கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாறி வரும் புதிய உலக ஒழுங்கு: புவிசார் அரசியல் நோக்கு

Page 1


Page 2


Page 3


Page 4

மாறிவரும் புதிய உலக ஒழுங்கு
புவிசார் அரசியல் நோக்கு
கே.ரீ.கணேசலிங்கம்
அரசறிவியல்- சமூகவியல்துறை, δωθψύδι ύύ, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்

Page 5
மாறிவரும் புதிய உலக ஒழுங்கு புவிசார் அரசியல் நோக்கு
G):ஆசிரியர்
முதலாவது பதிப்பு 2002.10.01
வெளியீடு:- Mr.TThayalan, 11, Ruedelo
Hermet, 93400 ST-ouen, France
பதிப்பு: S.S.R. Computer & Offset Printers,
288, Palaly.Road, Jaffna.
விலை:-150/-

சமர்ப்பணம்
எனது உயர்வுக்கு தமது உதிரத்தை உரமாக்கி உழைத்த அன்புக்கும், மதிப்புக்கும் உரிய ஆசான்களான திரு. சு. திருஞானம் அவர்கட்கும் திருமதி இராஜலக்ஸ்மி சந்திரபாலன் அவர்கட்கும் இந்நூல் சமர்ய்பணம்.

Page 6

APEC ASEAN BJP CAIC CASC CASMIC
CASTC
CIA CTBT CVC DF EAPC FMCT FSRS FTAA GSLV
AT ICBMS IRBMS ISRO MRBMS MTCR NASA
NATO NIC’S
விரிவாக்கம்
-Anti Ballistic Missiles -AsiaPacific Economic Cooperation -Association Of South East Asian -Barathiya Jenata Party -China Aero Space Industries Co-Oporation -China Aero Space Co-Oporation -China Aero Space Machinery And Electornics Cooporation -China Aero Space Science And TechnologyCooporation
-Central Intelligence Agency -Comprehensive Nuclear Test-Ban Treaty. -Chemical Weapons Convention
-Dong Fong -Euro-Atlantic Partenership Council -Fissile Material CutoffTreaty -Former Sovite Republic's -FreeTrade Area Of Americas -Geosynchronous Satellite Launch Vehicle -Hundustan Aeronauties Ltd -Isreal Aircraft Industries -Inter Continental Ballistic Missile -Intermediate Range Ballistic Missile -Indian Space Research Organization. -Mediam Range Ballistic Missile -Missile Technology Control Regime -National Aeronautics And Space Administration.
-North Atlantic Treaty Organization -Newly Industrial Countries

Page 7
NMD)
NWTZ OECD
-National Missile Defence -Nuclear Non-Proliferation Treaty -Nuclear Weapon Free Zones -Organaization For Economic Co-Operation
And Development -Permanent Five (Members OfThe UNSecu
rity Council) -Partnership For Peace -Permanent Joint Council (NATO-RUSSIA) -Prevention Of Terrorism Act -Polar Satlliteanuch Vehicle -Strategic ArmsLimitationTalks -SouthEast Asian Treaty Organisation -Submarine Launched Ballistic Missiles -South-Pacific Treaty -ShortRange Ballistic Missile -Strategic Arms Reductions Talks -Theater Missile Defence -Warsaw Treaty Organization (Warsaw Pact) -World Trade Organization -Weapon. Of MassDestruction

முன்னுரை
“மாறிவரும் புதிய உலக ஒழுங்கு' என்ற இந்நூல் கடந்த ஓராண்டுக்கு மேலான முயற்சியின் விளைவாக ஏற்பட்டதாகும். சர்வதேச அரசியல் கற்கை நெறியானது எண்ணக்கருக்களை மட்டும் உள்ளடக்காது அதன் நடைமுறையினையும் தாங்கிய யதார்த்தவாத உலகத்தை காண்பிக்கின்ற கண்ணாடியாக துலங்குகிறது. அந்த முயற்சியில் சர்வதேச அரசியலில் மிகப் பிந்திய வடிவத்தை விளங்க வைப்பதற்கான உள்ளடக்கத்தைக் கொண்ட இந்நூல், கடந்த ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் சமூக விஞ்ஞானப்படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் அபிவிருத்தியாகும்.
உலக மாற்றத்தின் வேகம் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக அமைந்த போதும் அறிவியல் புரட்சியின் வேகம் அதன் யதார்த்தத்தை காட்ட தவறுவதில்லை. மூலதன திரட்சி எங்கு குவிகிறதோ அங்கு அரசியல் அதிகாரம் மேலெழுகிறது. அவ்வாறு மேலெழும் அரசியல் அதிகாரம் பொருளாதார வளர்ச்சியை தொழில்படும் சக்தியாக கொண்டு செயல்பட விளைகிறது. அத்தகை வரலாற்றுக் கணி னோட்டம் அரசியல் கோட்பாடுகளிலும், அதன் பிரகிருதித்துவ கடமைகளிலும் அதிகமான செல்வாக்கை செலுத்திவருகிறது. அக்கடமைகளில் ஏற்பட்ட புதிய அபிவிருத்தி மூலதன திரட்சியை அரசியல் அதிகாரம் என்ற சக்தி முழுமையாக விழுங்கி ஏப்பம் விடும் உலக ஒழுங்கையே தரிசிக்க வழிசமைத்துள்ளது. இதனால்
மூலதனத் திரட்சி உற்பத்தி பண்டம் சாராது, உழைப்பு சக்தியில்

Page 8
தங்காது, சந்தை வலுக்களுடனும், அவை சார்ந்திருக்கும் அரசியல் வலுக்களுடனும் ஒன்றிணைந்து விடுகிறது. அத்தகைய ஒன்றிணைப்பு இறைமையுடைய, மூலதன திரட்சியை உள்ளடக்கிய அரசுகளுடன் மட்டும் சுருங்கிவிடுகிறது. அத்தகைய சுருக்கத்தை சற்றுவிரிவுபடுத்திய அம்சமான அறிவியல் எழுச்சியடைந்து சித்தாந்த வேறுபாடுகள் இறைமை உடைய பல அரசுகளுக்கான தளத்தை கடந்த 20ஆம் நூற்றாண்டில் விரிவாக்கியது. அத்தளம் மிக நீண்டகாலம் நிலையான திசையை உலகத்துக்கு காட்டியிருந்தது. ஆனால் அது மீண்டும் பிசிறலை சந்தித்த போது ஒரு சில தனிமனித சக்திகள் அதனை தீர்மானிப்பவையாக அமைந்தமையினால் மீண்டும் ஒரு மாறுதல் அவசியமாகியது. பிரபஞ்சத்தின் இயக்கமும், தொழில் பாடும் மாற்றத் தரின் யதார்த்தமே அத்தகைய மாறுதல் அறிவியல்பூர்வமானதாக திகழும்போது தனித்துவமாகவும், நிலைத்ததுமான உருவாக்கங்களை ஏற்படுத்தவல்லதாக அமைந்துவிடுகிறது. எனவே மாற்றத்தை அறிவியல்பூர்வமான தளத்தினுடாக நோக்க முயலும் போது தெளிவும், முடிவும், நேர்த்தியானதாக அமையும் மூலதனத்திரட்சி அறிவியலுடன் இணையும்போது வளர்ச்சி நிர்ணயமான காரணியாக மாறுகிறது. அப் போது போலியான அரசியல் அதரிகாரமும் அயோக்கியத்தனமான பொருளாதார சுரண்டலும், அரசியல் ஆளுகையிலிருந்து அந்நியமாகி விடும்.
இத்தகைய தளத்தினை விரிவாக்கும் முயற்சியில் விளைந்த இந்நூல் நான்கு அலகுகளைக் கொண்டது. அந்நான்கு அலகுகளுக்கூடாக சமகால அரசியல் பொருளாதார இராணுவ, இலக்குகளை இனங்காட்டும் முயற்சியின்போது, புவிசார் அரசியல்

கோட்பாடுகள் நிரந்தமான அரசியல் பொருளாதார- பாதுகாப்பு இருப்பை கேள்விக்குட்படுத்த முயன்றதையும் அக்கோட்பாடுகள் ஒவ்வொன்றின் தளத்திலிருந்தே உலக அதிகாரப் போட்டி இன்றுவரை சாத்தியமாகிவருகிறதென்பதை காட்டுகிறது. தற்போதைய மாறிவரும் புதிய உலக ஒழுங்கு அதற்கான முன்னாயத்தங்களையே கொண்டு இயங்குகிறது. இந்நூலில் குறிப்பிடப்படும் “விழிம்பு நிலமி', 'மையநிலமி', 'இருதய நிலம், ஆகியன புவியியல் ரீதியில் பாரிய வேறுபாட்டை கொண்டிருக்காத நிலையில் அரசியல் நோக்கில் ஏறக்குறைய ஒரே பிரதேசமாகவே இனங்காணப்படுகிறது. குறிப்பாக கூறுவதனால் அது ஐரோப்பிய, (கிழக்கு) ஆசியப் பகுதியை சுட்டுவதாகும். இப்பிரதேசம் நோக்கிய அரசியல் அதிகாரப் போட்டியே 20ஆம் நூற்றாண்டு அரசியலில் மட்டுமல்ல 21ஆம் நூற்றாண்டு அரசியலிலும் காணப்படுகின்ற அம்சமாகும் o God, ஒழுங்கு மாற்றமுறுகிற வேளையில் அதன் இலக்கு அல்லது அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கும் மையம் என்றுமே விழிம்பு நிலம்', 'மைய நிலம்', 'இருதய நிலம்’ என்று அழைக்கப்பட்ட பகுதிக்கே உரியதாகும் இது மாற்றத்தை ஏற்படுத்தும் பிரதேசம் என்பதானால் அதனை கருதுகோளாக கொண்டு மாறிவரும்
புதிய உலக ஒழுங்கு என்ற நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்
கே.ரி.கணேசலிங்கம், விரிவுரையாளர், அரசியல், சமூகவியல்துறை, யாழ் பல்கலைக்கழகம்.

Page 9
அரசறியிவல் சமூகவியல் துறைத்தலைவர் கலாநிதி என். சண்முகலிங்கனின்
வாழ்த்துரை.
உலக நாடுகளுக்கிடையிலான உறவுக் கோலங்கள் கால வெளியில் மாற்றங்களைக் காட்டுவன, அணிகளாய் இசைதலும், முரண்பட்டு முறிதலுமாய் இந்த உறவின் தன்மைகள் வேறுபடுவன. வேறுபடும் இந்த உறவின் தன்மையானது மேலாண்மை செலுத்தும் நாடுகளின் வல்லமையில் தங்கியுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் நியட்சே சொன்ன வல்லவன் வாழ்வான்- தத்துவத்துக்கு உயிர் தருவதாகவே இன்றைய உலக நாடுகளின் முனைப்புக்களை புரிய முடிகிறது.
வல்லமையென்பது பல பரிமாணங்களில் இங்கு விஸ்வரூபமெடுப்பது. கருவி காரணங்களிலிருந்து கருத்தியல்வரை இந்த வல்லமையின் எல்லைகளைக் காண முடியும்.ஒரு காலத்து முதலாம், இரண்டாம், மூன்றாம் உலக பிரிப்புகள் இன்று உலகமயமாக்கல் என்ற புதிய கருத்தியலில் எல்லாம் ஒன்றாய் எனும் புதிய கதைவசனங்கள், காட்சி விரிவாக்கங்கள் மாக்ஸியஎதிர்மாக்ஸிய கருத்தியல் சம நிலை கலைந்த போது (கலைக்கப்பட்டபோது) சர்வதேச அரசியல் சமநிலைக்கான புதிய கருத்தியல்கள் முனைப்புப் பெறும். ஏவுகணைத் தொழில்னுட்ப வழி சம நிலை, டொலருக்கு சமனானதாக யூரோ நாணய ஏற்பாடு மிகப்பிந்திய கண்டுபிடிப்பாக பயங்கரவாதத்துக்கு எதிரான அணியாகி சமநிலையென புதிய ஏற்பாடுகள்.
இவை அனைத்தினதும் பலிக்கடாக்களாய் இன்னமும் தம் சுயங்களை தனித்துவங்களை நிலைநாட்ட போராடும் எங்களைப் போன்ற பணபாடுகளின் இருப்புக்களே இன்று கேள்விக்குள்ளாகும்.
இந்நிலையில் இன்றைய உலக நிலைமை தொடர்பான தெளிந்த ஞானமும், உறுதியான பண்பாட்டுணர்வும் எங்களது

முதன்மையான தேவைகளாகும். இன்றைய நிலைமைகள் உரியவாறு புரிதல் -உணருதல் என்பது அதற்குரியப் அறிவுறுத்தளத்தில் நிகழும் போதே அர்த்தமுள்ளதாகும். இந்த அறிவு அனைத்து மக்களையும் சேரும் விதமான ஏற்பாடும் இன்று அவசியமானதாகும். இதனை எழுதும் வழியில் தமிழை அறிவியல் மொழியாக்கும் பணி எமதாகும்.
இந்தவகையில் அரசறிவியலை தன் சிறப்பு ஆர்வத்துறையாக தேர்ந்து இன்ஞ எங்கள் பல்கலைக்கழக அரசறியில் துறை விரிவுரையாளராக பணியாற்றும் தம்பி கே.ரி.கணேசலிங்கம் அவர்களின் “மாறிவரும் புதிய உலக ஒழுங்கு” என்னும் நூல் நல்வரவாகிறது.
காலத்தின் தேவையாய் கனியும் இந்நூல், மிகத் துல்லியமாய் உலகின் கடந்தகால- நிகழ்கால மாற்றங்களை, அவற்றின் பின்னணியான ஆதிக்க விசைகளை இனங்காட்டி நிற்கின்றது. புவிசார் அரசியல் எண்ணக் கருவாக்கத்திலிருந்து இன்றைய உலகமயமாக்க அலைகள் வரை ஏற்படுத்தும் விளைவுகள்ை பகுப்பாய்வு செய்யும் இந்நூல் எங்கள் அரசறியிவியல்-சமூகவியல் மாணவாகளுக்கு அரியதொரு கைநூல்; சமூகத்திற்கு சிறந்த வழிகாட்டி
கணேஷின் ஆக்க முயற்சிகள் மென்மேலும் வளர
என்றொன்றம் அன்பான வாழ்த்துக்கள்.
கலாநிதி.என்.சண்முகலிங்கன், அரசறிவியல்-சமுவியல்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

Page 10
அணிந்துரை
“மாறிவரும் புதிய உலக ஒழுங்கு' என்ற இந்நூலின் ஆசிரியராகிய திரு.கே.ரி.கணேசலிங்கம் அவர்கள் மாணவப் பருவத்திலிருந்தே சர்வதேச உறவுகளில் ஈடுபாடு கொண்டவர். இன்று யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் அரசறிவியல், சமூகவியல் துறையில் கனிவழ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் அவர் பட்டதாரி மாணவர்களுக்கு சர்வதேச உறவுகளைக் கற்பிப்பவர். தனது சிந்தனையோட்டத்தைக் கட்டுரைகள், கருத்தரங்குகள், ஆய்வுரைகள் மூலம் வெளிப்படுத்தி வருபவர். குறிப்பிட்ட துறையில் அவரது அர்வம், அர்ப்பணம், உழைப்பு போன்றவற்றைப் பறைசாற்றுவதாக இந்த ஆய்வு நூல் அமைகின்றது. சமகால சர்வதேச உறவுகளில் மிகவும் முனைப்பானதும் , அதிக வாதத்துக் குரியதுமான ஒரு கருப்பொருளை ஐந்து அத்தியாயங்களில் விளக்கியுள்ளார். ஆய்வாளர்கள், மாணவர்கள் மட்டுமன்றி, சர்வதேச உறவுகளில் ஆர்வம் கொண்ட எவரும் இந்நூலை வாசித்துப் பயன்பெற (ՄIգավլb.
துறைசார்ந்ததும், புலமைசார்ந்ததுமான யதார்த்தங்களுடாக இந்நூலைச் சற்று நோக்குதல் அவசியமாகின்றது. சர்வதேச 9 p6,56it (International Relation)gio (353 oly fugi) (International Politics), Fig))(353. 665Tyshlab6ir (International Affairs) என்ற மூன்று பதங்களால் சர்வதேசச் சிக்கல்கள் அணுகப்பட்ட போதும் சர்வதேச உறவுகள் என்ற பதமே அதிக பொருத்தப்பாடும், கருத்துச் செறிவும் கொண் டதாக இருப்பதுடன் பெரும்பான்மையோரால் ஏற்றுக் கொள்ளப்படும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. சர்வதேச அரசியல் என்பது தனித்து அரசியல் பரிமாணத்துடன் மட்டும் கட்டுண்டதாக இருக்கையில் சர்வதேச விவகாரங்கள் என்பது துறை சார்ந்து அல்லது புலமை சாாந்த அடிப்படைகள் அருகி மேலெழுந்த வாரியாக அன்றாட சர்வதேசவிவகாரங்களை விளக்குவதாக அம்ைகின்றது. இவையிரண்டுக்கும் மாறாக சர்வதேச உறவுகள் என்பது

அரசியல் பரிமாணத்துக்கு அப்பால், சமூக, பொருளாதார கலாசார, புவியியல், வரலாற்றுப் பரிமாணங்களையும் உள்ளடக்கி அர்த்தமும் ஆழமும் கொண்ட ஆய்வுத் துறையாக விளங்குகின்றது. இந்நூலின் இரு அத்தியாயங்கள் தனித்து புவியியல் பரிமாணத்தையம், பொருளாதாரப் பரிமாணத்தையும் பற்றிப் பேசுகின்றன. அவ்வகையில் சர்வதேச உறவுகள் பற்றிய கற்கைக்குக் காத்திரமான பங்களிப்பை வழங்க இந்நூல் முற்படுகின்றது.
சர்வதேச உறவுகள் பற்றிய கற்கை நெறியானது சர்வதேசச்சிக்கல்களின் நிர்ணயசக்திகளாக விளங்கும். யுத்தம், சமாதானம் என்ற இரண்டையுமே பெருமளவுக்கு முக்கியப் படுத்துகின்றது. ஆனால் சமூகவிஞ்ஞானத்தில் ஏற்பட்ட புதிய அபிவிருததிகளுக்கேற்ப யுத்தம் பற்றிய விடயங்கள் இராணுவ அறிவியல் (Military Science) என்றும், சமாதானம்பற்றிய விடயங்கள் பல்வேறு கவர்ச்சிகரமான பெயர்களாலும் தனித்துறைகளாக மேற்கு நாடுகளில் உருவாகி விட்டன. இவ்வாறு சுருங்கி விட்ட சர்வதேச உறவுகள் பற்றிய கற்கைக்கு Lổ60őTOBb (p(g6ODLDuuT60T (8bTä560Da5 (Holistic Viwe) 6) pÉIGölbg?sĩ முயற்சியாகவும் இந்நூல் அமைகின்றது.
இன்னும், சர்வதேச உறவுகள் பற்றிய பிரபலமான நூல்கள் பல கூட கருத்தியல் பிராந்திய வாதங்களாலும், ஆசிரியர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைப் பிரதிபலிக்கும் நிலைப்பாடுகளாலும் பாதிக் கப்பட்டு அநாவசியமான முரண்பாடுகளையும், குழப்பங்களையும் தோற்றுவித்துள்ளன என்பது மறுக்க முடியதாதாகும். இக்குறைபாட்டை ஓரளவுக்கு நிவர்த்தி செய்யும் வகையில் அறிவியல் தனத்தில் நின்று, எளின்ம, தெளிவு விமர்சன நோக்கு எனபற்றுடன் சுவவாரஸ்யமாக விடயங்களை விளக்கும் தனித்துவமான பாணியையும் கலந்த ஆசிரியர் வாழ்த்துச் செல்லுதல் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதாகும்.

Page 11
மொத்தத்தில் ஆசிரியரின் கன்னிமுயற்சி தன்னிறைவான ஒன்றாக காணப்படுகின்றது. தமிழ் மொழி மூலம் சர்வதேச உறவுகளைக் கற்கின்ற பல்கலைக்கழக மாணவர்கள் சமகால விடயங்கள் பற்றி சரியான பிரக்ஞையைப் பெறுவதற்கு இந்நூல் சிறந்ததோர் கையேடாகும். கலைச் சொல் உருவாக்கத்திலும், மொழி பெயர்ப்பிலும் உருவாகும் இடர்களைக் களைந்து முன்னுதாரணமான இந்நூலை எழுதிய ஆசிரியரைப் பாராட்டி வாழ்த்துகின்றேன். எதிர்காலத்திலும் ஆக்க பூர்வமான தமிழ் நூல்களால் அரசறிவியலுக்கு உகந்த பங்களிப்பை ஆசிரியர் வழங்குவார். என்பதும் எனது ஆர்வம் மேலிட்ட உறுதியான நம்பிக்கையாகும்.
கலாநிதி. அ.வே.மணிவாசகர் சிரேஷ்ட விரிவுரையாளர் அரசறிவியல்- சமுகவியல் துறை யாழ் பல்கலைக்கழகம்.

நன்றியுரை
“மாறிவரும் புதிய உலக ஒழுங்கு' என்ற இந்நூலின் உருவாக்கத்துக்கு தூணாக நின்று உழைத்த பலருக்கு நன்றி கூறவேண்டியது எனது கடமையாகும்.
குறிப்பாக இந்நூலுக்குரிய ஆரம்ப வடிவத்தினை கட்டுரை ஒழுங்கில் சமூக விஞ்ஞான படிப்பு வட்டத்தில் வாசித்த போது காத்திரமாக விமர்சனங்களை முன்வைத்த சமூக விஞ்ஞான படிப்பு வட்டத்தின் ஆர்வலர்களுக்கு முதன்மையான நன்றிகள். அத்துடன் இந்நூலை எழுத்து வடிவத்தில் தயாரித்த போது அதனை வாசித்து ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைத்த திரு.வே.சேந்தன், திருகவேல்தஞ்சன், மற்றும் வைத்தியகலாநிதி குமரவேள் போன்றவர்களுக்கும் திரு.பிரதீபன், திரு.சாந்தசீலன் மற்றும் நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.
மேலும் இந்நூலுக்கான வாழ்த்துரை தந்து என்னை எப்போதும் ஊக்குவித்து வரும் காலாநிதி என். சண்முகலிங்கன் அவர்கட்கும் அணிந்துரையை வழங்கியதுடன் எனது கல்வி உயர்வுக்கு என்றென்றும் உறுதுணையும், ஒத்துழைப்பும் வழங்கிவரும் கலாநிதி அவே.மணிவாசகர் அவர்கட்கும் மதிப்புக்குரிய இளைப்பாறிய மூத்த அரசறிவியல் ஆசானாகிய கலாநிதி சண்முகநாதன் அவர்கட்கும் எனது சக விரிவுரையாள
நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.
மேலும் எனது ஆய்வுப் புலத்துக்கு என்றென்றும் உதவிவரும் எனது அன்புக்குரிய குடும்பத்திற்கு எனது நன்றிகள்
இறுதியாக இந்நூலினை அச்சுவடிவத்தில் ஒழுங்குபடுத்திய எஸ்.எஸ்.ஆர் கணனி நிறுவனத்துக்கும் அதன் உரிமையாளருக்கும், ஊழியர்களுக்கும் மற்றும் வெளியீட்டை செய்யும் தயா பிறைவேட் லிமிட்டட்டினருக்கும் நன்றிகள்.

Page 12
பொருளடக்கம்
விரிவாக்கம் முன்னுரை வாழ்த்துரை அணிந்துரை நன்றியுரை
அத்தியாயம்
1. உலகளாவிய மேலாதிக்க வியூகத்தில்
புவிசார் அரசியல்
2. உலகளாவிய இராணுவ-அரசியல் போக்கு
3. அமெரிக்க மேலாண்மையை நிலைநிறுவும்
தேசிய பாதுகாப்பு ஏவுகணை
4. உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்க
அரசுகளின் போக்கு
5. முடிவுரை

உலகளாவிய மேலாதிக்க வியூகத்தில் புவி சார் அரசியல்
சர்வதேச அரசியலில் பிரபலமான கோட்பாடுகளில் ஒன்றாக புவிசார் அரசியல் கோட்பாடும் விளங்குகிறது. புவி (Geo) அல்லது புவியியல் (Geography) இயற்கையாகவே ஓர் அரசியல் இருப்பைக் கொண்டுள்ளது. தகவல் விஞ்ஞான மறுமலர்ச்சிகளும், தொழில்நுட்பப் புரட்சிகளும் பிரமாண்டமான உரு மாற்றங்களை செய்த போதும் “புவி” என்றுமே தனது வலுவை இழந்துவிடவில்லை என்ற கருத்து வலுவாகவே உள்ளது. ஆனால் புவி தவிர்ந்த இன்னோர் கோளில் மனித இருப்பு நிரந்தரமானதாக அமையும் வரை அல்லது புவியின் இடப்பெயர்ச்சி பெரியளவில் சாத்தியமாகும் வ்ரை புவியின் அரசியல் பலம் கேள்விக்கிடமின்றி
நிர்ணயமானதாக அமைந்திருக்கும்.
நவீன புவிசார் அரசியல் கோட்பாட்டை சர்வதேச அரசியலுக்குள் உட்படுத்தரியவர்களில் ஐரோப்பிய புவியியலாளர்களே முதன்மையானவர்கள். அவர்களிலும் ஜேர்மனியர்களும், ஆங்கிலேயர்களும், முன்னணி வகித்தனர். Alexander Von Humboidt (1799)karl Ritter (1804) Arnold Guyot (1849) Boston (1849) ஆகியோர் புவிசார் அரசியலுக்குரிய எண்ணக்கருக்களை வெளியிட்டனர். இவர்களின் கருத்துக்களை பின்னணியாகக் கொண்டு ஜேர்மனிய புவியியலாளரான Friedrich Ratzel என்பவர் முதல் முதலாக நவீன புவிசார்அரசியலை முறைசார் கற்கைநெறியாக உருவாக்கினார். இவரது சிந்தனை
1 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 13
19ஆம் நூற்றாண்டின் சர்வதேச அரசியல் தளத்தில் திருப்புமுனையாக அமைந்தன. உலகளாவிய ரீதியில் அரசுகளின் அதிகாரப் போட்டிக்கு Ratzel இன் புவிசார் அரசியல் கொள்கைகள் அடிப்படையாக அமைந்தன. ஓர் அரசின் அமைவிடத்திலும் (Location) அதன் பரந்த விசாலமான இடைவெளியிலும் (Space) அவ் அரசின் அதிகாரப் பிரயோகத்தின் ஆதிக்கம் தங்கியிருந்ததனால் அது, புவிசார் அரசியலை வலுப்படுத்தியது. Ratzal இன் எண்ணத்தில் உலக நாடுகளில் அமெரிக்கா மட்டுமே பரந்த பரப்பையும், மிகப் பிரமாண்டமானதும், விசாலமானதுமான, பரந்த இடைவெளியையும் கொண்ட அரசாக அமைகிறது. அவ்வாறுRatzal கருதுவதற்கான அடிப்படை பசுபிக் சமுத்திரத்தாலும், அத்திலாந்திக் சமுத் தரத் தாலும் பிரிக் கப் பட்ட தனித் தேசமாக அமைந்திருப்பதுடன், அமெரிக்க கண்டம் முழுவதும் அதன் செல்வாக்குக்கு சவால் விடும் வலு வேறு எந்த அரசுக்கும் இல்லை என்பதை கோடிட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கலாம். ஏனெனில் Ratzel இற்கு பின்பு புவி சார் அரசியல் எண்ணக்கருவை முன்வைத்தவர்களின் அமெரிக்கா தொடர்பான மதிப்பீடு அவ்வாறானதொன்றாகவே அமைந்திருந்தது என்பது கவனத்திற்குரியதாகும்.
நில அதிகாரக் கொள்கை
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம்முதல் நடுப்பகுதி வரை இங்கிலாந்தை சேர்ந்த புவியியலாளரான Halford Mackinder புவிசார் அரசியல் பற்றிய எண்ணக்கருக்களை முன்வைத்தார்.
இவரது ஒவ்வொரு எண்ணக்கருவாக்கமும் உலகளாவிய ரீதியில்
கே.ரி.கணேசலிங்கம் 2

அதிகாரப் போட்டியை ஏற்படுத்துவதாகவே மாறியது. அவற்றை ஒவ்வொன்றாக நோக்குவதன் மூலம் பொருத்தமான தகவலையும், புவிசார் அரசியலின் பரிமாணத்தையும், புரிந்து கொள்ள முடியும்.
Mackinder இன் முதலாவது பிரகடனம் 1904 இல் வெளியானது அதனை மையநிலக் கொள்கை (Pivot Theory) என சுருக்கமாக அழைத்தனர். (படம்.1-ஐப் பார்க்க) அவரது மையநிலக் கொள்கையின் சாராம்சத்தில் பின்வரும் அம்சம்
முதன்மை வகித்தது.
“உலகளாவிய அரசியலின் மையநிலப் பகுதி ஐரோஆசியப் பிரதேசமாகும் (Eurasia) உலகத்தை ஆளுகைக்கு உட்படுத்த வேண்டுமாயின் அல்லது மேலாதிக்கம் செலுத்த வேண்டுமாயின்மைய நிலத்தை ஆளுகைப்படுத்த வேண்டும்’
Mackinder இன் மைய நிலப் பிரதேசமானது ரஷ்சியா, ஜேர்மனி, சீனா, (மிகச் சிறிய பகுதி) கிழக்குஜரோப்பா, வடஆசியா என்பனவற்றை உள்ளடக்கியிருக்கின்றது. Mackinder இன் கருத்தைப் பொருமளவுக்கு அனுசரித்த James Fairgieve மையநிலப்பிரதேசத்தில் பெரும் மக்கள் தொகையைக் கொண்ட சீனா வலுவான மேலாதிக்க நாடாக விளங்குமென 1911 களில் கூறினார். Mackinder ரஷ்சியாவையும், ஜேர்மனியையும் முதன்மைப்படுத்த James Fairgrieve சீனாவை மைய நிலத்தின் முதன்மை நாடு என விபரணப்படுத்தினர். இருவரது கணிப்பீடும் கடந்த சர்வதேச அரசியல் வரலாற்றில் பொய்த்துப் போகாதது என்பது குறிப்பிடத்தக்கது.
3 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 14
Mackinder இன் இரண்டாவது புவிசார் அரசியல் கொள்கை 1919 இல் முன்வைக்கப்பட்டது. அதனை இருதய நிலக் கொள்கை (Heartland Theory) என அழைத்தனர். மையநிலக் கொள்கையின் விருத்தியாக அவர் கருதும் இருதய நிலக் கொள்கை உலகளாவிய அதிகார ஆளுகை கொள்கையாக கருதுகின்றார். இருதய நிலக் கொள்கையில் சீனா, இந்தியா மட்டுமன்றி மையநிலப் பிரதேசத்துடன் திபெத், மொங்கோலியா ஆகிய பிரதேசங்களையும் உள்ளடக்குகின்றார். மத்திய கிழக்கு, ஐரோப்பாவினது பகுதிகளை இருதய நிலக் கொள்கைக்குள் உட்படாதென உறுதிப்படுத்திய போதும் இருதய நிலத்தின் பாதுகாப்பு அரண்களாக அல்லது வலயங்களாக அப்பிரதேசங்களை இனங்காண முற்படுகின்றார். மேலும் நிலப்பரப்பை மட்டும் முதன்மைப்படுத்திய நிலையிலிருந்து விலகி கடற் பிரதேசத்தையும், அவற்றின் கரையோரங்களையும் நிலப்பரப்பின் பாதுகாப்பு அரணாக கொள்ளும் நிலமை Mackinderஇன் மைய நிலக் கொள்கையின் அபிவிருத்தியாக இருதயநிலக் கொள்கை அமைகிறது. இருதய நிலத்தின் சாதகமான இன்னோர் அரணாக பால்ரிகடல் பகுதியையும், கருங்கடல் பகுதியையும், உள்ளடக்குகின்றார். (படம் 2 ஐப் பார்க்க) Mackinder இன் மைய நிலக் கொள்கையின் விரிவாக்கத்தின் கீழ் இருதய நிலம் ஏறக்குறைய ஒன்பது மில்லியன் சதுர மைல் பரப்பைக் கொண்டதாக அமைகின்றது. அது ஐரோப்பாவை விட இரு மடங்கு பரப்பைக் கொண்ட பிரதேசமாக அமைகின்றது. Mackinder இன் கொள்கையின் விரிவாக்கத்திலிருந்து பின்வரும் முடிவுக்கு வரலாம்.
கே.ரி.கணேசலிங்கம் 4

"கிழக்கு ஐரோப்பாவை ஆளும் அரசு இருதய நிலத்தை ஆளும் அதிகாரமுடைய அரசாக மாறும் இருதய நிலத்தை ஆளும் அரசு உலகத்திவை ஆளும் அதிகாரத்தை பெறும். இறுதியில் உலகத்திவை ஆளும் அரசு உலகத்தை ஆளும்
பலமுடைய அரசாக அமையும்”
1943ஆம் ஆண்டு Mackinder தனது மூன்றாவது புவிசார் எண்ணக்கருவை வெளியிட்டார். அதுவே மைய நிலசமுத்திர பகுதியென விபரிக்கப்பட்டது(படம் 3 ஐப் பார்க்க) அதாவது இருதய நில கொள்கையின் வளர்ச்சியாக அல்லாது பதிலாக மைய நிலசமுத்திர (Midland Ocean) கொள்கையைப் Sg85L6GTI (655, 6L9556 on b5.d5 (North Atlantic) ugg560)u அரசியல் முதன்மை பகுதியாக மாற்றினார். இரண்டாம் உலக யுத்தக் காலப்பகுதி என்பதனால் ஐரோ-ஆசியாவை வட அத்திலாந்திக் நாடுகளுடன் ஒன்று சேர்ப்பதன் மூலம் புதிய உலகத்தை அவர் உருவாக்க முயன்றிருக்கலாம். ஏனெனில் LD55uu Soo F(p55) is QBIT6iT60)856Ou “The Round World and the winning of the Peace” 6T6örg gb606 of Ligó Bob GuIICB6TTE(36). பிரகடனப்படுத்தியிருந்தார். அதில் பெளதீகப்புவியியலின் நிலஅமைப்பை மட்டுமன்றி கடல் பகுதியையும், இயற்கை வளங்களையும், அதன் பரப்புக்களையும் சர்வதேச அரசியலின் உயிரோட்டமான பகுதிகளென இனங்கண்டார். எதிர்காலத்தில் மிக முக்கியமான அலகுகளாக மொன்சூனல் ஆசியாவும் (Monsoonal Asia) Qg56 9,556 Tbilis 5 (Gib (South Atlantic Basin) அமையுமென கூறியிருந்தார் (படம் 4 ஐ பார்க்க).
5 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 15
Mackinder 2 Gl JIT6d G2stud6öfluu blIÜL6),JT601 Haushofer நில அதிகாரக் கொள்கையை பரந்த பிராந்திய (Pan-Regionalism) வாதத்திற்கூடாக (படம் 4ஐப் பார்க்க) முன்வைத்தார். பரந்த பிராந்தியங்கள் பற்றி குறிப்பிட்ட Haushofer பிராந்தியங்கள் ஒவ்வொன்றினதும் வாழ்விடங்களின் பொருளாதார பலம் உலகை ஆளுவதற்கு அடிப்படையானது என்றார்." பெளதீக பொருளாதார வளம் குவிந்திருக்கும் மையங்களை நோக்கிய அதிகாரப் போட்டியை இவரது எண் ணக் கரு துTணி டியது. அவ் எண் ணக் கருவின் போக்கு தற் காலத் துக் கும் பொருத்தப்பாடுடையதாகவே அமைகிறது.
கடல் அதிகாரக் கொள்கை
Ratzel, Mackinder, Haushofer, gaé(BuJTyfle6ör 56o அதிகாரக் கொள்கையின் பரிமாணமாக கடல் அதிகாரக் கொள்கை அமைந்திருக்கின்றது. அக்கடல் அதிகாரக் கொள்கை Nicholas Spykman என்ற புவியியலாளரால் பிரபல மடைந்த போதும், AlfredT Mahan என்பவரால் ஏற்கனவே கடல் அதிகாரக் கொள்கை வலியுறுத்தப்பட்டிருந்தது. Mahan ஒரு புவியியல் அறிஞராக இல்லாத போதும் கடற்படை அட்மிரலாக வியங்கியதனால்அவரது கடல் அதிகாரக் கொள்கை வலிமை உடையதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. நில அதிகாரத்தைத் தக்கவைக்கவும், அதனைக் கைப்பற்றுவதற்குரிய நகர்வு மையமாக கடல்ப் பிரதேசங்கள் விளங்குவதாக Mahan குறிப்பிடுகின்றார்.' வளர்ச்சியடைந்த வடக்கு நாடுகள் உலக அதிகாரத்தின் பெரும் பகுதியை ஆட்சி செய்து வருகின்றன.
பனாமாக் கால்வாய், சுயஸ் கால்வாய் என்பவற்றின் உருவாக்கம்
கே.ரி.கணேசலிங்கம் 6

வளர்ச்சி குன்றிய தெற்கு நாடுகளின் வாணிபத்தையும் அரசியலையும் கட்டுப்படுத்தி முழு உலக அதிகாரத்தையும் தமக்குக் கீழ் கொண்டு வர முயல்வதை குறிப்பதாகவே Mahan கருதுகின்றார். மேலும் அவர் நில அதிகாரக் கொள்கை குறுகிய காலத்தில் வலுவற்றுப் போக நில அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் பலம் கடல் அதிகாரக் கொள்கைக்கு உரித்தாகிவிடும் என வாதிடுகின்றார். எதிர்காலத்தில் ஆங்கில அமெரிக்க கூட்டுக் கடல் வலு உலகை ஆளும் பலமுடையதாக மாறும் என
அவர் எதிர்வு கூறியிருந்தார்.
Mahan இன் அணுகுமுறையை பின்பற்றிய Spykman 'விழிம்பு நிலக் கொள்கையை' (Rimland Theory) பிரகடனப்படுத்தி உலகளாவிய அதிகாரக் கொள்கைக்கு புதிய வலுவைச் சேர்த்தார். ஆனால் அவரும் Mackinder போன்று ஐரோஆசியாவையே முதன்மையான அதிகாரத் தளமாக கருதினார். அவரது விழிம்பு நிலக் கொள்கை கடலாதிக்க செல்வாக்கினால் வலுவடைந்தது. விழிம்பு நிலப் பிரதேசமான ஐரோ- ஆசியாவில் இந்தியா, சீனா, ரஷ்சியா என்பன முக்கிய நாடுகளாக இனங்கண்டுள்ளார். இதனால் விழிம்பு நிலத்தை ஆதாரமாக கொண்டு Spykman பின்வரும் முடிவுக்கு வந்திருந்தார்.
“விழரிம்பு நிலமாகசிய ஐரோ-ஆசியாவை யார் ஆளுகரிறார்களோ அவர்கள் உலகை ஆளும்
பலமுடையவர்களாக விளங்குவர்*
இங்கிலாந்தும், அமெரிக்காவும் கூட்டாக ஐரோ
ஆசியாவை கடலாதிக்க கொள்கையூடாகக் கட்டுப்படுத்துவது
7 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 16
கடினம் என்ற கருத்தை முன்வைக்கும் Spykman ஒருவகையில் Mahan இன் அணுகுமுறையை மறைமுகமாக நிராகரிக்கின்றார். மாறாக இராணுவ ரீதியான ஆதிக்கத்தைப் பயன்படுத்தி அப்பிரதேசங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் மட்டுமே ஐரோஆசியாவை ஆளுகைப் படுத்தலாம் என கூறுகின்றார். குறிப்பாக கடல் இலக்குகளுடாகவும், தரைப்பகுதித் தளங்களுடாகவும் நெருக்கமான இராணுவ வலைப்பின்னலைக் கொண்டிருக்கும் அப்பிரதேத்தை ஆளுவதன் மூலம் உலகை ஆளமுடியும். கடலாதிக்கத்தைக் கொண்டுள்ள ஐரோப்பிய அரசுகள் கூட்டாக வட அமெரிக்கா, மேற்கு ஆசியா, தென் சகாராப் பிரதேசம், அவுஸ்ரேலியா, ஆசியாவின் ஏனைய பிரதேசங்களையும் ஆளுகைப் படுத்தலாம். ஆனால் அது இலகுவான ஆதிக்க நடவடிக்கை அல்ல. மேலும் அவ்வாறு முழு உலகத்தை ஆளுகைப்படுத்தவும் முடியாது. அதனால் விழிம்பு நிலத்ததை
ஆளுகைப்படுத்துவதன் மூலம் இலகுவாக ஏனைய பிரதேசங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென
கூறினார்.
இவ்வாறு புவிசார் அரசியல் கொள்கைகள் உலக அதிகாரம் பற்றிய போட்டியை வல்லரசுகள் மத்தியில் ஏற்படுத்தியதென்பதே கடந்த நூற்றாண்டு அரசியல்வரலாறாக காணப்படுகின்றது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பு உருவான உலக ஒழுங்கிலும் இவ் அதிகாரப் போட்டிக்கான கொள்கைகள் வல்லரசுகளின் போட்டியில் முதன்மை பெற்ற அம்சமாக அமைந்திருந்தது ஆனால் இரண்டாம் உலக யுத்தத்தின்
அழிவுகளின் பின் னால் எழுந்த அரசியல்
கொள்கைவகுப்பாளர்களில் அனேகமானோர் எல்லோரும் புவிசார்
கே.ரி.கணேசலிங்கம் 8

அரசியல் கொள்கைகளை பிரபலப்படுத்தாமலும் அதற்கு முதன் மை வழங்காமலுமே தமது கருத்துக் களை வெளியிட்டிருந்தனர். இருந்த போதும் புவிசார் அரசியலின் கொள் கைகள் முடிவுக் குவராத அம்சங் களாகவும் தொடர்ச்சியானவையாகவும் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றன. இதன் வளர்ச்சிப் போக்கில் இருபதாம் நூற்றாண்டு மட்டுமன்றி இருபத்தியோராம் நூற்றாண்டிலும் அவ்வாறான கொள்கைகள் ஆழமான தாக்கத்தை சர்வதேச பிராந்திய, அரசியலில் ஏற்படுத்தியுள்ளது, என்பதனை விளங்கிக் கொள்வதே இவ்வாய்வின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும். “மையநிலம்’ “இருதய நிலம்’ ‘விழிம்பு நிலம்’ என சுட்டிக்காட்டப்படும் நிலப்பகுதி ஐரோ-ஆசியப் பிரதேசமேயாகும். (இனி இதனை ஈரோசியா என்றே அழைப்போம்) ஈரோசியாவில் ரஷ்சியா, சீனா, இந்தியா, என்பன நாகரீகங்களின் வளர்ச்சிப் போக்குக்கு உட்பட்ட சமூக கட்டுமானங்களைக் கொண்ட பலமான அரசுகள் ஆகும் இதில் ரஷ்சியா மிக நீண்ட காலமாக உலக அதிகாரத்துக்கான போட்டியில் முன்னணி வகித்த நாடு மட்டுமன்றி, கடந்த நூற்றாண்டில் ஈரோசியாவின் கணிசமான நிலப்பரப்பை தனது ஆதிக்கத்துக்குள் கட்டுப்படுத்தி வைத்திருந்த அரசுமாகும்." அவ் வல்லரசு 1989ம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டுமொரு வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதன் வீழ்ச்சியுடன் பசுபிக் சமுத்திரத்திற்கும் , அத்திலாந்திக், சமுத்திரத்திற்கும் இடையில் உருவெடுத் துள்ள தனி வல லரசாக அமெரிக் கா எழுச்சியடைந்துள்ளது.அமெரிக்காவின் அவ்வெழுச்சி பற்றிய எண்ணப்பாட்டை Mackinder, தனது மூன்றாவது கொள்கையான ‘மைய நில சமுத்திரக் கொள்கையில் குறிப்பிட்டிருந்ததும்
நினைவுகோரத்தக்கது.எனவேதான் சமகால சர்வதேச அரசியலில்
9 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 17
புவிசார் அரசியல் கொள்கைகள் காத்திரமான பங்கை செலுத்துகின்றது என்று கருதப்படுகின்றது. புவிசார் அரசியல் பற்றிய ஆய்வு இன்றி சர்வதேச அரசியலுக் கான பரிமாணத்தையோ முடிவையோ தூரநோக்குடன் எடுக்கமுடியாது.
அண்டவெளி அதிகாரக் கொள்கை
நில அதிகாரக் கொள்கை, கடல் அதிகாரக் கொள்கை, என்பற்றைப் போன்றுஅண்ட "வெளி அதிகாரக் கொள்கையும் (Theory Of Space Power) liguouldT60T GET 6ft 60 BuTE விளங்குகிறது. இன்று உலகத்தை ஆளுகை செய்யும் கொள்கைகளில் முதன்மையானது அண்ட வெளி அதிகாரக் கொள்கை என்றே கருதப்படுகின்றது. அக் கொள்கை 1944களில் Renner Se6ò îNG&Jfä585ŮJLJU GLJITg5.Lb Alexander de Seversky என்பவரால் இக் கொள்கை பிரபலமானது. இக்காலப்பகுதியில் நிலவிய மையநில இருதய நில விழிம்பு நில பிரதேசத்தை ஆதிக்கம் செய்வதற்கான இன்னோர் அதிகார தளமாக அண்டவெளி அதிகாரக் கொள்கை அமைந்திருந்தது. ஆனால் இன்று உலக நாடுகளில் அண்ட வெளி தொழில் நுட்பம் (Space technology) ஓர் இராணுவப் பொறிமுறை அரசியலை மட்டும் உள்ளடக்காது பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்துவதன் மூலமாக சமூக மாற்றங்களை உருவாக்கி வருகிறது. ஆரம்பத்தில் சோவியத்யூனியன் (முன்னாள்) அமெரிக்கா என்பன அண்டவெளி தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டன. காலப்போக்கில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், சீனா, இஸ்ரேல் , இந்தியர் எனப் பல நாடுகள் அண்டவெளி தொழில்நுட்ப்பத்தில்
கே.ரி.கணேசலிங்கம் 10

விருத்தியடையத் தொடங்கின. தற்போது மேற்குறிப்பிட்ட எல்லா நாடுகளும் கூட்டாகவும் , தனித் தும் அண்டவெளித் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைய போட்டியிடுகின்றன. இப் போட்டியில் இராணுவ ரீதியிலும், பொருளாதார இலக்குடனும் மிகத் தீவிரமாக அமெரிக்கா, ரஷ்சியா, சீனா என்பன தமது அண்ட வெளித் தொழில்நுட்ப்பத்தை நிறுவிவருகின்றன. இதில் அமெரிக்காவே முன்னணி வகிக்கின்றது. தற்போதைய அமெரிக்க பாதுகாப்பு செயலரான Donald Rumsfeld 1998ஆம் ஆண்டு அண்டவெளி தொழில்நுட்பம் தொடர்பான அறிக்கை ஒன்றில் பின்வருமாதறு குறிப்பிட்டிருந்தார்.
“எதிர்கால உலகத்தின் அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தி அண்ட வெளிதொழில்நுட்ப்பத்திற்கே உரியது. அதிலும் தொழில்நுட்ப ரீதியான இராணுவ வலுவிலேயே அதன் முதன்மை தங்கியிருக்கும். உலக அதிகாரக்கொள்கையின் மையம் அண்டவெளியாகும். அணுவாயுத தாக்குதலிலிருந்தும், ஏவுகணைத் தாக்குதலிலிருந்து அமெரிக்காவையும், அமெரிக்க அதிகாரத்தையும் பாதுகாக்கக்கூடிய வலு அண்டவெளி தொழில்நுட்பத்திற்கு மட்டுமே உண்டு”
அமெரிக்காவின் அண்டவெளி தொழில்நுட்பத்தின் விருத்தியாக அதன் செயற்கைக் கோள்களையும், விண்வெளி ஏவுகலன்களையும் குறிப்பிட முடியும். அமெரிக்காவின் விண்வெளி நிலையமான ‘நாஸா’ விண்வெளித் தொழில்நுட்பத்திற்கான விருத்திகளை மேற்கொண்டு வருகின்றது. Rumsfeld இன் அறிக்கையில் பனிப்போர்க்காலப் பகுதியில் அமெரிக்காவின்
அண்டவெளி தொழில்நுட்ப அதிகாரக் கொள்கையில் பலவீனம்
11 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 18
காணப்பட்டதென்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன் அதனால் அக்காலப்பகுதியில் தேய்வடைந்து போன தொழில்நுட்ப விருத்தியை முழுவீச்சுடன் செயல்படுத்தி அமெரிக்க தொழில்நுட்பக் கொள்கையை அபிவிருத்தி நோக்கி நகர்த்த வேண்டுமென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அமெரிக்கா அண்டவெளியில் 2010 ஆண்டுக்குள் 2000 செயற்கைக் கோள்களை நிறுவுவதென்றும் இது தற்போது 600 ஆக மட்டுமேயுள்ளதென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது."
இவ்வாறு அண்டவெளியில் நிறுவப்படும் செயற்கைக் கோள்களின் பயன்பாடு இராணுவ பாதுகாப்பை மட்டும் நோக்காகக் கொண்டு அமையாததென்று கூறினாலும் இராணுவ நோக்கே முதன்மையானதாக விளங்குவதை அவதானிக்க முடிகிறது. ஆனால் தற்போது செயற்கைக்கோள் சார்
பொருளாதாரம் ஒன்று வளர்ந்து வருகின்றது. அதனைத் தகவல் பொருளாதாரமென்றும் கூறுகின்றனர். (பொருளாதாரம் தொடர்பான அலகில் இதனை நோக்குவோம்) அண்டவெளி கைத்தொழில் தொழில்நுட்பத்தினால் 2000 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு 125 பில்லியன் (Billion) அமெரிக்க டொலர் (அ.டொ)
வருமானமாக கிடைத்துள்ளது." அண்மையில் இந்தியா விண்வெளிக்கு செலுத்திய GSLV செயற்கைக் கோளினால்
பத்துக் கோடி ரூபா வருமானமாக கிடைக் குமென எதிர்பார்க்கப்படுகிறது.? எனவே இராணுவப் பொருளாதார நோக்கில் அண்டவெளித் தொழில்நுட்பம் பலமான நிலையை
ஏற்படுத்தியுள்ளது. இவ் வம்சத்தை மேலோட்டமாகப் பார்க்கும்போது நில அதிகார கொள்கையும், கடல் அதிக்ாரக்
கொள்க்ையும் வலுவற்று விட்டது என்று ஆய்வாளர் ஒருவர்
கே.ரி.கணேசலிங்கம் 12

முடிவுக்கு வரலாம். ஆனால் ஆழமாக அவதானிக்கும் போது ஆளுகைப் பலத் தின் இன்னோர் அம்சமாக அல்லது முதன்மையான அம்சமாக அண்டவெளி அதிகாரக்கொள்கை விளங்குகின்றதென்பதே இதன் உள்ளடக்கமாகும். மேலும் இதனை விளங்கிக் கொள்வதற்கு சமகால அரசியல் நிகழ்வுகளை பரிசீலிப்போம்.
இன்று அமெரிக் கா தக்க வைத்துள்ள உலக மேலாதிக்கத்திற்கு எதிராகவும் சார்பாகவும் பல அரசுகள் செயல்படுகின்றன. அந்த வரிசையில் கியூபா, வடகொரியா, ஈராக், லிபியா, தைய்வான், தென்கொரியா, என நாடுகளின் நீண்ட பட்டியலைக் காணலாம். இந் நாடுகள் ஒவ்வொன்றும் எதிராகவே, சார்பாகவே நிகழும் அதிகாரப் போட்டிகக்குள் செல்வாக்கு செலுத்கின்றன. மேலும் அந்நாடுகளது அமைவிடம் எல்லைநாடுகளது போக்குகள், தளங்கள் அமையும் கடல் பிரதேசங்கள் என பல காரணிகள் தனித்துவத்தையும், எதிர்ப்பையும் , ஒத்துழைப்பையும் ஏற்படுத்துவதற்கு வழிவகுக் கின்றன. உதாரணத்துக்கு கியூபாவையும், தைய்வானையும் முக்கியத்துவம் பொறுத்து ஆராய்வோம்.
கியூபாவின் விட்டுக் கொடுக்காத அமெரிக்க எதிர்ப்பு வாதத்திற்குத் தலைமைத்துவம் செலுத்தும் பங்களிப்பைப் போன்று அதன் அமைவிடமும் ஒரு முக்கிய காரணியாக அமைகிறது. சோவியத்யூனியன் வீழ்ச்சிக்கு பின்பும் அங்கு காஸ்ரோவால் அமெரிக்க எதிர்ப்பு வாதம் பேசப்படுகின்றதென்பது கியூபாவின் தனித்துவத்தை கோடிட்டுக் காட்டுகிறது. கியூபா சிறிய தீவாக
விளங்கியதனால் ஏனைய நாடுகளது பண்பாடுகள், கலாசாரக்
13 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 19
காரணிகள் பொருளாதார, சமூகக் காரணிகளின் தாக்கங்களுக்கு
பெருமளவு உட்படாமல் தப்பிக் கொள்கிறது. இது அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டு பலமான அரச கட்டுமானத்தினாலும்
இராணுவப் பாதுகாப்பினாலுமே சாத்தியமாகக் கூடியது. 1959களில் சன்ரினிஸ்டாவுக்கு எதிரான புரட்சியில் காஸ்ரோ கட்டி வளர்த்த இராணுவ கட்டமைப்பு, சமூகக் கட்டமைப்பு,
என்பன உறுதியான நிலையைப் பேணி வருவதே அதற்கான
காரணமாகும்.
தைய்வானை அவதானித்தால் அமெரிக்க நட்பும்,சீன எதிர்ப்புவாதமும் பரீட்சார்த்தமாக காரணிகளாக அமைந்திருப்பது தெரியவரும். தைய்வான் சீனாவின் அரசியல், இராணுவ, பொருளாார பரிணாமத்துடன் பின்னிணைந்துள்ள நாடு. ஏனெனில் அதன் அமைவிடம் சீனாவிற்கு அண்மையிலும் தென்சீனக் கடல்
பிரதேசத்தில் அமைந்திருப்பதனாலும் ( படம் 5ஐப் பார்க்க) கடந்த காலத்தில் கிழக்காசியாவின் அரசியல் கொந்தளிப்புக்கு (அமெரிக்கா-சீனமுறுகலுக்கு) காரணமாகவும் தைய்வான் விளங்கியது. அமெரிக்கா சீனாவுக்கு எதிரான அரசியலை
நடைமுறைப் படுத்துவதற்கு தையப் வானை தளமாக தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்கா தைய்வானுக்கு வழங்கும் இராணுவ ஆயுததளபாட ஒத்துழைப்பில் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை விருத்திசெய்ய விரும்புவதிலிருந்து அதனை விளங்கிக் கொள்ள முடியும்.
“அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட TMD ஏவுகணை (p6ODB60DLD60DuJu qlib Inter mediate-range Surface-to Sürface mis
siles, Long range Surface-to-surface missiles g66T 6(b5560)u up
கே.ரி.கணேசலிங்கம் 14

தைய்வானில் ஏற்படுத்துவதென தைய்வானின் ஜனாதிபதி Chenshui-bian (p1906)(6556iT6TITsi.”
எனவே கியூபா, தைய்வான் ஆகிய இரண்டு நாடுகளினதும் புவி சார் அரசியலின் கொள்கைகள் வலுவன உலக அதிகார அரசியலை தீர்மானிக்கும் அரசுகளாக விளங்குகின்றன. இது பெளதீகப் புவியியலின் புவிசார் அரசியல் தனது இருப்பையும், வலுவையும, என்றுமே இழந்துவிடவில்லை என்பதையே காட்டுகின்றது. இன்றைய தொழில்நுட்ப உலகம் கூட புவிசார்
அரசியலை அனுசரித் தே கொள் கைகளையும் ,
நடவடிக்கைகளையும், வகுக்க வேண்டிய நிலையிலுள்ளது. அதனை இவ்வாறு கூறுவது பொருத்தம் போலுள்ளது. அதாவது புவிசார் அரசியலின் அதிகாரக் கொள்கைகளையும் அமைப்புக்களையும் கருத்தில் கொண்டு தொழில்நுட்ப உலகம் பொருத்தமான அதிகாரக் கொள்கைகளை உருவாக்குகின்றது. தொழில்நுட்ப உலகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு போதும் அதிகாரக் கொள்கையை வடிவமைக்கும் வலுவை தனித்துக் கொண்டிருக்காது என்பதே இதன் அர்த்தமாகும். அவ்வாறு தனித்து கொண்டிருக்கும் இயல்பை வெளிப்படுத்தும் நிலை எழுச்சியடைந்திருந்தால் ஈராக் மீதான வளைகுடாப் போரையும், ஆப்கான் மீதான தாக்குதலையும் அமெரிக்கா, அமெரிக்க மண்ணிலிருந்து நடத்தியிருக்கலாம். ஆனால் அவ்வாறு நிகழவில்லை என்பதல்ல நிகழமுடியாது என்பதே யதார்த்தமான
நோக்காகும்.
தற்போதைய உலகளாவிய அரசியல், பொருளாதார,
இராணுவ ரீதியான அதிகாரப் போட்டியில் முனைப்படைந்துள்ள
15 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 20
பகுதி ஆசியாவாகும். ஆசியாவிலும் மேற்குஆசியா, கிழக்காசியா, ஆகிய இரண்டு பிராந்தியங்களும் மிகக்கூர்மையான எதிர்ப்பை அமெரிக்க மேலாதிக்கத்திற்கு(Hegemonic Power) எதிராக வெளிப்படுத்தி வருகின்றன. இவ் வெளிப்படுத்துகையின் ஆபத்தை உணர்ந்து கொண்ட அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி வில்லியம் புஷ்ன் நிர்வாகம், “ஆசிய-பசுபிக் பிராந்தியத்தை இராணுவ அரசியல்- பொருளாதார பரிமாணமிக்க பிராந்தியமென கருதுகிற அதே வேளை உலகத்திற்கு கட்டளை பிறப்பிக்கும் அமெரிக்க இராணுவ பலம் கிழக்காசியாவில் குவிந்துள்ள பலத்தையும் அப்பிராந்தியத்திலிருந்து பாரசீக வளைகுடா நோக்கி நகர்த்த வேண்டுமென தீர்மானித்துள்ளது” இதனை மேலும் ஆதாரப்படுத் பென்ரகன் 2000ஆம் ஆண்டு இறுதிவாக்கில் வெளியிட்ட அறிக்கையில் “எதிர்கால அமெரிக்க இராணுவ- அரசியல் தந் தரோபாயத் தின் முதல் நிலைப் பிராந்தரியமாக
22
ஆசியாஅமைந்திருத்தல் வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச மட்டத்தில் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் நாடுகளாக சீனா, ஜப்பான்,ரஷசியா என்பன முதன்மை நிலையைப் பெறுகின்றன. அமெரிக்காவால் காடை நாடுகள் (Rogue States) என்று அழைக்கப்பட்ட ஈராக், சேர்பியா, சிரியா, ஆப்கானிஸ்தான், சூடான், வடகொரியா, என்பனவும் அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்க்கும் நாடுகள் வரிசையில் அடங்குகின்றன. அவற்றைவிட அனேகமான மூன்றாம் உலக நாடுகளின் சாதாரண மக்கள் அமெரிக் காவின் அரசியல் ,பொருளாதார, இராணுவ அணுகுமுறைகளை எதிர்ப்பவர்களாக உள்ளனர். இதனால் வில்லியம்புஷ்"நிர்வாகம்
அமெரிக் காவின் அரசியல், பொருளாதார, இராணுவ
கே.ரி.கணேசலிங்கம் 16

மேலாதிக்கத்தை பாதுகாக்க சில நடவடிக்கைகளை அண்மைக்
காலத்தில் தீவிரப் படுத்தியுள்ளது.
சீனாவை கிழக்கு ஆசியாவுக் குள்ளும் , தென்கிழக்கு ஆசியாவிலிருந்தும், மேற்கு ஆசியாவிலிருந்தும் தனிமைப்படுத்துவது. சோவியத்யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் கிழக்கு, தென் கிழக்கு ஆசியாவிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும், மேற்காசியாவிற்குமான கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார உதவிகளையும், வர்த் தக உறவுகளையும் ഥ്ഞ് (Bഥ துரிதப்படுத்துவது. * ஜப்பான், தென்கொரியாவுடனான பாதுகாப்பு உடன்படிக்கைகளை சுமூகமாகப் பராமரித்தல். சீனா-ரஷசியா உறவையும், சீன-மியான்மார் புரிந்துணர்வு உடன்படிக்கையையும், தென்பசுபிக் நாடுகளுடனான கூட்டையும் (SPT)அன்சூக் உடன் படிக் கையையும் (ANZAC) கண்காணிப்பதும் கட்டுப்படுத்தவதும* ரஷ் சியாவை மத் தய ஆசியக் குடியரசுகளிலிருந்தும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் தனிமைப்படுத்துவது. இந்தியாவை சீனாவுடனோ, ரஷ்சியாவுடனோ இணையவிடாது தடுப்பது.
6T6) 6)|T அரசுகள்ையும் அமெரிக் காவின் தலைமையில் அணிதிரட்டுவதற்கு அமெரிக்கா தனது தேசிய பாதுகாப்பு ஏவுகணை தொழில்நுட்பத்தை அமுலாக்குவதென (NMDS) தீர்மானித்தது.
17 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 21
வில்லியம் புஷ பதவி ஏற்ற சில மாதத்தில் gu T(3BT85Tifuu (DIECO GARCIA) g6gög565(bbg Kitty Hawk என்னும் அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஆசிய-பசுபிக் பிராந்திய நாடுகளான அவுஸ்ரேலியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, தைய்வான் என்பனவற்றிற்கு விஜயம் மேற்கொண்டது.* இவ் விஜயத்தின் பின்னால் அமெரிக்க அரசியல் இராணுவ இலக் கு இப் பிராந்தியம் நோக் கியே விரிந்துள்ளதென்பதையும் கடந்த காலத்தைக் காட்டிலும் புவிசார் அரசியல் இராணுவ பரிமாணத்தில் இப் பிராந்தியம் முக்கியமானதென்பதை சமிக்ஞைமூலம் காட்டுவது போன்றே Kitty Hawk இன் பயணம் விளங்குகின்றது. தைய்வான் பொறுத்த அமெரிக்கக் கொள்கையிலும் ஆசிய-பசுபிக் பிரதேசத்தின் கொள்கையிலும் அமெரிக்க இராணுவ அணுகுமுறையை உணர்த்துவதாகவே நோக்குதல் பொருத்தப்பாடாக அமையும்.
அமெரிக் காவின் அதிகார தளத்தின் இலக்கு ஈரோசியாவாகவே அமைந்துள்ளபோது ஈரோசிய நாடுகளது போக்கும் அணுகுமுறையையும் புரிந்து கொள்ளமுடியாத இராஜதந்திரத்தைக் கையாளுவது போல் அமைகிறது. காரணம் கடந்த வரலாறு முழுவதும் ஈரோசியாவின் கள நிலையை அரசியல் தலைமைகள் உணர்ந்து கொண்டதேயாகும். மையநிலம் 'இருதயநிலம்” “விழிம்புநிலம்’ என்று வாதிட்ட கொள்கை வகுப்பாளர்கள் ஈரோசியாவை முதன்மைப்படுத்தியது போன்று நெப்போலியன் தோற்றுப்போனது, முதலாம் உலகயுத்தம் முடிவுக்கு வந்தது, இரண்டாம் உலகயுத்தம் ஸ்தம்பிதமடைந்தது, ஈரோசியாவிலே என்பது வரலாற்று ஆய்வாளர்களது முடிப்ாகும்
இவை மட்டுமல்ல புதிய உலக ஒழுங்குக்கான கருவாக
கே.ரி.கணேசலிங்கம் 18

அமைந்த பெரஸ்ரொய்காவும், அதன் விரிவான மெளனப் புரட்சியும் யுத்த அழிவின்றி புதிய உலகத்தை ஈரோசியாவே பிரகடனப்படுத்தியது எனலாம். எனவேதான் ஈரோசியாவின் புவிசார் அரசியல் பற்றி கலாநிதி Hauner “வலுவானதும் பலமானதுமான புவிசார் அரசியல் பின்னணியை இப் பிராந்தியம் கொண்டுள்ளது.* எனக் குறிப்பிட்டார். ஆனால் இன்றைய நிலையில் “புவிசார் வலு மட்டும் போதுமானதா என்ற கேள்வி முதன்மையடைகின்றது. இது உலக அதிகாரத்தை ஆளுகைக்கு உட்படுத்த முயலும் போது புவிசார் அரசியல் இராணுவ அரசியல், பொருளாதார அரசியல், இராஜதந்திர அரசியல் என்பன வலுவடையும் நிலையிலேயே சாத்தியமடையலாம் என்பதை யதார்த்த நிகழ்வுகளாகக் காட்ட முயலுகின்றன. புவிசார் அரசியல் கொள்கைகள் நவீன அதிகாரக் கொள்கைகளால் மெருகூட்டப் படும் போதே உலக ஆளுகைப் பலம்
சாத்தியமடையலர்ம் என்ற முடிவுக்கு வரலாம்.
அடிக்குறிப்புகள்
1. Saul Bernard Cohen, Geography and Politics in a divided
world, methuen London, 1964, pp.35-36.
2. Ibid.p,36., பரந்த இடைவெளி என்பது ஐரோப்பாக் கண்டத்திலிருந்து அமெரிக்காக் கண்டம் அத்திலாந்திக் சமுத்திரத்தால் பிரிக்கப்பட்டிருப்பதை குறிப்பதாகும்.
3. Ibid.p.38.,
Ibid.,
5. Ibid.,
19 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 22
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
Milanhauner, What is Asia to Us? Russias Asiam HeartIland Yesturday and today, London and Newyork, 1992.p,141.
Sanl Bernard Cohen,p,40, op.cit., Milan haunerp,140, op.cit., Ibid, P. 141 உலகத்தீவு என்பது ஐரோ-ஆசியாவையும் ஆபிரிக்காவையும் உள்ளடக்கிய பகுதியைக் குறிப்பதாகும். Sanl Bernard Cohen, p.42, op.cit.,
Ibid.p,45.
Ibid.,
Ibid.p.46.
Milanhauner, P, III op.cit., Sanl Berhard Cohen, pp. 49-51, op.cit., Michae krepn, “Lost in spaces. The misguided Drive ToWard Anti satellite Weapons, Foreign Affairs, May/Jann 2001 pp 2-6 gaisabi (6609 seaffluff Donald Rumsfeld இன்அறிக்கையின் முழுப்பகுதியும் வெளிவரவில்லை என்று கூறுவதுடன் அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கருதி அப்பகுதி வெளிவராதுள்ளது என்றும் எனவே தகவல்கள் கட்டுரையில் குறிப்பிட்டதைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்னும் குறிப்பிட்டுள்ளார்.
Ibid., P06.
Ibid., P07.
India today, 30, April, 2001 Sheng lijun "Cheushuo-bian and cross-strait Relations Contomporary South East Asia. Vol 23 Number 1 April, 2001, P,125.
கே.ரி.கணேசலிங்கம் 20

21.
22.
23.
24.
25.
26.
Bob catley The Bush Administrationand changing Geopolitics in the AsiaPacific Region Ibid., pp 151-152, இக் கட்டுரை புவிசார் அரசியல் தளமாக உள்ள பிராந்தரியமாக விளங்கும் ஆசிய- பசுபிக் வட்டகையைப் பற்றிய அமெரிக்க ஆதிக்கத்தை தெளிவுபடுத்துகிறது. அதே வேளை அப்பகுதி புவிசார் அரசியலுக்குள்ள பலத்தையும் கோடிடத் தவறவில்லை. Newsweek, May 2001, P., 05/07th Bob Catley, pp 154-155, op.cit.,
Ibid.,, P., 151.
Asiaweek, 20April 2001, P, 32.
Milan hauner, P. III
21 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 23
LILLD 1
கே.ரி.கணேசலிங்கம் 22
 

*T.L蛋感母工 M属切HL「1白鶴
t
ULLD 2
மாறிவரும் புதிய உலக ஒழுங்கு
23

Page 24
கே.ரி.கணேசலிங்கம்
SS ہلا!!۔ S용 冕
24
s
 

awawas o Aမ္ဗူဒို့မှိနှီးမှူဒင်္ခါ\` 毒感或 4)
甄)
『Q1配』km「t場
嘎心咒因置感 *噶玛
Lb 4
25 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 25
*る*三るこ
----|-Ĵ Ĵmae ae uelu目澎灘縱密 --------- - - - --------Nyqysso·
-泌 ?*密
感藏
懿舞麒麟磷|藏卿)
:
aetae eae
•• }
---|_■ *.**
·*)*** -&&&&&&&&하지%-? 梁婉
·藏
8%88 ::8888 ·8888: 888· :S8 883 :83888 : 3
\|?
激灘
溪
※無幾
•†•
LIL LD 5
26
ங்கம்
கே.ரி.கணேசலி
 
 
 
 
 
 
 
 

உலகளாவிய இராணுவ அரசியல் போக்கு
புதிய உலக ஒழுங்கின் கீழ் அமெரிக்கா தனிவல்லரசாக ஆதிக்கம் செலுத்திவருகிறது. உலகளாவிய ரீதியில் பொலிஸ்காரனாக விளங்கும் அமெரிக்காவின் ஆதிக்கம் கடந்த தசாப்தம் முழுவதும் (1989-1999) சிறு, சிறுநெருக்கடிகளை மட்டுமே எதிர்கொண்டு படிப்படியாக எழுச்சியடைந்து பரவி வந்தமையை அவதானிக்க முடிந்தது. ஆனால் கடந்த ஒரு சில ஆண்டுகளில் அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்தை முறியடிக்கும் விதத்தில் ராஜதந்திர ரீதியில் ரஷ்சியா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, என்பன சில நகர்வுகளை தனித்தும், கூட்டாகவும் ஆரம்பித்துள்ளன. இந் நகர்வுகளுக்குப் பிராந்திய அரசுகளைத் தளமாகவும் இராணுவ, அரசியல், பொருளாதார அடிப் படையிலான இலக் கு க ைள கருவிகளாகவும் கொண்டுஅவ்வரசுகள் செயல்பட்டு வருகின்றன. இவ் அரசுகளின் நடவடிக்கைகள் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு பலமான அச்சுறுத்தலாக மாறும் நிலையை அடிப்படையாகக் கொண்டு இப்பகுதி பரிசீலிக்கப்படுகின்றது.
பனிப்போர் முடிந்த பின்பு உலக அரசியலின் சமநிலையை நிலைநாட்டும் ஐக்கிய நாடுகள்சபை அமெரிக்காவின் பொம்மையாக மாறியது. இராணுவ, பொருளாதார, இலக்குகளை எச்சரிக்கையாகவும், சலுகையாகவும் காட்டி ஐக்கிய நாடுகள்
சபையின் அங்கத்துவ நாடுகளையும் பாதுகாப்பு சபையின்
27 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 26
நிரந்தர அங்கத்துவ நாடுகளையும் அமெரிக்கா தனது விருப்பப்படி கையாண்டு தனது அரசியல் நலனைப் பூர்த்தி செய்து கொண்டுவருகிறது. குறிப்பாக ஈராக் மீதான அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலில் சீனா பாதுகாப்பு சபையில் தனது வெட்டு வாக்கை (Veto Power) பயன்படுத்தாது வெளியேறியமை சீனாவின் பொருளாதார இலக்குகளை அமெரிக்கா பொறிவைத்து அழித்து விடும் என்றஅச்ச உணர்வே அவ்வணுகுமுறையை சீனா பின்பற்றுவதற்கான அடிப்படைக் காரணமாகும். ஆனால் அத்தகைய அணுகுமுறையை சீனாவால் மட்டுமன்றி ரஷ்சியாவாலும் 1999 களுக்குப் பின்பு பொருளாதார நோக்கில் பின்பற்றி வரும் போக்கு காணப்படுகின்றது. அத்தகைய மாற்றுக் கருத்து கூட்டான எதிர்ப்புணர்வாகவே அமைந்து வருகிறது. அதனை இவ் அத்தியாயத்தின் வேறொரு பகுதியில் நோக்குவோம். தற்போது சீனாசார்ந்த அரசிலையும் அப்பிராந்தியத்தின் இராணுவ பொருளாதார போக்கையும்
ஆராய்வோம்.
கிழக்காசியப் பிராந்தியம்
சீனா சார்ந்த பிராந்தியத்தில் ஜப்பான், தென்கொரியா, தைய்வான், என்பன பலமான அமெரிக்க சார்பு நாடுகளாகவும் வடகொரியா சீனா சார்பு நாடாக மட்டுமன்றி அமெரிக்கா மீதான தீவிர எதிர்ப்பு அரச்ாகவும் அமைந்துள்ளது. சீன எதிர்ப்பு அரசுகளாக தென்கொரியா, ஜப்பான், தைய்வான் காணப்படும் போது பொருளாதார-சமூக-கலாசார உறவில் நெருக்கமான போக்கை அவை சீனாவுடன் கொண்டிருக்கின்றன. சீனாவின்
பலமான பொருளாதார கூட்டாளியாக தென்கிழக்கு ஆசியா
கே.ரி.கணேசலிங்கம் 28

நாடுகளுக்கு அடுத்த நிலையில் அல்லது இரண்டாவது நிலையில் ஜப்பானே முதன்மை பெறுவதென்பது சீன-ஜப்பானிய உறவை தெளிவுபடுத்த உதவும். ஆனால் சீனாவுக்கு சவால்விடும் நிலையில் இப் பிராந்திய அரசுகளின் இராணுவ அரசியல்பலம் இல்லாதுள்ளதுடன் அப்பலத்தை ஈடுசெய்வதற்கு அமெரிக்க நட்பை பல அரசுகள் ஏற்படுத்தியுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவும் அவ் அரசுகளின் நெருக்கமான உறவை பயன்படுத்தி சீனாவின் பலத்தை உடைக்க முயன்றுவருகிறது.
இப்பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும், அரசுகளின் உறுதித் தன்மைக்கும் அச்சுறுத்தலாக அமெரிக்க இராணுவத் தளங்கள் விளங்குகின்றன. ஜப்பான், தென்கொரியா, ஆகிய நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவம் இரு நாடுகளது அரசியலில் செல்வாக்கு செலுத்துவதுடன் சமூகபொருளாதார காரண்களுக்கும் ஊடாகத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இத் தாக்கத்தின் விளைவாகவே கடந்த காலங்களில் ஜப்பானிய மக்கள் அமெரிக்க தளங்களையும், இராணுவத்தையும் அகற்றுமாறு போராட்டங்களை நடத்தி வருபவை என்பது குறிப்பிடத்தக்கது.* எவ்வாறு பிலிப்பைன்ஸ் அமெரிக்க தளங்களுக்குப் படிப்படியாக அச்சுறுத்தல் விரிவடைந்தோ அதே போன்று ஜப்பானிலும் ஏற்படலாமென கருதப்படுகின்றது. இதனை தவிர்ப்பதற்கும், அமெரிக்க தளங்களை தொடர்ந்து தக்கவைப்பதற்கும் அமெரிக்கா பல நடவடிக்கைகளை இப் பிராந்தியத்தில் ஏற்படுத்தத் திட்ட்மிட்டுள்ளது. குறிப்பாக “வடகொரியாவின் ஏவுகணைத் தொழில்நுட்ப விருத்தி ஜப்பானை நேரடியாகத் தாக்கக் கூடியது” என்பதை முதன்மைப் படுத்தி அமெரிக்கா பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும் “ஜப்பான்
29 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 27
தென்கொரியா அவுஸ்ரேலியா என்பவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு அமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா முயன்றுவருகிறது.”
இப்பிராந்தியத்தில் தைய்வான் தீவை முதன்மைப்படுத்திய அதிகாரப் போட்டி யொன்று சீன அமெரிக்காவுக்கிடையில் மிக அண்மையில் நடைபெற்றது. கடந்த ஏப்பிரலில் அமெரிக்கக் கடற்படை விமானமான EP-3 சீன யுத்த விமானமான F-8 உடனான விபத்தின் பின் அமெரிக்க கடற்படை விமானம் சீனாவுக்கு சொந்தமான Hainan தீவில் (படம் 1 ஐ பார்க்க) தரையிறக்கப்பட்டது. இவ் அமெரிக்க விமானம் உளவு நோக்குடன் தையப் வான் அணி டிய பிரதேசத் தரில் செயல்ப்பட்டதாகவும், சீன யுத்த விமானத்தை திட்டமிட்டே தாக்கியதாகவும் சீன நிர்வாகம் குற்றம்சாட்டியது. பரஸ்பரம் தைய்வானை முதன்மைப்படுத்தி இரண்டு அரசுகளும் தகவல் போர் (Information War) ஒன்றை நடத்தி முடித்தன. இறுதியில் கடந்த ஜூலையில் உளவு விமானத்தை சீனா அமெரிக்காவிடம் கையளிக்க உடன்பட்டதாக அறிவித்தது. பிணக்கு சுமூக நிலையை அடைந்தது போல் காணப்பட்டாலும் தூரநோக்கில் சீனாவின்போக்கு அமெரிக்காவுக்கு ஆபத்தானதென்பதையே இச் சம்பவம் காட்டியுள்ளதாக பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் அவ் யுத்த விமானத்தை சீனா பகுதி பகுதியாக பிரித்த நிலையிலேயே அமெரிக் காவிடம் ஒப்படைத்ததாகவே தெரியவருகிறது.
சீனாவின் எதிர்கால அரசியல் நிலைபற்றி ஜகாட்டா சர்வதேச கற்கைகள் நிலைய ஆய்வாளர் Justaf Wanadi
பின்வரும்ாறு கூறுகின்றார்.
கே.ரி.கணேசலிங்கம் 30

“எதிர்கால உலகளாவிய அரசியலில் ஆசியாவே அமெரிக்காவுக்கு ஆபத்து மிக்க பிரதேசம், அதிலும் மிகப் பிரதான சவால்விடும் அரசு சீனாவாகும். சீனா அடுத்துவரும் 30-50 ஆண்டுகளுக்கிடையில் வல்லரசாகும் நிலையிலுள்ளது. முழு உலகிலும் பிராந்தியத்திலும் அமெரிக்காவையும் அதன் அதிகாரத்தையும் முறியடிக்கும் இராணுவ, பொருளாதார, மக்கள் பலத்தை கொண்டுள்ள அரசு சீனா மட்டுமேயாகும். ஆனால் சீனா அதனை சரியாகவும் சாதுரிய மாகவும் கையாளத்தவறுமாயின் ஆசியாவே பெரும் அபாயத்தை எதிர் கொள்ளும்” என்ற எச்சரிக்கையுடன் அவரது கருத்து அமைகிறது அவ்வாறு Wanadi எச்சரிப்பதற்கு அவரே கூறும் காரணங்களை
நோக்குவோம்.
> வில்லியம் புஷ் நிர்வாகம் இராணுவத்திற்கும் பாதுகாப்புக்கும் வழங்கிவரும் முக்கியத்துவம்.
> பனிப் போர்க் காலத்தில் சோவியத் யூனியனின் இறுக்கமான போக்கு ஆசியாவிலோ அல்லது சீனாவிடமோ இல்லாமை.
> புஷ்ன் நிர்வாகம் ஆசியாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கும் நிலைமைக்கு அப்பால் பொருளாதார முதலீடுகளை வழங்கி ஜனநாயகம் என்ற போர்வையில் சிவில் சமூகத் தைத் தனது செல்வாக்குக்குள் கொண்டுவருவதுடன் அரசுகளையும்,
சிவில் சமூகத்தையும் முரண்பாடடைய செய்துவருகிறது.
என அவர் தனது கருத்தினை விபரிக்கின்றார். அதாவது சீனாவின் எழுச்சி கிழக்காசியா, தென்கிழக்காசிய நாடுகளால்
31 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 28
விரும்பப்படாததொன்றாக மாற்ற அமெரிக்கா முயலுகிறது என அச்சம் கொள்கின்றார்.அவ்வாறு சீனாவின் எழுச்சியை அமெரிக்காவால் தடுக்க முடியாதென Institute ofInternational Economics in Washington @6ù G6)J6fiu JIT6OT b' (660DJ Gu JT6ögö36ù
George Yeo என்ற ஆய்வாளர் பின்வருமாறு விளக்குகின்றார்.
“கிழக்காசிய, தென்கிழக்காசிய, நாடுகள் சீனாவின் வளர்ச்சியை விரும்புகின்றன. ஏனெனில் மீண்டும் ஒரு தடவை இப்பிராந்திய அரசுகளின் சமூக ஒருமைப்பாடும் அரசியல் ஐக்கியமும் அமெரிக்க தலையீட்டினால் துண்டாடப்படக் கூடாது என்பதில் அவை அக்கறையாகவுள்ளன. கடந்த வரலாற்றில் அமெரிக்கா மூன்று பெரும் யுத்தங்களை இப் பிராந்தியத்தில் நிகழ்த்தியது.”
e இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதிப்பகுதியில் ஜப்பான் அழிவுக் குக் காரணமான அணுக் குண் டினை அமெரிக்காவே வீசியது.
9 கொரிய யுத்தத்தினால் ஏற்பட்ட பிரிவினைக்கு அமெரிக்காவின் பங்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கை ஏற்படுத்தியிருந்தது.
9 வியட்னாம் யுத்தம் சித்தாந்த அடிப்படைகளை அழிப்பதற்காக அமெரிக்காவே நேரடியாக ஈடுபட்டு 60ᎠᏧᏏᏓ1 lfᎢ60ᏈIL_ போராக அவதானிக்க முடிகின்றது.
9 மேலும் பனிப் போர் காலத்தில் கம்யூனிஸ் கொள்கைக் குள் இப் பிராந்திய நாடுகள்
கே.ரி.கணேசலிங்கம் 32

அகப்பட்டுவிடக் கூடாதுஎன்பதற்காகவே பொருளாதார உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் அமெரிக்கா அள்ளி வழங்கியது. பனிப்போர் முடிந்ததும் இவ்வுதவிகளை அமெரிக்கா நிறுத்திக் கொண்டதனால் இப் பிராந்திய அரசுகள் அமெரிக்கா மீது அதிருப்தி அடைந்துள்ளன என YeO குறிப்பிடுவதன் மூலம் சீனாவின் பலத்தை உறுதிப்படுத்த முயலுகின்றார். இதனால் இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்க செல்வாக்கை விட சீனாவின் எழுச்சி ஆபத்து மிக்கதல்ல என்பதே அனேக அரசுகளின் எண்ணமாக
அமைந்துள்ளதென அவர் கருதுகின்றார்.
சீனாவும் இப்பிராந்திய அரசுகளுடன் சுமுகமான அரசியலுறவை பேணுவதுடன் பொருளாதார ஒத்துழைப்புக்களினூடாக அவற்றை இணைத்துக் கொள்ள முயலுகின்றது. ஹொங்ஹொங், மக்கோ, பிரதேசங்கள் G60D60OI &ö 85L’i ulʼ Lg5I (3lu T6öi BI ʻOne State, Two Systemʼ கொள்கையைப் பின்பற்றி தைய்வானையும் அமைதியான முறையில் இணைக்க விரும்புகின்றது. 1970 களுக்குப் பின்பு சீனா இப் பிராந்திய அரசுகளுடன் அரசஇப் பின்பற்றுகையினால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி என்பதுடன் இப் பிராந்திய அரசுகளின் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் கணிசமான பங்கினை தக்கவைப்பதில் சீனா வெற்றி கண்டுள்ளது. அரசியல் நலன் சார்ந்த அணுகுமுறையைப் பின்பற்றர்து பொருளாதார நலன் சார்ந்த அணுகு முறையையே அனேகமாக பின்பற்றி வருகிறது. எனவே சீனாவின் மெதுவான வளர்ச்சிப் போக்கு எதிர்கால
சீனாவின் அரசியல் நலனை நிலை நிறுத்துவதாக அமையலாம்.
33 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 29
ஆனால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமான முறுகல் நிலை மீண்டுமொரு பனிப்போரை உருவாக்கி விடக்கூடாது என்பதில் அக்கறை செலுத்தும் அமெரிக்க நலன் விரும்பியான Joseph Nye அமெரிக்க நிர்வாகத்திற்கு பின்வருமாறு ஆலோசனை வழங்குகின்றார்."
அரச மட்டத்தில் அமெரிக்கா சீனாவுடன் நெருக்கமான உறவினை ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி, உபஜனாதிபதி, மற்றும் அதிகாரிகள்,இராணுவத் தளபதிகள் சீனாவுக்கு விஜயம் செய்வதுடன் சீனத் தலைவர்களை அமெரிக்காவுக்கு அழைத்தல் வேண்டும். பொருளாதார ரீதியில் அமெரிக்கா மேலும் சீனாவுடனான உறவில் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பாதுகாப்புப் பொறுத்துப் பின்வரும் விடயங்களில் இரு அரசுகளும் கூட்டாக உழைப்பதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுத்தல் வேண்டும். பாரிய மற்றும் ஆபத்து விளைவிக்கும் ஆயுதங்களை உடன்படிக்கையின் அடிப்படையில் அழித்தல் (WMD) வேண்டும். அணு ஆயுத விருத்தியையும் பாவனையையும் கூட்டுக் கமிஷன் அமைத்து தடுத்தல் அல்லது கட்டுப்படுத்தல் வேண்டும். இந்திய-பாகிஸ்தான் அணுவாயுதவளர்ச்சியினை ஏவுகணைத் தொழில்நுட்ப்பத்தின் மூலம் செலுத்தும் தொழில்நுட்ப முயற்சியை முடக்க அமெரிக்கா சீனாவுடன் கூட்டாக உழைப்பதென உடன்படுவதுடன்
அதனை அமுல்ப்படுத்தல் வேண்டும்.
கே.ரி.கணேசலிங்கம் 34

சமாதானமான கொரியக் குடாவை உருவாக்க அமெரிக்கா சீனாவுடன் ஒத்துழைத்தல் கொரியப் பிராந்தியத்தின் அடிப்படைத் தேவைகளை கவனித்துப் பொருளாதார, சமூக, உறுதிப்பாட்டை ஏற்படுத்தி கொரியர்களை ஒன்று சேர்க்க முயலுதல் வேண்டும்.
தைய்வான் பிரச்சினையை சமாதான பூர்வமான அணுகுமுறையினுடாக தீர்த்து வைப்பதுடன் “One China principle’ஐ அமெரிக்கா ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
என Nye அமெரிக்காவை தந்திரோபாய ரீதியாக சீனாவை கையாள வேண்டு மென்ற நோக்கில் ஆலோசனை வழங்குகின்றார். இவ் அணுகு முறை சீனாவை வீழ்த்துவதற்காக அமெரிக்க ஆட்சியாளர் மேற்கொள்ளும் கொள்கை வகுப்புக்கு சாதாகமானதாகவே அமையும். தற்போதைய அமெரிக்க ஆட்சியாளரும் ஜோசப் நைஇன் கொள்கைகளை பின்பற்றுவது போல் நடவடிக்கைகள் அமைகின்றன. குறிப்பாக கடந்த ஜுலையின் இறுதிப்பகுதியில் ஆசிய பசுபிக் நாடுகளுக்கான விஜயத்தின் போது சீனாவுக்கு சென்ற அமெரிக்க அரசுச் Gafu 160T6TUT61 Colin Powell fGöı g6öTTgSuğ, Jiang Zemin 8
சந்தித்த போது பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
“நாங்கள் இருநாட்டவரும் எதிரிகள் அல்லர், எதிரிகளாக நோக்கப்படக் கூடியவர்களுமல்லர், நாங்கள் ஒத்துழைப்பாக
இயங்குவதற்கான பாதையையே தேடுதல் வேண்டும்.”*
மேலும் POWel சீனநிர்வாகத்துடன் எழுத்துருவில்
அல்லாத உடன்பாடுகளையம், உத்தரவாதங்களையும்
35 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 30
பேச்சளவில் ஏற்படுத்திக் கொண்டதாக தெரியவருகிறது. சீன
ஜனாதிபதிையை சந்திக்கமுன் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் Powell சீனாவின் மனித உரிமைகள் தொடர்பாக கருத்துக்கூறியதுடன் தைவானுக்கான ஏவுகணை வியாபாரத்தை
சீனாவின் மனித உரிமையுடன் இணைத்து பேரம் பேசுவதுபோல் Powell இன் கருத்து அமைந்ததாக அரசியல் விமர்சகர்கள்
கருதுகின்றனர். மேலும் ஓர் அரசியல் திருப்பமாக Powell தைய்வானைப் பொறுத்த கொள்கையான “One China Policy ஐ ஆதரிப்பதாக” கூறியிருந்தும் அதனை உடன்படிக்கையாக
எட்ட முயலாததையும் நோக்கும் போது ஒரு ராஜதந்திர அணுகுமுறையையே அமெரிக்கா பின்பற்றுகிறதென்பதை புரிந்து கொள்ளலாம். எப்போதும் வல்லரசுகள் தமது பொருளாதார
இராணுவ அணுகுமுறைகள் தோல்வியடையக் கூடிய அல்லது
நெருக்கடியை எதிர்நோக்கும் சந்தர்ப்பத்தில் ராஜதந்திர ரீதியான
அணுகுமுறைகளை கொள்கையாக வகுத்து செயல்படுவதனை
உலக வரலாற்றில் காணமுடிகிறது. அவ்வாறான நடவடிக்கையில் பிரித்தானியர் ஒரு காலத்தில் கைதேர்ந்தவர்களாக விளங்கியது போல தற்போது அமெரிக்கர்கள் கைதேர்ந்தவர்களாக விளங்குகின்றனர். சோவியத்யூனியனையும் கொர்பச்சேவ்வின்
மறுசீரமைப்பையும் தோற்கடிப்பதில் அமெரிக்கர்கள் பயன்படுத்திய
மிக முக்கியமான ஆயுதங்களில் ராஜதந்திரமும் ஒன்றாகும்.
அமெரிக்க ராஜதந்திரத்தை முறியடிப்பதிலேயே சீனாகளின் அரசியல் எதிர்காலம் தங்கியுள்ளதென்பது மட்டுமல்ல முழு
உலகத்தினதும் இராணுவ, அரசியல், பொருளாதார, கலாசார,
பரிமாணம் தங்கியுள்ளதென கூறலாம்.
கே.ரி.கணேசலிங்கம் 36

நேட்டோ அமைப்பு
நேட்டோ அமைப்புப் பற்றிய இப்பகுதி மிகச் சுருக்கமானதாகவே ஆராயப் படுகின்றது. நேட்டோ அமைப்பினுாடாக அமெரிக்கா எவ்வாறு பல்முனை அதிகாரக் கட்டமைப்புக்குள் தனித்துவமான அரசாக தன்னைக் காட்டிக் கொள்ள முயலுகின்றது என்பதைப் பிரதானமான இலக்காகக் கொண்டு நோக்கப்படுகிறது. NatO அமைப்பின் அங்கத்துவ
நாடுகளைப் படம் 2 இல் பார்க்கவும்.)
வோர்சோ (Warsaw) என்ற சோஸலிஸ முகாமின் இராணுவஅமைப்பு 1991 ஆண்டு கலைக்கப்பட்ட பின்பு சென்ரோ (CENTO) சியாட்டோ (SEATO) வலுக்குன்றிய நிலையில் நேட்டோ (NATO) மட்டுமே உலகளாவிய ரீதியில் இராணுவ அமைப்பு. அது அமெரிக்கத் தலைமையிலான வட அத்திலாந்திக் சமுத்திர நாடுகளின் கூட்டாக 1949 இல் ஆரம்பமாகி தற்காலம் வரை நிலைத்த இராணுவ அமைப்பாக விளங்குகின்றது. இவ் அமைப்பின் தொடக்ககாலப் பகுதியில் பின்வரும் மூன்று நோக்கங்கள் பிரதானமானவையாக காணப்பட்டன.
* சோஷலிஸத்தையும், சோவியத் யூனியனையும் எதிர்ப்பதும்
அதன் ஆதிக்கப் பரவலைத் தடுப்பதும். * மேற்கு ஐரோப் பாவின் பாதுகாப் பை உறுதிப்படுத்துவதுடன் ஐரோப்பாவுக்குள் அமெரிக்காவை நிலைநிறுத்துவது. * ஐரோப்பிய நாடுகளை அமெரிக்க இராணுவ வலைப்பின்னலுக்குள் கெட்டியாகப் பிணைத்துக்
கொள்வது.
37 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 31
இதன் இலக்குகளை 1991 ஆண்டு வேர்சோ அமைப்புக் கலைக் கப்பட்ட போது நேட்டோ தனது இலக்குகளை அடைந்தாக விளங்கிக் கொள்ள முடியும். அதன் பின்னர் நேட்டோ உலகளாவிய பாதுகாப்பு அமைப்பாக மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. உலகளாவிய ஆதிக்கத்தை தக்கவைக்க வேண்டுமாயின் வேர்சோ அமைப்பிலிருந்து பிரிந்த அரசுகளை நேட்டோவுடன் இணைக்க வேண்டும். அவ்வாறு நேட்டோவுடன் இணைக்கும் போது கருத்தியல் ரீதியாக நேட்டோ மெல்லினப்படும். வட அத்திலாந்திக் நாடுகளின் கூட்டு என்பது பொருத்தப்பாடற்றது என்ற வாதம் வட அத்திலாந்திக்- ஐரோப்பிய நாடுகளால் 1997 March நிகழ்ந்த Helsinki மாநாட்டில் தொனித்த முதன்மைக் கருத்தாக காணப்பட்டது." குறிப்பாக ரஷ்சியாவை நேட்டோவில் இணைப்பது பற்றிய சர்ச்சையே மேலெழுந்தது. அமெரிக்கா ரஷ்சியாவை நேட்டோ அமைப்பில் இணைக்காது தவிர்க்கவே விரும்பியது. ஏனெனில் ரஷ்சியா ஐரோப்பாவில் பலமான அரசு. நீண்ட காலத்தில் ஐரோப்பாவுக்குள் ரஷ்சியா அமெரிக்காவின் தலைமைக்கெதிராகப் போட்டி போடும் வலுவுடையது. மேலும் அமெரிக்கா அத்திலாந்திக் சமுத்திரத்தால் ஐரோப்பாவிலிருந்து பிரிந்திருப்பதனாலும் ஆபத்து எப்போதும் நிகழ்ந்துவிடுமென்பதே அமெரிக்காவின்அச்சமாகும். ஆனால் ரஷ்சியாவையும் அதன் முன்னாள் வோர்சோ நாடுகளையும் கூட்டாக தனிமைப்படுத்தி விட்டால் அதுவும் நீண்ட நோக்கில் உலகளாவிய அமெரிக்க ஆதிக்க நலனுக்கு ஆபத்தாக அமையும். இதனால் வோர்சோ 96OLD'sö55 Albania, Bulgria, Czechoslovakia, Germany (East), Hungary, Poland, Romania, USSR 616óTU6) inst Czech Republic, Hungary, Poland ஆகிய மூன்று நாடுகளையும் நேட்டோவில் நிரந்தர அங்கத்துவ நாடுகளாக ஆக்கிக் கொண்டது.'
கே.ரி.கணேசலிங்கம் 38

அமெரிக்காவின் இந்நடவடிக்கையால் அப்பிராந்தியத்திற்குள் புதிய நெருக்கடியை அரசியலில் ஏற்படுத்திவிட்டது. இம் மூன்று நாடுகளும் புவிசார் அரசியல் நோக்கில் ரஷ்சியாவின் பாதுகாப்புக்கான அரண்களாகும். எதிர்காலத்தில் ரஷ்சியா இப்பிராந்தியத்துள் தனது செல்வாக்கை நிலைநாட்டுவதற்கு அமெரிக்காவின் நடவடிக்கை நெருக்கடியானதாகவே அமையப்போகிறது என்பது நேட்டோ வின் இராணுவ கட்டமைப்பு விருத்தியின் மூலம் விளங்கிக் கொள்ள முடியும்.
நேட்டோவின் அமைப்பு மட்டுமன்றி இராணுவ கட்டமைப்பும் மிக இறுக்கமானது. (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்) நேட்டோ அமைப்பை உருவாக்கிய போது அதன் அங்கத்துவ நாடுகள் வரைந்த சரத்து நான்கில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் இறுக்கத்தன்மையை மேலும் தெளிவாக்குகின்றது. அதாவது பாதுகாப்பு பொருளாதார அபிவிருத்தி, மற்றும் பொது விடயம் பற்றி அங்கத்துவ நாடு ஒன்று தான் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக நேட்டோ அமைப்புக்கு விண்ணப்பம் செய்யலாம் என்றும் அத்தகைய விண்ணப்பம் நேட்டோ அமைப்பினால் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக விரைந்து அந்நெருக்கடிக்கு தீர்வு காணுதல் வேண்டும்" எனவும் அச்சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இச்சரத்தின் படி அமெரிக்க தலைமையில் கிழக்கு ஐரோப்பாவுக்குள் நேட்டோவின் இராணுவம் நிறுத்தப்படலாம் என்பதை இலகுவாக விளங்கிக் கொள்ளலாம் அங்கத்துவ நாடுகள் தமது நெருக்கடியை நேட்டோவுக்கு அறிவிப்பதில் (கிழக்கு ஐரோப்பிய நாடுகள்) தாமதமாக செயல்ப்படலாமென கொள்வோமாயின் (மிகமிக அரிதாகவே நிகழலாம்) அதனை அமெரிக்கா பொருளாதார பேரம்பேசலுக்கூடாக முறியடித்து விடும்
39 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 32
எனவே எக்காரணிக்கூடாகவும் ரஷ்சியா இப்பிராந்தியத்திற்குள் நுழைவது அல்லது பலத்தைத் தக்கவைப்பது என்பது கடினமான அம்சமாகவே அமையலாம். மேலும் மூன்று கிழக்கு ஐரோப்பிய நாடுகளை நேட்டோவில் இணைத்தது போன்று வோர்சோ அமைப்பின் ஏனைய நாடுகளும் இணைக்கப்படலாமென்ற அரசியல் அபிலாசைக் காண எண் ணக் கருவையும் 6Jfg (655uj6íT6Igöl. Azerbaijan, Georgia, Moldova, Ukraine 616öL601 நேட்டோவில் இணைவதற்கான ஆவலை கொண்டிருப்பதனை
ஆதாரமாகக் குறிப்பிடலாம்.
ரஷ்சியாவையும் அதன் முன்னாள் குடியரசுகளையும், ஏனைய நாடுகளையும் அமெரிக்கா நோட்டோவின் நிரந்தர அமைப்புக்குள் உட்படுத்தாது கையாளும் அரசியலை பின்வரும்
அம்சங்களுக்கூடாக விளங்கிக் கொள்ளலாம்.
8 NACC - North Atlantic Cooperation Council, 1991 ஆண்டு டிசம்பரில் உருவாக்கப்பட்டது. இதில் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உட்பட நேட்டோ நாடுகளும் சேர்ந்து 39 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. X* PFP - Partnership For Peaca, 1994ga6ò (3b (3LT அமைப்புடன் கிழக்கு, மத்திய ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகித்துள்ளன. 8 EAPC -Euro-Atlantic Partnership Council, 1997 உருவாக்கப்பட்ட அமைப்பு நேட்டோ உடன் PFP அனைத்து நாடுகளும் அங்கம் வகித்துள்ளன. & PJC-NATO-Russia Permanent Joint Council, 1997
உதமான உடன்பாடு ரஷ்சியாவுடன் பாதுகாப்பு மற்றும்
கே.ரி.கணேசலிங்கம் 40

உறவுகளில் புரிந்துணர்வுடன் கூட்டாக செயல்படுதல். 8 NUC - NATO-Ukraine Commission, 1997 go) உருவாக்கப்ட்ட உடன்பாட்டின்படி உக்ரேனுடன்
நெருக்கமான உறவை நேட்டோ ஏற்படுத்த விரும்பியது.
எனவே மேற்குறிப்பிட்ட அமைப்புக்களையும் அதன் ஊடாக ஏற்படுத்தியுள்ள உறவுகளையும் நோக்கும் போது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ பாரிய திட்டமிலுக்கும் பிரயத்தனத்துக்கும் பின்னால் கிழக்கு, மத்திய ஐரோப்பாவை தனது பிடிக்குள் தக்கவைக்க போராடிவருகிறதென்பது புலனாகும். இத்தகைய புலப்படுத்தலில் ரஷ்சியாவின் வளர்ச்சிக்கான தடைகளைப் போடுவதே பிரதான நோக்கமாக அமெரிக்கா கொண்டுள்ளது. 12,000 அமெரிக்க துருப்புக்கள் நேட்டோ அமைப்பினால் பொஸ்னியா, கொசோவா, மசிடோனியா, பகுதியில் அமீைதிகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளமை? அக்கருத்தை மேலும் தெளிவுபடுத்த உதவும். இப் பிராந்தியத்தில் நேட்டோவின் செல்வாக்கினால் அமெரிக்கத் தலையீடே
பிரகாசமாக பரப்பப்பட்டுள்ளது.
எனவே இவற்றிலிருந்து ஒரு முடிவுக்கு வருவோமாயின் நேட்டோவை திரையாகக் கொண்டுஅதன் மறைவில் ஐரோஆசியாப்பகுதியை விழிம்பு நிலம், இருதய நிலம், மைய நிலம் என விபரிக்கப்பட்ட பகுதியை அமெரிக்கா தனது முழுமையான செல்வாக்குக்குள் உட்படுத்தி வருகிறது. இத்தலையீட்டில் இருந்து ஐரோ-ஆசியாப் பிராந்தியத்தின் தனித்துவத்தை பேணுவது அல்லது மீட்டெடுப்பதென்பது குறிப்பிட்ட காலத்துக்கு கடினமென்றே கருதலாம்.
41 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 33
ரவர்சியப் பிராந்தியம்
உடைந்த பின்னான சோவியத்யூனியன் பாதையில் ரஷ்சியாவும், அமெரிக்க சார்பு கொள்கையை வகுத்துக் கொண்டது. கடந்த ஒரு தசாப்தமாக நேயாளி ஜனாதிபதி ஜெல்ஸினால் நோய்வாய்ப்பட்ட அரசாக இயங்கியது. இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய அமெரிக் கா கிழக்கு ஐரோப்பாவுக்குள்ளும், மத்திய ஆசியாவிற்குள்ளும் தனது செல்வாக்கைப் பரப்பத் தீவிர முயற்சி எடுத்தது. ரஷ்சியாவும், அமெரிக்காவும் ஒரேஅணியென்ற நிலைப்பாட்டை உலகுக்குக் காட்டிக் கொண்ட அமெரிக்கா தனது நலன்களை ரஷ்சியாவின் நலனுக்கு எதிராக அமுல்படுத்தியது. அத்தகைய அமெரிக்க நலன் அரசியலுக்குள் START-I உடன்படிக்கை ரஷ்சியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது ஆனால் START-1 ரஷ்சியாவின் கீழ்ச்சபையான ‘டுமா இனால் நிராகரிக்கப்பட்ட போது அமெரிக்க நலன் எச்சரிக்கப்பட்டது. மேலும் ஜெலஸினுக்கு அடுத்த படியாக ஆட்சிக்கு வந்த விளாடிமிர் புட்டின் அமெரிக்க சவால்களை எதிர்த்துப் போராடும் புதிய தலைவராக தன்னை இனங்காட்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். புட்டின் ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் அமெரிக்க நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆரம்பித்தார். தனது வெளிநாட்டுக் கொள்கையில் “அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்ப்பதுடன் ரஷ்சியாவுக்கு உலகளாவிய ரீதியில் உரிய உரிமையை பெற்றுக் கொள்வதென ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார்." இதனால் புட்டின் புதிய ரஷ்சியாவின் புதிய தேசியவாதியாகவும், தாய்நாட்டை நேசிக்கும் ஆட்சியாளனாகவும், ரஷ்சியனாகவும்,
ரஷ்சியர்களால் மதிக்கப்ட்டார். புட்டினை ரஷ்சிய மக்கள் ஒரு
கே.ரி.கணேசலிங்கம் 42

"லெனினாக” ஒரு “பிரஷ்னோவாக எண்ணுமளவுக்கு ரஷ்சியாவில் கெளரவமிக்க தலைவனாக விளங்கினார். குறிப்பாக புட்டினை பின்வரும் அடை மொழிக்குள் உட்படுத்துகின்றனர். “Today's Russians have the three Ps;Putinism, putinmania and Just Plain Putin’s
அரசியலில் மட்டுமன்றி இராணுவத் தரிலும் பொருளாதாரத்திலும் ரஷ்சியாவை கட்டி வளர்க்கும் பலமுடைய தலைவனாக புட்டின் விளங்குகின்றார். தற்போது ரஷ்சிய மக்களின் நம்பிக்கைக்குரிய மிகப் பெரும் தலைவன் புட்டின் ரஷ்சிய இராணுவக் கல் லுTரி எங்கும் புட் டினின் உருவப்படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளதாகவும் தனது கட்சியையும், ஆட்சியையும் திறம்பட நிர்வகிப்பதையும் காணமுடிகிறதென முன்னாள் பிரதமர் பிறிமிக்கோ குறிப்பிட்டுள்ளார். அவர் புட்டின் புதிய ‘Politbero வை
கட்சியடிப்படையில் வளர்த்துவருவதாக கூறுகின்றார்."
ரஷ்சிய வரலாற்றில் இவ்வாறான தலைவர்கள் எழுச்சியடைவது இயல்பான விடயமாகவேயுள்ளது. 18ம் நூற்றாண்டில் மகாபீற்றர் அழிவுகளையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்டு ரஷ்சியாவை நவீன பொருளாதார இராட்சியமாக மாற்றினார். 20ம் நூற்றாண்டில் விளாடிமிர் லெனின் சிதைந்த ரஷ் சியாவை கட்டி வளர்த்தது மட்டுமன்றி உலக அதிகாரத்திற்காகப் போட்டியிடும் அரசாக் ரஷ்சியாவை மாற்றினார் இவ்வாறான தலைவர்களில் ஒருவராக விளாடிமிர் புடின் துலங்கலாமென்பதே ரஷ்சியாகளின் எண்ணமாகும். மீண்டுமொரு
சோவியத்யூனியனாகவோ, அல்லதுபுதிய பனிப்போருக்கான
43 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 34
அரசாகவோ அல்லது ஒரு வல்லரசாகவோ எழுச்சியடையாது விட்டாலும் குறைந்தது ரஷ்சியாவை அந்நியர்கள் ஆட்சி செய்யாது ரஷ்சியர்களே ரஷ்சியாவை ஆளும் சூழலை ஏற்படுத்தி ரஷ்சியாவை புட்டின் மீட்டெடுப்பார் என கருதுகின்றனர்.
புட்டின் பதவியேற்றபின்பு உலகளாவிய ரீதியில் ரஷ்சியா ஏற்படுத்திய மாற்றங்களை நோக்குவோம்.
அமெரிக்காவால் “காடைநாடு’ என வர்ணிக்கப்பட்ட லிபியாவுக்கு ஆயுத ஏற்றுமதி செய்ய உடன்பட்டமை. பத்து வருடங்களுக்குப் பின்னர் ரஷ்சியா தனது குண்டுவீச்சு விமானங்கள் ஏழினை ARTIC தளங்களுக்கு மீண்டும் நகர்த்தியமை. அமெரிக்காவுடன் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு முரணாக ஈரானுக்கு ஆயுதம் வழங்க இணங்கியமை. மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் ரஷ்சிய ஜனாதிபதி ஒருவர் கியூபாவிற்கு விஜயம் மேற்கொண்டதுடன் அணுஆலை நிர்மாணம் பற்றி ஆலோசனை மேற்கொண்டமை, மேற்கு நாடுகள் அமுல் செய்த விமானப் பறத்தல் g560L60)ui (No fly Zone) f3 J69duds (g(p66O760) ஈராக்குக்குள் அனுப்பியமை. சீனா இந்தியாவுடன் நெருக்கமான உளவுகளை நிர்வகிக்கும் விதத்தில் உடன்பாடுகளை செய்து கொண்டமை. NMD க்கு எதிரான எச்சரிக்கைகளை முன் வைத்தது LDL (BLD 65 6l. Tg5) NMD 용g ஏதர்க் கும்
கூட்டமைப்பொன்றினை பலப்படுத்தி வருகின்றமை.
கே.ரி.கணேசலிங்கம் 44

மிக அண்மையில் ஈராக் மீதான பொருளாதாரத் தடைக்கு எதிராக பாதுகாப்புச் சபையில் தீர்மானமொன்றை
முன்வைக்கப் போவதாக எச்சரித்தமை.
இவை அமெரிகக் மேலாதிக்கத்துக்கு எதிராக புட்டின் உலகளாவிய ரீதியில் போராடுவதற்கான தயார்ப்படுத்தலேயாகும். ரஷ்சியா மட்டுமன்றி சீனாவும் அப் போராட்டத்தில் இணைந்துள்ளது. ஏனெனில் இரு நாட்டுத் தலைவர்களும் பகிரங்கமாகவே மீண்டுமொரு புதிய உலக ஒழுங்கு உருவாக்கப்பட வேண்டும் என்று, அமெரிக்க மேலாதிக்கத்தை
அகற்ற வேண்டுமெனவும் கூறிவருகின்றனர்."
மேற்கு ஆசியா
ஆசியக் கண்டத்தில் மேற்கு ஆசியா அரசியல் கொதிநிலைப் பிராந்தியமாக விளங்குகின்றது. இப் பிராந்தியத்தில் அமெரிக்க அணுகுமுறையால் அதிருப்தி அடைந்துள்ளது பல அரசுகள் சீனா, ரஷ்சியாவுடனும், மற்ற பொருளாதார பலமுடைய ஐரோப்பிய நாடுகளுடனும் உறவுகளை முதன்மைப்படுத்தி வருகின்றன. ஈராக் மீதான கூட்டுப்படைகளின் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார தடைகள் வேறு ஒரு அரசை அப்பிராந்தியத்தில் எழுச்சி அடைய விடாது தடுத்துள்ளது. அப்பிராந்தியத்தில் வலுவான சக்தியாகவும் அமெரிக்க நட்புநாடாகவும் இஸ்ரேல் விளங்குகிறது. ஏரியல்வடிரோனுக்கும், வில்லியம் புஷ்க்குமான, ராஜிக உறவு அரபு உலகத்தால் பலஸ்தீனியர்களுக்கோ, அல்லது
இஸ்ரேலுக்கு எதிராகவோ எந்த நடவடிக்கையையும்
45 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 35
எடுக்கமுடியாத நிலைக்குத் தள்ளியுள்ளது. இது இன்று நேற்றைய உறவு நிலையல்ல. இஸ்ரேல் உருவாகிய ஒரு குறுகிய காலத்தில் தொடங்கி இன்று வரை நீடிக்கிறது. அமெரிக்கா இஸ்ரேலை அச்சுறுத்துவது போன்றும், மிரட்டுவது போன்றும், அறிக்கைகளை வெளியிடுகின்ற போது மறுபக்கத்தில் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பூரணமான ஆதரவு என்பதே அர்த்தமாக கடந்த காலங்களில் அமைந்திருக்கின்றது. அமெரிக்கா இஸ்ரேலியரின் இராணுவ தொழில் நுட் ப் ப வளர்ச்சியைக் கண் டு அச்சமடைகின்றதென்பது உண்மையே, ஆனால் அதற்காக இஸ்ரேலின் உறவை முறிக்க அது ஒரு போதும் தயாராக இல்லை. காரணம் மேற்கு ஆசியாவில் இஸ்ரேலியரை தவிர ஏனையோர் இஸ்லாமியர்கள் என்பதேயாகும். மேற்காசியாவில் இஸ் லா மரியரின் ஆதரிக் க தி தை அடக் குவதற்கு அமெரிக் காவுக்குள்ள ஒரே பலமான சக்தி இஸ்ரேல் மட்டுமேயாகும். இஸ்ரேலினை கண்காணிப்பதற்காகவும், இப் பிராந்தியத்தில் அமெரிக்க நலனைப் பேணுவதற்காகவும் கிழக்காசியாவில் குவிந்துள்ள தளங்களையும், விமானம் தாங்கிக் கப்பல்களையும் வளைகுடா நோக்கி நகர்த்துமாறு புஷ்நிர்வாகம் பதவிக்கு வந்த குறுகிய காலத்தில் பணித்திருந்தது. இது பற்றி முதலாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதும் ஆசியப் பிராந்தியங்களின் முக்கியத்துவம் பொறுத்து புவிசார்அரசியல் நலன்களை அமெரிக்கா பேணுவதில் கவனமாக உள்ளதென்பதை காட்டுவதற்காகவே இதனை இப்பகுதியில் குறிப்பிட்டுள்ளேன். அமெரிக்காவின் இராணுவ ராஜிக ரீதியிலான இறுக்கமான பிடி குறுகிய காலத்தில் இப் பிராந்தியத்தில் மாற்றம் எதனையும் ஏற்படுத்துவது கடினமானதாகவே அமையும்
ஆனால் சீனா இப் பிராந்திய நாடுகளுடன் கொண்டுள்ள
கே.ரி.கணேசலிங்கம் 46

இராணுவ-ஆயுத தளபாட ரீதியாக எழுந்துள்ள உறவு ஈரானின் மெதுவான மறுசீரமைப்புக்கான போக்கு ஆயுதப் போட்டியையும், நெருக்கடியையும் அமெரிக்காவுக்கு எதிர்காலத்தில் கொடுக்கலாம்.
தென்னாசியா பற்றிய ஆய்வு பொருத்தம் கருதி பிறிதொரு அத்தியாயத்தில் ஆராயப்படுகிறது.
GIDíBé5 g(?JITZTE JT
இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்பு அமெரிக்க செல்வாக்கு மிகத்தீவிரமாக காணப்படும் பிராந்தியம் மேற்கு ஐரோப்பாவாகும். ஆனால் மிக அண்மைக்காலத்தில் மேற்கு ஐரோப்பியநாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘யூரோ நாணயத்தினால் அமெரிக்க- மேற்கு ஐரோப்பிய உறவு பாதிப்படையும் நிலையில் உள்ளது. யூரோ நாணயத்தின் பொருளாதார பக்கம் எப்படியோ அதே அளவு வலு அரசியல் பக்கமும் யூரோநாணயத்திற்கு உண்டு. அமெரிக்க எதிர்ப்பு பிராந்தியமாக யுரோலாந்து வெளிப்படையாக தென்படாது விட்டாலும் உள்ளார்ந்த நோக்கில் அமெரிக்க டொலர்’ நாணயத்திற்கு எதிரானதாகவே அமையப் போகிறது. அமெரிக்காவுக்கு சமமான பொருளாதார பலத்தையும் அரசியல் உறுதிப்பாட்டையும் உள்ளடக்கிய அரசுகளைக் கொண்டுள்ள பிராந்தியம் ஒன்றிணையும் போது இயல்பாகவே அரசியல் வலுவடையும் பிராந்தியமாக அது மாற்றமடையும்."
இப் பிராந்தியத்தில் பிரான்ஸ், ஜேர்மனி என்பன அரசியல் முக்கியத்துவமுடைய பிராந்திய சக்திகளாக எழுச்சியடைவதற்கான
47 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 36
பின்னணியை யுரோலாந்து கொண்டுள்ளதென்பது அவற்றின் அணுகுமுறையூடாக தெரியவருகின்றது. பிரித்தானியா, டென்மார்க், நோர்வே என்பன யுரோவில் இணையாத நிலையில் யுரோ நாணயம் புளக்கத்திற்கு வந்துள்ள 2002 இற்குப் பின்னர் அவை பல நெருக்கடிகளை எதிர்நோக்கும் நிலையிலுள்ளன. அந்நெருக்கடியிலிருந்து டொலர் எவ்வளவு தூரம் அவற்றிற்குப் பாதுகாப்பளிக்குமென்பது கேள்விக்குரியதே.
பொருளாதார வலு எந்த சக்தியிடம் குவிந்துள்ளதோ அந்த சக்தி அரசியல் பலத்தை உடையதாக மாறுமென்பது சோவியத்யூனியனின் வீழ்ச்சியின் அனுபவத்திலிருந்து உணர முடிகிறது. இதனால் யுரோ நாணயத்தின் பொருளாதார பலம் மேற்கு ஐரோப்பாவில் அமெரிக்க அரசியல் இலாபத்தை தோல்வியடையச் செய்துவிடும் (யுரோவின் பொருளாதார பலத்தை அடுத்த அத்தியாயத்தில் நோக்குவோம்) இரண்டாம் உலக யுத்தத்தின்பின்பு ஐரோப்பாவை மீளக் கட்டியெழுப்பப் போவதாக கூறிக் கொண்ட அமெரிக்கா (Marshal plan) ஐரோப்பாவை சுரண்டி அமெரிக்க பொருளாதாரத்தை செழிப்படையச் செய்தது. அச்சந்தர்ப்பத்திலேயே டொலர் ஐரோப்பாவுக்குள் மிக ஆழமாக வேரூன்றியது. அதன் பின்பு ஐரோப்பிய நாடுகள் தேசிய பொருளாதாரத்தில் தமது நாட்டு நாணங்களை பயன்படுத்திய போதும் சர்வதேச பொருளாதாரத்தில் டொலரையே ஏற்றுக் கொள்ளப்பட்ட நாணய அலகாகப் பயன்படுத்தி வந்தன. ஆனால் இந் நிலை 2002 இற்குப் பின்பு ஐரோப்பிய தேசிய
பொருளாதாரத்திலும், சர்வதேசப் பொருளாதாரத்திலும், யுரோ நாணயமே அலகாகத் தொழில்படும் போது அமெரிக்கப்
பொருளாதார மந் தம் அமெரிக் க அரசியலையும்
கே.ரி.கணேசலிங்கம் 48

ஐரோப்பாவுக்குள்ளும், பிற பிராந்தியங்களுக்குள்ளும் மந்தமைடயச் செய்யும். இது வரை காலமும் அரசியல் - இராணுவ ஆதிக்கத்துக்குப் பின்னால் ஒரு அமெரிக்க பொருளாதார நலன் மறைந்திருந்தது. உற்பத்தி, சந்தை வாய்ப்பு, முதலீடு என்பவற்றை அரசியல் இராணுவஅரண்களுக்கூடாக அமெரிக்கா நிலை நாட்டி வந்தது. அப் பொருளாதார நலனுக்கு டொலரே தலைமைதாங்கியது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஏனைய நாடுகளோடும், பிராந்தியங்களோடும் வர்த்தகத்தை டொலரின் மூலமே மேற்கொண்டு வந்தன. இந் நிலையினால் அமெரிக்காவின் அரசியல் ஆதிக்கம் டொலர் நாணயத்தின் வாயிலாக மேற்கு ஐரோப்பிய நாடுகளால் ஐரோப்பாவுக்குள்ளும், பிறபிராந்தியத்துக்குள்ளும் பரப்பப்பிட்டது. இது இனி யுரோலாந்து ஆதிக்கமாக பரவலடையலாம்.
தென்னமெரிக்கப் பிராந்தியம் அமெரிக்காவின் செல்வாக்குக் பிராந்தியங்களில் ஒன்றாகும். மேலும் அமெரிக்காவுடன் இறுக்கமான அரசியல் இராணுவப் பொருளாதார உறவை கொள்டுள்ள பிராந்தியமுமாகும். அமெரிக்க கண்டம் முழுவதிலும் கியூபா மட்டுமே அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்க்கும் சர்ச்சைமிக்க அரசாக விளங்குகின்றது. அதனால் தனித்து அமெரிக்காவுக்கு ஆபத்து நிகழ்ந்துவிடப் போவதில்லை. மொத்தத் தில் அமெரிக் காக் கண்டம் முழுவதும் அமெரிக்காவுக்குப் பலமான நட்புப் பிரதேசமாகும்.
ஆபிரிக்காக் கண்டம் வறுமை, எயிட்ஸ், இயற்கையின் கொடுமை என்பன கூட்டாக அக்கண்டத்து நாடுகளை சர்வதேச
அரசியலின் ஆதிக்கத்துக்கு எதிராக போராடும் வலுவை
49 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 37
இல்லாமல் செய்துள்ளது. மனித இனத்தின் அழிவுக்கு எடுத்துக்காடான பிராந்தியமாகவே மட்டும் நோக்கக்கூடியதாக
உள்ளது.
அவுஸ்திரேலியா அமெரிக்காவின் செல்வாக்குப் பிரதேசம். இராணுவ ஒத்துழைப்புக்களைப் பலமாக பேணும் பிரதேசம். மேலும் பொருளாதாரப் பலமும் அரசியல் உறுதிப்பாடும் உடைய பிரதேசமாக விளங்குகின்றது.
முடிவாக சீனா, ரஷ்சியா என்பனவும் அவை சார்ந்த பிராந்தியங்களும் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் முதன் நிலை அரசுகளாக விளங்குகின்றன. யுரோலாந்து அமெரிக்காவை பலவீனப்படுத்தியோ அல்லது கூட்டாகவோ அவ் வெற்றிடத்தை நிரப்புமாயின் சீனா “யுரோ” “டொலர்” இருநாணயங்களையும்
எதிர்த்து போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.
அடிக்குறிப்புக்கள்
1. AsiaWeek, 20 April, 2001.
2. Daily News, 30 July, 2001.
3. DailyNews, 19 June, 2001. 4. Bob Catley, The Bush Administration and Changing Geo
Politics in the Asia-Pacific Reagion, Contemporury Southea
Asia, Vol.23 Number 1, April 2001 P.152. 5. News Week, o7 May, 2001.
AsiaWeek, 20 April, 2001.
Ibid.,
கே.ரி.கணேசலிங்கம் 50

10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
Daily News, 30 July, 2001.
Ibid., Kalpana ChittaranJan, NATO. Where is it Headed Staregic Analysis December, 1997, Vol. XXI No:9, pp. 1297-1298. Ibid., P, 1298. Shalini Chawla, NATO'S Repense to The kosovo crisis, Stategic Analysis, September, 2000. Thinakkural, 06, October, 2001. News Week, 07 May, 2001.
Ibid., p.29.
Ibid.,
Daily News., 13 June,2001. Economics Reivew, January/March 2000 PP,6-8.
51 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 38
LULLD 1
கே.ரி.கணேசலிங்கம் 52
 

* .象*逐*¿.逐縫· *** -33繆 繆*...***縫 縱 メr.()メ_^燦! »
·^ ■ ■
*「** ****參餐*〉 *** 後參變籌錢錢餐參義 參變*餐籌發變變變 ***QQ_
翠
:
53 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு
ILLD 2

Page 39
Wawië*
odsłjỳ{JN d{10}}) o MINYT.d. METOTIN331 11WW00 SHIỸ43% HÖN3+30 8313ffs JWsi: 331 IIWW00 Å8ỳIITIWÅŪ08 AH1s}}}X{} *广*...!!! ~~ 855ɔd0Jd Å008 9NIGINWIS TWIO3&$331 LIWWÓJ 9ĦIN\sid 3DN3H30TIDNĪ100 INBNWW83d -£YS
ROUT急0)
AG08 BALIWAISINIw0v3wawans
(0)!\s|N|
5NTURE0
அட்டவணை
54
கம்
கே.ரி.கணேச
 

3.
அமெரிக்காவின் மேலாண்மையை நிலைநிறுத்தும் தேசிய பாதுகாப்பு ஏவுகணை (NM0)
வில் லியம் கSளின் டன் நிர்வாகத் தரில் பிரகடனப்படுத்தப்பட்டு வில்லியம் புஷ்ன் காலத்தில் தீவிரமாக அமுலாகி வரும் புதிய அமெரிக்க பாதுகாப்பு ஆயுதமே தேசிய பாதுகாப்பு ஏவுகணையாகும். (NMD)இத்திட்டம் 1998 ஜூலையில் Donald Rumsfeld ஆல் அமெரிக்கப் பாதுகாப்பு பொறுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அமெரிக்க காங்கிரஸ்னால் அத்திட்டம் பின்னர் முதன்மைப்படுத்தப்பட்டு 1999 ஜூலையில் நகல்திட்ட வரைபாக அமெரிக்க நிர்வாகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அமெரிக்க அரசியல் சக்திகளும், புலனாய்வு தலைமையகமான சி.ஐ.ஏ(CIA)யும் இராணுவ தலைமையகமான பென்ரகனும், விண்வெளி ஆய்வுமையமான நாசாவும் (NASA) இணைந்து கொடுத்த அழுத்தம் காரணமாக மிக வேகமாக NMD பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் அமெரிக்க ஜனாதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதுடன் NMD இன் தொழில்பாட்டு விருத்திக்கு உத்வேகம் கொடுக் கும் பணியும் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. 2000 மே காலப்பகுதிக்கு இடையில் NMDஇன் கட்டுமானப்பணிகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கிளின்டன் வாக்குறுதியளித்திருந்தார். NMD இன் முதல் கட்டப் பரிசோதனை 2000 ஜூலை 08 இல் மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிந்தது. பின்பு பதவிக்கு வந்த வில்லியம் புஷ்
நிர்வாகம் ஏவுகணைப் பரிசோதனையை பகுதி,பகுதியாக
55 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 40
மேற்கொண்டது. முதலில் செய்மதியின் உதவியுடன் லேசர் கதிர்களினால் எதிரிநாட்டு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் நட்சத்திரயுத்த பரிசோதனையை வெற்றிகரமாக சோதித்து முடித்ததாக 2001 ஜனவரி 26இல் அமெரிக்கா அறிவித்தது. 2001 ஜூலை 17 இல் முழுமையான பரிசோதனையும் பூர்த்தியாகிவிட்டதாக அது அறிவித்துள்ளது. இனி இத் திட்டத்தின் இராணுவ பரிமாணத்தை மிகச்சுருக்கமாக நோக்குவோம்.
“அமெரிக்காவை நோக்கி வேறொரு நாட்டிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள உளவு பார்க்கும் செய்மதிகளால் அதன் ஏவுகணை (NMD)தளமொன்றுக்கு தகவல் பரிமாற்றப் பட்டு எதிர் ஏவுகணையொன்று விரைந்து வரும் ஏவுகணையை புவிப்பரப்பிலிருந்து ஏறக்குறைய 230 கிலோமீட்டருக்கு அப்பால் வானிலே வைத்து மோதி அழித்தொழிப்பதாகும்” (படம்-1 ஐப் பார்க்க) 9600 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து அமெரிக்க ஏவுகணைத் தளங்களை அழிப்பதற்காக ஒரு அந்நிய நாட்டு ஏவுகணை சுடப்பட்டு விரைகிறது. 20 நிமிடங்கள் கழித்து அதை நோக்கி செய்மதியால் தூண்டப்பட்டு சுடப்படும் ஓர் எதிர் ஏவுகணை அதனை இடைமறித்து அழித்துவிடும் NMD திட்டம் படத்தின் மூலம் காட்டப்படுகிறது. இப்பகுதி NMD பரிசோதனை வெற்றியினால் ஏற்படப் போகும் அமெரிக்க அரசியல் மேலாதிக்கத்தையும் ஏவுகணைப் போட்டி அரசியலையும்
பரிசீலிப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமகால சர்வதேச அரசியலின் அதிகாரப் போட்டியில் மேலதிக அதிதியாக NMD இணைந்துள்ளது. இரண்டாம் உலக
கே.ரி.கணேசலிங்கம் 56

யுத்தத்திற்குப் பின்பு "அணுஆயுதமே சர்வதேச அரசியலின் அதிகாரப் போட்டியின் பலத்தை பெருமளவிற்கு நிர்ணயம் செய்த ஆயுதமாகும். ஆனால் அந்நிர்ணய பலம் அணுவாயுத பரவலினால் பலவீனமடைந்துள்ளது. 1998 ஆம் ஆண்டு இந்தியாபாகிஸ்தான் ஆகிய இரு நாட்டினதும் அணுவெடிப் பரிசோதனை மேலும் அதிகாரப் போட்டியின் தரநிர்ணயத்தை குறைத்து விட்டது. இதனால் அமெரிக்கா முதல்தர வல்லரசு என்ற நிர்ணயத்தை நிலைநாட்ட NMD ஐ நிறுத்தியுள்ளதென்பது அமெரிக்கா இராணுவ தொழில்நுட்ப விருத்திவாயிலாக இராணுவ ஆயுத தளபாடங்களை உற்பத்தி செய்வது மட்டுமன்றி அவற்றை உலக நாடுகள் எவற்றுக்கும் கிடைக்காத வகையில்
பேணிவருவதே அமெரிக்க முதன்மைக்கு மிதமான காரணமாகும்.
புஷ் நிர்வாகம் NMD ஐ அமெரிக்காவின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது அமேரிக்க கூட்டு நாடுகளின் பாதுகாப்புக்கு ஏற்றவகையில் நிலைநிறுத்தப்போவதாக அறிவித்துவருகிறது. NMD ஐ நிறுவும் முயற்சியிலும் , அவற்றை நிலைநிறுத்தவேண்டிய தளங்களை வழங்கும் வகையிலும் இங்கிலாந்து, டென்மார்க், என்பன இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய அரசியல் இராணுவ ஒத்துழைப்பு ஐரோப்பாவுக்குள் விருத்தியடையுமாயின் அமெரிக்காவின் இராணுவ பலம் ஐரோப்பாவுக்குள் மேலும் அதிகரிக்கும். அமெரிக் காவின் அரசியல் -பொருளாதார-இராணுவ செல்வாக்கினால் பாதிப்படைந்துள்ள பிரான்ஸ், ஜேர்மனி என்பன மாற்றுக் கொள்கைப் போக்கை தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் முன்னாயத்தம் தவிர்க்க முடியாததாகும். இது அமெரிக்காஐரோப்பிய முறுகலுக்கு வெளிப்படையான சர்ச்சையாக
57 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 41
அமையும். வில்லியம் புஷ் பதவிக்கு வந்ததும் ஐரோப்பிய ராஜதந்திரிகள் பலர் மீண்டும் ”நெப்போலியன்’ ஆட்சிக்கு வந்துவிட்டான் என வர்ணித்திருந்தனர். நெப்போலியனின் இருபதாண்டு நெப்போட்டிஸம் ஐரோப்பாவில் இரத்தம் பொங்கிய ஆண்டுகளாக இருந்ததென்பது வரலாற்றாய்வாளர்களின்
கருத்தாகும்.
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பு ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவை ஆதரிக்கும் நாடுகளில் இங்கிலாந்து முதல் நிலையிலுள்ளது. ஐரோப்பாவுக்குள் இங்கிலாந்தா? ஜேர்மனியா? பிரான்ஸா? என்ற தலைமைத்துவ போட்டியில் இங்கிலாந்து அமெரிக்க ஒத்துழைப்புடன் ஐரோப்பிய அரசியல் சமநிலையை தக்கவைத்துக் கொண்டு வருகிறது. பதிலாக அமெரிக்க நலன்களுக்கு உலகளாவிய ரீதியிலான நியாயப்படுத்தல்களை இங்கிலாந்து வெளிப்படையாக உதவிவருகிறது. ஆனால் டென்மார்க், நோர்வே என்பனவற்றின் ஒத்துழைப்பானது இங்கிலாந்துடன் ஒப்பிடும் போது சற்று வித்தியாசமானவை. ஏனெனில் டென்மார்க், நோர்வே என்பன அமெரிக்காவின்
சமாதான தூதுவர்களாகவே பணியாற்றி வருகின்றனர். கொரிய பிணக்கு, பலாஸ்தீன பிணக்கு என்பவற்றுக்கான நோர்வேயின் பங்களிப்புக்கும் அமெரிக்க நலனுக்கு நெருக்கமான தொடர்பு
உண்டு என்பது அவற்றின் போக்குகளை ஆழமாக அவதானிக்கும் போது புரிந்து கொள்ளமுடியும். பொதுவாக ஸ்கன்ரினேவிய நாடுகள் அனைத்துமே இவ்வாறான ஒத்துளைப்புக்களையே
அமெரிக்காவுக்கு வழங்கி வருகின்றன.
கே.ரி.கணேசலிங்கம் 58

உலகளாவிய ரீதியிலான அமெரிக்க ஆதிக்கத்தை அடைவதற்கு ஒத்துழைப்பு மட்டுமன்றி போட்டியற்ற சூழலையும் ஏற்படுத்திக் கொள்ள முனைகிறது. ஆனால் ஜேர்மனியைப் போன்று பிரான்ஸ்ம் மிக நீண்ட காலமாக அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்க்கும் நாடாக செயல்பட்டு வருகிறது. LîJT66mb6 Cl66f6îl6)labIJ e6oldă gii Hubert Vedrine; “உலகத்தில் அரசியல் ரீதியான தனியாதிக்க வல்லரசையோ அல்லது ஒருதலைப்பட்சமான தனியதிகாரத்தையோ பிரான்ஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது" எனக் குறிப்பிட்டார். NMD திட்டத்தை அமெரிக்கா வெளியிட்ட பின்னர் ஐரோப்பிய ராஜதந்திரிகளும் பத்திரிகையாளர்களும் தெரிவித்த கருத்துக்கள் அமெரிக்கர்களுக்கு ஆட்சரியமானவையாகவே அமைந்திருக்கும். அதாவது “அமெரிக்கா ஐரோப்பாவை நோக்கி முன்வைக்கும் பாதுகாப்புக் கொள்கையானது ஆராக்கியமில்லாதது; ஆபத்து மிக்கது, ஐரோப்பாவை (உலகத்தையும்)தனது பொறிக்குள் சிக்கவைக்க அமெரிக்கா முன்வைத்திருக்கும் திட்டமே NMDs.g5 b.”
பொதுவாக அமெரிக்கா பற்றிய அடிப்படை எண்ணத்தில் ஐரோப்பியரிடம் பெரும் மாற்றங்கள் அண்மைக்காலமாக ஏற்பட்டுவருகிறது. அத்தகைய மாற்றத்திற்கு அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமானதும், அமெரிக்க நலன் சார்ந்ததுமாகவே அதன் நடவடிக்கைகள் அமைந்துள்ளதே காரணமாகும். அவற்றை
சுருக்கமாக நோக்குவோம்.
> உலக வெப்பமயப்படுத்தலை தடுக்கும் Kyoto
உடன்படிக்கையில் ஒப்பமிட மறுத்துவருவது.
59 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 42
> முழு உலகுக்குமான நிலக்கண்ணிவெடிகள் தடை
உடன்படிக்கையில் இணைய தயக்கம் காட்டிவருவது. > LDJ60T 560ó L6060T60)u (Death Peralty) d'60ö (BLb
அமுல்படுத்தி வருவது. > CTBT, NPT என்பன முழுமைபெற ஒத்துழைக்காது செயல்படுவது மட்டுமன்றி NMD ஐ பிரகடனப்படுத்தியுள்ளமை. > AMBஐ கைவிடப் போவதாக அறிவித்து வருவது “
என்பன ஐரோப்பாவுட்ன் முரண்படுவது மட்டுமன்றி ஒருதலைப்பட்சமாக அமெரிக்க நலனில் மட்டுமே அக்கறை கொள்வதனைக் காட்டுகிறது. மேலும் உலக நாடுகள் எங்கும் பரவிவரும் நிலக்கண்ணிகளின் அபாயத்தை தடுப்பதை விடுத்து அமெரிக் கா தனது சொந்தப் பாவனைக்கு மட்டும் நிலக்கண்ணிகளை அழிக்கும் விசேட கவசவாகனங்களை தயாரித்து உபயோகித்து வருகிறது? இதனை விளங்கிக் கொள்ள இன்னோர் அம்சத்தை நோக்குவோம். கொரியன் வளைகுடாப் பிரதேசத் தின் 37,000 அமெரிக்கத் துருப்புக் கள் குவிக்கப்பட்டுள்ளன. இதனை முறியடிக்கும் நோக்கில் வடகொரியாவும் தனது எல்லைப்பிரதேசத்தில் 1 Milion துருப்புக்களை பதிலுக்கு நிறுத்தியுள்ளது. மேலும் பல ஆயிரக்கணக்கான நிலக்கண்ணிகளை அப்பகுதியில் வடகொரியா பரவியுள்ளது." இது அமெரிக்காவின் எல்லைமீறலையும் ஏனைய அரசுகளின் இறைமையை சூறையாடுவதையுமே தெளிவாக காட்டகின்றது. அமெரிக்கா மேலாதிக்க நலனுக்காக உலக நாடுகள் போருக்காகவும், அழிவுகளுக்காகவும் வலுக்கட்டாயமாக இழுக்கப்படுகின்றன என்பதை வட கொரிய நிகழ்வு துலாம்பரமாக எடுத்தக் காட்டுகிறது. அத்தகைய நடவடிக்கையின் இன்னோர் அம்சமே NMD ஆகும்.
கே.ரி.கணேசலிங்கம் 60

வில்லியம் புஷ்ன் ஆட்சியில் அமெரிக்க ஐரோப்பிய விரிசல் அதிகரிப்படைந்து கொண்டு செல்கிறது, கடந்த ஆண்டு இரண்டு மாதங்களில் (17-06-2001/19-07-2001) இரண்டு தடவை புஷ் ஐரோப்பாவுக்கு விஜயம் செய்திருந்தார். இரண்டு தடவையும் பிரிட்டிஷ் பிரதமரான ரொனி பிளயரையே முதலில் சந்தித்தார். ஆனால் சுவீடனில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டிலும், ஜெனோவாவில் நடைபெற்ற G.8 நாடுகளின் மாநாட்டிலும் பெருமளவான ஐரோப்பியர்கள் புஷ் ஐ "கொலைகாரன் 'வெறியன் சுயநலக்காரன் என்றெல்லாம் சுலோகம் ஏந்தி புஷ்ஐயும் அவரது கொள்கைகளையும் விமர்சித்தனர். ஐரோப்பிய மக்களின் பிரதான எதிர்ப்பு உலகமயப்படுத்தல், வெப்பமயப்படுத்தல், மரணதண்டனை மயப்படுத்தல், இராணுவ மயப்படுத்தல் (NMD) என்பவற்றுக்கு எதிரானதாகவே அமைந்திருந்தது. இச் சந்தர்ப்பத்தில் ஐரோப்பிய-அமெரிக்க விரிசல் தொடர்பாக பிரபல சர்வதேச விவகார ஆலோசகரான கென்றிக்கீசிங்கன் கூறியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
“ஐரோப்பா இல்லாத அமெரிக்காவும் அமெரிக்கா இல்லாத ஐரோப்பாவும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்வன. இதில் ஆபத்தும் அபாயமும் ஐரோப்பாவை விட அமெரிக்காவுக்கே அதிகமுண்டு”
இவ்வாறு ஐரோப்பிய மக்களால் எதிர்ப்புக்குள்ளாகிய NMD ஈரோசிய நாடுகளால் (முக்கியம்வாய்ந்த சீனா, இந்தியா, ரஷ்சியா என்பன) எவ்வாறு எதிர்கொள்ளப்படுகிற தென்பதனை
விரிவாக நோக்குவோம்.
61 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 43
NMD முன்வைக்கப்பட்ட ஆரம்பகாலத்திலிருந்து எதிர்த்த நாடுகளின் பட் டியலில சீனாவும் , ரஷ் சியாவும் , முதன்மையானவைகளாக காணப்படுகின்றன. இந்நாடுகள் இரண்டும் பல தடவை மறைமுகமாகவும், நேரடியாகவும் NMD ஐ எதிர்ப்பதாக அறிவித்துள்ளன. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பின்னர் தற்போது ஆட்சியிலிருக்கும் ரஷ்சிய ஜனாதிபதி விளடிமிர் புடின் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராக மிக தெளிவான நிலைப்பாட்டை எடுத்துவருகின்றார். அதனோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாத புட்டின் சீனாவை நெருக்கமான நட்பு நாடாக்கி வருவதும் உலகளாவிய அரசியலில் ஈரோசியா மீண்டுமொரு மாற்றத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாமென்ற ஆரூடத்துக்கும் வழிவகுத்துள்ளது. ஆருடத்தை உறுதிப்படுத்த ஆதாரங்கள் பலவற்றை எடுத்துக்காட்டலாம்.
சுவீடனில் நிகழ்ந்த மாநாடொன்றுக்கு வருகை தந்த வில்லியம் புஷ் ஐ (17.06.2001 இல்) சந்திக்க முன்னர் விளாடிமிர் புட்டின் மேற்கொண்ட நடவடிக்கை உலக ராஜதந்திரிகளால்
கூர்ந்து விமர்சிக்கப்பட்டது.
“ஷங்ஹாய் - ஐந்து (Sharghai-five) என்று அழைக்கப்படும் கூட்டமைப்பொன்றை சீனா கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் என்பனவற்றுடன் ரஷ்சியா 16.06.2001 இல் உடன்பாட்டை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இக் கூட்டமைப்பின் இணக்கப்பாட்டில் எட்டப்பட்ட மிகப் பிரதான
அம்சங்கள்;
> இப்பிராந்தியம் முழுவதும் பரவிவரும் இஸ்லாமிய
தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது,
கே.ரி.கணேசலிங்கம் 62

> மத்திய ஆசியக் குடியரசுகள் மீது வளர்ந்தவரும் அமெரிக்க செல்வாக்கைத் தடுப்பது." என்பனவாகும்.
இஸ்லாமிய தீவிரவாத்தைக் காட்டிலும் ஒப்பீட்டடிப்படையில் அமெரிக்க மேலாதிக்கமே சீனா, ரஷ்சியா, என்பவற்றுக்கு ஆபத்து மிக்கதாக காணப்படுகின்றது. அமெரிக்க செல்வாக்கு சீனா, ரஷ்சியா ஆகிய நாடுகளில் கொல்லைப்புறம் வரை நகர்ந்து கொண்டிருக்கிறது. இது இரு நாடுகளது தனித்துவத்தை அடியோடு அழித்து விடுமென்பதே அவைகளின் அச்சமாகும். சீனா மீண்டுமொரு சோவியத்யூனியனாக அழிந்து போகக் கூடாதென்பதன் முன்னெச்சரிக்கையான நடவடிக்கையே ஷங்ஹாய்-5 இணக்கப்பாடென அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். எனவே இரு நாடுகளும் பரஸ்பரம் அமெரிக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஒன்றிணைந்ததுடன் NMD ஐ எதிர்ப்பதில் முதன்மையானவர்களாக காணப்படுகின்றன.
அடுத்து NMDக்கு எதிராக விளாடிமிர்புட்டின் அமெரிக்க நிர்வாகத்துக்கு கொடுத்த அதிர்ச்சித் தகவல்கள் மட்டுமல்ல ராஜதந்திரமான அரசியல் நடவடிக்கையை நோக்குவோம்.
“அமெரிக்கா NMD திட்டத்தை தீவிரப்படுத்துபாயின்
ரஷ்சியா செலவு குறைந்த அணு ஆயுதங்களை பதிலுக்கு கைகளில் எடுத்துக் கொள்ளும்”*
“NMD ஐ அமெரிக்கா கைவிட மறுக்குமாயின் 1972 ஆம் ஆண்டு ரஷ்சியா அமெரிக்காவுடன் செய்து கொண்ட ABM உடன்படிக்கையையும் கைவிடப் போவதாக புட்டின்
அமெரிக்க ஆளும் தலைமையை பதிலுக்கு எச்சரித்தார்”*
63 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 44
மேலும் புட்டினும்-ஜியாங்-ஷெமினும் 16.07.2001 இல் 10 ஆண்டுகால உடன்படிக்கை ஒன்றை கைச் சாத்திட்டமை குறிப்பிடத் தக்கதாகும். அவ்வுடன்படிக்கையில் இருதலைவர்களும் இணைந்து கொண் டமை உலகளாவிய அரசியல் திருப்புமுனையாக மதிப்பீடு செய்யப்படுகிறது. அம் மாஸ்கோ உடன்படிக்கையில், “உலகளாவிய ரீதியில் அமெரிக்க ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது, NMD ஐ எதிர்ப்பது வில்லியம்புவடி நிர்வாகம் கைவிடுவதாக கூறிய ABM ஐ ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து நடைமுறைப்படுத்துவது. இராணுவ, அரசியல், பொருளாதார விடயங்களில் பரஸ்பரம்
" ஒத்துழைப்பது.” “ என்பன முக்கிய அம்சங்களாகும்.
இதில் ABM ஐ ஐரோப்பியருடன் இணைந்து அமுல்படுத்துவதென்ற எச்சரிக்கைக்கு மாறான அம்சம் சீனாவும், ரஷ சியாவும் , தந் தரோபாயமாக ஐரோப் பாவை அணுகுகின்றதென்பது தெளிவாகிறது. இது சீனாவை விட ரஷ்சியா காத்திரமான நட்புக்களை ஐரோப்பாவுக்கு ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புக்களை அதிகரிக்குமென்பது மட்டுமன்றி அமெரிக் கரை ஐரோப் பாவுக் குள் ளரிருந்து அந்நியப்படுத்துமென்பதை கோடிட்டு காட்டுவதாகும். ஏனெனில் அமெரிக்க-ஐரோப்பிய விரிசலுக்கு அமெரிக்காவின் ஆயுதப்பரவலே பிரதான காரணமென்புது குறிப்பிடத்தக்கதாகும். இச்சந்தர்ப்பத்தை புட்டின் சாதுரியமாகவும், நுட்பமாகவும் கையாளுகின்றார் என்பது
கவனத்துக்குரிய அம்சமாகும்.
மேலும் புட்டினும் -ஷெமினும் செய்து கொண்ட
உடன்படிக்கையின் பின்பு உரையாற்றிய புட்டின் நேட்டோ
கே.ரி.கணேசலிங்கம் 64

அமைப்பை கலைத்துவிட்டு ஐரோப்பிய பாதுகாப்புக்குத் தனியான ஓரமைப்பு உருவாக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்." இது முன்னாள் சோவியத்யூனியனின் இறுதி ஜனாதிபதி கொர்ப்பச்சேவ் முன்வைத்த “ஐரோப்பிய பொதுக் குடும்பம்” என்பதற்கு ஒப்பானது. இவ் அணுகுமுறை வரலாற்று நோக்கில் ரஷ்சியர்கள் தாம் அரசியல், பொருளாதார, இராணுவ நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போது முன்வைக்கும் ஒரம்சமாகவே அமைந்துள்ளது. ஐரோப்பா நோக்கிய புட்டினின் அழைப்பும் அவ்வாறானதென்றே. ஆனால் நேட்டோவின் பலம் ஐரோப்பியரிடமே குவிந்துள்ளதென்பதை தெளிவாக கண்டறிந்து கிழக்கு ஐரோப்பாவுக்குள்ளும், ஆசியக்குடியரசுகள் பக்கமும் செல்வாக்கைப்பரப்பு நேட்டோவையும் அதன் தலைமையையும் எதிர்கொள்ள சீனா மட்டுமல்ல மேற்கு ஐரோப்பாவும் அவசியமானதென்பதையே புட் டினின் கருத் து வெளிப்படுத்தியுள்ளது. நேட்டோ கலைக்கப்படாதென்பது தெளிவாக விள்ங்கிய நிலையில் புட்டினின் கருத்து பலவீனமானதென பல அரசியல் நோக்குனர்களால் விமர்சிக்கப்படலாம். ஆனால் டொலரை முறியடிக்க யுரோவை முன்வைத்த ஐரோப்பியர்கள் காலப்போக்கில் நேட்டோவுக்கு எதFராக மாற்றுச் சிந்தனை எழுச் சியடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதை கருத்தில் கொள்ள தவறக்கூடாது.
சீனா, ரஷ்சிய நெருக்கம் உலகின் புதிய ஒழுங்கான மாற்றுக் கருத்துப் பற்றிய எண்ணப்பாட்டை உருவாக்கிவிட்டது. ஏற்கனவே பல உலக மாற்றத்துக்கும், திருப்புமுனைக்கும் மையநிலமாக விளங்கிய ஈரோசியா மீண்டுமொரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடுமெனவும் நம்பப்படுகிறது.
65 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 45
ஏவுகணை தொழில்நுட்பப் போட்டி
சமகால சர்வதேச அரசியலின் சமநிலையை நிர்ணயிக்கும் அதிகாரம் NMD க்குரியதென்பது ஏற்கனவே நிர்ணயமாகிவிட்டது. அது அண்டவெளி தொழில்நுட்பத்தின் உயர்வளர்ச்சி நிலையாகும். தகவல் தொழில்நுட்பத்தின் வலுவான தாக்குதிறன் கொண்ட தலைமை நாடாக அமெரிக்கா மாறி வருகிறது. அம்மாற்றத்துக்கான வலு ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது. அதாவது இன்று உலக வல்லரசுக்கான போட்டியில் தற்காப்பு ஆயுதக் களஞ்சியமாக ஏவுகணைகள் விளங்குகின்றன. NMD போன்ற தற்காப்பு ஏவுகணைத் திட்டத்தை இலகுவில் விருத்தி செய்யக்கூடிய நாடுகள் வரிசையில் அமெரிக்காவுக்கு இணையாக ரஷ்சியா விளங்குகிறது. ஆனால் ரஷ்சியாவின் பொருளாதார செழிப்பின்மை, வறுமைநிலை என்பன பில்லியன் கணக்கான அமெரிக்க டொலரை செலவிட்டு ஏவுகணையை தாயாரிக்க இடங்கொடுக்குமா என்பது கேள்விக்குரியதே. ஆனால் சீனாவின் பொருளாதார செழிப்பு, ரஷ்சியாவின் ஏவுகணை தொழில்நுட்ப விருத்தி என்பன எதிர்காலத்தில் பலமான அண்டவெளி தொழில்நுட்ப விருத்திக்கு வழிவகுக்கலாம். அமெரிக்காவின் NMD க்கு நிகராக ரஷ்சியாவும் சீனாவும் கூட்டாக அண்டவெளிமாற்றுத்திட்ட மொன்றை முன்வைக்கலாமெனMichael Krepon குறிப்பிடுகின்றார்." இவரது கருத்துக்கு வலுச்சேர்க்கும் இன்னோர் ஆய்வாளனான Manpreet Sethi ரஷ்சியா பாதுகாப்பு கொள்கை சார்ந்த நோக்கில் சீனாவை GLONASS என்ற அணி ட வெளிப் பயணத் திட்டத்தை பயன்படுத்த அனும்தித்துள்ளதுடன் அமெரிக்க NMDக்கு எதிராக மாற்று
கே.ரி.கணேசலிங்கம் 66

ஏவுகணைத் திட்டமொன்றை முன்வைக்க அதிக வாய்ப்பு உண்டு எனவும் குறிப்பிடுகின்றார்?
இச் சந்தர்ப் பத்தில் ரஷ் சரியா தனது உயர் தொழில்நுட்பத்தை தரைவழி தொடர்புடைய அயல் நாடொன்றுக்கு வழங்குமா? என்ற அரசியல் சார்பான கேள்வி எழுவது இயல்பானது. 1959 களிலிருந்து சீனா- சோவியத் முறுகல் படிப்படியாக விரிசலடைந்து 1970 களின் பின்பு அமெரிக்க-சீன நெருக்கம் மேலும் சோவியத்ரஷ்சியா-சீனா விரிசலை அதிகரித்தது.இதனால் சோஸலிஸ் முகாம் பலவீனமடைந்ததுடன் சோஸலிஸம் என்று அவர்களால் அழைக்கப்பட்ட கொள்கை மறுசீரமைப்புக்கு வழிவகுத்தது. சீனாவே முதலில் மறுசீரமைப்புக்கு வித்திட்டது. சீனாவே முதலில் மறுசீரமைப்பை ஏற்படுத்தியது (சிறியபெரஸ்ரொய்கா) அதன் பின்பு சோவியத் யூனியனும் 1987 களில் பாரியளவில் மறுசீரமைப்பை ஆரம்பித்தது. (பெரிய பெரஸ்ரொய்கா) இச்சந்தர்ப்பத்தில் அமெரிக்காவுடன் சேர்ந்து சோவியத்துக்கு பாரிய நெருக்கடிகளை சீனாவும் கொடுத்தது. ஆனால் சோவியத்யூனியன் உடைந்தபின்பு இப்பிராந்தியத்தில் பலவீனமான அரசுகளே உருவாகின. ரஷ்சியாவும் யெல்சின் ஆட்சியில் மிகப்பலவீனமான அரசாகவே விளங்கியது. மறுபக்கத்தில் அமெரிக் காவின் மேலாதிக்க பரவல் ரஷ்சியாவின் கொல்லைப்புறத்தை மட்டுமன்றி சீனாவின் எல்லையோரமும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இதனால் சீனா-ரஷசிய நெருக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு தவிர்க்க முடியாததாக வளரத் தொடங்கியுள்ளது. பலவீனமான ரஷ்சியா என்ற காரணம்
மட்டுமன்றி விளாடிமிர்புட்டின் தலைமையிலான ரஷ்சியா
67 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 46
அமெரிக்காவின் எதிரி என்ற நோக்கிலும் சீனா-ரவுசியா நெருக்கம் மேலும் அதிகரிக்கலாம். மேலும் வரலாற்று நோக்கில் சீனாரஷ்சிய உறவு பிராந்திய சமநிலையை பேணுவதாகவே அமைந்துள்ளது. சோவியத்யூனியனை முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் கொண்டே மாவோசேதுங் சீனப்புரட்சியை வெற்றி கொண்டார். சீனாவுக்கு பொருளாதார உதவி மட்டுமன்றி சீனாவினால் இன்று பயன்பாட்டுக்கு உட்படுத்தும் இராணுவ தளபாடங்களும் அதன் மாற்றுத்தயாரிப்புகளுக்கும், அணுவாயுதப் பரிசோதனைகளுக்கும் வித்திட்ட நாடு ரஷ்சியாவே. மறுவளமாக நோக்கினால் ரஷ்சியா அடைந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு கினாவின் நட்பு பலமான ஒத்துழைப்பாகக் கூட அமையலாம். அமெரிக்கா இந்தியாவைத் தனது விருப்பப்படி கையாண்டு வருவது காலப் போக்கில் சீனாவுக்கு சவாலாக இந்தியாவை நிறுத்தமுயலும் என்ற சந்தேகம் சீனாவுக்குண்டு. அவ்வாறான தீவிரத்தன்மைக்கான வாய்ப்பு சீன- ரஷ்சிய நட்பை பலப்படுத்தும். அதாவது அமெரிக்கா என்ற பொது எதிரியை இரு நாடுகளும் கூட்டாக எதிர்கொள்வதே தற்போதய பிராந்திய அரசியல்
சமநிலைக்கான சூழலாகும்.
சீனாவின் ஏவுகணைத் தொழில்நுட்பம்
இச்சந்தர்ப்பத்தில் சீனாவின் ஏவுகணை தொழில்நுட்பம் பற்றிய ஆய்வு முக்கியமானதென உணரப்படுகின்றன. இன்றைய வல்லரசுகளுக்கான அதிகாரப் போட்டியின் தளமாக ஏவுகணைத் தொழில்நுட்பம் விளங்குகிறது என்பதனால் அதன் முக்கியத்துவம்
உயர்வானதென்ற வகையில் அதனை நோக்குவோம்.
கே.ரி.கணேசலிங்கம் 68

1950 களின் இறுதிப்பகுதியில் சோவியத்யூனியனின் உதவியுடன் பெற்றோலிய வளங்களை பயன்படுத்தி தாக்கத்தை விளைவிக்கும் Balistic Missile DF-2ஐ சீனா தயாரித்திருந்தது* அதனால் சீனாவின் ஏவுகணை தொழில்நுட்பம் 1950 களின் நடுப்பகுதியில் ஆரம்பித்ததெனக் கூறலாம். குறிப்பாக சீன Ballistic Missileusipuu 61606T600ig5605 eGLDifists.T666T TITANICBM அமைப்பு ஏற்படுத்தியது. அது பின்பு சீனாவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அமெரிக் கா அவ்வமைப்பை சீனாவிலிருந்து விலக்கிக் கொண்டது. அமெரிக்காவின் அந்நடவடிக்கை நிகழ்ந்த ஒரு சில ஆண்டிலேயே சீன ரஷ்சியாவிடமிருந்து R-1 என அழைக்கப்படும் ஏவுகணையைப் பெற்றுக் கொண்டது. இது இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜேர்மனி பாவித்த V-2 ஏவுகணையின் பிரதி என்றே கருதப்படுகிறது. அதனை சீனா மிக வேகமாக 1957களில் R-2 என அழைக்கப்படும் சீனத் தயாரிப்பு ஏவுகணையாக வடிவமைத்தது. இவ் R-2 தாக்குதிறன் விருத்தியையும், வீச்சு எல்லையையும் அதிகரித்ததுடன் இலகுவாக எடுத்துச் சென்று தாக்கக் கூடியதாகவும் வடிவமைத்துக் கொண்டது. சீனாவின் ஏவுகணைத் தொழில்நுட்பம் 1966 களில் இரண்டாம் கட்டப்பரிமாணத்தை அடைந்தது. 1966 யூலை இல் முதலாவது சுயதயாரிப்பான ஏவுகணைகளை அதிகரிக்கும் நோக்குடன் சீனாவினால் ஏவுகணை நிகழ்ச் சித் திட்டமொன்று உருவாக்கப்பட்டது. அதில் சீன இராணுவமும் பாதுகாப்பு அமைச்சும் தமது நேரடிக் கட்டுப்பாட்டில் இந்நிகழ்ச்சித் திட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டன. விரிவாக்கத்தின் நடவடிக்கையில் f6OTT6l6őT gsbgbsT6Jg5! SÐä585LLÓ (Fifth Academy) CASC, CAIC CASTC, CASMEC, போன்ற பிரிவுகளை அமைத்ததுடன்
69 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 47
அவற்றின் ஊடாக சீனாவுக்கென ஏவுகணை முறைமையையும், பரிசோதனைகளையும் விரித்திசெய்யும் பணியை ஏற்படுத்திக்
கொண்டது. இப்போக்கு 1980 களின் பிற்பகுதியில் மூன்றாம் கட்ட பரிமாணத்தை அடைந்தது குறுந்துார ஏவுகணைகள் நீண்ட
தூர ஏவுகணைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் என பலவற்றை தொழில்நுட்பரீதியிலும், தாக்கும் திறனிலும்
சர்வதேச தரத்தை சீனா அடைந்தது.
ICBM 6N 6OD 35 6J 68560)6OOT u T6OT DF-5/5A (CSS-4)
என்பதன் வீச்சுஎல்லை 13,000kmதூரத்தை அடைந்த தாக்கும் திறன் கொண்டது.’ இவ்வகை ஏவுகணையின் எண்ணிக்கை
20-26 வரை மட்டுமே உண்டு என சீனாவின் உத்தியோகபூர்வ
தகவல்கள் கூறுகின்றன. இவற்றை விட தற்காலத்தில் ICBM வகையைச் சேர்ந்த ஏவுகணைகள் பலவற்றை விருத்தி செய்துள்ளது.DF-31 இதன் வீச்சு எல்லை 8000 km DF-41 இதன் வீச்சு திறன் 12000km கொண்டிருந்தது. மேலும் இவ்விரு ஏவுகணைகளையும் விண்ணுக்கு ஏவும் வாகனதளங்களை பயன்படுத்தி மும்முனைப்பரிமாணங்களில் பெற்றோலியத்தை உந்துசக்தியாகக் கொண்டு தயாரிக்கும் திறனை சீனா கொண்டுள்ளது. இது அமெரிக்காவின் W-88 அல்லது W-70 ஏவுகணைகளின் மாதிரிகளை ஒத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது DF-3 ஏவுகணைகளையும், DF-15 M-9 போன்ற ஏவுகணைகளையும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வளர்ச்சியை சீனா அடைந்துள்ளது. டொங்-வழியாவோ-பிங் இன் “ACTIVE DEFENCE 66örps g5b55(3y TUITuuLDT601 Gas Toiré035
ஏற்படுத்திய வெற்றி' என்றே கூறப்படுகிறது.
கே.ரி.கணேசலிங்கம் 70

இறுதியாக சீனாவும் அமெரிக்காவினதும் ஏவுகணை வீச்சு
எல்லைகளை பின்வரும் அட்டவணை வாயிலாக விளங்கிக்
கொள்வோம்.
ஏவுகணை சீன தயாரிப்புக்களின் அமெரிக்கத்
வகைகள் | தூரம் (Km) தயாரிப்புக்களின்
g5Tyub (Km)
BSRB 0-150
SRB 150-800 O-1100
MRB 800-2400 1100-2750
RB 2400-5500 2750-5500
ICB 5500-மேல் 5500-(8D6)
Source: Strategic Analysis/June 2000P537.
எனவே சீனா ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் மோசமான நிலையில்லை என்பதை மேற்படி விடயம் தெளிவுபடுத்துகிறது. ரஷ்சியா, அமெரிக்கா போன்றவற்றை பிரதி செய்து வந்த போதும் சீனாவின் ஏவுகணைப் பரிமாணம் விருத்திபெற்றே செல்கிறது.
இனி NMD சிபார்சு செய்தபோது அமெரிக்க ஆட்சித் துறையும், புலனாய்வுப் பிரிவும் இராணுவ
தலைமையகமும் கூட்டாக முன்வைத்த காரணங்களை
நோக்குவோம்.
> அமெரிக்க தாய்நாட்டின் மீது வட கொரியா, ஈரான், ஈராக்.
போன்ற நாடுகளின் ஏவுகணைத் தாக்குதல்கள் விரைவில்
நிகழவாய்ப்புண்டு. அப்போது பெரும் அழிவினை அமெரிக்க
நகரங்களில் வாழும் மக்கள் எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.
71 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 48
சீனா ஏற்கனவே அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பை தாக்கி அழிக்கும் நோக்கில் 20-26 இடைப்பட்ட
ஏவுகணைகளை தயாராக நிறுத்தியுள்ளது.*
> 6LGd5(Tful T Taepo-Dong 6,68560600T60)u guT60ful
வான் பரப்புக் கூடாக ஏவி பசுபிக் கடல் ப் பரப்பில் பரிசோதித்துள்ளது. மேலும் வடகொரியா 2005 ற்கு முதல் 3560öTL bef (6 beois LLD LIFulb (Long Range missile) ஏவுகணைகளை பரிசோதிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது அமெரிக்க தாய் நாட்டை இலக் குவைத் து தயாரிக்கப்படுவதாக அமையலாம்.
> ஈரான் நீண்ட தூர ஏவுகணையை அண்மைக் காலத்தில்
பரிசோதித்து வெற்றி கண்டுள்ளது.
இவ்வாறான ஆபத்திலிருந்து அமெரிக்க மண்ணையும், மக்களையும் பாதுகாக்க வேண்டுமாாயின் NMD ஐ விருத்தி செய்தல் அவசியமானது என்ற சாரப்பட அமெரிக்க நிர்வாகம் பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகிறது. இது NMD திட்டத்தை நியாயப்படுத்துவதற்கான பிரச்சாரமாகவே நோக்குதல் பொருத்தப்பாடுடையது. தகவல் தொழில்நுட்பப் புரட்சி அமெரிக்கா உட்பட மேற்குலகின் உள்நோக்கங்களை பிரச்சாரப்படுத்துவதும் நியாயப்படுத்துவதுழாகவே அமைந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்ப்பப் புரட்சியானது போலியான, அல்லது மாயையான உலகத்தையே உருவாக்கிவருகிறது. இப்போலி உலகத்திலிருந்து யாரும் விடுபட முடியாத நிலையில் உலகின் முழு மக்களும் கிணற்றுத் தவளைகாளக்கப்பட்டுள்ளனர். இதுவே நடத்தைசார்
புதிய உலக ஒழுங்கின் யதார்த்தமாகும்.
கே.ரி.கணேசலிங்கம் 72

இவ்வாறு NMD பற்றி பென்ரகனும், அமெரிக்க நிர்வாகமும் கூறும் போலி காரணங்களுக்குப் பின்னால் இருக்கும்
உண்மையான காரணங்களை மிகச்சுருக்கமாக நோக்குவோம்.
9 நெருக்கடிக்குள்ளான CTBT உடன்படிக்கை
1998 ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் என்பன அணுவாயுத அரசுகளாக பரிமாணமடைந்தன. இதனால் அணுவாயுதம் உலக அதிகாரச் சமநிலையின் பலத்தை நிர்ணயிக்கும் சக்தியை முற்றாக இழந்ததுடன் அமெரிக்காவின் தலைமையிலான அணுவாயுதத் தடை, அணுவாயுதப் பரிசோதனைத்தடை உடன்பாடுகள் படுதோல்வியை அடைந்தது.
9 கைவிடும் நிலையில் NPT உடன்படிக்கை
1968ஆம் ஆண்டு அமெரிக்கா, இங் கிலாந்து, சோவியத்யூனியன் ள்ன்பன NPT உடன்படிக்கையில் ஒப்பமிட்ட போதும் அணுவாயுதப்பரவலை தடுக்க முடியவில்லை NPT பற்றிய 2000 ஆண்டு மாநாடு எந்த இறுதி முடிவையும் எடுக்க முடியாது கைவிடப்பட்டது.
o START 2: L6oiLITG 65r6õ6fluol -5356olo
1991இல் START I, II, III என அமெரிக்கா சோவியத்யூனியனுடன் ஆயுத முடக்கம்பற்றிய உடன்படிக்கையை கைச்சாத்திட்டது. பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் START1ஐ ரஷ்சியா- நடைமுறைப்படுத்த விரும்பிய போதும் அரைகுறை நிலையில் , START -II ஐ ரஷ் சியப் பாராளுமன்றத்தின் கீழ் சபையான டுமா (Duma) நிராகரித்தது* இது அமெரிக்க மேலாதிக்க நலனுக்கு பெரும் நெருக்கடியாக
73 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 49
அமைந்தது START-I இல் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனின் அணுவாயுதங்களையும் அவை சார்ந்த ஏவுகணைகளையும் மற்றும் பாரிய ஆயுதங்களையும் அழிப்பதென அல்லது குறைப்பதென முடிவாகியது. அதன் முழு விபரமும் பின்வரும் அட்டவணையில் தரப்படுகிறது.
Countries Arms 1992 START-E START-I
Levels (1999) (2003)
RUSSIA/FSRS 1 CBMS 6115 3153 531
US 1 CBMS 2370 1400 500
RUSSLA/FSRS || SLBMS 2696 1744 1744
US SLBMS 3840 3456 1728
RUSSIA/FSRS Bomber/weapon 1426 1552 752
US Bomber/weapon 3776 3700 1272
TOTAL
RUSSIA/FSRS - 10,287 6449 3027
US --- 9,986 8556 3500
Source: Newsweek June 29, 1992. P.26
அமெரிக்காவின் திட்டமிட்ட ஆயுதக் குறைப்பு ரஷ்சியாவின் எதிர்கால இராணுவ பலத்தை முற்றாகவே அழித்துவிடுமென்ற அபாயம் ரஷ்சியர்களிடம் எழுந்தபோதே START நிராகரிக்கப்பட்டது. இது அமெரிக் கவின் இராணுவ உள்நோக்கத்துக்கு பெரும் அடியாக வீழ்ந்தது.
கே.ரி.கணேசலிங்கம் 74

இவ்வாறு உலகளாவிய ரீதியில் அமெரிக்கா ஆயுத உற்பத்தியை தடுப்பதற்கும் உற்பத்தி செய்யப்பட்ட பாரிய ஆயுதங்களை அழிப்பதற்கும் போட்ட பல திட்டங்கள் தோல்வியில் முடிந்தன. இத்தோல்வியை சமன்செய்யவும், அணுவாயுத பலத்துக்கு மாற்றீடான அதிகார பலமாகவுமே NMD ஐ அமெரிக்கா சிபார்சுசெய்தது. இது 1998 டிசம்பரில் அமெரிக்க செனற்றும், பிரதிநிதிகள் சபையும் CTBTNPTஎன்பவற்றால் ஆகப் போவது எதுவுமில்லையென்ற முடிவுக்கு வந்ததுடன் NMD ஐ முதன்மைப்படுத்த ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்த" காலப்பகுதியிலேயே அணுவாயுதத்துக்கு பதிலான மாற்றுத் திட்டம் உலகப் பரிமாணமாகக் கருக்கொள்ளத் தொடங்கியது கிளின்டன் நிர்வாகம் NMD திட்டத்திற்கு 50 கோடி அமெடொ ஒதுக்கியதென கூறினாலும் அது திரிபுபடுத்தப்பட்ட கணக்குவளக்காகவே அமைந்துள்ளது. ஆனால் வில்லியம்புஷ் நிர்வாகம் 240 மில்லியன் அமெ.டொ. செலவில் இத்திட்டத்தை அமுல்படுத்தி வருகிறது.
தென்னாசிய அரசியல் சமநிலை
NMD திட்டத்தை அமெரிக்க நிர்வாகம் அமுல்படுத்த உலக நாடுகளின் ஆதரவை திரட்ட முயல்கின்ற இச்சந்தர்ப்பத்தில் அதனை பகிரங்கமாக ஆதரித்த ஒருசில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். டென்மார்க், இங்கிலாந்து, நோர்வே மற்றும் தென்கொரியா என்பன ஆதரவளித்த போதும் சலசலப்பை அது ஏற்படுத்தவில்லை. மாறாக அது ஓர் இயல்பான ஆரவளிப்பாகவே அமைந்தது. ஆனால் இந்தியாவின் ஆதரவு தென்னாசியாவையும், உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் அரசியல் பின்புலத்தை பொதுவாகவும், குறிப்பாகவும் நோக்குவோம்.
75 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 50
புதிய சர்வதேச அரசியல் ஒழுங்கில் இந்தியாவின் நட்பை
மிக நிதானமாக அமெரிக்கா பேணியது. ஆரம்பத்தில் ராஜீவ்காந்தி
வகுத்த பாதையில் புகுந்த நரசிம்மராவ் இந்தியாவின் டெங்
வழியாவோ-பிங் என வர்ணிக்குமளவுக்கு சீர்திருத்தங்களை
இந்தியாவுக்குள் அமுல்படுத்தினார். குறிப்பாக இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்துக்கும் நரசிம்மராவே
ஆணிவேராக செயல்பட்டார். அக்காலப்பகுதி முழுவதுமே
அமெரிக் கா இந்தியாவுடனான நட்பில் நிதானமான
கையாளுகையை பின்பற்றியது. இந்தியாவின் அரசியல்
நெருக்கடியின் போதும், மாற்றங்கள் நிகழ்ந்த போதும், இந்திய
ஆளும் வர்க்கத்துடனான உறவை அவதானமாகக் கையாண்டது.
அமெரிக்க-இந்திய உறவு ஒரே நேர்கோட்டில் தொழில்பட்டுக்
கொண்டிருந்த போது வாஜ்பாய் தலைமையிலான பாரதீயஜனதா
அரசாங் கம் (B.J.P) 11,13, May 1998இல் ஐந்து
அணுக்குண்டுகளை பரிசோதித்தது. அதனைத் தொடர்ந்து
பாகிஸ்தானும், 28.30 May 1998லேயே ஆறு அணுக்குண்டுகளை
பரிசோதித்தது.* இவ்விரு தென்னாசிய நாடுகளின் அணுவாயுதப்
பலப்பரீட்சை அமெரிக்க, இந்திய நட்பின் அணுகுமுறையில்
மாற்றத்தை உருவாக்கியது. வாஜ்பாய் அரசாங்கம் அமெரிக்க
உளவு நிறுவனத்துக்கே மறைத் து அணுவெடிப்பு
பரிசோதனையை நிகழ்த்தியமை அமெரிக்க நிர்வாகத்துக்கு
எரிச்சலூட்டுவதாக அமைந்தது. அமெரிக்காவின் நிதானமான
கபடப் போக்கு தீவிரமான கபடப்போக்காக மாறியது. அமெரிக்கா
இந்தியாவை முதன்மையாகக் கொண்டு தென்னாசியாவை புத்தி
சாதுரியமான மீண்டும் அணுகத் தொடங்கியது.
கே.ரி.கணேசலிங்கம் 76

அணுவெடிப்புப் பரிசோதனை அமெரிக்க இந்திய உறவில் விரிசலை ஏற்படுத்தியது. பொருளாதார இராணுவ தொழில்நுட்ப பரிமாற்றங்களில் இந்தியாமீதான அமெரிக்காவின் தடைகள், உறவுகளை கீழ்நிலைக்கு தள்ளியது. இத்தகைய உறவின் விரிசல் இந்தியாவின் பொருளாதாரத்தில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் அமெரிக்காவின் சந்தை சக்தியாக விளங்கிய இந்தியாவினால், அமெரிக்காவே அதிக பாதிப்பை அனுபவிக்கும் நிலையை அடைந்தது. இது மட்டுமன்றி அமெரிக்கா இல்லாத இந்தியாவின் வளர்ச்சி உறுதியாக கட்டுமானத்தை அடைந்துவிடுமென்ற சந்தேகமும் அமெரிக்காவுக்கு அதிகரிக்க படிப்படியாக இந்தியா மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா தளர்த்த ஆரம்பித்தது. மாறாக பொருளாதார தடையை தளர்த்தியது போன்று இராணுவ, தொழில்நுட்பத்தில் இந்தியா மீதான தடைகளை முற்றாக தளர்த்த அமெரிக்கா விரும்பவில்லை. மேலும் பாகிஸ்தானுடன் அமெரிக்கா “Under ground Politics” ஐ பலப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. "பாலுக்கும் காவல் பூனைக்கம் தோழன்’ என்பது போல அமெரிக்கா இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்தை சமநிலைப்படுத்த பாகிஸ்தானை கையாண்டு வருகிறது? இதனை
விளங்கிக் கொள்ள பின்வரும் சம்பங்களை நோக்குவோம்.
'கார்கில் யுத்தத்தில் இந்தியா பாகிஸ்தானை மீண்டுமொருதடவை தோற்கடித்தது. இத்தோல்வி எல்லையில் நிகழ்ந்த யுத்தத்தில் மட்டுமல்ல, நவாப்ஷரீவ்க்கு தனிப்பட்ட ரீதியிலும் ஆபத்தாக முடிந்தது. இது வாஜ்பாய்க்கு கிடைத்த இரட்டை வெற்றியென்றே கூறவேண்டும். யுத்தத்தின் பின்நிகழ்ந்த தேர்தலில் வெற்றியடைந்ததுடன் பிராந்திய ரீதியில்
77 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 51
இந்தியாவுக்கான முதல்தர நிலையையும் நிலைநிறுத்திக் கொண்டார். ஆனால் நவாப்ஷரீவ்ன் தோல்வி பாகிஸ்தானின் முழுமையான தோல்வியாக அமைந்துவிடக் கூடாதென்பதில் அமெரிக்கா அக்கறையெடுத்ததின் நிமித்தமே முஷாராப் ஆட்சியைப் பிடித்தார். ஏனெனில் கார்கில் தோல்விக்கு பின்னான நவாப்ஷரீவ்ன் நிலை இந்தியாவுக்கு கட்டுப்பட்டதே. நவாப்ஷரீவ்ன் தலைமையிலான பாகிஸ்தான், இந்தியாவுக்கு சமனான நிலையினை பிராந்திய ரீதியில் பெறப் போட்டியிட முடியாத பலவீனத்தை கொண்ட அரசாகவே திகழும். இதனை தவிர்க்கவே அமெரிக்கா முஷாரவிவை ஆட்சியில் அமர்த்துவதற்கு மறைகரமாக செயல்பட்டது. இதனால் நவாப் ஷரீவ்வை அமெரிக்கா நிர்க்கதியாக விடவில்லை. மாறாக முஷராவ்க்கு அழுத்தம் கொடுத்து அவரை தனது செல்வாக்கு நாடான சவுதியரேபியாவிற்கு அழைத்து அரசியல் தஞ்சம் அளித்துள்ளது. நவாப்ஷரீவ்வை ஆட்சியிலிருந்து வீழ்த்துவதற்கு அமெரிக்காவுக்கு இன்னோர் தேவையுமிருந்தது. அதாவது நவாப்ஷரீவ்க்கு ஆப்கானிஸ்தான் போராளிப் பிரிவான தலிபான்களுடனும், பில்லேடனுடனும் உள்ள நெருக்கமான தொடர்பும் காரணமாகும் எனவே பாகிஸ்தான் முற்றாக பலவீனமடைவதோ, அல்லது, பாகிஸ்தான் தலிபான்களுடன் நெருக்கமடைவதோ, இப் பிராந்தியத் தில் நீணி டகால அமெரிக் க நலன் ஆபத்துக்குள்ளாகுமென்பதே அமெரிக்காவின் அச்சமாகும். இதனால் இப்பிராந்தியத்தின் இஸ்திரத்தையும், உறுதிப்பாட்டையும் குலைவடையச் செய்வதன் ஊடாக தனது அரசியல் நலன்களை
உறுதிப்படுத்திக் கொள்வதே அமெரிக்காவின் உள்நோக்கமாகும்.
கே.ரி.கணேசலிங்கம் 78

அடுத்து இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுக்கள் வாயிலாக தமது பிரச்சினைக்கு தீர்வுகாண விரும்பி ஜீலையின் 'அக்ரா உச்சிமகாநாட்டை கூட்டியிருந்தன. இம்மாநாட்டுக்கான முன் ஆயத்தங்களை இரண்டு நாடுகளும் மேற்கொண்ட போது அமெரிக்கா இவ்வுறவை வேண்டாததொன்றாக நோக்கியது. ஜெனரல் முஷாரஷ் இந்தியா-பாகிஸ்தானிய பேச்சுக்கு? ரஷ்சியாவை மத்தியஸ்தராக்க விரும்பியமை அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை மேலும் தூண்டுவதாகவே அமைந்திருந்தது. பேச்சுக்களுக்கு தயாராகும் தோரணையில் முஷராவ் அரசியலமைப்புக்கு உட்பட்ட ஜனாதிபதியாக பதவியேற்றதற்க்கு அமெரிக்கா கடும்கண்டனம் வெளியிட்டது. ஜனநாயகத்தை பாகிஸ்தானில் கொலை செய்யும் ஆட்சியாளராக முஷாராவ் காணப்படுகின்றார். ஜனநாயகத்துக்கு புறம்பான எந்த நியமனத்தையும் அமெரிக்கா எதிர்க்குமென வெள்ளைமாளிகை அறிக்கை வெளியிட்டது. ஆனால் முஷராவ் அமெரிக்காவின் எச்சரிக்கைகளை கடந்து இந்தியாவுக்கு வருகைதந்து பேச்சுக்களில் ஈடுபட்டு உடன்படிக்கை எதனையும் எட்டமுடியாது பாகிஸ்தான் திரும்பினார். (16.07.2001) முஷாராவ் - வாஜ்பாய் பேச்சு தோல்வியில் முடிந்ததை 17ஆம் திகதி அதிகாலை உலகம் முழுவதும் தெரிந்து கொண்டது. 'அக்ரா மாநாடு தோல்வியடைந்த அடுத்த 24 மணித்தியாலத்துக்குள் அமெரிக்க வெளிவிவகார பிரதி செயலாளர்களில் ஒருவரான கிறிஸ்ரினா றொக்கா வோசிங்டனில் பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்படுத்தி பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்.
இந்தியா-பாகிஸ்தான் பேச்சுக்களை அமெரிக்கா
உன்னிப்பாக கவனித்து வந்தது பேச்சுக்கள் நல்ல ஆரம்பமாகும்.
79 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 52
இரு தலைவர்களும் அடுத்த சந்திப்பை அமெரிக்காவில் நடத்தலாமெனவும் அதற்கான அழைப்பை அமெரிக்கா விடுத்துள்ளதாகவும்,’ தெரிவித்தார்.
இன்னோர் நிகழ்வையும் அமெரிக்கா 17.07.2001 அன்று நிகழ்த்தியது,
“அமெரிக்காவின் தென்பிராந்திய இராணுவத்தளபதியை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தது.”
மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் பின்வரும் காரணிகளையே
தெளிவுபடுத்துவதாக அமைகின்றது.
9 இந்திய, பாகிஸ்தான் ஆகிய நாடுகளால் எட்டப்படும் தீர்வுகள் அமெரிக்க விருப்புக்கு உட்பட்டதாகவும், கட்டுப்பட்டதாகவும் அமைந்திருத்தல் வேண்டுமென்பது.
9 இந்திய-பாகிஸ்தானுக்கு இடையில் இராணுவரீதியிலான தீர்வை அணுகவைப்பதே அமெரிக்காவின் நீண்டகால நலனுக்கு இலாபகரமானது என்பது, அவ்வாறான இராணுவ அணுகுமுறையும் அமெரிக்காவிற்குக் கட்டுப் பட்டதாகவே அமைய வேணி டுமென எதிர்பார்க்கின்றது.
• இப்பிராந்தியத்தில் சீனா, ரஷ்சியா என்பவற்றின்
செல்வாக்கை பரவவிடாது தடுத்தல், என்பனவாகும்.
இவ்வாறு அமெரிக்கா இந்தியாவையும், தென்னாசியப் பிராந்தியத்தையும் பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டு தனது
கே.ரி.கணேசலிங்கம் 80

மேலாதிக்கத்தை நிறுவமுயலும் போது இந்தியாவின் அரசியல் தலைவர்கள் அதற்கு துணைபோவது போல நடந்து கொள்வதே கேள்விக்குரிய அம்சமாகும். உண்மையில் இந்தியா NMD ஐ ஆதரித்தமைக்குரிய வலுவான காரணத்தின் பின்னணியை நோக்குவோம்.
சுதந்திர இந்தியாவின் கனவுகள் இரண்டு, ஒன்று, தென்னாசியாவில் பிராந்திய வல்லரசாக எழுச்சியடைவது. ஏறக்குறைய சாத்தியமடைந்துவிட்டதென்றே கூறலாம். 1971 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்திய-பாகிஸ்தானிய யுத்தத்தில் இந்தியாவின் நிலை பிராந்திய வல்லரசுக்கான அங்கீகாரமாகவே அமைந்தது. இரண்டாவது, இந்துசமுத்திரப் பிராந்தியத்தை ஆளுதல் என்பதாகும். இதனை அடைவதற்கு எடுத்த மிக அண்மைக்கால நடவடிக்கையில் ஒன்றாகவே GSLV விளங்குகிறது. (படம்-2 இல் அதன் வீச்சு எல்லை காட்டப்படுகிறது) இந்தியாவின் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியில் இராணுவ தொழில்நுட்ப வளர்ச்சியே மிக வேகமாக நிகழ்ந்து வருகிறது. இவ்வளர்ச்சியின் ஊடாக இந்து சமுத்திரத்தை ஆளுவதற்கான ஆரம்ப பலத்தை இந்தியா அடைந்து விட்டதாகவே கருதப்படுகிறது. ஆனால் இராணுவ தொழில்நுட்ப வளர்ச்சியினால் மட்டும் இந்துசமுத்திரத்தை ஆளும் பலத்தை முழுமையாக இந்தியா பெற்றுவிட்டதென்று எண்ணிவிட முடியாது. இன்னும் பலதடைகளை இந்தியா தாண்ட வேண்டிய நிலையிலேயே உள்ளது. அத்தகைய நிலையில் உலக வல்லரசுகளது இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பையும், பொருளாதார வளர்ச்சியையும், சர்வதேச அரசியல் வலுவினையும்
பெறுவதேஅதன் பிரதான நோக்கமாகும்.
81 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 53
1970 களில் சீனா அமெரிக்காவின் நட்பினால் விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியில் இராணுவ வளர்ச்சியை அடைந்தது மட்டுமன்றி பொருளாதாரத்திலும் எழுச்சிமிக்க அரசாக விளங்குகிறது. இந்தியாவுடன் ஒப்பிடும் போது சீனா இராணுவத்திலும், பொருளாதாரத்திலும் பல மடங்கு வளர்ச்சியை அடைந்த நாடாக விளங்குகிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சிக்கு வந்த பின்னர் இராணுவத்தில் ஏற்பட்டுவரும் சடுதியான வளர்ச்சியும, ஏனைய துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும் இந்தியாவையும், சீனாவுக்கு நிகரானதாக உயர்த்தும் முயற்சியாகவே உள்ளது. குறுந்துார, நெடுந்துTர, ஏவுகணைகள், ஆளில்லாத விமானங்களின் உற்பத்திகள், கடற்படை கலன்களது உருவாக்கங்கள், அணுவாயுத தயாரிப்புக் கள் என பாரிய இராணுவ தளபாடங்களை சுயமாக உற்பத்தி செய்யுமளவுக்கு இந்தியாவின் விருத்தி காணப்படுகிறது. மேலும் மிக நீண்டகாலத்துக்கு பின்பு இஸ்ரேலுடனான இராணுவ உறவை இந்தியா வளர்த்து வருகிறது. ஆரம்ப நடவடிக்கையாக இஸ்ரேலின் IA1 நிறுவனத்துடன் இரண்டு பில்லியன் அமெ.டொ ஆயுத உடன்படிக்கையில் இந்தியா ஒப்பமிட்டுள்ளது.* இவ் ஆயுத s L6öTUL93560)85ujoo Radar, Surface to Surface Missiles 6T6öTU60T முக்கியமானவை Radar ஐ அடிப்படையாகக் கொண்டே இஸ்ரேல் Anti-Ballistic Missile g 6(b55 Gaugbg). 61607(36) gibg5uJIT Radar gg Ju6öTLJ(655. Super Barak Missiles g 660).j66) தயாரித்துவிடும் என பாதுகாப்பு வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
இத்தகவலை வெளியிட்ட Huaretz நிறுவனம்,
கே.ரி.கணேசலிங்கம் 82

இவ் ஆயுத உடன்படிக்கையில் இந்திய மத்திய அரசு நேரடியாக ஈடுபடாது. HAT ஐ பயன்படுத்தியதுடன், இதில் அடங்கும் ஆயுதங்களில் சில அண்மையில் அமெரிக் கா சனாவுக்கு வழங்க தடை வரித7த்த
• 35
ஆயுதக களையும் உள்ளடக் கரியுள்ளதென
குறிப்பிட்டுள்ளது.
இந்தியா மேலும் பிரான்ஸ், ஜேர்மனி, ஆகிய நாடுகளின் இராணுவ தொழில்நுட்பத்தை பெறுவதிலும், தனது மிக நீண்டகால நட்புநாடான ரஷ்சியாவை முற்றாக கைவிடாத போக்கையும் கடைப்பிடித்து வருகிறது. அதாவது இந்தியா தந்திரமான அணுகுமுறையினைக் கையாண்டு வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதார, இராணுவ, தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொள்வதையே நோக்கமாக கொண்டு செயல்படுகின்றது. ஒரு பக்கம் ரஷ்சியாவுட்ன் ஒத்துழைப்பது போலும், மறுபக்கத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டுவருவதனையும் அவதானிக்க முடிகிறது. இதனை மேலும் விளங்கிக் கொள்ள
பின்வரும் சம்பவங்களை நோக்கவோம்.
NMD ஐ ஆதரித்து கருத்து வெளியிட்ட பின்னர் இந்தியாவின் இடைக்கால பாதுகாப்பு அமைச்சராக செயல்பட்ட ஜஸ்வர்த்சிங் அவுஸ்ரேலியாவுக்கு சென்றிருந்த போது
பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில்;
'இந்த7யாவரின் இராணுவ முகாம்களுக்குள் அமெரிக்காவினர் பரிரவேசத்தை நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். இப் பிராந்தியத்தின் பொருளாதாரப்
83 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 54
பாதுகாப்பு, சக்திவளப்பாதுகாப்பு, இராணுவப் பாதுகாப்பு
இப்பிராந்தியத்துக்கு உரியதும் தனித்துவமானதுமாகும்*
என அவுஸ்திரேலியாவின் எல்லை பாதுகாப்பை அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளதை கிண்டலடிப்பது போல் பதில் அமைந்தாலும் இந்தியாவின் நிலைப்பாட்டை அவரது பேட்டி கோடிட்டுக் காட்டியுள்ளது.
இதே போன்றே இந்தியா, ரஷ்சியாவுடன் இணைந்து கூட்டாக தயாரித்த நிலத்திலிருந்து இன்னோர் நிலப்பரப்பிலுள்ள இராணுவ இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகயை வெற்றிகரமாக இக்காலப் பகுதியில் பரிசோதித்தது ” மேலும் ரஷ்சியாவும்-இந்தியாவும் 13 வருடங்களுக்கு முன்னர் செய்து கொண் ட அணுமின் தரிட்டத்தை (கூட்டங் குளம்) நடைமுறைப்படுத்தப் போவதாக இணங்கியுள்ளமை.* என பலவிடயங்களில் இந்தியா ரஷ்சியாவுடனான ஒத்துழைப்பை பேணுகின்றதென்பதை கோடிட்டுக் காட்டுகின்றது. இவ் அணுகுமுறையை பனிப்போர் முடிவடைந்த பின்பு ஆரம்பித்தாலும் அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியான வில்லியம்புஷ் ஆட்சிக்கு வந்த பின்பே தீவிரமடையத் தொடங்கியது. புஷ் பதவியேற்ற குறுகிய காலத்தில் அமெரிக்காவுக்கு அரசமுறைப்பயணத்தை மேற்கொண்ட ஜஸ்வர்த்சிங் (வெளிவிவகார அமைச்சராக) ஐ பாரம்பரிய மரபுகளுக்கு புறம்பாக ஜனாதிபதி புஷ் அவரை வரவேற்றமையிலிருந்து தீவிரத்தன்மை ஆரம்பித்ததெனலாம். அமெரிக்கப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஜஸ்வர்த்சிங் திடீரென ரஷ்சியாவுக்கு பயணமானார். ரஷ்சிய ஜனாதிபதி விளடிமிர்புடினுடன் நடத்திய பேச்சுக்களின் பின்னர்
கே.ரி.கணேசலிங்கம் 84

ரஷ்சியப் பாதுகாப்பு அமைச்சுடன் ஓர் உடன்படிக்கையில் ஒப்பமிட்டார். அவ்வுடன்படிக்கையின்படி யுத்தவிமானங்கள்
பலவற்றை இந்தியா பெற்றுக் கொண்டதாக தெரியவந்தது.”
இவ்வாறு குழப்பகரமான நிலையில் இந்தியா உள்ள தென்பதனைக் காட்டிக் கொண்டு சாதுரியமாகவும், தந்திரமாகவும், தனது பிராந்திய நலனை தக்கவைப்பதுடன் சர்வதேச நலனை அடையும் விதத்தில் செயல்பட்டு வருகிறது. குறுகிய காலத்தில் சீனாவின் வளர்ச்சியை எட்டுவதென்பதும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்த அங்கத்துவத்தை அடைவதென்ற வகை யரிலும் இந் தரியாவின் இலக் குகள் முதன் மைப் படுத் தப் பட்டுள்ளன. இத் தந் தரோ பாய அணுகுமுறையினை அமெரிக்கா புரிந்து கொள்ளாமலுமில்லை. எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் அரசுகளின் வரிசையில் இந்தியாவுமொன்றாக மாறலாம். அமெரிக் காவுக்கு மீண்டுமொரு சீனாவாக இந்தியா உருவெடுக்கலாம். இதனை விளங்கிக் கொண்ட புஷ்நிர்வாகம் இலங்கை இனவிவகாரத் தரில் தனது செல் வாக்கை தக்கவைப்பதில் அக்கறை செலுத்துகிறது. புஷ் தனது ஆட்சியில் இலங்கைவிவகாரத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக இலங்கை இன விவகாரத்திற்கான தீர்வில் இந்தியாவின் தொடர்பு துண்டிக்கப்பட்டது, நோர்வேயின் சமாதான முயற்சியில் கிளின்டன் காலத்திலிருந்த இந்தியாவின் பங்கு புஷ்ன் காலத்தில் இல்லாமல் போனது, சொல்ஹொம் இனவிவகாரத்துக்கான தீர்வின் ஆலோசனைக்கும், விளக்கத்துக்குமாக இந்தியா சொல்வதை தவிர்த்து அமெரிக்காவுக்கு சென்றுவந்தமை, வன்னிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களை
85 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 55
அமெரிக்கா கண்டித்தமை, பின்னர் பேச்சுக்கள் குழம்பியதுடன் நோர்வே பேச்சுக்களிலிருந்து சொல்ஹெம்மை விலக்கியமை, இந்தியா மீண்டும் பேச்சுக்கு இருதரப்பினரையும் போகுமாறு வற்புறுத்திவருவது எனப் பலவிடயங்கள் அமெரிக்கா-இந்திய இழுபறியால் நிகழ்ந்த மாற்றங்களாகவே உள்ளன. நோர்வேயின் முதல் க் கட்ட சமாதான முயற்சி தடைப்பட்டமைதற்கு அமெரிக்காவும்-இந்தியாவுமே நேரடியான பொறுப்பாளிகள். அமெரிக்க நலன்களை சமாதானம், அமைதி, என்பனவற்றின் பெயரால் நடைமுறைப்படுத்தும் நாடுகளில் நோர்வேயும் ஒன்றாகும். இதற்கு நிதர்சனமான ஆதாரம் இஸ்ரேலிய-பாலஸ்தீன பிரச்சினைக்கான "ஒஸ்லோ உடன்படிக்கை ஆகும். ஆனால் அமெரிக்காவும் சரி, இந்தியாவும் சரி இரண்டுமே தமது நலன்களை முதன்மைப்படுத்தியே தீர்வுகளையும், சமாதான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா-அருகிலுள்ள ஆபத்து மிக்க நண்பன், அமெரிக்கா சற்று தொலைவிலுள்ள ஆபத்து மிக்க நண்பன், ஒன்று பிராந்திய நலனை கருத்தில் கொள்கிறது. மற்றயது சர்வதேச நலனை கருத்தில், கொள்கிறது. ஆனால் இரண்டில் ஏதாவது ஒரு நாட்டின் ஒத்துழைப்புமின்றி எந்த தீர்வையும் எட்டுவது கடினம். இதனை மிக சுருக்கமாக
நோக்குவோம்.
மாறிவரும் புதிய உலக ஒழுங்கின் கீழ் தேசிய இனங்களின் சுயநிர்ணயக் கோரிக்கைகளுக்கு கிடைக்கும் வலுவான ஒத்துழைப்புக்கள் அருகி வருகின்றன. விடுதலைப் போராட்ட அமைப்புகளையும் பயங்கரவாத அமைப்புக் களையும்
இனங்காண்பதில் தெளிவான அடிப்படை இல்லாதுள்ளது.
கே.ரி.கணேசலிங்கம் 86

விடுதலைப் போராட்ட அமைப்புக் களின் நடத்தைகள் அனைத்துக்கும் பயங்கரவாத முலாம் பூசப்படுகிறது. இது உலகிலுள்ள பெரும்பான்மை இனங்களாலும், அவற்றின் அரசுகளாலும் நியாயப்படுத்தப்படும் ஒரு காரணியாக வளர்ந்து வருகறது. இதனை நிராகரிக் கும் மிகக் குறுகலிய எண்ணிக்கையுடைய அரசுகள் கூட பலவீனமான அரசுகளாகவே
விளங்குகின்றன.
உலகில் எந்த ஒரு தேசிய இனத்தினதும் தேசிய விடுதலைப் போராட்டம் அத்தேசிய இனத்தினால் மட்டும் தீர்மானிக்கப்படும் விடயமாக நோக்க முடியாது. மாறாக அத் தேசிய இனத்தின் எல்லைக்கும், விருப்புக்கும், அப்பால் இருந்து வற்புறுத்தும் பல சக்திகளின் விருப்புக்களையும், நலன்களையும் தேசிய விடுதலை திருப்திப்படுத்துவதாகவே தற்காலத்தில் தேசிய விடுதலை போராட்ட்ங்கள் அமைகின்றன. பனிப்போர்க் காலத்தில் இரு முகாங்கள் காணப்பட்டதனால் எல்லாத் தேசிய இனங்களின் சுயநிர்ணயக் கோரிக்கையில் இழுபறி நிலை சாதாரணமான சூழலை ஏற்படுத்தியிருந்தது. அது கூட பெரியளவில் சாதகமாக நிகழ்ந்ததாக கணக்குப் போட்டு விட முடியாது. ஆனால் முகாம் அரசியல் போட்டியில் சுயநிர்ணயக் கோரிக்கைகள் வளர்ச்சி யடைந்ததுடன் நெகிழ்ச்சித் தன்மையைப் பெற்றிருந்தன. இது புதிய சர்வதேச அரசியல் ஒழுங்கில் இல்லாது போனதுடன் உலகம் முழுவதும் தனது தனிமுகாம் அரசியலுக்குள் உட்பட வேண்டுமென அமெரிக்கா விரும்புகிற்து. சோவியத்யூனியனின் வீழ்ச்சிக்கு பின் அமெரிக்காவுக்கு சவாலாக வேறு எந்த அரசும் அண்மைக்காலத்தில் பெரியளவில் எழுச்சி அடையவில்லை.
அதனால் உலக தேசிய இனங்களின் சுயநிர்ணய கோரிக்கையை
87 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 56
ஆதரிப்பதோ, நிராகரிப்பதோ, அமெரிக்காவின் நலனிலேயே அதிகம் தங்கியுள்ளது. ஆனால் இந்நிலை இலங்கை தமிழர் பிரச்சினையில் மாறுபாடான தொன்றாக உள்ளது. இந்தியா அமெரிக்காவின் நலனைவிட தனது நலனை இப் பிராந்தியத்தில் பேண முயலுகின்றது. வில்லியம்புஷ்ன் ஆட்சியில் அமெரிக்கா இந் தரியாவை குழப் பத்துக் குள் ளாக் க இலங்கை இனப்பிரச்சினையை கையாள விரும்புகிறது. உத்தியோகப் பற்றற்ற ஆனால் அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள் வெளிவருகின்றன.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரையோரப் பிரதேசங்களில் அமெரிக்காவின் கவனம் அதிகரித்துவருவதாகவும், இலங்கை அரசுடன் அமெரிக்கா மேற்கொண்ட உடன்பாட்டின் கீழ் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
இத் தகவல்களை உறுதிப்படுத்துவதற்கு கடினமாக சூழல்
காணப்பட்டாலும் அதனை நியாயப்படுத்த பல காரணங்கள் உண்டு. அதாவது இந்தியா தனது அணுமின் நிலைகளையும், செயற்கை கோள் ஏவுதளங்களையும், விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுமையங்களையும் தென் இந்திய மானிலங்களை அண்டிய பகுதிகளில் குவித்துள்ளது. மேலும் வாஜ்பாயின் சேது சமுத்திரத் திட்டம் தென்னாசியாவை குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கு உள்ளாக்கும் அத்திட்டத்தால் இந்தியாவின் இராணுவ, பொருளாதார, வர்த்தகப் பரிமாணம் விரித்தியடைய வாய்ப்பு அதிகமுண்டு. சேது சமுத்திரத்திட்டம் கொழும்புக்கு பதிலாக யாழ்ப்பாணத்தின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் இவையே தமிழர்களை மீள குடியேற்றுவதற்கு தடையாக உள்ள அம்சமாகுமென விமர்சிக்கப்படுகிறது. எனவே இவை
கே.ரி.கணேசலிங்கம் 88

யாவற்றையும் சரிவர மதிப்பீடு செய்வதன் மூலமே இலங்கை தமிழரின் பிரச்சினைக்கான தீர்வினையும் அதன் வடிவத்தையும் பற்றி சரியான முடிவுக்கு வரலாம்.
இப் பகுதி சாதாரண வாசகன் ஒருவனுக்கு குழப்பமானதாக அமையலாம். ஏனெனில் ஒரு பக்கம் அமெரிக்கா-இந்தியா கூட்டுப் பற்றி கூறும் போது மறுபக்கம் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட முடிவதனை ஆய்வு காட்டுகிறது. உண்மையில் சர்வதேச அரசியலில் இதுவரை நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர பகைவனுமில்லை. நிரந்தர நலன் மட்டுமே கொள்கை என்ற கருத்து பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நிரந்தர நலன் கூட அமெரிக்கா தவிர்ந்த அரசுகளிடமும் முடிவுக்கு வந்து விட்டதாகவே கருதவேண்டி உள்ளது. பனிப்போர் முடிந்த பின்பு அமெரிக்காவே நிரந்தர நலனைக் கொண்டு செயல்படுகிறது. ஏனைய அரசுகளிடம் நிரந்தர நலன் பகுதியாகவன்றி ஒரு போதும் முழுமையாக காணமுடியாது. காரணம் அமெரிக்க மேலாண்மையின் பிரதிபலிப்பாகக் கருதி நிரந்தர நலனை கொள்கையாக கொள்ளும் அரசுகளுக்கு எதிராக அமெரிக்கா தனது இராணுவ, அரசியல். பொருளாதார, கொள்கைகளை புகுத்தி அதனை தோற்கடிப்பது இயல்பான அம்சமாக மாறிவருகிறது.
எனவே புதிய உலக ஒழுங்கு மீண்டுமொரு தடவை மறுசீரமைக்கப்பட வேண்டிய சூழல் கருக்கொண்டுள்ளது. அதனை உணர்ந்து கொண்ட பல ஆய்வுகள் கூட்டாகவும் தனித்தும் மறுசீரமைக்கப்பட்ட புதிய உலக ஒழுங்கை கோடிட்டுக் காட்ட
முயலுகின்றன.
89 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 57
அடிக்குறிப்புகள்
9.
10.
11.
12.
3.
14.
5.
16.
17.
18.
C.N.N., -26-01-2001.
C.N.N, -11-07-2001.
நந்தலாலா-மார்ச் 05- மே 05,2001. Vice of America, 19-07-2001. News week, May, 07, 2001, P, 04. Antony.J. Blinken, The False Crisis Over the Atlantic, Foreign Affairs, May/June 2001, P41.
Ibid., PP41-42.
Ibid., P,36.
Ibid., P., 43.
Ibid.,
Daily News, July 19,2001.
Antony.J. Blinken, OP Cit,P45.
DailyNews, June, 13.2001.
Reuters, 26.06.2001. Bob Cafley, The Bush Administration and Chaning Geopolitics, Contemporary South East Asia, Vol.23, Number,01 April 2001 P157.
Daily News, July 19,2001.
Reuters, 16.07.2001.
Michael kerpon, Lost in Space, The Misguided Drive Toward AntiSatellite Weapons, Foreign Affairs, May/June 2001, P,06. இக் கட்டுரை ஆய்வாளனால் முன்வைக்கப்பட்ட
எதிர்வுகூறல்கள் 2001 July மாதத்திலேயே ஆரம்பித்து
கேரிகணேசலிங்கம் 90

19.
20.
2.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
விட்டது. அவர் ரஷ்சியா-சீனா ஆகியவற்றின் கூட்டு அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளை கொண்டுள்ளதென கோடிட்டு காட்டுகின்றார்.
Ibid., Manpreet sethi, Us National Missile Defence, A Case of misplaced Logic, Strategic Analysis, March 2000, P,2168. A.K. Sachdev, Chinese missiles winning the Limited War, strategic Analysis, June 2000, P,531
Ibid.,
Ibid.,
Ibid., PP, 531-532.
William Walker, Nuclear order and disorder, International Affairs, No,76.4/2000,p,718. SIPRI Year book 1999, Oxford University Press, P, 537 இந்நூலில் நீண்ட வரலாற்றை தொகுப்பாக கொண்டிருக்காத போதும் உலகளாவிய இராணுவதளபாட உற்பத்தியையும் உற்பத்தி மீதான கட்டுப்பாடுகளையும் தெளிவாக எடுத்துக் காட்டுவதுடன் அமெரிக் காவின் மேலாதிக்கத்தை விலாவாரியாக விளக்குகிறது. அமெரிக்காவின் அதிகாரப் போட்டிக்கு எதிரி நாடுகளை பலியிடுவதனையும், அவற்றின் மீது திணிக்கும் அடாவடித்தனத்தையும் ஆதாரத்துடன் எடுத்துக் காட்டுகிறது சமகால இராணுவ அரசியலை பார்ப்பதற்கு சிறந்த நூல்
William Walker, P,713.
SIPRI Year book, 1999, P520.
William Walker, P.719.
Voice of America, 11-06-2001
91 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 58
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
Reuters, 17.07.2001. Daily News, 19.July 2001. Reuters, 17.07.2001. Daily News, 19 July 2001. Ibid.,
Daily News, 24 June.2001.
Reuters, 11.06.2001.
Reuters, 25.07.2001.
Reuters, 05.06.2001.
கே.ரி.கணேசலிங்கம் 92

-히디지정 회전적g - gaean, çorapae fez sous nowo wewewe - noe so oooooo &."''* sørgentiae aegae swae orogo posy ugi w owomoyo wƆ, wo ****** oo ngo oś wrogonosso «teories nosoɛtso of soos ou so ooo'', "o too.
炎醫&żž 舞蹟, ,
1.
LJLLD
93 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 59
縱
ONESIA
ND
94
IF ČSD
L ILLD 2 -
கே.ரி.கணேசலி
 

4
உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்க அரசுகளின் போக்கு
உலகளாவிய பொருளாதாரத்தின் போக்கில் கடந்த ஒரு தசாப்தத்தில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இம்மாற்றத்தின் ஆரம்ப கட்டத்தில் அகப்பட்ட சோவியத்யூனியன் தனது அரசியல், இராணுவ இருப்பை இழந்தது. அதாவது உடல் உழைப்புக்கும், இயந்திர உழைப்புக்கும் இடையிலான போட்டி இறுதியில் இயந்திர உழைப்பை வலுவுடைய பொருளாதார குறிகாட்டியாக மாற்றியது. இவ் இயந்திரவியல் பொருளாதாரம் மூலதன திரட்சியுடைய அரசுகளால் ‘உலக கிராமம்’ ‘உலகமயவாக்கம் தகவல் பொருளாதாரம்’ போன்ற கருத்துவாக்கங்கள் விருத்தி செய்யப்பட்டு வருகின்றன. தனியார் முதலாளித் துவப் பொருளாதாரத் தரிற் கும் , தகவல் தொழில்நுட்பத்துக் குமிடையில் இறுக்கமான பிணைப்பு உற்பத்தியிலும், விநியோகத்திலும், புதிய வடிவங்களுக்கு இடங்கொடுத்துள்ளது.
பொதுவாக இன்றைய உலகப் பொருளாதாரத்தில்
பின்வரும் இரண்டு மாதிரிகளை இனங்காணலாம்.
பண்டம் சார் உற்பத்தி 爵
(Material Production)
I பண்டம் சாரா உற்பத்தி
(Non- Material Production)
95 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 60
பண்டம்சார் உற்பத்தி நுகர்பொருள் தொழில் உற்பத்தியை
உள்ளடக்கியதாக அமைகிறது.
பண்டம் சாரா உற்பத்தி உயர் தொழில்நுட்பம், உற்பத்தி வடிவமைப்பு, ஆய்வு வணிகம், நிதியியல், மற்றும் தகவல் தொழில்நுட்பப் பரிமாணங்களை கொண்டதாக விவரணப்
படுத்தப்படுகிறது.
இன்றைய பொருளாதாரத்தில் பண்டம்சார் உற்பத்தி பின் தள்ளப்பட்ட இரண்டாவது பட்சமான பொருளாதார காரணியாக மாறியுள்ளது. பண்டம் சாரா உற்பத்திப் பொருளாதாரம் முதன்மையான அம்சமாகவும் அதிக வருமானத்தை குவிக்கும் பொருளாதாரமாகவும் மாறியுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், கனடா, மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பண்டம் சாரா உற்பத்திப் பொருளாதாரம் பெரியளவில் எழுச்சியடைந்து வருகிறது. இப் பொருளாதாரத்தில் இந்தியாவும் தனது உற்பத்திப்பங்கை வேகமாக இணைத்துக் கொள்ள முயன்றுவருகிறது. ஆனால் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளது பொருளாதாரத்திலும் பண்டம் சார் உற்பத்தியும், பண்டம் சாரா உற்பத்தியும் இணையான சமநிலை பேணுவதனை காணமுடிகிறது. இதனாலேயே பொருளாதார தளம்பல் நெருக்கடியை இரு நாடுகளும் சகித்துக் கொள்ளும் வலுவை கொண்டிருக்கின்றன
போல்.
பண்டம் சாரா உற்பத்திப் பொருளாதாரம் அதிக இலாபம் தருவது மட்டுமன்றி தகவல் இணையத்தின் ஊடாக புதிய உலக ஒழுங்கை உருவாக்கி வருகின்றன. இதனையே புதிய
கே.ரி.கணேசலிங்கம் 96

பொருளாதாரம்’ என அழைக்கின்றனர். அது 'தகவல் பொருளாதாரம்' 'எடையில்லாப் பொருளாதாரம்’ ‘புலனாய்வுப் பொருளாதாரம்’ ‘அருவப் பொருளாதாரம்' என வேறு வேறுபட்ட சொற்பதங்களால் அழைக்கப்படுகின்றது. பொதுவாக இன்றைய பொருளாதாரத்தின் வலுவை தீர்மானிப்பதில் சந்தை முதன்மையான காரணியாகவுள்ளது. முதலீடுகளையும், வர்த்தக வாய்ப்புக்களையும் தீர்மானிப்பதில் பண்டச்சந்தை தனித்துவம் பெறுகிறது. அச் சந்தை வாய்ப்பு நுகர்வோரது அளவீட்டினாலும், நுகர்வு சக்தியினாலுமே மட்டுப்படுத்தப்படுகிறது. இதில் மேற்கு நாட்டவர் (அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் உட்பட) முதலீட்டாளராகவும் , வர்த்தகர்களாகவும், விளங்க கீழைத் தேசத் தவர்கள் அத கம் நுகர்வோராகவே காணப்படுகின்றனர். இந் நுகர்வு சந்தை சக்திகளாக சீனா, இந்தியா, ஆகிய அரசுகள் மட்டத்தில் முதன்மை வகிக்கின்றன. இவற்றுடன் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், மத்திய ஆசியக் மற்றும் மேற்கு ஆசியா பிராந்தியமும் அடிப்படையில் முன்னணி
நுகர்வுச் சக்திகளாக விளங்குகின்றன.
உலகளாவிய பொருளாதார போட்டியில் அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஜேர்மனி, பிரான்ஸ், என்பன முனைப்பாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியா மெதுவாகவே நகரும் பொருளாதார சக்தியாக விளங்குவதுடன் மிகவும் பின்தங்கிய நிலையிலே காணப்படுகிறது. ஜேர்மனி, பிரான்ஸ் என்பன கூட்டாக மேற்கு ஐரோப்பிய நாடுகளால் உருவாக்கப்பட்ட யுரோ நாணயச் சுழற்சியால் யுரோலாந்து என்ற பொதுமையான அல்லது ஓர் அரசு’ என்ற நிலையில் உலகப் பொருளாதாரத்தில் போட்டியிடுகின்றன. எனவே பொதுவாக பொருளாதாரப்
97 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 61
போட்டியானது அமெரிக்கா, சீனா, யுரோலாந்துக்கிடையிலேயே தற்போது தீவிரத் தன்மை அடைந்துவருகின்றன. ஜப்பான் அமெரிக்காவுக்கு எதிராக வெளிப்படையாக பொருளாதாரத்தில் போட்டியிடாது விட்டாலும் ஜப்பானியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கப் போராடிவருகிறது. ஆனால் சீனாவுக்கு எதிராக ஜப்பானின் பொருளாதார போட்டி சுமாரக நிகழ்ந்துவருகிறது. எனவே அமெரிக்கா, சீனா, யுரோலாந்து என்ற அரசுகளுக்கிடையே மும்முனைப் போட்டி உலகப் பொருளாதாரத்தில் நிலவுகிறது என்பது அரசியல் ரீதியான அணுகுமுறையாளர்களின் கருத்தாக அமைந்துள்ளது. இம் மூன்று சக்திகளுக்கும் அரசியல் ரீதியான போட்டியொன்றும் நிலவுகிறது. எனவே இம்மூன்று சக்திகளின் பொருளாதார நிலையை முதன்மைப்படுத்தி இப்பகுதியை நோக்குவோம்.
அமெரிக்கப் பொருளாதாரம்
பனிப்போர் முடிந்த காலத்தில் அமெரிக்கப் பொருளாதாரம் பிரகாசமானதாக திகழ்ந்தது. ஏனெனில் அமெரிக்க வர்த்தகத்திற்கும் நேரடி முதலீட்டக்குமான வாய்ப்புக்கள் பல பிராந்தியங்களிலும், அரசுகளிலும் ஏற்பட்டிருந்ததே காரணமாகும்* குறிப்பாக.
9 வட அமெரிக்க நாடுகளுடனான NAFTA
உடன்படிக்கை.
9 ஐரோப்பிய நாடுகளின் பொதுச் சந்தை ஊடாக
கிடைத்த வாய்ப்பு.
கே.ரி.கணேசலிங்கம் 98

9 கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார
மறுசீரமைப்பு.
9 பிறேசில், இந்தியா, என்பனவற்றின் தனியார் பொருளாதாரமயப்படுத்தலில் காட்டிய தீவிரப் போக்கு, சீனாவின் தாராளமயப்படுத்தல் அபிவிருத்தி அடைந்துவரும் ஏனைய மூன்றாம் உலக நாடுகள் அமெரிக்க நேரடி முதலீட்டுக்காக திறந்து
விடப்பட்டமை,
என பல மாற்றங்கள் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலாக அமைந்தது. இந் நிலை ஏறக்குறைய பத்து ஆண்டுகள் (1989-1998) நீடித்து நிலைத்திருந்தது. அக் காலப்பகுதியில் அமெரிக்காவின் நேரடி முதலீடுகளையும், வருமானங்களையும் புள்ளிவிபர ரீதியில் நோக்குவோம்;
1990 களில் ஆசியாவில் அமெரிக்காவின் நேரடி முதலீடு 122 billion அமெரிக்கடொலராகும். அமெரிக்கா முழு உலகத்திலும் நேரடி முதலீடாக 802 billion அ.டொ அக்காலப்பகுதியில் முதலீடு செய்தது. முழு உலகத்திலிருந்தும் அமெரிக்காவுக்கு 1998 ஆம் ஆண்டு மட்டும் உற்பத்திப் பண்டங்களால் கிடைத்த வருமானம் 510 அடொ ஆகும். மேலும் 1998 ஆம் ஆண்டு அமெரிக்கா பின்வரும் நாடுகளோடு கொண்டுள்ள ஏற்றுமதியும். கூட்டான வர்த்தகத்தின் அளவினையும் கீழ்வரும் அட்டவணை காட்டுகிறது.
99 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 62
அட்டவணை 4.1
நாடுகள் ஏற்றுமதி கூட்டானவர்த்தகம்
இங்கிலாந்து|39.1 மில்லியன் அடொ 2240 மில்லியன் அடொ ஜேர்மனி 26.7 மில்லியன் அடொ | 163.1 மில்லியன் அடொ 560L 156.6 மில்லியன் அடொ 2095 மில்லியன் அடொ ஜப்பான் 57.8 மில்லியன் அடொ 1772 மில்லியன் அடொ பிறேசில் 15.1மில்லியன் அடொ 52.9 மில்லியன் அடொ
Source: Foreign Affairs: Vol.80.No.3. May/June 2001
1998 ஆம் ஆண்டு அமெரிக்கா பல்தேசியக் கம்பனிகள் ஊடாக உலக நாடுகளுக்கு 623 billionஅ.டொ பெறுமதியான அத்தியாவசிய, நடுத்தர பண்டங்களை ஏற்றுமதி செய்தது. இத்தகைய அளவுக்கு ஏறக்குறைய சமமான ஏற்றுமதியை சீனா, ஜேர்மனி, ஜப்பான், போன்ற நாடுகளின் பல்தேசியக் கம்பனிகள்
மேற்கொண்டுள்ளன."
இவ்வாறு வளமடைந்திருந்த அமெரிக்கப் பொருளாதாரம் 1999 களில் கிடு, கிடு வென வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது. இது 1999 களிலேயே ஆரம்பமாகி தற்போது தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி உலகப் பொருளாதார வீழ்ச்சியாகவே விளங்கும். ஏனெனில் அமெரிக்கப் பொருளாதாரம் சர்வதேசப் பொருளாதாரக் கொள்கையினாலேயே உருவாக்கப்பட்டிருந்தது. 2000 ஆம் ஆண்டில் ஐரோப்பாவுக்கான அமெரிக்க ஏற்றுமதி 22.4 சதவீதமாக குறைந்துள்ளது. இலத்தீன் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 17.8 சதவீதமாகவும் ,
கே.ரி.கணேசலிங்கம் 100

ஆசியாவுக்கான கூட்டானவாத்தகம் 10 சதவீதமாகவும் குறைந்துள்ளது. 1998 களில் பிரித்தானியாவுடனான கூட்டுவர்த்தகம் 224 billion அடொ இருந்த நிலைமாறி 2000 ஆம் ஆண்டில் 39 billion அ.டொ, அதாவது 1/5 பங்காக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ் வீழ்ச்சிக்கான காரணங்களை
நோக்கும் போது
9 ஈரோ நாணயத்தின் வருகையும் அமெரிக்க டொலருக்கு
எதிராக அதன் பரிமாணமும், 9 அமெரிக்க பல்தேசியக் கம்பனிகள் ‘ஈரோ நாணயத்தின் அறிமுகத்தினால் குழம்பியுள்ளதுடன் நெருக்கடிக்கு முகங்கொடுக்க முடியாத நிலையை அடைந்துள்ளன, 9 ஐரோப்பிய-ஜப்பானிய கம் பணிகள் கூட்டாக வெளிநாடுகளில் சந்தைகளை உருவாக்கிவருகின்றமை. 9 ஜேர்மனி " அமெரிக்காவுக்கு நிகராக ஏற்றுமதி வர்த்தகத்துக்கான வாய்ப்புக் களை கிழக்கு ஐரோப்பாவிலும், மத்திய ஆசியக் குடியரசுப் பிரதேசத்திலும் ஏற்படுத்திவருகின்றமை. இவ்வாறான காரணிகள் ஐரோப்பாவுடனான அமெரிக்க
வர்த்தகத்தை கட்டுப்படுத்தியுள்ளன.
குறிப்பாக அமெரிக் காவின் பொருளாதாரம் நெருக்கடியடைவதற்கு பல்தேசியக் கம்பனிகளின் போக்கு பிரதான காரணமென நம்பப்படுகின்றது. ஏனெனில் பல் தேசியக் கம்பனிகள் மூடப்படுகின்றன. பல போட்டிபோடமுடியாத நிலையில் நஷ்டத்தில் இயங்ககின்றன. குறிப்பாக கிழக்காசியாவில் Kodak படச்சுருள் கம்பனி, இந்தியா, சீனா, போன்ற நாடுகளில் Coca
101 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 63
Cola கம்பனி என்பன, சில முதலீடு செய்யும் நாடுகளிலேயே உத்தரவாத வர்த்தகத்தை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவதுடன் போட்டியாக ஜேர்மனி, சீனா போன்ற நாடுகளின் கம்பனிகள் உத்தரவாத வர்த்தகத்தை மேற்கொண்டுவருகின்றன. ஐரோப்பிய நாடுகள் Del Computerக் கான முதலீடுகளை இலத்தீன் அமெரிக்க bTG856solo (BLDiGibsT6irot foots Cisco System, And Micro Soft என்பவற்றுக்கான முதலீடுகளை மேற் கொள்கிறது. இதே நேரம் அமெரிக்காவின் சர்வதேச ரீதியில் இயங்கும் பல் தேசியக் 36lbU6óilab(Gibb, 96).jög36öT (g5(gábab(61bb (City Group, Fedex and yahoo) பின்பற்றும் அயோக்கியத் தனமான (Unfair) வர்த்தக நடவடிக்கையும், நேரடி முதலீடுகளினால் ஏற்படும் விலை உயர்வும் நுகர்வோரால் அமெரிக்க கம்பனிகள் வெறுக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதனையும் காணமுடிகிறது. அமெரிக்க பல்தேசிய கம்பனிகளின் வீழ்ச்சிக்கு காரணம் கூறும் Financial Times (September 1999) “அமெரிக்க பல்தேசிய கம்பனிகளின் தத்துவங்களும் புத்தி ஜீவித்தனமான தந்திரோபாயங்களும் அமெரிக்காவுக்கு வெளியே உருவாகின்றன’ இதனால் வேறுநாடுகளின் பல் தேசியக் கம்பனிகள் அமெரிக்கப் பாணியினைப் பின்பற்ற முயலுகின்றதுடன் அவற்றின் முயற்சிகளை முறியடிக்க வாய்ப்பு ஏனைய நாடுகளுக்கு இலகுவாக கிடைத்துவிடுகின்றன எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
யுரோலாந்தின் பொருளாதரம்
தோற்கடிப்பதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது மிகப் பிந்திய தகவல்கள் பல இதனை உறுதிப்படுத்துகின்றன.
கே.ரி.கணேசலிங்கம் 102

ஐரோப்பிய யூனியன் முதல்முதலாக அமெரிக்காவின் U6)LDT60T gj60öTCB Blbu66l356061T (General Electric and Honeywell) எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியமை சில நிபந்தனைக்கு கட்டுப்படாத போது அவற்றை மூடுவது, அல்லது ஐரோப்பிய யூனியனே அவற்றைக் கொள்வனவு செய்வதென முடிவெடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் உலக வர்த்தக ஒழுங்கமைப்பில் (WTO) கடந்த பத்து வருடங்களாக அமெரிக்கா பின்பற்றிய அணுகுமுறைகளை கண்டித்ததுடன் ஏற்றுமதி கொள்கை யொன்றை புதிதாக உருவாக்கியுள்ளன. உலகளாவிய உணவுப் பாதுபாப்புத் திட்டத்தை அமுல்படுத்தவதென்றும், கழிவு பொருள்களைக் கொண்டு மீள் உருவாக்கப்படும் உணவுப் பொருட்களை நிராகரிப்பதெனவும் (மறுசுழற்சி மூலமான உணவுப் பொருள்) தீர்மானித்துள்ளது. உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் வாயிலாக அமெரிக்காவை கண்காணிப்பதே பிரதான நோக்கமாகும். ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் Kyoto உடன்பாட்டில் ஜப்பானை ஒப்பமிட முயற்சிப்பதுடன் புவர் நிர்வாகத் தற்கு எதிராக நேரடியாகப் போராடிக்கொண்டு புஷ் உலகை வெப்பமயவாக்கும் பிரகிருதி என்றும் அதனால் அமெரிக்காவை பொருளாதார நோக்கில் தனிமைப்படுத்துவதே பொருத்தபாடெனவும் கருதுகின்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்தி, பங்குச்சந்தை, கடன் பிணைப்பத்திரம், சேமித்தல், வங்கி வைப்பு
103 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 64
என்பனவற்றில் அமெரிக்காவைவிட யுரோலாந்து பிரதேசமே உயர்வான பங்களிப்பை வகிக்கின்றது. புள்ளிவிபர ரீதியில் மொத்த உலகப் பண்ட ஏற்றுமதியில் யுரோலாந்து 16 சதவீதத்தையும் (USA13%) வங்கி வைப்பில் 84 சதவீதத்தையும் (USA55%) ஈடு செய்கின்றது."
யுரோ பிரதேசம் உலகின் மிகப் பெரிய பொருளாதாரப் பிரதேசமாகவும், உலகளாவிய பேரண்டப் பொருளாதாரத்தை வடிவமைப்பதின் ஒரு பங்கினை எதிர்காலத்தில் வகிக்கும் லுலுவையுடையது? யுரோலாந்து உற்பத்தியையும் உற்பத்திக்கான வாய்ப்புக்களையும் மட்டும் கொண்டிராமல் பெருமளவான சந்தை வலுவையும் கொண்டிருக்க கூடியதாக அமையவுள்ளது. புவிசார் நிலை யரில் ஐரோப் பியர் ஆசியர்களுடனும் , ஆபிரிக்கர்களுடனுமான தொடர்புகளை இலகுவாக பெற முடியுமென்ற அடிப்படையிலும் சந்தைவாய்ப்பு அமெரிக்காவுடன் ஒப் பரிடும் போது யுரோலாந்துப் பிரதேசத் துக் கு பிரகாசமாகவேயுள்ளது. யுரோ நாணயத்தின் உபயோகம் 2002 யூலை 01 திகதி அதன் கட்டுமானப் பணிகள் பூர்த்தியடைகிறது. இதன் பின்பே அமெரிக்க டொலருடனான போட்டித் தன்மை ஆரம்பமாகும். பொதுவாக யுரோ பெருமாற்றத்தையும், ஐரோப்பாவுக்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்துமென அனேக விமர்சகர்களால் எதிர்வுகூறப்படுகிறது. அவ்வாறு ஐரோப்பாவுக்கு இலாபகரமானதாக கருதப்படும் அம்சங்களை சுருக்கமாக நோக்குவோம்.
கொடுக்கல் வாங்கல்களின்போது பண இழ்ப்பு
தவிர்க்கப்படும்.
கே.ரி.கணேசலிங்கம் 104

> செலாவணி மாற்றல் இல்லாத சூழலில் கட்டணம்
இல்லாது போய்விடும்
> சிறுவர்த்தகர்களுக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
>
விலைத்தளம்பல் நிலை இல்லாமல் போய்விடும்
S.
விலை நிர்ணயம் நுகர்வோருக்கு இலாபகரமானதாக
sel60)LDulb > அரசியல் ரீதியில் தேசிய தன்மையும் ஒருமைப்பாடும்
6)igh)6).j60)Lub. > இப்பிராந்தியம் தனிவல்லரசுகளின் அமைப்புக்கு
8F6)T6)T85 seGOLDub.
ஒட்டு மொத்தமான நோக்கும் போது யுரோலாந்துப் பிரதேசமானது
“The Globel market is not an American market'6T66L605ub “The Globel politics is notan American Politics'
என்பதையே வெளிப்படுத்துவதாக உள்ளது. ஆனால் யுரோலாந்துப் பிரதேசம் தற்போது ஏற்படுத்தியுள்ள நாணயத் தேசியம் மந்த நிலையை எதிர்நோக்கும் போது யுரோலாந்தே மந்தநிலையை அடையக் கூடிய வாய்ப்பு உருவாகலாம். “செலாவணி அசைவுகளில் திடீரென ஏற்படும் மாற்றங்கள் ஒரு சில மணி நேரங்களில் இலாபங்கள் அனைத்தையும் அடித்துச் சென்றுவிட முடியும்” ஏனெனில் எந்தக் காலத்திலும் மூலதன திரட்சி ஒரு போதும் ஒரே அரசிடமோ, அல்லது ஒரே பிராந்தியத்திடமோ இருப்பதில்லை. இங்கிலாந்திடம் குவிந்திருந்த மூலதனம் ஒரு காலத்தில் அமெரிக்காவிடம் கைமாற்றப்பட்டது. இங்கிலாந்தின் பொருளாதார வீழ்ச்சி உலகப் பொருளாதாா வீழ்ச்சியாக கடந்த காலத்தில் முடிந்தது. தற்போது அமெரிக்கப்
105 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 65
பொருளாதார மந்தம் உலகப் பொருளாதார மந்தமாக உருவெடுத்துள்ளது. எனவே யுரோலாந்தின் பொருளாதாரப் போக்கை நீண்ட காலத்தில் அளவிடாது குறுகிய காலத்தில் அளவிடுவோமாயின் அது புதிய பொருளாதார அரசியல் ஒழுங்குக்கு வழிவகுக்கும் சூழலை ஏற்படுத்தும் என்ற முடிவுக்கு வரலாம்.
சீனப் பொருளாதாரம்
அடுத்து அமெரிக்காவுக்கு சவால்விடும் பிராந்திய நாடுகளில் ஒன்றாக விளங்கும் சீனாவின் பொருளாதார நிலையை பரிசீலிப்போம். ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாக இரட்டை இலக்கத்தில் வளர்ச்சியடையும் பொருளாதாரத்தை கொண்ட
நாடு சீனாவாகும்.
கடந்த 20 ஆண்டுகளாக சராசரி 10 சதவீத வருடாந்த பொருளாதார வளர்ச்சியை சீனா கொண்டுள்ளது 1998 ஆண்டு 12 சதவீத வளர்ச்சியை பேணியிருந்தது. வர்த்தகத்தில் ஒவ்வொரு ஆண்டு 15 சதவீதமான வளர்ச்சியை பெற்றுவருகிறது. 1990 ஆண்டு 117 billion அடொ வர்த்தகத்தை மேற்கொண்ட சீனா 2000ம் ஆண்டில் 474 billion அ.டொ பெறுமதியான வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளது." ஏற்கனவே கிழக்காசியா பொருளாதாரத்தில் தலைமைவகிக்கும் சீனா 21ஆம் நூற்றாண்டில் உலகளாவிய பொரளாதாரத்தில் பிரதான நாடாக விளங்கும் நிலையை அடைந்துவருகிறது. இதனை தெளிவாக விளங்கிக் கொள்ள சீன-அமெரிக்க நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவை நோக்குவோம்.
கே.ரி.கணேசலிங்கம் 106

சீனா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதனையும் இறக்குமதி செய்வதனையும் பின்வரும் அட்டவணையில் அவதானிப்போம்.
7
45 -
40 -
ஏற்றுமதி
ஜ் இறக்குமதி
1995 1996 1997 1998 1999
உரு:- 4.1 Source: Asia week April 20.2001
இவ் அட்டவணை ஏற்றுமதியின் அளவைக் காட்டிலும் இறக்குமதியின் அளவு குறைவாகவுள்ளது என்பதனையும் ஏற்றுமதி அதிகரிப்பு வேகத்தைக் காட்டிலும் இறக்குமதி அதிகரிப்பு வேகம் மிக மெதுவானதாகவே செல்கிறது என்பதனையும் காட்டுகிறது.
சீனாவும், அமெரிக்காவும் கூட்டாக நிர்வகிக்கும் சீனக்
கம்பனிகளால் அமெரிக்காவுக்கு கிடைக்கும் வருமானத்தை
107 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 66
பின்வரும் அட்டவணையூடாக அவதானிப்போம். இதனால் சீனாவுக்கும் நூற்றுக்கணக்கான மில்லியன் வருமானம்
கிடைக்கிறது என்பது இன்னோர் தகவலாகும்.
அட்டவைணை- 4.2
மாதம்/ஆண்டு I கம்பனி அமெரிக்காவுக்கு
கிடைக்கும் வருமானம்
10/97 China Mobile 444 Million S 03/00 Asia Info 120Million S 06/00 Petro China Ltd 840 Million S 06/00 China Umcom 157Million S 0/00 Sinopec 513Million S 02/01 Cnooltd 373 Million S
Source: Asia week April 202001
இத்தகவல் ஊடாக சீன- அமெரிக்கப் பொருளாதாரம் பரஸ்பரம் தங்கியிருக்கும் போக்கை விளங்கிக் கொள்ள முடியும். மேலும் தற்போத சீனாவின் 50,000 மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும், மற்றும் உயர்கல்வி நிறுவனங்களிலும் கல்விகற்று வருகின்றனர். இது அமெரிக்காவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களில் 10 சதவீதமாகும். இம் மாணவர்கள் தொகையில் பெரும்பாலானோர் திரும்பவும் சீனாவுக்கு செல்ல விரும்புவதில்லை என்பத்னையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 1989 ஆண்டு சீனாவின் தினமென் சதுக்கத்தில் நடந்த மனித உரிமை மீறலுக்கு பின்பு இப்போக்கு அதிகரிகின்றது எனவும்,
அதனை அமெரிக்கா ஊக்குவிப்பது போன்றும் அமைகிறது
கே.ரி.கணேசலிங்கம் 108

அமெரிக்கப் பொருளாதார மந்தம், WTO வில் சீனாவின் வளர்ச்சி நிலை, என்பனவற்றால் அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் ஆபத்தை அடையுமென நம்பப்படுகிறது. 2000 ஆம் ஆண்டில் சீனா அமெரிக்காவுடன் 120 billion அடொ கான வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும், ஒவ்வொரு ஆண்டும் சாதாரணமாக 10bilion அடொ கான வர்த்தகம் அதிகரித்து செல்வதாகவும் புள்ளி விபரங்கள் மூலம் தெரியவருகிறது. மேலும் சீனா 2000 ஆண்டில் 80bilion அடொ ஐ வர்த்தக மீதியாக பெற்றுள்ளது." இது சீனாவின் கைகளில் மூலதனம் திரட்சியடைவதை காட்டுவதாக அமைகின்றது.
சீனா கிழக்காசிய நாடுகளுடன் மட்டுமன்றி மேற்காசிய நாடுகளோடும் தனது வர்த்தகத்தையும், பொருளாதார உறவுகளையும் விருத்தி செய்து வருகிறது. சீனாவுக்கு மிகப்பெரிய வர்த்தக் கூட்டாளியான ஜப்பான் தென்கிழக்காசிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் காண்படுவது கவனத்திற்குரியது. ஜப்பானுக்கு அடுத்த நிலையிலே அதாவது மூன்றாவது நான்காவது வர்த்தக கூட்டாளியாக அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் விளங்குகின்றன." இதனாலேயே அமெரிக்க பொருளாதார மந்தம் சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி முகத்தை காட்டுகின்றது என பொருளாதார விமர்சகர்கள் கூறுகின்றனர். இரண்டாம் உலக யுத்தத்தின் போது அமெரிக்கா வளர்ந்தது போல் சீனா வளர்ச்சிய அடையலாம் என எதிர்வு கூறுகின்றனர். சீனாவின் இப்போக்கை அவதானித்த அமெரிக்க நலன் விரும்பியான Joseph Nye “அமெரிக்கா சீனாவுடன் கூட்டாக செயல்படுவதே புத்திசாலித்தனமானது எனவும் மீண்டுமொரு பனிப்போர் ஏற்படுவது (சீனாவுடன்) தவிர்க்கப்பட வேண்டுமென்றும்
109 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 67
புஷ் நிர்வாகத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளளார்.’ இவ் ஆலோசனையை புஷ் நிர்வாகம் பின்பற்றுவது போல் தெரிகிறது ஏனெனில் கடந்த ஆண்டு யூலை இறுதிப் பகுதியில் அமெரிக்க அரசுச் செயலாளரான கொலின் பவல் சீனாவுக்கு வருகை தந்திருந்தார். அவரது விஜயம் அமெரிக்க சீன பதட்டத்தை தணிப்பதாகவும் சுமூக உறவை ஏற்படுத்துவதாகவுமே அமைந்திருந்தது. (இது பற்றி முன்னர் ஓர் அத்தியாயத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது) ஆனால் சீனாவைப் பொறுத் தவரையில் அமெரிக் காவுடனான உறவு முறுகலடைந்துள்ளதாகவே அது கருதுகிறது. சீனாவின் உத்தியோகபூர்வ ஏடான "Beijing Review” இன் கருத்து அமெரிக்க-சீனாவுக்கு இடையிலான பனிப்போருக்கான சூழல் ஆரம்பித்து விட்டதாக கருதி அதனை முதன்மைப்படுத்தி வருகிறது. இது கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னோர் அம்சம், சீனா பற்றி சீனப் பத்திரிகைகளும், அதன் தகவல் பரிமாற்ற ஊடகங்களும் வெளியிடும் தகவலுக்கும், அமெரிக்க சார்பு பத்திரிகைகளும், இதழ்களும் வெளியிடும் தகவலுக்கும் வேறுபாடு அதிகமாக உள்ளது என்ற கருத்துமாற்றம் புத்திஜீவிகளால் முன்வைக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க சார்பு தகவல் புரட்சியே உலகில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக் கரிறது. எப் படி சோவியத் யூனியனிடம் வளர்ச்சியடையாத, இல்லாத, பூச்சியமான தகவல்களை நேர்கணியத்தில் உண்டு என்றும், வளர்ந்துள்ளது என்றும், அமெரிக்கருக்கும், உலக முதலாளித்துவத்துக்கும் அமெரிக்க ஆளும்வர்க்கம் அச்சத்தை ஏற்படுத்தியதோ அதே போன்றே சீனா பற்றியும் அமெரிக்கா’ கருத்துக்களை வெளியிடுகிறது போல் தெரிகிறது. ஆனால் சோவியத்யூனியன் போல் அல்லாது
கே.ரி.கணேசலிங்கம் 110

சீனா அமெரிக்கப் பிரசாரத்துக்கு சவாலாக தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. BeijingReview வின் தகவல்படி 1990-2000 வரை அமெரிக்கா சீனாவில் மேற்கொள்ளும் நேரடிமுதலீடு ஆண்டு தோறும் 30 bilion அ.டொ இருந்தது என்றும் 2000 ஆண்டில் அமெரிக்காவுக்கு சீனாவின் ஏற்றுமதி 40 சதவீதமாக காணப்பட்டது என்றும்" குறிப்பிட்டுள்ளது. அதாவது அமெரிக்க சார்புத் தகவல்களுக்கும் சீன சார்புத் தகவல்களுக்குமிடையில் பாரியவேறுபாடு எதனையும்
காணமுடியாது உள்ளது.
பொதுவாக சீனாவின் போக்கு வளர்ச்சி நிலையைக் காட்டுவதாகவே விளங்குகிறது. சீனாவை நோக்கி மேற்குலக ராஜதந்திரி ஒருவர் ‘தீக்கோளிக்கு சமமான நாடு என்றார். வியத்தகு கண்டுபிடிப்பகளையும், மாற்றங்களையும் உலகத்துக்கு தருவித்தவர்கள் சீனர்கள். ஆனால் அதனைக் கொண்டு தங்களை ஆரவாரிப் பானவர்கள் என்று ஒருபோதும் அடையாளப்படுத்தவில்லை. 1949 ஆம் ஆண்டு மாவோ சேதுங்ண் புரட்சிக்கு பின்னர் மிக மெதுவாகவும், நிதானமாகவும், அறிவியல்பூர்வமாகவும் தனது கொள்கை வகுப்பை வகுத்து செல்கின்றனர். மாவோவுக்கு பின்பு டொங்ஷியாவோபிங் செய்த சீர்திருத்தம் சீன வரலாற்றின் திருப்புமுனையாக கொள்ளப்படுகின்றது. அப்போது டொங் உருவாக்கிய பொருளாதார சீர்திருத்தக் கொள்கையிலேயே சீனர்களின் இன்றைய பொருளாதார வளர்ச்சி தங்கியிருக்கிறது.
இத்தகைய சீனாவின் நிலையினையும் உலகளாவிய
பொருளாதார நெருக்கடியினையும், எதிர்கொள்வதற்கு அமெரிக்கா
111 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 68
தற்போது சில புதிய உபாயங்களை வகுத்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்பிரலில் கனடாவின் கியூபெக் மாநிலத்தில் நடந்த மகாநாடு ஒன்றில் “FTAA என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது" இது வட அமெரிக்க, தென் அமெரிக்க, கரீபியன் நாடுகளை உள்ளடக்கிய கட்டற்ற வர்த்தக உடன்படிக்கைக்கான அமைப்பை அமெரிக்கா தலைமையில் ஏற்படுத்தியுள்ளது. இதில் கியூபா தவிர ஏனைய அமெரிக்க கண்டத்து நாடுகளும், கரீபியக் நாடுகளுமாக சேர்ந்து 24 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதே போன்று ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட APEC என்ற ஆசியபசுபிக் பொருளாதார கூட்டு 2020ல் தீவிர பொருளாதார நடவடிக்கையில் ஒன்றிணைப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.* இவ்வாறான அமெரிக்காவின் நடவடிக்கைகள் பற்றியும் உலகமயப்படுத்தலை விமர்சித்தும் லண்டன் “Observer இல் வெளிவந்த ஒரு கட்டுரையில் 'அமெரிக்கா ஐரோப்பிய யூனியனின் கொள்கையை தோற்கடிப்பதற்கும் அதேமாதிரியில் அமெரிக்கப் பிராந்தியத்தை உருவாக்கப் போடப்பட்ட திட்டமான NAFTA எப்படி தோல்வியை எதிர் கொண்டதோ அதே மாதிரி இத் திட்டமிடலும் நெருக்கடிக்குள்ளாகுமென' கருத்துக் கூறியிருந்தது. இக் கருத்தை ஆதாரப்படுத்தும் விதத்தில் FTAA இன் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் பொருளாதார, சமூக வளர்ச்சியிலும் கட்டமைப்பிலும் அரசியல் உறுதிப்பாட்டிலும் பலமானவை எனக் கொள்ள முடியாது. அதாவது யுரோலாந்து போன்ற பிரதேசமாக அதனைக் கொள்ள முடியாது. அவ்வாறான நிலையில் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு நெருக்கடி அடைவதற்கு வாய்ப்பு அதிகமுண்டு இதேபோன்று APEC இன் அங்கம் பெறும் நாடுகளது அரசியல் நலனும், பொருளாதார வலுவும் ஏறக்குன்றய ஐரோப்பிய நாடுகளுக்கோ, அமெரிக்காவுக்கோ நிகரானவையாக
கே.ரி.கணேசலிங்கம் 112

உள்ளன. மேலும் மேற்கு நாடுகளின் இராணுவ, ஆயுதக் கொள்கையை எதிர்க் கும் நாடுகளாகவும் அவை காணப்படுவதனால் வலுவான போட்டித்தன்மை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே அமெரிக் காவின் பொருளாதார நெருக்கடிக்கான சுமூக தீர்வு கரடு முரடானதாகவே உள்ளது. அக் கரடுமுரடான பாதையை கடப்பதற்கு புஷ் நிர்வாகம் ராஜதந்திர அணுகுமுறையையும் இராணுவ நகர்வுகளையும் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. தனது NMD ஐ எதிர்க்கும் ரஷ்சியா, சீனா, என்பவற்றுடனும் அதன் நிர்வாகத்துடனும் சுமுகமான அணுகுமுறையை காட்டிக் கொள்வதற்கான நடவடிக்கையாக கொலின் பவலின் சீன விஜயமும் கொண்டோலிஸா ரய்ஸ் இன் ரஷ்சிய விஜயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஏவுகணைப் பரிசோதனையை வெற்றிகரமாக அமெரிக்க நிர்வாகம் நிறைவேற்றியதன் பின்பு இத்தகைய ராஜதந்திர அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறது. ஆனால் சீனாவோ, ரஷ்சியாவோ அமெரிக்க ராஜதந்திரத்துக்கு மசிவதாக தகவலில்லை. மாறாக நிர்ப்பந்தத்திற்கும் உலகப் போக்கிற்கும் அடிபணியும் நிலையை காணமுடிகிறது. மாறாக வடகொரிய தலைவரை இரு நாடுகளும் அழைத்து உடன்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதுடன், அமெரிக்க நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுவதாகவும் இருநாடுகளது நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.
ஆனால் வளர்ச்சி அடைந்து வரும் சீனப் பொருளாதாரம் பல்முனைப் போட்டிக்கு முகங்கொடுக்க வேண்டியுமுள்ளது என்பதை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும் ஏனெனில் தற்போது உருவாகியுள்ள யுரோலாந்து பொருளாதா பிரதேசத்தையும்,
ஏற்கனவே எதிர்கொண்டு வரும் அமெரிக்கப் போட்டியையும்
113 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 69
தனித்து சமாளிக்க வேண்டியுள்ளது. யுரோலாந்தும், அமெரிக்கப் பொருளாதாரமும் தமது பிரதேசங்களில் முரண்பாட்டைக் கொண்டிருந்தாலும் தமக்கு அப்பாலுள்ள பிராந்தியங்களில் ஒரே விதமான தாக்கத்தையும் விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியன மேலும் சீனாவுக்கு அயலிலுள்ள இந்தியா தற்போது உருவெடுத்துவரும் புதிய தகவல் பொருளாதார அரசாகும். எனவே இந்தியாவின் வேகமான வளர்ச்சியும் சீனாவின் பொருளாதார வேகத்தை கடடுப்படுத்தக் கூடியன. ஆனால் இவற்றை எதிர்கொள்ளும் ப்லம் சீனாவிடம் இல்லை என்று அறிதியிட்டு கூறிவிடமுடியாது.
சீனா போன்று ரஷ்சியப் பொருளாதாரம் வளர்ச்சி அடையாதபோதும் வேகமாக பொருளாதார மீட்சியை அடைய வேண்டுமென ரஷ்சிய தலைவர்களும், மக்களும் கருதுகின்றனர். சோவியத் யூனியன் உடைந்த பின்பு மிக அண்மைய காலப்பகுதியில் பொருளாதார மாற்றத்தை அமுல்படுத்தி வருவதுடன் ஏற்றுமதியிலும் வர்த்தகத்திலும் ரஷ்சியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சாதாரணமாக 2000 ஆம் ஆண்டில் நூற்றுக்கு மூன்று ரஷ்சியர்கள் இணையத்தைப் பயன்படுத்தி வருவதனையும், எட்டு மில்லியன் ரஷ்சியாகள் வெளிநாடுகளில் உற்பத்தியில் ஈடுபடுவதனையும் காணமுடிகிறது. இது 1999 ஆம் ஆண்டு மில்லியனாக மட்டுமே காணப்பட்டதென்பது கவனத்துக்குரியது. 2000 ஆம் ஆண்டின் ரஷ்சியாவின் மிக உயர்வான ஏற்றுமதி 102 bion அடொ ஆகவுள்ளது. இது 1993 இல் 54 bion அடொ மட்டுமே காணப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.*
கே.ரி.கணேசலிங்கம் 114

எனவே வேகமான பாதையில் ரஷ்சியப் பொருளாதார மாற்றம் செல்கிறது உலகமயப்படுத்தலுக்குள் ரஷ்சியப் பொருளாதாரம் நிமிர்வடையுமாயரின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து ரஷ்சியா தப்பிப்பிழைத்துவிடும் என ஐரோப்பிய ராஜதந்திரிகள் எதிர்வு கூறுகின்றனர்.
எனவே உலக ஆதிக்க அரசுகளின் பொருளாதாரப் போக்கு அவ்வாறு அமையும் போதும் அவற்றின் கொள்கைகளுக்குள் அகப்பட்டு நெருக்கடியை சந்தித்துவரும் மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரம் மிக பின்தங்கிய நிலைக்குள் தள்ளப்பட்டு வருகின்றன. மூலதனத்திரட்சி வளர்ச்சியடைந்துவரும் நாடுகளிடமே குவியும் போது நுகர்வை மட்டும் பொருளாதார காரணியாக கருதும் மூன்றாம் உலகம் ஆபத்தான நிலையை ஒவ்வொரு நிமிடமும் எதிர் கொள்கிறது. இந்த நாடுகளின் ஆட்சிபுரியும் உயர்வர்க்கம் தமது நலன்களை பாதுகாப்பதற்காக மூன்றாம் உலக நாடுகளை மீள முடியாத அடிமை நாடுகளாக மாற்றிவருகின்றன.
அடிக்குறிப்புகள்
1. Josph Quinlan and marc chandler, The U.S. Trade Deficit A Dangerous Obsession, Foreign Affairs May/June 2001 Vol, 80,No.3, P88.
Ibid., P92.
Ibid., P89.
Ibid., P90.
Ibid.P88.
115 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 70
6. Ibid.P.95.
7. News week, July 9, 2001, P, 18, seGLDfd, 35.T66, 2779 கம் பணிகள் வெளிநாட்டில் இயங்கும் ஏனைய கம்பனிகளிடமிருந்து 766 bion அடொ ஐ சுரண்டியுள்ளன. General Electric கடந்த வருடம் மட்டும் ஏழு தடைவைகள் 300 billion அ.டொ தனது திட்டத்துக்கான செலவு செய்துள்ளது கடந்த வருடம் Henywell 42 bilion அடொ வருமானமாக சம்பாதித்துள்ளது.
8. பொருளியல் நோக்கு, ஜனவரி/ மார்ச் 2000; யுரோலாந்து பறந்நிய விரிவான விளக்கத்தைப் பெறுவதற்கு மேற்குறிப்பிட்ட பொருளியல் நோக்கினைபார்க்கவும் மிக சிறப்பான தரவுகளை உள்ளடக்கிய அண்மைக்காலத்தில் யுரோலாந்து பற்றி இதளைாக அமைந்துள்ளது.
9. மேற்படி இதழ்,
10. News week, July, 2001 PP, 18-21.
11. பொருளியல் நோக்கு, ஜனவரி/ மார்ச் 2000, பக், 10.
12. AsiaWeek, April, 20.2001.
13. William Gamble, The middlekingdom Runs Dry Tax Evasian in China, Foreign Affairs November/December, 2000, P,06.
14. AsiaWeek, April, 20.2001.
15. Ibid.,
16. Ibid.,
17. Ibid.,
18. AsiaWeek, April, 20.2001, PP,23-32.
19. Beijing Review, No, 28 July 12, 2001.
20. Ibid.,
கை.ரி.கணேசலிங்கம் 16

21. உயிர் நிகழ் மாாச்-ஏப்ரல் 2001, 22. See, Bob Catley The Bus Administration and changing Geopoliticsinthe Asiapacific Region. Contemporary Southeast Asia. Vol, 23, No. 01, April-2001, PP, 150-151. 23. Sunday Observer, June 10, 2001. 24. News week, may 7,2001.
117 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 71
(plq6)6OJ
1989ம் ஆண்டு சோவியத்யூனியன் வீழ்ச்சியடைந்ததுடன் எழுச்சி பெற்ற புதிய உலக ஒழுங்கு மீண்டும் வில்லியம் புஷ் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பரின் னர் மாற்றமடைந்துள்ளது. அதுவரை அமெரிக்க ஆட்சியும் அதன் இராணுவ, பொருளாதார விரிவாக்கக் கொள்கையும் தனித்து அமெரிக் காவின் பொலிஸ் காரத் தனத்தை மட்டுமே விரிவாக்கிவந்தது. இதுவும் ஜோர்ச் புஷ்ன் கொள்கைப் பிரகடனத்திலிருந்து கட்டிவளர்க்கப்பட்ட விடயமாக இருந்ததேயன்றி தனித்துவமான விரிவாக்கம் எதனையும் கூர்மையாக நோக்கவில்லை. இதனால் வில்லியம் கிளின்டனின் ஆட்சிக் காலம் உலகளாவிய அமெரிக்கக் கொள்கையில் மந்தமான வளர்ச்சியையே கொண்டிருந்தது. ஆனால் வில்லியம் புஷ்ன் வருகை அமெரிக்காவின் பொலிஸ்கார சண்டித்தனத்தையும் தாண்டி உலகத்தின் காவல்காரனாகவும், தூதுவனாகவும், மாற்றிக் கொண்ட போக்கும், மனித உரிமை, சமூகநீதி, தனிமனித சுதந்திரம், ஜனநாயகம், சமாதானம், என்ற உருக்களை தாங்கிய அமெரிக்காவாக மாறியுள்ளது. அம் மாற்றம் மேற்கு ஐரோப்பியராலும், இஸ்லாமிய உலகத்தினாலும் நேரடியாக நிராகரிக்கப்பட்டு வருகின்றது. இதனால் யுரோலாந்து, சீனா, ரஷ்சியா போன்ற தேசியப் பலமிக்க அரசுகளும், இஸ்லாமிய உலகமும் மாறியுள்ள புதிய உலகத்தில் புதிய சவால்களாக அமெரிக் காவின் அரசியல் பொருளாதார, இராணுவ
கே.ரி.கணேசலிங்கம் 118

விரிவாக்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. இச் சவால்களை தோற்கடிக்க எடுக்கும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மீண்டுமொரு மாறுதலை உலக ஒழுங்கில் ஏற்படுத்திவருகின்றது. இதனை வெளி கொணரும் முயற்சியாக எழுந்த இந்நூலின் வடிவமைப்புக்கும் வெளியீட்டுக்கும் இடையில் ஏற்பட்ட அல்லது மாறுதலைக்காட்டும் நிகழ்வுகள் வெளித் தெரியவந்த பகுதியை சுருக்கமாக நோக்குவது பொருத்தப்பாடெனக் கருதுகின்றேன். அத்தகைய தோற்றப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் மீதான போர் மாற்றத்துக் கான புதய பரிமாணமாகும் . தனித் து பயங்கரவாதமென்ற சுலோகத்திற்கு எதிரான போர்மட்டுமல்ல. அச்சுலோகத்தின் மறைப்புக்குள் அமெரிக்காவின் உலகளாவிய தேசிய நலன் குவிந்துள்ளது. அத்தகைய தேசியநலனையும்
அதன் பக்க விளைவுகளையும் நோக்குவோம்.
தலிபான் அமைப்பும், அல்கொய்டாவும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அரசியல் மார்க்கமாக கைக்கொள்கின்ற அமைப்புக்கள். இவையிரண்டுமே மிக நீண்டகாலமாக மத்திய ஆசியப்பகுதி எங்கும் வளர்ச்சியடைந்தவை மட்டுமன்றி சோவியத்யூனியனின் சிதைவுக்காக பெரும் போராட்டத்தை நிகழ்த்தியவை. சோவியத்தின் வீழ்ச்சிக்காக அமெரிக்க சார் முதலாளித்துவ உலகத்திற்கு வழங்கிய ஆதரவுக்கு கைமாறாக அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் பாரிய நிதி உதவிகளையும், இராணுவ தளபாட உதவிகளையும் இரு அமைப்புகளுக்கும் அவ்வமைப்புக்கள் சார்ந்திருந்த நாடுகளுக்கும் வழங்கின. அது மட்டுமன்றி அமெரிக்கர்களால் இன்று தேடப்படும் பின் லேடன் 1980 களில் வெள்ளை மாளிகையின்
விருந்தாளியாவார். வெள்ளைமாளிகை அரசியலில் இருந்து
119 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 72
அமெரிக்கர்களின் கொல்லைப்புற அரசியல் அநாகரிகங்கள் வரை நன்கு பரிச்சயமானவர். பின்லேடனது வளர்ச்சிக்கும், தலிபான்களது எழுச்சிக்கும் அடிப்படை சக்தியை வழங்கியது அமெரிக்கர்கள் என்பது அமெரிக்கர்களின் அரசியல் வங்குரோத்த தனத்தையே காட்டுகிறது. ஆனால் இவ்வாறு வளர்ச்சியடைந்த தலிபானும், பின்லேடனும் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் மக்களும் அப்பிரதேசமும் வறுமையினாலும், போர்க் கொடுமையாலும் நாகரிகத்தின் அடிப்படை இருப்புக்களைக் கூட இழந்திருந்தன என்பதே அதன் அரசியல் யதார்த்தமாகும். பொருள் சார் உற்பத்தியின்மை, உற்பத்திக்கு ஏற்ப போதிய நிலமின்மை, வர்த்தகம் நிகழ்த்தும் வலு இன்மை மட்டுமன்றி அதனை நிர்வகிக்கும் பலமான அரசின்மை என்ற இன்மைகளை மட்டும் நிறைவாகக் கொண்ட மக்கள் வாழ்ந்த பிரதேசமே ஆப்கானிஸ்தான். ஆனால் மரபுக்களின் மீதும், அடிப்படை உணர்வுடனான நம்பிக்கைகள் மீதும் ஆப்கானிஸ்தானியர்களின் அரசியல், சமூக, பொருளாதார, இராணுவக் கட்டமைப்பு கட்டிவளர்க்கப்பட்ட தென்ற அரசியல் பாரம்பரியத்தை அம் மக்கள் கொண்டிருந்தனர் என்பது மட்டுமே அவர்களது சமகால அரசியல்-பொருளாதார-இராணுவ வலுவாகவும் மாறாக வலுவற்றதாகவும் அமைந்தது. அவ்வாறான வலுவற்ற, இன்மைகளால் நிறைந்திருந்த மக்கள் மீது உலக வல்லரசுகள் பல அணி வகுத்து பேர்ர் தொடுத்ததென்பதே அதிர்ச்சியளிக்கும் வினாவாகும். உலகத்தில் வேறு எந்த அரசின் மீதும் போர் தொடுக்கவோ, ஆக்கிரமிப்பை மேற்கொள்ளவோ திராணியற்ற ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்ததற்கான
பரிமாணத்தை மிக சுருக்கமாக நோக்குவோம்.
கே.ரி.கணேசலிங்கம் 120

உலகமயப்படுத்தல் என்ற அமெரிக்க மயப்படுத்தல் பொருளாதார பரிமாணத்தை மட்டும் கொண்டதல்ல. அது அரசியல், இராணுவ, கலாசார, பரிமாணங்களில் தேசிய எல்லைகளை தகர்த்துக் கொண்டு இயங்கும் ஒரு செயல்பாட்டு சுரண்டல் தத்துவமாகும். இச் சுரண்டல் முறைமையென்பது பிராந்தியங்களை அல்லது முழு உலகையும் எல்லையாகக் கருதும் முகாமைக்குள் உட்பட்டதான பொதுமைப்படுத்தப்பட்ட கொள்கையை கொண்டிருக்கின்றது. அதனால் அரசுகளின் தேசியம், எல்லை, இறைமை, என்பனவற்றுக்கான அர்த்தங்கள் அடியோடு தகர்ந்து போகின்ற சூழல் ஒன்று எழுச்சியடைந்து வருகின்றது. இத்தகைய எழுச்சியானது மிக நீண்ட காலத்துக்கு முன்பே ஆரம்பமாகி படிப்படியாக விரிவாக்கமடைந்து தற்போது தீவிரத்தன்மையை எட்டியுள்ளது. இவ்வாறான விரிவாக்கக் கொள்கைக்கு தற்போது ஆப்கானிஸ்தானில் எழுச்சியடைந்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாதம் நெருக்கடியான அம்சமாக விளங்கியது. ஏற்கனவே ஈரானில் அயதுல்லா கொமேனியின் தலைமையில் வெடித்த இஸ்லாமியப்புரட்சி அமெரிக்க மேலாதிக்கத்துக்கு பெரும் சவாலாக இன்றுவரை நிலவுகிறது. அதே போன்று ஈராக்ன் எழுச்சியும் அமெரிக்க நலன்களுக்கு தடையாக விளங்கிய போதும் ஈராக்கின் எழுச்சியை முழு இஸ்லாமிய உலகுக்கும் பரவவிடாது தடுத்ததில் அமெரிக்க ஆட்சியாளர்கள் வெற்றியடைந்தனர். சதாம் உஷைன் முற்றாக தோற்கடிக்கப்படாது விட்டாலும் சதாம் உஷைன் மாதிரி எழுச்சியடையும் தலைமைகளை ஜோர்ஜ் புஷ் அப்போதே கத்தரிப்பதில் வெற்றியை கண்டார். (இதனால் ஈராக் மீதான போர் அமெரிக்க மயவாக்கத்துக்கு எதிரான முறியடிப்பு (8LITां
1 என்றும் ஆப்கான் மீதான போர் அமெரிக்க மயவாக்கத்துக்கு
121 மாறிவரும் புதிய உலக ፵dgቘë

Page 73
எதிரான முறியடிப்புப் போர்-II என்றும் அழைக்கலாம்.) இரண்டு நாடுகள் மீதான போரும் வேறுபட்ட அணுகுமுறைகளையும், ஒழுங்குகளையும் கொண்டிருந்தாலும் இலக்குகளில் இரண்டுமே ஒன்று என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இதனால் ஆப்கானிஸ் தானின் தவிர அடிப்படைவாதம் உலக மயப்படுத்தலுக்கும் பெரும்தலைவலியாக ஆப்கானிஸ்தானில் மட்டுமல்ல, முழு இஸ்லாமிய உலகத்திலும், ஏனைய நாடுகளில் விருத்தியடைந்துவரும் தேசியப் போராட்டங்களாலும் பின்பற்றப்பட்டு விடும் அல்லது முன் உதாரணமாக கொள்ளப்பட்டு விடும் என்ற அச்சம் அமெரிக்கர்களிடம் மேலோங்கியிருந்தது. அவ்வாறான முன்மாதிரி பொப் இசை, ஹெலிவூட், மற்றும் நீலநிறப் படங்களையும், திடீர் உணவகங்களையும், ஆங்கில மாதிரியிலான நவீன வாழ்க்கை முறைகளையும் தகர்த்து விடும்
என்ற இன்னோர் அச்சம் அமெரிக்கர்களிடம் காணப்பட்டது.
அடுத்து புவிசார் அரசியல் ரீதியில் ஆப்கானிஸ்தான், மேற்காசியா, கிழக்காசியா, தென்னாசியா, ஆகிய ஆசியாவின் உப பிராந்தியங்களின் மையநிலப்பரப்பில் அமைந்துள்ளது. இப் பிராந்தியங்களில் சீனர்கள் அமெரிக்கர்களின் விரிவாக்கக் கொள்கைக்கு சவால் விடுகின்ற சக்திகளாகவும், பொருளாதார, இராணுவ, அரசியல், வளர்ச்சியில் வலுவானவர்களாகவும் விளங்குவதுடன், பாகிஸ்தான், ஈரான், வடகொரியா, மியான்மார் ஆகிய அரசுகளுக்கு இராணுவ உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வளங்குகின்ற அரசாகவும் விளங்குகிறது. ஆப்கானிஸ்தான் ஊடாக மேற்காசியாவுடன் வர்த்தக தொடர்புகளையும், இராணுவ-ஆயுத பரிமாற்றங்களையும் இலகுவாக கையாளும் நிலையில் சீனர்களும் அதற்கு
கே.ரி.கணேசலிங்கம் 122

சாதகமான நிலையத்தில் ஆப்கானிஸ்தானும் அமைந்துள்ளது. சோவியத் யூனியன் உடைந்த பின் னர் சீனர்களே அமெரிக்கர்களுக்கு ஆபத்து மிக்கவர்கள் என்பதனால் அமெரிக்கர்களின் உலகளாவிய அரசியல் தந்திரோபாயம் சீனாவை குறிவைத்ததாகவே அமைந்துள்ளது. (ஆனால் அமெரிக்கர்கள் சீனர்களை குறிவைக்க இருவரையும் இலக்குவைத்து யுரோலாந்து எழுச்சியடைகிற தென்பதே தற்போதைய அரசியல் பரிமாணமாகும்) எனவே அமெரிக்க மயவாக்கத்தை எதிர்க்கும் சீனர்களும், இஸ்லாமியர்களும் ஒன்றிணைவதை தடுப்பதுடன் இருவரும் பரஸ்பரம் தங்கியிருக்க முடியாத சூழல் ஒன்றை உருவாக்க வேண்டுமாயின் ஆப்கானிஸ்தான் மிக முக்கிய நிலையம். தைவானையும் விட அமெரிக்கர்களுக்கு அதிக இலாபத்தை அளிக்கக் கூடிய மையம் ஆப்கானிஸ்தான் என்பதை அமெரிக்க நிர்வாகம் நன்கு புரிந்து
கொண்டுள்ளது.
அடுத்த ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அடிப்படைவாதம் ரஷ்சியாவை சூழவுள்ள இஸ்லாமிய குடியரசுகள் மீது உடனடியாக பரவலடைந்துவிடும் என்ற இன்னோர் அச்சமாகும். 1979ஆம் ஆண்டு சோவியத்யூனியன் தனது படைகளை ஆப்கானிஸ்தானுக்குள் குவித்தமைக்கான காரணங்களில் ஒன்றாக கூறப்படும் ஈரானியப்புரட்சி ஆப்கானிஸ்தானுாடாக மத்திய ஆசியகுடியரசுகளுக்கும் கடத்தப்பட்டு விடும் என்பதை அமெரிக்கர்களும் உணர்ந்து கொண்டனர். அவ்வாறு ஆப்கானிஸ்தானில் எழுச்சியடைந்துள்ள இஸ்லாமிய அடிப்படைவாதம் மத்திய ஆசியக்குடியரசுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பிய இஸ்லாமிய நாடுகளுக்குள் பரவலடைவது
123 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 74
அமெரிக்கர்களின் புதிய இராணுவ பொருளாதார கொள்கை விரிவாக்கத்துக்கு ஆபத்தானது ஏனெனில் மத்திய ஆசிய, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுமே அமெரிக்கர்களின் புதிய நண்பர்கள். எனவே அவர்களது கொள்கைப் போக்கு அமெரிக்கர்களுக்கு ஆபத்தானதாக அமையக்கூடாதென்பதில் கவனம் செலுத்தியதே அமெரிக்கர்களின் ஆப்கானிஸ்தான் மீதான போர் நடவடிக்கையாகும். இதே ஆபத்து சீனர்களுக்கும், ரஷ்சியாகளுக்கும் உண்டு என்கதனாலேயே ஆப்கான் மீதான போரை இரு நாடுகளும் ராஜதந்திர ரீதியில் அணுகியமைக்கான காரணமாகும்.
இறுதியாக ஆப் கானிஸ் தானின் தரையமைப்பு வரலாற்றுரீதியில் பல அதிகார அரசுகளின் அஸ்தமனத்துக்கு வழிவகுத்தது. அதனால் அப்பிரதேசம் அமெரிக்கர்களின் செல்வாக்குக்குள் இருப்பதை காட்டிலும் அமெரிக்கர்களின் இராணுவ முகாமாக அமைவது இலாபகரமானது. முழு உலகளாவிய இராணுவக் கட்டமைப்புக்குள்ளும் ஆப்கானிஸ்தான் மிக முக்கியம்வாய்ந்த மையம் எனவே அதனை சுவீகரித்துக் கொள்ளுகின்ற அமெரிக்கக் கொள்கை மிக நீண்ட காலத்திற்கு சாதகமானதாகவே அமையும். இஸ்லாமிய உலகத்தை ஒன்றுதிரளாது தடுப்பதுடன் அமெரிக்க மயவாக்கத்திற்கு எதிராக சீனாவின் தலைமையில் வலுவடையும் போக்கையும் கட்டுப்படுத்த உதவும். மேலும் அமெரிக்க விரிவாக்கத்தையும் அப் பிராந்தியம் முழுவதும் இலகுவாக அமுல்படுத்த முடியும். குறிப்பாக முன்னாள் சோவியத்தின் இஸ்லாமியக்குடியரசுகளையும், கிழக்கு ஐரோப்பாவையும் நேரடியாக அமெரிக்க மயவாக்கத்துக்குள் இணைத்துக் கொள்ளலாம். ஏற்கனவே "மையநிலம் 'இருதயநிலம்
கே.ரி.கணேசலிங்கம் 24

'விழிம்புநிலம்’ என இனங்காணப்பட்ட இப் பிரதேசத்தை மையப்படுத்திய அதிகாரப் போட்டி இணைவுமே இராணுவ வலைப்பின்னலாக இணைக்கப்பட்டு வருகிறது. அத்தகைய வலைப்பின்னல் ரஷ்சியாவை மீளவும் கட்டி எழுப்பமுடியாமலும், சீனாவின் பலத்தை சீனாவுக்குள்ளேயே கட்டிப்போடுவதென்ற அமெரிக்க நலனுக்கு சாதகமானதாக அமையும் திட்டமிடலைக் கொண்டது. எனவே ஆப்கானிஸ்தான் மீதான போர் அமெரிக்க அரசியல், இராணுவ விரிவாக்கம் மட்டுமன்றி பொருளாதார விரிவாக்கத்திற்கான நடவடிக்கையுமாக கொள்ளப்படுதல் பொருத்தப்பாடானது. ஏனெனில் வளர்முகநாடுகள் எதிர் நோக்கும் மிகப் பிரதான பிரச்சினை உலக (அமெரிக்க)மயவாக்கம். அத்தகைய உலக (அமெரிக்க) மயவாக்கத்தை அமெரிக்கா தாராள ஜனநாயகமயவாக்கத்தினுடாக சாத்தியப்படுத்த முயலும் போது ஏற்படும் நெருக்கடிகளை இராணுவமயவாக்கத்தினூடாக அமுலாக்க விரும்புகிறது. அதுவே முறியடிப்பு போர் 1, 11 என்பனவற்றில் காணமுடிந்தது.
இத்தகைய உலகளாவிய இராணுவ அரசியல் போக்கில் ஆசியா மிகப்பிரதான கண்டமாகும். இதிலும் முதல்தரப் பிராந்தியங்களாக மேற்காசியா, மத்திய ஆசியா, கிழக்காசியா பிராந்தியங்கள் அமைகின்றன. இதில் தென்னாசியா துணைப்பிராந்தியமாக மட்டுமே விளங்குகிறது. ஏனைய பிராந்தியங்களுடன் ஒப்பிடும்போது ஆசியாவில் தென்னாசியா இராணுவ-அரசியல் போக்கில் துண்ைநிலைப் பிராந்தியமாக அமைந்திருந்தாலும் பொருளாதாரத்தில் முதல் நிலைப் பிராந்தியமாக விளங்குவதனாலும் தென்னாசியா பற்றிய நோக்" பொரளாதாரம் சார்ந்ததாக அமைகிறது. ஏனெனில் வில்லி ம்

Page 75
புஷ தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் பாகிஸ்தான் தலைமையையோ, இந்தியாவின் தலைமையையோ ஒரு போதும் நிராகரிக்காத தந்திரோபாயத்தை பின்பற்றிவருகிறது. இந்திய ஆளும் வர்க்கத்தினர் பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொள்ள முயன்ற போதும் அமெரிக்கர்கள் அதற்கு இடங்கொடுத்ததாக அமையவில்லை. மாறாக பாகிஸ்தானிய தலைமையை பாதுகாக்கவும் முஷராப்பை சிவில் ஆட்சியாளராக மாற்றுவதற்கும் பல நடவடிக்கைகளை மறைமுகமாக எடுத்து வந்தது ஒரு பக்கம் மறுபக்கம் பாகிஸ்தானின் மீது அமெரிக்கர்கள் வெறுப்படைந்திருப்பது போல் காட்டிக்கொள்வதன் மூலம் இந்தியர்களை திருப்திப்படுத்தி பாகிஸ்தான் இராணுவ தலைமையை அமெரிக்கா பாதுகாத்துக் கொண்டு வருகிறது. பாகிஸ்தான் மீதான போர் நடவடிக்கைக்கு இந்தியா இரு தடவை மிகத் தீவிரமான தயார்ப்படுத்தலை பூர்த்திசெய்த போதும் அதனை திடீரென கைவிட வேண்டிய நிலை இந்தியர்களுக்கு ஏற்பட்டதென்பதை கருத்தில் கொள்ளுதல் வேண்டும். ஒரு வகையில் இந்தியா, பாகிஸ்தான் பொறுத்த கொள்கையில் அமெரிக்கர்களுக்கு கட்டுப்பட்டே செயல்படுகிறது. இது முழு தென்னாசியாவிலும் படிப்படிய்ாக ஏற்படுவது போன்றே தெரிகிறது. இந்தியா பிராந்திய வல்லரசு என்ற பலம் கேள்விக்குரியதாக மாறிவருகிறது. இலங்கை விவகாரதில் எழுந்துள்ள புதிய போக்குக்கும் இந்தியாவின் நிலைப்பாடு பலவீனமாகயுள்ளது என்பதற்கும் அமெரிக் காவே அடிப்படையாகும். அமெரிக்கபோர் கப்பல்களான, ஹோப்பர், வைஸ் என்பனவற்றின் இலங்கை துறைமுகத்துக்கான வருகைக்கும் இந்தியர்களின் பிராந்திய பலத்திற்கு ஏற்பட்ட நெருக்கடியாகவே கருதலாம். நெருக்கடிக்கான காரணம்
எதுவென்பதை விளங்கிக்கொள்ள முயற்சிப்போம்.
கே.ரி.கணேசலிங்கம் 126

ஆப்கானிஸ்தான் மீதான போரை அமெரிக்கர்கள் தயார்ப்படுத்தும் போது இந்திய ஆளும் வர்க்கத்தினர் அரசியல் இராஜதந்திரத்தில் தவறான கணிப்பீடுகளையும் முடிபுகளையும் எடக்க ஆரம்பித்து விட்டனர். ஆப்கானிஸ்தான் தலிபான்களுக்கு எதிரான போரை பாகிஸ்தானுக்கு எதிரான போராகவும், முஷராப்புக்கு தனிப்பட்ட ரீதியில் எதிரான போராகவும், திசைதிருப்பமுடியுமென இந்தியர்கள் கருதினர். மேலும் அஸாத் காஷ்மீர் பகுதியை இந்தியாவுக்குரியதாக ஆக்கிவிடலாமெனவும் அதற்காக அமெரிக்கா தமக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமெனவும் நம்பிக்கை கொண்டனர். அதனால் ஆப்கான் போர் இந்தியர்களில் எல்லையில் நிகழாத போதும் தமது எல்லைக்குள் நிகழ்வதுபோல் காட்டிக் கொண்டு அமெரிக்காவுக்கு தமது முழு ஆதரவையும் வழங்கினார்கள். அமெரிக்கர்கள் எந்தக் கோரிக் கையும் விடுக் காதபோதும் தமது விமான நிலையங்களையும், துறைமுகங்களையும், தளங்களையும் அமெரிக்கர் பயன்படுத்தலாம் எனவும் பயன்படுத்த வேண்டுமெனவும் பலதடவை இந்தியர்கள் வேண்டுமெனவும் பலதடவை இந்தியர்கள் கோரினர். ஒரு சந்தர்ப்பத்தில் முஷராப்பை காட்டிக் கொடுப்பதற்காகக அஸாத் காஷ்மீர் பகுதியில் காணப்பட்ட இராணுவ இலக்குகளையும் மையங்களையும் ஆதாரங்களுடன் அமெரிக்கர்களுக்கு கையளித்தனர். எல்லாத்தகவல்களையும் அமெரிக்கர்கள் திரட்டிக் கொண்டார்களே தவிர வேறு எதனையும் அவர்கள் இந்தியர்களுக்காக செய்யவில்லை. சில சந்தர்ப்பங்களில் அமெரிக்கர் வெள்ளை மாளிகையில் நின்று கொண்டு பாகிஸ்தானியரை கண்டித்தார்களே தவிர பாகிஸ்தானிய
மண்ணில் அவர்களை தண்டிக்க எந்த நடவடிக்கையையும்
127 மாறிவரும் புதிய உலக ஒழுங்பூ

Page 76
மேற்கொள்ளவில்லை. இதனை புரிந்து கொண்ட இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜோர்ச் பெர்னாண்டஸ் ஒரு தடவை, வல்லரசுகள் தமது நலனுக்கேற்ற வகையில் பயங்கரவாதம் என்ற கோஷத்தை பயன்படுத்துகின்றனவே தவிர கொள்கையடிப்படையில் அதனை வல்லரசுகள் எதிர்க்கவில்லை, என அமெரிக்காவை சூசகமாக சாடியதுடன், பாகிஸ்தானுக்கு எதிரான போர் நடவடிக்கைக்கும் திட்டமிட்டு தீவிரமாக தயாாப்படுத்தலை செய்தார். ஆனால் அவ்வாறான போர்களை இந்தியர்கள் மேற்கொள்ள முடியாதென அமெரிக்கர்கள் தமது ராஜதந்திரத்தால் நிறுவிக்காட்டினர். அவ்வாறான அமெரிக்கர்களின் நடவடிக்கையை இந்தியர் சரிவரக் கையாண்டுள்ளதாக அனுமானிக்க முடியாதுள்ளது. பொதுவாக அமெரிக்கர்களின் கொள்கைக்கும் போக்குக்கும் கட்டுப்பட்டு செயல்படும் பிராந்தியமாக தென்னாசியா காணப்படுகின்றதென்பதனால் அதன் முக்கியத்துவம் ஏனைய பிராந்தியங்களுடன் ஒப்பிடும் போது குறைந்துள்ளது என கருத வாய்ப்புண்டு. அதாவது இந்திய ஆளும் வர்க் கம் இந் தரியப் பரிரா மணியத் தரின் செல்வாக்குக்குட்பட்டதென்பது மாறி தற்போது அமெரிக்க-இந்திய பிராமணியத்தின் செல்வாக்குள் அகப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதே நிலைபாடுதான் இலங்கை விவகாரத்திலும் இந்தியாவுக்கு ஏற்பட்டது இன்றைய இந்தியத் தலைமையின் ராஜதந்திரம் தோல்வியடைந்துவிட்டதென்பதற்கு ஐ.தே குஜராலின் இலங்கை விஜயம் சிறந்த எடுத்துக்காட்டாகும். மனித உரிமை பற்றிய பணியில் அவர் ஈடுபட்டபோதும் இலங்கை இனப்பிரச்சினைக்கான சமாதான சூழலை அவரால் தவிர்த்து கருத்துக்கூறமுடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. சில சந்தர்ப்பங்களில், குஜரால் இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியாவின் புதிய சகாத்தம்
கே.ரி.கணேசலிங்கம் 128

ஒன்றுக்கு வித்திடுபவராக அமையலாம். இந்திய நலன்களை அமெரிக்க நலன்களுக்காக அடகுவைத்தவர்களும், கட்சி அரசியலுக்காக தமது தேசத்தவரையும் உடன் பிறப்புக்களையும் காட்டிக் கொடுத்தவர்கள் தான் தற்போதைய இந்திய ஆளும் வர்க்கத்தவர் என்ற விமர்சனம் தீவிர இந்தியவாதிகளால்
முன்வைக்கப்படுகின்றது.
ஐ.தே குஜராலின் இலங்கை வருகைக்குப் பின்னர் சமாதானப் புறச்சூழல் படிப்படியாக பாதிப்படைகிறது. இந்தியர்கள் சில வேளைகளில் இறுதிக் கூட்டத்தில் விழித் தெழுந்துவிட்டார்கள் போல் அமைகிறது. அவ்வாறு இந்தியர்களுடன் இலங்கை அரசு இணைந்து கொள்ளவும் சமாதான சூழலை குழப்பவும் முயற்சிக் குமாயின் அமெரிக்கர்களின் விரிவாக்கத்திற்கு தடை போடுவதாக அது அமைந்துவிடும். அத்தகைய தடை நிகழ்வு ஈழக்கோரிக்கைக்கு சாதகமானதாகவோ அல்லது இலங்கை அரசும் தமிழ் மக்களும் மீண்டும் முரண்படுவதற்கோ வாய்ப்புக்கள் அதிகரிக்கும். எனவே போர் தவிர்க்க முடியாத பாதிப்புக்களை அமெரிக்கர்களுக்கு ஏற்படுத்திவிடும். ஆசியாவின் ஏனைய பிராந்தியங்களுடன் அவர்கள் கொண்டுள்ள பொருளாதார இராணுவ விரிவாக்க இலக்குகளை இலங்கையில் நிகழும் போர் முற்றாக குழம்பாது விட்டாலும் பாதிப்பையும், நெருக்கடியையும் ஏற்படுத்திவிடும். அதனால் போர் தணிவது அத்தியாவசியமானதாகும். அதனையும் மீறி யாரும் போரை தொடக்கின்ார்களாயின் அவர்கள் அமெரிக்கர்களின் எச்சரிக்கைக்கு உள்ளாவார்கள் இலங்கையின் போருக்கு இந்தியர்கள் வழிவகுத்தால் இந்தியர்களின் மதச்சுத்திகரிப்பின் பெயரால் பெரும் அனர்த்தங்களுக்கு
129 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 77
முகங்கொடுக்கவேண்டி ஏற்படும் இந்தியர்களின் ஐக்கியத்தினை பாதுகாக்க விரும்பும் அமெரிக்கர்கள் தமது நீண்டகால எதிரிகளான சீனர்கள், ரஷ்சியாகள் சார்ந்த கொள்கை பொறுத்தே அதனை பேணிவருகின்றனர். இவ்விரு நாடுகளினதும் பலம் உறுதிப்படுத்தப்படுகின்ற சூழல் எதிர்காலத்தில் விரிவடையுமாயின் மட்டுமே இந்தியர்கள் ஐக்கியமாக இருக்க முடியும் . அவ்வாறு சீனர்களும் , ரஷ் சியாகளும் பலவீனப்படுவார்களாயின் இந்தியர்கள் அமெரிக்கர்களுக்கு தேவையற்றவர்களாக மட்டுமன்றி அமெரிக்கர்களுக்கே ஆபத்தானவர்களாக மாறிவிடுவார்கள் என்பதனால் இந்தியர்கள் துண்டாடப்படுவார்கள், சோவியத்யூனியனின் பக்கபலமான மத்திய ஆசியக்குடியரசுகளை உடைக்கும் கோரிக்கையை முன்வைத்த அமெரிக்கர்கள் ஏனைய நாடுகளின் சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தையோ, கோரிக்கையையோ கருத்தாகக் கூட உள்வாங்கவில்லை. அப்போது சுதந்திரம், உரிமை பற்றிப் போதித்த அமெரிக்கர்கள் தற்போது அதே சுதந்திரத்தையும், உரிமையையும் கோரும் சக்திகளை பயங்கரவாதமாக கற்பிதம் செய்ய முயலுகின்றனர். அத்தகைய புதிய தளத்துக்கூடாக அமெரிக்க மயவாக்கத்தை அமுலாக்க அமெரிக்கர்கள்
முனைகின்றனர்.
பயங்கரவாதம் என்பது புதிய பரிமாணத்தைப் பெற்ற கருத்தியல்வாதமாக வளர்ச்சியடைந்துவரும் அம்சமாகும். அமெரிக்க நகரங்கள் மீதான செப்ரெம்பர் 11 தாக்குதல்களின் பின்பான உலகை ஒழுங்குபடுத்தும் பலம் வாய்ந்த கோட்பாடாகும். பயங்கரவாதத்தை வரையறுப்பதிலும்,
இனங்காண்பதிலும் உலகம் முழுவதிலும் குழப்பமடைந்துள்ளது.
கே.ரி.கணேசலிங்கம் 130

ஐக்கிய நாடுகள் சபை பல நாட்களாக கூடி பேசிய போதும் பயங்கரவாதத்தை வரையறுப்பதில் முரண்பாடுகள் ஏற்பட்டதே அன்றி முடிபு ஏற்படாமல் முடிந்தது. மூன்றாம் உலகின் ஆளும் வர்க்கங்கள் தமது எல்லைக்கும், விருப்புக்கும் ஏற்றவகையில் பயங்கரவாதம் என்ற சொற்பதத்தை அதிகார இலக்குக்கு பயன்படுத்திவருகின்றன. பொதுவாகவே அமெரிக்கர்கள் தமது தாயகத்தின் மீதுள்ள சொத்துக்களையும் உடைமைகளையும் அழிக்கும் நோக்கத்துடன் நிகழ்த்தப்படும் தாக்குதலை மேற்கொள்ளுகின்ற அமைப்புகள் மீதும் நாடுகள் மீதும் பயங்கரவாதம் என்ற குற்றச்சாட்டை சுமத்துவது போன்று, அமெரிக் கர்களை அழிக் கும் நோக்குடன் நிகழும் தாக்குதல்களையும், நடவடிக்கைகளையும் பயங்கரவாதமாகவே கருதுகின்றனர். மேலும் அமெரிக்கர்களின் தேசிய பாதுகாப்புக்கும் தேசிய நலனுக் கும் ஆபத் துமரிக் கதாக கருதும் நடவடிக்கைகளையும் பயங்கரவாதமாக அமெரிக்கர்கள் கருதுகின்றனர். உலகில் வேறு எந்த அரசுக்கும் இல்லாத அதிகாரம் அமெரிக் காவுக் கு உண்டு என்பதை பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் கூறுகின்றது. இந்தியாவின் POTA பயங்கரவாத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மிகப் பிந்திய சட்டமூலமாகும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளும்
அவ்வாறான சட்டமூலங்களை உருவாக்கிவருகின்றன.
எனவே பனிப்போர் முடிந்த மிகப் பிந்திய அரசியல் சமநிலையில் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை போர் அற்ற உலகத்தை அமெரிக்க நலன்சார்பாக உருவாக்க முயல்கிறது. அமெரிக்கா, போர் நிகழ்வுகளை தனது தலைமையிலும் பொருளாதார, வர்த்தக நோக்கிலான பிராந்திய
131 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 78
அமைப்புக்களையும் உலகளாவிய ஒழுங்கமைப்புக்களையும் அமெரிக்கா சார்பாக ஏற்படுத்த விரும்புகிறது. மேலும் பாரிய ஆயுத உற்பத்திகளை தடுப்பதுடன் அத்தகைய ஆயுதங்களை அழிப்பதிலும் தேசிய அரசுகளிடையே காணப்படும் பகைமையை தணித்தல் அவற்றை ஒன்றிணைத்தல் என அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை அமைகிறது. இதில் இலங்கை தமிழர்கள் போன்று விடுதலைப் போராட்டத்தை மேற்கொள்ளும் மக்கள் இராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளை கையாண்டு விடுதலைப் போராட்டத்தை தக்கவைப்பதே தற்போது பொருத்தப்பாடுடைய நிகழ்வாகும். உலக நாடுகளே இராஜதந்திர ரீதியான அணுகுமுறைக்கே முதன்மை அளித்து ராஜதந்திரபோர் ஒன்றை மேற்கொண்டு வருகின்றன அதனடிப்படையிலே இன்று மாறியுள்ள புதிய உலகம் பின்வரும் பிரிப்புகளை கொண்டியங்கி
வருகிறது.
வல்லரசும் அதன் கூட்டாளிகளும். (அமெரிக்கா, ரஷ்சியா, ஜப்பான், பிரித்தானிய, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா) என்பன,
காடை நாடுகள் என அமெரிக்காவால் அழைக்கும் ஈராக், ஈரான், சிரியா, லிபியா, போன்ற நாடுகள்,
இவ்விரு அமைப்புக்களிலிருந்தும் விலகிய ஆனால் இரண்டாவது அணியின் எதிரியோடு முரண்பாடடைகின்ற விடுதலைப் போராட்ட அமைப்புக்களும், அவை சார்ந்த
நாடுகளும் என வகைப்படுத்தலாம்.
இதில் விடுதலைப் போராட்ட அமைப்புக்கள் இரண்டாவது
அணியுடன் மறைமுக்மான செல்வாக்கை பெற்று அல்லது ஒரு
கே.ரி.கணேசலிங்கம் 132

வரையறுக்கப்பட்ட காலத்துக்கு தமது தேசிய இனத்தின் விடுதலைக்காக ராஜதந்திரப் போரை கையாண்டு பாதுகாப்பதே பொருத்தப்படானது. அத்தகைய காலப்பகுதியில் உலக மாற்றம் மீண்டும் நிகழும். ஏனெனில் உரோம சாம்ராச்சியம் போன்றோ பிரித்தானிய பேரரசு போன்றே அமெரிக்க சக்கராதிபத்தியம் நிலையானதும், தொடாச்சியானதுமான எழுச்சியை ஏற்படுத்த முடியாத உலகமய சூழலுக்குள் அமெரிக்கா அகப்பட்டுள்ளது. உலகமயமாக்கத்தின் கீழ் ஏற்பட்டு வரும் அதிர்ச்சிதரும், திடீர் மாற்றங்கள் உலகத்தை சுருக்கியது போன்று கால அளவையும் வேகமாக சுருக்கிவிடுகிறது. அதனால் அமெரிக்க விரிவாக்கம் நெருக்கடியை அடையும் காலத்தை விரைவில் எதிர்பார்க்க முடியுமென்பதனால் இராணுவ தயார்ப்படுத்தலுடனான சுமூக நிலையை தக்கவைப்பது சாதகமானதாகும். ஆனால் இவ்வமைப்புக்கள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இராணுவ விரிவாக்கத்தை எதிர் கொள்வது சுலபம். மாறாக தற்போது முன்வைக்கப்பட்ட பொருளாதார விரிவாக்கமே மிக ஆபத்தானது. அது தேசியத்தை அழிக்கும் வல்லமை பொருந்தியது. அதனை முற்றாக நிராகரிக்காது சற்று அவற்றை உள்வாங்கி எமது தேசியத்திற்கு ஏற்ப மறுசீரமைத்து அமுல்படுத்துவதே சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். உள்வாங்க தவறினாலும் தேசியம் அழியும் அபாயம் உண்டு. அதே போன்று உள்வாங்கி அதனை அப்படியே அமுலாக்குவோமாயின் தேசியத்தை இழந்துவிடும்
ஆபத்தை எதிர்நோக்க வேண்டியவர்களாவோம்.
133 மாறிவரும் புதிய உலக ஒழுங்கு

Page 79


Page 80
S.S.K. computer S { 288B, Palaly Rd. K.
 

)ffset Printers. antharmadam