கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ருக்மணி ஜெகதீசசிங்கம் (நினைவு மலர்)

Page 1
வடமராட்சி சந்தை வீதி உ கொக்குவிலை
அமரர். ருக்டி
அவர்கள் சிவபதப்பேறு கு
 

ు. 1.
டுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்
தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட
0ணி ஜெகதீசசிங்கம்
(இராசபாக்கியம்) நறித்த “மாதாவிற்கோர் மலர்” என்னும்
னவு டுலர்
02-77-2007

Page 2

தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட
அமரர் I திருமதிருக்மணி ஜெகதீசசிங்கம் ?
(இராசபாக்கியம்)
அவர்கள் சிவபதப்பேறு குறித்த “மாதாவிற்கோர் மலர்” என்னும்

Page 3
சந்தை வீதி, உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டு, 05-10-2007 அன்று சிவபதமடைந்த எமது பாசமிகு தாயார் அமரர் திருமதி ருக்மணி ஜெகதீசசிங்கம் அவர்கள்
நினைவாக வெளியிடப்படும்
“மாதாவிற்கோர் மலர்' என்னும் நினைவு மலரினை
அன்னார் தம் ஆத்மா இறைவனடியில் நித்திய ஆத்ம சாந்தியடைய வேண்டும் என நாமெல்லோரும் கன்னி மல்க இறைவனைப் பிரார்த்தித்து அன்புத்தாயார் தம் பாதங்களுக்கே எம் காணிக்கையாய் சமர்ப்பிக்கின்றோம்.
இங்ஙனம்
மகன்மார்கள், மருமக்கள், பெறாமகள், பேரப்பிள்ளைகள்.
 

இறைவன் அடியில்: O5-10-2007
தாயின் மடியில்:
25-02-H926 அமரர்
O O திருமதிருக்மணி ஜெகதீசசிங்கம்
(இராசபாக்கியம்) திதி வெண்பா சர்வசிதது வருடத்தின் புரட்டாதி வெள்ளியதில் சர்வ பூரணமாய் நின்ற திதி நவமியில் - பார்புகழ வாழ்ந்தவுயர் ஜெகதீசசிங்கம் உறுதுணை ருக்மணி
ਭ ஈசனடி சார்ந்த தினம்.

Page 4

அமரர் ருக்மணி ஜெகதீசசிங்கம் அவர்களின்
பஞ்சபுராணம்
திருச்சிற்றம்பலம்
விநாயகர் வணக்கம்
விநாயகனே வெவ்வினையே வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கைதனி விப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து.
தேவாரம்
நங்கடம்பனைப் பெற்றவர் பங்கினன் தென்கடம்னை திருக்கரக் கோயிலான் தன்கடளடியேனையுந் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே.
திருவாசகம்
ஒளிவளர் விளக்கே உலப்பிலாவொன்றே
உணர்வு சூழ் கடந்ததோருணர்வே தெளிவளர் பளிங்கின் திரள் மணிக்குன்றே
சித்தத்துள் சித்திக்கும் தேனே அளிவளருள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலமாடராப்காக வெளிவளர் Rேய்வக்கூத்துகந் தாயைத்
தொன்ைடனேன் விளம்புமா விளம்பே.
C1)
நினைவு மலர்
لے

Page 5
நினைவு மலர் அமரர் ருக்மணி ஜெகதீசசிங்கம் அவர்களின்
『ー திருவிசைப்பா
ஏக நாயகனை இமயவர்க் கரசை என் உயிர்க் கமுதினை எதிரில் போக நாயகனை புயல்வணற்கு அருளிப் பொன்நெடும் சிவிகையா வூர்ந்த மேக நாயகனை மிகு திருவீழி மிழலைவிண் ணிNசெழுங் கோயில் யோக நாயகனை யன்றிமற் றொன்றும் உண்டென உணர்கிலேன் யானே!
திருப்பல்லாண்டு பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்த பிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற தில்லைச்
சிற்றம் பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே,
பெரிய புராணம் தண்ணளி வெண்குடை வேந்தன் செயல்கண்டு தரியாது மண்ணவர்கண் மழைபொழிந்தார் வானவர்பூ மழைசொரிந்தார் அண்ணலவன் கண்ணெதிரே அணிவீதி மழவிடைமேல் விண்ணவர்கள் தொழநின்றான் வீதிவிடங்கப் பெருமான்
திருப்புகழ் ஏறுமயில் ஏறிவிளை யாடுமுகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே கூறும்அடி யார்கள் வினை தீர்க்குமுகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே ஆறுமுக மானபொருள் நீ அருளல் வேண்டும்
ஆதியரு ணாசலம் அமர்ந்த பெருமாளே
வாழ்த்து வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன் முறையரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொா டிசைவநிதி விளங்குக உலகமெஸ் , ம்
C2)
لئے

அமரர் ருக்மணி ஜெகதீசசிங்கம் அவர்களின் நினைவு மலர்
அமரர் திருமதி ருக்மணி ஜெகதீசசிங்கம் ר (இராசபாக்கியம்)
அவர்களின்
வாழ்க்கை வரலாறு
(1926-2007)
இந்துமா சமுத்திரத்தின் முத்தென விளங்கும் தெட்சண கைலாயம், குமேரபூமி, சுவர்ணபூமி என ஞானிகளினால் புகழப் பெற்ற இலங்கைத்தீவின் வட மாகாணத்தில் சைவமும், தமிழும் தழைத்தோங்கும் யாழ் மாவட்டத்தின் வடமராட்சியில் நீர்வளமும், நிலவளமும், பொருள் வளமும் மிக்கதாய் விளங்கும் “உடுப் பிட்டி’ எனும் ஊரின் கண் அமைந்த இமையாணன் மேற்கு பகுதியிலே, “அரிது, அரிது மானிடராதல் அரிது. ’ என்ற ஒளவை வாக்கிற்கிணங்க மருதநிலங்கள், வயல்கள் பலவற்றிற்கு உரிமையாளராகவும் தலைசிறந்த கைத்தொழில் விற்பன்னரா கவும், அக்காலத்தில் பேரோடும், புகழோடும் வாழ்ந்த அமரர் சிவக்கொழுந்து - அலங்காரம் எனும் தம்பதிகளுக்கு மூத்த புத்திரியாக கலகலப்பாகப் பேசும் அமரர் மகேஸ்வரியும், இளைய புத்திரியாக அமரர் ருக்குமணி (இராசபாக்கியம்) அவர்களும் அவனிதனில் 1926ம் ஆண்டு மாசி மாதம் 25ம் திகதி உதித்தார். இவர் மழலைக்குழந்தையாக வளரும் காலத்தில் எதையும் கூர்ந்து நோக்கும் நுண் ஆற்றலையும், இலகுவாகக் கிரகிக்கும் தன்மையையும், வந்தாரை இன்முகத்துடன் வரவேற்கும் பண்பினையும் இறைவன் கொடுத்திருந்தார். -
அமரர் தனது ஆரம்பக் கல்வியினை உடுப்பிட்டி மகளிர் கல்லூரியிலும் , கனிஷ்ட இடைநிலை வகுப்பு வரை கல்விகற்று தேர்ச்சி பெற்றார். இவரது ஆசாரம், குரு பணிவு, அன்பு, இரக்கம் என்பவற்றில் தலை சிறந்த மாணவியாக திகழ்ந்ததினால், கல்வி புகட்டிய ஆசிரியர்களால் பாராட்டப்பட்டு , பாடசாலைக்கல்வி கற்கும் காலத்தில் “இராசபாக்கியம்” என்ற செல்லப் பெயரினை பாசத்துடன் சூட்டி அழைத்தார்கள். இப்பெயரே திக்கெட்டும் பரவிய பெயராகவும் இவவுடன் அன்ஆபாடு பழகியவர்கள் நாவில் உச்சரிக்கும் பெயராகவும் இறுத வரை நிலைத்து நின்றது. لـ
Gs)

Page 6
நினைவு மலர் அமரர் ருக்மணி ஜெகதீசசிங்கம் அவர்களின்
『ー அன்றைய சமய கலாச்சார வரையறைகளின் படி இவர் தனது 22ம் வயதில் 1948ம் ஆண்டு ஆவணித் திங்கள் 7ம திகதியன்று காலஞசென்ற தம்பு - இளையாச்சி தம்பதிகளின் மூத்த புத்திரனான ஜெகதீசசிங்கம் அவர்களை திருமணம் செய்து,
“அன்பும் அறமும் உடைத்தாயின்-இல்
வாழ்க்கை பண்பும் பயனும் அது’
என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க இல்லற வாழ்க்கையை இனிதே ஆரம்பித்தார்கள்.
புருஷனுக்கு ஏற்ற பதிவிரதையாகவும், ஈருடலும் ஒருயிருமாக மிக ஒற்றுமையாக இல்லறம் நடாத்தி வந்தனர். அமரர் தனது கணவருடன், கணவர் வேலை செய்த கொழும்பு, வவுனியா, அங்குலான போன்ற இடங்களில் அமரரின் தாயாரின் உதவியடன் வாழ்ந்து வந்தார்கள். இனிய இல் வாழ்வின் தவப்பேறாக 1950ம் ஆண்டில் மூத்த மகன் பவானந்தசிவமும், 1954ம் ஆண்டில் இரண்டாவது மகன் புவனேந்திரனும், 1961ம் ஆண்டில் இளைய மகன் சத்தியேந்திரனும் ஆக முத்தான மூன்று புத்திரர்களை பெற்றெடுத்தனர். மேற்படி தனது மூன்று புத்திரர்களுக்கும் அழகாகப் பெயரிட்ட போதிலும்; “ராசன்”, “ராசு”, “செல்வம்” என்றே அன்புடன் அழைத்து, மிகுந்த பாசத்துடன் கண்ணை இமை காப்பது போல கண்ணும் கருத்துமாய் பேணி வளர்த்து, கல்வி அறிவினையும், தமக்கு வேண்டிய துறையில் உயர் கல்வியினையும் புகட்டினார்கள். பொருட் செல்வத்திலும் பார்க்கக் கல்விச் செல்வத்தில் தம்பிள்ளைகள் தேர்ச்சியடைய வேண்டுமென்ற எண்ணத்தில் கண்ணும் கருத்தாக இருந்தார்கள். கொழும்பில் வாழ்ந்து வருங்காலத்தில் உதவிகள் தேடி வருவோருக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் உதவிகள் பல புரிந்து மகிழ்ந்தார்.
அமரர் அவர்கள் தனது பிள்ளைகளின் கல்விக்காக வழங்கிய ஊக்குவிப்பின் பேறாக பிள்ளைகள் மூவரும் சமூகத்தில் உயர்ந்த பதவிகளில் மிளிர்கின்றனர் இவ்வாறான உயர்நிலையினைப் l لـ

அமரர் ருக்மணி ஜெகதீசசிங்கம் அவர்களின் sobara Jr. ரீபிள்ளைகள் அடைவதற்கு அமரர் அவர்கள் ஒரு சிறந்த அன்னைக்கே உரித்தான வகையில் வாழ்ந்து, வழிகாட் டியாகவும் , ஆலோசகியாகவும் நல்வாழ்வில் ஒளியூட்டி யாகத்திகழ்ந்தார்கள்.
அமரரின் மூத்த மகனான பவானந்தசிவம் (பொறியியலாளர்) அமரர் செல்லத்தம்பியின் மகள் செல்வத்திலகத்தினைத் திருமணம் செய்தார். இரண்டாவது மகன் புவனேந்திரன் (பட வரைஞர்) அமரர் நாகலிங்கம் மகள் கிருஷ்ணவேணியைத் திருமணம் செய்தார். மூன்றாவது மகன் சத்தியேந்திரன் (தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்) அமரர் அசரையா மகள் றொஸ்லினைத் திருமணம் செய்தார்.
அமரர் அவர்கள் தனது மூன்று பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகளுடன் இன்பமாக இணைந்து மகிழ்ச்சியுடன் உடுப்பிட்டியில், தனது சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். வயது முதிர்ச்சியின் காரணமாகவும், இயலாமையின் விளைவாக தனது மூன்று பிள்ளைகளினது வீட்டிலும் சிறிது காலம் மாறி, மாறி வசித்தார்கள். இறுதியில் தனது சுய விருப்பின் பேரில், கணவரின் பூரண இயலாமை நிலையிலும் இரண்டாவது மகனான புவனேந்திரனுடன் தலையாழி, கொக்குவிலிலும் வாழ்ந்தார்கள்.
18-09-2007 திகதிஏற்பட்ட சளியடைப்பின் காரணமாக கணவரான அமரர் ஜெகதீசசிங்கம் அ , கள் இறையடி சேர்ந்த போது, கணவரின் இழப்பினைத்தாங்க முடி த நிலையில் காணப்பட்டார். கணவரின் அந்தியேட்டிக் கிரிகைளைக் கூட திருப்தியுடன் செய்தார். அந்தியேட்டியின் மறுந:t {04-10-2007) அதாவது கணவர் இறந்த 17வது நாள் மதியத்திலிருந்து அடுத்த தினம் மதியம் வரை நெஞ்சினுள் ஏதோ செய்வதாக கூறினார். சாப்பாடும் சாப்பிட மனமற்ற நிலையில் இருந்தார். 05-10-2007 விடியற் காலையிலும், பிற்பகலிலும், சட்டநாதர் கோவில் அபிவிருத்தி செயலக தலைவரும், டாக்டருமாகிய திரு. க. செந்தில்குமரன் அவர்கள் சிகிச்சையளித்தார். பிற்பகல் வேளையில் மானிப்பாய் கிறின் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்சே வைத்தியர்களினால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு இருள் கவியும் வேளையில், ஓரளவு சுகமாக
Cs)

Page 7
நினைவு மலர் அமரர் ருக்மணி ஜெகதீசசிங்கம் அவர்களின்
இருந்தார்கள் அன்றையதினம் முன்னிரவு 10.42 மணி அளவில் திடீரென ஏற்பட்ட இதயவலி காரணமாக வைத்தியர்கள், மூன்று பிள்ளைகள், பெருமகள் முன்னிலையில் நெஞ்சுக்குள் ஏதோ செய்கிறது, மயக்கமாக வருகிறது என கூறி கணவர் சென்ற இடத்திற்கு ஒத்த ஜீவன்களாக, குறுகிய நாட்களில் விதியது நிறைவுற தன் பூவுலக வாழ்வு தனை நிறைவாக்கித் தினமும் வணங்கும் முருகப்பெருமானின் திருவடி நிழலை அடைந்தார்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”
அமரரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
“ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய்”

அமரர் ருக்மணி ஜெகதீசசிங்கம் அவர்களின் jsoore Dooli
ழுத்த மகனின் மூச்சில் இருந்து . -
கல்வி அறிவில் உயர்வு அடையச் செய்து சபை தனிலே முன்னிற்க வைத்த என் அன்புப் பாசமும் நிறைந்த அம்மா, எதை எதையோ எழுத எண்ணுகின்றேன். ஆனால், என்னால் எழுத முடியவில்லையே!
ஏன் இந்த தடுமாற்றம் என ஏங்குகின்றேன் பாசம் என்றால் பணம் கொடுத்து வாங்குவதில்லை. அம்மாவின் பாசத்திற்கு பாரினில் யார் உளர் என் ராசன் எதையும் செயற்படுத்துவான் ஒன்றுக்கும் யோசிக்க தேவையில்லை ஐயா என்று எந்த நிகழ்விலும் பெருமையாக கூறுவீர்கள். அந்த செயற்படுத்தும் ஆற்றலையும், வழிகாட்டலையும் நீங்கள் தானே அம்மா கற்பித்திரகள். நேர்மையாக வாழ், கடமையைக் கண்ணாக நினை, சரியெனப்பட்டதை செய், பிறருக்கு உதவும் நோக்கடன் வாழ். இப்படி எத்தனை, எத்தனை அறிவுரைகள். இவை எல்லாம் என்னை வழிகாட்டியாக செயற்படுத்தியவை. அது மட்டுமா? என் விருப்பத்திற்கு நான் ஏற்ற துணையையும் தேடித்தந்து, தரணி போற்ற வாழ வைத்தீர்களே. குடும்பத்தலைவர் ஐயா இருக்கும் பொழுது எனக்கு என்ன குறை என்று குதூகலமாக இருந்தேன். என் மகளின் திருமணத்தினை கண்ணார கண்ணுற்று சுதாவுக்கு இனி எக்குறையும் இல்லை என்றுரைத்து, வனிதாவே உன்னை என்றைக்கும் கவனிப்பாள் என்று கூறி, ரூபியையும், மாலினியையும், திலகத்தையும் கொழும்பு மாநகரில் கவனமாக இருக்கும் படியும் எடுத்துரைத்து தம்பி செல்வத்தை நீயும், உன் பிள்ளைகளும் கவனித்துக்கொள்ளவேண்டும் என்று எடுத்து முதல் நாள் கூறினீர்களே அம்மா! ஆனால்அந்த ஆண்டவன் உங்களை எடுத்துக் கொண்டார்.
உங்களை சுகதேகியாகக் சுறுசுறுப்பாக சுற்றி வந்தேனே, எங்களை நல்வழி காட்டி வளர்த்தெடுத்து எழுச்சி பெற வைத்த எனது அம்மாவை யமனிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. எல்லோருடனும் கதைத்து, கதைத்து முருகா முருகா என்று கூறி, ராசன், ராசு, செல்வம் என்னை விட்டுப்போகாதே என்று கூறி, கூறிக் கொண்டிருந்த அம்மாவே, உன்னை யமனிடம் இருந்து காப்பாற்ற முடியவிலலை. لـ
○

Page 8
நினைவு மலர்
ar
துதிக்கின்றேன்.
அமரர் குக்மணி ஜெகதீசசிங்கம் அவர்களின்
f எலலோருடனும் கதைத்து, கதைத்து ஈசனடி சென்றதை இதயம் உள்ளவரை அழுது புலம்பிக்கொண்டேயிருக்கும். அம்மா, அம்மா என்றுவாய்விட்டு அழுகிறேன். ஆனால் இனி பாரினிலே அம்மாவின் பாச முகத்தைக் காணமுடியாது. என்ன செய்வது?
கதறி அழுகின்றேன் அம்மா, கதறி அழுகின்றேன் முருகன் திருவடியில் சித்தமாயிருக்கும் அம்மாவே, சீரான வாழ்வைச் சிறப்பாக வாழவைத்த உத்தமியே, முருகன் திருவடியில் இருந்து எம்மைக் காத்தருள்வீர்கள் எனதினம், தினம் போற்றி உங்களைத்
பிரிவுத்துயரினால் வாடும்,
முத்த மகன்
ஜெ. பவானந்தசிவம் (ராசன்)
அன்பு காட்டு இரக்கம் காட்டு பணிவாய் இரு கண்டிப்பாய் இரு சிக்கனமாய் இரு வீரனாய் இரு. சுறுசுறுப்பாய் இரு தர்மம் செய், ஆனால் பொருளைத்தேடு உழைப்பினை நம்பு,
ஆனால் அடிமையாகி விடாதே ஆனால் ஏமாந்து விடாதே. ஆனால் கோளை:கி விடாதே. ஆனால் கோப:தே. ஆனால் கஞ்சலாய் இரஈதே. ஆனால் போக்கிரியாய் இராதே. ஆனால் பதட்டப்படாதே. ஆண்டியாகி விடாதே. ஆனால் பேராசைப்படாதே. ஆனால் கடவுளை மறவாதே.
G3D

அமரர் ருக்மணி ஜெகதீசசிங்கம் அவர்களின்
『ー
th
.------- ,- ,--- ............................ے_x" : بھا؟
அம்மா என்றண் ஒதய்வம்
வடமராட்சி தேசத்தின் உடுப்பிட்டியூரின் கண் உத்தமியாய் பிறந்து ஊர் புகழ நல்லோளாய் வாழ்ந்து உற்றார், உறவினருக்கு உதவிகள் புரிந்து உண்மையுடன் உறவாடியே உயிர் நீத்த அம்மாவே;
நல்லோராய்- வல்லோராய் கற்றோராய்- மற்றோர் போல் வானகத்து வாசமது பூமி மீது சஞ்சரிக்க வாழ்த்தும் உங்கள் தாய்மனம். ராசன், ராசு, செல்வமென நாள்தோறும் கேட்டீர்கள் எங்கள்உயர்வின் ஏணிப்படியானிர்கள்; என்றும் இன்புற்று வாழ்ந்தீர்கள்.
“ஐடென்ரிகாட் எடுத்தாயா? அவதானமாகப்போ’ என்றும் “பயமாயிருக்கிறது; வேளைக்கு வா” என்றும் கூறியே
அலுவலகம் செல்லு முன் வழியனுப்பி வைப்பீர்கள்; அலுவலகக் கடமை முடிந்து வீடு அடையும் வேளையதில் வாசலில் நின்று வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பீர்கள்.
ராசு, ராசு, ராசு என எப்போதும் அழைப்பது இப்போதும் சின்காதில் ஒலிக்கிறது. பசுமரத்தாரிையாய்.
நினைவு மலர்
wiwi*
الغfيسه..
`

Page 9
அமரர் ருக்மணி ஜெகதீசசிங்கம் அவர்களின்
நினைவு மலர்
w
பூனைக்கும், நாய்க்குமெனத் தனித்தனியாக மீன் முள் நீக்கி உணவு கொடுப்பீர்கள்; உண்மையான அன்பைக் காட்டுவீர்கள்உயிர்களிடத்தே! அச்சம் - மடம் - நாணம் - பயிர்ப்பு அத்தனையும் கொண்ட பெண்ணாக அன்னையாய், அமைதியான ஆலோசகியாய், அவனியிதில் வாழ்ந்தீர்கள் அம்மா. அன்பும், பண்பும், அறமும், பணிவும் எங்களுக்கு வேண்டுமென என்றுமே கூறுவீர்கள் - இதை இன்று கூற. இல்லையே நீங்கள் இப்போது!
“நேரில் நின்று பேசுந் தெய்வம் பெற்ற தாயன்றி வேறிங்கு ஏது. பொருளோடு, புகழ் வேண்டும் மகனல்ல தாயே நின் அருள் வேண்டும் எனக்கிங்கு அது போதுமே, அதை நீயே தருவாயே.
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் பிறந்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா? ”
பிரிவுத் துயரினால் வாடும் இரண்டாவது மகன்
ஜெ. புவனேந்திரன் (ராசு)
காலங்கள் மிகப் பொல்லாத8ை அதனால் தான் - அவை கடந்து விட்ட விநாடிகளை மீளத் தருவதில்லை!
--
ܢܬ

அமரர் ருக்மணி ஜெகதீசசிங்கம் அவர்களின் நினைவு மலர்
ଫେଉଁ ରାagଣ୍ଣ ଓidog,jଉf -
நீன்கடித நினைவுகள்.
என் பாசமிகு அம்மாவே!
“செல்வம்” என அழைக்கப்பட்ட இளையவனாகிய, நான் இரத்தினதுவிபம் என்றழைக்கப்படும் ஈழத்திருநாட்டின் தலைநகராம் கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் ஆரம்பக்கல்வியை கற்றபோது என்னைத் தினமும் கல்லூரிக்கு கூட்டிச் சென்று என்னுடன் கூட ஒரு ஆசிரியை போல இருந்து திரும்பி வரும் போது பல கதைகள் கூறித் தைரியம் மிக்கவனாய் கூட்டி வந்தீர்களே என் பாசமிகு அம்மாவே! அன்று ஒரு நாள் கொழும்பில் பாதை மாறி பஸ் சென்ற போதும் தைரியம், துணிச்சல் கொண்டு பக்குவமாய் மாலை வேளை வீடு சென்று சீரிய கல்வியதனை கற்றிடவே சிறப்புடனே உதவிய என் பாசமிகு அம்மாவே! உங்கள் அன்பு முகத்தை எங்கு காண்பேனோ? உடுப்பிட்டியில் உயர்தரம் படித்து தேர்ச்சி அடைய உதவியதுடன் நான் விரும்பும் சைவ உணவுகளை சுவையாகச் செய்து தந்தீர்கள் அம்மாவே!
அந்த நாட்களில் அம்பாறையில் உயர் கல்வி பெறச் செல்லும்போதெல்லாம், என்னை வழியனுப்பும் போது பஸ்ஸில் ஏறும் வரை நின்று; பகல், இரவு என்று பாராது என்னுடன் கூட நின்று வழியனுப்பி வைட்பீர்களே என் பாசமிகு அம்மாவே! ஆன்றைய காலத்தில் குறைவிடாது நேரத்திற்கு நேரம் பணம் அனுப்பி எனதுவிவசாய டிப்புளோமா பட்டபடிப்பினை நிறைவு செய்து பாரினில் சீரும், சிறப்புடனே வாழ உதவினிர்களே அம்மாவே! இனக்கலவர நேரத்தில் அம்பாறையில் நான் இருந்த போது என்னைக் காணாது கதறி அழுதீர்களே அம்மாவே! இன்று நான் உங்களை நினைத்து கதறுகின்றேனே! வேலையில் இணைந்து மட்டக்களப்ப்ல் சேவை செய்யும்போது எப்ப யாழ்ப்பாணம் வருவீர்கள் என ஏங்கினீர்களே அம்மாவே! இப்போ உங்களை காணாது ஏங்குகிறேன் நேசமிகு
!bordഖ لہ
GD

Page 10
நினைவு மலர் அமரர் ருக்மணி ஜெகதீசசிங்கம் அவர்களின்
spr
f
தெய்வத்துள் சென்றீர்களே - என் பாசமிகு அம்மாவே!
மன்னாரில் வேலை செய்துவிட்டு வார முடிவில் வீட்டுக்கு வரும்போது, எங்கள் இருவருக்கும் நல்வழி நடத்துதலைக் கூறி, நேர்மையையும், கடமையையும் மதித்து நடக்கும் படி நல் அறிவுரைகூறி, என் சேவையினை திறம்படச் செய்ய உதவினிர்களே அம்மாவே மாலை வேளையானதும் நான் பார்க்க வந்த போதெல்லாம், இருட்டுப்படுகின்றது வேளைக்கு வீடு போய்ச் சேர் செல்வம்; றொஸ்லின்தனியாக இருப்பா அவதானமாகச் செல் என்றெல்லாம் சொல்வீர்களே! இனி யார் தான் இதனை சொல்வார்கள். அக்குரல் இன்னும் என் செவிகளில் ஒலிக்கின்றதே அம்மாவே!!
என் பாசமிகு அம்மாவே! இறுதி மூச்சிலே தன் பக்கத்திலே இருக்க வேண்டும் எனவும், இவ்வுலகினை விட்டுப் பிரிந்துசெல்லும் நோக்கில் முதல் நாள் இரு கரமும் கூப்பினிர்களே, அடுத்த நாள் இரவு எம்மைமீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு இறைவனடி சேர்ந்த அம்மாவே! தங்களை எங்கே இனி காண்பேனோ?
"அன்பிலே நிறைந்த நெஞ்சும், வஞ்சமிலா இன்புற பணிகள் செய்யும் இன்முகமும் இனிய வார்த்தையும் கண்என உறவு பேணும் கனியு நெஞ்சத்தே மண்ணிதில் மாண்பு பேணி மதிப்போடு வாழ்ந்த என்
அம்மாவே!
பிறக்கும்போது நீ அழு இறக்கும்போது ஊரே அழும்படி வாழ் என்ற நல்லுரை கூறி என்றுமே உலகம் போற்ற, *ன்ற நல்லுரை கூறி என்றுமே உலகம் போற்ற, நிறைவான நோயற்ற வாழ்வை வாழ்ந்த - என் அம்மாவே!
வாழ்வாங்கு வாழ்ந்தீர்கள் வழிகாட்டினிர்கள் ஊர் மெச்ச வாழ்ந்து, உவமையின்றி போனிர்கள் வையத்து வாழ்வாங்கு வாழ்ந்தேன் என்று,
பிரிவுத்துயரினால் வாடும்
இளைய மகன் -ஜெ. சத்தியேந்திரன். (செல்வம்)
d
-- - - - - - - - - ہم ۰۰۰ ۔ یہ ۰۰---- ::سہ ۔۔۔۔۔۔۔۔ ۔ ۔ ۔ ۔

அமரர் ருக்மணி ஜெகதீசசிங்கம் அவர்களின்
என்கு சென்று விட்டிர்கள் இளைய அம்மா?
சொல்லி அழ வார்த்தை இல்லை ஆறுதல் சொல்லியும் ஆறவில்லை வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தேன் என்று தெய்வத்துள் போனீர்களே!
நினைக்க நினைக்க எனது நெஞ்சம் கனக்குதம்மா நினைக்க கண்ணிர் வடியுதம்மா நீங்கள் நிரந்தரமாய் தூங்கி விட்டீர்களே அம்மா
என்னால் தூங்க முடியவில்லை.
வந்ததும் வாழ்வதும், வரச் சொன்னவுடன் போவதும் இறைவன் போட்ட கணக்கு, இதை பிழை சொல்ல முடியுமா?
பிரிவுத்துயரினால் வாடும் பெறாமகள்
திருமதி. மனோரஞ்சித மலர்
பாலபரமேஸ்வரன்.
நினைவு மலர்
ףר
"தாயின் கருணை மொழியினாலே, தவறுகளை
நீக்க முடியும். அன்பின் அரவணைப்பினாலே பாவங்களைப்
போக்க முடியும்”
G3)

Page 11
நினைவு மலர் அமரர் ருக்மணி ஜெகதீசசிங்கம் အား6:Jff! இல்லத்திற்கு ஒளி தந்த இன்ப ஜோதி
அன்பே அணிகலனாகக் கொண்டு அரவணைத்து ஆதரவு காட்டி எங்களை வழிநடத்தி வந்த எங்கள் அன்புத்தெய்வம் - இல்லத்திற்கு ஒளிதந்த இன்ப ஜோதி - மங்கள தீபம் அணைந்து விட்டது.
துன்பங்கள் எவ்வளவோ வந்தபோதும் அவற்றை எல்லாம் சகித்து எங்கள் சுகத்திற்காகவும், சந்தோஷத்திற்காகவும் அரும்பாடுபட்டு வாழ்வை வளம்படுத்திய எங்கள் குல விளக்கின் ஒளி மறைத்து விட்டது.
அன்பு, பாசம், பரிவு, நேசம், கருணை என்ற சொற்களின் அர்த்தங்களை எமக்குப் புரியவைத்த எங்கள் அன்புத் தெய்வமே! இனி நாம் எங்கே போய் உங்கள் அரவணைப்பையும், அன்பையும், ஆறுதலையும் தேடுவது?
நன்றி மறவாமை என்னும் வள்ளுவர் வாய் மொழிக்கு உதாரணமாகத் திகழ்ந்த உத்தமியே உண்ணும் போது இறைவனுக்கு முதலில் நன்றி செலுத்தி விட்டுப் பின்னர் உணவை ஆக்கித்தந்த சீவனுக்கும் நன்றி செலுத்தும் உயர்ந்த பண்பு படைத்த "அப்பம்மாவே”
"அப்பம்மா” என்று ஆறாக் காதலுடன் ஓடோடி வந்து ஆசை தீரக் கதைத்த அன்புப் பேத்தி வனிதா, இனிமையாக மழலை மொழி பேசி உமது இதயத்தைக் குளிர்விக்கும் அன்புப்பேத்தி சுதா, சின்னஞசிறு வயதினிலே இன்ற வரை அப்பம்மா என்று அகங் குழைத்து ஆசை தீர |முத்தம் தந்து தலைவாரிப்பூச்சூடி கொஞசு மொழி பேசி, உங்களை மகிழ்வித்த அன்புப் பேத்தி ரூபி, மாலினி. இந்த அன்புச் செல்வங்களோடு இணைபிரியாது இணைந்த அம்ம்ே:ா என்று அழைக்கும் யுசந்தி, நிசாந்தன், சுகன்யா, வினோஜா போன்ற அன்புச் செல்வங்களை விட்டுப்பிரிய எப்படி அப்பம்மா உமக்கு மனம் வந்தது? எங்கள் அன்புத் தெய்வமே பாசத்தின் உறைவிடமே, நினைக்கும் பொழுதெல்லாம் உங்கள் எழில் மிக திருவுருவம் கண்முன் தெரிகிறதே.
பண்பில் உயர்ந்தவராய், பழகுவதற்கு இனியவராய் வாழ்ந்த,எங்கள் பாசமிகு அப்பம்மா எம்மை எல்லாம் மீளாத்துயரத்தில் ஆழ்த்தி விட்டு |கடமை முடிந்ததென்றோ சொல்லாமல் சென்று விட்டீர்கள்?
.. எஃறும் உங்கள் நினைவில் •
l அன்புப் பேத்திமார். لے

அமரர் ருக்மணி ஜெகதீசசிங்கம் அவர்களின் நினைவு மலர்
f R
zttiXij
ಟ್ಲಿ ಭ: ಬ್ಲ:ಳಿ ఫీ
ຫຼິ
திருமதி ஜெகதீச
#్క
ங்கம் ருக்குமணி
鞘*<、该飙》
நல்லூர் சட்டநாதர் ತ್ರಿ ಕಿಟಕಿ :பிவிருத்திச் செயலக நிர்வ 黏
கணக்காய்வாளர் சத்தியேந்திரன்
அவர்களின் தாயாரான திருதி, ருக்குமணி அவர்களின்
மறைவையிட்டு }}}}}}} .ه{s9 ؤ %{
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை
தெரிவிப்பதுடன்
இறைவனைப் பிரார்த்தில்கின்றோம்.
愛多**森弱 **葵 **線詩
- நல்லு சட்டதா: * ఖః قرار دو هزار و کار ra16 87.10-2017. 42ܐܶܬ݁ܪ ܐܶܝ ܶܡ݂ܢ - ܫ#& မီဂဲအီး ႏွင္ငံႏွ% జి.శ్రభ***ణీ శస్త్రః .
器
ಶ್ರೆಣಿಜ್ಞ'ನ್ತರ್ಟ್ತ
ব55

Page 12
மலர் அ: ருக்ம ைஜ்ெக لقطعيم
a Alth - - உளம் கனிந்த நன்றி
நவில்கின்றோம்
கடந்த 05-10-2007 இல் சிவபதமடைந்த எங்கள் குடும்ப குல ஜோதியும், அன்புத்தாயாருமாகிய
அமரர் திருமதி. ருக்மணி ஜெகதீசசிங்கம்
(இராசபாக்கியம்)
அவர்களின் உடநலக்குறைவுற்ற வேளையில் விடியற் காலை வேளையிலும், மதியமும் கிறீன் ஞாபகார்த்த மருத்துவமனை , மானிப்பாய் வரையும் கூடவந்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கியுதவிய Dr. க. செந்தில்குமரன் அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளித்த கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலை, மானிப்பாய் வைத்தியர்கள் மூவருக்கும், அன்னார் சிவபதமடைந்த செய்தி கேட்டு ஓடோடி வந்துதவிய சகலருக்கும், மரணச்சடங்கிலும், தொலைபேசி,தந்திகள் மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், கண்ணிர் அஞ்சலி பிரசுரம் வழங்கி அனுதாபம் தெரிவித்த நல்லூர் சட்ட நாதர் ஆலய தர்மகர்த்தாவுக்கும், அபிவிருத்தி செயலக உறுப்பினர்களுக்கும் உதயன் பத்திரிகையில் கண்ணிர் அஞ்சலி பிரசுரம் செய்த சமாதான நீதிவான்கள் சமூகத்திற்கும் , மலர்வளையம் வழங்கி அனுதாபம் தெரிவித்த தென்னைப்பயிர்ச்செய்கையின் பிராந்திய முகாமையாளர் (வடக்கு) அவர்களுக்கும் சக தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும், எழுதுவினைஞர்கள், மற்றும் சக ஊழியர்கள் அனைவருக்கும் அனுதாபம் தெரிவித்த உள்ளுராட்சி உதவி ஆனையாளர், அனைத்து உத்தியோகத்தர்கள் அனைவருக்கும், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும், மற்றும் இறுதிக் கிரியைகளின் போது பல வழிகளில் வேண்டிய உதவிகள் நல்கிய அன்பு நெஞ்சங்களுக்கும், அந்தியேட்டி, சபிண்டிகரண கிரியைகள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், மற்றும் உற்றார் உறவினர், நண்பர்களுக்கும், அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்தோருக்கும், எமது துன்பத்தின் மத்தியில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் இம்மலரினை அழகுற அச்சிட்டுத் தந்த தயா அச்சகத்தினருக்கும் எமது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்
இங்கனம், ஐெ.பவானந்தசிவம் ஜெ. புவனேந்திரன் ஜெ. சத்தியேந்திரன் குடும்பத் 2 எர்.
66, சபாபதி லேன்,
தலையாழி வைரவர் கோவிலடி, கொக்குவில்.
04-11-2007
 
 
 
 
 


Page 13

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
து நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்ற எது நடக்க இருக்கின்றதோ அதுவும்
囊 நன்றாக நடக்கும் 贛 灘
உன்னுடையது எதை இழந்தாய்
எதற்காக அழுகின்றாய்?
எதை நீ கொண்டு வந்தாய் ణ
அதை நீ இழப்பதற்கு எதை நீ எடுத்துக்கொண்பயோ அது இங்கேயே லகாடுக்கப்பட்டுள்ளது எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையாதாகின்றது மற்றொரு நாள் அதுவேறொருவருடையதாகும் இதுவே உலக நியதியும்
எனது படைப்பின் சாராம்சமுமா
U5Uਏ5ਮੁੰਹ
ہی مجمتمتمN متمنحة*