கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சனநாயக நிறுவனங்கள்

Page 1
酸
றிய ெ
நிக
巴 口|- 3 |38 E |- 历 丽 |:
பொதுசன க
 


Page 2

சனநாயக நிறுவனங்கள்
தமிழாக்கம் தை. தனராஜ்
uğÜumfluir எஸ். அன்ரனி நோபேட் புவியியல்துறை கொழும்புப் பல்கலைக்கழகம்
பொதுசனக் கல்வி நிகழ்ச்சித்திட்டம் மார்கா நிறுவகம் 1996

Page 3
SANANAYAKA NIRUWANANGAL
(Democratic Institutions)
Translated by : T. Thanaraj Edited by : S. Antony Norbert
First Published 1996
© Copy Right : Marga Institute
Type Setting: Unique Graphics,Wellawatte,Colombo - 6. Printing : Unie Arts (Pvt) Ltd., Colombo - 13.
Please address inquiries and orders to:
Newton Fernando Assoc. Director Communication / Publication Division
Marga Institute P.O.BOX 601 93/10, Dutugemunu Road, Colombo - 6, Sri Lanka.
N ADVISORY COMMITTEE Godfrey Gunatilleke Shelton Wanasinghe Newton Fernando S. Antony Norbert P.P.M. Gunatilleke Sarath Madduma اسے ܓܠܠ
This Series of Publication has the Financial Support of the Canadian International Development Agency (CIDA).

பொருளடக்கம்
முன்னுரை
சமஷ்டி என்றால் என்ன? 11
சமஷ்டித் தாயமும் வேறுபட்ட மாதிரிகளும் 12
பல்வேறு வகையான சமஷ்டி ஏற்பாடுகள் 16 (1) கூட்டமைப்புக்கள் 16 (ii) சமஷ்டி ஏற்பாடுகள் 22 (i) யூனியன்கள் 24 (iv) நட்புறவுப் பங்கீடுகள் 26 (V) கூட்டரசுகள் அமைப்பு 27 (vi) சமச்சீரற்ற சமஷ்டி ஏற்பாடுகள் 30 (vi) பேரவைகள் 34 (Vi) உள்ளூர் மற்றும், அரசு சார்பற்ற சமஷ்டிவாதம் 35 சமஷ்டி : ஒற்றுமையும் வேற்றுமையும் 38 கட்டமைப்பும் செயன்முறையும் என்றளவில் சமஷ்டி வாதம் 41 சமஷ்டி வாதத்தின் சமூக, ஆள்புலக், கலாசார வெளிப்பாடுகள் 42
(i) சமூகம் 42
(i) ஆள்-புலம் 45
(iii) s6oTFITTb 50
I
அதி நவின யுகம் சமஷ்டி யுகமா? 53
உதிரும் நிலையில் நவீன தேசிய-அரசு? 53 இனக் குழுக்களையும் பொதுமக்களையும் சமஷ்டி ரீதியாக இசைவுபடுத்தல் 60 மூன்றாம் உலக நாடுகளில் சமஷ்டி வாதம் 65 சமஷ்டி ஏன் தோல்வியடைந்தது? 67

Page 4
11.
12.
சமஷ்டிகள் ஏன் வெற்றியடைந்தன? 70 வேற்றுமைகளை இசைவுபடுத்தல் 73 சுதந்திரத்தை வலுப்படுத்தல் 75 பொருளாதார அபிவிருத்தியைப் பரப்புதல் 76 மூன்றாம் உலக நாடுகளில் சமஷ்டியின் எதிர்காலம் 77 நகரவாக்கமும் சமஷ்டியின் எதிர்காலமும் 78 புதிய அரசு முறையை நோக்கி 80 அதிநவீன யுகமும் சமஷ்டிவாதப் புரட்சியும் 82
III
ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் சனநாயகப் பன்முகப்படுத்தல் 87
அறிமுகம் 87 பன்முகப்படுத்தலை வரைவிலக்கணப்படுத்தல் 87 அது சிறப்பாகச் செயற்படும்போது 89 பன்முகப்படுத்தலின் சிறப்பான இயக்கத்துக்கு எதிரான தடைகள் 93 (1) முற்கூறிய முக்கிய நிபந்தனைகள் யாவை? 93 பன்முகப்படுத்தல் சிறப்புடன் செயற்பட உதவுதல் 98

முன்னுரை
சனநாயகத்தின் இயல்பும் கருத்தும் பற்றித் தொடர்ச்சியான ஐந்து நூல்களை வெளியிடுவதற்கான மார்கா நிறுவகத்தின் முயற்சியில் இவ் வெளியீடு ஐந்தாவதாகும். தகுதிவாய்ந்த படைப்புக்களைக் கொண்ட நூல்கள் அல்லது அவற்றிற் சில அத்தியாயங்களின் மொழிபெயர்ப்பைக் கொண்டதாக இத் தொடர்கள் அமைந்திருக்கின்றன. பிரசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சனநாயக சமூகத்தின் பிரதான அம்சங்களைக் கற் றுணர்ந்த ஆய்வுகளாக இக் கட்டுரைகள் விளங்குகின்றன. ஆரோக்கியமான சனநாயகம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை விரிவாகவும், அது நிலைத்து நிற்பதற்குத் தேவையான பெறுமானங்களைச் சுட்டிக் காட்டுவதாகவும் இக் கட்டுரைகள் உள்ளன. ஏனைய மனித நிறுவனங்கள் போன்று ஒரு சனநாயக முறைமையும் தன்னுள் குறைபாடுகளைக் கொண்டுள்ளதெனினும் இன்றும் இது ஒரு சிறந்த அரசாங்க அமைப்பாக உள்ளது என்பதில் பரந்தளவான உடன்பாடு காணப்படுகின்றது. இத்தொடரில் வெளிவந்த ஐந்து நூல்கள் சனநாயகம் ஏன் இந்த அதிஉயர்நிலையைக் கொண்டுள்ளதென்பதை விளக்கு கின்றதுடன் சனநாயக முறைமையின் சில சர்ச்சைக் குரிய பிரச்சினைகளையும் ஆராய்வதாக உள்ளது.
இன்று உலகின் பல பாகங்களிலும் செயற்பட்டு வரும் சனநாயக முறைமைகளானது ஒரே தன்மையுடையவை அல்ல. நிறைவேற்று விடயங்களிலும், அரசாங்கத்தின் செயற்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட சட்டவாக்கக் கருவிகளிலும் குறிப்பிடத்தக்க பல்வகைத் தன்மை காணப்படுகின்றது. பொதுவாக அவை அவற்றைப் பகிர்ந்து கொள்கின்றன என்பது அடிப்படையான தத்துவம் என்பதுடன் அதிலிருந்தே ஏனைய பொது அம்சங்களும் பெறப்படுகின்றது. மக்கள் தமது அரசாங்கத்தைத் தெரிவு செய்யத் தன்னாதிக்கமுடையவர்கள் என்பது தத்துவமாகும். இத் தொடரில் வெளியிடப்படும் ஐந்து நூல்களும் எல்லாச் சனநாயகங்களுக்கும் பொதுவான அத்தியாவசியமான கூறுகளை விளக்குகின்றதுடன் பல்வேறு சமூகங்களின் தேவைக்குப் பொருந்தும் வகையில் பல்வேறு அமைப்புக்களைப் பரீட்சிக்கவும் முற்படுகின்றது.
இத் தொகுதியின் முதலாவது வெளியீட்டில், ஒரு சுருக்கமான விளக்கம் தரப்படுகின்றது. சனநாயக செயற்பாடுகளின் வழிகளும், வெவ்வேறுபட்ட பகுதிகளின் சனநாயக முறைமையும் எவ்வாறு இடைத்தொடர்புகளைக் கொண்டுள்ளதென்பதையும், ஒன்றுக்கொன்று எவ்வாறு ஆதரவளிக் கின்றது என்பதையும் இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகள் மற்றும் சில வேறுபாடு கொண்ட மனிதப் பெறுமானங் களையுடைய ஏனைய அம்சங்கள் தொடர்பாக எல்லாச் சனநாயகச்

Page 5
செயற்பாடுகளும், அமைப்பும் (ஒழுங்கான முறையில் அரசாங்கங்களைத் தெரிவு செய்தலும், பெரும்பான்மையோர் ஆட்சியையும் கொண்ட) எவ்வாறு காணப்படுகின்றதென்பதை இது விளக்குகின்றது. இத்தகைய அகப் பெறுமானங்களும், உரிமைகளும் பிரிக்க முடியாத சாரமாகவும், சனநாயகத்தின் மையமாகவும் விளங்குகின்றது. இவையில்லாமல் உண்மையான சனநாயகம் இருக்க முடியாது. இலங்கையில் கடந்த இருபது வருட அனுபவமானது தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் அல்லது சனநாயக ஆர்வமானது உண்மையான சனநாயக சமுதாயத்தை நிலை நிறுத்துவதற்குப் போதியதாக இருக்கவில்லை என்பதை வெளிக் காட்டுகின்றது. சக்திவாய்ந்த பெரும்பான்மை ஒன்று சனநாயகரீதியில் தெரிவு செய்யப்பட்டாலும், சனநாயக ரீதியான எதிர்க்கட்சியை அழிப்பதற்கும், ஒடுக்குவதற்கும் சனநாயக ரீதியற்ற வழிகளைப் பயன்படுத்த முற்பட்டது. இவ் அணுகுமுறையானது எதிர்கட்சியாக இருப்பதற்கு அதன் உரிமையை மறுப்பதாக உள்ளது.
ஒரு எதிர்க்கட்சி எப்பொழுது நாட்டின் பெரும்பகுதி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கின்றது. மறுவகையில் எதிர்க்கட்சி மக்களின் முடிவை ஏற்றுக்கொள்ளவும் , சனநாயக முறைமையின் சட்டத்துக்குள் இயங்கவும் தயாராக இல்லை. கிடைக்கக்கூடிய எல்லாச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி, நாட்டுக்கு ஒரு நிலையான ஆட்சியைக் கொடுக்கத் தெரிவு செய்யப்பட்ட கட்சிக்குப் பிரச்சினையை ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றது. இத்தகைய பலவீனங்களிற் சில ஒரு சனநாயக முறைமையின் உள்ளார்ந்த குறைபாடாகும். ஆனால் இலங்கையில் சனநாயக முறைமையின் பயனுறுதிவாய்ந்த செயற்பாட்டைத் திரிபு படுத்தும் வகையில் முனைப்பானவையாகவும் அவை விளங்குகின்றன.
பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுபவர்கள் சலுகைகள், அனுகூலங்களைத் தமக்குரியதாக ஆக்கிக் கொள்கின்றனர். அதிக பெரும்பான்மையுடன் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் வழங்கப்பட்ட அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்பவர்களாகவும் தன்னிச்சையாக நடந்து கொள்பவர்களாகவும் காணப்படுகின்றனர். சனநாயகத்தில் பெரும்பான்மையினரின் ஆட்சி என்னும் கருத்தியலானது எப்பொழுதும் சிறுபான்மையினரின் உரிமைகளை மறுக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரச்சினைகளில் எல்லாச் சனநாயக முறைமைகளும் தொடர்ச்சியான போராட்டத்தைக் கொண்டிருப்பதுடன் தவறுகளைத் திருத்துவதற்கு வழிகளைத் தேடுவனவாகவும் உள்ளன. அவைகள் நிறுவனங்களையும் அமைப்புகளையும் ஸ்தாபிக்கவும், வடிவமைக்கவும் முயலுவதுடன் அவற்றின் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் மிகவும் பயன்படக்கூடிய முறையில், அவர்களை அதிகாரத்துக்குத் தெரிவு செய்த மக்களுக்குப் பதில் சொல்லக் கூடியதாகவும் மாறுகின்றது. மார்கா நிறுவனத்தின் இவ் வெளியீட்டில் இத்தகைய முக்கிய விடயங்களும்,

பிரச்சினைகளும் ஆராயப்படுகின்றதுடன் அவை எவ்வாறு சனநாயக முறைமைகளுடன் தொடர்புபடுகின்றதென்பதையும் உசாவுகின்றது. அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பும் உறுதியும் சனநாயக முறைமையின் அடிப்படையாக இன்று தோற்றம் பெற்று வருகின்றது.
இரண்டாவது வெளியீடு சனநாயக முறைமையின் கீழ் விருத்திபெற்ற பல்வேறு அரசாங்க அமைப்புக்களை ஆராய்கின்றது. சனாதிபதி மற்றும் பாராளுமன்ற முறைமை ஆகிய இரு முக்கிய வடிவங்களில் ஐக்கிய அமெரிக்கா முன்னையதற்கும், ஐக்கிய இராச்சியம் பின்னையதற்கும் சிறந்த எடுத்துக்காட்டாகத் தரப்படுகின்றது. தேர்தல் முறைமையில் காணப்படும் வித்தியாசமான வேறுபாடுகளை ஆராய்ந்து, இப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கொடுக்க அவை எவ்வாறு முனைகின்றன என்பதையும் ஆராய்கின்றது. தேர்தற் செய்முறைகள் வேறுபாடு கொண்டவை. அவை நன்மைகளையும், தீமைகளையும் கொண்டிருக் கின்றன. உதாரணமாக இத்தாலி விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையைக் கொண்டுள்ளது. பதியப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஐக்கிய இராச்சியத்தில் தற்போது காணப்படும் பிரதேச ரீதியான தேர்தல் தொகுதி முறைகளும் சர்ச்சைக்குரிய தொன்றாகவே உள்ளன. தேசிய அடிப்படையில் பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, விகிதாசாரமின்றிக் குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆசனங்கள் வெற்றிபெறும் கட்சிக்குக் கொடுக்கப்படுகின்றது. இலங்கை இத்தகைய பிரச்சினையை விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு கொண்டிருந்தது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும், இது வாக்காளனுக்கும், அவனது பிரதிநிதிக்கும் இடையில் காணப்படுகின்ற தொடர்பைத் தடைசெய்கின்றது என்ற காரணத்தினால் குறை கூறப்பட்டு வருகின்றது. இத் தொடர்பானது தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர் தெளிவாக அடையாளம் செய்யப்பட்ட தொகுதி ஒன்றில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும்போது மிகவும் இறுக்கமாக இருக்கும். ஜேர்மனியில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையும், தொகுதிப் பிரதிநிதித்துவமும் இணைந்த வகையிலான இரு முறைகளின் கலப்பைக்கொண்ட முறை காணப்படுகின்றது. அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்காக வாதாடுபவர்கள் இம்மாதிரியை இலங்கைக்குப் பொருத்தமுடையதாகக் கூறுகின்றனர்.
மூன்றாவது வெளியீடான சனநாயகச் சிந்தனைகள் என்ற நூல் தெரிந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைக் கொண்டிருப்பதுடன் அது கிரேக்க நகர அரசிலிருந்து நவீன காலம் வரையுள்ள பிரபல்யமான மெய்யியலாளர்களினதும் அரசியல் சிந்தனையாளர்களினதும் எழுத்துக்களில் பிரதிபலிக்கப்பட்ட சனநாயக கருத்துருவத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய தேடலாகவும் அமைகின்றது.

Page 6
நாலாவதாக வெளிவந்த “பல்லினச் சமூகத்தில் சனநாயகம்” என்னும் நூலானது இலங்கையின் சனநாயகத்துக்கு முக்கியமான பல்லின, பண்பாட்டுச் சமுதாயங்களில் நிலையான செயற்பாட்டைக் கொண்டிருப்பதற்கான சனநாயக முறைமைக்கு அவசியமான பெரும்பான்மை ஆட்சியினரின் பிரச்சினை, நிறுவன மற்றும் பொறிமுறை தொடர்பான விடயங்களை எடுத்துரைக்கின்றது. உள்ளூர்ச் சமூகத்தின் பங்கு, பிரசைகள், நிறுவனங்கள் கொண்டிருக்கக் கூடிய பங்காற்றில் பற்றிய கட்டுரைகளை இது உள்ளடக்கியுள்ளது. பிரசைகளின் சனநாயகப் பங்களிப்பானது அவர்களது வாக்குகளை அளிக்கும் உரிமையுடன் மாத்திரம் இணைந்திருக்கவில்லை. ஆட்சி முறைமை, தேசியக் கொள்கை தொடர்பான முக்கிய விடயங்களில் நிலையான பொதுக் கலந்துரையாடல்கள் அவசியம். தேசியக் கொள்கைகளினை வடிவ மைப்பது தொடர்பான பொதுவிடங்களைக் கொண்ட கலந்துரையாடலில் அரசு சார்பற்ற நிறுவனங்களின் கூட்டுப் பங்களிப்பு அவசியமானது. எனவே சனநாயகச் செயற்பாட்டைப் பாதுகாத்தலும், விருத்திசெய்தலும் என்பது பிரசைகள், அரசியல் கட்சிகள், அரசு என்பதன் கூட்டான கடமையாகும்.
சனநாயகம் பற்றிய நூல்களின் வெளியீட்டுத் தொடரில் “சனநாயக நிறுவனங்கள்” பற்றிய இந்நூல் இறுதி வெளியீடாகும். சமஷ்டி என்றால் என்ன, மூன்றாம் உலக நாடுகளில் சமஷ்டி வாதம் எத்தகைய நிலையில் காணப்படுகின்றது என்பது பற்றிய சில விளக்கங்களை இந்நூல் முன்வைக்கின்றது. அத்துடன் ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும் சனநாயகப் பன்முகப்படுத்தலுக்கு எதிரான தடைகள் எவை என்பதையும் இந்நூலில் உள்ள இறுதிக் கட்டுரை விளக்குகின்றது.இந்நாட்டின் உண்மையான சனநாயக நிறுவனங்களைப் பேணுவதற்கும் கட்டியெழுப்பவும் தேவையான பிரதான முயற்சிகளைப் பொதுமக்கள் விளங்கிக் கொள்வதற்கு இவை தொடர்பான வெளியீடுகள் பெரிதும் உதவும் என மார்கா நிறுவகம் உறுதியாக நம்புகின்றது.
கொட்பிரே குணதிலக
மார்கா நிறுவகம்.

சனநாயக நிறுவனங்கள்
சமவடிடி என்றால் என்ன?
I அதி நவீனயுகம் சமவடிடி யுகமா?
III ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும்
சனநாயகப் பன்முகப்படுத்தல்
தமிழாக்கம் தை. தனராஜ்
செயற்றிட்ட அதிகாரி
கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித்துறை தேசியக் கல்வி நிறுவகம், மகரகம
பொதுசனக் கல்வி நிகழ்ச்சித்திட்டம் மார்கா நிறுவகம்

Page 7

சமஷடி என்றால் என்ன?
பொது நோக்கங்களுக்காக, ஒன்றிணைந்தும் அதே நேரத்தில் தமது ஒன்றிணைந்த தன்மையைப் பாதுகாப்பதற்கு வேறுபட்டும் இருப்பதற்காக மக்களினதும் குழுக்களினதும் தேவையை நிறைவு செய்ய அமைந்ததே சமஷ்டியாகும். இது கூழுக்கும் மீசைக்கும் ஒருங்கே ஆசைப்படுவதற்கு ஒத்ததாகும். அது பொதுவாக மனித இயல்பாக இருக்கின்ற காரணத்தினால் இத் தீர்க்க முடியாத பிரச்சினையைத் தீர்ப்பதில் அது அரசியல் விவாதங்களின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் சமஷ்டி இவ்விடயத்தில் மிகவும் பயனுள்ள ஒரு சாதனமாகும். இதன் விளைவாக மனித வரலாற்றில் சமஷ்டி எண்ணங்களும் ஏற்பாடுகளும் இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் பிரதான சாதனங்களாக அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அவ்வாறான ஒரு கால கட்டத்திலேயே இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சமஷ்டிக் கோட்பாடுகளானது சுதந்திரமான மக்கள் தமது அடையாளங்களைப் பாதுகாத்துக் கொண்டு பொது இலக்குகளை அடைவதற்காக நிலையான ஆனால் வரையறுக்கப்பட்ட அரசியற் கூட்டுக்களைச் சுதந்திரமாக ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்ற அடிப்படையிலேயே தோன்றி வளர்ந்தன. “சமஷ்டி” என்னும் வார்த்தை இரட்டைத்தன்மை கொண்டது. சமஷ்டி என்பது ஒரே நேரத்தில் சுதந்திரத்தின் பெயரால் அரசியலதிகாரத்தின் பரவலாக்கத்தையும், ஓரினத்தன்மையின் பெயரால் அல்லது வலிமையான அரசாங்கத்தின் பெயரால் அரசியல் அதிகாரம் ஓரிடத்தில் குவிவதையும் கொண்டுள்ளது. சமஷ்டிக் கருத்து உண்மையில் அரசியல் மற்றும் சமூக நிறுவனங்களும் உறவுகளும் ஒப்பந்தங்கள் கூட்டிணைவுகள் முதலான பரஸ்பர ஏற்பாடுகள் மூலம் ஸ்தாபிக்க முடியும் என்ற கோட்பாட்டிலேயே பெரிதும் தங்கியுள்ளது.
1

Page 8
1. சமஷ்டி தாயமும் வேறுபட்ட மாதிரிகளும்
சமஷ்டி என்பது ஒரு குறிப்பிட்ட யாப்பு முறைச் சட்டகத்தை (Constitutional Framework) அடிப்படையாகக் கொண்டுள்ளது. அத்தகைய சட்டகம் மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்குமிடையில் அதிகாரப்பிரிவில் தெளிவாகக் காணக் கூடியதாக இருக்கும். இவை மாநிலங்களாகவோ (ஆஜென்டீனா, அவுஸ்திரேலியா, பிறேசில், இந்தியா, மலேஷியா, மெக்சிக்கோ, நைஜீரியா, வெனிசூலா, ஐக்கிய அமெரிக்கா முதலிய நாடுகளைப் போல), மாகாணங்களாவோ (கனடா), லண்டர்களாகவோ (Lander) (ஒஸ்திரியா, மேற்கு ஜேர்மனி), கன் ரன்களாகவோ (சுவிற்சலாந்து) அல்லது குடியரசாகவோ (யூகோஸ்லாவியா, சோவியத் ரஷ்யா) இருக்கலாம். யாப்புமுறைச் சட்டகமானது இந்த அதிகாரப் பிரிவிற்கும் அப்பாற்பட்டதாகும். சமஷ்டி அரசியலானது அடிப்படையில் மத்தியப்படுத்தலிலிருந்து மாறுபட்டது. அதாவது அரசாங்க அதிகாரங்கள் பல மையங்களுக்கு பன்முகப்படுத்தப்பட்டிருக்கும். இம்மையங்கள் பொது அரசியல் அமைப்பினால் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும்.
சமஷ்டி, சனநாயகத்தின் மிக முக்கிய பண்புகளில் ஒன்று. அதிகாரங்களைச் சட்டரீதியான அரசியல் யாப்பினால் உறுதி செய்யப்பட்ட பல்வேறு மையங்களுக்குப் பன்முகப்படுத்துகின்றது. சமஷ்டி அமைப்புகளை விவரிப்பதற்குப் பன்முகப்படுத்தல் (Decentralization) என்னும் வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இது தவறான சொற் பிரயோகமாகும். உண்மையில் பன்முகப்படுத்தல் என்பதும் அதிகாரத்தை மத்திய மயப்படுத்தாமை என்பதும் ஒன்றல்ல. பன்முகப்படுத்தல் என்பது ஒரு மத்திய அதிகாரம் (Central authority) இருப்பதையும் அதிகாரத்தைப் பன்முகப்படுத்தக் கூடிய ஒரு மத்திய அரசாங்கம் (Central government) இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது. பன்முகப்படுத்தப்பட்ட முறைமைகளில் அதிகாரப் பரவலாக்கமென்பது ஒரு பெருந்தன்மைச் சார்புடைய விடயமே தவிர உரிமை சார்ந்த விடயமாகாது.
ஆனால் அதிகாரம் மத்தியப்படுத்தப்படாத ஒர் அரசியல் முறைமையில் அதிகாரமானது உண்மையாகவே பரவிக் காணப்படுகிறது. அவற்றைச் சட்டரீதியாக மத்திய மயப்படுத்த முடியாது. அவ்வாறு செய்ய வேண்டுமெனின் அது அரசியலமைப்பின் அடித்தளத்தையே சிதைப்பதாக அமையும். ஐக்கிய அமெரிக்கா, சுவிற்சலாந்து, கனடா ஆகிய சமஷ்டி அமைப்புகளில் இத்தகைய மத்தியமயப்படுத்தப்படாத தன்மை காணப்படுகிறது. இங்கு ஒரு பொதுவான அல்லது தேசிய அரசாங்கம் பல் நோக்கங்களுக்காக வலிமையுடன் இயங்குகிறது. சகல அரசியல் தொடர்பாடல் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளல் ஆகியவற்றின் சகல அம்சங்களையும் கட்டுப்படுத்தும் ஒரு மத்திய அரசாங்கம் இங்கு இல்லை. அத்துடன் மாநிலங்கள் அல்லது மாகாணங்கள் அல்லாத கன்ரன்கள்
12

Ꮷ- LᏝ6ᏂᏐᎥᎸ- அரசாங்கத்தின் படைப்புகள் அல்ல. மாறாக அவை சமஷ்டி அரசாங்கத்தைப் போலவே தமது அதிகாரங்களை மக்களிடமிருந்து நேரடியாகப் பெறுகின்றன. அமைப்புரீதியாகப் பார்க்கும் பொழுது சமஷ்டி அரசாங்கம் இவற்றில் தலையிட முடியாது. செயற்பாட்டுரீதியாக நோக்கும் பொழுது இவை தமது தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரங்களைக் கைவிடாது சமஷ்டி அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுகின்றன.
பன்முகப்படுத்தலென்பது ஒரு படிநிலைக் கட்டமைப்பைக் காட்டி நிற்கிறது. அதாவது வரைபடம் 1 இல் காட்டப்படுவதைப் போல அதிகாரப் படிமுறை மேலிருந்து கீழ் வருகின்ற தன்மைகொண்ட அரசாங்கங்களின் கூம்பு வடிவமாகும். இதனையே வரைபடம் 2 காட்டுகின்ற விளிம்புகளைக் (Periphery) கொண்டமையும் எனவும் கூறலாம். இப் படிமுறை அமைப்பானது இன்று அரசாங்க முறைகள் பற்றிய விவாதங்களில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது. வர்த்தக உலகத்திலும் இராணுவத்திலும் இவ்வாறான முறையே காணப்படுகிறது. மைய-விளிம்பு மாதிரியானது அரசியல் சமூகவியலாளர்களினால் பெரிதும் விதந்துரைக்கப்படுகிறது. மக்ஸ் வெபர் (Max Weber) மற்றும் வுட்றோ வில்சன் (Woodrow Wilson) ஆகியோரது கருத்துக்களின் அடிப்படையில் படிநிலை அல்லது மைய - விளிம்பு ஏற்பாடுகளானது தற்கால அரசியலறிஞர்களினால் மிகவும் ‘இயற்கை (Natural) யானதாகக் கருதப்படுகிறது. இதில் அதிகார மையம் அதிகாரத்துவத்திடமா (Weber) அல்லது பாராளுமன்றத்திடமா (Wilson) உள்ளது என்பதில் மட்டுமே வேறுபாடு உள்ளது. இது சமஷ்டி அமைப்பின் எண்ணக் கருவாக்கத்தைத் தவறாக வழி நடத்துவது மட்டுமல்ல சனநாயக அரசாங்க அமைப்புக்கும் பொருத்தமற்ற அடிப்படையாகும்.
அதிகாரத்தைக் குவித்து வைக்காத (Non-Centralization) தாயத்தில் பல அரசாங்கங்கள் ஒருவரிசை நிலையில் இல்லாமல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. (வரைபடம் 3). உதாரணமாக ஐக்கிய அம்ெரிக்காவில் வெளி விவகாரம், தேசியப் பாதுகாப்பு முதலிய விடயங்களில் மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கங்கள் பெருந்தெருக்கள் உயர்கல்வி, பொதுச்சுகாதாரம் முதலியவற்றிலும் உள்ளுராட்சிகள், ஆரம்ப, இடைநிலை கல்வி, வீடமைப்பு முதலியவற்றிலும் முதன்மை பெறுகின்றன. நிதி வழங்கும் மூலங்கள் குறிப்பான செயற்பாடுகளின் அடிப்படையில் அரசாங்கங்களின் வரிசைப்படுத்தலைப் பாதிக்கலாம், ஆனால் வரிசை நிலையை மாற்ற முடியாது.
இப்படியொரு தாயத்தில் உயர்ந்த அல்லது தாழ்ந்த அதிகார மையங்கள் என இல்லை. அரசியற் தீர்மானம் மேற்கொள்வதில் பெரிய அல்லது சிறிய பரப்புகளே காணப்படுகின்றன. சமஷ்டி முறையை விபரிப்பதில் இது வெபர் அல்லது வில்சனுடைய விளக்கங்களை விடச் சிறந்தது எனலாம்.
13

Page 9
வரைபடம் 1: அதிகாரக் கூம்பு வடிவம் (The Power Pyramid)
உள்ளூர்
அரசாங்கங்கள்
வரைபடம் 2: மைய - விளிம்பு மாதிரி (The Centre - Periphery Model)
 
 

660)Julio 3: 5stuu Longólf (Matrix Model)
சமஷ்டி அரசாங்கம்
நீதி
ཅ།། 5 ككحججنوب ༽།། உள்ளூராட்சி
tos stiess வே དེ།།
~ക
I
க்
D.
த் கன்ரன்கள் |-1 த்
AO Sl ހޯރ
குடியரசுகள
றை N ހަރ ഞp
நிர்வாக முறைமை
கூம்புவடிவ மாதிரியில் தேசிய அதிகாரப்பகிர்வு என்பதில் 'உயர்வு’, "தாழ்வு' என்னும் நிலை தோன்றுகிறது. ஆனால் மேற்படிதாய மாதிரியில் அதிகாரப் பகிர்வு என்பது பல்வேறு நோக்கங்களுக்காகப் பல்வேறு இடங்களில் ஏற்றி வைப்பதாக அமைகிறது.
தீர்மானம் மேற்கொள்ளும் மையங்கள் தாய முறையில் முறைசார் மற்றும் முறையில் தொடர்பாடல் மூலம் ஒன்றையொன்று ஊடறுத்து இணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய அமைப்பின் அடிப்படைச் சட்டத்தை அரசியல் யாப்பு முறைசார், மற்றும் முறை சாரா நிறுவனங்கள் மூலமாக வழங்குகிறது. முழு அமைப்பிலும் தொடர்பாடல் வழிகளே "நரம்பு"களாகத் தொழிற்படுகின்றன.
இத்தகைய அரசியல் யாப்பு, சட்ட அமைப்புகளின் தாக்கங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. சமஷ்டிவாதத்தின் மிகப் பெரிய பலம் அதன் நெகிழ்ச்சித் தன்மையும் மாற்றியமைக்கக் கூடிய தன்மையுமே ஆகும். ஆனால் அதேநேரத்தில் அதே பலம் சமஷ்டி வாதத்தை ஒரு கோட்பாட்டு அடிப்படையில் விவாதிக்கத் தடையாகவும் உள்ளது.
15

Page 10
உண்மையில் சமஷ்டி நெகிழ்ச்சித்தன்மையுடையது என்ற வாதம் சமஷ்டிவாதத்தின் மரபுரீதியான கருத்துக்களுக்கு எதிராக அமைந்து சமஷ்டி வாதத்தில் மிக இறுக்கமான அதிகாரப் பிரிவு உள்ளதாகக் காட்டுகிறது. சில சமஷ்டி அமைப்புகள் நெகிழ்ச்சித்தன்மையற்றிருந்த போதிலும் பொதுவாக சமஷ்டி பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விதமாக நடைமுறையில் உள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்கள் சிலவற்றில் காணப்படுகின்ற நெகிழ்ச்சித்தன்மையானது ஒரு சமஷ்டிக் கோட்பாட்டை உருவாக்குவதைச் சிக்கலாக்கியும் விடுகிறது. நெகிழ்ச்சித்தன்மையானது தெளிவற்ற தன்மைக்கு வழிவகுக்கிறது. எனினும், இதனால் கோட்பாட்டு ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டபோதும் நடைமுறை நன்மைகள் பல உள்ளன.
சமஷ்டியுடன் தொடர்பான கோட்பாட்டு ரீதியான மற்றும் செயல்முறை எண்ணக் கருவில் ஆறு அடிப்படையான தெளிவற்ற தன்மைகள் காணப்படுகின்றன.
(1) பல்வேறு அரசியல் ஏற்பாடுகளுக்கு சமஷ்டி என்னும் பதம்
பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. (2) சமஷ்டியானது ஒரேநேரத்தில் ஒற்றுமையையும், வேற்றுமையையும்
பேணிப் பாதுகாக்க முயல்கிறது. (3) அரசாங்க அம்சமாகவும், சமூக, பொருளாதார அம்சமாகவும்
ஒரேநேரத்தில் அமைந்துள்ளது. (5) முடிவையும் அதற்கான வழிமுறைகளையும் கவனத்திற்
கொள்கிறது. (6) வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்காகவும் அதே நேரத்தில் முழுமையான நோக்கங்களுக்காவும் சமஷ்டி பின்பற்றப்படுகிறது.
2. பல்வேறு வகையான சமஷ்டி ஏற்பாடுகள்
(i) as L6OnLDLssassit (Federations)
சமஷ்டி என்பது பொதுவாக அதன் நவீன பரிமாணத்திலேயே அதாவது 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு 1787 இல் வரையப்பட்ட அமெரிக்க சமஷ்டி அமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள சமஷ்டி அமைப்பின் அடிப்படையிலேயே நோக்கப்படுகிறது. அமெரிக்க மாதிரியிலான சமஷ்டிக்கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய தேவை நவீன தேசிய அரசு (Nation - State) என்னும் பிரச்சினை காரணமாகவே தோன்றியது. மிகையான இறைமையும் அதன் அடித்தளமாக மத்திய மயப்படுத்தப்பட்ட அதிகாரமும் அரசியல் அதிகாரப் பகிர்வுக்கும்
16

வேற்றுமையை ஏற்கும் தன்மைக்கும் கோட்பாட்டு ரீதியாக எதிராகவே இருந்தன. “தேசம்’ (Nation) ‘தேசிய அரசு' (Nation-State) ஆகிய இரு பதங்களும் மரபு ரீதியாக ஏற்கப்பட்ட பொருளிலேயே இங்கு பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் பயன்பாட்டில் சில பிரச்சினைகள் இருந்த போதும் அவை கவனத்திற் கொள்ளப்படவில்லை. நவீன தேசியஅரசுகள் இரு வகைப்படும்.
(1) ஏற்கெனவே இருந்த தேசங்களுக்கு அரசியல் அடையாளத்தை
வழங்கியதால் ஏற்பட்டவை.
(2) அரசியல் அடையாளத்தைப் பெற்றுக் கொண்டதற்கு இணையாக தேசிய அயைாள உணர்வை வளர்த்துக் கொண்டவை-அதாவது அரசின் எல்லைக்குள் வாழ்கின்ற அனைவரையும் தனிநபர்கள் என்றவாறு ஒரு பொதுவான குடியுரிமையைப் பெறச் செய்தவை.
இதற்கு முதலாவது வகைக்கு ஜேர்மனியும் , அடுத்ததற்குப் பிரித்தானியாவும் சிறந்த உதாரணங்களாகும். ஜேர்மனியர்கள் தமக்கு ஒரு தனியான ஜேர்மனிய அரசினை நிறுவிக் கொள்வதற்கு முன்னரே தம்மை ஒரு தேசமாகக் கருதிக்கொண்டவர்கள். தமது தேசிய ஒற்றுமையைச் சிறப்பாக வெளிக்காட்டுவதற்காக அவர்கள் அரசியல் ஒற்றுமையை நாடினார்கள். ஆனால் பிரித்தானியா அதன் மக்கள் பொதுவான பிரிட்டிஷ் அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முன்னரே அரசியல் ஒன்றிணைப்பைப் பெற்றுக் கொண்டது. பிரித்தானிய ஆட்சியாளர்கள் ஒன்றிணைப்பைப் பயன்படுத்தி பொதுத் தேசிய அடையாளத்தை வளர்த்தனர்.
ஒவ்வொரு தேசிய அரசும் ஏதாவதொரு வழியில் தனது சனத்தொகையின் சிலபகுதிகளைப் பிரசைகளாக்கும் பொருட்டு அரசியல் நுட்பங்களைக் கையாளவேண்டியிருந்தது. தனிப்பட்ட குழுக்களின் செல்வாக்கை ஒழித்துச் சகலரையும் பொதுக் குடிமைக் கோட்பாட்டில் (Common Citizenship principle) இணைக்கும் நுட்பத்தையே அவர்கள் கையாண்டிருந்தனர். எனவே தேசிய அரசு என்பது ஒரே நேரத்தில் 'குடிகள் அரசாகவும் (Citizen- State) அமைந்தது. நவீன சமஷ்டிவாதத்தைப் புரிந்து கொள்வதற்கு இந்த விளக்கம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இன்று சமஷ்டியானது ஓர் அரசுக்குள் பொதுக் குடிமை உணர்வினை (Common citizenship) வளர்க்கும் ஒரு சாதனமாகப் பயன்படுத்தப்படுகிறது.
நவீன தேசிய அரசுகள் பிரதிநிதித்துவ அரசாங்கத்துக்கான உறுதி மொழிகளை வழங்கிய போதிலும் அதனை நிறைவேற்றுவதற்கான சில அடிப்படை நிபந்தனைகளை அவை கருத்திற் கொள்ளவில்லை. மறுதலையாக சமஷ்டிவாதம் ஒரு புதுவகையான அதிகார மத்திய மயப்படுத்தலுக்கு வழி வகுத்து புதிதாகச் சுதந்திரம் பெற்ற ம்க்களின் சுதந்திரத்தை மறுத்தது.
17

Page 11
நவீன தேசிய அரசுகள் தமது எல்லைகள், அரசாங்கம் மற்றும் மக்கள் ஆகிய மூன்று கூறுகளும் ஒன்றிணைக்கப்பட்டு முழுமையாக உள்ள காரணத்தினால் ஒன்றுபட்ட ஒரே மக்கள் கூட்டத்தையும் ஒரே ஒரு பொது மையத்தையும் கொண்டிருப்பதாக வாதிட்டன. நவீன சமஷ்டிவாதமும் இக் கருத்தினைப் பிரதிபலிக்கிறது. சமஷ்டியானது சமூகங்களுக் கிடையேயுள்ள வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு அவைகளுக்கிடையே ஒற்றுமையை வளர்க்க முயல்கிறது. அத்துடன் ஏற்கெனவே தனித்தனியாக உள்ள சமூகங்களை ஒன்றாக இணைத்து அதிகாரங்களை ஓரிடத்தில் குவித்து வைப்பதையும் தடுக்கிறது. சமஷ்டிக் கோட்பாட்டை நவீன அரசுடன் இணைக்கும் முயற்சியில் 1787ஆம் ஆண்டு அமெரிக்க யாப்பினை வரைந்தோர் ‘சமஷ்டி’ (Federal) என்னும் பதம் கூட்டரசுகளின் அமைப்பைக் (Confederation) குறிக்கும் வகையில் மிக நுணுக்கமான திறனுடன் செயற்பட்டனர். கூட்டரசுகளின் அமைப்பு என்பது சமூகங்கள் ஒப்பீட்டு வகையில் தமது இறைமையைத் தற்காத்துக் கொண்டு அதே நேரத்தில் ஒரு தளர்வான கூட்டமைப்பைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. அமெரிக்க 'சமஷ்டி' முறை இத்தன்மையையே காட்டிநிற்கிறது.
இம் மாற்றத்தின் முழுப்பரிமாணத்தையும் சமஷ்டி வாதத்தின் விமர்சகர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நவீன சமஷ்டி வாதத்தில் பல அரசுகள் ஒன்றிணைந்து ஒரு பெரிய அரசாக மாறும் போது அங்கு இறைமை எங்கு தங்கி நிற்கிறது என்பது முதன்மையான ஒரு கேள்வியாக நிற்கிறது. நவீன தேசிய அரசு என்பது கைமாற்ற முடியாத இறைமையைக் கொண்டிருக்கிறது எனக் கொண்டால் இங்குள்ள பிரச்சினை ஒரே நிலப்பரப்பின் (Territory) எல்லைக்குள் இரண்டு "இறைமைகள்" (Sovereigns) எவ்வாறு இருக்க முடியும் என்பதே!
உண்மையில், அமெரிக்க சமஷ்டித் தீர்வின் உண்மையான அர்த்தமானது, தனித்துவமானஅரச இறைமை என்னும் பிரச்சினையைத் தவிர்ப்பதற்கு ஒரு வழியைக் காண்பதாகும். இதனையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால் சமூகத்தை இன்னும் சிறந்த சனநாயக அடிப்படையில் ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு நவீன மாற்றுவழியைத் தருவதாகும். இறைமையுள்ள அரசு என்பதன் 16ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய வரைவிலக்கணத்தை ஏற்றுக் கொள்ளாது இறைமை என்பது மக்களிடம் உள்ளது என அமெரிக்கர்கள் ஏற்றுக் கொண்டனர். சமஷ்டி மாநில, உள்ளூராட்சி முதலிய அரசாங்கத்தின் பல்வேறு அலகுகள் தமக்கு அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரங்களையே பிரயோகிக்க முடியும். எனவே இறைமையுள்ள மக்கள் மத்திய அரசாங்கத்துக்கு அல்லது மாநில அரசாங்கங்களுக்கு அதிகாரங்களை வழங்க முடியும். இவ்வாறு வழங்கும் போது எந்த அலகு இறைமையைக் கொண்டிருக்கிறது என்ற பிரச்சினைக்கு இடமில்லை. வெவ்வேறு அரசாங்கங்கள் வித்தியாசமான பருமனைக் கொண்ட பரப்புகளுக்குச் சேவையாற்றவென வடிவமைக்கப்படுகின்றன.
18

இங்கு பருமன் முக்கியமில்லாத காரணத்தால் அதிகாரங்களைப் பொறுத்தவரை இந்த வெவ்வேறு அரசாங்கங்களுக்கிடையில் சமத்துவம் பேணப்படுகிறது.
சமஷ்டி பற்றிய இந்த வரைவிலக்கண மாற்றம் எவ்வாறு ஏற்பட்டதென்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். ஓர் உறுதியான கூட்டிணைந்த அரசாங்கத்தை உருவாக்குவதன் மூலம் அரசியல் உறுதிப்பாட்டையும் ஒன்றிணைப்பையும் பேண முடியும். ஆனால் இறைமையை அரசிடமிருந்து அகற்றி மக்களிடம் பொறுப்பளிப்பதன் மூலம் அதிகாரத்தைப் பகிர்வு செய்ய முடியும். அத்துடன் அரசாங்க அதிகாரத்தில் வரையறைகளையும் செய்ய முடியும். இம்மாற்றங் களிலிருந்தே இன்று நாம் கூறுகின்ற நவீன சமஷ்டி வாதம் (Modern Federalism) விருத்தியடைந்தது.
உலகின் பல்வேறு சமஷ்டி அமைப்புகள் அமெரிக்க மாதிரியிலிருந்து பல அம்சங்களைத் தம்முடன் இணைத்துக்கொண்டன. சில நாடுகள் அமெரிக்க சமஷ்டிக் கட்டமைப்பைப் பின்பற்றின. ஆனால் நோக்கத்தை அடைவதில் வெற்றி பெறவில்லை. வேறு சில நாடுகள் கட்டமைப்பு, நோக்கம் ஆகிய இரு அம்சங்களிலிருந்து சில அம்சங்களைப் பெற்று தமது சொந்த மாதிரியை உருவாக்கிக் கொண்டன. நவீன சமஷ்டி அமைப்பில் மூன்று பிரதான மாதிரிகள் காணப்படுகின்றன. அவை: (1) அமெரிக்க முறைமை (2) சுவிஸ் முறைமை (3) கனடிய முறைமை.
சுதேசிய இனம் மற்றும் மொழிவாரி வேறுபாடுகள் நிரந்தரமானவை என்பதை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில், தனது கூட்டாட்சி மாதிரியை அமைத்த முதலாவது நாடு சுவிற்சலாந்து ஆகும். கனடிய முறைமையானது பல்லினக் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டது மாத்திரமன்றி ஒரு சமஷ்டி அமைப்பில் "வெஸ்ட்மினிஸ்டர்" மாதிரியிலான பாராளுமன்றத்தையும் இணைக்க முடியும் எனக் காட்டிய முதலாவது மாதிரியாகும்.
இன்று சமஷ்டியானது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இன்று உலக சனத்தொகையின் 40 வீதத்தைக் கொண்டுள்ள 19 சுதந்திர நாடுகள் சமஷ்டி அமைப்பை ஏற்றுள்ளன. அட்டவணை 1 இல் இந்த சமஷ்டி அரசுகளின் 304 கூறுகள் அல்லது இணைந்த நாடுகள் மற்றும் ஏனைய வேறுபட்ட தன்னாட்சியுடைய கூறுகளும் காட்டப்படுகின்றன.
அட்டவணை1இல் காட்டப்பட்டுள்ள நாடுகள் முறையான சமஷ்டி அரசியல் அமைப்பைக் கொண்டவை. சமஷ்டி அமைப்பின் அத்திவாரமாக அமைவது சமஷ்டியாக இணைந்திருப்பதற்கு சமூகங்களுக்குள்ள அவா அல்லது உறுதியான எண்ணமாகும். இத்தகைய உறுதிப்பாட்டையே சமஷ்டி
19

Page 12
அமைப்பை ஏற்று அதனைப் பேணுவது காட்டி நிற்கிறது. அதேவேளை சமஷ்டியாக இருக்கும் உறுதிப்பாட்டுக்குச் சமாந்தரமாக சமஷ்டிக்கு முரணான வேறு உறுதிப்பாடுகளும் ஏற்படுகின்றன. (உதாரணமாக ஒரு மார்க்சிய சோஷலிச சமூகம் அலலது ஓர் ஏகாதிபத்தியத்தை அமைத்தல் முதலியவை) இவ்வாறான முரண்பட்ட கருத்துக்கள் சிலவேளை சமஷ்டி என்பதை யாப்பில் மட்டுமே வைத்திருக்கின்றன. சிவவேளைகளில் சமஷ்டியில் உள்ள அர்ப்பணிப்பானது முரண்பட்ட இலக்குகளை விலக்கி வைக்க உதவுகிறது. இன்னும் சில சந்தர்ப்பங்களில் சமஷ்டி உறுதிப்பாடு ஏனைய நோக்குகளைக் கொண்ட காரணிகளால் குறிப்பாக, கலாசார, பொருளாதார, இராணுவ, அரசியல் அல்லது சமூகக் காரணிகளினால் சிதைவடைகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது.
அட்டவணை 1 : சமஷடி முறைமைகள்
பெயர் சனத்தொகை பரப்பளவு (அரசியல் அலகுகள்) (ஆயிரத்தில்) (a) (ச. மைல்)
ஆஜென்டீனா குடியரசு (22 மாகாணங்கள், 27,863 1,068,302
3 தேசிய ஆட்சிப் பிரதேசங்கள் + 1 சமஷ்டி மாவட்டம்)
அவுஸ்திரேலியா பொதுநலவரசு (8 மாநிலங்கள், 14,616 2,966,150
4 நிர்வாக ஆட்சிப் பிரதேசங்கள், 3 எல்லைப் பிரதேசங்கள், 1 தலைநகரப் பிரதேசம்)
ஒஸ்திரிய சமஷ்டிக் குடியரசு (9 லாண்டர்) 7,507 32,376
பிறேசில் (22 மாநிலங்கள் + 4 சமஷ்டி ஆட்சிப் பிரதேசங்கள் + 1 சமஷ்டி தலைநகர மாவட்டம்) 123,032 3,286,488
கனடா (10 மாகாணங்கள் + 2 ஆட்சிப் பிரதேசங்கள்) 23,941 3,851,809
கொமரோஸ் சமஷ்டி இஸ்லாமியக் குடியரசு
(3 தீவுகள்) 298(b) 863
செக்கோஸ்லாவாக்கிய சோஷலிச குடியரசு
(2 குடியரசுகள்) 15,312 49,378
ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு 61,561 96,011
(10 லாண்டர் + 1 இணைந்த மாநிலம்)
இந்தியக் குடியரசு (21 மாநிலங்கள் + 9 யூனியன் ஆட்சிப் பிரதேசங்கள் + 1 பெடரசி(6) + 1 இணைந்த மாநிலம்); 683,810 1,269,420
20

மலேஷியா (13 மாநிலங்கள்)
13,436
127,581
ஐக்கிய மெக்சிக்கன் இராச்சியங்கள் (31 மாநிலங்கள் + 1 சமஷ்டி மாவட்டம்)
67,396
756,066
நைஜீரிய சமஷ்டிக் குடியரசு (19 மாநிலங்கள் + 1 சமஷ்டி தலைநகர ஆட்சிப் பிரதேசம்)
77,082
356,669
பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு (4 மாகாணங்கள் + 3 மாநிலங்கள் + 2 இனக்குழுப் பிரதேசங்கள்)
76,770
310,403
சுவிஸ் சமஷ்டி அமைப்பு (26 கன்ரோன்)
6,329
15,943
ஐக்கிய சோவியத் சோசலிசக் குடியரசுகள் (15 யூனியன் குடியரசுகள் + 20 தன்னாட்சியுள்ள சோசலிஸ்ட் குடியரசுகள் + 10 தேசிய மாவட்டங்கள் + 8 தன்னாட்சிப் பிரதேசங்கள்)
265,542
86,49540
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (T ஷெய்க் பிரதேசம்)
1,040
30,000
அமெரிக்க ஐக்கிய இராச்சியங்கள் (50 மாநிலங்கள் + 2 பெடரசிகள் + 3 இணைந்த மாநிலங்கள் + 3 உள்ளூர் சுயாட்சிப் பிரதேசங்கள் + 3 இணைக்கப்படாத ஆட்சிப் பிரதேசங்கள்+ இந்திய இனக்குழுவினர்)
227,640
3,618,467,
வெனிசூலா குடியரசு (20 மாநிலங்கள் + 2 பிரதேச எல்லைகள் 1 சமஷ்டி மாவட்டம் + 2 சமஷ்டி தங்கியிருக்கும் பிரதேசங்கள் - 72 தீவுகள்)
13,913
352,144
யூகோஸ்லாவியா சோசலிச சமஷ்டிக் குடியரசு (6 குடியரசுகள் + 2 தன்னாட்சியுள்ள மாகாணங்கள்)
22,344
98,766
(a) 1980 அல்லது 1981 விபரங்கள் (b) 1976 மதிப்பீடு (c) ஜம்மு - காஷ்மீர் ஒரு பெடரசியாகும் (d) 1978 விபரங்கள்
21

Page 13
(ii) SFLID6håLQ 6þLurrba56řT (Federal arrangements)
21 மேலதிக நாடுகள் முறையான சமஷ்டி அமைப்பைக் கொண்டிக்கவில்லை. எனினும் ஏதோ ஒரு வகையான சமஷ்டி ஏற்பாடுகளை அல்லது கோட்பாடுகளை அல்லது நடைமுறைகளை அவைகள் தமது அரசியல் முறையில் கொண்டுள்ளன. இதன் மூலம் அவை தமது நாட்டின் பல்லினத் தன்மைக்கு உரிய இடம் கொடுக்க முனைந்துள்ளன. (அட்டவணை 2) இந்நாடுகளை 3 வகைளாகப் பிரிக்க முடியும். சட்டவாக்க ரீதியான யூனியன்கள், அரசியலமைப்பு ரீதியாகப் பன்முகப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சிமுறைமைகள், எல்லைகளை அடிப்படையாகக் கொண்டிராத கூட்டிணைவான யூனியன்கள் . இந்த ஒவ்வொரு வகையிலும் உண்மையான சமஷ்டிக் கோட்பாடுகளின் பயன்பாடு முக்கிய விளைவுகளைக் கொண்டிருக்கும். ஆனால் இவற்றுக்கும் உண்மையான சமஷ்டிக்கும் இடையிலான வித்தியாசம் இங்கு காணப்படுகிறது. ஏனெனில் உண்மையான சமஷ்டிக் கோட்பாடுகள் இவற்றில் ஊடறுக்கவில்லை.
அட்டவணை 2 : சமவடிடி ஏற்பாடுகளைக் கொண்ட அரசியல்
முறைமைகள்
பெயர் சனத்தொகை பரப்பளவு (அரசியல் அலகுகளின் எண்ணிக்கை) (ஆயிரத்தில்)(a) (ச.மைல்)
அன்டிகுவா, பார்புடா (8 சுதந்திர தீவுகள்) 75 171
பெல்ஜிய இராச்சியம் (2 மொழிவாரி மாநிலம் +
1 நலைநகரப் பிரதேசம் + 3 கலாசார சமூகங்கள்) 9,859 11,783
பர்மிய யூனியன் (4 மாநிலங்கள் + 8 பிரிவுகள் + 1 விசேட பிரிவு) 32,913 261,218
சீன மக்கள் குடியரசு (தன்னாட்சிப் பிரதேசங்கள் + 3 இனக்குழு சமஷ்டிகள் + 22 மாகாணங்கள்) - -
கொலம்பியா குடியரசு (23 துறைகள் + 4 intendencies
+ 3 commissaries) 27,090 440,831
பிஜி தீவுகள் (2 இனத்துவ சமூகங்களின் கூட்டிணைவு) 663.5 7,095
கானா குடியரசு (9 நிர்வாகப் பிரதேசம்) 11,450 92,100
இஸ்ரேல் (b) 3,871 7,848
22

ந்காலிய யரசு (15 சாதாரண மற்றும் தத @l件 த றறு
5 விசேட தன்னாட்சியுள்ள பிரதேசங்கள்) 57,042 116,318
uu'uurtsäT (42 to-do-fu-ken/ perfectures) 116,782 145,834
லெபனான் குடியரசு (C) 2,658 3,950
நெதர்லாந்து இராச்சியம் (11 மாகாணங்கள் + ஒன்று இணைந்த மாநிலம்) 14,144 13,104
பப்வுவா-நியூகினி சுதந்திர அரசு (2 தன்னாதிக்கமுள்ள தீவுக் கூட்டங்கள்) 3,079 178,704
போர்த்துக்கேயக் குடியரசு
(2 தன்னாதிக்கமுள்ள கடல் கடந்த பிரதேசங்கள்) 9,933 35,549
சொலமன் தீவுகள் (4 மாவட்டங்கள்) 228 10,639
தென் ஆபிரிக்கக் குடியரசு (4 மாகாணங்கள் +
6 தாயகங்கள்) 26,129 437,872
தென்மேல் ஆபிரிக்கா / நமீபியா 1,009 318,261
ஸ்பெயின் (17 தன்னாதிக்கப் பிரதேசம்) 37,746 194,884
சூடான் சனநாயகக் குடியரசு (1 அரசியல்யாப்பு தன்னாதிக்க + 7 சட்டரீதியான தன்னாதிக்க பிரதேசங்கள்) 16,126 (d) 967,500
தன்சானியா ஐக்கியக் குடியரசு (2 அரசியல் அலகுகள்) 17,982 364,900
பிரித்தானிய ஐக்கிய இராச்சியமும் வட அயர்லாந்தும் (4 நாடுகள் + 5 சுயாட்சித் தீவுகள்) 55,883 94,249
வனாட்டுக் குடியரசு/ புதிய ஹெப்ரய்ட்ஸ் (அரசியல் யாப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தீவுகள்) 112 5,700
(a) 1979 அல்லது 1980 விபரங்கள்
(b) இஸ்ரேல் தனது இனத்துவ, சமயக் குழுக்களிடையே தனிப்பட்ட அந்தஸ்து, சமய, கல்வி, மொழி தொடர்பாக வரையறுக்கப்பட்ட அதிகாரப் பகிர்வைக் கொண்டுள்ளது.
23

Page 14
(c) 1975 க்கு முன்னர் லெபனான் தமது இனத்துவ, சமயக் குழுக்களிடையே அரசியல் அதிகாரப் பகிர்வுக்காக நட்புறவுப் u filáfu, GjF FLD6q 6 ou I' (Consociational federalism) luuu6ăTL uGifuug. இக் கோட்பாடுகளை உயிர்ப்பூட்டத் திரும் பவும் முயற்சி செய்யப்படுகிறது.
(d) 1976 விபரம்
பல ஒற்றையாட்சி நாடுகள் சமஷ் டிக் கோட்பாடுகளைக் கொண்டிருக்கின்றன என்னும் கருத்தானது சமஷ்டி என்பது சகல இடங்களிலும் நிறைந்துள்ளது என வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. பயனுறுதியற்ற மத்தியமயப்படுத்தல் சமஷ்டிக்கு ஈடானது எனவும் கூறுவதற்கு முயலவில்லை. அரசியலமைப்பு உருவாக்கத்தின் பங்குதாரர்களான பல தனித்துவமான குழுக்கள் தமக்கிடையே ஒருமுறையான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளும்போது தமது உரிமைகளையும் தனித் துவங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, பேரம் பேசுவதற்காக ஒர் ஒற்றையாட்சி நாட்டிலும் சமஷ்டி ஏற்பாடுகளைக் கைக்கொண்டுள்ளன என்பதாகும்.
இதன் விளைவாக இந்நாடுகளின் இலக்குகள் ஒரு தூய்மையான ஒற்றையாட்சி முறைமை கொண்ட நாட்டின் இலக்குகளிலும் மாறுபட்டவை. தூய்மையான ஒற்றையாட்சியைக் கொண்ட நாடுகளில் வரலாற்று ரீதியாகவே அதிகாரங்கள் மத்தியில் குவிக்கப்பட்டுள்ளன. அரசியல் அல்லாத காரணிகளினால் மட்டுமே (உள்ளூர் சமூக, இன, Dg5, கலாசார வேறுபாடுகள்) அதிகாரப் பகிர்வு பற்றிய சிந்தனை ஏற்படுகிறது. அரசாங்க ரீதியாக “நல்லது” என்பது அரசாங்க முறையில் எவ்வளவு மத்தியமயப்படுத்தல் உள்ளது என்பதைக் குறித்து நிற்கிறது. பிரான்ஸ் இதற்கு நல்ல உதாரணமாகும். ஆனால் இங்கிலாந்தில் (ஐக்கிய இராச்சியமல்ல) அரசியல் அல்லாத காரணிகளினால் உள்ளூராட்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. விளிம்புகளிலுள்ள (சுற்றுப்புற) நாடுகளை அனுசரிப்பதற்காக ஐக்கிய இராச்சியத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமஷ்டி ஏற்பாடுகள் இங்கிலாந்தில் அதிகார மயப்படுத்தலுக்குத் தடையாக உள்ளன எனச் சிலர் வாதிடக்கூடும் . மறுதலையாக சமஷ்டிக் கோட்பாடுகளின் அடிப்படையில் 'நல்ல’ அரசாங்கம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட அதிகாரப் பகிர்வின் மீதான அர்ப்பணிப்பில் தொடர்புபடுகிறது. எனவே, “நல்லது” என்பதையும் “மத்திய மயப்படுத்த”லையும் நெருக்கமாகச் சமப்படுத்த முடியாது.
(iii) usosuu6ởra56řT (Unions )
இத்தகைய அமைப்புகளில் சமஷ்டி தொடர்பான ஆர்வம் இருந்தபோதிலும்
வேறு காரணிகளினால் அத்தகைய ஆர்வம் குறைக்கப்படுகிறது.
24

இத்தகைய அமைப்புகள் யாவும் முன்னர் தனித்தனி நாடுகளாக இருந்தன. இவை தமது தனித்துவங்களைப் பாதுகாத்துக் கொண்டு சில நோக்கங்களின் அடிப்படையில் ஐக்கியமடைந்தன. இதற்கு நல்ல உதாரணம் பெல்ஜியமாகும். எனினும் அண்மைக் காலத்தில் பெல்ஜியத்தினது பிளேமிங்ஸ் (Flemings), வாலூம்ஸ் (Walooms) ஆகியற்றிக்கிடையில் ஐக்கியத்தைப் போனுவதற்காக சமஷ்டிக் கோட்பாடுகளை வெகுவாக ஏற்றுக்கொண்ட போதும் வித்தியாசங்கள் இன்னும் இருக்கவே செய்கின்றன.
சட்டவாக்க யூனியன் (Legislative Union) என்பது எவ்வாறு பயன்படுத்தப்பட்டபோதிலும் அது ஒரு ஒன்றிணைந்த அரசியல் அமைப்பாகும். இதில் அங்கம் வகிக்கின்ற அரசியல் அமைப்புகள் தமது முதன்மையான அரசியல் அமைப்புச் சார்ந்த கருத்துக்களைத் தாம் பிரிந்திருக்கும் தன்மையின் ஊடாகவன்றிப் பொது நிறுவனங்கள் ஊடாகவே வெளிப்படுத்துகின்றன. ஐக்கிய இராச்சியமானது அதனுடைய பெயர் குறித்து நிற்பது போல நீண்டகாலமாக ஒரு சட்டவாக்க அரசியலமைப்பாக நிலைத்து நின்ற போதும் சமஷ்டி என்னும் சொல்லைத் தொடர்ச்சியாக நிராகரித்தே வந்துள்ளது. ஐக்கிய இராச்சியமானது நான்கு நாடுகள் மற்றும் பல கரையோரத் தீவுகளின் கூட்டாகும். அதனுடைய அரசியல் யாப்பு ஏற்பாடுகளில் ஸ்கொட்லாந்துக்கு, உள்ளூர் நிர்வாகம், சட்டம், மத உரிமை உட்பட மத்திய வங்கியையும் உறுதிப்படுத்தியுள்ளது. வேல்ஸில் ஒரு கலாசார சுயாட்சியும் நிர்வாக தன்னாதிக்கமும் வழங்கப்பட்டுள்ளது. உல்ஸ்டரில் சுயாட்சியும் சட்டவாக்க அமைப்பும் உள்ளன. குவான்சி, ஜெர்ஸி, மான், சாக் முதலிய பிரித்தானிய கரையோரத் தீவுகளிலும் அவற்றின் அரசாங்கங்களில் ஒரளவு அரசியலமைப்பு ரீதியான தன்னாதிக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பல முக்கிய அம்சங்களில் சட்டவாக்க யூனியனும் சமஷ்டி யூனியனும் ஒரே மாதிரியைக் கொண்டுள்ளன. ஒரு மத்திய அதிகாரம் மக்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்கு வடிவமைக்கப்பட்டதாக இருந்தாலும் யூனியனில் மத்திய மயப்படுத்தலுக்கு உட்படாத பல்வேறு கூறுகளும் உள்ளன. யூனியன் அரசாங்கமானது அதன் அரசியல் அலகுகளின் எல்லைகள், தேசிய சட்டசபையில் பிரதிநிதித்துவம், உள்ளூரமைப்புகள் போன்றவற்றின் தன்னாதிக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்துகிறது. சட்டவாக்க யூனியனானது சமமற்ற அரசியல் அலகுகளை ஐக்கியப்படுத்துகிறது. அதன் காரணமாக மத்தியமயப்படுத்தும் தன்மைக்கு எதிரான வலுவும் செயற்பட்டு உள்ளூராட்சிச் சுய அரசாங்கத்துக்கான எஞ்சிய விருப்புக்களினால் மீள் சமப்படுத்தப்படுகிறது.
ஒற்றையாட்சிகளில் காணப்படும் அரசியல் அமைப்பு ரீதியான பன்முகப்படுத்தல் பண்டைக் காலங்களிலிருந்தே பல்வேறு வடிவங்களில்
25

Page 15
இருந்து வந்துள்ளது. நெதர்லாந்து தனது ஆரம்பகாலச் சமஷ்டி முறையை மாற்றியமைத்து கூடிய அதிகாரப் பரவலை வழங்கும் மாகாண யூனியன் அமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளது என முன்னரே குறிப்பிடப்பட்டது. டச்சு மாகாணங்கள் மிக முக்கியமான அரசியற் செயற்பாடுகளைக் கொண்டுள்ளன. தென்மாகாணங்கள் 1831இல் பிரிந்து பெல்ஜியம் அமைக்கப்பட்டபோது புதிய அரசும் இதே மாதிரியான அரசியல் யாப்பினை ஏற்றுக்கொண்டது. 2 ஆம் உலகப் போருக்குப் பின்னரும் கூட இந்த யாப்பு தொடர்ந்தது. தமது நாடு சமூகங்களின் மிகத் தளர்வான ஓர் ஒன்றியம் என்பதில் பல்லாண்டுகளாக பெல்ஜியர்கள் பெருமைப்பட்டுக் கொண்டனர். பின்னர் உள்ளக இனத்துவ அழுத்தங்கள் பெல்ஜியத்தை மூன்று பிரதேசங்களைக் கொண்ட ஒரு சமஷ்டி யூனியனாக மாற்றின.
பன்முகப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி அரசுகள் அரசியல் யாப்பு ரீதியாகத் தமது உள்ளூராட்சி அரசாங்கங்களுக்கு நியாயமான தன்னாட்சி அதிகாரங்களை வழங்குகின்றன. ஆனால் உள்ளூர் அதிகாரம் சில விடயங்களில் மத்திய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டே இருக்கிறது. அத்துடன் அவ்விடயங்களில் தேசிய மேற்பார்வையும் ஏற்படுத்தப் படுகின்றன. எனினும் சில விடயங்களில் உள்ளூர் மரபுகள் மத்திய அரசாங்கத்தின் அதிகாரக் கட்டுப்பாடுகளைத் தனித்து விடவும் கூடும். எனினும் இங்கிலாந்தின் அனுபவங்கள் காட்டுவதைப் போல உள்ளூர்த் தன்னாதிக்கத்தை ஆதரிக்கும் வலிமையான மரபுகள் இருந்தபோதும் அவற்றால் சனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தின் பெரும்பான்மை அதிகாரத்தைத் தடுத்துவிட முடியாது.
(iv) pbi Llgp6hqŮu Lunašbē56sir (Consociations)
சில மத்திய அதிகாரம் கொண்ட அரசுகள் உண்மையில் இனத்துவ சமய அல்லது சித்தாந்த அடிப்படையிலான குழுக்களின் அரை- சமஷ்டி யூனியன்களாகும். (Quasi-Federal Unions). இவை ஆட்சிப் பிரதேசமாக ஒழுங்குபடுத்தப்படா விட்டாலும் கூட அவை தமக்குரிய விசேட பண்புகளைப் பெற்று அவற்றை ஒரு பொது அரசுக்குள் உறுதிப்படுத்திக் கொள்ளும் அரசியல் யாப்புரிமையையும் பெற்றுவிடுகின்றன. இவ்வாறான அரசுகளை ஆரண்ட் லிஜ்பாட் (Arend Lijphart), ஜேராட் லெம்புறுாஸ் (Gerhard Lembruch) முதலியோர் நட்புறவுப் பங்கீடுகள் என அழைக்கின்றனர். இச்சொல்லை முதலில் ஜோகானஸ் அல்துாசியஸ் (Johannes Althusius) என்பவரே பிரயோகித்திருந்தார். இவ்வாறான ஏற்பாட்டிற்கு உதாரணமாகப் பல்வேறு சமூகங்களைக் கொண்ட பெல்ஜியமும் மதவாரியான சமூகங்களைக் கொண்ட லெபனானும் சித்தாந்தக் கட்சிகளைக் கொண்ட இஸ்ரேலும் நல்ல உதாரணங்களாகும்.
26

இந்நாடுகள் பலவற்றில் உள்ளூர் சேவைகளும் பொறுப்புகளும் இந்தத் துணைச் சமூகங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
நட்புறவுப் பங்கீட்டு ஏற்பாடுகளுக்கும் சமஷ்டிகளுக்கும் இன்னுமொரு வேறுபாடும் உண்டு. அதாவது நட்புறவுப் பங்கீடுகளில் கற்றறிவாளர்கள் (Elites) துணைச் சமூகங்களின் மீது தமது அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் தொடர்ந்து கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டுமாயின் அதிகாரங்கள் மத்திய மயப்படுத்தப் பட்டிருக்க வேண்டியது அவசியம். அதாவது ஒரு துணைச் சமூகங்களின் தலைவர்கள் கலந்து பேசி முடிவுக்கு வரும் அதிகாரங்களையும் அத்தகைய முடிவுகளைத் தமது துணைச் சமூகங்களில் அமுல்படுத்தும் அதிகாரங்களையும் கொண்டிருக்காது விட்டால் அம்முறைமையானது அழிந்துவிடும். இவ்வாறு ஆட்சிப் பிரதேசங்களைப் பன்முகப்படுத்துவதும் கூட நட்புறவுப் பங்கீட்டு முறைமைகளில் பிரச்சினையாகி விடுகிறது.
நட்புறவுப் பங்கீட்டு ஆதரவாளர்கள் மற்றும் சமஷ்டி அரசு ஆதரவாளர்களிடையே இவ்விரு கருத்துக்களுக்கிடையேயுள்ள தொடர்பு பற்றி ஒரு விவாதம் இருந்து வருகிறது. நட்புறவுப் பங்கீட்டு ஆதரவாளர்கள் சமஷ்டி என்பது வெறுமனே ஒரு கட்டமைப்பு எனவும் அதிகாரப் பகிர்வுக்கான அடிப்படை உண்மையில் நட்புறவுப் பங்கீட்டு எண்ணக்கருவையே மூலமாகக் கொண்டிருக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். சமஷ்டி ஆதரவாளர்கள் நட்புறவுப் பங்கீடு என்பது உண்மையில் ஆட்சிப்பிரதேசம் அற்ற சமஷ்டியேயாகும் என்றும் அது ஒரு தற்காலிகமான மாறுகின்ற ஓர் அரசியல் ஏற்பாடு என்றும் ஆட்சிப் பிரதேச சமஷ்டி (Territorial Federalism) ஏற்பட்டாலான்றி இவ் அரசியல் ஏற்பாடு நிலைக்க மாட்டாது எனவும் வாதிடுகின்றார்கள். கடந்த சில ஆண்டுகளாக இவ்விரு கருத்துக்களும் நெருக்கமடைகின்றன.
32 வீதமான உலகக் குடித்தொகை சமஷ்டிக் கோட்பாடுகளை ஏதோவொரு வழியில் ஏற்றுக்கொண்ட அரசுகளின் கீழேயே காணப்படுகின்றன. எனினும் இவற்றில் அரைவாசி அரசுகள் சமஷ்டியை முழுமையாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.
(v) asF6AİLL-Tasira56íT geH6onLDfuL (Confederations)
அண்மைக் காலத்தில் நிரந்தரமான பன்னாட்டுச் “சமூகங்கள்” உருவாகி வருகின்றன. ஐரோப்பிய சமூகம் (EC) இதற்கு நல்லதொரு உதாரணமாகும். இதன்மூலம் கூட்டரசு அமைப்பு ஏற்பாடுகள் திரும்பவும் உயிர்ப்பிக்கப்படுகின்றன. ஐரோப்பிய சமூகத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் தமது தேசிய அதிகாரத்தைக் கைமாற்றுவதற்குத் தயக்கம் காட்டிய
27

Page 16
போதிலும் ஐரோப்பிய சமூகமானது (EC) உயிர்ப்புடன் இருப்பதோடு ஒர் அரசியல் ஆளுமையையும் பெற்றுள்ளது எனலாம்.
ஐரோப்பியர்களைப் பொறுத்த வரையில் கூட்டரசுகள் அமைப்பு ஏற்பாடுகள் புராதன கிரேக்க நகரங்களில் கையாளப்பட்ட உண்மையான சமஷ்டி வடிவத்தையே கொண்டுள்ளது என அவர்கள் நினைக்கின்றனர். நவீன யுகத்தில் கூட்டரசுகள் அமைப்பு மறைந்துவிட்டது. அதற்கான முக்கிய காரணம் தேசியவாதம் உறுதியாகத் தலையெடுத்த ஒரு காலகட்டத்தில் தம்மை தக்க வைத்துக்கொள்வதற்கான அரசியல் ஆதரவை அவைகளால் பெற்றுக்கொள்ள இயலவில்லை.
புனித ரோமன் ஏகாதிபத்தியம், ஜேர்மனியின் மத்திய கால அரசுகள், பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து ஐக்கிய மாகாணங்கள் முதலிய கூட்டரசுகள் அமைப்பு ஒன்றில் உடைந்து சிதறின அல்லது ஒன்றிணைக்கப்பட்ட ஒரே அரசுகளாக மாறின. ஹெல்விடிக் (Helvetic) கூட்டரசுகள் அமைப்பு சுவிஸ்சினால் நவீன சமஷ்டி அமைப்பாக மாற்றப்பட்டது. புனித ரோமன் ஏகாதிபத்தியத்தின் (Holy Roman Empire) சிதைவுகளிலிருந்து உருவாகிய ஜேர்மனிய கூட்டரசுகள் அமைப்பு 1576ör63Tst (3).J.6ööTLTüb söjdflsöt (Second Reich) 9 à 53 FLD6+lq (QuasiFederal) ஜேர்மனிய ஏகாதிபத்தியமாக மாற்றமடைந்தது.
இன்றைய ஐரோப்பிய சமூகத்தில் 300 மில்லியனுக்கு அதிகமான மக்கள் உள்ளனர். அத்துடன் அதன் 12 உறுப்பினர்களில் 7 நாடுகள் சமஷ்டியை அல்லது சமஷ்டிக் கோட்பாடுகளையே பின்பற்றுகின்றனர். மொத்தமாகப் பார்க்கும் போது 75 வீதத்துக்கும் அதிகமான உலக மக்கள் ஏதாவது ஒரு வகையிலான சமஷ்டி அமைப்புகளின் கீழேயே வாழ்கின்றனர். ஐரோப்பிய சமூகத்தின் நிலையும் அதன் செயற்பாடுகளும் உலகின் ஏனைய பகுதிகளில் இவ்வாறான கூட்டரசுகள் அமைப்பு ஏற்பாடுகளுக்கு வழிசமைத்துள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ASEAN) இதற்கு ஒர் உதாரணமாகும். இன்றைய உலகில் இவ்வாறான மூன்று கூட்டரசுகள் அமைப்புக்கள் உள்ளன. அவற்றில் ஐரோப்பிய சமூகமே பிரசித்தி பெற்றுள்ளது.
முன்னைய பிரித்தானிய மேற்கிந்திய தீவுகள் பின்னர் மேற்கிந்திய சமஷ்டியமைப்பாக மாற முயன்று தோல்வியடைந்த போதும் இன்று ஒரு கூட்டரசுகள் அமைப்பாகவே இயங்குகின்றன. இத்தகைய கூட்டரசுகள் அமைப்பு ஒரு செயற்பாட்டு அடிப்படையிலேயே அமைந்துள்ளது. பொதுவான உயர்நீதிமன்றம், நாணயம், வங்கி, சந்தை, பல்கலைக்கழகம் ஆகியவற்றை அவை கொண்டுள்ளன. அண்மைக் காலத்தில் செனகல், சாம்பியா ஆகியவை ஒன்றிணைந்து செனகாம்பியா கூட்டரசுகள் அமைப்பைத் தோற்றுவித்துள்ளன. பரஸ்பரப் பாதுகாப்பு, மற்றும்
28

தர்க்கரீதியற்ற எல்லைகளை மாற்றுதல் ஆகியவற்றின் காரணமாக இவை ஒன்று சேர்ந்துள்ளன. தென்னாபிரிக்காவும் கூட்டரசுகள் அமைப்பு நோக்கியே சாய்கிறது. உண்மையில் கறுப்பின, கறுப்பினரல்லாத தென்னாபிரிக்க மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தென்னாபிரிக்கக் குடியரசு, கூட்டரசுகள் அமைப்பையே முன்மொழிந்தது. அதற்கான ஏற்பாடுகள் தென்னாபிரிக்க சனாதிபதி மீற்றர் போத்தாவினால் (Pieter W.Botha) செய்யப்பட்டபோதும் கறுப்பு மக்களின் தலைமைத்துவத்தால் அது நிராகரிக்கப்பட்டது.
கூட்டரசுகள் அமைப்பு இன்று ஒரு நடைமுறைச் சாத்தியமான அரசாங்க ஏற்பாடாக உருவாகிவருகிறது. சமஷ்டி வரலாற்றில் பல காரணங்களினால் இது மிகவும் முக்கியமானது எனலாம். 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கூட்டரசுகள் அமைப்பானது சமஷ்டி அமைப்பின் ஒரு நடைமுறைசார்ந்த வெளிப்பாடு என்னும் நிலையிலிருந்து தூக்கி எறியப்பட்டதற்கு நவீன காலத்தில் அரசு (Statehood) என்பதன் வரைவிலக்கணத்துடன் அது கொண்ட தொடர்பே காரணமாகும். நவீன தேசிய அரசு (Nation-State) எனப்படுவது பூரண இறைமை கொண்ட ஒரு நாடு என்னும் கருத்தானது கூட்டரசுகள் அமைப்புக்கு எதிராக இருந்தது.
ஆனால் அண்மைக் காலங்களில் பூரண தேசிய இறைமை என்னும் கருத்து வலுவிழந்து விட்டது. சர்வதேசரீதியாக நாடுகள் ஒன்றிலொன்று தங்கி இருத்தல் மற்றும் தேசிய அரசு என்னும் மாயை ஆகியவை பல்லினம் சார்ந்த பாரிய அரசியல் அமைப்புகள் அல்லது கூட்டரசுகள் அமைப்புகளுக்கு வழிவிட்டுள்ளன. இவ்வாறான தாற்பரியங்களின் முதலாவது வெளியீடு ஐரோப்பிய சமூகம் எனக் கூறலாம். எல்லையற்ற இறைமையின் மோசமான விளைவுகளை 20ஆம் நூற்றாண்டில் முதலில் அனுபவித்தது ஐரோப்பிய நாடுகளேயாகும். இன்று ஐரோப்பியாவில் இவ்வாறான கூட்டரசுகள் அமைப்புக்களில் ஈடுபடாது தனித்திருப்பவை சுவிற் சலாந்தும் , ஒஸ்திரியாவும் மட்டுமே. ஸ்கண்டிநேவிய நாடுகளும் இதற்குள் அடங்கும். எனினும் அவை ஒரு வரையறுக்கப்பட்டுள்ள அளவில் தமக்குள் ஒரு கூட்டரசுகள் அமைப்பைக் கொண்டுள்ளன.
மேற்கு ஐரோப்பிய நாடுகள் வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கொண்டிருப்பதன் காரணமாக அவை தொடர்ந்தும் முன்னேறுவதற்குப் பொருளாதாரரீதியாக ஒன்றிணைய வேண்டியது அவசியமாகும். இதனைச் சாத்தியமாக்குவதற்கு ஒரு பொதுவான அடிப்படையில் கூட்டரசுகளை அமைப்பதை விடுத்துக், குறிப்பிட்ட செயற்பாடுகளுக்காக ஒன்றிணையும் வழியை அவைகள் கண்டறிந்தன. இவ்வாறான குறிப்பிட்ட செயற்பாடுகளில் ஐரோப்பிய சமூகத்துக்குப் பொருத்தமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய குறிப்பிட்ட செயற்பாடுகளின்
29

Page 17
எண்ணிக்கை அதிகரித்த பொழுது ஒவ்வொரு வகையான அதிகாரங்கள் கொண்ட பொதுநிறுவனங்கள் அமைக்கப்படவேண்டிய தேவை எழுந்தது. அரசியலமைப்பு நீதிமன்றமாக அமைக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்றம் வரையறுக்கப்பட்ட நீதி வழங்கும் அதிகாரங்களைக் கொண்டுள்ளது. கொள்கைகள் உறுப்பு நாடுகளின் அமைச்சர்களைக் கொண்ட ஒரு சபையினால் தீர்மானிக்கப்படுகின்றன. ஐரோப்பியப் பாராளுமன்றம் வரவு செலவு மீளாய்வுகளையும் அனுமதித்தலையும் செய்கிறது. இவ்வாறு பொது நிறுவனங்கள் உறுப்பு அரசுகளின் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் அச்சுறுத்தாவண்ணம் அமைக்கப்பட்டன.
இவ்வாறான செயன் முறைக்கு 1950களில் ஐரோப்பிய செயற்பாட்டாளர்களினால் ஒரு தத்துவார்த்த வடிவம் கொடுக்கப்பட்டது எனினும் இச் செயற்பாட்டாளர்கள் (Functionalists) ஐக்கிய ஐரோப்பிய இராச்சியத்தைக் கோரிய சமஷ்டிவாதிகளுடனும் தேசங்களின் நிலைத்தலை கோரிய தேசவாதிகளுடனும் (Statists) வாதத்தில் ஈடுபட்டிருந்த காரணத்தினால் அவர்கள் சமஷ்டிக் கருத்துக்களுக்கு அவ்வளவு அழுத்தம் கொடுக்கவில்லை. இவர்களின் தத்துவம் ஒரு காலத்தில் பிரயோசனமாக இருந்த போதிலும் பொதுச்சந்தை (Common Market) அமைக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட மாற்றங்களையும் அபிவிருத்திகளையும் அவர்கள் கருத்தில் கொள்ளாத காரணத்தால் அவர்களின் தத்துவம் வலுவிழந்தது.
இப் புதுவகையான கூட்டரசுகள் அமைப்புக்கான தத்துவார்த்த அடிப்படை இன்னும் கட்டி எழுப்பப்படவில்லை என்றே கூறவேண்டும்.
(vi) &LD&subp &LDSLA Igburt baser
(Asymmetrical Federal Arrangements)
அண்மைக்காலத்தில் புதுப்புது சமஷ்டிக் கோட்பாட்டுப் பிரயோகங்கள் தோன்றுகின்றன. இவை கடந்த காலத்தில் இருந்திருக்கலாம் அல்லது இல்லாமலிருந்திருக்கலாம். சிறு நாடுகள் பெரிய நாடுகளுடன் சில அவசியமான தொடர்புகளைக் கொண்டிருக்கின்றன. இந்தப் பெரிய நாடுகள் பெரும்பாலும் முன்னைய காலனித்துவ நாடுகளாக இருந்திருக்கின்றன. இவ்வாறான ஏற்பாடுகளில் இச்சிறு நாடுகள் பூரணமான சுதந்திரம் அனுபவிப்பதை விடச் சுயாதிபத்தியம், சுய அரசாங்கம் என்ற அடிப்படையில் பெரிய நாட்டுடன் இணைந் திருப்பதில் அணிகளுக்குப் பல நன்மைகள் ஏற்பட்டன. இவ்வாறான சுதந்திர இணைப்புகள் (Free Association) இரு அடிப்படைகளில் ஏற்படுத்தப்பட்டன.
30

(1) ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட விதிகள் அல்லது நடைமுறைகளின் அடிப்படையில் இவ்விரண்டு அரசுகளில் ஒன்றேனும் தான் விரும்பும் போது மற்ற அரசின் சம்மதத்தை எதிர்பாராமலேயே கூட்டிலிருந்து பிரிந்து கொள்ள முடியும்.
(2) ஏற்படுத்தப்பட்ட சமஷ்டித் தொடர்புகளில் பரஸ்பர சம்மதத்தின் பேரிலேயே மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும் , அட்டவணை 3 இவ்வாறான இரு வழிகளில் இணைப்பை ஏற்படுத்தியிருக்கும் நாடுகளைக் காட்டுகின்றது.
அட்டவணை 3:
ஒன்றிணைந்த அரசுகள், சமஷ்டிகள் மற்றும் கூட்டுத்தலைமையாட்சிகள் (Condominiums)
நாடு (வடிவம்)
சமஷ்டி வலுவாண்மை
சனத்தொகை பரப்பு (ஆயிரம்)(a) (ச.மை)
ஆலன் தீவுகள் (Federacy)
அண்டோராப் பள்ளத்தாக்கு (Condominium)
அஸோர்ஸ் தீவுகள் (Federacy)
பூட்டான் (Associated State)
குக் தீவுகள் (Associated State)
பரோ தீவுகள் (Federacy)
மெக்ரோனிஸ்ரீயா
சமஷ்டி அரசுகள் (Associated State)
பின்லாந்து
பிரான்ஸ் + ஸ்பானியா
போர்த்துக்கல்
9ösust
நியூஸிலாந்து
டென்மார்க்
ஐக்கிய அமெரிக்கா
31
23 572
34 179
289 902
1,296 18,000
19 90
44 540
117 502

Page 18
கிறீன்லாந்து (Federacy)
குவான்ஸி Federacy
ஐல் ஒவ் மேன் (Federacy)
ஜம்மு காஷ்மீர் (Federacy)
ஜெர்ஸி
(Federacy)
லீச்டென்ஸ்டெய்ன் (Associated State)
மெக்காவோ (Associated State)
மதீரா தீவுகள் (Federacy)
மார்ஷல் தீவுகள் (Associated State)
மொனாக்கோ (Associated State)
நெதர்லாந்து அன்ரில்லஸ் (Associated State)
நியூ தீவுகள் (Associated State)
வட மரியானா
(Federacy)
போர்ட்டோ றிக்கோ (Federacy)
டென்மார்க்
ஐக்கிய இராச்சியம்
ஐக்கிய இராச்சியம்
இந்தியா
ஐக்கிய இராச்சியம்
சுவிற்சர்லாந்து
போர்த்துக்கல்
போர்த்துக்கல்
ஐ.அமெரிக்கா
பிரான்சு
நெதர்லாந்து
நியூஸிலாந்து
ஐ.அமெரிக்கா
ஐ. அமெரிக்கா
32
51
53
64
5100(C)
74(b)
25
271
251
31
27.1
251 (b)
17
3.188
840,005
38
227
85,805
45
61.
307
0.8
383
100
185
3,421

1ாலுங் குடியரசு ஐ.அமெரிக்கா 12 127 (Associated State)
சன் மரினோ இத்தாலி 21(b) 24 (Associated State)
மேற்கு பெர்லின் ஜெர்மன் சமஷ்டி 1,899 185 (ASSociated State)
(a) 1979 அல்லது 1980 மதிப்பீடுகள் (h) 1978 மதிப்பீடு (c) 1976 மதிப்பீடு
நெதர்லாந்து அன்ரில்சும், நெதர்லாந்தும்; போர்ட்டோறிக்காவும், ஐக்கிய அமெரிக்காவும் முறையே ஒன்று சேர்ந்த அரசுகளுக்கும், சமஷ்டிக்கும் சிறந்த உதாரணங்களாகும். போர்ட்டோறிக்கோ ஓர் சுதந்திர அரசுக்கு இருக்கக் கூடிய சகல அதிகாரங்களையும் கொண்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் எந்தவொரு சமஷ்டி அரசுக்கும் இருக்கக் கூடிய அதிகாரங்களைவிட அதிகமான அதிகாரங்களைக் கொண்டுள்ளது. போர்ட்டோறிக்கோ குடிமக்கள் அமெரிக்கக் குடிமக்களாவர். ஆனால் தேசிய தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கில்லை. இன்று இவ்வாறான 20 ஏற்பாடுகள் உள்ளன. இவற்றில் மேற்கு ஜேர்மனிக்கும் ஜெர்மன் சமஷ்டி குடியரசுக்கும் உள்ள ஏற்பாடும் உள்ளடங்குகிறது. நான்கு அரசாங்கங்களின் ஆக்கிரமிப்புக் காரணமாக ஏற்பட்ட சட்ட அந்தஸ்துக் காரணமாக மேற்கு பெர்லின் ஒரு சமஷ்டி அலகாக அன்றி ஒன்று சேர்ந்த (associated) அலகாகவே வளர்ந்துள்ளது. இவ்விரண்டு வகையான அரசியல் ஏற்பாடுகளையும் மதிப்பீடு செய்வதற்குப் பொறுத்திருக்க வேண்டும். ஒரு சிறுநாடு பெரிய நாட்டுடன் முற்றாக ஒன்றிணைய அல்லது முற்றாகப் பிரிந்திருக்கத் தீர்மானம் மேற்கொள்வதற்கு முன்னர் இடையில் தடைகளும் உள்ளன. ஆனால் மத்திய கால ஏற்பாடுகளையே மாற்றி அமைத்துள்ள சில நாடுகள் நூற்றாண்டுகால வளர்ச்சியைப் பெற்று உறுதியடைந்துள்ளன. சான் மரினோ, இத்தாலி, மொனாக்கோ, பிரான்சு, லிச்டென்ஸ்டெயின், சுவிற்சர்லாந்து என்பன இதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.
கூட்டுத்தலைமையாட்சிகள் (Condominiums)என்பது அரிதான ஒரு சமஷ்டி ஏற்பாடு எனினும் அது அடைந்துள்ள ஒரேயொரு பெருவெற்றி இங்கு குறிப்பிடத்தக்கது. கூட்டுத் தலைமையின் அடிப்படையில் ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பு பல நாடுகளால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. கடந்த காலங்களில் இவ்வாறான ஏற்பாடுகள் (உதாரணமாக இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் ரான்ஜியர் (Tangier) வெளிப்படையான காலனித்துவத்
33

Page 19
தன்மையைக் கொண்டிருந்தது. இதனை நாம் சமஷ்டி ஏற்பாடு எனவும் கூறிவிட முடியாது. ஏனெனில் ஆட்சி செய்யப்பட்ட நாட்டின் மக்கள் ஆட்சியுரிமையைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அன்டோரா, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கிடையிலான முக்கூட்டு ஏற்பாடு சுமார் எழுநூறு ஆண்டுகள் தொடர்ந்திருந்து வந்துள்ளன. அத்துடன் அவை உண்மையான சமஷ்டிப் பண்புக் கூறுகளைக் கொண்டுள்ளன. இவ்வாறான ஏற்பாட்டில் அன்டோரா காலனித்துவத்தன்மை கொண்ட இரண்டு பெரிய நாடுகளுக்கிடையே தன்னுடைய சுயாட்சியைப் பேணி வந்துள்ளது. அரசியல் யாப்பு ரீதியாக இறுதி வலுவாண்மை இரு பெரிய நாடுகளிடம் இருந்தாலும் அது அண்டோராவின் சுயாட்சியைப் பாதிக்கவில்லை.
(vii) (3LDGOnslabsit (Leagues)
பேரவைகள் வரையறுக் கப்பட்ட சமஷ்டிக் கோட்பாடுகளைக் கொண்டுள்ளன. முற்றிலும் வேறுபட்ட பல நாடுக்ளை அவை தொடர்ந்து இணைத்து வைத்துள்ளன. பிரித்தானியப் பொது நலவாயம் (British Commonwealth), GIB GLT (NATO) Gustair p30) 6, g5560) sui பேரவைகளே. நேட்டோவும் முதலில் ஓர் இராணுவக் கூட்டமைவாக அமைக்கப்படவில்லை. எனினும் அது பிரித்தானியப் பொதுநலவாயம் போன்று பேரவைப் பண்புகளைப் பெற்றுக் கொள்ளாததால் ஓர் இராணுவக் கூட்டாக மாற்றமடைந்தது. நீண்டகாலம் நிலைத்து நிற்கும் இன்னொரு பேரவை "அரபுலீக்" (Arab League) ஆகும். இதனுடைய செயற்பாடு வரையறுக்கப்பட்டதாயினும் இதன் உறுப்பினர்கள் பொதுவான அரபு நாட்டுணர்வை கொண்டிருப்பதால் இது தொடர்ந்து நிலைத்துள்ளது.
இன்று புதிதாக உருவாகி வரும் இன்னொரு சமஷ்டி வடிவமாக "இருபக்க ஒப்பந்த சமஷ்டி" (Foralisticfederalism) விளங்குகிறது. இதன்படி முதன்மை அரசுக்கும் ஏனைய அலகுகளுக்கும் உள்ள உறவு இருபக்க ஒப்பந்தங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும். இவ்வொப்பந்தம் ஒவ்வொன்றும் அலகுகளின் சிறப்பான தன்மைக்கும் தேவைக்கும் ஏற்றவாறு அமைந்திருக்கும். foralistic என்னும் பதம் ஸ்பானிய பதமான fuero என்பதிலிருந்து பெறப்படுகிறது. இப் பதமானது மத்தியகால ஸ்பானியாவில் அரசனுக்கும் மாகாணங்களுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை அடிப்படையிலான பட்டயங்களைக் குறிக்கும். நவ்ரே (Navare) மாகாணம் இவ்வாறான உரிமைகளை இன்றுவரை காத்து வந்துள்ளது. இவ்வுரிமைகள் இன்று பாஸ்க் (Basque) மாகாணங்களாற் கோரப்படுகின்றன. இவ்வுரிமைகள் மத்திய காலத்தி லிருந்து உள்ளூர் மக்கள் காத்துவரும் மரபுசார்ந்த சுதந்திரங்களாகும். இவற்றில் மேலாண்மை அரசு தலையிடமுடியாது.
34

தற்போதைய ஸ்பானிய அரசாங்கம் மரபுரிமைகளைத் தொடர்ந்து உறுதிப் படுத்த மறுத்தாலும் தன்னாதிக் கமுள்ள ஒவ்வொரு பிரதேசத்தினதும் தன்னாதிக்கத்தை உறுதிப்படுத்தும் ஒப்பந்தங்களுக்கு மரபுரிமை அணுகுமுறையையே பின்பற்றுகிறது. ஒவ்வொரு ஒப்பந்தமும் ஸ்பானிய பாராளுமன்றத்தையும் (Cortes) தன்னாதிக் கமுள்ள பிரதேசங்களின் மன்றங்களையும் உள்ளடக்கிய ஒரு சிக்கலான முறையின் மூலம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன் விளைவாக அதாவது மரபுரிமை ஒப்பந்தங்களின் மூலம் ஸ்பானியா ஒரு சமஷ்டி முறைமையாக மாறி வருகிறது. ஐக்கிய இராச்சியத்துக்கும் அதன் சமஷ்டி அலகுகளான ஜெர்ஸி, குவான்ஸி, ஐல் ஒவ் மேன் ஆகியவற்றுக்குமான உறவுகளும் இதே அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
மேலே குறிப்பிட்ட பல்வேறு சமஷ்டி வடிவங்களினதும் முக்கியமான பங்கு அவை யாவும் கூட்டு அலகுகளே தவிர ஒற்றை அலகுகளல்ல. இரண்டுக்கு மேற்பட்ட இவ்வாறான அலகுகள் ஒன்றுசேர்வது தமது தனித்துவங்களைப் பாதுகாத்துக் கொண்டு அதே நேரத்தில் சில பொது நோக்கங்களை ஒன்றாக அடைவதற்காகும். இவ்வாறு இவ்வரசுகளை ஒன்றிணைக்கும் நுட்பங்கள் சமஷ்டி நுட்பங்களேயாகும். அத்துடன் இத்தகைய சமஷ்டி நுட்பங்களையும் கூட்டரசாங்க அமைப்புகளையும் பற்றிக் கற்பது இன்று மிகவும் முக்கியமானதாக மாறி வருகிறது.
அட்டவணை 4 இல் இன்று உலகில் நிலவும் பல்வேறு வகையான சமஷ்டி அமைப்புக்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. ஒவ்வொரு அமைப்பும் ஆட்சிப் பிரதேசம் அல்லது நட்புறவுப் பங்கீட்டு (Territorial or consociational) அடிப்படைகளைக் கொண்டுள்ளன. ஆனால் பலவற்றில் இரண்டு அம்சங்களையும் காண முடியும். பொதுவாக இவை யாவும் சமஷ்டியின் ஏதாவதொரு அம்சங்களைக் கொண்டுள்ளன. அட்டவணை 4 இல் இவ்வாறான வேறுபட்ட ஏற்பாடுகள் ஒரு தொடர்ச்சித் தன்மையில் காட்டப்படுகின்றன. இது அரசின் ஏனைய இரு மாதிரிகளையும் விளக்கும் மத்திய - பன்முகத் தொடர்பினை ஒப்பிடுவதற்கு உதவுகிறது. அத்துடன் ஒவ்வொரு ஏற்பாட்டிலும் உள்ள உறவுகளை அவற்றின் உறுதிப்பாடு, மற்றும் சமச்சீரின் அடிப்படையில் நோக்கவும் உதவுகிறது. வரைபடம் 4 இல் இத் தொடர்புகள் ஒரு முக்கோண மாதிரியில் காட்டப்படுகின்றது.
(viii)உள்ளூர் மற்றும் அரசுசார்பற்ற சமஷடி வாதம்
மேற்படி சகல கோட்பாடுகளும், ஏற்பாடுகளும் உள்ளூர் மட்டத்திலும் பிரயோகிக்கப்படுகின்றன. உதாரணமாக இஸ்ரேல் ஒருமுறையான மத்திய
மயப்படுத்தப்பட்ட அரசாகும். ஆனால் உள்ளூர் மட்டத்தில் நாட்டின்
35

Page 20
அட்டவணை 4: சமவடிடி ஏற்பாடுகளின் பல்வேறு மாதிரிகள்
(தெரிவு செய்யப்பட்டவை)
g|La LuôOnL ஆட்சிப் பிரதேசம்
அன்ரிகுவாபார்புடா ஆர்ஜென்டீனா கரீபியன் டென்மார்க்-பெக்டோஸ் பிரான்ஸ். அரபு லீக் ஜப்பாள் မ္လဖါးဆိur #ប្រយ៍ இந்தியா - காஷ்மீர் மொனாக்கோ ஆசியான் சொலமன் தீவுகள் နှီးနှီ# போர்த்துக்கல். அசோர்ஸ் மேஜெர்மனி- பெனிலக் வனாட்டு ற்கு ஜெர்மனி பேர்த்துக்கல்-தீர ெேபர்லின் مقافة
மலேஷியா ஐ.இரா - குவான்ஸி இத்தாலி- நாாடிக 6
மெக்ஸிக்கோ ஐ.இரா. ஜெர்லி சான்மன்னோ
U.A.R. ஐ.இரா - மேன் சுவிற்சலாந்து -
ஐ.அமெரிக்கா லீச்டென்ஸ்டைன்
வெனிசுவாலா
இத்தாலி ஆஸ்திரியா ஐரோப்பிய நெதர்லாந்து - நெதர்லாந்து -|அன்டோரா -|பிரித்தால ஸ்பெயின் 56LT சமூகம் குரசாவோ நெதர்லாந்து பிரான்ஸ் . பொது சூடான் நைஜீரியா செனகாம்பியா டென்மார்க் - அன்ரில்லிஸ் ஸ்பெயின் நலவாய தன்சானியா பாகிஸ்தான் கிறீன்லாந்து இந்தியா - ஐக்.இராச்சியம் சுவிற்சலாந்து பூட்டாள்
வடிவம LLJSGT *டி அல ஒன்றிணைந்த கூட்டுத் பேரை யூனியன் சமஷடி அமைப்பு 3LDG i. 9 (5 2. தலைமையாட்சி பரவை பெல்ஜியம் செக்கோஸ் பின்லாந்து - ஆலன்ட் நியூஸிலாந்துtit() U.S. ტმწ தீவுகள்
-லாவாக்கியா V- நியூஸிலாந்து - GATT இந்தியா போட்டோ நீகோ கொலம்பியா நதய U.S. நோர்மன் நியூ தீவுகள் -
யூகோஸ்லேவியா S, • நோாமன U.S. . தினியா ufurari) மார்ஷல் தீவுகள் நெதர்லாந்து U.S. . பப்புவா நியூகினி மைக்றோனிஸியா தென் ஆபிரிக்கா U.S. பாலங் இஸ்ரேல் லெபனன் நமிபியா
நட்புறவுப் பங்கீடுகள்
கிராமியக் குடியிருப்புக்கள் பிரதேச சபைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன இது நவீன கருத்துப்படி ஒரு சமஷ்டிக்கு உதாரணமாகும். இஸ்ரேலில் நகரங்கள் வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்காக நடைமுறை கூட்டிணைவுகளாக இணைக்கப்பட்டுள்ளன. அரசாங்க நிறுவன கட்டமைப்பில் சமஷ்டி ஏற்பாடுகள் பொதுவாகக் காணப்படுகின்றன உதாரணமாக புதிய பாடசாலைகள் பழைய பாடசாலைகளுடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளன. பாரிய நகரங்களி பெரும்பாலானவை உப பிரிவுகளின் ஒன்றியங்களாகும். ஜெருசலேம் ஹைபா போன்ற நகரங்கள் இத்தகைய ஒன்றியங்களே. நாட்டில் உள்: சகல நகரங்களும் தெளிவாக வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்கா
36

:
放
வரைபடம் 4: சமவடிடி ஏற்பாடுகளின் வடிவங்கள்
பேரவைகள்
உள்ளூர் அதிகார சபைகளின் இஸ்ரேலிய ஒன்றியம் என்ற அமைப்புக்குள் இணைக்கப்பட்டுள்ளன.
நகரப் பிரதேசங்களில் அரசியல் ஒன்றிணைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக சமஷ்டி முன் வைக்கப்பட்டுள்ளது. இவ்வகையான ஏற்பாடுகளுக்கு கனேடிய அனுபவம் குறிப்பாக ஒன்ராரியோ சிறந்த உதாரணமாகும். ஐக்கிய அமெரிக்கா சிறிது வித்தியாசமான சமஷ்டி ஏற்பாடுகளை மியாமி, மின்னசோட்டாவின் இரட்டை நகரங்கள் மற்றும் ஏனைய நகரப் பிரதேசங்களில் முயற்சி செய்துள்ளது. பாரிஸ், லண்டன் போன்ற ஐரோப்பிய பெரு நகரங்கள் இரு படி முறை கொண்ட அர்த்த சமஷ்டி (two - tiered - quasi - federal) ஏற்பாடுகளுக்கு உதாரணங்களாகும்.
சமஷ்டிக் கோட்பாடுகள் சமகால உலகின் அம்சங்களாக மாறிவிட்ட அரசு சாரா நிறுவனங்களின் அடிப்படையாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உலக நாடுகள் பலவற்றில் தொழிற்சங்க அமைப்புகளிற் குறிப்பாக தேசிய தொழிற்சங்க சம்மேளனங்கள் ஆகியவற்றுடனான தொடர்புகளில் சமஷ்டிக் கோட்பாடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல வர்த்தக கைத் தொழில் நிறுவனங்களிலும் சுகாதாரம் மற்றும் நலன் புரி
37

Page 21
நிறுவனங்களிலும் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு இவை சமஷ்டிக் கோட்பாடுகளை ஆட்சிப் பிரதேச அடிப்படையிலில்லாது செயற்பாட்டு அடிப்படையிலேயே பிரயோகிக்கின்றன. இது சமஷ்டிக் கோட்பாட்டுப் பிரயோகத்தின் இன்னொரு பரிமாணமாகும்.
நவீன கூட்டுத்தாபனங்களும் கூட ஓரளவுக்கு நவீன சமஷ்டிக் கோட்பாடுகளிலேயே ஊன்றி நிற்கின்றன. கூட்டுத்தாபனங்கள் மிகப் பெரிதாக வளர்ச்சியுற்றிருப்பதனால் அவை சமஷ்டி ஏற்பாடுகளில் அல்லது முழுச் சமஷ்டி வடிவத்தில் நாட்டம் கொண்டுள்ளன. அதாவது மிகச் சிக்கலான நிறுவனங்களைக் காத்திரமாகக் கொண்டு நடத்துவதற்கு சமஷ்டிக் கோட்பாடுகளே சிறந்தவையாக உள்ளன. இதே காரணங்களினா லேயே அரசுகளும் சமஷ்டி ஏற்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ளன. அண்மைக் காலங்களிற் பல நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டமைப்புகள் சமஷ்டிக் கோட்பாடுகளை மேலும் முன்னெடுத்துச் செல்கின்றன.
தொழிற் சங்கங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகள் ஒரு துறை சார்ந்த சம்மேளனங்களாக ஒன்று சேர்ந்துள்ளன. இவ்வாறான ஏற்பாடுகள் சமஷ்டி அரசியல் முறைமைகளில் மிகவும் பொதுவானவை. தாராள சனநாயகமானது பன்முகத்தன்மைக்கு அழுத்தம் தருவதால் சமஷ்டி ஏற்பாடுகளுக்குச் சிறந்த வாய்ப்பளிக்கிறது. உண்மையில் பல்கட்சி முறையிலான அரசியற் கூட்டுகள் ஒரு வகையிலான கட்சி சமஷ்டித் தன்மையையே காட்டி நிற்கின்றன. மேற் கூறப்பட்ட பல்வேறு உதாரணங்களின் காரணமாக எல்லா அம்சங்களும் சமஷ்டியாகவே உள்ளன எனக் கருதக் கூடாது. ஆனால் நமது காலத்தில் மனித ஒழுங்கமைப்புகளை உருவாக்குவதில் சமஷ்டிக் கோட்பாடுகளின் தாக்கம் எவ்வளவு அழுத்தமானது என்பதையே அவை காட்டி நிற்கின்றன.
3. சமவர்டி : ஒற்றுமையும் வேற்றுமையும்
சமஷ்டியின் மிக முக்கிய பண்புக் கூறுகளில் ஒன்று அது ஒரே நேரத்தில் ஒற்றுமையையும் வேற்றுமையையும் உருவாக்கிப் பேணுவதாகும். இந்த இரட்டைத் தன்மையானது சமஷ்டி என்னும் பதப் பிரயோகத்தின் பல்வேறு பரிமாணங்களில் தெளிவாகத் தெரிகிறது. சமஷ்டி என்னும் பதமானது அரசியல் ரீதியான ஒன்றுபடுத்தலுக்கும் அதே நேரத்தில் அரசியல் அதிகாரத்தைப் பன்முகப்படுத்திப் பேணுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் இப்பதப்பிரயோகம் உண்மையில் எதனைச் சுட்டி நிற்கிறது என்ற விளக்கமின்மையையும் ஏற்படுத்தி விடுகிறது.
இவ்விரட்டைத் தன்மையானது மிகவும் யதார்த்தமானது. ஏனெனில் சமஷ்டி என்னும் பதம் இருவகைச் செயன்முறைகளையுமே சுட்டுகிறது.
38

சமஷ்டிப்படுத்தல் என்பது ஒற்றுமையை உருவாக்கிப் பேணுதலையும் அதே நேரத்தில் அரசியல் அதிகாரத்தைப் பன்முகப்படுத்தலையும் காட்டுகிறது. இதன் காரணமாகவே மத்தியப்படுத்தல் - பன்முகப்படுத்தல் தொடர்புத் g56iT60)LD (Centralization-decentralization Continuum) 6TsiTuás d'LD6hl6Du அடையாளப்படுத்துவதை விட இன்னொரு தொடர்புத்தன்மையில் அதாவது மத்தியமயப்படுத்தாமை (Non - Centralization) அல்லது ஒற்றுமையையும் வேற்றுமையையும் காத்திரமாக ஒன்றுபடுத்தல் ஆகியவற்றில் அடையாளப்படுத்துவது இலகுவானது.
சமஷ்டியைப் பற்றி விவாதிக்கும் போது ஒற்றுமை வேற்றுமை ஆகியவற்றை ஒன்றுக்கொன்று எதிரானவை என்ற கருத்தில் எடுத்துக் கொள்வது தவறானதாகும். ஒற்றுமை என்பதற்கு எதிரானது ஒற்றுமையின்மை (Unity-disunity) எனவும் வேற்றுமை என்பதற்கு ஓரினத் தன்மை (Diversity-homogenity) எனவும் எடுத்துக் கொள்வது நல்லது. இது அச்சொற்களின் அரசியல் ரீதியான கருத்துக்கு அழுத்தம் தருவதாகும். வரைபடம் 5 இவ்விரண்டையும் இணைக்கும் போது ஏற்படும் விளைவைக் காட்டுகிறது.
அரசியல் ரீதியிலான அர்த்தமுள்ள வேற்றுமையை சமஷ்டி முறைமைகள் ஏற்றுக் கொள்வதை இவ் வரைபடம் பிரதிபலிக்கிறது. ஒஸ்திரியாவும், ஜேர்மனியும் இவற்றுக்கு முக்கியமான விதிவிலக்குகளாகக் காணப் படுவதுடன் அவற்றின் சமஷ்டி முறைமை ஓரினத் தன்மை கொண்ட விவாதங்களை எதிர்கொள்கிறது. இவ்விவாதங்கள் சமஷ்டிக்கெதிரான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. பெல்ஜியம், கனடா ஆகியவற்றில் இன்னொரு வகையான வாதம் முன்வைக்கப்படுகிறது. அதாவது இந் நாடுகளின் ஒற்றுமையைப் பேண சமஷ்டி ஏற்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு பலமான சமஷ்டி முறையின் மூலம் ஒர் உயர்ந்த மட்ட ஒற்றுமையையும் அதே அளவான வேற்றுமையையும் ஏற்படுத்த முடியும். (உதாரணம் சுவிற்சலாந்து). அதே போல ஒர் உயர்ந்தமட்ட வேற்றுமை பாரிய ஒற்றுமையின்மையையும் ஏற்படுத்த முடியும். (உதாரணமாக ஈராக்கில் அராபியர்களும், குர்ட்ஸ் (Kurds) இனத்தவரும் தொடர்ச்சியான சிவில் யுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஓரினத்தன்மை எப்பொழுதும் ஒற்றுமையை வளர்க்குமெனக் கூறிவிட முடியாது. 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் ஓரினத்தன்மை அங்கு ஏற்பட்ட சிவில் யுத்தத்தைத் தடுத்துவிடவில்லை. அதேபோல பிரித்தானியாவிற்கும் அதன் அமெரிக்கக் குடியேற்றங்கட்கும் இடையிலிருந்த ஓரினத்தன்மை 18ஆம் நூற்றாண்டில் அமெரிக்கப் புரட்சியைத் தடுத்துவிடவுமில்லை. எனவே பல்வேறு வடிவங்களில் ஐக்கியமும் ஐக்கிய மின்மையும் இருப்பதைப் போன்று பல்வேறு வடிவங்களில் வேற்றுமைகளும் உள்ளன.
39

Page 22
வரைபடம் 5: குறிப்பிட்ட சில சமஷ்டி, சமஷ்டி அல்லாத முறைமைகளில்
ஒற்றுமையும் வேற்றுமையும் (1970களின் மத்தியில்)
ஒற்றுமை ಲULTST ஐ.இராச்சியம்
0 சுவிற்சலாந்து இடன்மார்க் இஸ்ரவேல்
ஜேர்மனி அவுஸ்திலேலியா • ஐ அமெரிக்கா போலந்து 9 ?  ைமெக்சிக்கோ
நெதர்லாந்து
gif
• ஒஸ்திரியா 0 பிறேசில்
வெளிசூலா •
9 கொலம்பியா
ம் பிரான்ஸ் மலேசியா 9
சு சீனா
நைஜீரியா 0
சு சூடான்
உதன்சானியா தெ. அபிரிக் இந்தியா சிைலி ഉ. . |'' ''". ";
லெபனான்
ஓரினத்தன்மை வேற்றுமை
556ts
O
ஹென்ரீன பாகிஸ்தான் பெல்ஜியம் ஆoஜனானா ம O O
Lurr DI O
ஈராக் சைபிரஸ் O O
ஒற்றுமையின்மை
Source: Daniel J. Elazar (1979).
40

நிலைப்படுத்தப்பட்ட ஐக்கியத்துக்கும் (பிரான்ஸ்) சமஷ்டி மூலம் பெறப்பட்ட ஐக்கியத்துக்கும் (சுவிற்சலாந்து) வேறுபாடு உள்ளது. வேற்றுமைகள் தேசிய இனம் அல்லது இனத்துவ, மத, சித்தாந்த, சமூகக் காரணிகளினால் வெளிப்படுத்தப்படுகின்றன. இவை ஓர் அரசியல் வெளிப்பாட்டைப் பெறலாம் அல்லது பெறாமல் விடலாம் . நிலைப்படுத்தப்பட்ட ஐக்கியமானது (Consolidated Unity) வேறுபாடுகளின் அரசியல் தன்மையைக் களைய முற்படுகிறது. அல்லது அவற்றின் அரசியற் தாக்கங்களைக் குறைக்க முற்படுகிறது. மறுதலையாக சமஷ்டி வாரியான ஐக்கியமானது (Federal Unity) வேற்றுமைகளில் அரசியல் வெளிப்பாடுகளை ஏற்றுக் கொள்வதோடு வேற்றுமைகளை அரசியலின் சட்டரீதியான கூறுகளாகவும் மாற்றுகிறது. நிலைப்படுத்தப்பட்ட அரசுகள் பல்வாறாக இருப்பினும் அவற்றில் வேற்றுமைகள் விரும்பத் தக்கதாக ஏற்கப்படுவதில்லை. இங்கு முக்கியமான கேள்வி என்னவெனில் எத்தகைய வேற்றுமைகள் சமஷ்டிக்குப் பொருத்தமானவை என்பதும் எவை பொருத்தமற்றவை என்பதுமாகும்.
4. கட்டமைப்பும் செயன்முறையும் என்றளவில்
சமவடிடிவாதம்
நவீன சமஷ்டி வரலாற்றின் ஆரம்பக் கட்டத்தில் சமஷ்டி ஏற்பாடுகளுக்கான சகலதும் சமஷ்டிக் கட்டமைப்பிலேயே தங்கியிருந்தன. அதாவது சமஷ்டிக் கட்டமைப்பு ஒழுங்கமைக்கப்பட்டவுடன் அது சமஷ்டி நடைமுறைகளுக்கு வழிவகுக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால் அண்மைக்காலமாக இந்த அணுகுமுறையின் வரையறைகள் உணரப்படுகின்றன. ஏனெனில் சமஷ்டிக் கட்டமைப்புகளைக் கொண்ட பல நாடுகளில் உண்மையான சமஷ்டி நடைமுறைகள் இல்லை என்பதை அநுபவங்கள் காட்டி நிற்கின்றன. சமஷ்டிக் கட்டமைப்புகள் அதற்கு முற்றிலும் முரணான அதிகார மத்தியத்துவத்தை மூடி மறைக்கப் பயன்படுகின்றன.
இவ்விடயம் பற்றி ஆராய்ந்தபோது சமஷ்டிக் கட்டமைப்பைப் போலவே சமஷ்டிச் செயன்முறைகளும் முக்கியமானவை என்பது வெளிப்பட்டது. அதிலும் குறிப்பாக செயன்முறையானது அரசியல் - கலாசாரப் பரிமாணத்தை உள்ளடக்கக் கூடியதாக வரையறுக்கப்பட்டிருப்பின் அது கூடிய முக்கியத்துவத்தைப் பெறும் . சமஷ்டிக் கூறுகள் சமஷ்டி செயன்முறையில் பங்காளிகளாக இருக்க வேண்டும். பிரச்சினைகளிலும் திட்டங்களிலும் கருத்தொருமைப்பாட்டை அடைவதில் சகலரும் ஒத்துழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் இயங்க வேண்டும். அது முடியாத வேளையிலும் கூட ஒவ்வொரு கூறினதும் தனித்துவம் பாதுகாக்கப்படக் கூடியதான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அரசுகளின் செயன்
41

Page 23
முறைகளில் சமஷ்டிக் கோட்பாடுகள் உண்மையாகவே பின்பற்றப்படும் போதுதான் அங்கு சமஷ்டி அமைப்பு அர்த்தமுடையதாகிறது.
செயன்முறை முக்கியம் எனக் கூறப்படுவது சமஷ்டிக் கட்டமைப்பின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்காக முன் வைக்கப்படும் வாதமன்று. உண்மையில் சமஷ்டி என்பது கட்டமைப்பையும் செயன்முறையையும் ஒன்றிணைக்க வேண்டும். இத்தகைய இணைப்புத்தான் சமஷ்டியை உருவாக்குகிறது. செயன் முறையில் சமஷ்டி இல்லாத சமஷ்டி கட்டமைப்புகளில் சமஷ்டியின் தாக்கம் இருப்பினும் கூட இறுதிப் பகுப்பாய்வில் சமஷ்டிக் கோட்பாடுகள் இரண்டாந்தரமாகி விடுகின்றன. சோவியத் யூனியனிலும், சில லத்தீன் அமெரிக்க அரசுகளிலும் இந்த நிலைமையே காணப்படுகிறது.
சில குறிப்பிட்ட காலங்களில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்காக சில அரசுகளில் சமஷ்டிக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் அவ்வாறான கட்டமைப்புக்கு முன் நிபந்தனையாக அமையும் சமஷ்டிச் செயன்முறைகள் எந்தளவுக்கு அக் கட்டமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதைப் பற்றி ஒப்பீட்டளவில் எமக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. சமஷ்டிக் கட்டமைப்பு இல்லாத நிலையிலும் கூட குறைந்தளவான சமஷ்டிச் செயன்முறை சில சந்தர்ப்பங்களில் இருக்கக் கூடும். ஆனால் அங்கும் கூட பின்னர் கட்டமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். வரைபடம் 6 இல் இப்போதுள்ள தெரிவு செய்யப்பட்ட சில சமஷ்டி அரசுகளில் தற்போதுள்ள சானர் றுகளின் அடிப்படையில் கட்டமைப்பு மற்றும் செயன்முறை ஆகியவற்றின் மதிப்பீட்டைக் காட்டுகிறது. கட்டமைப்பு மாத்திரம் சமஷ்டிக் கோட்பாடுகளை ஓர் அரசு பின்பற்றுகின்றது என்பதை நிரூபிக்கப் போதுமானதன்று.
5. சமவடிடி வாதத்தின் சமூக, ஆள்புலக், கலாசார
வெளிப்பாடுகள்
(i) GF passio (Social )
சமஷ்டிவாதம் அதன் அரசியல் சார்ந்த கருத்தில் அரசாங்கங்கள் அல்லது அரசுகளுக்கிடையிலான தொடர்புகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமஷ்டி வாதம் பற்றிய இந்த எண்ணக் கரு பரவலாக ஏற்கப்படுகிறது. ஆனால் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து சமஷ்டி வாதத்தின் சமூக அம்சம் வலியுறுத்தப்பட்டு இன்று சமஷ் டி ஒரு சமூகக் கருத்தாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. இத்தகைய சமூகம் சார்ந்த எண்ணக் கருவாக்கமானது தன்னை இரு வழிகளில் வெளிப்படுத்தி நிற்கிறது. முதலாவது தனி மனிதர்கள் சம்பந்தப்பட்டது. அதாவது தனிநபர்கள்
42

வரைபடம் 6 : சமவடிடி அரசுகளிலும் சமஷ்டி அல்லாத சில தெரிவு
செய்யப்பட்ட அரசுகளிலும் கட்டமைப்பும் செயன்முறையும்
செயன்முறை dFLD6haq
சுவிற்சலாந்து 9 start யு.எஸ்.ஏ
O e இஸ்ரவேல் 9 நெதர்லாந்
9 லெபனான் நதாலாநது
மே.ஜேர்மனி .gritjaub O జ్మిశి ()
அவுஸ்திரேலியா தன்சானியா o
భu Ogisgust
மலேசியா
O சூடான் պ, 6J. *
O
பின்லாந்து
டென்மார்க் O இத்தாலி O தென்ஆபிரிக்கீ * 9 ஒஸ்திரியா நியூசிலாந்து கட்டமைப்பு ஒற்றையாட்சி சமஷ்டி
சிங்கப்பூர்
ULUTSಳ್ಯ யூகோஸ்லாவியர் கு
நைஜீரியாக
சபாகிஸ்தான் கொலம்பியா பிறேசில்
குஆஜென்ரீனா
9 வெனிசூலா பிரான்ஸ்
O  ைஈராக் கு மெக்சிக்கோ
சயர் 0 போலந்து O
.எஸ்.எஸ்.ஆர் C) ქfiნტ) ● Lii LDT u ಳೆ e எகிப்து செக்கோஸ்லாவியா
சீனா O
ஒற்றையாட்சி
43

Page 24
தமக்கிடையிலும், குடும்பத்திலும், சமூகத்திலும் தனிமனிதனின் தனித்துவப் பண்புகளை ஏற்றுப் பொது நோக்கங்களுக்காக சமஷ்டி ரீதியாகத் தொடர்பு கொள்ளுதலாகும். இரண்டாவது அம்சம் பிரான்சிலும் ரஷ்யாவிலும் சிந்தனையாளர்களால் முன் வைக் கப்பட்டது. இவர்கள் சமூகப் பிரச்சினைகளுக்குச் சமஷ்டித் தீர்வுகளைக் கண்டனர். இவர்கள் சமஷ்டி வாதத்தில் இணக்கமான சமூக உறவுகளையும் பொருத்தமான அரசியல் ஏற்பாட்டையும் கண்டனர்.
இவ்விரண்டாவது அம்சமானது நிரந்தரமான சமய, இனத்துவ, கலாசார, சமூகக் குழுக்கள் இருக்கத்தக்கதாக அவற்றின் அடிப்படையில் அரசியல் வாழ்க்கை அமைக்கப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இக் குழுக்களின் அடிப்படையில் அரசியல் ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டாலும், செய்யப்படாவிட்டாலும் இக்குழுக்கள் அரசின் துரண்களாக விளங்கும் . இதனை அண்மைக் காலமாக அரசியல் விஞ்ஞானிகள்"நட்புறவுப் பங்கீட்டு ஏற்பாடுகள்” (Consociational arrangements) எனக் கூறுகின்றனர். நட்புறவுப் பங்கீட்டு ஏற்பாடுகள் முறையான வகையில் உருவாகுவதில்லையெனினும் பின்னர் இவை சட் ரீதியாக நிறுவனப்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக அவை அரசியல் யாப்பமைதியையும் பெறுகின்றன. இந்த இரண்டாவது படியானது அவற்றை சமஷ்டி அமைப்புக்குள் இட்டுச் செல்கிறது.
நட்புறவுப் பங்கீட்டு ஏற்பாடுகள் சமஷ்டி அமைப்புக்குள் உறுதிசெய்யப்படல் வேண்டும் . அல்லாது விடின் அவை ஒரிரு தலைமுறைக்குள் சிதைவடையலாம். அல்லது வேறொன்றாக உருமாற்றம் பெறலாம். இவ்வாறு தான் டச்சு நட்புறவுப் பங்கீட்டுவாதம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் டச்சு ஆட்சிமுறையின் (Dutch Regime) அடிப்படையாக மாறி இரண்டாம் உலகப்போரின் பின்னர் சிதைவடைந்தது. பெல்ஜிய நட்புறவுப் பங்கீட்டுவாதம் இதே கால கட்டத்தில் ஆட்சிப்பிரதேச ஏற்பாடாக மாற்றம் அடைந்தது. லெபனானின் நட்புறவுப் பங்கீட்டு ஏற்பாட்டின் தேசிய கட்டுறுத்து ஒரு பரம்பரையின் பின்னர் 1975இல் சிவில் யுத்தமாக மாற்றமடைந்தது. இஸ்ரேலில் சித்தாந்தக் கட்சிகளின் வீழ்ச்சியானது அதன் நட்புறவுப் பங்கீட்டுப் பண்புக் கூற்றினை மாற்றி விட்டது. தூய்மையான நட்புறவுப் பங்கீட்டுவாதம் மிகவும் குறைந்த காலமே நிலைக்க முடியும், ஏனெனில் ஆட்சிப் பிரதேச சமஷ்டியின் அரசியல்யாப்பு அடிப்படை நட்புறவுப் பங்கீட்டு வாதத்துக்கு இல்லை.
பல சமஷ்டி அரசுகளில் சமஷ்டி எண்ணக் கருவின் சமூகப் பரிமாணம் கவனத்தில் எடுக்கப்படவில்லை. எனினும் வெற்றிகரமாக நடைபெறும் சமஷ்டி அரசுகளில் சமூகப் பரிமாணம் உட்பட சமஷ்டி அரசியற் கட்டமைப்பும் , தெளிவான சமஷ்டி அரசியற் செயன்முறையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சில நாடுகளில் சமஷ்டி
44

வாதத்தின் சமூகப் பரிமாணம், அதன் வெளிப்படையான அரசியற் பரிமாணம் இன்றிக் காட்டப்படுகின்றன. வரைபடம் 7 இல் சில தெரிவு செய்யப்பட்ட சமஷ்டி அரசுகளிலும், சமஷ்டி அல்லாத அரசுகளிலும் இவ்விரண்டு பரிமாணங்களின் இணைவு விளக்கப்பட்டுள்ளது. அரசியற் பரிமாணத்தின் மதிப்பீடு இவ் வகைப்படுத்தலின் பெறுபேற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சோவியத் யூனியன் அதன் கட்டமைப்பு இருப்பினும் மிகக் குறைவான புள்ளிகளையே இப்பரிமாணத்தில் பெறுகிறது. சமூகப் பரிமாணத்தின் மதிப்பீடானது ஒர் அரசிற் காணப்படும். கூட்டிணைவு நடத்தையின் அளவை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
(ii) g, 6T 6Uúd (Territorial)
சமஷ்டி முறைமைகளில் சமூக அரசியல் ஒழுங்கமைப்பின் புவியியல் அடிப்படையை உருவாக்குவதில் சமஷ்டி முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய சமஷ்டி முறைமைகள் அதிகாரத்தின் அடிப்படை ஆட்சிப் பிரிவுகளையே அடித்தளமாகக் கொண்டுள்ளன. இதனால் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆள்புலமே அடிப்படையாக உள்ளது. பிரதான பிரிவுகளின் நிரந்தரமான எல்லைகள் அதிகாரப் பிரிவுக்கு உறுதியான தடைகளாக அமைந்துள்ளன. அவை நிரந்தரமான அரசியல் அலகுகளாக அமைந்து பல்வேறு நலன்களும் தமது குரல்களை ஒலிக்கத் தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்குகின்றன. ஒரு நலன் புதிதாகவோ அல்லது பழையதாகவோ இருந்த போதும் அது வரையறுக்கப்பட்ட அரசியல் ஆட்சிப் பிரதேசத்தில் முறைாக அமைந்துள்ளது. இதனால் ஒவ்வொரு நலனும் தனது வலிமைக்கேற்ற விதத்தில நாட்டின் அரசியற் பொறி முறைகளைப் பயன்படுத்தித் தனது குரலை ஒலிக்க முடியும்.
இது தொடர்பாக இரண்டு அமெரிக்க அனுபவங்களை உதாரணமாக முன்வைக்க முடியும். ஒரு காலத்தில் மரபு சார்ந்த தென்பகுதி நலன்களை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்திய புளோரிடா மாநிலம் இன்று வடகீழ் பகுதியைச் சார்ந்த ஓய்வூதியக்காரர்களுக்காகவும், விண்வெளித்திட்ட ஆரம்ப கர்த்தாக்களுக்காகவும் குரலெழுப்புகிறது, 19 ஆம் நூற்றாண்டில் டெட்ரொயிட் பகுதியானது யங்கி (Yankee) வர்த்தக மற்றும் தொழில் நலன்களுக்கு ஓர் அதிகாரத்தளமாக இருந்தது. இன்று அது ஒரு மோட்டார் உற்பத்தி மையமாகப் பொருளாதார மாற்றம் பெற்றதன் காரணமாக அரசியல் ரீதியாகவும் மாற்றமடைந்து இனத்துவ மற்றும் கறுப்பின மோட்டார் தொழிலாளர்களின் அதிகாரத்தளமாக மாறிவிட்டது. ஆனால் அது தன்னுடைய அடிப்படை அரசியற் கட்டமைப்பையோ அல்லது நிறுவனங்களையோ மாற்றிக் கொள்ளவில்லை. அண்மைக் காலமாக டெட்ரொயிட்டின் கறுப்பினத்தவர் மொத்த சனத்தொகையில் தமது பங்கைக் கூட்டிக் கொண்டதனால் இந்த மோட்டார் நகரத்தின் அரசியற் கட்டுப்பாட்டையும் பெற்றுக்கொண்டனர். இத்தகைய மாற்றங்கள் தேசிய
45

Page 25
வரைபடம் 7: தெரிவு செய்யப்பட்ட அரசுகளில் சமூக மற்றும் அரசியல் தோற்றப்பாட்டின் அடிப்படையில் சமஷ்டி வாதம்
சமூகத் தோற்றப்பாடு பூரணமாக உள்ளது
சுவிற்சலாந்து உஇஸ்ரவேல் O
யு.எஸ்.ஏ 0 நெதர்லாந்து
ஒஸ்திரியா O
வெபனான் 0
நைஜீரியா இந்தியா ஃ.இராச்சியம் O O O நோர்வே
அரசியல் தோற்பாடு பூரணமாக இல்லை JSRTLDT as O 6T6T.
ெைபல்ஜியம்
Odi of sir மெக்சிக்கோ 0ஆஜென்ரீனா
9 பிறேசில்
யு.எஸ்.என்.ஆர் ஜேர்மனி அபிரான்ஸ் p 52*) סTLD
இத்தாலி
பூரணமாக இல்லை
46

அரசியல் முறைமையை மாற்றியமைக்காமலேயே ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் ஆள்புலச் சனநாயகம் இருப்பதாகும்.
ஆள் புல அதிகாரமானது சிறுபான்மைச் சமூகங்களுக்குக் கூடிய தன்னாதிக்கம் வழங்குவதன் மூலம் அவர்களைப் பாதுகாக்கவும் வழி செய்கிறது. பல்வேறு தேசிய இனங்களும் சமஷ்டியைக் கையாண்டு ஒற்றுமையாக வாழ்ந்து வருவதற்கு யூகோஸ்லாவியா சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இந்தியா தனது மொழிவாரிச் சிறுபான்மை இனங்களின் அபிலாஷைகளுக்கு இடங்கொடுக்கச் சமஷ்டி அமைப்பைப் பயன்படுத்தியுள்ளது. நைஜீரியா தனது பிரதான இனக் குழுக்களுக்கு அதிகாரத்தை வழங்குவதற்காகத் தனது மூன்று மாநிலங்களை 19 மாநிலங்களாகப் பிரித்துள்ளது. அதே நேரத்தில் எந்த ஓர் இனக் குழுவும் உயர்ந்த ஸ்தானத்தைப் பெறுவதை அது தடுத்துள்ளது. அதே நேரத்தில் மிகச் சிறிய இனக் குழுக்களின் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கு உள்ளூராட்சி அமைப்பைப் பயன்படுத்தியுள்ளது. கனடா , செக்கோஸ்லாவாக்கியா, சுவிற்சர்லாந்து மற்றும் சோவியத் யூனியன் உட்பட பல சமஷ்டி அரசுகள் தம்மளவில் உதாரணங்களை வழங்குகின்றன.
சமஷ்டியின் புவியியல் ரீதியான தாக்கம் இன்னும் ஒரு பரிமாணத்தையும் கொண்டுள்ளது. சமஷ்டி அரசுகளில் ஒரு குறிப்பிட்ட நகர மையம் ஆட்சி செலுத்துவதில்லை. ஒரு சமஷ்டி அமைப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட நகரங்கள் சம ான முக்கியத்துவத்தைக் கொண்டு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிற, பான செயற்பாடுகளையும் கொண்டு விளங்குகின்றன. இதற்கு உதாரணமாக பிரான்சையும் , மேற்கு ஜேர்மனியையும் எடுத்துக் கொள்ளலாம். இவ்விரண்டு அரசுகளும் பருமனில் சமனானவை, பிரான்சில் சகலமும் பாரிஸ் நகரத்தை மையமாகக் கொண்டுள்ளன. ஆனால் ஜேர்மன் சமஷ்டிக் குடியரசில் எந்த ஒரு நகரமும் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறமுடியாது. சமஷ்டி முறைமைகள் பொதுவாக ஜேர்மனியைப் பின்பற்ற ஒற்றையாட்சிகள் பிரான்சிய மாதிரியைப் பின்பற்றுகின்றன.
காலனித்துவ நாட்களில் பிரெஞ்சுக்காரர்கள் தலைநகர் பிரான்ஸ் எனக் கதைப்பதுண்டு. ஏனெனில் தலைநகர் பிரான்சில் தலைநகர் பாரிஸ் இருந்தது. ஒரு முழுமையான சமஷ்டி முறையைப் பிரெஞ்சுக்காரர்களைப் போல வரையறைப்படுத்துவது நினைத்துப் பார்க்க முடியாததாகும். உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவில் வாஷிங்டன் தேசிய தலை நகரமாகும். ஆனால் அது ஒரு அரசாங்க மையம் மாத்திரமே. உண்மையில் பாரிஸ் நகரத்துக்குள்ள அரசாங்க மையத்தன்மை வாஷிங்டனுக்கில்லை. பொருளாதார, கலாசார நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் அமெரிக்காவில் வாஷிங்டனை விட முக்கியத்துவம் கூடிய ஐந்து நகரங்களையேனும் குறிப்பிடமுடியும். இவற்றில் நியூயோர்க் மிகக் கூடிய முக்கியத்துவம் கொண்டது. பொஸ்டனைக் கல்விசார் தலைநகரமாகவும்
47

Page 26
லொஸ் ஏஞ்சல்சைக் களியாட்டத் தலைநகரமாகவும் கொள்ளலாம். மேலும் நியூயோர்க், லொஸ் ஏஞ்சல், நஷ்வில், பிலடெல்பியா, ஒஸ்டின், ரெக்சாஸ் போன்றவைகளைப் பிரபல்யமான சங்கீதத் தலைநகரங்களாகவும் கொள்ளலாம்.
கனடாவும் கூட இவ்வகையான சமஷ்டித் தன்மையையே காட்டுகிறது. தலைநகரமான ஒட்டாவாவிற்கு உண்மையில் வாஷிங்டனுக்கு உள்ள முக்கியத்துவம் கூட இல்லை. நாட்டின் உண்மையான மையங்களாக ரொரன்ரோவும், மொன்றியலும் விாங்குகின்றன. அரசாங்கத்தை விட ஏனைய சகல துறைகளிலும் இவ்விரு நகரங்களுமே முக்கியத்துவம் பெறுகின்றன. கியூபெக் தலைநகரம் மொன்றியலின் அரசியல் முக்கியத்துவத்தைக் குறைக்கிறது. மேற்குக் கரையில் வன்கூவரும் மத்தியில் வின்னிபெக்கும் ஒட்டாவை விடப் பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியமானவை. உண்மையான சமஷ்டி முறைகளில் தலை நகரங்கள் இருக்க முடியாது. அங்கு அரசாங்க ஆசனம் அதிகார மையங்களாகவே உள்ளது. தலைநகரம் எனும் பொழுது அது அரசாங்கத்தின் உச்சியையே குறிக்கிறது. ஆனால் 'ஆசனம்' என்று சொல்லும் பொழுது அது அனைவரும் கூடுகின்ற இடத்தைக் குறிக்கிறது. இத்தகைய தோற்றப்பாட்டின் சிறந்த உதாரணம் சுவிற்சலாந்தாகும். பேண் நகரத்தை யாரும் தலைநகரம் என்று சொல்வதில்லை. அது சமஷ்டி அரசாங்கத்தின் உத்தியோக ரீதியான ஆசனம் (Seat) மாத்திரமே. அமெரிக்காவிலும் கூட வாஷிங்டனை நாட்டின் தலைநகராகக் குறிப்பிடும் வழக்கம் பின்னரே ஏற்பட்டது. உண்மையில் வாஷிங்டன் ஆரம்பத்தில் தேசிய நகரம் என்றே கூறப்பட்டது. தலைநகர் என்னும் சொற்பிரயோகம் ஐக்கிய அமெரிக்காவில் இன்னும் எல்லாராலும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் சமஷ்டி அதிகாரிகளும் தொடர்பு சாதன நபர்களும் தலைநகர்’ என்னும் பதத்தை விரும்புகின்றனர். ஏனெனில் அவர்கள் நாட்டையும் உலகத்தையும் ஒரு வாஷிங்டன் மையப் பார்வையில் நோக்குவதற்கு விரும்புகின்றனர்.
பொதுவாக ஒரு குறிப்பிட்ட சமஷ்டி அமைப்பில் மத்திய மயப்படுத்தலின் அளவுக்கும் ஒரு தனியான தேசிய தலைநகரத்தின் தோற்றத்திற்கும் ஒரு தெளிவான தொடர்பு உள்ளது. உதாரணமாக ஆர்ஜென்டினா, மெக்சிக்கோ, வெனிசூலா ஆகிய மூன்று சமஷ்டி அமைப்புகளிலும் சமஷ்டிக் கோட்பாடு அரசியலில் ஒப்பீட்டளவில் குறைவான செல்வாக்கையே செலுத்துகிறது. எனவே புவனஸ் அயர்ஸ், மெக்சிக்கோ நகரம், கரகாஸ் ஆகிய நகரங்களில் சகல செயற்பாடுகளும் மையங் கொண்டுள்ளன. இதே காரணிகள் பிரேசிலிலும் செல்வாக்குச்செலுத்துகின்றன. எனினும் பல்வேறு அரசியல், சமூக, வரலாற்றுக் காரணங்களுக்காக இவ்வாறு மையப்படுத்தல் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகிறது. இங்கு நகர முக்கியத்துவமானது றியோடிஜெனிரோவிற்கும், சாயோபோலோ முதலிய ஏனைய நகரங்களுக்குமிடையில் பங்கிடப்பட்டுள்ளது. .
48

இக்கோட்பாடு ஐரோப்பாவில் இன்னும் அழுத்தமாகப் பின்பற்றப்படுகிறது. ஜெர்மனியில் பெர்லின், ஹம்பேர்க், பிராங்பேர்ட், மியூனிச், பொன் ஆகிய நகரங்கள் சமமான முக்கியத்துவம் கொண்டவையாகும். நெதர்லாந்திலும் அம்ஸ்ரர் டாம், றெட்டர்டாம் , ஹேக் ஆகிய நகரங்கள் சமமான முக்கியத்துவம் பெறுகின்றன. சுவிற்சலாந்தில் சூரிச், ஜெனீவா, பாசல், பேர்ன் ஆகியவை சமமான முக்கியத்துவம் கொண்ட மையங்களாகும். யூகோஸ்லாவியாவிலும் பெல்கிரேட், ஷாக்ரப் மற்றும் ஏனைய குடியரசுத் தலைநகரங்கள் சமத்துவமானவையாகும். சோவியத் யூனியனில் மொஸ்கோவும், லெனின்கிராட்டும் நீண்ட காலமாகவே முக்கியத்துவம் பெற முயன்றுள்ளன. அதே போல ஏனைய யூனியன் தலைநகரங்களும் முக்கியமானவையேயாகும்.
இத்தாலியை ஒற்றுமைப்படுத்தவும் அதிகாரத்தை மையப்படுத்தவும் புதிய மாநிலமான றோமில் அரசியற் பொருளாதார கலாசார வாழ்வை ஒருமுகப்படுத்த ஒவ்வொரு ஏற்பாடும் செய்யப்பட்டது. எனினும் இத்தாலியானது பிரதேசங்களின் கூட்டமைப்பாகவே நிலைத்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏனைய நகர மையங்களைக் குறிப்பாக வடபகுதியில் இருந்த நகரங்களை அபிவிருத்தி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக அரசியல் யாப்பு அடிப்படையில் பிரதேச அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன.
ஐரோப்பாவில் இவ்வாறான பொது விதிக்கு விலக்காக அமைவது ஒஸ்திரியா மட்டுமேயாகும். இங்கு வீயன்னாவின் முக்கியத்துவத்தை வேறு எந்த நகரமும் பெறவில்லை. ஹப்ஸ்பேர்க் சாம்ராஜ்ய காலத்தில் பல மாநிலங்களும் அதேபோல பல நகரங்களும் முடியாட்சி அதிகாரத்தின் கீழ் இருந்தன. எனினும் முதலாம் உலகப்போருக்குப் பின் ஒஸ்திரியாவின் பருமன் வெகுவாகக் குறைக்கப்பட்டதன் காரணமாகவும் அது ஒரு நகர அரசாக உருமாறியிருக்கலாம். உண்மையில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒஸ்திரியாவின் கிழக்கு எல்லை பொருளாதார நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டதால் சிறு நகர மையங்கள் குறிப்பாக மேற்கிலும் மத்திய பகுதியிலும் வளர்ச்சியடைந்தன. அது நாட்டின் உள்ளக அதிகார சமநிலையை மாற்றியமைத்தது.
ஆசியாவின் சமஷ்டி அரசுகளும் இதே அமைப்பையே காட்டுகின்றன. பம்பாய், கல்கத்தா, சென்னை, புதுடில்லி ஆகிய நகரங்கள் இந்தியாவில் சமமான தரத்தையே கொண்டுள்ளன. மலேஷியாவில் நகரங்கள் மிகவும் குறைந்த பங்கினையே வகிக்கின்றன. இஸ்ரேல் நகர முக்கியத்துவத்தை ஜெருசலேம், டெல் அவிவ், ஹைபா, பீர்ஷிபா ஆகிய நகரங்களிடையே பகிர்ந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் மெல்போர்ண், சிட்னிக்கு இடையிலும், பேர்த்துக்கும் அடிலெய்ட்டுக்கும், கன்பெராவுக்கும் இடையிலே உள்ள தொடர்புகளில் உள்நாட்டு இனத்துவ மொழிப்பிரிவுகள் இல்லாத கனடாவின் தன்மை பிரதிபலிக்கப்படுகின்றது.
49

Page 27
சமஷ்டியானது அரசியல் ஒன்றிணைப்பில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகிறது என்பதற்கு நைஜீரியா சிறந்த உதாரணமாகும். இன்றைய உலகிற் கூடிய இனத்துவப்பிரிவுகள் கொண்ட நாடாக நைஜீரியா விளங்குகிறது. அதன் காரணமாக நாட்டைக் கட்டியெழுப்புவதில் அந்நாடு சமஷ்டிக் கோட்பாடுகளில் நிறைந்த நம்பிக்கையைக் கொண்டுள்ளது. சிவில் யுத்தங்களும், இராணுவ ஆட்சியும் கூட இந்த நம்பிக்கையைத் தகர்த்துவிடவில்லை. பிரித்தானியர்கள் ஆட்சி செய்தபோது இனத்துவ, பிரதேச பகைமைகளுக்கு அப்பாற் செயற்படுவதற்காக லாகோஸ் என்னும் நகரத்தைக் கட்டியெழுப்பினர். இது இப்போது சமஷ்டித் தலைநகரமாக இருந்தபோதும் நாட்டின் தலை நகரமாகச் செயற்படுவதற்காக இன்னுமொரு நாட்டின் மையப் பகுதியில் நகரம் கட்டப்படுகிறது. சிவில் யுத்தங்களின் போது இராணுவ ஆட்சியாளர்கள் முன்பு இருந்து வந்த நான்கு மாநிலங்களைப் 12 மாநிலங்களாகவும் பின்னர் 19 ஆகவும் பிரித்தனர். பல்வேறு இனத்துவ அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதற்காகவே இவ்வாறு பிரிக்கப்பட்டது. அத்துடன் அபிவிருத்தி முயற்சிகள் இந்த 19 தலைநகரங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டன. இதன் மூலம் வளங்கள் ஒரேயொரு தலைநகரத்தில் குவிக்கப்படுவது தவிர்க்கப்பட்டது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் பன்முக அபிவிருத்திக்குச் சிறந்த உதாரணமாக நைஜீரியா விளங்குகிறது. தேசிய அபிவிருத்தி என்பதை ஒரு தலைநகரத்தைச் சுற்றி அடக்கிவிடலாம். நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் கொண்டுசெல்லப்படவேண்டும் என்பதை நைஜீரியா காட்டுகிறது.
(iii) es6untesFmryTo
உண்மையான சமஷ்டிமுறைகள் சமஷ்டியின் கட்டமைப்பிலும், யாப்பிலும் மட்டுமல்லாது கலாசாரத்திலும் பிரதிபலிக்கின்றன. அதாவது ஒரு நாட்டின் சகல சமூகங்களும் தமது சொந்த அடையாளங்களைப் பாதுகாத்துக் கொண்டு பொது இலக்குகளை அடைவதற்கு ஒன்று சேர்வதற்காகப் பல்வேறு உடன்படிக்கைகளையும், கட்டுறுத்துக்களையும் செய்து கொண்டுள்ளன என்னும் சமஷ்டிக் கோட்பாடு சமஷ்டி முறைகளில் காணப்படுகின்றன. இந்த அடிப்படையில் சமஷ்டியானது எஜமான் - அடிமை என்னும் மனப்பான்மையைத் தவிர்த்து மனித தொடர்புகளில் ஒன்றிணைக்கப்பட்ட, ஒத்துழைப்பான மனப்பான்மையை அழுத்தமாகக் காட்டிநிற்கிறது. இவ்வாறான மக்களின் "சமஷ்டிச்சிந்தனைக்குச்"சிறந்த உதாரணம் சுவிற்சலாந்தாகும்.
பலவழிகளில் சமஷ்டியின் வெற்றியானது சமஷ்டிவாதம் சமூகத்தில் எந்தளவுக்குக் கலாசார ரீதியாக ஊறிநிற்கிறது என்பதையும் பொறுத்துள்ளது. சமஷ்டி அமைப்புகளை மக்கள் மீது திணிக்க முயலும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. அதே நேரத்தில் சில
50

யூனியன்கள், நட்புறவுப் பங்கீடுகள் சமஷ்டிக் கட்டமைப்புகள் இல்லாத போதும் மக்களின் கலாசார ரீதியான ஆதரவு காரணமாகச் சமஷ்டி ஏற்பாடுகளைத் தக்கவைத்துக் கொள்வதில் வெற்றியடைந்துள்ளன. இதற்கு சிறந்த உதாரணம் நெதர்லாந்தாகும். இங்கு உள்ளூராட்சி ஏற்பாடுகளில் உள்ள நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் யாப்பு ரீதியாக ஒரு யூனியனாகவும், கலாசார ரீதியாக கூட்டிணைவு ஏற்பாடுகளாகவும் மலர்ந்திருக்கின்றன. பெல்ஜியம் தன்னுடைய சமஷ்டிப் பண்புகளைத் தனது கலாசாரத்தின் ஊடாக ஒன்றரை நூற்றாண்டுகளாகப் பேணி வந்திருக்கின்றது. இப்பண்புகள் இன்று முறையான சமஷ்டி ஏற்பாடுகளாக மலர்ந்துள்ளன. இத்தகைய ஏற்பாடுகள் சுதேசிய கலாசார நிலைமைகளுக்குப் பொருத்தமாக, மாற்றங்களுக்கு ஏற்றவகையில் அரசியல் ஒன்றிணைப்புகளை ஊக்குவிப்பதற்கான ஏற்றுக் கொள்ளல் முறைகளை இவ்விரு ஒழுங்குகளும் பிரதிபலித்து நிற்கின்றன.
படி முறையான சமூக உறவுகளை ஏற்றுக் கொள்ளும் கலாசாரங்களிலும் கூட சமஷ்டி வடிவங்கள் சில சமயங்களில் உறுதிப்படுத்தப்படுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் உள்ளூர் கலாசாரங்கள் தமது உள்ளூர் ஆதிக்கத்தில், மரபு காரணமாக, ஆழ்ந்த அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளன. இவ்வாறான சமஷ்டி ஏற்பாடுகளுக்குக் கலாசார அடிப்படைகளைப் பெறும் மாற்று ஏற்பாடுகளில் ஜேர்மனி, ஒஸ்திரியா, மற்றும் லத்தீன் அமெரிக்க சமஷ்டி முறைகள் சிறந்த உதாரணங்களாக விளங்குகின்றன.
அண்மைக் காலமாக அரசியல் கலாசாரம் தொடர்பாகக் கூடிய ஈடுபாடு காட்டப்பட்ட போதிலும் சமஷ்டி வாதத்தின் அரசியல் கலாசார அடிப்படையை விளங்கிக் கொள்வதற்குப் பெரிதாக ஒன்றும் செய்யப்படவில்லை. எனினும் வெற்றிகரமாக இயங்கும் சமஷ்டி முறைகளுக்கு ஒரு பொருத்தமான கலாசார அடிப்படையின் அவசியம் உணரப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்குப்பின்னர் சமஷ்டியை வெற்றிகரமாகக் கைக்கொள்ளும் ஒரேயொரு ஆபிரிக்க நாடான நைஜீரியா இத்தகைய ஆய்வு ஒன்றுக்குச் சிறந்த தளமாக விளங்குகிறது. இந்நாட்டின் பல்லினப் பண்புகள் அரசியல் அதிகாரத்தை உள்ளூர்ப் பிரதேசங்களுக்கு விரிவ படுத்துவதை ஊக்குவித்து வந்துள்ளது. அத்துடன் நைஜீரியாவின் மூன்று முக்கிய மக்கள் தொகுதியினரில் இரு தொகுதியினரான இபோ, யொரூபா ஆகிய மக்களின் கலாசாரம் சமஷ்டித் தன்மைக்கு ஏதுவானதாக அமைந்துள்ளது. இபோ மக்களின் மரபு சமத்துவமான மக்களிடையேயான உள்ளூர்ச் சுயாட்சியாகும். யொரூபாக்கள் தமது மரபு சார்ந்த அரசியல் நிறுவனங்களை உள்ளூர் சிலராட்சிகளின் (Oligarchies) அமைப்புகளைக் கொண்டு பேணி வந்திருக்கின்றனர்.
★ ★ ★ 女 ★
51

Page 28

I
அதி நவீனயுகம் சமவடிடி யுகமா?
1. உதிரும் நிலையில் நவீன தேசிய அரசு?
17ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் மத்திவரை நவீனகாலம் நீடித் திருந்தது. இக் கால கட்டத்தில் தான் சகல மனிதர்களுக்கும் ஏதோவொரு வகையில் பொதுவானதாகக் காணப்படும் இன்றைய மனிதகுல நாகரீகம் உருவாக்கப்பட்டது. இந்த முந்நூறு ஆண்டுகளில் ஐர்ோப்பிய நாகரீகத்திலும் அந்நாகரீகத்தின் செல்வாக்கிற்கு உட்பட்ட ஏனைய நாடுகளிலும் மத்திய மயப்படுத்தப்பட்ட, இறைமையுள்ள அரசுகள் கட்டியெழுப்பப்பட்டன. இவ்வரசுகளின் இலக்கு ஒரே மக்கள், ஒர் அரசாங்கம், ஒரே நாடு என்றமைந்தது.
சனநாயக நாடுகளில் இத்தகைய அரச வடிவத்துக்கும் அதன் எல்லைமீறல்களுக்கும் சிறந்த உதாரணமாக அமைவது பிரான்ஸ் ஆகும். ஏனெனில் சகல அரச அதிகாரங்களும் இங்கு பாரீஸ் நகரில் குவிக்கப்பட்டன. ஏனைய இனத்துவ, சமயக்குழுக்களின் அபிலாசைகளுக்கு அங்கு இடமிருக்கவில்லை. தமது பிள்ளைகளுக்கு தமது விருப்பத்துக்கு ஏற்றவிதத்தில் பெயரிடவும் அவர்களால் முடியவில்லை. எனவே அக்குழுக்களைச் சேர்ந்த தீவிரவாதிகள் தமது விரக்தியை வன்முறை மூலம் வெளிப்படுத்தினர்.
இந்த புதிய படைப்புக்கு “தேசிய - அரசு” (Nation - State)எனப் பெயரிடப்பட்டது. இதுவே ஒரு கைதேர்ந்த கண்கட்டு வித்தையாகும். இன்று எம்மால் தேசத்தையும் அரசையும் வெவ்வேறாக இனங்கண்டு கொள்ள முடியாது. எங்குமே அரசு (State)க்கு முன்னர் (Nation) தோன்றவில்லை. தேசத்துக்கு முன்னரே, அரசு உருவாக்கப்பட்டது. அதனுடைய எல்லைகள் பொதுவாக வன்முறையின் மூலமே உறுதி
53

Page 29
செய்யப்பட்டன. அரசுக்குப் பின்னர் தேசம் உருவாக்கப்பட்ட போது அது தேசிய - அரசு என்பதை யதார்த்தமாக்குவதற்காக அதற்கு விரோதமான சகல அம்சங்களையும் அடக்கிவிட்டது. தேசிய அரசுகள் அதன் அபிவிருத்திச் செயன்முறையில் ஒரு பிரசைகள் - அரசாக (Citizen- State) மாற்றம் பெற்றது. அதாவது இங்கு ஒவ்வொரு தனி நபரும் ஒரு பிரசை என்னும் அந்தஸ்த்தைப் பெற்றனர். அதனைப் பெறுவதற்காக அவர் தனது இனத்துவக்குழு அடையாளத்தைப் பேணுவதை இழக்க வேண்டியிருந்தது. இவ்வாறு பல தேசங்கள் அரசு என்னும் அந்தஸ்தைப் பெறுவதற்காக ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தன.
இத்தகைய நிலைகள் இன்று அதாவது பிந்திய நவீனயுகத்தில் (Post-modern Era) எதிர்க்கப்படுகின்றது. ஏனெனில் மக்களையும், அரசாங்கத்தையும் நாட்டையும் ஒன்றுபடுத்தி ஓரினத்தன்மையுள்ள தேசமாகக் காட்டும் முயற்சிகள் தோல்வியையே தழுவின. பிந்திய நவீனயுகத்தின் மிக முக்கியமான பண்புக் கூறாக இனத்துவ மறுமலர்ச்சி பரிணமித்தது. தனிநபர் அடையாளத்தின் அடிப்படையாக இனத்துவ மூலவேர் இனங்காணப்படலாயிற்று. இத்தகைய அபிவிருத்தி இன்று உலகளாவிய ரீதியில் வர்க்க அடிப்படை கொண்ட அரசுகளிலும் இனத்துவ அடிப்படை கொண்ட அரசுகளிலும் பிரதிபலிக்கிறது.
இத்தகைய புதிய இனத்துவத் தொடர்புகளின் விளைவுகளில் ஒன்று நாட்டு எல்லைகளுக்கு அப்பால் குறிப்பிட்ட மக்கள் குழுக்களின் இணைப்பு ஸ்தாபிக்கப்பட்டமையே ஆகும். உதாரணமாக மேல் றைன் பள்ளத்தாக்கில் (Upper Rhine Valley).96)Gudsofluisit (Allemanian) SairGorgoofsiduud Gas T65.TL நாடுகள் தமக்குள் பல்வேறு இணைப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டன. பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சலாந்து முதலிய தேசிய அரசுகளும் இவ்வாறு இணைப்பை ஏற்படுத்திக் கொண்டன. அதே போல யூதர்களும் , அராபியர்களும் நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் தம்மை ஒரே தேசமாக இனங்காண முற்பட்டனர்.
இத்தகைய பிந்திய நவீன யுகத்தின் செல் நெறிகளை ஏற்றுக் கொள்வதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடுகளின் விருத்தி பற்றி விரிவாக எடுத்துக்காட்டப்பட்டது. இத்தகைய புதிய அரசாங்க ஏற்பாடுகள் ஒரே நேரத்தில் இரு திசைகளில் செல்ல முற்பட்டன. அவையாவன:
1. வெவ்வேறான நோக்கங்களுக்காகப் பெரியதும் சிறியதுமான
அரசியல் அலகுகள் ஏற்படுத்தப்பட்டன.
2. சுதேசிய அம்சங்களையும் இனத்துவப் பல்லினத் தன்மையையும் பேணிக் கொண்டு, அதேநேரத்தில் பொருளாதார அல்லது திறமுறை (Strategic) மேம்பாட்டை அடைய முற்படுதலாகும். இதில் அடிப்படையாக உள்ள கருத்தானது ஓர் ஆட்சிப் பிரதேசத்துக்குள்
54

ஒன்றுக்கு மேற்பட்ட பல அரசாங்கங்கள் அதிகாரத்தைக் கொண்டிருத்தலாகும். இக்கருத்துத்தான் அமெரிக்கக் கண்டு பிடிப்பான சமஷ்டிவாதத்தின் அடிநாதமாகும். ஆனால் இதுவே நவீன தேசிய-அரசுகளின் ஐரோப்பியத் தந்தைமாருக்கு வேப்பங்கனியாகக் கசந்தது.
ஓர் ஆட்சிப் பிரதேசத்துக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட அரசாங்கங்கள் அதிகாரம் கொண்டிருப்பது இன்று ஒரு பொதுவான தோற்றப்பாடாக வளர்ந்து வருகிறது. அரசுகளின் இறைமை என்பதிலுள்ள வரையறைகளை இந்த 20ஆம் நூற்றாண்டு அபிவிருத்தி காட்டிநிற்கிறது. எந்தவொரு அரசும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கொண்டிருந்ததைப் போல அந்தளவு இறைமை கொண்டிருக்கவில்லை. பெரும் வல்லரசுகளும் கூட இந்த அணுவாயுத யுகத்தில் சமாதானம், போர் தொடர்பாகத் தன்னிச்சையான முடிவுகளை மேற்கொள்வதிலுள்ள வரையறைகளை உணர்ந்துள்ளன. இந்த வரையறைகளை உணர்ந்துள்ள பல அரசுகள் அதனை ஏற்றுக்கொண்டு தமது நலன்களுக்கு அந்த வரையறைகளைப் பயன்படுத்துகின்றன. ஐரோப்பிய பொதுச்சந்தை இதற்குச் சிறந்த உதாரணமாகும்.
இந்திய மத்தி-விளிம்பு (Centre-periphery) அரசு மாதிரியானது இன்று பல அரசியல் அறிஞர்களினால் எதிர்க்கப்படுகிறது. இவர்கள் அரசு என்பதனை ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ள அலகுகளாகவும், அதிகாரங்களாகவும், தொடர்புகளாகவும் காண்கிறார்கள் . இவ்வாறான பல்வேறு தோற்றப்பாடுகளுக்கிடையே ஓர் இணக்கம் காணும் முயற்சி மிகவும் மெதுவாகவே நடைபெறுகிறது. எனினும் ஏற்கப்பட்டுள்ள அரசு மாதிரிகள் பின்தங்கியிருந்த போதிலும் இன்று மாறத் தொடங்கியுள்ளன. இன்றைய உலகில் உள்ள 3,000க்கு மேற்பட்ட இனத்துவக் குழுக்கள் தமது அடையாளங்களுக்கு ஏற்ப சுமார் 150 பல்லின அரசுகளாகப் பிரிந்துள்ளன.
மூன்றாம் உலகம் காலனித்துவத்திலிருந்து மீட்சிபெற்றபோது தனியான தேசிய அரசும் கூட அரிதாகிவிட்டது. இவ்வாறான தேசிய அரசு என்னும் நிலைப்பாட்டிலிருந்து தம்மை மாற்றிக்கொண்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட அரசுகள் உள்ளன. இவையாவும் “இறைமையுள்ள” 56 நாடுகளில் அடங்கியுள்ளன. இவை இன்றைய உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் மூன்றிலொரு பகுதியாகும்.
பல்வேறுவிதமான அரசியல் ஏற்பாடுகள் பின்வருமாறு அமைகின்றன:
(FLD6hlqassir (Federations)
象 கூட்டரசுகள் அமைப்பு (Confederations). ஐரோப்பிய சமூகத்தைப்
போன்றது.

Page 30
ஐக்கிய இராச்சியத்தைப் போன்று பிரதேச தன்னாட்சியுள்ள g46 ful 65ts6ir (Unions)
உருமாற்றமடைந்துள்ள மானியமுறை ஏற்பாடுகள் (Feudal arrangements). உதாரணம்: ஜேர்மனி, குலார்ன்ஸி, ஐல் ஒவ் மேன், மொனாக்கோ, சான் மரினோ.
ஐக்கிய அமெரிக்காவுக்கும் போர்டோறிக்கோவுக்கும் இடையில் உள்ளதைப் போன்ற அல்லது சுவிற் சலாந்துக்கும் லிச்டென்ஸ்டைன்னுக்கும் உள்ளதைப் போன்ற இணை அரசு @;95 TLńrl_456iT s9j6üb6ab35 Giu LJ difa356ir (Federacies or associated state relationships)
சுயாட்சி (Home rule). இது இருவகைப்படும். ஒன்று முன்னர் காலனித்துவ முறைகளிலிருந்து ஒரு தலைப் பட்சமாக வழங்கப்பட்டது. மற்றது அரசயாப்பு ரீதியாக வழங்கப்பட்ட சுயாட்சி.
கலாசார சுயாட்சி (Cultural home rule). பெல்ஜியத்தில் உள்ளதைப் போல் ஒரு சிறுபான்மை மொழி அல்லது சமயம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.
தன்னாட்சியுள்ள மாகாணங்கள் அல்லது தேசிய மாவட்டங்கள் (Autonomous provinces or national districts). 35 disby,6ofsful நாடுகளில் பரவலாகக் காணப்பட்டாலும் நைஜீரியா போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றது.
for G35 JF 6J frö Lu (TG) is 6ir (Regional arrangements). B) 5 நாடுகளுக்குள்ளும் (இத்தாலி, ஸ்பெயின்) நாடுகளுக்கிடையிலும் (மேல் றைன் பள்ளத்தாக்கு) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சுங்க யூனியன் (Customs Union). இது மிகவும் பழைய ஏற்பாடு எனினும் இன்று தென் ஆபிரிக்காவில் இதற்குப் புதிய அர்த்தம் ஏற்பட்டுள்ளது.
லீக் (League). இவை பொதுவான தேசிய அல்லது கலாசார அடிப்படைகளைக் கொண்டவை. உதாரணம் பெனிலக்ஸ், நோர்டிக் யூனியன், அரபுலீக்.
அரசு-இனத்துவ தொடர்புகள். உதாரணம்: உலகம் முழுவதுமுள்ள யூதர்களின் தொடர்புகள், இந்திய யூனியனிலுள்ள மாநிலங்களில்
56

வாழும் மக்களுக்கு ஏனைய மாநிலங்களில் வாழும் மக்களுடனுள்ள தொடர்புகள்.
எல்லைகளுக்கு அப்பாலான ஏற்பாடுகள் (Extra-territorial arrangements). எகிப்தும் , சூடானும் தமது எல்லைகளில் இவ்வாறான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன.
கூட்டுத் தலைமையாட்சிகள் (Condominium). உதாரணம்: அன்டோரா
O குறிப்பான பிரதேசங்கள் அல்லது குழுக்களுக்கான விசேட மத்திய அரசாங்க ஏற்பாடுகள் . உதாரணமாக கிறிஸ் மத்திய மயப்புடுத்தப்பட்ட அரசமாதிரியைக் கொண்டிருந்த போதிலும் சலோனிகாவில் மசிடோனிய விவகாரங்களுக்காக ஒர் அமைச்சரை நியமித்துள்ளது.
தன்னாதிக்கமுள்ள குழுக்கள் மீதான அரச அமைப்புகள் . ஆப்கானிஸ்தானில் இவ்வாறான இரு-படிமுறை உள்ளது. கம்யூனிஸ் ட் கட்சி அரசைக் கைப் பற்றியபோதிலும் தன்னாதிக்கமுள்ள குழுக்கள் மீது தனது ஆட்சியை நிலைநிறுத்த முடியவில்லை. இதனால் சிவில்யுத்தமும், சோவியத் தலையீடும்
ஏற்பட்டன.
O நட்புறவுப் பங்கீட்டு ஏற்பாடுகள் (Consociational arrangements). இதில் இரண்டு வடிவங்கள் உண்டு. நெதர்லாந்தில் உள்ளதைப் போன்ற சமத்துவமான ஏற்பாடுகள் அல்லது தென்னாபிரிக்காவில் உள்ளதைப் போன்ற படிமுறையான இனத்துவ சமயக் குழுக்கள்.
இவையாவும் சமஷ்டித் தீர்வுகள் எனக் கூறிவிட முடியாது. இந்நூலின் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மாதிரியின் அடிப்படையில் தன்னாதிக்கத்துக்கான கோரிக்கையைச் சமஷ்டி அல்லது சமஷ்டி அல்லாத முறைகளில் அணுகப்பட முடியும். படிமுறை அமைப்புகளில் மானியமுறை ஊடாகத் தன்னாதிக்கம் சாத்தியமானது. அதாவது அதிகாரப் பிரமிட்டில் ஒப்பந்தச் சட்டகத்தை வலுப்படுத்த முடியும். படிமுறையின் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் போதுமான அதிகாரத்தைப் பெறும் போது மேலுள்ள வர்களைத் தமது தன்னாதிக்க உரிமையை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்த முடியும். இவ்வாறு மேல்படியினர்க்கும், கீழ்ப்படியினர்க்கும் இடையில் உள்ள அதிகாரப் பிரிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரை இப்படிமுறை அமைப்புத் தொடர்ந்திருக்கும். இவ்வாறான ஒருமுறை சுதந்திரத்துக்குப் பின்னர் லத்தீன் அமெரிக்காவில் வளர்ச்சியடைந்தது.
மத்திய-விளிம்பு அரசு மாதிரியில் ஒரங்களில் உள்ள பிரதேசங்களுக்கு அல்லது சிறுபான்மைக் குழுக்களுக்குத் தன்னாதிக்கம் மத்திய
57

Page 31
அதிகாரத்தினால் வழங்கப்படுகிறது. இவ்வாறான முறைமைகளில் மத்திய அதிகாரம் உறுதியாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஒரங்களில் உள்ள பிரதேசங்கள் அல்லது குழுக்களின் உரிமைகள் பேணப்படுவதற்கு இந்த உறுதி அவசியமானதாகும்.
உண்மையில் யாப்பு ரீதியாகவும் படிமுறை அமைப்பு ரீதியாகவும் மானிய முறையின் மூலம் அல்லது அரை மானிய முறையின் மூலம் உறுதியான மத்திய அமைப்பின் மூலமாக இதனை ஸ்தாபிப்பது இலகுவானதாகும். இத்தகைய விளைவுகளை ஐரோப்பாவில் ஜேர்மன் மொழிபேசும் நாடுகளின் சமஷ்டியில் காணமுடியும் . இந்நாடுகளில் மத்திய காலங்களில் படிமுறை மானியமுறை வெளிப்படையாகவே இருந்தது. பிரான்ஸ் முதலிய நாடுகளில் பன்முகப்படுத்தப்பட முடியாமலும் இருந்தது. பிரான்சில் உள்ளூர் பிரதிநிதிகளை மத்திய அரசு நிறுவனங்களில் கொண்டு வருவதன் மூலம் கூடிய அதிகாரத்துக்கான கோரிக்கைகள் நிறைவு செய்யப்பட்டன. இதன் காரணமாகத்தான் பிரெஞ்சுத் தேசிய சபையின் உறுப்பினர்கள் பலர் தமது உள்ளூர் நகர அதிகார சபைகளின் மேயர்களாகவும் உள்ளனர். இதன் மூலமாகத் தனது சமூகத்துக்கு ஒரு மேயர் என்ற முறையில் சாதிக்க முடியாதவற்றைப் பாரிசில் தனக்குள்ள உத்தியோகநிலை காரணமாகப் பலவற்றைச் சாதிக்க முடிந்தது.
கிறீஸ், ஈராக் முதலிய நாடுகளில் குறிப்பிட்ட பிரதேசங்களில் விசேடமான மத்திய அரசாங்க ஏற்பாடுகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மத்திவிளிம்பு மாதிரியான பன்முகப்படுத்தலைப் பிரயோகிப்பது தொடர்பான சிறந்த மாதிரிகள் இவையாகும். இதேபோல டென்மார்க்கும் அதனுடைய இரு தீவு சமஷ்டி அலகுகளும் உதாரணமாகும். இத்தாலி, சூடான் முதலிய நாடுகள் தமது ஒரப் பிரதேசங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதற்காகத் தமது அரச முறையை ஒரு மத்தி-விளிம்பு மாதிரியிலிருந்து ஒரு தாயம் மாதிரிக்கு(MatrixModel) மாற்ற முயன்றனர். ஆனால் மத்திய அதிகாரத்தின் வலிமையானது இம்முயற்சிகளைத் தடுத்துவிட்டது.
இறுதியாக சமஷ்டி மாதிரியை நோக்கலாம். சமஷ்டி மாதிரி ஒரு தாயம் என்ற அடிப்படையில் வரையறை இல்லாமல் விட்டுக் கொடுக்கக்கூடியது. இதன் காரணமாகவே சமஷ்டி மாதிரிகள் வெற்றிகரமாக உறுதிப் படுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்கா ஐம்பது மாநிலங்களின் சமஷ்டி மாத்திரமல்ல. அது போட்டாரிக்கோ, வடமரியானாஸ் ஆகியவற்றுடனும் சமஷ்டி ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. அத்துடன் புதிய அரசுகளான மைக்ரோனேசியாவுடன் இணை அரசு ஏற்பாடுகளையும் கொண்டுள்ளது. சுதேச அமெரிக்கர்களுடைய (அமெரிக்க இந்தியர்) அடிப்படை இறைமை அமெரிக்க நீதித்துறையினால் மீள உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய இனக்குழுக்களுடன் ஐக்கிய அமெரிக்காவின் சமஷ்டித்தொடர்புகள் மீளவும்
58

உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய இராச்சியமானது மானிய முறை மற்றும் உறுப்பமைதி சார்ந்த நிறுவனங்களின் வெற்றிகரமான இணைப்புக்குச் சான்றாக விளங்குகிறது. ஐக்கிய இராச்சியத்தின் மரபுகளைப் பேணும் தன்மையானது இவ்வாறான அரை சமஷ்டி ஏற்பாடுகளை ஊக்குவித்துள்ளது. இத்தகைய ஒவ்வொரு தொடர்பும் தனித்துவமானவை. ஸ்கொட்லாந்துடனான யூனியன் சட்ட, சமய நிர்வாகக் கட்டமைப்புக்களைப் பேணுகிறது. வேல்சின் மத்திய அரசாங்கத்தின் விசேட பிரதிநிதித்துவம் மேலதிக கலாசார சுயாட்சியைக் கொண்டுள்ளது. அல்ஸ்டருக்கு அரை சமஷ்டி சுயாட்சி ஏற்படுத்தப் பட்டுள்ளது. ஐல்ஸ் ஒவ் மான், ஜெர்சி, குவான்சி மற்றும் சர்க்கின் சமஷ்டி ஏற்பாடுகள் பழைய மானிய முறைக் கட்டுக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. வெளிநாடுகள் பலவற்றுக்கு யாப்புரீதியான சுயாட்சி வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய ஏற்பாடுகள் யாவும் ஐக்கிய இராச்சியத்தில் இங்கிலாந்துக்கும் ஆங்கிலம் பேசாத ஏனைய பகுதிகளுக்கும் இடையிலான வெற்றிகரமான இணைப்புகளுக்குச் சான்றாக விளங்குகின்றன.
இதிலிருந்து வேறுபாடுகளைத் தீர்க்கும் முறைகள் சட்டம் சார்ந்தவை என்பதைவிட அரசியல் சார்ந்தவை என்பது புலனாகிறது. இது தொடர்பான ஆய்வுகளில் சட்டம் சார்ந்த அம்சங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் தன்மை காணப்படுகிறது. ஆனால் உண்மையில் இங்கு முக்கியமானது அரசியற் தீர்வுகளேயாகும். ஒவ்வொரு வகையான ஆட்சிக்கும் சமாந்தரமாக சமஷ்டி ஏற்பாடுகள் காணப்படுகின்றன. ஆனால் எதேச்சாதிகாரமான ஆட்சி முறைகள் விதி விலக்கானவைகளாகும். இத்தகைய ஆட்சிமுறைகள் சம்ஷடிக் கட்டமைப்புக்களைக் கொண்டிருந்த போதும் உண்மையில் மேலே கூறப்பட்ட விடயங்கள் சமஷ்டிக் கருத்துக்களுக்கும் அவற்றின் பிரயோகமும், இறைமை கொண்ட அரசு என்பதற்கு ஒரு முழுமையான மாற்றீடாக அமைவதைக் காட்டுகின்றன. அரசின் இறைமை என்பதைத் தேசிய ரீதியாகவும், சர்வதேசரீதியாகவும் ஏற்படுத்தும் தாக்கங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். சர்வதேச அரங்கில் ஒவ்வொரு இறைமையுள்ள அரசும் தனித்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியுள்ளது. தேவையான நேரங்களில் மாத்திரம் அதுவும் வரையறைகளுடன் மாத்திரமே ஏனைய நாடுகளுடன் சேரவேண்டும். அதிகாரங்களையும் கட்டுப்பாடுகளையும் மிகவும் குறைந்த அளவிலேயே விட்டுக் கொடுக்க வேண்டும் . உள்நாட்டைப் பொறுத்தவரையில் மத்திய அரசாங்கமே சகல அதிகாரங்களையும் கொண்டிருக்கும். ஏனைய ஆட்சி உறுப்புகளுக்கு மத்திய அரசாங்கத்தின் விருப்பப்படி மாத்திரமே அதிகாரம் வழங்கப்படும்.
மறுதலையாக சமஷ்டி மாற்றிடுகள் அரசாங்கம் அல்லது அரசு இறைமை கொண்டவை என்பதை நிராகரிக்கிறது. உண்மையில் மக்களிடமே அரசியல் இறைமை தங்கியுள்ளது. அவர்கள் அரசியல் யாப்பு ஏற்பாடுகளுக்கமையத்
59

Page 32
தாம் விரும்பும் வண்ணம் அதிகாரங்களை வெவ்வேறு அரசாங்கங்களுக்குக் கையளிக்கிறார்கள். இதன்படி இறைமை என்னும் அம்சத்திலிருந்து அரசியல் யாப்பு அதன் பயன்பாடு, உரிமைகள் ஆகியவை மேம்பட்டு நிற்கின்றன. எந்த ஒர் அரசும் தனக்காக இயங்க முடியாது. சமகால உலகம், ஒன்றில் ஒன்று தங்கியிருக்கிறதுடன் அதனுடைய சிக்கற் தன்மையும் அதிகரிக்கிறது. எனவே அரசுகளின் இறைமை என்பது அதாவது ஒவ்வொரு அரசும் தனது தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமையும் அதிகாரமும் கொண்டுள்ளன என்பது இன்று ஏற்றுக்கொள்ளப்படமுடியாத விடயமாகி உள்ளது. எனவே இன்று வல்லரசுகளிலும் கூட தற்போதைய முறைமைகளை இலகுபடுத்துவதற்காக சமஷ்டி ஏற்பாடுகள் பல்கிப் பெருகுகின்றன.
2. இனக்குழுக்களையும் பொதுமக்களையும்
சமஷ்டி ரீதியாக இசைவுபடுத்தல்
மக்களின் இறைமை என்பது ஏனையவை இருக்கத்தக்கதர்க அரசாங்கம் மக்களின் அனுமதியுடனான அரசியல் ஒழுங்கமைப்பின் ஒரேயொரு சட்டரீதியான அடிப்படை என்று பொருள்படும். இத்தகைய அனுமதியைப் பெறுவதும் பேணுவதும் நவீன சமூகங்களில் ஒரு சிக்கலான விடயமாகும். இதில் சம்பந்தப்பட்ட பகுதியினர் அல்லது பிரதிநிதிகளின் பல்வேறு முனைப்புகள் தொடர்புபட்டுள்ளன. சமஷ்டிக் கோட்பாடுகளையும் ஏற்பாடுகளையும் பிரயோகிப்பதில் வெற்றி அல்லது தோல்வியின் அளவு சமஷ்டிக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் மாத்திரம் தங்கி யிருக்கவில்லை. மாறாக, பொதுமக்களை உருவாக்குவதிலும் தங்கியுள்ளது. இந்த அடிப்படையில் சமஷ்டி என்பது தொடர்புகளை உருவாக்குவதாகும். வெறுமனே நிறுவனங்களைக் கட்யெழுப்புவதல்ல.
இக்கட்டுரையில் சமஷ்டி என்பது அதனுடைய இயல்பு காரணமாகக் குடியரசுத் தன்மையுள்ளது என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. குடியரசு என்பது மக்களின் சொத்தாகும். அது மக்களுக்கே உரிமையானது. அவ்வாறு மக்களுக்கு உரிமை உள்ளதாக விளங்க வேண்டுமெனில் அது மக்களில் தங்கியிருக்க வேண்டுமேயல்லாது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக் கொண்ட தனிநபர்களில் அல்லது குடும்பங்களில் தங்கியிருக்க முடியாது. பொதுமக்களின் ஆதரவு இல்லாத காரணத்தினால்தான் பல நாடுகளில் குடியரசு நிறுவனங்கள் தோல்வியடைந்தன.
ஒரு பொதுவான அரசியற் கட்டமைப்புக்குள் இருக்கும் பல்வேறுபட்ட இனக்குழுவினரின் விருப்பு வெறுப்புகளுக்கிடையே இணக்கம் காண்பதற்காகவே சமஷ்டி ஏற்பாடுகள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன.
60

இத்தொடர்பில் மக்களுக்கும் (Peoples) பொதுமக்களுக்கும் (Publics) இடையில் காணப்படும் வித்தியாசத்தை விளங்கிக் கொள்வது முக்கியமானது. இனக்குழுவினர் என்போர் (கிரேக்க மொழியில் Ethnos ) உறவு, கருத்தொருமிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒன்றுபட்டு ஒரு கலாசாரத் தன்மையைப் பெற்று ஓர் அடையாளத்தையும் பெற்ற ஒரு கூட்டமாகும். இதன் மூலம் அது சிவில் உரிமைகளையும் அரசியல் வெளிப்பாடுகளையும் பெற்றுக் கொள்கிறது. பொதுமக்கள் என்போர் ஒரு சமூகமாகும். அது பல தலைமுறை கொண்டதாகவோ அல்லாததாகவோ இருக்கலாம் . ஆனால் அது சிவில் பண்புகளையும் அரசியல் வெளிப்பாட்டையும் கட்டாயமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அரசாங்கமும் ஒரு தனிப்பட்ட இனக்குழுவினருக்குச்சேவை செய்வதில்லை. ஆனால் ஓர் அரசாங்கம் நிலைப்பதற்கு அது பொதுமக்களைக் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும். மாறாகப் பார்க்கும் பொழுது ஒவ்வொரு பொதுமக்களும் ஓர் இனக்குழுவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஓர் இனக்குழுவினர் பல்வேறு பொதுமக்களாகப் பிரிக்கப்படலாம். உதாரணம் அரபு நாடுகள் அல்லது யூகோஸ்லாவியாவைப் போன்று பல இனக் குழுவினரைக் கொண்டிருக்கலாம்.
கலாசார ரீதியான பிளவுகள் வேறுபட்ட இனக்குழுக்கள் அரசியல் அடையாளத்தைப் பெற முயற்சிப்பதைக் காட்டுகின்றன. சில சந்தர்ப்பங்களில் சமஷ்டியானது இவ்வாறான வேறுபட்ட இனக் குழுவினரை ஒருங்கிணைத்து சிவில் சமூகத்தையும் அரசியல் ஒழுங்கையும் ஏற்படுத்தக் கூடும். இத்தகைய சந்தர்ப்பங்களிற் தான் சமஷ்டியானது பன்முகத்தன்மையாக (Pluralism) மாறுகிறது. பன்முகத்தன்மை என்பது சட்டரீதியான வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளுவதாகும். சமஷ்டியானது இத்தகைய வேறுபட்ட குழுக்களை ஒரே அரசியல் அமைப்புக்குள் இயங்குவதற்கு வழிவகுக்கிறது.
இவ்விடயத்தில் சமஷ்டி மேலதிகப் பயன்களை வழங்கக்கூடும். ஏனெனில் சரியான முறையில் கையாளப்படின் அது பல்வேறு இனக்குழுக்களையும், பொதுமக்களையும் சுயாட்சியிலுள்ள பகிரப்பட்ட ஆட்சியிலும் ஒன்றிணைப்பதோடு அதனை வரையறுக்கப்பட்ட ஆட்சிச் சூழலில் செயற்படுத்துகிறது. வரையறுக்கப்பட்ட ஆட்சி என்பது சமஷ்டியோடு இணைந்ததாகும். ஏனெனில் சமஷ்டி அடிப்படையிலான பகிர்வு வரையறைகளைக் கொண்டுள்ளது. சமஷ்டிக் கோட்பாடுகளையும் பொறிமுறைகளையும் வெற்றிகரமாகப் பிரயோகித்தல் என்பது அவற்றை அரசியல் யாப்பு மயப்படுத்தலில் தங்கியுள்ளது. இவ்வாறு யாப்புமயப்படுத்தல் வரையறுக்கப்பட்ட ஆட்சியைப் பேணக்கூடிய வகையில் அமைய வேண்டும். இவையும் கூட வெறுமனே அரசியல் யாப்பாக இருக்கும் பொழுது போதுமானவை அல்ல. இவை சட்டவாட்சியின் அடிப்படையில் செயன்முறைகளை ஏற்படுத்தக்கூடியதாக
61

Page 33
அமைதல் வேண்டும் . இன்னும் கூறப் போனால் பொதுமக்கள் சட்டவாட்சியை ஏற்றுக்கொண்டு செயற்படுத்துவதிலும் தங்கியுள்ளது.
இனத்துவப் பிரதேச அடையாளங்களின் மீட்சியானது அரசின் ஒதுக்கிவைத்தல் செயற்பாட்டுடன் தொடர்புடையது. அத்துடன் இனக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் என்பவற்றை நிர்ணயம் செய்யும் அம்சங்களுடன் தொடர்புடையது. இதற்கான விடையைத் தேடுதல் கடினமானதாகும். ஆனால் இயக்க அடிப்படையில் இதனை விளங்கிக் கொள்ள முடியும். இவ்வாறான இயக்குக் கருவிகளாகச் செயற்பட சமஷ்டி ஏற்பாடுகள் சிறந்தவையாகும். இனக் குழுவினரையும் பொதுமக்களையும் சமஷ்டி அடிப்படையில் ஏற்றுக் கொள்ளலில் இரு அம்சங்கள் உள்ளன. (1) இனத்துவப் பிளவுகளை ஊடறுத்து அவற்றின் முக்கியத்துவத்தைக் குறைத்து பொதுமக்களைக் கொண்ட அரசினை அமைப்பதாகும். (2) ஒவ்வொரு இனக்குழுவினருக்கும் கருத்து வெளிப்பாட்டுக்கு வாய்ப்பளிக்கும் ஒருமுழுமையான அரசினை அமைப்பதாகும். இவ்விரண்டு பரிமாணங்களும் ஆட்சிப் பிரதேச சனநாயகத்துக்கு சமாந்தர மானவையாகும்.
இவ்விரண்டு வகையான இசைவுபடுத்தலுக்குமான உதாரணங்கள் அட்டவணை 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு வகையான சமஷ்டி ஏற்பாடுகளில் காணப்படுகின்றன. இதனோடு தொடர்புடையதாகப் பின்வரும் பிரச்சினைக்குரிய விடயங்களை ஆராய்வது பயனுடையதாகும். இவற்றில் இனத்துவப் பிளவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு சமஷ்டித் தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன.
O பெல்ஜியம் : இங்கு பிளெமிங்ஸ், வல்லுண்ஸ் ஆகிய வேறுபட்ட இனத்துவக் குழுக்களைப் பொது நோக்கங்களுக்காக இணைத்துக் கொள்வதற்குச் சமஷ்டி ஏற்பாடுகள் அமுல் செய்யப்படுகின்றன.
கனடா : கியூபெக் மக்கள் தம்மைத் தனித்துவமான இனக்குழுவாக இனங்காண்கின்றனர். இவர்களிடம் பிரிவினை மனப்பான்மை காணப்படுகின்றதெனினும் கனடாவின் ஐக்கியம் பேணப்படுகிறது.
சீனா : மத்திய மயப்படுத்தப்பட்ட எதேச்சாதிகாரமான அரசு மிகத் தூரப்பிரதேசங்களில் வாழும் இனத்துவச்சிறுபான்மையினருக்காகச் சமஷ்டி ஏற்பாடுகளைப் பிரயோகிக்கிறது.
சைப்பிரஸ் : இங்கு கிரேக்கர்களையும் துருக்கியரையும் இசைவுபடுத்தப் பரஸ்பர உடன்பாடுகள் அமுல்படுத்தப்படுகிறன. இவ்விரு இனக்குழுவினரும் புவியியற் காரணிகளின் விளைவாகப் பொதுமக்களாக மாற வேண்டியுள்ளது.
62

பிஜி : சுதேசிய பிஜிசனத்தொகைக்கும் இன்று பெரும்பான்மையாக இருக்கும் குடியேற்றவாசிகளான இந்தியர்களுக்கும் இடையில் உள்ள இனத்துவப் பிளவுகள் இசைவுபடுத்தப்படுகின்றன.
ஐரோப்பிய சமூகம் : ஐரோப்பிய அரசுகளை அவற்றின் எல்லைகளுக்கு அப்பால் செல்லும் ஐரோப்பிய இனத்துவக் குழுக்களுடன் சமநிலைப்படுத்துகிறது.
பிரான்ஸ் : உள்ளூர் பொதுமக்களுக்கும் தூரப்பிரதேசங்களில் வாழும் குழுக்களின் இனத்துவ அபிலாசைகளுக்கும் இடையில் சமநிலையைப் பேண பிரதேசப் பன்முகப்படுத்தல் உள்ளது.
இந்தியா : மொழிவாரி, மதவாரியாகப் பொதுமக்களுக்குக் கலாசார சுயாட்சி மற்றும் சமஷ்டி தொடர்பான எக்காலமும் உள்ள சமஷ்டிப் பிரச்சினைகள்.
ஈராக் இனத்துவக் குழுவான குர்திஷ் மக்களுக்கும் முஸ்லிம் பொதுமக்களுக்கும் இடையே இசைவுபடுத்தல்.
ஈரான் : ஒரு சமயம் சார்ந்த பொதுமக்கள் என்றளவில் ஒற்றுமைப்பட்டுள்ள பெரும்பான்மை ஈரானியர்களும் அவர்களுக்கெதிரான குர்திஷ், அரபு மற்றும் ஏனைய இனத்துவச் சிறுபான்மையினரும்.
இஸ்ரேலும் பாலஸ்தீனர்களும் : பிரச்சினைக்குரிய பிரதேசங்களை ஆளும் பிரச்சினை தொடர்பாக பாலஸ்தீனிய அரபுப் பொதுமக்களுக்கும் யூத இன மக்களுக்கும் இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சமஷ்டிக் கோட்பாடுகளைப் பிரயோகித்தல்.
இத்தாலி : தனிநபர்களும் குடும்பங்களும் அரசியல் அந்நிய மயப்படுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இந்நாட்டில் பொதுமக்களை உருவாக்க ஒரு சமஷ்டி ஏற்பாடாகப் பிரதேசவாதத்தை ஏற்படுத்தல்.
லெபனான்: போரினால் சீரழிந்துள்ள பன்முக அதிகாரம் கொண்ட சமூகத்தில் ஓர் கூட்டிணைவு அடிப்படையில் லெபனான் ஐக்கியத்தை ஏற்படுத்துதல்.
மலேஷியா : மலாயர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் உள்ள ஆழமான இனத்துவப் பிளவின் ஊடாக ஒரு சமஷ்டி முறையைப் பேணுதல்.
63

Page 34
அட்டவணை 1: சமவுடியின் வகையும் இசைவுபடுத்தல் அமைப்பும்
ஆட்சி அமைப்பு முறை வேறுபாடுகள்
வேறுபாடுகளை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஆட்சி அமைப்பு முறை
கூட்டமைப்பு ஆஜென்ரீனா (Federation) 96.6m).5GT65u T
ஒஸ்திரியா பிறேசில் கொமோரோ தீவுகள் ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு மலேசியா மெக்சிக்கோ பாகிஸ்தான் ஐக்கிய அமெரிக்கா
S6STLs சைபிரஸ் செக்கோசெலவாக்கியா இந்தியா
நைஜீரியா பப்வுவா நியூகினியா சுவிற்சலாந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சோவியத்ரூஷியா(முன்னைய) வெனிசூலா
கூட்டரசுகள் செனிகாம்பியா
மைப்பு (Confederations)
ஐரோப்பிய சமூகம்
மேற்கிந்திய தீவுகள் யூகோஸ்லாவியா
ணையரசு டென்மார்க்-பாரூ தீவுகள்
ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு-பேர்லின் ஐ. அமெரிக்கா-சானல் தீவுகள்
டென்மார்க்-கிறீன்லாந்து பின்லாந்து-ஆலாந்து தீவுகள் நியூசிலாந்து-குக்தீவுகள் ஐ. இராச்சியம்-அயில்ஸ் ஒப் மான்
ஐ.அமெரிக்கா-வட மரியானாஸ்
ணைந்த அரசு பிரான்ஸ்-மொனாகோ அமெரிக்கா-போட்டாரிக்கோ இணைந்த அ இத்தாலி-சான் மரினோ ਨੂੰ
நெதர்லாந்து-குராகாகோ தென்ஆபிரிக்கா-சுதந்திரதாயகம் சுவிற்சலாந்து-லிச்ர்ன்ரைன்ஸ் ஐ.இராச்சியம்-பல்வேறுகரீபியன்
ஒன்றிணைந்த அரசுகள் பிரதேசதேசிய கொலம்பியா பெல்ஜியம்
ன்றியம் போத்துக்கல்-அசோர்ஸ் Luñr LDIT சமஷ்டிப் st st பாறிமுறைப் ಕ್ಲಿಕ್ಗಿ பயன்பாடும் நதர்லாந்து உள்ளது) பிலிப்பைன்ஸ்
தென்ஆபிரிக்கக் குடியரசு சொலமன் தீவுகள்
ஸ்பெயின்
சூடான்
தன்சானியா
ஐக்கிய இராச்சியம் கூட்டுத்தலைமை ஆட்சி அன்டோரா (Condominium) லெபனான் நட்புறவுப் பங்கீடு நமீபியா (Consociation)6mübGnsiv தென்ஆபிரிக்கா
(a) சைபிரஸ் சமஷ்டித் தீர்வுக்கு ஒத்துக்கொண்டாலும் அமுல்படுத்தப்பட வேண்டியுள்ளது.
64

நைஜிரியா சமஷ்டியினுTடாக மூன்று பிரதான 250 சிறிய இனத்துவக் குழுக்களை இசைவுபடுத்தல்.
வடஅயர்லாந்து : இரண்டு இனத்துவச் சமய சமூகங்களான புரட்டஸ்தாந்தினருக்கும் கத்தோலிக் கருக்குமிடையிலான போராட்டமும் ஐக்கிய இராச்சியத்துக்கும் அல்ஸ்ரர், ஐரி ஆகியவற்றின் தொடர்புகள் மீதான அதன் தாக்கமும்.
பாகிஸ்தான் : உள்ளக இனத்துவ மற்றும் இனக்குழுக்கள் ஆகியவற்றுக்கிடையே இசைவுபடுத்தி அரசியல் ஐக்கியத்தைப் பேணுதல்.
தென் ஆபிரிக்கா : வெள்ளையரையும் வெள்ளையர் அல்லாதோரையும் ஒரு பல்லின பல் தேசிய சமூகத்தில் இசைவுபடுத்தல்.
ஸ்பானியா : தேசிய சிறுபான்மையினருக்குத் தன்னாதிக்கமும் ஸ்பானிய ஐக்கியமும்.
சுவிற்சலாந்தும் ஜாராவும் : சமஷ்டியினுTடாக மொழிவாரிப் பொதுமக்களை வெற்றிகரமாக இசைவுபடுத்தல்.
சோவியத் யூனியன் : ரஷ்ய மற்றும் கம்யூனிஸ்ட் ஆட்சியை ரஷ்யர் அல்லாத இனக்குழுக்கள் மீது பேணுவதற்கு ஒரு கருவியாக சமஷ்டி,
ஐக்கிய இராச்சியம் ; வேறுபட்ட இனக்குழுக்களைக் கொண்ட நாடுகளுக்கு நிர்வாக அதிகாரத்தையும் தேசிய உரிமைகளையும் பகிர்வு செய்தல்,
ஐக்கிய அமெரிக்காவும் அதனுடைய துTரப்பிரதேசங்களும் ஒருங்கிணைப்புகளும் போாட்டோரிக்கோ வடமரியானாஸ் மற்றும் மைக்குரோனேஷியா ஆகியவற்றுக்குச் சமஷ்டி ஏற்பாடுகள் இந்திய இனக்குழுவினருடன் சமஷ்டிரீதியாக வாழும் வகையை ஏற்படுத்தல்.
யூகோஸ்லாவியா சமஷ்டியூடாக வேறுபட்ட இனக்குழுவினரை ஒன்றுபடுத்தி யூகோஸ்லாவியப் பொதுமக்களைப் பேணுதல்.
3. மூன்றாம் உலக நாடுகளில் சமஷ்டி வாதம்
இவைபோன்ற வேறுபட்ட சூழ்நிலைகளில் சமஷ்டிக் கோட்பாடுகளையும் ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொள்வதிலுள்ள நன்மைகளும் தீமைகளும்
65

Page 35
மூன்றாம் உலகத்தின் புதிய சுதந்திர அரசுகளில் சிறப்பாக வெளிப் படுகின்றன. சமஷ்டி வடிவங்கள் இம்மூன்றாம் உலக மக்களுக்குக் கவர்ச்சியாகத் தெரிவதன் காரணமென்ன? ஏன் அது அடிக்கடி தோல்வியடைகிறது? எத்தகைய சந்தர்ப்பங்களில் வெற்றியடைகிறது? சமஷ்டி ஏற்படுத்தியுள்ள நன்மைகளும் தீமைகளும் யாவை? மூன்றாம் உலக அரசியலிலும் அதன் எதிர்காலத்திலும் சமஷ்டி ஏற்பாடுகளின்
பயன்கள் யாது?
இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர் உருவாகிய 92 நாடுகளும் மூன்றாம் உலகத்தின் பகுதிகளாகும். இவற்றில் 46 நாடுகளில் சமஷ்டி ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காலனித்துவ ஆட்சியாளர்களினால் 11 நாடுகளில் கூட்டாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் பல சமஷ்டி ஏற்பாடுகளுக்கெதிராகத் தமது சுதந்திரம் நோக்கிப் போராடுகின்றன. இருபது நாடுகள் சமஷ்டி அரசுகளாக மாறியுள்ளன. 15 நாடுகள் சமஷ்டி அல்லது கூட்டாட்சி இணைப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இவ் ஏற்பாடுகள் முழுமையான சமஷ்டியிலிருந்து பொதுச்சந்தை ஏற்பாடுகள் வரை வேறுபட்டுள்ளன. மூன்று நாடுகளில் அவற்றின் உண்மையான அரசியல் முறை மாற்றப்பட்டு அரை சமஷ்டி ஏற்பாடுகள் சில தேவைகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இக்கட்டுரை எழுதப்பட்ட காலத்தில் ஆறு நாடுகள் சமஷ்டி முறையை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. 14 நாடுகள் அர்த்தமுள்ள சமஷ்டி ஏற்பாடுகளைக்கொண்டுள்ளன. 5 நாடுகளில் சமஷ்டி ஏற்பாடுகள் தற்போது அர்த்தமற்றதாகி விட்டன. இச்சமஷ்டிகள் நாடுகள் ஏறக்குறைய 750 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளன. இது மூன்றாம் உலக சனத்தொகையில் (8 பில்லியன்) 15 வீதமாகும். மூன்றாம் உலகத்தில் சமஷ்டி என்பது ஏதோ ஒரு வடிவத்தில் பரவலாக முயற்சிக்கப்பட்டுள்ளது. இதன் பெறுபேறு பல்வேறு விதமாக இருப்பினும்கூட ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் சமஷ்டி ஒரு யதார்த்தமாகி விட்டது. உண்மையில் சமஷ்டி ஏற்பாடுகள் இந்நாடுகளில் தமது தாக்கத்தைப் பரவலாக ஏற்படுத்தியுள்ளன.
இந்நாடுகளில் சமஷ்டி ஏற்பாடுகளின் கட்டமைப்பானது இனத்துவ சமய மொழிவாரி வேறுபாடுகளுக்கிடையே ஒரு இசைவாக்கத்தை ஏற்படுத்தும் தேவையின் விளைவாக உருவாகின. மூன்றாம் உலகத்தைவிட உலகில் வேறெங்கும் இனத்துவப் பன்முகத்தன்மையைப் பாரிய அளவிற் காணமுடியாது. இந்நாடுகளில் காணப்படும் சமய, இனத்துவ மொழிவாரிப் பிரிவுகள் நவீனத்துவத்தினாலோ, புதிய தேசிய அடையாளத்தினாலோ மாற்றமடைந்துவிடவில்லை. ஒருசில விதி விலக்குகளைத் தவிர இந்நாடுகளில் இனத்துவப்பிரிவுகள் நிலைத்துள்ளன. அதே நேரத்தில் புதிய அரசுகள் இவ் இனத்துவப் பிரிவுகளைத் தமது
66

எல்லைக்குள் ஒன்றிணைக்கப் பாடுபடுகின்றன. எனவே சமஷ்டியின் அம்சங்கள் மூன்றாம் உலகைப்பொறுத்தவரையில் இனத்துவ வேறுபாடுகள் மற்றும் பன்முகத்தன்மையின் அடிப்படையிலேயே கையாளப்படவேண்டும்.
4. சமஷ்டி ஏன் தோல்வியடைந்தது?
ஒவ்வொரு தோல்வியடைந்த சமஷ்டியும் தன்னளவில் தனித்துவமான ஒரு விடய ஆய்வாகக் காணப்படுகின்றது. ஆனால் சில பொதுத்தன்மைகள் தெளிவாகத் தெரிகின்றன. அவற்றுள் ஏழு மிக முக்கியமானவை:
1. சமஷ்டி ஏற்பாடுகள் உள்ளக ஆதரவு எதுவுமில்லாமல் வெளியே இருந்து திணிக்கப்பட்டது. பிரித்தானிய , பிரான்சிய குடியேற்றங்களாகப் பிளவுபட்டிருந்த கமரூன் சமஷ்டியை ஒன்றிணைப்பதற்குச் சமஷ்டி கொண்டுவரப்பட்டது. இங்கு சமஷ்டி தமது ஆளுமையை நிலைநிறுத்துவதற்கு ஒரு கருவியாகக் குடியேற்றவாதிகளினால் பயன்படுத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக உள்நாட்டில் சமஷ்டிக்கான ஆதரவு கிடைக்கவில்லை. எனவே பின்னர் சமஷ்டி முறை இலகுவாகத் தூக்கி எறியப்பட்டது.
கானாவிலும் உகண்டாவிலும் காலனித்துவவாதிகளினால் சமஷ்டித் தீர்வுகள் திணிக்கப்பட்டன. ஆனால் அந்நாடுகள் சுதந்திரம் அடைந்த காலத்தில் அத்தீர்வுகள் நிராகரிக்கப்பட்டன. நிக்ரூமா அதிகாரத்தைத் தனது கைக்குள் வைத்திருக்க எண்ணினார். ஆனால் அவரது விழ்க்சிக்குப் பின்னர் கானாவின் ஆட்சியாளர்கள் அரைசமஷ்டிஏற்பாடுகளை முயற்சிசெய்து பார்த்தனர். அவர்கள் பிரதேசப் பன்முகப்படுத்தலையும் அரச நிறுவனங்களில் இனக்குழுத் தலைமைகளை உள்ளெடுப்பதையும் பரிசீலித்தனர். மறுதலையாக உகண்டாவின் ஆட்சியாளர்கள் நாட்டின் பிரச்சினைகளுக்குப் பரிகாரமாக இனப்படுகொலைகளை வழமையாகக் கையாண்டனர்.
சமஷ்டி ஏற்பாடுகள் தூக்கியெறியப்படுவதற்கு மிகவும் வலிமை பொருந்திய ஒரு தனிநபர், ஆட்சியைப் பிடிப்பது ஒரு முக்கிய காரணியாகும். சர்வாதிகாரத்தைப் பகிர்வு செய்ய மறுப்பது மிகவும் இயற்கையானதே. சமஷ்டி ஏற்பாடுகள் யாப்பு ரீதியாக அதிகாரங்களைப் பகிர்வு செய்ய முனைவதால் அதிகாரத்தைத் தன்னில் கொண்டிருக்க விரும்பும் ஒரு நபர் சமஷ்டி முறையை விரும்பமாட்டார். ஒரு வலிமை பொருந்திய நபர் தொடர்ந்து ஆட்சியில் இருப்பாரெனின் சமஷ்டி ஏற்பாடுகள் நீக்கப்படும். நிக் ரூமாவின் வலிமையே கானாவில் சமஷ்டி அமைப்பு
67

Page 36
சுதந்திரத்துக்கு முன்னர் வீழ்ச்சியடைவதற்கு மிகவும் முக்கிய காரணியாக இருந்தது. லிபியாவில் இதிரிஸ் மன்னரின் வலிமை சமஷ்டியின் வீழ்ச்சிக்கு அத்திவாரம் அமைத்தது. அவர் ஆட்சியை இழந்த பின்னர் பதவிக்கு வந்த அதிகாரக் குழுவினர் சமஷ்டியை முற்றாக நீக்கினர் . நைஜீரியாவைப் பொறுத்தவரையில் சமஷ்டியானது அரசியலில் ஒன்றிணைந்து விட்டதால் அதனை நீக்கமுயன்ற ஆட்சியாளரே வீழ்ச்சியடைந்தனர். இதனை உணர்ந்து கொண்ட பின்வந்த இராணுவ ஆட்சியாளர்கள் சமஷ்டியை நீக்கும் முயற்சியில் ஈடுபடாமல் ஓரளவு அதனை மதித்து நடந்து
கொண்டனர்.
சில நாடுகளைப் பொறுத்தவரையில் புதிதாகச் சுதந்திரம் அடைந்த சில அரசுகள் ஒரு கூட்டரசாக மாற எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அந் நாடுகளில் பதவி வகித்த ஆட்சியாளர்களின் ஈடுபாடுகளில் காணப்பட்ட முரண்பாடுகளே இதற்குக் காரணம். கிழக்கு ஆபிரிக்க சமூகத்தின் (East African Community) தோல்விக்கு கெனியாவின் ஜோமோ கென்யாட்டா, தன்சானியாவின் யூலியஸ் நயரே மற்றும் உகண்டாவின் இடி அமீன் ஆகியோரின் போட்டி
உணர்வே காரணம்.
சமஷ்டியின் தோல்விக்கு இனத்துவப் பிரச்சினைகளும் ஒரு காரணமாகும். இனத்துவப் பிரச்சினைகள் சமஷ்டி அமைப்பினால் முகாமைத்துவம் செய்ய முடியாத அளவுக்குப் பாரதுTரமான நிலையை அடையும்போது அது தோல்வியடைகிறது. கறுப்பின - வெள்ளையர் பிணக்குக் காரணமாகவே மத்திய ஆபிரிக்கக் sin. It if (Central African Federation) 6nfþë fuu 6MdL fö855. இக்கூட்டின் மூன்று அலகுகளில் இரண்டில் கறுப்பின மக்கள் சமஷ்டியை நீக்கும் அளவுக்கு அதிகாரம் கொண்டிருந்தனர். மூன்றாவது அலகான தென் ரொடீசியாவில் (சிம்பாப்வே) வெள்ளையின சிறுபான்மையினர் அதிகளவு அதிகாரம் கொண்டிருந்ததால் கறுப்புமக்கள் தமது சுய-நிர்ணய உரிமைக்காக வேறு வழிகளை நாடவேண்டியிருந்தது. இத்தகையதொரு போராட்டம் மலாவி, சாம்பியாவில் இலகுவாக வெற்றியடைந்தது.
பர்மாவிலிருந்து பிரித்தானியர் நீங்கியபின்னர் அவர்களால் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட அரை-சமஷ்டி ஏற்பாடுகளைப் பெரும்பான்மைப் பர்மியர்கள் நீக்கிவிட்டனர். இன்று சமஷ்டி நிறுவனங்கள் நீக்கப்பட்டாலும் சிறுபான்மை இனத்துவப்பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. அதன் காரணமாகப் பர்மாவுக்குள் பல்வேறு இனத்துவ அரசுகள் நிறுவப்பட்டுள்ளன.
68

வளங்கள் இன்மை நான்காவது காரணியாகும். உண்மையில் மூன்றாம் உலக நாடுகளில் சமஷ்டியின் தோல்விக்கு இது ஒரு மறைமுகக் காரணியாக அமைகிறது எனலாம். அதாவது சமஷ்டி முறையைப் பேணுவதற்குப் போதுமான மனித, நிதி வளங்களை மூன்றாம் உலகநாடுகள் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவில்லை. மேற்கத்தியப் பாணியிலான நலவுரிமை அரசினையும் , சமஷ்டியையும் ஒரேநேரத்தில் அவைகள் கையாளுகின்றன எனக் கொண்டால் இந்த வாதத்தில் அர்த்தம் உள்ளது. ஆனால் இந்நாடுகளிலுள்ள வரையறை கொண்ட அரசினைக் கவனத்திற் கொண்டால் இவைகளாற் சமஷ்டியை உள்ளூர் கற்றறிவாளரைக் கொண்டு கையாளமுடியும். இதற்கு உதாரணமாக 18ஆம் நூற்றாண்டின் ஐக்கிய அமெரிக்காவை அல்லது கைத்தொழிலுக்கு முந்திய சுவிற்சலாந்தை அல்லது 19ஆம் நூற்றாண்டு லத்தீன் அமெரிக்காவைக் கூறலாம்.
உள்ளூர் மனித ஈடுபாடு என்று நாம் கருத்தில் கொள்வது வரவு - செலவுத் திட்ட அல்லது புள்ளிவிபரரீதியான மனித, நிதி வளங்களையல்ல. உளவியல் ஆன்ம வளத்தையே நாம் இங்கு குறிப்பிடுகிறோம் . உதாரணமாக இந்தியாவை எடுத்துக் கொண்டால் அங்கு வளங்கள் குறைவு. உண்மையில் பல நாடுகளைவிட இந்தியா வறுமையில் சிக்கியுள்ளது. அங்குள்ள படித்த பட்டதாரிகளின் வினைத்திறமை உயர்வானதல்ல; மாறாக அவர்கள் அதிகார வலுவாண்மையையே பிரதிபலிக்கிறார்கள். இருந்தும் இந்தியாவில் சமஷ்டி நடைமுறையில் உள்ளது. ஏனெனில் அதிகாரத்தைப் பகிரவும் அரசாங்க நிறுவனங்களைப் பகிர்வு செய்யவும் தேவையான மனிதவலுவைப் பெறும் மனப்பாங்கு
இந்தியாவில் காணப்படுகிறது.
சமஷ்டிக்குச் சார்பான ஒரு அரசியற் கலாசாரம் இல்லாமை ஐந்தாவது காரணியாகும். இப்பரிமாணம் சமஷ்டியாளர்களினால் இன்னும் ஆராயப்படவில்லை. எனினும் அரசியல் ஆய்வாளர்கள் சமஷ்டி என்பது வெற்றி பெறச் சமஷ்டிக்குச் சார்பான ஒர் அரசியற் கலாசாரம் அல்லது சமஷ்டியை ஏற்கும் திறந்த மனப்பான்மை இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளனர். இவைகள் இல்லாவிடின் சமஷ்டி ஏற்பாடுகளைப் பேணுவது பிரச்சினைக் குரியதாகும்.
பொதுவான ஈடுபாடு அல்லது ஆர்வம் இல்லாமை சமஷ்டியின் தோல்விக்கான ஆறாவது காரணியாகும். மாலி கூட்டாட்சி பொருளாதாரக் காரணிகளுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அது நிலைப்பதற்கு இக்காரணி போதுமானதாக இருக்கவில்லை.
69

Page 37
பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிந்ததற்கும், மலேஷியா விலிருந்து சிங்கப்பூர் விலகியதற்கும் பொது ஈடுபாடுகளின்மையே காரணமாகும். அதேபோல் கிழக்கு ஆபிரிக்கச் சமூகம் பிளவுற் றமைக்கு ஈடுபாடுகளிற் பொதுத்தன்மை இல்லாமல் பிணக்குகள் ஏற்பட்டமையே காரணமாகும்.
8. சமநிலையற்ற சமஷ்டி ஏற்பாடுகளும் அரிதாகவே வெற்றியடைந்துள்ளன. இரண்டு அலகு சமஷ்டியும் பாதிப்புக்கு ஆளாகலாம். ஏனெனில் இவற்றில் நெருக்கடித் தீர்வுக்கான வாய்ப்புக்கள் இல்லை. இதேபோல் ஒர் அலகு மேலாண்மை செலுத்தும் சமஷ்டியும் வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் இல்லை. இவ்விரு காரணிகளாலேயே எதியோப்பிய-எரித்திரேய கூட்டு வீழ்ச்சியுற்றது. அத்துடன் ஹெய்ல் செலாஸியின் அதிகாரப் பகிர்வில் நாட்டமின்மையும் ஓர் உடனடிக் காரணமாகும்.
5. சமஷ்டிகள் ஏன் வெற்றியடைந்தன?
மூன்றாம் உலக நாடுகளில் சமஷ்டிக் கோட்பாடுகள் அல்லது ஏற்பாடுகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான காரணங்கள் யாவை?உண்மையில் தோல்விக்கான காரணிகளுக்கு எதிரான காரணிக்ளே இதற்கான காரணிகளாக விளங்குகின்றன.
இனத்துவப் பிணக்குகளைத் தீர்ப்பதற்குச் சமஷ்டி முறைகள் சிறப்பாகப் பயன்பட்டுள்ளன. இனத்துவப் பிரச்சினைகளை முகாமை செய்யும் அவாவின் காரணமாகவே இந்தியா சமஷ்டிரீதியான யாப்பில் வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டது. விருப்பமில்லாதபோதும் மாநிலங்களின் எல்லைகளை மீள வரைந்தது. புதிய மாநிலங்களை மொழிரீதியாக (ஒன்று சமயரீதியாக) உருவாக்கியது. இம்மாற்றங்களின் விளைவாக இந்தியா இனமுறுகல் நிலையைப் பல சந்தர்ப்பங்களில் வெற்றிகரமாக நீக்கியது. இந்த வெற்றிகளின் காரணமாக மக்கள் மனத்தில் சமஷ்டியின் நன்மைகள் ஆழப்பதிந்தன.
இதே காரணங்களுக்காக நைஜீரியாவும் சமஷ்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளது. எனினும் பயப்ரா தொடர்பாக ஒரு குறுகிய கால சந்தேகம் ஏற்பட்டது. நைஜீரியாவில் சமஷ்டியின் மீது இருக்கும் நம்பிக்கையானது நைஜீரிய ஆட்சியாளர் அதனை மாற்ற முயன்றபோது அவர்கள் தூக்கியெறியப்பட்டதிலிருந்து புலப்படுகிறது. பயப்ரா பிரச்சினை தீர்ந்தவுடன் திரும்பவும் நைஜீரியா இனத்துவ நல்லுறவை வளர்க்கச் சமஷ்டி ஏற்பாடுகளைப் பயன்படுத்தியது. இபோ மக்கள் தமது மாநிலத்தைப் பெற்றுக்கொண்டனர். போரில் வெற்றிகொண்டயொரூபா,
70

ஹவுஸா மக்கள் தமது மாநிலங்களைப் பெற்றுக்கொண்டனர். இதன் மூலம் சமஷ்டி மூலம் தமது செல்வாக்கினை நிலைநாட்டும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் நைஜீரியா அரசாங்கம் இருமுறை தனது சமஷ்டிக் கட்டமைப்பை மாற்றியமைத்தது. இதன் மூலம் இனத்துவ வேறுபாடுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. (நைஜீரியாவில் நூறுக்கு மேற்பட்ட இனக் குழுக்கள் உள்ளன. இவை ஐரோப்பாவின் இனக்குழுக்களின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமானதாகும்) அத்துடன் நைஜீரியா உள்ளூராட்சியமைப்பிலும் இனத்துவ வேறு பாடுகளை இசைவுபடுத்துவதற்காகச் சமஷ்டிக் கோட்பாடுகளைப் பிரயோகித்துள்ளது. இவை அமெரிக்க கவுன்டிகளைப் போன்று தன்னாதிக்கம் கொண்ட பிரதேச அரசாங்கங்களாகும். உள்நாட்டு இனத்துவப் பிணக்குகளை முகாமை செய்வதில் சமஷ்டிக் கோட்பாடுகளைப் பிரயோகிப்பதில் சூடான் அரசும் ஒரளவு வெற்றி கண்டுள்ளதெனலாம். தென் சூடான் மக்களுக்குப் பிரதேச சுயாட்சி வழங்குவதற்காக அரசியல்யாப்பு மீள வரையப்பட்டது. இதன்மூலம் சூடான் அரசாங்கம் முழுநாட்டிலும் பிரதேச அடிப்படையில் அதிகாரத்தைப் பகிர்வு செய்ய முயற்சித்தது.
சமஷ்டி ஏற்பாடுகளின் வெற்றிக்கு இன்னொரு காரணி அரச அதிகாரத்தில் ஒரு பலமிக்க தனிமனிதனை நீக்கிக் கற்றறிவாளர் குழுவை அமைப்பதாகும். உண்மையில் தனிமனிதனிடம் அதிகாரம் கையளிக்கப்படுவது சமஷ்டிக் கோட்பாடுகளுக்கு எதிரானதாகும். இத்தகைய கற்றறிவாளர் குழுவினர் பலர் எதிர்பார்க்கும் சனநாயகத்தை முழுமையாகப் பேண முடியாது போனாலும் சமஷ்டி ஏற்பாடுகளைக் கொண்டுநடத்த முடியும்.
வெற்றிகரமான சமஷ்டி அமைப்புகளில் இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட கற்றறிவாளர் குழு இன்றியமையாததாகும். உதாரணமாக மலேஷியாவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு சுல்தான் இருந்த காரணத்தினால் அதிகாரப் பகிர்வு இலகுவாக அமைந்தது. இதேபோல் வெற்றிகரமான சமஷ்டி அதிகாரப் பகிர்வுக்கு இன்னொரு உதாரணமாக ஐக்கிய அரபு எமிரேட்டைக் (UAE) குறிப்பிடலாம்.
நைஜீரியாவில் இத்தகைய கற்றறிவாளர் சிலராக இல்லாமல் முறையாகக் கடவுடமைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள இராணுவ ஆட்சி ஒரு தனிமனிதனால் அல்லாமல் ஒரு குழுவினால் நடத்தப்படுகிறது. இக் குழுவினர் மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மூன்றாம் உலகத்தின் மிகப்பெரிய சனநாயகமான இந்தியாவில் இத்தகைய கற்றறிவாளர் குழு இன்னும் பரந்ததாக அமைக்கப்பட்டுக் கூடிய பிரதிநிதித்துவம்
71

Page 38
கொண்டதாக அமைந்துள்ளது. இதே போல மனித, பொருள் வளங்கள் இருத்தல் மூன்றாம் உலகநாடுகளில் சமஷ்டியின் வெற்றிக்கு இன்னுமொரு முக்கிய நிபந்தனையாகும். இந்தியாவிலும், நைஜீரியாவிலும் பாரிய சனத்தொகை உள்ளது. இந்தியா ஒரளவு படித்த சனத்தொகையைக் கொண்டுள்ளது. இவர்கள் அரசாங்க யந்திரத்தை இயக்கப் பயன்பட்ட போதிலும் அதிகாரத்துவ வலுவாண்மைக்கும் (Bureaucracy) காரண மாயுள்ளனர். எல்லாவற்றையும் விட முக்கியமானது மக்களின் எண்ணிக்கையைவிட அதிகாரப் பகிர்வுக்குச் சாதகமான மக்களின் கலாசார உளச்சார்பாகும். இந்தியாவைவிட செல்வச்செழிப்புக் கொண்ட மூன்றாம் உலக நாடுகள் சமஷ டிப் பொறிமுறையின் பிரயோகத்தில் வெற்றியடையவில்லை. ஆனால் இந்தியாவின் வெற்றிக்கு இத்தகைய
மக்களின் மனப்பான்மையே காரணம்.
இதனையே சமஷ்டிக்குச் சார்பான அரசியல் கலாசாரம் என்று முன்னர் குறிப்பிடப்பட்டது. மூன்றாம் உலக நாடுகளிலும் அல்லது வேறு நாடுகளிலும் சமஷ்டியின் வெற்றிக்கு இத்தகைய அரசியல் கலாசாரம் மிகவும் முக்கியமானதாகும். ஆட்சிச் செயன்முறையில் பெருந்தொகையான இனக்குழுக்கள் சம்பந்தப்படும்போது இத்தகைய கலாசாரம் அதிகாரப் பகிர்வுக்கு அத்திவாரமாக அமைகிறது.
வெற்றிகரமான சமஷ்டி ஏற்பாடுகள் வெளியிலிருந்து திணிக்கப் பட்டவையல்ல. அவ்வாறான ஏற்பாட்டுக்கு மக்களிடம் இயல்பாகவே எழும் தேவை காரணமாக இந்த ஏற்பாடு சாத்தியமாகிறது. மக்களைச் சமஷ்டிப்படுத்தாமல் ஆட்சியாளர்களை மாத்திரம் சமஷ்டிப்படுத்தும் செயற்பாட்டுக்கு வெற்றிகரமான உதாரணமாக மலேஷியாவும், ஐ.அரபு எமிரேட் சும் திகழ்கின்றன. பாகிஸ்தானில் சமஷ்டி ஏற்பாடு வெற்றியடையவில்லை. சூடானில் தானாக உருவாகிய தன்னாதிக்க ஏற்பாடு இன்னும் செயற்படுகிறது. ஆனால் லிபியாவின் மீது ஐக்கிய நாடுகளினால் திணிக்கப்பட்ட மூன்று - அலகு சமஷ்டி தோல்வியில் முடிந்தது. பொதுவான ஆர்வங்கள் குறிப்பாக பொருளாதார, பாதுகாப்புத் தேவைகள் சமஷ்டி ஏற்பாடுகளுக்கு அத்தியாவசியமான காரணிகளாகும். இத்தகைய காரணிகள் நிலைப்படுத்தலுக்கு மிகவும் ஆதாரமாக அமைகின்றன.
சில அலகுகளைக் கொண்ட சமஷ்டி ஏற்பாடுகளை விட, பல அலகு சமஷ்டி ஏற்பாடுகள் வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இந்தியா, மலேஷியா, நைஜீரியா முதலிய நாடுகள் பத்துக்கும் அதிகமான மாநிலங்களைக் கொண்டுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட் ஏழு மாநிலங்களைக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் நான்கு மாநிலங்களை மட்டுமே கொண்டுள்ளது.
72

மொத்தமாகப் பார்க்கும் பொழுது ஆபிரிக்காவை விட ஆசியாவில் சமஷ்டி ஏற்பாடுகள் கூடிய அளவு வெற்றிகளைக் கண்டுள்ளது. அரசியற் கலாசாரக் காரணங்கள் இதற்குச் சாதகமாக இருந்திருக்கலாம். ஆசியாவிலோ அல்லது ஆபிரிக் காவிலோ சமவர்டியின் வெற்றிக்கு அடிப்படையான தாராண்மைவாதம் காணப்படாவிட்டாலும் கூட ஆபிரிக்காவில் வலிமை வாய்ந்த தனிநபர்கள் ஆட்சி அதிகாரத்தை மத்தியப்படுத்தும் சந்தர்ப்பங்கள் பல ஏற்பட்டுள்ளன. ஆசியாவைப் பொறுத்தவரையில் கற்றறிவாளர் ஆட்சிக்கான வாய்ப்புகள் அதிகரித்திருந்துள்ளன. இது ஓரளவுக்குச் சமஷ்டி ஏற்பாடுகளுக்குச் சார்பானது. ஆசியாவைப் பொறுத்தவரையில் இனத்துவ வேறுபாடுகளை இசைவுபடுத்த நிறுவன ஏற்பாடுகள் வளர்ச்சி யடைந்துள்ளன. இது இன்றைய நவீன அரசின் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமானது.
6. வேற்றுமைகளை இசைவுபடுத்தல்
மேற்குறித்த ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு மூன்றாம் உலக நாடுகளில் சமஷ்டியின் பயன்பாடுகளைப் பற்றிய சில முடிவுகளுக்கு நாம் வரமுடியும் . இவற்றில் முக்கியமானது. சமஷ்டியானது வேற்றுமைகளை இசைவுபடுத்த மிகவும் பயனுள்ளது என்பதாகும். உண்மையில் வேற்றுமைகளை இசைவுபடுத்த வேண்டும் என்னும் அர்ப்பணிப்பு ஏற்பட்டவுடன் சமஷ்டித் தீர்வுகள் தானாகவே தொடர்கின்றன. சமஷ்டிக்கான எதிர்ப்பானது வேற்றுமைகளை இசைவுபடுத்த வேண்டும் என்று எண்ணுபவர்களைவிட வேற்றுமையை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டோரிடமிருந்தே வருகின்றன. இவ்விடயம் பற்றி ஏற்கெனவே பல அம்சங்கள் ஆராயப்பட்டு விட்டன. எனினும் இங்கு திரும்பவும் நினைவு கூரத்தக்கது என்னவெனில் இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பரிமாணங்கள் உள்ளன என்பதாகும் . அதாவது வேற்றுமையைக், குறிப்பிட்ட ஆட்சியாளர்கள் தான் எதிர்க்கிறார்கள் என்பதல்ல. இனக் குழுக்கள் அல்லது சமயக் குழுக்களும் எதிர்கின்றன என்பதாகும் . இவர்களில் பலர் இனப்பாகுபாட்டுக்கு ஆளான சிறுபான்மையினராக இருக்கலாம். ஆனால் அவர்களும் கூட அதிகாரம் வழங்கப்பட்டால் வேறுவிதமாக நடந்து விட மாட்டார்கள்.
சாய் ரே பெல்ஜியத் திடமிருந்து விடுதலை பெற்றவுடன் உத்தேசிக்கப்பட்டிருந்த சமஷ்டி முறையைக் கைவிட்டுவிட்டது. பின்னர் கட்டாங்கா பிரிந்து செல்ல நிச்சயித்ததால் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் கட்டாங்கா வென்றிருந்தால் சாய்ரே சமஷ்டியை ஏற்றிருக்கும் என்றும் கூறுவதற்கில்லை. கட்டாங்காவின் பிரிவினைவாதத்தலைவரான மொயிஸ் ஸோம்பே (Moise Tshombe) குறுகிய காலம் சாய்ரேயின் சனாதிபதியாக இருந்தபோது
73

Page 39
அவர் வேற்றுமையை ஏற்றுக் கொள்ளவில்லை. அவரை எதிர்த்தவர்கள் பின்னர் அவரைப் படுகொலை செய்தனர். சுருக்கமாகக் கூறுவதெனில் சாய்ரேயின் இனக்குழுவினர் அதிகாரப் பகிர்வு செய்து ஒற்றுமையாக வாழ்வதை விட தமது குழுவினரின் மேலாண்மையை உருவாக்குவதையே விரும்பினர்.
நைஜீரியைவைப் பொறுத்தளவில் நைஜீரிய கூட்டாட்சியின் மற்ற இரு பிரதான பங்காளிகளும் ஏனையோரும் ஹவ்ஸாக்களுடன் இசைவுபடுத்திக் கொள்ள முயல வேண்டும். இது மிகவும் கடினமான செயற்பாடாகும். 1970களில் நைஜீரியாவின் இராணுவ ஆட்சியாளர் எவ்வளவு தவறுகளைச் செய்தபோதும் அவர்கள் செய்த நன்மை ஹவ்ஸாவின் (Hausa) மேலாண்மையைக் குறைத்து அதன் மூலம் சமஷ்டி ஏற்பாடுகளைக் காப்பாற்றியதாகும். இராணுவம் ஆட்சியைத் திரும்பவும் சிவில் அதிகாரத்துக்கு மாற்ற முன்னர் ஹவ் ஸா வட மாநிலத்தைச் சிறுபகுதிகளாகப் பிரித்தனர். இதன்மூலம் நைஜீரிய சமஷ்டி 19
மாநிலங்களைக் கொண்டமைந்தது.
மலேஷியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற கற்றறிவாளர் மீது தங்கியிருக்கும் சமஷ்டி ஏற்பாடுகளில் இக்கற்றறிவாளர்கள் தமது வேறுபாடுகளைப் பேணும் கடமையைக் கொணடுள்ளனர்.இந்நாடுகளில் வேற்றுமைகள் சமஷ்டிப்பிரிவுகளில் தங்கியிருக்கவில்லை. மலேஷியாவில் மலாயர்கள் பெரும்பான்மையினராவர் . சகல மாநிலங்களிலும் சிறுபான்மையிரான சீனர்கள் மீது இவர்கள் பகைமை கொண்டுள்ளனர். சிங்கப்பூரில் மட்டுமே சீனர்கள் பெரும்பான்மையினராவர். இதன் காரணமாக சிங்கப்பூர் பிரிய நேரிட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சில் சில இனக்குழுக்கள் பரந்து காணப்படுகின்றன. ஆனால் மக்களில் வேற்றுமை தொடர்பான பிரச்சினைகள் இல்லை. பாகிஸ்தான் இஸ்லாமிய ஐக்கியம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இங்கு இனத்துவ வேறுபாடுகளுக்கு அதிகம் இடம் கொடுக்கப்படவில்லை. மக்கள் இனத்துவ வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கோரியபோது ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஒரு வலிமையுள்ள தனிநபர் பாணியிலேயே ஆட்சி நடத்த முயன்றனர். பாகிஸ்தானில் சமஷ்டி பேப்பரில் தான் தங்கியுள்ளது. நடைமுறையில் சமஷ்டி மத்திய அரசாங்கத்தின் பலவீனம், மாகாண அரசுகளின் வலிமை காரணமாகவே செயற்படுகிறது. மத்திய அரசாங்கத்துக்கு சமஷ்டியில் எவ்வித அக்கறையும் இல்லை.
பிலிப்பைன்ஸில் மின்டானோவில் உள்ள மொரோஸ் இனக்குழுக்களுக்கு ஒரளவு தன்னாதிக்கம் வழங்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அது வெற்றிபெறவில்லை. ஏனெனில் இரு பகுதியினருக்குமே இசைந்து செல்வதில் நாட்டமில்லை. சனாதிபதி பேர்டினன் மார்க்கோஸ் எத்தகைய சமஷ்டி அமுலாக்கத்தையும் தடுக்கும் அளவுக்கு மத்திய
74

அதிகாரத்தைக் கொண்டிருந்தார். அதேநேரத்தில் தமது புரட்சியைக் கொண்டு நடத்தும் அளவுக்கு மொரோஸ் வலிமையுள்ளோராயிருந்தனர். இக் காரணமாக தீர்வுகள் எற்படவில்லை. ஆனால் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தன. ஒரு சமஷ்டி அடிப்படையில் ஒரு தீர்வு காணப்படாவிட்டால் இருபகுதியினரும் தமது இலக்குகளை ஒரு போதும் அடையப் போவதில்லை.
இனத்துவ வேறுபாடுகள் மூன்றாம் உலகில் மறைந்துவிடப் போவதில்லை. முதலாம், இரண்டாம் உலகிலும் கூட அவை மறையவில்லை. தேசிய ஒருமைப்பாட்டை ஓரின அடிப்படையில் ஏற்படுத்த நூற்றாண்டுகளாக முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் அது சாத்தியப்படவில்லை. சிறுபான்மையினரைப் படுகொலை செய்தல் அல்லது விரட்டியடித்தல் மூலமே இச்சூழ்நிலையில் மாற்றம் ஏற்படும். ஆனால் இத்தகைய அசிங்கமான நடவடிக்கைகளும் கூட சில நாடுகளில் எதிர்பார்க்கப்படும் ஓரினத் தன்மையைக் கொண்டுவரப் போவதில்லை. வேற்றுமைகளுக்கு முகம் கொடுக்கச் சமஷ்டி ஏற்பாடுகள் மட்டுமே ஏற்புடையவை.
7. சுதந்திரத்தை வலுப்படுத்தல்
ஏனைய நாடுகளைப் போலவே மூன்றாம் உலக நாடுகளிலும் சமஷ்டி சுதந்திரத்தை வலுப்படுத்தும் ஒரு சாதனமாகும். இதற்கு இந்நாடுகளில் சமஷ்டியின் வெற்றியை விடத் தோல்விகள் அதிகமாக இருப்பது ஒரு காரணமாகும். மூன்றாம் உலக நாடுகளில் சுதந்திரத்தை வலியுறுத்தும் ஆட்சியாளர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையினராவர். இவர்கள் நாட்டின் சுதந்திரத்திலும் அதனைக் கட்டியெழுப்புதலிலும் ஈடுபட்டிருந்த போதும் மக்களின் சுதந்திரத்தில் நாட்டம் கொண்டவர்கள் எனக் கொள்வதற்கில்லை. மாறாக மக்களின் சுதந்திரங்களை மட்டுப்படுத்து வதற்கான வாதங்களே முன்வைக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் தேசிய சுதந்திரம், தேசிய அபிவிருத்தி என்னும் பெயரால் மரபுரீதியான சுதந்திரங்களும் உரிமைகளும் கூட நீக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வகையில் சுதந்திரங்களை உறுதிப்படுத்த சமஷ்டி ஒரு முக்கிய சாதனமாகப் பயன்படக்கூடும். ஏனெனில் சமஷ்டியின் இயல்பு சுதந்திரத்தைப் பேணுவதாகும். வெற்றி பெற்றுள்ள சமஷ்டிகளில் இத்தகைய சுதந்திரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணம் இந்தியாவில் மிகத் தெளிவான சனநாயக அபிலாசைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆட்சிப் பங்காளிகளின் உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளன.
75

Page 40
8. பொருளாதார அபிவிருத்தியைப் பரப்புதல்
பொருளாதார அபிவிருத்தி மற்றும் அதன் நன்மைகளைப் பரப்புவதில் சமஷ்டியின் முக்கியத்துவம் பற்றிப் பொதுவாகக் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. மூன்றாம் உலகில் தேசிய அபிவிருத்தி எனக் கொள்ளப்படுவது உண்மையில் தேசியத் தன்மை கொண்டதல்ல. இங்கு உண்மையில் நகரங்கள், அதுவும் குறிப்பாக தலைநகரம் மாத்திரமே அபிவிருத்தி செய்யப்படுகிறது. இத்தகைய நகரப்பகுதிகள் புதிய வளங்களைத் தன்னில் இழுத்துக் கொள்வதோடு கிராமப்புறங்களில் சுதந்திரத்துக்கு முன்னர் இருந்த வளங்களையும் கவர்ந்து கொண்டன. இதன் காரணமாகக் கிராமிய வறுமையும், நகர வளர்ச்சியின்மையும் மூன்றாம் உலகின் ஒரு விஷ வட்டமாக மாறிவிட்டது. அதாவது கிராமிய வறுமை காரணமாக மக்கள் நகரங்களை நோக்கிப் புலம் பெயர்கிறார்கள். மக்கள் தொகை அளவுக்கதிகமாகப் பெருகுவதால் நகர அபிவிருத்தி பாதிக்கப்படுகிறது. இதற்குச் சிறந்த உதாரணமாகக் கல்கத்தாவைக் குறிப்பிடலாம். இதன் காரணமாக நன்மை அடைந்தவர்கள் ஆளும் வர்க்கம் மட்டுமே. அபிவிருத்தி நிதியின் பெரும்பகுதி அவர்களின் கைக்குள் சென்று சேர்கின்றது அல்லது அவர்களின் சுவிஸ் வங்கி கணக்கு வளர்ச்சியடைகிறது.
மூன்றாம் உலகில் பொதுவாக இத்தகைய தன்மைகள் காணப்பட்டாலும் சமஷ்டியின் காரணமாக வளங்கள் ஒரளவேனும் பகிர்வு செய்யப்படுகிறது எனலாம். சமஷ்டியைக் கடைப்பிடிக்கும் நாடுகளில் ஆகக்குறைந்தது சமஷ்டி அலகுகளின் தலைநகரங்களிலும் வளங்களைப் பெறும் வாய்ப்பு உள்ளதால் அபிவிருத்தியானது நாட்டு மக்களில் பெரும் பகுதியினருக்குச் செல்கிறது. அதனால் வளங்கள் ஒரிடத்தில் குவிக்கப்படும் ஆபத்து நியாயமான அளவு குறைக்கப்பட்டு உண்மையான தேசிய அபிவிருத்திக்கான தளம் இடப்படுகிறது.
இந்தியாவும் நைஜீரியாவும் இதற்கு நல்ல உதாரணங்கள். கல்கத்தா, பம்பாய், லாகோஸ் ஆகிய நகரங்கள் கிராமிய-நகரப் புலப்பெயர்வு காரணமாகப் பல பிரச்சினைகளுக்கு உள்ளான போதும் இந்நாடுகளில் அபிவிருத்திமுயற்சிகள் பரந்துபட்டுள்ளன. இங்கு குறைந்த முக்கியத்துவம் கொண்ட நகரங்களுக்குப்புலம்பெயர்ந்தவர்களும் ஓரளவு தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளக் கூடியதாக உள்ளது. இவ்விடயம் ஆழமாக ஆராயப்பட வேண்டியதொன்றாகும்.
அரசியற்பொருளாதாரத்தில் செல்வாக்குச்செலுத்துவதும், பொருளாதாரம் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதும் தெளிவான விடயமாகும். சமகால உலகில் பொருளாதாரத்தில் அரச தலையீடு திரும்பவும் முக்கியமாகி யுள்ளது. எந்த அரசிலும் அரசியல் அமைப்பானது ஒவ்வொரு பிரசையின்
76

பொருளாதார எதிர்காலத்தையும் பாதிக்கிறது. அதேபோல பொருளாதார ஏற்பாடுகள் அரசியலில் ஒப்புரவின்மையை ஏற்படுத்தாது விட்டாலும் நடைமுறை வித்தியாசமானதாக இருக்கலாம். இந்தவகையில் சமஷ்டி அரசியல் மூன்றாம் உலகைப் பொறுத்தவரையில் பொருளாதார நன்மைகளின் பரந்துபட்ட பகிர்வுக்குக் கூடிய வாய்ப்பினை அளிக்கிறது.
9. மூன்றாம் உலகநாடுகளில் சமவர்டியின் எதிர்காலம்
மேலோட்டமாகப் பார்க்கும் போது மூன்றாம் உலக நாடுகளில் சமஷ்டியின் எதிர்காலம் வரையறுக்கப்பட்டுள்ளதுபோலத் தோன்றலாம். தற்போதைய சமஷ்டிகள் தமது சமஷ்டி இயல்பை இழக்காது விட்டாலும் ஆட்சி மாற்றங்கள், அதிகாரப் பகிர்வு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அதே நேரத்தில் பிரச்சினைகளுக்குச் சமஷ்டி மூலமே தீர்வு காண முடியும் என்னும் நிலையிருந்த போதிலும் கூட சமஷ்டி அல்லாத நாடுகள் சமஷ்டி நோக்கித் தள்ளப்படும் என்றும் எதிர்பார்ப்பதற்கில்லை. இது குறுங்கால நோக்கமாகும். நீண்டகால நோக்கில் மூன்றாம் உலகப் பிரச்சினைகளின் தீர்வில் சமஷ்டிக்கு இடமில்லை எனக் கூறுவதற்கில்லை. முதலாவதாக, சமஷ்டித் தீர்வு கோரி நிற்கும் மூன்றாம் உலக வேற்றுமைகள் (ஒரு விதிவிலக்கைத் தவிர) மறைந்துவிடும் என்று கூறுவதற்கில்லை. வேற்றுமைகளை இசைவுபடுத்தும் ஏதோவொரு வழியை அவர்கள் கண்டாக வேண்டும். அப்படியொரு சிறந்த வழி கண்டறியப்படும் சாத்தியமும் இல்லை.எனவே பல்வேறு வகையான சமஷ்டி ஏற்பாடுகளில் ஒன்று இச்சூழ்நிலைகள் ஒவ்வொன்றுக்கும் இருந்தாக வேண்டும். ஆனால் இதனை அமுல்படுத்தக் கூடிய ஆர்வம் இல்லாமலிருக்கலாம்.
அரசுகளுக்கிடையிலான ஏற்பாடுகளைக் கட்டியெழுப்புவதில் சமஷ்டிக் கோட்பாடுகளின் பயன்பாடு ஒளிமயமானது எனக் கூறுவதற்கில்லை. ஆனால் ஆசியான் (ASEAN) கூட்டு ஓர் எதிர்பாராத சமஷ்டி அடிப்படையிலான ஒரு பிரதேசக் கூட்டாகும். இதில் அங்கம் வகிக்கும் பிலிப்பைன்ஸ், மலேஷியா , இந்தோனேஷியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் 200 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளன. ஒரு லீக் ஆகப் பரிணமித்திருக்கும் இக் கூட்டு பொதுவான அரசியல் ஐக்கியம், பொருளாதாரக் கொள்கை, பொதுவான சந்தை ஆகியவற்றைக் கட்டியெழுப்பமுயல்கின்றன. ஐந்து நாடுகளில் நான்கு உறுதியான மத்திய மயப்படுத்தலைக் கொண்டுள்ளனவெனினும் ஒரு பொதுக் கூட்டினை உருவாக்குவதிற் தம்மை அர்ப்பணித்துள்ளன. இது மட்டுமல்லாமல் செனகல், காம்பியா ஆகிய நாடுகளின் கூட்டான செனகாம்பியாவும் பரஸ்பர நன்மைகளுக்காகச் சமஷ்டியை ஏற்றுக் கொள்ளும் இன்னுமொரு உதாரணமாகும்.
77

Page 41
10. நகரவாக்கமும் சமஷ்டியின் எதிர்காலமும்
உலகம் முழுவதும் நகரவாக்கத்தின் (Urbanisation) தீவிர அதிகரிப்பானது அதிநவீன உலகின் இன்னொரு புரட்சியைக் காட்டி நிற்கிறது. உலகம் முழுவதையும் நகரவாக்கம் மாற்றியமைத்திருப்பதால் எதிர்கால சமஷ்டியின் நடிபங்கில் அது முக்கிய காரணியாகக் கூடும். நகரவாக்கத்தில் சமஷ்டியின் தாக்கம் பற்றி ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிரான கருத்தும் உண்மையாகும். உதாரணமாக சமகால சமஷ்டி அமைப்புகள் நகரங்களின் முக்கியத்துவம் மிகவும் குறைவான விவசாயக் கிராமிய அமைப்பிலேயே உருவாகின. இதன் காரணமாக சமஷ்டி தனது பண்புக் கூறுகளைக் கிராமிய ஆட்சி அலகுகளில் இருந்தே பெற்றது. பின்னர் தொடர்ந்து ஏற்பட்ட நகரவாக்கம் சனத்தொகை அமைப்பை மாற்றியமைத்தது. அத்துடன் நகரமையங்களுக்கும் தூரப் பிரதேசங்களுக்கும் புதுவகையான தொடர்பாடல்களை ஏற்படுத்தியது.
உதாரணமாக, சட்டசபைகளின் பிரதிநிதித்துவம் பிரதேச அடிப்படையில் அமைந்தது. கிராமிய சனத்தொகையைக் கொண்ட பிரதேசங்களில் ஒரே மாதிரியாகப் பரந்திருந்தது. நகரவாக்கத்தின் காரணமாக நகரங்களில் சனத்தொகை விரைவாக அதிகரித்தது. இதனால் ஏற்பட்ட சமநிலை யின்மையை ஈடு செய்வதற்காகவும், சனநாயகத்தின் அடிப்படையான சமவாய்ப்புகளை ஈடு செய்வதற்காகவும் பிரதிநிதித்துவத்தின் அடிப்படைகளை மாற்றியமைக்க வேண்டியிருந்தது. நகரவாக்கம் தேர்தல் தொகுதி எல்லைகளை ஊடறுத்துச் சென்ற வேளைகளில் பிரதேசப் பொருளாதார இடைத்தொடர்புகளுக்கும், அரசியல் எல்லைகளுக்கும் இடையிலான பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. இப்பிரச்சினைகளுக்குச் சமகால சமஷ்டி ஆய்வுகளில் தேவைக்கு மேற்பட்ட இடம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவற்றில் ஆய்வுக்கான அம்சங்கள் சில இல்லாமலில்லை.
பொதுவாக நகரவாக்கம் சமஷ்டியில் உள்ளார்ந்திருக்கும் சில நெருக்கடிகளுக்குக் கூடிய முக்கியத்துவம் கொடுத்த போதிலும் அவை சனத்தொகை பரந்திருக்கும் ஒரு கிராமிய கல்ாசாரத்தில் கட்டுப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக இனத்துவ முரண்பாட்டு நெருக்கடிகள் சனத்தொகை குறைந்த ஒரு கிராமியப் பின்னணியில் இலகுவாக முகாமை செய்யப்படலாம். ஏனெனில் குழுக்களுக்கிடையிலான ஏற்பாடுகள் இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால் நகர அமைப்பில் இது சாத்தியமில்லை. புலப்பெயர்வு நகரவாக்கத்தின் ஓர் அம்சமாக இருப்பதால் சமூக உறுதிப்பாட்டை உருவாக்குவது கடினமானது.
நகரவாக்கமானது அரசாங்கத்தின் சுமைகளை அதிகரிக்கின்றது. பல்வேறு சேவைகளை வழங்க அது நிர்ப்பந்திக்கப்படுகிறது. சேவைகள் திருப்தி
78

இல்லாத போது மக்களின் வெறுப்பையும் அது தேடிக்கொள்கிறது. இதில் முக்கியமான அம்சம் என்னவெனில் அத்தகைய வெறுப்பு மத்திய அரசாங்கத்தை விட அச்சேவைகளை வழங்கும் உள்ளூர் ஆட்சிகளின் மீதே திருப்பப்படுகிறது. அவர்கள் மீது நெருக்குதல் ஏற்படுத்த வேண்டுமென மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுகிறது. இதன் மூலம் அதிகாரம் ஒரு மையத்தில் குவிக்கப்படுவது ஊக்குவிக்கப்படுகிறது. ஆனால் சமஷ்டி அமைப்பு தன்னுடைய இயல்பு காரணமாக நகரவாக்கத்தைக் குறைக்கிறது. அத்துடன் மத்திய அரசாங்கத்தில் தங்கியிருப்பதையும் குறைக்கிறது.
மறுதலையாகப் பார்க்கும் போது நகரங்களினால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளுக்குச் சமஷ்டி ஒரு பரிகாரமாக அமைகின்றதுடன் நகரவாக்கத்தினால் ஏற்படும் பிரச்சினைகளின் தீவிரத்தைக் குறைப்பதற்கு மத்திய மயப்படுத்தப்பட்ட அரசியல் முறைகளைவிட இது சிறந்த தீர்வாகவும் விளங்குகின்றது. அமெரிக்க சமஷ்டி முறையைப் பற்றி நடத்தப்பட்ட ஆய்வுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
சமஷ்டி பற்றிய ஈடுபாடுகள் பெரும்பாலும் தேசிய-அரசுகளைச் சூழந்தே அமைந்திருந்தன. ஆனால் உள்ளூர் ஆட்சி மட்டத்தில் பல சமஷ்டி ஏற்பாடுகள் எப்பொழுதும் இருந்து வந்துள்ளன. இன்று அவை எண்ணிக்கையில் பெருகுகின்றன. உள்ளூராட்சியில் சமஷ்டி ஏற்பாடு நகரவாக்கத்தின் ஒரு தோற்றப்பாடாகும். ஏனெனில் பலநகரங்கள் பொருளாதார, சமூகக் காரணிகளினால் இணைக்கப்படுகின்றன. ஆனால் அரசாங்க ரீதியாகப் பிரிந்துள்ளன. கனடாவின் அனுபவம் இங்கு குறிப்பிடத்தக்கது. ஒன்ராறியோ ரொரன்டோவில் சமஷ்டி ஏற்பாடுகளும், கோட்பாடுகளும் பின்பற்றப்பட்டன. அமெரிக்காவில் மியாமி, மினசோட்டாவில் சமஷ்டிக் கோட்பாடுகள் இன்னொரு வகையில் பின்பற்றப்பட்டன. எல்லாவற்றையும் விட நகரங்களின் ஆட்சியில் சமஷ்டி ஏற்பாடுகளைப் பயன்படுத்துவதில் பாரீஸ், லண்டன் முதலிய நகரங்கள் சிறந்த உதாரணங்களாகும். நகரப் பிரதேசங்களில் சமஷ்டி ஆட்சி என்பது ஆய்வு செய்வதற்கு சிறந்த விடயமாகும்.
இதுவரை சமஷ்டியைப் பற்றி அரசாங்க அடிப்படையிலேயே கலந்துரையாடப்பட்டது. அரசு சாரா நிறுவனங்களிலும் சமஷ்டிக் கோட்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. தொழிற்சங்கங்கள், வர்த்தக, கைத்தொழில் சங்கங்கள், சுகாதார அமைப்புகள் ஆகியவை சமஷ்டிக் கோட்பாடுகளைப் பயன்படுத்தியுள்ளன. இவை யாவும் அரசு சாரா பொது நிறுவனங்களாகும். இவர்கள் சமஷ்டியைப் பின்பற்றும் போது பிரதேச அம்சத்தை அல்லாது இயங்கும் அம்சத்தையே கவனத்தில் கொள்கிறார்கள். இது சமஷ்டிக் கோட்பாடுகளின் இன்னொரு பயனாகும். நவீன கூட்டுத்தாபனங்கள் பெருமளவுக்குச் சமஷ்டிக் கோட்பாடுகளையே
79

Page 42
பின்பற்றுகின்றன. கூட்டுத்தாபனங்கள் பரந்து விரியும் போது நடைமுறையில் அவை சமஷ்டிக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவே நிர்ப்பந்திக்கப்படுகின்றன. சிக்கல்தன்மை பெருகும் போது இதே காரணங்களுக்காக அரசுகளும் சமஷ்டியை நோக்கித் தள்ளப்படுகின்றன.
அண்மைக்காலங்களில் பாரிய கூட்டுத்தாபனக் கூட்டுகள் சமஷ்டிக் கோட்பாடுகளைப் பெருமளவுக்குப் பயன்படுத்தியுள்ளன. இதற்கு காரணம் நவீன வாழ்க்கை முறைக்கு சமஷ்டிக் கோட்பாடுகள் ஏற்புடையதாக உள்ளமையேயாகும். நவீன சமூகங்கள் பெரும்பாலும் அந்தஸ்து உறவுகளை விட ஒப்பந்த உறவுகளிலேயே பெருமளவுக்குத் தங்கியுள்ளன. சமூக ஒப்பந்தங்கள் தனிநபர் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் மேம்படுத்துகின்றன. அத்தகைய சந்தர்ப்பங்களிற் பேச்சு வார்த்தைகளும், பேரம்பேசுதலும் முக்கியமாகின்றன. சமஷ்டி ஏற்பாடுகள் இவற்றுக்கு
வாய்ப்பளிக்கின்றன.
நகரவாக்கம், சமஷ்டி என்னும் இரு புரட்சிகள் ஒன்றிணையும் ஒரு கால கட்டத்திலேயே நாம் வாழ்கின்றோம். அரசாங்கங்களும், பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்களும் தமது பிரச்சினைகளுக்குச் சமஷ்டி மூலம் தீர்வு காணும் தன்மை பெருகி வருகின்றது. இது சிற்றளவிலும், பேரளவிலும் நடைபெறுகின்றன. வேற்றுமைகள் பெருகியுள்ள சந்தர்ப்பங்களில் தனி அலகுகளின் தனித்துவத்துக்குப் பங்கம் வராமல் நகரங்களையும் நாடுகளையும் இணைப்பதற்கு சமஷ்டி ஏற்பாடுகள் மிகவும் உதவியாக உள்ளன. ஆயினும் இத்தகைய வாய்ப்புகள் இன்னும் போதுமான அளவுக்கு ஆய்வு செய்யப்படவில்லை.
11. புதிய அரசு முறைமையை நோக்கி
(Toward a New State System)
நவீன அரசு முறைமையில் இன்று 160க்கு மேற்பட்ட நாடுகள் உள்ளன. இவையாவும் சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையில் மீளமைக்கப்பட்ட, அரசியல் ரீதியாக இறைமை கொண்ட நாடுகளாகும். இதற்கு மேலாக உலகில் சமாந்தர அரசு முறையில் 300 சமஷ்டி நாடுகள் உள்ளன. இதனையே வேறுவிதமாகக் கூறுவதானால் உலகில் 500 நாடுகள் உள்ளன. இவற்றில் சுமார் 100 நாடுகள் அல்லது ஐந்தில் ஒரு பகுதி அரசியல் இறைமை கொண்ட ஒற்றையாட்சி நாடுகளாக நவீன அரசு முறைக்குச் சிறந்த உதாரணங்களாக விளங்குகின்றன. மிகுதி 400 நாடுகள் அல்லது ஐந்தில் நான்கு நாடுகள் ஏதோவொரு வகையான சமஷ்டி ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன. இது ஒரு மேம்போக்கான வேறுபாடு எனினும் இன்று இந்த இரு முறைகளும் பின்னிப் பிணைந்துள்ளன. சமஷ்டி அலகுகளின் சர்வதேச உறவுகள் இன்று விரிவடைந்து செல்கின்றன.
80

உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவை நோக்கின் வெளிநாட்டு உறவுகள் முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தின் பொறுப்பாக இருக்க சில உள்ளக விடயங்கள் முழுவதும் மாநிலங்களின் பொறுப்பாக இருந்தன. ஆனால் இன்று அமெரிக்க மாநிலங்கள் நேரடியாகச் சர்வதேச உறவுகளை விருத்தி செய்கின்றன. அதேநேரத்தில் மத்திய அரசு உள்ளக விடயங்களில் பொறுப்புகளைப் பகிர முயல்கிறது. மாநில அரசுகள் வெளிநாட்டுப் பொருளாதாரத் தொடர்புகள், வெளிநாட்டு மூலதனத்தை ஈர்த்தல் போன்றவற்றில் கூடிய ஆர்வம் காட்டுகின்றன. கென்னடி நிர்வாகம் தொடக்கம் மாநிலங்கள் பொருளாதாரச் செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றன. மாநிலங்களின் மொத்தப் பொருளாதாரச் செலவுகள் மத்திய அரசாங்கத்தின் செலவுக்கு ஈடாகிறது. அதுமட்டு மல்லாமல் எல்லைப்புற மாநிலங்கள் கனடா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளுடன் தொடர்புகளை வளர்த்துள்ளதோடு இந்நாடுகள் தொட்ர்பான ஐக்கிய அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையில் செல்வாக்கும் செலுத்துகின்றன. பேரேரிப் பிரதேசம் கொலம்பியா ஆற்று வடிநில, நீர் சம்பந்தப்பட்ட விடயங்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கான மெக்சிக்கர்களின் குடிவரவு ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
அமெரிக்க உதாரணம் இவ்விடயத்தில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் அமெரிக்க அரசியல் யாப்பு வெளியுறவுகளை மத்திய அரசாங்கத்தின் விசேட பொறுப்பாக வரையறை செய்துள்ளது. பல சமஷ்டி அரசியல் யாப்புகளில் மத்திய அரசின் சட்டங்களுக்கு முரண்படாத வகையில் தம்மைப் பாதிக்கும் விடயங்கள் தொடர்பாகச் சமஷ்டி அலகுகள் தமது அயல்நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் கன்ரோன்கள், யூகோஸ்லாவிய குடியரசுகளைப் பொறுத்தவரையில் இது உண்மையாகும். சோவியத் குடியரசுகளைப் பொறுத்த வரையில் உக்ரைன், பைலோ ரஷ்யா ஆகியவை ஐக்கியநாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. ஐ.நா. உருவாக்கப்பட்டபோது சோவியத் ரஷ்யாவுக்கு அதிக வாக்குகள் வழங்குவதற்காக வல்லரசுகளுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட ஓர் இணக்கப்பாட்டின் காரணமாகவே இம்மாநிலங்கள் ஐ.நா. பிரதிநிதித்துவம் பெற்றன என்பது உண்மையெனினும் சோவியத் நாட்டின் அரசியல் அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில கோட்பாடுகளுக்கு அமையவே இப்பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.
இவ்விடயம் பற்றிக் கனடிய அரசியல் யாப்பில் தெளிவான அம்சங்கள் காணப்படவில்லையெனினும் கனடாவின் மாகாணமான கியூபெக் இன்று சமஷ்டி அலகுகளின் வெளியுறவு வளர்ச்சிக்கு உதாரணமாகத் திகழ்கிறது. கியூபெக் கனடா சமஷ்டி அரசில் ஓர் அலகாக இருக்கும் பொழுதே கலாசார ரீதியாகப் பிரெஞ்சு செல்வாக்குக்குஉட்படவும் சர்வதேச சமூகத்தில்
81

Page 43
தனியிடம் பெறவும் முயல்கிறது. அல்பேட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா முதலிய மாநிலங்களும் வெளியுறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் முன்னிற்கின்றன. இத்தகைய மாநில ஆர்வங்களை ஏற்றுக்கொண்ட கனடாவின் வெளியுறவு அமைச்சு மாநில வெளியுறவு அம்சங்களைக் கவனிப்பதற்காக ஓர் அலுவலகத்தை நடத்துகிறது. அத்துடன் வாஷிங்டனிலுள்ள கனடாவின் தூதரகத்தில் இதற்கென ஓர் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வேறுநாடுகளில் உள்ள தூதரகங்களில் வெளியுறவு விடயமாக வரும் மாநில அதிகாரிகளுக்கு உதவுமாறு நிரந்தரப் பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளன.
வெளியுறவு விடயங்களில் இவ்வாறு வளர்ந்துவரும் சமஷ்டி அலகுகளின் பங்கானது உலக அரங்கில் இறைமை முறைகளுக்கும் சமஷ்டி முறைமைகளுக்கும் உள்ள வேறுபாடு உடைவதைக் காட்டி நிற்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் இந்த நிலைமை தலைகீழாக இருந்தது. அதாவது சமஷ்டி அமைப்புகளில் மத்திய அரசு அதிக அதிகாரம் பெற்றுவரும் அதேவேளை சமஷ்டி அலகுகளின் அதிகாரம் குறைகின்றன எனக் கூறப்பட்டது. ஆனால் இன்றைய சர்வதேசச் செல்நெறிகள் மாநிலங்களின் பங்கானது ஒரு சமஷ்டிமுறைமையில் வலுப்பெறுவதையே காட்டி நிற்கின்றன. உண்மையில் சமஷ்டி அலகுகள் இன்று இருதிசையாகவும் இழுக்கப்படுகின்றன. சமஷ்டிப்புரட்சி தொடருமானால் ஒன்றிலொன்றில் மென்மேலும் தங்கியிருக்கும் நாடுகளைக் கொண்ட உலகில் அரசுகளின் இறைமை குறைக்கப்படும். அதேவேளை சமஷ்டி அலகுகளின் பல்வேறு தொடர்புகள் அதிகரிக்கும் பட்சத்தில் அவை மரபுரீதியான இறைமை கொண்ட நாடுகளுக்குச் சமமான் முக்கியத்துவம் பெறக்கூடும்.
12. அதிநவீன யுகமும் சமஷ்டிவாதப் புரட்சியும்
சமஷ்டிப் புரட்சியின் எழுச்சிநவீன அரசியலின் மூன்று தோற்றப்பாடுகளில் தங்கியுள்ளது. அவையாவன :
(1) நவீன தேசிய அரசுகளின் எழுச்சி. இவ்வரசுகள் அரசியல் இழுபறிகளின் நவீன நிலைமைகளிற் தம்மைத் தற்காத்துக் கொள்ளும் தேவை காரணமாகப் பாரிய ஆட்சிப்பிரதேசங்களையும், மக்கள் தொகையையும் கொண்டெழுந்தன. இதன் விளைவாகத் தோன்றிய உள்ளக அதிகாரப் பகிர்வும் இங்கு முக்கியமாகும்.
(2) நவீனத்துவம் அதற்கு முந்திய சமுகத்தின் "சேதன" (organic) அதிகார அழிவுகளையும் தன்னில் கொண்டிருந்தது. ஆனால் சுயாட்சி வடிவங்களை உருவாக்கும் தேவைகளும் எழுந்தன.
82

(3) நவீனத்துவம் பழைய மேன்மக்கள் (Aristocratic) கோட்பாடுகளையும் உடைத்தெறிந்தது. இதன் விளைவாக எழுந்த சமத்துவம் போன்ற எண்ணக் கருக்களை இசைவுபடுத்தக் கூடிய சனநாயக
ரீதியான சமூக, அரசியல் ஒழுங்கினை ஏற்படுத்த வேண்டியிருந்தது.
சமஷ்டிப் புரட்சியின் எழுச்சி மேற்குறிப்பிடப்பட்ட மூன்று தோற்றப்பாடுகளின் காரணமாகவும் அவற்றின் தொடர்ச்சியாக எழுந்த பிரச்சினைகளைத் தீர்க்கவும் ஒரு மாற்றுமருந்தாகவே ஏற்பட்டது. சமஷ்டியானது தேசிய-அரசுகள் அதிகாரத்தையும் வலுவாண்மையையும் மத்திய அரசாங்கத்தில் குவிப்பதற்கு வழிவகுத்த அதே நேரத்தில் அவற்றின் பிரயோகத்தைப் பொறுத்த வரையில் சகல மக்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் அரசியல் அமைப்பு ரீதியாகப் பகிர்வு செய்யவும் வழிவகுத்தது. சமஷ்டிக் கருத்துக்கள் புதிய சமூகங்களையும் அவற்றின் உள்ளூர் சுயாட்சிக்கான புதிய சாதனங்களையும் தோற்றுவித்தன. இக்கருத்துக்கள் மரபுரீதியான, உறவுரீதியான தொடர்புகளை விடுத்து ஒப்பந்தரீதியான தொடர்புகளுக்கு வழிவகுத்தன. இறுதியாக சமஷ்டிப்புரட்சிசமத்துவத்தைப் பேணுவதற்கு வழிவகுத்தது. உள்ளூர் மட்டத்திலிருந்து பொதுவான அரசு மட்டம் வரை பொதுவிடயங்களில் பொதுமக்களின் பங்குபற்றலுக்கு அது வாய்ப்பளித்தது. இம்மூன்று தோற்றப்பாடுகளுடன் சமஷ்டியின் பயன்பாடு கொண்டிருக்கும் தொடர்பு பற்றி முதலில் கணிப்பிட்டவர் ரொக்வில் (AlexisdeTocqueville) ஆவார். நவீன அரசியல் அபிவிருத்தியில் சமஷ்டிப் புரட்சியின் பங்குபற்றி ஆய்வு செய்யவும், விளக்கம் பெறவும் ரொக்விலின் பணிகள் மிகவும் காத்திரமானவையாகும்.
இதற்கு மேலாக, சர்வதேச அரங்கிற் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால் அதற்கான அரசியல் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் தேவையும் அதிகமாகவே உள்ளது. சமஷ்டிக்குச்சார்பான ஓர் எளிமையான வாதமாக இதனைக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக சூழலியல் வாதிகள் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை எதிர்க்கின்றனர். அவர்கள் ஐ.நா.சபைச் சூழலியல் சார்ந்த தீர்மானங்களை மேற்கொள்ளும் வலிமையுடையதாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பர். இங்கு எழும் முதலாவது கேள்வி ஏன் அவர்கள் நாம் விரும்பும் தீர்மானங்களை ஐ.நா. சபை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். நாம் ஐ.நா. பற்றி அறிந்தவற்றிலிருந்து அச்சபையானது அவர்களுக்கு எதிரான முடிவையே எடுக்கும் என எதிர்பார்க்கலாம். ஐ.நா. சபை மூன்றாம் உலக அபிவிருத்தி பற்றிய சிந்தனையைக் கொண்டிருப்பதால் சூழலியல் வாதிகளின் எதிர்பார்ப்புகளை அது நிராகரிக்க இடமுண்டு.
இங்கு விளங்கிக் கொள்ள வேண்டிய உண்மை என்னவெனில் சர்வதேச அரங்கில் மனிதகுலம் இடைத் தொடர்புகளின் மூலம் தீர்மானம் மேற்கொள்ள முயலும்போது அதற்கு மிகவும் பிரயோசனமான
83

Page 44
அணுகுமுறையைச் சமஷ்டிப் பரிமாணங்களே வழங்குகிறது என்பதாகும். அதாவது இங்கு ஓர் எளிய பெரும்பான்மையினர் அல்லது எளிய சிறுபான்மையினர் இல்லை என்பது இங்கு ஏற்கப்படுகிறது. சகல பெரும்பான்மைகளும் குழுக்களின் தொகுதிகளாகச் சேர்க்கை அடை கின்றன. சிறுபான்மையினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன. பெரும்பான்மை என்பது வெறுமனே அதிகாரப் பிரயோகமாக அல்லாது பல குழுக்களும் கலந்த இணைப்பாக இயங்குவதற்கு வழி ஏற்படுகிறது. இது பின்னர் தாயத்தின் மீள் உருவாக்கத்திற்கு வழிவிடுகிறது. அதாவது இங்கு ஒரு சர்வதேசப் பரிமாணம் நிறுவனமயப்படுத்தப்படுகிறது. இவ்வாறான ஓர் ஏற்பாட்டைநாம் இதுவரை காணவில்லை. உலகமானது இத்தகைய ஒரு பிரச்சினைக்குச் சீக்கிரமே முகங்கொடுக்க வேண்டி வரலாம். தற்போதைய சர்வதேச முறைமையானது இன்றுள்ள குழு, தேசிய, சித்தாந்த வேறுபாடுகளால் ஏற்படும் பிரச்சினைகளைத் தாங்க முடியுமெனினும் எதிர்காலத்தில் இது முடியாமற் போகலாம்.
எமக்குள்ள உடனடிப் பிரச்சினை நம்மைச் சூழ்ந்துள்ள அதிகாரத்துவ மேலாண்மைப் பிரச்சினையேயாகும். அதிகாரத்துவ மேலாண்மை சமூகத்துக்குச் சேவை செய்யும் சாதனமாக இல்லாமல் தனது பணிகளைத் தானே உருவாக்கும் ஒன்றாக மாறியுள்ளது. அவை தமது நெருக்கடிகளைத் தாமே உருவாக்குகின்றன. பின்னர் அவற்றைத் தீர்க்கும் பொறுப்பும் அவற்றிடம் ஒப்படைக்கப்படுகின்றன. மக்கள் அறிவுபூர்வமாகச் செயற்படுவார்களாயின் சமஷ்டியைப், பிரச்சினை தீர்க்கும் அரசியல்யாப்புச் சாதனமாகப் பயன்படுத்த முடியும். நாம் நமது அரசியற் கட்டமைப்புகளை அதிகார மேலாண்மையின் வளர்ச்சியைத் தடுப்பதற்குப் பயன்படுத்தினால் தப்பிக்க முடியும். சமஷ்டியை ஓர் அரசியல் யாப்புச் சாதனமாகப் பார்க்க வேண்டும். அதனை வெறுமனே ஒரு நிர்வாகச் சாதனமாக எண்ணினால் அது அதிகார மேலாண்மை, அரசியலை முகாமைத்துவம் செய்யும் நிலையையே தோற்றுவிக்கும். உண்மையில் அரசியலே அதிகார மேலாண்மையை முகாமை செய்தல் வேண்டும். அமெரிக்கா இதற்குச் சிறந்த உதாரணமாகும். இங்கு அதிகார மேலாண்மையை முகாமை செய்வதற்குச் சமஷ்டியானது அரசியல் கட்டமைப்புத் தொடர்புகளை ஏற்படுத்தியது. பொதுநல அரசினை உருவாக்குவதற்குத் தேவையான அதிகார மேலாண்மையைக் கட்டியெழுப்புவதற்கு முயன்றபோது அதற்காக அவர்கள் அரசியல்யாப்புப் பரிமாணத்தை முதன்மைப்படுத்தினர். 1960களின் பிற்பகுதியிலும் 1970களின் முற்பகுதியிலும் சனாதிபதி தனிப்பட்ட அதிகாரத்தை வலுப்படுத்தியபோது அவர்கள் அரசியற் பரிமாணத்தைக் கைவிட்டனர். இதன் பெறுபேறுகள் நாம் அறிந்தவையே. இங்கு எழும் முக்கிய கேள்வி அவர்கள் எங்களை ஆட்சி செய்கிறார்களா அல்லது அவர்களை நாங்கள் ஆட்சி செய்கிறோமா? என்பதுதான். இக்கேள்விக்கான விடையைக் காண்பதில் சமஷ்டி முக்கிய பங்காற்ற முடியும்.
84

இன்று நாம் அதிநவீன யுகத்தின் இரண்டாவது தலை முறையின் முதலாவது தசாப்தத்தில் இருக்கிறோம். அதனுடைய எதிர்கால வடிவம் நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. எனினும் ஒன்று மாத்திரம் நிச்சயமானது. அதாவது புதிய யுகமானது நவீனத்துவக் கோட்பாடுகளில் குறிப்பாக சமத்துவம், சுதந்திரம் போன்ற கோட்பாடுகளை அடைப்படை யாகக் கொண்டிருக்கும். இக்கோட்பாடுகள் மக்கள் அரசாங்கத்தின் சர்வதேச அர்ப்பணிப்பைக் கொண்டவையாகும். சில மேற்கு நாடுகளில் நவீனத்துவப் பணிகள் முடிவு பெற்றுள்ளன. அவை நாம் செல்லும் திசையை எமக்குக் காட்டியுள்ளன. இந்நாடுகளில் நவீனயுகத்தின் மூன்று முக்கிய அரசியல் தோற்றப்பாடுகளிலிருந்து ஓர் இரட்டை அரசியல் ஈடுபாடுகள் அறியப்பட்டுள்ளன.
1. புதிய பரந்த பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்காக அசாங்க
அலகுகளை உருவாக்குதல்.
2. சனநாயகத்தை வளர்க்கப் பிரசைகளின் பங்குபற்றலை
ஊக்குவித்தல்.
சமஷ்டிப் புரட்சி இவ்விரட்டை ஈடுபாடுகளை எதிர்கொள்கிறது. இதனால்தான் பல்வேறு பின்னணிகளிலும் வழிகளிலும் நடைபெறும் சமஷ்டி ஏற்பாடுகள் பற்றிய பரிசோதனைகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாகவே 16 ஆம் நூற்றாண்டிலிருந்து வலுப்பெற்று வந்த இறைமை எண்ணக் கருவும் அதனுடன் இணைந்த அரச மத்தியமயப்படுத்தலும் இன்று வலுவிழந்து வருகின்றன. சுருக்கமாகக் கூறவதெனில் இன்று இறைமை கொண்ட மத்தியமயப்படுத்தப்பட்ட அரசிலுள்ள ஈடுபாடு பங்குகொள்ளும், இசைந்து செல்லும், பேரம் பேசும் ஒர் அரசு முறைமையை நோக்கித் திரும்புகிறது எனலாம்.
★ ★,★ 女 ★
85

Page 45

III
ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் சனநாயகப் பன்முகப்படுத்தல்
1. அறிமுகம்
பன்முகப்படுத்தல் என்பது நமது காலத்தின் மிகவும் முக்கிய நாகரீக அம்சங்களுள் ஒன்றாகி விட்டது. கடந்த பத்து, பதினைந்து வருடங்களில் அபிவிருத்தி அடைந்து வரும் பலநாடுகள் பன்முகப்படுத்தலை ஏற்றுக் கொண்டுள்ளன அல்லது அதில் தீவிர கவனஞ் செலுத்திவந்திருக்கின்றன. இதனைச் சர்வதேச அபிவிருத்தி முகவரகங்கள் (ஐ.நா. முகவரகங்கள் மற்றும் போர்ட் மன்றம் ஆகியவை உட்பட) ஊக்குவித்து வந்துள்ளன. இத்தகைய பன்முகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆர்வமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. உலக வங்கியும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகமும் 'சிறந்த அரசாங்கம்’ மற்றும் நிதிசார் பொறுப்புகளில் பல்வேறு வகையான பன்முகப்படுத்தல் முறைகளைப் பிரயோகிப்பதில் ஆய்வுகளை ஊர்க்குவிக்கின்றன. அண்மைக் காலமாக இது தொடர்பான பல ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகள் இக்கட்டுரையில் பயன் படுத்தப்பட்டுள்ளன.
2. பன்முகப்படுத்தலை வரைவிலக்கணப்படுத்தல்
பன்முகப்படுத்தல்’ என்னும் பதம் பல்வேறு வகையான முனைப்புகளைக்
குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அவற்றின் மிக முக்கியமான நான்கு அம்சங்களை இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.
87

Page 46
(1)
(2)
(3)
(4)
சில சமயங்களில் இப்பதம் 'தனியார் மயப்படுத்தலையும் (Privatisation) குறித்து நிற்கின்றது. இதன் பொருள் இதுவரை அரசினால் செய்யப்பட்டு வந்த பணிகளைத் தனியாரிடம் ஒப்படைத்தலாகும். இச் செயலானது பன்முகப்படுத்தலையும் சனநாயகப்படுத்தலையும் கொண்டுள்ளதாக வாதிடப்படுகிறது. அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமிருந்து தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்படுகிறது. அதேவேளை நுகர்வோர்களுக்கான தெரிவுகளும் அதிகரிக்கின்றன. ஆனால் இதற்கு எதிரான வாதங்களும் உள்ளன. அதாவது அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் தனியார் நிறுவனங்களும் மிகவும் பாரிய தாக உள்ளன. இதனால் உண்மையில் அதிகாரம் கைமாறு கிறதே தவிரப் பன்முகப்படுத்தல் நடைபெறுவதில்லை. அத்துடன் தனியார் மயப்படுத்தலின் காரணமாக ஏழைகள் சந்தையிலிருந்து ஒதுக்கப்படுவதால் தெரிவுகள் அதிகரிக்கின்றன எனவும் கூறுவதற்கில்லை.
பன்முகப்படுத்தல்’ என்னும் பதம் ஒருமுகப்படுத்துதலைப் பரவலாக்குதல் (Deconcentration) என்பதையும் குறிக்கிறது. அதாவது மத்திய அரசாங்க நிறுவனங்களைக் கீழ்மட்டங்களுக்குப் பரப்புதலாகும். இவ்வாறு பரவலாக்கலைச் செய்யும் உயர் அதிகார சபையானது சனநாயகரீதியாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பின் அது சனநாயகத் தன்மை உள்ளதாக இருக்கும். ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் சனநாயகப் பொறுப்பு இல்லாத அரசாங்கங் களாலேதான் செய்யப்படுகின்றன. இதனால் சிவில் சமூகங்களின் கீழ்மட்டங்களை ஊடுருவுவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு கருவியாக இது பயன்படுத்தப்படுகிறது.
பன்முகப்படுத்தல்' என்பது உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டங்களுக்கு நிதி மாற்றப்படுதலையும், நிதிசார் தீர்மானங்கள் மேற் கொள்ளுவதற்கான அதிகாரங்களை வழங்குவதனையும் குறிக்கிறது. இத்தகைய அதிகாரம் அதிகாரிகளையோ அல்லது தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையோ சென்றடையலாம். இவ்வாறு அரசியல் வாதிகளுக்கு மாற்றம் செய்யப்படும் போது அது சனநாயக ஆட்சிக்குப் பொருத்தமுடையதாகிறது.
"பன்முகப்படுத்தல்’ என்பது அதிகாரப்பரவலாக்கத்தைக் குறிக்கும். அதாவது வளங்கள், பணிகள், தீர்மானம் மேற்கொள்ளல் ஆகிய அனைத்துக்கும் முழுவதுமோ அல்லது ஓரளவுக்கோ மத்திய அரசாங்கத்தில் தங்கியிருக்கும் கீழ்மட்ட அதிகார சபைகளுக்கு இவ் அதிகாரங்கள் வழங்கப்படும். அத்துடன் அவ்வதிகாரங்கள் சனநாயகரீதியாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதும் முக்கியமானது.
88

இக்கட்டுரையில் சனநாயகப் பன்முகப்படுத்தல் சிறப்பாகச் செயற்படும் போது எதனைச் சாதிக்க முடியும் என்பதையும், தொடர்ந்து அவ்வாறான சிறப்பான செயற்பாட்டினை எதிர் நோக்கும் தடைகளையும், இறுதியாக அச்சிறப்பான செயற்பாட்டை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பதையும் ஆய்வு செய்யப்படுகின்றது.
3. அது சிறப்பாகச் செயற்படும்போது.
சனநாயகப் பன்முகப்படுத்தல் சிறப்பாகச் செயற்படும் போது பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. கூடிய அரசியற் பங்குபற்றலை அது ஊக்குவிக்கிறது. இங்கு பங்குபற்றல்" என்பது ஓரளவுக்குத் தேர்தல் தொகுதி மூலமான பங்குபற்றலைக் குறித்துநிற்கின்றது. அதாவது தேர்தல் நடவடிக்கைகளிலும் வாக்களிப்பதிலும் பங்குபற்றலைக் கருதுகின்றதுடன் அவை ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் மிகவும் அதிகமாகவும் காணப்படுகிறது. குறிப்பாக ஆசியாவின் பங்குபற்றற் தன்மையானது மேற்கு நாடுகளை விட அதிகமானது.
'பங்குபற்றல்' (Participation) என்னும் பதம் தேர்தல்களுக்கிடையில் அரசியலில் தீவிரமாக ஈடுபடுதலைக் குறிக்கும். அதாவது சங்கங்கள் நிறுவுதல், அவற்றில் சேர்தல், மக்கள் பிரதிநிதிகளுடன் அல்லது அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுதல், மனுக்கள் அனுப்புதல், பாராட்டுதல், பகிஷ்கரித்தல் முதலியவற்றைப் பங்குபற்றுதல் குறிக்கும். இத்தகைய பங்குபற்றல் ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் ஒரே அளவில் இருப்பதாகக் கூறமுடியாது. மக்கள் உரிமைகள் பொதுவாக நசுக்கப்பட்ட நாடுகளில் இவ்வாறான பங்குபற்றல்மிகவும் குறைவாக உள்ளது. எனினும் கானா, நைஜீரியா, உகண்டா, பிலிப்பைன்ஸ், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை முதலிய நாடுகளில் சர்வதேச ரீதியாகப் பார்க்கும் போது TTTTTTT TTT TTT TLALSLTTCLCL LLLLLLTTTLLLLLLL LTLT TMTLLTLLLLLLL TTTTTY TTTTTTT LLL LLTTTTTLLLLLTT LLTLLLLLTTLLLLL பன்முகப்படுத்தலானது பலநாடுகளில் அரசாங்க நிறுவனங்களின் ஒத்துழைப்புத் தன்மையை ஊக்குவிப்பதாகவும் இருக்கின்றது. ற்தகைய தன்மையைப் பன்முகப்படுத்தல் சிறப்பாகச் செயற்படும் பிலிப்பைன்ஸ் இந்தியாவின் சில மாநிலங்கள் மற்றும் உகண்டா மட்டுமன்றி பங்களாதேஷ், ஹொங்கொங், நைஜீரியா முதலிய நாடுகளிலும் காணலாம். அதிகாரிகளின் பொறுப்பும் பன்முகப்படுத்தலினால் அதிகரிக்கிறது. ஏனெனில் கீழ்மட்ட அதிகாரிகள் மேல்மட்ட அதிகாரிகளின் அனுமதியை நாடிநிற்பதில்லை. அவ்வாறு தேவைப்பட்டவேளைகளிலும் கூட அனுமதி உடனடியாகக் கிடைக்கிறது. பொறுப்புக்களின் அளவும் குறிப்பாகச் சிறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் அதிகரிக்கின்றன. அதாவது வளங்கள் பகிரப்படும்பொழுது பாரிய அணைக்கட்டுகள், வைத்தியசாலைகள்முதலிய பாரிய செயற்றிடங்களை விடச் சிறிய செயற்றிட்டங்கள் அதிகரிக்கின்றன.
89

Page 47
பன்முகப்படுத்தலானது அரசாங்க நிறுவனங்களில் வினைத்திறனை உயர்த்துகிறது. நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தகவற் பாய்ச்சலை அதிகரிக்கிறதுடன் இத்தகவற் பாய்ச்சல் இரு வழியில் இடம் பெறுகிறது. ஓர் இந்திய மாநிலத்தில் மாவட்ட ரீதியாகப் பன்முகப்படுத்தலானது, இலவசத் தடுப்பூசியைப் பெறும் பிள்ளைகளின் எண்ணிக்கையைப் பெருமளவு அதிகரித்தமை சுகாதார அதிகாரிகளினால் அவதானிக்கப்பட்டது. இதற்கு அதிகாரிகளை விடப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் தடுப்பூசி ஏற்றலின் முக்கியத்துவத்தை மக்களிடம் சிறப்பாக விளக்கியமையே காரணமாகும்.
அதே மாநிலத்தில் புதிய கவுன்சில்கள் நிறுவப்பட்டிருந்தன. அக்கவுன்சில்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 55,000 உறுப்பினர்கள் தகவல்களைத் திரட்டி மாவட்ட ரீதியாகவும், உப மாவட்ட ரீதியாகவும் அதிகாரிகளுக்கு வழங்கினர். அவ்வாறான ஓர் அதிகாரி பன்முகப் படுத்தலுக்குப் பின்னர் தனக்குக் கிடைத்த தகவல்கள் பத்து மடங்கு அதிகரித்ததாகக் கூறினார். இத்தகைய பெருமளவு தகவல்கள் பெறப்பட்டதன் காரணமாக அதிகாரிகள் அதிகளவான பயனுறுதிவாய்ந்த தன்மையுடன் கடமையாற்ற முடிந்தது. இவ்வாறு பெருமளவு தகவல்கள் பெறப்படும் பொழுது அவற்றைப் பகுப்பாய்வு செய்வது சிரமமான பணியாக இருந்தாலும் அதிகாரிகளினால் திறமையாகச் செயற்பட முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.
பன்முகப்படுத்தலில் இன்னுமொரு முக்கியமான அம்சம் என்னவெனின் மிக ஒதுக்கமான பிரதேசங்களில் ஏற்படப் போகும் அழிவுகளை முன்னோக்கியே கூற முடியும் என்பதாகும். வரட்சி மற்றும் நோய்களின் பரவல் முதலியவை ஏற்பட முன்னரே மக்களின் கவுன்சிலர்கள் உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொள்வதால் அழிவுகளைத் தடுக்க முடிகிறது.
பன்முகப்படுத்தலானது பொது ஊழியர்கள் வேலைக்கு வராமல் இருப்பதைப் பெருமளவுக்குக் குறைக்கிறது. இதுவரை வேலைக்கு ஒழுங்காகச் சமூகமளிக்காத பாடசாலை ஆசிரியர்கள், சுகாதார ஊழியர்கள் முதலானோர் இப்போது தமது நடத்தை பற்றி உள்ளூர்க் கவுன்சிலர்கள் அறிந்து கொள்வார்கள் என்பதாலும் அதனால் ஏற்படும் விளைவு களுக்காகவும் வேலைக்குக் கிரமமாகச் சமூகமளிக்கின்றனர். அத்துடன் அவர்கள் பணியில் இருக்கும் போது கடினமாக வேலை செய்தும் சட்டதிட்டங்களுக்குப் பணிந்தும் நடக்கின்றனர். இதன் காரணமாக மக்களுக்கு மேலதிகச் செலவில்லாமல் சிறந்த சேவைகள் கிடைக்கின்றன.
பன்முகப்படுத்தலின் இன்னும் ஒரு நன்மை ஊழல்கள் குறைவதாகும். இவ்வாறு ஊழல்கள் குறைவதற்கான சான்றுகள் இந்திய மாநிலங்களில் கிடைத்துள்ளன. ஊழல் குறைவடைகிறது என்பதன் பொருள், ஊழல்
90

செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்பதல்ல. பன்முகப்படுத்தலின் காரணமாக அரசியற் செல்வாக்குள்ள நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் தவிர்க்க முடியாதவாறு தவறிழைப்போர் எண்ணிக்கையும் அதிகரிக்கவே செய்கிறது. ஆனால் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் ஒரு வெளிப்படையான முறையிற் செயற்படும் ஒரு கவுன்சில் தெரிவு செய்யப்பட்டதால் ஊழல்கள் குறைக்கப்பட்டன.
பன்முகப்படுத்தப்படாத ஒரு மத்தியமயப்படுத்தப்பட்ட முறைமையில் கீழ்மட்டச் செயற்றிட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்திற் பெரும்பகுதியை ஒரு சில முக்கிய நபர்கள் ஒன்று சேர்ந்து திட்டம் தீட்டி மோசடி செய்ய முடியும். இது சாத்தியமாவதற்குக் காரணம் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு இருக்கிறது என்பதை அறிந்தவர்கள் ஒரு சிலர் மாத்திரமே இருப்பதனாலாகும். ஆனால் பன்முகப்படுத்தப்பட்டதன் பின்னர் பல நுாற்றுக் கணக்கானவர்கள் இத் தகவல்களைத் தெரிந்திருப்பதால் முன்னரைப் போல மோசடிகள் சாத்தியமாவதில்லை. பெருந்தொகை யானோர் ஒருவரை ஒருவர் வேவுபார்ப்பதால் மோசடி செய்பவர்கள் கூடச் சிறிய தொகைகளுக்கு மேலதிகமாகப் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது. தூரதிஷ்டவசமாக இதற்கான சான்றுகள் இந்தியாவைத் தவிர வேறெங்கும் காணப்படுவது அரிது. இதனால் பன்முகப்படுத்தல் மூலம் ஊழல்களைக் குறைக்க முடியும் என்பது அடைய முடியாதது போன்று தோற்றமளிக்கிறது. நீண்டகாலமாகச் சனநாயக அரசியலில் ஊறித் திழைத்த நாடுகளிலேயே இது சாத்தியமாகலாம்.
சனநாயக மத்தியப்படுத்தலானது அரசியலில் ஈடுபடவிரும்பும் மக்களுக்குக் கூடுதல் வாய்ப்புக்களை அளிக்கிறது. இதனால் அரசியலில் ஈடுபட விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் ஏற்படும் உட்கட்சிப் பூசல்களையும் விரக்தியையும் குறைக்க முடியும். அத்துடன் சனநாயக முறைகள் சிறப்பாக இயங்குவதற்குத் தேவையான அரசியற்திறன்களும் அபிவிருத்தியடைகின்றன. பேரமீபேசுதல், கூட்டணி அமைத்தல் போன்ற சனநாயகத் திறன்களைப் பயன்படுத்திச் சீக்கிரமே உயர் நிலை அடையும் வாய்ப்பும் ஏற்படுகிறது.
இங்கு மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது என்னவெனில் பன்முகப்படுத்தல் எவ்வளவு சிறப்பாகச் செயற்பட்ட போதிலும் சில எதிர்பார்ப்புகளை அடைய முடியாத நிலையும் காணப்படுகிறது. ஆனால் பன்முகப்படுத்தல் தரும் நன்மைகளை அடிப்படையாகக் கொண்டு அது சாதிக்கக்கூடியவற்றையும் சாதிக்க முடியாதவற்றையும் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும்.
பன்முகப்படுத்தல் கீழ்மட்டத்திலிருந்து மேல்நோக்கித் திட்டமிடலை ஊக்குவிக்கும் என எதிர்பார்ப்பது யதார்த்த பூர்வமானதல்ல என
91

Page 48
அண்மைக்கால ஆய்வுகள் எடுத்துக் காட்டுவதுடன் அதற்கான பல காரணங்களும் கூறப்படுகின்றன. கிராமிய மட்டங்களில் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு உதவுவதற்குப் போதிய அதிகாரிகள் இருப்ப தில்லை. உயர்மட்டங்களில் அமைந்துள்ள கவுன்சில்களில் போதியளவு அதிகாரிகள் உள்ளனர். ஆனால் அவர்களது பணிகள் ஆணையிடுதல், நிறைவேற்றுதலுடன் முடிவடைகின்றன. திட்டமிடலுக்கு அவசியமான தரவுகளைத் தேடுதலிலோ அல்லது உள்ளூர் அரசியல் வாதிகளுடன் திட்டமிடல் தொடர்பாகக் கலந்து ாடுவதிலோ அவர்கள் ஈடுபாடு காட்டுவதில்லை. இத விளைவாக ட்டப்படும் திட்டங்கள்' (Plans) பெரும்பாலும் அரசி: வர்திகளுக்கு யதாகவே உள்ளது. அவர்கள் மற்றவர்களுடன் க* துரையாடுவதில்லை. இதில் மிகவும் தவறான விடயம் என்னவென் ஸ் உயர்மட் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் கீழ்மட்டத்திலிருந்து வரும் ஆலே “னைகளை ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் ன்முகப்படுத்தப்பட்ட திட்டங்களின் உயர்வுகளைப் பகிரங்கமாகப் புகழ்வதற்கு அவர்கள் தயங்குவதில்லை.
அண்மைக்க்ப் ஆய்வுகள் தரும் இன்னுமொரு உண்மை பன்முகப்படுத்தல் உள்ளூர் மட்டத்திலான வளங்களை ஒன்று திரட்டுவதற்குப் பெரும்பாலும் உதவுவதில்லை என்பதாகும். இவ்வாறு வளங்களைத் திரட்டல் பன்முகப்படுத்தலின் ஓர் இலக்காக உள்ளது. இதனுடைய பொருள் அடிநிலை மட்டங்களில் வளங்கள் இல்லை என்பதல்ல. உண்மையில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் புதிய வரிகளை விதிக்க விரும்புவதில்லை. வரிவிதிப்புக் காரணமாகத் தமது புகழ் மங்கிவிடும் என அவர்கள் பயப்படுகின்றனர். ஆனால் அவர்கள் வசதிபடைத்த குழுவினர் மீது வரிவிதிப்பது பற்றித் தயக்கம் கொள்கின்றனர். பெரும்பாலான அரசியல்வாதிகள் வசதிபடைத்த வகுப்புகளைச் சார்ந்தவர்களாக இருப்பதுடன் திரும்பவும் பதவிக்கு வருவதற்கு இவர்களிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது.
ஆனால் இதற்கு எதிரான சான்றுகள் அண்மைக் காலங்களில் உகண்டாவில் வெளிவந்தன. அங்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் பெரிய எதிர்ப்பு இல்லாமல் புதிய வரிகளை விதித்தனர். இதற்கு வாய்ப்பாக இருந்தது வரிவிதிப்புக்கு முன்னர் புதிய வரிகளின் நன்மைபற்றி அவர்கள் மக்களிடம் விளக்கக் கூடியதாக இருந்தமையாகும். நைஜீரியாவிலும் மற்றும் பல ஆபிரிக்க நாடுகளிலும் அபிவிருத்திச் செயற்திட்டங்களுக்கு வளங்களைத் திரட்ட இயலும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, பன்முகப்படுத்தலானது வறுமை ஒழிப்பிற்கும் , ஏழைமக்களுக்கும் உதவுவதற்கு அரசாங்க நிறுவனங்களின் பயனுறுதித் தன்மையை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதும் யதார்த்தமானதல்ல. ஏழைமக்களின் பிரதிநிதிகள் பொதுவாகக் கீழ்மட்டத்தை விட
92

உயர்மட்டத்தில் செல்வாக்கு உள்ளவர்களாக உள்ளனர். உதாரணமாக இந்தியாவில் தேர்தலைக் கவனத்திற் கொண்டு, கீழ்மட்டங்களிலுள்ள பிரதிநிதிகளுக்கு மந்திரிப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. உயர் மட்டத்தில் செல்வ்ந்த வகுப்பினர்க்கும் கீழ்மட்டத்தினர்க்கும் ஓரளவு அதிகாரப் பகிர்வு நடைபெறுகிறது. ஆனால் கீழ்மட்டத்தில் நிலம் படைத்த செல்வந்த வகுப்பினரே அதிகாரம் கொண்டவர்களாக உள்ளனர்.
எனவே இந்திய மாநிலங்கள் பலவற்றில் பன்முகப்படுத்தல் காரணமாக ஏழைகள் தமது செல்வாக்கு உள்ள மட்டத்திலிருந்து தமக்குச் செல்வாக்கு இல்லாத கீழ்மட்டங்களுக்கு அதிகாரங்களையும், வளங்களையும் நகர்த்தக் கூடியவர்களாக உள்ளனர். இந்தியாவில் உள்ளுராட்சிச் சபைகள் ஏழைகளுக்கு உதவுவதற்குத் தமக்குள்ள சட்டரீதியான பொறுப்பைத் தவிர்த்து விடுகின்றன. வறுமை ஒழிப்புத் திட்டங்களை உண்மையாக அமுல்படுத்த வேண்டுமெனில் அவற்றை உயர் அரசாங்க மட்டங்களிடம் விட்டுவிடுவது நல்லது.
இவ்வாறான பின்னடைவுகள் இருப்பினும் பன்முகப்படுத்தல் சிறப்பாக இயங்குமெனில் அதிலிருந்து நாம் பெற்றுக் கொள்ளக் கூடிய நன்மைகள் பல உண்டு. ஆனால் ஆசிய, ஆபிரிக்க நாடுகளிலிருந்து கிடைத்துள்ள பல சான்றுகள் அதனைச் சிறப்பாக இயங்கச் செய்வது கடினம் எனத் தெரிவிக்கின்றன. அவை விளக்கப்பட வேண்டியவையாகவும் உள்ளன.
4. பன்முகப்படுத்தலின் சிறப்பான இயக்கத்துக்கு
எதிரான தடைகள்
சனநாயகப் பன்முகப்படுத்தல் சிறப்பாக இயங்க வேண்டுமெனில் இரு முக்கிய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும். அத்துடன் வேறும் பல (அதிக முக்கியமற்ற) ஆதரவான நிபந்தனைகளும் காணப் வேண்டும். ஆனால் அபிவிருத்தியடைந்து வரும் passad அபிவிருத்தி அடைந்த நாடுகள் உட்பட) இந்நிபந்தனைகளைத் திருப்தியாகப் பூர்த்தி செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது,
முற்கூறிய முக்கிய நிபந்தனைகள் யாவை?
ஏற்கெனவே பன்முகப்படுத்தல் என்பது சனநாயகத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. மையத்தில் குவிந்திருக்கும் அதிகாரங்களைக் கலைத்துப் பரப்புவது (Deconcentration) பெரும் நன்மைகளை உருவாக்க மாட்டாது. மாறாக நிலைமைகளை மேலும் மோசமாக்கி விடலாம் . குறிப்பாகக் கூறவேண்டுமெனில்
93

Page 49
பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் இரு வழிகளில் பொறுப்புக் கூற வேண்டியதாக இருக்க வேண்டும்.
(1) அதிகாரிகள் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்குப் பொறுப்புக்
கூறல் வேண்டும்.
(2) தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் பொதுமக்களுக்குப் பொறுப்புக்
கூறல் வேண்டும்.
இவ்விருவகையான பொறுப்புக் கூறல்களும் இலகுவில் அடையக் கூடியவையல்ல. சனநாயகம் இல்லாத நாடுகளில் அல்லது சனநாயகம் தொடர்ச்சியாக நிலவியிராத நாடுகளில் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு அதிகம் மதிப்பளிப்பதில்லை. சிலவேளை ஒத்துழைக்க எண்ணினாலும் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் சேர்ந்து பணிபுரியும் திறன்கள் இருப்பதில்லை. இத்தகைய திறன்கள், தனக்கு விருப்பமில்லாத கட்டளைகளை நிறைவேற்றல், தெரிவு செய்யப்பட்ட அரசியல் வாதிகளுக்குத் தேவையான தகவல்களை வழங்குதல், ஆபத்துக்கள் பற்றி எச்சரித்தல் முதலியவைகளாகும். பல சிவில் சேவை அதிகாரிகள் தமது மேலதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்குமிடையில் அகப்பட்டுத் தவிக்கும் நிலை உள்ளது. இத்தகைய காரணங்களினாற் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரிகள் பொறுப்புக் கூறுதலை உறுதிப்படுத்த முடியாதுள்ளது.
இதேபோல அரசியல்வாதிகள் வாக்காளர்களுக்குப்பொறுப்புகூறுதலையும் உறுதிப்படுத்த முடியாது. இதிலுள்ள முக்கிய பிரச்சினை என்னவெனில் மத்திய அரசாங்கத்தின் அரசியல் வாதிகள் கவுன்சில்களின் தலைவர்களைத் தமக்கு ஆதரவாளர்களாக மாற்றிவிடுவதுதான். தேசியத்தலைவர்கள் எப்போதும் பன்முகப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட கவுன்சில்களைத் தமது அரசியல் அதிகாரத்துக்கான தளமாக மாற்றிக் கொள்கிறார்கள் . ஏனெனில் இது அவர்களின் முடிவுகளுக்கு ஒரு சனநாயக அந்தஸ்த்தை அளிக்கிறது. உதாரணமாக பங்களாதேஷின் சர்வாதிகாரியான ஜெனரல் எர்சாத், மாவட்டக் கவுன்சில்களின் தலைவர்களைத் தனக்குப் பொறுப்பு கூறக் கூடிய நிலையில் வைத்திருந்தார். இதன் மூலம் தமது மக்களுடன் அவர்கள் எப்படியும் நடந்து கொள்ளலாம் என்ற மறைமுகமான அதிகாரத்தை அவர்கள் கொண்டிருந்தனர்.
கவுன்சிலர்கள் தமது வாக்காளர்களுடன் ஒழுங்கான தொடர்புகளைக் கொண்டிருப்பதில்லை. இவ்வாறு தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிலை பெரும்பாலும் சட்டரீதியான அமைப்புகளிலும் கூட அநேகமாக நடைபெறுவதில்லை. பல்வேறு வகையான முறைப்பாடுகள் மற்றும் உதவி கோரல்கள் போன்றவை கவுன்சிலர்களாற்
94

சமாளிக்க முடியாதவைகளாகவும் எரிச்சலூட்டுபவைகளாகவும் இருப்ப துண்டு. சனநாயக அரசியல் அனுபவங்கள் குறைந்த நாடுகளிலுள்ள அரசியல்வாதிகள் தம்மையறியாமலேயே பொதுமக்களிடமிருந்து விடுபட்டுவிடுகிறார்கள். தமக்குள்ள கட்டுப்பாடுகளை அவர்கள் உணர்வதில்லை.
இரண்டாவது முக்கிய நிபந்தனை தெரிவுசெய்யப்பட்ட கவுன்சில்களுக்குப் போதுமான வளங்கள் இருப்பதாகும். கவுன்சில்கள் தமது நிதி வளங்களை மேலிருந்து பெற்றுக் கொள்ளுமாயின் அவை தமது சுதந்திரத்தையும் இழந்துவிடுகின்றன எனப் பொது நிர்வாகத்தில் நிபுணத்துவம் கொண்ட ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது இவர்கள் கவுன்சில்களுக்குக் கிடைக்கும் வளங்களை விட அவைகளுக்கிருக்க வேண்டிய “முறைசார்ந்த தன்னாதிக்கத்தையே (formal autonomy)வலியுறுத்துகின்றனர். ஆனால் இதற்கு மாறாக அண்மைக்கால ஆய்வுகள் வளங்கள் மேலிருந்து கிடைத்த போதிலும் நடைமுறையில் கவுன்சில்கள் தன்னாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதாகக் கூறுகின்றன.
பொதுநிர்வாகம் பற்றிய நூல்கள் இன்று பொதுவாகப் பன்முகப்படுத்தலின் முறைசார்ந்த விதிகள் பற்றியே பெரிதும் ஆய்வு செய்கின்றன. அரசியலிலுள்ள முறையில் தன்மைகள் பற்றி அவை கவனம் செலுத்துவதில்லை. ஆனால் அநுபவபூர்வமாகப் பார்க்கும் போது வளங்கள் உள்ள கவுன்சில்கள் பல விதிகளை வளைத்து அல்லது தளர்த்தித் தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்கின்றன என்பதைக் காணலாம். இது வெறுப்பூட்டக் கூடியதாக இருந்தாலும் சனநாயக அரசியல் இவ்வாறுதான் இயங்குகிறது. அதன் விளைவுகள் பெரும்பாலும் ஆக்க பூர்வமானவைகளே.
பல சந்தர்ப்பங்களில் கவுன்சில்கள் மேலிருந்து தமது வளங்களைப் பெற்றுக் கொள்வதில் பல தடைகளை எதிர்நோக்குகின்றன. குறிப்பாக மத்திய அரசாங்கம் அமைப்பு ரீதியான மாற்றங்களில் ஈடுபட்டிருக்கும் போது பொதுச் செலவுகள் வெட்டப்படுகின்றன. கானாவில் நடைபெற்ற அமைப்பு ரீதியான மாற்றங்கள் பன்முகப்படுத்தலைப் பாதித்தன. ஆனால் உகண்டாவில் அவ்வளவு பிரச்சினை ஏற்படவில்லை. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பொருளாதார மாற்றங்கள் பன்முகப்படுத்தலிற் பிரச்சினைகளை உருவாக்கலாம்.
பன்முகப்படுத்தலுக்கு உதவும் வேறு காரணிகளில் பல்கட்சிப் போட்டியும் ஒன்றாகும். ஒரு கவுன்சிலில் பெரும்பான்மை ஆதரவு கொண்ட கட்சியை எதிர்க் கட்சிகள் கூர்ந்து அவதானிக்கும் போது ஆளும் கட்சியின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. சிலவேளைகளில் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியைத் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டும்
95

Page 50
நிலை ஏற்படுகிறது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டபோதிலும் ஆட்சியில் உள்ளவர்கள் பொறுப்புக் கூறும் நிலை மென்மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.
உள்ளூராட்சிச் சபைகளில் அரசியற் கட்சிகள் தலையிடுவதைத் தவிர்த்தால் அவை நன்கு செயற்பட முடியும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இவ்வாதம் மிகவும் பொருத்தமானதல்ல. ஏனெனில் ஆரோக்கியமான கட்சிப் போட்டிகள் நிலவும் நாடுகளில் சட்டரீதியான தடை காணப்பட்டபோதிலும் கட்சிகள் உள்ளூர் ஆட்சிகளில் தமது செல்வாக்கைப் பதித்துவிடுகின்றன. அதேநேரத்தில் இது பல்வேறு பிணக்குகளைக் கீழ் மட்டங்களில் ஏற்படுத்தினாலும் ஆட்சியாளர்கள் பொறுப்புடனும் ஊழல் இல்லாமலும் செயற்பட வழிவகுக்கின்றன.
இங்குள்ள பிரச்சினை கட்சிகள் எல்லை மீறி நடந்து கொள்கின்றன என்பதல்ல. உண்மையில் பல நாடுகளில் ஆரோக்கியமான கட்சிப் போட்டிகள் நடைபெறுவதில்லை. ஒரு கட்சி நிலவும் நாடுகளில் சனநாயகப் பன்முகப்படுத்தல் நடைமுறைப்படுத்தப்பட்டால், அல்லது கட்சிப் போட்டிகள் மேலிடத்திலிருந்து வலுவற்றதாக்கப்பட்டால் கட்சிப் போட்டிகளினால் பன்முகப்படுத்தப்பட்ட உள்ளூர் ஆட்சிச் சபைகளுக்குக் கிடைக்கும் நன்மைகள் கிடைக்காமல் போய்விடும். ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் இந்நிலைமை காணப்படுவதால் சனநாயகப் பன்முகப் படுத்தல் இந்நாடுகளில் வளர்ச்சியடைவது மிகவும் சிரமமானதாகும்.
பன்முகப்படுத்தல் வெற்றிகரமாகச் செயற்படத் தேவையான இன்னுமொரு காரணி சுதந்திரமான பொதுசன ஊடகங்களாகும். உள்ளூர் ஆட்சிச் சபைகளில் நடக்கும் நடவடிக்கைகளையும், விவாதங்களையும் பத்திரிகை யாளர்கள் கவனமாகக் கவனித்து வெளிப்படுத்தினால் அரசாங்கச் செயற்பாடுகள் பெரிதும் வெளிப்படையாகி விடுகின்றன. அத்துடன் அரசியல் வாதிகள் மிகவும் கவனமாகவும் நடந்து கொள்கின்றனர். ஆனால் ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் பத்திரிகைகளும் ஏனைய பொதுசன ஊடகங்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சிலவேளைகளில் அவைகள் மீது பயமுறுத்தலும் விடுக்கப்படுகின்றது. இதனால் அவை சனநாயகப் பன்முகப்படுத்தலுக்கு அதிக பயனளிப்பவைகளாகச் செயற்பட முடிவ தில்லை. அத்துடன் உள்ளூர் ஆட்சிச் சபைகள் இயங்கும் மிகவும் தூரப் பிரதேசங்களில் பத்திரிகைகள் வளர்ச்சியடையவும் இல்லை.
ஓர் ஆர்வமுள்ள சிவில் சமூகத்திலேயே பன்முகப்படுத்தல் சிறப்பாகச்
செயற்பட முடியும். சமூகக் குழுக்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு
உறுதியுடன் செயற்பட முடியுமெனில் அவை அரசியற் பிரதிநிதிகளுக்குத்
தமது பிரச்சினைகள் பற்றி அறிவிக்க முடிவதோடு போதுமான அழுத்தத்தை
அரசியல் வாதிகள் மீது பிரயோகிக்கவும் முடியும். ஆனால் ஆசிய, ஆபிரிக்க
நாடுகளில் இத்தகைய குழுக்களைக் காண முடிவதில்லை. அங்கு
96

இருக்கின்ற ஒரு சில குழுக்களும் அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து பொறுப்புகளைப் பெறக் கூடிய அளவுக்குத் தலைமைத்துவமும், வினைத்திறனும் கொண்டவையாக இல்லை. அத்துடன் இத்தகைய குழுக்கள் அடிக்கடி அரசின் பயமுறுத்தலுக்கு ஆளாவதால் அரசியல் என்பது ஒரு பயங்கரமான விளையாட்டு என எண்ணி ஒதுங்கியிருக்கத் தலைப்படுகின்றன.
மேற்குறித்த சந்தர்ப்பங்களில் ஒரு சிவில் சமூகத்தில் ஆரோக்கியமான கூட்டுகளும், பிணக்குகளும் ஏற்படுவது தடை செய்யப்படுகின்றது. சிலவேளை பல பாரதூரமான பிரச்சினைகளும் ஏற்பட இடமேற்படுகிறது. வளங்கள் குறைந்த ஒரு கவுன்சிலில் அதனை எதிர் கொள்ள முடியாத கோரிக்கைகள் முன்வைக்கப்படும்போது இத்தகைய பிரச்சினைகள் உருவாகின்றன. இவை சனநாயகப் பன்முகப்படுத்தலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குச் சாதகமானவையல்ல.
இங்கு குறிப்பிடக் கூடிய இன்னுமொரு காரணி மனப்பாங்குகளாகும். அரசியல்வாதிகளும், அரசும் தம்மைப் பதவியில் அமர்த்திய மக்களுக்குத் தாம் கடமைப்பட்டுள்ளோம் என்னும் உறுதியான மனப்பான்மையைக் கொண்டிருந்தால் தான் பன்முகப்படுத்தல் மிகவும் இலகுவாக இயங்க முடியும் . இந்தியாவில் இத்தகைய மனப்பான்மை உறுதியாகக் காணப்படுகிறது. ஆனால் இந்தியாவைப் போல் சனநாயகம் ஆழமாக வேரூன்றாத ஏனைய ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் இத்தகைய சிறந்த மனப்பான்மைகள் இன்னும் ஊறுதியான தன்மையை அடையவில்லை.
நீண்டகால சனநாயக அரசியலின் அநுபவங்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் ஆக்க பூர்வமான உறவினை வளர்க்கிறது. இதம் மூலம் அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளுக்குப் பொறுப்பு கூறும் தன்மையும் அதிகரிக்கிறது. இது மனப்பாங்குகளிலும் அதே நேரத்தில் திறன்களிலும் தங்கியுள்ளது. சனநாயகப் பன்முகப்படுத்தல் அரசாங்கச் செயற்பாடுகளின் நியமமாக மாறினால் அதிகாரிகள் அதனையே தமது ஜீவனோபாயமாகக் கைக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவர். அதாவது அவர்கள் அரசியல்வாதிகளுடன் இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவர். சனநாயக அநுபவங்கள் நீண்ட காலம் தொடரும் போது ‘வாழு, வாழவிடு' என்னும் கொள்கையும் ஆழமாகப் பதிகின்றது. இது பன்முகப்படுத்தப்பட்ட கவுன்சில்கள் சிறப்பாகச் செயற்பட வழிவகுக்கும். ஆனால் பெரும்பாலான ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் சனநாயகம் நிலைபெறவில்லை, அல்லது சிறிது காலமே தொடர்கின்றது. எனவே இந்திய அநுபவத்திற் காணக் கூடியதான மனப்பான்மைகளையும் திறன்களையும் இந்நாடுகளில் காணமுடியாது.
97

Page 51
5. பன்முகப்படுத்தல் சிறப்புடன் செயற்பட உதவுதல்
உயர் மட்டத்திலுள்ளவர்கள் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் சீராக இயங்க வேண்டுமென விரும்பினால் அவர்கள் அவைகளுக்குத் தேவையான வளங்களைத் தரவேண்டும். அத்துடன் மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரிகள் பொறுப்புக் கூறக் கூடிய அதிகாரமும் வழங்கப்படல் வேண்டும். இதன்மூலம் கவுன்சிலர்கள் மக்களுக்குப் பொறுப்புக் கூறக் கூடிய சந்தர்ப்பங்கள் தோன்றும் . உள்ளூராட்சிச் சபைகளுக்குத் தேவையான வளங்கள் சிலவருடங்களேனும் மேல்மட்டத்திலிருந்தே வழங்கப்படல் வேண்டும். ஏனெனில் உள்ளூர் மட்டத்தில் இச்சபைகள் வளங்களைத் திரட்டுதலில் பல தடைகளைக் கொண்டுள்ளது.
பலநாடுகளில் குறிப்பாக ஆபிரிக்காவில் உள்ளூராட்சிச் சபைகள் வரிகளை விதித்துள்ளன. ஆனால் குறிப்பிடக்கூடிய நன்மைகள் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் வெறுப்படைந்து வரிகள் வழங்குவதை அறவே நிறுத்திவிட்டனர். மேல்மட்டத்திலிருந்து இச்சபைகளுக்கு நன்மைகளைச் செய்யக் கூடுமெனில் மக்கள் வரிகளைச் செலுத்த விரும்புவர். மக்கள் உள்ளூர்ச் சபைகளின் மீது கொண்டுள்ள நம்பிக்கையினத்தை அகற்று வதற்கு இது அவசியமானது.
நிதிவளக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும் உயர்மட்ட அதிகாரத்தினால் சனநாயகப் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களை உருவாக்க முடியாது. வளங்கள் குறைவடையும் போது இச்சபைகள் சிறப்பான நன்மைகளையும், சேவைகளையும் வழங்க முடியாது. இதனால் விரக்தி அடையும் வாக்காளர்கள் இறுதியில் இச்சபைகளையே குறை கூறுவார்கள். ஆனால் உண்மையான குறைகேட்க வேண்டியவர்கள் மேல்மட்ட அதிகாரம் கொண்டவர்களேயாவர். இத்தகைய சூழ்நிலை பன்முகப்படுத்தல் முறைமையினைக் களங்கப்படுத்தக் கூடும்.
அதிகாரிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமிடையே பொறுப்புக் கூறும் அம்சத்தை உறுதிப்படுத்தல் மூலம் மேல்மட்ட அதிகாரம் படைத்தோர் பன்முகப்படுத்தல்முறைமைக்கு நன்மை செய்ய முடியும். இதற்குமேல்மட்ட அதிகாரிகள் கீழ்மட்ட அதிகாரிகளை மக்கள் பிரதிநிதிகளுக்கு மேலாகக் கட்டுப்படுத்த அனுமதிக்கக்கூடாது. அத்துடன் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதில் மக்கள் பிரதிநிதிகளின் கரங்கள் பலப்படுத்தப்படவேண்டும்.
மக்கள் பிரதிநிதிகள் வாக்காளர்களுக்குப் பொறுப்பு கூறக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும். இத்தகைய பொறுப்புக் கூறல் மக்களுக்கும் அவர்களது பிரதிநிதிகளுக்கும் இருக்கக்கூடிய இடைத் தொடர்புகளின் மூலமே உருவாக்கப்பட முடியும். மேல்மட்டத்திலிருந்து இத்தகைய பொறுப்புக் கூறலுக்குத் தடையாக எதிர்மறைக் காரணிகள் பல உள்ளன. அதாவது
98

உள்ளூர்ப் பிரதிநிதிகள் தவறுகள் இழைக்கும் போது அரசியற் காரணங்களுக்காக அவர்கள் குற்றங்களிலிருந்து தப்புவதற்கு உயர் மட்டத்தில் ஒத்துழைப்புக் கிடைத்தால் அது பொறுப்புக்கூறலுக்கு விரோதமானது. பங்களாதேஷில் ஜெனரல் எர்சாத் இதற்கு நல்ல உதாரணம். இத்தகைய நடத்தை பன்முகப்படுத்தலுக்குப் பாரதூரமான தடையாக அமையும்,
பன்முகப்படுத்தலை வடிவமைப்போர் கருத்தில் கொள்ளக் கூடிய இன்னுமொரு அம்சமும் உள்ளது. அதாவது அரசாங்கமானது ஏற்கெனவே நிறுவனங்களைப் பகிர்வுசெய்த மட்டத்திலேயே கவுன்சில்களை உருவாக்க முடியுமெனில் சனநாயகப் பன்முகப்படுத்தல் சிறப்பாகச் செயற்படும். இங்கு செய்ய வேண்டியதெல்லாம் அதிகாரத்தை அதிகாரிகளிடமிருந்து புதிய கவுன்சிலுக்கு மாற்றுவது மட்டுமே. இது கஷ்டமானதெனினும் அதுவே சிறந்தது. நிறுவனங்களையும் அதிகாரத்தையும் ஒரே நேரத்தில் பன்முகப்படுத்த முனைவதுதான் உண்மையில் மிகவும் சிரமமானது. இங்குள்ள மிகப் பெரிய பிரச்சினை என்னவெனில் பன்முகப்படுத்தலை மனப்பூர்வமாக மத்திய அரசாங்கங்கள் செய்வதில்லை. அவ்வாறு பன்முகப்படுத்திய பின்னரும் மேல்மட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் தமது அதிகாரங்கள் பகிரப்படுவதை உணரும் போது பொறாமை கொள்கின்றனர். இதன் விளைவாக அவர்கள் பன்முகப்படுத்தலின் பொறிமுறைகளைச் சிறிது சிறிதாகத் தகர்க்க முயல்கின்றனர். இதனால் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் தமது வளங்களையும் , தன்னாதிக்கத்தையும் , பொறுப்புக் கூறலையும் சிறிது சிறிதாக இழக்கின்றன.
இவ்வாறான காரணிகளிடமிருந்து பன்முகப்படுத்தப்பட்ட முறைகளைப் பாதுகாப்பது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்திலும், பங்களாதேஷில் தேசிய மட்டத்திலும் கவுன்சில்களின் அதிகாரங்களைத் தகர்ப்பதற்குச் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை இங்கு உதாரணமாக குறிப்பிடலாம்,
பன்முகப்படுத்தலை வலுப்படுத்துவதற்குச் செய்யப்படும் அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களும் கூட சிறந்த விளைவுகளை எப்போதும் உருவாக்குவதில்லை. 1983 இல் இந்தியாவில் இவ்வாறான சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆனால் பல மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டங்கள் கவுன்சில்களுக்கான அதிகாரங்களையும், வளங்களையும் திட்டமிட்டுக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன.
எனவே இன்று உலகின் பல பகுதிகளிலும் ஆர்வத்துடன் மேற் கொள்ளப்படும் சனநாயக பன்முகப்படுத்தலுக்கான முயற்சிகளானது, பன்முகப்படுத்தல் ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நன்மைகளைப்
99

Page 52
பயனுறுதியுடன் ஏற்படுத்தும் என கூற முடியாது. பன்முகப்படுத்தல் சிறந்த ஆட்சியை உருவாக்கக் கூடும். ஆனால் இடையில் நிற்கும் தடைகள் அவ்வாறு எதிர்பார்ப்பது சாத்தியமானதல்ல என்பதையே எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
★ ★ ★ ★ ★
100


Page 53
PRINTED BYUNIEARTS (PWT
 
 
 

LTD, TEL: 33095