரி வானில் எழுந்தது. அந்த ஒலி எழுந்த உடனேயே யானை, பாகர்கள், வீரர்கள் எல்லோரும் உயிர்பெற்றெழுந்தனர். எறிபத்தர் புகழ்ச்சோழரை வணங்கினார். மன்னன் யானைமீது அரண்மனை செல்ல எறிபத்த நாயனார் கணங்களுக்குத் தலைவராயினார்,
இவர் முத்தியடைந்த திருநாளர் மாசி அத்தம்.
31

Page 20
சோழ நாட்டிலுள்ள அயர்னலுரிகிச் ஈழதஸ்ச சான்றோ ராகத் தோன்றியவர் ஒனாதிநாதர், திருநீந்நிற் பேரன்பு கொண்டவர். பர்னடி துtாரர்களுக்கு வாள்வித்தித பயிற்றுபவர், ஆதன்ாற் கிடைக்கும் வருவாய் கோள்ே சிவனடிார்களுக்கு உதவுவது அவர் திருத்தோள்டு.
கட்டத்தில் அதிசூரன் என்னும் பெருடைய ஆறும் வாள்வித்தை பயிற்றும் கலைஞனாக நன். அந்தவேஷா ஒன்ாதிநாதருக்கு வFள்வித்தை பயிற்றளில் நல்ல மதிப்பிருந்தது, அதனால் அங்நக்கே ங் கூடுதலாகியது. இது அதிசூரனுக்தப்
ä | ಹೆà¥éಷ್ಠಿ ಇಟ್ರೆçiéf # ಓáíäål பூர் வீடு சென்று போருக்கு அ6 சிவத்தது. நடந்த போரில் புறமுதுகு காட்டி அதிசூரன் ஒளாதிநாதரிர
: *
$j('####
நிறைவாகத் திருநீறணிந்து கேடகத்தால் அதை மறைத்துக்கொண்டு சென்று இருவரும் கிட்ட நெருங்கும் போது கேடகத்தைக் கீழே தாழ்த்துகின்றான். திருநீறு கண்ணிற்பட்டதும் ஏனாதிநாதர் அதிர்ந்துவிட்டார். சிவனடியான் ஒருவனைக் கொல்லத் துணிந்துவிட்டேனே என்று திகைத்துப் பின்னிட்டவர் மறுகணம் அவனை எதிர்ப்பவர் போல நிற்கின்றார். எதிர்த்துப் போரிடாத தம்மை அந்தச் சிவனடியார் கொன்றால் அவனுக்கு அபகீர்த்தியாகுமே என்பதை எண்ணி எதிர்ப்பவர் போல
32
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிற்கின்றார். அதிசூரன் தனது எண்ணத்தை நிறைவு செய்துவிடுகின்றான். சிவபெருமான் ஏனாதிநாதர் முன் எழுந்தருளி தம்மை என்றும் பிரியாத பெருவாழ்வை அவருக்களித்து அருளுகின்றார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் புரட்டாதி உத்தராடம்.
கண்ணப்ப நாயனார்
கலைமலிந்த சீர் நம்பி’ என்று சுந்தரமூர்த்தி சுவாமி களாற் பாராட்டப்பெற்ற கண்ணப்பர் பொத்தப்பி நாட்டில் மலைகள் நிறைந்த உடுப்பூரில் வாழ்ந்த நாகன் என்னும் வேடுவ மன்னனுக்கு மகனாகத் தோன்றியவர். மகனுக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் திண்ணன் என்பது. நாகன் முதுமை காரணமாக அரசுரிமையைத் திண்ணனாருக்கு வழங்குகின்றான். வேட்டுவ மன்னன் திண்ணன் ஏனைய வீரர்களுடன் வேட்டைக்குச் செல்கின்றான். அங்கே கொன்றதொரு பன்றியையும் எடுத்துக் கொண்டு பொன் முகலி ஆற்றுப் பக்கம் செல்கின்றனர். செல்லும் போது திருக்காளத்தி மலைச் சாரல் பற்றிய செய்திகளை நாணன் சொல்கின்றான். அங்கே குடுமித் தேவர் உறைகின்றார். கும்பிடுவோம் என்றுஞ் சொன்னான். என்ன நானா திருக்காளத்தி மலையை நெருங்க நெருங்க ஏதோ பெரிய சுமை இறங்குவது போலிருக்கிறதே என்று சொல்லி விரைகின்றனர்.
பொன்முகலி ஆற்றங்கரையில் பசியை ஆற்றிக் கொண்டு மலையேறுகின்றனர். அங்கே மகா தேவரைக் கண்ட திண்ணனார் அன்புருவம் பெற்றார். குடுமித்
33

Page 21
தேவரைக் கட்டித்தழுவுகின்றார். கண்களினின்றும் அருவிபோல் நீர் சொரிய ஐயோ! இது கொடிய விலங்கு கள் திரியும் காடு. ஐயன் எப்படி இங்கு தனித்திருக்கலாம். யாரோ இவருக்கு இலையும் போட்டுத் தண்ணிரும் ஊற்றி இருக்கிறார்களே! யாராயிருக்கலாம்? என்று சிந்திக்கின்றார். அப்போது நாணன், “நானொரு பார்ப்பானை முன்பு கண்டிருக்கின்றேன். அவர்தான் இதைச் செய்திருக்கலாம் என்றான். இவை இறைவனார்க்கு இனியவையாயப் இருக்கலாம். என்று நினைந்து கொண்டு வேண்டியவற்றைத் தாமே கொண்டு வரவேண்டுமென்று துணிந்து பிரிய மனமில்லாதவராகிப் பிரிந்து பொன்முகலி ஆற்றாங் கரைக்குச் செல்கின்றார். அங்கிருந்த பன்றியை வதக்கி நல்ல இறைச்சிகளைக் கல்லையில் எடுக்கிறார். பொன்முகலி ஆற்று நீரை வாயிலே எடுத்துக் கொண்டார். பச்சிலைகளையும் பூக்களையும் குடுமியிலே செருகிக் கொண்டார். அம்பு வில்லு ஊனமுதப் பொதி என்பவற்றுடன் செல்கின்றார். அங்கு சென்றதும் தேவர் முடிமீதிருந்த பூக்கள் இலைகளைக் காலால் விலக்கிவிட்டு வாய் நீர்கொண்டு அபிஷேகித்தார். தான் கொண்டுவந்த பூக்கள் கொண்டு அலங்கரித்து ஊனமுது படைத்து உண்ணும்படி பணிந்தார். இரவு முழுவதும் இறைவனுக்குத் துணையாக இருந்துவிட்டு விடிந்ததும் இறைவனுக்கு உணவு கொண்டுவரச் செல்கின்றார். இந்தவேளை சிவகோசரியார் வருகின்றார். அவ்விடத்திய நிலைமைகளைக் கண்டு வருந்தி, தூய்மையாக்கி அருச்சித்துச் செல்கின்றார். தொடர்ந்தும் இது நடைபெறுவது சிவகோசரியாருக்குப் பிடிக்கவில்லை. துன்புற்றார். அன்றிரவு சிவகோசரியார் கனவில் இறைவன் தோன்றி “இந்தப் பொருத்தமற்ற செயலைச் செய்யும் வேடனை நீ மறைந்திருந்து பார்.
34

அப்போதுதான் அவன் அன்பைப் புரிந்துகொள்வாய்' என்று குறிப்பிட்டார். மறுதினம் மறைந்திருந்த சிவகோசரியார் திண்ைணனாரின் செயல்களை நோக்கினார். அன்று ஆறாவது நாள். இறைவன் வலக் கண்ணிலிருந்து உதிரம் பெருகியதை வரும்போதே கண்ட திண்ணனார் பதறி மயங்கினார். அவர் கொண்டுவந்தவை எல்லாம் சிதறின. எழுந்து சென்று இரத்தத்தைத் துடைத்துவிட்டு ஊனுக்கு ஊன் என்பதுணர்ந்து தன் கண்ணை அம்பாற் பெயர்த்து அந்த வலக்கண்ணினிடத்து வைக்கின்றார். அது சரியா கியது கண்டு மகிழ்ந்திருந்த வேளை இடது கண்ணில் இரத்தம் பாயத் தொடங்கியது. அந்தக் கண்ணிடத்தில் தன் காலைவைத்துக் கொண்டு இடக்கண்ணைப் பெயர்க்க ஆயத்தமானார். ‘நில்லு கண்ணப்ப, நில்லு கண்ணப்ப என்று கூறிக்கொண்டே இறைவன் திண்ணனார் கையைத் தன்கையாற் பிடித்துத் தடுத்தார். இந்தக் காட்சிகளைப் பார்த்திருந்த சிவகோசரியார் ஆனந்தவாரியில் மூழ்கினார். கண்ணப்பர் கைகளைப் பற்றிய முக்கண்ணர் திண்ணனா ரைத் தன் வலப்பக்கத்தில் இருத்திக்கொண்டார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் தை மிருகசரிடம்.
குங்குலியக்கலய நாயனார்
சோழ நாட்டிலே திருக்கடவூரிலே அந்தணர் குலத் திலே தோன்றியவர் கலயநாயனார். குங்குலியத் தூபமிடும் திருத்தொண்டை நாளுஞ் செய்வதனால் குங்குலியக் கலய நாயனார் எனப்பட்டார். ஆண்டவனருளால் வறுமையை அனுபவிக்கத் தொடங்கிய கலய நாயனார் நிலபுலங்களை விற்றார். இறுதியில் விற்பதற்கு எதுவுமின்றி
35

Page 22
குங்குலியம் வாங்குதற்கும் வழியின்றித் திகைத்தார். பிள்ளைகளின் பசிக்கொடுமையைத் தாங்கிக்கொள்ள முடியாத மனைவியார் தம் கழுத்திலிருந்த திருமாங்கலி யத்தைக் கழற்றிக் கணவன் கையிற் கொடுத்து, இதை விற்று நெல் வாங்கி வரும்படி சொன்னார். அதை விற்கச் சென்ற வழியில் குங்குலியப் பொதியுடன் வந்த ஒருவன் கண்ணிற் பட்டான். அவனுடன் உரையாடி அந்தப் பொதி யைப் பெற்றுக்கொண்டு மாங்கல்யத்தை அவனிடங் கொடுத்தார். குங்குலியத்துடன் ஆலயம் சென்ற கலயனார் அதனைக் களஞ்சிய அறையிலே வைத்துவிட்டுச் சிவ சிந்தனையுடன் இருந்தார். வீட்டிலிருந்தோர் பசிக்களையி னால் உறங்கிவிட்டனர். அடியார்க்கெளியராகிய சிவபெரு மான் நாயனார் வீட்டிற் பொற்குவியலும் நெற் குவியலு மாக நிறைத்து வைத்தார். விழித்த அம்மையார் செல்வச் செழிப்பைக் கண்டு இறைவன் திருவருளை நினைந்து வியந்தார். தொடர்ந்து சமையல் வேலைகளைக் கவனித் தார். திருக்கோவிலிலுள்ள நாயனார் கனவிலுந் தோன்றி நீ விடு சென்று அமுதுசெய்து களை நீங்குவாயாக என்றருளினார். விடுவந்த கலயனார் பொருட் குவையைப் பார்த்து இறைவன் திருவருளை நினைந்து வியந்தார்.
திருப்பனந்தாள் சிவலிங்கஞ் சாய்வு ஏற்பட்டதை எண்ணி வருந்திய மன்னனிடஞ் சென்று அவர் துயரைப் போக்கினார். மன்னன் நாயனாரை வணங்கினான். திருப்பனந்தாளிலிருந்து திருக்கடவூர் சென்றபோது சம்பந்தரும், அப்பரும் அங்கு வந்தார்கள். அவர்களை வரவேற்று உபசரித்தார் குங்குலியக்கலய நாயனார். முறையாகத் தம் கடமைகளைச் செய்த நாயனார் இறைவன் திருவடிநீழலை அடைந்தார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் ஆவணி மூலம்,
36

மானக்கஞ்சாற நாயனார்
கஞ்சாறுாரில் வேளாளர் குலத்தில் தோன்றிய மானக்கஞ்சாறர் சேனாதிபதியாகத் தொழில் புரிந்தவர். சிவனடியார்களைச் சிவன் என்று எண்ணுபவர். அவர்கள் குறிப்பறிந்து வேண்டியவற்றைக் கொடுப்பவர். நீண்டகாலம் குழந்தைப் பேறில்லாத இவர் திருவருளை வேண்டி ஒரு பெண் குழந்தையைப் பெற்றார். அந்தக் குழந்தை மனப்பருவத்தை அடைந்ததும் ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்குத் திருமணம் பேசினர். உடன்பாடு கண்டதும் ஏயர்கோன் கலிக்காம நாயனார் மணக்கோலம் பூண்டு கஞ்சாறுாருக்கு வருகின்றார். மணமகன் கஞ்சாறுாரை அடையுமுன் சிவபெருமான் மாவிரதக் கோலத்துடன் மானக்கஞ்சாறர் வீட்டுள் நுழைகின்றார். வரவேற்பைப் பெற்ற மாவிரதர் இங்கென்ன நடைபெறவுளது என்று கேட்டு மகளுக்குத் திருமணம் என்றதும் சோபனம் உண்டாகுக' என்று வாழ்த்துகின்றார். புதல்வியாரை வரச் செய்து தொழவைத்தவேளை பெண்ணின் கூந்தல் தமது பஞ்சவடிக்கு உதவக்கூடும் என்கிறார் மாவிரதர். உடனும் உடைவாளால் அரிந்து மாவிரதரிடம் நீட்டுகிறார் நாயனார். மாவிரதர் தம் கோலத்தை மறைத்து உமையம்மையுடன் மழவிடைமேற் காட்சி தந்தார். வணங்கி நின்ற நாயனாரிடம் உமது அன்பை உலகறியச் செய்தோம், எம்மை வந்தடைக என்று கூறி இறையவர் மறைந்தார். தாம் அந்தக் காட்சியைக் காண வாய்ப்பிலாது போய்விட்டதே என்று செய்தி அறிந்த மணமகன் துன்பப்பட்டார்.
மானக்கஞ்சாறர் முத்தியடைந்த திருநாளர் மார்கழிச் சுவாதி.
37

Page 23
அரிவாட்டாய நாயனார்
சோழ நாட்டில் கணமங்கலம் என்னும் பதியில் வேளாண் குலத்தில் தோன்றியவர் அரிவாட்டாய நாயனார். செந்செல் செங்கீரை மாவடுத் திருவமுது சிவபெருமானுக்கு நாளும் வழங்குபவர். அவர் இயற்பெயர் தாயனார் என்பது. அவரது திருத்தொண்டின் மேன்மையை உலக றியத் தரவேண்டி இறைவன் வறுமையை நிலவச் செய்தார். எல்லாவற்றையும் இழந்த பின் நாயனார் கூலிக்கு நெல்லறுத்துத் தொண்டைத் தொடர்ந்தார். அவர் பெற்ற கூலி முழுமையாகச் செந்நெல் ஆனதால் அதை முழுமையாக இறைவனுக்கே அர்ப்பணித்துத் தாம் பட்டினி கிடந்தார். அடியவரின் அருமை மனைவியார் காய் கறிகளை ஆக்கி அவருக்கு உணவு கொடுப்பார்.
தமக்கு உணவில்லாத நாயனார் சிவனுக்குத் திருவ முது கொண்டு செல்கின்றார். மனைவி பஞ்சகெளவியம் கொண்டு பின்னே செல்கின்றார். தளர்வடைந்த நாயனார் வீழ்ந்துவிடப் போனவேளை, கலயத்தை மூடியிருந்த கையால் மனைவி தாங்கிக் கொள்கின்றார். ஆனாலும் சிவனுக்கான திருவமுதெல்லாஞ் சிதறின. ‘இனியான் ஏன் சிவனிடஞ் செல்லவேண்டும்' என்று வருந்திய நாயனார்தன் அரிவாளாற் குரல்வளையை அறுக்கத் தொடங்குகின்றார். அப்பொழுது நாயனார் கையைத் தடைசெய்த அம்மை யப்பன் விடைமேற் காட்சி கொடுத்தார். நீ புரிந்த திருத் தொண்டு நன்று. இனி நீவிர் இருவீரும் எமது உலகிற்கு வருவீர்களாக’ என்று பணித்து மறைந்தருளினார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் தைத் திருவாதிரை.
38

ஆனாய நாயனார்
மழநாட்டில் திருமங்கலம் என்னும் பதியில் ஆயர் குடியிற் பிறந்தவர் ஆனாய நாயனார். திருநீற்றிற் பேரன்பு கொண்ட இவர் சிவன் திருவடியையே போற்றுபவர். ஆயர்குலத் தலைவனாகிய இவர் பசுக்களைச் செவ்வனம் பாதுகாத்தவர். புல்லாங் குழலும் வாசிப்பார். ஒரு கார் காலத்தில் பசு நிரைகளை அழைத்துச் சென்றவர் பூத்துக் குலுங்கும் ஒரு கொன்றையைக் கண்டார். மெய்மறந்தார். தாழ்சடையிற் கொன்றையணிந்தவனை நினைந்துகொண்ட அவர் தன்னிலையை இழந்து சிவனிடமாகி உருகினார். வேய்ங் குழலை மீட்டினார். எல்லாம் அந்த இசையிற் கட்டுண்டன. வையத்தை மட்டுமல்லாது வானையும் அந்த இசை வயப்படுத்திவிட்டது. எம்பெருமான் ஆனாயர் முன் தோன்றி இவ்வண்ணமே நம்பால் அணைக என்று அருள அப்படியே இறைவனை அடைந்து இன்புற்றிருந்தார் ஆனாயர்.
இவர் முத்தியடைந்த திருநாளர் கார்த்திகை அத்தம்.
மூர்த்தி நாயனார்
* மும்மையால் உலகாண்ட மூர்த்தி’ என வன்றொண். டர் பேசக்கூடிய வாய்ப்பைப் பெற்ற மூர்த்தி நாயனார் பாண்டி நாட்டின் மதுரை மாநகரில் வணிகர் குலத்தில் தோன்றியவர். சிவ பக்தியுடைய அவர் அன்புருவங் கொண்டவர். சொக்கலிங்க நாதருக்குக் சந்தனக் காப்பணிவதைத் தன் திருத்தொண்டாகக் கொண்டவர்.
39

Page 24
வடுகக் கருநாடக மன்னன் ஒருவன் பாண்டி நாட்டின் மீது படையெடுத்து வென்று ஆட்சியைத் தொடர்ந்தான். அவன் சமண மதத்தவன். இந்த நிலையிலும் மூர்த்தியாரின் தொண்டு நடந்துகொண்டுதானிருந்தது. சந்தனக் கட்டைகள் கிடைக்காதவாறு செய்தான் மன்னன். இறுதியாகச் சந்தனக் கட்டையைப் பெற எங்கும் அலைந்தார். பெறமுடியாத நிலையில் ஆலயத்துட் சென்று சந்தனம் அரைக்கும் கல்லில் தன் கையைத் தேய்த்தார். இரத்தம் கொப்பளித் தது. என்புகள் தேய்ந்தன என்புத் துவாரங்களுடாக மச்சை வெளிவந்தது. அங்கே ஒர் அசரீரி கேட்டது. அன்பனே, அன்பின் உறுதியால் இதைச் செய்யாதே. ஆட்சியை நீயே ஏற்பாய், கொடுங்கோன்மை ஒழியட்டும், உன்பணி தொடரட்டும், என்பன அந்த வார்த்தைகள். கொடுங்கோல் மன்னன் இயற்கை மரணத்தைத் தழுவினான். மூர்த்தி நாயனார் சைவ ஆசார வழி நிற்கும் மன்னராக மக்களாற் பிரகடனப்படுத்தப்பட்டார். திருநீறு உருத்திராக்கம் சடை முடி ஆயமும்மையால் உலகாண்டவர். சைவ ஒழுக்க வழிநின்ற மூர்த்தி நாயனார் பிரமச்சாரியராக வாழ்ந்து இறைவன் திருவடி நீழலை அடைந்தார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் ஆடிக் கார்த்திகை.
முருக நாயனார்.
சோழநாட்டில் திருப்புகலூர் என்னும் பதியில்
மறையவர் குலத்தில் தோன்றியவர் முருகநாயனார்.
சிவபக்தி அடியார் பத்தியிலே தலைநின்ற நாயனார்
நாளும் காலைக் கடன்களை நிறைவுசெய்து திருநந்
தவனஞ் சென்று பூக்கொய்து பலவகையான மாலைகள 40

கட்டிச் சிவ பிரானுக்குச் சூட்டுவார். நெஞ்சம் குழைந்து குழைந்து திருவைந்தெழுத்தோதுவார். திருஞான சம்பந்தர் திருமணத்திற்குச் சென்று கலந்து சிவபிரான் திருவடி நீழலை அடைந்தவர்.
இவர் முத்தியடைந்த திருநாளர் வைகாசி மூலம்,
உருத்திரபசுபதி நாயனார்
சோழ நாட்டுத் திருத்தலைப் பதியின் அந்தணர் குலத்துத் தோன்றியவர் உருத்திரபசுபதி நாயனார். பசுபதி என்பது அவர் இயற்பெயர். தாமரைத் தடாகத்துட் சென்று கழுத்தளவு நீரில் நின்று பூரீ உருத்திரத்தை ஒதுவார். இந்தத் திருத்தொண்டுடனாகி நின்று சில நாள்களிற் சிவபதம் அடைந்தார். உருத்திர மந்திரத்தை ஒதியமையால் உருத்திர பசுபதி எனப் பெயர் பெற்றார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் புரட்டாதி அச்சுவினி
திருநாளைப்போவார் நாயனார்
சோழ நாட்டின் ஆதனுாரில் தோன்றியவர் நந்தனார். சிவாலயப் பேரிகைக்குத் தோல், வீணை யாழி என்பவற்றுக்கு நரம்பு சிவார்ச்சனைக்குக் கோரோசனை கொடுப்பது அவர் திருத்தொண்டுகள். சிவாலயங்களில் வாயிற்புறத்தே நின்று வழிபடுவார். திருப்புன்கூர் சிவ லோகநாதனைக் கண்டு பணிசெய்ய வேண்டுமென்னும் வேட்கை அவருக்குண்டானது. சென்றவர் சிவலிங்கப்
41

Page 25
பெருமானை நேரே கண்டு வழிபட ஆசைப்பட்டார். சிவபெருமான் அடியவர் ஆசையை நிறைவு செய்ய வேண்டித் தம்முன்னுள்ள இடபதேவரை விலகி இருக்கும் படி செய்து அடியவருக்குக் காட்சி கொடுத்தார். அங்கு ஒரு திருக்குளத்தை அமைத்துத் தமதுாருக்குத் திரும் பினார். பின்னர் சிதம்பரதரிசனம் பற்றி அவர் சிந்தனை சென்றது. இரவு நித்திரை இன்றிச் சிந்தித்தார். அங்கு சென்றாலும் இறைவன் திருக்கூட்டத்தைக் காணமுடியாதே என்று வருந்தினார். பிறப்பு தடையாக உள்ளமையை நினைந்து துன்பப்பட்டார். போக்கொழிந்தவர் ‘நாளை செல்வேன், நாளை போவேன்’ என்று நாளுஞ் சொல்வார். பலநாள்களின் பின் ஒருநாள் திருநாளைப் போவார் தில்லையின் திருவெல்லையைச் சென்றடைந்தார். அங்கே அந்தணர் யாகசாலைகள், வேதம் ஒதும் இடங்கள், மடங்கள் முதலியவற்றைக் கண்டு அச்சத்துடன் அவற்றைச் சுற்றிச் சுற்றி வந்தார். மனம் நொந்தார். உறங்கினார். சிவபெருமான் கனவில் தோன்றி, இப்பிறவி நீங்க நீ அக்கினியில் மூழ்கி வேதியர்களுடன் நம்முன் வருவாய்’ என்று அருளினார். தொடர்ந்து தில்லை வாழந்தணர் கனவிலுந் தோன்றி நிலைமையை உணர்த்தி எரி அமைக்குமாறு பணித்தருளினர். அந்தணர்கள் திருநாளைப் போவாருக்கு நடந்ததைச் சொல்லி தென்மதிற்புறத்தில் தீ வளர்த்தனர். திருநாளைப் போவார் அதனை வலம்வந்து தியுள் மூழ்கி எழுந்தனர். அவர் பொய்யுடலம் நீங்கப் புண்ணியப் பொன்மேனியுடன் பூனுால் சடைமுடி பொலியக் காட்சி தந்தார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். வேதியர் கைகூப்பித் தொழுதனர்.
42

அடியார் மகிழந்தனர். திருநாளைப் போவார் தில்லை வாழந்தணர்களுடன் சென்று கோபுரத்தைத் தொழுது பொன்னம்பலம் புகுந்தார். புகுந்தவர் புகுந்தவர்தான். அவர் பொன்னம்பலவாணருடனாகி அவர் திருவடிப் பேறுபெற்று இன்புற்றனர்.
இவர் முத்தியடைந்த திருநாளர் புரட்டாதி ரோகிணி
திருக்குறிப்புத்தொண்டர்
தொண்டை நாட்டில் காஞ்சிமா நகரம் என்னும் திருப் பதியில் சலவைத்தொழிலாளர் குலத்தில் தோன்றியவர் திருக்குறிப்புத்தொண்ட நாயனார். சிவனடியார்கள் குறிப்பறிந்து வஸ்திரம் தோய்த்துக் கொடுக்கும் தொண்டு செய்தவர். அதனால் திருக்குறிப்புத் தொண்டர் என்று அழைக்கப்படலானார்.
ஒரு குளிர்கால வேளையில் சிவபெருமான் திருநீறு பூசி அழுக்கேறிய கந்தலுடையுடனும் மெலிந்த உடம்பு டனும் கூடிய வேடத்தராகிச் சிவனடியாரிடம் வருகின்றார். இளைத்த உடம்புடனாகிய சிவவேடதாரியைக் கண்டதும் அவரை வணங்கி உபசரித்த திருக்குறிப்புத் தொண்டர் அழுக்கேறிய அந்த உடையைத் தரும்படியும் சலவை செய்து தருவதாகவுஞ் சொல்கின்றார். என்னிடம் வேறு உடை இல்லை, பொழுது மறைவதன் முன் சலவை செய்து தரமுடியுமென்றால் எடுத்துச் செல்லலாம் என்றார். திருக்குறிப்புத் தொண்டர் சலவை செய்து கொண்டிருக்கும் போதே மழை கொட்டத் தொடங்கியது. அவரால், உலர வைக்க முடியவில்லை. கொடுத்த உறுதி மொழியைக்
43

Page 26
காப்பாற்ற முடியவில்லையே என்று வருந்தினார். அடியவரைக் குளிரில் தவிக்கச் செய்தேனே என்று வருந்தித் தன் தலையைக் கல்லில் மோதுகின்றார். அங்கே சிவபெருமானின் திருக்கை நாயனாரைப் பற்றியது. பூமாரியைப் பார்க்க முடிந்தது. சிவன் உமை சகிதம் மழவிடைமேற் காட்சி தந்தார். திருக்குறிப்புத் தொண்டர் தம்மை மறந்து பணிந்தெழுந்தார். உமது உயர்நிலையை மூவுலகும்அறியச் செய்தோம். இனி எமது உலகை அடைக என அருளி மறைந்தருளினார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் சத்திரைச் சுவாதி
சண்டேசுர நாயனார்
சோழ நாட்டில் திருச்சேய்ஞலூர் என்னும் திருப்பதி யில் வேதியர் குலத்தில் காசிபர் கோத்திரத்தில் எச்ச. தத்தனுக்கும் பவித்திரை என்னும் பெண்ணணங்கிற்கும் புத்திரராக விசாரதருமர் என்றொரு குழந்தை பிறந்தது. இவரே பின்னர் சண்டேசுர நாயனார் ஆகின்றார். முற்பிறவி உணர்வுள்ள விசாரதருமர் வேதாகம உணர்வை விரைவிற் பெற்றார். ஏழாம் ஆண்டில் உபநயனம் முடிந்தது. வேதாகம உணர்வை இயல்பாகக் கொண்டிருந்த பிள்ளை ஆண்டவன் திருவடி அன்புடனானார்.
ஒரு முறை விசாரதருமரும் மாணவர்களும் வெளியே புறப்பட்டனர். அப்பொழுது ஆனிரைகளும் கூடவே சென்றன. ஒரு இளங்கன்று மேய்ப்பவனை முட்டியதால் அவன் அடிக்கலானான். கண்ட விசாரதருமர் அவனைத் தடுத்துத் தானே ஆனிரைகளை மேய்க்கத் தொடங்கினார்.
44

பசுக்களின் சொந்தக்காரரான அந்தணர்களின் அங்கி காரத்தைப் பெற்று விசாரதருமரே நாளும் ஆனிரைகளை மேய்க்கத் தொடங்கினார். பசுக்கள் அவரிடம் அன்பு கொண்டன. விசாரதருமர் கிட்டவந்தாற் பால் சொரிந்தன. விசார தருமர் ஒர் ஆத்திமரத்தடியில் மணலைச் சிவலிங்க மாக்கி ஆனிரைகள் சொரியும் பால் கொண்டு அபிஷே கிப்பார். மலர்களைப் பறித்து அர்ச்சிப்பார். பூசைக்குக் கிடைக்காத பொருள்களைப் பாவனை மூலம் கண்டு அர்ச்சிப்பார். இவர் செயலைக் கண்ட ஒருவன் அந்தணர்க்கு அறிவித்துவிட்டான். கோபங் கொண்ட தந்தை மறைந்து நின்று நிகழ்ந்ததைக் கண்டு வந்து காலால் எல்லாவற்றை யும் சிதைக்கின்றார். அந்த அடாத செயலைப் பொறுக்க மாட்டாத பிள்ளை ஒரு கோலை எடுத்து ஒச்சினார். அது மழுவாகி எச்சதத்தன் காலைத் துண்டாடியது. இறைவன் இடபாரூடராய் உமையம்மையுடன் காட்சி தந்தார். விசாரதருமர் உடலைத் தடவி அணைத்துக் கொண்டார். விசாரதருமரது உடம்பு சிவமயமாய்ப் பேரொளியுடன் விளங்கியது. ‘திருத்தொண்டர்களுக்கு உன்னைத் தலைவனாக்கினோம். நாம் உண்பன உடுப்பன எல்லாம் உனக்கே. அதற்காக உனக்குச் சண்டேசுரபதந் தந்தோம் என்று சிவபெருமான் அருளித் தம் திருச் சடையிலிருந்த கொன்றை மாலையை எடுத்து அவருக்குச் சூட்டினார். சண்டீசர் எல்லோரையும் வணங்கி சண்டேசுர பதத்தை அடைகின்றார். சண்டீசுரப் பெருமானால் வெட்டுண்ட எச்சதத்தனும் குற்றம் நீங்கித் தேவ உலகை அடைகின்றான்.
இவர் முத்தியடைந்த திருநாளர் தை உத்தரம்.
45

Page 27
திருநாவுக்கரசு நாயனார்
திருமுனைப்பாடி நாட்டிலே உள்ள திருவாமூர் என்னும் பதியில் வேளாளர் மரபில் குறுக்கையர் குடியில் புகழனார் மாதினியார் என்னுந் தம்பதியர்க்கு முதலில் திலகவதியார் என்னும் பெண் குழந்தை பிறந்தார். தொடர்ந்து சில ஆண்டுகளின் பின் மருணிக்கியார் என்னும் ஆண் குழந்தை தோன்றினார். இவரே பின்னர் திருநாவுக்கரசு நாயனார் என்ற புகழுக்குரியவர் ஆயினார். அந்த நாளில் கலிப்பகையார் என்றொரு வேளாள வகுப்பைச் சேர்ந்த சேனாதிபதி திலகவதியாரை மணஞ் செயவிரும்பிச் சில பெரியார்களை அனுப்பி இருபகுதியினரும் மனஓருமை கண்டனர். வடபுலத்து மூண்டதொரு போரை நிறைவு செய்ய வேண்டியது காரணமாகக் கலிப்பகையார் போர் மேற் சென்றனர். இந்தவேளை நோய்வாய்ப்பட்ட புகழனார் மறைவு நிகழ்கின்றது. மாதினியாரும் இறப்பைத் தழுவிக் கொள்கின்றார். பெற்றோர் இறுதிக் கிரியைகளை நிறைவு செய்திருந்தவேளை போர்க்களத்தில் கலிப்பகையார் மறைந்த செய்தியும் கிடைக் கின்றது. உடனும் உயிர்துறக்க விரும்பிய திலகவதியார் தம்பியின் வாழ்வை எண்ணி அந்த நினைவை மாற்றிக் கைம்மை நோன்புடன் வாழத் தொடங்கினார்.
பின்னர் சமய ஆய்வு செய்யத் தொடங்கிய மருணிக் கியார் சமண மதத்தைத் தழுவினார். அந்த மதத்தில் அவர் புலமை மிகுந்து காணப்பட்டமையால் தருமசேனர் என்று அவருக்குப் பெயர் சூட்டினர். அவரைக் குருவாக ஏற்றனர். திலகவதியார், தன் தம்பியை மீட்டுத் தருமாறு திருவதிகை வீரட்டானேசுவரரை வேண்டுகின்றார். சிவபெருமான் அம்மையார் கனவில் தோன்றி மீட்டுத்
46

தருவோம் என்றனர். தருமசேனருக்குச் சூலை நோய் உண்டாயது. சமணர்களால் அதைச் சுகப்படுத்த முடியாது போகவே அவர் அக்காவிடம் வந்து சேர்கின்றார். அடுத்த நாட்காலை அக்காவுடன் திருவீரட் டானேசுவரரை அணைந்து திருநீறு தரித்துக் கோயிலை வலம்வந்து * கூற்றாயினவாறு’ என்று தொடங்கும் தேவாரத் திருப்பதிகத்தைப் பாடுகின்றார். சூலை நோய் அகன்றது. அந்தவேளை நாவுக்கரசு என்னும் பெயர் இறைவனால் அவருக்கு வழங்கப்பட்டது.
திருநாவுக்கரசர் திருவருள் பெற்றமை பாடலிபுர மெங்கும் பரந்தது. வேதனை கொண்ட சமணர்கள் பல்லவ மன்னனிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லிச் சினங்கொள்ள வைத்தனர். தருமசேனரைப் பிடித்து வருமாறு அமைச்சர்களை ஏவினான். அமைச்சர்கள் நாவுக்கரசருடன் பரிந்து பேசி கொண்டுவந்து சேர்த்தனர். கொடியவர்களின் ஆலோசனைப் படி நாவுக்கரசரை நீற்றறையிற் பூட்டினர். மாசில் வீணையும்’ என்று தொடங்கும் தேவாரத் திருப்பதிகத்தைப் பாடி அவர் அங்கு மகிழ்வோடிருந்தார். ஏழு நாள்களின் பின் அறையைத் திறந்து பார்த்து அதிசயித்தவர்கள் நம் சமய மந்திரங் களைச் செபித்துத் தப்பிக்கொண்டான் தருமசேனன், அவனுக்கு நஞ்சூட்டச் சொல்லுங்கள் என்றனர்; கல்லுடன் கட்டிக் கடலிற் போடும்படி ஏவினர்; யானையை அவன்மீது ஏவும்படி கூறினர்; எந்த வகைக் தொல்லை கொடுக்கப் பட்டபோதும் வீரட்டானேசுவரரை நினைந்து திருப்பதி கங்கள் பாடி ஆனந்தமாகவிருந்தார். உண்மை தெளிந்த பல்லவ மன்னனும் நாவுக்கரசரிடம் வந்து வணங்கினான். சைவஞ் சார்ந்து சமணப் பள்ளிகளையும் பாழிகளையும்
47

Page 28
இடித்து அக்கல் கொண்டு குணபரவிச்சரம் என்னுஞ் சிவாலயத்தைக் கட்டுவித்தான்.
சம்பந்தரைப் பற்றிக் கேள்வியுற்ற நாவுக்கரசர் அவரைக்கான வேண்டிச் சீர்காழி சென்றவரைக் கெளனி யர்கோன் முன்னே வந்து காண்கின்றார். இருவரும் ஒரு வரை ஒருவர் வணங்கிப் பின் கோயில் சென்று வழிபடு கின்றனர். பின்னர் இருவருமாகச் சம்பந்தப் பெருமான் திருமடஞ் சென்று சிலநாள்கள் அங்கு தங்கினர். பின்பு பல தலங்களுக்குஞ் சென்று திங்களுரை வந்தடைகின்றார். அங்கு அப்பூதியடிகள் நாயனாரைத் தரிசிக்கின்றார். அவர் தம்மீது வைத்துள்ள அன்பை - பக்தியைக் கண்டு வியக் கின்றார். பாம்பு கடித்திறந்த அப்பூதியார் மகனை உயிர் பெற்றெழச் செய்கின்றார். இரண்டாவது முறையாக அப்பருஞ் சம்பந்தரும் திருப்புக லூரிற் சந்திக்கின்றனர். வெவ்வேறு தலங்கள் சென்ற இருவரும் மீண்டுந் திருப்புக லூர் வந்து சங்கமமாகின்றனர். சிறுத்தொண்ட நாயனார், திருநீலநக்க நாயனார், என்போருஞ் சேர்ந்து முருகநாய னார் மடத்தில் தங்கினர். இவர்கள் மூவரும் விடைபெற்றேக அப்பர் சம்பந்தர் என்போர் பிற திருப்பதிகளைத் தரிசிக்கச் சென்றனர். திருவிழிமிழலையிற் படிக்காசு பெற்றனர். திரும்றைக்காடு சென்று பூட்டியிருந்த ஆலயக் கதவு திறக்கவும் பின்னர் பூட்டவும் இருவரும் பதிகங்கள் பாடினர்.
சம்பந்தப் பெருமானும் அப்பரும் திருமறைக் காட்டில் நின்றபொழுது மங்கையர்க்கரசியார் அவர்களைத் தரிசிக்க விரும்பினார். குலச்சிறையார் மங்கையர்க்கரசியார் முன்னாகவே தூதுவர்களை அனுப்பினர். தூதுவர் செய்திகேட்ட அப்பர் சுவாமிகள் சம்பந்தரைப் போக வேண்டாமெனத் தடைசெய்கின்றார். ஆனால் சம்பந்தரோ
48

தமக்கு எதுவும் நடக்கமுடியாதென்று கூறிப் பாண்டிமா தேவியார் அழைப்பை ஏற்றுச்சென்றார். நாவுக்கரசர் திரு விழிமிழலைக்குப் புறப்பட்டார். வழியில் நீர் வேட்கை பசி என்பவற்றால் தாக்கப்பட்ட அப்பர் சுவாமிகள் சிவ சிந்தனையுடன் நடந்தார். சிவபெருமான் நீறுதாங்கிய அந்தணராய் வழியில் ஓரிடத்தில் சோலையும் குளமும் அமைத்து வழிகாட்டி நடப்பவர் போலப் பொதி சோற்றுடன் இருந்தனர். அப்பர்அவ்விடம் வந்தபோது பொதிசோற்றை அப்பருக்கு வழங்குகிறார். உணவு உண்டபின் இருவரும் திருப்பைஞ்ஞலி நோக்கி நடக்கின்றனர். திருப்பதியை அணுகியபோது அந்தணர் மறைந்துவிட்டார். திருப்பூந் துருத்தியில் அப்பரும் சம்பந்தரும் மீண்டும் சந்திக்கின் றனர். இறுதியில் இறைவன் திருவடிப்பேற்றை அடைகின்றனர்.
இவர் முத்தியடைந்த திருநாள் சித்திரைச் சதயம்
குலச்சிறை நாயனார்
* பெருநம்பி குலச்சிறை என்று சுந்தரமூர்த்தி சுவாமிக ளாற் போற்றப்பட்ட குலச்சிறையார் பாண்டி நாட்டின் மணமேற்குடியில் தோன்றியவர். சிவனடியாரின் குலநலன் எதையுங் கவனியாது அவர் பலராய் வரினும் அமுதூட்டும் பக்குவம் நிறைந்தவர். நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனின் முதலமைச்சராயப் இருந்தவர். மங்கையர்க்கரசியாரின் திருத்தொண்டிற்குப் பேருதவி புரிந்தவர். திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளின் பொன்னடியைப் போற்றியர்.
இவர் முத்தியடைந்த திருநாளர் ஆவணி அனுஷம்.
49

Page 29
பெருமிழலைக்குறும்ப நாயனார்
மிழலை நாட்டிலுள்ள மிழலைப் பதியில் தோன்றியவர் பெருமிழலைக்குறும்ப நாயனார். பிறந்த ஊர்காரணமாக மிழலைக்குறும்பர் எனப்பட்டார். சிவனடியார் குறிப்பறிந்து தொண்டு செய்பவர். சிவனடியார்களை உபசரித்து அமுது செய்விப்பது அவர் தொண்டு. சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். வடகைலை வாழ்வைச் சுந்தரருக்குச் சிவன் அளிக்கப் போகின்றார் என்பதை யோகக் காட்சியாற் கண்டு யோகத்தால் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு முன்னாகவே வடகைலையை அடைந்தவர்.
இவர் முத்தியடைந்த திருநாளர் ஆடிச் சித்திரை.
காரைக்காலம்மையார்
காரைக்கால் என்னுமிடத்தே வணிகர் குலத்தில் தனதத்தன் என்பவன் மகளாய்ப் பிறந்தவர் காரைக்காலம் மையார். அவர் இளமைக்காலப் பெயர் புனிதவதியார் என்பது. பருவம் எய்தியபோது நாகபட்டணத்து நிதிபதி மகன் பரமதத்தனுக்குத் திருமணம் செய்து வைக்கப் பட்டார். சிவபக்தி மிகுந்தவரான புனிதவதியார் நாளும் சிவவழிபாட்டில் தலைநின்றார். மனைக்கு வரும் சிவநேயச் செல்வர்களுக்கு நாளும் அமுதளிக்கத் தவறமாட்டார். ஒருநாள் பரமதத்தனைக் காண வந்தோர் அவனுக்கு இரண்டு மாம்பழங்களைக் கொடுத்தனர். அவன் அவற்றை மனைவியிடங் கொடுத்தான். அம்மையார் அவற்றை வாங்கி வைத்தார். அப்பொழுது அங்கு களைத்து வந்த ஒரு சிவனடியாருக்கு உணவு கொடுக்கத் தொடங்கியவர்
S()

கறி எதுவும் இல்லாமையால் மாம்பழத்தில் ஒன்றை வெட்டிக்கொடுத்தார். களிப்புடன் உண்ட அடியவர் அம்மை யைப் பாராட்டிச் சென்றார். நண்பகல் பரமதத்தன் உணவ ருந்திய போது மீதமிருந்த பழத்தை அம்மை வெட்டிக் கொடுத்தாள். அதன்சுவையில் ஈடுபாடுகொண்ட பரமதத்தன் மற்றையதையும் வெட்டிக்கொணருமாறு பணித்தான். செய்வதறியாத அம்மை உள்ளே சென்று இறைவனை வேண்டுகின்றாள். பழமொன்று கிடைக்கிறது. அதை உண்ட பரமதத்தன் இந்தப் பழம் எப்படிக் கிடைத்தது என்று வினவுகின்றான். அவள் நடந்தவற்றையெல்லாம் சொல்லுகிறாள். அப்படியானால் உன் கடவுளிடம் இது போன்று இன்னொன்று பெற்றுத்தா என்கின்றான். அவள் தன்னைக் காப்பாற்றும்படி இறைவனை வேண்டுகின்றாள். பின்னும் ஒன்று கிடைக்கின்றது. இது பரமதத்தனுக்குப் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கிவிட்டது. இவள் தெய்வ மாகத்தான் இருக்கவேண்டும் என்று துணிந்து அம்மை யிடத்திருந்தும் விலகி நடந்துகொண்டிருக்கின்றான்.
சிலநாள்களின் பின் வியாபாரத்திற்காகக் கடல்மீது சென்றுவருவேன் என்று புறப்பட்டவன் பாண்டி நாட்டின் மற்றோர் புறஞ்சென்று வேறோர் பெண்ணைத் திருமணஞ் செய்துகொண்டு வாழ்ந்திருந்தான். பிறந்த பெண் குழந் தைக்குத் தன் முதன் மனைவியின் பெயரைச் சூட்டினான். பரமதத்தன் காரைக்காலில் உள்ளான் என்பதை அறிந்த புனிதவதியார் அங்கு சென்றார். அறிந்த பரமதத்தன் தானே தன் மனைவி குழந்தையுடன் விரைந்து அவளைக் கண்டு வணங்குகின்றான். உம்முடைய திருநாமத்தையே குழந்தைக்குச் சூட்டியுள்ளேன் என்றும் சொல்கின்றான். பின்னும் அம்மையைத் தொழுகின்றான். இக்காட்சி அம்மைக்கு அச்சத்தை உண்டாக்கியது. அவள் ஒதுங்கி நின்றாள். அவள் தெய்வத்தகைமையை அவன் விளக்கம்
51

Page 30
செய்தான்.
புனிதவதியார் சிவனுடன் ஒன்றி அவன் திருவடி நினை வுடன் நின்று தனக்குப் பேய் வடிவு கிடைக்கவேண்டுமென்று வேண்டுகின்றார். திருவருள் துணையால் வேண்டுகோள் கைகூடியது. பேய்வடிவுபெற்ற அம்மையார் அற்புதத் திருவந்தாதி திருவிரட்டைமணிமாலை முதலிய பிரபந் தங்களைப் பாடினார்.
திருக்கைலையைக் காணுதல் வேண்டும் என்னும் அவாகாரணமாக வேகமாகச் செல்கிறார். முடியாமையால் தலையால் நடக்கின்றார். சிவன் அவரை அம்மையே என்று அழைத்தார். அம்மையும் அப்பா என்று அழைத்து ஆண்டவன் அடியில் வீழ்கின்றாள். உனக்கு வேண்டுவது என்ன என்று இறைவன் கேட்கின்றான் பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும். ஐயர் நடமிடும்போது அந்த அடியின் கீழ் யான் இருக்கவேண்டும் என்கின்றார் அம்மையார். எம் பெருமான் திருவருளைப் பெற்ற அம்மையார் ஆண்டவன் திருவடிக்கீழ் அவன் சிவானந்தத்தை என்றும் நுகரும் வாய்ப்பைப் பெற்றார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் பங்குனிச் சவாதி
அப்பூதியடிகள்
திங்களுரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் அப்பூதியடிகள். சிவபக்தி சிவனடியார் பத்தியில் சிறப்பாக நின்று இல்லறவாழ்வை மேற்கொண்டவர். திருநாவுக்கரசு சுவாமிகள்டம் பேரன்பு பூண்டவர். அதனால் தான் நிறுவிய
2
5

தண்ணிர்ப்பந்தல் அறச்சாலைகள் முதலியவற்றுக்கெல்லாம் திருநாவுக்கரசு எனப் பெயர் சூட்டி இருந்தார். அவ்வழியே வந்த திருநாவுக்கரசர் இந்தப் பெயர் சூட்டலைப் பார்த்து இதுயார் பெயர்? யாரிதை வைத்தவர் என்பனவாய வினாக் களை அங்கு நின்றவர்களிடம் வினவினார். அவர்கள் அப்பூதியடிகள்தான் இந்தப் பெயரைச் சூட்டியவர். அவர் வீடு அண்மையிலேதான் இருக்கிறது என்று சொல்லி வழிப்படுத்தினார்கள். அப்பூதியடிகள் வீட்டையடைந்ததும் யாரோ ஒரு சிவனடியார் வந்துள்ளார் என்ற மகிழ்வுடன் அடிகள் வரவேற்று உபசரித்தார். வந்தவர் உங்கள் அறப்பணிக்கு உங்கள் பெயரை வைக்காது யாரோ ஒருவர் பெயரைச் சூட்டியுள்ளிர்களே! ஏன்? என்று கேட்டார். அப்பூதியடிகள் ஒருகணம் நிலைமறந்தார். பின்னர் தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டு திருத்தொண்டாலே இம்மையிலும் பிழைக்கலாம் என்று செயலிற் காட்டிய எங்கள் திருநாவுக்கரசரையா வேறொரு வர் என்றீர்கள். எவ்வளவு பொருத்தமற்ற சொல்! கருங் கல்லையே தெப்பமாக மிதக்கச் செய்த எங்கள் திரு நாவுக்கரசரை வேறொருவர் என்று சொன்ன நீர் யார்? எங்கே இருப்பவன்? என்று கேட்கின்றார் அப்பூதியடிகள்.
அப்பூதியடிகளின் உணர்வை உணர்ந்த நாவுக்கரசர் ‘சூலைநோய் தந்து ஆளப்பெற்று தெளிவுற்ற அந்தப் பாவி யான்தான் என்கின்றார்கள். அப்பூதியடிகள் ஆனந்த மேலிட்டினால் அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்குகின்றார். வீட்டிலுள்ளவர்கள் எல்லோரையும் அழைத்து வணங்கச் செய்கின்றார். கைகள் தலைமீது குவிந்தன. கண்ணிர் ஆறாகப் பெருகுகின்றது. நாவுக்கரசரை அமுது செய்து செல்லவேண்டுமென உள்ளே அழைத்துச் செல்கினறனர்.
S3

Page 31
மூத்தமகன் வாழையிலை கொண்டுவரத் தோட்டம் சென்று வாழைக்குருத்திற் கைவைத்த போது பாம்பினாற் கடியுனன் டான். ஒடோடிவந்து வாழைக் குருத்திலையை அன்னை யிடங் கொடுத்துவிட்டு மயங்கி வீழ்ந்து இறக்கின்றான். சிவனடியாருக்கு உணவு கொடுக்க முடியாது போகுமே என்று துன்பப்பட்ட பெற்றோர் நடந்தவற்றை உணர்ந்து பிரேதத்தை மறைத்து வைத்துவிட்டு நாவுக்கரசரை அமுதுசெய்யுமாறு அழைத்தனர். அவர் கைகால் கழுவி, விபூதியணிந்து மற்றையோருக்கும் விபூதி அளிக்கின்றார். அந்தவேளை அந்த இடத்தில்லாத மூத்த மகனை அழைக்கும்படி வேண்டுகின்றார். ’இப்போது அவன் இங்கு உதவான்’ என்று தந்தையின் பதில் கிடைக்கின்றது. எங்கே? என்ன நடந்தது என்று விபரமாகச் சொல்லும்படி கேட்கின்றார் சிவனடியார். தந்தையார் எதையும் மறைக்க முடியாத நிலையில் உள்ளதை உள்ளவாறே சொல்லி விடுகின்றார். செய்திகளை அறிந்ததும் நன்று உம் செயல்' என்று சொல்லிப் பிரேதத்தைக் கண்டு ஒன்று கொலாம் என்று தொடங்கும் திருப்பதிகத்தை படிக்கின்றார். மூத்த திருநாவுக்கரசு உயிர்பெற்றுஎழுகின்றார். எழுந்தவர் சுவாமிகளை வணங்க அவர் திருநீறு கொடுக்கின்றார். எல்லோரும் இருந்து அமுது செய்தனர். நாவுக்கரசர் சிலநாள்கள் அங்கு தங்கி மற்றைத் தலங்களைநோக்கிப் புறப்பட்டார். தமக்குள்ள எல்லாம் நாவுக்கரசு சுவாமி களுடையவையே என்று அவருடைமையாக்கி வாழ்ந்த அப்பூதியடிகள் இறுதியில் தில்லைக் கூத்தன் திருவடிகளில் இன்புற்றார்கள்.
இவர் முத்தியடைந்த திருநாளர் தைச் சதயம்.
5
4

திருநீலநக்கநாயனார்
சோழநாட்டில் சாத்தமங்கை என்னும் பதியில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் திருநீலநக்கநாயனார். சிவனுக்கும் சிவனடியார்க்கும் வேண்டியன செய்தல் அவர் திருத்தொண்டு. அங்குள்ள அயவந்தி என்னுந் திருக் கோயிலிலுள்ள இறைவனை வழிபட ஒரு திருவாதிரைப் போதில் கணவன் மனைவியர் சென்றுள்ளனர். அவர்கள் வழிபாடு நடந்துகொண்டிருந்த போது ஒரு சிலந்தி சிவலிங்கப் பெருமான் மீது விழுந்தது. அதை அவதானித்த திருநீலநக்கர் மனைவி வாயினால் ஊதி அதை விலக்கி விட்டார். இதை அவதானித்த திருநீல நக்கருக்கு மனது பொறுக்கவில்லை 'நீ பொருத்தமற்ற வகையில் நடந்து கொண்டாய். ஊதியிருக்கக்கூடாது. அடாத செயல் செய்த உன்னைத் துறந்தேன். என்னைவிட்டு நீங்கி இருப்பாயாக' என்று சொல்லி பூசையை நிறைவு செய்து நடந்துவிட்டார். மனைவி கோயிலிலேயே நின்றார்.
அன்று இரவு அயவந்திநாதர் திருநீலநக்கர் கனவிற் தோன்றி 'உன் மனைவி அன்போடுதானே ஊதினாள். அந்த இடந்தான் கொப்புளம் இல்லாதிருக்கின்றது. மற்றை இடங்களிற் கொப்புளங் காணப்படுகிறதே என்று சொன்னார். விடிந்ததும் நாயனார் கோயிலுக்குச் சென்று மகிழ்ச்சியோடு மனைவியை அழைத்து வந்து வழக்கம் போலத் திருத்தொண்டு செய்தார்.
திருஞான சம்பந்தரிடம் மிகுந்த அன்புடையவரானார். அவரைக் கண்டு தொழவிரும்பினார். அந்தவேளை சம்பந்தப் பெருமான் அயவந்திநாதரை வணங்க வருகிறார் என்று தெரியவந்தது. திருநீலகண்ட யாழ்ப்பாணரும்
55

Page 32
உடனாக வருகின்றார் என்று தெரியவந்தது. திருநீலநக்கர் தமது ஊரை அலங்கரித்து அவர்களை வரவேற்கின்றார். அன்று அங்கு தங்கினார்கள். திருஞானசம்பந்தர் சென்ற பின்னரும் அவர் நினைவாகவே இருந்தார். இறுதியாகச் சம்பந்தப் பெருமானின் திருமணத்திற்குச் சென்று சேவித்துச் சிவபிரான் திருவடி சேர்ந்தார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் வைகாசி மூலம்,
நமிநந்தியடிகள்
சோழ நாட்டில் ஏமப்பேறுாரில் அந்தணர் குடியில் தோன்றியவர். திருநீற்றில் இனிய அன்பு கொண்டவர். திருவாரூர் சென்று சுவாமி தரிசனஞ் செய்து வந்தவர். ஒருநாள் புற்றிடங்கொண்ட பெருமானிடம் கொண்ட அன்பினால் பெருமானைப் பூஜித்து அருகே உள்ள அரனெறி என்னும் ஆலயத்தை அடைந்து திருத்தொண்டு செய்து தீபமேற்ற விரும்பினார். அயலிலுள்ள ஒரு வீட்டில் தீபம்ஏற்ற எண்ணெய் தரும்படி கேட்டபோது தண்ணிரை ஊற்றி ஏற்றும்படி சமணராகிய அவர்கள் சொல்லினர். மனத்துன்பத்தோடு ஆலயஞ் சென்ற போது அசரீரியாகத் தண்ணிரை விட்டுத் தீபத்தை ஏற்றும்படி பணிப்புக் கிடைத்தது. தண்ணிர் விட்டு அடிகள் தீபமேற்றினார். அது பிரகாசமாக எரிந்தது. கோயில் முழுவதும் தீபம் ஏற்றப்பட்டது. சமணர்கள் கண்ணுற்றனர். பங்குனி உத்தரத் திருவிழாவின் போது சுவாமியுடன் திருமணலிக்குச் சென்ற நாயனார் திரும்பிவந்து வீட்டுள்ளே செல்லாது வெளியே உறங்கினார். பல சாதியாருடனும் திருமணலிக்குப் போனதால் வீட்டுள் வரமுடியவில்லை. பிராயச்சித்தம்
56

செய்யவேண்டும் என்று மனைவிக்குச் சொன்னார். இறைவன் அவர் கனவில் தோன்றித் திருவாரூரில் தோன்றியவர்கள் எல்லோரும் கணங்கள் என்றும் வேறுபாடு பார்க்கவேண்டியதில்லை என்றும் அறிவுறுத்தினார். ஆலயஞ் சென்று எல்லோரும் கணங்களாக விளங்குதல் கண்டு தெளிந்தார். அடிகள் முறைப்படி தொண்டுகள் செய்து விதிவிடங்கப் பெருமான் திருவடி நீழலை அடைந்தார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் வைகாசிப் பூசம்,
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
சோழநாட்டில் சீர்காழிப் பதியில் சிவபாதவிருதயர்பகவதியார் என்னும் அந்தணத் தம்பதியர்க்குப் புதல்வ ராகத் தோன்றினார். பெளத்தம் சமணம் என்னும் மதங்கள் ஓங்கியிருந்த காலம். சைவம் நலிந்திருந்த வேளை அந் நன்னெறியை வளர்க்க என்று பிள்ளையார் தோன்றினார்.
சிவபாதவிருதயர் நீராடச் சென்றபோது மூன்று வயதினரான சம்பந்தரும் உடன் சென்றார். குழந்தையைக் குளக்கரையில் இருத்திவிட்டு அப்பா நீரில் இறங்கி நீராடினார். தலை தண்ணிருள் மறைந்தபோது குழந்தை தோணியப்பர் ஆலய முடியைப் பார்த்து அம்மே அப்பா என்று அழுகின்றது. இறைவன் உமையம்மையுடன் அங்கு தோன்றினார். திருமுலைப்பாலைப் பிள்ளைக்குக் கொடுக்கும்படி அம்மையைப் பணிக்கின்றார். குழந்தை அழுகையை ஒழிக்கின்றது. அம்மை அப்பர் மறை கின்றனர். நீராடி நிறைவாகிய சிவபாதவிருதயர் அங்கு
57

Page 33
வருகிறார். குழந்தையின் வாயிலிருந்து பால் ஒழுகுதலைக் கண்டு உனக்குப் பால் தந்தது யார் என்று அதட்டிக் கேட்கின்றார். குழந்தை ஆகாயத்தைச் சுட்டிக் காட்டித் *தோடுடைய செவியன்’ என்று தொடங்கும் தேவாரத்தைப் பாடுகின்றது. வியப்புற்ற தந்தை பிள்ளையாரைக் கொண்டு புறப்படுகின்றார்.
திருக்கோலக்கா என்னும் பதியில் தாள ஒத்தறுத்து மடையில்வாளை என்று படித்தபோது திருவைந்தெழுத்துப் பொறிக்கப்பட்ட தாளம் அவர் கையை அடைந்தது. சம்பந் தர் பெருமையைக் கேள்வியுற்ற திருநீலகண்ட யாழ்ப் பாணர் தம்மனைவி சூளாமணியுடன் காழிப்பிள்ளையைத் தரிசிக்க வருகின்றார். செய்தியை அறிந்த சம்பந்தர் அவர்களை எதிர்கொண்டு வரவேற்கின்றார்கள். திருஅரத் துறை என்னும் பதியில் முத்துச் சிவிகை, முத்துச் சின்னம் முத்துக்குடை என்பன இறையருளாற் கிடைக்கின்றன.
உபநயனப் பருவத்தை எய்திய பிள்ளையாரை உபநயனஞ் செய்யப் பணித்தனர். பிள்ளையார் மந்திரங்களை ஒதாதுணர்ந்தவர் அவற்றுக்கான விளக்கங்களையும் கொடுத்தார். எல்லா மந்திரங்களுக்கும் தாயகமானது பஞ்சாட்சரம் என்பதை உணர்த்த அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே என்று பஞ்சாட்சரப்பதிக மூலம் உணர்த்தினார்.
திருநாவுக்கரசர் ஆளுடையபிள்ளையாரைச் சீர்காழி வந்து சந்தித்தார். திருப்பாச்சிலாச்சிரமத்தில் கொல்லி மழவன் புதல்வியின் முயலகன் என்னும் பொல்லாத நோயைத் துணிவளர் திங்கள்’ என்னும் தேவாரம் பாடிக் குணமாக்கினார்.
58

திருமருகற் பதியில் உள்ளதோர் மடத்தில் வணிகப் பெண்ணொருத்தி தன் விருப்பத்திற்குரியவனுடன் உடன் போக்கில் வந்து மடத்தில் தங்கியிருந்தவேளை பாம்பு தீண்டி இறந்துவிட்டான். அவள் செய்வதறியாது அழுது புலம்பினாள். அழுகை ஒலியைக் கேட்ட காழியர்கோன் நடந்த சம்பவத்தை விசாரித்தறிந்து அவள் துயர் தீர்க்க வேண்டிச் சடையாய் எனுமால்' என்ற பதிகத்தைப் பாடுகின்றார். அவன் உயிர்பெற்றெழுகின்றான். இருவரையும் சேர்த்து வைக்கின்றார் பிள்ளையார். அவ்விடம் வந்த சிறுத்தொண்டநாயனார் வேண்டுகோளுக்குச் சம்மதித்து அவர் பதியாகிய திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளு கின்றார். திருப்புகலூரில் முருகநாயனாரின் விருந்தினராய் இருந்தபோது திருநாவுக்கரசு சுவாமிகள் அங்கு சென்று பிள்ளையைச் சந்தித்தார்கள். நாவுக்கரசரும் முருகநாய னாரும் திருப்புகலூரில் மீண்டும் ஆளுடைய பிள்ளையைத் தரிசிக்கின்றனர்.
திருவிழிமிழலையில் மழை பொய்த்தமையால் பஞ்சம் நிலவியது. அதனைப் போக்க இறைவன் நாவுக்கரசர்க்கும் காழியர் கோனுக்கும் படிக்காசு வழங்கினார். அந்தப் படிக் காசு கொண்டு மக்கள் வறுமையை ஓரளவு போக்கினர்.
நாவுக்கரசரும் சம்பந்தரும் திருமறைக்காடு சென்றனர். அங்கே இறைவனைத் தரிசிக்க முடியாதபடி கதவு வேதங்களாற் பூட்டப்பட்டிருந்தது. சம்பந்தர் திருநாவுக் கரசரை நோக்கி நேர்வழியாகவே நாங்கள் இறைவனைத் தரிசிக்க வேண்டும், எனவே இக்கதவு திறக்கும்படியாக நீங்கள் பாடுங்கள் என்றார். ‘பண்ணினேர் மொழி என்று தொடங்கும் பதிகத்துப் பத்துப் பாடல்களும் படிக்கப்பட்டன.
59

Page 34
ஆனால் கதவு திறக்கபப்படவில்லை. இரக்கமொன்றில்லீர் என்னும் திருக்கடைக்காப்புப் பாடல் பாடப்பட்டபின்தான் கதவுகள் திறந்துகொண்டன. வழிபாடு முடிந்து வெளியே வந்ததும் கதவை மூடிக்கொள்ளும்படியாகப் " பாடும்படி சம்பந்தரை நாவுக்கரசர் கேட்டுக்கொண்டார். ‘சதுரம்மறை தான்’ என்று தொடங்கும் பதிகத்தைச் சம்பந்தர் பாடத் தொடங்கினார். உடனே கதவும் அடைத்துக் கொண்டது. சம்பந்தர் பதிகத்தைத் தொடர்ந்து நிறைவு செய்தார்.
சம்பந்தர் திருமறைக் காட்டில் நிற்கும் செய்தி பாண்டி நாட்டிற்கு எட்டுகின்றது. உடனே பாண்டிமாதேவி மங்கை யர்க்கரசியாரும் முதலமைச்சர் குலச்சிறையாரும், பாண்டி நாட்டிற்கு எழுந்தருளும்படி சம்பந்தருக்குத் தூது அனுப்பு கின்றனர். அறிவுறுத்தல் கிடைத்ததும் சம்பந்தர் சம்மதிக் கின்றார். உங்களுக்கு நாளுங் கோளுஞ் சரியில்லை, ஆகவே போகவேண்டாம் எனத் தடைசெய்கின்றார் நாவுக்க ரசர். சம்பந்தர் வேயுறுதோழி பங்கன் என்னுந் தேவாரத் திருபதிகத்தைப் பாடிக் கோள்கள் தம்மை ஒன்றுஞ் செய்ய முடியாதென்பதை உறுதிசெய்து புறப்படுகின்றார். அங்கே பாண்டிமாதேவியார் குலச்சிறையார் ஏனைய பெரியார்கள் என்போரால் வரவேற்கப்படுகின்றார். திருவாலவாய் எங்கே என்று கேட்ட பிள்ளைக்கு இங்கே தெரிகிறதே கோபுரம் என்று காட்டினர் அடியர். உடனே ஞானசம்பந்த வள்ளலார் பூமியில் வீழ்ந்து வணங்கி மங்கையர்க்கரசி என்றெடுத்துப் பதிகம் பாடினார். அரசியாரையும் குலச்சிறையாரையும் மிகப் புகழ்ந்து பாடியுள்ளார். ஆலவாயாவதும் இதுவே என்று சிறப்பித்துங் காட்டியுள்ளார். உள்ளே சென்று வழிபட்ட பின்ளையார் வெளியே வந்தபோது அரசியாரும் அறிமுகஞ் செய்யப்பட்டார். எல்லோரும் விடை பெற்றுச் செல்லப் பிள்ளையார் ஒரு மடத்தில் தங்கினார்.
6()

வஞ்சனை மூலம் சம்பந்தரைத் திருப்பி அனுப்ப முயன்ற சமணர்கள் அவர்தங்கியிருந்த மடத்திற்குத் தீயிட்டனர். சம்பந்தர் பையவேசென்று பாண்டியற்காகவே என்று பாடியருளினார். மன்னன் வெப்பு நோயால் தாக்கப் பட்டான். அதை மாற்றச் சமணரால் இயலாது போகவே சம்பந்தர் அழைக்கப்பட்டார். பின்னும் சமணர்கள் விட்ட பாடில்லை. சரி, நாங்கள் இடப்பக்க நோயைத் தீர்ப்போம். சம்பந்தர் வலப்புற நோயைப் போக்கட்டும் என்று சொல்லி அவர்கள் மயிற்பீலியால் தடவினார்கள். மந்திரம் சொன் னார்கள். எதுவும் சரிவரவில்லை. சம்பந்தர் திருநீறிட்டு மந்திரமாவது நீறு என்று பாடினார். வலப்புற நோய் குணமாயது, இடப்புறம் மேலும் கூடியது. சமணர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. மன்னன் வேண்டுகோட்படி சம்பந்தரே இடதுபக்க நோயையும் அகற்றினார். பிள்ளை யாரின் திறமையைத் தேர்ந்த சமணர்கள் வாதஞ் செய்து இவரை வெற்றிகொள்ள முடியாது எனக் கண்டனர். அனல்வாதம் புனல்வாதம் செய்வோம் என்றனர். எல்லா வாதங்களிலும் சமனர்கள் தோல்வி கண்டனர். ஆரம்பத் தில் அவர்கள் குறிப்பிட்டபடி தோற்றவர்களாகிய அவர்க ளைக் கழுவேற்றினர். பிள்ளையார் மன்னனுக்கு விபூதி கொடுத்தார். பாண்டிய நாடு திருநீற்றால் ஒளிர்ந்தது.
பெளத்தர்கள் நிறைந்த போதிமங்கை என்னும் பதியைச் சேர்ந்து அங்கு பெளத்தர்களுடன் வாதிட்டு வென்று திருக்கடவூரையடைந்தார். பின்னர் திருப்பூந்துருத் தியில் அப்பரைச் சந்திக்கிறார்கள். தொடர்ந்து திருவோத் தூர் சென்றார். அங்கு ஆண் பனைகளைக் காய்க்கச் செய்து பெண்பனைகளாக்கினார். திருமயிலாப்பூரில் சிவநேசர் மகள் பூம்பாவையைப் பாம்பு தீண்டியது. இறந்தவரின் என்பு சாம்பர் என்பவற்றைச் சேமித்து
61

Page 35
வைத்தருந்தனர். திருமயிலாப்பூர் வந்த சம்பந்தரிடம் செய்தியைச் சொன்னார்கள். அந்த என்பையும் சாம்பரை யும் கொண்டுவரச் செய்து தேவாரப் பதிகம் பாடினார்கள். பூம்பாவை உயிர் பெற்றாள். அங்கிருந்து பல தலங்க ளுக்குச் சென்று தில்லையை அடைந்தார் காழியர்கோன். பிள்ளைக்குத் திருமணஞ் செய்து வைக்கத் தந்தை விரும் பினார். முயற்சிகள் எல்லாம் நடந்தன. திருநல்லூர் நம்பாண்டார்நம்பி மகள்தான் மணமகள் என்றும் நிச்ச யிக்கப்பட்டது. பிள்ளையார் பக்கலில் மணப்பெண் உரிய இருத்தப்பட்டார். திருநீலநக்க நாயனார் கிரியை களைச் செய்தார். துணைவியின் கையைப் பற்றியபடியே இறைதியானத்துடன் அங்கு தோன்றிய சோதியுள் சங்கம மாகி இறைவனுடன் கலந்தனர். அந்தத் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் அச் சோதியுடனாகி முத்திய டைந்தனர்.
இவர் முத்தியடைந்த திருநாளர் வைகாசி மூலம்,
ஏயர்கோண்கலிக்காம நாயனார்
சோழநாட்டில் திருப்பெருமங்கலம் என்னும் பதியில் வேளாள குடியில் ஏயர்மரபில் தோன்றியவர் கலிக்காம நாயனார். பிறப்புக் காரணமாக ஏயர்கோன் கலிக்காம நாயனார் எனப்பட்டார். சோழ மன்னனின் சேனாதிபதியாய் இருந்தவர் இவர். இது அவர் குடிப் பரம்பரைத் தொழில். திரும்புன்கூருடன் நெருங்கிய தொடர்புடைய கலிக்காமர் அங்கு திருப்பணி வேலைகள் பல செய்தவர்.
நடு நிசியில் எம்பெருமானைத் தூது அனுப்பிய
62

வன்தொண்டர்பால் மிகுந்த கோபமுடையவராக இருந்தார் கலிக்காமர். இருவரையும் ஒற்றுமையாக்கக் கலிக்காம ருக்குச் சூலை நோயை வருவித்தான் இறைவன். வன் தொண்டர் தான் அதை மாற்றக் கூடியவர் என்றும் அறிவிக்கப்பட்டது. வன்தொண்டர் கலிக்காமரிடம் சென்று அவரது நோயைக் குணமாக்கக் கலிக்காமர் அங்கீகரியாத நிலையில் சுந்தரர் தனதுயிரைப் போக்கமுற்படுகின்றார். உடனே கலிக் காமர் அச்செயலைத் தடைசெய்து விடுகின்றார். இருவரும் ஒருவரோடொருவர் அன்புள்ளவர் ஆகின்றனர். சில நாள்கள் சேர்ந்து வாழ்ந்தார்கள். பின் கலிக்காமர் வன்தொண்டரின் அங்கீகாரம் பெற்றுத் தம்பதி சென்று இறைவனை வழிபட்டிருந்து அவன் திருவடிகளைச் சேர்கின்றார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் ஆனி ரேவதி
திருமூல நாயனார்
திருக்கைலையில் நந்தியெம்பெருமானின் திருவருள் பெற்ற யோகியருள் ஒருவர் அகத்தியருடன் சில நாள்கள் தங்கவேண்டும் என்னும் அவாவுடன் திருக்கைலை யிலிருந்து வருகிறார். ஓரிடத்தில் ஒருவர் இறந்துகிடக்கின் றார். பசுக்கள் சுற்றிவர நின்று அலறுகின்றன. இறந்தவர் அந்தப் பசுக்களை மேய்ப்பவர் என்று உணர்ந்து கொள் கின்றனர். கூடுவிட்டுக் கூடுபாயும் வல்லமையை உடைய அந்தச் சிவயோகியார் தன் உடலை ஒரு இடத்திலே பாதுகாப்பாக வைத்துவிட்டு இறந்து கிடந்த மூலன் உடலுள் உயிரைச் சேர்த்துவிடுகின்றார். மூலன் உயிர் பெற்றான். பசுக்கள் ஆனந்தமடைந்தன. மூலன் உடலுட
63

Page 36
னாகிய சிவயோகியார் உடலைக் காணமுடியவில்லை. எனவே சிவயோகியார் மூலனாகவே இருக்க வேண்டிய தாயிற்று. திருமூலர் திருவாவடுதுறையை அடைந்து ஆலயத்தை வணங்கி மேற்கிலுள்ள அரச மரத்தடியில் மூவாயிரம் ஆண்டுகள் இருந்து ஆண்டுக்கு ஒன்றாக மூவாயிரம் திருமந்திரங்கள் செய்தார். அத்திருப்பணி நிறைவாகியதும் திருக்கயிலையை அடைந்தார்.
இவர் முத்தரிபடைந்த தருநாளர் ஐப்பசி அச்சுவினரி
தண்டியடிகள் நாயனார்
சோழ நாட்டில் திருவாரூரிற் பிறந்தவர் தண்டியடிகள் நாயனார். அவர் பிறவிக் குருடர். சிருவாரூர்க்கோயிலை வலம் வருதல், ஐந்தெழுத்தை ஒதுதல் என்பன அவர் பணிகள். கோவிலின் மேற்குப் புறத்தில் ஒரு குளம், அதைச் சுற்றிவரச் சமண மடங்கள். அவை காரணமாகச் சுருங்கிய குளத்தை விரிவுபடுத்தத் தண்டிகள் ஆரம்பித் தார். குளத்தின் நடுவில் ஒரு தடி, கரையில் இன்னொரு தடி நடப்பட்டது. இரண்டையும் இணைத்து ஒரு கயிறு கட்டப்பட்டது. கயிற்றைத் தடவித் தடவியே மண்ணை வெட்டிக் கொண்டுவந்து கொட்டுவார். சமணர்கள் இந்தப் பணியைத் தடைசெய்ய முயன்றார்கள். தண்டியடிகள் விடுவதாக இல்லை. உடனே சமணர்கள் அவர் மண்வெட்டி கூடை என்பவற்றையும் நடுதறி கயிறு என்பவற்றையும் அப்புறப்படுத்தினர். தண்டியடிகள் இறைவன் முன் சென்று துன்பத்தைத் தெரிவித்து அங்கேயே இருந்துவிட்டார். இறைவன் தண்டியடிகள் கனவில் தோன்றி எல்லாம் விரும்பியவாறே நிறைவெய்துமென்று சொல்லி மறைந்தார்.
64

மன்னன கனவில் தோன்றி செய்ய வேண்டியதைத் தெரிவித்தார். மன்னன் நேரிற் சென்று நடந்தவற்றைப் பார்வையிட்டான். தண்டியடிகள் இறைவனை வேண்டியபடி குளத்தில் மூழ்கி எழுந்தார். சமணர்கள் கண்கள் மறைந்தன. மன்னன் பணிப்புடன் குளம் விசாலமாகியது. தண்டியடிகள் தொண்டுகளுடனாகி இறைவன் தாள்களை அடைந்தார்.
இவர் முத்தியடைந்த திருநாள் பங்குனரிச் சதயம்,
மூர்க்க நாயனார்
தொண்டை நாட்டில் திருவேற்காடு என்னும் பதியில் வேளாளர் மரபில் தோன்றியவர் மூர்க்க நாயனார். சிவனடியார்களை அமுது செய்வித்தபின் உண்பது அவர் நியமம். அடியவர்கள் விரும்புவதையுங் கொடுக்க முயல்வார். வருபவர்கள் கூட்டம் நாளும் பெருகியதால் நாயனாரிட்ம் இருந்தவையெல்லாம் தீர்ந்தன. நாயனார் நினைந்து நினைந்து வருந்தினார்.
சூதாடுவதில் வல்லவரான நாயனார் பல இடங்களுக் குஞ் சென்று சூதாடிப் பணம் திரட்டிவந்து பணியைத் தொடர்ந்தார். சூதாட்டத்தில் முரண்படுவோரைக் குத்திக் கொன்றுவிடுவார். அதனால் மூர்க்கர் என்னும் திருநாமமும் பெற்றார். இப்படியான வாழ்க்கை மூலம் திருப்பணி செய்து இறைவன் திருவடிகளை அடைந்தார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் கார்த்திகை மூலம்
65

Page 37
சோமாசிமாற நாயனார்
சோழநாட்டிலுள்ள திருவம்பர் என்னும் பதியில் வேதியர் குலத்தில் பிறந்தவர். சிவனடியார்களை அமுது செய்விப்பவர். வேதவேள்வி செய்பவர். இவர் திருவாரூரை அடைந்து வன்தொண்டர் பால் அன்பு பூண்டு புலன்களை வென்று இறைவன் திருவடிகளைச் சார்ந்தவர்.
இவர் முத்தியடைந்த திருநாளர் வைகாசி ஆயிலியம்.
சாக்கிய நாயனார்
திருச்சங்கமங்கையிலே வேளாண்குடியிற் பிறந்தவர் சாக்கிய நாயனார். உயிர்களிடத்த இரக்கங்காட்டுபவரா கிய சாக்கியர் பிறப்பிறப்புத் துன்பத்தினின்றும் விடுபடுவ தெப்படி என்னும் விசாரத்துடனானவர். இதற்காக மதக் கொள்கைகளை ஆய்வுசெய்து பெளத்த மதத்திலும் சேர்ந்து கொண்டவர். பின்னும் பின்னும் ஆய்வு தொடர்ந்த தால் சிவநெறிதான் பொருத்மானதெனக் கண்டு சிவநெறி யில் நிற்கத் தொடங்கியவர். பெளத்த வேடத்துடனேயே சிவ வழிபாட்டு நெறியில் நின்றார். சிவலிங்கத்தைக் கண்டு வணங்கிய பின்னரே சாப்பிடுவார். அதை உறுதியாகப் பின்பற்றியவர். ஒருநாள் வழியிலே ஒரு வெளியிலே சிவ லிங்கம் ஒன்றைக் கண்டார். கண்டதும் செயலற்று வழிபட்டார். அருகே ஒருசெங்கட்டி கிடைத்தது. அதை எடுத்து சிவலிங்கப் பெருமான் மீது எறிந்து வழிபட்டார். நாளும்அப்படியே கல்லால் எறிந்து வழிபட்டார். ஒருநாள் மறந்து உண்ண உணவை எடுத்துவிட்டார். திடீரென நினைவு வந்தது. உணவை வைத்துவிட்டு ஓடினார். ஒரு
66

கல்லைக் கண்டெடுத்தார். எறிய என்று பார்த்தார். அங்கு சிவபெருமான் உமா தேவியாருடன் காட்சி கொடுத்துச் சாக்கியரைத் தம்முடன் சேர்த்துக் கொண்டார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் மார்கழிப் பூராடம்.
சிறப்புலி நாயனார்
சோழ நாட்டில் திருஆக்கூரில் வேதியர் குலத்தில் தோன்றியவர் சிறப்புலி நாயனார். சிவனடியார்களுக்கு அமுதூட்டுவது, வேண்டிய பொருள் கொடுப்பது அவர் திருத்தொண்டு. திருவைந்தெழுத்தை ஒதுவது யாகஞ் செய்வது அவர் வழமையான செயற்பாடு. இத்தொண்டுகள் மூலம் இறைவன் திருவடிகளை அடைந்தவர்.
இவர் முத்தியடைந்த திருநாளர் கார்த்திகைப் பூராடம்
சிறுத்தொண்ட நாயனார்
சோழ நாட்டில் திருச்செங்காட்டங்குடியில் மாமாத்திரப் பிராமணர் என்னும் குலத்தில் தோன்றியவர்தான் சிறுத்தொண்ட நாயனார். பரஞ்சோதியார் என்னும் இளமைக் காலப் பெயரை உடையவர். யானை ஏற்றம் குதிரை ஏற்றம், படைத் தொழில் என்பவற்றிற் புலமை பெற்றவர். ஆயுள் வேத மருத்துவக் கலையிலும் தேர்ந்தவர். வடமொழியில் வல்லவர். சிவபக்தி சிவனடியார் பக்தியிலும் சிறப்பானவர். சோழமன்னனின் அமைச்சராக இருந்தவர். வாதாபிப் போரை வென்றவர். அதன் பின்னர் தான் மன்னன் இவரொரு சிவனடியார் எனக் கண்டு
67

Page 38
கொண்டார். அவரை அவர் தொண்டு வழி நிற்குமாறு மன்னன் பணிவொடு விடைகொடுத்தான்.
அவருக்கு இல்லக் கிழத்தியாகக் கிடைத்த திரு வெண்காட்டு நங்கையாருடன் கணபதீச்சர வழிபாட்டில் ஈடுபாடுடையவராக இருந்தார். சிவனடியார்களை முன்னே உண்ண வைத்துப் பின்னே தாமுண்பார். சிவனடியாரிடம் தாம் சிறியராய் நடந்துகொள்வார். அதனால் சிறுத் தொண்டர் என அழைக்கப்பட்டார்.
அவர்கள் இல்லற வாழ்வில் ஒரு ஆண்மகவு கிடைத் தது. சீராள தேவர் என அதற்குப் பெயரிட்டனர். சீராள தேவர் உரியவேளை கல்விச்சாலைக்கு அனுப்பப்பட்டார். திருச்செங்காட்டங்குடிக்குத் திருஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருளியபோது எதிர்கொண்டழைத்து உபசரித் துள்ளார். திருஞானசம்பந்தர் தமது திருப்பாடல்களில் சிறுத்தொண்டரைப் பாராட்டியுள்ளார்.
சிறுத்தொண்டர் திருப்பணி எல்லோரையும் கவர்ந்தது. அவர் பணியின் உயர்வை வெளிக்கொணர விரும்பிய இறைவன் ஒருமுறை பைரவர் கோலங்கொண்டு மிகுந்த பசியுடன் வந்தவர் போன்று சிறுத்தொண்டர் வீடு எது எனக் கேட்டு அணைகின்றார். அந்தவேளை தாதிப்பெண் பைரவரைச் சந்திக்கிறாள். இவர் உரையாடல் கேட்ட திருவெண்காட்டு நங்கை ஓடோடிவந்து, நீங்கள் புதியவர் உள்ளே வந்திருங்கள், வெளியே சிவனடியாரைத் தேடிச் சென்றவர் வந்துவிடுவார் என்றார். ஆண்களில்லாத இடத்தில் நான் இருக்கமாட்டேன். கணபதிச்சர ஆலய முன்றிலிலுள்ள ஆத்திமரத்தின் கீழ் இருப்பேன் வந்து பார்க்கச் சொல்லுங்கள் என்று சொல்லிச் சிவனடியார்
68

சென்றுவிட்டார். சிறிது நேரத்திற் சிறுத்தொண்டர் யாரை யுங் காணாத நிலையில் வந்தார். மனைவியார் நடந்த தைச் சொன்னார். ஆனந்தம் மேலெழச் சிறுத்தொண்டர் விரைந்து சென்றார். சிவனடியாரை ஆத்தி மரத்தடியிற் கண்டு வணங்கினார். சுவாமி அமுது செய்ய எழுந்தருள வேண்டுமென்றார். அப்பொழுது பைரவர் ‘யான் வடதேசத் தவன் ஆறுமாதத்திற்கொருமுறை உண்பவன். அதுவும் நரபசுக்கறி வேண்டும். பெற்றோர்க்கு ஒரேயொரு ஆண் பிள்ளையாய் இருக்கவேண்டும். ஐந்து வயதுக் குழந்தை யாய் இருக்க வேண்டும். தாய் சந்தோஷமாக மடியில் வைத்திருக்கத் தந்தை மகிழ்ச்சியோடு அரிந்து சமைக்க வேண்டும். இது உமக்கு முடியாதே' என்றார். ஏன் முடியாது? இப்பொழுதே வேண்டியதெல்லாம் செய்து திரும்ப வருகின்றேன் என்றவர் வீட்டுக்குச் சென்று மனைவியுடன் பேசி வேண்டிய ஒழுங்குகள் செய்து தலை மட்டுங் கறிக்குதவாது என்று மறைத்து நிறைவு செய்தனர். சிறுத்தொண்டர் பைரவரை அழைத்துவந்து உபசரித்து இருத்தி உணவு படைக்கின்றனர். உறுப்புக்கள் எல்லாம் சமைத்திரா என்று பைரவர் கேட்க தலையைமட்டும் கறிக்கு உதவாதென்று தவிர்த்துவிட்டோம் என்று நங்கையார் குறிப்பிடுகின்றார். இல்லையில்லை அதுவும் வேண்டும் என்று பைரவர் சொல்ல, அடியவர் இப்படிக் கேட்டுவிட்டாற் கொடுக்கவேண்டுமே என்றெண்ணி அதையுஞ் சமைத்து வைத்துள்ளேன் என்று தாதியாகிய சந்தனநங்கை கொடுக்கின்றாள். திருவெண்காட்டு நங்கை அகமகிழ்வுடன் அதையும் வாங்கிப் படைக்கிறார். திருநீறு பூசிய நீரும் எம்முடன் உணவருந்த வேண்டும் இரும் என்றார் பைரவர். உணவு படைக்கப்பட்ட பின் மகனைக் கூப்பிடுங்கள் என்கின்றார். “அவன் இப்போ இங்கு
69

Page 39
உதவான்’ என்கின்றார்கள். அவன் இல்லாமல் சாப்பிட முடியாது அவனைக் கூப்பிடுங்கள் என்கின்றார் பைரவர. அவரது வற்புறுத்தலால் அன்னையுந் தந்தையும் வெளியே சென்று சீராளா என்று உரத்து அழைக்கின்றனர். அவன் பாடசாலையிலிருந்து வருபவன் போன்று ஓடிவருகின்றான். அன்னை தூக்கி முத்தமிட்டுத் தந்தையிடம் கொடுக்க மகிழ்ச்சியோடு கொண்டு செல்கின்றனர். அங்கே பைரவ ரையோ படைக்கப்பட்ட உணவுப் பொருள்களையோ இறைச்சிக் கறியையோ காணவில்லை. திகைத்த சிறுத் தொண்டருந் துணைவியாரும் சந்தன நங்கையும் சீராளனும் வெளியே வருகின்றனர். அங்கே உமாதேவி யாருடனும் முருகனுடனும் காட்சி தந்த சிவன் நால்வ ரையுந் தம்முடனாக்கிக் கொண்டு செல்கின்றனர்.
இவர் முத்தியடைந்த திருநாளர் சித்திரைப் பரணி
கழறிற்றறிவார் நாயனார்
மலைநாட்டிலே கொடுங்கோளுரிலே சேரர் மரபிலே தோன்றியவர் கழறிற்றறிவார் நாயனார். சேரமான் பெருமாள் நாயனார் என்பவரே இவர். சுந்தரமூர்த்தி சுவாமிகளுடன் தோழமை பூண்டொழுகியவர். திருவஞ்சைக் களத்தப்பனை நாடோறும் வழிபடுபவர்.
சேரன் செங்கோற்பொறையன் தவம் செய்ய விரும்பி
வனம் புகுந்தான். அமைச்சர்கள் ஆலோசித்துப்
பெருமாக்கோதையாரை மன்னனாகும்படி வேண்டினர்.
இறையருள் அங்கீகாரத்துடன் ஆட்சிப் பொறுப்பைப்
பெருமாக்கோதை ஏற்றுக்கொள்கிறார். எவர் கழறினும்
கேட்டு உணரும் திறமை பெற்றிருப்பதாற் கழறிற்றறிவார்
70

என்னும் பெயர் வழங்கலாயிற்று, சிவபத்தி அடியார் பத்தியில் உயர்ந்து நின்ற மன்னர்பெருமான் அரசாட்சி யைச் சிவமயமாக்கிக் கண்டார்கள். சிவபூசை சிவவேள்வி என்பன தொடர்ந்து நடைபெறுவனவாயின. `மதி மலிபுரிசை மாடக்கூடல்' என்று தொடங்கும் பாடற் திருமுகத்தைச் சிவபெருமான் பாணபத்திரன் என்னும் இசைகொண்டு வழி படுவான் ஒருவன் மூலம் மன்னனுக்குக் கொடுத்தனுப்பு கின்றார். பெற்றுக்கொண்ட மன்னன் சிவபெருமானை நேரேகண்டது போல் ஆனந்தமடைந்து வேண்டியனவெல் லாம் கொடுத்தனுப்பினார்.
வன்தொண்டரின் பாடலில் வயப்பட்ட வகையில் சேரருக்குச் சிலம்பொலி கேட்கச் செய்ய முடியாது போய்விட்டது, என்று சிவன் அருளிய கருத்து சுந்தரரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை கழறிற்றறிவார் நெஞ்சில் எழச் செய்தது. அதனால் வன்தொண்டரைச் சந்திக்கச் சேரமான் திருவாரூர் நோக்கிப் புறப்படுகின்றார். இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு கட்டித் தழுவுகின்றனர். சேரமான் பெருமான் வன்தொண்டருடன் சிலநாள் தங்கி இருந்து மதுரை முதலான திருப்பதிகளுக்குச் சென்று வணங்கினார். பின் சேரமானின் வேண்டுகோளை ஏற்றுக் கொடுங்கோளுர் சென்றார். அங்கு சிலநாள்கள் தங்கி இருவரும் சேர்ந்து வழிபாடு செய்தபின் சுந்தரர் திருவாரூர் சென்றார். மீண்டும் வன்தொண்டர் கொடுங்கோளுர் வந்தார். அஞ்சைக்களத்தப் பனை வழிபட்டுக் கொண்டிருந்தவேளை ஒரு வெள்ளை யானை வந்தது, அதன்மீதேறிக் கைலைக்குச் சென்றார் வன்தொண்டர். சேரமான் ஒரு வெள்ளைக் குதிரைமீதேறித் தொடர்ந்தார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் ஆடிச் சுவாதி
71

Page 40
கணநாத நாயனார்
சோழநாட்டிற் சீர்காழிப் பதியில் வேதியர் குலத்தில் தோன்றியவர் கணநாத நாயனார். இல்லற வாழ்வு வாழ்ந்தவர். திருத்தோனியப்பருக்குத் தொண்டு செய்தவர். திருநந்தவனப்பணி இவர் தொண்டுகளுட் சிறப்பானது. அதனால் பூத்தொன்டினைச் சிறப்பாகச் செய்தவர். திருஞான சம்பந்தர் பால் பேரன்பு பூண்டவர். கைலையை அடைந்து கணங்களுக்குத் தலைவரானார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் பங்குனரித் திருவாதிரை.
கூற்றுவ நாயனார்
களந்தைப் பதித் தலைவர் கூற்றுவ நாயனார். குறு நிலமன்னர். சிவனடியாரை உபசரிக்கும் அன்பு வழக்கு டையவர். திருவைந்தெழுத்தோதுவது அவர் வழக்கம். தனக்கு முடி இல்லையே என்பதைத் தில்லைவாழந் தணரிடம் சொன்னார். அவர்கள் தாம் சோழமன்னர்க்கன்றி முடிசூட்டுவதில்லை என்றனர். நாயனார் வருந்தித் தில்லைக் கூத்தன் முடியே தனக்கு முடியாக வேண்டுமென்று நினைந்துகொண்டு துயின்றார். தில்லைக்கூத்தன் திருவடி களை முடியாகப் பெற்றமை கனவில் உணர்த்தப்பட்டது. நாயனார் அதை ஏற்று உலகை ஆண்டு வந்தார். பின் பல திருப்பதிகளுக்குச் சென்று இறைவன் திருவடிநீழலை அடைந்தார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் ஆடித் திருவாதிரை
72

பொய்யடிமையில்லாத புலவர் (தொகையடியர்)
செய்யுள்களிலே தெளிவுடைமையும், பல நூற் பயிற்சியும், அவை காரணமான உண்மை உணர்வுப் பயனும், சிவனது தாள்களில் அன்புடையராதலும் என்னும் நெறியை உணர்ந்தவர்கள் பொய்யடிமை இல்லாத புலவர்கள்.
புகழ்ச்சோழ நாயனார்
சோழநாட்டை ஆண்ட மன்னருள் ஒருவர் புகழ்ச் சோழநாயனார். உறையூரிலிருந்து ஆட்சி புரிந்தவர். திருக்கோவில் பூசனைகளை ஒழுங்காக நடைபெறச் செய்பவர். சிவனடியார் குறிப்பறிந்து அவர்களுக்கு வேண்டியன உதவுவார். கொங்கர் குடகர் என்போரிடம் திறைபெற்று அவர்கட்கு ஆசி கூறுபவர். வேறு யாராவது திறை கொடுக்க மறுப்பவர்களும் உண்டோ என அறிந்து சொல்லுமாறு அமைச்சரைப் பணித்தார்.
சிவகாமி ஆண்டார் என்னும் அடியவர் ஒருவர் ஆனிலைப் பெருமானுக்கு வழமையாகப் பூக்கொண்டு செல்பவர் பட்டத்து யானை பறித்துச் சிதறிவிட்டது. எறிபத்தநாயனார் அதனை வெட்டிக்கொன்றார். (இந்த வரலாறு எறிபத்த நாயனார் பற்றிய செய்தியிற் கண்டது)
‘உங்கள் ஆட்சியிற் கீழ்ப்படியாதவன் அதிகன் என்ற பெயருடையவன் ஒருவன் இருக்கின்றான்’ என்று அமைச்சர்கள் சொல்லினர். அவனை அடக்கி வரும்படி
73

Page 41
படையை அனுப்பினார் புகழ்ச்சோழர். மன்னன் அதிகன் ஒடி மறைந்துவிட்டான். படையினரைக் கொன்று அவர்கள் சிலரின் தலைகளையும் பொன் பொருள் முதலானவற்றை யும் கொண்டு படையினர் வந்தனர். அறுபட்ட தலைகளுள் சிவ சின்னமுங் கண்டார் புகழ்ச்சோழன் நடுநடுங்கிவிட்டார். ‘என் அரசாட்சி மிக நன்று நன்று. சைவந்தழைக்க அரசியற்றுவோன் நானோ’ என்று புலம்பி, அமைச்சர்களை நோக்கிச் சிவதொண்டைத் தவறவிடாது அரசாட்சியை நடத்துங்கள்’ என்று கூறித் தீயை வளர்த்துச் சிவ சின்னங்களுடனான அந்தத் திருமுடியை ஒரு பொன் தட்டிலே தாங்கித் தன் தலைமேல் வைத்து ஐந்தெழுத்தை ஒதிக்கொண்டு நெருப்பில் இறங்கினார். இறைவன் திருவடிகளைப் பற்றிக் கொண்டார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் ஆடிக் கார்த்திகை
நரசிங்கமுனையரைய நாயனார்
திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட மன்னருள் ஒருவர் நரசிங்கமுனையரைய நாயனார். நிருநீற்றையே செல்வ மென மதித்தவர். திருக்கோவிற் பூசனைகளை நிறைவாகச் செய்வித்தவர். திருவாதிரைதோறும் சிவனடியார்களை அமுதுசெய்விப்பவர். வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் நூறு பொன் பணமுங் கொடுப்பார். ஒரு திருவாதிரையின் போது நிறைவாக நீறணிந்த தூர்த்தர் ஒருவரும் வந்தார். மற்றையோர் அவரைக்கண்டு ஒதுங்கினர். மன்னர் அவரைப் பணிந்து வேண்டிய உபசரிப்புகளெல்லாம்
74

செய்து இருநூறு பொன் பணமுங் கொடுத்துத் தொழுது முகமன் கூறி வழியனுப்பியும் வைத்தார். இவ்வாறு திருத்தொண்டுகள் செய்து சிவனடிகளைச் சேர்ந்தவர் நரசிங்க முனையரையர்.
இவர் முத்தியடைந்த திருநாளர் புரட்டாதிச் சதயம்.
அதிபத்த நாயனார்
சோழநாட்டில் நாக பட்டினத்தில் நுழைப்பாடியில் வலைஞர் குலத்திற் பிறந்தவர் அதிபத்த நாயனார். பரதவர்களின் தலைவராகிய நாயனார் சிவபத்தியிற் சிறந்தவர். வலையிற் படுகின்ற மீன்களுள் ஒரு நல்ல மீனைச் சிவபெருமானுக்கு என்று கடலில் விட்டுவிடுவார். ஒரேயொரு மீன் கிடைத்தாலும் அதனைச் சிவனுக்காக விட்டுவிடுவார். சிவன் திருவருளால் தொடர்ந்து பல நாள்களாக ஒவ்வொருமினே கிடைத்து வந்தது. நாயனார் நடோறும் அப்படிக் கிடைப்பதைக் கடலிலே விட்டுவிடுவார். அவர் செல்வம் சுருங்கியது. உணவில்லை. அவருடலமும் மெலிந்தது. பத்தியில் தலைநின்றார்.
ஒருநாள் வலையிற் பொன்மீன் ஒன்று அகப்பட்டது. அதனையும் சிவபெருமானுக்கு ஆக என்று கடலில் விட்டார். அப்பொழுது சிவன் அவருக்குக் காட்சி கொடுத்துத் தம்முடன் சேர்த்துக்கொண்டார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் ஆவணி ஆயிலியம்.
75

Page 42
கலிக்கம்ப நாயனார்
திருப்பெண் ணாகடத்தில் வணிகர் குலத்தில் தோன்றியவர் கலிக்கம்ப நாயனார். சிவனடியார்களை அமுது செய்விப்பவர். ஒருநாள் அடியவர்களின் காலைக் கழுவும் போது மனைவி நீருற்றத் தாமதமானாள். நீரை வாங்கிக் கொண்டு அவள் கையை வெட்டிவிட்டார். பின்னர் தன் கையால் நீரூற்றிக் கழுவினார். அமுது செய்வித்தார். இம்முறை திருத்தொண்டு செய்து இறைவனடி சேர்ந்தார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் தை ரேவதி
கலிய நாயனார்
தொண்டை நாட்டில் திருவொற்றியூரில் சக்கரப்பாடித் தெருவில் செக்கார் குலத்தில் பிறந்தவர் கலிய நாயனார். திருக்கோயிலின் உள்ளும் புறமும் நாடோறுந் திருவிளக் கேற்றுதல் அவர் திருப்பணி. நாயனாரின் அன்பு நிலையை உலகிற்கு விளக்கவிரும்பிய இறைவன் அவருக்கு வறுமையை வரச்செய்தார். நாயனார் தமது திருத்தொண் டைத் தொடர்ந்து கொண்டே இருந்தார். கூலிவேலை செய்து வந்த வருவாய் கொண்டு விளக்கேற்றினார். கூலிவேலையுங் கிடையாது போயிற்று. எல்லா உடைமை களையும் விற்றுப் பயன்படுத்தினார். செக்காட்டும் இடஞ் சென்று சிறிய சிறிய வேலைகள் செய்து பொருள் பெற்றார். அதுவும் முடியாத நிலை வந்தது. இனி எதுவும் இல்லை என்ற நிலையில் திருக்கோயிலை அடைந்து விளக்கு களுக்குத் திரியிட்டார் எண்ணெய்க்காகத் தன் இரத்தத்தை விடவென்று கழுத்தை அறுக்கத் தொடங்கினார். சிவபெரு
76

மான் அவர் கையைப்பிடித்துத் தடைசெய்து காட்சி கொடுத்தார். நாயனார் வணங்கி நின்றார். சிவபெருமான் தம் திருவடிகளின் இடமாக்கிக்கொண்டார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் ஆடிக் கேட்டை.
சத்தி நாயனார்
சோழநாட்டில் வரிஞ்சையூரில் வேளாளர் குலத்திற் பிறந்தவர் சத்தி நாயனார். சிவனடியாரை இகழ்வோர் நாவைத் தண்டாயுதத்தால் வலிப்பது இவர் தொண்டு. கத்தியால் அறுப்பதும் உண்டு. இத்தொண்டிலேயே ஊறிநின்று சிவன் திருவடிகளைச் சேர்ந்தவர் இவர்.
இவர் முத்தியடைந்த திருநாளர் ஐப்பசிப் பூசம்.
级D
ஐயடிகளிர்காடவர்கோன் நாயனார்
தொண்டைநாடு காஞ்சீபுரத்தில் பல்லவர் குலத்தில் பிறந்தவர். குறுநில மன்னர். ஐயடிகள் காடவர்கோன் எல்லா உயிர்களும் இன்பத்தை அனுபவிக்க வேண்டு மென்று விரும்பி அதற்காக உழைத்தவர் அவர். அவர் ஆட்சியிற் சைவம் தழைத்தது. அரசாட்சியில் வெறுப்ப டைந்து மகனுக்கு முடிசூட்டித் திருத்தலங்களுக்குச் சென்றார். ஒவ்வொரு தலத்திற்கு ஒவ்வொரு வெண்பாப் பாடியதாகத் தெரிகிறது. இப்பணியுடன் இறைவன் திருவடி நீழலை அடைந்தார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் ஐப்பசி மூலம்.
77

Page 43
கணம்புல்ல நாயனார்
வடவெள்ளாற்றுக்குத் தென்கரையில் இருக்குவேளுர் என்ற பதியில் தோன்றியவர் கணம்புல்லநாயனார். அவர் ஒரு செல்வந்தர். செல்வத்தாலாம் பயன் திருக்கோயிலில் திருவிளக்கெரித்தல் என்னும் கொள்கையை உடையவர். திருவருட் செயலாக அவர் வறுமையில் உழலத் தொடங் கினார். வீட்டிலுள்ள பொருள்களை விற்றுத் திருத்தொண் டைத் தொடர்ந்தார். அவையும் நிறைவெய்தின. கணம் புல்லை அறுத்துவிற்பனை செய்து வந்தவருவாய் கொண்டு பணியைத் தொடர்ந்தார். அதுவும் முற்றுப்பெற்று இனிச் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் அவர் தன் தலைமயிரை அறுத்து எரித்தார். பார்த்துக் கொண்டிருந்த சிவன் திருவருள் நோக்குக் கிடைத்தது. கணம் புல்லர் சிவன் திருவடிப் பேறு பெற்றார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் கார்த்திகைக் கார்த்திகை,
காரி நாயானர்
சோழநாட்டிலே திருக்கடவூரிற் பிறந்தவர் காரிநாய னார். தமிழ் மொழியிற் சிறந்த ஆற்றல் பெற்றவர். கோவை பாடுவதில் திறமையாளர். தாம்பாடிய கோவைகளை விரித்துச் சொல்லி மன்னர்களிடம் பணம் பெறுவார். பெற்ற பணங்கொண்டு திருக்கோயில் கட்டுதல் சிவனடியார்களை உபசரித்தல் முதலான தொண்டுகளைச் செய்து இறைவன் பாதாரவிந்தங்களைச் சேர்ந்தவர்.
இவர் முத்தியடைந்த திருநாளர் மாசிப் பூராடம்.
78

நின்றசீர் நெடுமாற நாயனார்
பாண்டிய மன்னருள் ஒருவர் நின்றசீர் நெடுமாறர். மங்கையர்க்கரசியாரை மனைவியாகப் பெற்றவர் இவர். திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் அருள் தொடர்பால் கூன்நீங்கித் திருநீற்று நெறியில் நின்றவர். வடபுல மன்னரை வென்றவர். சைவநெறி மேன்மையுற ஆட்சி செய்து சிவபெருமான் திருவடிப் பேறு பெற்றவர்.
இவர் முத்தியடைந்த திருநாளர் ஐப்பசிப் பரணி
வாயிலார் நாயனார்
தொண்டை நாட்டில் திருமயிலைப் பதியில் வேளாளர் குடியிற் பிறந்தவர் வாயிலார் நாயனார். தமது உள்ளத்தையே சிவன் கோயிலாகக் கண்டவர். அறிவை விளக்காக்கி ஆனந்த நீராட்டி அன்பாம் அமுதைப் படைத்து இறைவன் முன் ஞானபூசை செய்தவர். அவ்வழி சிவன் திருவடிப்பேறு பெற்றவர்.
இவர் முத்தியடைந்த திருநாளர் மார்கழி ரேவதி.
முனையடுவார் நாயனார்
சோழ நாட்டில் திருநீடுரில் வேளாண் குடியிற் பிறந்த சிவனடியார் தான் முனையடுவார் நாயனார். போர் முனையில் நின்று பகைவரைச் சாய்க்க வல்லவர். அதனாலேதான் முனையடுவார் என்று பெயர் நிலவியது.
79

Page 44
பகைவரிடம் தோல்வி காண்போர் முனையடுவார் உதவி யைப் பெற்று வெற்றிகாண்பர். அதனாற் கிடைக்கும் பொருள் கொண்டு சிவனடியார்க்கு அமுது உதவுவார். இப்பணி மூலம் சிவனடி சேர்ந்தவர் இவர்.
இவர் முத்தியடைந்த திருநாளர் பங்குனிப் பூசம்.
கழற்சிங்க நாயனார்
பல்லவர் குலத்தில் தோன்றிய ஒரு குறுநில மன்னர் கழற்சிங்க நாயனார். வடபுல மன்னரை வென்று எங்குஞ் சைவந்தழைக்கச் செய்தவர். ஒருமுறை மனைவியுடன் திருவாரூரை அடைந்தார். ஆலயத்தைச் சுற்றிவரும் போது ஒரு மண்டபத்தில் வீழ்ந்துகி ந்த பூவை எடுத்து அம்மையார் மணந்தார். அங்கு தொண்டு செய்து கொண்டிருந்த செருத்துணை நாயனார் அச்செயலைப் பார்த்துவிட்டார். இறைவனுக்குச் சாத்த வைத்திருந்த பூவை மணந்துவிட்டார் என நினைந்த செருத்துணை நாயனார் ஒரு ஆயுதத்தை எடுத்து அவர் மூக்கை அரிந்துவிட்டார். அவ்வழியே வந்த கழற்சிங்க நாயனார் கண்டு என்ன நடந்ததென்று விசாரித்தார். செருத்துணை நாயனார் செய்தியைச் சொன்னார். அப்படியானாற் பூவை எடுத்த கையை அல்லவா முதலில் துண்டிக்க வேண்டுமென்று சொல்லித் தன் உடைவாளை எடுத்துக் கையை வெட்டிவிட்டார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். கழற்சிங்கர் சிவதொண்டு செய்து இறைவன் திருவடிப் பேறு பெற்றார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் வைகாசிப் பரணி
8)

இடங்கழி நாயனார்
கோனாட்டில் கொடும்பாளுரில் வேளிர் குலத்தில் ஆதித்தன் குடியில் தோன்றிய மன்னர் பிரான் இடங்கழி நாயனார். அவர் அரசாட்சியிற் சைவம் ஒளிர்ந்தது. திருக்கோயிற் பூசனைகள் சிறப்பாக நடைபெற்றன. அங்கிருந்த ஒரு சிவனடியார் நாளும் மகேசுர பூசை செய்து உண்பவர். தன் பணிக்குப் பொருளில்லாமையால் இடையூறு வந்ததே என்று வேதனைப்பட்டு இரவோடிரவாக மன்னன் நெற்களஞ்சியத்திற் களவாடினார். காவலர்களிடம் பிடிபட்டுவிட்டார். மன்னன் முன் நிறுத்தப்பட்டார். களவின் தேவை என்ன என்று மன்னன் கேட்டான். ‘சிவனடியார்க ளுக்கு உணவு கொடுக்க' என்று பதில் வந்தது. மன்னன் உள்ளம் உருகிவிட்டது. சிவனடியாரை விடுதலை செய்தார். களஞ்சியங்களைத் திறந்துவிட்டு சிவனடியார்கள் களவெடுக்கலாம் என்று பறையறைவித்தார். கொள்ளைக் காட்சியைக் கண்டு மன்னன் மகிழ்ந்தான். இடங்கழியார் பன்னெடுநாள் திருத்தொண்டுகளுடன் அரசியற்றி இறைவன் திருவடி நீழலையடைந்தார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் ஐப்பசிக் கார்த்திகை.
செருத்துணை நாயனார்
சோழநாட்டிலே தஞ்சாவூரிலே வேளாளர் மரபிலே
பிறந்தவர்தான் செருத்துணை நாயனார். சிவபத்தி
சிவனடியார் பத்தியில் சிறந்தவர். திருவாரூர் சென்று
81

Page 45
தொண்டு செயதவர். அங்கு கழற்சிங்க நாயனார் மனைவியின் பொருந்தாத செயலினால் அவர் மூக்கரிந்த வரலாற்றைக் கழற்சிங்க நாயனார் சரித்திரத்துட் கண்டோம். செருத்துணை நாயனார் தொடர்ந்து சிவப்பணி செய்து சிவன் திருவடி நீழலை அடைந்தார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் ஆவணிப் பூசம்.
புகழ்த்துணை நாயனார்
செருவிலிபுத்துரில் ஆதிசைவ மரபிற் பிறந்தவர் புகழ்த்துணை நாயனார். சிவவழிபாட்டை முறைப்படி தொடர்ந்தவர். அங்கு பஞ்சம் உண்டானது. ஆயினும் நாயனார் தமது பணியை நிறைவாகச் செய்துவந்தார். அவர் பசி அவரை வாட்டியது பசிக்களை காரணமாகத் திருமஞ்சனம் ஆட்டும் போது தேவன் முடிமீது கலசத்தைத் தவறவிட்டுவிட்டார். தானும் மயங்கி வீழ்ந்து திருவருளால் உறங்கிவிட்டார். இறைவன் கனவிற் தோன்றிப் பஞ்சம் நிறைவாகுவதுவரை ஒவ்வொருநாளும் ஒரு காசு வைப் போம். அதுகொண்டு ஓரளவு சரி செய்யலாம் என்றார். துயில் நீத்தெழுந்த நாயனார் காசு இருப்பதைக் கண்டார் மிகுந்த மகிழ் வெய்தினார். வழமையாகச் செய்த திருத்தொண்டை ஒழுங்காகச் செய்து சிவபதப் பேறு பெற்றார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் ஆவணி ஆயிலியம்.
82

கோட்புலி நாயனார்
சோழநாட்டில் நாட்டியத்தான் குடியில் வேளாண் மரபில் தோன்றியவர் கோட்புலி நாயனார். சோழநாட்டின் சேனாதிபதியாகப் பணிபுரிந்தவர். பகைவரை வெற்றி கொள்வதில் திறமையாளர். தன் தொழிலால் வரும் வருவாயை நிறைவாக நெல்வாங்கப் பயன்படுத்துவார். நெல்லைச் சேமித்து வைத்துச் சிவனடியார்களுக்குத் திருவமுது வழங்குவார்.
திருநாட்டியத்தான் குடிக்குச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளிக் கோட்புலியாரின் இல்லத்தில் தங்கியுள்ளார் கள். அந்தவேளை கோட்புலியார் தன் சிங்கடியார் வனப் பாகையர் என்னும் இரு புதல்வியரையும் அழைத்துச் சுவாமியை வணங்கச் சொல்லியுள்ளார். அவர்கள் சுந்த ரரை வணங்கியதும் இவர்கள் இருவரையும் ஆட்கொண் டருள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். இவர்கள் இருவரையும் என் புதல்வியராக ஆட்கொண்டுள்ளேன் என்று சொல்லி உச்சிமோந்தார். சிலநாள்கள் அவருடன் தங்கிச் சுந்தரர் புறப்பட்டார்.
மன்னன் ஆணைப்படி போர்மேற் செல்ல நேர்ந்தது. மீண்டுவரும் வரை வேண்டிய நெல்லைச் சேமித்துக் கூடைகளில் வைத்தார். சுற்றத்தவர்களை அழைத்து இங்கு சேமிக்கப்பட்டுள்ள நெல் திருக்கோவில் திருவமுதிற்கு ரியது. எந்தக் காரணங்கொண்டும் உங்களுக்கென்று எடுத்துவிடாதீர்கள். கடவுள் ஆணை இது என்று சொல்லிப் போர் மேற் சென்றார்.
கோட்புலியார் சென்ற சில நாள்களில் திருவருட் செயலாகப் பஞ்சநிலை வந்தது. எல்லோரும் பஞ்சத்தின்
83

Page 46
இறுக்கத்தால் வருந்தினர். அவர்கள் உயிர் ஊசாலாடும் நிலை. இறுதியாகக் கோட்புலியார் சேமித்த நெல்லைப் பயன்படுத்தத் தொடங்கினர். பகைவரை வெற்றிகொண்ட கோட்புலியார் மீண்டுவந்தார். சுற்றத்தவர் செய்கையை அறிந்தார். அடாதசெயல் செய்தவர்களை வெட்டி வீழ்த்து வேன் என்று சினந்தார். பரிசில் வழங்கவென்று எல்லோரை யும் அழைத்தார் பெற்றோர் மனைவி ஏனைய சுற்றத்தினர் எல்லோரையும் வெட்டி வீழ்த்தினார். ஒரு ஆண் மகவு மட்டும் தப்பி இருந்தது. அதையுங் கொல்லப் புகுந்தார் காவலன் தடைசெய்து இக்குழந்தை உங்களுக்கு என்ன செய்தது. அது இந்தச் சோற்றை உண்ணவில்லையே. என்று சொல்லிப் பார்த்தான். உடனே கோட்புலி உண்ட வளின் பாலைக்குடித்ததல்லவா என்று சொல்லி அதையுந் தீர்த்துவிட்டான். அந்தவேளை சிவன் தோன்றி, கோட்புலி வெட்டுண்டவர்கள் உடனாக நீவிரெல்லீரும் எம்முடன் வருவீர்களாக என்று அருளி மறைந்தனர்.
இவர் முத்தியடைந்த திருநாளர் ஆடிக் கேட்டை.
பத்தராய்ப்பணிவார்
(தொகையடியர்)
சிவனடியாரைக் கண்டு ஆனந்தமடைபவர்களைப் பத்தராய்ப் பணிவார் என்றனர். அவர்களைப் பணிவார்கள், அவர்களையே தொடர்வார்கள். அன்பால் அவர்களுடன் தொடர்புகொள்வர். சிவனைச் சிவனடியார்களை வழிபடுவர். சிவத்தைப் பற்றிய வரலாறுகளைக் கேட்பர். இறைவ னையே தொடர்ந்து நினைவர். குறைவு படாத உணர்வு டையவர்கள் எந்தநேரமும் சிவன் நினைவுடனாகி இருப்பர்.
84

பரமனையே பாருவார் (தொகையடியர்)
இறைவனைப் பாடுபவர்கள். மொழிப்பயிற்சி பெற்று அதனாலாம்பயன் சிவபெருமானைப் பாடுதல் என்று கண்டு உள்ளுணர்வுடன் தம்மை மறந்துபாடுவர்.
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் (தொகையடியர்)
இவ்வுலக பந்தங்களை நீக்கி அவற்றைக் கடந்து
சிவத்தை அடைந்த திருவுள்ளத்தினர் சித்தத்தைச் சிவன் பால் வைத்தவர் ஆவர்.
திருவாரூர்ப் பிறந்தார்கள்
(தொகையடியர்)
திருவாரூரிற் பிறந்தோர் அனைவரும் சிவகணத்தைச் சேர்ந்தவர். எனவே அவர்பெருமையை என்னென்பது?
முப்போதுந் திருமேனி தீண்டுவார்
(தொகையடியர்)
முப்போதுந் திருமேனி தீண்டுபவர்கள் சிவனை அர்ச் சிக்கும் அந்தணர்.
85

Page 47
முழுநீறு பூசிய முனிவர்
(தொகையடியர்)
திருநீற்றைச் சிவமாக நினைத்து அணிபவர்கள், புலி அதளை உடையவனைப் போற்றித் தொடக்கத்திருந்தே வந்துகொண்டிருக்கும் மலங்களை அறுத்த முனிவர்கள் உடம்பு முழுவதும் பூசும் திருநீற்றை அணிந்தவர்கள் அவர்கள்.
அய்பாலும் அடிசார்ந்தார்
(தொகையடியர்)
சேர சோழ பாண்டிய நாடுகளுக்கு வெளியேயுள்ள நாடுகளில் பிறந்து அடியவர் ஆனவர்களும் திருத் தொண்டத் தொகையில் இடம்பெறும் அடியர்களுக்கு முன்னும் பின்னும் வாழ்ந்தவர்களுமாவர்.
பூசலார் நாயனார்
தொண்டை நாட்டிலே திருநின்ற ஊரிலே வேதியர் குலத்திலே பிறந்தவர் பூசலார் நாயனார். சிவ பத்தியிலும் சிவனடியார் பத்தியிலும் உயர்ந்து நின்றவர். சிவனடியார் வேண்டுவதை - விரும்புவதை - எப்படியாவது நிறைவு செய்ய வேண்டுமென முயலுபவர்.
பூசலார் ஒரு திருக்கோயில் கட்ட விழைந்தார். அதற்குப் பொருள் கிடைக்கவில்லை. பொருள் பெறுவதிற் தளர்வு கண்டவர் மனதிலேயே கட்டத்தொடங்கினார்.
86

செய்யவேண்டுவனவற்றை ஒவ்வொன்றாக நினைக்கத் தொடங்கினார். மதில் கட்டுதல், குளம் அமைத்தல் கிணறு தோண்டுதல் என்று எல்லாமே சிந்தனையில் உள்ளன. எல்லாம் மனதிற் கட்டி நிறைவு செய்து பிரதிட்டை நாளும் நிச்சயிக்கப்பட்டது.
இந்தச் சந்தர்ப்பத்தில் காடவ மன்னனும் காஞ்சிப்பதி யில் ஒரு கோயில் கட்டி நிறைவுகண்டு பிரதிட்டைத் திகதியும் குறியீடு செய்தான். பிரதிட்டைக்கென மன்னர் குறிப்பிட்ட நாளுக்கு முதனாள் இரவு மன்னரின் கனவிற் தோன்றிய இறைவன், திருநின்ற ஊரிலே பூசலார் என்பவர் ஒரு கோயில் அமைத்து நாளை பிரதிட்டையெனக் குறிப்பிட்டுள்ளார். நாளை அங்கு எழுந்தருளவிருப்பதால் உங்களுடைய பிரதிட்டை விழாவிற்கு வரமுடியாது. எனவே மற்றொரு திகதிக்கு மாற்றுங்கள் என்று குறிப் பிட்டுள்ளார். விழித்தெழுந்த மன்னர் பூசலாரைக் காணப் புறப்பட்டார். திருநின்ற ஊர் சென்றார். பூசலார் கட்டியுள்ள கோயில் எங்கேயுளது என்று விசாரித்தார். அந்தணர்கள் பூசலாரிடம் மன்னனை அழைத்துச் சென்றனர். அங்கே அவரை வணங்கி அடிகள் கட்டிய கோயிலில் இன்று சுவாமியைப் பிரதிட்டை செய்கிறீர்களாம். சிவபிரானால் அறியப்பெற்றேன். அடிகளைக் கண்டு வணங்கவென்று வந்தேன்’ என்றான் மன்னன்.
மன்னன் பேச்சைக் கேட்டதும் நாயனார் ஆச்சரிய மடைந்தார். என்னை ஒருபொருளாக மதித்து இறைவன் அருள்செய்தானா! யான் மனத்திலேதான் கோயில் கட்டியுள்ளேன். பொருளில்லை, அதனால் வெளியே கோயில் கட்டவில்லை’ என்று சொல்லி நடந்தவை எல்லாவற்றையும் விபரித்தார். மன்னர் மீண்டும் நாயனாரை
87

Page 48
வணங்கித் தன்னிடம் நோக்கித் திரும்பினான்.
பூசலார் தன் மனக்கோயிலில் இறைவனைப் பிரதிட்டை செய்து சில காலம் வழிபாடியற்றிச் சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.
இவர் முத்திபெற்ற திருநாளர் ஐப்பசி அனுஷம்,
மங்கையர்க்கரசியார்
சோழ மன்னனின் புதல்வியாகிய மங்கையர்க்கரசியார் நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டியன் துணைவி. சம்பத்தப்பெருமான் தேவாரத்தில் அம்மையார் பெருமை பேசப்படுகின்றது. தன் நாயகனுக்கு உற்ற துணையாகி அவனை நெறிப்படுத்தி இருவருமாகி இறைவனடி சேர்ந்தனர்.
இவர் முத்திபெற்ற திருநாளர் சத்திரை ரோகிணி
நேச நாயனார்
காம்பீலி நகரில் சாலியர் குலத்தில் தோன்றியவர் நேசநாயனார். மனத்தாலே சிவபிரானைத் தியானிப்பவர். திருவைந்தெழுத்தை ஒதும் நியதி உடையவர். கீழ் கோவணம் ஆடை என்பன நெய்து சிவனடியார்களுக்குக் கொடுப்பவர். இத்தகு திருத்தொண்டுகள் செய்து சிவன் பாத நீழலை அடைந்தவர்.
இவர் முத்தியடைந்த திருநாளர் பங்குனரி ரோகிணி
88

கோச்செங்கட்சோழ நாயனார்
சோழநாட்டு மன்னர் கோச்செங்கட் சோழனார். முற் பிறப்பில் ஞான உணர்வுடன் இருந்த ஒரு சிலந்தியே இப்பிறப்பில் இந்த உயர்வுபெற்றது. காவிரி நதி தீரத் துள்ளது சந்திரதீர்த்தம். அதற்குச் சமீபத்தில் உள்ளதொரு வனத்தில் நின்ற வெண்ணாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. திருவருட் செயலால் அதனை அறிந்து கொண்ட வெள்ளை யானை ஒன்று நாளும் துதிக்கையால் இலிங்கத்தை அபிஷேகித்து வழிபட்டு வந்தது. திருவருள் உணர்வுடனான சிலந்தி என்றும் அந்தச் சிவலிங்கத்தின் மேல் சருகுகள் விழக்கூடாதேயென்று மேல் விதானமாக வலை பின்னியது. இது அநுசிதமாக இருக்கிறதேயென்று யானை அதை அகற்றியது. நாளும் இப்படி நடைபெறும். சிலந்தி கோபங் கொண்டு யானையின் துதிக்கைத் துவாரத்துட் சென்று கடித்தது. அது தன் தும்பிக்கையை நிலத்தில் அடித்து அடித்து மாண்டது. சிலந்தியும் இறந்தது. யானை சிவகதியடைந்தது. சிலந்தி கோச்செங்கட் சோழனாகப் பிறவி பெற்றது.
சுபதேவர் என்னும் மன்னனுக்குக் கமலவதியார் வயிற்றிற் பிறந்தவர் தான் கோச்செங்கட் சோழன். அம்மை பிள்ளைப் பேற்றை எதிர்பார்த்திருந்த வேளை இந்தக் குழந்தை இன்னும் ஒரு நாளிகை கழித்துப் பிறந்தால் மூன்று உலகங்களையும் ஆளும் என்று ஒரு சோதிடர் சொன்னார் கேட்ட கமலவதியார் தம்மைத் தலைகீழாகக் கட்டித்தொங்கவிட்டு ஒரு நாளிகைப் போதின் பின் அவிழ்த்துவிடுங்கள் என்று குறிப்பிட்டார். அவ்வண்ணம்
89

Page 49
செய்தபோது பிறந்த ஆண் மகவு காலங்கடந்து பிறந்ததால் சிவந்த கண்களுடன் காணப்பட்டது. பிள்ளையைப் பார்த்த அன்னை ‘ என்மகன் செங்கண்ணனோ’ என்று கேட்டவர் கேட்ட அளவில் ஆவி பிரிந்தது.
உரிய வேளை கோச்செங்கட் சோழருக்கு முடிசூட்டப் பட்டது. முன்னை உணர்வுகளும் அவர் கனவென வந்துபோயின. திருக்கோயில்கள் அமைப்பித்து நியமங்க ளுஞ் செய்தார். திருவானைக்கா முன்னைப் பிறப்புடன் தொடர்புடைய தலம். சென்று வணங்கினார். திருப்பணிகள் நடைபெற வைத்தார். தில் லைக்குச் சென்றார். தில்லைவாழந்தணர்க்கு மாளிகை கட்டிக் கொடுத்தார். திருப்பணிகள் வழிநின்று இறைவன் இணையடிகளில் அமைதிகண்டார.
இவர் முத்தியடைந்த திருநாளர் மாசிச் சதயம்.
திருநீலகண்ட யாழ்ப்பாணர்
திருஎருக்கத்தம்புலியூரில் சிவபெருமான் திருப்புகழை யாழில் இட்டு வாசிக்கும் திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் நாயனார் இருந்தார். சிவன் திருப்புகழை யாழில் வாசிப்பது தான் அவர் திருத்தொண்டு. சீர்காழியில் திருஞான சம்பந்தரைச் சந்தித்தார். அவருடனாகச் சென்று அவர் தேவாரப் பாடல்களையெல்லாம் தமது யாழிலே இசைத்தார். திருநல்லூர்ப் பெருமணத்தில் ஞானசம்பந்த ருடன் சோதியிற் கலந்தார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் வைகாசி மூலம்.
9 ()

சடையனார்
சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் திருமகனாகப் பெற்ற புனிதர். திருநாவலூரர்.
இவர் முத்தியடைந்த திருநாளர் மார்கழித் திருவாதிரை.
இசைஞானியார்
திருநாவலூரைச் சேர்ந்த சடையனார் துணைவியார். சுந்தரமூர்த்தி சுவாமிகளை மகவாய்ப் பெறும் பெரும் பேறுபெற்றவர்கள்.
இவர் முத்தியடைந்த திருநாளர் சித்திரைச் சத்திரை.
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருமுனைப்பாடி நாட்டிலே திருநாவலூரிலே ஆதி சைவப் பிராமணர் மரபில் வந்த சடையனார் இசைஞானி யார் தம்பதியர்க்குப் புதல்வராக வந்தவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இளமையில் அவருக்கு நம்பியாரூரர் என்னுந் திருநாமம் சூட்டப்பட்டது. சிறுபிள்ளைப் பாராயத்திற்கேற்ற விளைாயட்டுக்களான சிறுதேரோட்டல் சிறுபறை கொட்டல் முதலியவற்றைத் தம்முடனொத்த வயதினருடன் விளை யாடுவார். அவ்வகை ஒருமுறை விளையாடிக்கொண்டு தெருவோரம் நின்றபோது அந்த நாட்டு அரசன் நரசிங்க முனையர் குழந்தை நம்பியாரூரனைக் கண்டார். குழந்தை யிடம் அன்புகொண்ட மன்னர் சடையனாரிடஞ் சென்று
91

Page 50
குழந்தையைத் தருமாறு கேட்டார். பெற்று நம்பியாரூர ரைத் தன்மகனாக்கிக் கொண்டார்.
அந்தணர் நெறிமுறைச் சூழலில் அரச திருவுடன் வளர்ந்தான் நம்பியாரூரன். உரிய வேளை உபநயனமும் நடைபெற்றது. நம்பியாரூரர் கலைகளில் வல்லவரானார். திருமணப்பருவம் வந்தெய்தியது. புத்தூர் சடங்கவி சிவா சாரியார் மகளைத் திருமணம் பேசினர். மன ஒருமைப்பாடு கண்டு திருமண நாளும் குறிக்கப்பட்டது.
திருமணத்துக்கு முன்பு நடைபெறும் காப்பணிதல் நிகழ்வை நம்பியாரூரருக்குச் செய்தார்கள். மறுதினம் திருமணக் கோலத்துடன் குதிரையிற் புத்துTரை அடைந்தார். பெண்மணிகள் நம்பியாரூரரை வரவேற்றனர். புத்துTர் மணம் வந்த புத்துார் என்னும் பெரும் பெயரைப் பெற்றது. மணமகன் குதிரையை விட்டிறங்கி மனப்பந்தருட் போடப்பட்டிருந்த ஆசனமொன்றிலிருந்தார்.
அந்தவேளை சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு முன்பு வாக்குக் கொடுத்தது போன்று சிவபெருமான் அவரைத் தடுத்தாட்கொள்ளும் பொருட்டுக் கைலாயத்தினின்றும் புறப்பட்டு ஒரு வயோதிபப் பார்ப்பனராய்த் தண்டுன்றிப் பந்தலுள் வருகின்றார். எல்லோரையும் ஒருமுறை பார்த்த அந்தணர் என் மொழியைச் சிறிது கேளுங்கள் என்றார். அடிகள் இங்கு எழுந்தருளியது நாம் செய்த தவம். சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கள்’ என்றனர் நம்பியாரூரனுடனாய அந்தணர். கிழவர் நம்பியாரூரரைக் கருணையுடன் பார்த்து ‘உனக்கும் எனக்கும் பெரியதொரு வழக்குண்டு’ என்கின்றார். வழக்கா! சொல்லுங்கள், அதைத்தீர்த்தபின்பு திருமணத்தைச் செய்வோம்’ என்கின்
92

றார் நமயியாரூரர். இந்த நம்பியாரூரன் எனக்குப் பரம்பரை அடிமை, இதனை இவன் பாட்டன் எழுதிக் கொடுத்த ஒலைகொண்டு அறியலாம்’ என்று கூறிய முதியவர் பாட்டன் எழுதிய ஒலை என்று ஒன்றை எடுத்துக் காட்டுகின்றார். “ என்ன பெரியவரே, அந்தணருக்கு அந்தணர் அடிமையாவதுண்டோ? உமக்கென்ன பித்துப் பிடித்துவிட்டதோ,’ என்று இகழுகின்றார் நம்பியாரூரர். * யான் பித்தனென்றால் என்ன? பேயனென்றால் என்ன? வீணே வித்தகம் பேசவேண்டாம், பணிசெய்யவா’ என்று வற்புறுத்துகின்றார் முதியவரான அந்தணர். அப்போது நம்பியாரூரர் ஒலையைப் பார்க்கவேண்டும் என்கின்றார். அந்தணர் கொடுக்க மறுக்கிறார். நம்பியாரூரர் அருக ணைய அந்தணர் ஒடுகின்றார். துரத்திச் சென்ற நம்பியா ரூரர் ஒலையைப் பறித்துக் கிழித்து எறிந்துவிடுகின்றார். அந்தணர் ஒலமிடுகின்றார். நின்றவர்கள் சமாதானஞ் செய்து, நீங்கள் எங்கிருப்பவர் என்று கேட்கின்றனர். இந்தத் திருவெண்ணெய்நல்லூரில்தான் என்கின்றார். வாருங்கள், அங்கேயே போய் வழக்கைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று எல்லோரையும் அழைத்துச் செல்கின்றனர். அங்கு வேதியர்கள் நிறைந்த சபையில் வழக்கைச் சொல்கின்றனர். திருவெண்ணெய் நல்லூர் வேதியர்கள், ‘நீர் இந்த இடத் தீராயின் உமது வீடு எங்கே? காட்டும்' என்கின்றார்கள். வாருங்கள் என்று எல்லோரையும் கூட்டிச் செல்கின்றார். அங்கே திருவருட்டுறை என்ற கோயிலுள்ளே நுழைந்தார். பின்னர் அவரைக் காணவில்லை. சிவபெருமான் உமா தேவியாருடன் காட்சி கொடுத்து ‘நாவலூரா, இந்த உலகபாசம் பிடிக்காதபடி நாமே தடுத்தாட்கொண்டோம் என்று திருவாய் மலர்ந்தருளினார். எல்லோரும் பேருவகை கொண்டனர். நீ என்னுடன் வன்மை பேசினாய், அதனால்
93

Page 51
உனக்கு வன்தொண்டன் என்னும் பெயர் வழங்குவதாக, நமக்குரிய அர்ச்சனை பாட்டு, ஆகவே நீ என்னைப்பாடு, பித்தா என்றே எடுத்துப்பாடு என்றனர். அன்றிருந்து தலங்கள் தோறுஞ் சென்று தேவாரம் பாடத்தொடங்கினார்.
திருத்தலங்கள் தோறுஞ் சென்றவர் திருவதிகைக்குப் பக்கலில் சித்த வடமடத்தில் தங்கினார். அங்கே இரவு துயின்றவேளை இறைவன் முதிர்ந்த வேதியராகி வந்து திருவடி தீட்சை செய்தார். திருவாரூர் சென்ற நம்பியாரூரர் இறைவன் பணிப்பை ஏற்றுத் திருமணக் கோலத்தை உடையவராகித் திருத்தலங்கள் தோறும் சென்றுவந்தார்.
திருக்கயிலாயத்தில் உமாதேவியாரின் தோழியராய் இருந்த கமலினியார் திருவாரூரில் உருத்திரகணிகையர் குலத்தில் பிறந்து பரவையார் என்ற பெயருடன் வளர் கின்றார். திருவருள் வழி நம்பியாரூரரும் பரவையாரும் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர். நம்பியாரூரர் இறை வனை வேண்டுகின்றார். சிவபெருமான் பணிப்பின் படி அங்குள்ள சிவநேசர்கள் இருவருக்குந் திருமணஞ் செய்து வைத்தனர்.
வழக்கம் போலத் திருக்கோவில் சென்ற நம்பியாரூரர் தேவாசிரிய மண்டபத்திருந்த தொண்டர்களைக் கண்டு இவர்களுக்கெல்லாம் அடியனாவது எப்போதோ என்று வருந்தினர். தியாசேகர் அடியவர் முன் தோன்றி அவர்க ளையெலாம் பாடுபடி அறிவுறுத்தித் தில்லைவாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடியெடுத்துக் கொடுத் தார். அங்கிருந்த திருக்கூட்டத்தை வணங்கிக் கொண்டு திருத்தொண்டத் தொகையைப் பாடினார்.
குண்டையூரில் பஞ்சம் நிலவிய போது சிவன் அரு
94

ளால் நெற்குவியல் மலைபோலமைந்தது. கொண்டுபோக முடியாதே என்று வருந்தித் திருக்கோளிலி என்னும் பதிசென்று ‘நீளநினைந்தடியேன்” என்று பதிகம் பாடினார். இரவு வீட்டுக்கு அனுப்புவோம் என்று பதில் கிடைத்தது. பரவையாரைச் சூழ இருந்தவர் எல்லோரும் நெல் கிடைக்கப் பெற்றவராய் மகிழ்ந்தனர். கோட்புலிநாயனார் நம்பியாரூரரைச் சந்தித்ததும் திருவாரூரிலேதான். கோட் புலியார் வேண்டுகோளுக்கிணங்கி திருநாட்டியத்தான்குடி சென்று இரண்டொரு தினங்கள் அவருடன் தங்கியிருந்தார். கோட்புலியார் புதல்வியர் சிங்கடியார் வனப்பகையார் நம்பியாரூரரை வணங்கினர். அந்தவேளை கோட்புலியார் நம்பியாரூரரைப் பார்த்து இவரிருவரையும் ஆண்டருள வேண்டும் என்று வேண்டினார். அவர்கள் இருவரும் என் புத்திரிகள் என்று இருவரையும் அனைத்து உச்சிமோந்தார் நம்பியாரூரர். செங்கற்கள் பொன்கற்கள் ஆன அற்புதமும் திருவாரூரிற்றான் நடந்தது.
திருமுதுகுன்று சென்று வழிபட்டார். முதுகுன்றப் பெருமான் பன்னிராயிரம் பொன் கொடுத்தார். எப்படிக் கொண்டுபோவது என்று சிந்தித்தார். திருவாரூர் மக்களுக்கு வியப்புத் தோன்றும் வகையில் அங்கே அந்தப் பொன் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். ஆரூரா! இப்பொன் முழுவதையும் மணிமுத்தா நதியிலே போடு, திருவாரூர்க் குளத்திலே எடுத்துக் கொள்வாயாக’ என்று ஒரு வாக்குக் கேட்டது. அப்படியே செய்துவிட்டார் நம்பியாரூரர். இடையே பல திருத்தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருவாரூரை அடைந்தார். திருமுதுகுன்றில் நடந்த சம்பவத்தைப் பரவையாருக்குச் சொல்லுகின்றார். இ.தென்ன அதிசயம் என்று அம்மையார் புன்னகை செய்கிறார். வா, பொன்னை எடுப்போம் என்று பரவை
95

Page 52
யாரைக் கூட்டிச் சென்று திருவாரூர்ப் பெருமானை வணங்கி திருக்குளத்தை அடைந்து இறங்கித் தடவுகின்றார். பொன் கிடைக்கவில்லை. திருப்பதிகம் பாடினார் தம்பிரான் தோழர். பொன்திரள் கிடைத்தது.
திருக்கைலைத் தொடர்புள்ள அனிந்திதையார் ஞாயிறு என்னும் ஊரில் ஞாயிறுகிழவர் மகளாகச் சங்கிலியார் என்னும் பெயருடன் பிறந்திருக்கின்றார். திருவொற்றியூர்க் கன்னியர் மடத்திருந்து பூத்தொண்டு செய்துகொண்டிருந்த வேளை வழிபாட்டிற்கு அங்கு சென்ற சுந்தரர் விதிவழி சங்கிலியாரை ஒரு கணம் பார்த்து விடுகிறார். சிவனரு ளால் இருவரும் இணைந்து கொள்ளச் சம்மதிக்கின்றனர். யான் சங்கிலியாரைப் பிரியேன் என்று நம்பியாரூரர் சத்தியம் செய்து கொடுத்ததன் மேல் திருமண ஏற்பாடு நடைபெற்றது. மறுதினமே திருDனம் நிறைவேறியது.
சங்கிலியாருடன் வாழ்க்கையைத் தொடர்ந்த நம்பியா ரூரர் திருவாரூர் சென்று வசந்த விழா காண விரும்பினார். ஒருநாள் திருவொற்றியூர் இறைவனை வழிபடச் சென்றவர் அப்படியே தொடர்ந்து திருவாரூர் நோக்கிச் செல்லத் தொடங்கினார். ஊரெல்லையைக் கடந்ததும் இரண்டு கண்களும் மறைந்தன. சபதம் தவறினமையால் நேர்ந்த தவறிது என்று உணர்ந்து கொண்டார். திருக்காஞ்சியை அணைந்து திருஎகம்பர் முன்னின்று வேண்டினார். இடக்கண் கிடைத்தது. திருவாரூர் தியாகேசப் பெருமான் திருவரு ளால் வலக்கண் பார்வையும் கிடைத்தது. பரவையார் தொடர்பு இல்லாத வேதனையை இறைவனிடம் சொல்லிச் சேர்த்து வைக்கும்படி வேண்டுகின்றார். சிவபெருமான் இரண்டு முறை தூது போய் இருவரையுஞ் சேர்த்து வைத்தார். இந்தத் தூதுச் செய்தியை அறிந்த ஏயர்கோன்
96

கலிக்காமர் நம்பியாரூரரை வெறுத்தார். இருவரையும் சிவன் சேர்த்து வைத்தார். பின்னர் சேரமான் வருகை தந்தார் அவரை நம்பியாரூரர் வரவேற்று மகிழ்ந்தார். அவிநாசிப் பெருமானை வழிபட்டு முதலை உண்ட பாலகனை மீட்டு அற்புதஞ் செய்தது போன்ற நிகழ்வுகள் பல இடம்பெற்றுள்ளன. சேரமான் பெருமாள் நாயனார் உடனாகிக் கைலை சென்று மீண்டும் ஆலால சுந்தரராகித் திருத்தொண்டு செய்து வரலானார்.
இவர் முத்தியடைந்த திருநாளர் ஆடிச் சுவாதி. ஒரு குறிப்பு
"தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று சிவன் வாக்காகக் கிடைத்த சொற்றொடரை வைத்துச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொணர்டத் தொகை என்னும் பதிகம் பாடினார், அப்பதிகம் அறுபத்து மூன்று தனியடியார்கள் பற்றியும் ஒன்பது தொகை அடியார்கள் பற்றியும் பேசுகின்றது. இதனைச் சிறிதளவு விரித்துச் சொல்வதுதான் நம்பியாண்டார் நம்பி செய்த திருத்தொண்டர் திருவந்தாதி இந்த இரண்டையும் ஆதரவாகக் கொண்டு சேக்கிழார் மிகவிரிந்த சரிதத்தையுடைய திருத்தொண்டர் புராணம் என்னும் பெருநூலைச் செய்தார். இந்த நூலுக்கும் 'உலகெலாம்' என்று சிவன்தான் அடியெடுத்துக் கொடுத்தார்.திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடப்பட்ட அறுபத்து மூவருள் மாணிக்கவாசக சுவாமிகளின் பெயர் இடம்பெறவில்லை. அதனால் அதைத் தொடர்ந்து வந்த திருத்தொண்டர் திருவந்தாதியிலும் மாணிக்கவாசகர் பெயர் இல்லை. அவற்றை மூலமாகக் கொ60ண்ட சேக்கிழாரும்
'தொன்று சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி இ6ர்றெ60 ஆதர வாலிங் கியம்புகேன்'
என்று சொல்6மித் தப்பிக் கொள்கின்றார்கள். சேக்கிழார் சுவாமிகளைப் பொறுத்தவரை சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் சொன்னவர்களை மட்டுந்தான் பாடினாரென்று தெரிகிறது. எனவே மணிவாசகர் வரலாறு இல்லாது போனமைக்கான காரணம் அவர் பெயர் திருத்தொண்டத் தொகையில் இடம்பெறாது போனமையே என்று உணர முடிகின்றது.
-ஆசிரியர்.
97

Page 53
°一 சிவமயம்
நன்றி
இறுதி நிலையில் வேண்டியவற்றைச் செய்து உதவிய பெருமனம் படைத்த பெரியவர்களுக்கு,
இறுதிக் கிரியைகள் நடைபெறுவதற்கு வேண்டிய உதவி களைச் செய்ததுடன் அதனை ஒழுங்காக நடைமுறைப் படுத்தியவர்களுக்கு,
தொலைபேசி மூலம், தந்தி மூலம், அஞ்சல் மூலம், நேரில் அநுதாபந் தெரிவித்து ஆறுதலளித்தவர்களுக்கு,
மலர்வளையம், மலர்மாலை, மலர் என்பன கொண்டு அஞ்ச லித்தவர்களுக்கு,
அந்தியேட்டி சார்பான கிரியைகளிற் பங்களிப்புச் செய்த வர்களுக்கு,
அமரரின் ஆத்ம சாந்தி நோக்கமாக நடைபெற்ற மதிய போசன விருந்திற் கலந்து சிறப்பித்தவர்களுக்கு
எமது உளமார்ந்த நன்றி!
மனைவி பிள்ளைகள் மருமக்கள் ந. மங்கையர்க்கரசி ந. கணேசலிங்கம் மங்களேஸ்வர்
ந. அமிர்தலிங்கம். சுகிர்தராணி புகையிரதநிலைய விதி க. சண்முகாதேவி கனகராஜா நெட்டிலைப்பரப்பிள்ளையர் கோவிடி, ந.முத்துலிங்கம் တ္တိဓoIII கேர67ர் 7வில்மேர்கு, ந.சண்முகலிங்கம் சிவவதனி கோரர்ட7வில் ந. சிவராஜலிங்கம் ரஜனி
நி சத்தியதேவி நிரஞ்சன். ந. சத்தியலிங்கம்
98


Page 54

莺
=
శ్లో
Sğb
TSFSIUITSri