கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரசியலமைப்பு: ஜேயாரால் ஜேயாருக்காக ஜேயாருடைய

Page 1

இக்காக ஜேயாருை

Page 2

མ་ཚོས་ག་བ་ཚོས་གོང་མའི་གོ་ سیسییو ாதுசன நூல.
"மாநகராட்சி மன்
14-8-1994

Page 3
தலைப்பு: அரசியல் அமைப்பு: ஜேயாரால் ஜேயாருக்
காக ஜேயாருடைய
ஆசிரியர்: மு. திருநாவுக்கரசு. வெளியீடு: ஆசிரியர், யாழ்ப்பாணம். 1994 ஓகஸ்ட் 10, நூலக பகுப்பு இல 342.
அட்டைப் படம்: ம. நிலாந்தன்.
ளக் தயாரிப்பு: அழகன் புளக் தயாரிப்பாளர், யாழ்ப்பாணம்.
பதிப்பு: மாரன் பதிப்பகம், யாழ்ப்பாணம்
பக்கங்கள்: 22 50 - بـ
KURIO
 
 
 
 
 

தனது அறுபதாவது வயதை இவ்வாண்டில் பூர்த்திசெய்யும் அன்புக்குரிய எனதாசிரியர் திரு. ஏ. ஜே. கனகரட்ணாவிற்கு

Page 4

பொருளடக்கம்
முன்னுரை -
அறிமுகம் - it
பின்னணி -
அத்தியாயம் ஒன்று ஓர் இன மத மொழி நோக்கு " ωναν
அத்தியாயம் இரண்டு கடின யாப்பு முறை
அத்தியாயம் மூன்று ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையில் மோதலுக்கான ஏற்பாடு -
அத்தியாயம் நான்கு ஜனதிபதியின் அதிகாரமும் அவரைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடும் -
2

Page 5
அத்தியாயம் ஐந்து
பிரேமாவை ஓரங்கட்டவும் சிறிமாவை களத்திலிருந்து அகற்றவும் யாப்பு ரீதியான ஏற்பாடுகள் 11 ܚܩܘܫ_N 16
அத்தியாயம் ஆறு ஐ. தே. க. வினைப் பாதுகாக்க
விகிதாசாரப் பிரதிநிதித்துவம் W 25
அத்தியாயம் ஏழு ஜே. ஆரின் சாதக நிலையை உறுதிப்படுத்த மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு -
அத்தியாயம் எட்டு அரசியலமைப்பால் உருமறைப்புச் செய்யப்பட்ட நவீன முடியாட்சி - 3密
அத்தியாயம் ஒன்பது
புதிய நிலைமைகளின் கீழ் ஜே. ஆரின் அரசியலமைப்பு உள்நாட்டு யுத்தம்தான் வழியா? - 48

முன்னுரை 09 - 08 . 1994
விரும் பொதுத்தேர்தலில் யார் யார் வெல்லப் போகிறார்கள்? அடுத்த பிரதமர் யார்? சந்திரிகாவா, சிறிமாவா? ரணிலா?
சில சமயம் சந்திரிகா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி வென்றுவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப் பொழுது ஜனாதிபதி டி. பி விஜயதுங்க என்ன செய்வார்?
அவர் சில தினங்களிற்கு முன் கூறியிருப்பது போல, நானே ஜனாதிபதி, நானே முப்படைகளின் தளபதி, நானே பிரதமரைத் தெரிவு செய்வேன்; நானே மந்திரிகளையும் தெரிவு செய்வேன். என்று காலப்பொருத்தமின்றி பிரகடனம் செய்து பதவியில் தொடர்ந்தும் ஒட்டிக்கொண்டிருப்பாரா?
அவ்வாறாயின் சந்திரிகா என்ன செய்வார்?
திருமதி அக்கினோ பாணியில் ஒரு உள்நாட்டு யுத்தத்திற்குத் தலைமை தாங்குவதைவிட அவருக்கு வேறு வழிகள் இல்லையா?

Page 6
இப்படி ஒரு சிவில் யுத்தமல்லாத வேறு வழிகளில் சிந்திக் கவே முடியாத நிலைமைகள் ஏன் எழுகின்றன?
இக்கேள்விகளுக்குரிய விடைகளைத்தேடும் முயற்சியே இந் நூலை எழுதுவதற்குரிய தேவைகளாகவும் இருந்திருக்கமுடியும் . திரு. மு. திருநாவுக்கரசு இந்நூலின் இறுதியில் கூறுகிறார்; *அரசியலமைப்பை மீறினால்தான் அரசியல்நடாத்த முடியும் என்பதே இன்று சிங்களவரின் அரசியல் யதார்த்தமாகிவிட்டது" என்று. அதாவது 78 இன் அரசியல் யாப்பு காலாவதியாகிவிட் டது என்பதே இதன் அர்த்தம்.
ஏன் இந்த அரசியலமைப்பு காலாவதியாகியது ?
அதனை அதன் வரம்புகளிற்குள்ளாகவே புதுப்பிக்கமுடியாதபடி அதிலிருக்கும் சுய வரையறைகள் எவையெவை?
இவைகளை ஆராய்வதில் தொடங்கி, இந்த அரசியலமைப்பின் மூலம் வரை மு.தி. சென்று விடுகிறார். அதாவது சமகாலத்தேவை களின் கேள்விகளைப பின்தொடர்ந்து சென்று கடந்தகாலத்திற்குள் நுழையும் அவர், இறுதியாக இந்த அரசியலமைப்பின் ஆதார சுருதியாக நிற்கும் அம்சத்தை வந்தடைகிறார். அதுதான். ஒரு தனிமனிதனின் பேராசைகளைப் பாதுகாப்பதற்காக அந்தத் தந்திரசாலியான மனிதனாலேயே உருவாக்கப்பட்ட அரசி பலமைப்புத்தான் இது என்பது. ۔۔۔۔۔۔
78 இல் ஜெயவர்த்தன தலைமையிலான ஐ தே . க ஆறில் ஐந்து அறுதிப் பெரும்பான்மை பெற்று அமோக வெற்றியீட்டியது. பாணுக்கும் சீனிக்குமாக நீண்ட கியூக்களில் காத்திருந்து சலித்த சிங்ளவர்ககள் ஜெயவர்த்தனவுக்குத் தந்த வெற்றி அது, ஆனால் ஜே ஆர் அந்த வெற்றியின் கனிகள் அனைத்தையும் தாே தனி ருசிபார்க்கத் திர்மானித்தார்.
ஒரு வழியாவுல் ஹக் போல, ஒரு மார்க்கோஸைப் போல, ஒரு சுகார்ட் டோவைப் போல, தனது ஆயுட்காலத்தின் ஆகக்கூடிய ஆண்டுகள் வரை ஆட்சியதிகாரத்தின் கடைசித்துளியையும் விடாமல் சுவைக்கும் ஆசை.
இதில் அவர் தன்னுடைய விசுவாசிகளைக் கூட நம்பத் தயாராக இருக்கவில்லை. தனது மந்திரிகளிடமிருந்து திகதியிடப் படாத ராஜினாமாக் கடிதங்களை அவர் வாங்கி வைததிருந்தார். கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் தன்னுடைய ஆயுட்கால
) II ( )

ஆட்சியாசைக்கு சவாலாகத் தோன்றிய எல்லாச் சக்திகளையும் பலமிழக்கச்செய்வதே அவருடைய பிரதான மூலோபாயமாகவிருந் து. இந்த மூலோபாயத்தை முன்னிறுத்தி அவர் வகுத்த சட்ட தந்தி இளின் சுயமுரண்பாடுகளின் கதம்பம்தான் 78 இன் அரசியல்
Geppe V ay , s
இப்படி ஜேயாரால் ஜேயாருக்காக உருவாக்கப்பட்ட இந்த் அரசியலமைப்பில், ஜே . ஆர் என்ற தனிமனிதனின் பேராசைகளைப் பாதுகாக்கும் முறையும் ஐந்து முக்கிய அம்சங்களை மு. தி அடையாளங்காண்கிறார் 9/60)62 (Vo62/637: 1) ஒரு இன, மத, மொழிச் சாய்வானநினிகே,
领 2) விகிதாசாரப் பிரதிநிதித்துவம் o. ూ 屬
7a. ஒ, "சீஇ 13 ஜனாதிபதி முறைமை %. ༧ "
� *
4) மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு 5) பொதுசன பாதுகாப்புச் சட்டம்,
இந்த ஐந்து அம்சங்களும் வெளித்தோற்றத்தில் சமுகத்தன்மை வாய்ந்தவையாகவே தோன்றும். சட்ட அந்தஸ்த்து உடையவைகள் போலவே தோன்றும். ஆனால் உள்ளடக்க சாராம்சத்தில் அவை ஒரு பேரரசை பிடித்த தனிமனிதனின் - ஜே ஆரின் வரையறையில்லாத அதிகாரங்களை பாதுகாப்பவைதான் என்பதை மு தி நூல் முழு வதும் தனித்தனி அத்தியாயங்களிற் கூடாக நிறுவிச் செல்கிறார்.
இபடி ஜேயாரால் ஜேயாருக்காக உருவாக்கப்பட்ட அரசியல் மைப்பு ஜேயாருக்குப் பின் உண்டான நிலைமைகளின் கீழ் எப்படி யெப்படி பிரேயோகிக்கப்பட்டது என்பவைகளைக் கூறும் ழ தி இறுதியாக இன்றைய காலத்தின் இன்றைய தேவைகளோடு இந்த 78 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு மோதும் நிலைமைகளையும் சுட்டிக்காட்டுகிறார்.
ஜேயாரின் அரசியலமைப்பு அவரையும் கூட பத்து ஆண்டுகள்தான் பாதுகாத்தது தன்னுடைய உட்கட்சி வெளிக்கட்சி எதிரிகளைப் பற்றி அவர் அநேகமாகச் சரியாகவே கணித்து வைததிருந்தார், கையாண்டார். ஆனால் அவருடைய அரசியலமைப் பின்வரையறைகளை உடைத்துக்கொண்டு ஈழப்போர் தீவுக்கு வெளி யிலும் வியாபித்துச் சென்றபோது அவருடைய அரசியலழை பாலும் அவரைப் பாதுகாக்கமுடியவில்லை,
III )

Page 7
ஒரு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக இருந்த படியால்தான் அவரால் ஈழப்போரைக் கையாள்வதற்காக ஒரு அமல்நாட்டின் படையை தன்னுடைய மந்திரிகளின் சம்மதங்களை யும் பெறாமலேயே தீவுக்குள் அழைக்க முடிந்தது. இதுதான் - இந்திய - இலங்கை உடன்படிக்கைதான் - அவருடைய ஆயுட்கால் ஆட்சியாசைக்கும் முடிவு கட்டியது, இந்த உடன்படிக்கையின் துர்க்கபூர்வ விளைவுகளிலிருந்து அவரால் தப்பிச்செல்ல முடியவே வில்லை. உடன்படிக்கையின் பின்னரான நிலமைகளை அரசியலமைப் 4க்கு உட்பட்ட வழிமுறைகளிற்கூடாக கையாளவும் முடியவில்லை. உண்மையில் அவருடைய அரசியலமைப்பு அப்பொழுதிருந்தே காலாவதியாகத் தொடங்கிவிட்டது . அவர் பார்த்துக்கொண்டிருக் கும்போதே, அவருடைய நாடாளுமன்றத்துக்குள் வைத்தே அவரு டைய பாதுகாப்பு மந்திரியின் கால்களுக்கடியில் ஒரு கைக்குண்டு வெடித்தது. அவர் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அவரு டைய விசுவாசிகள் ஒருவர் பின் ஒருவராக சுட்டுத்தள்ளப்பட் டார்கள். முடிவில் அவரும் முதுமையும் தோல்வியும் துரத்த அரசி யலிலிருந்து ஒதுங்க நேர்ந்தது.
எந்தப் பிரேமதாசாவை ஓரங்கட்டுவதற்காக அரசியலமைப் பில் தந்திரமான நுணுக்கங்களைப் புகுத்தினாரோ அதே பிரேம தாசா அவருடைய விருப்பங்களையெல்லாம் முறியடித்தபடி ஜனாதி பதியானார். இப்பொழுது ஜே. ஆரின் சட்டக்கவசம் (அரசியல ஒருப்பு) பிரேமதாசாவின் கையில். தவிர பிரேமதாசாவிடம் அரசி பைேழப்புக்கு வெளியில் பலமானதொரு பாதாளலோகமிருந்தது. ஜே ஆர் தனக்குச் செய்ததையே, பிரேமதாசா, ஜே ஆரின் ஆட்களுக்கும் செய்தார். ஜே. ஆர் பார்த்துக்கொண்டிருக்கை முதிலேயே கட்சி இரண்டாக உடைந்தது. பிரேமதாசா அவர் கொல் லப்படும் வரையிலும் அரசியலமைப்பு/க்கூடாக அசைக்கப்படமுடி யாத ஒரு சக்தி மிக்க மனிதராகவே காணப்பட்டார். பிறகு விஜ பதுங்கா வந்தார்.
ஜே. ஆரிடம் தந்திரமிருந்தது. பிரேமதாசாவிடம் பாதாள லோகமிருந்தது. ஆனால் விஜய துங்காவிடமோ வாய்மட்டுந்தான் இருக்கிறது.
புதிய காலத்தின் புதிய நிலைமைகளை வெட்டியாள, இந்த வாப் மட்டும் போதாது.
மு. தியின் இந்நூல் அவருடைய வழமையான நூல்களிலி
ருந்து வித்தியாசப்படுகிறது. அவருடைய வழமையான நூல்களில் ஒருவித கதைகூறும் பாணியிருக்கும். ஆனால் இந்நூலில் அது
) IV ( )

அநேகமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. நூல் கையாளும் விசயம் காரணமாகவும் இது நிகழ்ந்திருக்கலாம். இதனால் நூலின் மொழி கடினமாயிருக்கிறது. அதில் ஒருவித நேரடித்தன்மை மிகுந்திருக் கிறது. அதுவே மொழியின் சுவாரசியத்தையும் குறைத்துவிட்டது. மு. தி யின் வழமையான வாசகர்கள் சிலசமயம் இந்நூல் துறை சார் நிபுணர்களுக்கு மட்டும் உரியதொன்றோ என்று நினைக்கக் கூடிய வாய்ப்புக்களை மறுப்பதற்கில்லை.
ஆனால் 78 இன் அரசியலமைப்பை அது உருவாக்கப்பட்ட தற்குரிய காரணகாரியத் தொடர்பில் வைத்து விளக்குவதோடு , தமிழரின் நோக்கு நிலையிலிருந்து அந்த அரசியலமைப்பை முழு மையாகவும் அதே சமயம் பகுதி பகுதியாகவும் ஆராய்ந்திருக்கிறது என்ற வகையில் தமிழில் இந்நூலின் வரவு முக்கியமானது.
இதற்கு முன்பு தமிழில் இது சம்பந்தமாக வெளிவந்திருக்கும் அநேகமாக எல்லா வெளியீடுகளையும் விட இந்நூல் தனக்கென் றொரு உள்ளடக்க முழுமையை, தரிசனத்தைக் கொண்டிருக்கிறது. இதற்கு முன் தமிழில் வெளிவந்த அநேகமாக எல்லா நூல்களுமே பாடவிதான நூல்களாகத்தான் காணப்படுகின்றன.
என்பதனால்தான் , அரசியலமைப்பை அமைப்பு ரீதியாக முழு மையாக ஆராயப் புகுந்த மு . தி தனக்குத்தேவையான சில மூல ஆவணங்களைத் தேடி அதிகம் அலைய நேர்ந்ததைக் காணமுடிந்தது.
காலப்பொருத்தம் கருதி மிகவும் குறுகியதொருகால அவகாசத் துள் இந்நூல் மிகவும் அவசரமாகவும் உடனடியாகவும் எழுதப் பட வேண்டியிருந்தது. அரசியலமைப்பே அரசியல் நெருக்கடிக ளின் மையமாகக் காணப்படும் இக்காலப்பகுதியில் இறந்து கொண் டிருக்கும் 78 இன் அரசியல் அமைப்பிற்கு அறிவியல் தளத்தில் விழுந்த இறுதி மரண அடிகளில் இந்நூல் முக்கியமானதொன்றா பிேருக்கப் போகிறது. இக்காலப் பொருத்தம் காரணமாவே இந் நூலில் இருக்கக் கூடிய மொழி மற்றும் அமைப்பு ரீதியான எல்லாக் குறைபாடுகளையும் பொறுத்துக் கொள்ளலாம் என்றும் தோன்று
கிறது
- ம; நிலாந்தன்

Page 8
அறிமுகம் og - 08 – 94.
ஜே. ஆர். ஏர்பிடித்து உழவனாய் நடித்துச் சக்கரவர்த்தி யாய் வாழ்ந்தார். அவரது இந்த இரு பக்கங்கள்போலவே அவரது அரசியல் அமைப்பின் ஒவ்வொரு சரத்திலும் இரு பக்கங்கள் g_sircraj".
தனக்கிருந்த காலகட்ட வளங்களைப் பயன்படுத்தி அரசியல் அமைப்பிற்கூடாக ஜே. ஆர். தன்னை ஒரு சக்கரவர்த்தியாக்க எடுத்து நடவடிக்கைதான் 1978 ஆம் ஆண்டு உருவான புதிய அரசியல் அமைப்பாகும். s
டையட் (DE) எனப்படும் பிரதிநிதிகள் சபையுடன்கூடிய வலிமைமிகுந்த மன்னராட்சியைக் கொண்டபிறைவழியாவின் அரசியல் அமைப்பை மூல94 கிக் கொண்டு பிரான்சில், டி கோல் அரசியல் அமைப்பொன்றை உருவாக்கினார். இது ஜே. ஆருக்கு ஒரு முன்மாதிரியாய் அமைந்ததாயினும் இந்தப் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் அவர் தனித்து ஒரு தேசத்திற்கு மட்டும்தான்

கடமைப்பட்டார் என்றில்லை. தனது காலகட்ட வளர்ச்சியைக் கருத்தில் எடுத்து தன்னைச் சக்கரவர்த்தியாக்கக்கூடிய, நிகர்ற்ற அதிகாரம் மிக்கவராய் வைத்திருக்கக்கூடிய அமைப்பை உருவாக்க அவுர் பல்வேறுநாட்டு அரசியல் அமைப்புக்களுக்கும் கடமைப்பட்
C. (WMF .
யானையின் தலையையும், ஒட்டகத்தின் கழுத்தையும், பன்றியின் உடம்பையம், நரியின் கால்களையும் ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு ஜீவன் போலவே பல நாட்டு அரசியல் அமைப்புக்களிலுமிருந்து ஒன்றுக்கொன்றுபொருந்த முடியாத அளவு வேறுபாடுகள் மிக்க அங்கங்களை எடுத்து ஒன்றாய் இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு விசித்திர யாப்பே 1978 ஆம் ஆண்டு ஜே. ஆரால் உருவாக்கப்பட்ட யாப்பாகும்.
அதாவது அமெரிக்காவின் ஜனாதிபதி முறை, பிரித்தானி மாவின் நாடாளுமன்ற முறை, பிரான்ஸ், அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய மூன்று நாடுகள் கலப்பான மந்திரிசபை முறை, டென் மார்க்கில் உருவாகி சில ஐரோப்பிய நாடுகளில் நடைமுறைக்கு வந்த ஒருவிதக் கலப்பு விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறை,பிரான்ஸ்: ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து உருவாக்கப் பட்ட ஒரு கலப்பு மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு முறை, தென்னா பிரிக்க வெள்ளை இனவெறிச் சட்டங்களைப் போன்ற நடைமுறை களைப் பின்பற்ற உதவக் கூடிய பொதுமக்கள் பாதுகாப்புச்சட்டம் போன்ற பல்வேறு நாடுகளின் கலப்பிற்கு உட்பட்டதும், ஒன்றுடன் ஒன்று இசைந்து இசைந்து கொடுக்க முடியாத அம்சங்களினால் உருவானதே ஜே. ஆர் யாப்பு.
ஒழுக்கத்தைப் பின்பற்றும் ஒருவரிடம்தான் ஒழுக்கத்திற்கான விதிகளைப் பற்றிக் கதைக்கலாம். விபச்சாரனிடம் கற்பு நெறியைப் பற்றிய விதிகளை எப்படிப் பேசமுடியாதோ அப்படி இலங்கையில் யாப்பின் விதிகளைப்பற்றிப்பேசுவதில் பொதுவாக அர்த்தமில்லை. ஆனால் ஒரு கட்சியே நாடாளுமன்றத்திலும் ஜனாதிபதிப் பீடத்திலும் பலம் பெறாது இரண்டிலும் வேறு வேறு கட்சிகள் பலம் பெறும் போது சமரசம் செய்ய முடியாத முரண்பாடுகள் ஜே. ஆர். யாப்பில் உருவாகும். அப்போது இரு கட்சிகளும் பாப்பின் பெபே ராலும், நடைமுறையின் பெயராலும் மோத முடியும். எப்படியோ வரன்முறை பேணப்படாத சிங்கள அரசியலில் அதன் யாப்பு இரண் டாம் பட்சமே ஆயினும் யாப்பின் பெயரால்தான் இந்த மோதல் நிகழக்கூடும் என்பதால் இந்த யாப்பைப் பற்றி இப்போது ஆராய்தல்
VII
Tエ二

Page 9
அசிேயம். அத்துடன் உலகில் ஒரு கெட்ட யாப்பிற்கு உதா ான மாய் ஜே ஆர் யாப்பு எப்படி இருக்கின்றது என்பதை எப் போதும் ஆராய்தல் பொருந்தும்.
ஐ.தே.க.கடந்த 17 ஆண்டுகளாகக் கடைப் பிடித்த பிழையான உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளின் விளைவும், இனப்பிரச் சினையிற் கடைப்பிடித்த மோசமான கொள்கையின் விளைவும்,மற்றும் பிழைகளும் ஒன்று சேர்ந்து அரசியல் யாப்பு முரண்பாட்டிற்கூடாய் பெருவெடுப்பெடுத்துள்ளன. பொதுமக்கள் ஐக்கிய முன்னணி நாடா *ளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டக்கூடும் என்றே பொதுவான கணிப்புக்கள் கூறுகின்றன. பொ.ஐ.மு மூன்றில் இரண்டு பங்கு பலத்தைப் பெறாது சாதாரண பெரும்பான்மைப் பலத்தை மட்டுமே நாடளுமன்றத்திற் பெற்றுக் கொண்டால் கூட அரசியல் யாப்பு மு:ண் பரட்டிற் கூடாக உடனடிாயக அரசியல் கொந்தளிப்பு ஏற்பட αυτώνώ ένσοστώβ.
தேர்தல் மூலம் ஆட்சியதிகாரம் கைமாறிவந்த நாடுகளின் வரி சையில் இலங்கையும் ஒன்று. 1965ஆம் ஆண்டு க.க தேர்தலிற் தோல்வியடைந்தபோது பிரதமராய் இருந்த திருமதி சிறிமா பண்டார நாயக்காவை அவரது நெருங்கிய சில ஆதரவாளர்களும், இடது சாரிக் கூட்டாளிகளும் பதவி விலக வேண்டாமென வற்புறுத்திய போதிலும் சற்று தளம்பலின் பின்பு சிறிமா பதவி விலகி டட்லி சேன னாயக்காவிற்கு இடம் கொடுத்தார். சிறு தாமதத்தின் மத்தியிலாவது ஆட்சி அதிகாரம் தேர்தல் மூலம் சுமுகமாய் சிை மாறியது.
பதவிக்காலத்தை பிழையான முறையில் நீட்டியிருந்தாலும் 1977 ஆம் ஆண்டு தேர்தல் மூலம் ஆட்சியதிகாரம் கைமாறியது.1982 ஆம் ஆண்டு ஏமாற்று வித்தை மிக்க மக்கள் தீர்ப்பு வாக்கெடுல்பின் மூலம் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் மீண்டும் ஆறு ஆண்டுகளுக்கு நீட்டப்பட்டது. 198889இல் பொய்யாகவும் போலியாகவும், மோசடி மாகவும், கேலிக்கூத்தாகவும் நடாத்தப்பட்ட இரு தேர்தல்கள் மூலம் ஐ.தே.க. ஜனாதிபதிப் பதவியையும், நாடாளுமன்றத்தின் பெரும் பான்மைப் பலத்தையும் கைப்பற்றியது. ஐ.தே.க. குண்டர்கள் மூலம் அரசியல் நடாத்துவதில் வெற்றி பெற்றது.
இக்கால கட்டத்தில் சு.க.வுக்குள் தலைமைத்துவம் ஸ்திரமற்று இருந்தது மட்டுமல்ல, சீரழிந்தும் இருந்தது, சிறிமாவின் குடியுரிமைப் பதிப்பு இவ்வாறான சீரழிவைத் தோற்றுவித்து அதனை முற்றவும் வைத்தது ஐ.தே.க.வின் கெடுபிடிக்கெதிரான மாற்றுவழியைகாண
VIII []

வும் அதற்கேற்ற முதிர்ச்சியைப்பெறவும் காலஓட்டஅனுபவம் தேவைப் "பட்டது. சு.க.தலைமைத்துவச் சீரழிவில் இருந்து தன்னை விடுவித்து ஸ்திரமானதலைமைத்துவத்தை நோக்கி நடைபோடத் தொடங்கியது. ஒரு புதிய திருப்பம் தோன்றத் தொடங்கியது. மாக்கோஸின தேர்தல் கெடுபிடிகளுக்கு எதிராக திருமதி அக்கினோ கடைப்பிடித்த தேர்தற் கண்காணிப்பு முறையை திருமதி சந்திரிக்கா குமாரதுங்க தென் மாகாண சபைத் தேர்தலில் கடைப்பிடித்த தேர்தற் கெடுபிடிகளை கண்காணிக்க தனது கட்சி ஆதாரவளர்களை தெருக்களில் குவிப்பது, மக்கள் திரளால் குண்ட்ர் குழுக்களைச் சுற்றி வளைப்பது, மக்கள் திரளால் பொலிசாரை நீதியின்பாற் செயற்ப டுமாறு தூண்டுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
சிங்களப் பிரதேசங்களில் தென்மாகாணம் இயல்பாகவே போர்க்குணம் உள்ள ஒரு பகுதி தென்மாகாண மாகிய ரோகண்ண இலங்கை வரலாற்றில் மன்னராட்சிக்கால யுத்தத் தயாரிப்புக் களுக்குப் பெயர்போன ஒரு பகுதி அந்த மண்ணில் நிகழ்ந்த தேர்தல் சந்திரிக்காவின் முதல் ஒத்திகைக்குச் சிறந்த களமாகியது இதன் மூலம் சந்திரிக்கா தலைமையிலான பொ ஐ மு வீரியத்துடன் ஐ. தே கீ வினை எதிர்கொள்ளக்கூடிய சக்தியா
பொ ஐ மு வெற்றியீட்டும் என்றே பொதுவாகப் பேசப் படுவதால் அது சாதாரண பெரும்பான்மைப் பலத்தை மட்டுமே பெற்றதாகவும் வைத்துக்கொண்டு பிரச்சினையை ஆராய்வோம். ஜனாதிபதியைப் பதவி விலக்கவோ அன்றி அரசியல் அமைப்பை இரத்துச் செய்யவோ இதனால் முடியாது (விபரங்கள் ஒன்பதாம் அத்தியாயத்தில் பார்க்கவும்.)
ஐ தே - க - தற்போது தோல்வி மனப்பாங்கில் உள்ளது அதன் தலைவர் விஜேயதுங்கா திராணியில்லாத ஒரு வர். மேலும் உட்கட்சிப் பிரச்சினைகள் நிறையவே உண்டு . பதாள உலகிற்குத் தலைமை தாங்கக்கூடிய திரு . சிறிசேனக் கூரே விஜேயதுங்காவுடன் இல்லை. ஆதலினால் ஒரு சாதா ரண தோல்வியிற் கூட நின்று பிடிக்கக்கூடிய ஒர்மம் தற்போது ஜ .தே . க - விற்கு இல்லை. பொ. ஐ . மு. அறுதிப்பெரும் பான்மை பெறாதுவிட்டால் ஐ தே க. பின்வாங்குமென்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் பொ. ஐ . மு. அறுதிப் பெரும்பான்மையைப் பெற்ற பின்பு அது 'விரும்புவதுபோல் விஜேயதுங்கா அதற்கு வழிவிட்டுக் கொடுக்கர் திருந்தால்
IX ( )

Page 10
சந்திரிகா மக்கள் திரளால் சுற்றிவளைக்கும் தந்திரத்தை ஜனா திபதி மாளிகை மீதும் பிரயோகிக்கமாட்டார் என்று சொல்வதற் கில்லை சுமாராக ஐம்பதினாயிரம் பேரை ஜனாதிபதி மாளிகை முன் நிறுத்த முடிந்தால் விஜேயதுங்கா சரணடையக்கூடிய நிலையே ஏற்படலாம். இப்படிக் செய்தாலும் இது அரசியல் அமைச்4 மீறல்தான், எப்படியோ அரசியல் அமைப்பு மீறலுக்குத் தான் இந்த அரசியல் அமைப்பு வழி அமைத்துள்ளது.
இப்படிக் குழப்ப நிலைக்கு ஏதுவான இந்த அரசியல் அமைப்பை அதன் வேரிலிருந்து அறிதலும் ஆராய்தலும் அவசியமாகும்,
ஜே. ஆர் . ஏகாதிபத்தியத்தையும், இனவாதத்தினையும் கையில் எடுத்து ஐ. தே க வில் காலூன்றி, தன்னை நிலை நிறுத்தவும் எதிரிகளை வீழ்த்தவும் இவற்றின் மூலம் தனது முழு அபிலாசைகளையும் பிரட்டவும் கூடியதற்கான ஒரு கரு வியாக இந்த யாப்பை உருவாக்கினார்.
* ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்த திறந்த பொருளாதாரத்
திற்கான சரத்துக்கள்,
* இனவாதத்தை நிலைநிறுத்த சிங்கள-பெளத்த ஓர் இன,
மத, மொழிச் சரத்துக்கள்
* ஐ.துே க - வினை நிலைநிறுத்த விகிதாசாரப் பிரதிநிதித்
gF 62/cgp 600 M2
* தன்னை நிலைநிறுத்த ஜனாதிபதி முறையும் அதற்கான
ஏகப்பட்ட அதிகாரங்களும் காப்பரண்களும்
魯 கண்மூன் நிற்கும் தனது முக்கிய எதிரிகளான சிறிமாவை யும், பிறேமாவையும் வீழ்த்தவும் ஓரங்கட்டுவதற்கான சரத் துக்களும் அரசியல் அமைப்பு ரீதியான ஏனைய எற்பாடுகளும்.
* தனக்குச் சாதகமான சூழல்களில் தற்காத்தற்கு எற்ற ஆயுதமாக
மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு/ம்
* மக்கள் மத்தியில் எழக்கூடிய எதிர்ப்புக்களையும் மற்றும் சவால்களையும் எதிர்கொள்வதற்கான பொமதுக்கள் பாதுகாப்
4ச் சட்டம்
X

ஆகிய இன்னோரன்ன விடயங்களைக் கொண்டு தனது யாப்பினை உருவாக்கினார். இவ்விடயங்களே பின்வரும் ஒன்பது அத்தியாயங்களிலும் நோக்கப்படுகின்றன.
இப்படி ஒரு பிரசுரத்தினை எழுதும் நோக்கல் முதலிற் சிறிதும் இருக்கவில்லை. தேர்தலை ஒட்டி யாப்பு முரண்பாடு சம்பந்தமான பிரச்சினைகளைப் பற்றி நண்பர்கள் பலர் அவ்வப் போது என்னுடன்உரையாடியபோது, அதனாற்தூண்டப்பட்டு அவ்வப் போதைய உரையாடற் தேவைகளுக்காக ஜே. ஆர் யாப்பினையும் வெளிநாட்டு யாப்புக்களையும் படிப்பதில் ஈடுபட்டதன் விளைவே இச்சிறு பிரசுரம், கால அவசரம் இப்பிரசுரத்தில் தவிர்க்க முடியாது அமைந்தமையால் அத்தியாய அமைப்பில் போதியளவு கவனம் செலுத்த முடியவில்லை. -
இந்நூல் சிறப்புற வெளிவர உதவிய ஜேம்ஸ் இரத்தின நூலக நூலகர், திருவாளர்கள் பொன் பூலோகசிங்கம் ம நிலாந்தன், தே. சிறீதரன், மாறன் பதிப்பகப் பொறுப்பாளர் திரு. ரவி, மற்றும் மாறன்பதிப்பக ஊழியர்கள், ஈழநாதம் பொறுப் பாளர் திரு. தினேஸ் மற்றும் அதன் /ளக் தயாரிப்பாளர்களுக் கும் எனக்கு எல்லா வகையிலும் உதவிய உதவப்போகும் மற்றும் அனைவருக்கும் விசுவாசம் மிக்க நன்றி உரியதாகும்.
--- saffurf
XI [ ]

Page 11
பின்னணி
1832 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை எழுதப்பட்ட அரசிய லமைப்பைக் கொண்ட ஒரு நாடாகியது. இதுவரை இலங்கை எட்டு அரசியல் யாப்புக்களைக் கண்டுள்ளது. முதல் ஆறு பாப் புக்களும் பிரித்தானியரால் எழுதப்பட்டவை. 1972 ஆம், 1978 ஆம் ஆண்டு யாப்புக்கள் இரண்டும் சிங்களவரால் எழுதப்பட்டவை. 1978 ஆம் ஆண்டு யாப்பு இதற்கு முன்னிருந்த யாப்புப் பாரம் பரியத்திலிருந்து பெரிதும் வேறுபட்டது.
1978 ஆம் ஆண்டு யாப்பின் மூளை ஜே. ஆர். ஜெயவர்த்தனா வுடையது. இவ்வரசியல் யாப்பிற்கான சட்ட நுணுக்கக் கட்ட மைப்பை உருவாக்குவதில் பல அறிஞர்கள் பங்கெடுத்துள்ளனர். இலங்கையின் மூத்த பெரும் அரசியல்வாதி என்றும், பழுத்த இராஜதந்திரி என்றும் வர்ணிக்கப்படும் ஜே. ஆரின் மூளையில் உதித்த யாப்பு பல 'முன்னோடி நிபுணர்களின்" கைகளுக்கூடாக
XIII)
 

முழு உருவம் பெற்றது. இப்படி 'இராஜதந்திர” φφατάώ "நி/னத்துவ" மூளைகளும் இணைந்து உருவாக்கிய இந்த αυτώς, கயமுரண்பாடு மிக்கதாய், நெருக்கடிகளின்போது மாற்று வழிகள் அற்றதாய், தெளிவின்மைகளும் பதவர்ைபறை களும் அற்றதாய் காணப்படுகின்றது. * 。
இது பல வகைகளிலும் கண்டனங்களுக்கு உள்ளாகி வருவ துடன் இலங்கைக்குப் பொருத்தமற்றதான பண்புகளையும் கொண் டுள்ளது. இந்த யாப்பு உருவாக்கப்பட்டு முதற் 12 வருடங்களுள் 16 திருத்தங்களுக்கு உள்ளாகியது. ",、
ஜே.ஆருடன் இணைந்து இந்த யாப்பிற்குப் பெரிதும் ஒத் துளைப்பு வளங்கிவந்த திரு லலித்அத்துலத்முதலி,திரு காமினி திஸ் நாயக்கா ஆகிய இருவரும் இந்த யாப்பின் இருதயப்பகுதியாகிய ஜனாதிபதி முறைமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கருத்து வெளியிட்டதுடன் மட்டுமன்றி அத்தகைய கோரிக் கையின் அடிப்படையிற் ஒரு புதுக்கட்சியும் அமைத்தனர்.இந்த யாப்பை உருவாக்கிய ஜே.ஆர். கூட இதில் சிறு திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்று கூறியுள்ளார். இவை அனைத் துக்கும் மேலாக பொ.ஐ.மு இந்த யாப்பையே முற்றிலும் மாற்ற வேண்டும் என்று கூறுகின்றது.
ஓர் அரசின் நடைமுறை சார்ந்த தர்க்கபூர்வ அரசியற் போக் கினைக் கருத்திற்கொண்டே அதன் அரசியல் யாப்பினை அள வீடு செய்தல் வேண்டும்.
ஒரு யாப்பில் என்ன எவை உருவாக்கப்பட்டுள்ளன என்பதை நாம் வெளிப்படையாகவே பார்க்கலாம். ஆனால் அவை ஏன் உருவாக்கப்பட்டுள்ளன? எப்படி உருவாக்கப்பட்டுள்ளன? எவ்வாறு பிரயோகம் பெறுகின்றன? என்பவற்றை ஆராய்ந்து அறிந்து கொள்வதே பிரதானமானது.
ஒகு யாப்பினை ஆய்வு செய்வோர் அதனைப் பின்வரும் வகைகளில் நோக்குவதுண்டு.
1) போப்பைப்பற்றி விபரண உரை எழுதுவது அதாவது அதில்
என்ன எவை உண்டு என்பதை விபரிப்பது, 2) யாப்பிலுள்ள சட்டநுணுக்கப் பிரசினைகளை விளக்குவது. 3) யாப்பிற்கும் நடைமுறைக்கும் இடையேயான முரண்பாடுகளை
யும் சிறப்பம்சங்களையும் விளக்குவது.
XIII

Page 12
4) சமூக முன்னேற்றத்திற்கு அந்த யாப்பு எவ்வளவு தூரம் பொருத்தமுடையது என்பதை கண்டறிவதுடன் அந்த "யர்ப்
பால் ஏற்படக்கூடிய சமூக பொருளாதார விளைவுகளை ஆராய்வது.
இவற்றுள் முதலாவது அம்சம் பற்றி ஒரளவு பாட விதான நூல்கள் உள்ளன. எனவே ஏனைய அம்சங்களைப் பற்றியே இங்கு பொருத்தமான வகையில் அதிகம் நோக்குதல் நலம்
மேற்படி விடையங்களை ஆராய்வதன் பொருட்டு இந்த யாப்பின் இலக்கென்ன? இதனை உருவாக்கியவர்களின் உள்நோக் கங்கள் யாவை? போன்ற வினாக்களைத் திறவுகோலாகக் கொண்டு ஆராய்வதிலிருந்து இதன் நன்மை, தீமை, சரி பிழை என்பவற்றை இலகுவாகவே எடைபோட்டு விடலாம்.
இந்த யாப்பின் இலக்கினையும், அதன் ஏனைய அம்சங்க ளையும் விளங்கிக் கொள்வதற்கு இதனை உருவாக்கியவர்களைப் பற்றியும், அவர்களது சிந்தனைப் போக்கினைப் பற்றியும் விளங் கிக்கொள்ள வேண்டியது அவசியம்.
இவ்வரசியல் யாப்பின் பிரதான பிதாமகர் ஜே. ஆர். ஜெய ஈர்த்தனா. இவர் ஒரு தீவிர வலதுசாரி. முதலில் பிரித்தானிய காலனித்துவத்துடனும் பின்பு அமெரிக்கா தலைமையிலான பரந்த ஏகாதிபத்தியத்துடனும் கைகோர்த்துச் செயற்பட்டவர். தனது இலக்கினை அடைவதற்கு பேயுடன் மட்டுமல்ல பிசாசுடனும் கூட் டுச்சேரலாம் என்று சொல்லியவர். அரசியல் ஆதிக்கத்தினைப் பெறுவதற்கும், பெற்றதை நிலைநாட்டுவதற்கும் தீவிர இனவாதத் தினைக் கருவியாய்க் கொண்டவர். ' கிழட்டு நரி" என்று அரசி பல் அரங்கில் வர்ணிக்கப்படுபவர்.
இலங்கையின் அரசியல் அரங்கில் மிக நீண்டகாலம் நீடித்த ஒரு சிரேஷ்ட அரசியல் வாதியாய் காணப்பட்ட போதிலும் பண் டாரநாயக்க, சேனநாயக்க குடும்பங்களின் குடும்ப ஆதிக்கத் தினாற் பெரிதும் பாதிக்கப்பட்டவர். இதன் அடிப்படையில் டட்லி சேனநாயக்காவினால் ஜே. ஆருக்கு எதிராக வளர்க்கப்பட்ட பிரே 'மதாசா மீது பெரும் கசப்புணர்வைக் கொண்டவர்.
இவ்வாறு குடும்ப ஆதிக்கத்தார் பாதிக்கப்பட்டபோதிலும்
கொம்யூனிஸ எதிர்ப்பையே தனது முதன்மையான கடமையாகக் கொண்ட இவர் அதன் பொருட்டு குடும்ப ஆதிக்கத்தைச் சகித்தும்
VIX )
 

வந்தவர். பிரதான எதிரியை எதிர்கொள்வதற்காக குடும்ப ஆதிக்கத்தைச் சகித்துக்கொண்டபோதிலும் மேற்படி குடும்பங்கள் மீதான உறவில் தனது கொடுப்புப் பற்களைக் கடித்துக்கொண்டு பழகியவர் வெகுஜன அரசியற் பண்பில்லாத இவர் உயர்குழாத்து மேல்மட்டத்தில் இருந்துகொண்டு மேற்கொள்ளும் காய்நகர்த்தல் மூலம் அரசியல் நடாத்துபவர். וץ לא
வளம்பொருந்தியதும், அரசியற் தொடர்புமிக்கதுமான ཞུཚི4 பத்திற் பிறந்த இவர் உயர்குழாத்து ஆங்கிலப் பாணி வாழ்வு முறையைக் கொண்டிருந்தார். அங்கிலிக்கன் கிறிஸ்தவ மதக் குடும்பப் பின்னணியைக் கொண்ட இவர் மனதாலும் வாழ்வாலும் ஆங்கிலப் பாணியைப் பின்பற்றிக்கொண்டு அரசியல் அனுகூலத் திற்கான வேஷதாரித்தனமாக தூய வெள்ளைத் தேசிய ஆடை 9 Gorfou Govs. "...
இடதுசாரிக் கொள்கைக்கு மிகுந்த கவர்ச்சியிருந்த, இவரது இளமைப் பராயத்தில் ஓரளவு இடதுசாரிக் கொள்கையாற் கவர்ப் இவர் பின்பு மிகவிரைவிலேயே தீவிர வலதுசாரி ஆன்ார். இந்தியாவிற் தேசியப் போராட்டம் பெரும் எழுச்சி பெற்ற காலத் தில் தீவிர இந்தியச் சார்புக்காரராய் மாறிய இவர் இலங்கைக் குச் சுதந்திரம்' கிடைக்கும் சூழலில் தீவிர பிரித்தானிய சார் பாளனானார். உலக அரங்கில் பிரித்தானியா தனது ஏகவல்லரசு நிலையை இழந்து அமெரிக்கா தலைமையில் மேற்குலகம் அணி சேர்ந்தபோது இவர் அமெரிக்கா தலைமையிலான மேலைத்தேய σ η ή υησητοΟΤσ607/σή, ', '
1970 களில் திரு. டட்லி சேனநாயக்கா பதவியில் இல்லாத சூழலில் டட்லியுடன் ஜே. ஆரின் முரண்பாடுகள் வலுவடைம்பத் தொடங்கின. மாறி மாறிப் பதவிக்கு வரும் இரு கட்சிகளுமே குடும்ப ஆதிக்கத்திற்கு உட்பட்ட கட்சிகள்தான் என்ற வகையிலும் டட்லி நீண்ட காலம் உயிருடன் இருப்பார் என ஜே. ஆர். நம் பியதாலும் ஒப்பீட்டு ரீதியில் ஒரு புதிய நலனைப்பற்றி ஜே. ஆர் சிந்திக்கலானார் ஐ. தே க. வினை விட்டு சு. க. விற்கு கட்சி மாறுவதன் மூலம் இடதுசாரிகளுடனான சு. க. வின் ஐக்கிய முன்னணியை உடைக்கலாம் என்பதே அவரின் எண்ணமாய் இருந் திருக்க வேண்டும். v. ፶" " } Ÿ: ........... wኝ W (“ ̇
இந்நிலையில் ஐ. தே. க. வின் ஸ்தாபகர்களில் ஒருவரான ஜே. ஆர். சுதந்திரக் கட்சிக்குத் தாவுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். சமசமாஜிஸ்டுக்களினதும், கொம்யூனிஸ்டுக்களினதும்
E XV )

Page 13
கி. க், வில் இருந்து இடதுச்ாரிப் போக்குள்ள உறுப்பினர்களின தும் தீவிர எதிர்ப்பினால் இதன்ை உடனடியாக நிறைவேற்றிக் கூடிய நிலையிற் சிறிer பண்டாரநாயக்கா இருக்கவில்லை.
அதேவேளை இந்த இடைக்காலத்தில் டட்லி மரணமடைந்துவிட்
டார். இதன் பின் ஜே. ஆர். கட்சிதாவும் எண்ணத்தைக் கைவிட்டு ஐ.தே. காவின் தலைவரானார். இதன் பின்பும் தனக்கு குடும் ஆதிக்க இடையூறு ஏற்படக்கூடாதென்பதற்காக டட்லியின் ஒன் றைவிட்ட மகன் முறையால் சேனநாயக்கா குடும்பத்தின் இறுதி வாரிசான ருக்மன் சேனநாயக்காவைக் கட்சியிலிருந்து ஜே. ஆர் தூக்கி எறிந்தார்.
ஜே. ஆரின் இயல்பையும் போக்கையும் விளங்க இவை போது, மான்வை. இப்படிப்பட்ட ஒருவர் தானே பதவியில் இருக்கும். வேளையில் ஓர் அரசியல் அமைப்புத் திட்டத்தை உருவாக்கினார். என்றால் அது எப்படி அவரது தேவைகளையும், அபிலாசைகளை டிம் பிரதிபலிக்கும் என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டின. தில்லை.
தீவிர வலதுசாரி நலன், தனது சுயநலன் இவை இரண்டை யும் தனது இரு கண்களாகக் கொண்டவர். இவை இரண்டில் இருந்தும் சற்றும் பிசகக்கூடாது என்பதில் உறுதியான இவர் இவை இரண்டின் பொருட்டும் எத்தகைய நியாய மீறல்களையும் தர்ம மீறல்களையும் செய்வதில் சளையாத பூரண சித்தம் கொண் டவர். இவற்றின் பொருட்டான எத்தகைய இழிசெயற்கும் வெட் கப்படாதவர். இப்படியானவரின் அரசியல் அமைப்புத்திட்டம் இதற் கேற்றாற் போன்ற இயல்புகளையே கொண்டமையலாயிற்று. இவர் இந்த யாப்பீனை உருவாக்கிய காலத்தில் கட்சிக்குள்ளும் அரசியல் அரங்கிலும் பெரும் வல்லமை உள்ளவராய் இருந்தார். இதனால் திறந்த பொருளாதாரத் திட்டத்துடன் கூடிய தீவிர, வலதுசாரித் தன்மையையும், தனது சுய நலன்களையும் அரண், செய்யக்கூடிய வகையிலான யாப்பினை இவரால் உருவாக்க முடிந்தது.
சட்ட நுணுக்கத் தேவைகளின் பொருட்டு இவருக்கு தீபுண ர்கள் உதவினர். இந்த நிபுணர்கள் அனைவரும் ஆங்கிலப் பாணி யிலான வாழ்வு முறையைக் கொண்ட துரைத்தனம் மிக்க புத்தி ஜீவிகள். இத்தகைய துரைத்தனம் மிக்க 'நிபுணர்கள்' எல்லா வகையிலும் மேலைத்தேச எண்ண ஓட்டங்களைக் கொண்டவர் களாயும் இயல்பில் தேசத்தை விற்றுப்பிழைக்கும் தன்மை உள்ள
i XVI 0

سیصی
வர்களாயும் இருந்தனர். இந்த வகையில் ஜே ஆரும் அவரது நிபு ணர்களும் சா4க்கேற்ற மூடி போன்றவர்களே. லாழ்க்கை முறை யிலும், இயல்பிலும், அபிலாசைகளிலும், எண்ண ஓட்டங்களி லும் ஜே. ஆரும் இவர்களும் ஒரே குழாத்தைச் சேர்ந்தவர்களும் ஒரேவிதமான குறிக்கோளைக் கொண்டவர்களுமாவர் இந்த வகை
யில் இந்த அரசியல் அமைப்பை உருவாக்கியவர்களின் தேவை
யும், பண் 4ம், நோக்கமும் தெளிவாகப் புலப்படக்கூடியதே.
இலங்கையில் வெஸ்ற்மினிஸ்டர் நாடாளுமன்ற முறையை ஸ்தா பித்துவிட்டு வெள்ளையர் வெளியேறினர். அது சோல்பரி யாப்பு எனப்படும். இந்த யாப்பினைப் பின்பற்றியே முதலாவது குடியரசு யாப்பை 1972 ஆம் ஆண்டு சிறிமா தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கம் கொண்டு வந்தது. அடிப்படை மாற்றமற்ற ஒரு புதிய யாப்பை உருவாக்க சிறிமா அரசாங்கத் திற்கு சுமாராக இரண்டு ஆண்டுகள் எடுத்தன. ஆனால் பெரும் அரசியல் மாற்றங்களைக்கொண்ட முற்றிலும் புதிய அம்சங்கள் பலதைக் கொண்ட ஜே. ஆர் யாப்பு ஒரு சில மாதங்களுக்குள் நடைமுறைக்கு வந்தது.
நாட்டில் வெளிப்படையானதும், குறிப்பிடக்கூடியளவினதுமான வாதப் பிரதிவாதங்கள், கலந்துரையாடல்கள், பொதுமக்கள் மத்தியிலான ஆலோசனைக் கலப்புக்கள், பாரிய அபிப்பிராய வெளியீடுகள் என்பன நிகழாது இவற்றிற்கெல்லாம் கால அவ காசம் கொடுக்கப்படாது ஜே. ஆர். பதவிக்கு வந்த சில மாதங் களுள் புதிய யாப்பினைக் கொண்டு வந்தார்.
சிறிமா தலைமையிலான ஏழாண்டு ஆட்சிக் காலத்தில் மக்கள் உணவுப் பண்டங்களுக்காகவும், ஏனைய அத்தியாவசியப் பொருட் களுக்காகவும் "கியூவில்" நிற்க நேர்ந்தமையினால் உருவான வெறுப்பினால் பதவியில் இருந்த அரசாங்கத்திற்கு எதிராகப் பெருமளவில் வாக்களித்தனர். ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பெரும் சுழற்சியில் மக்கள் இருந்தபோது தனது நலனுக்கேற்ப தான் விரும்பியவாறான யாப்பினை ஜே. ஆர். பிரகடனப்படுத்தினார்.
இந்த யாப்பின் பிரதான அங்கங்கள் அனைத்தும் ஜே. ஆரின் தேவைக்கேற்ப அவரை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட் டன. அவர் ஆக்கபூர்வமான ஒரு யாப்பைப் பற்றிச் சிந்திக்காது தனது எதிரிகளை தோற்கடிப்பதற்கான நோக்கு நிலையில் இருந்தே யாப்பை உருவமைத்தார். Ο
[ ] XVH ܣܶܐb@a,
4Ձn-n-- ീ. ۔ منتقل سے

Page 14

அத்தியாயம் ஒன்று
t
ஓர் இன, மத, மொழி நோக்கு
இலங்கைக் குடியரசில் பெளத்த மதத்திற்கு முதன்மைதி தானம் வழங்கப்படுதல் வேண்டும் . பெளத்த சாசனத்தைப் துேகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும்" என ஒன்பதாவது சரத்து விபரிப்பதன் மூலம் இலங்கை பெளத்த மதத்தை ஏறக்குறைய அரச மதமா கக்கொண்ட நாடு என்றாயிற்று.
இவ்வாறாகவே சிங்கள மொழிக்கும், சிங்கள மக்களுக்கும் இந்த யாப்பு எல்லா முதன்மைகளையும் அளித்துள்ளது. இதன்மூலம் இந்த யாப்பானது இலங்கை வாழ் முழு மக்க ளையும் தழுவிய பல்லினத் தேசிய நோக்கிலல்லாது ஒரு மதம், ஒரு மொழி, ஓர் இனம் என்ற நோக்குநிலையில் நின்று எழுதப்பட்டுள்ளது. O

Page 15
அத்தியாயம் இரண்டு
கடினயாப்புமுறை
நெகிழாயாப்புக்குரிய வரையறைகளுடன் இரண்டாம் குடியரசு அரசியல்யாப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை இலங்கை கண்ட அரசியல் யாப்புக்களுள் அதிக கூடிய நெகி ழாத்தன்மை கொண்ட யாப்பு இதுவாகும். இந்த அரசிய லமைப்புத் திட்டத்தை மாற்ற வேண்டுமாயின், நாடாளுமன்றத் தின் மொத்த உறுப்பினர் தொகையில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவைப்பெறவேண்டும் என்பதுடன், மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பிலும் சம்மதத்தைப் பெறவேண்டும்.
நாடாளுமன்றத்தின் மொத்த ஆசனங்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவைப் பெறவேண்டுமெனச் சாதாரணமாகக் கூறினாலும் நடைமுறை பில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனததை எந்தொரு கட்சியும்

தனித்துநின்று இலகுவில் பெறமுடியாதநிலை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையால் உருவாகியுள்ளது. எனவே இலகு விலேயே நெகிழாத ஒரு யாப்பை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையானது மேலும் நெகிழ்ச்சியற்றதாக்கிவிடுகிறது. உலகி லுள்ள நெகிழாயாப்பிற்கு அதிகூடிய உதாரணமாய் அமெரிக்க யாப்பைக் கூறுவர். அங்கு மத்தியில் உள்ள கொங்கிரசில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கத்தவரின் ஆதரவும் அல்லது அதன் அரசியல் நிர்ணய சபையில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவைப் பெறவேண்டும் என்பதுடன் மாநில அரசுகளின் சட்ட சபைகளில் அல்லது அவற்றின் அரசியல் நிர்ணய சபைகளில் நாலில் மூன்று பங்குக்கு குறையாத சபை களில் அனுமதியைப் பெறவேண்டும். இது ஒரு சமஷ்டி அரசின் அரசியலமைப்பாகும்.
சமஷ்டி அரசாகிய அமெரிக்காவில் யாப்பின் நெகிழாத்தன் மையை இரு அம்சங்கள் நிர்ணயித்துள்ளன. ஒற்றையாட்சி நாடா கிய இலங்கை யாப்பில் மூன்று அம்சங்கள் யாப்பின் நெகிழாத் தன்மையை நிர்ணயிக்கின்றன. அவுஸ்ரேலியா, அயர்லாந்து ஆகிய நாடுகளில் யாப்பை மாற்றுவதற்குரிய அம்சங்களில் ஒன் றாய் மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு அவசியம் என்பது போல இலங்கையிலும் யாப்பை மாற்றுவதற்கு மக்கள் தீர்ப்பு வாக் செடுப்பு அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இலங் சையில் யாப்பை மாற்றுவதற்குரிய நிர்ணயங்களாக நாடாளு மன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை, அதுவும் விகிதாசார அடிப்படையிலான பிரதிநிதித்துவத்துடன் கூடியமை, மக்கள் தீர்ப்பு வாக்களிப்பு என மூன்று அம்சங்கள் சம்பந்தப் படுகின்றன. விகிதாசாரப் பிரதிநிதித்துவம் நேரடியான ஒரு தனிக் காரணிபோல் தெரியாதுவிட்டாலும் உண்மையில் செயல் பூர்வமுறையில் யாப்பின் நெகிழ்ச்சியை இறுக்கும் ஒரு காரணியே.
விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அற்றமுறையில் 1977 ஆம் ஆண்டு தெரிவான நாடாளுமன்றத்தில் ஐ. தே. கவுக்கு 5/6 பங்கு ஆசனங்கள் கிடைத்தன. 1977ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரையான ஐ.தே. க. இப் பெரும்பான்மை யைத் தொடர்ந்து வைத்திருந்தமையினால் பன்னிரண்டு ஆண்டு காலத்திற்குள் பதினாறு தடவைகள் அரசியல் யாப்புத் திருத்தங்கள் செய்யப்பட்டன. அமெரிக்காவில் இருநூறு ஆண்டு களுக்கு மேற்பட்ட வயதைக்கொண்ட அதன் யாப்பில் இருப த்தாறு தடவைகளே திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளன,
O 3D

Page 16
இதனுடன் ஒப்பிடுகையில் பன்னிரண்டு வருடங்களுள் புதி னாறு திருத்தங்கள் அதிகூடிய தொகைதான் என்றாலும் அதன் பின்னான கடந்த ஐந்தரை வருடங்களுக்குள் ஒரு திருத் தமோ, மாற்றமோ மேற்கொள்ளப்படவில்லை. அதனால் இங்கு ஒரு விடயத்தை ஆழமாக அவதானிக்க வேண்டியுள் ளது. அதாவது விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ் அல்லாத தொகுதிவாரிப் பிரதிநிதித்துவமுறையின் கீழ்த்தான் மூன்றி லிரண்டு பங்கிற்கு மேற்பட்ட பலத்தை நாடாளுமன்றத்தில் பெற்று பன்னிரண்டு ஆண்டுகளாக அதனையே தக்கவைத் துக்கொண்டிருந்தமையால் அத்தகைய பதினாறு திருத்தங் களும் சாத்தியமாகின. ஆனால் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் தெரிவான முதலாவது நாடாளுமன்றம் 1989ஆம் ஆண்டில் இருந்தே உருவாகியது. எனவே விகிதாசாரப் பிரதி நிதித்துவம் ஏற்பட்ட அதன் ஐந்தரை ஆண்டு காலத்தில் யாப் பில் ஒரு சிறிய திருத்தம் தானும் நிகழமுடியவில்லை. இவ்வாறு பார்க்குமிடத்து யாப்பின் நெகிழ்ச்சியின்மையை நிர்ணயிப்பதில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கென ஒரு குறித்த பல முண்டு.
ஜே. ஆர். யாப்பு இதுவரை பதினேழு ஆண்டுகள் இயங்கி விட்டது என்று கூறினாலும் யாப்பின் புதிய அம்சமும் முக்கிய அம்சங்களுள் ஒன்றுமாகிய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை முதற் பன்னிரண்டு ஆண்டுகளும் நடைமுறையில் இல்லாதது மட்டுமன்றி முன்னைய யாப்பின் ஒர் அம்சமாகிய தொகுதிவாரிப் பிரதிநிதித்துவம் நடைமுறையில் இருந்தமையாற்தான் தேவைக் கேற்ப இலகுவாகப் பதினாறு திருத்தங்களுக்கும் உள்ளாகி யாப்பு செயலிழக்காது செயற்பட முடிந்தது. ஜே. ஆர். யாப் பின் அனைத்து அம்சங்களும் இணைந்து செயற்பட்ட கால மாகப் பின்னைய ஐந்தரை ஆண்டு காலமும் காணப்படுவதால் யாப்பின் நெகிழாத் தன்மையை இந்த ஐந்தரை, ஆண்டுகால நடைமுறையில் வைத்துத்தான் பரிசீலிக்கலாம்.
ஒரு யாப்பில் குறிப்பிடக் கூடியளவு நெகிழ்வின்ம்ை இருக்க வேண்டியது அவசியம். ஆனால் தீவிர நெகிழ்வின்மை இருப்பது கால வேகத்திற்கேற்ப மாற்றங்களைச் செய்ய முடியாது சமூக முன்னேற்றம் தடைப்படும்.
அரசியற் கொந்தளிப்பு பெரிதும் எழநேரும். இதனால் யாப்பு முறிவடையக்கூடும் O
ロ4ロ

அத்தியாயம் மூன்று
ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்திற்கும் இsை யில் மோதலுக்கான ஏற்பாடு
நிர்வாகத் துறையின் தலைவராகிய ஜனாதிபதி சட்டத் துறைக்குப் புறம்பான முறையில் தெரிவாக வேண்டுமென்பது வலுவேறாக்கக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட தேயாகும். பிரஞ்சு அறிஞரான மொன்ரஸ்கியூ (Montasquieய) விளங்கி வைத்திருப்பது போன்ற வலுவேறாக்கம் சாத்தியமான தொன்றல்ல. சட்டம், நிர்வாகம் ஆகிய இரு துறைகளும் ஒன்றி லொன்று தங்கி நிற்பவையும் ஒன்றுடனொன்று நெருக்கமாகப் பின்னிப் பிணைந்தவையுமாகும். நிர்வாகம் நடாத்தச் சட்டங்கள் தேவை. சட்டங்களை நடைமுறைப்படுத்த நிர்வாகம் தேவை. எனவே இவ்விரு துறைகளிலும் இருவேறுபட்ட கொள்கைகளைக்

Page 17
கொண்ட அணியினர் அல்லது கட்சியினர் தனித்தனியே ஒரே நேரத்தில் ஆதிக்கம் பெறுவராயின் இரு துறைகளுமே செயற் பட முடியாது போகும். ۔
ஐக்கிய அமெரிக்காவில் மொன்ரஸ்கியூ கூறிய அளவிலான வலுவேறாக்கம் இல்லையாயினும் அவ்வாறான ஒரு வலுவே றாக்கக் கொள்கையை மனதிற்கொண்டே அந்த யாப்பு உரு வாக்கப்பட்டுள்ளதனால் நிர்வாகத் துறைக்கும் சட்டத்துறைக்கும் இடையே சில வரம்புகள் உள்ளன. எவ்வாறாயினும் ஒரே நேரத்தில் இருவேறுபட்ட கட்சிகள் மேற்குறிப்பிட்ட இரு துறைக ளிலும் ஆதிக்கம் பெற்ற பல சந்தர்ப்பங்கள் அமெரிக்காவில் நிலவியுள்ளன. நெருக்கடிகள் ஓரளவு ஏற்பட்டிருந்தாலும் கால கதியில் இரு துறைகளும் ஒன்றுடன் ஒன்று மோதி அரசியற் சீர்குலைவு ஏற்படாமலும் அதனால் உள்நாட்டு யுத்தம் வெடிக் காமலும் அரசாட்சி நிகழக்கூடியதாயிற்று. இதற்குப் பல கார னங்கள் உள்ளன.
நீண்ட காலமாக ஜனாதிபதி முறைமை அமெரிக்காவில் நிலவிவருவதால் நிர்வாகத் துறையும் சட்டத் துறையும் ஒன்றை ஒன்று அனுபவத்திற்கூடாக அனுசரித்துப் போகும் அரசியல் மரபும் இசைவாக்கமும் வளர்ந்துள்ளன: அங்கு குடியரசுக் கட்சி, ஜன நாயகக் கட்சி எனும் இருகட்சிகளும் மட்டுமே அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடிய கட்சிகளாய் உள்ளன. இவ்விரு கட்சிகளுக் கும் இடையில் அடிப்படைக் கொள்கை வேறுபாடு இல்லை என்பதால் சட்டத்துறையில் ஒரு கட்சி ஆதிக்கம் வகிக்கும்போது நிர்வாகத் துறையில் உள்ள மற்றைய கட்சிக்கு அது இசைந்து கொடுக்கும் நிலை உள்ளது. அத்துடன் வெள்ளை இன ஆதிக் கம் என்ற விடயத்தில் ஒன்றைவிட மற்றையது சற்று நெகிழ்ச் சித் தன்மைஉடையதாய் இருப்பினும் அமெரிக்க தேசிய வெறி யில் இரண்டும் ஒரே கொள்கையைக் கொண்டுள்ளன. அடிப்ப டைக் கொள்கைகளில் ஏறக்குறைய இரண்டும் ஒன்று என்பதனால் பொது முடிவெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளதனால் மேற்படி இரு துறைகளுக்கும் இடையில் சமநிலை ஏற்படுவது சுலபமாய் உள்ளது. V
மேலும் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் பொதுவான அபிப்பிராயத்தை பத்திரிகைகள் ஏற்படுத்துவதனால் பொதுத்
தேவையின் நிமித்தம் ஒரு துறையை இன்னொரு துறை அனுசரித்தே ஆகவேண்டி உள்ளது. அமெரிக்கப் பத்திரிகைகளும்
O 6

தேசிய வெறி கொண்டவை என்பதிற் சந்தேகமில்லை. மேற்படி இரு துறைகளுக்கும் இடையிற் பிரச்சினை ஏற்படும்போது பத்திரிகைகள் ஒரு பொதுமுடிவை இரு கட்சிகளுக்கும் இடையில் முன்னிறுத்துவதால் ஒன்றை மற்றையது அனுசரித்து நடக்க வேண்டியதாய் உள்ளது. இவ்வாறான காரணிகளி னால் அமெரிக்காவில் நிர்வாகத் துறையும், சட்டத் துறையும் தனித்தனி அலகுகளாய் உருவாகி ஆனால் இணைந்து செயற் படுவது சாத்தியமாய் உள்ளது. ஆழமாக ஆராயுமிடத்து செயற்பாட்டு அர்த்தத்தில் அமெரிக்காவில் வலுவேறாக்கம் உண்டு என்று சொல்லமுடியாது. ஆனால் இங்கு கவனத்திற்குரிய விடயம் என்னவெனில் வேறு வேறு தெரிவுகள் மூலம் இரு அலகுகளாக உருவாகும் அரசியல் அமைப்பானது ஒன்றுடன் ஒன்று ஒன்று இணைந்தோ அல்லது, ஒன்றை இன்னொன்று அனுசரித்தோ அங்கு செயற்பட முடிகின்றது என்பதுதான்.
ஆனால் இலங்கையில் அதற்கேற்ற அரசியற் சூழலோ அன்றி/அரசியல் மரபோ வளரவில்லை. ஜனாதிபதியும், சட்டத் துறையும் வேறு வேறு தேர்வுகளினாற் தெரியப்படுமிடத்து அன்றி இரண்டும் தனித்தனி அலகுகளாக இருக்கக்கூடியதாக உருவாக்கப்படுமிடத்து அவை நேரடியாகவோ அன்றி மறை முகமாகவோ ஏதோ ஒர் அளவில் வலுவேறாக்கக் கோட்பாட் டுடன் சம்பந்தப்படுகின்றன. இதில் ஒரு குழப்பம் உண்டு. இந்த வகையில் வலுவேறாக்கக் கோட்பாட்டையும் அமெரிக்க அர சியல் யாப்பையும் இணைத்துக் கண்ணுற்றதால் வலுவேறாக்
கம் பற்றி இரு வகைப்பாடுகள் வகுக்கப்பட்டன.
s
麓 அவை அங்கவேறாக்கம், செயற்பாட்டு வேறாக்கம் என அழைக்கப்படுகின்றன. அமெரிக்க அரசியல் யாப்பின்படி நிர் வாகமும் சட்டமும் தனித்தனி அங்கங்களாய் உள்ளன; அவை தனித்தனியே தெரிவாகின்றன. உதாரணமாக பிரித்தானியாவை எடுத்துக்கொண்டால் அங்கு மந்திரிசபை நாடாளுமன்றத்தின் ஒரு நீட்டமாக இருக்கின்றதே தவிர நாடாளுமன்றத்திலிருந்து வேறானதாகவோ அன்றித் தனியானதாகவோ இல்லை. இவ் வாறாக அமெரிக்காவில் அங்கவேறாக்கம் இருந்தாலும்கூட செயற்பாட்டில் ஒன்றுடன் ஒன்று இணைந்தும், ஒன்றின் மீது மற்றையது தாக்கம் புரிந்தும் வருகின்றன. இதனில் நிர்வாகத் துறையானது சட்டத் துறையின் மீது செல்வாக்குச் செலுத் தியும் ஆதிக்கம் செலுத்தியும் வருவதற்கான நடைமுறையே
அதிகம். இவ்வாறு பார்க்குமிடத்து நிர்வாகத் துறையும்
O 7D

Page 18
சட்டத்துறையும் தனித்தனி அங்கங்களாக இருக்கின்றன என்பதற் காக வலுவேறாக்கம் இருக்கின்றது என்று சொல்வதற்கில்லை. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் தனித் தனியே உருவாக்கப்பட்டுள்ள இரு அங்கங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்துச் சிதறாமல் இயங்கக்கூடிய நடை முறை உருவாகியுள்ளது என்பதுதான்.
அமெரிக்காவில் இருப்பதுபோல அங்கவேறாக்க அடிப் படையில்தான் இலங்கையிலும் வலுவேறாக்கம் பிரயோகம் பெற்றுள்ளது. உண்மையில் இது வெறும் அங்கவேறாக்கமே தவிர வலுவேறாக்கமல்ல. அங்கவேறாக்கம் அமெரிக்காவில் செயற்படுவதற்கான வாய்ப்புண்டு; ஆனால் இலங்கையில் அதற்கேற்ற அரசியல் மரபில்லை. இலங்கையில் ஜனாதிபதி மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகிறார். இதற்கான தேர்தலும் விதிகளும் தனியானவை. நாடாளுமன்றத்திற்கான பிரதிநிதிகளும் மக்களால் புறம்பான இன்னொரு தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். இதற்கான தேர்தல் விதிகளும் தனியானவை. இரண்டும் தனித்தனியே ஆறாண்டுகளை ஆயுட் காலமாகக் கொண்டவை. இவ்வாறு இரண்டும் தனித்தனி அங்கங்களாகத் தோன்றுகின்றன. இவ்வாறான இரு அங்கங்க ளும் ஒன்றுடன் ஒன்று எப்படி உடன்பாடும், இடர்பாடும், வெட்டுப்பாடும் கொள்ளும் நிலை உள்ளது என்பதைநோக்கு தல் நலம்.
இவ்விரு துறைகளுக்கும் இடையிலான அதிகாரவைப்புப் பற்றிய பிரச்சினைகளைப் பிறிதோர் இடத்தில் ஆராய்வோம். இவை இரண்டிற்கும் இடையிலான உடன்பாட்டையும் இடர் பாட்டையும் கோட்பாட்டளவிலும் நடைமுறை சார்ந்தும் ஆராய்தல் பொருந்தும்.
இலங்கையில் அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றக் கூடிய இரு பெரும் சிங்களக் கட்சிகளிடையேயும் தமிழின எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு என்பன பொறுத்து சில பொது முடிவுகள் காணப்பட்டாலும் ஏனைய விடயங்களில் ஏதோ ஒர் அளவில் முரண்பாடுகள் உள்ளன. பொதுவாக எதுவும் கட்சிக் குரோத உணர்வுக்கூடாக அணுகப்படுகின்றதே தவிர அதற்கு அப்பா லான பரந்த நோக்கிலல்ல. இலங்கையில் எதிர்க்கட்சி என்ப தன் அர்த்தம் நல்லதோ கெட்டதோ எதனையும் எதிர்த்தல் என்ற வகையைச் சார்ந்ததாகவே உள்ளது. எனவே இத்
8

தகைய இயல்பு கொண்ட சிங்களக் கட்சிகள் இரண்டும் சட் பத்துறையில் ஒரு கட்சியும் நிர்வாகத் துறையில் மற்றைய கட்சியுமென ஒரே நேரத்தில் ஆதிக்கம் பெறுமிடத்து நடை முறையில் அவை செயற்படமுடியாது போகும் தன்மையே பெரிதாக உள்ளது.
இம்முறையானது செயற்பாட்டில் இருந்த, கடந்த 17 ஆண்டுகளிலும் இரு துறைகளிலும் ஒரே கட்சியே ஆதிக்கம் செலுத்தியதால், அநேகமாக இரண்டும் செயற்படக்கூடியதாய் இருந்தது. ஆனால் இவ்வாறு எப்போதும் ஒரே கட்சியே இரண் டிலும் ஆதிக்கம் பெறமுடியும் என்று சொல்வதற்கில்லை.
ஜனாதிபதியின் காலமும் நாடாளுமன்றத்தின் காலமும் ஒரே காலத்திற் தொடங்கி ஒரே காலத்தில் முடிபவையல்ல. இரண்டிற்கும் தனித்தனியான கால அட்டவணைகள் உண்டு. அத்துடன் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்கக்கூடிய வராக இருப்பதால் நாடாளுமன்றத்தின் காலம் ஸ்திரமற்றது என்பதுடன் ஜனாதிபதி தனக்கெனக் குறித்த ஓர் எதிர்பார்க் கையுடன் நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலை நடாத்தினால் அதன் தேர்தல் முடிவு எதிர்மாறானதாகவும் அமையலாம். *
கட்சி ஒழுக்கங்களுக்கு முதன்மை கொடுப்பதைவிடவும் கட்சி அரசியலில் குடும்பங்களுக்கும் ஆளணிகளுக்கும் முதன்மை கொடுப்பது இலங்கையின் கட்சி அரசியலில் பெரிதும் காணப் படும் ஓர் அம்சமாகும். இதனால் இந்நிறுவனங்களுக்கிடையே பிரச்சினைகள் எழும்போது விட்டுக்கொடுப்பற்ற குடும்ப ஆதிக்க முதன்மை பெரும் பங்காற்றுகின்றது.
ஜனநாயக மரபுகளைப் பற்றி என்னதான் பேசிக்கொண் டாலும் அது அரசியலில் ஒரு பண்பாடாக மாறவில்லை. உதா ரணமாக தன்னை ஒரு பெரும் ஜனநாயகவாதியாகப் பறை சாற்றிக் கொண்ட ஜே. ஆர்.ஜெயவர்த்தனா தனது கட்சி நாடா ளுமன்ற உறுப்பினர்களிடம் திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்களை வாங்கி வைத்திருந்தார். இவ்வாறான ஒரு சம்பவம் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் நடைபெற முடி யாது. அவ்வாறு ஒரு நிகழ்வு ஏற்படுமாயின் பத்திரிகைகள் விடாப் பிடியாக ஆட்சியாளனைக் கண்டித்து அவரைப் பதவியிலிருந்து கவிழ்த்திருக்கும். இவ்வாறாக ஜனாதிபதி முறைமை செயற்பட்ட
9 O.

Page 19
ஒரு காலத்தில் அதுவும் ஒரே கட்சியே இரு துறைகளிலும் ஆதிக் கம் வகித்த காலத்தில், அத்துடன் நாடாளுமன்றத்தில் ஜனாதி பதியின் கட்சி ஆறில் ஐந்து பங்கு பெரும்பான்மைப் பலத்துடன் விளங்கிய காலத்தில், சட்ட மன்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி இவ்வாறாக திகதியிடப்படாத இராஜினாமாக் கடி தங்களை வாங்கி வைத்திருந்தமையானது சட்டத்துறையின் உரி மையை மீறுவது மட்டுமன்றி சாதாரணமாக ஒரு பிரஜையின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகவும் அமைந்திருந்தது. அதாவது, அரசியலமைப்புத் திட்டத்தில் பெரிதும் வற்புறுத்தப் பட்டிருக்கும் தனிமனிதனின் அடிப்படை உரிமை, சிந்தனைச் சுதந்திரம் என்னும் இரண்டையும் மக்களால் தெரிவு செய்யப் பட்ட பிரதிநிதிகளுக்கு மீறப்பட்டுள்ளதை மேற்குறித்த நடவ டிக்கை வெளிக்காட்டியது.
முதலாவது ஜனாதிபதி பதவியில் இருந்த இரு தடவைகளும் 5/6பங்கு பெரும் பான்மைப் பலத்தைச் சட்டசபையிற் கொண் டிருந்தும் சட்டசபையுடனான மோதலில் தனது வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்கூட்டியே அவ்வாறு செய்து கொண்டார். ஆனால் இரண்டாவது ஜனாதிபதியாக திரு. ஆர். பிரேமதாஸ் பதவி வகித்த காலத்தில் நாடாளுமன்றத்தில் அவர் சாதாரண பெரும்பான்மைப் பலத்தை மட்டுமே பெற்றிருந்த நிலையில் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனா திபதி திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்களை வாங்கி வைத்திருக்காத நிலையில் சட்டமன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான மோதல் மிகவும் கூர்மை அடைந்திருந்தது. அம் மோதலின் உச்சகட்டமாக ஜனாதிபதிக்கு எதிரான குற்றச் சாட்டு மனு ஒன்றினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக சபாநாயகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுச் சமர்ப்பித்திருந்தனர். இவ்விவகாரத்தில் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் ஜனாதிபதிக்கு எதிராக அணி திரண்டிருந்தனர்.
இவ்விடயத்தில் சட்டரீதியான பாதையின்படி ஜனாதிபதி தோல்வி அடைவதற்கேற்ப நிலைமையே பலமாய் இருந்தது . ஆனால் சபாநாயகர் மீது அச்சுறுத்தல்களை ஜனாதிபதி மேற் கொண்டே தனக்கெதிரான வழக்கைத் தடுத்து நிறுத்த முடிந் தது. அச்சுறுத்தல், மிரட்டல் . ஆள்க்கடத்தல் போன்றவற்றின் மூலமே சிங்களக் கட்சி அரசியலில் செயற்படுவதைக் காணலாம். இந்நிலையில் ஜனாதிபதிக்கும் சட்டமன்றத்திற்கும் இடையிலான
10

போட்டியில் சட்ட வரண்முறைகளுக்கு அப்பாலான அம்சங்கள் அரசியலிற் தீர்க்கமான பாத்திரம் வகிப்பதைக் காணலாம். அர சியற் திட்டத்தினை உருவாக்கிய போது சட்ட மன்றத்தை மேலாண்மை செய்யக்கூடிய அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு ஒதுக் கப்பட்டிருந்தும் அரசியற் திட்டத்தை உருவாக்கினவர்களே தமது ஆட்சிக் காலத்தில் அரசியற்சட்ட, சாதாரணச் சட்ட வரண் முறைகளை மீறிச் செயற்படக்கூடிய அளவிற்குத்தான் இலங்கை யின் அரசியற் திட்டமும், அரசியற் திட்ட நடைமுறைகளும் அமைந்திருப்பதைக் காணலாம். ஒரே கட்சியே ஜனாதிபதிப் பதவியிலும் நாடாளுமன்றத்திலும் ஆதிக்கம் பெற்றிருந்த சூழ்லில் நாடாளுமன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையிற் பெரும் போட்டி ஏற்பட முடியுமென்றால் வேறு வேறு கட்சிகள் ஒரே நேரத்தில் இவற்றில் ஆதிக்கம் பெறும் வேளைகளில் அரசியல் நெருக்கடி எத்துணை பெரிதாய் இருக்கும் என்பதை சொல்லாமலே உணரலாம். Ο
10442.
O 112

Page 20
அத்தியாயம் நான்கு
ஜனாதிபதியின் அதிகாரமும் அவரைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடும்
ஜே. ஆர். ஜெயவர்த்தனாவைப் பற்றி முன்கண்ட அவரது பின்னணியையும் அவரது நோக்கங்களையும் மனதிற்கொண்டு, அதனடிப்படையில் ஜனாதிபதிப் பதவியின் உருவாக்கத்தினை ஆராய்வோம்.
ஜனாதிபதி அரசின் தலைவர், அரசாங்கத்தின் தலைவர், முப்படைகளின் தலைவர், மந்திரிசபையின் தலைவர் மட்டுமன்றி மந்திரிப் பதவியினைத் தானே வகிக்கக்கூடியளவிற்கு மந்திரி சபையின் ஓர் உறுப்பினரும்கூட
ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கூட்டவும் கலைக்கவும்: அமர்வுகளை நிறுத்தவும்கூடிய அதிகாரமுள்ளவர் என்பதுடன்,

அமர்வு ஒவ்வொன்றின் ஆரம்பத்திலும் அரச கொள்கைக் கூற்றை வாசிப்பதற்கும் நாடாளுமன்றத்தின் சடங்குமுறையான இருக்கைகளுக்குத் தலைமை தாங்குவதற்கும் அதிகாரமுள்ளவர் ஆவார்.
போர், சமாதானம் என்பவற்றைப் பிரகடனம் செய்வதற்கும் அதிகாரமுள்ளவர். -
இவ்வாறாக அவரது அதிகாரப் பட்டியல்நீண்டு செல்கின்றது.
இத்துணை அதிகாரங்களுடனும் ஒருவர் ஜனாதிபதியாக பதவியில் அமர்த்தப்பட்டபின் அவரது பதவியை எவ்வளவுதூரம் பாதுகாக்க இயலுமோ அவ்வளவு தூரம் பாதுகாப்பதற்கு ஏற்ற விதத்தில் அரசியற் திட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஜனாதிபதி வரம்பை மீறித் துணிந்து செயற்படக்கூடிய பின்னணியே உண்டு. மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை விடவும் ஜனாதிபதியின் பதவியைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடு கள் பலமானவை.
ஜனாதிபதி தானாகப் பதவி விலகினாலே தவிர, அவரைப் பதவியில் இருந்து விலக்குவதற்கு மூன்று வழிகள் உண்டு. அவை UZ:T@) V G607"::
1) ஜனாதிபதிக்குப் பைத்தியம் பிடித்துள்ளது அல்லது அவர் செயற்பட முடியாத அளவிற்கு நோயுற்றுள்ளார் எனக் காணுமிடத்து, 2) ஊழல், மற்றும் தேசத்துரோகம் போன்ற பாரியகுற்றங்க
ளுக்கு உள்ளாகியுள்ளார் எனக் காணுமிடத்து, 3) அரசியல் அமைப்புத் திருத்தம் ஒன்றின்மூலம் ஜனாதிபதிப் பதவியை இல்லாது செய்யுமிடத்து. 涧 巽 இம்மூன்றினில் எந்த ஒன்றை நிறைவேற்ற வேண்டுமாயி னும், நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவைப் பெறவேண்டும்.முதல் இரண்டிற்கும் உயர்நீதிமன்றத்தின் சம்மதத்துடன்கூடிய வகையில் * பங்கு உறுப்பினரின் ஆதரவும், மூன்றாவதற்கு 3 பங்கு உறுப்பி னரின் ஆதரவுடன் மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பின்மூலமான மக்களின் சம்மதத்தினையும் பெறவேண்டும். ...
- இதனால் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யும் ஆதிகாரம் நாடாளுமன்றததிற்கு தனித்துக்கிடையாது என்பதுடன் நாடாளு
13
s

Page 21
மன்றம் ஒன்றில் நீதிமன்றத்துடன் இணைந்தோ அன்றிமக்கள் தீர்ப்பு வாக்கெடுப்புடன் இணைந்தோதான் ஜனாதிபதியைப் பதவிநீக்கம் செய்யலாம். இவற்றை விடவும் இவற்றிற்கான நடைமுறை மேலும் கடினமானது. அதனைப் படிமுறையாக நோக்குவோம்.
ஜனாதிபதி பைத்தியத்திற்கு உள்ளாகியுள்ளார் அல்லது செயற்பட முடியாதளவிற்கு நோயுற்றுள்ளார் என்றோ அல்லது ஜனாதிபதி குற்றச்சாட்டிற்கு உரியவரென விபரமான குற்றப் பத்திரத்துடனோ நாடாளுமன்ற உறுப்பினரின் மொத்த உறுப்பி னர் தொகையில் அரைவாசிப் பேரிற்குக் குறையாதோர் கையெ ழுத்திட்டு, சபாநாயகரிற்கு முகவரியிட்டு சபாநாயகரிடம் சமர்ப்பிக் குமிடத்ததுச் சபாநாயகரும் அதனை ஏற்றுக்கொள்ளுமிடத்து, நாடாளுமன்ற விவாதத்திற்குரிய நிகழ்ச்சிநிரலில் அதனைச் சேர்த் துக்கொள்ளலாம். அவ்வாறு சபாநாயகரின் சம்மதம் அதற்கு இல்லாத இடத்து, மொத்த உறுப்பினர் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினரின் கையெழுத்து இருந்தால் மட்டுமே நிகழ்ச்சி நிரலில் சேர்க்கலாம்.
இவ்வாறு நிகழ்ச்சி நிரலில் இடம்பெறின் பின்பு விவாதம் நிகழும். விவாதம் முடிந்ததும் மொத்தஉறுப்பினரின் 3 பங்கு உறுப் பினரின் வாக்குகளால் ஜனாதிபதிக்கு பைத்தியம் பீடித்துள்ளது அல்லது செயற்பட முடியாதளவிற்குச் சுகவீனம் ஏற்பட்டுள்ளது என்றோ அன்றிக் குற்றத்திற்கு உரியவர் என்றோ கருதி உயர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்று தீர்மா னம் நிறைவேற்றப்படுமிடத்து, சபாநாயகர் அதனை விசாரணக் காக உயர்நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிப்பார்.
உயர்நீதிமன்றம், விசாரணையை முடித்துக்கொண்டு ஜனாதி பதிக்குப் பைத்தியம் பீடித்துள்ளது என்றோ செயற்பட முடி யாதளவிற்கு நோயுற்றுள்ளார் என்றோ அல்லது குற்றவாளிதான் என்றோ தீர்மானித்து அதுபற்றிய ஓர் அறிக்கையை சபாநா யகரிடம் சமர்ப்பிக்குமிடத்து, உயர்நீதிமன்றத்தின் அறிக்கை எனப்படும் தீர்ப்பை சபாநாயகர் நாடாளுமன்றத்தில் வாக்கெடு பிற்கு விடலாம். அப்போது மொத்த உறுப்பினரில் ஐ பங் கிற்கு குறைய தோரின் வாக்குகள் ஜனாதிபதிக்கு எதிரான தாக அளிக்கப்பட்டால் மட்டுமே அவர் பதவி விலக்கப்படுவார்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்று சொல்லத்தக்க அறிக்கை யில் ஜனாதிபதிக்குப் பைத்தியம் பீடித்துள்ளது அல்லது அவர்
O 14

செய்ற்ப்டமுடியாதளவிற்கு நோயுற்றுள்ளார் என்றோ சொல்லப் பட்ாதிருந்தால் அல்லது குற்றவாளி என்றோ சொல்லப் படாதிருந்தால் நாடாளுமன்றத்தில் அது வாக்கெடுப்பிற்கு விடப்படமாட்டாது. அவர்பதவி விலக்கப்படவும் மாட்டார்,
மேற்படி விபரங்களின்படி ஜனாதிபதியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமாயின் நான்கு கட்டங்களைத் தாண்ட் வேண்டும். மேற்படி நான்கு கட்டங்களிலும் சம்மதம் கிடைத் தால் மட்டுமே அவரைப் பதவி விலக்கலாம். இந்த நான்கு கட்டங்களுள் ஏதாவது ஒன்றில் ஜனாதிபதிக்குச் சாதகமான தீர்மானம் கிடைத்துவிட்டால் அத்துடன் பதவி நீக்குவதற்கான முயற்சி கைவிடப்படும். உதாரணமாக ஜனா திபதிக்குப் பைத்தியம் பீடிக்கவில்லை அல்லது அவர் குற்ற வாளியல்ல என்று உயர் நீதிமன்ற அறிக்கை அமையுமா னால், பின்பு மேற்கொண்டு நாடாளுமன்றத்தில் அது வாக் கெடுப்பிற்கு விடப்படாமல் இரத்தாகிவிடும். இங்கு விசித்தி ரம் என்னவெனில், ஜனாதிபதிக்குப் பைத்தியம் இல்லை என்று நீதிமன்றம் அறிக்கை சமர்ப்பித்தால் அதை நம்பி நாடாளு மன்றத்தில் வாக்கெடுப்பு நிகழாது. ஆனால் பைத்தியம் தான் என்று அறிக்கை சமர்ப்பித்தால் அதை நம்பாது ; பங்கு வாக்கை நாடாளுமன்றத்திற் பெறவேண்டும்.
மூன்று தடவைகளும் மிகக் கடினமான ஏற்பாடுகளுக் கூடாக நாடாளுமன்றத்தின் சம்மதத்தைப் பெற்று, ஒரு தடவை நீதிமன்றத்தின் சம்மதத்தைப் பெற்றபின்புதான் ஜனாதிபதியைப் பதவி விலக்கலாம். நாடாளுமன்றம் நீதிமன்றம், மக்கள்தீர்ப்பு வாக்கெடுப்பு ஆகிய எந்த ஒரங் கத்தாலும் தனித்து எடுக்கப்படும் முடிவினால் ஜனாதிபதி பதவி விலக்கப்பட முடியாதது. நாடாளுமன்றத்துடன் மற் றைய இரு அங்கங்களில் ஏதாவது ஒன்று இணைந்துதான் பதவி விலக்கலாம். -
ஆதலினால் பெயரளவில் பதவி நீக்கம் செய்ய இடமிருப் பது போலத் தெரிந்தாலும் உண்மையில் ஜனாதிபதிப் பதவியை உறுதிப்படுத்துவதற்கேற்ற ஏற்பாடுகளே இவையாகும்.
இத்தனை பாதுகாப்பு அம்சங்களும் போதாதென்று நடை முறையில் இன்னோர் அம்சமும் இதற்கு அரணாக அமைந்தி ருப்பதைக் காணலாம் திரு. ஆர். பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்தபோது அவரிற்கு எதிரான குற்றப் பத்திரம் ஒன்றில்
ロI5ロ

Page 22
நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினரில் அரைவாசிப் பேரிற்கு மேல் கையொப்பமிட்டு சபாநாயகரிடம் சமர்ப்பித்திருந்த னர். அதற்கு சபாநாயகரின் சம்மதமும் உண்டு என்ற நிலை தெரிய வந்ததும் சபாநாயகர் மிரட்டலுக்கு உள்ளாகவே, அவர் அதனை நிகழ்ச்சிநிரலில் சேர்க்காது தவிர்த்தார். எனவே ஜனாதி பதிக்கு அரசியல் அமைப்புரீதியான பாதுகாப்பிற்கு அப்பால் மிரட்டல் முறையான இன்னொரு பாதுகாப்பும் சிங்கள அரசி யலில் ஒரு பாரம்பரிய மரபாகிவிட்டது.
வெறும் சட்டநுணுக்கப் பிரச்சினைக்கப்பால் நடைமுறை அர்த்தத்தில் பின்வரும் பிரச்சினையை ஆராய்வோம். ஜனாதி பதியைப் பதவி நீக்குதல் சம்பந்தமான விவகாரத்தில் நாடாளு மன்றத்தின் தீர்மானத்தை நீதிமன்றம் மீறமுடியும், அதேபோல நீதிமன்றத்தின் தீர்மானத்தை நாடாளுமன்றம் மீறமுடியும். இதில் ஜனாதிபதி குற்றத்திற்கு உரியவர்தான் என நீதிமன்றம் அறிக்கை எனப்படும் தன து தீர்ப்பை அளித்தபின்பு, நாடாளு மன்றம் அதனை நிராகரிக்கும் உரிமை உடையது. உயர் நீதி மன்றத்தின் விசாரணையை நாட்டின் முதல் பிரஜை எனப்படும் ஜனாதிபதியின் பொருட்டு மீறமுடியுமெனில், நீதித்துறையின் கெளரவம் என்னாகும்? இந்த நீதித்துறையின் தீர்ப்பிற்கு சாதாரண பிரசைகள் எவ்வாறு மதிப்பளிக்க முடியும்? இதில் நீதித் துறையின் கெளரவம் பாதிக்கப்படும் விதத்தினைப் பற்றி கலா நிதி. என். எம். பெரேரா தனது நூலில் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார். 3.
அரசியல் யாப்பின் நான்காவது சரத்தின் பிரகாரம் மக் களின் இறைமையைப் பிரயோகிக்கக்கூடிய அதிகாரம் நாடாளு மன்றத்திற்கு உண்டு. ஆனால் அப்படியான அதிகாரம் நீதிமன் றத்திற்கு இல்லை. அப்படி இருக்கையில் நாடாளுமன்றத்தின் விருப்பத்தை நீதித்துறை மேற்படி பதவி விலக்கற் பிரச்சினையில் மீறமுடியும் என்றால், நாடாளுமன்றததின் இறைமை என்னா வது?இது நாடாளுமன்றத்தையும் இறைமையையும் கேலிக் கூத்தாக்கும் விவகாரமே! -
ஜனாதிபதியினை பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சியில் நீதித்துறை அதனை நிராகரிக்குமாயின் அது தீர்ப்பாகிவிடும் சட்டத்துறை நிராகரிக்கும் ஆயினும் அதுவும் தீர்ப்பாகிவிடும். ஆனால் சட்டத்துறை ஏற்று நீதித்துறை நிராகரித்தாலும் அது தீர்ப்பாகமாட்டாது. நீதித்துறை ஏற்று சட்டத்துறை
O 16 D

நிராகரித்தாலும் அது தீர்ப்பாக முடியாது. அதாவது நிராகரிப்பு விடயத்தை ஜனாதிபதிக்குச் சாதகமாக இரு துறைகளிலும் ஏற்பாடு செய்ததனாலேதான் மேற்படி இருதுறைகளுக்கிடையிலும் , முரண்பாடும், கெளரவப் பிரச்சினையும் ஏற்பட்டு, இறைமையும், நாடாளுமன்றமும், நீதித்துறையும் ஒரே நேரத்தில் கேலிக்கூத் தாக்கப்பட்டன.
எனவே ஜனாதிபதி நலனை மையமாகக் கொண்டே தர்க்க பூர்வமற்றதும் ஒன்றுடன் ஒன்று பொருந்தாததுமான ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன எனலாம்.
ஜனாதிபதியை நிகரற்ற அதிகாரமுள்ளவராக உருவாக்குவது, அவ்வாறான நிகரற்ற அதிகாரங்களை அவரதுகைகளில்ஒப்டைத்து விட்டு அவரையும் அவரது அதிகாரங்களையும் பாதுகாப்பது, அதற்காக முன்னுக்குள்ள ஒரு சரத்தை பின்னுக்குள்ள ஒரு சரத் தால் மீறுவது, இவற்றிற்காக முரண்பாடான விடயங்களை இணைக்கும் முயற்சியில் சாதாரண தர்க்கத்தையே மீறுவது போன்ற அனைத்து குளறுபடிகளுடனும்கூடிய வகையிலேயே இந்த யாப்பின் பல்வேறு அம்சங்களும் பின்னிப் பிணையப்பட் டுள்ளன. 臀
அரசியல் அமைப்பின் 155ஆவது சரத்து பொதுமக்கள் பாது காப்புப் பற்றியதாகும். இது பொதுமக்களைப் பாதுகாக்கும் சரத்தல்ல; ஜனாதிபதியைப் பாதுகாக்கும் சரத்தாகும். இதனை பொதுமக்கள் உரிமைமீறற் சரத்து எனவும் அழைக்கலாம். பொதுமக்களின் பல்வகை உரிமைகளைப் பற்றியும் பலசரத்துக் கள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் பெரிதாக உரைக்கப் பட்ட அத்தனை உரிமைகளும் இந்தப் பொதுசனப் பாதுகாப்புச் சட்டத்தை ஜனாதிபதி பிரகடனப்படுத்துவதன்மூலம் "கண்மூடி முழிக்க முன்னே’பறிக்கப்பட்டுவிடுகின்றன; மீறப்பட்டுவிடுகின்றன.
தேவையான கட்டங்களில் அரசியல் அமைப்பை மீறுவதற்கு ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள சட்ட அங்கீகாரத்திற்குப் பெயர்தான் பொதுமக்கள் பாதுகாப்புச்சட்டம் என்பது. இந்தச் சட்டத்தினை 17 ஆண்டுகளும் பதவி வகித்த மூன்று ஜனாதிபதி களும் தமது தேவைக்கேற்ப பெருமளவு பிரயோகித் தனர். அப்படி யாயின் இந்த அரசியல் அமைப்புப்பற்றிக் கூறக்கூடிய கருத்து என்னவெனில் இது அரசியல் அமைப்பற்ற அரசியல் அமைப்பு என்பதே. Ο
O 17 ( )

Page 23
அத்தியாயம் ஐந்து
பிறேமாவை ஓரங்கட்டவும் சிறிமாவைக் களத்திலிருந்து அகற்றவும் யாப்புரீதியான ஏற்பாடுகள்
பதவியில் இருக்கும் ஜனாதிபதி தானாகப் பதவி விலகு மிடத்து அல்லது அவர் பதவி விலக்கப்படுமிடத்து அல்லது அவர் இறக்குமிடத்து அப்பதவியை எப்படி நிரப்புவது என் பது, இலங்கையில் மிகவும் சிக்கலான நடைமுறைகளைக் கொண் டது. ஜனாதிபதி முறைமை தோன்றிய முதலாவது நாடு அமெரிக்கா, அங்கு ஜனாதிபதிக்கு அடுத்து பதில் ஜனாதிபதி யாகவும், ஜனாதிபதியாகவும் கடமை ஆற்றுவதற்கென தயார்நிலையில் உப ஜனாதிபதி இருப்பார். ஜனாதிபதிப் பதவி அங்கு வெற்றிடமாகுமிடத்து சிக்கலின்றி நேரடியா கவே அடுத்த கணத்தில் வெற்றிடம் நிரப்பப்படுகின்றது.

இலங்கையில் ஏன் உப ஜனாதிபதிப் பதவி வைக்கப்பட வில்லை? அதற்குப்பதிலாக ஏன் சிக்கலான ஒரு முறைமை வைக்கப்பட்டது போன்ற கேள்விகளை கலாநிதி என். எம். பெரேரா 1979ஆம் ஆண்டு தான் எழுதிய நூலில் எழுப்பி, விட்டு ஐ. தே. க. விற்குள் உள்ள பிரேமதாஸ் எதிர்ப்பு வாதத் தினை விபரிப்பதுடன் அதோடு பிரதம மந்திரி பதவியும் கூட ஒரு பெயரளவிலான பதவியாகச் சுருக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார், 4
இதனை விபரமாகப் பரிசீலிப்போம். அமெரிக்காவில் ஜனாதிபதியின் பதவி வெற்றிடமாகுமிடத்து ஜனாதிபதிப் பத விக்கு புதிதாகத் தேர்தல்எதுவும் நடைபெறாது. ஜனாதிபதியின் எஞ்சியுள்ள பதவிக்காலத்திற்கு உப ஜனாதிபதி ஜனாதிபதியாய்ப் பதவி வகிப்பார். அதாவது அமெரிக்க முறைப்படியான நான்கு ஆண்டுப் பதவிக்காலத்தில் ஜனாதிபதி ஓராண்டுதான் பதவி வகித்தார் என்று வைத்துக்கொண்டால், மிகுதியான மூன்று ஆண்டுகளுக்கும் உப ஜனாதிபதி ஜனாதிபதியாய்ப் பணியாற்று
வார்.
மேற்படி அமெரிக்காவில் ஒரு பதவிக்காலத்திற்காக நிகழ் வதுபோல இலங்கையிலும் ஒரு தேர்தல்மூலம் ஒரு திட்ட வட்டமான பதவிக்காலம் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை யிலும் பதவியிலிருக்கும் ஜனாதிபதி ஒருவர் இடைக்காலத் தில் பதவியை இழப்பாரானால், எஞ்சியுள்ள காலத்திற்கே இன்னொருவர் பதவி வகிக்க முடியும்.
அமெரிக்காவில் ஒவ்வொரு பதவிக்கால தொடக்கத்துக் கும் முடிவுக்குமென ஒரு நிரந்தரமான திகதியுண்டு, அதனைப் பின்பற்றியே இலங்கையிலும் ஒவ்வொரு பதவிக்கால தொடக் கத்திற்குமென பெப்ருவரி 4ஆம் திகதியென நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இவ்வாறான விடயங்கள் எல்லாமே அமெரிக்கா வைப் பின்பற்றிச் செய்யப்பட்டிருக்கின்றபோது, ஏன் அமெரிக் காவைப் பின்பற்றி உபஜனாதிபதி முறைமை இலங்கையில் உருவாக்கப்பட்டிருக்கவில்லை என்று கேள்வி எழுவது நியாயமே.
" ஜனாதிபதி சுகயினம் காரணமாக, இலங்கையில் இல் லாமை காரணமாக அல்லது வேறேதேனும் காரணமாக தமது பதவிக்குரிய தத்துவங்களையும் கடமைகளையும், பணிகளையும் பிரயோகிபபதற்கும் புரிவதற்கும் நிறைவேற்றுவதற்கும் இய லாது இருப்பாரெனக் கருதுவாரெனில் அத்தகைய காலத்தின்
19

Page 24
போது ஜனாதிபதி என்ற பதவியில் முதலமைச்சரை ஜனாதிபதி என்ற பதவிக்குரிய தத்துவங்களையும் கடமைகளையும் பணிக ளையும் பிரயோகிப்பதற்கும் புரிவதற்கும் நிறைவேற்றுவதற்கும் அவர் நியமிக்கலாம். * எண் 37 ஆவது சரத்தின் முதலாம் பிரிவு கூறுகிறது. ஆனாலும் ஜே. ஆர் வெளிநாடுகளுக்குப் பல தடவை சென்றிருந்த போதிலும் பிரேமதாசாவை அவர் பதில் ஜனாதிபதியாக நியமித்திருக்கவில்லை என்பதைக் காணலாம்.
பிரேமதாசாவை ஜே. ஆர். பிரதமராக நியமித்தமை யானது பிரேமாவுக்கு ஐ.தே.கவின் அடிமட்ட உறுப்பினர் மத்தியில் பெரும் செல்வாக்கு இருந்தமையினால்தான் என் றும் அவ்வாறு பிரேமாவை பிரதமராக நியமிப்பது ஜே. ஆருக்குத் தவிர்க்க முடியாததாய் இருந்ததென்றும் நம்பலாம்
எனவே எந்த வகையிலும் பிரேமதாசா ஜனாதிபதிப் பீடத் தில் அமர்ந்துவிடக்கூடாது என்பதில் ஜே. ஆர். அக்கறையாக இருந்தார் என உணரமுடிகின்றது. இக்கருத்தினைப் பிற்காலச் சம்பவங்களும் உறுதிப்படுத்துவனவாய் அமைந்தன; அதனை ஆராய்வோம்.
நாடாளுமன்றத்திற்கு அப்பாலான அரசியலில் பிரேமா வைக் கட்டுப்படுத்துவது கடினம் என்பது ஜே. ஆர். இற்குத் தெரிந் திருந்தது. ஆனால் நாடாளுமன்றத்திற்குட்பட்ட அரசியலில் பிரேமாவை அடக்கி வைத்திருக்கும் வழிகளும் வல்லமைகளும் ஜே. ஆரிடம் இருந்தன. ஜே. ஆர். பதவியிலிருந்த காலத்தில் நாடாளுமன்றத்திலிருந்த ஐ. தே. க. உறுப்பினர்களில் பெரும் பாலானோர் ஜே. ஆரின் ஆதரவாளர்கள். 1977ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட இந்த நாடாளுமன்றத்தின் விசுவாசிகள் பட்டியலைப் பேணிப்பாதுகாப்பதற்காகத்தான் ஜே. ஆர் 1982 ஆம் ஆண்டு ஒரு பொதுத் தேர்தலுக்குச் செல்லாது மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பின்மூலம் நாடாளுமன்றத்தின் பதவிக்கா லத்தை மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடித்தார். இதன்மூலம் தனது விசுவாசிகளால் ஜே. ஆர். தன்னை அரண் செய்து கொண்டார். 1982ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர் தலை நடாத்தியிருந்தால் வேட்பாளர் பட்டியலில் பிரேமதாசா வின் ஆதரவாளர்கள் பெருமளவில் இடம் பிடிக்க நேர்ந்திருக்கு மென்றும், அதனைத் தவிர்ப்பதற்காகத்தான் ஜே. ஆர். பொதுத் தேர்தலை நடத்தாது மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பை நடாத் தினாரென்று தனிப்பட்ட உரையாடலின்போது திரு. சிவா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
口印口

பொதுத்தேர்தல் நடாத்தாது, மக்கள் தீர்ப்பு வாக்கெடுப் பால் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு ஜே. ஆர். கூறிய காரணம், பொதுத் தேர்தல் நடாத்தினால் "நக்ஸ லைட்டுக்கள்' நாடாளுமன்றத்துள் பிரதிநிதித்துவம் பெற்று விடுவார்கள். அதனைத் தடுப்பதற்கே இந்த மக்கள் தீர்ப்பு வாக் கெடுப்பு என்றார். ஜே.ஆர் கூறிய "நக்ஸலைட்டுக்கள்" பிரோமா வின் ஆதரவாளர்கள்தான் என்று சிவாசுப்பிரமணியம் மிகவும் சுவாரசியமாகக் கூறினார்.
பொதுத் தேர்தலை நடத்தியிருந்திருந்தால் சாதாரண பெரும்பான்மை ஆசனங்களைத்தான் ஐ.தே.க. நாடாளுமன்றத் திற் கைப்பற்றியிருக்க முடியும் என்பதையே, மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பில் கிடைத்த வாக்கு விகிதம் காட்டுகின்றது. இந்தச் சாதாரண பெரும்பான்மை ஆசனங்களில் பிரேமாவின் ஆதரவாளர்களும் கணிசமானளவு இடம்பிடித்திருப்பார்களேயா னால் ஜே.ஆரின்நிலை நெருக்கடிமிக்கதாய்த்தான் இருந்திருக்கும். எனவே மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்றத் தின் ஆயுட்காலத்தை நீடித்ததனால் ஜே.ஆர். ஒரே நேரத்தில் இரண்டு வெற்றிகளைப் பெற்றார். ஒன்று, சுமாராக 53 வீத வாக்குகளினால் நாடாளுமன்றத்தின் 83 வீத ஆசனங்களைப் பேணியமை. இரண்டு, பிரேமாவை ஒரங்கட்டியமை,
ஜே. ஆர். யாரையும் நம்பாத ஒருவர். தனது விசுவாசி களாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களிற் பெரும்பாலோர் காணப்பட்டாலும், இவர்கள் பக்கம் மாறவோ அன்றி இவர்கள் பிரேமாவால் வென்றெடுக்கப்படவோ கூடும் என அச்சம் கொண் டிருக்கலாம். ஆதலினால் திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்களை இவர் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்க ளிடம் வாங்கி வைத்திருந்ததன் மூலம் தன்னைப் பாதுகாக்க முற்பட்டார் என்று எண்ணமுடிகின்றது. அதாவது கட்சி தாவாத் தடைச் சட்டம் நடைமுறையில் இருந்ததால் ஐ.தே.க. உறுப்பினர் எவரும் இலகுவிற் கட்சி மாறிவிட முடியாது. எனவே தனது உறுப்பினர்கள் ஐ.தே.க விற்கு எதிராகக் கட்சி மாற நேருமென ஜே.ஆர். அஞ்சவேண்டியதில்லை. ஆனால் இவர்கள் கட்சி மாறாமல் ஐ. தே.க வுக்குள் இருந்துகொண்டு பிரேமாவின் பக்கம் சார்ந்துவிடக்கூடும் என்ற அச்சத்தினாலே தான், அதனைத் தடுப்பதற்காக திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்களை வாங்கி இருக்கலாம் என்று, நம்ப இடமுண்டு.
21

Page 25
நாடாளுமன்றத்தினுள் ஜே. ஆர். இத்துணை பெரிய வரம்புகளைப் பிரேமாவிற்கு எதிராக எழுப்பித் தன்னை ஸ்திரப் படுத்திக்கொண்டபோதிலும், நாடாளுமன்றத்திற்கு வெளியே பிரேமாவிற்கு ஜே. ஆர். பெரிதும் அஞ்சினார். நாடாளுமன்றத் திற்குப் புறம்பான அரசியலில், அதாவது தடி அடி, மிரட்டல் களைச் செய்வதில் பிரேமாவிற்கென ஒரு பெரும் கூட்ட மும் பலமும் இருந்தது. வேறு நோக்கங்கள் இருப்பினும் பிரே மாவைக் கட்டுப்படுத்துவதையும் ஒரு நோக்கமாகக் கொண்டு சிறில் மத்தியூ தலைமையில் ஒரு தடி அடிக் கூட்டத்தை ஜே. ஆர். வளர்த்தார். பின்பு அதனையும் விடச் சற்று முன்னேறி தனது மகன் றவி ஜெயவர்த்தன தலைமையில், ஒரு மேல்வர்க்க இராணுவத் தட்டொன்றை உருவாக்கினார். இது எஸ். ரீ. எவ். என்ற பெயரில் தமிழ்மக்கள் மீது தனது பயிற்சிகளை மேற்கொண் டது. றவி ஜெயவர்த்தன தலைமையிலான இப்படியான இராணுவ அணி ஒன்றின் வளர்ச்சியானது பிரேமாவை அவரது சண்டித் தனப் பாதையில் இருந்து சற்றுப் பின்தள்ளியது.
அடுத்து, தனக்குப்பின்னான அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பிரேமாதான் என்பது ஜே.ஆர். நிலைப்பாடாய் இருக் கவில்லை. மூன்றாவது தடவையும் பதவிக்கு வருவது அல்லது
தனது வாரிசுகளான காமினி திசாநாயக்காவையோ அன்றி லலித் அத்துலத்முதலியையோ வேட்பாளராக்குவது என்ற எண்ணத்துடனேயே காணப்பட்டார். ஆனால் இலங்கை
இந்திய ஒப்பந்தத்தின் கீழ் தென்னிலங்கையில் ஏற்பட்ட கொந் தளிப்புக் காரணமாகவும், அந்தக் கொந்தளிப்பை பிரேமா தனக் காகப் போதியளவு பயன்படுத்தியதாலும், ஜே.ஆரும் அவரது வாரிசுகளும் மேற்படி தேர்தற் களத்திலிருந்து ஒதுங்க நேர்ந்தது. மொத்தத்தில் ஜே.ஆர்.தனது பன்னிரண்டு ஆண்டு கால ஆட்சிக் காலத்திலும் பிரேமாவை எதிர்நிலையில் வைத்துத்தான் அணுகியுள்ளார் எனத் தெரிகின்றது. பிரேமா வும் ஜே.ஆருக்கு எதிராக நீண்டகாலமாக நிலைப்பாட்டை கொண்டிருந்த ஒருவர்தான். அதாவது டட்லி சேனனாயக்கா வுக்கும் ஜே.ஆருக்கும் இடையிலான போட்டியில் பிரேமா ஜே.ஆருக்கு எதிராகச் செயற்பட்டவர். பின்பு சந்தர்ப்பம் த்கிடைதபோது இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினையும், ஜே. வி பியின் எழுச்சியினையும் ஜே. ஆருக்கு எதிரான முக்கிய சாதனங்களாக பிரேமா பயன்படுத்தினார் என்பது வெளிப் f fáð){ - .
口22口

எனவே இந்த அரசியல் யாப்பின் தன்மையை நிர்ணயிப் பதில் ஜே. ஆருக்கும் பிரேமாவுக்கும் இடையிலான பிரச்சினை களும் ஓரங்கமாய் இருந்துள்ளன எனத் தெரிகின்றது. இவ்வாறு ஜே. ஆருக்கும் பிரேமாவுக்கும் இடையிலான பிரச்சினைகள் அரசியலமைப்பை நிர்ணயிப்பதில் ஒரு பங்கு வகித்தது போலவே, ஜே. ஆருக்கும் சிறிமாவுக்கும் இடையிலான ஆதிக்கப் போட்டி யும் ஒரு பங்கெடுக்கத் தவறவில்லை. அதாவது சிறிமாவைத் தேர்தல் களத்திலிருந்து அகற்றுவதற்கான ஏற்பாட்டை அரசி யல் யாப்பில் மேற்கொண்டிருந்தார். சிறிமாவிற்கு எதிராக இப்படி ஒரு ஏற்பாட்டினை ஜே. ஆர். மேற்கொண்டிருந்தார். என்பதை நிரூபிப்பதன்மூலம், பிரேமாவிற்கும் எதிராக இவ் வாறாக நடந்து கொண்டார் என்பதும் உறுதியாகும்.
சிங்கள அரசியலில் குடும்ப ஆதிக்கம் ஒரு முக்கிய கருவி யாக உள்ள நிலையில், சிறிமாவோவிற்கு என ஒரு மக்கள் கவர்ச்சி உண்டு. சுதந்திரக் கட்சியின் அடித்தளமும் சிறிமாவோ தான். இந்நிலையில் 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சிறிமாவோ போட்டியிடும்போது, இந்த நேரடிப் போட்டியில் தன்னால் சிறிமாவோவிற்கு ஈடுகொடுக்க முடியாது போகும் என்பதை, ஜே. ஆர் நம்பினார். எனவே சிறிமாவோவை தேர் தற் களத்திலிருந்து அகற்றுவதற்கு ஜே. ஆர். முன்கூட்டியே திட்டமிட்டார். 1978 ஆம் ஆண்டு ஏழாம் இலக்க விசேட சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து, அதனை அரசியல் அமைப் பின் எண்பத்தோராவது சரத்தாக இணைத்தார். இதனைப் பின் னோக்கும் சட்டவாக்கம் என்ற வகைக்குள் அடக்குவர். இதன் மூலம் ஜனாதிபதிக்கு விசேட நீதிமன்றங்களை அமைப்பதற்கான உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளதுடன்" நடைமுறையில் உள்ள சட்டத்தின்மூலம் ஒருவர் குற்றவாளி என்று இல்லை என்றாலும் அதற்கு முன்பு ஒருவர் செய்த செயல்களை பின்பு இயற்றப்பட்ட சட்டத்தினால் குற்றத்திற்கு உரிய வராகக் கணிப்பதற்கு இந்த ஏற்பாடு வசதி செய்தது, 81 ஆவது சாத்தின் முதலாம் பிரிவு பின்வருமாறு கூறுகிறது;
"..எவரேனும் ஆள் ஒருவர் அரசியல் அமைப்புத் தொடங்கு வதற்கு முன்னர் அல்லது அதன் பின்னர் ஏதேனும் செயலைச் செய்தார் அல்லது செய்யாது விட்டார் என்ற காரணத்திற்காக அவர்மீது குடியியற் தகுதியீனத்தை விதிக்க வேண்டுமென்று விதந்துரைக்குமிடத்து, நாடாளுமன்றமானது, அதன் முழு உறுப்
23 밍.

Page 26
பினர்களினதும் எண்ணிக்கையில் (சமூகமளிக்காதோர்உட்பட) மூன்றில் இரண்டுக்குக் குறையாதோர் அதற்குச் சாதகமாக வாக்களித்து நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் மூலம்" (அ) ஏழாண்டுக்கு மேற்படாத காலமொன்றிற்கு அத்தகைய ஆளின்மீது குடியியற் தகுதியீனத்தை விதிக்கலாம். (ஆ) அவர் நாடாளுன்ற உறுப்பினராயிருப்பின் .୭)। ବାiଙ}]]'' நாடாளுமன்றத்தில் இருந்து விலக்கலாம்" என்று கூறப்பட் டுள்ளது.
இவற்றில் பல விடயங்களைத் தெளிவாக அவதானிக்கலாம். இங்கு குற்றத்திற்குரிய தண்டனை என்னவெனில், குற்றவாளி யாகக் காணப்பட்டவரை அவரது குடியுரிமையைப் பறிப்பதன் மூலம் அரசியற் களத்திலிருந்து அகற்றுவதே தவிர வேறில்லை. உண்மையில் குற்றவாளிக்கு இதனைவிடவும் சிறைபோன்ற பெரிய தண்டனைகள் பலவுண்டு. ஆனால் இங்கு ஜே. ஆரின் நோக்கம் சிறிமாவைத் தண்டிப்பதல்ல; அவரை அரசியற் களத்திலிருந்து அகற்றுவதற்கான தண்டனையை உருவாக்குவது தான். அதாவது குடியுரிமையைப் பறிக்காத வேறேதாவது தண்டனைகள் அவர் அரசியற் களத்தில் நிற்பதை தவிர்க்காது என்பதால் இப்படி ஒரு ஏற்பாட்டை மேற்கொண்டார்.
இந்த வகையில் ஜே. ஆரை எதிர்கொள்ளவல்ல எதிர்க் கட்சித் தலைவிக்கு எதிராகவே 81 ஆவது சரத்தினை ஜே.ஆர். அரசியல் அமைப்பிற் சேர்த்திருந்தார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இவற்றின்மூலம் ஜே. ஆர் தனது எதிரிகளை வெற்றி கொள்வதற்கேற்ற ஒரு கருவியாகவே அரசியல அமைப்பை உரு வாக்கினார். ஜே ஆரின் குறுகியகாலப் பதவி நலன்களுக்கு ஏற்ப அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கும் இடத்து, அதற்கு அப்பால் இந்த அரசியல் அமைப்பு எப்படி நீண்டகாலத் தேவை களுக்கேற்ற நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பது சாத்தியமாகும்?
24 O

104421
அத்தியாயம் ஆறு
ge. தே, க வினைப் பாதுகாக்க விகிதாசாரப் பிரதிநிதித்துவம்
விகிதாசாரப் பிரதிநிதித்துவம் இரு முக்கிய காரணங் களுக்காக ஐரோப்பாவிற் தோன்றியது. பல்லினத் தன்மை வாய்ந்த நாடுகளில் சிறுபான்மை இனங்கள் தொகுதிவாரிப் பிரதிநிதித்துவத்தின்மூலம் தெரிவுசெய்யப்பட முடியாத அள விற்குச் சிதறிவாழும் சூழலில், தேசம் தழுவிய அல்லது மாவட் டம் தழுவிய அளவில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையைக் கடைப்பிடிப்பதன்மூலம் அச் சிறுபான்மை இனங்களை பிரதிநிதித் துவம் பெறவைப்பதற்காக இது உருவானது. 1855 ஆம் ஆண்டு இதற்கான முதலாவது தேர்தல் டென்மார்க்கில் நிகழ்ந்தது

Page 27
இதைத் தொடர்ந்து 1892 ஆம் ஆண்டு சுவிட்சலாந்தின் கன்ரன் களிலும் பின்பு 1891 ஆம் ஆண்டு பெல்ஜியத்திலும் இது உப யோகததிற்கு வந்தது.
எழுச்சி பெற்றுவந்த தொழிலாளி வர்க்கம் 19 ஆம் நூற் றாண்டில் நகரப்புறங்களைச் சார்ந்து குவியத் தொடங்கி, இத னால் குறிப்பிடக்கூடிய தொகுதிகளில் மேலாதிக்கம் பெற்று, அதிக ஆசனங்களைத் தொழிற் கட்சிகைப்பற்றும் நிலை வளர்ந்து வந்தது. நாடு தழுவிய விவசாயிகளுடன் ஒப்பிடுகையில் தொழி லாளி வர்க்கம் 19 ஆம் நூற்றாண்டில் விவசாயிகள் வர்க்கத்தை விடச் சிறியதுதான். இதனால் நாடு அல்லது மாவட்டம் தழு விய தேர்தல் முறையின்மூலம் தொழிலாளி வர்க்கப் பிரதி நிதித்துவத்தைப் பலமிழக்கச் செய்வதற்காகவே பெல்ஜியத்தில் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் முதல் முறையாகப் புகுத்தப்பட்ட தாகச் கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் இது இப்படி அங்கு இருந் திருப்பினும், தொழிலாளி வர்க்கம் வளர்ச்சி அடைந்த பிற் காலத்தில் இது பொருந்த முடியாது.
இந்த முறையினை அறிமுகப்படுத்தியோர் தத்தமது காலச் சூழலில் ஏதோ தமக்குக் சாதகமான காரணங்களையிட்டு அறி முகப்படுத்தியது போலவே " இலங்கையில் ஜே ஆர். இதனை ஐ தே. க. விற்குச் சாதகமான முறை எனக்கண்டு பிரயோகத் திற்குக் கொண்டுவந்தார்,
1947 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண்டு வரை இலங் கையில் நிகழ்ந்த பொதுத் தேர்தல்களை அவதானிக்குமிடத்து, தனிப்பெரும் கட்சி என்ற வகையில் விகிதாசார அடிப்படையில் ஐ. தே.க. முன்னணியில் இருப்பது அவதானிக்கப்பட்டது. அதா வது ஐ. தே. க ஆட்சி அதிகாரத்தினை இழந்த கட்டங்களிலும் கூட விகிதாசாரரீதியில் சு. க வினைவிடக்கூடிய விகித வாக்குத் களைப் பெற்றிருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் தொகுதி வாரிப் பிரதிநிதித்துவத்தை விடவும் விகிதாசாரப் பிரதிநிதித்து வத்தை கொண்டுவருவது கட்சி அடிப்படையில் ஐ. தே, க விற்கு இலாபமாகப்பட்டது. எனவே இங்கு தேசிய நல னை விடவும் ஐ தே, க வின் கட்சி நலனை முதன்மைப்படுத்தி அதற்கேற்ப இவ்வரசியல் அமைப்பில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை புகுத்தப்பட்டுள்ளது என்பதே பொதுவான அபிப்பிராயமாகும்.
国26口
 

"ழ்ப்புணரு "
இவ்விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் குறைபாடுகள் அதன் நல்ல அம்சங்களை விடவும் பெரியவையாகும். விகிதா சாரப் பிரதிநிதித்துவம் கொண்டு வரப்பட்டு, அது ஆரம்ப நடை. முறையிலேயே மாற்றத்திற்கு உள்ளாகியது. ஒன்று விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தில் வாக்கு, நபருக்கு அல்ல கட்சிக்கே என்பதை அது அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஆனால் இது நடை முறையில் சிக்கலுக்குள்ளாகியது. அதாவது விகிதாசாரப் பிரதி நிதித்துவத்திற்கான பட்டியல் முறையில் பிற்பகுதிப் பெயர் களைக் கொண்டிருந்தவர் தாம் பதவிக்கு வரமுடியாது என் பதை நம்பினர். அதாவது உதாரணத்திற்கு ஒரு தேர்தல் மாவட்டப் பட்டியலில் 30 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றி ருக்குமிடத்து, அதில் 10 அல்லது 15 நபர்களே வெற்றி வாய்ப்பு பெறமுடியும் என்பதை அப்பட்டியலில் உள்ளவர்கள் உணர்ந்து விடுவார்கள். பட்டியலில் வரிசைக்கிரமத்தில் உள்ளபடி முதல் 10 அல்லது 15 நபர்களும் பதவி பெற, எஞ்சியோர் பதவி பெற முடியாது என்பதனால், அவர்கள் தேர்தலுக்காக கடுமையாக
உழைக்கமாட்டார்கள். அதேவேளை பட்டியலின் முன்வரிசை யில் உள்ளோர் தமக்கு வெற்றி நிச்சயம் என்பதாலும் கடுமை யாக உழைக்க மாட்டார்கள். இதனால் கட்சிக்குப் பெரும்
பாதிப்பு ஏற்படும் என்பதை அனுபவரீதியாக உணர்ந்ததன் மூலமே, இதில் திருத்தத்தைக் கொண்டுவந்தனர். அதன் பிர காரம் மக்கள் ஒரு கட்சிக்கு மட்டும் வாக்களிப்பதாக இல்லா மல் அக்கட்சியில் உள்ளோரில் விரும்பும் நபர்களுக்கும் வாது களிக்கக்கூடிய வகையில் விருப்பத்தேர்வு வாக்களிப்பு முறை புகுத்தப்பட்டது. இது முன்பு இருந்ததை விட சற்று மேலானது. ஆனால் இச்சிறு உண்மையை முன்னுணர, அரசியல் அமைப்புத் திட்டத்தை உருவாக்கியவர்களினால் முடியவில்லை என்பதை யும் கருத்தில் கொள்ளவேண்டும்.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையானது வேறு பல குறை பாடுகளையும் கொண்டுள்ளது. ஒன்று, மக்களுக்குப் பொறுப்பான ஒரு குறித்த பிரதிநிதி தொகுதிவாரித் தேர்தல் முறையின் மூலம் பதவியில் இருந்தார். ஆனால் விகிதாசாரப் பிரதிநிதித் துவ முறையின் கீழ் ஒரு பிரதிநிதி குறித்த மக்கள் பகுதியின ருக்குப் பொறுப்பு என்பதில் இருந்து விடுபட்டுவிட்டார். மக்கள் தமது தேவைக்கு தமது பிரதிநிதி யாரென்று தெரியாது தவிக் கும் நிலையை இத்திட்டம் உருவாக்கியது. இதனால் மக்களுக்
27

Page 28
கும் பிரதிநிதிக்கும் இடையிலான தொடர்பும் பரஸ்பர தங்கு நிலையும் விடுபட்டது. ஒரு பிரதிநிதி தனது கட்சிக்கு மட்டும் பொறுப்பாக இருக்க முடியுமே தவிர மக்களுக்கு அல்ல என்ற நிலை, இங்கு தோன்றுகிறது . இது கட்சியின் அதிகார வர்கக் அமைப்புக்கு வலுச் சேர்க்கின்றது.
விகிதாசாரப் பிரதி நிதித்துவத்தின் கீழ் சுயேச்சை உறுப் பினர் தமது பலத்தை இழந்தனர். எந்த ஒரு நபரும் தனித்து நின்று தேர்தலில் நிற்கமுடியாது என்ற நிலையைத் தோற்று வித்தது. அவ்வாறு சுயேச்சையாக ஒருவர் போட்டியிட முற்பட் டால் அவர்கள் குழுவாக வேண்டும். இவ்வாறு குழுவாகும் போதே அவர் தன் தனித்துவத்தை இழந்து விடுகின்றார். எனவே பெயரளவில் இங்கு சுயேச்சை குழு எனச் சொல்லப் பட்டாலும், நடைமுறையில் அவர் குழுவாகும் போது சுயேச்சை இல்லாமலேயே போய்விடுகிறார்.
இவ் விகிதாசார பிரதிநிதித்துவம் பெரிய கட்சிகளுக்கு வாய்ப்பையும் சிறிய கட்சிகளுக்குப் பாதிப்பான சூழலையும் உரு வாக்கியுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் கூட்டுச்சேருமி டத்து அவை இரண்டு வகைப் பாதிப்புக்குள்ளாகின்றன. ஒன்று சிறிய கட்சிகள் தேர்தலில் தமது சின்னத்தை இழந்து விடுகின் றனர் பெரிய கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிடவேண் டிய துர்ப்பாக்கியம் ஏற்படுகிறது. கட்சிக்கே வாக்கு என்ற முதல் கோட்பாடு இருப்பதனால் பெரிய கட்சியின் சின்னத் தின் கீழ் போட்டியிட்ட சிறிய கட்சி பெரிய கட்சியுடன் முரண்படும் காலத்தில் தனது, ஆசனத்தை இழக்க வேண்டி ஏற்படுகிறது. அவ்வாறு இழப்பதை பாதுகாப்பதற்கு நேரடி யாக அரசியல் அமைப்புத் திட்டத்தில் ஏற்பாடு இல்லை. ஆனால் இக்குறைபாட்டை உணர்ந்துகொண்டு நடைமுறை யில் இதனால் வரக்கூடிய நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக 1994 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை மையமாகக் கொண்டு ஐ. தே. க க்கும் இ. தொ' காக்கும் இடையே ஏற்பட்ட கூட்டமைப்பில் இரு கட்சிகளும் ஐ. தே. க வின் யானைச் சின்னத்தின் கீழ் போட்டி இடுவ தென்று முடிவானது. இதில் இ. தொ. கா வினால் நிறுததப் படும் உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐ. தே? விற்கு உரிமை இல்லை என்று ஒர் ஒப்பந்தத்தினை மேற்படி இரு கட்சிகளினதும் - தலைவர்கள் செய்துள்ளனர்.
28
 

அரசியற் சட்டத்தின்படி யானைச் சின்னத்தின் கீழ்தெரி 6565 உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய ஐ. தே. க விற்கு உரிமை உண்டு. அரசியற் திட்டம் உருவாக்கிய இந்த உரிமையை மறுதலிப்பதற்கே மேற்படி ஒப்பந்தம் செய்ய வேண் டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. உண்மையில் இப்படியான இந்த ஒப்பந்தம் என்பதே அரசியல் அமைப்பினது குறைபாட்டின் வெளிப்பாடுதான்.
இந்த வகையான ஒப்பந்தம் எவ்வளவு தூரம் வலிமை யானது என்பதை உறுதியாகக் கூறமுடியாது. ஓர் இ. தொ.கா நாடாளுமன்ற உறுப்பினரை ஐ, தே. க பதவி நீக்கம் செய்யு மாயின் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இ. தொ. கா. நீதிமன் றம் செல்லலாம். அரசியல் அமைப்பின் சரத்தை மீறும் வகையில் யாரும் ஒப்பந்தம் செய்ய முடியாது என்றும், எனவே இந்த ஒப்பந்தம் செல்லுபடி அற்றதென்றும் நீதிமன்றம் தீர்க் கலாம். இதனை விடவும் இன்னொரு விடயம் உண்டு. அதா வது இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தில் சிங்கள நீதி பரிபாலனத்தின் மனச்சாய்வு சிங்களக் கட்சிகள் பக்கமே. எனவே இப்படியான விடயங்களில் ஐ. தே, க விற்குச் சாத கமாகத் தீர்ப்பு அமைவது இயல்பு. இரு சிங்களக் கட்சிக ளுக்கிடையேயான பிரச்சினை எனில் முதலாவது வகைத் தீர்ப் புக்கோ அல்லது அந்தக் காலகட்ட ஆட்சியாளருக்குச் சாத கமான தீர்ப்புக்கோ நீதிமன்றம் போகலாம்.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை சிறுபான்மை இனங் களின் நலனில் கணிசமான அளவு பாதிப்பினை ஏற்படுத்தி யுள்ளது. இதனால் முஸ்லிம் மக்களும், மலையக மக்களும் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். இம்முறைமை ஐ.தே. க விற்கே முதற்தர சேவை செய்துள்ளது என்பதுடன் சிங்கள இனத்திற்கும் இலாபமீட்டிக் கொடுக்கக்கூடியதாய் உள்ளது. அடுத்து இதனால் பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளை விழுங் குவற்கான வாய்ப்பும் ஓரளவுண்டு.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழான தேர்த லில் இடைத் தேர்தலிற்கு இடமில்லாது போய்விடுகின்றது தொகுதிவாரித் தேர்தலில் எப்போதும் இடைத்தேர்தல்களிற்கு வாய்ப்பேற்படும். இடைத் தேர்தல் நாட்டின் அரசியற்
29

Page 29
துடிப்பை அறிவதற்கான ஒரு நாடித்துடிப்பாக அமையும். இத் தகைய இடைத் தேர்தல் இல்லாத இடத்து மாகாணசபைத் தேர்தல், மற்றும் உள்ளுராட்சித் தேர்தல் என்பன நாடித் துடிப்பை ஓரளவு அறிய உதவுமாயினும் இடைத் தேர்தல் களிற்கு இருக்கும் பலம் இவற்றிற்கு இருக்க முடியாது. ஏனெ னில் இடைத்தேர்தல்களினால் நாடாளுமன்ற அங்கத்தவர்களது தொகையில் ஏற்படும் மாற்றம் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் இயல்புடையது.
அடுத்து ஒரு கட்சி அல்லது ஒரு சுயேட்சைக் குழு தனது நாடாளுமன்றப் பிரதிநிதிப் பதவிகளை புறக்கணிப்பராயின் அதன்மூலம் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்ப இம்முறை மையில் வழியில்லை, 1991 = 94ஆம் ஆண்டுக் காலப் பகுதி யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் இவ் வாறு வெற்றிடமாய் இருந்ததனை நடைமுறையிற் காணலாம்.
இப்படியான ஒரு வெற்றிட நிலை ஏற்படக் கூடும் என்ப தைச் சிறிதும் யோசிக்க இயலாதவர்களது அரசியற் திட்டம் என்பதை மனதிற் கொள்ளவேண்டும் என்பதுடன் பொது வாக அரசியல் அமைப்பில் எதற்கும் ஒரு மாற்றுவழி வைப் பது இயல்பு. ஆனால் அந்த இயல்புகூட இங்கு முக்கிய விட யத்தில் கவனிக்கப்படவில்லை. O
\'
 

அத்தியாயம் ஏழு
ஜே. ஆரின் சாதக நிலையை உறுதிப்படுத்த மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்புமுறை
இவ்வரசியல் அமைப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்று மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பாகும். இலங்கையின் அரசியல் அமைப்பு வரலாற்றில் இது முதல்முறையாக இந்த யாப்பில் சேர்க்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு முதல்முறையாக மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு நடாத்தவும் பட்டுள்ளது.
பிரதிநிதித்துவ ஜனநாயகம் மட்டும் போதாது எனக் கரு தப்படும் நிலையில் நேரடி ஜனநாயகத்திற்கான வாய்ப்பைக் குறித்த சில விடயங்களிலாவது ஏற்படுத்த மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு உதவுமெனக் கருதப்படுகின்றது.

Page 30
மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு முதல் தடவையாக 1778 ஆம் ஆண்டு மசூசெற்ஸ் மாநிலத்தில் எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 1831ஆம் ஆண்டு சுவிட்சலாந்திலும் இது பிரயோகம் பெறலாயிற்று. பின்பு இத்தாலி, பிரான்ஸ், அயர் லாந்து, அவுஸ்ரேலியா போன்ற பல நாடுகளுக்கும் பரவலா யிற்று ஆசியாவில் பிலிப்பைன்ஸ் இலங்கை போன்ற நாடுக ளுக்கும் பரவியது.
இந்த வாக்கெடுப்பை இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்துவர். ஒன்று புதிதாக ஒரு முடிவை எடுப்பதா இல்லையா என்பதற்கான வாக்கெடுப்பு இது ஏற்பதா இல்லையாஎன்ற வாக்கெடுப்பு (Obi. gatory Referendum) எனப்படும். மற்றையது சட்டசபையினால் அல்லது ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட ஒரு முடிவினை அல்லது சட்டத்தினை முடிவான பின்பு ஆட்சேபனை அல்லது எதிர்ப்பின் காரணமாக அத்தகைய முடிவினை நிராகரிப்பதா அல்லது ஏற்பதா என்பதற்காக எடுக்கப்படும் வாக்கெடுப்பு. இது நிராகரிப்பதா அல்லது ஏற்பதா என்ற வாக்கெடுப்பு (optional) அல்லது aeulfatwe Referenaum) எனப்படும். இந்த இரண்டாவது வகை வாக்கெடுப்பில் இரு அங்கங்கள் உண்டு. ஒன்று சட்டத்தின் மீதான ஆட்சேபனை யின் பிரகாரம் அதனைஎதிர்த்து குறிப்பிடத்தக்க தொகையின ரின் கையெழுத்துடனான மக்கள் விண்ணப்பத்தின் பேரில்வாக் கெடுப்பு நடாத்தப்படுதல், இரண்டு ஜனாதிபதியின் முடிவை சட்ட மன்றம் ஆட்சேபிப்பதன் மூலம் அல்லது சட்டமன்றத்தின் முடிவை ஜனாதிபதி ஆட்சேபிப்பதன் மூலம் வாக்கெடுப்பு நடாத்தப்படுதல் இலங்கையில் முதலாவது வகையான வாக்கெடுப்பும் (obliga(ory) இரண்டாவது வகையில் (facultative) இரண்டாம் பிரிவும் ஓரளவு அடங்குகின்றன.
மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு என்பது ஒரு சிறந்த அம்சமே. ஆனால் இலங்கையில் இது பிரயோகம் பெற்ற முதலாவது தட வையே துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பதுடன் ஜே.ஆர். தனது நலன்களைப் பாதுகாப்பதற்கான உள்நோக்கத் துடனும், அதற்கேற்ப துஷ்பிரயோகம் செய்யக்கூடியதற்கான சட்ட ஏற்பாடுகளுடனும் இதனை உருவாக்கினார்.
1982 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கான பொது தேர்தலை நடாத்த து தனக்குச் சாதகமான நாடாளுமன்
றத்தின் பதவிக்காலத்தை நீடிப்பதற்குமாக இவ்வேற்பாட்டை அவர் முன்கூட்டியே திட்டமிட்டுப் புகுத்தி இருக்கவேண்டும்.
32.

ஏனெனில் இதன் முதலாவது பிரயோகமே நாடாளுமன்றத் தின் பதவிக் காலத்தை நீடிப்பதற்காகவே மேற்கொள்ளப்பட் பதனை அவதானிக்கலாம் .
இரண்டாவது நோக்கம் என்னவெனில் மேற்குலகின் நலன்களை உத்தரவாதப்படுத்தியுள்ள இந்த யாப்பை யாரும் இலகுவில் மாற்றிவிடமுடியாது என்ற உத்தரவாதத்தை மேற் குலகிற்கு அளிப்பதற்காக யாப்பின் நெகிழாத் தன்மைக் கான வலுவை மேலும் ஒருபடி அதிகரிப்பதற்கான ஒர் அம்சமாக இதனை மேற்குலகிற்குக் காட்டுவதற்காகவும் ஜே. ஆர். சேர்த்திருக்கலாம். N "IKI"
மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பானது 1982 ஆம் ஆண்டு துஷ் பிரயோகம் செய்யப்பட்டதனையும் அதற்கான உள்நோக்கத்தி னையும் இங்கு ஆராய்வோம். இதற்காக அரசியல் அமைப்பில் ஏற்கெனவே இருக்கும் ஒரு சரத்தினைத் தற்காலிகமாகத் திருத்து வதற்கென மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைமுறையில் இருக்கும் ஒரு சட்டத்தினை தற்காலிகமாக நிராகரிப்பதற்கேற்ற வகையில் இந்தச் சரத்து புகுத்தப்பட்டுள்ளமையால், இது மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பில் இரண்டாவது வகையான நிராகரிப்பதா அல்லது ஏற்பதா எனும் | Giyoso) aos 600 L (Facultative Referendum) சார்ந்ததாய் உள்ளது.
இலங்கையின் முதலாவது மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பானது அரசியல் அமைப்பில் நடைமுறையில் இருந்த ஒரு சரத்தினை தற்காலிகமாக நிராகரிப்பதற்காக எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு
என்பதை முக்கியமாக அவதானிக்கவேண்டும். இதற்கான அர சியற் திட்ட ஏற்பாடுகளை ஆராய்வோம்.
'விடயத்துக்கேற்ப,. நாடாளுமன்றத்தின் வாழ்க்கைக் லத்தை ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு காலத்துக்கு நீடிக்கின்ற. 62 ஆம் உறுப்புரையின் 2 ஆம் பந்தியின் ஏற்பாடு களைத் திருத்துவதற்கான அல்லது நீக்குவதற்கான மாற்றீடு செய் Absbeyl DIT Gor. . . . . . *ஒரு சட்டமூலத்தினை மக்கள் தீர்ப்பு வாக் கெடுப்பின்மூலம் நிறைவேற்ற வழிசெய்யப்பட்டுள்ளது.
அப்படியாயின் திருத்தத்திற்கு உள்ளாக்கப்படக்கூடிய அந்த 62 ஆம் சரத்தின் 2 ஆம் பிரிவினை நோக்குவோம்.
'நாடாளுமன்றமானது கலைக்கவேண்டிய காலத்துக்கு முன் னதாகக் கலைக்கப்பட்டாலொழிய, ஒவ்வொரு நாடாளுமன்றமும் அதன் முதலாவது கூட்டத்திற்கென நியமிக்கப்பட்ட தேதியில்
33

Page 31
இருந்து ஆறு ஆண்டுகள்கொண்ட காலத்திற்கு தொடர்ந்திருத் தல் வேண்டுமேயொழிய, அதற்கு மேற்பட்டல்ல என்பதோடு செனல் லப்பட்ட ஆறு ஆண்டுகாலம் கழிந்து போதலானது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாகச் செயற்படுதலும் வேண்டும். ( அழுத்தம் எனது). -
இதன்படி ஆறு ஆண்டுகாலம் முடிவடைந்ததும் நாடாளு மன்றம் தானாகவே கலைந்துவிட்டதாக அரசியல் அமைப்புக் கூறுகின்றது. இதன்படி பார்க்கையில் தனது அரசியற் திட்டத் தின் 62 ஆம் சரத்தின் 2 ஆம் பிரிவை நிராகரிப்பதற்கென 82 ஆம் சரத்தின் (ஆ) பிரிவை 182(ஆ) உருவாக்கி அதன் மூலம் முதலாவது மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பை அரசியற் திட்டச் சரத்து ஒன்றை தற்காலிகமாக நிராகரிப்பதற்காக, prirofflăL LDégoir 3ția artăQa Grill (Facultative Referendium) நடாத்தியுள்ளார் என்பதில் இருந்து, ஜே. ஆர். எப்படி தனது தேவைக்கேற்ற முன்யோசனையுடன் திட்டமிட்டு இதனை உருவாக்கி நடைமுறைப்படுத்தி உள்ளார் என்பதைக் கண்டு கொள்ள முடிகின்றது.
ஒரு நாடு வெளிநாடுகளுடன் தவிர்க்க முடியாத பெரும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் சந்தர்ப்பத்தில், அல்லது மிகப்பெரி தளவில் ஒர் உள்நாட்டு யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் சந் தரிப்பத்திற்தான் பதவிக்காலத்தை நீடிப்பது மரபு. ஆனால் 1982 ஆம் ஆண்டு இலங்கை எந்தொரு வெளிநாட்டுடனும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கவில்லை; அத்துடன் உள்நாட்டில் சாதாரண குழப் பம்தானும் இருக்கவில்லை. ஆனால் 1988 ஆம் ஆண்டு தெற்கில் முன்னெப்பொழுதும் இல்லாதளவிற்கு உள்நாட்டு யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது; வடக்கில் விடுதலைப் போராட்டம் பாரியள வில் இடம் பெற்றுக்கொண்டிருந்தது. மொத்தத்தில் இலங்கைத் தீவின் முழுப்பகுதியிலுமே பெரும் யுத்த நிலைமை அப்படியான 1988 ஆம், 89 ஆம் ஆண்டுகளில் சில மாதங்களுக்குள் அடுத் தடுத்து இருபெரும் தேர்தல்களையும் நடாத்தமுடியும் என்றால், 1982 ஆம் ஆண்டு ஏன் நாடாளுமன்றத் தேர்தல் நடாத்த முடி யாதிருந்தது?
எப்படிப்பட்ட ஒரு கட்டத்தில் இப்படியான பதவிக்காலத்தை நீடிப்பதற்கான மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பை நடாத்த வேண்டு மென்றோ குறித்த சரத்து கூறாதிருப்பதுடன், “விடயத்திற் கேற்ப . "என்ற ஒரு பொதுவான சொல், எவ்வித வரைய
34

A.
றையுமின்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே பதவிக்கால நீடிப்பை வரையறுக்கக்கூடிய எவ்வித பதத்தையும் பிர யோகிக்காமல் தமது தேவைக்கேற்ப எந்தொரு விளக்கமும் அளிக்கவல்ல ஒரு பொதுப்பதம் அதாவது "விடயத்திற் கேற்ப." என்ற பதம் திட்டமிட்டே அரசியல் யாப்பில் உபயோகிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதற்காக ஜே. ஆர். கூறிய ஒரு விளக்கம் என்னவெனில், தேர்தல் நடாத் தினால் "நக்ஸலைட்டுக்கள்’ நாடாளுமன்றத்துக்குள் பிரதி நிதித்துவம் பெற்றுவிடுவார்கள் என்பதுதான். அப்படி ஒரு "நக்ஸலைட்டும்” இலங்கையில் இல்லை. இது உண்மைக்குப் புறம்பான விளக்கம் மட்டுமல்ல; யார் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது மக் களேதான். மக்களின் அந்த உரிமையைத் தடுக்கும் செயலா கவே மேற்படி மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பை ஜனாதிபதி நடத் தினார் ( இதற்கேற்ப மேலதிக விபரங்களை ஐந்தாம் அத்தி யாயத்தில் பார்க்கலாம்.
'ஜனாதிபதி, நாடாளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட ஏதேனும் சட்டமூலத்தை. தனது தற்றுணியின் பேரில் மக்கள் தீர்ப்பிற்கென மக்களிடம் சமர்ப்பிக்கலாம்.’’ என்று எண் பத்தைந்தாம் சரத்தின் இரண்டாம் பிரிவு 85 (2) கூறுகின்றது.1
நாடாளுமன்றம் சட்டமூலம் சம்பந்தமாக எடுத்த தீர் மானத்தை நிராகரிப்பதா இல்லையா என்பதுதான் இந்த மக் கள் தீர்ப்பு வாக்கெடுப்பின் உட்பொருள். இப்படியான ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்தப்படுமிடத்துப் பல அடிப்படைப் பிரச் சினைகள் எழுகின்றன. மக்களின் இறைமையானது நாடாளு மன்றத்திற்கூடாகவும், ஜனாதிபதிக்கூடாகவும், மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பிற்கூடாகவும் பிரயோகம் பெறுமென நான்காம் சரத்துக் கூறுகின்றது. இறைமையைப் பிரயோகிப்பது பற்றிய உரிமையை மேற்படி மூன்று அம்சங்களுக்கும் இடையில் ஒதுக் கீடு செய்த விதத்தில் ஒன்றுடன் ஒன்று போட்டியிடவும், மோதவும் மேற்படி விதி வழிவகுத்துள்ளது.
நாடாளுமன்றத்தினால் நிராகரிக்கப்படும் ஒரு சட்ட மூலத்தினை ஜனாதிபதி மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பிற்கெனச் சமர்ப்பிக்கும்போதே நாடாளுமன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் மோதல் ஆரம்பமாகிவிடுகின்றது. மக்களால் தெரிவு
35

Page 32
செய்யப்பட்ட நாடாளுமன்றத்தினது இறைமையைப் பிரயோ கிப்பதற்கான உரிமையை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மீற முயல்வது முதற்கட்ட முரண்பாடாகும். இங்கு மக்கள் தீர்ப்பானது நாடாளுமன்றத்தின் முடிவுக்கு எதிரான தாக அமையுமிடத்து நாடாளுமன்றத்தின் அடுத்த நிலை என்ன? அதேபோல மக்கள் தீர்ப்பு ஜனாதிபதியின் விருப்பத் திற்கு மாறாக அமையுமாயின் ஜனாதிபதியின் நிலை என்ன என்பது போன்ற குறைகள் கூறப்படுகின்றன, ஏதோ ஒரு வகை யில் இதில் ஒன்றை இன்னொன்று புறக்கணிப்பது தவிர்க்க முடியாதது. நாடாளுமன்றத்தின் முடிவை மக்கள் தீர்ப்பு புறக் கணித்தால் நாடாளுமன்றம் கலையுமா? அல்லது ஜனாதிபதி யின் விருப்பத்தை மக்கள் தீர்ப்பு நிராகரித்து நாடாளுமன்மத் தின் முடிவை அங்கீகரித்தால் ஜனாதிபதி பதவி விலகுவாரா? இதற்கான எந்தவித அடுத்தகட்ட நடவடிக்கை சம்பந்தமான ஏற்பாடுகளும் அரசியல் அமைப்பில் இல்லை. 1969 ஆம்ஆண்டு பிரான்சின் ஜனாதிபதி டீ கோல் அரசியல் அமைப்புத் திருத் தம் ஒன்றை மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பிற்குச் சமர்ப்பித்த போது 53% வாக்குகள் திருத்தத்திற்கு எதிராகக் கிடைக்கவே அவர் பதவியை இராஜினாமாச் செய்தார். அங்கு குறைந்த பட்ச அரசியல் நாகரிகம் உண்டு. ஆனால் சிங்கள அரசியலில் அப்படி ஒரு நாகரிகத்தினை எதிர்பார்க்க முடியாதே! மரபுக ளும் சம்பிரதாயங்களும் வளர்ச்சி அடையாத நாடுகளில் இப் படியான நாகரிகத்தினைச் சிறிதும் எதிர்பார்க்க முடியாது. மரபுகள் வளர்ச்சி அடைந்த அமெரிக்காவிற்கூட முக்கியமான விடயங்கள் சட்டத்தினால் வரையறுக்கப்படாத இடத்து மரபு மீறல்கள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக அமெரிக்காவில் ஒரு வர் இரண்டு தடவைகள்தான் ஜனாதிபதியாக இருக்கலாம் என்ற மரபே ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் அந்த மரபு பின்பு மீறப்பட்டபோது அரசியற்திட்டத் திருத்தத்தின்மூலம் ஒருவர் இரு தடவைகள் மட்டுமே பதவி வகிக்கலாம் என்று வரையறுக்கப்பட்டது. முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக அடுத்த கட்டம் என்ன என்பதும் அதற்கான சட்ட வரையறை களும் அவசியம். -
இவ்வாறு மேற்குறிப்பிட்ட வகையிலான மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பை நடாத்துவதன் மூலம் ஒரு தேசத்தின் தலையாய மூன்று அம்சங்களுக்கிடையிலும் பிரச்சினையை மூட்டுவதாகவே இது அமைந்துள்ளது. இது ஒரு தேசத்தின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழியல்ல; பிரச்சினையை உருவாக்குவதற்கான வழியாகும்.
36

நேரடி ஜனநாயகத்திற்காக மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு என்பது, இற்றைவரையான பதினேழு ஆண்டுகால வரலாற் றில், பிழையான ஒரு நடவடிக்கைக்கான விடயத்தில் பிரயோகம் பெற்றதைத் தவிர ஏனைய விடயங்கள் எதற்கும் அது பிர யோகிக்கப்படவில்லை. பொதுவானதும், பிரதானமானதும், சிக் கலானதுமான விடயங்களில் மக்கள் தீர்ப்பு மூலமான சட்ட உருவாக்கம் ஒரு சிறந்த விடயமே ஆயினும், அதற்கேற்றாற் போன்ற நடைமுறைகளை இது கொண்டிருக்கவில்லை என்ப துடன் பாதகமான பிரயோகமே நிகழ்ந்தும் உள்ளது. ()

Page 33
அத்தியாயம் எட்டு
அரசியலமைப்பால் உருமறைப்புச் செய்யப்பட்ட நவீன முடியாட்சி
“தேவையே கண்டுபிடிப்பின் தாய்' நெருக்கடியே புதியவற்றின் ஊற்று, அப்படியாயின் 1978 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டதற்கான தேவை என்ன? இதற்கான பதிலில்தான் இந்த அரசியலமைப்புப் பற்றிய விளக்கமும் இதன் எதிர்காலம் பற்றிய கணிப்பீடும் அடங்க (Ա)ւգ, մյւն .
இலங்கையில் பிரித்தானியர்கள் காலத்துக்குக் காலம் தமது தேவைகளிற்கேற்ப மாற்றங்களைச் செய்தார்கள். அவ் வப்போது சில நெருக்கடிகளும் மாற்றங்களைத் தூண்டியிருந் தன. இறுதியாகத் தமது பாணியிலான ஒரு நாடாளுமன்ற

அரசியலமைப்பு முறையினை ஸ்தாபித்தனர். அந்த அரசியல மைப்பு இலங்கைக்குப் பழக்கப்பட்டு விட்டது. சுதந்திர இலங் கையை இலங்கைக் குடியரசாக ஆக்கமுற்பட்டபோது பிரித் தானிய முடிக்குரிய யாப்பினை இலங்கையின் குடியரசுக்கான யாப்பாக மாற்றம் செய்தனர். ஆனால் நாடாளுமன்ற முறை யில் மாற்றம் செய்யாது ஏற்கெனவே நிலவிவந்த அதே யாப்பு முறையை:ே பேணினர். இரு சபைகளைக் கொண்ட நாடாளு மன்றத்துக்குப் பதிலாக ஒரு சபையைக் கொண்ட நாடாளு மன்ற ஆட்சியையும் மகாதேசாதிபதிக்குப் பதிலாக ஜனாதிபதி யும் தவிர வேறு மாற்றங்களைச் செய்யவில்லை. உண்மையில் பெயர் மாற்றங்களைத் தவிர அடிப்படையில் இதற்கு முன்பி ருந்த சோல்பரி யாப்பை அப்படியே பேணியமைதான் 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பு ஆகும்.
எனவே 1972 ஆம் ஆண்டின் யாப்பிலிருந்த ஒரே ஒரு தேவை முடியரசின் கீழாக யாப்பிற்குப் பதிலாக ஒரு குடியரசுக் கான யாப்பு என்பது மட்டும்தான். அதுவும் பெயர் மாற்றங் களைத் தவிர வேறொன்றுமில்லை. இதற்கு முன்பிருந்த யாப்பு சுமுகமாக இயங்கியதாலும் அதற்கு சிங்கள அரசியல் வாதிகள் பழக்கப்பட்டிருந்தபடியாலும் அதைப் பின்பற்றினர்.
ஆனால் 1978 இன் யாப்புக்கான தேவை என்ன? அர சியல் திட்ட நெருக்கடிகள் 78 இன் யாப்பை உருவாக்கத் தூண் டவில்லை. யாப்பு மாற்றம் கோரி நாட்டில் கிளர்ச்சியெழ வில்லை. யாப்பில் திருத்தங்கள் வேண்டுமென்று பொதுவாகப் பத்திரிகைகளோ, புத்திஜீவிகளோ, கருத்துக்களை வெளியிட வில்லை. இந்நிலையில் யாப்பு மாற்றம் ஏன் தேவைப்பட்டது?
தமிழரை ஒடுக்குவதற்கு 72 இன் யாப்பு போதுமானது அல்ல என்று கருதமுடியாது. ஏனெனில் இனப்பிரச்சினை பற்றிய விவகாரத்தில் 72 இன் யாப்பின் கருத்துக்களையே 78 இன் யாப்பும் அப்படியே பின்பற்றியிருந்தது. அத்துடன் தமி ழரை ஒடுக்குவதற்கு ஐ. தே. கா. விற்கு ச. ச. வின் ஆதரவு எப்பொழுதும் கிடைக்கும். சில நுணுக்க விடயங்களைப் பற்றிச் சிந்தித்தாலும் கூட அடிப்படையில் இது சம்பந்தமாகச் சிந்திக் கத் தேவையிருக்கவில்லை. எனவே இந்த யாப்பு மாற்றத்துக் கான தேவையை அடையாளங் காண்பது இலகுவானது.
ஜே. ஆர். தன்னையும், திறந்த பொருளாதாரத்தையும் மனதில் கொண்டு இந்த யாப்பு மாற்றத்தை மேற்கொண்டார்.
39

Page 34
1. அவர் குடும்ப ஆதிக்கத்தால் அரசியலில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தவர். எனவே தன்முன் குடும்ப ஆதிக்கத் தின் இறுதித் தூணாக இருக்கும் திருமதி சிறிமாவோ பண்டார நாயக்காவை எதிர்கொள்வது.
2. சேனநாயக்க குடும்பத்தின் விசுவாசியாக டட்லியால்
வளர்க்கப்பட்ட பிரேமதாச ஐ.தே.க. விற்குள் பலமான ஒரு சக்தியாக இருப்பதால், அவரை எதிர் கொள்வது.
3. ஐ. தே. க. வை உறுதியான நிலையில் வைத்திருப் பதற்கு பலமான அமைப்பை உருவாக்குவது.
4. தனக்கெதிராக எழக்கூடிய மக்களின் கிளர்ச்சிகளையும் ஏனைய சக்திகளையும் ஒடுக்குவது,
5. தனக்குச் சாதகமான பல அரச செயற்பாடுகளை உருவாக்குவது.
6. இவற்றிற்காகத் தன்கையில் பெரும் வல்லமைகளைக் குவித்து அவற்றைப் பாதுகாக்கும் விதத்தில் அரசியல் திட்ட அரண்களை அமைப்பது.
7. திறந்த பொருளாதாரத்தை ஸ்தாபிப்பது.
8. உள்நாட்டில் உறுதியான தனியார் முதலீட்டை ஏற் படுத்துவது.
போன்ற தேவைகளே இவ்வரசியலமைப்புத் திட்டத்தை உருவாக்குவதற்கான நிபந்தனைகளாக அமைந்தன. ஆனால் அதே வேளையில் இனரீதியாக மேற்கொள்ளக்கூடிய விடயங் களையும் அவர் கைவிட்டாரில்லை இவை அனைத்திற்கும் ஈடு கொடுக்கக் கூடிய ஒரு அமைப்பை அவர் யோசித்தார். இதற் காக அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் திட்டம் பிரஸ்ஷியாவில் மன்னராட்சிக்காலத்தில் காணப்பட்டது போன்ற ஒரு அரசியலமைப்பு ஆகும்.
அதை அடிப்படையாகக் கொண்டு வேறு பல நாடுகளின் அரசியலமைப்புத் திட்டங்களின் அங்கங்களையும் தனது திட்டத் தில் சேர்த்துக் கொண்டார். பொதுவாக பிரான்சில் உள்ள டிகோல் இன் அரசியலமைப்பையே இவர்கள் பின்பற்றியதாகக் கூறப்படுவதுண்டு. ஆனால் டிகோலின் அரசியலமைப்புத்_திட் டத்தின் தேவையையும் மூலத்தையும், பார்த்தால் இதன் உண்மை விபரம் தெரிய வரும். UN
ロpロ
 

இரண்டாம் உலக யுத்தத்தில் பிரான்ஸ் ஜேர்மனால் கைப்பற்றப்பட்டுவிட்டது. அந்தச் சூழலில் கொம்யூனிஸ்டுகள் ஹிட்லரிற் கெதிரான தேசிய விடுதலைப் போராட்டத்திற் கூடாக பிரான்ஸில் துரிதவளர்ச்சியடைந்தனர். ஹிட்லரைத் தோற்கடித்த நேச நாடுகளின் படைகள் இறுதியாக பிரான்சை மீட்டு டி கோலிடம் ஒப்படைத்தனர். ஜேர்மன் துருப்புக்களால் சீரழிக்கப்பட்ட பிரான்ஸ் ஒருபுறமும் கொம்யூனிஸ்டுகள் போர்க் குணத்துடன் வலிமை பெற்றுவருவது மறுபுறமுமாக பிரான்ஸ் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இச்சமயம் தீவிர வலது சாரியான டி கோல் கொம்யூனிஸ்டுகளைத் தோற்கடிக்கவும் பிரான்சை சகஜ நிலைக்கு கொண்டுவரவும் அதிகாரத்தை ஓரிடத்தில் குவிக்கும் அரசியலமைப்பை உருவாக்க நினைத்தார். அந்த நிலையில் பிரஸ்ஸியாவின் மன்னராட்சிக்கால அரசியலமைப் பைக் கண்ணுற்றார். பிரஸ்ஸியாவின் சட்டசபைக்கு டயற் என்று பெயர். டயற்றும் மன்னனும் இணைந்த வகையில் சில நவீன தன்மைகளையும் சேர்த்து டிகோல் தனது அரசியல் திட்டத்தை உருவாக்கினார். அந்த டயற்றின் பின்னணியில் இருந்துதான் முதலாவது உலக யுத்தத்திற்கு வித்திட்ட கைசர் வில்லியமும், இரண்டாவது உலக யுத்தத்தை உருவாக் கிய ஹிட்லரும் தோன்றினர். எனவே டிகோலின் அரசியல் திட்டத்தின் மூலம் பிரஸ்ஸியாவின் மன்னராட்சியும் டயற்றும் இணைந்த ஒரு அமைப்பாகும்.
ஜே. ஆர். உம் தன்னை எதிர் நோக்கிய குடும்ப ஆதிக் கம், பிரேமதாஸ் மீதான அச்சம் வெகுசன எழுச்சிகளை அடக் குவதற்கான தேவை, திறந்த பொருளாதாரத்தை உறுதிப் படுத்துவதற்கான அவசியம் ஆகிய அனைத்தினதும் மத்தியில் உலகில் ஒரு காலத்தில் நிலவிய வல்லமை பொருந்திய முடியாட் சியை (Absolute Monarch ) போன்ற முடியாட்சி அரசியல மைப்பை உருவாக்கினார். ஐரோப்பாவில் காணப்பட்ட மகாபீற் தர், மகாபிரடெரிக், 14 ஆம் லூயி போன்ற வல்லமை மிகுந்த மன்னர்கள் போல தன்னை அரசியலமைப்புத் திட்டத்தினூ டாக மன்னராக்கினார். ஜே. ஆர் ஐ மன்னராக்குவதற்கான அரசியலமைப்புத் திட்டம் இதுவெனக் கூறலாம்.
இவற்றுக்காக தனது கால கட்ட நவீன நிலமைகளை உள்வாங்கிய ஜே. ஆர். நவீன முலாம் பூசிய பழைய மன்னர் போலானார். சட்டங்கள் சம்பிரதாயங்கள் போன்ற் தோற்றங் களை இவர் ஏற்படுத்தினார். அதற்கு அரசியலமைப்பை ஒரு கருவியாக ஆக்கிக் கொண்டார்.
41

Page 35
இதனால், ஐ. தே. க வைப் பலப்படுத்த விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையையும் சிறிமாவின் குடும்ப ஆளுமையை எதிர்கொள்ள முடியாத நிலையில் அவரை அரசியல் களத்திலி ருந்து அகற்ற 81 ஆவது சரத்தையும் பிரேமதாசாவை எதிர் கொள்ள உப ஜனாதிபதியின்மையையும் மேலும் தனக்குச் சாதகமான நேரத்தில் பயன்படுத்துவதற்கென மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பையும், திறந்த பொருளாதாரத்தை உறுதிப்படுத் துவதற்காக விசேஷ சரத்துகளையும் உருவாக்கியதுடன், சட்டத் துறைக்கும் நீதித்துறைக்கும் மேலாக ஜனாதிபதி முறைமையை உருவாக்கியும் 1985 இல் ஐ.தே.க. வின் 28 ஆவது மகா நாட்டில் ஜே.ஆர். உரையாற்றும் போது சட்டசபை, நீதித்துறை ஆகிய இரண்டிற்கும் மேலான இடத்தில் ஜனாதிபதி உள்ளார் raig Jinjaortif (Cited in Lanka Guardian 15.7. 91). yurg பல் திட்டத்தின் முற்பகுதியால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்கும் மக்களின் கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்கும் என பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம் எனப்படும் 155 ஆவது சரத்தையும் உருவாக்கினார்.
இந்த வகையில் ஜே. ஆர். தனது காலத்தில் காணப் பட்ட எல்லா வளங்களையும் பயன்படுத்தி அவ்வளங்களைத் தான் தொடர்ந்து பேணக் கூடிய வகையில் அரசியலமைப்பை உருவாக்கினார். இவரிடமிருந்த பிரதான வளம் நாடாளுமன் றத்தில் 6 இல் 5 பெரும்பாண்மை பலமும், அவர்களிலும் பெரும் பாலானோர் பிரேமதாசாவின் ஆட்களாயிராமல் தன்னுடைய ஆட்களாயிருந்ததும்தான். இப்பலத்தை வைத்துக்கொண்டு உருவாக்கிய அரசியலமைப்பைத் தொடர்ந்து பேணவும் இந்த அரசியலமைப்பாலேயே வழியும் வகுத்தார் என்பதால், நாடா ளுமன்றத்தை கட்டுப்படுத்தும் வல்லமை மிக்கவராகவும் இருந் தார். இவரின் விசேட சூழலுக்கேற்ற இந்த அமைப்பு எல்லோ ருக்கும் எல்லா வேளைகளிலும் பொருந்தும் என்பதல்ல. ஜே ஆர். மையத்தில் இருந்து எழுந்த இத்தகைய குறை பாடுள்ள அரசியலமைப்பானது இயல்பான நெருக்கடிக்குள்ளா வது தவிர்க்க முடியாதது. இந்த அரசியலமைப்பு நடைமுறை யிலிருந்த காலப் பகுதியில்தான், முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு இலங்கைத்தீவில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இக்காலப் பகுதியில்தான் இலங்கைத்தீவு மனித உரிமை மீறல் களிற்குப் பேர்போன ஒரு நாடாகியது. இது ஒரு ஆக்க நோக்க அரசியலமைப்பு அல்ல. ஜே. ஆர். இன் எதிரிகளை எதிர்கொள் வதற்கான அரசியலமைப்பு ஆகவும் அமைக்கப்பட்டதுடன் இதன் விளைவு இரத்தக் களரியாகவும் அமைந்துவிட்டது. ()
42

அத்தியாயம் ஒன்பது
புதிய நிலைமைகளின் கீழ், ஜே. ஆரின் அரசியலமைப்பு உள்நாட்டு யுத்தம்தான் வழியா?
மூன்று ஜனாதிபதிகளின் கீழ் பதினேழு ஆண்டுகளாக இவ்வரசியலமைப்பு நடைமுறையில் இருந்து வருகிறது. இக் காலகட்டத்தில் ஒரே கட்சி ஆனால் மூன்று ஜனாதிபதிகள் பதவி வகித்துள்ளனர். நாடாளுமன்றத்தேர்தலும் ஜனாதிபதித்தேர்த லும் நிகழ வேண்டிய இக்கால கட்டத்தில் அரசியல் கொந்தளிப் புக்கள் பெரிதும் ஏற்பட்டுள்ளன. ஐ. தே. க. விற்கெதிரான உணர்வலைகளே அதிகமுள்ளதாக அபிப்பிராய் வாக்கெடுப்புக் களும் அரசியல் அவதானிகளின் கூற்றுக்களும் உள்ளன. பொதுமக்கள் ஐக்கிய முன்னணி வெற்றி பெறும் என்று

Page 36
பொதுவாகக் கூறப்படும் அதே வேளையில் அறுதிப் பெரும் பான்மையை அது பெறாமல், தொங்கு நாடாளுமன்றத்துக் கான வாய்ப்புக்களே உண்டு என்றும் அபிப்பிராயக் கணிப் புக்கள் கூறுகின்றன,
இத்தகைய பின்னணியில் பொதுமக்கள் ஐக்கிய முன்னணி ( பொ. ஐ மு ) தான், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட் டியதும் இந்த அரசியலமைப்பை மாற்றப் போவதாகவும் ஜனாதிபதி முறையை உடனடியாகக் கலைத்து வெஸ்ற் மினிஸ் ரர் பாணியிலான நாடாளுமன்ற முறையைக் கொண்டுவரப் போவதாகவும் அறிவித்துள்ளது. ஐ. தே. க. தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தான் தேர்தலில் வெற்றியீட்டியதும் நேர டியாக மக்களால் தெரிவு செய்யப்படும் நிறைவேற்று அதிகார முடைய ஜனாதிபதியை உருவாக்கப் போவதாக அறிவித்துள் ளது. இதன்படி தெரிவு முறைதான் வேறுபடுமே தவிர, ஜனாதிபதிமுறை மாறாது.
இச்சூழலில் அரசியலமைப்பை உருவாக்கிய ஜே. ஆர். * இந்து " பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் 'இவ்வரசிய லமைப்பை யாரும் இலகுவில் மாற்றியமைத்துவிட முடியாது' என்று கூறியுள்ளார். இத்தகைய பின்னணியில் நடைபெறக் கூடியது என்ன? என்பதை இங்கு ஆராய்வோம்.
அரசியலமைப்பு சார்ந்த சட்ட வரம்புகளின்படியும், நாட் டின் அரசியல் யதார்த்தத்தின்படியும் இதைப் பரிசீலிப்போம்.
அரசியலமைப்பின்படி ஜனாதிபதி முறையில் ஏதாவது மாற் றம் அல்லது திருத்தம் கொண்டுவர வேண்டுமாயின், இரண்டு நிபந்தனைகளை நிறைவேற்றியாகவேண்டும்.
(2) நாடாளுமன்றத்தில் * பங்கு பெரும்பான்மை பலத்தை
நிரூபிப்பது.
(2) மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பில் மக்களின் சம்மதத்தைப்
பெறுவது.
விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ் எந்தவொரு கட்சி யும் * பெரும்பான்மை பெறமுடியாது என்பதை தேர்தல் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன; இரு பெரும் கட்சிகளும்
44

ஒன்று சேர்ந்தால்தான் இதை மாற்றலாம். ஐ. தே. க. ஜனாதிபதி முறையில் சிறு திருத்தம் செய்யத் தயாராயிருக்கி றதே தவிர மாற்றம் செய்யவில்லை. எனவே மாற்றத்துக்காக ஐ.தே. க, பொ. ஐ. மு. உடன் இணைந்து வாக்க ளிக்காதஇடத்து மாற்றம் சாத்தியப்படாது. அதே சமயம் திருத்தத்துக்காக பொ. ஜ. மு. , ஐ. தே. காவுடன் இணைந்து வாக்களிக்காவிட்டால் திருத்தமும் சாத்தியப்படாது. இப்படி யாக இரண்டுமே இரு கோணங்களில் நிற்கும்போது அரசி யல் திட்டம் தன்னியல்பாகவே நெருக்கடிக்குள்ளாகும்.
பொ. ஐ. மு. வெற்றி பெறுவது என்பது ஊர்ஜிதமா னது போல ஒரு நிலை தோன்றுகிறது. இதனால் பொ. ஐ. மு வெற்றி பெற்றதும் கட்சியின் உபதலைவியாகிய திருமதி சந்திரிக்கா குமார ரணதுங்க பிரதமராக நியமிக்கப் பட வேண்டும் என சுதந்திரக் கட்சியின் செயலாளர் தோழ மைக் கட்சியின் கையெழுத்துடன் ஜனாதிபதிக்கு அறிவித் துள்ளார். ஜனாதிபதி இதில் எப்படி நடந்துகொள்ளக் கூடிய நிலைமை உண்டு என்பதைப் பார்ப்போம்.
43 ஆம் சரத்து 3ஆம் பிரிவின்படி " ஜனாதிபதி அவரது கருத்துப்படி பராளுமன்றத்தின் எந்த உறுப்பினரும் நாடாளு மன்றத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அதிகம் வாய்ப் புள்ளவராக இருக்கிறாரோ அந்த உறுப்பினரை முதலமைச் சராக நியமித்தல் வேண்டும் ' என உள்ளது. இதன்படி பார்த்தால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெறுகின்ற ஒருவரை முதலமைச்சராக்க வேண்டும் என்ப தில்லை. அதுவும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை பெறக்கூடிய ஒருவர் எனத் தாம் கருதும் ஒருவரைப் பிரதமராக நியமிக்கலாம். இதில் பெரும்பான்மைக்குப் பதிலாக நம்பிக்கை என்ற சொல்லும் ஜனாதிபதியின் கருத்துப்படி என்ற சொல்லும் முக்கியமானவை. அமெரிக்க நிலைமை ஒன்றினை உதாரணமாகக கொண்டு இதை விளக்க முற்படுவோம்.
அமெரிக்க ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலர் என அழைக் கப்படும் பாதுகாப்பு அமைச்சரை நியமிக்கும் உரிமையுடையவர். ஆனால் அந்த நியமனத்தை கொங்கிரஸ் வாக்கெடுப்பின் மூலம் நிராகரித்தால் அது ச்ெசு லுபடியற்றது என அரசியலமைப்புக் கூறுகிறது. ஜோர்ஜ் புஷ் நியமித்த பாதுகாப்புச் செயலாளர் விவகாரத்தில் நடந்தது இது. ஆனால் இலங்கையில் ஜனாதிபதி நியமிக்கும் ஒருவரை மறுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை.
45

Page 37
அரசியலமைப்புத் திட்டத்தின்படி ஜனாதிபதி எந்தக் கட்சிக் காரரையும் பிரதமராக்கலாம். ஜனாதிபதியானவர் பதவியிலி ருக்கும்போது அவர்தான் மந்திரி சபையின் தலைவர். அவர் மந் திரி சபையின் தலைவர் மட்டுமல்ல, மந்திரி சபையில் அமைச் சர்களுக்கான பதவிகளை வகிக்கக்கூடியவர். சிலவேளை மக் களை ஏ0ாற்றுவதற்காக அரசியல் சூழலை அனுசரித்துப் போவ தற்காகவும் ஜனாதிபதி பொ.ஐ.மு சார்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்கலாம் (இதில் எழக்கூடிய வேறு சிக்கல்களைப் பின்னர் பார்ப்போம்). அப்படி நியமித்தால் ஐ.தே.க. ஜனாதிபதியின் கீழ் பொ. ஐ மு. அமைச்சர்கள் இருக்கவேண்டும். அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஜனாதிபதிதான் தலைமை தாங்குவார். இது தான் அரசியல் திட்ட ஏற்பாடு. இதனை பொ. ஐ. மு. ஏற் ஆப்போவதில்லை. எனவே அரசியல் கொந்தளிப்பு ஏற்படக் கூடும். பொ. ஜ.மு. இற்கு 4 பெரும்பான்மை கிடைக்காத பட் சத்தில் அவர்கள் ஜனாதிபதி ஆட்சியை அரசியல் திட்ட ரீதியாகக் கலைக்கும் முயற்சிகளைச் செய்யமுடியாது. அப்படித் தன்னிச்சையாக ஜனாதிபதி ஆட்சியை அவர்கள் இல்லாமற் செய்வதாக பிரகடனம் செய்யுமிடத்து அரசியலமைப்பின் பாது காவலர் என்ற வகையில் ஜனாதிபதி அதற்கெதிராக நட வடிக்கை எடுக்கும் அதிகாரமுடையவர். ஐ.தே. க. நிலைமைக் கேற்ப தானாக ஒதுங்கினால் தவிர இதற்குரிய சாத்தியக் கூறுகள் குறைவு. III,
ஐ. தே. க. இதில் தான் தோற்கக் கூடுமாயினும் பல திசை திருப்பங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்த முனைகிறது. ஒருபுறம் பொ.ஐ.மு, வெற்றி பெற்றாலும் பிரதமராக பொ.ஐ.மு. யைச் சேர்ந்தவரை நியமிக்கவேண்டிய சட்டரீதியிலான கடமை ஜனாதிபதிக்கு இல்லையானாலும், மக்கள் மத்தியில் குழப் பத்தை உண்டாக்க அப்படியொரு நியமனத்தை செய்வதற் கான நிலை ஒரு புறமும் பொ. ஐ. மு விற்குள் சிக்கல்களை உருவாக்க சந்திரிக்காவிற்குப் பதில் சிறிமாவை பிரதமராக န္တီ4:# ဒီဇးစံ எண்ணமும் ஐ. தே, க. யிடம் உள்ளது போல்தெரி
நிறது.
1945 இல் இரண்டாம் உலக யுத்தம் முடிந்ததும் நிகழ்ந்த பிரித்தானிய நடாளுமன்றத்திற்கான தேர்தலில் பதவியிலிருந்த சேர்ச்சில் தலைமையிலான அரசாங்கம் தோற்கடிக்கப்படவே. தொழிற்கட்சி பாரிய வெற்றியைப்பெற்றது. இதில் தொழில் கட்சியில் இரு தலைவர்கள் முன்னணியில் நின்றனர். ஒருவர்
46

பெவின் (Bevin) மற்றவர் அட்லி (Attee) மொத்தம் 393 உறுப் பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 247 ஆசனங்களை அறுதிப் பெரும்பான்மையுடன் தொழில் கட்சி வென்றிருந்தது. இந்த வெற்றிக்குத் தலைமை தாங்கியவர் பெவின். இவர் தொழில் கட்சியில் தீவிர நிலைப்பாடுகளைக் கொண்டவர். கட் சிக்குள் அட்லியை விடச் செல்வாக்குள்ளவர். இந்த நிலையில் பெவினைப் பிரதமராக்குவதற்கான பாராளுமன்றக் குழுக் கூட்டத்தை தொழில்கட்சி கூட்டியது. தொழிற்கட்சியின் பாரா ளுமன்றக் குழுத்தலைவராக பெவின் தான் தெரிவு செய்யப்படு வார் என்ற நிலையிருந்தது. ஆனால் அதற்கிடையில் சேர்ச்சில் சதித்தனமான ஒரு முடிவுக்கு வந்தார். பிற்பகல் இரண்டு மணிக்கு பாராளுமன்றக் குழுக்கூட்டம் கூட இருந்த வேளை அதற்குச் சில மணித்தியாலங்களிற்கு முன்பு சேர்ச்சில், மகாராணியைச் சந்தித்து கூட்டம் கூடி பெவினைத் தலைவராகத் தீர்மானிக்க முன்பு மிதவாதியும் தம்முடன் ஒத்துப்போகக் கூடியவருமான தொழிற்கட்சியின் மற்றொரு தலைவரான அட்லியை பிரதம ராக நியமிக்குமாறு ஆலோசனை கூறினார். மகாராணியார் அவ்வாறே செய்தார். இது கூட்டம் கூட்டப்பட சிலநிமிடங்க ளிற்கு முன்பு நடந்தது. அட்லி பிரதமராக நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குகளின்படி கூட்டம் ஆரம்பமாகியது. அவ்வேளை கூட்டத்துள் நுழைந்த அட்லி தன்னை மகாராணியார் பிரதமராக நியமித்துவிட்டதை அறிவித்தார். இதே மாதிரி சிறிமாவை பிரதமராக நியமிக்க விஜேயதுங்க யோசிக்கிறார் ஆயினும் தொழிற்கட்சி விட்ட பிழையை பொ. ஐ. மு , விடவில்லை. அது தனது பாராளுமன் றக் குழுத்தலைவராக சந்திரிக்காவை அறிவித்துள்ளது. ஆனால் விஜேயதுங்கா கட்சித்தலைவியைத்தான் பிரதமராக்கப் போவதாகக் கூறுகிறார். இதில் சட்டம், சம்பிரதாயம் இரண் டும் இல்லை. விஜேயதுங்க வாய்ப்புக்களைப் பயன்படுத்தி நிலைமையைக் குழப்ப முயற்சிக்கிறார்.
ஐ தே. க. நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந் தாலும் விஜேயதுங்க பொ. ஐ. மு. யின் அமைச்சரவையைத் தான் அமைக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் அவர் இப் பொழுது பொ. ஜ, மு. யின் அமைச்சரவையை அமைக்கப் போவதாகக் கூறுவது தமக்கேற்பட்டுள்ள பலவீனத்தின் மத் தியில் குழப்பம் ஒன்றை உண்டாக்குவதற்கான உத்திதான்.
பொதுத்தேர்தல் முடிவடைந்ததும் காபந்து அரசு உடன
டியாகத் தன்னியல்பாகக் கலைந்துவிடும் அப்பொழுது புதிய நாடாளுமன்றத்திலிருந்து அமைச்சர்களை ஜனாதிபதி நியமிக்க
47.

Page 38
வேண்டும். இக்கட்டத்தில் ஜனாதிபதி பொ. ஐ. மு. யினரை அமைச்சர்களாக நியமித்து அதற்கு அவரே தலைமைதாங்கு வதை பொ. ஐ. மு. ஏற்காது. அரசியல் அமைப்பின்படி 43 ஆவது சரத்தின் 2 ஆம் விதி பின்வருமாறு கூறுகிறது. “ஜனா திபதி அமைச்சரவையின் ஒரு உறுப்பினராக இருத்தல் வேண் டும் என்பதுடன் அமைச்சரவையின் தலைவராய் இருத்தலும் வேண்டும். ? இதனை பொ. ஐ. மு. எப்படி ஏற்கும்?
இவ்வாறு பொ. ஐ. மு. விலிருந்து பிரதமரையோ ஏனைய அமைச்சர்களையோ நியமிக்காது ஐ. தே. க. விலிருந்து அமைச் சர்களை நியமிக்க அரசியலமைப்பு இடங்கொடுப்பதால் விஜேயதுங்க தனது பதவிக்காலம் வரையிலும் ஐ. தே. க வினரை அமைச்சர்களாக நியமித்தால், பொ. ஜ, மு. கிளர்ச் சியில் ஈடுபடக் கூடும். இத்தகைய ஒரு நிலைமையில் பொ, ஐ. மு. எப்படிச் செயற்படப்போகிறது என்பது அதன் வலி மையிலேயே தங்கியுள்ளது.
அரசியலமைப்பானது இப்படிப்பட்ட போராட்டத்திற்கு வழி வகுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. அரசியலமைப் பின் முரண்பாடுகள் இதற்குத்தான் வழிவகுக்க முடியும்.
நான் சாதாரண பெரும்பான்மை பலம் பெற்றாலேயே அரசியலமைப்பை மாற்றப் போவதாகவும் அதற்குரிய மக் கள் ஆணையாக இத்தேர்தலை தாம் பயன்படுத்துவதா வும் பொ. ஐ. மு. கூறியுள்ளது உண்மையில் அரசியலமைப்பு ரீதியாக இப்படியொன்றைச் செய்ய முடியாது. ஏனெனில் அரசியலமைப்பில் இப்படியொரு மாற்றத்துக்கு விதிகள் இல்லை. இப்படியொரு மாற்றத்துக்குப் போவதை ஐ. தே.க சட்டப்படி எதிர்க்க (էքւգել էի. இதன் பிரச்சினையைப் பார்ப் பேrம்
ஒன்று, ஒரு பொதுத்தேர்தலை மக்கள் ஆணையாக மாற்ற முடியாது. ஏனெனில் மக்கள் வேறுநோக்கங்களிற்காகவும் இதில் வாக்களித்திருக்கலாம். 1977 இன் பொதுத்தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி பொதுமக்கள் ஆணையைப் பெறும் ஒரு தேர்தலாகப் பயன்படுத்தியது. அதில் ஒரு தவிர்க்க முடியாத நிலை இருந்தது. அதாவது ஆட்சியில்லாத தமிழர்கள் தேர் தலை நடாத்த முடியாது என்பதால் 9) Jér வைக்கும் தேர்தலை அதற்குப் பயன்படுத்துவது என்பதுதான், ஆனால் சிங்களவர்களைப் பொறுத்தவரை நிலைமை இவ்வாறில்லை. இப்படியொரு ஆணைக்கு அரசியலமைப்பில் இடமில்லை
48.

என்பதோடு, சம்பிரதாயத்திலும் அதற்கு இடமில்லை. ஆனால் தேர்தலில் பொ. ஐ. மு. வெற்றிபெற்றால், பின்பு அத்ற்கி ருக்கும் வெகுசன ஆதரவு அலைகளைப் பொறுத்தே இது நிர்ணயிக்கப்படும். ஐ. தே க. தானாக ஒதுங்கி மாற்றத் துக்கு இடம் விடாவிட்டால் பொ. ஐ. மு. தேர்தலில் வெற்றி யீட்டியதும் பொலிசும், இராணுவமும் பொ. ஐ. மு. இற்கு எதிராகச் செயல்படும் மனப்பாங்கை இழந்துவிடுவர். ஒரு புறம் விஜேதுங்காவின் ஆணைக்கு முப்படைகளும் கீழ்ப்படிந் வேண்டும். மறுபுறம் வெற்றிபெற்ற கட்சிக்கு எதிராகச்
செயற்படும் மனப்பாங்கு இன்மை இவ்விரண்டுக்கும் இடை
யில் முப்படைகள் தளம்பும் அதனால் ஐ. தே. க - பொ. ஐ.மு. ஆதரவாளர் மத்தியில் மோதல் இலகுவாக நிகழ முடியும். இது அரசியலமைப்புப்படி ஒரு உள்நாட்டு யுத்தத்திற்கான
கட்டமே. தோல்வியைத் தொடர்ந்து ஐ. தே. க. பின்வாங்
கத் தவறினால் அதனால், அரசியல் திட்ட அதிகாரத்தையே பிடித்துக் கொண்டிருக்க விரும்பினால் உள்நாட்டு யுத்தம் தவிர்க்க முடியாமலிருக்கும். அரசியலமைப்பு பலாத்காரத்துக்கு உட்படுவதைவிட வேறு வழியிருக்காது. ... '"
போதிய பலமிருக்குமானால் அரசியலமைப்பை பொ. ஜி.மு மாற்றுமீடத்து இதுவரைகாலமும் இலங்கையில் இருந்து வந்த அரசியலமைப்பு மரபு என்பது உடையும். இதுவரை இலங்கை யின் ஒரு அரசியலமைப்பானது அந்த அரசியலமைப்பின் சட்ட திட்டங்களிற்கு உட்பட்ட முறையிலேயே புதிய அரசியல் திட்டத்தைக் கொண்டுவந்தது. ஐ தே. க. வின் ஒத்துழைப்
பின்றி பலாத்காரமாக ஒரு அரசியலமைப்பை கொண்டுவந்
தால் அது இலங்கையின் அரசியமைப்பு மரபை மீறிய
ஒன்றுதான்.
இதற்காக, இதற்கு முன்பு சட்டதிட்டங்களில் மீறல்கள் நிகழவில்லை என்பதல்ல. குறிப்பாக தமிழர்கள் சம்பந்தப் பட்ட விவகாரங்களில் எப்பொழுதும் மீறல்கள் நிகழ்ந்துவந் துள்ளன. முதன்முதலாக 29ஆவது சரத்தை மீறி 1956 இல் தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது,
': "\
தற்போதைய பொதுத்தேர்தலில் கூட், 3 ஆம், 4 ஆம்
F
ரத்துக்களை மீறி தமிழ் மண்ணில் தேர்தல் நிகழ்கிறது. 81 ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் 24 ஆம் விதி 2 ஆம்
*4 தேர்தல் சாவடிகளை ஒருங்கிணைக்க ஏற் ཁ་ཀ་ டுள்ளது. ஆனால் உண்மையில் அந்த ஏற்புாடு ஏன் செய்யப்
O49)
% turns. ീ/മg ചെ

Page 39
பட்டது என்றால் தேர்தல் காலத்தில் வெள்ளப் பெருக்குப்
போன்ற எதிர்பாராத காரணங்களால் ஒரு சில இடங்களில் தேர்தல் சாவடிகளை நிறுவ முடியாத நிலையில் அச்சாவடி களை அருகில் உள்ள வேறுசாவடிகளுடன் இணைத்து மக்களை அங்கு வர்க்களிக்கக் கூடிய வகையில் தேர்தல் ஆணையாளர் வகை செய்ய அது இடங்கொடுக்கிறது. ஆனால் தமிழ் மண் னின் நிலை அப்படியல்ல. இங்கு 400 சாவடிகளை ஒருங்கி ணைக்கிறார்கள். எத்தனை சாவடிகளை இணைக்கலாம் என மேற்படி தேர்தல் சட்டத்தில் வரையறையில்லாததால் இங்கு 400 சாவடிகளையும் கூட இணைப்பதற்கு அவர்கள் முற்படு கிறார்கள். ஆனால் யதார்த்தத்தின்படி சட்டத்தின் உண்மை பான அர்த்தத்தின் படியும் அரசியலமைப்பு திட்ட விதியின் மேலாண்மையின் படியும் இங்கு தேர்தல்களை நடாத்த முடி
யாது. சிங்கள சட்ட நீதிமன்றம் என்ற வகையில் அது சரத்தை மீறி சட்டவிதிக்கு விளக்கமளித்து சட்டவிதியின்படி தேர்தலை
அனுமதித்துள்ளது.
இப்படியாக அரசியல் சரத்துக்களை யெல்லாம் தமிழரை மையமாகக் கொண்டு மீற சிங்கள அதிகாரிகள் பழக்கப்பட்டு விட்டார்கள். இவ்வாறு சாதாரணமான சரத்துக்களை மீறிப் பழக்கப்பட்ட இவர்கள் மொத்தத்தில் ஒரு அரசியலமைப்பையே மீற மாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. எப்படியோ, அரசிய லமைப்பை மீறினால் தவிர அரசியல் நடாத்த முடியாது என்
நிலையே இன்று இலங்கைத்தீவின் அரசியலாகிவிட்டது.
>2 * 47մւլ క్రైగ్) ஜே. ஆர். மேலாடையின்றி அரை ஆடை R) (S அணிந்து சேற்றில் கால்பதித்து ஏர் பிடித்து $ . உழும் உழவனாய் 1978 ஆம் ஆண்டு 邻 s s' பண்டுவஸ்நுவரவில் ஏர்பூட்டுவிழா நடாத்தி 9 f னார் இதைக் கண்டு தனது மின்னேரியாத் క్టోస్ట్రీస్లో தெய்வமே நேரில் வந்ததுபோல சிங்களப் * 怒 பாமரமக்கள் சொக்கி நின்றனர்.
ジ。
2) Lanka Guardian- 15. 9. 1993, 3) N. M. Perera, Critical Analysis...' the New Constitulion of Sri Lanka Govern." ment, Star PreSS Colombo [1978 (?) PP. 44 - 48. 4) ibid, pp. 44-48
| ) 50 Π.
 
 
 
 


Page 40