கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பு

Page 1
)
s.
 
 
 
 
 
 


Page 2
鬣
 

தி
இலங்கைக் * குடியரசின்
* அரசியலமைப்பு
இரண்டாம் பாகம்
(ابو (کہ ہماہم ھدی خہ یہ 41 ہائی ہو رہا ں ہی :ே 1 ஜைடிெரிங் இல் ہ جو مسرد ہوتیegقائی ک( ہی نہvصہ ہوں تکمیوہ بھی \ یہ ہمہ 1 ہوط کۓ ویو
اگما بارہ چھوئی. (ق)
a 3, 7S
UN இ. முத்துத்தம்பி, எம். ஏ.
பொருளியல் விரிவுரையாளர் இலங்கைப் பல்கலைக் கழகம் (: யாழ்ப்பான வளாகம் 。
3 ད་ལ། N. S (AC c

Page 3
திருமதி சுந்தரேஸ்வரி முத்துத்தம்பி
2ィ பதிப்புரிமை a、岛C ଏମ୍ ଅର୍ଚ୍ଚ முதலாம் பதிப்பு: 1973 كل متع"
لا سيس
THE REPUBLICAN CONSTITUTION OF SRI LANKA --Part II
E. MUTHUTHAMBY
First Edition: 1975
திருமகள் அழுத்தகம் சுன்னகம்
æà: 11195
 
 
 
 
 

IX.
ஆசிரியரின் முன்னுரை
இரண்டாம் பாகம்
பிரதம அமைச்சர்
.
2.
| 3.
讹
盤
5。
6
8.
s: அரசியல்தனம் ঠুঞ্জ
2; ஆறு பிரதமர்கள் ** 38 பிரதமரும் அவர் கட்சியும் 臀@砷 * பிரதமரும் சட்டத்துறையும்  ை 5. பிரதமரும் நிருவாகத்துறையும் 物@牌 6. பிரதமரும் நீதித்துறையும் . " معه 7 பிரதமரும் வெளிவிவகாரமும் 恩、领 8. பிரதமரும் அமெரிக்க ஜனதிபதியும்
ஜனதிபதி
13 மகாதேசாதிபதி Еf}: «л 2 ஜனதிபதியின் நியமனமும்
சேவை நிபந்தனைகளும் 岛@佛 3 ஜனதிபதியும் நிர்வாகத்துறையும் . 4 ஜனதிபதியும் சட்டத்துறையும் . 5 ஜனதிபதியும் நீதித்துறையும் 娜娜像 6.
ஜனதிபதியும் வேறு ஏற்பாடுகளும்.
அரச அலுவலர்
பொதுக் குறிப்புக்கள் . معه அமைப்பு ...
சேவை நிபந்தனைகளும், தொழிற்சங்க அரசியல் உரிமைகளும் 慈翰侮
கடமைகள் Istwa 鱲
அலுவலர்-அமைச்சர்-பாராளுமன்றம் பொதுச்சேவை-ஆணைக்குழுவின் மரணம்
அமைச்சர்களின் உயர் அதிகாரம் அரசசேவை ஆலோசனைச் சபையும் அரசசேவை ஒழுக்காற்றுச் சபையும்

Page 4
XIII.
நீதி பரிபாலனம்
.
2。
பொதுக் குறிப்புக்கள் : கடமை, சுதந்திரம் இலங்கையின் நீதித்துறை அமைப்பு (1) 1973 முடியும் வரை (2) 1974 தொடக்கம் (3) விசேட நீதி நிறுவனங்கள் குற்றவியல் நீதிக் கமிஷன்கள், நியாய சபைகள், இணக்கச் சபைகள் (4) குடியரசு யாப்பு ஏற்பாடுகள் . சோல்பரி யாப்பில் நீதித்துறைச் சுதந்திரம் குடியரசு யாப்பில் நீதிபதிகள் நியமனமும், நீதிச்சேவை ஆலோசனைச் சபையும் . நீதிபதிகள் இடமாற்றமும், நீதியமைச்சர் தலையீடும் நீதிபதிகள் ஒழுக்கக் கட்டுப்பாடும், நீதிச்சேவை ஒழுக்காற்றுச் சபையும் நீதிமன்ற மறுசீராய்வு es குடியரசு யாப்பில் நீதித்துறைச் சுதந்திரம் யாப்பு நீதிமன்றம் --
மதம், மொழி, குடியுரிமை
1.
மதம்
பொதுக் குறிப்புக்கள்
சோல்பரி யாப்பு
சரித்திரம் காட்டும் அநியாயங்கள்
அரசாங்கத் தலையீடு
குடியரசு யாப்பு : அரசகொள்கைக்
கோட்பாடு இயலில்
குடியரசு யாப்பு அடிப்படை உரிமைகள்
இயலில்
குடியரசு யாப்பு: பெளத்தமத இயலில்
மொழி
பொதுக் குறிப்புக்கள்
இலங்கையில் குடியரசு யாப்பு வரை
அரசகரும மொழி : தனிச் சிங்களச் சட்டம்
ušé5užb :
47
347
总49
35
(355 360
36
368
3.68
369
歌7恩
76
38.2
38.2
38&
385
387
388
390 39
岛94 394
396 398
அரசகரும மொழி : தமிழ் உபயோகச் சட்டம் 400
அரசகரும மொழி : தமிழ்மொழிப்
பிரமானங்கள் சட்டவாக்கமொழி
402 405
 
 
 

இயல் ejš5ub
நீதிமன்றமொழி 4 SM 406 / போதனுமொழி ... 4.08 இறுதியில் 4 2 3. குடியுரிமை 4 | 4 பொதுக் குறிப்புக்கள் a 4 ΙΙ. 4 இலங்கைக் குடியரசு யாப்பில் se 玺翼份 பிரிட்டிஷ் குடிமக்கள் og 4 6 1948 இலங்கைக் குடியுரிமைச் சட்டம் 4及7 1949 இந்திய பாகிஸ்தானிய குடியிருப்பாளர் VON "*" UN NUN (பிரசாவுரிமைச்) சட்டம் ro 4 9 பெறுபேறுகள் 20 XII. தலத்தாபன ஆட்சி 426 1 பொதுக் குறிப்புக்கள் Meason) 皇驾6 2. வளர்ச்சி வரலாறு (இலங்கை) ബ 429 3. அமைப்பு முறைமை an 436 4. அங்கத்துவமும் தேர்தலும் • 84 442 5. கடமை, அதிகாரம், செயல்முறை 墨47 வேறு தாபனங்கள் - 452 8 அலுவலரும், தலத்தாபன சேவை
ஆணைக்குழுவும் 43 7 1974 சட்டமும், ஆலோசனை-ஒழுக்காற்றுச்
சபைகளும் 459 8. பொதுநிதி ܓ do 462 9: மத்திய உதவியும், கட்டுப்பாடும் . 469 XIV. அரசியற் கட்சிகளும் தன்னலத் 480
தொகுதிகளும் 1. பொதுக் குறிப்புக்கள் : 4&份
கட்சியின் இலக்கணம்-தோற்றமும் வளர்ச்சி யும்-அமைப்பு-கட்சிமுறைமைகளும், ஆட்சி யியலும், நன்மை தீமைகளும் beber 480 2. இலங்கையின்கட்சி வளர்ச்சி: தோற்றுவாய்
இரு கட்ட வளர்ச்சி 489 3; சில கட்சிகளின் அமைப்பும் கொள்கையும் 49盔 (1) 9 இடதுசாரிக் கட்சிகள் சிதறுண்ட 莎
சரித்திரம் a 494 ல. ச5 ச. க. அமைப்பு . 497 க. க (மொஸ்கோ) : அமைப்பு 498 இரு கட்சிகளின் அமைப்புப் பற்றிய குறிப்புக்கள் s 玺99
இரு கட்சிகளின் கொள்கை . 500

Page 5
Wi
༤༽ གས་ (2) ஐ.தே கட்சி அமைப்பு . 504 - 數歸 i Glasnreireg & . 508
(3) பூரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பு 5 ΙΙ 3 g) Ab கொள்கை 515
(4) சிறுபான்மையினரின் சிறு கட்சிகள் 5易麓。
1. தமிழரின் கட்சிகள் 苏23
(அ) தமிழ்க் காங்கிரஸ்
அமைப்பு, நோக்கம் 52总 (ஆ) தமிழரசுக் கட்சி :
அமைப்பு, இலட்சியம் 's 27 (இ) இலங்கைத் தொழிலாளர்
காங்கிரஸ் ress 莎总4 2. முஸ்லிம் மக்களின் கட்சிகள் 537 4. கட்சி முறைமையின் முக்கிய அம்சங்கள் 538 (1) சுயேச்சைப் பிரதிநிதிகள் நலிவுறல் 538 (2) கட்சிகளிற் சில உறுதி பெற்றமை
(3) பல கட்சிகளுக்குள் இருகட்சி முறைமை 542 (4) தேர்தல் முறைமை கட்சிகளைப்
பாதித்தமை $ €ው Ö 葛45 5. தன்னலத் தொகுதிகளும் அரசியலும்
(1) பொதுக்குறிப்புக்கள்
(2) இலங்கையில் 5 5 1 KK 6. தொழிற் சங்கங்களும் அரசியற் கட்சிகளும் 556 தோற்றம், வளர்ச்சி, சம்பிரதாய நோக்கம் 556 அரசியற் கட்சிகள் உறவு Walio, a 莎57 கட்சிச் சார்புக்கான காரணிகள் . 558 சார்பினுல் ஏற்படும் நன்மை தீமைகள் 559
தொழிற்சங்கங்கள் கட்சிகளின் கருவியாய் 360 eggpJU 55 lb
1. தேர்தல்களில் பா. உறுப்பினர், வாக்குகள் i. தலத்தாபன வருமானம் - 1968 i, சுயேச்சையாளர் பற்றிய புள்ளி விபரங்கள் iv, பெருங்கட்சிகளுக்குக் கிடைத்த சதவீத வாக்குகள்
பிழை திருத்தம்
முதலாம் பாகத்தில். யாப்பின் பின்னணி-யாப்பமை மன்றம்-யாப்பின் முக்கிய அம்சங்கள் - அடிப்படை உரிமைகளும் அரச கொள்கை நெறி களும்-தேசிய அரசுப் பேரவை 1-1 அமைச்சரவை,
 
 
 
 
 

எனது "இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பு-முதலாம் பாகத்திற்குப் பொதுவாக வாசகர்களும், குறிப்பாக மாணவர் களும் நல்லாதரவு தந்ததோடு, நூலின் அடுத்த பாகம் விரைவில் வெளிவரவேண்டுமென்று கேட்டுக்கொண்டிருப்பதினல், இந்த இரண்டாம் பாகத்தைத் திட்டமிட்டபடி இறுதியான ஓர் இயலையும், தமிழ்-ஆங்கிலக் கலைச்சொல் அகராதியையும், பொருளடக்க அகரவரிசை அட்டவணையையும் சேர்த்து முழு நிறைவாக்காது வெளியிடவேண்டியுள்ளது.
ஒரு அரசியல் சாசனத்தை அரசியற்கட்சிகள், மக்கட் தொகுதிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கண்கொண்டு பார்ப்பது இயற்கை வருங்கால இலங்கையின் அரசியல் பொருளாதார அமைப்பு எத்தகையதாயிருத்தல் நாட்டிற்கு நலன் தருமென்பது பற்றிக் கருத்து வேறுபாடுகள் உண்டு. எமது யாப்புப் பற்றிய மூன்ருண்டிற்கு மேலான வாத எதிர்வாதங்கள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. இச்சூழ்நிலையிலேதான் எனது நூல் வெளிவந்துள்ளது. எனவே, வாசகர்கள் அனைவரையும் எப்பொழுதும் திருப்தி செய்வதென்பது முயற்கொம்பாகும். ஒருபாற் கோடாது, இயன்றவரை நடுநிலை நின்று, மாயமான மெய்ப்பொருளைக் காண முயற்சித்துள்ளேன். மனித முயற்சி பரிபூரண சித்தி எய்தல் நிலவுலகின் பான்மையல்ல. இச் சிறு எத்தனத்தில் குறைபாடுகள் தொனிக்கலாம் ; உண்மையான தவறுதல்கள் | இருக்கலாம். அவற்றைச் சுட்டிக்காட்ட விழையும் அன்பர்
களுக்கு எனது மனமார்ந்த நன்றி உரித்தாகும்:
ஒரு நூலைப் படைப்பதிலும் பார்க்க, அதை அச்சிட்டு விநியோகம் செய்வதில் கூடுதலான தடைகள் உண்டு. பல நாட்டு நல்லறிஞர் கருத்துக்களும் எனது பழைய மாணவர் இளின் உள்ளத்துதித்த சிந்தனைகளும் நூலே எழுதுவதற்கு உதவியுள்ளனவென்று கூறவேண்டியதில்லை. அவர்களுக்கும், கவின் அச்சகம், திருமகள் அழுத்தகம், அச்சுப்படிவங்களைத் திருத்த உதவிய நண்பர், நூலை விநியோகம் செய்ய முன்வந்த பிரபல நிறுவனங்கள்-குறிப்பாகச் பூனிலங்கா புத்தகசாலை,

Page 6
సా-4 *
viii
Nவேறு பல வழிகளில் ஆதரவளித்தோர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் திரும்பவும் தெரிவித்துக்கொள்கின்றேன். குடும்ப நிதியமைச்சராய் பற்ருக்குறை வரவு-செலவுத் திட்டங் கள் மூலம் வெளியீட்டுச் செலவிற்காகப் பெருந்தொகையில் பொருளுதவி புரிந்த எனது மனைவி திருமதி சுந்தரேஸ்வரி முத்துத்தம்பிக்கு இவ்விரண்டாம் பாகத்தைச் சமர்ப்பணமாகுதல் செய்யாவிடின் என் நெஞ்சே என்னைச் சுடும்.
* 45čavaj:(34-tržno ", இ. முத்துத்தம்பி கரவெட்டி, மாசி, 1975
சுருக்கக் குறியீட்டு விளக்கம்: நூலின் உடற் பகுதியிற் காணும்
இலக்கங்கள், வேறு தொழில் புரியாதவிடத்து, யாப்பு
விதிகளின் எண்களைக் குறிப்பதாகக் கொள்க.
 
 
 

f ί
VIII. foggio SoyGOoLoở đ i
1. பொது
இலங்கை அரசியலில் பிரதம அமைச்சருக்கு உயர் இடம் அளிக்கப்படுகிறது. செய்தித்தாபனங்கள் அவற்றைப் பிரபல்யப் படுத்துகின்றன. பிரதமர் பதவி பெற்ற ஒருவர் விரைவில் தேசியத் தலைமை அந்தஸ்தை எய்திவிடுகின்ருர் . இது சாதாரண ஆற்றலுடையவருக்கும் பொருந்திய ஒன்ருகும். அவர் கட்சி ரீதி யான, இன மத மொழி ரீதியான முறையில் நடந்துகொண்டா லும், பல்வேறு மக்கட் தொகுதிகளும் ஓரளவுக்காவது நியாயம் பெற அவரை அணுக எத்தனிப்பதைக் காண்கின்ருேம். இந்த வகையில் சுதந்திரக் கட்சிப் பிரதமர்களிலும் பார்க்க ஐக்கிய தேசியக் கட்சிப் பிரதமர்கள் எல்லாத் தொகுதிகளின் அபிலாசை களுக்கும் கூடிய அளவில் இணக்கங் கொடுக்கும் மனப்பான்மை யுடையவர்களாகக் காணப்பட்டனர். பிரதமர் பெறும் பெரு மதிப்பிற்குக் காரணம் யாப்பு, அவருக்குக் கொடுக்கும் அந்தஸ்தும் அதிகாரமுமாகும். அமைச்சரவை ஆட்சிமுறையில் அவர் பொறுப்பு வாய்ந்த அமைச்சரவையாகிய "வில்வளைவின் மூலக்கல்லாய் இருப்பது மாத்திரமன்றி யாப்பின் மூலக்கல்" லாயும் விளங்குகின் ருர், ஆளுங்கட்சி, சட்டத்துறை, நிர்வாகத் துறை, நீதித்துறை ஆகியவற்றிலும் வேறுபல விடயங்களிலும் ஆழ்ந்து பரந்த ஆதிக்கமும் அதிகாரமும் கொண்டுள்ளார். சில சூழ்நிலைகளில் அவரின் அதிகாரங்கள் ஒரு சர்வாதிகாரியி னுடையதை எட்டிப்பிடிக்கக் கூடியனவாயும் இருக்கலாம். அந்த அதிகாரங்கள் எந்த அளவிற்கு, எவ்வகையிற் பயன்படுத்தப் படும் என்பது ஒவ்வொரு பிரதமரின் அறிவு, ஆற்றல், ஆளுமை, பண்பு, மனச்சான்று ஆகியவற்றைப் பொறுத்ததாகும். 2. ஆறு பிரதமர்கள்
அமைச்சரவை முறை புகுத்தப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை அறுவர் பிரதமர் பதவி வகித்துள்ளதைப் பின்வரும் அட்டவணையிற் காணலாம் :

Page 7
مسيس 272 حسم
a’œ9đfi) sẽ stelu-Taego 11Ġ ușorm ugi 11-i tegori ureg) ugi seg0 / 6 Igig) | ° 0 1 ɑfɑødfī) IỆrteluso igolygi ușorm ugi loo ogÐ 9977-70 / 6 I97)一岭96T 电池七七97:6 af østfī) apotfi)luo orm ugi dij-i așera ureg) ugi seg || 996 I op # 41 ugi | 096 I do?@ăể | '8 a’usof) Nortos) qoft)suo și mugi se og 997 T-1 | 096 i dog@ăể | 096 I do?!) ugi | ^ 2 - uș și mugi uos@ : fmų951-ı096 I so? 41.1107 | 6 g6 I * T(J) stoso) | * 9 wo orm ugi 11.-18.gsr. - †ı - gf, o smijos: o 0,9196 g6 I ----70)ņo@| 9 g6 I 49ųısı so | * g norte uægĒĢ usoe) so urng) 4,5 g) | 9 g 6 i qoyqısı 19 | og 6 1 ' udg)?ě3 | * s;
afweds) sorte u-i loạo úsố، ،g g 6 I - udg) ș& | 3 g6 I @@yo ofằo | * g a’œ(fi) apotfī)suo pri ugi 1,9 og) (997 - || 2 g6 I @ąoofằo || 2 g6 I of 4/1,0" | " z uș și mugi sezog) , ayo 19 gぬ6 **にトg A*s『JG7もC 『
Hırısı’oĮGio:151ste-sigħ)979唱—74979 Q9@

-l. 273 -
அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள் கீழே சுருக்கித் தரப் படுகின்றன : டி. எஸ். சேனநாயக்கா :
பிறப்பு 20-11-1884. முதலியார் டொன் ஸ்பேட்டர் சேனநாயக்காவின் புதல்வர் - சான்தோம் கல்லூரியின் மாணவர் - உதைபந்து, எறிபந்து ஆட்டங்களில் வல்லவர்நில அளவைக் கந்தோரில் குமாஸ்தாவாக இருந்து விலகி, தெங்கு, இரப்பர் கமத்தொழிலில் வெற்றி கண்டார் - மது விலக்கு இயக்கத்திலும் ஈடுபட்டார் - 1922 இல் சட்டசபை அங்கத்தவரானுர், முதலாம் அரச சபையில் (1931 - 35) விவசாய மந்திரியாயிருந்து, நீர்ப்பாய்ச்சல் வசதிகளைப் புனருத் தாரணஞ் செய்து குடியேற்றத்தை அபிவிருத்தி செய்தார்சேர் பாரன் ஜயத்தில காவிற்குப் பின்னர் அரச சபையின் முதல்வரானர் - இலங்கைக்குப் பரிபூரண சுயாட்சி கோரும் இயக்கத்திற்குத் தலைமை தாங்கி வெற்றி கண்டார் - ஐ, தே, கட்சியின் தலைவராக 1947இல் சோல்பரி யாப்பின் கீழ் பிரதம ரானுர் - 1950இல் பிரிவிக்கவுன்சிலர் - 22-3-72இல் கால மானுர்-நியாயம் வழங்கும் பண்பு, பொறுமை, சகிப்புத்தன்மை உடையவர் - எளிய வாழ்க்கையை விரும்பினர் - தேசபிதா என்று அழைக்கப்பட்டார். டட்லி ஷெல்ரன் சேனநாயக்கா :
பிறப்பு 19-6-1911, தந்தையார்போல கல்லூரியில் உதை பந்து, எறிபந்து, ரெனிஸ், குத்துச் சண்டை, உடற்பயிற்சி கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்கினர். கேம்பிறிட்ஜ் கோப்பஸ் கிறிஸ்ரி கல்லூரியிலிருந்து இயற்கை-விஞ்ஞானத்தில் சிறப்புப் பட்டமும், எம். ஏ. பட்டமும், 1935இல் ஆங்கில வழக்கறிஞர் பட்டமும் பெற்ருர், தாயகம் திரும்பிச் சிறிது காலம் வழக் கறிஞர் தொழிலை நடத்திய பின் அரசியலில் நுழைந்து 1936 தேர்தலில் டெடிகம அரசசபை உறுப்பினராணுர் - இலங்கைத் தேசிய காங்கிரசைப் புனருத்தாரணஞ் செய்ய உழைத்தார்1947இல் திரும்பவும் டெடிகம் அங்கத்தவராகி, விவசாய மந்திரிப் பதவி பெற்றுக் கல்ஒயாத் திட்டத்தை உருவாக்கி அமுல் செய்தார் - 41ஆவது வயதில் பிரதமராகிப், பொதுத் தேர்தல் நடத்தித் திரும்பவும் பிரதமரானர்-சுகவீனம் காரணமாக ஒ க் ரே ரா பர் 1953இல் பதவி துறந்தார் - 1956 இல் ஐ. தே. கட்சியிலிருந்தும் அரசியலிலிருந்தும் வில கினர் - 1957இல் கட்சித் தலைமையைத் திரும்பவும் ஏற்ருர் - மார்ச்சு 1960இல் சிறுபான்மை அரசாங்கத் தலைவராகவும், யூலை 1960 - 1965 எதிர்த்திறத் தலைவராகவும், 1965-70இல் நாலாவது முறை பிரதமராகவும் , 1970 தொடக்கம் எதிர்த்

Page 8
میس -- 274 سے۔
திறத்திலிருந்தும் கடமையாற்றி 22-4-1972 இல் மறைந்தார்பிரமச்சாரி - நிழற் படமெடுப்பது இவரின் ஒய்வுநேரத் தொழில் சேர் யோன் கொத்தலாவல :
வசதியற்ற குடும்பத்தில் 4-4-1897 இல் பிறந்தார்-பின்னர் காரீயச் சுரங்கங்களுக்கு உரிமையாளரானுர் - ஆரம்பக் கல்வி ருேயல் கல்லூரியில்-உதைபந்து, எறிபந்து ஆட்டம், ரெனிஸ், போலோ, வேறு பல விலையாட்டுக்களிற் சிறந்து விளங்கினர்உயர் கல்வி கேம்பிறிட்ஜ் கிறைஸ்ற் கல்லூரியில் - 1922இல் இலங்கைக் காலாட்படையில் லெப்டினன்ற்முக ஆரம்பித்துக் கேணலாக உயர்ந்தபின் அரசியல் துறையில் பிரவேசித்தார்1935 தொடக்கம் 25 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராகப் பொதுச்சேவையில் ஈடுபட்டார்-முதலாம் அரசசபைக் காலத் தில் விவசாய-காணி அமைச்சராகச் சிறிது காலமும், 1936-52 போக்குவரத்து அமைச்சராகவும், ஒக்ரோபர் 1953 - 56 பிரதமராகவும் கடமையாற்றினர் - இவருக்குப் பிடிக்காதது கம்யூனிசமும், ஏகாதிபத்தியமும் - பிடித்தது நேர்மை, ஒளிவு மறைவற்ற பேச்சு, நகைச் சுவை - இங்கிலாந்திலுள்ள தமது தோட்டத்திலும், இலங்கையிலும் தமது இளைப்பாறுங் காலத் தைக் கழித்து வருகின் ருர் . எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா:
சேர், சொல ம ன் டயஸ் பண்டாரநாயக்காவின் ஏக பத்திரராக 8-1-1889 இல் பிறந்தார் - சான்தோம் கல்லூரியில் சிறந்த மாணவனுக விளங்கி, ஒக்ஸ்போட் கிறைஸ்ற் சேர்ச் கல்லூரியில் பட்டம் பெற்றதோடு, பின்னர் ஆங்கில வழக்கறிஞர் பட்டத்தையும் பெற்ருர் - சிறந்த பேச்சாளர் - ஒக்ஸ்போட் யூனியன் செயலாளராகவும் இந்திய மாய்லிஸ் தலைவராகவும் இருந்துள்ளார்--1923இல் தாயகம் திரும்பிச், சட்டத்தொழிலைச் செய்ததோடு, இலங்கைத் தேசிய காங்கிரசில் சேர்ந்து உழைத் தார் - 1927இல் கொழும்பு மாநகரசபை அங்கத்தவரானுர்1931 தொடக்கம் 26-9-1959 இல் கொலை செய்யப்படும்வரை பாராளுமன்ற உறுப்பினராயிருந்தார் - 1936-47 ஸ்தல ஸ்தாபன அமைச்சராகவும், 1947 - 51 ஐ. தே, கட்சி அங்கத்து வத்துடன் சுகாதார , ஸ்தலஸ்தாபன அமைச்சராகவும் கடமை யாற்றிஞர் - 1951 இல் ஐ. தே. கட்சியையும் அமைச்சர் பதவி யையும் விட்டு விலகி, தான் ஸ்தாபித்திருந்த சிங்கள மகாசபை யைக் கலைத்துவிட்டுச் சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார் - 1952-56 எதிர்க்கட்சித் தலைவராகவும், 1956-59 மக்கள் ஐக்கிய முன்னணியுடன் சேர்ந்து அரசாங்கத் தலைவராகவும் கடமையாற்றிஞர். கிறித்தத்திலிருந்து பெளத்தத்திற்கும்,

سیب 275 سس
அந்நிய உடையிலிருந்து தேசிய உடைக்கும் மாறியவர் - சமா தான அரசியற் புரட்சி மூலம், பலகாலம் ஆட்சியிலிருந்த ஐ.தே. கட்சியைத் தோற்கடித்தவர். கலாநிதி விஜயானந்த தகாநாயக்கா :
பிறப்பு 22-10-1902 - றிச்மன்ட், சான்தோம் ஆசிரிய பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் படித்து அர்ச். அலோசியஸ் கல்லூரியில் ஆசிரியராக இருந்து, 1939- 1956 காலி மாநகர சபை அங்கத்தவராகவும் 3 வருடம் அதன் மேயராகவும் சேவை புரிந்ததோடு 1944 தொடக்கம், 3 மாதம் நீங்கலாகப், பாராளுமன்ற அங்கத்தவராக இருக்கின்ருர் - ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான இயக்கத்தில் பங்குபற்றி 1942இல் 6 மாதம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார் - 1947இல் வொல் ஷிவிக்க லெனினிசக் கட்சியினர், 1952 இல் ல. ச. ச. கட்சியினர், பின் இடதுசாரிச் சுயேட்சையாளர், 1955இல் பாஷா பெரமுன இயக்கத்தின் தலைவர், 1956இல் ம. ஐ. மு ன்னணியில் பங்குதாரராகத் திரு. பண்டாரநாயக்கா அரசாங் கத் தி ல் கல்வி மந்திரி பதவி, பின் சுதந்திரக் கட்சியினர், ஆகஸ்ட் 1959இல் பிரதிநிதிகள் சபை முதல்வர், செப்டம்பர் 1959இல் பிரதமர் எனப் பொதுச் சேவையில் பல பாகங்களை வகித்தார்மார்கழி 1959இல் பாராளுமன்றத்தைக் கலைத்து, லங்கா சன நாயகக் கட்சியை அமைத்து மார்ச் 1960 தேர்தலில் போட்டி யிட்டுத் தோல்வியுற்ருலும், ஜூலை 1960 தேர்தலில் பாராளு மன்றத்துக்குத் தெரிவு பெற்ருர்-1965இல் சுதந்திர சோஷ லிசக் கட்சிச் செயலாளராகப் போட்டியிட்டுத் தெரிவு பெற்று, ஐ. தே. கட்சி அரசாங்கத்தில் உள்நாட்டு அமைச்சரானுர்1970 தொடக்கம் எதிர்த்திறத்திலுள்ளார் - எவ்விடயம் பற்றி யும் சரளமாகப் பேசும் திறமையுடையவர் - ஒரு முறை அரச சபையில் வரவுசெலவுத் திட்டம்பற்றி 13 மணித்தியாலங்கள் பேசியுள்ளார் - பிரமச்சாரி-புகைப் பிடித்தல், குடிப்பழக்கம் இன்று இல்லை. சிறிமாவோ றத்வத்த டயஸ் பண்டாரநாயக்கா :
பிறப்பு 17-4-1916 - றத்வத்த திசாவா அவர்களின் புத்திரி - அர்ச். விறிட்ஜெற் கொன்வென்றில் கல்வி - 1940இல் திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவைத் திரு மணம் - கணவன் இறக்குமுன் அரசியலில் நாட்டம் செலுத்த வில்லை ; ஆனல் பெண்கள் சேமநலனில் ஈடுபாடு - ஜூலை 1960 தேர்தலுக்குமுன் சுதந்திரக் கட்சியின் தலைமையை ஏற்று, அது வெற்றிபெற உதவி, உலகின் முதல் பெண் பிரதமரானுர் - செனேற்றில் நியமன அங்கத்தவராயிருந்து பிரதமரின் கடமை களை ஆற்றினர் - 1964இல் அவர் அரசாங்கம் தோற்கடிக்கப்

Page 9
- 276 -
பட்டபோது போராளுமன்றத்தைக் கலைத்தார் - 1965 தொடக் கம் எதிர்த்திறத் தலைவி- 1970இல் ஐக்கிய முன்னணித் தலைவி யாகித் தேர்தலில் வெற்றிபெற்றுப் பிரதமராயிருக்கின்ருர், அவர் தலைமையில் குடியரசு யாப்பு ஆக்கப்பட்டது.
மேற்கூறிய குறிப்புக்களிலிருந்து இலங்கைப் பிரதமர்
பதவியை எய்துவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய தகைமை களை ஒரளவிற்கு வகுத்துப் பார்க்கலாம் :-
(1)
(ii)
(iii)
ஆறு பிரதமர்களும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் : அத்தோடு பெளத்தர்கள் ; அத்தோடு கோயிகமர்கள். சிங்கள இனம், பெளத்தமதம், கோயிகம குலம் ஒவ்வொன் றும் பெரும்பான்மை வாக்காளரைக் கொண்ட தொகுதிக ளாகும். சிங்களப் பிரதேசங்களில் ஒரு அரசியற் கட்சி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு இன்றைய சூழ்நிலையிலும், வருங்காலச் சூழ்நிலையிலுங் கூடப் பெரும்பாலான அபேட்கர்களும் கட்சித் தலைவரும் சிங்கள கோயிகம பெளத்தராக இருக்கவேண்டுமென்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். வேறு இன மத குலத்தவர் பிரதமராக வரமுடியாத நிலை தொடரும் வரை இலங்கையில் உண்மையான சனநாயகம் நிலவு மென்ற பேச்சுக்கே இடமில்லை. அறுவரும் பெருமதிப்பிற்குரிய குடும்பங்களில் பிறந்த வர்கள்; குடும்பச் செல்வாக்கு இன்றும் தேர்தல்களில் ஒரளவு முக்கியத்துவமுடையது. அத்தோடு திரு. த கா நாயக்காவைத் தவிர்ந்த ஏனையோர் பிறப்பாலும் குடும் பத்தினரின் திருமண உறவாலும் தாழ்பிரதேசச் சிங்கள வாக்காளரை மாத்திர மன்றி மலைநாட்டுச் சிங்கள வாக் காளரையும் கவரக்கூடியதாக இருந்தது. இரு பிரிவுச் சிங்கள மக்களின் விசுவாசத்தைப் பெறக்கூடிய குடும்ப உறவு பிரதமர் பதவியை அடையச்செய்யும் காரணிகளில் ஒன்ருகும். திரு தகாநாயக்காவைத் தவிர்ந்த ஏனையோர் மேல் மத்திய வகுப்பினரென்று கூறலாம் ; விவசாயத்தி லிருந்தோ கணிப்பொருட் சுரங்கத்திலிருந்தோ இவர்கள் பெற்ற பொருள் வருவாய் இவர்களின் அரசியல் முன் னேற்றத்திற்கு ஓரளவு உதவியுள்ளது. உச்சவரம்பு வருமான நெறி வருங்காலத்தில் நன்கு அமுல்செய்யப் பட்டால், பணமும் உடைமையும் அரசியலில் வகிக்கும் செல்வாக்குக் குறைந்து உண்மையான தகைமையுடை யோர் பிரதமராகும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.

مسيسي. 277 سيس
(iv) அறுவரும் இலங்கையின் ஏதாவதொரு பிரபல கல்லூரி யில் படித்தவர்களாயினும், உயர் கல்வியைப் பொறுத்த வரையில் மூவரே பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் மாணவர்களாயிருந்துள்ளனர். உயர் கல்வியறிவு பிரதம ராவதற்கு இலங்கையில் அவசியமற்றதென்பதை இது காட்டுகின்றது. மக்கள் தங்களுக்கேற்ற அரசாங்கத் தைப் பெறுகின்றனரென்பது முதுமொழியாகும். (V) பிரதமராகுமுன் திருமதி பண்டாரநாயக்கா மாத்திரம் அரசியல் அனுபவம் அற்றவராயிருந்தார்; ஏனையோர் போதிய அனுபவம் பெற்றிருந்தனர், இருவர் தம் அரசியல் வாழ்வை ஸ்தலஸ்தாபன உறுப்பினராக ஆரம்பித் தார்கள். அதி கெளரவ சேனநாயக்கா 1922 தொடக்க மும், ஏனைய நால்வர் 1931 - 1944 இடையிலிருந்தும் மத்திய பாராளுமன்ற அங்கத்தவர்களாகக் கடமை யாற்றியுள்ளனர். இந்த ஐவரும் குறைந்த அல்லது கூடிய காலங்களுக்கு அமைச்சர்களாகவும் பதவிவகித்து அர சியற் பயிற்சிபெற்றனர். பிரதமராகும்பொழுது அறுவ ரின் சராசரி வயது 54 ஆகும். டட்லி சேனநாயக்கா வின் வயது 41 ஆகவும், சிறிமாவோ பண்டாரநாயக்கா வின் வயது 44 ஆகவும் இருந்தது. பொதுத்தேர்தல் நடவாமலே, 1952இல் டி. எஸ். சேன நாயக்கா இறக்க டட்லி சேனநாயக்காவும், 1953இல் டட்லி ராஜினுமாச் செய்யச் சேர் ஜோனும், 1959இல் பண்டார நாயக்கா இறக்கத் தகாநாயக்காவும் பிரதமர்களாக மகா தேசாதிபதியினல் நியமிக்கப்பட்டார்கள். ஏனைய பிரதமர்கள் நியமனம் பெறுமுன் நடந்த பொதுத் தேர்தல்களில் அவர்கள் கட்சி அல்லது முன்னணி பெற்ற வாக்குகளையும் அவர்களை ஆதரி யாத வாக்குகளையும் அடுத்த பக்கத்திலுள்ள அட்டவணையிற் காணலாம்:-
இவற்றிலிருந்து எந்த ஒரு பிரதமரும் எந்தப் பொதுத் தேர்தலிலும் பெரும்பான்மை வாக்காளரின் ஆதரவைப் பெற வில்லை என்ற உண்மை வெளியாகின்றது. கடந்த பொதுத் தேர்தலில் கூட சமசமாஜக் கட்சிக்கும் கம்யூனிசக் கட்சிக்கும் கிடைத்த வாக்குகளும் பிரதமரை ஆதரித்ததாகக் கொள்ளினும் கத்தானை தேர்தல் விவரங்களைச் சேர்க்காது, அவரை ஆதரித்த மொத்த வாக்காளர் தொகை 2,4 15,000 ஆகவும் ஆதரியா தோர் தொகை 2535 ஆகவும் இருந்ததைக் காணலாம். ஆணுல் தேர்தல் முறையின் நெறிதிறம்பும் தன்மையினுல் வாக்காளர் தொகைக்கு ஏற்றவாறு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொகை அமையவில்லை என்பதை இயல் W/4-(v)ன் கீழே தரப்பட்ட அட்டவணை காட்டுகின்றது.

Page 10
مس 278
· f) • 8,3 • q !
I 3 0 3 6岭T母
Į 6 g |
3 0 £ s)
o est i
(000 I ) 411) og} urmųjofặ
€ £ 8 !
6 2 G {
3 3 0 {
6 0 6
9 ± 0 I
( 0 0 0 [ } 七4闽g响g)
|
suo ormulgidu-i aegeri ureg) ugi og Loomugi woog) gø~~ı suo orm.us/11 --Tlogora ureg) ugi seg
uso orm ugi too og go-i-i
Auso orm u gï sú u-Taegeri · fr · 4 se ofīlses-i o no 19
uoform.ugi 109 sog) (9977-7
suo som ugi 109 og) o așele · #1
04
§ 9
Q2户部 09
*たミg 09

جیسے 279 جینسی۔
3. பிரதமரும் அவர் கட்சியும் :
அமைச்சரவை ஆட்சிமுறைக்கு அரசியற் கட்சிகள் இன்றி யமையாதன; ஆட்சி நிறுவனங்கள், விசேடமாகப் பாராளு மன்றமும் நிருவாகமும் நன்கிணைந்து இயங்குவதற்கு உதவுவன. இருந்தும் பிரித்தானியாவின் யாப்பினைப்போல இலங்கையின் பழைய புதிய யாப்புகளில் கட்சிகளைப் பற்றி ஒரு விதிதானும் சேர்க்கப்படவில்லை;
பிரதமர் நியமனம் பற்றிப் பழைய யாப்பில் மகாதேசாதி பதியினுல் நியமனம் பெறும் கூட்டுப் பொறுப்புடைய அமைச்ச ரவை இருக்கவேண்டு மென்றும் அதன் தலைவர் பிரதம அமைச்சர் என்னும் பெயர் பெற வேண்டுமென்றும் 46ஆவது விதி கூறுவதோடு, மகாதேசாதிபதி தன் அதிகாரத்தை இங்கி லாந்தில் நிலவும் மரபுப்படி பயன்படுத்த வேண்டுமென்றும், மரபை மீறினுல் சாதாரண் நீதிமன்றங்களுக்கு அவர் பொறுப்பு வகிக்க வேண்டியதில்லை யென்றும் 4ஆவது விதி கூறுகின்றது. பிரதமர் நியமனத்தில் சில மரபுகள் மீறப்பட்டிருப்பினும் கீழ்ச்சபையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் அல்லது வேறு கட்சிகளிலும் பார்க்கக் கீழ்ச்சபையில் கூடிய ஸ்தானங் களைக் கைப்பற்றிய கட்சியின் தலைவர் விதிவிலக்கின்றிப் பிரதம ராக்கப்பட்டுள்ளார். குடியரசு யாப்பின் 9 2/2 விதிப்படி தேசிய அரசுப் பேரவையின் மிகக் கூடிய நம்பிக்கையைப் பெறக் கூடிய அதன் அங்கத்தவரே முதலமைச்சராகச் சணுதிபதியால் நியமிக்கப்படல் வேண்டும். இது மறைமுகமாகப், பேரவையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் அல்லது முன்னணியின் தலைவர் அல்லது நடைமுறையில் வேறு கட்சிகளிலும் பார்க்கக் கூடிய பாராளுமன்ற அங்கத்தவர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் பிரதமராக நியமிக் கப்பெறும் வாய்ப்பைக் கொடுக் கின்றது. புதிய யாப்பின் 43ஆவது விதி அந்த யாப்பு செயல் படுவதற்கு நேர் முன்னர், சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற கூட்டுமுன்னணித் தலைவியென்ற முறையில் பிரதமர் பதவி வகித்து வந்தவரே குடியரசின் முதலாவது பிரதமராகத் தொடர வேண்டுமென்னும் விசேட ஏற்பாட்டைச் செய்துள்ளது. எனவே பொதுத்தேர்தல்களில் கூடியளவு அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சிப்பீடத்தில் அமரக் கட்சிகளின் தலைவர்கள் எத்தனிப்பது இயற்கையாகும்.
ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் பொதுத் தேர்தலில் கட்சி மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுதலும், அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காகக் கட்சியை நல்ல முறையில் நடத்துவதும் கட்சித் தலைவரான பிரிதமரின் முக்கிய கடமைகளென லாம். இலங்கை வாக்காளரின் உணர்ச்சிகளைப்
ଡ୍ର, III - 2

Page 11
- 280 -
பயன்படுத்தக் கட்சியின் நலனுக்காக நீதியற்ற செயற்படுத்த முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து அதிகாரத்தைக் கைப் பற்றும் போக்கு உடனடிப் பயன்தரலாம்; ஆனல் பெருநோக்கில் இத்தகைய உத்தி கட்சிக்கும் நாட்டிற்கும் கேடு விளைவிப்பது திண்ணம், இனவாரிப் பெரும்பான்மை என்னும் போலிச் சனநாயக நெறியின் மீது ஆட்சி நடத்தினுல், அது மனிதகுலம் போற்றும் அறமாண்பிற்கு அப்பாற்பட்டதாக அமையும். பாராளுமன்றத்திற்கு உள்ளும் புறமும் கட்சிப்பிளவு ஏற்படா மலும், கட்சி தன் தலைமையைத் தொடர்ந்து ஏற்கவும் பிரதமர் பார்த்துக்கொள்ளவேண்டும். பிளவு ஏற்படின் அரசாங்கம் வீழ்ச்சியடையலாம்; சுதந்திரக் கட்சி அரசாங்கங்கள் இருமுறை தோற்கடிக்கப்பட்டது வரலாருகும். கட்சித் தலைவர்களுக் கிடையே ஏற்படும் பிளவு கட்சியின் ஆதரவாளர்களிடையே பரவி, வருந் தேர்தல்களில் கட்சி வெற்றியிட்டுவதில் கஷ்டங்கள் ஏற்படலாம் . ஆதலினுல், கட்சி அங்கத்தவரோடு நன்கு பழகும் தன்மையும் அவர்கள் அபிப்பிராயத்தை அறியும் ஆற்றலும் பிரதமர்களுக்கு இருக்கவேண்டும். இலங்கையில் கட்சியின் கொள்கைகளோடு கட்சித் தலைவரின் குலமும், செல்வமும், குடும்பமும், இனமும், மதமும் மக்களிடையே கட்சி செல்வாக்குப் பெற உதவுகின்றன. இன்று வாக்காளர் கட்சி ரீதியாக வாக் களிப்பது பெருமளவில் முன்னேறியுள்ளது; அதில் எக்கட்சித் தலைவர் பிரதமராகவேண்டுமென்பதும் முக்கியத்துவம் பெற்று விட்டது. எனவே பிரதமர் மக்களால் ஒரளவுக்காவது நேரடி யாகத் தெரிவுசெய்யப்படுகின்ருர் என்ற முறையிலும் அவர் அந்தஸ்தும் செல்வாக்கும் நாட்டில் உயருகின்றன.
4. பிரதமரும் சட்டத்துறையும் :
பிரித்தானியாவில் இரு-கூட பாராளுமன்றமிருப்பினும், அமைச்சரவை மக்கள் சபையின் நம்பிக்கையை இழந்தபொழுது ராஜினுமாச் செய்வது மரபாகுமென்பதை இயல் i/2(உ) இல் காணலாம். இலங்கையின் 1948ஆம் யாப்பும் அமைச்சரவை கூட்டுப் பொறுப்புடன் இயங்கவேண்டுமென்று பொதுவான முறையில் விதிக்கின்றது; அதாவது ஆங்கில மரபைத் தழுவி கீழ்ச்சபையின் நம்பிக்கையை இழந்தபொழுது அமைச்சரவை ராஜினமாச் செய்யவேண்டும் அல்லது பாராளுமன்றம் கலைக்கப் படவேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. குடியரசு யாப்பில் தேசிய அரசுப் பேரவை மாத்திரமுண்டு. பேரவை அதற்குக் கூட்டாகப் பொறுப்பு வகிக்கவேண்டுமென்பதோடு, பிரதமர் எப்பொழுது ராஜினுமாச் செய்யவேண்டும், எப்பொழுது பாராளுமன்றத்தைக் கலைக்கலாம் என்பன யாப்பில் பொறிக் கப்பட்டுள்ளன. உதாரணமாகத் தேசிய அரசுப்பேரவை :

سمي. {28 مس.
1. பங்கீட்டு மசோதாவை நிராகரித்தால், அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றினுல், முதல் அமர்வைத் தவிர்ந்த ஏனைய அமர்வில் அரசாங்கக் கொள்கை பற்றிய கூற்றினை நிராகரித்தால், பிரதமர் 48 மணித்தியாலத்திற்குள் பேரவையைக் கலைக்கலாம், இன்றேல் அவர் ராஜிஞமாச் செய்துவிட்டதாகக் கொள்ளப்படும் . 11. முதல் அமர்வில் அரசாங்கக் கொள்கைபற்றிய கூற்றின நிராகரித்தால், 48 மணித்தியாலத்துக்குள் (அ) பேரவை யைக் கலைக்குமாறு சனதிபதிக்கு அறிவுரை வழங்கலாம்: சஞதிபதி அதை ஏற்காவிட்டால் பிரதமர் ராஜினுமாச் செய்துவிட்டதாகக் கொள்ளப்படும். (ஆ) பேரவையைக் கலைக்குமாறு அறிவுரை வழங்காது விட்டாலும் பிரதமர் ராஜினுமாச்செய்துவிட்டதாகக் கொள்ளப்படும். பிரதமர் ராஜினுமாச் செய்தால், அமைச்சரவையே பதவி இழந்த தற்குச் சமமான தென்பது யாப்பு ஏற்பாடாகும்.
பிரதமரின், அரசாங்கத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் உரிமையுடைய, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றத்தைக் கட்டுப்படுத்தலும் வழிநடத்தலும் அவசியமாகின்றது. முக்கிய அரசியற் போர்கள் நடைபெறும் கீழ்ச்சபையில் பிரதமர் அங்கதவராயிருந்து, முக்கிய விவாதங் களில் பங்குபற்றி, அரசாங்கத்தின் பேச்சாளரைத் தெரிவு செய்து, கீழ்ச் சபையைக் கொண்டு நடத்தவேண்டுமென்பது ஆங்கில மரபு. இங்கிலாந்திலும், இலங்கையிலும் அமைச்சர்கள் வேறு சில நாடுகளிற்போல் இரு சட்டமன்றங்களிலும் பிர சன்னமாயிருந்து கருத்துரை வழங்க முடியாது. பழைய யாப்புக் காலத்தில் திருமதி பண்டாரநாயக்கா (1960-65) மேற்சபை யாகிய செனெற்றில் வீற்றிருந்து பிரதமர் கடமையைச் செய்தது வழக்கத்தை மீறுவதாயிருந்தாலும் யாப்பிற்கு உட்பட்டதாகும். இதைவிட இரு சபைகளில் ஒன்றிலாவது அங்கத்தவராயிராது 4 மாதங்களுக்கு மேற்படாது ஒருவர் பிரதமராகவோ (வேறு அமைச்சராகவோ) செயற்படுவதற்குப் பழைய யாப்பு இடங் கொடுத்தது கவனித்தற்பாலது. குடியரசு யாப்பு விதிப்படி பிரதமர் தேசிய அரசுப் பேரவை அங்கத்தினர்களிலிருந்தே நியமிக்கப்படவேண்டும். அவர் பேரவைக்குக் கிரமமாகச் சென்று அதன் மரபுகளை மதித்து நடப்பதும், பாராளுமன்ற உறுப்பின ரின் மனநிலை பற்றிக் கோலாசான்கள் மூலம் அறிந்து தகுந்த நடவடிக்கை எடுப்பதும் பாராளுமன்றத்தின் போக்கைத் தம் வசப்படுத்த உதவும்.

Page 12
سے۔ 282 جنصص۔
பாராளுமன்றத்தைக் கட்டுப்படுத்த உதவும் சில அதிகாரங் களும் பிரதமருக்கு உண்டு. அவற்றில் சட்டமன்ற அங்கத் தவர்கள் சிலரையும் அமைச்சர்களையும் நியமித்தல், பாராளு மன்றத்தைக் கூட்டல், தரிப்பிடுதல் (மன்ற அமர்வை நிறுத்துதல்), கலைத்தல் முக்கியமானவையாம் : பழைய யாப்புக் காலத்தில் செனெற் சபைக்கு இரு வருடத்திற் கொருமுறை 5 அங்கத் தவர்களை நியமிக்கவும், சராசரி 3 அங்கத்தவர்களைத் தன் பாராளுமன்றக் கட்சி தெரிவு செய்வதில் ஒரளவு ஆதிக்கமும் பிரதமருக்கு இருந்ததினுல், தொடக்கத்தில் அரசாங்கத்தை ஆதரிக்காது இயங்கிய மேற்சபையைத்தானும் விரைவில் ஆளுங் கட்சிச் சார்பினதாக ஆக்கமுடிந்தது. கீழ்ச்சபைக்கு 6 அங்கத் தவர்களை நியமிக்கும் உரிமையினுல், அங்கு திடமான பெரும் பான்மையில்லாத பிரதமர்கள் தமது நிலைமையை ஒரளவுக்கு ஸ்திரமானதாக்க முடிந்தது. டி. எஸ். சேனநாயக்காவிற்குப் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை யில்லாதபோதும், திரு. பண்டாரநாயக்காவினது அமைச்சரவையில் பிளவு ஏற்பட்ட போதும் நியமன உறுப்பினர் பெரிதும் உதவியது உதாரணங் களாம். சில பிரதமர்கள் சிங்களப் பிரதேசங்களிற் பரவலாக வாழும் தாழ்த்தப்பட்ட குலத்தினருக்கு நியமன அங்கத்துவம் கொடுத்துத் தேர்தல்களில் தமது கட்சியின் செல்வாக்கை உயர்த்த எத்தனித்துள்ளனர். இன்று இரண்டாவது சட்ட மன்றமே இல்லை. வருங்காலத்தில் தேசிய அரசுப் பேரவைக்குப் பிரதிநிதிகள் நியமிக்கும் முறை அகற்றப்பட்டுள்ளது. இதனல் பிரதமரின் ஆதிக்கக் கருவியொன்று இல்லாததோடு இரு பெருங் கட்சிகளைச் சுற்றிவரும் சிறு கட்சிகளுக்கு அரசாங்கத்தில் இடம் பெறும் வாய்ப்புச் சிறிது உயர்கிறதெனலாம். பிரதமர் அவற் றிற்கு அமைச்சர், உபஅமைச்சர் பதவிகளை வேண்டிய நேரத்திற் கொடுத்துப் பேரவையில் அவர்களின் ஒத்துழைப்பைப் பெற லாம். சில பிரதமர்கள் நிர்வாகத் தேவைக்கு அதிகமாக இப் பதவிகளைச் சிருஷ்டித்துள்ளனர். பழைய புதிய யாப்புகளில், பிரதமர்கள் தாம் விரும்பிய அளவு அமைச்சர்களையோ உட அமைச்சர்களை யோ நியமனஞ் செய்யவும் அதிகாரம் பெற்றுள் ଜୀ ଶବ୍ଦା (T•
பழைய புதிய யாப்புக்களில், பாராளுமன்றத்தின் நேர சூசியை நிர்ணயிக்கும் உரிமை பிரதமருக்கு உண்டு. சாதாரண நேரங்களில் சட்டமன்றத் தலைவர் மூலம், எதிர்த்திறத் தலைவரின் ஒப்புதலோடு இக் கடமையைச் செய்கின் ருர், அவருக்குப் பாராளுமன்றத்தைத் தரிப்பிடும், கூட்டும் அதிகாரத்தை இரு யாப்புக்களும் வழங்கியுள்ளன. பிரதமரின் பெரும்பான்மை சந்தேகத்திற்கிடமாயிருந்த வேளைகளில் திரு. பண்டாரநாயக்கா வும், திருமதி பண்டாரநாயக்காவும் பாராளுமன்றத்தைத்

سيبي 283 سسس
தேவைக்குக் கூடிய கால அளவிற்குத் தரிப்பிட்டு அக்காலத்திற் குள் எதிர்த்திற உறுப்பினர் சிலரின் ஆதரவைத் திரட்ட எத் தனித்துள்ளனர். இரண்டு யாப்புக்களின்படியும் அரசதலைவரின் பிரகடனம் மூலம் பாராளுமன்றம் ஆண்டுக்கொரு முறையாகுதல் கூட்டப்பட வேண்டும் : 4 மாதகாலத்திற்கு மேற்படாது தரிப் பிடுதல் செய்யவேண்டும்.
இரு யாப்புக்களிலும் பிரதமரின் பாராளுமன்றத்தை ஒட்டிய முக்கிய அதிகாரம் அவர் அதனைத் தான் நினைத்த நேரம் கலைப்பதாகும். பிரத மருடைய, அமைச்சரவையினுடைய கொள்கைக்கு ஆளுங்கட்சிப் பாராளுமன்றக் குழுவிடமிருந்தோ தொகுதியிடமிருந்தோ, எதிர்ப்புத் தோன்றும்பொழுது சட்ட மன்றத்தைக் கலைப்பதாகப் பிரதமர் பயமுறுத்தி, அரசாங்கத் தின் பெரும்பான்மை ஆதரவை நிலைநாட்டி, ஸ்திரமான ஆட் சிக்கு வழிவகுக்கலாம். டி. எஸ். சேனநாயக்காவின் பயமுறுத் தல் வெற்றி பெற்றதையும் டட்லியின் 1960ஆம் ஆண்டுப் பயமுறுத்தல் தோல்வியில் முடிந்ததையும் காணலாம். கட்சிக் கொள்கைகளுக்கு எதிராக நடப்போர் வரப்போகும் தேர்தல் களில் கட்சிசார்பில் அபேட்சகராக வரமுடியாதவாறு பிரதமர் தம் செல்வாக்கை உபயோகிக்கலாம் என்னும் பயமும் பாராளு மன்றக் கட்சியினரை அரசாங்கத்தின் கொள்கைகளை மறுக்காது ஏற்கத் துரண்டுகின்றது. பாராளுமன்றத்தைக் கலைக்கும் தன் அதிகாரமூலம் பிரதமர் பொதுத் தேர்தல் நடைபெறவேண்டும் என்பதை நிர்ணயிக்க முடியும் . தனது கட்சிக்கு மக்களின் ஆதரவு கிடைக்கக்கூடுமென்று கருதும் நேரத்தில் மன்றத்தைக் கலைக்க முற்படுவர். சேர் , யோன் கொத்தலாவல அப்படிச் செய்து தேர்தலில் படுதோல்வி உற்றதும் கவனித்தற்பாலது. 1960இல் பெரும்பான்மை அங்கத்தவர் ஆதரவைப் பெருத திரு. டட்லி சேனநாயக்காவும், 1959இல் தமது அமைச்சர்களைக் கலந்து ஆலோசியாது திரு. தகாநாயக்காவும் பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார்கள்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடைய கட்சியுறுப் பினர் கட்டுக்கோப்புடன் இயங்கிப் பிரதமருக்கு ஆதரவு கொடுத்தால் அவர் மக்கள் சம்மதம்பெற்ற சர்வாதிகாரியின் நிலையை எய்தலாம்; யாப்பு அனுமதித்த எவ்வித சட்டங்களை யும் ஆக்கலாம். அவசரகால நிலையில் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும், நீதிமன்றங்களின் தலையீட்டைத் தடுக்கும் பாரதூர மான சட்டவிதிகளைப் பிரகடனப்படுத்தி, மக்களின் உயிர், உடைமை அனைத்தையும் பறிக்கலாம்.

Page 13
- 284 -
5. பிரதமரும் நிருவாகத்துறையும் !
நிருவாகத்துறை உண்மை அல்லது அரசியல் நிருவாகமென் றும், பெயரளவில் நிருவாகமென்றும், நிரந்தர நிருவாக tெeன் றும் மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டது:
அரசியல் நிருவாகம் : இது பிரதமர், அமைச்சர்கள், அமைச்சரவை, உதவி-அமைச்சர்கள் ஆகியோரைக் குறிக்கும். அரசின் தலைவரால், பொதுத்தேர்தலின் பின்போ பிரதமர் இறந்த அல்லது ராஜினமாச் செய்ததன் பின்டோ ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்படி அழைக்கப்பட்ட பிரதமரின் முதல் முக்கிய கடமை அமைச்சர்களை நியமித்து அமைச்சரவையை அமைப்பதும், அமைச்சர்களுக்குரிய திணைக்களங்களை நிர்ண யிப்பதும், உதவி-அமைச்சர்களைத் தெரிதலுமாகும். அமைச்சர் களையும் அவர்கள் அமைச்சுக்களையும் நிருணயிப்பதில் பிரதமரைக் கட்டுப்படுத்திய முன்னைய யாப்பு விதிகளையும் சட்டரீதியற்ற விதிகளையும் இயல் V/5 இல் பார்க்க. குடியரசு யாப்பின்படி முன் னிருந்த கட்டுப்பாடுகளின்றி, தேசிய அரசுப் பேரவையி லிருந்து தான் விரும்பிய அமைச்சர்களையும் அவர்களுக்குரிய அமைச்சுக்களையும் பிரதமர் நிருணயிக்கமுடியும் இரு கட்சிமுறை நன்கு ஸ்தாபிக்கப்படாத இலங்கையில், கூட்டு - அரசாங் கங்களே பெரும்பாலும் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன இதனுல் ஒற்றுமையுடன் இயங்கி ஒரு கால்பந்தாட்டக் கோஷ்டி போல் திறமையுடன் செயல்படக்கூடிய அமைச்சரவையை உரு வாக்குவதில் பிரதமருக்குக் கஷ்டமேற்பட்டுள்ளது. அதோடு கூட்டுச் சேரும் கட்சியினரையும் சிறுபான்மைத் தொகுதியின ரையும் அவர் திருப்திப்படுத்த வேண்டியிருந்தது. இதில் எல்லாப் பிரதமரும் வெற்றிபெறவில்லை.
உதவி-அமைச்சர்கள் பழைய யாப்பில் ' பாராளுமன்றக் காரியதரிசிகள்’ என்றும் புதிய யாப்பில் ' பிரதி அமைச்சர்கள் என்றும் பெயர்பெற்றுள்ளனர். இரு யாப்புக்களும் அமைச்சர் களுக்கு அவர்களின் பாராளுமன்ற, திணைக்களக் கடமை களில் உதவி புரிய உதவி-அமைச்சர்களை நியமிக்கும் உரிமை யைப் பிரதமருக்குக் கொடுத்துள்ளன. முன்னைய யாப்பின் படி அவர்கள் தொகை அமைச்சர்கள் தொகைக்கு மேற்படாததோடு இரண்டிற்குக் குறையாதோர் செனெற்றர்களாயுமிருக்க வேண் டும். குடியரசு யாப்பின்படி தேசிய அரசுப் பேரவையிலிருந்து பிரதமர் விரும்பியளவு பதில் - அமைச்சர்களை நியமிக்கலாம். இதுகாறும் செயல்பட்ட அரசாங்கங்களில் 8-16 உதவி - அமைச்சர்கள் இருந்துள்ளார்கள். ஐ. தே. கட்சியின் 1960 சிலமாதச் சிறுபான்மை அரசாங்கம் பாராளுமன்றக் - காரிய

--1 285 سس۔
தரிசிகள் இல்லாமலே கடமையாற்றியது. அரசாங்கத்திற்குப் பிரதிநிதிகள் சபையில் ஆதரவைத் திரட்டுவதற்கும் கூட்டுஅரசாங்கத்தின் பங்குதாரர்களைத் திருப்திப்படுத்துவதற்கும் நாட்டின் பல்வேறு தொகுதிகளுக்கு அமைச்சில் இடமளிப்ப தற்கும், அமைச்சுக்களின் தேவைக்கு அதிகமான உதவிஅமைச்சர்களைப் பிரதமர்கள் சில காலங்களில் நியமித்துள் ளார்கள்; சில காலங்களில், சில தொகுதி மக்களுக்கு ஒரு உதவி-அமைச்சர் பதவிதானும் கிடைக்கவில்லை. உதவிஅமைச்சர்களுக்குக் கிடைக்கும் கடமையும் பொறுப்பும் அமைச்சர்களின் மனப்பாங்கில் தங்கியுள்ளன. அமைச்சர் ஒரு சட்ட மன்றத்திலும் பாராளுமன்றக் காரியதரிசி மற்றைய திலுமிருந்து பாராளுமன்றக் காரியதரிசியின் கடமையும் பொறுப்பும், அதிகமாயிருந்தது இயற்கையாம். எனினும் அவர் அமைச்சரின் பேரிலேயே, அமைச்சரின் கொள்கைக்கினங்கவே தன் பொதுக் கடமைகளைச் செய்யவேண்டும் அமைச்சர் தனது அதிகாரத்திலும் கடமையிலும் எவற்றையேனும் அரசாங்கவர்த்தமானிப் பிரகடனமூலம் பதில் அமைச்சருக்கு ஒப்படைப் பதற்குக் குடியரசு-யாப்பு ஏற்பாடு செய்துள்ளது. இளைஞராகிய உதவி-அமைச்சர்கள் வருங்கால அமைச்சர்களாயும் எதிர்த் திறத் தலைவர்களாயும் கடமையாற்ற வேண்டியவர்கள். எனவே அவர்களுக்கு நிருவாகப் பயிற்சி அளிப்பது அவசியமானதொன் ரும், இதை அமைச்சர்கள் உணர்ந்ததினுற்போலும், தங்க ளுக்குப் போதிய வேலையில்லையென்று உதவி அமைச்சர்கள் ஆரம்பத்திற் குறை கூறியது இன்று நின்றுவிட்டது. அமைச்சர்கள் வெளிநாடுகளுக்குப் பிரயாணஞ் செய்யும்பொழுது உதவி அமைச்சர்கள் தற்காலிகமாகப் பிரதமரால் அமைச்சராக்கப் படுவதையும் காண்கின்ருேம்.
அமைச்சரவை ஆழ்ந்த பரந்த அதிகாரங்கொண்ட நிறுவன மாகும். அது அரசின் கொள்கையைத் தீர்மானிக்கின்றது; பால னக் கட்டுப்பாடு செய்கின்றது; திணைக் களங்களின் அதிகாரத்தை இணைக்கின்றது; சட்டநகல்களைத் தயாரிக்கின்றது: பொருளா தார திட்டங்களையும் அரசாங்க வரவு-செலவுத் திட்டங்களை யும் வகுக்கின்றது; இவைபோன்ற வேறு பல கடமைகளைச் செய்யும் அமைச்சரவையின் தலைவர் என்ற முறையில் அது எடுக்கும் முடிவுகளில் பிரதமர் பெரும்பங்கு வகிக்கின்றர். அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமைதாங்கி, அமைச்சர் களின் அபிப்பிராயத்தைக் கேட்டு, வேண்டிய நேரத்தில் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இறுதியில் வாக்கெடுப் பின்றியே அமைச்சர்கள் கடைப்பிடிக்கவேண்டிய கொள்கை யென்ன, அதை எப்படிச்செயல்படுத்தவேண்டும் என்று பிரதமர்

Page 14
سلس– 286 سست۔
முடிவு செய்வது மரபாகும். பிரதமரின் பணிப்புகளுக்கtைய 1947இல் ஸ்தாபிக்கப்பட்ட அமைச்சரவைக் காரியாலயத்தின் செயலாளர் பணிபுரிகின் ருர் ; பிரதமரின் வழிகாட்டுதலுக் கமைய அமைச்சரவைக் கூட்டங்களின் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக் கின்ருர், இவ்வுரிமை மூலம் பிரதமர் தான் விரும்பிய நேரத்தில், தான் விரும்பிய விடயத்தை அமைச்சரவைமுன் கொண்டுவர முடிகிறது; தான் விரும்பாதவற்றைப் பின்போடலாம்.
அமைச்சரவையினர் நீடித்து ஒத்துழைக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் பிரதமரின் இன்னுெரு முக்கிய கடமையாகும். இலங்கையில் அ  ைம ச் ச ர் க ள் பிரதமர்களுக்கு, வேறு நாட்டு அமைச்சர்களிலும் பார்க்கக் கூடியளவில் தலையிடி கொடுத்திருப்பது வரலாழுகும். இவற்றிற்குக் காரணம் பொது மக்கள் சேவை என்ற போர்வைக்குள் நின்று அமைச்சர்கள் பெருந் தலைவர்களாக வளர எத்தனிக்கும் மனப்பாங்கும், கூட்டு-அமைச்சரவைகளினுல் ஏற்படும் கொள்கை வித்தியா சங்களும் எனலாம். அமைச்சரவைக்குள் கருத்துவேற்றுமை முற்றிச்சென்ருல், சூழ்நிலைக்கேற்றவாறு பிரதமர் தன் அபிப் பிராயத்தைத் திணித்தோ, சிறுபான்மை அல்லது பெரும் பான்மை அங்கத்தினரின் அபிப்பிராயத்தை மாற்றியோ பிரச்சினை யைப் பின்போட்டோ அமைச்சரவைய்ைக் கொண்டு நடத்தவேண்டும். பிரதமர் விருப்பத்திற்கு அமைச்சர்கள் கட்டுப் படவேண்டியுள்ளது; இதற்குக் காரணம் எந்த அமைச்சரவையும், அமைச்சர்கள் அனைவரையும் ராஜினமாச் செய்யும்படி பிரதமர் கேட்கலாம்; அப்படிச் செய்யாதோரைப் பதவி நீக்கம் செய்ய லாம். இலங்கை வரலாற்றில் பலர் ராஜினுமாச் செய்ததையும் பதவிநீக்கம் செய்யப்பட்டதையும் காணலாம் . அமைச்சர்களைப் படைக்கும், காக்கும், அழிக்கும் உரிமைகளினுல் பிரதமர் அமைச்சரவை மீது முதன்மை பெறுகின்ருர் . அவரைச் சம பலமுள்ள சகாக்களுள் முதல்வர் ' என்றே " சிறு வெள்ளி களுக்கிடையில் துலங்கும் சந்திரன்' என்ருே வர்ணிப்பதிலும் பார்க்க " " கிரகங்களுக்குள் ஒரு சூரியன் ' என்று அழைப்பது சாலப் பொருத்தமாகும்.
பெயரளவில் நிருவாகம் : முன்னைய மகாதேசாதிபதியும் இன்றைய ஜனதிபதியும் பெயரளவில் நிருவாகிகளாம். மகா தேசாதிபதி இராணியாரால் நியமனம் பெற்று, இராணியார் விரும்பிய காலம்வரை பதவியிலிருப்பார். ஆங்கில மரபுப்படி இராணியார் நடக்கவேண்டுமென்று பழைய யாப்புக் கூறுகின் றது. எனவே பிரதமர் சிபார்சின் படி மகாதேசாதிபதியின் நியமனமும் பதவி நீக்கமும் நடபெறுமென்பது பெறப்படும். வேண்டுமெனில் பிரதமர் அமைச்சரவையைக் கலந்தாலோசிக்

مصیبت سے 287 ۔۔۔۔
கலாம் , பிரதமரோ, அரசாங்கமோ விரும்பாத சோல்பரிப் பிரபுவும் சேர் ஒலிவர் குணதிலகா அவர்களும் தங்கள் பதவியைத் துறக்கவேண்டி நேரிட்டது. கொள்கைப்படி மகா தேசாதிபதிக்குச் சில விடயங்களில் தற்றுணிபு அதிகார மிருந்தது; அவர் பிரதமருடைய, வேறு அமைச்சர்களுடைய ஆலோசனைப்படி சில வேளை களி ல் நடக்கவேண்டியதில்லை : ஆணுல், பதவி நீக்கம் செய்யும், பதவிக்காலத்தை நீட்டும் பிரதமரின் உரிமை மகாதேசாதிபதியை அரசியல் நிருவாகத்தின் விருப்பப்படி நடக்கச் செய்துள்ள தென்று பொதுவாகக் கூறலாம். உதாரணமாகப் பாராளுமன்றத்தைக் கலைக்கும் மகாதேசாதிபதியின் தற்றுணிபு அதிகாரம் சிறுபான்மை அரசாங்கப் பிரதமரின் விருப்பப்படி பயன்படுத்தப்பட்டுள் ளதைக் காணலாம். இதனுல்தான் மகாதேசாதிபதி 'பெய ரளவில் நிருவாகி ' எனப்படுவர்.
இன்றைய ஜனதிபதிக்கும் தான் நினைத்தபடி நடக்கும் அதி காரம் அதிகம் கிடையாது. பிரதமரை நியமிப்பதிலும், அவர் சிபார்சுப் படி தேசிய அரசுப் பேரவையைக் கலைக்கா திருப்பதிலும் ஜனதிபதிக்குச் சில சந்தர்ப்பங்களில் தற்துணிபு அதிகார முண்டு. இராணியாராலன்றி நேரடியாகப் பிரதமரால் நியமிக்கப் படும் ஜனதிபதி பிரதமர் விருப்பத்திற்கு எதிராக நடக்க எத்த னிக்கமாட்டாரென்று எதிர்பார்க்கலாம். மாரு க நடப்பின் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைப் பிரதமர் அரசுப் பேரவையில் சமர்ப்பித்து அதை நிறைவேற்றினுல் ஜனதிபதியின் பதவி பறிபோகும் என்னும் 26/2/ஈ யாப்பு விதி கவனிக்கற்பாலது. எனவே, மகாதேசாதிபதி போல் ஜனதிபதி யும் பிரதமர் விருப்பப்படி நடக்கவேண்டி நேரிடும். அத்தோடு, * "அரசியல் சாசனத்தினுல் வேறுவகையில் ஏற்பாடு செய்யப்பட் டிருப்பதனைத் தவிர ஜனதிபதி எப்பொழுதும் பிரதமரின் அல்லது பிரதமரிடமிருந்து அதிகாரம் பெற்ற அமைச்சரின் ஆலோசனை யின் மீது செயலாற்றுதல் வேண்டும்’ என்று 27/1 விதி கட்டாயப் படுத்துகிறது. யாப்பில், முக்கியமாக அதன் ஏழாவது அத்தி யாயத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஜனதிபதியின் அதிகாரங்கள் நடைமுறையில் பிரதமரின் அதிகாரங்களாக மாறுகின்றன.
நிரந்தர நிருவாகம் : அரச அலுவலரும், முப்படை யினரும் நிரந்தர நிருவாகிகளாவர். அமைச்சர் பதவி நிரந்தர மற்றது; பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்ட தும் புது அமைச்சர்கள் பதவியேற்பார்கள். ஆனல் , அரச சேவை யினர் தொடர்ந்து சேவையாற்றுவார்கள், அமைச்சர்களும் உதவி - அமைச்சர்களும் தங்கள் திணைக்கள அலுவலரின் கடமை களை மேற்பார்வை செய்யினும், எல்லாத் திணைக்களங்களிலும்
. III - 3

Page 15
ہے۔ 288 حس۔
என்ன நடக்கிறதென்று பிரதம ர் கண்காணிக்கவேண்டும். அமைச்சரவையின் தீர்மானம், செயல்படுத்தப்படும்போது அரசியற் கொந்தளிப்பு ஏற்படக்கூடுமாகையால் பிரதமரின் கண்காணிப்பு அவசியமாகின்றது. டொனமூர் யாப்புக் காலத் தில் அமைச்சர்கள் ஒரேமுகமாக இயங்காத தன்மையும் இன்று ஒரளவிற்குத் தொடர்வதினுல், இலங்கைப் பிரதமர் திணைக்கள மேற்பார்வையில் இயன்றளவு சிரத்தை எடுக்கவேண்டியுள்ளது: அமைச் சர் கள் தமது திணைக்களங்கள் பற்றி ஆலோசனை கேட்கும்போது பிரதமர் உடனடி அறிவுரை வழங்கவேண்டிய சந்தர்ப்பங்கள் தோன்றுகின்றன. தாமதிக்க முடியாத காலங் களில், அமைச்சரவையைக் கலந்தாலோசியாது ஒரு விடயத்தைச் செயல்படுத்தும்படி அ  ைம ச் ச ரு க்கு ப் பிரதமர் அனுமதி கொடுப்பது அமைச்சரவை முறையிலுள்ள மரபாகும்.
பாலனம் திறமையாக ந  ைட பெற, அரசாங்கத்தின் கொள்கைகளை நன்கு செயல்படுத்த விசுவாசமிக்க ஆற்றல் வாய்ந்த அலுவலர் பாலனத்துறையின் கேந்திர இடங்களி லிருந்து பாலனத்தை இயக்கவேண்டும். எனவே, ஒவ்வொரு அமைச்சின் கீழுள்ள திணைக்களங்கள் மீதும் பொது மேற்பார்வை செய்யும் நிரந்தரச் செயலாளர்கள் ( இன்று செயலாளர்கள்) பதவிகள் போன்றவற்றை நிரப்பும் அதிகாரத்தைப் பழைய புதிய யாப்புகள் பிரதமருக்கு வழங்கியுள்ளன. இவ்வதிகாரிகள் திருப்திகரமாக இயங்காவிடின் அவர்களை வேறு இடங்களுக்குப் பிரதமர் மாற்றலாம். ஏனைய அலுவலரின் நியமனம், இட மாற்றம், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு, வேலை நீக்கம் ஆகிய வற்றைச் சுதந்திர பொதுச்சேவை ஆணைக்குழு பழைய யாப்புக் காலத்தில் செய்தது. இதன் மூன்று அங்கத்தவர்களைத் தெரியும் உரிமையும், காரணங்காட்டிப் பதவி நீக்கஞ் செய்யும் உரிமையும் பதவிக்காலம் முடிந்த பின் திரும்பவும் நியமனஞ்செய்யும் உரிமை யும் பிரதமருக்கு இருந்தது. சட்டரீதியற்ற முறையில் பிரதமரும் வேறு அமைச்சர்களும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் கடமை களில் தலையிட்டுள்ளது ஒத்துக்கொள்ளப்பட்ட தொன் ருகும். இன்று அலுவலர் விடயத்தில் சட்டரீதியாக அரசியலார் தலை யிடுவதற்கான முறையில் குடியரசு யாப்பு வரையப்பட்டுள்ளது. பொதுச்சேவை ஆணை க் குழு அகற்றப்பட்டு அரசசேவை ஆலோசனைச் சபை, அரசசேவை ஒழுக்காற்றுச் சபை என்னும் இரு சபைகள் இடம்பெறுகின்றன. இச்சபைகளின் சிபார்சின் பேரில் அலுவலரின் நியமனம், இடமாற்றம், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு, வேலை நீக்கம் ஆகியனவற்றைச் செய்யும் இறுதி அதிகாரம் அமைச்சரவைக்கு மாற்றப்பட்டுள்ளது. இரு சபை களின் உறுப்பினரையும் பிரதமரே நியமிக்கின்ருர்,

سيس 289 مس.
பழைய யாப்பிலே நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதும் போர் அல்லது சமாதானப் பிரகடனங்களை விடுப் பதும் இராணியின் அல்லது முப்படைத் தளபதியாகிய மகா தேசாதிபதியின் அதிகாரத்திற்குள் இருந்தன; இவற்றைப் பிரதமரின் சிபார்சின் பேரில் செய்தனர். குடியரசு யாப்பிலும் ஜனதிபதியே ஆயுதப்படைகளின் தளபதி-20. அவர் போர் , சமாதானம் ஆகியவற்றைப் பிரதமரின் ஆலோசனையின் பேரில் தான் செய்யவேண்டும். அதேபோலத்தான் தரைப்படை, கடற் படை, வான்படை, ஊர் காவற்படை ஆகியவற்றின் தலைவர் களைப் பிரதமரின் ஆலோசனைக்கிணங்கவே ஜனதிபதி நியமனஞ் செய்கின்ருர், பழைய யாப்புக் காலத்தில் பொதுப் பாது காப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரதமருக்கிருந்த சிறு கட்டுப் பாடும் இன்று நீக்கப்பட்டுவிட்டது. அதன் 12ஆம் பிரிவின் கீழ் நாட்டின் அமைதிக்குப் பங்கம் வந்துவிட்டதென்றும், அமை தியை நிலைநாட்டப் பொலீசாரால் முடியாதென்றும் பிரதமர் கருதினுல் ஆயுதப் படைகளை அவர் உதவிக்கு அழைக்கலாம். அவசரகாலச் சட்ட விதிகளோடு ஆயுதப் படைகளின் நட வடிக்கைகளும் சேர அரசாங்கத்தின் அடக்குமுறைப் பலம் பல்கிப் பெருகுகின்றது. 1971ஆம் ஆண்டு பயங்கரவாதப் புரட்சிக்காலத்தில் நடந்தவை இதற்கொரு எடுத்துக்காட்
- π63, ιb .
6. பிரதமரும் நீதித்துறையும் :
நீதித்துறையிலும் பிரதமர் குறிப்பிடத்தக்க அதிகாரங் கொண்டவர் என்பதை இயல் XI இல் விரிவாகக் காணலாம் பழைய யாப்பில், உயர் நீதிமன்ற, பருவ நீதிமன்ற நீதிபதி களையும், நீதிச்சேவை-ஆணைக்குழுவின் அங்கத்தவர்களில் இரு வரையும் நியமனஞ் செய்யும் உரிமை பிரதமருக்கு இருந்தது. நீதிமன்றச் சுதந்திரத்தை வேண்டுமெனில் பாதிக்கும் வண்ணம் பயன்படுத்தக்கூடிய சில அதிகாரங்களையுங் கொண்டிருந்தார்: குடியரசு யாப்பில் உயர்நீதிமன்ற, பருவ நீதிமன்ற நீதிபதிக ளோடு யாப்பு-நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி களையும், வருங்காலத்தில் உருவாக்கப்படக்கூடிய இவையொத்த நீதிமன்றங்களின் நீதிபதிகளையும் பிரதமர் நியமிப்பார். கீழ் நீதிபதிகளின் நியமனம், இடமாற்றம், ஒழுக்கக் கட்டுப்பாடு, பதவி நீக்கம் ஆகியவற்றிற்குப் பொறுப்பாயிருந்த நீதிச் சேவை - ஆணைக்குழுவிற்குப் பதிலாக இரு புதிய சபைகள் தோற்றமளிக்கின்றன. நீதிச்சேவை - ஆலோசனைச் சபையின் தலைவரைத் தவிர்ந்த ஏனைய நால்வரும், பிரதமரால் நியமிக்கப் படுவார்கள்; அவரால் வேலைநீக்கம் செய்யப்படலாம். அமைச்ச ரவை, கீழ் நீதிபதிகளை நியமிப்பதற்கு விதப்புரை செய்வதே

Page 16
میس- 290 ستاسیس۔
இச்சபையின் கடமையாகும். மற்றைய சபை நீதிச்சேவைஒழுக்காற்றுச் சபையாகும். இதன் தலைவரைத் தவிர்ந்த மற்று இரு அங்கத்தவர்களையும் உயர் நீதிமன்றத்திலிருந்து பிரதமர் நியமிப்பார். குடியரசு யாப்பிலும் நீதிமன்றங்களின் சுதந்திரத் தைப் பாதிக்கும் வண்ணம் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலையும் அதிகாரமும் பிரதமருக்குண்டு. 7. பிரதமரும் வெளிவிவகாரமும் :
உள்நாட்டு விடயங்களிலிருந்து வெளிவிவகாரத்திற்குத் திரும் பினல், பிரதமர் பாதுகாப்பு - வெளிவிவகார அமைச் ச ராக இருக்கவேண்டுமென்று முன்னைய யாப்பு விதித்திருப்பதைக் காணலாம். இந்த நிபந்தனை குடியரசு யாப்பில் இடம்பெற வி ல் லை யா யி னு ம், பிரதமரே இன்றும் வெளிவிவகார அமைச்சராகத் தொடர்ந்து கடமையாற்றுகின்ருர், அமைச்ச ரவையின் அதிக தலையீடின்றி இலங்கைப் பிரதமர்கள் தமது வெளிநாட்டுக் கொள்கைகளை நிருணயித்துள்ளார்களென்று பொதுவாகக் கூறலாம். அரசாங்கத்தில் கூட்டுச் சேர்ந்துள்ள இடதுசாரிகள் சோசலிச நாடுகளுடன் இலங்கை கூடிய தொடர்பு கொள்ளவேண்டுமென்று விரும்புவது இயற்கை யாகும். அமெரிக்க சட்டமன்ற நிரந்தர வெளிவிவகாரக் குழுக்கள்போல் பிரதமரின் வெளிவிவகார நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் குழுக்கள் இலங்கையில் இல்லை. அவரின் போக்கை மட்டுப்படுத்துவதற்கு நீண்டகால மரபுகளோ விரிந்த முறையில் அமைக்கப்பெற்ற வெளிவிவகாரச் செய லகமோ கிடையாது. எனவே, பிரதமர்களின் தனித்திறமை யையும் வெளியுறவு பற்றிய அவர்களின் ஈடுபாட்டையும் பொறுத்து அவர்கள் தமது வெளிநாட்டுக் கொள்கையை நிருண யித்துக்கொள்ள முடிந்தது. அவர்கள் கொள்கையில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய அளவிற்குப் பொதுசன அபிப்பிராயம் வளர்ந்திருக்கவில்லை. இந்தியத் தமிழர் பிரச்சினை பற்றிக் கண்டிச் - சிங்கள மக்களின் அபிலாசைகள் மாத்திரம் பிரதமர்கள் இந்தியாவோடு நடத்திய பேச்சுவார்த்தைகளிற் குறிப்பிடத் தக்க அளவிற்குச் செல்வாக்குப் பெற்றுள்ளன.
கடந்த கால்நூற்ருண்டில் இல்ங்கைப் பிரதமர்கள் காலத் திற்குக் காலம் எடுத்த பல வெளிவிவகார நடவடிக்கைகளின் பிரதான நோக்கம் நாட்டின் அரசியல் பொருளாதார கலாசார சுதந்திரத்தைப் பாதுகாத்துப் பேணுவதாகும். வணிகக் கப்பல் கள் செல்வழியில் இருப்பதாலும், போர்த்திற நோக்கில் கேந்திர இடத்தை வகிப்பதாலும் முஸ்று ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு அடிமைப்பட்டுக்கிடந்த இலங்கை, 1948இல் இலங்கை மக்கள் பெற்ற சுதந்திரத்தைப் பழைய புதிய ஏகாதிபத்தியங்களுக்கு

கு"
- 291 -
இழக்காமல் பாதுகாக்க எத்தனிப்பது இயற்கையாம். எப்படி எவர் உதவியுடன் இச் சுதந்திரத்தைப் பாதுகாக்கலாம் என்பது பற்றித்தான் ஐ. தே. கட்சி, சுதந்திரக் கட்சிப் பிரதமர்களுக் கிடையில் வேற்றுமை எழுந்துள்ளது. பொருளாதார சுபீட்சத் திற்கு ஏற்றுமதிப்பொருள்கள் எங்கு எப்படி விற்பனையாகி இறக்குமதிப் பொருள்கள் எவரிடமிருந்து எப்படி வாங்கவேண்டு மென்றும், பொருளாதார வளர்ச்சிக்கு எவரின் எத்தகைய உதவி பெறவேண்டுமென்றும் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றங் கள் ஏற்பட்டுள்ளன. வெளித்தாக்குதல்களினுல் கலப்புப் பெற்ற இலங்கையின் தனித்துவத் தன்மையான மத கலாசாரத்தை மறுமலர்ச்சி செய்யும் புனித குறிக்கோளையும் வெளிவிவகாரக் கொள்கையில் காணலாம் ! பலகாலம் விடுதலை தவறிக்கெட்டுப் பாழ் பட்டு நின்ற தென்-ஆசிய மக்கள் அரசியல் பொருளாதார, கலாசார பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து செயற்படவேண்டு மென்னும் நோக்கிற்கு இலங்கை ஆதரவு தந்துள்ளது. ஆனல், இந்நோக்கத்திற்கு வேண்டியளவு வெற்றி கிட்டவில்லை.
மேலே கூறிய நோக்கங்களின் அடிப்படையில் இலங்கைப் பிரதமர்கள் நாட்டு நலனுக்காக மாத்திரமன்றிச் சில வேளை களில் தமது கட்சி நலனுக்காகவும் செயல்படுத்திய வெளிவிவ காரக் கொள்கைகளின் முக்கிய அம்சங்களாவன :
டி. எஸ். சேனநாயக்கா பொதுநலவாயத்தின் முக்கிய நோக்கம், சட்டப்படியன்றி மரபுரீதியாக அங்கத்துவ நாடு களுக்கிடையே அவர்கள் விரும்பிய அளவிற்குப் பாதுகாப்பு விடயங்களில் ஒத்துழைப்பையும், வெளிவிவகாரங்கள் பற்றி ஒரு நாடு முடிவெடுக்குமுன் ஏனையோரின், கருத்தைப் பெறு வதுமாகும். இந்த உறவு முறையை அடிப்படையாக வைத்தே திரு. டி. எஸ். சேனநாயக்கா இலங்கைக்கு ஆணிலப்பத அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தபோது, இங்கிலாந்துடன் பாதுகாப்பு ஒப்பந்தம், வெளிவிவகார ஒப்பந்தம் என்னும் இரு ஒப்பந்தங்களை ஐக்கிய இராச்சிய அரசாங்கத்துடன் செய்து கொண்டார். இரு ஒப்பந்த ங் களின் பாயிரவாசகங்களும் இலங்கை சுதந்திரம் பெற்றதும் பொது நல வாயத் தி ல் அங்கம் வகிக்குமென்பதை மறைமுகமாக ஒத்துக்கொண்டன. ஐந்து பிரிவுகள் கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக விளங்கியது. இருநாடுகளும் ஒத்துக்கொண்ட முறையில் ஐக்கிய இராச்சியம் இலங்கையின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றதும் அதற்கு உதவியாக இலங்கை கடல், விமான, தரைத் தளங்களைக் கொடுக்க இணங்கியதுமாகும். பிரித்தானிய ஏகாதிபத்தியம் மறைமுகமாக இலங்கையில் தொடர்வதற்கு, இந்த ஒப்பந்தம் வழிகோலியதென்று எதிர்த்

Page 17
- 292 -
திறத்தினர் கண்டித்தனர். விரும்பிய நேரமே ஒப்பந்தத்தி லிருந்து இலங்கையோ, ஐக்கிய இராச்சியமோ விலகலாம்; அன்றைய சர்வதேச சூழ்நிலையில், இலங்கைக்குப் பணச் செலவு ஏதுமின்றி அதன் பாதுகாப்பை இலங்கையோடு மிகக் கூடிய சிநேகபான்மையுடைய வல்லரசு ஏற்றுக்கொண்டது நாட்டிற்கு நன்மையானதென்று பிரதமர் வாதாடியுள்ளார். ஆட்சேபத்திற்கு ஆளாகாத வெளிவிவகார ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை இரு அனுகூலங்களைப் பெற்றது.
இலங்கை விரும்பினல், வெளிநாடுகளிலுள்ள ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் தூதுவரைத் தனது பிரதிநிதிக ளாகவும் பயன்படுத்திக்கொள்ளலா மென்பதோடு, இங்கி லாந்திற்குக் கிடைக்கும் வெளிவிவகாரத் தகவல்களை இலங்கை பெற்றுக்கொள்ள மு டி ந் த து. இவ் ஒப்பந்தங்களாலும் , ஏற்றுமதி-இறக்குமதி உறவுகளாலும் இலங்கை பொதுநல வாயத்துடனும் வேறு மேற்கு நாடுகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. மத்திய நிலையிலிருந்து வலது பக்கம் சிறிது சாய்ந்த ஐ. தே கட்சி முதலாளித்துவ அரசு களை விரும்புவது இயற்கையான தென்று விமர்சனம் செய்வாரு முளர். புத்த பிரான் காட்டிய மத்திய பாதையைப் பின் பற்றப்போவதாக ஒரு கால் கூறிய முதலமைச்சர், வேறுபல பொதுநலவாய நாடுகளிலும் பார்க்கக் கம்யூனிசச் சீனுவை முதலில் அங்கீகரித்துள்ளார். ஆணுல் அதனுடனே, ரூஷியா வுடனுே, வேறு எந்த கம்யூனிச நாடுகளுடனே அரசியற் தூதுவர் உறவை ஏற்படுத்த மறுத்துவிட்டார்; தூதுவரின் செயலகங்கள் மூலம் இலங்கையில் கம்யூனிசம் பரவு வதைத் தடுப்பதே இதற்குக் காரணமென்று வாதிட்டார். அத்தோடு ஐக்கிய நாடுகள் அமைப்பிலும் அதைச் சார்ந்த நிறுவனங்களிலும் இலங்கையின் பிரதிநிதிகள் கம்யூனிச நாடு களின் கருத்துக்களுக்கு எதிராகப் பேசியும், பிரேரணைகளுக்கு எதிராக வாக்களித்தும் வந்தனர். இது பிரதமரின் கம்யூனிசத் திற்கு எதிரான மனப்பான்மையைக் காட்டுகின்றது. இவர் காலத்தில் நிதியமைச்சராயிருந்த ஜே. ஆர். ஜயவர்த்தன 'கொழும்புத் திட்டத்தை' உருவாக்குவதில் பெரும்பங்கு எடுத்தார்; இத்திட்டம் இலங்கைக்கும் கணிசமான அளவு தொழில் நுட்ப, நிதி உதவிகளைக் கொடுத்தது. சுகாதார ஸ்தல ஸ்தாபன அமைச்சராக இருந்த திரு. எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா ஆசிய ஒற்றுமையைப் பேணும் முதல் முக்கிய நடவடிக்கையாக ஒல்லாந்தரின் இந்தோ னேஷிய ஆக்கிரமிப்பைக் கண்டிப்பதற்குப் புதுடில்லியில் கூட்டப்பெற்ற 1947ஆம் ஆண்டு ஆசிய உறவு மகாநாட்டில் கலந்துகொண்டார்.

. . . 。 リ 。 ) سيميس 293 مشمسة. 8 أسرة "
டட்லி சேனநாயக்கா : தந்தையார் அமைத்த வழிக 2ளப் பின்பற்றிய தனயன் அமைச்சரவையைக் கூடியளவு கலந்தாலோசித்து நடந்துகொண்டார். முதலாவது முறை யாக அவர் பிரதமராயிருந்த காலத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றம், சீனுவுடன் வர்த்தக-அமைச்சர் ஒழுங்கு செய்த ரப்பர்-அரிசி ஒப்பந்தமெனலாம். மேற்கத்திய நாடுகளின் உதவி நிறுத்தப்படலாமென்று கூறிய அமைச்சரவையின் ஒரு பகுதியினர் ஒப்பந்தத்தை எதிர்த்தாலும் அமைச்சரவையும் பாராளுமன்றமும் அதை ஏற்றுக்கொண்டன. அமெரிக்காவும் இங்கிலாந்தும் இலங்கை றப்பரைக் கம்யூனிசச் சீன வாங்கிக் கொறியா யுத்தத்தில் பயன்படுத்துவதை விரும்பாவிடினும், நாட்டிற்கு வேண்டிய அரிசியையும் அதன் ரப்பரையும் மேற் கத்திய சந்தைகளிலும் பார்க்கச் சீனு இலங்கைக்குச் சாதக மான விலைகளில் முதலாவது வருடத்தில் விற்கவும் வாங்க வும் முன்வந்ததினுல் இலங்கை ஒப்பந்தத்தை அமுல் செய் தது. இது இலங்கையின் பொருளாதார சுதந்திரத்தை நிலைநாட்டும் ஒரு நடவடிக்கை எனலாம்; இலங்கை மேற்கத் திய சந்தைகளில் மாத்திரமல்ல, வேறு நாடுகளிலும் விற் பனவுக் கொள்வனவை விஸ்தரிக்கும் கொள்கைக்கு முன் னேடியாய் அமைந்தது. ஆனல் அரசியலுறவு சீனுவுடனே வேறு கம்மியூனிச நாடுகளுடனே மாற்றமின்றி முன்புபோல் தொடர்ந்தது. 1952லும், 1969லும் லண்டனில் நடைபெற்ற பொதுநலவாயப் பிரதமர்களின் மகாநாட்டிற் கலந்து கொண்டு இலங்கையின் பொதுநலவாய உறவை வலுப்படுத் தினர்; வலதுசாரி நாடுகளான ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய இராச்சியம், மேற்கு ஜேர்மனி, பிரான்சு ஆகிய நாடுகளுக்கு விஜயஞ்செய்து, ஜனதிபதி யோன்சன், பிரதமர் ஹரல்ட் உவில்சன், முதலமைச்சர் ஏ ஹாட், தளபதி டி கோல் ஆகி யோருடன் உத்தியோ கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார்; பதவிவகித்த பிற்காலத்தில் கம்யூனிச நாடுகளல்லாத ஐக்கிய அரபுக் குடியரசு, கனடா, யப்பான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு உத்தியோக முறையில் வருகை தந்து அவற்றுடன் இலங்கையின் நல்லுறவை வளர்த்துக் கொண்டார்.
சேர், யோன் கொத்தலாவல முதல் இரு பிரதமர் களிலும் பார்க்கச் சேர், யோன் மேற்கு நாடுகளுடன் கூடுத லாக ஒட்டவும் கம்மியூனிச நாடுகளுடன் கூடுதலாக விலகிச் செல்லவும் முனைந்துள்ளார். மகாராணியாரை அவர் இலங்கை யிற் சுற்றுப்பயணம் செய்யுமாறு அழைத்து வெற்றிகரமாக நடத்திமுடித்தது, இங்கிலாந்தோடும் பொதுநலவாய நாடுக

Page 18
حساس۔ 294 بس۔
ளோடும் இலங்கை கொண்டிருந்த உறவை வலுப்பெறச் செய்ததெனலாம். தானே உலகின் பல தாராள சனநாயக நாடுகளுக்குச் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார், ஆசிய நாடுகள் பலவற்றின் 'கொழும்பு-மகாநாட்டை' 1954இல் கூட்டினர். இருபத்தொன்பது ஆசிய ஆபிரிக்க நாடுகள் பங்கு பற்றிய, 1955ஆம் ஆண்டு பாண்டுங் மகாநாட்டில் பழைய ஏகாதிபத்தியங்களோடு புதிய கம்யூனிச ஏகாதிபத்தியங்களும் கண்டிக்கப்பட வேண்டியவையென்று கூறி, சூ-என்-லாயின் கோபத்திற்கும், நேருவின் அதிருப்திக்கும், யு-நூவின் சமரச அறிவுரைக்கும் ஆளாகினுலும் மகாநாட்டின் பெரும்பான்மை ஆதரவையும் மேற்கு நாடுகளின் கைதட்டலையும் பெற்றுக் கொண்டார். இவர்காலத்தில் இலங்கை ஐ. நா. அமைப்பில் அங்கத்துவம் பெற்றது. மேற்கு வல்லரசுகளுக்கும் ரூஷிய கூட்டணியினருக்கும் இடையில், இரு கட்சியைச் சார்ந்த புதிய அரசுகள் சிலவற்றை அனுமதிப்பதுபற்றிய உடன்பாட் டின் விளைவாய், இலங்கைக்கு ஐ நா அமைப்பில் சேரும் வாய்ப்புக் கிட்டியது. சேர் யோன் தான் பிரதமராய் வந்த சிறு காலத்தில் இந்தியத் தமிழர் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்க எத்தனித்தார். இந்திய - பாகிஸ்தானிய பிரசா உரிமைச் சட்டத்தினுல் குடியுரிமையை இழந்த இந்தியத் தமிழரில் எத்தனைபேர் இந்தியப் பிரசைகளாகவும், எத்தனை பேர் இலங்கைப் பிரசைகளாகவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்பதுபற்றி இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடை யில் இதுகாறும் இணக்கமேற்படவில்லை. பிரச்சினையைத் தீர்க்குமென்று கருதப்பட்ட ஜூன் 1954 நேரு-கொத்தலாவல ஒப்பந்தமும் நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடு களினல் தோல்வியில் முடிந்தது;
1956 வரை பதவி வகித்த மூன்று ஐ. தே. கட்சிப் பிரதமர் களின் மேற்கு நாடுகளுடன் சார்ந்த வெளிநாட்டுக் கொள்கை யினல் இலங்கை அடைந்த நன்  ைம தீமை களை ஆராயும் பேராசிரியர் ஏ. ஜே. உவில்சன் அவர்கள் 4, 1) ஆங்கில-அமெ ரிக்க தொகுதி நாடுகளை வளைய வந்ததினல் சில ஆசிய-ஆபிரிக்க நாடுகளின் நன்மதிப்பை இழந்தது. (2) ஐ. நா. அமைப்பின் அங்கத்துவ விடயத்தில் பொதுநலவாய நாடுகளின் அமோக ஆதரவைப் பெற்ருலும், நடுநிலைக் கொள்கையைப் பின்பற்றி யிருந்தாலும் அங்கத்துவம் பெற்றிருக்கலாம். (3) கொழும்புத் திட்டத்தின் கீழ் சில இலங்கையர்கள் தொழில் நுட்பப் பயிற்சி பெற்றுலும், வேண்டிய மூலதன உபகரணங்களை நாடு பெற வில்லை. (4) இலங்கையின் விவசாயப் பொருள்களுக்கு நியாய
1. See, Ceylon's Foreign Policy since Independence (1948-1961)
in “Young Socialist" No. 1, July-Sept. 1961.

سے 295 حسی۔
மான ஸ்திரமான விலையை மேற்குச் சந்தைகளிலிருந்து பெறுவ தற்கு இலங்கை அரசாங்கங்கள் செய்த எத்தனங்கள் தோல்வி யுற்றன. (5) மேற்கு நாடுகள் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் சிரத்தையெடுக்கவில்லை. (6) எப்படித் தாங்கள் நடப்பினும் இலங்கை தங்கள் சார்பாகவே இருக்குமென்று இந் நாடுகள் கருதின, என்பன போன்ற பல கருத்துக்களை வெளி ஆபிட்டுள்ளார்.
எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா : 1956இல் சுதந்திரக் கட்சித் தலைவர் பிரதமரானதும் நாட்டின் வெளிவிவ காரக் கொள்கையில் புதியதோர் கட்டம் ஆரம்பமாகியது: முதலாளித்துவமும் கம்யூனிசமும் ஆக்கியோரையே அழிக்க வல்ல கோர உருவங்கள் ஒன்ருேடொன்று பொருதக்கூடிய இவ்விரு கோர உருவங்கள் எதனுேடும் சிக்கித் த விக்காது, இந்தியா அல்லது சுவிற்சலாந்துபோல நடுநிலைக் கொள்கை யைப் பின்பற்றுவதே நாட்டிற்கு நலன் தருமென்று புதிய பிர தமர் கூறியுள்ளார். ' எங்கள் மக்களின் நன்மையை உத்தே சித்து, சமாதானத்தைப் பேணுவதே எமது வெளிவிவகாரக் கொள்கையின் முக்கிய நோக்கமாயிருக்கும். இந்நோக்கத்தை அடைவதற்குச் சிறந்த வழி நமது நாடு வல்லரசுக் கூட்டணிகளி லிருந்து விலகியிருப்பதும், அனைத்து நாடுகளோடு சிநேக உறவை அமைப்பதுமாகும் ' என்ற வரிகளை மக்கள் ஐக்கிய முன்னணி யின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணலாம். ம. ஐ. மு. அரசாங் கத்தில் இடதுசாரிகள் முற்பகுதியில் அங்கத்தவர்களாயிருந்தா லும், பிரதமரின் நடுநிலைக் கொள்கையே அமுலாயிற்று. இக் கொள்கையின் முதல் முக்கிய அம்சமாக 1947 பாதுகாப்பு ஒப்பந் தத்தின் கீழ் ஐக்கிய இராச்சியப் படைகள் உபயோகித்துவந்த தளங்களை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு பிரித் தானிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வெளி நாட்டுப் படைக் குறைப்புக் கொள்கையை இக்காலத்தில் கடைப் பிடித்த பிரித்தானிய அரசாங்கம், பிரதமர் வேண்டுகோளுக்கு உடனடியாக இணங்கியது ; 1957இல் படைத்தளங்களில் சிங்கக் கொடிகள் பறந்தன. அவசரப்பட்டு நடந்தேறிய மாற்றத்தினுல் 10,000 இலங்கையர் வேலே இழந்தாலும், இலங்கை இப் போதுதான் பூரண சுதந்திரம் பெற்றதென்று பிரதமர் பூரிப் பெய்தினர். அடுத்த அம்சமாக ஆணிலப்பத இலங்கையில் பிரித் தானிய முடிக்கு இருந்த இடத்தை நீக்கி நாட்டைக் குடியரசாக் குவதாகும், உடனடியாக அவர் இதில் இறங்க முடியவில்லை : மொழிப் பிரச்சினையும் வேலே நிறுத்தங்களும் அவரது நேரத்தை மண்ணுக்கின. இருந்தும் அவர் முயற்சியால் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெற்ற இரு சபைத் தெரிகுழு குடியரசோடு வேறு
இ. - 4

Page 19
----- 296 --سم۔
யாப்பு மாற்றங்களையும் ஆராய்ந்து கொண்டிருக்கும்போது பிர தமர் இறந்துவிட்டார். இலங்கை அனுபவித்த நன்மை கருதி, பொதுநலவாயத்திலிருந்து விலக அவர் விரும்பவில்லை. கப் யூனிச நாடுகளின் உறவை வளர்ப்பதற்கு ருஷியாவுடனும் சீனுவுடனும் முதன் முதலாக அரசியல் தூதுவர் அலுவலகங்கள் பரஸ்பர முறையில் திறக்கப்பட்டன. யூகோஸ்லேவியா, போலந்து, சீனு, ருஷியா போன்ற நாடுகளுடன் வாணிபத் தொடர்பு ஏற்படுத் தப்பட்டாலும், பழைய வணிக அமைப்பில் பெருமாற்றத்தைப் புகுத்தக்கூடிய நடவடிக்கைகளைப் பிரதமர் எடுக்கவில்லையென்று குறைகூறுவாருமுளர், பொருளாதார வளர்ச்சிக்கு உதவ முதலாளித்துவ கம்யூனிச கூட்டணிகள் இரண்டும் போட்டியிட் டாலும், செயற்படுத்தக்கூடிய பொருளாதாரத் திட்டமின்மை யால் அவர்கள் கொடுக்க முன்வந்த பொருளுதவியை நன்கு பயன்படுத்த முடியவில்லை. தனது வெளிவிவகார விடயங்கள்
பற்றிய நிபுணத்துவ அறிவினல் இருசார்பு நாடுகளின் சிநேகத் தையும் பிரதமர் பெறமுடிந்தது. ஆனல் இந்தியத் தமிழர் பற்றிய பிரச்சினை தீர்க்கமுடியாத ஒன்ருக இருந்தது. எனினும் நேருவும் பண்டாரநாயக் காவும் சிநேகிதர்களாக இருந்து நடு நிலைக் கொள்கையைப் பின்பற்ற இருவரும் முயன்றுள்ளனர்:
சிறிமாவோ பண்டாரநாயக்கா; கணவன் அமைத்த நடுவழி செல்வோமென்று வெளிக்கு அறிவித்துள்ள அவரின் மனைவியார், நாட்டைக் குடியரசாக்காது கணவன் விட்டுச் சென்ற குறையை, இரண்டாவதுமுறை பிரதமரானதும் யாப்பமை மன்றம் மூலம் நிவிர்த்திசெய்துள்ளார். நாடு குடியரசான பின்பும் பொதுநல வாய உறவைத் தொடர்ந்து அனுபவிக்க முடிவுசெய்தார். 1961இலும் 64இலும் இலண்டனில் நடைபெற்ற பொதுநல வாயப் பிரதமர் மகாநாடுகள், 1961, 1973 நடுநிலையாளர் உச்சி மகாநாடுகள், 1964 ஆசிய-ஆபிரிக்க மகாநாடு போன்ற வற்றில் பங்குபற்றியதோடு, 1963இல் ருஷியா, செக்கோசெல வாக்கியா, போலந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்தும், முதலாளித்துவ கம்யூனிச நடுநிலை நாடுகள் அனைத்தின் நல் லெண்ணத்தைப் பெற எத்தனித்துள்ளார். " கொங்கோவில் ஏற்பட்ட அரசியற் சிக்கலில் இலங்கையின் நிலை, குடியேற்ற ஆபிரிக்காவில் நடந்த சுதந்திரக் கிளர்ச்சியில் பிரதமரின் நடத்தை, ஐ. நா.வில் விவாதத்திற்குரிய விடயங்களில் அவர் பாரபட்சமற்ற முறையிற் செயற்பட முனைந்தமை, இந்தியா வோடு சிநேக உறவை முன்னேற்றுவதற்கான அவர் எத்தனங்கள் அனைத்தும் திரு, பண்டாரநாயக்காவின் இயக்கஞ்சார் நடுநிலைக் கொள்கைக்கு இணங்கியனவாம் ' . 1964ஆம் ஆண்டு இந்தியத் தமிழர் பற்றிய சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் முறைப்படி அழு

--سے 297 -سسس۔
ஜாகாததை ஒழுங்குபடுத்த 1973இல் இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய-சீன எல்லைத் தகராறைத் தீர்க்குமுகமாக 1963இல் சீனுவிற்கு விஜயஞ்செய்தார். முக் கூட்டணியினர் ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கை கடைப்பிடித்த வெளிநாட்டுக் கொள்கை மயக்கமானது, நடுநிலை நெறிக்கு ஆட்டங்கொடுத்தது, சோஷலிச நாடுகளுக்குச் சார்பானது என்ற கருத்துக்கள் சிலர் மனதில் எழக்கூடும்.' 1971 இரத்தக் கிளர்ச்சிக் காலத்தில் முதலாளித்துவ நாடுகளும் சோஷலிச நாடு களும் இலங்கைக்கு உதவியது நாட்டின் நடுநிலைக் கொள்கையின் வெற்றிக்கு ஒரு எடுத்துக்காட்டென்று கூறப்படும் அதே நேரத் தில், சீனுவோடு அமைந்துள்ள நெருங்கிய உறவு வழமையான நேசநாடுகளில் அதிருப்தியைக் கொடுத்துள்ள தென்று கூறு வாருமுளர்.
ஆனல் , " " பொதுத்துறை அபிவிருத்தி-1973 ' என்னும் அரசாங்க அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளதைக் காண்கின் ருேம் : வெளிநாட்டுறவில் கூட்டுச்சேராக் கொள் கையை அரசாங்கம் தொடர்ந்து பின்பற்றியுள்ளது. நடுநிலை நாடுகளின் மகாநாடுபற்றி மே, 1973இல் காவுல் நகரத்தில் நடைபெற்ற முன்னேற்பாட்டுக் கூட்டத்தில் இலங்கை பங்குபற் றியதோடு, அல்ஜியேஸ் நகரில் செப்ரெம்பர் 1973இல் நடை பெற்ற உச்சிமகாநாட்டிலும் பங்குபற்றியது. அத்தோடு ஆகஸ்டு 1973இல் ஒற்ருவ நகரில் நடந்த பொதுநலவாய அரசாங்க அரச தலைவர்கள் கூட்டத்திலும் நாங்கள் பங்குகொண் டோம்; இந்துசமுத்திரத்தைச் சமாதான பிராந்தியமாக்கும் பிரகடனத்தைச் செயற்படுத்துவதற்குத் தொடர்ந்து எத்த னித்து வருகின்ருேம். ஐரோப்பிய பொருளாதார சமுதாயத் துடன் பேரம்செய்வதற்கு பிறசல்ஸ் நகரில் தூதரகமொன்றை அமைத்துள்ளோம் ' சுதந்திரக்கட்சி இளைஞர் கூட்டிணைவின் பிரதம அமைப்பாளரான திரு. அனுரா பண்டாரநாயக்கா சீன வுடனும் ருஷியாவுடனும் இலங்கை கொண்டுள்ள நெருங்கிய உறவை இன்னும் இறுகச் செய்வதற்காக இந்நாடுகளுக்கு (ஜூலை 1974) விசேட அழைப்பின்பேரில் தூதுக்குழு ஒன்றுடன் சென்றுள்ளார்.
மேலுள்ள சுற்றுநோட்டத்திலிருந்து இலங்கைப் பிரதமர்கள் சுதந்திரமாக, நாட்டுக்கு நன்மை தருமென்று கருதியதைச் செய்ய எத்தனித்துள்ளதைக் காணலாம்; இங்கிலாந்துபோல் வெளிநாட்டுக் கொள்கையில் கட்சிகளுக்கிடையே ஒருமைப்பாடு
l. See, W. A. Wiswa Warnapalas article, Sri-Lanka in 1972 Tension and Change in Asian Survey of Feb. 1973.

Page 20
حسی۔ 298 حس۔
இன்னும் ஏற்படவில்லை. ஒவ்வொரு பிரதமரும் சூழ்நிலைக்கேற்ற வாறு, பரிசோதனைமுறையில் நடந்துள்ளார். ஐ. தே. கட்சிப் பிரதமர்கள் தாராள சனநாயக நாடுகளுடன் கூடிய உறவை அமைத்துள்ளபோது, சுதந்திரக் கட்சிப் பிரதமர்கள் இப் போக்கை மாற்றிச் சோஷலிச சனநாயக நாடுகளின் உறவையும் அபிவிருத்திசெய்ய எத்தனித்துள்ளனர். பொருளாதார, பாது காப்புப் பலமும், திறமை அனுபவம் உள்ள அரசியல் தூதுவர் களும் போதியளவுக்கு இல்லாத சிறிய இலங்கை, உலக அரசிய லில் அதிகம் தலையிட்டு அனைவரின் நல்லெண்ணத்தையும் பெறும் எத்தனத்தால் ஏற்படக்கூடும் விளைவுகளைக் காலந்தான் நன்கு காட்டமுடியும்.
8. பிரதமரும் அமெரிக்க ஜனுதிபதியும்
ஐக்கிய அமெரிக்காவும் இலங்கையும் குடியரசுகள்; அவற்றின் ஆட்சிக் கருவிகளுக்கிடையே வித்தியாசமுண்டு. நிர்வாகத்தின் மீது கொண்ட நம்பிக்கையீனம் காரணமாய் அமெரிக்க யாப்பில் வலுவேருக்க, சமதடைப்பாட்டு நெறிகள் இளையோடிக்கொண் டிருக்க, இலங்கையில் வலுக்கள் இணைப்பும் நிர்வாக-சட்டத் துறைகளுக்கிடையில் ஒத்துழைப்பும் நிலவுவதைக் காணலாம். இவற்றின் பெறுபேருய் இருநாட்டு அரசாங்கத் தலைவர்களான ஜனதிபதி, பிரதமர் ஆகியோர் சம்பந்தமான சட்ட சட்டரீதி பற்ற அம்சங்கள் பல பகுதிகளில் வேறுபட்டுள்ளன.
தெரிவு : மக்களால் தெரியப்பட்ட தேர்தல் மன்றம், ஜனதிபதியைத் தெரியவேண்டுமென்பது யாப்புவிதி. நடை முறையில் இன்று சட்ட ரீதியாகத் தேர்தல் மன்ற அங்கத்தவர்கள் தெரியப்பட்டுப் பெரும்பான்மை அங்கத்தவரின் கட்சி நியமித்த அபேட்சகரே ஜனதிபதியாகின்ருர், இலங்கையில் கீழ்ச்சபையின் நம்பிக்கையைப் பெறக்கூடியவரே அரசின் தலைவரால் பிரதமராக நியமிக்கப்படுகின் முர் : இவர் சாதாரணமாகப் பெரும்பான்மை கொண்ட பாராளுமன்றக் கட்சித் தலைவராக இருந்துள்ளார். நடைமுறையில் ஒரு பொதுத்தேர்தல் பிரதமரைக் தெரிவு செய்வதாக அமையும். எனவே, ஜனதிபதியும் பிரதமரும் மக்க ளால் கட்சிமூலம் தெரியப்படுகின்றனர் என்பது பெறப்படும். இப்பதவிகளுக்கு வேண்டிய தகைமைகளை ஒப்பிடும்பொழுது, ஜனதிபதி ஐக்கிய அமெரிக்காவில் பிறந்து 14 வருடம் அங்கு வசித்து 35 வயதிற்குக் குறையாத அமெரிக்கப் பிரசையாயிருக்க வேண்டியபொழுது, பிரதமர் 18 வயதிற்குக் குறையாத இலங் கைப் பிரசையாயிருக்கவேண்டுமென்பது சட்டமாகும். ஜனுதி பதிப் பதவியை எய்துவதற்கு ஒருவர் சனத்தொகைகூடிய மாகா ணத்தவராய், புறெரெஸ்ரன்ட் மதத்தவராய், பெருங் குடும்பத் தினராய், தேசாதிபதியாய் அல்லது வேறுவகையில் கீர்த்தி

- 299 -
பெற்றவராய் இருப்பது நன்று ; காங்கிரஸ் அல்லது அமைச்ச ரவை அங்கத்துவம் முக்கியமல்ல, இலங்கைப் பிரதமர் பதவியை அடைய விரும்புவோர் சிங்கள இனத்து கோயிகம குலத்து பெளத்த மதத்தினராய், சாதாரணமாக அரசியலாளராய் இரு த்த ல் இன்றியமையாததாகும். ஜனதிபதியாவதற்கு வேண்டிய காரணிகளுடன் கெட்டித்தனமும் இருக்கவேண்டிய அவசியமில்லை" என்ற விறைஸ் பிரபுவின் கூற்று இலங்கைப் பிரதம ருக்கும் பொருந்தியதொன் மும்,
சட்டத்துறை : ஜனதிபதி காங்கிரஸ் உறுப்பினராய் இருக்கமுடியாது. ஆனல் தலைமை - நிர்வாகியின் அனுபவம் சட்டவாக்கத்திற் செறிவது விரும்பத்தக்கதென்ற நெறியை மனதிற்கொண்டு, அமெரிக்க யாப்பில் சில ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. உதாரணமாக, அவர் காலத்திற்குக்காலம் அரசின் நிலைபற்றிய செய்தி 'யைக் காங்கிரசிற்கு அனுப்பிவைக்கலாம் : அவசர காலங்களில் காங்கிரசை விசேடமாகக் கூட்டலாம் : காங்கிரஸ் நிறைவேற்றிய மசோதாவை " வீட்டோ செய்ய லாம். அவர் காங்கிரசைக் கலைக்கமுடியாது. எனவே, ஒத் துழைக்காத தன் ஆாங்கிரஸ் கட்சியினரை அவர் கட்டுப்படுத்து வதில் கஷ்டமேற்படுகின்றது. எதிர்க்கட்சியினர் காங்கிரசில் பெரும்பான்மையினராயிருக்கும் காலங் களி ல் சட்டத்துறை நிர்வாகத்துறைக்கு முட்டுக்கட்டையாக இருக்கக்கூடும் ஆணுல் ஜனதிபதியின் உயர் பதவி, அனைத்து மக்களின் பிரதிநிதியென்ற நிலை, கட்சியின் தலைமை, நியமன அதிகாரம், மக்களுடன் செய்தி நிறுவனங்கள் மூலம் நேரடித் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு ஆகியன காங்கிரசை அவரின் நியாயமான விருப்பத் திற்கு இணங்கச் செய்கின்றன. பிரதமருக்கு இத்தகைய கஷ்டங்கள் எழமுடியாது. தேசிய அரசுப் பேரவையின் உறுப் பினராக இருக்கவேண்டுமென்பதோடு சாதாரணமாகப் பாராளு மன்றத்தின் ஆதரவைப் பெறுகின் ருர் : ஆதரவை இழந்தால் அல்லது இழக்கப்போகும் சூழ்நிலை ஏற்பட்டால் அவர் பாராளு மன்றத்தைக் கலைக்கலாம். இவ்வுரிமையும், கட்சிக் கட்டுக் கோப்பும் பாராளுமன்றத்தைப் பிரதமர் விரும்பியபடி நடக்கத் தூண்டுகின்றன. அவருக்கு வீட்டோ அதிகாரமில்லை, வேண்டி யதுமில்லை.
நிர்வாகத்துறை : "நிர்வாக அதிகாரம் ஜனதிபதியில் விடப்பட்டிருக்கின்றது' என்ற ஒரு யாப்பு விதியும், காங்கிரஸ் இயற்றிய சட்டங்களும் ஜனதிபதியை உலகிலுள்ள பெரிய நிர் வாகத் தலைவர்களில் ஒருவராக ஆக்குகின்றன. தன் பரந்த நிர்வாக அதிகாரங்களை அமைச்சரவையின் உதவியுடன் பயன் படுத்துகின் ருர், அவர் நியமிக்கும் அமைச்சர்கள் காங்கிரசில்

Page 21
سے سے 300 جیس۔
அங்கம்வகிக்க முடியாது; நியமனம் செனெற்றினுல் அங்கீகரிக்கப் படவேண்டும். அமைச்சர்கள் ஜனதிபதியின்கீழ் வேலைசெய்யும் அலுவலர் போன்றவர்கள்; ஆலோசனை கூறுபவர்கள், சகாக்க ளல்ல. அவர்கள் ஆலோசனைக்கு எதிராக ஜனதிபதி முடிவு செய்யலாம், அவர்களைப் பதவி நீக்கம் செய்யலாம் - இவற்ருல் ஜனதிபதி ராஜினமாச் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஒருபோதும் எழமாட்டாது. பிரதமர், பாராளுமன்றத்திலிருந்து அமைச்ச ரவையை அமைக்கின்ருர், இக்கடமையைச் செய்யும்போது தேசிய அரசுப் பேரவையின் பெரும்பான்மை ஆதரவைப் பெறு மாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அமைச்சர்கள் பிரதமரின் சகாக்கள்; அவர்கள் கருத்திற்கு நல்ல மதிப்புக் கொடுக்கப் படுகின்றது; அவர்களை வேலை நீக்கம் செய்யலாம் - இதஞல் அரசாங்கமே சில வேளைகளில் வீழ்ச்சியுறலாம். மத்திய அரசாங்க உயர் அலுவலரை ஜனதிபதி நியமனஞ் செய்கின்ருர்; இந்த நியமனங்களுக்குச் செனெற்றின் ஆ பெரும்பான்மை அங்கீகாரம் வேண்டும். பிரதேச அரசுகளின் எல்லைக்குள் பணியாற்றும் மத்திய அரசாங்க அலுவலர்களை நியமிக்கும்போது தன் கட்சி பைச் சேர்ந்த பிரதேச அரசுச் செனெட்டர்களுடன் கலந் தாலோசிப்பது வழக்கமாகும் . பிரதமர் சட்டமன்றத்தின் ஆங்கீ காரமின்றி உயர் அலுவலரை நியமிக்கும் அதிகாரமுடையவர். புதிய யாப்பு ஏற்பாடுகளின்படி அலுவலர் நியமனத்தில் அரசியல் தனம் புகக்கூடிய வாய்ப்பு உண்டு.
வெளிநாட்டுறவில் : ஜனதிபதியும் பிரதமரும் வெளி விவகாரங்களில் முக்கிய இடம் வகிக்கின்றனர். ஜனதிபதி பிற நாடுகளுடன் செய்யும் ஒப்பந்தங்களுக்குச் செனேற்றில் & பெரும் பான்மை அங்கீகாரம் வேண்டும். சில வேளைகளில் செனேற் தன் அங்கீகாரத்தைக் கொடுக்க மறுத்ததினுல் ஜனதிபதி ᎥᏝ0ᎱᎢ ᎧᏪᏴᎢ மிழந்ததுமுண்டு. இத் த  ைகய சூழ்நிலை எழுவதைத் தடுக்க ஜனுதிபதி "நிர்வாக உடன்படிக்கை"கள் செய்யும் வழக்கம் அதிகரித்துள்ளது. மு ப் படைத் தலைவர் என்ற முறை யில் படைகளே எவ்விடத்தும் அனுப்பும் உரிமை ஜனதிபதிக்கு உண்டு; ஆனல் போர்ப் பிரகடனம் செய்வது காங்கிரசின் தனி யுரிமையாகும். பிரதமர் அமைச்சரவையின் அனுசரணையோடு ஒப்பந்தங்கள், போர்ப்பிரகடனங்கள் செய்யலாம்; பாராளு மன்றத்தின் அங்கீகாரம் சாதாரணமாக மறுக்கப்படமாட்டாது. நீதித்துறை : இருவரும் உயர்நீதிபதிகளை நியமிக்கலாம், குற்றம் புரிந்தோருக்கு மன்னிப்பு வழங்கலாம், அவர்கள் பெற்ற தண்டனையைக் குறைக்கலாம். ஜனதிபதியின் வேண்டுகோளுக் கிணங்கிக் காங்கிரஸ் ஆக்கிய சட்டம் யாப்பிற்கு முரண்பட்டதா யிருந்தால், அது சட்டரீதியற்றதென்று தீர்ப்பு வழங்கும் உரிமை

- 301 -
உயர்நீதிமன்றத்திற்கு உண்டு. இலங்கையில் தேசிய அரசுப் பேரவை பிரதமர் வேண்டுகோளுக்கிணங்கி ஆக்கிய சட்டத்தைச் சாதாரண நீதி மன்றங்கள் செல்லு படி யா கா தெ ன் று 3ñas D (PL. AJATE .
ஒழிபியல் : ஜனுதிபதியின் சம்பளத்தைச் சட்டமன்றம் மாற்றலாம்; ஆனல் அப்போதிருப்பவரின் பதவிக்கால முடிவி லேயே அமுலாக்கமுடியும். பிரதமரின் சம்பளம் எப்பொழுதும் மாற்றி அமுலாக்கப்படலாம். ஜனதிபதியைக் கைதுசெய்யவோ நீதிமன்றங்களில் அவர்மேல் வழக்குத் தொடரவோ முடியாது; பழி மாட்ட  ைற ந் து பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்புதான் வழக்குத் தொடரலாம். பிரதமர் "சட்ட ரீதியான அமைச்சர் பொறுப்பு' வகிப்பவர். ஒருவர் இன்று இருமுறைகளுக்குமேல் ஜனு தி பதிப் ப த வி ைய வகிக்க முடியாது; பிரதமராவதற்கு இத்தகைய கால வரையறை இல்லை. காங்கிரஸ் ஜனதிபதியை அவருடைய 4 வருடப் பதவிக்காலம் முடியும்வரை பதவியி லிருந்து நீக்கமுடியாது. பிரதமர் பதவிக்காலம் 6 வருடங்கள்: தேசிய அரசுப் பேரவை விரும்பினுல் அவரை எந்நேரமும் பதவியி லிருந்து நீக்கலாம். பாராளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பெற்றிருக்கும்போது இரு தலைவர்களின் அதிகாரம் பரந்ததா யிருப்பினும், பெரிய வல்லரசொன்றின் தலைவர் என்ற முறை யில் 'ஜன தி ப தி உலகத்தையே ஆட்சி செய்பவர்' என்ற கூற்றினையும், ஜணு தி பதி யி ன தோடு ஒப்பிட்டுக் கூறக்கூடிய பொதுச் சிறப்புடைய பதவி வேறெங்குமில்லை என்பதையும் மறத்தலாகாது.

Page 22
IX ஜனுதிபதி
1. மகாதேசாதிபதி
இலங்கையின் கடலடுத்த பாகங்கள் மீது ஒல்லாந்தர் கொண் டிருந்த மேலாண்மையுரிமை 1802இல் ஏமியென்ஸ் ஒப்பந்தத்தி ணு,லும், ஏனைய பகுதிகள் மேல் இலங்கை மன்னர்களுக்கிருந்த உரிமை 1815 இல் கண்டிப் பொது இணக்க ஒப்பந்தத்தினுலும், பிரித்தானிய மன்னருக்கும் அவரின் பின்னுரிமையாளருக்கும் சட்ட ரீதியாக நிலவரமாக மாற்றப்பட்டன. இச்சரித்திர நிகழ்ச்சி களினுல் பிரித்தானிய மன்னர் மேற்இொண்ட இலங்கையின் ஆட்சிப்பொறுப்புப் படிப்படியாக இலங்கை மக்களுக்கு மாற்றப் பட்டு, 1948இல் ஆணிலப்பத அந்தஸ்தையொத்த தன்னுட்சி உரிமையை நமது நாடு பெற்றது. தொடர்பு முற்ருகத் துண்டிக்கப்படாது 1972>வரை நிலவிற்று. பிரித் தானிய யாப்பு வழக்காறும்,இலங்கையின் 1948 யாப்பும் அவரின் அதிகாரத்தையும் கடமையையும் உரிமையையும் வரையறுத்தன: இலங்கையின் ஆட்சி அவர் பெயரிலேயே நடைபெற்றது ; அவர் பாராளுமன்றத்தின் ஒரு பகுதியாக விளங்கினர் ; நிர்வாக அதிகாரம் அவரின் பொறுப்பாக இருந்தது; நீதித்துறை அவர் பெயரிலேயே இயங்கியது. இது சட்டரீதியான நிலையாம். நடை முறையில் அவர் தன் அதிகாரங்களை ஆங்கில அரசியல் மரபை யொட்டி இலங்கை அமைச்சர்கள் ஆலோசனையின் மீதுதான் பொதுவாகப் பயன்படுத்தவேண்டும் , விரும்பினுல் முடியின் உறவை அகற்றும் உரிமையை இலங்கை பெற்றிருந்தது ; ஆணுல் அப்படிச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக இலங்கை ஆக்கிய சில சட்டங்கள் பிரித்தானிய இராணியை இலங்கையின் இராணி யாக ஏற்றுக்கொண்டன.
மகாராணியார் தமக்குரிய ஆட்சிப் பொறுப்புக்கள் அனைத்தை யும் இங்கி லா ந் தி லிருந்து நிறைவேற்ற முற்படின் ஆட்சிப் பொறியகம் துரிதமாக இயங்கமாட்டாது. எனவே, முன்னைய யாப்புக்களில் இடம்பெற்றிருந்த தேசாதிபதிக்குப் பதிலாக மகாதேசாதிபதி நியமிக்கப்பட்டார். 1948 தொடக்கம் 1972

வரை, சேர் ஹென்றி மொன் ங் - மேசன்மூர், சோல்பரிப்பிரபு, சேர் ஒலிவர் குணத்திலக, உவில்லியம் கோபல்லாவ ஆகிய நால்வர் மகாதேசாதிபதிப் பதவியை நிரப்பியுள்ளனர். மகா தேசாதிபதி இராணி யாரின் தனிப்பட்ட பிரதிநிதியாக இலங்கையிலிருந்து கடமையாற்றுபவர். இவருக்கு இராணியார் கையளித்த, யாப்புக் கொடுத்த, இலங்கைப் பாராளுமன்றச் சட்டங்களிலிருந்து பிறந்த பல அதிகாரங்கன் உண்டு. அவற் றைப் பயன்படுத்தும்போது மகாராணியாருக்குள்ள சுதந்திர மளவு அவரின் பிரதிநிதிக்கு இல்லையென்று கூறலாம். இதற்குச் சில காரணங்களுண்டு. இராணி யாரின் பதவி பிரதமர் விருப்பத்தில் சாதாரணமாகத் தங்கியிராது. மரபுரிமையாக வருவது; அரசியற் கண்டனத்திற்கு அவர் ஆளாகாமல் இருப்பது சம்பிரதாயம்; சாதாரணமாக இறக்கும்வரை அரியணையில் வீற்றிருக்கலாம்; நீதிமன்றங்களின் நியாயாதிக்கத்திற்கு அப்பாற் பட்டவர். மகாதேசாதிபதி இலங்கைப் பிரதமர் சிபார்சின் படி இராணியாரால் நியமிக்கப்படுகின்ருர்; அவர் பதவிக்கால எல்லை வரையறுக்கப்படுவதில்லையெனினும் பிரதமர் விரும்பியபொழுது இராணியாரால் பதவிநீக்கம் செய்யப்படலாம்; அத்தோடு அரசியலார் கண்டனத்திற்கு ஆளாகாதிருக்கும் சம் பிரதாயம் நன்கு வேரூன்றவில்லை. இவை மகாதேசாதிபதியைப் பிரதமரின், அமைச்சரின் விருப்பப்படி நடக்கச் செய்கின்றன. இணங்கி நடவாதோர் அயர்லாந்து சுதந்திர அரசின் மாகாதேசாதிபதி யாகிய திரு. ஜேம்ஸ் மாக்ரீல் 1931ஆம் ஆண்டில் திருப்பி அழைக்கப்பட்டதுபோல் பதவியிழக்க நேரிடலாம். இணங்கி நடப்பதையே யாப்பு எதிர்பார்ப்பதுமாகும். பிரித்தானிய மரபுப்படி அவர் இயங்கவேண்டுமென்று பழைய விதி 4/2 கூறு கின்றது. அதே நேரத்தில் ம க ரீ தேசாதி பதியின் சுதந்திர நடத்தையை ஓரளவு பேணக்கூடிய இரு ஏற்பாடுகளும் இருந் தன. அதில் ஒன்று பிரித்தானிய மரபுக றி நடந்தாலும் அவரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படு யாது; இரண் டாவது, யாப்பு மாற்றத்தினுலன்றி யாப்பு விதித்த அவர் சம்பளத்தை மாற்ற முடியாது என்ற ஏற்பாடுகளாகும்.
யாப்பு விதி 4/1-இன் கீழ் இராணியார் தனது அதிகாரத்தில் சிலவற்றை "1947, உரிமை ஒலை **மூலம் மகாதேசாதிபதிக்குக் கையளித்துள்ளதைக் காணலாம். அதன்படி மகாதேசாதிபதி படைகளின் தளபதியாகின்ருர் பதில் மகாதேசாதிபதியை நியமிக்கும் உரிமை பெறுகின் ருர் ; நீதிபதிகளின் வேறு அலுவ லரின் நியமனம், கட்டுப்பாடு, வேலைநீக்கம் போன்ற அதிகாரங்க ளும், குற்றவாளிகளை மன்னித்தல், அவர்கள் பெற்ற தண்டனை யைக் குறைத்தல், முடிக்குரிய காணிகளை விற்றல் அல்லது
இ. 11 - 5

Page 23
س 304 عصص
நன்கொடை அளித்தல் போன்ற அதிகாரங்களும் மகாதேசாதி பதியைச் சேருகின்றன. உரிமையோலையிலுள்ள ஏற்பாடுகளை இராணியார் வேண்டுமெனில் மாற்றியமைத்துக்கொள்ளலாம். தூதமைச்சர் நியமனம், வெளிநாடுகளுடன் உடன்படிக்கை செய்தல், போர்ப் பிரகடனஞ்செய்தல் போன்ற விடயங்களை இராணியார் தமக்கென ஒதுக்கிவைத்துள்ளார் ; அவை மகா தேசாதிபதிக்கு வழங்கப்படவில்லை; அவற்றை இலங்கைப் பிரதம வின் ஆலோசனையின் பேரில் இராணியாரே செய்கின் ருர் சில கடமைகளை மகாதேசாதிபதி, இராணியார் அல்லது இராணி பாரின் விசேட பிரதிநிதி ஆகியோரில் ஒருவர் செய்வதற்கு யாப்பு இடமளிக்கிறது. உதாரணமாக 'இராணியாரையும் இரு சட்டமன்றங்களையும் கொண்டதே பாராளுமன்றம்" என்னும் 7ஆது விதியின்கீழ் பாராளுமன்றத்தைத் திறத்தல், சிம்மாசனப் பேச்சை வாசித்தல், மசோ தாக் களு க் குச் சம்மதமளித்தல் போன்ற கடமைகளைச் சாதாரண சமயங்களில் மகாதேசாதிபதி செய்தாரெனினும், விசேட தருணங்களில் இவற்றை இராணி யார் நேராகவோ அல்லது வேறு விசேட பிரதிநிதிகள் மூல மாகவோ செய்திருக்கலாம். 1948இல் கிளாஸ்டர் கோமகனும் 1954இல் இராணி யாரும் பாராளுமன்றத்தைத் திறந்து அரியணை உரையினை நிகழ்த்தியுள்ளனர். அதேபோல், 'தீவின் நிர்வாக அதிகாரம் தொடர்ந்து இராணியிடமே யிருக்கும்; அதை இராணியின் சார்பாக மகாதேசாதிபதி பயன்படுத்தலாம்? என்று 45ஆவது விதி கூறுவதினுல், விசேட தருணங்களில் இராணியார் நிர்வாகக் கடமைகளையும் செய்யலாமென்பது பெறப்படும். ஆனல் நடைமுறையில் அவர் தலையிடவில்லை.
1948 யாப்பு மகாதேசாதிபதிக்கு வேறு பல அதிகாரங்களை பும் வழங்குகின்றது, அவற்றுள் பாராளுமன்றத்தைக் கூட்டல், தரிப்பிடுதல், கலைத்தல், பிரதமரை வேறு அமைச்சர்களை பாராளுமன்றக் காரியதரிசிகளை நியமித்தல் போன்றவை மந்திரி FU ஆட்சியோடு வழக்கமாகச் சம்பந்தப்பட்டவை ; இவற் ருேடு, பிரதிநிதிகள் சபையின் 8 அங்கத்தவர்கள், 2 ஆண்டுக ளுக்கொருமுறை 5 செனேற்றர்கள், காலத்திற்குக் காலம் 3 தேர்தல் தொகுதி வரையறை ஆணைக்குழு அங்கத்தினர், நீதிச் சேவை ஆணைக்குழுவின் 2 &ங்கத்தினர், பொதுச்சேவை ஆணைக் குழுவின் 2 அங்கத்தினர், அமைச்சரவைச் செயலாளர், நிரந் தரக் காரியதரிசிகள், சட்டத்துறை நாயகம், கணக்குப் பரி சோதனைத்துறை நாயகம் ஆகியோரை நியமனம் செய்யும் அதிகாரத்தையும் யாப்பு மகாதேசாதிபதிக்கு வழங்கியுள்ளது. இலங்கைப் பாராளுமன்றச் சட்டங்களும் அவருக்குச் சில ஆட்சி அதிகாரங்களைக் கொடுத்துள்ளன. உதாரணமாக,

--.............می. 305 ۔۔۔
(1) முடியின் நிர்வாக அதிகார முத்திரைச் சட்டத்தின்படி இராணியாரின் நேரடிக் கையெழுத்து வேண்டிய சாசனங்க ளுக்கு எக் காரணங்களாலும் கையொப்பம் வாங்க முடியாத போதும், வாங்க எத்தணிக்கையில் ஏற்படும் காலதாமதம் பொது நன்மையைப் பாதிக்குமென்று பிரதமர் கருதும்போதும் அச் சாசனங்களுக்கு இராணியார் சார்பில் மகாதேசாதிபதி கையொப்பமிடலாம்:
(i) பொதுப் பாதுகாப்புச் சட்டம் அவசர நிலையைப் பிர கடனம் செய்யவும், அதை மாதாந்தம் நீடிக்கவும், சட்ட விதி களை ஆக்கவும் மகாதேசாதிபதிக்கு அதிகாரம் வழங்குகின்றது; (ii) கடல், தரை, விமானப்படைச் சட்டத்தின் படி அவசர கால நேரங்களில் இராணுவ சப்பந்தமில்லாத அத்தியாவசிய வேலைகளைச் செய்வதற்காகச் சில படைகளை மகாதேசாதிபதி பிரகடனம் மூலம் அழைக்கலாம்.
சட்டவாக்க, நிர்வாக நீதித்துறைகள் அனைத்திலும் மகா தேசாதிபதிக்குள்ள மேற்கூறிய பரந்த " அதிகாரங்களையும், மேலாண்மையையும், கடமைகளையும், யாப்பு-சரத்துக்களுக்கும் நடைமுறையிலுள்ள வேறு சட்டங்களுக்கும் உட்பட்டு, ஐக்கிய இராச்சியத்தில் இத்தகைய அதிகாரங்களை இராணியார் எவ் வாறு யாப்பு மரபுகளுக்கிணங்கச் செயற்படுத்துகின்ருர்களோ, அவ்வாறு மகாதேசாதிபதியும் செயற்படுத்தவேண்டும் " என்று யாப்பு விதி 4/2 வற்புறுத்துகின்றது. எனவே, பெரும்பாலான அதிகாரங்கள் பிரதமரின், வேறு அமைச்சர்களின் ஆலோசனை யின்பேரில் பயன்படுத்தப்பட வேண்டுமென்பது பெறப்படும். இது ஆணிலப்பத அந்தஸ்தெய்திய நாடுகளில் காணும் ஆட்சி முறையின் அம்சமாகும். மகாதேசாதிபதியைப் பதவி நீக்கஞ் செய்யும் பிரதமரின் அதிகாரமும் மகாதேசாதிபதியின் சுதந் திரப்போக்கைக் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்ததென்று மேலே பார்த்தோம். இதனல்தான் மகாதேசாதிபதி பெய ரளவில் நிர்வாகியென்றும் ", " யாப்புறு ஆட்சியாளரென்றும் " அழைக்கப்படுவர். அவருக்குப் பரந்த ஏதேச்சாதிகார அதிகாரம் கிடையாது. அதே நேரத்தில் அமைச்சர்கள் கேட்டபடி யெல் லாம் நடக்கும். அவர்கள் கீறிய கோட்டின்மேல் கைச்சாத் திடும் தலையாட்டிப் பொம்மை என்றும் மகாதேசாதிபதியைக் கருதலாகாது. இங்கிலாந்தில் இராணியார் பின்பற்றும் சம்பிர தாயங்களும், மகாதேசாதிபதி அவற்றிற்கு உட்பட்டு நடவாத போது நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு ஆளாகாத வீதிவிலக்கும் அவர் இலங்கை ஆட்சியில் கணிசமான அளவு தாக்கம் ஏற்படும் வகையில் இயங்க வழி விடுகின்றன. அரசாங்கம் மாத்திரம் மாட்சிமை தங்கிய இராணியாருடையது அல்ல ; எதிர்த்திறமும்

Page 24
جيتسم 306 سمسم
அவருடையதே. இரு திறத்தாருக்குமிடையே இராணியின் பிரதிநிதி நடுநிலை வகிக்கவேண்டும். இந் நிலையிலிருந்து வழுவா திருக்கப் பிரதமரின் நியமனம், பாராளுமன்றத்தின் கலைப்பு போன்றவற்றில் மகாதேசாதிபதிக்குத் தற்றுணிபு அதிகாரம் அவசியமாகின்றது. இவ்விடயங்கள் பற்றிய சூழ்நிலை மாறுவ தோடு அதன் தன்மையும் துல்லியமற்றதாய் இருக்கக்கூடு மாதலால் மகாதேசாதிபதி எவ்வாறு நடக்கவேண்டுமென்று முன் கூட்டியே யாப்பில் வரையறுப்பது சாத்தியமில்லை. நல் லாட்சிக்கு உதவும் ஆலோசனைகளைக் கூறுவதோடு, இக் கடமை யுடன் சார்ந்த உரிமைகளும் மகாதேசாதிபதிக்கு உண்டு. சில வேளைகளில் அமைச்சரவை ஆட்சி முறைக்கு ஒவ்வாத வகை யிலும் சில மகாதேசாதிபதிகள் நடந்துள்ளனர் என்ற கருத்துக் களும் தரப்பட்டுள்ளன.
பொதுத்தேர்தலின் பின், பிரதமர் இறந்தால் அல்லது ராஜினுமாச் செய்தால் புதிய பிரதமரை நியமனஞ் செய்யும் முக்கிய கடமையில் மகாதேசாதிபதிக்குத் தற்றுணிபு அதிகார முண்டு. பல கட்சி முறை நிலவும் இலங்கையில், ஒரு கட்சி பிரதி நிதிகள் சபையில் பெரும்பான்மை பெறுவது கஷ்டமானதினுலும், ஆறு உறுப்பினரை அச்சபைக்கு நியமிக்கும் தன் உரிமையினுலும், பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவோரில் தான் விரும்பியவரை மகாதேசாதிபதி பிரதமராக்குவதற்குக் கூடிய வாய்ப்பு இலங் கையில் எழலாம் என்று கருதப்பட்டது. 1948-72 இடையில் 9 முறை பிரதமர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மகாதேசாதி பதிகள் செய்த பெரும்பாலான நியமனங்கள் அரசியல் விமர் சனத்திற்கு ஆளாகவில்லை. கீழ்ச்சபையில் பெரும்பான்மை பெற்ற அல்லது மறுகட்சிகளிலும் பார்க்கக் கூடிய அங்கத்துவம் உடைய கட்சியின் தலைவர்களே அரசாங்கத்தை அமைக்குமாறு அழைக்கப்பட்டுள்ளனர். 1952இல் டி. எஸ். சேனநாயக்கா இறக்க ஐ. தே. கட்சியின் தலைமைப் பதவி வெற்றிடமா யிருந்த பொழுது, சபை முதல்வரும் கூடிய அரசியல் அனுபவ மும் உடைய சேர் யோன் கொத்தலாவலைக்கும், மறைந்த பிரதமரின் புதல்வரும் இளைஞருமாகிய டட்லி சேனநாயக்கா விற்கும் இடையில் பிரதமர் பதவிக்குப் போட்டி எழுந்தது. இருவரில் எவரையேனும் சோல்பரிப் பிரபு பிரதமராக நியமித் திருக்கலாம் ; அவர் டட்லி சேனநாயக்காவையே விரும்பினர். இத்தகைய இரு சூழ்நிலைகளில் சிரேஷ்ட அமைச்சரைத் தற்காலிக பிரதமராக்கிவிட்டுப், பின்னர் ஆளுங்கட்சி தெரிவு செய்த தலைவரை அரசாங்கத்தை அமைக்குமாறு, இந்தியக் குடியரசு அழைத்துள்ளது கவனித்தற்பாலது. 1960 ஏப்பிரிலில் திரு. டட்லி சேனநாயக்கா அரசாங்கத்தின் முதலமர்வு அரியணை

- 307 -
உரை தோற்கடிக்கப்பட்டபின் பிரித்தானிய மரபைமீறி எதிர்த் திறத் தலைவர் திரு. சி. பி. டி. சில்வாவைப் பிரதமராக்கச் சேர் ஒலிவர் குணத்திலக மறுத்ததும் தேசாதிபதியின் தற்றுணிபு அதி காரத்திற்கு இன்னுெரு எடுத்துக்காட்டாம். நியமிக்கும் உரிமை யோடு இணைந்த தேசாதிபதியின் பதவிநீக்கும் உரிமை, பிரதமர் யாப்பின் அடிப்படை நெறிகளை மீறி நடக்கும்போது உபயோகிப் பதற்கான பாதுகாப்பு அதிகாரமாகும் ; இது இலங்கையில் ஒருபோதும் செயற்படுத்தப்படவில்லை. 1959ஆம் ஆண்டு பிற் பகுதியில் திரு. தகநாயக்கா பாராளுமன்றத்தின் ஆதரவை இழந்து நின்றபோது அ வ  ைர ப் பதவிநீக்கம் செய்துவிட்டுத் தன்னைப் பிரதமராக்கும்படி திரு. சி. பி. டி. சில்வா மகா தேசாதிபதியைக் கேட்டபொழுது சேர் ஒலிவர் குணத்திலக அதற்கு இணங்கவில்லை.
பாராளுமன்றத்தைக் கலைத்தல் மகாதேசாதிபதி வெளிப் படையாக உபயோகிக்கக்கூடிய இன்னுெரு முக்கிய அதிகார மாகும். ஐக்கிய இராச்சியத்தில் பிரதமரின் ஆலோசனை யின்றி இராணியார் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது பிரதமர் சிபார்சு செய்யுமிடத்து, கலையாதிருக்கும் உரிமை இராணியா ருக்கு உண்டென்று கொள்கையளவில் ஏற்கப்பட்டதாகும். பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மை ஆதரவையுடைய பிரதமர் கலைக்குமாறு கேட்டுக்கொண்டால் மகாதேசாதிபதி அதை நிறைவேற்றியே தீரவேண்டும். சில சந்தர்ப்பங்களில், மாற்று அரசாங்கம் அமைக்கக்கூடிய சூழ்நிலையில், பிரதமரின் வேண்டுகோளைப் புறக்கணிக்கும் தற்றுணிபு அதிகாரம் மகா தேசாதிபதிக்கு உண்டு என்று சிலர் வாதாடியுள்ளனர். 1959இல் தனது கட்சிப் பிளவினுல் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவை இழக்கக்கூடிய நிலையிலிருந்த திரு. தகநாயக்காவும், 1960 ஏப்பிரிலில் தற்காலிக சிறுபான்மை அரசாங்கத் தலைவ ராகிய திரு. டட்லி சேனநாயக்காவும் கேட்டுக்கொண்டபடி சேர் ஒலிவர் குணத்திலகா பாராளுமன்றத்தைக் கலைத்திருக்க வேண்டியதில்லையென்று இச்சாரார் கருதுவர். நடைமுறையில் ஆங்கிலப் பிரதமரின் வேண்டுகோள் எப்பொழுதும் செயற் படுத்தப்பட்டுள்ள மரபைத் தேசாதிபதி பின்பற்றினர் போலும், ஆணுல் அந்நாட்டுப் பிரதமர்கள் பாராளுமன்றத்தைக் கலைக்கச் சிபார்சு செய்யும் தம் உரிமையினைப் பொறுப்புடனும் ஜனநாயக நெறிக்கு அமைந்தும் பயன்படுத்துவர் என்பது குறிப்பிடற் lift 605).
மத்திய காலத்தில் பிரித்தானிய அரசர்களுக்கிருந்த பரந்த ஏதேச்சாதிகார அதிகாரங்களுக்குப் பதிலாக இன்று ஆட்சியில் செல்வாக்கு உண்டென்று கிளாட்ஸ்ரன் கூறியுள்ளார். உவால்ரர்

Page 25
- 308 -
பேஜோ குறிப்பிடும் ஆலோசனை கூறும், உற்சாகப்படுத்தும், எச்சரிக்கை செய்யும் உரிமைகள்மூலம் மன்னன் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தலாம். இந்த மூன்று உரிமைகளும் இலங்கை யின் மகாதேசாதிபதிக்கு உண்டு. அவர் அரசாங்கத்திற்கு அறிவுரை தருவதோடு நின்றுவிடவேண்டும் தனது கருத்தைத் திணிக்கலாகாது ; இறுதித் தீர்மானம் பிரதமரை அல்லது அமைச்சரவையைச் சார்ந்ததாகும். சோல்பரிப்பிரபு திரு. ஜி. ஜி. பொன்னம்பலத்தை அமைச்சரவையில் சேர்க்குமாறு திரு. டி. எஸ். சேனநாயக்காவிற்கும், சேர் ஒலிவர் குணத்திலக பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு சேர் யோன் கொத்தலா வலைக்கும் கூறிய ஆலோசனைகள் வெற்றியில் முடிந்தன. சேர் ஒலிவர் பாராளுமன்றத்தை நீண்டகாலம் தரிப்பிடுமாறு திரு. தகநாயக் காவிற்கு ஆலோசனை கூறினராயினும் அதில் சித்தி பெறவில்லை. தனது அறிவுரை மூலம் நல்லாட்சி நடைபெற உதவ வேண்டின், ஆட்சி அலுவல்கள் பற்றி மகாதேசாதிபதி நன்கு அறிந்தவராயிருக்க வேண்டும் . எனவேதான் அமைச்சரவையின் கொள்கைகள், கொள்கைகள் பற்றிய அதன் தீர்மானங்கள், தீர்மானங்கள் செயற்படுத்தப்படும் விதம், வேறு ஆட்சி விட யங்கள் பற்றி அறியும் உரிமை ஆதியனவற்றைப் பெற்றுள்ளார். பிரதமரிடமிருந்து தகவல்கள் பெறவும், வேண்டிய ஆவணங்களை வரவழைக்கவும் மகாதேசாதிபதிக்கு உ ரி  ைம யு எண் டு. அவர் ஆட்சியில் செலுத்தும் ஆதிக்கத்தின் அளவு அவரின் அறிவு ஆற்றல் அனுபவம் முயற்சி ஆகியவற்றில் தங்கியுள்ளது:
திரு. பண்டாரநாயக்கா, திரு. தகநாயக்கா அமைச்சரவை களில் ஏற்பட்ட பூசல்களைத் தீர்க்கவும், அரசாங்கத்திற்கும் ருேமன் கத்தோலிக்கர்களுக்கும் பாடசாலைப் பொறுப்பேற்புப் பற்றிய பிணக்கில் மத்தியஸ்தம் செய்யவும் சேர் ஒலிவர் முயற்சித்துள்ளார். சதி முயற்சிபற்றி எதிர்த்திறத்தினர் திரு. கோபல்லாவ அவர்களுக்கு முறையிட்டுள்ளனர். சோல்பரிப் பிரபுவும் திரு. கோபல்லாவ அவர்களும் சில அமைச்சர்களுடன் முரண்பட்டுக்கொண்டனர். சேர் ஒலிவர் தொழிற்சங்க வேலை நிறுத்தங்களை முறியடிக்கத் தன் ஆற்றலையும் அனுபவத்தையும் அரசாங்கத்திற்கு உதவி, மகாதேசாதிபதி வகிக்கவேண்டிய நடு நிலையை மீறியதாக எதிர்த்திறத்தின் கண்டனத்தைப் பெற்றர்: 1958 இனக்கலவர காலத்தில் ஆட்சிப்பொறுப்பு சேர் ஒலிவருக் குக் கையளிக்கப்பட்டது; அவர் படைகளுக்கு உத்தரவிட்டார், பத்திரிகைகளைத் தணிக்கை செய்தார், நிருபர்கள் மகாநாடு நடத்தினர், சேவைகள் நடைபெற ஆவன செய்தார் ; விரைவில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டினர். மகாதேசாதிபதி ஆட்சிசெய்தது சம்பிரதாய அமைச்சரவை முறைக்கு முரண்

ہے۔ 309 ۔۔۔۔۔۔۔
பட்டதாயிருக்கலாம் ; ஆணுல் இக்கட்டான நிலையில் திறமை புடன் செயலாற்றி நாட்டின் பாராட்டைப் பெற்றுக்கொண்டார். இத்தகைய சேவைகளைவிட மகாதேசாதிபதிகள் பல சமூக சடங்கு வைபவங்களில் பங்குபற்றியுள்ளனர். எனவே அமைச் சர்களின் ஆலோசனை மீது செயலாற்றும் பெயரளவில் நிர்வாகி யாகிய மகாதேசாதிபதி சட்டம் வரையறுக்காத பல துறை களில் மரபை ஒட்டியும் ஒட்டாமலும் இலங்கையின் அரசியல் வாழ்வில் கணிசமான அளவு தாக்கம் ஏற்படுத்தும் வகையில் இயங்கியுள்ளார் என்று பொதுவாகக் கூறலாம்,
2. ஜனுதிபதியின் நியமனமும் சேவை நிபந்தனைகளும்
இராணியாரும் அவரின் தனிப்பட்ட பிரதிநிதியான மகா தேசாதிபதியும் இலங்கையின் ஆட்சியில் பங்கு கொள்வது நாட்டின் கெளரவத்திற்கும் வெளிநாட்டு நடுநிலைக் கொள்கைக் கும் ஒவ்வாததென்ற காரணத்தினுல் மே 22, 1972இல் இலங்கை ஒரு குடியரசாகப் பிரகடனஞ் செய்யப்பட்டது: இலங்கை அரசுக்கிருந்த அதிகாரங்களும் உரிமைகளும் புதிய குடியரசுக்கு உரியனவாயின. இராணிக்கும் மகாதேசாதிபதிக்கும் குடியரசு யாப்பில் இடமளிக்கப்படவில்லை. குடியரசின் ஜனதி பதியே அரசின் தலைவராயிருப்பர். சில குடியரசு ஜனதிபதிகள் மக்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ தெரியப்படுகின் றனர். அயர்லாந்தில் நேரடித் தெரிவும், ஐக்கிய அமெரிக்கா பின்லாந்து போன்ற குடியரசுகளில் மறைமுகத் தெரிவும் உண்டு. இந்தியாவில் மத்திய பாராளுமன்ற உறுப்பினர்களினலும் பிரதேச சட்டமன்றங்களின் தெரிவுப் பிரதிநிதிகளினுலும் தெரியப்படுகின்ருர். இத்தகைய தெரிவு முறைகள் அரசின் தலைவர் பதவிக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உயர் கெளரவத்தைத் தருவன. இலங்கை யாப்பு ஏற்பாட்டின்படி ஜனதிபதியால் நியமிக்கப்படும் பிரதம அமைச்சர் ஜனுதி பதியை நியமிக்கின்றர். பழைய யாப்பில் பிரதமராயிருந்தவர் அந்த யாப்பில் மகாதேசாதிபதியாயிருந்தவரை முதலாவது ஜனதிபதியாக நியமித்துள்ளார். "" நிரந்தர அந்தஸ்தில்லா அரசியல் வாதி " ஒருவர் நடுநிலைநின்று சில முக்கிய அரசியற் கடமைகளைச் செய்யவேண்டிய ஜனதிபதியை நியமிக்க அதிகார மளிக்கும் ஏற்பாட்டை ஐ. தே. கட்சி கண்டித்துள்ளது. சமஷ்டிக் கட்சியினர் இந்திய முறையைத் தழுவிய ஓர் ஏற்பாட்டை விரும்பினர். பிரதமர் ஜனதிபதிய்ை நியமிக்கும் ஏற்பாடு, பழைய யாப்பில் பிரதமர் சிபார்சின் பேரில் இராணியார் மகாதேசாதிபதியை நியமிக்கும் முறையின் பிரதிபலிப்புப்

Page 26
--سس۔ 310 --س۔
போலும் . ' தேசிய அரசுப் பேரவை உறுப்பினரைத் தெரிவு செய்யும் தகைமையுடைய பிரசை எவரையும் ஜனதிபதி பதவிக்கு முதலமைச்சர் பெயர் குறிப்பிடலாம் : குறிப்பிடப்பட்டவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன்மேல் ஜனதிபதியாகப் பதவிமேற்கொள்வார் " . இவ்விதிப்படி 18 வயதிற்குக் குறை யாத ஆணுே பெண்ணுே அரசின் தலைவராக உயர்த்தப்பட லாம். ஐக்கிய அமெரிக்காவிலும் இந்தியாவிலும் 35 வயதிற்குக் குறையாதோர் மாத்திரம் ஜனதிபதிப் பதவியை வகிக்கலா மென்ற சட்டநிபந்தனையுண்டு. பொறுப்புடைய பதவிக்கு வயது முதிர்ச்சி அவசியமென்று இந்நாடுகள் கருதியுள்ளன போலும் . முதலாவது ஜனதிபதி யாப்பமை மன்றத்தினர்முன் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். ஏனையோர் மிக உயர் மீேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் அல்லது அங்கத்தினர் முன்னிலையில் சத் தி யப் பிர மாண ம் செய்யவேண்டும். மகா தேசாதிபதி பதவியேற்குமுன் பிரதம நீதியரசர் அல்லது உயர் நீதிமன்றத்தின் வேறெந்த நீதியரசர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யவேண்டுமென்பது இராணியார் பிறப்பித்த உரிமையோலையிற் காணும் ஒரு சரத்தாகும்.
ஜனதிபதி உடல்நலமின்மையாலோ, வேறு காரணத் தினலோ தன் கடமையைச் செய்ய முடியாதபோதும், அவர் இலங்கையில் இல்லாத காலத்திலும், ஜனதிபதிப் பதவி வெற் றிடமாயிருக்கின்ற பொழுதும் வேருெரு வரை ஜனதிபதிக்குப் பதிலாகக் கடமையாற்றுமாறு பிரதமர் நியமிக்கலாம்; அப்படி நியமிக்கப்படாதவிடத்து மிக உயர் மேன்முறையீட்டுத் தலைமை நீதிபதியாகச் செயற்படுபவர் ஜனதிபதிக்குப் பதிலாகக் கடமை யாற்றுவார். ஜனதிபதி இறந்தால் அல்லது ராஜினமாச் செய் தால், நோய் காரணமாகத் தன் கடமையைச் செய்யமுடியாத நிலையிலுள்ளாரென்று பிரதமர் முடிவெடுத்தால், தேசிய அரசுப் பேரவை ஜனதிபதிக்கெதிராக 26/2/ஈ-உ விதிப்படி நம்பிக்கை யில்லாப் பிரேரணை நிறைவேற்றினல் ஜனதிபதிப் பதவி வெற் றிடமாகும். பதிலாகக் கடமையாற்றும் ஜனதிபதி பற்றிய ஏற்பாடு இராணியார் மகாதேசாதிபதிக்கு விடுத்த உரிமை யோலையின் 7ஆவது சரத்தைப் பெருமளவிற்குத் தழுவியுள்ள தைக் காணலாம். பிரதமருக்கு மிக உயர் மேன்முறையீட்டுத்1 தலைமை நீதிபதியையோ வேருெருவரையோ ஜனதிபதிக்குப் பதிலாக நியமிக்கும் தற்றுணிபு அதிகாரம் தலைமை நீதிபதியின் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடுமென்ற கருத்துத் தரப்பட்டுள்ளது.
1. 1974 தொடக்கம் இம்மன்றம் அகற்றப்பட்டதினுல், அதன் தலைவருக்குப் பதிலாக உச்சமன்றப் பிரதம நீதியரசர் இடம் பெறுவ தாகக் கொள்க,

عس 1 31 --
ஜனதிபதியின் சம்பளம், படிகள், ஓய்வூதியம், பணிக் கொடை ஆகியன பேரவையினல் நிர்ணயிக்கப்படும். இவைகள் அவருக்குப் பாதகமான முறையில் மாற்றப்படலாகாதென்ப தோடு திரட்டு நிதியிலிருந்து கொடுபடல் வேண்டும். இந்த ஏற்பாடுகள் ஜனதிபதியின் சுதந்திரத்தை ஒரளவு பேணவும் , அவரை அரசியற் கண்டனத்திற்கு ஆளாக்காது ஓரளவிற்குத் தடுக்கவும் உதவலாம். மகாதேசாதிபதியின் சம்பளம் யாப் பிலே பொறிக்கப்பட்டு, அவரின் பதவிக்காலத்தில் மாற்ற முடியாததோடு திரட்டு நிதியிலிருந்தும் கொடுக்கப்படவேண்டும். எனவே, யாப்பை மாற்றும் முறையைப் பின்பற்றியே அவர் சம்பளத்தையும் மாற்றலாமென்பது பெறப்படும். ஒருவர் ஜனதிபதிப் பதவியை வகிக்கும் காலத்தில், அவர் அலுவலக அல்லது உத்தியோக முறையில் செய்த அல்லது செய்யாதுவிட்ட எக்கருமத்தையிட்டும் அவருக்கு எதிராகக் குடியியல் அல்லது குற்ற வியல் வழக்கு-நடவடிக்கை எதுவும் தொடரப்படுதலாகாது. இராணியார் தனது நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட முடியா தென்ற நெறியைத் தழுவி அவரின் தனிப்பட்ட பிரதிநிதியாகிய மகாதேசாதிபதியும் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு அப்பாற் பட்டவராகின்ருர், ஜனதிபதியைப் பதவிநீக்கம் செய்த பின், வழக்குத் தொடர்வது பற்றி யாப்பு மெளனம் சாதிக்கின்றது: மகாதேசாதிபதியின் பத விக் கால ம் வரையறுக்கப்பட வில்லிை ; பிரதமர் விரும்பியபோது அவரைத் திருப்பியழைக் கும்படி இராணியாருக்குச் சிபார்சு செய்யலாம். இலங்கையின் நாலு மகாதேசாதிபதிகளில் ஒருவரேனும் திருப்பியழைக்கப்பட வில்லை. அவர்கள் முறையே 1, 6, 8, 10 ஆண்டுகள் பதவி வகித்துள்ளனர். ஜனுதிபதியின் பதவிக்காலம் 4 வருடங்க ளாகும். திரும்பத் திரும்ப நியமனம் பெறுவதைத் தடுக்கும் விதியெதுவும் யாப்பில் இல்லை. நாலு வருட எல்லை முடிவுற் முலும், அடுத்து நியமனம் பெற்ற வேருெரு ஜனதிபதி தமது பதவியை ஏற்கும் வரை பழையவர் தொடர்ந்து பதவியில் இருக்கவேண்டும். இப்பாதுகாப்பு ஏற்பாடு இ ல் லா வி டி ல் பிரதமரும் ஜனதிபதியும் ஒரே நேரத்தில் பதவியிழக்கும் சந்தர்ப் பம் ஏற்படலாம் ; இது நேரின் ஆட்சிப் பொறியகம் இயங் காது நின்றுவிடும்; ' சட்டம் கொடுத்த அதிகாரங்களையும் கடமைகளையும் முறைப்படி நிறைவேற்றுவதற்கு ஜனதிபதி தேசிய அரசுப் பேரவைக்குப் பொறுப்பு  ைடய ரா த ல் வேண்டும்-91 '. முறைப்படி நிறைவேற்ருவிடின் அவரைப் பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் பேரவைக்கு உண்டு. 'பிரதம ரினல் பிரேரிக்கப்பட்ட ஜனதிபதிக் கெதிரான நம்பிக்கையில் லாப் பிரேரணை சாதாரண பெரும்பான்மை வாக்குகளினல்
g) II - 6

Page 27
- 3, 12 -
நிறைவேற்றப்பட்டால் ஜன தி பதிப் பதவி வெற்றி ட மாகும்." அவரின் பதவியை வெற்றிடமாக்குவதற்கு இன் ஞெரு வழியுமுண்டு. பேரவை உறுப்பினரில் குறைந்தது ; பங் கினர் ஜனதிபதிக்கெதிராகப் பிரேரித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆ பெரும்பான்மை வாக்குகளினுல் நிறைவேற்றப் படின் ஜனதிபதியின் பதவி பறிபோய்விடும். ஐக்கிய அமெரிக் காவில் பிரதிநிதிகள் சபை செனேற் முன்பும், இந்தியாவில் ஒரு சபை, மறுசபை முன்பும் ஜனதிபதிக் கெதிராக அரசுப்பகைமைக் குற்றஞ்சாட்டி நடைபெறும் விசாரணையில், விசாரிக்கும் சபை * பெரும்பான்மையினுல் குற்றச்சாட்டை ஏற்ரு ல் தா ன் ஜனதிபதி பதவியை இழப் பார் என்பது நோக்கற்பாலது. இவ் விசாரணையில் ஜனுதிபதி பிரசன்னமாயிருந்து தன் கட்சியை எடுத்துரைக்கும் உரிமைபெற்றுள்ளார். இவற்ருேடு ஒப்பிடும் பொழுது இலங்கை ஜனதிபதியைப் பதவிநீக்கம் செய்வது இலகுவாயினும் மகாதேசாதிபதியை அகற்றும் முறையிலும் கடினமானதாகும்,
3. ஜனுதிபதியும் நிர்வாகத்துறையும்
ஜனதிபதியின் நியமனமும் மறுநியமனமும், பாராளுமன்றத் தின் மூலம் பதவிநீக்கம் செய்யும் நிலையும் அவரைப் பிரதமரின் விருப்பப்படி நடக்கத் தூண்டுவன. அத் தோ டு "அரசிய லமைப்பினுல் வேறு வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்ப தனைத் தவிர எப்பொழுதும் ஜனுதிபதி முதலமைச்சரின் அல்லது முதலமைச்சர் கொடுத்த அதிகாரத்தைப் பெற்ற வேறு அமைச் சர்களின் ஆலோசனை மீதுதான் செயலாற்ற வேண்டும்; இவ் விதிப்படி ஜனதிபதி நடந்துள்ளாராவென்று விசாரணை செய்து தீர்ப்புவழங்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கோ வேறெவர்க்கோ கிடையாது." இத்தகைய கட்டுப்பாடு மகாதேசாதிபதிக்கும் இருந்தது. இந்திய, இலங்கை ஜனதிபதிகளின் கடமையும் அதிகாரமும் இங்கிலாந்து இராணியாரின வகிதப் பெரும்பாலும் பின்பற்றி இந்நாடுகளின் யாப்பில் வரையப்பட்டுள்ளன. மகா தேசாதிபதியைப்போல அமைச்சர்கள் ஆலோசனையின்றித் தாமே சில விடங்களில் நடக்கக்கூடிய உரிமை இலங்கையின் ஜனதி பதிக்கு உண்டு. அவரின் நிர்வாக, சட்டவாக்க, வேறு அதிகா ரங்களைக் கீழே ஆராயும்பொழுது அந்த அதிகாரங்கள் விசேடமாகக் குறிப்பிடாவிடத்து, பிரதமரின் அல்லது வேறு அமைச்சரின் ஆலோசனை மீது உபயோகிக்கப்படுவ தாகக் கொள்ளல்வேண்டும்.
* தேசிய அரசுப் பேரவை மக்களின் நிர்வாக அதிகாரத்தை ஜனதிபதி மூலமும் அமைச்சரவை மூலமும் பிரயோகிக்கும் "

سياسي 313 سيبي.
என்று 5 ஆவது யாப்பு விதியும், " ஜனதிபதி ஆட்சித்துறைத் தலைவராகும் ' என்று 20ஆவது யாப்பு விதியும் கூறுகின்றன. ஆட்சித்துறைத் தலைவரின் அதிகாரங்கள் மூன்று உபபிரிவுகளைக் கொண்டன -
1. அமைச்சரவையோடுசம்பந்தப்பட்டவை: மகா தேசாதிபதியைப்போல் பிரதம அமைச்சரையும் ஏனைய அமைச் சர்களையும் பிரதி அமைச்சர்களையும் ஜனுதிபதி நியமிக்கின்றர். பிரதி அமைச்சர்கள், முன்பு பாராளுமன்றக் காரியதரிசிகள் என்று அழைக்கப்பட்டார்கள், ஏனைய அமைச்சர்களைப் பிரதம ரின் ஆலோசனைப்படி நியமிக்கின்ருர் பிரதமர் நியமனம் ஜனதிபதியால் தன்னிச்சையாகச் செய்யும் கடமைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஜனதிபதியின் கணிப்புப்படி தேசிய அரசுப் பேரவையின் * மிகக் கூடிய அங்கத்தவரின் ஆதரவைப் பெறக்கூடிய உறுப்பினரே பிரதமராக்கப்படல் வேண்டும் என்பது யாப்பு விதியாகும். ஆங்கில மரபைத் தழுவிப் பிரதிநிதிகள் சபையின் ஆதரவைப் பெறக்கூடிய ஒருவரே மகா தேசாதிபதியால் பிரதமராக்கப்பட்ட நெறி யூரப்பில் பொறிக்கப் படாது, நடைமுறையில் * மிகக் கூடிய '/ கட்சித் தலைவரை நியமிக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டதுA இவ்வழக்கம் இன்று எழுத்துவடிவம் பெறுகின்றது. பல கட்சிகள் இயங்கும் இலங்கை யில் இரு கட்சிகள் இயங்கும் இங்கிலாந்திலும் பார்க்கப் பிரதமர் நியமனத்தில் அரசின் தலைவருக்குக் கூடிய தற்றுணிபு அதிகார மிருப்பதை இவ்வியலின் முதலாவது பிரிவில் பார்த்தோம். பிரிந்திருக்கும் கட்சிகளைச் சேர்த்து அமைச்சரவை நிறுவும்படி செய்வதற்கும், நிறுவிய அவையினுள் பிளவு வராது பார்ப்ப தற்கும், பிளவு வந்தபோது அதை முற்றவிடாது தவிர்ப்ப தற்கும் ஜனதிபதி பயன்படலாம். வருங்காலத்தில் தேசிய அரசுப்பேரவையில் நியமன அங்கத்துவம் இல்லாமை பிரதமரைத் தெரிவதில் ஜஞதிபதிக்குள்ள செல்வாக்கை ஒரளவு குறைக்க லாம் : கட்சி வளர்ச்சியின் தன்மையும் அவரின் தற்றுனிபு அதிகாரத்தைப் பாதிக்கலாம் பிரதமரைத் தவிர்ந்த ஏனைய அமைச்சர்களை ஜனதிபதி பதிவிநீக்கம் செய்யும் உரிமை யாப்பில் பொறிக்கப்பட்டுள்ளது. நியமிக்கும் அதிகாரத்தோடு அகற்றும் அதிகாரமும் இணைந்துள்ளதென்ற நெறிப்படி, யாப்பின் அடிப் படை அம்சங்களை மதியாது நடக்கும் பிரதமரை நீக்கும் தற் றுணிபு அதிகாரம் ஜனதிபதியிடம் தொக்குநிற்கின்றதென்று கொள்ளலாம். ஆனல் தேசிய அரசுப் பேரவையே பிரதமரைப் பதவிநீக்கம் செய்வதற்கு அல்லது அவர்மூலம் பேரவையைக் கலைப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளை யாப்பு வகுத்திருப்பதினுல், தவறுசெய்யும் பிரதமரை அகற்றுவதற்கு ஜனுதிபதி தலையிட வேண்டிய சந்தர்ப்பம் எழுவது துர்லபமாகும். பழைய யாப்பின் கீழ் பிரதமர் இறந்தால் அல்லது ராஜினமாச் செய்தால் அமைச்சர் களும் அமைச்சரவையும் புதிய அமைச்சரவை அமைக்கும்வரை

Page 28
سے 314 ہے۔
கடமையாற்றலாம் : குடியரசு யாப்பின்படி " அமைச்சரவை கலைக்கப்பட்டநிலை எய்துவதோடு அமைச்சர்களும் பதவி இழந்த வர்சளாவார்கள்." இவ்விதியிலிருந்து மாற்றுப் - பிரதமரை ஜனதிபதி நியமிக்கும்வரை ஆட்சித்துறைக் கடமைகள் ஜனதிபதி யின் பொறுப்பாகின்ற தென்பதும், இப்பொறுப்பைத் தான் விரும்பியபடி நிறைவேற்றலாமென்பதும் பெற ப் படு ம். காபந்து அரசாங்கத்தின் பிரதமர் இறந்தால் அல்லது விலகினல் மற்றும் அமைச்சர்களையும் அவர்களில் ஒருவரைப் பிரதமராக வும் கொண்ட அமைச்சரவை இயங்கும் அமைச்சர்கள் ஒருவரும் இல்லாதவிடத்து அமைச்சரவையின் அதிகாரங்களையும் கடமை களையும் ஜனதிபதி தன்னிச்சையாகச் செயற்படுத்துவார்.
2. பாலன அதிகாரம் : முன்னைய பொதுச்சேவை ஆணைக் குழுவிற்குப் பதிலான இன்றைய அரசசேவை - ஆலோசனைச் சபை, அரசசேவை-ஒழுக்காற்றுச் சபை ஆகியவற்றின் அங்கத் தவர்களை நியமிக்கும் அகற்றும் அதிகாரம் ஜனதிபதிக்கு உண்டு. முன்பு மகாதேசாதிபதியால் நியமனம்பெற்ற கணக்காய்வாளர்தலைமையதிபதி, சட்டத்துறை நாயகம், அமைச்சரவைச் செய லாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், தேர்தல் மாவட்ட எல்லை வரையறைக்குழு உறுப்பினர் இன்று ஜனதிபதியால் நிய மிக்கப்படுகின்றனர்; அமைச்சுக்களின் செயலாளரையும் இட மாற்றம் செய்கின்றர். குடி ய ர சு க் கு உரித்தாக்கப்பட்ட, சட்டப்படி வழங்கக்கூடிய நிலங்களையும் வேறு அசையாத ஆதனங்களையும் ஜனதிபதி நன்கொடை செய்யலாம், கையளிக்க லாம். இந்த அதிகாரங்கள் மகாதேசாதிபதிக்கு இராணியாரின் உரிமையோலைமூலம் கிடைத்தன.
3. பாதுகாப்பு அதிகாரம் : மகாதேசாதிபதியை இராணி யாரின் உரிமையோலை படைகளின் உயர்தளபதியாக்கியது. இன்றைய யாப்பு ஜனதிபதியை ஆயுதப் படைகளின் தலைவ ராக்குகின்றது. அவர் தரைப்படை, கடற்படை, வான்படைத் தலைவர்களை நியமிக்கின்ருர், முன்பு இராணியாருக்கிருந்த போரையும் சமாதானத்தையும் பிரகடனஞ் செய்யும் அதிகாரம் இன்று ஜனதிபதிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகாலநிலை நிலவுகிறதென்று மகாதேசாதிபதி அபிப்பிராயப்படுமிடத்து அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தும் தற்றுணிபுரிமை உடையவராயிருந்தார்: இத்தகைய தற்றுணிபு அதிகாரம் இன்று ஜனதிபதிக்கு இல்லை. பாதுகாப்புச்சட்டம் தேசிய அரசுப் பேரவையினுல் தகுந்த மாற்றங்களுடனும் புதிய யாப்பு ஏற்பாடுகளுக்கு இணங்கவும் இயற்றப்பட்டதாகக் கொள்ளவேண்டும் என்று யாப்புவிதி 134/1 கூறுகின்றது. அத்தோடு இவ்விதியின்படி 'அவசரகாலநிலை ஏற்பட்டுள்ளதென அல்லது ஏற் படப் போ கின்ற தென முதலமைச்சர் ஜனதிபதிக்கு ஆலோசனை அளிக்குமிடத்து

--سے۔ 315 ہے۔
ஜனதிபதி அவசரகாலநிலையை வெளிப்படுத்தவேண்டும்; அவசர காலநிலைபற்றி ஜனதிபதி சட்டமுறைப்படி செய்யவேண்டிய அனைத்தையும் பிரதமர் ஆலோசனை மீதுதான் செயலாற்றுதல் வேண்டும்". அவசரகால - விதிகளை ஆக்கலும், முப்படைகளைச் சிவில்சேவை புரிய அழைப்பதும் அவர் சட்டப்படி செய்ய வேண்டிய சில கடமைகளாகும், பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசின் தலைவருக்கு எஞ்சியிருந்த அதிகாரத்தைப் பறித்து அரசியல்-நிர்வாகிக்குக் கொடுத்ததை ஐ. தே. கட்சி கண்டித் துள்ளது.
4. ஜனுதிபதியும் சட்டத்துறையும்
ஜனதிபதியின் சட்டத்துறை சார்ந்த முக்கிய அதிகாரம் தேசிய அரசுப் பேரவையைக் கூட்டுதல், தரிப்பிடுதல், கலைத்தல் என்பனவாகும். மகாதேசாதிபதிக்கும் இவ்வதிகாரங்கள் இருந் தன, பேரவை ஆண்டுக் கொருமுறையாகுதல் கூட்டப்படல் வேண்டும். இத்தகைய பணியும் மகாதேசாதிபதிக்கு இருந்தது. இங்கிலாந்தில் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தை அனுமதிப் பதற்கு ம், முப்ப  ைடகளை ஒரு வருடத்திற்கு அப்பாலும் தொடர்ந்து சட்டரீதியாக இயங்கச் செய்வதற்கும் மக்கள் சபை வருடம் ஒருமுறையாகுதல் சந்திக்கவேண்டுமென்ப மரபாகும். முன்னைய உாப்பில்போல் அரச தலைவர் 4 மாதத் திற்குமேல் பாராளுமன்றத்தைத் தரிப்பிடமுடியாது ; தரிப்பிட் டிருக்கும் காலத்தில் அது முன்புபோல் திருப்பியழைக்கப்பட லாம். முன்பு 5 ஆண்டுகளுக்குப் பின்பும், இன்று 6 ஆண்டு களுக்குப் பின்பும் பாராளுமன்றம் கட்டாயமாகக் கலைக்கப்பட வேண்டும். அத்தோடு முன்பு பிரதமர் தான்விரும்பிய நேரத்தில் பாராளுமன்றத்தைக் கலைக்கும்படி சிபார்சுசெய்யும்பொழுது மகாதேசாதிபதி அவ்வேண்டுகோளை ஏற்கும் அல்லது ஏற்காது விடும் தற்றுணிபு அதிகாரத்தைக் கொள்கையளவிலாகுதல் கொண்டிருந்தார் என்பதை முன்னர் பார்த்தோம் . Lurr til L. இவர்களின் கடமைகளையும் உரிமைகளையும் வரையறுக்கவில்லை; மரபுதான் வழிகாட்டியாய் அமைந்தது; எனவே மரபை மீறி யும் நடந்துகொள்ள முடிந்தது. இன்று தேசிய அரசுப் பேரவை பங்கீட்டு மசோதாவை நிராகரித்தால், அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றினுல், முதல் அமர்வைத் தவிர்ந்த ஏனைய அமர்வில் அரசாங்கக் கொள்கை பற்றிய கூற்றினை நிராக ரித் தா ல் பிரதமர் பேரவையைக் கலைக்குமாறு ஜனதிபதிக்குச் சிபார்சு செய்யவேண்டும்; அப்படிச் செய்யாவிடின் பிரதமர் ராஜினுமாச் செய்துவிட்டதாகக் கொள்ளப்படும் என்ற நிபந்தனைகள் யாப்பில் பொறிக்கப்பட் டுள்ளன. இம்மூன்று சந்தர்ப்பங்களிலும் பாராளுமன்றத்தைக் கலைக்கும்படி பிரதமர் கேட்டுக்கொண்டால் அப்படிச் செய்யாது விடும் தற்றுணிபு அதிகாரம் ஜனதிபதிக்கு இல்லையென்று கொள்ளலாம்; முதல் அமர்வில் அரசாங்கக் கொள்கைபற்றிய

Page 29
- 316 -
கூற்றினைத் தேசிய அரசுப் பேரவை நிராகரித்ததைத் தொடர்ந்து பேரவையைக் கலைக்குமாறு பிரதமர் சிபார்சு செய்தால், அச் சிபார்சை ஏற்காதிருக்கும் தற்றுணிபு அதிகாரம் ஜனதிபதிக்கு யாப்புவிதி 100ணுல் வழங்கப்படுகின்றது. பொதுத் தேர்தலுக்கு நேர் பின்னர் உள்ளதே முதலாவது அமர்வாகும். பொதுத் தேர்தலின் பின் அமைக்கப்பட்ட அரசாங்கம் பேரவையினல் உடனடியாகத் தோற்கடிக்கப்பட்டால், மாற்று அரசாங்கம் ஒன்றை அமைக்கும் எத்தனத்திற்கு வழிவகுக்கவே மேற்கூறிய தற்றுணிபு அதிகாரம் ஜனதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஆங்கில மரபைத் தழுவியது. இரு பொதுத்தேர்தல்களை அடுத் தடுத்து நடாத்துவது நாட்டின் ஒழுங்கான வாழ்க்கையைப் பாதிப்பதோடு, காரணமின்றி மக்கள் கட்சிமாறி வாக்களிக்கும் படி எதிர்பார்ப்பதுமாகும். மார்ச்சு 1960 தேர்தலின் பின் அமைக்கப்பட்ட ஐ. தே. கட்சி அரசாங்கத்தின் கொள்கைக் கூற்றினை முதலமர்விலேயே பிரதிநிதிகள் சபை நிராகரித்தபோது சிறுபான்மைப் பிரதமர் சிபார் சின் பேரில் பிரதிநிதிகள் சபை மகாதேசாதிபதியினுல் கலைக்கப்பட்டது. பிரித்தானிய மரபைப் பின்பற்றி மகாதேசாதிபதி நடக்கவேண்டுமென்ற யாப்பு-விதி யைப் புறக்கணித்து, எதிர்த்திறம் மாற்று-அரசாங்கத்தை அமைக்க முன்வந்த சூழ்நிலையில் பிரதிநிதிகள் சபை கலைக்கப் பட்டது பாரபட்சமான செயலென்று எதிர்த்திறத்தினரால் கண்டிக்கப்பட்டது. மேற்கூறிய சூழ்நிலையில் வருங் கால ஜனதிபதிகள் மாற்று-அரசாங்கத்தை அமைக்க முயற்சிசெய்ய வேண்டுமென்பதை 100ஆவது யாப்பு-விதி உணர்த்துகின்றது போலும், அன்று மரபைத் தழுவி மகாதேசாதிபதி திருமதி பண்டாரநாயக்காவை மாற்று-அரசாங்கத்தை அ  ைமக்க அழைத்திருந்தால், அவரின் கூட்டு-அரசாங்கம் சிறுபான்மை யினரின் குறைகளைப் பெருமளவிற்கு நீக்கி, இன்றைய அரசியல் நிலை ஏற்படுவதைத் தடுத்திருக்கலாமென்று கருதுவாருமுளர் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின் புதிய பாராளுமன்றத்தை நாலு மாதங்களுக்குள் கூட்டும் நடவடிக்கைகளை எடுக்குமாறும், அவசரகாலநிலை ஏற்படின் கலைத்த பாராளுமன்றத்தையே திருப் பிக் கூட்டுமாறும் பழைய புதிய யாப்புக்கள் இரண்டும் அரசுத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளன. சடங்குமுறை சார்ந்த பாராளுமன்ற இருக்கைகளுக்கு முன்பு மகாதேசாதிபதியும் இன்று பிரதமரும் தலைமைதாங்குவார்கள்.
பாராளுமன்றம் நிறைவேற்றிய மசோதா சட்டமாவதற்கு அரச தலைவர் கையெழுத்திடவேண்டும் என்பது உலகநாடுகள் பெரும்பாலும்  ைக யாளும் வழக்கமாகும். அமெரிக்க ஜனதிபதிக்கு அம்மசோதாக்களை "வீட்டோ செய்யும் உரிமை கூட உண்டு. பழைய யாப்பில் மகாதேசாதிபதி, இராணியார் சார்பில் மசோதா க் களுக்குச் சம்மதம் அளிக்கும் ஏற்பாடு இருந்தது; கொள்கையளவில் அவர் சம்மதம்தர மறுக்கலாம்:

-------- 317 ص~~~~۔
ஆளுல் நடைமுறையில் மறுக்காத மரபு நிலவியது. குடியரசு யாப்பில் ஜனுதிபதிக்குச் சட்டவாக்கத்தில் பங்கு பற்றும் சட்ட ரீதியான இடம் கொடுக்கப்படவில்லை. தேசிய அரசுப் பேரவை யினல் நிறைவேற்றப்பட்ட மசோதா அதன் சபாநாயகரினல் * இச் சட்டம் பேரவையில் முறைப்படி நிறைவேற்றப்பட்டுள் ளது ' என்று அத்தாட்சிப்படுத்தியதும் சட்டமாகிவிடும். இது தனித்தன்மை வாய்ந்த ஏற்பாடுபோல் தோன்றுகிறது;
--23 《ཐོབ་ 5. ஜனுதிபதியும் நீதித்துறையும்
மகாதேசாதிபதிக்கு இராணியார் உரிமையோலை மூலம் கையளித்த நீதித்துறை அதிகாரங்களை, அத்துறையில் இன்று ஏற்படுத்திய நிறுவன மாற்றங்களுக்கமையக் குடியரசு-யாப்பு ஜனுதிபதிக்கு வழங்குகின்றது. மேன்முறையீட்டு நீதிபதிகள் யாப்பு நீதிமன்ற உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பருவமன்ற ஆணையாளர்கள், இவர்களே பொத்த இருங்கால நீதிபதிகள், தலைவரைத் தவிர்ந்த நீதிச்சேவை-ஒழுக்காற்றுச் சபையின் இரு உறுப்பினர்கள் ஜனதிபதியால் நியமிக்கப்படுவர். 1973இல் நீதிபரிபாலனச் சட்டம் நீதித்துறை அமைப்பில் ஏற் படுத்திய மாற்றத்தை இயல் X1இல் காண்க. நீதிச்சேவை ஆலோசனைச் சபையின் தலைவரைத் தவிர்ந்த ஏனைய நாலு உறுப் பினரை நியமிக்கும், அகற்றும் அதிகாரம் ஜனதிபதிக்கு உண்டு. இவ்வதிகாரங்களை ஜனதிபதி பிரதமரின் ஆலோசனையின் பேரி லேயே பயன்படுத்துவார். யாப்புவிதி 22 ஜனதிபதியின் மன் னிப்பு வழங்கும் அதிகாரங்களை விரிவாக வரையறுக்கின்றது. உதாரணமாகக் குற்றஞ் செய்ய உடந்தையாயிருந்த ஒருவரிட மிருந்து முக்கிய தவருளருக்கெதிராகச் சாட்சியம் பெறுவதற்கு அவருக்கு மன்னிப்பு அளிக்கலாம் : தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு வழங்கலாம் : அல்லது தண்டனையைக் குறைக்கலாம். மரணதண்டனை பெற்றிருப்பவரின் தண்டனையை மன்னிக்கவோ தளர்த்தவோ செய்யுமுன் வழக்கை விளங்கிய நீதிபதியின் அறிக்கையும், சட்டத்துறை நாயகத்தின் ஆலோசனை யும், சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஆலோசனையும் ஜனதிபதிக்குக்
கிடைக்கவேண்டும்.
6. ஜனுதிபதியும் வேறு ஏற்பாடுகளும்
தேசிய அரசுப் பேரவைச் செயலாளர் ஜனதிபதியால் நியமிக்கப்படுகின்றர். ஒரு நிதியாண்டுக்கான ஒதுக்கீடு மசோதா சட்டமாகுமுன் தேசிய அரசுப் பேரவை கலைக்கப்படுமிடத்து, ஏற்கனவே பேரவை வேறு பண ஏற்பாடு செய்திருக்காவிடின், புதிய பேரவை கூடும் தேதியிலிருந்து 3 மாதங்கள் முடியும் வரை, பொது ச் சேவை க்கு அவசியமான அளவு பணத்தைத் திரட்டு நிதியிலிருந்து எடுத்துச் செலவழிப்பதற்கு ஜனதிபதி அதிகாரம் வழங்கலாம். அதேபோலப் பேரவை கலைக்கப் பட்டுப் பொதுத் தேர்தல் நடத்துவதற்குப் பேரவை ஏற்கனவே

Page 30
سن 318 دس.
பண ஏற்பாடு செய்திருக்காவிடின், தேர்தல் ஆணையாள ருடன் ஆலோசனை செய்தபின் தேவையான பணத்தைத் திரட்டுநிதியிலிருந்து வழங்குவதற்கு ம் செலவிடுவதற்கும் ஜனு தி பதி அதி இாரம விரிக்கலாம். இராணி யார் செய்த தூதமைச்சர் நியமனம் இன்று ஜனதிபதியின் உரிமையாகும். அத்தோடு வெளிநாடுகளின் தூ த  ைம ச் சர் களை வரவேற்று அங்கீகாரம் கொடுக்கும் மகாதேசாதிபதியின் கடமைகளை இன்று ஜனதிபதி செய்கின்றர்.
சர்வதேச வழக்கில் ஒரு அரச தலைவர் புரியும் வேறு கடமை களையும் எமது ஜனதிபதி, யாப்பிற்கும் வேறு சட்டங்களுக்கும், அமைந்து செயலாற்றலாமென்ற பொதுவான, துல்லியமற்ற சரத்தொன்றும் குடியரசு யாப்பில் இடம்பெற்றுள்ளது. இவ் விதி, இலங்கைத் தேசாதிபதிகள் சட்டத்திற்குப் புறம்பாகத் தங்கள் ஆளுமைக்கும் ஆற்றலுக்கும் ஏற்பச் செய்துவந்த சில கடைமைகளை ஜனதிபதிகளும் தொடர்ந்து செய்வதற்கு வழிவிடு கின்றது. உதாரணமாக அமைச்சர்கள் ஆலோசனைப்படி தன் பெரும்பாலான அதிகாரங்களைச் செயற்படுத்தும் ஜனதிபதி, அமைச்சர்களுக்கே அறிவுரை கூறலாம் எச்சரிக்கை செய்யலாம் : உற்சாகமூட்டலாம் ; நல்லாட்சிக்கு ஏற்ற வகையில் மத்தியஸ்தம் செய்யலாம் சமூகச் சடங்கு வைபவங்களில் பங்கு பற்றலாம் . இவைகளை யாப்பு எதிர்பார்க்கும் அரசியல் நெறிகளுக்கும், சட்டங்களுக்கும் அமைந்து செய்யவேண்டும். மக்கள் வாழ் வாங்கு வாழ்வதற்கு வழிகாட்டியாக அரச தலைவர் வாழ்ந்து காட்டவேண்டும். மேற்சாட்டிய பரந்த அதிகாரங்களும் கடமை களும் இருந்தும், பிரதமரால் நியமனம் பெற்று அவர் ஆலோ சனை மீது இயங்கி, அவரால் பதவி நீடிப்புப் பெறக்கூடிய ஜனதி பதியை ஆட்சிப் பொறியகத்தின் ஒரு அழகுச் சின்னமென்று ஒரு விதத்தில் அழைக்கலாம். யாப்புறு அரசுத்-தலைவர்களான இங்கிலாந்து இராணியார், இந்திய ஜனதிபதி, கனடாவின் மகாதேசாதிபதி போன்ருேரின் நிலையை ஒத்ததே இலங்கை ஜனதிபதியின் நிலையுமென்று பொதுவாகக் கூறலாம் ஐக்கியஅமெரிக்காவின், பல தென்-அமெரிக்க ஆசிய ஆபிரிக்க நாடு களின் உண்மை நிர்வாகிகளான ஜனதிபதிகளுக்குப் பெயரளவில் நிர்வாகியான இலங்கை ஜனதிபதியிலும் பார்க்க ஆழ்ந்து பரந்த தற்றுணிபு அதிகாரங்கள் உண்டு. அதே நேரத்தில் எங்கள் ஜனதிபதி அரசியலில் ஒரு " மகத்தான பூச்சியம் " என்றும் கூறுவதற்கில்லை. பிரதமர் நியமனம், தேசிய அரசுப் பேரவைக் கலைப்பு, தற்காலிக முழு - நிர்வாகப் பொறுப்பு போன்றவற்றில் தற்றுணிபு அதிகாரம் உப்யோகிக்கும் சூழ்நிலை எழலாம். அத்தோடு மற்றும் பணிகளை நல்லமுறையில் ஆற்றி, ஆட்சி திறம்பட இயங்கவும் தேச ஒற்றுமை வளரவும் அருஞ் சேவை செய்யலாம்.

X, அரச அலுவலர்
1. பொது
வாக்காளர்-தொகுதிகள், அரசியற்-கட்சிகள், பாராளு மன்றம், அரசியல்-நிர்வாகம் ஆகியன அரசாங்கக் கொள்கையை உருவாக்கத் துணைபுரியும் கருவிகளாம். உருவாக்கி ய கொள்கையை அரசியல்-நிர்வாகிகள், பெயரளவில்-நிர்வாகி, இராணுவம், சிவில்-பணித்துறையாளர் போன்ருேர் அமுலாக்கு கின்றனர். உண்மை நிர்வாகிகளின் உயர் கட்டுப்பாட்டிற்குள் நின்று இராணுவமும் சிவில்சேவையும் செயற்படும். வெளி நாட்டுத் தாக்குதல்களிலிருந்து அரசைப் பாதுகாப்பதும், நெருக்கடிக் காலங்களில் உள்நாட்டில் அமைதியையும் ஒழுங்கை யும் நிலைநாட்ட உதவுவதும் இராணுவத்தின் கடமையாகும் கூடியளவிற்கு உள்விவகாரங்களிலிருந்து இராணுவத்தை ஒதுக்கி வைப்பது விவேகமானதென்பதைப் பல நாடுகளின் அனுபவம் போதிக்கின்றது. சிவில்-பணித்துறை அரசாங்கத்தை நடத்த உதவும் பல அதிகாரிகளைக் குறிக்கும். ' அது, சம்பளம்பெறும், தனித்திறமை வாய்ந்த, அரச ஊழியத்தையே வாழ்க்கைத்
தொழிலாகக்கொண்ட அனைவரையும் அடக்கும் " - ஹேமன் ஃபைனர்: " சட்டத்தைச் செயலாக்குவதற்குத் தொடர்ச்சி
யாக இயங்குகின்ற, அரசாங்கத்தின் தொழில்துறைத் தொடர் புடைய பகுதியே சிவில்சேவையாகும் " என்று இன்னுெரு வரைவிலக்கணம் கூறுகின்றது. பியோன் தொடக்கம் நிரந்தரச் செயலாளர் வரை உள்ள பலதிறப்பட்ட தன் அரச-அலுவலர் அனைவரையும் இங்கிலாந்து சிவில் சேவை" என்று அழைப்பது வழக்கம், உயர் அலுவலராகிய ஒரு பகுதியினரே இப் பெயரை இலங்கையில் 1963 வரை பெற்றிருந்தனர் ; அதன் பின் * இலங்கையின்-நிர்வாக சேவை என்ற பதம் உபயோகிக்கப்படு கின்றது. நிர்வாக சேவையையும் ஏனைய அரச ஊழியர்களையும் சேர்த்துப் பொதுச் சேவை என்று 1948 யாப்பும், " அரச அலுவலர் ” என்று குடியரசு யாப்பும் அழைப்பதைக் காண லாம் "இலங்கை ஆட்சியில், முடியின் ஊழியராகச் சம்பளந்
இ, 11 - 7

Page 31
தரும் பதவியை வகிப்போர் பொதுச்சேவையாளர் ' என்று முன்னைய யாப்பு வரையறை செய்துள்ளது ; இதற்கு விதிவிலக் காக நீதிபதிகள், மகாதேசாதிபதி, சட்டமன்றச் சபாநாயகர்கள் அமைச்சர்கள், பாராளுமன்றச் செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கணக்குப் - பரிசோதனை நாயகம், பொதுச் சேவை - ஆணைக்குழு உறுப்பினர், நீதிச்சேவை - ஆணைக்குழு அங்கத்தவர் போன் ருேர் இருந்துள்ளார்கள், புதிய யாப்பின்படி ஜனதிபதி, அமைச்சர்கள், பதில்-அமைச்சர்கள், தேசிய அரசுப் பேரவை உறுப்பினர் ஆகியோரைத் தவிர்த்துக், குடியரசின் ஊழியராகச் சம்பளந்தரும் பதவியை வகிப்போர் அரச அலுவலராகும்
எப்பொழுது அரசாங்கம் ஆரம்பமானதோ அன்றுதொட்டுப் பொதுப் பரிபாலனமும் நிலவியதென்று கூறலாம் : அதாவது புராதன சமூகத்தில் ஆட்சி - நிறுவனங்கள் தோன்றி வளரச் சட்டங்களை ஆக்கி அமுல்செய்தலும் தோன்றி வளரலாயிற்று; எளிமையான சமூகத்தில் பொது-ஒழுங்கை நிலைநாட்டுவதே பொதுப் பாலனத்தின் நோக்கமாயிருந்தது செயலாட்சி நிறு வனங்களும் எளியனவாயும் சிறியனவாயுமிருந்தன. சமூகம் விரிந்து சிக்கல் பெற, அரசின் கடமைகளும் அவற்றைச் செயற் படுத்தும் நிறுவனங்களும் பெரியனவாய், சிக்கல்வாய்ந்தனவாய், தனிச்சிறப்புடையனவாய் மாறின. உதாரணமாகத் தொழிற் புரட்சிகளினல் ஏற்பட்ட பிரச்சினைகளையும், விஞ்ஞான முன் னேற்றத்தினுல் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்களையுந் தொடர்ந்து அரசின் கடமைகளும் பாலனப் பிரச்சினைகளும் அதிகரித்தன ; பாலன முறையும் பாலனப் பொறியகமும் மாறிய நிலைக்கேற்ப மாற்றம்பெற்றன : பொதுச் சேவையாளருக்கு விசேட பயிற்சி அளிக்கப்பட வேண்டியதாயிற்று. அதென்ஸ் போன்ற நகர-அரசுகளில் பயிற்சியற்ற சாதாரண பிரசை களில் ஒரு பகுதியினர் நிலைபேறற்ற அரச-ஊழியஞ்செய்த நிலை மாறி, விசேட பயிற்சியும் அரச-சேவையையே வாழ்க்கைத் தொழிலாக அமைத்துக்சொண்ட பொதுச் சேவையினர் நவீன அரசுகளில் கடமையாற்றுவது இன்றியமையாததாகிவிட்டது. அத்தோடு அவர்களின் அளவும், தொழில்நுட்ப அறிவும், முக்கியத்துவமும் உயர்ந்தன. இவ்வம்சங்கள் முதலாளித்துவ கம்யூனிச நாடுகள், வளர்ச்சியடைந்த, வளர்ச்சி எய்தும் நாடுகள் அனைத்திற்கும் பொருந்தியனவாம்:
அரச குடும்பத்தைச் சார்ந்தவராயிருந்து படிப்படியாகப் பொதுச்சேவையாக மலர்ந்த இன்றைய மேற்கு-ஐரோப்பிய சிவில் சேவை முறைகள் பண்டைய மத்தியகாலச் சீனு, எகிப்து, கிறிஸ், ருேம் ஆகியவற்றின் பாலன-அம்சங்கள் சிலவற்றைப்

- 321 -
பெற்றுக்கொண்டன : தற்போது வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இன்றைய உலகில் 4 முக்கிய சிவில்சேவை முறைகளைக் காணலாம். (1) பிரான்சிலும் வேறு சில மேற்குஐரோப்பிய நாடுகளிலும் உள்ள முறையில் அரச-ஊழியருக்குக் கிடைக்கும் உயரிடம், அரச-சேவையை ஒரு வாழ்க்கைத் தொழிலாகக் கொள்ளும் தன்மை, பொதுச்சேவையினரின் அந்தஸ்திற்கும் பதவிக்காலத்திற்கும் கிடைக்கும் நல்ல பாது காப்பு, பாலனம் தொடர்ச்சியாகத் திறமையுடன் இயங்குவ தற்கு அரச-ஊழியர்கள் புரியும் பணி ஆகியன குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். (2) பிரித்தானியாவில் அரசியலார் தலையீ டின்றிக், குறிப்பிட்ட வயதிற்குள் அமைவோரை அறிவுச்சோதனை மூலம் அலுவலராகத் தெரிவுசெய்வதும், பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் திறமைமிக்கோரை உயர்பாலன-ஊழியராகச் சேர்த்துக்கொள்ளும் முறையும் சிவில் சேவையாளரை நேர்மைக் கும் அறிவாற்றலுக்கும் அரசியல்-நடுநிலைமைக்கும் பெயர்பெற்ற வர்களாக உருவாக்குகின்றன. (3) ஐக்கிய அமெரிக்கா பிரித்தானிய அனுபவத்தைப் பொதுவாகப் பின்பற்றினுலும், வெற்றிபெற்ற கட்சியின் ஆதரவாளருக்குப் பதவி ஆதாயம் கொடுக்கும்முறை, வாழ்க்கைத்தொழிலுக்காகவன்றிக் குறிப் பிட்ட பதவிக்கு அலுவலரைத் தெரிதல், தெரிவில் அறிவுச் சோதனைக்கன்றிச் செயல்முறை சார்ந்த சோதனைக்கு முக்கியத் துவம் கொடுத்தல், சமூகத்தில் பொதுச்சேவையினரின் குறைந்த அந்தஸ்து ஆகிய வேற்றுமைகளைக் காணலாம். (4) மேற் கூறிய நாடுகளிலிருந்து மாறுபட்ட சமூக பொருளாதார அரசியல் அமைப்பைக்கொண்ட ரூஷியாவில் பொதுச்சேவையினர் ஒவ் வொரு அமைச்சின் கீழுள்ள கல்லூரிகளிலிருந்து சிவில்சேவைக் கான பரீட்சைகளின்றி நியமனம்பெற்று, பதவிக்கும் தகுதிக்கு மேற்ற சம்பளத்துடன், பதவியுயர்ச்சி பெறும் வாய்ப்பும், பதவிக்காலப் பாதுகாப்பும் உடையவராய்ப் பணியாற்றுகின் றனர்.
பல்வேறு சிவில்சேவை முறைகளையும் தாபித்து அவைகளைத் தொடர்ந்து செயலாற்றச் செய்வதற்கு வேண்டிய பொதுவான சில தேவைகள் எல்லா அரசுகளுக்கும் இன்றியமையாதன; உதாரணமாக : (1) எழுதின யாப்பு அல்லது பாராளுமன்றச் சட்ட அடிப்படை அவற்றிலிருந்து எழும் வழக்கமோ அல்லது அமைச்சு-விதிகளோ பெரும்பங்கு வகிக்கக்கூடும். (2) அலுவ லரைத் தொடர்ந்து செயற்படுத்துவதற்குப் பொறுப்புடைய தாபனம்; அது பொதுச்சேவை-ஆணைக்குழு, திறைசேரி, அமைச்சு அல்லது இலாகாவாக இருக்கலாம். (3) அலுவலர் களின் நியமனம், பதவியுயர்வு, ஒழுக்கக்கட்டுப்பாடு போன்றவற் றைச் செய்வதற்கு நிலைபேருன செயல்முறைகள்g (4) அலுவலர்

Page 32
--ساجد 322 -----
அந்தஸ்தைப் பேணும், நடத்தைநெறிகளை அமைக்கும் ஏற்பாடு கள். (4) அரசியலமைப்பில் அலுவலரின் இடம்பற்றிய வரை யறுப்பு: நிலவும் அரசாங்கத்திற்குப் பற்றுறுதி காட்டுபவர்க ளாய் இருக்கும் அதேவேளையில், மாற்று அரசாங்கம் ஏற்படின் அதன் நம்பிக்கையைப் பெறக்கூடியதாகச் சிவில் சேவை அமைக்கப் பட்டிருக்கவேண்டுமென்று பெரும்பாலும் கருதப்படுகின்றது.
சிவில்சேவை முறைகளில் அலுவலரின் நியமனம், அமைப்பு, அந்தஸ்து, வேலை ஆதியன பற்றிப் பல சிக்கல்கள் கருத்திலும் செயலிலும் எழுந்துள்ளன. உதாரணமாக : (1) ஆள் சேர்த் தலில் திறமை, கட்சிச்சார்பு, சமூக வகுப்பு போன்றவற்றில் எதற்கு முதலிடம் கொடுக்கவேண்டுமென்ற பிரச்சினைகளைக் காணலாம்; வளர்ச்சியுறும் நாடுகளில் தொழிலாற்றலுக்குப் பதிலாகப் பல்கலைக்கழகப் பட்டம் அளவுக்கு மீறிய மதிப்புப் பெறுகின்றது. (2) அலுவலரின் அந்தஸ்தையும் சம்பளத்தை யும் எவ்வாறு ஒழுங்கு செய்யலாமென்பதுபற்றி ஒருமித்த கருத்தைக் காணமுடியாது; சில நாடுகள் அலுவலர்களைச் சில வகுப்புகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் உரித்தாய படி நிலையை நிர்ணயிக்கும்பொழுது, வேறு சில நாடுகள் ஊழியர் வகிக்கும் பதவியே அவர்களின் அந்தஸ்தையும் கடமையையும் பொறுப்பையும் நிர்ணயிக்கும் முறையைக் கையாளுகின்றன. (3) தகுதியுடையோர் பொதுச்சேவையை ஏற்றுக்கொள்ளுமாறு தூண்டுவதற்குப் போதிய சம்பளம் கொடுப்பது பல நாடுகளின் பிரச்சினையாயுள்ளது. (4) அலுவலரின் நன்னெறி சார்ந்த ஒழுக்க அளவு, தொழிற்சங்க நடவடிக்கையளவு, அரசியலுரிமை யளவு பற்றி நாட்டுக்குநாடு வேறுபட்ட கருத்துக்களும் செயற் படுத்தல்களும் நிலவுகின்றன. (5) சிவில்சேவைக்கும் மற்றும் ஆட்சிக்கருவிக்கு மிடையேயுள்ள உறவு எல்லா நாட்டிலும் ஒரே விதமானதல்ல; சில நாடுகளில் அலுவலர்கள் அரசிய லாரின் அடிவருடிகளாக இயங்கும்பொழுது வேறு சில நாடு களில் அவர்கள் கொள்கை வகுப்பதிலும் பங்குகொள்ளக்கூடிய நிலை பெற்றுள்ளனர். (6) ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து அண்மைக்காலங்களில் சுதந்திரம் பெற்ற நாடுகளுக்கு, மற்றும் ஆட்சி- நிறுவனங்களிலும் பார்க்கப் பலம்வாய்ந்த, வளர்ச்சி யுற்ற சிவில் சேவை கிடைத்துள்ளதைக் காணலாம்; பழைய எசமானர்கள் விரும்பிய அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டு வதில் திறமைமிக்க சிவில்சேவையினர் பொதுமக்கள் மீது ஏளன இகழ்ச்சியும் தாம் மேம்பட்டவர் என்ற மனப்பாங்கும் உடைய வர்களென்றும், மாறிய நிலைக்கு வேண்டிய பொருளாதார முன்னேற்றத்திற்கும் சமூகப் பொதுநலனுக்கும் உழைக்கும் தகுதி யற்றவர்களென்றும் அரசியலாரால் குறைகூறப்படுகின்றனர்,

- 323 -
2. அமைப்பு
சேர், சால்ஸ் கொலின்ஸ் “இலங்கையின் பொதுப்பாலனம்" என்னும் நூலில் அதன் பொதுச்சேவையைச் சிவில்சேவை, எழுதுவினைஞரும் அவரோடொத்த சேவைகளும், தலைமைக் காரர் முறை என்று மூன்று பெரும் பிரிவுகளாக வகுத்துள்ளார். சிவில்சேவை நீண்ட, புகழ்மிக்க வரலாறுடையது; சிரேஷ்டபாலன அதிகாரிகளை அங்கத்தவர்களாகக் கொண்டது. தேசாதிபதி சேர். ஃபிறெடிறிக் நோர்த் (1798 - 1802 ) காலத்தில், "பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் முதன்முத லாகத் தனிப்பட்ட, முடியின்கீழ் இயங்கிய, அரச சேவையை வாழ்க்கைத் தொழிலாகக்கொண்ட சிவில்சேவையை இலங்கை பெற்றது." காலத்திற்குக் காலம் பல சீர்திருத்தங்களுக்கு ஆளாகிய இச்சேவை, பல ஆற்றல்வாய்ந்த தன்னலமற்ற அங்கத் தவரின் உயர்சேவையினுல் பெருமதிப்புப் பெற்றது. ஆரம்பத்தில் ஐரோப்பியர்களே சிவில்சேவைக்குப் பிரித்தானிய குடியேற்ற நாட்டு அமைச்சரினுல் நியமிக்கப் பட்டார் கள் பின்னர் இலங்கையருக்கும் அதில் சேரும் உரிமை கிடைத்து, அவர்கள் தொகை படிப்பீடியாக உயர்ந்து, 1937இல் இலங்கையரல்லா தோரையும் நியமிக்கும் வழக்கம் முற்ருகக் கைவிடப்பட்டது. அறிவுச் சோதனைமூலம் தெரிவு செய்யப்படும் பட்டதாரிகளையும், பொறிலலாளர், கட்டிடக்கலைஞர், மருத்து வர் போன்ற விஞ்ஞானப் பிரிவினரையும் உள்ளடக்கிய சிவில் சேவை 1ஆம், 2ஆம் வகுப்புக்களையும், ஒவ்வொரு வகுப்பும் 1ஆம், 2ஆம் பிரிவு களையும் கொண்டிருந்தது. 1963இல் சிவில்சேவைக்குப் பதிலாக "இலங்கை நிருவாகசேவை தாபிக்கப்பட்டது. 1972இல் அதன் 1-V வகுப்புக்களிலும் முறையே 22, 52, 74, 137, 898 உயர் அலுவலர்கள் இருந்தனர். முன்னர் பொதுச்சேவை ஆணைக் குழுவினுலும், இன்று அமைச்சரவையினலும் நியமனம்பெறும் நிருவாகசேவை நாட்டின் உயர் கல்வி பெற்ற கூரறிவுடைய இளம் ஆண்களையும் பெண்களையும் தன் பால் ஈர்க்கின்றது: திறமைக்கும் ஒழுக்கத்திற்கும் சிறந்து விளங்குகின்றது என்று பொதுவாகக் கூறலாம்
தொழில்துறை சார்ந்த, தொழில்திறமை உடைய அல்லது இல்லாத தொழிலாளரையும் வயல்வெளித்-தொழிலாளரையும் சேர்த்து, கனிஷ்ட படிநிலைகளில் சுமார் 150,000 அரசு அலுவலர் இலங்கையில் உண்டு. இவர்களுக்கு அடுத்த படியில் தொழில் நுட்பப் படிநிலைகளி லுள்ளோரையும் எழுது வினைஞரையும் போடலாம். எழுதுவினைஞர் சேவை பொது எழுதுவினைஞர் சேவையென்றும் தனிப் ட்ஆ சில இலாகாக்களுக்குரிய இச M யென்றும் பிரிபடும், தபால், புண்கியிரத், சுங்க இலாகாக்கிளுக் கு
“ሎ፡ && s * ് { }; " " "; " " | ''--് "" : "\

Page 33
- 324 -
விசேட பயிற்சி வேண்டியிருப்பதால் அவைகள் ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட சேவைகள் அமைக்கப்பட்டுள்ளன. எழுது வினைஞர் சேவையின் அங்கத்தினர் பிரித்தானிய ஆட்சிக்காலத்திலிருந்து இலங்கையராகவே இருந்துள்ளார்கள்; அறிவுச்சோதனை மூலம் தெரியப்படுகின்றனர். சிங்களம் அரசகரும மொழியாகும்வரை ஆங்கிலம் கற்றவர்களே எழுதுவினைஞர்களாக வரமுடிந்தது. இச்சேவையில் சில படிவரிசைகளுண்டு; திறமைமிக்கோர் படிப் படியாக உயர்ந்து,நிர்வாக-சேவைக்கும் பதவிஉயர்ச்சி பெறலாம். தலைமைக்காரர் சேவையின் மூன்று படிவரிசைகளில், கீழ்ப்படியில் கிராம விதானையும், அடுத்து விதான ஆராச்சி, கோருளை அல்லது உடையாரும், உயர்படியில் முதலியார் றட்டேமகாத் தயா, மணியகாரன், அதிகாரம் அல்லது வன்னியாவும் இருந் தனர்.நிலமானிய சமூகத்தின் பிரதிபலிப்பான தலைமைக்காரர்கள் செல்வாக்குமிக்க உயர் குடும்பங்களிலிருந்து நியமனம்பெற்று, இடமாற்றத்திற்கு உட்படாது, மன்னராட்சிக் காலந்தொட்டு அண்மைக் காலம்வரை பொதுப்பாலனத்தில் முக்கிய இடம் வகித்துள்ளார்கள் சட்டமும் மரபும் அவர்களுக்குப் பரந்த அதிகாரங்களை வழங்கின. மக்களின் மொழியையும் பழக்க வழக்கங்களையும் நன்கு அறியாத ஏகாதிபத்திய ஆட்சியாளருக்கு தலைமைக்காரரின் சட்டவாக்க நிர்வாக நீதித்துறைச் சேவைகள் பேருதவியாயிருந்தன. பணப்பொருளாதாரமுடைய சுதந்திர சமூகத்திற்குத் திறமையற்ற, ஊழல்கள் மலிந்த தலைமைக்காரர் முறைமை ஒவ்வாததினுல் அவர்களின் இடத்தைக் கல்வியும் விசேடபயிற்சியும் பெற்ற, இடமாற்றம் பெறக்கூடிய பிரிவு வருமான அதிகாரிகளும் அவர்களின் உதவியாளராகிய கிராம சேவையாளரும் நிரப்புகின்றனர்.
மேற்கூறிய அலுவலர்கள் அரசாங்கத் திணைக்களங்களிலும் பொதுக் கூட்டுத்தாபனங்களிலும் கடமையாற்றுகின்றனர்5 160க்கு மேற்பட்ட இந்நிறுவனங்கள் இன்று 20 அமைச்சுக் களின்கீழ் இனப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு அமைச்சும் ஒரு அமைச்சின் கீழ் இயங்குகின்றது. ஒரு அமைச்சில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திணைக்களங்கள் இருக்கலாம் திணைக்களங் களின் அரசியல் தலைவர் என்று அழைக்கப்படும் அமைச்சர் அமைச்சரவையின் கொள்கைக்கிணங்கத் தமது அமைச்சு பணி யாற்றுமாறு மேற்பார்வை செய்கின்ருர், அமைச்சரின் பாராளு மன்ற, திணைக்களக் கடமைகளில் அவருக்கு உதவிபுரியப் பிரதமர் ஒரு அல்லது சில பிரதியமைச்சர்களை வேண்டுமெனில் நியமிக்கலாம். வர்த்தமானியில் பிரகடனஞ் செய்வதன்மூலம் அமைச்சர் தனது எந்த அதி கா ரத் தை யோ அல்லது கடமையையோ பிரதியமைச்சருக்குச் சட்டரீதியாகக் கையளிக் கலாம் திறமைமிக்க இளம் பாராளுமன்ற உறுப்பினரைப்

- 325 -
பிரதியமைச்சராக்கும் முறைமை வருங்காலத்தில் ஆளுங்கட்சி ஆட்சிப்பொறுப்பை ஏற்க நேரிடும்பொழுது பாலனத்திற்கு வேண்டிய அனுபவம்பெற்ற அமைச்சர்களைக் கொடுக்க உதவும்3 ஒரு அமைச்சர் இன்னுெரு அமைச்சரின் பாராளுமன்றக் காரிய தரிசியாகவும் பிரதி ய ைமச் சரா க ) நியமனம் பெறுவது இலங்கைக்கேயுரிய விசேட அம்சம் போலும் . உதாரணமாகத் திரு. ஃபீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவும் திரு. ஜே. ஆர். ஜயவர்த்தணுவும் ஒரே நேரத்தில் இரு பதவிகளை வகித்துள் ளார்கள். " ஒவ்வொரு அமைச் சருக்கும் ஜனதிபதியால் நியமிக்கப்பட்ட செயலாளர் ஒருவர் இருத்தல் வேண்டும். அவர் தன் அமைச்சரின் பணிப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் அமைய, அமைச்சரின் பொறுப்பிலுள்ள அரசாங்கத் திணைக்களங்கள் அல்லது வேறு நிறுவனங்கள் மீது மே ற் பார்வை செய்தல் வேண்டும்-103.* முன்னேய யாப்பின் "நிரந்தரச் செயலாளர்? தற்போது அடைமொழியின்றிச் "செயலாளர்' என்று அழைக் கப்படுவதைக் காண்க; முன்பெல்லாம் பொதுச்சேவையில் மூத்த அரசஅலுவலர் ஒருவரே இப்பதவிக்கு நியமிக்கப்படுவது வழக்கம். ஐக்கிய-முன்னணியினர் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பொழுது சிவில்சேவையில் அங்கம் வகிக்காத முன்னணியின் " அங்கத்தவரோ அனுதாபிகளோ அமைச்சுச் செயலாளர் பதவிகள் சிலவற்றிற்கு நியமிக்கப்பட்டமை வழக்கத்திற்குப் புறம்பான தாகும். செயலாளர் அமைச்சரின் திணைக்களங்கள் பற்றிய முக்கிய ஆலோசகராகும். இவருக்கூடாகவே அமைச்சருக்கும் திணைக்களங்களுக்குமிடையேயுள்ள கடிதத்தொடர்பு நடைபெறு கின்றது. பெரும் அமைச்சுக்களுக்கு மேலதிக செயலாளரும் உதவிச் செயலாளரும் நியமிக்கப்படலாம்; ஒவ்வொரு திணைக் களத்திற்கும் அரசியலாரல்லாத நிரந்தர சிவில்சேவையாளரான ஒரு தலைவருண்டு; அவரின் கீழ் உயர் அலுவலர்கள், தலைமை எழுத்தாளர்கள், எழுதுவினைஞர்கள், பியோன், தூதர், துணை ஏவலர், காவலர் போன்ற கீழ்ப்படி வரிசை அலுவலர் வேலை செய்வர். திணைக்களப் பொதுச்சேவையினர் தொகை இலாகா விற்கு இலாகா மாறுபடும் மேற்காட்டிய அமைப்பில் ஓர் அமைச்சரின் கீழுள்ள பல திணைக்களங்களில் சில, அரசாங்கம் மாற்றி யமைக்கப்படும்போது இன்னெரு அமைச்சரின் மேற் பார்வைக்குச் செல்லலாம். இது ஒழுங்கான பாலனத்திற்குத் தடையாக இருக்கக் கூடுமாதலால், இங்கிலாந்து முறைமையைப் பின்பற்றித் தொடர்புடைய பல திணைக்களங்களை, ஒரு பெரும் திணைக் களமாகவும், முன்னைய தனிப்பட்ட திணைக் களங்களை உப திணைக்களங்கள் அல்லது பிரிவுகளாகவும் மாற்றியமைத்தல் நல்ல தென்று ஜென்னிங்ஸ் அவர்களும், 1958-61 சம்பள ஆணைக் குழுவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்; இம் மாற்றம் புதிய யாப்பிலும் இடம்பெறவில்லை. இங்கிலாந்தில் பெரும் இலாகாத்

Page 34
- 326 -
தலைவரை நிரந்தரக் காரியதரிசியென்றும், அவரின் நேர் கீழ் உதவியாளரான ஒருவரை அல்லது இருவரைப் பதில் காரிய தரிசியென்றும், உப திணைக்களத் தலைவர்களை நேருதவிக் காரிய தரிசியென்றும் அழைப்பதைக் காணலாம்.
திணைக்களங்கள் கூட்டுநிறுவனங்கள் போன்ற வற்றின் நடவடிக்கைகள் நாடு முழுவதற்கும் பொருந்தியனவென்று பொதுவாகக் கூறலாம்; இவற்றைவிட 1955 தொடக்கம் இலங்கை 22 பாலன-பெரும்பகுதிகளாகவும், பெரும்பகுதிகள் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுப் பெரும்பகுதிகள் ஒவ்வொன்றும் ஓர் அரசாங்க அதிபரின் தலைமையின் கீழும், பிரிவுகள் ஒவ் வொன்றும் ஒரு பிரிவு - வருமான அதிகாரியின் கீழும், சில பிரிவுகள் இணைந்த பகுதி ஒவ்வொன்றும் ஒரு உதவி அரசாங்க அதிபரின் கீழும் இயங்குகின்றன. கிராம சேவகர், பிரிவு வருமான அதிகாரி, உதவி அரசாங்க அதிபர், அரசாங்க அதிபர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்ற படி வரிசைப்படி இவர்களின் அதிகாரம் உயர்ந்து செல்கின்றது; ஒவ்வொரு பெரும்பகுதியிலும் "ஒத்திசை விக்கும் குழு ஒன்று மூன்று மாதத்திற் கொருமுறையாகுதல் அரசாங்க அதிபரின் தலைமையில் கூடும். அப்பெரும பகுதியைச் சார்ந்த பாராளு மன்ற உறுப்பினர். உள்ளூர் மன்றத் தலைவர், திணைக்களத் தலைவர் அதில் அங்கம் வகிப்பர். குழுவின் நோக்கம் பெரும் பகுதி அரசாங்க நடவடிக்கைளை ஒத்திசையச் செய்வதும், அரசாங்கத் திட்டம் செயல்படுத்துவதை முன்னேற்றுவது மாகும். இதுபோன்ற அமைப்புடனும் நோக்குடனும் பகுதி களிலும் பிரிவுகளிலும் ஒத்திசைவிக்கும் குழுக்கள் செயல் படுகின்றன. 3. சேவை நிபந்தனைகளும்,
தொழிற்சங்க அரசியல் உரிமைகளும்
" தேசிய அரசுப் பேரவை வேறுவகையில் ஏற்பாடு செய்யும் வரையில், அரசியலமைப்புத் தொடங்குவதற்கு நேர்முன்னர் இருந்த இலங்கை அரசாங்கத்தின் உள்ளூர் அதிகார சபையின், பொதுக் கூட்டுதாபனத்தின் சேவையிலிருந்த, பதவிவகித்த ஆள் ஒவ்வொருவரும் முன்னைய நியதி, நிபந்தனைகளின் கீழ் அத்தகைய சேவையில் அல்லது பதவியில் தொடர்ந்திருந்துவர ல்வேண்டும்132." 1948இல் இலங்கையின் முழு ஆட்சிப்பொறுப்பும் இலங்கையருக்கு மாற்றப்பட்டபோது பிரித்தானிய குடியேற்ற நாடுகளின் காரியதரிசியினல் நியமனம்பெற்ற உயர் அலுவலர்கள் சில சலுகைகளுடன் அவர்கள் விரும்பினுல் பொதுச்சேவையி லிருந்து இளைப்பாறுவதற்கும் வேறு குடியேற்ற நாடுகளுக்கு

இடமாற்றம் பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த ஏற்பாடுகள் விசேடமாகப் பிரிட்டிஷ் அலுவலரின் நியமன ஒப்பந்தங்களை மனதில்வைத்து ஆக்கப்பட்டவை, குடியரசு யாப்பு எந்த அலுவலருக்கும் நட்டஈட்டுடன் அர ச சே  ைவ யி லி ரு ந் து விலகும் உரிமையை அளிக்க வில்லை. அதன் 133ஆவது விதிப்படி எல்லா அரச அலுவலரும் இலங்கைக் குடியரசுக்கு விசுவாசமாயும், தமது கடமைகளை முறையாக நிறைவேற்றுவதாகவும் சத்தியம் செய்யவேண்டும்: குறிப்பிட்ட காலத்திற்குள் அப்படிச் செய்யாதோர் சேவையி லிருந்து ஒழிந்தவராதல் வேண்டும். இவ்விதிப்படி சத்தியப் பிரமாணச் செய்யாது ஒருசிலர் பதவி துறந்ததாகத் தெரிய வருகிறது. அரச அலுவலரின் சேவை நிபந்தனைகள், உரிமை கள், கடமைகள் ஆகியவற்றை யாப்பிலும், பாராளுமன்றச் சட்டங்களிலும், 1971இல் பொது நிர்வாகத் திணைக் களம் வெளியிட்ட பணித்துறையாளர்பற்றிய விதித் தொகுப்பிலும் காணலாம். அண்டை நாடுகளோடு ஒப்பிடும் பொழுது இலங்கையின் அரச அலுவலருக்குக் கொடுக்கப்படும் சம்பளம், விடுமுறை நாட்கள், வேறு சலுகைகள், ஓய்வூதியம் போன்றவை கவர்ச்சியானதென்று பொதுவாகக் கூறலாம். நியமனம், பதவி யுயர்வு, இடமாற்றம், ஒழுக்கக் கட்டுப்பாடு, வேலைநீக்கம் பற்றிய பழைய ஏற்பாடுகளில் இன்று புகுத்தப்பட்டுள்ள மாற் றங்கள் வாத எதிர்வாதங்களுக்கு ஆளாகியுள்ளன.
வாக்குரிமை, அரசியற் கட்சிகளில் அங்கம்வகிக்கும் உரிமை, அரசியல் விடயங்கள்பற்றிய அபிப்பிராயம் தெரிவிக்கும் உரிமை, சட்டமன்ற உறுப் பினரா கும் உரிமை ஆகியன முக்கிய அரசியல் உரிமைகள் எனப்படும். பல கட்சி மு  ைற யு ம் சர்வசன வாக்குரிமையும் நிலவுகின்ற நாடுகளில் எந்த அளவிற்கு அரசியல் உரிமைகள் அரச அலுவலருக்கு வழங்கப்படவேண்டு மென்பதுபற்றிக் கருத்துவேற்றுமையுண்டு. ஒரு குடிமகன் என்ற முறையில், இயற்கை உரிமைக் கோட்பாட்டைத் தழுவி, ஏனை யோர் அனுபவிக்கும் அரசியல் உரிமைகள் அனைத்தும் அரச அலுவலர்க்கும் இருக்கவேண்டுமென்றும், அலுவலர்கள் அரச பதவியைத் துறக்காமலே சட்டமன்ற உறுப்பினராக ஆட்சியில் பங்குகொண்டு தமது விசேட அலுவலக அனுபவத்தைப் பொது மக்கள் சேவைக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பைக் கொடுப்பது நாட்டிற்கு நலன்தருமென்றும் ஒரு சாரார் கருதுவர். மறு பக்கத்திலே, நடுநிலைநின்று பாலனக் கடமைகளைச் செய்ய வேண்டிய அலுவலர்கள் கட்சி அரசியலில் வெளிப்படையாக ஈடுபடின், ஒரு பகுதி மக்களினதும் மாற்ருர் கட்சி அரசாங்கத்தி னதும் நம்பிக்கையை இழக்க நேரிடுமாகையினல், அரசியல்
இ, l = 8

Page 35
--سیسی۔ 328 -------۔
வாதிகளான அலுவலர்கள் தமது பாலனக் கடமைகளைச் சில காலங்களில் நன்கு நிறைவேற்ற முடியாதிருக்குமென்று மறு சாரார் வாதாடுவர். இந்தக் கருத்துவேறுபாட்டின் பிரதி பலிப்பாய் ஐக்கிய அமெரிக்கா மத்திய அரசாங்க ஊழியரிற் பெரும்பாலானேரை அரசியலில் பங்குபற்ருதவாறு சட்டமாக்கி யுள்ளபோது, சில ஐரோப்பிய நாடுகள் கிட்டத்தட்ட எல்லா அரசியல் உரிமைகளையும் தமது அரசாங்க ஊழியருக்கு வழங்கி யுள்ளதைக் காணலாம். இங்கிலாந்து இவ்விரு போக்குகளுக்கும் இடைப்பட்ட ஒரு மத்திய பாதையை அண்மைக் காலத்திற் கடைப்பிடித்துள்ளது கொள்கை வகுப்பதற்கு அமைச்ச ரவைக்கு உதவிசெய்கின்ற, பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறவேண்டிய கடமைகளைப் புரிகின்ற உயர் அலுவலருக்கு மக்கள்சபையில் அங்கத்துவம் பெறும் உரிமையை மறுத்து விட்டு, மற்றும் அரசியல் உரிமைகளை அவர்களுக்கு வழங்கி யுள்ளது. ஏனைய அலுவலர்கள் முழு அரசியல் உரிமைகளையும் அனுபவிக்கலாம். ருஷியாவில் எல்லாப் பி ர  ைச க ளு க் கும். படைத் துறையினர் உட்பட, மத்திய பராளுமன்றப் பிரதி நிதிகளைத் தெரிவுசெய்கின்ற, பிரதிநிதிகளாகத் தெரியப்படு கின்ற உரிமையுண்டு-135, 138.
இ ல ங்  ைக யி ல், ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வருமுன் அலுவலருக்கு வாக்குரிமை மாத்திரம் இருந்தது. 1970 பொதுத் தேர்தலில் முன்னணியினர் இறங்கியபொழுது, அவர்களின் தேர்தல்-விஞ்ஞாபனம், "நீதிபரிபாலனம், ஆயுதப்படைகள், ஊர் காவல்துறை ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும், பொதுக் கொள்கையை அமுல்படுத்தும்போது நிர்ணயிப்பு-அதிகாரம் உள்ளவரும் நீங்கலாக, ஏனைய அனைத்து பொது ஊழியருக்கும் பூரண அரசியல் உரிமைகள் வழங்கப்படும் ' என்று வாக்குறுதி கொடுத்திருந்தது. தேர்தலில் வெற்றிபெற்றபின் முன்னணி யினர் பொது ஊழியருக்கு வழங்கிய அரசியல் உரிமைகள் 1971இல் வெளி வந் த பணித்துறை விதித்தொகுதியில் " காணப்படுகின்றன. அதன்படி நீதிபதிகள், படைப்பிரிவினர், ஊ ர் கா வ ல் து  ைற யி ன ர், கிராமசேவையாளர் போன்று பொலிஸ் கடமைகளைச் செய்வோர், சிறைத்துறையினர், வருட மொன்றிற்கு 6720/- ரூபா அல்லது இதற்கு மேற்பட்ட தொடக்கச் சம்பளம் தரப்படும் பதவிகளை வகிப்போர் ஆகி யோருக்கு, மத்திய ஸ்தலஸ்தாபன தேர்தல்களில் வாக்குப் பதியும் உரிமை மாத்திரம் தொடர்ந்தது இவர்கள் தேர்தல் களில் பங்குபற்றவோ, அரசியலோடு சம்பந்தப்பட்ட சங்கங் களில் அங்கம் வகிக்கவோ, வேறு அபேட்சகர்களுக்கு உதவி யளிக்கவோ, அரசாங்கத்தின் விசேட அனுமதியின்றி அரசாங்க

= 32.9 -
நடவடிக்கைகள்பற்றி வெளி ப் ப  ைட யா க விவாதிக்கவோ முடியாததோடு, இவ்வதிகாரிகளின் வாழ்க்கைத் துணைவியரும் மேற்கூறிய தடுக்கப்பட்ட விடயங்களில் பங்குபற்றக்கூடாது ; பூரண அரசியல் உரிமைகளை அனுபவிக்க விரும்புவோர் தமது பதவியை முதலில் ராஜினமாச்செய்யவேண்டும். ஏனைய அலுவல ருக்கு எல்லா உரிமைகளும் வழங்கப்பட்டன. ஆனல் அவர்கள் அவ்வுரிமைகளை அவர்களின் அரசாங்க சேவைக் கடமைகளுக்குக் கெடுதிவிளையாத முறையில் பயன்படுத்தல்வேண்டும் அரசாங்கக் கட்டிடங்களிலோ வேலைபார்க்குமிடங்களிலோ அரசியற் கூட்டங் களை நடத்தமுடியாது வேலைநேரங்களில் அரசியற் பிரசார மெதுவும் செய்யலாகாது. அரசியல் உரிமைகளைப் பயன்படுத்து வதற்குத் திணைக்களத் தலைவர் அரசசேவையின் தேவைக் கிணங்கச் சம்பளமற்ற விடுமுறை வழங்குவர். அங்கீகரிக்கப் பட்ட அரசியற் கட்சியினது மத்தியகுழுவில் பதவிவகிக்கும் அலுவ லர்க்கு மத்தியகுழுவின் தலைமைக்காரியாலயத்துக்கு அண்மையில் இடமாற்றம்பெறும் சலுகையும் கிடைத்தது. பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செ ய் ய ப் பட்ட அலுவலர் தமது அரசாங்க உத்தியோகத்தை ராஜினுமாச் செய்யவேண்டும். ஸ்தலஸ்தாபன உறுப்பினரானேர் பதவி துறக்க வேண்டியதில்லை; உள்ளூராட்சிச்சபைக் கூட்டங்களிற் பங்கு பற்று வ த ற் கு. அரசாங் க சே  ைவ யி ன் தேவையைப் பொறுத்து அவர்களுக்கு முழுச்சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படும்.
மேற்கூறிய ஏற்பாடுகளில் முக்கியமானவை, சிறு மாற்றங்க ளுடன் குடியரசு யாப்பில் பொறிக்கப்பட்டுள்ளன. குறைந்த சம்பளம்பெறும் ஊழியர்கள் தேசிய அரசுப் பேரவைக்குப் போட்டியிடும் உரிமை அவற்றில் ஒன்ருகும். ' வருடம் 67 20 ரூபா தொடக்கச் சம்பளமுடைய அரசபதவி வகிப்போரும், 7200 ரூபா தொடக்கச் சம்பளமுடைய அரசாங்கக் கூட்டு நிறுவனப் பதவி வகிப்போரும் தேசிய அரசுப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உரிமையற்றவர்களாவர்-70.' கணக் காய்வாளர் தலைமையதிபதிக்கும், தேர்தல் ஆணையாளருக்கும் ஊர் காவற்பணி செய்வோர் அனைவருக்கும் தேர்தல் அபேட்சக ராக நிற்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. "1 அரச அலுவலர் ஒருவர் தேர்தல் அபேட்சகராக இருக்கும்பொழுது, அவர் அபேட்சகராக நியமனம்பெற்ற தி க தி யி லி ரு ந் து தேர்தல் முடியும்வரை விடுமுறையிற் சென்றிருப்பதாகக் கொள்ளப் படும்-74.* தேசிய அரசுப் பேரவைக்குத் தெரிவுசெய்யப்பட்ட ஒரு அலுவலர் தமது பொதுச்சேவைப் பதவியைத் துறக்காது விடின் பேரவை அங்கத்துவத்தை இழந்தவராவார். இத்தகைய உரிமைகளைப் பெற்றுள்ள பிரித் தா னி ய சிவில்சேவையாளர்

Page 36
مسسه (330 حساس
தேர்தல்களில் பங்குபற்றும் உரிமையை உபயோகிக்க அதிகம்
முன்வருவதில்லை. இங்கு அரச அலுவலர்பற்றிய மேலாதிக்கம்
சு த ந் தி ர பொதுச்சேவை ஆணைக்குழுவிலிருந்து அமைச்ச
ர வைக்கு மாற்றப்பட்டிருக்கும் சூழ்நிலையில், எ தி ர் க் கட்சி
அலுவலர்கள் அரசாங்கத்தினல் துன்புறுத்தக்கூடிய வாய்ப்பைக்
குடியரசு யாப்பு அளித்திருக்கும்பொழுது, அலுவலர் பெற்ற
அரசியலுரிமைகள் எவ்வாறு, எந்த அளவிற்குப் பயன்படுத்தப் படுமென்பதைக் காலந்தான் காட்டமுடியும்.
ஊர்காவல்துறையினரையும் சிறைத் துறை யி ன ரை யும் தவிர்ந்த ஏனைய அரச அலுவலர்க்குத் தமது சேவைநலனைப் பேணும்பொருட்டுத் தொழிற் சங்கங்களை அமைக்கும் உரிமையுண்டு அலுவலரல்லாதோரை அங்கத்தவர்களாகக் கொண்ட தொழிற்சங்கங்களில் அரச அலுவலர் சேர முடியாது. அஇவலர் தமது தொழிற்சங்கங்கள் மூலமே சம்பளம் வேலை நிபந்தனே ஆகியவை பற்றிய குறைகளை அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்து நிவாரணம் பெற முயற்சிக்கலாமென்று தொழிற் சங்கச் சட்டம் விதித்ததினுல் 450 க்கு மேற்பட்ட தொழிற் சங்கங்கள் அரசஅலுவலரினல் அமைக்கப்பட்டன. சில நிபந்தனை களுக்கமைய வேலைநிறுத்தம் செய்யும் உரிமையும். இச்சங்கங் *ளுக்கு உண்டு. தொழிற்சங்க நடவடிக்கைகளினல் அலுவ லர்கள் பல சலுகைகளை அரசிடமிருந்து பெ ற் று ஸ் ள ன ர்? தொழிற்சங்க அங்கத்தவரின் சம்பளம், வேலைநிபந்தனை ஆகியன பற்றிய அரசாங்கத்தின் கொள்கைக்கும் தீர்மானத்திற்கும் எதிரான கருத்தை, நியாயமான முறையில், அலுவலர் வெளிப் Lடுத்தலாம் : அரசாங்கமெடுத்த ஒழுக்காற்று நடவடிக்கை களையும் முடிபுகளையும் சம்பந்தப்பட்ட அலுவலரும் அவரின் தொழிற்சங்க உத்தியோகத்தரும் ஆய்ந்து வாதாடலாம்.
4. கடமைகள்
பிறெடிறிக் ஒக் அவர்கள் பிரித்தானிய சிவில்சேவையின் கடமைகள் பற்றிக் கூறியவை இலங்கைக்கும் பொருந்தியன வாம். ** அரசாங்க வேலைகளை அமைச்சர்கள் மாத்திரமிருந்தால், ஒருபோதும் செயற்படுத்தமுடியாது சுங்க வரிகளைத் திரட்டல், கணக்குப் பரிசோதனை செய்தல், தொழிற்சாலைகளைக் கண்காணித் தல், குடிசன மதிப்பீடு எடுத்தல், ஏடுகளைப் பதிந்து பேணல், கடிதங்களை அஞ்சலிடுதல், தகவல்களை எடுத்துச்செல்லல் போன்ற வற்றை அமைச்சர்கள் செய்வதில்லை ; இத்தகைய பல்திறப்பட்ட வேலைகள் நிலையான சிவில் சேவையாளரென்று அழைக்கப்படும் உயர்பணியாளரையும் ஊழியர்களையும் சா ர் ந் த த ரா கும். '

سيسي 1 3 3 سادس.
இலங்கையில் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் தொகை 50க்கு உட்பட்டதாக இருக்க, அலுவலர் தொகை இலட்சக்கணக்கில் உண்டு. "இந்தப் பெருந்தொகையான அரசஅலுவலர் நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிவரை சட்டத்தை அமுலாக்கு கின்றனர்; சாதாரன பிரசைகளைத் தேசிய அரசாங்கத்துடன் நாளாந்தம் தொடர்புபடுத்துகின்றனர் : அரசாங்கம் எதற்காக நிறுவப்பட்டதோ, அந்நோக்கங்களை எய்துவதற்கு உழைக்கின் றனர் : அரசியலாரைப் போலன்றி. பொதுவிளம்பரஞ் செய் யாது கடமையாற்றுகின்றனர். அலுவலரின்றேல் ஆட்சியானது வெறும் விதிகளாகவும் சட்டங்களாகவும் நிலவும் வலுவும் பயனுமற்றதாகிவிடும் , '
பொதுச்சேவையின் கடமைகள் காலப்போக்கில் விரிவடைந் ததை முன்னர் பார்த்தோம். மாறிய சூழ்நிலைக்கேற்ப அரசாங்கம் புதுத் தொழில்களை மேற்கொள்ள, அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு அலுவலரும் சிலவேளைகளில் புதிய திணைக்களங் கீளும் அவசியமாகின்றன. 50 ஆண்டுகளுக்குமுன் இலங்கையில் 40 திணைக்களங்கள் மாத்திரம் இருந்தன ; இன்று 160க்கு மேற் பட்ட திணைக்களங்களாகவும், கூட்டுத் தாபனங்களாகவும் வேறு அரசநிறுவனங்களாகவும் பெருகியுள்ளன. அவற்றின் கடமைகளை ஆராய்தல் மூலம் அவற்றை இயக்கும் அலுவலரின் பணியை விரிவாக அறியமுடியும் சுருக்கமான குறிப்பீடு தருவ தற்கு, அரசாங்க இலாகாக்களைச் சில முக்கிய பிரிவுகளாக வகுத்தல்வேண்டும். 1. அமைதி அல்லது பாது காப் போடு சார்ந்தவை : இவை உள்நாட்டில் ஒழு ங்  ைக நிலைநாட்டும், வெளித்தாக்குதலிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் பழமை வாய்ந்த அத்தியாவசியமான கடமைகளைச் செய்கின்றன: பொலிஸ், சிறை, நீதி, முப்படைகள், வெளி அலுவல் ஆகியன வோடு சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இப்பிரிவில் அடங்கும் 2. பொருளாதாரப் பிரிவு : இதில் தொழிலாளர், வாணிபம், விவசாயம், கைத்தொழில், போக்குவரத்துப் போன்றவையோடு சார்ந்த திணைக்களங்கள் சேரும், இலங்கைபோன்ற வளர்ச்சி யுறும் தாடுகளில் பொருள்கள், சேவைகள், உற்பத்திக்கான சீமெந்து, பே ா க் கு வ ர த் துப் பொதுக்கூட்டுத்தாபனங்கள் போன்றவையும், பொருள் விநியோகத்திற்கான மொத்தக் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவையும் பெருமளவில் நிறுவப் படுகின்றன. 3. சமூகநலப் பிரிவு : சுகாதார, கல்வித் திணைக் களங்கள் போன்றவை இப்பிரிவில் அடங்கும். 4. திணைக் களங்களை ஒரளவு மேற்பார்வைசெய்யும் க ட் டு ப் படுத் து ம் திறைசேரி தனிப்பட்ட பிரிவைச் சேர்ந்ததென்று கூறலாம்.

Page 37
--ee- 332 -
உயர் பணியாளராகிய பாலன அதிகாரிகள் யாப்பில் வகிக்கும் பங்கு அரசியல் மாணவரின் கவனத்திற்குரியதாகும். அவர் களின் முக்கிய கடமைகளாவன : 1. பாலன வேலைகள் : கீழ்ப் பட்ட பணியிலுள்ளவர்களை நியமித்தல், மேற்பார் வைசெய்தல், வழிகாட்டல், ஒழுங்குமுறைப்படி நடக்கச்செய்தல், திணைக் களக் குழுக்களில் அங்கம்வகித்தல், பல திணைக்களங்களின் நடவடிக்கைகளை இணைக்கும் கூட்டுக்குழுக்களில் அங்கம் வகித்தல் ஆகிய செயலாட்சிக் கடமைகள் : தங்கள் திணைக்களங்களுக் கான திட்டங்களைத் தயாரித்து, அவற்றிற்கெதிரான தாக்குதல் களைச் சமாளித்தல் திணைக் களங்களுக்கு வேண்டிய செலவினங் களை மதிப்பீடு செய்து, அங்கீகரிக்கப்பட்ட பணத்தை முறைப்படி செலவு செய்தல் அல்லது கீழ்ப்பட்ட ப னி யா ள ர் செலவு செய்யும்படி பார்த்துக்கொள்ளல் சில வேலைகளுக்கான ஒப்பந் தங்களைச் செய்தல், இலாகாகளுக்கு தேவையான பொருள்களை வாங்குதல் போன்ற பாலனக் கடமைகளைச் செய்கின்றனர் 2. பாலனச் சட்டவாக்கம் 1 அரசின் சமூக பொருளாதாரக் கடமைகள் பெருகிய இந்நாட்களில், விரிவானமுறையில் சட்டங் களை ஆக்குவதற்கு வேண்டிய நேரமும் அறிவும் அனுபவமும் பாராளுமன்ற உறுப்பினருக்கு இல்லாமையால், அவர்கள் பொது நெறிகளைச் சட்டமாக வரையறுத்துவிட்டு, அவைகளுக்குள் நின்று விரிவான பாலனவிதிகளே ஆக்கும் அதிகாரத்தை அமைச்சர் களுக்கும் உயரதிகாரிகளுக்கும் வழங்கும்போக்கு அதிகரித் துள்ளது. வரையறுத்த முறைப்படி ஆக்கி, வரையறுத்த முறைப் படி பிரகடனஞ் செய்யப்பட்ட பாலனவிதிகள் சட்ட அந்தஸ் தைப் பெறுகின்றன. விதிகளை ஆக்குமுன் பாலன அதிகாரிகள் உத்தியோகபூர்வமான விசாரணை நடத்தும், தனிப்பட்டமுறை யில் அக்கறையுள்ளோருடன் கலந்தாலோசிக்கும் வழக்கமும் உண்டு. வலுவேருக்கமுள்ள நாடுகளிலும் பார்க்க வேறு நாடு களில் சட்டவிதிகள் கூடுதலாக வெளிவருகின்றன ; பாராளு மன்றச் சட்டங்களிலும் பார்க்கப் பாலனச் சட்டங்களே அதிகம். இவ்வழக்கம் பலத்த கண்டனத்திற்கு ஆளாகியிருப் பினும், துரித திறமையான ஆட்சிக்கு அவசியமானதினுல் எங்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 3. பாலனத் தீர்ப்பு வழங்கல் : இக்கடமை நீதிமுறைத் தொழில் போன்றது : சில அம்சங்கள் கண்டிக்கப்பட்டிருப்பினும், நவீன ஆட்சிமுறையிலிருந்து இளைய முடியாததாகிவிட்டது. பாலன நடவடிக்கைகள் பற்றிப் பொது மக்களிடமிருந்தும் பொதுச் சேவையினரிடமிருந்தும் எழுகின்ற முறையீடுகளுக்கு உயரதிகாரிகள் தீர்ப்பு வழங்குகின்றனர், அத்தோடு முதலாளி-தொழிலாளி, நிலக்கிழார்-குத்தகைக் காரர், வீடுடையோர்-குடியிருப்போர் போன்ற தனிப்பட்டவர்

-----حہ 333 -۔
களுக்கிடையே எழும் தகராறுகளும் பாலன செயற்கருவிகளின் தீர்ப்புக்கு வரலாம். பிரான்சிலும் அதன் நீதிமுறைமையைப் பின்பற்றும் நாடுகளிலும் பொதுச்சேவையினரின் குறைகளையும் , அரசாங்கத்திற்கெதிரான பொதுமக்களின் வ ழ க் கு களை யு ம் விசாரித்துத் தீர்ப்புவழங்குவதற்குப் பிரத்தியேகமான பாலன நீதிமன்றங்களுண்டு. 4. அரசாங்கக் கொள்கை : " முக்கிய நோக்கங்களைத் தீர்மானிப்பதில், அவற்றை அடைவதற்காய முறைகளைத் தெரிவதில், அரசாங்கத்தை எதிர்நோக்கும் பிரச் சினைகளுக்கு ஏற்றவாறு நிலவும் கொள்கைகளைத் தொடர்ச்சி யாகப் பயன்படுத்திக்கொள்வதில் கொள்கை நிர்ணயம் எழு கின்றது.' இவை சம்பந்தமாகப் பாலன அதிகாரிகள் அமைச் சருக்கு ஆலோசனை வழங்குவர், கொள்கையைச் செயற்படுத்து வதற்குத் தேவையான சட்டங்களைத் தயாரிப்பர், அமைச்சரின் வழிகாட்டலுக்கமைந்து கொள்கைகளை அமுலாக்குவர் : அமைச்ச ரின் சொற்பொழிவுகளுக்கான மூலப்பொருள்களையும் பாராளு மன்றத்தினரின் கேள்விகளுக்கான விடைகளையும் தயாரிப்பர். சம்பந்தப்பட்ட திணைக்கள உயரதிகாரிகள் நன்கு ஆராய்ந்து கூறிய கருத்துரையுடன்தான் எந்த விடயமும் அமைச்சரவையின் இறுதித் தீர்மானத்திற்குச் சாதாரணமாகச் செல்கின்றது.
இலங்கைப் பாலன சேவையில் அமைச்சின் செயலாளர், திணைக்களத்தின் நிலையான தலைவர், பெரும்பகுதியின் அரசாங்க அதிபர் ஆகியோர் கேந்திர ஸ்தானம் வகிக்கின்றனரெனலாம். டொனமூர் அரசியல்திட்டக் காலத்தில் நிர்வாகக் குழுவினர் பாலன விடயங்களில் அதிகம் தலையிட்டுப் பொதுச்சேவையின் உளஅமைதியைப் பெரிதும் குலைத்ததினுல் திணைக்களங்கள் திறமை யுடன் இயங்கவில்லை; இக்குறையை அகற்றுவதற்காக சோல்பரி அமைச்சரவைமுறையில் நிரந்தரச் செயலாளர் பதவி ஆக்கப் பட்டது. குடியரசு யாப்பிலும் இப் பதவி அமைச்சின் செய ளாளர் என்னும் பெயருடன் தொடர்கிறது. அமைச்சரிலிருந்து அரசியல்தனம் திணைக்களங்களுக்குள் செறியாது தடுப்பதற் காக முன்பு ஏற்படுத்தப்பட்ட அமைச்சுச் செயலாளர் பதவி, இன்று இந்நோக்கத்தைப் பெற்றுத்தரக்கூடிய கருவியென்று திட்டமாகக் கூறுவதற்கில்லை. மாறிய நிலைக்கான காரணிகளில் அரச அலுவலர்மீது அமைச்சரவையும் அமைச்சரும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய புதிய ஏற்பாடுகளும் ஒன்ரு கும். அன்றும் இன்றும் அமைச்சர் அரசாங்கக் கொள்கைகளைத் தமது செய லாளருக்கு அனுப்புகின்ருர் ; அவற்றையும் அமைச்சரவையின் முடிபுகளையும் திணைக்களத் தலைவர்மூலம் செயற்படுத்துவது செய லாளரின் பொறுப்பாகும். திணைக்களத்திலிருந்து அமைச்சருக்குச் செல்லும் ஆவணங்கள் செயலாளரின் கருத்தையோ சிபார்
ଘ} வசியம் . அமைச்சரின் IT O 疊 யூ ೫. து ழி

Page 38
س-334 -س--
காட்டலுக்கும் கட்டுப்பாட்டிற்கும் அமைந்து திணைக்களங்களை மேற்பார்வை செய்வதும் அவற்றின் பணியாளர் பற்றிய விடயங் களுக்குப் பொறுப்பேற்பதும் அவரின் வேறு கடமைகளாகும். தமதும், பிற அமைச்சுக்களோடும் சம்பந்தப்பட்ட முக்கிய விட யங்களை அவர் நேரடியாகக் கவனிக்கவேண்டுமென்று எதிர்பார்க் கப்படுகின்றது. சில விடயங்களை அவர் உதவிச் செயலாள ருக்குக் கையளிக்கலாமெனினும், தமது பொதுக் கட்டுப்பாட்டி லுள்ள விடயங்களுக்கான பொறுப்பிலிருந்து விடுபடமுடியாது, செயலாளர் அனுப்பும் அரசாங்கக் கொள்கைகளையும் அமைச் சரின் கட்டளைகளையும் நடைமுறைப்படுத்தல், திணைக்களத் தலைவரின் கடமையாகும். தனது திணைக்களத்தின் பாலனத் திற்கு அவர் செயலாளருக்குப் பொறுப்பு வகித்தல்வேண்டும்3 நிர்ணயிக்கப்படாத நெறிகளை அடக்கிய, அரசியல் பிரச்சினை களே எழுப்பக்கூடிய விடயங்கள் பற்றிப் பாலன நடவடிக்கை களைக் கையாளுமுன் அவற்றைச் செயலாளருக்குச் சமர்ப்பிக்க வேண்டும். அமைச்சுகள் ஒதுக்கிய கருமங்களை நிறைவேற்றலும் தமது பெரும்பகுதியிலுள்ள அரசாங்க நடவடிக்கைகளை ஒத்திசை வித்தலும் அரசாங்க அதிபரின் கடமைகளாம்.
5. அலுவலர்-அமைச்சர்-பாராளுமன்றம்
அலுவலர்- அமைச்சர் உறவு : இங்கி லா ந் தி ன் இலங்கையின் நிர்வாக அ  ைம ப் பி ல் அலுவலர் அமைச்சர் சேர்க்கை முக்கியமான ஒரு அம்சமாகும். அமைச்சர்கள் அரசிய லில் ஈடுபடுபவர் அரசாங்கம் மாறும்போது பதவி இழப்பவர் ; தமது திணைக்களங்கள் பற்றி நிபுணத்துவ அறிவற்றவர் 3 அலுவ லரைக் கட்டுப்படுத்தும் வழிநடத்தும் அதிகாரமுடையவர். இவற் றிற்கு நேர்மாருண் தன்மைகள் உயரலுவலர்க்கு உண்டு : அரசிய லில் பங்குபற்றது, நிரந்தரமாக, நிபுணத்துவ அறிவுடன், அமைச்சருக்குக் கீழ்ப் படிந்து கடமையாற்றுவர். அமைச்சர்கள் தமது தகுதிக்கேற்ற அமைச்சைப் பெறினும், பாலன அனுபவ மற்றவர்களாய் இருக்கலாம். எந்த அமைச்சரும் தமது திணைக் களங்களின் எல்லா விடயங்களிலும் நிபுணராயிருக்க முடியாது. இதற்கு வேறு காரணங்களும் உள ! அரசியற்கட்சி அமைச்சரவை சட்டமன்றம் சமூகம் ஆதியன பற்றிய கடமைகளையும் கவனிக் கும் அமைச்சருக்கு திணைக்கள வேலைகளை நன்கு கற்பதற்குப் போதிய நேரம் கிடையாது ஒரு அமைச்சிலிருந்து இன்னுென் றிற்கு அவர் மாற்றப்படலாம் ; குறுகிய காலத்திற்கே ஒரு அமைச்சிற்குப் பொறுப்பு வகிக்கலாம். அமெரிக்காவில் அல்லது பிரான்சில் போலன்றித் தன் திணைக்களங்கள்பற்றி முன்கூட்டியே ஒன்றும் தெரியாதவராய் இருக்கலாம். அமைச்சர் நிபுணத்

ہم سے 335 --۔
துவம் பெற்றிருக்கவேண்டுமென்ற அவசியமுமில்லை. அவரின் கடமை அமைச்சரவைக் கொள்கைக்கு இணங்கப் பாலனக் கொள்கையை அலுவலருடன் சேர்ந்து நிர்ணயித்து, அதை அலுவலர் நிறைவேற்றுகின்றனரா என்று மேற்பார்வை செய்த லாகும். இக்கடமை நிபுணரல்லாத அமைச்சரினுலேயே நன்கு செய்யமுடியுமென்று கருதப்படுகின்றது. இதற்குத் தரப்படும் காரணங்களாவன திணைக்களங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு, அவற்றின் கருத்துக்களைத் தமதாக்கிய அமைச்சர் தமது அமைச்சுக்கும் வேறு அமைச்சுக்களுக்கும் இடையேயுள்ள உறவை நன்கு மதிப்பிட முடியாது ; அதேபோல் பாராளு மன்றத்திலிருந்து கிடைக்கும் பொதுசன அபிப்பிராயத்தைத் திணைக்களத்திற்கும், திணைக்களத் தேவையைப் பாராளுமன்றத் திற்கும் தெரிவிக்கும் நல்ல நடுவராக நிபுணத்துவ அமைச்ச ரால் இயங்க முடியாது ; அத்தோடு திணைக்கள நிபுணர்களை வேருெரு நிபுணர் மேற்பார்வை செய்வதிலும் பார்க்க நிபுண ரல்லாத அமைச்சர் சாதுரியமாக மேற்பார்வை செய்யின் திணைக்கள நிபுணர்களின் கூடிய ஒத்துழைப்பைப் பெறலாம்.
அமைச்சரினல் செய்யமுடியாத பல கருமங்கள் ஒவ்வொரு திணைக்களத்திலுமுண்டு அவற்றை நீண்ட பயிற்சிபெற்ற அலுவலருக்கு விட்டுவிடவேண்டும். அப்போதுதான் திறமை மிக்க ஆட்சி நடைபெறும், வீடமைப்பு அமைச்சர் ஒருவர் கட்டிடக் கலையில் நிபுணத்துவம் பெறுவதற்கு உலகம் சுற்ற வேண்டியதில்லை. ஆணுல் நிலைபேறன அலுவலர், திறமையை மனதில் வைத்து மக்கள் விருப்பத்தைப் புறக்கணிக்கலாம். எனவே பொதுசன அபிப்பிராயத்திற்கு உயரிடமளிக்கும் அமைச் சர்கள் தரும் சனநாயக அம்சமும், அலுவலர்தரும் திறமையும் இணைந்து செயற்படுதல் நல்லாட்சிக்கு உகந்ததாகும். இதனுல் தான் இங்கிலாந்திலும் இலங்கையிலும் அலுவலர்க்கும் அமைச் சருக்குமிடையே தொடர்ச்சியான நெருங்கிய தொடர்பு இருப் பதைக் காணலாம். திணைக்களத்தின் பாலனக் கொள்கைக்கும் நடத்தைக்கும் அமைச்சரே பாராளுமன்றத்திற்கும் அமைச்ச ரவைக்கும் பொறுப்புடையவரென்பது தத்துவம். உயரலுவலர் அவருக்கு ஆலோசனை கூறக் கடமைப்பட்டவர் அமைச்சரின் திட்டங்களில் குறைகள் இருப்பின் பயமின்றி எடுத்துரைக்க வேண்டும். ஆணுல் இறுதித் தீர்மானம் செய்யும் உரிமை அமைச் சரைச் சார்ந்தது. அத்தீர்மானம் தவருனதென்று அலுவலர் நினைப்பினும் அதை வெற்றிகரமாக அமுல்செய்ய எத்தனிக்க வேண்டும் : அப்பொழுது கண்டனங்கள் எழின் அமைச்சர் அலுவலரைப் பாதுகாக்கும் கடப்பாடுடையர். எவ்வளவிற்கு அமைச்சர் தன் கருத்தைத் திணைக்களத்தின் மீது திணிக்கலா
g). III - 9

Page 39
سے 336 ~سست۔
மென்பது அவரின் ஆற்றலைப் பொறுத்ததாகும். அனுபவமும் நிபுணத்துவமும் உடைய அலுவலரின் சிபார்சை அமைச்சர் பெரும்பாலும் புறக்கணிப்பதில்லை. குடியேற்ற நாடாயிருந்த போது இலங்கையின் சிவில்சேவை வலுப்பெற்ற அமைப்பைக் கொண்டிருந்தாலும், சுமுகமான சுதந்திர முன்னேற்றத்தினுல் கொள்கை வகுப்பதில் அரசியலார் ஆதிக்கம் செலுத்த முடிந்தது; இன்று அலுவலர் அரசியலாருக்கு மிகப் பணியும் பான்மையைப் LufTriji SG) fT ab.
அலுவலர் பாராளுமன்ற உறவு : இங்கிலாந்தின் பாராளுமன்றத்தைப் போன்று இலங்கையின் தேசிய அரசுப் பேரவை இறைமையுடையது; அது சிவில்சேவை பற்றி எதுவித சட்டத்தையும் ஆக்கலாம்; அதன் சம்பளத்தை அனுமதிக் கின்றது, ஓய்வூதியத்தை மாற்றியமைக்கின்றது, அலுவலர் நிய மனம், பதவியுயர்வு பற்றி விவாதிக்கின்றது, அலுவலர் நடத்தை யைக் கட்டுப்படுத்துகின்றது. மறுபக்கத்திலே அலுவலர் தங்கள் சிந்தனை யையும் விருப்பத்தையும் நேரடியாகப் பாராளுமன்றத் திற்கு அறிவிக்க முடியாது; அவற்றை முக்கியமாக அமைச்சர் மூலந்தான் தெரிவிக்கலாம்; தமது பதவியைத் துறக்காது பாராளுமன்ற உறுப் பினராக ச் சேவை செய்யும் உரிமை அலுவலர்க்கு இல்லை. இருந்தும் பொதுச்சேவையும் பாராளு மன்றமும் ஒன்று மற்றதின் மேல் தாக்கம் ஏற்படுத்தி ஒயாத செயல் விளைவுகளை உண்டுபண்ணுகின்றன.
பாராளுமன்றம் திணைக்களத்தின் சிறு விடயந் தொடக்கம் கொள்கை ஈருகக் கேள்விகள் கேட்ப தோடு விவாதங்கள் நடத்துகின்றது; அமைச்சர் மீது கண்டனப் பிரேரணை பிரேரிக் கின்றது. இவற்றினுல் உயரலுவலரின் கடமைகளில் ஏற்படும் விளைவுகளாவன : 1. அமைச்சரின் அரசியல் வாழ்வில் அக்கறை கொண்ட அலுவலர், அவர் தன் பாராளுமன்றக் கடமைகளைத் திறம்பட நிறைவேற்றுவதற்கு உதவுவதை மிகமுக்கிய பணி யாகக் கருதி நடக்கின்றனர். 2. புது நடவடிக்கைகளை எடுக்கும் போதும் புதிய திட்டங்களை வகுக்கும்போதும் பாராளுமன்றத் தின் எதிர்விளைவுபற்றி அலுவலர் சிந்திக்கவேண்டியுள்ளது: மன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகக்கூடுமென்று கருதப்படும் விடயங்கள் பற்றித் தீர்மானம் எடுக்கத் தயங்குவர். இதனுல் அரசாங்க நடவடிக்கைகள் சில வேளைகளில் தாமதமாகலாம். 3. தங்களின் பாதுகாப்பிற்காகச் சட்டவிதிகளையும் முன்மாதிரி களையும் மீருது செயலாற்ற எத்தனிப்பது சிலவேளைகளில் பொருத்தமற்றதாயிருக்கலாம்; பாராளுமன்றத்தின் நுணுக்க மான ஆராய்விற்கு உடனடியாக விடைகொடுப்பதற்கு எல்லா நடவடிக்கைகளும், நேரம் வீணகினலும், பதிந்து வைக்கப்பட

حـصـ 337 حسب
வேண்டியுள்ளது. தீர்மானமெடுப்பதில் மிதமிஞ்சிய பீதியுடைய வர்களாகவோ, முன்மாதிரியைப் பின் பற்றுவதில் அளவுக்குமீறி வினைமுறையைப் பின்பற்றுபவர்களாகவோ அலுவலர் மாரு திருப்பது நன்று. கீழ் அலுவலர் தமது நடத்தைகளும் பாராளு மன்ற ஆய்வுக்கு உட்படலாமென்ற காரணத்தால் தமது அதிகா ரத்தைத் துர்ப்பிரயோகம் செய்யத் தயங்குவர்;
பொதுச் சேவையினர் தமது கருத்துக்களைப் பல வழிகளில் பாராளுமன்றத்திற்கு அனுப்பி அங்கு செயல்விளைவுகளை உண்டு பண்ணுகின்றனர். அவ்வழிகளை 1. அமைச்சர், 25 இரு நிறுவனங் களின் தனி அங்கத்தவர் சந்திப்பு, 3. வேறு வழிவகைகள் என்று மூன்ருக வகுக்கலாம். இவற்றுள் அமைச்சரே முக்கிய கருவி பாய் அமைகின்ருர், மசோதாக்கள், பேராட் சட்டவிதிகள், முன்னேற்பாடான சொற்பொழிவுகள், கேள்விகளுக்கான விடைகள், சுருங்கக் கூறின் அமைச்சர் நன்கு ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு எழுத்துமூலமோ வாய்மொழியாகவோ சமர்ப்பிப்பவை அனைத்தும் ஒரு அல்லது பல பாலன அதிகாரி களிஞல் தயாரிக்கப்பட்டு அமைச்சரினுல் அதிக மாற்றமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டனவாக இருக்கும். ஒரு தலை சாயாது ஆறியமர்ந்து வேளைக்கேற்றவாறன்றி அடிப்படை மெய்மை மீதமைந்த அலுவலர் தயாரிப்புக்கள் கேட்போர் சிந்தனையைத் துண்டக்கூடியன. சமூக வைபவங்களில், மசோதாவின் குழுப் பருவத்தில், திணைக்களத் தலைவர் அல்லது குழுச் செயலாளர் என்ற முறையில் பொதுச்சேவையினர் பாராளுமன்ற உறுப்பின ரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படலாம்; இச்சந்திப்புக்களினல் தொடர்ச்சியான படர்ந்து பரவிய தாக்கம் ஏற்படுமென்று கூறு வதற்கில்லை. அதேபோலத் தேர்தற் காலங்களிலும், தொழிற் சங்கங்கள் மூலமும், இளைப்பாறிய அலுவலர் பாராளுமன்ற உறுப் பினராயும் பொதுச்சேவையினர் நாடாளுமன்றத்தில் சிறு செயல்விளேவுகளை ஏற்படுத்தலாம்.
6. பொதுச்சேவை-ஆணைக்குழுவின் மரணம்
மேற்காட்டிய பரந்த பணிகளினல், பொதுச்சேவை ஆட்சிப் பொறிய கத்தில் முக்கிய இடம் வகிப்பதைக் காணலாம். அர சாங்கத் திட்டங்களை நல்ல முறையில் தீட்டவும், அவற்றை வெற்றிகரமாகச் செயற்படுத்தவும், மக்களின் நல்லெண்ணத்தை அரசாங்கத்திற்குப் பெற்றுத் தரவும் நேர்மையான, திறமை யான, அரசாங்கத்தோடு ஒத்துழைக்கக்கூடிய பொதுச்சேவை அவசியமாகும். இத்தன்மை வாய்ந்த சேவையை உருவாக்கும் பொறுப்பு 1931 வரை தேசாதிபதியினுடையதாயிருந்தது; நிய மனம், கட்டுப்பாடு ஆகியவை பெருமளவிற்கு அவரின் உரிமைக

Page 40
- 338 -
ளாகும். டொனமூர் யாப்புக் காலத்தில் இவ்விடயங்கள் பற்றித் தேசாதிபதிக்கு ஆலோசனை கூறப் பொதுச் சேவை ஆணைக்குழு முதன்முதலாகத் தாபிக்கப்பட்டது. பிரதம செய லாளர் அதன் தலைவர்; நிதிச்செயலாளரும் சட்டச் செயலா ளரும் ஏனைய இரு அங்கத்தவர்கள். அரச அலுவலர்களைக் கொண்ட ஆணைக்குழுவின் சிபார்சுகளைத் தேசாதிபதி கட்டாய மாக ஏற்கவேண்டுமென்பதில்லை. அத்தோடு நிருவாகக் குழுக் களும் தமது திணைக்கள அலுவலர் நியமனம் பற்றித் தேசாதி பதிக்குச் சிபார்சு செய்யும் உரிமை பெற்றிருந்தன. ஆணைக் குழுவும் நிருவாகக் குழுவும் ஒரு பதவிக்கு வெவ்வேறு பெயர் களைச் சிபார்சு செய்யின், நியமனம் பெற்றவரின் தகைமை பொது விவாதத்திற்கு ஆளாகி, அதனுல் பொதுச்சேவையின் திறமை பாதிக்கப்படும் சூழ்நிலை எழுந்துள்ளது. ஆனல் நடை முறையில் கருத்துவேறுபாடு அதிகம் எழவில்லை. சோல்பரி யாப்பின் கீழ் ஆட்சியதிகாரம் இலங்கையருக்குக் கூடுதலாக மாற் றப்பட்டபோது, பொதுச்சேவை ஆணைக்குழு புது அமைப்பும் கூடிய சுதந்திரமும் அதிகாரமும் பெற்றுக் குடியரசு யாப்புவரை இயங்கியது. அதன் நோக்கம், அரசியல்தனம் புகுந்து ஆற்றலற் ருேர் நியமனம் பதவியுயர்வு பெறுவதைத் தடுத்தலும், கட்சிச் சார்பற்ற பொதுச்சேவையை உருவாக்குதலுமாகும். வறண்ட பிரதேசங்களில் வாழும் சிறுபான்மையினர் அரச சேவையை ஒரு முக்கிய செய்தொழிலாக அமைத்துக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தினல், திறந்த தெரிவுப் போட்டி மூலம் தமது மக்கள் தொகை விகிதாசாரத்திலும் பார்க்க அரசசேவையில் சிறிது அதிக இடத்தைப் பெற்றிருந்தனர். புதிய ஆட்சியாளர்கள் அலுவலர் நியமனத்தில் திறமையைப் புறக்கணித்துப் புது நெறிகளைப் புகுத்திப் பெரும்பான்மையினருக்குச் சாதகமாக நடக்கலாமென்று சிறுபான்மையினர் பயந்தனர். இப்பயத்தை ஒரளவு போக்குமுகமாக அமைச்சர் குழுமத்தின் நகல் யாப் பைத் தழுவிச் சோல்பரி ஆணைக்குழு புதுத் தன்மை வாய்ந்த ஆணைக்குழுவை அமைத்தது.
இந்த ஆணைக்குழுவிலும் மூன்று அங்கத்தவர்களுண்டு. இவர் களைப் பெயரளவில் நிருவாகியான மகாதேசாதிபதி நியமிப்ப தோடு, இவர்களில் யார் தலைவராக இருக்கவேண்டுமென் பதையும் அவரே நிர்ணயிப்பார். இவர்களில் ஒருவராகுதல் நிய மனம் பெறுவதற்கு நேர்முன்னரான 5 வருடங்களில் பொதுச் சேவையிலோ நீதிச் சேவையிலோ எந்தவொரு பதவியையும் வகித்திருத்தலாகாது ஆணைக்குழுவின் அங் க த் த வ ரு க் கு விடுமுறை வழங்கவும் வெற்றிடத்தைத் தற்காலிகமாக நிரப்ப வும் மகாதேசாதிபதிக்கு அதிகாரமிருந்தது. குழுவினர் சம்பளம்

سے 339 --س۔
பாராளுமன்றத்தால் நிர்ணயிக்கப்படும். சில ஏற்பாடுகள் ஆணைக் குழுவின் சுதந்திரத்தைப் பேணும் தன்மை வாய்ந்தன: ஒருவர் ஒரே நேரத்தில் சட்ட மன்றத் தி லும் ஆணைக் குழுவிலும் அங்கத்துவம் வகிக்கமுடியாது பொதுச்சேவையிலுள்ள ஒருவர் ஆணைக்குழுவிற்கு நியமனம் பெற்ருல் அவர் முடியின் ஊழிய ராகத் தொடரமுடியாது; ஆணைக்குழுவிலிருந்து கடமையாற்றி யவர், பின்னர் பொது ச் சே  ைவ யில் நியமனம் பெறும் தகைமையை இழந்துவிடுவார்; குழுவினர் சம்பளம் அவர்கள் பதவிக் காலத்தில் மாற்றமுடியாததோடு திரட்டுநிதியிலிருந்தும் கொடுபடல் வேண்டும்; சட்டத்திற்குப் புறம்பான முறையில் ஆ8ணக்குழுவின் தீர்மானத்தை வசப்படுத்த எத்தனிப்போர் 1000/- ரூபாவிற்கு மேற்படாத குற்றம் அல்லது ஒரு ஆண்டிற்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது இரண்டிற்கும் ஆளாக லாம். அதே நேரத்தில் வயது பற்றி கட்டுப்பாடு இல்லாத சூழ்நிலையில், ஆணைக்குழுவினர் தமது ஐந்தாண்டுப் பதவிக்காலம் முடிந்த பின் திரும்பவும் நியமனம் பெறும் வாய்ப்பும், பதவிக் காலம் முடியுமுன்னரே காரணங்காட்டிப் பிரதமர் அவர்களைப் பதவிநீக்கஞ்செய்யும் உரிமையும் ஆணைக்குழுவின் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடிய ஏற்பாடுகளாம். இந்திய பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினர் 65 வயதுவரை பதவியிலிருக்கலாமென் பதும், உயர்நீதிமன்றத்தின் விசாரணையின் பின்னரே அவர்களை ஜனதிபதி பதவிநீக்கம் செய்யலாமென்பதும் கவனிக்கற்பாலது
பொதுச்சேவை ஆணைக்குழுவிற்குப் பரந்த அதிகாரத்தை யாப்பு வழங்கியது; 60/1 விதிப்படி பொதுச்சேவையினர் நியமனம், சம்பள உயர்வோடு சம்பந்தமான இடமாற்றம், வேலை நீக்கம், ஒழுக்கக் கட்டுப்பாடு ஆகியன ஆணைக்குழுவின் அதிகாரத்துட் சென்றன; சட்டத்துறை நாயகம், நிரந்தரக் காரியதரிசிகள் போன் ருேர் நியமனம் இவ்விதிக்கு விலக் காகப் பிரதமரின் சிபார் சில் மகாதேசாதிபதியால் செய்யப் பட்டது. பெருந்தொகையான பொதுச்சேவையினர் பற்றிய மேற்கூறிய அதிகாரங்களை நேரடியாகவும் விரிவான முறை யிலும் ஆணைக்குழு பிரயோகிப்பது சாத்தியமன்று. எனவே, தனது எந்த அதிகாரத்தையும் அரசாங்க வர்த்தமானியில் பிர கடனஞ் செய்வதன் மூலம் எந்தப் பொதுச்சேவை அதிகாரிக்கும் அது நிபந்தனைகளுடன் ஒப்படைக்க யாப்பு வழிவிடுகின்றது. உயரனுவலர்களைத் தவிர்ந்த ஏனைய வகுப்புக்களேச் சேர்ந்த அலுவலரின் நியமனம் வேலை நீக் கம் போன்ற கடைமைகளை ஆணைக்குழு ஒப்படைத்த அதிகாரத்தின் கீழ் திணைக்களத் தலைவர்கள், நிரந்தரக் காரியதரிசிகள், ஆணைக்குழு நியமித்த சபையோர் செய்தனர். இவர்களின் தீர்மானங்களுக்கு எதிராக

Page 41
--سب سے 340 ہے۔
அலுவலர் ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு செய்யலாம் அதன் தீர்ப்பு இறுதியானதென்ற யாப்பு ஏற்பாட்டை உயர்நீதிமன்றம் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளது: -
ஆரம்பத்தில் ஆணைக்குழுவின் தலைவரை இங்கிலாந்திலிருந்து வர வ  ைழ க் க வேண்டியிருந்தது. பின்பு இலங்கையரையே அங்கத்தவராகக்கொண்டு, தானே நியமித்த செயலாளருடன் இயங்கிய ஆணைக்குழு, சிலவேளைகளில் தாமதமாய் அல்லது ஏதேச்சாதிகாரமாய் நடந்துள்ளதென்ற சிறு குறைகளுக்கு ஆளாகியிருப்பினும், அளவுக்குமீறிய அரசியல்தனம் செயல்படும் இலங்கைச் சூழ்நிலையில் சுதந்திர பொதுச்சேவை ஆணைக்குழு இன்றியமையாத ஒரு நிறுவனம் என்ற கருத்து வலுவிழந்து விட்டதாகத் கொள்வதற்கில்லை, காலப்போக்கில் அரசியல் தலையீடு ஆணைக்குழுவின் சு த ந் தி ரத்  ைத ப் படிப் படியாகப் பாதிக்கலாயிற்று. சட்டமன்றத்தினரும் அமைச்சர் களும் அலுவலர் நியமனம் பதவியுயர்வு போன்றவற்றில் தலையிட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர். திணைக்களத் தலைவர்கள் நியமனத்தில் ஆணைக்குழுத் தலைவர் பிரதமரைக் க ல ந் த ரா லோ சி க் கு ம் வழக்கமும் ஏற்பட லாயிற்று, "பிறர் தலையிடாத தொலையில் வைக்கப்பட்ட ஆணைக் குழுவிற்கும் பிரதமருக்கும் இடையில் மாத்திரமன்றி, ஆணைக் குழுவிற்கும் மற்றும் அமைச்சர்களுக்குமிடையிலும் இரகசிய நுழைவாயில்கள் தோன்றி, கலந்தாலோசனைகளும் முடிவு களும் எழுந்தன என்று யாப்பமை மன்றத்தில் பகிரங்கமாக ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமருடைய மறைமுக ஆதிக் கத்திற்கு உட்பட்ட ஆணைக்குழு சட்டத்திற்குள் அமையாத வழக்கத்திற்கு விட்டுக்கொடுக்கும் இ க் க ட் டா ன நிலையில் இருந்தது. பொதுநலனை முன்னிட்டு உயர்அலுவலர் நியமனம், இடமாற்றம் போன்றவற்றில் அமைச்சர்கள் தலையிட்டால் அதற்கு ஒரளவு ஆதரவளிக்கலாம். நல்லாட்சிக்கு மக்களுக்குப் பொறுப்பு வகிக்கவேண்டிய அ  ைம ச் ச ர் க ள், நல்லாட்சியின் பொருட்டு அரசாங்கக் கொள்கையை நன்கு செயலாற்றக்கூடிய தகுதியும் மனப்பாங்குமுடைய உயரலுவலரைக் கேந்திர இடங் களுக்குப் பெறவும், ஒத்துழைக்காதோரை இடமாற்றம் செய் விக்கவும் உரிமையிருக்கவேண்டுமென்ருகிறது: எக்கட்சி ஆட்சிக்கு வரினும் நிடுநிலை நின்று கருமமாற்றவேண்டிய பொதுச்சேவை யினர் 1958ஆம் ஆண்டுச் "சமாதானமான சமூக அரசியற் புரட்சிக்குப்பின் ' புதிய அரசாங்கத்தின் சோஷலிசக் கொள் கையை முழுமனதுடன் நிறைவேற்ற முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு சில வட்டாரங்களில் எழுப்பப்பட்டது அமைதி யையும் ஒழுங்கையும் நிலைநாட்ட, அரசாங்க வருமானத்தைத்

- 341 -
திரட்ட, பெருந்தோட்ட விவசாயப் பொருளாதாரத்திற்கு ஏற்ற தபால் போக்குவரத்துச் சேவைகளை இயக்க, கல்வி சுகா தாரம் போன்ற சமூகநலத் திட்டங்களைப் பரிபாலிக்க, நிலவும் பொதுச்சேலை தகுதியும் திறமையும் உடையதாய் இருக்க லாம் ; ஆணுல் வருங்கால சோஷலிச சனநாயக மாற்றத்தைச் செயற்படுத்துவதற்கு ஏற்ற சிறந்த கருவியல்ல என்ற கருத்தும் சில வட்டாரங்களிலிருந்து தோன்றலாயிற்று. அதற்கு ஒருங் கிணைந்து செயற்படும் நோக்கு அவசியம் அத்தோடு அமைச்ச ரவை அலுவலர்மீது கட்டுப்பாடற்ற அதிகாரமுடையதாயிருக்க வேண்டுமென்றும் முக்கூட்டணியினரால் வாதாடப்பட்டது. இச்சிந்தனை குடியரசு யாப்பில் எழுத்துவடிவம் பெற்றது : சிறுபான்மையினரின் பாதுகாப்பான சுதந்திர பொதுச்சேவை ஆணைக்குழு நோகாமல் புதைக்கப்பட்டது; இரு புது ஆலோ சனைச் சபைகள் தோற்றமளித்தன.
7. அமைச்சர்களின் உயர் அதிகாரம்
புதிய யாப்புவிதி 106 இன் படி "1 அரசியலமைப்பின் ஏற் பாடுகளுக்கமைய அமைச்சரவை எல்லா அரச அலுவலரதும் நியமனம், இடமாற்றம், பதவிநீக்கம், ஒழுக்காற்றுக் கட்டுப் பாடு சம்பந்தமான அதிகாரம் உடையது." இந்தப் பரந்த அதிகாரம் அ  ைத்  ைத யு ம் பல முக்கிய பணிகளைப் புரியும் அமைச்சரவையினல் நேர டி யா க ப் பயன்படுத்தமுடியாது ! அவை எவ்வாறு செயற்படுமென்பதுபற்றி விரிவான ஏற்பாடுகள் யாப்பில் பொறிக்கப்பட்டுள்ளன. முன்னைய பொதுச்சேவை ஆணைக்குழு, அலுவலர் பற்றிய பல அதிகாரங்களைத் திணைக்களத் தலைவர்கள் போன் ருேருக்குக் கையளித்ததுபோல, அமைச்ச ரவையும் பலவற்றை அமைச்சர்களுக்கும் அலுவலர்களுக்கும் கையளிக்கலாம். பிரதமர் ஆலோசனையின் பேரில் ஜனதிபதி சில உயர் அதிகாரிகளை நியமனஞ் செய்கின்ருர் என்று பிரதமர் பற்றிய இயலில் பார்த்தோம். இப்பதவிகளின் அந்தஸ்தைப் பேணுவதற்கும், அவற்றிற்குத் தகுதிவாய்ந்தவர்களை அமர்த்து வதற்கும் நாட்டின் முதலமைச்சர் நியமனஞ் செய்வது பொருத்த மானதென்று பாலன அமைச்சர் யாப்பமைமன்றத்தில் கூறி யுள்ளார். ஏனைய அலுவலர் பற்றிய அதிகாரங்களை, அமைச்ச ரவை நேரடியாக உபயோகிக்கவேண்டியவை என்றும், அமைச்ச ரவை கையளிக்கக்கூடியவை என்றும் இரண்டாகப் பிரிக்கலாம்:
நேராக உபயோகிக்கப்படவேண்டியவை: 'அரசிய லமைப்பு வேறு விதமாகச் செய்துள்ள இடங்களில் தவிர, திணைக் களத் தலைவர் பதவிக்கும், அமைச்சரவை நிர்ணயிக்கும் வேறு பதவிகளுக்குமான நி ய ம ன ங் க ள் அமைச்சரவையினல்

Page 42
- 342 -
செய்யப்படவேண்டும்-13.?? இதைவிட 1. அரசசேவைகளின் அமைப்பையும், அலுவலரைச் சேர்க்கும் திட்டங்களையும் ஆக்கு தல், 2. அலுவலர் ஒழுக்காறுபற்றிய கைந்நூல்களை உருவாக்குதல், 3. அரச அலுவலர் பற்றிய அதிகாரங்களை உபயோகிக்கும் கையளிக்கும் முறைகளை வகுத்தல், 4. அலுவலர் இடமாற்றம் பற்றிய விதிமுறைகளை ஆக்குதல் அமைச்சரவையின் நேரடிப் பொறுப்பில் உள்ளன. " யாப்பில் வெளிப்படையாக வேறு ஏற் பாடுகள் செய்யப்படா விடத்து, ஒவ்வோர் அலுவலரும் ஜனதி பதி விரும்பும் காலத்தின்போது பதவி வகித்தல்வேண்டும்107/1, 9 நீதிமன்றத் தலையீடின்றி அரசாங்கத்தின் சிபார்சின் பேரில் ஜனதிபதி, ஒருசிலரைத் தவிர்ந்த ஏனைய அலுவலரை எந் நேரத்திலும் பதவிநீக்கம் செய்யலாமென்பது இவ்விதியின் கருத்தாகும். அமைச்சரவை கையளித் த அ தி கா ர த்  ைத க் கொண்டு அமைச்சர் ஒரு ஊழியரை வேலையிலிருந்து நீக்கினல், அவ்வூழியர் அமைச்சரவைக்கு ஒருமுறை மேன்முறையீடு செய்ய லாம்.
கையளிக்கக் கூடியவை நேரடியாகச் செய்யவேண்டிய கடமைகளைத் தவிர்ந்த ஏனையவற்றை அமைச்சரவை அமைச் சர்களுக்குக் கையளிக்கலாம் : அப்படிக்  ைக ய விரித் தாலும் அமைச்சரவை அவ்வதிகாரங்களைத் தானே பிரயோகிக்கமுடியும். அமைச்சர் தான் பெற்ற அதிகாரங்களிற் சிலவற்றையோ பல வற்றையோ அலுவலர் ஒருவருக்கு, நடைமுறையில் திணைக் களத் தலைவருக்குக் கையளிக்கலாம் ; கையளித்த அதிகாரத்தை அமைச்சர் விரும்பினுல் அமைச்சரவையின் ஒருப்பாட்டுடன் தானே பிரயோகிக்க முடியும்.
அலுவலர்களை நியமிக்கும்போது, ஏனைய விதத்தில் தகைமை வாய்ந்த எந்தப் பிரசைக்கும், இனம், சமயம், சாதி அல்லது பால் காரணமாக வேறுபாடு காண்பிக்கலாகாது என்று அடிப் படை உரிமைகள் பற்றிய விதி 18/1/ ஏ கூறுகின்றது. ஆனல் இவ்விதி மாற்றியமைக்கக்கூடியது; மொழி அல்லது கட்சிச்சார்பு அடிப்படையில் பாகுபாடு காட்டுவலதத் தடைசெய்யவில்லை : இந்த அல்லது வேறு விதிகளை மீறி நியமனம் செய்யப்படினும் நீதிமன்றம் தலையிட முடியாது.
8. அரசசேவை ஆலோசனைச்சபையும்
அரசசேவை ஒழுக்காற்றுச்சபையும் பொதுச்சேவை ஆணைக்குழுவிலிருந்து அரசிய லா  ைரக்
கொண்ட அமைச்சரவைக்கு மாற்றப்பட்ட அரச அலுவலர்
நியமனம், இடமாற்றம், வேலைநீக்கம், ஒழுக்கக்கட்டுப்பாடு

- 343 -
பற்றிய உயரதிகாரங்கள் சீரியமுறையிற் பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுகின்றது. தனிப்பட்ட அமைச்சர் தன் அரசியல் வாழ்வை உறுதிப்படுத்தவும், அமைச்சரவை தனது கட்சி அல்லது கூட்டணி தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றவும் எத்தனிப்பது இயற்கையாகும். எனவே இவர்கள் தங்கள் தேர்தல் தொகுதி யினர், கட்சி ஆதரவாளர், தேசிய அரசுப் பேரவை உறுப்பினர் ஆகியோரின் நியாயமற்ற கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கா திருப்பது இலங்கையிற் கடினமாகும் நியமனம் பதவியுயர்வு போன்றவற்றில் ஆட்சியாளர் பாரபட்சம் காட்டுகின்றனர் என்றும், தாங்கள் வகிக்கும் புதவி நிலையற்றதென்றும் அலுவலர் நம்பினுல், எக்கட்சி ஆட்சிக்கு வரினும் திறமையுடன் பணி புரியக்கூடிய பொதுச்சேவையை உருவாக்கமுடியாது; இதனுல் நாட்டின் முன்னேற்றம் தடைப்படும். அமைச்சர்களின் ஆட்சிப் பாரத்தைக் குறைப்பதோடு அரசியல்தனத்திற்கு அணை போடும் வெளிப்படையான நோக்குடன்போலும் பொது ச் சே  ைவ ஆணைக்குழுவை அகற்றிய குடியரசு யாப்பு, அரசசேவை ஆலோசனைச்சபை, அரசசேவை ஒழுக்காற்றுச்சபை என்னும் இரு புதிய சபைகளை உருவாக்கியுள்ளது. இச்சபைகள் திருப்திகரமான பொதுச்சேவையை அமைப்பதில் எப்பங்கினை வகிக்கப்போகின்றன என்பதை ஊகிப்பதற்கு அவற்றி ன் அமைப்பும் அதிகாரமும் வழிகாட்டியாய் அமையலாம்.
அமைப்பு : ஒவ்வொன்றும் மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட இச்சபைகள் பிரதமரால் ஆக்கப்படுகின்றன : Luny fif தலைவராக இருக்கவேண்டுமென்பதையும் பிரதமரே நிர்ணயிக் கின்றர். தேசிய அரசுப்பேரவை உறுப்பினரோ அரச அலுவலரோ சபைகளில் அங்கத்துவம் வகிக்க முடியாத்தோடு, ஒரு சபை யின் உறுப்பினர் மறுசபையில் உறுப்பினராய் இருத்தலாகாது: இவர்கள் சம்பளம் பொதுச்சேவை ஆணைக்குழுவினரதுபோன்று பாராளுமன்றத்தினுல் நிர்ணயிக்கப்படும் பதவிக்காலத்தில் அதை மாற்றமுடியாததோடு, திரட்டுநிதியிலிருந்து அது கொடு படல் வேண்டும். ஆணைக்குழுவினர் சேவைக்காலம் 5 வருடமாக இருந்தது : புதிய சபையினரது 4 வருடமாகக் குறைக்கப்பட்டுள் ளது; திரும்பவும் நியமிக்கப்படலாம். எக்காரணத்திற்காகவும் ஒருவர் தற்காலிகமாகக் கடமையாற்ற முடியா திரு ப் பின் அவரிடத்திற்கு இன்னெருவரை ஜனதிபதி நியமிக்கலாம். ஒவ் வொரு சபைக்கும் ஒரு செயலாளருண்டு : இவர்கள் அமைச்ச ரவையினல் நியமனம் பெறுவர். பொதுச்சேவை ஆணைக்குழுவி லிருந்து மாறுபட்ட இரு அம்சங்கள் புதிய சபைகளின் சுதந் திரத்தைக் கூடுதலாகப் பாதிக்கக்கூடியன. 1. முன்னை பதின் அங்கத்தவரைப் பிரதமர் காரணங்காட்டியே அகற்றலாம் :
ga). III = 10

Page 43
--سے 344 سے۔
இன்று காரணங்காட்டாமலே அகற்றப்பட்டு வெற்றிடம் நிரப் பப்படலாம். 2. சபைகளின் தீர்மானங்களைத் தகாதமுறை யில் வசப்படுத்த எத்தனிப்போரைக் கிறிமினல் குற்றத்திற்கு ஆளாக்கக்கூடிய விதிகள் புதிய யாப்பில் இடம்பெறவில்லை. அன்று பிரதமரும் அமைச்சர்களும் ஆணைக்குழுவிற்கு " இரகசிய நுழைவாயில்களை அமைத்திருந்தனர் இன்று அரசியலாரை விடப் பிறரும் வெளிப்படையாகச் சபைகளை அணு குவ தி ல் யாப்புரீதியான தடைப்பாடுகள் இல்லை,
கடமை : சுதந்திரம் குறைந்த அரசசேவைச் சபைகளின் அதிகாரங்கள் என்ன ? ஆலோசனைச்சபையின் கடமை அலுவலர் நியமனத்தோடும், ஒழுக்காற்றுச்சபையின் கடமை அலுவலர் ஒழுக்க நடவடிக்கையோடும் சம்பந்தப்பட்டவை. ஆலோசனைச் சபையும் நாலுவித நி ய ம ன ங் களு ம் - 13 அமைச்சரவை 113ஆம் விதியின் கீழ் நேரடியாகச் செய்யவேண்டிய நியமனங் களைச் சம்பந்தப்பட்ட அமைச்சரின் விதப்புரையைப் பெற்ற பின் செய்யவேண்டும் அமைச்சரொருவர் ஆலோசனைச்சபை யுடன் கலந்த எ லே ரா சி யா து விதப்புரை செய்யலாகாது. 2. அமைச்சரவை 114ஆம் விதியின் கீழ் ஒதுக்கும் பதவிகளை ஆலோசனைச்சபையின் விதப்புரையைச் சம்பந்தப்பட்ட அமைச் சர் மூலம் பெற்றபின்தான் நிரப்பவேண்டும். 3. அமைச்ச ரொருவர் தான் அமைச்சரவையிலிருந்து பெறும் நியமன அதிகாரத்தை ஆலோசனைச்சபையின் விதப்புரை பெற்றபின் தான் செய்யவேண்டும், 4. அரச அலுவலரொருவர் தான் அமைச்சரிடத்திலிருந்து பெறும் நியமன அதிகாரத்தைப் பயன் படுத்தும்போது ஆலோசனைச்சபையின் விதப்புரையைப் பெற வேண்டியதில்லை : யாப்பு அதுபற்றி மெளனம் சாதிக்கின்றது. மேற்காட்டிய விதப்புரையையும் ஆலோசனையையும் அமைச் சரோ அமைச்சரவையோ ஏற்கவேண்டுமா ? இல்லையா? என்பது பற்றியும் யாப்பிற் கூறப்படவில்லை. யாப்பு கையாளும் கலந் தாலோசியாது", "விதப்புரை பெற்றபின்" என்னும் பதங்களைப் பார்க்கும்பொழுது அமைச்சரோ அமைச்சரவையோ ஆலோ சனைச்சபையின் கருத்துக்களைப் புறக்கணிக்கலாமென்பது பெறப் படும்3
ஒழுக்காற்றுச்சபையை எடுத்தால் : 1. அதன் விதப்புரை யைச் சம்பந்தப்பட்ட அமைச்சர் மூலம் பெற்றபின்தான் வேலை நீக்க, வேறு ஒழுங்குநடவடிக்கைகளை அமைச்சரவை எடுக்க லாம். 2. அமைச்சரும் தான் கையேற்ற வேலைநீக்க, ஒழுக்கக் கட்டுப்பாடு அதிகாரங்களை ஒழுக்காற்றுச்சபையின் விதப் புரையைப் பெற்றபின்தான் பயன்படுத்தமுடியும், அமைச்ச

- 345 -
ரால் வேலைநீக்கம் செய்யப்பட்ட அலுவலர் அமைச்சரவைக்கு ஒருமுறை மாத்திரம் மேன்முறையீடு செய்யலாம் மேன்முறை யீடு செய்யாதவிடத்தும், வேறுவித தண்டனை வழங்கியவிடத்தும் அமைச்சரின் தீர்ப்பு இறுதியானது. 35 அரச அலுவலர் ஒருவர் தான் அமைச்சரிடமிருந்து பெற்ற அதிகாரத்தின் பிரகாரம் தன்கீழுள்ள ஊழியருக்குத் தண்டனை வழங்கலாம் : தண்டனையை ஆட்சேபித்து ஊழியர் ஒழுக்காற்றுச்சபைக்கு ஒருமுறை மாத் திரம் மேன்முறையீடு செய்யலாம் ; வேலைநீக்கத் தண்டனையை ஒழுக்காற்றுச்சபை உறுதிப்படுத்துமிடத்து, ஊழியர் சம்பந்தப் பட்ட அமைச்சருக்கு ஒருமுறை மேன்முறையீடு செய்யலாம் ; வேறுவித தண்டனைகள் பற்றிய சபையின் தீர்ப்பு இறுதியானது : இந்த ஏற்பாடு கீழ் ஊழியர் ஒழுக்கக்கட்டுப்பாடு பற்றிச் சிறு அதிகாரத்தைச் சபைக்குக் கொடுக்கின்றதாயினும், அமைச்சர் தான் திணைக்களத் தலைவர் போன்ற அதிகாரிகளுக்குக் கையளித்த வேலைநீக்க, வேறு ஒழுக்கக்கட்டுப்பாடு அதிகாரங்களைத் தானே பயன்படுத்த முடிவுசெய்யலாமென்பது கவனித்தற்பாலது. அத் தோடு ஒழுக்காற்றுச்சபையின் விதப்புரைகளும் அமைச்சரி ஞலும் அமைச்சரவையினுலும் ஏற் கப்பட வேண்டு மென்ற st run Asiah.
9. அரசியல்தனம்
யாப்புச் சட்டக் கோணத்தில் நின்று நோக்கும்பொழுது, அலுவலர் நியமனம், இடமாற்றம், வேலைநீக்கம், ஒழுக்கக் கட்டுப்பாடு பற்றி எழக்கூடிய அரசியல்தனத்திற்கு அரச சேவைச் சபைகள் இரண்டினலும் அணைபோட முடியாதென்பது பெறப்படும். ஆட்சியிற் பங்குகொள்ளும் வாய்ப்பற்ற சிறு பான்மையினர், அரசசேவையில் ஜனநாயக நெறிகளுக்குப் புறம் பாண முறையில் நடத்தப்படலாமென்று பயமுறுவதில் நியாய முண்டு. அப்பயத்தைப் போக்குவதற்கும், ஜனநாயக அரசாங் கத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும், அலுவலர்களிடையே மலிந்து கிடக்கும் ஊழல்களை அகற்றுவதற்கும் அரசசேவைச் சபைகளும் அமைச்சர்களும் அமைச்சரவையும் தேசிய அரசுப் பேரவையும் நடைமுறையில் எவ்வாறு இயங்கி, எத்தகைய மரபை ஏற்படுத்துவார்கள் என்பதைக் காலந்தான் காட்ட முடியும்; இவைபற்றி நீண்ட ஆட்சி அனுபவம் பெற்றுள்ள ஐ. தே கட்சி தரும் அபிப்பிராயம் நன்னம்பிக்கையற்றதாகும்3 * பல்லாண்டுகளாக நிலவிய பொதுச்சேவையின் அரசியல் நடு நிலை நெறியைக் கைவிட்டு , அலுவலர் நியமனம், பதவியுயர்வு, ஒழுக்கக்கட்டுப்பாடு ஆகியவற்றை அமைச்சரவையின் இறுதிக் க ட் டு ப் பா ட் டு க் கு ன் கொணர்தல்மூலம் நடைமுறையில்

Page 44
حسس 346 هـ
* அரசாங்கம் மாறும்பொழுது உயரதிகாரிகளும் மாறும் முறை யைப் புகுத்தியது புதிய யாப்பிற் காணும் குறைகளில் ஒன்று' என்று ஐ. தே. கட்சி கூறுகின்றது. " அ  ைமச் சர் களு க் (கம் அலுவலர்களுக்குமிடையே எழும் வழக்குகளில் அமைச்சர் களே இறுதித் தீர்ப்பு வழங்குவோராயிருக்கும் உள்ளார்ந்த அம்சம் புதிய யாப்பில் புகுத்தப்பட்டிருப்பதும் வருந்தத் தக்கது " என்பது இரு மதிப்புக்குரிய பெரியாரின் 1 எண்ணித் துணிந்த கருத்தாகும். அத்துடன், "நீதியை நிருவகிக்கும் நிறுவனம் எதுவாயினும் அரச அலுவலரின் நியமனங்கள் இட மாற்றங்கள் வேலைநீக்கங்கள் அல்லது ஒழுக்காற்றுக் கட்டுப் பாடுகள் தொடர்பான அ  ைம ச் ச ர  ைவ யி ன், ஆலோ சனைச் சபையின், ஒழுக்காற்றுச்சபையின், அலுவலரின் விதப் புரை அல்லது முடிவினைப்பற்றி விசாரணை செய்யவோ தீர்ப்பு வழங்கவோ முடியாது ' என்ற 105/5 விதி பலத்த ஆட்சேபத் திற்கு ஆளாகியுள்ளது. இக்கடமைகளுக்கு அமைச்சரவை தேசிய அரசுப் பே ர வைக் குப் பதிலிறுத்தல்வேண்டுமென்னும் விதி அரசியல்தனம் புகுவதைத் தடைசெய்யும்-ஆற்றல்வாய்ந்ததல்ல. நாளாந்த நிர்வாகத்தில் அரசியலார் தலையீடும், அரசாங்கத் தோடு உயரலுவலர் மாறும் முறைமையும் பின்தங்கிய, வேலை வாய்ப்புக் குறைந்த நாடுகளில் திறமையற்ற, ஒழுங்கு குலைந்த பொதுச்சேவையை உருவாக்கும், ஊழல்களைப் பெருக்கும் என்று இந்திய சிவில்சேவை வேத்தியல் ஆணைக்குழு 1924 இல் தெரி வித்த கருத்து இன்றும் பொருத்தமானதாகும். எனவேதான் அமரர் பண்டாரநாயக்கா அவர்களின் சிந்தனைகளில் ஒன்று ஈண்டு குறிப்பிடற்பாலது. ** பொதுச்சேவையினர் அரச ஊழியர் களேயன்றிக் குறிப்பிட்ட ஓர் அரசியற்கட்சியின் ஊழியர்களல்ல. காலத்திற்குக்காலம் எக்கட்சி ஆட்சிக்கு வரினும் அவர்கள் தமது கடமைகளைப் பாரபட்சமின்றிச் செய்யவேண்டும் ஆணுல் அரசாங்கம் நிர்ணயிக்கும் கொள்கையை விசுவாசத்துடன் நிறைவேற்றவேண்டும். அதைவிட்டு, ஆளுங் க ட் சி யா கி ய கோளைச் சுற்றிச்சுழலும் சார் புக் கோ ள் க ள ஈ க அவர்களை மாற்றுவது ஜனநாயக நெறிகள் அனைத்திற்கும் ஒவ்வாததாகும்.' பெரும்பாலான திறமையற்ற நேர்மையற்ற சுயநலமிகளே சார்புக்கோள்களாக மாறும் இயல்பினர். அவர்கள் தொகை அதிகரித்தால், உழைப்பிற் சிறந்த ஆற்றல் வாய்ந்த அலுவ லர்கள் சிலகாலமாகப் பதவி துறப்பதும் நாட்டைவிட்டு வெளி யேறுவதும் வலுப்பெறலாமல்லவா ?
1. அத்தியட்சகர்கள் லக்ஸ்மன் விக்கிரமசிங்கா-டி. ஜே. அம்பலவாணர்,

XI, நீதிபரிபாலனம்
1. பொதுக் குறிப்புக்கள்
1. நீதிமன்றக் கடமைகள் : தாராள சனநாயக நாடு கள் நீதிமன்றங்களுக்கு யாப்பில் முக்கிய இடமளிக்கின்றன. அவைகளின் முக்கியத்துவம் அவைகள் புரியும் கடமைகளி லிருந்தே எழுகின்றது. அக்கடமைகளாவன : 1. வழக்குத் தீர்த்தல்: தனிமனிதருக்கிடையில் ஒப்பந்தப்படி நடவாமை , அத்துமீறிப் பிரவேசம்செய்தல் போன்ற பல பிணக்குகள் எழ லாம் அரசாங்கத்திற்கும் தனியார்களுக்கும் இடையில், தனியார் செய்யும் கொலை, களவு போன்ற குற்றங்களும், அரசிற்கு வரிகொடாமை போன்ற பிணக்குகளும் எழலாம்: இவற்றைத் தீர்த்துவைத்தலும், சட்டத்தை மீறியதற்கு நிவா ரணமோ தண்டனையோ வழங்குவதும் நீதிமன்றங்களின் பிரதான கடமையாகும். 2. தீர்ப்புவழிச்சட்டம் ஆக்கல் : மேற்கூறிய வழக்குகளை நீதிமன்றங்கள் நிலவும் சட்டங்களின் அடிப்படையில் தீர்த்துவைக்கின்றன. ஒரு வழக்கைத் தீர்த்துவைப்பதற்கு வழி காட்டக்கூடிய சட்டங்கள் இல்லாவிடத்து, நீதிபதிகள் தம் இயல் பான அறஉணர்வின் துணைகொண்டு, நிலவும் சமூக பொருளா தார அரசியல் நோக்கத்திற்கு ஏற்பத் தீர்ப்புக் கூறுவார்கள். உயர்மன்றங்கள் வழங்கும் அறநெறிகள் கீழ் மன்றங்களினுற் பின் பற்றப்படுகின்றன ; சட்டத்தன்மை பெறுகின்றன. 3. மேற் பார்வை செய்தல் விவாகரத்து ஏற்பாடு, பங்குடைமையின் புனர் நிர்மாணம், பிராயம்வராதோரின் உடைமை, அடைக் கலப் பொருள்கள் போன்றவற்றைப் பெரும்பாலும் நீதிமன்றம் மேற் பார்வைசெய்கின்றது. பாலன நடவடிக்கைகள் சாதாரண சட்டத் திற்குள் நடைபெறுகிறதா? என்று மேற்பார்வை செய்யும் அதிகா ரம் நீதிமன்றத்திற்கு இருக்கலாம். உதாரணமாக, ஒருவன் சட்ட ரீதியற்ற முறையில் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டால், ஒருவன் பொருள்கள் சட்டரீதியற்ற முறையில் அரச அலுவல ராற் கைப்பற்றப்பட்டால் நீதிமன்றம் தலையிடலாம். 4. நீதி மன்ற மறுசீராய்வு மயக்கமான யாப்பு விதிகளுக்கு விளக்கந்

Page 45
سس۔ 348 س
தரும் அதிகாரமும், நிர்வாக பாலனச் செயல்களும் சட்டவாக் கங்களும் யாப்பை மீறிஞல் அவைகள் செல்லுபடியாகாதவை என்று தீர்ப்புக்கூறும் அதிகாரமும் நீதிமன்ற மறுசீராய்வு அதிகார மெனப்படும். முதலில் ஐக்கிய அமெரிக்க யாப்பில் தொக்கியுள்ளதென்று கருதப்பட்ட இவ் வ தி கா ர ம் இன்று அவுஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, இந்தியா, யப்பான் போன்ற நாடுகளின் சாதாரண நீதிமன்றங்களுக்கும், இத்தாலி, ஒஸ்றியா, ஜேர்மன் குடியரசு போன்ற நாடுகளின் விசேட யாப்பு நீதிமன்றங்களுக்கும் உண்டு ரூஷியாவிலும், அதைப் பின்பற்றும் நாடுகளிலும், பிரான்சிலும் நீதின்ற மறுசீராய்வு இல்லை.
2. நீதிமன்றச் சுதந்திரம்: மேற்கூறிய கடமைகளை நன்கு செய்வதன் மூலம் நீதிபதிகள் ?? ஒழுங்கான சமூகத்தின் வாயிற் பாதுகாவலராகத் " திகழவேண்டும். அவர்கள் தனி மனிதரையும், அரசாங்கத்தையுஞ் சட்டப்படி நடக்கச் செய்ய வேண்டும் சட்ட ஆட்சியைப் பேணித் தனிமனித சுதந்திரத் தையும், மக்களிடையே பரஸ்பர நம்பிக்கையையும் நிலைநாட்ட வேண்டும். இவற்றைச் செய்வதற்குத் திட்டமாக வரையறுத்த நல்ல சட்டங்கள் இருந்தால் மாத்திரம் போதாது ; நடுநிலை நின்று நீதிபரிபாலனம் செய்யக்கூடிய உறுதிகொண்ட நீதிபதி களும் அவசியம்: இன்றைய ஆட்சியில் சட்டவாக்க நிர்வாகத் துறைகள் இரண்டும் வலிமை வாய்ந்தன ; இவைகள் நல்லாட் சிக்கு இன்றியமையாத நீதித்துறைமீது ஆதிக்கம் வகிப்பது உகந்ததல்ல நீதித்துறையின் சுதந்திரமே அதன் பலமாகும்: சுதந்திரமற்ற நீதிபதிகள் மீது மக்கள் நம்பிக்கைவைக்க முடி யாது. மக்கள் நம்பிக்கையைப் பெருத நீதித்துறையால் அதிக நன்மை கிடையாது. எனவே, பணமோ பலவந்தமோ நீதி பதிகள் கடமையிற் குறுக்கிடமுடியாத சூழ்நிலையை ஆக்கித் தரு வது இன்றியமையாததாகும். முக்கியமாக அதிகாரம்படைத் தோரின் செல்வாக்கைத் தவிர்ப்பது பெரும் பிரச்சினையாய் இருந் துள்ளது. இப்பிரச்சினை கிரேக்க நகர-அரசின் காலந்தொட்டே அரசியல் அறிஞரின் சிந்தனையைக் கவர்ந்ததொன்ருகும்:
ஆங்கில அமெரிக்க மரபுச் சட்டமுறையைத் தழுவும் நாடுகள், அரசியலமைப்பில் வலுவேருக்க நெறி புகுத்தப்படுவது நீதித் துறைச் சுதந்திரத்திற்கும் தனிமனித சுதந்திரத்திற்கும் ஒரு முக்கிய காப்பீடென்று நம்புகின்றன. அரசவலு சட்ட, நிர்வாக, நீதி வலுக்கள் என்று பிரிபடும். வலுவ்ேருக்கத்தின்படி ஒரு பிரிவு வலுக்களை உபயோகிப்பவர் மறுதுறையில் அங்கம் வகிக்கக் கூடாது. மறுதுறையைக் கட்டுப்படுத்தக்கூடாது, மறுதுறைக்குரிய

حصہ۔ 349 سست۔
கடமைகளைச் செய்யக்கூடாது. எல்லா வலுக்களும் ஒருவரிடத் திலோ ஒரு கூட்டத்தினரிடத்திலோ இருந்தால், அவர் தம் அதி காரத்தைக் கொடுங்கோன்மையாக உபயோகிக்கும் இயற்கை இயல்பு உண்டு முக்கியமாக நீதித்துறைக்கும் மற்றிரு ஆட்சித் துறைகளுக்குமிடையே வலுவேருக்கமிருப்பது அவசியமென்று கொள்ளப்படுகின்றது. மேற்கூறியவாருன வலுவேருக்கம் சோஷலிச நாடுகளில் இல்லாவிடினும், நீதித்துறைச் சுதந்திரம் எழுத்தளவிலாகுதல் அங்கீகரிக்கப்பட்ட இலட்சியமாகும்3 உதாரணமாக, ரூஷிய யாப்புவிதி 115, "* நீதிபதிகள் சுதந்திர முடையவர்கள்; சட்டத்திற்குத்தான் அவர்கள் பணியவேண்டும்" என்கின்றது. போலந்தின் யாப்புவிதி 64, ** நீதிசெலுத்தும் கடமையில் நீதிபதிகள் சுதந்திரமுடையவர்கள் " என்கின்றது. செக்கோசெலவாக்கிய சோஷலிசக்குடியரசின் யாப்புவிதி 98/1, நீதி நிர்வாகம் சுதந்திர மக்கள்-நீதிமன்றங்களின் கடமை யாகும் " என்கின்றது.
2. இலங்கையின் நீதித்துறை அமைப்பு
(1) 1973 முடியும் வரை : இரண்டாயிரம் ஆண்டு களுக்கு மேலாக இலங்கையின் ஆட்சிமுறையில் நீதிமன்றங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன. சிங்கள, தமிழ் ம ன் ன ர் க ள் காலத்தில் படிநிலையாக நீதித்துறை அமைக்கப்பட்டிருந்ததைக் காணலாம். ஒல்லாந்தரின் கடலடுத்த மாகாணங்களில் மூன்று மேல்நிலை நீதிமன்றங்கள் காலி, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இயங்கின. ஆங்கிலேயர் ஆட்சியில் 1796இல் மீயுயர் கிறிமினல் முறை மன்றமும், 1801இல் உச்சநீதிமன்றமும் சுதந்திர நீதிநிலையத்துறையும், 1810இல் யூரிமார் முறையும் செயற்படத் தொடங்கின. 1833இல் முடியின் நீதிமுறைப் பட் டயம் முன்னிருந்த நீதித்துறையை மாற்றியமைத்ததோடு, சட்ட வாக்க நிர்வாக வலுக்களிலிருந்து பிரிக்கப்பெற்ற நீதிவலுவை உச்சநீதிமன்றத்திடமும் வேறு நீதிமன்றங்களிடத்தும் ஒப்படைத் தது. இப்பட்டயந்தான் " இன்றைய நீதிமுறையின் அடித்தள மாகவும், 1868 நீதிபரிபாலனக் கட்டளைச்சட்டத்தினதும், 1889 நீதிமன்றங்கள் கட்டளைச்சட்டத்தினதும் தந்தையாகவும் இருக்கின்றது"
1973ஆம் ஆண்டு முடிவுறுங் கால், படைத்துறைமுறை மன்றம், குற்றவியல் நீதிவிசாரணைக் கொமிஷன், காதிமன்றம் இணக்கசபை, கைத்தொழில்மன்றம், பாலனமன்றம் போன்ற நீதிபரிபாலனஞ் செய்யும் விசேட தீர்ப்புரிமை மன்றங்களை விட, இலங்கையின் நீதித் து  ைற அமைப்பில் ஆறு வகையான
1. De Sampayo J un- N L. R. 384, P. 338,

Page 46
- 350 -
சாதாரண நீதிமன்றங்கள் இருந்தன. 1. ஊர்மன்றங்கள் : சாதாரணமாக நூறு ரூபாவிற்குக் குறைந்த சிவில் வழக்குகளை யும், 14 நாட்களுக்குக் குறைந்த மறியல் தீர்க்கக்கூடிய குற்ற வியல் வழக்குகளையும் விசாரிக்கும் உரிமையுடையன. வழக் காளிகளிடையே சமரசஞ்செய்ய எத்தனித்து வெற்றிபெரு விடின், மன்ற அதிபர் வழக்கை விசாரணைக்கு எ டு ப் பார். வழக்கறிஞர் இங்கு தோற்ற முடியாது. அதிபர் தீர்ப்பிலிருந்து மாவட்ட நீதிபதிக்கு மேன்முறையீடு செய்யலாம். ஊர்மன்றங் கள் 1974 தொடக்கம் அகற்றப்பட்டுள்ளன. 2. நீதிவான் மன்றங்கள் : 6 மாத மறியலும் 100 ரூபாவிற்குக் கூடாத அபராதமும் விதிக்கக்கூடிய குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்யலாம் ; ஏனையவற்றை மாவட்ட நீதிமன்றத்துக்கோ உச்ச மன்றத்திற்கோ பாரப்படுத்தவேண்டும். 3. விண்ணப்ப மன் றங்கள் : 750 ரூபாவிற்குக் குறைந்த சிவில் வ ழ க்கு களை விசாரணைசெய்யும் உரிமையுடையன. இவைகளின் தீர்ப்பிலிருந்து உச்சமன்றத்திற்கு மேன்முறையீடு செய்யலாம்; 1974 தொடக் கம் இவைகள் அகற்றப்பட்டுள்ளன. 4. மாவட்ட மன்றங்கள் : உச்ச நீதிமன்றத்திற்கென்று ஒதுக்கப்பட்ட வழக்குகளைத் தவிர்த்து ஏனைய உரிமையியல் வழக்குகளையும், 2 வருடச் சிறையையும் 1000 ரூபா அபராதத்தையும் விதிக்கக்கூடிய குற்ற வியல் வழக்குகளையும் விசாரணை செய்கின்றன3 5. உச்ச நீதி மன்றம்: ஒரு பிரதம நீதியரசரையும் 10 துணை நீதியரசர்களையும் கொண்ட உச்சம்ன்றம், சிவில் குற்றவியல் நியாயாதிக்கத்தை உடையது. சிவில்துறையில் விண்ணப்பமன்று, மாவட்டமன்று ஆகியவையின் தீர்ப்பிலிருந்துவரும் மேல்மனு நியாயாதிக்கம் மாத்திரமுண்டு, குற்றவியல்துறையில், கொலை, சதி போன்ற பெருங்குற்றங்களைச் சாதாரணமாக யூரிமாருடன் தன்முதலான விசாரணை செய்யும் அத்தோடு நீதிவான்மன்று, மாவட்ட மன்று ஆகியவையிலிருந்து வரும் மேல்மனு நியாயாதிக்கமும் உடையது. பருவமன்றத் தீர்ப்புக்கெதிரான மேன்முறையிடு களைக் குற்றவியல் மேன்முறையீட்டு மன்றமாக " விசாரணை செய்கின்றது. சிவில், குற்றவியல் நியாயாதிக்கத்தைவிடக் கீழ் மன்றங்களைக் கட்டுப்படுத்தும், நிர்வாகிகளைத் தம் கடமைகளை நிறைவேற்றச் செய்யும், காவலில் வைக்கப்பட்டோரை வெளிக் கொணரச் செய்யும் " கட்டளைகளைப் பிறப்பிக்கும் உரிமை உச்சநீதிமன்றத்திற்கு உண்டு. 63 மேல்முறையீட்டு மன்றம் 5 ஆண்டுசஞக்குப் பதவிவகிக்கும் தலைவரையும் வேறு 6 நீதியரசர் களையும் கொண்டது : 1971இல் பாராளுமன்றச் சட்ட மூலம் தாபிக்கப்பட்டு, 1974 தொடக்கம் அகற்றப்பட்டுள்ளது. இது இலங்கை நீதிமன்றப் படிவரிசையில் மிக உயர்மன்றமாக

- 351 -
விளங்கியது. கீழ்மன்றங்களின் குறிப்பிட்ட உரிமையியல் குற்ற வியல் தீர்ப்புகளுக்கெதிராக இதற்கு மேன்முறையீடு செய்ய லாம் ; இதன் தீர்ப்பு இறுதியானது. மேன்முறையீட்டு மன்றம் அமைக்கப்படுமுன் கோமறைக் கழகத்தின் நீதிமுறைக்குழு, இலங்கையிலிருந்து செல்லும் வழக்குகளுக்கு இறுதி மேன்முறை யீட்டு மன்றமாக இயங்கியது குறிப்பிடற்பாலது.
(2) 1974 தொடக்கம் : 1973 நீதிபரிபாலனச் சட்டங் கள் வேறு விடயங்களுடன், மேன்முறையீட்டு நீதிமன்றச் சட்டம், குற்றவியல் மேன் முறையீட்டு நீதிமன்றக் கட்டளைச் சட்டம், நீதிமன்றங்கள் கட்டளைச் சட்டம், கப்பல்துறை நீதிமன்றக் கட்டளைச் சட்டம், ஊர்மன்றங்கள் கட்டளைச் சட்டம், குற்ற வியல் செயல்படுமுறை சட்டத்தொகுப்பு ஆகியவற்றை ரத்துச் செய்து, நிலவும் நீதித்துறை அமைப்பையும் நடைமுறைகளையும் 1974 ஜனவரி முதலாம் திகதி முதல் மாற்றியமைத்துள்ளன. நீதிமன்றப் பிரமாணங்கள், சிவில் குற்றவியல் சட்ட த் தொகுப்புக்கள், பெரும்பாலும் பிரித்தானிய ஆட்சியாளரால் புகுத்தப்பட்ட வேறு பல சட்டங்கள் ஆகியவற்றிற்குப் பதிலாகப் புதிய சட்டங்கள் செயற்படும். மாற்றங்களின் நாலு அடிப்படை நோக்கங்களாவன : 1. இலகுவான, ஒரே மாதிரியான நடை முறைகளைப் புகுத்தல், 2. நீதியான பரிபாலனத்திற்கு வழி வகுத்தல். 3. தேவையற்ற கால தாமதத்தையும் பணச் செலவையும் நீக்கல், 4. ஒவ்வொரு வழக்கையும் சரியாகத் தீர்த்தல், கவனத்திற்குரிய சில மாற்றங்களாவன : மேல் மன்றத்திற்குப் பாரப்படுத்துவதற்கான விசாரணை அகற்றப் பட்டது: பிஸ் கால் இலாகா அகற்றப்பட்டு, முன்னிலைப்பாட்டுக் கட்டளை-ஆணை பதிவுத் தபால்மூலம் அனுப்புதல் ; குற்றஞ் சாட்டப்பட்டவர்களைச் சொந்தப் பிணையில் விடலாம் ; குற்றப் பணங்களை வங்கிகளிற் கட்டலாம் : கட்டத் தவறுவோர் சிறைக்குப் பதிலாகக் குறிப்பிட்ட காலத்திற்குக் கட்டாய சமூக சேவை செய்யுமாறு பணிக்கப்படுவர். இறுதி விருப்ப ஆவணம் பற்றிய காரியங்கள் அரசாங்க தருமகர்த்தாவின் பொறுப்பாகும்: கருத்துவேறுபாடு ஏற்பட்டால் மாத்திரம் அவை நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பிவைக்கப்படும். மேல்முறையீட்டுடன் எழுத்திலான காரணங்கள் அணைக்கப்படவேண்டும்; அவற்றிற் கான தீர்ப்பு வழங்கும்போது காரணம் காட்டப்படவேண்டும். குறைந்தது இரு நீதிபதிகள் மேன்முறையீட்டைக் கேட்க வேண்டும். குற்றங்களை விசாரணை செய்வதும் வழக்குத் தொடர் வதும் புதிய குற்றவியல் வழக்குரைக்கும் ஆணையாளரின் பொறுப்பாகும்;
இ = 1 - 11

Page 47
-------- 352 --سے
புதிய நீதிபரிபாலன முறைமையில் இலங்கை 16 நீதி மண்டலங்களாகவும், நீதிமண்டலங்கள் 40 மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் 90 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஊர் மன்றமும், விண்ணப்ப மன்றமும், மேன்முறையீட்டு மன்றமும் புது முறைமையில் இடம்பெறவில்லை. உச்சமன்றம், உயர் மன்றங்கள், மாவட்ட மன்றங்கள், நீதிவான் மன்றங்கள் ஆகிய நாலு வகையான சாதாரண நீதிமன்றங்களைத் தாபிக்க ஏற்பாடு செய்வதோடு, அவைகளின் அமைப்பு அதிகாரம் செயல்முறை ஆகியவற்றையும் 1973 நீதிபரிபாலனச் சட்டம் வரையறை செய்கின்றது.
இலங்கையின் உச்ச நீதிமன்றம் : இலங்கைக் குடியரசில் ஒரு உச்சமன்றம் இருக்கவேண்டும் அது ஒரு பிரதம நீதியரசரையும், பத்திற்குக் குறையாத ஆனல் இருபதிற்கு மேற் படாத நீதியரசர்களையும் கொண்டிருத்தல் வேண்டும், அவர்கள் முதலமைச்சர் சிபார்சின்பேரில் சனதிபதியால் நியமனம் பெறுவர். ஒவ்வொரு உச்சமன்ற நீதியரசரும் 63 வயது நிறை வேறும்வரை பதவியிலிருக்கலாம். கீழ்நீதிமன்ற முடிவுபற்றிய வழக்கில், ஆதார மூலங்களின் அடிப்படையிலான விசாரணை செய்யும் மேல்நிலையான ஒரேயொரு நீதிமன்றம் இலங்கை உச்சமன்றமாகும் கீழ் நீதிமன்றங்கள் செய்த சட்ட, மெய்ந் நிகழ்வுபற்றிய எல்லாத் தவறுதல்களையும் திருத்தும் அதிகாரம் அதற்கு உண்டு கீழ் நீதிமன்றங்களின் செயலாட்சிக்கு ஆளாகக் கூடிய நடவடிக்கைகள், செயல்முறைகள், காரியங்கள் அனைத்தும் பற்றிய மேன்முறையீடு, புனராலோசனை, இழைத்த தீங்கிற்கு எதிர்மாற்றீடு ஆகியவற்றைக் கவனிக்கும் தனியுரிமை உச்ச மன்றத்தினுடையதே சட்டம் அதற்கு வேறு அதிகாரங்களையும் வழங்கலாம். அதன் எவ்வித தீர்ப்பும் இறுதியானது ; அதற்கு மேலான நியா யாதிக்கமுடைய நிறுவனம் வேறெதுவுமில்லை. இவ்வேற்பாடுகளிலிருந்து, வழக்கிற் சம்பந்தப்பட்ட ஒருவர் ஒருமுறைதான் மேன்முறையீடு செய்யலாமென்பது பெறப்படும். இந்த மாற்றம் பொதுவிவாதத்திற்கு ஆளாகியது குறிப்பிடற் பாலது. முன்னைய முறைமையில் ஒன்றிற்கு மேற்பட்ட மேன் முறையீடுகள் செய்யும் வாய்ப்பு இருந்ததையும், முதலாவது மேன்முறையீட்டு மன்றத்தின் முடிவை இரண்டாவது அல்லது மூன் ருவது மேன்முறையீட்டுமன்றம் மாற்றியமைத்துள்ளதையும் ஒருசாரார் சுட்டிக்காட்டியபோது, பல மேன்முறையீடுகளினல் காலதாமதமும் பணச்செலவும் ஏற்பட்டதை மறுசாரார் காட்டி யுள்ளனர். கீழ் நீதிமன்றம் அல்லது வேறு சம்பந்தப்பட்டவர் மேற்கொண்ட நடவடிக்கையை நிறுத்தும், ஒரு பதவியை, வாக்குரிமையை, சுதந்திரத்தைப் பயன்படுத்துவதற்கு உரிமை

- 353 -
ஏதென்று வினவும், கடமையைச் செய்யுமாறு பணிக்கும், ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கோரும், கைதுசெய்த அல்லது தடுத்துவைத்த ஒருவரை நீதிமன்றத்திற்குக் கொணருமாறு பணிக்கும் கட்டளைகளை உச்சநீதிமன்றம் வழங்கலாம், பிறப்பிக்க லாம். இவ்வதிகாரங்களைக் குற்றவியல் நீதிக்கமிஷனுக்கு எதிராக உபயோகிக்கமுடியாது. எனவே, புதிய அமைப்பின் உச்சி யில் புதிய உச்சநீதிமன்றம் மக்களின் உரிமைச் சுதந்திரப் பாது காவலனுகக் கடமையாற்றும் என்று எதிர்பார்க்கலாம். நீதிவான் மன்றத்தின் தீர்ப்போடும் உத்தரவோடும் சம்பந்தமான நியா பாதிக்கத்தைக் குறைந்தது இரு நீதியரசர்களும், மாவட்ட உயர் நீதிமன்றங்களின் தீர்ப்போடும் உத்தரவோடும் சம்பந்த மான நியாயாதிக்கத்தைக் குறைந்தது மூன்று நீதியரசர்களும், சில விசேட நியாயாதிக்கத்தை ஐந்து அல்லது அதற்கு மேற் பட்ட நீதியரசர்களும் செயலாட்சி செய்யலாம். வேண்டிய அறிவு, திறமை, நன்நடத்தை உடையவர்களை உச்சமன்றம் சட்டத்தரணிகளாக ஏற்றுப் பதிவேட்டிற் பதிவுசெய்யலாம்.
உயர்நீதிமன்றங்கள் : இலங்கை 16 நீதிமண்ட லங்களாகப் பிரிபடும் அமைச்சர், கசற்றில் கட்டளை வெளி யிடுதல் மூலம் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு உயர்நீதிமன்றத் தைத் தாபிக்கலாம். உயர்நீதிபதிகள், முதலமைச்சர் சிபார்சின் பேரில் ஜனதிபதியால் நியமனம் பெறுவர் : 6 வயது நிறைவேறும் வரை பதவிவகிக்கலாம். முறையார்ந்த குற்றச்சாட்டுத் தாக்கல் மீதான வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பு வழங்கல் அதன் அதிகாரத்திற்குள் அடங்கும் தாக்கல் செய்யப்படும் குற்றம் எந்த ஒருவர் மீதாகிலும் இருக்கவேண்டின் அவைகள் பின் வரும் இடங்களிற் புரியப்பட்டிருக்கவேண்டும் : 1. உயர்நீதி மன்றத்தின் நியாயாதிக்க எல்லை, 2. இலங்கையின் நாட்டுரி மைக் கரையோரக் கடற்பரப்பு, 35 கடற்கொள்ளையெனில் திறந்த கடற்பரப்பு, 4. திறந்த கடற்பரப்பிலுள்ள இலங்கை யில் பதியப்பெற்ற கப்பல் அல்லது விமானம், இலங்கைப் பிரசையாயின் திறந்த கடற்பரப்பிலும் அல்லது எந்த விமானத் திலும் குற்றம் புரியப்பட்டிருக்கலாம். முன்னைய உச்சமன்றம் போல, அழைப்பாணை செயலாணப் பத்திரங்களை வழங்கல், செயலைத் தடுக்கும் வலியுறுத்தும் உத்தரவைக் கொடுத்தல், பிணை வழங்கல், உயர்மன்றத்தின் அதிகாரத்திற் குள் அடங்கும்: ஒருவர் மாவட்ட அல்லது நீதி வா ன் ம ன் றில் வழக்குத் தொடர்ந்து தீர்ப்புப் பெறுவதற்கிடையில், சீர்படுத்தமுடியாத ஊறுபாடு நேரிடக்கூடிய நிலையில், ஒரு செயலைத் தற்காலிகத் தடை செய்யும் உத்தரவை அவர் உயர்நீதிமன்றத்திடமிருந்து கோரலாம். பிரதம நீதியரசர், பாராளுமன்றத் தேர்தல்

Page 48
- 354 -
மனுவை விசாரணை செய்வதற்காகக் குறிப்பிட்ட உயர்மன்ற நீதிபதியை நியமிக்கலாம். கப்பல்துறை நியாயாதிக்கத்தை மேற் கொள்ளுமாறு குறிப்பிட்ட உயர்நீதிமன்றத்தைக் கசற் கட்டளை மூலம் அமைச்சர் நியமிக்கலாம்: சாதாரணமாக ஒரு உயர் மன்ற நீதிபதி தமக்குமுன் வரும் பெருங்குற்றவியல் வழக்குகளை யூரிமாருடன் விசாரணை செய்வார் : குறிப்பிட்ட நீதிமன்றத்தில், குறிப்பிட்ட ஒரு வழக்கை யூரிமார்முன் தான் நியமிக்கும் மூன்று உயர்மன்ற நீதிபதிகளை விசாரணைசெய்யுமாறு பிரதம நீதியரசர் பணிக்கலாம்.
மாவட்ட நீதிமன்றங்கள் : ஒவ்வொரு நீதிபரிபாலன மண்டலத்திலுமுள்ள மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட நீதிமன்றத் தைக் கசற்முலம் அமைச்சர் நிறுவலாம் நீதிச்சேவை ஆலோ சனைச்சபையின் சிபார்சைப் பெற்றபின் அமைச்சரவை மாவட்ட மன்ற நீதிபதிகளை நியமனஞ் செய்யும். வேறு நீதிமன்றங் 9ளுக்கு ஒதுக்கப்பட்ட தொடக்கமுதலான நியாயாதிக்கத்தைத் தவிர்ந்த குற்றவியல், சிவில், திருமணம், கடன் தீர்க்க இயலாமை, அர சிறை, விருப்ப ஆவணம் ஆகியன சார்ந்த நியாயாதிக்கம் அனைத் தும் மாவட்ட நீதிமன்றத்தினுடையதாகும். இறுதி விருப்ப ஆவணம் சார்ந்த காரியங்கள் தற்போது அரசாங்க தர்மகர்த் தாவின் பொறுப்பாகுமென்றும், கருத்துவேறுபாடு ஏற்பட் டால் மாத்திரம் அவை மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அனுப்பிவைக்கப்படுமென்றும் முன்னர் பார்த்தோம். தனது நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட குற்றம் புரிந்த எவருக்கும் எதிராக, முறைப்படி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, சட்டம் விதித்தவாறு விசாரணை செய்து தீர்ப்புவழங்கும் உரிமை மாவட்ட மன்றத்திற்கு உண்டு. சிறுவர், பித்தர், முதுகளுளரின் பாது காப்பில் இருப்போர் ஆகியோரின் ஆன்மீதும், சொத்து மீதும், பாதுகாவலர் மீதும், தர்மகர்த்தா மீதும், சட்டம் கொடுக்கக் கூடிய வேறு விடயங்கள் மீதும் அது நியாயாதிக்கம் செலுத்த a) Tah.
நீதிவான் மன்றங்கள் : மாவட்டத்திலுள்ள ஒவ் வொரு பிரிவிலும் நீதிவான் மன்றத்தை அமைச்சர் கசற் கட்டளை மூலம் தாபிக்கலாம், நீதிச்சேவை ஆலோசனைச்சபையின் சிபார் சைப் பெற்றபின் நீதிவான்களை அமைச்சரவை நியமிக்கும். நீதிவான் மன்றங்களுக்கு சிவில் குற்றவியல் வழக்குகள் பற்றிய தொடக்கமுதலான நியாயாதிக்கமுண்டு சிவில் வழக்குகள் 1500/= ரூபாவிற்கு மேற்படாத பெறுமானமுடைய கடன், வட்டி, இழப்பீடு, சொத்து, பங்கு, காணி ஆகியன பற்றிய தாய் இருத்தல்வேண்டும் ; குற்றவியல் வழக்குகள் நீதிவான்

- 355 -
மன்ற நியாயாதிக்க எல்லைக்குள் குற்றம்புரிந்த எ வரு க் கும் எதிராகத் தாக்கல் செய்யப்பட்டதாயும், அவற்றிற்கு விதிக்கக் கூடிய உச்சதண்டனை 7 வருடக் காவலுக்கு அல்லது 7000/= ரூபா அபராதத்திற்கு மேற்படாததாயும் இருத்தல்வேண்டும்.
(3) விசேட நீதி நிறுவனங்கள் ! நீ தி பரி பா ல ன அமைப்பில் வேறு விசேட நிறுவனங்களையும் காணலாம். உதா Ꮣ] 6ᏡᎢ tfᎼfᏈ Ꮬ : --
குற்றவியல் நீதிக் கமிஷன்கள் : ஏப்பிறில் கிளர்ச்சி யையும் அந்நிய செலாவணி மோசடியையும் இரு விசேட கமி ஷன்கள் இன்று விசாரணை செய்வதைக் காண்கின்ருேம். இக் கமிஷன்கள், 1972 குற்றவியல் நீதிக்கமிஷன்கள்-சட்டப் பிரகாரம் நிறுவப்பட்டவை. 1972 சட்டம், அது ஆக்சி படுவதற்கு முன்னர் அல்லது பின்னர் நடைபெற்ற 1. புரட்சி அல்லது படைக்கிளர்ச்சியோடு சம்பந்தப்பட்ட குற்றங்கள், 2. நாட்டுநலனைப் பாதிக்கக்கூடிய அளவிலான நாணய அல்லது அந்நிய செலாவணி மோசடிகள், 3 தனியார் அல்லது பொதுத் துறைத் தொழிற்சாலை, இயந்திரசாதனம், கருவிகள் அமைவு போன்றவற்றை மிகப் பரவலாக ச் சேதப்படுத்திய குற்றச் செயல்கள் ஆகியவற்றிற்கான சூழ்நிலையையும், அவ ற் ருே டு சம்பந்தப்பட்ட வேறு விடயங்களையும் விசாரணைசெய்து, குற்ற வாளிகளாகக் காண ப் படுவோரு க் குத் தகுந்த தண்டனை கொடுப்பதற்காகக் குற்றவியல் நீதிக்கமிஷன்களை அமைக்க ஜனதிபதிக்கு அதிகாரம் வழங்குகின்றது. ஒரு கமிஷனில் ஐந்து உச்சமன்ற நீதியரசர்களுக்கு மேற்படாதோர் அங்கம் வகிக்க லாம். அங்கத்தவர் யாராயிருக்கவேண்டுமென்பதைப் பிரதம நீதியரசர் நிர்ணயிப்பார். பிரதம நீதியரசரும் ஒரு அங்கத் தவராயிருப்பின் அவரே கமிஷனுக்குத் தலைமை தாங்கவேண்டும். அவரில்லாவிடத்துத் தலைவரையும் பிரதம நீதியரசர் நியமிப் பார். பெரும்பான்மை அங்கத்தவரின் முடிவே கமிஷனின் முடி வாகும். குற்றவியல் நீதிக்கமிஷன்கள்-சட்டம் எட்டு ஆண்டு களுக்கே வலுவுள்ள தாயிருக்கும். அதன்பின் தேசிய அரசுப் பேரவை சாதாரண பெரும்பான்மைப் பிரேரணைமூலம், விரும் பிய நேரங்களில், ஒவ்வொரு முறையும் ஐந்து ஆண்டுகளுக்கு மேற்படாத காலத்திற்குச் சட்டத்தைத் திரும்பவும் வலுவுள்ள தாக்கலாம்.
சாதாரண நீதிமன்றங்களின் செயல்முறை, மேற்காட்டிய அசாதாரண சூழ்நிலைகளுக்கு ஏற்புடையதல்லவென்று ஜஞதிபதி கருதினுல் மாத்திரம் விசேட கமிஷன்களை நிறுவலாம். அவரின் முடிபு இறுதியானது. சாதாரண நீதிமன்றங்களின் நடை

Page 49
حسن 356 مس.
முறையையோ, அவைகள் பின்பற்றும் சான்றுபகர் கட்டளைச் சட்டத்தையோ கமிஷன் கட்டாயமாக அனுசரித்து நடக்க வேண்டியதில்லை ; உண்மையைக் கண்டுபிடிப்பதற்காகச் சட்ட விதிமுறை ஒழுங்குகளையும், மரபு ஒழுங்குகளையும் அது புறக்கணிக் கலாம்; ஆல்ை இயற்கையான நீதிநெறிகளுக்கு முரண்பட்ட முறையில் விசாரணையை நடத்தலாகாது. அசாதாரண காலங் களில் படைத்துறை ஆட்சியின் துப்பாக்கிமுனைப் பாலனத்திலும் பார்க்க உச்சமன்ற நீதியரசர்களைக் கொண்ட கமிஷனின் அசா தாரண இயக்கம் விரும்பத்தக்கதாகும். விசாரணை செய்யப் படுவோர் சார்பிலும், கமிஷனின் அனுமதியுடன் வேறெவர் சார்பிலும் சட்டத்தரணிகள் விசாரணையிற் பங்குபற்றலாம்; அரசின் சார்பில் சட்டத்துறை நாயகமோ அவரின் அதிகாரம் பெற்ற வேறெவரோ கமிஷனுக்கு உதவிதரலாம். குற்ற நடவடிக்கைகளிற் சம்பந்தப்பட்ட ஒருவர், தனக்குத் தெரிந்த அனைத்தையும் சாட்சியமாகக் கூற ஒருப்படின், அவருக்குச் சட்டத்துறை நாயகம் மன்னிப்பு வழங்கலாம் மன்னிப்பு நிபந்தனையின்படி அவர் நடக்காதுவிட்டால், குற்றச்செயலில் ஈடுபட்டதற்காகக் கமிஷன் அவருக்குத் தண்டனை வழங்கலாம்: பொதுமக்களையும் பத்திரிகை நிருபர்களையும் விசாரணையைக் கேட்கவிடாது தடுக்கும் அதிகாரம் கமிஷனுக்கு உண்டு.
விசாரணையை நன்கு நடத்துவதற்கேற்ற வேறு பல அதிகா ரங்களையும் சட்டம் கமிஷனுக்கு வழங்குகின்றது. உதாரணமாக இலங்கையில் வசிக்கும் எவரையும் அழைத்துச் சாட்சியம் பெற லாம் விரும்பிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு அவர்களைப் பணிக்கலாம்; இலங்கையிலுள்ள எந்த ஒரு வங்கியிலிருந்தும், இறைவரி ஆணையாளரிடமிருந்தும், தொலைப் போக்குவரத்து அதிகாரிகளிகளிடமிருந்தும் வேண்டிய தகவல்களைப் பெறலாம்; குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்ட திகாரி மூலமும், பொலிஸ் அதிகாரிகள் மூலமும் சாட்சியம் தரக்கூடியவர்கள் இலங்கையி லிருந்து வெளியேறுவதைத் தடுக்கலாம். குற்றமற்றவர்களாகக் காணப்படுவோரை விடுதலைசெய்யவும், குற்றவாளிகளாக நிரூ பிக்கப்பட்டவர்களைத் தண்டிக்கவும் கமிஷனுக்கு அதிகாரமுண்டு. அதன் தண்டனை விதிப்பு அதி கா ர ம் உயர்நீதிமன்றத்தினது போன்றதாகும் ; ஆனல் மரணதண்டனையை விதிக்கமுடியாது. அதற்குப் பதிலாக ஆயுட்கால காவல்தண்டனையை விதிக்க லாம். கமிஷனின் தீர்ப்பு இறுதியானதும் முடிவானதும் ஆகும் ; அதை வேறெந்த நீதிமன்றம் முன்பும் ஆட்சேபிக்கமுடியாது.
பாலன தீர்ப்புரிமை மன்றங்கள் அல்லது நியாய சபைகள் : இவைகள் பாராளுமன்றச் சட்டங்களினல் வரவர அதிகமாக அமைக்கப்படுகின்றன. இன்றைய அரசுகள் சிக்க

س-- 357 -س--
லான பரந்த பல கடமைகளை விரைவாகச் செயற்படுத்தவேண்டி யுள்ளன ; சமூக பொருளாதாரச் சட்டங்களை அமுல் செய்யும் போது எழும் உரிமை, கடமை பற்றிய பிரச்சினைகளைக் கால தாமதமின்றியும் அதிக செலவின்றியும் தீர்த்துவைக்கக்கூடிய விசேட தீர்ப்புரிமை மன்றங்கள் அமைப்பது தவிர்க்கமுடியாத தாய்விட்டது. சட்டம் வகுத்த முறைமையைத் தழுவிச், சட்ட ஆட்சியை நிலைநாட்டும் சாதாரண நீதிமன்றங்களால் தேவைக் கேற்றவாறு அரசாங்கக் கொள்கையை மனதில் வைத்து இயங்கு வதிற் சிரமமுண்டு. எனவே, விசேட அறிவுடைய நடுவர்களையும் துரித நடைமுறைகளையுங் கொண்ட பாலன தீர்ப்புரிமை மன் றங்கள் ஆட்சியில் முக்கிய இடம்பெற்றுவிட்டன. உதாரணமாக இலங்கையில் : 1. முஸ்லிம் திருமண விவாக ரத்துச் சட்டம் காதிமாருக்குத் திருமணம் விவாக ரத்துச் சம்பந்தமான பல பிரச்சினைகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தைக் கொடுத்துள்ளது. காதிமார் தீர்ப்பிலிருந்து காதிமார் குழுமத் திற்கும், பின்னர் உச்சநீதிமன்றத்திற்கும் மேன்முறையீடு செய் யும் விடயங்களை வரையறுக்கும் விதிகளுமுண்டு. காதிமார் நிய மனம் பதவிநீக்கம் ஒழுக்கக்கட்டுப்பாடு ஆகியவற்றை 125-131 யாப்புவிதிகள் நிர்ணயிக்கின்றன. 2. 1950ஆம் ஆண்டு கைத் தொழிற் பிணக்குகள் சட்டத்தின் கீழ் கைத் தொழில் மன்றமும், அதன் 1957ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் கீழ் தொழில் நியாய சபைகளும் நிறுவப்படலாம், 1 ஜனதிபதி தயாரித்த பெயர்ப் பட்டியலில் இருந்து தொழிலமைச்சரினல் நியமிக்கப்பெற்ற ஒருவர் அல்லது மூவர் கொண்ட கைத்தொழில் மன்றத்தின் பிரதான கடமை, அமைச்சர் அனுப்பிய கைத்தொழிற் பிணக் கிற்கு நடுநிலைத் தீர்ப்புக் கொடுப்பதாகும். நடுவர்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பதவி வகிக்கலாம். கசற் அறிவித்தல் மூலம் அமைச்சர் தொழில் நியாய சபைகளை அமைக்கலாம்; ஒன்றில் ஒரு அங்கத்தவரே உண்டு. அவைகளின் கடமை தொழிலாளி அல்லது அவரின் சார்பில் ஒரு தொழிற்சங்கம் சமர்ப்பித்த சில பிணக்குகளைக் கேட்டுத் தீர்ப்பு வழங்குவதாகும். 3. தொழி லாளர் இழப்பீடு, கட்டளைச்சட்டம், உள்நாட்டு இறைவரிச் சட்டம், வாடகையை எல்லைக்குட்படுத்தும் சட்டம், நெற் காணிச் சட்டம, சொத்துக்களைக் கைப்பற்றும் சட்டங்கள், மருத்துவர் சட்டத்தரணிகள் போன்ருேளின் ஒழுக்கக் கட்டுப் பாட்டுச் சட்டங்கள், வேறு பல சட்டங்கள் ஆகியவற்றின் கீழ் பல்வேறு நோக்கங்களுக்காகப் பலவிதமாக அமைக்கப்பட்ட பாலன தீர்ப்புரிமை மன்றங்கள் இயங்குவதைக் காணலாம். மேற்
1. see, S. R. de Silva, "The Legal Framework of Industrial Relations in Ceylon 1973, ch. 1.7 & 18

Page 50
------- 358 سس۔
கூறிய மன்றங்கள் பெரும்பாலும் நீதிவலுவுடையன ; பரந்த, முக்கியம்வாய்ந்த அதிகாரங்களைக் கொண்டவை; அவைகள் நிர்வாகத்திற்குச் சார்பான, சட்ட ஆட்சிக்கு ஒவ்வாத ஹிவாட் பிரபு வருணித்த " புதிய வல்லாண்மை "" நிறுவனங்களென்று கட்டாயமாக முடிவுகட்டலாகாது. அது. அவற்றின் சுதந்திர அமைப்பையும், ஒருதலைசாயா நடைமுறையையும், அவைகள் சட்டத்தைமீறி நடக்கும்பொழுது மேன்முறையீடு செய்யும் வாய்ப்பையும் பொறுத்தது. இலங்கையின் நடுவர்கள் நியமன மும் ஒழுக்கக் கட்டுப்பாடும், சுதந்திர நீதிச்சேவை ஆணைக்குழுவி லிருந்து குடியரசுயாப்பில் அமைச்சரவைக்கு மாற்றப்பட்டுள்ள தென்று பொதுவாகக் கூறலாம் ; எல்லாவித நடுவர்களும் தமது தீர்ப்புக்குக் காரணம் காட்டவேண்டுமென்று சட்டம் வற்புறுத்த வில்லை ; நியாய சபைகளின் அமைப்பும் செ ய ல் மு  ைற யும் முறைப்படுத்தப்படுவதோடு, அவைகள் அனைத்தின் சட்டத்தை மீறிய நடவடிக்கைகளைத் திருத்தக்கூடிய பாலன மேன்முறை யீட்டு மன்றம் ஒன்றும் வேண்டற் பாலது.
இணக்கச் சபைகள் : பிணக்குகளுள்ள தரப்பினர்க் கிடையே வேற்றுமையைப் போக்குவதற்குப் பி ண க் கோடு தொடர்பற்றவரின் இடையீட்டு எத்தனத்தை இணக்கமென லாம். நடுவர் தீர்ப்பிலும் பார்க்க, மனமொத்து விட்டுக் கொடுப்பதனுல் ஏற்படும் இணக் கம் கூடிய நன்மை தரும்; பிணக்குகள் விரைவாகத் தீர்க்கப்படுவதோடு, அவைபற்றிப் பிரச்சினைகள் திரும்பவும் எழுவது குறையும், பல தரப்பினரும் பிணக்குகளைத் தீர்க்கும் செயல்முறையில் பங்குபற்றும் இணக்க வழி கூடிய ஜனநாயகத்தன்மை வாய்ந்தது. கைத்தொழில் துறையிலன்றிச், சிவில் குற்றவியல் துறைகளிலும் இணக்கத்தின் முக்கியத்துவம் இலங்கையில் சட்ட அங்கீகாரம் பெற்றுள்ளது. 1931 கைத்தொழிற் பிணக்குகள் இணக்கக் கட்டளைச்சட்டம், தொழிற் தகராறுகளைப் போ க் கித் தொழிற்துறையில் அமைதியை நிலைநாட்டும் பொறியகத்தையும், 1942 அத்தியா வசிய சேவைகள் (வேலைநிறுத்த, கதவடைப்புத் தவிர்ப்பு) சட்டம் , பிணக்குகளைக் கட்டாய நடுவர் தீர்ப்பிற்கு விடும் ஏற்பாட்டையும் அமைத்திருந்தன. இவைகளுக்குப் பதிலாக இன்று 1950 கைத்தொழிற் பிணக்குகள் சட்டம், தொழில் கொடுப்பவர்களுக்கும் தொழில் புரிபவர்க்கும் இடையில் எழும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு, வேறு வழிகளோடு இணக்க முறைக்கும் வழிவகுத்துள்ளது. அதன்படி தொழில் ஆணை யாளர் பிணக்குகள் ஏற்படக்கூடிய சூழ்நிலையிலும், பிணக்குகள் தோன்றிய பின்பும் பிரச்சினையை விசாரணைசெய்து இணக் கத்தை உருவாக்கும் எத்தனங்களை மேற்கொள்ளலாம், அல்லது

. جیسے ؛ 359 مسیحیے
இணக்கத்தை ஏற்படுத்து மாறு அலுவலருக்கு அதிகாரம் வழங் கலாம். விசாரணைக்கு வேண்டிய தகவல்களையும் ஆவணங்களையும் பெறும் உரிமை ஆணையாளருக்கும் அலுவலர்க்கும் உண்டு. விசாரணையின்போது சட்டத்தரணிகள் தோன்ற முடியாது. தொழில் இலாகாவின் இடையீட்டிற்கு ஆளான பிணக்குகளிற் பெரும்பாலானவை தீர்க்கப்பட்டுள்ளன.
மக்களிடையே, விசேடமாகக் கிராமவாசிகளிடையே எழுந்த சிவில் குற்றவியல் பிணக்குகளைப் பண்டைக் காலந்தொட்டுக் கிராமசபைகள் தீர்த்துவைத்தது வரலாருகும். ஆங்கிலேயர் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் கிராமசபைகளின் செல்வாக்குக் குறைந்தபோதும் றட்டே மாத்தயா போன்ருேரின் மத்தியஸ்தத் திற்கு மக்கள் கட்டுப்பட்டு நடந்த வழக்கத்தைக் காணலாம். பெரியோர் சொற்படி தமிழ் மக்களிடையே தோன்றும் சச்சர வுகள் இன்றும் ஓரளவுக்குச் சமரசம் காணுகின்றன. இந்தப் பின்னணியிலே, சிவில் பிண க்கு களை யும் சிறு குற்றவியல் சச்சரவுகளையும் இரு தரப்பினரும் ஒருங்கொத்து முடிவு காண உதவக்கூடிய இணக்கச் சபைகளை அமைக்கும் அதிகாரத்தை 1958 இணக்கச்சபைகள் சட்டம் அளித்தது. அதன்படி ஒவ் வொரு இணக்கச்சபையின் ஆட்சியெல்லைக்கும் 12 அங்கத்தவ ருக்குக் குறையாத இணக்கஞ் செய்வோர் ஆயத்தை நீதி யமைச்சர் நிறுவலாம். ஆயத்தில் இடம்பெறும் தகைமை வாய்ந் தோரைச் சம்பந்தப்பட்ட கிராமமுன்னேற்றச் சங்கம், கூட்டுற வுச் சங்கம், பிரிவு அரசிறைக் காரியாதிகாரி, உள்ளூராட்ஓ மன்றம் போன்ருேர் அமைச்சருக்குச் சிபார்சு செய்யலாம். ஆய அங்கத்தவர் மூன்ருண்டிற்குமேற் பதவி வகிக்க (Up9. L frg. அதற்குமுன் அவர்களில் எவரையேனும் அமைச்சர் பதவிநீக்கம் செய்யலாம். இணக்கஞ் செய்வோர் ஆயத்திலிருந்து அப் பகுதிக்குரிய இணக்கச்சபைகள் அமைக்கப்படும். அப்பகுதியைக் சார்ந்த ஆதனம் உடன்படிக்கை பற்றிய சிவில் பிணக்குகள், நீதிமன்றத்திற்குச் செல்லக்கூடிய வேறு பிணக்குகள், இணக்கச் சபைகள் சட்டத்தில் குறிக்கப்பட்ட சிறு குற்றவியல் சச்சரவு கள் ஆயத் தலைவரினல், அவர் விரும்பியபோதும் சம்பந்தப் பட்ட திறத்தினர் கேட்டுக்கொண்டபோதும் இணக்கச் சபைக ளின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்படும். பிணக்குகளோடும் குற்றவியல் நடவடிக்கைகளோடும் தொடர்புடையவர்களை இணக்கச்சபை வரவழைத்து, விசாரணைசெய்து, இணக்கமேற் படுத்த முயற்சிக்க வேண்டும. சபைமுன் சாட்சியமளிப்போர்க் குச், சாதாரண நீதிமன்றச் சாட்சிகளுக்குரிய பாதுகாப்புரிமைக ளுண்டு. இணக்கமேற்படினும், அது ஏற்பட்ட ஒரு மாதத் தற்குள் தரப்பினர் எவரும் உடன்பாட்டிலிருந்து விலகிக்கொள்ளலாம் : ஒரு மாதத்திற்குள் எவரும் விலகாவிடின், இணக்கச்சபை உடன்
g) = i = 12

Page 51
سے 360 مسست۔
போட்டை உரிய நியாயாதிக்கங் கொண்ட அப்பகுதியின் சாதா ரண நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கும்; அதன்பின் உடன் பாடு, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் சட்டரீதியான தீர்ப்பா கக் கணிக்கப்படும். இணக்கஞ் செய்வோர் ஆயம் நிறுவப்பட் டிருக்கும் பகுதியின் இணக்கச்சபையினுல் இணக்க எத்தனம் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இணக்கச் சபைகள்-சட்டம் குறிப்பிடும் பிணக்குகள், குற்றவியல் நடவடிக்கைகள் பற்றிச் சாதாரண நீதிமன்றங்களில் வழக்குத் தொடர முடியும். இணக் கச் சபைகள்-சட்டத்தில் சில திருத்தங்கள் வேண்டுமென்று 1971 சட்டக்கமிஷனும், அரசியல் தலையீடு, அளவுக்குமீறிய இணக்க நடவடிக்கைகளினல் ஏற்படும் வேலைப்பழு, நீதியமைச் சின் அசிரத்தை, தவிர்க்கப்பட வேண்டுமென்று ஆராய்ச்சியாள ரும் அபிப்பிராயந் தெரிவித்திருப்பினும், இணக்கச்சபைகளின் முயற்சிக்கு ஆளாகிய பிணக்குகளிலும் குற்றவியல் சச்சரவுகளி லும் சுமார் அரைவாசியை அச் சபைகள் தீர்த்து வைத்து, நீதி மன்ற வழக்காடலைக் குறைத்து, மக்களிடையே ஒற்றுமைப் பண்பை வளர்த்துள்ளது குறிப்பிடற்பாலது.
(4) குடியரசுயாப்பு ஏற்பாடுகள் : தேசிய அரசுப் பேரவை வேறுவகையில் ஏற்பாடு செய்தாலொழிய, யாப்பு ஆக்கப்பட்டபோது நிலவிய நீதிமன்றங்களும், விசேட தீர்ப் புரிமை மன்றங்களும், இணக்கச்சபைகளும், யாப்பு ஏற்பாடு களுக்கமையத் தொடர்ந்து பணியாற்றும் என்றும், அவை களின் நியாயாதிக்கமும் அதிகாரமும் யாப்பிலிருந்து பிறந்த தாகக் கொள்ளவேண்டுமென்றும் யாப்பு விதிக்கின்றது- 12 1/2. 1973 நீதிபரிபாலனச் சட்டங்கள்மூலம் தேசிய அரசுப் பேரவை வேறுவகையான பல ஏற்பாடுகளைச் செய்ததை மேலே பார்த் தோம். யாப்பு விதிகளுக்கமையத் தேசிய அரசுப்பேரவை வேறு நீதி நிறுவனங்களையும் தாபிக்கலாம் . அவைகளினதும் , நிலவும் நிறுவனங்களினதும் கடமைகள் பின் வருவனவாய் மாத்திரம் இருக்கலாம் : 1. நீதி நிர்வாகம் செய்தல் 3 2. கைத்தொழிற் பிணக்குகளையும் ஏனைய பிணக்குகளையும் விளங்கித் தீர்த்தல், அவற்றில் இணக்கம் ஏற்படுத்தல் 3 3. நீதிமுறையான, நீதி மருவிய முடிவுகளைச் செய்தல்-12 1/1, நீதிமன்ற மறுசீராய்வு இக்கடமைகளிற் சேர்க்கப்படாதது கவனித்தற்பாலது. தேசிய அரசுப் பேரவை வேறுவகையில் ஏற்பாடு செய்தாலொழிய, யாப்பு ஏற்பாடுகளுக்கமைய இப்போதுள்ள எழுத்திலான சட்டங்கள் நீதிமன்றங்களினதும், நிறுவனங்களினதும் நட வடிக்கை முறையை ஒழுங்குபடுத்தவேண்டும்- 12 1/4. நீதி மன்ற மொழிபற்றி யாப்பில் பொறிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் *iஆம் இயலிலும், புதிய யாப்பு நீதிமன்றத்தின் அமைப்பு, கடமை, அதிகாரம் பற்றிய ஏற்பாடுகள் இவ்வியலின் இறுதி யிலும் ஆராயப்படுகின்றன.

- 361 -
3. சோல்பரி யாப்பில் நீதித்துறைச் சுதந்திரம்
(1) சுதந்திரக் காப்பீடுகள் : வழக்குத் தீர்த்தல், தீர்ப்புவழிச்சட்டம் ஆக்கல், மேற்பார்வை செய்தல், நீதிமன்ற மறுசீராய்வு செய்தல் ஆகிய நான்கு கடமைகளையும் சோல் பரி யாப்புக் காலத்தில் நீதித்துறை செய்துவந்தது, அவற்றை நன்கு புரிந்து, மக்களுக்கிடையிலும், மக்களுக்கும் அரசாங்கத் திற்குமிடையிலும் சட்ட ஆட்சியின் கீழ்ச் சமமான நீதியைப் பரிபாலிப்பதற்கேற்ற சுதந்திரம் நீதிமன்றங்களுக்குப் பெரு மளவில் இருந்ததெனலாம். சுதந்திரத்தைப் பேணுவதற்கு வலுவேருக்கக் கொள்கையின் அம்சங்களான (அ) நிர்வாகி களும் சட்டமாக்குவோரும் நீதித்துறையில் அங்கம் வகிக் காமை, (ஆ) நிர்வாகிகளும் சட்டமாக்குவோரும் நீதிசெலுத்து வோர்மீது நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டுப்பாடு செய்யாமை நிலவுவதோடு, (இ) வேறு சில காப்பீடுகளும் இருத்தல் நன்றென்று கருதப்படுகிறது. நல்லாட்சிக்கு, வலுவே முக்கக் கொள்கையை நடைமுறைப்படுத்தும்போது சிறு தளர்ச் சிக்கு இடமளிக்கப்படுவது மனதிற் கொள்ளவேண்டியதாகும்;
(அ) அங்கத்துவம் : சோல்பரி யாப்பின் நிர்வாகத்துறை யில் இராணியார் மகாதேசாதிபதி அமைச்சர்கள் அரச அலுவலர் ஆகியோர் அங்கம் வகித்தனர். இராணி பார் நிர்வாகத் தலைவ ராகவும் நீதித் துறைத் தலைவராகவும் பெயரளவில் இருந்திருப் பினும், இவ்விணைப்பு நீதித்துறைச் சுதந்திரத்தைப் பாதிக்க வில்லை. கொள்கையளவில் நிர்வாக நிறுவனமாகிய கோமறைக் கழகத்தின் நீதிமுறைக்குழு, நடைமுறையில் மேன்முறையீட்டு நீதிமன்றமாக மாத்திரம் பணியாற்றியது. அமைச்சர்களும் அலுவலரும் நீதிபதிகளாக இருக்க முடியவில்லை. ஒரு கால் சிவில் சேவையாளர்களிற் சிலர் கீழ்நிலை நீதிபதிகளாக நியமனம் பெறும் முறையும், கீழ்நிலை நீதிமன்றங்களின் பாலனத் தொழிலை நிர்வாகத்தினர் கட்டுப்பாடு செய்யும் வழக்கமும் நிலவிற்று. இந்நிலைக்கு எதிராகப் 19ஆம் நூற்றண்டு தொடக் கம் ஏற்பட்ட பொதுக்கிளர்ச்சியின் பயணுய், வெவ்வேருன நிர்வாகச் சேவையும் நீதித்துறைச் சேவையும் படிப்படியாக ஏற்பட்டுவிட்டது. சோல்பரி யாப்பின் சட்டத்துறை இராணி யார், செனேற், பிரதிநிதிகள் சபை ஆகியவற்றைக் கொண்டது. இராணியார் சட்டத்துறை, நீதித்துறை ஆகிய இரண்டின் தலைவி யாகப் பெயரளவில் இருந்தாலும், இவ்விணைப்பும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கவில்லை. சட்டமன்றத்தினர் நீதிபதிக ளாகவோ, நீதிச்சேவை ஆணைக்குழு உறுப்பினராகவோ இருக்க முடியாது. சட்டரீதியான ஏற்பாடுகளைவிடப் பொதுசன அபிப்பிராயமும் மரபும் நீதிபதிகளை அரசியற்சார்பற்று நடக்கச்
செய்தன.

Page 52
بسسس 362 ست
(ஆ) கட்டுப்பாடு நீதிபதிகளை நியமிக்கும், இடம்மாற்றும், பதவிநீக்கும், அவர்களின் சம்பளத்தை மாற்றும், ஒழுக்கத்தைக் கட்டுப்பாடு செய்யும் அதிகாரங்கள் சட்டமாக்குவோர்க்கும் விசேடமாக நிர்வாகிகளுக்கும் இருந்தால், அவர்கள் நீதிபதிகளின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் அவ்வதிகாரங்களை உப யோகிக்க எத்தனிக்கலாம்; நிர்வாகிகள் சம்பந்தமான வழக்குகள் தனிப்பட்ட அல்லது உத்தியோக முறையில் நீதிமன்றங்கள் முன் வரும்பொழுது, நீதிபதிகள் ஒரு இக்கட்டான நிலைக்கு ஆளாகு வார்கள். எனவே உயர்நிலை நீதிபதிகள் நியமனம் பிரதமர் கையில் இருந்தது குறைகூறப்பட்டுள்ளது; இருந்தும் சில நாடு களில் அவர்களை நிர்வாகிகளோ சட்டமன்றஞ் சார்ந்த நிறுவ னங்களோ நியமிப்பினும், நீதித்துறைச் சுதந்திரம் அதிகம் தாக்கப்படவில்லை. இலங்கையின் உயர்நிலை நீதிபதிகளின் சம்பளம் பாராளுமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டாலும், நீதி பதியின் பதவிக்காலத்தில் குறைக்க முடியாதிருந்தது ; அத் தோடு பாராளுமன்றத்தின் கண்டனத்தைக் குறைப்பதற்கு அவர்கள் சம்பளம் திரட்டு நிதியிலிருந்து கொடுக்கப்பட்டது தன்னிலையான பிரேரணை மீதுதான் பாராளுமன்றம் ஏதாவது கண்டனத்தைத் தெரிவிக்கலாம். பிரதிநிதிகள்சபை செனேற் ஒவ்வொன்றின் தனித்தனியான வேலைநீக்க விளித்துரைமீதுதான் மகாதேசாதிபதி மேல்நிலை நீதிபதிகளைப் பதவிநீக்கம் செய்ய லாம் நடைமுறையில் அப்படி ஒருவரும் பதவியிலிருந்து விலக் கப்படவில்லை. மேல் நிலை நீதிபதிகள் சாதாரணமாக இலங்கை யின் தலைநகரிலிருந்தே கடமையாற்றினர். உச்ச நீதிமன்றத்தின் தொடக்கமுதலான குற்றவியல் விசாரணைகளை நடத்துவதற்கு நாடு மேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு, மத்திய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இங்குள்ள பருவ மன்றங்களுக்கு எந்த நீதியரசர் தலைமைதாங்க வேண்டும் என்பதைப் பிரதம நீதி யரசர் நிர்ணயித்தார்; கீழ்நிலை நீதிபதிகளின் நியமனம் இட மாற்றம் ஒழுக்கக் கட்டுப்பாடு ஆகியன பெருமளவு சுதந்திர முடைய நீதிச்சேவை ஆணைக்குழுவின் பொறுப்பில் இருந்தன. காதிமார், இலஞ்ச ஊழல் மன்ற நடுவர் போன்ற நீதிவலு பிர யோகிக்கும் நீதித்துறை அதிகாரிகள் " ஒருகால் நிர்வாகிகளி ஞல் நியமிக்கப்பட்டனர். இது வலுவேருக்கமுள்ள சோல்பரி யாப்பிற்கு முரணுனதென்றும், அவர்கள் நீதிச்சேவை ஆணைக் குழுவினுல் நியமிக்கப்படவேண்டு மென்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டரீதியற்ற முறையில் நீதிச்சேவை ஆணைக்குழு மீது யாராயிருப்பினும் செல்வாக்குப் பிரயோகிப்பது கிறிமினல் குற்றமாகும், லியனகே வழக்கில் நீதிவலு நீதித் துறைக்கு உரியதென்றும், விசாரணை செய்ய வேண்டிய நீதி யரசரை நீதியமைச்சர் தெரிவது நீதிவலுவைப் பிரயோகிப்பது

سس 363 سیسیسی.
போன்றதினுல் அதுபோன்ற நீதிவலுவை நிர்வாகமோ, பாராளு மன்றமோ பிரயோகிப்பது யாப்பை மீறுவதாகுமென்றும் நிலை நாட்டப்பட்டது. நீதி வலுவை நிர்வாகத்திற்கோ பாராளுமன்றத் திற்கோ வழங்கும் சட்டங்களைப் பாராளுமன்றம் ஆக்க முடியா திருந்தது.
(இ) வேறு காப்பீடுகள் : நீதி பரிபாலனக் கடமையைச் செய்யும்போது நீதிபதிக்குத் துணிவுடன் பேசும், செயலாற்றும் சுதந்திரம் வேண்டும் தமது பேச்சுக்கும், செயலுக்கும் சிவில் வழிக்குகளுக்கு ஆளாகலாம் என்ற நிலை இருப்பின் அவர்கள் ஆராய்ந்து மிகக் கவனமாக நடக்கவேண்டி ஏற்படும் ; இதனல் நியாயம் வழங்குவது கடினமாகும். இலங்கை நீதிபதிகள் நீதி மன்றத்திலிருந்து நீதிசெலுத்தும்போது அதிகாரத்தை மீரு து கெட்ட எண்ணத்துடனன்றி எது பேசினலும், செய்தாலும் அவர்களுக்கெதிராக வழக்குத்தொடர முடியாது. மறுபக்கத் திலே, தீயநோக்குடன் நீதிபரிபாலனத்தை ஊறுபடுத்தும் வகையிற் பிறர் பேசினல், ஒழுகினல், செயலாற்றினுல் அவை நீதிமன்றத்தை அவமதிப்புச் செய்த குற்றமாகக் கொள்ளப் படும் ,
(2) சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடிய ஏற்பாடுகள் : நீதித்தேவதை கொலுவீற்றிருக்கும் கோயிலைத் தாங்கும் தூண்க ளாக மேல்நிலை நீதிபதிகளின் பதவி சம்பளம் பற்றிய பாது காப்புக்களும், கீழ்நிலை நீதிபதிகளுக்காய சுதந்திர நீதிச்சேவை ஆணைக்குழுவும் அமைக்கப்பட்டிருந்தன. ஆனல், அந்தக் கோயிற் கட்டிடத்தில் சிறுசிறு குறைபாடுகள் இல்லாமலில்லை. மேல்நிலை நீதிபதிகளின் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடிய ஏற்பாடு களுக்கு உதாரணமாக 1. அவர் இளைப் பிரதமர் நியமித்தல், 2. மேன்முறையீட்டு நீதிபதிகளை 5 வருடச் சேவையின் பின் திரும்பவும் நியமிக்கக்கூடிய வாய்ப்பு, 3. உச்சநீதிமன்ற நீதி யரசர்களின் சேவைக்காலத்தை 62 வயதிற்குப்பின் ஒரு வருடம் பிரதமரால் நீட்டக்கூடிய ஏற்பாடு, 4. வேறு தகுதியான ஆள் இல்லாவிடின் பிரதம நீதியரசர் தற்காலிக மகா தேசாதிபதியாகக் கடமையாற்றும் விதி, 5. தான் விரும்பிய இரு உச்சநீதிமன்ற நீதியரசர்களை நீதிச்சேவை ஆணைக்குழு அங்கத் தவராக நியமிக்கும் பிரதமரின் தற்றுணிபு அதிகாரம் ஆகிய வற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய சட்ட ஏற்பாடுகள் சில வேளைகளில் சில நீதியரசர்களை நிர்வாகத்தின் நல்லெண் ணத்தை இழக்காது நடக்கத் தூண்டும் தன்மையனவென்று பொதுவான முறையில் சுருக்கிக் கூறலாம். நீதிச்சேவை ஆணைக் குழுவின் சுதந்திரத்தைப் பாதித்து, அதன் மூலம் கீழ்நிலை திபதிகளின் நியமனம், இடமாற்றம், ஒழுக்கக்கட்டுப்பாடு,

Page 53
ആ 364 -
வேலைநீக்கம் ஆகியவற்றில் நிர்வாகம் ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஏற்பாடுகளாவன : 1. ஆணைக்குழுவின் இரு அங்கத் தவர்களை நியமிக்கும் பிரதமரின் தற்றுணிபு அதிகாரம், 2. ஐந்து வருட சேவைக்காலத்தின் பின் அவர்கள் திரும்பவும் நியமனம் பெறக்கூடிய வாய்ப்பு, 3. அவர்களைக் காரணங்காட்டி ஆணைக் குழுவிலிருந்து நீக்கக்கூடிய பிரதமரின் அதிகாரம் இத்தகைய ஆணைக்குழு எக்காரணங்களுக்காகக் கீழ்நிலை நீதிபதிகளை வேலை நீக்கஞ் செய்யலாம் என்பது பற்றித் திட்டமாக வரையறுக்கும் விதிகள் இன்மையால், அதற்கு இவ்விடயத்தில் பரந்த திற் றுணிபு அதிகாரம் இருப்பதும் ஒரு குறைபாடென்று கூறலாம். மேற்காட்டிய சட்டரீதியான ஏற்பாடுகளைவிட, ஒய்வுபெற்ற நீதிபதிகளை அரசாங்கம் நியமிக்கும் ஆணைக்குழுக்கள் போன்ற வற்றிற்கு உயர்சன் மானம் கொடுத்து, அங்கத்தவர் அல்லது தலைவர்களாக ஆக்கும் வழக்கமும், சில நீதிபதிகளை அவர்களின் பதவிக்காலத்தில் அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை இழக்காது நடக்கத் தூண்டலாமென்று கூறுவாருமுளர்,
இருந்தும், இலங்கையின் நீதித்துறை அதன் நீண்ட வரலாற் றில் சுதந்திரத்துடன் இயங்கிச் சம நீதி வழங்கியுள்ளது. 1801இல் முடிக்குரிய பட்டயம் மூலம் தாபிக்கப்பட்ட உச்சநீதிமன்றம், அன்றிலிருந்து நிர்வாகத்தின் ஆதிக்கத்திற்கு ஆளாகாது செய லாற்றிய மரபே, நீதிபதிகள் சுதந்திரமாக நீதிபரிபாலனஞ் செய் வதற்கு உறுதுணையாய் இரு ந்து ன் ளது. உச்சநீதிமன்றம் 1804இல் இராணுவத் தளபதிக்கே தண்டனை விதித்தது 1824இல் ருெ சிற்றர் என்பவரையும், 1937இல் விறேஸ்கேடில் என்பவரையும் வலிமைமிக்க தேசாதிபதி நாட்டிலிருந்து வெளி யேற்றுவதைத் தடுத்தது 3 1915 கலகத்தின்போது அரசாங்கத் தின் பொய் வழக்குகளைப் பயமின்றி நடுநிலைநின்று விசாரணை நடத்தித் தள்ளுபடிசெய்தது ; 1982இல் குற்றவியல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் சில விதிகள், பாராளுமன்றத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவையென்ற காரணத்தால், அவைகள் செல்லுபடியாகாதவை என்று தீர்ப்பளித்தது. இவை போன்றவை உச்சநீதிமன்றத்தின் சுதந்திர வரலாற்றில் அழியா இடம் வகிக்கும் தன்மையன. இத்தகைய உச்சநீதி மன்றத்திற்குக் கீழ்நிலை நீதிமன்றங்களின் மேலுள்ள ' தடை யுத்தரவு, உரிமையேது-வினு, பத்திரங்களைச் சமர்ப்பிக்க இடப் படும் ஆணை ' போன்ற விதிமுறை ஆவணங்களை விடுக்கும் அதிகாரமும், புனராய்வு செய்தல், வழக்கை வேறு நீதிமன்றங் களுக்கு மாற்றல் போன்ற பொது மேற்பார்வை செய்யும் உரிமையும் இருந்தன ; இவற்றின் மூலம் கீழ்நிலை நீதிமன்றங்
களும் தவறி நடக்காது பார்த்துக்கொண்டன.

سیسے 365 سس۔
4. குடியரசு யாப்பில் நீதிபதிகள் நியமனமும்,
நீதிச்சேவை ஆலோசனைச் சபையும்.
சோல்பரி யாப்பிற்போல குடியரசு யாப்பு ஏற்பாட்டின்படி மேன் முறையீட்டுமன்ற நீதியரசர்களும், உச்சமன்ற நீதியரசர் களும், பருவ மன்ற ஆணையாளர்களும், வருங்காலத்தில் தேசிய அரசுப் பேரவையினுல் ஏற்படுத்தப்படும் இவர்களையொத்த நீதி பதிகளும், பிரதமர் சிபார்சின் பேரில் ஜனதிபதியால் நியமிக் கப்படவேண்டும். ஆணுல், 1973 நீதிபரிபாலனச்சட்டப்பிரகாரம் திருத்தியமைக்கப்பெற்ற, உச்சமன்றத்தின் நீதியரசர்களும் புதிய உயர்மன்ற நீதிபதிகளும் மாத்திரம் 1974 தொடக்கம் பிரதமர் சிபார்சின்பேரில் ஜனதிபதியால் நியமிக்கப்படுவார்கள். கீழ்நிலை நீதிபதிகள், நீதிவலு பிரயோகிக்கும் பாலன தீர்ப்புரிமை மன்றத்தினர் நியமனம், முன்பு நீதிச்சேவை ஆணைக்குழுவின் கடமைகளில் ஒன்ருக இருந்தது இவ்வாணைக்குழு புதிய யாப்பில் இடம்பெறவில்லை. கீழ்நிலை நீதிபதிகளினதும் நீதி நிருவகிக்கும் அரசஅலுவலரினதும் நியமனம் புதியதோர் " நீதிச் சேவை ஆலோசனைச்சபை" செய்யும் " விதப்புரையைப் பெற்ற பின்' அமைச்சரவையால் செய்யப்படவேண்டும் ' விதப்புரை யைப் பெற்ற பின் ' என்ற சொற்கள் கவனித்தற்குரியன: ஏனெனில், ஆலோசனைச்சபையின் விதப்புரையை அமைச்சரவை ஏற்கவேண்டுமென்பதில்லை. கீழ்நிலை நீதிபதிகள், நீதி நிருவகிக் கும் அசர அலுவலர் நியமனம் செய்வதற்காய சந்தர்ப்பம் எழும் போது, நீதிச்சேவை ஆலோசனைச்சபை, நியமனத்திற்கு விதப்புரை செய்யும் ஆட்களின் நிரலொன்றையும், விண்ணப்பஞ் செய்த வர்களின் நிரலொன்றையும் அமைச்சரவைக்கு அனுப்பவேண்டும் - 126/2, எத்தனை பேர் விதப்புரை நிரலில் இடம்பெறவேண்டு மென்பது வரையறுக்கப்படவில்லை ; இது அமைச்சரவையினுல் நிர்ணயிக்கப்படக்கூடிய ஒன்ருகும். விதப்புரை செய்யப்பட்ட நிரலிலிருந்து எந்த ஒருவரையும் அமைச்சரவை நியமிக்கலாம். எனவே, நியமனஞ் செய்வதில் அமைச்சரவைக்குத் தற்றுணிபு அதிகாரம் உண்டென்பது பெறப்படும். அத்தோடு, விதப்புரை நிரலைக் கடந்து, அதில் இடம்பெருத விண்ணப்பக்காரரையும் அமைச்சரவை நியமிக்கலாம். அப்படிச் செய்யுமிடத்து நியமனஞ் செய்யப்பட்ட ஆளின் பெயரையும், ஆலோசனைச்சபையின் விதப்புரையை ஏற்றுக்கொள்ளாததற்கான காரணத்தையும், விதப்புரை நிரலையும், அமைச்சரவை தேசிய அரசு பபேரவையில் சமர்ப்பித்தல் வேண்டும். இந்த ஏற்பாட்டின் கீழ் அரசியல்தனம் எந்த அளவிற்குக் கீழ்நிலை நீதிபதிகள் நியமனத்தில் இடம்பெறப் போகின்றதென்பதைக் காலந்தான் காட்டமுடியும், தகுதி யற்ற ஒருவர் நியமிக்கப்பட்டால் எதிர்த்திறம் கண்டனக்குரல்

Page 54
-س-366 س
எழுப்பலாம். ஆனல் அமைச்சரவையின் நடத்தையை ஆதரிக் கப் பேரவையில் பெரும்பான்மை இருப்பதினுல், எதிர்த்திறக் கண்டனம் அரசியல்தன நியமனத்திற்குப் போதிய தடையாய் இருக்கமுடியாது:
புதிய நீதிச்சேவை ஆலோசனைச்சபை விதப்புரை செய்வதில் தானும் அரசியல் தனத்திற்கு ஆளாகாதிருக்குமா ? இச்சபை 5 உறுப்பினரைக் கொண்டது : உச்சநீதிமன்றத்தின் பிரதம நீதி வரசர் அதன் தலைவர்; ஏனைய நால்வரும் பிரதமர் சிபார்சின் பேரில் ஜனதிபதியால் நியமிக்கப்பெறுவர் ; அதில் ஒருவர் உச்ச உயர், மாவட்ட, அல்லது நீதிவான் நீதிமன்ற நீதிபதி யாக இருக்கவேண்டும் இன்னுெருவர் தொழில் நியாயசபை யாகப் பணியாற்றும் அரச அலுவலராயிருக்கவேண்டும் மற்றும் இரு உறுப்பினரும் யாராயிருக்கவேண்டுமென்று யாப்பு வரை யறுக்காததினுல், தான் விரும் பியோரைப் பிரதமர் நியமிக்கலா மென் ருகிறது. முதலாவது நீதிச்சேவை ஆலோசனைச் சபைக்குச் சட்டத்துறை நாயகமும், நீதியமைச்சின் காரியதரிசியும் நியமிக் கப்பட்டுள்ளனர். அத்தோடு தலைவரைத் தவிர்ந்த ஏனைய 4 அங்கத்தவரும் 4 ஆண்டுகளுக்கு மாத்திரம் உறுப்பினரா யிருக்கலாம் : இவர்கள் திரும்பவும் நியமனம் பெறலாம் : 4 ஆண்டுகள் முடியுமுன்னரே காரணங்காட்டாது ஆலோசனைச் சபையிலிருந்து பிரதமரால் அகற்றப்படலாம். ஆலோசனைச் சபையின் தலைவராகிய பிரதம நீதியரசர் சந்தர்ப்பம் எழும் போது பதில் ஜனதிபதியாகக் கடமையாற்றுவதும் பிரதமர் கையிலுள்ளது. இவ்விதிகள் ஆலோசனைச்சபையின் சுதந்திரத் தைப் பாதிக்கவல்லன. அத்தோடு, பழைய நீதிச்சேவை ஆணைக் குழுமீது செல்வாக்குப் பிரயோகிக்க எத்தனிப்பது கிறிமினல் குற்றமென்று பார்த்தோம்; இத்தகைய விதி புதிய ஆலோ சனைச்சபையைப் பொறுத்த மட்டில் போடப்படவில்லை. எனவே அமைச்சர்கள் விருப்பம், ஆலோசனைச்சபை சமர்ப்பிக்கும் விதப் புரைப் பட்டியலில் பிரதிபலிக்கக்கூடிய சூழ்நிலை எழலா மென்பது பெறப்படும்
மேல்நிலை நீதிபதிகள் நியமனத்தில் பழைய யாப்புக் கொடுத்த அதிகாரத்தைப் பிரதமர்கள் துர்ப்பிரயோகம் செய்ய வில்லை ஆ6 ல் தொடர்ந்து நல்ல முறையில் நடப்பார்களென் பதற்கு உத்தரவாதம் கிடையாது. செனேற்றின் கட்டுப்பா டிருந்தும் அமெரிக்க ஜனதிபதிகள் தமது கொள்கைக்கு ஆதரவு தரக்கூடியவர்களையே உச்ச நீதிமன்றத்திற்குக் கூடுதலாக நிய மிக்க எத்தனித்தது கவனிக்கற்பாலது. இங்கிலாந்தில் அமைச்ச ரவை அங்கத்தவரான பிரபுக்கன் நாயகன் பெரும்பாலான உயர் நீதிபதிகளை நியமிக்கும் முறைமை எங்கள் பிரதமர் நிய மனஞ் செய்யும் முறைமைக்கு ஒப்பானதல்ல. அங்கு பிரபுக்கள்

مصمیمہ 367 حسی۔
நாயகன் அரசியல்வாதியென்ற முறையிலன்றி, உயர்நீதிமன்ற அங்கத்தவர் என்ற முறையிலும், நீதித்துறைத் தலைவர் என்ற முறையிலும் நியமனஞ் செய்கின்ருர் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பிலன்றித் தனிப்பட்டமுறையில் நியமனத்திற் குப் பொறுப்பேற்கின்ருர், பலகாலம் அவர் முன்னுேடிகள் நடந்துகொண்ட நல்மரபு அவருக்கு வழிகாட்டியாய் அமை கிறது. தேர்வுபெறுவதற்காக மக்கள் ஆதரவை அவர் நாட வேண்டியதுமில்லை. இருந்தும் இங்கிலாந்தினல் கூடச் சில அரசியல் நியமனங்கள் நடைபெறுவதைத் தடுக்க முடியவில்லை. எனவே, அரசியல் வாதியாகிய பிரதமர் கையில் உயர்நிலை நீதிபதிகள் நியமனமிருப்பது ஏகோபித்த ஆதரவைப் பெருத தொன் ருகும். இந்தியாவிற் போலச் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு மேல்நிலை நீதிமன்றத்தினரை அரசின் தலைவர் கலந்தாலோசித்து நியமனம் செய்யும் முறையைச் சிலர் விரும்புகின்றனர். கீழ்நிலை நீதிபதிகள் நியமனத்தைப் பொறுத்தமட்டில், முன்னிருந்த குறைபாடுகள் நீக்கப்பெற்ற முழுச் சுதந்திர நீதிச்சேவை ஆணைக்குழுவின் கையில் நியமனம் ஒப்படைக்கப்படுவது மேலான தென்று இச்சாரார் கருதுவர்.
சர்வாதிகார அரசுகளில் நீதிபதிகளின் முக்கிய கடமை சட்டத்தினுள் சுதந்திரத்தைப் பேணுவதல்ல; எது சமூகத்திற்கு உகந்ததென்று ஆட்சியாளர் கருதுகிருர்களோ அதை எய்த உதவுவதாகும். ஆட்சியில் இருப்போர் நலனைப் பேணுவதற்கு ஆக்கப்படும் சட்டங்களை மீறுவோர் விசேட நீதிமன்றங்கள் முன்பும், சிலசமயம் சாதாரண நீதிமன்றங்கள் முன்பும் விசாரணை செய்யப்படுகின்றனர். புதுச் சமூகநோக்கையும் ஆட்சியாளர் நலனையும் ஆதரிக்கும் மனப்பாங்குடையவர்களாக நீதிபதிகள் இருப்பதை ஆட்சியாளர் விரும்புவர். ஜேர்மன் நாசிச வாதி களும் இத்தாலிய பாசிச வாதிகளும் தங்களுடன் ஒத்துணர்ந்து நடக்காத நீதிபதிகளை வேலைநீக்கம் செய்து, தங்கள் விருப் பத்தை நிறைவேற்றக் கூடியவர்களை நீதிபதிகளாக நியமித் துள்ளார்கள். ரூசியாவில் நீதிபதிகள் நியமனம் அல்லது தெரிவு மீது கம்யூனிச கட்சி ஆதிக்கம் கொண்டுள்ளது. சோஷலிச ஜனநாயகமே இலங்கைக்கு உகந்ததென்பது முக்கூட்டணி ஆட்சியாளரின் கருத்தாகும். அந்த இலட்சியத்திற் கேற்றவாறு பிரதமரும், அமைச்சரவையும் தங்கள் நியமன அதிகாரத்தைப் பயன்படுத்தலாமென்று கூறுவாருமுளர். அத்தோடு, தகுதிக்கு முக்கியத்துவம் கொடாது, வேறு காரணங்களுக்காக நியமனம் நடைபெறலாமென்று இன மத மொழிச் சிறுபான்மையினர் கருதுகின்றனர்.
g). III - 13

Page 55
ܒܡܣܡܗ 368 ܚ=-
5. நீதிபதிகள் இடமாற்றமும், நீதியமைச்சர் தலையீடும்
கீழ்நிலை நீதிபதிகளினதும் நீதிநிருவகிக்கும் ஏனைய அரச அலுவலரினதும் இடம்ாற்றத்தை நீதிச்சேவை ஆலோசனைச் சபை செயற்படுத்தல் வேண்டும். இடமாற்றமென்பது சம்பள உயர்வை உட்படுத் தாத இடமாற்றமெனப் பொருள்படும். ஆலோசனைச்சபையின் இடமாற்றக் கட்டளைக்கெதிராக நீதி யமைச்சருக்கு, அமைச்சரவையால் தீர்மானிக்கப்படும் நட வடிக்கை முறைகளுக்கமைய, சம்பந்தப்பட்டோர் மேன்முறையீடு ஒருமுறை செய்யலாம். ஆலோசனைச்சபை, அமைச்சரவையின் உடன்பாட்டுடனும், விதிக்கப்படக்கூடிய நிபந்தனைகளுக்கமைய வும் ஆலோசனைச்சபைச் செயலாளருக்கு இடமாற்றம் சம்பந்த மான இடைநேர் விளைவான விடயங்களைக் கையாள்வதற்குத் தேவையான அதிகாரத்தைக் கையளிக்கலாம்: 6. நீதிபதிகள் ஒழுக்கக்கட்டுப்பாடும்,
நீதிச்சேவை ஒழுக்காற்றுச்சபையும்
உச்ச நீதிமன்றத்தினர் 83 வயது நிறைவேறும்வரையும், உயர் நீதிமன்றத்தினர் 61 வயது நிறைவேறும் வரையும் பதவி வகிக்கலாம். அவர்கள் "நன்னடத்தை யுடையவராய் இருக்கும் வரை பதவியில் தொடரமுடியும். தேசிய அரசுப் பேரவையின் வேண்டுகோள்மீது ஜனதிபதியால் அவர்கள் வேலையிலிருந்து அகற்றப்படலாம். இருகூடமன்றம் இலங்கையில் இயங்கிய பொழுது, கீழ், மேற் சபைகள் ஒவ்வொன்றின் வேலைநீக்க விளித்துரைமீது மேல்நிலை நீதிபதிகளை மகாதேசாதிபதி வேலை நீக்கம் செய்ய முடிந்தது. இம்முறை இங்கிலாந்தின் 1701 இணக்கச்சட்டத்தைத் தழுவியதாகும்; எதேச்சாதிகாரமாக நீதிபதிகளை மன்னன் வேலைநீக்கம் செய்ததைத் தடுப்பதற் காகவே, இரு சபைகளின் இணக்கத்தோடு தான் நீதிபதிகளை அகற்றமுடியுமென்று இணக்கச்சட்டம் கட்டுப்பாடு விதித்தது. இந்த ஏற்பாடு இங்கிலாந்து நீதிபதிகளுக்குப் பாதுகாப்பளிக்கப் போதுமானதாகும், அங்கு மேற்சபையிலுள்ள சட்டப் பிரபுக்கள் அரசியல் நோக்கைத் தவிர்த்து, நடுநில நின்று நீதிபதிகளின் ஒழுங்குப் பிரச்சினையை ஆராயுந் தன்மையினர். அத்தோடு குற்றஞ்சாட்டப்பட்ட நீதிபதி வேண்டுமெனில் தனது கட்சியை இரு சட்டமன்றங்கள் ஒவ்வொன்றிலும் விளக்கலாம். அரசியல் ரீதியாக இயங்கக்கூடிய இலங்கையின் தேசிய அரசுப் பேரவை யாகிய ஒருகூட சட்டமன்றத்திற்குச் சாதாரண பெரும்பான்மை வாக்குகளினுல் மேல்நிலை நீதிபதிகளை வேலைநீக்கஞ் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, நீதிபதிகள் 'ಸಿ:

سس۔ 369ء سے
பாதிக்கவல்லதென்று கருது வாருமுளர்; ஐக்கிய அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளிற்போல் மூன்றில் இரண்டிற்குக் குறையாத வாக்குகளினலன்றிச் சட்டமன்றம் நீதிபதிகளைப் பதவிநீக்கஞ் செய்யமுடியாத ஏற்பாட்டையாகுதல் செய்திருக்க
வேண்டுமென்று இச்சாரார் கருதுவர்.
கீழ்நிலை நீதிபதிகளின் ஒழுக்கக் கட்டுப்பாடும், வேலைநீக்க மும் சோல்பரி யாப்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவினுல் செய்யப் பட்டன. இன்று ஆணைக்குழுவிற்குப் பதிலாகப் பிரதம நீதி யரசரைத் தவிசாளராகவும், பிரதமரினுல் நியமிக்கப்பெறும் இரு உச்சமன்றத்தினரை அங்கத்தவராகவும் கொண்ட நீதிச் சேவை ஒழுக்காற்றுச்சபை ? இக்கடமைகளைச் செய்கின்றது: ஒழுக்காற்றுச் சபையுடஞன ஆலோசனையுடன், அமைச்ச ரவை கீழ்நிலை நீதிபதிகளின் நடத்தை விதிகளையும், ஒழுக்காற்று விசாரணை களை நடத்துவதற்கான நடவடிக்கைமுறை விதி களையும், ஒழுக்காற்றுச்சபையினது கடமைகளைப் புரிவதற்கான ஏற்பாடுகளையும் ஆக்கலாம், தீயொழுக்கத்திற்குக் குற்றவாளி யாகக் காணப்படும் கீழ்நிலை நீதிபதிகளும் நீதி நிருவகிக்கும் அரச அலுவலரும் பதவியிலிருந்து அகற்றப்படல்வேண்டும், ஒழுக் காற்றுச்சபை தன் வேலைநீக்க அதிகாரத்தைப் பிரயோகிக்கு மிடத்து, அதுபற்றிய அறிக்கையொன்றை நீதியமைச்சர் மூலம் அமைச்சரவைக்கு அனுப்பிவைத்தல்வேண்டும் ; அத்தகைய அறிக்கையின் பிரதியொன்று தேசிய அரசுப் பேரவைச் சபா நாயகருக்கு அனுப்பிவைக்கப்படுகல் வேண்டும். பழைய யாப்பில் காணுத ஏற்பாடொன்று புதியதில் சேர்க்கப்பட்டுள்ளது: அதன்படி கீழ்நிலை நீதிபதி அல்லது நீதி நிருவகிக்கும் அரச அலு வலர் எவரேனும், அவரின் தீயொழுக்கத்திற்காகத் தேசிய அரசுப் பேரவையின் வேண்டுகோள்மீது ஜனுதிபதியால் பதவி நீக்கம் செய்யப்படலாம். அதற்கான வேலைநீக்கப் பிரேரணை பேரவையின் நிகழ்ச்சிநிரலில் சேர்க்கப்படுமுன், நீதிபதிக்கெதி ரான குற்றச்சாட்டுகள் பற்றிய அறிக்கையொன்றை ஒழுக்காற் றுச் சபையிலிருந்து சபாநாயகர் பெற்றிருக்கவேண்டும். ஒழுக் காற்றுச் சபையின் முடிபு இறுதியான தாய், பேரவையின் விவா தத்திற்கு அப்பாற்பட்டதாய் இருக்கும்.
7. நீதிமன்ற மறுசீராய்வு
சோல்பரி யாப்பில், பாராளுமன்றம் ஆக்கிய சட்டம் யாப்பு விதிகளுக்கு முரணுக இருந்தால் அதைச் செல்லுபடியாகா தென்று கூறும் உரிமை இலங்கையின் சாதாரண நீதிமன்றங் களுக்கிருந்தது; அத்தோடு, நிர்வாகிகள் சட்டத்தை மீறுவதைத் தடுக்கவும், ஏதாவது கடமையைச் செய்யாதிருக்கும் அலுவலர்

Page 56
= 370 -
களை அதைச் செய்யுமாறு ஆணையிடவும் உரிமைகொண்டிருந்தன: மக்கள் விருப்பத்தைச் செயற்படுத்தும் தேசிய அரசுப் பேரவைக் குக் குறுக்கே வேறெந்த நிறுவனமும் இருக்கக்கூடாதென்பது முக்கூட்டணியினர் கருத்தாகும். நடுத்தரவகுப்பினர் ஆட்சியில், பிற்போக்கு மனப்பான்மையுடைய நீதிபதிகள் ஆளும் வகுப் பினர் நலனைப்பேணும் கருவியென்பது மாக்சீயம் உதாரண மொன்றை நீதியமைச்சர் யாப்பமை மன்றத்தில் தந்துள்ளார்3 நெற்காணிச் சட்டத்தின் கீழ், காணியிலிருந்து வெளியேற்றப் பட்ட குத்தகை விவசாயிகளின் உரிமைபற்றி விசாரணை செய்து, அவர்களுக்குரிய காணியைத் திருப்பிக் கொடுக்கும் அதிகாரம், விவசாயச்சேவை உதவி ஆணையாளர் கையிற் சட்டத்தால் விடப்பட்டிருந்தது; நீதிச்சேவை ஆணைக்குழுவினுல் நியமிக்கப் படாத விவசாயச்சேவை உதவி ஆணையாளர் நீதிவலுக்களைப் பயன்படுத்தமுடியாதென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது; நீதித்துறையின் இத்தகைய தலையீட்டு அதிகாரம் முன்னேற்ற மான அரசநடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்துள்ள தாகவும், அத்தடைப்பாடு அகற்றப்படுதல் நாட்டுநலனுக்கு உகந்ததென்றும் நீதியமைச்சர் வாதாடியுள்ளார்.
இக்கருத்திற்கு எதிராக, மக்களின் நீதிவலு மக்களால்
ஏற்படுத்தப்படும் நீதிபதிகள்மூலம் செயற்படுவது மேலான தென்று இன்னுெருசாரார் வாதாடுவர். இங்கிலாந்தில் பாராளு மன்றம் கட்டுப்பாடற்ற அதிகாரங் கொண்டிருப்பதைப் பின் பற்றி இலங்கை நடக்கக்கூடாது; அங்கு பாராளுமன்ற இறைமை கொடுங்கோன்மையாக மாருததற்குக் காரணம் அந்நாட்டு மக்களின் அனுபவமும் அரசியலறிவுமாகும். இலங்கையில் இந் நிலை ஏற்படப் பல காலம் எடுக்கலாம். அத்தோடு தேசிய அரசுப் பேரவை மக்களை எப்பொழுதும் பிரதிபலிக்குமென்று கூற முடியாது. எனவே பேரவை ஒன்றினுல் மாத்திரமன்றிப் பல நிறுவனங்கள்மூலம் மக்களின் விருப்பம் செயற்படுவது புத்தி சாலித்தனமென்றும், யாப்பில் பொறிக்கப்பட்ட அடிப்படை நெறிகளைப் புறக்கணிக்கும் பேரவையை, யாப்பு ஏற்படுத்திய நீதிமன்றங்கள் தடுத்துநிறுத்தல் வரவேற்கத்தக்கதென்றும் இவர்கள் வாதாடுவர். " மனிதனின் நீண்டகாலப் போராட்டம், சட்டங்களாலாய அரசாங்கத்திற்குக்கீழ் வாழ்வதற்கேயன்றி, மனிதனுலாய அரசாங்கத்திற்குக் கட்டுப்படுவதற்கல்ல. சட்ட ஆட்சிக்குத் தன்னை அர்ப்பணித்த நீதிமுறை நமக்குச் சுதந்திர சமுதாயத்தை ஆக்கித்தரும் இன்றியமையாத பங்கைக் கொண் டுள்ளது. 1" வாத எதிர்வாதத்திற்கு ஆளாகிய இன்னுெரு விடய
1. தமிழர் - மகாநாடு அரசியலமைப்பு - அமைச்சருக்குச் சமர்ப்பித்த மகஜரில்
- ஈழநாடு 15-9-7Ꮅ , .
 
 
 
 

سس۔ 371 سس۔
மறுசீராய்வினுவில் ஏற்படக்கூடிய காலதாமதம் பற்றியதாகும் : காலங்கடந்து, ஒரு சட்டம் செல்லுபடியா காதென்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினல், அதற்கிடையில் அரசாங்கம் எடுத்த நட வடிக்கைகள் சட்டரீதியற்றனவாகிப் பாலனத்தைக் குழப்ப நிலைக்கு ஆளாக்குமென்று மறுசீராய்வை எதிர்ப்போர் வாதாடு வர் இதற்கு மாற்ருக, நியாயாதிக்கத்தைத் துரிதப்படுத்து வதே பிரச்சினைக்கேற்ற மருந்தென்றும், நீதிமன்றத்தின் அதிகா ரத்தை அகற்றுவது கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கலாமென் றும் மறுசாரார் கூறுவர்.
ஏனைய பிரச்சினைக்குரிய விடயங்கள்போல் இங்கும் முக்கூட் டணியினர் கருத்தே புதிய யாப்பில் திணிக்கப்பட்டது. இதற்கு முன்னுேடியாக அரசியல் நிர்வாகிகள் தனிமனிதன் உரிமை களைப் பறித்தால் அல்லது அவனுக்கெதிராகத் தவறிழைத் தால், அவன் இதுகாறும் நீதிமன்றங்களிலிருந்து நிவாரணம் பெற முடிந்தது : இந்த வாய்ப்பைத் தொடர்ந்து முற்ருக அனுபவிக்க முடியாதவாறு 1972 பொருள் விளக்க (திருத்தச்) சட்டம் செய்துள்ளது. இன்று புதிய யாப்பு 5/இ விதி 11 தேசிய அரசுப் பேரவை குடியரசின் மிக உயர் கருவியாகும். அது மக்களின் நீதித்துறை அதிகாரத்தை நீதிமன்றங்களின், வேறு நிறுவனங்களின் மூலமாகப் பிரயோகிக்கலாம் ' என வற்புறுத்து கிறது. நீதிமன்றங்கள் பயன்படுத்த முடியாத அதிகாரங்கள் என்னவென்று யாப்பே பல இடங்களில் விரிவுபடுத்துவதைக் காணலாம். உதாரணமாக 1. அரசகொள்கைக் கோட் பாடுகள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படாதவை, 2 ஜனதிபதி உத்தியோக அல்லது தனிப்பட்ட முறையில் செய்த அல்லது செய்யாதுவிட்ட எக்கருமத்தையிட்டும் அவருக்கெதிராக வழக்கு நடவடிக்கைகள் எதுவும் தொடரமுடியாது. 3 தேசிய அரசுப் பேரவையின் நடவடிக்கைகள், செய்யாது விடப்பட்டவைகள் நீதிமன்றங்களின் நியாயாதிக்கத்திற்கு அப்பாற்பட்டவை: 4. தேசிய அரசுப் பேரவையின் சட்டம் செல்லுபடியற்ற தன்மை பற்றி விசாரணைசெய்யவோ, கருத்துரை வெளியிடவோ நீதி மன்றத்திற்கு அதிகாரம் கிடையாது நகல்சட்டங்கள் யாப் பிற்கு முரண்பட்டதாவென்று முடிவுசெய்யும், அபிப்பிராயம் தெரிவிக்கும் உரிமை புதியதோர் யாப்பு நீதிமன்றத்திற்கு விடப் பட்டுள்ளது ; பாப்பு நீதிமன்றத்தின் முடிபு வேறெந்த நீதி மன்றங்களினது நியாயாதிக்கத்திற்கும் அ ப் பாற் பட்ட து 5. சட்டம் தேசிய அரசுப் பேரவையினல் முறைப்படி ஆக்கப் பட்டதென்ற சபாநாயகரின் அத்தாட்சி நீதிமன்ற ஆராய்விற்கு அப்பாற்பட்டது. 6. அரச அலுவலர் நியமனம், இடமாற்றம், ஒழுக்காற்று விடயம், வேலைநீக்கம் ஆகியவற்றில் நீதிமன்றங்கள் தலையிடமுடியாது 3

Page 57
= 372 -
8. குடியரசு யாப்பில் நீதித்துறைச் சுதந்திரம்
நீதிமன்றங்களுக்கு மறுக்கப்பட்ட அதிகாரங்களை மேற் பிரிவிலும், வழக்குத் தீர்த்தல், தீர்ப்புவழிச் சட்டமாக்கல், மேற் பார்வை செய்தல் போன்ற கடமைகளைப் புரிவதற்கு வழங்கப் பட்டுள்ள அதிகாரங்களை இரண்டாவது பிரிவிலும் விரிவாகப் பார்த்தோம் *1 வெவ்வேறு இயல்புகள் இணைந்த, மாற்றங் களுக்கு ஆளாகியுள்ள இலங்கையர் சமுதாயத்தில், விரிந்து செல் லும் ஆட்சியதிகாரங்களுக்கும், சட்டத்தின்கீழும் யாப்பின்கீழும் மக்களுக்குள்ள அடிப்படை உரிமைகளுக்கும் இடையே சமரசஞ் செய்யும் சின்னமாக நீதிமன்றங்களைக் கொள்வது நியாயமான தாகும். நீதிமன்றங்கள் தங்கள் அதிகாரத்திற்கும் நியாயாதிக் கத்திற்கும் உள்நின்று, சட்ட ஆட்சியின் அடிப்படையில் சமநீதி நெறியைத் தாங்கிநிற்கும் தூண்களாக, இயக்கம் சார்ந்த முறையில் கடமையைப் பயமின்றிப் புரியவேண்டியுள்ளது." 1 மரபு சார்ந்த வலுவேருக்கநெறி குடியரசுயாப்பில் இழையோட வில்லை என்பது முதலில் கவனிக் கற்பாலது. சோல்பரி யாப்பில், சட்டமன்றம் தலையிட முடியாதவாறு நீதிவலு நீதித்துறையின தாய் இருந்தது. " மக்கள் விருப்பத்தை விரைவில் செயற்படுத்து வதற்கு, நீதிவலுவைப் பிரயோகிக்கும் அதிகாரத்தைக் குடியரசு யாப்பு தேசிய அரசுப்பேரவைக்கு வழங்கியுள்ளது பேரவை அவ் வதிகாரத்தை நேரடியாகப் பிரயோகிக்காது, நீதிமன்றங்கள் மூலமும், சட்டம் அமைக்கும் நிறுவனங்கள் மூலமும் பிரயோகிக் கும். யாப்பும் பேரவையும் கொடுக்கும் நீதிவலுவை நடுநிலை நின்று செயற்படுத்த, எந்த அளவிற்கு நீதித்துறைச் சுதந்திரம் பேணப்பட்டுள்ளதென்பதைச், சோல்பரி யாப்பு நீதித்துறைச் சுதந்திரத்தோடு ஒப்பிடும் வகையில் சுருக்கிக் குறிப்பிடலாம்.
(1) அங்கத்துவம் : நீதித் துறை யினர் சட்டமன்றத்தின ராகவோ நிர்வாகிகளாகவோ இருக்கமுடியாது; இது வலுவே முக்கத்தின் ஒரு அம்சம் மறுதுறைகள் செலுத்தக்கூடிய செல் வாக்கைத் தடுக்க உதவும், முத்துறைகளுடன் இணைப்புப் பெற் றிருந்த இராணியார் குடியரசு யாப்பில் இடம்பெறவில்லை. ஜனதிபதிக்கு நீதித்துறையுடன் தொடர்பிருப்பினும் அதன் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடிய அளவில் அவருக்கு அதிகார மில்லை. நீதிச்சேவை ஆலோசனைச்சபை கீழ்நிலை நீதிவலு செலுத்து வோரின் நியமனம் இடமாற்றம் பற்றிச் சிறு அதிகாரங்
1. J. A. ... Co oray, Constitutiona and Ådministrative Law of Sri-Lanka,
2. மாவட்ட நீதிபதிகள், நீதிவான் மன்றத்தினர், காதிமார், தொழில் நியாய சபைகள், நீதிவலுசெலுத்தும் வேறு அரச அலுவலர்.

- 373 -
கொண்டது; இதில் இரு வெளியார் இடம்பெறலாம் : உதா ரணமாக முதலாவது ஆலோசனைச்சபையில் சட்டத்துறை நாயகமும் நீதியமைச்சின் செயலாளரும் நியமிக் இப்பட்டுள்ள னர்; எனவே அவர்கள்மூலம் அரசியலாரின் கருத்துச் சபைக் குச் செறிய இடமுண்டு. நீதிச்சேவை ஒழுக்காற்றுச் சபையில் உச்சமன்ற நீதியரசர்களே அங்கம் வகிக்கலாம். (2) உயர்நிலை நீதிபதிகள் நியமனம் : முன்புபோல் பிரதமரினல் நியமனம் : பிரதமர் ஒரு அரசியல் வாதி சுதந்திரத்தைப் பாதிக்கும்வகை யில் அதிகாரம் துர்ப்பிரயோகம் செய்யப்படவில்லை. ஆனல் இப்போக்குத் தொடருமென்பதற்கு உத்தரவாதங்கிடையாது: பிரதம நீதியரசரைப் பதில் ஜனதிபதியாக நியமிக்காதிருக்கும் பிரதமர் தற்றுணிபு அதிகாரம் தொடர்வதும், தான் விரும்பிய இரு உச்சமன்ற நீதியரசர்களை நீதிச்சேவை ஒழுக்காற்றுச் சபைக்கு நியமிக்கும் பிரதமரின் உரிமையும், உச்சமன்றத்தினர் சுதந்திரத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடும் தன்மையன. (3) நீதி வலு பிரயோகிக்கும் ஏனையோர் நியமனம் : இவர்களை நியமிக்கு மாறு அமைச்சரவைக்கு விதப் பு ைர செய்வது நீதிச்சேவை ஆலோசனைச்சபையாகும் : இச்சபையின், பிரதம நீதியரசரைத் தவிர்ந்த ஏனைய நாலு அங்கத்தவர்களைப் பிரதமர் சில நிபந் தனைகளுக்கமைந்து, தான் விரும்பியோரை நியமிக்கும் உரிமை யும், நாலு ஆண்டுகளுக்குப்பின் அவர்களை மீண்டும் அங்கத்தவர் களாக நியமிக்கும் உரிமையும், நாலு ஆண்டுகளுக்குமுன்பே பிரதமர் விரும்பியவாறு காரணங் காட்டாமலே அவர்களின் அங்கத்துவத்தை அகற்றும் அதிகாரமும், நீதிச்சேவை ஆலோ சனைச் சபையின் சுதந்திரத்தைப் பாதிக்கவல்லன சபையின் ஆலோசனையை அமைச்சரவை கட்டாயமாக ஏற்கவேண்டு
1. 1974 தொடக்கம் உச்சமன்ற நீதியரசர்களையும் உயர்மன்ற நீதிபதிகளை யும் கொண்டது. யாப்பு ஆக்கப்பட்ட காலத்திருந்த பருவமன்ற ஆணையாளர் களும் மேன்முறையீட்டுமன்ற நீதியரசர்களும் தற்போது இல்லை. பருவமன்ற ஆணையாளர்கள் தற்காலிகமாகப் பதவி வகித்தவர்கள்; உச்சமன்றத்தினராக வர விரும்புவோர், வேறு பதவிகளைப்பெற விரும்புவோர் நிர்வாகத்தின் நல்லெண்ணத்தைப் பெறுமாறு நடக்கவேண்டுமென்று சிலர் குறைகூறினர். மேன்முறையீட்டு மன்றத்தினர் 5 வருடச் சேவையின் பின் மீண்டும் பிரதம ரால் நியமனம்பெறும் வாய்ப்பு, அவர்களின் சுதந்திரத்தைப் பாதிக்கக் கூடு மென்ற அபிப்பிராயம் நிலவியுள்ளது ; அத்தோடு அரசின் தலைவர் மேன் முறையீட்டு மன்றத்திடமிருந்து தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்டப் பிரச்சினை பற்றி அதன் அபிப்பிராயத்தைப்பெற 1971 மேன் முறையீட்டு மன்றச் சட்டம் அனுமதித்தது அதன் சுதந்திரத்தைப் பாதிக்குமா ? என்பது பற்றிக் கருத்துவேறுபாடு நிலவிற்று ; கற்பனை வழக்குகளில் தீர்ப்புக்கூறுதல் நீதிபதிகள் சுதந்திரத்தைப் பாதிக்குமென்று இங்கிலாந்து நீதிபதிகள் மூன்று நூற்ருணடுகளாகக் கருதி நடக்கக், கனடாவும், இந்தியாவும் அப்படிக் கருதுவ தில்லை என்பது நோக்கற்பாலது.

Page 58
--سے = 374 سس۔
மென்பதில்லை ஆலோசனையை மீறி அரசியலாரைக் கொண்ட அமைச்சரவை நியமனஞ் செய்யின், தகாத நியமனத்திற் கெதிராகப் போடப்பட்டுள்ள பாதுகாப்புப் போதுமானதல்ல என்று பார் த் தோம். (4) இடமாற்றம் : கீழ்நிலை நீதிவலு பிரயோகிப்போரை இடமாற்றஞ் செய்யும் நீதிச்சேவை ஆலோ சனைச் சபையின் உத்தரவுக்கெதிராக அரசியல் வாதியாகிய நீதி யமைச்சர் ஒருமுறை தலையிடலாம். முன்னைய யாப்பில் நீதிச் சேவை ஆணைக்குழுவின் இடமாற்றக் கட்டளை இறுதியானது. (5) சம்பளம் : முன்புபோல் மேல்நிலை நீதிபதிகளின் சம்பளம் பாராளுமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டு, நீதிபதியின் பதவிக் காலத்தில் குறைக்கப்படாத பாதுகாப்புப் பெற்றுத் திரட்டு நிதியிலிருந்து கொடுபடுகின்றது. முன்புபோல் தனிநிலையான பிரேரணை மீதுதான் நீதிவலு பிரயோகிப்போர் எவரையும் பாராளுமன்றத்தினர் கண்டிக்கமுடியும் அவர்களின் நடத் தையை, குணத்தை சார்ந்த கேள்விகள் கேட்கப்படுவதை சட்டமன்றத்தின் நிரந்தர விதிகள் தடைசெய்கின்றன. (6) மேல் நிலை நீதிபதிகளின் வேலைநீக்கம்: நீதித்துறைச் சுதந்திரத்தைப் பேணும் பிரதான காரணி சேவைப்பாதுகாப்பாகும். ? நல் நடததையுடையராயிருக்கும் " உயர்மன்ற நீதிபதிகள் 61 வயது வரைக்கும், உச்சமன்ற நீதியரசர்கள் 63 வயது வரைக்கும் பதவி வகிக்கலாம் : முன்னை ய் யாப்பில் உச்ச மன்றத்தினரின் சேவைக்காலத்தை 62 வயதுக்குப்பின் பிரதமர் விரும்பினுல் ஒரு வருடத்திற்கு நீட்டலாம் என்ற ஏற்பாடு புதிய யாப்பில் மாற்றப்பட்டது வரவேற்கப்படக்கூடியதாகும். முன்புபோல் பாராளுமன்றத்தின் வேலைநீக்க விளித்துரைமீது மாத்திரம் மேல்நிலை நீதிபதிகளை அரசின் தலைவர் பதவியிலிருந்து அகற்ற லாம் : இன்று பாராளுமன்றம் ஒருசபை கொண்டதென்பது நோக்கற்பாலது. அதன் வேலைநீக்க நடைமுறை, சட்டத்தால் வரையறுக்கப்படவில்லை. (7) கீழ்நிலை நீதிவலு பிரயோகிப்போரின் வேலைநீக்கம்: சோல்பரி யாப்பில் நீதிச்சேவை ஆணைக்குழு மாத்திரம் ஒழுக்கக் கட்டுப்பாடும் வேலைநீக்கமும் செய்யலாம் : இன்று அவற்றை நீதிச்சேவை ஆலோசனை ச் சபை சில நியதிகளுக்கமைந்து செய்வதோடு, தேசிய அரசுப் பேரவையின் சில நிபந்தனை க்குள் அமைந்த விளித்துரைமீது ஜனுதி பதியும் வேலைநீக்கஞ் செய்யலாம். (8) சட்டரீதியற்ற தலையீடு: சட்ட அதிகாரம் இல்லாது நீதியை நிருவகிக்கும் ஆட்களின் கடமைகளில் த லை யிடுகின்ற அல்லது தலையிட எத்தனிக் கின்ற எவரும் ஒராண்டு மறியல், அபராதம் அல்லது இரண் டிற்கும் ஆளாகவேண்டும். முன்னைய யாப்பில் இத்தகைய ஏற்பாடு நீதிச் சேவை ஆணை க் குழு வின் கடமைகளைப் பற்றி மாத்திரம் வெளிப்படையாகப் பொறிக்கப்பட்டிருந்தது.

- 375 -
(9) பாலனத் தீர்ப்புகள் : சாதாரண நீதிமன்றங்களுக்குப் புறம் பாகத், தனிமனித உரிமைகள் நிர்வாகத்தினதும் பாலன தீர்ப் புரிமை மன்றங்களினதும் முடிவிற்கு அதிகமாக ஆளாகியுள்ளன. இவைகளின் முடிவுகளில் நீதிமன்றங்கள் எந்த அளவிற்குத் தலையிட முடியாதுள்ளதோ, அந்த அளவிற்கு நீதித்துறைச் சுதந் திரம் நடைமுறையிற் குறைகின்றது. அமைச்சர்களின், பாலனத் தீர்ப்புரிமைமன்றங்களின் பணிப்புகள் இறுதியானது, நீதிமன்றங் களின் தலையீட்டிற்கு அப்பாற்பட்டது என்று விதிக்கும் சட்டங் களைப் பாராளுமன்றம் ஆக்கும் பான்மையைக் காணலாம் : ஆனல், அத்தகைய கட்டுப்பாடிருந்தும், அமைச்சர்கள், தீர்ப் புரிமை மன்றங்கள், சட்டம் கொடுத்த அதிகாரத்தைக் கடந்து, இயற்கை நீதிநெறிகளைப் புறக்கணித்து எடுக்கும் முடிபுகளிற் தலையிடும் உரிமை உச்சநீதி மன்றத்திற்கு உண்டென்று 1972 பொருள் விளக்க (திருத்தச்) சட்டம் வரையறுக்கின்றது. சட்டம் வழங்கும் அதிகாரம் பரந்ததாயின் நீதிமன்றத் தலையீடு அற்றுப்போகும் என்பது பெறப்படும். (10) வேறு ஏற்பாடுகள்: முன்புபோல், நீதிபரிபாலனஞ் செய்யும்போது எழும நீதிபதி களின் பேச்சும் செயலும் சிவில் வழக்குகளுக்கு அப்பாற்பட் டுள்ளதும், நீதிமன்ற அவமதிப்புக்கான குற்ற ஏற்பாடு தொடர் வதும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பேணும் தன்மையன.
மறைந்த பிரதமர் திரு. பண்டாரநாயக்கா அவர்கள் நீதித் துறைச் சுதந்திரம் பற்றித் தீர்க்கமான கருத்துக் கொண்டவர். * சனநாயகத்தின் மைய அம்சங்களில் ஒன்று நீதித்துறைச் சுதந்திரமாகும். மனிதனுக்கும் மனிதனுக்குமிடையில் மாத்திர மன்றி, குடிமகனுக்கும் அரசிற்குமிடையிற் சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் நீதிவழுவா நெறிமுறை செய்வதில் கட்டுப்பாடுகளின்மையே நீதித்துறைச் சுதந்திரமெனலாம். நிர் வாகம் நீதித்துறையில் தலையிடுதல் அல்லது தலையிடுவதுபோல் தோற்றமளிப்பதுதானும் சனநாயகத்தின் முக்கிய அம்சமாகிய நீதிததுறைச் சுதந்திரத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது ?? என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த வழிகாட்டுதலுக்கேற்பப் புது ஏற்பாடுகள் அமையவில்லை எனறு கூறுவாருமுளர் : சுதந்திரத் திற்குப் பாதகமாய் உபயோகிக்கக்கூடிய பழைய ஏற்பாடுகள் சிறு மாற்றங்களுடன் தொடருகின்றன; அத்தோடு சுதந்திரத் தைப் பாதிக்கக்கூடிய புது நிறுவனங்களும் ஏற்பாடுசஞம் இடம் பெறுகின்றன ; இவற்றுள் முக்கியமானது நிர்வாகிகளின நியமன அதிகாரமென்பர். துரித சமூக மாற்றங்களுக்கு அவைகள் அவசிய மென்றும், ஆட்சியாளர் நடைமுறையில் நல்லபடியாக நடக்கலா மென்றும் பதில் எழலாம் : அப்படியாயினும் " நிர்வாகம் தலையிடுவதுபோல் தோற்றமளிப்பதுதானும் தவிர்க்கப்பட வேண்டும் ' என்ற சுதந்திரக்கட்சி தாபகர் காட்டிய இலட்சியம் தகர்ந்துவிடுகின்றது : நீதிமன்றங்களின் மறுசீராய்வு அதிகாரம் அகற்றப்பட்டதும் பலத்த ஆட்சேபத்திற்கு ஆளாகிய ஒன்ருகும்,
இ, 11-14

Page 59
سے 376 ہے۔
9. யாப்பு நீதிமன்றம்
அமைப்பு: சாதாரண நீதிமன்றங்களின் மறுசீராய்வு அதிகாரம் அகற்றப்பட்டதையும் அது பற்றியெழுந்த வாதப் பிரதி வாதங்களையும் இயல் xi/7ல் பார்த்தோம். குடியரசு யாப்பு புதிய நிறுவனமாகிய யாப்பு நீதிமன்றத்தை நிறுவி, அதற்குரிய கடமையையும் கொடுத்துள்ளது. இந்த நீதிமன்றம் ஜனதிபதியால் நியமிக்கப்படும் ஐந்து உறுப் பினர் களை க் கொண்டது. முன்னர் ராஜினுமாச் செய்யாவிடத்து, உறுப்பினர் ஒவ்வொருவரும் 4 ஆண்டுகள் தொடர்ந்து பதவிவகிப்பர். மன்ற அங்கத்தவர் நியமிக்கப்படுமுன் அவர்கள் ஊதியம் தேசிய அரசுப் பேரவையினல் நிர்ணயிக்கப்படும். தற்போது உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குக் கிடைக்கும் ஊதியம் யாப்புமன்ற உறுப்பின ருக்குக் கொடுக்கப்படவேண்டு மென்று பேரவை தீர்மானித் துள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர், யாப்புமன்ற உறுப்பின ராகவும் தியமிக்கப்பட்டால் அவருக்கு வேறு சம்பளம் கொடுக் கட்பட மாட்டாது ; ஒய்வுச் சம்பளம் பெறுவோராயின், அரசாங்கம் ஒய்வுபெற்ருேரைத் திரும்பவும் வேலைக்கமர்த்தும் சம்பளத் திட்டப்படி ஊதியம் பெறுவர், யாப்பு நீதிமன்றத் தின் காலம் முடியும்வரை நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை மாற்ற முடியாததோடு, அது திரட்டு நிதியிலிருந்தும் கொடுபடல் வேண்டும். இவை நீதிமன்றத்தின் சுதந்திரத்தைப் பேணும் ஏற்பாடுகளாகும். ஆனல் உறுப்பினர் திரும்பவும் நியமிக்கப் படுவதைத் தடுக்கும் விதி இல்லாமை மன்றத்தின் சுதந்திரத்தை ஒரளவு பாதிக்கக்கூடுமென்ற ஆட்சேபம் சில வட்டாரங்களில் எழுப்பப்பட்டுள்ளது. சட்ட பாரம்பரியத்திலிருந்து மாறுபட்ட, புது முறைகளின் கீழ் இயங்குகின்ற, புதிய நிறுவனத்தை ஐக்கிய தேசியக் கட்சி பெரிதும் விரும்பவில்லை. அத்தோடு போதியளவு வேலைகிடைக்கமாட்டாத யாப்பு நீதிமன்ற உறுப்பினர்களுக்கு அதிக ஊதியம் பொதுப்பணத்திலிருந்து செலவழிக்கப்படப் போகின்றதே என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை மனதில் வைத்துப் போலும் முதல் நீதிமன்றத்திற்கு, நீதி யரசர்கள் ரி. எஸ். பேர்ணுன்டோ, வீ. சிவசுப்பிரமணியம், ஏச். டெஹெரகொட ஆகியோரையும் இளைப்பாறிய மாவட்ட நீதிபதி கே. டி. சில்வா, அரசியலமைப்புச் சட்ட அறிஞர் ஜே. எ. எல். கூறே அவர்களையும் பிரதமர் நியமனஞ் செய் திருந்தார்கள். பத்திரிகைப் பேரவை மசோதாவை முதலில் விசாரணை செய்த பேர்ணுன்டோ (தலைவர்), டெஹர கொட, கூறே ஆகியோரின் இடத்தை இன்று நீதியரசர் ஜயா பத்தி ரான அவர்களும் பருவமன்ற ஆணையாளர்கள் சி. வி. உடலகம, ரி. எ. டி. எஸ். விஜேசுந்தர ஆகியோரும் நிரப்பியுள்ளனர்.
கடமை : யாப்பு நீதிமன்றம் யாப்பு ஒதுக்கிய கடமை களைப் புரிதல் வேண்டும். மசோதாக்கள் தேசிய அரசுப் பேரவை யின் ஆராய்வுக்குட்பட்டுச் சட்டமாகுமுன், நீதிமன்றத்திற்கு
 
 
 

= 377 -
வரும் முறிகள் யாப்பு விதிகளுக்குள் அமைந்தனவா ? என்று தீர்மானிக்கும் அல்லது ஆலோசனை கூறும் கடமை அதற்கு உண்டு. அடிப்படை உரிமைகள் பற்றிய ஏற்பாடுகளை, வேறு யாப்பு விதிகளை மீறுகிறதென்று கருதப்படும் முறிகளும், யாப்பை மாற்றும் அல்லது அகற்றும் ஏற்பாடுகளுக்குள் அமையாதன வென்று கருதப்படும் முறிகளும், யாப்பு நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும். 'அது தானுகவே எந்த முறியையும் எடுத்து ஆராய முடியாது தேசிய அரசுப் பேரவை தன் சட்டவாக்கக் கடமையை எவ்வாறு செய்யவேண்டுமென்று கட்டுப்படுத்த
முடியாது : மசோதா சட்டமான பின் மறுசீராய்வு செய்ய முடியாது " - சபாநாயகர். எனவே நீதிமன்றத்தை யார் எவ்வாறு இயங்கவைக்கலாம் என்பது பற்றி இருவித ஏற்பாடுகள் உண்டு :- (i) தேசநலன் கருதி அவசரமானவை என்று
அமைச்சரவையினல் அத்தாட்சிப்படுத்திய முறிகள் பற்றி யவை, (i) ஏனைய முறிகள் பற்றியவை. அவசரமற்ற முறிகள் பேரவை நிகழ்ச்சி நிரலில் இடம் பெறுவதற்குக் குறைந்தது 7 நாட்களுக்குமுன் கசற்றில் வெளியிடப்படல்வேண்டும், அதன் பின் ஒரு மசோதா யாப்பிற்கு முரணுனதென்று.
(i) அம்மசோதா பேரவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்ற 7 நாட்களுக்குள், அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியற் கட்சி யின் பேரவையிலுள்ள தலைவர், அல்லது 20 பேரவை உறுப்பினருக்குக் குறையாதோர் சபாநாயகருக்கு அறி வித்தால், (i) நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்ற 7 நாட்களுக்குள் பிரசை எவரும் யாப்பு நீதிமன்றத்தின்முன் ஆட்சேபிக்க, அதை நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவிக்க,
(ii) சட்டத்துறை நாயகம் சபாநாயகருக்கு அறிவித்தால்,
(iv) சபாநாயகர் தானுகவே கருதினுல், சபாநாயகர் அந்த மசோதாவை யாப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அனுப்பி வைக்கவேண்டும். மேலுள்ள (i) ல் நீதிமன்ற ஆட்சேபத் தைச் சபாநாயகருக்கு அறிவித்தலின் நோக்கம், நீதி மன்றத்தின் தீர்ப்புக் கிடைக்கும்வரை பேரவை அம் முறிபற்றி மேல் நடவடிக்கைகளில் இறங்குவதைத் தடுப் பதற்காம் (ii) லும் (iv) லும் 7 நாட் தவணை விதிக்கப் படவில்லை; மூன்ருவது வாசிப்புவரை மசோதாவிற்குப் பேரவையில் திருத்தங்கள் கொண்டுவரலாம். திருத் தங்கள் யாப்பிற்கு முரணுனதென்று சட்டத்துறை நாயகமோ சபாநாயகரோ கருதுமிடத்துச் சபாநாயகர் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கோரமுடியும்,

Page 60
- 378 -
அவசர மசோதாக்கள் மேற்கூறிய ஏற்பாடுகளிலிருந்து விதி விலக்குப் பெற்றுள்ளன. அத்தகைய முறிகள் அனைத்தையும் சபாநாயகர் யாப்புநீதிமன்றத்தின் ஆலோசனை பெறுவதற் காக அனுப்பிவைப்பார். நீதிமன்றம், மசோதா யாப்புடன் ஒத்துப்போகின்றது அல்லது ஒத்துப்போகவில்லை என்பது பற்றிச் சந்தேகமுண்டு அல்லது இல்லை என்ற அறிவுரையைச் சபாநாயகருக்கு இயன்றளவு விரைவாக, மன்றம் அமர்ந்து 24 மணித்தியாலங்கள் முடிவுறுமுன் அனுப்பவேண்டும் அவசர மற்ற மசோதாக்கள் பற்றிய தீர்ப்பும் அதற்கான காரணங் களும் மன்றத்திற்கு அனுப்பப்பட்ட இரு கிழமைகளுக்குள் நீதிமன்றத்தினுல் சபாநாயகருக்கு அறிவிக்கப்படல்வேண்டும்? ஒருப்படாத யாப்பு நீதிமன்ற உறுப்பினர் தன் வேறுபாட்டிற் கான காரணங்களைத் தெரிவிக்கலாம். இவையும் பெரும் பான்மையினரின் முடிவுடனும் காரணங்களுடனும் சேர்த்து அனுப்பப்படல்வேண்டும். நீதிமன்றத்தின் முடிபு சபாநாயக ரைக் க ட் டு ப் படுத் தும் எல்லா நோக்கங்களுக்கும் முற் முனது வேறு நிறுவனங்களின் நியா யூாதிக்கத்திற்கு அப்பாற் பட்டது. அவசரமற்ற மசோதாக்கள் பற்றிய தீர்ப்புத் தரப் படும் வரை, அவைகள் பற்றித் தேசிய அரசுப் பேரவையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படலாகாது அவசர முறிகள் பற்றி நீதிமன்றத்தின் அறிவுரை பெறும் வரை அவைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலிற் சேர்க்கப்படலாகாது.
24 மணித்தியால, இரு கிழமைக் காலவரையறை பற்றிய ஏற்பாடுகள் தொடர்பாக இரு சட்டப் பிரச்சினைகள் எழுந் தன. (i) இத்தவணைகள் நெறிமுறைக் கோட்பாட்டுத் தன்மை பனவா ? அல்லது தவிர்க்கமுடியாத கட்டாயமான ஏற்படுகளா ? என்பது வாத எதிர்வாதங்களுக்கு ஆளாகியிருந்தது. பத்திரி கைப் பேரவை மசோதாவை முதலில் ஆராய்ந்த பேர்ணுன்டோ யாப்பு நீதிமன்றம், தனது முடிவைக் கட்டாயமாக இரு கிழமைக்குள் அனுப்பவேண்டியதில்லையென்று கருதி, அதன் பின்பும் ஆட்சேபனை மனுக்களைத் தொடர்ந்து விசாரணை செய்துகொண்டிருந்தது. யாப்பு விதிகளுக்குப் பயனுரைப்பது யாப்பு நீதிமன்றத்தின் தனியுரிமையென்றும் யாப்பு நீதிமன் றத்தில் வாதாடப்பட்டுள்ளது. பேரவை உறுப்பினரின், முக்கிய மாக அரசாங்கத் தரப்பினரின் பொது அபிப்பிராயம், இரு கிழமைகள் கட்டாயமான சட்ட நிபந்தனை என்பதாம். ஒழுங்குப் பிரச்சினை பற்றிய தமது தீர்ப்பில் இக்கருத்தையே சபாநாயகரும் ஏற்றுள்ளார்கள். பத்திரான நீதிமன்றமும் இதே அபிப்பிரா யத்தை வெளியிட்டு, அதைச் செயற்படுத்த நீதிமன்றத்தின் நடை முறைகளைச் சுருக்கித், தன் முடிபை இரு கிழமைக்குள் சபாநாயக ருக்கு அனுப்பிவைத்தது. (i) நீதிமன்றத்தின் முடிபு கிடைக்கும் வரை தேசிய அரசுப் பேரவை, முறிபற்றி வேறு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாதென்று சிலர் கருத, குறித்த தவணை

= 379 -
களுக்குள் நீதிமன்றம் தனது அபிப்பிராயத்தைத் தெரிவிக்க வேண்டுமென்று யாப்பு விதிகள் மறுபுறம் கூறுவதோடு நின்று விடுகின்றன. குறிப்பிட்ட தவணைகளுக்குள் நீதிமன்றம் தன் அபிப் பிராயத்தைத் தராவிட்டால் என்னுவது? யாப்பு விதிகளும் யாப்பமை மன்றமும் இதுபற்றி மெளனம் சாதித்துள்ளன. இதுபற்றிய விவாதத்தில் நீதி அமைச்சரும் அரசியலமைப்பு அமைச்சரும் தெரிவித்த கருத்தை ஏற்ற சபாநாயகர், குறிப் பிட்ட தவணைகளுக்குள் நீதிமன்ற முடிவு கிடைக்காவிட்டால் தேசிய அரசுப் பேரவை சம்பந்தப்பட்ட முறைகள்பற்றிய நட வடிக்கைகளைத் தொடரலாமென்று தீர்ப்புக் கூறியுள்ளார். இத்தீர்ப்பின்படி சாதாரண பெரும்பான்மையுடன், ஆட்சேபிக் கப்பட்ட மசோதா சட்டமாக்கப்படலாமென்ருகிறது.
மசோதா யாப்பிற்கு முரண்பட்டதல்லவென்று யாப்பு நீதி மன்றம் முடிவுசெய்தால், அது பேரவையின் நடைமுறைகளுக்கு ஆளாகி, அவையின் சாதாரண பெரும்பான்மை வாக்குகளில்ை சட்டமாக்கப்படலாம். மசோதாவின் குறிப்பிட்ட ஒரு ஏற்பாடு அல்லது ஏற்பாடுகள் யாப்பிற்கு ஒவ்வாததென்று நீதிமன்றம் தீர்மானித்தால், சபாநாயகர் அந்த முடிவைப் பேரவையில் அறி விக்கும்போது, மசோதாவைச் சமர்ப்பித்தோர் முரண்பட்ட ஏற்பாடுகளைத் திருத்த அல்லது மசோதாவைக் கைவிட அல்லது திருத்தாமலே பேரவையின் நடவடிக்கைகளுக்கு விடத் தீர்மா னிக்கலாம்: பேரவைக்கு, யாப்பிற்கு ஒவ்வாத முறிகள்மீது மேற் கொண்டு சட்டவாக்க நடவடிக்கைகளைத் தொடரும் யாப்புறு உரிமையுண்டு ஆணுல் அத்தகைய மசோதா சட்டமாவதற்குப் பேரவை உறுப்பினர் தொகையில் மூன்றில் இரண்டிற்குக் குறை யாதோரின் ஆதரவைப் பெறல்வேண்டும். மூன்றில் இரண்டு வாக்கினுல்தானும் குறிப்பிட்ட ஒரு மசோதாவைப் பேரவை சட்டமாக்கும் உரிமையற்றதென்று, யாப்பு நீதிமன்றம் சபா நாயகருக்கு ஆலோசனைகூறும் அதிகாரமற்றதென்பது சபா நாயகரின் அபிப்பிராயமாகும்.
நடைமுறை : தேசிய அரசுப் பேரவைச் செயலாளரே யாப்பு நீதிமன்றத்தின் பதிவாளராயிருப்பர். அவரே நீதிமன்றத் தைக் கூட்டுதல் வேண்டும் நீதிமன்றம் காலத்திற்குக் காலம், யாப்பு ஏற்பாடுகளுக்கமைய அதன் நடவடிக்கை முறையைப் பொதுவில் ஒழுங்குபடுத்துவதற்கென நீதிமன்ற விதிகளை ஆக்க லாம். இவ்விதிகள் கசற்றில் வெளியிடப்படவேண்டும் ; வெளி யிட்ட திகதியன்று அல்லது விதியிற் குறிப்பிட்ட பிந்திய திகதி யன்று அவைகள் நடைமுறைக்கு வரும். வெளியிட்ட பின் வசதி யான அளவு விரைவாக, விதிகள் தேசிய அரசுப் பேரவையின் அங்கீகாரம் பெறவேண்டும் அங்கீகரிக்கப்படாத விதிகள் செய

Page 61
سے 380 ہے۔
லற்றனவாகிவிடும் ஆட்சேபிக்கப்பட்ட ஒரு மசோதா யாப்பு ஏற்பாடுகளுக்கு ஒவ்வாததா என்று தீர்மானிக்கும் சந்தர்ப்பம் எழும்போது அவ்விடயத்தை மூன்று நீதிமன்ற உறுப்பினரே தீர்மானிக்கவேண்டும். இம் மூவரும், தவிசாளரும் யாப்பு நீதி மன்றம் ஆக்கிய விதிகளுக்கிணங்கவே தெரியப்படல் வேண்டும். பத்திரிகை மசோதாவைப் பேர்ணுன்டோ நீதிமன்றம் முதலில் பரிசீலனை செய்தபொழுது, மேற்கூறிய விடயங்களுக்கான நீதி மன்ற விதிகள் கசற்றில் வெளியிடப்படவுமில்லை, பேரவையின் அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிக்கப்படவுமில்லை. எனவே அந்த மன்றம் யாப்பு விதிகளுக்கு ஏற்பத் தகுந்த முறையில் அமைந்து இயங்கவில்லையென்று சபாநாயகர் பேரவையில் ஒழுங்குப் பிரச்சினைமீது தீர்ப்புக்கூறியது கவனித்தற்பாலது. 1
யாப்பு நீதிமன்றத்தின் முடிபு பெரும்பான்மை வாக்குகளி ஞற் பெறப்படும். அமர்வில் சமுகமாயிருக்கும் உறுப்பினர் எவரும் வாக்களிக்காது விடலாகாது. எல்லா மன்ற நடவடிக் கைகளின்போதும் பொதுமக்கள் சமுகமாயிருக்கலாம். நீதி மன்றத்தில் எவ்விடயம் மீதும் வாதிக்கும் உரிமை சட்டத்துறைத் தலைமையதிபதிக்கு உண்டு. நீதிமன்றம் விரும்பினுல், யாரா யினும் அதன்முன் விவாதிப்பதற்கு அனுமதியளிக்கலாம் : தேவையானபோது சாட்சிகளைக் கட்டளைவிட்டழைத்து விளங் கலாம் ; ஆவணம் அல்லது வேறு பொருளைக் காண்பிக்குமாறு கட்டளையிடலாம். தேசிய அரசுப் பேரவை உறுப்பினர் எவரும் நீதிமன்றத்தின்முன் வழக்குரைஞராக அல்லது வழக்கறிஞ ராகத் தோன்றமுடியாது. யாப்பு நீதிமன்றத்தின் அதிகாரத் திற்கெதிராக அல்லது அதற்கு அவமரியாதையாகப் புரியப் பட்ட தவறு எதனையும் கவனத்தில் எடுத்துத் தவறு செய்தோ ரைச் சுருக்கமாய் விளங்கித் தண்டனை கொடுக்கலாம். அத் தண்டனை, நீதிமன்றம் தகுந்ததெனக் காணும் காலத்திற்குச் சாதாரண அல்லது கடூழியச் சிறையாகவோ, 5000/= ரூபா விற்கு மேற்படாத அபராதமாகவோ அல்லது இரண்டுமாகவோ இருக்கலாம்; இதுபற்றிய நீதிமன்றக் கட்டளைகளை, உயர்நீதி மன்ற நிபந்தனைக் கட்டளைகளை நிறைவேற்றும் அரச அலுவலர் செயற்படுத்துவார்கள்.
அரசியல் அமைப்பு நீதிமன்றம், யாப்பின் 59/1 பிரிவின்கீழ் 43 சட்ட விதிகளை விரிவானமுறையில் ஆக்கி, 29-1-73 வர்த்த மானியிற் பிரகடனப்படுத்தியுள்ளது. இவற்றின் சில முக்கிய அம்சங்களாவன : (1) அவசரமற்ற மசோதாக்களுக்கு எதிரான தீர்ப்பை வழங்க 14 நாட்களும், அவசரமான மசோதாக்கள்மீது
1, வீரகேசரி 201-1973,

سسہ 381 ہسست۔
ஆலோசனை கூற 24 மணித்தியாலங்களும் யாப்பு அவ்காசம் கொடுத்துள்ளதென்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. (i) யாப்பு நீதிமன்றத்தின் 5 உறுப்பினரில், ஒரு மசோதாவை ஆராயும் மூவர் அதிஷ்டச் சீட்டின் மூலம் தெரிவுசெய்யப்படுவார்கள்: இம் மூவரும் தங்களுக்குள் ஒருவரைத் தவிசாளராகத் தெரிவு செய்யவேண்டும் ; அவர்கள் விரும்பினுல் அதிஷ்டச் சீட்டின் மூலமும் தலைவரைத் தெரியலாம். (ii) மசோதாவுக்கு எதிரான மனுக்கள் ஆறு பிரதிகளாக அனுப்பப்படவேண்டும். மனுக்களில் ஒரு பிரதி பதிவாளரினுல் சட்டத்துறைத் தலைமையதிபதியிடம் ஒப்படைக்கப்படும். அனைவரும் எழுத்துமூலம் மனுக்களையும் அவற்றிற்குச் சார்பான வாதங்களையும் நீதிமன்றத்திற்குச் சமர்ப் பிக்கவேண்டும். நீதிமன்றம் விரும்பினுல் மனுதாரர்களை அல்லது அவர்களின் வழக்கறிஞர்களைத் தமது மனுவை ஆதரித்து வாய் மூலம் வாதாடுமாறு அழைக்கலாம். வாதாடும் நேர அளவு கட்டுப்படுத்தப்படும். (iv) மனுக்களை விசாரணைசெய்யும் போது நீதிமன்றம் சட்டத்துறைத் தலைமையதிபதியைத் தனக்கு உதவிபுரியுமாறு அழைப்பு விடுக்கவேண்டும். விசாரணையின் இறுதி யிலும் இவருக்கு வாதாடும் சந்தர்ப்பம் அளிக்கப்படும். (V) மனுதாரர்கள் தாஸ்தாவேஜ" இளேயும், சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் தங்கள் சார்பில் ஆஜராக்க விரும்பினுல் அதற்கு எழுத்துமூலம் நீதிமன்றத்திற்கு மனுச்செய்து அனு மதி பெறவேண்டும். இதற்கு அனுமதி அளிப்பதற்கும் மறுப்பதற்கும் நீதிமன்றத்திற்கு உரிமையுண்டு. நீதிமன்றத் தின் அழைப்பை ஏற்று, அங்கு ஆஜராகத் தவறும் எவரும் குற்றவியல் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள். மேற் கூறியவைபோன்ற விதிகளைவிட 11 பிரிவுகளில் நீதி மன்ற நிந்தனை நடைமுறைச்சட்ட விதிகளும் யாப்பு நீதிமன்றத்தினுல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. நிந்தனை, மன்ற உறுப்பினர் முன் அல்லது வேறிடத்தில் நடைபெறலாம். எந்த உறுப்பினர் முன் குற்றம் புரியப்பட்டதோ அவ்வுறுப்பினரே விசாரணை நடத்துவர். வேறு இடத்தில் நடைபேற்றதாகத் தகவல் அல்லது முறையீடு கிடைத்த நீதிமன்ற நிபந்தனை, விசாரணைக்கு ஆளாக வேண்டுமென்று நீதிமன்றம் தீர்மானித்தால், அந்த வழக்கை மூன்று பேருக்குக் குறையாத உறுப்பினர் விளங்கவேண்டும்: இவற்றேடு ஆவணங்கள் சாட்சிகள் வரவழைத்தல், கைது செய்யும் ஆணப்பத்திரம் பிறப்பித்தல், பிணையிற் செல்ல அனுமதித்தல் வழக்கறிஞர் குற்றஞ் சாட்டப்பட்டவர் சார்பில் தோன்றும் உரிமை, வேறு நடைமுறைகள் பற்றிய சட்ட விதி களையும் காணலாம்.

Page 62
XII. மதம்-மொழி-குடியுரிமை
ν
1. மதம்
பொதுக் குறிப்புக்கள் : அரசின் ஆணையினல் மதம் தோன்றவில்லை : இயற்கைச் சக்திகளுக்குப் பயந்த ஆதிமனிதன், அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு இனந்தெரியாத ஒன்றை வணங்கியதிலிருந்து அது ஆரம்பமானதெனலாம். அன்று ஆட்சியாளன் புரோகிதனுகவும் இருந்து அல்லது புரோகிதர் களின் உதவியோடு அறிவற்ற மக்களை இலகுவில் ஆட்சிசெய்ய முடிந்தது. பண்டைக்கால மன்னர்களின் கட்டளைகள் மத நெறி களைத் தழுவியிருப்பதைக் காணலாம். மத்தியகாலத்தில் மத குருமார்களுக்கும் உலகியல்சார்ந்த ஆட்சியாளருக்கும் இடை யில் அதிகாரப்போட்டி ஏற்பட்டு, இறுதியில் அரசு தனது இறைமையை நிலைநாட்டுவதில் முடிந்தது. 16 ஆம், 17 ஆம் நூற்ருண்டுகளில் பல சமயக் கோட்பாடுகள் தோன்றின; ஒழுங் கான அரசியல் வாழ்விற்கு ஒரு நாட்டின் மக்கள் அனைவரும் ஒரு மதத்தையே பின் பற்ற வேண்டுமென்று நம்பப்பட்டதால், பல அரசுகள் ஒரு மதத்தையே உத்தியோக மதமாக்கின : நிறுவப்பட்ட ஒரு நாட்டு மதத்தை ஏற் காதோர் அரசினல் துன்புறுத்தப்பட்டனர் : துன்புறுத் த ப் பட்டோர் அரசிறகு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுதல் இயற்கையாம். ஒரோயொரு மதத்தை நிறுவும் எத்தனங்கள் தோல்வியில் முடிந்தது வரலாருகும் மக்களாட்சிப் பாதையில் முன்னேறு வதற்குப் பல மதங்களையும் வாழவிட்டு வாழும் மனப்பான்மை உருவாகும் சூழ்நிலை தோன்றிற்று. தாராள சனநாயகத்திற்கு மதச்சுதந்திரம் இன்றியமையாத அடிப்படையாகும். அரசானது மதம் இனம் மொழி போன்ற வேறுபாடுகளைக் கடந்து அன வரின் நலனைப்பேணும் நிறுவனமென்பது இன்று ஏற்கப்பட்ட நெறியாகும். அத்தோடு, அரசின் கருவிகளாகிய சட்டத்தையும் பலாத்காரத்தையும் துணைகொண்டு மக்களின் மதவாழ்க்கையை அரசு செப்பனிடமுடியா தென்று சனநாயகவாதிகள் கூறுவர் : தன்னிச்சையாக மனம் விரும்பித் தனித்தோ கூட்டாகவோ

= 383 ہے
மக்கள் மதத்துறையில் இயங்கினல்தான் ஆத்மஈடேற்றமடைய முடியும் எனவே அரசு மதத்தில் தலையிடக்கூடாதென்பது இச்சாரார் நிலையாகும். தலையிடுவது மதத்திற்கு நன்மை பயக் காததோடு, பல மதங்களுள்ள ஒரு நாட்டில், குறிப்பிட்ட ஒரு மதத்தோடு அரசு அதிக உறவு ஏற்படுத்துவது தேச ஒற்றுமை யைப் பாதிக்கலாமென்றும் வாதிடுவர். மாக்சீயவாதிகள் சில மதக்கோட்பாடுகளை ஏற்கத் தயாராயில்லை. சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, பாட்டாளிமக்களின் வரண்ட வாழ்க்கையை மலரச்செய்வதே இவர்கள் இலட்சியம். அதை அடைவதற்கு முதலாளித்துவ அமைப்பைப் புரட்சிமூலம் மாற்ற வேண்டும். புரட்சிமனப்பான்மையைக் கெடுக்கும் மதபோதனைக ளுண்டு உதாரணமாக, மனிதனின் இவ்வுலக அவலநிலைக்குக் கர்மம் முக்கிய காரணியென்றும், இறைவன் கொடுத்த வாழ்வை ஏற்க மறுப்பது பாவ மென்றும் கூறும் கோட்பாடுகளைக் காண லாம். இவைபோன்றவற்றைப் பரப்பும் மதம் அபின் போன்று பாமரமக்களை மயக்கிப் புரட்சிக்கும், முயற்சிக்கும் தடையா யிருக்குமென்பது மாக்சீயவாதிகளின் நிலையாகும். சனநாயக, மாக்சீயக் கொள்கைகளின் பயணுய் ஒருசிலவற்றைத் தவிர்ந்த இன்றைய அரசுகளெல்லாம் மதச்சார்பற்றவைகளாகக் காணப் படுகின்றன.
அரசுகளை, மதச்சார்புடைய அல்லது மதச்சார்பற்ற அரசுக ளென்று வேறுபடுத்துவதில் இடர்ப்பாடுண்டு, வேறுபாடு யாப்பு விதிகளையும் அவற்றைச் செயற்படுத்தும் தன் மை யை யும் பொறுத்தது. 1. யாப்புவிதிகள் : எல்லா அரசுகளிலும் மதச் சார்புடைய மதச்சார்பற்ற யாப்புவிதிகள் சாதாரணமாகக் காணப்படுகின்ற ன. அவ்விதிகளை மூன்ருகப் பிரிக்கலாம். (அ) மத-தனிமனித உறவை நிர்ணயிப்பவை. இவை தனி மனிதனின் மதச்சுதந்திரம் போன்றவற்றை அனுமதிக்கின் றனவா? இல்லையா ? என்று பார்க்கவேண்டும். (ஆ) அரசதனிமனித உறவை வரையறுப்பவை. உதாரணமாக ? அவை குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கு மாத்திரம் குடியுரிமை, பதவி யுரிமை, வேறு விசேட உரிமைகளைக் கொடுக்கலாம். (இ) அரசமத உறவை நிர்ணயிப்பவை. இவ்விதிகள் மற்றவையிலும் பார்க்க முக்கியமான வை யெ ன ல |ாம். மேற்கு ஐரோப்பிய நாடுகள் மதத்தை அரசிலிருந்து பிரித்த சரித்திரக் கண்ணுேக் குடன் அரச-மத உறவை இன்று நாம் அணுகலாகாது. ஒரு அரசு சட்டவாக்க நிர்வாகக் கடமைகளை மேற் கொள்ளும்போது குறிப்பிட்ட ஒரு மதம் போதிக்கும் ஒழுக்கநெறிகளை எந்த அளவிற்குக் கட்டாயமாக அது தழுவி நடக்கவேண்டுமென் பதே ஆராயத்தகுந்தது, மேற்கூறிய மூன்றுவகை யாப்புவிதி
g) III = 15 851

Page 63
=ܡ= 384 ܗܗܡܗ
களில் மதச்சார்புத்தன்மை கூடியோ அல்லது குறைந்தோ இருக்கின்றதென்று கணித்துக், கூடுதலாக இருந்தால் அரசு மதச்சார்புடையதென்று கூறலாம். அகஉணர்வு நிலைக்குரிய கணிப்பு வேறுபட்ட முடிவிற்கு வழிகோலும் தன்மையது 2 அடிப்படைச் சட்டங்களுக்கும் அவற் றை நடைமுறைப் படுத்துவதற்குமிடையே வேறுபாடு அரசியலில் தோன்றுவ துண்டு. ஒரு அரசாங்கம் யாப்புவிதிகளைத் தீவிரமாகச் செயற் படுத்த, இன்னென்று தீவிரமற்ற முறையில் நடப்பதற்கு விதிகள் இடங்கொடுக்கலாம். எனவே, விதிகளின் தன்மையும் அளவும் மட்டுமின்றி, அவ்விதிகள் எப்படிப் பயன்படுத்தப்படு கின்றன என்பதையும் சீர்தூக்கிப் பார்த்து ஒரு அரசு மதச் சார்புடையது அல்லது அற்றது என்று கணிக்கவேண்டும். இங்கிலாந்தில் தேசிய திருச்சபை ஒன்று உண்டு : இச்சபையைச் சேர்ந்த ஒருவரே சிம்மாசனமேற முடியும். இருந்தும் இங்கி லாந்து மதச்சார்பற்ற அர சென்று இன்று கொள்ளப்படுகின்றது, இந்தியா மதச்சார்பற்றதென்று ஒரு யாப்புவிதியும் கூருவிடி னும், அது மதச்சார்பற்ற சனநாயகத்தை நிலைநாட்ட ளத்த னிக்கும் யாப்பைக் கொண்டது : பல்வேறு மதத்தினருக்கிடையே பாரபட்சம் காட்டாத விழுமிய நோ க் கை மையமாகக் கொண்டது : காலத்தால் முந்திய, பெரும்பான்மையினர் பின் பற்றும் இந்துமதத்திற்கு முன்னணி முதன்மையை அளிக்கவில்லை மதச்சார்பற்ற குடியரசென்று போற்றப்படுகின்றது. எல்லா மதங்களுக்கும் பல சமவுரிமைகளை வழங்கும் யாப்புவிதிகளை யுடைய பாகிஸ்தான், இஸ்லாமிய நெறிகளுக்கு இணங்க அதன் அரசாங்கம் சட்டவாக்க, நிர்வாக நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டுமென்னும் யாப்புவிதிகளைக் கொண்டிருக்கும் காரணத்தால் மதச்சார்புடைய அர செனக் கணிக்கப்படுகின்றது. மதச்சார்பற்றதென்று கருதப்படும் தாராள சனநாயக நாடு களிலும் மதம் அரசியலில் தாக்கம் விளைவிக்கும் முக்கிய காரணி களில் ஒன்ருகும். மதஅடிப்படையிலமைந்த அரசியற் கட்சிகள் நிலவும் ஐரோட்பிய நாடுகளிலும், மதரீதியான கட்சிக ளில்லாத அமெரிக்காவிலும், பொருளாதாரத்தோடு மதவிடயங் களையும் இணைத்த வாக்குறுதிகளையும் மக்களுக்குக் கொடுத்து, அவர்களின் ஆதரவைத்தேட அரசியற் கட்சிகள் முயலுவதைக் காணலாம். மருத்துவமனைகளுக்கு மானியம், வரிக்குறைப்பு, விரும்பிய சட்டவாக்கம், இலவச உணவு போன்ற உடல் வாழ்க்கையொட்டிய நலன்களையும் மத நிறுவனங்கள் அரசிடமிருந்து வேண்டிநிற்கின்றன. இவ்வேண்டுகோள்களுக்கு அரசாங்கம் செவிமடுப்பதும் விடுவதும், எந்த அளவிற்கு மதஞ் சார்ந்த மரபுகள் நம்பிக்கைகள், பெறுமானங்கள் வாக்காளர் களின் சிந்தனையையும் நடத்தையையும் தூண்டலாமென்பதைப்

ܡܣ= 385 =ܡܚܵ
பொறுத்ததாகும். ஆசியமக்கள், விசேடமாகக் கிராமவாசிகள் ஐரோப்பிய மக்களிலும் பார்க்க மதப்பிரசாரங்களினுலும் மத நிறுவனங்களின் கருத்துக்களினுலும் கூடிய உணர்ச்சி வசப்படு வதினல், ஆசியாவில் மதம் ஆழ்ந்த அரசியற் தாக்கத்தை ஏற் படுத்துகின்றது.
சோல்பரி யாப்பு: இலங்கையின் முன்னைய யாப்பு மதச் சார்பற்ற விதிகளைக் கொண்டிருந்தது ; எல்லா மதங்களின் சமத்துவத்தையும் பேண எத்தனித்தது. அதன் பிரசித்தி பெற்ற 29ஆவது விதிப்படி பாராளுமன்றம் ஆக்கும் சட்ட மெதுவும், ஒருவன் விரும்பிய சமயத்தை மேற்கொள்ளும் உரிமை யைக் கட்டுப்படுத்தலாகாது; ஒரு மதத்தினருக்குச் சாதகமான தாய் அல்லது பாதகமானதாய் இருத்தலாகாது ஒரு மத நிறுவனத்தின் அமைப்பை அதன் ஆட்சியதிகாரிகளின் சம்மத மின்றி மாற்றலாகாது சட்டப்படி கூட்டிணைப்பாக்கப்பெற்ற மத நிறுவன அமைப்பை அதன் ஆட்சியதிகாரிகளின் வேண்டு கோள்மீது தான் மாற்றமுடியும். இலங்கையின் முதலாவது பிரதமர் மேற்கூறிய விதிகளுக்கு இணங்க நடந்துகொண்டார். புத்த குருமார் பெளத்தத்திற்கு அரச பாதுகாப்பும் உதவியும் கோரியபோதும், அகில இலங்கைப் பெளத்த காங்கிரஸ் பெளத் தர்களின் குறையை ஆராய ஒரு கொமிஷன் நியமிக்க வேண்டு மென்று கேட்டபொழுதும், அவரின் அமைச்சரவையில் அங்கம் வகித்த திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா பெளத் தத்திற்கு விசேட யாப்பு அங்கீகாரம் பெற்றுத் தர முயன்ற போதும் திரு. டி. எஸ். சேனநாயக்கா மதவிடயங்களில் அரசுதலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தார். அவருக்குப்பின் இக்கொள்கை தொடர்ந்து நிலவவில்லை. மதமும் மொழியும் மக்கள் உணர்ச்சியைத் தட்டியெழுப்பவல்லன. கிறித்தவராகப் பிறந்து புத்தமதத்திற்கு மாறிய திரு. பண்டாரநாயக்காவும் : அவருக்குப்பின் அவரின் துணைவியாரும் பெளத்த சிங் களப் பற்றின் மீது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்தனர் : ஐக்கிய தேசியக் கட்சியும் பெளத் தத்திற்கு " அதற்குரிய இடத்தை " அளிக்கும் கொள்கையைத் தழுவிற்று. இரு பெருங் கட்சிகளான சுதந்திரக் கட்சியும் ஐ. தே. கட்சியும் அமுக்கத் தொகுதிளான மகா சங்கத்திற்கும் பெளத்த காங்கிரஸிற்கும் செவிசாய்த்ததோடு, பெளத் தத்திற்குக் கூடிய சலுகைகளைத் தரும் போட்டியில் சிக்கியுள்ளன.
சரித்திரம் காட்டும் அநியாயங்கள் : தன்னிகரற்ற ஒரு நிலையைப் பெளத்தம் திரும்பவும் அடையச்செய்வது நியாய மானதென்று மகாசங்கமும் பெரும்பாலான பெளத்த மக்சளும் நம்புகின்றர்கள், 1956இல் வெளிவந்த பெளத்த "கொமிஷன்"

Page 64
سے 386 تھی۔
அறிக்கை இக்கருத்தைப் பிரதிபலிக்கின்றது. இன்று பெளத்தர்கள் தங்களுக்குரிய நிலையை மதம், மொழி, கலா சாரம் கல்வி, அரசாங்கசேவை ஆகியவற்றில் இழந்து நிற்ப தற்கு முக்கியகாரணி, கிறித்த மதத்தைப் பரப்புவதற்காக ஆங்கிலேயரின் ஆட்சி பெளத்தத்திற்குப் பாதகமான கொள்கை களைக் கடைப்பிடித்ததாகும் என்று அறிக்கை கூறுகின்றது: உதாரணமாக : 1. 1815 கண்டிச்சாசனத்தின் படி பெளத்தம் சிதைவுருது பார்த்துக்கொள்ளவும், அதன் மதச்சடங்குகளையும் பிக்குகளையும் விகாரைகளையும் பேணிக் கா க்கவும் ஆங்கில அரசாங்கம் ஒத்துக்கொண்டிருப்பினும், விரைவில் ஒப்பந் தத்தை மீறித் தன் பொறுப்பைக் கைவிட்டதினுல் 22 நூற் முண்டுகள் மன்னனு தரவில் சிறப்புற்ருேங்கிய பெளத்தம் சிதை வுற்றது. 2. பலம்வாய்ந்த மத்திய அமைப்பொன்றை வேண்டு மென்றே பெளத்தத்திற்கு அந்நிய அரசாங்கம் தராது, கிறித்தவ கூட்டிணைப்புக்குச் சட்ட அங்கீகாரம் அளித்ததினுல் பெளத்தம் கிறித்த மதத்துடன் சரிநிகர் நின்று போட்டியிட முடியவில்லை; இது போதாதென்று, சட்டக் கூட்டிணைப்புப் பெற்ற மத நிறுவனங்களின் அமைப்பை அவற்றின் ஆட்சியதிகாரிகளின் வேண்டுகோளின் மீது மாத்திரம் மாற்றியமைக்கலாமென்று சோல்பரி யாப்பின் 29/2/ஈ விதியாகப் பொறித்தது, கிறித்த மதத்தின் முதன்மையைத் தொடர்ந்து பேணுவதற்காகும். ஆங்கில ஏகாதிபத்தியத்தின் மறைமுக அம்சமான இவ்விதி மாற்றப்படவேண்டும். 3. ஆங்கில அரசாங்கத்தின் கல்விக் கொள்கை கிறித்தவ உயர் கல்விச்சாலைகள் பெருகுவதற்கும் அதன்மூலம் கிறித்தவர்களும் தமிழர்களும் அரசசேவையில் அவர்களின் விகிதாசாரத்திற்கு அதிகமான இடங்களைக் கைப் பற்றுவதற்கும் உதவியது. எனவே மத நிறுவனங்களின் கல்விச் சாலைகள் அரச உடைமையாக வேண்டும்.
இத்தகைய கண்டனங்கள் மிகைப்படுத்தியனவாகவோ, சில வேளைகளில் தர்க்கரீதியற்றனவாகவோ இருக்கலாம் : அடிமைப் பட்டிருந்த குடியேற்றநாடுகள் தங்கள் பலவீனத்திற்கான முழுப் பொறுப்பையும் அந்நியராட்சிமீது சுமத்தும் இயற்கைப் போக் கைத் தழுவியதாக இருக்கலாம். இருந்தும், பெரும்பாலான பெளத்தர்கள் தாம் அநியாயத்திற்கு ஆளாக்கப்பட்டதாக நம்பும்பொழுது, அது அரசியல் நடவடிக்கைகளைப் பாதிக்கும் தன்மை வாய்ந்தது ; அதிகாரம் அவர்கள் கையில் சென்றடைந் ததும் சிறுபான்மையினரின் சமயங்களின் தாழ்வில் பெளத்தம் * அதற்குரிய இடத்திற்கு உயர்வது தவிர்க்க முடி யாத தா கின்றது. உரிய இடமென்பது, இன்றைய சூழ்நிலைக்கேற்ற திரிபுக ளுடன் சிங்கள மன்னர் ஆட்சியின்கீழ்ப் பெளத்தம் இருந்த நிலை யைப் பெருமளவிற்குக் குறிக்கும்.

س 387 سم
அரசாங்கத் தலையீடு : 1954 தொடக்கம் குடியரசு யாப்புவரை சோல்பரி யாப்பு ஏற்பாட்டிற்கு ஒரளவு புறம்பாக இலங்கை அரசாங்கங்கள் பெளத்த புனருத்தாரண வேலைகளில் ஈடுபடலாயின. 1956இல் நடைபெற்ற புத்தஜயந்தி சிங்களப் பெளத்தர்களுக்குப் பலவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது: அதை நல்லமுறையில் கொண்டாடுவதற்கு ஐ. தே கட்சி அரசாங்கம், ' இலங்கை பெளத்த கழகத்தை " அமைத்து, அதற்கு 50 லட்சம் ரூபாவைப் பொதுநிதியிலிருந்து கொடுத்த தோடு, தானும் நேரடிப் பங்கெடுத்துக்கொண்டது, ' புத்த ஜயந்தி அரசையும் பெளத்தத்தையும் நன்கிணைத்து, அரசாங்கம் மதவிடயங்களில் பெருமளவில் தலையிடுவதற்கு முன்மாதிரியாய் அமைந்தது ??. கலாநிதி என்: எம். பெரேரா அரசின் மதச் சார்புப் போக்கை அன்று கண்டித்துள்ளார் : இன்று இடதுசாரிக ளின் நிலை வேறு பின்வந்த அரசாங்கங்கள் பெளத்த கொமிஷ னின் அறிக்கையைப் பெருமளவிற்கு அமுல்செய்தன: கொமிவு னின் முக்கிய சிபார்சுகளாவன : யாப்புவிதி 29ஐ மாற்றல், அரசமானியம் பெறும் பாடசாலைகளை அரச உடைமையாக்கல், மருத்துவமனைகளில் வேலைசெய்யும் கிறித்தவப் பெண்துறவிகளை வேலைநீக்கஞ்செய்தல், போயாதினங்களைப் பொதுவிடுதலைநாட்க ளாக ஆக்கல், மதத்துறைக்கென அமைச்சர் ஒருவரை நிய மித்தல், குதிரைப்பந்தய ஓட்டத்தைத் தடைசெய்தல், மது பான விற்பனையைத் தடுத்தல், பெளத்தசாசனசபையை நிறுவுதல் போன்றவையாகும். பெளத்தம் அரசமதமாக இருக்க வேண்டுமென்பதைக் கொமிஷன் ஆதரிக்கவில்லை. இப்பிரச் சினைகள் பற்றிய பொதுவிவாதங்களும் அரச நடவடிக்கைகளும், சில மாற்றங்கள் சம்பந்தமாக எழுந்த சிறுபான்மையினரின் பலத்த எதிர்ப்பும் நாடறிந்தவையாகும்;
திரு பண்டாரநாயக்கா காலத்தில் அமைக்கப்பட்ட கலா சார அமைச்சு பெளத்தத்திற்கு உரிய இடத்தைக் கொடுக்கும் பணியைத் தொடர்ந்து நடத்துகிறது: " எங்கள் (பெளத்த) மதமே எங்கள் (சிங்கள) கலாசாரத்தின் அடிப்படை ' என்று ஒரு பெளத்த சிங்களக் கலாசார அமைச்சர் கூறிய தத்துவத் திற்கமையக் கலாசார அமைச்சின் நடவடிக்கைகள் அமை கின்றன. சிறுபான்மை மதங்களுக்கு அவைகளின் நிறுவனங் களுக்கூடாகப் பணஉதவி கொடுக் கப்படினும், பெளத் தத்தைப் பொறுத்தமட்டில் கலாசாரத் திணைக்களம் நேரடி யாகப் பெருஞ்செலவு செய்வதைக் காணலாம்; பெளத்த, சிங்களக் கலைக்களஞ்சியங்கள், பெளத்தபிக்குகள் இடாப்புப் போன்றவற்றைத் தயாரித்து வெளியிடல், தலதமாளிகையை மறுபுனைவாக்கம் செய்தல் போன்ற எத்தனங்களைப் பரிபாலிக்

Page 65
--سست 388 سیسے
கின்றது : பெளத்த காங்கிரஸ், இளைஞர் பெளத்த கழகம், பெளத்த வெளியீட்டுச் சங்கம் போன்ற பல நிறுவனங்களுக்கு மானியம் வழங்குகின்றது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெளத்தத்தைப் பரப்புவதற்கு ஆதரவு தருகின்றது : 4000க்கு மேற்பட்ட "விகாரைப் பெளத்த முன்னேற்றச் சங்கங்களை யும் ', 88 பிராந்திய முன்னேற்றச் சங்கங்களையும் அமைத்து நாடெங்கணுமுள்ள விகாரைகளுக்கும் கலாசாரத் திணைக் களத்திற்குமிடையே நெருங்கிய இணைப்பை ஏற்படுத்தியுள் ளது. 1962 படைப்புரட்சி எத்தனத்தின் பின் கிறித்தவ மகாதேசாதிபதி பதவி துறந்ததும், பெளத்தர் ஒருவர் அரச தலைவர் ஆகியதும் பெளத்த ஆதிக்க முதன்மையின் அறிகுறி யென்று கூறுவாருமுளர், அமைச்சர்களும் உயர் அரச அலுவ லரும் பெளத்தர்களாக இருக்கவேண்டுமென்று சில வட்டா ரங்கள் கிளர்ச்சி செய்வதையும் காணலாம்.
குடியரசு யாப்பு: மேற்காட்டிய பின்னணியிலேதான் முக்கூட்டணியின் 1970 தேர்தல் விஞ்ஞாபனமும் அதைத் தொடர்ந்த குடியரசு யாப்பின் மத ஏற்பாடுகளும் தோன்றின விஞ்ஞாபனத்தில், " பெரும்பாலான மக்களின் சமயமாகிய பெளத்தத்திற்கு அதற்குரிய நியாயமான இடம் உறுதிப்படுத் தப்படும். எல்லா மதங்களைப் பின்பற்றுவோரின் மதவழிபாட்டுச் சுதந்திரத்திற்கும், மத அனுட்டான உரிமைக்கும் உத்தரவாதம் அளிக்கப்படும். எல்லா மதத்தினரும் தமது சமயக் கோட்பாடு களை உண்மையாக அனுசரிப்பதற்குத் தேவையான பொருளா தார சமூக சூழல் அமைக்கப்படும்’ என்ற உறுதிமொழிகளைக் காணலாம். தேர்தலில் முக்கூட்டணி பெரும்பான்மை பெற்றது; அதே பெரும்பான்மையைப் பிரதிபலிக்குமாறு யாப்பமைமன்ற மும் அமைக்கப்பட்டது; கொடுத்த வாக்குறுதியைச் செயற் படுத்துவதற்குக் குறுக்கேநின்ற மதசமத்துவ நெறியை உள்" ளடக்கிய, அகற்றப்படவேண்டுமென்று பெளத்த கொமிஷன் கோரிய சோல்பரி யாப்பின் 29ஆவது விதி குடியரசு யாப்பில் இடம்பெறவில்லை. அவ்விதிக்குப் பதிலாக, அரசகொள்கைக் கோட்பாடுகள், அடிப்படை உரிமைகள், பெளத்தமதம் ஆகிய மூன்று அத்தியாயங்களில் மதம்பற்றிய வேறு ஏற்பாடுகளைக் இாணலாம்.
அரசகொள்கைக் கோட்பாடு அத்தியாயத்தில் சட்ட அந்தஸ்தை எய்தாத, அரசிற்கு வழிகாட்டவேண்டுமென்று கொள்ளப்படும் இரு நியதிகளுண்டு : 1. ? ? இன, மத ரீதியாக வெவ்வேறு தொகுதிகளிடையே ஒத்துழைப்பையும் பரஸ்பர நம்பிக்கையையும் வளர்ப்பதன்மூலம் தேசிய ஐக்கியத்தை வலுவுறச் செய்வதற்கு அரசு முயலவேண்டும். " பாடசாலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

سے 389 ہے۔
சுவீகரிப்புப் போன்ற நடவடிக்கைகளினுல் பல மதத்தினருக் கிடையே ஒற்றுமை சீர்குலைந்த நிலையில், வருங்காலத்திலாகுதல் அவர்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்க்க அரசு எத்தனிக்கவேண்டுமென்ற நியதி வரவேற்கத்தக்கது. ஆனல், இவ் விழுமிய நோக்கை எய்துவதற்குப் பெளத்தத்திற்கு முன்னணி முதன்மை வழங்கவேண்டுமென்னும் " ஏற்பாடு எந்த அளவிற்கு விட்டுக்கொடுக்கும் என்பதை வருங்காலந்தான் காட்டமுடியும். பேச்சையும் எழுத்தையும் விடச் செயல்களால்தான் ஒற்றுமையை யும், நம்பிக்கையையும், தேச ஐக்கியத்தையும் வளர்க்கமுடியும். தமிழர் கூட்டணியில் இந்துக்கள், கிறித்தவர், இஸ்லாமியர் அங் கத்தவர்களா யிருக்கின்றனர் அதன் செப்டெம்பர் 1973 வெளி யீடு அரசநடவடிக்கைகளை அவநம்பிக்கையுடன் நோக்குவதைக் காணலாம். ' 1948இல் சுதந்திரம் கிடைத்த நாள்தொடக்கம் அரசநடவடிக்கைகளில் பெளத்தத்திற்கு ஒப்புயர்வற்ற சிறப் பிடம் கொடுக்கப்பட்டுவருகின்றது. அரச வைபவங்கள் சாதா ரணமாகப் பெளத்த சமயச்சடங்குகளுடன் தொடக்கிவைக்கப் படுகின்றன. அரசாங்க, பாடசாலைக் கட்டிடங்கள் மீது மாத்திர மல்ல, சனசமூக நிலையங்கள், கிராம முன்னேற்றச் சங்கங்கள் போன்ற அரச உதவிபெறும் எல்லா நிறுவனங்களின் கட்டிடங் கள் மீதும் தேசியக் கொடியுடன் பெளத்த கொடியும் பறக்கவிடப் படவேண்டுமென்று அரசாங்கம் மிக அண்மையில் செயல்முறைக் கட்டளைகள் பிறப்பித்துள்ளது. உயர்தர நியமனங்களில், பெளத் தத்தைப் பின்பற்றுவோர் அரசாங்கத்தின் நல்லாதரவைப் பெற்றுவருகின்றனர்: பெளத்தத்தையும் பெளத்த நிறுவனங் களையும் பேணுவதில் பெருந்தொகையான அரசபணம் செல வழிக்கப்படுகின்றது. காங்கேசன்துறை போன்று, இந்துக்கள் பெருந்தொகையில் வாழும் இடங்களில் பெளத்த வழிபாட்டு நிலையங்களை அமைப்பதற்கு அரசாங்கம் நிலமும் பணமும் வழங்கி வெளிப்படையாக ஆதரவு நல்குகின்றது. சந்தேகத்திற்கிட மான உள்நோக்குடைய பெளத்த சங்கங்களின் வேண்டுகோள் மீதென்று கூறிச் சில பாடசாலைகளில் இந்து மாணவர்களுக்குப் பெளத்தமதம் போதிப்பதை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது", 2. தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பின்பற்றி ' எல்லா மதத் தினரும் தம் சமயக் கோட்பாடுகளை உண்மையில் பின்பற்றுவ தற்கு வேண்டிய பொருளாதார சமூக சூழ்நிலையை அரசு அமைப்ப தற்கு முயலவேண்டும் " என்பது இரண்டாவது நியதியாகும்; வேண்டிய சூழ்நிலை எதுவாயிருக்கலாம் ? அது சோஷலிச சன நாயகமாயின், அத்தகைய அமைப்பு தெளிவற்ற ஒன்ருயிருப்ப தோடு, அங்குதான் உண்மையான மத வாழ்வு நடைபெறலா மென்பது உண்மையா? இந்நியதி சச்சரவிற்கு ஆட்படக்கூடிய துல்லியமற்ற ஒன்ருகும்.

Page 66
سس۔ 390 --۔
அடிப் படை உரிமைகள் அத்தியாயத்தில் * சிந்தனை செய்யும் சுதந்தரம், மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மதசுதந்திரம் என்பன சார்பான உரிமை ஒவ்வொரு பிரசைக்கும் இருத்தல்வேண்டும் " என்று விதி 18/1(ஈ) கூறு கின்றது. இந்த உரிமையில், ' ஒருவன் தான் விரும்பிய சமயம் அல்லது நம்பிக்கையொன்றை உடையவனுயிருத்தல் அல்லது மேற்கொள்ளுதல் சார்ந்த சுதந்திரமும், தனியாக அல்லது கூட்டாக, பகிரங்கமாகவேனும் அல்லது அந்தரங்கமாகவேனும் தனது சமயத்தை அல்லது நம்பிக்கையை வழிபாட்டிலும், அனுசரிப்பிலும், செயற்பாட்டிலும், போதிப்பிலும் வெளிக் காட்டுதல் சார்பான சுதந்திரமும் அடங்கும் ' . சில குறிப் புரைகள் : 1. மேற்கூறிய உரிமை சட்ட அந்தஸ்துப் பெற்றது : நீதிமன்றத்தினுல் வலியுறுத்தக்கூடியது. மதம்பற்றித் துல்லிய மான சட்டவரையறை இல்லை. அது மனித நடத்தை பற்றிய நன்னெறிகள், சித்தாந்தம், மத அனுட்டானங்கள், சடங்குகள் ஆகியவற்றை அடக்கிய முறைமை என்று பொதுவாகக் கூற லாம். இந்த முறைமை கடவுள் உண்டென்ற கோட்பாட்டைக் கட்டாயமாகக் கொண்டிருக்கவேண்டியதில்லை இவ்வுலக அல்லது மறுவுலக வாழ்வு பற்றிய ஒருவனின் நம்பிக்கையாகவும் இருக்கலாம். நம்பிக்கையோடும் மதத்தோடும் சார்ந்துள்ள முக்கிய சுதந்திரங்கள் ஒருவனுக்கு இருக்கவேண்டுமென்று எங்கள் யாப்பு உறுதிப்படுத்துகின்றது. ஆனல், பொதுநலன் கருதிச் சிந்தனைசெய்யும், மனச்சாட்சியைப் பின்பற்றும், மதவாழ்க் கையை நடத்தும் சுதந்திரங்கள் கட்டுப்படுத்தப்படலாமென்பது ஏற்றுக்கொள்ளப்படினும், குடியரசு யாப்பு விதி 18/2 தேசிய அரசுப் பேரவைக்கு அளவுக்குமீறிய பரந்த கட்டுப்பாடு அதி காரங்களை வழங்கியுள்ளதைக் காணலாம் : தேசிய ஐக்கியமும் ஒருமையும், தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சுகாதாரம், ஒழுக்கம், பிறர் உரிமைகளின் பாதுகாப்பு ஆகிய காரணங்களுக்காகவும், அரச கொள்கைக் கோட்பாடுகளைச் செயல்படுத்துவதற்காகவும் அடிப்படை உரிமைகள் அத்தியா யத்திற் பொறிக்கப்பட்டுள்ள உரிமைகளைத் தேசிய அரசுப் பேரவை சாதாரண பெரும்பான்மையினுல்தானும் மட்டுப்படுத்த முடியும் என்பது போன்ற விடயங்கள் இந்நூலின் நாலாவது இயலில் விரிவாக ஆராயப்படுவதைக் காண்க. மாக்சீயவாதிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினுல் சோஷலிச இலட்சியத் திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் மதக்கோட்பாடுகளையும் நம்பிக்கைகளையும் நீக்க எத்தனிக்கலாமென்று ஐயுறுவாருமுளர்; 2. மத சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம் பிரசைகளுக்கு மாத்திரம் குறிப்பாக வழங்கப்பட்டிருப்பது நோக்கற்பாலது ;

- 391 -
இச்சுதந்திரங்களில் போதிக்கும் சுதந்திரமும் அடங்கும்; அந்நிய சமயம் பரவிய போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேய ஆட்சிக் காலங்களில் அரசாங்க ஆதரவுடனும் சிலவேளைகளில் பயமுறுத்தல்களுடனும் இலங்கையரை மதமாற்றஞ் செய்த சரித் திரப் பின்னணியினுற்போலும், போதிக்கும் சுதந்திரம் உட்பட ஏனைய மதசுதந்திரங்கள் பிரசைகள் அல்லாதோரும் அனுபவிக்கக் கூடிய அடிப்படை உரிமையாக யாப்பிற் பொறிக்கப்படவில்லை, அன்று, எமது அந்நிய எசமானர்கள் மக்களை மதமாற்றஞ் செய்ததுபோன்ற தவறுதல்களே இன்றைய சுதேசிய ஆட்சி யாளர் பின்பற்ருதிருத்தல் நன்று, பொருளாதார நலனைக் காட்டித் தாழ்த்தப்பட்டிருக்கும் மக்களைக் கல்விச்சாலைகள் மூலம் பெளத்தர்களாக மாற்றும் எத்தனத்திற்கு ஆட்சியாளர் அளிக்கும் ஆதரவு சமயத்திற்கு மாத்திரமன்றித் தேச ஒற்று மைக்கும் உகந்ததன்று.
பெளத்தமத அத்தியாயத்தில் திணிக்கப்பட்ட ஒரே யொரு விதி ' இலங்கைக் குடியரசு பெளத்தத்திற்கு முன்னணி முதன்மையிடம் வழங்கவேண்டும் அதற்கிசைய 18/1(ஈ) விதி யினுல் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லாச் சமயங்களுக்கும் உறுதியளிக்கும் அதே நேரத்தில், பெளத்தத்தைப் பாதுகாத் தலும், பேணிவளர்த்தலும் அரசின் கடம்ைபாதல் வேண்டும் " என்பதாகும்3 குறிப்புரைகள் : 1. நாலு பெரும் மதங்களைப் பின்பற்றும் மக்களுடைய நாட்டில், ஒரு மதத்திற்கு முன்னணி முதன்மையும், அரசபாதுகாப்பும், பேணி வளர்ப்பும் கொடுக் கின்ற யாப்பு:உறுதிப்பாடு பலத்த ஆட்சேபத்திற்கு ஆளாகியது: குறிப்பிட்ட விதிக்கு அரசியல் சாசனத்தில் இறுதிச் சட்ட உருக் கொடுப்பதில் முக்கூட்டணியே ஊசலாடியுள்ளது ஊசலாட்டம் பெளத்தத்திற்கு " முதன்மையிடமா " அல்லது " உரிய இடமா " கொடுக்கவேண்டுமென்பது பற்றியும், அதற்கான காரணம் யாப்பிற் பொறிக்கப்படவேண்டுமா, வேண்டாமா என்பது பற்றியும் எழுந்தது. ஆங்கில ஆட்சியால் தாழ்வுற் றிருந்த பெளத்தம் மீண்டும் " அதற்குரிய இடத்தை " அடைய வேண்டுமென்று பெளத்தர்கள் கிளர்ச்சிசெய்ததையும் , " உரிய இடம் " என்பது சிங்கள மன்னர் ஆட்சியில் பெளத்தம் எய்தி யிருந்த இடத்தைப் பெருமளவில் குறித்ததென்பதையும் முன்னர் பார்த்தோம். " பெளத்தம் இலங்கையில் உரிய இடத்தைப் பெற வேண்டுமென்று சிங்களப் பெளத்தமதத்தினன் வற்புறுத்தும் போது, தனது சமுதாயம் கல்வித்துறையிலும், அரசாங்க சேவையிலும் ஒப்பற்ற ஆதிக்கத்தை அனுபவிக்க வேண்டு மென்பதையும் உள்ளடக்கிக் கூறுகின்றன் ' என்பது வெளி
இ, 11 - 16

Page 67
س-392 س--
நாட்டுப் பேராசிரியர்* ஒருவர் தரும் கருத்தாகும்; இந்தப் பின்னணியிலேதான் முக்கூட்டணியினர் தமது தேர்தல் விஞ்ஞா பனத்திலும், யாப்பை விரிவாக வரைவதற்கு உதவிய அடிப் படையான பிரேரணைகளில் ஒன்ருகிய பெளத்தமதம் பற்றிய மூன்ரும் பிரேரணையிலும் உரிய இடம் ' என்ற பதத்தை உபயோகித்துள்ளனர்; சூழ்நிலையிலிருந்து இப்பதத்தைப் பிரித்து யாப்பிற் பொறித்தால் அதற்குப் பலரும் பலவித விளக்கத் தைக் கொடுக்கலாம் ; எனவே, இந்த மயக்கத்தைப் போக்கக் கூடிய "முன்னணி முதன்மை " எனும் சொல் யாப்பில் இடம் பெற்றுள்ளது: " பெளத்தம் பெரும்பான்மை மக்களின் சமய மாகையினல் அதற்கு உரிய இடம் உறுதிப்படுத்துவது நியாய மானதென்பதைக் காட்டுமாறுபோல் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனமும் மூன்ரும் அடிப்படையான பிரேரணையும் வரை யப்பட்டுள்ளன. பெரும்பான்மையினர் எதையும் பெறலாம் , எதையும் பேசலாம், எதையும் செய்யலாம், அவைகள் ஏற் புடைத்தாகும் என்பது தாராள ஜனநாயக நாடுகளால் ஏற்கப் படுவதில்லை; எனவே, " பெரும்பான்மை மக்களின் சமய மாகிய ' எனும் அடைமொழி நீக்கப்பட்டுப் பெளத்தத்திற்கு முன்னணிமுதன்மை வழங்கப்பட்டுள்ளது. பெளத்தத்திற்குச் சலுகை தருவதில் தாங்கள் சுதந்திரக்கட்சிக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் பெளத்தமக்களுக்குக் காட்டப்போலும், கண்டிச்சாசனத்தில் பெளத்தம் பற்றி ஆங்கிலேயர் கொடுத்த உறுதிமொழிகளைச் சேர்க்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் ஒரு திருத்தப்பிரேரணையை யாப்பமை மன்றத்திற் சமர்ப்பித்திருந் தனர்; அது வழமைபோல் தோற்கடிக்கப்பட்டது. தமிழர் கூட்டணியின் சார்பிற் கொண்டுவரப்பட்ட, ' இலங்கைக் குடி யரசு ஒரு மதச்சார்பற்ற அரசாதல் வேண்டும் ஆணுல் அது பெளத்தமதம், இந்துமதம், கிறிஸ்த மதம், இஸ்லாமியமதம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், பேணிவளர்க்கவும் வேண்டும் " என்னும் திருத்தப்பிரேரணையும் அரசாங்க எதிர்வாதமின்றியே தோற்கடிக்கப்பட்டது. அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் 18/1(ஈ) விதியில் காணும் சிந்தனை, மனச்சாட்சி, மத சுதந்தி ரங்கள் ? எல்லாச் சமயங்களுக்கும் " மேலே ஆராயப்படும் பெளத்தமத ஏற்பாட்டில் உறுதிப்படுத்தப்படுகின்றது. "எல்லாச் சமயங்களுக்கும்" என்பதை " இந்து மத, இஸ்லாமியமத, கிறித்த மத, வேறு எல்லா மதங்களுக்கும்" என்று விரிவுபடுத்தும் திருத் தப் பிரேரணையைத் திரு. அ. அசீஸ் முன்மொழியத் திரு. எம். பலீல் ஏ. கபூர் பின்மொழிந்தார். இப்பிரேரணை சிறுபான்மை யினர் சமயங்களின் பெயரை யாப்பில் இடம்பெறச் செய்வதைத் தவிர வேறெந்த விளைவையும் ஏற்படுத்தக்கூடியதல்ல. இருந்தும்
* Donald E. Smith, S. Asian Politics and Religion' -1966, P. ae
 
 
 

سیاسی 393 سیس
இச்சிறு விருப்பத்திற்குத்தானும் யாப்பமைமன்றம் விட்டுக் கொடுக்கவில்லை. இலங்கைவரலாற்றிலும் மரபிலும் பெளத்தம் தனிச்சிறப்புப் பெற்றது ; அத்தனிச்சிறப்பைப் பிரதிபலிக்கச் செய்யும் வகையிற் கவனமான ஆராய்வின் பின்னரே மதங் களுக்குரிய இடம் வரையறுக்கப்பட்டதென்று அரசியலமைப்பு அமைச்சர் விளக்கியுள்ளார். சரித்திரத்தை ஆதாரமாகக் காட்டும் வாதம் சிறுபான்மையினர் பயத்தைப் போக்கும் தன்மையதல்ல; அது தமிழ்மக்களைத் தமது சுதந்திர வரலாற்றையும், இந்து மதத்தின் த னி ச் சிறப் பி னை யும் சிந்திக்கச் செய்துள்ளது: 26 முன்னணிமுதன்மை ' தெளிவற்ற ஒரு பதம் : முதன்மை யின் எல்லை வரையறுக்கப்படாவிடத்து எத்தகைய சலுகை களையும் பெளத்தத்திற்கு அரசு செய்துகொடுக்க இடமளிக் கின்றது: பெளத்த ஒழுக்க நெறிகளை அரசு நன்கு கடைப் பிடித்துச் சட்டவாக்க நிர்வாக நடவடிக்கைகளை எடுக்குமா? ஏனைய மதத்தினருக்கு அரசசேவையில் உரிய இடம் கிடைக்குமா ? இன்றைய ஆட்சிமுறை தொடர்ந்தால் அவற்றையெல்லாம் நிர்ணயிக்கப்போவது பெளத்த வாக்காளர்களாகும் அவர்கள் நியாயமான முறையில் நடக்க அதிகாரத்தைக் கைப்பற்ற விளையும் அரசியற்கட்சிகள் விட்டுவைக்குமா? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. இத்தகைய போக்கிற்குப் " பெளத்த மதத்தைப் பாதுகாத்தலும், பேணிவளர்த்தலும் அரசின் கடமையாதல் வேண்டும் " என்னும் ஏற்பாடு வலுவூட்டுவ தாய் அமையலாம். ' உலக நாடுகளின் எந்த ஓர் அரசிய லமைப்பிலும் பெரும்பான்மை இனத்தின் மதத்தைப் பாது காக்கும் சரத்துக்கள் இடம்பெறவில்லை : பெளத்தத்திற்கு மாத்திரம் அரசாங்கம் உதவிசெய்யமுடியுமே தவிர, மற்ற மதங் களுக்கு அவ்வித உதவிகளைச் செய்யாத நிலை ஏற்படும் இந் நாட்டு அரசாங்கம் ஒரு மதப்பற்றுள்ள அரசாங்கமாகவும், இந்த நாடு ஒரு மதப்பற்றுள்ள நாடாகவுந்தான் விளங்கும் கருணை, அருள் ஆகியவற்றிற் கால்கொண்ட பெளத்தத்தின்பேரில் மக்களை ஒன்றுபடுத்துவதற்குப் பதிலாக, அவர்களைப் பெரும் பான்மையினர் சிறுபான்மையினரென்று பிரித்து வைப் பது விசனத்திற்குரியது. " இவற்றை மனதில் வைத்தே "இலங் கைக் குடியரசு ஒரு மதச்சார்பற்ற அரசாதல் வேண்டும் " என்ற திருத்தப் பிரேரணை தோன்றியது. மதச்சார்புடைய அரசென்று கொள்ளப்படும் பாக்கிஸ்தான், தனது யாப்பு விதி ஆறில், " அதற்கென்று திரட்டப்பட்ட பணத்தையன்றி வேறு பொதுப்பணத்தைக் குறிப்பிட்ட ஒரு மதத்தினர் நலனுக்காகச் செலவு செய்யக்கூடாது' என்ற கட்டுப்பாடு போட்டிருப்பது சிந்தனைக்குரியது.

Page 68
مس– 394 سے
2. மொழி
பொதுக் குறிப்புக்கள் : இரண்டாம் உலக மகாயுத்தத் தின் பின் சுதந்திரமடைந்த நாடுகளுக்குப் பொதுவான பல பிரச்சினைகளில் மிக அடிப்படையானது மொழிபற்றியதாகும். மக்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் நாட்டிற்கேற்ற அரசியற்சாசனத்தை அமைக்கவும், சுயமொழிகளுக்கு உரிய இடத்தை அளிக்கவும் இந்நாடுகள் முயற்சிக்கின்றன. மக்கள் ஒரு மொழி பேசுபவர்களாயின், மொழிபற்றிய உணர்ச்சிகளும், ! கிளர்ச்சிகளும், மோதல்களும் எழவேண்டியதில்லை. பன்மொழி பேசும் தென் ஆசிய நாடுகளின் மொழிக் கொள்கையை வகுப் பதிற் கஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன. இயல்பு மொழியான தாய் மொழி ஒருவனுக்குத் தனிமுறைச் சிறப்பு வாய்ந்தது ; அதன் மூலம் அவன் தனது உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் தெளி வாக வெளியிடலாம், தன் மொழி பேசுபவரோடு கலந்துற வாடி இன்பம் பெறலாம், தனது ஆளுமையையும் படைப் பாற்றலையும் வளர்க்கலாம், தனது கலாசாரத்தையும் பெறு மானங்களையும் அறியலாம் ; அத்தோடு, தனது மொழிபேசும் மக்கட்தொகுதியின் முழுமையையும் மதிப்பையும் நிலைநாட்டு வதற்கு அத்தொகுதியின் கலாசாரத்தோடு நெருங்கிய தொடர் புடைய மொழியைப் பேணிக்காத்தல் அவசியமென்று நம்பு கின்றன். எனவே ஒவ்வொரு மொழித்தொகுதியும் அதன் உறுப்பினரும் சட்ட, நிர்வாக, நீதி, கல்வி, மத, கலாசாரத் துறைகளிற் தமது மொழிக்குப் பிற மொழிகளிலும் பார்க்க உயர் அந்தஸ்தில்லாவிடினும் சம அந்தஸ்தாகிலும் கிடைக்க வேண்டுமென்று விழைவது இயற்கையாம். ஒவ்வொரு மொழியும் நடைமுறையிற் பெறும் முக்கியத்துவம் பல காரணிகளைப் பொறுத்துள்ளது உதாரணமாக, ஒரு மொழியைப் பேசுவோர் தொகை, அதைப் பயன்படுத்தும் நிறுவனங்களின் தன்மை, அம்மொழியின் வரலாறும் மொழியமைப்பும், நாட்டின் சமூக பொருளாதார சூழ்நிலை, கல்விமுறையமைப்பு, மொழிமாற் றத்தால் ஏற்படக்கூடும் செலவினம், மொழிக் கொள்கையை அரசாங்கம் அமுல்செய்யும் தீவிரம் ஆகியன முக்கிய காரணிக ளெனலாம்.
காரணிகள் நாட்டிற்கு நாடு வேறுபடுவதினுல் தேசிய மொழி பற்றிய பிரச்சினைக்கு, எல்லா நாடுகளுக்கும் பொருந்தி ஒரேயொரு தீர்வு எழமுடியாது. கலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் மூன்று பெரும்பிரிவுக் கொள்கைகளில் ஒன்றை மேற்கொள்ளலாம் : 1. ஒரு அல்லது பல சுயமொழிகளை எல்லாச் செயல்நோக்கங்களுக்கும் பயன்படுத்தல், 2. ஒரு அல்லது பல சுயமொழிகளுக்கும் ஒரு சர்வதேச மொழிக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

= 395 -
சம அந்தஸ்து வழங்கல், 3. ஒரு சர்வதேசமொழியை எல்லாச் செயல்நோக்கங்களுக்கும் உபயோகித்தல், கலாசாரம், கல்வி, பொருளாதாரம், சமத்துவம், வணிகம், தேசஓற்றுமை, சர்வ தேச உறவு ஆகிய கோணங்களிலிருந்து ஆராயும்பொழுது ஒவ் வொரு பிரிவுக் கொள்கையைக் கையாளும்பொழுது கூடியோ குறைந்தோ நன்மையும் தீமையும் கலந்தெழுவதைக் கான லாம். ஒரு பன்மொழிநாடு ஆங்கிலம் பிரஞ்சு போன்ற ஏகாதி பத்திய மொழியை அகற்றிவிட்டு, ஒரு சுயமொழியை மாத்திரம் தேசிய மொழியாக்கும் பொழுது, வரலாறு காட்டும் படிப்பினை களை மனதிற் கொள்ளவேண்டியது அவசியம். பிராந்திய மொழியை மாகாண அரசு உத்தியோகமொழியாகப் பயன் படுத்துவதற்கு ஏற்பாடு செய்ததோடு, மத்திய அரசின் உத்தி யோக மொழியாக இந்தி இருக்கவேண்டுமெனினும், 1965 வரை ஆங்கிலம் உத்தியோகமொழியாகத் தொடருமென்று சுதந்திர இந்தியா தனது குடியரசுயாப்பிற் பொறித்திருந்தது; ஆனல் இந்தியை மாத்திரம் உத்தியோகமொழியாக ஏற்க மறுத்த மாகாணங்களில் ஏற்பட்ட கிளர்ச்சிகளினுலும் கலவரங்களி ஞலும் தேவையான காலத்திற்கு ஆங்கிலம் ஒரு துணை அரச கரும மொழியாகத் தொடரலாமென்று மாற்றஞ்செய்யும் நிர்ப் பந்தம் அங்கு ஏற்பட்டது. கனடாவில் ஆங்கிலத்திற்கும், பிரஞ்சு மொழிக்கும் சட்டப்படி சம அந்தஸ்திருப்பினும், பிரஞ்சு பேசு வோருக்குப் பாதகமான முறையில் மொழிக்கொள்கை செயற் படுத்தப்படுகிறதென்ற காரணத்தால் வன்செயல்களும் பிரிவினை இயக்கமும் தலைதூக்கியுள்ளன. இதுபோன்ற காரணத்தை யிட்டுப் பிரஞ்சும் பிளெமிஸ் மொழியும் பேசப்படும் பெல்ஜி யத்தில் மொழிப்பிரச்சினை மோதல்களை ஏற்படுத்தும் தன்மை யதாயுள்ளது. இவற்றிற்கு மாருக சுவிற்சலாந்தின் 4 அரச கருமமொழிகளில் 12% மக்களின் தாய்மொழியாகிய ருேமா னிஸ் மொழியும் ஒன்ருகும் : சிங்கப்பூரில் குடியேறிய தமிழர் களின் மொழியும் அரசகருமமொழியாக்கப்பட்டுள்ளது ; பின் லாந்தில் 9% மக்கள் பேசும் சுவிஸ்மொழி பினிஷ் மொழியோடு சம அந்தஸ்து வகிக்கின்றது; சிறுபான்மையினரின் மொழிகள் இரண்டாம் நிலைக்குத் தாழ்த்தப்படாத இந்நாடுகள் ஒற்றுமை யுடன் முன்னேறுவதைக் காணலாம்: " ஒரு தொகுதி மக்க ளின் பொதுநலன் மீதெழுந்த ஒத்தபண்பின் பிரதிபலிப்பே ஒரு பொதுமொழியாகும். இக்கருத்தைத் தலைகீழாக்கி, ஒரு பொது மொழி நாட்டுமக்களிடையே ஒத்த பண்பைக் கட்டாயம் ஏற் படுத்தும் என்று கொள்வதினுல், நாட்டில் மொழி வகிக்க வேண்டிய இடம் குறித்துப் பல தப்பெண்ணங்கள் இன்று எழுந்துள்ளன. ' பன்மொழி நாட்டில் ஒரு மொழியை மாத்
1. R. B. Le Page, *The National Language Question. P. 14.

Page 69
- 396 -
திரம் அரசகருமமொழியாக்கும் சட்டத்தை ஆக்கிவிட்டால் மக்களிடையே ஒற்றுமை வளருமென்பதற்கில்லை. ஒரு பகுதி யினர்தானும் அச்சட்டத்தை ஏற்காதுவிட்டால், வன்முறையில் இறங்காவிடினும் அமைதிவழியான அறப்போர்மூலம் எதிர்க்கத் துணிந்துவிட்டால், ஒழுங்கான ஆட்சி தடைப்படும் 3 நேரமும் ஆற்றலும் பணமும் விரயமாகும் : சிறுபான்மையினர் நலன் மாத்திரமின்றி நாட்டின் முன்னேற்றமும் பாதிக்கப்படும். ஆங்கிலேயர் உவேல்சைக் கைப்பற்றிச் சில நூற்ருண்டுகள் சென்றிடினும், உவேல்ஸ் மொழிப் பிரச்சினை அரசாங்கத்திற்குத் தலையிடி கொடுக்கும் பிரச்சினையாக இன்றுமுள்ளது.
இலங்கையில் குடியரசுயாப்புவரை : 1953 குடி மதிப்புப் புள்ளிவிபரங்களின் படி 2 வயதிற்கு மேற்பட்டோர் பேசிய மொழியும் மக்கள் தொகையில் அவர்களின் விகிதா சாரமும் :-
பேசிய மொழி (கள்) விகிதாசாரம் சிங்களம் மாத்திரம் 58 9 தமிழ் 舞 多 2夏°6 ஆங்கிலம் 娜娜 2 சிங்களமும் தமிழும் 9 9 9 ஆங்கிலமும் 4 9 2 தமிழும் 麟 靜 2 * 0. மூன்று மொழிகளும் 3 2
Tij oog -
சிங்களரையும், தமிழரையும் வேறுபடுத்திய முக்கிய காரணி மொழியெனலாம். மொழி ஒவ்வொரு சமுதாய உறுப்பினரை இணைத்தும், இரு சமுதாயங்களைப் பிரித்தும் வைத்துள்ளது. இரு சமுதாயங்களிலும் மொழிப்பெயரே மக்கள் பெயராகவும் இருப் பது குறிப்பிடற்பாலது. சிங்களரும் தமிழரும் பெரும்பாலும் மொழிவழித் தொகுதிகளென்று ஜென்னிங்ஸ் கருதியுள்ளார். * சுதந்திரம் பெற்ற சிறுகாலத்திற்குள் அரசகருமமொழிப் பிரச் சினை நாட்டைப் பிளவுபடுத்தும், உணர்ச்சிகளை எழுச்சியுறச் செய்யும் மிகமுக்கிய காரணியாக இலங்கை அரசியலில் இருந் துள்ளது. "1 இந்நிலை கலனித்துவ ஆட்சியின் விளைவாகும். 16ஆம், 17ஆம் நூற்ருண்டுப் போர்த்துக்கேய ஆட்சியாளரின் தூண்டுதலினுல் கடலோர நகரங்களில் மாத்திரம் ஆட்சியாளரின் மொழி சிறு முக்கியத்துவம் பெற்றது. அவர்களும் ஒல்லாந்
1. Robert Kearney, 'Communalism and Language in the Politics of
Ceylon

- 397 -
தரும் தத்தம் மொழிகளைப் பதிவுமொழியாகவும், சில மத்திய அரசாங்க தேவைகளுக்கும் பயன்படுத்தினர்; ஆட்சியதிகாரம் தேசியமொழிகள்மூலம் செயற்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் ஆட்சியாளர்மொழி பரிபாலனத்தில் முக்கியத்துவம் பெற்று 1956 வரை 14 நூற்ருண்டுகாலம் சட்டத்தாலன்றி வழக்கத்தி ஞல் ஆட்சிமொழியாயிருந்தது; மக்களின் மொழிகளென்ற முறையில் சிங்களமும் தமிழும் சம அந்தஸ்துடையனவாயிருந் தன. ஆங்கிலம் தெரிந்த 8% மக்கள் அரசசேவையிலும், அரசியல் பொருளாதாரத் துறைகளிலும் புகுந்து ஏனையோரி லும் பார்க்க உயர்ந்த வாழ்க்கைத்தரத்தையும் சமூக அந்தஸ் தையும் அனுபவித்தனர்:
இலங்கை முழுச்சுதந்திரம் பெறும் தறுவாயில், நாட்டின் கெளரவத்தைப் பேணவும், சுய மொழிகளை மட்டும் பேசும் மக்களுக்கு நீதி வழங்கவும் ஆங்கிலத்தைப் பல துறைகளிலு மிருந்து அகற்றுதல் அவசியமாயிற்று. சிங்களமும் தமிழும் * சமத்துவ அடிப்படையில். சம அந்தஸ்து அனுபவிக்கும் வகையில் " நாட்டின் அரசகரும மொழிகளாக இருக்கவேண்டும் என்னும் பிரேரணையை அரசசபை 1944இல், கிட்டத்தட்ட ஏகமனதாக ஏற்றுக்கொண்டது; ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்த " எமது சட்டமன்றத்தினர், ஒருவேளை தன்னுணர்வின்றியே, இங்கு இன ஒற்றுமை நிலவு கின்றதென்ற எண்ணத்தை எமது எசமானர்கள் மனதில் பதிய வைக்கும் நாட்டமுடையவர்களாய் இருந்திருக்கலாம். ' சுதந் திரங் கிடைத்த சிறிது காலத்திற்குள், சிங்களத்தை மட்டும் அரசகருமமொழியாக்கும் கிளர்ச்சி ஆரம்பமாகி வலுப்பெற்றது: சிங்கள வாக்காளரின் ஆதரவைப் பெற்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குச் சு. கட்சியும் ஐ. தே. கட்சியும் 1955இல் இருமொழிக் கொள்கையைத் துறந்து தனிச்சிங்களக் கொள் கையைத் தழுவின ல. ச. ச. கட்சியும் க. கட்சியும் 1960இல் தனிச்சிங்களத்திற்கு மாறின. சு. கட்சியின் தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி 1956 பொதுத்தேர்தலில் வெற்றி யெய்திய இரு மாதங்களுள் " சிங்களம் மாத்திரம் சட்டத்தை ஆக்கியது. இச்சட்டம் பற்றியும், 1958 தமிழ்மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டம், 1961 நீதிமன்றமொழிச்சட்டம், 1966 தமிழ்மொழி (விசேட ஏற்பாட்டுப்) பிரமாணங்கள் ஆகியன பற்றியும் எழுந்த வாதப்பிரதிவாதங்கள், பாராளுமன்றத்திற்கு உள்ளும் புறமும் நடந்த நிகழ்ச்சிகள், சட்டமும் ஒழுங்கும் பாதிக்கப்பட்டதினுல் தோன்றிய அவசரகாலப் பிரகடனங்கள்
l. J. Handy-Perinbanayagam, *Face-Saving" - a memorandum sub mitted to the Steering Committee of the Constituent Assembly.

Page 70
- 398 -
இந்நிலைக்கான அடிப்படைக் காரணம் ' மொழிப்பிரச்சினை சிங்கள மக்களுக்கு அவர்களின் மூதாதையர் வழியான மர புரிமையை மீட்கும், பெரும்பான்மையினருக்குரிய மேல்நிலை யையும் தனிச்சிறப்புரிமையையும் மீண்டும் உறுதிசெய்யும் சின்ன மாகியது ; தமிழருக்கோவெனில் மொழிப்பிரச்சினை சிங்களப் பெரும்பான்மையினரின் பேரச்சம்தரும் மேலாதிக்கச் சின் r மாகியதோடு தமிழர்களின் தனித்துவ வாழ்வையும் அச்சுறுத் தியது. "1 தமிழர் கூட்டணியின் தனித்தமிழ்நாட்டுக் கோரிக் கையிலிருந்து, சிங்களமக்களால் குடியரசுயாப்பில் திணிக்கப் பட்ட மொழிபற்றிய ஏற்பாடுகள், பிரிந்துசெல்லும் இரு சமுதாயங்களையும் இணைக்க உதவவில்லையென்று கூறலாம். ஏற்பாடுகள் அரசகருமமொழி, சட்டவாக்கமொழி, நீதிமன்ற மொழி என்ற மூன்று பிரிவுகளின் கீழ் பொறிக்கப்பட்டுள்ளன.
அரசகருமமொழி பற்றிய ஏற்பாடுகளாவன : (அ) 1956 அரசகருமமொழிச் சட்டம் ஏற்பாடுசெய்தவாறு, இலங்கையின் அரசகருமமொழியாகச் சிங்களம் செயற்படவேண்டும்-7 (ஆ) 1958 தமிழ்மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டப் பிரகாரம் தமிழின் உபயோகம் இருத்தல்வேண்டும்-8/1, (இ) தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்டு யாப்புத் தொடங்குகையில் வலுவுள்ளதாயிருந்த எந்த பிரமாணமும் யாப்புச்சட்டமாகவன்றித் துணைநிலைச் சட் மாகக் கொள்ளப்படல் வேண்டும்-8/2,
(அ) தனிச் சிங்களச்சட்டம் பற்றிய சில குறி புரைகள் : 1. 1956 அரசகரும மொழிச் சட்டத்தின் பி காரம் " சிங்களமொழியே ஒரேயொரு அரசகருமமொழியாக செயற்படவேண்டும். ' அத்தோடு இச்சட்டம், பிரமாணங்கள் அல்லது பணித்துறைச் செயற்கட்டளைகள் மூலம் 31-12-60 வரை வேறு மொழிகளை உபயோகப்படுத்துவதற்கும் வழி வகுத்துள்ளது ; இதன் கீழ் பிரமாணங்கள் எதுவும் ஆக்கப் படவில்லையாயினும், பல பணித்துறைச் செயற்கட்டளைகள் விடுக்கப்பட்டன. 1961 தொடக்கம் சிங்களமே அரசகரும மொழியாக இருந்துள்ளது. எனவே ' 1956 அரசகருமமொழிச் சட்டம் ஏற்பாடு செய்தவாறு ' என்ற அணுவசிய சொற்களை அகற்றிவிட்டு " இலங்கையின் அரசகருமமொழியாகச் சிங்களம் செயற்படவேண்டும் ' என்று புதிய யாப்பில் பொறித்தல் ஆட்சியாளரின் நோக்கத்தை எய்தப் போதுமானது. 2. அரசிய
1. Robert Kearney, ibid.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

س - 399 سيبي.
சட்டமாயிருந்தது ; சட்டமன்றத்தின் சாதாரண பெரும் பான்மையினுல் மாற்றக்கூடும் தன்மையது. அதற்குத் தேவை யான திருத்தங்களைச் செய்யத் தான் தயாரென்று அதை 1956இல் பிரேரித்த அன்றைய பிரதமர் கூறியிருந்தார். இன்று தனிச்சிங்களச் சட்டம் யாப்புச்சட்ட அந்தஸ்திற்கு உயர்த்தப் பட்டுள்ளது ; தேசிய அரசுப்பேரவையின் மூன்றில் இரண்டிற்கு மேற்பட்ட பெரும்பான்மையினுல் மாத்திரம் அதைத் திருத்த முடியும். இத்தகைய பெரும்பான்மை ஆதரவை வருங்காலச் சட்டமன்ற மெதிலும் எதிர்பார்க்கமுடியாது. அத்தோடு முன்னைய யாப்பின் 29ஆவது விதியின் கீழ் தனிச்சிங்களச் சட்டம் செல்லுபடியாகுமாவென்று கோடீஸ்வரன் வழக்கில் நீதிமன்றத்தின்முன் வாதாடப்பட்டது : தீர்ப்பு வழங்கப்படுமுன் பிரகடனப்படுத்தப்பட்ட புதிய யாப்பு அச்சட்டத்தைச் சட்ட ரீதியான ஆட்சேபனைக்கு அப்பாற்படுத்திவிட்டது. 3. தனிச் சிங்கள ச்சட்டம் சிங்களமக்களுக்குப் பூரண மொழியுரிமைகளை வழங்குகின்றது : " அது நியாயமானது சுதந்திரத்தின் மறுக்க முடியாத விளைவுகளில் ஒன்று. அதேபோலத் தமிழ் மக்களுக்குத் தமிழ் ஆட்சி மொழியாகவேண்டு மென்பதே தமிழ் மக்களின் கோரிக்கை: தமிழ் மக்களும் இந்நாட்டிற் சுதந்திரம் பெற்ற மக்களாயின் அவர்களுடைய ஆட்சிமொழி தமிழாக இருக்க வேண்டும். ' தனிச்சிங்களச்சட்டம் இவ்வுரிமையை மறுக்கின்றது; குடியரசு யாப்பு மறுப்பை உறுதிப்படுத்துகின்றது. சிங்களமும், தமிழும் அரசகரும மொழிகளாக ஆக்கப்படும் என்று திரு. டி. எஸ். சேனநாயக்கா சோல்பரி யாப்பை அரச சபை ஏற்றபொழுதும், பின்னர் பிரதமரான சேர் யோன் கொத்தலாவல 1954இல் யாழ்ப்பாணத்திற்குச் சென்றபோதும் உறுதிமொழி கொடுத் திருந்தனர். 1955 வரை எல்லா அரசியற்கட்சிகளும் இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்குவதில் ஒத்த கருத் துடையனவாக இருந் ஆன. அவ்வாண்டில் சு. கட்சியும் ஐ. தே. கட்சியும் தனிச்சிங்களக் கொள்கைக்கு மாறினலும், திரு. எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா தமிழுக்கு நியாயமான உப யோகவுரிமை கொடுப்பதாக வாக்களித்ததினுல் தென்னகத்துத் தமிழ் மக்கள் சு. கட்சியை 1956 பொதுத்தேர்தலில் ஆதரித்த தாகக் கூறப்படுகின்றது. பிரதமராகிய பண்டாரநாயக்கா தான் தயாரித்த முதலாவது சிங்கள வரைச் சட்டத்தில் தமிழுக்கு நியாயமான இடமளித்தார் ஆனல் சிங்கள மொழித் தீவிர வாதிகளின் எதிர்ப்பினுல், தனிச்சிங்கள மசோதா மாத்திரம் சட்டமன்றத்தில் பின்னர் சமர்ப்பிக்கப்பட்டுப், பரந்த இனக்
1. ஆ. அமிர்தலிங்கம், “தமிழரசுக்கட்சியின் 12ஆவது மாநில மாநாட்டுத்
தலைமைப் பேருரை -ப. 7.
g), III - 17

Page 71
سمت 400 سه
கலவரத்திற்கு மத்தியில், 55 சாதகமான, 28 பாதகமான வாக்குகளைப் பெற்றுச் சட்டமாகியது. மசோதாவை முன் மொழிந்த பிரதமர், தமிழ்மொழிக்கு இடமில்லா அரசகரும மொழி ஏற்பாடு குறைபாடுடையதென்றும், தகுந்த சூழ்நிலை யில் வட்டமேசை மகாநாடொன்றைக் கூட்டி ஆராய்ந்த பின் வேண்டிய மாற்றம் செய்யப்படுமென்றும் வாக்குறுதியளித்தார். வேலைநிறுத்தங்கள், அமைச்சரவைப் பிணக்குகள், தீவிரவாதி களின் போக்குகள் தகுந்த சூழ்நிலையையோ, அவகாசத்தையோ பிரதமருக்கு அளிக்கவில்லை. எனவே தமிழரசுக்கட்சித் தலைவரை அழைத்து மொழியுரிமை, குடியேற்றம், பிரதேச சுயாட்சி பற்றிய ஒப்பந்தமொன்றை 1957இல் செய்துகொண்டார். இவ் வொப்பந்தத்தில், "தமிழ் ஒரு தேசிய சிறுபான்மையோரின் மொழியென்பது சட்டபூர்வமாக அங்கீகரிக் கப் படு மென்று ஏற்றுக்கொண்டார் : தமிழ்மூலம் கல்விகற்கும் உரிமை, தமிழில் அரசாங்கத்தோடு கருமமாற்றும் உரிமை, உள்ளூராட்சி மன்றங் களில் தமிழ் உபயோகம், வடக்கு கிழக்கு மாகாண நிர்வா கத்தில் தமிழ் உபயோகம் ஆகியவை பற்றிய நாலு அம்சங் களில், வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிர்வாகமொழி தமி ழென்பதும், இம்மாகாணங்களில் வாழும் தமிழ்பேசுவோர் அல்லாத சிறுபான்மையோருக்கு ஏற்ற ஒழுங்குசெய்வதும் சேர்த்துக்கொள்ளப்படும் என்றும் ஒப்புக் கொண்டார்." ப-செ ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படாதது வரலாருகும்: **தீயசக்திகள் இன்னும் வலிமை வாய்ந்தன" என்ருர் பிரதமர். இவற்றின் பின்னணியில் நடந்த 1958 இனக்கலவர காலத்தில், தமிழரசுக்கட்சித் தலைவர்கள் தடுப்புக்காவலில் இருந்தபோது புதிய யாப்பிற் குறிக்கப்பெற்ற தமிழ்மொழியின் உபயோகத் திற்கான (விசேட ஏற்பாடுகள்) சட்டம் ஆக்கப்பட்டது.
(ஆ) தமிழ் உபயோகச் சட்டம் பற்றிய குறிப் புரைகள் : 1. போதனமொழியைத் தவிர்ந்த அதன் ஏற் பாடுகளாவன : தமிழ்மூலம் கல்விகற்ற ஒருவருக்கு, அரச சேவையில் நுழைவதற்கான பரீட்சை எதிலும் தமிழ்மொழி மூலம் தெரிவுசெய்யப்படும் உரிமையுண்டு ஆணுல் இச்சட்டத் தின் கீழ் ஆக்கப்படும் பிரமாணங்கள் விதித்தபடி அவர் (அ) சிங்க ளத்தில் போதுமான அறிவுடையவராக இருக்கவேண்டும், அல்லது (ஆ) அத்தகைய அறிவை அரசசேவையிற் சேர்ந்தபின் குறிப்பிட்ட காலத்திற்குள் பெறவேண்டும். தமிழ்ப்பாடசாலை களில் சிங்களம் போதிப்பதற்குப் போதிய வசதிகள் உண்டென் றும், இரண்டாவது நிபந்தனையை அகற்றுவதனல் மிதமிஞ்சிய இன்னல் ஏற்படாதென்றும் அரசாங்கம் திருப்திப்பட்டால் பிரமாணம்மூலம் அந்நிபந்தனையை நீக்கிவிடலாம்-விதி 3, தமிழ்மூலம் கல்விகற்ருேருக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலும்,

حسینے 401 ستمبی۔
வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங் களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலும், இச்சட்டத்தின்கீழ் ஆக்கப்படும் பிரமாணங்கள் விதித்தபடி தமிழ்மொழியிற் கடிதத் தொடர்பு நடைபெறலாம்-விதி 4. தனிச்சிங்களச் சட்டத் திற்குத் தீங்கு செய்யாதவகையில், இச்சட்டத்தின்கீழ் ஆக்கப் படும் பிரமாணங்கள் நிர்ணயிக்கும் நிர்வாக நோக்கங்களுக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்மொழி உபயோகிக்கப்பட லாம்-விதி 5: இச்சட்டத்தின் நெறிகளையும் ஏற்பாடுகளையும் அமுல்செய்வதற்கு (சம்பந்தப்பட்ட) அமைச்சர் பிரமாணங்களை ஆக்கலாம். பிரமாணங்கள் சட்டமன்றத்தினுல் அங்கீகரிக்கப் பட்டு, அங்கீகாரம் வர்த்தமானியில் வெளிவந்தபின்னரே செயற் படும்.--விதி 5, 23 தமிழ்மொழி உபயோகச் சட்டம் அவசரகால நிலையில், உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் மத்தியில் ஆக்கப்பட் டது. மசோதா சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது த. கட்சித் தலைவர்கள் தடுப்புக்காவலில் இருந்தனர் : எதிர்த்திறம் வெளி நடப்புச் செய்தது. எனவே, நன்கு ஆராயப்படாது மசோதா நிறைவேற்றப்பட்டதென்று கூறலாம்; அத்தோடு திரு : பண்டாரநாயக்கா அவர்களின் சமரசப்போக்கைப் பிரதிபலிக் காது, மட்டுமீறிய சிங்கள மொழிப் பற்ருளர்களின் விருப்பத் தைப் பிரதிபலித்தது. ல, ச, ச, கட்சி சட்டத்தைத் தான் ஏற்க வில்லையென்று கூறிற்று 3. அரசஅலுவலர் பற்றிய மூன்ருவது விதியை நோக்கும்பொழுது, பல பொதுநிறுவனங்களில் எழும் பதவிகளுக்குப் போதிய சிங்கள மொழியறிவுடையோரே சில காலமாக நியமிக்கப்படுவதைக் காணலாம், ஆட்சியாளர்கள் தமிழ்ப்பாடசாலைகளில் அரசகருமமொழியைப் போதிப்பதற்கு வேண்டிய வசதிகளை ஆக்கிக்கொடுக்காத சூழ்நிலையில், சிங்களத் தைப் போதனுமொழியாகக்கொண்ட மாணவர்கள் தமிழ்மொழி மூலம் கல்விபெறுவோரிலும் பார்க்க, அரசசேவையிற் சேரு வதற்குக் கூடிய வாய்ப்பைப் பெறுகின்றனர். அத்தோடு, அரச சேவையிற் சேர்ந்த " தமிழரசாங்க ஊழியரைத் தண்டிக்கும் வகையில் தனிச்சிங்களச்சட்டம் அமுலாக்கப்படுகின்றது. சிங்க ளத்தில் போதிய தேர்ச்சி பெருதோருக்குச் சம்பள உயர்வு, பதவி உயர்வு, புலமைப்பரிசு ஆகியன மறுக்கப்படுகின்றன ; பலர் பதவிநீக்கஞ் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்ப்பகுதிகளில் அதி முக்கியமற்ற கடமைகளைச் செய்யும் தமிழர்கள் சிங் களத்தேர்ச்சி பெறவேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்படும்போது, தமிழ்ப் பகுதி களில் அதிமுக்கியமான கடமைகளில் ஈடுபட்டுள்ள சிங்களவர் தமிழைப் பயிலவேண்டுமென்று கேட்கப்படுவதில்லை. இதன் நோக்கம் நிர்வாகத்தைத் திறழைப்படுத்துவதற்கல்ல; தனிச்

Page 72
–ص= 402 سے=
சிங்கள மயமாக்குவதற்காகும்." 1 43 கடிதத்தொடர்பு, நிர்வாகம் ஆகியன பற்றிய நாலாம் ஐந்தாம் விதிகள், (அ) தமிழின் உபயோகம் கட்டாயமானதென்று கூறவில்லை : அரசாங்கம் விரும்பினுல் தமிழில் கடிதத்தொடர்பு * நடை பெறலாம் , நிர்வாக நோக்கங்களுக்குத் தமிழ் உபயோகிக்கப் படலாம் ? என்பதைக் குறிக்கும் " மே " எனும் ஆங்கிலப் பதம் கையாளப்பட்டிருக்கும் சொ ல் ந ப ம் கவனிக்கற்பாலது. (ஆ) தமிழ் பேசுவோரின் மொழியுரிமைகளைத் திட்டவட்டமாக வரையறுக்கவில்லை. தெருக்களின் பெயர், அஞ்சல்நிலையங்களின் பெயர், பங்கீட்டரிசிப் புத்தகம், இ. போ. ச. பஸ்கள் சேரிடம் போன்றவற்றில் நிர்வாகரீதியாகத் தமிழ் உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது : திருமணப் பதிவுச் சட்டம், தேர்தல் திருத்தச் சட்டம் போன்ற பல சட்டங்கள் தமிழ் உபயோகத்திற்கும் இடமளிக்கின்றன. இத்தகைய உபயோகங்களின் கதிதான் என்ன ? நிலவும் சட்டங்கள் தொடர்ந்து வலுவுள்ளனவாக இருக்கும் என்ற யாப்பு விதி 12 திருப்திகரமான ஏற்பாடென்று கொள்ளமுடியாது. அத்தோடு, வருங் காலத்தில் தமிழ்மொழியின் உரிமை என்னவாகுமென்று வரையறுத்துக் கூறுவதற்கில்லை : அது வருங்காலத்தில் ஆக்கப்படும் அல்லது ஆக்கப்படாமல் விடப்படும் பிரமாணங்களைப் பொறுத்ததாகும். 5. சட்டம் அனுமதித்த நெறிகளைச் செயற்படுத்துவதற்குப் பிரமாணங்கள் அவசியமென்று தமிழ்மொழிச்சட்டமே விதித்துள்ளது. 1966 வரை ஒரு பிரமானந்தானும் ஆக்கப்படவில்லை. 1980இல் சிறிமாவோ அரசாங்கம் சட்டமன்றத்தில் சமர்ப்பித்த சில பிரமாணங்கள்தானும் சில அரசியலாரின் சூழ்ச்சியால் நிறை வேற்றப்படாமல் மீட்கப்பட்டன. இதஞல், ' எட்டாண்டுக ளாகத் தமிழ்மொழிச் சட்டம் உயிரடங்கிய பிணமாகவே கிடந் தது."2 பிணத்திற்கு ஓரளவு உயிர்கொடுக்கும் எத்தனமாக, 1965இல் த. கட்சி ஐ. தே. கட்சியுடன் செய்துகொண்ட மொழி சுயாட்சி குடியேற்ற ஒப்பந்தத்தின் பயனுய் 1966இல் தமிழ்மொழி (விசேட ஏற்பாடுகள்) பிரமாணங்கள் நிறை வேறின.
(இ) பிரமாணங்கள் பற்றிய குறிப்புரைகள் : 1. இப் பிரமாணங்களாவன : தனிச்சிங்களச் சட்டத்தின் செயற் பாட் டிற்குத் தீங்கு விளைவிக்காதமுறையில் (அ) வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள திணைக்களம், அரசாங்க நிறுவனம், பொதுக் கூட்டுத்தாபனம், சட்டத்தால் நிறுவப்பெற்ற தாபனம் எதிலும் அல்லது எதனலும் அனைத்து அரசாங்கப், பொதுக்
. T. U. F. Memorandum on Discrimination to I. C. J., pp. 25, 26. 2. பண்டிதர் க. பொ. இரத்தினம் அடிமைச் சாசனம் - ப. 3,
 
 
 

سی۔سی۔ 403 ~~۔
கருமங்களைச் செய்வதற்கும், (ஆ) தமிழ்மூலம் கல்விபயின்ருே ருக்கும் அரச அலுவலர்க்கும் இடையிலும், வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள, தமிழில் கருமமாற்றுகின்ற உள்ளூராட்சி மன்றம் எதற்கும் அரச அலுவலர்க்கும் இடையிலும், நடை பெறும் அனைத்துக் கடிதத்தொடர்புக்கும் தமிழ்மொழியும் உபயோகிக்கப்படல்வேண்டும்-விதி 2. 1958 தமிழ்மொழிச் சட்டத்தினதும் மேற்கூறிய இரண்டாம் விதிப் பிரமாணங்களி னதும் நெறிகளுக்கும் ஏற்பாடுகளுக்கும் முழுமையான வலுவை யும் செயல் விளைவையும் கொடுப்பதற்காக அனைத்துக் கட்டளைச் சட்டங்கள், சட்டங்கள், எழுத்திலான சட்டம் எதன் கீழும் ஆக்கப் பட்ட அல்லது வெளியிடப்பட்ட பணிகள் பிரசித்தங்கள், விதிகள், துணை விதிகள், பிரமாணங்கள், அறிவித்தல்கள், அரசாங்க வர்த்த மானி, அரசாங்கப் பொதுக்கூட்டுநிறுவனம், சட்டதாபனம் எவற்றினலும் வெளியிடப்பட்ட அல்லது பாவிக்கப்பட்ட வேறு உத்தியோக ரீதியான வெளியீடுகள் சுற்றறிக்கைகள் படிவங்கள் தமிழிலும் மொழிபெயர்த்து வெளியிடப்படவேண்டும்-விதி 3: 2. தமிழ்மொழிப் பிரமாணங்களை முக்கூட்டணியினர் வன்மை யாக எதிர்த்துள்ளனர்; அவைகள் சட்டமன்றத்தில் விவாதிக்கப் பட்டபொழுது, நிறைவேருமல் தடுப்பதற்குப் பாராளுமன்றத் திற்கு வெளியில் பெருங்கிளர்ச்சி செய்தனர் : கிளர்ச்சியில் ஒரு புத்தபிக்கு பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இரை யானது தெரிந்ததே. 1970இல் கூட்டணி ஆட்சியைக் கைப் பற்றியதும் புத்த பிக்கு இறந்த இடத்தில் நினைவுத் தூண் எழுப்பி, விழாவெடுத்துத் தமிழெதிர்ப்பை உறுதிப்படுத்தியது: 3. எதிர்ப்பை உறுதிப்படுத்தியதோடு நில்லாது, தமிழ்மொழிச் சட்டம் சில நோக்கங்களுக்குத் தமிழை உபயோகிக்கலாம் என்பதைக் குறிக்கும் " மே " என்னும் ஆங்கிலப் பதத்தைக் கையா ளும் பொழுது, அச் சட்டத்தின் பிரகாரம் ஆக்கப்பட்ட 1966 பிரமாணங்கள் சில நோக்கங்களுக்குத் தமிழ் கட்டாயம் உபயோ கிக்கப்படவேண்டுமென்பதைக் குறிக்கும் ஷால் " என்ற பதத் தைக் கையாள்வதால், பிரமாணங்கள் தமிழ்மொழிச்சட்டத் தின் அதிகார எல்லையை மீறியனவென்றும், எனவே செல்லுபடி யாகாதவையென்றும் முக்கூட்டணி கூறுகின்றது. இக்கருத்தை மொழிச்சட்டங்களின் அமுலுக்குப் பொறுப்பான நீதியமைச்சர் திரு. பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா பாராளுமன்றத்திலும் 1 அரசியலமைப்பு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா யாப்பமை மன்றத்திலும்? உறுதிப்படுத்தி
1, 30-11-71 அஞ்சாட்டு 9315 நிரல் 1772, 1773, 2. யாப்பமைமன்ற அறிக்கை 2-6 நிரல் 333-337,

Page 73
سب سے 404 ہے۔
யுள்ளனர். எனவே, பிரமாணங்களை அரசாங்கம் நடைமுறைப் படுத்தாதென்று நிதியமைச்சரும் 1 அரசியலமைப்பு அமைச் சரும் திட்டமாக வலியுறுத்திக் கூறிவிட்டார்கள், 4. சிங்களமே ஒரேயொரு அரசகருமமொழி வரையறுக்கப்பட்ட நோக்கங் களுக்கான தமிழ்மொழிச்சட்டம் பிரமாணங்களின்றேல் செயற் படமுடியாது; 1966ஆம் ஆண்டிலேதான் சில பிரமாணங்கள் ஐ. தே. கட்சியிஞல் ஆக்கப்பட்டன : அப்பிரமாணங்களும் வலுவற்றனவென்பது முக்கூட்டணியின் நிலையாகும். வலுவுள்ள பிரமாணங்கள் இல்லாத நிலையில், " யாப்புத் தொடங்கும் பொழுது வலுவுள்ளதாயிருந்த பிரமாணம் எதுவேனும் " என்ற குடியரசுயாப்பின் 812 விதியிலுள்ள சொற்முெடர் சேர்க்கப் பட்டதற்கான காரணம் ஒரு புதிராகவுள்ளது: முக்கூட் டணியின் சட்ட அறிஞர்கள் தங்கள் வியாக்கியானத்தை ஒருவேளை ஐ யுற்றி ருக்கலாம் : அல்லது சிலர் கூறுவது போல், முக்கூட்டணியின் தமிழ்ப்பேசும் ஆதரவாளர்களை மயக்கித் தமிழுக்கு ஒரளவு இடமாகுதல் தரப்பட்டுள்ளதென்று காட்டி அரசியல் இலாபம் பெறும் நோக்கமாயும் இருக்கலாம், 5. 129-12-71ஆம் திகதியன்று வழிகாட்டு விடயக்குழுவினுல் சமர்ப்பிக்கப்பட்ட யாப்பு வரைவில் சிங்களம் மட்டும் சட்டமும் தமிழ்மொழிச் சட்டமுமே குறிக்கப்பட்டுள்ளன. தமிழ்மொழிச் சட்டம் மட்டும் uur7 j1965) சேர்க்கப்பட்டால் அதன் கீழ் ஆக்கப்பட்ட தமிழ்மொழிப் பிரமாணங்களும் யாப்பின் ஒரு பகுதியாகவும் ஆகிவிடலாம். அ ப் ப டி ஆகி வி ட் டால் த மிழ் மொ ழி க் கு க் கட்டாயமாக அரைகுறை உரிமை தானும் கிடைத்துவிடுமேயென்று ஆட்சியாளரிடம் ஒரு பெருங் கவலை தோன்றியது. இந்தச் சந்தேகத்தையும் கவலையையும் நீக்க'2 8/2 பிரிவைச் சேர்த்துவிட்டுத், தமிழ்மொழிப் பிர மாணங்கள் எதுவேனும் யாப்பு ஏற்பாடாக எவ்வகையாக வேனும் பொருள்கொள்ளப்படலாகாதென்று அப்பிரிவில் ஐயந் திரிபற வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்மொழி உபயோகச் சட்டத்தினதும் பிரமாணங்களி னதும் சட்டரீதியான நிலை எவ்வாறிருப்பினும், மொழிச் சட்டங் களை அமுல் செய்வதில் எந்த அளவிற்கு நாகரிக உலகம் எதிர் பார்க்கும் சிறுபான்மையினரின் அடிப்படை மொழியுரிமைகள் மதிக்கப்படுகின்றன என்பது நோக்கற்பாலது. அமுல்பற்றித் தமிழர் கூட்டணி விரக்தியடைந்துள்ளதைக் காணலாம். ' தமிழ் பேசும் மக்களுக்கு அதிக இன்னல்களைத் தராது மொழிச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்கம்
1. 6-8-71 அஞ்சாட்டு 93.115 நிரல் 1771, 1774 2. க. பொ. இரத்தினம், மு. கு. நூ. 1, 15,
 
 
 
 
 
 
 
 

س-405 س--
பலமுறை உறுதியளித்திருப்பினும், நடைமுறைப்படுத்தல் அவ் வளவு கொடியமுறையில் இருப்பதினுல் , சொந்த நாட்டிலேயே தமிழ்பேசும் மக்கள் தாம் அந்நியர்களெனும் உணர்ச்சியைப் பெறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். விறுவிறுப்பான தனிச்சிங்களக் கொள்கையின் அமுலினல் தமிழ்பேசும் மக்கள் அடையும் மானமிழப்பு, தொல்லை, மன உளைவு, ஆகியன விபரிக்கமுடியாத அளவிற்குப் பெருகியுள்ளன. " அரசாங்கத்திடமிருந்தும், ஏனைய பொதுத் துறைகளிலிருந்தும் கிடைக்கின்ற பெரும்பாலான பற்றுச்சீட்டுகள், செக்குகள், பலவித சான்றிதழ்கள், அனுமதிச்சீட்டுகள், கடிதங்கள் போன்றவை சிங்களத்திலே இருப்பதாலும், தமிழ் பேசும் மக்களின் ஒருசிறு தொகையினருக்கே சிங்களம் தெரியுமாதலா லும் அவர்கள் அடையும் இடர்ப்பாடுகள் சொல்லுந்தரத்தன்று.
சட்டவாக்க மொழி: 22-5-72 வரை ஆங்கிலமே சட்ட வாக்க மொழியாக இருந்தது; குடியரசு யாப்பின்படி சட்டங்கள் யாவும் சிங்களத்தில் ஆக்கப்படவேண்டும் அவைகளுக்குத் தமிழில் மொழிபெயர்ப்பும் இருத்தல் வேண்டும் யாப்பு தொடங்கும்போது வலுவுடையனவாயிருந்த துணை நிலைச்சட்டம் உட்பட்ட எழுத்திலான எல்லாச் சட்டங்களும் நீதியமைச்சரின் அதிகாரத்தின் கீழ் இயன்றளவு விரைவாகச் சிங்களத்திலும், தமிழ் மொழிபெயர்ப்பிலும் கசற்றில் வெளியிடப்படல்வேண்டும் : அவ்விதம் வெளியிடப்படும் சட்டம் தேசிய அரசுப்பேரவைமுன் வைக்கப்படல்வேண்டும் பேரவை வேறுவகையில் ஏற்பாடு செய்தாலொழிய சிங்களத்தில் வெளியிடப்பட்ட சட்டம் வெளி யீட்டுத் தேதியிலிருந்து, ஆங்கிலத்திலுள்ள நேரொத்த சட்டத் திற்குப் பதிலாக (நாட்டின்) சட்டமாகக் கருதப்படும். குறிப் புரைகள் : 1. அரசியலறிஞர் ஒருவர்? சிங்களத்தைச் சட்டவாக்க மொழியாக உடனடியாக ஆக்கியதினுல் ஏற்படக்கூடிய பிரச் சினைகளை ஆராய்கின்ருர், உதாரணமாக ஆங்கிலத்திலுள்ள பல சட்டங்களை மொழிபெயர்ப்பதற்கேற்ற பொருத்தமான, சரி நுட்பமான சொற்களைச் சிங்களத்திலும் (தமிழிலும்) தற்போது கண்டுபிடிப்பது எளிதல்ல ; பல இடங்களில் சிதறிக்கிடக்கும் இலங்கைச் சட்டங்களையும், இலங்கைக்குப் பொருந்திய ஆங்கி லேயரின் சட்டங்களையும் மொழிபெயர்த்து முடிக்கப் பன்னெடுங் காலம் எடுக்கும் ஆங்கிலத்திலுள்ள பாராளுமன்றச்சட்டம், வழக்கச்சட்டம், நீதிமன்றத் தீர்பட ஆகியவற்றிற்குச் சிங்களத் தில் திருத்தஞ்செய்வது சிரமத்தையும், காலதாமதத்தையும் துல்லியமற்ற தன்மையையும் ஏற்படுத்தும் சட்டங்களில் ஒரு
1. T. U. F., ibid, p. 24. 2. S. Nadesan ibid. Ch 9.

Page 74
జా 406 =
பகுதி ஆங்கிலத்திலும் மறு பகுதி சிங்களத்திலும் இருக்கும் நிலை சட்டத்தரணியின், சட்டவரைவாளரின், பாராளுமன்ற உறுப் பினரின் கடமைகளை இலகுவாக்கவோ திறமையாக்கவோ முடியாது; தமிழ்பேசும் சட்டமன்றத்தினர் சிங்கள மசோதா விற்குத் திருத்தம் கொண்டுவருவதிற் பிரச்சினைகள் உண்டு. எனவே இந்தியக் குடியரசு யாப்பிலுள்ள நெறிகளைப் பின்பற்றி, சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் சட்டவாக்கம் நடை பெறுவதும், தகுந்த சூழ்நிலையில் தேசிய அரசுப் பேரவை வேறு
வகையில் ஏற்பாடுசெய்யும்வரை ஆங்கிலத்திலான சட்டத்தையே
அதிகாரவுடைமையுடைய சட்டவாக்கமாகக் கொள்வதும் நாட்
டிற்கு நலன்தருமென்று அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.
2. சட்ட மொழிபெயர்ப்புக்குச் சட்ட அந்தஸ்து இல்லை.
இதனுல் சிங்களத்தை வாசித்து விளங்கமுடியாத எவரும்,
வடக்குக் கிழக்கு மாகாணங்களிற் கூட எந்த வழக்கையும்
முழுப்பயன் தரும்வகையில் நடத்த முடியாது.
நீதிமன்ற மொழி: "நீதிமன்றச் செயற்படுமுறை ச் சட்டங்களின் கீழ் ' ஆங்கிலம் நீதிமன்ற மொழியாக 1961 வரை இருந்தது. அவ்வாண்டில் தனிச்சிங்களக் கொள்கையை நீதி மன்றங்களிலும் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதற்குச் சு, கட்சி நீதிமன்றங்களின் மொழிச்சட்டத்தை "' ஆக்கியது. அதன் 2/1 விதியிலிருந்து, எந்த நீதிமன்றத்திலும் சிங்களத் தில் பதிவுசெய்வதற்குவேண்டிய அலுவலரும் வேறு வசதிகளும் உண்டென்று நீதியமைச்சர் திருப்திப்பட்டால், அவர் அந்த நீதிமன்றம் சிங்களத்தில் இயங்கவேண்டுமென்று அட்டளையிடும் அதிகாரம் பெற்ருர், அரசாங்கத்தின் இக்கொள்கையைத் தமிழ் பேசும் மக்கள் எதிர்த்தனர்; கச்சேரி முற்றிக்கைச் சத்தியாக் கிரகம் " ஒரு எடுத்துக்காட்டாம். 1970 வரை சிங்களப் பகுதி களிலுள்ள மிகச்சில ஊர்மன்றங்களே சிங்களத்திற் செயலாற்று மாறு நீதியமைச்சராற் பணிக்கப்பட்டன : அவ்வாண்டில் மிகச் சில நீதவான்மன்றுகளும் சிங்களத்திற் செயல்பட ஆரம் பித்தன.
குடியரசு யாப்பின் 11வது விதியில் நீதிமன்ற மொழி பற்றிய ஏற்பாடுகளைக் காணலாம். அதன்படி எல்லாவித நீதிமன்றங் களினதும் மொழி, இலங்கை எங்கணும் சிங்களமாதல்
1. நீதியை நிருவகிப்பதற்குச் சட்டத்தினுல் அதிகாரம்பெற்ற நீதிமன்றங்கள்
நியாயசபைகள் ; கைத்தொழிற் பிணக்குகள் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட நீதிமன்றங்கள், நியாயசபைகள், ஏனைய நிறுவனங்கள் ; 1958ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க இணககச் சபைகள் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட இணக் கச் சபைகள்; மேற்கூறிய நிறுவனங்கள் போன்று வருங்காலத்தில் சட்டத் தால் தாபிக்கப்படக்கூடிய நிறுவனங்கள்.
 

سے 407 سے۔
வேண்டும். அதற்கிணங்க வழக்குரைகள், நடவடிக்கைக்ள், தீர்ப்புகள், கட்டளைகள், நீதிமுறைச்செயல்கள், சட்டநிறை வேற்றம் சார்ந்த செயல்கள் அனைத்தும் சிங்களத்தில் இருக்க வேண்டும். ஆனல் வடக்குக் கிழக்கு மாகாணங்களில், முதனிலை நியாயாதிக்கத்தைப் பிரயோகிக்கும் நிறுவனங்கள் பற்றித் தேசிய அரசுப் பேரவை சட்டத்தால் " வேறுவகையாக " ஏற் பாடு செய்யலாம்-11/1 குறிப்புரை: 1. நிருவாக, சட்ட வாக்கத் துறைகளிற்போல் நீதித் துறையிலும் சிங்களம் பேசும் மக்கள் அனைவரும் பூரண மொழியுரிமையைப் பெறுகின்றனர் அவ்வுரிமை இப்பொழுது அரசியல் சாசனத்தில் உறுதிபெறுகிறது. வடக்குக் கிழக்கு மாகாணங்களிலாகுதல் தமிழ்மொழி நீதிமன்ற மொழியாகுமென்று யாப்பில் பொறிக்கப்படவில்லை; தேசிய அரசுப் பேரவை விரும்பினுல் இம்மாகாணங்களில் ' வேறு வகை யாக " ஏற்பாடு செய்யலாம். " வேறு வகையாக " என்பது தமிழைக்குறிக்கக்கூடும் அச்சொல்லிற்குப் பதிலாகத் "தமிழில் ? என்ற பதத்தைப் போடுமாறு தமிழ்ப் பிரதிநிதிகள் கேட்டும் ஆட்சியாளர் அவ்விருப்பத்திற்காகுதல் மதிப்புக்கொடுக்கவில்லை, இப்பிரிவின் கீழ் தேசிய அரசுப் பேரவை 1973ஆம் ஆண்டு நீதி மன்றங்களின் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை ஆக்கி, அதன் மூலம் வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள முதனிலை நியாயாதிக்கத்தைப் பிரயோகிக்கும் நிறுவனங்களில் எது, எப் பொழுது தமிழிற் கருமமாற்றவேண்டுமென்று நிர்ணயிக்கும் அதிகாரத்தை நீதியமைச்சருக்கு வழங்கியுள்ளது. எனவே, தமிழ் மொழி உபயோக (விசேட ஏற்பாடுகள்) சட்டம்போல நீதிமன்றங் களின் மொழிச் (விசேட ஏற்பாடுகள்) சட்டமும் தானகவே மொழி யுரிமை எதையும் கொடுக்கவில்லை. கொடுப்பதும் விடுவதும் அமைச்சரின் விருப்பத்தைப் பொறுத்தது, வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள எந்த நீதிமன்றமும் தமிழில் இயங்க வேண்டியதில்லையென்ற அவரின் முடிவைத் தேசிய அரசுப்பேரவை அங்கீகரித்தால் இம்மாகாணங்களிலுள்ள நீதிமன்றங்களில் தானும் தமிழுக்கு இடமற்றுப்போய்விடும். இத்தகைய ஏற் பாடு, காலப்போககில் முழுச் சிங்களமயமாக்கத்திற்கு வழிவகுக் கலாமென்று ஐயுறுவாருமுளர். 2. எந்த நீதிமன்றமும் சிங்களத் தைத் தவிர்ந்த வேறெந்த மொழியிலும் பதிவேடுகளை வைக்க முடியாதென்ற நிபந்தனையும் போடப்பட்டுள்ளது. வடக்குக் கிழக்கு மாகாணங்களிலும் காதிமார் கோடுகளிலும் கட்சிக் காரர், விண்ணப்பகாரர். இவர்களின் சட்டமனுமதித்த பிரதி நிதிகள் ஆகியோர் தமது வழக்குரைகள், விண்ணப்பங்கள், பிரேரணைகள், மனுக்கள் என்பவற்றைத் தமிழில் சமர்ப்பிக்க லாம்; நடவடிக்கைகளிலே தமிழிற் பங்குகொள்ளலாம், இருந்தும்,
g) II - 18

Page 75
حسبہ 408 ہے۔
இத்தகைய சந்தர் ப் பங்களிலும் சிங்கள மொழிபெயர்ப் பொன்றைப் பதிவேடுகளின் பொருட்டு நீதிமன்றம் தயாரித்தல் வேண்டும் என்பது கவனித்தற்பாலது-11/3.
குடியரசு யாப்பில் காணும் வேறு ஏற்பாடுகளாவன: எவ்வித நீதிமன்றத்திலும் பயன்படுத்தப்படும் மொழியை அறிந்திராத கட்சிக்காரர், விண்ணப்பகாரர், நீதிபதி, யூரிமார், நியாயசபை யுறுப்பினர் ஒவ்வொருவரும் நீதிமன்ற நடவடிக்கைகளை விளங்கி அவற்றில் பங்குபற்றுவதற்காக அரசினல் ஏற்பாடுசெய்யப்படும் பேச்சு மொழிபெயர்ப்பையும், சிங்களத்தில் அல்லது தமிழி லான மொழிபெயர்ப்பையும் பெறும் உரிமையுடையர், அத் தகைய ஆள், சட்டம் அனுமதித்த பதிவேட்டை சிங்களத்தில் அல்லது தமிழிற் பெறும் உரிமையுமுடையர்-11/4. எல்லாவித நீதிமன்ற நடவடிக்கைகளிலும் சட்டத்தரணி சிங்களத்தில் அல்லது தமிழிற் பங்குகொள்ளலாமென்பதோடு, சிங்களத்தில் அல்லது தமிழிலான பேச்சு மொழிபெயர்ப்புக்கும் உரிமை யுடையவராவர்-11/5, பதினுெராம் விதியின் முற்போ ந் உபபிரிவுகளில் அடங்கியுள்ள ஏற்பாடுகளுக்கமைய எல்லாவித நீதிமன்ற நீதிபதி, நீதி நிருவகிக்கும் வேறு அரச அலுவலர், வாதாடுநர் ஒருவர் சிங்களம் அல்லது தமிழ் அல்லாத மொழி யைப் பயன்படுத்துவதை அனுமதிக்கும் கட்டளைகளை அமைச்ச ரவையின் ஒருப்பாட்டோடு நீதியமைச்சர் வழங்கலாம். இக் கட்டளைகளை ஒவ்வொரு நீதிபதியும், நீதி நிருவகிக்கும் வேறு அரச அலுவலரும் செயற்படுத்தல்வேண்டும்- 1 1/6
போதனமொழி பற்றி யாப்பில் நேரடியான ஏற்பாடுக இல்லை : யாப்பின் 12/1 விதி 'இப்போதுள்ள சட்டங்கள் ஏற்ற மாற்றங்களுடன் தொடர்ந்து வலுவுள்ளனவாயிருக்கும் ' என்று கூறுகின்றது. இந்தப் பொதுவிதியின் கீழ் இன்றைய போத
ஆட்சி தொடங்கியதும் அரசாங்கத்தின் கீழ் உத்தியோக களுக்கு இலங்கையரை அமர்த்துவதற்காக ஆங்கிலத்தில கல்வி போதனை ஆரம்பமாகிப் படிப்படியாக வளர்ச்சி எய்தியது சிறு தொகையினருக்கு உயர் கல்வி கொடுப்பதற்கான நிறு: னங்களும் பின்னர் தோன்றின. பொதும்க்களிடையே கல்வி யறிவை வளர்க்க விரும்பிய ஆட்சியாளர் 19ஆம் நூற்றண்டுப் பிற்பகுதி தொடக்கம் தேசியமொழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தனர் : ஆங்கிலக் கல்வி பெருமளவிற்குக் கிறித்த சமயப் பரப்பாளர் கையில் சென்றடைந்தது. தேசியமொழிக மூலம் கல்விகற்றேர் தொகை பல்கிப்பெருகியது. மொத்த கல்வியறிவுடையோரில் ஆக்கிலக் கல்வி பெற்றேர் தொகை 1953இல் 1/7 பகுதியாயிருந்தாலும், இச்சிறு தொகையினரே
*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

حسب 409 مصـ
அரசசேவையில், சமூக பொருளாதாரத் துறைகளில், பல்கலைக் கழகப் பிரவேசத்தில் அளவுக்குமீறிய சலுகைகளையும் உரிமை களையும் அனுபவித்தனர். சர்வசன வாக்குரிமை பெற்ற சிங்களக் கல்வியறிவுடைய மத்திய, கீழ் வகுப்பினர் இந்நிலை தொடர் வதை எதிர்ப்பதும், அரசாங்கத்தின் மொழிக்கொள்கையில் மாற்றமேற்படுவதும் இயற்கையாகும். போதனுமொழிபற்றிய மாற்றமே முதலில் ஏற்பட்டது. உளவியல், சமூக, மனே தத்துவ அடிப்படையில் தாய்மொழியே போதனுமொழியாக இருப்பது சிறந்ததென்பது கல்விமான்களின் முடிபு. இதற்கிணங்கப் பாலர் வகுப்புத் தொடக்கம் பல்கலைக்கழகம் ஈருகத் தேசிய மொழி களே போதனுமொழியாக இருக்கவேண்டுமென்று விசேட கல்விக்குழு 1945இல் சிபார்சு செய்தது. இக்கொள்கையைப் படிப்படியாக அமுல் செய்வதற்கென்று அவ்வாண்டில் ஒரு சட்ட மும், பின்னர் காலத்திற்குக்காலம் கட்டளைகளும் ஆக்கப் பட்டன. பிள்ளைகளின் போதனுமொழியைத் தெரிவுசெய்யும் உரிமையைப் பெற்ருேருக்கு வழங்கின், அவர்கள் ஆங்கிலத்தை விரும்பலாமென்ற காரணத்தால் இவ்வுரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது; ஆனுல் மூன்றும் வகுப்புத் தொடக்கம் ஆங் கிலம் ஒரு கட்டாய இரண்டாவது மொழியாகியது. பெற்றேர் விருப்பத்தின் மீது சிறுபான்மையினத்துப் பிள்ளைகளுக்குச் சிங்கள மும் கற்பிக்கப்படலாம். 1956ഴ്ന്ന് தனிச் சிங்கள அரசகரும மொழிச் சட்டம் ஆக்கப்பட்டதையும், அதற்கு எதிரான தமிழ் பேசும் மக்களின் எதிர்ப்பால் 1958 தமிழ்மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டம் தோன்றியதையும் முன்னர் பார்த்தோம். தமிழ்மொழிச் சட்டத்தில் தமிழ்பேசும் மக்களின் போதனு மொழியுரிமை பற்றிய ஏற்பாடொன்றையும் காண லாம்: அதன்படி, 1, 1939 கல் விக் கட்டளைச்சட்டத்தின் கீழ் வலு வுள்ளனவாயிருந்த அல்லது வலுவுள்ளனவாக ஆக்கப்படக்கூடிய பிரமாணங்களுக்கிணங்க, அரசாங்க அல்லது உதவி பெறும் பாடசாலையிலுள்ள ஒரு தமிழ் மாணவன் தமிழ்மொழிமூலம் கல்விபெறும் உரிமையுடையவனுவான் 2. சிங்களம் இலங்கைப் பல் கலைக் கழகத் தி ல் போதனுமொழியாக்கப்படும்போது, 1942ஆம் ஆண்டு பல்கலைக்கழகக் கட்டளைச்சட்டத்திற்கும் அதன் கீழ் ஆக்கப்பட்ட பிரமாணங்களுக்கு மிணங்க, பல்கலைக் கழகப் பிரவேசத்திற்குமுன் தமிழ்மொழிமூலம் கல்விபெற்ற மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் போதனமொழி யாக இருக்கவேண்டும்.
சில குறிப்புரைகள் : 1. தேசிய மொழிகள் மாத்திரம் போதனுமொழிகளாக இருக்கவேண்டுமென்ற கொள்கையின் நடைமுறைப்படுத்தல் 1945இல் ஆரம்பமாயிற்று, அவ்வாண்டில்

Page 76
ہے۔. 410 ہے۔
6r âi» 6q) rTgʻi பாடசாலைகளிலும் தேசியமொழிகளில் ஒன்று ஐந்தாம் வகுப்புவரையிலான ஆரம்பப் பருவ மாணவர் களுக்குக் கட்டாய போதனுமொழியாக இருக்கவேண்டுமென்று சட்டம் விதித்தது. அப்பருவத்தைக் கடந்து, வருடாவருடம் மேல்வகுப்புக்களுக்குச் செல்வோர் ஆரம்பபருவத்து மொழியைப் போதனுமொழியாகத் தொடர்வது பொருத்தமானதாகும் ஆனல், இது நடைபெறவில்லை ஆரம்ப பருவத்தின் பின் பல கட்டங்களிலும், விஞ்ஞானம், கணிதம் போன்ற சில பாடங் களைப் பொறுத்தவரையில் பாடசாலை விரும்பினுல் ஆங்கிலத் தைச் சில காலம் போதனுமொழியாகக்கொள்ள அனுமதித்த அரசாங்கத்தின் ஊசலாடும் கொள்கையைக் காண்கின் ருேம்? இதன் பெறுபேருகச் சுயமொழியொன்றில் கல்விபயின்று வந்த பெருந்தொகையான மாணவர்கள் ஆங்கிலத்திற்கு மாறவும், பெரும் இடர்ப்பாட்டிற்கு ஆளாகவும் நேர்ந்தது ; ஆங்கிலம் தெரிந்த குடும்பத்து மாணவர்கள் ஏனைய மாணவர்களிலும் போர்க்கச் சலுகைபெற முடிந்தது போதனுமொழி மாற்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை இன்னும் முற்ருகத் தீர்ந்துவிடவில்லை : உதாரணமாகச் சுயமொழியிற் கல்விகற்ற மாணவர்கள் பல்கலைக் கழகத்தில் சில பாடங்களை ஆங்கிலம் மூலமே கற்கவேண்டிய இக் கட்டான நிலையிலுள்ளனர். அரசாங்கங்களின் இத்தகைய போக் கிற்குக் காரணம் கல்வியின் தரம் வீழ்ச்சியுருதிருப்பதற்குத் தேவையான சுயமொழியறிவுடைய ஆசிரியரும் சுயமொழிநூல் களும் போதியளவில் இல்லாமையென்று ஒரு சாரார் வாதிடும் போது, ஆங்கிலத்தினல் சலுகைகள் அனுபவித்த வர்க்கத்தின ரின் அயராத முட்டுக்கட்டைதானென்று இன்னுெருசாரார் கண்டனஞ் செய்வர். 23 19 மாணவர்கள் அனைவருக்கும் கட்டாய மாக ஆங்கிலம் தரப்படுமென்ற ஏற்பாடு மக்கள் மீது செய்யப் பட்ட பெரும் ஏமாற்றமாகும் , * 2 பெருந்தொகையான பாட சாலைகளில் ஒரு ஆங்கில ஆசிரியர்தானும் அமர்த்தப்படவில்லை : அமர்த்தப்பட்டோரின் தகமைக்குறைவும் பிரசித்திபெற்றது. ஒருசில பாடசாலைகளில்தான் ஆங்கிலம் போதிப்பதற்கு நல்ல வசதிகளுண்டு. எனவே ஆங்கிலக்கல்வி அனைவருக்கும் சமசந்தர்ப் பத்தை வழங்கும் என்ற வாதத்தில் அர்த்தமேயில்லை. 3, அர சாங்கத்தின் போக்கினுல், சிறுபான்மையினர் தமது மொழி பேசும் மக்கள்தொகை காலப்போக்கில் இன்னும் குறைந்து விடலாமென்று அஞ்சுகின்றனர். உதாரணமாக : (அ) தாய்
1. For details see J. E. Jayasuriya, ' Education in Ceylon before
and after Independence 1969-pp. 78 ff.
2. J. E. Jayasuriya, ibid.
 

سعيد. 1 41 عضح.
மொழியே போதனுமொழியாக வேண்டுமென்ற நிலையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் எத்தனம் வலுப்பெறுவதைக் காண லாம். உயர்நிலைக் கல்விக்குழுவின் தலைவர் 1956இல் அரச கருமமொழியே போதனுமொழியாக இருக்கவேண்டுமென்ற அரசியல்ரீதியான கருத்தைத் தெரிவித்தார் ; 1962 தேசிய கல்விக்குழு பெற்ருேர் விருப்பப்படி சிங்களம் அல்லது தமிழ் போதனுமொழியாக வேண்டுமென்றும், மலையக தோட்டப் பாடசாலைகளில் அரசகருமமொழியே தமிழ் மாணவரின் போதன மொழியாகவேண்டுமென்றும் கூறிற்று : 1967 கல்வி வெள்ளை யறிக்கையும் இக்கருத்தையே வெளியிட்டது 1970 சிம்மர்சன உரை போதனுமொழி " சுயமொழியாய் இருக்கவேண்டு மென்றது : 1972 ஆரும் வகுப்புக் கலைத்திட்டம் முதன் மொழியே போதனுமொழியா யிருக்கவேண்டுமென்கின்றது : (சுயமொழி, முதன் மொழி என்ற சொற்கள் கட்டாயமாகத் தாய்மொழியைக் குறிக்கவில்லை என்பது நோக்கற்பாலது) 1973இல் புத்தூர், அல்வாய், அச்சுவேலி, கரவெட்டி ஆகிய இடங்களிலுள்ள நாலு பாடசாலைகளில் முதலாம் வகுப்புத் தமிழ்ப் பிள்ளைகளுக்கு அரசாங்கம் சிங்களத்தைப் போதனு மொழியாக்கியது. எனவே, " தாய்மொழியே போதனுமொழி யாய் இருக்கவேண்டுமென்று கல்விச்சட்டத்தில் மட்டுமல்ல, அரசியற் சாசனத்திலும் இடம்பெறல்வேண்டும் " என்று கருது வாருமுளர். (ஆ) தமிழ்மாணவர் தமிழ்மூலம் கல்விபெறும் சட்டரீதியான உரிமை பெற்றிருப்பினும், அதற்கான வசதி களைச் செய்து கொடுக்கவேண்டுமென்ற சட்டரீதியான கடமை அரசாங்கத்திற்கு இல்லை. பாடசாலைகளை அமைப்பதில் அரசாங் கத்திற்குத் தன்னுரிமை இருக்கும் சூழ்நிலையில், வடக்குக் கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய பாகங்களில் தமிழ்மூலமான கல்வியைப் போதிப்பதற்கு வேண்டிய வசதிகளை அரசாங்கம் செய்துகொடுக்காததினுல், ஆயிரக்கணக்கான தமிழ்மாணவர் கள் சிங்களம்மூலம் கல்விபெறும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. (இ) போதனுமொழியோடு சம்பந்தப்பட்ட வேறு பல பிரச்சினை களுமுண்டு. உதாரணமாக, தரப்படுத்தல் என்ற போர்வைக் குள் பல்கலைக்கழகப் பிரவேசவிடயத்தில் தமிழ்மாணவர்களுக் குப் பாதகமாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன; மன்னர், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் குறைந்த விஞ்ஞானக்கல்வி வசதிகள்தான் உண்டு : ஆசிரியப் பயிற்சிக்காக ஆசிரிய கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் குறைந்தவீதத் தமிழர்கள் தெரியப்படுகின்றனர் : அரசாங்கம்
1. ப. சந்திரசேகரம், ' காலத்திற்குக்காலம் மாறும் போதனுமொழிக் கொள்கை'
(18-8-72, வீரகேசரி)

Page 77
سیسے 412 مسی۔
வெளியிடும் தமிழ்மொழிப் பாடநூல்கள் உயர்விலையில் விற்கப் படுகின்றன என்று குறைகூறுவாருமுண்டு.
இறுதியில் : முக்கூட்டணியினர் தமது 1970 தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனிச்சிங்களச் சட்டத்திற்கும் தமிழ்மொழிச் சட்டத்திற்கும் அமைந்து மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப் படுமென்று கூறியிருப்பினும், பிரச்சினையையே உருவாக்கிய இச்சட்டங்களை ஒரு மொழியைப் பேசும் இனத்தவரின் பெரும்பான்மையினல் அரசியற் சாசனம் என்ற ஒன்றில் திணித் துப், பிரச்சினையை இன்னும் இறுக்கியுள்ளனர். தமிழினத்தின் மொழியுரிமை கோரி யாப்பமை மன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதி களாற் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் தோற் கடிக்கப்பட்டதனுல் அவர்கள் மன்றத்தை ஒரு கட்டத்தில் பகிஷ்கரித்தனர். "தமிழ்பேசும் மக்கள் தனிச்சிங்களச் சட்டத்தை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை அவர்கள் இதயம் அதற் கெதிராக எஃகுபோன்ற உறுதிபெற்றுவிட்டது." யாப்பைத் திருத்தக்கூடிய மூன்றில் இரண்டிற்கு மேற்பட்ட பெரும்பான் மையைப் பெற்றுள்ள முக்கூட்டணி அரசாங்கம் நியாயமான திருத்தத்தை இப்பொழுதே செய்யா விடின் " சிங்களமக்களே புதிய யாப்பை வகுத்துக்கொண்டதற்காக வருந்தும் நாள் வந்தே தீரும் , "2 தமிழர்கூட்டணி பிரிவினையை ஆதரித்து நிற்பது இதற்கு ஒரு அறிகுறியாகும். சுதந்திர, ஐக்கியதேசியக் கட்சிகளின் முன்னைய, இன்றைய தலைவர்கள் ப-செ ஒப்பந் தத்திற் காணும் குறைந்தபட்ச தமிழ்மொழி உரிமைகளைத் தனித்தனியாக ஏற்றிருப்பினும், அவற்றைப் புத்தபிரான் காட் டிய அன்புவழிநின்று அமுல்செய்யத் தயங்குகின்றனர். இதற் காண காரணத்தை ஆராயப்புகும் பேராசிரியர் ஒருவர், பல காலம் புறக்கணிக்கப்பட்டிருந்த சிங்கள மொழியை இளந் தலைமுறையினர் கற்று நிறைவுபடுத்த, அரசமொழியென்ற அந்தஸ்தினல் ஏற்படும் கீர்த்தி அதற்கு அவசியமென்றும், பாக்கு நீரிணைக்கு வடக்கேயுள்ள தமிழருடன் சேர்த்துப் பார்க்கும் போது சிங்களமக்கள் சிறுபான்மையினராக ஆகிவிடலாமென் றும், ஆங்கிலத்தைக் கற்றதுபோல் சிங்களத்தைத் தமிழ்பேசும் மக்கள் இலகுவாக விரைவாகக் கற்றுவிடுவார்களென்றும் சிங்கள மக்கள் உண்மையில் நம்பியதாகவும், சிங்களம் அரசகருமமொழி யானுல் கூடிய வேலைவாய்ப்புத் தமக்குக் கிடைக்குமென்று பல சிங்கள மத்திய வகுப்பைச் சார்ந்தவர்கள் கருதியதாகவும்
1 S. Handy Perinpanayagam, ibid, P. 12. 2. A. C. Nadarajah, Language and unity". (letter in C. D. N.) 8. W. H. Wriggins, ibid. P. 251.

سب سے 413 ہے۔
எழுதியுள்ளார். இத்தகைய நியாயமற்ற கருத்துக்களை 1960 வரை ஏற்காத முக்கூட்டணியைச் சேர்ந்த ல . ச. ச. க. அங்கத் தினரும், க. க. அங்கத்தினரும், நிரந்தர எதிர்த்திறத்திலிருப் பதிலும் பார்க்க, மாக்சீயம் காட்டும் வழியைப் பின்பற்றி மததியவகுப்புத் தேசியவாத ஆட்சியாளருடன் தற்காலிக மாகவேனும் சேர்ந்துவிட்டால், முழுமையான சோஷலிசமில்லா விடினும் அரைகுறைச் சோஷலிசத்தையாகுதல் உருவாக்க எத் தனிக்கலாமென்று கருதிப்போலும், தனிச்சிங்களக் கொள் கையை இன்று வெளிப்படையாக ஆதரிக்கின்றனர்; அவர் களில் ஒருசிலரின் பேச்சும் நடத்தையும் இலட்சியத்தை அடை யக் கையாளும் வழிகள் எத்தகையதாயு மிருக்கலாம் என்ற மாக்சீயக் கோட்பாட்டை நினைவூட்டுந் தன்மையன க. கே தனது ஆழுவது தேசியமகாநாட்டில் 1. சிங்களம் நாடு முழுவதும் அரசகரும மொழியாகவும் 2. தமிழ், தமிழ்பேசும் சிறு பான்மை இனத்தின் கல்விபுகட்டும் மொழியாகவும், அரசுடன் தொடர்புகொள்ளும் அலுவல்மொழியாகவும், 3. தமிழ் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நிர்வாக மொழியாகவும் அமையவேண் டும் என்று நிறைவேற்றிய தீர்மானத்தை அக்கட்சியின் ஒரு பகுதி பினர் இன்றும் ஆதரிப்பதைக் காணலாம். கட்சியின் போக்கு * நாயுடன் சேர்ந்து வேட்டையாடும்போது முயலுடனும் சேர்ந்து ஓடுதல் போன்றது ' என்று சிலர் கருதுவதற்கு இட மளிப்பினும், மாக்சீயத்தைத் தழுவி, " அமைந்த அரசிய லமைப்புச் சட்டம் இன்றைய காலகட்டத்தின் தேவையையே ஒரளவு பிரதிபலிக்கின்றது "T, ' இன உறவுக்ளுக்கு இறுதியான தும் நீதியானதுமான தீர்வு பூர்சுவா சித்தாந்தத்தைக் கடைப் பிடிக்கும் கட்சிகளின் தப்பிதமான சுருத்துக்களை முறியடித்த பின்னர்தான் சாத்தியமாகும் '2 என்பனபோன்ற கருத்துக் களும் கவனத்திற்குரியன. மொழியுரிமைகளுக்குப் பாட்டாளி களின் சர்வாதிகார ஆட்சி அவசியமென்பது மாக்சீய வாதிகள் நிலைபோலும் . முக்கூட்டணியின் பொறுப்புவாய்ந்த சில அமைச் சர்கள் சிறுபான்மையினரின் குறைகளைத் தாம் உணருவதாக வும், நல்லெண்ணத்துடன் அணுகினல் அவைகள் தீர்க்க முடியாதனவல்ல என்றும் அண்மைக் காலத்தில் கூறிவருதல் கவனித்தற்குரியதுடு
1. வ, பொன்னம்பலம், “தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்குக் கம்யூனிஸ்ட்
கட்சி காட்டும் வழி *
2. இலங்கைக் க. கட்சியின் எட்டாவது தேசிய காங்கிரஸிற்கான அரசியல்
நகல அறிக்கை, ப. 79.

Page 78
سے 414 سے
3. குடியுரிமை
பொதுக்குறிப்புக்கள் : அன்னியரும் குடிமக்களும் : ஒரு நாட்டில் இவ்விரு திறத்தினரும் வாழலாம்; அரசின் அங்கத் தவரே குடிமக்களெனப்படுவர் இவர்கள் தமது நாட்டிற்கு மாத்திரம் விசுவாசமுடையவர்களாய், அரசிலிருந்து உரிமை களைப் பெறும் அதே நேரத்தில் அதற்குச் சில கடமைகளைச் செலுத்தும் கடப்பாடுடையர், நாட்டில் நிரந்தரமாக வாழு முரிமை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உயிர் உடைமை களுக்குப் பாதுகாப்புப் பெறுமுரிமை, வாக்குரிமை, பொதுப் பதவிகளை வகிக்குமுரிமை, கூட்டுச்சேரும் கூட்டம் வைக்கும் கருத்துக்களை வெளியிடும் உரிமைகள் குடிமக்களுக்கு அளிக்கப் படும் முக்கிய உரிமைகளெனலாம், அவர்களின் கடமைகளில் சமூக நலனுக்காக ஆக்கப்படும் சட்டங்களுக்குப் பணிதல், உள் வெளித் தாக்குதல்களிலிருந்து அரசைப் பாதுகாத்தல், அரச அலுவலர் தம் பணிகளை நிறைவேற்ற உதவிபுரிதல், பொதுச் சேவைப் பதவிகளை ஏற்று நடத்தல், தேர்தல்களில் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தல், அரச வரிகளை நேர்மையாகச் செலுத்துதல் முக்கியமானவையாம். அன்னியர் தரம் வசிக்கும் நாட்டிற்கண்றித் தாய்நாட்டிற்கு விசுவாசமுடையவர் : இருந் தும் மேற்கூறிய உரிமைகள் அனைத்தும் அவர்களுக்கு மறுக்கப் படுமென் பதில்லை. உள்நாட்டில் உயிர்-உடைமைப் பாதுகாப் பையும் ஏனைய பல சலுகைகளையும் அரசு அவர்களுக்கு வழங் கலாம் ஆணுல் முக்கிய அரசியலுரிமைகள் சாதாரணமாக மறுக்கப்படுகின்றன. நாட்டின் சட்டங்களை மீருது நடப்பதும், அதன் வரிகளைத் தவருது செலுத்துதலும் அன்னியரின் கடமை GRUNT ELD
பிறப்பினல் பிரசை குடிமக்களைப் பிறப்பு/இயல்புப் பிரசைகளென்றும், ஏற்கப்பட்ட/பதிவுப் பிரசைகளென்றும் பிரிக்கலாம். ஒரு நாட்டின் பெரும்பாலான மக்கள் பிறப்பினுல் குடியுரிமை பெறுகின்றனர். பிறப்பு நிபந்தனைகள் நாட்டுக்கு நாடு வேறுபடும் வம்சாவழி/இரத்தஉறவு, பிறப்பிடம், அல்லது இவையிரண்டும் ஒரு குழந்தையின் குடியுரிமையை நிர்ணயிக்கலாம் : உதாரணமாகப் பிள்ளைகள் எங்கு பிறப்பி னும் பெற்றேரின் நாட்டுக் குடியுரிமைக்கு உரித்தாகின்றன ரென்பது சுவிற்சலாந்து சுவீடன் போன்ற நாடுகளின் ஏற்பாடா கும் குழந்தைக்கு அது பிறந்த நாட்டின் குடியுரிமையே கிடைக்குமென்று ஆர்ஜென்ரீனு போன்ற நாடுகள் கொள் கின்றன; பெற்றேரின் குடியுரிமையும் குழந்தையின் பிறப்பிட மும் கலந்த நெறி, பிள்ளையின் இயல்பான குடியுரிமையை,
 

خس-415 - س
இங்கிலாந்து பிரான்சு பழைய ஜேர்மனி போன்ற நாடுகளில் நிர்ணயஞ் செய்கின்றது. பிறப்பிடநெறி இலகுவானது, இரத்த உறவுநெறி நியாயமானது எனலாம்.
ஏற்கப்பட்ட / பதிவுப்பிரசை ? ஒரு நாட்டுப் பிரசை இன் னெரு நாட்டிற்குச் சென்று தனது குடியுரிமையைத் துறந்து விட்டுப் புதிதாக வாழும் நாட்டின் குடியுரிமையை மேற் கொள்ளலாம். ஒவ்வொரு நாட்டின் சட்டத்தைப் பொறுத்துக் குடியுரிமையைத் துறப்பதற்கான காரணிகளும் புதிய குடியுரிமை யைக் கொடுப்பதற்கான நிபந்தனைகளும் நாட்டிற்கு நாடு வேறு படும் அன்னியரை மணந்த பெண்கள், படைத்துறையை விட் டோடுபவர், படைத்துறையில் கட்டாயசேவை செய்ய மறுப் போர், அயல்நாட்டின் நன்மதிப்புச் சின்னங்களை அல்லது பதவி களை ஏற்போர், சில குற்றங்களைப் புரிந்தோர், தாயகத்தி லிருந்து தொடர்ச்சியாகப் பலகாலம், சாதாரணமாக 5 ஆண்டு களுக்குமேல் வெளிச்சென்று வாழ்வோர் தமது குடியுரிமையை இழக்க நேரிடலாம். ஒரு நாடு இன்னுென்றின்கீழ் செல்லும் பொழுது அந்நாட்டு மக்கள் அனைவரும் ஆதிக்க நாட்டுக் குடி யுரிமையை ஏற்கவேண்டியிருந்ததை வரலாறு காட்டுகின்றது. அந்நியர்கள் அயல்நாட்டுக் குடியுரிமையை மேற்கொள்வதற் குத் தமது குடியுரிமையைத் தாமே விரும்பித் துறத்தல் அடிக்கடி நிகழுகின்ற வழியாகும்; ஆனல் இவ்வழியைச் சில நாடுகள் அனுமதிப்பதில்லை வேறு சில, கடின நிபந்தனைகள் மீது அனுமதிக்கின்றன இன்னும் சில, தற்காலிகமாக அனுமதித்து விட்டுப் பின்னர் தாய்நாட்டுக் குடியுரிமையைத் திருப்பிக் கொடுக்கின்றன.
ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகள் அந்நியருக்கு ஒரே விதக் குடியுரிமையை வழங்கும்பொழுது வேறு சில நாடுகள் இருவிதமானவையை வழங்குகின்றன; உதாரணமாக, இங்கி லாந்தில், பாராளுமன்றச் சட்டப்படி குடியுரிமை பெற்ருே ரென்றும், நிர்வாகம் வழங்கிய குடியுரிமையுடையோரென்றும் பிரிவுறும்போது, பிரான்சும் பெல்ஜியமும் மேம்பட்ட குடியுரிமை யாளர், சாதாரண குடியுரிமையாளர் என்று பாகுபாடு செய் கின்றன; தங்களின் புதிய அரசிற்கு முழு விசுவாசம் செலுத்தக் கூடியவர்களுக்கே பாராளுமன்றச்சட்ட/மேம்பட்ட குடியுரிமை வழங்கப்படும் அவர்கள் கடின நிபந்தனைகளைத் திருப்திசெய்ய வேண்டும் பிறப்புக் குடியுரிமையாளரோடு சமஉரிமைகளை அனுபவிப்பர். மறுவித குடியுரிமையைப் பெற விரும்புவோர் இலகுவான நிபந்தனைகளுக்கு ஆளாவதோடு, குறைந்த உரிமை களைப் பெறுவர் முக்கிய பொதுப்பதவிகளை வகிக்கும் உரிமை இவர்களுக்கு மறுக்கப்படுகின்றது : உதாரணமாக இயல்புக்
இ; 1 a 19

Page 79
سے 416 جس۔
குடிமகனே ஐக்கிய அமெரிக்க ஜனதிபதியாக வரமுடியும். குடியுரிமை வழங்குவதற்கான முன்நிபத்தனைகள் நாட்டுக்கு நாடு மாறுபடினும், குடியுரிமை கோருவோர் புதிய அரசில் குறிப் பிட்ட காலம் குடியிருப்பது பொதுவானதோர் தேவையாயிருப் பதைக் காணலாம்;
இலங்கைக் குடியரசு யாப்பில்: தேசிய அரசுப்பேரவை பற்றிய இயலின் வாக்குரிமைப் பிரிவிலுள்ள 67ஆவது விதியில் இலங்கைக் குடியுரிமை பற்றிய ஏற்பாடு சிறு இடைநிகழ்ச்சி யாக இடம்பெறுகின்றது. அவ்விதிப்படி "தேசிய அரசுப் பேரவை வேறுவகையில் ஏற்பாடு செய்தாலொழிய, யாப்புத் தொடங்கு வதற்கு நேர்முன்னர் வலுவுள்ளனவாயிருந்துவந்த பிரசாவுரிமை யும் பிரசைகளின் உரிமைகளும் தொடர்பான அத்தகைய சட்டங்கள் ஏற்ற மாற்றங்களுடன் தொடர்ந்து வலுவுள்ளன வாய் இருந்துவரல்வேண்டும். ஆயினும், தேசிய அரசுப் பேரவை யின் சட்டமெதுவும் வம்சாவழிப் பிரசையொருவரின் இலங் கைப் பிரசை அந்தஸ்தினைப் பறித்தலாகாது, "'
பிரிட்டிஷ் குடிமக்கள் : யாப்புத் தொடங்கும்பொழுது வலுவுள்ளனவாயிருந்த பிரசாவுரிமைச் சட்டங்களை நன்கு விளங்குவதற்கு, ஆங்கிலேயராட்சி இலங்கையில் ஆரம்பமான காலந்தொட்டு இலங்கையர் அனுபவித்த பிரசாவுரிமையின் தன்மையை முதலில் நோக்குதல் நன்று. இங்கிலாந்து தான் கைப் பற்றிய, குடியேறிய, அல்லது ஆட்சியுரிமைபெற்ற கனடா, அவுஸ் திரேலியா, இந்தியா, இலங்கை போன்ற எல்லாக் "குடியேற்ற நாடுகளுக்கும் தனது 1914-43 பிரிட்டிஷ் நாட்டின, அந்நியர் அந்தஸ்துச் சட்டங்களினலும், அவற்றிற்கு முன்னிருந்த சட்டங் களிஞலும் பிரிட்டிஷ் குடியுரிமையை வழங்கிற்று. பிரித்தானிய மன்னனுக்கும், சாம்ராச்சியத்திற்கும், தாம் வாழும் நாட்டிற் கும் மரபார்ந்த பல கடமைகளைச் செலுத்தும் கடப்பாடுடைய பிரித்தானிய, குடியேற்ற நாட்டு மக்கள் அனைவரும் " பிரிட்டிஷ் குடிமக்கள் அல்லது மாட்சிமைதங்கிய மன்னர்பிரானின் குடி மக்கள் " என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்டனர். எந் நாட்டுப் பிரிட்டிஷ் குடிமகனுக்கும் சாம்ராச்சியத்தின் எப் பகுதியிலும், சட்டரீதியாகப் பார்க்கும்பொழுது, சமத்துவ மான சமூக பொருளாதார அரசியல் உரிமைகள் கிடைத்தன வென்று பொதுவாகக் கூறலாம். இலங்கை உட்பட சில நாடுகள் பாலனரீதியில் வெளிநாட்டுப் பிரிட்டிஷ் குடிமக்க ளுக்குப் பொதுத்துறையில் வேலைபெறும் உரிமை போன்ற வற்றை மறுத்துள்ளன. அயர்லாந்து போன்ற சில நாடுகளைத் தவிர்ந்த ஏனைய குடியேற்றநாடுகள் டொமினியன் அந்தஸ்

--بی 417 ملی۔
தையோ, பொறுப்பாட்சியையோ பெற்றபின்பும், அல்லது பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கும் குடியரசாக மாறிய பின்பும் பிரிட்டிஷ் குடிமகன் அல்லது பொதுநலவாயப் பிரஜை அந்தஸ்தைத் துறக்காது அதனுல் கிடைக்கும் நலன்களை அனுப விக்கின்றன ; அதேவேளையில், தாம் பெற்ற புதிய அதிகாரத் தைக் கொண்டு தமது நாட்டுப் பிரசைகள் யாரென்பதை நிர்ணயித்து, அவர்களுக்கு விசேட உரிமைகளைக் கொடுக்க லாயின. குடியரசு யாப்பிற்கு முற்பட்ட இலங்கை யாப்புக்கள் இலங்கையரைப் பிரிட்டிஷ் குடிமக்களென்றே குறிப்பிடுகின்றன : குடியரசானபின்பும் இலங்கை பொதுநலவாய அங்கத்துவத்தைத் துறக்கவில்லை. ' 1948 வரை இலங்கைப் பிரஜாவுரிமை உருவாக் கப்படவில்லை ; பிரித்தானிய பாராளுமன்றம் ஆக்கிய 1948 பிரிட்டிஷ் நாட்டினச் சட்டத்தின் முதலாம் விதியின் வலிமைக் கூறு காரணமாய் இலங்கைப் பிரசையொருவர் ஐக்கிய இராச் தியத்தில் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் அல்லது பொதுநலவாயப் பிரசையாக இருப்பார்" 1
1948 இலங்கைக் குடியுரிமைச் சட்டம் : இச்சட்ட மும் 1950, 1955 திருத்தச் சட்டங்களும் ஒருவர் இலங்கைப் பிரசையாவதற்கு வேண்டிய தகைமைகளைத் தருகின்றன;* பிரசைகளில் வம்சாவழிப் பிரசைகளென்றும் பதிவுப் பிரசைக ளென்றும் இரு பிரிவுகளுண்டு ஒருவர் வம்சாவழிப் பிரசை யாவதற்கு 15 15-11-1948க்கு முன் அவர் இலங்கையில் பிறந் திருந்தால், அவரின் தந்தை அல்லது தந்தைவழிப் பாட்டன்முப்பாட்டன் ஆகிய இருவரும் இலங்கையில் பிறந்திருக்க வேண்டும்; 25 15-11-48க்கு முன் இலங்கைக்கு வெளியில் அவர் பிறந்திருந்தால், அவரின் தந்தை தந்தைவழிப் பாட்டன் ஆகிய இருவரும் அல்லது தந்தைவழிப் பாட்டன்-முப்பாட்டன் ஆகிய இருவரும் இலங்கையில் பிறந்திருக்கவேண்டும் 3. 15-11-48இல் அல்லது அதற்குப் பின்னர் அவர் இலங்கையில் பிறந்திருந்தால், அவர் பிறக்கும்பொழுது தந்தை இலங்கைப் பிரசையாயிருத்தல் வேண்டும். 4. 15-11-48இல் அல்லது அதற்குப்பின்னர் அவர் இலங்கைக்கு வெளியில் பிறந்திருந்தால், தந்தை இலங்கைப் பிரசையாயிருப்பதோடு பிள்ளையின் பிறப்பு சாதாரணமாக ஒரு வருடத்திற்குள் குறிப்பிட்ட இலங்கையின் உத்தியோகத்தரிடம் பதிவுசெய்யப்படவேண்டும். 5. முறைகேடாகப் பிறந்தவர்.
1. Jennings & Thambiah, Dominion of Ceylon", First Greenwood
Reprinting 1970, P. 78. 2. For details see Dr. S. U. Kodikara Indo-Ceylon Relations since
Independence ". Ch. IV.

Page 80
سببیہی۔ 448 ہیں۔
பெற்றேரால் கைவிடப்பட்ட அனுமதேயப்பிள்ளைகள், வம்சா வழியை உறுதிப்படுத்த முடியாதவர் பற்றிய விசேட ஏற் பாடுகளுமுண்டு.
மேற்காட்டிய முதல் நான்கு நிபந்தனைகளும் " பிரசாவுரிமை யைத் தெளிவாகத் தெரியக்கூடியவாறு கட்டுப்படுத்துவன " என்று ஹாவாட் றிக்கின்ஸ் அவர்களும் * மிகக் கடுமைவாய்ந் தவை" என்று எஸ். நமசிவாயம் அவர்களும் குறிப்பிட்டுள்ளனர். நிபந்தனைகளின் நோக்கம் இரு தலைமுறைகளுக்காகுதல் இலங் கையில் வாழாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வம்சாவழிப் பிரசாவுரிமை பெறுவதைத் தடுப்பதாகும் அவற்ருல் இலங்கை வாழ் பெருந்தொகையினரான இந்திய, பாகிஸ்தானிய சமூகத் தினரும் சிறுதொகையினரான இதர அயல்நாட்டினரும் பாதிக் கப்பட்டனர். அவருட் சிலருக்கு மாத்திரம் பதிவுப்பிரசை அந்தஸ்தை அளிக்கக்கூடிய ஏற்பாடுகள் 1948 சட்டத்தில் இடம்பெற்றன. பதிவுப்பிரசையாவதற்கு விண்ணப்பஞ் செய் வோர் உரிமை-வயது அடைந்தவராயும், புத்தி சுவாதீன முடையவராயும், இலங்கையில் வாழ்பவராயும், தொடர்ந்து இங்கு வாழும் நோக்குடையவராயும் இருப்பதோடு, பின்வரும் தகைமைகளில் ஒன்றை யா குதல் திருப்திசெய்யவேண்டும் -ே 1. விண்ணப்பதாரரின் அன்னை இலங்கையின் வம்சாவழிப் பிரசையாக இருக்க அல்லது இருந்திருக்க வேண்டும் அத்தோடு விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் திகதிக்கு நேர்முன்னர், திருமணமானவராயின் 7 ஆண்டுகள், திருமணமாகாதவராயின் 10 ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந்திருக்கவேண்டும் : வாழ் காலம் தொடர்ச்சியற்றதாயின் பிரசாவுரிமை மறுக்கப்படலா மென்பது நீதிமன்றத் தீர்ப்பாகும். 2. விண்ணப்பதாரர் வம்சா வழிப் பிரசைவான தந்தைக்கு வெளிநாட்டில் பிறந்து சட்டம் விதித்த முறைப்படி பிறப்பு பதிவுசெய்யப்படாதவராயிருக்க வேண்டும். 3. விண்ணப்பதாரர் பிறக்குமுன்போ பின்போ தந்தை தமது வம்சாவழிப் பிரசாவுரிமையை இழந்திருக்க வேண்டும். 4. வம்சாவழி அல்லது பதிவுப் பிரசையின் கணவன், மனைவி, விதவை, மனைவியை இழந்தவர் விண்ணப்பதாரராயின் அவர் இலங்கையில் ஒரு ஆண்டிற்காகுதல் தொடர்ச்சியாக வசித்திருக்கவேண்டும். 5. விண்ணப் பதாரர் சிறந்த பொதுச் சேவை செய்தவராய், அல்லது வாழ்க்கைத்தொழில் வாணிபம் கைத்தொழில், விவசாயம் ஆகிய துறையொன்றில் மேம்பட்டவ ராய், அல்லது 1914 பிரிட்டிஷ் நாட்டினச் சட்டமோ, 1890 இலங்கையின் பதிவுப்பிரசைக் கட்டளைச் சட்டமோ ஏற்றுக் கொண்ட பிரிட்டிஷ் குடிமகனக இருக்கவேண்டும். இப்பிரிவு 1890 கட்டளைச்சட்டத்தை ரத்துச்செய்ததோடு, வருடமொன்

سے 419 سس ۔
றிற்கு 25க்கு மேற்படாதோரைப் பதிவு ப் பி ர  ைச களாக அனுமதிப்பதற்குச் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அதிகாரமளிக் கின்றது. குறிப்பு : முதற்பிரிவிலுள்ள நிபந்தனைகளைத் திருப்தி செய்த மனுக்களை நிராகரிக்கும் தற்றுணிபு அதிகாரம் அமைச்ச ருக்கு இல்லை. ஏனைய விண்ணப்பங்களை அவர் ஏற்கலாம், மறுக்க லாம் : அமைச்சரின் முடிபு இறுதியானது, நீதிமன்றத் தலையீட் டிற்கு அப்பாற்பட்டது. விண்ணப்பதாரர் தமது வயதுவராத பிள்ளைகளுக்கும் பிரசாவுரிமை கோரலாம்.
1948 சட்டத்தின் இன்னுெரு அம்சமாக, எவ்வழிகளில் ஒருவர் பிரசாவுரிமையை இழக்கலாமென்னும் ஏற்பாடுகளைக் காணலாம். வயதுவந்த புத்திசுவாதீனமுடைய ஒருவர் தமது பிரசா வுரிமை யை த் துறப்பதாக அறிவித்தல் இன்ஞெரு நாட்டுப் பிரசாவுரிமையை ஏற்றல்; பதிவுப் பிரசையான தந்தை யின் வம்சாவழிப்பிரசையான பிள்ளை, 1 வயதுவந்தபின் தனது பிரசாவுரிமையை விடாதுவைத்திருப்பதாக அமைச்சருக்கு அறிவியாதுவிடல் பதிவுப்பிரசையொருவர் சட்டம் அனுமதித்த காரணங்களுக்குப் புறம்பாக வேறுநாடுகளில் தொடர்ந்து வசித்தல் ; பதிவுப்பிரசையொருவர் பிரசாவுரிமைச் சட்டத்திற்கு எதிரான குற்றமெதையுமோ, அல்லது தண்டனைபற்றிய சட்டத் தொகுப்பேட்டின் Vi ஆம் இயலில் குறிப்பிட்ட அரசிற் கெதிரான, கடூழியச் சிறைத்தண்டனை அளிக்கக்கூடிய குற்ற மெதையுமோ புரிதல், போன்றவற்றினுல் ஒருவர் தன் பிரசா வுரிமையை இழக்க நேரிடலாம். பதிவுப்பிரசையொருவரின் நடத்தை காரணமாய் அவர் பிரசையாகத் தொடர்ந்திருப்பது நாட்டுநலனுக்குத் தீங்கு தரத்தக்கதாயின், அவரின் பிரசா வுரிமையை ரத்துச்செய்யும் அதிகாரம் பாதுகாப்பு வெளி விவகார அமைச்சருக்குண்டு
1949 இந்திய பாகிஸ்தானிய குடியிருப்பாளர் (பிரசா வுரிமைச்) சட்டம் : இந்திய பாகிஸ்தானிய சமூகத்தினரும், வேண்டிய தகமைகள் இருப்பின், வம்சாவழி அல்லது பதிவுப் பிரசாவுரிமையை 1948 பிரசாவுரிமைச் சட்டத்தின்கீழ் கோர முடியும்; ஆனல் அவர்களின் தொகையோடு ஒப்பிட்டுநோக்கும் பொழுது பிரசாவுரிமைபெறும் தகைமை மிகமிகச் சிறு தொகை யினருக்கே இருந்தது : அரசாங்கமும் அச்சட்டம் அவர்களின் பலருக்குப் பொருந்துமென்ற நோக்குடன் அதை ஆக்கவில்லை: அவர்களுக்கென்று சிறிது தளர்த்தப்பெற்ற நிபந்தனைகளை உள்ளடக்கிய 1949 இ. பா. கு. பி. சட்டம் இயற்றப்பட்டது.
1. பதிவுப்பிரசையின் பிள்ளைகள் வம்சாவழிப் பிரசைகளாகலாமென்பதைச்
சட்டம் ஏற்றுள்ளது.

Page 81
سب سے 420 سس۔
அதன் கீழும், 1950, 1952 திருத்தச் சட்டங்களின்கீழும் இந்தியபாகிஸ்தானியரே இலங்கைப் பிரசைகளாகப் பதிவுபெறும் உரிமை பெற்றனர். பிரசாவுரிமை கோரும் விண்ணப்பங்கள் 5-8-1951க்கு முன்னர் சமர்ப்பித்தாகவேண்டும். விண்ணப்ப காரர் பற்றிய முக்கிய நிபந்தனைகளாவன: 1. திருமண மாகாதவர், மனைவியை இழந்தவர் அல்லது விவாகரத்துப் பெற்றவர் 1-1-1946க்கு முன் குறைந்தது 10 வருடங்களும், திருமணமானவர் 7 வருடங்களும் இலங்கையில் இடையருது வசித்ததோடு, 1-1-1946 தொடக்கம் விண்ணப்பஞ்செய்யும் வரையும் இடையருது வசித்திருத்தல் வேண்டும். இடையிடையே ஒரு வருடத்திற்கு மேற்படாத காலத்திற்கு இலங்கையில் இராமை இடையற்றதெனக் கணிக்கப்படும் 2. திரும s மாணவரின் மனைவி திருமணம் நடந்த ஒரு வருடத்தின் பின் தொடக்கம் விண்ணப்பஞ் செய்யும்வரையும், பிள்ளைகள் பிறந்
திகதியிலிருந்து ஒரு வருடத்தின் பின் தொடக்கம் விண்ணப்பஞ் செய்யும்வரையும், சில விதிவிலக்குகளுடன், தொடர்ச்சியாக இலங்கையில் வசித்திருத்தல்வேண்டும் 3. நியாயமான அளவில் உறுதியான வருமானம் அல்லது தக்க வாழ்க்கைத்தொழிலே வேலையோ உடையவராயிருக்கவேண்டும் 4: இலங்கைச் சட்ட களுக்கமைந்து வாழ்வதைக் கடினமாக்கும் அல்லது தடுக்கும் தகுதியின்மையோ தகுதிக்குறைபாடோ அற்றவராயிருக்க வேண்டும்; 58 பிறநாட்டுப் பிரசாவுரிமை பெற்றிருப்போர் அதைத் துறக்கவேண்டும்; இந்த நிபந்தனைகளைவிட இந்திய பாகிஸ்தானியரின் இலங்கைவாழ் மனைவியர், வயதுவராத பிள்ளைகள், விதவைகள் போன்ருேர் பதிவுப்பிரசாவுரிமை பெறு வதுபற்றிய ஏற்பாடுகளையும் காணலாம். விசாரணை செய்தபி விண்ணப்பங்களைப் பதிவுக் கொமிஷனர் ஏற்கலாம், மறுக்கலாம் : அவரின் முடிவை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்துக்கு மேன் முறையீடு செய்யலாம்.
பெறுபேறுகள்: 1, பரிபாலனம்: ' குடியுரிமைச் சட்டம் கள் விட்டுக்கொடாத் தன்மையில் உச்ச எல்லையை எட்டி பிடிப்பவை " -ஜென்னிங்ஸ் 1948 குடியுரிமைச் சட்டம், இலங்கையின் விசேட சூழ்நிலை காரணமாகப், பிறநாடுகள் கையாளாத கடின பிறப்பு வசிப்பு நெறிகளை உள்ளடக்கியதென்று அன்றைய அரசாங்கமே ஏற்றுள்ளது. இந்திய பிரிட்டிஷ் பிரை களே, விசேடமாக இந்தியத் தொழிலாளரைப் பெருமளவில் இலங்கை வர அனுமதித்ததினுல், இ ல ங்  ைக ய ரி ன் சமூ பொருளாதார அரசியல் வாழ்வு பாதிக்கப்படுகின்றது : இந் நாட்டின் மீது அக்கறையுடைய இந்திய வம்சாவழியினருக்கே இலங்கைப் பிரசாவுரிமை கொடுத்தல் நீதியான தென்பது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

--س۔ 421 سا۔
அரசாங்கதரப்பு வாதமாகும். 1948 சட்டத்தின்கீழ் சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கை முஸ்லிம்கள், பறங்கியர் குடி யுரிமைபெற, 10 இலட்சத்திற்கு மேற்பட்ட இந்திய வம்சாவழி யினர் குடியுரிமை அற்றவராயினர். சிங்களப் பெயருடையோர் ஆராய்ச்சிக்கு ஆளாகாது பிரசைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட போது, தமிழ், முஸ்லிம் பெயருடையோரிற் பலர் பிறப்புப் பத்திரம் போன்ற ஆவணங்கள்மூலம் தமது பிரசாவுரிமையை நிலைநாட்டியபின்பே பிரசைகளுக்குரிய உரிமைகளுக்குப் பாத்திர மாயினர் பிரசாவுரிமை பெறுவதில் ஏற்பட்ட சிரமங்கள் பற்றிய முறையீடுகளின் பயனுய் 1964இல் நியமிக்கப்பட்ட குழு தனது 1965 அறிக்கையில் சிரமங்களைக் குறைப்பதற்கு 14 சிபார்சு களை வெளியிட்டது அவைகளை அமுல்செய்ய எந்த அரசாங்க மும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
1949 குடியிருப்பாளர் சட்டத்தின்கீழ் 8,25,000 இந்திய வம்சாவழியினருக்குப் பதிவுப் பிரசாவுரிமை கோரும் 2,37,034 விண்ணப்பப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றின் ஆராய்வு மெதுவாக நடைபெற்றது : குடியிருப்பை நிறுவுவதற் குப் பத்திர ஆதாரம் காண்பிக்க முடியாதபோதும், வேறு அற்ப காரணங்களுக்காகவும் பெருந்தொகையான மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, பதிவுக் கொமிஷனர்கள் முடிவெடுப்பதில் காட்டிய தவருண போக்கை உயர் நீதிமன்றம் பலமுறை கண்டித்திருப்பினும், அதிகாரிகள் தம் போக்கைக் கைவிட வில்லை உயர் நீதிமன்றமும் கோமறைக் கழகமும் அதிகாரிகள் சட்டத்திற்குக் கொடுத்த விளக்கம் தவருனதெனப் பல சந்தர்ப் பங்களில் தீர்ப்பளித்தபொழுது, அத்தீர்ப்புகள் செயற்படாத வாறு 1952 திருத்தச் சட்டத்தை அரசாங்கம் ஆக்கியது: 1948, 1949 சட்டங்கள் அன்றைய யாப்பு விதி 29க்கு முரணுன தென்ற வகையில் செல்லுபடியாகாமற் செய்வதற்கெடுத்த எத்தனம் கீழ் நீதிமன்றத்தில் வெற்றிபெற்ருலும், அதன் தீர்ப்பை உயர் நீதிமன்றமும் கோமறைக் கழகமும் மாற்றி யதை Wஆம் இயலில் பார்த்தோம். இத்தகைய சூழ்நிலையில் மனுக்களாராய்வு மெதுவாக நடந்து, 1962இல் முடிவெய் தியது மொத்தமாக 134,188 பேர்கள் மாத்திரம் பதிவுப் பிரசாவுரிமை பெற்றனர், மலைநாட்டுச் சிங்கள மக்களின் பிரதி நிதிகள் இத்தொகை அளவுக்கு மீறியதென்று கவலைப்பட்டுள் ளனர்.
2. இலங்கை - இந்திய உறவு பிரசாவுரிமைச் சட்டங் களும், அவை பரிபாலிக்கப்பட்ட முறைகளும், பிரசாவுரிமை பெருதோர் நிலையும் கடந்த கால்நூற்ருண்டுக்காலம் இந்திய இலங்கை உறவைப் பாதித்துள்ளன. 1947 நேரு-டி, எஸ். சேன

Page 82
--ساس 422 --سی
நாயக்கா பேச்சுவார்த்தையின்போதும், அதன்பின் நடைபெற்ற கடிதத்தொடர்பின்போதும், இலங்கை அரசாங்கம் தயாரித்த நகல் சட்டங்கள் உள்ளடக்கிய நெறிகள், சட்டமானபின் செயல் படுத்தப்பட்ட முறைகள், வம்சாவழிப் பிரசைகளுக்கும் பதிவுப் பிரசைகளுக்கும் இடையில் பொருளாதார உரிமைகள் பற்றிய ஏற்றத்தாழ்வு ஆகியன இரு நாடுகளுக்குமிடையே வேற்றுமை யையும், மனக் கசப்பையும் உருவாக்கின. இந்தியா இனங்காத சட்டங்களை ஆக்கிய இலங்கை, தான் ஏற்காத இந்திய வம்சா வழியினரை இந்தியா ஏற்றுக்கொள்ளும் என்று கருதியது. பல தலைமுறை காலம் வெளிநாடுகளில் வாழ்ந்த 40 இலட்சத்திற்கு மேற்பட்ட இந்திய வம்சாவழியினரை இந்தியா ஏற்கத் தயாரா யில்லை. 1948 இந்திய குடியரசு யாப்பின் பிரகாரம், இந்திய அரசாங்கம் தான் விரும்பியவர்களுக்கு மாத்திரம் இந்தியக் குடியுரிமையை வழங்கிற்று இரு நாடுகளும் கடைப்பிடித்த கொள்கையினுல், இலங்கையில் வாழ்ந்த பெருந்தொகையான இந்திய வம்சாவழியினர் " நாடற்றவர் " என்னும் அந்தஸ்தை அடைந்தனர்; இவர்களின் பொறுப்பு இலங்கையினுடைய தாயிற்று. 1953இல் இலண்டனில் நடைபெற்ற நேரு-டட்லி சேனநாயக்கா பேச்சுவார்த்தையின் போது, 9.50,000 நாடற்ற வர்களில் 4,00,000 பேர்களுக்கு இலங்கைக் குடியுரிமை வழங் கும், 2,50,000 பேர்களுக்கு இலங்கையில் நிரந்தரமாக வாழ் வதற்கு அனுமதித்துவிட்டு 10 வருடங்களின்பின் அவர்கள் வருங்காலத்தை நிர்ணயிக்கும், ஏனைய 3,00,000 பேரைக் கட்டாயமாக இந்தியாவுக்கு அனுப்பும் அம்சங்களை அடக்கிய ஒரு திட்டத்தைத் திரு. டட்லி சேனநாயக்கா சமர்ப்பித்தார்5 கட்டாய நாடுகடத்தல் நெறியை நேரு ஏற்காத முக்கிய காரணத்தால் பேச்சுவார்த்தையில் பூரண இணக்கம் ஏற்பட வில்லை. 1954, தைமாத நேரு-கொத்தலாவல ஒப்பந்தப்படி இரு நாடுகளும் நாடற்றவருக்குத் தத்தம் நாட்டுக் குடியுரிமை வழங்குவதைத் துரிதப்படுத்த இணங்கின, ஆனூல் ஒரு நாடு மற்றதின் உள்நோக்கத்தை ஐயுற்றதன் காரணமாய்க் குடி யுரிமை மனுக்கள் பெருமளவில் நிராகரிக்கப்பட்டன. இந்திய குடியுரிமைபெற நாடற்றேர்களைத் "தூண்டுவதற்கு " அவர்கள் இந்தியாவிற்குச் சென்றுவருதலையும், பணம் அனுப்புவதையும் இலங்கை தடைசெய்தது. 1954 ஒக்ரோபரில் நடைபெற்ற நேரு-கொத்தலாவல பேச்சுவார்த்தையினுல் இத்தடைகள் நீக்கப் பட்டதோடு, 2 ஆண்டுகளில் குடியுரிமைப்பதிவை நிறைவேற்றும் இணக்கமும் ஏற்பட்டது. திரு. பண்டாரநாயக்கா பிரதமரா யிருந்த காலத்திலும் நாடற்ருேர் பிரச்சினை தீர்ந்தபாடில்லை; 1964 சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தப்படி பிரச்சினைக்கு ஆளாகிய

حی۔ 423 سے
வர்களென்று கணிக்கப்பட்ட 93 இலட்சம் பேர்களில் 54 இலட் சத்தினரை இந்தியாவும், 3 இலட்சத்தினரை இலங்கையும் பங்கீடுசெய்வதோடு, எஞ்சிய 13 இலட்சத்தினரைப் பற்றிப் பின்பு பேசித் தீர்வுகாண்பதென்று முடிவாயிற்று ஒப்பந்தத்தின் கீழ் மனுக்கள் கோரப்பட்டபோது 4 இலட்சம் பேர் இந்தியா வையும், 6த் இலட்சம் பேர் இலங்கையையும் தாயகமாக ஏற்றுக் கொள்ள விரும்பி மனுச்செய்து, ஒப்பந்தத்தின் அடிப்படை யையே கேள்விக்குறியாக்கினர் 1973 சிறிமா-இந்திரா கூட் டறிக்கையில் இலங்கைப் பிரதமர், முன்பு ஒத்துக்கொண்ட வாறு, இந்தியா செல்லவிருப்போருக்கு வேலைவாய்ப்பு, பிள்ளை களின் கல்வி போன்ற வசதிகளைச் செய்துகொடுக்க உறுதி கூறி யுள்ளார் : சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தை உள்ளது உள்ளபடி அமுலாக்கவும், வருடாந்தம் இந்தியாவுக்குச் செல்லவேண்டிய 35,000 பேர்களின் எண்ணிக்கையை வருடாந்தம் 10 சத வீதத் தால் அதிகரிக்கவும் இணங்கப்பட்டது: 29-1-74இல் வெளி யிடப்பட்ட சிறீமா - இந்திரா உடன்படிக்கைப்படி, சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின்போது தீர்வுகாணுமல் விடப்பட்ட ஒன்றரை இலட்சம் பேரில் தலா 75,000 பேரை இரு நாடுகளும் பொறுப்பேற்றுள்ளன; இதனல், கடந்த கால்நூற்ருண்டிற்கு மேலாக இருந்துவந்த நாடற்றவர் பிரச்சினைக்கு ஏட்டளவிலாகு தல் இறுதித்தீர்வு காணப்பட்டது; இதுவரை (பங்குனி 1974) 2 இலட்சத்திற்கு அதிகமானுேர் இந்தியக் குடியுரிமை பெற்றுள்ள னர். இதில் ஒரு இலட்சம் பேர் இதுவரை இந்தியா சென்று விட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
3. பொருளாதாரம் : இந்திய உறவைப் பாதித்திடினும், இலங்கைச் சிறுபான்மையினரிடையே பீதியை உருவாக்கிடினும், பிரசாவுரிமைச் சட்டங்களின் ஒரு நோக்கம் சிங்கள மக்களின் பொருளாதாரநிலையை உயர்த்துவதாகும். ஏற்றுமதி இறக்கு ம்தித் துறையில், சில்லறை வாணிகத்துறையில், வங்கித் துறையில் இந்திய வம்சாவழியினர் கணிசமான இடத்தை வகித்தனர் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பிற்கு இலங்கைய ரோடு போட்டியிட்டனர்; பெருந்தோட்டங்களில் கண்டிச் சிங்கள வர்கள் வேலைபெறும் வாய்ப்பைக் குறைத்தனர்; அதிக பணத்தை இந்தியாவிற்கு அனுப்பினர் : பெருகிச்செல்லும் குடிசனத் தொகையால் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதைக் கடினமாக்கினர்-என்றெல்லாம் கூறப்பட்டது. எனவே, பெரும் பாலான இந்திய வம்சாவழியினருக்குக் குடியுரிமையை மறுத்து அவர்களை நாடுகடத்தும் எத்தனம் மேற்கொள்ளப்பட்டது: 1948க்கு முன்பே இலங்கையர் மயம் ஓரளவிற்குக் கையாளப் பட்டு, முடிக்குரியகாணி, இலங்கையின் நீர்த்துறைகளில் மீன்
இ: 1-20

Page 83
سس۔ 424 ہے۔
பிடித்தல், பொதுத்துறையில் நாளாந்த வேலைவாய்ப்பு இலங் கையரல்லதோர்க்கு மறுக்கப்பட்டது யுத்தகாலத்தில் கூட்டுறவு இயக்கம் வளர்ந்து, பல இந்திய வம்சாவழி வியாபாரிகளின் தொழிலைக் கைப்பற்றியது. பிரசாவுரிமைச் சட்டங்களின் பின் இலங்கையர் மயமாக்கம் விரிவடைந்தது : பொதுத்துறையிலும் உள்ளூராட்சித்துறையிலும் இலங்கைப் பிரசைகள் அல்லாதோர் புகமுடியாது ; துறைமுகங்களிலும் தனியார் வியாபார நிலையங் களிலும் பிரசைகளுக்கு மாத்திரம் வேலைகொடுக்கும் பாலன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன பொதுத் துறை யின் வியாபார வளர்ச்சி, இறக்குமதிக் கட்டுப்பாடு, 1958 தோட் டக்கடைச் சுவீகரிப்புச்சட்டம், 1961 வி ய ப ா ரி க ஞ க் கு லைசென்ஸ் வழங்கும்சட்டம் போன்றவை இலங்கைப் பிரசைக ளல்லாதோரை வியாபாரத்துறையிலிருந்து அகற்ற உதவு கின்றன ; பெருந்தோட்டங்களில் ஏற்படும் வெற்றிடங்களை இலங்கையரால் நிரப்பும்படி அரசாங்கம் முதலாளிமாரைக் கேட்டுள்ளது தோட்டச் சுவீகரிப்புகளினுல் பல இந்திய வம்சா வழியினர் இன்று வேலையிழக்கின்றனர் : இலங்கைப் பிரசைக ளல்லாதோர்க்கு இலவச அரிசியில்லை, போதிய கல்விவசதி யில்லை : இவைகள் இந்திய வம்சாவழியினரை இந்தியப் பிரசா வுரிமை கோரச்செய்யும் தூண்டுதல்களென்று கூறுவாருமுளர்; நாட்டு முன்னேற்றத்திற்குச் செருப்பாக உழைத்து, நாட்டின் பொருளாதாரத்தில் இரண்டறக்கலந்துவிட்ட மக்களைத் துன் புறுத்துவதோ, கட்டாயமாக வெளியேற்றுவதோ நியாய மற்றது; தேசிய உற்பத்தியைக் குறைத்து அனைவரின் வாழ்க் கைத் தரத்தைப் பாதிக்குமென்னும் எதிர் வாதத்தைக் காண லாம். வம்சாவழிப் பிரசைகள் அனுபவிக்கும் உரிமைகளிற் சில பதிவுப் பிரசைகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இரு திறத்தாருக்கு மிடையில் சட்டரீதியாகவும், பாலனரீதியாகவும் வேறுபாடு காட்டாத வாக்குறுதியை 1948இல் ஜவஹர்லால் நேரு கேட்ட பொழுது, வருங்காலத்தில் வேறுபாடு காட்டும் எண்ணமில்லை யென்றும், முடிக்குரிய காணி பெறும், பஸ் லைசென்ஸ் பெறும், மீன்பிடிக்கும் உரிமைகள் போன்றவை அன்று இந்திய வம்சா வழியினருக்கு மறுக்கப்பட்டிருந்தநிலை தொடருமென்றும் திரு டி. எஸ். சேனநாயக்கா வெளிப்படையாகக் கூறவேண்டிய சந்தர்ப்பம் எழுந்தது. புதிய யாப்பின் 67ஆவது விதி பதிவுப் பிரசைகளின் குடியுரிமையையும் வேறு உரிமைகளையும் தேசிய அரசுப் பேரவை சாதாரண பெரும்பான்மை வாக்குகளினல் மாற்றியமைப்பதற்கு வழிவிடுகின்றது : மாற்றமேற்படின் அது எத்தன்மையதாயிருக்கும்? இன்றைய நாடற்ருேர் நிலைபற்றிக்
l. Dr. S. U. Kodikara, ibid, p. 107.
 
 
 
 
 
 

- 425 -
குறிப்பிடும் திரு செளமியமூர்த்தி தொண்டமான் அவர்கள், சிறிமா-சாஸ்திரி, சிறிமா-இந்திரா ஒப்பந்தங்கள் " அமுல்செய்து முடிக்கப்படும்வரை பல இலட்சக்கணக்கான மக்கள் அரை வயிற்றுக் கஞ்சிக்கு வழியின்றி அடிமைகளாக, பிழைக்க வசதியும், கல்வி வசதியும், இதர வசதிகளுமின்றித் தொடர்ந்திருக்க அனுமதிப்பது வெட்கக்கேடானது; ந ல் வாழ் வுக் கா ன பொறுப்பை இரு நாடுகளும் உடனடியாக ஏற்கவேண்டும்' என்று அறைகூவல் விடுத்துள்ளார். -
4 அரசியல் : டொனமூர் யாப்புக் காலத்து அமைச்சர் குழுமம் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து நாட்டுமக்கள் அனை வருக்கும் சுதந்திரம்பெற முயன்றபோது பாதியளவு தமிழரின் வாக்குரிமையைப் பறிக்கும் எண்ணத்தை வெளிக்காட்டவில்லை; மாருகத், தமது பிரதிநிதித்துவத் திட்டம், மொத்தம் 95 தெரிவுப் பிரதிநிதிகள் கொண்ட கீழ்ச்சபையில் இலங்கைத் தமிழருக்கு 15 இடங்களும், இந்தியத் தமிழருக்கு 14 இடங் களும் கொடுக்குமென்றனர். சோல்பரி ஆணைக்குழுவும் இந்த மதிப்பீட்டை ஏற்றது. ஆனல், 10 இலட்சமளவு தமிழருக்குப் பிரசாவுரிமையை மறுக்கும் சட்டத்தைப் பின்பற்றி ஆக்கப் பட்ட 1949 இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் பிரசாவுரிமையற்றவர்களுக்கு வாக்குரி மை யை 4 ம் மறுத்தது; இவற்ருல் இந்திய வம்சாவழியினருக்கு ஒரு தெரிவுப் பிரதிநிதிதானும் கிடைக்காத விளைவையும், சட்டமன்றத்தில் தமிழரின் பலம் குன்றிப் பெரும்பான்மையினத்தவர் நிறை பீட்டுப் பிரதிநிதித்துவம் பெற்ற பான்மையையும், தேர்தல் ஏற்பாடுகளின் நெறிதிறம்பும் தன்மையையும், கண்டிச் சிங்கள் ரின் எதிர்ப்பைக் குறைப்பதற்குக் கொத்தலாவல அரசாங்கம் பிரசாவுரிமை பெற்ற இந்திய வம்சாவழியினருக்கு கீ பிரதிநிதி இளைத் தெரியும் விசேட தேர்தல் தொகுதியை அமைத்துவிட்டு அதைச் செயல்படுத்தாத போக்கினையும், 1959இல் திரு. பண் டாரநாயக்கா அரசாங்கம் பதிவுப்பிரசைகளை அவர்கள் வசிக்கும் தொகுதியின் பொதுத்தேர்தல் இடாப்பில் சேர்த்த மாற்றத்தையும் Vஆம் இயலில் விரித்துப் பார்த்தோம்.
மேற்கூறிய நாலு வித பாரதூரமான விளைவுகளை ஏற் படுத்திய, சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டங்களும் பிரசை களின் உரிமைகள் தொடர்பான சட்டங்களும் தொடர்ந்து செயல்படுமென்று குடியரசு யாப்பு வலியுறுத்துகின்றது; பிரசை களே வாக்குரிமையும், சட்டமன்ற உறுப்பினராகும் உரிமையும் பெறுவர்-68, 89, யாப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியா யத்தின் 18ஆவது விதியில் காணும் 9 உப விதிகளில் 7 பிரசை களின் உரிமைகள் தொடர்பானவையென்பதும், அரச கொள்கை நெறிகள் அத்தியாயத்தில் பிரசைகளின் நலன் மேலோங்குவதும் குறிப்பிடற்போலது.

Page 84
XI தலத்தாபன ஆட்சி
1. பொதுக் குறிப்புக்கள்
மக்களுக்குப் பொருந்திய விடயங்களில் பாலன, நிர் கடமைகளைச் செய்யவும், அவர்களின் வழிகாட்டலுக்குத் துணை விதிகளை ஆக்கவும் அதிகாரம்பெற்ற, மக்களால் தெரிவுசெய்யப் பட்ட நிறுவனங்களின் ஆட்சியே தலத்தாபன ஆட்சியாகும் " என்று யே, ஏச். உவாறென் "ஆங்கில உள்ளூராட்சி முறைமை" என்னும் நூலில் வரைவிலக்கணம் கூறியுள்ளார்ஜி ஒரு நாட்டின் குறிப்பிட்ட பிரதேசம் அல்லது இடம், ஒற்றையாட்சி அரசி லாயின் தேசிய அரசின் ஒரு பகுதியாயும், சமஷ்டிஅரசிலாயின் பிரதேசஅரசின் ஒரு பகுதியாயும் இருக்கும். ஒரு நாட்டின் ஆட்சி நிறுவனங்களில் தேசிய அரசாங்கம் உயரிடத்தையும், சமஷ்டிப் பிரதேசஅரசாங்கங்கள் மத்திய இடத்தையும், தலத் தாபன அரசாங்கங்கள் கீழிடத்தையும் வகிக்கின்றன. இலங்கையி லுள்ள ஆற்றுப்பள்ளத்தாக்குக் குழுமம், அனுராதபுரம் காப் பீட்டுக் குழுமம் போன்ற குறிப்பிட்ட எல்லைக்குள் குறிப்பிட்ட கடமைகளைச் செய்வதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்படும் நிறுவனங்களும் தலத்தாபனங்களென்று விரிவான கருத்தில் அழைக்கப்படலாம் உண்மையான த லத் தாபன மென்பது மேலரசாங்கத்திற்குக் கீழ்ப்படிவதாயும், திணைக்களம்போலல் லாது தனித்துவமுடையதாயும், மக்களால் தெரியப்பட்டதாயும், வரிவிதிக்கும் உரிமைபெற்றதாயும், ஒரு அலுவலையன்றிப் பல அலுவல்களை நிறைவேற்றுவதாயும், ஓரளவு சுதந்திரமுடைய தாயும் இருக்கும்
உலகில் இன்று இலட்சக்கணக்கான தலத்தாபனங்கள் உண்டு. ஒவ்வொரு நாடும் நவீன அரசாக மாறும்பொழுது உள்ளூ ராட்சி முறையைப் புதிதாக அமைத்து அல்லது சீர்திருத்தி யுள்ளதை வரலாறு காட்டுகின்றது. ஒவ்வொரு நாட்டின் மரபு, சமூக அமைப்பு, பொருளாதாரவளப் பாவிப்பு, அரசியற் கட்சியின் பாதிப்புப் போன்ற பல்திறப்பட்ட காரணிகளால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

سے 427 ہیمے
த லத்தா பனங்களுக்கி  ைடயே அவைகளின் பரப்பெல்லை, அமைப்பு, கடமை, தன்மை ஆகியவற்றில் வேற்றுமைகள் மலிந் துள்ளன : 1. பரப்பெல்லை : மாகாணம், டிப்பாட்மென் ற், கவுன்ரி போன்ற பெரும் மா வட்டங் களி லும், சேக்கிள் அமுென்டைஸ் மென்ற், கிராமப்புற மாவட்டம் போன்ற விஸ் தீரணம் சிறிது குறைந்த பிரதேசங்களிலும், நகரம், பட்டினம், கிராமம் போன்ற சிறிய இடங்களிலும் இயங்கும் தலத்தாபனங் களைக் காணலாம் : இவற்றைவிடப் பல தாபனங்களின் எல்லைகள் மேற்சென்று கவிந்திருக்கும் விசேட தா பனங் களு முண் டு 2. அமைப்பு : ஒரு கோடியில் பாலனத்தையே வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்ட, உயர்தகமை வாய்ந்த அலுவலர் மக்களால் தெரியப்பட்ட தலத்தாபனசபைகளின் மேற்பார்வை யில் பெருமளவு சுதந்திரத்துடன் பரிபாலனஞ்செய்யும்பொழுது, மறுகோடியில் சபைகளுக்குக் குழுமையாகக் கீழ்ப்படிந்து நடக்கும் அலுவலரையும் காணலாம். சபைகளை ஆக்குவதில், கடமைகளை வழங்குவதில், ஒரு பல அடுக்கு முறையினை அ  ைம ப் ப தி ல் நாட்டுக்குநாடு வேறுபாடுகளுண்டு. 3. கடமை : சில நாடு களில் மேலரசாங்கம் அனுமதித்த குறிப்பிட்ட அலுவல்களையும், வேறு நாடுகளில் பொதுவான அலுவல்களையும் தலத்தாபனங்கள் செய்கின்றன. சில நாடுகளில் கட்டாயமாகச் செய்யவேண்டி யவையென்றும், விரும்பினுல் செய்யவேண்டியவையென்றும் கடமைகள் இரண்டாகப் பிரிவுறும் குறிப்பிட்ட அலுவல்களின் தொகை காலப்போக்கில் அதிகரிக்கின்றன. இதனுல், மேலர சாங்கங்களின் நடவடிக்கைகளிலும் பார்க்க மக்களின் நாளாந்த வாழ்க்கையில் உள்ளூராட்சி கூடிய இடம்பெறும் போக்கைக் காணலாம். உள்ளூராட்சிக் கடமைகளின் விரிவையும், முக்கி யத்துவத்தையும் பொறுத்து உள்ளூராட்சியில் மக்கள் எடுக்கும் சிரத்தையும் அதில் பங்குபற்றுவோரின் தகைமையும் நாட்டுக்கு நாடு மாறுபடும். 4. மேலரசாங்கக் கண்காணிப்பு இது எல்லா நாடுகளிலும் ஒரேயளவானதல்ல ; அத்தோடு மேலர சாங்கத்தின் கட்டுப்பாடு வரவர அதிகரித்துச்செல்லும் பான்மை யைப் பார்க்கலாம். அரசாங்க மானியத்துடன் பரந்த கடமை களைத் தலத்தாபனங்கள் சீரியமுறையில் நிறைவேற்றுகின் றனவா ? என்று கண்காணிக்கும் பொறுப்பை மேலரசாங்கம் ஏற்பது இயற்கையாகும். பலம்வாய்ந்த மத்தியஆட்சியின்கீழ் தலத்தாபனங்களின் சுதந்திரம் குன்றி, உள்ளூராட்சி செழிப் பற்றிருப்பதைக் காணலாம்: 5. நிதி : தலத்தாபனங்கள் தங்கள் வருமானத்திற்கு முழுமையாக மேலரசாங்கத்தில் தங்கியிருக் கும், முழுமையாகத் தங்கள் வரிகளிலிருந்து வருமானத்தைத் திரட்டும், அரசாங்க மானியத்திலிருந்து ஒரு பகுதியையும் தாங்கள் சுயாதீனமாக விதிக்கும் வரிகளிலிருந்து மிகுதியையும்

Page 85
سبيسي 428 بيب
பெறும் பல்திறப்பட்ட ஏற்பாடுகளுண்டு. பெருகிச்செல்லும் செலவினங்களுக்குப் போதிய வருவாயின்றி உலக தலத்
தாபனங்கள் கஷ்டப்படுவது பொதுவான அம்சமெனலாம். ஜி
மேற்கூறிய வேற்றுமைகள் ஒருபுறம் மறுபுறத்தில் பிரச் கினைகளிலும் அவற்றிற்குத் தீர்வுகாண்பதிலும், உருவத்திலும் அம்சத்திலும், வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் உலக தலத்தார் னங்களிடையே ஒற்றுமைகள் இல்லாமலில்லை. பல நாடுகளில் நகரங்கள் பெருவளர்ச்சியுற்று, நகரத் தொகுதிகள் தோன்றிப் போக்கு வரவு, சுகாதாரப் பிரச்சினைகள் உருவாகின்றன; நகர வளர்ச்சியினுல் அவற்ருேடு தொடர்புள்ள கிராமப்புறங்களின் சமூக பொருளாதார வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது ; அதைச் சமாளிப்பதற்குப் புதுவித தலத்தாபனங்கள் அமைக்கப்பட வேண்டியுள்ளது. எல்லா நாடுகளின் பொதுவான அம்சத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக மேற்காட்டிய மாற்றங்கள் அமை கின்றன. தலத்தாபனங்களின் தன்மையை நிர்ணயிக்கும் காரணி களில் மேலரசாங்கக் கட்டுப்பாட்டளவு, தாபனங்களின் கடமை விரிவு, தல ஆட்சியில் மக்களெடுக்கும் பங்கு முக்கியமானவை எனலாம். இவற்றை அடிப்படையாகக்கொண்டு உலக உள்ளூ ராட்சி முறைமைகளை ஐந்தாக வகைப்படுத்தலாம் : ஒவ்வொரு வகையினுள்ளும் வேற்றுமைகள் இருப்பினும் குறிப்பிடத்தக்க ஒற்றுமையுடைய தலத்தாபனங்களைக் காணலாம், 1. சமஷ்டிப் பன்முகப்படுத்தப்பட்ட அதிகார முறைமைகள்: பிரதேச அரசு களுக்குக் கூடிய அதிகாரமுடைய சமஷ்டிகளில், தலத்தாபனங் களின் அதிகாரமும் கடமையும் கூடுதலாக இருக்கும் தல ஆட்சியில் மக்களுக்குக் கூடிய இடமுண்டு. 2 ஒற்றையாட்சிப் பன்முகப்படுத்தப்பட்ட அதிகார முறைமைகள் : இங்கிலாந்தும் ஸ்காண்டிநேவிது நாடுகளும் உதாரணமாகும்; கணிசமான சுதந் திரமும் பரந்த பொறுப்பும் உடையவை மக்கள் தலச:ை களைத் தெரிய, சபைகள் நிர்வாகிகளைத் தெரிகின்றன. 3. நெப் போலிய- பிறிபெக்ற் மு  ைற  ைம க ள் பிரான்சு, தென்ஐரோப்பா, தென்-அமெரிக்கா ஆகிய நாடுகளில் நிலவுகின்றன: அரசாங்கத்தின் பிரதேச அதிகாரிக்குத் தலத்தாபனங்கள்மீது பரந்த கட்டுப்பாடு இருப்பினும், அவைகளுக்குக் கணிசமான சுதந்திரமும் கடமையும் உண்டு. 43 கம்யூனிச முறைமைகள் : மத்திய அரசாங்கத்தின் கருவிகளாகக் குறைந்த தற்றுணிபு அதிகாரத்துடன் இயங்கும் தலத்தாபனங்கள் முதலாளித்துவ நாடுகளிலுள்ள தாபனங்களிலும் பார்க்கப் பரந்த பொருளா தார கடமைகளைச் செய்கின்றன: 5 கலனித்துவத்திலிருந்து விடுபட்ட முறைமைகள் : சில நாடுகளில் பலம்வாய்ந்த ஒரு கட்சி ஆட்சி முறைமையும், சிலவற்றில் பழைய வழக்கத்தின்

- 429 -
தொடர்ச்சியாய் அதிக மத்திய நிர்வாகக் கண்காணிப்பும் நிலவு வதைக் காணலாம் ; இந்நாடுகளில் பாரிய சமூக பொருளா தாரப் பிரச்சினைகள் தலத்தாபனங்களையும் எதிர்நோக்குகின்றன.
2. வளர்ச்சி வரலாறு
1850 வரை : இலங்கையின் இன்றைய தலத்தாபன ஆட்சி முறை 19ஆம் நூற்றண்டின் இரண்டாவது அரை நூற்றண் டில் தோன்றி வளர்ந்த ஒன்ரு கும். ஆணுல் சிங்கள தமிழ் மன்னர்கள் காலத்தில் கிராமிய நிலமானிய சூழ்நிலைக்கேற்ற உள்ளூராட்சி நிறுவனங்கள் இயங்கியுள்ளன. கி. மு. 5ஆம் நூற் ருண்டிலேயே கிராமங்களில் கான்சபாக்களும் பெரும்பகுதி களில் றட்டசபாக்களும் நிலவியதாக வரலாறு கூறுகின்றது ? பாலன நீதித்துறைக் கடமைகளோடு விவசாயத்தை அபிவிருத்தி செய்தல், முக்கியமாக நீர்ப்பாசன வேலைப்பாடுகளைப் பரா மரித்தல் ஆகியனவே இவைகளின் கடமைகளாகும். மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாடு அதிகமின்றிப் பெருமளவு சுதந் திரத்துடன் இவைகள் இயங்கின. குடும்பத் தலைவர்களைக் கொண்ட கான்சபாக்கள் தேவையான நேரங்களில் கூடிப் பெரும்பான்மை வாக்குகளினுல் நிர்ணயித்த முடிவுகளுக்குக் கிராமியச் சமுதாயம் கட்டுப்பட்டு நடந்தது. இத்தகைய தலத் தாபன ஆட்சிமுறை பல நூற்ருண்டுகளாக இலங்கையர், போத் துக்கீசர், ஒல்லாந்தர், முற்பகுதி ஆங்கிலேயர் ஆட்சிக் காலங் களில் நாட்டிற்குப் போதுமான உள்ளூர் பாலனச் சேவையைப் புரிந்ததென்று கூறலாம். 1818 ஆம் ஆண்டு பிரித்தானிய அரச விளம்பரம் கிராமப்புறப் பரிபாலனத்தில் மக்கள் அனுபவித்து வந்த சுயாட்சியுரிமையை அகற்றுவதாக அமைந்தது. இவ் வாண்டு தொடக்கம் சுமார் 4 பத்தாண்டுகளுக்கு இலங்கையில் தலத்தாபன நிறுவனங்கள் செயற்படவில்லை.
1850-1900 : ஆங்கிலேயர் இப்பகுதியில் பழைய கான் சபாக்களையொத்த நிறுவனங்களையும் புதிய நிறுவனங்களையும் நாட்டின் அபிவிருத்தி கருதி அமைக்கலாயினர். இன்றைய முறைமை பழையனவற்றிலிருந்து தோன்றியதாகவோ அவற்றின் தன்மையது என்ருே கொள்ளலாகாது; பிரித்தானிய தலத்தாபன ஆட்சிமுறையைப் பின்பற்றியதாகவும் பாராளுமன்றச் சட்டங் களினல் ஆக்கியதாகவும் இருக்கின்றது. 1856 நீர்ப்பாசனச் சட்டம் கிராமக் குழுக்களுக்கு நீர்ப்பாசனம், வேளாண்மை ஆகியன பற்றிச் சில கடமைகளைக் கொடுக்க எத்தனித்தது : 1861 பொதுச் செல்வழிச் சட்டம் நாட்டுப்புறச் செல்வழி
1. For an excellent discussion of this topic, see Dr. W. Kanesa" lingam's, ' A Hundred years of Local Government in Ceylon (1865—1965)—1971°— рр. 6—80.

Page 86
--ساس 430 --س۔
களின் பொறுப்பை மாகாண, டிஸ்திறிக்குகளின் நெடுஞ்சாலைக் குழுக்களுக்குக் கொடுத்தது. இக்குழுக்களில் மூன்று தெரிவு செய்யப்பட்டோரும் இரண்டு அலுவலரும் அங்கத்தவராயிருந் தனர். மாநகரசபைகளைத் தாபிப்பதற்கான 1865 சட்டத்தின் கீழ் 1866இல் கொழும்பிலும் கண்டியிலும், 1867இல் காலி யிலும் மாநகரசபைகள் அமைக்கப்பட்டன. இவற்றில் தெரிவு அங்கத்தவர்களும் நியமன அங்கத்தவர்களும் இடம்பெற்றனர். 1871இல் கிராமக்குழுக்கள் அல்லது கிராமநீதிமன்றங்கள் அர சாங்க அல்லது உதவி அரசாங்க அதிபரின் கட்டுப்பாட்டுக்குள் நின்று நீதிபரிபாலனஞ் செய்யும் உரிமையையும் பெற்றன: வளர்ச்சியுறும் பட்டினங்களின் பொதுத்தேவைகளைச் செய்து கொடுப்பதற்கு வேண்டிய சுகாதார குழுமங்களை ஒவ்வொரு வருமானப் பெரும்பகுதியில் நிறுவும் அதிகாரத்தை 1892 சிறு பட்டின சுகாதாரச் சட்டம் வழங்கியது. இவற்றில் நியமன அங்கத்தவர்களே இடம்பெற்றனர், நுவரெலியாவின் அபிவிருத் திக்கென விசேட அபிவிருத்திக்குழுமம் ஒன்றை அமைப்பதற்கு 1896இல் ஆக்கிய சட்டமும், தனிப்பட்ட சில பட்டினங்களில் தல குழுமம் அமைப்பதற்கு 1898இல் ஆக்கிய சட்டமும் வழிகோலின. இக்குழுமங்களில் தெரிவுப்பிரதிநிதிகளும் அங்கத் தவராயிருந்தனர்; சுருக்கிக் கூறின் 19 ஆம் நூற்ருண்டு முடி வுறுந்தறுவாயில் நெடுஞ்சாலைக் குழுக்களையும், கிராம நீதிமன்றங் களையும், நுவரெலியா அபிவிருத்திக் குழுமத்தையும் தவிர்ந்த 4 பொதுவகையான தலத்தாபன நிறுவனங்களில், 360 கிராமக் குழுக்களும், 13 தல - குழுமங்களும், 19 சுகாதார குழுமங்களும், 3 மாநகரசபைகளும் இருந்தன. இவைகளில் மக்களும் ஓரள வுக்குப் பங்குகொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர். ஆணுல், பெரும் பாலான நிறுவனங்கள் மத்திய அரசிலிருந்து குறிப்பிட்ட விடயங் களுக்கான பணஉதவி பெற்றதினுலும், அரசாங்க உயரலுவலர் இவற்றின் நிர்வாக அதிகாரிகளாக இயங்கியதினுலும் தலத் தாபன ஆட்சி அதிக சுதந்திரமின்றி அரசாங்கக் கொள்கையை அமுல்நடத்தும் தன்மையதாய் இருந்தது. அதன் அமைப்பு இசைவிணவின்றியும் ஒருமைப்பாடான மத்திய கட்டுப்பாடின்றி யும் காணப்பட்டது. அதன் நிறுவனங்கள் கட்டாயமான, கட்டாயமற்ற சேவைகளைப் புரிந்தன.
1900-1930 மேற்கூறிய சூழ்நிலையில் நாட்டுப் புறங்களில் நிலவிய தலத்தாபனங்களை ஆராய்ந்து தேவையான மாற்றங் களைச் சிபார்சு செய்வதற்கென 1916இல் தலத்தாபன - ஆணைக் குழு நியமிக்கப்பட்டது; அதன் அறிக்கையின் அடிப்படையில் ஆக்கப்பட்ட 1920ஆம் ஆண்டு தலத்தாபன ஆட்சிச் சட்டம் மூன்றுவித வட்டார சபைகளையும் தலத்தாபன ஆட்சிக்

--۔ 431 بس۔
குழுமத்தையும் ஏற்படுத்தியது; சுகாதார குழுமம் அல்லது தல குழுமம் பாலனஞ் செய்யமுடியாத அளவிற்கு வளர்ச்சியுற்ற பட்டினங்களில் நகர வட்டார சபைகளும், பின்தங்கிய இடங் களில் நாட்டுப்புற வட்டார சபைகளும், இரண் டி. ற் கும் இடைப்பட்ட பகுதிகளில் பொது வட்டார சபைகளும் மக்கள் விரும்பினுல் நிறுவப்படலாம். நாட்டுப்புறச் சபைகளை நியமன அங்கத்தவர்களாலும், ஏனைய இரு சபைகளையும் பெரும்பான் மைத் தெரிவு அங்கத்தவர்களாலும் நிரப்புவதற்கு ஏற்பாடாகி யிருந்தது. பொதுச்செல்வழி, சுகாதாரம், வேறு தல தேவைகள் பற்றிய பாலனமும் கட்டுப்பாடும் முச்சபைகளின் கடமைகளா யிருந்தன: 5 நியமன அலுவலர்களைக்கொண்ட தலத்தாபன ஆட்சிக் குழுமம் வட்டார சடைகளைப் பொதுக்கட்டுப்பாடு செய்யும், அவைகள் ஆக்கும் விதிகளை அங்கீகரிக்கும், மத்திய அரசாங்கம் உதவும் பணத்தைப் பங்கிடும் அதிகாரம் பெற் றிருந்தது. 1931 முடியும்வரை 11 பட்டினங்களே நகர வட் டார சபைகளை விரும்பின; ஏனைய சபைகளில் ஒன்றுதானும் நிறுவப்படவில்லை. கூடியவரி விதிக்கப்படலாமென்னும் பயமும், மத்திய அலுவலர் கட்டுப்பாடும், நிறுவப்பட்ட நகர வட் டார சபைகள் நன்கு இயங்காமையும் புதிய திட்டத்தை மக்கள் விரும்பாததன் காரணங்களாக அமைந்தன. 20ஆம் நூற் முண்டு 3ஆம் பத்தாண்டின் தலத்தாபன வளர்ச்சி வரலாற்றில் 4 நிகழ்ச்சிகள் குறிப்பிடற்பாலன : 1. 1923இல் பொதுநிதித் தொடர்பு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. தலத்தாபனங்களுக் குப் போதிய வருமானமில்லாத காரணத்தால் அவைகளின் பொதுச்சேவை என்ன என்பதை வரையறுத்து, மத்திய அர சாங்கம் எந்த அளவிற்குப் பணஉதவி அளிக்கவேண்டுமென் பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்த ஆணைக் குழு கேட்கப்பட்டது. அரசாங்கம் அதன் சிபார்சுகளை ஏற்று, அவற்றின் அடிப்படையில் தலத்தாபனங்களுக்கு 1946 வரை பணஉதவி செய்துவந்தது. 2. 1924 கிராம சமுதாயச் சட்டம், கிராமக் குழுக்களுக்குக் கடன் பெறும் உரிமையையும், உயர் தலைமைக்காரருக்குப் பதிலாகத் தங்களிலிருந்தே ஒரு வரைத் தலைவராகத் தெரியும் வாய்ப்பையும், கூடிய விடயங்கள் பற்றிய விதிகளை ஆக்கும் அதிகாரத்தையும் அளித்தது. 3.மாநகர சபைகளைத் தவிர்ந்த ஏனைய தலத்தாபனங்கள் இயங்கிய முறையையும், அவைகளை இலங்கை எங்கணும் பரப்பக்கூடிய வகையையும் ஆராயுமாறு சட்டசபைத் தெரிகுழு ஒன்று 1926இல் நியமிக்கப்பட்டது. அதன் அறிக்கை 1928இல் வெளி வந்தது. 4. 1927இல் இலங்கை வந்த டொனமூர் வேத்திய லானைக்குழுவின் அறிக்கையும் 1928இல் வெளியிடப்பட்டது : அதில் மத்திய அரசாங்க ஆட்சிபற்றியும் தலத்தாபன ஆட்சி
இ, 11 - 21

Page 87
--سمبر 432 ملی۔
பற்றியும் அடிப்படையான மாற்றங்கள் சிபார்சு செய்யப் பட்டதினுல் சட்டசபைத் தெரிகுழுவின் அறிக்கைமீது அர சாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
1930-1946 டொனமூர் யாப்பின்கீழ் தலத்தா பன ஆட்சி, தேசாதிபதியின் உயர் கட்டுப்பாட்டிலிருந்து மக்களைப் பெருமளவு பிரதிபலித்த அரச சபையால் அமைக்கப்பெற்ற தலபரிபாலன நிர்வாகக் குழுவிற்கு மாற்றப்பட்டது. அதன் மேற்பார்வையில் புதியதோர் தலத்தாபன திணைக்களம் இயங்கலாயிற்று. குழுவும் திணைக்களமும் த லத் தா ப ன ஆட்சிக்கு ஒருங்கிணைந்த மத்திய கட்டுப்பாட்டைக் கொடுத்தன அதன் வளர்ச்சிக்கு வேண்டிய தூண்டுதலை அளித்தன. ஆனல் 1930ஆம் பத்தாண்டு முற்பகுதியில் சில தடங்கல்களைச் சமா ளிக்கவேண்டியிருந்தது. உதாரணமாக, உலகமனைத்தும் பரவிய பெரும் பொருளாதார மந்தத்தினுல் பாதிக்கப்பட்ட இலங்கை யிலும் பொதுநிதி நெருக்கடி ஏற்பட்டு, தலத்தாபனங்களுக்கு அறிவுரை கூறுவதற்கு வேண்டிய திணைக்கள அலுவலர்களை அமர்த்தவோ, அவைகளுக்கு அரசாங்கம் போதிய பணஉதவி செய்யவோ முடியவில்லை : தாபனங்களும் தலைவர்களும் வரவு செலவு விடயங்களிற் சிரத்தை எடுக்கவில்லை. இருந்தும் தல சுயஆட்சி வளர்ச்சிக்கு ஏற்ற உறுதியான அரசாங்கக் கொள்கை விரைவிற் தோன்றலாயிற்று. ஜனநாயகரீதியற்ற தல குழுமங் களைப் படிப்படியாக நீக்கி, தல சபைகளிலிருந்து உத்தியோக அங்கத்துவத்தை அகற்றி, சர்வசன வாக்குரிமையைப் புகுத்தி, தலத்தாபனங்களின் அதிகாரத்தை உயர்த்தி, அவற்றில் மக்கள் அதிகமாகப் பங்குபற்றக்கூடிய மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த அம்சங்கள் 1932, 1933 கிராடிக்குழுத் திருத்தச் சட்டங்களிலும், 1938 கிராம சமுதாயத்தினர் சட்டத்திலும், 1935 கொழும்பு மாநகரசபை அமைப்புச் சட்டத்திலும், 1939 நகரசபைச் சட்டத் திலும் சிதறிக்கிடக்கின்றன. மேலும், இறுதியாகக் குறிப்பிட்ட சட்டம் நகர வட்டார சபையின் பெயரை நகர சபையென்று மாற்றியது 3 மக்கள் விருப்பத்தைக் கேட்காமலே அச்சபையை அமைக்க வழிவகுத்தது தேவையை இழந்துவிட்ட தலத் தாபன ஆட்சிக் குழுமத்தை ஒழித்து, அதன் அதிகாரத்தை நிர் வாகக்குழுவிற்கும் உள்ளூர் ஆட்சித் திணைக்களத்திற்கும் பகிர்ந் தளித்தது, உறுதிவாய்ந்த இந்த அடித்தளத்திலிருந்து, எதிர் பார்த்த அளவிற்குத் தலநிறுவனங்கள் வளர்ந்து மக்களுக்குச் சேவை புரியவில்லை; இரண்டாம் உலகமகாயுத்தத்தில் யப்பானின் தாக்குதல், அங்கத்தவர்கள் தலசபைக் கூட்டங்களுக்கு வருகை தராமை அல்லது வெளிநடப்புச் செய்தல், அவர்கள் மக்களிட மிருந்து வரிகளை அறவிடத் தயங்குதல் ஆகியன இதற்குக் காரணங்களாய் அமைந்தன. 1936 தொடக்கம் 1951 வரை
 
 

- 433 -
தலத்தாபன அமைச்சராயிருந்த திரு. எஸ். டபிள்யு. ஆர்: டி3 பண்டாரநாயக்கா வளர்ச்சித் தடங்கல்களை நீக்குவதிலும், முன்னேற்றமான புது நடவடிக்கைகளை எடுப்பதிலும் கவனம் செலுத்தினர்; 1946ஆம் ஆண்டில் பல மாற்றங்களைக் கொணர்ந் தார் : 1. பட்டினசபைகள் சட்டம் சுகாதார, தல குழுமங் களுக்குப் பதிலாகப் பட்டினசபைகளை அமைக்க ஏற்பாடுசெய்து, தலத்தாபனங்களில் மக்களாட்சியைப் பூரணப்படுத்தியது: 2. கிராமக்குழுக்கள்மீது அரசாங்க அதிபர்கள் இதுகாறும் கொண்டிருந்த கட்டுப்பாடு, புதிதாக அமர்த்தப்பெற்ற உள்ளூ ராட்சிப் பிரதேச உதவி ஆணையாளருக்கு மாறியது. 3 தலத் தாபன தேர்தல்களை நடத்துவதற்குத் தனிப்பட்ட இலாகாவும், தலத்தாபன சேவையை ஒன்றிணைப்பதற்குத் தலத்தாபன சேவை ஆணைக்குழுவும் தோன்றின. 4. தலத்தாபனங்களுக்கு மொத்த நன்கொடை வழங்கும்நெறி முதன்முதலாக அரசாங் கத்தினுல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1947-1974 : சோல்பரி யாப்பிலோ அதைத் தொடர்ந்த பூரண சுதந்திர ஏற்பாடுகளிலோ உள்ளூராட்சி பற்றி எதுவித மாற்றமும் செய்யப்படவில்லை எனவே, முன்பிருந்த நிலை தொடர்ந்தது. நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் உள்ளூராட்சி முறையில் நிலவிய இரு முக்கிய பிரச்சினைகளில் ஒன்று போதிய வருமான மின்  ைம யாகும். அதுபற்றி 1948இல் அலுவலர் குழுவும், 1953இல் சொக்ஸி ஆணைக்குழுவும் ஆராய்ந்தன. இரண்டாவது பிரச்சினை தலத்தாபனங்களின், முக்கியமாகக் கிராமக்குழுக்களின் அதிகார உயர்வு பற்றியது: 1952 தலத் தாபன அதிகார உயர்வுச் சட்டம் உள்ளூராட்சி நிறுவனங் களுக்கு என்றுமில்லாத அளவிற்கு அவைகள் சுதந்திரமாக இயங்கவும், அரசாங்கத்தின் கட்டுப்பாடு அதிகமின்றிப் பண உதவி பெறவும் வழிவகுத்தது. நாட்டிற்குக் கிடைத்த சுதத் திரம் உள்ளூராட்சியிலும் செறிவது இயற்கையாம் சொக்ஸி ஆணைக்குழுவும் மத்திய அரசாங்கம் தாராளமாக நடக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியது ; மொத்த நன்கொடையை அரசாங்கம் வழங்கவேண்டுமென்ற அதன் சிபார்சு 1957/58இல் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனல் நாட்டு முன்னேற்றத் திற்குப் பிரதேச சபைகள் அவசியமென்ற அதன் கருத்து அரசியற் காரணங்களுக்காக அமுல்செய்யப்படாத பெரும் பிரச்சினையாக இன்றும் உள்ளது. 1961 கிராமசபைத் திருத்தச் சட்டம் கிராமக்குழுவைக் கிராமசபையென்று பெயர் மாற்றம் செய்ததோடு, அதன் கடமையையும் அதி கா ரத்  ைத யு ம் கூட்டியது:

Page 88
سست۔ 434 --سے
முக்கூட்டணி அரசாங்கம் 1971இல் 48ஆம் இலக்க தலத் தாபனங்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினுல் உள்ளூராட்சிச் சட்டங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது; அம்மாற்றங்கள் ஐந்தாகப் பிரிக்கப்பட்டுள்ளன : 1. மாநகரசபைகளும் கிராம சபைகளும் தமது சோலைவரியை விதிப்பதற்குத் தேவையான அசைவற்ற ஆதனங்களின் வருட வருமானத்தை ஐந்து ஆண்டு களுக் கொருமுறை கட்டாயமாகத் திருப்பி மதிப்பீடு செய்து, அந்த மதிப்பீட்டிலிருந்தே சோலைவரியைக் கணக்கிட்டு அறவிட வேண்டும். முன்பு திருப்பி மதிப்பிடுதல் கட்டாயமாக்கப்படா ததினுல், இச்சபைகள் சில வேளைகளில் திருப்பி மதிப்பீடு செய்யாததன்மூலம் தமக்குக் கிடைக்கக்கூடிய வருமானத்தை இழந்துள்ளன. 2. அமைச்சரினுல் பதவிநீக்கம் செய்யப்பட்ட நகர, பட்டின, கிராம சபைகளின் தலைவரும் அங்கத்தவரும் தலத்தாபன மெதற்கும் தெரியப்படும் தகைமையின்மை, பதவி நீக்கக் கட்டளையை அமைச்சர் ரத்துச்செய்ததும் நீங்கிவிடும் அதாவது சம்பந்தப்பட்டோர் அங்கத்தவராகும் உரிமையைத் திருப்பிப்பெறுவர். 3. மாநகர, நகர, பட்டின, கிராம சபை களுக்குரிய வரிகள், கட்டணங்கள், வேறு வருமானங்கள் ஆகிய வற்றை வசூலிக்கும் பொறுப்பு அவற்றின் தலைவரிடமிருந்து, மாநகரசபைக் கொமிஷனர், நகர பட்டின சபைச் செயலாளர், உதவி ஆணை வாளர் நியமிக்கும் கிராமசபை அலுவலர் ஆகியோருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மக்க ளால் தெரிவுசெய்யப்படும் தலைவர்கள் மக்களிடமிருந்து வரி களைக் கண்டிப்பானமுறையில் வசூலிக்கத் தயங்கியதனுல் சபைகள் வருமானத்தை இழக்க நேரிட்டதாகும் 45 ஒரு தலத் தாபன சபை இன்ஞெருவித சபையாக மாற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் சில வேளைகளில் இல்லாதகுறை இப்போது நிவிர்த்தி செய்யப்பட்டுள்ளது. 5. இப்பிரிவில் குறிப்பிடத்தக்க மூன்று மாற்றங்களைக் காணலாம் : (அ) ஒரு தலத்தாபனத்தின் உப யோகிப்புக்காகக் காணி சுவீகரிக்கப்படும்போது, அக்காணி குறிப் பிட்ட பெறுமானத்திற்கு மேற்படாதிருந்தால், அவசியமான தேவையை முன்னிட்டு, அதை உடனடியாக ஆள்வகை உடைமை யாக ஆக்குவதற்கு அமைச்சர் கட்டளை பிற ப் பிக்க லாம்3 (ஆ) பட்டின, கிராம சபைகளின் பதில் தலைவர்களும் சமா தான நீதிவான்களாகின்றனர். (இ) மாநகரசபையின் சாதாரண பெரும்பான்மைப் பிரேரணையினுல் அதன் தலைவரை இது காறும் பதவியிலிருந்து நீக்கமுடிந்தது. புதிய சட்டத்தின்படி, * பெரும்பான்மை அவசியம்; அத்தோடு மாநகராதிபதிக்கு அல்லது பதில் மாநகராதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 3 பெரும்பான்ம்ை பெருத திகதி தொடங்கி 6 மாதம் முடியும் வரை அவர்களுக்கெதிராக இன்னுெரு நம்பிக்கை யில்லாப் பிரேரணையைக் கொண்டுவர முடியாது. இத்திருத் தங்கள் ஸ்திரமான மாநகரசபை ஆட்சிக்கு உதவும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

--ساس ۔ 435 ہیبسببے
1972 குடியரசு யாப்பு உள்ளூராட்சி முறைமையில் எதுவித மாற்றத்தையும் புகுத்தவில்லை; யாப்பு ஆரம்பமாகும் தறுவாயில் நிலவிய சட்டங்கள் தொடர்ந்து வலுவுடையனவாயிருக்குமென்று விதி 12 பணிக்கின்றது. ? ? இலங்கைக் குடியரசு ஒரு ஒற்றை யாட்சியரசு" எனும் இரண்டாவது ஏற்பாடு சமஷ்டியாட்சி எழுவதையும், பிரதேச அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் தலத் தாபனங்கள் செல்வதையும் மறைமுகமாகத் தடுக்கின்றது. 1973லும் 1974லும் உள்ளூர் நிர்வாக அமைச்சர் பல சபை களின் ஆயுட்காலத்தை நீட்டுவதையும் பலவற்றைக் கலைப் பதையும் காணலாம்: 23-5-74இல் ஆக்கப்பட்ட 16ஆம் இலக்க உள்ளூராட்சிச்சேவைச் சட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்த தாகும்; அது இயல் Xi/7இல் விரிவாக ஆராயப்படுகின்றது : அச்சட்டம் உள்ளூராட்சிச்சேவை ஆணைக்குழுவிற்குப் பதிலாக ஆலோசனைச்சபை, ஒழுக்காற்றுச்சபை ஆகியவற்றை நிறுவி, உள்ளூராட்சி அமைச்சருக்கு உள்ளூராட்சிச் சேவைமிது பரந்த அதிகாரங்களை வழங்குகின்றது.
ஒரு நூற்ருண்டிற்கு மேற்பட்ட தலத்தாபன வளர்ச்சியில், குழுக்கள், குழுமங்கள், சபைகள் ஆகியவற்றில் அரச பணித்துறை ஆட்சிக்குப் பதிலாக மக்களாட்சி மலர்ந்த முறையையும், சில தாபனங்கள் மறைந்து வேறுசில தோன்றிப்படிப்படியாக உயர்ந்த அதிகாரங்களைப் பெற்ற பான்மையையும், அவைகளின் வருமா னம், தேர்தல், அலுவலர் ஆகியன பற்றிய பிரச்சினைகளைத் தீர்ப் பதற்கு எடுத்த எத்தனங்களையும், அவைகளின் மேற்பார்வையும் கட்டுப்பாடும் தேசாதிபதி உள்ளூராட்சிக்குழுமம் ஆகியோரில் சிதறிக்கிடந்த நிலை மாறி ஒருங்கிணைந்த மத்தியகட்டுப்பாடு ஏற் பட்ட வகையினையும் சுருக்கிப் பார்த்தோம் தலத்தாபனங் களின் எண்ணிக்கை, டொனமூர் காலத்திலிருந்து எவ்வளவிற்கு வளர்ந்துள்ளதென்பதைப் பின்வரும் அட்டவணை காட்டுகின்றது:
1931 1940 1950 1960 1970
கிராம சபைகள் a 99 399 400 40 540
சுகாதாரக் குழுமங்கள் 17
Lf4 g607 சபைகள் 37 37 86
நகர சபைகள் 27 36 37 岛4
மாநகர சபைகள் 3. 3. 2 7 ץ
* சுகாதாரக் குழுமங்களுக்குப் பதிலாகப் பட்டினசபைகள் 1946இல் அமைக் கப்பட்டன. தியத்தலாவையில் மாத்திரம் ஒரு சுகாதாரக் குழுமம் இபங்குகின்றது

Page 89
- 436 -
கடந்த நீண்ட வரலாற்றில் ஆக்கப்பட்ட சட்டங்களும், வெளிவந்த அறிக்கைகளும் அநேகம் : இருந்தும் பொதுமக்களின் அக் க  ைற யி ன்  ைம, வருமானப் பற்ருக்குறை, பயன்தரு கடமைகள் போதாமை ஆகியன தீர்ந்த பாடில்லை. இலங்கையில் தலத்தாபன ஆட்சி " எழுச்சியற்ற நிலையிலுள்ளது" என்று' உருசிலா ஹிக்ஸ் 1957லும், அது ?? நெருக்கடி நிலையிலுள்ளது" என்று கலாநிதி வி. கணேசலிங்கம் 1971லும், நகரசபைத் தலைவர்கள் சங்கம் 1973லும் குறிப்பிட்டுள்ளனர். இதற்காய காரணங்களும், தலத்தாபன முறைமையின் முக்கிய அம்சங் களும், வரலாற்றுப் பின்னணியில் சிறிது விரித்து ஆராயும்' தகைமை வாய்ந்தன.
3. அமைப்பு முறைமை
ஆற்றுப்படுகைகள் அபிவிருத்திக் குழுமத்தின் ஆதிக்கத் திற்குட்பட்ட அபிவிருத்தியடையாத பகுதிகள் நீங்கலாகவும் அனுராதபுர காப்பீட்டுக் குழுமத்தின் பகுதிகள் நீங்கலாகவும் உள்ள இலங்கையின் ஏனைய கிராம நகரப் புறங்களில் ஏதாவ தொரு தலத்தாபனசபை இயங்குவதை இன்று காணலாம். இச்சபை மாநகர, நகர, பட்டின, கிராம சபைகளில் ஒன்ருக இருக்கும். அவைகளின் அமைப்பு முறைமையைப் பின்வரும் அட்டவணை சுருக்கி இலகுவாக்கிக் காட்டுகின்றது.
தேசிய அரசுப் பேரவை
தலத்தாபன அமைச்சர்
அமைச்சும் செயலாளரும் செயலகமும்
தலத்தாபன ஆட்சித் திணைக் தலத்தாபனசேவை ஆணைக்குழு களமும் ஆணையாளரும் விற்குப் பதிலாக ஆலோசனைச் சபையும் ஒழுக்காற்றுச் சபையும் பணிப்பாளரும் -உள்ளூராட்சி ... ሎ
மாவட்ட உதவி ஆணையாளர்
terநகர நகர பட்டின கிராம சபைகள் சபைகள் சபைகள் சபைகள் "
இறைமையுடைய தேசிய அரசுப் பேரவை நாலுவித தலத்
தாபன சபைகள் பற்றி எதுவித சட்டத்தையும் ஆக்கலாம்; சபைகள் அச்சட்டங்களுக்கு அமைய இயங்கவேண்டும். தீலத்

................... 437 --
தாபன ஆட்சியை ஓரளவிற்கு மேற்பார்வை செய்யவும், கட்டுப் படுத்தவும், அபிவிருத்தி செய்யவும் தலபரிபாலன அமைச்சர் ஒருவர் உளர். இவர் சபைத் தலைவர்களை அங்கத்தவர்களை அகற்ற லாம், சபைகளைக் கலைக்கலாம், இடைநிறுத்தலாம், அவற்றின் காலத்தை நீட்டலாம், அவைகளுக்குச் சில சந்தர்ப்பங்களில் கடனையும் மானியத்தையும் அனுமதிக்கலாம். இக்கடமைகளைச் செய்வதில் அமைச்சருக்கு உதவ அமைச்சுச் செயலாளரும், செயலாளரின் மேற்பார்வையில் இயங்கும் தலத்தாபன திணைக் களமும் உண்டு. திணைக்களத்தின் தலைவர், ஆணையாளர் என்று அழைக்கப்படுவர் இவர் மாநகர, நகர, பட்டின சபைகளை நேரடியாகவும், கிராம சபைகளை 22 உள்ளூராட்சி மாவட்ட உதவி ஆணையாளர்கள் மூலமும் கண்காணிக்கின்றர்; சிறு பணி யாளர்களைத் தவிர்த்து " அட்டவணையில் சேர்க்கப்பட்ட " சுமார் 8000 தலத்தாபன அலுவலரின் நியமனம்,இடமாற்றம்,ஒழுக்கக் கட்டுப்பாடு, வேலைநீக்கம் ஆகியவற்றைச் செய்வதற்கு உள்ளூ ராட்சிச் சேவை ஆணைக்குழு ஒன்று செயற்பட்டது ஆணைக் குழுவிற்குப் பதிலாக 1974 சட்டம் ஏற்படுத்திய நிறுவனங் களின் அதிகாரத்தையும் அமைப்பையும் இயல் xi/7இற் கrண்க
தற்போது மிகவும் அபிவிருத்திபெற்ற 12 பெரிய நகரங்க ளான கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்பாணம், நுவரெலியா, குருநாகல், நீர் கொழும்பு, தெகிவளை-கல்கிசை, பதுளை, மாத்தளை மட்டக்களப்பு, இரத்தினபுரி ஆகியவற்றில் மாநகர சபைகளும், நகர்ப்புறங்களில் 37 நகரசபைகளும், நாட்டுப்புறப் பட்டினங்களில் 86 பட்டினசபைகளும், நாட்டுப்புறங்களில் 542 கிராமசபைகளும் சேர்ந்து மொத்தம் 677 தலத்தாபன சபைகள் நிறுவப்பட்டுள்ளன. அரசாங்க வர்த்தமானியில் பிரகடனம் செய்வதன் மூலம் அமைச்சர் புது இடங்களில் தலத்தாபனங்களை நிறுவலாம், அவற்றின் எல்லையை நிர்ணயிக்கலாம், நிர்ணயித்த எல்லையை மாற்றலாம், நிலவும் சபைகளின் அந்தஸ்தை உயர்த்த லாம் ; ஆனல் அவற்றின் அதிகாரங்களைக் கூட்டும் அல்லது குறைக்கும் உரிமை தேசிய அரசுப் பேரவையைச் சார்ந்ததாகும்: நாலுவித தலத்தாபனங்களும் ஓரளவு சுயேச்சையானவை: சட்டத்தால் ஆக்கப்பட்டவை; அவைகளின் அமைப்பு அதிகாரம் கடமை ஆகியன சட்டத்தால் வரை யறுக் கப் பட்டவை அவற்றின் சபைகள் மக்களால் தெரியப்பட்ட அங்கத்தவர் களைக் கொண்டவை எல்லாச் சபைகளின் கடமைகளும் ஏறத் தாழ ஒரேவகையின : தங்கள் ஆட்சிப் பிரதேசங்களில் சுகா தார வசதிகளை, போக்குவரத்துப் பாதைகளை, பொது உப யோகச் சேவைகளைப் பேணி வளர்த்தலே இக்கடமைகளென்று

Page 90
------- 438، سیمس
பொதுவாகக் கூறினலும், சூழ்நிலைக்கேற்றவாறு அவைகள் கூடியோ குறைந்தோ நடைமுறைப்படுத்தப்படுகின்றன:
மக்களாற் தெரிவுசெய்யப்படாத, மத்திய அரசாங்கத்தின் கருவிகளென்று கருதக்கூடிய வேறு இரு நிறுவனங்கள் உண்டு : இவைகளையும் விரிந்த கருத்தில் தலத்தாபனங்களென்று கூற லாம் ஒன்று அனுராதபுர காப்பீட்டுக் குழுமமாகும் ; இது முன் இயங்கிய நகரசபைக்குப் பதிலாக 1961இல் நிறுவிப்பட்டது:
அனுராதபுரத்தின் பழைய நகரைப் புனித பிரதேசமாகப் பாது
காப்பதும், புதிய நகரை அபிவிருத்திசெய்து பரிபாலிப்பதுமே இதன் கடமைகளாகும்; இரண்டாவது நிறுவனம் ஆற்றுப்
V
படுகைகள் அபிவிருத்திக் குழுமமாகும். இது 1949இல் நிறுவப்
பட்ட கல்லோயா அபிவிருத்திக் குழுமத்திற்குப்பதிலாக 1965இல் திருத்தி அமைக்கப்பெற்றது; கல்லோயாக் குழுமம் விவசாய காணி அமைச்சரால் நியமிக்கப்பட்ட ஒரு தலைவரையும் ஏனைய மூன்று அங்கத்தவரையும் கொண்டது : இவர்கள் 5 ஆண்டுகள்
பதவி வகிக்கலாம், திரும்பவும் நியமனம் பெறலாம், குழுமம்
பல நோக்குடையது ; இலங்கையின் விஸ்தீரணத்தில் 3 சதவீத நிலப்பரப்பை உள்ளடக்கிய கல்லோயாப் பள்ளத்தாக்கில்
விவசாய உற்பத்தியைப் பெருக்கல், வெள்ளப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தல், நிலமிலாக் குடும்பங்களைக் குடியேற்றுதல், கூடிய வேலை வாய்ப்பை உருவாக்கல், மக்களின் சமூக பொருளா
தார பண்பாட்டு நலனை உயர்த்தல் ஆகியன அதன் கடமைக
ளாகும். இவற்றைச் செயல்படுத்துவதற்கு அலுவலரை நியமிக்
கவும், துணை விதிகளை ஆக்கவும், தண்ணிர் மின்வரி விநியோகத் திற்குக் கட்டணங்களை வசூலிக்கவும் அதிகாரம் பெற்றிருந்தது : அரசாங்கமும் பெ ரு ந் தெ  ைக யா ன பணத்தைக் கொடுத் துதவியது. குழுமத்தின் உரிமைப் பகுதியாக்கப்பட்ட பள்ளத் தாக்கு, உள்ளூர் பாலனத்திற்காக, விருத்திபெற்ற பாக மென்றும், விருத்திபெருத பாகமென்றும் இ ர ண் டாக ப் பிரகடனப்படுத்தப்பட்டது; முன்னைய பாகத்திலிருந்த தலத்
தாபனங்கள் தொடர்ந்து இயங்க, பின்னையதிலிருந்த கிராம
சபைகள் அகற்றப்பட்டன. இதன் நோக்கம், குழுமம் தடை
யின்றிக் கடமையாற்றும் வாய்ப்பை அளிப்பதாகும் விருத்தி வேலைகள் நிறைவேறியதும் தலத்தாபன நிறுவனங்கள் திருப்பி
அமைக்கப்பெறும், கல்லோயாப் பள்ளத்தாக்கின் விருத்தி முடி
வுறும் தறுவாயில்; வேறு முக்கிய ஆற்றுப் பள்ளத்தாக்குகளை விருத்திசெய்யும் அதிகாரம் குழுமத்திற்கு 1965 சட்டத்தால் வழங்கப்பட்டது; அதன் பெயர் " ஆற்றுப்படுகைகள் அபிவிருத் திக் குழுமம்" என்று மாற்றப்பட்டதோடு அதன் நோக்கமும்
சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றி வரையறுக்கப்பட்டது; குழுமம்
தான் பெற்ற அனுபவத்தையும் தன் ஊழியர்களையும் பயன்

مسلم : 439 --ساس۔
படுத்தி, உடவளவை ஆற்றுப்படுகையை விருத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளது. நிலவளமும், நீர்வளமும் உடைய பின்தங்கிய நாட்டுப்புறங்களில், சம்பிரதாய தலத்தாபனங்கள் விருத்தி வேலைகளை மேற்கொள்ளமுடியாத சூழ்நிலையில், விசேட விருத்திக் குழுமங்கள் வகிக்கக்கூடிய இடம் இவ்வியலின் " கடமைகள்" பிரிவில் ஆராயப்படுகின்றது.
1931 டொனமூர் யாப்பின்கீழ் நாடு ஒரளவு சுதந்திரம் பெற்ற காலந்தொட்டோ, அன்றி 1948இல் முழுச் சுதந்திரம் பெற்றபின்புதானும் தலத்தாபன அமைப்புமுறைமை பற்றி முழு நிறைவான ஆராய்வு நடத்தப்படவில்லை. பதவியிலிருந்த அரசாங்கம் ஒவ்வொன்றும் பரப்பெல்லையின் அளவு, கடமை களின் செயலெல்லை, குடிசனப் பரப்பீடு, பொருளாதாரரீதியில் செயற்படக்கூடும் தன்மை, சம்பந்தப்பட்ட வேறு விடயங்கள் ஆகியவற்றை நுண்ணுய்வு செய்யாது, குறிப்பிட்ட ஒரு குறிக் கோளை மனதில்வைத்து, பல்வேறு தலத்தாபனங்களைப் படைத் துள்ளது. அந்நியர் ஆட்சியிலிருந்து வெளிவரும் ஒரு நாட்டின் சனநாயக அடித்தளத்தைத் தலத்தாபனங்களின் உயர்ந்து செல்லும் தொகை உறுதிப்படுத்த உதவுமென்னும் முறையில் அரசாங்கத்தின் உள்நோக்கம் வரவேற்கத்தக்கது. ஆனல் கடந்த மூன்று பத்தாண்டுகளின் திட்டமில்லாத் தலத்தாபன வளர்ச்சி பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. பணவருவாயில் மிகக்குறைந்த கிராமசபைகளினதும், பட்டினசபைகளினதும் தொகை 1950இல் முறையே 401, 33 ஆக இருந்து, 1970இல் 541, 85 ஆக உயர்ந்துள்ளது ; அதாவது கடந்த 20 ஆண்டு களில் இவைகளின் தொகை முறையே 26, 150 சதவீதம் உயர்ந்துள்ளதெனக் கூறலாம் 1950இல் இருந்த 3 மாநகர சபைகள் 1970இல் 12ஆக அதிகரித்தன. சில நகரசபைகள் மாநகரசபைகளாக உயர்வு பெற்றதினுல் நகரசபைகளின் தொகை மாத்திரம் சிறிது குறைந்துள்ளது. பின்வரும் பட்டினங்களுக்கு எதற்காக நகரசபை அந்தஸ்து வழங்கப்பட்டதென்று விளங்க ລສົ@&ລ -
*
"தி:| குடிசனம் வட்டாரம் கடுகண்ணுவை 2 − Ꮧ , 569 . 6 அப்புத்தளை °4 1789 7 பலாங்கொடை 9 2 0 0 و 3 | 4ث வத்தேகமை 7 3,431 7
* Sessional Paper No. VII-1972: Ch. XVIII.
ତ୍ରି ଓ III --22

Page 91
அதேபோல, பின்வரும் இடங்களுக்குப் பட்டினசபை அந்தஸ்
س-440 س
தைக் கொடுத்திருக்கவேண்டியதில்லை :
|-"? || secara || ..., றத்தோட்டை 5 l, 990 6 ககாவத்தை 15 986 5 கலே வெல 1,474 5
வலஸ்முல்லை *94 1855 5 மாவத்தகமை 7 80 ο 5
இப்பட்டினசபைகளின் தேர்தல் வட்டாரங்கள் " கைவசத் தொகுதிகள் " ஆகும் வாய்ப்பைப் பெறுகின்றன : அத்தோடு கிராமப் புறங்களின் விருத்தியடைந்த பகுதிகள் பட்டினசபை களாக உயர்த்தப்படுவதினல், கிராமசபைகள் எஞ்சிய தங்கள் பாகங்களை அபிவிருத்தி செய்யமுடியாது கஷ்டப்படுகின்றன நெடுஞ்சாலைகளை அடுத்து நீள்வரிப்பாணியில் வீடுகள் கட்ட படும் இலங்கையில், பட்டினசபைகள் பொருத்தமற்ற நிறுவ மென்று கூறுவாருமுளர். " நிலவும் 83 பட்டின சபைகளில் 17 சபைகள் நிர்வாகச் சீர்கேடு காரணமாக அமைச்சரினல் கலைக்கப்பட்டுள்ளன. சில பட்டினசபைகள் பராமரிப்பதற் நிதியின்றி உள்ளன. இதனல் பட்டினசபை முறையை அரசாங்கம் மாற்றியமைக்க விருக்கின்றது : 55 பட்டினசபைகள் நகரசபைக ளாகத் தரம் உயர்த்தப்படும் எஞ்சியவை கிராமசபைகளாகச் சேர்க்கப்படும் " என்று உள்ளூராட்சிப் பிரதியமைச்சர் திரு. நீல் டி. அல்விஸ், அகில இலங்கைப் பட்டினசபைகளி 9 ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் கூறியுள்ளதா 8-10-74 'வீரகேசரி"யில் வெளிவந்துள்ளது.
இன்னெரு வேண்டத்தகாத போக்கு, ஒரு கிராமசை இயங்கிய பகுதியை ஒன்றுக்கு மேற்பட்ட கிராமசபைப் பகுதி ளாகப் பிரித்தால், அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் மொத் மானியம் அதிகரிக்கும் என்ற காரணத்தால் கூடிய கிரா சபைகளுக்கான கிளர்ச்சி தோன்றுவதாகும். இப்போக்கு தடைசெய்யப்படாவிடின் ஒவ்வொரு சிறு கிராமத்திலும் ஒ தலத்தாபனம் நிறுவப்பட்டுவிடலாம். பெரிய பாலன நிறு னங்கள் மேம்பட்ட சேவைகளையும், செளகரியங்களையும் ஆக்கி
Sessional Paper No. VII-972 : Ch. XVIII
 
 
 
 
 
 
 
 
 

ستيس 441 سبيس.
கொடுக்க முடியும். எனவே, இன்றைய தலத்தாபன அமைப்பு முறைமையை ஆராய்வதற்கு ஒரு எல்லை நிர்ணய ஆணைக்குழு நியமிக்கப்படவேண்டுமென்று ஜயசூரியா அலுவலர் ஆய்வுக்குழு சிபார்சு செய்துள்ளது. கூடிய சுதந்திரமும் அதிகாரமும் உடைய கோப்பரேஷன் அந்தஸ்திற்குக் கொழும்பு உயர்த்தப்பட வேண்டு மென்று அதன் மாநகரசபை 1969இல் தீர்மானம் நிறைவேற்றி யுள்ளதும் இங்கு குறிப்பிடற்பாலது.
தற்போதைய தலத்தாபன அமைப்பு "எல்லாம் அடங்கிய நெறியை, அதாவது ஒரு நிறுவனம் பல கடமைகளைச் செய்யும் தத்துவத்தை உள்ளடக்கியது; எனவே வேண்டிய வாய்ப்புக் கிடைப்பின் நெகிழ்ச்சியுடனும் சிக்கனத்துடனும் மக்கள் தேவைக் கேற்றவாறு இயங்கும் தன்மையது. அத்தோடு நகர நாட்டுப் புறங்களுக்குப் பொருந்திய வெவ்வேறு சேவைகளைச் செய்யவும், அவற்றின் செலவுக்கேற்றவாறு மக்களிடமிருந்து வரி வசூலிக் கவும் இடமளிக்கின்றது, "எல்லாம் அடங்கிய நெறியைத் தழுவும் இன்றைய நிறுவனங்கள் சில அலுவல்களுக்கு உகந்தன வாயினும், பொதுவழி, பொருளாதாரத் திட்டம் போன்ற வேறு சில தொழில்களுக்கு ஏற்ற "உத்தம அளவு உடையனவாய் இருக்கவில்லை. சில கடைமைகளுக்குக் கூடிய விஸ்தீரணமுடைய ஆதிக்க பாகங்கள் அவசியமாகும். இப் பிரச்சினையைத் தீர்ப்ப தற்குச் சில நாடுகள் "இரண்டு-தட்டு தலத்தாபன ஆட்சி முறையைக் கையாளுகின்றன. இம்முறைப்படி சில அலுவல்களுக் குச் சிறுபகுதிகளில் இயங்கும் தாபனங்களும், வேறு அலுவல் களுக்குப் பல சிறுதாபனப் பகுதிகளை இணைத்த பெரும்பாகங் களில் இன்னெரு நிறுவனமும் அமைக்கப்படும்கு மேற்றட்டு நிறுவனத்தின் விஸ்தீரணம் தேவைக்கேற்றவாறு அமையலாம்: இலங்கையில் ஒவ்வொரு மாகாணம், பாலனப் - பெரும் பகுதி (டிஸ்திறிக்), அல்லது பிரதேசம் ஆகியவற்றிற்கு முறையே மாகாண, மாவட்ட அல்லது பிரதேச சபைகள்/குழுக்கள்/குழு மங்கள் நிறுவப்படவேண்டுமென்பது கடந்த அரை நூற்ருண்டுக் காலம் விவாதிக்கப்பட்ட சிக்கலான தீர்வுகாணுத பிரச்சினை யாகும் பிரதேசம் என்ற பதம் ஒரு மாவட்டத்தையோ, அதன் ஒரு பிரிவையோ, பல மாவட்டங்களையோ, அவற்றின் பிரிவு களையோ குறிக்குமாறு உபயோகிக்கப்பட்டுள்ளது.மேற்கூறிய நிறு வனங்கள்பற்றிப் பல ஆய்வுக்குழுக்கள்,ஆணைக்குழுக்கள்,அரசியற் கட்சிகள், அரசாங்கங்கள், சட்டமன்றங்கள் ஆகியன ஆராய்ந் துள்ளன; உதாரணமாக, 1926 சட்டநிரூபண சபைத் தெரிகுழு வின் மாவட்ட குழுமச் சிபார்சு, டொனமூர் ஆணைக்குழுவின் மாகாணசபை பற்றிய ஆலோசனை, அரசசபையின் மாகாணசபை பற்றிய 1940 தீர்மானம், யுத்தத்தின்பின் அரசாங்கம் உரு

Page 92
- 442 =
வாக்கிய பிரதேசசபைத் திட்டம், 1955 சொக்ஸி கொமிஷனின் மாவட்டகுழுச் சிபார்சு, பண்டா-செல்வா ஒப்பந்தத்தின்பின் சுதந்திரக்கட்சி உருவாக்கிய பிரதேசசபை மசோதா, 1963 மகாதந்தில ஆய்வுக்குழுவின் பிரதேசசபைச் சிபார்சு, ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்டசபை மசோதா ஆகியன மேல் தட்டு நிறுவனப் பிரச்சினை எடுத்துள்ள நீண்ட பாதையில் காணப்படும் எலும்புக்கூடுகளாகும். பிரஸ்தாபிக்கப்பட்ட நிறுவ னங்களின் விஸ்தீரணம், அதிகாரம், கடமை, அங்கத்துவம் ஆகியவற்றில் பரந்தகன்ற வேறுபாடுகளைக் காணலாம் மாவட் *த்தின் ஒரு பகுதி தொடக்கம் இரு மாகாணங்களைக் கூடத் தழுவக்கூடிய விஸ்தீரணத்தையும், தமது ஆதிக்க பாகத்தி இள்ள கீழ்த்தட்டு தலத்தாபனங்களை இணைக்கும் மேற்பார்வை செய்யும் அதிகாரந்தொடக்கம் பல வரிகளிட்டுப் பரந்த சமூக பொருளாதார திட்டங்களை வகுத்துச் செயற்படுத்திப் பரிபா லிக்கும் அதிகாரத்தையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்லது நியமன அங்கத் தினர் அல்லது இருவகையினரையும் கொண்ட அங்கத்துவத்தை யும் உள்ளடக்கிய பல்திறப்பட்ட மேல்தட்டு நிறுவனங்கள் ஆராய்விற்கு ஆளாகியுள்ளன. நன்கமைந்த மாகாண மாவட்ட அல்லது பிரதேச சபைகள் மத்திய அரசாங்கத்தின் பாலனப் பாரத்தைக் குறைக்கும் சில சேவைகளைச் சிக்கனமாகச் செய்ய உதவும் : மக்களின் சுயாட்சி ஆர்வத்தைப் பெருக்கிச் சனநாய கத்தை உறுதிப்படுத்தும் பொருளாதாரத் திட்டங்களைத் தீட்ட வும் செயல்படுத்தவும் பயன்படும் பலம்வாய்ந்த தலத்தாபன ஆட்சிக்கு உறுதுணையாயிருக்கும். ஆனல் அரசியற் காரணிகள் அவைகள் நிறுவப்படுவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது கவலைக்குரியதாகும்,
4. அங்கத்துவமும் தேர்தலும்
காலத்திற்குக்காலம் திருத்தங்கள் செய்யப்பட்ட 1947 மாநகர, 1939 நகர, 1946 பட்டின, 1924 கிராம சபைகளுக் கான சட்டங்கள் நாலுவித தலத்தாபனங்களை நிறுவுவதற்கும், ! அவற்றின் பரிபாலன எல்லையை வரையறுப்பதற்கும், புதிய சபைகளுக்குப் பெயரிடுவதற்கும், அவைகளின் அங்கத்தவர் தொகையை நிர்ணயிப்பதற்கும் தலத்தாபன அமைச்சருக்கு அதிகாரம் வழங்குகின்றன. மாநகரசபைகளினதும் கிராமசபை களினதும் அங்கத்தவர் தொகையைச் சட்டம் வரையறுக்கவில்லை; அது இடத்திற்கிடம் வேறுபட்டிருப்பதைக் காணலாம்; நகர சபைகள் 4- 12 அங்கத்தவர்களையும், பட்டினசபைகள் 3.8 அங்கத்தவர்களையும் கொண்டிருத்தல் வேண்டும்; சாதாரண
 

سيسه 443 ميسي
மாக 3 ஆண்டுகளென்றிருந்த அங்கத்தவர்களின் பதவிக் காலத்தை 1967 தலத்தாபனசபைக் காலனல்லைச் சட்டம் 4 ஆண்டுகளாகக் கூட்டியுள்ளது. அங்கத்தவர் விரும்பினுல் தமது பதவியை இராஜினமாச் செய்யலாம் : சபையின் அனுமதியின்றித் தொடர்ச்சியாக அதன் 3 கூட்டங்களுக்குச் சமுகமளிக்காதோரின் பதவி வெற்றிடமாகும். உள்ளூராட்சி அமைச்சர் விரும்பினுல் சபையைக் கலைக்கலாம், சபைத் தலைவரை அல்லது அங்கத் தவரை அகற்றலாம், சபையை இடை நிறுத்தலாம், நான்கு ஆண்டுகள் முடிந்தபின் சபையின் காலத்தை நீட்டலாம்
தலத்தாபன சபைகளின் அங்கத்தவர்கள் அனைவரும் இன்று மக்களால் தெரியப்படுகின்றனர். 1865இல் மட்டுப்படுத்தப் பட்ட வாக்குரிமை, கொழும்பு மாநகரசபை அங்கத்தவர் களில் ஒரு பகுதியினரைத் தெரிவுசெய்யும்பொருட்டு ஆண் களுக்குக் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஒரு நூற்ருண்டில் வாக்குரிமையை விஸ்தரிக்கவும் அதைப் பயன் படுத்தும் முறையைச் சீராக்கவும் பல சட்டங்கள் ஆக்கப்பட்டன; டொனமூர் யாப்புக் காலத்தில் பாராளுமன்ற, தலத்தாபன தேர்தல்களில் சர்வசன வாக்குரிமை நடைமுறைப்படுத்தப் பட்டது. இன்று பாராளுமன்ற வாக்காளர் இடாப்பில் பதியப் பட்டோரே தலத்தாபன தேர்தல்களிலும் வாக்களிக்கும் உரிமை பெறுவர். இவ்விடாப்பில் பதிவுபெறுவதற்காய தகைமைகள் குடியரசு யாப்பில் வரையறுக்கப்பட்டுள்ளன: மனநோயற்ற 18 வயதிற்குக் குறையாத இலங்கைப் பிரசைகளாகிய ஆண் பெண் இருபாலாருக்கும் தலத்தாபன அங்கத்தினரைத் தெரிவு செய்யும் உரிமையுண்டு சில குற்றங்கள் புரிந்ததினுலும் வேறு விசேட காரணிகளினலும் சிலருக்கு வாக்குரிமை மறுக்கப் பட்டுள்ள விபரத்தை இயல் W/4/i இல் காண்க; வாக்காளர் இடாப்பில் இடம்பெறுவதற்குப் பாராளுமன்றத் தேர்தல் தொகுதியில் குறிப்பிட்ட ஆறு மாதங்கள் வசித்திருக்கவேண்டும் என்று 1964 வரை நிலவிய நிபந்தனை, அவ்வாண்டுச் சட்டத்தி ஞல் தேர்தல் இடாப்புத் தயாரிக்கும் வருடத்தின் ஜூன் முதலாந் திகதி மாத்திரம் வசித்தால் போதுமானதென்று மாற்றப் பட்டது: ஒருவர் ஒரு தலத்தாபன வட்டார தேர்தல் இடாப்பில் மாத்திரம் பதிவுபெறலாம். வேட்பாளராக நின்று தலத்தாபனசபை அங்கத்தவராவதற்கு, வாக்காளராவதற்கு வேண்டிய தகைமைகளோடு வேறு சில நிபந்தனைகளும் உண்டு: அவற்றைமீறி அங்கத்தவராகப் பதவியேற்ற ஒருவருக்கெதிராக நீதிமன்றத்தில் ஆட்சேபனை தாக்கல் செய்யலாம் ஆட்சேபனை ஏற்கப்படின் அங்கத்தவர் பதவியிழப்பதுடன், தகுதியற்றவ ரென்று தெரிந்துகொண்டும் சபை நடவடிக்கைகளில் பங்குபற்றிய நாள் ஒவ்வொன்றிற்கும் நூறு ரூபாவிற்குக் குறையாத தண் டனப்பணம் கட்டவேண்டி நேரிடும்;

Page 93
سیا۔ 444 ہیبس۔
1946ஆம் ஆண்டிற்குமுன் மாநகரசபைத் தேர்தல்கள் மாநகர ஆணையாளரினலும், ஏனைய தலத்தாபனசபைத் தேர்தல் கள் அரசாங்க, உதவி அரசாங்க அதிபர்களினுலும் நடத்தப் பட்டன; 1946 தலத்தாபன தேர்தல் சட்டம், மத்திய தலத் தாபன தேர்தல்கள் அனைத்தையும் நடத்துவதற்குத் தேர்தல் கொமிஷனரின்கீழ் இயங்கும் தேர்தல் இலாகாவை முதன்முத ாைக அமைத்தது; மாவட்டங்களில் அரசாங்க அதிபர் தேர்தல் அதிகாரியாகவும் கடமையாற்றுவர்; அவரின்கீழ் உதவித்தேர்தல் அதிகாரி உண்டு. தலத்தாபனமொன்றின் ஆதிக்கபாகம் பல வட்டாரங்களாகப் பிரிபடும் : ஒரு வட்டாரத்திற்கு ஒரு பிரதி நிதி தெரியப்படுவர். பொதுத் தேர்தல் நடைபெற ஒரு ஆண் டிற்கு முன்னதாக, வட்டார வாக்காளரின் இடாப்புகள் தேர்தல் அதிகாரியினுல் திருத்தப்பெறுகின்றன. பழைய சபைகள் கலை வதற்கு ஓரிரு மாதங்களுக்குமுன் தேர்தல்கள் நடைபெறும் அபேட்சகராக நிற்க விரும்புவோர் குறித்த பணையப் பணத் தைக் கட்டுவதோடு, வட்டார வாக்காளர் ஒருவரின் முன் மொழிதலையும் இன்னுெருவரின் பின்மொழிதலையும் பெறுதல் வேண்டும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் சாதாரண பெரும் பான்மை பெற்ற வேட்பாளர் வெற்றி பெறுகின்ருர், ஒப்புக் கொள்ளப்பட்ட மொத்த வாக்குகளில் எட்டில் ஒன்றைப் பெருத வேட்பாளர் கட்டுப்பணத்தை இழக்க நேரிடும்.
தேர்தல் முறையில் காணப்படும் சில முக்கிய அம்சங்களைக் குறிப்பிடலாம் : 1. ஒவ்வொரு வாக்குச்சாவடி அதிகாரியின் முன்னிலையில் ஒரேயொரு வாக்குப்பெட்டி வைக்கப்படும். எல்லா அபேட்சகர்களினது வாக்குகளும் இதற்குள்ளேயே போடப்படு கின்றன; இம்முறை வாக்குச் சீட்டுகளில் களவுகள் நிகழ்வதைப் பெரிதும் தடுத்துள்ளது. 2. கட்சிச்சார்பில் போட்டியிடும் அபேட் சகருக்கெதிராகக் கட்சிச்சின்னமும், ஏனையோருக் கெதிராகத் தனிப்பட்ட சின்னங்களும் வாக்குச் சீட்டுக்களில் குறிக்கப்படுவதி ஞல், எழுத்தறியாத வாக்காளரும் தாம் விரும்பும் அபேட்சக ருக்குரிய இடத்தைச் சின்னத்தின் துணைகொண்டு அறிந்து, வாக்குச்சீட்டில் அடையாளம் இடலாம்g இங்கிலாந்தில் கட்சி களுக்குச் சட்டரீதியான இடமளிக்கப்படுவதில்லை. இலங்கை முறை பிரயோசனம்தரும் ஒன்றென்பது அவதானிகளின் கருத் தாகும். 3. வாக்கெடுப்பில் இரகசிய நெறி கையாளப்படு கின்றது. 4 ஆள்மாருட்டம், தகாதமுறையில் செல்வாக்குப் பிரயோகித்தல், லஞ்சம் கொடுத்தல் வாங்கல், பலமுறை வாக்கிடுதல், தேர்தல் சட்டத்திற்கு முரணுன வேறு செயல்கள் ஆகியன கிறிமினல் குற்றங்களாகும்; குற்றங்கள் புரிவோர் அபராதம், சிறை அல்லது இரண்டிற்கும் ஆளாகலாம்; இந்த
 

ہے۔ 445 ہے۔
ஏற்பாடுகளைவிட ஒரு சனநாயக நாட்டில் தேர்தல்கள் வெற்றி கரமாக நடப்பதற்கு வேறு முற்படு தேவைகளும் இருப்பது அவசியம். உதாரணமாகக் காலங்கடந்துவிடாத செம்மையான வாக்காளர் இடாப்பு, தகுதியுடைய மக்கள் அனைவருக்கும் ஆட்சியில் பங்குகொள்ளும் வாய்ப்பை அளிக்கும் தேர்தல்களைக் கட்சிச்சார்பின்றி நடத்துவதற்குத், தேர்தல் பொறியகத்தை நடுநிலைநின்று இயக்கும் நேர்மையான அலுவலர் அவசியம் : நலமார்ந்த கட்சிமுறைமையும் தேசப் பற்றுடைய தலைவர்களும் வேண்டத்தகாத உணர்ச்சிகளை மக்களிடையே தட்டியெழுப் பாது, எதிர்த்திறத்திற்கும் உரிய இடத்தை அளித்துப் பொது சன அபிப்பிராயத்தை நல்முறையில் உருவாக்கலாம் பகுத்தறிவு வாய்ந்த, அறிவொளிபெற்ற வாக்காளர் இருப்பின், அவர் தம் வாக்குரிமையைப் பொறுப்புடன் பயன்படுத்தி, உண்மை யுடனும், விசுவாசத்துடனும் சேவையாற்றக்கூடிய பிரதிநிதி களைத் தெரிவுசெய்வர் சுதந்திர நீதிபதிகளின்றேல் தேர்தல் சட்டங்களை நன்கு நடைமுறைப்படுத்த முடியாது, இலங்கை யைப் பொறுத்தமட்டில் வாக்காளர் இடாப்புகள் அரசியற் கட்சிகளின்,பாராளுமன்ற உறுப்பினரின், குடும்பத்தலைவர்களின் ஒத்துழைப்புடன் பெருமளவிற்கு நன்கு தயாரிக்கப்படுகின்றன : தேர்தல் ஆணையாளர் சுதந்திரமாக இயங்குவதற்குக் குடியரசு யாப்பு பாதுகாப்பு அளித்திருப்பினும், அரசியல் நிர்வாகத்தின் உயர் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் ஏனைய தேர்தல் அலுவலர் வருங்காலத்தில் எவ்வாறு நடந்துகொள்வர் என்பதைக் காலந் தான் காட்ட முடியும் அரசியற் கட்சிகளின் போக்கில் மாற்றம் ஏற்படுவது அவசியம் : சாதி, மதம், பந்து அபிமானம், அதி கார ஆதிக்கம், அறியாமை, வறுமை ஆகியன வாக்காளர்கள் நல்ல முறையில் வாக்குகளைப் பயன்படுத்துவதற்குத் தடை யாயுமுள்ளன : உயர்நீதி மன்றத்தின் புதிய முதலாவது பிரதம நீதியரசர், நீதித்துறை முன்புபோல் சீரிய முறையில் நீதிபரி பாலனம் செய்யுமென்று உறுதியளித்துள்ளார்டு பொதுவாகக் கூறுமிடத்து இலங்கைத் தேர்தல்கள் ஆசிய நாடுகளுக்கு முன்மாதிரியாய் அமைந்துள்ளதென்று கருதுவாருமுளர்
நாலுவித சபைகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தலைவரும் ஒரு துணைத் தலைவரும் உண்டு. மாநகர சபையின் தலைவரும் துணைத் தலைவரும் முறையே நகராதிபதி, துணை நகராதிபதி என்று அழைக்கப்படுவர். ஒவ்வொரு சபையின் தலைவரும் துணைத் தலைவரும் அச்சபையிலிருந்து அதன் அங்கத்தவர்களால் தீர்க்க மான பெரும்பான்மை நெறிப்படி தெரியப்படுவார்கள். ஒருவர் மாத்திரம் முன்மொழியப்பட்டால் வாக்கெடுப்பு நடப்பதில்லை, இருவராயின், பெரும்பான்மை பெற்றவர் வெற்றிபெறுவர்

Page 94
..................... 446 ہین۔
சமவாக்குகள் கிடைப்பின் திருவுளச்சீட்டுப் போடப்படும்; இரண் டிற்கு மேற்பட்டவராயின், கொடுக்கப்படும் மொத்த வாக்கு
களில் பெரும்பான்மை பெறுபவர் தெரிவுபெறுகின்ருர் முதல் வாக்கெடுப்பில் ஒருவர் தீர்க்கமான பெரும்பான்மை பெருவிடின், மிகக்குறைந்த வாக்குகள் பெற்றவர் போட்டியிலிருந்து விலக்கப் பட்டுத் திரும்பவும் வாக்கெடுப்பு நடைபெறும் சமவாக்குகள் பெறும் வேட்பாளரில் யார் மிகக்குறைந்த வாக்குகள் பெற்றுள் ளார் என்பதை நிர்ணயிக்கத் திருவுளச்சீட்டுப் போடவேண்டும் ஒருவருக்குத் தீர்க்கமான பெரும்பான்மை கிட்டும்வரை மிகக் குறைந்தவரை அகற்றித் திரும்பத்திரும்ப வாக்கெடுப்பு நடத்தப் படும். பொதுத்தேர்தலின் பின்பும், இடைத்தேர்தலிலும் இம் முறை கையாளப்படும் பதவிவகிப்பவர் இறந்தால், ராஜின மாச் செய்தால், அமைச்சரால் அல்லது சபையினுல் அகற்றப் பட்டால் இடைத்தேர்தல் நடைபெறும். இந்தப் பொதுவான தேர்தல்முறையைவிட, வேறு அம்சங்களில் நால்வகைச் சபை களுக்குமிடையே சில வேறுபாடுகளைக் காணலாம். அவற்றுள் முக்கியமானவை: 1. தெரிவுக்கான மாநகரசபைக் கூட்டங்களை மாநகர ஆணையாளர் முறைப்படி கூட்டி, அவற்றிற்குத் தலைமை வகித்து, நகராதிபதி, துணை நகராதிபதி ஆகிய இருவரின் தேர் தல்களையும் நடத்துவார். ஏனைய சபைகளை முறைப்ப்டி கூட்டுவது: தலத்தாபன உதவி ஆணையாளரின் பொறுப்பாகும் நகர, பட்டின் சபைகளுக்கு அவரும் கிராமசபைகளுக்கு, அவர் அல்லது அவரின் நியமிப்பாளரும் தலைமைதாங்கித் த லை வ ர் க ளின் தெரிவை நடத்துவார்கள். மூன்றுவித சபைகளின் துணைத் தலைவர்கள் தெரிவிற்கு அச்சபைகளின் தலைவர்களே தலைமை தாங்குவர். 2. நாராதிபதியும், துணை நகராதிபதியும் திறந்த வாக்கெடுப்புமூலம் தெரியப்படுகின்றனர். ஏனைய #းါက္ကံ ။ துணைத் தலைவரும் இரகசிய அல்லது திறந்த வாக்குமூலம்ா தெரியப்படவேண்டுமென்று, சம்பந்தப்பட்ட சபைகள் முதலில் திறந்த வாக்குமூலம் நிர்ணயிக்கின்றன ; அதன்படி பின்னர் தெரிவு நடைபெறும், தலைவர் தேர்தலில் எழும் ஊழல்களைக் குறைப்பதற்கு, எல்லாச் சபைகளின் தலைவர் தேர்தலிலும்
கிராமசபைத் தலைவரை வாக்காளர் நேரடியாகத் தெரியும் முறை ஒருசில இடங்களில் பரீட்சிக்கப்படவேண்டுமென்றும்,
துள்ளது; 3. தலைவர்களைத் தெரிவதற்கான சபைகளின் முத லாவது கூட்டம், கூடிய விரைவில் ஒழுங்குபடுத்தப்படவேண்டு
 
 
 
 
 
 

சமுகமளிக்காது கூட்டங்கள் பின்போடப்படுவதைக் காணலாம்: புதுச் சபைகள் அமைக்கப்பட்டபின் மாநகர நகர பட்டின, கிராம சபைகள், தங்கள் தலைவரையும் துணைத் தலைவரையும் முறையே 3, 2, 2, 1 மாதங்களுள் தெரிவுசெய்யாவிடின், முதல் மூன்று சபைகளை அமைச்சர் கலைக்கவும், கிராமசபைத் தலைவரையும் துணைத் தலைவரையும் அமைச்சர் நியமனம்செய்ய வும் சட்டம் வழிவகுத்துள்ளது. அங்கத்தவர் தெரியப்பட்ட ஒரு வாரத்திற்குள் தலைவர் தெரிவு கட்டாயமாக்கப்படுவது, தலைமைப் பதவியை விரும்புவோர் கைக்கூலி, தகாத செல் வாக்கு உபயோகிப்பதைப் பெருமளவிற்குக் குறைக்குமென்று ஜயசூரியா ஆய்வுக்குழு கருதியுள்ளது. 4 சட்டம் விதித்த 4 ஆண்டுகள் கழியுமுன்னரே தங்கள் தலைவர்களைப் பதவிநீக்கம் செய்யுமுரிமை சபைகளுக்குண்டு. குறிப்பிட்ட தொகை அங்கத் தினர் அதற்கான முன்னறிவித்தல் கொடுத்தால், மாநகர ஆணை யாளர் அல்லது தலத்தாபன உதவி ஆணையாளர் சபைகளின் விசேட கூட்டத்தை ஒழுங்குசெய்து அதற்குத் தலைமைதாங்கு வார்கள். நகர, பட்டின, கிராம சபைத் தலைவர்கள் மூன்றில் இரண்டிற்குக் குறையாத வாக்குகளினலும், நகராதிபதி பாதிக்குக் குறையாத வாக்குகளினலும் பதவியிலிருந்து நீக்கப்படலாம்3 நகராதிபதி இலகுவில் அகற்றப்படக்கூடிய ஏற்பாட்டினல் மாநகர சபைகளின் நிருவாகம் ஸ்திரமற்றதாகின்றது இதைத் தடுக்கு முகமாக, நகராதிபதியை நீக்குவதற்கும் ஜ் பெரும்பான்மை ஆதரவும் மாநகரசபைகளின் அங்கத்தவர்தொகை அதிகரிப்பும் உதவுமென்று கூறலாம். குறிப்பு: 1971, 48ஆம் இலக்க தலத் தாபன (விசேட ஏற்பாடுகள்) சட்டம் நகராதிபதியையோ, பதில் நகராதிபதியையோ நீக்குவதற்குச்சபையுறுப்பினர் தொகையில் 8 வாக்குகள் கட்டாயமென்று விதித்துள்ளது: 5. கடமை, அதிகாரம், செயல்முறை
கடமை ,ே நாலுவகை தலத்தாபனங்களின் கடமையும் அதிகாரமும் அவற்றிற்குப் பொருந்திய சட்டங்களால் வரை யறுக்கப்பட்டுள்ளன. 1947 மாநகர, 1939 நகர 1946 பட்டின 1924 கிராம சபைச் சட்டங்கள் முக்கியமானவையாகும். வேறு பல சட்டங்கள் இவைகளைத் திருத்தியுள்ளன. 1952 அதிகார அதிகரிப்புச் சட்டம் தலத்தாபனங்களின் சுயாதீனத்தை உயர்த் தியது. இவற்றைவிடப் பல்வேறு சட்டங்களும் தலத்தாபனங் களுக்குக் குறிப்பிட்ட அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் வழங்கியுள்ளன; நகர கிராம திட்டச் சட்டம், வீடமைப்பு நகர செம்மைப்படுத்துச் சட்டம், சுடுகாடு இடுகாடுச் சட்டம், காணி சுவீகரிப்புச் சட்டம், நிறை அளவு சட்டம், பொழுது போக்கு வரிச் சட்டம் ஆகியன முக்கிய உதாரணங்களாம்.
G), II— 23

Page 95
سے 448 ملی۔
மாநகரசபைச் சட்டப்பிரகாரம்" பொதுச் சுகாதாரம், பொது உபயோகச் சேவைகள், பொதுப் பாதைகள் ஆகியன சம்பந்த மான சகல விடயங்களையும் ஒழுங்குபடுத்தல் கட்டுப்படுத்தல் பரிபாலித்தலோடு, பொதுவாக மக்களின் சுகானுபவம் வசதி பொதுநலன் ஆகியவற்றையும், மாநகரசபையின் வசதிகளையும் பொறுப்பேற்கும் கடப்பாடு மாநகரசபைக்கு உண்டு." ஏனைய விதமான தலத்தாபனங்களின் கடமைகளும் இதேபோன்ற தென்று பொதுவாகக் கூறிவிடலாம். தண்ணீர் விநியோகம், வீதிகள் அமைத்துப் பேணுதல், வீதிகளில் ஒளி அமைத்தல், வீடு கட்டுதலும் அதை ஒழுங்குபடுத்தலும், சந்தைகள் தாபித் தல், வடிகால் சாக்கடைத் திட்டங்களைச் செயற்படுத்தல், தாய் சேய் நலத் திட்டங்களை அமுலாக்கல், பால் விநியோகம், பொதுக்கிணறுகள், இலவச மருத்துவசாலைகள், விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், நூலகங்கள், தீயணைப்புச் சேவை கள், தெருப்பெருக்கல், மலமகற்றல் போன்றவற்றை அமைத் துப் பரிபாலித்தல் தலத்தாபனங்களின் விரிந்த கடமைகளுக்குள் அடங்கும்; இவைகள் அனைத்தையும் எல்லாத் தாபனங்களும் கட்டாயம் நடைமுறையில் மக்களுக்குச் செய்து கொடுக்க வேண்டுமென்பதில்லை சூழ்நிலைக்கு ஏற்ற சேவைகளைத் தலத் தாபனங்கள் நிறைவேற்றக்கூடிய நெகிழ்ச்சித்தன்மையுடன் பொறுப்புக்கள் சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ளன.
அதிகாரம் : மேற்கூறிய கடமைகளைச் செய்வதற்குப் போதுமான அதிகாரங்கள் தலத்தாபனங்களுக்குண்டு. சட்ட ரீதியில் தாபனங்கள் * கோப்பறேஷன் போன்றவை : தொடர்ச்சியான வாழ்வும் பொது முத்திரையும் உடையன வழக்குத் தொடரும் உரிமை கொண்டவை. நாலுவித தாபனங் களின் அதிகாரங்களைச் சம்பந்தப்பட்ட சட்டங்கள் விரிவாக நிர்ணயிக்கின்றன ; அவைகளில் சில பொதுவான அம்சங்களைக் காணலாம் : 1. சபைகளின் ஆணைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பாழ்நிலங்கள், கற்குழிகள், நீர்ப்பாதைகள், முடிக்குரிய காணிகள் ஆகியவற்றின்மீது ஆட்சி ; பொதுச்சந்தைகள், பொதுக் கட்டி டங்கள், பொதுப்பாதைகள் போன்றவற்றின் பொறுப்பு: பொதுச்சேவைக்காகச் சொத்துக்களைக் கொள்வனவு செய்தல் வைத்திருத்தல், விற்றல், குத்தகைக்கு விடுதல் 22 அவசிய மென்று கருதும் பதவிகளை உண்டுபண்ணல் தலத்தாபன சேவை யில் இடம்பெழுத பதவிக்கு ஏற்ற சம்பளத்தை நிர்ணயித்து அலுவலரை நியமித்தல்: 3. பாதைகள், சந்தைகள், நீர்வசதி, பொது ஆரோக்கியம், பொதுச்சேவைகள் செய்தல், 4. வேலை கள் சேவைகள் செய்விப்பதற்கும் பொருள்களை வாங்குவதற்கும் ஒப்பந்தம் செய்தல். 5. சட்டங்கள் கொடுத்த அதிகாரத்தின் கீழ் துணைவிதிகளை ஆற்றி அமுல் நடத்தல் சபையின் அலுவல

مسييه 449 جيبس.
ரின் பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு வழக்குத் தொடர்தல், எதிர் வழக்காடல். 6. சட்டங்கள் அனுமதிக்கும் வீத வரிகள், வரிகள், கட்டணங்கள் போன்றவற்றை விதித்தல் திரட்டல் இவற்றையும் அரசாங்க மானியங்களையும் கடனுத வித் தொகையையும் தலநிதியில் போட்டு, அந் நிதியிலிருந்து சட்டரீதியான செலவினங்களைச் செய்தல் 7. வரவு செலவுத் திட்டத்தையும் கடனையும் அனுமதித்தல் போன்ற இன்னுேரன்ன பல அதிகாரங்களைத் தலத்தாபனங்கள் கொண்டுள்ளன.
செயல்முறை : சட்டம் அனுமதித்த கடமைகளைச் சட்டம் கொடுத்த அதிகாரங்களின் துணைகொண்டு, தங்கள் ஆணைக்குட்பட்ட பிரதேசத்தில் நிறைவேற்றுவதற்குத் தலத் தாபனங்கள் எத்தனிக்கின்றன. பொதுவாகக் கூறுமிடத்துத் தலத்தாபன சபைகள் கொள்கைகளை நிர்ணயித்து, அவற்றை நிறைவேற்றுவதற்கு வேண்டிய பொதுவிதி ஏற்பாடுகளை உள். ளடக்கிய வரவு செலவுத் திட்டங்களை அனுமதிக்கின்றன. இக் கடமைகளைச் செய்வதற்குத் தலைவரின், அவரில்லாவிடத்துத் துணைத்தலைவரின் தலைமையில் சபைகள் காலத்திற்குக் காலம் கூடுகின்றன. தலைவர் விரும்பும்போதும், குறித்த தொகையான அங்கத்தவர் எழுத்துமூலம் கேட்கும்போதும் விசேட கூட்டங்கள் ஒழுங்குசெய்யப்படும். சபைக் கூட்டங்களில் சட்டம் விதித்த தொகைக்குக் குறையாத அங்கத்தவர் சமுகமளித்து, சாதாரண பெரும்பான்மையினல் முடிபுகளை எடுக்கலாம். சபையின் தீர் மானங்களை, அது நிர்ணயித்த கொள்கைகளை வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய நிருவாகம் செய்வதும், தலத்தாபனத் திற்குச் சேரவேண்டிய வருமானங்களைத் திரட்டுவதும், அவற் றைச் சிக்கனமாகச் சட்டப்படி செலவழிப்பதும் தலைவரின் பொறுப்பாகும். அடுத்த நிதிவருடத்தில் கிடைக்கக்கூடிய வருமானத்தையும், எதிர்பார்க்கும் செலவுகளையும் அலுவலர் உதவியுடன் தலைவர் மதிப்பீடு செய்து சபையின் அங்கீகாரத் திற்குச் சமர்ப்பிப்பார், பொதுநிதி பற்றிய பிரிவில் நிதி நிருவாகம் விபரிக்கப்படுகின்றது. தலைவருக்கு அடுத்தபடியில் மாநகர ஆணையாளரும், நகர பட்டின கிராம சபைச் செயலாளரும் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர்களாகக் கடமை யாற்று கின்றனர். இவர்கள் தலைவரின் கட்டுப்பாட்டுக்கும் வழிகாட்ட லுக்கும் அமைந்து, சபையின் தீர்மானம் எதையும் மீருது, சட்டப்பிரகாரம் பணிபுரிய வேண்டும்; இவர்களுக்கு அடுத்த படியாகப் பல ஊழியர்களுண்டு. பெரிய தலத்தாபனங்களில் பல உயர் உத்தியோகத்தர்களும் பெருந்தொகையான பணி யாளரும் செயலாற்றுவதைக் காணலாம். உதாரணமாக, மாநகர ஆணையாளரின்கீழ் செயலாளர், பொறிஞர், பொருளாளர், சுகாதார வைத்திய உத்தியோகத்தர், வரி மதிப்பாளர் போன்

Page 96
ருேர் கடமையாற்றலாம். 7இல் கொழும்பு மாநகர சபை யில் 6000 பணியாளர் இருந்துள்ளனர். ஒவ்வொரு நிதிவருட இறுதியிலும், தலைவர் தயாரித்த கடந்த ஆண்டு நிர்வாக நிதி நிலை பற்றிய அறிக்கையைச் சபை ஆராய்கின்றது. வரவு செலவுக் கணக்குகளைக் கணக்காய்வாளர் தலைமையதிபதி பரி
லனை செய்வர்.
தலத்தாபனங்களின் செயல்முறையைச் செப்பனிடுவதற்குச் கருத்துக்கள் தரப்பட்டுள்ளன : 1. மாநகரசபையின் குழு *ற திருப்தியற்றது. ஒவ்வொரு வருடமும் நிதிக்குழு ஒன் னையும் இதர நிலைக்குழுக்களையும் சபை தெரிவு செய்கின்றது. இக் குழுக்கள் ஒன்றிணைந்த மேலாண்மையைத் தடுத்து திற மைக்கும் முயற்சிக்கும் முட்டுக்கட்டையாக இருக்கலாம் நிதிக் குழு பலதுறை எத்தனங்களையும் இணக்கி முன்னேற்பாடான திட்டத்தை வகுக்கின்றதெனினும், நடைமுறையில் சபையின் இடத்தைத் தனதாக்கிக்கொள்ளும் தன்மை வாய்ந்தது. அது தீர்மானித்ததைச் சபை பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளும் கருவி யாக மாறியுள்ளதைக் காணலாம். சட்டம், சுகாதாரம், நகர சபை வேலைகள், வீடமைப்பு, அபிவிருத்தி, போக்குவரவு போன்ற விடயங்களுக்கான இதர நிலைக்குழுக்களின் முக்கியத்துவம் குன்றி விட்டது. எனவே தலத்தாபன ஆட்சியில் சபை உறுப்பினர் ய பங்கு கொள்வதற்கேற்றவாறு குழுமுறை திசைதிருப்பப் டவேண்டும்டு 2. பிரதான நிருவாக உத்தியோகத்தரின் கடமை பொறுப்பும் சட்டத்தால் நன்கு வரையறுக்கப்படவில்லை: ாதிபதியும் வேறு தலைவர்களும் தங்கள் கடமைகளோடு, ம்பளம் பெறும் நிர்வாகிகளின் கடமைகளையும் தமதாக்கிக் கொள்ள எத்தனிக்கின்றனர்; இதனுல் பல தலத்தாபனங்களின் பொதுநிதியிலும் பாலனத்திலும் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அரசியற் தலைவர்கள் வரிகளைக் கண்டிப்பாக திரட்டத் தயங்குவது ஒருபுறம் மறுபுறத்தில் வேலைகள் சேவைகள் செய்விப்பதிலும், பாதைகள் கட்டிடங்கள் போடுவ திலும், ஏனைய நிருவாகக் கடமைகளிலும் காலதாமதம், ஒழுங்கீ ஊழல் ஆதியன தோன்றியுள்ளன. எனவே, சம்பளம் பெறும் ன நிருவாகிகள்மீது நிறைவேற்றுப் பொறுப்பைச் சும தும் வகையில் அவர்களின் கடமையும் அலுவலும் வரையறு
: வேண்டும். 3. காரியாலய, வெளிப் பணியாளரின் ற்றுத் திறமை உயர்த்தப்படல் வேண்டும் தேவை தொழிலாளரைக் குறைத்தல், வீண் செலவுகளைத்
ல், சம்பிரதாய பழக்கவழக்கங்களைப் பரிசீலனை செய் பான்றவை தலத்தாபனங்கள் தமது அலுவல்களைச் தவும். நீர்க்குழாய், எரிவளி செல்வழி, மின்வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 451 -
கம்பி, வடக்குழாய், தொலைபேசிக்கம்பி - வடக்குழாய் ஆகிய வற்றை அமைக்க ஒரு நெடுஞ்சாலை ஐந்துமுறை அகழப் படுவது போன்ற பிற்போக்கான பழக்கங்கள் மறையவேண்டும்: 4. பொறுப்பை உணர்ந்து கடமையாற்றும் மனப்பான்மை யுடைய பிரதிநிதிகள் தலத்தாபன ஆட்சி நன்கு செயற்படுவதற்கு இன்றியமையாத தேவையாகும் வெவ்வேறு கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களிடையே மிதமிஞ்சிய ஒத்துழைப்போ தீவிர வேற்றுமையோ இல்லாது எதிர்த்திறம் பொறுப்புடன் இயங் குவது நல்லாட்சிக்கு உகந்ததாகும். 鷺
கடமைக் கணிப்பு: தலத்தாபனங்களின் கடமைகளை நோக்கினல், அவைகள் மக்களுக்குப் புரியும் சேவைகள் திருப்தி யற்றதாக இருப்பதைக் காணலாம் : அதே வேளையில் பெருகிச் செல்லும் மக்களுக்கு, கூடிய வசதிகளை ஆக்கிக் கொடுக்கவேண்டு மென்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனல் வாழ்க்கைச் சூழல்கள் விசேடமாகக் கிராமப்புறங்களில் மிகவும் பிற்போக்கான நிலையில் இருக்கின்றன. தலவிருத்திக்கு அவசியமான பல கிராமியப் பாதைகள் கவனிப்பாரற்றுப் பாவனைக்குதவாத நிலையிலுள்ளன : ஓரளவு பராமரிக்கப் படுபவையும் ஆற்றங்கரையோடு நின்றுவிட லாம். பொது ஆரோக்கியத் துறையில்தானும், இன்றியமை யாத சேவைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர சபையே போதியளவு சுகாதார போதனையாளர்களை அமர்த் தவோ, திருப்திகரமான நீர்க்காலை அமைக்கவோ முடியா துள்ளது: இலங்கை முழுவதிலும் ஒரேயொரு நகரத்தில்தான், அதுவும் பற்ருக் குறையான வடிகால் அமைப்புத்திட்டம் செயற் படுவதைக் காணலாம் ஒரு சில நகரங்களில்தான் குழாய் மூலம் தண்ணிர் விநியோகிக்கப்படுகின்றது. விளையாட்டு வசதிகள் நூல் நிலையங்கள் படிப்பகங்கள் வேண்டியளவிற்கு அதிகரிக்கவில்லை; சுருங்கக் கூறின், செளக்கிய சேவைகள் போன்ற ஒரு சில கடமைகளோடு தலத்தாபனங்கள் நின்றுவிடுகின்றன. இச் சேவைகளைக் கடந்து தேசிய பொருளாதார விருத்தியில் பங்கு கொள்ளக் கூடியவாறு அவைகளின் கடமைகள் விரிவடைய வேண்டும். துரித பொருளாதார விருத்திக்குத் தலத்தாபனங்கள் தேசிய திட்டத்திற்குள் அமைந்த சிறு பொருளாதார நட வடிக்கைகளில் ஈடுபடுவது சிறந்த வழியென்று இன்று கூடுதலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும்: அத்தோடு, மத்திய அரசாங்கத்தின் விவசாய கைத்தொழில் முதலீடுகள் முழுப் பயன் தரவேண்டில், பாதைகள், பாலங்கள், மின்வலி விநியோ கம், சந்தைகள், பண்டகசாலைகள், நூல்நிலையங்கள், சுகாதார சேவைகள் போன்ற உள்ளமைப்புக்கள் தேவையான அளவிற்கு அமைக்கப்பட வேண்டும். நாட்டின் உற்பத்தி வளங்களை முழுமை

Page 97
யாகப் பயன்படுத்துவதற்குத் தலத்தாபனங்களும் முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்ளுவது இன்றியமையாததாகும் சொக்ஸி ஆணைக்குழுவும் ஜயசூரியா ஆய்வுக்குழுவும் தலத்தா பனங்களின் கடமைகளை விரிவுபடுத்துவதற்கான பல யோசனை களைத் தந்துள்ளன: கடமைகளை வகைப்படுத்தும்போது, செய்து தீரவேண்டியவை யென்றும், விரும்பினல் செய்யக்கூடியவை யென்றும் பாகுபாடு செய்தல் நன்று. ' உள்ளுராட்சியின் வருங் காலம், தலத்தாபனங்களின் அதிகார அளவையன்றி அதிகாரத் தன்மையைக் கூட்டுவதில் தங்கியுள்ளது" என்ற பரீட்சை
வினுக்களில் இடம்பெறும் கூற்றைக் காண்க. தலத்தாபனங்கள்
பெற்றுள்ள அதிகாரம் இன்றைய கடமைகளைச் செய்வதற்குப்
போதுமானது ஆனல் அவற்றைச் செயல்படுத்துவதற்கு அலுவ
லரும் பணவருவாயும் வேண்டியளவிற்கு இல்லையென்ற குறை Lin (5 அடுத்தடுத்துவரும் இரு பிரிவுகளில் ஆராயப்படுகின்றது.
வேறு தாபனங்கள் ஆற்றுப்படுகைகள் அபிவிருத்திக் குழுமம், கச்சேரிகள், உத்தேச மாவட்ட சபைகள் போன்ற வற்றின் கடமைகள் பற்றிச் சிறு குறிப்புரை இங்கு தருவது பொருத்தமாகும். அமெரிக்க ரெனெசி ஆற்றுப்படுகை அதிகார சபை, இந்திய தமோதர் ஆற்றுப்படுகைக் கோப்பறேஷன் ஆகியவற்றின் முன்மாதிரியைத் தழுவி இலங்கையில் அமைக்கப் பட்ட கல்லோயாக் குழுமம், பின்னர் வேறு ஆற்றுப் படுகை களையும் விருத்தி செய்வதற்காக, ஆற்றுப்படுகைகள் அபிவிருத் திக் குழுமமாக மாற்றியமைக்கப்பட்டதை முன்னர் பார்த் தோம். இலங்கையின் பெரும் ஆறுகளையும் வாவிகளையும் அடுத்த பள்ளத்தாக்குகளில் விவசாய நாகரிக சமுதாயங்கள் ஒருகால் தழைத்தோங்கியிருந்தன. இன்று அப்பகுதிகளின் பல பாகங்கள் காடுகளினல் ஆட்கொள்ளப்பட்டுள்ளதைக் கான லாம் : அவைகள் பயிர்ச்செய்கைக்கேற்ற மண் வளமும் நீர் வளமும் உடையன. காட்டை அழித்து, நிலத்தைத் திருத்தி நீர்ப்பாசன மின்வலி போக்குவரத்து கைத்தொழில் சாதன
களை அமைத்து உற்பத்தியைப் பெருக்கவும், நிலமிலாக் குடும்
பங்களைக் குடியேற்றி அவர்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற் படுத்திக் கொடுக்கவும், வருவாயும் அதிகாரமும் ஆற்றலு போதியளவுக்கில்லாச் சம் பிரதாய கிராமசங்கங்களின முடியாது. எனவே, அரசாங்கம் நியமிக்கும் அங்கத்தவர்களைக் கொண்ட, ஆற்றலும் அதிகாரமும் வாய்ந்த, கோப்பறேஷன் அந்தஸ்துடைய, அரசாங்கத்திடமிருந்து பெருமளவு பணஉதவி பெறுகின்ற, மத்திய அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் இயங்கு கின்ற, மேற்கூறிய விசேட கல்லோயா அபிவிருத்திக் குழுமம்
 
 
 
 
 
 
 
 
 

நிலங்கள், 700 மைல் நீர்ப்பாசனக் கால்வாய்கள், | 43 Grrr மங்கள், 10 பட்டினங்கள், பல தொழிற்சாலைகள், மின்வலி உற்பத்தி நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்டன. நாட்டுப் புறங்களின் விசேட தேவைக்காகச் சம்பிரதாய தலத்தாபனங்க ளுக்குப் புறம்பான இத்தகைய சிறப்புத் தாபனங்கள் தற்காலிக மாகச் செயற்படும்முறை வரவேற்கத்தக்கதாகும். ஆனல் இலங் கையின் 22 பரிபாலன மாவட்டங்களில் அரசாங்க அதிபரின் ஆட்சியின்கீழ் இயங்கும் கச்சேரிகள் இன்றைய சனநாயக நெறிக்கு ஒவ்வாத நிறுவனங்களாகும் அந்நிய ஆட்சியாளரின் கருவி யாக இயங்கிய கச்சேரிகள், இன்று 'கால இட முரண்பாடான' நிலையங்களென்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும் இவைகள் மத்திய அரசாங்கத்திற்குரிய சில கடமைகளையும், பிரதேசத்திற்குரிய பிச்சைச் சம்பளம் வழங்கல், காசநோயாளர் நலன் பேனல் போன்ற சமூக சேவைகளையும், நாட்டுப்புற அபி விருத்திக்கான கடமைகளையும் செய்கின்றன. அவற்றின் பிர தேசரீதியான கடமைகளும் இன்னும் பலவும் மக்களைப் பிரதி பலிக்கும் பிரதேச சபைகளுக்கு உடனடியாக அல்லது படிப்படி யாக மாற்றுவதுபற்றிய முடிவுருப் பிரச்சினையை முன்பு பார்த் தோம். கடமைகளோடு, கச்சேரிகளுக்குக் கிடைக்கும் பண வருவாயில் ஒருபகுதியையும் உத்தேச பிரதேச மக்கள் சபைளுக்கு மாற் றலாம். இம்மாற்றங்கள் தலத்தாபன ஆட்சியை வலுப்படுத்த, சுயாட்சியை நாட்டுப்பற்றை வளர்க்க, நாட்டை முன்னேற்ற உதவும் ஒத்திசைவிக்கும் குழுக்களோ, பிராந்திய அபிவிருத்திச் சபைகளோ, அரசியலதிகார நிறுவனங்களோ, மேலடுக்குப் பிரதேச தலத்தாபன சபைகளின் இடத்தை முழுமையாக நிரப்புவதற்கில்லை, பாதைகள், பாலங்கள், மதவு கள், பொதுக்கிணறுகள், மலசலகூடங்கள் போன்றவற்றை அமைப்பதில் கிராமமுன்னேற்றச் சங்கங்கள் ஈடுபட்டு, கிராம சபைகளோடு போட்டியிடாது அக்கடமைகளைத் தலத்தாபனங் களுக்கு விட்டுவிடவேண்டுமென்று சொக்ஸி ஆணைக்குழு சிபார்சு செய்தது குறிப்பிடற்பாலது. சனசமூக நிலையங்கள் தலத் தாபனங்களின் ஆதரவுடன் இயங்குவது, மக்களின் சுயாட்சி ஆர்வத்தை வளர்ப்பதற்கு ஏதுவாகும்.
6. அலுவலரும், ஆணைக்குழுவும்
1946 வரை: தலத்தாபனங்களின் கொள்கைகளை அமுல் செய்வதற்குத் திறமைவாய்ந்த, மனநிறைவுகொண்ட அலுவலர் போதிய அளவில் இருப்பது அவசியம் 1946 வரை நாலுவித தலத்தாபன சட்டங்கள், அலுவலர் நியமனம் ஒழுக்கக்கட்டுப் பாடு ஆகிய துறைகளில் சபைகளுக்குப் பல அதிகாரங்களை வழங்கியிருந்தன; மாநகரசபைகள் இத்துறைகளில் கட்டுப்

Page 98
- 454 سلسله
பாடற்ற அதிகாரங்களைக் கொண்டிருந்தன. நகரசபைகள் எந்த ஒரு பதவிக்கும் மாதம் நூறு ரூபாவிற்கு மேற்பட்ட வேத னத்தை ஒதுக்கிக் கொடுக்குமுன், தலத்தாபனமஜணையாளரின் அனுமதியைப் பெறவேண்டுமென்ற கட்டுப்பாடு நிலவிற்று பட்டினசபைகள் மாதம் ஐம்பது ரூபாவிற்கு மேற்பட்ட வேத னத்தை ஒதுக்குமுன்பும், சம்பளம் கொடுக்கவேண்டிய பதவிகளை ஆக்குமுன்பும் ஆணையாளரின் அனுமதியைப் பெற்ருகவேண்டும். கிராமசபைகள் மீது மத்திய கட்டுப்பாடு இன்னும் கூடுதலாக இருந்தது எந்த ஒரு பதவியை ஆக்குமுன்பும், அதற்காய வேதனத்தை ஒதுக்குமுன்பும் மாவட்ட உதவி ஆணையாளரின் ஒப்புதல் அவசியம். இந்த ஏற்பாடுகளின் பயனப், 1945 அளவில் சுமார் 500 வேறுபட்ட சம்பள-அளவுப்படிகளை உடைய பதவி களைத் தலத்தாபனசேவையிற் காணமுடிந்தது. ஒவ்வொரு சபையும் தான் விரும்பிய சேவை நிபந்தனைகளையும், ஆட் சேர்க்கும் திட்டத்தையும், பதவிஉயர்ச்சி முறையினையும் பின் பற்றியதால், இவைபற்றி ஒரேவித நிலைமையோ, ஒரே கடமை களைச் செய்வோரை ஒரேவிதமாக வகைப்படுத்தலோ தலத் தாபன சேவையில் நிலவவில்லை. அத்தோடு நியமனஞ் செய்யும் பொழுது தகைமை புறக் கணிக்கப்பட்டு, உறவினருக்கும் அதிகாரத்திலுள்ள அரசியற்கட்சியைச் சார்ந்தோருக்கும் தனி யாதரவு காட்டுதல், லஞ்ச ஊழல், வேண்டத்தகாத செல்வாக்குப் பிரயோகம் ஆதியன மலிந்தன: சபை அங்கத்தவர்க்கிடையில் சச்சரவுகள், மோதல்கள் தோன்றின : இவற்ருலும், அங்கத் தவருக்கும் அலுவலர்க்கும் இடையில் ஏற்படும் கருத்து வேறு பாடுகளினுலும் நிருவாகவேலையே தடைப்பட்டுள்ளது. அநீதி யான ஒழுங்கு-நடவடிக்கைகளும், வேலைநீக்கங்களும் தனிக் குரோதத்தினுல், அரசியற் காரணத்தினுல் நடந்துள்ளன. சாதாரண பெரும்பான்மை மூலம் பதவிநீக்கஞ்செய்யும் முறை அலுவலரிடையே நிம்மதியின்மையை ஏற்படுத்தியிருந்தது : அவர்கள் வேறு தலத்தாபனங்களுக்கு இடமாற்றம் பெற முடியாததும் நிலைமையை மோசமாக்கியது. இத்தகைய சூழ்நிலை திறமையற்ற, மனநிறைவற்ற பணியாளர் சேவையை உரு வாக்கி, நிருவாகம் நன்கு நடைபெரு திருந்ததில் வியப்பொன் றில்லை; எனவே, டொனமூர் யாப்பின்கீழ் உள்ளூராட்சிக்குப் பொறுப்பாயிருந்த நிருவாகக் குழுவும் அமைச்சரும் தலத் தாபனசேவையினரை ஒருங்கிணைத்து, அவர்களின் நியமனம், இடமாற்றம், ஒழுக்காறு, பதவிநீக்கம் ஆகியவற்றைக் கட்டுப் பாடு செய்வதற்கு, மத்திய தலத்தாபன சேவை ஆணைக்குழு
ஒன்றைத் தாபிக்க முற்பட்டனர்; அனைவரின் நம்பிக்கைக்கு உரித்தாய, ஒரளவு சுதந்திரத்துடன் இயங்கக்கூடிய ஆணைக் குழுவை அமைப்பதே அவர்களின் குறிக்கோளாகும். அலுவ லரும், பெரும்பாலான தலத்தாபனங்களும், பொதுமக்களும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(455 ـ
புதிய திட்டத்தை வரவேற்றனர்; சில தலத்தாபனங்கள் மாத்திரம் தாங்கள் அனுபவித்துவந்த அதிகாரத்தைக் குறைப் பது சனநாயகத்தன்மையற்றதென்றும், தாபனங்களின் பதவி நீக்க ஒழுக்காற்று உரிமைகளை அகற்றினுல் அலுவலர் தாபனங் களுக்குப் பொறுப்பாக நடக்கும் மனப்பான்மை கெட்டுவிடு மென்றும் ஆட்சேபித்தன; அரசாங்கம் ஒழுக்காற்று உரிமை யைத் தவிர்ந்த ஏனைய ஆட்சேபங்களை ஏற்கவில்லை. புது மாற்றங்களைச் செயற்படுத்துவதற்கான தலத்தாபன சேவைச் சட்டம் 1945இல் அரச சபையினுல் நிறைவேற்றப்பட்டது.
தலத்தாபனசேவை - ஆணைக்குழு : 1945 சட்டம் ஆணைக்குழுவின் அங்கத்துவம் கடமை அதிகாரம் ஆகியவற்றை வரையறுத்து, ஆணைக்குழு தலத்தாபன சேவையினை ஒருங் கிணைத்து அமைக்கவும், சேவையோடு சம்பந்தமான விடயங் களைக் கட்டுப்படுத்தவும், அலுவலரின் சேவைநலனைப் பேணவும் வழிவகுத்தது; ஆணைக்குழு "கோப்பறேஷன் அந்தஸ்துடை யது. ஆரம்பத்தில் தலத்தாபன கமிஷனரும், அமைச்சரால் நியமிக்கப்படும் வேறு நால்வரும் அதில் அங்கம் வகித்தனர்; 1949இல் அதன் அங்கத்துவம் ஒன்பதாக உயர்த்தப்பட்டது. தலத்தாபன கொமிஷனர் அதன் தலைவராகவும் கடமையாற்றி ஞர் கொழும்பு மாநகரசபை, ஏனைய மாநகரசபைகள், நகர பட்டின சபைகள், கிராமசபைகள் ஆகிய ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு பிரதிநிதியாக நால்வரையும், தான் விரும்பிய வேறு நால் வரையும், அமைச்சர் ஆணைக்குழு அங்கத்தவராக நியமனம் செய்வார். பாராளுமன்ற உறுப்பினர் அதில் அங்கத்துவம் வகிக்கமுடியாது. அங்கத்தவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுக ளாகும் கூட்டம் நடைபெறுவதற்கான குறைநிறைவெண் ஐந்து ஒரு செயலாளரையும், ஒரு கணக்காளரையும், வேறு தேவையான உத்தியோகத்தரையும், பணியாளரையும் ஆணைக் குழு தனது செயலகப்பணிக்கு அமர்த்தும் உரிமை பெற்றிருந் தது. கொழும்பு மாநகரசபைக்குத் தனிப்பட்ட பிரதிநிதித் துவம் வேண்டியதில்லை என்று சொக்ஸி கொமிஷன் சிபார்சு செய்திருப்பினும், ஆணைக்குழுவின் அங்கத்துவத்தில் 1969வரை மாற்றமெதுவும் ஏற்படவில்லை; அப்போதைக்கப்போது வேலைக் கமர்த்தப்படுவோரையும், தற்காலிக ஊழியரையும் தவிர்த்து தலத்தாபன சேவையிலிருந்த ஊழியர் அனைவரோடு, ஆணைக் குழு நியமிக்கப்போகும் ஊழியர்களும் ஆரம்பகாலத்தில் ஆணைக் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டனர். இப் பெருந் தொகையினரைக் கட்டுப்படுத்துவதில் சிரமமேற்பட்டதி னல், "அட்டவணையிலிட்ட ஊழியர்கள் மாத்திரம் 1947 தொடக்கம் ஆணைக்குழுவின் அதிகாரத்திற்கு ஆளாகினர்;
g) III - 24

Page 99
கிராம சபைகள் ஊழியரும் இடம்பெறவில்லை. வு காரணமாக மேற்குறிப்பிட்ட உச்ச சம்பளத் தொகை களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அட்டவணையி இடம்பெருதோர் தலத்தாபனங்களின் கட்டுப்பாட்டுக்கு தொடர்ந்து செயலாற்றுகின்றனர். இடம் பெற்றேர் "ஓ றிணைந்த தலத்தாபன சேவையினர்' என்று அழைக்கப்படுவர்
ல் மொத்தமாகச் சுமார் 8000 ஊழியர்கள் இன்று அங்கம் க்கின்றனர். இச்சேவையின் ஆட்சேர்க்கும் முறை, பரீட்சை நடத்தல், சம்பள நிர்ணயம், வேறு சேவை நிபந்தனைகள் ஊழியர் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம், ஒழுக்கக் கட்டு
டு, கடமையிலிருந்து தடுத்துவைத்தல், வேலைநீக்கம் ஆகியன பற்றி ஆணைக்குழுவிற்குப் பூரண அதிகாரமுண்டு. அத்தோடு தலத்தாபன சேவைச் சேமலாபநிதி, பென்ஷன் நிதி, வித.ை அனதைகள் உபகாரச்சம்பள நிதி ஆகியவற்றையும் அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வதில் காலதாமதம் ஏற்படுகின்றது. குழப்பநிலைை படுத்தும் இடமாற்றங்கள் நடைபெறுகின்றன. நியமனம் இ மாற்றம் ஒழுக்கக்கட்டுப்பாடு சம்பந்தமாகப் பின்பற்றவே விதிமுறை ஒழுங்குகள் நேரத்தைக் குடிப்பன இவற் நிருவாக வேலைகள் சீர்குலைகின்றன என்று தலத்தாபன குறைகூறின. 23 கடமைகளைத் திறமையாகச் செய்
நன்கு பயிற்சிபெற்ற ஊழியர்களை ஆணைக்குழு த என்பது இன்னெரு பொதுவான முறையீடாகும். நுட்ப ஊழியருக்கு ஓரளவு பயிற்சி கொடுக்கப்படினு உத்தியோகத்தர்சளுக்கும், எழுதுவினைஞர்களுக்கும்ப பதற்கேற்ற ஏற்பாடுகள் போதியளவுக்கில்லை: குழுவின் குறைகளுக்கான அடிப்படைக் காரணம் அத கடமைகளும், பொறுப்புக்களும் அதிகமாயிருந்ததா விஷயங்களிற்கூட வேறு அதிகாரிகளுக்கு, விசேடமாக தாபனங்களுக்குத் தனது அதிகாரத்தை ஒப்படை குழு விருப்பற்றிருந்தது 4 அலுவலரும் தங்கள் நிபந்தனைகளும், சம்பளமும் அரசஅலுவரினதுபோ உயர்த்தப்படவில்லையென்று குறைபட்டனர்.
பரந்த பொறுப்புக்களை 9 அங்கத்தவர்களைக் கொண்ட ஆணைக்குழு ஒன்றினல் திறம்பட நிறைவேற்ற முடியாது எ தைப் பலகாலமாக உணர்ந்த தலத்தாபன அமைச்சு, தலத்தாபனசேவைச் சட்டத்தைத் திருத்துவதற்கான ம ஒன்றை 1968இல் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பி
பற்றி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை கூற ஒரு இ.
Dம் அமைப்பதும், ஆட்சேர்த்தல், பதவி சேவை நிபந்தனைகள் பற்றித் திட்டம் வ ல் இன்னுெரு பிரிவை நிறுவுவதும் மசோ அம்சங்களாக இருந்தன. அன்றைய அமைச்
துறந்ததினுல் மசோ

Page 100
- 458
ஜயசூரியா ஆய்வுக்குழு அறிக்கை : 1972இல் வெளி
வந்த இந்த அறிக்கையில் பரவிக்கிடக்கும் கருத்துக்களைத்
திரட்டிக் கூறுமிடத்து 15 1946இல் தலத்தாபன சேவை
ஆணைக்குழு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதிலிருந்து கடந்த
23 ஆண்டுகள் அதன் அங்கத்தவராகத் தலத்தாபன கொமி
ஷனர் தொடர்ந்திருந்த உறவைப் புதிய சட்டம் துண்டிக்கிறது
இத்துண்டிப்பு தலத்தாபன சேவையின் திறமையைப் பேணுவதில்
ஒரு கெடுதலாக அமையலாம்; எனவே, கொமிஷனர். பதவி
காரணமாக ஆணைக்குழுவின் அங்கத்தவராக இருப்பதற்கு வழி
செய்யும் வகையில் சட்டம் திருத்தப்படுதல் நன்று அப்போது கான் அவர் திணைக்களம், ஆணைக்குழு, தலத்தாபனங்கள் ஆகிய வற்றிற்கிடையே பிணைப்பை ஏற்படுத்த முடியும் ஆணைக்
குழுவின் நிலையைத் தலத்தாபனத் தலைவருக்கும், தலைவரின் நடைமுறைக் கஷ்டங்களை ஆணைக்குழுவிற்கும் நன்கு விளக்க
முடியும் 2. தலத்தாபனங்களுக்கு ஊழியர்கள் போதிய அள விலும் தரத்திலும் அமர்த்தப்படுவதில்லை. இதற்குக் காரணம் தலத்தாபனங்களின் குறைந்த வருவாயும், ஊழியருக்குப் பயிற்சி அளிக்கும் ஏற்பாட்டுப் போதாமையுமாம். பல தலத்தாப னங்கள் அனுபவ அறிவுடைய சிரேஷ்ட அலுவலர்க்குச் சம்பளம் கொடுக்க முடியாததினல், குறைந்த சம்பளப்படியிலுள்ள கனிஷ்ட ஊழியரை அனுப்புமாறு ஆணைக்குழுவைக் கோருகின் றன. ஒரு எழுதுவினைஞரை மாத்திரம் அமர்த்தியுள்ள கிராம சபைகள் கூட அனுபவமில்லாத ஒருவரை வேண்டிநிற்கின்றன; பின்தங்கிய நாட்டுப்புறங்களுக்கு அனுபவமற்ற குறைந்த சம்பளம் பெறுகின்ற ஊழியர் போதுமானதென்று கருதுதல் தவறு; இங்குதான் திறமையான அலுவலர் அவசியம். எனவே தலத்தாபன சேவையில் 10 வருடத்திற்குக் குறையாத திறமை மிக்க செயலாளரை ஒவ்வொரு கிராமசபைக்கும் நியமிப்பது கட்டாயமாகவேண்டும் பெரும் தாபனங்கள் தகைமைவாய்ந்த கணக்காளர் இல்லாத குறையை நிரப்பவேண்டும் தலத்தாப னங்களின் வருவாய் கூடினல்தான் இவை சாத்தியமாகும். ஊழியரின் சம்பளமும் சேவை நிபந்தனைகளும் அரச அலுவல ரினதுபோல் உயர்த்தப்படவேண்டுமென்பதை அறிக்கை ஏற்றுக் கொள்ளினும், அதற்காகத் தலத்தாபன சேவையும் அரசசேவை யும் ஒன்றிணைக்கப்படவேண்டுமென்ற சிலரின் வேண்டுகோள் உள்ளூராட்சியின் அடிப்படை நெறியையே மாற்றும் தன்மை வாய்ந்ததால், அதுபற்றி ஆராய்வதை அறிக்கை அரசாங்கத் திற்கு விட்டுவிடுகின்றது. நல்நிருவாகத்திற்கு அலுவலர் தொகை யோடு திறமையும் சேரவேண்டும் திறமைக்கு முக்கிய காரணி பயிற்சி. தலத்தாபனங்களும் ஆணைக்குழுவும் அரசாங்க உதவி யுடன் யாருக்கு எப்ப டிப் பயிற்சி அளிக்கவேண்டுமென்று
 

{ = 459 سس
அறிக்கை விபரிக்கின்றது. 3. மத்திய அரசாங்க முறையைத் தழுவி, இன்று பிரதான நிருவாகிகளாகக் கடமையாற்றும் நகராதிபதிகள் / தலைவர்கள் கொள்கை வகுப்பதோடு நின்றுவிட வேண்டுமென்றும், மாநகர கொமிஷனர் / செயலாளர் முழு நிருவாகப் பொறுப்பை ஏற்பது திறமையான பரிபாலனத்திற்கு உகந்ததென்றும் அறிக்கை சிபார்சு செய்துள்ளது. நிலையான இவ்வதிகாரிகளின் பொறுப்பு அதிகரிக்குமாதலால் அவர்கள் பதவிக்குக் கூடிய தகைமை ஆற்றல் அனுபவம் மிக்கோர் நிய மனம் பெறவேண்டும். அத்தோடு அவர்களைத் தற்காலிகமாக வேலை செய்யாது தடுத்துவைக்கும், வேறு ஒழுக்கக்கட்டுப்பாடு நடவடிக்கை எடுக்கும் உரிமை நகராதிபதிகள்/தலைவர்கள் ஆகியோரிடமிருந்து அகற்றப்படல்வேண்டும் : இந்த உரிமை பிழைசெய்யாதோரைத் தண்டிக்கவும், தவறிழைத்தோரைப் பாதுகாக்கவும் தகாதமுறிையில் பயன்படுத்தப்பட்டுள்ளது : அதைத் தலத்தாபனசேவை ஆணைக்குழு நேரடியாகப் பயன் படுத்தவும், கீழ் ஊழியரின் ஒழுக்கக்கட்டுப்பாட்டை மாநகரக் கொமிஷனருக்கு/செயலாளருக்குப் பாரப்படுத்தவும் ஏற்பாடு செய்தல் நல்நிர்வாகத்திற்கு உறுதுணையாயிருக்கும்.
7. 1974 சட்டமும் ஆலோசனை - ஒழுக்காற்றுச்
சபைகளும்
பரந்த அதிகாரங்களையுடைய தலத்தாபனசேவை ஆணைக் குழு 1969ஆம் ஆண்டுச் சட்டப்பிரகாரம் செயலாற்றி வந்தது: இச்சட்டத்தை 23-5-74இல் இயற்றப்பட்ட 16ஆம் இலக்க உள்ளூராட்சிச் சேவைச் சட்டம் ரத்துச்செய்து, ஆணைக்குழுவை நோகாமல் புதைத்தது; ஆயினும் பழைய சட்டத்தின்கீழ் ஆக்கப் பட்ட சட்டவிதிகள், புதிய சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரண் படாவிடின், தொடர்ந்து வலுவுள்ளனவாயிருக்கும். உள்ளு ராட்சிச் சேவையினரின் நியமனம், இடமாற்றம், வேலைநீக்கம், ஒழுக்கக்கட்டுப்பாடு ஆதியனபற்றி இதுவரை ஆணைக்குழுவிற் கிருந்த அதிகாரங்கள் இப்போது ஊள்ளூராட்சி அமைச்சருக்கு மாற்றப்பட்டுள்ளன. இவ்வதிகாரங்களைப் புதிய சட்டம் வகுத்த முறைப்படி, அமைச்சர் பிரயோகிக்கவேண்டும். இம் முறைக ளாவன : 14 ஆட்சேர்ப்பு, சம்பளம், ஒழுக்கமுறை, நியமனம், இடமாற்றம், சேவை விடுபாடு, பணி ஓய்வு, பதவியொழிப்பு, வேலைநீக்கம், ஒழுக்கக்கட்டுப்பாடு போன்ற விடயங்களைச் செயற் படுத்துவதற்கும் கையளிப்பதற்குமான நடைமுறைத் திட்டங்களை அமைச்சர் நிர்ணயிக்கவும் ஏற்படுத்தவும் வேண்டும். 2: மேற் காட்டிய பரந்த அதிகாரங்கள் அனைத்தையும் அமைச்சர் நேரடியாக உபயோகிப்பது சாத்தியமன்று. எனவே, வருட

Page 101
ாத (திரட்டு) சம்பளத்தைப் * வேலைநீக்கம் அல்லது ஒழுக்கக்கட்டு அதிகாரத்தையும், அனைத்துச் சேவையினரின் றம், சேவை விடுபாடு, பணி ஓய்வு, பதவிெ ற்றிய அதிகாரங்களையும் அரசஅலுவலர் எவருக்கும் அமை கையளிக்கலாம் ; கையளித்த எந்த அதிகாரத்தையு
ரே பயன்படுத்துவதற்கும் சட்டம் வழிவகுத்துள்ளது. 14,
ற்குக் குறையாத வருட (திரட்டு) சம்பளத்தைப் ெ
தரவை
உள்ளூராட்சிச்சேவை ஆலோசனைச்சபையும், ட்சிச்சேவை ஒழுக்காற்றுச்சபையும் : அரச சேவை திச்சேவை ஆகிய ஒவ்வொன்றிற்கும் ஆலோசனைச்சபை, ஒழு
றுச்சபை ஆகிய இரு சபைகள் குடியரசு யாப்பினல் ஆக்
முன்மாதிரியைப் பின்பற்றிப்போலும், 1974ஆம்
முதலாவ
 

வேண்டும் இவ்வேற்பாடுகள் சபைகளின் சுதந்திரத்தைப் பேணும் தன்மையன. அங்கத்தவரின் சேவைக்காலம் 4 ஆண்டுகளாகும்; அவர்கள் திரும்பவும் நியமனம் பெறலாம். தற்காலிகமாகக் கடமையாற்ற முடியாத உறுப்பினரின் இடத் திற்கு வேருெருவரை அமைச்சர் நியமிக்கலாம் காரணங் காட்டாமலே அங்கத்தவரைப் பதவியிலிருந்து அகற்றும் அமைச் சரின் அதிகாரம் சபைகளின் சுதந்திரத்தைப் பெருமளவில்
பாதிக்க வல்லது:
சபைகளின் கடமை: ' உள்ளூராட்சி ஆலோசனைச் சபையின் விதப்புரையைப் பெருது, அமைச்சர் அல்லது அமைச்சரின் அதிகாரக் கையளிப்பை ஏற்ற அரசஅலுவலர், தமது நியமனஞ் செய்யும் அதிகாரத்தை உபயோகிக்கலாகாது அமைச்சரோ அலு வலரோ கேட்டஞான்று ஆலோசனைச்சபை தனது விதப்புரை யைக் கொடுத்தாகவேண்டும்." அதேபோல ஒழுக்காற்றுச் சபையின் விதப்புரையைப் பெருது, அமைச்சரோ அலுவலரோ, தமது வேலைநீக்க அல்லது ஒழுக்கக்கட்டுப்பாட்டு அதிகாரத்தை உபயோகிக்கலாகாது; ஒழுக்காற்றுச்சபை தனது கடமையை நன்கு நிறைவேற்று முகமாக, மாவட்ட நீதிமன்றங்களுக்குரிய அதிகாரம் போன்று, கட்சிக்காரரையும் ஆவணங்களையும் வர வழைக்கும் உரிமை பெற்றுள்ளது; இவற்றிலிருந்து, புதிய இரு சபைகளும் பழைய உள்ளூராட்சி ஆணைக்குழுவிற்கிருந்த அதி காரங்களை இழந்துநிற்பதையும், அரசியலார் கையில், விசேடர் மாக உள்ளூராட்சி அமைச்சரிடம் அவ்வதிகாரங்கள் சென்' றடைந்ததையும் காணலாம்; சபைகளின் விதப்புரையை அமைச்சரோ அலுவலரோ ஏற்கலாம், விடலாம் : அது பற்றிச் சட்டம் மெளனம் சாதிக்கின்றது. 'உள்ளூராட்சிச்சேவை யினரின் நியமனம், இடமாற்றம், சேவையிலிருந்து விடுபாடு பணி ஓய்வு, பதவியொழிப்பு, வேலைநீக்கம் அல்லது ஒழுக்கக் கட்டுப்பாடு சம்பந்தமான எவ்விடயம் பற்றியும் அமைச்சரவை, அமைச்சர் ஆலோசனைச்சபை, ஒழுக்காற்றுச்சபை, அரசர் அலுவலர் அல்லது உள்ளூராட்சிச்சேவையின் அங்கத்தவர் செய்யும் எந்தவொரு விதப்புரை, பணிப்பு அல்லது முடிபுபற்றி விசாரணைசெய்கின்ற, தீர்ப்புவழங்குகின்ற அல்லது எதுவித மான ஆட்சேபனை தெரிவிக்கின்ற அதிகாரமோ நியாயாதிக்கமோ எந்தவொரு நீதிபரிபாலன அல்லது வேறு நிறுவனத்திற்கோ, ஆளுக்கோ, அதிகாரிக்கோ கிடையாது.'
வேறு ஏற்பாடுகள் : 1974ஆம் ஆண்டுச் சட்டத்தில் காணும் வேறு முக்கிய ஏற்பாடுகளாவன: 1. உள்ளூராட்சிச் சேவைத் திணைக்களமொன்று அமைக்கப்படும் உள்ளூராட்சி சேவைப் பணிப்பாளர் ஒருவர் (டரைக்டர்) நியமனம் பெறுவர்

Page 102
தலத்தாபனசேவைச் சேமலாபநிதி, பென்ஷன்நிதி, விதவைகள்அனதைகள் உபகாரச்சம்பளநிதி ஆகியவை பணிப்பாளரின் அல்லது அமைச்சர் நியமிக்கும் வேறு அரசஅலுவலரின் பொறுப் பாகும் பணிப்பாளருக்கு வேறு கடமைகளையும் அமைச்சர் சட்டப்படி ஒதுக்கலாம், கையளிக்கலாம். இக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வேண்டிய பிரதிப் பணிப்பாளர்கள், ! உதவிப்பணிப்பாளர்கள், வேறு அலுவலர்கள், பணியாட்கள் ஆதியோரும் நியமிக்கப்படலாம். 2. இச் சட்டத்தின்கீழ் நியமனம்பெறும், இடமாற்றம்பெறும் அலுவலர் எவரையும் எந்த உள்ளூராட்சிமன்றமும் ஏற்று, அவர் தன் கடமைகளை ஆற்ற அனுமதித்து, அவரின் சம்பளத்தை மன்றநிதியிலிருந்து கொடுத்தல் வேண்டும். தனது நேரடிப் பொறுப்பிலுள்ள கீழ்ப் பணியாளரின் பதவிகளைத் தவிர்ந்த வேறெந்தப் பதவிகளையும் அமைச்சரின் அனுமதியின்றி, எந்த உள்ளூராட்சிமன்றமும், ஒழிக்கலாகாது, 3. உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பி லுள்ள பணியாளரின் பட்டியலை, உள்ளூராட்சிச் சேவையின் நலன் கருதி, அமைச்சர் மாற்றியமைக்கலாம். சட்டத்தை அமுல் செய்யும்போது ஏற்படக்கூடும் ஐயப்பாட்டுநிலையை அல்லது தடங்கலை, வர்த்தமானிப் பணிப்புகள்மூலம் அமைச்சர் நீக்க லாம். சட்டத்தின் நெறிகளையும், ஏற்பாடுகளையும் செயற் படுத்துவதற்கு வேண்டிய விதிகளையும் காலத்திற்குக் காலம் அமைச்சர் ஆக்கலாம் : இவ்விதிகள் தேசிய அரசுப் பேரவை யினல் அங்கீகரிக்கப்படவேண்டும்.
8. பொது நிதி
வரவு : தலத்தாபனங்களின் வருமானம் மூன்று துறைகளி லிருந்து கிடைக்கின்றன: 1. சோலைவரி, வேறு கட்டணங்கள். 2. அரசாங்க மானியம், 3. கடன் காணிகள், கட்டிடங்கள் போன்ற அசைவற்ற ஆதனங்கள் மீது விதிக்கப்படும் சோலை வரி தலத்தாபனங்கள் ஓரளவு சுயாதீனமாக விதிக்கும் வரிகளில் முக்கியமானதாகும். இதிலிருந்து கிடைக்கும் வருமானம் காலப் போக்கில் நியாயமான அளவிற்கு உயர்ந்து செல்லவில்லை. இதற்கு முக்கிய காரணம், வரி வீதம் வருடாந்த பெறுமான மதிப் பீட்டில் விதிக்கப்படும்போது, பொதுவிலைமட்டம் உயர்வதற் கேற்றபடி வருடாந்தபெறுமானம் 4-5 ஆண்டுகளுக்கொருமுறை யாகுதல் திருப்பி மதிப்பீடு செய்யப்படாமையாகும்; 1971 தலத்தாபன (விசேட ஏற்பாடுகள்) சட்டம் பெறுமான மதிப் பீடு 5 வருடத்திற்கொருமுறை கட்டாயமாகச் செய்யப்பட வேண்டுமென்று விதித்து இக்குறையை அகற்றியுள்ளது. வாட கைச் சட்டத்தினல் வீட்டுவருமானம் கட்டுப்படுத்தப்படுவதி ஞலும், சொந்தக் குடியிருப்போர் தமது வீட்டின் வருடாந்த
 
 
 
 
 
 
 
 
 
 

( سہ 463 بس۔
வருமானத்தைக் குறைத்துக் கூறுவதாலும் தலத்தாபனங் குச் சேரவேண்டிய சோலைவரித் தொகை குறைகிறது. என சொத்துக்களின் விலைமதிப்பீட்டிலிருந்து வரி அறவிடுதல் சிறந்த தாகும். வாக்காளரினல் தெரியப்படும் தலத்தாபனசபைகள் வரிவீதத்தை உயர்த்தவோ, வரவேண்டிய வரியை நிலுவையில் செல்லவிடாது கண்டிப்பாக அறவாக்கவோ தயங்குகின்றன. யறவிடும் பொறுப்பைச் சம்பளம்பெறும் நிரந்தர அலுவலருக்கு ஒப்படைத்தல் நன்று. 1971 சட்டம் தலத்தாபனங்களுக்குரிய வருமானங்களை அறவிடும் அதிகாரத்தை மாநகரசபைல் கமிஷனர், நகர பட்டினசபைச் செயலாளர், பிராந்திய உதவி ஆணையாளர் நியமிக்கும் கிராமசபை அலுவலர் ஆகியோருக்கு வழங்கியுள்ளது. பொழுதுபோக்குவரி, தலத்தாபனங்களின் உபவிதிப் பிரகாரம் விதிக்கப்படும் லைசென்ஸ் கட்டணங்கள், தலத்தாபன சொத்துக்களைப் பிறர் உபயோகத்திற்கு விடுவதி ஞற் கிடைக்கும் வாடகைகள், நீர்வசதி தோட்டவசதி போன்ற சேவைகளை அமைத்துக் கொடுப்பதற்காக விதிக்கப் படும் கட்டணங்கள் ஆகியன தலத்தாபனங்களின் மொத்த வருமானத்தில் 5-6 வீதத்தை நிரப்புகின்றன3 鷺 அரசாங்க மானியம் நான்கு வகையின 1: மொத்த மானியம்-தலத்தாபனங்களின் அதிகரித்துச்செல்லும் நிர்வாகச் செலவுகளைச் சமாளிப்பதற்காகக் கொடுக்கப்படுகின்றது. தாபன வருமான அடிப்படையிற் குறிப்பிட்ட ஒரு சதவிகிதம் இவ் வாறு அளிக்கப்படும் : சதவிகித அளவு தலத்தாபனத்தின் மயையும், சனத்தொகை யையும் பொறுத்தத
ய், குடித்தொகை ஆகிய அடிப்படைகள் கணிசமான அளவிற்கு அதிகரித்திருப்பினும் 蠶 கொடையில் மாற்றம் ஏற்படவில்லை. 2. சாதாரண விசே வாழ்க்கைப்படிகள் மானியம்-இரண்டாவது உலகமக
ருக்குச் சம்பளம் கொடுக்கமுடியாத நிலையில் அரசாங் இந்த மானியத்தை வழங்குகிறது. 3. ஒதுக்கு மானியம்-தலத் தாபனங்கள் விதித்த தலைவரி தெருவரி போன்றவையும், நீதி மன்றக் குற்றப்பணம் முத்திரைத்தீர்வை போன்றவையும் ரத்துச்செய்யப்பட்டதனல் இழந்த வருமானத்தை ஈடுசெய்வதற்
காக இந்த மானியம் ஒதுக்கப்படுகின்றது. 4. குறிப்பிட்ட திற்கான மானியம்-வீடமைப்பு, நீர்விநியோகம், சன ஸ்யம், செல்வழி மின்வலிவிநியோகம், சாக்கடையமைப்பு, ாழிப்பு, கிராமக்கிணறு, பிரசவ-சிசுபரிபாலன சாலை, பிவிருத்தி, வாசிகசாலை போன்ற திட்டங்களை அமுல் ற்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது. இதன்மூலம்
ஊழிய

Page 103
است. 464 سانس.
அரசாங்கம் தரமான தலஅபிவிருத்தியை ஊக்குவிப்பதோடு, நாடெங்கணும் சமமான முன்னேற்றத்தை ஏற்படுத்த முயற் சிக்கலாம். நாலுவித மானியங்களும் தலத்தாபனங்களின் தேவைகளுக்குப் போதுமானவையல்ல ; அவைகள் தலத்தாபன வருவாயின் 30-40 வீதத்தை நிரப்பினும், அரசாங்க வருமா னத்தில் 4 வீதமானவையாய் இருக்கின்றன. Y.
குறிப்பிட்ட கருமத்திற்கான மானியத்தைவிட தலத் தாபனங்கள் கடனுகப் பெறும் பணத்தையும் அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்யலாம் பெறும் கடன்கள் பொதுவில் சிறுசிறு தொகைகளாகப் பல ஆண்டுகளிற் செலுத்தக்கூடியவை. இன்றைய முதலீட்டின் பெறுபேறுகளைப் பிற்சந்ததியினரும் அனுபவிக்கப்போவதால், கடனில் ஒரு பகுதியை அவர்களும் திருப்பிக்கொடுப்பது நியாயமானதென்பது ஏற்றுக்கொள்ளப் பட்ட தத்துவமாகும் ஆனல் அவர்கள்மீது வீண் பாரத்தைச் சுமத்தாதவாறு பயன்தரு திட்டங்களில் கடன் பணத்தைச் சிக்கனமாக இன்றைய சந்ததியினர் முதலீடு செய்யவேண்டும்: கடன் பெறுவதற்கு மூன்று வழிகளைச் சட்டம் அனுமதிக் கின்றது : 1. தலஅபிவிருத்திக் கடன்நிதி மூலம்-சோலைவரி யையும் வேறு வரிகளையும் அடைமானம் வைத்துக் கடன் பெறு வதற்கென்று விசேடமாக நிறுவப்பட்ட இந்நிதி, தலத்தாபனங் களின் வரிவருவாய்க் குறைவாலும், மத்திய அரசாங்கம் கடனை அனுமதிக்கத் தயங்குவதாலும், நிதியில் போதிய மூலதனம் இல்லாததாலும், வேண்டிய அளவில் தலத்தாபனங்களுக்குக் கடனுதவி செய்யமுடியாத நிலையிலுள்ளது. 2. கடனீட்டுப் பத்திரங்கள் மூலம்-பத்திரங்களை வெளியிட்டுப் பொதுமக்க ளிடமிருந்து கடன் பெற மாநகரசபைகளுக்கு அதிகாரமிருப் பினும், இம்முறை இதுகாறும் பயன்படுத்தப் படவில்லை: 3. வங்கி, வேறு நிதிநிறுவனங்கள் மூலம்-இவைகள் அடை மானம் பெற்று நீண்டகாலக் கடன் கொடுக்க முன்வருவ தில்லை; மூன்று வழிகளிலும் 1929-53, 1954-68 ஆகிய காலப் பகுதிகளில் முறையே 40 மில்லியன் ரூபாவையும், 117 மில் லியன் ரூபாவையும் தலத்தாபனங்கள் கடனுக வாங்கியுள்ளன: 1968ஆம் ஆண்டில் நாலுவித தலத்தாபனங்கள் முக்கிய துறைகளிலிருந்து பெற்ற வருமானத்தை அநுபந்தம் 11 காட்டு கின்றது. எல்லாவித தலத்தாபனங்களின் மொத்த நடப்பு வரு மானம் 123 மில்லியன் ரூபாவாக இருப்பதைக் காணலாம். இதில் 48 மில்லியன் ரூபா கொழும்பு மாநகரசபையினதாகும். சோலை வரியும், அரசாங்க் மானியமும் முக்கியமானவை. 1960ஆம் ஆண்டில் இவையிரண்டும் ஒவ்வொருவித தலத்தாபனத்தின் மொத்த வருமானத்தில் வகித்த சதவிகிதத்தைப் பின்வரும் அட்டவனே காட்டுகின்றது : い 鬣
 
 
 

- 465 -.
பட்டின கிராம gFG) jes67 gF66.14567
மாநகர நிகர சிஇைள் சபைகள்
மொத்த வருமான சதவீதம்
| 42 - 6 | 24 - 22* மொத்த மானியம் 28 1 0 ° 2 12' 4 14: 9
நாலுவகை தலத்தாபனங்களின் ஒவ்வொரு பிரிவிலுமுள்ள சீபைகளின் வருமானத்தில் ஏற்றத்தாழ்வு உண்டு. 1968ஆம் ஆண்டுப் புள்ளிவிபரப்படி 12 மாநகரசபைகளின் மொத்த வருமானத்தில் 66 சதவீதம் கொழும்பு மாநகரசபையைச் சேர்ந்ததாகும் நகரசபைகளுக்கிடையிலும், பட்டினசபைகளுக் கிடையிலும் வருமான வேறுபாடு அதிகமில்லை. 48 கிராமசபை களின் வருமானம் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேலாகவும், 238 இனது 20,000 ரூபாவிற்குக் குறைவாகவும், 180 இனது 20,000-40,000 ரூபாவிற்குள்ளும் இருந்தது,
செலவு: குறிப்பிட்ட சேவைகளுக்கும், முதலீடு வேலை களுக்கும் அரசாங்க மானியத்திலிருந்தும், கடன் நிதியிலிருந்தும் செலவானவைகளைத் தவிர்த்து, 1968இல் நாலுவகைத் தலத் தாபனங்களின் செலவுகளைப் பின்வரும் அட்டவணையிற் காண Ginth :
செலவுத் மாநகர நகர பட்டின ரொம மொத்தச்
துறை சபைகள் சபைகள் சபைகள் சபைகள் செலவு
ஆயிரம் ரூபா (பிரயாணச் செலவைத் தவிர்த்து) சுகாதாரம் 2 0 39 3 90.94 岛643 5791 3892 செல்வழி 1 19363 8490 1773 5 4 96 || sou 22 அலுவலர் 23933 3867 8052 8578. 39 430 audsoe sel 907g asal 5150 aga ஏனையவை 6110| 1784 , , , ಙ್ಗ* 77620. 27264. 16997. 25το 7 τασσες
தலத்தாபனங்கள் மக்களுக்குப் புரியவேண்டிய சேவைகளின் தாயரிப்புச் செலவுகளையும், தொழில்படுத்தும் செலவுகளையும், அவைகளே வசூலிக்கும் வருமானங்களிலிருந்து பெறவேண்டு மென்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறியாகும் ஆஞல், நிலவும் சேவைகளில் அத்தியாவசியமானவற்றைத் தானும் நாகரிக வாழ்வுக்கு ஏற்றமுறையில் அவைகளாற்

Page 104
செய்ய முடிவதில்லை வருமானப் பற்ருக்குறையே இந்த இக்கட்டான நிலைக்குக் காரணமாகும். 1938-68 இடைப் பட்ட காலத்தில் மத்திய அரசாங்கத்தின் வருமானம் 1843 சதவீதம் உயர்ந்துள்ளபோது, தலத்தாபனங்களினது 844 சத வீதம் மாத்திரம் அதிகரித்தது. புதிய சமூக முதலீடுகளுக்கும் பொருளாதார முன்னேற்றத் திட்டங்களுக்கும் அரசாங்க மானியமும் கடன்களும் போதியளவிற் கிடைக்காது வேறு திண்டாடுகின்றன. இவற்றின் பெறுபேருய், 13 35 நகரசபைக ளில் 14 சபைகள் 1966-67 நிதியாண்டில் வரவுக்குமீறிய செலவு செய்துள்ளன. வருமானமுயர்ந்த பல மாநகரசபைகளும் பற்றக் குறை வரவு-செலவுத் திட்டங்களை ஆக்கி, பற்ருக் குறையை நிரப்புவதற்கு நம்பிக்கை நிதிகளையும், கடன் பணங்களையும் குறிப்பிட்ட க ரு மங்களுக்கான மானியங்களையும் பயன் படுத்தின; இத்தகைய குறைநிரப்புமுறை தவருனதாகும்ே 2 தலஅபிவிருத்திக் கடன்நிதியிலிருந்து பெற்ற கடனைக் கிரம மாகக் கட்டுவதில் கஷ்டமும், தாமதமும் ஏற்படுவதோடு புதி தாகக் கடனெடுக்க முடியாதுள்ளது. 3. ஆற்றலும் அனுபவமும் வாய்ந்த அலுவலரைத் தேவையான அளவில் அமர்த்த முடியா ததினுல் பாலனப் பொறியகம் பலவீனமடைகிறது. 4 தலத் தாபனங்கள் பரந்த கடமைகளை மேற்கொள்ள முடியாததின4 தகுதிவாய்ந்த பிரசைகள் உள்ளூராட்சியிற் பங்குகொள்ள முன்வருவதில்லை:
தலத்தாபனங்களின் நிதி நெருக்கடிகளை அரசாங்கம் உண ராமலில்லை. அவற்றின் வருவாயை உயர்த்தல், திருப்திகரமா மத்திய தலத்தாபன நிதியுறவை அமைத்தல் போன்றவற்றை ஆராய அரசாங்கம் பல குழுக்களை நியமித்துள்ளது. 1924ஆ ஆண்டு நிதியுறவு ஆணைக்குழு, 1948ஆம் ஆண்டு அலுவல ஆய்வுக்குழு, 1953ஆம் ஆண்டு சொக்ஸி ஆணைக்குழு, 1962ஆம் ஆண்டு அலுவலர் ஆய்வுக்குழு உதாரணங்களாகும்; நிலவும் வருமான மூலங்கள், புதிய மூலங்கள், அரசாங்க நன்கிொடை கடன் நிதி ஆகியவற்றிலிருந்து தலத்தாபனங்களின் வருவாை உயர்த்துமுகமாக 1969ஆம் ஆண்டு ஜயசூரியா அலுவல ஆய்வுக்குழு 23 சிபார்சுகளைச் செய்துள்ளது. பல ஆண்டுகளா அரசாங்கமே பற்ருக்குறை வரவு செலவுத் திட்டங்களைச் சமா ளிக்க முடியாது திண்டாடும்போது வருமானவரி, மொத்த விற்பனைவரி போன்றவற்றின் ஒரு பகுதி தலத்தாபனங்களுக் ஒதுக்கப்படவேண்டுமென்ற யோசனையை ஆய்வுக்குழு ஏற்க தயாராயில்லை. தலாவித வருமானங் குறைந்த பின்தங்கி நாட்டில், மத்திய அரசாங்கமோ உள்ளூராட்சி நிறுவனங்களே பயன்படுத்தக்கூடிய வருவாய் குறைவாக இருப்பது இயற்கையே இந்தச் சூழ்நிலையில் தலத்தாபனங்களின் நிதிநிலையைச் ಶಿರಾಗಕೆ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 467 -
அரசாங்கமெடுத்த நடவடிக்கைகள் தேவைக்குப் போதாமலும் சிதறலாயும் இருப்பதில் வியப்பில்லை இலங்கையின் தலத் தாபன அம்சங்களில், பணநிலை 'பலங்குறைந்த சங்கிலியின் மிகப் பலவீனமான தனிவளையமாகும்' என்ற உரிசிலா ஹிக்ஸ் அவர்களின் கூற்று இன்றும் பொருத்தமுடையதாயுள்ளது. இன்று உணவு மானியங்கள் வெட்டப்பட்டு, மத்திய அரசாங்கச் செலவு குறைந்தும், புதிய உயர் வரிகளினல் வரவு கூடியும் இருக்கும் போது வருமானத்தில் ஒரு பகுதியைத் தலத்தாபனங்களுக்குச் செறியச்செய்வது நாட்டிற்குக் கூடிய நன்மை பயக்கும்
நிதி நிருவாகம் : ஒவ்வொரு தலத்தாபனத்திற்கும் ஒரு தல நிதி உண்டு. பல துறைகளிலுமிருந்து கிடைக்கும் வருமா னங்களும் இந் நிதியைச் சேரும் இதிலிருந்துதான் செலவினங்கள் செய்யப்படுகின்றன. மத்திய அரசாங்கம் வரப்போகும் நிதி வருடத்திற்கான வரவு செலவு மதிப்பீடுகளைப் பாராளுமன் றத்தின் அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிப்பதுபோல, ஒவ்வொரு தலத்தாபனத் தலைவரும் தமது சபையின் வரவு செலவுத் திட் பத்தையும், சிலவேளைகளில் குறைநிரைப்புத் திட்டத்தையும் சபைமுன் வைப்பார் நகராதிபதிகள் மாநகரசபையின் நிலையற் குழுக்களைக் கலந்தாலோசித்துத் திட்டத்தைத் தயாரிக் கின்றனர். கிராமசபைகளைப் பொறுத்தமட்டில் அதன் தலைவரே தயாரிக்கவேண்டுமென்று சட்டம் கூறுகின்றது. இருந்தும் இக் கடமையை நிறைவேற்ற எல்லாத் தலைவர்களுக்கும் அலுவலர்
நவி செய்வதைக் காணலாம்; எந்த அலுவலர் திட்டத் தயா ரிப்பிற்கு உதவும் பொறுப்பை ஏற்கவேண்டுமென்று சட்டம் நிர்ணயிப்பது நன்று சமர்ப்பித்த வரவு செலவு மதிப்பீடுக சபை மாற்றலாம். ஏற்கலாம், நிராகரிக்கலாம். மாநகரச * நிதிக்குழுவினுல் நிதிசம்பந்தமான விடயம் எதுவும் பரிசீலனை செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலன்றி, அந்த நிதி டயத்தைச் சபை முற்முகத் தீர்த்துவைக்க முடியாது தலத் தாபன சபைகள் நிர்ணயித்தபடி சபைகளுக்கு வரவேண்டிய வருமானங்களைத் திரட்டுவதும், அவற்றைச் சட்டப்படி செல வழிப்பதும் தலைவர்களது பொறுப்பாகும். ஒவ்வொரு நிதிவருட இறுதியிலும் சபைத்தலைவர் கடந்த வருடத்தில் சபைக்குக் கிடைத்த பலவித வருவாய்களின் தன்மை, தொகை ஆகியன பற்றியும், செலவழிக்கப்பட்ட தொகைபற்றியும் விரிவான அறிக்கையொன்றைத் தயாரிப்பர், அறிக்கையை நன்கு ஆராய் வதும், பொதுப்பணம் செலவாகும்போது கண்காணிப்பதும் சபையிலிருந்து எதிர்பார்க்கப்படும் கடமைகளாகும். இறுதியில், வரவு செலவுக் கணக்குகளைக் கணக்காய்வாளர் நாயகத்தின் இலாகா பரிசீலனை செய்கின்றது:

Page 105
سے 468 سے
நிதிபரிபாலனத்தில் சில பலவீனங்கள் சுட்டிக்காட்டப்படு கின்றன: 1. வரவு செலவுத் திட்டங்கள் தயாரிக்கும் முறை களைச் சட்டங்களும் சட்டப்பிரமாணங்களும் வரையறுத்துள்ளன. பட்டினசபைகள் பற்றிய வரையறுப்பு மாத்திரம் துல்லியமான தாய் இருக்கின்றது. அதன்படி, முதலில் செலவுகளை மதிப்பீடு செய்து, அவைகளுக்கு வேண்டிய சோலைவரியைத் தவிர்ந்த ஏனைய வருமானங்களை மதிப்பிட்டபின், மிகுதிச் செலவிற்குத் தேவை யான தொகையைச் சோலைவரியின் வீதத்தைக் கூட்டி அல்லது குறைத்துப் பெற்றுக்கொள்ளல் வேண்டும். இம் முறையைப் பின்பற்றுவதனல் பட்டினசபைகளில் பற்ருக்குறை வரவு செல வுத் திட்டங்கள் எழுவதில்லை. ஏனைய சபைகள் பற்ருக்குறைத் திட்டங்களை வரவர அதிகமாகக் கையாளுகின்றன. இது கடன் தீர்க்கமுடியாத நிலைக்கு இட்டுச்செல்லலாம். எனவே, பற்ருக் குறைத் திட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு சட்டத்தைத் திருத்தல் நன்று. 23 மொத்தக் கடனில் வருடாவருடம் திருப்பிக் கொடுக்கவேண்டிய தொகையை வரவு செலவுத் திட்டத்தின் செலவுப் பக்கத்தில் சேர்க்கத் தவறுவதும், பொதுமக்களிட மிருந்து சபைக்கு வரவேண்டிய வரிகளைத் தலைவர்கள் கண்டிப் பாக வசூலிக்கத் தயங்குவதும் பல சபைகளின் வகையற்ற நிலையை உருவாக்கும் வேறு இரு காரணிகளாக இருந்துள்ளன: முதற்காரணியைத் தவணைப்பணம் உரியகாலத்தில் கொடுபடல் வேண்டுமென்று சட்டத்தால் கட்டாயப்படுத்துவதன் மூலம் அகற்றலாம் இரண்டாவது குறையை நீக்குவதற்கு, வரிவசூ விக்கும் பொறுப்பை, மக்கள் தயவில் தங்கியிராத சம்பளம் பெறும் அலுவலர்களான LADATA[595 Ur ஆணையாளருக்கோ, சபைச் செயலாளருக்கோ, வேறு குறிப்பிட்ட அலுவலருக்கோ 1971 தலத்தாபன (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மாற்றியது வரவேற் கத்தக்கதாகும். 35 முழுநிறைவான நிதி நிருவாகத்திற்குத் திட்டமான பிரமாணங்களும் நடைமுறைகளும் அவசியம். நகர பட்டின சபைகளுக்குப் பொருந்திய பிரமாணங்கள் திருப்திகர மானதாய் இருப்பினும், கிராமசபைகளினது திருத்தப்படுவ தோடு, மாநகர சபைகளுக்குப் பிரமாணமில்லாக் குறை விரை வில் நீக்கப்படவேண்டும். 4. கணக்குவைப்புக் கடமையை நன்கு நிறைவேற்றுவதற்கும், கணக்குகளைக் கணக்காய்வாளர் நாயகத் திற்குத் தாமதமின்றிச் சமர்ப்பிப்பதற்கும் தகுதிவாய்ந்த கணக்கர் இல்லாக் குறையை மாநகரசபைகளும், நகரசபைகளும் அகற்றவேண்டும் ; ஏனைய சபைகளின் எழுதுவினைஞருக்குக் கணக்குவைப்பதில் பயிற்சியளிப்பது நன்று 5, சட்டத்திற்கு முரணுகப் பணஞ்செலவழிப்பதற்கு அதிகாரம் வழங்குவோரிட மிருந்தும், வேண்டுமென்ருே தற்செயலாகவோ தவறுதலாகக் கணக்கு வைப்போரிடமிருந்தும் சபை இழந்த பணத்தை அற
 
 

-- 469 سے
விடக் கணக்காய்வாளர் நாயகத்திற்கு அதிகாரமுண்டு. இதை
களுக்குக் கடமைகளையும் பொறுப்புக்களையும் வழங்கிய அர
if (
விடக் கணக்குப் பரிசோதனையினுல் நல்விளைவு ஏற்படுவதற்கு, வரியிறுப்போர் தலத்தாபனக் கணக்குகள் பற்றித் தமது கருத் தைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பை அளிப்பதும், குறிப்பிட்ட தொகைக்கு மேலாகச் சபையின் பணத்தை இழக்கச்செய்து அதைத் திருப்பிச்செலுத்தத் தவறுவோரைக் குறிப்பிட்ட காலத்திற்குத் தலத்தாபன அங்கத்துவம் வகிக்காது தடை
செய்வதும் வரவேற்கப்படவேண்டியவை. கொழும்பு மாநகர
சபை தனக்கென ஒரு கணக்குப் பரிசோதனைப் பிரிவை அமைத்துக்
கொள்வது நன்று.
9, மத்திய உதவியும், கட்டுப்பாடும்
பிரான்சிலும் வேறு சில நாடுகளிலும் மக்களால் தெரியப் பட்ட தலத்தாபனங்கள் இயங்கினலும், அவைகள் அதிகாரங் குறைந்தனவாயும், மத்திய அரசாங்க அதிகாரிகளுக்குப் பெரு மளவிற் கீழ்ப்படிந்து நடப்பனவாயும் உள்ளன. இந்நாடுகளில் காணுத அளவிற்கு இங்கிலாந்திலும், இலங்கையிலும் உள்ளூ ராட்சி சுயாதீனமுடையதாய் இருக்கின்றது. ஒரு நூற்றண் டிற்கு முன்பே " மக்களால் பிரதிநிதித்துவம் அளிக்கப்பெற்ற, ஓரளவு தன்னட்சியுரிமையுடைய" கொழும்பு மாநகரசபை செயலாற்றுவதற்கு நிறுவப்பட்டது; இச் சபையினதும் மற்றும் தலத்தாபனங்களினதும் தன்னுட்சி உரிமையை அதிகரிப்பதற்கு அவைகளின் அங்கத்துவமும் அதிகாரமும் காலத்திற்குக்காலம் மாற்றியமைக்கப்படலாயின. மத்திய அரசாங்கத்தின் திட்டங் களை அமுல்செய்யும் கருவிகளாய் மாத்திரம் இயங்காது, தாங்கள் பாலனஞ்செய்யும் பகுதி க ஞ க் கு ப் பொருந்திய கொள்கைகளை நிர்மாணிக்கும் பொறுப்பும் தலத்தாபனங்களுக்கு உண்டு. இவ்வுரிமையைக் கொண்டு, அவைகள் விரும்பியபடி யெல்லாம் நடக்க முற்படின் நாட்டில் குழப்பநிலை ஏற்படலாம், எனவே, மத்திய தலத்தாபன ஆட்சிகளுக்கிடையே இருக்க வேண்டிய உறவு நிர்ணயிக்கப்படல் வேண்டும் தலஅட்சியின் நோக்கம் மத்திய ஆட்சியின் நோக்கத்திற்கு முரண்படாதிருத்தல் அவசியம். முக்கிய சேவைகள் நாடெங்கணும் ஒரேவித தர முடையனவாய் இருக்கும்படி பார்த்துக்கொள்ளப் பொதுநல அரசு எத்தனியாதிருக்க முடியாது; அந்த எத்தனம் தலத் தாபனங்களின் துணிந்து முயற்சியெடுக்கும் தன்மையை அணைக் காத சூழ்நிலையைப் பேணுவதே உள்ளூராட்சியை எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாகும். பாராளுமன்றம்மூலம் தலத்தாபனங்
சாங்கம், அவைகள் நன்கு நிறைவேற்றப்படுவதற்கு வேண்
1. கொழும்பு மாநகரசபை நூற்ருண்டு நினைவுமலர் - ப. 3.

Page 106
% , ليس "{470 / سلس
அறிவுரையையும், பண உதவியையும், மேற்பார்வையையும் அளிப்பதோடு, தலத்தாபன சபைகளும் அவற்றின் தலைவர் களும் தமக்குக் கொடுக்கப்பட்ட அதிகார எல்லையைக் கடந்து கருமமாற்றினுல் அல்லது அதிகாரத்தைத் துர்ப்பிரயோகம் செய்தால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கேற்ற ஏற்பாடு களையும் அமைக்கவேண்டும்.
விரிந்த கருத்தில், தலத்தாபனங்கள்மீது செலுத்தப்படும் மத்திய கட்டுப்பாடுகள் மூன்று வகையின : 1. பாராளுமன்றக் கட்டுப்பாடு, 2. நீதித்துறைக் கட்டுப்பாடு, 3. நிருவாகக் கட்டுப் பாடு; இவைகள் ஒவ்வொன்றும் தமக்கே உரித்தாய வழிகளில் செயற்படினும், அவைகள் அனைத்தின் பொதுநோக்கம், நாட்டு நலன் கருதித் தலத்தாபன சேவைகளை ஒருங்கிணைத்து வழி: நடத்தலாகும் பாராளுமன்றக் கட்டுப்பாடு: அடிப்படையான கட்டுப்பாடு சட்டத்திலிருந்து பிறக்கின்றது. தலத்தாபனங்கள் * இயற்கையான நிறுவனங்களல்ல ; அவை செயற்கையானவை, சட்டத்தால் உருவாக்கப்படுபவை பாராளுமன்றம் கொடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்திக், குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டுத் துணைவிதிகளை ஆக்கலாமேயன்றித் தாமாகவே சட்டமியற்றும் உரிமையற்றவை பாராளுமன்றம் வழங்கிய கடமைகளை மாத் திரம் நிறைவேற்றும் நிர்வாக-நிறுவனங்களென்று இவை களைப் பொதுவாக அழைக்கலாம் தான் கொடுத்த அதிகாரங் களையும் கடமைகளையும் பாராளுமன்றம் குறைக்கலாம், வேறு சேவைகளைச் செய்வதற்குப் புதிய அதிகாரத்தை வழங்கலாம். தாம்பெற்ற அதிகாரத்தை உபயோகிக்கவோ, விடவோ தலத் தாபனங்களுக்கு ஓரளவு உரிமையுண்டு. பாராளுமன்றத்தின் அடிப்படைக் கட்டுப்பாடு பரந்தமுறையில் செயற்படுவது அதிகாரங்களைப் பாராளுமன்றம் விரித்து வழங்குவதில்லை; சட்டத்தை மீறித் தலத்தாபனங்கள் நடக்கின்றனவா என்று கண்டுபிடித்துத் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கு வேண்டிய அளவில் பொறியகமெதுவும் அதனிடமில்லை. நீதித்துறைக்கட்டுப் பாடு: சட்டமீறல்களை ஒரளவிற்குக் கட்டுப்படுத்தும் அதிகார மும் அமைப்பும் நீதிமன்றங்களுக்குண்டு; நீதிமன்றங்கள் பாராளு மன்றச் சட்டங்கள் அனைத்திற்கும் ஓரளவில் உயிர்கொடுக் கின்றன. சட்டத்தை மீறித் தலத்தாபனங்கள் நடவடிக்கை எடுப்பதை இவைகள் தடுத்து நிறுத்தலாம்; சட்டம் விதித்த நடவடிக்கைகளை எடுக்காதிருக்கும்போது அவற்றைச் செய்யு மாறு பணிக்கலாம் தனியொருவரோ, நிறுவனமோ, அரசாங் கமோ குறிப்பிட்ட குறைகளுக்கு நிவாரணம் கோரி நீதிமன்றத் திற்கு மனுச்செய்ய முடியும். தலத்தாபனங்களின் பாலனத் தையோ அவைகள் வகுக்கும் கொள்கைகளையோ நீதிமன்றங்கள் விரிவாக மேற்பார்வை செய்வதில்லை; நீதித்துறைக் கட்டுப் பாடு மற்றிருவகைக் கட்டுப்பாடுகளிலும் முக்கியத்துவம்
றைந்ததாகும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

سے 471 --سے
நிர்வாகத்துறையின் உதவி: 1931இல் உள்ளூராட்சி இலங்கை மக்களால் தெரியப்பட்ட பிரதிநிதிகளின் மேலாண் மைக்குட் சென்றது; அதன்பின் தலத்தாபனங்களுக்குக் கிடைத்த மத்திய நிருவாக உதவியும், கண்காணிப்பும் விரிந்தன; டொனமூர் நிருவாகக் குழுக்களும் அவற்றைத் தொடர்ந்த தலபரிபாலன அமைச்சுக்களும் உள்ளூராட்சியின் அபிவிருத்திக்குக் கூடிய ஆதரவு கொடுத்தன. அரசாங்க ஆதரவு, பணஉதவி அளிப்பதோடு நிற்கவில்லை; தமது எதுவித பிரச்சினைபற்றியும் தலத்தாபனங்கள் அரசாங்கத்தை நாடும்பொழுது அதன் ஆலோசனையும் நிபுணர்களின் சேவையும் எப்பொழுதும் கிடைக் கின்றன. தலத்தாபன திணைக்களத்தின் உதவியைவிட வேறு திணைக்களங்களின் ஒத்துழைப்பையும் பெறமுடிகிறது. உதாரண மாகச் சுகாதார சேவை இலாகா சுகாதார அபிவிருத்தி வேலை களுக்கும், நகரநிர்மாண இலாகா வீடமைப்பு நகரத்திட்டம் ஆகியவற்றிற்கும், பெறுமான மதிப்பீட்டு இலாகா சொத்துக்கள் மதிப்பீட்டிற்கும், பொது வேலை இலாகா நீர்விநியோகத் திட்டங்களுக்கும் தத்தம் நிபுணத்துவ அறிவைக் கொடுத் துதவுகின்றன. இலங்கையின் பரிபாலன மாவட்டங்களில் கடமையாற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற 22 தலத்தாபன உதவி ஆணையாளரின் அனுபவம், ஆலோசனை, பொதுவான சேவை ஆகியன அவர்களின் அதிகாரபாகத்திலுள்ள கிராமசபைகளுக்கு உடனடியாகக் கிடைக்கின்றன. கிராமசபைகள் போதிய வருவாயின்மையால் நிபுணத்துவ அலுவலரைத் தனித்தனியாக அமர்த்தமுடியாது. எனவே, தலத்தாபன உதவி ஆணையாளரின் கீழுள்ள, தொழில்நுட்ப அறிவுள்ள மூன்று அதிகாரிகள் கிராம சபைகளுக்குத் தமது சேவையை அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 15 கிராமவேலைக் கண்காணிப்பாளர் தெரு, மதகு, பாலம், கட்டிடம், கிணறு போன்றவற்றை அமைப்ப தற்கு உதவுவர். 2, கிராமசபைப் பரிசீலனை அதிகாரி செயலக தாபன வேலைகளிலும் கணக்குவைப்புமுறைகளிலும் ஆலோசனை கூறுவர். 3. சனசமூகநிலைய மேற்பார்வையாளர் இந்நிலையங் களைத் தாபிப்பதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் தமது சேவையை நல்குவர்.
நிருவாகக் கட்டுப்பாடு : தலத்தாபன அமைச்சர், தலத் தாபன கொமிஷனரின் த லை  ைம யிலுள் ள திணைக்களம், மாவட்ட உதவி ஆணையாளர்கள், கணக்காய்வாளர் நாய கத்தின் தலைமையிலுள்ள திணைக்களம், தலத்தாபன சேவைக்குப் பொறுப்பாயுள்ள நிறுவனங்கள் ஆகியவை மத்திய நிருவாகக் கண்காணிப்பையும் கட்டுப்பாட்டையும் செய்கின்றன. கண்
g). II - 26

Page 107
سمي 472 سبي
காணிப்புகளில் பலவகை உண்டு அவைகளை, 1 கிரமமாகச் சகல சந்தர்ப்பங்களிலும் செய்யப்படுவன என்றும், 2 அவசியம் நேரிடும்பொழுது செய்யப்படுவன என்றும் இரு பெரும் பிரிவுக! ளாக வகுக்கலாம். 「 *鷲W偲 is . . .
கிரமமான கண்காணிப்புகள்: இப் பிரிவில், துஜன விதிகளை வரிகளை கடன்களை அனுமதிப்பது, கடன்பணம் அர சாங்க மானியம் வேறு வருமானம் செலவழிக் கப்படும் முறையை மேற்பார்வை செய்வது, அவசிய கடமைகளைச் செய்யுமாறு பணிப்பது, வரவு செலவுக் கணக்குகளை ப் பரிசீலனை செய்வது, தலத்தாபன சேவையினரைக் கட்டுப் படுத்துவது போன்றவை அடங்கும். இவற்றைச் சிறிது விரித்துக் கூறின் 1. தலத்தாபனங்கள் ஒவ்வொன்றும் தனது பொறுப்பி லுள்ள விடயங்கள் செயல்படுவதை ஒழுங்குசெய்வதற்குத் துணைவிதிகளை ஆக்கும் உரிமை பெற்றுள்ளன. அரசாங்கம் விதித்த நியதிக்குள் துணைவிதிகள் அமையவேண்டும்; அரசாங்க ஒப்புதல் பெற்றபின்பே அவைகள் செயல்படும். 2. சோலை வரி விகிதத்தைக் கட்டுப்படுத்தும், குறிப்பிட்ட தொகைக்கு மேலாகக் கடன் பெறுவதை அனுமதிக்கும் உரிமை அமைச்சருக் குண்டு. குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஒரு த லத் தாபனம் செலுத்தப்பெருத மொத்தக் கடன்தொகை, அதன் கடந்த 5 வருட வருமானங்களைக் கூட்டி ஐந்தால் பிரித்துப் பத்தால் பெருக்கிய தொகைக்கு மேற்படாதிருக்கவேண்டுமென்பது பொதுநெறியாகும் அதற்கு மேற்படும் வகையில் ஒரு தாபனம் புதுக் கடனெடுக்க விரும்பினல், அமைச்சரின் அனுமதியைப் பெறவேண்டும் தாபனத் தி ன் கடன் தீர்க்கும் ஆற்றலைப் பொறுத்து அமைச்சர் அனுமதி வழங்குவார்; அவசியமான சிலவேலைகளை நிர்மாணித்து நடத்தக் கடனெடுக்குமா அமைச்சர் சில தாபனங்களைச் சில வேளைகளில் பணிக்கலாம்: 3. அரசாங்கத்திடமிருந்து தலத்தாபனங்கள் ஒதுக்கு நன் கொடை, மொத்த நன்கொடை, குறித்தநோக்கு நன்கொை ஆகிய பணஉதவிகள் பெறுகின்றன. அப்பணம் நல்ல முறையி செலவிடப்படுகின்றதா என்று கண்காணிக்கும் பொதுவான
உரிமை அரசாங்கத்திற்கிருப்பது நியாயமானதாகும் நீர் விநியோகம், மின்சார அளிப்பு, வடிகால் திட்டம், வீடமைப் போன்ற அபிவிருத்திகளுக்கென்று ' குறித்தநோக்கு ந கொடை" கொடுப்பதும் விடுவதும் அமைச்சரின் விருப்ப தைப் பொறுத்தது. அதைக் கொடுக்கும்போது அமைச்ச விதிக்கும் நிபந்தனைக்குட்பட்டு, கொடுத்த நோக்கத்திற்கே ந: கொடை செலவிடுதலை அமைச்சு மேற்பார்வை செய்கின்றது. இவ்வித நன்கொடை தரமான வேலைகள் நடைபெறுவதற்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(3. oło களைத் தவிர்ந்த ஏனைய சபைகள் தமது வரவு ெ களைத் தலத்தாபன திணைக்களத்திற்கு அனுப்பவேண் அவற்றிற்கு ஒப்புதல் கொடுக்கவோ விடவோ திணைக்களத் தலைவருக்கு அதிகாரமுண்டு. இவ்வுரிமைமூலம் தலத்தாபனங் களின் கொள்கையை அரசாங்கம் ஒரளவிற்குத் திசை திருப்ப லாம். 5 ஆறு மாதங்களுக்கு அல்லது வருடத்திற்கு ஒரு முறை தலத்தாபனங்களின் வரவு செலவுக் கணக்குகளைக் கணக்காய்வுத் திணைக்களம் பரிசீலனை செய்கின்றது.
' தலத் தாபனங்கள் கணக்குகளைச் சரியாக எழுதிவைக்கச் செய்வதும்,
குறித்த விடயத்திற்கான அரசாங்க நன்கொடைப்பணமும்
குறித்த தேவைகளுக்கெனத் தலத்தாபன சபைகளினுல் ஒதுக் கப்பட்ட பணமும் அந்தந்த விடயத்திற்கு அல்லது தேவைக்கு மாத்திரமே செலவாக்குமாறு பார்த்துக்கொள்வதும், செலவுகள் aft
படவரம்பிற்கு உட்பட்டதாயிருக்குமாறு பார்த்துக்கொன் வதும், பொதுப்பணம் தகாத வழிகளில் செலவாகாது பார்த்துக் கொள்வதும் கணக்குப் பரிசோதனைத் தலைமையதிபதியின் கடம்ையாகும்." இக்கடமையைச் செய்வதற்கு அவரின் அலுவலர் கணக்குப்புத்தகங்களையும், வவுச்சர்களையும் ஆங்காங்கு சென்று பரிசோதனை நடத்துவர் சட்டத்திற் பணம் செலவுசெய்ய அதிகாரம் வழங்குவோரிடமி செய்வோரிடமிருந்தும், தவறுதலான கணக்கு மிருந்தும் தலத்தாபனமிழந்த பணத்தை அறவி வாளர் நாயகத்திற்கு அதிகாரமுண்டு. அவரு எதிராகச் சம்பந்தப்பட்டோர் விரும்பினுல் திற்கு மேன்முறையீடு செய்யுமுரிமை வழங்குமாறு சட்டம் திருத்தப்படவேண்டுமென்று கருதுவாருமுளர், 6. ஒருங் கிணைந்த தலத்தாபன சேவையினரைத் தலத்தாபன சேவை ஆணைக்குழு கட்டுப்பாடு செய்துவந்ததை இவ்வியலின் ஆருவ பிரிவிலும், 1974 தொடக்கம் கட்டுப்பாட்டு அதிகாரம் அ சருக்கு மாற்றப்பட்டதை இவ்வியலின் ஏழாவ
காண்க

Page 108
- 474
அங்கீகரித்த கட்டுப்பாடுகளைவிடப், பாலனவழியிலும் மத்திய நிருவாகம் கண்காணிப்பு நடத்துவதைக் காணலாம். கட்டுப் பாடுகள், கண்காணிப்புகள் ஒவ்வொன்றினலும் ஏற்படும் செயல் விளைவுகள் கூடியும் குறைந்தும் இருக்கலாம். நாலுவித தாபனங் களின் கட்டுப்பாடும் கண்காணிப்பும் ஒரேமாதிரியானவையல்ல அவற்றின் வகையிலும் அளவிலும் வேறுபாடுகள் உண்டு. மாநகரசபைகள் பெருமளவு சுயாதீனமுடையவை அவைகள் மீது கணக்காய்வாளர் தலைமையதிபதியும் தலத்தாபனசேவை பற்றிய நிறுவனங்களும் உபயோகிக்கும் அதிகாரமும், குறித்த நோக்கு நன்கொடைகள் பற்றிய அரசாங்க மேற்பார்வையும் முக்கியமானவை. நகர, பட்டின சபைகளின் சுயாதீனம் கிட்டத் தட்ட ஒரேயளவானதாயினும், மாநகரசபைகளின் சுயாதீனத் திலும் குறைந்ததாகும். மத்திய அரசாங்கத்திடமிருந்து பெறும் கூடிய பணஉதவியும், திணைக்களத் தொழில்நுட்ப அலுவலரிட மிருந்து பெறக்கூடிய சேவையும், தங்கள் நடவடிக்கைகள் சட்ட வரம்பிற்குட்படுமா? என்று அறிவதற்குத் திணைக்களத் துடன் நடத்தும் கூடிய கடிதத் தொடர்பும் நகர, பட்டின சபைகளைக் கூடிய மத்திய கட்டுப்பாட்டிற்குள் கொணரும் தன்மையன கிராமசபைகள் மற்றும் பொதுவான கட்டுப் பாடுகளுடன் மாவட்ட உதவி ஆணையாளர்களின் விசேட மேற் பார்வைக்கும் ஆளாகி, மிகக்கூடிய கண்காணிப்புக்குள் இயங் கின்றன. காணி, கட்டிடம் ஆகியவற்றை வாங்க, விற் மாற்ற, குறிப்பிட்ட தொகைக்கு மேலாகச் செலவிட, மிக குறைந்த கேள்விப்பத்திரமல்லாதவற்றை ஏற்க, கிராமசபைக உதவி ஆணையாளரின் ஒப்புதலைப் பெறவேண்டும் சோத செய்யவும், வரிமதிப்பீடு பற்றிய முறையீட்டை விசாரித்துத் தீர்ப்புவழங்கவும் அவருக்கு அதிகாரமுண்டு. கிராமசபை அங்கீ கரித்த கூட்ட நடவடிக்கைக் குறிப்பின் பிரதியொன்று அவருக்கு அனுப்பப்படல் வேண்டும். மத்திய நிருவாகம் கிரமமாக செய்யும் கட்டுப்பாடுபற்றிய இன்னுெரு அம்சம், இவ்வதிகார கூட்டப்படவேண்டுமா? அல்லது குறைக்கப்படவேண்டுமா? என்ற பிரச்சினையாகும். நன்கொடைகள் மேலும், புள்ளி விபரங்கள் பெறுவதிலும், வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போ சோதனைசெய்வதிலும் அமைச்சருக்குக் கூடிய அதிகாரம் வழங்கு வது நல்லதென்று சொக்ஸி ஆணைக்குழு அபிப்பிராயம் தெரிவித் துள்ளது மறுபக்கத்திலே, தலஆட்சி வலுப்படுத்தப்படு தற்குப் பதிலாக, அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் அளவுக் மீறிக் குவிந்துள்ளதென்றும், இவ்வதிகாரக் குவிப்பு பிற்போ கானது, சனநாயக ரீதியற்றது, உள்ளூராட்சிக்குச் சாவும அடிக்க வல்லது என்றும் கொழும்பு மாநகரசபை நூற்ருண்
 
 
 
 
 
 
 
 
 
 

س- 475 --
மலரின் "இணக்கமற்ற கூட்டுப் பங்காண்மை ' அத்தியா யத்தில் குறைகூறப்பட்டுள்ளதைக் காணலாம்.
அவசியகால கண்காணிப்புகள் : மேற்கூறிய கிரம மான கண்காணிப் புகளை விட ச், சந்தர்ப்பம் எழும்போது பிரயோகிக்கக்கூடிய அதிகாரங்கள் அமைச்சருக்குண்டு, 1. தலத் தாபனசபைகளை இடைநிறுத்தல் : அவசர காலங்களில் நாட்டில் அமைதியையும், ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்குத் தலத்தாபன் சபைகள் இடையூருக இருக்கக் கூடுமென்று அமைச்சர் கருதினல் இவ்வதிகாரத்தை அவர் பயன்படுத்துவதில் தவறில்லை. சபைகள் திருப்பிப் பதவியேற்கும்வரை பரிபாலனத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு விசேட ஆணையாளரை அமைச்சர் நியமிப்பார். சாதாரணமாக மாநகரசபைகளுக்கு அவற்றின் மாநகர கொமி ஷனரும், ஏனைய சபைகளுக்கு அப்பகுதித் தலத்தாபன உதவி ஆணையாளரும் விசேட ஆணையாளராக நியமனம்பெறுவது வழக்கமாகும். 2. சபையின் பதவிக்காலத்தை நீட்டல் தேர்தல் இடாப்புகள் தயாராயில்லாத நிலையில் இவ்வதிகா ரத்தை ஒருசில வேளைகளில் பயன்படுத்துவதில் தவறில்லை. ஐப்பசி 1971-மார்கழி 1972 இடையில், பதவிக்காலம் முடிவெய்திய 243 தலத்தாபன சபையின் தேர்தல்கள் நடத்தப்படவில்லை யென்பது குறிப்பிடற்பாலது அவற்றில் 213 சபைகளின் பதவிக் காலம் சாதாரண சட்டப்பிரகாரமும், வேறு சிலவற்றினது பாதுகாப்புச் சட்டப்பிரகாரமும் நீட்டப்பட்டது; எஞ்சிய சபை களின் பரிபாலனத்தை விசேட ஆணையாளர்கள் பொறுப்பேற் றனர். 3. சபைத் தலைவர்களை, மற்றும் அங்கத்தவர்களை அகற்றல் பல தலைவர்கள், முக்கியமாக நகர, கிராம சபைத் தலைவர்கள் பொதுப்பணத்தை மோசடி செய்துள்ளனர் சட்டரீதியற்றமுறையில் செலவழித்துள்ளனர் அங்கத்தினர் கொடுத்த நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கூட்டங்களின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்காது குழப்பநிலையை உண்டுபண்ணி யுள்ளனர்; பிரேரணைகள் சேர்க்கப்பட்டாலும், அவரும் ஆதர வாளரும் கூட்டம் நடைபெறுவதற்கு வேண்டிய குறைநிறை வெண்ணை நிரப்பாதிருப்பதற்காகக் கூட்டங்களுக்குச் சமுகந் தராது சபையின் பரிபாலன வேலைகளை ஸ்தம்பிக்கச் செய்துள் ளனர். எதிர்த்திறத்தினரும் தலைவருக்கெதிரான எதிர்ப்பைத் தெரிவிப் பதற்கும் இத்தகைய சூழ்ச்சிச் செயல்முறையைக் கையாண்டுள்ளனர். திறமையற்ற, பொதுநலனில் அக்கறை யெடாத தலைவர்களினல் தலத்தாபன நிருவாகம் சீர்குலைந் துள்ளது. எனவே, தவறிழைக்கும் தலைவர்களையும், அங்கத்தின ரையும் பதவிநீக்கஞ் செய்யும் அதிகாரம் அமைச்சருக்கு வழங்கப் பட்டுள்ளது ; அதை அவர் பலமுறை உபயோகித்துமுள்ளார்.

Page 109
னலும், அங்கத்தவர் சுயநலத்தினலும் பொதுநலன் பெரும வில் தொடர்ந்து பாதிக்கப்படும்போது அமைச்சர் இவ் வதிக
மான நடவடிக்கைகளை எடுக்குமுன் அமைச்சர் விரும்பின
லாம். அதனிடமிருந்து விளக்கங் கோரலாம், அத்தியாவசியமான
விட்ட பணத்தைப் பொதுநிதியிலிருந்து ஈடுபெற விழைவது இயற்கையாகும். இவற்ருேடு இலங்கைக்கே உரித்தான கட்
சேவைகளை நிறைவேற்றுமாறு பணிக்கலாம், சபை இயங்கும் முறைபற்றி விசாரணை நடத்தலாம்: 《
வதில், விற்பனைச்சாவடிகள் ஒதுக்குவதில், அபிவிருத்திவேலை
துள்ள குறைபாடுகளின் பிரதிபலிப்பெனினும், அதை ஓரளவி காகுதல் சீராக்குவதற்கு : 1. தலத்தாபனங்களில் மக்களை கூடிய சிரத்தையெடுக்கச் செய்து, நேர்மையான அங்கத்தவ களைத் தெரிவதின் அவசிய த் தை அவர்களுக்கு உண்ர்த் வேண்டும்; இதற்காகத் தலத்தாபன அமைச்சில் பொது பிரசாரப் பகுதி ஒன்றினை அமைக்கலாம் மாதப்பத்திரிை (யொன்றை வெளியிட்டு, கருத்தரங்குகளை ஒழுங்குசெய்து, செய்தி
தாபனங்களின் நிருவாகக் கடமைகளை நன்கு செய்யவேண்
செலவிட வேண்டியுள்ளது. சம்பளமில்லாத இந்த உத்தியே
476
4。 சபைகளைக் கலைத்தல் மேற்காட்டிய கட்சிப் பூசல்க
ரத்தை உபயோகிப்பதில் தவறில்லை கலைத்தபின் கட்சி பூசலோ தாபனத்தின் பணநிலையோ சீராகும்வரை பரிபா
அமைச்சர் தேசிய அரசுப் பேரவையில் தெரிவித்துள்ளார். அங்கத் தவர்களை அகற்றல், சபைகளைக் கலைத்தல் போன்ற பாரதூ
தலத்தாபன சபையின் ஆவணங்களை அழைத்துப் பார்வையி
தலத்தாபனங்களில் நேர்மையற்றேர் உட்புகுந்து, அதிகார அல்லது பண மோகத்தினல் தகாதமுறையில் நடக்கின்றனர் என்ற கருத்தில் உண்மையில்லாமலில்லை. ஒப்பந்தங்கள் செ
களைச் செயற்படுத்துவதில் ஊழல்கள் மலிந்துள்ளதைக் காண்
கின்ருேம் கைலஞ்சம் கொடுத்துத் தலைமைப்பதவியைக் கை பற்றியோர், லஞ்சம் பெற்றேரின் அனுசரணையுடன், செ
முறைமையும் சேர்ந்து உள்ளூராட்சியைக் குழறுபடி செய்கின் றன. இந்நிலை நமது பொது வாழ்க்கை அனைத்திலும் பர
நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு, பிரசாரப் பகுதி மக்கள் அறிவையும் ஆர்வத்தையும் வளர்த்தல் நன்று. 28 தலத்
மெனின், அவற்றின் தலைவர்கள் அதிக நேரத்தை இன்று
கத்தை ஏற்று நடத்துவதற்குத் திறமையும் நேர்மையுமுடை பணமுள்ளோர் அவசியம். எப்பொழுதும் அவர்கள் கிடிை
 
 
 
 
 
 
 
 
 

பார்களென்று எதிர்பார்க்கமுடியாது. எனவே பல வகுப்பு மக்க ளிடமிருந்து தலைமைப் பகுதியை நிரப்புவதற்கு வாய்ப்பை ஏற் படுத்துமுகமாகச் சபைத்தலைவர்களுக்கு நிலையான மாதப்படி வழங்கல்வேண்டும். மற்றும் அங்கத்தவர்களுக்குச் சபைக் கூட்டங்களுக்குச் செல்வதனல் ஏற்படும் செலவுகளுக்கு ஈடாகச் சிறுதொகை வருடாந்தப்படி கொடுப்பது ஆராய்வதற்குரியது. 33 உள்ளூராட்சியில் கட்சி அரசியல் புகுவதைத் தடுக்க முடி யாது; ஆனல் ஒழுங்கான செயல் திட்டங்களின்றி இயங்கும் கட்சிகள். நன்கிணைந்த அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் முன் வைத்து அவர்கள் ஆர்வத்தை எழுச்சியுறச் செய்யலாம்; ஆரம்பகாலத்தில் உள்ளூராட்சிப் பிரச்சினைகளை வெளிக்கொணர் வதிலும், அதிகரித்துச் செல்லும் மத்திய கட்டுப்பாட்டை எதிர்ப் பதிலும், திறமையுடன் இயங்கிய தலத்தாபன சபைத் தலைவர் களின் சங்கங்கள், இன்று உட்பூசல்களினலும் கட்சிச்சார்புகளி ஞலும் நன்கு செயற்படுவதில்லை. இச் சூழ்நிலையில் நாலுவகைச் சபைகளின் பிரதிநிதிகளை அரசாங்கம் அழைத்து, அவர்களும் திணைக்கள அமைச்சுப் பிரதிநிதிகளும் சேர்ந்து முக்கிய பிரச் சினைகளைக் கலந்தாலோசிக்குமுகமாகத் தலத்தாபன மத்திய சங்கமொன்றை அமைப்பது உள்ளூராட்சியின் வருங்கால வளர்ச் சிக்கு உகந்ததாகும். மேற்கூறிய சிபார்சுகளை ஜயசூரியா ஆய்வுக் குழுவின் அறிக்கையிற் காணலாம்.
மக்களின், சபை அங்கத்தவர்களின் அறிவிலும் ஒழுக்கத்தி லும் வளர்ச்சி ஏற்பட்டு நற்பயனைத்தர நீண்டகாலமெடுக்கலாம். அதுவரை மத்திய நிருவாகத்தின் பரந்த கண்காணிப்புத் தொடர வேண்டுமா என்பது பிரச்சினைக்குரியதாகும் தலத்தாபனங்களில் பாரதூரமான தவறுதல்களோ ஊழல்களோ ஏற்பட்டபின் மத்திய நடவடிக்கை எடுப்பதிலும் பார்க்க, அவைகள் எழுவர் தைத் தடுப்பதற்கான கண்காணிப்புச் சிறந்ததென்ற சொக்வி கொமிஷனின் யோசனையைக் காண்க; நாளாந்த செயல்முறை களில் கூடிய பரிசோதனை, கூடிய வழிகாட்டல், கூடிய உன்னிப் பான பொதுநிதிக் கட்டுப்பாடு இருப்பதை அது விரும்பியுள் ளது. சபைகளைக் கலைக்கும், தலைவர்களை நீக்கும் அமைச்சரின் அதிகாரம் பலத்த ஆட்சேபத்திற்கு ஆளாகிய ஒன்ருகும்; இங்கிலாந்தில் அமைச்சருக்கு இத்தகைய அதிகாரம் கிடை யாது. சர்வசன வாக்குரிமை மூலம் தெரியப்பட்ட சபைகளை அகற்றும் பொறுப்பை மக்களிடம் விட்டுவிடுதலே முறை யாகும் அதற்கிடையில் சட்டத்தை மீறுவோர் சட்டம் விதித்த 。 தண்டனைக்கு ஆளாக வேண்டுமேயன்றி அமைச்சரின் எதேச் சாதிகார அதிகாரத்திற்கு அப்பாற்பட்டிருத்தல் நன்று. அத்

Page 110
ബ 478 س
தகைய அதிகாரம் துர்ப்பிரயோகிக்கப்படும் தன்மையது. பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர்கள், பிரதமர் ஆகியோர் மீது நியாயமான கண்டனங்கள் எழுவதைக் காண்இன்ருேம் அரசின் தலைவர் அவர்களைப் பதவியிலிருந்து விரட்டவேண்டு மென்று ஒருவரும் சிந்திப்பதில்லை. அதேபோலத் தலத்தாபன சபைகளையும் இயங்கவிடுவது சனநாயகரீதியானது. மக்களாட்சி சுலபமான ஆட்சிமுறையல்ல தவறுதல்கள் மூலமாகவேனும் அவர்களைச் சித்திபெற விடுதல் நன்று என்பது சித்தாந்தம், அமைச்சர் ஒரு அரசியல்வாதி தனது அகன்ற அதிகாரத்தைக் கட்சிச்சார்பாக உபயோகித்துள்ளாரென்று கண்டனங்கள் எழுந்துள்ளன. கலைக்கும், அகற்றும் அதிகாரம் தற்காலிக மாகத் தொடரவேண்டுமாயின், அது இறுதிநிலையில் உபயோ கிக்கும் கருவியாக அமையவேண்டுமென்றும், ஒரு விசாரணை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படவேண்டுமென்றும், சொக்ஸி கொமிஷன் தொடக்கம் 1973 நகரசபைத் தலைவர் சங்கம் வரை வற்புறுத்தப்பட்டுள்ளது. மத்திய நிர்வாகத்திடமுள்ள அதிகாரக் குவிப்பு, தலத்தாபனங்கள் ஊக்கமுடன் விருத்தி வேலைகளில் ஈடுபட்டுத் தல வளங்கள் நன்கு பயன்படுத்தப் படுவதைத் தடுக்கும் பொறுப்பான குடிமைப் பண்பும், சன நாயகத் தன்மையும் மக்களிடையே வளர்வதற்கு இடையூரு யிருக்கும் : மத்திய அரசாங்கத்தின் ஆட்சிப்பாரத்தை அளவுக்கு மீறி அதிகரிக்கும் உள்ளூராட்சியைப் பலமற்றதாக ஆக்கிவிடும் என்று ஒரு சாரார் கூறுவர். பாதைகளுக்குப் பெயரிடும் சிறு விடயத்திற்கூடத் தனது அனுமதியைப் பெறவேண்டுமென்ற அமைச்சரின் ஆணையை ஒரு த லத் தாபனந் தானும் மீருது பணிந்து நடக்கும் அளவிற்கு மத்திய நிருவாகத்தின் செல்வாக்கு வளர்ந்துள்ளதை இவர்கள் கவலையுடன் சுட்டிக் காட்டுவர், ! சோஷலிச சனநாயகத்தை அமைப்பதற்கு மத்திய அரசாங்கம் நிர்ணயித்த வழியில் தலத்தாபனங்கள் இயங்குவது அவசிய மென்று மறுசாரார் கருதலாம் ; எனவே, அரசாங்கச் சார்பற்ற சபைகளைக் கலைப்பது நாட்டு நலனிற்கு உகந்ததென்று அவர்கள் கொள்ளலாம். அரசியல் அலுவலர்சேவை, அரசியல் அதிகார சபைகள், அரசியல் ஜனதாக் குழுக்கள், அரசியல் கூட்டுறவுக் குழுமங்கள் போன்ற இன்னேரன்ன சமூக பொருளாதார அரசியல் நிறுவனங்கள் வலுப்பெறும் இன்றைய சூழ்நிலை யில், ஒரு கட்சி சார்ந்த தலத்தாபனங்களும் ஏற்படுவதை அவர்கள் வரவேற்கலாம். இத்தகைய கருத்துவேறுபாட்டுப் பின்னணியில், " மத்திய உள்ளூர் ஆட்சிகளுக்கிடையே நிலவ
Daily Mirror Editorial of 26-7-78.
 
 
 

வேண்டிய உறவு. தலத்தாபனங்களை மத்திய அரசு கட்டுப் படுத்துவதுமல்ல, அன்றிச் சமஷ்டி ஆட்சியிற்போல் அவைகள்
சுதந்திரமாக இயங்குவதுமல்ல என்பது பொதுவாக ஏற்றுக்
கொள்ளப்பட்டதாகும் மத்திய அரசாங்கமும் தலத்தாபனங் களும் சுறுசுறுப்பாக ஒத்துழைக்கும் பங்காண்மையில், மத்திய அரசாங்கம் சிரேஷ்ட பங்குதாரராக இருக்கும் உறவையே உத்தமமானதாகக் கொள்ளலாம் தலத்தாபனங்கள் தங்களுக் கிடையே வெற்றிகரமாகவும், தேசிய கொள்கையுடன் முரண்பா டின்றியும் இயங்குமாறு பார்த்துக்கொள்ளும் பொறுப்பை மத்திய அரசாங்கம் தன்வசம் வைத்துக்கொள்ளல் அவசியம் வேறுவிதமாகக் கூறின் மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்தாது அறிவுரை தரவும் மேற்பார்வை செய்யவும் வேண்டும். தேசியக் கொள்கை முதன்மைவாய்ந்ததினுல் அது சில வேளைகளில் தேசியக் கொள்கையைத் திணிக்கவேண்டி நேரிடும் ஆஞல் இயன்றளவிற்கு அப்படித் திணிக்காது, குறித்த எல்லைக்குள் மிகவுயர் தன்னட்சியுரிமையைத் தலத்தாபனங்களுக்கு அளித்தல் நலமாகும். அஃதில்லையெனில் அவைகளின் ஒத்துழைப்பை மத்திய அரசாங்கம் இழக்க நேரிடும்' என உருசிலா ஹிக்ஸ் கீழிருந்து விருத்தி ' எனும் தனது நூலில் கூறியுள்ளது சிந்தனைக்குரியதாகும். |
இறுதியில் : "இன்றைய தலத்தாபன அரங்கில் முழு
நிறைவான உள்ளூராட்சி மலர்வதற்கு மாத்திரமன்றி, பலவித தலத்தாபனங்கள் தங்களின் சம்பிரதாயக் கடமைகளைச் செய் வதற்கும் தடையாகத் தோன்றக்கூடிய கவலைதரும் போக்குகள் சிலவற்றைக் காணமுடிகிறது. இப்போக்குகளுக்கான காரணி
களில், மிதமிஞ்சிய நெகிழ்ச்சியற்ற மத்திய கட்டுப்பாடு, த தாபன அமைப்பு முறைமையில் மாற்றங்கள் அவசியமென்பை ஏற்றுக்கொள்வதில் விருப்பார்வமின்மை, மாறும் சமூகத்தி உள்ளூராட்சிக்குரிய இடத்தை உணரத்தவறியமை, தலத்தா னங்களுக்குக் கிடைக்கும் பணவருவாய் போதாமை, பல தலத் தாபனப்பகுதிகளில் நற்தகைமைவாய்ந்த பிரசைகளைச் சபை அங்கத்தினராக வாக்காளர் தெரிந்தனு ப் பாக் குறைபாடு ஆகியன முக்கியமானவையெனலாம். இத்தகைய போக்குகளை அகற்றக்கூடிய மாற்றங்கள் உள்ளூராட்சி அழிந்தொழியாது பாதுகாப்பதற்கு இன்றியமையாதன. 1
i. Dr. V. Kanesalingam, ibid, P.18a,
இ, 11 27

Page 111
தன்னலத் தொகுதிகளும்
1. பொதுக் குறிப்புக்கள்
(1) அரசியற் கட்சியின் இலக்கணம் : y - XI
இயல்களில் விளக்கிய ஆட்சிப்பொறியகம், ஆட்சிமுறைமை எனும் தேகத்தின் எலும்புக்கூடு போன்றது. தேகம் நன்கு
இயங்க இரத்தம், நரம்பு, தசை ஆகியவையும் அவசியம்.
அரசியற் கட்சிகளும் அவைகளோடு சார்ந்த மரபுகளும் ஒரு நாட்டு யாப்பின் இரத்தம், நரம்பு, தசை போன்றவை:
இருந்தும் இலங்கையின் யாப்பு விதிகளில் அரசியற் கட்சிகள்
பற்றி ஒரிடத்திலாகுதல் குறிக்கப்படவில்லை. தேசிய அரசுப் பேரவையின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரைப் பிரதம ராக ஜனதிபதி நியமிக்கவேண்டும் என்ற யாப்பு விதி 92/2
கட்சி முறைமையை மனதிற் கொண்டு வரையப்பட்டதாகும் கட்சிகளின் அமைப்பு, அவைகள் மக்களின் ஆதரவைப் பெற எடுக்கும் எத்தனம், கட்சி வளர்ச்சிக்கு உதவும் காரணிகள், ! ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு நடைபெறும் போட்டி, ஆட்சி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் போக்கு ஆகியன இன்றைய பெரும்பாலான நாடுகளில் முக்கிய இடம் வகிப்ப தைக் காணலாம் : கட்சிகளே அரசியலின் உயிர்நாடி என்று கூறுமளவிற்கு அவைகள் இடம் பிடித்துவிட்டன; அவைக
வின்றி அரசியலையே ஆராயமுடியாது,
மனித நடத்தையைத் தூண்டும் முக்கிய சக்திகளில் ஒன்று சுயநலமாகும். சுயநல அடிப்படையிலேதான் கட்சிகள் தாபிக்கப் படுகின்றன. கட்சிகள் மூலம் அந்தஸ்தும் அதிகாரமும் பணமும் பெறலாமென்ற ஆசையினலே, முக்கிய பொது விடயங்களில்
கணிசமான ஒருமைப்பாடுடையோர் கட்சிகளை அமைத்து
வளர்க்க முன்வருகின்றனர். பொதுநலனைக் காட்டும் நோக் கத்தை முன்வைத்து மக்கள் ஆதரவைப் பெற்ருல்தான் கட்சி யைச் சார்ந்தோர் சுயநலனை அனுபவிக்க முடியும், "தங்களது கூட்டுமுயற்சியால் ஏதாவதொரு அடிப்படையில் தேசிய நலனை
XIV அரசியற் கட்சிகளும்,
 
 
 
 
 
 

வளரச்செய்யும் நபர்களின் கூட்டமே கட்சியாகும்" என்று எட்மன்ட் வேக் 18ஆம் நூற்ருண்டு இங்கிலாந்துச் சூழ்நிலையில் கட்சிக்கு இலக்கணம் வகுத்தார். தங்களிலிருந்து வேறுபட்ட கருத்துடைய கூட்டங்களோடு போட்டியிட்டு, ஒர் அரசியல் அங்கமாகப் பணிபுரிந்து, மக்களின் வாக்குரிமைச் சக்தியால் அரசாங்க அதிகாரத்தைக் கட்டுப்படுத்தித், தங்களுடைய பொதுக் கொள்கைகளை நிறைவேற்ற எத்தனிக்கும் குடிமக்களின் அமைப்பே கட்சியென்று இன்றைய நிலைக்கேற்றவாறு கட்சிக்கு விளக்கங் கொடுக்கப்படுகின்றது. சர்வாதிகார அரசியல் முறைமை களில் அதிகாரத்திற்குப் போட்டியிடும் அமைப்புக்கள் இல்லை ஒரு கூட்டமே ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு, மக்கள் அதற்கு ஆதரவு நல்கவேண்டுமென்று கட்டாயப்படுத்துவ தினுல், அக்கூட்டத்தினரைக் கட்சியென்று அழைப்பது பொருத்த மற்றதென மேற்கத்திய சனநாயக வாதிகள் கூறுவர். 幌
(2) கட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் : இங்கிலாந் தில்தான் கட்சிகள் முதலில் தோன்றின எனலாம் அவைகள் உயர்குடிமக்களைப் பின்பற்றுவோர் தொகுதிகளாக ஆரம்பத்தில் இருந்து, பின்னர் மத்திய வகுப்பினரின் அரசியல் செல்வாக் கைப் பிரதிபலிக்கும் இரண்டாவது கட்டத்தை அடைந்தன அப்போது அவ்வகுப்பின் சிறப்புடையோரும் பாராளுமன்ற உறுப்பினரும் தமது கட்சிகள்மீது ஆதிக்கம் செலுத்தினர். இவர்களைக் கடந்த மூன்ருவது கட்டத்தில், பாராளுமன்றத் திற்குப் புறம்பாக, அரசியலையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டோரின்கையில் கட்சியின் கட்டுப்பாடு சென்றடைந்தது பொதுமக்களின் கருத்திற்கும் கட்சிகள் செவிசாய்க்கவேண்டிய நிலை ஏற்பட்டது. வாக்குரிமையும், மன்னனிடமிருந்து மக்க ளுக்கு மாறிய அதிகாரமும் விரிவடைய, பாராளுமன்ற உறுப் பினரையும் தேர்தல் தொகுதிகளிலுள்ள குழுக்களையும் அடிப் படையாக வைத்து அரசியற் கட்சிகள் துரித வளர்ச்சி எய்தின வென்று பொதுவாகக் கூறலாம். இத்தகைய கட்சிகளின் பிரதான நோக்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுதலாகும்: பாராளுமன்றத்திற்குப் புறம்பாகச் சட்டமன்ற ஆசனங்களைக் கைப்பற்றுவதையே முக்கிய நோக்கமாக இல்லாத கட்சிகளும் குறைந்த அளவில் தோன்றியுள்ளன.
மத, சமூக, அரசியல், பொருளாதார, வர்க்க, வேறு பிரச் சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கங்களை அடிப்படையாக வைத்துக் கட்சிகள் தோன்றி இயங்குகின்றன. 17ஆம் நூற் முண்டு மதவேற்றுமை இங்கிலாந்தை இரு கட்சிகளாகக் கூறு படுத்திற்று இன்று மேற்கு ஐரோப்பாவிலும் தென் ஆசியாவிலும் அரசியற் கட்சிகள்மீது மதவிடயங்கள் ஆதிக்கம்

Page 112
அரசு போன்றது. அரசுபோல் அதற்கும் சுறுசுறுப்பான அங்கங்
அனுப்பிவைத்தல், தல மத்திய அரசாங்கத் போட்டியிடும் அபேட்சகர்களைத் தெரிவதில்
செலுத்துகின்றன. பல்லின நாடுகளில் கலாசாரம், மொழி
போன்றவைகளும், சில நாடுகளில் முடியரசு, குடியரசு அல்ல கூட்டரசு உகந்ததா என்பது பற்றிய பிரச்சினைகளும், எல்லா நாடுகளிலும் விவசாயம், கைத்தொழில், வணிகம் போன்றவை பற்றிய கொள்கை வேறுபாடுகளும் அரசியற் கட்சிகள் தோன்றி இயங்குவதற்குக் காரணிகளாக அமைந்துள்ளன; 19ஆம் நூற் ருண்டு இறுதியிலிருந்து சோஷலிசம் வர்க்கம் சார்பான கருத்
துக்கள் பல கட்சிகளை ஆட்கொண்டுள்ளன. கட்சிகளின் கவி னத்தை ஈர்க்கும் காரணிகளில் பொருளாதாரப் பிரச்சினைகளே பிரதானமானவை யெனலாம். இருந்தும், "எல்லா வகையா மூலக்கூறுகளும் பலவகையான வழிகளில் கலக்கப்பட்டு: வரலாற்றலும், உளவியல் சூழ்நிலைகளாலும் நிர்ணயிக்கப்படுவ: தாகத்தான் கட்சிகள் இருக்கின்றன" யஅர். ஏச், ஸோல்ரோ சில கட்சிகளின் கொள்கைகளைவிட அவற்றின் தலைவரின் கவர்ச்சிக்கூறு மக்கள் ஆதரவைக் கட்சிக்குப் பெற்றுத்தரும் பலம்வாய்ந்த சக்தியாக இருக்கலாம்
(3) கட்சியமைப்பு : சில விதிவிலக்குகளுடன் இன்று பெரும்பாலான கட்சிகள் நிரந்தரமான அமைப்பைக் கொண் டுள்ளன. மாறும் சூழ்நிலைக்கேற்பப் பெருங் கட்சிகள் தங்கள் அமைப்பை மாற்றித் தொடர்ச்சியாக இயங்கும் பான்மையைக் காணலாம்: அப்படியானுல்தான் மக்களின் விசுவாசத்தைப் பெற்று, அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய பலத்தைக் கட்சி பெறமுடியும்; தற்காலிக நோக்கங்கள்மீது அமைக்கப்படும் கட்சிகள் தமது நோக்கம் கைகூட அழிந்துவிடும் தன்மையன நன்கு அமைக்கப்பெற்ற ஒரு கட்சி, அரசிற்குள் நிலவும் சிறு
கள், அமைதியாகப் பின்பற்றும் அங்கத்தினர், தலப்பிரிவுக கட்சித் தலைவர்களின் தெரிவு, கட்சிக் கொள்கைகளின் நிர்ணயம் ஆகியன உண்டு. மத்திய அமைப்பைவிட, நாடெங்கிலும் பரவி கட்சிக்கிளைகள், கட்சிக்குச் சார்பான இளைஞர் கூட்டிணைவுக மாதர் சங்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பெரிய சிக்கலான் அமைப்புகளையும் காணலாம். தனது கொள்கையையும், எதிர்க் ட்சிகளின் குறையையும் மக்களிடையே பரப்புவதற்கு செய்தித் தாள்களையும் தனித்துறை நிபுணர்களையும் விசேட கருவிகளையும் கட்சி அமைத்துக்கொள்கிறது. கட்சிக் கிளைகள் கட்சிக்கு ஆள் சேர்த்தல், மக்களின் விருப்பு வெறுப்பை மத்திய அமைப்பிற்கு கத் தேர்தல்களில்
பங்குபற்ற நிலைக்ே
போன்ற கடமைகளைச் செய்கின்றன. நாட்டின் சூழ் கட்சியமைப்பின் தன்மை மாறுபடலாம்.உதாரணமாக, ஓரினத்
கற்பக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தன்மையான மக்களும், ஒற்றையாட்சியின்கீழ் மத்திய அரசாங் கத்தின் அதிகாரம் முக்கியமாயுமுள்ள இங்கிலாந்தில் கணிசமான அளவு அதிகார ஒருமைப்பாடுடைய கட்சியமைப்பையும், சாதாரண அங்கத்தவர்கள் முக்கிய இடம் வகிப்பதையும் கட்சி நல்ல கட்டுப்பாட்டுடன் இயங்குவதையும் காணலாம்: சமஷ்டியாட்சியில் மாகாணங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ள ஐக்கிய அமெரிக்காவில் கட்சியின் மத்திய அதிகாரம் தளர்ந்து, மாகாணக் கிளைகளுக்கு அதிகாரம் பன்முகப்படுத்தப்பட்டிருப்ப தோடு, கட்சியின் தேசியக் கொள்கையை அங்கத்தவர்கள் அனுசரித்து நடக்காது விடக்கூடிய காரணிகளும் செயல் படுகின்றன:
臀 புரட்சியை நோக்கமாகக்கொண்ட கட்சிகளின் அமைப்
பிற்கு, லெனினின் கருத்துக்கள் வழிகாட்டியாய் அமையலாம்: மேற்கத்திய நாடுகளில் இருப்பனபோல் பெருந்தொகையான அங்கத்தவர்களைக் கட்சியில் சேர்த்து, மக்களின் வாக்குகள்
மூலம் அரசாங்கத்தைக் கைப்பற்றுதல் சாத்தியமில்லையென்றும்
துரித புரட்சிக்குக் கட்டுப்பாடுடைய சிறு தொகையினரைக்
கொண்ட கட்சியே சிறந்ததென்றும் லெனின் கருதினர். பாமரர்
வகுப்பினர் தாமாகவே முதலாளிவர்க்கத்திற்கெதிராகப் புரட்சி
செய்யும் வகுப்புணர்ச்சி பெறுவரென்பதை லெனின் ஏற்க வில்லை. முதலாளிவர்க்கத்தின் ஏமாற்றுத் தந்திரமும், அவர்கள்
பாமரருக்குக் கொடுக்கும் சிறு சலுகைகளும் பாராளுமன்றப் பாதைமூலம் சோஷலிசத்தை அடையமுடியுமென்ற தவறன மனப் பான்மையைப் பாமரர்களிடம் தோற்றுவிக்கின்றன: ஜீவனுேபாயத்திற்கு நாளாந்தம் உழைக்கவேண்டிய பி ஈடுபட்டிருக்கும் தொழிலாளர் வரலாற்று-உலோகாயத நு பங்களை விளங்கி, வர்க்க உணர்ச்சி பெற்று, சமூகப் மூலம் தங்களுக்கேற்ற பொருளாதார அமைப்பை ஏற்படுத்துவர் என்று எதிர்பார்க்கமுடியாது. தொழிலாளர் தங்கள் சேவை நிபந்தனைகளை உயர்த்தத் தொழிற்சங்கங்களை அமைப்பதோடு நின்றுவிடுவார்கள்: சோஷலிச வாதிகளாக மாறமாட்டாகள்
கட்சி, கட்சியின்
அறிவுத்திறனும் சோஷலிச மனப்பான்மையுமுடைய மத்திய வகுப் பினர் மையப் பகுதியின் இதயம் போன்றவர்கள். இந்த நடுத்தர வகுப்பினர், முதலாளித்துவம் சிருஷ்டிக்கும் கருத்தியல் கட்டு மானத்திற்கு அப்பாற் சென்று பாமரர்களைப் புரட்சிக்குத் தயார் W呜、W
நடத்தித் தொழிலாளரைச் சோஷலிசத்திற்கு இட்டுச்செல்வர்
பாட்டாளிவ க்கத்தின் முன்னணிப்படை பொதுவுடைமைக் 7' உள்மையப்பகுதியில் 'நம்பிக்கையுடைய, அனுபவமிக்க, உறுதியான தொழிலாளர் இருப்பார்கள்.
பிரச்சினையில்
செய்து தகுந்த நேரத்தில் புரட்சியை முன்னின்று

Page 113
- 484 -
இவர்கள் இக் கடமையில் முழுநேர்த்தையும் செலவிடல் அவசியம் இரத்தப் புரட்சியையே தமது இலட்சியமாகக்கொண்ட உள் மையப் பகுதியினர், இரகசியமாக இயங்குவதற்கு அவர்கள் தொகை அதிகமாக இருக்கக்கூடாது. வர்க்க உணர்ச்சிமிக்க, சுயநலமற்ற, வருவதுணரக்கூடிய" தொழிலாளர்களே கட்சி யங்கத்தவர்களாகச் சேர்க்கப்படுவர். இவர்கள் தொழிற்சங்கங் களுக்கு உள்ளும் புறமும் இருக்கும் பாட்டாளி மக்களிடையே கட்சியின் கொள்கைகளைப் பரப்ப உதவுவர். பின்தங்கிய நாடு களில் சிறு தொகை விவசாயிகளும் கட்சியங்கத்தவர்களாக இருக்கலாம்.
அதிகாரத்தைக் கைப்பற்றச் செல்லும் பாட்டாளிகள் படையின் உயர் பணியாளர் அமைப்பாகிய பொதுவுடைமைக் கட்சியை ஒன்றிப் பிணைப்பதும் வழிகாட்டுவதும் மாக்சீயமாகும். கட்சி இறுகிய கட்டுப்பாட்டுடன் இயங்கினல்தான் எதிரிகளை வெல்ல முடியும். அது "ஜனநாயகரீதியான மையப்படுத்தல்" என்னும் நெறியைப் பின்பற்றி ஒழுகவேண்டும், அதன்படி 1 கட்சி அங்கத்தவர்களால் தெரிவுசெய்யப்பட்ட கட்சி அலு வலர்கள் அங்கத்தவர்களுக்குப் பொறுப்பு வகிக்கவேண்டும் 2 சிறுபான்மையோர் பெரும்பான்மையோர் முடிவிற்குக் கட்டுப்படவேண்டும்: 3. கட்சியின் மேற்தள அமைப்பின் முடிவுகளுக்குக் கீழ்த்தள அமைப்புக்கள் கட்டுப்படவேண்டும் நடைமுறையில் "மையப்படுத்தல்" ஜனநாயகப் பண்பிலும் பார்க்க வலுப்பெறுவது இயற்கையாகும். அமைப்புக்களிடையே கட்சிக் கொள்கைபற்றிக் கட்டுப்பாடற்ற வாத எதிர்வாதங்கள் இருக்கவேண்டுமென்பது கோட்பாடாயினும், பேச்சுச் சுதந்திர மும் பெரும்பான்மை மூலம் முடிவெடுப்பதும் எப்போதும் பின் பற்றப்படுமென்று எதிர்பார்ப்பதற்கில்லை.
(4) கட்சிமுறைமைகளும், ஆட்சியியலும், நன்மை தீமைகளும்: கட்சிகளை அமைக்கவிடும் அரசின் அனுமதியை 鷺 அடிப்படையாக வைத்து, 1. திறந்த அல்லது கட்டுப்படுத்தப் படாத 2 அடைத்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட, இரண்டு கட்சி முறைமைகளைக் காணலாம். திறந்த முறைமையில் கட்டுப் பாடற்ற கட்சிப்போட்டி அனுமதிக்கப்படுகின்றது; இங்கு ஒரு இரு அல்லது பல கட்சிகள் இயங்கலாம். ஒரு, இரு பல கட்சிக ளென்னும்போது, ஆட்சியில் முக்கியத்துவம் வகிக்கும் பலம் வாய்ந்த கட்சிகளே குறிக்கப்படுகின்றன; முக்கியத்துவ மற்ற வேறு சிறு கட்சிகளும் அதே நேரத்தில் இருக்கலாம் இக்கருத்தில் ஐக்கிய-அமெரிக்க மாகாணங்கள் சிலவற்றில் ஒரு கட்சி முறையும், இங்கிலாந்திலும் ஐக்கிய அமெரிக்காவிலும்
(மத்திய அரசியல்பற்றி) இருகட்சி முறைகளும், சுவீடினிலும்
 

ܚܙܝ 485 ܕܢ.
சுவிற்சலாந்திலும் பலகட்சிமுறைகளும் நிலவுவதைக் காணலாம். அடைத்த முறைமை மரபார்ந்த சர்வாதிகார நாடுகளிலும் கம்யூனிச நாடுகளிலும் செயற்படுகின்றது. ரூஷியாவில் கம்ய னிசக் கட்சி ஒன்றே யாப்பினுல் அங்கீகாரம் பெற்றது. சீன மக்கள் குடியரசில் ஆட்சியாளரின் கட்சிக்கு அனுசரணையாக இயங்கும் வேறு கட்சிகளும் அனுமதிக்கப்படினும், உண்மையில் ஒருகட்சியாட்சியே நடைபெறுகின்றது . -
திறந்த அடைத்த கட்சி முறைமைகளுக்கேற்பவும் அவை ஒவ்வொன்றினுள் நிலவும் நடைமுறைப் பிரிவுகளுக்கம்ையவும் கட்சிகள் அரசியலில் வகிக்கும் பங்கும் மாறுபட்டதாயிருக்கும்.
(1) பிரதிநிதித்துவம்: ஜனநாயக ஆட்சி மக்கள்-பிரதிநிதிக ளின் ஆட்சியெனலாம்; இன்று பிரதிநிதிகளைத் தெரிவதற்கு இரு கட்டத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. முதலில் கட்சிகள் வேட்பாளரைத் தெரிய, வேட்பாளரிலிருந்து வாக்காளர் பிரதி நிதிகளைத் தெரிகின்றனர். ஒரு தேர்தல் தொகுதிக்கு ஒன் றிற்கு மேற்பட்ட கட்சிகள் வேட்பாளரை நிறுத்துவதினுல், பிரதிநிதிகளைத் தெரிவதில் மக்களுக்கு ஓரளவு உரிமை உண் டென்று கூறலாம். வறிய வேட்பாளருக்குக் கட்சியின் நிதியி லிருந்து தேர்தல் செலவுக்கெனப் பணஉதவி சாதாரணமாகக் கிடைக்கின்றது. கட்சியின் செல்வாக்கும் அதன் வேட்பாளருக் குக் கிடைக்கின்றது. கட்சி முறைமை நன்கு ஏற்கப்பட்ட நாடு களில், கட்சிச்சார்பற்ற வேட்பாளர்கள் சாதாரணமாக வெற்றி பெறுவதில்லை. எனவே, நிலவும் கட்சிகளை ஏற்காத மக்களுக்கு, விசேடமாக ஒரு இரு கட்சிகள் இயங்கும் நாடுகளில் பிரதி நிதித்துவம் கிடைக்கும் வாய்ப்பு இல்லாதிருப்பது ஒரு குறை யென்று கூறலாம் நடைமுறையிலுள்ள தேர்தல் முறையைப் பொறுத்துப் பிரதிநிதிகளைத் தெரிவதில் கட்சியின் செல்வாக்குக் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கும் ; உதாரணமாக விகித சமப் பிரதிநிதித்துவமும் பட்டியல்முறையும் அமுலில் இருக்கும் நாடுகளில், கட்சிகள் நிறுத்தும் வேட்பாளரில் யார் தங்களுக்கு உகந்தவரென்று காட்டும் வாய்ப்பு வாக்காளருக்கு அதிகம் , கிடையாது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காகச் சில நாடு களில் சில கட்சிகள் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய கொள்கைகளையும் திட்டங்களையும் கடைப்பிடிப்பதினுல், அக் கட்சிகள் தேசியத் தன்மையை இழந்துவிடுகின்றன இன மத மொழிச் சிறுபான்மையினர் பெருங்கட்சிகள்மூலம் பிரதிநிதித் துவம் பெறமுடியாத நிலை ஏற்படுகின்றது. சிறுபான்மையினர் தமக்கெனச் சிறு கட்சிகளை அமைக்கவேண்டியுள்ளது. சர்வாதி கார ஒருகட்சி நாடுகளில் ஆளுங்கட்சி நியமித்த அல்லது ஏற்றுக் கொண்ட வேட்பாளரையே வாக்காளர் உறுதிசெய்யவேண்டி யுள்ளது வாக்காளர்களுக்குத் தாம் விரும்பிய ஒருவரைத்

Page 114
ஜனநாயகத்தன்மை வாய்ந்ததென்று மாக்சீய வாதிக
(2) சமூக பொருளாதார வாழ்க்கையில் வகிக்கும் பங்கு 1ள் ஒரு சிலரின் ஆதிக்கத்தின் கீழ் அவர்களின் நலனை ட்டு இயங்கும் தன்மையனவாயிருக்கலாம். ஆனல்
 

முன்வருவதைக் காணலாம். ஆளுங்கட்சியின் ஆதரவாளர்களான 'அரசியல் அதிகாரிகளின்' மேற்பார்வையில் பிராந்திய திட்டங் களை அமுல் செய்யும்முறை எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பைத் தடுத்து முன்னேற்றத்தைத் தடை செய்யலாம். சில கட்சிகள் தேர்தல் விடயங்களில் மாத்திரம் முழுக்கவனத்தையும் செலுத் தாது, சமூகநலப் பணிகளிலும் மக்களின் அறிவு வளர்ச்சித் திட்டங்களிலும் ஈடுபடுவதைக் காணலாம். கட்சியைச் சார்ந்த தனிமனிதர்களுக்கிடையிலும் தொகுதிகளுக்கிடையிலும் நிலவும் பொதுப் பற்றுதல்களையும் நம்பிக்கைகளையும் வலியுறுத்தி, வேற்றுமைகளை இயன்றளவு குறைத்து, அவைகளுக்கிடையே ஒற்றுமையையும் ஒத்திசைவையும் செயற்படுத்த முனையும் அரசியற்கட்சி அரசில் ஒட்டிணைவாற்றலை உருவாக்கும் பிரதான கருவி யென்று வருணிக்கப்பட்டுள்ளது. பலம்வாய்ந்த அமைப் புடைய கட்சிகள் நாட்டில் வன்முறையோ, இராணுவப் புரட் சியோ, ஏதேச்சாதிகார ஆட்சியோ தோன்றுவதைத் தடுத் துள்ளது வரலாருகும். ஆனல், சில நாடுகளில் கட்சிநலன் பொதுநலனிலும் மேலோங்கியதால் நாடே பிளவுறுவதையும் காணலாம். சர்வாதிகார ஒருகட்சி முறைமைகளில் கட்சித் தலைவர்களின் இலட்சியம், சுயநலவேட்கை, அதிகாரமோகம் ஆகியன ஜனநாயகக்கட்சித் தலைவர்களினதுபோன்ற தெனினும், அங்கு அதிகாரத்தைக் கைப்பற்றிய கட்சி நிரந்தரமாக ஆட்சி செய்யும் தனியுரிமையைத் தனதாக்கிக்கொண்டு, மக்களின் ஆதரவிற்குப் போட்டியிட எத்தனிக்கும் கட்சிகளைத் தடை செய்வதோடு, செய்திச் சாதனங்கள், கல்விச்சாலைகள், கலா சார விஞ்ஞான தொழிற் சங்கங்கள் மூலம் தனது கொள்கை களையும் இலட்சியங்களையும் திட்டங்களையும் மக்கள் தமதாக்கிக் கொள்ளும்படி செய்ய எத்தனிக்கும்; ஆட்சியாளரின் கருத்துக்கு எதிரான கருத்திற்குத் தடைவிதிக்கும் கட்சிக்கு எதிரானுேர் தண்டிக்கப்படலாம். அப்படியானல்தான் உயர் இலட்சியத்தை நோக்கி நாடு துரித முன்னேற்றம் அடையமுடியுமென்று கூறப் வடுகின்றது,
(3) அரசாங்கம்: அரசியற்கட்சிகள் உள்ள நாடுகளில் உண்மை யான பொதுச்சித்தத்தை உருவாக்க முடியாதென்று று சோ அவர்கள் கூறியுள்ளார் அங்கு கட்சிசார்ந்த தனிமனிதன் தனது மனச்சாட்சிக்கு மாருன, கட்சிக் கருத்துக்களை ஏற்கவேண்டி யுள்ளது கட்சித் தலைவர் சில உண்மைகளை மக்களிடமிருந்து மறைக்கவேண்டியுள்ளது. எனவே உண்மையான பிரதிநிதித்துவத் திற்கும் நேர்மையான பொதுவாழ்விற்கும் கட்சிகளில்லாச் சனநாயகம் சிறந்ததென்று கொள்ளினும், முன்காட்டிய நன்மைக ளோடு அரசாங்கம் நன்கு செயற்படுவதற்கும் கட்சிகள் பெரு
இ. 1928

Page 115
ليس 488 سنس மளவிற்கு உதவுகின்றன. ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் எவ்வளவு வாக்காளர் உண்டோ அவ்வளவு தனிக்கருத்துக்கள் நிலவுவது இயற்கையாகும் இக்கருத்துக்களை ஒன்றுசேர்த்து விளக்கமான கருத்துக்களாகக் கட்சிகள் பகுக்கின்றன. பகுப் புக்கள் ஓரளவு செயற்கையானதாயினும், அவற்றைப் பிரதி பலிக்கும் கட்சிப் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றக் கட்சிகள்? சுயேச்சைப் பிரதிநிதிகளைப் போலன்றிக் கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் நின்று ஒன்றிணைந்து இயங்குவர். ஒரு அல்லது சில பாராளுமன்றக் கட்சிகளிலிருந்து அமைக்கப்பெற்ற, அல்லது அவற்றின் ஆதரவைப் பெற்ற அமைச்சரவை, சனதிபதி, அல்லது சமஷ்டிக் கழக நிர்வாகங்கள் பல நாடுகளில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடித்துவதைக் காணலாம். இருகட்சி முறையில், ஒருகட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதிஞல், ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்க முடிகிறது; பல கட்சிமுறைமை நிலவிய பிரான்சின் நாலாவது குடியரசு வரை உறுதியற்ற கூட்டரசாங்கங்களே தோன்றியுள்ளன. ஆனல், பலகட்சிமுறைமை உறுதியற்ற அரசாங்கத்திற்கும் இருகட்சிமுறைமை உறுதியான, திறமையான அரசாங்கத் திற்கும் கட்டாயம் வழிகோலுமென்று கொள்ளலாகாது: உதாரணமாகப் பல கட்சிகளுள்ள ஸ்காந்திநேவியாவிலும் சுவிற் சலாந்திலும் உறுதியும் திறமையும் வாய்ந்த நிர்வாகங்களை அமைக்க முடியும்போது, இரு கட்சிகளையுடைய அமெரிக்காவில் நிர்வாகத்திற்கும் சட்டமன்றத்திற்கு மிடையே வேண்டி ஒத்துழைப்புக் கிடையாது, பல காலங்களில் ஆட்சி சுமுக் மாக நடைபெறவில்லை என்பது கவனித்தற்பாலது. எனவே, திறமையான ஆட்சி கட்சிகளின் தொகையில் மாத்திரமன்றி நாட்டும்க்களின் பண்பு, அரசியல் பெறுமானங்கள் பற்றிய அவர்கள் நம்பிக்கை, ஆட்சி நிறுவனங்களை இயங்கச் செய்யும்
தள்ளாடாப் பெரும்பான்மையை அரசாங்கத்திற்குக் கொடுத்து அது மக்கள்முன் வைத்த கொள்கைகளைத் திட்டமிட்டுச் செயற் படுத்தும் வாய்ப்பைக் கட்சிமுறைமை அளிப்பதோடு, இணைப் பற்றுச் சிதறிக்கிடக்கும் மன்றங்கள், குழுக்கள், திணைக்களங்கள் போன்று பிணைக்கப்பட வேண்டிய நிறுவனங்களைப் பின்னிப் பிணைத்து ஆட்சிப்பொறியகத்தை நன்கு இயங்கவைக்கும் அரசியற்கட்சிகள், அரசியற் கலைக்குக் கிடைத்த முக்கிய நவீன கருவிகளில் ஒன்றெனலாம், அரசாங்கம் சில வேளைகளில் கட் நலனுக்காகத் தேசநலனைப் புறக்கணித்து நடக்கும்போதுப்
தனிமனித சுதந்திரங்களைப் பறிக்கும்போதும் எதிர்க்கட்சிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

سنة 489 يسبب • ም இவ்வெத்தனங்களைப் பொறுப்புடன் கண்டிப்பதிஞல் ஏற்படும் நன்மைகளும், அதிகாரப் போட்டியினல் கட்சிகள் முறைதவறி நடக்கும்போது விளையக்கூடிய தீமைகளும் இயல் W/6இல் ஆராயப்பட்டுள்ளன. பாசிச கம்யூனிச ஒருகட்சிமுறை பெரும் பாலான மக்கள் தங்களைத் தாமே ஆளும் தகுதியற்றவர்கள் என்னும் கொள்கையில் கட்டப்பட்டது; அவர்களை ஆளுங் கட்சியும் அதன் தலைவர்களும் வழிநடத்திச் செல்லல்வேண்டும்: கட்சியின் உயரங்கத்தவர்கள் ஆட்சி நிறுவனங்களில் பொறுப் பான பதவிகளை வகிப்பார்கள் சட்டமன்றத்தின்மீதும் கட்சி ஆதிக்கமுடையது; சமூக பொருளாதார தாபனங்கள் கட்சி யால் கட்டுப்படுத்தப்படுகின்றன; அடக்குமுறை, ஆட்சியாளரின் அரசியலதிகாரத்தையும், கனவியல் கோட்பாடுகளையும் பாது காக்கும். இரட்டை மாட்டு வண்டியின் பலம்வாய்ந்த ஆளுங் கட்சியாகிய மாடு ஒரு திசை நோக்கிச் செல்ல எதிர்த்திறமாகிய மாடு மறுதிசை நோக்கி இழுக்க எத்தனிப்பது ஆளுங்கட்சியின் இலட்சியத்தை அடைவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்ற காரணத்தால் எதிர்க்கட்சிகள் ஒழிக்கப்படுகின்றன. ஒரு கட்சியின் இலட்சியம் தவருனதாக இருக்கலாம்; பல கட்சிகளின் கருத்துப்போட்டி கூடிய உண்மையை அடைய வழிவகுக்கும் என்பது மேற்கத்திய சனநாயகவாதிகளின் நிலையாகும் 2. இலங்கையின் கட்சி வளர்ச்சி A.' தோற்றுவாய் ! 1928இல் டொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு விஜயம் செய்யுமுன் இங்கு ஆரசியற் கட்சிகள் இயங்கவில்லையென்று பொதுவாகக் கூறலாம். கட்சிகள் தோன்றி வளர்வதற்கான அரசியல் சூழ்நிலையும் ஆட்சிமுறையும் இல்லா திருந்ததே இதற்குக் காரணமாகும் தேசாதிபதியாட்சியோ பொறுப்பும் அதிகாரமும் போதியளவுக்கில்லாத சட்டமன்றமோ செயற்படும்போது அரசியற் கட்சிகள் அவசியமற்றவை 1924இல் இலங்கையரைப் பெரும்பான்மையினராகக்கொண்ட சட்டநிரூபண சபைக்குக் கூடிய அதிகாரம் வழங்கப்பட்டாலும், அதன் அங்கத்தவர்களுக்கு நிர்வாகப்பொறுப்பு மறுக்கப்பட்டதி ஞல், அவர்கள் நிரூபணசபையின் ஆதரவைப் பெற்றுக் கட்சி ரீதியாக ஒன்றிணைந்து ஆட்சி நடத்தும் வாய்ப்பு உருவாக வில்லை. இலங்கைத் தேசிய மகாசபை போன்ற நிறுவனங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் சட்டநிரூபண சபையில் அங்கம் வகித் திருந்தாலும் அவர்கள் அங்கு கட்சிரீதியாக இயங்கவில்லை:
For some facts and figures on Ceylon an indebted to C. A. Woodward's The Growth of a Party System in Ceylon,

Page 116
سے 490 |
* பொறுப்பு அதிகாரச் சேர்க்கை" நெறியை உள்ளடக்கிய புதிய யாப்பை டொனமூர் ஆணைக்குழு சிபார்சுசெய்தபொழுது அமைச்சரவையாட்சிமுறையை நிராகரித்துவிட்டு, நிர்வாகக் குழுமுறையை ஏற்றதற்கு முக்கிய காரணம், சம்பிரதாய அமைச்சரவையாட்சிமுறைக்கு அத்தியாவசியமான அரசியற் கட்சிகள் தேசிய அடிப்படையிலான பொருளாதார அரசியல் யாப்புறு காரணிகள் மீது கட்டப்படாது, குறுகிய இன மொழி, மத உணர்ச்சிகளால் உந்தப்பட்டு ஜனநாயக நெறிகளை மீறி இயங்குமென்று நம்பியதாகும். எனவே, கட்சிமுறைமை எழுவ தைத் தடுக்கக்கூடிய நிர்வாகக்குழு அரசியலமைப்பு இலங்கை மக்களின் பண்பை ஆழ்ந்தறிந்த ஆணைக்குழுவின் முடியைப் பிரதிபலித்தது:
1946இல் அமைச்சரவைமுறை திணிக்கப்படும்வரை அரசியல் வானில் கட்சிகள் முற்ருகத் தோற்றமளிக்கவில்லையென்று கொள்ளலாகாது. 1919இல் தோன்றிய தேசியமகாசபையை விட, 1927இல் தொழிற் கட்சியும், 1928இல் யூனியனிஸ்ட் கட்சியும், 1931இல் லிபறல் லீக்கும், அதே ஆண்டில் சுதந்திர தொழிற் கட்சியும் அமைக்கப்பட்டன. சர்வசன வாக்குரிமை அடிப்படையில் நடைபெற்ற 1931 தேர்தலில், இக் கட்சிகளின் சார்பிலான வேட்பாளர்கள் 37 தேர்தல் தொகுதிகளில் போட்டி யிட்டு 31 ஆசனங்களைக் கைப்பற்றினர். ஆனூல், கட்சி யடிப் படையில் தேர்தல் நடைபெறவில்லை : கட்சிகள் வேட்பாளரை நியமிக்கவுமில்லை, தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடவுமில்லை; கட்சித் தலைவர்கள் வேறு கட்சிகளைச் சார்ந்த வேட்பாளருக்கும் ஆதரவு நல்கினர்; ஒரு தொகுதியில் ஒரு கட்சியின் சார்பில் ஒன்றிற்கு மேற்பட்ட வேட்பாளர் போட்டியிட்டனர். சாதி, இனம், மதம், வாழிடம், பணம், செல்வாக்கு ஆதியன அவர்க ளின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாய் அமைந்தன. இத்தன்மை வாய்ந்த தேர்தல் முறை அரசியல் கட்சி வளர்ச்சிக்கு உகந்த சூழ்
நிலையல்ல ; அத்தோடு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தாம்
விரும்பிய நிர்வாகக்குழுவிற் சேர்வதற்கும், அமைச்சராவதற்கும் கட்சிக் கட்டுப்பாட்டிற்குள் நின்று இயங்கும் நிர்ப்பந்தம் இன்றிப் பணம், செல்வாக்கு, இனம், பிறருடன் செய்த ஒப் பந்தம், ஆகியவற்றைப் பயன்படுத்தியதும் கட்சி வளர்ச்சியைத் தடுத்தது ; பிரதிநிதிகள் கட்சிநலனை மதியாது தத்தம் நிர்வாகக் குழுவின் நலனைப் பேணும் ஆர்வமும் கட்சி வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருந்தது; இவற்ருல் 1936 தேர்தல் தறுவாயில்
1. சுயேச்சையாளர் 15 : 4 தொகுதிகளில் தேர்தல் பகிஷ்கரிக்கப்பட்டது.
(அரசசபையின் மொத்தத் தெரிவுப் பிரதிநிதிகள் தொகை 50 ஆக இருக்
gaorti)

491 ܚ
கட்சிகள் நலிவுற்றுவிட்டன: லிபரல் லீக்கும் யூனியனிஸ்ட் கட்சியும் இறந்துவிட, தொழிற்கட்சி தனியொருவரின் நிறுவன மாகக் குன்றியது. 1984இல் சிங்கள மகாசபையும் 1935இல் லீ ச. ச. கட்சியும் ஆரம்பிக்கப்பட்டாலும், இரண்டாவது அரச சபையில் கட்சிகள்பேரில் சில பிரதிநிதிகள் வீற்றிருந்தாலும், அவர்களின் தேர்தல் வெற்றிக்கான காரணிகளும், சட்ட மன்றத்தில் அவர்கள் நடந்துகொண்ட முறையும் முதலாம் அரசசபைக் காலத்தியது போன்றிருந்தன;
பாராளுமன்ற அமைச்சரவை முறைமையைச் சிபார்சு செய்த சோல்பரி ஆணைக்குழு, இனரீதியான கட்சிகள் தோன்றுவது மிகவும் சாத்தியமென்றும், சமூக பொருளாதார ரீதியில் கட்சிகள் அமைக்கப்படும்வரை சிறுபான்மையினருக்கு ஆட்சியில் பங்குபற்றும் வாய்ப்புக்கிட்டாதென்றும் கருதினலும், சிறுபான்மையினர் அடக்குமுறை அட்டூழியங்களுக்கு ஆளாக மாட்டார்களென்று நம்பியது; திரு. டி. எஸ். சேனநாயக்கா நாட்டை நல்ல முறையில் வழிநடத்துவாரென்று கூறினலும் யாப்பின் பல துறைகளிலும் ஆங்காங்கு சிறுபான்மையினருக் கான காப்பீடுகள் பலவற்றைப் புகுத்தியது. 1947 தேர்தலில் முன்பு நிலவிய கட்சிகளும், தேர்தலுக்கென்றே நிறுவப்பட்ட கட்சிகளும் போட்டியிட்டன. ஐ தே.க., ல, ச: ச.க. க.க. தொ.க. த. கா. இல: இந் காங்கிரஸ், ஐக்கிய லங்கா காங் கிரஸ், சுவராஜ் கட்சி ஆகியனவே போட்டியிட்ட கட்சிகளாகும்: அடுத்த ஆறு பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களிலும் பழைய கட்சிகள் பலவும், அவைகளிருந்து பிரிந்து சென்ற அங்கத்தவர் களால் அமைக்கப்பட்ட கட்சிகளும், காலத்திற்குக் கால ம் தோன்றிய புதிய கட்சிகளும் பங்குபற்றியுள்ளன ; அவற்றில் சில மறைந்துவிட்டன. இதுகாறும் குறிப்பிட்ட கட்சிகளைவிட சுருக, வி. ல. ச. ச. க., த க. (பு) ல. ச. ச. க, ஈ. த. ஒ: மு. புத்த குடியரசுக் கட்சி, குடியரசுக் கட்சி, சுதந்திர சோஷலிசக் கட்சி, ஜா வி. பெ. எல். பி. பி. எஸ். எம். பி. லங்கா ஜாதிக பெரமுனை, வி. வி. பி. ஆதியனவும் தேர்தல் களில் போட்டியிட்டுள்ளதைக் காணலாம்g
இரு கட்ட வளர்ச்சி : கடந்த கால்நூற்ருண்டுக் கட்சி வளர்ச்சியில் இரு முக்கிய கட்டங்கள் காட்சியளிக்கின்றன. 1956க்கு முற்பட்ட பகுதியைப் பிரமுகர் கட்சிக் காலம் என்றும், பிற்பட்ட பகுதியைச் சமூகக் கட்சிக் காலம் என்றும் ஆசிரியர்கள் வரையறுத்துள்ளனர்.
(1) பிரமுகர் கட்சி ஆரம்ப கட்டம் அமைச்சரவை ஆட்சி முறையோடு 1947இல் ஆரம்பமாகியதெனலாம். இக்கால கட்டத்தில் கட்சிகள் தனிப்பட்ட பிரமுகர்களால் அமைக்கப்

Page 117
பெற்று, அவர்களின் அதிகார நலனுக்காக, அவர்களையே மையமாகக்கொண்ட அமைப்புடன், அவர்களினல் உருவாக்கப் பட்ட கருத்துப்போக்குடன், அவர்களால் வழிநடத்தப்பட்டன. அரசசபைக் காலத்தில் அதிகாரத் தி லிருந்த பிரமுகர்கள் தொடர்ந்து அதிகாரத்தை அனுபவிக்குமுகமாக ஐ.தே. கட்சியை உருவாக்கினர்; அக்கட்சியிலிருந்து விலகிய சிலர் அதிகார நோக்கத்திற்காகச் சுதந்திரக் கட்சியை தாபித்தனர்; தமிழ்க் காங்கிரஸ், இல: இந் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் பாராளு மன்றத்துக்குப் புறம்பான நோக்கங்களுக்காகத் தோன்றினலும் அவைகள் பிரமுகர்களின் நலனுக்காகவே தொடர்ந்தியங்கின எனலாம். பிரமுகர்களின் வளர்ச்சிக்குத் துணைபுரிவதற்காகக் கட்சிகளின் அமைப்பிலும் பிரமுகர்களே முக்கிய இடம் வகித் தனர். மாக்சீயக் கட்சிகள் ஏனைய கட்சிகளிலும் பார்க்க நன்கு அமைக்கப்பட்டிருப்பினும், இருவகைக் கட்சிப் பிரமுகர்களும் தம்மைச் சார்ந்த தன்னலத் தொகுதிகள், தொழிற்சங்கங்கள் போன்றவற்றின்மீது கொண்டிருந்த செல்வாக்கினல், தமது பிராந்திய மத்திய அமைப்புக்களில் அங்கத்துவம் பெற்றிருந் தனர், மாக்சீயக் கட்சிகளை ஆதரித்த வாக்காளர் அக்கட்சிகள்
மேல் கூடிய விசுவாசமுடையவர்களா யிருப்பினும், பிரமுகர் களின் தனிப்பட்ட செல்வாக்கே அவர்களின் தேர்தல் வெற்றிக் குப் பெருமளவில் ஏதுவாயிருந்தது. பிரமுகர்களே கட்சியையும் வாக்காளர்களையும் தொடர்புபடுத்தினர்; கட்சிக் கோட்பாட் டைப் பெருமளவிற்கு நிர்ணயித்தனர்; இருந்தும் கட்சியோடு தொடர்புடைய அமுக்கத் தொகுதிகளின் நலன்கள், கோட் பாட்டை உருவாக்குவதில் பங்குகொள்ளவில்லையென்று கூற முடியாது. கோட்பாடு தெளிவற்றதாயும், பல கருத்துக்களை அகப்படுத்தி இணைத்ததாயும் இருந்தது; இதனுல் பலவகைத் தன்னலத் தொகுதிகளையும் வெளியிலுள்ள பலவகைப் பிரமுகர் களையும் கட்சி தன்னகத்தே ஈர்க்கமுடிந்ததோடு, பிரமுகர்களும் அரசியல் நலன் கருதிச் சூழ்நிலைக்கேற்பக் கட்சிவிட்டுக் கட்சிக்குத் தாவ முடிந்தது; 臀W
(2) சமூகக் கட்சி: இரண்டாவது கட்டத்தில் பிரமுகர்களின் கட்சிகள் சமூகக் கட்சிகளாக மாறின; இம்மாற்றம் படிப்படி யாகவே ஏற்பட்டது. 1947, 1952 தேர்தல்களில் சிறுபகுதி வாக்காளரே கட்சிக்காக வாக்களித்தனர். பாராளுமன்றத்திற்கு உள்ளும் புறமும் எதிர்த்திறத்தினர் ஆட்சியாளருக்கு எதிராக மேற்கொண்ட பிரசாரத்தினலும், உறங்கிக்கிடந்த சமூக கலா சார பெரமுனைகளின் விழிப்பினலும், ஐ. தே. கட்சியின் ட்சியில் திருப்தியற்ற தொகுதிகள் 1956 தேர்தலில் பிரமுகர் காகவன்றிக் கட்சியடிப்படையில் வாக்களித்து, மg ஐ முன்
 
 
 
 
 
 
 

னணியை ஆட்சிப்பீடத்தில் அமர்த்தின; முன்னணியும் தன்னை ஆதரித்த சிங்கள வாக்காளரின் விருப்பத்தைச் செயல்படுத் தியது. ஏனைய கட்சிகளும் சிங்கள வாக்காளரின் விருப்பத்தைப் பிரதிபலிக்கும் கொள்கைகளைத் தமதாக்கி, : சிங்களத் தேசிய சோஷலிசக் காட்சியை'ச் சிங்கள மக்கள் மனதில் பதிய வைத்து, வாக்காளருக்குக் கட்சியே பொருள்தரும் அரசியல் அலகாகும் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றன. ஐ.தே. க. இம் முயற்சியில் முன்னுேடியாகும்; மாக்சீயக் கட்சிகளும் தமது நெடுங்கால தேசிய நெறிகளைப் புறக்கணித்து, சிறுபான்மை யினர் பெருமளவில் கட்சிவிட்டு வெளியேறியதையும் பொருட் படுத்தாது, இனவாதத்தை மேற்கொண்டு, சிங்கள வாக்காளரின் விருப்பத்தைப் பிரதிபலிக்கும் கொள்கைக்கு மாறின. கட்சி யமைப்பிலும் பிரமுகர்களின் முக்கியத்துவம் குறைந்து, மக்க ளுக்குக் கூடிய இடம் அளிக்கப்பட்டது. கட்சிகள் வாக்காளர்க ளுடையது என்ற கருத்தை அவர்கள் மனதில் ஏற்படுத்த ஒழுங்கு முறையான அமைப்பு அவசியமாயிற்று. 1965இலும் 1970இலும் ஐ தே, கட்சியும், 1956இல் சுதந்திரக் கட்சியும் தோற்கடிக் கப்பட்ட பின் கட்சியமைப்பில் வாக்காளரைக் கூடுதலாகப் பங்குகொள்ளச் செய்து, அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கு அமைப்பில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன; பிரமுகர்கள், தமது அரசியல் வாழ்வு குன்ருதிருப்பதற்காக இம் மாற்றத் திற்குத் தடையாய் இருக்கவில்லை. கட்சிக்காகவே மக்கள் பெரும் பாலும் வாக்களித்தாலும், பிரமுகர்களின் செல்வாக்கு முற்ருக மறைந்துவிட்டதென்று கூறமுடியாது. கட்சிமுறை வளர்ச்சி யுற்ற இங்கிலாந்தில்தானும் கட்சி மாத்திரமின்றிப் பிரமுகர் களும் வாக்காளரிடையே ஆதிக்கம் செலுத்துவதைக் காண லாம். இப்படி இலங்கைக் கட்சி வளர்ச்சியில் பிரமுகர்கள் நிர்ணயித்தபடி, பிரமுகர்களுக்காகப் பிரமுகர்களால் ஆரம் பித்து இயக்கிய கட்சிகள், வாக்காளரின் ஆதிக்கத்துட் சென்று, சமூக விருப்பத்திற்குச் செவிசாய்க்கும் சமூகக் கட்சிகளாக மாறிவிட்டன. பிரமுகர்களின் அரசியல் நலனே கட்சி வளர்ச்சி யின் அடிப்படை மாறும் சூழ்நிலைக்கேற்பப் பிரமுகர்களின் நலனைப் பேணுவதற்குக் கட்சியிலும் மாற்றங்கள் தோன்றுவது தவிர்க்கமுடியாதது; இந்த மாற்றத்தில் சுயநிறைவுடைய அரசியல் அலகுகளாக இருந்த பிரமுகர்களின் இடத்தைப் பாரளுமன்றத்திலும், வாக்காளர் தொகுதிகளிலும் கட்சிகள் வரவரக் கூடுதலாகப் பிடித்துக்கொள்ளும் போக்கைக் காண லாம் பிரமுகர்களும் கட்சிக் கட்டுப்பாட்டிற்கு அமைந் நடக்கும் நிலை ஏற்படலாயிற்று.

Page 118
- 494 -
3. சில கட்சிகளின் அமைப்பும் கொள்கையும்
இலங்கையில் இன்று இயங்கும் கட்சிகளை நாலாக வகுத்து ஆராயலாம் : (1) 1935இல் ல: ச. ச. கட்சியாக முதலில் உருப்பெற்றுப், பின்னர் இரு முக்கிய கூறுகளாகப் பிரிந்து, இக் கூறுகளிலிருந்து காலத்திற்குக் காலம் சிதறி, மாக்சீய லட்சிய மென்ற போர்வைக்குள் நின்று இயங்கும் இடதுசாரிக் கட்சிகள்: (2) 1946இல் வலதுசாரிக் கொள்கையுடன் தோன்றிய ஐ. தே. கட்சி; (3) 1941இல் இடது - வலது சாரிகளுக்கு இடைப்பட்ட மத்திய பாதையைப் பின்பற்றுமுகமாக ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரக் கட்சி; (4) சிறுபான்மைத் தொகுதிகளின் நலனைப் பேணுவதற்காகக் காலத்திற்குக் காலம் உருவாகிய சிறு கட்சிகள், ! பல்வேறு கட்சிகளின் அமைப்பு, கொள்கை, செயல்திட்டம் ஆகியவற்றில் கால்த்திற்குக் காலம் மாற்றங்கள் ஏற்பட்டிருப் பதினுல், அவற்றையெல்லாம் சுருக்கித்தருவதில் இடர்ப்பாடுகள் உண்டு என்பது கவனித்தற்பால்து, (1) இடதுசாரிக் கட்சிகள் :
சிதறுண்ட சரித்திரம் இடதுசாரி இயக்கத்திற்கு முன்னேடிக ளாக 1922ஆம் ஆண்டு ஆரம்பமான இலங்கைத் தொழிற் சங்கம், அதைத் தொடர்ந்து இந்தியத் தொழிலாளர்களிடையே காந்தி, வோஸ் ஆகியோரது பெயர்களைத் தாங்கியெழுந்த சங்கங்கள், 1930ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் தோன்றிய இந்திய தோட்டத் தொழிலாளர் சம்மேளனம், 1928இல் ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கைத் தொழிற்சங்கக் காங்கிரஸ், அதேயாண்டு தோன்றிய தொழிற் கட்சி ஆகியன செயற்பட் டுள்ளதைக் குறிப்பிடலாம். 1930ஆம் ஆண்டுகளின் முற்பகுதி மாக்சீய இயக்கம் உருவாவதற்கு உகந்த காலமாகும் பொரு ளாதார மந்தம், வேலையின்மை, பெருவாரியாகப் பரவிய மலேரியாநோய், வெள்ளப்பெருக்கம் ஆதியன மக்களின் வாழ்க் கையைச் சீர்குலைத்தன, இச்சூழ்நிலையில் மேல்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் கல்விபெறும்போது மாக்சீயத்தில் ஈடுபாடு கொண்ட நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் தொழிற் சங்க வேலைகளில் தீவிரமாகப் பங்குபற்றலாயினர் : சோஷலிச கூட்டங்களை ஒழுங்குசெய்தனர்; ஆங்கிலேயருக் கெதிரான சூரிய மல் இயக்கத்தில் ஒன்றுசேர்ந்து உழைத்தனர். இவர்கள் கூட்டுமுயற்சியின் கருத்தொற்றுமையின் பயனுய் 1935இல் லீ ச. ச. கட்சி உதயமாயிற்று. கட்சியை அமைப்பதில் பிலிப் குணவர்த்தன. பீற்றர் கெனமன், எஸ். ஏ. விக்கிரமசிங்கா, என் எம். பெரேரு, கொல்வின் ஆர், டி. சில்வா, எட்மன்ட் சமரக்கொடி, ரி, விடு சுபசிங்கா, லெஸ்லி குணவர்த்தணு
 
 

س- 495 -
போன்ருேர் முக்கிய பங்கெடுத்தனர். புதிய கட்சி யாழ்ப்பான இளைஞர்காங்கிரஸ் மூலம் வடக்கில் வேரூன்றியது. நாட்டிற்குச் சுதந்திரம் பெறுவதும், பெற்றபின் சோஷலிச சமுதாயத்தை அமைப்பதும் கட்சியின் முக்கிய இலட்சியங்களாக இருந்தன.
தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட கோட்பாடு வேற்றுமை களினலும் தலைமைப் போட்டிகளினலும் மாக்சீய இயக்கம் சிதறுண்ட வரலாற்றின் முக்கிய கட்டங்கள் கீழே இலகுவாக்கித் தரப்படுகின்றன !
ல. ச. ச. க - 1935
| 1940இல் வெளியேற்றப்பட்டோர்
6u。母。母。岛。一l940 ஐ சோ. க - 1941
(ரொற்ஸ்கி சார்பு) (ஸ்ராலின் சார்பு)
19 45
@。母。母。压。 வொ, லெ, க. க. கட்சி ஆக பிலிப் , என்.எம். சி. ஆர்ஜ் டி. 1943இல் குண,"பெரேரு இல்வா மாறியது
| | リ
夏963 1950 1950 | | , (வி) ல. ச. ச.க. (ந) ல. ச. ச. க. க.க. (மொஸ்கோ) க.க. (பீக்கிங்) எஸ். ஏ. விக், என். சண்முக 19 164 Gର &ଶarld!' தாசன் 1959 KOMISIÓN D. 224 (LAP o 196).3F. &#F6 35. ου, σ. εν. 5ς (L) என்ற என்.எம்.பெ. எட்மன்ட் GQi, u unjiri கொல்வின் சமரக்கொடி
ல. ச. ச. க. (1935) மிதவாத, தீவிர கொள்கைகளை யுடைய தலைவர்களைக் கொண்டிருந்ததினுல் வேறுபாடுகள் விரைவில் தோன்றலாயிற்று. இரண்டாம் உலக மகாயுத்தம் தொடங்கிய காலத்தில் கலாநிதி எஸ். ஏ. விக்கிரமசிங்கா போன்றேர், ஸ்ராலின் சார்புடைய மூன்ரும் கம்யூனிஸ்ட் சர்வதேச இயக்கத்தில் ல. ச. ச. க. சேரவேண்டுமென்று வற் புறுத்தினர் பெரும்பான்மையினரான ரொற்ஸ்கீய வாதிகள் வற்புறுத்தலை ஏற்காது ஸ்ராலினிச வாதிகளை 1940இல் கட்சியி லிருந்து வெளியேற்றினர். வெளியேற்றப்பட்டோர் ஐக்கிய சோஷலிசக் கட்சியை 1941இல் உருவாக்கினர். யுத்தகால வேலை நிறுத்தங்களில் ஈடுபட்ட புதிய கட்சியை அரசாங்கம் 1942இல் சட்டரீதியற்றதாக்கியது. தலைமறைவாக இயங்கிய
இது 11 29 -

Page 119
ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியை போராளுமன்றப் பாதையைப் தாருக்கும் புரட்சி வழியை ஆதரித் தாடர்ந்து நிலவிய கருத்து வேறுபாடு, சண்முகதாசன் கோஷ்டியினர் கட்சியி றப்படுவதில் சென்றடைந்தது சண்முக ன-ரூஷிய தகராறில் சீனவை ஆதரித் டது முன்னணியை எதிர்த்ததும் பிரி டிக் காரணங்களெனலாம். இன்று மொஸ்கோ சார்புடைய பிரிவு, பீக்கிங் சார்புடைய என இரு பிரிவுகளாக இயங்குகின்றது; முற் பிரிவு 。
1ே940இல் ஸ்ராலின் கொள்கையை ஆதரித்தோரை வெளி யேற்றியபின் ரொற்ஸ்கி சார்புடையதாகிய ல. ச. ச. கட்சியின் தலைவர்களிடையே பிரிவினைகளும், பிரிந்தோர் கூடுதல்களும் ஏற்படலாயிற்று. யுத்தத்திற்கு எதிர்ப்புக் காட் டி யதி ன ல், a 7-6 ல் தடுப்புக் காவலில் இடப்பட்ட தலைவர்களிற் சிலர், ஏப்பிறில் 1942இல் இந்தியாவிற்குத் தப்பியோடி, அங்கு தலைமறைவாயிருக்கும்போது இந்திய வொல்ஷிவிக் லெனினிசக் ட்சியை அமைக்க உதவிவிட்டு, 1945இல் தாயகம் திரும்பி, 942ஆம் ஆண்டு சட்டரீதியற்றதாக்கப்பட்ட ல. ச. ச. கட்சி யைப் புனரமைப்புச்செய்ய எத்தனித்தபோது எழுந்த தலை aso பாட்டியிஞல், 1945இல் சி. ஆர். டி. சில்வா தலை வொல்ஷிவிக் லெனினிசக் ஆட்சியும், என்g எம். ሃ፭፻፶ ] III&Ów¥፧ குணவர்த்தன ஆகியோர் தலைமையில் ல. ச. ச, ட்சியும் ஸ்த க்கப்பட்டன. 1950இல் முன்னைய வொ, லெ. சியாகிய வொல்ஷிவிக் சமசமாஜக் கட்சியும் ல :வும் ன்றுபட்டு நவ (புதிய ல ச. ச.க. உருவானபோது, 飒 ணவர்த்தன வெளியேறி, விப்ளவகார (புரட்சிகர)
燃* 1959இல் ம. ஐ மூ அரச
ஐ மு என்ற பெயரைத் தனது கட்சியின நவ-ல. ச. ச. க. 1964இல் சுதந்திரக் சாங்கம் அமைக்க ஒருப்பட்டபோது ல. ச. ச. னற்ற வாதிகள், எட்மன்ட் சமரக்கொடி -ல. ச. ச. கட்சியை அமைத்துக்
姆 リ க. அடைமொழியில்லா ல. ச. ச. க. என்றும் புரட்சிகர-ல. ச. ச. க. என்றும் இரு
பிரிவுகளாக இயங்குகின்றது. முற்பிரிவு ஏனைய மாக்சீயக் கட்சி
களிலும் பார்க்கக் கூடிய பாராளுமன்றப் பலமுடையது ல. ச. ச.க. வின், மொஸ்கோ சார்புக் கம்யூனிஸ்ட் கட்சி
1,60。伊。特。栖。+、 &q+o 33و هلال م
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"'' யின் அமைப்பு, கொள்கை ஆகியனல்ே சுருக்கமாக ஆராயப் படும்; இதஞல் ஏனைய மாக்சீயக் கட்சிகள் அரசியலில் தாக்கம்
அற்றவை என்று கொள்ளலாகாது.
அமைப்பு-ல. ச. ச. க. பல காலமாக மாக்சியக் கட்சிகள் மிகச் சிறந்த அமைப்பைக் கொண்டுள்ளன; அவற்றுள் ல. ச. ச. கட்சியின் அமைப்பே தலைசிறந்ததாயும் கூடிய் விளை பயன் தருவதாயுமுள்ளது. தேர்ந்தெடுத்த சிறுதொகையின. ருக்கே அங்கத்துவம் கொடுக்கும் கொள்கையைக் கட்சி கடைப் பிடிக்கின்றது : சுமார் 4000 அங்கத்தவர் மாத்திரம் இன்று உண்டென்று அவதானிகள் கருதுகின்றனர். கட்சிக் கிளையின் உறுப்பினர் ஒருவரால் பிரேரிக்கப்பட்டுக் கிளையிஞல், பிராந்திய கமிட்டியால், மத்திய கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரின் கட்சி விசுவாசத்தை 3-12 மாதங்கள் அவதானித்த பின்பே அவருக்கு முழு அங்கத்துவ உரிமையும் அளிக்கப்படுகின்றது. இம்முறை, கட்சிக்கே தங்களை அர்ப்பணஞ்செய்த, கட்சிக் கட்டுப்பாட்டிற்கமைந்து ஒழுகக்கூடிய அங்கத்தவர்களைத் தேர்ற் தெடுக்க உதவுகின்றது. இத்தன்மை வாய்ந்த உறுப்பினர்கள். ஆட்சியைக் கைப்பற்றி ஆதரவாளருக்கு அரச சலுகைகளை வழங்கமுடியாத ஒரு சிறு கட்சியை வளர்ப்பதற்கு இன்றியமை யாததாகும் குறைந்தது மூன்று அங்கத்தவர்களோடு இயங்கும் கட்சிக்கிளையே கட்சியின் அடிப்படைக் கூருகவுள்ளது. மத்திய அல்லது பிராந்திய கமிட்டியின் அங்கீகாரத்தின்மீது அங்கத் தவர்களின் தொழிற்சாலையில் அல்லது தொழிலிடத்தில் கிளைகள் அமைக்கப்படுகின்றன ; கிளைகளின் நடவடிக்கைகள் அதிகம் விளம்பரப்படுத்தப்படுவதில்லை; மத்திய கமிட்டி நிர்ணயித்த படி பிராந்திய கமிட்டிகளை அமைக்கலாம்; இவைகள் தமது பிராந்தியத்திலுள்ள கிளைகளை மேற்பார்வை செய்யும் சுமார் 45 அங்கத்தவர்களைக்கொண்ட மத்திய கமிட்டியை வருடாந்த மகாநாடு தெரிவுசெய்கின்றது. மகாநாடுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மகாநாட்டின் அதிகாரங்கள் அனைத்தையும் மத்திய கமிட்டி, மாதம் ஒரு முறையாவது கூடிச் செயலாட்சி செய்யும்: ஒவ்வொன்றும் சுமார் பத்து அங்கத்தவர்களைக்கொண்ட மூன்று நிர்வாகக் குழுக்களை மத்திய கமிட்டி நியமிக்கின்றது. கமிட்டி கூடாத நேரங்களில் மிக முக்கியத்துவும் வாய்ந்த அரசியற்குழு அரசியல் முடிவுகளை எடுக்கின்றது; அமைப்புக்குழு கட்சி யமைப்பை மேற்பார்வை செய்கின்றது : தொழிற்சங்கக்குழு கட்சியையும் அதன் தொழிற்சங்கங்களையும் இணைக்கின்றது: இக்குழுக்களின் தீர்மானங்கள் உடனடியாக அமுலாக்கப்படலா மாயினும், அவைகளை மத்திய கமிட்டி மாற்ற முடியும்; தல ஸ்தாபனங்கள் தெரிவுசெய்த சுமார் 1000 பேராளரைக்

Page 120
கொண்ட வருடாந்த மகாநாடு கட்சியின் உச்ச அதிகார முடையது 3 மற்றும் உயர் நிறுவனங்களின் முடிபுகளை இறுதி யாக உறுதிசெய்வதோடு, கட்சியின் கொள்கைகளை நிர்ண யிக்கும் பிரதான சாதனமாக விளங்குகிறது.
அமைப்பு - க. க. (மொஸ்கோ) : இக் கட்சியின் அமைப்பு ல. ச. ச கட்சியினது போன்று பரந்தகன்றதாய் இரா விடினும், சிறு வேறுபாடுகளுடன் அதே தன்மையதென்று பொதுவாகக் கூறலாம். தேர்ந்தெடுத்த சிறு தொகையினருக்கே கட்சியின் அங்கத்துவம் கிடைக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட ஒருவரின் அங்கத்துவத்திற்கான விண்ணப்பத்தை உரிய கட்சிக் கிளையின் இரு உறுப்பினராகுதல் சிபார்சு செய்யவேண்டும் : கிளையும் மத்திய கமிட்டியும் அங்கீகரித்ததும் அவர் அபேட் சக அங்கத்தவராகின்ருர் 6-9 மாத கட்சி விசுவாச பரி சோதனையின் பின் முழு அங்கத்துவ உரிமை அளிக்கப்படுகின்றது. அவசியம் ஏற்படும்போது மத்திய கமிட்டி அங்கத்தவர்களை நேரடியாகவும் சேர்த்துக்கொள்ளலாம் : சில சூழ்நிலையில் மாவட்டக் கமிட்டிக்குத் தனிப்பட்ட அ ங் கத் த வ ர் களை ச் சேர்த்துக்கொள்ளும் அதிகாரமும் உண்டு குறைந்தபட்சம் ஐந்து அங்கத்தவர்களைக்கொண்ட கட்சிக்கிளையே கட்சியின் அடிப்படை அமைப்பாகும் சாதாரணமாக மத்திய கமிட்டியின் அங்கீகாரத்தின்மீது, அங்கத்தவர்கள் வேலை செய்யும் அல்லது வாழும் வேலைத்தலம், நிறுவனம், பிரதேசம் ஆகியவற்றின் அடிப்படையில் கிளைகள் அமைக்கப்படுகின்றன. மக்களிடையே கட்சியின் கொள்கைகளைப் பரப்பி அதை வளர்ப்பதே கிளை களின் முக்கிய கடமையெனலாம். உரிய மாவட்டக் கமிட்டி எடுக்கும் முடிவின் பிரகாரம், தேசிய அரசுப் பேரவைத் தொகுதிப் பிரதேசத்தில், அப்பிரதேசத்திலுள்ள அங்கத்தவரின் பொதுச்சபைக் கூட்டம் பிரதேச கமிட்டியை அமைக்கலாம். பொதுவாக ஆண்டுக்கொரு தடவை இக்கமிட்டி தேர்ந்தெடுக் கப்படுகிறது. பிரதேசக் கிளைகளைக் கமிட்டி வழிநடத்தும் மத்திய கமிட்டியின் தீர்மானத்தின் பிரகாரம், எந்த மாவட் டத்திலும் அங்குள்ள அனைத்து அங்கத்தவர்களினது காங்கிரஸ் ஒரு மாவட்டக் கமிட்டியை அமைக்கலாம்; பொதுவாக ஆண்டுக் கொருமுறை இக்கமிட்டி தேர்ந்தெடுக்கப்படவேண்டும். தனக்குக் கீழுள்ள கமிட்டிகளையும், கிளைகளையும், அங்கத்தவர் களையும் முறையாகத் திரட்டுவதும், வழிநடத்துவதும், தலைமை யளிப்பதும் மாவட்டக் கமிட்டியின் கடமையாகும். தேசிய காங்கிரஸால் தெரிவுசெய்யப்பட்ட மத்திய கமிட்டி, காங் கிரஸ்கள் இரண்டுக்கிடையிலான காலத்தில் கட்சியின் உயர்ந்த அதிகார அமைப்பாக விளங்குகிறது முழுக் கட்சியின் சார்
 

- 499 -
பிலும் முடிவுகள் எடுக்கின்றது. அது இரு மாதங்களுக்கு ஒரு தடவையாகுதல் கூடவேண்டும் தனது உறுப்பினர் மத்தியி லிருந்து அரசியல்குழுவையும், செயலாளர்குழுவையும் மற்றும் அவசியமான மண்டலங்களையும் இலாகாக்களையும் நியமிக்க லாம். கட்சி ஸ்தாபன மண்டலம் இவற்றுள் ஒன்ருக இருக்கும். மத்திய கமிட்டி கூடாதபொழுது அதன் சார்பில் முடிவு எடுக் கவும் செயற்படவும் அரசியல் குழுவிற்கு அதிகாரமுண்டு. வாரத்திற்கு ஒரு தடவையாவது கூடவேண்டிய அரசியல் குழுவே மிகமுக்கியத்துவம்வாய்ந்த நிறுவனமெனலாம் செயலாளர்குழு மத்திய கமிட்டியின் அன்ருட வேலைகளைச் செய்யும். இரண்டு தேசிய காங்கிரஸ்களுக்கு இடைப்பட்டி காலத்தில் எந்த ஒரு விசேடமான, முக்கியமான பிரச்சினை பற்றி முடிவுசெய்ய மத்திய கமிட்டி ஒரு தேசிய மகாநாட்டைக் கூட்டலாம். யாப்பு விதிப் படி தேசிய காங்கிரசே கட்சியின் சிரேஷ்ட அதிகார அமைப் பாகும். அது மத்திய கட்டுப்பாட்டுக் கமிஷனையும், மத்திய கணக்குப் பரிசோதனைக் கமிஷனையும் தேர்ந்தெடுக்கின்றது. சாதாரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவையாகுதல் காங்கிரஸ் கூட்டப்படவேண்டும் சேட சூழ்நிலையில், அது கூட்டப்படுவதை இரு ஆண்டுகளுக்கு ஒத்திப்போடலாம் இதனுல் காங்கிரசின் நடைமுறை அதிகார உபயோகிப்பு மட்டுப் படுத்தப்படுகின்றது)
இரு கட்சிகளின் அமைப்புப் பற்றிய குறிப்புகள்: 1. இரண்டின் அமைப்புக்களும் இவ்வியலின் மூன்ரும் பிரிவில் விளக்கிய 9 ஜனநாயக மையப்படுத்தல்" நெறியின் அடிப் படையில் கட்டப்பட்டன. மத்தியத்துவ அம்சம் க. கரு அமைப் பில் கூடுதலாக உளதுபோல் தோன்றுகின்றது. 2 இரண்டின் மத்திய கமிட்டிகளும் கட்சிக்கொள்கையை நிர்ணயிப்பதில் செல் வாக்கு மிக்கதாயுள்ளன. ல, ச. ச. கட்சியின் தலைவர்கள் தமது திறமையினலும் நாவன்மையினலும் தம்விருப்பப்படி கட்சியை வழிநடத்த முடிகிறது இருந்தும் சில வேளைகளில் சாதாரண அங்கத்தவர்கள் தலைவர்களின் வி ரு ப் பத்  ைத த் திசை திருப்பியுள்ளனர். க; க. தனது அங்கத்தவர்களுக்கு வேண்டி யளவு சுதந்திரத்தை அளிப்பினும், இறுகிய கட்டுப்பாட்டுடன் இயங்க எத்தனிக்கின்றது. 3. இரண்டும் ஏனைய கட்சிகள் போலல்லாது, வேற்றுமைகளை மறைத்து ஒருமுகமாக இயங்கும் காட்சியை மக்களிடையே பதியவைக்க முயலுகின்றன. 4% இரண்டின் தேசிய மகாநாடுகளிலும் காங்கிரஸ்களிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படாது நடவடிக்கைகள் இரகசிய மாக நடைபெறுகின்றன. இதனுல் கட்சியின் வெளியிடப் 1. இந் நெறியின் 8 முக்கிய அம்சங்களைக் க. க. தனது அமைப்பு விதிகள்
பற்றிய பிரசுரத்தின் 13ஆவது பிரிவில் வரையறுத்துள்ளது.

Page 121
- 500 س"
படாத உள்நோக்கங்களுக்கும், பகிரங்கமாக வெளியிடப்படும் குறிக்கோள்களுக்குமிடையே வேறுபாடு எந்த அளவிற்கு இரு கட்சிகளிலும் உண்டென்று கூறுவதில் சிரமம் ஏற்படுகின்றது. இத்தகைய வேறுபாடு க. கட்சியில் ஓரளவிற்குக் கூடுதலாக இருக்கலாமென்று அவதானிகள் கருதுகின்றனர்: 5 இரண் டிற்கும் இளைஞர் முன்னணிகளும் தொழிற்சங்கங்களும் உண்டு; இவைகள் கட்சியுறுப்புக்களல்ல கட்சியைச் சார்ந்த துணைமை நிறுவனங்களாம். இவற்றின் அங்கத்தவர்கள் கட்சியங்கத்தவ ரல்ல கட்சியங்கத்தவர் போன்று கட்சிவிதிகளை நன்கு அனு சரித்து நடக்கவேண்டியதில்லை. இருந்தும் இரு துணைமை நிறு வனங்களும் கட்சியமைப்பிற்கு வலுவூட்டுவன : தேர்தல் காலங் களில் கட்சியபேட்சகர்களுக்கு உழைக்கின்றன. ல. ச. ச. கட்சி யோடு ஒப்பிடும்போது க. கட்சியின் இளைஞர் முன்னணி அங்கத்தவர் தொகை கூடுதலாக இருக்கலாம் ; 1964இல் க. கட்சிக்கு சுமார் 1000 முன்னணிகள் இருந்ததாகக் கணக் கிடப்பட்டுள்ளது. இரு கட்சிகள் ஒவ்வொன்றின் தொழிற் சிங்க அங்கத்துவம் ஒரு இலட்சத்திற்கு மேலாகவுள்ளது : இலங்கை இந்திய காங்கிரசிற்கு அடுத்த படியில் க. கட்சியின் தொழிற்சங்க பலம் இருப்பதைக் காணலாம். அரசியல் நிதி அமைக்கும் சட்டரீதியான உரிமையைத் தொழிற்சங்கங்கள் யேன்படுத்தித் தமது கட்சிகளுக்குப் பணஉதவி புரிகின்றன ; கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்கின்றன. குறிப்பிட்ட மசோ "தாக்களையும் பழமைபேண் அரசாங்கங்களையும் எதிர்ப்பதற்கு இரு கட்சிகளும் தொழிற் சங்கங்களின் வேலைநிறுத்த ஆயுதத் தைப் பயன்படுத்துகின்றன. தொழிற்சங்கத் தலைவர்கள் கட்சிகளில் செல்வாக்குடையவர்களாய் இருப்பதைக் காண லாம்; 6 இரு கட்சிகளும் கைத்தொழிலாளர் கணிசமான அளவில் வசிக்கும் நகரப்புறங்களில் செயல்விளைவுடைய அமைப் புக்கொண்டவை ; கிராமப் புறங்களில் கட்சிக் கிளைகள் அமைக்க ஒரளவு எத்தனிக்கப்பட்டாலும் தேர்தல்களில் குறிப்பிடக்கூடிய விளைவு ஏற்படவில்லை; 72 போதிய பணவருவாயின்மையே இரு கட்சியமைப்பிலும் காணும் முக்கிய பலவீனமாகும் செல்வச் சிறப்புடைய தலைவர்கள் தமது சொந்தப் பணத்தி லிருந்து கட்சி இயங்க உதவியுள்ளனர்.
கட்சிகளின் கொள்கை வகுப்பு வேறுபாடுகள் மலிந்த வாழ்க்கைத்தரம் குறைந்த ஒரு நாட்டு மக்களுக்கு மாக்சீய லெனினிச கருத்துக்கள் கலங்கரைவிளக்காகத் தோன்றுவது இயற்கையாம்; ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆரம்பமாகிக் கோட்பாடு வேறுபாட்டினல் பிரிந்து மாக்சீய லெனினிசத்தைத் தழுவி இயங்கும் ல. ச. ச5 கட்சியும் க. கட்சியும் இலங்கைத் தொழிலாளிவர்க்கத்தின் கட்சிகளாகும். முதலாளித்துவ பொரு
 
 
 
 
 

سے 8501
ளாதார அரசியல் அமைப்புக்கள் மூலம் சமூக அநீதிகளையும் குறைபாடுகளையும் தீர்க்க முடியாதென்று இக்கட்சிகள் நம்பு கின்றன. ஐ.தே. கட்சியை விரைவில் முறியடித்து, முதலாளித் துவத்தை அழித்து, மக்களின் புரட்சியால் தொழிலாளர்.விவ சாயிகள் அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும்" என்று ல: சச கட்சியின்' 1952 தேர்தல் விஞ்ஞாபனம் கூறியுள்ளது; ஒரு சோஷலிச சமுதாயத்தையும், பின்னர் கம்யூனிச சமுதாயத் தையும் நிர்மாணிக்க, மாக்சீய லெனினிசத்தின் புரட்சிகரப் படிப்பினைகளைக் க: கட்சி அங்கீகரிப்பதுடன் பின்பற்றுகிறது" என்று அக்கட்சியின் அமைப்புவிதி வலியுறுத்தி நிற்கின்றது: இரு கட்சிகளிலும் புரட்சிகர சோஷலிசத்தை ஆதரித்தோரும் படிப்படியாக விரிந்து செல்லும் சோஷலிசத்தை ஆதரித்தோரு மென இரு பிரிவினர் இருந்துள்ளனர். இரு தரப்பினரையும் திருப்திசெய்யவேண்டிய காரணத்தால், கட்சிகளின் போக்குத் தெளிவற்றுக் காணப்பட்டன; பாராளுமன்ற நடைமுறை களுக்கும் தேர்தல் விஞ்ஞாபனங்களுக்கும் இடையே முரண் பாடுகள் தோற்றமளித்தன. என். எம். பெரேரு போன்ற ல. ச. ச. கட்சியின் மிதவாதிகள் வர்க்கப் போட்டியையும், பாமரரின் சர்வாதிகார ஆட்சியையும் ஏற்கின்ற அதே நேரத்தில், பிரித்தானிய தொழிற்கட்சியைப்போல் பல கட்சிகள் இயங்கு வதையும், மக்கள் தமது வாக்குகளால் அரசாங்கங்களை மாற்றி யமைப்பதையும் ஆதரித்துள்ளனர். க.க. இத்தகைய மர பார்ந்த பாராளுமன்ற நடைமுறைகளுக்கு இணங்கப் பின்னின்ற தோடு, இந்திய க கட்சிபோல் "உண்மைச் சுதந்திரத்திற் காக" இடதுசாரிக் சக்திகள் ஒன்று படுவதை விரும்பியது. 1963இல் க. கட்சியின் தீவிரவாதிகள் வெளியேற்றப்பட்டனர்; அடுத்த ஆண்டில் ல ச ச. கட்சியின் தீவிரவாதிகள் வெளி யேறும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. காலப்போக்கில், விசேட மாக மார்ச்சு 1960 தேர்தலில், வாக்காளர்கள் புரட்சிகரக் கட்சிகளை ஆட்சியில் அமர்த்தமாட்டார்கள் என்று கண்டபின், இரு கட்சிகளும் தமது தீவிர கனவியல் கோட்பாடுகளை விட்டுக் கொடுத்து, ஓரளவிற்கு வலதுபக்கம் நகர்ந்துள்ளதோடு பாராளு மன்றப் பாதையை ஏற்றுவிட்டனபோல் காட்சிதருகின்றன.
ல. ச. ச. கட்சி ரொற்ஸ்கி சார்புடையதென்றும், க. கட்சி ஸ்ராலின் சார்புடையதென்றும் பார்த்தோம், ஒரு நாட்டில் சோஷலிசம் உருவானல், அதை வேறு நாடுகளிலும் பரப்ப முயற்சிப்பதே அந்நாட்டின் முதற்கடமையென்று ரொற்ஸ்கி வாதம் கூறுகின்றது இதற்கு மாருக, முதலாளித்துவ நாடு களின் தாக்குதலிலிருந்து புதிதாக உருவாகிய சோஷலிசத் தைக் கட்டிக்காப்பதே அந்நாட்டின் தவிர்க்கமுடியாத முதற்

Page 122
- 502
பொறுப்பென்பது ஸ்ராலினிசத்தின் நிலையாகும்; இவ் வேறு பாட்டைவிட ரூசியாவில் உண்மையான கம்யூனிசக் கொள் கையை ஸ்ராலின் பின்பற்ருது, அதைச் சீர்குலைத்துவிட்டா ரென்று ல. ச. ச. கட்சியினர் கூறுவர் : இருந்தும், சோஷலிசம் அங்கு முதன்முதலாக உருவாகியதென்ற காரணத்தால், அந்: நாட்டுக் கொள்கைகளைப் பெரும்பாலும் ஆதரிப்பினும், அதன் ஆட்சியில் தோன்றும் குறைகளை வேண்டியபொழுது கண்டிக்கத் தயங்கவில்லை. இந்த வகையில் ல. ச. ச வாதத்திற்கும் flsöGfrrr யிசத்திற்கும் நெருங்கிய ஒருமைப்பாடு உண்டெனலாம். க. க. சோவியத் ரூஷியாவின் கருத்தையும் அனுபவத்தையும் எப் பொழுதும் பின்பற்றி நடக்கும் மனப்பான்மையுடையதென்று கூறப்பட்டுள்ளது. இரு கட்சிகளும் தங்களைச் சர்வதேசியக் கட்சிகளென்று தொடக்கத்திலிருந்தே வர்ணித்துள்ளன. க. க * தொழிலாளி வர்க்க சர்வதேசியக் கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கின்றது : சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் சகோதர கம்யூனிஸ்ட் தொழிலாளர் கட்சிகளுள் ஒன்ருக இருப்பதில் பெருமிதமடைகிறது, ல. ச. ச. கட்சியும் உலக சோஷலிச இயக்கத்தோடும் சோஷலிச நாடுகளோடும் நெருங்கிய உறவுகளை வளர்க்கப் பாடுபடுகின்றது; நாலாம் உலகத் தொழிலாளர் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றது. இரு கட்சிகளும் ஆங்கில-அமெரிக்க ஏகாதிபத்திய முகாமுடனும் பொதுநல ஆயத்துடனும் இலங்கை கொண்டுள்ள பல்துறை உறவைத் துறக்கவேண்டுமெனும் கொள்கையுடையன ஆனல், சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் இன்று அங்கம் வகிப்பதினலும், கம்யூனிச-முதலாளித்துவ முகாம்களுக்கிடையே ஏற்பட்டுள்ள நட்பமைதியுடன் கூடிய கூட்டு வாழ்வுச் சூழ்நிலையினலும், முதலாளித்துவ - பொதுநல வாய நாடுகளின் உறவினல் நடைமுறையில் பெறக்கூடிய நன்மை களினலும், இந்நாடுகளுடன் இரு கட்சிகளும் தமது பகை மையை வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதில் சிரமமேற் பட்டுள்ளது.
உள்நாட்டுக் கொள்கைக்குத் திரும்பினுல், "முதலாளித் W துவத்தைச் சோஷலிசத்தாலும் கம்யூனிசத்தாலும் மாற்றி யமைக்கும் தனது பிரதான நோக்கத்தை ஈட்டும் பாதையில் அவசியமான பூர்வாங்கக் கடமையாக, நிலப் பிரபுத்துவத்தினதும் கலோனியலிசத்தினதும் விட்ட குறைகளை ஒழித்துக்கட்டவும் இலங்கையின் சுதந்திரத்தையும் சுயாதிபத்தியத்தையும் வலு படுத்தவும், பொருளாதார சுதந்திரத்தை வென்றெடுக்கவும், ஜனநாயக உரிமைகளை வியாபிக்கவும், இலங்கையின் பல்வேறு தேசிய இனங்களினதும், இனப்பகுதிகளினதும் தேசிய
 
 
 
 
 

சர்வாதிகா னிசக் கட்சிகள், பொருளியல் சார்ந்த நியதி பாட்டை மனதிற்கொண்டு பரந்த, துணிந்து திட்டங்கள் அடிப்படையில் பொருளாக்க விர்
அரசு மேற்கொள்வதை வலியுறுத்துவன
கட்சியும் உற்பத்தி விநியோக பரிமாற் நட்டஈடின்றி அரச2உடைமையாதல் கூட்டு பெருந்தோட்டங்களைச் சுவீகரித்து விவசாயிகளுக்கு
சலுகைகளையும் செல்வாக்குகளையும் ஒழித்தில் ஆதரிக்கின்றன. சிறு கட்சி அந்தஸ்திலுள்ள இக்
பொருளாதார திட்டங்களைத் தீட்டுவ
டிக்கும், அதன் அரசாங்கத்துடன் சார்ந்துநின்று ம் உத்திகளைக் கையாளுகின்றன. ஐக்கிய முன்னணி அங்கம் வகிக்கும் இடதுசாரி அமைச்சர்கள் புச் சட்டங்கள், வருமான சொத்து வீட்டு உச்சவரம்புச் கள், துரித சோஷலிச மாற்றங்களைச் செயற்படுத்து குடியரசு யாப்பும் நிறுவனங்களும் ஆகியவற்றை குவதற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்துள்ளனர். சுதந்

Page 123
லாம் :
திரம் சமத்துவம் சகோதரத்துவம் எனும் இக் கட்சி களின் உன்னத இலட்சியங்கள் பற்றி வேறு கட்சிகள் வேறுவித வியாக்கியானங்களைக் கொடுக்கலாம்; வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோட்பாடுகளைப் பின்பற்றிச் சுதந் திரக் கட்சி நடக்கமாட்டாதென்று பிரதம அமைச்சர் கிறி ஆனல் சோஷலிச வளர்ச்சிப் பாதையில் முன்னேற எத்தனிக்கும் மாக்சீய-லெனினிசக் கட்சிகள் பலகாலம் நடந்து கொண்டதுபோல் இனவாதத்தைத் தமது கொள்கைகளில்
கலக்காது, இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் நலனைப் புறக் கணிக்காது, அதிகாரத்தில் இருக்கும்போது அனைவர்பால் நெறி முறை தவறது இயங்கினல், நீதிக்கும் நேர்மைக்கும் மக்களின் உள்ளத்தில் அவைகள் பிடித்திருந்த உயரிடம் ஆட்டங்காண மாட்டாது;
(2) ஐ. தே, கட்சி : S S S S S S S S S S0 S S S S S S S SL
அமைப்பு இன்று செயற்படும் அமைப்பு விதிகளின் படி கட்சிக் கொள்கையை ஏற்கும் பதிவுபெற்ற வாக்காளர் எவரும் இனமத வேறுபாடின்றித் தேர்தல் தொகுதிச் சங்கம், தேர்தல் தொகுதிப் பெண்கள் சங்கம், தேர்தல் தொகுதி இளைஞர் சங்கம், தேர்தல் தொகுதி ஒவ்வொன்றிலுமுள்ள கிளைச் சங் கங்கள் மூலமோ அல்லது நேரடியாகவோ :::######မ္ယန္တီ
பெறலாம். சங்கங்கள்கள் பதிவுபெற்றனவாயும், பதிவுபெறு வதற்குக் குறைந்தது 30 அங்கத்தவர்களைக் கொண்டனவாயும் இருத்தல் வேண்டும். சாதாரணமாக வருடமொருமுறை கூட வேண்டிய தேசிய மகாநாடும் நிர்வாகக் கமிட்டியினல் அல்லது கட்சித் தலைவரினுல் தேவையான நேரங்களிலும் லாம். சங்கங்களால் தெரியப்படும் பேராளர்கள், நேரடி அங்கத் தவர்கள், கட்சியின் உத்தியோகத்தர்களும் நிர்வாகக் கமிட்டி யின் ஏனைய அங்கத்தவர்களும், கட்சியின் பாராளுமன்ற உறுப் பினர் ஆகியோர் மகாநாட்டில் கலந்துகொள்ளலாம் கட்சியலு வல்கள் மகாநாட்டின் வழிகாட்டலுக்கும் கட்டுப்பாட்டிற்கும் அமைந்து நடைபெறும் கட்சியின் உத்தியோகத்தர்கள், அதன் பழைய புதிய பாராளுமன்ற உறுப்பினர், அதன் கொழும்பு மாநகரசபை அங்கத்தினர், தேர்தல் தொகுதிச் சங்கங்களின் பிரதிநிதிகள், வருடாந்த மகாநாடு தெரிவுசெய்யும் 50 பேர்கள் ஆகியோரைக் கொண்ட நிர்வாகக் கமிட்டி, 4 மாதங்களுக்கு ஒருமுறையாகுதல் கூடி, மகாநாட்டின் மறுசீராய்வு நெறிக்கு உட்பட்டுக் கட்சியின் இறுதிப் பாலன-அதிகார அமைப்பாய் இயங்கும். தேர்தல் தொகுதிச் சங்கங்களை நிறுவுதல், மகா நாட்டு நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தல், கட்சி கட்டுப்பாட்டுடன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 505 -
இயங்குமாறு பார்த்துக்கொள்ளல், நிதி சேகரித்தல், தேர்தல் தொகுதிச் சங்கங்களைக் கலந்தாலோசித்து வேட்பாளரை நிய மிக்கும் பொறுப்புடைய நியமனக் குழுமங்களை அமைத்தல், கட்சியின் நோக்கங்களைச் செயற்படுத்துவதற்கு வேண்டிய விசேட குழுக்களை நிறுவி அவற்றிற்குத் தகுந்த அதிகாரத்தை அளித்தல் ஆதியனவும் நிர்வாகக் கமிட்டியின் கடமைகளும் அடங்கும். இக் கமிட்டியிலிருந்து கட்சித் தலைவரால் நியமிக்கப் படும் 40 பேருக்கு மேற்படாதோரையும், கட்சியின் உத்தியோ கத்தர்களையும் அங்கத்தவர்களாகக் கொண்டுள்ள செயற்குழு, நிர்வாகக் கமிட்டி பாரப்படுத்திய கட ைமகளை ச் செய்யும்
அதிகாரமுடையது;
1944இல் சோல்பரி ஆணைக்குழு இலங்கைக்கு அமைச்சரவை ஆட்சிமுறையைச் சிபார்சு செய்துள்ளதென்று அறியவந்ததும் அம்முறைமை நன்கு இயங்குவதற்கு அரசியற்கட்சிகள் அவசிய மென்ற சூழ்நிலையில், 1947இல் நடைபெறவிருந்த பொதுத் தேர்தல்மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் உடனடி நோக்கத்திற் காக டொனமூர் திட்டத்தின் கீழ் அதிகாரத்திலிருந்த வலது சாரித் தொகுதிகள் டி. எஸ். சேனநாயக்காவைத் தலைவராகக் கொண்டு 1946இல் ஐ. தே கட்சியை அமைத்தன. இந்த ஐக்கிய அமைப்பில் இலங்கைத் தேசிய காங்கிரசின் பெரும் பகுதி, சிங்கள மகாசபை, முஸ்லிம் லீக் ஆதியன சேர்ந்து கொண்டன : 1948இல் தமிழ்க் காங்கிரசின் ஒரு பகுதியும் அதோடு நெருங்கிய தொடர்புகொண்டு இயங்கியது. பல இனத் தவரையும், மதத்தினரையும், வர்க்கத்தினரையும் ஐக்கியப் படுத்தும் தேசிய நோக்குடையதென்று கருதப்பட்ட புதிய கட்சி, தனது, பெருநோக்கில் இந்தியத் தமிழருக்கு இடமளிக் காதது கவனித்தற்பாலது கட்சித் தலைவர்கள் மேற்கத்திய ஜனநாயகத்தை ஏற்பதில் ஒற்றுமையுடையவர்களாக இருந் தாலும், பிரிவுச் சக்திகள் கட்சியில் சூக்குமமாக அடங்கி யிருந்தன. கோயிகம வகுப்பினரே தலைவர்களாக வர முடிந்தது. பொதுவான சமூக கலாசார பொருளாதார திட்டங்கள்பற்றி வேற்றுமைகள் காணப்பட்டன. ஆரம்பச் சூழ்நிலையில் ஸ்திரமற்ற கட்சியமைப்பு வேண்டியதாயிற்று : சிங்கள மகாசபை, முஸ்லிம் போன்றவை தமக்குரிய தனித்துவத்தைக் கலைக் கா து தத்தம் வருடாந்த மகாநாடுகளை வேருக நடத்துவதற்கு ஐ.தே.
கட்சியின் அமைப்புவிதிகள் இடங்கொடுத்தன.
1947. தர்தலில் வெற்றிபெற்றபின் கட்சி ய  ைமப் ை ப நாடெங்கணும் கட்டியெழுப்புவதில் ஐ. தே, கட்சி சிரத்தை எடுத்தது. 1951இல் 96. 1952இல் 200, அதன்பின் அநேக

Page 124
  

Page 125
سن 508 سي
பெளத்த வாக்காளரினதும் நல்லுறவு வளர்க்கப்பட்டது; சுருங்கக் கூறின் 1956க்குப் பிற்பட்ட ஆண்டுகள் ஐ. தே; கட்சியின் இரண்டாம் மறுபிறப்புக் காலமெனலாம் : இக்கால கட்டத்தில் அது ஏனைய கட்சிகளிலும் பார்க்க மிக விளைபயன் தரும் அமைப்பாக உருவெடுத்தது. 1970 தேர்தலில் திரும் பவும் தோல்வியுற்றபின் கட்சிக்கிளைகளுக்குக் கூடிய உயிரூட்டு வதற்குக் கொழும்பு மாநகரப் பிரசைகளின் முன்னணிமூலம் திரு. ஆர். பிரேமதாச கிளர்ச்சி செய்ததையும், இன்றைய தலைவரான திரு. ஜே.ஆர் ஜெயவர்த்தன அமைப்பை வலுப் படுத்த முயற்சிப்பதையும் காணலாம். ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் சோஷலிச நடவடிக்கைகளினல் ஐத் தே: கட்சிக்குக் கிடைத்துவந்த பெருமளவு பணவருவாய் வருங் காலத்தில் குறையக்கூடும்.
கொள்கை: 1946 - 56, 1960, 1965 - 70 ஆகிய ஆண்டு களில் அரசாங்கக் கட்சியாகவும், ஏனைய ஆண்டுகளில் எதிர்த் திறத்தின் முக்கிய கட்சியாகவும் விளங்கிய ஐ.தே.கட்சி ஒரு பெருங் கட்சியென்ற நிலைநின்று, பல்திறப்பட்ட வாக்காளர் களை ஈர்க்குமுகமாக மாறும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தனது கொள்கையையும் மாற்றியமைக்க எத்தனித்துள்ளது. பொருளா தார அரசியல் துறைகளில் கோட்பாட்டுக் கருத்தியல்கள் மலிந்த இந்நாட்டில், ஐ. தே. கட்சியின் செயற்திட்டங்கள் குறித்த ஒரு திசையைக் காட்டுவனவல்ல உத்தமமானவையென்றுதான் கருதிய திட்டங்களைப் பல திசைகளிலுமிருந்து பொறுக்கி யெடுத்து, பொதுத்தேர்தல்களில் மக்களுக்குக் கொடுத்த வாக் குறுதிப்படி செயலாற்றத் துணிந்துள்ளது. இருந்தும், அதன் திட்டங்களில் நிரந்தரமான சில பெறுமானங்களைக் காணலாம்; உதாரணமாக மேற்கத்திய பாராளுமன்ற ஜனநாயகமே, விசேட மாகப் பிரித்தானிய முறைமையே இலங்கைக்கு உகந்ததென்பது அதன் நம்பிக்கையாகும். அம்முறைமை ஸ்திரமான சட்டரீதி யான ஆட்சிக்கு வழிவகுக்கும், முக்கிய பொருளாதார சமூக மாற்றங்களைச் சுமுகமான முறையில் ஏற்படுத்த உதவும் என் கின்றது. எனவே, சம்பிரதாய ஜனநாயக அமைப்பிற்குப் புறம் பான அம்சங்கள் குடியரசு யாப்பில் புகுத்தப்பட்டதைக் கண்டித் துள்ளது. புரட்சிகரமான மாற்றங்களை எதிர்க்கும் இக்கட்சி, அனைத்தாண்மைச் சர்வாதிகாரத்தை விரும்பும் மாக்சீயக் கட்சி களினல், நிலவும் அரசியல் முறைமையோடு, மக்கள் நெஞ்சார நேசிக்கும் கலாசார சமய பெறுமானங்களும் அழிக்கப்பட்டுவிடும் என்று கூறி, கம்யூனிசக் கொள்கை இந்நாட்டில் வளர்வதைத் தடுக்குமுகமாகப் பிரசாரஞ் செய்வதையும் நடவடிக்கைகள்

{ = 509 سيس
எடுப்பதையும் தனது பிரதான நோக்கங்களில் ஒன்முகக் கருதிச் செயலாற்றி வருகின்றது. சட்டத்திற்கும் ஒழுங்கிற்கும் உயரிடமளிப்பதாகக் கூறி, அரிசி-மானியக் கர்த்தாலின்போதும், தமிழ் - பிரயோகப் பிரமாணங்களின் எதிர்ப்பின் போதும் வன் முறையைப் பாவித்துள்ளது ம. ஐ. மு. அரசாங்கக் காலத்தில் ட்ட குழப்பங்களைக் கண் டி த் த து; அதே வேளையில் செடு ஒப்பந்த அமுலைத் தடுப்பதற்கும், கூட்டணியினரின் முற்போக்கு நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கும், அது கையாண்ட பாராளுமன்றத்திற்குப் புறம்பான வழிகள் ஒழுங்கைப் பாதிக்க வல்லன என்று கூறுவாருமுளர். பேச்சுச் சுதந்திரம் கூட்டுச்சேரும் சுதந்திரம் கூட்டம் வைக்கும் சுதந்திரம் ஆகிய வற்றை வலியுறுத்தும் இக்கட்சி, இச்சுதந்திரங்களுக்கு எதிராகச் சிலவேளைகளில் நடந்துள்ளதாக எதிர்த்திறத்தினர் குறைகூறி யுள்ளனர்;
ஆரம்ப காலகட்டத்தில், அளவுக்குமீறி மக்களின் வாழ்க் கையில் அரசு தலையிடா லெயிசபெயர் கொள்கையை ஐ தே க. பின்பற்றியதெனலாம். இருந்தும், சமூகநீதியின் பேரில் அனைவருக்கும் சமசந்தர்ப்பம் அளிக்கும் புதியதோர் சமுதாயத்தை உருவாக்கக்கூடிய யாப்புறு-சோஷலிசமே தனது குறிக்கோளென்று கூறிக்கொண்டது; இத்தகைய சோஷலி சத்தைச் செயற்படுத்துவதற்குச் செல்வந்தர்மீது உயர்வரி விதிக் காது, அவர்களின் சொத்தைப் பங்கீடு செய்யாது. அவர்களின் ஒத்துழைப்புடன் விவசாயிகளின் வாழ்க்கைத் துயரைத் தணிப் தற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது; நிலமிலாக் குறையை வரண்ட பிரதேசக் குடியேற்றங்கள்மூலம் நிவிர்த்தி செய்ய எத்தனித்தது பொருளாதார முன்னேற்றத்தை ஊக்கி, வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு நன்கு செயற்படுத் தாத இரு ஆருண்டுத் திட்டங்களைத் தயாரித்தது : நிலவும் தனியார் சொத்துமுறைமையைப் பாதிக்காவண்ணம் வெளி மூலதனத்தினுலும் தனியார் முயற்சியாலும் உற்பத்தியைப் பெருக்க முயன்றது . ஆனல் வெளிமுதலீடும் கைத்தொழில் முன்னேற்றமும் போதியளவுக்கு ஏற்படவில்லை. சில மூலவளங் களும் செய்தொழில்களும் அரசின் தனியுரிமையாக்கப்பட்டன : பெரும் நீர்ப்பாசன திட்டங்களிலும், பல அடிப்படைத்' தாழில்களிலும் அரசாங்கம் நேரடியாகப் பெருந்தொகையில் முதலீடு செய்தது ; ஆனல் முதலீட்டிற்கேற்ற விளைவு கிட்ட
恕
வில்லையென்று கூறலாம்;
அரசியலதிகாரத்தை அந்நியரிடமிருந்து இலங்கையர்க்குத் மே பெற்றுத்தந்ததாகக் கூறிக்கொள்ளும் ஐ.தே. கட்

Page 126

- 51 -
சனநாயக சோஷலிசத்தைக் குறிப்பதாக விளக்கம் தரப்பட் டுள்ளது; சோஷலிசத்திற்கு இட்டுச்செல்லும் ஒரேயொரு மார்க்கம் அரச உடைமைதான் என்பதை ஐ. தே க ஏற்கத் தயாராயில்லை. புதிய தத்துவத்திற்கிணங்க அது நடக்க எத் தனித்துள்ளதைக் காணலாம். உதாரணமாக, ம. ஐ. மு: அரசாங்கத்தால் தேசியமயமாக்கப்பட்ட சேவைகள் தனிச் சொத்தாளரிடம் திருப்பி வழங்கப்படமாட்டாதென்று அதன் 1960 தேர்தல் விஞ்ஞாபனம் அறிவித்தது; திருகோணமலைத் துறைமுகத்தைத் தானே தேசியமயமாக்கியது : சோஷலிச வாதிகளைக் கட்சியங்கத்தவர்களாக ஏற்காத கொள்கையைத் துறந்து, தேசிய அரசாங்கத்தில் பல இடதுசாரிகளுக்கு இடமளித்தது. தான் ஆட்சியிலிருந்த 1965-70 ஆண்டு களில் கையாண்ட நடவடிக்கைகளினல், சுதந்திரக்கட்சி அரசாங்கம் விட்டுச்சென்ற பொருளாதார சீர்கேடுகளை வெற்றி கரமாகச் சமாளித்து, விவசாயப் புரட்சியை ஏற்படுத்தி, கைத் தொழில் துறையைக் கணிசமான அளவில் முன்னேற்றி, துரித பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலியதன் மூலம் இன்று போல் மக்களின் வாழ்க்கை என்றுமே இருந்ததில்லை" என்று தன் 1970 தேர்தல் விஞ்ஞாபனத்தில் இறுமாப்படைந்துள்ளது; ஆனல் கூட்டணியினரின் தேர்தல் விஞ்ஞாபனம் இக் கூற்றுக் களை உண்மையற்றனவென்று மறுத்து வாதிடுவதைக் காண்லாம்,
கட்சியின் கொள்கை மாறியதற்கான வேறு உதாரணங் களும் உண்டு. இலங்கை ஒரு டொமினியனுக இருக்க வேண்டு மென்னும் தன் நிலையை 1960 இல் கைவிட்டு, மற்றும் கட்சி களின் கோரிக்கை மக்களின் மதிப்பைப் பெற்றதினுல்தானும் நாடு குடியரசாவதை ஆதரித்தது. சிங்கள் பெளத்த எழுச்சி யின் பிரதிபலிப்பைக் கட்சியின் மொழி, சமயக் கொள்கை களில் துலாம்பரமாகக் காணலாம். சிங்களத்திற்கும் தமிழிற் கும் சம அந்தஸ்து வழங்கும் கொள்கையைத் துறந்து, சிங்களமே படிப்படியாக அரசகரும மொழியாக வேண்டும் என்ற தீர்மா னத்தைக் கலனியா மகாநாடு நிறைவேற்றியது. ஒரு மதத்திற்கும் விசேட சலுகைகள் கொடுக்கக்கூடாதென்ற முன்னைய கொள்கை, சுதந்திரக் கட்சியின் கொள்கைக்கு விஞ்சியதோர் முதன்மை யைப் பெளத்தத்திற்குக் கொடுப்பதில் சென்றடைந்தது. தேசிய நோக்குடன் இயங்கிப் பல்வேறு மக்கட் தொகுதியினரிடையே ஐக்கியத்தை வளர்க்கும் இலட்சியத்தைக் குறிக்குமுகமாகக் கட்சிக்கு ஐக்கிய, தேசிய என்னும் அடைமொழிகள் சூட்டப் பட்டன. ஆனல், நடைமுறையில் கட்சி நலன் மேலோங்கியும், தேசியத்துள் சிங்களத் தேசியம் கலந்தும் செயற்பட்ட பான் மையைக் காணலாம், 1948-1949ஆம் ஆண்டுகளிலேயே
g). II.3.

Page 127
512 --
பெரும்பாலீன இந்தியத் தமிழரின் குடியுரிமையும் வாக்குரிமை யும் பறிக்கப்பட்டன; சிறுபான்மையினர் குறைகளை நீக்குவதற்கு வட்டமேசை மகாநாட்டைக் கூட்டவோ, மாவட்டசபை முறை யைச் செயற்படுத்தவோ ஐ தே; க. தயங்கியுள்ளது ; அத்தோடு நில்லாது, சிறுபான்மையினரின் இழந்த உரிமைகளை ஒரளவுக் காகுதல் கொடுக்க வேறு கட்சிகள் ஒருப்பட்டபோதெல்லாம் அவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளில் ஐ. தே.க. இறங்கி யுள்ளதை வரலாறு காட்டுகின்றது.
(3) பூநீலங்கா சுதந்திரக் கட்சி :
1937இல் திரு. எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்காவினல் ஆரம்பிக்கப்பட்டு அவர் தலைமையில் இயங்கிவந்த சிங்கள மகாசபை, 1947இல் ஐ தே கட்சியின் ஒரு உறுப்பானபோதும் தனது தனித்துவத்தை இழக்காது தொடர்ந்து இயங்கிற்று. ஐ. தே, கட்சியின் அரசாங்கத்தில் சுகாதார தலதாபன அமைச்ச ராயும், பிரதிநிதிகள் சபையின் முதல்வராயும் திரு. பண்டார நாயக்கா கடமையாற்றி வந்தார். திரு, டி. எஸ். சேனநாயக்கா விற்குப்பின் கட்சியின் தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் வரக்கூடிய தகைமை அவருக்கு இருந்தது ; ஆனல் இப்பதவிகள் சேர் யோன் கொத்தலாவலைக்கோ அல்லது திரு. டட்லி சேனநாயக்காவிற்கோ கிடைப்பதற்கான சூழ்நிலை கட்சிக்குள் உருவாகிற்று, மகாசபையின் சிங்கள பெளத்த அபிலாசைகளை யும், அதன் தலைவரின் சோஷலிச மனப்பான்மையையும் கட்சி வரவேற்கவில்லை. கட்சிக்கு எதிரான உணர்ச்சி மக்களிடையே வளர்ந்து சென்றது. இத்தகைய சூழ்நிலையில் தன்து அரசியல் உயர்ச்சிக்கு வழிகோலும், தான் விரும்பிய சமூக மாற்றங் களைச் செயற்படுத்தும் வாய்ப்பை உருவாக்குவதற்காகத் திரு, பண்டாரநாயக்கா தனது ஆதரவாளருடன் 1951இல் ஐ தே, கட்சியினின்று வெளியேறி, சிங்களமகாசபையைக் கலைத்துவிட்டு, இனமதமொழி வேறுபாடுகளைக் கடந்த பூரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்தார். ஐ. தே. கட்சிக்கு மாற்ருகப், புரட்சி வழியைப் பின்பற்ருத ஒரு ஜனநாயகக் கட்சியை நாட்டிற்குத் தருவதற்காகவே சுதந்திரக்கட்சி உருவாக்கப்பட்டதென்று அதன் ஸ்தாபகர் கூறியுள்ளார். స్ట్రీ
அமைப்பு: கட்சியின் 1951ஆம் ஆண்டு அமைப்பு விதிகளின் படி வயதுவந்தோர் நேரடியாக மாத்திரம் அதன் அங்கத்தவர் களாகச் சேரலாம்; கிளை, இளைஞர், மாதர் சங்கங்கள் தெரிந் தனுப்பும் பேராட்களைக் கொண்ட வருடாந்த மகாநாடு கட்சியின் பொதுக் கொள்கையினை நிர்ணயிக்கும். பொதுக்கமிட்டி யில் ஒவ்வொரு கிளைச்சங்கத்திலிருந்து இருவரும், ஒவ்வொரு
 

شیمیا 53. سیسی
மாதர் சங்கத்திலிருந்து ஒருவரும், கட்சியின் பாராளுமன்ற உறுப்
பினரும் அங்கம் வகிப்பர்; அது நாலு மாதத்திற் கொருமுறை யும் செயற்குழு விரும்பும்போதும் கூடவேண்டும். பொதுக்கமிட்டி யால் தெரியப்படும் கட்சியின் உத்தியோகத்தர்களும், வேறு பத்துப்பேரும் செயற்குழுவாகக் கடமை புரிவர். தான் விரும்பிய நேரத்தில் கூடும் செயற்குழு வேண்டியபொழுது பொதுக் கமிட்டியைக் கூட்டுவதோடு, கமிட்டியின் நிகழ்ச்சி நிரலை நிர்ண யிக்கும் பொது நிதியைக் கட்டுப்படுத்தும் இளைஞர், முதியோர் சங்கங்களை அமைக்கும் ; கிளைச்சங்கங்களின் அனு சரணையோடு அபேட்சகரை நிறுத்தும் முதற்படியான அதிகாரத் துடன் இயங்கும் செயற்குழு கட்சியின் நிர்வாக நிறுவன Ginéoréyrrh.
திரு. பண்டாரநாயக்கா ஐ தே. கட்சியிலிருந்து வெளி யேறிய பத்து மாதத்தில், 1952ஆம் ஆண்டுத் தேர்தல் நடை பெற்றபோது, சுதந்திரக் கட்சிக்குக் குறிப்பிடத்தக்க அமைப்போ நிதியோ இருக்கவில்லை. அதன்பின் கிளைச்சங்கங்களும் இளைஞர் சங்கங்களும் அமைக்கப்படலாயின. தலைவரின் கவர்ச்சிகரமான ஆளுமையே ஸ்திரமற்ற பிரமுகர்-நிறுவனங்களை ஒன்றிணைக்க உதவியது அவரின் படுகொலைக்குப்பின் அமைப்புச் சிதறுபடும் அபாயம் ஏற்பட்டது. ஆனல், மக்களிடையே வளர்ந்து ဓါးနှီးနှံ - கட்சியின் செல்வாக்கும், திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா கட்சிப்பொறுப்பை ஏற்க முன்வந்ததும் இக்கட்டான நிலைமை யைச் சமாளிக்க உதவின. சமூகசேவையில் ஈடுபட்டுக் கட்சி பால் நல்லெண்ணத்தைத் திரட்டும் நோக்கமுடன் 1963இல் மாதர் நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. இளைஞர் கூட்டிணைவு ଅର୍ଜାt ); பெருகின: இன்று, அவைகளின் பிரதம அமைப்பாளரான திரு. அனுரா பண்டாரநாயக்கா நாட்டின் பல பாகங்களிலும் இளைஞர் கூட்டிணைவுகளை தாபித்தும் அவைகளுக்கு உயிரூட்டி யும் வருகின்றர். சிங்களப் பிரதேசங்கள் அனைத்திலும் கிளைச் சங்கங்கள் அமைக்கப்பட்டன. ஆரம்பத்தில் கட்சியங்கத்தவர்க ளாகச் சேர்ந்த தமிழர்கள், கட்சியின் கொள்கை மாற்றத்தி னல் கட்சியிலிருந்து வெளியேறியது வரலாருகும்; இன்று தமிழ்ப் பிரதேசங்களிலும் கட்சிக் கிளைகள் தோற்றமளிக்கின்றன. முஸ்லிம்களும் கணிசமான அளவில் கட்சி அங்கத்தவர்களாக உளர். கட்சியின் " முற்போக்குத் திட்டங்களை விட, அரச அலுவலரின் நியமனம் இடமாற்றம் பதவியுயர்வு வேலைநீக்கம் போன்றவற்றிலும், தனியார் சொத்துக்களைச் சுவீகரிப்பதிலும் அரசாங்கம் கொண்டுள்ள அதிகாரங்கள், கட்சிக்கிளைகள் பெருகு வதற்கு ஒரு காரணமென்று சிலர் கூறுவதைக் கேட்கலாம்; இந்நாட்டின் 22 மாவட்டங்களிலும் 22 சுதந்திரக்கட்சி

Page 128
-54 -
மாவட்டக்கிளைகளும், அகில இலங்கைச் சுதந்திரக்கட்சி மகா சம்மேளனமும் விரைவில் அமைக்கப்படவிருக்கின்றன. மேற்படி சம்மேளனத்திற்கு ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலுமிருந்தும் தலா பத்துப்பேர் வீதம் மொத்தம் 1510 பேர் தெரிவு செய்யப்படுவர்.' -அமைச்சர் கே. பி. இரத்தினுயகா (14974 வீர கேசரியில்). 鷺
அண்மைக்காலம்வரை சுதந்திரக்கட்சி யமைப்பின் தன்மை ஆரம்பத்திலிருந்ததைவிட அதிகம் மாற்றமடையாது, பல அம் சங்களில் 1956க்கு முன்னிருந்த ஐ. தே. கட்சியம்ைப்பின் தன் மையை ஒத்திருந்தது. எதிர்க்கட்சியாக உதயமாகி அரசாங் கத்தைக் கைப்பற்ற விழைந்த சுதந்திரக்கட்சி, ஆரம்பத்தி
லிருந்தே தமது அரசியல் வாழ்வை மேம்படுத்த விரும்பும் தலத்துவாழ் பிரமுகர்களைத் தன்னகத்தே சேர்க்க முயன்றுள்ளது: திரு. பண்டாரநாயக்கா தமது குடும்பச் செல்வாக்கினலும், கட்சியை அமைக்குமுன் சில அமைச்சுகளுக்குப் பொறுப்பா யிருந்ததினுலும் தமது கட்சிக்கு மக்களிடையே ஆதரவைப் பெற்றுள்ளார் கிளைச்சங்கங்கள் பிரமுகர்களின் நிறுவனங்க ளாகப் பெரும்பாலும் இயங்கிக் கட்சிக்கு வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தன வேட்பாளர்கள் வெற்றியீட்டுவதற்கு உதவிய கட்சிச் செல்வாக்குப் படிப்படியாக உயர்ந்து, 1970 தேர்தலில் உயர் கட்டத்தை அடைந்தது; அப்பொழுது, இடதுசாரிக் கட்சிகளின் உதவியுடன் அதன் 107 வேட்பாளரில் 91 பேர் வெற்றி பெற்றது குறிப்பிடற்பாலது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தமது வெற்றிக்குக் கட்சியில் தங்கியிராத காலங் களில், கட்சி இறுகிய கட்டுப்பாடுடன் இயங்காதது இயற்கையேடு பல்வேறு நலன்களைப் பிரதிபலித்த அமைச்சர்களிடையே திரு. பண்டாரநாயக்கா காலத்திலும், திருமதி பண்டாரநாயக்காவின் 1960-1964 காலத்திலும் வேற்றுமைகள் தோன்றின. கட்சிக் கொள்கைகள் கட்சி நிறுவனங்களினல் ஆக்கப்பட வேண்டும்; ஆனல் அவற்றை நடைமுறையில் அமைச்சர்களும் பாராளுமன்றத்திலிருந்த தொகுதியினரும் நிர்ணயித்தனர் அமைச்சர்களிடையே வேற்றுமை எழுங்கால், அவர்கள் தம்மை ஆதரித்த பின்னிரையோரிடம், சில வேளைகளில் கட்சியின் உயரமைப்பிடம் ஆதரவுதேடும் போக்குக் காணப்பட்டது. இப் போட்டிகள் அமைச்சர் பதவிகளிலும் கொள்கைகளிலும் மாற் றங்களை எற்படுத்தின. மாக்சீவக் கட்சிகளின் ஆதரவை நா. வேண்டிய சூழ்நிலை, தேர்தல் கட்டத்தில் நன்மை பயப்பதாயி னும், கூட்டுக்கொள்கையைச் செயல்படுத்தும் கட்டத்தில், அன்றும் இன்றும் கூட்டாளிகளுக்கிடையில் வேற்றுமையை உருவாக்கியுள்ளது: . . . . . .
 
 
 
 
 
 
 
 
 
 
 

مسيين : 515 سب
கட்சிக்கொள்கையைக் கூடிய ஜனநாயக முறையில் நிர்ண யிக்கும், கூடிய திறமையான கட்சியமைப்பை உருவாக்கும் நோக்கங்களுடன், கட்சியின் அமைப்புவிதிகள் 1963இல் மாற்றி யமைக்கப்பட்டன; முன்னைய பொதுக்கமிட்டிக்குப் பதிலான புதிய மத்திய கமிட்டியில், பொதுக்கமிட்டியில் இடம்பெற்ற அங்கத்தவர்களோடு இளைஞர் சங்கங்கள் ஒவ்வொன்றும் தெரிந் தனுப்பும் ஒரு பிரதிநிதியும், மகாநாடு தெரிவுசெய்யும் 75 பேர் களும், நிர்வாகக்குழு அங்கத்தவர்களும் இடம்பெறுவர். இக் கமிட்டி பழைய செயற்குழுவிற்குப் பதிலாக அமைக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் முடிவுகளை உறுதிசெய்தல் வேண்டும் மத்திய கமிட்டியால் தெரியப்படும் உத்தியோகத்தரோடு வேறு 75 பேரும் நிர்வாகக்குழுவாக அமைந்து, மாதம் ஒருமுறை கூடி, முன்னைய செயற்குழுவிற்குரிய பரந்த கடமைகளைச் செய்வர் சாதாரண அங்கத்தவர்களும் கொள்கையை நிர்ணயிப்பதிற் கூடிய பங்கு கொள்ளுமாறு நிர்வாகக்குழுவின் அங்கத்துவம் அதிகரிக்கப்பட்டதே முக்கியமான மாற்றமெனலாம். ஆனல், இந்நோக்கம் நடைமுறையில் கைகூடுவதற்குப் பாராளுமன்றக் கட்சியின் ஆதிக்கப்போட்டி குறையவேண்டும் போட்டி குறை வதற்குக் கிளைச்சங்கங்களும் துணை நிறுவனங்களும் நன்கமைய வேண்டும் நன்கமைந்த அமைப்பு வளர்வதற்கு நிதி பற்ருக் குறையும், தங்கள் சொந்தச் செல்வாக்கினல் பிரமுகர்கள் தேர்தலில் வெற்றிபெறும் சூழ்நிலையும், மரபார்ந்த பெறுமானங் களை விரும்பும் அமுக்கத்தொகுதிகளின் ஆதரவும் தடைகளா
யிருந்துள்ளன. இன்று கூடிய நிதியைத் திரட்டும் வாய்ப்பும், பிரதமரின் கவர்ச்சிகரமான ஆளுமையும், வாக்காளரின் ஆதர வைக் கூடுதலாகப் பெற்றுத் தருமென்று கூறப்படுகின்ற கட்சி யின் செயல்திட்டங்களும், பிரமுகர்களின் செல்வாக்கைக் குறைத்து, கட்சியமைப்பு திறமையுடனும் கட்டுப்பாட்டுடனும் செயல்பட வழி வகுக்கலாம்.
கொள்கை : உயர் குடியிற் பிறந்து, ஒக்ஸ்ஃபோட் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று, முற்போக்கு அரசியற் கருத்துக்க ளுடன் தாயகம் திரும்பிய இளைஞர் பண்டாரநாயக்கா, ஆங்கில ஆட்சியாளரின் நன்மதிப்பைப் பெற்றுச் சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்த தந்தையின் பழமைபேண் கொள்கைகளைப் புறக்கணித்து, நாட்டின் விடுதலையையும் மக்களின் விமோசனத்தையும் தனது இலட்சியமாக மேற்கொள்ளலாஞர். ஆனல், இந்த இலட்சியம் அவரின் கால்நூற்ருண்டுப் பொதுவாழ்வில் சிங்கள பெளத்த மறுமலர்ச்சி, பெரும்பான்மையின விவசாயிகளின் முன்னேற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு செயற்பட வேண்டியதா
யிற்று இலட்சியத்திற்கிணங்க,அவர்தாபித்த பூரீலங்கா சுதந்தி

Page 129
سے 516 ..................
கட்சியின் பூரீ லங்கா" எனும் அடைமொழி இலங்கையின் பண்டைய மாட்சியுடன் கட்சியை இணைப்பதாகவும், சுதந்திர எனும் சொல் மக்கள் பெற்ற அரசியல் சதந்திரம் உண்மையில் அர்த்தமுள்ளதாக வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளன. ஐ. தே. கட்சியின் அடிப்படையான அரசியல் தத்துவத்தை ஏற்கும் அதே நேரத்தில், அக்கட்சி புறக்கணித்த தொகுதியினரின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் ஆரம்பிக்கப் பட்ட சுதந்திரக்கட்சி, சனநாயக சோஷலிச நிலைநின்று திட்டங் களைக் கூடுதலாக வகுத்துப் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் குறிக்கோளைக் கொண்டது : தேசியப் பொலிவுட னை ஒரு முற்போக்குக் கட்சியாக விளங்கி, மாக்சீயக் கட்சிக வின் தீவிரப் போக்கையும் ஐ. தே, கட்சியின் பழைமைபேண் பற்றினையும் நீக்கி, மத்திய பாதைவழி செல்லும் ஒரு மிதவாத சோஷலிசக் கட்சியாக இயங்க விரும்பியது. அத்தகைய வழியே வறுமை, அறியாமை, பிணி, வேலையின்மை ஆகியவற்றிலிருந்து விடுபட்ட பொருளாதார சுதந்திரத்தை மக்களுக்குக் கொடுப்ப தோடு, அவர்களின் அரசியல் சுதந்திரம் பறிபோகாமல் பாது காக்கவும் உதவும் என்று நம்பியது ; பேச்சுச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம், கூட்டுச் சேரும் சுதந்திரம், ஏதேச்சாதி காரமாகக் கைதுசெய்யப்படாச் சுதந்திரம் ஆகியவற்றை உள் ளடக்கிய இருகட்சி ஆட்சிமுறையை வரவேற்றது. கட்சியின் கொள்கைபற்றிய வரலாறு இரு முக்கிய அம்சங்களைக் காட்டி நிற்பது முதற்கண் கவனித்தற்பாலது. 1. எவற்றைச் செய்வோ மென்ற கட்சியின் கூற்றுக்களிலும் பார்க்க, அது நடைமுறை யில் சாதித்தவைகளே கட்சியைப்பற்றிய காட்சியை மக்களின் மனதில் உருவாக்க உதவியுள்ளன : கட்சியின் கொள்கை பற் றிப் பல சந்தர்ப்பங்களில் மயக்கநிலை தோன்றியிருப்பினும், அது நிறைவேற்றிய செயல்திட்டங்கள் மக்களிடையே கட்சியின் போக்கை ஒரளவுக்குத் தெளிவாக்கியுள்ளன. 2 மிதமானதா யிருந்த அதன் ஆரம்பக்கொள்கை காலப்போக்கில் தீவிரமான தாய் மாறிக்கொள்வதையும் காணலாம். 皺 W
திரு பண்டாரநாயக்காவின் தலைமையிலான சுதந்திரக் கட்சியின் 1952 தேர்தல் விஞ்ஞாபனம் சிங்கள தேசிய அபிலாசை களைப் பெருமளவிற்குப் பிரதிபலித்தது பெரும்பான்மை மக்க ளின் கலாசார மத கிராமிய பெறுமானங்களின் மறுமலர்ச்சி யும், சுதேச வைத்தியத்தின் மத பரிபாலன நிறுவனங்களின் குறை நீக்கலும் வலியுறுத்தப்பட்டன : மேற்கத்திய ஆதிக்கத்தி லிருந்து நாடு விடுபடுவதற்கென இங்கிலாந்துடன் ஏற்படுத்திய பாதுகாப்பு உடன்படிக்கையை ஒழித்தல், பொதுநல ஆயத்தி லிருந்து விலகுதல், நாட்டுமக்களே தங்களுக்குகந்த யாப்பை
 
 
 
 
 

--517-سے
ஆக்குதல் போன்ற திட்டங்கள் முன்வைக்கப்பட்டன; பொரு |ளாதாரத் துறையில் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற் கும் சிறுதோட்டப் பயிர்ச்செய்கையை முன்னேற்றுவதற்கும் பல நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது : படிப்படி யான தேசியமயமாக்கமும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம் பெற்றது. 1956 தேர்தலுக்குச் சிலகாலம் முன்னர் வரை கட்சி யின் செயல்திட்டத்தில் அதிக மாற்றம் ஏற்படவில்லை. ஆனல் தேர்தல் நெருங்கும் சூழ்நிலை தோன்றியதும், சிங்களமும் தமிழும் ஆட்சிமொழிகளாகவேண்டுமென்று இதுவரை வற்புறுத்திய திரு. பண்டாரநாயக்கா சிங்களத்தை மாத்திரம் ஆட்சிமொழியாக் கும் கோஷத்தைக் கிளப்பினர் அத்தோடு இலங்கைச் சமுதா யம் மரபார்ந்த பெளத்த நெறிகளுக்கமைய மாற்றியமைக்கப்பட வேண்டுமென்ற கிளர்ச்சிக்கும் ஆதரவு தரலானர். தேர்தலில் வெற்றிபெறும் நோக்குடன் மாக்சீயவாதிகளில் ஒரு பகுதியின ருடனும் தனிச்சிங்கள விரும்பிகள் சிலருடனும் சேர்ந்து ம. ஐ முன்னணியை ஏற்படுத்தினுர், முன்னணியில், பழமைபேணுவோர் மிதவாதிகள் தீவிரவாதிகள் எனப் பலதிறப்பட்டோர் இருந் தனர்; இந்தப் பின்னணியில் சுதந்திரக் கட்சியின் கொள்கை தெளிவற்றதாகக் காட்சியளித்தது. *
1956-59 ம் ஐ. மு. அரசாங்கத்தின் செயல்களே மயக்க மான நிலைக்கு விளக்கம் கொடுத்தன. 26-9-74 வானெலிப் பேச்சில் மறைந்த தலைவரின் சாதனங்களைக் கூறப்புகுந்த திரு மைத்திரிபால சேனநாயக்கா, ' இரு சகாப்தங்களைப் பிரிக்கும் ஆண்டாக 1956 திகழ்ந்துள்ளது; அவ்வாண்டு பழைய கால கட்டத்தின் செறிவுமிக்க சோம்பலைத் துண்டித்ததோடு, 194756 வரை ஆட்சியிலிருந்த மேல்வகுப்பினரின் பிற்போக்குக் கொள்கைகளை முற்ருக நிராகரித்துள்ளது, சிங்களத்தை ஆட்சி மொழியாக ஆக்கியது, கலாசார அமைச்சை நிறுவியது, வித்தி யோதய வித்தியாலங்கார பல்கலைக்கழகங்களை அமைத்தது, பஸ் சேவையையும் துறைமுகக் கப்பல் சரக்குக் கூட்டுத்தாப னத்தையும் தேசியமயமாக்கியது, இலங்கையிலிருந்த பிரித்தானிய தளங்களைக் கையேற்றது, சோஷலிச நாடுகளுடன் இராஜரீகத் தொடர்பை ஏற்படுத்தியது, மே தினத்தை விடுதலை நாளாக் கியது, தொழிலாளரின் சேவை நிபந்தனைகளை மேம்படச் செய் வதற்கான பல மாற்றங்களைக் கொணர்ந்தது போன்றவை திரு பண்டாரநாயக்காவினல், ஏனையோர் தெளிவாக உணரக்கூடிய வாறு அமுலாக்கப்பட்ட நடவடிக்கைகளிற் சிலவாகும்" என்று பெருமிதப்பட்டுள்ளார். இவற்றைவிட அரச முயற்சிகளை நிறுவினுர், கூட்டுறவுச் சங்கங்களை அமைத்தார், பொதுநல சேவைகளைப் பெருக்கினர், நெற்காணிச் சட்ட்த்தினை ஆக்க உதவி

Page 130
T 51 8 T
ஞர். இவைகள் அனைத்தும் நிலவும் பொருளாதார அமைப்பை அதிகம் மாற்ருது கட்சியின் மிதவாதக் கொள்கைக்கிணங்க மேற்கொள்ளப்பட்டவை எனலாம். முன்னணியிலிருந்து தீவிரப் போக்கை ஊக்கிய இடதுசாரிகள் வெளியேறியதும், திரு பண்டாரநாயக்கா கட்சியின் 1959ஆம் மகாநாட்டில் மாக்சீயத் தைக் கண்டித்ததோடு கட்சியின் சனநாயக சோஷலிசப் பாதையை உறுதிப்படுத்தியதும் கட்சியின் மயக்கமான போக்கைத் தெளிவாக்க உதவின. முன்னணியின் ஆட்சிக்காலத்தில் கட்சிக் குள்ளும் முன்னணிக்குள்ளும் வெளியிலும் சச்சரவுகள் வேலை நிறுத்தங்கள் இனக்கலவரங்கள் ஆதியன நடந்தது வரலாருகும் மாறிச்செல்லும் சமுதாய காலகட்டத்தில் பிணக்குகள் எழுவது இயற்கையானது; அப்பிணக்குகள்மூலம் மேலானதொரு இணக்' கம் காண்பது வரவேற்கவேண்டியது என்ற பிரதமரின் சித்தாந்தம் பிரசித்திபெற்றது: தமிழ்பேசும் ஒரு பகுதி மக்களின் நியாயமான குறைகளைப் ப.--செ3 உடன்படிக்கைமூலமோ வேறு வகையிலோ நிவிர்த்திசெய்ய முன்வந்த பிரதமர் அதை நிறைவேற்றுமுன் படுகொலை செய்யப்பட்டார்.
தன்னிகரற்ற தலைவனை இழந்த சுதந்திரக்கட்சி சிதறுண்ட நிலையில், அதன் கொள்கையிலும் சிலகால மயக்கம் நிலவியது. கொலையுண்ட கணவனின் கொள்கைகளைப் பின்பற்றி நாட்டை முன்னேற்றப் பாதையில் நடத்திச்செல்ல முன்வந்த விதவையின் தலைமையின் கீழ், கட்சியின் பங்குனி 1960, ஆடி 1960 தேர்தல் விஞ்ஞாபனங்கள் ம. ஐ. முன்னணியின் விஞ்ஞாபனத்தைப் பெரும்பாலும் பின்பற்றின. 1960-65 ஆட்சியின் முற்பகுதியில் சிறுபான்மையினரின் கடும் எதிர்ப்பிற்கு ஆளாகிய இரு சட்டங் கள் ஆக்கப்பட்டன : சிங்களத்தை நீதிமன்ற மொழியாக்க உதவிபெற்ற கல்விச்சாலைகளைப் பெளத்த தூண்டுதலின்பேரில் அரசு கையேற்க அதிகாரமளித்த சட்டங்கள் எந்த அளவிற்குப் * பண்டாரநாயக்கா கொள்கைகளைத் glg | தழுவியன்வென்று சரித்திரம் நிர்ணயிக்க வேண்டும் முன்னணிக் காலத்தில்போல் இப்பொழுதும் இடதுசாரிகள் கணிசமான அளவில் கட்சிக்குள் செறிந்திருந்தனர் : கிராமிய மக்கள், மரபார்ந்த கலாசாரம் ஆகியவையால் திசைமுகப்படுத்தும் கட்சியின் கொள்கை தொடர்ந்த அதே நேரத்தில், அரச பொருளாதார முயற்சிகள் கூடுதலாக ஆரம்பிக்கப்பட்டன : எண்ணெய்க் கம்பனிகள் தேசிய மயமாக்கப்பட்டன : பாலனசேவையின் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டன. கட்சியிலிருந்த தீவிரவாதிகளின் தூண்டுதலால் பொருளாதாரத் துறையில் அரசின் பங்கு அதிகரித்தும், பத்திரிகை களைக் கையேற்கும் எத்தனம் வலுப்பெற்றும் இருந்த சூழ் நிலையில், மாக்சீய பாதையைக் கட்சி பின்பற்றதென்று பிரதமர்
 
 
 

- 519 -
திருமதி பண்டாரநாயக்கா கூறவேண்டியிருந்தது கட்சியின் பாராளுமன்றப் பலம் குறைந்து சென்றதினல், ல. ச. ச. கட்சிக்கு அமைச்சரவையில் முதன்முதலாக இடமளித்தபோது கட்சியின் 15 மிதவாத பாராளுமன்ற உறுப்பினர் கட்சியி விருந்து வெளியேறியது கட்சியின் தீவிரப் போக்கைக் காட்டுவ தாக அமையுமென்று கூறுவாருமுளர்; WIWN
1965 தொடக்கம் எதிர்த்தி றத் தி லிருந்து ஐ. தேடு கட்சியை ஒன்றுபட்டு எதிர்த்த உறவின் பயனப், சுதந்திரக் கட்சியும் லீ ச. ச. கட்சியும், க. கட்சியும் பொதுவானதோர் செயல்திட்டத்தை அடிப்படையாக வைத்து, 1968ஆம் ஆண்டு ಸ್ಧಳಿಲ್ಲ அரசியல் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. " திரு. "பண்டாரநாயக்காவின் தலைமையின்கீழ் 1956இல் ஆரம்பிக்கப் பட்ட முற்போக்கு முன்னேற்றத்தைத் தொடர்ந்து கடைப் பிடித்து, இலங்கையில் சோஷலிச சனநாயகத்தை அமைப்பதே ? புதிதாக உருவான பொதுத் திட்டத்தின் குறிக்கோளாகும்; சுதந்திரக் கட்சியின் முன்னைய சனநாயக சோஷலிசம் தற் போது சோஷலிச - சனநாயகமாக மாறியதும், இந்த மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்த தென்பதும் கவனிக்கற்பாலது. முக் கூட்டணியின் 1970 தேர்தல் விஞ்ஞாபனம் கவர்ச்சிகரமான' பல வாக்குறுதிகளோடு, " சோஷலிச சமுதாயத்தை நோக்கி மேலும் முன்னேறிச் செல்வதற்கான அடித்தளத்தை இடும் வகையில் ஒரு தேசிய திட்டத்தின் பிரகாரம் பொருளா தாரத்தில் சகல கிளைகளையும் துரிதகதியில் வளர்க்க நாம் முனைவோம்' என்று கூறியுள்ளது; விஞ்ஞாபனத்தை ஒட்டியும், சில அம்சங்களில் ஒட்டாமலும், 1971 ஏப்பிறில் கிளர்ச்சியால் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்கேடுகளுக்கு மத்தியில், பாரதூர மான மாற்றங்கள் கடந்த நான்காண்டுகளிலும் கூட்டணியர சாங்கத்தாற் செயல்படுத்தப்பட்டுள்ளன, தனியார் துறைக்குக் கணிசமான அளவு இடமளிக்கும் 1972 - 76 ஐந்தாண்டுத் திட்டம் தேசிய வருமானத்தை உயர்த்தும், அவ்வருமானத்தை நீதியான முறையில் பங்கீடுசெய்யும், விசேடமாக விவசாயி களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் குறிக்கோள்களைக் கொண்டது திட்டத்தை நன்கு அமுல் செய்வதில் பல கஷ் டங்கள் தோன்றியுள்ளன; முக்கூட்டணிக்கால 1972 குடியரசு யாப்பு வலியுறுத்தும் கூட்டுச்சொத்தின் வளர்ச்சியும், சோஷ லிச சனநாயகம் பற்றிய விளக்கமும் இந்நூலின் IV/10 ஆம் இயலில் ஆராயப்பட்டுள்ளதைக் காண்க: வருமான செல்வ. வீட்டு உச்சவரம்புச் சட்டங்களைவிட, இதுவரை 550, 000 ஏக்கர் தனியார் காணியையும், யாழ்ப்பாணக் கல்லூரியையும், வேறு சொத்துக்களையும் அரசு சுவீகரித்துள்ளது. துரித சோஷலிச
இ. 1132

Page 131
- 520 -
முன்னேற்றத்திற்கு ஏற்றவகையில் புதிய யாப்பு ஆக்கப்பட் டுள்ளது முன்னேற்றத்திற்குத் தடையாயிருக்கும் அரசிய லுரிமைகளும் வேறு சக்திகளும் கட்டுப்படுத்தப்படுவதையும் காண்கின்ருேம், சுதந்திரக் கட்சி போன்று பரிணும சோஷலி சத்தை ல. ச. ச. கட்சி ஆதரிக்கும்போது, புரட்சிகர மாற் றங்களை விரும்பும் க. கட்சி முதன்முறையாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது கவனித்தற்பாலது. " நாம் இன்று இரு எதிரிகளை எதிர்த்துப் போராட வேண்டியுள்ளோம் : ஒன்று தீவிர வலதுசாரிகள், மற்றது தீவிர இடதுசாரிகள்" என்று திரு அநுரா பண்டாரநாயக்காவும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்ட கோட்பாடுகளுக்கு நாம் இடமளியோ மென்று பிரதம அமைச்சரும், கட்சியை தாபித்த அரும் பெருந் தலைவரின் அரசியற் சிந்தனைகளிலிருந்து கடைந்தெடுத்த * பண்டாரநாயக்கா கொள்கைகளுக்கு அவரின் மனைவியார் உயிரூட்டுகின்ருர் என்று திரு. மைத்திரிபால செனநாயக் காவும் அண்மையில் கூறியுள்ளனர். இருந்தும், சுதந்திரக் கட்சியின் கொள்கை ஆரம்பநிலையிலிருந்து இடதுபக்கம் சாய்ந்து விட்டதென்று அவதானிகள் கருதுவர்.
சோஷலிச - விவசாய - மரபார்ந்த கட்சியாகக் காட்சி யளிக்கும் சுதந்திரக் கட்சி, சிறுபான்மையினரைப் பொறுத்த மட்டில்தான் நியாயமாக நடந்துள்ளதென்று இதயபூர்வமாக நம்பினுலும் பெரும்பாலான இந்திய இலங்கைத் தமிழரும், ! கிறித்தவர்களும் ஐ. தே. கட்சியினதும் சுதந்திரக் கட்சியினதும் கொள்கைகளிற் காணும் சில அம்சங்களை எதிர்க்கின்ருர்க ளென்று கூறினல் அது உண்மையைத் திரித்துக் கூறுவதாக அமையாது, சுதந்திரக் கட்சியின் பழைய நடவடிக்கைகளை விடக், கடந்த நான்காண்டுகளில் மொழி மதம் குடியுரிமை கல்வி பொருளாதாரம் ஆதியாம் துறைகளில், தமிழர் படும் துன்பங் களையும், காணும் குறைகளையும் பத்துப் பிரிவுகளாக வகுத்து 8-9-74இல் வெளியிட்ட தன் துண்டுப் பிரசுரத்தில் தமிழர் கூட்டண காட்டியுள்ளது. சுதந்திரக் கட்சியின் முற்போக்குக் கொள்கையை ஆதரிக்கும் இடதுசாரித் தமிழர்கள்தானும், சம தர்மச் சமுதாயம் மலரும்போது சிறுபான்மையினரின் சிறு குறைகளும் சூரியனைக்கண்ட பணிபோல மறைந்துவிடுமென்று ஆறுதல் கூறுவதைக் காணலாம் சுதந்திரக் கட்சியை ஆதரிக்கும் சில தமிழ்ப் பிரமுகர்களின் நிலையைத் ' தேசிய ஒருமைப்பாட் டைக் கட்டியெழுப்பும் பணியில், சிறுபான்மை யி ன த்த வர் மனதில் குடிகொண்டுள்ள அச்சத்தையும் ஐயத்தையும் அகற் றுங்கள்" என்று யாழ்ப்பான மேயர் 5-10-74இல் பிரதமர் திருமதி பண்டாரநாயக்காவை விநயமாக வேண்டியதிலிருந்து அறியலாம். சுதந்திரக் கட்சியின் பொறுப்புவாய்ந்த சில
 
 
 

அமைச்சர்களும் தமிழ்மக்களின் குறைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கமுடியாதனவல்ல என்று அபிப்பிராயப்படுகின்றனர். இந்தச் சூழ்நிலையில், பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகத் தைத் திறந்துவைக்கப், பல சிக்கல்வாய்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்ட பூரீ லங்கா சுதந்திரக் கட்சிப் பிரதமர், யாழ்ப் பாணத்திற்கு முதன்முறையாக விசயஞ்செய்தது சரித்திர முக்கி யத்துவம் வாய்ந்ததாக அமையலாம். சிறிமாவோ அவர்களைப் பாட்டுடைத் தலைவியாக்கி, ' நின்னினம்போல் எம்மை நினைத்தோம்பி நிற்பாயேல், அன்னையளாய்ப் போற்றிடுவோம் நாம் ' என்று முன்ள்ை யாழ்ப்பாண வாலிப மகாநாட்டினர் சிலர் 5-10-இல் உறுதிமொழி தருவதைக் காணலாம்.
குறிப்பு: சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களாயிருந்து அதன் இன்றைய போக்கை ஏற்காத மேஜர் ஜெனரல் றிச்சாட் உடுகம அவர்களைத் தலைவராகவும், திரு, பிறின்ஸ் குணசேகரா அவர்களைச் செயலாளராகவும் கொண்டு புதியதோர் கட்சியாகிய ஜீ லங்கா விமுக்தி பலவேகய (விடுதலை இயக்கம்) 17-10-74இல் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இளைப்பாறிய நீதியரசர் ஒ. எல். டி3 கிறெட்சர் அதன் பொருளாளராகவும் பிரதித் தலைவ ராகவும் கடமையாற்றுகின்ருர், மக்களைப் பட்டினியிலிருந்தும் விலைவாசியேற்றத்திலிருந்தும் காப்பாற்றுதல், ஆட்சியாளரின் துர்நடத்தைகளையும், சுமார் 1250 நாட்களுக்குமேல் தொடரும் அவசரகாலச் சட்டத்தின் கீழான சர்வாதிகாரப் போக்கையும் தடுத்தல் ஆதியனவே புதிய கட்சி தோன்றுவதற்கான உடனடிக் காரணங்களென்று கூறப்பட்டுள்ளது. அது மக்களின் கட்சி யாக, விசேடமாக இளைஞரின் கட்சியாகச் செயல்படும் ; மலையக, வடபகுதி இளைஞர்களையும் ஈர்க்க முனையும் ; நேர்மை யான, அச்சமிலா, மதப் பற்றுடைய, பிறர் துயரைத் தம் துயர் போல் உணரும் இயல்புடைய தலைமையுடன் இயங்கும் ; வெளி நாட்டுறவில் நடுநிலைக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் பொரு ளாதாரத் துறையில் மாக்சீயம் - லெனினிசம் போதிக்கும் புரட்சி வழியைத் துறந்து, ஜனநாயகரீதியில், தனியார் முயற்சியை முற்ருக ஒழிக்காது முழுமையான சோஷலிசத்தை ஏற்படுத்தும் : முக்கூட்டணியும் ஐ. தே. கட்சியும் தருகின்ற இருகட்சி முறைமையினுல் சலிப்புற்ற மக்களுக்கு ஏற்ற மூன்ரும் சக்தி யாக" விளங்கும் என்று கட்சியின் அமைப்பாளர் கூறுகின்றனர்; (4) சிறுபான்மையினரின் சிறுகட்சிகள் : பன்மைச் சமூக இலங்கையில், சிங்கள மக்கள் தமிழர் முஸ்லிம்கள் முறையே 717, 22, 534 சத வீதத்தினராகும். பொதுநலன் என்பது நாட்டு மக்கள் அனைவரின் நலனுகக் கருதப்படாது. ஒவ்வொரு தொகுதியின் நலனைக் குறிப்பதாகக் கொள்ளப்படும் போக்கை

Page 132
سيسبيد 522 نسيس.
நம் நாட்டில் இன்றும் காணலாம்; இப்போக்கு, வேறு ஆசிய நாடுகளிற்போல் இன மத கலாசார அடிப்படையில் கட்சிகள்: அமைவதற்கான ஒரு முக்கிய காரணியாக இருக்கின்றது. சர்வ சன வாக்குரிமைமீதமைந்த பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறைமையில், சட்டவாக்க நிர்வாக அதிகாரங்கள் பெரும் பான்மை இனத்தவரைச் சென்றடைவதும், நிரந்தர சிறுபான் மைத் தொகுதிகள் தமது நலனைப் பேணும் நோக்குடன் இன ரீதியான கட்சிகளை அமைப்பதும் தவிர்க்க முடியாத தாகிர் விட்டது. வடக்கு மாகாணத்தில் 90 சதவீதமானேரும், கிழக்கு மாகாணத்தில் 50 சதவீதத்திற்குச் சிறிது குறைந்தோரும் இலங் கைத் தமிழர்களாகும். இப்பிரதேசங்கள் இனரீதியான கட்சிகள் வளர்வதற்கேற்ற சூழ்நிலையைத் தருகின்றன. சிறுபான்மை யினர் நலனைப் பேணுவதற்குத் தமிழர்களே முன்னணியில் நின்று முயற்சித்தனரெனலாம்; அரசியற் சுதந்திரத்திற்காகச் சிங்களமக்களுடன் ஆரம்பத்தில் ஒத்துழைத்த தமிழர்கள், 1920 யாப்பின் கீழான சட்டசபையில் சிறுபான்மையினரின் பிரதி நிதிகள் தொகை பற்றிய வேறுபாட்டினுல் தேசிய மகாசபையி லிருந்து வெளியேறினர்; இனவாரிப் பிரதிநிதித்துவம் தொடர வேண்டுமென்று வாதாடினர் தமக்குப் பாதகமானதென்று கருதிய டொனமூர் யாப்பின்கீழ் நடந்த முதலாவது தேர்' தலைப் பகிஷ்கரித்தனர் அமைச்சரவை முறைமையை எதிர்த் தனர். சுருங்கக்கூறின், அரசியல்துறையில் தமிழர்கள் பின்பற்ற வேண்டிய கொள்கைகள் வழிகள் பற்றி அவர்களிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றிடினும், நிரந்தர சிறுபான்மை யினராக இருப்பதினல் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை எவ்வாறு வெற்றிகரமாகச் சமாளிக்கலாமென்பதே அவர்கள் அனைவரின் பெரும் பிரச்சினையாக இருந்துவருகின்றது. இலங் கைத் தமிழருக்கு அடுத்தபடியாக, நாட்டின் சனத்தொகையில் 9.4 சதவீதத்தை வகிக்கும் இந்தியத் தமிழர் மலையகத்தில் செறிந்து வாழ்கின்றனர். இவர்கள் நலனைப் பேணுவதற்கென, நாடு ஆணிலப்பத அந்தஸ்தெய்திய தறுவாயில், இவர்களிடையே நிலவிய பலம்வாய்ந்த இல. இந் காங்கிரஸ், அதன் அங்கத் தவர் வாக்குரிமையை இழந்தபின் நலிவுற்றதையும், இன்று திரும்பவும் அதன் அரசியற்பலம் வளர்வதையும், வேறு கட்சிகள் தோன்றும் அறிகுறியையும் காணலாம். இலங்கைச் சோனகர், மலாயர் என இரு முக்கிய கூறுகளாகப் பிரிந்து, நாடெங் கணும் பரவலாக வாழும் முஸ்லிம்மக்கள் அமைத்துக்கொண்ட கட்சிகள், தமது தனித்துவத்தை இழக்காத முறையில் பெருங் கட்சிகளோடு சார்ந்து, தமது தொகுதியினரின் நலனைத் தற்காலிக மாகவேனும் வெற்றிகரமாகப் பேணும் பான்மையைப் பார்க்க
 
 
 
 

லாம் பல தேர்தல் தொகுதிகளில் முஸ்லிம் வாக்க ஆதரவு, பெருங் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் அபேட் சகரின் வெற்றிக்கு அவசியமானதினல், முஸ்லிம்மக்களின் நல னுக்குப் பாதகமான வகையில் நடக்கப் பெருங் கட்சிகள் முன் பருவதில்லை. இருந்தும் 54 சதவீத மக்கள் தொகைக்குரிய சட்டமன்றப் பிரதிநிதிகளை, நிலவும் தேர்தல் முறைமை பெற்றுக் கொடுக்காத குறையை எவ்வகையிலாயினும் நீக்குமாறு முஸ்லிம் தாபனங்கள், இன்று செயலாற்றும் மூன்ருவது தேர்தல்தொகுதி
ஈய ஆணைக்குழுவைக் கோரிநிற்கின்றன. () தமிழரின் கட்சிகளில் (அ) அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், (ஆ) தமிழரசுகட்சி, (இ) இலங்கைத் தொழி 鳚 காங்கிரஸ் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். (அ) அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் நாடெங்கணும் வாழ்ந்த தமிழரின் யாப்புச் சீர்திருத்தம் பற்றிய அபிப்பிரா யத்தை ஒன்றிணைத்து, 1945இல் வரவிருந்த சோல்பரி ஆணைக் குழுமுன் சமர்ப்பித்து, தமிழரின் அரசியல் பொருளாதார சமூக நலன்களைப் பேணுவதற்குகந்த யாப்பொன்றை ஆங்கி லேயரிடமிருந்து பெறுமுகமாகத் திரு ஜி. ஜி. பொன்னம் பலம் அவர்களின் தலைமையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 1944இல் உருவாகியது. காங்கிரஸின் தலைவர் பெருந்திறமை வாய்ந்தவர் சமநிலைப் பிரதிநிதித்துவமும் நிர்வாகக்குழு முறைமையும் இலங்கைச் சூழ்நிலைக்கு அவசிய மானவையென்று ஆணைக்குழுமுன் ஆணித்தரமாக வாதிட்டார். காங்கிரஸின் முக்கிய கோரிக்கைகளை, நமது நாட்டின் வர லாற்றை நன்கு அறியாத ஆணைக்குழு நிராகரித்துவிட்டு, சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்குப் போதாத சில ஏற்பாடு களை மாத்திரம் புதிய யாப்பில் புகுத்தியது வரலாருகும். தற் காலிக நோக்கத்திற்காக ஆரம்பமான காங்கிரஸ், அந்நோக் ல் சித்திபெருவிடினும் சிறுபான்மையினரின் சம்பிரதாய யற்கட்சியாகத் தொடர்ந்து இயங்கிவருகின்றது
மிழரின் நலனை நன்கு பேணுவத்ற்குப் பிரதிநிதிகள் பைக்கான 1947 பொதுத்தேர்தலில், தமிழ்ப் பிரதிநிதிகள் எந்த முறையில் தெரிந்தனுப்பப்படவேண்டுமென்பது பற்றி மூன்றுவித கருத்தோட்டங்கள் தோன்றின: 1. பல இனத் தவரையும் உள்ளடக்கிய ஒரு தேசியக் கட்சியில் சேர்ந்து செயல் படுவது சிறந்ததென்று ஒரு சாரார் கருதினர்; எனவே, ஐ தே; கட்சியின் வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிட்டனர். இவர்களின் செல்வாக்கு வாக்காளரிடையே படிப்படியாகக் குறைந்து 1956க்குப் பின் முற்ருக அற்றுப்போயிற்று. 2 ஒரு கட்சியிலும் சேராது. சுயேச்சையாளராகப் பாராளுமன்றஞ் சென்று அங்குள்ள நிலைக்கு ஏற்றவாறு கூட்டுச்சேர்ந்து செயலாற் றுதல் நன்றென்று திரு. செ. சுந்தரலிங்கம் போன்ற பெரியோர்

Page 133
- 524 -
岛
கருதினர்கள். 1948 வரை ஐ.தே. கட்சி அரசாங்கத்தில் அங்க தவராயிருக்க ஒருப்பட்ட திரு. செ. சுந்தரலிங்கம் கொள்கை வேறுபாட்டினல் அமைச்சரவையிலிருந்து ராஜினமாச் செய் விட்டு, அடங்காத் தமிழர் முன்னணியையும், பின்னர், ஈ. த. ஒ: முன்னணியையும் அமைத்தார்; இன்று, ஒற்றுமை முன்னணி தமிழர் கூட்டணியின் உறுப்பாகவுள்ளது. 3. நன்கு அமை கப்பெற்ற ஒரு தமிழ்க் கட்சிமூலம் பாராளுமன்றஞ் சென்று தமிழரின் உரிமைகளுக்காக உழைப்பதே சிறந்த வழியென்று தமிழ்க் காங்கிரஸ் கருதிற்று. நாவன்மையுடைய தலைவரின் இயங்கிய காங்கிரஸ் ஏனைய கருத்தோட்டங்களை மேலோங் விடாது தடுத்து, 1956வரை தமிழரின் முக்கிய கட்சியா விளங்கிற்று. 臀 .
அமைப்பு: 1944இல் ஆக்கப்பெற்று 1956இல் திருத்தப் பட்ட காங்கிரஸின் யாப்பு சம்பிரதாய நிறுவனங்களை அமைப் பதற்கு ஏற்பாடு செய்துள்ளது ; உதாரணமாக, நேரடியாகவோ கட்சிக்கிளைகள்மூலமோ சேரும் 18 வயதிற்குக் குறையாத அங்கத்தவர்கள், நகர்வட்டம் கிராமம் கோவிற்பற்று ஆகிய வற்றில் கிளைகளும் அவையொத்த வேறு தலகிளைகளும், தேர்தல் தொகுதிக் கமிட்டிகள், கட்சியை வழிநடத்தும் பொதுச் சபையும் தெரிகுழுக்களும், நிர்வாக அதிகாரமுடைய செயற் கமிட்டி, இளைஞர் மாதர் முன்னணிகள் போன்ற இணைப்பு நிறுவனங்களும் வேறு துணைநிறுவனங்களும், கொள்கைகளையும் திட்டங்களையும் வகுக்கும் வருடாந்த மகாநாடு ஆகியன குறிப் பிடத்தக்கன. இந்நிறுவனங்களையுடைய கட்சியின் அமைப்பு பலம்வாய்ந்ததென்று கூறுவதற்கில்லை5 தமிழரின் நம்பிக்கைக் குரிய பிரமுகர்களின் சேர்க்கையாகச் சோல்பரி ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க ஆரம்பமான காங்கிரஸ், பாராளுமன்றக் கட்சியாகச் செயல்பட்ட காலத்திலும், பிரமுகர்களின் கட்சி யாகவே பெரும்பாலும் இயங்கிற்றெனலாம் ; வேட்பாளர்கள் தமது சொந்தச் செல்வாக்கினுல் வாக்காளரின் ஆதரவைத் தேட முயற்சித்தாலும், கட்சியின் செல்வாக்கும், விசேடமாக அதன் தலைவரின் வாக்காளரைக் கவரும் ஆளுமையும் வேட் பாளரின் வெற்றிக்கு ஓரளவு உதவின அண்மைக் காலங்களில் கட்சியின் செல்வாக்கைக் கட்டிக்காக்க எத்தனித்த பிரமுகர் களில், நேர்மை நாவன்மை செயலுறுதி ஆகியவற்றினல் கட்சி யைக் கடந்து மக்களின் பேரன்பைப் பெற்றவரும், பிரதிநிதிகள் சபையின் முன்னுள் உப-சபாநாயகரும், கட்சியின் செயலாளரு மாகிய திரு மு: சிவசிதம்பரம் முன்னணியிடம் வகித்துள்ளா ரென்று கூறலாம்3
 
 
 
 
 
 

سنة 525 سم .
நோக்கங்கள் : தேசஓற்றுமையையும் தமிழ்பேசும் மக்களின் தனித்துவத்தையும் வலியுறுத்துவதாக அமையும் நோக்கங் களைக் கட்சியின் இரண்டாவது யாப்பு விதியில் காணலாம்: பொதுவாழ்வு வளம்பெறுவதை மனதிற்கொண்டு, தமிழ்பேசும் மக்களின் கலாசார பொருளாதார அரசியல் நலனைப் பேணி வளர்க்கக் கட்சி பாடுபடும் அதற்காகக் கலாசாரத்துறையில் நாட்டின் ஒவ்வொரு இனத்தினருக்கும் தன்னுட்சியுரிமை ஒப்புக் கொள்ளப்படவேண்டுமென்று யாப்பு வலியுறுத்துகிறது. தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் வளர்க்க, தமிழ் கலாசாரத் தைப் பரப்ப, தமிழை ஒரு தேசிய மொழியாகவும் அரசகரும மொழியாகவும் ஆக்கக் கட்சி உழைக்கும் தமிழ்பேசும் மக்கள் எம் மா கா ண த் தி ல் வாழினும், அரசாங்கத்துடன் தமிழில் தொடர்புகொள்ளும் உரிமையைத் தேசியமொழி யெனும் அந்தஸ்துக் குறிக்கும்; நீதிநிர்வாகம் போன்ற பொதுநிர்வாகத் துறைகளில் ஆங்கிலத்தைப்போல் திறம்பட உபயோகிப்பதற்கான தகுதியைத் தேசிய மொழிகள் பெறும் வரை, ஆங்கிலம் தொடரவேண்டுமென்று காங்கிரஸ் கருது கின்றது. இவைகள் மொழிவிடயத்தில் கட்சியின் குறிக்கோ ளாக இருப்பினும், நடைமுறையில் தேசிய அரசாங்கம் இயற்றிய விசேட தமிழ்மொழிப் பிரமாணங்களை ஏற்றுள்ளது. மக்களின் பல்வேறு ஆற்றலை வளர்க்கும் கல்வி முறையையும், தமிழரின் உயர்கல்வி விருத்திக்காகச் சேர் பொன்னம்பலம் இராமநாதன், திரு மல்லவராயர் போன்ருேர் விட்டுச்சென்ற அறக் கொடை களைப் பயன்படுத்தி ஒரு பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படுவதையும் விரும்பியுள்ளது.
தேசஓற்றுமையை ஏற்படுத்தும் முகமாகப் பல்வேறு மக்க ளிடையே நல்லெண்ணத்தையும் ஒத்துவாழும் பண்பினையும் உருவாக்கும் இலட்சியத்தைக் கொண்ட காங்கிரஸ், ஐ. தே. க. அமைச்சரவைகளில் அங்கத்துவத்தை ஏற்று, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் செயலாற்ற முன்வந்துள்ளதைக் காண லாம்; காங்கிரசின் பொருளாதாரக் கொள்கை தேசியக் கண் நோக்கைப் பிரதிபலிக்கும் தன்மையது நாட்டின் விவசாயமும் கைத்தொழிலும் விஞ்ஞானரீதியாகத் திட்டமிட்டு ஒருங்கிணைந்து முன்னேறவேண்டும் அதனல் அனைவரின் வாழ்க்கைத்தரமும் உயரவேண்டும், தொழிலாளருக்குத் திருப்தியான சம்பளம் கொடுபடல் வேண்டும், வறுமையும் வேலையின்மையும் ஒழிந்து அனைவருக்கும் சமவாய்ப்பை நல்கும் சமூக அமைப்பு உருவாக வேண்டுமென்று விரும்பியது: தமிழர்கள் இரு மாகாணங்களில் மாத்திரம் ஒதுங்கிவாழாது, நாடெங்கிலும் வர்த்தகம் செய்யும், தொழில்நடத்தும் சுமுகமான சூழ்நிலை தொடருவதைப் பேணும்

Page 134
--526 جنت
றிக்கோளைக் கொண்டிருந்தது. ஐ. தே: கட்சியுடன் ஒத்துழைத் ததினல் வடக்கிலும் கிழக்கிலும் சீமெந்துக் கூட்டுத்தாபனம், கடதாசிக் கூட்டுத்தாபனம், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்ற வற்றை அமைத்ததோடு, தமிழர்கள் 1956 வரை சிங்களமக்க ளுடன் சமஅந்தஸ்துடையவர்களாக வாழ வழிவகுத்துள்ள தென்று காங்கிரஸ் கூறிக்கொள்கின்றது. அதேவேளையில் பொது வான இன கலாசார பாரம்பரிய அடிப்படையில் தமிழ்பேசும் மக்களினது பிரிக்கமுடியா ஒன்ருந்தன்மை ஒத்துக்கொள்ளப் படுதல், தமிழ்பேசும் மக்களின் பரம்பரைத் தாயகம் பறி போகாது பாதுகாக்கப்பட ல், இலங்கையின் அரசியல் சமுதாய உறுப்பினராக இந்திய வம்சாவழித் தமிழ்பேசும் மக்கள் தமது கடமைகளைச் செய்வதற்கும் உரிமைகளைப் பயன்படுத்துவதற் கும் குறுக்கேநிற்கின்ற சட்டரீதியான தடங்கல்கள் நீக்கப்படுதல் ஆதியன காங்கிரசின் வேறு கொள்கைகளாகும், 1947-56 இடை யில் தமிழ்ப்பகுதிகளில் சிங்களமக்கள் குடியேற்றப்படுவதை எதிர்க்காத காங்கிரஸ், அதற்குப்பின் நடைபெற்ற குடியேற் றங்களை, ஆட்சியாளரின் உள்நோக்கை மனதிற்கொண்டு எதிர்த் துள்ளதாகக் கூறுகின்றது. ஐ. தே. கட்சியுடனன ஒத்துழைப்பு முறிந்துபோகாவண்ணம், இந்திய பாகிஸ்தானிய பிரசாவுரிமைச் சட்டத்தின்கீழ் 75% இந்திய வம்சாவழியினர் குடியுரிமையைப் பெறுவார்களென்று நம்பி, காங்கிரசின் ஒரு பகுதியினர் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். அப்போது திரு எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களைச் சார்ந்தோர் கட்சியை விட்டு வெளியேறியதும், காங்கிரஸின் நடத்தை தமிழரின் ஆக்கநலனுக்குத் துரோகமானதென்ற அவப்பெயர் பரவியதும், காங்கிரஸ் தமிழர்களிடையே பெற்றிருந்த செல்வாக்கை ஒரளவு இழப்பதற்கான காரணியென்பது குறிப்பிடற்பாலது: சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தைக் காங்கிரஸ் எதிர்க்கவில்லை; குடியுரிமை பெறுவோரைப் பிரத்தியேக வாக்காளர் பட்டியலில்
சேர்க்கக்கூடாதென்ற கருத்துடையது.
காங்கிரசின் அரசியற்கொள்கையை நோக்கின், பல்வேறு பட்ட மக்கட்தொகுதிகளும் தன்மானத்துடன், உயர்மதிப்புடன், நாடெங்சனும் சமஅந்தஸ்துடனும் சமவாய்ப்புடனும் வாழ் வதற்கு வழிகோலும், ஜனநாயகரீதியில் ஒற்றுமையுடன் இயங்கும் ஒற்றையாட்சி அரசை வேண்டிநிற்கின்றது அதில் சிறுபான்மை யினர் பிறரின் மேலாண்மைக்கு ஆளாகக்கூடாது; அதேநேரத்தில் மக்களினத்தின் தனியாட்சிப் பண்புரிமை ஒப்புக்கொள்ளப் படவேண்டும் உயர்நீதிமன்றம்மூலம் எந்த ஒரு பிரசையும் நிலை நாட்டக்கூடிய அடிப்படை உரிமைகளைக் கொண்ட அத்தியாய மொன்று பழைய யாப்பில் சேர்க்கப்படுவதன் அவசியத்தை
 
 
 
 

- 527 -
வலியுறுத்திற்று. இக்குறிக்கோளுக்கு இணங்கச் சமஷ்டி ஆட்சி முறை நாட்டிற்கும் சிறுபான்மையினருக்கும் கேடானதென்று கூறித் தமிழரசுக் கட்சியின் சமஷ்டிலட்சியத்தை வன்மையாகக் கண்டித்து வந்துள்ளதைக் காணலாம் கிளையாட்சிமுறையைக் கோட்பாட்டுரீதியில் எதிர்க்காவிடினும், மாவட்டசபைகள் பற்றிய மசோதா அரசாங்கத்திற்கும் மாவட்டசபைகளுக்கும் இடையிலான தொடர்புமொழி அதிகாரபூர்வமான மொழியாய் இருக்கவேண்டுமென்றதினுலும் சபைகளுக்கு அளிக்கப்பட்ட அதிகாரம் தமிழர்களுக்குப் பாதகமாகத் தென்பகுதிகளில் பயன் படுத்தப்படலாமென்றதாலும் அம்மசோதாவிற்கு எதிர்ப்புக் காட்டியது. காங்கிரசின் சமநிலைப் பிரதிநிதித்துவக் கோரிக் கையைச் சோல்பரி ஆணைக்குழு நிராகரித்ததை முன்னர் பார்த் தோம் பெரும்பான்மையினத்து ஆட்சியாளரைக் கடுப் படுத்தக்கூடுமென்று கருதிய 29ஆவது விதியோடு இருக்ட சட்டமன்றம், சுதந்திர நீதிச்சேவைக் கமிஷன், சுதந்திர பொதுச் சேவைக் கமிஷன் போன்ற பாதுகாப்புக்களாவது கிடைத்ததே யென்று காங்கிரஸ் ஓரளவு ஆறுதலடைந்தது. இக்காப்பீடுகள் நடைமுறையில் அதிகம் பயன்தரவில்லையென்று கண்ட காங் கிரஸ், நன்கு வரையறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் யாப்பில் இடம்பெறவேண்டிய அவசியத்தை வற்புறுத்தி வந்துள்ளது. குடியரசுயாப்பில் சேர்க்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயமும், சோல்பரி யாப்பிலிருந்த சிறுபான்மையினரின் ஏனைய காப்பீடுகள் அகற்றப்பட்டமையும் காங்கிரசிற்குப் பெரும் ஏமாற்றமாகும். இச்சூழ்நிலையில், தேச ஒருமைப்பாட்டிற்காகவும் ஒற்றையாட்சிக்காகவும் ஐ தே கட்சி யுடன் ஒத்துழைத்து, அக்கட்சியின் மொழிக்கொள்கை மாற்றத் தினுல் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த காங்கிரசின் அடிப் படைக் கொள்கைகளில் திசைதிருப்பம் ஏற்படலாயிற்று. காங் கிரசின் இரு பாராளுமன்ற உறுப்பினரும் வேறு சிலரும் முக் கூட்டணி அரசாங்கத்தை ஆதரித்துக் காங்கிரசிலிருந்து வெளி யேற, கட்சித்தலைவரின் நிலை என்னவென்று பொதுமக்களுக்குத் திட்டவட்டமாகத் தெரியாதிருக்க ஏனையோர் 14:572இல் உதயமான தமிழர் கூட்டணியில் சேர்ந்து செயலாற்றுகின் றனர்: இலங்கையின் பல்வேறு மக்கட் தொகுதியினருக்கும் சுய நிர்ணய உரிமை உண்டென்று காங்கிரசின் அமைப்புவிதி வலி யுறுத்துவது கவனித்தற்பாலது. 燃薇
(ஆ) தமிழரசுக் கட்சி: சமநிலைப் பிரதிநிதித்துவத் திட் டத்தை ஆதரித்துத்தோல்விகண்டபின், ஒற்றையாட்சியின் கீழ் ஐ தே கட்சியுடன் ஒத்துழைத்துத் தமிழ்மக்களின் நலனைப் பேணமுடியும் என்ற நம்பிக்கையில் இயங்கிய தமிழ்காங்கிரசில் அங்கத்தவராயிருந்த திரு எஸ். ஜே. வி. செல்வநாயகமும் வேறு
இ க33 (്

Page 135
ரங்கள் காட்டுகின்றன.
அமைப்பு: மாக்சியக் கட்சிகள்
யப் புரட்சிமனப்பான்மையு "ருடன் இயங்குவன:
ல் துெ காரியசை
மாநில மகாநாடுகளின் தீர்ம
கைகளை வகுத்தல் St.
 
 
 
 
 
 
 
 
 

பாதுகாப்பு, ! யும் கட்சியின்

Page 136
--- இருந்தும் தமிழ்நலப் பாதுகாவலன் என்று பெரும்பகுதி தமிழ்மக்களின் இதயத்தில் கலந்துவிட்ட இக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தலத்துவாழ் பிரமுகர்களிற் பெரும்பாலானேர் வெற்றிபெற்றுள்ளனர்; அது முன்னின்று நடத்திய பாராளு மன்றத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் தமிழரசுக் கட்சி யைச் சாராதோரும் பங்குபற்றியுள்ளனர். மூதறிஞர் செல்வ நாயகம் அவர்களின் நீண்ட நேர்மையான, உறுதியான, உத்தியோகபூர்வமற்ற தலைமையும் கட்சியின் செல்வாக்கை உயர்த்திய முக்கிய காரணிகளில் ஒன்றெனலாம். : '
இலட்சியம், 1972 வரை கட்சியின் அமைப்பு விதிப்படி " ஐக்கிய இலங்கைச் சமஷ்டியின் அங்கமாகச் சுயநிர்ணய உரிமைக் கொள்கைப்படி ஓர் சுயாட்சித் தமிழரசும், ஓர் சுயாட்சி முஸ்லிம் அரசும் நிறுவி, இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்க ளுடைய அரசியல், பொருளாதார, கலாசார விடுதலையைக் காண்பதே தமிழரசுக் கட்சியின் நோக்கமாகும். இப் பிர கடனத்திலிருந்து தமிழரசாரின் சிந்தனையையும் செயலையும் அவற்றின் விளைவையும் ஆராய முற்படலாம். 1 தமிழரசுக் கட்சி எத்தன்மையது? அது ஒரு சம்பிரதாயச் சிறுகட்சி அல்ல; விரிவின் அளவிலும் பாராளுமன்ற உறுப்பினர் தொகையிலும் 1965 தேர்தலில் மூன்ருவது இடத்தையும் 1970 தேர்தலில் நாலாவது இடத்தையும் பெற்ற ஒரு அரசியற் கட்சியாக வளர்ந்து சோஷலிசம், தீண்டாமை ஒழிப்பு போன்ற முற் போக்குக் கொள்கைகளை ஆதரித்து நாடாளுமன்ற விவாதங் களில் கலந்தும், ஆட்சிக்குழுக்களிலும் ஒருகால் அரசாங்கத் திலும் பங்குபற்றியும், நிர்வாகத்தின் சீர்கேடுகளைக் கண்டித்தும் ஒரு சம்பிரதாயக் கட்சியாக இயங்கிடினும், தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காகப் பாராளுமன்ற பாராளுமன்றத் திற்குப் புறம்பான வழிகளில் உழைக்கும் ஒரு இயக்க மென்று தமிழரசுக் கட்சியை அழைப்பது பொருத்தமான தென்று கருதுவாருமுளர் 2 எதிலிருந்து விடுதலை ? வரலாறு பண்பாடு, மொழி, மதம், பிரதேசம் ஆகியவற்றினுல் ஒருமை உணர்ச்சியுடைய இரு தேசிய இனங்களையுடைய இலங்கையில் பெரிய தேசிய இனம் சிறியதை விழுங்கும் இயற்கைப் போக்கைத் தழுவி, ஒற்றையாட்சிப் பாராளுமன்ற அமைச்சரவை முறை மையின் கீழ் சிறுபான்மையினர் தமது அடிப்படை உரிமைகளைப் படிப்படியாக இழந்து இனஅழிவு பெறச் சுதந்திரத்தையும், நிரந்தரமாக ஆளப்படுவோராயிராச் சுதந்திரத்தையும் தமிழரசுக் கட்சி வேண்டிநிற்கின்றது. 3 விடுதலையை எங்கே காணலாம் ? தமிழரசார் விரும்பியது சமஷ்டிச் சுதந்திரமாகும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வெளிவிவகாரம், பாதுகாப்பு
 

( 531
போக்குவரத்து போன்ற விடயங்களை மத்திய அரசாங்கமும், இலங்கையின் ஒற்றுமைக்கும் வெளிப்பாதுகாப்பிற்கும் முர
ணற்ற வகையில் மிகக் கூடியளவு விரிந்த ஸ்தல முக்கியத்துவம் வாய்ந்த கல்வி, சுகாதாரம், சமூகசேவை காணியபிவிருத்தி போன்ற விடயங்களை இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்
பட்ட பிரதேச அரசாங்கங்களும் பொறுப்பேற்று, ம்த்திய
அரசாங்கத்தின் கட்டுப்பாடின்றிப் பிரதேச அரசாங்கங்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களில் சுதந்திரமாக இயங்குகின்ற கூட்டாட்சி முறையின்கீழ், அங்கத்துவ பிரதேச அரசுகள் தம்
மக்களின் தனித்துவத்தைப் பேணுவதோடு, அவர்களின் கலா சாரத்தையும் பொருளாதாரத்தையும் வளர்க்கலாம் பிரதேச மக்கள் தம்மைத் தாமே ஆளும் வாய்ப்புப்பெற்றுப் புருஷத்துவ
வளர்ச்சி எய்தலாம்; அவர்களின் உரிமைகள் பேணப்படும்;
ஒவ்வொரு பிரதேச அரசும் முன்னேற நாடும் முன்னேறுகிறது:
அத்தோடு, தேசிய மனப்பான்மையும் மக்களிடையே வளர்
கிறது; மத்திய ஆட்சி பிரதேச மக்களைத் திருப்திசெய்யும்
வகையில் அமைக்கப்பெற்று, அவர்கள் ஒத்துழைப்புடன் நன்கு இயங்கலாம்; சமஷ்டி பிரிவினையல்ல, பிரிவினைக்கு வழிகோலுவது
மல்ல; அது தேசிய ஒருமைப்பாட்டிற்கும் பிரதேச அரசுகளின்
உரிமைகளுக்குமிடையில் சமரசஞ் செய்யும் ஓர் எத்தனம். வேற்றுமையில் ஒற்றுமை காணும் முறை, ஐக்கிய இலங்கையை உருவாக்கக்கூடிய ஒரேயொரு வழி என்றெல்லாம் தமிழரசுக் கட்சி, பிறநாட்டு அனுபவங்களை மேற்கோளாகக் காட்டி வாதித்
இத்தகைய சிந்தனப் பிரகாரம், பிரதிநிதிகள்சபை அங்கத்
தவரின் * பெரும்பான்மை ஆதரவைப் பெற்று நிலவும் யாப்பை
மாற்றி சமஷ்டியாட்சியை ஏற்படுத்த விரும்பில் தமிழரசுக் கட்சியின் இலட்சியம் நிறைவேறுவதற்குப் பெரும்பான்மை
இனத்தவரின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும். ஆனல்,
சமஷ்டிமுறை நாட்டின் பிரிவினைக்கு இட்டுச்செல்லும், அதன்
முன்னேற்றத்திற்குத் தடையாயிருக்கும் என்று கூறி, ஆட்சியதி
காரத்தை மக்கள் அனைவருடனும் பகிர்ந்தனுபவிக்க அதிகா ரத்தைப் பெற்றுள்ளோர் விருப்புக்கொள்ளவில்லை முயற்சி
திருவினையாக்கும் என்ற எண்ணத்துடன் தமிழ்பேசும் மக்க ளிடையே சமஷ்டியார்வத்தை வளர்க்கவும் சிங்களமக்கள்
சமஷ்டி முறைமையை ஏற்கச்செய்யவும் தமிழரசுக் கட்சி 22 ஆண்டுக்காலம் முயன்றுள்ளது. சாதி மத புவியியல் ரீதியாக வேறுபட்டிருந்த முஸ்லிம் மக்கள், மலைநாட்டுத் தமிழர், இலங்
கைத் தமிழர் ஆதியோரின் அரசியலொற்றுமையை வளர்க்கு முகமாக முஸ்லிம்மக்களின் மரபார்ந்த வாழுமிடங்கள் திட்ட

Page 137


Page 138
ܚܵܝܵܐ 534 ܚܘ .
ஏதாவதொரு வகையில் சிங்களத் தலைமையிலான கட்சிகள் ஒவ்வொன்றின லும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை யென்று தமிழர் கூட்டணி கூறுகின்ற இந்த அம்சங்களை அரசாங்கம் ஆராய முன்வராது வாளாவிருந்தது: இந்தப் பின்னணி யிலே, தமிழரசுக் கட்சித் தலைவரின் சொற்பாங்கில் சிங்களச் சமுதாயத்தின் சம்மதத்தோடு எமது உரிமைகளே நிலைநாட்ட முடியாதென்பது தெரிந்துவிட்ட்பின் ஒரு தனித் தேசிய இனத்
தின் மறுக்கமுடியாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், தன் பாரம்பரிய தாயகத்தில். சட்டமறுப்பு ஒத்துழையாமை
ஆயுதங்களைத் தாங்கி. சாத்வீகப் புரட்சிமூலம் . தமிழினம் தன்னுட்சி காண்பதன் அவசியத்தை வலியுறுத்தும் பிரேரணை செப்ரெம்பர் 1973இல் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 12ஆவது மாநில மகாநாட்டில் நிறைவேறியது. இத்தீர்மானம் தமிழரசுக் கட்சியின் சரித்திரத்தில் ஒரு திருப்புமுனை எனலாம்
ஜூலை 1974இல் அனைத்துலக நீதி ஆணைக்குழுவிற்கும் சுெப் ரெம்பர் 1974இல் இலங்கையில் கூடிய பொதுநலவாய மகா நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் சமர்ப்பித்த அறிக்கைகளில், தமி ழினத்தை அல்லற்படுத்தும் அரச நடவடிக்கைகள் பற்றிய நீண்ட பட்டியல்களைக் கொடுக்கும் தமிழர் கூட்டணி இரு தேசிய இனங்களும் பிரிந்துசெல்லும் கட்டம் வந்துவிட்டதா? என்ற கேள்விக்கண தொடுத்து நிற்கின்றது. சரித்திரக் காரணிகளின் பயனுய் உருவாகியுள்ள இக்கட்டான இன்றைய நிலையில், நேரெதிராகவுள்ள இரு தரப்பினரையும் ஒன்றிணைக்க விழிப் புறும் தொழிலாளி வர்க்கத்தினுல்தான் இயலுமென்று மாக்சிய வாதிகளும், சிறுபான்மையினர் காட்டும் சில ஆட்சேபனைகளில் நியாயமுண்ட்ென்று பொறுப்புவாய்ந்த அமைச்சர்களும், கருத்து வெளிப்படுத்தும் இவ்வேளையில் யார் வகுப்புவாதிகள் ? யார் மக்களின் உண்மையான பிரதிநிதிகள்? எனும் முரண்படு வாதங்களைக் கைவிட்டு, நாட்டு நலனை மனதிற்கொண்டு அமரர் பண்டாரநாய்க்கா காட்டிய வழியைப் பின்பற்றியாகுதல் தேசிய இனப்பிரச்சினைக்கு நல்லதோர் தீர்வு விரைவில் காண்பது arGansé島強sèrén, (9) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்: 1920ஆம் பத் தாண்டுகள் தொடக்கம் இந்தியத் தோட்டத் தொழிலாளர் மத்தியில் ஆரம்பமான தொழிற்சங்கங்களிடையே தொழிலாள ரின் பலம் சிதறுண்டிருந்ததினுல், அவர்களின் அபிலாசைகளைத் தெளிவாக வெளிப்படுத்தி, அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு, அவர்கள் அனைவரையும் அகங்கொண்ட ஒரு பெரும் நிறுவனம் அவசியமாயிற்று. இக்குறையைப் போக்க வென, இந்திய வம்சாவழியினருக்குப் பாதகமான அரசாங்க
 
 
 
 
 
 
 
 

நடவடிக்கைகள் சம்பந்தமாக இலங்கைக்கு வருகைதந்த ஜவகர் லால் நேரு அவர்களின் ாசனையின் பேரில், திரு ஜி. ஆர். மோதா, திரு. எஃ 鷲懿鷲
யின்கீழ் 15-7
சாதாரண நேரத்தைச் செலவழித்தது. அரசியற் பிரச்சினைகளும் அதன் கவனத்திற்கு ஆ உதாரணமாக இந்தியத் தமிழரின் பிரதிநிதித்துவம் சம் மான தனது கருத்துக்களைச் சோல்பரி ஆணைக்குழுவிடம் ச பித்துள்ளது ஆணைக்குழுவின் திருப்தியற்ற சிபார்சுகளை ஆம்
சேபித்து 1946இல் கர்த்தால் ஒன்றை நடத்தித்
பலத்தை வெளிப்படுத்தியுமுள்ளது.
ஏனய கட்சிகளின் ஆரம்ப அமைப்புப்போன்று இலங்கை இந்திய காங்கிரசின் அமைப்பும் செல்வாக்குடைய பிரமுகர்களை மையமாகக்கொண்டு இயங்கியதெனலாம் இருந்தும், 1947
களைச் சுதந்திரக்கட்சி வ
ய கைப்பற்றியது; அப்ப
யில், கைப்பற்றும், மாக் திலிருந்து அகற்றும் ட்ட்ங்களை ஐ.தே. Ο Σ. . .Σ. Σ இச்சட்டங்களுக்கு இந்தியத் தமிழரின் எதிர்ப்பைக் காட்டுமுகமாக எழுந்த சத்தி யாக்கிரக இயக்கத்திற்குக் காங்கிரஸ் தலைமைதாங்கியது; ஆனல் 1952 தேர்தலிலோ அதற்குப் பின்னர் நடைபெற்ற தேர்தல் களிலோ இந்திய வாக்காளர் தொகை குறைந்ததினல் தனது
அபேட்சகர்களை நிறுத்தமுடியவில்லை. 鷺 54இல் நடைபெற்ற இலங்கை இந்திய காங்கிரசின் காநாடு கட்சியின் பெயரை இலங்கைத் தொழி ஸ் என்று மாற்றியது பொருத்தமானதாகும். 鷲懿 னயின் பலம்வாய்ந்த அமுக்க நிறுவனமாக

Page 139


Page 140
சார வாழ்வை மேம்படுத்து ü。 சோஷலிச சமுதாயத்தை ஏற் படுத்த உழைக்கும். ஏனைய இயக்கங்களுடன் மலாயரை பிணைக்க முனையும் நோக்கங்களைக் கொண்டது. 徽
இலங்கைக் கட்சிமுறைமையில், அதன் வளர்ச்சி கொணர்ந் தாக இரண்டாம் பிரிவில் காட்டிய அ வேறு சிலவு குறிப்பிடற்பாலன
தம் I கடந்த 7 பாராளுமன் சுயேச்சை வேட்பாளர், அவர்களில் ಸ್ತ್ರ್ಯ அவர்களை ஆதரித்த வாக்காளர், கட்டுப்பணத்தை இழந்தோர் பற்றிய புள்ளிவிபரங்களைத் தருகின்றது. இவற்றிலிருந்து கட்சி சாராதவர்கள் இலங்கை அரசியலில் முக்கிய இடம் வகித்திருந் நிலையைப் படிப்படியாக இழந்து நிற்பதைக் காணலா 1947ஆம் ஆண்டு அவர்கள் உயர் செல்வாக்கின் இறுதிக் மெனலாம். இவ்வாண்டில் துல்லியமான கொள்கையுடைய ழ்நிலையில், அரசசபைக்கால அனுபவத் ன்பற்றி வரிக்காளர்கள் சுயேச்சை வேட்பாளரின் பை மனதில் அதிகம் கொள்ளாது, பிரமுகர்களுக்கு
பட்ட பிளவுகள், 35 போட்டியிட்ட குறைந்து தேர்தலில் போட்டியிட விரு நியமனம் கிடைக்காமை, 4. எதிர்த்திறத்
றுபடுத்துவதற்குப் பெருங்கட்சிகள் சுயேச்
போட்டியிடத் தூண்டியது போன்றவை அமைந்துள் 闵 மற்பாலது. சுயேச்சையாளருக்குக் கிடைத்த
மிகவும் குறைந்து சென்றதினுல் வரவர அதிகமானேர் கட்டு பணத்தை இழந்துள்ளனர் உதாரணமாகப் ாே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போரில் 78% 1965 தேர்தலிலும், 94% 1970 தேர்தலிலும் இக்கதிக்கு ஆளாகினர். 1947 பின் கட்சிசார்பற்றேர் சில மாகாணங்களில் தப்பிவாழ்வ ளுண்டு வடமாகாணத்தில் *、 鷺了燃 கீழ்மாகாணத்தில் முஸ்லிம்ம மொழிமத காரணிகளால் சிங்கள அல்லது தமிழ்க் கட்சிகளுடன் முழுமையாகச் சேர முடியாமையும், வடமேல் மாகாணத்தில் சில பிரமுகர்கள் கட்சி களில் சேரும் விருப்பின்மையும் சுயேச்சையாளர்கள் தெரியப்படு வதற்கு உதவியுள்ளன. கட்சிச்சார்பற்ற வேட்பாளர்கள் ஊவா மாகாணத்தில் சிதறலாக வெற்றியும், ஏனைய மாகாணங்களில் பெருமளவிற்குத் தோல்வியும் அடைந்துள்ளனர் வருங்கா தில் தற்சார்பாளர்கள் அரசியலிலிருந்து முற்ருக அக
சுயேச்சையாளரின் செல்வாக்குக் குன்றியதற்குப் னங்களைக் காட்டலாம்: 1. 1959இல் உச்சவரம்பு போடப்பட்டது. ஒரு அபேட்சக ரூபாவிற்கு மேற்படாது, அல்லது தேர்தல் இடாப்பிலுள்ள வ்வொரு வாக்காளருக்கும் 30 சதத்திற்கு மேற்படாது செலவு ப்யலாம். அத்தோடு ஒரு தேர்தல் ஏஜென்டுக்கு 1000 ரூபா ம், அபேட்சகரின் தனிப்பட்ட செலவிற்கு I ), செலவழிக்கலாம்; இந்த உச்சவரம்புக்குள் நின்று அே செலவழித்துள்ள தொகை, பெரும்பாலான சுயே சையாளரின் வருவாயோடு ஒப்பிட்டு நோக்கும்போது அதி மானதென்று சு. ாம் பெருங்கட்சிகள் தமது வேட்பாளருக்குப் ப
க் கிடைக்குமானல் சுயேச்சையாளர் தேர்தலில்
தப் பொருட்படுத்தமாட்டார்கள் அமைச்ச ჯგუწჭწწჭეჭჯჭვე) கட்சிகே அங்கத்தவர்கள் முட்டுக் பத்திரிகைகளும் பிரசாரஞ் செய்தன; ாக வாக்களிக்கத் தலைப்பட்டனர்.
x 魏

Page 141


Page 142
ரும் ஐ தே கட்சியைக் கூடுதலாக ஆதரிக்கின் றைய முக்கூட்டணியினர் நடவடிக்கைகளினல் தரவு எந்த அளவிற்கு எக்கட்சிகள்பால் திை திரு ள்ளதென்பதை தகுந்த சூழ் நிலையில் நடக்கப்போகு பொதுத் தேர்தல்தான் காட்டமுடியும் கட்சிவளர்ச்சி வர
லாற்றிலிருந்து குறிப்பிட்ட வாக்காளத் தொகுதிகள் சில
கட்சிகள் இயங்கித் தங்களுக்கிடையே பெரும்பாலான வாக் காளரின் ஆதரவைப் பகிர்ந்துகொண்டு ஒன்று பெரும்பான் மைப் பலத்தைப் பொதுத் தே ர்தலில் எய்தி அரசாங்கத்தை அமைத்து ஆட்சி நடத்தும்போது, மற்றையது எதிர்த்திறமாகக் கடமையாற்றும்; எதிர்த்திறமாகச் செயற்பிட்டகட்சி இன்னுெரு
ஒரு கட்சி தனித்து முழு ஆட்சியதி பலமற்றதாக விளங்கும்
தாகுதி வாக்க ல் பெருந்ெ
స్త్రీ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வீதம் சிறிது குறைவானதாய் இருந்துள்ளது. முதலிடம் பெறும் அபேட்சகர் அடுத்தபடியாக வருபவரைச் சொற்ப வாக்கு களிஞல் மாத்திரம் தோற்கடிப்பதைக் காணலாம் : உதாரண மாக, வெற்றிபெற்ற வேட்பாளர்கள் 1947-65 தேர்தல் களில், இரண்டாவது தேறிய வேட்பாளர்களிலும் பார்க்க முறையே 34, 27, 33, 20, 21, 16 சதவீத வாக்குகளை அதிகப் படியாகப் பெற்றனர்; 1970 தேர்தலிலும் இத்தகைய போக்கு களே செயற்பட்டுள்ளன; 。
சுதந்திரக் கட்சி 1951இல் தோன்றி வளர்ந்தபின் நடை பெற்ற தேர்தல்களில் இரு கட்சிகளே பெரும்பாலான தொகுதி | Saile நேரடியாகப் போட்டியிட்டுள்ளன. சிங்கள விவசாயிகள் வாழும் தொகுதிகளிலும், சப்பிரகமுவ மாகாணத்தின் சில தொகுதிகளிலும் சு கட்சி-ஐ தே. கட்சி மோதல்கள் சாதாரண மாக ஏற்பட்டன; இருகட்சி மோதல்களைப் பரவலாக்குவதற்கு முன்னணி ஏற்பாடுகளும், போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தங்களும் உதவின. 1956இல் சுதந்திரக் கட்சியை முக்கிய பங்குதாரராகக் கொண்ட மக்கள் ஐக்கிய முன்னணி தோன்றியது; பின் தொடர்ந்த தேர்தல்களில் சு. கட்சி, லீ ச. ச. கட்சி, க, கட்னி ஆகியன போட்டித்தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொண்டன் 1965இல் சு. சோ கட்சி, பிலிப் குணவர்த்தனவின் ம. ஐ. மு. ஜா விரு பெ ஆகியவற்றுடன் ஐ தே கட்சி முதன்முறையாகத் தேர்தல் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. இவற்றின் பெறுபேருய் இரு கூட்டணிகளிலிருந்து தேர்ந்தெடுத்த இரு அலகுகளுக் கிடையே சிங்களத் தொகுதிகளில் சாதாரணமாகப் போட்டிகள் நடைபெற்றன. வடக்கு மாகாணத்தில் பல கட்சிகளும் சுயேச்சையாளரும் மோதியிருப்பினும், 1956 தொடக்கம் தமி ழரசுக் கட்சி உயரிடங் கொண்டுள்ளது கீழ் மாகாணத் தொகுதி களில், வாழும் இனங்களைப் பொறுத்துப் போட்டியிடும் கட்சி கள் வேறுபடும் 。
போட்டித் தவிர்ப்பும் அரசியல் முன்னணிகளும், பங்கு பற்றும் கட்சிகளின் அரசியல் இலாபத்தை முக்கிய நோக்கமாகக் கொண்டவை. எனினும், இரு கூட்டணிகளைச் சேர்ந்த கட்சிகள் ஒவ்வொன்றும் கூட்டணி சுமுகமாக இயங்குவதற்காகத் தத்தம் கொள்கையை ஓரளவு விட்டுக்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் தற்காலிகமாகவேனும் ஏற்பட்டது. உதாரணமாகச் சுதந்திரக் கட்சி இடதுபக்கம் சாய மாக்சீயக் கட்சிகள் சிங்களம் மாத் திரம் போன்ற கொள்கைகளை ஏற்றன; மாற்றத்தை ஏற்காத அங்கத்தவர் இக்கட்சிகளிலிருந்து வெளியேறினர். சுதந்திரக் 恕 * சு கட்சி வில் ச.ச. sí3) + thiraga பெரமுன 鷺

Page 143


Page 144
கொடுக்கும் தன்மையனவென்றும், சில சமு
பலத்தை அளித்தனவெ
து நிலப்பரப்பளவிலான நிறையீட்டுப் பிரதிநிதித்துவம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு முதலாவது பாராளுமன்றத்தில் மக்கள் ெ ୋ; அடிப்படையில் கிடைக்கவேண்டிய பிரதிநிதிகள் தொகையிலும் பார்க்கச் சில ஆசனங்களைக் கூடுதலாகக் கொடுத்திருப்பினும் இந்தியத் தமிழரின் குடியுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப் பட்டபின், சிங்கள மக்களே நிறையீட்டுப் பிரதிநிதித்துவம் பெறுவதில் சென்றடைந்தது. இதன் பெறுபேருய், சிறுபான்மை யினரைப் பிரதிபலிக்கும் கட்சிகள் பாராளுமன்றக் கட்டத்தில் பெரும்பான்மை இனத்தவரைப் பிரதிபலிக்கும் கட்சிகளோடு ஒப்பிடும்போது, தமக்குச் சாதாரணமாக உரித்தான பலத்தை யும் இழந்து நிற்கின்றன. 2. பின்தங்கிய கிராமிய சிங் மாகாணங்கள் நிறையீட்டுப் பிரதிநிதித்துவமும் முன்னேற்ற மடைந்த நகர்ப்பண்பினதான மேற்கு தெற்கு மாகாணங்கள்
பிரதிநிதித்துவம் குறைந்த பிரதேசங்களில் செல்வாக்குப் பெற்
றிருக்கும் கட்சிகள், விசேடமாக மாக்சீயக் கட்சிக படும்போது, சுதந்திரக் கட்சி போன்று விவசா வைக் கூடுதலாகப் பெறுவதற்கான கொள்கையு பின்தங்கிய பாகங்களில் நன்மையடைந்தன. னேறிய இரு பாகங்களிலும் ஓரளவு செல்வா கட்சி, பின்தங்கிய பிரதேசத்தில் நன்மையையும், பிரதேசத்தில் நட்டத்தையும் அனுபவித்தது. நிதித்துவம் பெற்றிருக்கும் காரணத்தால் பின்தங்கிய பாக களின் சமூக பொருளாதார கலாசார தேவைகள்மீது கட்சிக மேலதிக சிரத்தையெடுக்கும் பான்மையைக் காணலாம்
பழைய தேர்தல்முறை குடியரசு யாப்பிலும் பெருமளவி தொடருவதால், மலைநாட்டுச் சிங்கள மக்கள் இலங் யரசியலில் செயற்கையான மு Ο Σ.
பலில் செய ற்கையான முந்துரிமை அனுபவித்தல் படுத்தப்பட்டுள்ளது. சிங்கள மக்களின் மொத்தத் தொகையில் கண்டியர் சுமார் 3 பகுதியையும் தாழ்பிரதேசத்தவர் பகுதி
யையும் வகிப்பினும், கண் 隱
நெறிபிறழ்வுகவனத்திற்குரியது. இதற்கு இரு காரணங்களுண்டு 1. மாகாண நிலப்பரப்பு நிறையீடு கண்டிச் சிங்களரும் இந்தி தி தமிழரும் வசிக்கும் மத்திய ஊவா சப்பிரகாமுவ மாகாணங்
களுக்குமேலதிக பிரதிநிதித்துவம் கொடுத்தமை. 2. இந்தியத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழர் குடியுரிமை இழந்த பின்பும் மாகாணப் பிரதிநிதிகள் தொகை வாக்காளர் தொகையிலன்றி மக்கள் தொகை அடிப் படையில் நிர்ணயிப்பது தொடர்ந்தமை நெறிபிறழ்வைத் தெற்
றெனக் காட்டும் புள்ளிவிபரங்களாவன: 崧W 1947 ജൂൺ 1960இல்
மக்கள் 鷺鷺 தொகை மில் 2*8 Lóó。
மக்கள் தொகை 鷲。 ്| கொடுக்கும் பிரதி 85 34。 47。7 நிதிகள் தொகை 鷲 鷲
உண்மையில் 皺 鷺髓 கிடைத்த பிரதி ፵ 6 岛然 {66 நிதிகள் தொகை
இந்தியத் தமிழரின் ஒரு பகுதியினர் பிரசைகளாகப் பதிவு செய்யப்படின் நெறிபிறழ்வு சிறிது குறையலாம் இருந்தும் ஆட்சியைக் கைப்பற்ற விழையும் ஒரு பெருங்கட்சி, குடியரசு யாப்பின்கீழும் கண்டிச் சிங்களரின் ஆதரவைப் பெறுதல் அவ சியம் அவர்களின் கலாசாரம் பொருளாதாரம் ஆகியவற்ருேடு ஒத்துச் செல்லும் கொள்கையையுடைய சுதந்திரக் கட்சி கூடிய அரசியல் இலாபம் பெறும் நிலையிலுள்ளது ; காணிச் சீர்திருத்தம் கண்டிப் பகுதிகளில் சுதந்திரக் கட்சியின் விவசாய காணி அமைச் சரினல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைப்படக்கூடு மென்னும் கண்டனத்திற்கிடையில் இன்று (1947) தீவிரமாக அமுல் செய்யப்படுவது நோக்கற்பாலது இனவாரிக் கொள் கையை ஆரம்பத்தில் ஏற்காதிருந்த மாக்சீயக் கட்சிகள், இந்தியத் தமிழர்கள் வாக்குரிமையை இழந்தபின் பெரிதும் பாதிக்கப் பட்டன. இக்கட்சிகளும் ஐ. தே கட்சியும் வேறு சிங்களக் கட்சிகளும் ஜனநாய்க நெறி தேச ஒரும்ைப்பாடு, பொருளா தார வளர்ச்சி ஆதியன பாதிக்கப்படினும் கண்டிச் சிங்களரின் அபிலாசைகளுக்கு மதிப்புக் கொடுத்தல் தவிர்க்க முடியாததாகி விட்டது :
மாகாணத்தின் பிரதிநிதிகள் தொகையை நிர்ணயித்த விதிகளைவிடக் கட்சியரசியலைப் பாதிக்கும் இன்னெரு காரணி ஒவ்வொரு மாகாணத்திற்குமுரிய தேர்தல் தொகுதிகளை வரை யறுக்க வழிகாட்டியாய் அமையும் நெறிகளாகும் அந் நெறி களின்படி இன மத வேறு காரணிகளால் ஒருமைப்பாடுடைய இலங்கைப் பிரசைகள் கணிசமான அளவில் ஒரு பகுதியில் வாழின் அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில்,

Page 145


Page 146
டுகின்றதோ, அங்கு அவ்வுத்திகளைக் குதிகள் (1) பொதுசன அபிப்பிரா
எத்தனிக்கி கக் கொள்கையாக மா.
அரசியற் கட்சிகளை
கட்சிகளை அமைப்பதில்லை; தொகுதி அங்கத்தவர் இரு கட்சிகளின் அமைப்பிலும் சேர்ந்து பொருத்தமான வேட் ளேருக்காக உழைத்து, இரு கட்சி-நிதிகளுக்கும் பனங் கொடுத்து, எக் கட்சியினர் அதிகாரத்துக்குவரினும் அவர்களின்
顯簽鷲 தொகுதிகள் அரசியற் கட் இணைந்து தமது நலனே ஒர
 
 
 
 
 
 
 
 

ہی۔ 551 سے
கின்றன; உதாரணமாகத் தொழிற்சங்க சம்மேளனம் தொழிற்
கட்சியுடனும், தொழிலதிபர் கூட்டிணைப்பு பழமைபேண் கட்சியுடனும் இணைந்து இயங்குவதைக் காணலாம். ஆட்சியி
லிருக்கும் கட்சி பொதுநலனைப் பாதிக்காவண்ணம் தன்னை ஆத ரிக்கும் தன்னலத் தொகுதியின் அபிலாசையையும் கவனத்திற் கெடுக்கின்றது. இந்தியாவிலும் இத்தகைய போக்கே நிலவுகிற தென்று பொதுவாகக் கூறலாம் கட்டுப்பாட்டுடன் ஒழுகாத பல பிராந்திய கட்சிகளையுடைய பிரான்சில், தன்னலத்
தொகுதிகள் கட்சிகளுடன் ஒன்ருேடொன்று சேர்ந்த அமைப்
பைப் பெற்றுத் தமது நலனைப் பேணுவதில் வெற்றி பெறுகின்றன. (2) இலங்கையில்: வரலாறு, இனம், மதம், மொழி, சாதி, பொருளாதார வர்க்கமும் அமைப்பும், வசிப்பிடம், குடி யுரிமை, அரசியலமைப்பு ஆதியன அடிப்படையில் இலங்கையர் சமுதாயம் பல்வேறு வகையில் கூறுபட்டுள்ளதை முதலாம் இயலில் பார்த்தோம் : இவற்ருல் பல்வேறு தன்னலத்தொகுதிகள் தோன்றுவது இயற்கையாகும். இத் தொகுதிகள் அங்கத்தவர் தொகையில், அமைப்பில், நோக்கில் வேறுபட்டவை. ஒரு தொகுதியின் நலன் தாக்குதலுக்கு ஆளாகும்போதும், அதன் உணர்ச்சிகள் கிளர்ச்சியுறும்போதும், அதன் தலைமைப் பீடத்
திற்குப் போட்டியெழும்போதும், அது சுறுசுறுப்புடன் இயங்கி
விட்டுப் பின்னர் உறங்கிக் கிடப்பதைக் காணலாம்; பொதுப் பிரச்சினைக்கு ஆளாகிய விடயம்பற்றிச் சம்பந்தப்பட்ட தன்னலத் தொகுதிகள் தமது அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகின்றன. இருந்தும், தேர்தல்களில் அரசியற் கட்சிகளோடு தன்னலத் தொகுதிகளும் முக்கிய பங்கு வகிக் கின்றன; பெரும்பாலான மக்கள் வாழும் நாட்டுப் புறங்களில் தன்னலத் தொகுதிகளின் நடவடிக்கைகள் அரசியல் முக்கியத் துவம் வாய்ந்தனவாகும்; பல தனியார்களிடையே உறங்கிக் கிடக்கும் விருப்பு, வெறுப்பு, கவலை, அச்சம் ஆகியவற்றை வெளிக்கொணர்வதோடு, இவ்வுணர்வுகளைச் செயற்கையாகவும் மக்கள் மனத்திலே உருவாக்கியுள்ளன. வெளிக்கொணர்ந்த அல்லது உருவாக்கிய உணர்வுகள் கூடிய வாக்காளரின் ஆதர வைப் பெற்றுத்திரும் நிலையை அடைந்தால், அவற்றை அர சியற் கட்சிகள் தமது கொள்கையாக ஏற்று, செயற்படு திட்டங்க களாக வகுத்துக்கொள்கின்றன : மக்களின் சில விருப்பங்கள் நியாயமற்றவையாயினும் அவற்றைச் செயற்படுத்துவதற்குக் கட்சிகள் போட்டியிடுவதையும் காணலாம், தமது அபிலாசை களைக் கட்சிகள் ஏற்கும்வரை தன்னலத் தொகுதிகள் அவற்றை வற்புறுத்திக்கொண்டேயிருக்கும். அதிகாரத்திலுள்ள கட்சிகள் தானும் தமது கொள்கைகளைப் புறக்கணித்துத் தன்னலத்
g). I-36

Page 147
- 52 -
தொகுதிகளுக்குச் சிரந்தாழ்த்தியுள்ளன. பல அரசியற் கட்சி களுள்ள நாடுகளில், கட்சிக் கட்டுக்கோப்பு வேண்டியளவிற்கு இறுக்கம்பெருத சூழ்நிலையில், கட்சி நலனுக்கு முதலிடம் கொடுக்கும் மனப்பான்மை அகலும்வரை, சட்டமன்றத்தினரும் அமைச்சர்களும் தன்னலத் தொகுதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியும் தன்மை அதிகமாக இருப்பது இயற்கையாகும்:
தெளிவான படிவமும் நிலையான நோக்கமும் இல்லாது தன் னலத் தொகுதிகள் இருப்பினும், அவைகளில் நாலு விதமான வைகளை அமெரிக்கப் பேராசிரியர்* ஒருவர் காண்கின்ருர்:-
(1) ஏனையவையோடு ஒப்பிடும்பொழுது, மேலான அமைப் பும், கூடிய கட்டுக்கோப்பும், உறுதியான அங்கத்துவமும், பொது ஒழுங்கைப் பாதிக்கக்கூடிய ஆற்றலும் அல்லது பொரு ளாதார பலமும் கொண்டவை. தொழிற்துறைச் சங்கங்களும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற சில தொழிற் சங்கங்களும் இப்பிரிவைச் சேரும் தொழிற்துறைச் சங்கங்களே முதலில் அமைக்கப்பட்டு, அரசியல் பாலன விடயங்களில் செல்வாக்குடையனவாக இருந்துள்ளன. தொழிலாளர் சங்க ரீதியாகத் தங்களை அமைப்பதில் முன்னேறுவதினுல், முதலாளி மார் தேர்தல்கள்மீது செலுத்திவந்த செல்வாக்கைப் பெருமள விற்கு இழந்துவிட்டனர் ; தொழிற்சங்கங்கள் அமைக்கப்படாத நிறுவனங்கள் மாத்திரம் தமது தொழிலாளரின் வாக்குகளை ஒரளவுக்குத் திசைதிருப்ப முடியும் தேர்தல்களுக்கிடையில், கட்சிகளின் நிதிக்குப் பணம் கொடுப்பதினுல், முதலாளிகள் அரசியல் மீது ஒரளவு ஆற்றல் செலுத்த முடிகிறது : மலைநாட்டு, தாழ்பிரதேச தோட்டத் துரைமார் சங்கங்களுக்கும், அமைச் சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்குமிடையில் தேயிலை, ரப்பர், தெங்குத் தொழில்கள்பற்றி நெருங்கிய உறவு இருந்துள்ளது ; அதேபோல் வணிக முதலாளிமார் சம்மேளனத் துடனும் அரசாங்கம் வணிகக் கொள்கைபற்றிக் கலந்தாலோசித் துள்ளது. சோஷலிச சனநாயகத்தை ஏற்படுத்த முற்பட்டுள்ள முக் கூட்டணி அரசாங்கம் தனியார்துறையின் அரசியலதிகாரத்தை மாத்திரமன்றி, முதலாளித்துவத்தையே அழித்தொழிப்பதற் கான பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது; ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அந்நிய வங்கிகள், வணிக நிறுவனங்கள்' ஐரோப்பிய தோட்டத்துரைமார் சங்கம் போன்றவை அரசாங் கத்திடமிருந்து போக்குவரத்துச் சாதனங்கள் போன்ற சலுகை கள் பெற்றிருந்த நிலை பல காலமாக அற்றுப் போய்விட்டது.
"W. H. Wriggins, Ceylon, Dilemmas of a new Nation'- 960,
рр 1512 A60,
 

سے 553 |
(2) உறுதியான அங்கத்துவம், கொள்கை, அமைப்பு ஆகிய வற்றையுடைய சில தொழிற்சங்கங்களைவிட, ஏனைய தொழிற் சங்கங்கள் இன்ஞெரு பிரிவைச் சேர்ந்தவையெனலாம். அவை களின் அங்கத்துவம் தெரிந்துகொள்ளக்கூடியதாய், கட்டுக் கோப்புடன் இயங்குவதாய் இருப்பினும், நிலையற்றதாய், புடை பெயரும் தன்மையதாய் உள்ளது ; தலைமைப்பீடத்தைத் தெரிவு செய்யும் அமைப்புமுறைமையும், சங்கங்கள் பின்பற்றும் கொள் கையும் முக்கியமானவையல்ல தலைவர்களின் கவர்ச்சித் தன்மை யினல் தொழிலாளர் அவர்களைப் பின்பற்றுகின்றனர். இரு வகைத் தொழிற்சங்கங்கள் அனைத்தும் தன்னலத் தொகுதிகளாக மாத்திரம் இயங்குகின்றனவென்று கூறமுடியாது ; அவற்றுட் பல அரசியற் கட்சிகளுடன் வெளிப்படையாக இணைந்து செயற் படுவதைக் காணலாம்; தொழிற்சங்கங்கள் அரசியலில் வகிக்கும் பங்கினை இவ்வியலின் இறுதிப்பிரிவு சிறிது விரிவாக ஆராய் கின்றது. வாழ்க்கைத் தொழில்களோடு சம்பந்தப்பட்ட சங்கங் களில் சிங்கள ஆசிரியர் சங்கங்களும் ஆயுள்வேத வைத்தியர் சங் கங்களும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தனவாகும். நடுத்தர வகுப்பைச் சார்ந்த இச்சங்க அங்கத்தவர்கள் தங்கள் விசேட நலன்களைப் பேண எத்தனிப்பதோடு, கிராமிய வாக்காள ரிடையே செல்வாக்குடையவர்களாதலினுல் அரசியல் கட்சிகள் அவர்களின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்குப் போட்டியிடு கின்றன.
(3) சாதாரண அங்கத்தவர்களைச் சேர்த்து நிலையான அமைப்பை ஏற்படுத்தாது, அவர்களின் விருப்பு வெறுப்பைத் தூண்டிப் பொதுவான முறையில் அவர்களை வழிநடத்தச் சிலர் எத்தனிக்கின்றனர். இப்படி மக்களைத் தூண்டுவோர்க்கிடையில் முன்கூட்டியே தொடர்பில்லாமற்கூட இருக்கலாம். இவர்கள் குறிக்கோள் மக்களின் உணர்ச்சியைத் தட்டியெழுப்பி, அவர் களின் வாக்குகளைக் குறிப்பிட்ட அபேட்சகர்க்கோ கட்சிக்கோ சார்பாகத் திருப்பித் தாம் விரும்பிய பிரச்சினைக்குச் சாதக மான தீர்வு காண்பதாகும். 1. சிங்கள மத்திய வகுப்பினர் சார்பான சிலர், அடையாளங் காணக்கூடிய அமைப்பை ஏற் படுத்தாவிடினும், மொழி இன கலாசார கோரிக்கைகளுக்காகப் பொதுக் கூட்டங்களிலுைம், அரசியல் தலைவர்களின் பேட்டி களினலும், வேறு பிரசாரங்களினலும் மக்கள் அபிப்பிராயத் தைப் பெருமளவில் உருவாக்கி அரசியல்மீது ஆற்றல் செலுத்து வதைக் காணலாம்: 2 முதலிரு தேர்தல்களிலும் பிக்குகள் பெளத்தமத, கலாசார நலனுக்காகத் தாம் விரும்பிய அபேட் சகர்களுக்குத் தனிப்பட்டமுறையில் ஆதரவு தேடினர் பின்னர் வாழ்க்கைத் தொழிலாளருடன் சேர்ந்து, ஒழுங்குமுறை சாராத அமைப்புகள்மூலம் ஆற்றல்வாய்ந்த அமுக்கத் தொகுதிகளாக

Page 148
ஆட்சியாளரிடமிருந்து சிறப்புரிமைகள் அனுபவித்ததாகச் சிலர் குறைகூறியுள்ளனர். அது பொதுத்தேர்தல்களில் மாக்சீயக்
களை ஆதரியாததோடு, கத்தோலிக்க அபேட்சகரு கு உத புரிகின்றது. 4. பிராந்தியப் பற்றுதல்களும் தன்னலத் தொகுதி களுக்கு அடிப்படையாக உள்ளன. உதாரணமாகச் சரித்திர பொருளாதார கலாசார அம்சங்களினல் தனித்துவமுடைய கண்டிச் சிங்கள மக்கள். தங்களிடையே பிரிவுகளிருந்தும் தங்கள் பொதுநலனுக்காக ஒன்று சேர்ந்து இயங்குவர் : அரசியல் கட்சிகள் அவர்களின் ஆதரவிற்குப் போட்டியிடுகின்றன. 5. சிறுபான்மை இனத்தவர், ஆட்சியைக் கைப்பற்றக்கூடிய சிங்களக் கட்சிகளில் சேரமுடியாததாலும், தங்களுக்கென அமைத்துக்கொண்ட கட்சிகள் அரசாங்கத்தின் புறக்கணிப்புக்கு ஆளாவதாலும் தன்னலத் தொகுதிகள் மூலம் சிங்களத் தலைவர் களைச் சந்தித்துச் சலுகைகள் பெற எத்தனிப்பதைக் காண லாம். தமிழர்களின் முக்கிய கட்சிகளும் வேறு பிரிவுகளும், தமது இனத்தவரின் அடிப்படை உரிமைகள் பறிபோவதை மர பார்ந்த அரசியல் நடவடிக்கைகளினல் தடுக்கமுடியாத சூழ் நிலையில், சுயநிர்ணய உரிமையின்பேரில் தனியரசொன்றை நிறுவு வதற்கான யோசனையைப் பின்னணியாக வைத்து அமைத்துக்
லாம். 6. அண்மைக் காலங்களில் அதிகாரத்திலிரு. அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடிய கட்சிகளின் கிளைகள் சிறுபான்மையினரின் பிரதேசங்களில் அமைக்கப்படுவதைக்
காணலாம். கட்சிகளின் சில முக்கிய கொள்கைகளைத் தா ஏற்கவில்லையென்றும், கட்சித் தலைவர்களுடன் ஒத்துழைத் அவர்களின் நல்லெண்ணத்தைப் பெற்று, சிறுபான்மையினரி உரிமைகளை மீட்பதே தமது உத்தியென்றும் கிளைகளின் அமைப் பாளர் பிரசாரஞ் செய்கின்றனர். இது மரபார்ந்த கட்சி முறைமைக்கு ஒரு புதுமையாகும். அத்தோடு, தொழில்காணி யம் போன்று கட்சிக்கிளைகள் இயங்கக்கூடாதென்று பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் அறிவுரை கூறியுள்ளனர். எனவே,
总
இத்தகைய கிளைகள் ஒருவகையில் கட்சிப்போர்ை கும் தன்னலக் குழுக்கள் போன்றவை என்றும் கூறல
(4) புறவடிவத்தில் மிகக் குறைந்த அமைப்பை
ரீதியில் மிக உயரமைப்பையும் உடைய தன்னலத் தொகுதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களுக்கு உதாரணமாக இலங்கையர் சமுதாயத்தி பிரிவுகளையும் * சொந்தக்காரர் தொகுதிகளையும் நாடு முன்னேறிச் செல்ல, சமூகமுறைமைகளில் ஏற்பட், வேறுவித தன்னலத் தொகுதிகளின் மப்பும் அங்கத்துவமும் பலமடைய, சாதியும் குடும்பமும் மக்களைப் பிரித்து, அப்பிரிவுகளை ஒருமித்து இயங்கச் செய்யும் ஆற்றலை இழந்துவிடும். இருந்தும், இச்சக்திகள் இன்னும் அரசியலில் கணிசமான முக்கியத்துவமுடையன. ஒரு அபேட்சகருக்கு அவருடைய சாதியினரும் குடும்பத்தினரும் சாதாரணமாக வாக்களிக்கின்றனர். ஒரு முக்கியஸ்தருக்கு அவமானம் அல்லது தீங்கு தரும் முறையில் ஒரு கட்சியோ அதன் தலைவர்களோ நடந்துவிட்டால், முக்கியஸ்தரின் சாதியினரும் குடும்பத்தினரும் அக்கட்சிக்குத் தமது ஆதரவைக் கொடுக்கப் பின்வாங்கலாம்: மரியாதையும் உதவியும் வாக்குகளை ஈர்க்கலாம். பல தேர்தல் தொகுதிகளில், அபேட்சகர் வெற்றிக்குச் சாதியும், பெருகிய குடும்பமும் கேந்திர இடம் வகிப்பதால், இவற்றின் நல்லெண் ணத்தைப் பெறும் முறையில் கட்சிகள் நடந்துகொள்கின்றன. இவைகள் கட்சிக் கொள்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட, ஆட்சியிலிருக்கும் கட்சிகளிலிருந்து இரகசியமாகத் தமது அங்கத் தினருக்குப் பதவி வேலைவாய்ப்புப் போன்ற சலுகைகளைப்
பறுவதில் சிரத்தையெடுக்கின்றன.
தன்னலத் தொகுதிகள் - கட்சிகள் உறவு: இனலத் தொகுதி குறிப்பிட்ட தனது கோரிக்கைை
செய்யும் அதே நேரத்தில், அரசியற் கட்சியும் அ தனது கருத்துக்களைத் தெரிவிக்கும்போது
விசேடமாக ஒரு இனத்தவரின் நலனைப் பேணும் த் தொகுதி தனது கோரிக்கையை இன்னும் உயர்த்தும் கக் காணலாம். நாடு சுதந்திரம் பெற்று ஒரு பத்தாண்டு ழியுமுன்னரே, பெருங் கட்சிகள் ஒரு இனத்தவரின் தன்னலத்
த்திரம் இடங் கொடுத்து, தமது தேசியத் ய இழந்து நிற்கின்றன. 2 அரசியற் கட்சிகள் நல்ல ப் பெற்றிராத காலத்தில், பிரதம அமைச்சர் தன்னை பெருமளவு சுதந்திரத்துடன் இயங்கிய பல்வேறு னலத் தொகுதிகளின் தலைவர்களைத் திருப்திசெய்யும் வகையில் நடந்து தமது பதவியைக் காப்பாற்றவேண்டிய நிலை இன்று பெருமளவிற்கு மாறியுள்ளது. 3. ஒரு கட்சி தேர்தல் தொகுதியொன்றிலுள்ள பல்வேறு தன்னலத் தொகுதிகளின் கோரிக்கைகளுக்கும் தனது கொள்கைகளுக்குமிடையே, பெரும் பான்மை வாக்குகளைப் பெறும் வகையில், சமரசம் ஏற்படுத்த
முற்படுவதைக் காணலாம்?

Page 149
اسسس 556 سياسي
6. தொழிற் சங்கங்களும் அரசியற் கட்சிகளும் தோற்றமும் வளர்ச்சியும்:
ஒரு நாடு கைத்தொழிலில் வளர்ச்சி எய்தித், தொழிலாளர் ஆலைகளில் நெருங்கிய உறவு கொள்ளும் சூழ்நிலை ஏற்பட அவர்கள் இணைந்து செயற்பட எத்தனிப்பது இயற்கையாகும்3 இலங்கையில் கைத்தொழில் முன்னேற்றமடையுமுன்னரே தொழிற்சங்க இயக்கம் ஆரம்பமாயிற்றெனலாம். 19ஆம் நூற் முண்டுப் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்ருண்டு முற்பகுதியிலும் தொழிலாளர்கள் தமது உடனடிக் குறைகளை நீக்குவதற்காகத் தற்காலிக குழுக்களை அமைத்துப் பல வேலை நிறுத்தங்களில் இறங்கியுள்ளனர். 1922இல் எ. இ. குணசிங்கா அவர்கள் நிறுவிய இலங்கைத் தொழிலாளர் சங்கம் " ஒரளவு நிரந்தர மானதும் முக்கியமானதுமாகும். 1930ஆம் பத்தாண்டுகளில் ஆங்கில அமெரிக்க பல்கலைக்கழகங்களிலிருந்து தாயகம் திரும்பிய "முற்போக்கு இளைஞர்கள் தொழிற்சங்க இயக்கத்திற்கு வலிமை யையும் போர் மனப்பான்மையையும் ஊட்டினர். இரண்டாம் உலகமகாயுத்தம் முடிவுறும் தறுவாயில், மாக்சீய வாதிகளே தொழிற்சங்க இயக்கத்தில் மேம்பட்ட செல்வாக்குடையவர்களா யிருந்தனர். 1956க்குப் பின்னர் வேறு முக்கிய அரசியற் கட்சிகளும் தொழிற்சங்கங்களை அமைப்பதில் கவனம் செலுத்தலாயின. 1940இல் 8000 அங்கத்தவர்களைக் கொண்டிருந்த தொழிற்சங்க இயக்கம் 1967இல் 1237 தொழிற் சங்கங்களையும் 1,454,000 அங்கத்தவர்களையும் அடக்கிய இயக்கமாக வளர்ந்துள்ளது. இவ் வளர்ச்சிக்கான காரணிகளில் : 1. தொழிற்சங்கம் அமைப்பதற் கும் கூட்டுப்பேரம் நடத்துவதற்கும் முதன்முதலாக அங்கீகார மளித்த 1935ஆம் ஆண்டுச் சட்டம், 23 1949இல் இலங்கை இந்தியக் காங்கிரசின் தொழிற்சங்க அமைப்பு, 3. அரச அலுவல ரும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையைச் சில கட்டுப் பாடுகளுடன் கொடுத்த 1948ஆம் ஆண்டுச் சட்டம், 4. 1956க்குப் பின்னர் ஏற்பட்ட தொழிற்சங்க இயக்கத்திற்குச் சாதகமான அரசியற் சூழ்நிலை ஆகியன முக்கிய இடம் வகிக்கின்றன. ஆனல் சில சங்கங்களைத் தவிர்த்து ஏனையவை சிறியனவாய், நிலையே றற்ற அங்கத்துவத்தையும் பலமற்ற அமைப்பையும் வருவாயை யும் கொண்டனவாய் இருப்பதைக் காணலாம். அத்தோடு பல அரசியற் கட்சிகளின் போட்டியாலும், தொழிலாளரின் இன வேறுபாட்டினுலும், ஏழு தொழிலாளர் சேர்ந்து ஒரு சங் கத்தை அமைக்கக்கூடிய சட்டரீதியான உரிமையினுலும், தொழிற்சங்கத் தலைமை பெறுவதற்கான பலரின் ஆசையினலும் தொழிலாளர் இயக்கம் சிறு கூறுகளாகப் பிரிந்துள்ளது : இருந்தும்
 

سے 557۔
கடந்த கால் நூற்றண்டில் தன்னம்பிக்கையுடைய, உள்ளுரம் வாய்ந்த, முதலாளிகளுடன் பொருதக்கூடிய பாரிய இயக்கமாகி விட்டதென்று கூறலாம்.
சம்பிரதாய நோக்கம்:
இலங்கைத் தொழிற்சங்க இயக்கம் சம்பிரதாயப் பொருளா தார நோக்கத்தையும் அரசியல் நோக்கத்தையும் கொண்டது. பொருளாதார நோக்கத்திற்காக அது தொழிலாளர் வர் கத்தை ஒரளவு பிரதிபலித்து, வேதன உயர்வு, வேலைநேரக் குறைப்பு, பதவி உயர்வு, வேலைநீக்கம் போன்றவற்றில் முதலாளி களின் ஏதேச்சாதிகாரத்தைத் தடுத்தல் போன்றவற்றை எய்த முயற்சித்துள்ளது. இம் முயற்சியை, வளர்ச்சியுறும் வேறு நாடுக ளுடன் ஒப்பிடும்போது, இலங்கையின் தொழிற்சங்கங்கள் கூடிய திறமையுடனும் வெற்றியுடனும் கையாண்டுள்ளனவென்று பொதுவாகக் கூறலாம். பல சங்கங்கள் முதலாளிகளுடன் கூட்டுப் பேரம் பேசுவதற்கு நேரடியாக இறங்காது அரசாங்கத்தின் உதவியை நாடும் மனப்போக்குடையன. இலங்கை வணிகத் தொழிலாளர் சங்கம், வங்கித் தொழிலாளர் சங்கம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற பலம்வாய்ந்த தொழிற் சங் கங்கள், அரசாங்கத்தின் அனுசரணையின்றியே, தமது உறுப் பினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் கூடியவாறு முதலாளி களின் சங்கங்களுடன் கூட்டு ஒப்பந்தங்கள் செய்வதில் வெற்றி கண்டுள்ளன. தொழில் நிபந்தனைகளைச் சாதகமாக மாற்றுவ தோடு நில்லாது, விரிந்துசென்று தொழிலாளி வர்க்கத்தின் நலனேடு சம்பந்தப்பட்ட சமூக பொருளாதார அரசியற் பிரச் சினைகளிலும் தொழிற் சங்கங்கள் அக்கறைகாட்டியுள்ளன. சர்வசன வாக்குரிமை, தெரிவுசெய்யப்படும் ஆட்சி நிறுவனங்கள், மக்களின் பல்துறைச் சுதந்திரங்கள் ஆகியவற்றிற்காகவும் போராடியுள்ளன.
அரசியற் கட்சிகள் உறவு:
அரசியற் கட்சிகள்மூலம் தங்கள் நோக்கங்களை அடையலா மென்று கருதிப் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் அவைக ளுடன் தொடர்புடையனவாக இயங்குவதைக் காணலாம். இத் தொடர்பை அடிப்படையாக வைத்துப் பேராசிரியர் கேணி* அவர்கள் இலங்கைத் தொழிற்சங்கங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கின்ருர் : 1. அரசியற்கட்சிகளின் பேராதரவிற்குள்ளானவை: இச் சங்கங்கள் அரசியற் கட்சிகளினுல், பெரும்பாலும் கைத் திறன்பெருத் தொழிலாளரிடையே அமைக்கப்படுகின்றன. இத் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கங்களை நன்கு அமைத்து
*зее, Robert N. Kearney, Trade Unions and politics in Ceylon-1971.

Page 150
ய பரப்புவதாலும், ச் POPP TIL 4-A JA 47, 190 #AALVAUKU
நேரிடு கிற து as a ன் திசைத்தொடர்பிணை' வானவை: இச் சங்கங்கள் ஒவ்வொன்றும் ஒரு கட்சியுடன் ஓரளவு நிலைபேருண் உறவுடையன. பேராதரவிற்காளான சங்கங்கள் போலக் கட்சிகளில் அதிகம் தங்கியிருப்பனவல்ல. சங்கத் தலை வர்கள் கட்சியின் அங்கத்தவர்களாகவோ அல்லது கட்சியி ஆதரவாளர்களாகவோ சாதாரணமாக இருப்பதினலும், ச அங்கத்தவர்களில் கணிசமானேர் கட்சியின் வழிகாட்டலை விரும்பி ஏற்பதிலுைம் இவ்வித சங்கம் கட்சிப் பற்றுடையதாய் இருக் கின்றது. 11 கட்சிகளிற் சிக்கிக்கொள்ளாதவை இவை கட்சி யரசியலிற் பங்குபற்றினும் ஒரு குறிப்பிட்ட கட்சியோடு நிலை பேருன உறவுடையனவல்ல சுதந்திரமாக இயங்கும்பொழுது, சிலவேளைகளில் விரும்பின் ஒரு கட்சியைப் பின்பற்றலாம்: பின்னைய இரு பிரிவுத் தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்குத் தமது சங்கங்களின் அரசியற் சார்பை நிர்ணயிப்பதற்கு ஓரளவு சுதந்திரமுண்டு இருந்தும், இச்சங்கங்களில் அரசியலுணர்ச்சி பெற்ற அரச அலுவலரும் நகரத் தொழிலாளரும் அங்கத்துவம் வகிப்பதினல், அன்னரின் அரசியற் கருத்துக்களுக்குச் சங்கத் தலைவர்கள் மதிப்புக்கொடுத்து நடக்கவேண்டியுள்ளது : இ6 றேல் தலைமைப்பீடமே மாற்றியமைக்கப்படலாம், அல்லது அங்க தவர் வேறு சங்கங்களுக்கு மாறிச்செல்லலாம். மாக்சீய
ரடி வழிகாட்டலைப் பெறுவதில்லை : க.
டளைகளைச் சங்கத்திலுள்ள மாக்சீய ፻፭ffi......................ff yoጳ வர்கள்மூலம் மறைமுகமாகச் சங்கத்தின் த் திை திருப்புகின்றன; ஏனைய கட்சிகளும் இவ் வழிமுறையைப் பெரு பாலும் பின்பற்றுவதைக் காணலாம். ஐ. தே. கட்சியையு
தமிழரசுக் கட்சியையும் தவிர்ந்த ஏனைய கட்சிகளைச் சார்ந்த
பல்துறைத் தொழிற்சங்கங்களும் கூட்டிணைவு அமைப்புடையன; அதன்மூலம் கூட்டு நடவடிக்கைகளை எடுக்கின்றன.
கட்சிச் சார்புக்கான காரணிகள்:
பொதுவாகக் கூறுமிடத்துத் தனிப்பட்ட சில பொரு தார நிறுவனங்களிலுள்ள சிறு தொழிற் சங்கங்களைவிட ஏை சங்கங்கள் அனைத்தும் கட்சிச் சார்புடையனவாக இயங்குகின் இப்போக்கு வருங்காலத்தில் அதிகரிக்கலாம். இதற்கேற்ற காரணிகள் பல உண்டு . தொழிலாளி வர்க்கத்தின் ஆ து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-- 559 سس
பரந்த பொருளாதாரக் குறைகளை வேண்டிய அளவில் அரச நடவடிக்கைகளினல் மாத்திரம் நிவிர்த்திசெய்யமுடியு மென்று பெரும்பாலான தொழிற்சங்கங்கள் நம்புகின்றன. அமைச்சரவை ஆட்சிமுறையில் அரசியற் கட்சியொன்றை ஆதரித்து, அக்கட்சி அரசாங்கத்தை அமைக்க உதவி, அதன்மூலம் தமது கோரிக்கை களைப் பெறச் சில சங்கங்கள் எத்தனிக்கின்றன; i, தொழிலாள ரின் வேலை-நிபந்தனைகளையும் உரிமைகளையும், அரசு பல சட் டங்கள்மூலம் வரையறுத்துள்ளது. அத்தோடு அரசசேவையிலும் அரச கூட்டுநிறுவனங்களிலும் வரவர அதிகமான தொழிலா ளர்கள் வேலை பெறுகின்றனர். அவர்களும் தொழிற்சங்கங்களை அரசியலார் பக்கம் திருப்புகின்றனர். i. பத்திரிகை, மதம், அரசசேவை, கல்வி போன்ற பல துறைகளில் பிரிவினையையும் கட்சிச் சார்பையும் தூண்டுகின்ற இலங்கையின் சமூக பொருளா தார அமைப்பு, தொழிற்சங்கத் துறையிலும் பிரிவினையையும் கட்சிச் சார்பையும் ஏற்படுத்தும் தன்மைவாய்ந்தது; iv. தொழி லாளருக்கு நீதிவழங்காத முதலாளித்துவ அமைப்பைத் தீவிர அரசியல் நடவடிக்கைமூலம் மாற்றியமைக்கலாமென்று பெரும் பாலான தொழிற்சங்கங்கள் நம்பும்படியான மனமாற்றம் பெற் றுள்ளனர். இதனுல்தான் புரட்சியைப் போதிக்கும் மாக்சீயக் கட்சிகள் தொழிலாளரிடையே செல்வாக்குப்பெற முடிந்தது. பொருளாதார அமைப்பில் பாரதூரமான மாற்றங்களை வேண்டி நிற்கும் வேறு தொழிற்சங்கங்களும் தொழிலாளர் மனதை ஈர்க்க முடிகின்றது. சார்பினுல் ஏற்படும் நன்மை தீமைகள் :
அரசியற் கட்சிகளுடன் சார்ந்தியங்குவதினுல் தொழிற்சங் கங்களுக்குக் கிடைக்கும் நன்மைகளாவன : i, தொழிற்சங்கங் களின் குறைகளையும் கோரிக்கைகளையும், அரசாங்கத்திற்கும் அதன் திணைக்களங்களுக்கும் சங்கங்களோடு தொடர்புடைய அரசிய லார் எடுத்தியம்புகின்றனர் வேண்டுமெனில் நாடாளுமன்றத் தில் திறம்பட விளக்குகின்றனர் : பாராளுமன்றத்திற்கு வெளி யிலும் தொழிற்சங்கங்களுக்குச் சார்பான பொதுசன அபிப் பிராயத்தைத் திரட்டுகின்றனர். தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தங்களைக் கையாண்டு, அரசாங்க அல்லது எதிர்த்திற அரசிய லாரின் அனுசரணையுடன் தங்கள் கோரிக்கைகள் பற்றி அரசாங் கத்திடமிருந்தோ தனியார்துறை முதலாளிகளிடமிருந்தோ சலுகைகளைப் பெற்றுள்ளன. அதே நேரத்தில், ஆளுங்கட்சியினர் சம்பள உயர்வை நோக்கிய வேலை நிறுத்தங்களை முறியடித் துள்ளதையும் காணலாம்; i, தொழிற்சங்க இயக்கம் பலத் திலும் அங்கத்தவர் தொகையிலும் பெருவளர்ச்சி பெற்றதற்கு முக்கிய காரணம் அதன் அரசியற்ருெடர்பாகும் பலகட்சி
g), III = 37

Page 151
முறையுள்ள இலங்கையில் எல்லா அரசியற் கட்சிகளும் 霹以屏 நலன் கருதித் தொழிற்சங்கங்களை அமைப்பதும் அவற்றிற்கு ஆதரவு தருவதும் தமது தவிர்க்கமுடியாத ஒரு கடமையாகக் கொண்டுள்ளன. இதனுல் தொழிலாளர் இயக்கம் வளர்ச்சி யடையுமதேநேரத்தில், தொழிலாளர்களைத் தம்பால் ஈர்க்கும் பொருட்டு அரசியற் கட்சிகள் தமது கொள்கைகளிலும் திட்டங் களிலும் தொழிலாளருக்கு நன்மை பயக்கும் அம்சங்களைப் புகுத்தத் தவறுவதில்லை. i. பல்வேறு கட்சிச் சார்புடைய தொழிற்சங்கங்களுக்கிடையே எழும் போட்டியினல், அவற்றின் அங்கத்தவர் தொழிலாளர் பிரச்சினைகளிலும் அரசின் போக்கு களிலும் சிரத்தையெடுக்கும் சூழ்நிலை தோன்றுகிறது. சங்கக் கருமங்களில் பங்குகொள்கின்றனர்; தலைவர்கள் நடத்தையைக் கண்காணிக்கின்றனர்; வேறு சமூக அரசியல் தங்கள் தொழிற்சங்கங்கள்மூலம் பங்குபற்றுகின்றனர்.
அரசியற்சார்பு கலப்பற்ற நன்மையானதென்று கூறுவதற் கில்லை : சில தீமைகளையும் தோற்றுவித்தது: , தொழிற்சங்கங் களைத் தம்வசப்படுத்தும் கட்சிப் போட்டியால் தொழிலாளர் இயக்கத்தில் பிளவும் ஒற்றுமையீனமும் வளர்ந்தன தொழிற் சங்கங்களின் நேரமும் ஆற்றலும் அவைகளின் முன்னேற்றத் திற்குப் பயன்படுத்தப்படாது, போட்டிச் சங்கங்களைப் பலவீனப் படுத்துவதில் வீண் செலவாகின. அரசியலினலும், கூட்டுப்பேர' முயற்சியாலும் பிளவுற்ற தொழிலாளர் இயக்கம் முழுப் பலத்துடன் செயற்பட முடியவில்லை. i. கட்சிநலனே முன்னிட்டுப் பல தொழிற்சங்கங்கள் தம் சம்பிரதாயக் கடமைகளே நன்கு செய்யமுடியாதளவிற்குத் தங்கள் சுதந்திரத்தை இழந்துள்ளன: i, அரசியலில் ஏற்பட்ட விளைவுகளினுல் தொழிலாளர் இயக்கம் வேண்டத்தகாத தாக்கத்திற்கு ஆளாகின்றது; உதாரணமாக 1963 கம்யூனிசக் கட்சிப்பிளவு, 1964 ல், ச. ச. கட்சிப் பிளவு, 21 கோரிக்கைகளின் தோல்வி போன்றவை இயக்கத்தைக் கூறுபடுத்தி, அதனைப் பலவீனப்படுத்தின 1966 அரசியல் வேலை நிறுத்தத்தினுல் அதில் பங்குபற்றியோர் பலர் அரசாங்கத்தின் தண்டனைக்கு ஆளாகியதோடு தொழிற்சங்க இயக்கமும் தனது பலத்தை விரையஞ் செய்து பலவீனமுற்றது. தொழிற்சங்கங்கள் கட்சிகளின் கருவியாய்:
1950வரை மாக்சீயக் கட்சிகள் மாத்திரம் தொழிற்சங் கங்களோடு நெருங்கிய உறவுகொண்டிருந்தன. கடந்த 20 ஆண்டுகளாக வேறு கட்சிகளும் தொழிற்சங்கங்களுக்கிடையே பல வழிகளில் ஆதரவைத் தேடலாயின. இன்று ல. ச. ச. கட்சிகள், க. கட்சிகள், ம; ஐ. மு. சு கட்சி, ஐ தே, கட்சி, த, கட்சி ஆகிய 8 முக்கிய கட்சிகள் தொழிற்சங்க ஆதரவைப்
 

AMALL 561 -
பெற்றுள்ளன: ஆதரவின் அளவிலும், அதைப் பெறுவதற்கான தூண்டுதலிலும் கட்சிக்குக்கட்சி வேறுபாடுண்டு. மாக்சீயக் கட்சி களுக்குத் தொழிற்சங்க உறவு தவிர்க்கமுடியாத அத்தியாவசிய மான ஒன்ருகும்; தொழிற்சங்கங்கள்மூலம் தொழிலாளர் புரட்சியை ஏற்படுத்துவதே இக் கட்சிகளின் நோக்கமாக இருந்தது. இன்று பாராளுமன்றப் பாதையிலும் நம்பிக்கை யுடையனபோலக் காட்சிதருகின்றன. ஏனைய கட்சிகள் தமக்கே உரித்தான தூண்டுதல்களைக் கொண்டுள்ளன. உதாரணமாகச் சுதந்திரக் கட்சி நகர்ப்புறத் தொழிலாளரிடையிலும், தேயிலை றப்பர்த் தோட்டங்களிலுள்ள சிங்களத் தொழிலாளரிடையிலும் அரசியல் ஆதரவைப் பெருக்க விரும்புகின்றது; ஐ.தே. கட்சி தொழிலாளரிடையே மாக்சீயக் கட்சிகள் கொண்டுள்ள செல் வாக்கைக் குறைக்கவும், தான் ஒரு முதலாளிகளின் கட்சியல்ல வென்று காட்டுவதற்கும் தொழிற்சங்கத் துறையில் புகுந் துள்ளது. த. கட்சி தமிழ்பேசும் மக்களின் ஒற்றுமைக்காகத் தான் பாடுபடுகிறதென்பதை மலையகத் தமிழரிடையே பரப்பு வதற்கு இலங்கைத் தொழிலாளர் கழகத்தை 1962இல் அமைத்தது:
தொழிற்சங்க-கட்சி உறவினுல், தொழிற்சங்கங்கள் நலன் பெறுவதுபோலக், கட்சிகளும் சில நன்மைகளைப் பெறலாம்: வேறு சில நாடுகளில் தொழிற்சங்கங்களிலிருந்து கட்சி நிதிக்குப் பணங்கிடைப்பதுபோல வறிய இலங்கைத் தொழிற்சங்கங்களி லிருந்து கட்சிகள் பண உதவி பெறமுடியாது. ஆனல், வேறுவித அரசியல் உதவி எதிர்பார்க்கப்படுகின்றது. சுதந்திரம்பெற்ற நாள் தொடக்கம் ஆட்சியதிகாரம் 5 முறை கைமாறியுள்ளது. இங்கு ஒரு பெருங்கட்சி வாக்காளரின் பெரும்பான்மை ஆதரவை நிலைபேருகக் கொண்டியங்கவில்லை. ஐ. தே. கட்சிக்கும் சுதந் திரக் கட்சிக்கும் இடையே, அவற்றைச் சார்ந்த சிறு கட்சி களின் ஆதரவுடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குக் கடும் போட்டி ஏற்படும் சூழ்நிலையில், தேர்தலில் வெற்றிபெறுவதற் காக அரசியற் கட்சிகள் தொழிற்சங்கங்களையும் பயன்படுத்த முனைகின்றன. . இச் சங்கங்கள் ஓரளவு நிலையான ஒத்தியங்கு கின்ற சமூக அமைப்பாகும். இந்த அமைப்புக்களைப் பெரும் பாலும் மத்திய வகுப்பினரை அங்கத்தவராகவுடைய அரசியற் கட்சிகள் பொது மக்களுடன் தொடர்பு கொள்ளுவதற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றன. கிராமிய மக்கள் தொழிற் சங்கங்களின் எல்லேக்கு அப்பாற்பட்டன என்பதோடு, ஒரு தொழிற்சங்க அங்கத்தவர் அனைவரும் ஒரு கட்சியை ஆதரியா திருப்பதும் சங்கங்களின் தொடர்புபடுத்தும் கடமையின் முக்கி யத்துவத்தைக் குறைக்கின்றன. i தங்களைச் சார்ந்த தொழிற் சங்கங்களின் பெரும் பகுதி அங்கத்தவர், தேர்தலில் போட்டி

Page 152
ܚ- 562 ܚ
யிடும் தங்கள் அபேட்சகரை ஆதரித்து வாக்களிப்பரென்று அரசியற் கட்சிகள் சாதாரணமாக எதிர்பார்க்கின்றன. சங்க அங்கத்தவரிற் பெரும்பாலானுேர் மாக்சீயக் கட்சிகளைச் சார்ந் திருப்பதினுல், மற்றும் கட்சிகள் பெருந்தொகையில் வாக்கு களைப் பெறுவரென்று கூறமுடியாது. தொழிற்சங்கங்கள் நேரடி யாகக் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதில்லை. i. சங் கங்களிலிருந்து கட்சியின் அங்கத்தவர்களாகச் சிலர் சேரலாம் ஆனல் இவர்கள் தொகை சிறியது. iV. தொழிற்சங்கங்கள்மீது ஆதிக்கம் செலுத்தும் எதிர்த்திறக் கட்சிகள் அரசியல்ரீதியான வேலை நிறுத்தங்களை நடத்தி அரசாங்கத்திற்குத் தொல்லை கொடுக்க முயற்சித்துள்ளன. இவ் வேலை நிறுத்தங்களை வெளிப் படையான அரசியல் வேலைநிறுத்தம், அரசியல்-பொருளாதார பொது வேலைநிறுத்தம், அரசியல் தன்மைபெறும் பொருளா தார வேலைநிறுத்தம் என்று மூன்ருகப் பிரிக்கலாம்; இவைகள் நாட்டிற்குப் பெரும் பொருளாதார நட்டங்களையும், சில வேளை களில் அரசியற் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன. எனவே, அரசாங்க சார்புச் சங்கங்கள் மாற்ருர் வேலை நிறுத்தங்களை முறியடிப்பது தமது கடமையெனக் கொண்டுள்ளன. தொழிற் சங்கப் பலத்தைக் கொண்டு மாக்சீய வாதிகள் முதலாளித்துவ அரசாங்கங்களில் அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளதோடு, தொகைக்கு மீறிய ஆதிக்கத்தையும் அரசியலில் செலுத்த முடி கிறது; மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தைத் தொழிற்சங்க நேரடி நடவடிக்கைகள் மூலம் அச்சுறுத்த எத் தனிப்பது ஜனநாயகத்திற்கு முரண்பட்டதென்று வாதாடு வோரு முளர். V. தொழிற்சங்கங்கள் ஒழுங்கையும் அமைதியை யும் சீர்குலைக்க முயல்வதும், மக்களுக்குத் தங்கள் பலத்தைக் காட்டுமாறு கட்சிகள் சங்கங்களின் உதவியுடன் திரளணிகள் அமைப்பதும் நகர்வலங்கள் நடாத்துவதும் ' தொழிற்சங்க நேரடி நடவடிக்கைகளில் ' அடங்கும். இவைகள் தொழிற் சங்கங்களிடையேயுள்ள ஒற்றுமையீனத்தாலும், பொது மக்களின் எதிர்ப்பினுலும் தோல்வியில் முடியும்போது, பங்குகொண்ட சங்கங்களும் ஆதரித்து நடத்திய கட்சிகளும் மதிப்பிழக்க நேரிட
 
 

鬣,
“
*
。 ാ.
སྤྱི་
法 , 路
。
༈ དོན་ལ་
མེ་ཏེ་ N.
on s
loam
V
حے
He his 一一 سب سسسسسسسستر | | | 5)"
*,
|WAN
t
" .
' : '
一一
උA བ་སྤྱི་ CN ym
* 。
W I.
ཀ་ཁ་ III || || 7 || || || 0 || " H neu
泷、
■ DI A

Page 153
|-尔沁娜娜娜澱>~腕心 |- ,慨) #ffffæ gihœgođù nhưngetrofeso-ie giori
mae: osoɛɛ ɲɛ-ɲɛ ɲɛsɛ sɛdeɛ sɛɛnŋƆŋoo-olosoɛɛgɛ gors
-- ©®rengo osoɛ-nɔnɔminɛ wɛɛ ɛ-ñɩnʊ ɛ-naens § ¶ ¡ ¿ \ ( )| 2161 so IIA -os sedea leucisses səoungs» ( )
■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ Hınıso
| || 60L :soos |-| zou o qimų suaoņue no
| 8çoit -
| sios
oggi gosso) so-io
G增atea鳴a@ed型
| | 06lzi :681 6,91||
Z1901 9188]
-(...) qisu norssēre segi
quae unore suae,
(số) qise uqisore sûrego qimųos ugi ongiuotiko (†) qirmųno ugi sisillo de (so) qılone-i-zise ajo sosoɛɛg gifts o)? urag) sẽ đī) url(0) ựre seo@ışsaegs ‘įoog gael ựifesto2.Jos)
quae fɔ nɔŋŋƆre
so i uporageo | useongoo | isoo rioso † 109th-ara | áægi úogi ugi
.ş961 – nieorgiore seruosas? I리고귀
 
 
 
 
 
 
 
 
 
 

Z8 £40s 9.z.
0L
|l:6. çiz
oz 96
§961 :
Lo § 28 9・g
0s 69
[9] sols 9. I
0% L9I
舟G-侧也曲临g日
096 s
II寸 so sɛ内部 8. Zs (, s. 9.6 9-sz8-8 8s s ! 8ZI 9Z8% #998 __|_ | 9§ 61|パい6T
{Z
09 [8]
Łț¢6 s
soos@ș uno osoɛ o afone, ormg), o geos@pure og ligilo) oos uos, siis umowɛɛngɔse os quaerisi@oio posso poinęło3-iosisòrie) · z - -susuraoseșmpo : i
(0001) spoosiinssensesigno
兇4日兇&* g@a Dr *ume z sogeușe) · I · susumotoșmgae sağrılsaeqğreto o uno sooo @ųjųo ur-ansg)§§ une *院, sebsg
sus um stofmoss -izaentiņurg)
119oruírios glo isoh mosqÎn prie urnogo forngae
----| 리귀司副司制

Page 154
*、W, | Ι ΑΙ ΜΙ ΑΙ , . | ,
,
。 。 -
N
1 SN 92
A. 5ᏠᏧ ! , ; ,"" : ","" : "مه * ಕ್ಲ;
! | अम् ।
اهيم 断
 

பிழை திருத்தம்
QHQ பிழை திருத்தம்
3 அவற்றைப் அவரைப் 2 காணப்பட்டனர். காணப்பட்டனரா P 3 25?5 2,535,000 5. | பேரவை அமைச்சரவை 3 ) அங்கதவராயிருந்து அங்கத்தவராயிருந்து
தேர்தல் நடை. தேர்தல் எப்போது (56t, 5, 6| ' பிரதி அமைச்சர்கள் .. பிரதி அமைச்சர்கள்
1 திலுமிருந்து திலுமிருந்தபோது 5 அமைச்சரவையும் அமைச்சரையும் 3 முன்று மூன்று 2 விளங்கியது. விளங்கியது, 3 தங்கியிராது. தங்கியிராது, 2 நடக்கும். நடக்கும், 5 சொல்லுந்தரத்தன்று சொல்லுந்தரத்தன்று என்று த கூ மேலும் கூறுகின்றது. 5 கடன் கடன், 1 145 40
KVIN NAUVOO A \ A \: %

Page 155


Page 156
*ன்னுகம், திருமகள் அழுத்தகத்தில் குரும்பசிட்டி, தி
அவர்களால் அச்சிடப்பட்டு,
வளியிடப்பெற்றது.
இலங்கைப்
பாண வளாகத்தி =ராகக் கடமையாற்
தம்பி அவர்கள் பட ளுக்கு நீண்டகாலம் ளியலும் கற்பித்த வர். சுன்னுகம் கல்லூரியில் தமது யைப் பெற்ற முத்
பதிஞன்கு ஆண்டுக களத்தில் அலுவல் தார். பின்னர் ே
கழகத்தில் பி. ஏ.
களைப் பெற்றுப் பு யாழ்ப்பாணக் க ளியல் விரிவுரையா ரர்ாற்றினூர், கொக்
நுட்பக் கல்லூரியி புறப் போதனுசிரி
போற்றி வருகிரு உயர்ந்த இ.மு. பாற்றலும் பணி
தவர் சமுதாயப் நம்பிக்கைகொண்டு எழுதிய அரசியல்
களும், ஆராய்ச்சி
மாணவர்கள் மத் மக்கள் மத்தியிலும் யத்தை ஏற்படுத்தி
மாணவருக்கும்,
உகந்த கைந்து
இலங்கைக் குடியரசி
முதலாம் பாகம்
Tri. அரசிய அனுபவமும் கலந்: வாசகர் கூட்டத்ை
துள்ளது.
கரகெட் திருஇ.
 
 
 

கலைக் கழக யாழ்ப்
றும் இ முத்துத் ட்டதாரி வகுப்புக்க அரசியலும்,பொரு அனுபவம் வாய்ந்த ஸ்கந்தவரோதயக்
இ மைக் கல்வி துத்தம்பியவர்கள் ள் அஞ்சல் திணைக் ராகப் பணிபுரிந் தன்னைப் பல்கலைக்
67th g. t t "it is தினுறு ஆண்டுகள் ஸ்லுரரியிற் பொரு ாளராகக் கடமை குவில் பல் தொழில் லே பொருளியல் யராகவும் கடமை 伊、 உழைப்பால் அவர்கள் பல்துறை பார்வமும் நிறைந் பணியில் ஆழ்ந்த பத்திரிகைகளில் விளக்கக் கிட்டுரை க் கட்டுரைகளும் தியிலும், பொது நிறைந்த பரிச்ச யுள்ளன. அரசியல் பொதுமக்களுக்கும் @Fస్ట్ 1974இல், *ன் அரசியலமைப்பு என்ற நூலை வெளி ஞானமும் ஆசிரிய 药 நிதானம், பரந்த த இவர் பால் ஈர்த்
,ga53چ --س=
ரு முத்தையா சபாரத்தினம் முத்துத்தம்பி அவர்களால் - 1975