கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொன்னுத்துரை கிருஷ்ணகுமார் (நினைவு மலர்)

Page 1
is 6 லத்
ண்கு
5/6o27
6Ô9F6)I (86IGTTT
பாண்ணுத்
66 ஸ்
சிவபத
6) O.
ம், மல்லாகத் வதிவிடமாகவு
變
ଓ}ଗ]
யாழ்ப்பான
கிரு
 

பிடமாகவும்,
தைப் பிறப்
: கிருஸ்ணகு
35sT600TL-6). Q5
தோ
ADAT
நப்பேறு குறித்த
I (S6)
இதி
I

Page 2
پ://
. .
- :
-
-
ܠܗ
-
-
- - У
 ܼ
. .
.
- . .
. . :
-
エ
- .
-- . ܦ
-
s
-
--
-
-
- ݂ ݂ ......... .
.
.
ܒ
ܒ ܲ
- -
V
 ܼܓ
 
 
 
 
 
 
 
 
 
 
 

uយថ្ងៃ ២៣Lu uកា680| 8Dយវារាំ) I Goloradio D
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே
- Oliufi troubleb6ft
யாழ்ப்பாணம் - மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டவரும் சைவ வேளாண்குலத் தோன்றலுமாகிய
mო* Ο
感蕊 $

Page 3
R அருள்வழியும் திருமுகமும் அழகுதவழ் புன்னகையும் / வருவிருந்து தேடும் வாழ்நிலையும் - உருக்கமுடன்
இறைவனடி போற்றும் இளநெஞ்சும் கொண்டுயர்ந்தோள்
\ அறம் வளர்த்த கிருஷ்ணகுமார். N
மனிதருள் மாணிக்கமாய் அன்புநிறை பேரொழியாய் இன்சொல் பேசி அன்புடன் எம்மைப் பேணிக்காத்து பண்புடனும், பாசத்துடனும் நேசத்துடனும் இன்முகத்துடனும் வாழ்வாங்கு வாழ்ந்து இன்று வானுறையும் தெய்வமாகிவிட்டே
எமது அன்பு தெய்வத்தின் இனிய நினைவுகளை
எங்களின் உதிரங்களில் சுமந்த வண்ணம் இக் கிருஸ்ணா மலரை அவரின் திருப்பாதங்களுக்கு காணிக்கையாக்குகின்றோம்.
குடும்பத்தினர்
லர் ஆக்கமும், வடிவமைப்பும்:
மரரின் தாய்மாமன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இல் றஇறந்தது இநதிறைந்தது
O7 இடு)
திதிநிர்ணய வெண்பா
போற்ற வாழ்ந்த கிருஷ்ணகுமார் உயர்ந்தோன் பூத்த இறைநாமம் தனைக் கொண்டு பரந்த அமரபக்க நவமி திதிதனில்
லாப் பேறடைந்தார் இனிதே தி சர்வசித்து வருட தைத்திங்கள் штиѣлъ நவமி அருள்நெறிச் செல்வர்
வி. செல்வத்தினம் .

Page 4

6.
விநாயகர் துணை
“ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம்பலவன் வானகுரு வாணிபதம் நாடு”
கடவுள் வணக்கம் திருவாக்குஞ் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் காதலாற் கூப்புவர் தம்கை.
தேவாரம்
திருத்தாண்டகம்
திருநாமம் அச்செழுத்தும் செப்பராகில்
தீவண்ணர் தினமொருகால் பேசார் ஆகில் ஒரு காலும் திருக்கோயில் சூழார் ஆகில்
உண்பதன்முன் மலர் பறித்திட்டுண்ணார் ஆகில் அரு நோய்கள் கெட வெண்ணி றணியார் ஆகில்
அளியற்றார் பிறந்தவாறேதோ என்னில் பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்துஞ் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கிள் றாரே.
- 0.1 -

Page 5
திருவாசகம்
அன்றே எந்தன் ஆவியும் உடலும்
உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னை ஆட்கொண்ட
போதே கொண்டிலையே? இன்றோ ரிடையூ றெனக் குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழை செய்வாய
நானே இதற்கு நாயகமே.
- மாணிக்கவாசகர்
திருவிசைப்பா பண் இத்தளம்
அன்ன நடையார் அமுத மொழியார்
அவர்கள் பயில் தில்லைத் தென்னை தமிழும் இசையும் கலந்த
சிற்றம் பலம் தன்னுள் பொன்னும் மணியும் நிரந்த தலத்துப்
புலித்தோல் பியற்கு இட்டு மின்னின் இடையாள் உமையாள் காண
விகிர்தன ஆடுமே.
- திருவாலிமுதனார்
திருப்பல்லாண்டு பண் - பஞ்சமம் சீரும் திருவும் பொலியச்
சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன்;
பெற்றதார் பெறுவா ருலகில்? ஊரும் உலகும் கழற உழறி
உமைமண வாளனு காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே.
- 02
 
 

பெரியபுராணம் இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறபுண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி அறவா! நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்.
திருப்புகழ் கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவர்
கற்பக மெனவினை கடிதேகும் மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகள்
மற்பொரு திரள்புய மதயானை மத்தள வ்யிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே முப்புர மெரிசெய்த அச்சிவ னுறையும் அச்சது பொடிசெய்த அதிதிரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை இபமாகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மனமருள் பெருமாளே.
வாழ்த்து வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவநிதி விளங்குக உலகமெலாம்.
ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியாரெல்லாம்.
- 03

Page 6
அமரர் அவர்களின் பேர்த்தியார் அமரர் விசுவலிங்கம் அன்னபூரணி அவர்கள் விரும்பி பழக்கும் தேவாரங்கள்
1. நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்திலிடர்ப்படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் இன்பமே யெந்நாரும் துன்பமில்லை தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யாண சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கெ நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம் மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.
2. எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணரமாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேமிய பண்ணியனே.
3. அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஒரு ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்தும் நீ
இறைவன் நீ ஏறுார்ந்த செல்வன் நீயே.
4. பேராயிரம் பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும் வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்து மாகித்
கிருஸ்ணா Dauor - 04
 

தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழுத்தின் சிலைகைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேறா ரானைப்
பொற்றாதே ஆற்றநாள் போக்கி கோனே.
திருவேயென் செல்வமே தேனே வானோர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர்ந்ந் சோதிமிக்க உருவேஎன் னுறவேஎன் ஊனே ஊனின்
உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற கருவேஎன் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடு பாவாய் காவாய் அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்
ஆவடுதண் துறையுறையும் அமர ரேறே.
எல்லா உலகமு மானாய் நீயே
ஏகம்ப மெவி யிருந்தாய் நீயே நல்லாரை நன்மை யறிவாய் நீயே
ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் நீயே பொல்லா வினைக ளறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென் மேல் வைத்தாய் நீயே செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்குமிட்டு
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக்கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதியென்றும்
ஆரரா என்றென்றே அலறா தில்லை.
அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்குத்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகமொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
- 05

Page 7
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கணைகடலைக் குலவரையைக் காற்றைக்
பெரியாணைப் பெரும்பற்றாப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
9 முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டார்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசார ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் னாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.
10. என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே
யிருங்கடல் வையத்து
முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை
முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி
வாணணை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும்
வழிபடும் அதனாலே.
m
இறை வழிபாடு
1. இறைவனின் மகிமையைப் பலர் கூடிப் பாடுவது
- பஜனை 2. இறைவனிடம் வேண்டுதல் செய்வது - பிரார்த்தனை 3. இறைவனின் பெயரை மனத்திற்குள் திரும்ப, திரும்ப
சொல்வது - ஜெபம் 4. இறைவனின் திருவுருவத்தை உள்ளத்துக்குள் ஆழ்ந்து
நினைப்பது - தியானம்
- 06
 
 

அமரர் பொன்னுத்துரை கிருஸ்ணகுமார் அவர்களின் s ク
A
வாழ்க்கை வரலாறு
நமச்சிவாய வாழ்க!நாதனிதாள் வாழ்க! WSZ, N இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! A கோகழி ஆணிட குருமனிதனி தாள் வாழ்க! V ஆகமம் ஆகிநின்று அணிணிப்பானி தாள் வாழ்க N ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க t WS
இந்து சமுத்திரத்தினர் திலகமென விளங்கும் ஈழநாட்டினர் கணி ணென்று போற்றப்படுகின்ற யாழ்ப்பாணத்தினி வடபாலி திகழ்வது வலிகாமம் வடக்கு என்னும் பிரதேசம். இப்பிரதேசத்தின் ஒரு நாயகமாகத் திருவும், கல்வியும் சீரும் தழைத்தோங்கும் செந்தமிழ்ப் பதியாம் மல்லாகம் கிராமம். இக்கிராமம் ஆன்றோர் வாழும் பெருமையும் மேன்மைகொள் சைவரீதி விளங்கும் சிறப்பும் gd 60) LuL 1951.
மல்லாகத்தில் சீரும் சிறப்புடனும் வாழ்ந்த முருகேசு வியாழாட்சி தம்பதிகளுக்கு கதிர்காமநாதன், பொன்னுப்பிள்ளை, பொன்னுத்துரை ஆகிய பிள்ளைகள் கிடைத்தனர். கனிஷ்ட புத்திரன் திரு. பொனினுத்துரை தனது கலவியை முடித்தபின் உள்ளூராட்சி திணைக்களத்தில், மல்லாகம் கிராம சபையில் தொழில் புரிந்து வந்தார். இவருக்கு திருமண காலம்வர பெற்றோர் அளவெட்டியைச் சேர்ந்த விசுவலிங்கம் அன்னபூரணி தம்பதியரின் மூத்த மகள் திலகவதியை திருமணம் செய்து வைத்தார்கள். இவர் தாய் மாமன் மகள் ஆவார். இவர் ஆசிரியராக தொழில் புரிந்து வந்தார். திருமணத்தின் பின் ஆசிரியர் தொழிலை விட்டுவிட்டார்.
இவர்களின் இல்லறத்தினர் பயனாக புவனகெளரி, விஜயகுமார், தாயளகெளரி, கிருஷ்ணகுமார் ஆகிய பிள்ளைச்செல்வங்கள் கிடைக்கப்பெற்றன. புவனகெளரியை அளவெட்டியைச் சேர்ந்த
- 07

Page 8
இராசரத்தினம் லீலாவதிதம்பதிகளின் புதல்வன் கோணேஸ்வரனை திருமணம் செய்து வைத்தார்கள். தற்போது இவர்கள் ஜேர்மனி நாட்டில் அபர்ணா, பிரணவன், தீபனா என்னும் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். விஜயகுமாருக்கு அளவெட்டியைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் நாகபூசணி தம்பதிகளின் புதல்வி ஞானாம்பாளை திருமணம் செய்து வைத்தார்கள். தற்போது இவர்கள் ஜேர்மனி நாட்டில் செந்தூரணி, சஞ்சிவ் என்று செல்வப் பிள்ளைகளுடனர் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களினி மூன்றாவது மகள் தயாளகெளரிக்கு மல்லாகத்தைச் சேர்ந்த நடராசா விக்கினேஸ்வரி தம்பதிகளின் புதல்வன் ஆனந்தகுமார் அவர்களை திருமணம் செய்து வைத்தார்கள். கம்ஷவர்த்தனி, கபிலாயனர், கபத்திரா எனினும் பிள்ளைப் பாக்கியத்துடன் மல்லாகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். கடைக்குட்டி கிருஸ்ணகுமாரே இம்மலரின் நாயகனாவார். இவர் 15. 07. 1976ல் பிறந்தார். இவர் பிறக்கும்போது இவரின் மேனியில் வலதுபக்கம் ஒரு நீலநிறமாக தோன்றி பின் மறையும். எடுப்பான தோற்றமும் கம்பீரமான பார்வையும் கொணர்டவராக இருந்தார். ‘விளையும் பயிரை முளையிலே தெரியும்’ எனும் முதுமொழிக் கிணங்க அன்பும், பணிபும், அறிவும் அடக்கமும் இளமையிலே பெற்றிருந்தார். கல்வியில் மிக்க ஆர்வமுள்ளவராக விளங்கிய இவர் தனது ஆரம்ப கல்வியை யா/மல்லாகம் கனிஷ்ட வித்தியாலயத்தி லும், நடுநிலை கல்வியை யா/மல்லாகம் மகா வித்தியாலயத்திலும் உயர்கல்வியை யா/இந்துக்கல்லூரியிலும் கற்றார்.
இவர் படிக்கும் காலத்தில் பல நிகழ்வுகளில் பங்குபற்றி பல மதிப்பான பரிசில்களைப் பெற்றிருக்கின்றார். அத்துடன் ஆசிரியர்களிடம் பெரும் மதிப்பு பெற்றிருந்தார். இவர் தெய்வபக்தி நிரம்பப் பெற்றவர்.
படிப்பைத் தொடர்ந்து செல்லாமல் வலிவடக்கு பிரதேச சபையில் வருமான மேற்பார்வையாளராக 01. 10. 1998ல் இணைந்தார். இவர் தொழில் புரியும் காலத்தில் தனது சக உத்தியோகத்தர் மத்தியில் சிறந்த உள்ளங்கொணர்டு எல்லோருடனும் இனிமையாக பழகினார். பல நண்பர்களுடன் இருந்தும் எவ்வித பழக்கங்களுக்கும் ஆளாகாமல் எல்லோராலும் நல்லவர் என்று போற்றப்பட்டார்.
&Gsidsorm uDøvst - 08ఫైవ్లో
 

இவர் தொழில் புரியும் காலத்தில் மணப்பருவம் எய்தியதும் பெற்றோர் இவருக்கு திருமணம் செய்ய எணர்ணியபோது சணர்டிலிப்பாயைச் சேர்ந்த ஆசிரியர் தெய்வேந்திரன் வசந்தாதேவி தம்பதிகளின் பிள்ளைகள் அனிதா, குமுதா அவர்களில் மூத்த மகள் அனிதாவை 07.06.2004ல் திருமணம் செய்து வைத்தார்கள். இவர் அன்பும், பணிபும், நற்குணமும் நிறைந்தவராவார். இவர்களுக்கு இறையருளால் பெறுவதற்கரிய பெணி பிள்ளை ஸர்மதா 11.08.2006 இல கிடைக்கப்பெற்றார். மனைவி அனிதா வலிகாமம் வடக்கு, தெல்லிப்பழை பிரதேசசெயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக தொழில் புரிகின்றார். அமரர் தனது பிள்ளையின்மேல் அளவில்லா பாசம் வைத்திருந்தார். அதேபோல் தனது சகோதரி தயாளகெளரியின் பிள்ளைகளை மிகவும் பாசமாக தூக்கி விளையாடுவார்.
செல்வரத்தினம் கெளரிதம்பதிகளுக்கும், பூபாலகிருஷ்ணன் சகுந்தலா தம்பதிகளுக்கும், பொன்மணிக்கும் அன்பு மருமகனாகவும், கதிர்காமத்தம்பி உமாகுலம் தம்பதிகளுக்கும், பாலசுப்பிரமணியம் உருக்குமணிதம்பதிகளுக்கும் அன்புப் பெறாமகனாகவும், முரளிதரன், சத்தியபாமா, வாகீசன், சத்தியப்பிரியா, ஜெயக்குமார், ஜெயவதனி, ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனாகவும், சுபகரணி, நிருபா ஆகியோரது மச்சானாகவும் விளங்கினார்.
gotii g56015.1 G5d 6061 ST6 gig56) National Certificate in Technology (Quantity Surveying December 2002 6IGoi6OILD Lutflaguia) 2002Lib se găoiG) G566ătirii. Lîsi National Certificate in Technology (Civil Engineering January 2007) Lifló03-uja) 2007(3.a) fgäg5u60l fig5Tii.
இப்படியிருக்கும் காலத்தில் இவர் வருமானவரி பரிசோதகராக பதவி உயர்வு பெற்று 01. 04. 2006 தொடக்கம் நல்லூர் பிரதேச சபைக்கு மாற்றலாகிச் சென்று தனது கடமைகளை ஏற்றார்.
அவர் கடமை காலத்திலும் தொழிலிலும் கடமை கணிணியம் கட்டுப்பாடு நேரந்தவறாமை ஆகிய குணங்கள் நிறைந்தவராக திகழ்ந்த ஒரு பெருந்தகை. இவரிடம் காணப்பட்ட ஒரு சிறந்த பணிபு தனது தாய் தந்தையின் மேல் வைத்த பாசம். இவர்களுக்கு ஒரு கஷடமும் வராமல் பாதுகாத்து வந்தார். அமரர் ஆன்மீகத்தில்
- 09

Page 9
ஆழமான ஈடுபாடுடையவர். தனது குலதெய்வமான நீலியம்பணைப் பிள்ளையாருக்கு தினமும் மாலைகட்டி பிள்ளையாருக்கு சார்த்த தனது தாயார்மூலம் செய்து வந்தார். அங்கே நடைபெறும் திருவிழாக் காலங்களில் பிள்ளையாருக்கு பலவிதமான தொணர்டுகள் செய்து வந்தார்.
நேற்று இருப்பவர் இன்று இல்லை. சற்று நேரத்திற்கு முன்பு இருந்தவர் இப்போது இல்லை என்பது வாழ்க்கை. இப்படியே மனிதர்களின் வாழ்க்கை முடிவடைகிறது. அவர்கள் வாழ்க்கை முடிவடைந்த மறுநாள் அவர்கள் பற்றி யாரும் எணர்ணுவதில்லை, பேசுவதில்லை. இதற்கு மாறாக சிலர்' தமது உயர்ந்த உள்ளத்தினாலும், சொற்களாலும், செயல்களாலும் வாழ்க்கையில் பெரும் சாதனைகளை ஆக்கி செல்கிறார்கள். மேற்கூறிய எடுத்துக்காட்டுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது அமரர் கிருஸ்ணகுமார் என்பவருடைய வாழ்வும் வளமும் அப்படியே அமைந்து விட்டது.
31.01.2008இல் தனது உத்தியோக நேரத்தில் திருநெல்வேலி என்னும் இடத்தில் காலதூதன் அவரின் புணர்ணிய ஆத்மாவை கவர்ந்து சென்றுவிட்டானர். அதாவது அவரின் 31வது வயதில் இப்படி ஆண்டவன் செய்துவிட்டார்.
இவ்வகையான ஒரு சிறந்த பணியாளனை, ஒரு சிறந்த இல்லத்தலைவனை, பெற்றோரினிமேல் மதிப்புமிக்க மைந்தனை சகோதரர்கள்மேல் பாசம்வைத்த சகோதரனை சிறந்த தந்தையை பிரிந்தது எமக்கு பேரிழப்பு ஆகும். அவரைப்பிரிந்து தாங்கொணாத் துயரில் மூழ்கியிருக்கும் அவரது அணிபு மனைவி, மகள், பாசமுள்ள பெற்றோர், சகோதரர்கள், மாமணி, மாமி, மைத்துனர்மார்கள், மருமக்கள், பெறாமக்கள், மற்றும் உற்றார் உறவினர்களுக்கும் ஆறுதல்கூறி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வலில: நீலியம்பணையில் வீற்றிருக்கும் விநாயகப் பெருமானை வேணர்டி பிரார்த்திப்போமாக. :-.
ஓம் சாந்தி சாந்தி சாந்திய
- 10
 
 
 
 

சர்வதேச இந்துமத குருபீட யாழ். மாவட்ட பிரதம அமைப்பாளர், கலாநிதி, சிவப்பிரம்மழறி சிவ. நித்தியானந்த சிவாச்சார்யார் அவர்கள் வழங்கிய
பிரார்த்தனை உரை
உலகில் எத்தனையோ பேர் பிறக்கின்றார்கள், சிலகாலம் வாழ்ந்து பின்னர் மறைந்து விடுகின்றார்கள் மறைந்தும் மறையாது மக்கள் மனதில் அழியாத தனி இடத்தை நிரந்தரமாக பெற்று அணையா மணி விளக்காய் பிரகாசிப்போர் அரிதிலும் அரிதே. அவ்வண்ணம் அமரத்துவம் எய்திய உத்தமரே அன்பர் பொன்னுத்துரை கிருஸ்ணகுமார் அவர்கள். இறப்பவர் எல்லாம் அமரரல்ல. அத்தகுதி ஒரு சிலருக்கே உண்டு. அத்தகுதி உடையவரே எங்கள் கிருஸ்ணகுமார் அவர்கள்.
“வெள்ளைத்தனைய மலர் நீட்டம் - மாந்தர் தம்
உள்ளத்தனைய உயர்வு” என்கின்ற வள்ளுவப் பெருமானின் தமிழ் மறைதாள் நெஞ்சில் எழுகின்றது. ஆம் பணமோ, பட்டங்களோ, பதவிகளோ ஒருவனை உயர்த்துவதில்லை. நல்ல உள்ளம் ஒன்றே அவனை உயர்ந்தோனாக்குகின்றது. அந்த வகையிலே உள்ளத்தால் உயர்ந்து நம் எல்லோரது உள்ளங்களிலும் நிறைந்தவரே இவ் அமரர் அவர்கள் மிக எளிமையானவர், அன்பு, அறம், இரக்க சுபாவம் மூத்தோரைப் பணிதல், சாந்தம், போன்ற நற்குணங்கள் அமரரோடு கூடிப் பிறந்தவை. இப்படிப்பட்ட ஒருவரை காலன் வஞ்சித்து விட்டான். எங்கள் எல்லோரது மனங்களில் மாணிக்கமாய், சகல செளபாக்கியங்களும் பெற்று வாழ்ந்த இப்பெருமகனின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூற வார்த்தைகளேயில்லை, அவர்களது மன அமைதிக்காகவும் அமரரின் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல பரம்பொருளை பிராத்தனை Qayu (86 IITLDIT85.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
இவ்வண்ணம் கலாநிதி சிவப்பிரம்மழீ. சிவநித்தியானந்த சிவாச்சார்யார் குடும்பத்தினர்
சங்கானை
-11

Page 10
நிறை பக்தர் அமரர் கிருஸ்ணகுமார்
யாரும் எதிர்பாரத விதத்தில் தீடீர் அமரத்துவம் அடைந்த கிருஸ்ணகுமார் அமைதியும் பண்பும் மிக்கவர். அவருடைய மரணத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவன். அவருடைய தகப்பனாரும் தாயாரும் எமது ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு மலர்மாலை அணியத்தருவதோடு விளக்கேற்றி வழிபட்டுச் செல்பவர்கள். அவர்களது மனம் வேதனைப்படும் படியான நிகழ்வு நடைபெற்றதையிட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைகின்றேன். கிருஸ்ணகுமாரின் மனைவிக்கும் குழந்தைக்கும் திரு.பொன்னுத்துரை அவர்கள் குடும்பத்தினருக்கு மன அமைதியையும், மனோதிடத்தையும் நீலியம்பனை ஷேத்திரத்தில் வீற்றிருக்கும் விநாயகப்பெருமான் கொடுத்தருளவேண்டி அவரின் பாதாரவிந்தங்களை வணங்கி ஆசி கூறுகிறேன்.
“மண்ணில் பிறந்தவர்கள் மாண்டு மறைந்திடுதல்
திண்ணம் இதற்குத் துயர் வேண்டாம் - எண்ணில் நெடுநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்தில்வுலகு.
இங்ங்ணம் பிரம்மழீ. இ. கு. சரவணபவக்குருக்கள் பிரதம குரு, நீலியம்பணை பிள்ளையார் கோவில், மல்லாகம்.
யக் கழற்றி ಇಳ್ದು ர்வதைப் போல்
உதறி
பிறர் கர்வத்தை மாற்ற நாம் உபயோகிக்க கூடிய மருந்து
அன்பு ஒன்றே.
- 12
 
 
 

கிருஸ்ணா
பணிவான பணியாளன்
நல்லூர் பிரதேச சபையின் வருமானப் பரிசோதகராக கடமையாற்றும் கிருஸ்ணகுமார் அவர்களின் திடீர்மறைவு சபைக்கு பெரும் இழப்பாகி விட்டது. மின்னாமல் முழங்காமல் ஏற்பட்ட இந்த பரிதாபகரமான நிகழ்வு அனைத்து உத்தியோகத்தரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது. மிகக்குறுகிய காலப்பகுதியில், குறைந்த வயதில் பதவியுயர்வு பெற்று எமது பிரதுெச சபைக்கு இடமாற்றலாகி வந்து கடமையை மேற்கொண்ட கிருஸ்ணகுமார் சபையின் சிறந்த கடமை வீரனாக காணப்பட்டார். பொதுமக்களின் பல வேறுபட்ட பிரச்சினைகளை இலகுவில் தீர்த்து வைத்த பெருமையும் இவருக்கு உண்டு. பணிவான பணி பான உத்தியோகத்தராக இருந்த இவர் சபையின் வருமானப் பகுதியின் பொறுப்பாளராக இருந்து செயல்பட்டார்.
யாழ் மாவட்டத்தில் பிரபல்யமாக விளங்கும் திருநெல்வேலிச் சந்தை சபையால் நடாத்த வேண்டிய காலப்பகுதியில் மறைந்த எமது உத்தியோகத்தர்களான திரு. ச. முத்துக்குமார், திரு. கொலின் தேவராஜா ஆகியோருடன் இணைந்து துணிச்சலுடன் அப்பணியை மேற்கொண்டு சபையின் நன்மதிப்பை பெற்று நிர்வாகத்துக்கும் உதவியாக இருந்து செயல்பட்ட கிருஸ்ணாவை எப்படி மறப்போம்? எங்கே காண்போம்? கள்ளம் கபடம் அற்ற புன்சிரிப்போடு தினமும் காணும் “கிருஸ்ணா”வின் இழப்பு நல்லூர் பிரதேச சபைக்கு பெரும் இழப்பாகி விட்டது. உன் மறைவால் சோகமே உருவாகி நிற்கும் எமது சபையின் உத்தியோகத்தர், ஊழியருடன் இணைந்து அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக.
தி. தவராஜா பொறுப்பதிகாரி நல்லூர் பிரதேச சபை உப-அலுவலகம்
- 13- s

Page 11
வலி வடக்கு பிரதேச செயலரின்
O O O
இரங்கற் செய்தி
அமரர் பொன்னுத்துரை கிருஸ்ணகுமார் அவர்கள் எமது பிரிவின் வலி வடக்கு பிரதேச சபையில் கடமையாற்றிய காலத்தில் தனது வரையறுக்கப்பட்ட பணிகளுக்கு அப்பால் தமது சபை உறுப்பினர்களுடன் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்கள் திறம்பட நடாத்த தனது முழுமையான பங்களிப்பை வழங்கியிருந்தார். குறிப்பாக எமது பிரிவில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்பு, மலசலகூட அமைப்பு திட்டங்களின் பயனாளிகளுக்கு பிரதேச சபையின் கட்டிட அனுமதிக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த தன்னாலான பங்களிப்பினை நல்கியிருந்தார். அத்துடன் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் எமது செயலக அணியுடன் சிநேகயூர்வ ஆட்டங்களை ஏற்படுத்தியும் செயற்பட்டவர். மிகுந்த தன்னடக்கமும் துடிப்பான கடமையுணர்வும் மிக்க இவரின் இழப்பானது எமது பிரதேசத்திற்கு பேரிழப்பாகும். இவரது திடீர் பிரிவால் ஆறாத் துயர் அடைந்துள்ள எமது செயலக உத்தியோகத்தரான இவரது மனைவி மற்றும் மகள் அமரரின் பெற்றோர், சகோதரர்கள், நண்பர்களிற்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். திரு. சு. முரளிதரன் பிரதேச செயலர், வலி வடக்கு, தெல்லிப்பழை.
நமது எண்ணம் உயர உயர மன அமைதியும் பெருகும். இறைவனின் திருவடிகளில் மட்டுமே உண்மையான அமைதியும் ஆறுதலும் அடைக்கலமும் கிடைக்கும் ‘நான் எனது' என்று எண்ணுபவை நம்மிடமிருந்து நீங்கினால் நமது ஆழ்மனதில், ஆத்மாவில் அமைதி நிலவுகிறது.
up6ої - 14 -
 
 

O
(GG) LD55GT
என் மகனே உன் தீடீர் மறைவை கேட்டவுடன் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோமே. எங்களால் நம்பவே முடியவில்லையே. என்மகனே உனக்கு இந்தநிலை வந்ததை நினைக்கும் போது எங்கள் மனம் கலங்கி துடிக்கிறது. நாங்கள் கும்பிட்ட தெய்வங்கள் எங்களை கைவிட்டுவிட்டார் ஏனோ தெரியாது. கடவுள் என்று நம்பி இருந்தோமே.
உன் பணிவான செயலும் பண்பான வார்த்தையும் நீ அப்பா என்று அழைக்கும் இனிய குரலும் என் மனதை விட்டு அகலாதடா. இந்த குரலை நான் எப்பொழுது கேட்பேன் என் செல்வமே.
உனது அம்மா உன்னை சின்னக் குழந்தையாகவே நினைக்கிறவ. என்னிடம் சொல்லுவா கண்ணனுக்கு புழுக்கொடியல் கச்சான் வாங்கி வாருங்கோ. நானும் உடனே வாங்கி வந்து கொடுப்பேன். நீ அடிக்கடி எடுத்து சாப்பிடுகிறதை பார்த்து நாங்கள் சந்தோசப்படுவோம். நீ எங்கள் சின்னக்குழந்தையடா. உன்னை விட்டு நானும் அம்மாவும் எப்படி இருக்கப் போகிறோம். உன் ஆதரவில் இருக்க ஆசைப்பட்டோம். நீ எப்ப வருவாய் என்று நானும் அம்மாவும் வழிபார்த்து இருப்போமே. இப்ப கலங்கி தவிக்கிறோமே நீலியம்பணை பிள்ளையாரை நம்பி வணங்கினோமே. அவர் எங்களை ஏமாற்றி விட்டார் இது விதியோ சதியோ நான் அறியேன்.
நீ கல்வியில் புகழ் அடையும் போது நான் எவ்வளவு சந்தோசப்படுவேன். கண்ணபிரான் கீதையில் கூறுகிறார் ஒன்று நான் அழியக்கூடிய இவ்வுடலல்லேன் உடல் வெளியிலுள்ள இழிவான வெறும்கூடே என்பது இன்னொன்று நான் என்றும் இறவாத சிதைவற்ற பரந்த ஆத்மா ஆவேன் என்பது. ஆம் ஆன்மா அழிவுறக்கூடுமாயின் அது நிச்சயமாய் வருத்தத்திற்குரியதே ஆனால் அதுவோ அழிவற்றது. கடவுள்தான் மனதில் அமைதியை தரவேண்டும். பிறப்பும் இறப்பும் இரட்டைக்குழந்தைகள் இருப்பது மெய்யே என்று எண்ணி மனம் அமைதி அடைவோம். ஆத்மா சாந்தி அடைய வேண்டி எல்லாம் வல்ல நீரியம்பணை பிள்ளையாரைப் பிரார்த்திக்கின்றேன்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
உன் அன்பு அப்பா
- 15

Page 12
பாசமுள்ள எனது கடைக்குட்டி
O O
அன்பு மகன்
எண் அன்புள்ள மகனே உனக்கு கிருஷ்ணகுமார் என்று பெயரும் வைத்து அன்புடன் தெய்வக் குழந்தை என்று மார்மேலும் தோள்மேலும் போட்டு காதலித்துகாப்பாற்றிச் சீராட்டி வளர்த்தேனே. அதுவும் காணாது என்று அன்புடன் கண்ணா என்று அழைத்தேனே, உன் திடீர் மறைவு எங்களுக்கு அதிர்ச்சியை தந்து விட்டது. வேலைக்கு போகும்போது அம்மா போய் வருகிறேன் என்று கூறினாயே. எண் செல்வமே அந்த இனிய குரலை எப்பொழுதுகேட்பேண்.நானும் உண் அப்பாவும்நீஎப்போ வருவாய் என்று காத்து இருப்போமே. உன்னைக் கணிடவுடன் எங்களுக்கு எவ்வளவு சந்தோஷம். எண் மகனே கணிணா எங்கு சென்றாய். உன்னை விட்டு அப்பாவும் நானும் எப்படி இருக்கப் போகிறோமோ தெரியாது. நீஎங்கள் கணிமுன்நிற்பது போல் தெரிகிறது. நீளங்களுடன் இருப்பாய் எங்களைக் காப்பாய் உன் ஆதரவில் நாங்கள் இருப்போம் என்று இருந்தோமே. இப்ப நீ இல்லாமல் தவிக்கின்றோம். எங்களால் தாங்கமுடியவில்லையே உன் பாசமுள்ள மனைவிதான் தாங்குவாளா. உன் அன்புக்குழந்தைதான் தாங்குமா. உணர் அணி புச் சகோதரர்கள், மைத்துனர்கள்தானி தாங்குவார்களா? எங்கள் ஒருவராலும் இந்த பிரிவைத் தாங்கமுடியவில்லையே. உன்மாறாத புன்னகையுடன் நேச உணர்வுடன் உணி அன்புச் செல்வத்தை தூக்கி உன் மடிமீது வைத்து கொஞ்சி மகிழ்வாயே, இப்பொழுது எங்கு போனாய். நீரியம்பனை பிள்ளையாரை குலதெய்வமாக வணங்கி வந்தோமே. அவர் எங்கே போனார். பிள்ளையாரைநம்பி இருந்தோமே அவரும் கைவிட்டு விட்டாரே.
என்மகனே நீஅன்பும் பணிபும் இறைபக்தியும் உடையவனாக இருந்தாய். இன் சொல்லைத் தவிர வேறு வார்த்தைகள் கூறமாட்டாயே. உயர்வான பதவியில் இருந்தாலும் எல்லோருடனும் அண்பாக பழகுவாயே. அதே நேரம் எல்லோராலும் மதிக்கப்பட்டாயே. மனம் நோகாதபடி பேசுவாயே. உள்ளத்தால் உயர்ந்துநின்றாயே.நீபிறந்த மணினுக்கு சிறப்பையும், புகுந்த மணர்ணுக்கு பெருமையையும் வாரிவழங்கினாயே.
س- 16 -
 
 

நீ கல்வியில் எந்த துறையில் சென்றாலும் சித்தி அடைவாய். இதற்கு காரணம் உனக்கு இருந்த சீரிய நினைவாற்றலும், உடனே புரிந்துகொள்ளும் தன்மையும் இருந்தமையாலாகும். உனது கல்வியில் அனைத்திலும் சிறப்பாகத் தேறினாயே.
உங்கள் மகன் சான்றோனி அவரைப்போல் மகன் எங்கே இருக்கிறார்கள் என்று மற்றவர்கள் சொல்லக்கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். “ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டதாய்” என்ற வள்ளுவரின் குறளே எனக்கு ஞாபகம் வந்தது.
நல்லவர்கள்சாவதில்லை. எல்லோனிக்மனங்களில்நின்றுநிலைத்திருப்பர். எழுத்தாணி முனை தன்னால் எழுதிவந்த விதியெல்லாம் அழிந்தாலும் அழுதாலும் அகலாதே என்பது பழமொழியாம்.
துளிர் என்றும் மொட்டென்றும் பூவென்றும் காயென்றும் பழம் என்றும் காலனுக்கு பேதமேது மரணம் மனித வாழ்க்கையின் முடிவல்ல. அடுத்த வாழ்க்கையின் ஆரம்பமாகும். எங்கள் உடல் ஆடையைப் போன்றது. பழுதுபட்ட ஆடையை எறிந்துவிட்டு புதியதை தேடுவது போல ஒரு சரீரத்தை விட்டு மற்றையதுக்கு போகும்போது தொடர்புகெடுவதில்லை. ஆத்மா கெடுவதுமில்லை. கொல்லப்படுவதுமில்லை. ஆயுதங்கள் ஆத்மாவை வெட்ட மாட்டா என்று கிருஸ்ணர் கீதையில் கூறுகிறார். இந்த தத்துவத்தைக் கொணர்டு மனதைத் திடப்படுத்துவோம். மரணம் இயற்கைதான் ஆனாலும் அதை பூரணமாக ஏற்றுக்கொள்ளமுடியாமல் தவிக்கின்றோம்.
அண்புக் கணர்ணா நீ கணிணனின் கழல் அடிக்கே சென்று இணைந்து விட்டாயோ. நாங்கள் நீலியம்பணை பிள்ளையாரை எங்கள் குலத்தெய்வமாக வழிபட்டவர்கள். அவரது ஆத்மா இறைவனி திருவடியோடு இணைந்து இன்புற்றிருக்க எல்லாம் வல்ல நீரியம்பனை பிள்ளையாரை மிக வினையத்தோடு வேண்டி வணங்குகின்றேன்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி1
9-6 elair elabudst
- 17- கிருஸ்ணா:

Page 13
எங்கள் சோதரனே ஒரு மனிதனை
எங்கள் அன்புச் சகோதரனே! ஏன் எங்களை விட்டுப் பிரிந்து சென்றாய்? உன் பிரிவை இன்னும் எங்களால் நம்பமுடியவில்லை இல்லை எனக்கூற எங்கள் மனம் ஒப்பவில்லை எங்கள் இனிய சகோதரனே! நான் கண்ணன் கதைக்கின்றேன் எனக்கூறும் குரல் இனிக் கேட்காதா? இனி எப்போது எப்படிக் கேட்போம்? எங்கள் அன்புச் சகோதரனே! ஏன் எங்களுடன் கூடப்பிறந்தாய்? பாதிவழியில் விட்டுப்பிரிவதற்கா! அன்பாக இருந்தாய் ஏன் எங்களை மறந்து சென்றாய் எங்கள் அன்புச் சகோதரனே! எம் வாழ்நாள் முழுவதும் உன் நினைவுடன் வாழ்வோம்.
அத்தான், அக்கா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கணிணா நீ எங்கு சென்றாய்?
ஆசைக்கு ஒர் தம்பி கண்ணா நீ இருக்கையிலே ஆதரவு உண்டென்று இறுமாந்து இருந்தேனே தொலைபேசியில் உன்பிரிவை உரைத்த செய்தி பொய்யாக இருக்காதோ என்று நானும் புலம்பியே தவித்தேன் கண்ணா இன்ரர் நெற்றினிலே உன் உயிரற்ற உடலை பார்த்து உருக்குலைந்து நின்றேன் கண்ணா கிழமைக்கு ஒரு தடவை என்றாலும் நீ வந்து தொலைபேசி எடுத்து குசலம் கேட்டிருப்பாய் தொலைபேசியில் அண்ணா என்று அழைத்தகுரல் இன்றும் என் காதினிலே ரீங்காரம் கேட்குதடா தாயகம் நாம் வந்தபோது உன் அலுவல்களை ஒதுக்கிவிட்டு எம்முடனே கூடியிருந்து குலாவியதை மறப்பேனா இன்முகம் காட்டி இனிய மொழி பேசி எல்லோரையும் உன் அன்பில் கட்டிப் போட்டுவிட்டு எமைப் பிரிந்து நீ மட்டும் எங்கு சென்றாய் கண்ணா உன்னை கரம்பிடித்து உற்ற துணை நீ என்று நம்பி வந்த அனிதாவை எப்படி நான் தேற்றுவேன் கண்ணா கண்ணா என்று உன்னையே உயிர் மூச்சென்று எண்ணிய அப்பா அம்மாவை தேற்றுவேனோ உன் பிரிவை அறியாது சிரித்திடும் உன் மழலை செல்வத்தை கண்டுதான் மனம் ஆறுவேனோ ஊர்வலமாய் உன் உடலை கொண்டு சென்று உற்றாரும் உறவினரும் அடக்கம் செய்தாலும் ஊன்றிவிட்ட உன் அன்பை அடக்க முடியுமா கண்ணா உன்னை எப்படித்தான் மறந்திருப்பேன் என்று நானும் புலம்புவதை விட வேறு என்ன செய்யமுடியும் என்றும் உந்தன் நீங்காத நினைவுடனே தனிமரமாய் வாடியே நிற்கின்றேன்.
உன் அண்னை விஜயகுமார்
韃 - 19 - கிருஸ்ணா மலர்
S. ក្ត லா

Page 14
o do LDuJub
5EOTEOTTI
உம்மை நினைக்க எனது மனம் குமுறுகிறது
எனது அருமை மருமகன் கண்ணனின் அகால மரணச்செய்தி கேள்விப்பட்டவுடன் நான் என்ன செய்வது என்று தெரியாமல் மனம் தடுமாற, நெஞ்சு பதற தொடங்கிவிட்டது. இப்படி அவருக்கு ஒரு கதிவரவேண்டுமா? இதனை நான் கனவிலும் நம்பவில்லை. அதுவும் கடமை நேரத்தில் இப்படி அகால மரணம் அடைய ஏன் கடவுள் விட்டார். மனவேதனை தாங்கமுடியாமல் இருக்கிறது.
அத்தான் (கண்ணனின் மாமா) அவரும் தீராத கவலையில் மூழ்கிப்போயிருக்க, உமது அப்பா, அம்மா, மனைவி படும் துயரத்தை என்னால் பார்க்க முடியாமல் இருக்கிறது. இவர்களின் துயரத்தை போக்க இறைவன் தான் கருணை காட்டவேண்டும்.
பெற்றோர் சொல்லை அலட்சியம் செய்யும் இந்த காலத்தில் தாய் தந்தை மீது வைத்திருந்த பாசம், மரியாதை கலந்த பக்தியைக் கண்டு எனக்குள்ளே ஆச்சரியப்படுவேன். வசதியாக இருப்பவர்கள் ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள். எங்கள் கண்ணா அப்படியில்லாமல் எளிமையாக கண்ணியமான, கட்டுக்கோப்பான வாழ்க்கை வாழ்ந்து வந்ததை நான் கண்டுள்ளேன்.
புன்னகை பூரித்த முகமும், சாந்தமான பார்வை, எவருக்கும் தீங்கு விளைவிக்க எண்ணாத உள்ளம், சேவையில் நல்ல எண்ணம், எல்லோரையும் இன்முகம் காட்டி வரவேற்கும் பழக்கம், அமைதியும் அடக்கமும் கொண்ட நிஜ அன்பும், பண்பும் அமையப்பெற்ற குணங்களும் இவரிடம் காணக்கூடியதாக இருந்தன.
உலகில் இருக்கும்போது வாழும் காலத்தில் அவரைப் புகழ்வது
புகழல்ல. இறந்த பின் புகழ்வதே சிறப்பு. புகழுக்குரியவராக வாழ்ந்த அந்த அன்பு மனிதரைப் பற்றி எல்லோரும் அறியவேண்டும். இந்த
- 20
 
 

நினைவுமலர் அனைவரது இதயத்திலும் புகழ் மணம் வீசவேண்டும். எமது வீட்டிற்கு போவதாக லண்டனில் வாழும் சின்னமாமாவிற்கு தொலைபேசி மூலம் சொல்லியிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. கடவுள் ஏன் இப்படி செய்தார். எமது வீட்டிற்கு வரும்போது எமக்கு வேண்டிய வேலைகள், குறிப்பாக மின் இணைப்பு பழுது அடைந்து இருந்தால் அதை சரிசெய்து தருவார். இனி யார் செய்து தருவார்கள்.
அமரரின் மரணக்கிரியையின்போதும், இறுதி ஊர்வலத்தின்போதும் கலந்துகொண்ட மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது ஒரு பெரும் மனிதரை இழந்துவிட்டோம் என்பதை தெரிவுபடுத்தியது.
பிறப்பது நிச்சயமில்லை, ஆனால் பிறந்தவர் இறப்பது நிச்சயம் இதைத்தான் பொய்யாமொழிப் புலவரும் நெருதல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமையுடைத்து இவ்வுலகு என்று திருக்குறளில் ஆணித்தரமாக கூறியுள்ளார்.
மறைவு என்பது இறைவனால் வழங்கப்பட்ட நியதியே ஆகும். அணிந்திருந்த ஆடை கிழிந்துவிட்டால் வேறு உடை மாற்றுவது போன்று ஆன்மாவும் உடலை மாற்றிக்கொள்கிறது. மேலும் இயற்கையை நினைத்து எப்போ முடிந்த காரியம், யாம் அறியோம், முழுவதும் உண்மை ஒரு பொல்லாப்பும் இல்லை என்ற யோகர் சுவாமிகளின் அருள்வாக்கை நினைத்து மன அமைதி பெறுவோம்.
அமரரின் பிரிவால் துயருறும் தாய், தந்தை, மனைவி, பிள்ளை மற்றும் உற்றார், உறவினர் ஆகியோருக்கும் ஆறுதல் கூறி அவரது ஆன்மா சாந்தியடையவேண்டி எல்லாம்வல்ல அவரின் குலதெய்வமான நீலியம்பனை பிள்ளையாரை வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
திருமதி கெளரி செல்வரத்தினம் (6lurfuðIIÓ)
அப்புக்காத்து வளவு அராலி மத்தி வட்டுக்கோட்டை.
- 21 -

Page 15
மாமா உங்களை நினைக்க மனம் துடிக்கிறது
அன்பு மாமாவே! என் இனிய மாமாவே! எங்களை விட்டு ஏன் பறந்து சென்றாய்? பொல்லாத காலன் வீதி வழி வந்து சொல்லாமல் உன் உயிர் கவர்ந்து சென்றானே! என் இனிய மாமாவே இறைவா மீண்டும் எங்களுடன் சேர்த்து விடு
மருமகள் கோ. அபர்னா
65db6 DIIDIT!
கண்ணன் மாமா என யாரை அழைப்போம்? மாமா உங்களுடன் பழகிய காலமோ ஒரு மாதம் நீங்கள் எங்களுடன் குழந்தையாய் மாறி விளையாடியதை நினைக்கவா?/ எங்களை எல்லா இடமும் கூட்டித் திரிந்ததை நினைக்கவா? உங்கள் சிரிப்பை எங்களால்
மறக்கமுடியவில்லை S. உங்கள் குரல் Telephone இல் இனி கேட்காதா என ஏங்கி நிற்கின்றோம் அன்பு மாமாவே மீண்டும் பிறந்து எங்களுடன் வந்து சேர்ந்துவிடு
மருமக்கள் கோ. பிரவணன், கோ. தீபனா
- 22 -
 
 
 
 
 
 

எங்கள் சித்தப்பா எங்கே தாயகம் நாம் வந்தபோது நாம் கண்ட சித்தப்பா இன்று இல்லை என்று எண்ணி வாடுகின்றோம் நாமிங்கு மோட்டார் சைக்கிள் ஏற்றி ஊரெல்லாம் காட்டி இனிக்க கதைகள் சொல்லி எம்மையெல்லாம் மகிழ்வித்தீர் எங்கள் தாயகத்தின் நிலையினால் உங்களை நாமிழந்து வாடுகின்றோம் ஜேர்மனியிர்
அன்பு பெறாமக்கள் வி. செந்தூரன், வி. சஞ்சீவ்
oTGOIgl5 «OHGóñL LDIILDII
IDTமா என்னை விட்டு பிரிந்து விட்டார் எனக்கு கேட்டது எல்லாம் தருவார். இப்போது மாமா இல்லை எனக்கு கொக்கு காட்டி வளர்த்தவர். மாமா என்னை தூக்கி வளர்த்தவர். இப்போது மாமா இல்லை நான் என்ன செய்வேன்
எனக்கு மாமா என்றால் எவ்வளவோ ஆசை. என்னிலை அன்பு வைத்த மாமா இப்போது இல்லை. மாமாவிற்கு இப்படி நடந்து விட்டது. மாமா இல்லாவிட்டாலும் நான் பாசம் வைப்பேன். மாமா என்னை பாடசாலையில் விட்டுவிட்டுத்தான் தன் வேலைக்கு போவார்.
எப்படி மாமா உங்களை மறப்பேன். எனக்கு சட்டை வாங்கித் தருவார். நான் உங்களின் வண்ணக்கட்டியல்லவோ! மாமா என்னைக் கேட்ட இடத்திற்குகெல்லாம் கூட்டிக்கொண்டு (BLTGuTT. பாசத்தை கொட்டின மாமா எங்களை விட்டுப் போட்டார். நாங்கள் இனி எப்போது மாமாவை காண்போம். இனி நாங்கள் என்ன செய்கிறது.
அன்பு மருமகள் ஆ. கம்சி

Page 16
வலி வடக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் திருமதி அனிதா கிருஸ்ணகுமார் அவர்களின் கணவர்
அமரர் லிபான்னுத்துறை கிருஸ்ணகுமார் அவர்களது நீங்கா நினைவுகளில்.
பேரதிர்வாய் நெஞ்சினில் வீழ்ந்து பெருவலியாய் மனதில் நிலைத்து அதிர்வுகள் இன்னமும் ஆறாமல் தேற முடியாது திகைத்து நிற்கும் உறவுகள் உழன்று சுழன்றாலும் உன் நினைவுகள் நீங்க மறுக்கிறதே! இழப்புகள் இயல்பாய் போன எம் மண்ணில் உன் பெயரும் இடம்பிடிக்கும் என நாம் எண்ணவில்லை - நண்பனே ஈடது செய்ய இயாமல் ஏங்கித் தவிக்கின்றேன் - இளைஞனே.
உன்னவளின் சிரித்த முகம் கண்டு உவகை கொண்டு பழகிய நாட்களை எண்ணிப் பார்க்க முடியவில்லை. அவளை ஏறிட்டு நோக்க இயலவில்லை. கள்ளமில்லா அவள் சிந்தையில் கவலைதனை நிலைக்க விட்டுவிட்டு காலனவன் கடுகதியில் கவர்ந்ததேனோ காரணத்தை யாரிடம் கேட்க வைக்க உன் உறவை உச்சரித்தே உன் வரவை எதிர்பார்க்கும் உன் மழலை முகம் நோக்க ஓடோடி வாராயோ!
அலுவலகப் பணிகளில் அயராது உழைத்து விட்ட அயர்ச்சியில் சென்றனையோ அணங்கவள் அன்பினிலே திளைத்து விட்ட களிப்பினில் கடந்தனையோ ஆறாமல் தேறாமல் அல்லற்படும் அன்புறவுகளுக்காய் அருமைக் கண்ணனே அடுத்த உயிர்ப்பெடுத்தே ஓடிவாராயே பிறப்புண் டேல் இறப் பென்னும் பேரூண் மை தெரிந்திருந்தும் உண்மைதனை உணரமுடியாது தவிக்கின்றேன் தனையனே.
இவரது திடீர் பிரிவால் ஆறாத்துயர் அடைந்துள்ள எமது செயலக உத்தியோகத்தரான இவரது மனைவி மற்றும் மகள் அமரரின் பெற்றோர், சகோதரர்கள், நண்பர்களிற்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ப. இராஜகோபலன் தலைவர் சகல நலன்புரிச்சங்க அங்கத்தவர்கள் சார்பில் பிரதேச செயலகம்,வலி வடக்கு, தெல்லிப்பழை.
ணா மலர் - 24
 
 

அந்தளிஈைய்வோகேன்னனுக்கு
கண்ணன் குழந்தைகளை ஆசையாக, பாசமாக அழைக்கும் பெயர். குழலூதும் கண்ணது குறும்புத்தனங்களை மனதிற் கொண்டு அழைக்கும் பெயர். பொன்னுத்துரை திலகவதி தம்பதியர் தாம் பெற்ற தவப்புதல்வனுக்கு (15. 07. 1976) கிருஸ்ணகுமார் என்று பெயரிட்டதோடு வீட்டிலே கண்ணன் என்று வாய்நிறைய அழைத்து மகிழ்ந்தனர். அத்தகைய மகிழ்ச்சிக்குரிய கண்ணன் இன்று அவர்களைத் துயரத்திற் துடிக்க விட்டு அகால மரணத்தைத் தழுவியுள்ளார். இளமைத் தோற்றம், இனிய சுபாவம், யார்க்கும் எளிதில் உதவும் உயர்ந்த பண்பு, பெற்றோரை மதித்தல், மற்றோருக்கு மரியாதை செய்தல் இவரது உயர்ந்த குணம். பெற்றோர் மட்டுமா தவிக்கின்றனர். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்கினி சாட்சியாகக் கரம் பிடித்த அனிதா துணையைப் பிரிந்து ஆறாத் துயரில் மூழ்கியுள்ளார். கிருஸ்ணகுமார் அனிதா தம்பதியரின் இல்லறவாழ்வின் இனிமைக்கு ஆதாரமாய் உள்ள ஸர்மதா தந்தையின் வரவுக்காக ஏக்கந்தேங்கிய கண்களுடன் சோர்ந்துபோயுள்ளார். அவரது நண்பர்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. இதற்கெல்லாம் முடிவு என்ன? யாரைக் குறை கூறுவது. யாரை மனம் நோவது? வார்த்தைகளை மீறிய சோகம். மொழிக்கும் ஓர் எல்லையுண்டு. அதற்குமேல் அது மெளனித்து விடும். பேரின்பத்திற்கும் பெருந்துயரத்திற்கும் வார்த்தைகள் இல்லை. சப்தப் பிரமமாக உள்ள அந்தப் பரம்பொருள் கூட ஒரு கண்ம் மெளனித்து விட்டது போலும்.
கண்ணன் என்ற பண்பாளனுக்கு உயிர் கொடுக்கத் தாய் திலகவதியின் கருவறையைத் தேர்ந்தெடுத்த கடவுள் அக்கருவறையே அதிர்ந்து கல்லறையாய்ப் போனதை ஏனோ கண்டுகொள்வில்லை.
மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை எந்தோற்றான் கொல் எனும் சொல் என்ற வள்ளுவர் வாக்கிற்கமைய இன்று எல்லோரும் கண்ணனின் குணநலன்களையும், பண்பையும் போற்றுகின்றனர்.
காரணம் இன்றிக் காரியமில்லை. பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. இன்பமும், துன்பமும் நமக்குச் சொந்தமானவையல்ல. உடலோடு இருக்கும்வரை தான் உறவுகள். பிறந்தார் பெறுவது பெருந்துயரம். பிறவார் பெறுவது பெரும் பேரின்பம். இவ்வாறு தத்துவம் பேசினால் மனம்
- 25- கிருஸ்

Page 17
ஏற்றுக்கொள்ளாது. ஆனால் அதுதான் உண்மை. உலக நியதி. அவமிருத்து என்று சொன்னாலும் அதுகூடக் கடவுள் வகுத்த நியதி என்றே எண்ண வேண்டியுள்ளது. ஒருவன் நீண்ட காலம் வாழ்கிறான் என்றால் அவன் உடல் எடுத்ததன் நோக்கம் இன்னும் நிறைவு பெறவில்லை என்று விளங்கிக்கொள்ளல் வேண்டும். முற்பிறப்பில் நாம் செய்த வினைகளின் காரணமாகவே எமக்கு இப்பிறப்புத் தரப்பட்டுள்ளது. அதிலும் நாம் செய்யும் வினைகள் மேலும் நமக்குப் பிறப்பையே பலனாகத் தரவுள்ளன.
மேலைக்கு வித்துமாகி விளைந்தவை உணவுமாகி ஞாலத்து வருமா போல நாம் செய்யும் வினைகள் எல்லாம் ஏலத்தான் பலமாய்ச் செய்யும் இதமகிதங்கட் கெல்லாம் பூலத்ததாகி என்றும் வந்திடும் முறைமை யோடே
(சிவஞான சித்தியார்) ஒருவன் விதைத்து விளைந்த தானியங்கள் உணவாகவும், பின்னர் விதையாகவும் வருவது போல நாம் செய்யும் நல்வினை தீவினையெல்லாம் இன்ப துன்பப் பயனாகியும் மேலும் செய்யப்படும் நல்வினை தீவினைகட்கெல்லாம் காரணமாகியும் என்றும் முறையாக வந்துசேரும். பிறப்பு என்பது ஆன்மா ஒரு உடலைப் பெறுகின்ற நிகழ்ச்சி. இறப்பென்பது ஆன்மா இவ்வுடலைப் பிரிந்து செல்லும் நிகழ்ச்சி. நித்திரைபோலும் சாக்காடு மீண்டும் துயிலெழுவது போலும் பிறப்பு. இவ்வளவு எளிமையான சம்பவம் உறவுகளின் உள்ளத்தை எப்படி எப்படியெல்லாம் பாதிக்கின்றது. பாதிக்கப்பட்டவர்கள் உள்ளம் உண்மையை உணர்ந்து தேறவேண்டும்.
பேறிழவின்ப மோடு பிணி பூப்புச் சாக்காடென்னும் ஆறுமுன் கருவுட்பட்டதன் விதி யநுபவத்தால் ஏறிடுமுன்பு செய்த கன்மமிங்கிலற்றிற் கேது தேறு நீ யினிச் செய் கன்ம மேலுடற் சேருமென்றே
(சிவஞான சித்தியார்) இப்பிறப்பிலே கல்வி, செல்வம், உயர்பிறப்பு முதலியவற்றைப் பெறுதலும், அவற்றைப் பெறாதிருத்தலும், இன்பமும், துன்பமும் நீடியஆயுளும் குறைந்த ஆயுளும் ஆகிய ஆறும் பிறக்குமுன் சூக்குமமாய்க் கருவினுள் அடைத்து கிடந்தனவாம். அங்ங்ணம் அமைக்கப்பட்டவை முயற்சியோடு கூடிய அனுபவத்தாற் பின் தூலமாய் வந்து பொருந்தும். அதாவது முற்பிறப்பிற் செய்த நல் வினைகளுக்குந் தீவினைகளும் இப் பிறவியில் அனபவிக்கப்படும்போது இழவு, இன்பம் பிணி, பூப்பு, சாக்காடு என்னும் ஆறினுக்கும் காரணமாம்.
- 26
 
 

இத்தகைய விளக்கங்கள் பெரியவர்களுக்குச் சற்று ஆறுதலைத் தரலாம். உலகிற் பிறந்தவர்கள் வாழ்ந்துதான் ஆகவேண்டும். நாம் விரும்பிப் பிறந்தோமா, இல்லை நம் பிள்ளைகள் நம்மைக் கேட்டுப் பிறந்தார்களா? ஆனால் வாழ்க்கை வாழ்வதற்குத்தான். வாழ்க்கைப் பயணத்தில் நல்லது, கெட்டது, இன்பம், துன்பம் இரண்டும் எம்மைக் குழப்புகிறது. ஒன்றை நாம் உறுதியாக நம்பவேண்டும். உயிர் அழியாத வஸ்து. உடலுக்குத்தான் இளமை, பூப்பு, நோய், சாக்காடு யாவும். உயிர் கொல்வதும் இல்லை. கொல்லப்படுவதும் இல்லை. ஒருவன் தான் கொல்கிறேன் என்று நினைப்பதும் கொல்லப்படுகிறேன் என்று நினைப்பதும் அறியாமை காரணமாகவே என்று கீதையிலே கண்ணன் கூறுகிறான். கடமையைச் செய், பலனை எதிர்பாராதே கடமையைச் செய்யமட்டுமே உனக்கு உரிமையுண்டு. அதன் பலனுக்கு நீ உரிமையடையவன் அல்ல என்ற பகவத் கீதையில் வாசகங்கள் எம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
கண்ணன் பெற்றோருக்கு நல்மைந்தனாக மனைவிக்கு அன்புக் கணவனாக, குழந்தைக்குப் பாசமிகு தந்தையாக இருந்தது இன்றோ வெற்றிடமாய் நிரப்பமுடியாத வெளியாகி விட்டது. எமது உயர்தத்துவ நூல்களான உபநிடதங்கள் எமக்குச் சில உண்மைகளை எளிதாக உணர்த்துகின்றன. பிருகதாரணியாக உபநிடதத்திலே இடம்பெறும் உரையாடல் எமது உள்ளத்திற்குச் சற்று உரமூட்டுவதாயுள்ளது.
கணவன் மனைவி, குழந்தைகள் என்பன எல்லாம் கணவன் என்பதற்காகவோ, மனைவி என்பதற்காகவோ, குழந்தை என்பதற்காகவோ உயர்ந்தவை அல்ல. அவை ஆத்மாவின் காரணமாகவே உயர்ந்தவை. கணவன், மனைவி, குழந்தை என்ற உறவுக்காக அவை போற்றப்படுவதில்லை.
இப்படி கண்ணனின் இழப்பைத் தாங்கும் பக்குவத்தை முதுமை நிலையிலுள்ள அவரது பெற்றோருக்கும், அவரது குடும்பத்தவர்க்கும் கொடுக்கவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழி எமக்கில்லை. கண்ணனின் தாயார் சிந்திய கண்ணீர், கொட்டிய வார்த்தைகள் அவர் வாழ்க்கை பற்றிய மயக்கத்திலிருந்து தெளிவு பெற்றனவாகவே இருந்தன. கண்ணனின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக.
கலாநிதி ஏ. என். கிருசுடினவேணி யாழ். பல்கலைக்கழகம்
- 27

Page 18
நலம் தரும் நாமம்
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து கூடினேன் கூடி இளையவர் தம்மொடு
அவர் தரும் கலவியே கருதி ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர் வெறும் பெரும்பதந் தெரிந்து நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்
குலந்தரும் செல்வந் தந்திடும் அடியார் படுதுயராயின் வெல்லிாம்
நிலைந்தரஞ் செய்யும் நீன் வீசும் பருளும்
அருளொடு பெருநிலை மணிக்கும்
விலந்தரும் மற்றுத் தந்திடும் பெற்ற
தாயினு மாயின செய்யும்
நலந்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்.
பூனி திருமங்கையாழ்வார்
- 28
 
 
 

கடமை, நேர்மை தவறாத உள்ளுராட்சி சேவையாளன் அமரர் பொன்னுத்துரை கிருஸ்ணகுமார்
அமரர் பொன்னுத்துரை கிருஸ்ணகுமார் மிக இளமைப் பருவத்தில் வருமான மேற்பார்வையாளர் சேவையூடாக உள்ளுராட்சி சேவையில் இணைந்து தனது உயரிய வினைத்திறனுடாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் வளர்ச்சிக்கு உழைத்திட்ட கடமையாளன்.
இவர் அமைதி, பொறுமை, தன்னடக்கம், கடமைப்பற்று என்பன ஒருங்கே அமைந்த ஒரு பண்பான அலுவலர். இவருடன் வேலை செய்யும் அலுவலர்கள் இவரின் நற்பண்புகளைப் பின்பற்றி நடக்கக்கூடிய ஒரு உதாரண புருஷராக இவர் விளங்கினார்.
அமரர் கிருஸ்ணகுமார் தனது உயர்தரக் கல்வியுடன் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் குடிசார் இயந்திரவியல் மற்றும் படவரைஞர் டிப்ளோமா பட்டங்களையும் பெற்றிருந்தார். சேவையிலிருந்தபோது வருமானப்பரிசோதகர், முகாமைஉதவியாளர், தொழில்நுட்பஊடத்தியோகத்தர், பொது சுகாதாரப்பரிசோதகர் போன்ற பதவிகளுக்குரிய போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்த வெற்றி கண்ட அறிவும் ஆற்றலும் மிக்கவர். இறுதியில் வருமானப் பரிசோதகர் பதவியே தனக்கு உரித்தான பதவியெனத் தெரிவு செய்து எமது வலிகாமம் வடக்கு பிரதேச சபையிலிருந்து பதவியுயர்வுடன் இடமாற்றம் பெற்று நல்லூர் பிரதேச சபையில் கடமையாற்றினார். அங்கு கடமையில் இருந்தபோது இக்கடமையாளன் திடீர் மரணம் அடைந்தமை என்னையும் எனது சபை உத்தியோகத் தர் ஊழியர்களையும் மிகவும் ஆழ்ந்த கவலைக்குள்ளாக்கி உள்ளது. தலைவனை இழந்து ஈடுசெய்ய முடியாத துயரில் இருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எல்லா வல்லமையினையும் இறைவன் கொடுக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
இ. அருணகிரி Qafusortemir வலிகாமம் வடக்கு பிரதேச சபை, காங்கேசன்துறை. (மல்லாகம்)
- 29

Page 19
என் தம்பி கிருஸ்ணா நீளங்கேயடா
ஒருவனது வாழ்வில் மறக்க முடியாத சில அனுபவங்கள் அம்மனிதனது வாழ்வு நிறைவடையும் வரை நிலைத்து நிற்கும். இந்தவரிசையில் ஒன்றே கண்ணா உனது இணைவும் பிரிவும் எனது வாழ்வில், நிகழக்கூடாத ஒன்று நிகழ்ந்து விட்டது அது தான் இறைவனது நியதி.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் வருமான மேற்பார்வையாளராக நியமனம் பெற்று வந்தவர் ஏனோ, தெரியாது என்னுடன் சிறிது காத்திரமான பாசத்தை ஏற்படுத்தினார். அன்றிலிருந்து நாம் பழகிய பத்து வருடங்களில் பல நிலைகளிலும் எனது தம்பி என்றே எண்ணுமளவிற்கு இணைந்து கொண்டோம். பாடசாலை வாழ்க்கையின் நிறைவுடன் தொழில் இணையும் அரிய வாய்ப்பைப் பெற்றிருந்தவனுக்கு, அன்புசால் நற்பண்பும் பணிவான புன்சிரிப்பும் அள்ளியே கொடுத்திருந்தான் இறைவன்.
என் உள்ளம் கவர்ந்த இவர் அருகில் வந்து, அடிக்கடி கேட்கும், கதைக்கும் பாணி தனித்துவமானது, மறக்கவும் முடியாதது “அண்ணை இப்படி ஒன்று வந்திருக்கு எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, நீங்கள் ஆறுதலாக யோசித்துச் சொல்லுங்கோ’ இந்தப் பத்து வருடத்தில் பலமுறை கேட்ட ஒன்று ஆனால், எத்தனையோ விண்ணப்பங்கள் நிரப்பினோம், பரீட்சைக்குச் சென்றாய், தேர்ச்சியும் கண்டாய் மேலும் கடிதத்துடன் வருவாய் P.H.I., T.O Civil, G.S. 61656)Tib (36.60irLITb (3d Irg56060T Gaul6hugs அனுபவம் என்றேன், கேட்டாய்.
நல்ல "ஊரில் நல்லூரில் வருமானப் பரிசோதகர் நல்லது வீட்டில் அப்பா, அம்மா வயதானவர்கள்; மனைவி, குழந்தை சிறியவர்கள் நீ! அருகில் இருக்கவேணும் மற்றதுகள் வேண்டாம் என்றேன்.
- 30
 
 

ஆனால் ஒருவரிடமும் கேளாமல் சொல்லாமல் இப்படி யொரு விண்ணப்பம் என்னெண்டு செய்தனி, தம்பி அன்று உனது மறைவு நம்ப இயலாத ஒன்றாக இருக்கக் கூடாதா? பொய்யாக இருக்கக்கூடாதா என்று எண்ணியபடி நண்பன் ஒருவருக்கு தொலைபேசியில் கூறிய பொழுது அவர் கூறியது, “நீங்கள் தான் அண்ணை கிருஸ்ணாவை மறித்தது இல்லாவிட்டால் இப்போ ஒரு முகாமை உதவியாளர் பதவியில் இருந்திருப்பார்” என்றார்.
என்ன செய்வது, விதியின் கொடுமையை யாரறிவார்.
இவரது இழப்பை, நாமெல்லாம் ஏதோ ஒரு வகையில் மறக்கலாம், மறப்போம். ஆனால், ஒன்றாக வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருந்த, வாழத்தொடங்கிய உள்ளங்களை ஆறுதல்படுத்தி அமைதியும் சாந்தியுமளிக்க இறைவனது கருணை கிடைக்க வேண்டுமென நீலியம்பனை வாழ் வேழமுகத்து வெள்ளைக் கொம்பனைப் பிரார்த்தித்து அமைவோமாக.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய. ஓம் சாந்தி ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
என்றும் நினைவுடன் பா. விஜயகுமார் பொது நூலகம் உடுவில்.

Page 20
சிவானந்தவாரிதி சிவத்திரு வ. குமாரசாமி ஐயா அவர்களின்
ஆற்றொனா உள்ளத்துயர் உணர்வலைகள்
செம்மை நலமிகு சீரிய பணிபாளன் எமது பேரண்புக்கும் அளவுகடந்த பாசத்திற்கும் உரிய சகோதரன் அமரர் பொன்னுத்துரை கிருஷ்ணகுமார் (கிருஷ்ணா) அவர்களின் திடீர் மறைவு பற்றிய செய்தியைச் செவியுற்று அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் அடைந்துள்ளோம். அன்பு, பணிபு, பொறுமை, செயற்றிறனர், கடமையுணர்வு, சேவைமனப்பாங்கு, பெற்றோரைப் பேணுதல், மூத்தோரை மதித்தல், இறைபக்தி போன்ற இன்னோரன்ன சிறந்தநற்குணவியல்புகள் ஒருங்கே வாய்க்கப்பெற்ற ஒரு இளம் உத்தமனை இழந்தது அவரினி பெற்றோர் குடும்பத்தவர்கள் உட்பட எங்கள் எல்லோருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
வலிவடக்கு பிரதேசசபை உபஅலுவலகம் தெல்லிப்பளை, அமைந்திருந்த கட்டிடத்தில் நாம் பணிபுரிந்த நூலகமும் ஒருங்கே அமைந்திருந்தது. அப்பொழுது அமரர் கிருஷ்ணா அவர்கள் உப அலுவலகத்தின் வருமான மேற்பார்வை யாளராகப் பணியாற்றி வந்தார். இக்காலகட்டத்தில் இவருடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்தது. தமக்கென்று விதிக்கப்பட்ட அலுவலகக் கடமைகளை எள்ளழவும் பிசகாமல் மிகத்திறமையாக ஆற்றி மேலதிகாரிகளினர் பெருமதிப்புக்காளாக விளங்கினார். தமது பணிகளுடன் மட்டும் நின்றுவிடாமல் சக உத்தியோகத்தர்களுக்கும் உதவும் பெருமனது படைத்த சேவையாளனாகவும் மிளிந்தார்.
அமரர் அவர்களினர் அணி புத் தந்தையார் திரு. பொன்னுத்துரை ஐயா அவர்களும் பாசமிகு தாயாரும் ஆண்மீகத் தொடர்பில் எமது பேரணர்புக்குரியவர்கள். அமரர் அவர்கள் பெற்றோரைத் தெய்வங்களாகப் போற்றிய பெருந்தகையாளனர். அவர்களுக்குரிய கடமைகளைத் தவறாது நிறைவேற்றிய
-32 -
 
 

சற்புத்திரனாக விளங்கினார். எத்தனையோ வேலைச் சுமைகளுக்கு மத்தியிலும் பெற்றோருக்குச் செய்யும் கடமைகளுக்கு முன்னுரிமை வழங்கி வந்தார். அமரர் அவர்கள் பெற்றோரைப் பேணுவதில் எல்லோருக்கும் முன்னுதாரணமாக விளங்கினார்.
அத்துடன் நின்றுவிடாது இல்லறமாகிய நல்லறத்தில் காலடி எடுத்துவைத்த அமரர் அவர்கள் தமது துணைவிக்கேற்ற துணைவனாக (துணைவியாரும் உத்தியோகத்தர் ஆனபடியால்) இருந்து அவரின் பணிகள் சிறக்கவும் அயராது உழைத்து வந்தார். இல்லறத்தின் இனிய பயனாகத் தமக்கு இறைவனால் அருளப்பட்ட அன்பு மகளின் மழலை மொழி கேட்டுப் பேருவகையெய்தினார்.
அவரினி திருமண வைபவத்தின் போது நாமும் சென்று அவரின் மணக்கோலத்தைக் கணிடு களித்திருந்தோம். அக்காட்சி எம்மனதில் இன்றும்நிலைத்திருக்கும் வேளையில் அவரின் மறைவும் மணக்கோலத்திற்கு எதிரான கோலத்தைக் காணிபதென்பதும் சொல்லில் வடிக்கமுடியாத வேதனையாகும்.
அமரர் அவர்கள் அமரராவதற்கு நான்கு நாட்களுக்கு முன் எம்மை வீதியில் கணிடு ஷேமம் விசாரித்ததும், நாம் அவரின் ஷேமம் விசாரித்ததும் அதன்பின் நான்கு நாட்களில் அவரின் பிரிவு பற்றிய செய்தியை அறிந்தது எவ்வளவு கொடுரமானது?. கிருஷ்ணா கிருஷ்ணா என்று அழைக்கும் பொழுது அந்தப் பரந்தாமனை நினைவு படுத்திய எங்கள் கிருஷ்ணா இன்று நாம் வணங்கும் தெய்வமாகி விட்டார்.
அமரர் அவர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவரின் பிரிவாலி ஆற்றொணாத் துயருற்றிருக்கும் பெற்றோர்கள், சகோதரர்கள், மைத்துனர்மார், அண்பு மனைவி, ஆருயிர் அன்புமகள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் மனச்சாந்தியடைய வேணர்டுமெனவும் எல்லாம்வல்ல நீலியம்பணை அருள்மிகு விநாயகப் பெருமானை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி- சாந்தி- சாந்தி
சிவத்திரு வ. குமாரசாமி ஐயா
ооз - 33

Page 21
தந்தைக்கு ஏற்ற தனையன்
எமது ஆலயத்தின் தர்மகர்த்தாசபையில் ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக பொருளாளராக சேவையாற்றி முன்னைய நாள் பொருளாளர் திரு. மு. பொன்னுத்துரை அவர்களினதும், எமது ஆலய அறநெறிப்பாடசாலை பொறுப்பாசிரியர் திருமதி. தி. பொன்னுத்துரை அவர்களின் கனிஷ்ட புத்திரன் 31.01.2008 அன்று நடைபெற்ற விபத்து சம்பவத்தில் அகப்பட்டு உயிரிழந்த செய்தியினைக் கேட்டு நாம் மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் கொண்டுள்ளோம்.
அமரத்துவம் அடைந்த பொ. கிருஸ்ணகுமார் சிறுவயதில் இருந்தே மிகுந்த கடவுள் நம்பிக்கையுடையவர். எமது ஆலயத் தொண்டர்களுள் ஒருவர். 1998ஆம் ஆண்டு வலி வடக்கு பிரதேச சபையில் உத்தியோகம் பெற்று படிப்படியாக பல போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்து குறைந்த வயதிலே அறிவினாலும், ஆற்றலினாலும் வருமானப் பரிசோதகராக உயர்ந்து நல்லூர் பிரதேச சபைக்கு இடமாற்றம் பெற்று சென்றவர் படித்த படிப்பிற்கேற்ற பண்பாளன். பெரியோரை மதித்தல், பெரியோர் சொற்கேட்டல், கடமையே கண்ணெனக் கொள்ளல், இரக்க சுபாவம், தர்ம சிந்தனை, காருண்ய மனம் போன்ற உயர்ந்த பண்புகளைக்கொண்ட உயர்ந்த மனிதன் ஆவார்.
தாய் தந்தையினை பேணிப்போற்றி காத்து வந்தவர், சிறந்த குடும்பத் தலைவனாக திகழ்ந்தவர். மாமனார், மாமியார் பேரன்பைப் பெற்ற பெருமகனார். தந்தைக்கு ஏற்ற தனையனாக இருந்து தந்தைக்குரிய பொருளாளர் கடமைகளை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றி வைத்தவர். அத்தகைய பெருந்தகையால் ஏற்பட்ட இழப்பு பேரிழப்பாகும்.
“உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போல பிறப்பு” என்ற கூற்றைப்போல் இறப்பும் பிறப்பும் இணைபிரியாதன இறப்புக்கால நேரம் நிர்ணயிக்கப்பட்ட பின்னரே நாம் பிறக்கின்றோம். இது விதி, தலை எழுத்து என்று நம்பப்படுகின்றது. ஆன்மா அழிவதில்லை என்பது எமது சமய நம்பிக்கை எனவே அவரது
م۔ 34 -
 
 

ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதே நாம் அனைவரும் அவருக்கு செய்ய வேண்டிய பணியாகும்.
அன்னாரின் பிரிவால் துயருறும் அருமைத்தந்தை, தாய், மனைவி, மகள், சகோதர, சகோதரிகள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆலய தர்மகர்த்த சபையினர் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய நீரியம்பனைப் பிள்ளையார் பாதங்களைப் பணிந்து பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
கு. கந்தசாமி தலைவர், தர்மகர்த்தா சபையினர் நீரியம்பனைப் பிள்ளையார் கோவில், மல்லாகம்.
ம் விரும்புவதை தட்டாது தருவா
-35- ఫణి

Page 22
யாருமே எதிர்பாராத வேளையில் கிருஸ்ணா உன் இன்னுயிர் பிரிந்ததோ!
எங்கள் சபைக்கு வருமான பதவியுயர்வுடன் மிடுக்குடன் வந்தாய், வந்த நாள் முதல் அனைவருடனும் புன்முறுவலுடன் அடக்கமாகப் பேசி தன் துறை சார்ந்தவர்களுடன் ஒத்துழைப்பு நல்கி தெரியாத புதுவிடயமாக இருந்தாலும் அதனைத் தெரிந்து கொண்டு கடமையில் சிறு தவறும் நேர்ந்துவிடக் கூடாதென்ற உணர்வுடன் பணியாற்றி வரும் வேளையில் எதிர்பாராமல் எமையெல்லாம் தவிக்க விட்டுச் சென்ற எமது அருமை சகோதரன் கிருஸ்ணகுமாரினை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு நல்லூர் பிரதேச சபையின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அந்த பரபரப்பான வேளையில் அதிர வைத்த வெடியோசை கேட்டு திகைத்து எத்திசை என்று அறிவதற்கு வீதியைப் பார்த்தோம் சற்றுத் தொலைவில் ஒரே புகை மண்டலம் தெருவோரத்தில் சிலர் கிடப்பது தெரிகின்றது யாரோ என்று பதற்றத்துடன் பார்த்தோம் சில நிமிடங்களில் ஒரு வாகனத்தில் அவர்களை ஏற்றிச் செல்வதை பார்த்திருக்கும் அவ்வேளையில் ஒரு வயதானவர் ஓடி வந்து அழுது கொண்டே சொன்னார் என்ன பார்த்துக்கொண்டு நிற்கின்றீர்கள் அவர்கள் உங்கட முத்தண்ணா, கொலின் அண்ணா, கிருஸ்ணா, மதி என்றார். சொன்னது தான் தெரியும் அலுவலகமே அதிர்ந்தது போல் ஓலமிட்ட படி எல்லோரும் பதறியபடி வைத்தியசாலைக்கு ஒடினோம் அங்கு திரண்டிருந்த சனக்கூட்டத்தில் எப்படி, எங்கு, என்ன கோலத்தில் எம் உறவுகளை காணப் போகின்றோம் என்று பதறியபடி கண்கள் அவர்களை தேடியது மனமோ இறைவனிடம் மன்றாடியது ஆண்டவா இவர்களுக்கு ஒன்றுமே நேரக்கூடாதென்று நினைத்தது உள்ளே செல்லச் செல்ல நெஞ்சு படபடத்தது
கிருஸ்ணா LDeofir -36 -
羲
 
 

யாரிடம் கேட்பது எல்லோரும் பரபரப்புடன் ஒடிக்கொண்டிருந்தனர் அங்கு கடமையில் இருந்த ஒரு பெண்மணி அழைத்துச் சென்று இவரை யாரென்று பாருங்கள் என்றார் கிட்டச் சென்று பார்த்த பொழுது அங்கே எமதருமை கிருஸ்ணா ஸ்ரெச்சரில் உண்மையில் எம்மைப் பார்த்துப்பேச அழைப்பது போல் பார்த்திருந்தாயோ! அது தப்பாகி விட்டதே கிருஸ்ணா எம்மால் நம்பமுடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை என்ன சொல்ல நினைத்தாயோ கிருஸ்ணா உன் குடும்பத்தாருக்கு அப்படி ஒரு ஏக்கப்பார்வையுடன் விழி மூடாமல் இருந்தாயே சற்று நேரத்தில் உன் அன்பான முத்தண்ணாவும் உயிரற்று உன்னருகில் உடல் வந்ததே உன்னை விட்டு பிரிய மனமின்றி உன்னுடனே அவரும் வந்துவிட்டார். நீ அலுவலக விடயமாக நீதிமன்றம் சென்ற வரும் வரை வீடு செல்லாமல் உனக்காக காத்திருப்பவர் இன்று உன்னுடனே வந்துவிட்டார். உங்கள் வருகைக்காக காத்திருக்கும் உங்கள் குடும்பத்தாருடன் சபை உறவுகளும் மீண்டும் வருவீர்களாக என்ற ஆதங்கத்துடன் காத்திருக்கின்றோம். உனது நினைவு நாளில் ஆத்ம சாந்திக்காக நாம் அனைவரும் பிரார்த்திக்கின்றோம்.
செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நல்லூர் பிரதேச சபை.
தியானம் நமது இந்து மதத்தின் அடிப்படையான பயிற்சி தியானம் அதை நாம் பிரார்த்தனைக்கு உபயோகப்படுத்து கிறோம். இறைவனை நினைத்து நல்லவற்றை வெண், தியானம் செய்யும் போது மனம் தெளிவடைகிறது. உடலின் உள்ளே உணர்ச்சிகள் அமைதி காண்பதை உணருகிறது.
குழந்தைகளின் எதிர்காலம் எப்போதும் தாயின் செயலில்
அடங்கி இருக்கும்.
நெப்போலியன் இரண்டு இடங்களில் பொய் சொல்லலாம், பெண்ணைப்
புகழும்போதும், பெண்ணை இகழும்போதும்.
பெர்னாட்ஷா
- 37

Page 23
நம்ப முழயாதது நடந்து விட்டது
ஒரு மனிதனுடைய வாழ்வில் பிறப்பும் இறப்பும் சர்வ சாதாரணம் தான். எனினும் ஒவ்வொருவருடைய பிறப்பு பேரின்பத்தையும், இறப்பு பெரும் துயரத்தையும் கொடுக்கிறது. அதில் எனக்கு மிகவும் கவர்ந்தவராகிய அமரர் பொன்னுத்துரை கிருஸ்ணகுமார் அவர்கள்.
மெல்லென விரியும் மலராகி விரிந்து மலரும் அவ்வேளையில் ஒரு கணப்பொழுதில், குடும்பத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் திடீரென விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்துள்ளார்.
குழந்தை முகம் அதுபோல் அவருடைய உள்ளமும் மனப்பக்குவமடைந்து இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டியவர் தனது இனிய மனைவி அன்பின் சின்னமாக ஒரு பெண் குழந்தை இவர்களை விட்டுப்பிரித்துக் காலன் திடீரென எடுத்துச்சென்று விட்டான்.
கிருஸ்ணகுமாரின் சோகச்செய்தியை அன்று மாலை எனக்குத் திருமதி. சிவகெளரி சிவகுமார் அவர்கள் என்னிடம் கூறியபோது அதிர்ச்சி ஒருபுறம், மறுபுறம் அவரின் காட்சிகள் எண் மனதில் ஓடியபடி நின்றன. வலி வடக்குப் பிரதேச சபையிலிருந்து நல்லூர் பிரதேச சபைக்கு மாறிப்போவதற்கு முன்பு என்னைப் பார்ப்பதற்கு வந்து என்னுடன் அளவளாவிய காட்சி இப்போதும் பசுமையாக இருக்கின்றது. அந்த புன்னகை முகம் குழந்தை போன்று சற்றேனும் செயற்கையற்ற எளிமை, யாரையும் இம்சை செய்யாத பணிவும், பாசமும் நிரம்பிய மென்மை நிறைந்த உரையாடல் இன்று நேற்று அல்ல நான் ஏறக்குறைய 9 ஆண்டுகளாகக் கண்டு கொண்ட அருங்குணங்கள்.
இவர் சிறுவயதில் மல்லாகம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று பின் உயர்கல்வியை யாழ் இந்துக்கல்லூரியில்
ணா மலர் -38 -
 
 

பெற்று, வலி வடக்கு பிரதேச சபையில் வருமான மேற்பார்வையா ளராக 1998இல் நியமனம் பெற்றவர். இவரின் மறைவு வள்ளுவர் கூறியதைப் பிரதிபலிக்கிறது.
“நெருதலுள்ளனொருவன் இன்றில்லை என்றும்
பெருமை யுடைத்தில வுலகு”
என்கிறது குறள் இந்த உலகத்தின் பெருமை எனக்கூறக் கூடியது ஒன்று உள்ளது. அதுதான் நம்முன்னே இருந்தவன் இன்று காணமுடியாது இறந்துவிட்டான். இவரின் மறைவு ஒரு கெட்ட சொர்ப்பனமாகவே உள்ளது.
அனிதாவின் அன்புக்கணவன், சர்மதாவின் பாசமுள்ள தந்தையாகிய அமரர் கிருஸ்ணகுமார் மறைவு எல்லோருக்கும் பேரதிர்ச்சியாகவே உள்ளது. யாரை நோவது யாருக்கு யார் ஆறுதல் கூறுவது. காலம்தான் கவலையைப் போக்கவல்லது. இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக. திருமதி. பாலாம்பிகை பூgபாஸ்கரன் B.SC
முன்னாள் தலைவர்
வலி வடக்குப் பிரதேச சபை
ாம் துன்பப்படுவதற்குக் காரணமாக இருப்பது, நாம் செய்த வினைகளே ஆகும். எனவே நமக்குத் துன்பம் நேராமல்
இருக்க வேண்டுமானால் பின்வரும் நான்கு செயல்களே நாம் செய்ய வேண்டும் அவையாவன, ့် ဣဒ္ဓိမ္ပိ -ံ့ ...”....: ;
ஜெபம், தியானம், பிரார்த்தனை போன்ற ஆத்ம சாதனைகளில் தவறாமல் ஈடுபடுவதுடன் இறைவனிடம் பக்தி செய்ய வேண்டும். 2. மகான்களின் தொடர்பை நாட வேண்டும்.
3. கீழ் மக்கள் (கெட்டவர்கள்) தொடர்பை எப்போதும் எந்த
நிகயிலும் நாடக்கூடாது. 4. எப்போதும் எத்திசையிலும் நாம் நன்மைகளையே செய்து, தீமை சய்வதை தவிர்க்க வேண்டும். 鑿 蠶
2008 - 39

Page 24
விடைபெறாது
சென்றதேனோ அன்பே உருவாக அவனியில் பிறப்பெடுத்து அனைவரது இதயங்களிலும் அழியாது இடம்பிடித்த - எம் அருமை மருமகனே
பரந்த உம் மனதைப் போலவே பல்லாண்டு காலம் அனிதாவுடன் வாழ்ந்திடுவீர் என்று நாம் நினைத்திருக்க "ஸர்மதா'வைத் தந்துவிட்டு-நீர் பாதியிலே வாழ்வை முடித்து ஆண்டவன் அடி சேர்ந்ததேனோ?
நேற்றுவரை கணிடு வந்த அந்த இனிய முகம் காற்றோடு கலந்ததை எப்படித்தான் தாங்குவதோ..? எமதருமை மருமகனே...! எப்போது வந்தாலும் எங்கே நாம் நின்றாலும் அங்கே தேடி வந்து போட்டு வாறேன்’ என்று விடை பெறுவீர் தை முப்பத்தொன்றில் - மட்டும் விடை பெறாது சென்றதேனோ..?
காத்திருக்கும் மாமா குடும்பம்
- 40
 
 

கண்ணிருக்கு விடைகொடு மகளே!
எழுதுகின்றேன். புயலடித்து சிதறிய நந்தவனத்தில் உதிர்ந்த இதழ்கள் மீண்டும் பூவாகுமா என்ற ஏக்கத்தின் தாக்கத்தை எழுதுகின்றேன்
பொங்கி எழும் எரிமலையின் கொதிப்பை ஆற்ற ஆற்றுப்படை பாடுகின்றேன் இடிவிழுந்து சல்லடையாய் சிதறிவிட்ட என் மருமகள் இதயத்தின் காயத்தை ஆற்ற தேற்றப் படை வரைகின்றேன்
மாமனித கோபுரம் சாய்ந்தது - எங்கள் மருமகள் அனிதாவின் மாணிக்க மாலை மண்ணில் உதிர்ந்தது! அன்புமகள் புன்னகையை ஆண்டவனே ஏன் பறித்தாய்
சங்கத் தமிழ்ச் சாரலது நின்று போனால் பாவலர் பாட்டிசைக்க எங்கே போவார் தங்க மகள் பூ முகம் வாடிப் பார்க்க - எங்கள் இதயத்திற்கு வலிமை இல்லை
மதியத்தில் அஸ்த்தமனம் அறிந்ததில்லை உலகம் வசந்தத்தில் இலையுதிரைக் கண்டதில்லை பருவம் பசுமை மாறாத இளமை கொலுவிருக்கும் எங்கள் மருமகளின் மணவாழ்வை பாதியிலே ஏன்பறித்தாய் இறைவா!
அந்தநாள் நினைவுகளை மீட்டி மீட்டிப் பார்க்கின்றேன் கண்களிலே கடல் சுமந்து கரைதேடித் தவிக்கின்றேன்
3. 2oов - 41 -

Page 25
தை 31ம் நாள் வருஷச் சக்கரத்தில் கருப்புநாள் எங்கள் இதய வானத்தின் சூரியன் வழுக்கி விழுந்த நாள்
DeBG36m நீ துணை இழந்தாய் என்ற சேதிகேட்டு துயரக் கடலில் மூழ்கித் தவித்தோம் நீ மாமனுக்கு மருமகள் என்பது உறவு வழக்கு என் இதயத்தில் எப்போதும் மகளென்னும் உரிமை உனக்கு.
உன்துயர் கேட்டு இடிந்துபோன இதயத்தின் சோகத்தை இங்கே பதிவு செய்கிறேன்
அனிதாவின் திருமணம் அறிவித்தார்கள் கனடாவில் இருந்து கொண்டே இதயம் நிறைந்த
வாழ்த்துக்களை வழங்கினேன் குழந்தை கிடைத்தது அறிவித்தார்கள் அப்போதும் தூர இருந்தே வாழ்த்தினேன் ஒருநாள் வருவேன் கூடிமகிழ்வோம் என்று காத்திருந்தேன்
அறிந்தறிந்து மகிழ்ந்ததெல்லாம் நேரில் பார்த்து அறிவதன் முன். அனிதாவின் வாழ்க்கை முடிந்ததென்று அறிவிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை
கண்விழித்து எழும்போது கலைந்து போகும் கனவுகள் போல் தொடக்கமும் முடிவும் சட்டென்று ஓடிவிடும் என்று யாரும் கனவுகண்டதில்லை
கோபுர கலசமாய் உயர்ந்திருப்பாள் இல்லறச் சோலையில் மணம் தருவாள் என்று நாம்கண்ட கனவெல்லாம் நொடிப்பொழுதில் பொடிப்பொடியாகி விட்டதே! பூத்தமாத்திரமே புயல்மோதி பூ உதிரும் என்று யார்கண்டார்
- 42 -
 
 

எங்கள் உயிரில் கலந்த உறவே!
ஆருயிர் மருமகளே! பற்றிப் படர்ந்த பந்தர்த்தடி உடைந்திட தரையில் வீழ்ந்து அலைபுரழும் பசும்முல்லைக் கொடிபோல நீ அழுது புரண்டபோது
அருகிருந்து அணைத்து ஆறுதல் சொல்ல நாம் இல்லை கடல்கொள்ளா கண்ணிரை நீவார்த்தபோது உன் பக்கம் இருந்து
அதை அணைபோட்டு தடுப்பதற்கு விதி இல்லையே என்று விம்மி அழுதேன்
நீ ஏன் கலங்குகின்றாய் உன் தலையில் பூப்பதற்கு பூக்கள் கொடுத்து வைக்கவில்லை
ஒன்றுமட்டும் உறுதி வாழ்க்கை துணையை இழந்தாய் நீ வாழ்க்கையை இழக்கவில்லை உனக்காக நாம் இருப்போம் நீ தனிமரமல்ல உன் அன்பு மகளுண்டு உன்னை தாய்போலதாங்க நாங்கள் இருக்கின்றோம்! கண்ணிருக்கு விடை கொடு உனக்காகவே நாம் வாழ்வோம்!
பாசமுள்ள பூணீ மாமா குடும்பம் (கனடா)
மனிதன் கேட்கக் கடவுள் கொள்வது - பசுவத்கீதை கடவுள் கேட்க மனிதன் கொள்வது - திருவாசகம்
மனிதன் கேட்க மனிதன் கொள்வது - திருக்குறள்

Page 26
இதயங்கள் இருளாக்கப்பட்டன
சிலவேளைகளில், சில மரணங்கள் எங்கள் இதயத் துடிப்பை ஒரு கணம் நிறுத்தி, நிலை குலையச்செய்து விடுகின்றன. திடீரென வந்த இச்செய்தி உண்மைதானா என்ற சந்தேகத்தில், ஏற்க மறுத்துவிட்டது. உடன் சென்று, இணையத்தினுTடாக உறுதிப்படுத்தினேன். படங்கள், செய்திகள் சரியாகவிருந்தன. அப்படியான மரணமே, இந்த கிருஸ்ணகுமாருக்கு இளமையான வயதில் ஏற்பட்டுள்ளது. எல்லோரதும் இதயங்களையும் இருளாக்கி விட்டது. கண்மூடித் துயில் கொள்வது போலத்தான் இருக்கிறது. காலத்தின் கட்டளையை என்னவென்று சொல்லுவது. காலனின் கரங்களை என்னவென்று முறிப்பது, வெல்ல முடியாது என்ற உண்மையை அனைவருக்கும் உணர்த்திவிட்டுச் சென்று விட்டார். இது கொடுமை, கொடுமையிலும் கொடுமை. கண்ணிரில் மிதக்கும் அவலநிலை யாருக்கு யார் ஆறுதல் சொல்வது. அவரது ஆத்மா சாந்தியடைய நாங்கள் என்றும் பிரார்த்திப்போம். எல்லோருக்கும் மரணம் உண்டு நம்மையே நாம் தேற்றிக்கொள்வோம்.
மன்னவன் பிரிவால் அழுது புலம்பும் இன்னல் படர்ந்து எழும் - இவ்வேளை சின்னதாய் ஆறுதல் நாம் சொல்வது முழுமை யன்றல்ல முடிந்த காரியமே
கணவனை இழந்த இளந்தளிர், பேரப்பிள்ளையாகிய அனிதா பச்சிளங்குழந்தையோடு படும் துயரம் எல்லைக்கப்பால் பட்டது. எனக்கு அவ்வேளை எனது தாயாரது ஞாபகம் வந்தது. எனக்கு வயது மூன்று தந்தை இறந்து போனார். தந்தை முகம் பாராது தாயார் தனித்துவமாய் நின்று என்னையும் எனது சகோதரியையும் வளர்த்து வந்த முறைகளை நினைப்பதுண்டு. உள்ளத்தில் நம்பிக்கை, மனஉறுதி, விடாமுயற்சி ஆகியவை நிலைத்திருக்குமாயின் வாழ்க்கை என்றும் மலருவதற்கு இறைவன் அருள் கிட்டும். துயரத்தைக் களைந்து விட்டு, தூயபாதையைப் புதுமையாக்கவும் எங்களது, ஆதரவு ஆசிகள் என்றும் கிடைக்கும்.
६ंगा Door - 44- 15
 
 
 

மரணம் என்பது ஒரு தொடர் கதையாகும். பிறக்கின்றோம், வளர்கின்றோம், குழந்தை - இளமை - சம்சாரம் - முதுமை என்கின்றோம். ஒவ்வொரு பருவம் முடிவிலும் நடப்பது ஒரு மரணமே. அவ்வப்போது நாம் அழுகின்றோமா? இல்லை. இதை உணருகின்றோமா? இல்லை. எங்கள் ஆத்மா ஒரு சங்கிலித் தொடராக, சந்ததி சந்ததியாக கூடுவிட்டுக் கூடு பாய்வது போலச் செல்கின்றது. நடக்கவேண்டிய காலங்களில், எமது உடல் மட்டுமே அழிகின்றது. இதை நாம் அறிவதில்லை. இத்தத்துவத்தை அறியும்போதுதான் நாம் உண்மையை உணரமுடிகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக ஆன்மீகம் என்பது உயர்ந்த நிலையாகின்றது. இத்தகைய உன்னதமான நிலையை உள்ளத்தில் நிறுத்தி நாம் வெற்றிகொள்ள வேண்டும்.
இவ்வேளைதனில், பச்சிளங்குழந்தைபோல் எமது உள்ளத்தில் நிலை பெற்றிருந்த அனிதாவே! நீ தனிமையாக இருக்கவில்லை என்பதனை எடுத்தியம்ப, இடம்பெயர்ந்த நாடாகிய கனடாவில் வாழ்கின்ற அன்பின் பிணைப்புகளாகிய நாங்கள் தாத்தா, பாட்டி, மாமிமார், சுமதி குடும்பம், பாமதி குடும்பம், லண்டனில் இருக்கும் சாந்தி குடும்பம் அனைவரும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தாத்தா, செ. சந்திரசேகரி
56LT
R
கவனிக்க வேண்டியவை
1. கிழக்கு நோக்கி அமர்ந்து உணவை உண்டால் ஆயுள்
வளரும். மேற்கு நோக்கி அமர்ந்து உண்டால் புகழ் சேரும். தெற்கு நோக்கி உண்டால் பொருள் வளரும். வடக்கு நோக்கி உண்டால் நோய் வளரும்.
- 45- கிருஸ்ணா மலர்

Page 27
ஆத்9ாவுக்கு
ஆண்டுத் திவசம்
(வருட சிரார்த்தம்) இந்தச் சிரார்த்தமே ஆன்மாவிற்கு ஓரிட ஓய்வு தருவது. அங்குமிங்கும் இடை நடுவாய் அல்லாது, அந்தியேட்டி, எகோதிட்டம், சபிண்டீகரணம், மாசியம் என முறையாக ஆன்மாவிற்கு மகிழ்சி தரும் கிரியைகள் செய்து, ஆண்டுத் திவசத்தில் ஆன்மா மோட்சம் பெறும் என்பது ஐதீகம். எனவே, இத் திவசம் திருப்திகரமாய் செய்யப்பட வேண்டியது மிக முக்கியமாகும்.
வருடச் சிராத்தம்
ஒவ்வொரு வருடமும் இறந்த ஆத்மாவின் திதியில் செய்யப்படுவது இதுவாகும். இதற்குக் கணக்கு இல்லை. எம் உயிருள்ள வரை எம்மால் இயன்றவரை இதைத் தொடர்ந்து செய்வதால் எம் வம்சம் தழைத்தோங்கவும், எமக்கு எமது பிள்ளைகள் கிரியைகள் செய்யாவிடினும், அந்தப் பலாபலன் எமக்குக் கிடைகின்றது.
மஹாளயம்
ஆவணி மாதத் தேய்பிறை பிரதமை முதல் புரட்டாதி மாத அமாவாசை வரையிலான பதினைந்து அல்லது பதினாறு நாட்கள் பிதுர்களுக்குரிய பிரியமான பிண்டதானம், தர்ப்பணம் முதலியன செய்யும் காலமே “மஹாளயம்” எனப்படுகின்றது.
தட்சணாயத்திலே சூரியன் தெற்கு நோக்கிச் சஞ்சரிக்கும் காலம் அதன் நடுப்பாகம் புரட்டாதி மாதம். அதாவது பூமிக்கு நேரே நிற்கும் காலமும் சந்திரன் தென்பகுதிக்கு நேராகவும் நிற்கும் காலமாக அமைவதாலும், இக்காலம் பிதுர்களுக்குப் பிரியமான, விசேடமான காலமாக அமைகின்றது. சில வேளைகளில் வருஷ சிரார்த்தம் நாம் செய்யத் தவறியிருப்பின், செய்ய முடியாத நிலைமைகள் அமைந்து விடினும், அதை இந்த மஹாயள பட்ச நாளில் செய்து கொள்ளலாம்.
- 46
 
 

அமாவாசை விரதம்
இது ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி திதி முடிந்த 15ம் நாளில் வருவது. இந்த நாளில் “தாமகு’ தந்தை, பாட்டன் வழியினருக்கும் தர்ப்பணம் செய்து விரத அனுட்டானம் செய்வது மரபு. இந்த அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் தந்தை வழியினர் சிரார்த்தங்கள் செய்யத் தவறியோர் இந்நாளில் செய்யலாம். பிதுர்களுக்குரிய திசையாகிய தெற்குத் திசைப் பக்கமாய் சூரியபகவான் உதயமாகும் காலமும், சந்திரனின் ஆட்சி வீடான கடகராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலமும், கொண்ட இந்நாள் பிதுர்களின் பிரியநாள். எனவே இந்த ஆடி அமாவாசை புனிதத்துவமும், மகிமையும் நிறைந்த நாளாய் மிளர்கின்றது.
பூரணை விரதம்
இவ்விரதம் ஒவ்வொரு மாதமும், அமாவாசைத் திதி முடிந்த 15ம் நாளில் வருவது. இந்நாளில் தாயாருக்கும் தாய் வழி உறவினர்களுக்கும் விரதமிருந்து தர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்வது உத்தமம். பெளர்ணமி விரதங்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த “சித்ரா பெளர்ணமி” சூரியன் தனது உச்சம் பெற்ற வீடாகிய மேஷ ராசியில் சங்சரிக்கும் காலம், அதே நேரம் மாதுருகாரசன் சந்திரன் 7ம் இடம் சஞ்சரிக்கும் காலம். சூரியன் பிதா கிரஹம், சந்திரன் மாதா கிரஹம் என்பது ஜோதிட நூல்கள் கூறும் விதி. இந்த இரு கிரஹங்களின் சேர்க்கைப் பார்வை பெறும் நாட்கள், பிதுர்களின் பிரிய நாளாகின்றன. எனவே தான் ஆடி அமாவாசை, சித்ரா பெளர்ணமி சிறப்புப் பொருந்திய சிரார்த்த தினங்களாகப் பேணப்படுகின்றன.
ஆசார முறைகள்
எமது இந்து சமயத்திலே முதன்மை பெறுவது “ஆசாரம் அதை நல்ல முறையில் பேணிக்காப்பது முக்கிய கடமையாகும். தினமும் சூரிய உதயத்தின் முன் கண்விழித்துக் காலைக் கடன்கள் முடித்து ஸ்நானம் செய்து தோய்த்துலர்ந்த ஆடை தரித்து, விபூதி தரித்து, சுகந்த சந்தனம் பூசி, இறைவழிபாடு செய்து புலால் தவிர்ந்த உணவு உட்கொண்டு, உடற்சுத்தி, உளச்சுத்தியோடு இருப்பதே முறையான ஆசாரம். முக்கியமாக ஆலய வழிபாடு செய்யுங் காலங்களிலாவது இவற்றை முறையாக மேற்கொள்ள வேண்டும்.
- 47- கிருஸ்ண ః

Page 28
நாம் வாழும் இல்லத்தைக் கோயில் போல் ஆசாரமாக வைத்திருக்க வேண்டும். நாம் தீட்டுக்களுடன் வீட்டுக்குள் பிரவேசிப்பதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக ஒரு மரணச் சடங்கு வீட்டுக்குச் சென்றால், திரும்பி இல்லம் வந்ததும் முறைப்படி ‘ஸ்நானம்” செய்தே வீட்டிற்குள் பிரவேசிக்க வேண்டும். காரணம் மரணச் சடங்கில் கண்ட துயரங்களும், அழுகை, துன்ப ஒலிகளும் மனம், வாக்கு, காயங்களில் பதிந்து நிற்கையில் ‘ஸ்நானம்” செய்து நித்திய அனுஷ்டானம் மூலம் மனம், வாக்கு, காயங்களைச் சுத்தமாக்கி செல்லுதல், அத்தோடு இறந்தவரிடமிருந்து பிரேத கிருமிகள் தொற்றா வண்ணம் உடற்சுத்தம் முறையாகச் செய்ய வேண்டும்.
2ளழ்வினை என்ற விதியை வெல்ல இருபது வழிகள்
1. நான் நற்பணியை மட்டுமே செய்வேன். 2. செய்யும் நற்காரியத்தில் தீவிரமாக உழைப்பேன். 3. என்னை மட்டுமல்லாமல், என் குடும்பத்தை மட்டுமல்லாமல், எனக்குத் தெரிந்தும் - தெரியாமலும், உள்ள எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, எல்லோருக்கும் நலம் உண்டாக வேண்டும் என்று எண்ணுவேன், சிந்திப்பேன், செயலாற்றுவேன். 4. பெரியோர்களிடம் பணிவுடன் அன்பு செலுத்தி அவர்களின் நல்லாசிகளையும், நல்ல யோசனைகளையும் பெற்று அவற்றின் படி நடப்பேன். எளியவர்களுக்கு உதவுவேன். பசியோடு வருவோர்க்கு உணவளிப்பேன் தாகம் என்று வருவோர்களுக்குத் தண்ணிர் கொடுப்பேன். படிக்காதவர்களுக்குப் படிக்க வசதி செய்வேன். ஆலயம் தொழுவேன், ஆண்டவனை ஆராதிப்பேன், சாதுகளைத் தரிசனம் செய்வேன், தீர்த்தம் ஆடுவேன். 10. தாயை - தந்தையை - மூத்தோரை - முதியோரை வழிபடுவேன்.
அவர்கள் உள்ளம் குளிரவைப்பேன். 11. செல்வம் திரட்டும் வழிகளை ஆராய்ந்து, அவற்றில் என் உழைப்பை ஈந்து என்னுடன் உழைப்பவர்களின் பக்க பலத்தைப் பெற்றுக்கொண்டு இரவு - பகல் பாடுபட்டு, எந்த இலட்சியத்திற்காக குறிப்பிட்ட முயற்சியை மேற்கொண்டேனோ அதை முழுமூச்சாகக் கொண்டு இயங்குவேன்.
- 48
 
 

12. துணிவுடன் இருப்பேன், ஊக்கம் குறைய மாட்டேன், எதிர்ப்பைத்
தாங்குவேன், ஏளனத்தைப் பொருட்படுத்தமாட்டேன். 13. அன்பு நிறைந்திருப்பேன் அனுதாபப்படுவேன் குற்றவாளிகளை
மன்னிப்பேன், இரக்கம் காட்டுவேன். 14. அடக்கம் கொண்டிருப்பேன், பொறாமைப்படமாட்டேன், அறிவு
நூல்களைக் கற்பேன், கற்றபடி ஒழுகுவேன். 15. துன்பத்தைக் கண்டு அஞ்சமாட்டேன், யாருக்கும் துன்பம்
தரமாட்டேன், இனியவையே பேசுவேன், முடிந்தவரை ஈவேன். 16. ஒழுக்கம் கடைப்பிடிப்பேன், மது முதலான போதைப் பொருட்களைப் பயன்படுத்தமாட்டேன், கெட்ட சகவாசத்தை களைந்து விடுவேன், பாவங்களைச் செய்யப்பயப்படுவேன். 17. பயனற்ற சொற்களைச் பேசமாட்டேன், குறிப்பறிந்து பேசுவேன், பழகுவேன், மானம் காப்பேன், பொய் பேசேன், வாய்மை நெறி நிற்பேன். 18. வாழ்க்கைத் துணை நலம் பேணுவேன், மக்கள் நலம் காப்பேன், உற்றார், உறவினர், நண்பர், விருந்தினர் அனைவருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றுவேன். 19. புறம் பேசுதலைச் செய்யமாட்டேன், பேராசைக் கும் , வெளியுணர்ச்சிக்கும், ஆட்படமாட்டேன், சினம் கொள்ளேன், சீற்றம் அடையேன். 20. உட்பகையைக் களைவேன், புறப்பகையை வளர்க்க மாட்டேன், பேதமையை அகற்றித் தெளிவுடன் செயலாற்றுவேன், செயலாற்றிக் கொண்டு இருப்பேன்.
மனம் விட்டுப் பேசுவதை விடச்சிறந்த அறிவு வேறு இல்லை.
19øöGusö ஒருவனுடைய உரத்த சிரிப்பு அவனுடைய காலி மூளையைக் காட்டுகிறது. கோல்ஸ்மித்
பணம் சம்பாதிப்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே.
8ышоөo கண்ணியமான மனிதன் எப்பொழுதும் நீதியாகவே சிந்தனை செய்கிறான் 68€gনা
எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து ஒருவரையும் நம்பாமல்
இருப்பது பேராபத்து.
ஆபிரராம்லிங்கன் சான்றோருக்கு உரிய ஆற்றல்கள் இரண்டு, ஒன்று சகிப்புத் தன்மை,
மற்றது பொறுமை.
எபிக்டெட்டான்
- 49

Page 29
1.
2.
3.
4.
°Ꮴ
7.
8.
9.
O.
11.
மகாபாரதம் கூறும்
தத்துவமுத்துக்கள்
நல்லவனுக்கு எது வெட்கத்தை அளிக்கிறதோ அது துஷ்டனுக்கு ஆனந்தம் அளிக்கிறது. கர்வம் பிடித்தவன், பெரியோர்களை அவமதிப் பவன், புலன்களைத் திருப்தி செய்வதில் கட்டுண்டு கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று நினைப்பவன் மதிமயக்கத்தை அடைகிறான். நூறு கிணறுகள் வெட்டுவதைவிட ஒரு குளம் வெட்டுவது சிறந்தது. நல்ல மனிதனே ஏன் பார்க்க முடிவதில்லை என்றால், எலி லோரும் , அந்த வேடதி தை போட்டுக்கொண்டிருப்பதால் தான். பத்து கைகளால் திரவியம் ஈட்டி, ஆயிரம் கைகளால் தானம் வழங்கு. அறிவைத் தந்தையாகவும், திருப்தியைத் தாயாகவும், சத்தியைத்தை சகோதரர்களாக வும் வைத்துக்கொள் இந்த உறவினர்கள் உள்ளே ஒரு போதும் கைவிடாமல் காப்பாற்று வார்கள். தர்மங்களில் ஐயமே முதலிடம் வகிக்கிறது அதுவே எல்லாப் பாவங்களையும் போக்க வல்லது. பிற உயிர்களைத் துன்புறுத்துவது தன் உயிருக்கே Ջ-6Փ6ծԱյTսն (Մ)ւգեւկլք. வயதையும், வெளித்தோற்றத்தையும் பார்த்து ஒருனைச் சிறியவன் என்று நிச்சயிக்கக்கூடாது. பெற்ற தாயைப்பற்றி குற்றம் கூறக்கூடாது. சொற்பமாயிருந்தாலும் தானமும், பாவமும் முறையே மிகுந்த நற்பயனையம், தீயபயனையும் தரும்.
 

ஆன்மீக வாழ்க்கைக்கு மெளனம் மிக முக்கியம்
மனிதன் 90 சதவீதம் பேசுபவனாகவும் , 10 சதவீத கேட்பவனாகவும் இருக்கிறார் என்று சாத்திரத்தில் கூறப்படுகிறது. இதற்கு மாறாக வீணி பேச்சுக்களே அறவே தவிர்ப்பது பயனுடையவற்றை மட்டும் பேசுவது, குறைந்த பேச்சு ஆகியவை ஆன்மீக சாதனைக்கு உதவிக்கரமாக இருக்கும்.
வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்று உலக வழக்கில் சொல்வதுண்டு. அனால் தவவாழ்க்கையிலோ ஓயாமல் பேசிக் கொண்டிருந்தால் அழிவுதான் ஏற்படும்.
மெளனத்தின் ஆழத்தில் மூழ்கி இறைவனைச் சிந்திக்கத் தெரிந்தவன் ஞானியாவது திண்ணம். “மெளனம் என்பது ஞான வரம்பு’ என்பது நமது கவிச்சக்கரவர்த்தி ஒளவையின் அமுதமொழி.
மனிதர்களிடம் பேசுவதற்கு நாக்கு வேண்டும். இறைவனிடம் பேசுவதற்கு இதயம் வேண்டும். இறைவனே நோக்கிச் செல்ல இயல்பாகவே பேச்சு குறைகிறது. நல்ல சாதகர் ஒருவரிடம் பேச்சுக் குறைவது, அவர் இறைவனே நோக்கி செல் ல ஆரம்பித்திருக்கிறார் என்பதற்குரிய முதல் அடையாளமாகும்.
5. மற்றவர்கள் மனதை புண்படுத்தல் பாவம் 6. பிறர் பொருளை அபகரித்தல் பாவம்
பொய் சொல்லி பணம் சேர்ப்பது பாவ 8. பிறருக்கு கிடைக்கும் பொருளின் ஒரு ப 9. வறியயோர் எளியோரிடம் வீரத்தைக் கா
ய எடுத்தல் பாவம்

Page 30
லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க. பூரீலட்சுமி கடாட்சம் நமது இல்லத்தில் நிலைக்க வேண்டுமானால் நாம் செய்யக்கூடாதவை சில இருக்கின்றன அவைகளுள் சில.
1. சூரியன் உதித்த பிறகு படுக்கையில் தூங்கிக்கொண்டிருக்க
éfôh.L.TğB5I. 2. பால், தயிர் பச்சைகாய் கறிகளை இரவில் கடன் கொடுக்காவோ,
வாங்கவோ கூடாது. 3. பாலைப்பொங்கி வழிய விடக்கூடாது. 4. பணம் காசு, புதிய பட்டாடை வெள்ளிக்கிழமைகளில் ஒருவருக்கும்
கொடுக்கக் கூடாது. 5. மாலையில் தீபம் வைத்துவிட்டு உடனே வெளியில் உலாவ
கிளம்பக் கூடாது. 6. இரவில் குப்பைகளை வீட்டுக்கு வெளியே கொட்டக்கூடாது.
அல்லது கூட்டி வெளியே தள்ளக்கூடாது. 7. தீபம் வைத்த பிறகு, தலைவாரிக் கொள்ளுதல், முகம் கழுவுதல்,
தயிர் கடைதல், அரிசி போன்ற வேலைகள் செய்யக்கூடாது. 8. வெள்ளிக்கிழமைகளில் அரிசி புடைப்பது அரிசியை வறுப்பது
போன்றவை செய்யக்கூடாது. 9. மேலும் இரவில் இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், நெல்லிக்காய் இவைகள் உண்ணக்கூடாது. உண்டால் லட்சுமி கடாட்சம் நீங்கும்.
பாவங்கள்
களவு திட்டமிட்டுத் தீங்கிழைத்தல் பேராசை
கடும் சொல் கோள் சொல்லுதல் பொய் கூறல்
ஒவாதபேச்சு பிறர் பொருளைக் கவர்தல் - பிறரைத் தவறாக எண்ணுதல்
Nதவறான வழியிற் செல்லுதல்
шpєої - 52
 
 
 

மூனறு
1. மதிப்பளிக்க வேண்டியவை
முதுமை, மதம், சட்டம்
2. விரும்ப வேண்டியவை நெஞ்சமே! நமக்கு தூய்மை, நேர்மை, உழைப்பு இறுதிக்காலம்
3. பாராட்ட வேண்டியவை எப்பொழுது நேரும்
அழகு, அறிவு, குணம் என்று தெரியாது.
4. வளர்த்துக்கொள்ள வேண்டியவை அப்பொழுது உன்னால்
அஞ்சாமை, உற்சாகம், திருப்தி எந்த முயற்சியும் 5. காப்பாற்ற வேண்டியவை செய்ய முடியாது. செல்வாக்கு, நட்பு, பற்று அதனால் நேரமும் 6. விலக்க வேண்டியவை சக்தியும் இருக்கும் புகைபிடித்தல், மது, சூதாட்டம் போதே முருகனின் 7. கட்டுப்படுத்த வேண்டியவை திருவடித் தியானத்தை
நா, உணர்ச்சி, ஆசை விரைந்து 8. கவனிக்க வேண்டியவை செய்வாயாக.
பேச்சு, நடத்தை, செயல்
9. ஒழிக்க வேண்டியவை கந்தரனுபூதி
சோம்பல், பொய், புறங்கூறல்
10. முத்திபெற நீங்க வேண்டியவை ஆணவம், மாயை, காமம்
கடன் தொல்லை விலக
அபிராமி அந்தாதி 75வது பாடல் பார்க்கும் திசைதொறும் பாசாங்கு சமும் பணிச்சி றைவண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையார் திரு மேனியும் சிற்றிடையும் வார்க்குங்கும் முலைமேல் முத்து மாலையுமே.
மேற்படி பாடலை தொட ர்ந்து பாடி வந்தால் கடன் தொல்லை விலகும்.
- 53 - கிருஸ்ண

Page 31
1 O.
11.
செய்ய வேண்டியவை
జ్యో சாதே, புறங் கூறாதே
பிறரைப் பற்றி அவதூறாகப் முடிந்தவரையில் பிறர்ைப்பற்றி பேசுவதைத் தவிர் பிறரைக் குறை கூறாதே. స్త్రీ* * பொய் பேசாதே. ޗް& கடுமையான வார்த்தைகளைப் ப்ேசாதே, தகாத வார்த்தை களையும், நிந்தனைச்சொற் ன்ஸ்யும் உபயோகிக்காதே, பிறரை சபிக்காதே, கெட்டவார்த்ை களைப்-பேசாதே. நிதானமாகவும் இனிமையாகவும்-பிேசு
. .ns-0:" , " ళళ్లలో நலலவாாததைகளை உ யோகி,_ஒருவரிடம் விரோதம்
கொள்ளாதே. 2^/| à স্থ அவசியமில்லா ம், தற்பெருமையாகவும் பேசாதே.
భళ
இறைவனின் பெருமைக்ளைப் பற்றி பேசவும் கேட்கவும் செய்,
சமய நூல்கள்ைப் படிப்பதிலும் இறைவன் நாமத்தை ஜெபிப்பதிலும், அவர் புகழ்/ ாடுவதிலும் ஈடுபாடு செய்.
தற்பெருமைக்கு இடம் ெ 3 பசுவையோ, ஏழைன்ய்யே ৪৭ விளைவிக்கும் முறையில் நட்ந்து காள்ளாதே.
སྔ་མ་ལ་བྱས་པ་ ஒருவரையும் அர்த்தமற்ற முறையில் முகஸ்தூதி செய்யாதே. கேளியாகப் பேசர் கேலிக்காக்கூட கெட்ட வார்த்தைகளை பேசாதே. ッ
வாழ்க்கையில் வெற்றிபெற10 கட்டளைகள்
நல்வற்றைக் கூட்டிக்கொள் தீயவற்றைக் கழித்துக்கொள் அறிவைப் பெருக்கிக்கொள் நேரத்தை வகுத்துக்கொள் இன்ப துன்பங்களை சமமாக்கிக் கொள்
வளர்பிறைபோல் அறிவை வளர்த்துக்கொள் செலவைக்குறை வரவை பெருக்கிக்கொள் அன்பைப் பெருக்கி ஆணவத்தைக் குறைத்துக்கொள் . நல்லவருக்கு இணையாக இரு 10. பிறரை நம்பி வாழும் வாழ்வு இணையற்றது
 
 
 
 
 
 
 
 

இந்த மூன்றும் பேராசை பாவங்களைச் செய்யத்தூண்டும், சாப்பாட்டு ஆசை, வியாதிகளை வளர்க்கும், அதிக பாச பந்தம் துயரத்தை விளைவிக்கும், ஆகையால் பேராசை நாவாசை உறவு ஆசை மூன்றையும் விட்டால் தான் நின்மதியும் மகிழ்ச்சியும் பெறமுடியும்.
பெரியோர் வாழ்வும் காலத்தில் அவர்களைப் போற்றாது வாழ்பவனும், அவர்கள் இறந்த பிறகு இழந்துவிட்டமே என்று இரங்கி வருந்துபவனும், நலிவு ஏற்படும் போது நல்லவைகளைச் செய்யாமற் போனேன் என்று வருந்துகின்றவனும், ஆகிய இம்மூவரும் அறிவை பெற்றும் பெறாதவர்.
இருளில் செல்வது போன்ற தவறான வழியிற் செல்லும் செயலும் நன்மை தீமைகள் அழியாமல் கொதித்து ஒழுகின்ற கோபமும், தீய பொருட்களில் ஆசையை உண்டாகும் வேட்கையும், ஆகிய இம்மூன்றுமே பேதமையாகிவிடும்.
செல்வம் குறைந்த போது காணப்படும் நண்பனுடைய அன்பும், நற் குணங்களின் நிறைவினாலே காணப்படும் உயர்ந்த குடிப்பிறப்பும், தூய்மையான உள்ளத்தில் காணப்படும் சிறந்த உறுதிப்பாடும் ஆகிய இம்மூன்றும் தன்மையுடையார் செயல்.
பெரியோர் காட்டிய வழியை மீறி நடக்கும் செயலும், நட்புடையவர்களிடத்தும் பொய் கூறி, ஏமாற்றும் வஞ்சகமும், விரும்பிக் கைக்கொண்ட மனையாளை வெறுத்து கைவிடும் கொடுமையும், ஆகிய மூன்றும் அரம் இழந்தோர் தொழில்.
சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் இம்மூன்றையும் பழிக் கொள்ள வேண்டும். தேவை சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தவும் வேண்டும் உலகமே உனது நட்பை விரும்பும். ரகசியமாக வாய்க்குள் சிரித்துக்கொள்வது, செய்த உதவிக்கு மாத்திரம் நல்லது செய்வது, நாம் ஏதாவது நன்மையும் அறியாமல் கெட்டகாரியம் செய்திருந்தால் அதை மறக்காமல் மனதில் வைத்துக்கொண்டிருப்பது, இந்த மூன்றும் கெட்ட நண்பர்களுக்கு உரிய அடையாளங்களாகும்.

Page 32
8. சுமையைத் தாங்கி அலுக்காமல் உழைக்க வேண்டும். வெயிலையும், குளிரையும் பாராட்டக்கூடாது எப்போதும் ஆனந்தமாக இருக்க வேணி டும் . இவை மூன்றையும் கழுதையிடமிருந்து கற்றுக்கொள்.
9. காமம், கோபம், பேராசை ஆகிய மூன்றும் ஆத்மாவிற்கு நாசம் விளைவிக்கும். நரகத்தின் வாயில்கள் இம்மூன்றையும் தவிர்க்க வேண்டும்.
- இது ஏகாந்தநிலை ற வரினும் தீதே விளைகினும்
றிவது ஒன்றுமில்லை
- இது யகார்த்த நிலை க்கே பாரம் எனக்கு உள்ளம் எல்லாம்
- இது சரணாகதி நிலை இதற்கு மூன்ற நிலைகளில் மனதைப் பக்குவப்
ஐாதகம்
இறைவனுடைய படைப் பில் ஒரு கன்றுக்குட்டிக்குக் கூட ஜாதகம் இருக்கிறது. கன்றுக்குட்டி என்ன கடவுளுக்கே கூட ஜாதகம் இருக்கிறது. பூரீராமனுடைய ஜாதகத்திலும் பெண்டாட்டியை பறி கொடுக்கும் கட்டம் இருக்கிறது சீதை பிறக்கும் போதே, அவர் கைரேகையில், அவர்
காட்டுக்குப் போவான் என்றிருக்கிறது.
ஒரு காரியம் நடைபெறுகிறது என்றால் அதற்கு நாம் காரணமில்லை என்றால், ஏதோ நமக்குத் தெரியாத
ஒரு சக்தி தானே காரணம்.
நினக்காத ஒன்று நடக்கும் போது அதுவே
ஜாதகப் பலனாகி விடுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மஹா சிவராத்திரி நாளன்று சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேகங்களும் ஆராதனைகளுக்கு உரிய திரவியங்களும்
முதலாம் காலம்:- பஞ்சகவ்ய அபிஷேகம் பொங்கல் நிவேதனம்:- வில்வார்ச்சனை இரண்டாம் காலம்:- பஞ்சமிர்த அபிஷேகம் பாசாயம் நிவேதனம்:- தாமரை வேர் அர்ச்சனை மூன்றாம் காலம்:- தேன் அபிஷேகம் நெய்யும் மாவும் கலந்த நிவேதனம்:- முல்லைவேர் அர்ச்சனை நான்காமம் காலம்:- கரும்புச்சாறுஅபிஷேகம் வெண்பொங்கல் நிவேதனம்:- நத்தியாவெட்டைவேர் அர்ச்சனை
ஆமையின் அற்புதம்
ஆமை புகுந்த வீடு உருப்படாதென்பது நாம் கேள்விப்பட்ட செய்தி உண்மை அதுவல்ல. ஆமையால் விளையும் பயன்கள் எவையென்பதைக் காண்போம்.
1.
முழு பெளர்ணமி அன்று வீட்டினுள் ஆமை கிழக்கு முகமாக நுழைந்தால் குடிசை வீடு மாளிகையாகமாறும். ஆமை ஒட்டை நொறுக்கி சாம்பிராணி போன்று புதைத்து ஆசன வாயியல் புகைப்பிடித்தால் 100 வகையான மூல நோய் உடனே நீங்கும். ஆமை ஒட்டில் பால் ஊற்றி உண்டால் புண்ணரியம் பெருகும். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் ஆமை ஒட்டில் உண்டால் புத்திர பாக்கியம் உடனே கிடைக்கும். ஆமை ஒட்டில் விளக்கு எரித்தால் செல்வச் செழிப்பு ஏற்படும். ஆமை ஒட்டில் அமர்ந்தால் காலனும் நீண்டுவதில்லை. ஆமை ஒட்டினை கழுத்தில் மாட்டிக்கொண்டால் வெற்றிகள் நிச்சயம் உண்டு. பிதுர்க்கடன் முடிக்கும் போது ஆமையை கொண்டு வந்து அலங்காரம் செய்து பூஜித்து அதைப் போகவிட்டால் அது செல்லும் திசையை வைத்து தீமைகளையும் பிதுர்க்கள் உள்ளார்களா அல்லது வேறு பிறவி எடுத்து விட்டார்களா என்பதை அறியலாம்.
- S7- கிருஸ்ணா மலர்

Page 33
9. ஆமையை இடது கையில் எடுத்து வலது கையில் தானம்
செய்தால் செல்வங்கள் சேரும்.
10. இந்து கோவில்களில் ஆமையின் பீடம், விளக்குகள் இருப்பது
ஆமையின் பெருமைக்கு ஒரு சான்று.
11. திருமாலும் தன் அவதாரத்தின் பெருமையைக் காட்டுவதற்கு
ஆமையாகவும் (கூர்ம அவதாரம்) அவதரித்தார்.
வில்வமும், துளசியும் சிவன் கோவிலில் அர்ச்சனை செய்யப்படும் வில்வமும், விஷ்ணு கோவிலில் அர்ச்சனை செய்யப்படும் துளசியும் எத்தனையோ நோய்களைத் தீர்க்கவல்ல சக்தியைப் பெற்றுள்ளன என்று விஞ்ஞானிகள் கண்டறிந்ததை அன்றே நம் சித்தர்கள் தெரிந்து வைத்து இருந்தார்கள். துளசியும் வில்வத்திலும் ஊறி வந்த அபிஷேக நீர் நோய், தீர்க்கும் மருந்தாக பயன்பட்டு வருகின்றது.
ஆலய மூர்த்திகளுக்கு மேல் ஊற்றப்பட்ட அபிஷேக திரவிய ங்கள் அடியார்களின் உடல் நலத்தைக் காக்கும் மருந்தாகவும், உள்ளத்துக்கு ஆறுதல் தரும் அருட்பிரசாதமாகவும் கிடைக்கப் பெறுகின்றன.
பணத்தால் சாதிக்க முடியாதது
3 பணத்தால் படுக்கையை வாங்கலாம்
- உறங்கத்தை வாங்க முடியாது. புத்தகத்தை வாங்கலாம் - அறிவை வாங்க முடியாது. உணவை வாங்கலாம் - பசியை வாங்க முடியாது. பகட்டை வாங்கலாம் - பண்பாட்டை வாங்க முடியாது. கேளிக்கைகளை வாங்கலாம்- மகிழ்ச்சியை வாங்க முடியாது. ஆயுதங்களை வாங்கலாம் - வீரத்தை வாங்க முடியாது. வேலைக்காரர்களை வாங்கலாம்
 

ஐம்புலனை அடக்க ஒரு விளக்கம்
1. கண்ணால் கெடுவது- வீட்டில் பூச்சி, விளக்கு வெளிச்சத்தை
பார்த்து அதில் வீழ்ந்து மடிகிறது.
2. நாவால் கெடுவது:- மீன் தூண்டில் முளையில் இருக்கும் புழுவுக்கு ஆசைப்பட்டு நாக்கை நீட்டி தூண்டிலில் மாட்டிக் கொண்டு வெளியே இழுத்து வரப்பட்டு மடிகிறது.
3. செவியால் கெடுவது- மான் குறிப்பிட்ட குழலோசையைச் கேட்டு
ஒசை வந்த இடம் நோக்கிச்சென்று மாட்டிக் கொள்கிறது.
4. நாசியால் கெடுவது:- வண்டு, மலரின் மகரந்த மணத்தில் மயங்கி மலரில் மொய்த்து பின்னர் மலர் மூடிக்கொண்ட போது மடிந்து விடுகிறது.
5. மெய் (உடம்பு)யால் கெடுவது: யானை குழியில் விழுந்த பெண் யானையிடம் சேர ஆசைப்பட்டு தானும் படுகுழியில் வீழ்ந்து மாட்டிக்கொள்கிறது.
தாய்மார்கள் கவனத்திற்கு
1. முத்தானையைத் தொங்கவிட்டு நடக்கக்கூடாது. இழுத்துச் செருக
வேண்டும். முத்தானை ஆடினால் குடும்பமும் ஆடிப்போகுமாம் 2. கோயிலில் சாமி கும்பிடும் போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன்நெற்றி தலையில் படுமாறு கும்பிடு வேண்டும். 3. கோயிலில் தீர்த்தம் வாங்கும் போது இடக்கைக்கும் வலக்கைக்கும் நடுவில் முத்தானை நுனியை வைத்துத் தீர்த்தம் வாங்க வேண்டும். 4. சுமங்கலிப் பெண்கள் குளிக்கும் போது சிறிது மஞ்சள் உரைத்து
முகத்தில் பூசிக்கொண்டுதான் தலைமுழுக வேண்டும். 5. குத்துவிளக்கு ஏற்றும்போது ஒரு திரி மட்டும் போடக்கூடாது
இரண்டு திரி போட்டு ஒரு முகம் ஏற்ற வேண்டும்.
றாக விஷயங்களை அறிபவன் கொஞ்சமாக அறிந்தவனை
羲萎 அலெக்சாந்தர்டுமாஸ்
- 59 - கிருஸ்ணா மலர்

Page 34
நம்முடன் வரும் புண்ணியம் நாம் நூறு வயது வரை இந்த உலகில் வாழ்ந்து பணத்தைச் சேர்த்தாலும், உயிர் இந்த உடலை விட்டுப்போகும் போது ஒரு பைசா கூட எடுத்து போக முடியாது என்பது அனைவருமே அறிந்ததுதான்.
பெண்களோ, ஆண்களோ அணிந்து கொண்டு இருக்கின்ற அணிமணிகள் தீ இவ்வுடலைத் தீண்டுவதற்கு முன்னமே கழற்றப்பட்டு விடுகின்றன. உயர்தர பட்டுப்புடவை, வேட்டி முதலியன வீட்டிலேயே அவிழ்க்கப்படுகின்றன. ஆகையால் நாம் சம்பாதிப்பதை நாமே எடுத்துப் போவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அதாவது நாம் சம்பாதிக்கும் பணத்தை வேறு சாமான்களாக மாற்றி விட்டால், உயிர் உடலை விட்டுப்போகும் போது நம்முடன் கூடவே கொண்டு போகலாம் வேறு சாமான்கள் என்றால் என்ன? பணத்தை செலவழித்துப் பலவகையான புண்ணியங்களை மூட்டை கட்டி வைத்துக்கொண்டால், அந்த புண்ணிய மூட்டைகளை தம்முடன் கூடவே கொண்டு போகலாம். பூரீ அழகியசிங்கன்
உடல் சம்பந்தப்பட்ட விஷயங்கள்
1. உயிருள்ள ஜீவன்களுக்கு ஊறு விளைவிக்காதே
கெட்ட காரியங்களிலோ, மட்டரகமான விஷயங்களிலோ FFGULITG35. உன்னால் முடிந்த வரையில் பிறருக்கு சேவை செய். உன் கையினாலேயே உன் வேலையைச்செய். உன் குருமார்களுக்கு தினந்தோறும் வந்தனம் செய். புண்ணிய புருஷர்களையும், தீர்க்கதரிசிகளையும் காணும் பொருட்டு, புண்ணிய ஷேத்திரங்களையும் கோவில்களையும் தரிசி. 7. நல்ல நீரில் நீராடு, களி மண்ணாலும் நீராலும் சுத்தம் செய்து
கொள். 8. நிர்வாணமாக ஸ்நானம் செய்யாதே. 9. மலஜலம் கழித்த பின் கை, வாய், கால் இவற்றை நன்றாக
சுத்தம் செய்து கொள். 10. மலஜலங்கள் நதிக்கரைகளில் கழிக்காதே. 11. நின்று கொண்டு ஜலம் கழிக்காதே. 12. கண்ட இடங்களில் துப்பாதே. அசுத்தமானவற்றை தொடாதே.
2
- 60
 
 

உன்னதமானவை
1. இருக்க வேண்டியது :- தூய்மை, நீதி, நேர்மை 2. ஆளவேண்டியது :- கோபம், நாக்கு, நடத்தை 3. பெற வேண்டியது - அன்பு, தைரியம், மென்மை 4. கொடுக்க வேண்டியது :- இல்லாதவர்க்கு ஈதல்,
துன்புறுவேர்க்குஆறுதல் கூறுதல், தகுதியானவர்களைப்பராட்டுதல் 5. அடைய வேண்டியது - ஆன்மசுத்தம், முயற்சி,
உள்ள மகிழ்வு 6. தவிர்க்க வேண்டியது :- துன்பம் செய்தல், முரட்டுத்தன்மை
நன்றி இல்லாமை 7. விபகாரம் - செல்வங்களை விழுங்கி விடும் 8. பிரார்த்தனை :- துன்பங்களை விழுங்கி விடும் 9. தர்மம் - நோயை விழுங்கி விடும் 10. பொய் :- உணவு, உறைவிடம், உடை
ஆகியவற்றை விழுங்கி விடும் 11. கவலை - மனிதனின் வயதை விழுங்கி விடும்
1O அருள் கட்டளைகள் 1. காலையில் எழுந்தவுடன் கடவுளை இரண்டு நிமிடங்களாவது மனத்தில்
நினைத்து பிரார்த்தனை செய்க. 2. அன்றைய நாள், நல்ல நாளாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம்
வேண்டிக்கொள்க. 3. புண்ணிய நதிகள், கோமாதா, சீரஞ்சீவிகள், சப்தகன்னியர்கள் முதலியவர்களைக் குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது நினைக்க வேண்டும். 4. வாரத்தில் ஒரு நாளாவது அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று வணங்க
வேண்டும். 5. உன் பக்கத்தில் வாழ்பவர்களையும், மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். 6. சாப்பிடும் முன் மிருகங்களுக்கோ, பட்சிகளுக்கோ ஆகாரம் அளித்து விட்டு
பிறகு சாப்பிடவும். 7. அன்றாடம் குறைந்தபட்சம் சக்திக்கேற்றபடி தருமம் செய்தல். 8. நெற்றியில் தவறாது திலகம் வைத்துக்கொள்க. 9. உறங்கச்செல்லும் முன் அன்றைய நாளில் நீ செய்த நல்லவை கெட்டவைகள்
எண்ணிப்பார்க்கவும். 10. ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்து விட்டு உறங்கவும்.
- 61 -

Page 35
உறவுகள் மேல்வடேன. 9 நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள் (Ego) 9 அர்த்தமில்லாமலும் பின் விளைவு தெரியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள் (Loose talks) 9 எந்த விடயத்தையும், பிரச்சினையையும் நாசுக்காக கையாளுங்கள் (Compromise) 9 சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆகவேண்டும் என்று உணருங்கள் (Tolerance) 0 உண்மை எது பொய் என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்லுவதும், அங்கே கேட்டதை giGs, GaffTaigj6/605uilb GiGild, Git. (Carrying talks) 9 அளவுக்கதிகமாகவும் தேவைக்கதிகமாகவும் ஆசைப் LILITgrg,6ir (Over expectation) 9 எல்லோரிடத்திலும் எல்லா விடயங்களையும் அவர்களுக்கும் சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டிராதீர்கள் 9 கேள்விப்படுகின்ற எல்லா விடயங்களையும் நம்பி விடாதீர்கள்
• உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாக இருக்காமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். (Flexibility) 0 மற்றவர்கள் கருத்துக்களை, செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். (mis understandion) 0 மற்றவர்களுக்குரிய மரியாதையைக் காட்டவும் இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
IIT црәої - 62
 
 

-%험劇制制制制制制劇헌劇劉劇 、磁
ğ
“sougồšğiorias e pos:4ı©ș-nsus-gestowae, , , 圆窗g9949碱岛umg的吸—a8002’20”ț0 ‘ąsuolo ornae to|- sąıs@rns@ qsurtosságilistýĝuo 11ġġuż tứĝigo••· *quid? igogoșoqĩyılíų, rạisoestega og* m-isomoous laise şesreig grooteloijotsorosojots și eseorsuriuočioje ossĩĩg ffairs @ș@icsgoạnqo@ q@ș@gqoÀrno, opustossı çepılcosseig
quos@os Igoresèqń9 -ựesises œquipps @ılaoq'alg)
qoaĵigooglossusog afișeinrı-içosos 1@qsnego ssqrı @ı-ış, iuq,
密 源 决溶 郑 淞 激 赛 發 掌 激 必 ?
! §3 慈懿河;淇* - *-*••----~~~~! Įī@lan9.gs9gū’ış micusī£și@ņsırlı9 -掷1įsions@> þqiao-lo seus oorleagrı ise unores œurnese oosofų, įlaeopos founĐạo -yɛri ɖgsg)**a***행șɑ sortuse oorso sựı @op-ins-gers
94.8s */,0 ogs
懿豪*豪蒙豪登警总*蛟变***登登登登登登壁登**变***受、经

Page 36
Af
இ
=f ମଞ୍ଜୁ
அமரர்
SS2, ZÁSZSSR. ZAISTESSANS ESSE
"52 Gے مشعر۔
மல்லாகம் நீலியம்பனைப்பிள்ளையார் கோவில் நிர்வாகசபை பொருளாளர் 器
திரு. மு. பொன்னுத்துரை அவர்களின் மகன்
Barúler ஒளிவிளக்கே பண்பின் சிகரமே! பாசத்தின் இருப்பிடமாய் பண்பின் உறைவிடமாய் நேசமுடன் எம்முடன் பழகி எல்லோருடன் அன்புமழை பொழிந்து எல்லா நாளும் எம்முடன் சிரித்துப் பழகிய நீர் சொல்லாமல் பேசாமல் சென்றீரே நாமெல்லாம் நொந்து நெருடத் துடிக்கின்றோம்
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அவரது ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி: சாந்தி!!!
நண்பர்கள் நீலியம்பனை ಸ್ನೀ
秤突癸癸癸°日
பொன்னுத்துரை கிருஸ்ணகுமார்
శక
 
 
 
 
 
 
 
 
 
 
 

எமது செயலக உத்தியோகத்தர் திருமதி அணித்தா கிருஸ்ணகுமார் அவர்களின்
அன்புக்கணவர் - - - - - - - - - -
அவர்களின் அகால மறைவினால் ஆளாத்துயரில் uSuS S LLLLmmmLLLLLLLLTTTT LLOOmTLmT TTLLTTTTmtT S SuS
எமது கவண்ணி அஞ்சலியிலள காணிக்கைuாக்குகின்றோம்
ஆண்டவன் சோதனையோ ພ.
எங்கள் அணித்தாவின் இயற்தில் பேரிழயை இறக்கிவிட்டு போய்விட்ட astrografai Sigisijai!" "
சிறித்தழகத்தோடு
அரைநொடியில் மறைந்ததுவே
விதியென்று சொல்லி
ови оту руилов . . . 6ij6 . . . . . . . . . . . . அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக
dditionBálnégi . . ぶ;リ.ー ".......*:*。" ... " JééQಿಟಿ! ఢి, శ్రీశిశిగ్రీ&&gNశీడ&క్రిణీ -
................ . . . . . شاھلہ لاہو6a_4چéوڑا ۔
- - - - దిచ్తో

Page 37
LTTMm mmTTT S LSLmmLmmtmm mmmmtmLLm L mtYLSmmLmTTmLmLSS LLLJSLLmLmammT LLLTT
ឱD, 6tegឆ្នាឧទ្ធា វិញទាំងៃgoff அவர்களுக்கு எமது கண்ணீர் காணிக்கை!
ព្រោ}{360} - ஆர்ப்பாட்ட மில்லாதவனே! ప్త சபைக்கு வந்த நாள் முதல் இன்றுவரை அதே மாறாத புன்னகை பூத்த முகம் វិមជ្ឈិង ឆេងអ៊ួ ឆ្នា ឆ្នា
s 3.35 និងប្រែៈ វិជា្ជ អ៊ិស្ណុ
றகல்விக்கேற்ப வேலை கிடைக்கவில்லைெ
g86ö65),6o staðiru urrun. 6.1656an Lésél6ö பதவியுயர்வோடு இங்கு வந்து ប្រះទ័យ ឆ្លាយអ្វីg B.copឆ្នាc}{c} ម្ល៉ោះ ឃ្ល ដ្យា ទ្រៀវ ாம் கண் இமைக்கும் நேரத்தில்
மலே, புன்சிரிப்போடு பார்த்திருப்பது អ៊ុ ឆ្នាgh ー
செல்வத்திற்காகவா நண்பா ឆ្នាវិញ្ញំ ឆ្នាសំ (ម្ភៃថ្ងៃ ឯប្រឈៃឆ្នា
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
2. f8LXXIrösöggressir, eskultūrasóir iguríritor 36 ឆ្នាខឹង
 

·Ao¿oísmo)}}韃譯 : »
·i&vojscíclicosa,âánsson quaeqae1,2 %ậstossá * sq ss; is sisssssssss浣蹟orogo,0%"to sogaegae%@gogosto **# ~~~~ ·saesnaesą ságos ĝojo oqosoq, sốn Nonosos * 溪* 정飒就診 &就----환 ***城:3?-政子: %, "& : ...........*...*:·; : ?-:æ.* sóstolę£ €ởaestosom scaeosog)gorĝojosĠ{{{{{s{{{3}sonĝ略歴2)
i:气)食兮岛剧):食兮母剧
*g@@的巨g姆目医g) - oởỚżozo zooz£??zo*:', Åos@@anq6JĘZÍ/@@
每盘)
*);g) *唱因*暗白的官爵恩a@白匈哈官匈臣副! stologosố寻长的身份)反总剧 *曾馬@@sms sogaesso saeos? ossosoɛɛgɛsɛ sɛ ŋƆŋsim popologo
昌gmümüs宮g副&臣ggla@ 的Gm曾己白鶴官爵哈雷唱自恆
·luogo iníur: £ 1ợgo gif@mae@solo goosssssssssssssssssssssssssssszaeső songs grassa originses, TỈNors goosno som soạn osoa omas ĝisų, są rosson glaga siis - almış, maes lomaeus googtergo (noco pos:9ť, plōgos o postos) yra looton@ro)
qual@lwww.spog størấệsĒispuntos
Țúnfo

Page 38
நன்றி நவிலல் எங்களை ஆறாத துயரில் விட்டு சென்ற எங்கள் அருமை கண்ணன் இறையடி சேர்ந்த போது எமக்கு பலவழிகளிலும் பல உதவிகளைச் செய்த உற்றார் உறவினர் நண்பர்களுக்கும்,
எங்களது ஆழ்ந்த கவலையின் போது நேரில் பங்கு பற்றி தேற்றியவர்களுக்கும், அனுதாபச்செய்திகளை அனுப்பியவர் களுக்கும் மலர்வளையங்கள் மாலைகள் சாத்தித் தேற்றியவர் களுக்கும்,
பிறநாடுகளில் வாழும் எமது உற்றார், உறவினர், நண்பர்கள் அனுப்பிய அனுதாபச் செய்திமடல் மூலம் எங்கள் கவலைகளில் பங்கெடுத்துத் தேற்றியவர்களுக்கும்,
அதுபோல் பிறநாடுகளிலிருந்து எங்களுடன் நேரடித்தொலைபேசித் தொடர்பு கொண்டு எமது சோகங்களைப் பகிர்ந்து கொண்டு
ஆறுதல் கூறியவர்களுக்கும்,
இறுதிக்கிரியைகள் சிறப்பாக நடைபெற கலந்து கொண்ட உறவினர், நண்பர்களுக்கும்,
அந்தியேட்டி, சபிண்டிகரண, மதியபோசன நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்த உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கும்,
இந்நினைவு மலரை அழகாக அச்சிட்டு உதவிய அச்சகத்தாருக்கும்
மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
- குடும்பத்தினர்
- 68
 
 


Page 39
面