கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மார்க்கண்டு கந்தசாமி (நினைவு மலர்)

Page 1

அமரர் ரக்கண்டு கந்தசாரி
அவர்களின் சிவபதப்பேறு குறித்த
நினைவுமலர் 28.10.2008

Page 2


Page 3

பண்டத்தரிப்பினை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் 6lasnodorL
திரு மார்க்கண்டு கந்தசாமி அவர்களின் அமரத்துவம் குறித்த நினைவு மலர்
28.1 O2OO8

Page 4
மானிடர்க்கு மானிடராய் இருந்து ,
இனியன சிந்தித்து இன்சொல் பகர்ந்து
பத்திரிகைத் துறையே உயிரென வாழ்ந்து
கடமையே கடவுளெனக் கொண்டு
ஊரின் மேன்மைகள் நாடி நின்று
எம்மையும் பார் போற்ற முன்னிறுத்தி
பண்புடன் வாழ வகை காட்டி
செம்மையுற வானுறையும்
எங்கள் குடும்பத் தலைவருக்கு விழி நீர் சொரிய
இம்மலர் காணிக்கை
குடும்பத்தினர்
 


Page 5

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வுத்துள் வக்கப்படு
போதாயன euronic தியாக-வேதமுதல் சதாசிவன் கழல்பற்றி மார்க்கண்டு கந்தசாமி பதாம்புயக் கீழுறைந்தான் சாந்தி

Page 6

பஞ்சபுராணம்
திருச்சிற்றம்பலம்
விநாயகர் துதி
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
தேவாரம்
தாயினும் நல்ல தலைவரென் றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்து மருவிநின்றகலா மாண்பினர் காண்பல வேடர் நோயிலும் பிணியுந் தொழிலர்பானிக்கி நுழைதரு நூலினர் ஞாலம் கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.
திருவாசகம்
பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே.

Page 7
().
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
திருவிசைப்பா
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனைத்
திருவீழி மீழலை வீற்றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டு கண்டு) உள்ளம்
குளிர என் கண்குளிர்ந்தனவே
திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப்
பாற்டக லீந்தபிரான் மாலுக்குச் சக்கரமன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கு மந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலமே யிடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
இறவாத இன்ப அன்பு
வேண்டிப் பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்பு உண்டேலுன்னை யென்றும் மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும் நான் மகிழ்ந்து பாடி அறவா நீ யாடும்போதுன்
அடியின் கீழிருக்க வென்றார்.

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
திருப்புகழ்
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கைப்பிய கரிமுக னடிபேணிக் கற்றிடும் அடியவர் புத்தியிலுறைபவர்
கற்பக எனவினை கடிதேகும் மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே முத்தமிழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே முப்புரம் எரிசெய்த அச்சிவனுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா அத்துயரதுகெட சுப்பிரமணிபடும்
அப்புனம் அதனிடை இபமாகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.
வாழதது
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை அரசுசெய்க குறைவிலாதுயிர்கள் வாழ்க நான்மறை அறங்களோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்

Page 8
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
அமரர் மார்க்கண்டு கந்தசாமி
அவர்களின் வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் வடபாகத்தில் அமைந்துள்ள வலிகாமத்தின் மேற்குப் பகுதியில் பண்டத்தரிப்பு என்னும் அழகிய ஊர் அமைந்துள்ளது. மாதகல், சில்லாலை, வடலியடைப்பு, விளான், பிரான்பற்றுப் போன்ற ஊர்களின் மையமாகப் பண்டத்தரிப்பு விளங்குகின்றது. இந்து சமுத்திரத்தின் தொடர்ச்சியைக் கொண்ட ஒரு கடல் பிராந்தியமாக மாதகல் சிறப்புப்பெறுகின்றது. இந்தியாவுடனான இப்பகுதியின் தொடர்புகள் வள்ளங்கள் மூலமும், நீச்சல் மூலமும் ஏற்படுத்தக் கூடியதாக அமைந்திருந்தன. இதனால் இந்தியாவின் தென்முனையூடான பொருட்களை இப்பகுதிக்குக் கொண்டுவரமுடிந்தது. இப்பின்னணியிற் பண்டங்களைக் கொண்டுவந்து விற்கும் இடமாக அல்லது பாதுகாக்கின்ற இடமாகப் பண்டத்தரிப்பு இருந்தது எனக் கருதப்படுகின்றது. பண்டையூர் எனச் சுருக்கமாக இவ்வூர் குறிக்கப்படுவதையும் அவதானிக்கலாம். செழிப்பான வயல்களையும், குளங்களையும் கொண்டிருப்பதுடன் ஒரு சிறிய 0ருக்குரிய வளர்ச்சியையும் பண்டத்தரிப்புக் கொண்டுவிளங்குகின்றது. இத்தகைய சிறப்புவாய்ந்த ஊரிற் பிறந்தவர் அமரர் கந்தசாமி. இவர் மார்க்கண்டு இராசம்மா தம்பதியினரின் மூத்த மகனாகப் பிறந்தார். இவரின் தந்தையார் மாவிட்டபுரக் கந்தனின் மீது பக்தி கொண்டிருந்தமையால் அத்தெய்வத்தின் பெயரை இவருக்கு வைத்தார்.
திரு.கந்தசாமி அவர்கள் தனது ஆரம்பகாலக் கல்வியை வடலியடைப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையிலிருந்த "ஐயரின் பள்ளிக்கூடம்" என்று அழைக்கப்பட்ட சைவ வித்தியாசாலையிற் பெற்றார். தொடர்ந்து இந்து சைவாங்கில வித்தியாசாலையிற் கற்று 1958இல் S.S.C. பரீட்சையிற் சித்தியடைந்தார். உயர்தரக் கல்வியை 1960வரை சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியிற் பெற்றார்.
மருந்தாளராக
1962ஆம் ஆண்டில் அரச மருந்தாளர் பதவியைப் பெற்று அதற்குரிய பயிற்சியைப் பண்டத்தரிப்பு கிராமிய வைத்தியசாலையில் நிறைவு செய்தார். 1964இல் கண்டி மாவட்டத்திலுள்ள பத்தமுல்ல (Buttamula) என்ற இடத்தில் தனது முதலாவது நியமனத்தைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து தொல்புரம், அளவெட்டி, ஆனையிறவு, அக்கராயன்,

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர் கிளிநொச்சி, காரைதீவு, புங்குடுதீவு, சரசாலை எனப் பல இடங்களிலும் கடமையாற்றினார். தனது பணியினை அன்போடும், பொறுமையோடும் கடமையுணர்வோடும் முன்னெடுத்தமையால் அவ்வவ் இடங்களில் வாழ்ந்த கிராம மக்களின் அன்புக்குப் பாத்திரமானார். 1995 Q ) யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயரும்வரை மருந்தாளர் பணியைத் தொடர்ந்தார். 1997இல் மீள் நியமனம் பெற்று 2006ஆம் ஆண்டுவரை பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இடப்பெயர் வினை அடுத்து பண்டத்தரிப்பு கிராமிய வைத்தியசாலை மிகவும் சிதிலமடைந்திருந்தது. அதனை மீளமைப்பதிலும் இயங்கச் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். அமரர் யாழ் மாவட்ட அரசாங்க மருந்துக் கலவையாளர் சங்கத்தின் செயலாளராக 18 வருடங்கள் இருந்து மருந்தாளர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்தார். தென்பகுதிகளில் நடைபெறும் மருந்தாளர் சங்கக் கூட்டங்களில் சிங்கள மொழி பெயர்ப்பாளராகவும் செயற்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளராக
பாடசாலையிற் கற்கும் காலத்திலேயே அமரர் இலக்கிய~ 07 ஆர்வமுடையவராக விளங்கினார். அக்காலப் பத்திரிகைகள்,
சஞ்சிகைகளை வாங்கி வாசிப்பது, அவற்றுக்கு ஆக்கங்களை அனுப்புவது போன்றவற்றையும் மேற்கொண்டார். நாடகங்கள், பட்டிமன்றம், கவிதை எழுதுதல் எனப் பல்வேறு துறைகளிலும் பங்கேற்றார். ஆனாலும் பத்திரிகைச் செய்தியாளராகப் பணியாற்றுவதிலேயே அவரது கவனம் இருந்ததெனலாம். 1966இலேயே தினபதி பத்திரிகையின் செய்தியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்ததை அவரது நாட்குறிப்பேட்டிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. 1969 இலிருந்து ஈடுநாடு பத்திரிகைக்குச் செய்திகளை அனுப்பத் தொடங்கினாலும் 1976 ஆம் ஆண்டிலிருந்து பத்திரிகைச் செய்தியாளராக இணைக்கப்பட்டு 1995ஆம் ஆண்டு இடப்பெயர்வு வரை பணிபுரிந்தார். 1977இல் இருந்து இறக்கும்வரை, தினகரன் லேக் ஹவுஸ் பத்திரிகையின் வட்டுக்கோட்டை விசேட நிருபராகச் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. வலி தென் மேற்கு செய்தியாளராக ஏறக்குறைய 14 வருடங்கள் உதயன் பத்திரிகையின் செய்தியாளராகப் பணிபுரிந்தார். ஒரு செய்தியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டபின் இவரைத்தேடிச் செய்திகள் வருவதும், செய்திகளைத்தேடி இவர் செல்வதும் நாளாந்த செயற்பாடாகியது. அக்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக விளங்கிய அமிர்தலிங்கம், திருநாவுக்கரசு, தியாகராசா, மாவை சேனாதிராசா

Page 9
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர் போன்றவர்களைப் பேட்டி கண்டதோடு அவ்வப்போது அவர்களிடமிருந்து சில தகவல்களையும் பெற்று, பத்திரிகைகளின் செய்திகளாக்கினார். இதனைவிடப் பேராசிரியர் சண்முகதாஸ், பேராசிரியர் சிவச்சந்திரன், திருமதி சரோஜா சிவச்சந்திரன் போன்றவர்களையும், மில்க் வைற் கனகராசா, பருத்தித்துறை சாரதா, சேவாச்சிரமத்தின் சித்ரூபானந்தா போன்ற பலரையும் சந்தித்துச் செய்திகளைப் பெற்றார். அத்துடன் சனசமூக நிலையங்கள், பாடசாலைகள், பொது நிறுவனங்கள் கோவில்கள் எனப் பலதரப்பட்ட துறைகளில் அமரர் தன்னை முழுமையாக அர்ப்பணித்தமை குறிப்பிடத்தக்கது. ஒரு செய்தியைப் பெற்றால் அதனை செய்தி வடிவமாக்கிய பின்னரே தன் உணவினை எடுத்துக்கொள்வார். முழுமையான சமூகப் பொறுப்புள்ள மனிதராக இப்பணியை மேற்கொண்டிருந்தமையைப் பலரும் அறிவர். நோயுற்றுக் கொழும்புசெல்ல வேண்டியேற்பட்டபோது உதயன் பணிமனைக்கு எழுதிய லீவு விண்ணப்பத்திற்குகூட "உயிருள்ளவரை தனது பத்திரிகை செய்தியாளர் பணியைத் தொடர்வேன்" எனக் குறிப்பிட்ட மையை இவ்விடத்திற் சுட்டிக் காட்டுவது அன்னார் இத்துறையிற் கொண்ட ஈடுபாட்டுக்குச் சான்றாகும். இத்துறையில் தன்னை வளர்த்துக்கொள்ளும் வகையிற் புகைப்படப் பயிற்சி, பத்திரிகைத்துறை சார்ந்த கருத்தரங்குகள், கற்கைநெறிகளிலும் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சமூகப் பணியாளராக
அரசாங்க மருந்தாளர் பதவி, பத்திரிகையாளர் பணி என்பவற்றினூடாக சமூக நலன் நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது. பண்டத்தரிப்பில் இளைஞர்கள் இணைந்து உருவாக்கிய திருக்குறள் சனசமூக நிலையத்தின் செயலாளராக நீண்டகாலம் பணியாற்றி கிராமத்தின் கலை கலாசார வளர்ச்சிக்குத் துணைநின்றார். மக்கள் நலன் தொடர்பான குழு, அஞ்சல் ஆலோசனை சபை, கிராம அபிவிருத்திச்சபை என்பவற்றிலும் பதவியைப் பெற்று, கிராமத்தின் முன்னேற்றத்திற்குத் தனது பங்களிப்பினை அமரர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தலைவராக
1965ஆம் ஆண்டு சின்னத்துரை - தில்லையம்மா தம்பதியின் மூத்த புதல்வியைக் கரம்பிடித்தார். இரு பெண்களையும் ஒரு ஆணையும் பிள்ளைகளாகப் பெற்றிருந்தார். தந்தை பிள்ளைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை நேர்மையான முறையில் மேற்கொண்டார். தனது பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கைத் துணைவர்கள் கிடைத்ததையிட்டு

பண்டத்தரிப்பு கிராம வைத்தியசாலை புனரமைக்கப்பட்டு மீளத் திற
அமரர் உரையாற்றுவதைக் காணலாம்
அமரர் இந்தியாவில் இருந்தபோது பிள்ளைகள் மருமக்களுடன்

Page 10

அரசாங்க மருந்தாளராக நீண்டகாலம் தொல்புரம் வைத்தியசாலையில் கடமையாற்றியதை கெளரவித்து நடாத்தப்பட்ட விழாவில் எம்.பி.தியாகராசா மாலை அணிவித்துப் பாராட்டுரை வழங்குவதைக் காணலாம்

Page 11
அரசாங்க மருந்தாளராக 25 வருடகால பணியை நிறைவு செய்ததை பாராட்டி கெளரவித்த விழாவில் அமரர்.
 

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர் பெருமைப்படுவதுண்டு. எல்லாமாக ஒன்பது பேரப்பிள்ளைகளைக் கண்டு
இறும்பூது எய்தினார்.
இறுதிக்காலம்
2008ஆம் ஆண்டு வைகாசி மாதத்திலிருந்து நோயினாற் பீடிக்கப்பட்டார் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. கொழும்பில் தங்கியிருந்தபோது திரு. தர்மகுலசிங்கம், அவர் மகள் சங்கீதா, டாக்டர் தேவானந்தன் போன்றவர்கள் பல்லாற்றாலும் அமரருக்குத் துணைபுரிந்தனர். திருச்சியில் உடனிருந்து, எல்லாவகையான உதவிகளையும் அமரரின் மைத்துனரான செல்வநாயகம் குடும்பம் செய்தது. பிரான்ஸ் நாட்டில் வதியும் பிள்ளைகளை இந்தியாவிற்கு வரவழைத்துப் பார்த்து, அவர்களோடு ஒருமாத காலம் வாழ்ந்து, பூரண திருப்தியோடு தாயகம் திரும்பினார். நோயின் துன்பத்துக்கு இடையிலும் பிள்ளைகளின் குடும்பத்தாரோடு கோவில் வழிபாடுகளிற் கலந்து கொண்டதுமன்றி பேரப்பிள்ளைகளோடு தானும் ஒரு சிறு குழந்தையாக மகிழ்ந்து இன்புற்றார். இக்காலத்தில் தானே தமது மரண அறிவித்தலை எழுதி வைத்ததோடு, தமது மனைவி எதிர்காலத்திற் செய்ய வேண்டியவற்றையும் கூறிவைத்தார்.
-09
விரைந்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த அமரர் சிறிதுகாலம் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்பொழுது தன் தாயைக் காணவும், பண்டத்தரிப்பிலுள்ள சொந்த வீட்டிற்குச் செல்லவும் விரும்பினார். தாயின் வீடு சென்று அவரின் கால்களைத் தொட்டு கும்பிட்டு, தாம் தாய்க்குரிய கடமைகளைச் செய்யாது போகப்போவதாக கூறி, அவரிடமிருந்து விடைபெற்று, தனதுவிடு சென்று மூன்றாவது நாளான 28.09.2008 ஞாயிற்றுக்கிழமை அமாவாசை நாளன்று மாலை 5.30 மணிக்கு 68வது வயதிற் பூதவூடல் விட்டுநீங்கி இறைகழலைச் சென்றடைந்தார்.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி

Page 12
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
உறவுகளின் உள்ளங்களில் இருந்து.
D6D6OTbill
எல்லாமாய் எனக்கு வாய்த்தவரே தாலியால் மங்கலம் சேர்த்தவரே சந்தோஷமாய் நான் சுமந்தேன் சுகதுக்கம் உம்மோடு . இன்று எதுவுமற்றுத் தனிமரமாய் நான் மட்டும் முக்கண்ணாய் மூன்று மக்கள் குறைவிலாது கண்டு நின்றீர் தளர்வறியாக் கல்வியுடன் கறையிலா வாழ்வும் தேடித் தந்தீர்
வீடு வாசல் கன்று காலி எல்லாம் நீரின்றி வளமாகுமோ இனி ஆடு நாய் பூனை கூட உம் வரவின்றி தாங்குமோ ஐயா! நாடி வந்து செய்திகள் தரவும் தேடி வந்து குறை நிறை சொல்லவும் வாசல் வந்த கால் தடங்கள் எத்தனை? நாடித் தேடி வந்த கால்களெல்லாம் களையிழந்து வாசல் கடநது போவதைக் காண நெஞ்சற் தாங்குமோ ஐயா! உத்தமமான துணைவியாய் மீணடும் வருவேன் உங்களோடு
LSSSSS
ஞாயிறு திங்கள் செவ்வாய்
புதன் வியாழன் வெள்ளி
சனி
ஏழு தினங்களும் புனித தினங்களே
வியாபாரம் தொடங்கவும், கட்டடம் கட்டவும் சிறந்தது விரதம் இருப்பதற்கு சிறந்தது போர் தொடங்கநல்லநாள் மற்றவர்களுக்கு விருந்து படைக்கநல்ல தினம் கல்வி தொடங்க சுபதினம் பூஜைக்கும் விரதத்திற்கும் ஏற்ற நாள் சனிபகவானை வணங்குதல் நன்மை பயக்கும்.
SSSSTTSSLSLSLSSSSSSSSSSSAY

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
உங்கள் தடங்களில்.
எம் அப்பாவே எங்கு சென்றீர்கள் எம்மைத்தவிக்கவிட்டு உங்கள் புன்னகையும் சார்ந்தமான நடையும் எம் கண்ணில் நிறைந்திருக்க விண்ணகம் சென்றதேனோ சத்தியமான வழியில் நித்தியம் நடந்து பதித்த தடங்கள் எம் முன்னால்
விரிந்த கிடக்கின்றதே.
நீங்கள் முனிவரிவில்லை என்றாலும் எத்துணை தீர்க்கதரிசனம் வர முன்னர் காத்த எம் தந்தையே இறப்பும் தெரிந்துதானோ அவரசமாய் வீடு வந்தீர்கள்
முற்றத்து மல்லிகை சாய்மனைக் கதிரை தேநீர்க்குவளைகள் முருகனுக்கமைத்த கோயில் எல்லாம் இருக்க நீங்கள் மட்டும்
எங்கே அப்பா மீண்டும் எமக்குப் பிறப்புண்டேல் சேயாக வேண்டும் உங்களுக்கு
அன்பு மகள் சாந்தினி அருளானந்தம்

Page 13
12 سح
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
கடமை தவறித் தவிக்கின்றேன்
அறிவு தெரிந்த நாள் முதலாய் தோள் மீதும் மடிமீதும் உங்கள் அன்பு உணர்ந்தேன் அறிவு, நற்பண்பு எனக்களித்து உண்மை உழைப்பை எடுத்துரைத்து உலகத்தில் நானும் நிமிர்ந்து வாழ உங்கள் அறிவுரைகள் தோற் கொடுத்தனவெனக்கு
பதினொட்டு வருடங்களின் பின் உங்களைக் காணும் பேறுபெற்றோம் ஒன்றாகக் கூடி இன்பமும் வைத்திய சாலைகளில் துன்பமும் சூழ ஒரு மாதம் இருந்துவிட்டு வேதனைகளே மிஞ்சநாம் பிரிந்தோம் கூடிப் பிரிந்த நாள் முதலாய் உங்கள் சுகநலம் தினமும் தொலைபேசியில் கேட்டறிந்தோம் இன்னொரு முறை அருகிருக்க நெஞ்சம் நிறைய நினைத்திருக்கையில் துக்க செய்தி அறிந்து துடிதுடித்தோம்
தந்தை கடமை செம்மையாய் முடித்த நிறைவோடு உங்கள் கனவுகள் முழுமையாய் முடிவுற்ற சிறப்போடு போய் விட்டீர்கள் அப்பா கொள்ளிக் குடமுடைத்து இறுதிக் கிரிகை செய்ய நான் அருகில் இல்லையே அப்பா இந்தக் கொடுமையை எப்பிறப்பில் ஈடுசெய்வேன் அப்பா? ஈசன் கழலில் உங்கள் ஆத்மா அமைதியுற பிரார்த்திக்கின்றேன்.
அன்பு மகன் சிவகாந்தன் (ராசன்)

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
நெஞ்சம் மறக்குதில்லையே.
கள்ளம் கபடமில்லா
உள்ளத்துடன்
அன்பு நேர்மை நிறைந்த
குணத்துடன்
தாய்க்கொரு தலைமகனாய் நீங்கள்
வெளிநாட்டில் நாமிருந்தாலும்
கணமேனும் எம்மை மறந்ததில்லை
நித்தம் எங்கள் குரல் கேட்க
நீங்கள் கொண்ட ஆவல் மறக்குமோ
தஞ்சாவூர் போகாதடி என்று
குழந்தைகளோடு மகிழ்ந்ததை மறக்குமோ
இரவிரவாய் மதுரை சென்றதை மறக்குமோ
மெய் தளர்ந்திருந்தாலும்
இந்தியச் சஞ்சிகைகள்
தவறாது வாசித்து
சொன்ன சந்கதிகள்
இன்னும் காதில் கேட்கிறதே
எம்மை விட்டுப் போகவோ
இந்தியா வந்தீர்கள் அப்பா
எங்களோடு வாழ்ந்த காலம்
போதுமென்று
நினைத்தீர்களோ அப்பா
மீண்டும் எங்கு காண்போம் உங்களை?
அன்பு மகள்
சுகந்தினி (றஞ்சனா)
சர்வானந்தன்
LLLLSSSLSSSMSSSS
நமது வாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மையுடையதாகவும் இருந்தால் மட்டும்தான் உலகமும் சிறப்பும் தூய்மையும் பெற்றதாக இருக்க முடியும். அது காரியம்: நாம் அதை விளைவிக்கும் காரணம். எனவே நம்மை நாம் தூய்மைப்படுத்திக் கொள்வோமாக. நம்மை நாம் பரிபூரணர்களாக்கிக் கொள்வோமாக.
-விவேகானந்தர்
-ாட்ர

Page 14
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
என் நெஞ்சு எப்படி யூேறுமப்பா!
முத்தான முதல் மகனே
என்னை முந்திப் போனாயோ வித்துடலை வேகவிட்டு
எண்ணுலகம் சென்றாயோ முத்தம் கொடுத்து
மகிழ்ந்த காலமதை முத்தழகே என் மனத்தில்
எண்ணிப் பார்க்கிறேன் பொன் மகனே பூவெழிலே
பார்மீது நீவாழ்ந்து இன்புற்ற நாட்களை
எண்ணிப் பார்க்கிறேன் மகனே! நினைக்கவே நெஞ்சம் நடுங்குதப்பா அணைத்தகரம் அணைக்க துடிக்குதப்பா பெற்ற வயிறு வேதனையால் பற்றி எரியுதப்பா அனலாய் வேகும் என்நெஞ்சு எப்படி ஆறுமப்பா
பெற்றதாயின் ஆதங்கம்
என்னவென்று ஆறுவோம்
நெஞ்சம் துடிக்கிறது தேரெமக்கு மூத்தவரே கொஞ்சிப் பேசிக் குதூகலித்த நாட்களை, நெஞ்சோடு அரவணைத்து நீதந்த பாசமதை. கொஞ்சக் காலத்தினுள் கொடுங்காலன் கொண்டனனே
மண்ணில் முழுமையாய் வாழ்ந்து கழிக்காமல் எங்களின் குலக்கொழுந்தாய் இருந்து சிறக்காமல் எங்களை விட்டு நெடும் பயணம் ஏகினையோ என்னவென்று இங்குயாம் ஆறுவோம் அறியோமே
அன்புச் சகோதர சகோதரிகளின் ஆதங்கம்

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
மைத்துணி மச்சாள்மார்களின் ஆதங்கம்
இக்கலியுக காலத்திலும் ஒரு மார்க்கண்டேயனா என மக்களால் மட்டிடும் தோற்றம் கொள்ள மாமா மாமிக்கு முதல் மைந்தனாய் எங்கள் வம்சத்தில் வந்து தித்தவரே மச்சான் முறையில் இருந்தாலும் நண்பராய் எம்மை வழி நடாத்தியவரே
உழைப்பினால் உயர்ந்தவர் நீங்கள் உறவுகளின் பாலமும் நீங்கள் வாழ்க்கையின் நீண்டகால பயணத்தில் உங்களை பார்ப்போம் என்றிருந்த எங்களை மரணக்கோலத்தில் பார்க்க வைத்துவிட்டு
ஏன் சென்றீர்கள்?
மைத்துணி,
மச்சாள்மார்கள் 15
மாமாவின் துயரம்.
மகள் வாழ்வு செழிக்குமென்று தேடிக் கண்டு கைபிடித்துக் கொடுத்து என்னருகே குடிவைத்தேன் அவள் வாழ்விழந்து துடிக்க விரைந்து சென்றதேனோ என் இறுதியாத்திரைக்கு விடை தருவீர் என்றிருந்தேன் வாய்க்கரிசி போட்டு விட்டு நான் இன்று தவிக்கின்றேன்

Page 15
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
பேரப்பிள்ளைகள் துயரம்.
நான் முதலில் பார்த்துவிட்டேன் படியில் இருக்கின்றேன் பார்த்து வாருங்கள் என்று எம்மை அனுப்பிய நீங்கள் எப்படி இருநூறு படி தாண்டி உச்சிப்பிள்ளையாரிடம் போனீர்கள்? எமக்கென்ன கொண்டு வருவீர்கள்? இனிப்புத்தான் கிடைக்குமோ? மாலை, காப்புத்தான் கிடைக்குமோ? சோடாதான் கிடைக்குமோ? இவற்றைக் கொண்டுவரும் கறுப்புப் பையை ஏன் கொண்டு போகவில்லை தாத்தா? புதுப் பையில் வாங்கி வருவீர்களோ?
கதிரையில் அமர்ந்து ஏதோவொன்றில் இலயித்திருக்க கண் பொத்திச் சிரிப்பீர்களே தாத்தா சாய்மனைக் கீழிலிருந்து மெதுவாகத் தட்டினால் தெரியாததுபோல யாரது என்பீர்களே தாத்தா சாடையாக எட்டிப் பார்த்தால் சட்டெனப் பிடித்து கையில் முத்தம் தருவீர்களே தாத்தா தீராத நோயென்று தெரிந்த பின்பு கிட்ட வரவேண்டாமென்று வாசலில் நிற்க வைத்தீர்களே தாத்தா தீபாவளிவரப்போகிறதே புதுக் சட்டையுடன் வருவீர்களோ தாத்தா? உங்களின் வரவுக்காக இன்றும் -நாளையும் -நாளையும். காத்திருப்போம்.

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
தேற்றம்
மண்ணில் பிறப்பெடுத்த உயிர்களின் முடிவு மரணமென்று தெரிந்திருந்தும் ஆற்றாது அழுகின்றோம் உம் பிரிவால் ஈசன் இணையடியில் உங்கள் ஆத்மா அமைதியாய் துயிலட்டும்
சுதந்திர தாகம்
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்
என்றுமடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்றெம தன்னைகை விலங்குகள் போகும்
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்? அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே.
ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே! வென்றி தருந்துணைநின்னருளன்றோ!
மெய்யடியோம் இன்னும் வாடுதல் நன்றோ?
பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினியார்க்கோ? தஞ்சமடைந்தபின் கைவிடலாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ? அஞ்சலென்றருள்செயுங் கடமையில்லாயோ? ஆரிய நீயும் நின் அறம்மறந்தாயோ? வெஞ்செயல் அரக்கரை வீட்டிடுவோனே!
வீரசிகாமணி ஆரியர் கோனே!
மகாகவி பாரதியார்

Page 16
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
மேரருக்கு எமது ந்ேசலி
"அரிது அரிதுமானிடராய்ப் பிறத்தல் அரிது" என்பது ஒளவையார் கூற்று. இப்பூவுலகில் மனிதராய்ப் பிறந்தவர்கள் முதலில் மனிதராக வாழ்கின்றார்களா? - என்பது கேள்விக்குறிதான். அமரர் கந்தசாமி அவர்கள் மனிதரில் மாணிக்கம். ஒரு மனிதனுக்கு இருக்கவேண்டிய அத்தனை பண்புகளும் நிறையப்பெற்ற இவரது மறைவு எனக்குத் தாழ முடியாத - தாங்கமுடியாத - பெரும் மனவேதனையைத் தருகின்றது.
சாந்தமான முகத்திற் புன்சிரிப்புத் தவழும் வதனம். உரையாடும்போது அவரது பேச்சில் கனிவு இருக்கும். இன்சொல்லேயன்றி வேறு வார்த்தை பேசமாட்டார். என்னைக் கண்டால் தமது மோட்டார் சைக்கிளை நிறுத்தி அன்போடு குசலம் விசாரிப்பார். "பத்திரிகைகளில் உங்கள் ஆக்கம் வந்திருந்தால் விரும்பிப் படிப்பேன். உங்களது எளிய நடை பாமர மக்களுக்கும் விளங்கக்கூடிய தனிப்பாணி. நிறைய எழுதுங்கள். உங்கள் சைவப்பணிக்கு எனது நல்வாழ்த்துக்கள்" என்று திறந்த மனத்துடன், பரந்த நோக்குடன் பாராட்டும் பண்பு அவருக்கே உரியது.
"உதயன்' பணிமனைக்கு வந்தால் என்னைச் சந்திக்காது போகமாட்டார். ஓரிரு நிமிடங்களாவது கதைத்துவிட்டுத்தான் செல்வார். இவரது இழப்பு பத்திரிகை உலகுக்குப் பேரிழப்பே. பத்திரிகைக்குச் செய்தி எழுதும் தனித்துவமான ஒரு பண்பு இவருக்குக் கைவந்த கலை. சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் ஆற்றல் படைத்த இவர் விடயங்களைப் பொருள் பொதிந்த ஒரு செய்தியாக எழுதுவதிற் சமர்த்தர். இத்துணை சிறப்புவாய்ந்த ஒருநண்பரை இழந்துவிட்டோமே என்பதை எண்ணும்போது துக்கம் தொண்டையை அடைக்கின்றது. எனது எழுதும் பணி நன்கு தொடரவேண்டும் என்று வாழ்த்திய ஒரு நல்ல உள்ளம் மறைந்துவிட்டது. வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு மாமனிதர் இவர்
இவர் மறைந்தாலும் இவரது உருவம் என் நெஞ்சைவிட்டு அகலவே அகலாது. பூதவுடல் இல்லாது போயிற்றே தவிர, புகழுடல் எம்மிடையே வளைய வந்துகொண்டேயிருக்கும்.
கண்ணியமும் கடமையும் மிக்க காருண்ய சீலரே!
கருத்துடன் கதைபேசும் கருணையுள்ள கந்தசாமியே புண்ணியமே செய்திட்ட எங்கள் புருஷோத்தமரே!

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
பூதவுடல்நீக்கி விட்டுப் புகழுடம்பு பெற்றீரோ? எண்ணிய கருமங்களை எளிதாய் நிறைவேற்றிடும்
ஏந்தலே நீவிர் மறைந்தது எமது துர்ப்பாக்கியம்! மண்ணிலே நின்புகழ் நல்ல மாண்புடன் திகழ்ந்திடுமே
மாமேதையே உமக்கு அஞ்சலி செலுத்துகின்றோம்!
ஒரு தூய உள்ளம் படைத்த நல்ல நண்பரை இழந்துவிட்டோம். இவரது ஆத்மா இறைவன் கழலிணையில் அமைதிபெறப் பிரார்த்தித்து இவரின் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கு எனது மனம் நெகிழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஈடுசெய்ய முடியாத பேரிழப்புக்கு நாம் மனம் வருந்துகின்றோம்.
நாச்சிமார் கோவிலடி, ஆன்மீக எழுத்தாளர், யாழபபாணம. இராசையாழனிதரன்.
LSSSSSSSS விநாயகருக்கு அர்ச்சனை செய்யும் இலைகளும் அவற்றின் பலன்களும்
1. மருத இலை - மகப்பேறு
2. மருவு துன்பம் நீங்குதல் 3. எருக்க இலை - குடும்பத்தில் கர்ப்பரட்சை 4. ஊமத்தை இலை - பெருந்தன்மை 5. அரச இலை எதிர்வாக்கு அடங்குதல் 6. அகத்தி இலை - துயரம் தீருதல் 7 இலந்தை இலை - கல்வி 8. அரளி இலை அன்பு 9. தாழை இலை - கோபம் நீங்குதல் 10. கண்டங்கத்தரி இலை - லட்சுமிகடாட்சம் 11. கரிசலாங்கண்ணி இலை செல்வம் பெருகுதல் 12. துளசி நல்வாழ்வுடன் மோட்சம் 13. நாயுருவி இலை -- வீரலட்சுமிகடாட்சம் 14. தேவதாரு இலை சோகம் நீங்குதல் 15. முல்லை இலை - காமம் 16. மாதுளை இலை நற்புகழ்
17. வில்வம் இன்பம் பெருகுதல் 18. வன்னி இலை - முகம் தெளிவுறுதல் 19. விஷ்ணு கிராந்தி இலை நுண்ணறிவு பெருகுதல் 20. வெள்ளெருக்கு இலை- செளபாக்யம் 21 ஜாதி மல்லிகை இலை - கோபம் சாந்தமடைதல்
"ע רישאר הרחשפים שהאדריר ריי ר"

Page 17
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
மறக்கமுடியாத மனிதர்
மனித வாழ்விலே மரணம் இயற்கை நியதி. எவருமே தப்பமுடியாது. பிறந்தவன் இறப்பது கடவுள் நியதி. தங்கப் பஸ்பத்தின் தகுதியைத் தராசுகள் எடைபோட முடியாது. அதன் பயனைப்பெற்ற ஒருவரின் நம்பகத் தன்மையான உறவின் உணர்வலைகளை வெளிப்படுத்த எந்த மொழியில் எந்த வார்த்தையை நான் தேட?
வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. நிலையற்ற வாழ்வை நிலையானதென எண்ணி நாம் எமது வாழ்நாளையே வீணாக்குகின்றோம். ஆனால் பண்டைநகர் மண்ணிலே பிறந்து, தவழ்ந்து, நடந்து, ஒடி, மக்கள் சேவையாற்றி எம் மனதைவிட்டு நீங்காத பிறவி பெற்றவர் திரு. மார்க்கண்டு கந்தசாமி அவர்கள். அன்பான பார்வை, நேர் கொண்டநடை எந்நேரமும் சிந்தனையுடன் துலங்கும் நெற்றி, இனிமையான பேச்சு, எல்லோரும் இவை அனைத்தையும் ஒருங்கே பெற்றுவிடமுடியாது. நான் கண்டேன் இம்மனிதரிடம், சமூகப்பணி, சமயப்பணி, பத்திரிகைப்பணி, எந்தத் துறையிலும் சளைத்துவிடல்லை. நோய்வாய்ப்பட்ட காலத்திற்கூட
மெதுவாக நடந்து, நடந்து சிறப்பாகப் பணியாற்றியவர்.
இவர் ஊரார் என்ற ரீதியில் காற்றோடு கலந்துவிட்ட சில நிகழ்வுகளை என் சிந்தையில் நிற்கவைத்துப் பார்க்கின்றேன். கல்விகற்ற காலம், வைத்தியசாலையில் மக்களோடு பணிசெய்த பரிவு, வாழ்க்கைத் துணையாளைக் கரம்பற்றிய நாளில் இருவரும் மலர்மாலை கழுத்திலாட, புன்னகை முகத்திலாட, இனிய நினைவுகள் மனத்திலாட ஊர்வலம் சென்ற காட்சியுடன் இவ்வுலகை விட்டுப் பிரிந்து மலர்மாலையுடன், வெண்துகிலுடன் படுக்கையில் துயில்கொண்ட காட்சி நெஞ்சுருக வைத்தது.
"ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மானிலத்தில்" வாழ்வில் ஒவ்வொரு நிமிடத்தையும் பொன் போல் மதித்து வாழ்ந்த மனிதர் இறைவன் பதமதில் இன்பமுடன் வாழவும் குடும்பத்தவர் துயர்மறையவும் இறையாசி வேண்டுகின்றேன்.
திருமதி ஜெபமணி ஜோசப் பண்டத்தரிப்பு மகளிர் சி.க.கூ.சங்கத்தலைவர், பண்டத்தரிப்பு மகளிர் சமுக9பிவிருத்திக் கழகத் தலைவர், யாழ் சமுக அபிவிருத்தி மன்றத்தலைவர்,

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
கண்வரியமாய்ப் பணிசெய்த கடமை வீரர்
என்னுள்ளம் குடிகொண்ட இனிய நண்பர்
இதமான வார்த்தைகளே என்றும் சொல்வார் தன்மனத்தில் நல்லதையே என்றும் எண்ணி
தான்வாழும் சமூகத்திற்குச் சேவை செய்தோன் பொன்னான பண்பாளன் போற்றத்தக்க
பொறுமையும் இன்சொல்லுமே அணியாய்க் கொண்டோன் இன்னிலத்து வாழ்விகந்து இறைதாள் சேர்ந்தாய்
இனியதுவாம் உன்நினைவு என்றும் நிற்கும்.
கண்ணியமாய்ப் பணிசெய்த கடமை வீரன்
கருணையுடன் நோயாளர் தமைப்புரந்தோன் கண்ணெனவே தன்மனைவி மக்கள் தம்மைக்
காத்திட்ட பெருங்குடும்பத் தலைவனாவான் எண்ணியதை நன்றாக ஆய்ந்தறிந்தே
எல்லோர்க்கும் நல்லதையே செய்யவல்லான் மண்வாழ மொழிவாழ வாழ்நாளெல்லாம்
வாழ்வாங்கு வாழ்ந்தனையே வணங்குகின்றேன். R
கலாபூஷணம், சைவப்புலவர் சு.செல்லத்துரை (ஒய்வுநிலை அதிபர் - இளவாலை)
LSSSSSSSSSSSSMSSSS
மாங்கல்யத்தின் தத்துவம்
மாங்கல்யம் என்பது ஒன்பது இழைகளைக் கொண்டது. அவை பின்வருமாறு.
1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்துகொள்ளுதல்
2. மேன்மை 3. ஆற்றல்
4. தூய்மை 5. தெய்வீக குணம் 6. உத்தம குணங்கள் 7. விவேகம்
8. தன்னடக்கம் 9. தொண்டு
இவற்றை ஒரு பெண் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம் அமைக்கப்பட்டுள்ளது.
" - ”காாது ட்ர

Page 18
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
diGůTňlůT dojdůlLGLD colshei GTsiefuGun ஆற்றாது துடிக்கின்றேன் யூேறுதல் இல்லையடா
1954ஆம் ஆண்டு பண்டத்தரிப்பு இந்து ஆங்கிலக் கல்லூரியில் நீயும் நானும் படித்தநேரம் புத்தகம் ஒன்று கிழிந்தமையால் எமக்கிடையே ஏற்பட்ட பிணக்கு, பின்னர் நட்பாகி54 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளது.
நான் படித்த காலத்தில் எல்லோரும் கந்தசாமியை அவர் கார்களிற் கொண்டிருந்த விருப்பத்தினால் 'ஏ (F) போட்டி (A 40) கந்தசாமி என்றே அழைத்தனர். நாளடைவில் நல்ல வசனம் எழுதுவதிலும், அழகிய தமிழ் உச்சரிப்பிலும் சிறந்து விளங்கியதால் பண்டையூர் கந்தசாமி’ என்றே குறிப்பிடப்பட்டார். எங்கள் நட்பும் வளர்ந்து வீடு வரை சென்றது. 1959ஆம் ஆண்டு நான் உயர்தரக் கல்விக்காக சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரிக்குச் சென்றேன். என்னைப் பிரிய விரும்பாத கந்தசாமியும் அக் கல்லூரியிற் சேர்ந்தார்.
1960ஆம் ஆண்டு எமது கல்லூரியில் சோக்கிரட்டீஸ் அரங்கேற்றப் பட்டபோது அதில் சோக்கிரட்டீஸாக நானும், நண்பன் கீரிட்டோவாகக் கந்தசாமியும் நடித்தோம். இதன்மூலம் எங்கள் நட்பு பிரிக்கமுடியாதது என்பதை உணர்த்தினார். 1962 நடைபெற்ற எனது திருமணத்தைத் தோளோடு தோள் நின்று நடத்தினார். இவரது சசோதரியின் கணவரின் பெயரும் கந்தசாமியாகும். இவரும் எனது இணைபிரியாத நண்பர்.
அரசினர் வைத்தியசாலையில் கடமையாற்றவேண்டும் என்ற அவரின் விருப்பத்துக்கமைய அவ்வேலை கிடைத்தது. எந்த இடத்திற்கு அவர் மாற்றலாகிச் சென்றாலும் அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் நானும் சென்று அடிக்கடி சந்திப்பது வழக்கமாக இருந்தது. இவரது உறவினர்கள் ஸ்கந்தபுரத்தில் இருந்தமையால் அங்குசென்று பணியாற்ற விரும்பினார். அவ்விடம் வேறுபட்ட சூழ்நிலையைக் கொண்டதென்பதை நான் எடுத்துச் சொன்னேன். அடிக்கடி காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு மூன்று மாதத்தில் மீண்டும் ஊருக்குத் திரும்பினார். இவரது திருமணத்தின்போது இணைபிரியாத சிவ-பார்வதி உருவமொன்றைப் பரிசளித்தேன். அதனை இடம்பெயர்ந்த காலம் வரை பக்குவமாகப் பாதுகாத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அக்காலத்திற் புதுமணத் தம்பதியர் காரில்

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று படம் பார்ப்பது வழக்கம். என்னையும் கூட வருமாறு வற்புறுத்தியதைத் தொடர்ந்து புதிய பறவை’ என்ற படம் பார்த்தோம்.
எது நடந்தாலும் ஒருவருக்கொருவர் சொல்லி ஆலோசனை கேட்டு நடப்பதில் இருவரும் ஒத்துவரக் கூடியவர்களாக இருந்தோம். மூத்த மகளின் கல்வி, வேலை தொடர்பாகச் சொல்லிப் பெருமைப்படுவார். வெளிநாட்டிலுள்ள பிள்ளைகளைக் காண நீண்ட நாட்களாக ஆவல் கொண்டிருந்தார். அண்மையில் நோயால் வருந்திய நிலையிலும் இந்தியாவில் அவர்களைக் கண்டு தன் ஆவலை நிறைவு செய்தார். இறுதிக் காலத்திலும் தனது இணைபிரியாதவர்களைப் பார்த்து, பேசத்துடித்தார். அந்த நல்லவரின் இணைபிரியாத நண்பரின் 54 ஆண்டுகள் என்னுடன் உறவாடிய உத்தமனின் உயிரைக் காலன் கவர்ந்து சென்றுவிட்டான். இரண்டு நாட்கள் என்னை முந்திப் பிறந்த நீ இறப்பிலும் முந்தி விட்டாய். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ? அவனே படைத்தான்.அவனே அழைத்தான் என அமைதியுறுவோம்.
அன்பின் இருப்பிடமே, அறிவுக் களஞ்சியமே. ஆற்றாது துடிக்கின்றேன் ஆறுதல் இலையடா! உன்பிரிவுதாங்காது உயிர் நண்பன் துடிக்கின்றான். உயிருள்ள வரையுமே கோபாலன் உன்னிடுவான். இன்பு பல தருகின்ற இனிய பாடசாலைகளில் இணைந்துமே படித்ததையும் இவனின்றும் நினைக்கின்றான். தென்பு பல தந்தவென் தேனொத்த என் நண்பா, தேவனின் திருவடியில் சேர்ந்துமே வாழ்ந்திடுவாய்!
அன்பு மறவாத நண்பன்,
காலையடி தெற்கு,
தம்பையா கிருஷ்ணகோபாலன்
பண்டத்தரிப்பு.
LSSSSSSSSSSSSSSS நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.
-விவேகானந்தர்
"שר שהאחרים שאפשר אבשר"ר"ר" "ר

Page 19
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
கனிவாகப் பேசும் கண்ணியமான மனிதர்
இற்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பண்டத்தரிப்பு அரசினர் வைத்தியசாலையில் யான் கடமையாற்றிய காலத்தில் என்னோடு வேலை செய்து நட்பும் பாராட்டி அறிமுகமானவர் தான் அன்பர் கந்தசாமி அவர்கள். அன்றில் இருந்து இன்றுவரை எமது நட்பு இனிமை நிறைந்ததாகவே இருந்து வந்துள்ளது. அவர்களுடன் வைத்தியாலையில் ஒன்றாக வேலை செய்த காலத்தை ஒரு போதும் மறந்துவிடமுடியாது.
தொழில் நிமித்தம் கால ஓட்டத்தில் வேறு வேறு இடங்களுக்கு யாம் மாற்றலாகிச் சென்ற போதும் அன்பரும் யானும் தொடர்ந்து அடிக்கடி சந்தித்து எமது நட்பைப் பலப்படுத்தத் தவறியதில்லை. அவரோடு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தோடும் நெருங்கிப்பழகி குடும்ப நட்பு எங்களுக்குள் வளர்ந்திருந்தது. நெருங்கிப் பழகிய ஒரு உறவு இவ்வளவு விரைவாக எம்மை விட்டு பிரிந்து செல்லுமென்று சிறிதளவும் யான் எதிர்பார்க்கவில்லை. அவரது பிரிவை என்னாலேயே தாங்கமுடியாத போது அவரது குடும்பத்தார் நிலை எப்படி இருக்குமென்று யோசித்துப் பார்க்கவே முடியவில்லை."மண்ணில் பிறந்தவர் ஒரு நாள் மடிந்து போவது திண்ணமே” என்பதற்கிணங்க நோய்வாய்ப்பட்டு சீரழிந்து வாழாமல் நல்ல தருணத்தில் அவர் இறைவனடி சேர்ந்துவிட்டத்தை எண்ணி ஆறுதல் பெறுவோம்.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பவற்றை தம் வாழவில் கடைப்பிடித்து வாழ்ந்த அன்பர் அவர்கள் எல்லாம் வல்ல அந்த கந்தசாமிக் கடவுளின் பாதாரவிந்தங்களில் சாந்திபெற பிரார்த்திப்போமாக
ஓம் சாந்தி சாந்தி சாந்தி O அன்பன், 665D
சி. தயாபரசிவம்.
SSSSSS வில்வம், துளசி, விளாத்தி, மாதுளை, நாயுருவி, நாவல், விஷ்ணுகாந்தி என்னும் ஏழு இலைகளும் முறையே ஞாயிறு முதலாய ஏழு கிழமைகளில் இறைவனைப் பூசித்தற்குரிய பத்திரங்களாகும்.
- புட்பவிதி
"קיר - דחים ששידר"

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
பற்றுறுதியுடன் பத்திரிகைப் பணியாற்றியவர்
ஒரு சிறந்த, கைதேர்ந்த செய்தியாளராகப் பற்றுறுதியுடன் உழைத்தவர் மூத்த பத்திரிகையாளர் அமரர் நா.மா.கந்தசாமி. முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து இத்துறையில் கால்பதித்து நின்று மக்களுக்குத் தகவல் தெரிவிக்கும் அரிய பணியை ஆற்றியவர் அவர்.
ஒரு செய்தியாளனுக்குத் தேவையான நல்ல இயல்பும், பண்பும் அவரிடம் நிறையவே இருந்தன. செய்திக்குரிய சரியான, முழுமையான தகவல்களைத் தரக்கூடியவர்களைத் தேடிப் பிடித்து அதனை வழங்குவதில் வல்லவர். எவருடனும் இனிய சுபாவத்துடனும் கண்ணியத்துடனும் பழகும் அவரால் செய்திக்குரிய தரவுகளைச் சரியாகவும், இலகுவாகவும் பெற்று, மக்களுக்கு அவசியமான, தரமான செய்திகளை வழங்க முடிந்தது.
மக்கள் குறைகளைக் கண்டு தாங்கிக் கொள்ள முடியாத மனப்போக்கு அவரை உண்மையான பத்திரிகையாளனாக்கியது. உண்மையை உள்ளவாறே எடுத்துச் சொல்லும் பத்திரிகையாளனுக்குரிய துணிச்சலும் அவரிடம் நிறைய இருந்தது. தாம் எழுதும் எந்தச் செய்தியிலும் தவறு நேர்ந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். தமது செய்திகளில் தவறில்லை என்பதை நிறுவுவதற்குரிய தக்க ஆதாரங்ளை அடிப்படையாக வைத்துக் கொண்டே செய்திகளை எழுதுவார். காத்திரமான, கனதியான செய்திகளை உரிய வடிவத்தில் எழுதுவதில் கைதேர்ந்தவர். அவரது செய்திகளில் உதவி ஆசிரிகள் வெட்டுக்கொத்தோ, மாற்றங்களோ செய்ய வேண்டிய தேவையிராது. அவரது செய்தி ஆக்கங்கள் தரம் மிக்கவை. கட்டுரைகள், விவரணங்களையும் வடிக்கும்
திறமை கொண்டவர்.
அவர் ஒர் அரசாங்க அலுவலர் என்பதனை விட ஒரு பத்திரிகையாளர், செய்தியாளர் என்றே மக்கள் மற்றும் அதிகாரிகளால் பெரிதும் அறியப்பட்டவர். எல்லோருடனும் நட்புறவுடன் புன்முறுவலைத் தவழவிட்டே பழகுவார்.
உதயனின் மூத்த செய்தியாளர்களில் ஒருவரான மாநா.கந்தசாமி தொடர்ந்து பதினைந்து வருடங்கள் எங்களுடன் சேர்ந்து உழைத்தார். எல்லோரது மதிப்புக்கும், அன்புக்கும் உரியவராக விளங்கினார்.

Page 20
26 ۔حس
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு பலர்
அவரும் நானும் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் ஒரே காலத்தில் பயின்றோம். அவர் எச்.எஸ்.சி வகுப்பில் கலைப்பிரிவில் பயின்று கொண்டிருந்தார். நான் விஞ்ஞானப் பிரிவில் பயின்று கொண்டிருந்த போதிலும் சிவதொண்டன் ஆசிரியரும், அறிஞரும். பேச்சாளருமான கே.கே.நடராஜன் என்னைத் தனது தமிழ், மற்றும் சமஸ்கிருத வகுப்புக்களில் எனது பாட நேர அட்டவணை இடம்கொடுக்கும் வேளைகளில் வந்து பயிலுமாறு அழைப்பார். அப்போது வெள்ளை வேட்டியும், சேர்ட்டும் அணிந்து உயர்ந்த அஜானுபாகுவான மூத்த இளைஞர் ஒருவரையும் சந்திக்க நேர்ந்தது. அவர்தான் மாநா.கந்தசாமி. வகுப்பிலேயே அமைதியானவர் அடக்கமானவர். எப்போதும் புன்னகை தவழப்
பேசுவார்.
விக்ரோரியாவின் ஆளுமைமிக்க அதிபர்களில் ஒருவரான சுதுமலை எஸ்.சுப்பிரமணியம் ஐயாவிடம் பல நாள்கள் பிரம்பந்தடியால் அடிவாங்கியவர் நா.மா.கந்தசாமி தோட்டத்துக்கு காலையில் துலாமிதித்து தண்ணீர் இறைத்துவிட்டு பண்டத்தரிப்பில் இருந்து துவிச்சக்கரவண்டியில் கல்லூரியின் பிரதான கதவு மூடப்பட்ட பின்னரே வருவார். கல்லூரிக்கு உள்ளே வருவதானால் சுப்பிரமணியம் ஐயாவிடம் மூன்று பிரம்படி வாங்கி வரவேண்டும் என்பது அப்போதைய விதி. அந்த விதிக்குள் நானும் ஒரு சில நாள்கள் அகப்பட்டிருக்கிறேன். ஆனால், கந்தசாமி பல நாள்கள் சிக்கியவர். கல்லூரி நாள்கள் குறித்துப் பேசும்போது இருவரும் இதனை நிறைவுகூருவோம்.
அரசாங்க உத்தியோகம் கிடைத்ததால் உயர்படிப்பைப் பூர்த்தி செய்யாமலேயே பாடசாலையை விட்டு விலகியதாக ஞாபகம். ஏரிக்கரைப் பத்திரிகையான தினகரனில் செய்தியாளராகப் பணிபுரிவதாகக் கூறி, 1993 ஆம் ஆண்டில் உதயன் சடிலிப்பாய்ச் செய்தியாளராகச் சேர்ந்த ஒரு சில வருடங்களிலேயே வலிதென்மேற்குப் பிரதேச செய்தியாளராக உயர்ந்தார். அவரது உடல் நலம் குன்றும்வரை ஊக்கத்தோடும், உத்வேகத்துடனும் இடைவிடாது மக்களுக்குச் செய்திகளை வழங்கிய வண்ணமே இருந்தார்.
யாழ்ப்பாணத்துச் செய்தியாளர்கள் - பத்திரிகையாளர்கள் - வரிசையில் அவர் உயர்ந்த இடத்தைப் பிடித்திருந்தார். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும். அவரது ஆத்மா இறைவன் கழல்களை அடைந்து உய்தி பெறுவதாக!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
ம.வ.கானமயில்நாதன்,
பிரதம ஆசிரியர், உதயன் - சஞ்சீவி

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
எல்லா உயிர்களுக்கும் இன்பம் தந்தவர்
அமரர் மா.கந்தசாமி அவர்கள் பண்டத்தரிப்பு அரசினர் வைத்தியசாலையிலும், இளவாலை வைத்திய நிலையத்திலும் மருந்துக் கலவையாளராகச் சேவையாற்றியவர். நோயாளரின் நலன்களில் அக்கறை கொண்டு உரிய மருந்துகளை உரிய முறையில் வழங்கி வந்தவர்.
இவர் நிறைவான பக்தியும் சிரித்த முகமும் இன்சொல்லால் எவரோடும் உரையாடும் தன்மையும், தன்னலமற்ற தொண்டும், உயர்ந்த எண்ணங்கள், உயர்ந்த சிந்தனைகள் ஆகியன கொண்ட அறநெறியாளர் ஆவார். இப்படிப்பட்டவரின் மறைவு பண்டத்தரிப்பு ஊருக்கு மட்டுமல்ல, அயல்
ஊரவர்களுக்கும் பேரிழப்பாகும்.
நிறைவாழ்வு வாழ்ந்த பெரியார், நிறைந்த மனதுடன் இறையடி சேர்ந்துவிட்டார். தமது ஊரையும் வைத்தியசாலைகளையும் நேசித்த பெருமைக்குரியவர் மறைந்துவிட்டார் என்பது எமக்குப் பேரிழப்புத்தான். எனினும் இம்மண்ணிற் பிறந்தோர் எல்லோரும் இறப்புறுவது இயற்கை. அன்னாரைப் பிரிந்து துயரமடைந்துள்ள மனைவி, பிள்ளைகளுக்கும், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும், கவலையையும் தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி
“உறங்குவது போலும் சாக்காடு
உறங்கி விழிப்பது போலும் பிறப்பு”
Dr.சி.கணேசலிங்கம், வைத்திய அதிகாரி, இளவாலை,
7—="—"
ஐந்து பேரைத் தாயாகப் போற்ற வேண்டும்.
ஈன்றெடுத்த தாய், ஆசானின் துணைவி, அரசனின் மனைவி, அண்ணனின் மனைவி. கணவன் மற்றும் மனைவியின் தாய்.
- ܡ===-- - ¬

Page 21
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
நினைவில் நீங்காதவர்
ஈழ மணித்திருநாட்டின் மணிமுடிமேல் பதித்த மாணிக்கம் போல் திகழும் பண்புமிகு பண்டத்தரிப்பு நன்நகரில் அவதரித்து. நானிலம் போற்றும் நாயகனாக, நாட்டின் பல பாகங்களிலும் குறிப்பாக பண்டத்தரிப்பு மருத்துவமனையில் மருந்தாளராக, மக்கள் சேவையே மகேசன் சேவையென பணியாற்றிக்கொண்டு, வைத்தியசாலை அபிவிருத்தி வேலைகளிலும் ஈடுபட்டார்.
அவர் எல்லோருடனும் இன்சொல் பேசி முகமலர்வுடன் எவருக்கும் உதவும் மனப்பாங்குடன் எவரும் மனம் கோணாத விதத்தில் பழகினார். அவர் பத்திரிகை செய்தியாளராகவும், பலவேறு சமூக சேவையாளனாகவும் பணியாற்றிக்கொண்டு இருந்தவேளையில் இறைவனின் திருவிளையாடலினால் அவரைத் தன்னிடம் அழைத்தார். அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவருக்கும் ஆழ்ந்த அநுதாபத்தைத் தெரிவிப்பதோடு, அவரின் ஆன்மா சிவப்பேறு அடைய இறையருளை வேண்டிபிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Dr.இ.செல்வநாயம், கருணா கிளினிக் பிரதான வீதி,
சங்கானை.
L SSSSSSSSS
பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். வேறு எந்தச் சக்தியாலும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு முறை நீ அவற்றை இயங்கச் செய்து விட்டால் அதனால் வரும் விளைவையும் நீ ஏற்றே ஆக வேண்டும். இதை நீ நினைவில் வைத்துக் கொண்டால் தீய செயல்களைச் செய்வதிலிருந்து அது உன்னைத்தடுத்துநிறுத்தும்.
-விவேகானந்தர்
~ "-ത്തr

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
வாழ்வாங்கு வாழந்த பெருந்தகை
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.”
அன்போடும் பண்போடும் வாழ்ந்து இன்று அமரராகி விட்ட பிரதேச வைத்தியாசலையின் முன்ளாள் மருந்துக் கலவையாளரான சமூகசேவகர் மார்க்கண்டு கந்தசாமி ஐயா அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வத்துள் வைக்கப்பட்டு விட்ட பெருந்தகை. தனது 24ஆம் வயதிலே மருந்தக கலவையாளராக இச் சமூகத்திற்குத் தனது சேவையை வழங்க ஆரம்பித்த அவர் தனது 66 ஆவது வயது வரை அக்கடமையை இலங்கையின் பல்வேறு பாகங்களிலாற் செவ்வனே செய்து புகழீட்டியவர். வேலைப்பழு அதிகமானாலும் சிரித்த முகத்துடன் சலிக்காது தனத சேவையை தமிழ் மக்களிற்கு மிகவும் இக்கட்டான காலங்களிலும் வழங்கிய இவர் இன்று எம்மைவிட்டுப் பிரிந்து சென்றமை வைத்தியசாலையைச் சமூகத்திற்கும் தமிழ்மக்களிற்கும் பேரிழப்பாகும். 1996 ஆம் அண்டு பெயர்வினைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற இவர் மருந்துக்கலவையாளர்களிற்கு நிலவிய பற்றாக்குறையை உணர்நது பலரின் வேண்டுகோளிற்கமைய 2006 ஆம் ஆண்டு வரை மீள் நியமனம் பெற்று இளவாலை, மானிப்பாய், இணுவில், பண்டத்தரிப்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசாங்க வைத்தியாசலைகளில் தனது சுகயினத்தையும் பொருட்படுத்தாது கடமையாற்றிய பெருந்தகை.
18 வருடங்களாக யாழ் மாவட்ட அரசாங்க மருந்துக் கலவையாளர் சங்கச் செயலாளராகக் கடமையாற்றிய இவர் ஒரு புகழ்பூத்த மூத்த பத்திரிகையாளரும் கூட அன்னாரிற்கு பண்டத்தரிப்பின் பிரதேச
வைத்தியசாலை சார்பில் எமது இதய அஞ்சலிகள் உரித்தாகுக.
செல்விதி. திருத்தேவி,
மாவட்ட வைத்திய அதிகாரி, பிரதேச வைத்தியசாலை பண்டத்தரிப்பு.

Page 22
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
எமது என்.எம் (N.M)
அமரர் நா.மா.கந்தசாமி அவர்கள் பண்டத்தரிப்பில் பிறந்து வாழ்ந்தவர். பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியிற் கல்வி கற்றவர். இவரது வகுப்பில் இன்னுமொரு மா.(M) கந்தசாமி கல்வி கற்றதினால், இவர் N.M.கந்தசாமி எனப் பெயரிடப்பட்டார்.
பள்ளிப் பருவத்தில் மாணவர் மன்றங்களில், சிறப்பாக விவாத அரங்குகளில் தாம் எடுத்துக்கொண்ட விடயங்களில் வாதிடும் திறன் மிக்கவராகவும், தீவிரப் போக்குடையவராகவும் விளங்கினார். அப்போதிருந்தே இவர் எல்லோராலும் N.M. என்று அழைக்கப்பட்டார்.
பாடசாலைப் பருவத்தைத் தாண்டியவர். மலையகத்தில் மருத்துக் கலவையாளராக நியமனபெற்று, தொடர்ந்து ஆனையிறவு. தொல்புரம் - பாணாவெட்டி போன்ற இடங்களிலும் ஈறில் பண்டத்தரிப்பிலும் மருந்துக் கலவையாளராகக் கடமையாற்றியதோடு, யாழ் மாவட்ட மருந்துக் கலவையாளர் சங்கத்தின் செயராளராகவும் சேவையாற்றி ஓய்வு ~ 30 ~பெற்றுள்ளார்.
இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பத்திரிக்கைத்துறையில் ஈடுபட்டு, வீரகேசரி, ஈழநாடு, முரசொலி, தினகரன், உதயன் ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராகச் செயற்பட்டு எல்லோரது மனதிலும்
இடம்பெற்றுக்கொண்டவராவர்.
பண்டத்தரிப்புக் கிராம அபிவிருத்திச் சங்கத்தில் இணைந்து பல பணிகளுக்குப் பங்களிப்புச் செய்து சங்கத்தின் உபதலைவராகச் செயற்பட்டு அமரத்துவம் அடைந்துள்ளனர்.
இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். இவரைப் பிரிந்துள்ள குடும் பத்தவர் வளுக்கும், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தலைவர்,நிர்வாகசபையினர், உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்கம், பண்டத்தரிப்பு.

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
உலகு பயன்பட வாழ்ந்த உத்தமன்
இவ்வுலகிற் பெரும்பான்மையான மக்கள் “தானுண்டு தன் குடும்பம் உண்டு” என்று தங்கள் நலனைப் பற்றியே சிந்தித்து வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். சிலர் மட்டும்தான் மற்றவர்களைப் பற்றியும் சிந்திக்கின்றார்கள். தனக்காக மட்டுமன்றி மற்றவர்களுக்காகவும் வாழ்பவர்கள் இவர்களே. இவர்கள் இறந்தாலும் இந்த உலகம் இவர்களை
மறவாது.
இவ்விதமான பெருமைக்கு உரியவரே அமரர் கந்தசாமி அவர்கள். இவருடைய வாழ்வு முப்பரிமாணம் உடையது. ஒன்று அவர் மருந்தாளராக உத்தியோகம் பார்த்த காலத்தில் நோயாளிகளுடன் மிகுந்த கருணையோடும் மனிதநேயத்தோடும் நடந்த பண்பு, மிகுந்த பொறுமையோடும். இன்முகத்தோடும் இன்சொல்பேசி நோயாளர்களுக்கு உதவிய பண்பு என்பன மறக்கமுடியாதவை.
இரண்டாவது, தனது ஒய்வுநேரத்தில் ஊடக நிருபராகச் செயற்பட்டுச் செய்த பணி, சமூக நலனை மனதிற்கொண்டு, தன் பிரதேசத்தில் நடக்கின்ற பல நிகழ்வுகளையும், சமூகத்தின் தேவைகளையும் உடனுக்குடன் ஊடகங்களில் வெளிவரச்செய்த சேவை, நெருக்கடி மிகுந்ததும் தாம்வாழும் பிரதேசத்தில் என்ன நடக்கின்றது என்பதையே அறியமுடியாதிருந்ததுமான இருண்டகால கட்டத்திற் பத்திரிகைகள்மூலம் செய்திகளைத் தந்த சேவை போற்றுதலுக்குரியன.
மூன்றாவது, தான்வாழும் பண்டத்தரிப்புப் பிரதேச நலனில் அக்கறை கொண்ட சமூகசேவை மன்றங்களுடனும், அரச மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுடனும் இணைந்து தனது சேவையை நல்கிய தன்னலங் கருதாத பணியையும் மதிக்கவேண்டும்.
தான்வாழும் சமூகம் பயன்பட வாழ்ந்த ஒரு நல்ல மனிதர், யாருடைய மனத்தையும் துன்பமுறச் செய்யாத பண்பாளன். கந்தசாமி அவர்களின் ஆன்மா சாந்தி அடைக.
அஞ்சல் அதிபரும், உத்தியோகத்தர்களும். பண்டத்தரிப்பு.

Page 23
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
சிறந்த சேவையாளர்
அமரர் திரு ம.கந்தசாமி அவர்கள் சிறந்த சேவையாளர், ஊடகத்துறையினருக்குத் தேவையான ஆர்வம், அமைதி, சிந்தனையாற்றல் என்பன இவரிடம் சிறந்து விளங்கின. இவரது சேவையினால் பத்திரிகைத்துறை வளர்ந்ததெனலாம்.
எமது கல்லூரியில் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டிருந்த திரு.மா.கந்தசாமி அவர்கள் பாடசாலையின் வளர்ச்சியில் ஒரு நலன் விரும்பியாகவும் ஊடகவியலாளராகவும் பணியாற்றி எமது கல்விப் பணிகளை உலகிற்குப் பறைசாற்றிய பெருமைக்குரியவர். எமது கல்லூரி நிகழ்வுகளை உடனுக்குடன் தெரியப்படுத்துவதில் ஆர்வம் கொண்ட இவரின் செயற்பாடுகள் கல்லூரியின் வளர்ச்சியில் பங்கு வகித்தது எனலாம்.
இன்று வரலாற்றுத்துறை விரிவுரையாளராக விளங்கும் அமரர் கந்தசாமியின் மகளான திருமதி அசாந்தினி எமது கல்லூரியின் பழைய
மாணவி என்பதில் பெருமை கொள்கிறோம். இந்த வகையிலும் - 32-॰ಲ್.ಅಶ್ எமது கல்லூரிக்குமிடையே நீண்டதொரு தொடர்பு இருந்து
வந்துள்ளது எனலாம்.
இத்தகைய சேவையாளரின் பூதவுடல் மறைந்தாலும் அவரது சேவைகள் மறத்தற்கரியன. அன்னாரது இழப்பினால் வருந்தும் உறவினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அமரரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
திருமதி.கி.சிவராசா, அதிபர், யா/பண்டத்தரிப்பு மகளிர் உயர்தர பாடசாலை.
L SSSSSSS
தும்பை அந்தணர்க்காகாது. துர்க்கைக்கு அறுகு ஆகாது. சூரியனுக்கு வில்வமாகாது. விநாயகருக்கு துளசி ஆகாது. வயிரவருக்கு நந்தியாவர்த்தம் ஆகாது. உமையம்மைக்கு நெல்லி ஆகாது. ஆதலால் அவ்வத் தேவர்க்கு விலக்கப்பட்டவற்றை விலக்கிப்பூசித்தல் வேண்டும்.
- புட்பவிதி
SSSS

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
சிறந்த பண்பாளரும் உயர்ந்த சிந்தனையாளரும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து 28.09.2008 இல் அமரத்துவம் எய்திய அமரர் மார்க்கண்டு கந்தசாமி அவர்களின் மறைவு, எம்மையும் எமது கிராம மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அன்னார் அரசினர் வைத்தியசாலைகளில் மருந்தாளராகக் கடமையாற்றிய இடங்களில் அந்தப் பிரதேச மக்களின் அன்புக்கும் மதிப்புக்குரியவராகவும் இருந்துள்ளார். பண்டத்தரிப்பு அரசினர் வைத்தியசாலையில் கடமையாற்றிய காலத்தில் இருந்து அமரரை நன்கறிவேன். நான் பண்டத்தரிப்புக் கிராமிய வங்கியில் காசாளராகவும் சேவைகள் முகாமையாளராகவும் கடமையாற்றிய காலத்தில் இருந்து நீண்டகால தொடர்புடையவனாக இருந்துள்ளேன். இதனால் இவர் குணாதிசயங்களை அறியக்கூடியவனாக இருந்துள்ளேன். இவரை சிறந்த பண்பாளராகவும், உயர்ந்த சிந்தனையாளராகவும் என்னை உணரவைத்தது.
பிரான்பற்து கிராமத்தின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்டு எமக்கு ஆக்கபூர்வமான பல கருத்துக்களை வழங்கியுள்ளார். கிராமத்தின் நன் நிகழ்வுகளைப் பத்திரிகை வாயிலாக வெளிப்படுத்தி, எமது கிராமத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். அமரர் இந்து மதத்திற் பூரண நம்பிக்கை உடையவராகவும், அதே நேரத்தில் இந்து மதத்தில் இருந்து விருப்பமற்ற மத மாற்றத்திற்கு எதிரான கருத்துடையவராகவும் செயற்பட்டார். பண்டத்தரிப்பு அரசினர் வைத்தியசாலை மீளவும் புதிய கட்டிடத்தில் இயங்குவதற்கு பாடுபட்டவர்களில் அமரரும் ஒருவராவார். அன்னார் ஓய்வுக்கு பின் மக்கள் நலன்கருதிப் பண்டத்தரிப்பு அரசினர் வைத்தியசாலையில் மீளக் கடமையாற்றிய பெருமைக்குரியவராவார். இவ்வாறான பெரும் குணங்களை உடையவரின் இழப்பு எம்மையும் எமது கிராம மக்களையும் கலங்க வைத்துள்ளது. அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை, தெரிவித்து, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி
சி. மகேந்திரன்,
தலைவர், பிரான்பற்று மக்கள் நலன்புரிச் சங்கம், பண்டத்தரிப்பு.
حصہ 33

Page 24
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
பிரதேச அபிவிருத்திக்கு உதவியவர்
அன்பும் பண்பும் நிறைந்த அமரர் மா. கந்தசாமி அவர்களின் இழப்பு எமது குடாநாட்டு விவசாயிகளுக்கும் மற்றும் அவர் சார்ந்த எழுத்துத்துறையினருக்கும் பேரிழப்பாகும்.
கொழும்பில் உள்ள லேக்கவுஸ் நிறுவனத்தின் 'தினகரன்’ - வட்டுக்கோட்டை செய்தியாளராகவும், யாழ்ப்பாணத்தில் 'உதயன்’ பத்திரிகை செய்தியாளராகவும் வலம் வந்து கொழும்பையும் - யாழ்ப்பாணத்தையும் பாலம் போல் இணைத்துச் செயற்பட்ட பத்திரிகையாளன் என்றால் அது கந்தசாமியையே சாரும்.
யாழ் குடாநாட்டில் வழுக்கையாறு மற்றும் ஏனைய குடாநாட்டு விவசாயச் செய்திகளை உடனுக்குடன் பிரசுரித்து, பிரதேச வளர்ச்சி அபிவிருத்திக்குப் பெரிதும் உதவிய பெருந்த கையாளன். இப்பெருந்தகையாளன் தன்னலம் கருதாது பிறர் நலனுக்காக முழுமையாகச் 34TP: செயல்வீரன். இவரது மறைவினால் எழுத்துலகம்
கவலையடைகின்றது.
என்.எம்.கந்தசாமி வடஇலங்கைப் பத்திரிகையாளர் சங்கத்தின் உப தலைவராகவும், மருந்தாளராகவும் அரும்பணியாற்றி இறைவனடி சேர்ந்துள்ளார். இவரது மறைவினால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அமைகின்றோம்.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி
சி.பொ.வ.மா.க முதலியார் (ச,நீ) தலைவர் மானிப்பாய் மேற்கு விவசாயிகள் சம்மேளனம்

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
புற்றுநோயைத் தவிர்க்க முடியுமா?
புற்றுநோயினால் பல நூற்றுக்கணக்கானோர் நம் நாட்டில் இறந்து கொண்டிருக்கின்றனர். இருதய நோய்க்கு அடுத்தபடியாக அதிக இறப்புக்கள் புற்றுநோயினால் சம்பவிக்கின்றன. புற்று நோயின் ஆரம்ப அறிகுறிகளை இனங்காண்பதன் மூலம் இந்நோய் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
இனங்கானப்பட்ட நோயாளருக்கு உரிய மருந்துகளைக் கொருத்தல், சத்திரசிகிச்சை அல்லது கதிர் அல்லது இரேடியம் ஆகியவற்றுள் ஒன்றினையோ அல்லது அனைத்தையுமோ அளித்து நோயினை ஒரளவுக்குக் கருப்பருத்த
முடியும்.
இந்நோய் பற்றிய போதிய விளக்கமின்மையாலும் அல்லது பயம் காரணமாகவும் வைத்திய ஆலோசனை பெறத்தவறும் காரணத்தினால் நோய் முற்றி ஆபத்தடையும்போதுதான் எமது பிரதேசத்தில் அதிகமானோர் சிகிச்சைக்காக வைத்தியசாலையை நாடுகின்றனர். எவ்வளவு காலத்திற்குச் சிகிச்சை தாமதமடைகின்றதோ அதற்கேற்றவாறு மரணத்தின் ஆபத்தும் அதிகரித்துக்கொண்டே போகமுடியும்.
1.புற்றுநோய்என்றால் என்ன?
உடல் பல உயிரணுக்களால் (கலங்கள்) ஆக்கப்பட்டது. சாதாரண நிலையில் உடலிலுள்ள கலங்கள் உடலின் தன்மை, தேவைக்கேற்ப ஒன்றுடன் ஒன்று இயல்புபட வளருகின்றன; ஆனால், இக்கலங்களின் ஒழுங்கற்ற நிலையின் வளர்ச்சியே புற்று நோயாகும். சில சமயங்களில் ஒரு கலம் அல்லது க.டாக ஓர்
பகுதியில் உள்ள கலங்கள் அசாதாரணமான நிலையில் குருதி, நினநிர்ச் சுரப்பிகள்
ஏனைய இளையங்களில் வளரமுடியும். இவ்விதமாக இந்நோய் உடலின் எப்பாகத்தையும் பாதிக்கமுடியும். இந்நிலைமை ஏற்படும்போது உயிருக்கு ஆபத்தானநிலைமை ஏற்படுகின்றது என்பதை மறுக்கமுடியாது:
2. ஆரம்ப அறிகுறிகள்
உடலில் மறைமுகமாக வளரும் இந்நோய் ஆரம்பத்தில் வெளிப் படையாகக் காட்டிநிற்காது. ஆனால் அநுபவ ரீதியாக பின்வரும் எச்சரிக்கை அறிகுறிகளுக்கும், புற்றுநோய்க்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு என்பதை அறிந்திருக்கின்றனர்.
36O)6)LLT66OI:

Page 25
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
(அ) ஆறாதா புண் (குறிப்பாக வாய், நாக்கு,சொக்கை அல்லது உதடு) (ஆ) அசாதாரணமான அல்லது தொடர்ச்சியான இரத்த ஒழுக்கு (விசேடமாக
மாதவிடாய்நின்ற பெண்களுக்கு)
(இ) அசாதாரணமான கட்டி அல்லது வளர்ச்சி (மச்சம்) குறிப்பாக பெண்களின் முலையில், முலைக்காம்பின் தோற்றம் மாறுபடல், முலைக் காம்பிலிருந்து இரத்தம் கலந்த ஊனீர்வடிதல். (ஈ) இடையறா அஜீரணம் அல்லது விழுங்குவதில் சிரமம் (உ) இடையறா இருமல் அல்லது நீண்டகாலக் குரலடைப்பு (ஊ) வழமையான மலங்கழிக்கும் பழக்கத்தில் ஏதாவது மாற்றம் (எ) உடம்பிலுள்ள காய் அல்லது மச்சத்தின் பருப்பம்,நிறம் மாற்றமடைதல்
(ஏ) படிப்படியாக எடைகுறைதல்.
இவ்வெச்சரிக்கை அறிகுறிகள் காணப்படின் அண்மையிலுள்ள அரச வைத்திய சாலைகளை நாருங்கள், தேவையேற்படின் தங்களை போதனா
வைத்தியசாலைக்கு வைத்தியர்கள் அனுப்பிவைப்பர்.
3.புற்றுநோயை எப்படித்தவிர்த்துக்கொள்ளலாம்? அ) உடலின் எப்பாகத்திலும் தொடர்ச்சியான அழற்சி ஏற்படும் நிலைமை( 36 س--
தவிர்க்கப்படல் வேண்டும்.
(ஆ) பிரசவத்தின்போது கருப்பையில் உண்டாகும் எல்லாக் காயங்களும் உடனடியாகச் சீர்செய்யப்படல் வேண்டும். தனிநபர் சுகாதாரம்
பேனப்படல் வேண்டும்.
(இ) மார்பகங்கள் இயல்பாகச் செயற்படவிடல் வேண்டும்.
(ஈ) புகையிலை பாவிப்பதில் தன்னடக்கம் வேண்டும்.
(உ) தீராத மலச்சிக்கல் சீர்செய்யப்படல் வேண்டும்
(ஊ)சுருங்கக்கூறின் உடலின் எவ்விழையத்தையும் அனாவசியமாக
அழற்சியேற்படாது பாதுகாத்தல் வேண்டும்.
4.வாய்ப்புற்றுநோயைநம்நாட்டில்எப்படித்தடுக்கலாம்?
எமது பிரதேசத்தில் சம்பவிக்கும் புற்றுநோய்களில் 40% மானவை வாய்ப்புற்றுநோயாகும். தடுப்புமுறைகளாவன:- (ஆ) ஆடும் பற்கள், உடைந்த பற்கள் காலதாமதமின்றி சீர்செய்யப்படல்
வேண்டும். அல்லது பிடுங்கப்படல் வேண்டும்.
(ஆ) நன்கு பொருத்தப்படாத போலிப் பல்வரிசைத் தகடுகள்
தவிர்க்கப்படல் வேண்டும்.

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
இல.
(g) S}{6ÖI6OIb, 6lds16ÖI(b, [b|Iéb(G (Upgð6Öu l6}lsb(Ö6ð 6l6).16iT606IIÜLIL6Olb
தென்படின், வைத்தியரின் ஆலோசனை பெறப்படல் வேண்டும். (ஈ) சுண்ணாம்புடன் புகையிலை சேர்த்து வெற்றிலை பாக்கு பாவிப்பதை
முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்.
உடலின் சகல பாகங்களையும் தாக்கும் இக்கொடிய வியாதியை ஆரம்பத்தில் இனங்கானல் மிகவும் அவசியம். இதன்மூலம் முற்றாக இந்நோயைத் தருக்கலாம். மக்கள் மத்தியில் இந்நோய் சம்பந்தமான அறிவு வளர்க்கப்படல் வேண்டும். மேலும் வேண்டிய தகவல்களுக்கு வெளிக்களச் சுகாதார ஊழியர்களையோ அல்லது எமது புற்றுநோய்த்
தடுப்புச் சங்கத்தையோ நாடவும்.
107, கண்டி வீதி, வடமாகாண புற்றுநோய்த் தடுப்புச் சங்கம்,
சுண்டிக்குளி, யாழ்ப்பாணம். யாழ்ப்பாணம்
LSSSSSSSSSSSSSSSYS
1
1
O.
11.
12.
13.
அபிஷேகப் பொருட்களும் அவற்றின் பலன்களும்
பால் - நீண்ட ஆயுளைத்தரும் நல்லெண்ணெய் - சுகத்தைக் கொடுக்கும் பஞ்சகவ்யம் - மனதைப் பரிசுத்தம் செய்யும் பஞ்சாமிருதம் - வெற்றியை தரும்
நெய் - மோட்சத்தைத் தரும்
தயிர் - மகப்பேறு தரும்
கரும்புச் சாறு - ஆரோக்கியத்தைத் தரும்
தேன் - கலைவாணியின் அருளைத் தரும் பழரசம் - எமபயத்தைப் போக்கும்
இளநீர் - உயர்ந்த பதவியைத் தரும் சந்தனம் - இறைவனோடு இரண்டறக் கலக்கச் செய்யும்
கலசாபிஷேகம் - அஷ்டலஷ்மி கடாக்ஷத்தைத் தரும்.
வஸ்திரம் - வறுமையைத் தடுக்கும்
SSSSSSSSSSSS

Page 26
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
பத்தொன்பதாம் நூற்றாண்டில்
பத்திரிகைகளும் சமயங்களும்
ஈழத்தில் 19ஆம் நூற்றாண்டு முக்கியமான காலப்பகுதியாக கருதப்படுகின்றது. இக்காலகட்டத்தில் நடைபெற்ற சமயங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பல்துறை வளர்ச்சிக்கு வித்திட்டன. அவ்வகையில் பத் தரிரிகைகளின் தோற்றம் இடம் பெறுவதைக் காணலாம் . துண்டுப்பிரசுரங்களின் மூலமும் நேரடி வாதங்கள் வாயிலாகவும் இலக்கியங்கள் போன்றவற்றினுTடாகவும் வலுப்பெற்ற முரண்பாடுகள் பத்திரிகைகள் ஊடாகவும் தோற்றம்பெறத் தொடங்குவதைக் காணலாம். விரைவிலேயே எல்லாவற்றையும் விட பத்திரிகைகளே அதிக செல்வாக்குடையதாக விளங்கியதுமன்றி பெரும்பாலானவர்களைச் சென்றடையும் ஆற்றலையும் பெற்றிருந்தமை அவற்றின் முக்கியத்துவத்திற்குக் காரணமெனலாம். கல்வி கற்ற பலரும் தமது கருத்துக்களைக் கட்டுரைகளாகவும் கடிதங்களாகவும் விமர்சனங்களாகவும் வெளிப்படுத்த இந்த ஊடகம் வாய்ப்பாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை பத்திரிகைகள் தோன்றி வளர்வதற்கு அவற்றைப் பயன்படுத்தவல்ல வர்க்கமொன்று உருவானமையும் பிரதான பங்கு வகித்ததெனலாம். இந்த வர்க்கம் மத்திய
* 38 - தரவர்க்கம் எனக்கூறப்படுகின்றது.
இப்பின்னணியில் 19ஆம் நூற்றாண்டின் இடை. கடைப் பகுதிகளில் தோன்றிய பத்திரிகைகள் பலவாகும். ஆயினும் அவை யாவும் நீண்டகாலம் நிலைத்திருக்கவில்லை என்பதும் கவனத்திற் கொள்ளத்தக்கது. “எம்முடன் பயணம் புறப்பட்டார் எத்தனைபேர் காலம் என்னும் சக்கர வாய்ப்பட்டிறந்து போயினர்” என உதயதாரகை என்ற பத்திரிகை கூறுவது சான்றாகும். இந்நிலை அக்காலகட்டத்தில் இயல்பானதாயினும் ஈழத்தில் சமகாலத்தில் காணப்பட்ட ஒவ்வொரு சமயத்தாரும் ஒவ்வொரு பத்திரிகையையாவது வெற்றிகரமானதாக நடத்தி வந்தமை சமயத்தில் பத்திரிகைகளின் செல்வாக்கை எடுத்துக்காட்டும்.
கிறிஸ்தவமும் பத்திரிகையும்
19ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்து வெளியான பத்திரிகைகள் தத்தம் சமயங்களுக்கு முன்னுரிமை கொடுத்துப் பிறசமயங்களைச் செல்வாக்கிழக்கச் செய்யும் பணியில் ஆர்வம் காட்டின. ஈழத்தில் சமயச் சார்பான அச்சியந்திரசாலைகள் தோற்றம் பெற்றமை இந்நோக்கிற்கு துணை நின்றது. இங்கு சமயப் பணியாற்றிய கிறிஸ்தவ மிசனரிச் சங்கங்கள் முறையே கோட்டை (வெஸ்லியன் மிசன்), மானிப்பாய் (அமெரிக்கன் மிசன்), கண்டி

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
(பப்டிஸ்ட் மிசன்) ஆகிய இடங்களில் அச்சியந்திரசாலைகளை நிறுவியிருந்தன. இவை பெரும்பாலும் கிறிஸ்தவ சார்பான வெளியீடுகளுக்கே முக்கியத்துவமளித்தன. கிறிஸ்தவ நூல்கள், துண்டுப்பிரசுரங்கள், பிற சமயங்களுக்கு எதிரான கண்டனங்கள், மொழிபெயர்ப்புகள் , மாணவர்களுக்குரிய பாடப்புத்தகங்கள் முதலாயின இவ் அச்சியந்திர சாலைகளிலிருந்து பிரசுரமாயின. இவற்றினைத் தொடர்ந்து பத்திரிகை வெளியீடுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் எல்லா மிசனரிச் சங்கங்களும் பத்திரிகைகளை வெளியிடவில்லை என்பதும் சுட்டிக்காட்டத் தக்கது. ஈழத்தின் முதலாவது தமிழ்ப் பத்திரிகை என்ற பெருமையைப் பெற்ற உதயதாரகை அமெரிக்க மிஷனுக்குரிய மானிப்பாய் அச்சகத்திலிருந்து வெளியிடப்பட்டது. மிசனரிமார்களால் வெளியிடப்பட்டமையே இப்பத்திரிகை சமயச்சார்பானது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டும். இதழியல் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட இளங்கோவன்,
“நாளிதழ் பருவ இதழ் பற்றியெண்ணும்போது இவற்றுக்கெல்லாம் வழிவகுத்துத் தந்த இந்திய (ஈழக்) கிறிஸ்தவ பாதிரிமார்களை வணங்கத்தோன்றுகின்றது. அவர்கள் தங்கள் சமயத்தைப் பரப்ப வேண்டும் என்னும் குறிக்கோள் கொண்டவர்கள். அதற்குப் பத்திரிகை வேண்டுமென்று
எண்ணினர். தமிழ்மொழியைக் கற்று தமிழர்க்கு உறவாகினர். மக்கள் படித்து தங்கள் சமயக் கருத்துக்களை விளங்கிக்கொள்ள விரும்பும் பத்திரிகை அவ்வப் பகுதி மக்களுக்குரிய தாய்மொழியிலேயே அமைய வேண்டுமென்று அவர்கள் எண்ணினர். வெள்ளையர்கள் பத்திரிகை நடத்துகின்றார்கள் என்பதே
அக்கால மக்களுக்குக் கவர்ச்சியாகியது...... அவர்கள் மொழியை வளர்ப்பதில் கருத்தைச் செலுத்தினார்கள் என்பதைவிட தங்கள் சமயத்தைப் பரப்ப மொழியை வாயிலாகக் கொண்டார்கள் என்பதே பொருந்தும்"
எனக்குறிப்பிடுவதானது ஆரம்பகால பத்திரிகை வெளியீடுகள் கிறிஸ்தவ சமயப் பரப்புதலை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றதெனலாம். கிறிஸ்தவ சமயத்தை ஈழத்தில் நிலைநாட்டுவதில் உதயதாரகை பத்திரிகைக்கு மிகப்பெரிய பங்குண்டு. அதனுடைய முதலாவது ஆசிரியத் தலையங்கம் பின் வருமாறு எழுதப்பட்டுள்ளது.
‘விஞ்ஞானம், வர்த்தகம், விவசாயம், அரசியல், கிறிஸ்தவம் ஆகிய துறைகளில் மக்களின் சிந்தனையைத் துTணி டவல்ல ஏனைய விடயங்களையும் உலகின் நான்கு திக்குகளிலிருந்து வரும் செய்திகளையும் காலந்தோறும் வெளியிடுவதே எமது குறிக்கோளாக இருக்கும்”
39 سح

Page 27
40 سب حس
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
மேற்படி ஆசிரியத் தலையங்கம் எல்லாத் துறைகளையும் உள்ளடக்கியதாக உதயதாரகை வெளிவருவதை எடுத்துக்காட்டினாலும், நடைமுறையில் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பவே முற்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை. முதலாம் பக்கத்தில் உதயதாரகை என்ற தலைப்பு பெயரின் கீழே “கிறிஸ்தவ பத்திரிகை” எனக் குறிப்பிடுவதே அதன் சமயச் சார்பை எடுத்துக்காட்டப் போதியதாகும். வட்டுக்கோட்டை செமினரியில் படித்தவர்கள், படிப்பித்தவர்கள் இதன் ஆசிரியர்களாகவும், கட்டுரையாளராகவும் இருந்தமை தர்க்க ரீதியான சமயவாதங்களுக்கு வாய்ப்பாக அமைந்தன. இப்பத்திரிகையை நடத்தியவர்கள் பிற சமயத்தைத் தாக்கி விரோதத்தைச் சம்பாதிப்பதிலும் பார்க்க தர்க்க ரீதியாகத் தமது கருத்தை நிரூபித்துக்காட்டுவது பயன்தரவல்லது என நினைத்தனர். எனவே பிற சமயத்தவர்களும் உதயதாரகையில் தமது கருத்துக்களை எழுத சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இவர்கள் எழுதியதும் விவாதத்தை ஆரம்பித்துத் தம் பதிலைக் கூறிக் கிறிஸ்தவ பிரசாரம் செய்தனர். இப்பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட சமயச்சார்புச் செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்கள், கடிதங்கள் சம்பாஷனைகள் கிறிஸ்தவ சமயத்தின் மேன்மையை மட்டும் கருத்திற்கொள்ளவில்லை, சுதேச சமயங்களான இந்துசமயம், பெளத்தசமயம், கிறிஸ்தவ சமயம் என்பவற்றையும் ஐரோப்பாவிலேயே தமது போட்டிக்குரிய சமயமாக விளங்கி ஈழத்திலும் கிறிஸ்தவத்திற்குச் சவாலாக இருந்த கத்தோலிக்க சமயத்தையும் செல்வாக்கிழக்கச் செய்யும் முயற்சியையும் இவை புலப்படுத்துகின்றன. இதனால் 19ஆம் நூற்றாண்டு சமயம் சார்ந்த பத்திரிகைகளின் எழுச்சிக் காலமாக அமைந்திருந்தது எனலாம்.
“உதயதாரகை தமிழ் மக்களிடம் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க வேண்டும். இந்து சமயத்தவரை தன்பால் ஈர்க்க வேண்டும் என்று விளம்பிற்று. இதில் தோல்வி கானவில்லை என்றே கூறவேண்டும்” எனக்கூறப்படுவது
உதயதாரகையின் நோக்கத்தையும், அந்நோக்கம் வெற்றிகரமாக நிறைவெய்தியதையும் உணர்த்துவதாக அமைகின்றது.
உதயதாரகை பத்திரிகை மட்டுமன்றி 1863இல் சி.வை.கதிரவேற்பிள்ளை வெளியிட்ட இலங்காபிமானி, 1864இல் கொழும்பிலிருந்து வெளிவந்த இலங்கைக் காவலன் முதலிய பத்திரிகைகளும் கிறிஸ்தவ சார்புடையனவாக இருந்ததோடு, இந்து சமயத்துக்கு எதிரான கருத்துகளையும் வெளியிட்டன. மேற்கூறிய பத்திரிகைகளின் தோற்றத்தையடுத்து அவற்றில் கிறிஸ்தவ - இந்து சமய வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறலாயின. யாழ்ப்பாணத்தில் இருந்தும் கொழும்பிலிருந்தும் வெளியான சில ஆங்கிலப் பத்திரிகைகளும் இப்பணியில் பின்னிற்கவில்லை. 1862இல் வெளிவந்த புரட்டஸ்தாந்து கிறிஸ்தவரின் ஜப்னா

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
|Snip67 (Jaffna Freeman) 6T6 (I J35floo).5u Lib, 186396 (ob)6fluJIT607 f(86).T6 பேற்றியட் (Ceylon Patriot) என்ற பத்திரிகையும் குறிப்பிடத்தக்க அளவில் இந்துசமயத்துக்கு இடையூறான கருத்துகளுக்கு இடமளித்தன.
கத்தோலிக்கமும் பத்திரிகையும் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களின் பத்திரிகை வெளியீடுகள் இந்துசமயத்தைப் பாதித்ததைப் போலவே கத்தோலிக்க சமயத்தையும் பாதித்தமையால் அவர்களும் நீண்டகாலம் முயற்சிசெய்து 1876இல் சத்தியவேத பாதுகாவலன் என்ற பத்திரிகையைத் தமிழிலும் கதலிக் கார்டியன் (Catholic Guardian) என ஆங்கிலத்திலும் ஒரே பத்திரிகையாக வெளியிட்டனர். ஆயினும் இந்துக்களிடையே தம் சமயத்தைப் பரப்புவதற்கும், இந்துசமயத்தின் பல்வேறு அம்சங்களையும் கேள்விக் குள்ளாக்குவதற்கும் கூடத் தமது பத்திரிகையைப் பயன்படுத்தினர். இந்து சமயக் கருத்துக்கள், விமர்சனங்கள், கண்டனங்கள், கடிதங்கள் சத்தியவேத பாதுகாவலனில் இடம்பெற்றன. சத்தியவேத பாதுகாவலன் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த ஆயர் பொன்ஜின் அப்பத்திரிகையின் நோக்கங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுகின்றார். 1. இருக்கும் மதநம்பிக்கையையும் புனித வாழ்க்கையையும் கத்தோலிக்கரி
டையே பேணிவளர்ப்பது. 2. சிலுவையென்னும் ஆயுதத்துடன் எதிரிகளின் தாக்குதல்களை
முறியடிப்பது.
இரண்டாவது நோக்கத்தில் இந்துசமயமும் அடங்கியிருந்தமை கண்கூடு. எதிரிகள் எனச் சுட்டுவது பிறசமயங்களையே. புரட்டஸ்தாந்து கிறிஸ்தவத்தையும் இந்துசமயத்தையும் கத்தோலிக்கர் தமது எதிரிகளாகக் கருதியமையால் அம்மதங்களை விமர்சித்து தமது பத்திரிகையில் எழுதிவந்தனர். குறிப்பாக இந்துசமயத்துடனான முரண்பாடு நீதிமன்றம் வரை சென்றமை ஈழத்துப் பத்திரிகை வரலாற்றிலும் சமய வரலாற்றிலும் முக்கியமான நிகழ்வாக அமைந்துகொண்டதெனலாம்.
இந்துசமயப் பத்திரிகைகளின் தோற்றம்
19ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியிலிருந்து தோற்றம் பெறத்தொடங்கிய கிறிஸ்தவ மற்றும் அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய கத்தோலிக்க பத்திரிகைகள் யாவும் “முழுமூச்சுடன் சைவசமய உண்மைகளைக் குழிதோண்டிப் புதைத்தன” என்றே கூறலாம். இத்தகைய சூழ்நிலையில் சைவர்கள் தம் சமயத்துக்கு எதிராகக் கூறப்படும் குற்றங்களைப் பரிகரிக்கவும், தேவையானவற்றுக்கு விளக்கம் சொல்லவும், தமது சமயத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தவும் தாமும் ஒரு பத்திரிகையைத் தொடங்க வேண்டியதன்

Page 28
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர் அவசியத்தை உணர்ந்து கொண்டனர். “பரம்பரை பரம்பரையாக இந்துசமயம் வளர்த்த நாட்டிலே கிறிஸ்தவம் புகுவதா? ஏன்ற பிரச்சினை எழுப்பப்பட்டதும், இந்துசமய ஏடு ஒன்று இல்லாமை துலாம்பரமாயிற்று” சுதேச சமயப் பத்திரகைகளின் தோற்றம் பற்றி சிவகுருநாதன் கூறும்பொழுது..?
“உள்நாட்டுச் சமயங்கள் துள்ளி எழுந்தன. தமக்குச் சாவுமனி அடிக்கப்படுவதனை உணர்ந்தன. பிற சமய தத்துவங்களால் கவரப்பட்டவர்கள் பிறசமயம் புகுவதனைப் பார்த்திருப்பது பாவமென்று நினைத்தார்கள்” 6Ꭲ60lᏑ
குறிப்பிடுகின்றார். கிறிஸ்தவ கத்தோலிக்க சமயங்கள் தத்தமது பத்திரிகைகளைப் பயன்படுத்தி சுதேச சமயங்களை வீழ்த்த முற்பட்டபோது, ஒரு தற்பாதுகாப்பு நடவடிக்கையாக சுதேசிகளும் சமயச் சார்பான பத்திரிகைகளை வெளியிட முயன்றனர். பெளத்த, இந்து, இஸ்லாமிய பத்திரிகைகளின் தோற்றத்தின் அடிப்படை கிறிஸ்தவ கத்தோலிக்கப் பத்திரிகைகளின் தோற்றமும் அவற்றின் பணிகளுமே என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் ஈழத்தின் முதலாவது இந்துசமய மறுமலர்ச்சிப் பத்திரிகையாழ்ப்பாணத்திலேயே தோன்றியதாகக் கூறப்படுகின்றது.
இந்துசமயத்தைப் பொறுத்தவரை நாவலரே ஒரு பத்திரிகையைத் ~ 42 ~ தொடங்க ஆவல் கொண்டிருந்தபோதும், அது நிறைவேறவில்லை. இதனையடுத்து நாவலரோடு தொடர்புடைய சாமிக்குருக்கள் என்பவர் சைவப் பத்திரிகையொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முதன்முதலாக பிரசங்கமொன்றில் முன்வைத்ததாக அறியமுடிகின்றது. இது பற்றி இலங்காபிமானியில் பின்வருமாறு கூறப்படுகின்றது.
“பிரதேசத்தவர்களுக்கு உபயோகமாயிருக்கும் வண்ணம் சைவப் பொருளை உள்ளுக்கு வைத்து ஒரு பத்திரிகையோ, புத்தகமோ பிரசாரம் செய்வரெனவும் ஒரு பாக்கியாதியுண்டு. இவைகள் மாத்திரமா? இல்லையில்லை கொழும்புச் செட்டிகளுள் சிலரும் வேறொரு புதினப் பத்திரிகை சமைக்கக் கருதுகின்றார்கள். கிறிஸ்தோபர் பிறிற்றோ வந்தவுடன் சாமரிக் குருக்களும் ஒரு பத்திரிகை நடத்துவாராம். ஒருவேளை அவுஸ்ரேலியாவின் குதிரைகள்போல பத்திரிகையுமாமோ நாமறியோம்” சாமிக்குருக்கள் பத்திரிகையொன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தாலும் அவரது எண்ணம் ஈடேறவில்லை என்றே தெரிகின்றது. ஆனால் அவ்வாறன ஒரு முயற்சியை வழமைபோல் இலங்காபிமானி நகையாடுவதைக் காணலாம். மேலும் செட்டிமார்களால் புதினப் பத்திரிகை ஒன்று வெளியிடப்பட்டதாகவும் தெரியவில்லை.

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
இந்துசமயப் பத்திரிகை ஒன்றை வெளியிடவேண்டும் என்ற சிந்தனை ஈழத்து இந்து அறிஞர் சிலரிடையே தோற்றம் பெற்றிருந்தாலும், 1877இல் இலங்கை நேசன் என்ற பத்திரிகை தோன்றும்வரை இந்துசமயம் சார்பாக எந்தவிதமான பத்திரிகையும் தோற்றம் பெற்றதாகத் தெரியவில்லை. எம்.எச்.சின்னத்தம்பி என்பவர் இப்பத்திரிகையை ஆரம்பிப்பதற்கு நாவலரே காரணமாக இருந்தாரெனவும் கூறுவதுண்டு. எவ்வாறாயினும் ஈழத்து இந்துக்களது செய்திகளை உரிமையுடன் பிரசுரிக்கும் பின்னணியில் முதலாவது இந்துப்பத்திரிகை இதுவெனக்கூறலாம். இலங்கை நேசனில் சமயநெறி முறைமைகள், சமயப்பெரியார்கள் பற்றிய கட்டுரைகள் உதயதாரகை, கத்தோலிக்கப் பாதுகாவலன் முதலிய கிறிஸ்தவ கத்தோலிக்க பத்திரிகைகள் மற்றும் நுTல்கள் துண்டுப் பிரசுரங்கள் முதலியன இந்துசமயத்தின் மேலேற்றிய குற்றங்களுக்கும் கண்டனங்களுக்கும் தக்க பதில்கள், மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட சமயவிடயங்கள். கடிதங்கள் என்பவற்றுடன் சமகால அரசியல், பொருளாதார, சமூக செய்திகள் ஆகியன இடம்பெறலாயின. ஆறுமுகநாவலர் முதலிய அறிஞர்களது சமய, சமூக விழிப்புணர்வுக் கட்டுரைகளும் இப்பத்திரிகையில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. கத்தோலிக்கப் பாதுகாவலனில் பிஷப் பொன்ஜினும், கோப்பாய் மாணாக்கன் என்ற புனைபெயரையுடையவரும் இந்தசமயத்துக்கு எதிராகக் காட்டிய கண்டனங்களும் அவற்றுக்கு இலங்கை நேசனில் ஆறுமுகநாவலரும் செந்திநாதையரும் எழுதிய மறுப்புக் கட்டுரைகளும் பிரசித்தம் பெற்றவையாகும்.
இந்துக்கள் சார்பாக இலங்கை நேசன் பத்திரிகை வெளியிடப்பட்டாலும், “சைவ” என்ற அடையுடன் முதன்முதலாக வெளிவந்த பத்திரிகையாக சைவ உதயபானுவை நாம் கருதலாம். நாவலர் இவ்வாறான ஒரு பெயருடைய பத்திரிகையை வெளியிட விரும்பியமையின் வெளிப்பாடே இப் பத்திரிகையின் வெளியீட்டுக்குக் காரணமெனலாம். நாவலருடைய பணிகளைத் தொடரவும் அவரது நோக்கங்களை நிறைவேற்றவும் இப்பத்திரிகை தோன்றியதாகக் குறிப்பிடப்படுகின்றது. சைவ உதயபானு 1880 ஆம் ஆண்டு ஆவணி மாதம் பதினாறம் திகதி பிரசுரமானது. இப் பிரசுரத்தின் முக்கிய சிறப்பம்சம் யாதெனில் சமகாலத்தில் இந்தியாவிலும் ஈழத்திலும் வெளியிட்டு வைக்கப்பட்டமையாகும். இந்துசமயத்தை வளர்ப்பதனையே நோக்கமாகக் கொண்டிருந்த சைவ உதயபானு சமகாலத்துப் பிற சமயப் பத்திரிகைகள் போன்று சமயங்கள் மீதான காழ்ப்புணர்வுச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. அதேவேளை எல்லோரும் படித்துப் பயன்பெறும் வகையில் இனிமையான தமிழில் எளிமையாகவும் நேர்மையாகவும் இந்துசமயத்தை வளர்க்க விரும்பியது. பல பணிகளை சைவ உதயபானு மேற்கொண்டு இந்துசமயத்தின் நிலைபேற்றுக்காகவும், வளர்ச்சிக்காகவும் உழைத்த போதும் அதன் பணி குறுகியகாலமே (நான்கு வருடங்கள்) நிலைத்திருந்தது.

Page 29
rul 44
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர் 1883 ஆம் ஆண்டிலிருந்து வெளிவந்த இன்னொரு இந்துப் பத்திரிகை சைவாபிமானி ஆகும். இப் பத்திரிகையின் ஒவ்வொரு வெளியீட்டிலும் எந்த அச்சியந்திரசாலையிலிருந்து? யார் வெளியிடுவது? எந்தெந்தக் காலங்களில் வெளிவரும்? இப் பத்திரிகைக்குரிய கடிதங்கள் யாருக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்? என்ற விபரங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்படி வல்வைச் சிவன் கோயிலின் வடக்குப் பகுதியிலுள்ள மடத்துக்குரிய இடத்திலிருந்து சிவராமலிங்கக் குருக்களால் ஸ்தாபிக்கப்பட்ட பாரதீ நிலைய முத்திராவர சாலையிலிருந்து சைவாபிமானி அச்சடிக்கப்பட்டது. மாதத்தில் இரு தடவைகள் இப்பத்திரிகை வெளியானது.
ஈழத்து இந்து சமயத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்கள் செட்டிகளாவர். அவர்கள் வழியில் வந்த முத்துவேலுச் செட்டியாரின் பத்திரிகையான விஞ்ஞானவர்த்தினியும் குறிப்பிடத்தக்கது. பொதுவாகச் செட்டிகள் இந்து சமய அபிமானிகளாகையால் சமயச் செய்திகளுக்கு இடமளிப்பது தவிர்க்கமுடியாததே. இந்துசாதனம் என்ற பத்திரிகை அளவில் சிறுவர்களுக்கான பத்திரிகையொன்றினை வெளியிட முயற்சி செய்யப்பட்டதுடன் சைவ உபாத்தியாயர் கூட்ட ஆயத்த சபையால் இதற்குரிய விளம்பரமும் மேற்படி பத்திரிகையில் வெளிவந்திருந்தது. இப்பத்திரிகை வெளிவர ஆதரவு வழங்குமாறு சைவர்களை இந்துசாதனம் கேட்டது. இப் பத்திரிகை வெளியிடப்பட்டதா? அதன் பெயர் என்ன? சைவச் சிறுவர்களுக்கு எவ்வாறு இந்துசமயச் செய்திகளை வழங்கியது போன்றவற்றை நாம் அறியுமாறில்லை.
1900 க்கு முற்பட்ட காலப்பகுதியில் இந்து சமயம் சார்பாக பல பத்திரிகைகள் சைவர்களது ஆர்வ மேலிட்டினால் தோற்றம் பெற்றிருந்தன. ஆயினும் இவற்றுள் பெரும்பாலானவை போதிய பொருளின்மையாலும், ஈழத்து இந்துக்கள் தமது சமயப் பத்திரிகைகளை வாங்கி வாசிக்கும் ஆர்வம் குன்றியவர்களாக விளங்கியமையாலும் தொடர்ந்தும் வெளிவர முடியாது போயின. மேலும் பத்திரிகைகளைப் பெற்ற பலர் அவற்றுக்குரிய சந்தாக்களை ஒழுங்காகச் செலுத்தவில்லை. அவற்றைச் செலுத்துமாறு அவ்வப் பத்திரிகைகளில் அறிவுறுத்தல் களும் வெளியிடப்பட்டமையை காணமுடிகின்றது. இத்தகைய காரணங்களால் இந்துசமயப் பத்திரிகைகள் பல வெளிவராது நின்று போயின. இருப்பினும் 1879 க்குப் பிற்பட்ட காலப்பகுதியில் தோன்றியவையும், அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்து வெளியிடப்பட்டு 1879க்குப் பின்பும் வெளிவந்தவையும் 19 ஆம் நூற்றாண்டு இந்துசமய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்களவில் பங்காற்றியுள்ளன எனலாம்.
பிற சமயங்களின் செல்வாக்கிலிருந்து இந்துசமயத்தினைப் பாதுகாக்கும் ஆவலினால் பல பத்திரிகைகள் இந்துசமயம் சார்பாகத் தோற்றம் பெற்று, சில

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
காலம் வெளிவந்து பின்னர் நின்று போனதையடுத்து ஈழத்து இந்துக்களுக்கென ஒரு பத்திரிகையும் இல்லாதிருந்தது. இக்காலகட்டத்தில் இந்து அறிஞர்கள் மீண்டும் தங்களுக்கு ஒரு ஸ்திரமான பத்திரிகை அவசியம் என்பதனை விளங்கிக் கொண்டனர். இதற்குரிய காரணமொன்று பின்வருமாறு கூறப்படுகின்றது.
"་བ... இலங்கையிலுள்ள மற்றெல்லா சமயத்தாருக்கும் சாதியாருக்கும்
வேண்டிய விஷயங்களைப் பேசவேண்டிய பத்திரிகைகள் இருக்கின்றன. சைவர்களாயுள்ள தமிழர்களுக்கு மாத்திரம் ஒரு பத்திரிகையும் இல்லை. நம்மவர்கள் சைவத்தைப் பற்றி விளம்பரந்தானும் பத்திரிகைகளில் வெளிப்படுத்த வேண்டுவராயின் சென்ன பட்டணம் முதலான தூரமான இடங்களுக்கு அனுப்ப வேண்டியிருக்கின்றது”
இந்நிலையில் “அந்நியரால் அடையும் சிறுமையைப் பார்த்துச் சகிக்காது பொது நன்மைக்காகவும் சமய விருத்திக்காகவும்” கூட இந்துக்களுக்கெனப் பத்திரிகையொன்று தேவைப்பட்டது. இவ்வாறான ஒர் பின்னணியில் இந்துசாதனம் பத்திரிகை தோற்றம் பெற்றது. பொது நன்மையின் பொருட்டும் சமய விருத்திக்காகவும் இந்துசாதனம் தொங்கப்பட்டதாயினும் சமய விருத்தியே சமகாலத்து சூழ்நிலையில் முனைப்புப் பெற்றிருந்தது. இந்து சமயத்தைப் பேணி ஸ்திரப்படுத்த முனைந்த ஈழத்து இந்து அறிஞர்கள் தமது சமயத்துக்கே இந்து சாதனத்தில் முன்னுரிமை கொடுத்தமை வியப்பானதல்ல. பத்திரிகையின் பெயரே சமய வளர்ச்சியை நோக்காக் கொண்டதென்பதைத் தெளிவுபடுத்துகின்றது. ஏனைய சைவப் பத்திரிகைகளுக்கில்லாத சிறப்பம்சம் யாதெனில் இப்பத்திரிகை ஸ்திரமான கூட்டுமுயற்சியின் பின்னணியில் சைவபரிபாலன சபை என்ற நிறுவனத்தினூடாகத் தோற்றம் பெற்றமையாகும்.
பெரியளவில் பிரசுரமான இந்து சாதனம் இரு மொழிகளில் வெளியிடப்பட்டது. வெளிப்புறப் பத்திரிகை வறிந்து ஒகன் என ஆங்கிலத்திலும், உட்புறப் பத்திரிகை இந்துசாதனம் எனத் தமிழிலும் பிரசுரமானமை சிறப்பான அம்சமெனலாம். சமகாலத்தில் வெளிவந்த பிறசமயப் பத்திரிகைகளான உதயதாரகை, கத்தோலிக்க பாதுகாவலன் போன்றனவும் இவ்வாறே பிரசுரமானமை குறிப்பிடத்தக்கது. சைவபரிபாலன சபையினர் இவ்விரு மொழிகளைப் பயன்படுத்தியமைக்குக் காரணம் தமது பத்திரிகை இருமொழி வாசகர்களையும் சென்றடைய வேண்டும் என்பதேயெனலாம். கிறிஸ்தவ சமயப் பரப்பாளர்களும் புதிதாகத் தோற்றம் பெற்றிருந்த ஆங்கிலம் கற்ற மத்திய வகுப்பினரும் வறிந்து ஒகனை வாசிக்கும் வாய்ப்பினைப் பெற்றனர். சுதேச இந்துக்களுக்கு சமய விழிப்புணர்வையும், சமய அறிவையும் வழங்குவதற்குத் தமிழ் மொழியிலான பிரசுரம் வழிவகுத்தது.

Page 30
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர் “... இவையனைத்துடனும் நம் நிலையை வைத்துப் பார்த்தல் இலங்கை எங்கே நிற்கிறது. இங்குள்ள செய்தித்தாள்களை ஒரு கைவிரலுக்குள் எண்ணிவிடலாம். இந்த நாட்டில் இந்து இனத்தவர் 6 இலட்சத்துக்கு மேல் ஏறத்தாழ 22 வீதம் இருக்கும். அவர்களுடையநலன்களை எடுத்துப்பேச ஒரு பத்திரிகையும் இல்லையே. நீண்டகாலமாக உணரப்பட்ட
இத் தேவை நாம் இப் பத் திரிகையைத் தொடக்குவதன் மூலம்
நிவர்த்தியாகின்றது”
நமது எதிர்காலத்தைப் பற்றி நாம் எதையும் கூறமுடியாதுள்ளது. எமது செயற்பாடுகளில் எம்மினத்தவர் எடுக்கும் கவனத்திலேயே முழுவதும் தங்கியுள்ளது. ஆனால் ஒன்றுமட்டும் கூறுவோம். நாம் வேறெந்த நோக்கத்தோடும் இல்லாமல் பொதுநலன்களைத் தூண்டும் முயற்சியாகவே இதனைத் தொடங்கினோம். மக்கள் இன்றிருக்கும் அடைந்துவரும் ஒழுக்கம், அறிவு, பெளதீகம் சார்ந்த மிகப் பெரிய முன்னேற்றங்களை எடுத்துக்காட்டி உற்சாகப்படுத்துவதும் எமது நோக்கமாகும். எம்மால் இயன்றவரை மக்களுடைய நிலையை மேம்படுத்துவதற்குரிய வழிகளை எடுத்துக் கூறுவோம்.
இக் கூற்றிலிருந்து ஈழத்து தமிழர்களிடையே குறிப்பாக இந்துக்களிடையே இந்து சாதனம் தோன்றியமை அவர்களது சமயத் தேவைகளுக்கு அப்பால் பொது நன  ைம க  ைளயும் கருத தரிற் கொண டிருந் த மை யை அவதானிக்கின்றோம்.
மேற்கூறியவாறு 19ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற பத்திரிகைகளின்
பெரும் பலானவை தத் தமது சமயத்தைப் பிறசமயங்களிடமிருந்து
பாதுகாக்கவும், பிற சமயங்களின் அறிவுசார் தாக்குதல்களை எதிர் கொள்ளவும்
ஏற்றவகையில் தோற்றம் பெற்று செயற்பட்டதைக் காணலாம். ஆயினும் சமூக
நன்மையை, பொது நோக்காகவும் அவ்வப் போது பத்திரிகைள் வெளிப்படுத்தி
இருந்தமை குறிப்பிடத்தக்கது. சுருக்கக் கூறின் 19ஆம் நூற்றாண்டு
பத்திரிகைகளின் செல்வாக்கு உயர்வடைந்த காலப்பகுதியாக விளங்கியதைச்
சமகாலச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. இன்றும் அவை சக்தி மிக்க
ஊடகங்களாக காலத்தின் தேவைக்கேற்ற விடயங்களை மையப்படுத்தி வெளிவருவதைக் காணலாம்.
சாந்தினி அருளானந்தம்,
B.A(Hons) M.Phil
சிரேஷ்ட விரிவுரையாளர்,
வரலாற்றுத்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
விண்ணுலகில்
}ဂ္ဂိစ္စငဲ့
ர் அஞ்சலி
28
N
Zク
言
義
W
美
. ര, aba ര அமரர் என்.எம். கந்தசாமி
(ஒய்வுபெற்ற மருந்துக் கலவையாளர், உதயன், தினகரன் செய்தியாளர்,
அரசாங்க மருந்துக் கலவையாளர் சங்க, யாழ் மாவட்டக் கிளை */முன்னாள் செயலாளர், வட இலங்கைப் பத்திரிகையாளர் சங்க உபதலைவர்,
பண்டத்தரிப்பு கிராம அபிவிருத்திச் சங்க உபதலைவர்) அவர்கள்
警
அணையாத தீபமாய் ஆழ்கடலின் முத்தாய் இருளில்லா வடிவமாய் ஈகையின் வள்ளலாய் உயிருலகின் தெய்வமாய் வாழ்ந்த நீர் எமை விட்டு நீங்கினும் என்றும் உம் பிரிவைத்தாங்காது எம் நெஞ்சம் ஆயினும் உமது உயிர் பெறுக நற்சாந்தி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
காலையடி தெற்கு, ஆருயிர் நண்பன் பண்டத்தரிப்பு கிருஸ்ணகோபால் குடும்பம்

Page 31
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
OyeO eeeSS eee eeeS eeeee S eee0 e eee0 eee0 eee eeeS eeS eee 0 S0 S0S eSeee0 S SeeS eeeS e0S eSeeS SeS eeeeS
விண்ணுலகில்
28
மண்ணுலகில்
22
()
O7
Kỳ
義
இ டு இ டு ܠܬܘ SyuzazářLDTŤĞ5856ÕOTB 85 shöBFITLÓ (எமது நலன்புரிச் சங்க உப தலைவரும், பண்டத்தரிப்பு ஓய்வு பெற்ற மருந்தாளரும்) நெஞ்சம் கணக்குதையா நினைவிழந்துதவிக்குதையா
பந்தங்களைப் பரிதவிக்கவிட்டு பரமனிடம் சென்றாயோ?
பண்டத்தரிப்பில் பண்போடு வாழ்ந்து
பண்பாலும் அறிவாலும் யாவரையும் கவர்ந்து
தங்கமாய் பெற்றெடுத்த பிள்ளைகளை மறந்து
எங்கே சென்றாயோ?
உமது திருமுகத்தை தரணியில் காண்பதெப்போ?
அன்னாரின் ஆதமா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி
பிரிவால் துயருறும், பிரதேச வைத்தியாசலை உத்தியோகத்தர்களும், 29,09. 2008 ஊழியர் நலன்புரிச்சங்க அங்கத்தவர்களும், பண்டத்தரிப்பு.
స్త్ర
స్త్ర
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
28
令
O9
令
A V A V A. AB ovuzzi III/7(56567/7 afiavail/07 (ஒய்வுபெற்ற மருந்துக் கலவையாளர், உதயன், தினகரன் செய்தியாளர்,
அரசாங்க மருந்துக் கலவையாளர் சங்க, யாழ் மாவட்டக் கிளை முன்னாள் செயலாளர், வட இலங்கைப் பத்திரிகையாளர் சங்க உபதலைவர், பண்டத்தரிப்பு கிராம அபிவிருத்திச் சங்க உபதலைவர்)
அவர்கள் பண்டத்தரிப்பில் பண்புடன் உதித்த உத்தமனே! அன்பால் அனைத்து மக்களடனும் பழகி நன்மதிப்பைப் பெற்றவரே! எமது கிராமத்தின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கியவரே பிரான்பற்று நன் நிகழ்வுகளைப் பத்திரிகை வாயிலாக வெளிப்படுத்தி எமது பிரான்பற்று மக்களின் அன்புக்குப் பாத்திரமானவரே பெற்ற அன்னை கலங்கி, மனைவி மக்கள் கண்ணி விட்டுக் கதறியழ, பார்தனில் நீர் இல்லையே என்ற செய்தி கேட்டு நாம் ஆழ்ந்த கவலையும் வேதனையும் அடைகின்றோம். அமரரை இழந்து மாறாத துயரில் தவிக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ളb சாந்தி, சந்தி, சந்தி
பிரான்பற்று பிரான்ற்று மக்கன் கன்ைபுரிச்சங்கம், 29.09.2006 பிரான்பற்று கைைமகன் சனசமூக ைேயைம்

Page 32
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
tEEEEEEEEEEEEEEEEEEEEEE
* மண்ணுலகில் விண்ணுலகில்
22 28
() ()
O7 O9
N () Kỳ
194O sute s'a 2008
Swa محرابر 宅 S་
S
அமரர்மார்க்கண்டு கந்தசாமி
(ஒய்வு பெற்ற மருந்துக் கலவையாளர், பத்திரிகை நிருபர், பண்டத்தரிப்பு அஞ்சலக ஆலோசனைச் சபைச் செயலாளர்)
அன்பு எனும் அரவணைப்பில்
Ν அறிவு எனும் ஆழ்கடலில்
Ν தீங்குதனை விரும்பாது
எல்லோருக்கும் வழிகாட்டியாய் N இருந்த அன்புத் தெய்வமே
Ν
காலன் உங்களை அழைத்தானோ?
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் என்றென்றும்
எம் நெஞ்சை விட்டு அகலாது.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாயங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.
N
29.08.2008 o:
RES 3-3=8=3=8=χ-Χ8=3=88=χΕΞχΞχΞχΞχΞχΞχΞ χΕΣΣΕ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
MI// s (2 W
李
(எமது வரலாற்றுத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் சாந்தினி அவ்ாகளின் அன்புத் தந்தை)
பணிகளில் உயர்ந்திருந்த பெருந்தகையே பரந்த உலகிதனுள் உத்தமராய் அவதரித்து நல்வழியைக் காட்டிநிதம் நற்பணிகள் பல புரிந்து
எதிர்பாராத் தருணமொன்றில் இறைவனவன் பதம் பணிந்த செய்தியதை ஏற்றிடத்தான் இயலவில்லை ஒரு கூட்டுக்குஞ்சாய் சேர்ந்திருந்த மகவுகளைத் தவிக்கவிட்டுத் தனிவழியில் பயணித்த இரகசியம்தான் எதுவோ? தங்களுக்கு எமதினது
கண்ணிரை என்றும் காணிக்கையாக்கியபடி ஆத்மா சாந்தியுற வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி வரலாற்றுத்துறை
விரிவுரையாளர்கள், மாணவர்கள் யாழ். பல்கலைக்கழகம்

Page 33
52 سےحس
அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
அமரரின் மரணம் தொடர்பாகப் பத்திரிகைகளிற் பிரசுரமானவை
உதயன் 20.09.08
மூத்த பத்திரிகையாளர் என்.எம்.கந்தசாமி
நேற்றுக் காலமானார்.
குடாநாட்டின் மூத்த பத்திரியைாளர் என்.எம். கந்தசாமி தனது 68 ஆவது வயதில் நேற்றுக் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம். இவர் உதயனின் பண்டத்தரிப்புச் செய்தியாளராகவும் தொடர்ந்து வலிகாமம் தென் மேற்கின் பிரதேச செய்தியாளராகவும் மொத்தம் 22 வருடங்கள் பணிபுரிந்தவர். உதயனின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர். தமது செய்திச் சேவையில் திறம்படவும், வேகமாகவும் மக்கள் நலன் நாடியும் பணியாற்றியவர் அமரர் ம. கந்தசாமி.
ஈழநாடு மற்றும் தினகரன் பத்திரிகைகளிலும் செய்தியாளராகப் பணியாற்றினார். கடந்த சில வருடங்களாக வட இலங்கைப் பத்திரிகையாளர் சங்கத்தின் உபதலைவராகப் பணியாற்றியவர். ஓய்வுபெற்ற மருந்துக் கலவையாளரான இவர் சிறந்த சமூக சேவையாளரும் ஆவார். அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அன்னாரின் இறுதிக் கிரியைகள் கீரிமலை வீதியில் பண்டத்தரிப்பில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பி.ப. 230 மணிக்கு நடைபெறவுள்ளது.
flerasrør O.I.O. 2oo8 தினகரன் வட்டுக்கோட்டை நிருபர் கந்தசாமி காலமானார்.
தினகரன் வட்டுக்கோட்டை நிருபரும், ஒய்வுபெற்ற மருந்துக் கலவையாளருமான என். எம். கந்தசாமி தனது 68ஆவது வயதில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நேற்றுப் பிற்பகல் அவரது பண்டத்தரிப்பு, சிவபவனம் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் விளாவெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவர் வட இலங்கை பத்திரிகையாளர் சங்க உப தலைவராகவும், அரசாங்க மருந்துக் கலவையாளர் சங்க யாழ். மாவட்டக்
கிளை முன்னாள் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

அமரர் மார்க்கண்டு கந்தசாமி நினைவு மலர்
5heотёрдутөр зо.o9.2оо8
மூத்த பத்திரிகையாளரின் பூதவுடல் நேற்றுத் தகனம் செய்யப்பட்டது யாழ்ப்பாணக் குடாநாட்டின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான என்.எம்.கந்தசாமி தனது 68ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர்
ஏறக்குறைய 25 வருடங்களாகப் பத்திரிகைத் துறையிற் பணிபுரிந்துள்ளார்.
மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதில் மிகவும் திறமையாகச் செயற்பட்ட இவர், ஆரம்பகாலத்தில் வெளிவந்த ஈழநாடு மற்றும் தினகரன் போன்ற பத்திரிகைகளிலும் செய்தியாளராகப் பணிபுரிந்தார்.
கடந்த சில வருடங்களாக இவர் வட இலங்கைப் பத்திரிகையாளர் சங்கத்தின் உப தலைவராகவும் பணியாற்றினார். ஒய்வு பெற்ற மருந்துக் கலவையாளரான கந்தசாமி சமூக சேவைகளிலும் சிறந்த விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த
இறுதிக் கிரியைகள் பண்டத்தரிப்பு கீரிமலை வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில்
பூதவுடல் விளாவெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
2 guer: O1.10.2OO8
கன்னிர் அஞ்சரி அமரர் என்.எம். கந்தசாமி
குடாநாட்டின் மூத்தபத்திரிகையாளரும்
எமது சங்கத்தின் உப தலைவருமான
என்.எம்.கந்தசாமி 28.09.2008இல் காலமானதை அறிந்து நாம் கவலை அடைகின்றோம்.
குடும்பத்தவரின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்
வட இலங்கைப் பத்திரிகையாளர் சங்கம், யாழ்ப்பாணம்.
இவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இறைபதமடைந்தார். இவரின்

Page 34
q@@@@ 11909oysíali@ »
AJ199||Ft]+?1991|9||09@j Ļ9Ļolosபடிeநிரடி3க்குகிதுImq9os@> பூய01nெeழிப்L@gogi|JGr(9ვ)(g|டி9ரோரே 長9그9Drm的)에+++ 9n白ng過由 9「瑚湖亡田与9瑜归反9与9七电Ļotę@1090ī£ggேடிeயப9சிெ 長용그的制道ua, 仁9OT는中占邻与90坝十十十 gn@@u田”厉9@ufg翻点试与D可毛9项圈的电与9坝唱巨塔Tofழ9திர்ப?
++++++
ĢToạo ú?đĩ)uży@s, yreopisooreh
十十十முப9மகுரேம9* quom]qİRoq9olo) syrtodų91]Țillosgïo ystoaposòligÍ占闽图巨9巨m郎9 ++++長e그드南氏(5)恒9喻母巨9巨塔与T) 邻与Q9喻的1ņ9$ąj1991 TU9|| ? JƯiq Inqoqoqoff + 009Ģș1991,9(?乍94巨鼠的D 感u4009199@qĪ109||Toto
டி90ழிற்சிஐரbộ áo@jmowosą. Ji Lous-lÇİரயனிகிர்வி
与忠qs 편(學兵9홍홍兵家) 는中드仁中트그홍*Louňorg/sē Ļoøglosso gusaegsso *++!-—++
பரIரeபப்டு + டுடி98ஒழய0)
Ĵiroll-oqsmo
针对 !

தமிழ் நெடுங்கணக்கு
உயிர் எழுத்துக்கள்
அ ஆ இ ஈ உ உள எ ஏ ஐ ஒ ஓ ஒள ஃ
மெய் எழுத்துக்கள் 18
* க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் *
உயிர் மெய் எழுத்துக்கள் - 216
க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கெள ங் |ங்ா IB நவீ|ங் நு ங்ெ ங்ே ங்ை ங்ொ நோ ங்ெள ச சா சி சீ சு சூ செ சே |சை சொ சோ செள ஞ | ஞா ஞ | ஞ | ஒது வூா ஞெ |ஞே ஞை | ஞொ ஞோ (ஞெள ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டெள ண னாணிணி னுணு ணெ|ணே|ணை னொ னோ ணெள த தா தி தீ |து துT தெ தே தை தொ தோ தெள ந நா நி நீ நு நூ நெ |நே | நை | நொ நோ நெள ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பெள ம மா மி மீ |மு மூ மெ 1 மே மை மொ மோ மெள ய யா யி யீ யு யூ யெ |யே யை யொ யோ யெள ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரெள ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லெள வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வெள ழ | ழா ழி ழி |ழு மூ ழெ |ழே ழை ழொ ழோ ழெள ள | ளா |ளி |ளிளுளூ ளெ |ளே ளை ளொ |ளோ ளெள ற றா றி |றி |று |று றெ றே றை றொ றோ றெள ன னானினி னு னுT னெ |னே னை னொ னோ னெள
*கந்தையானாலும் கசக்கிக் கட்டு* *இளமையிற் கல் - கற்றபடி ஒழுகு"
A B C D E. F. G H I J K L M N OP Q R S T U V W XYZ
1 2 3 4 5 6 789 10 abcdefghijklmnopdr stuv waxyz

Page 35
எமது குடும்பத் தலைவர் நோயுற்று இருந்தபொழுது யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், இந்தியாவிலும் அவருக்கு மருத்துவம் செய்த மருத்துவ நிபுணர்கள், தாதியர்கள், அவ்விடங்களில் அமரருக்கு உதவிகள் பலசெய்து ஆதரவளித்தவர்களுக்கும், ஈடு செய்யவியலாத பேரிழப்பினால் நாம் கலங்கித் துவண்டபொழுது அவரின் இழப்பினையும், சேவையினையும் பிரசுரித்து, அஞ்சலி செலுத்திய உதயன், தினக்குரல், தினகரன் பத்திரிகை நிறுவனத்தாருக்கும் துயரிற் பங்குகொண்டு ஆறுதல் கூறி எம்மைத் தேற்றிய அன்புள்ளங்களுக்கும், மலர்வளையங்கள், மலர் மாலைகள் வைத்து மரியாதை செலுத்தியோருக்கும் தபால், தந்தி, தொலைபேசி மூலம் அனுதாபங்களைத் தெரிவித்தோருக்கும் இடரான வேளையில் இறுதிக்கிரியை, இறுதியாத்திரை போன்றவற்றிற் கலந்து கொண்டோருக்கும் மற்றும் சகலவழிகளிலும் உதவிநின்ற உறவினர், அயலவர், நண்பர்கள் யாவருக்கும் அந்தியேட்டி, வீட்டுக்கிருத்திய நிகழ்வுகளிற் கலந்துகொண்டு அன்னாரின் சேவைகள் குறித்து உரையாற்றி, ஆத்மசாந்திக்காகப் பிரார்த்தித்து, மதியபோசன நிகழ்விற் கலந்துகொண்டு சிறப்பித்தோருக்கும் எமது மனம் நெகிழ் நன்றிகளை இருகரங்கூப்பித்
தெரிவித்துக்கொள்கின்றோம்.
"சிவபவனம்" இங்ங்னம், கீரிமலை வீதி, குடும்பத்தினர்.
பண்டத்தரிப்பு
 


Page 36


Page 37
வாழ்க நிரந்தரம் வ வாழிய வாழியவே
தி
நீங்கத் தமி ஒவயத ே
தொல்லை வினைதரு சுடர்க தமிழ்நா டே
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வானம் அறிந்தனை வாழிய
 

ழ்க தமிழ் மொழி
தும் அளந்திடும்
வே
தன்மணம் விதி றிய வே
எங்கள் தமிழ்மொழி
66
ற்மொழி ஓங்கத்
D
தொலுை யகன்று
வாழ்க தமிழ்மொழி
தும் அறிந்து
ରାଧା
一ID5「I5G通 பாரதியார்.