கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அபிவிருத்தி எவ்வாறு சமாதானத்தினைப் பாதித்தது

Page 1
016:5366
一、 33). U72 பஸ்ரி
 

|-
:
| GDI

Page 2

அபிவிருத்தி எவ்வாறு சமாதானத்தினைப் பாதித்தது

Page 3

அபிவிருத்தி எவ்வாறு சமாதானத்தினைப் பாதித்தது
சுனில் பஸ்ரியன்
தமிழாக்கம் அ. றொபின்சன்
இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் கொழும்பு

Page 4
இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் 2 கின்சி ரெறஸ், கொழும்பு - 8, இலங்கை
Lg6'ıųfGDID C9 ICES 2007
Printed by Unie Arts (Pvt) Ltd No.48 B, Bloemendhal Road Colombo 3

இக் கட்டுரையானது 2004 ஆம் ஆண்டு மார்கழி மாதம் கொழும்பு, இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தினால் “மாறுநிலை/உருவாக்கம்: இலங்கைத் தமிழரின் தேசியம் பற்றிய ஒரு கருத்தரங்கு” என்ற தலைப்பில் நடாத்தப்பெற்ற மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இம் மகாநாடு அபிவிருத்தி ஒத்துழைப்பிற்கான நோர்வேயின் முகவரகத்தின் (NORAD-Norwegian Agency for Development Cooperation) óf SD 56îuqL6ör GGFuugiòUG6ög5ťILL (B6 6.J(biò இலங்கை கற்கைகள் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு செயற்றிட்டமாகும்.
சிங்கள தேசிய வாதம் பற்றிய சமூகவியல், அரசியல் ஆய்வுகள் அளவிலும், பண்பிலும் குறிப்பிடத்தக்களவு மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கும் நிலையில் தமிழ் தேசியவாதம் சில காலங்களாக ஆய்வுக்குட்படாத ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய ஆய்வுகள் கூடத் தமிழ் மொழியில் மாத்திரமே காணப்படுகின்றன. எனவே இலங்கைத் தமிழரின் தேசியவாதம் பற்றிய சிக்கல்களையும் பண்புகளையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு முக்கிய தேவை இருந்து வந்துள்ளது.

Page 5

அபிவிருத்தி எவ்வாறு சமாதானத்தினைப் பாதித்தது
சுனில் பஸ்ரியன்
இவ்வாய்வுக் கட்டுரையானது 2002-2004 வரையான சமாதானச் செயல் முறையினையும், 2004 ஏப்ரல் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி அரசின் தோல்வினையும் மையப்படுத்துகின்றது. இது சமாதானச் செயல்முறை ஆரம்பமாகிய சூழ்நிலையின் விபரணத்துடன் ஆரம்பமாகின்றது. முடிவற்ற உள் நாட்டு யுத்தம், ஆட்சியின் நிலையற்ற தன்மை மற்றும் பொருளாதாரக் குழப்பங்கள் என்பன 2000 மற்றும் 2001 ஆண்டு காலப் பகுதிகளின் பண்பியல்புகளாகக் காணப்பட்டன. 2001 இல் நாடு எதிர்கொண்ட பொருளாதாரக் குழப்பமானது சமாதானச் செயல்முறைக்கான மிகப் பெரும் தூண்டலாக அமைந்ததென்பது தொடர்பாக இப்பகுதியில் விவாதிக்கப்படுகின்றது.
இதன் விளைவாக ஐக்கிய தேசிய முன்னணி (UNF) அரசானது மூன்று அம்சங்களை உள்ளடக்கிய தந்திரோபாயத்தினை அமுல்படுத்தியது - போர் நிறுத்த ஒப்பந்தமும் எல்.ரீ.ரீ.ஈ யுடனான பேச்சுவார்த்தையும், விரிவான பொருளாதாரச் சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டம், மற்றும் இவ்விரு அம்சங்களுக்குமான சர்வதேச உதவி நகர்வாக்கத்தின் உணர்வு ரீதியான முயற்சி. உதவி வழங்கும் நாடுகளிடமிருந்து ஆர்வம் நிறைந்த உதவிகளை நாடு பெற்றுக் கொண்டது. ஐக்கிய தேசிய முன்னணி தலைமைத்துவத்தினதும் உதவி வழங்குபவர்களினதும் கருத்துக்களுக்கும் ஆர்வங்களுக்குமிடையில் குறிப்பிடத்தக்க அளவு ஒப்புமை காணப்பட்டது. இவ்வாய்வுக் கட்டுரையின் பெரும் பகுதியை உள்ளடக்குகின்ற இரண்டாவது பகுதி ஐக்கிய தேசிய முன்னணியின் தந்திரோபாயம் மற்றும், உதவி வழங்கும் நாடுகளின் அரசியல் பற்றிய மையக் குவிவாகக் காணப்படுகின்றது.
இவ்வாய்வுக் கட்டுரையின் இறுதிப் பகுதியானது ஐக்கிய தேசிய முன்னணியின் தோல்வியினை விளக்குகின்றது. ஐக்கிய தேசிய முன்னணியினால் முன்வைக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டத்தின் முழுமையான நோக்கமானது பெரும்பான்மைச் சிங்கள மக்களின்ஆதரவினை நிலை நிறுத்துவதற்குப் பொருத்தமானதாக அமையவில்லை. பொருளாதாரச் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் அரசியலானது பெரும்பான்மைச் சிங்கள மக்களின் பெரும்பகுதியினரை அன்னியப்படுத்தியதே ஐக்கிய தேசிய முன்னணியின் தோல்விக்கு வித்திட்டது.

Page 6
பொருளாதார நெருக்கடியும் சமாதானத்திற்கான தேடலும்
பிளவுக்குள்ளான பின் காலனித்துவ இலங்கை எதிர்கொண்ட குழப்பத்தினை விரிவுபடுத்திய பல்வேறு காரணிகள் ஒன்றிணைவதனை மில்லேனியத்துக்குப் பின்னரான இருவருடங்களும் சான்று பகர்கின்றன. இக்காரணிகள் போரின் தன்மை, பொருளாதாரம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் உறுதித்தன்மை என்பவற்றோடு தொடர்புபடுகின்றன.
இருதசாப்த காலப் போருக்கு முடிவில்லை. 1995 முதல் போர் தீவிரமடைந்தது. எல்.ரீ.ரீ.ஈ யுடனான பேச்சுவார்த்தை முறிவடைந்ததும் அன்றைய மக்கள் முன்னணி அரசானது ‘சமாதானத்திற்கான போர்’ என்னும் கொள்கைக் குரலுடன் இலங்கைத் தமிழரின் இதய பூமியாகக் திகழும் யாழ்குடா நாட்டை எல்.ரீ.ரீ.ஈ. யிடமிருந்து கைப்பற்றும் நோக்கத்துடன் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஏழு வாரகாலப் போரின் பின்பு குடாநாட்டின் முக்கிய நகரமான யாழ்ப்பாணத்தினை இராணுவம் கைப்பற்றியது. இதன் விளைவாகப் பெருந்தொகையான மக்கள் இடம்பெயர்ந்தனர்.
இருப்பினும் போர்முனையானது 2000 ஆம் ஆண்டில் திருப்பு முனையினைச் சந்தித்தது. எல்.ரீ.ரீ.ஈ. யினால் குடா நாட்டை ஏனைய பிரதான நிலப் பரப்புடன் இணைக்கும் ஆனையிறவுப் பகுதியினை ஏப்பிரல் 2000 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டமை மிக முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வானது ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை அச்சத்திற்குள்ளாக்கியது மட்டுமன்றி அரசிற்கும் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியது. இவ்வாறு கலக்கமுற்ற அரசானது குடாநாட்டிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதவற்கு இந்திய அரசின் உதவியினை நாடியது.
மிகத் தீவிரமான போரை மேற்கொண்ட அதே வேளை மக்கள் முன்னனி அரசானது மக்கள் முன்னனியின் தலைமைத்துவத்தினைக் கையாளும் பொருட்டு “மூலத்துவ விவகாரங்கள்’ (Core issues) என்பதனை மையமாகக்கொண்ட யாப்பு உருவாக்கச் செயல் முறையினை மேற்கொள்ளத் தொடங்கியது. இந்தியாவின் அழுத்தத்தினால் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளால் அனுபவிக்கப்பட்ட தன்னாதிக்கத்திலும் பார்க்கக் கூடிய அதிகாரங்களை வழங்கக் கூடிய அரசியல்யாப்பு ஒன்றினை உருவாக்குவதே இச் செயன்முறையின் பிரதான நோக்கமாகக் காணப்பட்டது. இது பாராளுமன்றத் தெரிவுக் குழுவினுள் நீண்டதொரு யாப்பு ரீதியான விவாதத்திற்கு இட்டுச் சென்றது. அரசானது 2000 ஆம் ஆண்டில் சீர்திருத்த முன்மொழிவு வடிவத்தினைப் பாராளுமன்றில் சமர்ப்பிக்க எண்ணியது. இருப்பினும் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு கிடைக்காமையினால் அரசானது பாராளுமன்ற விவாதத்திலிருந்து முன்மொழிவினை மீழப்பெற்றுக் கொண்டது.
2

மக்கள் முன்னணி அரசானது ஐப்பசி, 2000 ஆம் ஆண்டில் புதிய தேர்தலை எதிர்கொண்டது. வன்முறைகள் நிறைந்த தேர்தலானது மக்கள் முன்னணியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியது. ஆரம்பத்திலிருந்தே புதிய அரசாங்கமானது பாரிய பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தது. இந்நிலையானது 2000 ஆம் ஆண்டு ஆரம்பமாகிய பொருளாதாரக் காரணிகளின் காரணமாக 2001 இலும் தாக்கங்களை ஏற்படுத்தியது. கெலேகமவின் (2001) அவதானத்தின்படி சாதகமாக பொருளாதார வெளித்தோற்றத்தினை 2000 ஆம் ஆண்டு நிகழ்ந்த இரு பொருளாதார அதிர்வுகள் தாக்கத்திற்குள்ளாக்கின. உள்நாட்டினைப் பொறுத்தவரையில் 2000 ஆம் ஆண்டு சித்திரை, வைகாசி மாதங்களில் போரானது உக்கிரமடைந்ததன் விளைவாக அரசானது அதிக பணத்தினைப் போருக்காகச் செலவிட வேண்டியிருந்தது. (பாதுகாப்பிற்கான வரவு செலவு ஒதுக்கீடனாது 1999 ஆம் ஆண்டில் 48 பில்லியன் ரூபாவாக அதிகரித்தது. இது மொத்தத் தேசிய உற்பத்தியில் 5.6 சதவீதமாகும்) மறுபுறமாக 2000 ஆம் ஆண்டு ஆனி மாதத்திலிருந்து வெளிநாட்டுச் சந்தையில் எண்ணையின் விலை அதிகரித்தது. (ஒரு பீப்பா எண்ணையின் விலை 1999 ஆம் ஆண்டில் 19 அமெரிக்க டொரலாகவிருந்து 2000 ஆம் ஆண்டில் 28 அமெரிக்க டொலராக உயர்வடைந்தது.) இதன் காரணமாக வெளிநாட்டு நாணயக் கையிருப்பு வீழ்ச்சியடைந்தது. (வெளிநாட்டு நாணயக் கையிருப்பானது 596 அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்தது)
வெளிநாட்டு நாணயத்தின் கையிருப்பு குறைவடைந்ததால் உள்நாட்டு நாணயத்தைப் பாதுகாக்க முடியாது போகவே மத்திய வங்கிக்கு 2001 ஆம் ஆண்டு தை மாதத்தில் வெளிநாட்டு மாற்று வீதத்தைச் சுயமாக மிதப்பிற்கு விட வேண்டிய கட்டாயநிலை தோன்றியது. இந்நிகழ்வானது சூழ்நிலையைச் சமாளிக்கப் போதுமானதாக அமையவில்லை. எதிர்வந்த மாதங்களில் அரசானது ஒரு சில அத்தியாவசியப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களின் இறக்குமதி மீது 40 சதவீத வரிவிதிப்பினை அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து புதிய அரசானது 2001 ஆம் ஆண்டு பங்குனி மாதம் அறிமுகப்படுத்திய முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் வருமானத்தை அதிகரிப்பதற்கும் செலவுகளைக் குறைப்பதற்கும் வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டது. (ibid) அந்நிகழ்வுகள் அனைத்தின் விளைவாகவும் 530 மில்லியன் அமெரிக்க டொலர்களை உள்ளடக்கிய சர்வதேச நாணய நிதியத்தின் துணையுடனான நிகழ்ச்சித் திட்டமொன்று 2001 ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் முன்மொழியப்பட்டது.
இலங்கை அரசானது போருக்குச் செலவிட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் பொருளாதார நெருக்கடியினைச் சமாளிக்கக் கூடிய வகையில்
3

Page 7
உதவி வழங்கும் நாடுகளின் உதவியினையும் தக்கவைத்துக் கொண்டது. இவ்வாறான நிகழ்வானது 1977 ஆம் ஆண்டு பொருளாதாரத் தாராளமயமாக்கல் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே நிகழுகின்றது. இத்தகைய வழிகளில் இலங்கை செல்வதன் காரணமாக போர் நிகழ்ந்தாலும் கூட பொருளாதார அபிவிருத்திக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களுக்கும் உதவி வழங்கும் நாடுகளின் ஆதரவு தொடர்ச்சியாகக் கிடைத்தது. இருப்பினும் 2001 காலப்பகுதியில் கடும் வரட்சி காரணமாகச் சீர்திருத்தப் பொருளாதாரத்தினை சர்வதேச நாணய நிதியத்தினால் காப்பாற்ற முடியவில்லை. இலங்கையின் ஒரேயொரு சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க விமான நிலையத்தினை 2001 ஆம் ஆண்டு ஆடி மாதம் 24 ஆம் திகதி விடுதலைப் புலிகள் தாக்கியதன் விளைவாக பொருளாதாரம் மிகுந்த பின்னடைவுக்கு உள்ளானது. விடுதலைப்புலிகளின் இச்செயற்பாட்டின் பிரதான நோக்கம் நாட்டின் பொருளாதாரத்தினைச் சீர்குலைப்பதாகும். இதன் விளைவாகச் சுதந்திரத்திற்குப் பின்பு என்றும் நிகழாதவகையில் நவீன இலங்கையின் பொருளாதாரமானது கீழ்நோக்கிச் சென்றதுடன் 1.5 சதவீத குறைவை மொத்தத் தேசிய உற்பத்தியில் எதிர் கொண்டது.
அட்டவணை 1 தெரிவு செய்யப்பட்ட பொருளாதாரக் குறிகாட்டிகள்
குறிகாட்டிகள் 1999 2000 2001 2002 2003
GLDT.2–.D –. (% LDTopLib) 4.3 6.0 -1.5 4.0 5.9 வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை (% மொ.தே.உ) .75 8.0- 8.9- 10.8- 9.9۔ அரச கடன் (% மொ.உ.உ) 95. 96.9 103.2 105.4 105.9 வெளிச் சொத்துக்கள் 5.2 3.5 4.5 4.9 5.8 அதே வருடத்தின் மாத இறக்குமதிகள் கடன் சேவை விகிதம் (பொருட்கள் சேவைகளின் ஏற்றுமதி %) 15.2 14.7 3.2 13.2 11.6
ஆதாரம்: இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கைகள், 1999-2003

இத்தகைய பொருளாதார நெருக்கடிச் சூழலில் பொதுசன முன்னணி அரசானது விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தக் கூடிய வகையில் “ஊக்குவிப்பாளர்” என்னும் பங்கினை மேற்கொள்ளும் வகையிலான நோர்வே அரசின் திட்டத்தினை ஏற்றுக் கொண்டது. அடிப்படையில் பொருளாதார நெருக்கடியின் காரணமாகவே அரசானது இதனை ஏற்றுக் கொண்டது என்பதனை ஏனைய தொடர்புடைய நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இதன் காரணமாக அரசானது மீண்டும் மீண்டும் நோர்வேயின் பங்கு ஊக்குவிப்பாளரைத் தவிர வேரெதுவும் இல்லை என்பதனை வலியுறுத்தியது.
இருந்த போதிலும் இலங்கையின் உள்விவகாரத்தில் சிறப்பாக இனத்துவ அரசியலில் வெளியாரின் தலையீடு என்ற வகையில் இது குறிப்பிடத்தக்கதோர் நிகழ்வாகும். இருப்பினும் இதுவரையில் முரண்பாட்டில் தலையிட்டு வந்த முக்கிய வெளிச் சக்தியாக இந்தியாவே காணப்பட்டது. இதற்கு புவியியல் ரீதியான அண்மித்த நிலை, வரலாற்றுத் தொடர்புகள், பிராந்திய வல்லரசு என்பதன் காரணமாக இந்தியாவின் வகிபங்கு, தமிழ்நாட்டில் தமிழ்பேசும் மக்கள் இருக்கின்றமை, மற்றும் இலங்கையின் முரண்பாடுகளின் விளைவாக இந்தியாவின் பாதுகாப்பு போன்ற பல்வேறு காரணிகள் காணப்படுகின்றன. இதன் உச்சக் கட்ட நிகழ்வாக 1987 இல் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கையின் முரண்பாட்டில் வெளியார் தலையீடு என்ற வகையில் நிலைநிறுத்தப்பட்ட இந்தியாவை மையப்படுத்தி வெளியார் தலையீடு என்பதிலிருந்து இலங்கையின் ஆளும் வர்க்கமானது நோர்வேயினை ஊக்குவிப்பாளராக அழைத்ததன் மூலம் விலகிச் சென்றது. தற்காலத்தில் தமிழ் நாடு அரசியலைப் பொறுத்த வரையில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் இந்தியாவைப் பொறுத்த வரையில் குற்றவாளியாகவும் கருதப்படும் ஒருவரைத் தலைவராகக் கொண்ட அமைப்பின் ஆளுகைக்குட்டபட்டதாக போர் நிறுத்த உடன்படிக்கையினைக் (Cease Fire Agreement - CFA) கைச்சாத்திட்டதன் மூலமாக இலங்கை அரசியல் சமூகம் ஏற்றுக் கொண்டது என்பதனைத் தவிர வேறு எதனைக் கூறமுடியும்.
2001 இன் இறுதியில் அரசு ஸ்த்திரத் தன்மையினை இழந்து கட்சிப் பூசல்கள் உருவானதன் காரணமாக இலங்கை எதிர் கொண்ட பொருளாதாரக் சிக்கலானது மேலும் சீரழிந்தது. ஆரம்பத்திலிருந்தே பல கட்சிகளின் கூட்டமைப்பாகக் காணப்பட்ட பொதுசன முன்னணி அரசானது நிலையற்றதாகக் காணப்பட்டது. பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக கூட்டு அரசாங்கத்தின் ஒரு பகுதியாகக் காணப்பட்ட இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) மற்றும் அரசில் அங்கத்துவம் வகித்த இரு சிரேஸ்ட அமைச்சர்கள் கட்சியிலிருந்து
5

Page 8
விலகி எதிர் கட்சியில் சேர்ந்தனர். இதன் காரணமாக ஒருவருடத்தினுள் பொதுசன முன்னணி அரசு கலைந்து 2001 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தில் புதிய தேர்தலினை எதிர்கொண்டது.
நாட்டின் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் மூலமாக ஆட்சிக்கு வரும் கூட்டு அரசானது நிலையற்றது என்பதனையே இத்தகைய நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை (Proportional Representation System) (3D) bò óle60d6MouT60T gáfu 6Do6OT உருவாக்கும் என்று அதனை உருவாக்கியவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறான விளைவுகளையே தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டின. 1978 இல் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போது அதனை முன் மொழிந்தவர்கள் குறிப்பிட்ட முறைமையானது பாராளுமன்ற உறுப்பினர்களைக் கட்சியின் மேலதிக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருமென எதிர்பார்த்தனர். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் ஆரம்பப் பரிந்துரையானது பாராளுமன்றத்தின் அங்கத்துவத்திற்குத் தெரிவாவதற்கான மிக உயர்ந்த தொகை வாக்குகளைக் கொண்டு காணப்பட்டது. உறுப்பினர்கள் கட்சி மாறும் போது அங்கத்துவத்தை இழப்பதற்கான வழிவகைகளும் காணப்பட்டன. இதன் விளைவு என்னவெனில் மேலாதிக்கம் செலுத்திய இரு கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தின. இருப்பினும் இறுதியில் குறித்த முறைமையானது மேற்குறிப்பிட்ட இரு வழிவகைகளையும் திரிபுபடுத்திவிட்டது. குறைந்தபட்ச வாக்கு வீதமானது 5 சதமாகவும் குறைக்கப்பட்டதுடன் கட்சிலிருந்தும் உறுப்பினர் விலக்கப்பட்டால் நீதிமன்றில் பிரேரணையினைச் சமர்ப்பிக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன் காரணமாக கூட்டு அரசில் இருந்து கட்சித் தாவல்கள் நிகழ்ந்ததால் தெரிவு செய்யப்பட்ட அரசுகளின் ஸ்த்திரமற்ற தன்மை தோற்றம் பெற்றது."
ஐ.தே.கட்சியினைத் தலைமைத்துவமாகக் கொண்ட ஐ.தே. முன்னணி என்னும் கூட்டணிக் கட்சியானது 2001 ஆம் ஆண்டு மார்கழி மாதத் தேர்தலில் வெற்றி பெற்றது. தேர்தல் பிரச்சாரத்தின் போது போர் மற்றும் பொருளாதார நிலைமைகளைப் பற்றிய விடயங்கள் முக்கியத்துவம் பெற்றன. ஐ.தே.மு. விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தையினை மேற்கொள்ளப் போவதாகப் பிரச்சாரம் செய்தது. பொருளாதாரச் சீர்த்திருத்தத்திற்கு இது முக்கியமானது எனவும் விவாதிக்கப்பட்டது. தேர்தல் பெறுபேறுகள் மக்கள் முன்னணி அரசிலும் பார்க்க ஐ.தே.மு. அரசானது பொருளாதாரப் பிரச்சினையினைத் திறமையாகக் கையாளும் என மக்கள் நம்பியதனை வெளிப்படுத்தியது. மக்கள் முன்னணி அரசில் பொருளாதாரத்திற்கு என்ன நடந்தது என்பது பற்றி ஆச்சிரியப்படுவதற்கு ஏதும்மில்லை. இருப்பினும் 2001 ஆம் ஆண்டு மார்கழியில் ஐ.தே.முன்னணியின் தேர்தல் வெற்றியில் பொருளாதாரக் காரணிகள் முக்கிய பங்கினை வகித்திருந்தன.
6

அட்டவணை 2: விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் ஐ.தே.கட்சியின் பெறுபேறுகள்
ஆண்டு % தகுதி வாக்குகள் தேர்தல் தேசிய மொத்தம்
மாவட்டங்களில் பட்டியல் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள்
1989 47.6 1 O 15 125
1994 4.9 81 13 94
2000 38.1 77 12 89
2001 43.2 96 3 109
2004 35.8 7 1. 82
ஆதாரம்: இலங்கை அரசின் தேர்தல்கள் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளிலிருந்து கணிப்பிடப்பட்டவை.
அட்டவனை 2 இல் குறிப்பிடப்பட்டபடி 2001 இல் தேர்தலில் ஐ.தே.கட்சி 43 சதவீத வாக்குகளைப் பெற்றது என்பது விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் அடைந்து கொண்ட சிறப்பான வெற்றியாகும். அதிகரித்த வன்முறைகளின் மத்தியில் நடைபெற்ற தேர்தல் என்பதனால் 1989 இல் இடம்பெற்ற தேர்தலை நாம் கவனத்தில் கொள்ளத் தேவையில்லை" இரு பெரும் கட்சிகளும் பெரும்பான்மை பெறக் கூடிய 19 தேர்தல் மாவட்டங்களில் ஐ.தே.கட்சியானது 17 மாவட்டங்களில் வெற்றி பெற்றது. இப் 17 மாவட்டங்களிலும் ஐ.தே. கட்சி விருப்பு வாக்குகளையும் பெற்றுக் கொண்டது. இவை முன்னைய வருடத்தின் பெறுபேறுகளுக்கு முற்றுலும் மாறான பெறுபேறுகளாகும்.
போர் நிறுத்தமும் புதிய - தாராள நிகழ்ச்ச நிரலும்
ஐ.தே.முன்னணி 2001 இன் தேர்தலில் வெற்றி பெற்ற போது அதில் பிரதான கட்சியாகக் காணப்பட்ட ஐ.தே.கட்சியானது முன்னைய தலைமுறைகளில் ஐ.தே.கட்சியின் தலைவர்களைப் போலன்றி புதியதோர் மாறுபட்ட தலைமுறை தலைமைத்துவத்தினால் வழிநடத்தப்பட்டது. இவர்கள் பேச்சுவார்த்தை மூலமான தீர்வில் நாட்டம் மிக்கவர்களாகவும் பொருளாதாரத் தாராளமயமாக்கலுக்கு அதிக ஆதரவு வழங்குபவர்களாகவும், இலங்கையில் இன முரண்பாட்டினைத்
7

Page 9
தீர்ப்பதற்கு வெளியாரின் ஆதரவில் பெரும் நம்பிக்கை கொண்டவர்களாகவும் காணப்பட்டனர். பொருளாதாரத்தின் எதிர்காலம் மற்றும் அது போரினால் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதே இவர்களின் பிரதான கவனமாக இருந்தது. பொருளாதார முன்னேற்றத்துக்கு போருக்கான தீர்வு மிகவும் இன்றியமையாதது என்பதனை இவர்கள் உறுதியாக நம்பினர். இத்தலைமைத்துவம் இருக்கையில் ஐ.தே.கட்சி பெற்ற முதலாவது வெற்றியே 2001 இல் பெற்ற பெற்றியாகும். இவர்கள் இப்போது தமது கொள்கைகளை அமுலாக்குவதற்குத் தயாராக உள்ளனர்.
போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாவதற்கு முன்பே பிரதமரால் ஐ.தே. முன்னணியின் கொள்கைத் திட்டமானது 2002 ஆம் ஆண்டு தை மாதத்தில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. விடுதலைப்புலிகளால் ஏற்கனவே 2001, மார்கழியில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை மற்றும் விரைவான பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டம் இவற்றை அடைந்து கொள்வதில் சர்வதேச சமூகத்தின் உதவியினைப் பெறுதல் போன்ற அம்சங்களுக்கே இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது."
(அ) போர் நிறுத்த ஒப்பந்தமும் விடுதலைப் புலிகளுடன்
பேச்சுவார்த்தையும்
தேர்தலில் வெற்றி பெற்றதும் நோர்வேயின் அனுசரணையுடன் ஐ.தே.முன்னணி அரசானது விடுதலைப்புலிகளுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை அமுல் படுத்தியது. போர்நிறுத்த ஒப்பந்தம் 2002, மாசியில் கைச்சாத்தானது. இது நிகழ்ந்த வேகத்தை நோக்குகின்ற பொழுது ஐ.தே.முன்னணி அரசானது தேர்தலுக்கு முன்பே விடுதலைப் புலிகளுடனான தொடர்புகளைக் கொண்டிருந்தது என்பது உறுதியாகத் தெரிகின்றது.
விடுதலைப்புலிகள் நாட்டின் சில பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர் மற்றும் இலங்கையில் வேறுபட்ட பிராந்தியங்களில் இரு இராணுவம் நிலைகொண்டுள்ளது என்பதனை 2002 ஆம் ஆண்டு மாசி மாதம் 22 ஆம் திகதி கைச்சாத்தான உடன்படிக்கை ஏற்றுக்கொண்டது. பல்வேறு சரத்துக்கள் ஒவ்வொரு இராணுவமும் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சிக்காக வேண்டி எதனைச் செய்ய வேண்டும் எதனைச் செய்யக்கூடாது என்பதனை விளக்கி நிற்கின்றன. ஏனைய சரத்தானது யாரேனும் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாயின் 14 நாட்கள் முன்னறிவித்தல் வழங்க வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது. இறுதியாக பெரும்பாலும் ஸ்கண்டிநேவியன் நாட்டவரைக் கொண்ட போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது.
8

உடன்படிக்கையின் மூலகங்களை ஆராய்கின்ற போது இலங்கையின் அரசியல் தலைமைத்துவத்தின் அரசியல் அபிப்பிராயங்களில் இருந்து புதியதோர் பாதையில் செல்வது தெரிகின்றது. இதற்கு முன் ஒரு போதும் இலங்கை அரசாங்கமானது போராளிகள் நாட்டின் சில பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்பதனை ஏற்றுக் கொள்ளவும் இல்லை அல்லது ஒப்பந்தத்தின் அங்கீகாரம் எதனையும் வழங்கியதில்லை. அதுமட்டுமன்றிப் போராளிகள் பிராந்தியங்களைக் கட்டுப்படுத்தவும், ஆயுதங்களை வைத்திருக்கவும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவும் சுதந்திரம் வழங்கப்பட்டது. இவையாவும் நாடு எதிர்கொள்ளும் குழப்பநிலையின் தார்ப்பரியத்தையே எடுத்துக் காட்டின. முடிவற்ற போரும் சீரழிந்த பொருளாதாரமுமே இலங்கை அரசியல் வகுப்பினர் எண்ண முடியாதவற்றை எண்ணச் செய்தது என்பதில் ஐயமேதுமில்லை.
முன்னையவற்றிலிருந்து ஐ.தே.மு. அரசு பின்பற்றிய பேச்சு வார்த்தைக்கான உபாயம் முற்றிலும் மாறுபட்டதாகும். இதனையே முரண்பாட்டுத் தீர்வு gui6JT6 Tjab6f Luigbloodblo' 91600)(5(p60p (step by step approach) 6T60T அழைக்கின்றனர். இதன் பண்பியல்பு என்னவெனில் ஆரம்பத்தில் பேச்சு வார்த்தைக்கான செயன்முறைகளைப் பாதிக்கின்ற மிகச் சிக்கலான விடயங்களை போர் நிறுத்தம் உடைவதைத் தவிர்க்கும் பொருட்டு கையாளாமல் விடுவதாகும். மாறாக விடுதலைப் புலிகளின் கருத்துக்களுக்கமைய வட கிழக்கு மக்களின் உடனடித் தேவைகளைச் சந்திப்பதே ஆரம்பப் படிநிலையின் குவிமையமாகக் காணப்பட்டது.
அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்தை 2002 புரட்டாதியிலிருந்து 2003 பங்குனி வரை நடைபெற்றது. மொத்தமாக ஆறு பேச்சுவாரத்தைகள் இடம் பெற்றன. மிக முக்கியமான அடைவு என்னவெனில் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையின் பின்பு மார்கழி 2002 இல் முன்வைக்கப்பட்ட சமஷ்டியினை அடிப்படையாகக் கொண்ட அரசாங்க முறைமையாகும். இருப்பினும் அமெரிக்க அரசினால் ஆதரவு அளிக்கப்பட்ட வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டத்திற்கு அழைக்கப்படாமையினைக் காரணம் காட்டி விடுதலைப்புலிகள் 2003 சித்திரை மாதம் பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக் கொண்டனர்.
சமஷ்டி முறை மீதான ஒஸ்லோ உடன்படிக்கை என்பதனை விட நாட்டில் ஸ்த்திரத்தன்மை ஏற்ப்பட்டதே சமாதானச் செயன்முறையின் மிக முக்கியமான நிகழ்வாகும். இது போர் உடன்படிக்கை கைச்சாத்தான காலத்திலிருந்தே ஆரம்பமாகியது. ஏனைய நன்மைகளை நோக்கின் குடா நாட்டிற்கான சுதந்திரமான தரை வழிப்போக்குவரத்தாகும். ஐ.தே. முன்னணியின் தலைமைத்துவத்தினைப் பொறுத்தவரையில் பொருளாதரச் சீர்திருத்தத்திற்கு இது மிகவும் இன்றியமையாதது.

Page 10
(ஆ) பொருளாதாரச் சீர்திருத்தங்கள்
இலங்கையினை மீழப்பெறுதல் (Regaining Sri Lanka) என்னும் தலைப்பிடப்பட்ட ஆவணத்தின் மூலம் ஐ.தே.முன்னணியின் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டம் முன்வைக்கப்பட்டது. “இலங்கையானது 1977 இல் தாராளமயப் பொருளாதாரத்தினை ஆரம்பித்தது” என்று ஆரம்பத்தில் குறிப்பிடுவதன் மூலம் திட்டத்தின் அடிப்படைக் கருத்தியல் தந்திரோபாயமானது முன்வைக்கப்பட்டது. ஆரம்பத்திலிருந்து முன்னேற்றமும் நிகழத்தொடங்கியது. இருப்பினும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றம் நின்றுவிடாத போதிலும் மிகவும் வேகம் குறைந்தது என்பது அண்மைக் கால அனுபவமாகும்.” எனவே சில கிழக்காசிய அயல் நாடுகள் வெற்றி கொண்டதனைப் போல 10 சதவீத பொருளாதார வளர்ச்சியினை அடைந்து கொள்வதே தாராளமயமாக்கலின் பிரதான நோக்கமாகும்.
இவ்வாறு 10 சதவீத வளர்ச்சியினை அடைந்து கொள்ளும் பொருட்டு ஐ.தே.முன்னணி அரசானது பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் தொடர் கொள்கைத் திட்டங்களை முன்னெடுத்துச் சென்றது. வருமான நிலையினை அதிகரிக்கவும் செலவினைக் கட்டுப்படுத்தவும் பல தந்திரோபாயங்களை மேற்கொண்டது. வருமானத் தளத்தினை விரிவாக்குவதற்கு பொருட்கள் பலவற்றின் மீது பெறுமதி கூட்டப்பட்ட வரி என்ற தனித்ததோர் திட்டமும் மேலதிக வரித்திட்டமும் வரி மன்னிப்பும் அறிமுகப்பபடுத்தப்பட்டது.
“பொதுச்சேவைக்கான ஆட்சேர்ப்பு சரத்து (தொழில்நுட்ப மற்றும் தொழில் வித்துவத் தரங்களுக்கான வரி விலக்கு) சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வுத் தவிர்ப்பு, பாதுகாப்புச் செலவினைக் குறைத்தலும் ஒரப்படுத்தலும், நலத் திட்டங்களுக்கான செலவினை சிறப்பாகத் தயாரித்தல், வகைப்படுத்தப்படாத மற்றும் எதிர்பாராத செலவுகளுக்கான வள ஒதுக்கீட்டை மட்டுப்படுத்துதல் மற்றும் போரிலான முதலீட்டுச் செலவுகளை மட்டுப்படுத்துதல் போன்ற வழிவகைகளைச் செலவுக் குறைப்பு என்பது உள்ளடக்குகின்றது. பண முகாமைத்துவச் சட்டம் மற்றும் நல்வாழ்வு நலச் சட்டம் என்பவற்றில் உருவாக்கிய சீர்த்திருத்தங்களுக்குச் சட்ட ரீதியான ஆதாரங்கள் வழங்கப்பட்டன. கட்டமைப்புப் பகுதியினைப் பொறுத்தவரையில் ஐ.தே.முன்னணி அரசின் இலக்குகள் மிகவும் பரந்துபட்டவை. இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 100 பெற்றோல் நிரப்பு நிலையங்கள் மொத்த விற்பனை நிறுவகம் மற்றும் எண்ணைக் குதங்களைக் குத்தக்ைகு எடுத்தல் போன்ற அரச சொத்துக்கள் தனியார் உடைமையாக்கப்பட்டன. பிராந்திய போக்குவரத்துச் சபையினை முழுவதுவமாகத்
O

தனியார் மயப்படுத்தும் திட்டங்களும் முன்வைக்கப்பட்டன. மத்திய வங்கியின் 2003 ஆம் ஆண்டு அறிக்கையின்படி நான்கு துறைகளையும் இணைப்பதற்கும் சீர்திருத்தவும் திட்டம் இருந்தது." இலங்கை மின்சார சபை, புகையிரதத்துறை போன்ற அரச நிறுவனங்களை சீர்திருத்த மற்றும் வருமான அதிகார சபையினை உருவாக்குவதற்கும் அரசுக்குத் திட்டம் இருந்தது.
அரச ஊழியர்களுக்கான செலவுக் குறைப்பினை மேற் கொள்ளுவதற்கான படிநிலைகளை அரசு முன்னெடுத்துச் சென்றது. குடிமக்கள் சேவைச் சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டமொன்று 2004 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதன்படி 2004, 2006 காலப் பகுதியில் பொதுத்துறை வேலைவாய்ப்பு 30 சதவீதமாகக் குறைக்கப்படும். 2004 இற்கான இலக்கு 10 சதவீதமாகும். அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் பலவற்றிலும் தொழிலாளர்களின் எண்ணிக்கையினைக் குறைக்கும் நோக்குடன் தன் விருப்ப பதவியோய்வுத் திட்டம் ஒன்றும் அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டது. மேலும் 55-57 வயதுள்ள பொதுச் சேவையிலுள்ளோரின் ஒப்பந்தங்களைப் புதிப்பிக்காததற்கும் வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டன.
தனியார் துறையினரால் கோரிக்கை விடுக்கப்பட்ட தொழிற் சட்டச் சீர்திருத்தமானது மற்றுமோர் முக்கிய அம்சமாகும். நடைமுறையிலிருந்த தொழிற் சட்டங்களானவை தனியார் துறையினர் தமது விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ப தொழிற் செயல்முறையினை மாற்றி அமைக்கவும் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கவும் வேலைக்கு அமர்த்தவும் தடையாக அமைந்தன. மத்திய வங்கியின 2003 ஆம் ஆண்டறிக்கை சுட்டிக்காட்டுவது போல் “நீண்ட காலமாக நிலுவையிலுள்ள தொழிற் கற்கைச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான பாரிய படிநிலைகள் மேற்கொள்ளப்பட்டன.” இதன்படி தொழில் நிறுத்தமும் தொழில் செய்வோர் சட்டமும் (TEWA), கைத்தொழில் பிணக்குகள் சட்டம் (IDA), கைத்தொழில் பிணக்குகள் தீர்மானித்தல் நடைமுறைகள் சட்டம் மற்றும் பெண்களின் வேலை, இளையோரும் பிள்ளைகளும் சட்டம் என்பவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் அரசானது நிதித்துறையினைத் தாராளமயப்படுத்துவதற்கு பல வழிவகைகளை மேற்கொண்டது.
ஐ.தே.முன்னணி அரசின் மேற்குறிப்பிட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் என்னவெனில் அவை அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவமுடையதாக அமைந்ததாகும். கடந்த காலங்களில் தனியார் மயமாக்கம், தொழிற் சட்ட மாற்றங்கள் அரச பணிக்குழுவின் சீர்திருத்தம் ஆட்குறைப்பு என்பன பாரிய எதிர்ப்புகளைச் சந்தித்தன. இத்தகைய வரலாற்றுப் பின்னணியினையும் பொருட்படுத்தாது ஐ.தே.முன்னணி அரசு இவற்றை
11

Page 11
முன்னெடுத்துச் செல்ல முனைந்தது. வேறுவார்த்தையில் கூறின் கடினமான பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அதேவேளையில் ஐ.தே.முன்னணி அரசானது கடினமான அரசியல் முயற்சியுடைய பொருளாதாரத் தந்திரோபாயங்களையும் முன்னெடுத்துச் சென்றது.
(இ) சர்வதேசமயமாக்கம்
ஐ.தே.முன்னணியின் மூன்றாவது திட்டம் எதுவெனில் சமாதானச் செயல்முறையிற்கும் திட்டமிட்ட பொருளாதாரச் சீர்திருத்தத்திற்கும் பரந்துபட்ட சர்வதேச ஆதரவுத் தொடர்பு வலையமைப்பினை உருவாக்குவதாகும். போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முன்பு பிரதமர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையானது இலங்கையில் சமாதானத்தை உறுதி செய்வதில் சர்வதேச சமூகத்தின் அபிப்பிராயம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை மிகத் தெளிவாக விளக்கி நிற்கின்றது. பிரதமர் இலங்கையின் இனப் பிரச்சினை பற்றிப் பேசுகையில் “முன்பு ஒருபோதும் இல்லாதவாறு இன்று இப்பிரச்சினை பற்றி இந்தியாவினதும் ஏனைய உதவி வழங்கும் நாடுகளின் கவனத்தை ஈர்ப்பது இன்றியமையாததாகும். இவர்களால் போருக்கு ஒரு தீர்வினை வழங்கமுடியும். சர்வதேச சமூகத்தின் அபிப்பிராயத்தோடு வட கிழக்குப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு. இதனை மையமாக வைத்தே எமது கவனம் அமைந்திருக்க வேண்டும். சர்வதேச சமூகத்தினை அபிப்பிராயம் எம்மோடு இருப்பின் நாம் எமது பிராந்திய ஒருமைப்பாட்டினையும் எமது தேசத்தின் ஒற்றுமையினையும் பாதுகாக்க முடியும்” (Daily News, January 23, 2002)
இதற்கும் மேலாக இத்தந்திரோபாயமானது நோர்வே தவிர்ந்த அமெரிக்கா, யப்பான், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளையும் சமாதானத்திற்கான இணைத் தலைமை நாடுகளாகப் பெற்றுக் கொண்டது. இதன் மூலமாக உலகின் தனித்த வல்லாதிக்க நாட்டினையும் அதன் வரத்தக நட்பு நாடுகளையும் இலங்கை விவகாரத்தில் தலையிடச் செய்ததோடு இலங்கையின் மிகப் பெரும் உதவி வழங்கும் நாடாகவும் மாற்றமுற்றது.
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஐ.தே. முன்னணி தலைமைத்துவமானது அமெரிக்க அரசின் ஆதரவினைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. அரச உதவிச் செயலாளரான ரிச்சாட் ஆமிரேஜ் சமாதானச் செயல் முறைப் போக்கின் மீது தனிப்பட்ட ஆர்வத்தோடு கூடிய ஈடுபாட்டினை வெளிப்படுத்தினார்’
இலங்கைகுப் பெரும் உதவி வழங்கும் மற்றுமோர் நாடான யப்பானும் மிக முக்கிய வகிபங்காளராகும். ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற பன்முக
12

முகவர்கள் மீது யப்பானின் செல்வாக்கு அதிகமானது என்பதனால் இலங்கையின் பொருளாதாரத்தினைச் சீரமைப்பதற்கு யப்பானின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஐ.தே.முன்னணி அரசானது சமாதானச் செயல் முறையில் யப்பானிய உயர் ஸ்தானிகர் யாசுசி ஆகாசியின் பங்குபற்றுதலையும் பெற்றுக் கொண்டது.
ஐரோப்பிய ஒன்றியமானது மூன்றாவது வகிபங்காளர் என்ற வகையில் குறிப்பிட்ட அளவு காலத்திற்கு இலங்கையின் சமாதானச் செயல் முறையில் தன்னையும் உட்படுத்திக் கொண்டது. பேச்சுவார்த்தை மூலமாக முரண்பாட்டினைத் தீர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதுடன் ஐரோப்பிய ஒன்றியமானது அடிக்கடி தேர்தல் கண்காணிப்புக் குழுக்களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தது. அது மட்டுமன்றி ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய வர்த்தக பங்காளர்களாக விளங்கியதுடன் பல்வேறு உதவி வழங்கும் நாடுகளையும் ஒருங்கிணைத்தது.
ஐ.தே.முன்னணியினது சர்வதேசமயமாக்கல் இராஜதந்திரம் இந்தியாவின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ளத் தவறவில்லை. சமாதானச் செயல்முறை பற்றி உடனுக்குடன் இந்தியாவுக்கு அறியத் தந்தது. இந்தியா ஒரு பொருளாதாரப் பங்காளராகவும் கருதப்பட்டது. பிரதமரும் பொருளாதாரச் சீர்திருத்த அமைச்சரும் தமது இந்திய விஜயத்தின் போது இதனைப் பிரச்சாரம் செய்வதில் முக்கிய பங்கினை ஆற்றினர். இதற்கான அடித்தளமானது பொதுசன முன்னணி அரசினால் மேற்கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் உருவானது. இக்காலகட்டத்திலேயே இரு நாடுகளுக்குமிடையேயான விமானப் போக்குவரத்தினை விஸ்த்தரித்தல், இலங்கைக்கும் தென் இந்தியாவுக்குமிடையே வீதியொன்றை அமைத்தல், இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியக் குடிமக்களின் விசாக் கட்டுப்பாடுகளை இலகுவாக்கல், இலங்கைக்கான இந்திய சுற்றுலாத்துறையினை விஸ்த்தரித்தல் போன்ற பல்வேறு நடடிவக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஐ.தே முன்னணியின் புதிய யூகம் என்னவெனில் முத்தரப்புப் பொருளாதார வளர்ச்சியின் பகுதிகளாக இலங்கையினையும், மறுபகுதியாக தமிழ்நாடு, கேரளா என்பவற்றையும் ஒப்பு நோக்கியமையாகும்.
குறித்த தந்திரோபயத்தின் மூன்று பகுதிகளும் ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களை மீண்டும் வலியுறுத்தும் பொருட்டு பாதுகாப்பையும் ஸ்த்திரத்தன்மையையும் மேலும் வலுப்படுத்த ஐ.தே.முன்னணி அரசு எண்ணியது. இம்முத்தரப்புத் திட்டமானது 2003 சித்திரையில் புலிகள் பேச்சுவாரத்தையில் இருந்து விலகியதுடன் முடிவுக்கு வந்தது. இது வரையில் நேரடிப் பேச்சுக்கள் எதுவும் நடைபெறாத போதும் நோர்வேயின் சமரசத்துடன்
13

Page 12
கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இக்கலந்துரையாடல்களின் சாராம்சமாக அமைந்தது வடகிழக்கில் புனர்வாழ்வையும், மீழ்கட்டுமானத்தையும் ஊக்குவிக்கக் கூடிய உள்ளக ஒழுங்கு முறை ஒன்றை உருவாக்குவதாகும். இதன் முக்கிய விளைவாகக் கருதப்படுவது விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபையாகும் (ISGA). இதன் நோக்கங்கள் மிகத் தெளிவானவை. புலிகளால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் புனர்வாழ்வுக்கான நிதிப் பகிர்வில் கட்டுப்பாட்டினை கொண்டிருத்தல். இருப்பினும் அரசு இது தொடர்பாக முடிவுகள் எதனையும் மேற்கொண்டு கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவில்லை. இந்நிலையில் சனாதிபதி 2003 ஆம் ஆண்டு மார்கழியில் மிக முக்கிய அமைச்சுக்களைக் கையகப்படுத்தியதோடு 2004 ஆம் ஆண்டு மாசியில் நாடாளுமன்றத்தையும் கலைத்து விட்டார். இவ்வாறு 2004 இல் ஐ.தே. கட்சியின் தோல்வியானது ஐ.தே.முன்னணியின் தந்திரோபாயத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது.
சர்வதேச சமுகத்தின் அரசியல்
இலங்கை 1977 இல் தனது பொருளாதாரத்தினைத் தாராளமயமாக்கியதிலிருந்து உதவி வழங்கும் நாடுகள் மிகையான ஆதரவினை வழங்கி வருகின்றன. இதற்கு காரணமாகப் பன்முக நிறுவனங்களான சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவை இலங்கைக்கு உதவி வழங்க முன்வந்தன. வரவு செலவுத்துண்டு விழும் தொகையினைச் சமன்செய்வதற்கும், சமமாக்கல் கொடுப்பனவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், பொது முதலீட்டுத் திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்கும் மற்றும் பிரச்சினையிலுள்ள பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதற்கும் உதவி வழங்கும் நாடுகளின் ஆதரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.'
நாம் முன்பே கூறியது போல் இது 2001 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடியின் போது நாணய நிதியம் அறிமுகப்படுத்திய பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தினை ஒத்தது. இதற்கான பிரதான காரணம் என்னவெனில் ஆனையிறவு வீழ்ந்ததன் பின்பான அதிகரித்த ஆயுதச் செலவும், எண்ணெய் விலை அதிகரிப்புமாகும். 2001 இல் நிகழ்ந்த பொருளாதாரப் பின்னடைவுகள் 1977 இல் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார நிகழ்ச்சித்திட்டத்தின் குறைபாடுகளையேயன்றி வேறெதுவுமில்லை. இப்போது ஐ.தே. முன்னணி அரசானது சமாதானத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலமும் முக்கிய பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலமும் நிலைமையினைச் சரிவரக் கையாளுவதாக வாக்குறுதி வழங்குகின்றது.
14

இதன் நிமித்தமாக ஐ.தே.முன்னணி அரசானது உதவி வழங்கும் நாடுகளின் இதயபூர்வமான ஆதரவினைப் பெற்றது. ஐ.தே.முன்னணியின் தந்திரோபாயமும் கருத்தியலும் உதவி வழங்கும் நாடுகளின் தாராள முதலாளித்துவத்தின் மேலோடு என்றும் தந்திரோபாயத்துடன் ஒத்துப் போனது. சிலர் சுட்டிக்காட்டுவது போன்று முரண்பாடுகளிடையில் உதவி வழங்கும் நாடுகள் கண்ட புதிய ஆர்வமாகவே இதன் பிரதான நோக்கம் கருதப்படுகின்றது. இது அபிவிருத்தி மற்றும் அபிவிருத்தி உதவிக்கிடையிலான பாதுகாப்பு என்ற துறைகளையும் ஒன்றிணைத்துள்ளது. *
விடுதலைப்புலிகள் தொடர்பாக உதவி வழங்கும் நாடுகளிடையே கருத்தொருமைப்பாடு காணப்படாவிடினும் இவை குறித்த சூழலில் வைத்து ஆராயப்பட வேண்டும். இது தாராளச் சமாதானம் என்னும் கருத்தியல் அளவுச் சட்டத்தினுள் வைத்து நோக்கப்பட வேண்டும். அனைத்து உதவி வழங்கும் நாடுகளும் தாராள சந்தைப் பொருளாதாரத்தின் மேம்பாடு, தாராள நிறுவனங்களையும் விழுமியங்களையும் வலுப்படுத்துதல் என்பனவே இலங்கையின் சமாதானத்திற்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் துணைபுரியுமென நம்பின. இதனை மேலெடுத்துச் செல்வதற்கு விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்குமிடையே தீர்வுகளைக் காண்பது இன்றியமையாததாகக் காணப்பட்டது. உதவி வழங்கும் நாடுகளிடையேயான ஒருமைப்பாட்டினைப் புரிந்து கொள்வதற்கு இலங்கையில் முரண்பாட்டுத் தீர்வில் ஈடுபடும் இன்னோர் புறச் சக்தியாகிய இந்தியாவின் நிலைப்பாட்டினை ஒப்பு நோக்குவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வழமையைப் போன்றே பேச்சுவார்த்தை மூலமான தீர்வினை வரவேற்பதாக அறிக்கை விடுவதுண்டு. எப்படியிருப்பினும் விடுதலைப்புலிகளின் உள்ளாந்த நோக்கங்கள் தொடர்பாக இந்தியாவுக்கு எப்போதுமே சந்தேகம் இருந்ததுண்டு. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய எழுத்தாளர்கள் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டனர். நோர்வேயும் ஏனைய வெளிநாட்டுச் சக்திகளும் இலங்கையின் விவகாரத்தில் தலையிடுவது பற்றி உண்மையில் இந்தியா என்ன எண்ணுகின்றது என்பதனைக் கொழும்பும் அறிவதற்கு எப்போதும் மிகவும் ஆவலாக இருந்ததுண்டு. எனவே ஐ.தே.முன்னணியால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உதவி வழங்கும் நாடுகளின் ஒருமித்த நிலைப்பாடானது இந்தியாவின் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டுக் காணப்பட்டது.
உதவி வழங்கும் நாடுகளைப் பொறுத்தவரையில் பேச்சுவார்த்தை தொடர்பான விடுதலைப் புலிகளின் அர்ப்பணிப்பினைப் பற்றி அமெரிக்கா மாறுபட்ட கருத்தினைக் கொண்டிருந்தது. செப்டம்பர் 11 இற்குப் பிறகு அமெரிக்காவானது ஆயுதக் குழுக்கள் பற்றிய தனது கருத்தினை மாற்றியமையே இதற்குப் பிரதான காரணமாகும். இன்னோர் காரணம் இந்தியாவுடனான அமெரிக்க
15

Page 13
உறவாகும். பல்வேறு காரணிகளுக்கான பிராந்திய ரீதியாக இந்தியா மிகவும் முக்கயத்துவம் வாய்ந்த நாடாகும். இறுதியாக USAID போன்ற நிறுவனங்களுடனான தொடர்புகளை மட்டுமன்றி அமெரிக்காவால் வழங்கப்படுகின்ற உதவிகள் பணம் எதனையும் பயன்படுத்துதல் போன்ற அனைத்தையும் தடுக்கும் நோக்கிலேயே விடுதலைப் புலிகளுக்கெதிரான அமெரிக்காவின் தடை அமைந்திருந்தது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அமெரிக்காவின் பேச்சாளர் விடுதலைப் புலிகள் தாம் பயங்கரவாதத்தைக் கைவிட்டு விட்டனர் என்பதனைத் திட்டவட்டமான செயற்பாடுகள் மூலம் தெரியப்படுத்த வேண்டுமென்பதனை வலியுறுத்தினர். தாராள தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு முறையியல் ரீதியான கட்டுப்பாடுகளை அமெரிக்கா விடுதலைப்புலிகள் மீது பிரயோகித்தது. உதாரணமாக, டோக்கியோ உதவி வழங்கும் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டன."
அமெரிக்காவுக்கு மாறாக உதவி வழங்கும் நாடுகள் பல விடுதலைப் புலிகள் தொடர்பாக மென்மைப் போக்கினை கடைப்பிடித்தனர். இவை விடுதலைப் புலிகளுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்துவதிலும் வட கிழக்கிலும் தமது செயற்பாடுகளை விஸ்த்தரிப்பதிலும் கவனம் செலுத்தினரேயன்றி மனித உரிமைகள் போன்ற விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இன்னும் இவர்கள் விடுதலைப்புலிகளே தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்பதனையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தனர். டோக்கியோ பிரகடனத்தை எப்படி அமுல் செய்வது என்பதே உதவி வழங்கும் நாடுகள் மத்தியில் நிலவிய பிரதான விவாதமாகும். அதாவது இவை விடுதலைப் புலிகள், அரசு இருவருக்கும் பொதுவானதே என்ற விவாதமும் காணப்பட்டது.
குறித்த கால கட்டத்தில் ஐ.தே.முன்னணி அரசானது உதவி வழங்கும் நாடுகளிடமிருந்து அதிக உதவியினைப் பெற்றது. மத்திய வங்கியின் அறிக்கையின் படி 2002 இல் 17.2 மில்லியனாக இருந்த உதவித் தொகை 2003 இல் 61.2 மில்லியனாக உயரந்தது. அதாவது இவ்வுயர்ச்சி 350 சதவீதமாகும். இவ்வுதவியானது துண்டு விழும் தொகையினை நிரப்புவதற்கு துணைபுரிந்தது. வெளிநாட்டு உதவியின் பயன்பாடானது 2002 இல் 0.5 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியினை 2003 இல் 2.9 சதவீதத்திற்கு உயர்த்தியது."
6

அட்டவணை 3: வெளிநாட்டு உதவி தொடர்பாகத் தெரிவு செய்யப்பட்ட குறிகாட்டிகள் (மில்லியன் ரூபா)
2000 % 2001 9% 2002 % 2003 %
கடன்கள் 10070 66.2 19396 779 1013 58.8 53213 87.0 நன் கொடைகள் 545 33.8 5500 22. 7079 412 7956 13.0 மொத்தம் 15215 100.0 24896 100.0 17192100.0 61169 100.0 வெளிநாட்டுக் கடன் 43.1 45.3 45.6 47.9 (சதவீதம்மொ.உ.உ) வெளிநாட்டு மூலாதாரங்களின் 0.4 1.4 O.5 2.9 நிதிப்பற்றாக்குறை (சதவீதம் மொ.உ.உ)
மூலம்: மத்திய வங்கி ஆண்டறிக்கைள், 2000-2003
வெளிநாட்டு உதவியின் பயன்பாடும் அதிகரித்தது. ஒப்பீட்டு நோக்குகையில் 2001 இல் 13 சதவீமாகவும், 2002 இல் 15 சதவீதமாகவும் காணப்பட்ட பயன்பாடானது 2003 இல் 21 சதவீதமாக உயர்வடைந்தது. வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் பிரதமரால் உருவாக்கப்பட்டது. இது பிரதமரின் அதிகாரத்துக்கு உட்பட்டதுடன் உதவி வழங்கும் நாடுகளுடனான பேச்சுவார்த்தை, ஒப்பந்தங்கள் என்பவற்றுக்கும் பொறுப்பாக இருந்தது. இதன் காரணத்தாலேயே வெளிநாட்டு உதவியின் பயன்பாடு அதிகரித்தது. உதவின் பயன்பாடு, நகர்வாக்கம் என்பவற்றைப் பார்வையிடுவதற்குச் சிறப்பாக உருவாக்கபட்ட குழுவொன்றும் காணப்பட்டது.
கடன்கள் கொடுப்பனவுகள் இடையேயான மீதியைச் சீர்செய்யவும் வெளிநாட்டு உதவிகள் துணைபுரிந்தன. கொடுப்பனவுகளின் வீதமானது 2000 இல் 33.8 சதவீதமாக இருந்தது. 2003 இல் 41.2 சதவீதமாக உயரந்தது. இவ்வாறே கடன்களின் வீதமும் குறித்த ஆண்டில் 36.2 சதவீதத்திலிருந்து 58.6 சதவீதமாக குறைந்தது. இருந்த போதும் இந்த வெளிநாட்டு உதவியானது இலங்கையின் கடன் பழுவினைக் குறைப்பதற்குத் துணைபுரியவில்லை. வெளிநாட்டுக் கடனானது 2000-2003 இடைப்பட்ட காலத்தில் மொ.உ.உற்பத்தியின் 43.1 சதவீதத்திலிருந்து 47.9 சதவீதமாக உயர்வடைந்தது. இலங்கை மத்திய வங்கியின் 2003 ஆம் ஆண்டு ஆண்டறிக்கையின் படி ரூபாவின் பெறுமதியிறக்கமே ஐம்பது வீத அதிகரிப்புக்குக் காரணமாகும்.
17

Page 14
பெருமளவு வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக் கொண்ட போதும் கடன் அதிகரிப்பு என்பது வேறு வழிகளில் பணம் செலவிடப்படுகின்றது என்பதனையே குறித்துக்காட்டுகின்றன." கீழுள்ள அட்டவணையானது இலங்கைக்குச் சார்பான உட்பாச்சல் பற்றி விளக்குகின்றது. இக்காலகட்டத்தில் இலங்கையானது ஆசிய அபிவிருத்தி வங்கி, யப்பான் மற்றும் உலக வங்கியின் IDA கடன்கள் போன்ற மூன்று உதவி முகவர்களில் அதீத தங்கியிருப்பைக் கொண்டிருந்தது.'
அதிகரித்த உதவியானது பொருளாதாரத்தைச் சிறப்பாக முகாமைத்துவம் செய்வதற்கு உதவியதுடன் சமாதானச் செயல் முறையும் உதவி வழங்கும் நாடுகளின் அதிகரித்த ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்குத் துணை புரிந்தது. உதாரணமாக, 2003 இல் திட்டமிடபட்ட 62 நிகழ்ச்சித் திட்டங்களில் 15 திட்டங்கள் நேரடியாகவே சமாதானத்தோடு அல்லது வட கிழக்குப் பகுதிகளில் பணிபுரிதல் என்பனவற்றோடு தொடர்புபட்டுக் காணப்படுகின்றன." ஏனைய 47 திட்டங்களும் சாதாரண அபிவிருத்திச் செயல்முறை என்பதோடு தொடர்புபட்டன. இதன்மூலமாக உதவி வழங்கும் நாடுகள் வட கிழக்கில் பணிகளை விஸ்த்தரிக்க விரும்பவில்லை என்று விவாதிப்பதற்கில்லை. குறிப்பிட்ட 15 திட்டங்களும் வட கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவி வழங்கும் நாடுகள் பணிபுரிய விரும்புவதனையே எடுத்துக்காட்டுகின்றன. இருப்பினும் சமாதானப் பேச்சுவார்த்தை சீர்குலைந்ததன் காரணமாக திட்டங்கள் வட கிழக்கில் நிறைவுறாமல் போயிற்று. இருப்பினும் டோக்கியோ மாநாட்டில் வெளியிடப்பட்ட 4.5 பில்லியன் டொலர் ஒதுக்கீடானது பொருளாதாரச் சீர்திருத்தம், தெற்கு அபிவிருத்தி என்பவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் வடகிழக்கிற்கான நிதி ஒதுக்கீடு என்பனவற்றை உள்ளடக்குகின்றது. முன்னைய இரு ஒதுக்கீடுகளும் சரியான வழியில் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும் வடகிழக்கு நிகழ்ச்சித் திட்டமானது சமாதானச் செயல் முறையின் அரசியல் காரணமாகத் தடைப்பட்டுள்ளது.
ஆகவே பொருளாதார நிகழ்ச்சித்திட்டமே நிதிப்பாச்சலின் பாரிய நன்மையாகும். அரசானது பெரும்பாகப் பொருளாதார அடிப்படைகளையும் சிறப்பான அபிவிருத்தித் திட்டங்களையும் மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டது. அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் வறுமைக் குறைப்பு வளர்ச்சி வசதி (PRGF) மற்றும் வறுமைக் குறைப்பு உதவிக் கடன் (PRSC) என்பது உலக வங்கியின் உதவியுடன் முக்கிய ஒப்பந்தங்களையும் நிறைவு செய்தது. மத்திய வங்கியின் 2003 ஆம் ஆண்டு ஆண்டறிக்கையின் படி இவ்வாறே ஒப்புதல்கள் நாட்டின் பொருளாதார விருத்திக்குத் துணை நின்றதுடன் ஏனைய உதவி வழங்கும் நாடுகளின் உதவியினை அதிகரித்ததுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் ஊக்கப்படுத்தியது.
8

அட்டவணை 4: இலங்கைக்கான வெளிநாட்டு உதவியின் தேறிய நேர்கணியப் பாச்சலும் வழங்குனர்களும்
2000 % 2001 % 2002 % 2003 %
ADB 4763 25.0 5777 26.9 239 4.6 7548 28.7
அவுஸ்த்திரேலியா | 257 1.3 216 1.0 | 1515 5, 1 1810 3.0
ஜேர்மனி 839 44 633 7.6 20.O. O. 630 1.0
IDA 2236 17 677 3.2 5663 190 5950 26.
FAD 231 1.2 137 O.6 205 0.7 198 0.3
யப்பான் 1079 53.4 2146 56.5 8596. 28.8 23298 38.
நெதர்லாந்து 427 2.0 626 2. 880 .4
நோர்வே 325 7. 298 1.4 499 17 435 0.7
சுவீடன் 241 1.3 155 O.7 285 1.0 389 0.6
மொத்தம் 1907 11 OO.O 21466 1 OO.O298 00100.061138 100.0
மூலம்: மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகள், 2000 - 2003
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய மூன்று பன்நாட்டு நிறுவனங்களின் பிரதான நோக்கமாக அமைந்தது சந்தைப் பொருளாதாரத்தை அல்லது முதலாளித்துவத்தை மேம்படுத்துவதாகும். வரவு செலவுத் திட்டத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவியானது கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை அரசு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்னும் நிபந்தனையினை அடிப்படையாகக் கொண்டது. இந்நோக்கத்துடனான கொள்கை அடிப்படையிலான கடன்களை உள்ளடக்கியதாகவே உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பனவற்றின் நோக்கங்களும் காணப்பட்டன. ஐ.தே. முன்னணியின் பொருளாதாரக் கொள்கையானது இதனை ஏற்றுக் கொள்வதாகவே காணப்பட்டது. அரசினதும், பன்நாட்டு முகவர்களதும் எண்ணங்கள் ஒத்துப்போயின என்னும் காரணத்தால் உலக வர்த்தக மையம் வெளிப்படையாகவே ஆட்சியிலுள்ள அரசினைப் புகழ்ந்தது. உதாரணமாக, நாட்டிலுள்ள தந்திரோபாயத்தின் செயற்குழுச் சுற்றறிக்கையின் (2003-2006) ஆரம்ப பகுதியானது அரசியலைப் பொறுத்தவரையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசானது “கட்டுப்பாட்டினைக் கொண்ட திட்டமான சீர்திருத்தங்களை அமுல்படுத்தத் தொடங்கியது” எனக் கூறி நிற்கின்றது.
19

Page 15
யப்பானைப் பொறுத்தவரையில் இலங்கையின் சமாதானச் செயல்முறையானது டோக்கியோவின் புதிய வெளியுறவுக் கொள்கையுடன் ஒத்துப்போனது. பல்லாண்டு காலமாக உலக நிதியில் யப்பான் மிகப்பெரும் உதவி வழங்கும் நாடாகும். வர்த்தகம் தொடர்பான யப்பானின் ஆர்வங்களை மேம்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே யப்பான் இவ்வாறு செயற்படுகின்றது. புதிய திட்டமானது இதற்கு மாறாகக் காணப்பட்டது. முரண்பாட்டுத் தீர்வு போன்ற திட்டங்களுக்கு அபிவிருத்தி உதவியினை வழங்குவதற்குப் புதிய கொள்கையானது அதிக முக்கியத்துவம் கொடுத்ததுடன் யப்பானின் ஆர்வம், அனுபவத்தின் காரணமாக ஆசியப் பிராந்தியத்தில் அதனைப் பயிற்சி செய்யவும் முனைந்தது. புதிய பரிசோதனையின் இலக்காக இலங்கை மற்றும் ஆசே நாடுகளின் முரண்பாடுகள் காணப்பட்டன. இதன் காரணமாகவே இலங்கை விவகாரத்தைக் கையாளும் பொருட்டு அதியுயர் பிரதிநிதியை நியமித்ததுடன், இணைத்தலைமை நாடாகச் செயற்படவும் ஒப்புக் கொண்டது மட்டுமன்றி பெருமளவு செலவில் டோக்கியோ மகாநாட்டையும் நடாத்தியது. உலகத் தந்திரோபாய நலன்களைக் கொண்ட தனித்த வல்லாதிக்கச் சக்தி என்ற காரணத்தால் அமெரிக்கா இலங்கை விவகாரத்தில் ஆர்வம் கொண்டுள்ளது. சிறப்பாக புரட்டாதி 11 இற்கு பின்பு தென்னாசியப் பிரதேசத்தின் ஸ்த்திரத்தன்மை என்பது அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். விடுதலைப் புலிகள் மீது அமெரிக்காவுக்கு நம்பிக்கையின்மை காணப்பட்ட போதும் இலங்கையின் முரண்பாட்டினைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தையே பொருத்தமானது என்பதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தது. அமெரிக்க இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்காளி நாடாகும் என்பதனால் ஐ.தே.அரசுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றையும் மேற்கொண்டது.
இலங்கையின் முரண்பாட்டுத் தீர்வில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆர்வமென்பது அரசியல் தஞ்சம் என்பதுடன் தொடர்புபட்டது. பல்வேறு நாடுகளின் உள்நாட்டு அரசியலிலும் இது மிக முக்கியத்துவம் பெற்ற பிரச்சினையாகும். தேர்தல் காலங்களில் அகதிகளுக்கான அரசியல் தஞ்சம் தொடர்பான குடிவரவுக் கொள் கைகள் மாறுபட்ட கட்சிகளின் எதிர்ப்புக் குள் ளாவது பொதுவானதொன்றாகும். புரட்டாதி 11 இற்குப் பின்னர் இது ஒரு பாதுகாப்புப் பிரச்சினையாகவும் காணப்பட்டது. இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தேவையற்ற குடிவரவுகளைத் தடுப்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டன.
பல்வேறுபட்ட நாடுகளிலும் இலங்கையின் போர் காரணமாக அனேக அகதிகள் தஞ்சமடைந்தமை சிலருக்குத் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு அனுமதி
20

வழங்கப்பட்ட போதிலும் போர் நின்று கொண்டிருந்த வேளையிலும் ஐரோப்பிய நாடுகள் பலவும் பொருத்தமற்றவர்கள் எனக் கருதியவர்களைத் திருப்பி அனுப்பின. சில சந்தர்ப்பங்களில் இந்நாடுகள் இலங்கையுடன் இது தொடர்பாக ஒப்பந்தங்ளையும் ஏற்படுத்தின. இவ்வாறான ஒப்பந்தத்தை முதன்முதலில் சுவிற்சலாந்து 1994 தை மாதத்தில் மேற்கொண்டது. இத்தகைய கட்டுப்பாடுகள் அனைத்தும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் பொதுவானவை எனப் பிரகடனப்படுத்தப்பட்டன. இது இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் 2002 ஆம் ஆண்டு ஆடியில் புரூசெல்ஸ்சிற்குச் சென்ற போது நிகழ்ந்தது. இவ்வாறு ஐ.தே.முன்னணி ஆட்சிக் காலத்தில் உதவி வழங்கும் நாடுகளுக்கும் இலங்கையின் அரசியல் வகுப்பினருக்கும் இடையே ஒப்புமைகள் காணப்பட்டன. இத்தகைய நிலைமைகள் விரைவாக மாற்றமடைந்தன. இரண்டு வருடங்களின் பின்பு இலங்கையின் அரசியல் திசை வேறுபட்டது என்பதனை எல்லோரும் உணர்ந்தனர்.
பொருளாதார சீர்திருத்தத்தின் அரசியலும் ஐ.தே. முன்னணியின் தோல்வியும்
ஐ.தே.முன்னணி அரசின் கொள்கைத் திட்ட அமுலாக்கத்தின் அரசியலானது இரு காரணிகளில் தங்கியிருந்தது. சனாதிபதி குமாரதுங்கவுடனான உறவுப் பேணல் (1989 இல் மக்கள் முன்னணியிலிருந்து இவர் தெரிவானார்) தெற்கில் தேர்தல் தொகுதிகளின் ஆதரவினைத் தக்க வைத்தல் (இவர்களை ஐ.தே.முன்னணியினை 2001 இல் ஆட்சியமர்த்தினர்) 1978 இல் இலங்கை அரசியல் யாப்பானது பாராளுமன்றமும், சனாதிபதியும் வேறுவேறு கட்சியாளர்களால் கட்டுப்படுத்தப்படும் வாய்ப்பினை வழங்குகின்றது. இருந்த போதும் இதுவே முதல் முதல் அவ்வாறான சந்தர்ப்பத்தின் தோற்றமாகும்.
சுதந்திர காலத்திலிருந்தே ஐ.தே.கட்சிக்கும், பூரீ.சு.கட்சிக்குமிடையே முரண்பட்ட நிலை காணப்பட்டது என்பதனால் இரு கட்சிகள் ஆட்சியேற்ற தொடக்கத்திலிருந்தே பல கடினத் தன்மைகள் நிலவின. இருப்பினும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அரசியல் வகுப்பினுள் தனிப்பட்ட ஆர்வங்கள், குடும்ப அடிப்படையிலான முரண்பாடுகள் காரணமாகத் தொடர்ச்சியாகச் செயற்படுவதில் சிக்கல் தோன்றின. சுதந்திர தினத்தன்று 2004 மாசி மாதத்தில் சனாதிபதி நாடாளுமன்றத்தினைக் கலைத்துப் புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். ஐ.தே.முன்னணி அரசானது 2004 தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் பொருளாதாரச் சீர்திருத்தங்களும், சமாதான முயற்சிகளும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம்
21

Page 16
ஆயினும் தேர்தல் களமானது மாறுபட்ட தீர்வுகளை வெளியிட்டதன் காரணத்தினால் ஐ.தே.முன்னணியானது 2004 இல் தோல்வியுற்றது. சமாதான ஆதரவாளர்களுக்கு இந்நிகழ்வு பல பாடங்களைக் கற்றுத் தருகின்றது.
விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை தொடர்பாகப் பெரும்பான்மையான சிங்கள மக்கள் கொண்டிருந்த கருத்தில் மாற்றம் நிகழ்ந்தது. ஆரம்பத்தில் போர் மூலமான தீர்வினையே மக்கள் விரும்பினர். தொடர்புசாதனம் மற்றும் பொதுப் பிரச்சாரக் கூட்டங்களும் போரையே ஆதரித்தன. இராணுவ ஆட்சேர்ப்பானது பெரும்தொகையான இளையோரைக் கவர்ந்தது. இருப்பினும் 1994 இல் நிகழ்ந்த தேர்தலானது ஒரு திருப்புமுனையாகும். சந்திரிக்கா குமரதுங்க பேச்சுவார்த்தை மூலமான தீர்வு என்ற பிரச்சாரத்தினை மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். இது 2001 இலும் மீண்டும் நிகழ்ந்தது. இதில் ரணில் விக்கிரமசிங்க பிரதான எதிர்க்கட்சியின் தலைவராவார். ஆரம்பத்திலிருந்தே இதற்கான ஆதரவு கிடைத்தது. கொள்கை மாற்ற மையத்தின சமூகச் சுட்டித் திட்டமானது சேகரித்த தரவுகளின்படி 80 சதவீதமான மக்கள் பேச்சுவார்த்தை மூலமான தீர்வினையே ஆதரித்தனர் (கொள்கை மாற்ற மையம், 2003) ஐ.தே.முன்னணி அரசும் விடுதலைப் புலிகளும் பல தடவை நேரடிப் பேச்சுக்களை நடாத்திய போது இது உச்சத்தில் இருந்தது. ஐ.தே.முன்னணியின் தேர்தல் தோல்வியினைப் புரிந்து கொள்வதற்கு சமாதானத்துக்குப் புறம்பான காரணிகளையும் நோக்குதல் இன்றியமையாததாகும். ஐ.தே.முன்னணியின் தோல்விக்குப் பொருளாதாரச் சீர்திருத்தமே காரணமாக அமைந்தது என்பதே இக்கட்டுரையின் பிரதான வாதமாகும்.
சந்தைப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கம் கொண்ட ஒவ்வொரு பொருளாதாரச் சீர்திருத்தமும் “விளையாட்டு விதியில்” (rules of the game) மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. அல்லது வள உற்பத்திப் பகிர்வு நிறுவனங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. வேறுபட்ட மக்களின் சீர்திருத்தம் தொடர்பான எதிர்ச் செயல்கள் சிக்கலான காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன. இவற்றுள் சீர்திருத்தத்திற்கு முன்பாக அனுபவித்த நிலைமைகளும் அதன் தன்மைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இது வேறுபட்ட மக்களும் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளனர் என்பதில் தங்கியிருக்கின்றது. சீர்திருத்தத்தின் இடையில் தேர்தலை எதிர்கொள்வது என்பது குறித்த ஓர் ஆட்சியைப் பொறுத்தவரையில் மக்களின் எதிர்பார்ப்புகள் ஆதரவினைத் தக்கவைத்தல் என்பதில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
ஐ.தே.முன்னணியின் பொருளாதாரச் சீர்திருத்தங்களை நோக்குகின்ற போது மறைமுகமாகப் பல்வேறு குறைபாடுகளை நோக்க முடியும். முதலில் ஐ.தே. முன்னணியின் தந்திரோபாயம் சமகாலத்தில் இரு விடயங்களை பரீட்சித்துப்
22

பார்த்தது. ஒரு புறமாகச் சமாதானச் செயல்முறையும் மறுபுறமாகப் பொருளாதாரச் சீர்திருத்தங்களையும் மேற்கொண்டது. இரு வேறு திட்டங்களுக்கும் தென்னிலங்கை மக்களின் ஆதரவினைப் பெறுதல் என்பது இலகுவான ஒன்றல்ல. முன்னைய ஆட்சியிலும் மக்கள் ஆதரவு கிடைத்த போதும் பொருளாதாரச் சீர்திருத்தங்களானவை பரீட்சித்துப் பார்க்கப்பட வில்லை. அரசினதும் தொழிற் சட்டங்களின் சீர்திருத்தங்களும் உள்ளடங்கிய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் சக்திமிக்கோரின் ஆர்வங்களுடன் முரண்பட்டு நின்றன.
இலங்கையில் தாராள முதலாளித்துவம் 1977 களில் ஆரம்பமாகிய போதும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் முக்கிய துறைகளில் மேம்பாட்டினை ஏற்படுத்தவில்லை. குறித்த காலப் பகுதியில் அவை தொடர்பான கலந்துரையாடல்களும் விவாதங்களும் நடைபெற்றன. இருப்பினும் பன்நாட்டு நிறுவனங்களின் குறித்த காலத்தில் அவற்றைச் செய்யும்படி எதிர்பார்த்தனர். இது தொடர்பான கலந்துரையாடல்கள் உதவி வழங்கும் நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டதுடன் ஆரம்பப்படி நிலைகளும் எடுக்கப்பட்டன. இருப்பினும் முன்னேற்றம் மிக மெதுவாகவே நிகழ்ந்தது. நன்கு ஒழுங்குப்படுத்தப்பட்ட குழுக்களின் ஆர்வங்களும் கருத்தியல்களும் இதனைப் பலமாக எதிர்த்ததே இச் சீர்திருத்தங்கள் வெற்றி பெறாமைக்கான காரணமாகும். சீர்திருத்தங்களையும் மீழ் கட்டமைப்பினையும் மேற்கொள்ள முனைகின்ற அரசானது குறிப்பிட்ட நிறுவனங்களில் பணிபுரிவோரின் எதிர்ப்புக்களைச் சமாளிக்க வேண்டும். அரச துறைகளில் பணிபுரிகின்ற ஒரு தொகுதிப் பணியாட்கள் மாக்ஸிய வார்த்தையில் கூறப்படுவது போன்று “மத்திய வகுப்பினைச் சேர்ந்தவர்கள். அரச மேலாதிக்க முதலாளித்துவக் காலத்தில் இவ்வகுப்பு வளர்ச்சியடைந்தது. சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் இலங்கையினை ஆட்சி செய்த வகுப்பு வட்டத்தில் மத்திய வகுப்பினர் மிகவும் முக்கயத்துவம் வாய்ந்த ஒரு பகுதியினர். வரலாற்று ரீதியான முதலாளி வர்க்கமானது காலனித்துவ காலப்பகுதியில் பெரும் பொருட் சேர்க்கையினை மேற்கொண்டது. காலனித்துவ வேந்தர்களிடமிருந்து அதிகாரத்தினையும் பெற்றுக் கொண்டனர். இந்நிலையானது சர்வசன வாக்குரிமை மற்றும் தொடர்ச்சியான தேர்தல்கள் என்பவற்றின் மத்தியில் தொடர்ந்து பேண முடியாமல் போயிற்று. தேர்தல் போக்குகளின் ஊடே அதிகாரத்தினை மேலாதிக்க வகுப்புடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி அடைந்த வகுப்பு மத்திய தர வகுப்பாகும்."
மேலும் 1977 களுக்குப் பிற்பட்ட காலத்திலும் இவ்வகுப்பு விருத்தி அடைந்தது. இதற்கு பொதுத் துறையில் பெருமளவு செலவுக் குறைப்பினை மேற்கொள்வதில் காணப்பட்ட அரசியல் கடினத் தன்மைகள் வேறுபட்ட சேவைகளுக்காகவும் தொடர்ச்சியாக அரசில் தங்கியிருந்தமை மற்றும் அரசியல்
23

Page 17
வகுப்பினுள் காணப்பட்ட தலைவன் தொண்டர் உறவு நிலை அரசியலில் மேலாதிக்கம் காரணமாக தொடர்ந்தும் ஆதரவாளர்களுக்கு வேலைவாய்ப்புப் போன்றவற்றை வழங்கியமை போன்றவை ஒரு வகையில் காரணமாகும். தாராள பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட தொழிலாளர் வகுப்பு விரிவடைந்தது. இருப்பினும் இப்புதிய தொழிலாளர் வகுப்பிற்கு புறம்பாக தோட்டத்துறை பொதுச் சேவை மற்றும் அரச நிறுவனங்கள் மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் போன்ற துறைகளில் வர்த்தக ஒன்றியங்கள் காணப்பட்டன. இத்தகைய சில வர்த்தக ஒன்றியங்கள் கட்சிகளோடு மிகவும் நெருங்கிக் காணப்பட்டதால் அவை அரசியல் பேரம் பேசுதலுக்கான ஆர்வக் குழுக்களைத் தோற்றுவித்தன. இதன் காரணமாக ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள் பெருமளவுக்கு இவர்களில் தங்கியிருக்கும் நிலை தோற்றம் பெற்றது.
இரண்டாவதாக, தாராள முதலாளித்துவத்தின் கீழ் இரண்டு தசாப்த காலமாகச் சமூக முரண்பாடுகளை எதிர் கொண்ட சமூகத்தில் ஐ.தே.முன்னணி அரசானது மிகவும் பரந்துப்பட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது. இருந்த போதும் அடிப்படைப் பொருளாதாரப் பார்வையானது 1977 களிற்குப் பிற்பட்ட காலப்பகுதியினை விமர்சன ரீதியாகப் பார்க்கத் தவறிவிட்டது. ஆகவே ஐ.தே.முன்னணி அரசானது ஒன்றில் முன்னைய இருபது வருட காலத் தாராண்மைப் பொருளாதாரத்தின் எதிரிடையான விளைவுகளைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது புரிந்து கொள்ள விரும்பவில்லை. மாறாக சமமான ஆனால் மிகுந்த செறிவு கொண்ட நிகழ்ச்சித் திட்டமே தேவைப்பட்டது. பொதுவான புள்ளிவிபரத் தகவல்களை நாம் ஆராய்ந்து பார்த்தால் இரு தசாப்த காலத் தாராளப் பொருளாதாரக் கொள்கைளின் பின்பும் 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட சனத்தொகை வறுமைக் கோட்டிற்குக் கீழ் காணப்படுவதனைப் பொருளியாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள் (பார்க்க அட்டவணை 5) இவை வட கிழக்குப் புள்ளிவிபரங்களையும் உள்ளடக்கவில்லை. இவை உள்ளடக்கப்பட்டால் நிலைமை இன்னும் மோசமடையும்.
இதற்கும் மேலாக அண்மைக்கால வருமானப் பகிர்வு தொடர்பான புள்ளிவிபரமானது இலங்கையானது அதிகரித்த அளவு அசமத்துவச் சமூகத்தினை கொண்டது என்பதனை வெளிப்படுத்துகின்றது. மத்திய வங்கி நுகர்வோர் நிதியும் மற்றும் சமூகப் பொருளாதார மதிப்பீட்டாய்வின் 2003/2004 ஆரம்ப நிலைத்தரவுகள் மொத்த வருமானத்தில் உயர் வருமானப் பகிர்வு 38.6 வீதம். இது குறைவருமானப் பகிர்விலும் (1.7 வீதம்) பார்க்க இருபத்தி மூன்று வீதம் அதிகமாகும். இது அதிகரித்த சமனற்ற வருமானப் பகிர்வினைச் சுட்டிக்காட்டி
24

நிற்கின்றது." இத்தகைய அசமத்துவப் போக்கானது பிராந்திய ரீதியான மாறுபாடுகளையும் வெளிப்படுத்துகின்றது. மேல் மாகாணம் அண்ணளவாக 50 சதவீதமான மொ.தே. உற்பத்தியினைக் கொண்டிருக்கின்ற அதேவேளையில் ஏனைய பிராந்தியங்கள் புறந்தள்ளப்பட்டுள்ளன (அட்டவனை 7). இது வறுமையில் உள்ள குடும்பங்களைப் பிரதிப்பலிக்கின்றது. அட்டவணை 7 இல் உள்ளவாறு மேல் மாகாணத்தில் 12.2 சதவீதமாகவும் சப்பிரகமுவ மாகாணத்தில் 40 சதவீதமாகவும் காணப்படுகின்றது.
அட்டவணை 6: பிராந்திய அசமத்துவக் குறிகாட்டிகள்
DITEsté00TLib வறுமையில் மொ.உ.உற்பத்தியின்
வீட்டுரிமையாளரின் பங்கு (2000) urg (1995-96)
மேல் மாகாணம் 12.2% 49.4% வட-மேல் மாகாணம் 30.4% 10.4% மத்திய மாகாணம் 35.4% 9.9% தென்மாகாணம் 32.5% 9.3% சப்பிரகமுவ மாகாணம் 40.0% 6.7% கிழக்கு மாகாணம் . 4.5% s616 IT DITEBT600Tib 33.9% 4.0% வட-மத்திய மாகாணம் 26.1% 3.8%
மூலம்: இலங்கை அரசினால் 25 கார்த்திகை 2002 இல் ஒஸ்லோ மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை.
பூரண வறுமையிலும் பார்க்க இலங்கையினைப் பொறுத்தவரையில் அரசியலில் சமூக சமத்துவமின்மையென்பது மிகுந்த செல்வாக்குச் செலுத்துகின்றது. இது இலங்கை சுதந்திரமடைந்த காலத்தின் பின்பு இருந்த நிலைக்கு மாற்றானது. மேலைத்தேய மயப்படுத்தப்பட்ட காலனித்துவ முதலாளி வர்க்கத்திற்கு எதிரான, அவர்களின் அதிகாரத்திற்கு எதிரான கொள்கைத் திட்டங்கள் பல வகுக்கப்பட்டன. நாம் ஏற்கனவே விவாதித்ததின் படி இதன் மூலம் இலாபம் அடைந்தவர்கள் மத்திய வகுப்பினரே.
நெற்செய்கையினை மேற்கொள்ளும் சிறு விவசாயிகளின் நிலையானது தாராளப் பொருளாதாரத்தின் மற்றுமோர் பரந்துபட்ட முரண்பட்ட சமூக
25

Page 18
விளைவாகும். நாம் முன்பு கூறியது போல் இவர்களைப் பாதுகாப்பது சுதந்திரத்திற்கு பிற்பட்ட இலங்கையின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்றாகும். இருப்பினும் பல வருடங்களாக நெற்செய்கையை மேற்கொள்ளும் சிற்றுடைமையாளர் விவகாரங்களின் இருப்பியலானது படிப்படியாக வீழ்ச்சி அடையத் தொடங்கியது. அரசியல் ரீதியாக இவர்கள் பெருந்தொகை வாக்காளர்களை உள்ளடக்குகின்றனர்.
இறுதியாக ஐ.தே.மு. அரசானது 2001 இல் நிலவிய பொருளாரக் கடினத் தன்மையின் பின்னணியிலேயே பரந்துபட்ட சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் சென்றது. வாழ்க்கைச் செலவு உயர்வு, நிறுவனங்கள் மூடப்பட்டதனால் உருவான வேலையிழப்பு, மற்றும் மாறுபட்ட தாக்கங்களைக் கொண்டுள்ளன. இருந்தபோதும் 2001 இன் தேர்தலில் தெற்கு வாக்குகள் போரிலும் பார்க்கப் பொருளாதாரச் சீர்திருத்தம் மேற்கொள்ளும் பொருட்டு ஐ.தே.முன்னணியினையே ஆதரித்தன. தைமாதம் 2003 இல் மேற்கொள்ளப்பட்ட சமூகக் குறிகாட்டி மதிப்பீட்டில் விவகாரங்களை முன்னுரிமைப்படுத்தும் படி கேட்கப்பட்டபோது 48 சதவீதமானோர் வாழ்க்கைச் செலவு உயர்வும், 16.5 சதவீதமானோர் வேலையின்மையினையும், 18.8 சதவீதமானோர் இன முரண்பாட்டையும் குறிப்பிட்டனர். (கொள்கை மாற்றத்திற்கான மையம், 2003) வேறுவார்த்தையில் கூறின் 64.7 சதவீதமானோர் பொருளாதாரக் காரணிகளை முன்னுரிமைப்படுத்திய அதேவேளை இன முரண்பாட்டை 18.8 சதவீதமானோரே சுட்டிக்காட்டினர்.
பாரிய பொருளாரப் பிரச்சினைகள் மத்தியில் பெரும்பான்மையான மக்கள் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை எதிர் கொண்ட போதும் இதனைத் தீர்ப்பதற்கு ஐ.தே.முன்னணி நிகழ்ச்சி திட்டம் எதனையும் கொண்டிருக்கவில்லை. திட்டமிடுவோரும் தலைவர்களும் மரபு ரீதியான வளர்ச்சி மற்றும் எதிர் கொள்ளும் தந்திரோபாயம் என்பவற்றில் நம்பிக்கை கொண்டார்கள் என்பதனால் சந்தை மற்றும் தனியார் துறையின் வளர்ச்சிக்குத் தடையான காரணிகளை அகற்றுவதனை அடிப்படை இலக்காகக் கொண்டிருந்தனர். வறியோரை அபிவிருத்தியுடன் தொடர்புபடுத்தி வறியோர் நலன்பெறக் கூடிய உதவிச் சேவைகள் சிலவற்றை வழங்குவதன் மூலம் பொருளாதார விருத்தியினை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
முன்னைய ஐ.தே.க அரசினைப் போன்று ஐ.தே.முன்னணி அரசானது மக்களின் அரசியல் ஆதரவினை நகர்வாக்கம் செய்யும் வகையில் எதுவித நிகழ்ச்சித் திட்டத்தினையும் கொண்டிருக்கவில்லை. சனாதிபதி பிரேமதாசாவின் சனசவிய (Janasaviya) மற்றும் சனாதிபதி குமாரதுங்காவின் சமுர்த்தி (Samurdhi) என்பவற்றை உதாரணமாகக் கொள்ளலாம். இவை இரண்டும் மிகப் பிரபல்யமான வறுமை ஒழிப்புத் திட்டமாக கருதப்பட்டன. அரசியல்
26

ரீதியில் நோக்குகையில் இத்தகைய திடடங்களை மக்களுடன் ஐ ஸ்ள தொடர்புகளை வளர்ப்பதற்கு பயன்படுத்தப் பட்ட அதேவேளை முதலாளித்துவத்தின் விருத்திக்குத் துணைபுரியும் சீர்திருத்தத் திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டன. மேலும் இவற்றிற்கு வழங்கப்பட்ட பெயர்களை இவற்றின் அரசியல் ஆதாரத்தினை வெளிப்படுத்துகின்றன. இருவரும் இந்நிகழ்ச்சித் திட்டங்களோடு சீர்திருத்தங்களையும் மேற்கொண்டனர்.’
புதுமையானவற்கைச் செய்வதனை விடுத்து ஐ.தே.மு அரசானது திட்டங்களை இறுக்கமாகச் செயற்படுத்த முனைந்தது. இதன் காரணமாகப் பெரும்பான்மையான மக்கள் அன்னியப்படுத்தப்பட, மக்களின் ஆதரவினைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. இந்நிலையானது சீர்திருத்தங்கள் மிகப் பெரும் வர்த்தகர்களுக்கே பயன்தரக் கூடியது என்னும் கருத்து மேலோங்கத் தொடங்கியது. வரி மன்னிப்பு போன்ற குறிப்பிடக் கூடிய கொள்கைகள் இதனை மேலும் உறுதி செய்து குழப்பதிற்கும் காரணமாக அமைந்தது.
ஐ.தே.மு அரசினால் முன்வைக்கப்பட்ட (பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டத்தின் ஒரு பகுதியான) PRSP திட்டமானது அரசியல் ரீதியான வகிபங்கு எதனையும் கொண்டிருக்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே PRSP உதவி வழங்கும் நாடுகளோடு ஒப்பு நோக்கப்பட்டதன் காரணமாக அரசியல் அங்கீகாரத்தினைப் பெற்றிருக்கவில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதாயின் PRSP திட்டமானது பன்னாட்டு உதவி வழங்கும் நிறுவனங்களால் முன்வைக்கப்பட்ட கட்டமைப்பு மாற்றம் மற்றும் திடப்படுத்தலுக்கான ஒரு நிகழ்ச்சித் திட்டங்களாகவே காணப்பட்டன. இது வறுமை ஒழிப்புக் கொள்கை மூலம் அங்கீகாரத்தினைப் பெறுவதற்கான முயற்சியாகவும் கருதப்படலாம். உதவி வழங்கும் நாடுகள் பங்குபற்றும் தந்திரோபாயத்தை பயன்படுத்தி சீர்திருத்தத்திற்கான ஆதரவினைப் பெற முனைந்தனர். PRSP இக்கான பங்கு பற்றும் பயிற்சியானது மட்டுப்படுத்தப்பட்டதாகவும் பெரும் தொகையான மக்கள் பங்களிப்பினை உள்ளடக்காதவையாகவும் காணப்பட்டன. இதன் காரணமாக PRSP திட்டமானது ஐ.தே முன்னணிக்குத் தேவைப்பட்ட அரசியல் ஆதரவு என்பதனைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.* w
ஒட்டு மொத்தமாக நோக்குகின்ற போது ஐ.தே.முன்னணியின் பொருளாதாரத் தந்திரோபாயமானது சமாதானச் செயல் முறைக்கான பெரும்பான்மைச் சிங்கள மக்களின் ஆதரவினைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இதன்படி நோக்கின் இது சமாதானத்திலிருந்து புறம்பானதோர் தந்திரோபாயமாகவே கருத வேண்டியுள்ளது. சீர்திருத்தங்களின் விஸ்தீரத் தன்மையானது சீர்திருத்தங்களையும் சமாதானச் செயல்முறையினையும் ஒரே நேரத்தில் முன்னெடுத்துச் செல்வதில் கடினத் தன்மைகளைத் தோற்றுவித்தது. இது சமகாலத்தில் வலுமிக்க ஆர்வக் குழுக்களின் எதிர்ப்புக்களையும் எதிர்கொண்டது.
27

Page 19
குறுகிய காலத்தினுள்ளே ஐதே. அரசானது சமாதானச் செயல் முறையில் அதிக அளவு அடைவுகளைப் பெற்றுக் கொண்டாலும் இரு முனைகளில் அரசியல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்டது. ஒன்று இரு கட்சி ஆட்சி சீர்குலைந்தது. மற்றது சில சீர்திருத்தக் கொள்கைள் மக்களின் நல்வாழ்விற்குத் தீங்காக அமைந்ததன் காரணமாக வேறுபட்ட சமூகக் குழுக்களிடம் இருந்து எதிர்ப்புக்கள் கிழம்பின.
அட்டவணை 6: UNP/UNF தேர்தல் பெறுபேறுகள்
தேர்தல் மாவட்டம் 2001 2004 = 1 -
கொழும்பு 49.7 40.3 -9.4 கம்பகா 423 35.7 -6.7
களுத்துறை 43.4 35.8 -7.6
B6) 42.2 36.6 -5.6
மாத்தறை 40.4 33.0 -7.4 அம்பாந்தோட்டை 38.2 33.3 -4.8 மாத்தளை 47. 45.2 - 1.9 கண்டி 49.3 46.6 -2.7 நுவரெலியா 62.6 50.3 -2.4 குருநாகல் 46.3 40.9 -5.5 புத்தளம் 48.2 43.4 -47 பொலநறுவை 44.9 38.2 -6.7 அனுராதபுரம் 43.5 37.8 -5.8 மொனராகலை 39.7 34.7 -50
பதுளை 50.2 45.4 -4.8 இரத்தினபுரி 43.7 39.5 -4.2 கேகாலை 46.8 4.8 -5. யாழ்ப்பாணம் 8.2 0.0 -8.2 வன்னி 26.0 22.3 -3.7 மட்டக்கிளப்பு 1.8 2.4 -9.3 அம்பாறை 19.7 3.6 -6.0 திருகோணமலை 37.1 8.2 -28.9 மொத்தம் 43.2 35.8 - 7.4
மூலம்: இலங்கை அரசின் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தின் புள்ளிவிபரத்திலிருந்து பெறப்பட்டவை
28

ஐ.தே முன்னணியின் எதிர்காலத்திற்குப் பெரும் சவாலாக சித்திரை 2004 தேர்தல் அமைந்தது. முக்கிய பெறுபேறுகளைப் பெற்ற 2001 தேர்தலிலும் பார்க்க 35.8 சதவீத மொத்த தேசிய வாக்குகளைப் பெற்றதன் மூலம் மிக மோசமான தோல்வியை எதிர் கொண்டது. இவர்கள் 1994 இல் 41.9 சதவீத வாக்குகளைப் பெற்றனர். ஐ.தே கட்சியானது 14 தேர்தல் தொகுதிகளில் கட்டுப்பாட்டை இழந்தது. அனைத்துத் தேர்தல் தொகுதிகளிலும் 2001 உடன் ஒப்பு நோக்குகையில் குறைவான வாக்குகளையே ஐ.தே கட்சி பெற்றது. ஐ.தே கட்சியின் 17 வருட சிறப்பான ஆட்சிக் காலத்திற்குப் பின் ரணில் விக்கிரமசிங்காவின் தலைமையிலான ஐ.தே.கட்சி மிக மோசமான தேர்தல் தோல்வியைச் சந்தித்தது.
முடிவுரை
இரு தசாப்த காலப் போர் காரணமாக இலங்கை பிளவுபட்ட நாடாக மாற்றமடைந்துள்ளது. இருப்பினும் தாராளப் பொருளாதாரக் கொள்கை காரணமாக நாடானது உலக முதலாளித்துவத்துடன் தொடர்புற்றுள்ளது. இட அமைவு வடிவங்கள் நாட்டில் உலக முதலாளித்துவத்தின் இயக்கத்தைப் பிரதிப்பலிப்பதாக டபில்ட் (Duffiled) விளக்குகின்றார். நாட்டின் ஒரு பகுதியானது உலக முதலாளித்துவத்துடன் தொடர்புற்றுக் காணப்பட மற்ற பகுதியானது யுத்தத்தையும் அது காரணமான பொருளாதார விளைவுகளையும் எதிர்கொண்டிருந்தது. இப்பகுதி வேறுபட்ட வழிகளில் உலக முறைமையோடு தொடர்புபட்ட ஆயுதக் குழுவொன்றின் கட்டுப்பாட்டில் இருந்தது.
புத்தாயிரம் ஆண்டின் முதல் இரு ஆண்டுகளும் தீவிரமான போரையும் தாராள முதலாளித்துவத்தின் விருத்தியின்மையினையும் அனுபவித்தது. 2001 இல் காணப்பட்ட பொருளாதார நெருக்கடி அரசினை விடுதலைப்புலிகளுடன் பேசும் நிலையினை ஏற்படுத்தியது. நிலைமை மிக மோசமடைந்ததால் அரசு விடுதலைப் புலிகளின் தடையினை நீக்கி போர் நிறுத்த ஒப்பந்தத்தினை அமுல் செய்ததன் வழி நாட்டின் இரு வேறு பகுதிகளை இரு வேறு இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்பதனையும் ஏற்றுக் கொண்டது.
விடுதலைப் புலிகள் நோக்கங்கள், வட கிழக்கில் கட்டுப்பாட்டை தம்வசம் வைத்திருத்தல், அரச கட்டுப்பாட்டுப் (விசேடமாக யாழ்ப்பாணம்) பகுதிகளில் சுந்திரமாக நடமாடுதல், சர்வதேச அங்கீகாரத்தைப் பெறல், வட கிழக்குப் புனர்வாழ்வுக்கான பணச் சுழற்சினைக் கட்டுப்படுத்துதல் என்பனவற்றை உள்ளடக்குகின்றன.
பாதுகாப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களின் சேர்க்கையாகவே 2002 மாசியில் செய்யப்பட்ட சமாதான ஒப்பந்தத்தினை நோக்க முடியும். இது விடுதலைப்புலிகளுடனான ஒப்பந்தத்தின் மூலம் பாதுகாப்பையும்
29

Page 20
உறுதிப்பாட்டையும் திடப்படுத்துதல் மற்றும் விரிவான பொருளாதாரச் சீர்திருத்தம் ஆகிய இரு வேறுபட்ட நோக்கங்களைக் கொண்டதாகக் காணப்பட்டது.
இவ்விரு திட்டங்களிலும் உதவி வழங்கும் நாடுகளால் தலைமை வகிக்கப்பட்ட சர்வதேச சமூகத்தின் அரசியல் வகிபங்கு என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின்றது. இரு திட்டங்களும் உதவி வழங்கும் நாடுகளில் பெரும் ஆதரவினைப் பெற்றிருந்தன. சமாதானச் செயற்பாட்டு நோக்கில் வேறுபட்ட நாடுகள் மிகுந்த ஆர்வம் காட்டின. நோர்வே மத்தியஸ்த்தராக விளங்கியது. யப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன இணைத்தலைமை நாடுகளாகச் செயற்பட்டன. இவர்களுடன் பன்நாட்டு நிறுவனங்களும் சமாதானத்திற்கும் சீர்திருத்தத்திற்கும் ஆதரவளித்தன.
இருப்பினும் பாதுகாப்பு அபிவிருத்தி தொடர்பான நிகழ்ச்சித் திட்டம் விடுதலைப் புலிகளுடனான சமரசத்தின் வழி தாராள சந்தைக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார மேம்பாட்டினை ஏற்படுத்த எண்ணியபோதும் அபிவிருத்தியினையோ சமாதானத்தினையோ ஏற்படுத்த முடியவில்லை. சிறப்பாகப் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் காணப்பட்ட தாராளப் பொருளாதாரத்தின் முரண்பாடுகளைப் புறம் தள்ளியமையே இதற்கான பிரதான காரணமாகும். இது பெரும்பான்மை மக்களின் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைப் புறம் தள்ளி விடுதலைப்புலிகளுடன் நடாத்தப்படும் எந்த ஒரு தீர்வுத் திட்டமும் நிறை வேறாது என்பதனையே காட்டுகின்றது. திட்டமான சமாதானம் இலங்கையில் நிலை பெற வேண்டுமாயின் தாராளப் பொருளாதாரத்தின் அடிப்படைகள் சிலவற்றைப் பற்றிக் கேள்வி எழுப்புவது அவசியமானதாகும்.
அடிக்குறிப்புக்கள்:
l. இக்காலத்தில் நிகழ்ந்த தேர்தல் வன்முறைகள் தொடர்பான மேலதிக 6îlug (Élabbäsg5Ú UTjassab, K.M. De Silva (2002), “Sri Lankas Electoral System and Electoral Machinery 1931-2002: A Historical and Political Analysis. தென்னாசியாவின் தேர்தல் செயன்முறைகளும் ஆட்சியியலும் என்ற இக் கட்டுரை CBS கண்டி இல் நடந்த சர்வதேச மகாநாட்டில் முன்வைக்கப்பட்டது. 21-23 யூன் 2002.
2. Kelegama Saman, Sri Lankan Economy in Turbulent Times, Budget 2001 and
EMF Package, Economic and Political Weekly, July 14, 2001.
3. Kellegama Saman, op. cit
30

10.
Urtijas, A.J. Wilson (1980), The Gaullist System in Asia, The Constitution of Sri Lanka (1978). (Macmillan Press, London) and Sunil Bastian (2003) “இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையும் தேர்தல் சீர்திருத்த e Jfu6ò QuT(56TT5Tgcupò” in Sunil Bastian, Robin Luckham (ed.) Can Democracy be Designed? தாராளப் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்பும் அரசியல் அதன் தொடர்புப் பற்றிய பகுப்பாய்விற்குப் பார்க்க.
மிக முக்கியமான வாக்கெடுப்பு Org - Marg Smart இனால் நடாத்தப்பட்டது. இதன் பெறுபேறுகள் தினமும் Sunday Times இல் வெளியானது. பாரக்க, D-gst jeoOTLDITs, Sunday Times, 1 November 2001.
இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் இதுவே மிகுந்த வன்முறைகளைக் கொண்ட தேர்தலாகும். இந்திய அமைதிகாக்கும் படை வட-கிழக்கில் விடுதலைப் புலிகளுடன் போர் புரிந்த அதே வேளை தெற்கில் தேசியவாதத்தையும் மாக்ஸிய கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணியானது வன்முறை கலந்த பிரச்சாரத்தில் ஈடுப்பட்டது. அரசு இதனை அடக்குவதற்கு கையாண்ட வழிகள் மரணங்களையும் காணாமல் போதலையும் அதிக அளவில் தோற்றுவித்தது. தேர்தலைப் புறக்கணிக்குமாறு ம.வி.முன்னணி தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டது. மிகக் குறைவான வாக்களிப்பு இடம்பெற்றது. எதிர் கட்சியான ரீ.சு.கட்சி பிரச்சாரம் எதனையும் பெரிதாக மேற்கொள்ளவில்லை.
நேர்மையே சமாதானத்திற்கான ஒரேயொரு உத்தம வாதமாகும், பிரதமரின் Gastoireos said,60a, Daily News, 23 January, 2002.
Urtijss, Jayadeva Uyangoda, Peace Watch, Polity. Vol. 1, No. 3 and Sumanasiri Liyanage. The LTTE's pull-out from the peace talks-a comment, Polity, Vol. l, No. 3, for and analysis of the LTTE withdrawal from negotiations.
Government of Srilanka (2003), Regaining Sri Lanka. Vision, Strategy for accelerated development (Colombo).
இலங்கை மத்திய வங்கி, வருடாந்த அறிக்கை, 2003.
சமாதான செயன்முறைகளின் மத்தியில் இக் கட்டுரை ஆசிரியர் கலந்துகொண்ட மகாநாட்டில் முன்னாள் அமெரிக்க தூதுவரான ரெரிசிட்ரா சாவ்னரும் கலந்துகொண்டார். இவர் தற்பொழுது வாஷிங்டனில் உள்ள தந்திரோபாய மற்றும் சர்வதேச ஆய்வு நிலையத்தில் பணி புரிகின்றார்.
31

Page 21
12.
3.
15.
16.
17.
8.
அமெரிக்காவில் ஏப்ரலில் நடந்த கூட்டம் இலங்கைக்குப் பெரும் வெற்றியாக அமைந்தது என இவர் இக் கூட்டத்தில் தெரிவித்தார்.
1977 இன் பின்னரான உதவிப் பாச்சல் பற்றிய கலந்துரையாடலுக்கு பார்க்க, Gunnar M. Sorbo et al. (1987) Sri Lanka, Country Study and Norvegian Aid Review (Centre for Development Studies, University of Bergen) and Ronald J. Herring (2001) "Making Ethnic Conflict, The Civil War in Sri Lanka," in Esman, Milton, J., Ronald, J. Herring, (eds.) Carrot and Sticks, and Ethnic Conflict: Rethinking Development Assistance (University of Michigan Press, Ann Arbor).
untjasas, Mark Duffield (2001): Global Governance and New Wars (Zed Books, London).
இது டோக்கியோவில் ஆனி 2003 இல் இடம்பெற்ற நன்கொடையாளர் மகாநாடு. இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கட்டியெழுப்புவதற்கான உதவியினை நகர்வாக்கம் செய்வதற்கானது.
Central Bank of Sri Lanka, Annual Report 2003.
2000-2003 காலப்பகுதியில் பின்வரும் நாடுகளுக்குப் தேறிய வெளிப் பாய்ச்சல் மேற்கொள்ளப்பட்டது. கனடா, டென்மார்க், பிரான்ஸ், IBRD, இத்தாலி, நெதர்லாந்து (2000 மட்டும்) ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா.
இக் காலகட்டத்தில் இந்தியா, சீனா போன்ற நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட கடன் ஒப்பந்தங்கள் மூலமும் நன்மை பெற்றது என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
நிதி அமைச்சு, வெளிவாரி வளத் திணைக்களத்திலிருந்து பெற்ற தரவுகள்
இப் பகுப்பாய்வு பற்றிய பின்னணித் தரவுகளுக்குப் பார்க்க, Gunasinghe Newton (1996) "A Sociological Comment on the Political Transformations in 1956 and the Resultant Socio-political Processes and Land Reform, Class Structure and the State,' in Perera Sasanka (ed), Newton Gunasinghe. Selected Essays (Social Scientists Association, Colombo); Jayawardena Kumari (2000) Nobodies to Somebodies, The Rise of Colonial Bourgeoisie in Sri Lanka (Social Scientists Association, and Sanjaya Books, Colombo); Jayadeva Uyangoda (1999) “Post-Independence Social Movements,: in (ed) W.D.
32

22.
23.
24.
Laksman and C.A. Tisdell, Facets of Development of Sri Lanka since Independence. Socio-Political, Economic, Scientific and Cultural (University of Queensland, Brisbane); Sunil Bastian (2003), "The Political Economy of Electoral Reform, Proportional Representation of Sri Lanka,” in Sunil Bastian and Robin Luckham (ed), Can Democracy be Designed? (Zed Books, London).
இம்மதிப்பீடு கிளிநொச்சி, மன்னார், மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை a 6ft 6in Liassis)606). Central Bank of Sri Lanka, Annual Report 2003.
இவ்விடயம் பற்றிய பகுப்பாய்வுக்குப் பார்க்க, David Dunham and Chris Edwards (1997): "Rural Poverty and agrarian crisis in Sri Lanka, 1985-95: Making Sense of the Picture,” Research Studies, Poverty and Income Distribution Series No. 1 (Institute of Policy Studies). Slijö flood60Ti,85mGOT 6siduisti gÈg)é(g5 (3LDgpitò uTé85, World Bank (1996) Non Plantation Crop Sector Policy Alternatives.
uTjaia, Mick moore (1997): Leading the Left to the Right: Populist Coalitions and Economic Reform," World Development, Vol.25, No. 7.
gA6oš60d85u îl6őI PRSP usůsóluu 6upoj SF6OTgögb(5Ů LUTjääb, Debayani Kar (2003): The IMF-World Bank Plan for Sri Lanka. Will it help or Hinder South
Asian Success? (Centre for Economic and Policy Research, Washington D.C.).
ultijdt, Mark Duffield, Global Governance and New wars, Zed Books, London, 2001.
33

Page 22


Page 23
UNIEARTS (PVT)LTD.

COLOMBO - 13 TEL: 2330195