கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருமுருகாற்றுப்படை விளக்கவுரை

Page 1
குெ இந்தக
அருள்மி
-ை
 
 

鬣,
so【孚 -劑 澱劑
- அன்பு
-

Page 2

கணபதி ജ്
நக்கீரமுனிவர் பாடியருளிய
ருமுருகாற்றுப்படை
அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானம் நீர்வேலி, 2-2-1988

Page 3
நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தான வெளியீடு
வெளியீடுகள்
முருகநாமாவளித் திரட்டு 1 விசுவரூப தரிசனம் 2 பரீசுப்பிரமணிய பஜாசம் பொழிப்புரை - 3 திருமுருகாற்றுப்படை விளக்கவுரை - 4
ரூபா 10:00
 
 
 
 

ଖୁଁ முருகின் துறை
பல்கலைக்கழகத்து சிரேஷ்ட உதவிப் பதிவாளர் கவிஞர் இ முருகையன் B. Se, M. A. அவர்கள் வழங்கிய
அணிந்துரை
நல்லிசைப் ரேஞர் பாடியருளிய திருமுருகாற்றுப்படை சிறப்பிடம் பெறுகின்றது. இது ஒரு சிறந்த சமய நூலாக விளங்கு வதுடன் பாராயண நூலாகவும் இனேயற்ற இலக்கி லோகவும் விளங்குகின்றது. சங்க காலத்து பத்துப் ாட்டு நூல்களுள் முதலாவதாக அந்தத் தொகுதிக்கு ஒரு கடவுன் வாழ்த்துப் போன்று அமைகின்றது. திருமுறை *ளிலே பதிஞெரrரம் திருமுறையில் ஒரு பகுதிாது ଛୁଞ୍ଚିଛି * பெற்றுப் போற்றிப்படுகின்றது.
ஆறுமுகிப் பெருமகனின் ஆறு படைவீடுகணேப் பற்றியும் சிறப்பாக எடுத்தோதுகின்றது. ஆறுமுகன் அருண்பெற்ற ଔଜ୍ଜା ଖିଣ୍ଡୁ rலே அவன் தான் வணங்கி அவனருளே தாடி நிற்கும் வேறு அடியாரெrருவரை ஆறுமுகப்பெருமான் கோயில் கொண்ட் ம்ே ஆகியவை வீடுகளுக்கு ஆற்றுப்படுத்துவதாக அை 4ம் அரிய பொருள் வைப்பு முறையை பெற்று மிளிர்வது. முதற்பண்ட வீடrயே திருப்பர்ங்குன்றத்தில் முருகன் இயற்
இாட்சியளிக்ன்ேமூன்.

Page 4
இரண்டாவதாக திருச்சீரலைவாய் எனும் திருச்செந்தூரில்
கருணை கூர்முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டு
பரிபூரணனுகக் காட்சிதருகிருன். இவ்வுருவநிலை மெய்யடி பார் உள்ளத்திற் சிறந்து விளங்குவதாகும்.
*ஆரொருவர் உள்குவார் உள்ளத்துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்’
"நம் செந்தில் மேய வள்ளிமஞளன்; என்னும் அப்பர் சுவாமிகளின் அருள் வாக்குகள் இங்கு நினைவு கூரத்தக்கன.
திருவாவினன்குடி என்னும் பழனியின்கண் முருகப்பெரு மானே அருவமாய்க் கடந்தநிலையில் நக்கீரதேவர் வருணித் துக் காட்டுகிருர், நான்காவது படைவீடாகத் திருவேரகத் தைப் பாடி, அங்கு முருகப்பெருமானை அந்தணர் போற் றும் மந்திரருபியாய் வேதத்தின் உட்பொருளாகக் காட் டுகிருர் அநுபூதிமான்களுக்கேயல்லாமல் மலைவாழ் வேடர் முதலிய அடி நிலை மக்களுக்கும் எளியணுய் வெளிவந்து முருகவேள் அருள்புரிவான் என்பது ஐந்தாவதாகிய குன்று தோருடற் பகுதியில் எடுத்துக் காட்டுகிருர்,
முருகன் எழுந்தருளும் மலைகள் யாவும் இதனுள் அடங் குவனவாகும் புேயற் பொழில் பவற்பதி நயப்படுதிருத் தணி இக்குன்றுகளில் ஒன்ருகும். ஆருவதுபடை வீடாக பழமுதிர் சோலை சொல்லப்படுகின்றது. இத்தலம் இப் போது திருமால் வீற்றிருக்கும் பதியாக அழகர் கோயில் என்னும் பெயருடன் விளங்குகின்றது. திவ்வியப் பிரபந்தம் போன்ற வைணவ நூல்களில் 'திருமாலிருஞ்சோலை" என இப்பதி வழங்கப்படுகிற்து. முருகனும் அழகனும் ஒரு பொருட்சொற்களே என்பது சிந்தித்தற்குரியது. பரிபூரண ணுகிய முருகப்பெருமான் இத்தலத்திலே பெருமாளாகக் காட்சியளித்துத் திருவிளையாடல் புரிகிருன் போலும், அது பூதிச் செல்வராம் அருணகிரிநாத சுவாமிகள் தமது திருப் புகழ்ப்பாடல்கள் எல்லாவற்றிலும் முடிவில் முருகப்பிரான பெரும ளே என்று விளித்துப் பாடியிருப்பது நோக்கத்
தக்கது.
通
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்நூலைப்பாடியருளிய நக்கீரனுர் கடைச்சங்கத்துதி தலைமைப் புலவராவர். திருவிகளயாடற் புராணத்திலும் இவர் சரிதை வருகிறது. தருமிக்கு பொற்கிழி அளித்த திருவிளையாடலில் இறையனர் பாடலிற் குற்றங்கண்டு அவர்தம் நுதல் நெருப்புக்கு இலக்காகி வெப்பு நோயுற்று அது தீரும்பொருட்டுக் கயிலை நோக்கிச் செல்லும் வழியில் ஓரிடத்தில் சிவவழிபாட்டிலே தவறி, அதனுல் கற்கிமுகி என் னும் பூதத்தால் மலைக்குகையில் சிறைவைக்கப்பட்டார். அப்பூதம் சிவபூசையிலே தவறிய ஆயிர வ  ைர ப் பலி கொடுத்து ஒரு யாகத்தைச் செய்து முடிக்க விரும்பி தொள் ளாயிரத்துத் தொண்ணுற்முென்பது பேரை ஏற்கனவேசிறை வைத்திருந்தது. இறுதி ஆளாகச் சிறைப்பட்ட நக்கீரர் பெருமான் அக்குகையில் இருந்த போது அவருக்கு முருகப் பெருமானது நினைவு உண்டாகியது. எல்லாருடைய இரு தயகுகையாகிய தகராகாசத்தில்' இருப்பதனுல் முருக னுக்குக் குகன் என்னும் திருநாமம் உண்டாயிற்று, நக்கீர னுர் அந்தப் பெருமான எண்ணிப் பாட ஆரம்பித்தார். அப்படிப்பாடிய பாட்டே திருமுருகாற்றுப்படை என்பர். இதனை நக்கீரனுர் பாட முருகனுகிய குகன் தோன்றிப் பூதத்தை அழித்து நக்கீரமாமுனிவரையும் மற்றையோ ரையும் சிறைமீட்டான் என்னும் வரலாறு பலரும்அறிந்ததே.
இவ்வரலாற்றினைப் பகழிக் கூத்தர் என்னும் புலவர் பெருமான் தாம்பாடிய திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழில் மிகச்சிறப்பாகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இத்த கைய சிறப்பு வாய்ந்த இத் தெய்வ நூ லை நாள்தோறும் பாராயணம் செய்வதால் இம்மை மறுமைப்பயனை எளிதில் அடையலாம் என்பது முருகன் அடியார்களின் அசையா நம்பிக்கையாகும்
இவ்வரிய நூலானது இதற்குமுன்னர் அறிஞர் பெரு மக்கள் பல ரா ல் விரிவான நல்லுரைகளுடன் பன்முறை
iii

Page 5
அச்சிட்டு வெளிவந்துள்ளது எனினும் அவ்வெளியீடுகள் நன்கு கற்றவர்க்கேயன்றி எளிதிற் பயன்படுவண் அல்ல என்வே மூழ்ப்பாட்டுடன் அதற்குரிய சிறப்பான பொருள் விளக்கத்தையும் எழுதி நீர்வைக்கநதன் தேவஸ்தானத்தின் சார்பில் முப்போதும் திருமேனி தீண்டும் சிவசாய மணி*கந்தவேள் அருள் ஒளிமணி சிவபூரீ க. இராஜேந் இரக்குருக்கள் இப்போது வெளியிடுகிருர்கள். அவர் இட்கு எம்மனமார்ந்த நன்றியையும் நீடுவாழ்ந்து இன்னமும் இது tttt ttt t TTT TTtLLtLL 0 kut S T S tS t tltt Tt t Tt t tt வழிநடத்தவேண்டும் என்னும் வேண்டு கோளே ஆம் தெரிவிப்போாக
துப்பு மறைபோற்றும் திருநீர்வை நகர்வுேம் செய்ய முருகன் திருவடிகள் போற்றுதுமே"
#3 ಮೀಟಿ தெற்கு,
இ. முருகையன்
 
 

(6}}. .
முன்னுரை
இப்பொழுது முழுமையாகக் கிடைக்கும் தமிழ் இலக் கண நூல்களிலே மிகவும் பழையது தொல்காப்பியமாகும். இவ்விலக்கணமானது குறிஞ்சி நிலத் தெய்வம் முருகனே என்பதைத் தெளிவுபடச் செப்புகிறது. அவனைச் சேயோன்
அவ்விலக்கணம் குறிப்பிடும்.
இலக்கியத் தமிழ்ப்பனுவல்களிற் பழமையானவை எட்டுத்தொகை நூல்களாம். இவற்றிலே முருகன் பெருமை பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே காணப்படுகின்றன குறிப் பாக பரிபாடலிலே செவ்வேள் பற்றிய பாடல்கள் பல உண்டு. இவையெல்லாம் பொய்யடிமை இல்லாத புலவர் களாற் பாடப்பட்டவை.
எட்டுத்தொகை நூல்களை அடுத்து எழுந்தவையே பத்துப்பாட்டுகள் என்று தமிழ் இலக்கிய வரலாற்றுணர்ந் தோர் கூறுவர். பத்துப்பாட்டுகளுள்ளும் தலைமைப் பாட் டாக மிளிர்வது திருமுருகாற்றுப்படையாகும். சங்கத் தமிழின் தனிப்பெருந் தலைவராகத் திகழ்ந்தவர் நக்கீரனுர், அவரை நக்கீர தேவ நாயனுர் என்று சிறப்பித்துப் பேசுவது சைவத்தமிழ் மரபு.
நக்கீரனூர் அருளிய ஆற்றுப்படைப்பாட்டு முன் நூற்றுப் பதினேழு அடிகளால் இயன்றது. தொடுக்கும் கடவுட் பழம்பாடல்? என்று சொல்லத் தகுந்த விழுமிய நடையும் மேம்பட்ட பொருள் நிறைவும் கொண்டது. திருப்பரங் குன்றம், திருச்ந்ெதூர், பழனி, திருவேரகம், குன்று தோருடல், பழமுதிர்சோலை ஆகிய திருத்தலக் காட்சிகளை யும் வழிபாட்டு முறைகளையும் அருட்செயல்களையும் விரி வாக எடுத்துரைப்பது முருகப்பெருமானை அணுகித் திரு வருட்பேறு எய்த விழையும் முமுட்சுக்களுக்கு வழிகாட்டி யாக விளங்குவது, வேண்டுவார் வேண்டுவது எல்லாம்

Page 6
கிடைக்கப் பெறுவதற்கு அவர்கள் எவ்வழிச் செல்லல் வேண்டுமென்பதை உணர்வித்து மெய்நெறி காட்டுவது.
இவ்வாறன திருநெடும் பாட்டை நாள்தோறும் பாரா யணஞ் செய்யும் நியமம் பூண்டோர் பலர். அங்ஙனம் பாராயணஞ் செய்யும் விருப்பம் இருந்தும், அக்கடவுட் பழம்பாட்டின் மொழியருமை காரணமாக அதனை அணுக அஞ்சுவோரும் உளர்.
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லு தே" முழுப்பயன் தருமாதலால், மொழி முட்டறுத்தலும் பொருள் விளக்கம் தருதலும், பாராயணஞ் செய்வோருக்கு நல்லுதவி பயப்பனவாயமையும். இந்த நன்னுேக்கோடு திருமுருகாற்றுப்படைக்கு உரை வரைந்த முன்னைச் சான் ருேர் பலர் உளர். அவர்தம் உரைகள் இப்போது நம்மவர் களுக்கு எளிதிற் கிடைப்பன அல்ல. ஆகையால் இவ்வுரை விளக்கத்தை இயற்றி நீர்வேலிக் கந்தசுவாமியார் திருவடித் தாமரைகளிலே பணிவுடன் சாத்துகின்ருேம்.
இந்த உரை விளக்கத்தை எழுதுங்கால், எமக்குத் தோன்ருத் துணையாக வழிநடத்திய அன்புப் பெரியார் ஒருவர் உளர். அவர் யாரெனில், 'கலைமகள் ஆசிரியர் வாகீச கலாநிதி உயர்திரு கி. வா. ஜகந்நாதன் அவர் களாவர். சிவநெறித் துறையிலும் செந்தமிழ் நயப்பிலும் நுணுக்கங்கள் பலவற்றை அவ்வப்போது எமக்கு உணர் வித்த அறிஞர் அவர் அவருடைய கருத்துக்கள் சிலவற்றை யும் இந்த உரை விளக்கத்தில் எடுத்தாண்டு வழிமொழிந் துள்ளோம். அவரது அளவிலா அன்புக்கு எமது நன்றி என்றும் உரியது. -
சைவத் தமிழுலகம் இந்நூலை வரவேற்றுப் பயன் கொள்ளும் என்று நம்புகிருேம்.
அருள்மிகு சு. இராஜேந்திரக்குருக்கள் கந்தசுவாமி தேவஸ்தானம், நீர்வேலி. 2,288
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இண்கு தொழில்
@. கணபதி துணை செந்தில் மேய வள்ளிமணுளன் துணை
திருமுருகாற்றுப்படை
1. திருப்பரங்குன்றம்
உலகம் உவப்ப வலன் ஏர்புதிரிதரு பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு ஒவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி உறுநர்த்தாங்கிய மதனுடை நோன்தாள் செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை
莎
மறுஇல் கற்பின் வாள்நுதல் கணவன் கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பில் வள்உறை சிதறித் தலேப்பெயல் தலைஇய தண்நறுங் கானத்து இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து O
உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன் மால்வரை நிவந்த சேண்உயர் வெற்பில் கிண்கிணி கவைஇய ஒண் செஞ்சீறடிக் கணக்கால் வாங்கிய நுசுப்பிற் பனைத்தோள் கோபத்தன்ன தோயாப் பூந்துகில் 盟5
பல்காக நிரைத்த சில்காழ் அல்குல் கைபுனைந்து இயற்ருக் கவின்பெறு வனப்பின் நாவலொடு பெயரிய பொலம்புனை அவிர்இழைச் சேண்இகந்து விளங்கும் செயிர்தீர்மேனித் துணேயோர் ஆய்ந்த இணைஈர் ஒதிச் 2 β)
3

Page 7
செங்கால் வெட்சிச் சிறிதழ் இடையிடுபு பைந்தாட் (தவளைத் துரஇதழ் கிள்ளித் தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத் துத் திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் மகரப் பகுவாய் தாழமண்ணுறுத்துத் 95
துவரமுடித்த துகள் அறுமுச்சிப் பெருந்தண்சண்பகம் செரீஇக்கருந்தகட்டு உளைப்பூமருதின் ஒள் இணர் அட்டிக் கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் வளை இத்துணைத்தக
வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர் நுண்பூண் ஆகம் திளைப்பத்திண்காழ் நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ் தேய்வை தேங்கமழ் மருதினர் கடுப்பக் கோங்கின் குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் 翌5
வேங்கை நுண்தாது அப்பிக் காண்வர வெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெறியாக் கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிதென்று ஏத்திப் பலருடன் சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப்பாடிச் 40
சூர் அரமகளிர் ஆடும் சோலை
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச் சுரும்பும் மூசாச் சுடர்ப் பூங்காந்தள் பெருந்தண் கண்ணி மிலேந்த சென்னியன் பார்முதிர் பனிக்கடல் கலங்க உள்புக்குச் 《蔷
சூர்முதல் தடிந்த சுடர்இலை நெடுவேல் உலறிய கதுப்பிற் பிறழ்பல் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கண் குர்த்த நோக்கின் கழல்கண் கூகையொடு கடும் பாம்பு துரங்கப் பெருமுலை அலைக்கும் காதிற் பினர் மோட்டுச் 5)
 
 
 

உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் குருதி ஆடிய கூர் உகிர்க் கொடுவிரல் கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர வென்ருடு விறற்களம் பாடித் தோள்பெயரா 55
நினம்தின் வாயள் துணங்கை துரங்க இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர் மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்து இ0
எய்யா நல்இசைச் செவ்வேற் சேனிய் - ༦| சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும் செலவு நீநயந்தனே ஆயின், பலவுடன் நன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப 65
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே செருப்புகன்று எடுத்த சேண்உயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போர் அருவாயில் திருவீற்றி ருந்த தீதுதிர் நியமத்து
மாடமலி மறுகிற் கூடற் குடவயின் இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கள்கமழ் நெய்தல் ஊதி ஏற்படக் கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் 75
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன்று அமர்ந்து உறைதலும் உரியன்; அதா அன்று.
5

Page 8
2. திருச்சீரலேவாய்
வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல் வாடா மாலை ஒடையொடு துயல்வரப் படுமணி இரட்டும் மருங்கிற் கடுநடைக் 80
கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பிற் கால்கிளர்ந் தன்ன வேழமேல் கொண்டு ஐவேறு உருவிற் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண் மிகு திருமணி
மின் உறழ் இமைப்பிற் சென்னிப்பொற்ப 8岛
நகைதாழ்பு துயல் வரூஉம் வகைஅமை பொலம்குழை சேண்விளங்கு இயற்கை வாள்மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்பத் தாஇல் கொள்கைத்தம் தொழில் முடிமார் மனன் நேர்பு எழுதரு வாள்நிறமுகனே 90
மாஇருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம் ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகிக் காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே; ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ ●あ
அந்தணர் வேள்வி ஒர்க்கும்மே; ஒருமுகம் எஞ்சிய பொருளை ஏமுற நாடித் திங்கள் போலத் திசை விளக்கும்மே: ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே. ஒருமுகம்
I : 00 குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் ம வரல் வள்ளி யொடுநகை அமர்ந்தன்றே; ஆங்கம் மூவிரு முகனும் முறைநவின்று ஒழுகலின் ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பிற் செம் பொறிவாங்கிய மொய்ப்பிற் சுடர்விடுபு 105
 
 
 
 
 

வண்புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர்தோள்: விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை; உக்கம் சேர்த்தியது ஒருகை; நலம் பெறுகலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒருகை அங்குசம் கடாவ ஒருகை இருகை 0
ஐயிரு வட்டமொடு வலந் திரிப்ப, ஒருகை மார்பொடு விளங்க, ஒருகை தாரொடு பொலிய, ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக்கொட்ப, ஒருகை பாடின் படுமணி இரட்ட, ஒருகை I 5
நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய, ஒருகை வான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட - ஆங்கப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி அந்தரப் பல் இயம் கறங்கத் திண்காழ்
வயிர் எழுந்து இசைப்ப வால்வளைஞரல 2G
உரம் தலைக்கொண்ட உரும்இடி முரசமொடு பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ விசும்பு ஆருக விரைசெலல் முன்னி உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலேவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே; அதா அன்று 125
திருவாவினன்குடி
சீரை தைஇய உடுக்கையர், சீரொடு வலம்புரி புரையும் வால்நரை முடியினர், மாசு அற இமைக்கும் உருவினர், மானின் உரிவை தைஇய ஊன்கெடுமார்பின் என்பு எழுந்து இயங்கும் யாக்கையர், நன்பகல் 30
7.

Page 9
பலவுடன் கழிந்த உண்டியர், இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர், யாவதும் கற்ருேர் அறியா அறிவினர், கற்றேர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர், காமமொடு கடுஞ்சினம் கடந்த காட்சியர், இடும்பை
யாவதும் அறியா இயல்பினர், மேவரத் துணியில் காட்சி முனிவர் முற்புகப் புகை முகந்தன்ன மாசில் துர உடை முகவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச் செவிநேர்பு வைத்த செய்வுறுதிவவின்
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலர் இன் நரம்பு உளர நோய்இன்று இயன்ற யாக்கையர், மாவின் அவிர்தளிர்புரையும் மேனியர், அவிர்தொறும் பொன்உரை கடுக்கும் திதலையர், இன்நகைப்
பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் மாசில் மகளிரொடு மறுஇன்றி விளங்கக் கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால்எயிற்று அழல் எனஉயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறற் பாம்பு படப்புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
புள் அணி நீள்கொடிச் செல்வனும், வெள்ஏறு வலவையின் உயரிய பலர் புகழ் திணிதோள் உமை அமர்ந்து விளங்கும் இமையாமுக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும், நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத் தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும் நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇ
互らあ
240
翼空5
盟50
盟50
 
 
 

உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப் பலர்புகழ் மூவரும் தலைவர் ஆக ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித் தாமரை பயந்த தாஇல் ஊழி நான்முக ஒருவற் சுட்டிக் காண்வர 65
பகலில் தோன்றும் இகல் இல்காட்சி நால்வேறு இயற்கைப் பதினெரு மூவரொடு, ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர் மீன்பூத்தன்ன தோன்றலர், மீன்சேர்பு வளிகிளர்ந்தன்ன செலவினர், வளியிடைத் 70
தி எழுந்தன்ன திறலினர், தீப்பட உரம் இடித்தன்ன குரலினர், விழுமிய உறுகுறை மருங்கின்தம் பெறுமுறை கொண்மார் அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத் தாஇல் கொள்கை மடந்தையொடு சின்னுள் 175 ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று
4. திருவேரகம்
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறுநான்குஇரட்டி இளமை நல்லியாண்டு ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை 8)
மூன்றுவகைக் குறித்த முத்திச் செல்வத்து இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண். புலராக் காழகம் புலர உடீஇ து இக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து 85
Յին): எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கின் நவிலப்பாடி விரை உறுமலர் ஏந்திப் பெரிதுவந்து ஏரகத்து உறைதலும் உரியன்; அதாஅன்று
9

Page 10
5.
குன்றுகோருடல்
பைங்கொடி நறைக்காய் இடைஇடுபு வேலன் அம்பொதிப் புட்டில் விரை இக் குளவியொடு வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன், நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பிற் கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர் நீடுஅமை விளைந்த தேக்கள் தேறல்
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை,அயர விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கால் குண்டு சுனைபூத்த வண்டுபடு கண்ணி இணைத்த கோதை அணைத்த கூந்தல்
முடித்தகுல்லே இலையுடை நறும்பூச் செங்கால் மராஅத்த வால்இணர் இடைஇடுபு சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ மயில்கண்டன்ன மடநடை மகளிரொடு
செய்யன், சிவந்த ஆடையன், செவ்வரைச் செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன் கச்சினன், கழலினன், செச்சைக் கண்ணியன், குழலன், கோட்டன் குறும்பல் இயத்தன், தகரன், மஞ்ஞையன், புகரில் சேவலம்
கொடியன், நெடியன், தொடிஅணிதோளன், நரம்பு ஆர்த்தன்ன இன்குரல் தொகுதியொடு குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல் மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன், முழவு உறழ் தடக்கையின் இயலஏந்தி
மென்தோழ் பல்பிணை தழீஇத் தலைத்தந்து குன்றுதோருடலும் நின்றதன் பண்பே; அதாஅன்று
10
90
98
盛05
β. Η Ο
2及数
 
 
 
 

6. பழமுதிர் சோலே
சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து வாரணக்கொடியொடு வாயிற்பட நிறீஇ ஊர் ஊர்கொண்ட சீர்கெழு விழவினும்,
ஆர்வலர்ஏத்த மேவரு நிலையினும், வேலன்தைஇய வெறி அயர் களனும், காடும், காவும், கவின்பெறு துருத்தியும், யாறும் குளஒனும் வேறுபல் வைப்பும், சதுக்கமும் சந்தியும் புதுப்பூ ங்கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும், மாண்தலைக் கொடியொடுமண்ணி அமைவர நெய்யொடுஜயவி அப்பி ஐது உரைத்துக் குடந்தம்பட்டுக் கொழுமலர் சிதறி முரண்கொள் உருவின் இரண்டு உடன்உடீஇச்
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக் குருதியொடு விரைஇய துரவெள் அரிசி சில்பலிச் செய்து பல் பிரப்பு இரீஇச் சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீர நறுந்தண்மாலை துணைஅற அறுத்துத் துரங்க நாற்றி நளிமலைச் சிலம்பின் நல்நகர் வாழ்த்தி நறும்புகை எடுத்துக் குறிஞ்சிபாடி இமிழ் இசை அருவியொடு இன்னியம் கறங்க
உருவப் பல்பூத்துஉய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் முருகியம் நிறுத்து முரனினர் உட்க முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர் ஆடுகளம் சிலம்பப்பாடி பலவுடன்
229
岑婴5
230
2霹5
24 )
2彙あ

Page 11
கோடுவாய் வைத்துக் தொடுமணி இயக்கி ஓடாப் பூட்கை பிணிமுகம் வாழ்த்தி வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டாண்டு உறைதலும் அறிந்தவாறே, ஆண் டாண்டு ஆயினும் ஆக காண்தக
முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்திக்
கைதொழு உப் பரவிக்காலுற
\ன நெடும் பெருஞ்சியைத்து நீலப்பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ, 255
ஆல்கெழு கடவுட் புதல்வ, மால்வரை மலைமகள் மகனே, மாற்றேர் கூற்றே இவற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ, இழை அணி சிறப்பிற் பழையோள் குழவி,
2 வானுேர் வனங்குவில் தாரிைத் தலைவ, ...: 64
மாஜிலமார்ப நூலறிபுலவ
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை மங்கையர் கணவ, மைந்தர் ஏறே
வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ 265
குன்றம் கொன்ற குன்றக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ,
பலர்புகழ் நான்மொழிப் புலவர் ஏறே அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக
நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபேராள 多7Q
அலர்ந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் (3 gf GTi logit toli 5.5556šo வென்று ஆடு அகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவே எள் பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்,
சூர்மருங்கு அறுத்த மொயம்பின் மதவலி 27莎
2.
 
 
 
 
 

பொருந, குரிசில், எனப்பல "ான் அறிஅளவையின் ஏத்தி, ஆணுது நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் நின்னடி உள்ளி வந்தனென் நின்னெடு
புரையுநர் இல்லாப் புலமையோய் எனக் W8)
குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன் வேறுபல் உருவிற் குறும்பல் கூளியர் சாறு அயர் களத்து வீறுபெறத் தோன்றி, அளியன்தானே முதுவாய் இரவலன் வந்தோன் பெரும, நின்வண்புகழ் நயந்தென
இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித்
தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின் வான்தோய் நிவப்பின் தான்வந்து எய்தி அணங்குசால் உயர்நிலை தழீஇப்பண்டைத்தன் மணம்கமழ் தெய்வத்து இளநலம் காட்டி 990
அஞ்சல் ஒம்புமதி, அறிவல்நின் ଈ40 ଜମ୍ବୁଛtଶୟ୍ଯ அன்புடை நன்மொழி அளேஇ விளிவின்று இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து ஒருநீ ஆகித்தோன்ற, விழுமிய பெறல் அரும் பரிசில் நல்குமதி, பலவுடன் 295
வேறுபல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து ஆர முழுமுதல் உருட்டி வேரல் பூவுடை அலங்குசினை புலம்ப வேர்கீண்டு விண்பொரு நெடுவரைப் பரிதியின் தொடுத்த தண்கமழ் அலர் இருல் சிதைய நன்பல 300
ஆசினி முதுகளை கலாவ மீமிசை நாக நறுமலர் உதிர ஊகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று முத்துடைவான் கோடு தழீஇத் தத்துற்று 305
13

Page 12
நன்பொன் மணிநிறம் கிளரப் பொன்கொழியா வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக் கறிக் கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற மடநடை மஞ்ஞை பலவுடன் வெரிஇக
கோழி வயப்பெடை இரியக் கேழலொடு இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம் பெருங்கல்விடர் அளைச் செறியக் கருங்கோட்டு ஆமாநல்ஏறு சிலைப்பச் சேண்நின்று
இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்சோலைமலைகிழவோனே.
முற்றும்
* NWillihsiz ,
72 <ܛ
S
S హైడ్డ వష్ట
ஜ
:
స్త్రా
岛翼例
3 5
 
 
 
 
 
 
 
 
 

கணபதி துணை வேலும் மயிலுந் துணை
நக்கீர தேவநாயனுர் பாடிய
திருமுருகாற்றுப்படை விளக்கம் 1. திருப்பரங்குன்றம் ' உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாஅங்கு ஒவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி'
உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் மகிழும்படி வலமாக எழுந்து வானத்தில் உலாவும் பலவகையான அறிஞர் களும் புகழும், கதிரவனக் கடலின் மேலே உதயமாகும் போது கண்டாற்போல, இடையீடு இல்லாமல் சுடர்விடு கின்ற நெடுந்தூரத்திலும் சென்று விளங்கும், பரவிய ஒளி இதை உடைய முருகன் என்று சொல்ல வருகிருர்,
* உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்ருள்
செறுநர்த் தேய்த்த செல்லுற்ழ் தடக்கை '
மனிதர்கள் இன்பத்தை விரும்புவார்கள் துன்பத்தை வெறுப் பார்கள் இன்ப ஆக்கமும் துன்ப நீக்கமும் விரும்புவன: கண்ணன் கீதையில் எல்லாப் பற்றையும் விட்டு, எனதுதிரு வடியைப் பற்றிக்கொள், நான் உன்னைத் தாங்குகின்றேன் என்று சொன்னன். அதுபோல ஆண்டவன் தன்னுடைய திருவடியைப் பற்றிக்கொண்டவர்களுடைய கவலையைப் போக்கி அவர்களுடைய பொறுப்பை எல்லாம் ஏற்றுக் கொண்டு நலம் செய்கிருன். ஆதலின் அவனுடைய தாள் உறுநர்த் தாங்கும் தன்மையுடையது.
5

Page 13
அவனுடன் வந்து போர் செய்பவர்களை அவனுடை கைகள் தேய்த்து விடுகின்றன. ( செல் என்பது இடி ) பகைவர் களை அடியோடு அழிக்கும் பராக்கிரமத்தை உடையன அவன் கைகள்.
அருளும் பராக்கிரமமும் அவனுடைய அறக் கருணைக்கும் மறக் கருணைக்கும் அடையாளங்கள். இவ்வாறு நோன்ருளையும் தடக்கையையும் உடைய முருகப் பெருமானை நக்கீரர் அறிமுகப்படுத்துகிருர்,
* மறுவில் கற்பின் வாள்நுதல் கணவன் '
குற்றமற்ற கற்புடைய தேவயானையின் கணவன். தேவயான முருகப்பெருமானுடைய அருகில் அமர்ந்திருக் கிருள். இரண்டு பேரையும் ஒருசேர வைத்துக் காட்டுகிருர் நக்கீரர். முதலில் ஒளிப்பிளம்பைக் காட்டி பின் திருவடியைக் காட்டி திருக்கரத்தைக்காட்டி அக்கரத்தினுல் பற்றிக் கொண்டு மணம்செய்துகொண்ட தேவயானையைக் காட்டி அந்தப் பெருமாட்டியின் கணவன் முருகன் என்று சொல் მმლუგff.
'கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பில் வள் உறை சிதறித் தலைப்பெயல் தலைஇய தண்நறுங் கானத்து இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன்'
கடலை முகந்த நிறைந்த கருப்பத்தை உடைய கரிய மேகம் மின் ஒளி வெட்டும் வானத்தில் வளப்பமான மழைத்துளியைச் சிதறி முதல் மழை பெய்த தண்ணிய மணம் வீசும் காட்டில் இருள் உண்டாகும்படியாகச் செறிந்து படர்ந்த பருத்த அடிமரத்தையுடைய செங்கடம்பினது உருளும் பூவினல் கட்டிய மாலை புரளும் திருமார்பை உடையவன்.
கார்கோள் - கடல், கம நிறைவு, வான் - ஒளி, உறை - துளி, பெயல் - மழை, தலைஇய - பெய்த பொதுளிய - செழித்த பராரை - பருஅரை, பருத்த அடிமரம், மராஅம் - செங்கடம்பு,
16
 

"மால்வரை நிவந்த சேண் உயர் வெற்பில் கிண்கிணி கவைஇய ஒண் செஞ்சீறடிக் கணக்கால் வாங்கிய நுசுப்பிற் பணத்தோள் கோபத்தன்ன தோயாப் பூந்துகில் பல்காக நிரைத்த சில்காழ் அல்குல் கைபுனைந்து இயற்ருக் கவின்பெறு வனப்பின் நாவலொடு பெயரிய பொலம்புனே அவிர்இழைச் சேண்இகந்து விளங்கும் செயிர்தீர்மேனி'
பெரிய மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்த மிக உயரமான
கிண்கிணியால் சுற்றப்பெற்ற ஒளி பொருந்திய சிவந்த சிறு -9|ւգதிரண்ட காலையும் உள்வாங்கிய இடையையும் பருத்த தோளையும் உடையவர்கள் என்று சொல்ல வருகிருர், இந்திர கோபப் பூச்சியைப் போன்ற, வண்ணத்தில் தோய்க் காமல் இயல்பாகவே சிவந்துள்ள மெல்லிய துகில் பலமணிகளைக் கோத்த ஏழு வடமாகிய மேகலையை அணிந்த இரகசிய உறுப்பை உடையவர்கள்.
ஒருவருடைய கையால் அழகாகப் புனைந்து அமைக்காத அலங்காரத்தைப் பெற்ற அழகை உடையவர்கள். சாம்பூநதம் என்று ந்ாவல் பழத்தோடு பெயர் பெற்ற பொன்னுல் அமைந்து விளங்கும் ஆபரணத்தைஉடையவர்கள் நெடுந் தூரத்தைக் கடந்து விளங்குகின்ற குற்றம் தீர்ந்த நிறத்தினை உடையவர்கள்.
துணையோர் ஆய்ந்த இணைஈர் ஒதிச் செங்கால் வெட்சிச் சிறிதழ் இடையிடுபு பைந்தாட் குவளைத் துரஇதழ் கிள்ளித் தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் மகரப் பகுவாய் தாழமண்ணுறுத்துத்
7

Page 14
ந்தண்சண்பகம் செரீஇக்கருந்த G உளைப்பூமருதின் ஒள் இணர் அட்டிக் கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் வளைஇ?
தோழிமார் சிறந்ததென்று ஆய்ந்து பாராட்டும் கடை ஒத்து நெய்ப்புடன் உள்ள கூந்தலில், சிவந்த காம்பையுடைய வெட்சி மலரின் சிறிய இதழ்களை இடையிலே வைத்து, பசிய தண்டை உடைய குவளை மலரின் தூய இதழ்களைக்கிள்ளி இட்டு, சீதேவி என்னும் தலைக் கோலத்தோடு வலம்புரி என்னும் தலைக்கோலத்தையும் பக்கத்தில் வைத்து, தில கத்தை அணிந்த மனங்கமழும் அழகிய நெற்றியில் வந்து மகரவாய் என்னும் அணிகலன் தாழும்படியாகப் புனைந்து நன்முக முடித்த குற்றமற்ற உச்சிக் கொண்டையில் பெரிய குளிர்ந்த சண்பகமலரைச் செருகி கரிய புற இதழையும் பிசிரையும் உடைய மருதம்பூங் கொத்துகளையும் வைத்து, கிளையினின்று அழகுபெறப் பிரிந்து எழுந்து நீரின்கீழ் உள்ள சிவந்த அரும்பை இணைத்துக் கட்டிய மாலையை வளைய வைத்துக்கட்டி
"துணைத்தக வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர் நுண்பூண் ஆகம் திளைப்பத்திண்காழ் நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ் தேய்வை தேங்கமழ் மருதினர் கடுப்பக் கோங்கின் குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் வேங்கை நுண்தாது அப்பிக் காண்வர வெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெறியா?
ஒன்றுக்கு ஒன்று ஒப்பாக நிற்கும்படி வளப்பமான இரு காதுகளிலும் நிறையச் செருகிய அசோகத்தின் ஒள்ளிய தளிர் நுண்ணிய அணிகலன்களை அணிந்த மார்பில் புரள திண்ணிய வயிரமேறிய நறுமணமுடைய சந்தணக்கட் டையை அரைத்த குழம்பை வாசனை வீசும் மருதம் பூவைப் போலத் தோற்றும்படி கோங்க மரத்தின் குவிந்த அரும்பு போன்ற இளைய நகில்களின் மேல் பூசி
8
 

அதன்மேல் வேங்கை மரத்தில் மலர்ந்த மலரிலுள்ளம கரந் தப் பொடியை அப்பி அழகு உண்டாகும்படி விளாமரத் தின் சிறிய தளிர்களைக் கிள்ளி மேலே தூவி
கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிதென்று ஏத்திப் பலருடன்'
கோழி உயர்ந்து தோன்றும். வஞ்சியாது எதிர்நின்ற கொன்ற வெற்றியைப் புலப்படுத்தும் கொடி நெடிது வாழ்க என்று துதித்து; -
"சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப்பாடிச் சூர்அரமகளிர் ஆடும் சோலை மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச் சுரும்பும் மூசாச் சுடர்ப் பூங்காந்தள் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்'
பலரும் ஒருங்கே கூடி அழகு விளங்குகிற மலைப்பக்கங்கள் எதிரொலி செய்யும்படி பாடித் தேவமகளிர் ஆடுகின்ற சோலையில், குரங்கும் அறியாத மரங்கள் செறிந்திருக்கின்ற சூழலில், வண்டுகளும் மொய்க்காத விளக்கு போன்று ஒளிவிடும் காந்தள் மலராகிய பெரிய குளிர்ந்த கண் ணிையை அணிந்த தலையை உடையவன்;
போர்முதிர் பணிக்கடல் கலங்க உள்புக்குச் சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல்'
பாறைகள் முதிர்ந்த குளிர்ச்சியையுடைய கடல் கலங்கும் படி உள்ளே புகுந்து அங்கே மறைந்திருந்த சூரணுகிய அசுரகுல முதல்வனைப் பிளந்த ஒளியையும் இலையையும் உடைய நீண்டவேல்
*உலறிய கதுப்பிற் பிறழ்பல் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின் கழல்கண் கூகையொடு கடும் பாம்பு தூங்கப் பெருமுலை அலைக்கும் காதிற் பினர் மோட்டுச் உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்'
9.

Page 15
உலர்ந்த கேசத்தையும் ஒன்றுக்கொன்று மாருகக் G39;r Göröfu பற்களையும் ஆழமான வாயையும் சுழலுகின்ற விழிகளை புடைய பச்சையான கண்களையும் அச்சத்தைத் தரும் பார் வையையும், கழன்ருற்போன்ற கண்ணை உடைய (35, it டானேடு பாம்பு தொங்கப் பெரிய தனங்களை மோதும் காதுகளேயும், சுரசுரப்பான வயிற்றையும் அச்சம் பொருந் திய நடையையும் உடைய பயத்தை உண்டாக்கும் பேய் ፲i}(ኝ6ኽff o
குருதி ஆடிய கூர்உகிர்க் கொடுவிரல் கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர வென்றடு விறற்களம் பாடித் தோள் பெயரா நினம்தின் வாயள் துணங்கை துரங்க'
இரத்தம் தோய்ந்த கூரிய நகத்தையுடைய வளைந்த விர லாலே கண்ணைத் தோண்டி உண்டு எஞ்சிய மிக்க நாற் றத்தை உடையே கரிய தலையை பளபளக்கும் வளே யை பணிந்த வளைந்த கையில் ஏந்திக்கொண்டு கண்டோர் அஞ்சும்படியாக முருகன் வென்று போர் செய்த வெற் றிக் களத்தைப் பாடி தோளை அசைத்துக் கொண்டு தசை பைத் தின்னும் வாயையுடையவளாய்த் துணங்கைக் கூத்து ஆடும்படி
இருபேர் உருவின் ஒருபேர் urrëಹಾಟ: அறுவேறு வகையின் அஞ்சுவர LD 6öö7 4g.. அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர் மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்து எய்யா நல்இசைச் செவ்வேற் சேஎய்'
குதிரையும் மனிதனும் ஆகிய இரண்டு பெரிய உருவம் இணைந்த ஒரு பெரிய குரனு-ை" உடம்பை ஆறு வேறு திருவுருவங்களுடன் அவன் அஞ்சும்படி மேற்சென்று அசு ரர்களுடைய இந்த வலிமையெல்லாம் அடங்கும்படி, கவிழ்ந்திருக்கும் கொத்துக்களையுடைய மாமரத்தின் அடி ததைப் பிளந்த குற்றமில்லாத வெற்றியையுடைய
20
 
 
 

அறியமுடியாத நல்ல புகழையுடைய செவ்வேலையுடைய முருகனுடைய - திருவடி என்று பின்னுலே இணைக்கிருர்,
'எய்யா நல்இசைச் செவ்வேல் சேஎய்'
அறிய முடியாத நல்ல புகழையும் சிவந்த உடைய முருகன்.
"சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும் செலவு நீநயந்தனை ஆயின், பலவுடன் நன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப இன்னே பெறுதிநீ முன்னிய வினையே'
சிவந்த வேலையுடைய செந்நிறப்பிரானுகிய முருகனுடைய செம்மையான திருவடியைச் சென்று அடையும் பெருமை பெற்ற உள்ளத்தோடு, நன்மையை விரும்புகின்ற கடைப் பிடியோடு இதுகாறும் பழகிய இடத்தைப் பிரிந்து சென்று வாழ்வதற்குரிய யாத்திரையை நீ விரும்பினுயானுல், பலவகையான நன்மைகளுடன் நன்முக உன்னுடைய நெஞ் சத்திலுள்ள இனிய விருப்பம் நிறைவேறும் வகையில், இப்போது நீ நினைந்து முற்பட்ட காரியத்தின் பயனை அடைவாய்,
திருப்பரங்குன்றச் சிறப்பு 'செருப்புகன்று எடுத்த சேண் உயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போர் அருவாயில்?
போரை விரும்பி உயர்த்திக் கட்டிய மிக உயரமாக உள்ள நீண்ட கொடிகளை உடைய
வரிந்து புனையப்பட்ட பந்தோடு பொம்மைகள் தொங்க பகை வீரர்களை அழித்து போர் அருமையாகப் போன வாயிலையும் உடைய மதுரை என்று சொல்ல வருகிருர்,
'திருவீற்றி ருந்த தீதுதிர் நியமத்து மாடமலி மறுகிற் கூடற் குடவயின்'
2.

Page 16
கடைகளையும் மாடங்கள் மலிந்த தெருக்களையும் உடைய மதுரைக்கு மேற்கே
திருமகள் சிறப்புடன் எழுந்தருளியிருக்கும் தீமை தீர்ந்த
"இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கள்கமழ் நெய்தல் ஊதி ஏற்படக் கண்போல் மலர்ந்த காமர் சுனேமலர் அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன்று அமர்ந்து உறைதலும் உரியன்; அதா அன்று'
கரிய சேற்றையுடைய அகன்ற வயலில் விரிந்து மலர்ந்த முள்ளைத் தண்டிலே உடைய தாமரையில் உறங்கி, விடியற் காலையில் கள் வீசுகின்ற நெய்தல் மலரை ஊதி, பகல் நேரம் வந்தவுடன், கண்ணைப் போல மலர்ந்த அழகிய சுளைகளிலுள்ள மலர்களின் உள்ளே சிறகுகளையுடைய வண்டுகளின் கூட்டம் ரீங்காரம் செய்யும் திருப்பரங் குன்றத்தில் எழுந்தருளியிருப்பதற்கும் உரியன் - அது «9:àTLDGು.
2. திருச்சிரலேவாய் (திருச்செந்தூர்)
*வைந்நுதி பொருத வடுஆழ் வரிதுதல்
வாடா மாலை ஒடையொடு துயல்வரப் படுமணி இரட்டும் மருங்கிற் கடுநடை க்
கூர்மையான அங்குசத்தின் நுனிமோத, அதனுல் உண்டான வடு ஆழ்ந்திருக்கும் வரிகளையுடைய நெற்றியில், வாடாத பொன்னரி மாலை பட்டத்தோடு அசைய ஒலிக்கும் மணி மாறி மாறி ஓசை செய்யும் பக்கத்தை
பும் வேகமான நடையையும்
'கற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பிற் கால்கிளர்ந் தன்ன வேழமேல் கொண்டு
22
 
 
 

யமனப் போன்ற தடுப்பதற்குரிய வலிமையை உடைய,
காற்று எழுந்தாற்போன்ற வேகத்தையுடைய யானையின்
மேல் ஏறிக்கொண்டு
(மாற்று அரு மாற்றுவதற்கு அரிய மாற்று: தொழிற் Kui
'ஐவேறு உருவிற் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண் மிகு திருமணி மின் உறழ் இமைப்பிற் சென்னிப்பொற்ப"
ஐந்து வேறு உருவத்தில் கைத்தொழில் நுட்பம் நிரம்பிய முடியில் விளங்கிய வெவ்வேறு நிறம் பெற்ற மணிகள் மின்னலை ஒத்த ஒளியொடு திருமுடியில் பொலிவு பெற்று
'நகைதாழ்பு துயல் வரூஉம் வகை அமை பொலம்குழை சேண் விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்பு'
ஒளி தங்கி அசைகின்ற பலவகை மணிகளையுடைய பொன்
னுலான குழைகள், வானத்தில் விளங்கும் இயற்கையை யுடைய ஒளியைப் பெற்ற திங்களைச் சேர்ந்து அகலாத
நட்சத்திரங்களைப் போல விட்டு விளங்கி ஒளிர
"தாஇல் கொள்கைத்தம் தொழில் முடிமார் மனன் நேர்பு எழுதரு வாள்நிறமுகனே'
கேடும் குற்றமும் இல்லாத மேற்கோளையுடைய தம்முடைய
தொழில்கள் முடியும் பொருட்டுத் தியானம் செய்பவர்
களின் மனத்தில் பொருந்தி எழுகின்ற ஒளியையுடைய
முகங்கள்.
மாஇருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்; ஒருமுகம்'
பெரிய இருளையுடைய உலகம் குற்றம் இன்றி விளங் படியாகப் பலவகையான கதிர்கள் விரிந்தது ஒருமுகம்
23

Page 17
"ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகிக் காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே,'
ஒருமுகம் பக்தர்கள் போற்றிப் புகழ, அவர்களுக்கு ஏற் கும்படியாகப் பொருந்தி இனிதாகச் சென்று விருப்பத் தோடு மகிழ்ந்து வரத்தைக் கொடுத்தது.
'ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஒர்க்கும்மே”
வேதமந்திர விதியின்படியே சம்பிரதாயத்தினின்றும் 61 (ԼՔ வாத அந்தணர்களுடைய யாகங்களை நன்ருக நிறைவேற் றத் திருவுள்ளங் கொள்ளும் ஒருமுகம்,
"ஒருமுகம் எஞ்சிய பொருளை ஏமுற நாடித் திங்கள் போலத் திசை விளக்கும்மே”
ஒருமுகம் நூல்களாலும் ஆசிரியர்களாலும் விளக்கமுற மல் எஞ்சி நின்ற பொருள்களை, அவற்றை உணரவேண் டும் என்ற வேட்கையுடன் முருகனைப் பணிந்து நிற்கும் அடியார்கள் இன்பம் அடையும்படியாக ஆராய்ந்து, சந் திரனைப் போல அவர்கள் கேட்ட துறையின் பகுதிகளை யெல்லாம் விளங்கும்படி செய்யும்.
"ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒருமுகம் பொர்செய்யும் பகைவர்களை அடியோடு அழித்து வருகிற போர்களை ஒழித்துச் சினம் கொண்ட நெஞ்சத் தோடு வெற்றிக்கு அறிகுறியாக களவேள்வியைச் செய் கின்றது.
"ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளி யொடுநகை அமர்ந்தன்றே
24.

ஒருமுகம் குறவருடைய மடமகளும் கொடிபே இடையை உடைய மடமுடைய பெண்ணுமாகிய வள் யோடு சேர்ந்து புன்முறுவலை விரும்பிச் செய்கின்றது.
- **ஆங்கு அம் மூவிரு முகனும் முறைநவின்று ஒழுகலின்'
அவ்வாறு அந்த ஆறுமுகங்களும் தாம் செய்யவேண்டிய செயல்களை முறையே பயின்று நடத்துவதால் தோள்கள் நிமிர்கின்றன. கைகள் செயல் புரிகின்றன, என்று சொல்ல ഖഗ്രി?f.
'ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பிற் செம் பொறிவாங்கிய மொய்ப்பிற் சுடர்விடுபு வண்புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர்தோள்'
மாலே தாழ்ந்து விழங்கும் அழகிய பெருமையையுடைய திருமார்பிலுள்ன சிவந்த ரேகைகளை வாங்கிக்கொண்டவை தோள் என்று கூறவருகிருர் ஆரம் - முத்துமாலை; பிற மாலைகளையும் சொல்லலாம், தாழ்ந்த - தொங்கிய, பகடு - பெருமை, பொறி - கீற்று, கோடு வாங்கிய - ஏற்றுக் கொண்ட மார்பிலுள்ள கோடுகள் தோளளவும் செல்வதைத் தோளின் செயலாக வைத்து அவைவாங்கிக் கொண்டன என்ருர், வலியை உடையவை, ஒளிவிடுபவை, வண்புகழ் நிறைந்தவை படைக்கலங்களால் பகைவர் மார்பைப் பிளந்து அவற்றை வாங்குபவை, உயர்ந்தவை ஆகிய தோள்கள்.
'விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை;
உக்கம் சேர்த்தியது ஒருகை '
வானத்திலே செல்லும் வழக்கத்தை உடைய முனிவர்களைப்
பாதுகாக்கும் பொருட்டு மேலே எழுந்தது ஒரு திருக்கரம். இடையிலே வைத்திருப்பது ஒரு திருக்கரம்.
மரபு - வழக்கம், ஐயர் - முனிவர், உக்கம் - இடை
25

Page 18
நலம் பெறுகலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒருகை அங்குசம் கடாவ ஒருகை'
அழகுபெற்ற செவ்வாடையையுடைய துடையின் மேல் தங் கியது ஒருகை, அங்குசத்தைச் செலுத்துவதற்காக அமைந் திது ஒரு8ை
'இருகை, ஐயிரு வட்ட மொடு எஃகுவலந் திரிப்ப"
இரண்டு கைகள் கேடயத்துடன் வேலாயுதத்தையும் வல மாகச் சுழற்ற இந்த இரண்டு கைகளும் மந்திர விதியின் மரபுளிவழாஅ, அந்தணர் வேள்வி ஒர்க்கும்மே ஒரு முகம் என்று சொன்ன திருமுகத்துக்குப் பொருந்தி அமைந்த கைகள். அகரர் வந்து வேள்வியைக் கெடாமல் அவரை ஒட்டுவதற்கு இவற்றை கழற்றுதலின் வேள்வி ஒர்க்கும் முகத்திற்கு இக் கைகள் ஏற்றவாறு உணர்க.
'ஒருகைமார்பொடு விளங்க, ஒருகை தாரொடு பொலிய"
முனிவர்க்குத் தத்துவங்களைக்கூறி உரையிறந்த பொருளை உணர்த்தும் காலத்து ஒருகை மார்பொடே விளங்காநிற்க, ஒருகை மார்பின் மாலே தாழ்ந்ததனுேடே சேர்ந்து அழகு
l !, முருகனும் சின்முத்திரையைத் தரித்த கோலத்தில் குரு வாக வீற்றிருக்கிருன் என்பது தெளிவு
(ஞானபண்டித சாமியாக இருத்தலின் அவன் மோனகுரு வாக இருப்பதற்கும் உரிமையுடையவன். மனமும் குண மும் சலனமும் ஆகிய அழுக்குகள் இல்லாத துரியமும் கடந்த துரியாதீத நிலையில் பெறும் ஆனந்த அநுபூதியைத் தருவதற்கு காரணமான, மவுனமான அட்சரம் ஏதும் இல் லாத மந்திரமாகிய முத்திரையைப் பொருந்தித் திருமார் பில் நிகழ்ந்தவை
26
 
 
 

மோன முத்திரையே மவுன நிரட்சர மந்திரம் இதை உணர்ந்தவர்கள் துரியாதீதமாகிய சுகாதுபூதியில் திளைப் பார்கள். இந்த இரு திருக்கரங்களும் முருகப்பெருமானுடைய ஞானச் சிறப்பைத் தெளிவாகக் காட்டுகின்றன.
ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீதிசைக்கொட்ப,
ஒருகையானது கீழே நழுவி விழும் வளையோடு மேலே சுழன்று களவேள்வி செய்க என்று உத்தரவிட
*@gడా பாடுஇன் படுமணி இரட்ட
மற்ருெரு கை ஓசை இனிதாக உள்ள ஒலிக்கின்ற
மாறி மாறி அடிக்க
"ஒருகை
நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய"
ஒருகையானது நீலநிறம் பெற்ற வானத்திலிருந்து மிக்க துளிகளாக மழையைப் பொழிய
ஒருகை, வான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட" ஒருகையானது தேவலோகத்து மடந்தையருக்கு மனமாலை சூட்ட
**ஆங்கப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி"
அவ்வாறு அந்தப் பன்னிரண்டு திருக்கரங்களும் திருமுகங் களுக்கேற்ற பகுதியிலே அமையும்படி செயல்களைச் செய்தருளி
་་་་་་ ་་་་་་་་་ "அந்தரப் பல் இயம் கறங்கத் திண்காழ்
வயிர் எழுந்து இசைப்ப, வால்வளைஞர்ல உரம் தலைக்கொண்ட உரும்இடி முரசமொடு பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ' பொறி - பீலி, அகவ குரல் கொடுக்க
22

Page 19
வானுலகத்திலுள்ள இசைக்கருவிகள் முழங்க திண்ணிய வயிரத்தை உடைய கொம்புகள் ஒலிக்க, வெண்மையான சங்குகள் ஒலியை எழுப்ப = வலிமையை உடைய இடியைப் போன்ற முரசங்களோடு பல பிலிகளையுடைய மயிலாகிய வெற்றிக்கொடி குரல் காட்ட
விசும்பு ஆருக விரைசெலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஒங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே
அதா அன்று'
ஆகாயமே வழியாக விரைந்து செல்வதைத் திருவுள்ளத் திற் கொண்டு உலகத்தார் புகழ்ந்த நாளுக்கு நாள் ஓங்கி வருகின்ற உயர்ந்த மேலான சிறப்பை உடைய அலைவாய்க்குச் சென்று தங்குவதும் அவனுடைய நிலைத்த பண்பாகும்g அதுவல்லாமலும்
திருவாவினன்குடி (பழனி) 6 ைேர தைஇய உடுக்கையர், சீரொடு வலம்புரி புரையும் வால்நரை முடியினர்'
மரவுரியை உடையாக அணிந்தவர், அழகோடு வலம்புரிச் சங்கை ஒத்த வெண்மைமான நரைமுடியை உடையோர்
6 மாசு அற இமைக்கும் உருவினர், மானின்
உரிவை தைஇய ஊன்கெடுமார்பின்
என்பு எழுந்து இயங்கும் யாக்கையர்' மாசு இல்லாமல் விளங்கும் திருமேனியை உடையோர்:
மான்தோலைப் போர்த்த தசை கெட்ட மார்பில் எலும்பு தள் மேலே தோன்றி அசையும் உடம்பை உடையோர்.
சிரை - மரவுரி, தைஇய - அணிந்த, உடுக்கை - உடை, வால்நரை - வெண்மையான நரை,
28
 

"நன்பகல், பலவுடன் கழிந்த உண்டியர்' நல்லநாட்கள் பலவற்றில் ஒருங்கே உணவை உண்துை விட்டவர்கள், - ബ
'gിക്റ്റിഖITE செற்றம் நீக்கிய மனத்தினர், யாவதும் கற்ருேர் அறியா அறிவினர், கற்ருேர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர், பகையையும் பிறரைச் செறுவதையும் நீக்கிய மனமுடை யவர். கற்றவர் சிறிதும் அறியாத வாலறிவினர். கற்ற வர்களுக்கு வரம்பாக நிற்கும் தலைமையை உடையவர்.
கோமமொடு கடுஞ்சினம் கடந்த காட்சியர்' காமத்தோடு கடுமையான சினத்தையும் வென்ற ஞானத் தையுடையோர் - மயக்கத்தையும் வென்றவர் என்பது தெளிவு.
இடும்பை பாவதும் அறியா இயல்பினர், சிறிதளவும் துன்பத்தையறியாத இயல்புடையவர்கள்
"மேவரத் துணியில் காட்சி முனிவர் முற்புகப்" மனம் பொருந்த வெறுப்பில்லாத ஞானத்தையுடைய முனிவர்கள் முன்னலே செல்ல முனிவர் பெருங்கூட்டம் முன்னே செல்ல அவர்களைக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுப் பின்னே வருகின்றவர்கள் யார் என்று பார்ப்போம்
"புகை முகந்தன்ன மாசில் து உடை முகவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச் செவிநேர்பு வைத்த செய்வுறுதிவவின் நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலர் இன்நரம்பு உளg" நேர்பு சேர்த்து, செய்வு = சுருதி கூட்டும் செய்கை திவ்வு - நரம்புக்கட்டு, நயன் இனிமை அன்பு, இங்கே மனுேதர்மம், மேவலர் மேவுதலை உடையவர், உணர =
a.
29

Page 20
சகையை முகந்தாற் போன்ற "அமுக்கு இல்லாத தூய உடையையும், மொட்டுக்கள் வாய் அவிழ்ந்து மலர்ந்த மாலை சூழ விளங்கும் மார்பையும், காதிலே வைத்துப் பார்த் துச் சுருதிகூட்டிய நரம்புக் கட்டையுடைய நல்ல யாழிலே பயிற்சியுடையவர்களும் மனேதர்மமுள்ள நெஞ்சையும் மென்மையான மொழிகளையும் உடையவர்களுமாகிய கந் தருவர் இனிய யாழ் நரம்பை மீட்டிப்பாட
நோய் இன்று இயன்ற யாக்கையர், மாவின் அவிர்தளிர்புரையும் மேனியர், அவிர்தொறும் பொன்உரை கடுக்கும் திதலையர்'
நோயே இல்லாமல் அமைந்த உடம்பை உடையவர். மாமரத்தின் பளபளக்கும் தளிரை ஒத்த வண்ணத்தை உடையவர்: அப்படிப் பளபளக்குங் தோறும் பொன்னை உரைத்தாற் போலத் தோன்றும் அழகுத் தேமலை உடை
"இன்நகைப் பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் மாசில் மகளிரொடு மறுஇன்றி விளங்கக்"
கண்ணுக்கு இனிய ஒளியை உடைய பருமம் என்னும் மேகலையைத் தாங்கியதும் தாழ்ந்தும் உயர்ந்தும் இலக்கணப் படி அமைந்ததுமாகிய இரகசிய உறுப்பை உடையவருமா இய குற்றமற்ற மகளிரோடு அந்தப்பாடல் சிறிதும் குறைபாடு இல்லாமல் எடுத்துக் காட்ட
நகை ஒளி, பருமம் பதினெட்டு வடங்களைக் கொண்ட மேகலை, பணிந்து தாழ்ந்து ஏந்து உயர்ந்து நிற்கும்,
М
மறு குற்றம்
 
 
 
 

"கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால்எயிற்று அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறற் பாம்பு படப்புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் புள்அணி நீள்கொடிச் செல்வனும்"
நஞ்சோடு உள்ளே அமைந்த துளையையுடைய வெள்ளே யான பல்லேயுடையனவும், நெருப்பைப் போல மூச்சுவிடு வனவும், அச்சத்தை உண்டாக்குகின்ற கடுமையான வலி மையை உடையனவுமாகிய பாம்புகள் அஞ்சி விழும்படி அடிக்கும், பல கோடுகளையுடைய வளைந்த சிறகுகளையுடைய பறவையாகிய கருடனை அணிந்த உயர்ந்த துவசத்தையு டைய திருமாலும்
**வெள்ளேறு "வலவையின் உயரிய பலர் புகழ் திணிதோள் உமை அமர்ந்து விளங்கும் இமையாமுக்கண் மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும்"
வெள்ளையான இடபக் கொடியைத் தம் வலப்பக்கத்தே உயர்த்தியவரும், பலரும் புகழும் திண்மையான தோளை
உடையவரும், உமாதேவியார் விரும்பித் தங்கும் திரு
மேனியையுடையவரும், இமையாத மூன்று கண்களையுடை
யவரும், மூன்று மதில்களே அழித்த வலிமையிலே மிக்க
செல்வருமாகிய சிவபெருமானும்,
"நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நுாறுபல்
வேள்விமுற்றிய வென்றடு கொற்றத்து ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத் தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்"
ஆயிரம் கண்களே உடையவனும் துருகிய பலவகை வேள் விகளை முற்றச் செய்தவனும், எதிர்நின்று பகைவர்களை அழிக்கின்ற வெற்றிச் சிறப்பை உடையவனும், நான்கு உயர்ந்த கொம்புகளையும், அழகு வாய்ந்த நடையையும் பூமியில் தாழ்ந்த பெரிய வளைந்த துதிக்கையையும் உடைய
3.

Page 21
எல்லோரும் உயர்வாகச் சொல்லும் யானையாகிய ஐரா வதத்தின் கழுத்தின் மேல் ஏறியவனும் ஆகிய வளம் மலிந்த செல்வத்தையுடைய இந்திரனும்,
"நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப் பலர்புகழ் மூவரும் தலைவர் ஆக ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித் தாமரை பயந்த தாஇல் ஊழி நான்முக ஒருவற் சுட்டிக் காண்வர"
நாற்றிசைக் காவலர்களாகிய நான்கு பெருந்த்ெய்வங்களின் காவலுக்குட்பட்ட நல்ல நகரங்கள் நிலைபெற்ற உலகத் தைக் காப்பாற்றுகின்ற ஒன்ருக விரும்பும் கடைப்பிடியை புடையவர்களாகிய பலரும் புகழும் மும்மூர்த்திகளும், பழையபடியே தம்தம் தொழில்களை இயற்றித் தலைவர் கள் ஆகும்படியாக, இன்பமுறுகின்ற பூவுலகில் வந்து தோன்றி. தாமரையினுல் தோற்றுவிக்கப்பட்டவனும் கேடில்லாத நீண்ட ஆயுளையுடையவனுமாகிய நான்முகனு கிய ஒருவனை எண்ணி,
அவர்கள் குறை :
முதலில் தவம் செல்ல, அதனே அடுத்து இசை செல்லுகி றது. இந்த இரண்டையும் முன்னிற் கொண்டு தேவர்கள் வருகிருர்கள். அவர்களுக்கு முருகல்ை ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது. அதற்காகவே கூட்டமாகவே வரு இருர்கள் தேவர்கள். திருமால் வருகிருர், சிவபெருமான் வருகிருர் இந்திரன் வருகிருன். முப்பத்து முக்கோடி தேவர்களுமே வருகிருர்கள் இந்தக் கூட்டத்தில் ஒருவனைக் கானுேம், மும்மூர்த்திகளில் ஒரு மூர்த்தியாகிய பிரம்மா, அவன் இப்போது சிறையிலிருக்கிருன் அதனுல் படைப்புத் தொழில் நின்றுபோயிற்று அது நிற்கவே தொடர்ந்து செய்யவேண்டிய காத்தல் முதலிய தொழில்களும் நின்று
32
 
 

போய்விட்டன. அடுப்பு மூட்டினுல்தான சோறு சமைக்க முடியும், அடுப்பு மூட்டும் சிற்ருள் வரவில்லை. அதனுலே சமையலும் நடைபெறவில்லை. நான்முகனைச் சிறையில் அடைத்தவன் முருகன். அந்தப் பெருமானை அணுகிப் பிரமனுடைய பிழையைப் பொறுக்க வேண்டுமென்று இரந்து வரம் பெறுவதற்காகத்தான் இந் தத் தேவர்கள் வருகிருர்கள். நேரே போனுல் முருகனுக்கு பழைய கோபம் தலைகாட்டுமோ என்று அஞ்சி, அவனுக் குகந்த முனிவர்களையும் இசைவாணர்களையும் முன்னிட்டுக் கொண்டு வருகிருர்கள்.
"பகலில் தோன்றும் இகல் இல்காட்சி நால்வேறு இயற்கைப் பதினுெரு மூவரொடு'
சூரியனைப் போல தேசுடையவர்களாகத் தோன்றும் மாறு பாடு இல்லாத தோற்றத்தைப் பெற்ற, நான்கு வேறுபட்ட இயற்கையையுடைய முப்பத்துமூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறி இயர்"
பதினெண் வகையாகிய உயர்ந்த நிலையைப் பெற்றவர்
களும்
'மீன்பூத்தன்ன தோன்றலர், மீன்சேர்பு வளிகிளர்ந்தன்ன செலவினர், வளியிடைத் தீ எழுந்தன்ன திறலினர், தீப்பட உரும் இடித்தன்ன குரலினர், விழுமிய உறுகுறை மருங்கில் தம் பெறுமுறை கொண்மார் அந்தரக் கொட்பினர் வந்துடன் கான"
விண்மீன்கள் ஒளியுடன் விளங்குவதைப் போன்ற தோற் றத்தை உடையவர்கள்.
மீன்கள் உலாவுகின்ற இடத்தைச் சேர்ந்து காற்று எழுந் ததால் ஒத்த வேகமான நடையையுடையவர்கள். காற்று வீசும்பொழுது தீ எழுந்தாற் போன்ற வலிமையை உடையவர்கள்.

Page 22
தீ உண்டாகும்படியாக இடி இடித்தாற் போன்ற குரலையு
-
எல்லோருக்கும் பொதுவாக உள்ள பெரிய குறையைத் தீர்த் துக்கொள்வதோடு, அதன் சார்பில் தாம் பெறவேண்டில் வற்றைத் தங்கள் தங்கள் முறையிலே நின்று பெற்றுக் கொள்ளும் பொருட்டு (மேலே சொன்ன யாவரும்) ஆகா பத்தே இயங்கிக்கொண்டு வந்து ஒருங்கே தரிசனம் செய்து கொள்கிறர்கள். அப்படி அவர்கள் தரிசித்துக்கொள்ளும்படி - முருகன் ஆவி என் குடியில் எழுந்தருளியிருக்கிருன் என்று சொல்லவருகி (а?ії.
"தாஇல் கொள்கை மடந்தையொடு சின்னுள் ஆவினன்குடி அசைதலும் உரியன்; அதா-அன்று'
கேடு இல்லாத விரதத்தையுடைய மடந்தையாகிய தேவ சேனையோடு சிலகாலம் திருவாவினன் குடியில் தங்கியிருக்கும் செயலேயும் உடையவன். அது மட்டும் அன்று
4. திருவேரகம்
"இருமூன்று எய்திய இயல்பினின் ಮಿಥಿ!Tvolgi இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி'
ஆறு என்று தமக்கு அமைந்த இலக்கணத்தினின்றும் பிழையாமல் தந்தை தாய் என்னும் இருவருக்கும் உரிய கோத்திரமாகத் தனித்தனியே இரண்டு முனிவர்களேச் சுட்டிக் கூறும் பல வஈக வேறுபட்ட பழைய குடி
*அறுநான்குஇரட்டி இளமை நல்லியாண்டு ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை'
நாற்பத்தெட்டாகிய இளமைப் பருவத்துக்குரிய நல்ல ஆண்டுகளை நிற்க வேண்டிய நெறியிலே நின்று ஒழித்த, தர்மத்தையே விரும்பும் கடைப்பிடியை உடைய
34
 
 

'மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல'
மூன்று வகையாகச் சொல்லப்பட்ட வேள்வித் செல்வமாக உடைய இருபிறப்பாளர்களாகிய அவ்வந்தணர்கள் துதிக்கவேண்டிய பொழுதை அறிந்து, தோத்திரங்களைக் கூற
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண். புலராக் காழகம் புலர உடீஇ'
மூன்று புரிகளையுடைய ஒன்பது என்னும் எண்ணிக்கை கொண்ட நுண்ணிய நூலே அணிந்து, உலராத ஆடையை இடையில் கிடந்தவாறே உலரும்படி உடுத்து வழிபடு கிருர்கள்
* உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கின் நவிலப்பாடி விரையுறு நறுமலர் ஏந்தி'
த2லயின் மேல் குவித்த கையையுடைவர்களாய் முருகனைப் புகழ்ந்து, ஆறு எழுத்துக்களைத் தன்பாற்கொண்ட அரிய உபதேச மந்திரத்தை நாக்குப் புரளும் அளவிலே பலமுறை கூறி மணம் மிக்க நறுமலர்களை ஏந்தி, வழிபடவும்,
"பெரிதுவந்து ஏரகத்து உறைதலும் உரியன்; அதாஅன்று'
இவ்வாறு அந்தணர்கள் வழிபடுவதை மிகவும் திருவுள்ளத்தில் உவந்து முருகன் திருவேரகத்தில் எழுந்தருளியிருப்பதற்கும் உரியன்,
அதுமட்டும் அன்று, ஆறெழுத்தை தன்னுள்ளே அடக்கிய மந்திரம் ஷடாக்ஷரம் மறை என்பது மந்திரம் , கேள்வி உபதேசம் உபதேச மந்திரத்தை அவ்வாறு கூறினர் முருகனுக்கு உரியர
35

Page 23
ஷடாக்ஷர மந்திரம், அது பிரணவத்தின் விரிவாக இருப்பது அதனுல்
"ஒரெழுத்தில் ஆறெழுத்தை ஒதுவித்த பெருமாளே." என்று அருணகிரிநாத சுவாமிகள் பாடினுர், ஷடாக்ஷர மந்திரத்தை உச்சரித்துக் கையில் மலர்களே ஏந்தி வழிபடுகிருர்கள். அபிஷேக ஆராதனை முடிந்தபிறகு கையில் மலரை வைத்துக்கொண்டு வேதமந்திரங்களைச் சொல்லி இறைவன் திருவடியில் சமர்ப்பிப்பது மரபு. இதை மந்திரபுஷ்ப என்று சொல்வார்கள். பூசையின் இறுதியில் நறுமலர் ஏந்தி வழுத்துதல் வழக்கமாதலின் அதை இங்கே
இறுதியில் வைத்துச் சொன்னுர்,
5. குன்றுதோருடல்
"பைங்கொடி நறைக்காய் இடைஇடுபு வேலன்
அம்பொதிப் புட்டில் விரை இக் குளவியொடு
வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன்' பச்சிலைக்கொடியில் நறுமணத்தை உடைய சாதிக்காயை நடுவிலே வைத்து, பூசாரியானவன் அழகிய பண்டங்களைப் பொதிதலையுடைய புட்டிலைப்போல விளங்கும் தக்கோலக் காயையும் விரவவைத்து, காட்டுமல்லிகையோடு வெள்ளை நிறம் பெற்ற கூதாள மலரையும் வைத்துக் கட்டிய கண்ணியை அணிந்தவனுகி - எழுந்தருளுகிருன் முருகன் என்று சொல்ல வருகிருர்,
"நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பிற் கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர் நீடுஅமை விளைந்த தேக்கள் தேறல் குன்றகச் சிறுகுடிக் கிளேயுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை,அயர' பைங்கொடி = பச்சிலைக்கொடி, நறைக்காய் சாதிக்காய், இடுபு இட்டு வைத்து, வேலன் - பூசாரி, அம் - அழகிய, பொதி - பொதிதல் புட்டில் - புட்டிலைப் போன்ற தக்கோலக் காய் விரைஇ விரவி, கலந்து, குளவி காட்டுமல்லிகை, கண்ணி தலையில் அணியும் மாலை,
 
 

நல்ல மணத்தை வீசும் சந்தனத்தை அணிந்த, நிறம் கிளர்ந்து தோன்றும் மார்பையும் கொடுமையான செயலே பும் வலிய வில்லையும் உடைய கொலைசெய்யும் வேடர்கள் உயர்ந்த மூங்கிற் குழாயில் பல நாள் இருந்து முற்றி விளைந்ததும் தேனுலாயதுமாகிய கள்ளின் தெளிவை மலை யிலுள்ள சிற்றுார்களில் வாழும் தம் சுற்றத்தாருடன் உண்டு மகிழ்ந்து, தொண்டகம் என்ற சிறிய பறைக்கு ஏற்றபடி குன்றக் குரவையாகிய கூத்தை ஆட
**விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கால் குண்டு சுனே பூத்த வண்டுபடு கண்ணி'
விரலாலே வலிய மலர்த்துதலால் மலர்ந்தவை வெவ்வேறு வகையாக இருப்பவை, வாசனையும் காம்பும் உடையவை. ஆழமான சுனைகளிலே மலர்ந்தவை. வண்டுகள் படிந்து மொய்க்கும் தன்மையவை ஆகிய மலர்களால் தொடுத்த கண்ணியையும் - பிறவற்றையும் உடைய மகளிர்
"இணைத்த கோதை அணைத்த கூந்தல் முடித்தகுல்லை இலையுடை நறும்பூச் செங்கால் மராஅத்த வால்இணர் இடையிடுபு சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ மயில்கண்ட ன்ன மடநடை மகளிரொடு"
இரட்டையாகக் கட்டிய மாயிேனுல் கட்டிய கூந்தலேயும். முடிந்திருக்கும் கஞ்காவின் இலையையுடைய மணமுடைய பூவையும், சிவந்த அடியையுடைய வெண்கடம்பின் வெள்ளை யான பூங்கொத்துக்கரேயும் இடையிடையே இட்டு, வண்டு கள் வந்து மொய்த்துத் தாதுகளை உண்ணும்படி தொடுத்து அமைத்த பெரிய குளிர்ந்த தழையென்னும் ஆடையையும் திருத்தமாக அமைந்த மணிகளாலான வடங்களை உடைய மேகலையை அணிந்த இரகசிய உறுப்பில் அ  ைச யு ம் ப டி. (தழையை) உடுத்து மயிலைக் கண்டாற் போன்று வருகின்ற மெத்தென்ற நடையையுடைய பெண்களோடு,

Page 24
*செய்யன், சிவந்த ஆடையன், செவ்வரைச் செயலைத் தண்டளிர் துயல்வகும் காதினன்'
சிவந்த திருமேனியை உடையவன். செந்நிறம் பெற்ற டையை அணிந்தவன். செம்மையான அடிமரத்தை பு டய அசோகினது குளிர்ச்சியான தளிர் அசையும் காதுகளை କମ୍ପୁ} | ... liଇ ଜନ୍ମିr.
'கச்சினன், கழலினன், செச்சைக் கண்ணியன்'
கச்சை உடையவனுகி, கழலை அணிந்தவனுகி, வெ ட் சி க் கண்ணியைச் சூடியவனுகி,
"குழலன், கோட்டன், குறும்பல் இயத்தன்,
புல்லாங்குழலே வாசிக்கிறவன், கொம்பை ஊதுகிறவன் சிறிய பல வாத்தியங்களே வாசிக்கிறவனுய்,
தகரன், மஞ்ஞையன். புகரில் சேவலங்
கொடியன், நெடியன், தொடிஅணிதோளன்'
ஆட்டின் மேல் ஏறுபவனுய், குற்றமற்ற சேவற்கொடியை ஏந்தியவனுய், நெடிய திருவுருவமுடையவளுப் வாகுவலயங் களை அணிந்த தோள்களையுடையவனுய்,
'நரம்பு ஆர்த்தன்ன இன்குரல் தொகுதியொடு
யாழின் நரம்பு ஒலித்தாற்போன்ற இனிய குரலே எழுப்பிப் பாடும் மகளிர் கூட்டத்தோடு,
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல் மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன்'
சிறிய புள்ளிகளை உடையதாய் மணமும்தண்மையும் மென்மை
யும் உடையதாய் இடுப்பிலேகட்டிய, நிலத்திலே புரளுத2) உடைய துகிலை உடையவன்.
38
 
 
 
 

"முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி
மென்ருேள் பல்பினை தழீஇத் தலைத்தந்து"
முழவைப்போலப் பெருத்த விசாலமான கைகளால் ஏற்ற வண்ணம் ஏந்திக்கொண்டு, மெல்லிய தோளையுடைய மான் போன்ற பல மகளிரைத் தழுவி, அவர்களுக்குத் தலைக்கை கொடுத்து
"குன்றுதோருடலும் நின்றதன் பண்பே; அதாஅைன்று'
ஒவ்வொரு மலையிலும் திருவிளையாடல் புரிவதும் நிலைபெற்ற அவனுடைய இயல்பாகும். அதுமட்டும் அன்று
6. பழமுதிர் சோலே
முருகன் தனக்கென்று கோயில்கட்டி வழிபடும் இடங்களில் எழுத்தருளி வீற்றிருந்து அன்பர்களுக்கு நன்மை செய்கிருன், அந்த இடங்களில் மட்டும்தானு அவன் இருக்கிருன்? அவன் பார்க்கும் இடம் எங்கும் ஒருநீக்கமற நிறைகின்ற பரிபூரண ஆனந்தன். அவன் கண்ணக்கவரும் அழகுருவம் படைத்தி வன் அழகுததும்பும் இடங்களில் எல்லாம் அழகனுகிய முரு கனுடைய மனம்கமழும். மலர்களையும் மற்றப்பண்டங்களே பும் வைத்து நடாத்தும் விழாக்களில் அவன் சாந்நித்தியத் தைக் காணலாம்; அழகாக இருக்கும் இடத்தை "இது விழாக் களத்தைப்போல இருக்கிறது என்று கூறுவது புலவர்கள் வழக்கம். மகிழ்ச்சியையும் வளப்பத்தையும் தெய்வ உணர்ச் சியையும் கொண்டு விளங்குவது விழா ஒவ்வோர் ஊரிலும் விழா நடக்கும் அந்தந்த தெய்வத்திற்குஏற்ப தனித்தனியே சில முறைகள் உண்டு. சிறியசிறிய ஊர்களில் எல்லாம் முரு கனுக்கு விழா எடுப்பார்கள் குறிஞ்சி நிலக்கடவுளாகிய முரு கனுக்கு அந்நிலத்தில் விளையும் தினையரிசியில் விருப்பம் அதி கம், தேனும் தினமாவும் வள்ளிநாயகிதர உண்டவனல்லவா? ஆதலால் அவனை வழிபடும் போது தின அரிசியைக்கொண் டும் அதன் மாவில் தேனைச்சேர்த்துப்பிசைந்தும் நெய்விட்டும், நெய்விளக்கேற்றியும் வழிபாடு செய்கிருர்கள். இப்படி ஒன்
39

Page 25
வோர் ஊரிலும் நடைபெறுகிறது. அந்தவிழாக்களை (தினமா விளக்கு) நடத்துவோருடைய அன்பை உணர்ந்து முருகன் அவ்விடங்களில் எழுந்தருளிநலம் செய்கிருன் அங்கே அவனைக்
jsir aħjar Golf riħ. ܓ
*சிறுதினை மலரொடு விரைஇ. மறிஅறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்,'
சிறிய தினையரிசியைப் பூக்களோடு கலந்து வைத்து, ஆட்டை அறுத்து, கோழிக் கொடியோடு விழாவுக்குரிய களத்தை நிறுவி ஒவ்வோர் ஊரிலும் நடத்த மேற்கொண்ட ஒறப்பு பொருந் திய விழாக்களிலும்,
*ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் வேலன்தைஇய வெறிஅயர் களனும்'
அன்பு முறுகி ஆர்வமாகிய ஆர்வலர்கள் துதித்து வழிபட விரும்பிச் செல்லும் இடங்களிலும், பூசாரி அமைத்த வெறி பாடுகின்ற இடத்திலும்,
கொடும் காவும், கவின்பெறு துருத்தியும்
ாறும் குளலும் வேறுபல் ଈଶ}ifily if ' '
இயற்கையாக வளர்ந்த காடுகளிலும், மக்கள் வளர்க்கும் பூேர்ஆலகளிலும் அழகு பெற்ற ஆற்றுக்கு நடுவில் உள்ள இடங்களிலும் இயற்கையான ஆற்றிலும், மக்கள் வெட்டிய குளத்திலும். இவை போன்ற வேறு பல இடங்களிலும்,
*சதுக்கமும் சந்தியும் புதுப்பூ ங்கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்,' நான்கு தெருக்கள் கூடும் சதுக்கத்திலும் மூன்றுதெருக்கள், ஐந்துதெருக்கள் முதலியவை கூடும் சந்தியிலும், புதிய பூவைய டைய கடம்பமரத்திலும், மரத்தடியிலுள்ள மன்றத்திலும் போதுவாகப் பலர் சுடும் ச  ைபயிலும், கந்தை வழிபடும்
இடத்திலும்
盛{}
 
 

"மாண்தலைக் கொடியொடுமண்ணி அமைவர'
மாட்சிமைப்பட்ட தலையை உடைய கோழிக்கொடியோடு மற்ற அலங்காரங்களையும் பொருத்தமாக அமையும்படி
'நெய்யொடுஜயவி அப்பி ஐது உரைத்துக் குடந்தம்பட்டுக் கொழுமலர் சிதறி"
நெய் அல்லது எண்ணெயோடு வெண் சிறு கடுகையும் அப்பி மெல்லியதாக மந்திரத்தைச் சொல்லிக் கை கூப்பி வணங்கி வளப்பமிக்க மலர்களைத்தூவி அருச்சித்து.
'முரண்கொள் உருவின் இரண்டு உடன்உடீஇச் செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி மிதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக் குருதியொடு விரைஇய தூவெள் அரிசி சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇ'
ஒன்ருேடு ஒன்று மாறுபட்ட நிறத்தை யுடைய இரண்டு ஆடைகளை ஒன்றன் மேல் ஒன்ருகச் சேர்த்து உடுத் து கையில் செந்நிற நூலக் காப்பாகக் கட்டி, வெண்ணிறமான பொரியைத் தூவி, மிக்க வலிமைநிலை பெற்ற பெரியகாலை யுடையகொழுத்த ஆட்டுக்கிடாயை வெட்டிய இரத்தத்தோடு கலந்தமிக்க வெண்மையான அரிசியைச் சிறுபலியாக வைத்து, பல பிரப்பரிசி நிரம்பியகூடைகளை இருத்தி,
"சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் பெருந்தண் கணவீர நறுந்தண்மாலை துணையற அறுத்துத் தூங்க நாற்றி சிறிய பசுமஞ்சளோடு மணமுடைய பொருள்களைத் தெளித்து பெரிய குளிர்ந்த செவ்வரளியால் ஆண் மணமிக்க குளிர்ந்த மாலையை அளவு ஒத்து அறும்படியாக அறுத்து, அங்கங்கே தொங்கும்படி கட்டி,
玺廖

Page 26
*நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி நறும்புகை எடுத்துக் குறிஞ்சிபாடி இமிழிசை அருவியொடு இன்னியம் கறங்க உருவப் பல்பூத்து உய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் முருகியம் நிறுத்து முரணினர் உட்க முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர் - ஆடுகளம் சிலம்பப்பாடிப் பலவுடன் கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி ஒடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி'
செறிந்த மலைச்சாரலில் உள்ள நல்ல நகர்களை வாழ்த்தி, மனமுள்ள தூபத்தைக் காட்டி, குறிஞ்சிப் பண்ணைப் பாடி இனிமையாக ஒலிக்கின்ற ஓசையையுடைய அரு வியோடு இணைந்து இனிய வாத்தியங்கள் முழங்க, பலநிறங்களையுடைய மலர்களை அர்ச்சித்து, கண்டோர் அஞ்சும்படியாக இரத்தத் தோடு みa茂。 சிவந்த தினையைப் பரப்பி, பூசை செய்யும் குறமகள் முருகனுக்கு உவப்பான வாத்தியங்களை வாசிக்கச் செய்து, தெய்வம் இல்லையென்ற முரண்பட்ட கொள்கையை உடையவர்களும் அஞ்சும்படியாக முருகனை வரும்படி செய்த அழகு மிக்க அகன்றதிருக்கோயிலில், வெறி யா டு கின்ற இடத் தி ல் சிலையோடும்படியாகப் பாடி, பலகொம்புகளை ஒன்ருக ஊதி, ஒலியினுல் கொடுமையை உடைய பிணிமுகம் என்னும் யானையைவாழ்த் தி வழிபட
பிணிமுகம் என்பதற்கு மயில் என்னும் பொருள் கொள்ள irri தூபம் காட்டி குறிஞ்சிப் பண்ணைப்பாடி முருகனை வழி படுதல் பழையகால வழக்கம்.
குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின் என்பது சில: பதிகாரம்
'ஐயவிசிந்தி நறை புகைத்தாய் மலர் து உய்க்" புறப்
 
 
 
 
 
 

"வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டாண்டு உறைதலும் அறிந்தவாறே'
தன்னை விரும்பும் அன்பர்கள் தாம் விரும்பியபடியே அடைந்து வணங்க அங்கங்கே உறைவதும் நான் அறிந்த வண்ணமாகும் இவ்வாறு வழிபட்டவர்கள் தாம் வேண்டிய வற்றை வேண்டியபடியே பெற்று நன்றியறிவுடன் வழிபட அங்கங்கே எழுந்தருளியிருக்கிருன் எ ன் று ம் பொருள் கூறலாம்.
முருகனத் தரிசிக்கும் வழி
முருகன் எழுந்தருளிய தலங்களைக் கூறி அங்கங்கே முனி வரும் தேவரும் பிறரும் வழி படுவதைக் கூறி, கோயில் கட்டி வழிபடும் இடங்கள் அல்லாத வேறு பல இடங்களை யும் கூறி, கடைசியில் குறமகள் செய்யும் வழிபாட்டையும் கூறி, முருகன் எவ்வாறு எல்லா வகையான மக்களாலும் வணங்கப் பெறுகிருன் என்பதைப்புலப்படுத்தினர் நக்கீர தேவனுர், முருகன் மலை மேல் இருக்கிருன், சமவெளியில் இலங்குகிருன் காட்டில் ஒளிர்கிருன் நாட்டில் திகழ்கிருன், ஆற்றில் இருக்கிருன், குளத்தில் இருக்கிருன், மனிதர்கள் கூடுகின்ற இடத்தில் இருக்கிருன், மனிதசஞ்சாரமே இல்லாத இடத்திலும் விளங்குகிருன்,
அழகிய மலரிலும் அவன் அருள் ஒளிர்கிறது, அவனை வழிபடுவோர்களில் தான் எத்தனை வேறுபாடுகள் அழகிய
தேவமகளிர் அவனுடைய ஆட்சிக்குரிய குறிஞ்சி நிலத்துக்கு வந்து தம்மை அழகு செய்து கொண்டு அவனை வாழ்த்து கிருர்கள். போர்க்களத்தில் உணவு பெற்ற பயங்கரமான பேயும் அவனை வாழ்த்துகிறது இந்திராதி தேவர்களும் தம்முடைய குறை முடிய வேண்டுமென்று அவனை வந்து பணிகிறர்கள். கொலேயே புரிவேடர்களும் அவனைப்பாடிக் கூத்தாடுகிறர்கள் எல்லாம் கற்று உயர்ந்த ஞானியரும் அவனை வணங்கி இன்புறுகிறர்கள் ஒன்றும் அறியாத
னும் வழிபட்டு மகிழ்கிருன்

Page 27
முனிவர்கள் போற்றுகின்றனர். அந்தணுளர் ஏத்துகின் ர் ஏன் மும்மூர்த்திகளுமே வாழ்த்தி வணங்குகிருர்கள் பம் காட்டி குறிஞ்சிப் பண்ணைப்பாடியே முருகனை வழி
"ஆண்டாண்டு ஆயினும் ஆக; காண்தக முந்து நீ கண்டுழி: '
தான் கூறிய அவ்விடங்களானுலும் பிற இடங்க ள Tணு லும் அவனை நினைந்து வழிபடுவதற்குரிய உணர்வைத் தூண்டுவதற்கு ஏற்றதாக முந்தி நீ கண்ட இடத்தில்,
**காண்தக
முந்துநீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்திக் கைதொழு உப் பரவிக்காலுற வணங்கி'
காண்பதற்கு தக்க வண்ணம் முதலில் நீ அநுபவத்தால் உணர்ந்த இடத்தில் முகம் மலரத்துதித்துக் கையால் ଔli, பிட்டு வாழ்த்தித் திருவடிகளில் விழுந்து வணங்கி ஏத்து Gol f” sig i fy"
**நெடும் பெருஞ்சிமையத்து நீலப்பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ'
உயர்ந்த பெரிய இமயமலைச்சிகரத்தில் நீல நிற மு  ைடய தருப்பை வளர்ந்த பசிய சுனையாகிய சரவணப்பூம் பொய் கையில் ஐந்து பூதங்களின் அதி தெய்வங்களில் ஒருவனுகிய அக்கினி தேவன் முதலில் ஏற்றுச் சென்று கொடு க்க , முறையே சென்று தங்கி, ஆறு கார்த்திகை மாதர் பெற்று வளர்த்த வரைப்போல சீராட்ட ஆருகத்தங்கிய செல்வனே;
**ஆல்கெழு கடவுட் புதல்வ'
கல்லாலமரத்தின் அடியிலே எழுந்தருளிய தென்முகக் கட வுளாகிய சிவபெருமானுடைய புதல்வனே
4.
 
 
 
 
 

** Infrai}6}igory மலைமகள் மகனே, மாற்ருேர் கூற்றே"
பெருமையையுடைய பக்கங்களையுடைய இமயமலையின் மகளாகிய பார்வதியின் பு த ல் வ னே பகைவர்களுக்கு
@ 鹫、
யமனப் போன்றவனே!
*வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ'
வெற்றியையும் வெல்லும் போரையும் உடைய கொற்றை பின் திருமகனே,
*இழை அனிைசிறப்பிற் பழையோள் குழவி'
அணிகலன்களை அணிந்த சிறப்பையுடைய பழையவளாகிய பராசத்தியின் குழந்தையே,
'வானுேர் வணங்குவில் தானைத் தலைவ' தேவர்கள் வணங்கிய, வில்லை ஏந்திய, படைத்தலைவனே!
* மாலைமார்ப, நூலறி ១៣.* சரவணபவனே, கார்த்திகேயனே, சிவகுமாரா, பார் வ தி நந்த ஞ, துர்க்காசுதா, பராசத்திமகனே, தேவசேனுதிபதி, இன்பமலையணிவோப் என்றுமுருகனை ஏத்திப்புகழும்படி இது வரையில் சொல்லி மேலும் சொல்லுகிருர், எல்லா நூல் களையும் அறிந்த பேரறிவாளனே,
'செருவில் ஒருவ, பொருவிறல் மள்ளர்? போரில் யாரும் ஒப்பு இல்லாதபடி நிற்பவனே, பொருகின்ற வெற்றியினையுடைய இளையவீரனே,
'அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொன்மலை'
அந்தணர்களின் செல் வமே மெய்யுணர்ந்தவர்களுடைய சொற்களெல்லாம் தொக்க தொகுதியாக விளங்குபவனே,
45

Page 28
'மங்கையர் கணவ, மைந்தர் ஏறே!'
முருகன் மகளிர் விரும்பும் கணவனுக இருக்கிருன் காரணம் அவன் சிறந்த ஆண்மையை உடையவர்களில் சிறந்தவனுக இருத்தல், வலிமையுடைய மைந்தர்களுக்குள் சிங்கம் போல் விளங்குகிருன்.
'வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ'
வேல்பொருந்திய பெரிய கைகளால் அமைந்த பெரிய செல் வத்தை உடையவனே!
"குன்றம் கொன்ற குன்ருக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ"
கிரவுஞ்ச மலையை அழித்த குறையாத வெற்றிச் சிறப்புடைய வானை முட்டுகின்ற உயர்ந்த மலைகளையுடைய குறிஞ்சி நிலத் துக்கு உரிய தலைவனே!
'பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே'
, சமயம், இனம், நாடு மொழி ஆகியவற்ருல் வேருக இருக்கும் பலவகையினரும் புகழ்கின்ற நல்ல மொழி களுக்கு உரியவனுகிய புலவர்களுக்கு ஆண்சிங்கம் போன்ற
*அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக'
மரபு என்பது இலக்கணம், பெறுவதற்கரிய இலக்கணங்களால் வந்த பெரிய திருநாமமாகிய முருகன் என்னும் திருநாமத்தை ago). Lt.GIG63
முருகை உடையவன் முருகன். அந்தத் திருநாமத்தைப் பெறு வதற்குரிய மரபு அல்லது தகுதி யாவருக்கும் இல்லை. அது பெறுவதற்கு அரியது அதைப் பெற்றவன் முருகன். அவன் திருநாமம் பொருளாலும் சுவையாலும் பயனுலும் மிகப் பெரியது. அது பெரும்பெயர்.
 
 
 
 
 

சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. நிகண்டு களில் வற்றைக் காணலாம். எல்லாவற்றையும் தொகுத்துக் காட்டும் தமிழ்ப் பேரகராதியில் இளமை, மணம், அழகு, தெய்வத்தன்மை, வெறியாட்டு, வேள்வி, திருவிழா, பூத் திட்டு, தேன், கள், எலுமிச்சை, அகில், எழுச்சி, விறகு, காதணிவகை என்ற பொருள்கள் உள்ளன.
இவற்றில் தலைமையானவை மணம், தெய்வத்தன்மை, இளமை, அழகு என்பவை இந்த நான்கையும் குறிப்பாக நக்கீரரே பின்பு திருமுருகாற்றுப்படையில் கூறுகிருர்,
'மணம் கமழ் தெய்வத்து இளநலம் காட்டி" என்று 290 ம் அடியில் சொல்கிருர் மணமும் தெய்வத் தன்மையும் இளமையும் நலமாகிய அழகும் அவன் தன் திருவுருவத்தில் காட்டுவான் என்று கூறுகிருர்,
இந்த நான்கு மரபுகளும் கடவுள் திருவுருவங்களில் வேறு யாருக்கும் அமையாத வகையில் முருகனிடம் சிறந்து நிற் கின்றது. அழியாத ஞான மணமும், அருளென்னும் தெய்வத் தன்மையும், என்றும் அழியாத இளமையும், என்றும் மாருத பேரழகும், உடையவன் முருகன். அவன் ஞானஸ்கந்தன் கருணை கூர் முகங்களாறுடைய பேரருளாளன் என்றும், அழியாத இளமைக்காரன் ஆயிரம் கோடி காமர் அழகெ லாம் திரண்டு ஒன்ருகி மேவினுலும் இணையாகாத வடிவழி கன், ஆகவே அவன் இயல்புகள் பிறரால் பெறுவதற்கரியன. அத்தகைய முருகு அவனிடம் இருப்பதனல் அவன் திருநா ம்ம் வேறுயாருக்கும் பெறற்கு அரியதாயிற்று, பரிபாடலும் *பெரும் பெயர் முருக!' என்று அவனைப் பாராட்டும். அவ்விதமாகிய முருகனருள் பெற்ற முனிவன் பூரீ கி. வா. ஜ. அவர்களே "பெரும் பெயர் முருகன்' என்னும் பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார்கள்.
முருகன் என்னும் திருநாமம் பல பொருள்களையும் தன்னுள் அடக்கி நிற்கிறது, ஞானபண்டிதா அருளாளா, பாலசுப்பிர
4.

Page 29
சுந்தரமூர்த்தி, பக்தர்களுக்குத் தேனுகும் இறைவா, வேள்வி காவலா, என்று பல திருநாமங்கள் கூறிப்பெறும் பயனை அந்தத்திருநாமம் ஒன்றை ஒதிப் பெறலாம். அதனல் தான் அருணகிரிநாத சுவாமிகள் அது சொல்லால் ஒன்ருக நின்ருலும் அதைத்திருநாமங்கள் என்று சொல்கிருர்,
*மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்'
(கந்தர்அலங்காரம்)
*நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபேராளர்'
தன்பால் விரும்பி வந்தவர்களுக்கு அவர் விரும்பியதைத் தந்து நிரம்ப நுகரச் செய்யும் பெரிய புகழை உடையவனே
*அலர்ந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்'
துன்புற்று நிர்க்கதியாக வந்தவர்களுக்கு அருள் வழங்கிக் காப்பாற்றும், பொன் அணிகலன்களை அணிந்த, செவ்வண் ணமேனிப் பெருமானே;
*மண்டு அமர்க் கடந்தநின் வென்று ஆடு அகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள்' மேல் நெருங்கி வருகின்ற போர்களை வஞ்சியாமல் எதிர் நின்று முடித்து நின்னுடைய வென்றடுகின்ற மார்பினுல் பரிசிலர்களைப் பாதுகாக்கும் அழகையுடைய நெடியவேளே,
**பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்'
தேவரும் முனிவரும் பிறருமாகிய பெரியவர்கள் துதிக்கின்ற பெரிய திருநாமத்தை உடைய கடவுளே.
*சூர்மருங்கு அறுத்த மொயம்பின் மதவலி'
சூரனது குலத்தை அடியோடு அழித்த மார்பையுடைய மிக்க வலிமையைப் பெற்றவனே! இயவுள் - என்பது மிக அரிய சொல் - அதற்குத் தலேவன் என்றும் கடவுள் என்றும் சொல்வர்.
48
 

போர்மிகு பொருந குரிசில்
போரிலே சிறந்து விளங்கும் வீரனே தலைவனே! பொருபவன் பொருநன், குரிசில் என்பதற்கு
னும் பொருள் கொள்ளலாம். இவ்வாறு யான் அறிந்த அளவிஞலே இருபத்தாறு நா மங்களே ச் {ଘୋfrt ଜିହ୍ବା (ଖୋର୍ସ୍) , இவற்முேடு நின்று விடவில்லை. எனக்குத் தோன்றிய அெ வுக்குச் சொன்னேன் என்று கூறுகிருர் நக்கீரபுலவன்
తీ శీర్జ్యోrt() யான் அறிஅளவையின் எனப்பல ஏத்தி ஆனது'
என்று பல  ைகைய க நான் அறிந்த இந்த அளவிலே சொல்ல வேண்டியவற்றை விடாமல் சொல்லித் துதித்து
நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் நின்னடி உள்ளி வந்தனென்?
நின்னே அளந்து அறிவது உலகில் நிலை பெற்ற உயிர் களுக்கு அருமையாதலால் நின்னுடைய திருவடியைத் ់ சனம் செய்ய எண்ணி வந்தேன்,
நிேன்னெடு புரையுநர் இல்லாப் புலமையோய்'
நின்ளுேடு ஒப்பார் இல்லாத ஞானமுடையவனே!
** @F குறித்தது மொழியா அளவையின் என்று கூறி நீ எண்ணியவை அனைத்தையும் சொல்லாமல் இருக்கும் போதே
'குறித்துடன் வேறுபல் உருவிற் குறும்பல் கூளியர் சாறு அயர் களத்து வீறுபெறத் தோன்றி, அளியன்தானே முதுவாய் இரவலன் வந்தோன் பெரும, நின்வண்புகழ் நயந்தென இனியவும் நல்லவும் நனிபல ஏத்தி
ళ్ల9

Page 30
நீ எண்ணியதை அறிந்த உடனே வேறுவேருண பலவடி வங்களை உடைய குறிய பல ஏவலாளர்கள் விழா நிகழ்த் தும் இடத்தில் சிறப்புண்டாகும் படியாகத்தோன்றி முரு கனே நோக்கி இவன் இரங்கத்தக்கவன் அறிவு வாய்ந்த இரவலன், ஈகையால் வந்த நின்புகழைக் கேட்டு விரும்பி இனியவையும் நல்லவையுமாகிய சொற்களையும் திருநாமங் களையும் நன்ருகப் பல பலவாகக் கூறித்துதித்து வந்தான் பெருமானே - என்று சொல்ல
தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின் வான்தோய் நிவப்பின் தான்வந்து எய்தி அணங்குசால் உயர்நிலை தழீஇ'
தெய்வத்தை தன்மைவாய்ந்த பராக்கிரமம் விளங்குகின்ற உருவத்தோடு ஆகாயத்தை அளவிய உயரத்தை உடைய முருகன் நீ உள்ள இடத்துக்கு வந்து அடைந்து காண்பவ ருக்கு அச்சத்தைதரும் நெடிய கோல்த் தை அடக்கிக் ଗଣ୍ଡ, ଜର୍ମାଂt();
'பண்டைத்தன் மனம் கமழ் தெய்வத்து இளநலம் காட்டி
மிகப்பழையதாகிய தன் அழகுத் திருவுருவத்தை முருகன் காட்டுகிருன் முருகன் என்பது முருகை உடையவன் என்ற பொருளை உடையது முருகு என்பதற்கு பலபொருள் உண் டென்பதைப் பார்த்தோம் அவற்றின் தலைமையானவை நான்கு மணம் தெய்வத்தன்மை, இளமை, அழகு என் பன அவை நக்கீரசுவாமிகள் இந்த நான் கையும் சிறப் பாக எடுத்துச் சொல்கிருர் முருகன் தன்னே நாடிவந்த புலவனுக்கு மணங்கமழ் கோலத்தைக் காட்டுகிருன் தெய் வத்திருக்கோலத்தைக் காட்டுகிருன் இளமை உருவத்தைக் காட்டுகிருன்,
எழில் நலம் நிரம்பிய வடிவத்துடன் எழுந்தருளுகின்றன். 'மணம் கமழ் தெய்வத்து இளநலம் இந்த சொற்களில்
50
 
 

அருளுவான்
இந்த இயல்புகளைக் காணுகிருேம், இத்தகைய மணமும் அருளும் இளமையும் அழகும் இணைந்து கண்ணையும் கருத் தையும் கவ்வும் அற்புதக் கோலத்தைத் தரிசிக்கும்படி முரு கன் புலவனுக்குக் காட்டுவானும்,
*அஞ்சல் ஒம்புமதி, அறிவல்நின் வரவுஎன அன்புடை நன்மொழி அளே இ' அ ஞ் சு வ  ைத விட்டுவிடு, உன்வரவைமுன்பே அறிவேன் என்று அன்புடைய நல்ல மொழிகளைச் சொல்லி
扈 விளிவின்று இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து ஒருநீ ஆகத்தோன்ற விழுமிய பெறல் அரும் பரிசில் நல்குமதி:
இருளின் நிறத்தைப் பெற்ற கடல் வளைந்து சூழ்ந்த உல இத்தில் என்றும் அழிவே இல்லாமல், நீ ஒருவனே தலைவனு கத் தோன்றும்படி, எல்லாவற்றிற்கும் மேலான வேறு எங்கும் பெறுவதற்கு அரிய பரிசிலாகிய சீவன்முத்தியை
* பலவுடன்
வேறுபல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து
ஆர முழுமுதல் உருட்டி, வேரல்
பூவுடை அலங்குகின புலம்ப வேர்கீண்டு
பலசிறிய அருவிகள் ஒருங்கே பலவேறு துணிக்கொடிகளைப் போல வளைந்து, அசைந்து, அகில்கட்டைகளைச் சுமந்து சந்தனமரத்தின் அடிப்பாகத்தை உருட்டி, சிறுமூங்கிலின் பூவையுடைய அசைகின்ற கொம்பு பூவில்லாமல் மொட் டையாகும்படி அதன்வேரைப்பிளந்து
விண்பொரு நெடுவரைப் பகுதியின் தொடுத்த தண்கமழ் அலர் இருல் சிதை

Page 31
வானே முட்டுகின்ற உயர்ந்த மலைப்பக்கத்தில் வண்டுகள் அடைஅடையாக வைத்த குளிர் ந் த ந று ம ன ம் வீசிப் பரவியிருக்கும் தேனடைகள் சிதைய
"நன்பல ஆசினி முதுகளே கலாவ, மீமிசை நாக நறுமலர் உதிர”
நல்லனவாகிய பல ஈரப்ப லாக்களின் முதிர்ந்த சுளைகள் உதிர்ந்து கலக்கவும், மேலே உள்ள சுரபுன்னேயின் மனம் வீசும் மலர்கள் உதிரவும்.
'யூகமொடு மாமுக முசுக்கலே பணிப்பப் பூநுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசி'
கருங்குரங்குகளோடு கரிய முகத்தையுடைய ஆண்குரங்கு கள் நடுங்கவும், பூவைப் போன்ற புள்ளிகளையுடைய நெற் றியையுடைய கரிய பெண் யானை குளிர்ச்சி அடையும்படி !цій
"பெருங்களிற்று முத்துடைவான்கோடு தழீஇத் தத்துற்று
நன்பொன் மணிநிறம் கிளரப் பொன்கொழியா
பெரிய ஆண்யானைகளின் முகத்தையுடைய வெண்மையான தந்தங்களை வாரிக்கொண்டு, குதித்து நல்ல பொன்னும் மணியும் தன் நிறம் நன்ருக ஒளிரும்படி செய்து பொன் னேக் கொழித்துக் கொண்டு,
வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலே உதிரத் தாக்கிக் கறிக் கொடிக் கருத்துணர் சாய'
வாழையின் அடிமரம் முறியவும் தென்னைமரத்தின் மேலான இளநீர்க் குலைகள் உதிரவும் தாக்கி, மிளகுக் கொடியில் காய்க் கொத்துக் கீழே சாயவும், -
52
 

ெேபாறிப்புற படநடை மஞ்ஞை பலவுடன் வெரீக்
கோழி வயப்பெடை இரியக் கேழலொடு இரும்பனே வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம் பெருங்கல் விடர் அளேச் செறியக் கருங்கோட்டு ஆமா நல்ஏறு சிலப்பச்
பாறிகளை உடைய மேற்புறத்தையும் மெத்தென்ற நடை யையும் பெற்ற மயில்கள் பல ஒருங்கே அஞ்சவும்,
காட்டுப்பன்றியோடு இரியபனமரத்தின் உள் சோற் றிலே பள்ள புன்மையான சிலாம்பைப்போன்ற நிறம் பெற்ற மயிரையுடைய உடம்பையும் வளைந்த அடியையும் பெற்ற கரடிகள் பெரிய மலையின் பிளப்பிலே உள்ள குகைகளிலே சென்று சேரவும் இரிய கொம்பையுடைய காட்டு மாடு களின் கானைகள் முழங்கவும்.
சேண்நின்று இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழவோனே
லேயின் உச்சியாகிய நெடுந்தூரத்திலிருந்து இடையீடில்
ாமல் இழுமென்ற ஓசையுடன் இறங்கிவரும் அருவிறுை புடைய பழமுதிர்சோசல மலையை உடையவனுகிய முருகன்
முற்றும்

Page 32
இ.
உள்ளத்தில்உறை
குன்றம் எறிந்தாய் குரைகடலில் குர்தடிந்தாய் புன்றலேய பூதப் பொருபடையாய்- ଜୀର୍ଣ୍ଣ go li) இளேயாய் அழகியாய் ஏறார்ந்தான் ஏறே உளேபாய் என் உள்ளத்துறை ( .
என்றும் இளமையும் அழகும் வீரமும் கொண்டவனுக முருகன் திருக்கோலம் கொண்டதே அன்பர்களின் மனத் இல் இயானமுர்த்தியாக உறையத்தான். ஆகவே அவனு டைய திருக்கோலத்தை எண்ணி என் உள்ளத்தில் உறை
。
குன்றம் எறித்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங்கு அமரர் இடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும் பிற்காத்ததுவும் மெய்விடா விரன்கைவேல் {密。
இரஆஞ்சம் என்னும் மலேயை அழித்ததுவும் அசுரர்களின் வலிமை குறைந்து, அழியப்போர் செய்ததுவும், தேவர்களு டைய இன்னல்களைப் போக்கியதும் இன்று என்னைக் கை ஆடாமல் பாதுகாத்து நின்றதும் மலைக்குகையில் நக்கீரர் முதலானுேரைக் காத்ததும் மெய்யை அகன்று நில்லாத
ரஞகிய முருகனுடைய திருக்கரத்தில்
கொற்றவேல்
ஒரவேல் தாரைவேல் விண்ணுேர் சிறைமீட்ட இரவேல் செவ்வேன் திருக்குைவேல் என வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை 3.
బ్లీ
 
 
 
 

வீரத்தையுடையவேல், நீட்சியையுடையவேல் தேவர்களின் சிறையை மீட்ட தீரத்தையுடையவேல் செய்யநிறமுடைய முருகப்பெருமான் திருக்கரத்தில உள்ளவேல் கடலில் குளித்துச் சூரனைத்தேடிய வேல், வெற்றி தரும் வேல் குரனுடைய மார்பையும் கிரவுஞ்சமலேயையும் துளைத்
திவேல் நமக்குத்துணேயாக இருக்கிறது.
இடும்பைக் குன்று
இன்னம் ஒருகால் என திடும்பைக் குன்றுக்குக்
கொன்னவில் வேல் சூர் தடிந்த கொற்றவா! - முன்னம் பணிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத்தொட்ட தனிந்வலே வாங்கத்தகும்.
கொலேயே பயின்ற ஆயு த த் தை உடைய சூரபன்மனேக்
சிங்காரம் செய்த பெருமானே! முன்பு பணியாலே மூடப்
பெற்ற உயர்ந்த கிரவுஞ்சமலையில் புகுந்து உருவும் படி ஏவிய ஒப்பற்றவேலே இன்னும் ஒரு முறை என்னுடைய துன்பமாகிய குன்றை ஒழிப்பதற்கும் விடுவது தக்க செய ೧೫೯gth;
பன்னிருகைப் பெருமாள்
5. உன்னே ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னே ஒருவரையான் டன் செல்லேன் - பன்னிருதைக் கோலப்பா வானுேர் கொடிய வினைதீர்த்தருளும்
வேலப்பா செந்தி வாழ்வே!
உன்னத் தவிர வேறுயாரையும் எனக்குத் துணையாக நம்ப மாட்டேன் வேறு ஒருவரை அடியேன் பின் நின்று வழி படமாட்டேன். பன்னிரண்டு திருக்கரங்களையுடைய அழகுக் கோலத்தைப்பெற்ற முருகனே தேவர்களுடைய கொடு மையான பாவத்தைப் போக்கி, அவர்களுக்கு நலம் செய் தருளும் வேலாயுதப்பெருமானே திருச்செந்தூரில் எழுந் தருளியிருக்கும் எம்பெருமானே!
5

Page 33
திருநாமப்பியன்
*அஞ்சுமுகம்தோன்றின் ஆறுமுகம்தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலெனவேல் தோன்றும் நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்று ஒதுவார்முன், (6.
அடியவர்களுக்கு ஏதேனும் அச்சம் உண்டானுல் முருகன் அவர்கள் ஆறுதல் பெறும்படி தன்னுடைய ஆறுமுகங்களைக் கரட்டியருளுவான் மாற்றரும் கூற்றம் என்னும் பயத்தை முருகா என்று ஒதும் அடியவர்களுக்குப் போக்கும் கருணைக் கடல் முருகன் பழைய வெம்மையான சமரில் எப்படி வேல் தோன்றி வெற்றியைப் பெறச் செய்ததோ, அப்படியே மனதில் நிகழும் வெவ்விய போராட்டங்களிலும் அது தோன்றி அச்சத்தைப் போக்கும் தம்மை இடைவிடாது தொடர்ந்து திருநாமத்தைக்கூறி அன்பு செய்யும் அடியவர் ஆளுக்குக் குறிப்பறிந்து அருள்புரிய ஒடி வருவான் முருகன் ஆக அவர்கள் ஒருமுறை நினைத்து விட்டால் உடனே வந்து தன் இருதிருவடித்தாமரைகளையும் காட்டுவான் என்று சொல்லாமல் அவைகளே வந்து தோன்றும் எ கிருர் முருகா என்று ஒதும் அடியவர்களுக்கு அஞ்சுவது இல்லை. மனப்போராட்டம் ♔്, ബീ{}'g11 திருவடித்துணை உண்டு, R
நம்பிக்கை
முருகனே செந்திமுதல்வனே மாயோன் மருகனே, ஈசன்மகனே = ஒரு கைமுகன் தம்பியே, நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான் ο γη.
பக்தர் முருகனைப்பார்த்துச் சொல்கிருர் முருகனே, அழகனே செந்திப்பெருமானே மாமன் மாயோனுகிய இருமாவின் மருகனே பரமேசுவரப்பெருமானின் புதல்வனே. அவருக்கு
 
 
 
 

ஓர் அண்ணர் இருக்கிருர் முகத்தில் இருந்து தொங்கும் துதிக்கையைப் பெற்றவர் யானைமுகன் அவரின் தம்பியே இத்தனை உறவினர்களிடத்தும் பாராட்டுப் பெறும் அழக ஞக இருக்கிற எம்பெருமானே. இளையவனே தண்டை அணிந்த அழகிய உன் திருவடிக்கோலத்தை எப்போதும் நம்பிக்கையோடு தொழுது வாழ்வேன் என்கிருர்,
நல்ல இடம்
8. காக்கக் கடவிய நீ காவா திருந்தக்கால் ஆர்க்குப் பரமாம்; அறுமுகவா! - பூக்கும் கடம்பா முருகா கதிர்வேலா! நல்ல இடங்காண் இரங்காய் இனி,
அறுமுகவா என்னேப்பற்றிய கவலை எனக்கு இல்லாமல் நீயல்லவா எனக்காகக் கவலைப் படுகின்றவன்? அத்தகைநீஇப் போது புறக்கணிக்கலாமா? முருகனை அறுமுகவா என்ருர், முருகன் எங்கும் திருமுகமாய் எங்கும் திருக்கண்களாய் நின்று எல்லாவற்றையும் உணர்பவன், நான்முறையிடாமலே என் இடர்ப்பாடுகளை அறிந்து கொள்ளும் ஆற்றல் உடையவன். என்துயர் எல்லாம் அறிந்தவன், முருகன் திருமார்பில் கடம்பமாலையை அணிந்திருக்கிருன் போகத்துக்குரிய மாலை அது போர்க்குரிய கண்ணி வேறு போகத்துக்குரிய மாலை வேறு. முருகனுடைய கண்ணி காந்தள் அமைதியாக வள்ளி நாயகியோடும் தேவயானையோடும் எழுந்தருளியிருக்கும் போது கடம்ப மாலையை அணிந்து கொண்டு விளங்குகிருன் இறைவனுக்குப்போகமும் யோகமும் அவசியமில்லையாயினும் உலகத்தார் மனைவி மக்களுடன் வாழ்ந்து இன்பவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக அவன் போகியைப்போல விளங்குள் ரூன். அவன் அப்படி இல்லாதொழிந்தால் உலகம் இன்பவாழ் வின்றி வீணகி விடும் முருகா கதிர்வேலா முருகன் ஞானசக்தி யைக் கையில் ஏந்தியிருக்கிறவன், தன்னை அண்டினருடைய துயரத்தைப் போக்கும் அற்புதக் கருவி அது. சூர் மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை என்கிருர்,
57

Page 34
முருகன் என்னும் அரும்பெறல் மரபில் பெரும்பெயரும் கதிர்வேலாகிய தனிப்படையும் உடையவன் கந்தவேள்வேலே விளங்குகையான் வேலுக்கும் அவனுக்கும் உள்ள உரிமையை அவனுடைய மூலத்திருவுருவத்தில் வேலையும் இணைத்து அமைக்கும் வழக்கத்தில் இருந்து உணரலாம். ‘இரங்காய் இனி என்பதனுல் உன்னுடைய இரக்கத்துக்குடையவன் யான் என்பதைக் கூறுகிருர், தன்பம் உடையவரிடமும் இரங்குபவன் முருகன். ஆகவே தம்முடைய குறையைக் குறிபபிட்டு 'எனக்கு அருள் செய்ய வேண்டும் அதற்கு ஏற்ற பாத்திரம், என்னை ஆட்கொள்ள வேண்டும் என்கிருர்,
அரும் பெறல் மரபில் பெரும்பெயர் முருகன் பெரும் பெயர் முருகன் பெருமையைக் கூறும் திருமுருகாற்றுப் படையை பாராயணம் செய்பவர்கள். அந்நூல் முடிந்து வுடன் இதுகாறும் சொல்லி வநத வெண்பாக்களைக் கூறி துதி செய்வார்கள். அப்படி அமைந்த அந்தப் பாடல்களின் பின்னுவ இரண்டு வெண்பாக்கள பாராயணம் செய்யும் முறையும் அதனுல் உண்டாகும் பயனபும் கூறுகின்றன.
திருமுருகாற்றுப்படையைத் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த குகையில் இருந்து நக்கீரமாமுனிவர் பாடினர் என்பது வரலாறு அதல்ை ஒன்பதாவது வெண்பாவில் திருப்பரங் குன்றத்தை நினைக்கிருர் இதனைபபாடிய பக்தர் திருப் பரங்குன்றத்தில் எழுந்தருளியிருக்கும் பன்னிரு கைப் பெரு மானுடைய பாதத்தை அணுகி அன்பர்கள் கரம் குவிப் அவனுடைய சன்னிதானத்தை -960ւ-ցկմ) போதே அவன் பாதார விந்தத்தை லட்சி ய ம க க் கொண்டு தரிசித்துக் கரத்தைக் குவித்துக் கொண்டே செல் வார்கள். பின்பு கண்ணுர அவன் திருமேனி அழகைக் கண்டு இன்புறுவார்கள் அது போல ஏ! நெஞ்சமே நீயும் செய்வாயாக' என்று நெஞ்சுக்கு அறிவுறுத்துகிருர், கை கூப்பிக் கண்குளிரக் கண்ட பிறகு, மிக்க ஆர்வத்துடன் திருமுருகாற்றுப் படையைச் சொல்ல வேண்டும். - தமிழ் நயம் செழுமிய அழகான பாடல் அது.
Sଧୁ
 
 
 
 
 
 

நீர் கொண்டு அபிசேகம் செய்து பூக்கொண்டு அர்ச்சித்து, பழம் முதலியன கொண்டு நிவேதித்து பலவகை உபசாரங்களு டன் செய்வதற்கு எல்லாராலும் இயலாது. அவ்வாறு செய்து முடியா விட்டாலும் முருகனிடத்தில் பேரன்புடன் திரு முருகாற்றுப் படையை ஒதனுல் போதுமாம். முருகன் அந்நிதாவைத்தில் இந்த நூலைப் பாராயணம் செய்வது பூசை செய்வதற்கு சமனுகும். சிவபெருமான் சுந்தர மூர்த்தி நாயனுரைப் பார்த்து அருச்சனே பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மை சொற்றமிழ் பாடுக! என்று இருவாய் மலர்ந்தருளியதாக பெரிய புராணம் கூறுகிறது. அது போலவே இங்கும் திருமுருகாற்றுப் படையைப் பாரா பணம் செய்வதுவே பூசைக்குச் சமஞனது என்கிருர் பத்தர்,
பரங்கன்றில் பன்னிருகைக் கோமான் தன் பாதும் கரங் கூப்பிக் கண்குளிரக் கண்டு - கருங்காமல் ஆசையால், நெஞ்சே, அணிமுருகாற்றுப்படையைப் பூசையாகக் கொண்டே புகல்
US 65.
நக்கீரர் தாம் உரைத்த நன்முருகாந்துப் படையைத் தக்கோல நாள் தோறும் சாற்றினுல் - முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித் தான் நினைத்த எல்லாம் தரும்,
நக்ரே மாமுனிவர் திருவாய் மலர்ந்தருளிய நல்ல திருமுரு காற்றுப்படையை ஒருவன் தன்னைப்பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு நாளும் பாராயணம் செய்து வந்தால், அவனுக்கு முன்னுல் அழகுடைய பெருமை மிக்க முருகன் எழுந்தருளி வந்து அவனுடைய மனக் கவலையைத் தீர்த்தருளி அவன் நினைத்த எல்லாவற்றையும் வழங்குவான். எனவே திருமுரு காற்றுப்படையைப் பாராயணம் செய்பவர்களுக்கு முருகப் பெருமானுடைய திவ்வியதரிசனமும் இடர் நீக்கமும் நினைத்து விருபபங்கள் கைகூடுவதும் கிடைக்கும் என்பதை இந்தப் பாடல் தெரிவிக்கிறது.
59

Page 35
sa eOSJ iiLA Ae iTA i kS iA AA iAJS iLiTTJS eie eAS ieJe S SS e SSiee TTT eeS SeTA hAe ASiSkAJS AeAeAe S iieeS جبر)&& طبراA لیبریتی')$ 亲柴米杀米兴米兴米兴米杀洛兴杀杀※杀杀※※米米
* :
நன்றி
இந்நூலை வெளியிட்டு தவிய நீர்வேலிக்கந்தசுவாமி கோயிற் பரிபாலன சபையினர்க்கும் அணிந்துரை வழங் கிய கவிஞர் இ. முருகையன் அவர்களுக்கும் எம் மீது கொண்ட அன்பு காரணமாகக் குறுகிய காலத்தில் மிகவும் நேர்த்தியாக அச்சிட்டுதவிய செட்டியார் அச்சகத்தாருக் கும் அச்சுப் பிழைகளை விழிப்புடன் திருத்திச் சீர்செய்த ஆசிரியர் திரு ம. க. நடராசா அவர் களு க் கும் எமது அன்பான நன்றியைத் தெரிவிப்பதுடன் இவர்கள் அனை வருக்கும் நீர்வைத் திருமுருகன் அருள் பரிபூரணமாகக் கிடைக்கவேண்டும் என்று மனப்பூர்வமாகப் பிராத்திக்
சு. இராஜேந்திரக் குருக்கள் அருள்மிக கந்தசுவாமி
தேவஸ்தானம்
நீர்வேலி 2.288
LLA STLTLSS LLLL S SLLLLSiiLiLT S ALiA LLA iAL iA SiqJ SYAT i Ae TALA S LLLL S TTT S TLS SLLLLLA LLLAqS STA ALA A qLLe AALLLLL ALLLLLT 洛兴洛洛洛洛米米杀洛米洛米米洛治洛洛米杀米米米
(S செட்டியார் அச்சகம் யாழ்ப்பாணம்


Page 36
&肝癌,顺, *”就,慨,慨,T,慨,班。历,慨、马厂必米 谈历娜娜**必篇 劍 C5@%,班,慨历西遍翻&% 瓮创必,5)“俭,)盛,动,婚盛,山隧,哥永 燃)。邮。狮心。仰。”,《耶% 锐丽盆s哥§.颤翻#S#锡雅将 % km2 :*函,局} 炎娜娜迦秘娜娜炎 怒G净8@@,口, 匈,慨 G,跳。伍临G,匹炎 裂吻斑历费G研G霸% km2覆历历历所% *舒@口口%历守Gā炎 概&
穆 2 らいらいらいらいら ゆs s % % %*),7) **************************************
 
 

خه علاج عاجي علاجي علاج
�ଷ୍ଟି ଔଷି ୪ଟି ସ୍ପିଟ୍ଟି
عصفوي
மயிலும் துணை
ய்கைதனில் நிற்கு மொரு ழ் விழில் பறவையாம்;
கயலாம்; இதன்றி ஒர்
இங்குமாகப் பும் பறவை தானுக அப்,
T st
க்க அது, நீர்கொண்டு இழுக்க (து) அதிசயம் என னில் நிற்குமொரு பேழ்வாய் துகொண்டுபோய்
கீழ்வைக்கும் அதுகண்டு
னச் சிறைவிடுத்தவா பருளே !
ாய் உகந்த வடிவேலனே
பகழிக்கூத்தர்?
LLA A LAJ LiTA LLAJ ALAA S qiAA LLAJ SALALA LLLJ LLLLLLSAA ALAcS LGS 杀杀杀杀杀米米米米米杀杀崇