கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை: மனித உரிமைகள் நிலை 2003

Page 1
இலங்கை : மனித உரிமை
2OO3
 

மகத்திற்குமான அற நிலையம்

Page 2

இாைங்கை :
மனித உரிமைகன் நிைை 2003

Page 3

66),6085 மனிதஉரிமைகள் நிலை 2OO3
2002 ஆம் ஆண்டு தை - மார்கழி வரையுள்ள காலப் பகுதியின் தமிழ் மொழிபெயர்ப்பை இவ்வறிக்கை உள்ளடக்குகின்றது
சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம் 3, கின்சி ரெறஸ் கொழும்பு - 8 இலங்கை.

Page 4
G சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம்
ஐப்பசி 2003
SBN 955-9062-82-4

I
உள்ளடக்கம்
விடயங்கள் சமர்ப்பித்தோர்
முன்னுரை
மீளாய்வு
1. அறிமுகம் 2. சர்வதேச அபிவிருத்திகள் 3. 2002 இல் சமாதான நடவடிக்கைகள் 4. புரிந்துணர்வு ஒப்பந்தமும் (பு.உ.ஓ)
இலங்கை கண்காணிப்புக் குழுவும் 5. 2002 இல் சமாதானப் பேச்சுவார்த்தைகள்
உள்ளுரில் புலம்பெயர்ந்த ஆட்கள்: மனித
உரிமைகள் பற்றிய சில பிரதான பிரச்சனைகள்
அறிமுகம்
புரிந்துணர்வு ஒப்பந்தமும் மனித உரிமைகளும்
மனிதாபிமான உதவி
நடமாடும் சுதந்திரம்
திரும்பிச் செல்லுதலும் மீளமர்த்தப்படுதலும்
பெண்கள்
சிறுவர்
நிறுவக அமைப்பு
அகதிகள்
0. உ.பு.ஆ களுக்கு ஏற்புடைத்தான சர்வதேச,
உள்ளுர்மரபுகள்
11. புலம் பெயர்தல்
12. முடிவுரை
ஆளொருவருக்குள்ள கீர்த்தி 1. முன்னுரை 2. ஆளுக்குரிய கீர்த்தி தொடர்பிலான உரிமைகளின் நோக்கெல்லை 3. அறிக்கையிடப்பட்ட மீறுகைகள் . நீதித் துறை அபிவிருத்திகள் 5. முடிவுகளும் விதப்புரைகளும்
V
Viii
iX
O
06
07
12 15
21
24
27
30
32
39
4
43
46
47
49
50
52
53
57
66
71

Page 5
IV இலங்கையில் பெண்களின் அந்தஸ்து
முக்கியமான சில அம்சங்கள் பற்றிய மீளாய்வு
1. அறிமுகம் 73 2. ம.அ.வி.பா.ஒ.ச 74 3. நடைமுறைப்படுத்தும் அமைப்புகள் 8 4. வெளிநாடு சென்றுள்ள வேலையாட்கள் 92 5. பெண்களும் ஆயுதப் போரும் 97 6. பெண்களும் சமாதானமும் 00 7. பொருளாதாரக் கொள்கையும் பெண்களும் 105 8. பெண் தொழிலாளர்கள் 109
V இலங்கையில் ஆயுதப் போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட
சிறுவர்: இவ்வாண்டின் மீளாய்வு
1. அறிமுகம் 11 2. சேவைகளின் ஏற்பாடு 114 3. சிறுவர் போராளிகள் 124 4. முடிவுரை: எதிர்கால வாய்ப்புக்கள் 134
VI கருத்து வெளியீட்டுச் சுதந்திரமும் ஊடக
சுதந்திரமும் . 1. அறிமுகம் 136 2. சகவாழ்வும் ஊடகமும் - குறித்தவகை மனஅழுத்தங்கள் 138 3. ஊடகச் சட்டங்கள், ஒழுங்கு விதிகள் மற்றும்
தொழிற்பாடுகளின் சீரமைப்பு 141 4. கருத்து வெளியீட்டுச் சுதந்திர விவகாரங்களும்,
இன முரண்பாடுகளும் 169 5. கருத்து வெளியீட்டுச் சுதந்திரம் தொடர்பில், தெற்கில்
உடல் ரீதியான தாக்குதலும் பயமுறுத்தலும் 73 6. (Uplq6) 175
VII மனித உரிமைகளுக்கான நீதி பாதுகாப்பு
1. அறிமுகம் 177 2. உறுப்புரை 12 இன் கீழ் தாக்கல்
செய்யப்பட்ட வழக்குகள் 179
3. உறுப்புரை 14 இன் கீழ் தாக்கல்
செய்யப்பட்ட வழக்குகள் 181
νi

VIII
அடிப்படை உரிமை மனுக்களில் தகுதி பற்றிய விளக்கம் உறுப்புரை 11இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மனச்சாட்சிக்கான உரிமை சித்திரவதை அவசரகால சட்ட விதிகள் (pl96)6O)5]
மறியற் காரர்களுக்கான உரிமைகள்
1.
2.
3.
முன்னுரை
சர்வதேச சாதனங்கள் மறியற்காரர்களுக்கான உரிமைகளும் தேசிய சட்டவாக்கமும் இலங்கையில் மறியற்காரரின் உரிமைகள் தொடர்பிலான தற்போதைய நிலைமை தடுப்புக் காவல் நிலைமைகள் மீதான ஆராய்ச்சிக் குழுவின் அவதானிப்புரைகள் (plq660) J
அட்டவணை 1
அட்டவணை II
அட்டவணை II
அட்டவணை IV
வழக்குகளின் பட்டியல்
183
187
191
193
196
200
2O2
205
210
214
215
226
231
233
236
237
249

Page 6
விடயங்கள் சமர்ப்பித்தோர்
※
※
முன்னுரை : எலிசபத் நிசான்
உள்ளுரில் புலம்பெயர்ந்த ஆட்கள்: மனித உரிமைகள்
பற்றிய சில பிரதான பிரச்சனைகள் ரேணுகா சேனாநாயக்க
ஆளொருவருக்குள்ள கீர்த்தி : சாந்த ஜயவர்தன
இலங்கையில் பெண்களின் அந்தஸ்து - முக்கியமான சில அம்சங்கள் பற்றிய மீளாய்வு : குமுதினி சாமுவேல்
இலங்கையில் ஆயுதப் போராட்டத்தினால்
பாதிக்கப்பட்ட சிறுவர்: இவ்வாண்டின் மீளாய்வு: பர்சானா ஹனிபா
கருத்து வெளியீட்டுச் சுதந்திரமும் ஊடக சுதந்திரமும் கிஷாலி பின்றோ-ஜயவர்தன
மனித உரிமைகளுக்கான நீதி பாதுகாப்பு மதுரங்க ரத்நாயக்க
மறியற்காரர்களுக்கான உரிமைகள் : எச்.ஜி தர்மதாஸ்
ஒருங்கிணைப்பாளர் : தனுஜா விஜயசாந்தன்
ஒப்பு நோக்குனர் : த. தர்மேந்திரா,
கட்டுரை மீள்பார்வை (ஆங்கிலப் பதிப்பு) டாக்டர். மாரியோ கோமஸ், டாக்டர்.சுமுது அதபத்து, டாக்டர். குமாரி ஜயவர்தன, செல்வி ரமணி முத்தெட்டுவேகம, திரு. ஆர்.கே.டபிள்யூ. குணசேகர, டாக்டர். ஏ.ஆர்.பி அமரசிங்க.
அட்டை : பிரியந்த பர்னான்டோ
அச்சுப்பதிவு : யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட்
Viii

முன்னுரை
இவ்வறிக்கை இலங்கையில் மனித உரிமைகளின் நடைமுறை நிலைமையை விளக்குவதாக இருப்பதுடன் இலங்கை தனது பிரசைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கடமைகளை நிறைவு செய்வதில் சர்வதேசக் கடப்பாடுகளுடன் எந்தளவுக்கு இணங்கிச் சென்றுள்ளது என்பதையும் மதிப்பிடுகின்றது. எனவே இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக சில முக்கிய அம்சங்களை இவ்வறிக்கை வெளிப்படுத்துகின்றது. அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதங்கள், சட்டவாக்கங்கள், அடிப்படை உரிமைகளின் செயற்பாடு, நடைமுறையில் அவற்றின் அமுலாக்கம் பற்றிப் பரிசீலனை செய்யப்படுவதுடன் அவைகள் கொண்டுள்ள வரையறைகளின் தாக்கங்களும் ஆராயப்படுகின்றன. இவ்வறிக்கையில் உள்ளுரில் இடம் பெயர்ந்த ஆட்கள்: மனித உரிமைகள் பற்றிய சில பிரதான பிரச்சனைகள், ஆளொருவருக்கான கீர்த்தி, இலங்கையில் பெண்களின் அந்தஸ்து முக்கியமான சில அம்சங்கள் பற்றிய மீளாய்வு, இலங்கையில் ஆயுதப் போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்: இவ்வாண்டின் மீளாய்வு, கருத்து வெளியீட்டுச் சுதந்திரமும் ஊடகச் சுதந்திரமும், மனித உரிமைகளுக்கான நீதிப் பாதுகாப்பு, மற்றும் மறியற்காரர்களுக்கான உரிமைகள் போன்ற அத்தியாயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவ்வறிக்கையின் உருவாக்கம் சட்டத்துக்கும், சமூகத்துக்குமான அறநிலையத்தினாலேயே ஒருங்கிணைக்கப்பட்டது. பொருத்தமான விடயங்களில் விசேட தகைமைகளைக் கொண்ட தனி நபர்களுக்குத் தனித்தனி அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து அவற்றின் செம்மை, நோக்கு, விடயத் தெளிவு என்பவற்றைப் பரிசீலிப்பதற்காக மீள்பார்வை செய்யப்பட்டது. அதன் பின்னர் முடிந்தளவுக்கு அணுகுமுறையிலும், மொழி நடைமுறையிலும் ஒரே சீரான போக்கு அமைய வேண்டுமென்பதைக் கருத்திற் கொண்டு வரைவுகள் ஒன்று சேர்க்கப்பட்டு விரிவாகத் திருத்தம் செய்யப்பட்டன. எனினும், அத்தியாயங்களுக்கிடையில் கூறியது கூறலும் சில தலைப் புக் கள் ஏனைய தலைப் புக் களை விட விரிவாக ஆராயப்பட்டிருப்பதும் தவிர்க்க முடியாதது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இவ்வத்தியாயங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவையே.
iX

Page 7
மொழிபெயர்ப்பில் ஏற்படக்கூடிய பிழைகளுக்கு சட்டத்துக்கும், சமூகத்துக்குமான அறநிலையம் மன்னிப்பு கோருகின்றது. மேலும் இலங்கை ஒப்பந்ததாரியாக விளங்கும் சர்வதேச மனித உரிமைகள் சம வா யங் களின் பட் டியலொன்றும் , இலங்கை யரினால் பின்னுறுதிப்படுத்தப்படவிருக்கின்ற சாதனங்களின் பட்டியலொன்றும் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 2002 இல் உயர் நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை வழக்குகளின் பட்டியலொன்றும் இவ்வறிக்கையில் ஓர் அட்டவணையாக இணைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகளைப் பயனுறுதி வாய்ந்த முறையில் பாதுகாப்பதையும், மேம்படுத்துவதையும் உறுதிப்படுத்துவதற்கு இவ் வறிக் கை குடியியல் சமூக நிறுவனங்களுக்கும் அரசாங்கத்துக் குமிடையில் தொடர்ச்சியானதொரு கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுக்கும் என எதிர்ப்பார்க்கலாம். ‘அரசாங்கத்தின் எல்லா அமைப்புக்களும், அரசியல் அமைப்பில் பிரகடனம் செய்யப்படும், அங்கீகரிக்கப்பட்டும் உள்ள அடிப்படை உரிமைகளை மதித்தும், பாதுகாத்தும் முன்னெடுக்கும்’ என இலங்கை அரசியலமைப்பு ஆணையிடுகின்றது. இலங்கை பல சர்வதேச மனிதவுரிமைச் சமவாயங்களின் ஒப்பந்ததாரியாக இருப்பதுடன் அதனது உள்நாட்டுச் சட்டங்களும், கொள்கைகளும், செயற்பாடுகளும் அதனது சர்வதேசக் கடப்பாடுகளை உறுதி செய்வதாகவும் இருக்க வேண்டும். இவ்வறிக்கை (இவ்வறிக்கையில் உண்மையான பரிசீலனைக்கு உட்பட்டுள்ள அரச சார்பற்ற பங்காளிகளும்) மனித உரிமைகளை மதித்தும் பாதுகாத்தும் நடப்பதற்கான தமது சர்வதேச மற்றும் அரசியலமைப்பின் கடப்பாடுகளை உயர்வாகப் பேணி நடப்பதை அரசு உறுதி செய்யும் தொடர்ச்சியான போராட்டத்தில் ஒரு பணிவுடைமையான நடவடிக்கையே.
சட்டத்துக்கும், சமூகத்துக்குமான அறநிலையம் கொழும்பு
2002

I
மீளாய்வு
எலிசபெத் நிசான்
1. அறிமுகம்
ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்திய 2001 திசம்பர் 5ஆம் திகதிப் பொதுத் தேர்தலையடுத்து 2002ஆம் ஆண்டு, மனித உரிமைகளின் துறையில் நிதானமான நம்பிக்கையின் உணர்வொன்றைக் கண்ணுற்றது. இந்த மனமாற்றத்தின் மையமாக அமைந்தது யாதெனில் 2002 பெப்ரவரி 22ஆம் திகதி “இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்த உடன்படிக்கை” என்ற தலைப்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றின் (பு.உ.உ) வடிவில் உருவான வட கிழக்கில் இடம்பெற்ற போர் நிறுத்தமாகும். இரண்டு சாராருக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் முதல் மூன்று சுற்றுக்கள் அவ்வாண்டின் பிற்பகுதியில் இடம்பெற்றன.
ஒரு சில மீறுகைகளுக்கு மத்தியில் போர் நிறுத்தம் ஆண்டு முழுவதும் நீடித்தது. மனித உரிமைகளைப் பொறுத்தளவில் பு.உ.உ அமுலாக்கம் தொடர்பாக பல குறைபாடுகள் காணப்பட்டன.
1.

Page 8
பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணப்பட்ட வேளையில் மனித உரிமைகள் தொண்டர்கள், மனித உரிமைகள் தொடர்பாக பணியாற்றுபவர்கள் சமாதான முயற்சிகளில் மனித உரிமைகள் பற்றிய எண்ணக் கருத்துக்கள் இடம்பெறவேண்டுமென்ற கோரிக்கைக்கு ஆதரவுதேட ஆரம்பித்தனர். போர் நிறுத்தத்தையும், தெற்கிலிருந்து வடக்கு கிழக்கிற்குப் பல்வேறு பொருட்கள் கொண்டுசெல்லப்படுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை அகற்றப்பட்டதையும், தெற்கிற்கும் வடக்கிற்கும் இடையே போக்குவரத்துத் தொடர்புகள் திறந்துவிடப்பட்டதையுமடுத்து போர்ப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையில் கணிசமான முன்னேற்றத்தைக் கொண்டுவந்தன. பு:உ.உ. யும் 2002ஆம் ஆண்டின் சமாதானப் பேச்சுவார்த்தைகளும் இந்த மீளாய்வின் பிற்பகுதியில் ஆராயப்படுகின்றன.
போர் நிறுத்தம் வட கிழக்கில் வாழும் மக்களின் வாழ்க்கையில் பல நன்மைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பில் இந்த அறிக்கையில் மகளிர், சிறுவர்கள், உள்ளுரில் புலம்பெயர்ந்தவர்கள் ஆகியோர் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படுகின்றது. அத்துடன் வடக்கில் சோதனைச் சாவடிகள் பல மூடப்பட்டன. போர் நிறுத்தத்தின் நிலைபேறான தன்மை பற்றிய நம்பிக்கை படிப்படியாக வளர்ந்தது. சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் பற்றிய ஓர் உணர்வு, தெற்கில் குறிப்பாக கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்ரீஈ) தற்கொலைப் படைகளின் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகிய பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையில் ஊறத் தொடங்கியது. எனினும் 2002 ஆம் ஆண் டு முழுவதும் வடக்கு கிழக் கில் புலம் பெயர்ந்தவர்களினதும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களினதும் மீளக்குடியமர்வு, புனர்வாழ்வு என்பன தொடர்பாக பாரிய பணிகள் மேற்கொள்ளப்படவேண்டியிருந்தன: வட-கிழக்கு மக்களின் நிலைமைகளைத் தணிப்பதில் காணப்பட்ட மந்தமான முன்னேற்றம் தொடர்பான அக்கறை மேலோங்கி நின்றதனால் ஆண்டின் இறுதியளவில் இவை சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பிரச்சினையாக அமைந்தது. உள்ளுரில் புலம்பெயர்ந்த ஆட்கள் என்ற அத்தியாயத்தில் ஆராயப்படுவதைப் போன்று போர் நிறுத்தத்தின்கீழ் சில முன்னேற்றங்கள் காணப்பட்டபோதிலும் பெண்களும் சிறுவர்களும் உட்பட உள்ளூர் புலம்பெயர்ந்த ஆட்களின் நிலைமை மோசமாகவே காணப்பட்டது. உள்ளுரில் புலம் பெயர்ந்தவர்கள் பாதுகாப்பாகவும் தங்கள் சொந்தவிருப்பப்படியும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கும் போதியளவு உணவுப் பங்கீடு, உறைவிடம், வேலை, சுகாதாரப் பராமரிப்பு, கல்வி என்பவற்றைப் பெறுவதற்குமான உரிமைகள்
2

இவ்வாண்டில் முக்கியமான பிரச்சினையாகக் காணப்பட்டன. வட கழக் கரின் சிறுவர் கள் புலம் பெயர் நீ த குடும் பங்களின் அங்கத்தவர்களாகவும் குறிப்பாக எல்ரீஈ யின் ஆட்திரட்டும் பணியின் இலக்குகளாகவும் பாதிப்பிற்கு உட்படக்கூடிய நிலையில் இருந்தனர். சிறுவர்களை போரணியில் சேர்ப்பதில்லை என 1998இல் அளிக்கப்பட்ட வாக்குறுதியையும், எல்ரீஈ யின் சிரேஷ்ட அலுவலர்கள் அவ்வாண்டு அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தமையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் சிறுவர்களை எல்ரீஈ க்குப் பலவந்தமாக சேர்க்கும் பணி தொடர்ந்தமை இவ்வாண்டின் ஒரு பெரும் பிரச்சினையாகத் தென்பட்டதுடன் கீழே குறிப்பிட்டவாறு, இலங்கையில் ஆயுதம் தாங்கிய போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் என்கிற அத்தியாயத்தில் ஆராயப்பட்டவாறு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் தாபிக்கப்பட்ட கண்காணிப்பு ஏற்பாடுகளிலுள்ள பலவீனம் வெளியானது. எல்ரீஈ க்குச் சிறுவர்கள் பலவந்தமாக சேர்க்கப்படுவதில் ஆட்கடத்தல்களுமி, சுயமான ஆட்சேர்ப்பும் சம்பந்தப்பட்டிருந்ததாக அறிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் மகளிரின் அந்தஸ்து என்ற அத்தியாயத்தில் ஆராயப்பட்டவாறு பெண்களின் உரிமை மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்ச்சி செய்வதிலும், ஆதரவு தேடுவதிலும், சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் புலம்பெயர்ந்த ஆட்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆணி - பெண் சமத் துவத்தை வலியுறுத் தும் அணுகுமுறை வலியுறுத்தப்பட்டது. 2002ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மகளிர் ஒழுங் கமைப்புகளினால் மேற் கொள்ளப் பட்ட தவிரமான நடவடிக்கையானது சமாதான நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமான ஒரு புதிய முயற்சியான ஆண் பெண் சமத்துவம் பற்றிய எண்ணம் பயனுறுதியுடன் உட்புகுத்தப்படுவதற்கு ஆண் பெண் சமத்துவம் (ஆ.பெ.ச.) தொடர்பான உப குழுவொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கமும் எல்ரீ யும் உடன்பட்டன. ஆபெ.ச. தொடர்பான முதலாவது கூட்டம் 2003 இன் ஆரம்ப பகுதியில் இடம்பெற்றது.
கடந்த காலங்களில் “இலங்கை: மனித உரிமைகளின் நிலைமை" பற்றிய அறிக்கைகள் வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்றுவரும் போர், நாட்டில் மோசமான மனித உரிமை மீறல்களுக்குக் களம் அமைத்துக்கொடுத்துள்ளதாக அறிக்கையிட்டுள்ளன. அவையாவன “காணாமற் போதல்", ஆட்கடத்துதல், பெருமளவில் தான்தோன்றித் தனமாகத் தடுத்துவைத்தல், நீதித்துறைக்குப் புறம்பாக மரண தண்டனைகள் விதித்தல், படுகொலைகள், சாதாரண குடிமக்களின் பெருந்தொகையான புலம் பெயர்வு, புலம் பெயர்ந்தவர்களுக்கு
3.

Page 9
உரித்துடைய சமூக, பொருளாதார உரிமைகள் மீறப்படுதல் என்பன அடங்கும் . இத் தொகுதியிலுள்ள பல அத் தியாயங்களில் அவதானிக்கப்பட்டவாறு போர் நிறுத்தத்தையடுத்து இந்த நிலைமையில் முன்னேற்றகரமான மாற்றம் காணப்பட்டது. ஆனால், ஒரு சில வன்முறைகள் - அதாவது உதாரணமாக ‘காணாமற் போதல்" தான்தோன்றித்தனமாகத் தடுத்துவைத்தல் என்பன இடம்பெறவில்லை என்பதற்காக மீண்டும் போர் மூண்டால் இத்தகைய வன்செயல்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதற்கான பாதுகாப்புகள் உள்ளன என்று பொருளல்ல என்பது நினைவிற் கொள்ளப்படுதல் வேண்டும். இத்தொகுதியில் எடுத்துக்காட்டப்பட்டவாறு மனித உரிமைகள் சார்ந்த துறை முழுவதும் சமாதானம் நிலவும் காலத்திலும் போர் நடைபெறும் காலத்திலும் தீர்க்கமானதும் பாதுகாப்புடையதுமான மனித உரிமைகளின் உட்கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான பாரிய சீரமைப்புகள் அவசியம். அத்தகைய சீரமைப்புகள் மேலும் தீவிரமான மனித உரிமைகளின் கலாசாரமொன்றைப் பேணி வளர்த்து வருங்காலத்தில் வன்முறைகளையும, கடந்த காலத்தில் வன்முறைகள் நியாயமான முறையில் கையாளப்பட்டன என்பது தொடர்பிலான பிரச்சினைகளையும் பயனுறுதியுடன் கையாளக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் அவசரகாலச் சட்டங்களையும் பயங்கரவாத தடைச் சட்டத்தையும்(ப.த.ச.) அகற்றுதலும் ஆட்களின் கீர்த்தி தொடர்பிலான உரிமைகள் மீது அனுகூலமான பயனொன்றைக் கொணி டிருந்தது மாத் திர மன்றி இந்த ஏற்பாடுகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஏராளமானோர் விடுவிக்கப்பட்டனர். கருத்துச் சுதந்திரத்தின் மீது முன்னேற்றகரமான தாக்கம் ஒன்றையும் கொண்டிருந்தது. நீண்டகாலமாக ஊடகத்தின் மீது வெவ்வேறு விதமான தணிக்கைகளை விதிப்பதற்கு அவசரகால ஒழுங்கு விதிகளின் ஏற்பாடுகள் பயன்படுத்தப்பட்டன. இவை அகற்றப்பட்டதையடுத்து கூடுதலான சுதந்திரம் உருவாக்கப்பட்டது. எனினும் அத்தகைய மட்டுமீறிய செயல்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்கென பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கோ பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கோ அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனினும் அரசாங்கம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ஊடகச் சட்டத்திற்கு நன்மை தரக்கூடிய சில சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தது. இதில் தண்டனைச் சட்டக் கோவையிலும, பத்திரிகைப் பேரவைச் சட்டத்திலும் மானநஷட ஏற்பாடுகளை நீக்கம் செய்தலும் அடங்கும். தகவல் சுதந்திரச் சட்டத்தின் வரைவின்மீதான கலந்தாலோசனைகளையும் அரசாங்கம்
4.

ஆரம்பித்தது. இவையும, ஏனைய மறுசீரமைப்பு நடவடிக்கைகளும, இன்னமும் கருத்திற் கொள்ளப்படாதிருக்கும் ஊடகச் சுதந்திரம் தொடர்பில் தீர்க்கப்படாதிருக்கும் ஏனைய பாரிய பிரச்சினைகளும் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடகச் சுதந்திரம் பற்றிய அத்தியாயத்தில் விவரிக்கப்படுகின்றன.
கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் மனித சுதந்திரத்தின் மீறுகைகள் இடம்பெற்றது வடக்கிலும் கிழக்கிலும் காணப்பட்ட போர் நிலைமைகளில் மாத்திரமல்ல என்பது நினைவில் கொள்ளப்படுதல் வேண்டும். கடந்த ஆண்டில் கருத்திற் கொள்ளப்பட்டதும் நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருந்ததுமான ஒரு பிரச்சினை இலங்கையில் குற்றவியல் நீதி முறைக்குள் “சித்திரவதை’ பயன்படுத்தப்பட்டமையாகும். இதில் பாலியல் வல்லுறவும் ஏனைய விதமான சரீர துஷ்பிரயோகங்களும் கட்டுக்காவலிலுள்ளவர்களின் மரணமும் அடங்கும். இப்பிரச்சினை அவ்வளவு முக்கியம் வாய்ந்ததாக இருந்தமையால் ஆளொருவருக்கான கீர்த்தி, இலங்கையில் பெண்களின் அந்தஸ்து, மனித உரிமைகளுக்கான நீதி,பாதுகாப்பு என்பன பல அத்தியாயங்களில் வலியுறுத்தப்பட்டன. சித்திரவதை இலங்கையில் சட்டவிரோதமானது. ஆனால் இது தொடர்ந்து நடைபெறுவதைத் தடுப்பதற்கு குற்றவியல் நீதிமுறை எதுவுமே செய்யவில்லை. பொலிசிலும் ஆயுதப் படைகளிலும் சித்திரவதையானது தண்டனைக் கலாசாரமொன்றிலிருந்தே தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. சித்திரவதை நிறுத்தப்படவேண்டுமானால் இக்கலாசாரம் மாற்றப்படவேண்டும். அடிப்படை உரிமைமீறல் விண்ணப்பங்களை உயர் நீதிமன்றத்தின்முன் தாக்கல் செய்யும் சித்திரவதைக்குப் பலியான ஒரு சிலருக்கு நிவாரணம் வழங்குவதற்கு உயர் நீதிமன்றம் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டிற்குரியன, எனினும் இந்த தொகுதியில் விவரிக்கப்படுவதுபோல சித்திரவதை தொடர்ந்து இடம்பெறுவதைத் தடுப்பதற்கு இவை போதுமானவையல்ல.
முரண்பாடுகள் தொடர்பில் பெண்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஆராய்வதோடு இலங்கையில் பெண்களின் அந்தஸ்து என்ற அத்தியாயம் போருடன் அவசியம் தொடர்புறுத்தப்படாத பெண்களின் பாரதூரமான உரிமை மீறல் சம்பவங்கள் பற்றிய பிரச்சினையையும் எமக்கு நினைவூட்டுகின்றது. உதாரணமாக அண்மைக் காலத்தில் பெண்களின் உரிமைகள் சார்ந்த பட்டியலில் வாழ்மனை வன்முறைகள் உட்பட பெண்களுக்கெதிரான வன்முறைகள் மேலோங்கியுள்ளன. அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவேண்டிய அவசியமும் தவிர்க்க முடியாததாகும்.
5

Page 10
இலங்கையிலிருந்து வெளிநாடு சென்றுள்ள வேலையாட்களின் (இவர்களுள் பெரும்பான்மையானோர் டெண்களாவர்) உரிமை மீறல்கள் பற்றி ஆராய்கையில் இவ்வத்தியாயம் எமக்கு ஞாபகப்படுத்துமாற்போல் மனித உரிமைகள் தொடர்பில் அரசின் பொறுப்பானது இலங்கை நாட்டிற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை.
“இலங்கை: மனித உரிமைகளின் நிலைமை 2003” என்ற இப்பதிப்பில் எடுத்துக்காட்டப்படும் ஒரு புதிய பிரச்சினை இலங்கை மறியற் சாலைகளில் நிலவும் மோசமான நிலைமைகளாகும். பழைமை வாய்ந்த சீரழிந்த நிலையிலுள்ள மறியற் சாலைக் கட்டிடங்களில் இடவசதி போதாது. மறியற் சாலைத் திணைக்களத்திற்கு அரசாங்க செலவினத் திட்டங்களின் முந்துரிமையும் மிகக் குறைவு. ஆதலால் மறியற் கைதிகளின் நடாத்துகைக்கு ஐ.நா. வின் ஆகக்குறைந்த நியமங்கள் பற்றிய விதிகளும் நிறைவேற்றப்படுவதில்லை. இலங்கையில் மறியற் கைதிகளின் உரிமைகள் நாளாந்தம் மீறப்படுகின்றன. இட நெருக்கடி தொடர்பான எண்ணிக்கை வியப்பிற்குரியது. தற்போது நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளில் 7641 சிறைக் கைதிகளுக்கு மட்டுமே இடவசதிக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. எனினும் 2002ஆம் ஆண்டில் சிறைக்கைதிகளின் நாளாந்த சராசரி எண்ணிக்கை ஏறக்குறைய 18,000 ஆகும் எனப் புள்ளி விவரங்கள் தெவிக்கின்றன. இக்கைதிகளுள் 10,000 பேருக்கெதிராக இன்னமும் குற்றத் தீர்ப்பளிக்கப்படவில்லை, இவர்கள் தடுப்புக் காவலிலேயே வைக்கப்பட்டிருக்கின்றனர். இதனைக் கருத்திற்கொள்ளுமிடத்து சீர்திருத்தத்திற்கான அவசரத் தேவை தெட்டத் தெளிவாகின்றது. “கைதிகளின் உரிமைகள்’ என்ற அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டதுபோல
"மறியற்சாலைகளில் இடநெருக்கடி மிகவும் மோசமான அளவு அதிகரித்துள்ளது. பலர் நம்புவதுபோல இங்குள்ள பிரச்சினை இடவசதி அல்லது தங்குமிடவசதி இல்லாமை மாத்திரமல்ல. போதியளவு தண்ணி வசதியில்லாமை, உடல்நல, பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் கட்டில், பீங்கான்கள், கோப்பைகள், துவாய்கள். ஆடைகள் என்பன இல்லாமையும் இங்கு காணப்படும் ஒரு பிரச்சினையாகும்.
2. சர்வதேச அபிவிருத்திகள் 2.1. பெண்களுக்கெதிரான பாரபட்சத்தை ஒழித்தல் பற்றிய
சமவாயத்தின் கீழ் அறிக்கையிடல்.
“இலங்கையில் பெண்களின் அந்தஸ்து’ என்ற அத்தியாயத்தில் எடுத்துக்கூறப்பட்டதுபோல பெண்களுக்கெதிரான பாரபட்சத்தை ஒழித்தல் பற்றிய சமவாயத்தின் கீழான (பெ.எ.பா.ஒ.ச.) இலங்கையின் பருவகால
6

அறிக்கை பெ.எ.பா.ஒ.ச. குழுவால் விமர்சனத்திற்குட்பட்டது. நாட்டில் பெண் களின் உரிமைகளை அதிகரிக் குமாறு மேற்படி குழு அரசாங்கத்திற்குப் பல விதப்புரைகளைத் தயாரித்தது.
2.2. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பற்றிய உடன்படிக்கைக்கு ஏப்ரல் 9ஆம் திகதி, தேவையான எண்ணிக்கைகளைக் கொண்ட அங்கீகாரம் (60) கிடைத்ததையடுத்து 2002 யூலை 1ஆம் திகதி வலுவுக்கு வந்தது. இந்நீதிமன்றம் மனித படுகொலைகள், போர்க் குற்றச் செயல்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் என்பவற்றிற்கெதிராக வழக்குத் தொடரும். முன்னைய இலங்கை அரசாங்கம் போரில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக உடன்படிக்கையை அங்கீகரிக்கவில்லை. எனினும் அரசாங்கமும் எல்ரீஈ யும் இப்பொழுது சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதனால் அங்கீகாரத்திற்கு ஆதரவு தேடுவதற்கான வாய்ப்பொன்று திறந்துள்ளது. அங்கீகாரம் மற்ற திறத்தவரின் நம்பிக்கையையும், வருங்காலத்தில் மனித உரிமைகளையும் மனிதாபிமான மரபுகளையும் மதிப்பதற்கான அரசியல் நாட்டத்தையும் புலப்படுத்தும்.
3. 2002 இல் சமாதான நடவடிக்கைகள்
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் 2001 திசம்பர் 5ஆம் திகதி ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. போருக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீாவொன்றைத் தேடுவதாக வாக்களித்தது. திசம்பர் 24ஆம் திகதி எல்ரீfஈ ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தமொன்றைப் பிரகடனப்படுத்தியது. விரைவில் அரசாங்கமும் அதற்கு இசைவு தெரிவித்தது. போர்நிறுத்தம் நீடித்தது. 2002 பெப்ரவரி 22ஆம் திகதி இரு பகுதியினராலும் கைச் சாத்திடப்பட்டதும் கீழே சுருக்கமாக விவரிக்கப்படுவதுமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இது முறையாக இடம்பெற்றது. ஆண்டின் பிற்பகுதியில் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் தொடர்ச்சியாக சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
பாராளுமன்றத் தேர்தல் அரசாங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது ஆனால் சனாதிபதியின் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இப்பதவி எதிர்க் கட்சியின் கையிலேயே இருந்தது. சமாதான
7

Page 11
முயற்சியை முன்னெடுத்துச் செல்வதில் ஆண்டு முழுவதும் அரசாங்கத்திற்கும் சனாதிபதிக்கும் இடையில் இழுபறி நிலைமை காணப்பட்டது. சில வேளைகளில் இம்முயற்சியை சீர்குலைக்கும் அச்சுறுத்தலும் காணப்பட்டது. இலங்கை அரசியலின் தற்போதைய போக்கில் சிங் கள மக்கள் பெரும் பான்மையாக வாழும் தென்னிலங்கையில் ஆட்சியிலுள்ள கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் அத்தகைய இழுபறி நிலை தொடர்ந்ததோடு இது நாட்டிலுள்ள அனைத்துச் சமூகங்களுக்கும் தனியாட்களுக்கும் நிலையானதும் நியாயமானதுமான சமாதானத்தைக் காண்பதற்குப் பாரதூரமான ஒரு முட்டுக்கட்டையாகவும் அமைந்தது.
புரிந்துணர்வு ஒப்பந்தமும் சமாதானப் பேச்சுவார்த்தைகளும் மனித உரிமைகளுக்காகப் பணியாற்றுபவர் களினதும் , சமாதான ஒழுங்கமைப்புகளினதும் பணிகளில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தின. இவ்வமைப்புகள் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அனுசரணை அளிப்பதிலும் பரவலாக ஈடுபட்டன. சமாதான நடவடிக்கைகளில் மனித உரிமைகள் முக்கிய அம்சமாக விளங்கின. ஆரம்பத்தில் சமாதான முயற்சியில் நுண்ணுணர்வு சார்ந்த மனித உரிமைகள் பற்றிய பிரச்சினைகள் மிகவும் நிதானமாகவே எழுப்பப்பட்டன. நாட்கள் செல்லச்செல்ல போர் நிறுத்தம் தொடர்ந்து நிலவியதையடுத்து சமாதான நடவடிக்கைகளின் அடிப்படையில் மேலும் வெளிப்படையான மனித உரிமைக் கட்டுக் கோப்பொன்றிற்கான தேவை வெளிப் படுத்தப்பட்டதுடன் மனித உரிமைகள் பற்றிய பிரச்சினைகள் படிப்படியாக நிகழ்ச்சி நிரலில் இடம்பெறத் தொடங்கின. நவம்பர் மாதம் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் இரண்டாவது சுற்றுவட்டத்தில் சமாதான நடவடிக்கைகளில் மனித உரிமைகளைச் சேர்த்துக்கொள்வது தொடர்பாக நிபுணத்துவ ஆலோசனை வழங்குவதற்கென சர்வதேச மன்னிப்புச் சபையின் முன்னைய பொதுச் செயலாளர் திரு. இயன் மார்டின் என்பவருக்கு அழைப்பு விடுப்பதற்கு இரு திறத்தவர்களும் உடன்பட்டனர். மனித உரிமைகளின் பாதுகாப்பிற்கான முக்கியத்துவம் தொடர்பில் இரு பகுதியினரும் உறுதியளித்தபோதிலும் ஆண்டு முழுவதும் வடக்கு கிழக்கில் வெளிக்கள நிலைமை தொடர்ந்து கவலைக்குரியதாகவே காணப்பட்டது.
பு.உ.உ. கைச்சாத்திடப்பட்ட பின்னர் குறிப்பாக கவலைக்குரிய விடயமொன்றாகக் காணப்பட்டது யாதெனில் வட கிழக்கில் எல்ரீஈ யின் துஷபிரயோகங்கள் தொடர்ந்து இடம்பெற்றதே. குறிப்பாக சிறுவர்கள் போரணிக்குத் திரட்டப்பட்டமை, வட கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களிடமிருந்து பணமும் காணியும் அபகரிக்கப்பட்டமை

என்பன தொடர்ந்தன. எல்ரீஈ யின் அத்தகைய நடவடிக்கைகளை வெளிப்படையாகக் கண்டிக்க பல தமிழ் மக்கள் பயந்தனர். முஸ்லிம் சமுதாயம் முற்றிலும் மெளனமாக இருக்கவில்லை. முஸ்லிம் சமுதாயம் எல்ரீஈ யின் அச்சுறுத்துதலுக்குப் பலியாகும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக உணர்ந்ததுடன் எல் ரீரீஈ யின் நிலைப் பாடு என்னவாயிருப்பினும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் வட கிழக்கிலுள்ள சிறுபான்மைச் சமுதாயம் என்ற வகையில் அதன் நலன்கள் புறக்கணிக்கப்படக்கூடும் என அஞ்சியது. பு.உ.உ யையடுத்து அரசாங்கக் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் எல்ரீஈ யின் நடமாட்டம் அதிகரித்ததையடுத்து அத்தகைய பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் சமுதாயத்தின் உறுப்பினர்கள் எல்ரீஈ யால் பண அபகரிப்பிற்கும் பணயத்திற்காக ஆட்கடத்தலுக்கும் ஆளாகக்கூடிய சந்தர்ப்பங்களும் அதிகரித்தன. வடக்கிலுள்ள முஸ்லிம்கள் ஒருசில வியாபாரங்களையும் மீன்பிடித்தலையும் மேற்கொள்வதிலிருந்தும், பல வியாபார நலன்கள் மீது அதன் சொந்த ஆதிக்கத்தை விஸ்தரித்துக்கொள்வதிலிருந்தும் தடைசெய்யப்பட்டதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது.
பு.உ.உ. யின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கை கண்காணிப்புக் குழு (இ. க.கு.) அத்தகைய துஷ பிரயோகங்களை யிட் டு கண்மூடித்தனமாக இருக்கின்றதெனவும் முரண்பாட்டிற்குரிய பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்தத் தயங்குகின்றது எனவும் போர் நிறுத்தத்தை நிலைபெறச் செய்வதற்கு முக்கியமான மனித உரிமைகள் பற்றிய தொண்டர்கள் தெரிவித்தனர். புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆட்கடத்தலையும் பண அபகரிப்பையும் குடிமக்கள் தொல்லைக்குட்படுத்தப்படுதலையும் தடை செய்த போதிலும்கூட இவை தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. மேலும் எல்ரீரீஈ யின் கட்டுப்பாட்டிலுள்ள சில பிரதேசங்களை இ.க.கு. வினால் அணுகமுடியாதுமிருந்தது. இக் குழுவின் பணிகள் அரசாங்கக் கட்டுப்பாட்டிலுள்ள வலயங்களுக்குள்ளேயே செறிந்திருந்தன.
எல்ரீஈ யின் கோட்பாடு பற்றிய முறை சார்ந்த கூற்றுக்கும் களத்தின் நிலைமைக்கும் இடையில் மிகுந்த வேறுபாடு காணப்பட்டது. ஒரு புறத்தில் அனைத்துச் சமுதாயங்களினதும் உரிமைகள் மதிக் கப்படவேண்டிய முக்கியத்துவம் பற்றிய முறைசார்ந்த கூற்றுக்களில் உடன்பட்டுக் கொள்ளப்பட்டது. மறுபுறம் குறிப்பாக கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் எல் ரீரீஈ யால் தாங்கள் அச்சுறுத்தப்படுவதாக உணர்ந்தனர். அத்துடன் வட கிழக்கிலுள்ள ஏனைய தமிழ் அரசியல் குழுக்களும் அதிகளவில் எல்ரீஈ யின் அழுத்தத்திற்குட்பட்டு வருவதாக உணர்ந்தன.
9

Page 12
ஏப்ரல் மாதம் பு.உ.உ. வின் பின்னர் ஆனால் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறையாக ஆரம்பிக்கப்படுமுன்னர் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கம் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பிலான பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக எல்ரீஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்துள்ளார். தற்பொழுது தமிழர்களால் இருப்பாட்சி கொள்ளப்பட்டுள்ள காணிகளைத் தவிர முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் கூடிய விரைவில் திருப்பிக் கொடுக்கப்படும் என பிரபாகரன் வாக்குறுதியளித்துள்ளார். ஆனால் ஆண்டின் இறுதியளவில் அப்பிரச்சினை முறைசார்ந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது எடுத்துக் கொள்ளப்பட்டபோதிலும் தீர்மானம் எதுவும் செய்து கொள்ளப்படவில்லை.
பு:உ.உ. கைச்சாத்திடப்பட்டவுடனேயே வட கிழக்கில் இயல்பு நிலைமையை மீண்டும் நிலைநாட்டி இணக்கப் பேச்சுவார்த்தைகளை மேலும் கட்டியெழுப் புவதற்கான சூழி நிலையொன் றை உருவாக்குவதற்கான நம்பிக்கையை கட்டியெழுப்பும் ஒரு வழிமுறையாக ஒரு சில ஏற்பாடுகளைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நம்பிக்கையின் அடித்தளத்தை நிறுவுவதற்கு பொருளாதாரத் தடையை நீக்குதல் போன்ற துரித நடவடிக்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவேண்டியது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குமாரதுங்க ஆட்சியின் ஆரம்ப காலத்தில் முந்திய அரசாங்கத்திற்கும் எல்ரீஈ இற்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முறிவின் அனுபவத்திலிருந்து வெளிப்பட்டது. பு:உ.உ, கைச்சாத்திடப்பட்டவுடன் மார்ச் 6ஆம் திகதி வவுனியாவிலிருந்து தென் பகுதிக்கு குடிமக்களின் போக்குவரத்து மீதான பிரயாணத் தடைகள் நீக்கப்பட்டன. 'இலங்கை: மனித உரிமைகளின் நரிலை’ என்ற முந் திய பதிப்புகளில எடுத்துரைக்கப்பட்டவாறு அத்தகைய பல மட்டுப்பாடுகள் மக்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தின. நடமாடும் சுதந்திரத்தைப் பாரதூரமாக மட்டுப்படுத்தியது. சில விடயங்களில் தான் தோன்றித்தனமாக தடுத்துவைத்தலும் இடம்பெற்றது. தெற்கு நோக்கிப் பிரயாணம் செய்யுமுன் அனுமதிச் சீட்டு பெறப்படவேண்டுமி, தென் பகுதியை வந்தடைந்ததும் பொலிசில் பதியவேண்டும் என்ற தேவைப்பாடுகள் நீக்கப்பட்டன. எல்ரீஈ இயக்கத்தினர் மாத்திரம் பு.உ.உ யின் நியதிகளின்படி அரசாங்கக் கட்டுப்பாட்டிற்குட்பட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்யும் போது அதிகாரிகளிடம் பதிவுசெய்யுமாறு
O

தேவைப்படுத்தப்பட்டனர். பின்னர் மார்ச் மாதத்தில் நோர்வே அனுசரணையுடன் வன்னி ஊடாக (எல்ரீஈ யின் கட்டுப்பாட்டின் கீழிருந்த) ஏ9 பாதை திறக்கப்படுவதற்கு எல்ரீரீஈ உடன்பட்டது. போர் நடைபெற்ற ஆண்டுகளின்போது மிகவும் பயங்கரமான போட்டாபோட்டிக்கு உட்பட்ட பாதை ஏ9 ஆகும். இதன் கட்டுப்பாட்டிற்காக போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாக்கப்பட்டன. 12 ஆண்டுகளின் பின்னர் ஏப்ரல் 8ஆம் திகதி இப்பாதை திறக்கப்பட்டமை சமாதான நடவடிக்கையில் முக்கியமான ஒரு மைல் கல்லாக அமைந்தது. இப்பொழுது குடிமக்களால் கண்டியிலிருந்து நேராக யாழ்ப்பாணத்திற்கு வீதி வழியாகப் பயணம் செய்ய முடியும். எல்லைப் புறப் பரிசோதனை களுக்குச் சமமான சோதனைகள் மாத்திரம் இராணுவத்தாலும், எல்ரீஈ யாலும் வன்னியின் இரு மருங்குகளிலும் அவரவர்களின் கட்டுப்பாட்டு எல்லைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் பு.உ.உ. இன் நியதிகளின்படி ஒருசில பொருட்கள் மாத்திரமே வடக்கு கிழக்கிற்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. வட- கிழக்கிற்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு பொருட்களை மட்டுப்படுத்துவதற்கென விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. வன்னியில் அதன் கட்டுப்பாட்டு எல்லைகளில் எல்ரீஈ யால் சமாந்தர வரி விதிப்பனவு முறையொன்று விதிக்கப்பட்டிருந்தபோதிலும் வியாபாரத்திற்கான வாய்ப்புகள் கணிசமான அளவு அதிகரித்தன. யூலை 15ஆம் திகதி மஹா ஒயாவிலிருந்து செங்கலடி வரையிலான ஏ5 பாதை திறக்கப்பட்டதையடுத்து கிழக்கிற்குச் செல்லும் வசதி அதிகரித்தது. 2002 மே மாதத்தில் மீன் பிடித்தல் மீதான மட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமை மற்றுமொரு முக்கியமான முன்னேற்றமாகும்.
இக் காலப் பகுதி முழுவதும் அரசாங்கத்திற்கும் எல்ரீfஈ பிரதிநிதிகளுக்குமிடையில் அவ்வப்போது கூட்டங்கள் நடைபெற்றன. எனினும் இலங்கைச் சட்டத்தின' கீழ் எல்ரீஈ தடைசெய்யப்பட்டவொரு இயக்கமாக இருக்கையில் அரசாங்கத்துடன் முறைசார்ந்த சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதற்கு எல்ரீஈ விரும்பவில்லை. செப்டெம்பர் 4ஆம் திகதி அரசாங்கம் தடையை நீக்கியது. செப்டெம்பர் 28ஆம் திகதி முறைசார்ந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் முதலாவது சுற்றுவட்டத்தை உடனடுத்து இரு திறத்தவர்களும் பல போர்க் கைதிகளைப் பரிமாற்றம செய்துகொண்டனர். தெற்கில் சிறைக் கைதிகளாகப் பிடித்து வைக் கப்பட்டிருந்த 13 எல் ரீரீஈ உறுப்பினர்களுக்குப் பதிலாக எல்ரீஈ யால் பிடித்துவைக்கப்பட்டிருந்த ஏழு பாதுகாப்புப் படை ஆளணியினர் விடுவிக்கப்பட்டனர்.
11

Page 13
4. புரிந்துணர்வு ஒப்பந்தமும் (பு.உ.உ.) இலங்கை
கண்காணிப்புக் குழுவும்
இரண்டு பகுதிகளினதும் பொதுவான குறிக்கோள் “இலங்கையில் தொடரும் இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்தை மூலம் தீர்வு காண்பதே" என இலங்கை அரசாங்கத்திற்கும் எல்ரீரீஈ க்கும் இடையில் கைச் சாத்திடப்பட்ட பு.உ.உ. குறிப்பிட்டது. அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து போரினால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குழுக்களினதும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதே நீடித்த தீர்வொன்றை நோக்கி மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடிய சாதகமான ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கு விரும்பத்தக்க ஒரு வழிமுறையாகக் காணப்பட்டது.
போர் நிறுத்தத்திற்கான செயல்முறைகளையும் தற்போதைய கள நிலைமைகளின் அடிப்படையில் இரு சாராரினதும் படைகளை வேறுபடுத்துவதற்கான நியதிகளையும் பு.உ.உ விவரித்துக்கூறியது. அரசாங்கப் படைகளுடன் இணைந்திருந்த தமிழ் துணைப் படைக் குழுக்களால் குறிப்பிட்ட ஒரு கால வரையறைக்குள் ஆயுதம் கலைக்கப்படும் எனவும் அது குறித்துரைத்தது.
ஆயுதம் ஏந்தாத போராளிகள் எந்த நிலைமைகளின் கீழ் மற்ற பகுதியால் கட்டுப்படுத்தப்படும் இடப்பரப்பிற்குள் அல்லது அவற்றின் ஊடாக கடந்துசெல்ல முடியுமோ அந்த நிலைமைகளுக்கும் பு.உ.உ ஏற்பாடு செய்தது. அத்துடன் 'அரசியல் பணியின் நோக்கத்திற்கு படிப்படியாக அதிகரிக்கப்படும் எண்ணிக்கையினரான ஆயுதம் தாங்காத எல்ரீஈ உறுப்பினர்கள் குறித்துரைக்கப்பட்ட இராணுவ இடப்பரப்புகளைத் தவிர, அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் இடப்பரப்புகளினுள் தடையின்றி நடமாட அனுமதிக்கப்படுவர் எனவும் குறித்துரைத்தது.
துஷ்பிரயோகத்திலிருந்து பொது மக்களைப் பாதுகாப்பதற்கெனவும்
“இயல்பு நிலையை மீண்டும் நிலைநாட்டுவதற்கு" இப்பகுதியில் பொதுச் சேவைகளை மறுபடியும் நிலைநாட்டுவதற்கெனவும் உத்தேசிக்கப்பட்ட
I. இப்பிரிவு பிரதம மந்திரியின் அலுவலகத்திற்குள் சமாதான நடவடிக்கையையும் பணிகளையும் நிறுவனப்படுத்தும் வழிமுறையொன்றாக 2002 பெப்ரவரி 6ஆம் திகதி தாபிக்கப்பட்ட சமாதான நடவடிக்கையை இயைபுபடுத்துவற்கான செயலகத்தின் (சந.இ.செ) அலுவலக முறையான இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத் தின் ஏர் 11 டுகளை எடுத்துக்காட்டுவதுடன் அவற்றின் பொழிப்பையும் தருகின்றது.
2

பல ஏற்பாடுகள் பு:உ.உ வில் அடங்கியிருந்தன. பொது மக்களின் பாதுகாப்பிற்கு, “சித்திரவதை, அச்சுறுத்துதல், ஆட்கடத்தல், பண அபகரிப்பு, தொல் லைப்படுத்துதல் என்பன உட்பட பொது மக்களுக்கெதிரான அனைத்து விதமான அட்டூழியச் செயல்களையும் தவிர்த்தல்" இரு சாராரிடமிருந்தும் தேவைப்படுத்தப்பட்டது. கலாசார அல்லது மத ரீதியிலான நுண்ணுணர்வுகளுக்கு சபலத்தை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகளும் தடைசெய்யப்பட்டன. இரு சாராரினதும் படைகளால் பிடித்துவைக்கப்பட்டிருந்த வணக்கத் தலங்கள் பு:உ.உ. பயனுறுத்தப்பட்ட 30 நாட்களுள் காலி செய்யப்பட்டு பொது மக்களுக்கு கிடைக்கச்செய்வித்தல் வேண்டும். அதி பாதுகாப்பு வலயங்களுக்குள் அமைந்திருக்கும் அத்தகைய இடங்களைப் பொது மக்களால் அணுகமுடியாதிருந்தபோதிலுங்கூட அவை காலிசெய்யப் படவேண்டும் என்ற தேவைப்பாடும் இருந்தது. இரு சாராரினதும் படைகளால் இருப்பாட்சி கொள்ளப்பட்ட பாடசாலைக் கட்டிடங்கள் பு:உ.உ. பயனுறுத்தப்பட்ட 160 நாட்களுள் காலிசெய்யப்படவேண்டும். பகிரங்கக் கட்டிடங்கள் அவற்றின் உத்தேசிக்கப்பட்ட பாவனைக்குக் திருப்பிக்கொடுக்கப்படவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகளும் சோதனைக் கூடங்களும் மீளாய்வுசெய்யப்பட்டு குடிமக்கள் தொல் லைக் குட்படுத்தப்படுவதைத் தடைசெய்யும் வழிமுறைகள் 60 நாட்களுள் தாபிக்கப்படவேண்டும். “பொருட்கள் தடையின் றிச் செல்வதற்கும் குடிமக்கள் நடமாடுவதற்கும்’ வசதிசெய்யும் வகையில் ஒவ்வொரு சாராரினதும் கட்டுப்பாட்டு எல்லையில் சோதனைச் கூடங்கள் சகிதம், இராணுவச் சார்பற்ற பொருட்கள் எல்ரீரீஈ யின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட பகுதிக்கும் அங்கிருந்தும் கொண்டு செல்லப்படுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும். திருகோணமலை . ஹபரணை வீதி ஒவ்வொரு நாளும் 24 மணிநேர அடிப்படையில் திறந்துவைக்கப்படுவதற்கும் மட்டக்களப்பு புகையிரத சேவை வெலிகந்த வரை நீடிக்கப்படுவதற்கும் கண்டியாழ்ப்பாணம் ஏ9 வீதி இராணுவச் சார்பற்ற பொருட்களினதும் பொது மக்களினதும் போக்குவரத்துக்குத் திறக்கப்படுவதற்கும் மீன் பிடித்தலுக்கான மட்டுப்பாடுகள் நீக்கப்படுவதற்குமான மேலதிக ஏற்பாடுகளும் இடம்பெற்றன.
மறியற் கைதிகளைப் பொறுத்தளவில் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் அரசாங்கத் தரப்புப் படையினரால் மேற்கொள்ளப்படும் தேடுதல் நடவடிக்கைளும் கைதுசெய்யப்படுதலும் நிறுத்தப்படும், வருங்காலத்தில் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச்
13

Page 14
சட்டத்திற் கிணங்கவே கைதுசெய்யப் படுதல் வேண்டும் , தடுத்துவைக்கப்பட்டவர்களை 30 நாட்களுக்குள் சந்திப்பதற்கு குடும்ப உறுப்பினர்களுக்கு வசதியளிக்கப்படுதல் வேண்டும்.
உடன் படிக்கையின் நியதி நிபந்தனைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களையிட்டு விசாரணை செய்வதற்கு பு.உ.உ. இன் கீழ் சர்வதேசக் கண்காணிப்புக் குழுவொன்று (“இலங்கை கண்காணிப்புக் குழு”) தாபிக்கப்பட்டது. கண்காணிப்புக் குழுத் தலைவர் நோர்வே அரசாங்கத்தினால் நியமிக்கப்படுவார். அதன் உறுப்பினர்கள் நோர்வே நாடுகளிலிருந்து வருவர். இரு சாராரும் தத்தமது பகுதியால் ஏற்படுத்தப்படும் போர் சம்பந்தப்பட்ட ஏதேனும் விடயத்தைச் சீராக்குவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவர். குழு இந்த உடன் படிக் கையில் செய்து கொள்ளப் பட்ட கடப்பாடுகளை நிறைவேற்றப்படுவதை களத்தில் கண்காணிப்பதன்மூலம் சர்வதேச சோதிப்புகளை மேற்கொள்ளும்.
யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களில் உள்ளுர் கண்காணிப்புக் குழுக்கள் தாபிக்கப்படும். இவை ஒவ்வொன்றிலும் அரசாங்கத்தினாலும் எல்ரீஈ யினாலும் நியமிக்கப்பட்ட இரு உறுப்பினர்கள் அடங்குவர். குழுத் தலைவரால் ஐந்தாவது சர்வதேசக் கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார். உள்ளூர் குழுக்கள் தங்கள் மாவட்டங்களில் எழும் பிரச்சினைகள் பற்றி இ.க.கு.வுக்கு அறிவித்து கூடியவரை கீழ் மட்டத்தில் பிணக்குகளுக்குத் தீர்வுகாண முற்படும். தங்கள் கடமைகளை நிறைவேற்றும் இ.க.கு மற்றும் உள்ளுர் குழு உறுப்பினர்களின் தடையற்ற நடமாட்டத்தை உறுதிப்படுத்தவும் ஒப்பந்தத்தின் மீறுகை இடம்பெற்றதாக சார்ந்துரைக்கப்பட்ட இடப்பரப்புகளை உடனடியாக சென்றடைவதற்கு அனுமதி வழங்கவும் உடன்பட்டன.
இ.க.கு. வின் நடவடிக்கைகளுக்கான வழிகாட்டிகள் புறம்பான உடன்படிக்கையொன்றில் அடங்கியிருந்தன. அத்துடன் நிறுவனத்திற்கும் தனித்தனி உறுப்பினர்களுக்கும் உரித்தாக்கப்பட்ட சிறப்புரிமைகளையும் விடுபாட் டுரிமைகளையும் குறித் தரைத்தது. பு- உ.உ. இல் தரப் பட்டுள்ளவாறு இ.க.கு. தீர்க்கமானதும் பலமானதுமான ஆணையொன்றைக் கொண்டிருப்பதாகவும் உடன் படிக் கையில்
2. பார்க்கவும்: “இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினை ஸ்தாபித்தலையும் முகாமைசெய்தலையும் பற்றிய தூதுக்குழு உடன்படிக்கையின் 2ţig56ngi” http:www.peaceinsrilanka.Org u î6) 66)/6îfiu îl LILIL L-gl.
14

சார்ந்துரைக்கப்பட்ட மீறுகைகளைப் புலனாய்வு செய்வதற்கும் அதனைத் தீர்ப்பதற்கும் அதில் தனக்குள்ள அக்கறையை சம்பந்தப்பட்ட திறத் தவர் களின் கவனத் திற் குக் கொண் டுவருவதற்கும் பொறுப்பாயிருப்பதாகவும் பொருள் கொள்ளப்படலாம். அது இயங்கத் தொடங்கிய முதல் ஒருசில மாதங்களில் அதன் பணி இப்படித்தான் பொருள்கொள்ளப்பட்டதாகத் தோன்றிய விதம் இதுவல்ல. மாறாக ஆட்கடத்தல், அச்சுறுத்துதல், அத்தகைய முறைப்பாடுகளை புலனாய்வு செய்யத் தவறியமை, உடன்படிக்கையின் இராணுவ அம்சங்கள்மீது அதன் முயற்சிகளை திசைதிருப்புதல் போன்ற மனித உரிமை மீறல்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மீது வாளாதிருக்கும் நிலைப்பாடு ஒன்றையே அது மேற்கொண்டது. பு:உஉ இற்குட்பட்ட திட்டவட்டமான மனித உரிமை பற்றிய அம்சங்கள் உதாசீனப்படுத்தப்பட்டன என உள்ளுர் மனித உரிமைகள் ஒழுங்கமைப்புகள் கவலை தெரிவித்தன. அத்துடன் சர்வதேச மன்னிப்புச் சபை அரசாங்கத்துடனும் எல்ரீஈ யுடனும் கூட்டங்களுக்காக 2002 யூன் மாதம் இலங்கைக்கு விஜயம்செய்தபோது இலங்கை மன்னிப்புச் சபையும் உள்ளுள் குழு உறுப்பினர்களும் மனித உரிமைகள் பற்றி பயிற்சி பெறுவதை உறுதிப்படுத்துமாறு நோர்வே அரசாங்கத்தைத் தூண்டின.
5. 2002 இல் சமாதானப் பேச்சுவார்த்தைகள்
அரசாங்கத்திற்கும் எல் ரீfஈ யிற் குமிடையில் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடனான முறைசார்ந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றுவட்டம் செப்டெம்பர் 16 முதல் 18 வரை தாய்லாந்தில் நடைபெற்றது. ஆரம்பத்தில் பேச்சுவார்த்தை பல அவதானிகள் எதிர்பார்த்ததை விட மும்முரமான இடம்பெற்றது. 'நீடித்த சமாதானத்திற்கும் சுபீட்சத்திற்கும்" மனித உரிமைகளின் மதிப்பிற்கும் ஏற்ற நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு முன்னேறிச் செல்வதற்கான தங்கள் தீர்மானத்தை இரு சாராரும் உறுதிப்படுத்தியதையடுத்து முதலாவது சுற்றுவட்டம் சுமூகமாக முடிவுற்றது. பேச்சுவார்த்தைகளில் வட-கிழக்கில் பாரதூரமான மனிதாபிமான நிலைகள், குறிப்பாக
3. சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை 2003, “Sri Lanka' http:/
web.amnesty.org/report 2003/Lika-summary, eng.
4. ரோயல் நோர்வே அரசாங்கத்தின் கூற்று, ரோயல் நோர்வே
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, 2002 செப்டெம்பர் 19,
15

Page 15
கண்ணிவெடி அகற்றப்படுவதற்கும் உள்ளுரில் புலம்பெயர்ந்த ஆட்களின் மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, மனிதாபிமான மற்றும் புனரமைப்பு என்பவற்றிற்கான அவசியம் என்பன பற்றி கவனம் செலுத்தப்பட்டது. அவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு உயர் பாதுகாப்பு வலயம் (இது இராணுவமயப்படுத்தப்பட்டதும் புலம்பெயர்ந்த மக்களால் திரும்பிச்செல்ல முடியாததுமான ஓர் இடமாக இருந்தது) தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்கு ஒரு கூட்டுக் குழுவையும் மனிதாபிமான மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கான ஒரு கூட்டுச் செயலனியையும் அமைப்பதற்கு இரு சாராரும் உடன்பட்டனர். கூட்டுக்குழு இராணுவ ஆளணியினர் உட்பட இரு பகுதிகளினதும் சிரேஷ்ட பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும். கூட்டுச் செயலணி முஸ்லிம்களின் பங்கேற்பையும் உள்ளடக்கும். ‘இது வடக்கு கிழக்கைச் சேர்ந்த அனைத்து இனங்களுக்கும் நன்மை பயக்கும்’ எனக் குறிப்பிடப்பட்டது.* பேச்சுவார்த்தையை நோக்கி நீண்ட பயணம் செய்யவேண்டியுள்ளது என்பது உணரப்பட்டது. பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் ஆண்டில் நடத்துவதற்கு மூன்று சுற்றுவட்டப் பேச்சுவார்த்தைகளுக்கான திகதிகளுக்கு உடன்பட்டதுடன் கூட்டம் முடிவுற்றது.
முறைசார்ந்த பேச்சுவார்த்தைகளின் இரண்டாவது சுற்றுவட்டம் அக்டோபர் 30 முதல் நவம்பர் 3 வரை தாய்லாந்தில் நடைபெற்றது. இம்முறை குறிப்பாக கிழக்கில் அதிகரித்துவரும் பதற்ற நிலையினதும் வன்முறைகளினதும் பின்னணியில் “வட, கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு நிலைமையையும், இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தலையும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளுக்கு’ கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக வடக்கு கிழக்கில் இனங்களுக்கிடையிலான உறவை முக்கியமாக தமிழ், முஸ்லிம் சமுதாயங்களுக்கிடையிலான உறவை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள முற்பட்டது. இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் (இ.போ.க.கு.) உள்ளுர் கண்காணிப்புக் குழுக்களும் எப்படி செயாலாற்றின என்பது பற்றிய சில மாற்றங்கள் சம்பந்தப்பட்ட உடன்படிக்கைகள், இந்த இடப்பரப்பில் பாதுகாப்பையும், எல்ரீஈ இற்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்குமிடையில்
5. இதுவும் அதே. 6. ரோயல் நோர்வே அரசாங்கத்தின் கூற்று, ரோயல் நோர்வே வெளிநாட்டலுவல்கள்
அமைச்சு, 2002 நவம்பர் 1
6

கலந்தாலோசனைகளையும் மேம்படுத் துவதற்கும் எல் ரீரீஈ தளபதிகளுக்கும் கிழக்கிலுள்ள விசேட செயலணிக்குமிடையில் ஓர் உடன்படிக்கை என்பன சம்பந்தப்பட்டிருந்தன. கிழக்கில் வாழும் சிங்கள மக்களின் அக்கறைக்கு கவனம் செலுத்தவேண்டியிருந்தது. உள்ளுர் சமுகத் தலைவர்களையும் எல்ரீஈ மற்றும் அரசாங்கத் தலைவர்களையும் கொண்ட சமுதாய மட்டத்திலான உள்ளுர் சமாதானக் குழுக்களை தாபிப்பதற்கும் உடன்பட்டுக்கொள்ளப்பட்டது. இது இனங்களுக் கிடையிலான தகவல் தொடர்புகளுக்கும் இணக்கப்பாட்டிற்கும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தலுக்கும் பங்களிப்பு செய்யும்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளின் முதலாவது சுற்றுவட்டம், சமாதான நடவடிக்கைகளின் ஓர் உள்ளார்ந்த அம்சமாகும் என்ற வகையில் மனித உரிமைகள் பற்றிய பிரச் சினைகளை கருத்திற்கொள்ளத் தவறிவிட்டது என மனித உரிமைப் பணியாட்கள் கவலை தெரிவித்தனர். பேச் சுவார்த்தையின் இரண்டாவது சுற்றுவட்டத்தின்போது சமாதான நடவடிக்கைகளில் மனித உரிமைகள் பற்றி மதியுரை வழங்குவதற்கு சர்வதேச மன்னிப்புச் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் இயன் மார்டின் என்பவருக்கு அழைப்பு விடுக்கப்படவேண்டும் என உடன்பட்டுக்கொள்ளப்பட்டது.
அத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்தி குறித்துரைக்கப்பட்ட பிரச்சினைகளைக் கையாள்வதற்கு அவசியம் ஏற்படும்போது பல்வேறு உப குழுக்களைத் தாபித்து முறைசார்ந்த பேச்சுவார்த்தைகளுக்கு திருப்பி அறிக்கையிடுவதென பேச்சுவார்த்தைகளின் இரண்டாவது சுற்றுவட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது. இனவாரியான அனைத்துப் பிரிவினரதும் ஈடுபாட்டை உறுதிப்படுத்தி அதன் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துகையில் உள்ளுர் தொழிலாளர்களையும் நிறுவனங்களையும் தொழிலுக்கமர்த்தும் நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்கி வடக்கிலும் கிழக்கிலும் உடனடி மனிதாபிமான, புனர்வாழ்வு தேவை பற்றிய உப குழுக்கள் தாபிக்கப்படும் என கூட்டுச் செயலனி பேச்சுவார்த்தைகளின் முதலாவது சுற்றுவட்டத்தில் உடன்பட்டது. இதன் முதலாவது பணி, தங்கள் பணிக்கு நிதியுதவி பெறுவதற்கு உதவி வழங்கும் நாடுகளுடன் நிதி திரட்டும் கூட்டடெமான்றுக்கு ஆயத்தம் செய்வதில் நோர்வே அரசாங்கத்திற்குத் துணை புரிவதாகும்.
மேலும் உக்கிர தணிப்பு, இயல்பு நிலை உருவாக்கம், மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பான உபகுழுக்களும் தாபிக்கப்பட்டன. முந்திய குழுக்கள், உள்ளுரில் புலம் பெயர்ந்த ஆட்களை மீளக்குடியமர்த்துவதற்கு வசதியாக உயர் பாதுகாப்பு வலயங்கள்,
17

Page 16
மற்றும் பொது மக்களால் அணுகமுடியாத ஏனைய இடப்பரப்புகள் தொடர்பான விடயங்கள் மீது திறத்தவர்களுக் கிடையிலான உரையாடலுக்கு ஒரு களமாக அமையும். இதில் இரு தரப்பினர்களினதும் உயர்மட்ட குடியியல், இராணுவ ஆளணியினர் அடங்குவர். பின்னைய உப குழு, பிணக்கிற்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பதில் சம்பந்தப்பட்ட அரசியல் பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்தும். எனினும் நடைமுறையில் இலங்கையின் ஏதேனும் வருங்காலத் தீர்வுக்கான நியதிகளை வகுப்பதற்கான ஓர் அடித்தளத்தை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட பரந்தளவிலான அரசியலமைப்பு, சட்டம், அரசியல் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் பற்றி திறத்தவர்கள் ஒருமித்தும் தனித் தனியாகவும் நிபுணர்களுடன் கலந்துரையாடுவர் என எதிர்பார்க்கப்பட்டது."
பேச்சுவார்த்தைகளின் மூன்றாவது சுற்றுவட்டம் திசம்பர் 2-5ஆம் திகதிகளில் இடம்பெற்றது. மீண்டும் போர் நிறுத்தம், மனிதாபிமான, புனர் வாழ்வுப் பணிகளையும் அரசியல் விடயங்களையும் பலப்படுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டது. அனைத்துச் சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வொன்று பரிசீலனை செய்யப்படும் எனவும் அது ஐக்கிய இலங்கையினுள் சமஷ்டி அமைப்பை அடிப்படையாகக் கொண்டு தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழிடங்களில் உள்துறை சுய நிர்ணய கோட் பாடொன்றின்மீது உருவாக்கப்படும" எனவும் உடன்பட்டுக் கொள்ளப்பட்டது. முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான சமஷ்டிக் கோட்பாடு, அனைத்து இலங்கை மக்களினதும் உரிமைகளுக்கும் மதிப்பளித்தல் என்பன மீதான உடன்பாடு மிகவும் முக்கியமானதாகும். போர் நிறுத்தத்தை மேலும் திடப்படுத்துவதற்காக இருசாராராலும் குறித்துரைக்கப்பட்ட சில நடவடிக்கைள் வலியுறுத்தப்பட்டதுடன் தனியார் ஆதனத்தின் பயன்பாட்டிற்குப் போரினால் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளவிடத்து அதன் பயன்பாடு பற்றிய முரண்பாடு தொடர்பில் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான அணுகுமுறையொன்றைப் பிரேரிக்குமாறு உக்கிர தணிப்பு மற்றும் இயல்பு நிலையை உருவாக்குதல் மீதான உப குழு கேட்டுக்கொள்ளப்பட்டது.
7 ரோயல் நோர்வே அரசாங்கத்தின் கூற்று, ரோயல் வெளிநாட்டலுவல்கள்
அமைச்சு, 2002 நவம்பர் 3
8. ரோயல் நோர்வே அரசாங்கத்தின் கூற்று, ரோயல் நோர்வே வெளிநாட்டலுவல்கள்
அமைச்சு, 2002 திசம்பர் 5

பேச்சுவார்த்தைகளின் மூன்றாவது சுற்றுவட்டத்தின்போது முக்கியமான மனித உரிமைச் சிக்கல்கள் சம்பந்தப்பட்டதும் விசேட கவனத்தைத் தேவைப்படுத்தியதுமான இரண்டு புதிய துறைகள் உருவெடுத்தன: முதலாவதாக சமாதான நடவடிக்கைளின் அனைத்து அம்சங்களிலும் பெண்களின் முன்னுரிமைகளும் தேவைகளும் உறுதிப் படுத் தப் படவேண்டிய அவசியம் திறத் தவர்களால் எற்றுக்கொள்ளப்பட்டது. பெண்களின் நலன்கள் தொடர்பான பிரேரணைகளை பேச்சுவார்த்தையின் அமர்வுகளுக்கும் பல்வேறு உப குழுக்களுக்கும் சமர்ப்பிப்பதற்கு நிரந்தர மதியுரைஞர் குழுவொன்றைத் தாபிப்பதற்கு அவை உடன்பட்டன. அத்துடன் ஆயுதப் போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அவசியமும் அங்கீகரிக்கப்பட்டது. “சிறுவர்கள் அவர்களது குடும்பங்களுக்கு அல்லது பாதுகாவலர்களுக்கு மட்டுமே உரியவர்கள், “மாறாக குடியியல் அல்லது இராணுவ வேலைத் தலங்களுக் குரியவர்கள் அல்லர்’ என்னும் குறிப்பு குறிப்பாக முக்கியம் வாய்ந்தது? சிறுவர்களின் வாழ்வில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான செயற்திட்டம் ஒன்றின் மீது யுனிசெவ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு எல்ரீஈ உடன்பட்டதுடன் அத்தகைய பணிக்கு நிதியுதவியளிக்குமாறு திறத்தவர்கள் சர்வதேச சமுதாயத்திற்கு அழைப்பும் விடுத்தனர்.
2002 ஆம் ஆண்டின் இறுதியளவில் இலங்கையில் ஓர் அரசியல் திருட்பம் ஏற்பட்டதுடன் பல விடயங்கள் நிலை தடுமாறியிருந்தன. போர் நிறுத்தம் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு பத்து மாதங்கள் நீடித்திருந்தது. அரசாங்கத்தாலும் எல்ரீ யினாலும் யுத்த நிறுத்த மீறல்கள் தொடர்பாக எழுந்த பிணக்குகள் புலனாய்வு செய்யப்பட்டன. இரு திறத்தவர்களும் முறைசார்ந்த பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தனர். யுத்த நிறுத்த மீறல்களிலிருந்தெழும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான பிணக்குகள் மீது குறிப்புரை வழங்க இ.போ.க.கு. ஆயத்தமாயிருந்தது. நடு வரிசையைச் சேர்ந்த போராளிகளால் புரியப்படும் மீறல்களைக் குறைக்க எல்ரீஈ தலைமைத்துவம் நடவடிக்கை எடுத்தது. இரு திறத்தவர்களும் தங்கள் பிரேரணைகளுக்கு ஓர் அடிப்படையாக போருக்கு சமஷ்டித் தீர் வொன்றை பரிசீலனை செய்வதற்கு உடன்பட்டன.
9. இதுவும் அதே
19

Page 17
அத்துடன் சமாதான நடவடிக்கைகளில் மனித உரிமைகள் பற்றிய பிரச்சினைகள்மீது ஒரு மதியுரையாளராக செயற்படுமாறு மிகுந்த மதிப்பிற்குப் பாத்திரமான சர்வதேச நிபுணர் ஒருவருக்கு அழைப்பு விடுத்தன. எனினும் பாரிய அளவிலான நிச்சயமற்ற தன்மைகள் நிலவின. சமாதானப் பேச்சுவார்த்தைகளின் திருப்பத்திற்கு தெற்கில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் குறிப்பாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் கருத்தொருமைப்பாடு இல்லாமை, எல் ரீfஈ யுடனான தனது பேச்சுவார்த்தைகளில் தனது கரங்கள் கட்டப்பட்டுள்ளதாக அரசாங்கம் உணரும் நிலை என்பன காணப்பட்டன. எல் ரீரீஈ தொடர்ந்து ஆட்திரட்டலை மேற்கொண்டமையும், தனது அரசியல், பொருளாதார எண்ணங்களை இக்காலப்பகுதி முழுவதும் வடக்கு கிழக்கு மக்கள்மீது திணித்தமையும் குறிப்பாக கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்களுடனான அதன் உறவு சடுதியாக சீர்குலைந்தமையும் சமாதான நடவடிக்கை எந்தப் பக்கம் திசை திரும்பும் என்ற சந்தேகத்தையும் உருவாக்கியது. நாட்டில் வாழுகின்றவர்களதும் நாட்டிலும் நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வாழும் அனைத்துச் சமுதாயங்களினதும் தனியாட்களினதும் உரிமைகளைப் பாதுகாக்கும் வருங்கால அரசியலமைப்பு முறையொன்றை இலங்கைக்கு வகுத்துத் தருமா என்ற சந்தேகமும் மக்கள் மனதில் குடிகொண்டிருந்தது.
※
O
※

உள்ளூரில் புலம்பெயர்ந்த ஆட்கள்: மனித உரிமைகள் பற்றிய சில பிரதான பிரச்சினைகள்
ரேணுகா சேனநாயக"
1. அறிமுகம்
உள்ளுரில் புலம் பெயர் நீ தவர் களும் போரினால் பாதிக்கப்பட்டவர்களும் 2002ஆம் ஆண்டில் நாட்டின் அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்திய பல சம்பவங்களினால் நன்மைகள் பலவற்றை அடைந்தனர். இக்கால கட்டத்தில் நாட்டின் நீண்டகால போருக்கு இரண்டு பிரதான திறத்தவர்களாயிருந்த இலங்கை அரசாங்கத்திற்கும் (இ.அ) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (எல்ரீஈ) இடையில் சமாதான பேச்சு வார் த தைகளுக்கு வழிகோ லிய புரிந்துணர் வு உடன்படிக்கையொன்று இடம்பெற்றது. 2001 திசம்பர் 24ஆம் திகதி எல்ரீஈ இணக்கப்பாடு கொண்ட அரசியல் தீர்வொன்றில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி ஒருதலைப்பட்ச யுத்தநிறுத்தமொன்றை வெளிப்படுத்தியபோது ஏற்பட்ட முன்னேற்றகரமான சம்பவங்களிலிருந்து 2001ஆம் ஆண்டு புரிந்துணர்வு உடன்படிக்கை உதயமானது.
* எல்.எல்.பி, சட்டத்தரணி
21

Page 18
2001 திசம்பரில் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் (ஐ.தே.மு.) எல்ரீரீஈ யின் யுத்த நிறுத்தத்திற்கு மறுமொழியாக கடந்தகாலத்தில் மனித உரிமைகளின் மீறலுக்கு பங்களிப்பு செய்த பல மட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு நடவடிக் கைகளை மேற்கொண்டது. வடக்கு கிழக்கின் மீது சுமத்தப்பட்டிருந்த நீண்டகால பொருளாதாரத் தடையை அரசாங்கம் 2002 சனவரியில நீக்கி அத்தியாவசிய பொருட்கள் தடையின்றிச் செல்வதற்கு அனுமதி வழங்கியது. இராணுவ ரீதியில் நுண்ணுணர்வுடைய பொருட்கள் மட்டுமே தடை விதிக்கப்பட்ட பொருட்களின் நிரலில் காணப்பட்டன. மீன் பிடித்தலின் மீதான மட்டுப்பாடும் சனவரியில் தளர்த்தப்பட்டது. வடக்கிற்கு மருத்துவப் பொருட்களின் வழங்கல் மீதான தடையும் பெப்ரவரியில் நீக்கப்பட்டது. வடக்கையும் தெற்கையும் இணைக்கும் ஏ9 பாதை ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டதையடுத்து குடிமக்களும் அத்தியாவசியப் பண்டங்களும் வடக்கிற்கும் வடக்கிலிருந்தும் போய்வருவதற்கு வசதி ஏற்பட்டது. நவம்பரில் எல்ரீஈ க்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பாங்கொக்கில் உத்தியோக பூர்வமான சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் பல நிவாரணங்கள் வழங்கப்பட்டன.
போரில் சிக்கி விடுவோம் என மக்கள் மனதில் குடிகொண்டிருந்த அச்சமே இவர்கள் யுத்தநிறுத்தத்திற்கு முன்னர் புலம்பெயர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. குடிமக்கள் புலம்பெயர்வதற்கான ஏனைய காரணங்களுள் குடிமக்களின் குடியேற்றத் திட்டங்கள் மீதான நேரடித் தாக்குதல், எதிர்த்தாக்குதல் நடத்துதல், கைதுசெய்தல், தடுத்துவைத்தல், சித்திரவதை, பாலியல் ரீதியிலான தொல்லைகள், வளர்ந்தோரையும் சிறுவர்களையும் பலாத்காரமாக திரட்டுதல், அல்லது போருக்கான பிரதான திறத்தவர்களாலும் ஏனைய துணை இராணுவக் குழுக்களாலும் மேற்படி சம்பவங்கள் விளைவிக்கப்படும் அச்சுறுத்தல் என்பன அடங்கும்.
1. ஈழமக்கள் சனநாயகக் கட்சி (ஈ.பி.டீ.பி) புறநீங்கலாக தமிழ் துணை இராணுவக் குழுக்கள் 2002 பெப்ரவரியில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (எல்.ரீ.ரீ.ஈ) இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் 1.8ஆம் ஏற்பாட்டிற்கிணங்க இலங்கை இராணுவத்திடம் ஆயுதங்களைக் கையளித்தன. இக்குழுக்களில் தமிழீழ விடுதலை ஒழுங்கமைப்பு (டெலோ), தமிழ் ஈழ மக்கள் விடுதலை ஒழுங்கமைப்பு (புளோட்) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல.எவ்) என்பன அடங்கும்.
22

மீளாய் வுக் குட் பட்ட ஆணி டில் வன் முறைகளுக்கும் புலம்பெயர் விற்குமான பிரதான காரணங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதனால் குடிமக்களது புலம்பெயர்வின் புதிய திருப்பங்கள் முக்கியமானதொரு காரணமாக இல் லா தொழிந்தன. இதற்கு உறுதுணையாக இருந்த மற்றுமொரு காரணம், வடக்கிலும் கிழக்கிலும் மார்ச் மாதம் துணை இராணுவ குழுக்களின் ஆயுதக் களைவு ஆகும். இது மேலும் பொதுப்படையான வன்முறையைக் கட்டுப்படுத்த உதவியது.
ஆயினும் யதார்த்தபூர்வமான இந்த நடிவடிக்கைகளுக்கு மத்தியிலும் போர் நிறுத்தத்திற்குப் பிந்திய காலப் பகுதியில் முக்கியமான மனித உரிமைகள் பற்றிய பிரச்சினைகள் பல எழுந்தன. மூன்று பிரதான சமுதாயங்களிடையே இனரீதியிலான பதற்றத்தின் அடிப்படையில் எழுந்த குடியியல் கொந்தளிப்பு, எல்ரீஈ யினால் சிறுவர்கள் படைக்குத் திரட்டப்படுதல், எல்ரீஈ யினாலும் பொலிஸ் மற்றும் இராணுவப் படைகளினாலும் பொதுமக்கள் இம்சைப்படுத்தப்படுதல் என்பன அடங்கும். புலம்பெயர்ந்தவர்களுக்கு பாதுகாப்பும் உதவியும் கிடைக்காமை உரிமை மீறலுக்குத் தொடர்ந்து பங்களிப்புச் செய்தன. இக்காலப் பகுதியில் பாதுகாப்புடனும் சுய விருப்பத்துடனும் சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வது தொடர்பான பிரதான பிரச்சினைகள் தலை தூக்கியதுடன் மேலும் முக்கியத்துவமும் பெற்றன.
இந்த அத்தியாயத்தில் 2002ஆம் ஆண்டு முழுவதும் தொடர்ந்து இடம்பெற்ற முன்னேற்றகரமான மாற்றங்களின் அடிப்படையில் உள்ளுரில் புலம்பெயர்ந்த ஆட்களின் (உ.பு.ஆ) மனித உரிமைகள் பற்றி ஆராயப்படும். இவ்வத்தியாயம், உள்ளுர் புலம்பெயர்வு பற்றிய ஐக்கிய நாடுகளின் வழிகாட்டும் கோட்பாடுகளால் வழங்கப்பட்ட உபு.ஆ. லிற்கான வரைவிலக்கணத்தைக் கையாளுகின்றது. 2002ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்தவர்களின் உரிமைகள் என்ற இந்த விடயப்பொருள் புரிந்துணர்வு உடன்படிக்கையும் மனித உரிமைகளும், உதவி, நடமாடும் சுதந்திரம், திரும்பிச் செல்வதற்கும் மீளக் குடியமர்வதற்குமான
2. "...... உள்ளுரில் புலம்பெயர்ந்த ஆட்கள் என்பது குறிப்பாக ஆயுதப் போரின் விளைவாக அல்லது அதன் விளைவுகளைத் தவிர்த்துக்கொள்வதற்காக பொதுப்படையான வன்முறை, மனித உரிமை மீறல்கள், இயற்கையான அல்லது மனிதரால் ஏற்படுத்தப்பட்ட அனர்த்தங்கள் போன்ற நிலைமைகளில் தங்கள் வீடுகளை அல்லது வழமையான வதிவிடங்களை விட்டு தப்பிச்செல்லுமாறு அல்லது வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டவர்களும் அல்லது கட்டாயத்திற்குட்பட்டவர்களும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அரச எல்லைப் புறங்களை தாண்டிச் செல்லாதவர்களுமான ஆட்கள் அல்லது ஆட்களின் குழுக்கள” ஐ.நா. ஆவணம் E/CN.4/1998/53 சேர்த்தல் 2, பந்தி2
23

Page 19
உரிமைகள், நிறுவன நில அமைப்பு, மகளிர், சிறுவர், அகதிகள், உள்ளுரில் புலம் பெயர்ந்த ஆட்களுக்கும் புலம் பெயர்விற்கும் ஏற்புடைத்தான சர்வதேச, உள்ளுர் மரபுகள் என்னும் பரந்த தலைப்புகளின் கீழ் சமர்ப்பிக்கப்படும்.
2. புரிந்துணர்வு ஒப்பந்தமும் மனித உரிமைகளும்
2002 பெப்ரவரி 22ஆம் திகதி இலங்கை அரசாங்கமும் (இ.அ.) எல்ரீஈ யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (பு.ஒ.) ஒன்றைச் செய்துகொண்டன. உடன்படிக்கைக்கான முன்னுரையில் குறிப்பிடப்பட்டவாறு இதன் பிரதான குறிக்கோள் இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீவொன்றிற்கென இணக்கப் பேச்சு வார்த்தைக் கான சூழ்நிலை யொன்றை உருவாக்குவதாகும். விரிவான ஒருசில வழிமுறைகளுள் துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்களைக் களைதல், பகிரங்கக் கட்டிடங்களை அவற்றின் உத்தேசிக்கப்பட்ட பாவனைக்கென திருப்பிக் கொடுப்பதற்கு வசதியாக பு:ஒ. திற்கான இரு திறத்தவர்களும் அவற்றைக் காலி செய்தல், வடக்கிற்கும் கிழக்கிற்கும் இராணுவம் சாராத பொருட்கள் தடையின்றி செல்ல அனுமதித்தல், குடிமக்கள் தொல்லைப்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கும் மனித உரிமைகளுக்கு உத்தரவாதமளிப்பதற்கும் பாதுகாப்பு நடவடிக் கைகள்ை மீளாய்வுசெய்தல் என்பன அடங்கும். இலங்கை கண்காணிப்புத் தூதுக் குழு (இ.க.துT.கு.) எனப்படும் துTதுக் குழுவொன்றைத் தாபிப்பதற்கும் உடன்படிக்கை ஏற்பாடு செய்தது. நோர்வேயின் தலைமையிலான இ.க.து.கு. வில் இலங்கை அரசாங்கத்தினதும் எல்ரீஈ யினதும் பிரதிநிதிகளும் அடங்குவர். மொத்தத்தில் மனித உரிமைகளின் நிலைமையில் முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டபோதிலும் வடக்கிலும் கிழக்கிலும் இலங்கை ஆயுதப் படைகளாலும் எல்ரீஈ யினாலும் துணை இராணுவக் குழுக்களாலும் குடிமக்கள் அச்சுறுத்தப்படுதல், ஒடுக்கப்படுதல், தொல்லைப் படுத்தப்படுதல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. 2002ஆம் ஆண்டு முழுவதும் எல்ரீஈ யினால் சிறுவர்கள் படைக்குத் திரட்டப்படுதல, ஆட்கடத்தல், கப்பம் வாங்குதல், மற்றும் துணை இராணுவக் குழுக்களால் குடிமக்கள் தொல்லைப்படுத்தப்படுதல் என்பன பற்றிய
3. இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் எனத் தலைப்பிடப்பட்டது.
24

முறைப்பாடுகளை இ.க.துT.கு., இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ், குடியியல் சமுதாய ஒழுங்கமைப்புகள் என்பன தொடர்ந்து பெற்றுவந்தன.
உதாரணமாக மே மாதத்தில் கடத்திச் செல்லப்பட்ட 13 சிறுவர்களின் பெயர்களை சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டிருந்தது." யூன் 30ஆம் திகதியளவில் எல்ரீஈ யால் ஆடகடத்தல், மற்றும் கடத்தல் சம்பவங்களைப் பற்றி 32 முறைப்பாடுகளையும் கப்பம் கேட்டல் பற்றி 5 முறைப்பாடுகளையும் தொல்ைலைப்படுத்தப்படுதல் பற்றி 44 முறைப்பாடுகளையும் இ.க.தூ.கு பதிவுசெய்தது. இதே காலப் பகுதியில் ஆயுதந் தாங்கிய படைகளால் ஆட்கடத்தல் பற்றிய ஒரு சம்பவமும் தொல்லைப்படுத்தல் பற்றிய 23 முறைப்பாடுகளும் அறிவிக்கப்பட்டன.
குடிமக்களின் நடமாட்டத்தை மட்டுப்படுத்துதல், அவர்களின் ஆதனங்களை பலாற்காரமாக இருப்பாட்சி கொள்ளுதல் போன்ற சம்பவங்கள் பற்றி ஆயுதந் தாங்கிய படைகளுக்கும் எல்ரீஈ க்கும் எதிராக முறைப்பாடுகளும் செய்யப்பட்டன. திருகோணமலையில் சிங்களவர்கள் தமிழ் குடிமக்கள் மீது நடத்தியதாக குற்றஞ் சாட்டப்பட்ட தாக்குதல் தொடர்பாக செயற்படாதிருந்தமைக்கும் அதனைப் புலனாய்வு செய்யத் தவறிமைக்கும் இலங்கை அரசாங்கம் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் போர் நிறுத்த உடன்படிக்கையையடுத்து, முன்னர் எல்ரிரீஈ யினால் அணுகமுடியாதிருந்த பகுதிகளில் அவர்கள் தங்களது கட்டுப்பாட்டை விதிப்பதாக குடிமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். எல்ரீஈ புதிதாக குடிமக்களிடையே தாராளமாக புகுந்துசெல்லக் கூடியதாக இருந்தமையாலேயே எல்ரீஈ க்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரித்திருக்கலாம். எனினும் இடர்கள் பதிவுசெய்யப்பட்டபின்னர் முறைப்பாடுகள் கவனிக் கப்படவில்லை அல்லது நிவாரணம் வழங்கப்படவில்லை.
4. g5 g6)60iil 2002 (3d 7 Monthly News Brief 2002 u167 676tug56)
காட்டப்பட்டவாறு, மனித உரிமைகளின் இல்லம்
5. 2002 யூன் 30ஆம் திகதியன்றுள்ளவாறு முறைப்பாடுகளும் போர் நிறுத்த உடன்படிக்கையின் மீறல்களும் இலங்கை கண்காணிப்புத் தூதுக்குழுவின் பத்திரிகை அறிக்கை 2002 யூலை 8
6. கீனன், அலன், மனித உரிமைகளை சனநாயகமயமாக்கல், சமாதானத்தை வலுப்படுத்துதல்: இலங்கையின் வரலாற்று முக்கியத்துவமான சவால்” 2003 CPA/Berghof Road Map ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை, கொழும்பு, 2003 பெப்ரவரி 13

Page 20
நிவாரணம் கிடைக்காமைக்கான காரணம், பு. ஒ. தின் நியதிகளின்கீழ் பயனுறுதியுள்ள நடைமுறைப்படுத்தும் திட்டமொன்று இல்லாதிருந்தமையே. பு:ஒ. தின்கீழ் தாபிக்கப்பட்ட இ.க.து.க. வின் பிரதான பணி போர் நிறுத்த உடன்படிக்கையைக் கண்காணிப்பதாகும். குறிப்பாக, பிரிவு 2.1 குடிமக்கள் சித்திரவதை செய்யப்படுதல், அச்சுறுத்தப்படுதல், ஆட்கடத்தல், கப்பம் கேட்டல், தொல்லைப் படுத்தப்படுதல் போன்ற கொடுர செயல்களிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்கின்றபோதிலும் 2002ஆம் ஆண்டின் முற்பகுதியில் இ.க.துT.கு. மனித உரிமைகளைக் கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளுமா என்ற ஐமிச்சம் இருந்தது.
மேலும் மனித உரிமைகள் தொடர்பில் இ.க.து.கு. வின் ஆணை உள்ளார்ந்த வரையறைக்குட்பட்டதாகும். பு:ஒ. திலிருந்தெழும் இந்த ஆணை உடன்படிக்கைக்கான இரண்டு திறத்தவர்களாலும் குறிப்பிட்ட மீறல்கள் பற்றிய சம்பவங்களைக் கண்காணிப்பதற்காகவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனப் பரவலாக விளங்கிக் கொள்ளப்பட்டிருந்தது. (புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குள் மிகவும் திட்டவட்டமான சில ஏற்பாடுகளுக்கு அப்பால்) நடமாடும் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், மனம்போன போக்கில் கைதுசெய்யப்படாதிருப்பதற்கான சுதந்திரம், சட்டப்பூர்வமான அரசியல் 'உரிமையைப் பிரயோகிக்கும் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம், புலம் பெயர்ந்த ஆட்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச்சென்று தங்கள் பொருளியல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் சுதந்திரம் போன்ற பல முக்கியமான உரிமைகளைப் பற்றி பு:ஒ. குறிப்பிடவில்லை.”
7. "சம்பந்தப்பட்ட பகுதியினர் சர்வதேச சட்டத்திற்கிணங்க சித்திரவதை, அச்சுறுத்துதல், ஆட்கடத்தல், கப்பம் கேட்டல், தொல்லைப்படுத்துதல் போன்ற செயல்கள் உட்பட குடிமக்களுக்கு எதிராக கொடுரசெயல்களைத் தவிர்க்கவேண்டும்”. புரிந்துணர்வு ஒப்பந்தம், உறுப்புரை 2.1
8. நோர்வேயின் தலைமையிலான இ.க.து.கு. அதன் வழமையான பணிகளின் ஒரு பகுதியாக மனித உரிமைகளின் கண்காணிப்பையும் சேர்த்துக்கொள்ளத் தயங்கும் என ஆலோசனை கூறப்பட்டுள்ளது. ஏனெனில் இது சமாதான நடவடிக்கைகளைப் பாதிக்கக்கூடும் இலங்கையில் உபு:ஆ களின் நிலைமை: உள்ளுரில் புலம்பெயர்ந்தோர் அலகினால் மேற்கொள்ளப்பட்ட விஜயம் ஒன்றின் அறிக்கை 2002 ஏப்ரில், மனிதாபிமான அலுவல்களின் இயைபுபடுத்தும் ஐ.நா. அலுவலகம்.
9. பாதுகாக்கப்பட்ட உரிமைகளின் நிரல் விரிவானதாக இருந்தபோதிலும் நடமாடும் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்படாதிருக்கும் சுதந்திரம், என்பன பு:ஓ. வில் இடம்பெறவில்லை என இரண்டு பகுதியினரும் கருத்து கொள்கின்றனர். எனவே உடன்படிக்கை நிறைவேற்றப்படுவதை சரிபார்ப்பதற்கு இவை கண்காணிப்பு ஏற்பாட்டில் சேர்க்கப்படவில்லை. இலங்கையில் உ.பு.ஆ களின் நிலைமை; உள்ளுர் புலம்பெயர்ந்தோர் அலகினால் மேற்கொள்ளப்பட்ட விஜயம் ஒன்றின் அறிக்கை 2002 ஏப்ரில், மனிதாபிமான அலுவல்களின் இயைபுபடுத்தும் ஐ.நா. அலுவலகம்.
26

புஒ வின் கீழ் இ.க.து.கு. வின் கண்காணிப்புச் செயற்பாடுகளின் புவியியல் நோக்கெல்லை பற்றி கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் இ.க.து.கு. வின் கண்காணிப்புப் பணி எல்ரீஈ யின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளுக்கு நீடிக்கப்படவில்லை." இ.க.து.கு. வின் உறுப்பாண்மையில் இலங்கை அரசாங்கத்தினதும் எல்ரீஈ யினதும் பிரதிநிதிகள் அடங்குவதாலும் அதன் பணிகளுக்கு மேலும் முட்டுக்கட்டையாக அமைகின்றது. ஏனெனில் இது உத்தேச முறைப்பாட்டாளர்களுக்கு ஒரு தடையாக இருக்கக்கூடும்.
அத்துடன் கண்காணிப்பு ஏற்பாடுகள் போதாதிருக்கும் அதே வேளையில் பு:ஒ. கடந்தகால மீறுகைகளை போதியளவில் கவனிக்கத் தவறியுள்ளது. உதாரணமாக பலாற் காரமாக படைக் குத் திரட்டப்பட்டவர்களை விடுவிப்பதற்கு இது ஏற்பாடு செய்யவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு முன்னர்' பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதிகளின் வழக்குகளை மீளாய்வு செய்வதற்கும் இது ஏற்பாடு செய்யவில்லை.
3. மனிதாபிமான உதவி
புலம்பெயர்ந்த குடிசனத்திற்கு உதவி வழங்கும் பிரதான உறுப்பாக இருந்தது இலங்கை அரசாங்கமாகும். வழங்கப்பட்ட உதவியில் அடிப்படை உணவும் சில சந்தர்ப்பங்களில் இருப்பிடமும் பிரதானமாக அடங்கும். புலம் பெயர்ந்தவர்களை நடத்தும் விதத்தில் துலாம் பரமான பாகுபாடுகளுக்காகவும் அதன் உதவி, மனிதாபிமான உதவி தொடர்பாக" சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தராதரங்களைவிடக் குறைவாகவே இருந்தது என்ற நிகழ்விற்காகவும் அரசாங்கம் கடுமையான விமர்சனத்திற்குட்பட்டது.
10. “பார்க்க, மார்டின் இயன், யுத்த நிறுத்தத்திற்குப் பின்னர் இலங்கையில் மனித உரிமைகள் " இலங்கை பற்றிய சர்வதேச செயற்குழு ஐக்கிய இராஜியம் 2002 மார்ச் 26 -ஏப்ரில் 3.
11. இலங்கையில் உ.பு.ஆ. களின் நிலைமை: உள்ளுர் புலம்பெயர்ந்தோர் அலகினால் மேற்கொள்ளப்பட்ட விஜயம் ஒன்றின் அறிக்கை 2002 ஏப்ரில், மனிதாபிமான அலுவல்களின் இயைபுபடுத்தும் ஐ.நா. அலுவலகம்.
12. உலக உணவு நிகழ்ச்சித் திட்டம் ஒரு தனியாளின் கலோரி தேவையின் அடிப்படையில் உதவி வழங்குகின்றது. குடும்பம் ஒன்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் உதவி வழங்குகின்றது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தலைமையதிபதி 1993ஆம் ஆண்டின் வாழ்க்கைச் செலவின் அடிப்படையில் உதவி வழங்குகின்றார். குடும்பம் ஒன்றில் அதிகபட்சம் 5 உறுப்பினர்களுக்கு மட்டுமே உதவி வழங்கப்படுகின்றது.
27

Page 21
உதாரணமாக எல்ரீரீஈ ப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வடக்கு வன்னியிலுள்ள உள்ளுரில் புலம்பெயர்ந்த ஆட்களாகிய 379,400 பேருக்கு உதவி கோரப்பட்டபோதிலும் அரசு 170,000 பேருக்கு மட்டுமே தொடர்ந்து நிவாரணம் வழங்கி வந்தது. பாரபட்சமான இந்த நடத்தை எல்ரீஈ யுடனான சமாதானப் பேச்சுவார்ததைகளுக்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கான ஒரு முதற்படியாக 2002இல் சீராக்கப்பட்டது.
உதவியின் பற்றாக்குறை, உதவியைப் பகிர்ந்தளிப்பதில் நீடித்த தாமதம், மனம்போன போக்கில் உதவியைக் குறைத்தல், ஊழல் என்பன 2002ஆம் ஆண்டு முழுவதும் தொடர்ந்து இடம்பெற்றது. அரசாங்கம் புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்றிற்கு" (அதிக பட்சம் ஐந்து ஆட்களுக்கு) மாதமொன்றுக்கு இலங்கை ரூபா 1,260 பெறுமதியான உலர் உணவுப் பங்கீட்டை வழங்குகின்றது. 1993ஆம் ஆண்டிற்கான வாழ்க்கைச் செலவு மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்த இந்த உதவிப் பொதி நாட்டில் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் 2002ஆம் ஆண்டிற் கூட மாறவில்லை. எனவே அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மாதாந்த உணவுப் பங்கீடு உள்ளுரில் புலம்பெயர்ந்த ஆட்களின் சீவியத்திற்கு 10-15 நாட்களுக்குக்கூட போதாது என கோரப்பட்டது.* நிவாரண உதவி உலக தராதரத்திற்கு" அமைவாயிருப்பதை உறுதிப்படுத்துமாறும் தனியாட்களின் கலோரி தேவைகளை கருத்திற்கொள்ளுமாறும் மனிதாபிமான குழுக்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளன. குடும்பங்களின் அளவின் மீது 'ஐந்து அங்கத்தவர்' என்ற வரம்புமி, பெரிய குடும்பங்களுக்கு குறிப்பாக பெண்களை குடும்பத் தலைவர்களாகக் கொண்ட இல்லங்களுக்கும் பெண்களை குடும்பத் தலைவர்களாகக் கொண்ட விசேட தேவைகளுடனான இல்லங்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியது.
மீளாய்வுக்குட்பட்ட காலத்தில் உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தாலும் (உ.உ.நி.) அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தலைமையதிபதியாலும் (அ.சே.ஆ.த.) உணவு உதவி மறுக்கப் பட்டமையால் புலம்பெயர்ந்தவர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். நாடெங்குமுள்ள உபு. ஆட்களுக்கு 2001 திசம்பர் முதல் 2002
13. வி. கொசலின், ஆர் சேனநாயக மற்றும் ஈ. விஜயலக்ஷ்மி "உள்ளுரில் புலம்பெயர்ந்த ஆட்களின் மனித உரிமை மீறல்களும் அரசாங்க்க் கொள்கைகளும் 2001' மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்,
14. அரச உதவி அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தலைமையதிபதியின்
அலுவலகத்தின் ஊடாக விநியோகிக்கப்படுகின்றது.
15. libid
16. http://www.sphereproject.org, 610,605 2003 (3D 05
28

மார்ச் வரையிலான மூன்று மாதங்களுக்கு" உணவு நிவாரணம் மறுக்கப்பட்டது. நிதி பற்றாக்குறை காரணமாக உ.உ.நி. தின் திடீர் இடைநிறுத்தத்தால் மொத்தம் 800,000 புலம்பெயர்ந்தவர்களுள் 10சத வீதத்தினர் பாதிப்பிற்கு உள்ளாகும் சாத்தியக் கூறுகளை அதிகமாகக் கொண்டிருந்தனர். இதில் வவுனியாவிலுள்ள மூடிய முகாம் களிலுள்ளவர்களும் அடங்குவர் . உ.உ.நி. யின் உதவி இடைநிறுத்தப்பட்டதையடுத்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தலைமையதிபதி (அ.சே.ஆ.த.) மூன்று மாதங்களின் பின்னர் புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவி வழங்க முன்வந்தார். இவர்களுக்கு ரூபா 1,260 பெறுமதியான உலர் உணவு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன. தனியாட்களின் கலோரி தேவையின் அடிப்படையில் அமைந்ததும் இதனால் முழுக் குடும்பத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டதுமான உ.உ.நி. தின் உதவிக்கு மாறாக அ.சே.ஆத. யின் பொதியில் குடும் பமொன்றில் அதிகபட்சம் ஐந்து உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உ.உ.நி. யின் நிவாரண உதவியில் அரிசி, சீனி, பருப்பு, தேங்காய் எண்ணெய், அயடின் கலந்த உப்பு என்பனவும் கர்ப்பிணித் தாய்மாருக்கும் ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கும் குறைநிரப்பு உணவுப் பொருட்களும் அடங்கும்.
அ.சே.ஆ.த. புலம்பெயர்ந்தவர்களுக்கு உணவு நிவாரண வழங்கல்களை கிரமமாக வழங்கத் தவறியதற்கு சனாதிபதியின் பொதுஜன ஐக் கரிய முனி னணிக் கும் பாராளுமன்றத் தில் பெரும்பான்மையொன்றைக் கொண்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான அதிகாரப் போராட்டமே காரணம் எனக் கூறப்பட்டது. புதிதாக தெரிவுசெய்யப்பட்ட ஐ.தே.மு. அரசாங்கம் ஊழல்கள் பற்றி எடுத்துரைத்துக்கொண்டு புலம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரண வழங்கீடுகளைத் தொடர்ந்து அளிப்பதற்கு ஒழுங்கு செய்யாமல் நேரடியாக சனாதிபதியின் கீழுள்ள அ.சே.ஆத. க்கு பிரித்தொதுக்கப்பட்ட நிதியை உறையப் பண்ணியது. பின்னர் அ.சே.ஆ.த. அலுவலகம் ஐ.தே.மு. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது.
ஆயினும், புலம்பெயர்ந்தவர்களுக்கு உணவு உதவி மார்ச் மாதமளவில் மீண்டும் ஆரம்பிக் கப்பட்டடது என புனர் வாழ்வு, மீள்குடியேற்ற, அகதிகள் அமைச்சு அறிவித்தபோதிலும் குறிப்பாக கிளிநொச்சி, மட்டக்களப்பு, வவுனியா மாவட்டங்களில* நிவாரணம்
17. சேனநாயக, ரேணுகா "புலம்பெயர்ந்தவர்கள் பட்டினி அரசியல்வாதிகளுக்குக் கொண்டாட்டம்” இன்டர் பிரஸ் சேர்வஸ் 2001 மார்ச் Asia Times இல் G616ifujill ILull g5!. (360600TLIlb http://www.atimes.com
18, 6.j655Fif 2002 16i 02 Monthly News Brief (36) 666fluilt it 62nd LD6oils
உரிமைகளின் இல்லம் 2002 ஆகஸ்ட், தமிழ் இணையம் 2002 ஆகஸ்ட் 07
29

Page 22
வழங்குவதில் ஒரு மாதகால தாமதங்கள் பற்றி ஊடகத்துறையால் தொடர்ந்து எடுத்துக்காட்டப்பட்டன.
பரந்தளவிலான ஊழல் காரணமாக" நிவாரண உதவியின் முழுமையான அனுகூலங்கள் புலம்பெயர்ந்தவர்களுக்கு மறுக்கப்பட்டன. மீளாய்வுக்குட்பட்ட ஆண்டிலும் இதே நிலைமை தொடர்ந்து இடம்பெற்றது. தற்போதுள்ள விநியோகத் திட்டத்தின்கீழ் அரசாங்கத்தால் முற்பணமாக பணம் செலுத்தப்பட்டு குறித்தொதுக்கப்பட்ட கடைகளிலிருந்து தங்கள் உலர் உணவைப் பெற்றுக்கொள்வதற்குப் புலம்பெயர்ந்தவர்கள் கூப்பனொன்றைச் சமர்ப்பிக்கவேண்டும். பெரும்பாலும் இக்கடைகள் கையிருப்பு போதிய அளவில் இல்லை என்று கூறிவிடுகின்றன அல்லது தரக் குறைவான பண்டங்களை திறந்த சந்தையிலும் பார்க்கக் கூடுதலான விலைகளில் விற்பனை செய்கின்றன. உதாரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் திறந்த சந்தையில் 1 கிலோகிராம் 30 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட அரிசி உபு.ஆ, களுக்கு 37.50 ரூபா வீதப்படி விற்கப்பட்டது. புலம்பெயர்ந்தவர்கள் சீனி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கூடுதலான விலை செலுத்த வேண்டியிருந்தது. திறந்த சந்தையில் 27 ரூபாவுக்கு வாங்கக்கூடிய சீனிக்கு புலம்பெயர்ந்தவர்கள் 32.50 ரூபா செலுத்துகின்றனர். 30 ரூபாவுக்கு விற்பனைசெய்யப்படும் பருப்புக்கு புலம்பெயர்ந்தவர்கள் 56.50 ரூபா செலுத்தவேண்டியுள்ளது.*
4. நடமாடும் சுதந்திரம்
கடந்த காலத்தில் உ.பு.ஆ களின் நடமாட்டம் பல வழிகளில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதில் புலம்பெயர்ந்தவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் “மூடிய முகாம்கள்" உ.பு.ஆ. மீது கடுமையான இராணுவ உத்தரவுச்சீட்டு முறை சுமத்தப்பட்டமை என்பன அடங்கும். இலங்கை அரசாங்கமும் எல்.ரீ.ஈ. யும் இளைஞர்களின் நடமாட்டத்தின் மீது கடுமையான மட்டுப்பாடுகளை விதித்தன. அத்துடன் எல்ரீஈ அதன் கட்டுப்பாட்டிலுள்ள இடப்பரப்பிற்கு வெளியே செல்லும் குடிமக்கள் மீது கட்டணமொன்று செலுத்தப்பட வேண்டுமென நிர்ப்பந்தப்படுத்தியதன் மூலம் அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்
19. Care 2000 அக்டோபர், lbarguen Claudia எடுத்துக்காட்டியவாறு ஆய்வரங்கு அறிக்கை இலங்கையில் உள்ளுர் புலம்பெயர்வு பற்றிய இரண்டாந்தர இலக்கியத்தின் மீளாய்வும் பகுப்பாய்வும், Care 2001
20. அரச சார்பற்ற நிறுவனங்களின் பேரவையின் கூற்று, யாழ்ப்பாண மாவட்டம்.
30

படுத்தியது. மீளாய்வுக்குட்பட்ட காலப் பகுதியில் முன்னேற்றகரமான பல மாற்றங்கள் இடம்பெற்றன. வவுனியாவிலும் மன்னாரிலும் உ.பு.ஆ. களின் நடமாட்டத்தை மட்டுப்படுத்திய கடுமையான இராணுவ அனுமதிச்சீட்டு முறை மார்ச் 5ஆம் திகதி அகற்றப்பட்டது. சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு வழிவகுப்பதற்கென எடுக் கப்பட்ட வழிமுறைகளும், மாற்றுக் கொள்கைக்கான நடுநிலையத்தின்? அனுசரணையிலான அடிப்படை உரிமைகள் வழக்கொன்றில் அதன் சட் டமுறைமை பற்றிய ஆட்சேபனையும் இத் தடைகள் அகற்றப்படுவதற்குத் துணைபுரிந்தன. எல்ரீஈ யும் அதன் கட்டுப்பாட்டின் கீழுள்ள குடிமக்களின் நடமாட்டத்தின் மீதான மட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. எனினும் எல்ரீரீஈ யின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட இடப்பரப்புகளிலுள்ள புலம்பெயர்ந்த சில முஸ்லிம், சிங்கள மக்களின் நடமாட்டத்திற்கான உரிமை பற்றி நிச்சயமற்ற தன்மை நிலவியது. யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அப்பாலுள்ள தீவுகளில் வாழும் புலம்பெயர்ந்த மக்கள் ஆயுதந்தாங்கிய படைகளினாலும் துணை இராணுவக் குழுக்களினாலும் தொல்லைப்படுத்தப்படுவதையிட்டு தொடர்ந்தும் முறைப்பாடு செய்கின்றனர். நெடுந்தீவுக்குப் பிரயாணம் செய்யும் குடிமக்கள் மீது கடற்படை கட்டுப்பாடு விதிப்பதாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டனர்.
அரசாங்கத்தின் மீளமர்த்தும் கொள்கை* நடமாடும் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை விதித்தது. இக்கொள்கையின்படி புலம்பெயர்ந்தவர்கள், அவர்களது ஆரம்பகால மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டத்திலுள்ள அரச காணியில் மீளக் குடியமர்த்தப்பட முடியாது. நடைமுறையில் ‘ஆரம்பகால மாவட்டம்' என்பதற்கு அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக எந்த மாவட்த்திலிருந்து புலம்பெயர்ந்தார்களோ அந்த மாவட்டம் என்று பொருள்கொள்ளப்படுகின்றது.
21. "நடமாட்டத்தின்மீது எல்ரீஈ யின் மட்டுப்பாடுகளுள் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு வெளியே செல்வதற்கு கட்டணம் ஒன்றின் கொடுப்பனவும் அடங்கும். வெளியே செல்வதற்கு முழுக் குடும்பமும் அனுமதிக்கப்படுவதில்லை. வி. கொசலின், ஆர் சேனநாயக மற்றும் ஈ. விஜயலக்ஷ்மி உள்ளுரில் புலம்பெயர்ந்த ஆட்களின் மனித உரிமை மீறல்களும் அரசாங்கக் கொள்கைகளும் 2001. மாற்றுக் கொள்கை களுக்கான நிலையம். 22. ஆறுமுகம் வடிவேலு எதிர் சட்டத்துறைத் தலைமையதிபதியும் ஏனையோரும்
உநீ இல. 44/2002 23. 6)st6455-ft 2003 †6076)Jf 8 Monthly News Brief96Ö 66)5ifluss_LILL6)ITM)
மனித உரிமைகள் இல்லம் 2003 பெப்ரவரி 24. பின்னிணைப்பு II இலங்கைச் சனநாயக சோசலிச் குடியரசின்
அரசியலமைப்பிற்கான 13ஆம் திருத்தம்.
31

Page 23
இக்கொள்கையின் பிரயோகம், காணியற்ற பல உபு:ஆ களின் மீளமர்த்துகைக்கு ஒரு தடையாயிருந்துள்ளது. 1970ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து அவ்வப்போது இடம்பெற்ற கலவரங்களின்போது வடக்கிற்கு தப்பிச்சென்ற, மலைநாட்டில் காலம் காலமாக வாழ்ந்துவந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுள் முக்கிய இடம்பெறுகின்றனர். மாற்றுக் கொள்கைகளுக்கான நடுநிலையத்தால் (மா.கொ.ந.)* ஆவணப்படுத்தப்பட்டவாறு புலம் பெயர்ந்தவர்களுள் பெரும்பாலானோர் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தாங்கள் வாழ்ந்து வந்தவையும் அவர்கள் தற்போது புலம் பெயர்ந்துள்ளவையுமான இடப்பரப்புகளிலேயே மீளமர்த்தப்படுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
5. திரும்பிச் செல்லுதலும் மீளமர்த்தப்படுதலும்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின்படி 2002 அக்டோபர் மாதமளவில் உள்ளுரில் புலம்பெயர்ந்த 183,000 ஆட்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச்சென்றுள்ளனர்." அநேகமானோர் சொந்த விருப்பத்தின் பேரிலேயே அவ்வாறு திரும்பிச்சென்றுள்ள அதே வேளையில் குறிப்பாக 2002ஆம் ஆண்டின் முற்பகுதியில் உள்ளுரில் புலம்பெயர்ந்த ஆட்கள் அரசாங்கத்தால் கட்டாயப்படுத்தப்பட்டு அல்லது வற்புறுத்தப்பட்டு திரும்பிச்சென்றமை பற்றிய முறைப்பாடுகளும் இருந்துள்ளன. மா.கொ.நி. வினால் உள்ளுரில் புலம்பெயர்ந்த ஆட்களின் காணி மற்றும் ஆதனத்திற்கான உரிமைகள் பற்றிய அதன் அறிக்கையில்" பதிவுசெய்யப்பட்டுள்ளவாறு உ.பு.ஆ. களை அவர்களது ஆரம்பகால இடப்பரப்புகளுக்கு திரும் பிச் செல்லுமாறு நிர்ப்பந்திப்பதற்காக பல யுக்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில், உலர் உணவுப் பங்கீட்டை நிறுத்துவதாகவும் முகாம்களையும் பாடசாலைகள் போன்ற முகாம் வசதிகளையும் மூடிவிடுதாகவும் செய்யப்பட்ட அச்சுறுத்துதல் அடங்கும். செப்டெம்பரில் இலங்கை அரசாங்கம், மடு தேவாலய
25. வி.கொஸ்லின், ஈ. பிரேமரத்ன, ஆர். சேனநாயக, உள்ளுரில் புலம்பெயர்ந்த ஆட்களின் காணிக்கும் ஆதனத்திற்குமான உரிமைகள் 2003 பெப்ரவரி, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்.
26. தி ஐலண்ட் 2002 அக்டோபர் 12,
27 மேற்படி குறிப்பு n. 25.

வளவுகளுக்குள் அமைந்திருந்த மடு நலன்புரி நிலையத்தை மூடி 1600 குடும்பங்களை அவர்களது சொந்த ஆரம்பகால இடப்பரப்புகளுக்குத் திரும்பிச் செல்லுமாறு நிர்ப்பந்தித்தது.* முகாம் மூடப்பட்டதையடுத்து பாடசாலைகள், உணவு உதவி போன்ற வசதிகள் நிறுத்தப்பட்டமையால் முகாம் அமைந்திருந்த இடத்திலேயே தங்கியிருந்த காணியற்ற ஒரு சில குடும்பங்களுக்கு இவ்வசதிகள் மறுக்கப்பட்டுள்ளன.
வேறு பல காரணங்களால் பாதுகாப்புடன் திரும்பிச் செல்லும் உரிமை மேலும் தடைசெய்யப்பட்டது; இவற்றுள் கண்ணிவெடிகள், வெடிக்கச் செய்யப்படாத பீரங்கிகள், இன ரீதியிலான பதற்றம், இராணுவத்தாலும் எல்ரீஈ யினாலும் உள்ளுரில் புலம்பெயர்ந்த ஏனைய ஆட்களினாலும் ஆதனங்கள் இருப்பாட்சிகொள்ளப்படுதல், வீடுகளும் ஆதனங்களும் ஏனைய அத்தியாவசிய உட்கட்டமைப்புகளும் அழிக்கப்படுதல், அத்துடன் சேதப்படுத்தப்படுதல் , திரும்பிச் செல்வதற்கான உதவி கிடைக்காமை என்பன அடங்கும்.” இவர்களின் கவலைக்குரிய விடயங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தப்படுதல், போதியளவு உதவி இல்லாமை, வரம்பிற்குட்பட்ட தொழில் வாய்ப்புகளுக்கு போட்டியிடுவதிலுள்ள செயல்முறை சிரமங்கள், காணியைத் துப்பரவு செய்வதிலும் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவதிலுமுள்ள கஷ்டங்கள் என்பன அடங்கும்.
கண்ணிவெடிகளும், வெடிக்கச்செய்யப்படாத பீரங்கிகளும் உபு.ஆ. களின் பாரிய விஸ்தீரணமுள்ள விவசாயக் காணிகளும, வேறு வகையில் பொருளாதார ரீதியில் வளமுள்ள காணியும் பயன்படுத்த முடியாததாக்கப்பட்டமையும் பாதுகாப்பாக திரும்பிச் செல்வதைப் பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்றாக இருந்தன. ஐ. நா. அ. க. வின்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னரான ஒவ்வொரு வாரமும் குறைந்த பட்சம் கண்ணிவெடி தொடர்பிலான இரண்டு விபத்துக்களாவது இடம்பெற்றுள்ளன. மாதமொன்றுக்கு குறைந்தபட்சம் 15 கண்ணிவெடி விபத்துக்களாவது இடம்பெற்றுள்ளதாக ஐ. நா. கண்ணிவெடி செயற்பாட்டுச் சேவையின் அறிக்கை குறிப்பிடுகின்றது.
2002ஆம் ஆண்டு தற்போதைய கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு தொடர்பாகவும் சில இடப்பரப்புகளில் கண்ணிவெடி அகற்றல் நடைபெறாமை தொடர்பாகவும் பல பிரச்சினைகள் எழுந்தன. இலங்கை
28. Ibid
29. பொதுவாக பார்க்கவும், எலெக் சோபியா, ஆபத்துக்கெதிராக அரிசியைத் தேர்ந்தெடுத்தல்; உரிமைகள், மீளக்குடியமர்தலும் பெண்களும், CSHR, கொழும்புப் பல்கலைக்கழகம் 2003.
33

Page 24
இராணுவம் அரசாங்கக் கட்டுப்பாட்டிற்குட்பட்ட இடப்பரப்புகளில் கண்ணிவெடி அகற்றுதலை மேற்கொள்கின்றது. கண்ணிவெடி அகற்றுதல் தொடர்பாக சர்வதேசத் தராதரங்களை இது ஈடு செய்யாமை முக்கியமான ஒரு பிரச்சினையாக இருந்தது." கண்ணிவெடி அகற்றும் 90 இலங்கை இராணுவ வீரர்களுள் 36 பேர் காய முற்றுள்ளனர். கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இடப்பரப்புகளில் கண்ணிவெடி தொடர்பான விபத்துக்களில் குடிமக்கள் காயமற்றுள்ளதாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்ணிவெடி அகற்றும் முயற்சிகளில் பிராந்திய ரீதியில் பொருத்தமின்மைகளும் காணப்படுகின்றன. எல்ரீஈ கட்டுப்பாட்டிற்குட்பட்ட வன்னிப் பகுதியில் பயிற்றப்பட்ட உள்ளுர் ஆளணியினராலும் யாழ்ப்பாணத்தில் மட்டும் பயிற்றப்பட்ட ஆளணியினராலும் கணிணிவெடி தொடர்பான நடவடிக்கைகள் நடைபெற்றுவரும் இதே வேளையில் கிழக்கு மாகாணத்திலும் அரசாங்கக் கட்டுப்பாட்டிற்குட்பட்ட ஏனைய பகுதிகளிலும் வேளைக் கேற்ற கணிணிவெடி அகற்றும் நடவடிக் கைகள் இடம்பெற்றுள்ளன.
மற்றுமொரு பிரச்சினை யாதெனில் கண்ணிவெடி அகற்றும் வேகம் புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லும் வேகத்திற்கு ஈடுகொடுக்கவில்லை. உபு.ஆ களும் அகதிகளும் திரும்பிச் செல்வதற்கு முன்னர் அவர்களது முகாம் களிலோ அல்லது ஏனைய குடியேற்றங்களிலோ அளவில் கண்ணி வெடிகள் பற்றிய போதுமான தகவல் வழங்கப்படுவதில்லை. இதன் விளைவாக கண்ணிவெடிகளும் வெடிக்க வைக்கப்படாத பீரங்கிகளும் இருப்பது உள்ளுரில் புலம் பெயர்ந்த ஆட்களுக்குத் தெரியாமல், அவை இருக்குமிடங்களுக்குத் திரும்பிச் சென்று காயமடையும் அபாயம் அதிகரிக்கக் கூடிய உண்மையான ஆபத்தும் காணப்படுகின்றது.
30. கண்ணிவெடிகளை அகற்றுதல் பற்றிய சர்வதேச நியமங்கள் "ஆளுக்கெதிரான கண்ணி வெடிப் பிரயோகம், சேகரிப்பு, உற்பத்தி, இடமாற்றம் அவற்றை அழித்தல் பற்றிய சமவாயம் 1999' என்பதில் அடங்கியுள்ளன. மரபுவழிவந்த ஆயுதங்கள் (ம.வ. ஆ.) பற்றிய சமவாயங்களுக்கான இரண்டு வரைவுகள் 1980 இந்த சமவாயங்கள் இரண்டையும் இலங்கை அங்கீகரிக்கவில்லை.
31. Northeastern Herald அக்டோபர் 4 - 10 2002 உ.பு.ஆ, களைப் பாதிக்கும் காணி மற்றும் ஆதனம் பற்றிய பிரச்சினைகளும் திரும்பிச் செல்வோரும் 2003, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்,
32. மேற்படி குறிப்பு n. 25

எல்ரீஈ க்கும் இலங்கை ஆயுதப் படைகளுக்கும் இடையிலான போரில் கண்ணிவெடிகள் பரந்தளவில் பயன்படுத்தப்பட்டன. வீடுகளுக்குத் திரும்பிச் செல்லும் புலம்பெயர்ந்த ஆட்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு இவை பெரிய அச்சுறுத்துதலாக உள்ளன. 1.3 மில்லியன் கண்ணிவெடிகள் இலங்கை இராணுவத்தால் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் ஏறக் குறைய 900,000 கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளன.?
உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் உ.பு.ஆ, களுக்கு மற்றுமொரு பாரிய பிரச்சினையாக உள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் பல இடப்பரப்புகளில் வீடுகளும், பாடசாலைகள், மருத்துவ மனைகள், உள்ளுள் நிர்வாக நிறுவுகைகள் என்பன உட்பட உட்கட்டமைப்புகளும் பகுதியளவிலோ முழுமையாகவோ நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் தனித்துவமான சேவைகளை வழங்குவதற்கு உயர் உத்தியோகத்தர்கள் இல்லாதிருப்பதும் ஒரு முக்கியமான பிரச்சினையாகும். மேலும் கட்டிடப் பொருட்களின் கூடுதலான செலவும் வீடுகள் மீளக் கட்டியெழுப்பப்படுவதற்குத் தடையாக இருக்கின்றன. அதிகரித்த போக்குவரத்துச் செலவும் அரசாங்க வரிகளுக்கு மேலதிகமாக எல்ரீஈ யினால் சுமத்தப்பட்ட மனம்போன போக்கிலான வரிகளும் கட்டிடப் பொருட்களின் அதிகரித்த செலவுக்கு பங்களிப்புச் செய்துள்ளன. வடக்கிலும் கிழக்கிலும் போரினால் பாதிக் கப்பட்ட மக்களே இச் சுமையை சுமக்க வேண்டிவர்களாக உள்ளனர்.
உ.பு.ஆ. விரைவாக திரும்பிச் செல்வதற்குத் தடையாயிருக்கும் மற்றுமொரு காரணி, அவர்களின் ஆதனங்களில் ஆயுதம் தாங்கிய படையினரும் எல்ரீஈயும் இருப்பாட்சி கொண்டிருப்பதாகும். ஆயுதம் தாங்கிய படைகளும் பொலிஸ"ம் கணிசமான அளவிலான குடிமக்களின் ஆதனங்களில் இருப்பாட்சி கொண்டுள்ளனர். இவற்றுள் அதியுயர் பாதுகாப்பு வலங்களுக்குள்ளும் இராணுவ சோதனைக் கூடங்கள், நிலையங்கள், நிர்வாக அலுவலகங்கள் என்பன நிறுவப்பட்டுள்ள பகுதிகளிலுமுள்ள ஆதனங்களும் அடங்கும்.
உ.பு.ஆ களுக்கும், அகதிகளுக்கும், இடம்பெயர்ந்தவர் களுக்கும் முஸ்லிகள் சிங்களவர்கள் அடங்கலாக சொந்தமான பரந்தளவிலான காணி எல்ரீஈ யினால் கையேற்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடங்களை எல்ரீஈ நிர்வாக, வியாபார நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதுடன் அவற்றை வாடகைக்கும் விட்டுள்ளது.
33. மேற்படி குறிப்பு n. 25

Page 25
சில காணிகள் புலம்பெயர்ந்த ஆட்களினால் இருப்பாட்சி கொள்ளப்பட்டுள்ளன. மேலும் குறிப்பாக யாழ்ப்பாண தீபகற்பத்தில் அதிகாரமளிக்கப்படாத இருப்பாட்சியானது, ஒழுங்குசெய்யப்பட்ட ஒரு மோசடியாக அமைந்துள்ளது. கால விதிப்பனவுச் சட்டம், காணிச் சொந்தக்காரர்களான உ.பு.ஆ. களுக்கு ஒரு அச்சுறுத்துதலாக காணப்படுகின்றது. ஏனெனில் இச்சட்டத்தைப் பிரயோகித்து அத்தகைய அதிகாரமளிக்கப்படாத இருப்பாட்சியை சட்டப்பூர்வமாக்கிக் கொள்ளலாம் என இவர்கள் அஞ்சுகின்றனர்." மீளாய்வுக்குட்பட்ட ஆண்டில் வடக்கிலும் கிழக்கிலும் இச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. மேலும் புலம் பெயர்ந்தவர்களுள் சிலர் ஆவணச் சான்றுகளை இழந்துள்ளதால் தங்கள் சொத்தாண்மையை காண்பிப்பதில் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். காணிப் பதிவகங்களில் பேணப்பட்ட பகிரங்கப் பதிவேடுகள் அழிக்கப்பட்டுள்ளமையால் இவர்களின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.* காணிக் குறியீடுகளும் எல்லைகளும் சேதப்படுத்தப்பட்டும் நிர்மூலமாக்கப் பட்டுமுள்ளதால் காணிச் சொந்தக்காரர்களால் தங்கள் காணிகளை இனம் காண்பதிலும் மிகவும் சிரமம் ஏற்படலாம்.
போர் மூண்டதன் காரணமாக கட்டிடங்களினதும் காணிகளினதும் ஈடு மற்றும் குத்தகைகள் தொடர்பிலும் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய உடன்படிக்கைகளை மீண்டும் நிலைநாட்டுமாறு புலம்பெயர்ந்த வடபகுதி முஸ்லிம்களால் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டது.° வடக்கிலும் கிழக்கிலும்
34. கால விதிப்புனவுச் சட்டத்திற்கிணங்க பத்து ஆண்டு இருப்பாட்சியைப் பூர்திசெய்தபின்னர் சட்டப்பூர்வமான சொந்தக்காரரின் உரிமைக்குப் பாதகமாக காணிக்கான கால விதிப்பனவு உரிமைகளைக் கோரலாம். கால விதிப்பனவுக் காலப்பகுதி போர்க் காலத்தைப் புறநீக்கம் செய்யலாம் என வாதாடலாம் எனினும் உரிமைக்குப் போட்டியிடப்படும் பட்சத்தில் அத்தகைய ஆதனத்திற்கான உரித்தைக் கொண்டுள்ள ஆட்கள் தங்கள் உரிமையை எண்பிப்பதற்கு நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டும். பார்க்க பிரிவு 3, விரிப்பனவுக் கட்டளைச் சட்டம் (திருத்தப்பட்டவாறு), இல. 22/1871
35. மேற்படி குறிப்பு n. 25
36. யாழ்ப்பாணம், இடம்பெயர்ந்த வட பகுதி முஸ்லிம்களின் ஒழுங்கமைப்பு 27.01.2002 இல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தவிசாளருக்கு அனுப்பிய கடிதம்
36

உள்ளுரில் புலம் பெயர்ந்த ஆட்கள் பலர் காணியற்றவர்களாகவே உள்ளனர். காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் காணி வழங்கப்படுவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியின் கீழ் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளவர்களுள் காணி வழங்கப்பெற்றவர்களின் இரண்டாவது தலைமுறையினரும் அடங்குவர். காணியற்றவர்களுள் இந்திய வம்சாவளித் தமிழர்களும் அடங்குவர். பெரும்பாலும் வடக்கிலும் கிழக்கிலுமுள்ள முகாம்களில் வாழ்பவர்களான அல்லது அதிகாரமின்றி காணிகளை இருப்பாட்சி கொண்டுள்ளவர்களான காணியற்ற இம்மக்கள் திரும்பிச் செல்வதற்கு இடமில்லை. மடுவில் அத்தகைய உபு:ஆட்கள், முகாம் மூடப்பட்ட பின்னரும் முகாம் அமைந்துள்ள இடத்தில் தங்கியிருந்தனர். இவர்களுக்கு பாடசாலைகள் போன்ற வசதிகள் இடைநிறுத்தப்பட்டன.
ஊகிக்கப்பட்ட அல்லது உண்மையான இனப் பாரபட்சத்தினால் ஏற்படுத்தப்பட்ட இன ரீதியிலான பதற்றம் காரணமாகவும் கடந்த கால மனித உரிமை மீறல்கள் காரணமாகவும் உ.பு.ஆ. பலர் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச்செல்லப் பயந்தனர். ஊ.பு.ஆ. குறிப்பாக எந்த இடத்தில் தாங்கள் இன வாரியாக சிறுபான்மையினராக இருப்பார்களோ அந்த இடங்களுக்குத் திரும்பிச்செல்ல அஞ்சினர்.' உ.பு.ஆ திரும்பிச் சென்று மீளக் குடியமர்வதற்கான மற்றுமொரு பிரதான தடை என்னவெனில் நிதி உதவி இல்லாமையாகும். ஒரு சிலர் சேதமுற்ற வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் ஆதனத்தை அபிவிருத்தி செய்வதற்கும் சீவனோபாயங்களை மீண்டும் தொடங்குவதற்கும் தங்கள் சொந்த நிதிகளிலேயே தங்கியிருக்கும் அதேவேளையில் பெரும்பாலான உபு.ஆ களுக்கு அத்தகைய நிதி வசதிகள் இல்லை. பெருமளவிலான குடியமர்வும் தேவையை ஈடுசெய்வதற்கு தீபகற் பத் தரினுள் தொழிற் படும் அரச நிறுவனங்களிடமோ அரசாங்க சார் பற்ற நிறுவனங்களிடமோ போதியளவு நிதி வளம் இருப்பதாகத் தெரியவில்லை. திரும்பிச் செல்பவர்கள் உத்தியோக பூர்வமாக ரூபா 65,000 ஐக்கிய உதவித் திட்டமொன்றுக்கு (ஐ.உ.தி) உரித்துடையவர்களாவர். இதில் அடிப்படை கருவிகளின் கொள்வனவுக்கு 15,000 ரூபாவும் தற்காலிக உறைவிடம் ஒன்றை அமைப்பதற்கு 50,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் சேதமுற்ற வீடுகளின் திருத்தவேலைகளைச் செய்வதற்குக் கூட இத்தொகை போதாது. சொற்ப ஆட்கள் மட்டுமே முழுத் தொகையையும்
37. மேற்படி குறிப்பு n 25 (

Page 26
பெற்றனர். ஏனையோர் அரசாங்க அதிபர்களின் தற்றுணியின்பேரில் அல்லது இருப்பிலுள்ள காசின் அடிப்படையில் தரப்பட்ட ரூபா 15,000, மற்றும் ரூபா 7,000 அல்லது ரூபா 2,000 முடன் திருப்தியுற்றனர்."
ஐ. உ. தி. ஆனது அவசியத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. இது பெண்களை குடும்பத் தலைவர்களாகக் கொண்ட இல்லங்களுக்கான திட்டவட்டமான தேவையை கருத்திற்கொள்வதில்லை.” பெண்களைக் குடும்பத் தலைவர்களாகக்கொண்ட குடும்பங்கள் மீள்குடியமர்தல் பணியில் கூலியாட்களை வேலைக்கமர்த்த வேண்டிவரும் என்ற நிகழ்விற்கு மானியக்கொடையை ஏற்பாடு செய்வதில்லை."
குடும்பத்தவர் அனைவரும் சொந்த இடத்திற்குத் திரும்பிச்செல்ல உடன்படுமிடத்து மட்டுமே ஐ.உதிற்கு உரித்துடையவராவர். ஐ. உ. தி. தின் இந்நிபந்தனை புலம்பெயர்ந்தவர்கள் திரும்பிச் செல்வதை கடினமாக்கியுள்ளது. மேலும் நடப்புக் கொள்கையின் கீழ், சம்பந்தப்பட்ட தனியாட்களின் திட்டவட்டமான தேவையைப் பொருட் படுத்தாமல் மீள்குடியமர்தலின்பின்னர் அதிகபட்சம் 6 மாதங்களுக்கு மட்டுமே உணவு உதவி வழங்கப்படுகின்றது.
ஐ.நா.ம.உ.ஆ. உணவுப் பொருட்கள் அல்லாத பொருட்கள் அடங்கிய அவசரகால பொதிகளை வழங்கியபோதிலும் முழுக் குடும்பமும் திரும்பிச் செல்லுமிடத்து மட்டுமே அத்தகைய உதவி வழங்கப்படுகின்றது." பெரும்பாலும், குறிப்பாக, வட பகுதி முஸ்லிம்களிடையே குடும் பத்தின் ஏனைய அங்கத்தவர்கள் திரும்பிவருவதற்கு ஆயத்தம் செய்வதற்காக வயது வந்த ஆண்கள் முதலில் திரும்பிச் செல்கின்றனர். அவர்களுள் தங்கள் குடும்பங்கள் படிப்படியாகவே குடியமர வரவேண்டும் என முடிவு செய்பவர்களும் உண்டு. இதனால் மீளக் குடியமர்வதற்கு வசதியாக அமையக்கூடிய இவ்வுதவி அவர்களுக்கு மறுக்கப்படுகின்றது.
6. பெண்கள்
இந்த அத்தியாயத்தில் எடுத்துக்காட்டப்பட்ட பிரச்சினைகளுள்
பெரும் பாலானவை பெண் களைப் பாதிப் பவையாகும் புலம் பெயர்ந்தவர்களுள் ஆண் பெண் வித்தியாசம் கடந்த காலத்தில்
38. ibid 39, ibid 40. மேற்படி குறிப்பு n, 25 41. மேற்படி குறிப்பு n 25

போதியளவில் ஆவணப்படுத்தப்படவுமில்லை கொள்கையைத் திட்டமிடும் போதோ நடைமுறைப்படுத்தும் போதோ கருத்திற் கொள்ளப்படவுமில்லை.*
குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான குடும்பங்கள் பெண்களைத் தலைவர்களாகக் கொண்டவையாகும். யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் ஏறக் குறைய 21,400 விதவைகள் இருப்பதாக மதிப் பரீடு செய்யப் பட்ட ள் ளது. இவர் களுள் 9,000 (8 Luff 40 வயதுக்குட்பட்டவர்களாவர்." மேலும் வவுனியாவில் புலம்பெயர்ந்த குடும்பங்களுள் 60% வீதமானவை பெண்களைத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்களாகும். இக்குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் பெண்கள், பகிரங்க வாழ்க்கையிலிருந்தும், முடிவெடுப்பதிலிருந்தும் அவர் களைப் புறநரீக்கம் செய்யும் முதாதையர் வழிவந்த கலாசாரத்தினாலும், பாரம்பரிய நடைமுறைகளினாலும் அதிகரித்த பொறுப்பையும் சமூக மட்டுப் பாடுகளையும் எதிர்நோக்குகின்றனர்.
வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதானால் காணிகளை துப்பரவு செய்வதிலும், வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், தனியே வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதிலும் யதார்த்தபூர்வமான சவால்களையும், கவலையையும், பாதுகாப்பு அச்சுறுத்துதலையும் பெண்கள் வெளிப்படுத்தி யுள்ளனர். நிவாரண உதவி, நட்டஈடு, காணிகளுக்கும் ஆதனத்திற்கும் சட்ட ரீதியிலான உரிமைபெறுதல் போன்ற அனுபவங்கள் என்பவற்றிற்கு ஏற்புடைத்தான ஒப்புரவற்ற கொள்கைகளும் சட்டங்களும் மேலும் சிக்கலாக்கப்பட்டுள்ளன. அரச காணிகளைப் பிரித்தொதுக்குவதில் பாரபட்சமான சட்டங்களும் நடைமுறைகளும் காணிகளுக்கும் ஆதனங்களுக்குமான பெண்களின் உரிமையை மறுப்பதோடு மட்டுமல்லாமல் தங்கள் காணியைக் கட்டியெழுப்புவதற்கும், பண்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் அக்காணிகளை அணுகிச் செல்வதனையும் அனுமதிக்க மறுக்கின்றன.
42. Ibid
43. டீ அல்விஸ் எம். (பிரசுரிக்கப்படவில்லை) போரினால் பாதிக்கப்பட்ட பெண்களினுடைய சங்கத்தின் யாழ்ப்பாண விஜயம், 2001 நவம்பர் 21-24, 2001: 6 ஆபத்துக்கெதிராக அரிசியைத் தேர்ந்தெடுத்தல்: உரிமைகளும் மீளக்குடியமர்தலும் புலம்பெயர்ந்த பெண்களும், எலெக் சோபியா CSHR, கொழும்பு பல்கலைக் கழகம், 2003
39

Page 27
உதாரணமாக, காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின்கீழ்" காணியற்ற மக்களுக்குப் பகிர்தளிக்கப்படும் காணிகளுக்கு ஒரு குடும்பமே தகைமை பெற்றபோதிலும் பொதுவாக ஆண் வாழ்க்கைத் துணையின் பெயரிலேயே காணி அளிக்கப்படுகின்றது. பெண் வாழ்க்கைத் துணை வழியுரிமையாளராக பெயர் குறிப்பிடப்பட்டபோதும் அத்துடன் அவள் திருமணமாகாதிருக்கும் வரையும் மட்டுமே. அத்தகைய ஆதனத்திற்கு உரித்து பெறுகின்றாள். நடைமுறையில் பெண்கள் வழியுரிமையாளர்களாக பெயர்குறித்து நியமிக்கப்படாதிருக்குமிடத்து கடன்வசதிக்கு விண்ணப்பிப்பதற்கான பிணைப் பொறுப்பை கொடுத்துதவ முடியாதிருக்கின்றனர்.
மேலும் ஒரு வாழ்க்கைத் துணையின் இறப்பிற்கு நட்டஈடு பெறுவதற்காக இறப்பை நேரில் கண்ட சாட்சியொருவரின் அறிக்கை அல்லது மரணத்தை விளைவிப்பதில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் என்ற வடிவில் முறைசார்ந்த பதிவொன்று தேவைப்படுகின்றது. அத்தகைய ஆவணம் இல்லாத பட்சத்தில் நட்டஈடு பெறமுடியாத நிலை ஏற்படலாம்."
புலம் பெயர்ந்த பெண் கள் பெரும் பாலும் பாலியல்
துஷ்பிரயோகத்திற்குப் பழியாக்கப்படுகின்றனர். புலம்பெயர்ந்த பெண்கள் உட்பட தமிழ்ப் பெண்கள் இராணுவப் படைகளாலும் பொலிஸ் படையினராலும் பாலியல் துஷபிரயோகத்திற்குட்படுத்தப்படுவதைத் தடுக்குமாறு 2003 ஏப்ரல் மாதத்தில் சர்வதேச மன்னிப்புச் சபை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது."
யூன் மாதத்தில் இலங்கையிலுள்ள மகளின் ஒழுங்கமைப்புகளின் கூட்டணியொன்று அரசாங்கத்திற்கும், எல்ரீஈ இற்கும், நோர்வே ஒத்தாசையாளர்களுக்கும் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தது. இதில் பெண்களின் அனுபவங்களுக்கும் அக்கறைகளுக்கும் அவர்களது அவதானத்தைக் கோரியிருந்ததுடன் தற்போது நடைபெறும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பெண் பிரதிநிதித்துவத்தைக் கேட்டிருந்தனர்."
44. பார்க்க காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம், இல, 19/1935 (திருத்தப்பட்டவாறு) 45. (Sup66) (Supra) n. 29 46. 2003 ஏப்ரில் 25ஆம் திகதிய வீரகேசரியில் அறிக்கையிடப்பட்டவாறு சர்வதேச LD6ö16of Lë df60)LJu76öt 9nsisp| 2003 uDITië Monthly News Brief (96) பிரசுரிக்கப்பட்டவாறு, மனித உரிமைகளின் இல்லம். 47 ஒப்பந்தமானது ஐ.நா பாதுகாப்புச் சபைத் தீர்மானம் 1325 (UNS/res/ 1325 (2000) என்பதில் தங்கியிருந்தது. இது சமாதானத்தை ஏற்படுத்துதல், சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், புனர்வாழ்வு, புனரமைப்பு ஆகிய அனைத்து அம்சங்களிலும் பெண்களின் கருத்துக்களைக் கொண்டுவர வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
40

இவ்வறிக்கையில் பெண்களின் பிரச்சினைகளும் அக்கறைகளும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலில் உள்ளார்ந்த ஒரு பாகமாக அமையவேண்டும், புனரமைப்பு, புனர்வாழ்வு, நிலைபெயர்தல் ஆகிய நடவடிக்கைகளின் அனைத்து கட்டங்களிலும் முடிவெடுக்கப் படுகையில் பெண்களின் பங்கேற்புக்கு உத்தரவாதமளிக்கப்படவேண்டும் என்பன வலியுறுத்தப்பட்டன. இக்கோரிக்கைக்குப் பதிலாக 2002 திசம்பர் 2 முதல் 5 வரை நோர்வே, ஒஸ்லோ நகரில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின் மூன்றாவது சுற்றுவட்டத்தில் சாமாதன முயற்சிகளில் ஆண் பெண் வித்தியாசம் பற்றிய விடயங்களையும் சேர்த்துக் கொள்வதற்காக உப குழுவொன்று அமைக்கப்பட்டது.
7. சிறுவர்
இவ்வாண்டில் சிறுவர்கள் தொடர்பில் மனித உரிமைகள் பற்றிய பல பிரச்சினைகள் இருந்தன. போர் நிறுத்தத்திற்குப் பிற்பட்ட காலப் பகுதியிலும் சிறுவர்களை போரணிக்குத் திரட்டுவதாக எல்ரீஈ இற்கு எதிராக முறைப்பாடுகளிருந்தன. மார்ச் மாதத்தில் சர்வதேச மன்னிப்புச் சபை, சிறுவர் போராளிகளாகப் பயன்படுத்தப்படுவதற்கென எல்ரீஈ யால் ஆட்சேர்க்கப்பட்டதாக அல்லது கடத்திச் செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 49 சிறுவர்களின் பெயர்கள் அடங்கிய நிரல் ஒன்றைத் தயாரித்திருந்தது." இக்காலப் பகுதியில் யுனிசெவ் நிறுவனத்தின் தலையீட்டால் எல்ரீஈ யில் சேர்ந்த சிறுவர் போராளிகள் பலர் விடுவிக்கப்பட்டனர்."
அத்துடன் சிறுவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டமைக்கு வேறு பல காரணங்களும் பங்களிப்பு செய்தன: உணவு பற்றாக்கறை, போஷாக்கு மற்றும் மருத்துவ உதவி இல்லாமை, பாடசாலை வசதி, பொது வசதிக் கட்டமைப்பு இல்லாமை, கவனிப்பாரில்லாமை ான்பன இதிலடங்கும். இரண்டு வயதுக்கும் ஐந்து வயதுக்கும் இடைப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட சிறுவர்களும், அவ்வய தெல்லையைத் தாண்டிய 2000 சிறுவர்களும் வடக்கிலும் கிழக்கிலும் வாய்ப்புகள் இல்லாதிருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.* உதாரணமாக
48. பாதுகாப்பு பற்றிய அச்சம்/சிறுவர் போராளிகள், 2002 மார்ச் 11, http://
www.amnesty.org
49. தி ஐலண்ட், 2002 யூன் 23
50. தினக்குரல் 2002 ஆகஸ்ட் 16, Monthly News Brief இல் வெளியிடப்
பட்டிருந்தவாறு செப்டெம்பர், மனித உரிமைகளின் இல்லம்.
41

Page 28
வன்னியில் போரின்போது 20,000 சிறுவர்களின் பள்ளிப் படிப்பு தடைப்பட்டது. 2002ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் மீண்டும் பாடசாலைக்கு என்னும் நிகழ்ச்சித் திட்டமொன்று ஆரம்பிக்க்ப்பட்டது. எனினும் போர் காரணமாக நீண்ட காலமாக நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பள்ளிப்படிப்பு தடைப்பட்டிருந்த போதிலும் அத்தகைய நிகழ்ச்சித் திட்டங்கள் அத்தகைய பகுதிகளில் ஆரம்பிக்கப்படவில்லை. அறிவுரை வழங்கும் சேவைக்கான தேவை அளவு மீறி காணப்பட்ட போதிலும் இத்தேவையை நிறைவுசெய்வதற்கு முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை.
கடந்த காலத்தில் மருந்து வகைகள் மீது இராணுவத் தடையினாலும் மருத்துவ வசதி இல்லாமையினாலும் உ.பு.ஆ. பாதிக் கப் பட்டனர் . ஏல ரீரீஈ யின் கட்டுப் பாட்டிலுள்ள இடப்பரப்புகளிலுள்ள மருத்துவ மனைகள் மோசமாக பாதிக்கப்பட்டன. இதன் விளைவாக வவுனியா ஆதார வைத்தியசாலையில் ஊழியர்களும் வளங்களும் குறைவாகவே இருந்தபோதிலும் ஏறக்குறைய 600,000 மக்கள் வாழும் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மேலும் மூன்று மாவட்டங்களின் மருத்துவ தேவைகளையும் கவனிக்கவேண்டியிருந்தது."
1986 முதல் அமுலிலிருந்த வடக்கிற்கான மருந்துகளினதும் மருத்துவ உபகரணங்களினதும் போக்குவரத்து மீதான தடையை பாதுகாப்பு அமைச்சு 2002இல் அகற்றியது. எனினும் நிதி ஆளணிப் பற்றாக்குறை காரணமாக மீளாய்வுக்குட்பட்ட காலப் பகுதியில் சுகாதாரப் பராமரிப்பு தொடர்பிலான பிரச்சினை தொடர்ந் திருந்தது. மருத்துவர், மருந்துகளினதும் பற்றாக்குறையும் மூதூரில் ஈச்சிளம்பற்று என்ற இடத்தில் மருத்துவமனையொன்று மூடப்பட்டமை பற்றிய பிரச்சினைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.*
8. நிறுவக அமைப்பு
புலம்பெயர்ந்தவர்களைக் கையாள்வதற்கு ஒன்றிணைந்தவையும் விரிவானவையுமான கொள்கைகள் இல்லாமையாலும் தனியொரு இசைவாக்கக் குழு இல்லாமையாலும் புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவி வழங்குவதில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. முன்னைய பொதுஜன
51. மேற்படி குறிப்பு n 13 52. தமிழ்நெட் 2002 அக்டோபர் 9
42

ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் காலப்பகுதியின்போது? நிவாரணம், புனர்வாழ்வு, புனரமைப்பு பணிகளில் பத்துக்கு மேற்பட்ட அரசாங்க நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தன. இந்த அமைச்சுகள், திணைக்களங்கள், நிறுவனங்கள் ஒவ்வொன்றும் வெவ் வேறு துறைகளிலான பொறுப்புகளையும் புவியியல் ரீதியிலான செயற் பிரிவுகளையும் கொண்டிருந்ததுடன் இவற்றிற்கிடையில் ஒன்றித்த இசைவாக்கம் மிகக் குறைவாகவே இருந்தது அல்லது சற்றும் இருக்கவேயில்லை.
ஐ.தே.மு. அரசாங்கத்தின்கீழ் அமைச்சரவை சார்ந்த ஒதுக்கீடுகள் கட்சி அரசியலின் குறுகிய கால குறிக்கோள்களை நிறைவுசெய்யும் வகையில் அமைந்திருந்தன. ஆனால் ஒருங்கிணைப்பு தொடர்பில் ஓரளவு மேம்பாடு காணப்பட்டது. புலம்பெயர்ந்தவர்களுடன் நேரடி தொடர்பு கொண்டிருப்பதற்கு மூன்று அமைச்சுகள் நிறுவப்பட்டன. புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, அகதிகள் அமைச்சுக்கு (பு.மீ.அ. அமைச்சு) நாடு முழுவதும் உணவு உதவியையும் நட்டஈட்டையும் அவசரகால நிவாரணத்தையும் இயைபுபடுத்தும் பணி உரித்தாக்கப்பட்டது. வட பகுதியின் புனர்வாழ்வு, புனரமைப்பு அதிகார சபையின் ஊடாக மேற்கொள்ளப்படும் பொது வசதி உட்கட்டமைப்பு, புனர்நிர்மாண பணியையும் இது மேற்பார்வை செய்கின்றது. கிழக்குப் பகுதி அபிவிருத்தி அமைச்சு புனர்நிர்மாண, பொது வசதி உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிக்கு மேலதிகமாக நாடு முழுவதும் முஸ்லிம் உபு.ஆ. களின் பாதுப்பிற்குப் பொறுப்பானதாகக் கருதப்படுகின்றது. மறுபுறத்தில் வன்னி புனர் வாழ்வுக்குத் துணைபுரியும் அமைச் சின் பணி தெளிவற்றிருக்கின்றது. ஆரமபத்தில் இந்த அமைச்சின் பணி வட பகுதி முஸ்லிம்களுக்கு உதவிபுரிவதே எனத் தென்பட்டது.
ஆயினும் இடம்பெற்ற புனரமைப்புப் பணி, இயைபுபடுத்துதல் தொடர்பிலான பல பிரச்சினைகளைத் தாண்டிவந்துள்ளது. இது கடந்த காலத்தில் உ.பு.ஆ களின் உரிமைகள் தொடர்பான மீறல்களுக்குப் பங்களிப்பு செய்துள்ளது. புலம்பெயர்ந்தவர்களுக்கு நடமாடும் சுதந்திரத்தையும் வாக்களிக்கும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதற்கு அத்தியாவசியமான பிறப்புச் சான்றுப்பத்திரம், ஆளடையாள அட்டைகள் போன்ற அடிப்படை ஆவணங்களைப் பெறும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இயைபுபடுத்தும மனிதாபிமான அலுவல்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம், பின்வருமாறு கூறுகின்றது: 'அரசாங்கத்தினுள் சிறந்த
53. பொதுஜன ஐக்கிய முன்னணி 1994இல் ஆட்சிக்கு வந்து 2001 தி"ம்பர்
பாராளுமன்றத் தேர்தல்களில் தோற்கடிக்கப்படும்வரை தொடர்ந்திருந்தது.
43

Page 29
இயைபுபடுத்துதலை உறுதிப்படுத்துவதற்கு பு.மீ.அ. அமைச்சு செய்யவேண்டிவை பலவுள்ளன.* உபு.ஆ களின் பிரச்சினைகளை ஊடறுக்கும் தன்மைக்கு அமைச்சுகளுக்கிடையில் மேலும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது.
ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக பு:மீ.அ. அமைச்சில் திட்டமிடல் கொள்கை மற்றும் ஒருங்கிணைப்புக் கூறு ஒன்று தாபிக்கப்பட்டது. இது உபு:ஆ. கள் ஒழுங்கமைக்கப்பட்ட ரீதியில் திரும்பிச் செல்வதற்கு வசதியளிப்பதற்காக செயற்திட்டம் ஒன்றை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இக் கூறு விரிவான செயற்திட்டம் ஒன்றை விருத்தி செய்துள்ளதாக ஊடகத்தில் அது பிரசாரம் செய்தபோதிலும் 2002ஆம் ஆண்டில் அது பற்றிய விவரம் பொது மக்களுக்குக் கிடைக்கவில்லை.
புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை நாளடைவில் சீராக்குவதற்காகவும், திரும்பிச் செல்வதற்கான அல்லது மீளக் குடியமர்வதற்கான விருப்பம்பற்றிய தகவலைச் சேகரிப்பதற்காகவும் ஐ.நா.ம.உஆ வின் உதவியுடன் பு:மீஅ அமைச்சு விரிவான பதிவுசெய்யும் செயற்திட்டம் ஒன்றை ஆரம்பித்தது. இவற்றின் விவரங்களும் மீளாய்வுக்குட்பட்ட ஆண்டில் பொது மக்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை.
கடந்த காலத்தில் ஒத்திசைவான அணுகுமுறை இல்லாமைக்கு ஐ. நா. முகவராண்மைகளும், உ.பு.ஆ, களுக்கு உதவியும் பாதுகாப்பும் அளிக்கும் இலங்கை அரசாங்கத்திற்குத் துணை புரியும் சர்வதேச அரசாங் கச் சார் பற்ற ஒழுங் கமைப்புகளும் கடுமையான விமர்சனத்திற்குட்பட்டுள்ளன. மனிதாபிமான அலுவல் களை இணைபுபடுத்துவதற்கான ஐ. நா. வின் அலுவலகத்தின் ஆலோசனையின் பேரில் புனர்வாழ்வுக்கும் தேர்ச்சிக்கும் மனிதாபிமான ஆதரவுக்கான ஐ. நா. செயற்பாடுகளின் வசதிகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினதும் பு:மீ.அ. அமைச்சினதும் பிரசன்னத்துடன் ஐ. நா. வதிவுள்ள இணைப்பலுவலரின் அனுசரணையுடன் உள்ளூர் புலம்பெயர்வு மீதான ஐ. நா. செயற்குழுவொன்று தாபிக்கப்பட்டது.
2001இன் பிற்பகுதியில் உள்ளுரில் புலம்பெயர்ந்தவர்களுக்கென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்ட உதவி மன்றமும் சட்ட உதவி நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை ஆரம்பித்தன. மாதம் 6000 ரூபாவுக்குக் குறைந்த வருமானம் பெறும் புலம்பெயர்ந்த ஆட்களின் வழக்காடலுக்கு இலவச
54. மேற்படி குறிப்பு n. 11

சட்ட ஆலோசனையும் உதவியும் வழங்குவதற்கென வவுனியா, மன்னார். திருகோணமலை, புத்தளம், யாழ்ப்பாணம், பொலன்னறுவை ஆகிய இடங்களிலிருந்து சட்டவறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். இத்தகைய நிகழ்ச்சித் திட்டம் உபு ஆ களின் உரிமைகளை முன்னெடுத்துச் செல்வதில் ஓர் உந்துசக்தியாக இருக்கக்கூடிய அதே வேளையில் எதிராளியாக அரசு இருக்குமிடத்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வழக்காடலில் உதவி புரிய மாட்டாது என்ற நிகழ்வினால் சட்டத்தரணிகள் சங்கத்தின் நிகழ்ச்சித் திட்டம் மேலும் சிக்க லடைகின்றது.* உபு.ஆ களின் இடர்களுள் பல குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பான இடர்கள் ஆகும். அவை அரசின் செயற்பாடு அல்லது செற்படாமை சம்பந்தப்பட்டவையாதலால் இந்நிழ்ச்சித் திட்டத்தின் மட்டுப்பாடுகள் தெளிவானவையாகும். 2002 நவம்பரில் இலங்கை அரசாங்கத்திற்கும் எல்ரீ+ யிற்கும் இடையில் தாய்லாந்தில் மூன்றாவது சுற்றுவட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளையடுத்து இரண்டு உப குழுக்கள் நியமிக்கப்பட்டன. அதி பாதுகாப்பு வலயத்திலும் பொது மக்களால் அணுக முடியாதவையாக்கப்பட்ட ஏனைய இடப்பரப்புகளிலும் இருந்தெழும் பிரச்சினைகளையிட்டு கவனம் செலுத்துவதற்கும், நிலைமை மோசமடைவதைத் தடுப்பதற்கும், நிலைமையை வழமைக்குக் கொண்டு வருவதற்குமான உப குழுவொன்று தாபிக்கப்பட்டது.* இக்குழு இந்த இடப்பரப்புகளில் மீளக் குடியமர்தலையும், தனியார் ஆதனம் திருப்பிக் கொடுக்கப்படுவதையும் ,பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதையும் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. உடனடி மனிதாபிமான தேவைகள் பற்றிய உப குழுவுக்கு மனிதாபிமான மற்றும் புனர்வாழ்வுத் தேவைப்பாடுகள் மீது கவனம் செலுத்துதல்,
55. சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்ட உதவி நிகழ்ச்சித் திட்டச் செயலாளருடன்
கட்டுரையாசிரியரின் பேட்டி
56. நிலைமைகள் மோசமடைவதைத் தடுப்பதற்கான மேற்படி குழு சமாதானப் பேச்சுவார்த்தைகளின் நாலாவது அமர்வையடுத்து, பிரச்சினையை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டு செயலற்றுப் போனது. எனினும் திறத்தவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தின் மீளக்குடியமர்வைத் துரிதப்படுத்துவதற்கான செயற்திட்டம் ஒன்றின்மீது உடன்பட்டனர். இது அதிபாதுகாப்பு வலயங்களுக்கு அருகிலுள்ள இடப்பரப்புகளை விட்டு வெளியேறுவதைக் கவனிக்கும். ஆயுதம் தாங்கிய படைகள் இருப்பாட்சி கொள்ளுதல் தொடர்பான பிணக்குகள் மாவட்ட மட்டத்தில் தற்பொழுது தீர்க்கப்படுகின்றன. பேர்லின் நகரில் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் ஐந்தாவது அமர்வையடுத்து முஸ்லிம்களின் விவசாயக் காணியை இருப்பாட்சிகொள்ளுதல் தொடர்பான பிரச்சினைகளைக் கவனிப்பதற்கும் அத்தகைய காணிகளை அவற்றின் சட்டப்பூர்வமான சொந்தக்காரர்களுக்குத் திருப்பிக்கொடுப்பதற்கு வசதிசெய்வதற்காகவும் மட்டக்களப்பு திருகோணமலை, அம்பாறை ஆகிய இடங்களில் மூன்று குழுக்கள் தாபிக்கப்பட்டன.
45

Page 30
இக்குறிக்கோள்களை எய்துவதற்கான செயற்பாடுகளுக்கு முன்னுரிமை நிதி வளங்களைத் தேடுதல் , நிகழ்ச்சித் திட்டங்களுக்கு நடைமுறைப்படுத்தும் முகவர்களை இனம் காணுதல் என்பவற்றிற்கான ஆணை வழங்கப்பட்டது. இந்த உபகுழு கவனம் செலுத்தவேண்டிய முன்னுரிமைத் துறைகள் உ.பு.ஆ களின் மீள்குடியமர்வும் புனர்வாழ்வும், போரினால் பாதிக்கப்பட்ட பெண்களினதும் சிறுவர்களினதும் புனர்வாழ்வும், வடக்கிலும் கிழக்கிலும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீவனோபாயங்களை வழங்குவதும் ஆகும்.
9. அகதிகள்
2002 ஆம் ஆண்டில் அகதிகள் பலர் இந்தியாவிலிருந்து திரும்பி வந்தனர். இந்தியாவில் ஏறக்குறைய 200,000 அகதிகள் உள்ளனர். இவர்களுள் குறைந்தபட்சம் 66,000 பேராவது தென்னிந்திய முகாம்களில் உள்ளனர்.° சமாதானம் இன்னமும் உறுதிப் படுத் தப் பட வரில் லை ஆதலால் அகதரிகள் திரும்பிச்செல்வதற்கு நிலைமை உசிதமானதல்ல என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு வலியுறுத்தியது.” மனிதாபிமான அடிப்படையில் 85 அகதிகள் பாதுகாப்புடன்° திரும்பி வருவதற்கு ஐ.நா.ம.உ.கு. துணைபுரிந்த அதே வேளையில் ஏனையவர்கள் சட்டவிரோதமாகவும், ஆபத்தான முறையிலும் படகுகள் மூலம் திரும்பி வந்தனர். அவ்வாறு திரும்பிவந்த ஏழு அகதிகள் ஆகஸ்ட் மாதம் மன்னாரில் கைதுசெய்யப்பட்டனர். இன்னும் பல அகதிகள் அக்டோபரில் கடலில் வைத்து மீட்கப்பட்டனர்." 2002 யூலை மாதமளவில் 200 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து திரும்பி வந்தனர்.
57. சமாதானப் பேச்சுவார்த்தைகளின் இரண்டாவது அமர்வின் முடிவில் நோர்வே
அரசாங்கத்தின் கூற்று 2002 நவம்பர் 3 58. சண்டே ஒப்சேர்வர் 2002 பெப்ரவரி 2, Monthly News Brief2002 பெப்ரவரி
2இல் எடுத்துக்காடடப்பட்டவாறு, மனித உரிமைகளின் இல்லம் 59. நீடித்த தீர்வுகளின் தேர்ச்சி அறிக்கை 2002 மே 13-19, ஐக்கிய நாடுகளின்
உ.பு.ஆ செயற்குழுவின் வாராந்த மடல். 60. ஐ.நா.ம.உ.ஆ அகதிகளுக்கு விமானக் கட்டணமும் படியொன்றும் தங்கள் இறுதிச் சேர்விடத்திற்குப் பிரயாணம் செய்வதற்கான உதவியும் வழங்குகின்றது. 61. diLit 66f 2002 glassmö 27, Monthly News Brief Gatl (GLubuffs)
வெளியிடப்பட்டவாறு மனித உரிமைகளின் இல்லம்,
46

இந்திய முகாம்களில் பிறந்த சிறுவர்களின் பிறப்புப் பதிவுகள் இந்தியாவிலுள்ள இலங்கைத் துTதரகத்தால் புறக் குறிப்பு செய்யப்படவில்லை. ஆதலால் இச்சிறுவர்கள் நாடற்றவர்களாவர். இதனால் இவர்கள் உத்தியோகப் பூர்வமான முறையில் நாடு திரும்ப எத்தனிக்கையில் சிரமங்களுக்குள்ளாகின்றனர்.
10. உபு.ஆ, களுக்கு ஏற்புடைத்தான சர்வதேச, உள்ளூர்
LDJIL8ÍT.
உபு:ஆ களின் பாதுகாப்பிற்கான் பிரதான பொறுப்பு இலங்கை அரசைச் சார்ந்ததாகும். இப்பொறுப்பானது, சர்வதேச ரீதியில் உத்தரவாதமளிக்கப்பட்ட மனித உரிமைகளை தன் பிரசைகளுக்கு உத்தரவாதமளிக்கும் அரசின் பொறுப்பிலிருந்து எழுகின்றது. அத்தகைய உரிமைகள் அரசியலமைப்பிலிருந்து வந்தாலும் சரி, ஏனைய சட்டங்களிலிருந்து வந்தாலும் சரி, உடன்படிக்கையின் கடப்பாடுகளிலும் பாரம்பரிய சர்வதேச சட்டத்திலிருந்து வந்தாலும் சரி அது அரசினுடையதேயாகும்.
உள்ளுரில் புலம்பெயர்ந்தவர்களுக்கு விசேட உரிமைகளை வழங்கக்கூடிய தனித்துவமான ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களாக அவர்களை அங்கீகரிக்கும் திட்டவட்டமான சர்வதேச மனித உரிமை ஒப்பந்தம் எதுவுமில்லை. ஆதலால், சர்வதேச மனித உரிமைகளின் கீழும் மனிதாபிமான சட்டத்தின் கீழும் அத்தகைய கடப்பாடுகளை அரசு ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அல்லது அரச நடைமுறைகள் ஊடாகவும், அவை அரசைப் பிணிக்கின்றன என்ற நம்பிக்கையின் மீதும் அவை பாரம்பரிய சர்வதேச சட்டத்தின் ஒரு பாகமாக அமைகின்றபோது உ.பு.ஆட்கள் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திலிருந்து பாதுகாப்பு பெறுகின்றனர். எனவே, மனித உரிமைகள் மீதான சர்வதேசப் பிரகடனம், குடியியல், அரசியல் உரிமைகள் மீதான சர்வதேசச் சமவாயம் , சித் திரவதை, ஏனைய கொடுரமான, மனிதாபிமானமற்ற, இழிவான நடத்துகைக்கும் மற்றும் பெண்களுக்கும் எல்லாவிதமான பாரபட்சத்திற்கும் எதிரான சமவாயம், சிறுவர்களின் உரிமைகள் மீதான சமவாயம், பொருளாதார, சமூக கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்பாடு என்பன உட்பட ஐ. நா. ས་ཡི་ཆ་ལག་ பல உபு.ஆ களின் பாதுகாப்பிற்கு பெறுமதி மிக்க அடிப்படையாக அமைகின்றன. இலங்கை இந்த அனைத்து உடன்பாடுகளுக்கும் ஒரு திறத்தவராகும்.
47

Page 31
ஆயுதப் போராட்டத்தின்போது ஏற்புடைத்தாகும் பிரதான சட்டக் குழுமம, சர்வதேச மனிதாபிமான சட்டமாகும். 1949ஆம் ஆண்டின் ஜெனீவா சமவாயத்திற்கு இலங்கை ஒரு திறத்தவராகும். இதன்மூலம், போராட்டத்திற்கான இரண்டு திறத்தவர்களையும் பிணிக்கின்றதும் இரண்டு திறத்தவர்களுக்கும் ஏற்புடைத்தாகின்றதுமான நான்கு ஜெனீவா சமவாயங்களுக்கும் பொதுவான உறுப் புரை Il இனால பிணிக்கப்படுகின்றது. எனினும் சர்வதேசச் சார்பற்ற ஆயுதப் போராட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் 1997ஆம் ஆண்டின் ஜெனிவா சமவாயத்தின் உடன்பாடு III ஐ இலங்கை அங்கீகரிக்கவில்லை. உள்ளுரில் புலம்பெயர்ந்த ஆட்களின் ஐ.நா. பொதுச் செயலாளரின் பிரதிநிதி உள்ளுரில் புலம்பெயர்ந்தவர்களுக்கு வரைவுருச் சட்டம் ஒன்றை 1998இல் தயாரித்தார். இது இப்பொழுது உள்ளுரில் புலம்பெயர்ந்தவர்களுக்கு வழிகாட்டும் கோட்பாடுகள் என அழைக்கப்படுகின்றது. இக்கோட்பாடுகள் உள்ளுரில் புலம்பெயர்தலுக்கு இயைபான சர்வதேச மனிதாபிமான சட்டத்தினதும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தினதும் நெறிகளிலிருந்து வலிமைபெறுகின்றன. அத்துடன் உள்ளுரில் புலம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பிற்கு பெறுமதிமிக்க வழிகாட்டியாகவும் விளங்குகின்றன.?
இவற்றிற்கு மேலதிகமாக இலங்கையில் பல உள்ளுர் நெறிமுறைகள் உள்ளன. இவற்றில் அடிப்படை உரிமைகள் பற்றிய அரசியலமைப்பு உத்தரவாதங்களும் அடங்கும். புலம்பெயர்ந்தவர்கள் தங்களால் நிறைவுசெய்யமுடியாத சிக்கலான நடைமுறைத் தேவைப் பாடுகளாலும் வடக்கிலும் கிழக்கிலும் சட்டத்தை வலுவாக்கும் அமைப்புகள், நீதித்துறை முறைமைகள், சார்புடைய முகவராண்மைகள் எண் பன செயலTழ நீ துள்ளதாலும் இந்த உரிமைகளை நடைமுறைப்படுத்துவதிலிருந்து பாரதூரமாக தடுக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக புத்தளத்தில் வாழும் புலம்பெயர்ந்த வடபகுதி முஸ்லிம் வாசிகள் வாக்களிக்கும் உரிமை பற்றி மாற்றுக் கொள்கைகளுக்கான நடுநிலையத்தின் அனுசரணையுடனான அடிப்படை உரிமை மனுவொன்றில்° வாக்காளர்களாகப் பதிவுசெய்யப்படாத பட்சத்தில்
62. உபு.ஆ, களுக்கு இயைபான சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு பற்றிய முழு உரையாடலுக்கு சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அறநிலையத்தின் மனித உரிமைகளின் நிலைமை 2001 என்னும் வெளியீட்டைப் பார்க்கவும்.
63. கிறிஸ்தோபர் டேவிட் பெலிங் மற்றும் ஏனையோர் எதிர் தேர்தல் ஆணையாளர் மற்றும் ஏனையோர், நீ (S. C) விண்ணப்ப இல. 415/99, மே. நீ குறிப்புகள்
11.O.5.2OOO
48

சட்டத்தில் விதித்துரைக்கப்பட்ட நடைமுறைகளை அனுசரிக்கத் தவறியதன் காரணமாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. புலம் பெயர்ந்தவர்களின் சிக்கல்களையும் புலம்பெயர்ந்தவர்கள் எதிர் கொள்ளும் செயல்முறை சிரமங்களையும் நீதிமன்றம் கருத்திற் கொள்ளத் தவறியது.
11. புலம்பெயர்தல்
வடக்கிலும் கிழக்கிலும் புலம்பெயர்ந்த ஆட்களின் எண்ணிக்கை 1.3 மில்லியனாகும்" என புனரமைப்பு, புனர்வாழ்வு, அகதிகள் அமைச் சினாலும் ஐக் கசிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவாலும் 2002இல் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடொன்று வெளிப்படுத்துகின்றது. புலம்பெயர்ந்தவர்களுள் 78 வீதமானோர் தமிழர்கள், 13 வீதமானோர் முஸ்லிம்கள், 8 வீதமானோர் சிங்களவர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. குடிமக்கள் பலருக்கு புலம்பெயர்வானது நீண்டகாலம் நீடிப்பதும் மீண்டும் மீண்டும் நிகழ்வதுமான ஒரு சம்பவமாகும். இன ரீதியில் துப்பரவுசெய்யும் செயலொன்றில் வடக்கிலிருந்து எல்ரீஈ யால் விரட்டப்பட்ட சில முஸ்லிம்களும் சில சிங்களவர்களுமான உ.பு. ஆ, கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக குடியேற்றங்களில் வாழ்ந்துவருகின்றனர். புலம்பெயர்ந்த 80,000 முஸ்லிம்களுள் பெரும்பாலானோர் வட மேற்கு மாகாணத்திலுள்ள புத்தளத்தில் அடைக்கலம் தேடினர். இதுவரை பெருந்தொகையாக இவர்களால் திரும்பிச்செல்ல இயலாதிருக்கின்றது. ஊர்காவற்றுறையிலும் யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அப்பாலுள்ள தீவுகளிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை போன்ற மாவட்டங்களிலும் வாழும் மக்கள் போர் ஆரம்பித்தது முதல் திரும்பத்திரும்ப புலம் பெயர்ந்துள்ளனர்.
1995இல் எல்ரீஈ யை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடிக்கும் எண்ணத்துடன் இலங்கை ஆயுதப் படையினால் ஆரம்பிக்கப்பட்ட ரிவிரச இராணுவ நடவடிக்கையையடுத்து 3000,000 இற்கும் மேற்பட்டவர்கள் புலம்பெயர்ந்தனர். பெரும்பாலானோர் இப்பிரதேசத்திலிருந்து வெளியேறினர் அல்லது தீபகற்பத்திற்குத் தெற்கிலுள்ள வன்னிப் பிரதேசத்தில் குடியேறுமாறு எல்ரீஈ யினால் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
64. g3 g6600i 2002 ul,607 18 Monthly News Brief u1,606)u fish)
வெளியிடப்பட்டவாறு மனித உரிமைகளின் இல்லம்.
49

Page 32
அதனையடுத்து இதே பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கையினால் நூற்றுக்கணக்கான குடிமக்கள் வவுனியாவின் தென் பகுதிக்கு மேலும் தள்ளப்பட்டனர்.
இந்த பிரதான சம்பவங்களைவிட, எல்ரீஈ, யால் அல்லது ஆயுதந் தாங்கிய படைகளால் குடிமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நேரடித் தாக்குதலின் காரணமாகவும் புலம்பெயர்வு இடம்பெற்றது. வழமையான தொல்லைப்படுத்துதல், சிறுவர்களை படைக்குத் திரட்டுதல், பழிவாங்கும் அச்சம், அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட நீண்டகால பொருளாதாரத் தடை என்பனவும் புலம்பெயர்வுக்கு பங்களிப்பு செய்தன.
வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்தும் கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பலர் புலம் பெயர்ந்துள்ளனர். புத்தளம், குருநாகல், அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களும் அப்பிரதேசங்களும் தொடர்ந்து உபு.ஆ களுக்கு அடைக்கலம் தருகின்றன.
ஒவ்வொரு 25 இலங்கை யரில் ஒருவர் L|6) tĎ பெயர் ந் திருப்பதாகவும் வடக் கில் மூன்று பேரில் ஒருவர் புலம்பெயர்ந்திருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. பெருந் தொகையான உ.பு.ஆ. யாழ்ப்பாணத்திலிருந்தே வந்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 350,000 ஆகும். புலம்பெயர்ந்துள்ள ஆட்களின் மொத்த எண்ணிக்கையில் பெரும்பாலானோர் எல்ரீஈ யின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னியிலேயே உள்ளனர். இங்கு 300,000 உ.பு.ஆ.° இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
12. முடிவுரை
வடக்கிலும் கிழக் கிலும் வழமையான நிலைமையை எய்துவதற்கென உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையாலும் அதனையடுத்து 2002இல் எடுக்கப்பட்ட பல வழிமுறைகளாலும் உள்ளுரில் புலம் பெயர்ந்த ஆட்களுக்கும, போரினால் பாதிக் கப்பட்ட சமுதாயத்திற்கும் கணிசமான நிவாரணம் கிடைத்துள்ளது என்பதில்
65. மேற்படி குறிப்பு n, 13
50

சந்தேகமில்லை. எனினும் அரசினால் அவசரமாக கருத்திற் கொள்ளப்படாத பல பிரச்சினைகள் காரணமாக புலம்பெயர்ந்தவர்களால் போர் நிறுத்தத்தின் பயனை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. இப்பிரச்சினைகளுள் முக்கியமானவை மனிதாபிமான உதவி போதியளவிலும் உரிய நேரத்திலும் கிடைக்காமை, திரும்பிச் செல்வதற்கான வசதிகளும் வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான உதவியும் இல்லாமை என்பனவாகும். அரசு இப்பிரச்சினைகளை திறமையுடன் கையாளத் தவறியமைக்குரிய காரணம், ஒருங்கிணைந்த செயற்பாடின்மை, புலம்பெயர்ந்தவர்கள் விசேட தேவையைக் கொண்ட ஒரு பிரிவைச் சேர்ந்த ஆட்கள் என்பதை அங்கீகரிக்காமை, திட்டமிடல், நடைமுறைப்படுத்துதல், சேவைகளை வழங்குதல் என்பவற்றில் உரிமைகளின் அடிப்படையிலான அணுகுமுறையைக் கையாள மறுத்தல் என்பன அடங்கும். மீளாய்வுக்குட்பட்ட காலப்பகுதியில் மட்டுமில்லாமல், புலம் பெயர்ந்துள்ள பல ஆண்டு காலமாக புலம்பெயர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு இக் காரணிகள் ஏதுக்களாயிருந்துள்ளன.
米
O
51

Page 33
III
ஆளொருவருக்குள்ள கீர்த்தி சாந்தா ஜயவர்த்தன”
1. முன்னுரை
இந்த அத்தியாயம் 2002ஆம் ஆண்டின்போது ஆளொருவருக்குள்ள கீர்த்தி தொடர்பிலான உரிமைகள் சம்பந்தப்பட்ட அபிவிருத்திகளை மதிப்பீடு செய்யப்படுவதற்கு நாடுகின்றது. முதலில், இலங்கையின் சர்வதேச கடப்பாடுகள் உட்பட, இலங்கையில் ஆளொருவருக்குள்ள கீர்த்தி தொடர்பிலான உரிமைகளின் நோக் கெல்லையைத் தருகின்றது. அதன் பின்னர் இவ்வாண்டின்போது இடம்பெற்ற ஆளொருவருக்குள்ள கீர்த்தி தொடர்பிலான உரிமைகளின் பாரதூரமான மீறல் சம்பவங்களை எடுத்துக்காட்டி இயைபான நீதிமன்ற முடிவுகளையும் தருகின்றது. இறுதியாக, ஆளுக்குரிய கீர்த்தி தொடர்பிலான உரிமைகளை முன்னேற்றுவதற்கான விதப்புரைகளையும் அது விதந்துரைக்கும்.
இலங்கையில், கடந்த இரு தசாப்தங்களாக, அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற ஆயுதப்
* சட்டப் பட்டதாரி (கொழும்பு), சட்டத்தரணி ஆராய்ச்சியாளர், சட்டத்துக்கும்
சமூகத்திற்குமான அறநிலையம்

போராட்டம், பல பாரிய மனித உரிமைகளின் துஷபிரயோகங்களுக்கு, அதிலும் குறிப்பாக, ஆளுக்குரிய கீர்த்தி தொடர்பான மீறல்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.
2001 டிசம்பர் 5இல் ஐக்கிய தேசிய முன்னணி தேர்தலில் வெற்றியடைந்ததன் பின்னர் 2001 டிசம்பர் 24ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவித்தனர். இணக்கப் பேச்சுவார்த்தை மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவோம் என்ற ஆணையுடன் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொண்டது. யுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்து, நோர்வே அரசாங்கத்தின் முயற்சியால் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. இந்த அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2002 பெப்ரவரி 22இல் கைச்சாத்திடப்பட்டது. ஒப்பந்தம் காரணமாக அரச தரப்பிலும் விடுதலைப் புலிகள் தரப்பிலும், ஆளுக்குரிய கீர்த்தி தொடர்பிலான மனித உரிமைகளின் போர் தழுவிய மீறல்களின் எண்ணிக்கையில் கணிசமானளவு குறைபாடு காணப்பட்டுள்ளது.
ஆகவே, 2002ஆம் ஆண்டின் போது. ஆளுக்குரிய கீர்த்தி சம்பந்தமான உரிமைகளின் அந்தஸ்து புரிந்துணர்வு ஒப்பந்தப் பின்னணியிலும் சமாதானச் செயல்முறைப் பின்னணியிலும் வைத்து மதிப்பிடப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், ஆளுக்குரிய கீர்த்தி தொடர்பிலான உரிமைகள் வெறுமனே ஆயுதப் போராட்டச் சந்தர்ப்பத்தில் மாத்திரம் மீறப்படவில்லை. குற்றப்புலனாய்வின் போதும் பல உரிமைகள் மீறப்பட்டுள்ளன. எனவே, 2002ஆம் ஆண்டின் போது யுத்த மீறல்களின் எண்ணிக்கை குறைவடைந்த போதிலும், குற்றப் புலனாய்வுச் செயன்முறையின் போதான மீறல்களின் எண்ணிக்கையும் தன்மையும் பெரும் கவலைக்கிடமான விடயமாக இருந்து வந்துள்ளது.
2. ஆளுக்குரிய கீர்த்தி தொடர்பிலான உரிமைகளின்
நோக்கெல்லை
2.1. இலங்கையின் சர்வதேச கடப்பாடுகள்
குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச
சமவாயத்துக்கும் சித் திரவதை மற்றும் வேறு கொடூரமான,
மனிதாபிமானமற்ற அல்லது தரக்குறைவான துன்புறுத்தலுக்கு அல்லது
53

Page 34
தண்டனைக்கு எதிரான சமவாயத்துக்கும் திறத்தவராகவுள்ள இலங்கை உயிர் வாழ்வதற்கான உரிமைகளையும் கண்மூடித்தனமாகக் கைதுசெய்து தடுத்துவைத்திருப்பதற்கெதிரான சுதந்திரத்தையும்? சித்திரவதை அல்லது கொடுரமான மனிதாபிமானமற்ற அல்லது தரக் குறைவான துன்புறுத்தலுக்கு அல்லது தண்டனைக்கு எதிரான சுதந்திரத்தையும் போற்றிக் காப்பதற்குக் கட்டுப்பட்டதாகும்.
2.2. அரசியலமைப்பு உரிமைகள்
அரசியலமைப்பின் கீழ் அரசுக்குள்ள கடப்பாடுகள் அதன் சர்வதேச கடப்பாடுகளுடன் நோக்குகையில் வெகுவாகப் பின்தங்கி நின்ற போதிலும், அரசியலமைப்பிலுள்ள பல்வேறு ஏற்பாடுகள், அரசின் நிறைவேற்று அல்லது நிருவாகச் செயற்பாடுகளிலிருந்து ஆளுக்குரிய கீர்த்தியைப் பாதுகாக்கின்றன. 11ஆம் 13ஆம் உறுப்புரைகளின் கீழான உரிமைகள் எல்லா "ஆட்களுக்கும்’ உத்தரவாத மளிக் கப்பட்டுள்ளன என்பதையும் 12(2) மற்றும் 14ஆம் உறுப்புரைகளின்கீழான உரிமைகள் "பிரசைகளுக்கு" மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன என்பதையும் அவதானிக்க வேண்டும்.
உறுப்புரை 11: ஆள் எவரும் சித்திரவதைக்கு அல்லது கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது தரக் குறைவான துன்புறுத்தலுக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படுதல் ஆகாது.
உறுப்புரை 13: 1) ஆள் எவரும், சட்டவிரோதமாக கைது செய்யப்படுதல் ஆகாது.
2) கட்டுக் காவலரில் வைத் திருக்கப்படும், கட்டுக் காவலரில் தடுத்துவைக்கப்படும் அல்லது வேறுவகையாகச் சொந்தச் சுதந்திரம் பறிக்கப்பட்டவரான ஒவ்வோர் ஆளும், சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடைமுறைக்கிணங்க ஆகக்கிட்டிய தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் நீதிபதியின் கட்டளையின்மீது தவிரவும் அதன் நியதிகளின்படி
1. உறுப்புரை 3 மனித உரிமைகள் அனைத்துலக பிரகடனம், உறுப்புரை 6
கு.அ.உ.ச.ச (ICCPR), உறுப்புரை 9 ம.உ.அ.பி (UOHR), உறுப்புரை 9 கு.அ.உ.ச.ச. (ICCPR) உறுப்புரை 5 ம.உ.அபி உறுப்புரை 7 கு.அ.உ.சச, உறுப்புரை 2 சிஎச (CAT) இலங்கைக் குடியரசு அரசியலமைப்பின் 17ஆம் உறுப்புரை.
54

தவிரவும் மேலும் கட்டுக்காப்பில் வைத்திருக்கப்படுதல், தடுத்து வைத்திருக்கப்படுதல் மறித்து வைத்திருக்கப்படுதல் ஆகாது.
3) ..............
4) ஆள் எவரும், சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடைமுறைக்கிணங்க ஆகக்கிட்டிய, தகுதி வாய்ந்த நீதிமன்றத்தின் கட்டளைமூலம் தவிர, மரணதண்டனைமூலம் அல்லது மறியற்றண்டனைமுலம் தண்டிக்கப்படுதல் ஆகாது. புலனாய்வு அல்லது விளக்கம் இடம் பெறுவதனைப் பொறுத்து ஆள் ஒருவரைக் கைதுசெய்தல், கட்டுக்காவலில் வைத்திருத்தல், தடுத்து வைத்திருத்தல் அல்லது வேறுவகையாகச் சொந்த சுதந்திரத்தைப் பறித்தெடுத்தல் தண்டனையாக அமைதல் ஆகாது.
2.3 நியதிச் சட்ட ஏற்பாடுகள்
1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவைச் சட்டம் கைதுசெய்தல் தடுத்துவைத்தல் மற்றும் புலனாய்வு' என்பன தொடர்பிலான நடைமுறையை விதிக்கின்றது.
சித்திரவதையானது, 1994ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க, சித்திரவதை மற்றும் ஏனைய கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது தரக்குறைவான துன்புறுத்தலுக்கு அல்லது தண்டனைக்கு எதிரான சமவாயச் சட்டத்தின் மூலம் குற்றவியற் தவறாக ஆக்கப்பட்டுள்ளது. சித் திரவதைச் சட்டத்தின் கீழ் "சித் திரவதை” என்பது ஏழு ஆண்டுகளுக்குக் குறையாததும் பத்து ஆண்டுகளை விஞ்சாததுமான ஒரு காலப்பகுதிக்கு இரண்டிலொரு வகையான மறியற்றண்டனை மூலமும் பத்தாயிரம் ரூபாவுக்குக் குறையாததும் ஐம்பதினாயிரம் ரூபாவை விஞ சாததுமான குற்றப் பணத் தின் மூலமும் தண்டிக்கப்படுவதற்கான தவறொன்றாகும். மேலும் சித்திரவதை புரிய எத்தனித்தல், சித் திரவதை புரிய உதவுதல் மற்றும்
சட்டக்கோவையின் 23-29, 32, 36, 38, 43, 50-59 பிரிவுகள். சட்டக்கோவையின் 37ஆம் பிரிவு
சட்டக்கோவையின் 108-125 பிரிவுகள் இதனகத்துப்பின்னர் ‘சித்தரவதைச் சட்டம்’ எனக் குறிப்பீடு செய்யப்படும். 2(4)ஆம் பிரிவுடன் வாசிக்கப்படும் 2(1)ஆம் பிரிவு.

Page 35
உடந்தையளித்தல், சித்திரவதை புரிவதற்குச் சதிசெய்தல் என்பனவும் சித்திரவதைச் சட்டத்தின் கீழ் தவறுகளாகும்.
சித்திரவதையின் கீழான தவறுகள் பிடியாணையின்றிக் கைதுசெய்தற்குரியனவும் பிணையில் விடப்பட முடியாதனவும் ஆகும்." அல்லாமலும், சட்டத்தின் கீழ் தவறொன்றாக அமையும் ஏதேனும் செயல், போர் நிலைமை காணப்படும்போது, போர் இடம்பெறும் என்ற அச்சுறுத்தல் நிலவும்போது, உள்நாட்டு அரசியல் ஸ்திரமின்மை காணப்படும்போது அல்லது ஏதேனும் பகிரங்க அவசர கால நிலைமையின்போது அல்லது உயர்தர அலுவலரின் அல்லது பகிரங்க அதிகாரியின் கட்டளைக்கிணங்கப் புரியப்பட்டதென்பது எதிர்வாதமாதல் ஆகாது."
2.4. புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேற்கூறப்பட்ட சர்வதேச அரசியலமைப்பு மற்றும் நியதிச்சட்டக் கடப்பாடுகளுடன் மேலதிகமாக, 2002ஆம் ஆண்டில், மேலே குறிப்பீடு கூறப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆளுக்குரிய கீர்த்தி தொடர்பிலான உரிமைகள் மீது பரந்தளவு தாக்கத்தைக் கொண்டிருந்தது. அரசு மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டவர்களாக வந்ததோடு ஆளுக்குரிய கீர்த்தி தொடர்பிலான உரிமை மீறல்களின் எண்ணிக்கையில் பெருமளவு வீழ்ச்சியும் கண்டது. தற்போதைய கலந்தாராய்வுக்கு இயைபான புரிந்துணர்வு ஒப்பந்த ஏற்பாடுகள் வருமாறு:
உறுப்புரை 1.2:
இரு திறத்தவர்களுள் எவரும் ஏதேனும் இராணுவத் தாக்குதல் தொழிற்பாட்டில் ஈடுபடமாட்டார். இது சகல இராணுவ நடவடிக்கைகளின் பூரண நிறுத்தத்தைத் தேவைப்படுத்துகின்றது என்பதுடன், பின்வரும் செயல்களையும் மட்டுப்படுத்தப்படாமல் உள்ளடக்குகின்றது.
10. சித்திரவதைச் சட்டத்தின் 2(5)ஆம் பிரிவு.
II. FL'Lëg6l6ai înf6 3.
12. புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசியலமைப்புக்கு முரணானதா அல்லவா என்பதுபற்றிப் பல்வேறு அரசியலமைப்பு நிபுணர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அரசாங்கதின் முடிவை நீக்கக்கோரி உறுதிகேள் எழுத்தாணைக்கான 447/2002, 421/2002 மற்றும் 461/2002 விண்ணப்பங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோப்பிடப்பட்டன. இவ்விண்ணப்பங்கள் ஆண்டு முடிவில் முடிவுறாதுள்ளன.
13. அட்டவணை காண்க - பூரண ஒப்பந்த வாசகங்களுக்கும்.
56

அ) நேரடியான மற்றும் நேரடியற்ற ஆயுதங்கள்மூலம் சுடுதல்,ஆயுதந் தாங்கிய தாக்குதல்கள், மறைந்திருந்து தாக்குதல், படுகொலைகள், கடத்தல்கள், பொது மக்கள் அல்லது இராணுவச் சொத்தை அழித்தல், பகிஷ்கரிப்பு, தற்கொலைப் படையாளிகள், ஆழமாக ஊடுருவியுள்ள குழுக்களின் செயற்பாடுகள்;
ஆ) வான்வழிக் குண்டுத்தாக்குதல்;
இ) கடற்படைத் தாக்குதல் தொழிற்பாடுகள்.
உறுப்புரை 2.1:
திறத்தவர்கள். சர்வதேசச் சட்டத்துக்கிணங்க, சித்திரவதை, அச்சுறுத்தல், கடத்தல், பறித்தல் மற்றும் துன்புறுத்தல் உட்பட, பொதுமக்களுக்கு எதிரான விரோதச் செயல்களைத் தவிர்த்துக்கொள்ளுதல் வேண்டும்.
3. அறிக்கையிடப்பட்ட மீறுகைகள்.
3.1. பொதுமக்கள் மீதான தாக்குதல்கள்
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் பொதுமக்களைத் தாக்குவதில்லை எனக் கட்டுப்பட்ட போதிலும் பொதுமக்களைத் தாக்கிய சில சம்பவங்கள் பற்றி அறிக்கையிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த இரு தசாப்தங்களின் போது, எந்த ஆண்டிலும் பொதுமக்கள் மீது நடாத்திய தாக்குதல்களின் எண்ணிக்கையையும் பாரதூரத் தன்மையையும் ஒப்பிடுகையில், 2003ஆம் ஆண்டில் இடம்பெற்ற சம்பவங்கள் மிகக் குறைவானதாகும்.
3.1. அ) அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்
2002 ஜனவரி 21ஆம் திகதி கடற்புலிகளின் தளமான சாலை என்னுமிடத்துக்கு சமீபமாக இலங்கை கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்குமிடையே இடம்பெற்ற மோதலில், இலங்கை விமானப் படையினர் கரையோரப் பகுதிகளான சுண்டிக் குளத்துக்கும் மதலனுக்குமிடையே குண்டு வீசித் தாக்கியதில் ஐந்து குடிமக்கள் காயமடைந்தனர்." ஆயுதங்களை ஏற்றிச் செல்லுவதாக நம்பப்பட்ட
14. இலங்கை மொனிட்டர் - இல.169 பெப்புரவரி 2002, பிரித்தானிய அகதிகள் சபை.
57

Page 36
கடற்புலிகளின் பத்துப படகுகளை கடற்படையினர் வழிமறிக்க முற்பட்டபோது மேற்படி சம்பவம் இடம்பெற்றது.
2002 ஆகஸ்ட் 16ஆம் திகதி, யாழ்ப்பாணத்துக்கு மேற்கே ஊர்காவற்றுறைத் தீவிலுள்ள நாரந்தனையில் கள்ளுத் தவறணை யொன்றில் வைத்து கடற்படையினர் சில பொதுமக்களைத் தாக்கியதாக அறிவிக்கப்பட்டது. இதில் ஏழு பேர் காயமடைந்ததாகத் தெரியவந்தது.* 2002 செப்டெம்பர் 3ஆந் திகதி இலங்கைக் கடற்படையினர் யாழ்ப்பாணத்திலுள்ள மண்டைதீவின் வடகிழக் காகவுள்ள சிறுத்தீவுக்குக் அருகில் ஏழு கடற்றொழிலாளிகளைத் தாக்கியுள்ளனர்."
2002 ஒக்டோபர் 9ஆம் திகதி விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் அம்பாறை மாவட்டத்தில் காஞ்சிரன்குடா என்னும் இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டத்தினரை நோக்கிச் சுட்டதில் ஏழு தமிழ்ப் பொதுமக்கள் இறந்ததுடன் 13 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களுள் நால்வர் மாணவர். அறிக்கை களின்படி காஞ்சிரன்குடா பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் பொத்துவிலில் விடுதலைப் புலிகளின் தலைவரும் ஏனைய இருவரும் அதிரடிப் படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாகும் இது. விடுதலைப்புலிகளின் தலைவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தே பல்லாயிரக் கணக்கான மக்கள் பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் கூடினர். தமது நிலையத்தை மக்கள் தாக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து மக்கள் நோக்கிச் சுட்டதாக விசேட அதிரடிப் படையினர் கூறினர்."
2002 செப்டெம்பர் 11ஆம் திகதி விசேட அதிரடிப் பொலிஸ் படையினர் அம்பாறை மாவட்டத்திலுள்ள சாகமம் கிராமத்திலுள்ள வீடுகட்டும் தொழிலாளர்கள் ஏழு பேரைத் தாக்கியுள்ளனர். இந்த அதிரடிப் பொலிஸ் படையினர் வேலையாட்களை நோக்கிச் சுட்டும் உள்ளனர். ஆனால் எவரும் காயப்படவில்லை."
15. இலங்கை மொனிட்டர் - இல.175 ஆகஸ்ட் 2002, பிரித்தானிய அகதிகள் சபை,
16. இலங்கை மொனிட்டர் - இல.176 செப்ரெம்பர் 2002, பிரித்தானிய அகதிகள்
96.O.
17. இலங்கை மொனிட்டர் - இல.177 ஒக்ரோபர் 2002, பிரித்தானிய அகதிகள் சபை,
18. இலங்கை மொனிட்டர் - இல. 176 செப்ரெம்பர் 2002, பிரித்தானிய அகதிகள்
F6D.

3.1. ஆ) விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட
தாக்குதல்கள்
2002 பெப்ரவரி 16ஆம் திகதி மட்டக்களப்பில் வாழைச்சேனைக்கு அப்பால் உள்ள கடலில் 21முஸ்லிம் மீனவர்கள் கடத்தப்பட்டனர். எவ்வாறாயினும், கிராமத்தவர் அனுஷ்டித்த ஹர்த்தாலைத் தொடர்ந்து, மறுநாள் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.° கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளால் கப்பம் கோரித் துன்புறுத்தல்களுக்கும் கடத்தல்களுக்கும் உட்படுத்தப்படுவதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.*
அரசாங்கத்துடன் நல்லுறவு வைத்திருக்கும் தமிழ் குழுக்களின் உறுப்பினர்களும் விடுதலைப் புலிகளால் துன்புறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 2002 செப்டெம்பர் 1ஆம் திகதி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இரு ஆதரவாளர்கள் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளனர்.?
3.2. கைதுசெய்தலும் தடுத்துவைத்தலும்
இவ்வாண்டின்போது கைதுசெய்தல்களும் தடுத்துவைத்தல்களும் குற்றவியல் புலனாய்வுச் செய்முறையின் பாகமாகத் தொடர்ந்து இடம்பெற்றன. எவ்வாறாயினும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அரசாங்கம் குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படும் ஆட்களைக் கைது செய்வதனைத் தவிர்த்தபடியால், முன்னைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் சட்டவிரோதக் கைது செய்தல்களினதும் தடுத்து வைத்தல்களினதும் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும்.
3.2.1.பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து
வைத்திருப்போர்?
19. இலங்கை மொனிட்டர் - இல.169 பெப்புரவரி 2002, பிரித்தானிய அகதிகள் சபை
20. Ibid
21. இலங்கை மொனிட்டர் இல. 175, ஆகஸ்ட் 2002, பிரித்தானிய அகதிகள் சபை.
22. ப.த.ச. (PTA)வின் கீழான கைதுசெய்தல்கள் மற்றும் தடுத்துவைத்தல்கள் தொடர்பான விரிவான விளக்கங்களுக்கு “விலங்கை சாதுவானதாக்கல்: இலங்கையில் அரச வன்முறைக்கான நீதிமுறை மார்க்கம்” கலாநிதி தீபிகா உடகம, எல்எஸ்ரிமீளாய்வு தொகுதி 9 தொடர் 137 மார்ச் 1999 சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அற நிலையம் கொழும்பு மற்றும் "பயங்கரவாதத் தடைச் சட்டம் சர்வதேச மனித உரிமைத் தராதரங் களை மீறுகின்றது” எஸ்வி கணேசலிங்கம், சுவருக்கு அப்பால் ஜூன்-ஆகஸ்ட் 2002, மனித உரிமைகள் இல்லம், கொழும்பு.
59

Page 37
சமாதானப் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, விடுதலைப் புலிகளும் மனித உரிமை காப்பவர்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்த் தடுத்து வைத்திருக்கப்படும் ஆட்கள் பற்றித் தமது விசனத்தை வெளிப்படுத்தினர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஏறக்குறைய 1,700 தமிழ்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி பிற்பகுதியில், சுதந்திர தினத்தில் ஜனாதிபதி 2,500 குற்றவாளிகளுக்கு மன்னிப்பளித்தபோது, பல்வேறு மறியற் சாலைகளிலுள்ள 473தமிழ் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டோர் தமது வழக்குகளை மீளாய்வு செய்யக்கோரி, உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடாத்தினர்.? மீண்டும் ஜூலை மாதத்தில் களுத்துறை மற்றும் மட்டக்களப்பு மறியற் சாலைகளிலுள்ள தடுத்து வைக்கப்பட்டோர் 100 பேர் g5lb60)LD விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் கணிப்புப்படி, 2002ஆம் ஆண்டின் இறுதியில் 65பேர் மாத்திரமே தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.* ஏனையோர் விடுவிக்கப்பட்டனர்.
3.3. சித்திரவதை
இவ்வாண்டின்போது சித்திரவதை பரந்துபட்ட பிரச்சினையாகத் தொடர்ந்தும் பேணப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு பாகத்திலிருந்தும் பொலிஸ் அலுவலர்களினால் மேற் கொள்ளப்படும் பல சித்திரவதைச் சம்பவங்கள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் பாரதூரத் தன்மையும் எண்ணிக்கையும் பெரும் விசனம் தருவதாக உள்ளது. நவம்பர் மாதத்தில், சர்வதேச மன்னிப்புச்சபை, சித்திரவதையை நிறுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக் குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது. சித்திரவதையைத் தடுத்தல் மற்றும் புலனாய்வு செய்தல் தொடர்பில் பொலிசார், நீதிவான்கள் மற்றும் வைத்தியர்கள் ஆகியோரின் பங்களிப்பு முற்றுமுழுதானதாகவும், பாரபட்சமற்றதாகவும் இருக்கவேண்டும் என அது கோரியதுடன் "சித்திரவதை புரியப்பட்டுள்ளது என நம்புவதற்கு நியாயமான காரணம் இருக்கின்றவிடத்தெல்லாம், பொலிசாரின் தலையீடற்ற, குற்றவியல் புலனாய்வை நடாத்துவதற்குத் தேவைப்படும் அவசியமான தத்துவங்களும் நிபுணத்துவமும் கொண்ட, முழுக்கமுழுக்கச் சுயாதீனமான புலனாய்வுக் குழுவொன்றைத” தாபிக்க வேண்டுமெனவும் விதந்துரைத்தது.*
23. இலங்கை மொனிட்டர் - இல.168 ஜனவரி 2002, பிரித்தானிய அகதிகள் சபை
24. சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை 2003.
25. சர்வதேச மன்னிப்புச் சபை - பத்திரிகை வெளியீடு 2002 நவம்பர் AI சுட்டி
ASA 37/017/2002(Gungji)
60

3.3.1. கல்கிரியகம பொலிஸ் நிலையம்
அனுராதபுர மாவட்டத்திலுள்ள கல் கிரியகம பொலிஸ் நிலையத்தில் பல சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் எட்டு மாதங்களுக்குள்ளாக இந்தப் பொலிஸ் நிலையத்தில் எட்டுச் சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெற்றதாகச் செய்தித் தாளொன்று தகவல் வெளியிட்டது.* பொலிஸ் நிலையத்தில் பின்வருவோர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர். கெக்கிராவ - புபொகமைவைச் சேர்ந்த நிகால் காந்த உதயகுமார, சியம்பலாபே - அளுத்கெதரவைச் சேர்ந்த பிரனித் சந்தன, பிரசன்ன சுமித், அஜித் ஜயந்த, சனத் சமீர, கயான் சமீர, அக்குரஸ்ஸ கமகே நெல்சன் சில்வா, கிரிகாமிகே புஞ்சிரால, ஏக்கநாயக்க முதியான்செலாகே சுனில் பண்டார மற்றும் சிசிர பண்டார கொடுரமான வழிமுறைகளை கையாள்வதால் தமது பிரதேசத்தில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் தாம் வெற்றிகண்டுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பு அலுவலர் செய்தித்தாளுக்குப் பேட்டி அளிக்கும்போது தெரிவித்தார்? பொலிஸ் நிலையப் பொறுப்பு அதிகாரிக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் பற்றி வெகுசனச் சாதனங்களில் அறிக்கையிடப்படவில்லை.
3.3.2. பாலியல் சித்திரவதை
பொலிஸ் மற்றும் ஆயுதப் படையினரின் கட்டுக் காப்பில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை பாலியல் ரீதியாகச் சித்திரவதை செய்யும் பழக்கம் 2002இல் தொடர்ந்தது.* கட்டுக்காவலில் இருக்கும் போது பாலியல் வல்லுறவுச் சம்பவங்களைத் தடுப்பதற்காகவும் அத்தகைய சம்பவங்களுக்கு காரணம் சொல்லவேண்டிய பொறுப்பை உறுதிப் படுத்துவதற்காகவும் சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்துக்குப் பல்வேறு விதப்புரைகளைச் செய்தது.? சில விதப்புரைகள் வருமாறு:
26. றாவய, 2002.08.25
27. Ibid.
28 2001ஆம் ஆண்டில் பாலியல் சித்திரவதை தொடர்பாக எட்டுச் சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளதென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்தது. இந்த நான்கு சம்பவங்களிலும் கற்பழிப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கை: கட்டுக்காப்பில் கற்பழிப்பு, சர்வதேச மன்னிப்புச் சபை, ஜனவரி 2002.
29. Ibid
61

Page 38
பெண்களுக்கெதிரான சகல வகைப்பட்ட பாரபட்சங்களையும் ஒழிப்பதற்கான ஐ.நா. சமவாயத்துக்கான கட்டாயமற்ற தாயேட்டை அரசாங்கம் ஏற்று அங்கீகரிக்க வேண்டும்.
பெண் ஒருவரைக் கைதுசெய்தல் பெண் உத்தியோகத்தரால் நிறைவேற்றப்படுவதனையும் பெண் அலுவலர்களின் பாதுகாப்பில் பெண்கள் தடுத்துவைக்கப்படுவதனையும் தடுத்துவைத்திருக்கும் பெண்களை விசாரிக்கும்போது பெண் காவலர்கள் சமூகமாகி இருப்பதனையும் அரசாங்கம் நிச்சயப்படுத்துதல் வேண்டும்.
அரசாங் கம் மருத் துவ உயர் அதிகாரிகளினதும் நீதிவான்களினதும் பங்கை மீளாய்வு செய்யவேண்டும் என்பதுடன் நீதி மருத்துவ அலுவலர்களினதும் குறிப்பாக மாவட்ட மருத்துவ அலுவலர்களின் பயிற்சியை மேம்படுத்துவதற்கு அவசியமான எல்லா வழிவகைகளையும் பரிசீலித்தல் வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர்களை மிகவும் வினைத் திறமையாக புலனாய்வு செய்வதனையும், வழக்குத் தொடர்வதனையும் உறுதிப்படுத்துவதற்காக, கட்டுக்காவலில் இருக்கும்போது இடம்பெறும் பாலியல் வல்லுறவு தொடர்பான நடப்பிலுள்ள சட்ட மற்றும் நிறுவன ரீதியான கட்டமைப்பைப் பூரணமாக மீளாய்வு செய்யும் பணியை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.
குருநாகல் மாவட்டத்தில் வாரியப்பொல பொலிஸ் பிரிவிலுள்ள இகலதீகல்ல - பமுன கொட்டுவவைச் சேர்ந்த நந்தனி சிறியலதா ஹேரத், 2002 மார்ச் 8ஆந் திகதியன்று வாரியப்பொல பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு மூன்று நாட்களாகக் கட்டுக்காவலில் வைக்கப் பட்டிருந்தார். கட்டுக்காவலில் இருக்கும்போது அவரது பெண்ணுறுப்புக்கூடாக இறப்பர் குழாயைச் செலுத்தியதன்மூலம் பொலிசாரால் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். அவர் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் களவொன்று தொடர்பாக வாக்குமூலம் பதிவுசெய்யும் நோக்கத்துக்காக பொலிஸ் நிலையத்துக்குக் கூட்டிச் செல்லப்பட்டிருந்தார்."
வாரியப்பொல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் அந்நிலையத்தின் பொலிஸ் உப பரிசோதகரும் நந்தனி சிறியலதா மீது இழைக்கப்பட்ட சித்திரவதை தொடர்பாக வாரியப்பொல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டனர்." 2002 செப்ரெம்பர் 31ஆந் திகதியன்று விளக்கம் ஆரம்பித்து ஆண்டின் இறுதிவரை முடிவுறாதுள்ளது. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களாகக் கூறப்படும் ஐந்து பொலிசார் வாரியப்பொல பொலிஸ் நிலையத்திலிருந்து இடமாற்றஞ் செய்யப்பட்டுள்ளனர்.
30 றாவய, 28.04.2002 31. லங்காதீப 8.8.2002

3.3.4. ஹினிதுமவில் இரு பாடசாலை மாணவியர் சித்திர
வதைக்கு உட்படுத்தப்பட்டனர்
ஜூலை மாதத்தில், காலி மாவட்டத்திலுள்ள ஹினிதும மல்லிகா மகாவித்தியாலய மாணவியர் இருவர் ஹினிதும பொலிஸ் நிலைய பொலிஸ் அலுவலர் களால் கொடுரமான சித் திரவதைக் கு உள்ளாக்கப்பட்டனர். 10வயதுகொண்ட வழிரான் றசிக்காவும் 13வயது கொண்ட கசுன் மதுசங்காவும் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலையில் இரண்டு சீனிப்பாண்களைத் திருடினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 2002 ஜூலை 8ஆந் திகதி கைதுசெய்யப்பட்டனர்.* இவ்விரு மாணவிகளும் கம்பில் தொங்க வைத்துத் தாக்கப்பட்டனர். இவர்களை மயிரைப் பிடித்து இழுத்தனர். இவர்களது கைநகங்களில் ஊசிகள் ஏற்றப்பட்டன. இரு மாணவிகளாலும் இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சித்திரவதை தொடர்பாக வழக்குத் தொடர நீதிமன்றம் அனுமதியை வழங்கியது.* இவ்வழக்குகள் ஆண்டு முடிவிலும் முடிவுறாதுள்ளன.
3.3.5, லெபனானில் புலம்பெயர்ந்த பெண் வேலையாட்களின் சித்திரவதையும் மனிதாபிமானமற்ற துன்புறுத்தலும்
வேலைக்கமர்த்தப்பட்ட இடங்களை விட்டு வெளியேறிய புலம்பெயர்ந்த பெண் வேலையாட்கள் லெபனானில் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் இலங்கைத் தூதுவராலயத்தால் நடாத்தப்படும் "பாதுகாப்பு மனை'யில் மனிதாபிமானமற்ற துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக ஜனவரி மாதத்தல் வெளியிடப்பட்டது. அவர்களுக்கு நாளொன்றுக்கு இருவேளை உணவுகளே கொடுக்கப்படுகின்றது. 140 பெண்கள் ஒரேயொரு சுகாதாரக்கேடான மலசலகூடத்தைப் பாவிக்க வேண்டும். மேலும், அறிக்கையின்படி, ஒரு பெண், தூதுவராலய உத்தியோகத்தரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார். சில இளம்பெண்கள் உத்தியோகத்தர்களால் விபசாரத் தொழிலில் ஈடுபடுமாறு கட்டாயப் படுத்தப்படுகின்றனர்."
32. திவயின, 05.08.2002 33. உநீஅ.உ. விணணப்பங்கள் 483/2002 மற்றும் 484/2002 34. டெயிலி மிறர் 4.1.2002

Page 39
3.4. கட்டுக்காவலில் இருக்கும்போதான மரணம்
2002 ஆம் ஆண்டின்போது எட்டு மரணங்கள் சம்பவித்துள்ளன.” ஏப்பிரல் மாதத்தில் கனஹறிமுல்ல - முத்தரகமவைச் சேர்ந்த ஜயரத்ன றணசிங்க மீரிகம பொலிஸ் நிலையத்தில் கட்டுக்காவலில் இருக்கும்போது மரணமெய்தினார். மரணமெய்தியவர் தேங்காய்கள் திருடியதற்காக, 2002 ஏப்பிரல் 10ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்." உபாலி ஜயரட்ன, வயது 32, மறியற்சாலை அலுவலர்களால் தாக்கப்பட்ட பின்னர், குருவிட்ட விளக்க மறியற் சாலையில் கட்டுக்காவலில் இருக்கும்போது இறந்தார். கைதுசெய்யப்படும் நேரத்தில் மகன் நல்ல சுகதேகியாக இருந்தார் என நீதிவான் விசாரணையில் தாய் சாட்சியமளித்தார்." இரத்தினபுரி சட்ட மருத்துவ அலுவலரால் நடாத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் மரணம் தலையில் ஏற்பட்ட காயத்தினால் விளைந்தது எனத் தீர்க்கப்பட்டது.*
ஜூன் மாதத்தில், 19வயது நிரம்பிய, மாக்கோல வடக்கு சிறீ பன்னசிறி மாவத்தையைச் சேர்ந்த சுசில் ஜயலத், கப்புகளில்கந்த பொலிஸ் நிலையத்தில் கட்டுக்காவலில் இருக்கும்போது இறந்துள்ளார். இவர் ‘கஞ்சா போதைப் பொருள் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில், தெனிமுல்லவில், 2002 ஜூன் 29ஆம் திகதி கைது செய்யப்பட்டார்?.
ஜூலை மாதத்தில் எதந்துவாவவைச் சேர்ந்த எம்.கே.பியரட்ன, பொலிசாரால் தாக்கப்பட்டதன் பின்னர் பேராதனைப் பொலிஸ் நிலையத்தில் கட்டுக்காவலில் இருக்கும்போது இறந்தார்." பேராதனை ஆஸ்பத்திரியில் இருந்து குணமாகி வைத்தியசாலையை விட்டு வெளியேறும்போது 2002 ஜூலை 3ஆம் திகதி பேராதனைப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார். அவர் கண்டி - கொழும்பு வீதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார். உண்மையில் அவர் ஆஸ்பத்திரிக்கு வெளியே நின்ற வாகனத்துள் ஏறி, தம்மை வீட்டில் விடுமாறு சாரதிக்குக் கூறினார். சாரதி அவ்வாறு செய்ய மறுத்தார். இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட, அங்கு வந்த பொலிசார் இடையில் தலையிட்டு
35. பத்திரிகைகளில் வெளிவந்தது உண்மையான கட்டுக்காப்பிலான
மரணங்களின் தொகை வேறுபடலாம்.
36. லங்காதீய 20.04.2002.
37. தினமின 30.04.2002.
38. Ibid
39. றாவய, 14.07.2002 திவயின 7.7.2002.
40 றாவய,21.07.2002
64

இவரைப் பேராதனைப் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பியரட்ண தனது தலையை நிலத்தில் மோதிக் கொண்டார் எனவும் அவரை எந்தப் பொலிஸ் அலுவலரும் தாக்கவில்லை எனவும் புதினப் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.
2002 ஒக்டோபர் 25ஆம் திகதி கன்னிமகரவத்துறுகமவைச் சேர்ந்த ரஞ்சித் கருணாரத்ன, 26 வயது, கிரிந்திவெல பொலிஸ் அலுவலர்களால் தாக்கப்பட்ட பின்னர், பொலிஸ் கட்டுக் காவலில் இருந்தபோது இறந்துள்ளார். களவொன்றோடு சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் 2002 ஒக்டோபர் 20ஆம் திகதி ரஞ்சித் கருணாரத்ன கைது செய்யப்பட்டார். 2002 நவம்பர் 1ஆம் திகதி? பூகொட நீதிவானுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட றாகம சட்ட மருத்துவ அதிகாரி யின் அறிக்கையின்படி மொட்டையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட மிகையான இரத்தப்போக்கினாலும் அதிர்ச்சியினாலும் மரணம் ஏற்பட்டதென்ற முடிவுக்கு வரமுடிந்தது.*
நவம்பர் மாதத்தில் அனுராகொடவெரலுகம்பொலவைச் சேர்ந்த, பிங்கமுவ அப்புகாமிலாகே பியதாச, வயது 70, பொலிஸ் அலுவலர்களால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், கிரிந்திவெல பொலிஸில் கட்டுக் காவலில் இருந்தபோது இறந்தார்." றாகம வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அலுவலர் மொட்டையான ஆயுதத்தினால் தலையைத் தாக்கியதன் மூலம் மரணம் சம்பவித்தது எனத் தெரிவித்தார்."
செப்டெம்பர் மாதத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையான அத்தப்பத்து முதியான்செலாகே நிமல் பண்டார, 41வயது, ஆனமடுவ பொலிஸ் நிலைய பொலிஸ் அலுவலர்களால் தாக்கப்பட்ட பின்னர் இறந்தார். இவர் பசுவொன்றைக் களவாடியதற்காக, கிராமத்தவர்களால் கைதுசெய்யப்பட்டு ஆணமடுவ பொலிசில் ஒப்படைக்கப்பட்டார்."
10மில லிகிறாம் 'ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்தமைக்காக 2002 செப்ரெம்பர் 21ல் கைதுசெய்யப்பட்ட பின்னர், நவகமுவ பொலிஸ் நிலையத்தில் கட்டுக்காவலில் இருந்தபோது விக்ரமாராச்சிலாகே கமல் விக்ரமாராச்சி, 28 வயது மரணமடைந்தார்."
41. திவயின 28.10.2002 42. லக்பிம 15 நவம்பர் 2002. 43. லங்காதீய 18.01.2002. 44. திவயின 17.01.2003 45. லங்காதீய 6.9.2002 46. லங்காதீப 26.09.2002

Page 40
3.5. தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமை
குறிப்பாகச் சித்திரவதை போன்ற, மனித உரிமைகளின் துஷ்பிரயோகத்தை மேற்கொள்பவர்கள் தண்டனையிலிருந்து விலகிக் கொள்ளமுடியும் என்ற மனப்பாங்குடன் செயற்படுவது தொடர்ந்தும் ஒரு கவலைக்குரிய விடயமாகும். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகள் எவற்றையும் எடுக்கத் தவறியுள்ளது.
உதாரணமாக, மேலே குறிப்பீடு செய்யப்பட்ட நந்தனி சிறியலதாவின் சித்திரவதை விடயத்தில், ஓர் அமைச்சரவை அமைச்சர் - அதிலும் குறிப்பாக மகளிர் விவகார அமைச்சர் - சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக் கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தடுத்துள்ளார்." அதேவேளை பாதிப்புக்குள்ளானவரின் சட்டத்தரணிகளை பொலிசார் அச்சுறுத்தியுள்ளனர்."
4. நீதித்துறை அபிவிருத்திகள்
ஆளுக்குரிய கீர்த்தி தொடர்பாக இவ்வாண்டின்போது இரண்டு குறிப்பிடத்தக்க நீதித்துறை அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன." முதலாவதாக, அரசியலமைப்பின் 11ஆம் உறுப்புரையின் மீறுகைகள் தொடர்பான உயர் நீதிமன்றத்துக்கான அடிப்படை உரிமை மனுக்களின் சட்ட அந்தஸ்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இரண்டாவதாக உயர் நீதிமன்றம் "பாலியல் வல்லுறவை" "சித்திரவதை"யின் ஒரு வடிவமாக அங்கீகரித்தது.
4.1. சித் தரவதை தொடர்பான அடிப் படை உரிமை
மனுக்களின் சட்ட அந்தஸ்து.
சிரியாணி சில்வா எதிர் இடமல்கொட மற்றும் ஆறுபேர்" என்ற வழக்கின் உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஆளுக்குரிய கீர்த்தி சம்பந்தமான உரிமைகள் மீது மிகவும் கூடுதலான அளவு தாக்கத்தை ஏற்படுத்தியது."
47. Ibid
48. சர்வதேச மன்னிப்புச் சபை, ASA 37/014/2002, 10, செப்ரெம்பர் 2002
49. “மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு’ எம்.ரட்நாயக்கா எழுதிய
அத்தியாயம் காண்க.
50 உநீ.அ.உ.விண்ணப்பம் 471/2002
51. உநீகுறிப்புகள் 10.12.2002

மனுதாரர்? 2000 - ஜூன் 12ஆம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் ஆறுநாட்கள், மகசீன் விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருக்கும்போது இறந்தவரின் மனைவி ஆவார். அரசியலமைப்பின் 11, 13 (1) மற்றும் 13(2) ஆகிய உறுப்புரைகளால் கணவனுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் பிரதிவாதிகளான பொலிஸ் அலுவலர்களினால் மீறப்பட்டதெனக் கோரி, மனுதாரருக்கும் 2/2 வயதுப் பிள்ளைக்கும் நட்டஈடு கோரினார்.
பிரதிவாதிகள் சார்பில் எழுப்பப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனைகளுள் ஒன்று, அரசியலமைப்பின் 126(2) என்னும் உறுப்புரையின்படி மனுதாரருக்கு மேற்படி மனுவைத் தாக்கல் செய்வதற்கு சட்ட அந்தஸ்து இல்லை என்பதாகும். அரசியலமைப்பின் 126(2) என்னும் உறுப்புரை உயர் நீதிமன்றத்துக்கு அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்வதற்கான முறைக்கு ஏற்பாடு செய்கின்றது.
இங்கு தீர்க்கப்பட வேண்டிய விடயம் யாதெனில், குற்றச் செயலுக்கு இலக்கானவர் தவிர்ந்த வேறு ஆள் (இவ்விடயத்தில் மனைவி) 126(2) என்னும் உறுப்புரையின் ஏற்பாடுகளின் நியதிகளின் படி உயர் நீதிமன்றத்துக்கு மனுத்தாக்கல் செய்யமுடியுமா? இல்லையா? என்பதாகும்.
உயர் நீதிமன்றம் பெரும்பான்மை தீர்ப்புமூலம் (நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவுடன் பிரதம நீதியரசர் உடன்பட்டு) மனுதாரர் சார்பில் தீர்ப்பளித்து பிரதிவாதிகளால் எழுப்பப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனையைத் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றம் அடிப்படையாகக் கொண்ட காரணங்கள் இரண்டு; முதலாவதாக நீதிமன்றம் “பரிகாரமொன்றின்றி உரிமையொன்றில்லை” என்ற வாக்கில் தங்கியிருந்தது. இரண்டாவதாக, வேறு வகையாகத் தீர்ப்புக் கூறினால் அது விழலானதாகிவிடும் என்பதாகும்.
நீதியரசர் பண்டாரநாயக்க பின்வருமாறு தீர்ப்பளித்தார்:
- - - - a கைதுசெய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு ஈற்றில் மரணத்தைத் தழுவிய தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட மரணமெய்தியவர், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டமைக்காக இந்நீதிமன்றத்திலிருந்து நிவாரணம் நாடுவதற்கு அரசியலமைப்பின் கீழ் உரிமையைப் பெற்றுக் கொள்ளு
52. ஆரம்ப மனு சட்டத்தரணியினால் கோப்பிடப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் மரணமெய்தியவரின் மனைவியைது வழக்கின் மனுதாரராக ஆக்கும்வண்ணம் மனு திருத்தப்பட்டது.
67

Page 41
கிறார். மரணம்கூட அடிப்படை உரிமைகளின் மீறலாக அமையும் காயங்களின் விளைவானதாக ஏற்பட்டதாகும், அத்தகைய மரணம் காரணமாக, உரிமை இல்லாதொழிந்ததாகவும் பயனுறுதியற்றதாக வந்துவிட்டதாகவும் ஒருபோதும் எடுத்துக் கொள்ளக்கூடாது. அத்தகைய ஒரு பொருள்கோடல் கொடுக்கப்படாவிட்டால், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு ஆனால் தப்பிப்பிழைக்கும் ஆளொருவர் இந்நீதிமன்றத்தின் முன்னர் தமது உரிமைகளுக்காகப் போராடி அவற்றை வென்றெடுக்க முடியும்; ஆனால் சித்திரவதை கொடூரமானதானால் அது மரணத்தில் கொண்டுபோய்விட, இந்நீதிமன்றத்தில் உரிமைக்காகப் போராடி வென்றெடுக்க முடியாத நிலைமைக்குத் தள்ளிவிடும்.* (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது)
உயர் நீதிமன்றங்களுக்கான அடிப்படை உரிமை விண்ணப் பங்களைப் பொறுத்தவரை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் எதிர்காலத் தாக்கங்களைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். எவ்வாறாயினும், உயர் நீதிமன்றம் சோமாவதி எதிர் வீரசிங்க மற்றும் ஏனையோர் வழக்குத் தீர்ப்பை நிராகரிக்கவில்லை." நீதிமன்றம் நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த வழக்கை வேறுபடுத்திக் காட்டியது. நீதியரசர் பண்டாரநாயக்க பின்வருமாறு கூறினார்:
பிரதிவாதிகள் தரப்பு, கற்றுணர்ந்த சட்டத்தரணிகள் பெருமளவு தங்கியிருந்த சோமாவதி எதிர் வீரசிங்க மற்றும் ஏனையோர் வழக்கு, வழக்கின் நிகழ்வுகளைப் பொறுத்தவரை வேறுபடுத்தப்படமுடியுமென நான் கருதுகின்றேன்.
சோமாவதி வழக்கில், அரசியலமைப்பின் 11, 13(1), 13(2), 13(5) மற்றும் 13(6) ஆகிய உறுப்புரைகளில் உத்தரவாதமளிக்கப்பட்ட கணவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கோரி மனைவியினால் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுத்தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில் கணவன் விளக்க மறியற்சாலையில் இருந்தார்.
தற்போதைய வழக்கில் எம் முன்னால் உள்ள சான்று, எவ்வாறாயினும், வித்தியாசமானதாகும்" (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது) சோமாவதி வழக்குத் தீர்ப்பு நிகழ்வுகளின் அடிப்படையில் வேறுபடுத்தப்பட்டமையினால், சிரியாணி சில்வா வழக்கின் கோட்பாடு வேறு எந்த நிலைமைக்கும் விஸ்தரிக்கப்பட முடியாது. சித்திரவதை மூலம் விளைவிக்கப்பட்ட காயங்களின் காரணமாக ஆள் ஒருவர் இறந்துபோன நிலைமைகளுக்கே அது ஏற்புடைத்தாகும்.
53. மேற்படி குறிப்பு 6, பக்.7 54 (1990) 2 சிறீ ல.அ.12. 55. மேற்படி குறிப்பு 52. பக்.5

4.2. சித்திரவதை வடிவங்களாகக் பாலியல் வல்லுறவும்
பாலியல் துஷபிரயோகமும்.
வேலு அரச தேவி எதிர் எச்.பி.கமல் பிரேமதிலக மற்றும் ஏனைய ஐவர்" என்ற வழக்கில் உயர் நீதிமன்றம் பாலியல் வல்லுறவை ஒரு வகையான சித்திரவதையாக அங்கீகரித்தது. இதுவே அடிப்படை உரிமைமீறல் மனுவாக இலங்கையின் உயர் நீதிமன்றத்தின் முன் முதல் தடவையாக வந்துள்ளது.
2001 ஜூன் 23ஆம் திகதி மனுதாரர் இரவு 11.00 மணியளவில் 1ஆம் 2ஆம் பிரதிவாதிகளினால் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டார் 2001 ஜூன் 24ஆம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் 1ஆம் 3ஆம் பிரதிவாதிகளால் சோதனைச் சாவடிக்குப் பின்னாலுள்ள இடத்துக்குக் கூட்டிச்செல்லப்பட்டு ஒருவருக்கு மேற்பட்டோரால் பாலியல் வல் லுறவுக்கு உள் ளாக் கப் பட் டார் . மனுதாரர் , ஏனைய உரிமைமீறல்களுடன் சித்திரவதைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம் என்ற அவரது அடிப்படை உரிமை மீறப்பட்டதாகக் கூறினார். உயர் நீதிமன்றம், ஏனைய உரிமை மீறல்களுடன் ஒருவருக்கு மேற்பட்ட பிரதிவாதிகளால் மனுதாரர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார் எனவும் அரசியலமைப்பின் 11ஆம் உறுப்புரையின் கீழான அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன எனவும் தீர்ப்பளித்தது.
யோகலிங்கம் விஜிதா எதிர் விஜேசேகர மற்றும் எட்டுப் பேர்" என்ற வழக்கில் "பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம்’ சித் திரவதையாக அமைவதனால், அரசியலமைப்பின் 11ஆம் உறுப்புரையின் கீழான உரிமைகளின் மீறுகையெனத் தீர்ப்பளிக்கப்பட்டது. மனுதாரர் 27வயதுப் பெண்மணியாவர். இவர் நீள்கொழும்பு பொலிஸ் நிலையப் பொலிஸ் அலுவலர்களால் கைதுசெய்யப்பட்டார். கட்டுக் காவலில் இருக்கும்போது தயாரிக்கப்பட்ட சில வாக்குமூலங்களில் கையொப்பமிடுமாறு பொலிஸார் கேட்க, அவள் மறுத்தபோது அவரைச் சித்திரவதை செய்தனர். ஆவணங்களில் அவர் ஒப்பமிடாவிட்டால் மிளகாய் தூளில் தோய்த்தெடுத்த வாழைப்பொத்தியை அவளது பெண்ணுறுப்புக்குள் செலுத்தப்போவதாக பொலிசார் கூறினர்.
56. உநீஅஉ. விண்ணப்பம் 401/2001 உநீகுறிப்புகள் 24.01.2002
57. உநீஅஉ விண்ணப்பம் 186/201 உநீகுறிப்புகள் 23.05.2002
58. தண்டனைச் சட்டக்கோவையின் 365ஆம் பிரிவு "பாலியல் துஷ்பிரயோகத்தை' வரையறுக்கின்றது. இதன்படி 363ஆம் பிரிவின்கீழான கற்பழிப்பில், ஆணுறுப்பு தவிர்ந்த வேறெப்பொருளையும் உட்செலுத்துவது கற்பழிப்பாகாது.
69

Page 42
கையொப்பமிடாவிட்டால் அவரது சட்டையைக் கழற்றி அதனால் கண்களை மூடிக்கட்டி மேசையில் படுக்க வைக்கப்படுவார் எனக் கூறினர். அவரை அவ்வாறு மேசைமீது படுக்கவைத்து நான்கு பொலிஸார் அவரது கால்களை அகட்டிப் பிடிக்க, வாழைப்பொத்தி அவரது பெண்ணுறுப்புக்குள் வலிந்து செலுத்தப்பட்டு 15 நிமிடங்களின் பின்னர் வெளியே எடுக்கப்பட்டது.” மனுதாரரின் வாக்குமூலத்தை மருத்துவச் சான்று பெருமளவு ஒப்புறுதிப் படுத்தியதாக உயர் நீதிமன்றம் கண்டது. அத்துடன், மற்றவற்றுக் கிடையில் அரசியலமைப்பின் 11ஆம் உறுப்புரையின்கீழ் உத்தரவாத மளிக்கப்பட்ட மனுதாரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பளித்தது.
இவ்விரு தீர்ப்புகளும், பாலியல் வல்லுறவையும் பாலியல் துன்புறுத் தலையும் சித் திரவதையின் வகைகளாகும் என அங்கீகரிக்கும் சர்வதேச நிலைமைகளுக்கு இணங்கி உள்ளன. சில சந்தர்ப்பங்களில் போர்க் காலக் குற்றங்களும் அவ்வாறே. எவ்வாறாயினும், உயர் நீதிமன்ற முடிவுகள் சர்வதேச நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டனவல்ல.
4.3. சித்திரவதைக் குட்பட்டவர்களுக்கு நட்டஈடு
2002ஆம் ஆண்டின்போது உயர் நீதிமன்றம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு மிகவும் கூடுதலான தொகைகளில் நட்டஈடு கொடுக்க முன்வந்தமை மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்." இது சித்திரவதை வழக்குகளின் தொகையில் ஏற்பட்ட அதிகரிப்பினால் ஏற்பட்டதொன்றெனலாம். வேலு அரச தேவி எதிர் எச்.பி.கமல் பிரேமதிலக மற்றும் ஐவர்" என்ற வழக்கில் உயர் நீதிமன்றம் அரசினால் நட்டஈடாகவும் செலவு தொகைகளாகவும் கொடுக்கப்பட வேண்டிய தொகை ரூ.150,000 எனத் தீர்ப்பளித்தது. யோகலிங்கம் விஜிதா எதிர் விஜேசேகர மற்றும் எட்டுப்° பேர் என்ற வழக்கில் உயர் நீதிமன்றம் மனுதாரருக்கான நட்டஈடாகவும் செலவுகளாகவும் ரூ.250,000 செலுத்தப்பட வேண்டுமெனக் கட்டளை பிறப்பித்ததோடு இதில் ரூ.150,000 கொண்ட தொகை சித்திரவதைக்குப் பொறுப்பான பிரதிவாதிகளினாலும் எஞ்சிய தொகை அரசினாலும் கொடுக்கப்பட வேண்டுமெனக் கட்டளை பிறப்பித்தது.
59. மேற்படி. பக்.56.
60. இதுபற்றிய விரிவான விளக்கங்களுக்கு ஜே.சி.வெலியமுன, இலங்கையில் சித்திரவதைக்குப் பலியானோரின் நட்டஈடும் ஏனைய நிவாரணங்களும் என்ற பகுதி காண்க. குடும்பப் புனர்வாழ்வு நிலையம், கொழும்பு 2000
61. மேற்படி, குறிப்பு n.56.
62. மேற்படி, குறிப்பு 1.57
7Ό

5. முடிவுகளும் விதப்புரைகளும்
2002ஆம் ஆண்டைப் பொறுத்தவரை சித்திரவதை தொடர்பான வழக்குகளும் கட்டுக் காவலில் இருக்கும் போது சம்பவித்த மரணங்களும் மிகவும் வெறுக்கத்தக்க அம்சங்களாக அமைகின்றன. சித்திரவதை தொடர்பாக ஏற்பட்ட நீதித் துறைசார் அபிவிருத்திகள், மேலே கலந்தாரயப் பட்டவாறு வரவேற்கத் தக்கனவாகவுள்ளன. யுத்த நிறுத்த உடன்படிக்கை காரணமாக சட்டவிரோதக் கைது செய்தல்களும், தடுப்புக் காவலில் வைத்தல்களும், ஆட்கள் காணாமற் போதலும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் , முன்னைய ஆண்டுகளைக் காட்டிலும் வெகுவாகக் குறைந்துள்ள போதிலும் கடந்தகால மனித உரிமை மீறல்களின் தட்டிக் கேட்பாரில்லை என்ற போக்குத் தொடர்ந்தும் கவலை தரும் விடயமாக இருந்து வருகின்றது.
அடிக்கடி தடுப்புக் காவலில் வைத்திருக்கப்படுவோர் குற்ற வொப்புதல்களைப் பெறும் பொருட்டு பொலிஸ் அலுவலர்களால் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பொதுச் சட்டத்தின் கீழ் பொலிஸ் அலுவலர் ஒருவருக்குச் செய்யப்பட்ட குற்றவொப்புதல் நீதிமன்றத்தில் சான்றாக அனுமதிக் கப்படற் பாலதாகாது.* எவ்வாறாயினும், நடைமுறையில், குற்றவொப்புதல்களை பெற்றுக் கொள்வதன் மூலம் புலனாய்வு செய்யும் ஏனையோரையும் சாட்சிகளையும் குற்றம் , தொடர்பாகக் காட்டித் தரமுடியும் . இலங்கையில், பொலிஸ் புலன் விசாரணைகள் குற்றவொப்புதல் மூலமான தடயங்களின் அடிப்படையிலேயே பெரும் பாலும் இடம்பெறுவனவாகும். இத்தகைய குற்றவொப்புதல்கள் சித்திரவதை மூலம் பெறப்படுகின்றன. ஆகவே, போதியளவு முறையான புலனாய்வுத் திறன்கள் இல்லாத காரணத்தினாலேயே பொலிஸார் சித்திரவதை முறையை நாடுகின்றனர் என்பது புலனாகும்.
சட்டம் சித்திரவதையைத் தடுக்கின்ற போதிலும், சித்திரவதை மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலான புலனாய்வுகளைத் தடுக்கவில்லை. ஆகவே, சித் திரவதையை ஒழிப்பதற்கான
63. சான்றுக் கட்டளைச்சட்டத்தின் 25(1)ஆம் பிரிவு பொலிஸ் அலுவலருக்குச் செய்யப்பட்ட குற்றவொப்புதல் எதுவும் தவறொன்றுக்குக் குற்றஞ் சாட்டப்பட்டவருக்கு எதிராக எண்பிக்கப்படுதலாகாது.
71

Page 43
நெடுங்கால வழிவகை என்ற வகையில், அரசாங்கம் பொலிஸ் அலுவலர்களின் புலனாய்வுத் திறன்களை அதிகரிப்பதற்கான வழிவகைகளை எடுப்பதோடு டிஎன்ஏ பரிசோதனைகள் போன்ற விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்த பொலிஸாரை இயலச் செய்யுமுகமாக பொலிஸ் திணைக்களத்துக்குப் போதிய நிதிகளையும் ஒதுக்கவேண்டும். பொலிஸாருக்கு இயலக் கூடிய அளவுக்கு குற்றவியல் புலனாய்வுச் செய்முறையில் சட்டத் துறைத் தலைமையதிபதித் திணைக்களத்தின் ஆலோசனையை நாடுவதற்குச் சந்தர்ப்பமளித்தல் (36.606 (61b.
சித்திரவதைக்குப் பலியான பெருந்தொகையான மக்கள், தமது சார்பில் தோற்றுவதற்குச் சட்டத்தரணிகளை அமர்த்திக்கொள்ள முடியாத காரணத்தினால் உயர் நீதிமன்றத்தின் முன்னர் வருவதில்லை. ஆகவே, சித்திரவதை தொடர்பாக தற்போது பொலிஸ் அலுவலர்களாலும் ஆயுதந் தாங்கிய படையினராலும் அனுபவிக்கப்பட்டு வரும் தண்டனையி லிருந்தான விலக்கீட்டுரிமையை இல்லாமற் செய்வதன் மூலம் சித்திரவதைச் சட்டம் வினைத் திறமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
மேலும், எமது முன்னைய அறிக்கைகளில் செய்யப்பட்ட விதப்புரைகளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தன்மையையும் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்."
64. இலங்கை மனித உரிமைகளின் நிலை, 1998. சட்டத்திற்கும் சமூகத்திற்குமான
அறநிலையம், கொழும்பு (1998) பக். 39-41
72

IV
இலங்கையில் பெண்களின் அந்தஸ்து முக்கியமான சில அம்சங்கள் பற்றிய மீளாய்வு
குமுதினி சாமுவல்
1. அறிமுகம்
2002 ஆம் ஆண்டானது, ஆட்சிப்பீடத்தில் ஒரு புதிய அரசாங்கத்துடன் ஆரம்பமானது. ஐக்கிய தேசிய முன்னணி இப்போதுதான் பதவியேற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தலைப்பட்சமாக யுத்த நிறுத்தமொன்றை பிரகடனப்படுத்தியுள்ளனர். பெப்ரவரி மாதமளவில் அரசாங்கத்திற்கும் எல்ரீஈ இற்குமிடையே இடம்பெற்ற முறைசார்ந்த யுத்த நிறுத்த உடன் படிக் கையொன்று இரண்டு திறத்தவர் களுக்குமிடையே சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு வழிகோலியது. பல்வேறு பின்னடைவுகளுக்கு மத்தியில் டிசம்பர் மாதமளவில் யுத்த நிறுத்தம் தொடர்ந்து அமுலிலிருந்தது. அத்துடன் இலங்கையின் வரலாற்றில் முக்கியமான ஒரு திருப்புமுனையாக எல்ரீஈ யும் அரசாங்கமும் ஐக்கிய இலங்கையுள் சமஷ்டி அமைப்பு முறையொன்றின்
1. இணைப் பணிப்பாளர், மகளிர், ஊடகக் கூட்டவை, கொழும்பு, இலங்கை
73

Page 44
அடிப்படையில் உள்துறை சுயநிர்ணயக் கோட்பாடொன்றின் மீது மத்திய அரசுக்கும் வடக்கு கிழக்குப் பிராந்தியங்களுக்குமிடையில் அதிகாரப் பகிர்வு பற்றிய சிக்கலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உடன்பட்டன. போர் நிறுத்தம் பொதுவாகக் குடிமக்களின், விசேடமாக இலங்கையின் ஆயுதப் போராட்டத்தினால் பெரிதும் பாதிக்கப் பட்டவர்களான பெண்களினதும் சிறுவர்களினதும் வாழ்வில் பெருமளவு நிம்மதியைக் கொண்டுவந்தது. சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குள் ஆண் பெண் பேதம் பற்றிய பிரச்சினைகளையும் பயனுறுதியுடன் உட்படுத்துவது பற்றி ஆராய்வதற்கு மகளிர் குழுவொன்றை உருவாக்குவதற்கு டிசம்பர் மாதச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் உடன்பட்டுக்கொள்ளப்பட்டமை பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.
இவ்வத்தியாயம் மேற்படி பின்னணியில் 2002ஆம் ஆண்டில் பெண்களின் நிலைப்பாட்டையும், நிலைமையையும் அவர்களது உரிமைகளின் பாதுகாப்பையும் பற்றி ஆராய்கின்றது.
2. LD.9.6.LUIT.69.8f. (CEDAW)
இவ்வாண்டின் உதயத்தோடு மகளிரின் உரிமை தொடர்பாக தீர்க்கமானதும் முக்கியமானதுமான சர்வதேச நுண்ணாய்வுக்கு இலங்கை உட்படுத்தப்பட்டது. புதிதாக மீள் நியமனம் செய்யப்பட்ட மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் லலிதா திசநாயக மகளிருக்கு எதிரான அனைத்துவிதமான பாரபட்சங்களையும் ஒழித்தல் தொடர்பான ஐக் கிய நாடுகளின் சம வாயத் தற்கு (ம. அ. வி. பா. ஒ. ச.) இணங்கியொழுகுதல் பற்றி இலங்கையின் 3ஆம் 4ஆம் பருவகால அறிக்கைகளை 2003 ஜனவரி 26ஆம் திகதி நியூயோர்க் நகரில் ஐ.நா. சபையில் ம.அ.வி.பா.ஒ.ச. குழுவின் முன்னிலையில் எதிர்வாதம் செய்தார்.
ம.அ.வி.பா.ஒ.ச. அல்லது மகளிர் சமவாயம் மகளிர்க்கான சர்வதேச உரிமைகள் சட்டமூலமாகும். சமவாயத்துடன் அரசுகளின் இணங்கி யொழுகல் சமவாயத்தின் கீழ் தாபிக்கப்பட்ட மகளிருக்கெதிரான பாரபட்சத்தின் ஒழிப்பு பற்றிய குழுவினால் கண்காணிக்கப்படுகின்றது. இலங்கை சமவாயத்தை 1981இல் ஏற்றங்கீகரித்தது. சமவாயத்துடன்
2. இலங்கையிலுள்ள நோர்வே தூதரகத்தால் வெளியிடப்பட்ட பத்திரிகை
வெளியீடு, 2002 திசம்பர் 5
74

இணங்கியொழுகப்படுவதைக் கண்காணிக்கையில் குழுவானது மகளிருக்கெதிரான பாரபட்சத்தை ஒழிப்பதற்கென மேற்கொள்ளப்படும் சட்டம், கொள்கை, நிகழ்ச்சித் திட்டங்கள் என்ற வகையில் அரசின் கடப்பாடுகளை மீளாய்வு செய்கின்றது.
சமவாயத்தின் கீழ் பின்வரும் துறைகளில் பாரபட்சத்தை ஒழிக்கும் கடப்பாடு அரசுகளுக்குண்டு:
0 மகளிருக்கு விரோதமான பாலியல் நடத்தைகளும் மனத்தாக்கத்தை ஏற்படுத்துதலும் பாரம்பரிய பழக்கவழக்கங்களும் (உறுப்புரை 5); விபச்சாரம் (உறுப்புரை 6); அரசியல் மற்றும் பகிரங்க வாழ்க்கை (உறுப்புரை 7); சர்வதேச மட்டத்தில் பங்கேற்பு (உறுப்புரை 8); நாட்டினம் (உறுப்புரை 9); கல்வி (உறுப்புரை 10); தொழில் (உறுப்புரை 11); செளக்கியப் பராமரிப்பும் குடும்பக் கட்டுப்பாடும் (உறுப்புரை 12); பொருளாதாரமும் சமூக நலன்களும் (உறுப்புரை 13); கிராமியப் பெண்கள் (உறுப்புரை 14); சட்டத்தின் முன் சமத்துவம் (உறுப்புரை 15); விவாகமும் குடுப உறவுகளும் (உறுப்புரை 16):
சமவாயமானது சமத்துவத்தினதும் பாரபட்சமின்மையினதும் ஒன்றோடொன்று தொடர்புடைய மையக் கோட்பாடுகளையும் அவற்றை எய்துவதில் அரசின் கடப்பாடுகளையும் கையாள்கின்றது. இது ஒரு நாட்டின் வளங்களை அணுகுவதற்கும் அவற்றிற்கான சமவாய்ப்பிற்கும் பெண்களின் உரித்தை உறுதிப்படுத்துமாறு தேவைப்படுத்தும் கணிசமான சமத்துவத்தின் மாதிரியை ஊக்குவிக்கின்றது. அத்தகைய உரித் தானது அவற்றை நடை முறைப் படுத் துவதற்கான பயனுறுதியுள்ள செயல்முறையுடன் ஒரு சட்ட முறைமையினாலும் கொள்கைகளினாலும் உறுதிப்படுத்தப்படவேண்டும். அதாவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெறுபேறுகளின் சமத்துவம் அரசினால் உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும். இது தான் ம.அ.வி.பா.ஒ.ச. குழு அரசின் கடப்பாடுகளை அளப்பதற்குப் பயன்படுத்தும் அளவுகோலாகும். எனவே இக்குழு மகளிர்க்கான மாற்றத்தின் உண்மையான சாதனைகளை மீளாய்வு செய்ய விழைகின்றது. ஆதலால் அரசுகள் திட்டவட்டமான பெறுபேறுகளைக் காட்டுமாறு எதிர்பார்க்கப்படுகின்றன.

Page 45
21. ம.அ.வி.பா.ஒ.ச. குழுவின் முன்னிலையில் அறிக்கையிடல்
அரச அறிக்கைகளின் மீளாய்வையடுத்து, இக்குழு மகளிர்க்கான
சமத்துவத்தையும் பாரபட்சமின்மையையும் உறுதிப்படுத்துவதற்கு மகளிர் சமவாயத்தினதும் இலங்கையின் கடப்பாடுகளை நிறைவேற்றுதல் தொடர்பில் அவதானிப்புரைகளையும் விதப்புரைகளையும் செய்தது. அரசின் பருவகால அறிக்கைகளுக்கு மேலதிகமாக நாட்டில் பெண்களின் நிலைமை பற்றிய விமர்சன மீளாய்வொன்றைச் சமர்ப்பிக்க விழையும் குறைநிரப்பு அறிக்கைகளும் அதன் பணியைப் பற்றி அறிவிப்பதற்கான குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையிலுள்ள மகளிர் உரிமைகள் பற்றிய அரச சார்பற்ற நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கையும் கட்டுக் காவலிலுள்ளவர்களின் வல்லுறவு பற்றிய சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையொன்றும் இவற்றுள் அடங்கும்.
இலங்கைப் பேராளர்களுக்கான பேச்சாளர் திருமதி லலிதா திசநாயக அரசாங்கம் சமவாயத்தின் கீழான அதன் கடப்பாடுகளுக்கு மதிப்பளிப்பதற்கும் நாட்டின் அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள சமத்துவம் பற்றிய கோட்பாடுகளை மதிப்பதற்கும் உண்மையாகவே அர்ப்பணித்துள்ளதாக ம.அ.வி.பா.ஒ.ச. குழுவுக்கு அறிவித்தார். ஆயினும் நீண்டகால இனக் கலவரத்தால் நாடு தற்பொழுது கடுமையாக பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருவதாகவும் நாட்டின் குடிசனத்தின் மூன்றிலொரு பகுதியினரை வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழுமாறு தள்ளி விட்டிருப்பதாகவும் முக்கியமாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும் 2001ஆம் ஆண்டின் மனித அபிவிருத்தி அறிக்கைக்கிணங்க இலங்கைக்கான மனித அபிவிருத்திச் சுட்டி 1995ஆம் ஆண்டில் 97ஆம் இடத்திலிருந்து 81ஆக முன்னேறியுள்ளது. இதே வேளை நாட்டின் ஆண் - பெண் பாகுபாடு தொடர்பான அபிவிருத்திச் சுட்டெண் 146 நாடுகளிடையே 70 ஆகும் . இது ஒரு முன்னேற்றமாகக் கூறப்பட்டபோதிலும் இலங்கையின் ஆண் - பெண் பாகுபாடு பற்றிய அபிவிருத்திச் சுட்டெண் 1995 முதல் 2001 வரை வீழ்ச்சியுற்றுள்ளது.
3. இலங்கையின் ஒன்றிணைந்த 3ஆம் 4ஆம் பருவகால அறிக்கைகள் CEDAW/
C/LKA/3-4
4. மகளிருக்கெதிரான பாரபட்ச ஒழிப்பு சம்பந்தமான ஐக்கிய நாடுகளின் சமவாயத்திற்கான இலங்கை நிழல் அறிக்கை, பெண்கள் ஆராய்ச்சி நிலையம், திசம்பர் 2001 மற்றும் இலங்கை : கட்டுக்காவலில் கற்பழிப்பு (A 132 37/001/2002), SF6ØT6) lif? 2002.
5. 1995 முதல் 2001 வரையிலான் ஐ.நா. அ.க. மனித அபிவிருத்தி
அறிக்கைகளைப் பார்க்கவும்.
76

புதிய பிரதம மந்திரியின் பணிப்புரையொன்று அரசாங்க நிகழ்ச்சித் திட்டங்கள் அனைத்தும் ஆண் பெண் சமத்துவம் தொடர்பான அம்ச மொன்றைக் கொண்டிருக்கவேண்டும் எனவும் ஒவ்வொரு நிகழ்ச்சித் திட்டத்தினது ஆண் பெண் பாகுபாடு பற்றிய தாக்கம் மதிப்பீடு செய்யப்படவேண்டும் எனவும் பணிப்பதாக அவர் குறிப்பிட்டார். இக்கடப்பாடு அரசாங்க அமைப்புகள் முழுவதும் ஆண் - பெண் சமத்துவம் நிலவுவதற்கான ஒரு தூண்டுகோளாக அமையும் எனவும் 2000ஆம் ஆண்டு மீளாய்வு செய்யப்பட்ட பெண்களுக்கான தேசிய செயற்திட்டத்தின் அம்சங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வசதியளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. பொருளாதார உலகமயமாக்கல் பெண்களின் நிலைமையை நெருக் கடிக்கு உள்ளாக்குகின்றது எனவும் நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் இனக் கலவரமானது சமவாயம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஒரு பாரதூரமான சவாலாக அமைக்கின்றது எனவும் ம.அ.வி.பா.ஒ.ச. குழு அவதானித்தது. பெண்களினதும் ஆண்களினதும் பாரம்பரிய செயற்பாடுகளை வலியுறுத்தும் இலங்கையின் வலுவான பாரம்பரிய வழிவந்த கலாசாரம் ஆழமாக வேரூன்றியிருப்பதால் சமவாயம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்குத் தடையாயிருக்கின்றது எனவும் அது அவதானித்தது. குழுவின் அக்கறைக்குட்பட்ட சில விடயங்கள் வருமாறு: 9 அடிப்படை உரிமைகளுக்கு அரசியலமைப்பிலுள்ள உத்தர வாதத்திற்கும் பெண்களுக்கெதிராகப் பாரபட்சம் காட்டும் தனிப்பட்ட சட்டங்களுக்கும் இடையிலான முரண்பாடு 9 உள்ளுர் மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் அரசாங்கத்தில்
பெண்களின் குறைந்த அளவிலான பிரதிநிதித்துவம் 9 சமவாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சட்ட, நிறுவக, நிதி
சார்ந்த வரைவுருச் சட்டம் போதியளவில் இல்லாமை 9 மூன்றாம் நிலைக் கல்வியில் பொறியியல், தொழில்நுட்பத் துறைகள் சார்ந்த பாட நெறிகளில் பெண்கள் குறைவாகப் பிரதிநிதித்துவப் படுத்தப்படுதல் 9 அதிக அளவில் பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள். நெருக்கடியான சூழ்நிலைகளில் கூட கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளமையும் சட்ட விரோதமான கருக்கலைப்புகள் காணப்படுவதும்
6. இலங்கை, இறுதிக் குறிப்புரைகள், CEDAW26ஆம் அமர்வு 2002 சனவரி
14 - GLIL" if 62 yffl 1, I WIRAW -- AP

Page 46
0 ஆயுதம் தாங்கிய படைகளினாலும் பொலிஸ் படையினாலும் இன ரீதியில் சிறுபான்மையினரைச் சேர்ந்த பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள் 9 பெண்களிடையே அதிக அளவிலான வேலையில்லாமை
முறைசாராத துறைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு முற்றாகவே பாதுகாப்பு இல்லாமையும் சுதந்திர வர்த்தக வலயங்களில் பெண் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு சட்டங்கள் வலுவுக்கிடப்படாமையும் 9 பாதிப் பிற்கு உட்படக் கூடிய சாத்தியமுள்ள பெண்கள் துஷ்பிரயோகத்திற்கும் சிலவேளை இறப்பிற்கும் உட்படுத்தப்படும் சம்பவங்கள் அதிகரிக்கின்றமை e காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் பெண்களுக்கெதிரான
UTJUL 6FLD 9 பொருளாதாரக் கொள்கைகளில் ஆண் - பெண் சமத்துவம் கருத்திற் கொள்ளப்படாமையும் உற்பத்தியாளர்களாக கிராமிய பெண்களின் பங்கு அங்கீகரிக்கப்படாமையும் 9 பெண்களை குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்களின்
அதிகரித்த நூற்றுவீதம் 0 பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான சம்பள வித்தியாசம்
காணிக் கட்டளைச் சட்டத்தில் பாரபட்சமான முரண்பாடுகள்.
குழுவானது அரசாங்கத்திற்கான அதன் இறுதிக் குறிப்புரைகளில் தற்போதுள்ள அனைத்துச் சட்டங்களும் மீளாய்வு செய்யப்படவேண்டும் எனவும் அவற்றை சமவாயத்திற்குப் பொருத்தமானவையாக்குவதற்கு பாரபட்சமான ஏற்பாடுகள் திருத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியது சமவாயத்திற்குத் தோதாக இஸ்லாமிய சட்டங்களின் பொருள்கோடல் பற்றியது உட்பட ஒப்புநோக்கப்படற்பாலதான மானிடவியல் சட்டத்தைப் பற்றிய தகவலைப் பெறுமாறு அரசாங்கத்தைத் தூண்டியது
மகளிர் பட்டயத்திற்குச் சட்டவலு வழங்கப்படுதல் வேண்டும், மகளிர் தேசிய ஆணைக்குழுவின் தாபிதம் துரிதப்படுத்தப்படுதல் வேண்டும், அரசாங்க அமைச்சுகளில் ஆண் - பெண் பேதம் தொடர்பான முக்கிய அம்சங்கள் வலுப்படுத்தப்படுதல் வேண்டும், தேசிய செயற் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் போதியளவு மனித, நிதி வளங்கள், உறுதிப் படுத்தப்படுதல் வேண்டும் என வலியுறுத்தியது
தற்காலிக விசேட வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுதல் ஊடாக, உள்ளுர், மாகாண, தேசிய மட்டங்களில் அரசியலிலும் பகிரங்க வாழ்க்கையிலும் பெண்களின் பிரதி நிதித்துவத்தை அதிகரிப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தியது.
78

மூன்றாம் நிலைக் கல்வியில் பொறியியல் மற்றும் தொழினுட்பவியல் தொடர்பான பாடநெறிகளில் பெண்களின் பிரதி நிதித் துவத்தை அதிகரிப்பதற்கு அவசியமான அனைத் து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தியது.
வல்லுறவு, முறைதகாத உடலுறவு, பிறவி மந்த வளர்ச்சி போன்றவற்றால் ஏற்பட்ட கருவைக் கலைப்பதற்கு விதப்புரை செய்தது. பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பாக சட்ட வழிமுறைகளும் ஏனைய வழிமுறைகளும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும், அத்தகைய வழிமுறைகளின் தாக்கம் கண்காணிக்கப்படவேண்டும், வன்முறைக்குப் பலியாகிய பெண்களுக்கு நிவாரணமும் பாதுகாப்பும் பெறுவதற்கான வழிகளும் பயனுறுதியுள்ள வழிமுறைகளும் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தியது.
குடும்ப வன்முறை பற்றிய சட்டவாக்கம் கூடிய விரைவில் நிறைவேற்றப்படவேண்டும் எனக் கோரியது.
குடும்ப வன்முறை உட்பட பெண்ணினம் காரணமாகவும் இனப் பிரிவினாலும் ஒதுக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் பற்றிய தரவு, முறையாகத் திரடடப்படவேண்டும் என விதப்புரை செய்தது. அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் திருமண வல்லுறவு குற்றச் செயலொன்றாக அங்கீகரிக்கப்படவேண்டும் என வலியுறுத்தியது.
பெண்களுக்கெதிரான அனைத்து விதமான வன்முறைகள் பற்றி சட்டத்துறை, பொலிஸ், மற்றும் மருத்துவ ஆளணியினருக்கும் இயைபான ஏனைய குழுக்களுக்கும் விரிவான பயிற்சி அளிக்கப்படவேண்டும் என விதப்புரை செய்தது.
பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் நடத்தை கண்டிப்பாக கண் காணிக் கப்பட்டு பெண்களுக்கெதிரான வன்முறைகளை மேற்கொள்பவர்கள் சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்படவேண்டும் எனவும் பெண்களுக்கெதிரான, விசேடமாக இனரீதியில் சிறுபான்மை யினரான பெண்களுக்கும் இளம் யுவதிகளுக்கும் எதிரான வன்முறைச் செயல்களைத் தடுப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தியது.
ஊடகங்களுக்குப் பொது மக்களாகிய ஆண்களையும் பெண் களையும் நோக்கி திசைதிருப்பப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளும் கல்விப்பிரசாரங்கள் உட்பட பெண்களுக்குரியனவும் ஆண்களுக்குரியனவுமான பணிகள், பொறுப்புகள் பற்றிய பழங்கால மனோபாவங்களை ஒழிப்பதற்கு வலுவான வழிமுறைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் கோரியது.
79

Page 47
பெண்களின் பொருளாதாரப் பங்கேற்பை அதிகரிப்பதற்கும், பெண்கள் தொழிற்சந்தையில் சமமான அணுக்கத்தைக் கொண்டிருப் பதனையும், தொழிலில் சமமான வாய்ப்புகளைக் கொண்டிருப்பதையும் உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அனைத்து வழிமுறைகளும் மேற்கொள்ளப்படவேண்டும என வலியுறுத்தியது.
முறைசாரா துறைகளிலுள்ளவர்கள் உட்பட அனைத்து வேலையாட்களுக்கும் ஏற்புடைத்தாகும் வகையில் தொழிற் சட்டங்கள் மீளாய்வுசெய்யப்படவேண்டும் எனவும் அச்சட்டங்கள், சுதந்திர வர்த்தக வலயங்கள் உட்பட எல்லா துறைகளிலும் அமுல்படுத்தப்படவேண்டும் எனவும் கோரியது.
வருமானத்தைப் பகிர்ந்தளிப்பதிலும் ஊதியத்திலும் , பெண்ணினத்தைச் சேர்ந்திருப்பதன் காரணமாக ஒதுக்கப்பட்டிருக்கும் பெண்கள் பற்றிய தரவு திரட்டப்பட்டு அரசாங்கத்தின் அடுத்த அறிக்கையில் சேர்க்கப்படவேண்டும் எனவும் அனைத்து தொழிற் கொள்கைளிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்படுவது பற்றிய பிரேரணைகள் உட்புகுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியது.
சட்டவிரோதமான தொழில் முகவராண்மைகளைத் தடைசெய்வது உட்பட வெளி நாடுகளில் வேலை செய்யும் பெண்களைப் பாதுகாப்பதற்கும் முழுமையானதும் பயனுறுதியுள்ளதுமான வழிமுறைகள் அமுல் நடத்தப்படவேண்டும், அவர்கள் இலங்கைக்குத் திரும்பி வந்ததன் பின்னர் அங்கவீனர்களுக்கும் வேலையற்றோருக்கும் காப்புறுதியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியது.
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் சமவாயத்திற்கு ஒத்ததாக இருக்கும் வகையில் திருத்தப்படவேண்டும் என வலியுறுத்தியது.
கிராமிய உற்பத்தி தொடர்பாக ஆண் - பெண் பங்கேற்பு பற்றிய விவரங்களைத் திரட்டுவதன் மூலம் பொருளாதாரத்திற்கு கிராமியப் பெண்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படவேண்டும் எனவும் சிறுபான்மை இனப் பெண்களுக்கு விசேட கவனம் செலுத்தி, அனைத்து அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களிலும் ஆண் - பெண் சமத்துவம் பற்றிய கருத்துக்கள் உட்புகுத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியது. பெண் களை குடும் பத் தலைவர் களாகக் கொணி ட குடும்பங்களினதும் வயோதிபப் பெண்களினதும் நிலைமையை மேம்படுத்துவதற்கு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களில் சமமான உதவியும் நன்மைகளும் பெறும் குடும்பங்களாக பெண்களை குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள் அங்கீகரிக்கப் படவேண்டும் என வலியுறுத்தியது.
8O

உள்ளுரில் புலம் பெயர்ந்த பெண்களினதும் சிறுவர்களினதும் தேவைகளை நிறைவுசெய்வதற்கு கூடுதலான வளங்கள் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அவர்களது அந்தரங்கத் தன்மையும் சுகாதார வசதிகள், பாதுகாப்பு, வன்செயலிலிருந்து பாதுகாப்பு என்பனவும் உறுதிப்
படுத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியது.
போருக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளிலும் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் பணிகளிலும் பெண்களின் முழுமையான, சமமான பங்கேற்பைக் கோரியது.
3. நடைமுறைப்படுத்தும் அமைப்புகள்
3.1. மகளிர் தேசிய ஆணைக்குழு
மகளிருக்கெதிரான அனைத்து விதமான பாரபட்சங்களையும் ஒழிப்பதற்கான குழுவையொத்த, (ஆனால் உண்மையில் அதைவிடப் பலமான) உரிமைகள் சட்டமூலமொன்று 1993ஆம் ஆண்டில் இலங்கை மகளிர் பட்டயமாக அங்கீகரிக்கப்பட்டது. பெண்களுக்கெதிரான பாரபட்சத்தை ஒழிப்பதற்கும் ஆண் பெண் சமத் துவத்தை எய்துவதற்குமான அதிகாரமளிப்பு அதில் சேர்க்கப்பட்டுள்ளது. மகளிர் பட்டயம், பயனுறுதியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டால் சட்டத்தை வலுவாக்கும் தாபனங்களுக்குள் சட்ட மறுசீரமைப்பிற்கும், அமைப்பு முறைகளின் மறுசீரமைப் பிற்கும் , தடுப்பு வழிமுறைகளை மேற்கொள்வதற்கும் வழிவகுக்கும். பெண்களுக்கெதிரான பாரபட்சங்களை ஒழிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச, அரச சார்பற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் வலுப்படுத்துவதில் இப்பட்டயம் தீவிரமானதும் ஒத்தாசையளிப்பதுமான பங்கொன்றை ஏற்க முடியும்.
ஆண் பெண் பேதம் தொடர்பான முறைப்பாடுகளுக்கெதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஆண் பெண் பேதம் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கும் மதியுரை கோரப்படும்போது அல்லது ம.தே.ஆ அவசியமெனக் கருதும்போது மகளிர் விவகார அமைச்சுக்கு மதியுரை வழங்குவதற்குமான ஆணையுடன் பட்டயத்தின்கீழ் தேசிய மகளிர் ஆணைக்குழு (தே.ம.ஆ) நிறுவப்பட்டது. 2002இல் தே.ம.ஆ வுக்குப் புதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். எனினும் தே.ம.ஆ வுக்கு வலுவாக்கும் தத்துவங்கள் இல்லை. ஆதலால் மகளிர் பட்டயத்தில் எதிர் பார்க்கப்பட்டவாறு இது நியதிச் சட்ட அதிகார சபையொன்றாக மாறவேண்டும். தேசிய மகளிர் ஆணைக் குழு வொன்று நடைமுறைப் படுத்தும் அமைப்பாக
81

Page 48
எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் ஆணைக் குழுவை நிறுவுவதற்கான தேசிய சட்டவாக்கங்களை நிறைவேற்ற இயலாதவையாக அல்லது விருப்பமில்லாதவையாக இருந்தன. ஜனவரியில் மகளிர் தேசிய ஆணைக் குழுவுக்கு நியதிச் சட்ட அங்கீகாரம் அளிப்பதற்கான சட்டவாக்கமொன்றை விரைவில் மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என இலங்கை ம.வி.அ.பா.ஒ.ஆ முன்னிலையில் குறிப்பிட்டது. எனினும் டிசம்பர் மாதமளவில் தேசிய ஆணைக் குழுவுக்காக சட்டவரைவு தயாரிக்கப்பட்டு ஆணைக் குழுவுக்குப் பதிலாக பேரவையொன்றையும், நிறைவேற்றுத்துறை யொன்றையும் கொண்ட இருநிலை அமைப் பொன்றை நிறுவுவதற்கான திட்டம் பரிசீலனை செய்யப்பட்டது. இதனால் மகளிர் பட்டயத்திற்கு சட்டவலு அளிப்பதில் கூடுதலான தாமதம் ஏற்பட்டது.
3.2. தேசிய செயற்திட்டம்
மகளிர் விவகார அமைச்சினதும் தேசிய மகளிர் குழுவினதும் பணியை முழு நிறைவு செய்தும் மகளிர் பட்டயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கோட்பாடுகளுக்குட்பட்டும் 1996ஆம் ஆண்டில் மகளிள் தேசிய செயற்திட்டம் அங்கீகரிக் கப்பட்டது. இயைபான அரச அமைச் சுகளுடனும் திணைக்களங்களுடனும் மகளிரின் அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் இணைந்து தயாரிக்கப்பட்ட தேசிய செயற் திட்டம் அக்கறைக்குரிய தெளிவான துறைகளை இனங் கண் டுள்ளது. அதாவது, பெண்களுக்கெதிரான வன்முறை, பெண்களும் மனித உரிமைகளும், பெண்களும் ஆயுதம் தாங்கிய போராட்டமும், கல்வியும் பயிற்சியும், பொருளாதார செயற்பாடுகளும் வறுமையும், சுகாதாரம், சுற்றாடல், முடிவெடுப்புகள், பெண் பிள்ளைகள் மற்றும் ஊடகம், குறிக்கோள்கள், செயல் நுணுக்கங்கள், செயற்பாடுகள், சாதனைகளுக்கான கால வரையறை மற்றும் சுட்டிகள் என்பவற்றையும் இது இனங்கண்டுள்ளது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம், தேசிய மகளிர் குழுவுடனும் பல்வேறு மகளிர் நிறுவனங்களுடனும் அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் இணைந்து மகளிர் விவகார அமைச்சினால் 2002இல் இறுதியாக பூர்த்திசெய்யப்பட்டது.
3.3. விருப்பத்திற்குரிய கூட்டு ஒப்பந்தம்
இணங்கியொழுகுவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் பல குறைபாடுகள் இருந்தபோதிலும் கடந்த சில ஆண்டுகளாக பெண்களின் உரிமைகள் பற்றிய பல்வேறு அம்சங்களை ஊக்குவிப்பதிலும், பாதுகாப்பதிலும் தங்களது நோக்கெல்லைக்குட்பட்ட முக்கிய மனித உரிமைச் சாதனங்கள் பலவற்றை
82

இலங்கை அரசாங்கங்கள் ஏற்றங்கீகரித்துள்ளன. 2002ஆம் ஆண்டு ம.அ.வி.பா.ஒ.ச. குழுவின் முன்னிலையில் செய்த கடப்பாட்டிற்கிணங்க மகளிர் சமவாயத்திற்கான விருப்பத்திற்குரிய கூட்டு ஒப்பந்தத்திற்கு இலங்கை 2002 அக்டோபர் 15ஆம் திகதி உடன்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது உள்ளுள் வழிமுறைகள் வெற்றியளிக்காதபோது சர்வதேச மட்டத்தில் தங்கள் குறைகளை எடுத்துக் கூறுவதற்கு பெண்களுக்கும் பெண்களின் சார்பில் செயற்படும் ஆட்களுக்கும் கூடுதலான வாய்பினை அளிக்கின்றது. ம.அ.வி.பா.ஒ.ச. குழுவின் பயனுறுதியுள்ள பயன்பாடு இலங்கையில் பெண்களின் உரிமைகளை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் விழையும் குடியியல் சங்கச் செயற்பாடுகளுக்கு வலிமையூட்டும் என்பதில் சந்தேகமில்லை.
3.4. ஆணைக் குழு
இலங்கையரல்லாத பெண்ணொருவரைத் திருமணம் செய்த இலங்கை ஆணொருவர் தனது நாட்டுரிமையைப் பிள்ளைகளுக்கு அளிக்கலாம். எனினும் இலங்கைப் பெண்ணொருவர் கணவன் இலங்கைப் பிரஜையொருவராக இல்லாதவிடத்து தனது நாட்டுரிமையை அவ்வாறு வழங்கும் உரிமையை மறுக்கின்ற பிரஜாவுரிமைச் சட்டத்தில் இலங்கை புராதன ஏற்பாடொன்றை இன்னமும் பற்றிக் கொண்டுள்ளது. இச்சட்டத்தை மறுசீரமைப்பதற்கு மகளிர் குழுக்கள், பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றன. ஆண்டின் இறுதியில் இந்த முரண்பாட்டை ஒழிப்பதற்கு இயைபான ஏற்பாடுகள் வரையப்பட்டு திருத்தங்கள் 2003 மார்ச் 8ஆம் திகதி பாராளுமனறத்தில் நிறைவேற்றப்பட்டன. ஆரம்பத்தில் இரண்டாண்டு காலப்பகுதிக்கு தங்கள் வாழ்க்கைத் துணைகளுக்கு வதிவிட விசா வழங்கப்படுவதை அனுமதிக்கும் புதிய வழிகாட்டிகள் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தால் வகுக்கப்பட்டன. இவர்கள் நாட்டில் தொழில் தேடுவதற்கும் உரித்துடையவர்களாவர். ஆரம்பத்தில் வழங்கப்பட்ட இரண்டாண்டு காலத்தின் முடிவில் மேலும் ஐந்தாண்டுகள் வழங்கப்படும். ஏழாண்டு காலப் பகுதியின் முடிவில் நிரந்தர வதிவிட விசா வழங்கப்படும்.'
3.5 பெண்களுக்கெதிரான வன்முறைகள்.
அதிகரித்த எண்ணிக்கையினரான பெண்களுக்கெதிரான
வன் முறைச் சம்பவங்கள் 2002ஆம் ஆணி டில் மிகுந்த மனவருத்தத்திற்குரிய ஒரு விடயமாக விளங்கியது. இக்கட்டுரை
7 ஐலண்ட் 2003 பெப்ரவரி 10

Page 49
எழுதப்படும் நேரம்வரை பொலிஸ் திணைக்களத்தால் பதிவுசெய்யப்பட்ட பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் பற்றிய அறிக்கைகளின் புள்ளிவிவர ரீதியில் முழுமையான விவரம் முடிவாக்கப்பட்டு வெளியிடப்படவில்லை. இதேவேளை, 2002 ஜனவரி முதல் செப்டெம்பர் வரை வல்லுறவு பற்றிய 999 முறைப்பாடுகளும், கொலைச் சம்பவங்கள் பற்றிய 285 முறைப்பாடுகளும், சிறுவர் கடத்தல் சம்பவங்கள் பற்றிய 400 முறைப்பாடுகளும் (அனைத்தும் பெண்கள் சம்பந்தப்பட்டவை) பொலிஸ் திணைக்களத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகை அறிக்கையொன்று உரிமை கோருகின்றது.
1987ஆம் ஆண்டு தொடக்கம், பெண் களுக்கெதிரான வன்முறைகளை, குறிப்பாக குடும்ப சண்டைகளைக் கையாளும் அரச சார்பற்ற உதவி நாடும் பெண்கள் (உ.நா.பெ) என்ற அமைப்பு அதிகரித்த எண்ணிக்கையிலான முறைப்பாடுகளையும் உதவிகோரும் வேண்டுகோள்களையும் பெற்றுள்ளது." 2002இல் உ.நா.பெ. 6,530 வழக்குகளைக் கையாண்டது. இவற்றுள் 1,117 வன்முறைகள் காரணமாக உறவு முறிந்த குடும்பங்கள் சம்பந்தப்பட்டவை. மேலும் இவற்றுள் 844 தாக்குதல் சம்பவங்கள், 842 குடும்ப வன்முறைகள், 31 வல்லுறவுகள், 6 முறைதகாத புணர்ச்சி, 42 பாலியல் துஷ்பிரயோகம்" என்பன அடங்கும். 2002 மார்ச் மாதத்தில உ.நா.பெ. மகளிர்க்கு கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஓர் இடநெருக்கடி நிவாரண நிலையம் ஒன்றைத் தாபித்தது. இரண்டாவது நிலையம் 2003 ஜனவரியில் காசில் வீதி மகளிர் மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு, கண்டி, மாத்தறை ஆகிய இடங்களிலுள்ள நிலையங்களுக்கு மேலதிகமாக உ.நா.பெ. 2002 அக்டோபரில் பதுளையிலும் அநுராதபுரத்திலும் அலுவலகங்களைத் திறந்துள்ளது. பெண்களுக்கு விளைவிக்கப்படும் வன்முறைகளின் தன்மையிலும் வியக்கத்தக் களவு திருப்புமுனைகள் இருப்பதை உ.நா.பெ. பணியாட்டொகுதியினர் அறிவித்துள்ளனர். விவாகப் பந்தத்தினுள் காமக் களியாட்டமும் குரூரருமான பாலியல் பழக்கவழக்கங்களும் சம்பந்தப்பட்ட பாலியல் வன்முறைகள் பற்றி முறைப்பாடு செய்யும் பெண்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருவதாகவும் அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
8. தினமின 2003 மார்ச் 8
9. இக்காலப்பகுதிக்கான ஆண்டறிக்கையைப் பார்க்கவும் உ.தே.பெ. (Women
in Need) soa5.T(pubL
10. ஆண்டறிக்கை 2002 உதவி தேவைப்படும் பெண்கள் (WomeninNeed) கொழும்பு
11. 2002 நவம்பர் 5ஆம் திகதி இலங்கைப் பெண்களின் அ.சா.ஒ. களத்தினால் அழைக்கப்பட்ட குடும்ப வன்முறைகள் பற்றிய ஆலோசனையின்போது முறைசாரா உரையாடல்.
84

நீதித்துறையின் ஊடாகப் பிரிந்து வாழும் சந்தர்ப்பங்களில் தவிர, திருமண வல்லுறவு ஒரு குற்றச் செயலாக அங்கீகரிக்கப்படாமையால் தங்கள் கணவன்மாரினாலும் கூடிவாழ்பவர்களாலும் பாலியல் ரீதியில் துஷ் பிரயோகம் செய்யப் படுவது பெண்களுக்குத் தொடர்ந்து ஒரு பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. ஒழுங்கமைப்பினால் பெறப்படும் முறைப்பாடுகளின் தன்மையின் அடிப்படையில் இப்பிரிவைச் சேர்ந்த பெண்களின் மீதான தாக்கத்தைப்பற்றி ஆராய்வதற்கான ஆய்வொன்றை மேற்கொள்ள உநா.பெ. உத்தேசித்து வருகின்றது.
மகளிர் தேசிய குழுவின் பாலியல் முறைப்பாட்டுக் குழு 2002ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 583 வழக்குகளைக் கையாண்டுள்ளதாக அறிவிக்கின்றது. இவற்றுள் 34 குடும்ப வன்முறைகளும், 13 வல்லுறவு களும், 23 பாலியல் ரீதியிலான தொல்லைகளும் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகளாகும். இன்றைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட "காந்தா ரிதி பியச” மாகாணங்களில் ஆறு மகளிர் நெருக்கடி நிவாரண நிலையங்களை ஆரம்பித்துள்ளது. முதலாவது நிலையம் 2002 மார்ச்சில் ஜாஎலயிலும் இரண்டாவது மேல் மாகாணத்திலும் ஏனையவை மத்திய மாகாணத்திலும் ஆரம்பிக்கப்பட்டன.
நிலையங்களில் ஆலோசகர்கள் பணியாற்றுகின்றனர். மகளிர் பொலிஸ் கொஸ்தாப்புகளும் அவர்களது வாடிக்கையாளர்களும் தேவையானபோது சட்டவறிஞர்களையும் சட்ட உதவியையும் மருத்துவர்களையும் நாடும் வசதி உண்டு. பொலிஸ் அலுவலர்களாக செயற்பட்டு நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய முதலாவது வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் தத்துவம் இந்நிலையங்களுக்குண்டு. இவர்கள் நீதிமன்றங்களுக்கு வெளியே பெருந்தொகையான குடும்ப முறைப்பாடுகளைத் தீர்த்து வைத்துள்ளனர். முக்கியமாக வல்லுறவு, தகாத புணர்ச் சி போன்ற சம்பவங்களின் பொருட்டு 54 வாடிக்கையாளர்களின் சார்பில் புலனாய்வுகளையடுத்து நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்படடுள்ளன.
கொழும்பு மாநகர சபையின் (கொ.மா.ச.) ஒரேயொரு மகளிர் உறுப்பினரான திருமதி ஷர்மிளா கோணவலயின் பிரேரணையின்மீது “மகளிர் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தை" தவிர்ப்பதற்கு கொ.மா.ச. குழுவொன்றை அமைத்தது. மகளிரையும் சிறுவர் களையும் பாதுகாக்கும் நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கென
12. 2002 திசம்பரில் முடிவுற்ற ஆண்டிற்கு தேசிய பெண்கள் குழுவால் வழங்கப்பட்ட
புள்ளி விவரங்கள்

Page 50
2003இல் ரூபா 25 மில்லியன் பணத்தொகை ஒதுக்கப்பட்டது. இந் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொழும்பு மாநகர சபை மருத்துவமனையில் நிறுவப்படும் ஆலோசனை சேவையொன்றுடன் இலவச ஆலோசனை வழங்குவதாகும். இத்தகைய குற்றச் செயல்களைத் தடுப்பதில் கவனம் செலுத்தும் இம்முயற்சிக்கு மகளிர் வழக்கறிஞர்களினதும் பொலிஸ் அலுவலர்களினதும் ஒத்துழைப்பும் உதவியும் நாடப்படும். வன்முறையை ஊக்குவிக்கும் கட்புல, செவிப்புல விளம்பர முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட வழிமுறைகளின் சாத்தியம் பற்றியும் ஆராயப்படும்'.
அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் பற்றிய ஏற்பாடுகள், குறிப்பாக தனியார் செயற்பாட்டாளர்களால் புரியப்படும் குடும்ப வன்முறைகள், பாலியல் தொல்லைகள் போன்ற குற்றச் செயல்களுக்குப் பலியாகும் சாத்தியமுள்ள பெண்களின் நிவாரணத்திற்குப் பயனுறுதியுள்ள வழிமுறைகளைத் தடைசெய்யும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அல்லது தனியார் துறையினரின் நடவடிக்கைகளுக்கு பதில் சொல்லும் பொறுப்பை உருவாக்காததும் மற்றுமொரு வருத்தத்திற்குரிய விடயமாகும்"
பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான பணிகள் கடந்த ஆண்டுகளில் அதிகரித்திருக்கும் அதே வேளையில், பெண்களுக் கெதிராகப் புரியப்படும் வன்முறைகள் பற்றிய முறையான தரவு சேகரிப்பு, ஆண் - பெண் ரீதியில் பிரிக்கப்பட்ட தகவல் என்பன கிடைக்கப் பெறாதிருப்பது இன்னமும் கவலைக்குரிய விடயமாகும். வனமுறைகளிலிருந்து தப்பிவர விரும்பும் பெண்களுக்கு உறைவிடமும் சேவைகளும் போதாதிருப்பதன் மூலம் இந்நிலை மேலும் சிக்கலாகின்றது. இதன் விளைவாக பெண்களுக்குப் போதியளவு நிவாரணம் அளிக்கப்படுவதையும் பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எதிராக பெருமளவிலான வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு அல்லது குறைந்த பட்சம் குறைப்பதற்கு உதவக்கூடிய செயற்றிறன்களை வகுப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டு வருகின்றன.
3.6. குடும்ப வன்செயல்கள்
2002 மார்ச் மாதம் நீதி அமைச்சு குடும்ப வன்முறை பற்றிய
சட்டவாக்க வரைவொன்றைச் சமர்ப்பித்தது. இச்சட்டமூலம் பிரதான பெண்களுக்கு பாதுகாப்புக் கட்டளைகளை வழங்குவதனையே
13. சண்டே ஒப்சேர்வர் 2002 திசம்பர் 29 14. CEDAW வுக்கு நிழல் அறிக்கை

நோக்கமாகக் கொண்டிருந்தது. அக்டோபர் மாதமளவில் வரைவின் திருத்தப்பட்ட வாசகமொன்று மீளாய்வுக்கென அமைச்சரவை உப குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. இச்சட்டமூலம் வரையப்படுவதற்கு முன்னர் குடும்ப வன்முறைகள் பற்றிய சட்டவாக்கத்தைக் கோரி மகளிர் குழுக்களின் தலைமையில் பிரசாரமொன்று இடம்பெற்றது. இக்குழுவால் (மகளிர் வரைவு)" தயாரிக்கப்பட்ட சட்ட வரைவொன்று தேசிய, பிராந்திய, உள்ளுர் மட்டங்களில் ஆலோசனை முறையொன்றின் ஊடாக கலந்துரையாடப்பட்டது. மகளிர் சட்டவரைவில் விவரிக்கப்பட்ட சில எண்ணக் கருத்துக்களும் அம்சங்களும் அமைச்சின் வரைவில் சேர்க்கப்பட்டன. எனினும் அமைச்சின் வரைவு வரையறைக்குட்டது எனவும் அதனை மேலும் வலுப்படுத்துவது அவசியம் எனவும் மகளிர் குழுக்களும் ஏனையோரும் அபிப்பிராயம் கொண்டனர். குறிப்பாக அமைச்சின் சட்ட வரைவு பாதுகாப்புக் கட்டளை வழங்குவதற்கே வரையறுக்கப்பட்டுள்ளது எனவும் குடும்ப வன்முறை என்பதற்கு கூட்டு வரைவிலக்கணம் அளிக்கவில்லை எனவும் நிலைப்பாட்டை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளதெனவும் இடைக்கால பாதுகாப்புக் கட்டளை வழங்கவேண்டிய அவசியமுள்ளது எனவும் காண்பித்து தராதரத்தைப்பற்றியும் ஆதார சேவைகளுக்கான அவசியம் பற்றியும் சட்டவரைவு குழப்பமாகவுள்ளது எனவும் இவை கவலை தெரிவித்தன". இக்குழுவினதும் மகளிர் விவகார அமைச்சினதும் முறைப்பாடுகளின் விளைவாக அமைச்சின் வரைவு மீளாய்வுக்கு அழைக்கப்பட்டது".
15. தெரிவுசெய்யப்பட்ட மகளிர் ஒழுங்கமைப்புகளுக்கு 2002 மார்ச் 25ஆம் திகதி அனுப்பப்பட்டு நீதி அமைச்சில் 2002 ஏப்ரில் 18ஆம் திகதி உரையாடலுக்கு எடுக்கப்பட்ட குடும்ப வன்செயல் சட்டமூல வரைவைப் பார்க்கவும் சட்டமூலம் குடும்ப வன்செயல்களின் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புக் கட்டளைகளை ஆக்குவதற்கும் அதனோடு தொடர்புடைய அல்லது அதன் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமான ஒரு சட்டம்' என அறிமுகம் செய்யப்பட்டது. 16. மகளிர் மற்றும் ஊடக ஒன்றியத்தால் இசைவாக்கப்பட்ட குடும்ப வன்செயல்
சட்ட இயக்கத்தால் தயாரிக்கப்பட்ட சட்ட வரைவைப் பார்க்கவும். 17. இறுதி வரைவின்மீதான உரையாடலையடுத்து 2002 அக்டோபர் 2ஆம் திகதி மகளிர் குழுக்களாலும் மகளிர் விவகார அமைச்சினாலும் நீதி அமைச்குக்கு அனுப்பப்பட்ட கடிதங்களைப் பார்க்கவும். 18. பிரதம மந்திரியின் செயலாளர் திரு. பிறட்மன் வீரக்கோன் அவர்களுக்கும் வரைவை மீளாய்வுசெய்யும் அமைச்சரவை உப குழுத் தலைவரக்கும் 2002 அக்டோபர் 21ஆம் திகதியிடப்பட்டு தனியாட்களினதும் மகளிர் வரைவை வகுத்து தொகுக்கும் குழுக்களினதும் சார்பில் மகளிர் மற்றும் ஊடக ஒன்றியத்தால் எழுதப்பட்ட கடிதத்தையும் 2002 நவம்பர் 6ஆம் திகதியிடப்பட்ட அவரது மறுமொழியையும பார்க்கவும்.
87

Page 51
3.7. பெண்களும் சித்திரவதையும்
சித்திரவதை தொடர்பாக சமவாயமும் சித்திரவதையைக் கையாளும் சட்டவாக்கமும் ஏற்றங்கிகரிக்கப்பட்டபோதிலும் ? கட்டுக்காவலில் இருப்போரின் சித்திரவதை பற்றிய பல சம்பவங்கள் 2002இல்’ அறிவிக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைக்குள் அத்தகைய சம்பவங்களை நீதியின் முன் கொண்டு வருவதிலுள்ள பல்வேறு சிரமங்களை எடுத்துக்காட்டி பெண்களால் அறிக்கையிடப்பட்ட சித்திரவதை சம்பந்தப்பட்ட விடயங்களும் அடங்கும்.
ஹேரத் பத்திரன்னஹேலாகே நந்தனி சிறியலதா என்பரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று ஆண்டின் இறுதியிலும் முடிவுறாதிருந்தது. இப்பெண்மணி 2002 மார்ச் 8ஆம் திகதி வாரியப்பளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அலுவலர்களால் அவளது வீட்டில் வைத்து அவளது குடும்பத்தவர்கள் முன்னிலையில் கைதுசெய்யப்பட்டாள். இவள் வாரியப்பளை பொலிஸ் நிலையத்தில் இரண்டு நாட்கள் வைக்கப்பட்டிருந்தபோது அவளது ஆடைகள் கழற்றப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு குழாய் போன்ற ஒரு பொருள் அவளது யோனித் துவாரத்தினுள் செலுத்தப்பட்டு சித்திரைவதை செய்யப்பட்டாள்'.
(1994ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க) சித்திரவதை, வேறு கொடுரமான, மனிதாபிமானமற்ற, இழிவுபடுத்தும் தண்டனைக்கும் நடத்துகைக்கும் எதிரான சமவாயத்தின் கீழ் இவ்வழக்கு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் வாரியப்பளை பொறுப்பதிகாரி (ஒ.ஐ.சீ.) உட்பட ஐந்து பொலிஸ் அலுவலர் களுக்கெதிராக வயம்ப பிரதிப் பொலிஸ் பரிசோதகள் தலைமையதிபதி இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் குற்றவியல் குற்றச்சாட்டு வழக்கைத் தாக்கல் செய்தார். தவறின் கனத்தை நொய்தாக்கி பிணையை அனுமதித்து நந்தனி சிறியலதா ஹேரத் என்பவருக்கு எளிமையாதும் பாரதூரமானதுமான ஊறுவிளைவித்த தவறுக்காக மட்டுமே அலுவலர்கள் குற்றஞ் சாட்டப்பட்டனர். இத்தவறைப்
19. 1994 ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க சித்திரவதை, கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவுபடுத்தும் நடத்துகைக்கு அல்லது தண்டனைக்கு எதிரான சமவாயச் சட்டம்
20. 2002 இல் ஹொங்கொங்கில் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட ஜன சம்மத்தய என்னும் இலத்திரனியல் செய்தித் தாளைப் பார்க்கவும்
21. ஜன சம்மத்தய தொகுதி 1, இல. 9, 2002 யூன் 22
88

புரிந்ததாக சந்தேகிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தங்கள் பதவிகளை வகித்து வருகின்றனர். வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களும், குடும்பத்தவர்களும் பணியாட்களும் தலையீட்டையும் அச்சுறுத்தலையும் வன்முறையையும் பற்றி சார்ந்துரைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஒரு சில வழக்கறிஞர்கள் அச்சுறுத்துதலின் காரணமாக விலகிக் கொண்டுள்ளனர். உள்ளுர் ஊடகப் பிரதிநிதிகள் வழக்கை அறிக்கையிடாதிருக்கும்படி எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் சாட்சிகள் அச்சுறுத்தப்படக் கூடாது என நீதிவான் வெளிப்படையாக எச்சரித்திருந்தபோதிலும்? முடிவுறாதிருக்கும் வழக்குகளின் மீதான தாக்கம் பாரதூரமானதாகும். இலங்கை மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்புகளும, நிறுவனங்களும் எந்த அளவுக்கு ஒழுக்க நெறியிலும் சட்ட நம்பிக்கையிலும் சீர்குலைந்துள்ளன என்பதற்கு நந்தனி ஹேரத் என்பவரின் வழக்கு ஒரு சிறந்த எடுத்தக்காட்டு என கிஷானி பின்ரோ ஜயவர்தன தனது சண்டே டைம்ஸ் கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளார்". பொலிசினால் மற்றுமொரு பயங்கரமான பாலியல் சித்திரவதையின் விளைவாக உயர் நீதிமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவமான தீர்ப்பொன்று வழங்கப்பட்டது. எதிராளிகளுக்கும், மனுதாரர்களுக்கும் விளைவிக்கப்பட்ட சித்திரவதைச் செயல்களுக்குப் பொறுப்பானவர்களுக்கும் ஏனைய பிரதிவாதிகளுக்கும் எதிராக 1994ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க சித்திரவதை, வேறு கொடுரமான, மனிதாபிமானமற்ற, இழிவு படுத்தும் நடத்துகைக்கு அல்லது தண்டனைக்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதனைப் பற்றி பரிசீலனை செய்யுமாறு உயர் நீதிமன்றம் முதல் முறையாக சட்டத்துறை தலைமையதிபதியைப் பணித்தது. இதுவரை இருந்த நடைமுறை யாதெனில் தவறிழைக்கும் அலுவலர் களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் பரிசோதகள் தலைமையதிபதிக்குப் பணிப்புரை வழங்குவதாகும். இந்த வழக்கிலான கட்டளை புதியதும் மேலும் பயனுறுதியுள்ளதுமான பணிப்பொன்றைக் காட்டுகின்றது.*
இம்முடிவு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 7 பொலிஸ் அலுவலர்களை பிரதிவாதிகளாக எடுத்துக் காட்டி யோகலிங்கம் விஜிதா என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றில்
22. சர்வதேச மன்னிப்புச் சபையின் பத்திரிகை அறிக்கையைப் பார்க்கவும். இலங்கை: பாதுகாப்பிற்கு அச்சம் நந்தினி ஹேரத் ASA37/04/2002 மற்றும் சார்புடைய பத்திரிகை அறிக்கைகள்
23. கிஷாளி பின்ரோ ஜயவர்தன. சண்டே டைம்ஸ் 2002 செப்டெம்பர் 15
24. ஜே. குணசேகர குறிப்பிட்டவாறு யோகலிங்கம் விஜித எதிர் விஜேசேகர மற்றும் எட்டுப் பேர், உ. நீ அ. உ. விண்ணப்பம் இல: 186.2001. உ. நீ குறிப்புகள் 23.05.2002, 26+27
89

Page 52
தரப்பட்டது மிளகாயில் தோய்த்தெடுக்கப்பட்ட வாழைபொத்தியை அவரது யோனித் துவாரத்தில் செலுத்தி பாலியல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டது உட்பட தவறான முறையில் கைதுசெய்யப்பட்டு கொடூரமாக சித்திர க்குட்படுத்தப்பட்டதாக விஜி பாடு செய்தாள் விஜிதாவுக்கு நட்டஈடாக ரூபா 250000 செலுத்தப்பட்டது. இது சித்திரவதை தொடர்பான வழக்குகளில் கணிசமான ஒரு தொகையாகும்
மற்றுமொரு முக்கியமான தீர்ப்பில் அஞ்சலீன் ரொசானா என்பவள் அடிப்படை உரிமைமீறல் வழக்கொன்றில் வெற்றி பெற்றார். இதில் கொழும்பு நாரஹென்பிட்ட குற்றவியல் பொறுப்பதிகாாரி சலே* என்பவரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகவும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டதாகவும் முறைப்பாடு செய்தார். அரசியலமைப்பின் உறுப்புரைகள் 11, 13(1) மற்றும் 13 (2) என்பவற்றின் கீழ் பாதுகாக்கப்பட்ட அவளது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக நீதின்றம் தீர்மானித்து ரூபா 100,000 நட்டஈடு வழங்கியது. இதில் ரூபா 30,000 பிரதிவாதியால் தனிப்பட்ட முறையில் செலுத்தப்பட வேண்டியிருந்தது. இது சக்திவாய்ந்த தடுப்புக் காரணியை உள்ளடக்கிய முக்கியமான ஒரு தீர்ப்பாகும்.
போர் நிறுத்தப்பட்டு சமாதானப் பேச் சுவார்த்தைகள் இடம் பெற்றுவரும் ஆண் டொன்றில் வன்முறைக் கலாசாரமும் தண்டனைக்குட்படுத்தப்படாமையும் வெளிப்படையாகவே தடையின்றி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. அத்தகையதொரு கலாசர்ரம் சட்டத்தையும் ஒழுங்கையும் வலுவாக்குவதற்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நிறுவப்பட்ட நிறுவனங்களின் செயல்முறைகளில் ஆழமாக வேருன்றியிருப்பதாகத் தென்படுகின்றது.
3.8. பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம்
பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் தொடர்ந்து மிகக் குறைவாக காணப்படுகின்றது. 2002 மே மாதத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன. பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான வாக்குறுதியை நடைமுறைப்படுத்துமாறு மகளிர் குழுக் கள் ஐக் கரிய தேசிய முன்னணி அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டன. ஐ.தே.மு. தங்கள் நிரல்களில் குறைந்தபட்சம் 25 பெண்களை பெயர் குறித்து நியமிக்குமாறு அனைத்து அரசியல்
25. அஞ்சலின் ரொசானா மைகல் எதிர் செல்வின்சலே, OC (குற்றப்பரிவு) பொலிஸ் நிலையம், நாரஹென்பிட்ட மற்றும் இரண்டு பேர் உ. நீ அ. உ. விண்ணப்பம் இல. 01/2001 உ. நீ குறிப்புகள் 02.08.2002
9O

கட்சிகளையும் கேட்டுக்கொண்டது. வழமைபோல ஐ.தே.க. தலைமையிலான ஐ.தே.மு. வினாலேயே இந்த இலக்கை எய்தமுடியவில்லை. போதியளவு பெண் வேட்பாளர்களைத் தேட முடியவில்லை எனக் கட்சி வலியுறுத்தி கூறியபோதிலும் அனைத்துப் பிரதான அரசியல் கட்சிகளினதும் பெண்கள் தங்களது விண்ணப்பங்கள் ஆண்களுக்குச் சாதகமாக நிராகரிக்கப்பட்டதாக முறைப்பாடு செய்தனர். தேர்தல் முடிவுகள் வழமை போல மகளிர்க்கான பிரதிநிதித்துவத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. கொழும்பு மாநகர சபை ஒரேயொரு மகளிர் உறுப்பினரை மட்டுமே தெரிவுசெய்தது*
இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண எத்தனித்த மகளிர் செயலணியினர் தோடம்பழச் சின்னத்தின் கீழ் கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிடும் மகளிர் வேட்பாளர்களைக் கொண்ட சுயேச்சை நிரல் ஒன்றை முன்வைத்தனர். பெண் வழக்கறிஞர்களின் தலைமையிலான இந்நிரல் அதன் நியமத்தர்களிடையே குறைந்த வருமானமுள்ளவர்களையும் நகர சமுதாயங்களைச் சேர்ந்த பெண்களையும் கொண்டிருந்ததுடன் பெண்களுக்குச் சாதகமான ஆண் பெண் பாகுபாட்டிற்கு நுண்ணு ணர்வுள்ள விஞ்ஞாபன மொன்றையும் கொண்டிருந்தது. இந்த மகளிர் நிரல் கொழும்பு மாநகர சபையில் ஆசனமொன்றை வெல்லுவதற்கு அவசியமான ஆக்குறைந்த எண்ணிக்கையான 2500 வாக்குகளைப் பெறத் தவறியது. எனினும் தேர்தலில் போட்டியிட்ட பெண்கள் பெறுமதிமிக்க உள்ளுணர்வொன்றைப் பெற்றனர். இவற்றுள் தேர்தல் முறையும் தேர்தல் திணைக்களத்தில் ஆண் பெண் சமத்துவம் பற்றிய நுண்ணுணர்வு இல்லாமை, தேர்தல் பிரசாரத்தின் அமோகமான செலவு, குடியியல் சமுதாயக் குழுக்களிடமிருந்து ஆதரவு இல்லாமையினால் ஆதரவு தேடுவதிலுள்ள சிரமங்கள் என்பன அடங்கும். மகளிர் குழுக் களும் செயற்பாட்டாளர்களும் மகளிரின் அரசியல் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் வழிமுறைகளைத் தொடர்ந்து புலனாய்வு செய்கின்றனர். இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையம் (கொழும்பு) மகளிர் அரசியல் செயற்பாட்டாளர்களுடன் மொனராகல, கண்டி, மாத்தறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தொடர் ஆய்வரங்குகளை நடத்தியது. இவை கொழும்பில் தேசிய மட்டத்திலான சமவாயத்துடன் நடத்தப்பட்டு தேர்தல் நடைமுறைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கும் பங்கேற்பிற்குமுள்ள சிரமங்களை
26. இதனை எழுதும் நேரத்தில் தேர்தல்கள் திணைக்களம் பெண்களால் வெற்றிக்கொள்ளப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டுவதற்கு பெண் ணினம் காரணமாக ஒதுக் கப்பட்டவர்களின் தரவைத் தொகுத்திருக்கவில்லை.
91

Page 53
விவரித்து மகளிர் விவகார அமைச்சருக்கு விஞ்ஞாபனம் ஒன்று கையளிக்கப்பட்டது. இவ்விஞ்ஞாபனம், அரசாங்கத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும் குடியியல் சமுதாய ஒழுங்கமைப்புகளுக்கும் பெண்களிடமிருந்து விதப்புரைகளை வலியுறுத்தி பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு ஆக்கப்பூர்வமான செயற்பாட்டைக் கோரியது.' இலங்கையின் கூட்டணித் தாய்மாரும் புதல்விகளும் இ.ஆ.ச.நி. யின் பிரசாரத்தையடுத்து மூன்று மாவட்டப் பயிற்சித் திட்டமொன்றை ஆரம்பித்தனர். மகளிர் பணியகமும் மகளிர் விவகார அமைச் சும் அரசியலில் பிரவேசிக்க விரும்பும் பெண் களுக்காகப் பயிற்சியளித்தலுக்கும் விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்கும் கவனம் செலுத்தியது. எனினும் 2002இல் உள்துறை கட்சிச் சனநாயகம், பெண்களை நியமிப்பதற்கான அரசியல் ஆர்வம் என்பன அடிப்படையில் கேள்விக்குறியாகவே இருந்தன. எனினும் ஆண்டின் இறுதியளவில் வருங்காலத்திற்கான கொள்கைக் கடப்பாடுகளை விவரிக்கும் ஐ.தே.மு. அரசாங்கத்தின் பிரதான ஆவணமான இலங்கையை மீட்டுப் பெறுதல் என்னும் ஆவணம் அதன் செயற்திட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கும் தேசிய மட்டத்திலும் அவற்றின் வேட்பாளர்களின் நிரல்களில் 50 பெண்கள் நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு சட்டவாக்க வழிமுறைகளைப் பிரேரித்துள்ளது.*
4. வெளிநாடு சென்றுள்ள வேலையாட்கள்
4.1. வெளிநாடு சென்றுள்ள வேலையாட்களின் சமவாயம்
வெளிநாடு சென்றுள்ள வேலையாட்களினதும் அவர்களது குடும்பங்களினதும் உரிமைகள் பற்றிய ஐ.நா. சமவாயம் வெளிநாட்டு வேலையாட்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சர்வதேச சமவாயமாகும். 1990இல் வரையப்பட்டு அங்கீகாரத்திற்கென திறந்துவைக்கப்பட்ட இச்சமவாயம் ஐ.நா. வரலாற்றில் வலுவிற்கு வருவதற்கு மிக நீண்ட காலம் எடுத்த சமவாயங்களுள் ஒன்றாகும்.
27 மகளிர் அரசியல் அணியினரால் இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் மகளிர் விவகார அமைச்சருக்குக் கையளிக்கப்பட்ட 2002 யூன் 15ஆம் திகதிகொண்ட விஞ்ஞாபனத்தைப் பார்க்கவும்.
28. துரிதப்படுத்தப்பட்ட அபிவிருத்திக்கு இலங்கையை மீட்டுப் பெறுதல், நோக்கும் செயல்நுட்பமும் என்பதில் பாகம் II பிரிவு VI பகிரங்கத் துறை மறுசீரமைப்பு செயற் திடடங்கள் என்பதனைப் பார்க்கவும் இலங்கை அரசாங்கம், 2002 திசம்பர்.
92

20ஆம் அங்கீகாரத்தையடுத்து சமவாயம் இப்பொழுது 13 ஆண்டு காலம் காத்திருந்த பின்னர் யூலை 1ஆம் திகதி வலுவுக்கு வரவுள்ளது. சமவாயத்தை இலங்கை 1996இல் ஏற்றங்கீகரித்தது.
2002 இல் அணி ண ளவாக 800,000 இலங்கையர் கள் வெளிநாடுகளில் தொழில் புரிவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வேலையாட்களுள் பெரும்பாலானோார் பெண்களாவர்? இவர்கள் தேர்ச்சி பெறாத வீட்டு வேலையாட்களாக அல்லது பணிப்பெண்களாக தொழிலுக்கு அமர்த்தப்பட்டவர்களாவர். 1980ஆம் 1990ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதிகளில் அனேகமாக வெளிநாட்டு வேலையாட்கள் இந்த பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் தற்போதைய புள்ளிவிவரத்தின்படி இப்பொழுது பெண்கள் படிப்படியாக தொழிற்சாலைகளிலும், தாதியராகவும், ஆசிரியைகளாகவும் ஓரளவு தேர்ச்சி பெற்றவர்களும் முழுத் தேர்ச்சிபெற்றவர்களுமான வேலையாட்களின் தரத்திற்கு உயர்ந்து வருகின்றனர்." 90ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து வெளிநாட்டு வேலையாட்களால் அனுப்பப்பட்டுவரும் பணமே நாட்டின் அந்நிய செலாவணிக்கு ஆகக் கூடுதலான பங்களிப்பைச் செய்தது. அதில் பெருமளவு வருமானம் பெண் தொழிலாளர்களின் உழைப்பு என்பது வெளிப்படை. இலங்கையில் வெளிநாட்டிலுள்ள வேலையாட்களின் நலன்களைக் கவனிக்கும் மிகப் பெரிய முகவராண்மை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகமாகும். இது 1985ஆம் ஆண்டின் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்திற்குட்பட்டதாகும். கடந்த பல ஆண்டுகளாக இ.வெ.வே.ப, தொழிலாளரின் வெளிநாட்டுப் பயணத்தை சீர்ப்படுத்துவதற்கும் வேலையாட்களுக்குப் பாதுகாப்பளிப்பதற்கும் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டுள்ளது. எனினும் இலங்கை உட்பட தொழிலாளர்களை அனுப்பும் நாடுகள், பாதுகாப்பின் குறைந்த பட்ச நியமங்களையும் தொழிலாளர்களை ஏற்றுக்கொள்ளும் நாடுகளிலுள்ள தொழிற்பாடுகளின் கண்காணிப்பையும் உறுதிப்படுத்து வதற்கு இயலாதிருப்பதன் காரணமாக வெளிநாட்டிலுள்ள வேலை யாட்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. வெளிநாடு செல்லும் வேலையாட்களின் தன்மை இவர்களை அனுப்பும் நாடுகளிலும்
29. இலங்கை, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம், வெளிநாடு செல்லும்
தொழிலாளர் பற்றிய புள்ளிவிவரம், 2002 வெளிவருகின்றது.
30. 1980ஆம் 1990ஆம் ஆண்டு காலப் பகுதிகளுக்கு வெளிநாடு சென்ற வேலையாட்கள் பற்றிய இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் புள்ளி விவரங்களைப் பார்க்கவும்.
93

Page 54
ஏற்றுக்கொள்ளும் நாடுகளிலும் இவர்களைப் பற்றிய மனோபாவம், இப்பிரச்சினைகள் பற்றி கவனம் செலுத்துவதற்கு அரசியல் ரீதியில் மனமில்லாமை என்பன வெளிநாடு செல்லும் வேலையாட்களினி, குறிப்பாக பெண்களின் பிரச்சினைகள் தொடர்ந்திருப்பதற்கான வேறு காரணங்களாகும்.
வெளிநாடு சென்றுள்ள வேலையாட்களுள் பெரும்பான்மையானோர் ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்கிறபோதிலும் வெளிநாட்டு வேலையாட்களை ஏற்றுக்கொள்ளும் மேற்கத்திய நாடுகள் எதுவும் சமவாயத்தை ஏற்றங்கீகரிக்கவில்லை. இவர்களை ஏற்றுக் கொள்ளும் ஏனைய முக்கியமான நாடுகளான இந்தியா, ஜப்பான், வளைகுடா நாடுகள் என்பனவும் சமவாயத்தை ஏற்றங்கீகரிக்கவில்லை." வேலையாட்களை ஏற்றுக் கொள்ளும் பெரும்பாலான நாடுகள் சமவாயத்திற்குக் கையொப்பமிடவோ அதனை ஏற்றங்கீகரிக்கவோ இல்லையாதலால் சமவாயத்தின் தாக்கம் ஒரு வரையறைக்குட்பட்டே உள்ளது. சமவாயம் தேசிய சட்டங்களில் சேர்க்கப்படுவதை ஏற்றங்கீகரிக்கும் நாடுகள் உறுதிப்படுத்துதல் வேண்டும். சமவாயத்தின் பிரயோகம் பத்து நிபுணர்களைக் கொண்ட குழாம் ஒன்றினால் (அனைத்து வெளிநாட்டு வேலையாட்களினதும் அவர்களது குடும்பங்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு என அழைக்கப்படும்) கண் காணிக்கப்படும். இந்த நிபுணர்கள், சமவாயத்தால் மேவப்பட்ட துறைகளிலுள்ள பாரபட்சமற்ற அதிகாரிகளாக அங்கீகரிக்கப்படுவதுடன் சமவாயத்தை ஏற்றங்கீகரித்துள்ள நாடுகளால் தெரிவுசெய்யவும் படுவர் (உறுப்புரை 72). சமவாயத்தை ஏற்றங்கீகரித்துள்ள ஒரு நாடான இலங்கை வெளிநாடுகளில் தொழிலுக்கமர்த்தப்பட்டுள்ள இலங்கை வேலையாட்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு துாதரகங்கள் ஊடாகவும் வேறு வழிகள் ஊடாகவும் வேலையாட்களை ஏற்றுக்கொள்ளும் நாடுகளுடன் கருமமாற்றுவதற்கு மேலும் தீவிரமான வழிகளை நாடவேண்டும்.
4.2. வெளிநாடுகளிலுள்ள பெண் வேலையாட்கள்
சுரண்டப்படுதல்
முந்திய ஆண்டுகளிற் போல வெளிநாடு சென்றுள்ள வேலையாட்கள் எதிர்கொள்ளும் ஒருசில பிரச்சினைகள் 2002இல் ஊடகங்களுடாக வெளிப்படுத்தப்பட்டன. வெளிநாடுகளிலுள்ள
31. வெளிநாடு சென்றவர்களின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள்
சமவாயத்தின் தகவல் தொகுதி, யுனெஸ்கோ 2003 யூன்.
94

வேலையாட்கள் அனுபவிக்கும் உரிமை மீறல்கள், வேலை தொடர்பிலான சுரண்டல் முதல் பாலியல் துஷபிரயோகம் வரை பலதரப்பட்டவை. 2002இல் கூடுதலான வருத்தத்திற்குரிய விடயம் யாதெனில் பெருந் தொகையான பெண் தொழிலாளர்கள் அவர் களை ஏற்றுக்கொள்ளும் நாடுகளில் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளமையும், வணிக் பொருளாகப் பயன்படுத்தப்படும் குற்றச்சாட்டுக்களும், அரசாங்க அலுவலர்களின் குறிப்பாக மேற்காசிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களிலுள்ள அலுவலர்களின் அசமந்தப் போக்கும் ஆகும்.
கொழும்பில் நிலைகொண்டுள்ள மனித மகத்துவத்திற்கான களத்தின் (ம.ம.க.) அறிக்கையொன்றிற்கிணங்க அத்தகைய சுரண்டல் பேர் வழிகளுள் அச்சுறுத்துதல், பலாத் காரம், ஏமாற்றுதல் , பணத் திற்காகவும் ஏனைய நன்மைகளுக்காகவும் அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றின் மூலம் பெண்களைச் சுரண்டி வாழும் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரக அலுவலர்களும் அடங்குவர். வேலை தேடி வெளிநாடு செல்வதை ஊக்குவிக்கும் விதமும் வெளிநாடு செல்லும் வேலையாட்கள் தொழிலை அல்லது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளும் வழிமுறைகளும் ஒரு விதத்தில் பண இலாபத்தின் நோக்கத்திற்காக மனித கடத்தல் அல்லது மனித வணிகம் ஆகும் என ம.ம.க. தெரிவித்துள்ளது.*
குறிப்பிட்டவொரு பயங்கரமான அறிக்கை ஜெடாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் நிாக்கதியான நிலைக்குட்பட்ட பெண் வேலையாட்களின் விவகாரம் பற்றி விவரிக்கின்றது. இவர்களது விவகாரம் தினமுரசு பத்திரிகையில் எடுத் காட்டப்பட்டு ம.ம.க.வினால் கையாளப்படட்து. தூதரகத்தில் தஞ்சம் கோரும் வெளிநாட்டிலுள்ள பெண் வேலையாட்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு விபச்சார விடுதிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக மேற்படி கடிதம் குற்றஞ் சாட்டியது. இவ்வறிக்கையையிட்டு புலனாய்வு செய்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்துமாறும் நிர்க்கதியாகியுள்ள வேலையாட் களை நாட்டிற் குத் தருப்பி அழைத் துவந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத் தினருக்கும் நட்டஈடு வழங்குமாறும் ம.ம.க. வெளிநாட்டலுவல் கள் அமைச் சிடம் கோரியுள்ளது. துஷபிரயோகத்திலும் பெண்களைக்கொண்டு வாணிகம் செய்வதிலும் சம்பந்தப்பட்ட மற்றுமொரு தூதரகம் குவைத் நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகமாகும். இங்கு வெளிநாட்டிலிருந்து
32. மனித உரிமைகள் நிலைமை பற்றிய அறிக்கை இலங்கை 2002, மனித
மகத்துவத்திற்கான களம், கொழும்பு
95

Page 55
திரும்பிவந்த பெண்ணொருவரினால் தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க? அவர்களுக்குச் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து தூதரக அலுவலர் ஒருவருக்கெதிராக புலனாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமான நிலைய சுகாதார அலுவலர்களின் அறிக்கைகளை எடுத்துக்காட்டி 2002 அக்டோபர் 5ஆம் திகதி வெளிவந்த ஐலண்ட் பத்திரிகையானது 2000ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்திலிருந்து வெளிநாடுகளில் வேலைசெய்யும் தொழிலாளர்களின் 809 சடலங்கள் வெளிநாடுகளிலிருந்து திருப்பியனுப்பப்பட்டதாக அறிவிக்கின்றது. இவற்றுள் 70 வீதமானவை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அனுப்பப்பட்டவையாகும். கடந்த ஆண்டுகளில் இத்தொகை அதிகரித்துள்ளது என அறிவித்த இவ்வறிக்கை 2002 ஜனவரிக்கும் செப்டெம்பருக்கும் இடையில் சுகாதார அலுவலர்களால் பெறப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 235 ஆகும் எனக் கூறுகின்றது. ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் பெறப்பட்ட 48 சடலங்களுள் 33 சட்லங்கள் இளம் சாரதிகளினதும் வீட்டுப் பணிப்பெண்களினதுமாகும். ஒரு சில சடலங்கள் சவச்சாலைகளில் பல மாதங்களாகக் கிடக்கின்றன. வெளிநாட்டில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களின் இறப்பு பற்றிய அறிக்கைகள் இறப்புகளின் மர்மமான தன்மையையும் பாதகச் செயல் நடந்திருக்கககூடும் என்ற குடும்பத்தவர்களின் சந்தேகத்தையும் வலியுறுத்தியுள்ளன."
ஆட்திரட்டும் முகவராண்மைகளாலும் பிரயாண முகவர்களாலும் பெண்கள் அடிமைகள் போன்ற நிலைமையில் தடுத்து வைத்திருப்பதைப் பற்றிய அறிக்கைகளும் கிடைத்துள்ளன. இம்முகவர்கள் கடவுச் சீட்டுக்களைப் பறிமுதல் செய்து பெண்களை ஒரு வேலைத் தலத்திலிருந்து இன்னோர் வேலைத் தலத்திற்கும் ஒரு முகவரிடமிருந்து இன்னோர் முகவருக்கும் மாற்றியுள்ளதுடன் அவர்களது சம்பளத்தையும் பிடித்து வைத்துக் கொள்கின்றனர்.* பெண்கள் வழக்கறிஞர்களுடனோ குடும்ப அங்கத்தவர்களுடனோ தொடர்பில்லாமல் சிறை வைக்கப் பட்டிருப்பதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. 2002 ஜனவரி 31ஆம் திகதி வெளிவந்த வீரகேசரி பத்திரிகை பாஹற்ரேய்னிலிருந்து திரும்பிவந்த வேலையாள் ஒருவரை எடுத்துக்காட்டி ஒரு பெண்கள் கூட்டம் சிறைக் கைதிகள் போல் வாழ்வதாகவும், நேர்மையற்ற தொழில் முகவர்களின் கட்டுக்காவலில் சொல்லொண்ணா வேதனையும் கஷடங்களும் அனுபவிப்பதாவும் கூறுகின்றது. பாஹற்ரேய்ன், ஈநா மறியற் சாலையில் மாத்திரம் 11 இலங்கைப் பணிப்பெண்கள் இருப்பதாக அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.
31. சண்டே ரைம்ஸ், நவம்பர் 24, 2002 34. பார்க்கவும்: 2002 நவம்பர் 12 ஐலண்ட், 2002 நவம்பர் 5 ஐலண்ட், 2002
அக்டோபர் 19 ஐலண்ட், 2002 நவம்பர் 18 ஐலண்ட். 35. 2002 சனவரி 31 வீரகேசரி
96

வேதனம் வழங்கப்படாமை அடிக்கடி செய்யப்படும் மற்றுமொரு
முறைப்பாடாகும்."
லெபனனில் நிர்க் கதியாக் கப் பட்டும் துஷ பிரயோகத் திற்குட்படுத்தப்பட்டும் தடுத்தும் வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பெண் தொழிலாளர்களுக்கு நீதியும் நட்டஈடும் பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை நடிகர் ரஞ்சன் ராமநாயக பிரசாரம் ஒன்றை வழிநடத்திச் சென்றார். இவள் இப்பெண்களை லெபனானிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் பேணப்படும் பாதுகாப்பு விடுதிகளில் சந்தித்ததாகக் கூறுயுள்ளார். பெண்கள் சுரண்டப்படும் விடயத்திலும் வணிகப் பொருட்களாகக் பயன்படுத்தப்படும் விடயத்திலும் தூதரகத்திலுள்ள உயர் அதிகாரி முதல் தொழிலாளி வரையிலான அனைவரினதும் அசமந்தப் போக்கை குற்றஞ் சாட் டியுள்ளார்.' ராமநாயக வின் பிரசாரத் திற்கு பத்திரிகையிலும் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பரந்தளவு விளம்பரம் செய்யப்பட்டு இதன் விளைவாக லெபனான் குழுவொன்று உருவாக்கப்பட்டதுடன் வெளிநாட்டிலுள்ள வேலையாட்களும் திரும்பி வரக்கூடியதாக இருந்தது.
5. பெண்களும் ஆயுதப் போரும்
5.1. கட்டுக் காவலில் வல்லுறவு
கட்டுக்காவலிலிருக்கும்போது இராணுவ, பொலிஸ் மற்றும் கடற்படையினரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட முறைப்பாடுகள் இலங்கையில் பெருமளவு அதிகரித்திருப்பதாக 2001இல் சர்வதேச மன்னிப்புச் சபை கூறுகின்றது. 2002 ஜனவரியில் ம.அ.வி.பா.ஒ.ச. குழுவுக் குச் சமர்ப்பித்த அறிக் கையொன்றில் பாதுகாப்புப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுதப் போராட்டத்தின் சூழ்நிலையிலேயே பெரும்பாலான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் உள்ளுரில் புலம்பெயர்ந்த பெண்கள் பலர் பாதிக்கப்பட்டவர்களுள் அடங்குவர் எனவும் கூறப்படுகின்றது.*
36. 2002 சனவரி 27 வீரகேசரி
37. 2002 சனவரி 30 லக்பிம, 2002 மார்ச் 3 லங்காதிப, 2002 நவம்பர் 24
சிலுமின
38. இலங்கை கட்டுக்காப்பில் வல்லுறவு (ச. ம. ச. சுட்டி: ASA37/001/2002)
சனவரி 2002

Page 56
கட்டுக்காவலிலுள்ளவர்கள் மீது கும்பல்களின் வல்லுறவு போன்ற குற்றச் செயல்களைப் புரிபவர்களுக்கு கடுமையான மறியற் தண்டனையை அறிமுகப்படுத்துவது உட்பட பல வழிமுறைகளை வரவேற்கும் அதேவேளை சர்வதேச மன்னிப்புச் சபை கட்டுக்காவலில் வல்லுறவைத் தடுப்பதற்கும் எடுத்துரைக்கப்பட்ட சம்பவங்களைப் புலனாய்வு செய்வதற்கும் மேலதிக வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை வலியுறுத்தியது. வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொலைசெய்யப்பட்ட ஒரு பெண்மணியின் விடயத்தில் தவிர, ஆயுதம் தாங்கிய படைகளின் ஓர் உறுப்பினராவது கட்டுக் காவலிலிருக்கும் போதான வல்லுறவுக்கு எப்போதுமே குற்றவாளியாகக் காணப்படவில்லை. சாட்சியம் பாதுகாக்கப் படுவதையும் வெற்றிகரமாக வழக்குத்தொடுக்கும் வாய்புகள் அதிகரிக்கப்படுவதையும் உறுதிப் படுத்துவதற்கு, குற்றப் புலனாய்வின் ஆரம்ப கட்டங்களில் பொலிஸ், நீதிவான்கள், மருத்துவர்கள் ஆகியோரின் பணிகள் ஏன் மீளாய்வு செய்யப்படவேண்டும் என்பதற்கான காரணத்தை சர்வதேச மன்னிப்புச் சபை அதன் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.”
5.2. உள்ளுரில் புலம்பெயர்ந்த ஆட்கள்
சமாதான முன்னெடுப்பு நடவடிக்கைகளையும் 2) L6OTIQ u JT 60T மனித நேய தேவைகளையும் கையாள்வதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டதையும் போரினால் பாதிக்கப்பட்ட இடப்பரப்புகளில் "இயல்புநிலை நிலைநாட்டப்பட்டதையுமடுத்து 2002இல் உள்ளூரில் புலம்பெயர்ந்த ஆட்களைப் பற்றிய அக்கறைகள் முன்னுரிமை வழங்கப்படவேண்டிய பிரச்சினையாக இருந்தது. உள்ளுரில் புலம்பெயர்ந்த ஆட்களின் எண்ணிக்கை 800,000 என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் தூதரகம் (யூஎன்எச்சீஆர்)" மதிப்பிட்டுள்ளது. பெண்களும் சிறுவர்களும் அதில் 70 வீதமானவர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது."
சமாதானப் பேச் சுவார் தி தைகள் இடம் பெற்று வரும் இவ் வேளையில் உள்ளுரில் புலம் பெயர்ந்த ஆட்களின் தேவைகளையும் குறைகளையும் வலியுறுத்திக்கூறும் ஒரு முயற்சியாக மனித உரிமைகளின் ஆய்வுக்கான நிலையம் (சீஎஸ்எச்ஆர்) இலங்கையில்
39. Ibid
40. ஐ.நா.அ.உதா. இலங்கையில் உள்ளுரில் புலம்பெயர்ந்தவர்களுக்கான நிகழ்ச்சித் திட்டம் ஐ.நா.அ.உதா. மதிப்பீடு மற்றும் கொள்கைப் பகுப்பாய்வுக் 3ísmy. EPA U/2002/04/2002 (Bup.
41. வடகிழக்கில் யுத்தத்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தேவைகளின் மதிப்பீடு, SHRNற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது.
98

உள்ளுரில் புலம்பெயர்ந்த பெண்கள் பற்றிய அறிக்கையொன்றைத் தொகுத்துள்ளது." இவ்வறிக்கை முக்கியமானதாக புலம்பெயர்ந்த பெண்களால் இனம் காணப்பட்ட பின்வரும் பிரச்சினைகளைக் குறிப்பிட்டுள்ளது: பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஆண் பெண் பேதத்தைக் காட்டும் பணிகளை மாற்றுதல், மாற்றத்திற்கான புதிய வாய்ப்புகள், மூப்பு சார்ந்த அதிகார உறவுகள், முடிவெடுக்கும் அதிகாரம் பெண்களுக்கு இல்லாமை, நிறுவகப் பாதுகாப்பின்மை, சீதனம், சிறுவர் திருமணம் போன்ற பெண்களுக் கெதிரான பாரபட்சமான நடைமுறைகளின் அதிகரிப்பு, பாலியல் வன்முறை, துஷ்பிரயோகம், முறை தகாத புணர்ச்சி, வன்முறை, சோதனைக் கூடங்களில் வன்முறைகள், பாலியல் தொல்லை, துஷபிரயோகம், விபச்சாரம், வணிகம், அடிப்படை சேவைகளும் வசதிகளும் இல்லாமை, ஜனன சுகாதார சேவைகளின் சீர்குலைவு, சித்தப் பிரமை, உணவு மற்றும் உணவுப் பங்கீடு வழங்கலில் பற்றாக்குறை, உடல்நலம் தொடர்பான பாரிய பிரச்சினைகள், தண்ணீர், உறைவிடம், வீடமைப்பு அந்தரங்கத் தன்மை, சீவனோபாயம் இல்லாமை, கூலி வேலை, கூலிப் பாகுபாடுகள் என்பனவே அவை.
ஈற்றில், சமாதானம், உரிமைகள், மீள்குடியமர்வு என்பன பற்றிய வினாக்கள் அடிப்படை பிரச்சினைகளாகும் என அறிக்கையால் காணப்பட்டதுடன் சமாதான நிகழ்ச்சி நிரல் முழுவதும் பெண்களின் உரிமைகள் சேர்க்கப்படுவதனையும் ஆதரித்தது. புலம் பெயர்ந்தவர்களின் உடல் ரீதியிலான தேவைகளை மட்டுமின்றி அவர்களின் சமூக, உள ரீதியிலான தேவைகளையும் கருத்திற்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்து கொள்கை அபிவிருத்தியிலும் பிரயோகத்திலும் உரிமை அடிப்படையிலான அணுகுமுறையொன்றின் முக்கியத்துவம் அறிக்கை முழுவதும் வலியுறுத்தப்பட்டது. உதவி வழங்குவதில் புலம்பெயர்ந்த ஆட்கள் அனைவரினதும் அர்த்தமுள்ள பங்கேற்பின் அவசியமும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இனக்கலவரத்தின் காரணங்களுக்கும் விளைவுகளுக்கும் தீர்வு காணும்போது உள்ளுரில் புலம்பெயர்ந்த ஆட்களுக்கென எதிர்பார்க்கப்படும் மீள்குடியமர்வு நிகழ்ச்சித் திட்டங்கள், மீளமர்த்துகை, மீள ஒன்றிணைதல் ஆகிய அனைத்து நிகழ்ச்சித் திட்டங்களிலும் முடிவெடுத்தல், திட்டமிடுதல், நடைமுறைப்படுத்துதல் ஆகிய துறைகளில் பெண்களை ஈடுபடுத்த வேண்டிய அத்தியாவசிய தேவையும் அறிக்கை கண்டறிந்த விடயங்களில் சேர்க்கப்பட்டது.
42. ஆபத்துக்கு மேலாக அரிசியைத் தெரிவுசெய்தல் - புலம்பெயர்ந்த பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள், மனித உரிமைகள் பற்றிய ஆய்வுக்கான நிலையம், கொழும்பு.

Page 57
5.3. சிறுவர்கள் பலவந்தமான போரணிக்குத் திரட்டப்படல்
சிறுவர்கள் பலவந்தமாக போரணிக்குத் திரட்டப்படும் பிரச்சினை கவனத்திற் கொள்ளப்படுவதற்கு பெண்களின் செயற்பாடு பங்களிப்புச் செய்துள்ளது. தன் சிறுவர்களை ஆட்சேர்ப்பு செய்ததையும், ஆண்டின் இறுதியளவில் இந்நடவடிக்கையை நிறுத்தவும, பலவந்தமாக திரட்டப்பட்டவர்களை அவர்களது குடும்பங்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டிய கடப்பாட்டை மேற்கொள்ளவேண்டியிருந்ததையும் எல்ரீஈ ஏற்றுக்கொள்ள வேண்டும். உதயமாகியுள்ள சமாதான முயற்சியில் இராணுவத்திற்கும் அரசியல் கடப்பாடுகளுக்குமிடையில் நுண்ணுணர்வுள்ள சமநிலை பேணப்படவேண்டும் அத்துடன் மீண்டும் ஒரு போராக பரிணமிப்பதைத் தடுக்கவேண்டும் என்ற வலுவான நோக்கில் மனித உரிமைகள் பற்றிய பலமான வினாக்கள் எழுப்பப்படாமலேயே உள்ளன. இவை பெயர் குறிப்பிடப்படாதவையாக உள்ளன. இலங்கையின் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் முதலாவது ஆண்டில் சிறுவர்கள் பலவந்தமாக போருக்குத் திரட்டப்படுதல் அத்தகைய பிரச்சினைகளுள் ஒன்றாகும். எனினும் எல்ரீ யை எதிர்க்கத் துணிந்த ஒரு சில வீரத் தாய்மாரினதும் இப்பிரச்சினையை வெளிப்படுத்துவதற்கு அயராது உழைத்த ஒரு சில உள்ளுர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களினதும், பிரதானமாக பெண்கள், சர்வதேச மன்னிப்புச் சபை, யுனிசேர்வ் போன்ற சர்வதேச அவதான முகவராண்மைகளினதும் முயற்சியின் ஊடாக இப்பிரச்சினை இணக்கப் பேச்சுவார்த்தையின் மேசையில் திணிக்கப்பட்டது.
6. பெண்களும் சமாதானமும்
6.1. சர்வதேச நியமங்கள்
1985இல் நைரோபியில் நடைபெற்ற மகளிர் தசாப்தத்தின் 1975 - 1985 சாதனைகளை மீளாய்வு செய்த பெண்கள் பற்றிய ஐ. நா. உலக மாநாட்டின் முன் நோக்கச் செயல்நுட்பங்கள் சமாதானம் என்பது தேசிய, சர்வதேச மட்டங்களில் போரும் வன்முறைகளும் அட் டுழியங்களும் இல் லாதிருப்பது மட்டுமல்ல, ஆனால் , சமுதாயத்தினுள் பொருளாதார, சமூக நீதியையும் சமத்துவத்தையும் முழு அளவிலான அனைத்து உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் அனுபவிப்பதாகும்" எனக் குறிப்பிடுகின்றது.
43. பெண்களுக்கான ஐ.நா. தசாப்தத்தின் சாதனைகளை மீளாய்வு செய்வதற்கும் மதிப்பீடுசெய்வதற்குமான உலக மாநாட்டின் அறிக்கை - நைரோபி 1985 t1606) 15 - 26 www.un.org/women watch
100

சமாதானமானது ஆண் - பெண் சமத்துவம், பொருளாதார சமத்துவம், சர்வதேச ரீதியில் அடிப்படை மனித உரிமைகளினதும் அடிப்படைச் சுதந்திரங்களினதும் துய்ப்பு என்பவற்றை ஊக்குவிக்கின்றது என அது மேலும் குறிப்பிடுகின்றது. சர்வதேச சமாதானத்தையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பதில் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கும் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், தகவல் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம் என்பவற்றிற்கான உரிமையைப் பிரயோகிக்கும் அதே வேளையில், அது அனைவராலும் துய்க்கப்படுவதற்கு பெண்கள் தத்தம் நாடுகளில் அரசியல், பொருளாதார, சமூக வாழ்க்கையில் குறிப்பாக, முடிவெடுக்கும் நடவடிக்கைளில் அனைத்து துறைகளிலும் ஆண்களுடன் சமமான அடிப்படையில் பங்குபற்றுவதற்கான தங்கள் உரிமையைப் பிரயோகிப் பதனை இயலச் செய்வதை தேவைப்படுத்துகின்றது.
பத்தாண்டுகளுக்குப் பின்னர் 1995இல் மகளிர் பற்றிய 4ஆவது ஐ.நா. மாநாட்டில் செயற்பாட்டிற்கான பீஜிங் களம், பெண்கள்மீது ஆயுதப் போராட்டத்தின் தாக்கம் கவலைக்குரிய பாரதூரமான ஒரு விடயம் எனக் கருதியதுடன் சமாதானத்திற்கான மனிதாபிமான இயக் கத்தில் பெண்கள் பல வேறு தன்மைகளில் மத்திய செயற்பாட்டாளர்களாகத் தங்களை அதிகமதிகமாகத் தாபித்து வருகின்றனர் என்பதை ஏற்றுக்கொண்டது. முடிவெடுத்தல், போராட் டத்தைத் தடுத்தல், தீர்வு காணுதல், மற்றும் ஏனைய அனைத்து சமாதான முயற்சிகளிலும் இவர்களின் முழுப் பங்கேற்பு நிரந்தர சமாதானத்தை எய்துவதற்கு அத்தியாவசியமானதாகும்."
எனினும் 2002ஆம் ஆண்டிற்தான் ஐ. நா. பாதுகாப்புச் சபை பெண்களின் மீது போரின் தாக்கம் மற்றும் போராட்டத்தின் தீர்வுக்கும் நிலையான சமாதானத்திற்கும் பெண் களின் பங்களிப்புகள் என்பவற்றிற்கு குறிப்பாக கவனம் செலுத்தி அதன் முதலாவது தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் (ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைத் தீர்மானம் 1325) 2000 அக்டோபர் 31ஆம் திகதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டடது.*
இத்தீர்மானம் போராட்டங்களைத் தடுப்பதிலும் தீர்ப்பதிலும் பெண்களின் முக்கியமான பங்கை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன் சமாதானத்தைப் பேணுவதற்கும் ஊக்குவிப்பதற்குமான அனைத்து முயற்சிகளிலும் அவர்களது சமமான பங்கேற்பினதும் முழு ஈடுபாட்டினதும் முக்கியத்துவத்தையும் போரைத் தடுத்தல் மற்றும்
44. உலகளாவிய உருவரைச் சட்டம், செயற்பாட்டிற்கான பீஜங் களம் 45. S/RES/1325
101

Page 58
தீர்த்தல் என்பன தொடர்பில் முடிவுகள் எடுப்பதிலான அவர்களது பங்கையும் வலியுறுத்தியது. தேசிய, பிராந்திய, சர்வதேச நிறுவனங்களிலும் போரைத் தடுத்தல், முகாமைசெய்தல், தீர்த்தல் என்பவற்றிற்கான செயற்திட்டங்களிலும் முடிவெடுக்கும் அனைத்து மட்டங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு அங்கத்துவ நாடுகள் அனைத்தையும் தூண்டியது. இதே போன்று முக்கியமாக, சமாதான உடன்னபடிக்கைகளுக்கான இணக்கப் பேச்சுவார்த்தைகளின் போதும் அவற்றை நடைமுறைப் படுத்தும்போதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமவாய்ப்பை கடைப் பிடிக்குமாறு செயற்பாட்டாளர்கள் அனைவரிடமும் கோரியது. இதில் ஏனையவற்றுடன் பின்வருவனவும்: அடங்கும்; (அ) சொந்த நாடுகளுக்குத் திருப்பியனுப்பப்படும்போதும் மீளக்குடியமர்த்தப்படும்போதும் புனர்வாழ்வு, மீள ஒருங்கிணைத்தலின் போதும் போருக்குப் பின்னரான புனர்நிர்மாணத்தின் போதும் பெண்களினதும் பெண் பிள்ளைகளினதும் விசேட தேவைகள், (ஆ) உள்ளுர் பெண்களின் சமாதான முயற்சிகளுக்கும் போருக்குத் தீவுகாண்பதற்கான சுதேச நடை முறைகளுக்கும் சமாதான உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்தும் அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதரவளிக்கும் நடைமுறைகள் (இ) குறிப்பாக பெண்களினதும் பெண் பிள்ளைகளினதும் பாதுகாப்பையும் அவர்களது மனித உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வழிமுறைகள், குறிப்பாக அவை அரசியலமைப்பையும் தேர்தல் முறையையும் பொலிஸ் மற்றும் நீதித்துறையையும் தொடர்புறத்தும் அளவுக்கு இருக்க வேண்டும்.
தீர்மானம் 1325 போருக்குத் தீர்வுகாணும் விடயத்தில் பெண்களின் பிரச்சினை, சமாதான முயற்சி, சமாதானத்தைப் பேணுதல், பாதுகாப்பு என்பவற்றிற்குக் கவனம் செலுத்தும் உலக எண்ணக் கருத்திலும் ஒரு மாற்றத்தையும் அரசியல் கட்டுக்கோப்பையும் கொணர்ந்தது.
6.2. பெண்களும் சமாதான முயற்சியும்
அத்தகைய கட்டுக்கோப்பொன்று இலங்கையின் சமாதான முயற்சியில் பலதரப்பட்டவையும் முக்கியமானவையுமான விளைவுகளைக் கொண்டுள்ளது. மகளிர் குழுக்கள் இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் சமாதான முயற்சிகளை வலுப்படுத்துவதற்குமான தங்கள் பணிகளை 2002ஆம் ஆண்டு முழுவதும் மேற்கொண்டன. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் கழகம் போருக்கு பேசித் தீர்க்கப்படும் அரசியல் தீள்வொன்றைக் கோரி 2002 ஜனவரி 12ஆம் திகதி அதன் ‘ஒரு மில்லியன் கையொப்ப
102

இயக்கத்தை பூர்த்திசெய்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எல்ரீஈக்கும் மனுவொன்றைக் கையளித்தது.
2002 பெப்ரவரியில் இலங்கை அரசாங்கத்திற்கும் எல்ரீfஈ இற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (பு.உ.ஒ) கைச்சாத்திடப் பட்டதையடுத்து மகளிர் குழுக்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பெண்களின் பிரச்சினைகளையும் சேர்த்துக்கொள்ளச் செய்வதற்குத் தங்கள் முயற்சிகளை ஆரம்பித்தன. முதல் தலையீடுகளுள் ஒன்று இலங்கையின் தாய்மாரும் புதல்விகளும் மற்றும் இலங்கை மகளிர் அ.சா.ஒ. மன்றம் ஆகிய இரண்டு கூட்டணிகளால் 2002 மார்ச் 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதில் இணக்கப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் திறத்தவர்களுக்கும் நோர்வே அனுசரணை யாளர்களுக்கும் முகவரியிடப்பட்ட மனுவொன்றுக்கு கவனத்தை ஈர்த்து கொழும்பில் பேரணி ஒன்றையும் மறியற் போராட்டம் ஒன்றையும் நடத்தியது. பு:உஒ. கையொப்பமிடப்பட்டதன் விளைவாக இடம்பெற்ற போர் நிறுத்தத்தை இம்மனு வரவேற்றதுடன் உடன்படிக்கையை பலப்படுத்துமாறும் சமாதான முயற்சிகளில் பெண்களையும் சேர்த்துக் கொள்ளுமாறும் கோரியது.
ஏப்ரல் மாதத்தில் எல்ரீஈ அன்னை பூபதியின் நினைவாக மட்டக்களப்பில் நினைவுச் சின்னம் ஒன்றை நிறுவி சிரார்த்த தினம் ஒன்றுடன் அவரை கெளரவித்தது. 1989இல் இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருப்பதை எதிர்த்து சாகும் வரை மேற்கொண்ட உண்ணாவிரதத்திற்காக இவர் கெளரவிக்கப்பட்டார்.
மே மாதத்தில் இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையம்
பெண் களையும் போருக்கான தீர்வையும் அரசியலமைப்பின் உருவாக்கத்தையும் பற்றி கொழும்பில் சர்வதேச கூட்டம் ஒன்றை நடத்தியது. தொடர் நடவடிக்கையாக இலங்கையிலிருந்து மாநாட்டில் கலந்துகொண்ட பெண்கள் 2002 யூன் 7ஆம் திகதியிடப்பட்ட கோரிக்கைப் பத்திரமொன்றை அரசாங்கத்திற்கும் எல்ரீரீஈ இற்கும் நோர்வே அனுசரணையாளர்களுக்கும் கையளித்தனர். இந்த 14 அம்சக் கோரிக்கை சமாதான முயற்சிகளை வரவேற்றதுடன் பின்வரு வனவற்றையும் கோரியது: சமாதான முயற்சியின் அனைத்து அம்சங்களிலும் பெண்கள் சேர்க்கப்படுதல் வேண்டும். பெண்களின் பிரச்சினைகளும் குறைபாடுகளும் சமாதான வேலைத் திட்டத்தின் உள்ளார்ந்த ஓர் அம்சமாக அமையவேண்டும். அத்துடன் சமாதான முயற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
103

Page 59
பெண் பேராளர் குழுக்கள் ஜனாதிபதியையும் பிரதமரையும் நோர்வே அனுசரணையாளர்களையும் சந்தித்தன. அத்துடன் கோரிக்கைப் பத்திரத்தின் பிரதியொன்றும் கிளி நொச்சியிலுள்ள எல்ரீ யின் அரசியல் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இடப்பரப்பிற்கான கொள்கையிலும் கொள்கைத் தலையீடுகளிலும் பெண்களின் ஈடுபாட்டையும் பங்களிப்பையும் பற்றி உரையாடுவதற்கென 2002 செப்டெம்பரில் எல்ரீரீஈ இயக்கத்திருந்தும் வடக்கிலும் கிழக்கிலுமுள்ள குடியியல் சமூக ஒழுங்கமைப்புகளிலிருந்தும் வந்த தமிழ்ப் பெண்களின் பேரணியொன்றையும் மாநாடு ஒன்றையும் கிளிநொச்சியில் நடத்தியது. அங்கு குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த விடயம் யாதெனில் பெண்களுக்கான உடனடி மனித நேய நிவாரணத் தேவைகள் கொள்கையை வகுத்தல், நடைமுறைப்படுத்துதல், கண்காணித்தல் என்பவற்றில் பெண்களின் பங்கேற்பையும் பற்றிய கலந்துரையாடல்களாகும்.
மகளிர் ஒழுங்கமைப்புகளின் குழுவொன்று 2002 அக்டோபர் 12 முதல் 17° வரை இலங்கையின் வடக்கிற்கும் கிழக்கிற்குமான சர்வதேச மகளிர் தூதுக்குழுவொன்றில் பங்குபற்றியது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வடக்கிலும் கிழக்கிலும் இருந்து வந்த பெண்களின் அணிகள் யாழ்ப்பாணம், ஊர்க்காவற்றுறை, கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், மன்னார், மற்றும் பொலனறுவை மாவட்டத்திலுள்ள எல்லைப் புறக் கிராமங்கள் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்தன. துTதுக் குழுவின் உறுப்பினர்கள் இப்பிரதேசங்களில் பல்வேறு சமுதாயங்களையும் சமூக குழுக் களையும் சேர்ந்த பல வேறு பெண் களுடனும் ஆண்களுடனும் உரையாடினர். தூதுக் குழு இரண்டு வகையான விதப்புரைகளைச் செய்தது - ஒன்று சமாதான முயற்சியையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் பற்றியதாகும். மற்றது மீளக் குடியமர்தல், புனரமைப்பு, புனர்வாழ்வு என்பன பற்றிய கொள்கைப் பிரச்சினை தொடர்பானதாகும். தூதுக்குழு, சமாதான முயற்சிகளை நீடிக்கச் செய்தல், தகவலுக்கான உரிமை, புலம்பெயர்தலும் மீளக் குடியமர்தலும், புனரமைப்பும் புனர்வாழ்வும், காணி உரிமைகள், நட்டஈடு, சுகாதாரம், கல்வி, மகளிர் சீவனோபாயம், அரசியல் பிரதிநிதித்துவம், ஒன்றுகூடும் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம்,
46. பெண்களின் விதிப்புரைகள், இலங்கையில் வடகிழக்கிற்கான சமாதானச் செயற்பாடும், சர்வதேசப் பெண்கள் தூதுக்குழு, 12-17 ஒக்டோபபர் 2002 மகளிர் ஊடக கூட்டவை, கொழும்பு.
104

காணாமற் போதல் , போரில் ஆட்கள் காணாமற் போதல், பெண் களுக் கெதிரான வன் முறை என்பன தொடர் பிலான கண்டுபிடிப்புகளையும் விதப்புரைகளையும் செய்தது. மகளிர் குழுக்கள் உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்திற்கும் 2002 டிசம்பரில் ஒஸ்லோ நகரில் 3வது சுற்றுவட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கும் முன்னர் கொழும்பில் இருதரப்பு மற்றும் பலதரப்பு முகவராண்மைகளின் ஆதரவை நாடியதுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பெண்களின் அக்கறைகளையும் பயனுறுதியுடன் சேர்த்துக்கொள்வது தொடர்பாக மதியுரை கூறுவதற்கு ஆண் பெண் பாகுபாடு தொடர்பான பிரச்சினைகள் பற்றிய உப குழுவொன்றை நிறுவுவதற்கு பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் திறத்தவர்களை உடன்படச் செய்வதில் வெற்றியும் கண்டது. உப குழுவுக்கும் அரசாங்கத்தினதும் எல்ரீஈ யினதும் நியமத்தர்கள் 2003 ஜனவரில் அடுத்த சுற்றவட்ட பேச்சு வார்த்தைகளின்போது பெயர் குறிக்கப்படவிருந்தனர்.
மகளிர் குழுக்கள் தடுத்துவைக்கப்பட்டவர்களினதும் காணாமற் போனவர்களினதும் விடுவிப்பைக் கோரும் போரில் காணாமற் போனவர் களினதும் தடுத்து வைக்கப்பட்டவர்களினதும் குடும்ப உறுப்பினர்களின் ஒழுங்கமைப்புகளுடனும் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தின. யாழ்ப்பாணத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் மகளிர் கழகம், பெற்றோரினதும் பாதுகாவலர்களினதும் கழகம் என்பன கொழும்பில் இத்தகைய ஒரு செயற்பாட்டை ஒழுங்குசெய்தன. சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய டிசம்பர் 10ஆம் திகதி அரச சார்பற்ற ஒழுங்கமைப்புகளின் கூட்டவை இது போன்ற செயற்பாடொன்றை யாழ்ப்பாணத்தில் ஒழுங்குசெய்தது. இதில் யாழ்ப்பாணத்திலுள்ள மகளிர் மற்றும் ஊடக ஒன்றியத்தின் ஆதரவின்கீழ் தெற்கிலும் கிழக்கிலுமிருந்து வந்த பெண்கள் பங்குபற்றினர். வடக்கு கிழக்கு மாவட்டங்களிலிருந்தும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் வந்த பெண்களின் பல குழுக்கள் ஒன்றொன்றினது நகரங்களுக்கும் இல்லங்களுக்கும் விஜயம் செய்ததுடன் அவற்றின் தொடர்ச்சியான செயற்பாடுகளின் மத்தியில் ஆண்டு முழுவதும் கூட்டங்கள், கருத்தரங்குகள், பொதுக் கொண்டாட்டங்கள், சமவாயங்கள், என்பவற்றை நடத்தியதுடன் கூட்டுப் பேரணிகளையும் மறியற் போராட்டங்களையும் ஒழுங்குசெய்தன.
7. பொருளாதாரக் கொள்கையும் பெண்களும்
அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்பு முறைகள் பற்றி 2000ஆம் ஆண்டின் போது பல ஆவணங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டன. ஒன்று இலங்கைக்கான தேசிய தொழிற் கொள்கை
105

Page 60
வரைவு (தே.தொ.கொ.) ஆகும். மற்றது இலங்கை வறுமை தணிப்பு செயல்நுட்பப் பத்திர வரைவு (வ.த.செ.) ஆகும். பிந்தியது 2002 டிசம்பரில் இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல் என்ற தலைப்பின் கீழ் ஒன்றிணைக்கப்பட்ட மூன்று பாகங்களைக் கொண்ட கொள்கை வரைவுருச் சட்டமாகச் சேர்க்கப்பட்டது. (தே.தொ.கொ) இவை இரண்டும் வறுமை மற்றும் வறியவர்களுக்கு ஆதரவான செயல்நுட்பங்கள் ஆகிய பிரச்சினைகள் பற்றி கவனம்செலுத்தின. இவை இரண்டுமே குடியியல் சமுக ஒழுங்கமைப்புகளால் வன்மையாக விமர்சிக்கப்பட்டன. முக்கியமான ஒரு விமர்சனம் கொள்கைத் தொகுப்பில் ஆண் பெண் சமத்துவம் தொடர்பிலான நோக்கு இல்லாமையாகும்.
ஆண் பெண் சமத்துவம் தொடர்பிலான நோக்கெல்லையிலிருந்து தே.தொ.கொ வரைவை விமர்சித்த ரமணி ஜயசுந்தர" அதன் ஏழு பிரிவுகளுள் ஐந்து பிரிவுகளில் ஆண் பெண் சமத் துவத் தொனியொன்றைக் காட்ட முனையும் குழப்பமான ஓர் ஆவணம் என அதை வர்ணித்தார்." மற்ற இரண்டு பிரிவுகளும்? வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும் சமுக கடப்பாடுகளையும் பற்றியவையாகும். இவை பொருளாதாரத்திற்கு பெண்களின் பங்களிப்பைப் பற்றி நேரடியாகவும் தவிர்க்கமுடியாதவாறும் கூறுகின்றன. இது ஆண் பெண் பாகுபாடு பற்றிய நுண்ணுணர்வைக் காட்டுவதற்கான எத்தனிப்பு எனக் குறிப்பிட்ட அவர் பெண்களுக்கெதிராக ஆதரவளிப்பதாகவும் பாரபட்சம் காட்டுவதாகவும் பெண்களை ஒரங்கட்டுவதாகவும் முடிகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆவணம், 15 ஆண்களையும் பொருளாதாரம், தனியார் துறை, தொழிற் சங்கங்கள், அரச துறை என்பவற்றின் பிரதான பங்குதாரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெண்ணையும் கொண்ட மதியுரைக் குழவொன்றினால் வரையப்பட்டதாகும். தொழிற் துறையிலுள்ள பெண்கள் பற்றிய விடயங்களைக் கையாளுகையில் கவனத்திற் கொள்ளப்படவேண்டிய பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை கொள்கை வரைவு ஏற்றுக்கொள்கின்றது. ஆனால் அதேவேளை ஆக்க பூர்வமான
47. ரமணி ஜயசுந்தர, புதிய பொருளாதார யுகத்தில் அடியெடுத்துவைத்தல் -
மீண்டும் ஆண் பெண் பேதம்? - வெளிவருகின்றது.
48. ஆக்க முயற்சி 1. மனித வலுவைத் திட்டமிடல், ஆக்க முயற்சி2: சீவியகால தொழில் வாய்ப்பிற்கு கல்வியும் பயிற்சியும், ஆக்க முயற்சி 4: சி.ந.தொ.மு. மற்றும் சுயதொழில் ஊடாக வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், ஆக்க முயற்சி 6: மறுசீரமைக்கப்பட்ட பங்குடைமை, ஆக்க முயற்சி 7 தொழில் மூலவளத்தையும் ஒப்படை முறைகளையும் சென்றடைதல்
49. ஆக்க முயற்சி 3: வெளிநாட்டு வேலை வாய்ப்பின் மீள்நிர்ணயம், ஆக்க
முயற்சி 5; சமுக கடப்பாடுகளை நிறைவேற்றுதல்
106

தொழிற்துறையில் இலங்கைப் பெண்கள் ஆற்றும் முக்கிய பங்கை அது கருத்திற் கொள்ளவில்லை என ஜயசுந்தர மேலும் குறிப்பிடுகின்றார். கொள்கை பெண்களை மீண்டும் பாதகமான நிலையிலேயே வைக்கின்றது. அத்துடன் நலம்பேணலை நியாயப் படுத்துகின்றது, பெண்களின் பணி தொடர்பாக உதாசீனமான போக்கையும் பெண்கள் குறைநிரப்பு வருமானத்தை மட்டுமே சம்பாதிக்கின்றனர் என்ற கருத்தையுமே வெளிப்படுத்துகின்றது.
வெளிநாடு சென்றுள்ள வேலையாட்களுள் 70 வீதமானேர் பெண்களாக இருப்பது தற்செயலான நிகழ்வொன்றேயாகும் என்றே இவ்வாவணம் கருதுகின்றது, குறைந்த சம்பளம் வழங்கப்படும் தேர்ச்சியற்ற வேலைகளில் அவர்கள் பங்கேற்பதைப் பற்றி கவனம் எதுவும் செலுத்தப்படவில்லை என அவள் குறிப்பிடுகின்றார். நாட்டிற்கு இரண்டாவதாக ஆகக்கூடுதலான அந்நிய செலாவணிக்குப் பங்களிப்பு செய்யும் உள்ளுர் ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் புரிவோரில் பெரும்பாலானோர் பெண்களே என்ற உண்மையை (தே.தொ.கொ) எப்படி உதாசீனம் செய்யமுடியும் என்பதைத் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்கின்றார்.
மற்ற முக்கியமான ஆவணமாகிய வ.த.செ. யும் வன்மையான விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுகின்றது. ஏனையவற்றுடன் இதன் ஆண் பெண் சமத்துவம் பற்றிய பகுப்பாய்வும் ஆண் பெண் ரீதியில் வறுமையின் தன்மை பற்றிய அவதானமும் பலவீனமுற்றிருப்பதாகவும் கூறப்படுகின்றது. சுதந்திரம் கிடைத்ததிலிருந்து அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அரச தலையீடு முதல் சந்தையை தாராள மயப்படுத்துதல், மற்றும் வறுமை ஒழிப்பு வரை பல்வேறு கொள்கைகளை கையாண்டபோதிலும் சுதந்திரம் பெற்ற காலந்தொட்டு வறுமைச் சுட்டிகள் வரம்பளவில் மட்டுமே மாற்றமடைந்துள்ளன. தற்பொழுது குடிசனத்தின் ஒரு பெரும் பகுதி வறுமைக் கோட்டிற்குக் கீழேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றது. வருமானப் பகிர்வை நோக்குமிடத்து ஆகக்குறைந்த 40 வீதமான குடும்பங்கள் தேசிய வருமானத்தில் 15 வீதத்தை மட்டுமே பெறுகின்றன. ஆகக்கூடுதலான 20 வீதத்தினர் 50 வீதத்தைப் பெறுகின்றனர். குடிசனத்தின் ஏறக்குறைய 30.4 வீதத்தினர் உத்தியோகப் பூர்வமான வறுமைக் கோட்டின் கீழேயே வாழ்கின்றனர்." இம்மட்டங்கள் புவியியல் பகிர்வுக்கேற்ப மாற்ற மடைகின்றன. கிராமிய வறுமையே (34.7%) மிக மோசமானதாகக் காணப்படுகின்றது. அடுத்தது தோட்டப் பகுதிகள் (20.5%), மிக மோசமாயுள்ளன.
50. 1997இல் ரூபா 2750ஆக மீள் நிர்ணயம் செய்யப்பட்டது. 51. பார்க்க: ரமணி ஜயசுந்தர Op. cit.
107

Page 61
வறியவர்களுள் குறிப்பிடத்தக்க நூற்றுவீதத்தினர் பெண்களே என்பதையும் சில பிரிவுகளிலும் புவியியல் ரீதியிலான இடப்பரப்புகளிலும் பெரும்பான்மையானோர் பெண்களே என்பதையும் பல ஆய்வுகள் சுட்டிக் காட்டியபோதிலும் 200க்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட வ.த.செ. ஆவணம், 'ஆண் பெண் பாகுபாட்டைக் கட்டுப்படுத்துதல் என்ற தலைப்பின் கீழான அதன் பிரதான வாசகத்தில் பெண்களுக்கென இரண்டு பக்கங்களை ஒதுக்கியுள்ளது. குறித்துரைக்கப்பட்ட வழிகளில் பாதிக்கப்பட்டவர்களான? வறியவர்களின் பிரிவினரான பெண்களின்மீது வறுமையின் தாக்கத்தை வ.த.செ. ஆவணம் கருத்திற்கொள்ள முயலவில்லை ஆதலால் ஆண் பெண் நடுநிலை என்ற போர்வையில் இங்கும் ஆண் பெண் பாகுபாடு காணப்படுகின்றது என ஜயசுந்தர இவ்வாவணத்தை விமர்சிக்கின்றார். இவ்வாவணம் ஆண் பெண் சமத்துவம் தொடர்பாக நுண்ணுணர்வுடையதாயிருக்க எத்தினித்த போதிலும் ஈற்றில் அது முற்றிலும் பெண் களுக்கெதிராக பாரபட்சமானதாகவே காணப்படுகின்றது. CatSeye’ என்னும் சஞ்சிகையில் வ.த.செ. யைப் பற்றி விமர்சித்த மற்றுமொரு விமர்சகர் அரச அமைப்புகளினதும் கொள்கை வகுக்கும் குழுமங்களினதும் சில முக்கியமான கரங்களுக்குள் ஆண் பெண் சமநிலைக்கு முக்கியத்துவமளிக்கும் எண் ணக் கருத்தை புரிந்துகொள்ளத் தவறியமையையும் ஆண் பெண் சமநிலை பற்றிய விழிப்புணர்வை பசப்பு வார்த்தைக்கு மட்டுமே மட்டுப்படுத்துவதோடு திருப்தியுறும் மனப்போக்கையும் வெளிப்படுத்துகின்றார். Catseye நிருபர் ஏனைய சில முக்கியமான அம்சங்களையும் எடுத்துக்காட்டுகின்றார். வறுமை தணிப்பு செயல்நுட்பங்கள் குடும்பங்களை நோக்கியே தொடர்ந்து திசைதிருப்பப்படுகின்றன. எனினும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளதும் ஆண்களும் பெண்களும் சமமான நலன்களை துய்க்கும் வாய்ப்புள்ளதுமான குடும்பம் ஒற்றுமையான சமூக உறவுகளுக்கான ஒரு நிலையமாக அமையமாட்டாது எனவும் இவர் குறிப்பிடுகின்றார். செயல்நுட்பம் குடும்பங்களை நோக்கி கவனத்தைச் செலுத்தும் அதே வேளையில் அது பெண் களை குடும் பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்களின் முக்கியத்துவத்தை கருத்திற் கொள்ளத் தவறியுள்ளது. குறிப்பாக, போருக்கும் அரசியல் வன்முறைக்கும் மத்தியில் வறுமையைப் பொறுத்தளவில் இது முக்கியமான ஒரு பிரிவாக அமையலாம். பெண்கள், குடும்பத் தலைவர்களான ஆண்களை இழந்திருந்தாலன்றி குடும்பத்தின் தலைவர் என்ற ஸ்தானத்தை அடையமுடியாது அல்லது ஆண்களுடன் சமமாக
52. Ibid 53. Catseye, The Island Midweek Review, 2002 u16it 5
108

குடும்பத்தின் கூட்டுத் தலைவராக முடியாது என்ற வ.த.செ. வரைஞர்களின் பொதுவான கருத்தை ஆசிரியர் விமர்சிக்கின்றார். பெண்களின் காணிச் சொத்துவம், முறைசார்ந்த துறைகளில் பெண்களை விவசாயிகளாகவும் ஆக்கப்பூர்வமான வருமானம் சம்யாதிப்பவர்களாகவும் அங்கீகரித்தல் தொடப்பான ஏனைய முக்கியமான பிரச்சினைகள் செயல்நுட்ப ஆவணத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல் என்னும் கொள்கை உருவரைச் சட்டமுட்பட துரதிர்ஷ்டவசமாக முன்னர் வரையப்பட்ட கொள்கை ஆவணங்கள் பலவற்றை அவசர அவசரமாக ஒன்றுதிரட்ட தயாரிக்கப்பட்ட ஒரு தொகுப்பாகவே தென்படுகின்றது. இதன் விளைவாக ஆண் பெண் சமத்துவம் பற்றிய தொடர்பறுந்த ஒரு திடீர் தயாரிப்பாகவே அமைகின்றது. இப்பொருத்தமின்மைக்கான ஒரு தெளிவான உதாரணம், பாகம் IIIஇல் விதித்துரைக்கப்பட்ட முக்கியமான செயற்திட்டப் பிரிவாகும். ‘ஆட்சி முறையை மறுசீரமைத்தலும் வறியவர்களுக்குத் தத்துவமளித்தலும்’ என்ற தலையங்கத்தின் கீழ் ஆண் பெண் பாரபட்சத்தைத் தடுத்து நிறுத்துவதற்கென யாசிக்கும் கோரிக்கைகளின் பட்டியலொன்றைக் கொண்டுள்ளது. இத்தலையங்கத்திற்கும் ஆண் பெண் பாரபட்சத்திற்கும் தொடர்பேயில்லை. ஆண் பெண் சமத்துவம் மற்றும் பெண்கள் தொடர்பிலான தலையீடானது அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகரித்தல் முதல் பெண்களுக்கான தொழிற் பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் வரையிலுமானதாகும். மற்றும் நுண்கடன் நிகழ்ச்சித் திட்டங்கள், தொழில்முயற்சி, தொழிற்சாலை வேலையில் பெண்களின் தொழில் நிலைமைகளை மேம்படுத்துதல், பெண்களை குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள், வயோதிபர், பிள்ளைப் பராமரிப்பு போன்ற விடங்களை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடு முற்றிலும் செயல்முறைச் சாத்தியமற்றதாகவே காணப்படுகின்றது.
இக்குறைப்பாடுகள் பெண்களின் செயல்நுட்பம் சார்ந்த நீண்ட தவணை அக்கறைக்கு கவனம் செலுத்துவதும் வறுமையைத் தணித்து பெண்களின் அதிகார பலத்தை அதிகரிக்கும் அமைப்புமுறை சார்ந்த மாற்றமொன்றைக் கொண்டுவருவதுமான ஆண் பெண் சமத்துவம் சார்ந்த கட்டுக் கோப் பொன்றைப் பற்றிய விவர மரில் லாமையையே எடுத்துக்காட்டுகின்றன.
8. பெண் தொழிலார்கள்
ஆடைத் தொழிற் சாலைகளிலும் (சுதந்திர வர்த்தக
வலயத்திலுள்ள ஏனைய தொழிற்சாலைகளிலும்) தொழில்புரியும்
வேலையாட்களை ஆளும் பிரதான சட்டமூலம் 1942ஆம் ஆண்டின்
109

Page 62
45ஆம் இலக்க தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம்" ஆகும். 2002 ஆகஸ்ட் மாதம் திருத்தப்பட்டது. இத்திருத்தங்களுள் குறிப்பாக மேலதிக வேலை நேரத்தை ஆண்டொன்றுக்கு 80 மணித்தியாலங் களிலிருந்து மாதமொன்றுக்கு 60 மணித்தியாலங்களாக அதிகரித்த பிரச்சினைக்குரிய திருத்தமும் ஒன்றாகும். தொழில் நியாய சபையிலும் கைத்தொழில் நீதிமன்றங்களிலும் தொழிலை முடிவுறுத்தும் அலகிலும் தொழிலாளர்களின் வழக்குகளை விசாரிக்கும் காலக் கெடுவை நிர்ணயித்து கைத்தொழில் பிணக்குச் சட்டத்திற்கான திருத்தமும் பிரேரிக்கப்பட்டது. பிரேரிக்கப்பட்ட காலக்கெடு 4-2-1 என்னும் சூத்திரமாகும். அதாவது தொழில் நியாய சபைகள் அவற்றின் விசாரணையை 4 மாதங்களிலும் கைத்தொழில் நீதிமன்றங்கள் 2 மாதங்களிலும் தொழிலை முடிவுறுத்தும் “அலகு 1 மாதத்திலும் அவற்றின் விசாரணையைப் பூர்த்திசெய்யவேண்டும். தற்பொழுது தீர்க்கப்படுவதற்குக் குறைந்தபட்சம் 10 மாதங்கள் எடுக்கும் வழக்குகளைக் கையாள்வதற்கு இச்சூத்திரம் நியாயமற்றதென தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இச்சூத்திரம் பயனுறுதியுடன் செயற்படுவதற்கு தொழிற் திணைக்களத்திலும் நீதிமன்றங்களிலும் பணியாட் டொகுதியினரும் வளங்களும் நேரொத்த விதத்தில் அதிகரிக்கப்படவேண்டும் என இவை கோரின.
தொழிலை முடிவுறுத்துதல் சட்டத்தின்கீழ் பிரேரிக்கப்பட்ட மற்றுமொரு திருத்தம் வேலையாட்களை நட்டஈட்டுடன் முடிவுறுத்துவதற்கு தொழில்தருநரின் அனுமதியை அனுமதிக்க விழைந்தது. ஆனால் விசாரணைக்கோ மேன்முறையீட்டிற்கோ இடமில்லை. மேலும் முடிவுறுத்துதலானது சட்டவிரோதமானது எனக் கண்டாலுங்கூட வேலையாளை மீளவும் வேலைக்கு அமர்த்துதல் தொழில் தருநருக்குப் பங்கம் விளைவிப்பதாக அமையும் என தொழில் ஆணையாளர் கருதினால் மீள தொழிலுக்கமர்த்தப்படுவதற்குப் பதிலாக நட்டஈட்டைக் கட்டளையிடும் தத்துவம் அவருக்கு அளிக்கப்படவேண்டும் என இத்திருத்தம் பிரேரித்தது. தற்போதைய சட்டவாக்கத்தின் கீழ் கடந்த கால ஊதியத்துடன் வேலையாட்களை மீள வேலைக்கமர்த்தும் தத்துவம் ஆணையாளருக்குண்டு. ஆதலால் இத்திருத்தம் தொழிற் சங்கங்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.*
54. 1946ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க கட்டளைச் சட்டம், 1961ஆம் ஆண்டின் 54ஆம் இலக்கச் சட்டம், 1965ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கச் சட்டம், 1971ஆம் ஆண்டின் 29ஆம் இலக்கச் சட்டம், 1976ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தேசிய அரசுப் பேரவைச் சட்டம் என்பவற்றால் திருத்தப்பட்டது. 55. LA Ti atšat5: http://www/tieasia.org.
110

V
இலங்கையில் ஆயுதப் போராட்டத்தினால்
1
பாதிக்கப்பட்ட சிறுவர் : இவ்வாண்டின் மீளாய்வு பர்சானா ஹனிபா
அறிமுகம் 270,000 சிறுவர்கள் போர் நிலைமை காரணமாக இலங்கைக்குள் இடம்பெயர்ந்து வாழுகின்றனர். பலர் பெற்றோரில் ஒருவரைப் போரில் இழந்துள்ளனர்; பெருந் தொகையானோர் அனாதைகளே. இடம்பெயர்ந்த சிறுவர்களில் 50வீதம் வரையானோர் தமது பிறப்புச் சான்றிதழ்களை இழந்துள்ளனர்; பாடசாலைகளில் இவர்கள் சேர்வது பெரும் பிரச்சினையே. இடம்பெயர்ந்த சிறுவர்களில் ஐந்தில் ஒருவர் போஷாக் கின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பி.எசடி மாணவி. தொல்பொருளியல் திணைக்களம், கொலம்பியா பல்கலைக்கழகம்,
“போர் எம்மை இங்கு கொண்டு வந்தது.” போராட்டத்தினால் தமது சொந்த நாடுகளுக்குள் இடம்பெயர்ந்து வாழும் பிள்ளைகளைப் பாதுகாத்தல் சிறுவர் Ling/sittil stood 6 Lilb (Save the Children), 2000.
111

Page 63
ஆயுதப் போராட்டத்தில் சிறுவர்களுக்கான விசேட பாதுகாப்பு எதனையும் இலங்கையின் சட்ட அமைப்பு கொண்டிருக்கவில்லை; அத்துடன் உள்நாட்டுக்குள்ளாக இடம்பெயர்ந்த மக்களின் விசேட தேவைகளை அங்கீகரிப்பதற்கு ஏற்பாடெதனையும் கொண்டிருக்கவில்லை. முரண்பாட்டிலுள்ள திறத்தவர்கள், ஆகக் குறைந்தது ஜெனீவா சமவாயங்களின் 3ஆம் உறுப்புரையை மதிப்பதற்குத் தேவைப் படுத்தப்படுகின்றனர். எவ்வாறாயினும், 25 வருடங்களுக்கு மேற்பட்ட போராட்டம் இடம்பெற்ற போதும், உள்நாட்டு முரண்பாட்டை ஆளும் பிரதான சர்வதேச மனிதாபிமானச் சட்ட ஒப்பந்தமான - 1977ஆம் ஆண்டின் சர்வதேச ரீதியாக இடம்பெறாத ஆயுதப் போராட்டங்களுக்குப் பலியானவர்களைப் பாதுகாத்தல் தொடர்பிலான (தாயேடு II) 1949 ஆகஸ்ட் 12ஆம் திகதி வெளிவந்த ஜெனீவா சமவாயங்களுக்கான மேலதிக தாயேட்டை இலங்கை ஏற்றங்கீகரிக்கவில்லை. இலங்கை I*தி மேலதிக தாயேட்டில் ஒப்பமிடுமானால், அது உடனடியாக முரண்பாட்டுக்கான சகல திறத்தவர்களையும் பிணிப்பதாக வந்துவிடும். இது ஆயுதப் போராட்டத்தின் போதும் அதன் பின்னரும் சிறுவர்களையும் பாதுகாப்பதற்குப் பெரும் உதவியாக இருக்கும்.
இலங்கை பொதுவாக மிகவும் குறைந்த சமூக செலவினத்தைக் கொண்டதாகும்; இதன் கல்வித் தராதரங்களும் சுகாதாரமும் பல ஆண்டுகளாகப் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. முன்னொரு காலத்தில், ஜப்பானுக்கும் சிங்கப்பூருக்கும் அடுத்தபடியாக, இலங்கையின் கல்வி கற்றோர் வீதம் ஆசியாவிலேயே மிகவும் உயர்ந்ததாக விளங்கியது; ஆனால் தற்போது இலங்கை பிராந்தியத்திலேயே இருபத்தோராவதாகப் பின்தங்கிவிட்டது. 1999ஆம் ஆண்டில் இலங்கை மொத்த உள்ளுர் உற்பத்தியில் 2.5 வீதத்தையும், பகிரங்க செலவினத்தில் 10வீதத்தையும் கல்விக்காகச் செலவிட்டது. உலக வங்கியின் ஆகக்குறைந்த கல்விக்கான செலவினத் தராதரங்கள் மொத்த உள்ளுர் உற்பத்தியில் 5 வீதமும் மொத்தப் பகிரங்கச் செலவினத்தில் 20 வீதமும் ஆகும். சுகாதாரச் செலவினம் குறைந்துகொண்டே போகின்றது. இப்பிராந்தியத்தில் இலங்கை சுகாதாரப் பராமரிப்பில் மிகவும் கூடுதலாக மதிக்கப்பட்ட போதும், போரினால் பாதிக்கப்பட்ட
3. "இலங்கையில் கல்வியறிவு வீத பெருவீழ்ச்சி" சண்டே ஒப்சேர்வர் கொழும்பு செப். 1996 பக்.4 "இலங்கைச் சிறுவர் எதிர்நோக்கும் சவால்” சிறுவர் பாதுகாப்பு நிலையம், இலங்கை ஏப்பிறல் 2002 4. அனைவருக்கும் கல்வி 2000ஆம் ஆண்டு மதிப்பீடு நாட்டு அந்தஸ்து அறிக்கை
இலங்கை பூனெஸ்கோ உலகக் கல்வி மன்றம் 2000, பக். 15
112

பிரதேசங்களில் காணப்படும் சீர்கேடான சுகாதார நிலை பற்றி இப்புள்ளிவிபரங்கள் கணக்கெடுக்கவில்லை. இலங்கையின் சுகாதார வரவு செலவுத் திட்டம் மொத்த உள்ளுர் உற்பத்தியில் 1.4 வீதமாகும். போர் நிலைமை தற்போதுள்ள பிரச்சினைகளை அளவுக்கு அதிகமாக விசுவரூபமெடுக்க வைத்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளாகப் போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பிரதேசங்களின் நிலைமைகள் நாட்டிலுள்ள சில வறிய மாவட்டங்களை ஒத்தனவாக இருக்கின்றன."
இக்கட்டுரையை எழுதும் நேரத்தில், அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. 2002 ஜனவரி தொடக்கம் யுத்த நிறுத்தம் நடைமுறையில் உள்ளது. 2002ஆம் ஆண்டு பெப்ரவரியில் அரசாங்கத்தினாலும் விடுதலைப் புலிகளினாலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்ளப்பட்டது. “சகல திறத்தவரும் சர்வதேச சட்டத்தின் தராதரங்களை அனுட்டிக்க வேண்டுமென ஏற்பாடு செய்தது. சித்திரவதை, அச்சுறுத்தல், கடத்தல், பறித்தல், துன்புறுத்தல் போன்ற செயல்கள் உட்பட, பொதுமக்களுக் கெதிரான தாக்குதல்களிலிருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் . s என உடன்பட்டுக் கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட பின்னரும் விடுதலைப் புலிகளின் போராளிகளுள் சிறுவர்களைச் சேர்த்துக் கொள்ளும் பழக்கமும் காணப்பட்டது.
போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சேவைகளின் ஏற்பாடு பற்றாக் குறையாக இருந்ததுமல்லாமல், சிறுவர்களைப் போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபடுத்தி வரும் செயற்பாடு பற்றி அரசாங்கம் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அரசாங்கம் பாராமுகமாக நடந்து கொண்டமையினால் பல்வேறு சமவாயங்களின்கீழ் அரசுக்குள்ள கடப்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்தும் மீறி வந்தது. சிறுவர் உரிமைகள் மீதான ஐ.நா. சமவாயத்தின் கீழ் சுகாதாரப் பராமரிப்புப் பெறுவதற்கும் வீடமைப்பு வசதி பெறுவதற்கும், கல்வி கற்பதற்கும், பாரபட்சமின்றி நடாத்தப்படுவதற்கும் அரசினால்
5. இலங்கை மத்திய வங்கி அறிக்கை. 1999
6. ஹனிபா பர்ஸானா, சிறுவர் பாதுகாப்பு நிலையம், இலங்கை யூஎன்சிஆர்சி க்கான சமர்ப்பணம் மார்ச் 2002 (மீளாய்வு செய்யப்பட்டது. ஜன2003) முழுமொத்த போஷாக்கின்மை மட்டங்கள் 1997-1998 காலப்பகுதியில் 38% இலிருந்து 24% ஆக இருந்தன. மன்னார். அம்பாறை, வவுனியா, இரத்தினபுரிஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 30% இலிருந்து 50% ஆக உயர்ந்தது
7 ‘சமாதானச் செய்முறையில் சிறுவர்களுக்கான இடம் பவானி பொன்சேக்கா,
டெயிலி நியூஸ் கொழும்பு 5. ஒக்டோபர் 2002
113

Page 64
உத்தரவாதமளிக்கப்படுதல் வேண்டும். சர்வதேச தொழிலாளர் ஒழுங்கமைப்பின் 182ஆம் இலக்கச் சமவாயத்தின் கீழ் அரசானது சிறுவர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதனைத் தடுப்பதற்கும், அவ்வாறு சிறுவர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஒழிப்பதற்கும் இலவசக் கல்வியையும் தொழிற்பயிற்சியையும் வழங்குவதற்கும், நெடுங்கால, வினைத் திறமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தேவைப்படுத்தப்பட்டுள்ளது.
2. சேவைகளின் ஏற்பாடு
2.1. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சுகாதார
சேவைகள்.
சிறுவர் உரிமைகள் மீதான சமவாயத்தை அமுல்படுத்தல் மீதான 1998 இலங்கை நாட்டு அறிக்கையில் கூறப்பட்டவாறாக, போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மருந்துகள், வைத்தியசாலை வசதிகள், சுகாதார சேவை உத்தியோகத்தர் போன்ற தீவிர பற்றாக்குறையினால் மிக நெடுங்காலமாக துன்பத்தை அனுபவித்து வந்துள்ளன. நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து தனித்துவிடப்பட்ட நிலையில், அப் பிரதேசங்களுக்கு சுகாதார அமைச் சிலிருந்து கிடைக் கும் மட்டுப்படுத்தப்பட்ட மருந்துப்பொருள்கள் பாதுகாப்பு அமைச்சுக்கூடாகக் கொண்டு செல்லப்பட்டன. மேலும், நாடு பூராவும் மலேரியாக் காய்ச்சல் பரவி வருகின்றது. நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 56 வீதமான நோயாளிகளும் வன்னிப் பிரதேசத்தில் மாத்திரம் 40வீதமான நோயாளிகளும் சிகிச்சைபெற வந்தனர். வடக்கிலும் கிழக்கிலும் உயர் சிசு மரண வீதமும் நிறை குறைந்த சிசுப் பிரசவங்களும் அறிக்கையிடப்பட்டன. யுத்தகாலத்தின் போது தொற்று நீக்கற் பால்கட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள் 100 வீதம் வெற்றி அளிக்கவில்லை. கற்பகாலச் சுகாதாரப் பராமரிப்பு உளவியல் சமூக சேவைகள் மற்றும் நிபுணர் சேவைகள் போதியளவு கிடையாது? பிறப்புகள், இறப்புகள் பற்றி ஒழுங்கான அறிக்கைகள் செய்யப்படுவதில்லை." எவ்வாறாயினும்,
8. இலங்கைச் சிறுவர் சவால், சிறுவர் பாதுகாப்பு நிலையம், இலங்கை, ஏப்பிறல்
2002.
9. Ibid
10. சிறுவர் உரிமைகள் மீதான சமவாயத்தை அமுல்படுத்தல் பற்றிய
இரண்டாவது நாட்டு அறிக்கை. 1998.
14

சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்தின்மீது ஐ.நா.குழுவின் மாற்றுச் சமர்ப்பணங்களில் சுட்டிக் காட்டப்பட்டவாறு, இப்பிரதேசங்களில் மருந்துகளுக்கான பற்றாக்குறைகள் அரசாங்கம் ஒரே வழங்குநராக இருந்து அவற்றை வழங்குவதனால் மாத்திரம் ஏற்பட்டதல்ல. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் மருந்து வகைகளின் மீது பாதுகாப்பு அமைச்சு விதித்திருந்த வரையறைகளினாலும் ஏற்பட்டதாகும். நோயைத் தணிக்கும் மருந்துகள் இல்லாமையினால் அந்நோயின் காரணமாகவே நோயாளிகள் இறந்துள்ளனர். முறிந்த எலும்புகள் "பிளாஸ்டர் ஒப் பாரிஸ்’ இல்லாமை யினால் ‘காட்போர்ட்' கொண்டு பொருத்தப்பட்டன.' மருந்துகள் வடக்கிலுள்ள, குறிப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள வைத்திய சாலைகளுக்கு கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. போக்குவரத்து நிலைமைகள் காரணமாகவும் வழியில் அடிக்கடி சோதனைக்குட் படுத்தப்படுவதன் காரணமாகவும், சேதம் காரணமாகவும், களவு காரணமாகவும் 15 வீத மருந்துகள் இழக்கப்பட்டன. சில மருந்துகள் தடுக்கப்பட்டதற்கான காரணங்கள் கேள்விக்குரியதே. உதாரணமாக, மகப்பேற்றில் பயன்படுத்தப்படும் மருந்துகள் மீது மட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இப்போது இம்மட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. யுத்தநிறுத்தத்தையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் தொடர்ந்து, நிவாரண மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டாக்டர் ஜயலத் ஜயவர்த் தன மருந்துகளையும் நோயாளிகளையும் கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரம் அவசியமில்லையென 2002 பெப்ரவரியில் அறிவுறுத்தல்கள் வழங்கினார்."
போர் நிறுத் தமும் பயணத்திலுள்ள கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட்டமையும் இதுகாலவரை எதிர்நோக்கப்பட்ட பல இடர்ப் பாடுகளுக்கு விடிவாக அமைந்தது. வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் சேவைகள் வழங்குவதில் மாதாந்தம் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. 2002 ஏப்ரலில், பத்து வருடங்களுக்கு முன்னர் அனுப்பிவைக்கப்பட்ட பிரித்தானிய அரசாங்கத்தின் நன்கொடையான மேலதிக குளிரூட்டிகள் இறுதியாக யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் நிறுவப்பட்டன. அதற்கு முன்னர் இவை போக்குவரத்து
11. சமாத் பெய்சல், “போரின் பிடியில் உள்ள யாழ்ப்பாணத்தில் காயங்கள்
குணமாகாது.’ சண்டே டைம்ஸ், கொழும்பு பெப்.3.2002
12. Ibid
13. மேற்படி குறிப்பு 6.
14. மாவட்ட நிலைமை அறிக்கை, யாழ்ப்பாணம் CHA வெளியீடு தொகுதி 6
இதழ் 2, பெப். 2002
115

Page 65
வசதிகள் இல்லாமையினால் திருகோணமலையில் வைக்கப் பட்டிருந்தன. தற்போது ஏ9 நெடுஞ்சாலை மருந்துப் பொருட்களைக் கொண்டு வருவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய மருந்துப்பொருள் தொகுதி 2002 ஏப்பிரல் 15ஆந் திகதி முதன்முதல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. இது யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் மருந்துக்கான தட்டுப்பாட்டைக் கணிசமானளவு குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.* முன்னர் காலாண்டுக்கொரு தடவை இடம்பெறும் மருந்துக் கையளிப்புகள் பெருமளவு காலப்பகுதிக்கு வழமையாகவே தாமதப்படுத்தப்படுகின்றன. 2002 மார்ச் மாதத்தில், விடுவிக்கப்படாத பிரதேசங்களிலுள்ள புதிதாகப் பிறந்த சகல சிசுக்களுக்கும் அம்மைப் பால் கட்டும் நிகழ்ச்சித்திட்டத்தை திருகோணமலை மாகாணச் சுகாதாரத் திணைக்களம் ஆரம்பித்தது." ஏ9 நெடுஞ்சாலை வழியாக நோயாளிகள் வன்னியிலிருந்து இப்பொழுது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டனர். செஞ்சிலுவைச் சங்கமும் ஏ9 நெடுஞ்சாலையைப் பயன்படுத்தி விசேட சிகிச்சை அளிக்கப்படவேண்டிய நோயாளிகளைக் கொழும்புக்குக் கொண்டு வந்தது. முன்னர் செஞ்சிலுவைச் சங்கக் கப்பல் மூலம் மாத்திரமே நோயாளிகளைக் கொண்டுவர முடிந்தது. இக்கப்பல் வாரத்துக்கொரு தடவை மாத்திரமே சேவையில் ஈடுபடும்.'
பல முக்கியமான பிரச்சினைகள் இன்னமும் ஆராயப்படவுள்ளன. நலன்புரி நிலையங்களில் போதியளவு சுகாதார வசதகள் இல்லாமை தொடர்ந்தும் ஒரு பெருங்குறையாகவுள்ளது. இவற்றைப் பராமரிப்பதற்குப் போதிய பணியாட் டொகுதியினர் இல்லாமை ஒரு நிரந்தரப் பிரச்சினையாகும். யுத்த நிறுத்தம் ஏற்பட்டு போக்குவரத்து மட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னரும் ஆளணி கிடைப்பதில் எவ்வித குறிப்பிடத்தக்க மாற்றமும் ஏற்படவில்லை. அன்றாடம் 700 வரையான வெளி நோயாளர்களைக் கவனிக்கும் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் வெளிநோயாளர் பகுதி எட்டு வைத்தியர்களை மாத்திரம் கொண்டியங்குகின்றது. களுவாஞ்சிக்குடி மாவட்ட வைத்தியசாலை அன்றாடம் அறுநூறு நோயாளர்களைக் கவனிப்பதற்கு ஐந்து வைத்தியர்களை மாத்திரமே கொண்டுள்ளது. பருத்தித்துறையிலுள்ள
15. மாவட்ட நிலைமை அறிக்கை, யாழ்ப்பாணம் CHA சஞ்சிகை தொகுதி 6
இதழ் 4 ஏப்பிறில் 2002
16. மாவட்ட நிலைமை அறிக்கை, திருகோணமலை CHA சஞ்சிகை தொகுதி 6
இதழ் 3 மார்ச் 2002
17 மாவட்ட நிலைமை அறிக்கை, யாழ்ப்பாணம் CHA சஞ்சிகை, தொகுதி 6
இதழ் 6 ஜூன் 2002
18 மாவட்ட நிலைமை அறிக்கை, மட்டக்களப்பு CHA வெளியீடு தொகுதி 6
இதழ் 1, ஜனவரி 2002
16

மந்திகை ஆதார வைத்தியசாலை, உண்மையாகத் தேவைப்படும் தொண்ணுாற்றிமூன்று தாதிமார்களுக்குப் பதிலாக, முப்பத்திமூன்று தாதிமாருடன் இயங்குகின்றது." கோப்பாயிலுள்ள காசநோய் வைத்தியசாலையில் வைத்தியர்களும் இல்லை; வைத்திய நிபுணர்களும் இல்லை. அங்கு போதிய படுக்கை வசதிகளோ உணவோ கிடையாது.*
மீளக் குடியமர்வதற்காக வரும் குடும்பங்களுக்கு சுகாதார பராமரிப்பு கிடைப்பதில்லை. உள்ளகக் கட்டமைப்பு பெரும்பாலும் சேதப்படுத்தப்பட்டு அல்லது அழிக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் அறவே கிடையாது. ஏறக்குறைய இரண்டாயிரம் பேருக்கு அதிகமானோர் மீளக் குடியேறிய, வடமராட்சி கிழக்கிலுள்ள மருதங்கேணியில் மருத்துவ வசதிகள் கிடையாது; அதேவேளை வைத்திய சாலையும் பெரிதும் சேதமடைந்துள்ளது.' வைத்திய நிபுணர்களின் சேவை என்ற பேச்சுக்கே இடமில்லை. தெற்குப் பகுதிகளுக்குச் செல்வதற்கான தடைகள் நீக்கப்படுவதன் முன்னர் நிபுணத்துவமிக்க வைத்தியர்களின் சேவையைப் பெறுவது நரிக் கொம்பாக இருந்தது. மேலும், அவ்வாறு தெற்கிலுள்ள வைத்தியர்களை நாடக்கூடியதாக இருந்தபோது மொழி பிரச்சினையாக இருந்தது. தெற்குப் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் தமிழ் தெரிந்த வைத்தியர்கள் வெகு சொற்பமானவர்களாவர்.*
2.2. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உணவுப்
பற்றாக்குறை நிலைமை.
நாட்டிலுள்ள முழுமொத்த போஷாக்கின்மை மட்டங்கள் 1987 முதல் 1998வரை 38 வீதத்திலிருந்து 24.5விதமாகக் குறைவடைந்தது. எவ்வாறாயினும் மன்னார், அம்பாறை, வவுனியா, இரத்தினபுரி மற்றும் கம்பாந்தோட்ட போன்ற பிரதேசங்களில் போஷாக்கின்மை மட்டங்கள் 30 இலிருந்து 50வீதமாக உயாந்துள்ளன. பொருள் பதுக்கப்படுவதும் வீணடிக்கப்படுவதும் நிறை குறைவாக விற்கப்படுவதும் பரவலாகக் காணப்படுகின்றன. தாய்மார் காப்பமுற்றிருக்கும் காலத்தில் போதியளவு இரும்புச் சத்துப் பொருள்கள் சேர்க்கப்படாமையும் தரக்குறைவான
19. மாவட்ட நிலைமை அறிக்கை, யாழ்ப்பாணம் CHA வெளியீடு தொகுதி 6
இதழ் 6, ஜூன் 2002
20. மாவட்ட நிலைமை அறிக்கை, யாழ்ப்பாணம் CHA வெளியீடு தொகுதி 6
இதழ் 3, மார்ச் 2002
21. மாவட்ட நிலைமை அறிக்கை, யாழ்ப்பாணம் சிஎச்ஏ வெளியீடு தொகுதி 6
இதழ் 7 ஜூலை 2002
22. மேற்படி குறிப்பு 6.
117

Page 66
உணவைக் குறைந்த அளவில் உண்ணுதலும் சிறுவர்களின் புரதச் சத்துக்குறைவுக்குப் பிரதான காரணங்களாகும்.* அறுபது வீதத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார் இரத்தச்சோகை நோயினால் பீடிக் கப்பட்டுள்ளனர்; அதேபோன்று ஐந்து வயதுக்குட்பட்ட 20விதமான சிறுவர்கள் போஷாக்கின்மையினால் வாடுகின்றனர்.* போஷாக்கின்மையால் வாடும் எஞ்சியோர் நாட்டிலுள்ள வறியவர்களும் ஆயுதப் போராட்டத்தினால் இடம் பெயர்ந்தவர்களுமாவர்.
உள்ளகக் கட்டமைப்பு விவரங்களையும் இடம்பெயர்ந்த பெருமளவு சனத்தொகையையும் பார்க்கும்போது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இடப்பரப்புகளின் போஷாக்கு பற்றிய புள்ளி விவரங்களின்படி அந்த இடங்களின் உரிமைகள் மீதான சமவாயத்தை அமுலாக்குவதன் மீதான இலங்கையின் இரண்டாவது நாட்டு அறிக்கை, யுத்த நிலைமை உச்சக் கட்டத்தில் இருந்தபோதிலும்கூட வடக்குப் பகுதிகளுக்கு உணவு வழங்கல்களை ஏற்பாடுசெய்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை வலியுறுத்துகின்றது. அறிக்கையின்படி அப்பிரதேசங்களில் குறைந்த போஷாக்கு மட்டங்கள் நிலவவில்லை. எவ்வாறாயினும், சமீபத்திய அறிக்கைகள் ஊக்கந்தருவனவாக இல்லை. 2002ஆம் ஆண்டில் யுத்தத்தினால் பாதிப்படைந்த பல பிரதேசங்களில் கொண்டு நடாத்தப்பட்ட அளவீடுகள் சிறுவர்களிடையே பாரதூரமான போஷாக் கின்மை நிலவுவதாகக் காட்டியது. 21,123 மாணவர்களுக்கு வவுனியா மாவட்டத்தில் நடத்தப்பட்ட சுகாதாரத் திணைக்களத்தின் 22வீதமானோர் நெடுங்காலப் புரதக் குறைபாட்டினாலும் 16வீதமானோர் குறுங்காலப் புரதக் குறைபாட்டினாலும் பாதிக்கப்படுவதாகத் தெரியவந்தது.* வன்னியிலிருந்து வந்து இப்பொழுது நிலாவெளி அகதி முகாமில் வாழும் ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் போஷாக்கு நிலைமை பற்றி நடாத்தப்பட்ட கணிப்பீட்டில், மதிப்பீடு செய்யப்பட்ட 54 பிள்ளைகளில் 44.4 வீதமான பிள்ளைகள் தவிர போஷாக் கின் மையினால் மெலிந்துள்ளதாகவும் 37வீதமானோர் மந்த வளர்ச்சியுள்ளவர்களாகவும் 68.5 வீதமானோர் தேசிய சராசரி 37.6 வீதத்தோடு ஒப்பிடுகையில் நிறை குறைந்தவர்களாகவும் காணப்பட்டனர்.*
23. மேற்படி குறிப்பு 8
24. Ibid
25. மேற்படி, குறிப்பு 19
26. மாவட்ட நிலைமை அறிக்கை, திருகோணமலை, CHA சஞ்சிகை தொகுதி
6 இதழ் 5 மே 2002
118

மாதாந்தம் ரூ 1,500/-க்குக் குறைவாக வருமானம்பெறும், பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களாகவும் காசுக் கொடுப்பனவுகளாகவும் உதவும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு அரசாங்கம் நிதியளிக்கின்றது. எவ்வாறாயினும் தொகையளவிலுமி, கொண்டு வரப்படும் தடவைகளிலுமி, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் விநியோகிப்பதிலும் மட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. அரசாங்கத்தின் அவசரகால நிவாரண ஒழுங்குவிதிகள் சமைத்த உணவுகளுக்காக 12வயதுக்கு மேறபட்ட தனியாள் ஒருவருக்கு ரூ25/ - ஐ வழங்குகிறது. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்குச் சமைத்த உணவுக்காக ஆகக்கூடிய தொகையாக ரூ 15/- வழங்கப் படுகிறது. இவ்வுணவு உதவித்திட்டம் 1990ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டபோதும், போதுமானளவு நிதிகள் இல்லாமையினால் இத்திட்டத்தை மீளாய்வு செய்யமுடியவில்லை. ஆகவே, இத்தொகைகளும் உலர் உணவுப் பொருட்களும், வாழ்க்கைச் செலவு அதிகரித்த போதிலும், மாறாமலும் பற்றாக்குறையாகவும் இருந்தது. சமீபத்தில் இந்தப் பங்கீட்டில் வழங்கப்பட்ட அரிசியின் விலை ஒரு கிலோ 29.50இலிருந்து ஒரு கிலோ 38.50ஆக அதிகரிக்கப்பட்டது.' ક૦ o dP d, ૮_
வேறு சில காரணிகளும் உணவு கிடைப்பதனை மட்டுப் படுத்துகின்றன. யுத்த வலயங்களுக்குள் இருக்கும் சில பிரதேசங்கள் கமத்தொழில் ரீதியாக விளைச்சல் குன்றிய இடங்களாகும். ജ്ഞഖ முழுக்கமுழுக்க உரத்தை நம்பியே இருக்கின்றன. ஆனால் இந்த உரம் பாதுகாப்பு அமைச் சினால் தடுக்கப்பட்ட பொருளாகும். விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்குள் உலோகத்தைக் கொண்டு செல்வதற்கான தடையும் கமத்தொழில் உபகரணம் கிடப்பதில் தாக்கத்தை உண்டு பண்ணியது. ஏனைய இடங்களில் சந்தைகளை அபிவிருத்தி செய்யத் தவறியமையும் மீன்பிடித் தொழிலுக்கான தடை போன்ற பாதுகாப்பு மட்டுப்பாடுகளும் உணவுப் பற்றாக்குறைக்கு இட்டுச் சென்றன. இதுவும், மேலதிகக் குறைநிரப்பு உணவை வழங்குவதில் குடும்பங்கள் எதிர்நோக்கும் இடர்ப்பாடுகளும், பிள்ளைகளை (இன்னமும்) உணவுப் பங்கீட்டில் தங்கி நிற்க வழிகோலின.
சமாதானச் செயன்முறையின்போது, மீளக் குடியமர்த்தல் தொடர்பிலான இடஞ்சார் பிரச்சினைகள் உணவுப் பங்கீட்டில் தாக்கத்தை ஏற்படுத் தின. உதாரணமாக, 2002 ஜூனில் , தென்மராட்சிக்கு இடம் பெயர்ந்த மக்கள் தம் இடம்பெயர்ந்த இடத்திலிருந்தும் தாம் மீளக் குடியேறிய இடங்களிலிருந்தும் கிராம
27. Ibid
119

Page 67
சேவை அலுவலர் அலுவலகத் துக்குத் தமது உலர் உணவு அட்டைகளைப் பெறுவதற்காக பெருஞ் சிரமங்களை எதிர்நோக்கினர். இவற்றோடு, போதிய நிதிகள் கிடைக்காமையினாலும் முறையான திட்டமிடல் இல்லாமையினாலும் உலக உணவு திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த மக்கள் பிரிவினருக்கு உணவு வழங்குவதற்கான முயற்சிகள் வேண்டிய பயனளிக்கவில்லை. மேலும், குழந்தைகளுக்கும் கர்ப்பிணித் தாய்மாருக்கும் அரசாங் கத்தினால் ஏழு சுகாதார மருத்துவ அலுவலர்கள் பிரிவுகளில் யாழ்ப்பாணத்தில் வழங்கப்படும் 'திரிபோஷ” மனித நுகர்வுக்கு உகந்த அளவில் இல்லை? இலங்கை அரசாங்கத்துக்கும் உலக உணவுத் திட்டத்துக்குமிடையே உடன்பட்டுக் கொள்ளப்பட்ட விநியோக முறைமைகள் சீர்திருத்தப்பட (36.606TGLD.
இராணுவத்தினர் பாடசாலைகளிலிருந்தும் வழிபாட்டிடங் களிலிருந்தும் வெளியேறவேண்டும் என்ற யுத்தநிறுத்த ஒப்பந்தத் தேவைப்பாடு, பயிர்செய்யும் நிலங்களில் புதிய இராணுவ முகாம்கள் தோன்ற வழிகோலிற்று. தென்மராட்சிப் பிரிவில் உள்ள நுணாவிலில் 700ஏக்கர் விவசாய நிலத்தைப் பயன்படுத்தி ஓர் இராணுவ முகாம் அமைக்கப்பட்டது.* பாதுகாப்புப் படையினர் தமது பாதுகாப்பு பதுங்கு குழிகளையும் பாதுகாப்பு அரண்களையும் அமைப்பதற்காக L60)60 மற்றும் தென்னை மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் பலரின் சீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளது." பயிர் செய்யத்தக்க பெருமளவு நிலங்கள் மூலதனமில்லாமையினாலும, யுத்தத்தின் காரணமாக்க் கமத்தொழில் உபகரணத்துக்கு ஏற்பட்ட இழப்புக் காரணமாகவும் கண்ணிவெடிகள் காணப்படுவதன் காரணமாகவும் பயிர்செய்யப்படாது கைவிடப்பட்டுள்ளன. போதிய சந்தைப்படுத்தல் வசதிகள் இல்லாமையும் பலரின் ஊக்கத்தைக் கெடுத்தது. எவ்வாறாயினும், சமீபத்தில் ஏ9 நெடுஞ்சாலையைத் திறந்ததனைத் தொடர்ந்து வாழைப்பழங்கள், வெங்காயம், புகையிலை போன்ற உள்ளுர் உற்பத்திப் பொருட்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியேயுள்ள சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்படலாயின.* உயர் பாதுகாப்பு வலயங்கள் எனக் குறிக்கப்பட்ட இடங்கள் தவிர்ந்த மற்றெல்லாப் பிரதேசங்களிலும் மீன்பிடிப்பதிலுள்ள நேர, தூர மட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 2002ஆம் ஆண்டுக்கான
28. மேற்படி குறிப்பு 19. 29 மேற்படி குறிப்பு 26. 30. Ibid
31. மேற்படி குறிப்பு 19. 32. மேற்படி குறிப்பு 26.

மத்திய வங்கி அறிக்கை நாட்டின் பாதுகாப்பு நிலைமை சீர்திருந்தியதைத் தொடர்ந்து மீன்பிடித் தொழில் மற்றும் நெல் உற்பத்தியில் அதிகரிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தது.'
2.3. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் கல்வி.
சேவைகளும் உள்ளகக் கட்டமைப்பு வசதிகளும் சீர்குலைந்து சிதைக்கப்பட்டதன் காரணமாக யுத்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்குப் பகுதிகளில் சிறுவர்களின் அபிவிருத்தி பாரிய பின்னடைவுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. சமூகங்கள் இடம்பெயர்ந்தமை காரணமாக, பிள்ளைகளின் கல்விப் படிப்பு குழம்பியது. இடம்பெயர்ந்தமை காரணமாகவும் வறுமை காரணமாகவும் பெருந்தொகையான பிள்ளைகள் பாடசாலைக்குப் போவதையே நிறுத்திக் கொண்டனர். இடம் பெயர்ந்தமை காரணமாக ஓரிரு ஆண்டுகளுக்குப் பாடசாலை செல்லாத மாணவர்கள் திரும்பவும் பாடசாலைச் சூழலுக்குத் தம்மைத் தயார் செய்வதில் இடர்ப்பாடுகளை அனுபவித்ததால் பூரணமாகப் பாடசாலைக்குச் செல்லாமலே நின்றுவிட்டனர். இந்த இடப்பரப்புகளில் 650,000 மாணவர்கள் பாடசாலைக்குச் சென்றுவந்த போதிலும், இப்பொழுது 65,000 பிள்ளைகள் வரை செல்வதில்லை. சில பிரதேசங்களில் பிள்ளைகளில் ஐம்பது வீதமானோர் இடாப்பில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை; இடாப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்ட 30வீதமானோர் ஒழுங்கான வரவு இல்லாத காரணத்தால் கல்வியை இழக்கின்றனர்."
போதிய பயிற்சிபெற்ற ஆசிரியர் பற்றாக்குறை காரணமாகவும், கல்விசார் பொருட்களும் போதனா உதவிச் சாதனங்களும் கிடைக்காமை காரணமாகவுமி, பாடசாலைகள் நலன்புரி நிலையங்களாக அல்லது இராணுவ தரிப்பிடங்களாகப் பயன்படுத்தப்பட்டமையாலும் சிறுவரின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. விடுவிக்கப்படாத இடங்களில் கல்விச் சாதனங்களின் வழங்குகை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. வன்னியிலுள்ள கல்வித் திணைக்கள அலுவலர்களின்படி தொடர்பாடல் மற்றும் தகவல் பரம்பல் பிரச்சினைகள் கல்வி ஏற்பாடு செய்வதனைப் பெரிதும் பாதித்துள்ளன. மேலும் பாடசாலைச் சீருடைகள் இல்லாமையினாலும் ஆவணங்கள் இல்லாமையினாலும், சமூகப் பழிதுாற்றல் காரணமாகவும்
33. இலங்கை மத்திய வங்கி அறிக்கை 2002 பக்.91-92 34. டெங் கோட்பாடுகளின் அமுலாக்கல் அறிக்கை. ஐநா மஉநிஈ வரைவு
வெளியிடப்படவில்லை.
121

Page 68
இடம்பெயர்ந்த சிறுவர்கள் தமது பாடசாலைகளில் சேருவதனை விரும்பாத உள்ளுர் மக்களின் எதிர்ப்பினாலும் இடம் பெயர்ந்த பிள்ளைகளின் கல்வி பாதிப்படைந்தது. அரசாங்கக் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் வாழும் பெற்றோரும் பிள்ளைகளும் பாதுகாப்புச் சோதனைச் சாவடிகளில் பிள்ளைகள் பெரிதும் துன்புறுத்தலுக்கு ஆளாவதனால், பாடசாலைக்குச் செல்லவிடாது தடுத்துள்ளனர்.* யுத்த நிறுத்தம் ஏற்பட்டு அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் செய்துகொண்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர், பாடசாலைக் கட்டிடங்களை விட்டு, சில சந்தர்ப்பங்களில் பத்து வருடங்கள் கழிந்த பின்னர், வெளியேறினர். எவ்வாறாயினும் பாடசாலைகளின் தினவரவு குறைவாகவே உள்ளது. பாடசாலைக் கட்டிடங்கள் இடிந்தழிந்த நிலையில் உள்ளன. அவை செப்பனிடப்பட வேண்டும். வகுப்புக்கள் மரங்களுக்குக் கீழ் அல்லது தற்காலிக கொட்டில்களில் நடத்தப்படுகின்றன." ஆசிரியர் பற்றாக்குறை மிகவும் கூடுதலாக உள்ளது. வகுப்புக்கள் தற்போது தொண்டர் ஆசிரியர்களால் நடாத்தப்படுகின்றன. சில பாடசாலைகள் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக உயர்தர வகுப்புக்களை மூடவேண்டியும் நேரிட்டது.' கல்வி அமைச்சு பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு
வசதிகளைச் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் அறிக்கைகளின்படி அத்தகைய வழிவகைகள் முழுக்க முழுக்க தற்காலிகமானவையாகும். சமீபத்தில் க.பொ.த.உயர்தரம் வரை
தகைமை பெற்றோர் மாத்திரம் ஆசிரியர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.* புனர்வாழ்வுத் திட்டமிடுகையில் கல்வி முக்கிய இடம் வகிப்பதாக அடையாளங் காணப்பட்டது. ஐ.நா.முகவர் நிலையங்களின் கணிப்புப்படி, யுத்தம் பாதிப்படைந்த வலயத்தில் கல்வி முறைமையின் மீளமைப்புக்கு ஐ.நா. 40 மில்லியன் டொலர் வரை செலவுசெய்ய வேண்டும்.?
கல்வி அமைச்சானது, கிராம சேவகர் பிரிவுகளிலும் கல்விவலய மட்டத்திலும் உருவாக்கப்பட்ட குழுக்களுக்கூடாக ஐந்து முதல் பதினான்கு வரையான வயதுடைய பிள்ளைகள் கட்டாயமாகப் பாடசாலை செல்ல வேண்டும் என வலியுறுத்துவதற்கான
35. Ibid
36. மாவட்ட நிலைமை அறிக்கை. அம்பாறை, சிஎச்ஏ சஞ்சிகை தொகுதி 6
இதழ் 7 ஜூலை 2002
37. Ibid
38. மேற்படி குறிப்பு 36.
39. ஜயசிங்க அமல் "புதிய சண்டையில் சிறுவர் போராளிகள்’ ஐலன்ட் 22
நவம்பர் 2002.
122

நடவடிக்கைகளை எடுத்தது. இடம் பெயர்ந்த பிள்ளைகள் குறுகிய காலப்பகுதிகளுக்குக் கற்காமல் விட்ட பாடங்களைக் கற்பிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன."
வடக்கு, கிழக்கு கல்வி நிறுவனங்களிலுள்ள மற்றோர் அம்சம் அரசியல் நோக்கங்களுக்காகப் பாடசாலைப் பிள்ளைகளை அணிதிரட்டிக் கொண்டமையாகும். மீளாய்வின் கீழுள்ள ஆண்டின்போது இது குறிப்பாகக் காணப்பட்டுள்ளது. யா/மனித உரிமை ஒன்றியத்தின் அறிக்கையின்படி, 2002 மார்ச் 21ஆம் திகதி விடுதலைப் புலிகள் ஆண்டு 4ஆம் வகுப்பிலிருந்து பாடசாலைப் பிள்ளைகளைக் கிரானுக்குக் கொண்டுவந்தனர். இப்பிள்ளைகள் வாழைச்சேனை, கிண்ணியடி, பெத்தாலை, கல்குடாவிலுள்ள பாடசாலைகளைச் சேர்ந்தவர்களாவர். அறிக்கையின்படி, இப்பிள்ளைகள் பகிரங்கப் போக்குவரத்துப் பஸ் வண்டிகளில் விடுலைப் புலிகள் தலைமையில் கொண்டு வரப்பட்டனர். விடுதலைப் புலிகளின் அன்னை பூபதி அவர்களின் ஞாபகார்த்த விழாவின் அலங்காரங்களை இராணுவ வீரர் சிதைத்தமையைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்ற வைக்கப்பட்டனர்." விடுதலைப் புலிகளின் மாவீரன் திலீபனின் ஒருவாரகால கொண்டாட்டங்களின் போது, பாடசாலைகள் அதனை எவ்வாறு அனுட்டிக்க வேண்டுமெனக் கண்டிப்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. Lj6) u T & T606) 56f6) கூட்டங்களும் விசேட பேச்சுப் போட்டிகளும் நடாத்தப்பட்டன. பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் பாடசாலைகளுக் கூடாகவே நடத்தப்பட்டன.* சிறுவர்கள் பாடசாலையில் இருந்தவாறே விடுதலைப்புலிகளின் பயிற்சிக்கும் சமூகமளிக்க வேண்டும்". பாரிய பாடசாலை நிகழ்ச்சிகள் விடுதலைப் புலிகளின் ஆட்சேர்ப்புப் பிரச்சார நடவடிக்கைகளுக்கும் உதவின. உதாரணமாக
40. கல்விக் கட்டளைச்சட்டம்; பாடசாலைகளின் பிள்ளைகளின் கட்டாய வரவு
ஒழுங்குவிதிகள். 1997 இன் 1ஆம் இலக்க.
41. ய7மனித உரிமைகள் ஒன்றிய விசேட அறிக்கை (UTHR) இல13, "முழுமையான
அமைதியை நோக்கி; மனித உரிமைகள் குழப்பம்’ 10 மே 2002
42. யாழ்ப்பாணத்தில் வெளிக்கள வேலை. செப்ரெம்பர் 2002.
43. 1999 ஏப்பிரலில் தீவிர பிரச்சாரமும் கட்டாய தற்காப்புப் பயிற்சியும் பாடசாலை களிலும் கிராமங்களிலும் ஆரம்பிக்கப்பட்டது. 2000 மே 5ல் ஆனையிறவு வெற்றிவிழாவைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் ஆண்டு 10க்கு மேற்பட்ட பள்ளிமாணவர் அனைவரும் இராணுவப் பயிற்சிபெற வேண்டும் எனத் தேவைப்படுத்தப்பட்டனர். யா/மனித உரிமைகள் ஒன்றிய அறிக்கை இல.23 1107.2OOO
44. மேற்படி குறிப்பு 41.
123

Page 69
யா/மனித உரிமைகள் ஒன்றிய அறிக்கையின்படி, 2002 பெப்ரவரி 27ஆம் திகதி தம்பிலுவில் உயர் பாடாசலை விளையாட்டுப் போட்டியின்போது விடுதலைப் புலிகள் வீடியோக் கமெராக்கள் கொண்டு நிகழ்ச்சிகளைப் படம் பிடித்தனர். பல பிள்ளைகள் அந்நோக்கத்துக்காகக் கொண்டுவரப்பட்ட வாகனங்களில் விடுதலைப் புலிகளுடன் சென்றனர். விடுதலைப் புலிகள் இயக்கம் வடக்கிலும் கிழக்கிலும் கல்வி உள்ளகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி அடுத்த பரம்பரைக்கு ஆட்சேர்ப்பதற்காக சிறுவர்களை ஆட்சேர்க்கும் பழக்கத்தைக் கைக்கொண்டு வருகின்றது. அது தொடர்ந்தும் பாடசாலைகளையே ஆடசேர்ப்பு மற்றும் பிரசார நிலையங்களாகப் பயன்படுத்தி வருகின்றது. இந்த “இயக்கம்” அதன் அடுத்துவரும் போராளிச் சந்ததிகளை உருவாக்கி வளர்த்த போதிலும், எதிர்காலத்தில், எந்த ஆட்சியின் கீழும் பாடசாலைகளுக்கு அகதிகள் முகாம் தவிர்ந்த - எவ்வித அந்தஸ்து கொடுக்கப் படுமென்பதைப் பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.
3. சிறுவர் போராளிகள்
ஆயுதப் போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் ஐ.நா.விசேட பிரதிநிதி ஒலாறா ஒட்டுன்னுவுக்கு விடுதலைப் புலிகள் 1998ல் கொடுத்த வாக்குறுதியைப் பொருட்படுத்தாது விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் சிறுவர்களை ஆட்சேர்ப்புச் செய்தனர்." மீளாய்வு ஆண்டின்போது தீவிர ஆட்சேர்ப்புக்கள் இடம்பெற்றன." இத்தகைய ஆட்சேர்ப்பு பிரதானமாக கிழக்கு மாகாணத்தில் இடம் பெற்றது. விடுதலைப் புலிகள் 2000ஆம் ஆண்டில் ஆனையிறவில் பெருமளவு போராளிகளை இழந்த பின்னரும் அதன்பின்னர் யாழ்ப்பாணத்தைத் திரும்பவும் கைப்பற்ற எடுத்த முயற்சியில் தோல்வியைத் தழுவிய பின்னரும், இத்தகைய ஆட்சேர்ப்பு 2001 ஆகஸ்டில் தீவிரப்படுத்தப்பட்டது. 2002 பெப்ரவரியில், 12 வயதுக்கும் 15 வயதுக்கும் இடையில் காணாமற் போன பதின்மூன்று பிள்ளைகள் அனைவருமே விடுதலைப் புலிகளினால் ஆட்சேர்க்கப்பட்டதாக நம்பப்பட்டது." விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் பிரதான பேச்சாளருமான
45. பார்க்க: “சிறுவரின் உரிமைகள் சட்ட நம்பிக்கைப் பொறுப்பு மனித உரிமைகள்
நிலையம் 2000
46. யா/மனித உரிமை மன்ற விசேட அறிக்கை 13 மே 20, 2002, விசேட அறிக்கை 14, ஜூலை 20 2000 மற்றும் நிலைமை அறிக்கை 30 டிசம்பர் 3, 2002 காண்க.
47. வெப்தள சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை இலங்கை பாதுகாப்புக்கான
பயம்/சிறுவர் போராளிகள், 2002 பெப்.14
124

அன்ரன் பாலசிங்கம் அவர்கள், 2002 பெப்ரவரி 6ஆம் திகதி தமிழ் நெட் வெப் தளத்தில் “சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னேறும்போது, எழக் கூடிய அரசியல் மற்றும் நிருவாகத் தேவைகளுக்கான ஒரு பாகமாக இயக்கத்தில் அரசியல் மற்றும் நிருவாகப் பிரிவுகளை விஸ்தரிக்குமுகமாக 17வயதுக்கு மேற்பட்ட இளம் இளைஞர், யுவதிகளை விடுதலைப் புலிகள் ஆட்சேர்ப்பதாகக் கூறினார். விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவு படையினரின் சமநிலையைப் பேணுவதற்காகத் தொண்டர்களை ஆட்சேர்ப்பதாகவும் அவர் கூறினார்’* மனித உரிமைகளுக்காகப் போராடும் ஒழுங்கமைப்புகள், விடுதலைப் புலிகளினாலும் அரசாங்கத் தினாலும் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், மக்களை இலகுவாக ஆட்சேர்ப்புச் செய்வதற்கு வசதியாக, அரசாங்கக் கட்டுப்பாட்டு பகுதிகளும் விடுதலைப் புலிகள் சென்றுவரக் கூடியதாக அமைந்துள்ளது என்று விமர்சித்தன? இலங்கை கண்காணிப்புக் குழுவின் அறிக்கையின்படி விடுதலைப் புலிகளால் செய்து கொள்ளப்பட்ட 502 யுத்தநிறுத்த மீறல்களின்படி, 313 சந்தர்ப்பங்கள் சிறுவர் ஆட்சேர்ப்புப் பற்றியனவாகும்."
சிறுவர்களை யுத்தத்தில் சேர்ப்பது பற்றிய விடுதலைப் புலிகள் நிலைப்பாடு தெளிவானதாகவில்லை. 2000 ஏப்ரலில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் சிறுபிள்ளை ஆட்சேர்ப்பை முழுக்கமுழுக்க மறுத்தார். விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பேச்சாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள், வயது குறைந்த பிள்ளைகளை ஆட்சேர்ப்புச் செய்வதில்லை எனப் பல தடவைகள் மறுத்துக் கூறினார். பல அரச சார்பற்ற நிறுவனங்கள், மன்னிப்புச் சபை என்பன சிறுவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டாமென விடுதலைப் புலிகளைக் கேட்டுக் கொண்டன. மட்டக்களப்பு உட்பிரதேசங்களில் சிறுவர்களை ஆட்சேர்ப்பது பற்றி விடுதலைப் புலிகளைக் கேட்டுக்கொண்ட சர்வதேச மன்னிப்புச் சபை 2002 ஜூனில்
48. 1998ஆம் ஆண்டுக்குப் பின்னர் இம்மாதத்தில் உள்ள விடுதலைப் புலி உறுப்பினர் பகிரங்கமாக ஆகக்குறைந்த வயதைக் குறிப்பிட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும். ஆனால் எல்.ரீ.ரீ.ஈ. யானது 18 வயதிற்கு குறைந்த சிறுபிள்ளை ஆட்சேர்ப்பு தடுப்பை வலியுறுத்துகின்ற CRC யிற்கான கட்டாயமற்ற தாயேடு (Optional Protoco) அங்கீகரிக்கக்கூடும் என்பது தெளிவற்றதாகவுள்ளது.
49. சுமுது வீரவர்ண 'தமிழ்ச்செல்வம் தில்லுமுல்லு’ ஜலன்ட் 2003 ஜனவரி 22. இக் கட்டுரை தாய்லாந்து 5ம் வட்டசமாதானப் பேச்சு வார்த்தைகளில் சிறுவர் போராளிகள் சம்பந்தமான விடயம் எழுப்பப்படும் எனக் கூறப்பட்டது.
50. ஹறிசன் பிரான்சிஸ், 'சிறுவர்களைச் சேர்க்காது விடுதல் - எல்.f f யினரது சமாதான ஈடுபாட்டை நிர்ணகிக்கும் பரீட்சை சண்டே ஒப்சேவர் 9 பெப் 2003 (நன்றி): BBC வெப்தளம்.
125

Page 70
விடுதலைப் புலிகளிடம் விஜயம் செய்தது. விடுதலைப் புலிகள் இயக்கம் சிறுபிள்ளைகளைச் சேர்க்க மாட்டாதென்ற உறுதிப்பாட்டை தமிச்செல்வன் கொடுத்தார். ஆனால் அவ்வாறு ஆட்சேர்க்கப்படுவது நிறுத்தப் படவில்லையென்ற முறைப்பாடுகளைச் செய்தித்தாள்கள் வெளியிட்டன. 2002 செப்ரெம்பரில் தமிழ்ச்செல்வன் யூனிசெப் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது, தம்மால் விடுக்கப்பட்ட 85 பிள்ளைகள் பற்றிய நிரலை யூனிசெப் பிரதிநிதி ரெட் சாய்பானிடம் விடுதலைப் புலிகள் கையளித்தனர். யூனிசெப் மேலும் 20 பிள்ளை களையும் விடுமாறு கோரியது. ஏறக்குறைய நிரலில் உள்ள எல்லாப் பெயர்களுமே விடுவிக்கப்பட்டன. மீண்டும் எவ்வாறாயினும், புதினப் பத்திரிகைகள் பலதிறப்பட்ட ஆட்சேர்ப்புகள் பற்றிக் குறிப்பிட்டன. இதில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாத பிற்பகுதியில் இவை கூடுதலாக இடம்பெற்றுள்ளது.*
வயது குறைந்தவர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் சம்பவங்கள் அதிகரித்தமை பற்றி, மிகவும் சமீபத்திய கருத்து, விடுதலைப் புலிகளின் பேச்சாளர் ஜே.மகேஸ்வரனிடமிருந்து 2002 ஒக்டோபர் மாதத்தில் கொழும்பில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளைக் காப்பாற்றும் நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.* சிறுவர்கள் வறுமை காரணமாகவும் குடும்ப முறிவு காரணமாகவும் தாமாகவே விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்து கொள்ளுகின்றனர். விடுதலைப் புலிகள் குழந்தைகளைப் பராமரித்து அவர்களது பெற்றோர் அவர்களைப் பராமரிக்கவல்ல நிலைக்கு வந்ததும் திரும்பப் பெற்றோரிடம் ஒப்படைக்கின்றனர் எனக் கூறினார்." இலங்கைக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜெனரல் ட்றொன்ட் பர்கென்டே, பிரச்சினையானது, எழுத்தில் இல்லையெனவும், அதன் முறையான சந்தர்ப்பத்தில் அது விளங்கிக்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறினார். பிள்ளைகளுக்கு இதைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டார். பள்ஹொவ்டேயின் கூற்று, ஒருசில போராளிகளைப் பொறுத்தவரை உண்மையாக இருந்தபோதிலும், மனித உரிமைக் குழுக்களால் பல சிறுவர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் சந்தர்ப்பங்கள் பற்றியும் ஆட் கடத்தல் சம்பவங்கள் பற்றியும் அறிக்கை
51. “விடுதலைப் புலிகள் 85 சிறுவர் போராளிகளை விடுதலை’ டெயிலிமிறல்,
2003 செப்ரெம்பர் 12 பக்.3
52. யா/மனித உரிமைகள் மன்றம்bid(UTHR-J) - சமாதானத்தின் விலையும் பயங்கரவாதத்தின் பங்கிலாபங்களும் - இலங்கை யின் நோர்டிக் குளிர்காலம் - தகவல் பிரசுரம் சில 30, 2002 டிசம்பர் 3.
53. Ibid
54. Ibid
126

செய்யப்பட்டுள்ளது. இங்கு விடுதலைப் புலிகள் வாளாதிருக்கவில்லை என்பதே புலப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் அரசியல் பிரசாரமும் போர் நடாத்தப்படும் மிருகத்தன்மை தொடர்பாகவும் விடுதலைப் புலிகளின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகளும் பல இளைஞர் புவதிகளைச் சேர்க்கக்கூடியதாக இருந்தது. தமது பெற்றோருடன் சண்டையிட்டுக் கொண்டு சிறுவர்கள் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்துகொண்ட சம்பவங்கள் பற்றி யாழ்ப்பாணப் பெற்றோள் பிரஸ்தாபித்தனர்.* விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் ஒழுக்கமற்ற கனிட்ட பதவிகளிலுள்ள சிறுவர் ஆட்சேர்ப்புப் பற்றியும் ஒழுங்கமைப் புக்குள்ளான தொடர்பாடல் பிரச்சினைகள் தொடர்பாகவும் குறைகூறி வந்தது* இந்தப் பிரச்சினை தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கு உதவுவதற்கு யூனிசெப் உடன்பட்டுக் கொண்டுள்ளது.”
2002ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சிறுவர் போராளிகள் விடுதலைப் புலிகளால் பாலியல் துஷபிரயோகத்துக்கு ஈடுபடுத்தப்பட்ட புகார்கள் செய்யப்பட்டுள்ளன. 2002 செப்ரெம்பர் 6ஆம் திகதி த ஐலன்ட்’ பத்திரிகை விடுதலைப் புலிகள் வலுக்கட்டாயத் தொழிலுக்காகவும் இராணுவப் பயிற்சிக்காகவும் சில சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்காகவும் பிள்ளைகளைப் பயன்படுத்துவதாக குறிப்பிட்டதாக ஐ.நா. அரச திணைக்கள அறிக்கை தெரிவித்தது. இத்தகைய முறைப்பாடுகள் அளவுகடந்தவை. அவற்றின் தொகை பற்றிய விவரம் தெரியாது.
விடுதலைப் புலிகள் அங்கத்துவம் வகிக்கும் பல்வேறு குழுக்களினால் முன்வைக் கப்பட்ட புனர் வாழ்வு வழிவகைகள் தொடர்பில் தொடர்ந்தும் சிறுவர்களை ஆட்சேர்ப்பது பெரும் கவலையையும் சிக் கல் களையும் ஏற்படுத் தி வருகின்றது. வடக்கிலும் கிழக்கிலும் உடனடி மனிதாபிமான மற்றும் புனர்வாழ்வு 8 gᏏ 60Ꭷ 6Ꭷl ᏧᏏ 6ii மீதான உப குழு, சிறுபிள்ளைகளைத் தொழிலுக்கமர்த்துவதனைக் கண்டித்தது. குழந்தைகளுக்குரிய இடம் பாடசாலைகளும் கல்வி நிறுவனங்களுமே தவிர, குடியியல் அல்லது இராணுவ வேலைத் தலங்களல்ல.* ஒரு மிகப்பெரிய பிரச்சினையின் சிறிய குறிப்பீடு மாத்திரமே இதுவாக இருந்தாலும், சிறுவர்கள்
55. இந்நிலைமை சிறு நூற்றுவிதமான ஆட்சேர்ப்புக்குப் பொருந்தும், பெற்றோர்
அழைக்கும்போது மற்றைய பிள்ளைகள் திரும்பி வருகின்றனர். 56. மேற்படி. குறிப்பு 50. 57 பர்னாந்து விமுக்தி 350 சிறுவர் விடுதலை யூனிசெப் விடுதலைப் புலிகளைப்
பாராட்டு' சன்டே ஒப்சேவர் 2002 பெப்புருவரி 2. 58. இலங்கையின் வடக்கு, கிழக்குக்கு உடனடி மனிதாபிமான மற்றும் புனர்வாழ்வு உதவிக்கான வேண்டுகோள் - 2002 நவம்பர் 25 திங்கட்கிழமை, ஒஸ்லோ மாநாட்டின் உபகுழுவினால் சமர்ப்பிக்கப்பட்டது. சி.எச. ஏ. (CHC)சஞ்சிகை தொகுப்பிலிருந்து இதழ் 6, வெளியீடு 11, நவம்பர் 2002
127

Page 71
தொடர்ந்தும் ஆட்சேர்க்கப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப் படுவதனைப் பார்க்கும்போது விடுதலைப் புலிகள் இரட்டை வேடம் பூணுவதில் வல்லவர்கள் என்பதையே குறிக்கின்றது. பரந்தளவில் நோக்கும்போது, வடக்கு கிழக்கில் எத்தகைய வகை சொல்ல வேண்டிய பொறுப்புடன் அத்தகைய நிருவாகம் ஸ்தாபிக்கப்படும் என்பது ஐயப்பாடுள்ள வினாவாகும். சிறுவர் போராளிகளுக்கு குடிமக்கள் சூழலில் புனர் வாழ் வளிக் கப்பட வேண்டுமென நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.” இராணுவ நெறிமுறையைப் பின்பற்றும் ஒரு கலாசாரப் பின்னணியில் சிவிலியன் புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டம் எவ்வாறு அமுல்படுத்தப்பட முடியும் என்பது பிரச்சினைக்குரியதே.
ஆண்டு முடிவில் செய்தித்தாள் அறிக்கைகளில் “சிறுவர் அணியை” குலைக்கப் போவதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். 2002 நவம்பர் 24ஆம் திகதி "த ஜலன்ட், நோர்வே மத்தியஸ்த யுத்தநிறுத்தம் காரணமாக தமிழ் விடுதலைப் புலிகளினால் விடுவிக்கப பட்ட சிறுவர் போராளிகளின் எண்ணிக்கை உயர்ந்ததோடு இவர்களை சமூகத்துக்குள் இணைத்துக் கொள்ளுவதற்கான வழிவகைகளையும் தொழிற்பாட்டுக் குழு அமுல்படுத்தி வருகின்றது, எனச் செய்தி வெளியிட்டது." வறுமையும் பாடசாலை வசதியின்மையுமே பல நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளை இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஆயுதமேந்திப் போராட வைத்துள்ளதோடு இயக்கத்தை விட்டு நீங்கினால் அவர்கள் பட்டினியை எதிர்நோக்க வேண்டி நேரிடும் எனவும் அறிக்கை மேலும் தெரிவித்தது." உண்மையில் பெருமளவு எண்ணிக்கையான சிறுவர்கள் விடுதலை செய்யப்பட்டால், இது அவர்களின் வருங்கால சுபீட்சத்துக்கு வழிவகுக்கும்.
பல மனித உரிமைகள் தீவிரவாதிகளும், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் சமாதானம் நிலவுமானால், பல நூற்றுக்கணக்கான சிறுவர் போராளிகளை புனர்வாழ்வளிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என்பது பற்றிய எமது கவனத்தை ஈர்த்துள்ளன? யூனிசெப் நிறுவனம் பாடசாலைக்குச் செல்வதற்கான உதவி, தொழிற்கல்வி’ மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கான வசதி உட்பட, இப்பிள்ளைகளின் சமூக புனர் வாழ்வுக்கான செயற்பாட்டுத் திட்டமொன்றை° அபிவிருத்தி செய்வதாகத் தெரிவித்த போதிலும், 2002ஆம் ஆண்டு முடிவு வரை அத்தகைய திட்டம் எதுவும் உருவாக்கப்படவில்லை."
59. டாக்டர் எலிசபெத் ஜாஹெக் “சன்டே டைம்ஸ்’ 2002 செப்டெம்பர் 29,
இல் கூறியவாறு.
60. த ஜலன்ட் 2002 நவம்பர் 24
61. Ibid
62. மேற்படி குறிப்பு 6
63. மேற்படி குறிப்பு 50,
64. மேற்படி குறிப்பு 6
128

இத்தகைய அறிக்கை வெளியிடப்படுமுன்னர், இலங்கைக்கு யூனிசெப் தலைவர் கறொல் பெலாமியின் வருகை பற்றிச் செய்தித் தாள்களில் அறிக்கை வெளியிடப்பட்டதுமல்லாமல், யூனிசெப் நிறுவனத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே புதிதாக உடன் படிக் கை செய்து கொள்ளப்பட்டது. செய்தித் தாள் அறிக் கைகளின் படி, சிறுபிள்ளை போராளிகளை சமூகத்தில் ஒருங்கிணைப்பதற்கான ஒரு திட்டத்தை அமுல்படுத்துவதற்காக விடுதலைப் புலிகள் யூனிசெப் நிறுவனத்துடன் சேர்ந்து பணியாற்றப் பொறுப்பேற்றனர். 2001 நவம்பர் வரை 350 பிள்ளைகள் விடுவிக்கப்பட்டனர்." இருந்தபோதிலும் இலங்கை அமைதி காக்கும் படையினரால் 2002ஆம் ஆண்டின் ஒரு பகுதியில் விடுதலைப் புலிகள் 3 3 புதரிய போராளிகளைச் சேர்த் துக் கொண் டதாக அறிவிக்கப்பட்டுள்ளது." ஆகவே விடுதலைப் புலிகள் ஒரு புறத்தே சிறுவர்களை விடுவித்தபோதிலும் மறுபுறத்தே சிறுவர் போராளிகளை ஆட்சேர்ப்புச் செய்த வண்ணமுள்ளனர்.
3.1 சிறுவர் போராளிகளின் பிரச்சினையைப் பொறுத்தவரை சர்வதேசக் கடப்பாடுகளும் அரசுக்குள்ள பொறுப்பும்.
1994ஆம் ஆண்டில் இலங்கையினால் சமர்ப்பிக்கப்பட்ட, சிறுவர்கள் உரிமை மீதான ஐ.நா. குழுவின் அறிக்கைக்குப் பதிலிறுக்குமுகமாக, ஐ.நா. குழுவானது, “போரில் சிறுவர்களின் பங்களிப்பும் போராளிச் சிறுவர் கைதிகளை அதிகாரிகள் கையாளும் முறையும்’ பற்றிய விடயங்களுக்கு விசேட கவனஞ்செலுத்தி, ஆயுதப் போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்மீதான விசேட அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது." துரதிஷ்டவசமாக இலங்கை அரசாங்கம் எதுவிதமான பதிலையும் தரவில்லை. இலங்கையின் மிகப் பிந்திய சமர்ப்பணம் 2003 முற்பகுதியில் விசாரிக்கப்படவுள்ளது. இவ் விடயம் தொடர்புபட்ட அரசு சாரா அமைப்புக் களுடன் கலந்தாலோசித்து எடுத்துக்கொள்ளப்பட்ட அறிக்கை சிறுவர்களின் நலனுக்காகப் பணிபுரியும் சமூக ஒழுங்கமைப்புகளினால் பெரிதும் வரவேற்கப்படுகின்றது. எவ்வாறாயினும், சில பிரச்சினைகள் இந்த ஒழுங்கமைப்புகளினால் முன்வைக்கப்பட்டன.
65. மேற்படி குறிப்பு 57
66. மேற்படி குறிப்பு 51.
67. சிறுவர் உரிமைகள்மீதான குழு - இலங்கைமீது முடிவு அவதானிப்புகள் -
(9ஆவது அமர்வு, 1995)
129

Page 72
சிறுவர் போராளிகள் பற்றிய பரிபூரண அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்ற குழுவின் வேண்டுகோளுக்கு இணங்கியொழுகத் தவறிவிட்டது என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகாத வண்ணம் அரசாங்கம் மிகவும் சமீபத்திய சமர்ப்பணமாக ஆயுதப் போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் பற்றி 22 பக்க சமர்ப்பணம் ஒன்றைச் செய்தது. அது மிகவும் பரந்த அளவில், சிறுவர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதில் விடுதலைப் புலிகள் இழைக்கும் குற்றம் பற்றிக் குறிப்பிடுகின்றது. முன்னைய மக்கள் கூட்டணி ஆட்சிக்காலத்தின் போது பெருமளவுக்குப் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயமும் இதுவே. அது முன்னைய போராளிகளுக்குப் புனர் வாழ்வளிப் பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுக் கொண்டிருப்பது பற்றியும் குறிப்பிடுகின்றது. அறிக்கை பின்வருமாறு:
அரசாங்கம் புதிதாக ஆட்சேர்ப்பதைத் தடுப்பதற்கு மாத்திரம் அல்லாமல் சிறுவர் போராளிகளின் புனர் வாழ்வுக்கும் சமூக ஒருங்கிணைப்புக்கும் உதவுவதற்கும் பரிபூரண நிகழ்ச்சித் திட்டத்தைத் திட்டமிடுகின்றது. அத்துடன் ஆயுதப் படையினரால் கைது செய்யப்பட்ட அல்லது ஆயுதப் படையினரிடம் சரணடைந்த முன்னைய சிறுவர் போராளிகளுக்கு வழங்கப்படவுள்ள உளவியல் - சமூக ஆதாரப் பயிற்சித் திட்டத்துக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.*
இலங்கை சிறுவர் பாதுகாப்பு அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட பின்னணி அறிக்கையின்படி, இவ் விடயத்தில் அரசாங்கத்தின் முயற்சிகள் பாராட்டப்படக் கூடியனவாக இருந்தபோதிலும் அரசைப் பொறுத்தவரை பல குறைபாடுகள் உள்ளன. இலங்கை இன்னமும் போர் நோக்கங் களுக்காக சிறுவர்கள் ஆட்சேர்ப்பதனைத் தடுப்பதற்கு வினைத் திறமையான வழிவகைகளை எடுத்துள்ளதாக இன்னமும் வெளிக் காட் டவில்லை.? 1999, 2000 ஆம் ஆண்டுகளில் அறிக்கையின்படி, அரசாங்கமானது, அதன் சொந்த உறுப்பினர் சிலரின் ஆலோசனையையும் பொருட்படுத்தாது சரணடைந்த சிறுவர் பற்றிய பத்திரிகை மாநாடுகளையும் ஊடகப் பிரச்சாரத்தையும் அனுமதித்தது. இவற்றின்போது சிறுவர்களின் முகங்களையும்
68. மேற்படி குறிப்பு 10.
69. கீழே அறிக்கையிடப்பட்டவாறாக விடுதலைப் புலிகள் மீளாய்வின் கீழுள்ள காலப்பகுதி முழுவதும் தொடர்ந்தும் சிறுவர்களை ஆட்சேர்த்து வந்துள்ளனர். கரையோரப் பிரதேசங்களில் இலங்கை அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட ஊர் காவலர்களுக்கு ஆகக்குறைந்த வயதெல்லை கிடையாது. இத்தகைய குழுக்களுக்கு 18 வயதுக்குக் குறைந்தவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டு பெப்புருவரி மாதத்தில் விலக்கப்பட்டனர். மேற்படி குறிப்பு n. 6
130

காண்பித்தனர். 2000ஆம் ஆண்டில் பிந்துனுவெவவில் இடம்பெற்ற சம்பவத்தில், பல சிறுவர் உட்பட, 27பேர், தங்கியிருந்த புனர்வாழ்வு முகாம் ஒரு கும்பலினால் தாக்கப்பட்டபோது இறந்துள்ளனர். இங்கும் இந்த அரசாங்கம் சிறுபிள்ளைகளைக் காட்பாற்றத் தவறியுள்ளது." யாழ்ப்பாண புனர்வாழ்வு நிலையத்தில் உள்ளோர் நிதிப் பற்றாக்குறை காரணமாகத் உணவுகளைப் பெறமுடியாத காரணத்தால் துன்பத்துக்கு ஆளாக வேண்டிய நிலை பற்றியும் அறிவிக்கப்பட்டது. அறிக்கையின்படி தேசிய இளைஞர் சேவைகள் சபையும் பாதுகாப்பு அமைச் சுற் இந் நிலையத் தின் இயங் குகைக் குப் பொறுப்பானவையாகும்." மேலும் பாதுகாப்புப் படையினரால் சிறுவர் போராளிகள் துஷபிரயோகத்துக்கு ஆளாக்கப்படுதல் பற்றி எவருமே கவனிப்பதில்லை. சர்வதேச மன்னிப்புச் சபை பல்வேறு வகைப்பட்ட பாலியல் வல்லுறவு விடயங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, கடற்புலிகளுடன் சேர்த்து இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட 14 வயது நிரம்பிய சிறுமி பத்துக்கு மேற்பட்ட கடற்படை வீரர்களால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார்.’ சிறுவர் போராளிகள் கைது செய்யப்பட்டதும், ஆயுதப் படைகளிடம் சரணடையும்போதும் அல்லது விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் களிலிருந்து தப் பிச் செல்லும்போதும், அவர்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான நிறுவன ரீதியான நடைமுறைகள் வகுக் கப்படவேண்டியது அவசியமென அறிக்கை கூறியது. மேலும் அத்தகைய பிள்ளைகளின் சட்ட அந்தஸ்தைத் தாபிப்பதற்கும், அவர்களின் புனர் வாழ்வுக்கான ஏற்பாடுகளுக்கும், குழந்தைகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் அறிக்கை கோருகின்றது.
ஆயுதப் போராட்ட நிலைமைகளில் சிறுவர்களை விசேடமாகப் பாதுகாப்பதற்கான உத்தரவாதமளிக்கும் உள்ளுர் சட்டங்களை இலங்கை கொண்டிருக்கவில்லை. எவ்வாறாயினும் யுத்தக் காரணங்களுக்காக சிறுவர்களைக் கட்டாயப்படுத்திப் போராளிகளாகச் சேர்த்துக்கொள்ளல், சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கைக்குள்ள கடப்பாடுகள் பலவற்றை மீறுகின்றது. போர்புரியும் நோக்கங்களுக்காக
70. பண்டாரவளை பிந்துனுவெவ புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் மீதான மனித உரிமைகள் குழுவின் இடைக்கால அறிக்கை, 2000 ஒக்டோபர் 24, 25 காண்க றமணி முத்தெட்டுவேகம, “ஆளுக்குரிய கீர்த்தி' இலங்கை, மனித உரிமைகளின் நிலை, 2001 சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அறநிலையம் - பூரண அறிக்கைக்கும் அதன் பின்விளைவுகளுக்கும்.
71. மேற்படி குறிப்பு 6.
72. சர்வதேச மன்னிப்புச் சபை: இலங்கை, கட்டுக்காவலில் கற்பழிப்பு, 2002
ஜனவரி 28,
13

Page 73
18 வயதுக்குக் குறைவான பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ளல் 182ஆம் இலக்க சர்வதேச தொழில் ஒழுங்கமைப்பின் சமவாயத்தின் கீழும்” (1999) ஆயுதப் போராட்டத்தில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவது தொடர்பான பிள்ளைகளின் உரிமைகள் மீதான ஐ.நா.சமவாயத்துக்கான கட்டாயமற்ற 11ஆவது தாயேட்டிலும்" தடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச தொழில் தாபனம் அரச திறத்தவர்கள் ஆட்சேர்ப்புத் தொடர்பாக தண்டனைகளை விதிக்கவேண்டும் எனத் தேவைப்படுத்துகின்றது. (உறுப்புரை 7) பிள்ளைகளின் உரிமைகள் பற்றிய சமவாயத்துக்கான கட்டாயமற்ற 11வது தாயேடு அத்தகைய செயல்களைக் குற்றவியல் தவறுகளாகக் கருதுகின்றது. (உறுப்புரை 43) முன்னைநாள் சிறுவர் போராளிகளைப் பொறுத்தவரை, இலங்கை, சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் கீழ் ஆகக் குறைந்த குற்றவியற் பொறுப்புக்கான வயதைத் தாபிப்பதற்கும் அத்தகைய பிள்ளைகள் இயலக் கூடிய நீதிமுறையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாமல் கையாளப்படுவதனை உறுதிப்படுத்துவதற்கும் கடப்பாடுள்ளதாகும். (உறுப்புரை 40) இறுதியாக, இலங்கை ஆட்சேர்ப்பைத் தடுப்பதற்கான வினைத் திறமையான வழிவகைகளை எடுப்பதற்கும், ஏற்கனவே போராளிகளாகவுள்ள சிறுவர்களுக்கு நேரடியான உதவிவழங்குவதற்கும் பிள்ளைகளின் உரிமைபற்றிய குழுவுக்கும் சர்வதேச தொழில் ஒழுங்கமைப்பின் சமவாயத்தின் (உறுப்புரை 7) ஏற்பாடுகளுக்கும் செய்யப்பட்ட ஈடுபாடுகளின் கீழ் முன்னைய போராளிகளுக்கு இலவச அடிப்படைக் கல்வியும் தொழிற்கல்வியும் பெற ஏற்பாடு செய்வதற்கும் வினைத் திறமையான வழிவகைகளை எடுக்கக் கடப்பாடுடையதாகும் இலங்கையில் சிறுவர் போராளிகளின் பயன்பாட்டைத் தடுக்கும் குறிப்பான சட்டம் எதுவும் கிடையாது என்பது மனவருத்தத்துக்குரிய விடயமாகும்.'
73. சிறுவர் தொழிலின் மோசமான முறைகளைத் தவிப்பதற்கான உடனடி நடவடிக்கை
மற்றும் தடை சம்பந்தப்பட்ட சமவாயம் ILO (ச.தொ.தா.சமவாயம் 182) 1999
74. இலங்கை இவ்விரு சாதனங்களிலும் 2001 மற்றும் 2000ஆகிய ஆண்டுகளில் கைச்சாத்திட்டது. அவை 2002, 2003 ஆகிய ஆண்டுகளில் நடைமுறைககு வந்தன. கட்டாயமற்ற தாயேடு அரச படைகள் பதினைந்து முதல் பதினெட்டு வரை ஆட்சேர்ப்பதற்கு இடமளித்த போதிலும், அரசு சாராத் தொகுதிகள் 18 வயதுக்குக் குறைந்தவர்களை ஆட்சேர்க்கமுடியாது எனக் கூறப்பட்ட
75. 1985ஆம் ஆண்டின் 40ஆம் இலக்க ஆட்சேர்ப்பு மற்றும் குறைநிரப்பு படைகள் சட்டம் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களைச் சேர்த்துக் கொள்வதனைத் தடைசெய்கின்றது. இலங்கை ஆயுதந்தாங்கிய படையினர் ஒழுங்குவிதி மூலம் படைகளில் சிறுவர்களைச் சேர்த்துக்கொள்வதனை மட்டுப்படுத்தினர். எவ்வாறாயினும், அத்தகைய செயல்களைக் குற்றமாக்கும் உள்ளுர் சட்டம் “பிள்ளைகளுக்கான கொடுரம்' பற்றிய தண்டனைச் சட்டக்கோவையின் 308ஏ(1) பிரிவாகும். சட்டத்திற்கும் சமாதானத்திற்குமான அறநிலையம் 2001) போரிலும் முரண்பாட்டிலும் பிள்ளைகளைக் காத்தல்; சட்ட மற்றும் சட்டத் தராதரத் தொகுப்பு)
132

அல்லாமலும் சிறுவர் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச் சட்டத்தில் பாலியல் குற்றவாளிகள் நீதி தொடர்பான ஏற்பாடுகளின் முக்கியத்துவம் தொடர்பில் தெளிவுபடுத்தல் எதுவும் செய்யப்படவில்லை." மீளாய்வின் கீழுள்ள காலத்தின்போது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிள்ளைகள் தொடர்ந்தும் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டு விலங்கிடப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் எந்தவித குறிப்பான மனித உரிமைகள் கடப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. பொது மக்களுக்கெதிரான குறித்தசில தீங்கு விளைக்கும் செயல்களுக் கெதிரான தடைகளை அது கொண்டுள்ளது. உதாரணமாக, உறுப்புரை 2.1 திறத்தவர்கள் சர்வதேச சட்டத்துக்கிணங்கச் செயலாற்ற வேண்டும் எனவும் சித்திரவதை, அச்சுறுத்தல், ஆட்கடத்தல், பறித்தல் மற்றும் துன்புறுத்தல் போன்ற செயல்கள் உட்பட, பொதுமக்களுக்கெதிரான பகைச் செயல்களிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமெனவும் தேவைப் படுத்துகின்றது." புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை கண்காணிப்பு குழு சிறுவர்களைப் படைக்குச் சேர்த்துக்கொள்ளல் தொடர்பிலான முறைப்பாடுகளை விடுதலைப் புலிகளுடன் கலந்துரையாடுவற்குத் தத்துவம் கொண்டுள்ளது. இவ்வசதியைப் பொதுமக்கள் ஆரம்ப காலங்களில் வெகு குறைவாகவே பயன்படுத்தினர் ஆனால் கடந்த சில காலங்களில் பெருமளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டது போன்று, புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டதிலிருந்து 502 யுத்தமீறல் சம்பவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 313 விடயங்கள் சிறுவர்களைப் போராளிகளாகச் சேர்த்துக் கொண்ட சந்தர்ப்பங்களாகும்." மிகவும் சமீபமாக, யுத்தநிறுத்த ஒப்பந்தத்துக்கு முன்னர் ஆட்கடத்தப்பட்ட பிள்ளைகளின் பெற்றோரிட மிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன.” அத்தகைய முறைப் பாடுகளின் நிலைபற்றி ஆராயப்பட வேண்டும்.
76. இது ஏறக்குறைய சிறுவர் உரிமைகள் தொடர்பான சமவாயத்தின் தேவைப்பாடுகளை ஒத்துள்ளது. சிறுவர் உரிமைகள்' இலங்கை மனித உரிமைகளின் நிலை 1993 (சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அறநிலையம்), காண்க அத்தியாயம்.
77. மேற்படி குறிப்பு 7
78. மேற்படி குறிப்பு 51
79. மேற்படி குறிப்பு 52

Page 74
4. முடிவுரை: எதிர்கால வாய்ப்புக்கள்
தற்போதைய அரசாங்கம் மீளாய்வின் கீழுள்ள ஆண்டின்போது சிறுபிள்ளைகளைப் போராளிகளாக ஆட்சோக்கப்படும் விடயத்தில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. சிறுவர்கள் போராளிகளாகச் சேர்க்கப்படுவது பற்றியும், ஆட்கடத்தல் பற்றியும் பல அறிக்கைகள் வெளிவந்தபோதிலும் அரசாங்கம் மெளனமே சாதித்துள்ளது. 2002 மார்ச்சில் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கைகளுக்கு பாதுகாப்பு அமைச்சர், திலக் மாறப்பன தெரிவித்த கருத்துக்கள் பற்றிப் பெரிதும் பிரஸ்தாபிக்கப்பட்டன." பிரித்தானிய ஒலிபரப்புச் சேவையின் சிங்கள சேவையில் பேட்டி காணப்பட்டபோது, சிறுபிள்ளைப் போராளிகளாகக் கட்டாயமாகச் சேர்ததுக்கொள்வதென்பது “உறுதிப் படுத்தப்படாத கதையே’ எனவும் அரசாங்கத்துக்கு அதுபற்றிய சான்றெதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்." விடுதலைப் புலிகள் சிறுவர் போராளிகளை விடுவிப்பது தொடர்பாகவோ அவர்களைச் சேர்த்துக்கொள்வதனைத் தடுப்பது தொடர்பாகவோ எவ்வித சிரத்தையும் காட்டாதவர்கள் போன்று தோற்றமளித்தனர். யூனிசெப் உடனான கலந்துரையாடல்கள் மற்றும் ஐந்தாவது சுற்றுப் பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றபோதிலும் சிறுவர்களைப் பெருமளவில் விடுவித்த நிலைமை எதுவும் தோன்றவில்லை. தொடர்ந்தும் ஆட்சேர்ப்புச் செய்யப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2002ஆம் ஆண்டில் அபரிமிதமாகக் காணப்பட்ட ஆட்சேர்ப்பு யுக்திகளை புலிகள் மாற்றிக் கொண்டனர் போலத் தோற்றுகின்றது. உதாரணமாக, யா/மனித உரிமைகள் மன்ற அறிக்கையின்படி, விடுதலைப் புலிகளின் கிழக்கு பிராந்திய தளபதியான கருணாவின் அறிவுறுத்தல்களில் புதிய நிலைமைக்கேற்ப போராளிகள் தமது செயற்பாடுகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. "கருணா ஒழுங்கமைப்பின் பிரத்தியேக செல்வாக்கு நிலைமையை எடுத்துக் காட்டி அது பெறக்கூடிய வாய்ப்புகள் பற்றி உயர்வாக எடுத்துரைத்து சிறுவரை ஈர்க்கும் யுக்திகளைக் காட்டினார். இவற்றில் போராளிக் குடும்பங்களுக்குள்ள சலுகைகள், அதிகாரத்திலிருந்து கிடைக்கும்
80. மேற்படி குறிப்பு 47
81. மனித உரிமைகள் ஒன்றியம் (UTHR-J) யா/விசேட அறிக்கை 14. 'சிறுவர் போராளிகளின் நிலை, சமூகச் சீர்கேடும் முஸ்லிம் எதிர்ப்பு பயமும் 20 ജ്ജ്ഞ) 2002.
34

== - - జ్ఞానా
சமூக முக்கியத்துவம், போக்குவரத்து வாகன வசதி போன்றவை அடங்கும்.* மேலும் விடுவிக்கப்பட்ட 350 பிள்ளைகளைப் பற்றிப் பெரிதாகப் பேசப்பட்டு வருகின்றது. ஆனால் அக்காலப் பகுதியின் போது ஆட்சேர்க்கப் பட்ட சிறுவர் தொகை மிகவும் கூடுதலானதாகும் என்பதுடன் ஏற்கனவே இதில் உள்ள சிறுவர் தொகை பல ஆயிரக் கணக்கானதாகும்.* மே 2002ல் ஐ.நா.பாதுகாப்புச் சபைக்கான அறிக்கையில், ஐ.நா. விசேட பிரதிநிதி, ஒல்லாறா ஒட்டுன்னே சிறுவர்களின் பாதுகாப்பும் நல்வாழ்வும் முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சு வார்த்தைகளினதும், சமாதான ஒப்பந்தங்களினதும் பாகமாக வரவேண்டும் எனக் குறிப்பிட்டார்." இலங்கைச் சமாதானச் செய்முறையில் இதுதான் நிலைமையா என்பது இன்னமும் தெளிவற்ற விடயமாகவுள்ளது.
82. Ibid
83. ஐ.நா.இ.உ.ஆ.வின் இரண்டாவது நாட்டு அறிக்கை 18 வயதுக்குக் குறைந்த விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளிகள் 60 சதவீதமானோர் இருப்பதாக இராணுவத் தகவல் மையம் தெரிவிக்கின்றது. கொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகளின் தொகை 16,000 இருக்குமாயின், போராளிச் சிறுவர் தொகை ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என நியாயமானளவு மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி குறிப்பு 10.
84. ஜயசேகர, பந்துல, "சிறுவர் போராளிகள் உலகக் குழு தெரிவித்துளளது'
'த ஜலன்ட், மே 18, 2002.
135

Page 75
VI
கருத்து வெளியீட்டுச் சுதந்திரமும் ஊடகச் சுதந்திரமும்
கிஷாலி பின்ற்றோ-ஜயவர்தன
1. அறிமுகம்
"...நிறுவப்பட்டதோர் அதிகாரத்திற்கு எதிரெடை என ஒரு சமயம் கருதப்பட்ட அச்சு ஊடகம், அதனை எட்டுவது-அதாவது ஊடகங்கள்-அதிகாரத்தின் ஏனைய மாதிரிகளைப் போன்று சமசீரற்ற விதத்தில் பங்கீடு செய்யப்பட்டுள்ளதன் காரணமாக அதற்குக் கூடுதலான மீள் வலியுறுத்து வழங்குவது போல் அமைந்துள்ளது. உண்மையில், சக்தி குறைந்தவர்கள் ஊடகங்களில் தங்களின் கருத்துகளை வெளியிட முடிவதில்லை அல்லது அவர்களின் செயற்பாடுகள் என்றுமே எடுத்துரைக்கப்படுவதில்லை என்பதாகா. எனினும் நமது சமூகத்தில் அச்சு ஊடகம் தன்னளவில் இன்றியமை யாததொரு சக்தி என்பதாலும், ஏனைய இன்றியமையாத சக்திகளுடன் அந்நியோன்னியமாகத்
1. எல்.எல்.பி (சிறப்பு) சட்டத்தரணி, கொழும்பு, த சண்டேற் றைம்ஸ் ஆசிரிய ஆலோசகர்(சட்டம்) / பத்தி எழுத்தாளர், சட்டமும் சமூகத்திற்குமான அற நிலையம் - ஆலோசகர்
136

(சாதாரணமாக அல்லாது) நட்புறவு கொணி டிருப்பதாலும் அவர்களுக்கெதிராக புகார்கள் தளத்தில் போராகக் குவித்து வைக்கப்பட்டுள்ளன.”
இந்த நியாயப்படுத்தலில், கவர்ச்சிகரமான விதத்தில் கற்பனை செய்யப்பட்டுள்ள இந்த முரணுரைகளின் உட்கிடை (குறைபாடுள்ள ஜனநாயக முறைமைகளில் ஊடகக் கட்டமைப்புகள் விடயத்தில், சான்றாகும் தன்மை தொடர்பில்) அத்தகைய முறைமைகள், ஊடகக் கட்டுப்பாட்டிலிருந்து ஊடகச் சுதந்திரமாக மாற்றமடையும் இடைமாறு காலத்தில் அது மேலும் நுட்பமானதாக ஓர் உய்த்துணர்வைத் தருவதாக அமைந்துள்ளது.
கூடுதலான சுதந்திரம் என்பது, அதிக சக்தி வாய்ந்த ஓர் ஊடகத்தின் இன்றியமையாத தன்மையை உட்கிடையாக கொண்டு, தன்னளவில் பகுப்பாய்வு ஒழுங்குபடுத்தல் என்பவற்றின் அதிக அளவிலான அவசியத்தைக் காவிச் செல்கிறது. மாற்றாகத் தன்னை தீர்க்கமானதும், நம்பகத்தன்மை கொண்டதுமான ஓர் ஊடகமாக நிலை நிறுத்திக் கொள்வதற்கு முயல்வதன் விளைவுகள் வெளிப்படையான அடக்குதலுக்கு உள்ளாகும் விதத்தில் அனேகமாக சாத்தியமானதும் அதிக அளவில் அழிவை ஏற்படுத்திக் கூடியதுமானதொன்றாக அமையக்கூடும்.
ஆற்றல்மிக்க அரசியல் சக்தியையும், அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (எல்.ரி.ரி.ஈ) இடையே வடக்கிலும், கிழக்கிலும் ஏற்பட்டு வந்த போர் நிறுத்தம் தொடர்பில் எய்தப்பட்ட உடன்பாட்டையும் 2002 ஆம் ஆண்டு கண்டதோடு, நாட்டின் ஊடகத்துறையில் இந்த அக் கறைகள் அதிகரித்த அளவில் முன் கூட்டிய கவனத்தை ஈர்த்திருந்தன.
2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி (யூ.என்.எப்) ஈட்டிய வெற்றியின் விளைவாக நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் தனியார் மற்றும் அரசக் கட்டுப்பாட்டிலுள்ள அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு புதிய சவால்களைத் தோற்றுவித்தன.
அத்தோடு ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும், 1978ம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பின் சிக்கல் நிறைந்த தன்மை காரணமாக, மக்கள் ஐக்கிய முன்னணியின் ஜனாதிபதி முறைமைக்குமிடையே நடைமுறையில் அடிக்கடி பாதிப்புக்குள்ளாவதாக
2. டெமோக்கிறச்சி அன்ட் த மாஸ் மீடியா, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக அச்சகம்
1990 பதிப்பு லிச்ர்றென் பேர்க், பக்கங்கள் 102 - 105
137

Page 76
உள்ள சகவாழ்வு முயற்சி ஊடகங்களைப் பொறுத்தவரை சுய மனஅழுத்தங்களுக்கு உள்ளாயிற்று. இந்த இரண்டு நிகழ்வுகளின் அடுத்தடுத்த பக்க விளைவுகள் இவ்வத்தியாயத்தில் பின்னர் விரிவாக பரிசீலிக்கப்படும்.
புதிய அரசாங்கத்திற்கும் எல்.ரி.ரி.ஈ இற்குமிடையே 2002 பெப்ரவரி 22ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச் சாத்திடப்பட்டது. குறிப்பிடத்தக்கதாகப் பெரிதும் பாதிப்படைந்திருந்த பேச்சுத் சுதந்திரம், ஊடக சுதந்திரம் என்பனவற்றைக் குறிப்பிடத்தக்கதாகப் பெரிதும் பாதித்திருந்த கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக வடக்கிலும், கிழக்கிலும் நிகழ்ந்து வந்த அழிவை ஏற்படுத்தும் போரினால், நீறுபூத்த நெருப்பாக நெருக்கடி நிலைமைகளை தூண்டுவதற்கு பதிலாக, இணக்கப்பாடுகளை மேற்கொள்வதற்கு ஊடகங்களுக்கு விசேடமான பொறுப்புகள் உண்டு என்பதை வலியுறுத்திப் பேச்சுவார்த்தை மூலம் சர்சைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
வடக்கில் தீவிர பூசல்கள் முடிவுக்கு வந்துள்ள போதிலும், சாதாரண குடிமக்கள், செய்தித்துறை சார்ந்தோர் மற்றும் அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் ஆகியோர் மீதான எல்.ரி.ரி.ஈ.யின் ஒடுக்குமுறை தொடர்கிறது. வடக்கில் நிகழ்ந்து வரும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில், தெற்கிலுள்ள மனித உரிமைகள் அமைப்புகளின் செயல் வீரர்கள் அக்கறை காட்ட தவறியதன் காரணமாக வடக்கிற்கும், தெற்குக்குமிடையே ஆழமான பிளவு ஏற்பட்டது. V
இவ்வத்தியாயம் நாட்டில் பேச்சுச் சுதந்திரம், இந்த ஆண்டு கண்ட நிறைவேற்றுச் சாதனை செய்வதற்கு எஞ்சியுள்ளவை ஆகிய இரண்டின் தொடர்பில், ஊடகச் சட்டச் சீரமைப்பு என்பவை பற்றி முன்னேற்றம் பற்றி ஆராயும்.
2. “சகவாழ்வும்” ஊடகமும் - குறித்தவகை மன
அழுத்தங்கள்.
1994ல், மக்கள் ஜக்கிய முன்னணி நாட்டிலுள்ள மாற்று மற்றும் நிலைபேறான தனியார் ஊடகம் ஆகிய இரணி டினதும் நல்லெண்ணத்தோடு வீசிய அபார அலையோடு அதிகாரத்தைக் கைப்பற்றியது. எனினும் எட்டு ஆண்டுகால ஆட்சியின்போது ஊடகத் துறைக்கும், அரசாங்கத்திற்குமிடையேயான உறவுகள் இடையறாது மோசமடைந்தன.
138

அரசாங்கம் வெட்கங்கெட்ட விதத்தில், அரச ஊடகங்களைப் பிரச்சார நோக்கங்களுக்குப் பயன்படுத்தி, அரச சார்பற்ற அச்சு ஊடகத்தைச் சேர்ந்த பத்திரிகை ஆசியர்களுக்கும், இதழிய லாளர்களுக்கும் எதிராக நிகரற்ற விதத்தில் குற்றவியல் அவதூறு வழக்குகளைத் தொடுத்தது. வெளித்தோற்றத்தில் வடக்கு, கிழக்கு முரண்பாடு காரணமாக பரவலான செய்திகளுக்குத் தணிக்கை விதித்தது. எனவே, 2001 டிசம்பர் தேர்தலில் வென்ற பிறகு, எதிர்க் கட்சியிலிருந்த போது ஊடகச்சட்டம் தொடர்பில் சீரமைப்புச் செய்வதாக தெரிவித்திருந்த வாக்குறுதிகளை விரிவுபடுத்துவதற்காக பழிக்குப்பழி என்ற ரீதியில், ஊடகத்துறையை அணைத்துக் கொள்ள முற்பட்டது.
(இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் உள்ளபடி) அரச ஊடகத் துறையை அரசாங்கம் இணைத்துக் கொண்டதோடு, நாடு வழக்கத்தைவிடக் கூடுதலான ஆர்வத்தோடு ஊடகத்திற்கும் , ஜக்கிய தேசிய முன்னணிக்குமிடையேயான மரபுவழிவந்த ‘தேன்நிலவு காலத்துள் பிரவேசித்தது. ஐனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான யூ.என்.எப் இற்குமிடையேயான சக வாழ்வு நடைமுறையின் கடினமான தன்மையினால் இது மேலும் ஒப்பனைக்குள்ளானது. ஜனாதிபதி அமைச்சரவையின் தலைமைப் பதவியைக் கொண்டிருக்கையில், தொடர்பாடல் உட்பட சகல அமைச் சுக் களையும் , யூ.என்.எப் உறுப்பினர் - இவர்களில் அனேகமானோர் மறைமுகமாக ஐனாதிபதிக்கு எதிரானவர்கள் வசப்படுத்தியுள்ளனர். இவ்வாண்டு ஊடகங்கள் குறிப்பாக இலத்திரனியல் ஊடகங்கள் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கு மிடையேயான இந்த இழுபறிநிலையை, வெளிப்படையாகவே கண்டன. அத்தகையதொரு சந்தர்ப்பம் (இப்போது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள) அரச தொலைக்காட்சி, அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு தான் முயல்வதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி தனது
3. அரசியல் யாப்பின் 43(2) உறுப்புரை, ஜனாதிபதி அமைச்சரவையின் ஓர் உறுப்பினராக இருப்பதற்கும் அமைச்சரவையின் தலைமைப் பொறுப்பை கொண்டிருப்பதற்குமான அதிகாரமுடையவராக இருப்பதோடு எந்தவொரு விடயத்தை அல்லது பொறுப்பை தன்னளவில் ஒதுக்கிக் கொள்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்குவதற்கும், அதிகாரம் வழங்குவதோடு உப பிரிவு (3) ஜனாதிபதி எந்தவொரு வேலையிலும் பதவி அல்லது பொறுப்பினையும் அரசாங்கத்தின் அமைப்பில் மாற்றி ஒதுக்குவதற்கு அதிகாரமுடையவராக இருப்பார் என்றும் கூறுகிறது.
139

Page 77
நிலைப்பாட்டை விளக்குவதற்கு மிகச் சிறந்ததான நேரத்தை ஒதுக்கித் தருமாறு ஆண்டு நடுப்பகுதியில் கேட்டிருந்ததை மறுத்ததாகும். அந்த மறுப்புக்கான காரணம் ஏற்கனவே ஒளிபரப்புக்கென நிரல்படுத்தப்பட்டதும் - விளம்பரம் செய்வதற்காகப் பணம் அறவிடப்பட்டு விடப்பட்டதுமான அந்நிகழ்ச்சியை இரத்துச் செய்ய முடியததென்பதும் அதற்குப் பதிலாக ஜனாதிபதிக்கு முதல் தரமற்றதானதொரு காட்சி O+L நேரத்தை ஒதுக்கித் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டதுமான அடிப்படையாகும். ஜனாதிபதி செயலகத் திற்கும் இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின்(எஸ்.எல்.ஆர்சி) தலைவருக்குமிடையே இடம்பெற்ற எரிச்சலுாட்டும் கடிதப் பரிமாற்றத்தைப் தொடர்ந்து தொடர்பாடல் அமைச்சரின் நேரடித்தலையீட்டின் காரணமாக நாட்டுமக்களுக்கு உரையாற்றுவதற்கென ஜனாதிபதிக்கு முதல்தர நேரம் ஒதுக்கப்பட்டது."
ஆண்டின் பிற்பகுதியில் அனேகமாக அதிக வஞ்சப்புகழ்ச்சி சார்ந்ததாய், பிரதம மந்திரியின் சார்பில் வழக்கறிஞர்கள், பிரதமரின் நற்பெயருக்கு அவதுாறு விளைவித்ததற்காக மன்னிப்பு கேட்டு ஒரு செய்தியை ஒளிபரப்புமாறு பணித்து, தனியார் வானொலி நிலையங்களுக்குக் கடிதங்கள் எழுதியிருந்தனர். 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு முன்னைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில், கல்வியடைச்சராகவிருந்த சமயம், ரணில் விக்கிரமசிங்க தனது மகனைப் பாடசாலையில் சேர்ப்பதற்கு இலஞ்சம் கேட்டார் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளடங்கிய ஜனாதிபதி குமாரதுங்கவின் உரையொன்றை தனியார் நிலையங்கள் ஒலிபரப்பியிருந்தன. அப்போது பிரதமரின் வழக்கறிஞர்கள் உத்தியோக பூர்வ ரீதியிலோ அன்றி தனிப்பட்ட முறையிலோ, ஏதாவது செய்வதற்காக அல்லது செய்யத்தவறியது தொடர்பில் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதிலிருந்து ஜனாதிபதி
4. 2000 ஒகஸ்ட் 7ம் 8ந் திகதிகளைக் கொண்ட த ஐலண்ட் இலத்திரனியல் ஊடகத்தில் எழுந்த மற்றொரு சர்ச்சை 2001 பொதுத் தேர்தல்களின் போது, எஸ்.எல்.ஆர்சியில் நிகழ்த்தப்பட்ட செய்மதி ஊடான நேரடி ஒளிபரப்பிற்கு (எஸ்.எல்.ரி) எஸ்.எல்.ஆர்சிக்கும் இலங்கை ரெலிகொம்மிற்குமிடையே எழுந்த சர்சையாகும். அவ்வேளை ஐக்கிய தேசிய முன்னனி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த அவ்விரு நிறுவனங்களும் அந்த உரை, அரசியல் பிரச்சாரத் தன்மை கொண்டது என்ற அடிப்படையில் அதனைத் தம்மளவில் பதிவுசெய்ய மறுத்துவிட்டன (த சண்டே ரைம்ஸ் ஜூன் 30, 2002). அச்சூடகத்தில் அதேமாதிரியான நிகழ்வில், லேக் ஹவுஸ் (மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதான கூட்டுப்பாங்காளியான) இலங்கைச் சுதந்திரக் கட்சிக்கு எதிராக அது அரசாங்கத்தில் இருந்தபோது, கட்சியின் பிரச்சாரப் பிரசுரங்களை அச்சட்டவகையில் செலுத்தப்படாதிருந்த 43.4 மில்லியன் ரூபா தொகையை அறவிடுவதற்காக வழக்குத் தொடர்ந்தது (டெய்லி நியூஸ் மே 04, 2002)
5. அரசியலமைப்பின் 35 (1) உறுப்புரை
40

பாதிப்பின்மையை அனுபவிக்கையில், ஜனாதிபதியின் உரை தொடர்பில் தொலைக்காட்சி நிலையங்கள் ஏன் அத்தகைய பாதிப்பின்மையைக் கொண்டிருக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்குப் பெரும் பிரயத்தனம் மேற்கொண்டிருந்தனர்.
பரீசிலனைக்குள்ளாகும் காலப்பகுதியின் போது, முரண்பாடான ஜனாதிபதி முறைமைக்கும், எதிர்க்கும் அரசாங்கத்திற்குமிடையே ஊடகங்கள் அதிலும் குறிப்பாக இலத்திரனியல் ஊடகம் கட்டாயத்தின் பேரில் அதிமுனைப்பான மாதிரியில் நடந்து செல்லவேண்டியிருந்த பாதையினை இந்தச் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. மற்றொரு பரப்புத் தோற்றத்தில் இந்த நிகழ்வுகள், தனியார் மற்றும் அரச, உண்மையான, இலத்திரனியல் ஊடகங்களின் இவ்வத்தியாயத்தில் பின்னர் பரிசீலிக்கப்படும். ஊடக சட்ட சீரமைப்பின் ஓர் அம்சம், அமைப்பில் விரிவான அளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்துள்ளன.
3. ஊடகச் சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் தொழிற்
பாடுகளின் சீரமைப்பு.
நாட்டின் வழக்கொழிந்த ஊடகச் சட்டங்கள் ஒழுங்கு விதிகளின் சீரமைப்பு அவற்றில் அனேகமானவை சுதந்திரத்திற்கு முற்பட்டவை - கடந்த காலத்தில் ஒரு தவறான நடைமுறைக்கு உட்பட்டிருந்தது. இப்பிரச்சனையின் தீர்வுக்கான முதல் கோர்வையான முயற்சி, 1995ம் ஆண்டில் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் அரச உடைமையான லேக் ஹவுஸ் செய்திப்பத்திரிகைகள் தொகுதியினை விரிவான அடிப்படையில் உடைமையாக்கல், ஊடகங்கள் தொடர்பிலான சட்டங்களைச் சீரமைத்தல், ஊடகப்பயிற்சிக் கழகம் ஒன்றை அமைத்தல், ஊடகவியலாளர்களின் நிலைமைகளை மேம்படுத்தல் என்பன தொடர்பில் ஆராய்வதற்கென நான்கு குழுக்களை நியமித்ததுடன், ஆரம்பமாயிற்று. நான்கு குழுக்களுமே ஜனாதிபதி குமாரதுங்கவுக்கு விரிவான அறிக் கைகளை சமர்ப்பித் திருந்த போதும், இவை பின்னர் கவனிக்கப்படாது செல்லுபடியற்றதாகிவிட்டன.
6. த ஐலண்ட் வெள்ளிக்கிழமை 4 ஒக்டோபர் 2002 தாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது எஸ்.எல்.ஆர்சியும் எஸ்.எல்.பீசியும் தங்களுக்கெதிராக தீய எண்ணத்துடன் தன்னிச்சைப்படியும் அரசியலில் ஏறுமாறானவிதத்தில் செய்திகளை வெளியிட்டதாக பிரதமர் உட்பட புதிய நிர்வாகத்தின் உயிர் நாடியான உறுப்பினர்களால் தொடுக்கப்பட்ட அனேக வழக்குகள் நீதிமன்றத்தில் சமரஸமாகத் தீர்க்கப்பட்டதையும் இக்காலப்பகுதி கண்டுள்ளது. இது தொடர்பில் த ஐலண்ட் 19 ஒக்டோபர் 2002 ஐப் பார்க்க,
141

Page 78
இந்த ஊடகச்சட்டச் சீரமைப்பு நடைமுறைக்குப் புத்துயிரூட்ட பின்னர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1977இல் ஊடகம் தொடர்பிலான சட்ட ஒழுங்கமைப்புக்கெனப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நிறுவப்பட்டிருந்தும், இது ஒரு சில அமர்வுகளிலும், பொது மக்களிடமிருந்து முறையீடுகளைக் கோரியதோடு மட்டிலுமே தனது ஈடுபாட்டினை மட்டுப்படுத்திக் கொண்டது. தீர்க்கமான சிபாரிசுகள் எதுவும் வெளிவரவில்லை. w
1999இல் செய்தி இதழ்களைப் பாதிக்கும் சட்ட முரண்பாடுகள் தொடர்பில் பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சிகள் இணைந்து பாராளுமன்றப் பிரேரணையைக் (இல. 218/99) கொண்டு வந்தன. அப்பிரேரணை முதனிலையிலுள்ளதாக நான்கு துறைகள் மீது கவனம் செலுத்தியது. குற்றவியல் அவதூறுச் சட்டங்களை நீக்குதல், செய்தி இதழ்கள் மன்றச் சட்டத்தை நீககுதல், சுதந்திரத் தகவல் சட்டமொன்றையும் நீதிமன்ற அவமதிப்புச் சட்டமொன்றையும் இயற்றல. எனினும், இடைவந்த பாராளுமன்றத் தேர்தல்களால் அப்பிரேரணை காலாவதியாவதில் முடிந்தது. அந்த பிரேரணைக்குப் பின்னர் புத்துயிரூட்டப்படவுமில்லை. 2001 டிசம்பரில் பொது தேர்தல் நடைபெற்ற வேளையில் நாட்டின் ஊடகச் சட்டக் கட்டமைப்பைச் சீர்படுத்துவதற்கான செயற்பாடு சோர்வுற்ற இக்கட்டத்தில் நின்றுவிட்டது. அதன் பிறகு, ஊடகச் சட்டச் சீரமைப்பு நடைமுறையின் வேகம் பல விதங்களில் துரிதமடைந்தது.
2002ஆம் ஆண்டளவில், 1947இன் 25ஆம் இலக்க பொதுப் பாதுகாப்புக் கட்டளைச்சட்டம் (பி.எஸ்.ஓ - திருத்தப்பட்டபடி) 1979இன் இலக்க பயங்கரவாத தடைச்சட்டம் (பி.ரி.ஏ - திருத்தப்பட்டபடி) என்பவற்றின் அவசரகால ஆட்சிகள், காலாவதியான இச்சட்டங்கள், ஊடகங்களின் மீது செய்தித் தணிக்கைகளைப் புகுத்துவதற்கும், அச்சகங்களைக் கைப்பற்றுவதற்கும், செய்தி துறை சார்ந்திருந்தோரைச் சிறையரிலTடும் முயற் சிக் குமாக வகை தொகை யரின் றிப் பிரயோகிக்கப்பட்டன. பி. ரி. ஏ. அத்தோடு தகுதிவாய்ந்த அதிகாரியின் எழுத்து மூலமான அங்கீகாரமின்றி, குறிப்பிட்ட வெளியீடுகளைப் பதிப்பதில், வெளியிடுதல், விநியோகித்தல் என்பவற்றின் மீதும் தடை விதித்தது. இந்த அவசர கால சட்டங்கள் காலாவதியாயின. (இவை அநேகமாக, தசாப்தங்களாக இருந்து வந்த நாட்டின் வழமையான சட்டங்களுக்கு மாற்றீடாக அமைந்திருந்தன) அதன் மிகைகள் மீள வருவதைத் தடை செய்யும் விதத்தில் பி.ரி.ஏ.யையும், பி.எஸ்.ஒவிற்கான திருத்தங்களையும் நீக்கிவிடுமாறான அறைகூவலுக்கு வகைசெய்தன.
142

இந்தக் கோரிக்கைகள் இவ்வாண்டின் போது நிறைவேற்றப்படவில்லை. வினும் ஊடகங்களுக்கும், பேச்சுச் சுதந்திரத்திற்கும் நீண்டகாலமாகத் தீங்கு விளைவதற்கு சில சாதாரண சட்டங்கள் அல்லது அவற்றிற்கான திருத்தங்களின் நீக்கத்தை, பரிசீலனைக்குட்பட்ட காலப்பகுதி கண்டது. தகவல் சுதந்திரம், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலான விவகாரங்களைத் தெளிவுபடுத்தும் நோக்கங்கொண்டதாக, புதிய சட்டங்களை இயற்றுவதற்கான உந்துதல் தொடர்ந்தது. ஒரு சமாந்திரமான மேம்பாட்டுச் செயற்பாடாக, ஊடகங்களும் தம் மளவிலான ஒழுங்குவிதியை, வலுவுடையதான செயல்முறைமை நுட்பங்களுக்கு உட்படுத்த, அதிக அளவில் நியமமான முயற்சிகளில் ஈடுபடத் தலைப்பட்டன.
3.1 ஊடகச் சட்டசீரமைப்பு
3.1 அ) தண்டனைச் சட்டக் கோவையிலும் மற்றும் செய்தி இதழ்கள் மன்றச் சட்டத்திலுமுள்ள குற்றவியல் அவமதிப்பு ஏற்பாடுகளை நீக்கிவிடல் ஊடகத் தின் ஆளுகை தொடர் பிலான இலங்கையின் ஒழுங்குபடுத்தும் கட்டமைப்பினைச் சீரமைக்கும் விதத்தில், தேர்தல் பிரசாரத்தின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் முதலாவது பெரிய நிறைவேற்றமாக, அரசாங்கம் ஆண்டு நடுப்பகுதியில் பாராளுமன்றத்தில் 2002இன் 12ஆம் இலக்க தண்டனைச் சட்ட கோவைத் திருத்தச் சட்டத்தைச் சமர்ப்பித்தது. 2002 ஜூன் 18ஆம் திகதி சபையினால் அங்கீகரிக்கப்பட்ட இத்திருத்தம் தண்டனைச் சட்டக் கோவையின் 19ஆவது அத்தியாயத்தை நீக்கி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 135 (எப்) பிரிவுக்கு விலைவாய்ந்த தன்மையான ஏற்பாட்டுத் திருத்தங்களைச் செய்தது. அத்தோடு, ஜனாதிபதிக்கு அவமதிப்பினை ஏற்படுத்தும் விதத்தில் அதிகார அவமதிப்புகள் அல்லது சைகைகள் மூலம் மேற்கொள்ளப்படும் முயற்சிகளைத் தண்டனைக்குட்படுத்தும் விதத்திலான குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையின் 1 18ம் பிரிவை நீக்கம் செய்தது.
இதே சமயம், 2002இன் 13ஆம் இலக்கச் செய்தி இதழ்கள் மன்றத் திருத்தச் சட்டம், 1973இன் 5ஆம் இலக்கச் செய்தி இதழ்கள் சட்டத்தின் 15ஆம் பிரிவை நீக்கம் செய்தன. இந்த திருத்தங்கள் தற்போதுள்ள சட்டத்தில் பொருண்மை மாற்றங்களைச் செய்தது. குற்றவியல் சட்டத்தின் 479 ஆவது பிரிவு, குற்றவியல் அவமதிப்புக்கு
143

Page 79
அளிக்கும் விளக்கம் சாதாரண மறியல் அதன் 480ஆவது பிரிவின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்குக் கூடாத கால மறியலோடு கூடிய அபராதம் அத்தோடு ஒரு தண்டமும் விதிக்க வகை செய்கிறது.
முன்னர் குற்றவியல் நடைமுறைக் கோவையின் கீழ், தன் விருப்பப்படியானதும், அரசியல் நோக்கங்களைக் கொண்டதுமான வழக்குகளைத் தொடுப்பதற்கு எதிரான பாதுகாப்புகள் வழங்கப் பட்டிருந்தன. இந்தப் பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஏனையவற்றுடன், முதலில் சட்டமா அதிபரின் எழுத்து மூலமான அனுமதியுடன் நீதவானின் அதிகாரம் பெற்றபின் பொலிஸ் விசாரணை பின் தொடர்வதாக அமைந்திருக்க வேண்டுமெனத் திட்டவட்டமாகக் குறித்துரைக்கின்றன. எனினும் இந்த முன் நிபந்தனைகள் தெட்ட தெளிவானதோர் அரசியல் செயற்பாடாக 1980ஆம் ஆண்டில் கைவிடப் பட்டன. அதன் பின்னர் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களினால் தங்களின் இஷ்டப்படி, பத்தரிகை ஆசிரியர்கள், செய்தித்தாள்களுக்கு எதிராக வழக்குகள் தெடரப்பட்டன. சட்டத்துறையின் முழு வரலாற்றிலும், தனிப்பட்ட ஒருவரினால் (அரசியல்வாதிகள் தொடர்பிலானவை தவிர்ந்ததாக) ஒரேயொரு குற்றவியல் அவதூறு வழக்கே தொடக்கப்பட்டிருக்கிறது.
7 1980ன் 52ம் இலக்கச் சட்டம் குற்றவியல் நடவடிக்கை முறைக்கோவையின் நடப்பிலுள்ள ஏற்பாடுகளில் 135(6), 393 (7) பிரிவுகளை இணைத்துக் கொள்ளப்பட்டன. இது ஆர்.பி.விஜயசிறி சட்டமா அதிபருக்கு எதிராக தொடுத்த வழக்கில், மேன் முறையீட்டு மன்றம் பொலிஸாரினால் சட்டப்படியான விசாரணை நடாத்தப்படாமலும், நீதிபதியினால் பூர்வாங்க விசாரணை இடம்பெறாத நிலையிலும் குற்றவியல் அவமதிப்பு வழக்கொன்றை தொடரும் விதத்தில் உயர் நீதிமன்றத்திற்கு நேரடியாகக் குற்றச்சாட்டுப்பத்திரத்தைச் சமர்ப்பித்தற்கும் சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை என வழங்கிய தீர்ப்பிற்கு முரணானதாக அமைந்திருந்தது. ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனாவை அவதூறு செய்ததாக பாராளுமன்ற அங்கத்தவர் ஒருவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருந்த வழக்கில், சட்டமா அதிபரினால் உயர்நீதிமன்றத்திற்கு நேரடியாகச் சமர்ப்பித்திருந்த குற்றச்சாட்டுப் பத்திரத்தின் செல்லுந்தன்மை எதிர்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
8. இது ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.சி. அலஸ் மீது அவதூறு தெரிவிப்பதாக கருதப்பட்ட ஒரு புத்தகம் வெளியிடப்பட்ட போது நிகழ்ந்தது. சட்டமா அதிபரின் அனுமதியோடு குற்றம் சுமத்தப்பட்ட வெளியீட்டாளர் மீது மஜிஸ்றேற் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்த போதும் (வழக்கு இல. 86835/4) அது பின்னர் இணக்கப்பாட்டுடன் தீர்த்து வைக்கப்பட்டது. பூரீ லங்கா மனித உரிமைகள் நிலைமை 2000 (சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அற நிலையம்). இக்காலப்பகுதியில் தொடுக்கப்பட்ட குற்றவியல் அவதூறு வழக்குகளின் தன்மை தொடர்பில் மேலும் கூடுதலானதொரு ஆய்வுபற்றித் தெரிந்து கொள்வதற்கு). பேச்சுச் சுதந்திரமும் ஊடகச் சுதந்திரமும் என்ற அத்தியாயத்தைப் பார்க்க.
44

அத்தோடு 1973இன் 5ஆம் இலக்கச் செய்தி இதழ்கள் மன்றச்சட்டத்தின் 15ஆம் பிரிவு அவதூறினை ஒரு குற்றச் செயலாக்கி, இரண்டு விதங்களில் எதற்குமே பொருந்தக் கூடியதாக மிகக் கூடுதலாக, அபராதத்துடன் சேர்ந்ததாக இரண்டு வருடச் சிறைத் தண்டனையும் அல்லது அபராதம் விதிக்கும் விதத்தில் தண்டனை வழங்க வகை செய்தது. மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கத் திற்கும் தனியார் ஊடகங்களுக்குமிடையே உறவுகள் புளித்து போயிருந்த சமயம், 1995இற்குப் பின்னர் இப்பிரிவு ஊடகத்திற ' கெதிராகவும் பிரயோகிக்கப்பட்டது.
இந்தச் சட்டங்களின் கடுமையான பொருண்மைக்கு எதிராகத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்ட ஊடகத் துறைகளில் தொழில் புரிவோரும், செயல் வீரர்களும், குற்றவியல் ஏற்பாடுகளும் அரசாங்கத்தின் வசமுள்ள வளங்களும் - அரசியல் மற்றும் கட்சி நோக்கங்களுக்காகவும் அல்லது பொதுமக்களுக்குத் தகவல் வழங்கப்படுவதை அமுக்கி விடுவதற்குமாகத் துஷ பிரயோகம் செய்யப்படுவதாக வாதிட்டனர். தண்டனைச் சட்டக் கோவை ஏற்பாடுகள், அக்கோவை சட்டமாக இயற்றப்பட்ட 1883ஆம் ஆண்டு காலப்பகுதிக்குப் பொருத்தமாக இருந்திருக்கக் கூடுமெனினும், சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை மறுப்பதால் அவை இந்த நவீன காலப் பகுதியைப் பொறுத்தவரை, அவை வழக்கொழிந்தவை எனச் செய்தித் துறையினர் மனநிறைவு கொள்கின்றனர்.
இது தொடர்பில், ஊடக சங்கங்களும், பத்திரிகை ஆசிரியர்கள் கழகம், செய்தி இதழ்கள் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம் போன்ற ஆதரவு தேடும் குழுக்களும் ஏழு ஆண்டுகளாக நடத்தி வரும் தீவிரபிரசாரம், பிழை செய்யும் ஊடகத்துறை நிபுணர்களுக்கு எதிராக குற்றவியல் கோவையின் மற்றும் நடைமுறைகளின் கீழன்றி, குடியியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்று வலியுறுத்தி வருகிறது. இந்தப் பிரச்சார இயக்கத்தில் இடம்பெறும் சிவில் சங்கக் குழுக்களில் மாற்றுக் கொள்கைகள் நிலையமும் இடம்பெற்றுள்ளது. இவ்வியக்கத்திற்கு, சர்வதேச செய்தி இதழ்கள் கழகம், உலக செய்தி இதழ்கள் சங்கம், சாம்ராஜ்ய செய்தி இதழ்கள் யூனியன், செய்தித் துறை சார்ந்தோரையும் XIX உறுப் புரையையும் பாதுகாப்பதற்கான குழு என்பன உட்பட, அனேக சர்வதேச அமைப்புக்கள் ஆதரவு தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் ஆதரவு திரட்டும் தேசிய முயற்சிக்கு சுதந்திரமாகக் கருத்து வெளியிடுவது மீது அவதூறுச் சட்டங்கள் ஏற்படுத்தும் நடுங்கச் செய்யும் பாதிப்பைக் கண்டனம் செய்து
145

Page 80
சகல குற்றவியல் அவதூறுச் சட்டங்களும் சிவில் சட்டங்களுக்கு ஆதரவாக நீக்கப்படுவதோடு, தங்களைச் சாடுவோரை அடக்கிவைப்பதற்காக அரசாங்க அதிகாரிகளும், அமைச்சுகளும் அவதூறு வழக்குகள் தொடர்வதை உற்சாகப்படுத்தக் கூடாதென்றும் விதந்துரைக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கமிஷனுக்குச் சுதந்திரமாகக் கருத்து வெளியிடுவதற்குப் பொறுப்பான விசேட தொகுப்பாளர் ஜனாப் ஆபித்ஹ"சைன் ஆதரவு தெரிவித்தார்.? 2002 ஜனவரியில் சர்வதேச பெண் அமைப்பு (94 நாடுகளைப் பிரதிநிதித்துவம் வகிக்கும் எழுத்தாளர்களைக் கொண்ட ஓர் உலகச் சங்கம்) சமர்பித்த மகஜர் ஒன்று, தங்களை விமர்சிப்போரை அடக்கி வைப்பதற்கு ஒரு சாதனமாக அவதூறு வழக்குகளைத் தொடுப்பதற்கு அரசாங்க அதிகாரிகளையும், அமைப்புக்களையும் உற்சாகப் படுத்தக்கூடாதெனத் தெரிவித்திருந்தது.
இந்த மகஜர் இலங்கையில், எழுத்தாளர்கள், செய்தித்துறை சார்ந்தோர் மீதும், எவ்வாறு குற்றவியல் அவதூறுச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படுகிறது என்பதில் உள்ள அக்கறை பற்றிக் குறிப்பிடுகிறது."
இவ்வாண்டின் காலப் பிரசாரத்தின் பின், குற்றவியல் அவதூறு ஏற்பாடுகள் பாராளுமன்றத்தில் ஏகோபித்த வாக்களிப்பின் மூலம் நீக்கப்பட்டமை இலங்கையில் ஊடக வரலாற்றில் குறிப்பிடத்தக்கதொரு நிகழ்வாகும். இதனைத் தொடர்ந்து, தனிப்பட்ட ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகை ஆசிரியர்களுக்கும் செய்தித்துறை சார்ந்தோர்க்கும் எதிராக அரசாங்கத்தினால் தொடுக்கப்பட்ட நீதிமன்றங்களில்
9. மனித உரிமைகள் 2000, 2001 மீதான ஐக்கிய நாடுகள் கமிஷனுக்கு பேச்சுச் சுதந்திரம் பற்றிய விசேட தொகுப்பாளரின் அறிக்கைகளைப் பார்க்க (E/ CN.4/2000/63 & E/CN.4/2001/64)
10. இன்டநஷனல் PEN ஒப்பந்தம், பேச்சுச் சுதந்திரமும் குற்றவியல் அவதூறும், ஜனவரி 15, 2002 சுருக்கச் செய்தி ஏடு மற்றும் பிரதான செய்தி இதழ் ஆகிய இரண்டையும் சேர்ந்த பத்திரிகை ஆசிரியர்கள் செய்தித்துறைச் சேர்ந்தோர்கெதிராக 2000 ஆண்டளவில் மட்டும் 12 குற்றவியல் அவதூறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. எடுத்த எடுப்பிலேயே அடுத்தடுத்து அஞ்சாமல் ஆய்வில் ஈடுபடும் ராவய செய்தி இதழே மிகவும் கூடுதலான தாக்கத்திற்குட்பட்டதாக அதிக எண்ணிக்கையான வழக்குகளைச் சந்திக்க நேர்ந்தது, அதன் பிறகு வெகு தொலைவில் இல்லாமல் த ஐலண்ட், த சண்டே லீடர், த சண்டே ரைம்ஸ், லக்பிம ஆகியவையும், ஜனாதிபதி குமாரதுங்க அல்லது அவரின் அமைச்சர்களுக்கெதிராக குற்றவியல் அவதூறு கற்பித்ததான குற்றச்சாட்டின்பேரில் நீதிமன்றத்தில் தங்களுக்காக வாதிடவேண்டியிருந்தது.
46

விசாரணை செய்யப்பட்டுவந்த பெரும் எண்ணிக்கையிலான குற்றவியல் அவதூறு வழக்குகளும், அவை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேன்முறையீடுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன.
விலக்கிக் கொள்ளப்பட்ட மேன்முறையீடுகளில் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால், சிங்கள மொழிச் செய்திப் பத்திரிகையான லக் பிமவின் ஆசிரியர்க்கெதிராகச் செய்யப் பட்டிருந்ததும் ஒன்றாகும். அவசியமாகவிருந்த நோக்கம், பொய் சொல்வதற்கானதல்ல என்ற அடிப்படையில், உயர் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளிலிருந்து லக்பிம ஆசிரியர் விடுவிக்கப்பட்டிருந்தும், அன்றைய அரசாங்கம், அந்தக் குற்ற விடுதலைக்கெதிராக மேன்முறையீடு செய்திருந்தது.' குற்றவிடுதலைக் கெதிரான மேன்முறையீடுகள், ஒரு நடைமுறையாக அதி அரிய சந்தர்ப்பங்களிலேயே நாடப்படுகின்றன. குறிப்பிட்ட இந்தச் சந்தர்ப்பத்தில், அது பிரிவிலுள்ளோரைத் தணி டிப்பதான அரசாங் கத்தின் உறுதிப்பாட்டினை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.
எனினும், நீண்டகாலமாகத் தலையங்கங்களை ஈர்த்திருந்த மற்றொரு குற்றவியல் அவதூறு வழக்கு அது. உயர்நீதிமன்றத்தில் ஓர் ஆங்கில வார இதழான த சண்டே ரைம்ஸ் ஆசிரியருக்கு எதிராக 15 மாதங்களுக்கு மேலாக 75 நாட்கள் கொந்தளிப்பான தாகவும் முனைப்பான தோற்றமுடையதாகவும் நடைபெற்று வந்த விசாரணை அது. த சண்டே ரைம்ஸ் ஆசிரியர் குற்றவியல்
11. இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு-பி.ஏ பந்துல பத்மகுமார ஆகியோர்க்கிடையேயான உயர்நீதிமன்ற வழக்கு இலக்கம் 7580/95D கொழும்பு 5 நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பிறந்தநாள் விருந்துக்கு தான் பின்கதவால் நுழைந்து கலந்து கொண்டதாகப் பிரசுரிக்கப்பட்டிருந்த செய்தி தமக்குக் குற்றவியல் ரீதியில் அபகீர்த்தி ஏற்படுத்திவிட்டதாய் ஜனாதிபதி குமாரதுங்க வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்தச் செய்தி பின்னர் பொருண்மை அளவில் பிழையானதெனக் காணப்பட்டது. 12. இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு சிங்ஹ திஸ்ஸ மிகாரா ரணதுங்க ஆகியோர்க்கிடையேயான உயர் நீதிமன்ற வழக்கு இலக்கம் 7397 95 தண்டனைச் சட்ட கோவை பத்திரிகைப்பேரவைச் சட்டம் ஆகிய இரண்டின் கீழும் 'அநுர: காதல் வசப்படுத்தும் நாட்கள் வந்துவிட்டன என சூட்டின் கூறுகிறார்” என்ற தலைப்பில் ஒரு வீண்பேச்சுப் பந்தியில் இடம்பெற்ற செய்தியாக, அநேகமாக லக்பிம வழக்கில் இடம்பெற்றது போன்றதொரு செய்தியின் மாதிரியில் வெளிவந்த செய்தித் தொடர்பானது அந்த வழக்கு. அதில் இடம்பெற்றிருந்த, "எபிகூறியன்'(சிற்றின்பக் கோட்பாட்டாளர்) இன் த ஹறிற் ஒப் த சைலன்ற் நைற்’ போன்ற சொற்கள் சாரமற்ற ஒரு செய்தியில் சாதாரண எழுத்து நடை என எதிர்த்தரப்பில் வாதிடப்பட்டபோதும் வழக்காளி தரப்பில் அவை ஜனாதிபதி குமாரதுங்காவின் நற்பெயரைப் பாதித்துவிட்டதாக தமது வாதத்தை நிலைநாட்டினர்.
147

Page 81
ரீதியில் ஜனாதிபதி குமாரதுங்காவை அவதூறு செய்ததாக அவர்மீது தண்டனைச் சட்டக் கோவை, இலங்கைப் பத்திரிகைப் பேரவைச்சட்டம் ஆகிய இரண்டின் கீழும் குற்றவாளியாகக் காணப்பட்டார். அந்தத் தீர்ப்பைப் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. சண்டே ரைம்ஸ் ஆசிரியர் குற்றவாளியாகக் காணப்பட்டதும் அவர்மீது இடைநிறுத்தப்பட்ட தண்டனை வழங்கப்பட்டதும் இடைநிறுத்தப்பட்ட தண்டனைகள் விதிக்கப்படுவது, ஊடகங்களுக்கு நுட்பமான பயமுறுத்தல் ஏற்படுத்துவதற்குப் பதிலாகப் பாரதுTரமான விளைவுகளைத் தோற்றுவித்து விடக்கூடும் என்ற அக்கறைகள் தொடர்ந்து வந்தது. இலங்கையில் குற்றவியல் அவதூறுச் சட்டங்களை முற்றாக ஒழித்து விடுவதற்கான இயக்கத்திற்கு ஒரு பொருண்மையுடைய அரசியல் கொள்கைத் திட்டமாக அமைந்தது. குற்றவியல் அவதூறு ஏற்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அதேசமயம் உயர் நீதிமன்றத்தில் சண்டே ரைம்ஸ் இன் ஆசிரியரின் விசேட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த வேளையில் சகல விசாரணை களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு தீர்ப்பு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதேசமயம், பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையில் தான் எடுத்துரைத்த, அந்த வெளியீட்டுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக ஓர் அறிக்கையை வெளியிடுவதற்கு அதனை எழுதியவருக்கு செய்திப்பத்திரிகை இணக்கம் தெரிவித்ததோடு, அதனை எழுதியவர்க்கு, செய்திப்பத்திரிகைக்கு அல்லது தனக்கு (ஜனாதிபதி அவப்பெயர் ஏற்படுத்துவதற்கான) எந்தவித கெட்ட நோக்கமும் இருக்கவில்லையென்றும், தவறாக அதனை வெளி யிட்டதற்காக மனம் வருந்துவதாகவும் மீண்டும் எடுத்துரைத்தது.
பரந்ததோர் கருத்துப்படி திருத்தங்கள் நிறைவேற்றப் படுகையில் (ஏகமனதான வாக்களிப்பு இருந்ததெனினும்) பாராளுமன்றம் தனது சொந்த, இரு மனப் போக்கினைக் கொண்டிருந்தது என்னவோ உண்மைத்தான். சபையின் இருதரப்பிலுமுள்ள உறுப்பினர்களும் (வெளிப்படையாக அல்லவெனினும் மறைமுகமாக) தனியார்
13. த ரைம்ஸ் பத்திரிகை ஆசிரியருக்கு, முறையே முதலாவது, இரண்டாவது குற்றங்களுக்கு, ஏழு ஆண்டுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டதாக, 12 மாதங்களும், 6 மாதங்களும் சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனைகள் தொடர்ந்ததாக நடைமுறையிலிருக்கும் இரண்டு குற்றச்சாட்டுகளுக்காகவும் 10000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது (அதில் குற்றமிழைத்தால் அதற்கான சிறைத்தண்டனையும் உட்பட்டதாக).
48

ஊடகங்களை கொடுஞ்சொற்களாலும், கொடு நோக்காலும் அதட்டி வைப்பதற்குக் குற்றவியல் ஏற்பாடுகளைப் பிரயோகித்திருப்பதை ஒப்புக்கொண்டதுடன் பொறுப்புமிக்க ஒரு கலாச்சாரத்தையும் அத்தோடு தன்னளவில் செயல் வலுவுள்ள ஒழுங்கு விதிமுறைமையை மேம்படுத்துவதற்கான அவசியத்தையும் வலியுறுத்தினர். இவை உணர்மையில் பாரிய பொறுப்புகள் என்பதை அவ்வேளை வெளியிடப்பட்ட கருத்துக்களும் ஆசிரிய தலையங்களும் பிரதிபலிப்பதாக ஊடகங்களே ஏற்றுக் கொண்டன. ஓர் ஆய்வாளர் அதனை மணிச்சுருக்கமாகப் பின்வருமாறு குறிப்பிட்டார்.
“நாட்டில் உயர் நிலையிலுள்ளோரும், பலம் வாய்ந்தவர்களும், அரச செலவில் தனிப்பட்டதொரு எழுத்து வழி அவதூறுக்கு மாற்றமாக செய்தித்துறை சார்ந்தோரை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதையும் நீதிமன்றம் அவ்வாறு தீர்ப்பளித்தால் அத்தகையோரை சிறைக்கு அனுப்புவதையும் சாத்தியமாக்கும் குற்றவியல் அவமதிப்புச்சட்டம் இனியும் இல்லை. டெமோகிளசின் குறிப்பிட்ட இந்த வாள் எமக்கு மேலாகத் தொங்கப் போவதில்லை என்பது எமக்கு உண்மையில் ஒரு நிம்மதியே, எனினும் இது நம்மை மேலும் சிறந்த செய்திப் பத்திரிகையாளர்களாக ஆக்குமா?. கொடுஞ் சொற்களாலும், கொடுநோக்காலும் ஊடகத்துறையை அதட்டி வைப்பது எந்த அளவுக்கு அதற்குக் கேட்டை ஏற்படுத்துமோ, ஊடகம் அரசாங்கத்துக்கு வெறும் ஆதரவான மகிழ்ச்சி ஒலியெழுப்புவர்களாகவோ உறுதுணையாக இருப்பதும் அந்த அளவுக்குக் கேட்டை விளைவிக்கும். இதுவே அப்போது அரசாங்கம் “ஊடகம் ஆகிய இரண்டையுமே எதிர்நோக்கும் சவாலாக இருக்கும்,' (இந்த அழுத்தம் என்னுடையது).
3.1 ஆ) தகவல் சுதந்திரச் சட்டம்
குற்றவியல் அவதூறு ஏற்பாடுகள் நீக்கப்பட்டதோடு இந்த ஆண்டின்போது, பொது அமைப்புகளிலும், ஒளிவு மறைவின்மையையும், பொறுப்புடைமையும் பேணிவளர்க்கும் நோக்கங்கொண்டதான தகவல் சுதந்திரச்சட்டமொன்றை (எப்.ஒ.ஐ) வரைவது பற்றி கணிசமான அக்கறை செலுத்தப்பட்டது.
14. த ஜலன்ட், 19 ஜூன் 2002
15. த ஜலன்ட், 18 ஜூன் 2002
16. அஜித் சமரநாயக்கவின் “ஞாயிறு கட்டுரை” - த சண்டே ஒப்சேவர், 23 ஜூன்
2002
49

Page 82
அரசாங்கத் திணைக்களங்களிலும், அமைச்சுக்களிலும் அந்தரங்கக் கலாசாரமொன்று நிலைத்திருப்பதன் பின்னணியில் திட்டவட்டமான தகவல் சட்டம், இன்றியமையாததொன்றாகிவிட்டது.
சாதாரண தகவலைக் கூடப் பெறுவது செய்தித் துறை சார்ந்தோருக்கு, அதிலும் மேலாகப் பிரஜைகளுக்கு முடியாததாகி, கஷடமானதாகி விட்டது.' முன்னர் எப்.ஒ.ஐ சட்டமொன்றை வரைவதற்கு இலங்கைச் சட்டக் கமிஷனில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தனிப்பட்ட அளவில் வெற்றிபெற முடியாமல் போயிற்று." ஊடகத்துறையினா, சில சிவில் சங்கக் குழுக்கள் மற்றும் அரசாங்கம் என்பவற்றிற்கிடையே இவ்வாண்டின்போது எப்.ஒ.ஐ சட்டம் பற்றி நடந்த கலந்துரையாடலின் போது, பரந்த அளவில் பரப்புதல் செய்வதற்காக நகலைப் பொது மக்களின் கவனத்திற்காக வெளியிடுவதற்கு முன்னர் குறிப்பிட்ட அடிப்படைக் கோட்பாடுகள் தொடர்பில் ஓரளவு கருத்தொற்றுமை நிலை நாட்டப்பட்டது. இந்த அடிப்படைக் கோட்பாடுகளில் பின்வருவன அடங்கும்.
அ) தகவல்களை மிகக் கூடியதாக வெளியிடுவதை ஒரு தரநிலையாகக் கொண்டிருத்தல்:- சகல பொது அமைப்புக்களும் தங்கள் தரப்பில், தகவல்களை வெளியிடுவதற்குச் சார்பாகச் சட்டம் ஒரு துணிவினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அத்தோடு தகவல்களை மட்டுப்படுத்துவதற்குத் தற்போதுள்ள சட்டங்கள் மீது அது பிரயோகிக்கப்படகூடியதாகவும் அமைந்திருக்க வேண்டும். தகவல்
17. அரசாங்க சேவையிலுள்ள அதிகாரிகள், ஊடகங்களுக்கு எந்தத் தகவலையும் வழங்குவதைத் தடைசெய்யும் தாபனக்கோவையின் 2ம் தொகுதியின் XLVIம் அத்தியாயத்தின் 6ம் பிரிவையும் 1ம் தொகுதியின் XXXIம் அத்தியாயத்தின் 3ம் பிரிவையும் தான் நடைமுறைப்படுத்தவிருப்பதாக அமைச்சரவை, 2002ல் அறிவித்தது. அப்பயமுறுத்தல் அமைச்சுச் செயலாளரின் அனுமதியின்றி ஏற்கனவே ஊடகவியலாளர்களின் கரங்களிலுள்ள தகவல்களைக்கூட உறுதிப்படுத்த அல்லது மறுக்கமுன், அரசாங்க ஊழியர்களின் முதலெழுத்துக்கள், புள்ளிவிவரங்கள் உட்பட எந்தத்தகவலையும் ஊடகங்களுக்கு வழங்க அரசாங்க ஊழியர்கள் மறுத்தனர்.
18. இலங்கைச் சட்டக் கமிஷன் 1996ல், உத்தியோக தகவல் சட்டத்தை அணுகுவதற்கு ஏதுவாக குறுகிய எண்ணக்கருவைக் கொண்ட ஒரு நகலை வெளியிட்டது. அது உத்தியோகப்பூர்வமான தகவலுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்திற்கு வழிவிட்டதோடுகூட அந்த சட்டவரைவின் நோக்கத்தையே தோற்கடிப்பதற்கான குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளையும் கொண்டிருந்தது.
150

ஆ)
இ)
FF)
உ)
பொது அமைப்புகள் தொடர்பிலான பொருள் வரையறை, விரிவானதாய் சம்பிரதாய நாமகரணங்களை ஒத்ததின் மீதான கவனங் குவிந்ததாய் அமைந்திருக்க வேண்டும்."
பிரசுரிப்புக்கான கடமைப்பாடு பற்றிய தரநிலை:- (செய்ய தூண்டுதல் நடவடிக்கைகள்) தன் அதிகார எல்லைக் குள் வரும் ஒரு குறிப்பிட்டவித ஆவணங்கள் மற்றும் தகவலை வரையறுக்கப்பட்ட நியதிக்காலப்பகுதிகளுக்குள்ளாகப் பகிரங்கப்படுத்துவதற்கு அமைச்சுக்கள், பொது அமைப்புக்கள் மீது ஒரு கட்டாய கடமைப்பாடு விதிக்கப்படவேண்டும். உரிய தீர்மானங்களுக்கான காரணங்களை வெளியிடும் கடமைப்பாடு, கோரிக்கையின் மீதில்லாமல், சுயமான ரீதியில் அமைந்ததாகவிருக்க வேண்டும். பகிரங்கப்படுவதற்கான கடமைப்பாடு விதிக்கப்படவேண்டும். பகிரங்கப்படுவதற்கான கடமைப்பாடு (அந்நடைமுறைக்குப் பாதிப்பு ஏற்படாதவிதத்தில் சில பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கு அமை வானதாக) கொள்கை வரவுப் பேச்சுவார்த்தைகளையும் உள்ளடக்க வேண்டும்.
திறந்த நிலை அரசாங்க மேம்பாடு தொடர்பிலான தரநிலை: பொது அமைப்புகள், திறந்த நிலை அரசாங்கத்தை முனைப்பாக மேம்படுத்த (36.606 (6Lb.
விதிவிலக்குகள் தொடர்பிலான தரநிலை: உத்தியோக பூர்வமான தகவலைப் பெறுவதற்கான வாய்ப்பு, குறுகியதும் தெளிவாக வரையப்பட்டதுமான விதிவிலக்குகளுக்கு உட்பட்டதாகவே மட்டுப்படுத்தப்பட வேண்டும் (அதிலும் குறிப்பாக தேசிய பாதுகாப்பு தொடர்பில்) அது கணிசமான பாதிப்புப் பரிசோதனைக்கும், பொது அக்கறை கூர்ந்து இயங்குதலுக்கு உட்பட்டதாகவும் அமைந்திருக்கும்.
அதனைப்பெறுவதை இலகுவாக்குவதற்கான நடைமுறைகள் சம்பந்தமான தரநிலை: தகவலுக்கான கோரிக் கைகள், நியாயமாகவும், துரிதமாகவும் பரிசீலிக்கப்பட வேண்டும். மறுப்புகள்,
19.
1999 மே மாதத்தில் பொது நலவாய நாடுகளின் சட்ட அமைச்சர்களாலும், பின்னர் 1999 நவம்பரில் பொதுநலவாய நாட்டு அரசாங்கத்தலைவர்களாலும், ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான பொதுநலவாய அமைப்பு நாட்டு நிபுணர்கள் 1999 மார்ச் மாதம் வெளியிட்ட பிரகடனத்தைப்பார்க்க.
151

Page 83
தகவல். சுதந்திரம். சம்பந்தமான விசாரணைக் குழுவொன்றுக்கும், இறுதியான மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் முறையீடு செய்வதை அனுமதிக்கும் விதத்தில் சுதந்திரபரிசீலனைக்கு உட்படுத்தப்படல் வேண்டும். தன்னிச்சையான மறுப்புகள், ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
ஊ) செலவுகள் தொடர்பிலான தரநிலை; தகவல் கோரிக்கைகளுக்கான
கட்டணங்கள், நியாயமானவையாக இருத்தல் வேண்டும்.
எ) தகவல் தரும் சம்பந்தப்பட்டோரைப் பாதுகாப்பது தொடர்பிலான தரநிலை சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள இந்தக் கோட்பாடு, பிழையான செயற்பாடு தொடர்பில் (குற்றச் செயல்புரியப் பொறுப்பளித்தல், சட்டப்படியான கடமைப்பாடொன்றை நிறைவேற்றத் தவறுதல், நீதிச்செயற்பாடொன்றைச் சிதைவுறச் செய்தல், ஓர் அரசாங்க நிர்வாகி தொடர்பிலான ஊழல், நேர்மையீனம் அல்லது மோசமான நிர்வாகக் கேடு போன்றவை) தகவல் வெளியிடுவதற்காக சட்ட, நிர்வாக அல்லது தொழில் தொடர்பில் வலுவளிப்பு வழங்குவதற்கெதிராகப் பாதுகாப்பு வழங்குகிறது. வழங்கப்பட்ட தகவல் உண்மையானதும் அத்தகைய பிழையான செயற்பாடுகளுக்கு ஆதாரமானதுமாகும் என்ற வகையில், நல்லெண்ணத்துடனும், நியாயமான நம்பிக்கையுடனும் அவை வழங்கப்படவேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்தப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
இந்த எப்.ஒ.ஐ சட்டநகலின் ஆண்டுப் பரிசீலனை இறுதியளவில் தொடர்ந்து கொண்டிருந்தது.
3.1 இ) நீதிமன்ற அவமதிப்பு
பேச்சுச் சுதந்திரச் சட்டத்தைப் போன்றே, நீதிமன்ற அவமதிப்புச்சட்டத்தை* இயற்றுவதற்கு ஆதரவு திரட்டும் ஊடகச் செயற்பாடுகளும் தொடர்ந்து கொண்டிருந்தன. முறையானதொரு விசாரணையின்றியும் அரசியல் காரணங்களுக்காகவும், தாங்கள் நியாயயினமாக பதவி விலக்கப்பட்டதாகவும், குற்றஞ் சாட்டிய நீதித்துறை சார்ந்தவர்களுக்கும் பிரதம நீதியரசள் சரத் என். சில்வாவுக்கிடையேயான சர்ச்சைகள் அதிகரித்த நிலையில் இந்த நடைமுறை வலுப்பெற்றது.
2O.
152

இரண்டு நீதிபதிகளும், (நீதிச்சேவைகள் சங்கத்தின் தலைவரும், செயலாளரும்,) பிரதம நீதியரசரின், தன்விருப்பப்படியானதும், வலுக் கட்டாய நடவடிக்கைகள் காரணமாகவும், சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தை நடத்தத் தங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தனர். பிரதம நீதி அரசர் பதவியின் கண்ணியத்திற்கும், கெளரவத் திற்கும் ஒவ் வாததெனத் கருதய நடத்தையில் ஈடுபட்டிருந்ததாகத் கடந்த காலத்தில் அவர்மீது கண்டனம் தெரிவித்ததன் காரணமாகத் தாங்கள் இச்சங்கத்தில் பதவி வகிப்பதைப் பிரதம நீதியரசர் தடைசெய்யவிரும்பினார் என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
எனினும் வியப்பதிர்ச்சியூட்டும் ஒரு நிகழ்வாக இந்த வழக்குச் சம்பந்தமாக செய்தி வெளியிட்டும் சம்பந்தப்பட்ட நீதிபதிகளுடனான நேர்க்காணலைப் பிரசுரித்தும் அல்லது ஒளிபரப்பியும் செயற்பட்ட ஊடகவியலாளர்கள் சாாந்த சில ஊடக நிறுவனங்களுக்கு, நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றங்கள் சாட்டப்படக்கூடுமென எச்சரிக்கப்பட்டது. உயர் நீதிமன்றப்பதிவாளரால் கடிதங்கள் அனுப்பப்பட்டன. சுதந்திர ஊடக இயக்கம்’ இது சம்பந்தமாகக் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டது. அரசகட்டுப்பாட்டிலுள்ள டெய்லி நீயூஸ் பத்திரிகையும், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபானம் உட்பட்ட ஊடக நிறுவனங்களும், சர்ச்சைகளைச் சாதாரணமாக தகவலாகத் தெரிவிப்பது நீதிமன்றத்தை அவமதித்ததாகாது என உறுதி செய்து உடனடியாகவே, பதிவாளரின் கடிதங்களுக்கு விடையளித்தன. அதன் பின்னர் மேலும் அது தொடர்பில் வெளிப்பாடுகள் தலைக் காட்டவில்லை. எனினும், இச் சம்பவம் அனைத்தும் , ஊடகங்களைப் பயமுறுத்துவதற்கும், நாட்டின் சுதந்திரமான நீதித்துறை சார்ந்த அதிமுக்கிய விவகாரங்களையிட்டுத் தகவல் வெளியிடப் படுவதைத் தடுக்க நிர்ப்பந்திக்கும் ஒரு முயற்சி என நோக்கப்படுகிறது. பதிவாளரின் பயமுறுத்தல்கள், இலங்கையில் நீதிமன்ற அவமதிப்பின் துல்லியமற்ற தன்மையையும் எடுத்துக் காட்டுகிறது. முன்னர் என்றுமே இல்லாதபடியான உள்ளும், புறமுமான சர்ச்சைகளால் நீதிமன்ற அவமதிப்பு சமீப ஆண்டுகளில், பிரதம நீதியரசரின் நிலைப்பாடு காரணமாக, நீதி முறைமையே தன் னளவில் அழிவுக் கு உள்ளாகியிருப்பதையிட்டு அதிகமான கவலை தோன்றி வருகிறது.
சர்ச்சைகள் மீதான ஊடகங்களின் கவனம் “வெளியீடு என்னவானாலும் ஆகட்டும்’ என்ற ஒரு சில செய்திப்பத்திரிகையின் போக்கு முதல், தீக்கோழியின் செயல் போன்ற நடவடிக்கையே இதில்
21. த டெய்லி மிரர், 25 டிசம்பர் 2002
153

Page 84
சிறப்பானது என்ற ஏனையோரின் கருத்து வரை பல்வேறுபட்டதாக அதித எல்லைகளுக்குச் சென்றுவிட்டதாக அமைந்திருந்தது. நிறுவனத்தின் அடிப்படை மதிப்பைப் பாதுகாக்கும் அதே சமயம் இலங்கையின் நீதித்துறைக்குரியதான கடுமையான நுண்ணாய்வுத் தேவைக்கு உட்படுத்தப்பட்டதாய், மக்கள், ஊடகம் ஆகிய இரு தரப்பினர்க்கும், நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் வரையறை செய்யப்பட்டதானதொரு சட்டக்கட்டமைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தை அது மேலும் வலியுறுத்தியது.
இலங்கையில் நீதிமன்ற அவமதிப்புத் தொடர்பான சட்டம், இதுவரை மாறுதல் விரும்பாத ஒரு தன்மையையே சார்ந்திருந்தது. நீதித்துறைக்கும் ஊடகங்களுக்குமிடையேயான இழுபறிகள், கடந்த காலத்தில், ஒத்துணர்ந்து பார்க்கக் கூடியனவாகவும் ஏனையவை உணரத்தக்க அளவில் குறைந்தனவாகவும், நீதிமன்ற அவமான வழக்குகள் பல்வேறு தரப்பட்டனவாக அமைந்திருந்தன. நீதிமன்றத்தின் மீதோ அன்றி ஒரு நீதிபதி மீதோ பழி சுமத்தி இழிவுபடுத்தும் ஒரு திட்டமிட்ட செயலாக, நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு விசாரணை தொடர்பில் உள் நோக்கத்துடன் பிழையான செய்திகளை வேண்டுமென்றே வெளியிட்ட செயற்பாடுகளும் அடங்கும்* அனுமதிக்கப்படாத விடுமுறையில், குதிரைப் பந்தயங்களுக்குச் செல்வதன் மூலம் நீதிபதிகள் கடுமையான விதத்தில் கடமை தவறி அதன் காரணமாக வேலைகள் தாமதமடைவதாகவும், வெளியிடப்பட்ட செய்திகளில், அவமதிப்பு இடம் பெற்றிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.* ஒரு சாட்சி பொருத்தமற்றதாக உடைதரித்திருந்த காரணத்திற்காக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தமை. “அன்றைய காலகட்டத்தின் புதிய சட்டப்போக்குகளுக்கு ஏற்றதாகவில்லை’ என* முன்மேவு தீங்குவிளைவிக்காததாக ஒரு கருத்தை வெளியிட்டதற்காக சிலோன் டெய்லி நியூஸ் பத்திரிகையின் பிரதி ஆசிரியர் ஒருவருக்கு 70ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் ஆறுமாதகால சிறைத்தண்டனையை குற்றவியல் விசாரணைக் கமிஷன் (நாணயமாற்றுக் கட்டுப்பாடு தொடர்பில்) விதித்திருந்ததில், அதிக தீவிரத்தன்மை வாய்ந்ததோர் அறிவுக்கு அந்த செயல் அடி ஆதாரமாகப் பொதிந்திருந்தது.
22. டி ஆசா விடயத்திலான ஒரு தீர்ப்பு 18, என்.எல்.ஆர் 41
23. ஹலுகல்ல, 39 என்.எல்.ஆர் 294 தொடர்பில்
24. சிலோன் டெய்லி நியூஸ், 6 ஜூன் 1974 வெளியிடப்பட்ட கருத்து, புஷ்ஷேட்டும் நீண்டகாற்சட்டையும் அணிந்த ஒரு சாட்சி, கமிஷன் முன் தோன்றியது பற்றியதாகும். இதன் காரணமாக விசாரணை இடைநிறுத்தப்பட்டு உரிய முறையில் உடையணிந்து வந்து சாட்சியமளிக்கும்படி சாட்சிக்கு உத்தரவிடப்பட்டது. அப்பத்திரிகையின் பதில் ஆசிரியருக்கு ஒரு நாள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
154

பாராளுமன்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விளங்கும்
ஒழுங்குப்பத்திரத்தின் வெளியீடு கூட இந்த அவமதிப்பு விடயத்தில் விலக்களிக்கப்பட முடியாததொன்றே என்றும் கொள்ளப்பட்டிருந்தது.*
நிலுவையிலுள்ள வழக்கு விசாரணைகள் தொடர்பிலும் அதே
மாதிரியான விமர்சனங்கள் பழம்பண்புப் பாதுகாப்புக் கொள்கை விடயத்திலும் தள்ளாட்டத்திற்கு உள்ளாகியிருந்தன.* இலங்கையில் வழக்குகள் முடிவுறாத காலம்வரை தொடர்கையில், நீதிமன்ற விசாரணை
25.
26.
ஹேவாமன்ன எதிர் மணிக் த சில்வா மற்றும் ஒருவர் சம்பந்தப்பட்ட வழக்கு (1983, 1 எஸ்.எல்.ஆர், 1) 'நீதிபதியின் அறையில் எப்.டி.பியின் வழக்குரைகள் வரையப்பட்டன என்ற தலைப்பில் ஒழுங்குப் பத்திரம் தயாரிக்கப்பட்டதையும் திரு.கே.சி.ஈ. த அல்விஸின் முறையீடுகளைத் தெரிவுக் குழு பரிசீலனை செய்கிறது என்பதையும் அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட எதிர்ப்புக்குள்ளான அந்த செய்தி விசேட ஜனாதிபதி கமிஷனின் ஓர் உறுப்பினராகத் தொடர்ந்து செயற்படுவதற்கான உரிமையை நிராகரித்து வழங்கப்பட்ட தீர்ப்பு பக்கசார்பானதென ஒரு முன்னாள் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தெரிவித்த சார்பாண்மைகளையிட்டு விசாரணை செய்வதற்கென பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமனம் செய்யப்படவிருப்பதாகக் கூறியது. அந்தச் செய்தி வெளியீடு அவமதிப்புநிலையை எட்டியிருந்ததாக உச்ச நீதிமன்றம் எடுத்த தீர்மானத்திலிருந்து கவனத்தைத் திருப்பும் விதத்தில் 1984ம் ஆண்டின் 25ம் இலக்க பாராளுமன்ற (அதிகாரங்கள் சிறப்புரிமைகள்) திருத்தத்தின் மூலம் பாராளுமன்றத்தின் கட்டளைப் பிரகாரம் வெளியிடப்படும் எந்தப்பத்திரத்தினதும் எந்தவொரு எடு குறிப்பும், நல்லெண்ணத்தோடும் தீய நோக்கில்லாமலும் வெளியிடப்படுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் அளவுக்குக் கொள்ளப்படமாட்டாது என நியமதிட்டை விதித்துள்ளது. கருமினிகே திலகரட்ண வழக்குத்தொடர்பில் (1991 எஸ்.எல்.ஆர் 134) சிங்களச் செய்திப்பத்திரிகையின் திவயின மாகாண நிருபர் ஒருவர், ஜனாதிபதி தேர்தல் ஆட்சேப மனு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த காலகட்டத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நிகழ்த்தியிருந்த ஓர் உரை பற்றிய செய்தியொன்றை அனுப்பியிருந்தார். அதில் அவர் 'மனுவில் உள்ள குற்றச்சாட்டு ஏற்கனவே நிருபிக்கப்பட்டுவிட்டது, மனுதாரர் தமது வழக்கை வெல்ல முடியவில்லையெனின் அதுவே இலங்கையின் நீதித்துறையின் முடிவு' எனத் தெரிவித்திருந்தார். அந்தச் செய்தியின் வெளியீடு ஜனாதிபதி தேர்தல் மனுவின் தொடர்விசாரணைக்குக குந்தகம் விளைவிக்கலாம் அல்லது விளைவிக்கக்கூடியதாக அமைந்திருப்பதாலும் நீதிபதிகள் தங்களின் முடிவைத் தீர்மானித்து விட்டதான ஒருணர்வை ஏற்படுத்துவதேயாகும். ஆகவே அது சாட்சியமளிக்கக்கூடியவர்களைச் சாட்சியமளிப்பதற்குத் தடைசெய்யக்கூடும் என்ற அடிப்படையில் மற்றவற்கிடையில் நீதிமன்றத்தை அவமதித்த செயலாகக் காணப்பட்டது.
155

Page 85
நிலை பற்றிய விதி, பொது அக்கறை விவகாரங்கள் மீதான பரிசீலனையைப் பெரிதும் பாதித்துவிட்டது. நீதிமன்ற விசாரணை மீதான விதி கடுமையான விமர்சனத்துக்குள்ளாகிவிட்டது.'
கவலையளிக்கும் மற்றொரு விடயம், தகவல் மூலங்கள் வெளியிடப்படாமை தொடர்பிலானவையாகும். த சண்டே ரைம்ஸ், லக்பிம குற்றவியல் அவமதிப்பு வழக்குகள் விசாரணை செய்யப்பட்ட வேளையில் தான் தகவல் மூலங்கள் எந்தப் பின்னணியில் வெளியிடப்பட முடியும் என்பதையிட்டு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது. குற்றவாளிகளை விசாரணை செய்த வெவ்வேறு உயர் நீதிமன்றங்கள், தெட்டத்தெளிவான முரண்பாடான நிலைப்பாடு கொண்டிருந்ததை அவை வெளிக்காட்டின.* இந்த உண்மைகள், இந்தியா, ஐக்கிய ராஜ்யம் ஆகிய நாடுகளில் உள்ள சட்டத்தின் மாதிரியில் இயங்கும், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் ஒரு பொருத்தமான சட்டம் இயற்றப்படுவதன் அவசியத்தை மேலும் வலுப்படுத்தின. ஊடகங்கள் முன்மொழிந்த இனமொழிச் சட்டவரைவு, அவமதிப்பு சம்பந்தமான நவீன சட்டத்தில், முரண்பாடுகளற்றதாக பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட கோட்பாடுகளைப் பிரதிபலிப்பனவாகப் பின்வருமாறு அமைந்திருந்தன.
27. பேச்சுச் சுதந்திரமும் மன்றாய்வும், லக்ஷ்மன் கதிர்காமர் பி.சி, சுதந்திர அச்சூடகமும் நீதியான விசாரணையும், எச்.எல் த சில்வா, ஒ.பி.ஏ இதழ் தொகுதி 15, 1992 - 3. கருமினிகே வழக்கில் மேற்கொள்ளப்பட்ட முடிவு ஏனையவற்றுடன், அது தப்பான எண்ணத்தை போதுமான அளவில் ஏற்படுத்தக்கூடிய அவசியத்தின் தேவையை கருத்திற் கொள்ளவில்லை என்றும் அது உண்மையில் பொருளளவிலான ஒரு கூற்றிற்கு அதிமுக்கியத்துவமும் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கண்டனத்துக்குள்ளாக்கியது.
28. மேற்கண்டவாரான முடிவுக் குறிப்பு 11ம் 12ம் சண்டே ரைம்ஸ் ஆசிரியர் வழக்கின் முக்கியவிவகாரமான அந்த வீண் பேச்சுப் பற்றி எழுதியவரின் பெயரைக்குறிப்பிட மறுத்து விட்டதோடு ஆசிரியர் என்ற வகையில் தாம் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டபோதிலும் அந்த விடயம் எழுதப்பட்ட படியான தகவல் மூலத்தைப் பாதுகாக்கவேண்டியது தமது பொறுப்பு என்றும் தெரிவித்திருந்தார். அந்த மறுப்பை, சாட்சியத்தை விட்டுவிடல் அல்லது மறைப்பதை ஒத்தது எனக் கருதி, நீதிமன்றம் இறுதியில் அந்த வீண்பேச்சு பற்றிய செய்தியை அவரே எழுதினார் என்ற முடிவுக்கு வந்தது. இதற்கு மாறான நியாயப்படுத்தல் ஒன்றில் 'லக்பிம வழக்கில் விசாரணை நடத்திய நீதிமன்றம், அது போன்றதோர் மறுப்புப் பற்றிய விவகாரத்தில் பத்தரிகை ஆசிரியர்களும் ஊடகவியலாளர்களும் தகவல் மூலங்களை வெளியிடுவதற்குக் கட்டாயப்படுத்தக்கூடாது: காரணம் பேச்சுச் சுதந்திரத்திற்கும் தொடர்பாடலுக்கும் குந்தகம் விளைவிக்கும் எனப் பிரகடனப்படுத்தினர்.
156

、"))
ஆ)
இ)
FF)
உ)
நீதி விசாரணைகள் துரித கதியில் நடைபெறுகையில் கணிசமானதாக அல்லது கணிசமான அளவில், தலையீடு செய்வதான மாதிரியில், அக்குற்றச்சாட்டு அமைந்தது என எடுத்துரைக்கப்பட்ட நிலைமையில்தான் அவமதிப்பு தொடர்பில் முனைப்பான தீர்மானம் எடுக்கப்படவேண்டும்.
பொது விவகாரங்கள் அல்லது பொதுமக்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் பற்றிய செய்திகள் பிரசுரிக்கப்படும் போது அது நல்லெண்ணத்துடன், குறிப்பிட்ட சட்ட விசாரணை தொடர்பில் ஏற்படக் கூடிய இடையூறோ அல்லது தப் பெண் ணமோ, அப்பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரை தற்செயலாக நிகழ்ந்தது என்றால், அவை நீதிமன்றத்தை அவமதித்த நிலைக்கு உட்படாது.
அதேமாதிரி, பகிரங்கமாக நடத்தப்படும் சட்ட விசாரணைகள் பற்றிய நியாயமான, சரியான தகவல் சமகால நிகழ்வாக தெரிவிக்கப்படுவதும் ஒரு நீதிமன்றமாக அமர்ந்து, சிறைவாசம் அல்லது அபராதத்தீர்ப்பு வழங்குவதற்குப் பாராளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் நீதிமன்றத்தை அவமதித்த செயலாகாது. இது எம்மாதிரியென்றால், அதே அறிக்கையை ஒரு சமகால வெளியீடாகக் குறுக்கி அல்லது பொழிப்பாக நல்லெண்ணத்தோடு ஆனால் அந்நிகழ்வுகளைச் சரியானதாகவும் நேர்மையாகவும் வெளியிடுவதற்கு ஒப்பாகும்.
வஞ்சகமற்ற பிரசுரத்தின் பாதுகாப்பு அல்லது விநியோகம் கிடைக்கக் கூடியதாக இருக்கவேண்டும்.
ஒரு பிரசுரத்தில் இடம்பெற்றுள்ள தகவலுக்குப் பொறுப்பான அந்த ஆள், அந்ததகவலை வெளியிட மறுப்பின், அதன் விளைவாக, அவருக்கு எதிராக பாதிப்பான எந்தவொரு ஊடகத்திற்கும் இடமளிக்கப்படகூடாது என்பதோடு அச்செயலுக்காக நீதிமன்றத்தை அவமதித்ததான குற்றம் சாட்டப்படக்கூடாது என்பது மட்டுமல்லாமல், எந்த ஒரு நீதிமன்றமும் அத்தகைய தகவலை வெளியிடுமாறு ஒரு ஆளை நிர்ப்பந்திக்கவும் கூடாது. இதற்கான ஒரே விதிவிலக்குகளாவன: ஜனநாயகச் சமூகமொன்றில் நீதி அல்லது தேசிய பாதுகாப்பு அல்லது ஒழுங்கீனத்தை அல்லது குற்றத்தைத் தடுத்தல் போன்ற நலன்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுவது
157

Page 86
அவசியம் என்பதில் நீதிமன்றத்திற்குத் திருப்தி ஏற்படும் விதத்தில் நிரூபிக்கப்பட்டால் அத்தகைய வெளியீடு இன்றியமையாததாகும். ‘தேசிய பாதுகாப்பு’, ‘நீதியின் மீதான அக்கறைகள்’ போன்ற கோட்பாடுகள் தொடர்பில், ஐக்கிய ராஜ்ய நீதிமன்றங்களில் பிரிடிஷ் ஊடகங்கள் கற்றுக் கொண்ட பாடங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட அனுபவத்தை பயன்படுத்தியதான சுயமான விளக்கங்கள் மீது பொருத்தமான பாதுகாப்புகள் விதிக்கப்பட வேண்டுமென்றும் ஊடகங்கள் விநயமாக வேண்டிக்கொண்டன.
அவ்வவமதிப்பு தொடர்பிலான பொருண்மை விவகாரங்களுடன் சேர்ந்ததாக, நகல் வரைவின்போது, அவமதிப்பு பற்றிய விசாரணைகள் நியாயமானதாக நடத்தப்படவேண்டியதன் அவசியம் (நீதிமன்றத்தின் பார்வையில் அவமதிப்பு உட்பட) தேவைப்படும் போது அரசியல் யாப்பில் திருத்தத்தை அவசியப்படுத்தும் விதத்திலான கருத்தும் கவனத்திற் கொள்ளப்பட்டது. உதாரணமாக, 1971ன் இந்திய நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் அத்தகைய நடைமுறைகளைப் பணிப்புறுத்துகிறது.
இலங்கையில் அவமதிப்புக் குற்றத்திற்கு சார்நிலை நீதிமன்றங்கள் தண்டனை வழங்குவதற்கான அதிகாரம், திட்டவட்டமானதாக ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டுள்ளது, எனினும், ஒப்பீட்டளவில், மேல்நிலை நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மட்டுப்பாடற்றன்வ. அரசியல் யாப்பின் பிரிவு 105 (2) உயர்நீதிமன்றத்திற்கும் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் அவமதிப்புக்குத் தன்னளவிலேயே தண்டனை வழங்குவதற்கு அதிகாரம் தரப்பட்டிருக்கிறது.
உறுப்புரை 136 உடன் குறித்ததாக, இவைமட்டுமே, முறையீட்டு நீதிமன்றங்களில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைகளில், பகுத்தறிவுக்கொத்தான மற்றும் நடைமுறை ஒழுங்கு என்பன மீது தாக்கத்தை, ஏற்படுத்தக்கூடடியனவாக உள்ளன. 136வது உறுப்புரை பிரதம நீதியரசருக்கு (அவரால் நியமிக்கப்படும் யாராவது மூன்று நீதியரசர்களுடன்) அரசியல் யாப்பினால் அத்தகைய நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனேக நியாயாதிக் கங்களை பிரயோகிக்க உயர்நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை தொடர்பிலான விதிகளைப் புனைவது உட்பட நீதிமன்றத்தின் செயற்பாடு, நடைமுறை என்பனவற்றில் பொதுவாக ஒழுங்குபடுத்தும் விதிகளை இயற்ற அதிகாரம் வழங்குகிறது. இந்நாள்வரை உயர்நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் அத்தகைய விதிகள் எதனையும் இயற்றவில்லை.
158

3.1 ஈ) பாராளுமன்ற சிறப்புரிமை
1994இல், அன்றைய மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கம், 1953ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க பாராளுமன்றச் (அதிகாரங்கள் சிறப்புரைகள்) சட்டத்தில் (திருத்தப்பட்டப்படி) செய்யப்பட்ட 1978ம் ஆண்டுத் திருத்தத்தை நீக்கியது. அது சட்டத்தின் அட்டவணை பகுதி (அ)இல் குறித்துரைக்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் மீறப்படுவது தொடர்பில் தண்டனை வழங்க உயர் நீதிமன்றத்திற்கு, ஒழுங்கியல் விதத்தில் பாராளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கியிருந்தது. இதற்கு முன்னால், இது தொடர்பில், உயர்நீதிமன்றத்திற்குத் தனித்துவமான நியாயாதிக்கம் வழங்கப்பட்டிருந்தது. பாராளுமன்றம் ஒரு நீதிமன்றமாக அமர்ந்து சிறைவாசமோ அன்றி அபராதமோ செலுத்துமாறு தீர்ப்பு வழங்கும் ஒரு மன்றமாக விளங்குவதற்கு அதிகாரமளிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் அந்த 1978ஆம் ஆண்டுத்திருத்தம் கடும் கண்டனத்துக் குள்ளாகியிருந்தது. எனினும், குறிப்பாக அச்சு ஊடகத் துறையிலான வெளியீடு உட்பட சுதந்திரமான பேச்சு-எழுத்துச் சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதிக்கும் விதத்தில் அமைந்ததான இச்சட்டத்திற்கான சம அளவில் விரும்பத்தகாத மற்றொரு திருத்தம் நடைமுறையில் இன்னும் தொடர்கிறது. இதுவே 1980இன் 17ஆம் இலக்கத் திருத்தச்சட்டமாகும்.
உத்தியோகபூர்வ அறிக்கையான ஹன்சர்ட்டியிருந்து, நீக்கப்பட வேண்டுமென்று சபாநாயகர் கட்டளை பிறப்பித்த பிறகு, அத்தகைய வார்த்தைகளை, கூற்றுக்களை உள்ளடக்கியதாக, பாராளுமன்றத்தில் நடைபெறும் எந்தவொரு விவாதம், கூட்டநிகழ்வு பற்றிய எந்தவித செய்தியையோ வேண்டுமென்றே பிரசுரிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக விதிக்கிறது. விரும்பத்தகாத விதத்தில் வார்த்தைப் பிரயோகங்கள் பொதுவாகவும், கருத்துத் தெளிவற்றதாகவும் தற்போதுள்ள நிலையில் இத்திருத்தம் மற்றொரு திருத்தம் தாங்கள் சபையில் தெரிவிக்கும் கூற்றுகளுக்கான பொறுப்புடைமையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்குப் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்ளும் உறுப்பனர்களுக்கு இடமளிக்கிறது. இவ்வாண்டின் போது இந்தத் திருத்தத்தை விலக்கிக் கொள்ளுமாறு ஊடகங்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன.
அக்கறை உண்டாகச் செய்யும் விதத்தில், ஆண்டு நடுப்பகுதியில் அரசாங்கம், பொது தொழில் நிறுவனங்கள் குழுவினால் (கோப்) நடத்தப்படும் கூட்ட நடவடிக்கைகள் பற்றிய செய்தி சேகரிப்புகளை அனுமதிக்கும் விதத்தில் சிறப்புரிமைச் சட்டத்தை திருத்துவதாக
159

Page 87
வாக்குறுதி அளித்தது. கோப் ஈடுபட்டுள்ள செயற்பாடுகளின் தன்மை பற்றிப் பொதுமக்களுக்கு அக்கறை ஏற்படுத்தும் விதத்தில், ஊடக செய்தி சேகரிப்பு வாய்ப்புத் தரப்படவேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கு அமைய, இது எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கோப்பின் தலைவர் ஜெயராஜ் பெர்னாந்துப்பிள்ளை மேற்கொண்ட முன் முயற்சியினதும் பேரிலானதும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக, ஊடகங்கள் தொடர்பில், அரச நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கூர்ந்து அவதானிப்பதற்கும் அவற்றையரிட்டு விசாரணை செய்வதற்குமாகும்.”
இதே சமயம், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிறப்புரிமைகளை மீறுவதான குற்றச்சாட்டுகளும் தொடர்ந்தன. இவற்றில் நிதி அமைச்சர் வரவு செலவுத்திட்ட உரையில் சம்பள ஆணைக்குழு பற்றித் தெரிவித்த கண் டனக் கருத்துக்கள் தொடர்பில் சில விடயங்களைத் தெளிவுபடுத்தும் முயற்சியாக, அவ்வாணைக் குழுவின் தலைவர் திஸ்ஸ தேவேந்திர எழுதிய கட்டுரையொன்று தினசரிப்பத்திரிகையொன்றில் வெளியிடப்பட்டிருந்தமையும் இடம் பிடித்திருந்தது." நிதி அமைச்சரினால் அறிவிக்கப்பட்டிருந்த சீர்த்திருத்தங்கள், உண்மையில் ஆணைக்குழு மீது அமைச்சர் பாதகமாகவும் பிழையானதுமான கருத்துக்கள் தெரிவித் தரிருந்த போதும் சம்பள ஆணைக் குழுவினால் பிரேரிக்கப்பட்டிருந்த சீர்த்திருத்தங்களை ஒத்திருத்தன என திரு. தேவேந்திர தெரிவித்திருந்தார் இதற்கு ஆதாரமாக ஆணைக்குழு அறிக்கையின் சம்பந்தப்பட்ட மேற்கோள்கள் அதில் இடம்பெற்றிருந்தன. நிதி அமைச்சரும் அரசாங்கக் கட்சியின் பிரதம கொரடாவும் இந்தக்கட்டுரை பற்றிய தங்களின் கருத்தைத் தெரிவிக்கையில் அதன்மூலம் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகக் கூறினர். பாராளுமன்ற சிறப்புரிமை எவ்வாறு நியாயயினமான முறையில் எல்லை மீறி மிகைப்பட்டதாய் பிரஜைகள்ை பயமுறுத்துவதற்கு பயன்படுத்தப் பட்டிருப்பதை எடுத்துக் காட்டும் ஒரு சந்தர்ப்பமாக, அவ்விடயம் குழுக்களின் துணைத் தலைவருக்குப் பாரப்படுத்தப்பட்டிருந்தது. அரசியல் யாப்பு அனுமதிக்கின்றது' எனினும், பாராளுமன்றச் சிறப்புரிமை
29. த சண்டே லீடர், ஜூன் 23, 2002
30 த டெய்லி மிரர், டிசம்பர் 6, 2002 பாராளுமன்ற சிறப்புரிமை தொடர்பிலான சட்டத்தை ஏன் மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டுமென்ற கூற்றின் மீதான ஒளிவுமறைவற்ற விமர்சனத்தை, இந்த இதழின் ஆசிரியர் தலையங்கத்தில் Litirabab
31. அரசியல் யாப்பின் உறுப்புரை 15 (2)
60

என்ற தோரணையில் பேச்சுச் சுதந்திரத்தை மட்டுப்படுத்துவது, சர்வதேச நியதிகளுக்கும் சிவில் அரசியல் ஒருப்பாட்டு உரிமைகள் (ஐ.சி.சி.பி.ஆர்)’ உள்ளிட்டதாக இலங்கை ஏனைய தரங்களுக்கும் கடப்பாடுடையதாக இருப்பதால் அது எதிர்வாதத்துக்குட்படக் கூடியதல்ல.
3.1 உ) பகிரங்க நிகழ்ச்சி செயலாற்றுகைக் கட்டளைச் சட்டம்.
1912இன் 7ஆம் இலக்க பகிரங்க நிகழ்ச்சி செயலாற்றுகைக் கட்டளைச் சட்ட திருத்தச் சட்டப்படி திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் முன்வரைவு செய்யப்பட்டதான பொழுது போக்கு நிகழ்ச்சிகளைக் கடுமையான முற்தனிக்கை செய்வதற்கான முறைமையொன்றை நடைமுறைப் படுத்துவதற்கென சுதந்திரத்திற்கு முன்னதாக இயற்றப்பட்டதாய் அதன் செயற்பாடுகளின் கீழ் இன்றைய நவீன காலம் வரை பகிரங்க நிகழ்ச்சிகள் தணிக்கைச் சபையினால் (பி.பி.சி) நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்தக் கட்டளைச் சட்டம் அமைச்சருக்கு அத்தகைய நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவது, விலக்கிக் கொள்வது அல்லது இடைநிறுத்துவது உட்பட, அதனை ஒழுங்கு முறைப்படுத்துவதில் விதிகளை இயற்றுவதற்கும் பிணிப்பிலா உரிமையை வழங்குகிறது. இது தொடர்பிலான ஊடக ஆதரவு திரட்டற் செயற்பாடு அதன் ஒரு பகுதியாக திரைப்படங்களைத் திரையிடுவது தொடர்பில் பிரதானமாக நுணுக்கமான பரிசீலனைக்கென ஒரு சீரான ஒழுங்கு முறையினை மேற்கொள்ளக்கூடியதான ஒரு திரைப்பட மதிப்பீட்டுச்சபையினை நியமிப்பதன் மூலம் கட்புல ஊடகத்திற்குள்ள இந்தச் சுய விருப்பத் தணிக்கை முறைமையை விலக்கிக் கொள்ள வேண்டுமென்பதன்பால் கருத்தைக் குவித்தது.
3.2 ஊ) அசோஷியேற்றட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன்
லிமிற்றெட்டினைப் பரவலாக்கல்
அடுத் தடுத்து வந்த அரசாங் கங்கள் கடந்த பல தசாப்தங்களாகக் கடைப்பிடித்திருந்த கொள்கைக்கமைய யூ.என்.பி அரசாங்கமும் பொதுவாக லேக் ஹவுஸ் குழு எனக் குறிப்பிடப்படும்
32. ஐ.சி.சி.பி.ஆர் (உறுப்புரை 19) மனித உரிமைகள் மீதான ஐரோப்பிய சமவாயம் (ஈ.சி.எச.ஆர். - உறுப்புரை 10). முன்னையது இலங்கைக்கு நேரடியாக பொருந்தும், பின்னையது பெருமளவில் தூண்டுதலளிக்கும் அதிகாரமுடையது. இந்த வாசகங்களில் எதுவுமே பேச்சுரிமையைத்தடை செய்வதற்கு ஒரு காரணியாகப் பாராளுமன்ற சிறப்பதிகாரத்தை உள்ளடக்கவில்லை.
161

Page 88
‘த அசோஷியேற்றட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிற்றெட்டினைப் பரவலாக்கச் செய்வதற்கு எந்த முயற்சியையும் செய்யவில்லை.
ஊடகங்களுக்கெதிராய் அதிமட்டுமீறியதாக 1973இல் அன்றைய காலக்கட்டத்தில், இடஞ்சார்ந்ததாக இருந்த கூட்டரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஒன்று கம்பனியின் அந்தஸ்தை மாற்றி, அசோஷியேற்றட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சலோன் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை இயற்றியதாகும். இந்த செய்தி இதழ்கள் குழு குடியேற்ற ஆதிக்கத்தின் பின்னரான செய்திப் பத்திரிகைகளின் வரலாற்றில் தனியொரு அதி முக்கியத்துவம் வாய்ந்த பிரமுகராக பலராலும் கருதப்படும் டி.ஆர். விஜயவர்த்தனவினால் ஸ்தாபிக்கப் பட்டதாகும் (அது அரச உடைமையாகப் பொறுப்பேற்கப்பட்டபோது மூன்று மொழிகளிலும் செய்திப் பத்திரி கைகளை வெளியிட்டு வந்தது). அவரின் மறைவைத் தொடர்ந்து இந்தக் குழு அவரின் குடும்ப அங்கத்தவர்களினால் நிர்வகிக்கப்பட்டு வந்ததாகும்.
இந்தக் குழு பொறுப்பேற்கப்பட்டது குறிப்பானதொரு சட்ட உறுதிமொழிக்கு உட்பட்டிருந்தது. அதாவது இந்தச்செய்திப் பத்திரிகைக் கம்பனியின் செயற்பாடுகள் பரந்துபட்டதாக அமைந்திருப்பதுடன் பொது நம்பிக்கையாளரினால் பொறுப்பேற்கப்பட்ட பெரும்பான்மைப் பங்குகள் படிப் படியாகப் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப் பட்ட வேண்டுமென்பதுமாகும்.*
எனினும், அச்சட்டம் இயற்றப்பட்டது முதல், எந்த அரசாங்கத் தினாலும் அதன் திறம் எத்தகையதாயினும் பரவலாக்கம் மேற்கொள்ளப்படவில்லை. ஒவ்வோர் அரசியல் மாற்றத்துடனும் அதன் தலைவர் ஒழுங் குமுறையாக மாற்றப் படுவதுடனும் அதன் பத்திரிகைத்துறை சார்ந்தோர் தங்களுடைய வேலையைக் கட்சி அரசியலுக் கியையச் செய்யுமாறு வலுக் கட்டாயமாக இட்டுச் செல்லப்பட்டதுடனும், தனது வளங்கள் சொரணையற்ற விதத்தில் வழி நடத்தப்படுவதற்கு உள்ளாயிற்று.
33. பிரிவு 3 (1), பரிவு 6 (1 ஜி)யும் பிரிவு 12. அது சமயம் தேசிய அரசப்பேரவை விவாதங்கள் கருத்திற்கொள்ளப்பட்டது. பரவலாக்கலேயன்றி தேசிய மயப்படுத்தவில்லை என்பதைத் தெட்டத்தெளிவாகவே எடுத்துக்காட்டின. அந்தச் சட்டம் தொழிற் சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், பிரஜைகள், ஊடகவியலாளர்கள் போன்றோர் டி.ஆர் விஜயவர்தன குடும்பத்தினருக்கன்றி இந்தப் பத்திரிகைகளின் உடைமையை சட்டப்படி கொண்டிருப்பினர் என அன்றைய அரசியல் அமைப்பு விவகார அமைச்சர் டாக்டர். கொல்வின் ஆர். த சில்வா மேற்கொண்ட உயர்தகு தார்மீக நிலைப்பாட்டை குறிப்பாகப்பார்க்க (1973 ஜூலை 17ந் திகதி ஹன்சார்ட்)
62

1995 நடுப்பகுதியில் மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட குழுவொன்று இயலுமானவரை மிகக் கூடுதலான பிரஜைகளின் பங்கேற்புடன் பரந்த அடிப்படையிலான ஒரு செய்திப் பத்திரிகைக் கம்பனியை உருவாக்குவதை உறுதிப்படுத்தும் விதத்தில் லேக் ஹவுஸின் பங்குகளை விநியோகிக்குமாறு கடுமையாகச் சிபாரிசு செய்தது. அவ்வாறு விநியோகிக்கப்படும் பங்குகளில் கால்பகுதிக்கு மேற்பட்டதாக எந்தவொரு தனிப்பட்டவரோ அல்லது குழுவோ கொண்டிருக்க முடியாத விதத்திலான நிபந்தனையின் அடிப்படையில் லேக் ஹவுஸின் செயற்பாடுகளை விரிவு படுத்தப் போவதான வாக்குறுதியுடன் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை நாட்டிலுள்ள பெரிய அரசியல் கட்சிகள் முன் வைத்திருந்தகால கட்டத்தில் அந்தக்குழு இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தது. எனினும் அரசாங்கம் குழுவின் அறிக்கையை முற்றாக அலட்சியப்படுத்திவிட்டது.
அதனைத் தொடர்ந்து வந்த ஆண் டுகளில் , தனியார் ஊடகங்களுக்கும் மக்கள் ஐக்கிய முன்னணிக்குமிடையேயான விரோத மனப்பான்மை அதிகரித்து வந்த சமயம் சில அமைச்சர்கள் லேக் ஹவுஸ் பத்திரிகைகளை உராய்வுத்தன்மையுடையதாக அரசியல் மயப்படுத்துவதில் முனைப்பாக ஈடுபடத் தொடங்கினர். எனவே 2001ஆம் ஆண்டளவில், இலங்கையின் ஒரு மதிப்பு மிக்க செய்திப்பத்திரிகையின் கெளரவமான நற்பெயர் மெய்யாகவே ஒரு கேலிக்கூத்தாக மாறியதை மக்கள் கண்டனர்.
அந்த ஆண்டு பிற்பகுதியில் அரசாங்கம் மாறியபோது நாட்டில் ஒரு சுதந்திர ஊடகத்துறைக் கலாச்சாரத்தை உறுதிசெய்வதற்கான ஐக்கிய தேசிய முன்னணி நிர்வாகம் வெளிப்படையாக கூறி வந்த தனது ஈடுபாட்டின் உச்சகட்டமாக லேக் ஹவுஸை பரவலாக்கும் நடைமுறைக்குப் புத்துயிருட்டுவதாக அமைந்திருக்க வேண்டும்; எனினும் அது நிகழவில்லை.* உடைமையை பரலாக்குவதற்கான. மாற்றாகப் புதிய லேக் ஹவுஸ் நிர்வாகம், புதிய அரசியல் நியமனங்களைக் கொண்டு அந்நிறுவனத்தை போதாததோர் நிரப்பித் திணறடிக்கும்
34. அசோஷியேற்றர்ட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிற்றெட்டின் உடைமையைப் பரவலாக்குவதற்கான விதந்துறைகளைச் செய்வதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையைப் பார்க்க - 12 ஏப்பிரல் 1995,
35. இந்த விடயத்திலான காரசாரமான விமர்சனத்துக்கு "லேக் ஹவுஸ் பற்றிய யூ.என்.எப் இன் கொள்கை என்ன? என்ற தலைப்பில் ஈ.ஈ.சி அபேசேகர எழுதியதைப் பார்க்க. த ஐலண்ட், 8 ஜூன் 2002
163

Page 89
செயற்பாட்டைத் தவிர்த்துக் கொண்டது. பதிலாக ஊடகத்துறையில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டவர்களை உள்வாங்கி அரசியல் விவகாரங்களையும் அவை பற்றிய விமர்சனங்களையும் பொருத்தமாக கையாண்டு ஒரு சமச்சீர் நிலையை மீண்டும் குறைந்த அளவிலேனும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
எனினும் ஆண்டு நகர்ந்து செல்லச் செல்ல அரசாங்கத்தின் மீதும் அதன் அமைச்சர்கள் மீதுமான விமர்சன ரீதியான தகவல் வெளியீடு அதிக அளவில் குறைந்து வருவது தெளிவாயிற்று. அரசியல் காரணங்களுக்காக எனக் கொள்ளப்பட்ட சில நிகழ்வுகளைத் தொடர்ந்து செய்தித்துறை சார்ந்த சிலர் ஆண்டு நடுப்பகுதியில் விலகிச் செல்வதற்கு காலாய் அமைந்தது." லேக் ஹவுஸைப் பரவலாக்கும் விடயம் ஓர் அவசரச் சட்டச் சீரமைப்புப் பிரச்சனையாகவே தெடர்ந்தும் இருந்து வருகிறது.
3.1 எ) இலத்திரனியல் ஊடகங்கள்
2001 டிசம்பருக்குப் பிறகு, புதிய அரசாங்கம் பதிவியேற்றதோடு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அச்சு ஊடகங்களைப் போன்றே அரச கட்டுப்பாட்டிலுள்ள இலத்திரனியல் ஊடகங்களும் குறிப்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (எஸ்.எல்.பி.சி), இலங்கைத் தொலைகாட்சிக் கூட்டுத்தாபனம் (எஸ்.எல.ஆர்.சி) மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (ஐ.ரி.என்) என்பனவும் உயர்நிலையத் தீர்மானங்கள் எடுக்கும் முறைமையில் மாற்றங்களைக் கண்டன.
இக்காலப்பகுதியின் போது அரச கட்புல ஊடகங்களில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்குமிடையே இருந்து வந்த சர்ச்சையின் பிரதிபலிப்பு ஏற்கனவே கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளன." அரசியல் அழுத்தங்களிலிருந்து தனது சுதந்திரத்தை உறுதிசெய்வதற்கென இலத்திரனியல் ஊடகத்தில் விரிவான சீர்த்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை இந்தச் சர்ச்சைகள் மீண்டும் வலியுறுத்தின. ஊடக சுதந்திரத்தையும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்தையும் பாதிக்கும் விடயங்கள் மீது சீரமைப்புகள் செய்வதையிட்டு ஆலோசனை கூறுவதற்கென நியமிக்கப்பட்ட குழு 1996ஆம் ஆண்டுக்குப் பிந்திய காலப்பகுதியில் பின்வருவனவற்றைச் சுட்டிக்காட்டியிருந்தது.
‘.தற்போதுள்ளபடி வானொலி, தொலைக்காட்சி ஒலிபரப்புகள் அரசாங்கத்தினால் வெவ்வேறாக மேற்கொள்ளப்படவேண்டும் ஆனால், அவை இரண்டினதும் நிர்வாக அமைப்புகளையும் அவற்றின் செய்தி
30. 18 ஜூன் 2002, த ஐலண்ட் மற்றும் த டெய்லி மிரர் 21 ஜூன் 2002 37 மேற்கண்டவாறு உள்ளதைப்பார்க்க, அடிக்குறிப்பு 4ம், 6ம்
164

நிர்வாக சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும் விதத்தில் சட்டத்தில் அவசிய மாற்றங்கள் செய்யப்படவேண்டும். அவை அரசாங்கக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டதாக சுதந்திர செயற்பாட்டில் இரண்டு சபைகளினால் நிர்வகிக்கப்படுவதோடு அவற்றின் உறுப்பினர்கள் ஒலிபரப்பில் தங்களை ஏதாவது விசேட நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவோராகவன்றி பொதுநலனின் சுதந்திரக் காப்பாளர்களாகக் கண்டு கொள்ளவேண்டும். அவர்கள் குறித்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு காலப்பகுதிக்கு நியமிக்கப்பட வேண்டும். தெரிவு நடைமுறை நியாயமானதென்பதை உறுதிப்படுத்துவதற்கு அரசியல் அல்லது வேறு அழுத்தங்கள் காரணமல்ல என்பதாக அமைந்திருக்கவேண்டும்.”*
2000ஆம் ஆண்டளவில் இந்த மாற்றங்கள் இன்றியமையாதனதாக இருந்தன. பிரதான கருத்துக் குவிப்பு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (எஸ்.எல்.பி.சி) 1966இன் 37ஆம் இலக்கச்சட்டம் (திருத்தியபடி), இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் (எஸ்.எல்.ஆர்.சி) 1982இன் 6ஆம் இலக்கச்சட்டம் (திருத்தியபடி) என்பன மீது ஆதரவு தேடுவதில் ஈடுபட்டிருந்தது.
தனியார் வானொலி நிலையங்களின் அமைப்பு, நிலையங்களின் தன்மை ஆகிய இரண்டினதும் செயற்பாடுகளை நிர்வகிப்பதற்கான ஒழுங்கு விதிகளை ஏற்படுத்துவதற்கு அமைச்சருக்கு அளப்பரிய அதிகாரங்களை வழங்கும் 44 (4) ஆம் பிரிவு, மற்றும் அதன் உட்பிரிவுகளை உள்ளடக் கியதான எஸ்.எல்.பி.சி 44ஆவது பிரிவு என்பன தனியார் ஒலிபரப்பு நிலையங்களை ஏற்படுத்தி நிருவகிப்பதற்கான அதிகாரத்தை அமைச்சருக்கு வழங்குவதானது ஊடகத்தினரும் தீவிர செயற்பாட்டாளர்களும் நீக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தன என்று சிபார்சு செய்தனர்.” செய்தனர். ஏனைய அக்கறையுடைய விடயங்கள் எஸ்.எல்.பி.சி சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் போது அவர்களின்
38. ஊடக சுதந்திரம் வெளியீட்டுச் சுதந்திரம் தொடர்பில் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்களைச் சீரமைக்கும் விடயத்தில் ஆலோசனை கூறுவதற்கான குழுவின் அறிக்கை, பக்கம் 50
39. அதாவது: அத்தகைய நிலையங்களால் வழங்கப்படும் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தல் மேற்பார்வை செய்தல் தடை செய்தல் குறிப்பிட்ட ஆட்களால் அல்லது ஆட்களைக் கொண்ட பிரிவினர்களால் நடத்தப்படும் தனியார் வானொலி நிலையங்களின் ஒழுங்கு முறைக்கட்டுப்பாடு தனியார் ஒலிபரப்பு நிலையங்களை நடத்துவதற்கு அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள கம்பனிகளின் பங்குகளை
மாற்றுவதற்கான ஒழுங்கு முறை - கட்டுப் பாடு அத்தகைய அனுமதிப்பத்திரங்களுக்கான விதிப்பணங்கள் மீதான ஒழுங்குமுறை என்பவை தொடர்பிலானவை.
165

Page 90
தராதரங்கள் மற்றும் அடிப்படைகளைக் குறித்துரைப்பது தொடர்பிலும்" அவர்களை விலக்குவது சரியான காரணங்கள் தெரிவிக்கப்பட்டாலன்றி அமைச்சரின் விருப்பப்படியானதாக இருக்கக் கூடாது என்பது தொடர்பிலும் அமைந்திருந்தன."
எஸ்.எல்.ஆர்.சி சட்டத்தில் குறிப்பிட்ட ஏற்பாடுகள் தொடர்பிலும் எஸ்.எல்.பி.சியைவிடப் பிந்தியதாக அதே மாதிரியான ஆட்சேபங்கள் எழுப்பப்பட்டன்; ஆனாலும், பின்னையது பிரச்சனைக்குரிய ஏற்பாடுகள் சிலவற்றைக் கொண்டிருப்பதாக இருந்தது. இது சம்பந்தமாக தெரிவிக்கப்பட்ட சிபாரிசுகளில், ஏனையவற்றுடன் சட்டத்தின் கீழ் இக்கூட்டுத்தாபனத்தைத் தவிர வேறெவரும், அமைச்சரிடமிருந்து அதிகாரம் பெறாமல் ஒளிபரப்பு நிலையமொன்றைக் கொண்டு நடத்த முடியாது என்ற ஏற்பாடுகளையுடைய பிரிவு 28ஐ விலக்க வேண்டுமென்பதும் இடம்பெற்றிருந்தது.*
சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்த அதிபாரிய மாற்றங்களுக்கான யோசனைகளில், அரச உடைமையான ஊடகங்களை, பொதுச்சேவை ஒளிபரப்பு கூறுகளாக விரிவு படுத்துவதும் இடம்பெற்றிருந்தது.
தனியார் ஒளிபரப்பு ஊடகங்களைப் பொறுத்தவரை, தனிப்பட்ட ஒளிபரப்பாளர்களுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதை ஒழுங்குபடுத்துவதற்கென ஒரு சுதந்திரமான அதிகார சபையை நிறுவுவதும், அதனை வழங்குவதில் அமைச்சரின் தலையீட்டை விதிக்கும் வகையில் அமைந்ததாகவுள்ள சட்ட ஏற்பாடுகளை விலக்குவதும், தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தன.* அத்தகைய அனுமதி வழங்கும் ஓர் அமைப்பின் முக்கிய வெற்றிக் கூறு அதன் நடைமுறைப்படுத்தல் அரச கட்டுப்பாட்டில் இருந்து போதுமான விடுதலை பெறுவதுமாகும். இலத்திரனியல் ஊடகங்களுக்கென ஓர் ஒழுங்குபடுத்தும் அமைப்பினை ஏற்படுத்துவதன் மீதும் இக்காலகட்டத்தின் போது, ஆதரவு திரட்டப்பட்டு வந்தது. அத்தகையதோர் அமைப்பு பின்னர், தனியார் இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பில் , மேலும் நியாயமான அளவிலான
40. எஸ்.எல்.பி.சி சட்டத்தின் 6 வது பிரிவைத் திருத்துவது தொடர்பிலானது. 41. எஸ்.எல்.பி.சி சட்டத்தின் 8 (1) பிரிவைத் திருத்துவது தொடர்பிலானது. 42. எஸ்.எல்.பி.சி சட்டத்தின் பிரிவு 44 எஸ்.எல்.ஆர்.சி சட்டத்தின் பிரிவு 28
என்பனவற்றில் விலக்கல் 43. 2002 இல் ஊடகங்களின் நிலைமை, சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் இன்போம் (INFORM) மீதான அறிக்கையில் “சில நெருக்கடியான விவகாரங்கள்’ என்பதைப் பார்க்க - 3 மே, 2003 பக்கம் 3
166

பண்பாண்மைகளை உருவாக்குவதன் மீது கணிசமான செல்வாக்கைப் பிரயோகிக்க முடியும். பின்னையது அரசியல் கலந்துரையாடல், காட்சிகள், நேர்முகங்கள் தொலைபேசி நிகழ்ச்சிகள் மூலமான புத்தமைப்பு முறைமை பொதுமக்கள் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவாக சந்தையின் கணிசமான அளவினை வசப்படுத்திய பின்னணியில் இது இன்றியமையாததொன்றாகி விட்டது.
எனினும், பரிசீலனைக்குரிய காலப்பகுதி அச்சு ஊடகங்களைப் போன்று, இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பில், சட்ட சீரமைப்புகள் ஒழுங்குபடுத்தல் மீது காட்டப்பட்ட அதே உற்சாகத்த்ை காணவில்லை. இது அநேகமாக, ஒரு பகுதியாய் இலத்திரனியல் ஊடகங்களில் திட்டமிட்ட ஒழுங்குமுறையிலான ஆதரவு திரட்டல் முயற்சியில்லாமை காரணமாக இருக்கலாம்.
தொலைத் தொடர்புகள், கேபிள் மற்றும் ஒளிபரப்பு சம்பந்தமான சட்டங்களைச் (தொலைத் தொடர்புகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஆணைக்குழுவில் சீர்த்திருத்தங்கள் உட்பட) சீரமைப்பதற்கான தனது எண்ணத்தை ஐக்கிய தேசிய முன்னனி அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், இந்த வாக்குறுதி திட்டவட்டமான நியதிகளாக உருப்பெறவில்லை. இதேமாதிரி, அரச உடமையான சகல ஊடகங்களுக்குமாக கொள்கை வகுப்பதற்கான செயற்பாடு பற்றிப் பணியாற்றுவதற்கென, ஒரு குழு அமைக்கப்பட்டதெனினும் அதன் செயலாக்கங்கள் பற்றி அதன் பின்னர் பொதுமக்களுக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை."
3.2 ஊடகங்களின் சுய ஒழுங்கமைப்பு
அச்சூடகத்தைப் பொறுத்தவர்ை, இவ்வாண்டின் போது, சுய ஒழுங்கமைப்பு முன் முயற்சிகள் பல இடம்பெற்றிருந்தன. இது தொடர்பில் முதன்மை வாய்ந்த நாட்டின் மூன்று பிரதான ஊடக அமைப்புகளான - ஆசிரியர் கழகம், செய்திப் பத்திரிகைகள் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம் என்பன மேற்கொள்ளப்பட்டிருந்த முயற்சிகள் மீது இறுதித் தீர்மானம் எடுத்தன. அதாவது பூரிலங்கா பிரஸ் இன்ஸ்டியூட்டை நிறுவதாகும். கம்பனிகள் சட்டத்தின் கீழ் இலாப நோக்கற்ற ஒரு கம்பனியாகப் பதியப்பட்டு அது இம் மூன்று அமைப்புகளினாலும் நியமிக்கப்படும் ஒன்பது பணிப்பாளர்களை கொண்ட ஒரு சபையினால் நிர்வகிக்கப்படவுள்ளது.
44. த ஐலண்ட், ஒக்டோபர் 5, 2002
67

Page 91
செய்தி துறைச்சார்ந்தோர்க்கான ஒரு கல்லுாரியையும் சுயமாக ஒழுங்கமைப்புப் பணிகளுக்கு பொறுப்புடையதான செய்தித் துறை முறையீடுதல் கமிஷன் (பி.சி.சி) ஒன்றையும் அமைப்பதற்கான முயற்சியில் இக் கழகம் முனைப்பாக செயற்படவுள்ளது. பத்திரிகைத் துறையில் பணியாற்றுவோருக்கு நிபுணத்துவப் பயிற்சி அளிப்பதற்கான ஒரு கழகத்தை அமைப்பது முதலாவதான அவசியத் தேவையாகும். அதுபோலவே, இரண்டாவதும் முக்கிய நோக்குடையதாகும; அரசாங்க மற்றும் ஊடகத் தொழிற்துறையின் தலையீடுகள் அற்றதாக செய்தித் துறையின் செயற்பாடுகளினால் பாதிப்புற்று அல்லலுறும் பிரஜைகள் நீதிமன்றச் செயற்பாடுகளுடன் சேர்ந்ததாக இடர் நிறைந்த நடைமுறைகளுக்கும் எக்கச்சக்கமான செலவுகளுக்கும் உட்படாது முறையீடு செய்வதற்கான ஒரு சுதந்திர அமைப்பை உருவாக்குவதாகும். இந்தக் கம்பனிச் சட்டத்தின் கீழ் அமைக்கப்படவிருக்கும் பதினொரு உறுப்பினர்களைக் கொண்ட பி.சி.சிக்கு, செய்தி ஆசிரியர்கள் கழகத்தினால் வகுத்தமைக்கப்படவுள்ளனர். துறைசார் நிபுணர்கள் தொடர்பிலான கோட்பாட்டினை நிறைவேற்றுவதற்கும் பொருள் விளக்கமளித்தலுக்குமான பொறுப்பும் ஒப்படைக்கப்படவுள்ளது.
அதன் முதன்மைப்பணி பொதுமக்களுக்கும் பத்திரிகை யாளர்களுக்கும் இடையே பிணக்குகளில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தல், சமரசம் செய்துவைத்தல், நடுநிலைத் தீர்ப்புவழங்கல் என்பனவும், தவறியமைக்கும் செய்திப் பத்தரிகையில் எடுக்கப்படும் முடிவுகளுக்குக் கட்டுப்படாத நிலைமையில் நடுத்தீர்ப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ், நீதிமன்றங்கள் மூலம் அதன் தீர்மானங்களை நிறைவேற்றும் சாத்தியங்களைப் பரிசீலித்து ஆவன செய்வதுமாகும்.* இதன் முன் முயற்சிகள், ஊடகங்களின் பொறுப்புடைமை தொடர்பில், பொது மக்களிடமிருந்து அதிகளவில் தொடர்ந்து கிடைத்து வரும் முறையீடுகளை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் காலத்திற்குப் பொருத்தமானதாய் மேற்கொள்ளப்பட்டவையாகும். எனினும் அவற்றின் போதுமான தன்மை முற்றிலும் வேறுபட்டதானதொரு விவகாரமாகும்.
45. பி.சி.சி (PCC) அமைப்புடன் நேரினையாக, 1973ஆம் ஆண்டின் 5ம் இலக்கப் பத்திரிகைப் பேரவைச் சட்டம் விலக்கப்படுவதும் அதே சமயம் இலங்கை பத்திரிகைச் சபை ஒழிக்கப்படவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. இச்சபை கடந்த காலத்தில், அச்சூடகத்தை வழிநடத்துவதிலும் அதன் செயற்பாடுகளில் தெட்டத்தெளிவாக அரசியல் சாயம் கலந்திருப்பதை வெளிக் காட்டுவதிலும் முழுமையாகவே தனது இயலாமையை பிரதிபலித்துள்ளது. எனினும் ஆண்டின் இறுதியளவில், பிசிசியின் அமைப்பு தாமதமானதால், செய்தி இதழ்கள் சட்டத்தின் நீக்கம் இடம்பெறவில்லை.
68

அரச உடைமையான ஊடகங்கள் வசை துTற்றுவதான செய்திகளை வெளியிடுவது தொடர்பில் நாடு பல காலமாகப் பழக்கப்பட்டுவிட்டது என்பது ஒருபுறமிருக்க, ஊடக விமர்சகர்களோ சொற்பகாலமாக, தனியார் ஊடகங்கள் அரசியல் மற்றும் அல்லது தனிப்பட்ட ரீதியில் செய்திகளை அதிநுட்பமான விதத்தில் வெளியிட்டு வருவதை சுட்டிக் காட்டி வருகின்றன.
நாட்டில் வெளியிடப்படும் செய்திகளுக்கான பொறுப்பு, செய்தித்துறை சார்ந்தோரின் சுதந்திரம் தொடர்பிலான விவகாரங்களை யிட்டுத் தட்டிக்கேட்பதற்கென தொழில்சார் நிபுணத்துவ செய்தித்துறைசார் அமைப்புகள் கோடிட்டுக் காட்டுவதாக இல்லாதிருப்பது இந்தக் கவலைகளை தொட்டுக் காட்டுகிறது. இலங்கையில் ஏற்கனவே உள்ள செய்தித்துறைசார் சங்கங்கள், அரசியல் ரீதியில் கடுமையாகப் பிளவுபட்டிருக்கின்றன. எனவே இந்த நிலைப்பாட்டிலிருந்து பி.சி.சி அதன் கருத்துக்காரரிடமிருந்து எந்தளவுக்கு சுதந்திரத்தைக் கொண்டுள்ளது என்பதைக் கண்டறியும் மாதிரியில், இந்த சுய ஒழுங்கமைப்பு நுட்பமுறைகள், ஊடகங்களின் நம்பகத் தன்மையிலும் பொறுப்பு வளர்ச்சிக் கடப்பாட்டிலும் உறுதியான சார்புச் செயற்பாட்டில் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் திறமையாகச் செயற்பட்ப் போகிறது என்பது பரீட்சிக்கப்படவுள்ளது.
தங்களது சாதனங்களில் வெளியிடப்படும் செய்தியறிக்கைகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பில் அதிக அளவிலான செய்திப் பத்திரிகைகள், பதிலளிக்கும் உரிமையைக் கைக் கொண்டொழுகுவதை பரிசீலனையிலுள்ள ஆண்டு கண்டறிந்தது.
குறித்த ஆண்டின் போது, அரசு முன் வைத்த அதி கவர்ச்சிகரமான யோசனைகளில்" இராணுவத்திற்கு இடையே கருத்துப் பரிமாற்றங்களை ஒழுங்குமுறைப் படுத்துவதற்கானதொரு சாசனம், இன-மத ஊடகங்களுக்கும் விவகாரங்களில் மக்களின் கருத்துக்கள் தூண்டிவிடப்படுவதைத் தடுக்கும் செயற்பாடுகளைக் கூட்டிணைப்பதற்கான ஏற்பாடுகள் என்பனவும் அடங்கியிருந்தன; எனினும் அத்தகைய நடவடிக்கைகளை செயற்படுத்தல் என்பது சந்தேகத்திற்கிடமானதாகவே உள்ளது.
4. கருத்து வெளியீட்டுச் சுதந்திர விவகாரங்களும்,
இன முரண்பாடும்.
வடக்கு-கிழக் கில் போர் ஒயப் வும் எல்.ரீ.ரீ.ஈ இற்கும் அரசாங்கத்திற்குமிடையேயான சமாதான பேச்சு வார்த்தைகளும், போரினால் சின்னாபின்னப்பட்டுள்ள பகுதிகளை தெற்கிற்கென
46. த ஐலண்ட், 23 ஜனவரி 2002
169

Page 92
திறந்துவிடப்பட்டதும் இவ்வாண்டின் போது வெளியீட்டுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் என்பனவற்றில் அச்சுறுத்துவதான பல சவால்களை தோற்றுவித்தன.
சாதாரண மக்கள் சர்ச்சைக்குள்ளானது பற்றியும் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் பற்றிய சொந்த முறையிலானதும் அரசியல் ரீதியிலானதுமான விவகாரங்கள் தொடர்பிலும் விளக்கங்களுடன் முக்கியதுவம் வழங்கப்பட்டதான செய்திகள் தெற்கின் அச்சு ஊடகப் பக்கங்களின், வடக்கு, கிழக்கு, தெற்கு மக்களிடையேயான தொடர் பாடல் களாக முக்கியத்துவம் பெற்றிருந்தன. அரச கட்டுப்பாட்டிலுள்ள ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசை, 15 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின், 2002ஆம் ஆண்டில் அதன் ஒளிபரப்பை வடக்கிற்கு வழங்கியது.
ஆக்கபூர்வமானதொன்றாக, இக்காலப்பகுதியில் முரண்பாட்டுக் காலத்திலும் சமாதான காலத்திலும் ஊடகங்களின் சரியான பங்களிப்பு என்ன என்பது தொடர்பில் தெற்கில் அதிகமான விமர்சனங்கள் எழுந்ததும் கேள் விக் கணைகள் தொடுக் கப்பட்டதும் அவதானிக்கப்பட்டது. இது விடயத்தில், தங்களுக்குள்ள தார்மீக கடப்பாடுகளை ஊடகங்கள் பிரதிபலித்தன. இந்நடைமுறை ஓர் அத்தியாவசிய பங்களிப்பாக அமைந்திருந்தது.'
பொதுவானதொரு புரியாப் புதிராக இருப்பது, தனது செய்தி அறிவிப்பிலும் செய்தி விமர்சனத்திலும் இலங்கையின் தொடர்பர்டல் ஊடகங்கள் இனத்துவம் தொடர்பிலான பிரத்தியேக தன்மையைப் பின்பற்றி நடப்பதிலான கருத்து வெளியீட்டு மீறலில், முதன்மை இடத்தை வகிப்பதாகும். உதாரணமாக மொழி ரீதியான ஊடகம், இனவிவகாரங்களின் பிரதிநிதித்துவத்தின் போது ஏற்கும் தேர்ந்த பங்கு இதற்கு ஆதாரமாக அமைகிறது." இது விடயத்தில் சொரணையற்ற, பிழையான, சம்பந்தப்படாத விவகாரங்களை அடிப்படையாகக் கொண்ட இதழியல், அச்சு-இலத்திரனியல் ஆகிய இரண்டு ஊடகங்களிலும் தலைக் காட்டியிருப்பது அதிதீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியதோர் விவகாரமாகும்.
முற்றாக, வேறொரு முழுமைத் தோற்றத்தில் இக்காலப்பகுதியின் போது அச்சு ஊடகத்தின் சில பிரிவுகள், வடகிழக்கு முரண்பாடு தொடர்பில் அரசாங்கம் இக்காலப்பகுதியில் செய்தி முகாமைத்துவம் அல்லது தணிக்கையில் தலையிட முனைகிறதா என்ற காரசாரமான
47 லக்ஷமன் குணசேகரவின் ‘ஒப்சவேஷன்ஸ் இன் 'மிதிவெடி பரந்தவெளியில் நடமாடல்' 'த சண்டே ஒப்சர்வர், 24 பெப்ரவரி 2002 மற்றும் 21 யூலை 2002 இதழை குறிப்பாகப் பார்க்க.
48. சுப்றா, 41 பக்கம் 6 - இந்த வெளியீட்டின் இன் ஹவுஸ்" சுருக்கத்தைப் பார்க்க
170

கேள்விகளை அதிக அளவில் எழுப்பி வந்தன. இந்த விடயத்தில் அதிக அளவிலான சங்கடத்தைத் தந்தது, மதிப்பு மிக்க ஒரு செய்தி ஏஜன்சியான ரோய்ட்டரின் நிருபர் ஒருவர் எல்.ரீ.ரீ.ஈ யின் தத்துவ ஆசிரியரும், பேச்சுவார்த்தைகளில் அதி முக்கியத்துவம் வாய்ந்த பிரதிநிதியுமான அன்ரன் பாலசிங்கம் ஒஸ்லோவில், எல்.ரீ.ரீ.ஈ வன்முறையைக் கைவிடாது என்ற வகையில் தெரிவித்ததான கருத்தைத் திரித்து வெளியிட்டதான கருதுகோலின் பேரில் அரசாங்கம் நவம்பரில் ஒரு பிரேரணையைச் சமர்ப்பித்ததாகும். இந்த அறிக்கையை பாலசிங்கம் தன்னளவில் மறுத்துரைக்கவில்லையெனினும் அரசாங்கத்தின் அந்தச்செயல் சட்டப்படியான பிரசுரத்தை மோதல் நிலைக்குத் தள்ளும் ஓர் அனாவசிய செயற்பாடெனக் கடுமையான கண்டனத்துள்ளாகியது." லண்டனைத் தளமாகக் கொண்டுள்ள டெய்லிற்றெலிகிறாப் பத்திரிகையின் கொழும்பு நிருபருக்கு நவம்பரில் விசா நீடிப்பை வழங்க மறுத்தமையும் அதே சமமான அளவுக்குச் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.
உள்ளுர்ப் பத்திரிகையொன்றுக்கு அவள் ஒழுங்குமுறையாகச் செய்தி சேகரித்துக் கொடுத்ததன் மூலம் விசா நிபந்தனைகளை மீறிவிட்டார் என்பது உத்தியோக நிலையாக இருக்கையில, உண்மையான காரணம், வடக்கு-கிழக்கில் எல்.ரீ.ரீ.ஈ சிறார்களைப் படையணியில் சேர்த்தல் பறித்தல்" உட்பட மனித உரிமைகளை மீறும் செயல்களில் ஈடுபட்டிருந்ததாகும் எனக் காரணம் கற்பித்திருந்தது.
பத்திரிகை ஆசிரியர்கள் கழகம், வெளிநாட்டு நிருபர்கள் உட்பட நாட்டிலுள்ள ஊடக அமைப்புக்கள் இந்த நிருபரின் விசாவை நீடிக்க அரசாங்கம் மறுத்ததன் மீது கடுமையான கவலையைத் தெரிவித்திருந்தன.
இவ்வாண்டின் இறுதியின் போது நாட்டின் ஒலிபரப்பு மற்றும் சுங்க விதிமுறைகளுக்கும் சட்டங்களுக்கும் தன்னை உட்படுத்திக் கொள்வதற்குப் புறம்பாக (அரசாங்கத்தின் உட்கிடைக் குறிப்பிசையோடு) வடக்கிற்கும் கிழக்கிற்குமாக ஒரு தனியார் வானொலி நிலையத்தை நடத்துவதற்கு ஏதுவாக எல்.ரீ.ரீ.ஈ அதற்கான இயந்திர சாதனங்களை இறக்குமதி செய்தது இது. பெரிதளவு - ஆனால் குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடித்த ஒரு சர்ச்சையைத் தோற்றுவித்திருந்தது.
49. த ஐலண்ட், 30 நவம்பர் 2002 50. த ஐலண்ட், 8 நவம்பர் 2002 51. த சண்டே ரைம்ஸ், 10 நவம்பர் 2002
171

Page 93
வடக்கில், எல்.ரீ.ரீ.ஈ அரசாங்கத்துடன் போர் நிறுத்தமொன்றைப் பிரகடனப்படுத்தியிருந்த போதிலும், குடிமக்கள் எதிர்க்கட்சிகள், எதிர்த் தரப்புச் செய்திப்பத்திரிகைகள் மீதான கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கியதோடு அதன் பயமுறுத்தற் செயற்பாடுகளையும் அதிகரித்துக் கொண்டது. எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பு சிங்கள மொழியில் ஒன்று உட்பட அனேக செய்திப்பத்திரிகைகளையும், வன்னியில் தனது சொந்த வானொலி நிலையத்தையும் நடத்திவரினும், எதிர்த்தரப்பின் அச்சு ஊடக வெளியீடுகளின் பால் அதன் சகியாத்தன்மை குறிப்பிடத் தக்கதாகும். ஏப்ரலில், ஈ.பி.டி.பி சார்பு முகாமைத்துவத்தின் (எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான ஒரு கட்சி) வார வெளியிடான தினமுரசு, இதனை எல்.ரீ.ரீ.ஈ மட்டக்களப்பில் தடை செய்துள்ளதாக ஈ. பி. டி. பி. நோர்வேயின் கண்காணிப்புக் குழுவிடம் புகார் செய்தது. இதே மாதிரியான புகார்களை ஒரு பிராந்திய செய்திப்பத்திரிகையான தினக்கதிரும் பதிவு செய்தது* இது விடயத்தில் கண்காணிப்புக் குழு தலையிட்டபோதிலும் ஐந்து வாரங்களுக்குப் பின்னர் தினமுரசு மீண்டும் செய்தி வெளியீட்டுக் காட்சி நிலை மேடைகளில் தலை காட் டியது. இந்தச் செய்திப்பத்தரிகையின் ஊழியர்கள் அப்பகுதியிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ படை அணியினரால் தாங்கள் தொடர்ந்தும் தொல்லைகளுக்குள்ளாகி வருவதாக முறையீடு செய்து வருகின்றனர்.
ஆகஸ்ட் இல், மட்டக்களப்பில் செய்தித்துறை சார்ந்தோரும் பொது மக்களும் பத்துப் பேரைக் கொண்ட ஆயுதந் தரித்த ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர். அக் கும்பல் தினக்கதிர் காரியாலயம் மீது தாக்குதல் நடத்தி, அவ்வலுவலகத்தை கொள்ளையிட்டது. அதன்பின் ஊழியர்களைக் கண்ணைக்கட்டிக் கம்பங்களில் சேர்த்து பிணைத்த பின் அலுவலகத்திற்கு தீ மூட்டியது.* ஆண்டின் இறுதிப் பகுதியின் போது கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் சமுதாயத்தினரின் நலனை ஆதரிக்கும் தெற்கிலுள்ள செய்திப் பத்திரிகையான நவமணி ஆசிரியர் பீட அலுவலகம், இனந்தெரியாத ஒரு கும் பலால் தாக்கப்பட்டிருந்தது*
இதே சமயம், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பின் (யூரி.எச்.ஆர் - யாழ்ப்பாணம்) அறிக்கைகளில், எல்.ரீ.ரீ.ஈ யினரால் வடக்கு-கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணம்
52. த ஐலண்ட், 13 ஏப்பிரல் 2002 53. த ஐலண்ட், 12 ஜூன் மற்றும் 3 மே 2002 54. த டெய்லி மிரர், 11 ஆகஸ்ட் 2002 55. த ஜலண்ட், 1 டிசம்பர் 2002
172

பறித்தல், கடத்தல், பிரஜைகள், மீதான தாக்குதல்கள் உட்பட பேச் சுரிமை, கருத்துரிமை ஒடுக் குமுறைகள் சம்பந்தப்பட்ட கணக்கிலடங்காச் சம்பவங்கள் நிரைப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பிடத்தக்கதானவொரு கொடுங் குற்றச் செயல் வடக்கிலுள்ள பிரபலமான பாடசாலை ஹாட்லிக் கல்லூரியின் அதிபர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். பல்வேறுப்பட்ட விவகாரங்களில் பாடசாலைப் பிள்ளைகளை, அரசாங்கத்திற்கெதிரான செயற்பாடுகளில் பிரசாரச் கருவிகளாகப் பயன்படுத்தும் எல்.ரீ.ரீ.ஈ யின் முற்சிகளை அவர் எதிர்த்து வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அத்தகைய மாதிரியான வேறு சம்பவங்களையொத்ததாக இல்லாமல் இந்தத் தாக்குதல் தெற்கிலுள்ள தீவிர செயற்பாட்டாளர்களினால் சமாதானம் என்பது வெறும் போர்நிறுத்தம் மாத்திரமல்ல அது ஜனநாயகம் சுதந்திரம், கருத்து வேறுபாடு என்பவற்றையும் உள்ளாக்குவதானது என்ற அடிப்படையில், எதிர்ப்புக்குள்ளானது.*
ஒக்டோபரில், சர்வதேச ஊடக நிகழ்வுகளை அக்கறையுடன் காத்துவரும் அமைப்பான ஹிப்போட்டர்ஸ் சான்ஸ் புறொன்றியர்ஸ், பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிய கடிதமொன்றில் வடக்கில் நிலைகொண்டிருந்த ஊடகவியலாளரான மயில்வாகனம் நிமலராஜனின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை இன்னும் கைது செய்யப்படாது பற்றிய தனது மனக்கலக்கத்தை வெளியிட்டிருந்தது. முன்னைய அரசாங்கத்தின் பதவிக் காலத்தின் போது நிகழ்ந்த நிமலராஜனின் கொலை ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி)யின் செயற்பாடுகள் மீது அவர் கொண்டிருந்த எதிர்ப்புடன் தொடர்பு படுத்தப்பட்டிருந்தது. ஈ. பி. டி. பி. எல்.ரீ.ரீ.ஈக்கு விரோதமான ஓர் அரசியல் கட்சியாகும்." இது தொடர்பில் சில ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருந்த போதும், ஆண்டின் இறுதியளவில் விசாரணைகள் தேய்ந்து ஒழிந்தன.
5. கருத்து வெளியீட்டுச் சுதந்திரம் தொடர்பில், தெற்கில் உடல் ரீதியான தாக்குதலும் பயமுறுத்தலும்.
இந்த ஆண்டின் போது இத்தகைய சம்பவங்களின் நிகழ்வுகள்
குறைவானதாக இருந்திருப்பினும், சில சம்பவங்களுக்கான பொறுப்பு நாட்டிலுள்ள இரு பெரும் அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய
56. த ஐலண்ட், 6 ஒக்டோபர் 2002 57. த டெய்லி மிரர், 19 ஒக்டோபர் 2002
173

Page 94
முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி ஆகியவற்றின் மீது சுமத்தப்பட்டிருந்தமை பெரும் கவலையளிப்பதாக இருந்தது.
ஏப்ரலில், விசேட பணிப் படை கொழும்பு, புறக்கோட்டை போதிக்கருகே தேசிய பிக்கு முன்னணி நடத்திய சமாதான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைப் படம் பிடிக்க முனைந்த செய்தியாளர்களைத் தடுக்க முயன்றது. சுதந்திர ஊடக இயக்கம் இந்தச் செயலைக் கண்டித்து விடுத்த ஓர் அறிக்கை, அதனை முன்னைய அரசாங்கத்தின் போது ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவு (பி.எஸ்.டி), அச்சு ஊடகத்தின் சுதந்திரத்தை நெரித்துத் திணறடிக்க வைக்கும் முயற்சிகளுக்கு ஒப்பிட்டது.*
அதனிலும் கூடுதலாகக் கவலையளித்த நிகழ்வொன்று ஆண்டு இறுதியளவில், வடமத்திய மாகாணத்தின் பொலனறுவை நகரில், எதிர்க்கட்சி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட அமைதியானதொரு ஆர்ப்பாட்டத்தை முறியடிப்பதற்கு ஆயுதந் தாங்கியதாக சுமார் 50 பேரைக் கொண்ட கும்பலொன்று தாக்குதல் நடத்தியபோது 4 பத்திரிகையாளர்களும் மற்றொரு பொதுமகனும் காயமடைந்த சம்பவமாகும். இந்த ஆர்ப்பாட்டம் விவசாய அதிகாரிகள் உட்பட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீது முன்னர் இடம் பெற்ற இரண்டு தாக்குதல்கள் தொடர்பிலானதாகும். ஆர்ப்பாட்டம் தொடர்பில் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களைத் தாக்கிய கும்பலுக்கு அரசியல்வாதி யொருவரின் ஆதரவு இருந்ததாகக் கருதப்பட்டபோதிலும் பொலிஸாரின் உடனடித் தலையீடோ அல்லது விசாரணையோ இடம்பெறவில்லை.” இதனிடையே ஏப்ரலில் றிப்போட்டர்ஸ் சான்ஸ் புறொன்ற்றியர்ஸ் (ஆர்.எஸ்.எப்) ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு (கூட்டணியின் தலைவி என்ற வகையில்) அனுப்பிய கடிதமொன்றில், வத்தளையில் ஜனாதிபதி குமாரதுங்க நிகழ்த்திய சர்ச்சைக்குரிய ஓர் உரையை நாடாவில் பதிவு செய்த ஒரு செய்தியாளர் மீது கொலைப் பயமுறுத்தலும், அச்சுறுத்தலும் இடம் பெற்று வருவது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திக் கேட்டிருந்தது. அந்த உரையில் ஜனாதிபதி சமாதான நடைமுறை தொடர்பில் பல பிரதிகூலம் தரத் தக்க கருத்துக்களைக் கூறியிருந்தார். அந்தச் செய்தியாளர் வீட்டில் இல்லாத சமயம் அத்து மீறிப் பிரவேசித்தவர்கள் அவரின் மனைவியைப் பயமுறுத்திவிட்டு அனேக ஒலிப்பதிவு நாடாக்களையும் அங்கு ஓர் ஒலிப்பதிவுக் கருவியையும் அபகரித்துச் சென்றுள்ளனர்."
58. த டெய்லி நியூஸ், 24 ஏப்பிரல் 2002 59. த ஐலண்ட், 3ம் மற்றும் 9ம் ஒக்டோபர் 2002 60. த டெய்லி நியூஸ், 6 ஏப்பிரல் 2002
174

இரண்டு தனியாட்கள் பொலிஸ் அலுவலர்களால் பகிரங்கமாகத் தாக்கப்படுவதை தடைசெய்ய முயன்றதையடுத்து ராவய செய்தித்தாளின் நிருபர் ஒருவர் பொலிசாரால் தாக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். வாரியப்பளை பொலிஸ் கட்டுக் காவலிலிருந்த பெண்ணொருவர் சித்திரவதை செய்யப்பட்டமையைப் பற்றித் தொடர்ச்சியாக அறிக்கையிட்டதையடுத்து அதே செய்தித் தாளைச் சேர்ந்த இன்னொரு பத்திரிகையாளர் பஸ் ஒன்றில் வைத்துத் தாக்கப்பட்டார்.
முந்திய அரசாங்கத்தின் காலப்பகுதியின்போது பத்திரிகையாளர்களும் பிரஜைகளும் தாக்கப்பட்டதையிட்டு இதே காலப்பகுதியில் தொடர்ந்து புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இச்சம்பவங்களுள் சட்டன பத்திரிகையாசிரியர் ரோஹன குமாரவின் கொலை, அப்போதைக்கு எதிர்கட்சியுடன் தொடர்பு வைத்திருந்த பிரபல நடிகை அனோஜா வீரசிங்கவின் இல்லம் தாக்கப்பட்டமை என்பனவும் அடங்கும். எனினும் இப்புலனாய்வுகளில் முடிவாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஜனாதிபதி குமாரதுங்கவையும் அவரது அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை வெளியிட்ட ஆங்கில வாராந்தப் பத்திரிகையான சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் வதிவிடம் 1998 ஜூன் மாதம் தாக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் முன்னைய சாரதி உட்பட ஆறுபேர் ஏப்ரல் மாதம் கைதுசெய்யப்பட்டனர். இதேபோன்ற பிரச்சினைக்குரிய ஒரு சூழ்நிலையில் சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான ஆய்வுக்கட்டுரை ஆசிரியர் இக்பால் அத்தாஸ் என்பவரின் இல்லம் தாக்கப்பட்டது. இத்தாக்குதலின் போது இவரது குடும்பமும் அச்சுறுத்தப்பட்டது. இது தொடர்பாக நன்கு பரிசீலனை செய்யப்பட்ட தீப்பின் மூலம் இரண்டு வான்படை அலுவலர்களுக்கு ஒன்பது வருட மறியற் தண்டனை வழங்கப்பட்டது."
உயர்நீதி மன்றமானது ஒரு முஸ்லிம் பள்ளிவாசலிற்குள் நடந்த பொலிஸ் தாக்குதலை வீடியோ படப்பிடிப்பு செய்தமைக்காக தமிழ் செய்திப் பத்திரிகையாளர் ஒருவரை பொலிஸார் தாக்கியதையடுத்து நடாத்தப்பட்ட உரிமை மீறல் வழக்கிற்கான தீப்பை யூன் 2002ல் வழங்கியது.*
6. (pig.6)
பரிசீலனைக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதி கடந்த காலங்களில் வரித்துக் கொணி ட மரபுரிமைப் பணி புகள் , மிகையான அரசியல் மயத் தன்மை, கடுமையான ஒடுக் குமறை மற்றும் சகிப்புத்தன்மையற்ற அகழி ஆழ் கொள்கைகள் என்பனவற்றிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளைப் பிரதிபலித்தது.
61. மேற்படி குறிப்பு n 41,p12 62. டெய்லி மிறர், 18 யூன் 2002
175

Page 95
இந்த நடைமுறையின் போது யுத்தத்திலிருந்து மிகுந்த இடர்பாடுகளுக்குள்ளான சமாதானத்திற்கு மாறிய இடைநிலைக் காலப்பகுதியில் வடக்கில் மக்களினதும் ஊடகங்களினதும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரம், நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்ததை விட மிகவும் வேறுபட்ட சவால்களை எதிர்நோக்கியிருந்தது. மக்களுக்கும் மக்களுக்கும் இடையேயான தொடர்பு வெளிப்படையாக நிலவியிருந்த போதும், மனோநிலை போதுமான வீரஞ் செறிந்ததாக இருப்பின் அற்புதங்களை நிகழ்த்தலாம் என சிலர் கூறிக் கொண்ட போதும் வடக்கில் மக்கள் எதிர் நோக்கும் கஷடங்களிலிருந்து அவர்கள் விடுதலை பெறுவதற்கு அதிக அளவிலான உயிரூட்ட உணர்வும் ஆதரவும் தேவை என்பது அவசியமாகவே உள்ளது.
ஊடக சட்டச் சீரமைப்பைப் பொறுத்தவரை அடக்க முடியாத இணையொத்த நிகழ்வுகள் மனக்கண் முன் தோன்றுகின்றன. 1992ஆம் ஆண்டில் பிரிட்டனின் ஊடகச்சட்டங்கள் பற்றி பின்வருமாறு அபிட்பிராயம் தெரிவிக்கப்பட்டடிருந்தது. "பெரிதளவு உள்ள (சட்டங்கள்) பொதுமக்களுக்கு அக்கறையை ஏற்படுத்தும் விதத்திலான செய்தி தெரிவிப்பின் மீது மோதி மேற்சென்று பாதிப்பை ஏற்படுத்தலும், நம்பத்தகாத செய்தி அறிவிப்புச் செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கு அதில் சொற்பமே பங்களிப்புச் செய்கிறது என்பதும் வருந்தத்தக்கதாகும்" (அழுத்தம் என்னுடையது).
அந்தக் கட்டத்தில் பிரிட்டன் (வாதாடத்தக்கதாக அது தொடர்வதாகத் தெரிவிப்பினும் ஆனால் ஒரு குறைந்த அளவில் வேதனைப்படுத்தும் விதத்தில்) இப்போது இலங்கை உள்ளதைப் போன்றே அறிவியல் பத்திரிகைத்துறைக்கு உதவுவதற்கும், பிழையான ஊடக நடத்தையைத் தடைசெய்வதற்குமிடையே சரிசமமான நீதித்தராசை நிலைநிறுத்தும் முயற்சியில் தீர்க்கமானதொரு கட்டத்தில் உள்ளது.
அன்றைய பிரிடிஷ் சட்டங்கள் பற்றி விமர்சிக் கையில் 'அவமதிப்பின் மோசமான அம்சங்கள், நம்பிக்கை மோசடி மற்றும் உத்தியோக அந்தரங்கம் ஆகியவை வருந்தத் தகாத வித்தில் ஒழிந்து, அதனிடத்தில் பொதுமக்கள் வெளியிடும் தகவல்கள் மீது முறையான பாதுகாப்பும், மனித உரிமைகளின் பாதுகாப்பும் இடம்பெறவேண்டும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்டது’**
இலங்கையைப் பொறுத்தவரை, இந்த எதிர்பார்ப்புக்கள் கைகூடுமா என்பது, ஊடகங்கள், சட்டங்களைக் கொள்கைரீதியில் சீரமைக்கும் அளவுக்கு தன்னை ஒரு பொறுப்புமிக்க, மறுமொழி கூறுகின்றவிதத்தில் கருத்தைத் தோற்றுவிக்கின்ற ரீதியில் பெருமையைப் பேணி வளர்த்துக் கொள்வதில்தான் தங்கியுள்ளது. 2002ம் ஆண்டு, பேராவலுடைய இந்தக் கடும்முயற்சிகளின் மங்கலான ஒளியைத் தான் கண்டது; எனினும் அவற்றின் ஈடேற்றம் மற்றொரு சமயத்திற்கான ஒரு கதையாக இருக்கும்.
03. ஊடகச் சட்டம், றொபட்சன் மற்றும் நிகொல் 3 பதிப்பு பென்கியுன் (Penguin)
புத்தகங்கள் 1992, XVi 64. libid., pxviii
176

VII
மனித உரிமைகளுக்கான நீதிப் பாதுகாப்பு மதுரங்கா ரத்நாயக் க*
1. அறிமுகம்
2002ஆம் ஆண்டின் அடிப்படை உரிமை தொடர்பான வழக்குகளில் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகள் பற்றி ஆராய்வதே இவ்வத்தியாயத்தின் நோக்கமாகும்.
இவ்வாண்டு வழங்கப்பட்ட தீர்ப்புகள் உட்பட அண்மைய ஆண்டுகளின் தீர்ப்புகளும் கவனத்திற்கு எடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை அரசியலமைப்பின் உறுப்புரை (1) இன் கீழ் அடிப்படை
* எல். எல் பி சட்டத்தரணி நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர், சட்டத்திற்கும்
சமூகத்திற்குமான அறநிலையம்.
1. அரசியலமைப்பானது நிறைவேற்று, நிர்வாக தரப்பினரால் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை/ எதிர்காலத்தில் மீறப்படலாம் என்பதை ஆராய்ந்து தீர்க்கும் அதிகாரத்தை உயர் நீதி மன்றத்துக்கு வழங்கியுள்ளது (பிரிவு 17-126)
2. 2002 இல் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 17 மனுக்கள் தீர்க்கப்பட்டன. இவை உறுப்புரை 12இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டவையாகும். "அடிப்படை உரிமைகள் நியாயாதிக்க நோக்கு என்னும் ஆய்வு தீபிகா உடுகமவால் எழுதப்பட்டது. இலங்கையில் 2000, 2001 இல் மனித உரிமைகளின் நிலை, சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அற நிலையம் - மனித உரிமைகளுக்கான நீதிப் பாதுகாப்பு - சுமுது அத்தபத்து - ஆகியவற்றை பார்க்கவும்.
177

Page 96
உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பானவையாகும். இந்த விஷேட போக்கு அரசியல் அமைப்பின் உறுப்புரை 12(1) இற்கு உயர் நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தின் அடிப்படையிலேயே தோன்றியது. அதாவது உரிமைகளும் பொறுப்பு கூறலும் எனும் பரப்புக் குள்ளேயே அமைந்துள்ளது. வேறு வகையில் கூறுவதாயின் அரசின் ஒரு தலைப்பட்சமான ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உறுப்புரை 12(1) (3) இன் கீழ் ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். இதன் காரணமாக அரச நிறுவனங்களில் காணப்படும் ஒழுங்கனேங்கள், கேள்வி நடைமுறைகளில் காணப்படும் ஒழுங்கீனங்கள், அரசாங்க நிறுவனங்களின் பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் தொடர்பான விடயங்களில் அரசியலமைப்பின் உறுப்புரை 12(1)இன் கீழ் நிவாரணம் கோரும் மனுக்கள் அதிகரித்துள்ளன.
அதே நேரம் அரசியலமைப்பின் உறுப்புரை 12(2) இன் கீழ் அடிப்படை உரிமை மீறல்களுக்கான மனுக்கள் மிக குறைந்த அளவிலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனினும் 2002ஆம் ஆண்டு இவ்வுறுப்புரைகளின் கீழ் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனு:- வவுனியாவுக்கும் வவுனியாவிலிருந்தும் பிரயாணம் செய்வதற்கும் நடைமுறையில் இருந்த அனுமதிச்சீட்டு முறைமையின் கீழ் தாம் ஒரு தமிழன்" என்ற காரணத்தாலேயே அனுமதிச்சீட்டு பெற நிர்ப்பந்திக்கப்பட்டதாக மனுதாரர் மனுவில் கூறினார்.
2002ஆம் ஆண்டில் உறுப்புரை(12)1 இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படைஉரிமை மீறல் மனுக்களில் உயர் நீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கியமை, வழமையான உயர் நீதிமன்ற நடவடிக்கையாக
3. குணரதின எதிர் இலங்கை ரெலிகொம் இலங்கை சட்ட மீளாய்வு 1993/109 - பிரேமச்சந்திரா எதிர் மேஜி மொண்டேகு ஜயவிக்கரம 1994/2/SLR 90 - குணரத்தின எதிர் பெற்ரோலியம் கூட்டுத்தாபனம் 1996/1/SLR.315/ பிரியங்கனி எதிர் நாணயக்கார 1996/1 SLR 399 வில்லியம் சில்வா எதிர் சிரானி பண்டாரநாயக்க 1997/1 SLR 92 என்பவற்றை பார்வையிடவும் 4. சட்ட உதவி கோருபவர்கள் "ரிட்” மனுதாக்கல் செய்வதற்கு பதிலாக அரசியலமைப்பின் அடிப்படை உரிமைமீறல் தொடர்பாக உறுப்புரை12 (1) இன் கீழ் தாக்கல் செய்கின்றார்கள். 5. உறுப்புரை 12 (2) - ஏற்பாடுகள் எந்த ஒரு பிரஜையும் இன, மத, மொழி, சாதி, பால், அரசியல் கருத்து, பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரபட்சத்துக்குள்ளாக்க முடியாது. 6. ஆறுமுகம் வடிவேலு எதிர் வவுனியா சிதம்பரபுர அகதிமுகாம் பொலிஸ் நிலையம், உயர் நீதிமன்ற விண்ணப்ப இல. 44/2002 (FR) உயர்நீதிமன்ற அறிக்கை 5/9/2002 12(2)ன் கீழ் மனுதாரரின் உரிமை மீறப்படவில்லை என உயர் நீதி மன்றம் தெரிவித்தது.
178

அமைந்த வேளை அதிர்ச்சியூட்டும் பாலியல் வல்லுறவு, சித்திரவதை தொடர்பான பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தின் நிவாரணம் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்று மிகவும் பிரசித்தமானது. இம்மனுவை பார்ப்போம். அரச படைப் பிரிவினர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் தடுப்புக் காவலிலிருந்த போது இறந்து விட்டார். இறந்தவரின் சட்டரீதியான பிரதிநிதியாக இறந்தவரின் மனைவி அடிப்படை உரிமை மனுவை சமர்ப்பிக்க உரித்துடையவர் என உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
2. உறுப்புரை 12இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்.
முன்னர் கூறியவாறு 2002ஆம் ஆண்டின் பெரும்பாலான வழக்குகள் உறுப்புரை 12(1) இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றுள் பெரும்பாலானவை அரசாங்க நிறுவனங்களில், அரசாங்க
கேள்விப் பத்திரங்களை ஏற்றுக்கொள்ளல்(9), நியமனங்கள்", சேவை நீடிப்புகள்', இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள்(12) தொடர்
7 சிறியானி சில்வா எதிர் பயாகல பொலிஸ் பொறுப்பதிகாரி உயர் நீதிமன்ற விண்ணப்ப இல 471/2000(FR) உயர் நீதிமன்ற அறிக்கை 10-12-2002 வருட முடிவிலும் தீர்க்கப்படாமலுள்ளது. 8. அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) சமத்துவம், சகலருக்கும் சமனான
சட்டப்பாதுகாப்பு ஆகிய உரிமைகளை உறுதிப்படுத்துகின்றது. 9. வுளேர் கெயர் கிளினிங் சேவிஸ் எதிர் ருகுனு பல்கலைக்கழகம் உயர்நீதிமன்ற விண்ணப்ப இல 285/ 2001 (RR)உயர் நீதிமன்ற அறிக்கை 9-5-2002, ஈபேட் சில்வா ரூறிங் கம்பனி எதிர் எயர் லங்கா லிமிட் உயர் நீதிமன்ற விண்ணப்ப இல 548/ 96 (RR) உயர் நீதிமன்ற அறிக்கை 27.06.2002 சாம்சமரசேகர எதிர் கண்டி மாநகர சபை உயர் நீதிமன்ற விண்ணப்ப இல 53/ 2000 (FR) உயர் நீதிமன்ற அறிக்கை 25.6.2002. 10. K. S. ஜயசிங்க எதிர் NIFNE உயர் நீதிமன்ற விண்ணப்ப இல 692/ 2000(FR)உயர் நீதிமன்ற அறிக்கை 20.03.2002 சோமபால பத்திவதன எதிர் மத்திய வங்கி உயர் நீதிமன்ற விண்ணப்பம் இல450/ 2000. உயர் நீதிமன்ற அறிக்கை 30.04.2002 WR.R. ரபல் எதிர் தேசிய சேமிப்பு வங்கி உயர் நீதிமன்ற விண்ணப்ப இல531/ 2000 11. கமகே உபசேனா எதிர் ரிச்சட் பத்திரன கல்வி அமைச்சர் உயர் நீதிமன்ற விண்ணப்ப இல 50/99 (FR) உயர் நீதிமன்ற அறிக்கை 31, 5, 2002. 12. NDJநாரங்கொட எதிர் B.L. MDe.S கொடித்துவக்கு பொலிஸ்மா அதிபர் உயர் நீதிமன்ற விண்ணப்ப இல 397 2000 உயர் நீதிமன்ற அறிக்கை 11.02.2002 WRR ரபல் எதிர் தேசிய சேமிப்பு வங்கி உயர் நீதிமன்ற விண்ணப்ப இல. 331/ 2000உயர் நீதிமன்ற அறிக்கை 30042002 தயாரத்ன எதிர் தேசிய சேமிப்பு வங்கி உயர் நீதிமன்ற விண்ணப்ப இல 452/2001 (RR) உயர்நீதிமன்றம் அறிக்கை 5.9.2002 VB ராசபுத்ர எதிர் இலங்கை வங்கி உயர் நீதிமன்ற விண்ணப்ப இல 381/ 01. உயர் நீதிமன்ற அறிக்கை 16.09.2002
179

Page 97
பானவையாகும். குறிப்பிட்ட மனுவொன்றை பார்ப்போம். 1998ம் ஆண்டு அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட கடன் நிவாரணத் திட்டத்தின் கீழ் தமக்கு நிவாரணம் மறுக்கப்பட்டதால் உறுப்புரை 12(1) இன் கீழ் அடிப்படை உரிமை மீறப்பட்டதாக ஒருவர் வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கில் அரச வங்கியொன்றை பிரதிவாதியாக குறிப்பிட்டிருந்தார். இன்னொரு வழக்கு - வியாபார அனுமதி இரத்து செய்யப்பட்டமை' தொடர்பானதாகும். மற்றொரு வழக்கு அரசாங்க சேவையில் பதவியை" வெற்றிடமாக்குதல் தொடர்புடையதாகும். வேறொரு வழக்கில் தமது உத்தியோகபூர்வ பாவனைக்காக வழங்கப்பட்டிருந்த வாகனத்தை தாம் இளைப்பாறும் காலத்தில் கொள்வனவு செய்யும் உரிமை தமக்கு மறுக்கப்படலாம்" என முன்கூட்டியே ஒருவர் (இளைப்பாற முன்னரேயே) உறுப்புரை 12(1) இன் கீழ் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
பெரும்பாலான மனுக்களும், தீர்ப்புகளும் உயர் நீதிமன்றின் வழமையான நடவடிக்கைகளாகவே கருதப்பட்டன. இருப்பினும் சோமபால பத்திவதன V மத்திய வங்கி நாணய சபை வழக்கில்' நீதியரசர் பெர்னாண்டோ அளித்த தீர்ப்பு கவனத்திற்குரியதொன்றாகும். இவ்வழக்கில், மனுதாரர் இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்தார். முதலாவது மனு மத்திய வங்கியின் பிரதி ஆளுநரை மூன்றாவது பிரதிவாதியாக குறிப்பிட்டு இப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டமையை ஆட்சேபிக்கிறது. இரண்டாவது மனு மத்திய வங்கியில் சேவையாற்றிய மனுதாரரின் நான்காவது பதவி உயர்வு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபிக்கின்றது. இரண்டு மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம் இரண்டிலும் மனுதாரருக்கு சார்பாகவே தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் 3ஆம் பிரதிவாதியின் தரப்பு முன் வைத்த வாதம் பின்வருமாறு.
13. வெயாங்கொட நெசவு ஆலை எதிர் மக்கள் வங்கி உயர் நீதிமன்ற
விண்ணப்ப இல 404/99 உயர்நீதிமன்ற அறிக்கை 18.01.2002 14. கொழும்பு தெற்கு கூட்டுறவு சங்கம் எதிர் அனுரத்த ரத்வத்த, எரிபொருள் மின்சக்தி அமைச்சர் உயர் நீதிமன்ற விண்ணப்ப இல 698/98 உயர் நீதிமன்ற அறிக்கை 25.3.2002 15. விமல் வீரசிங்க எதிர் டாக்டர் S.A.K. கமகே பணிப்பாளர் நாயகம் கேகாலை ஆஸ்பத்திரி உயர்நீதிமன்ற விண்ணப்ப இல 682/ 2001 (அ.உ) உயர் நீதிமன்ற அறிக்கை 19.09.2002 16. L. M பெர்னாண்டோ R.A.A. ரணவீர, செயலாளர் கலாசார மதவிவகார அமைச்சு. உயர்நீதிமன்ற விண்ணப்ப இல 46/99 (அ.உ) உயர் நீதிமன்ற அறிக்கை 24.05, 2002 17. உ. நீ விண்ணப் இல. 450/2000 மற்றும் உ. நீ விண்ணப்ப இல.565/
2001, உ. நீ குறிப்புகள் 30.04.2002.
180

பிரதி ஆளுநர் பதவிக்கு இறுதியாக இருவரின் விண்ணப்பங்கள் மாத்திரமே பரிசீலனைக்காக எஞ்சின. மூன்றாவது பிரதிவாதியின் விண்ணப்பமும் திரு டீ என்பவரின் விண்ணப்பமுமே அந்த இரண்டுமாகும். மூன்றாவது பிரதிவாதி பிரதி ஆளுனராக தெரிவு செய்யப்பட்டமை திரு டீ ஐ மட்டுமே பாதித்திருக்கும். 3ஆம் பிரதிவாதி தெரிவு செய்யப்பட்டமையால் மனுதாரர் பாதிக்கப்பட்டிருக்கமாட்டார். எனவே மனுதாரர் 3ம் பிரதிவாதியின் தெரிவினை ஆட்சேபிப்பதற்கு உரிமை இல்லை
நீதியரசர் பெர்னாண்டோவின் தீர்ப்பு : மனுதாரர் இப்பதவிக்கு விண்ணப்பித்து நீதியான தெரிவு நடைமுறையை எதிர்பார்ப்பது அவருக்குள்ள உரித்தாகும். இலங்கையின் ஒரு பிரஜையாக 3ஆம் பிரதிவாதியின் தெரிவினை ஒரு தலைப்பட்சமானது என ஆட்சேபிக்கும் உரிமை அவருக்கு உண்டு. இவ்வழக்கில் நீதியரசர் பெர்னாண்டோ வழங்கிய தீர்ப்பும் அதற்கான விளக்கமும் அரச நிறுவனங்கள் தொடர்பான அடிப்படை உரிமை வழக்குகளில் முன்னேற்றகரமான சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை காலமும் அரசாங்க இயந்திரத்தின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிராக பொது விடயங்களில் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற முனைப்புள்ளவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது நீதி மன்றம் குறிப்பிட்ட வரையறைக்குள் நின்றே தீர்ப்பு வழங்கியது.
3. உறுப்புரை 14 இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட
வழக்குகள்.
வவுனியாவுக்கு வருவதற்கும் வவுனியாவில் இருந்து வெளியே பயணம் செய்வதற்கும்' “அனுமதிச்சீட்டு பெறும் நடைமுறை’ அமுலில் இருந்து வந்தது. இரண்டு இலங்கை பிரஜைகள் அனுமதி சீட்டு முறையை ஆட்சேபித்து மனுவை தாக்கல் செய்தனர். இந்த நடைமுறை
18. வவுனியாவுக்கு செல்வதற்கும் வவுனியாவிலிருந்து வெளியே வருவதற்கும்
அனுமதிச் சீட்டு பெறுவதை அரசாங்கம் கட்டாயமாக்கியது.
19 ஜகத் சொலமன் டயஸ் எதிர் செயலாளர் பாதுகாப்பு அமைச்சு உயர் நீதிமன்ற விண்ணப்ப இல 604/2001 (அ.உ)உயர் நீதிமன்ற அறிக்கை 05.09.2002 ஆறுமுகம் வடிவேலு எதிர் பொறுப்பதிகாரி சிதம்பரபுரம் அகதிமுகாம் பொலிஸ் நிலையம் வவுனியா- உயர் நீதிமன்ற விண்ணப்ப இல 44/2002 (அ. உயர் நீதிமன்ற அறிக்கை 59.2002 இரு மனுக்களும் விசாரணைக்கு எடுக்கப்படும் போது அனுமதிச் சீட்டு முறைமை அரசாங்கத்தால் நீக்கப்பட்டிருந்தது.
181

Page 98
சிரமமானதெனவும் அரசியலமைப்பின் 14(1) (ஈ) உறுப்புரையின் கீழ்" உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் நடமாடுவதற்கான சுதந்திரத்தை மட்டுப்படுத்துகின்றது எனவும் மனு தாக்கல் செய்தனர்.
வடிவேல் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பார்ப்போம் வடிவேல் வவுனியாவின் நலன்புரி நிலையம் ஒன்றில்' வாழ்ந்து வந்தார். அனுமதிச் சீட்டு முறை அரசியல் அமைப்பின் 11,* 12(1), 12(2) 14(1)(ஈ) ஆகிய உறுப்புரைகளின் கீழ் உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுகின்றது என ஆட்சேபித்தார்.
உறுப்புரை 14(1)(ஈ) இன் கீழ் மனுதாரரின் அடிப்படை உரிமை, அனுமதிச்சீட்டு முறையால் மீறப்பட்டுள்ளது என்பதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
உயர் நீதிமன்றத்தின் விளக்கத்தை பார்ப்போம் ".அனுமதிச் சீட்டு முறையின் கீழ் பிரயாணம் செய்பவர்களின் அடையாளம், வசிப்பிடம் போன்ற விபரங்கள் பதிவு நோக்கத்திற்காக பெறப்பட்டன. ஆனால் இந்த நடைமுறை பிரயாணிகளுக்கு பெரும் சுமையாக இருந்தது. பெரும் நேர விரயத்தையும் பணச் செலவையும் ஏற்படுத்தியது. எனவே பிரயாணிகளின் பயணஞ் செய்யும் உரிமையையும் வசிப்பிடத்துக்கு திரும்புவதற்கான உரிமையையும் பாரதூரமாக மட்டுப்படுத்தியது.”
“.பிரயாண அனுமதிச் சீட்டு தொடர்பான சுற்று நிருபங்களும் ஏனைய அறிவுறுத்தல்களும் சகல மக்களையும் சென்றடையும் வகையில் பிரசுரிக்கப்படவில்லை. மனுதாரர் இவை பற்றி அறிந்திருக்கவில்லை. ஆகையால் அனுமதிச்சீட்டு முறையின் கீழ் அமுல் செய்யப்பட்ட பிரயாண மட்டுப்படுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். பிரஜைகளின்
20. மனுதாரரின் குற்றச்சாட்டில் காணப்பட்ட குறைபாடுகளையும் சொலமன் டயஸ் வழக்கு கொண்டிருந்தது. சொலமன் டயஸ் தாக்கல் செய்த மனித உரிமை மீறப்படலாமென்ற குற்றச்சாட்டை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் அனுமதி சீட்டு முறை நீக்கப்பட்டிருந்தது. அவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டதா என தீர்மானிப்பதற்கு மனுதாரர் காலம் தாழ்த்தி மனு தாக்கல் செய்தமையால் தீர்மானிக்க முடியாது என தீர்ப்பளித்தது.
21. அடிப்படை உரிமை வழக்கினை உறுப்புரை 11 இன் கீழ் தொடர்ந்து நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உறுப்புரை11ஆனது சித்திரவதையை மனிதாபிமானமற்ற தரக்குறைவான தண்டிக்கத்தக்கதான செயல் எனக் கூறி அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்துகின்றது.
22. தாம் அனுமதி சீட்டு பெறாமல் முகாமிலிருந்து வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என ஆரம்பத்திலிருந்தே குறிப்பிட்டார். முதலில் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்ட அதே தினத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும். பின்னர் சொல்லுபடியாகும் தன்மை 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது. பாதுகாப்புப் பிரிவினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துள் மட்டுமே அனுமதிச்சீட்டு செல்லுபடியாகும் அத்துடன் வவுனியா மாவட்டத்துள் மட்டுமே செல்லுபடியாகும்
182

அடிப்படை உரிமைகளை பாதிக்கும் சட்டங்களும் ஒழுங்குவிதிகளும் கண் டிப்பாக பிரசுரிக் கப்படுவதுடன் அவை பிரஜைகளுக்கு சென்றடையத்தக்கதாகவும் இருக்க வேண்டும்.”*
“.பெருந்தெருக்களில் பிரயாணம் செய்வதற்கான பிரஜைகளின் உரிமையையும் பொது இடங்களை சென்றடைவதற்கான பிரஜைகளின் உரிமையையும் மட்டுப்படுத்த வேண்டுமாயின் அரசியலமைப்பின் 15(6), 15(7)இன்’ விதிகளுக்கு அமையவே மட்டுப்படுத்தலாம்.”
மனுதாரர் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதம் : அனுமதிச் சீட்டு முறை அரசியலமைப்பின் உறுப்புரை 12(2)இல் உத்தரவாதப்படுத்தப் பட்டுள்ள பாரபட்சம் காட்டப்படாமை என்னும் உரிமையை மீறியுள்ளது. மனுதாரர் தமிழர் என்ற காரணத்திற்காகவே அனுமதிச்சீட்டு பெறும்படி கோரப்பட்டார்.
இந்த வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதா என்பதை பார்ப்போம் :
உயர் நீதிமன்றம் வவுனியாவின் அகதி முகாம்களில் வசிப்பவர்கள் மீது மட்டும் அனுமதிச்சீட்டு முறை பிரயோகிக்கப் படவில்லை. வவுனியாவுக்குள்ளே வருபவர்கள், வவுனியாவிலிருந்து வெளியே செல்பவர்கள் யாவர் மீதும் பிரயோகிக்கப்பட்டது. எனவே அனுமதிச்சீட்டு முறை உறுப்புரை 12(2) ஐ மீறவில்லை.
4. அடிப்படை உரிமை மனுக்களில் தகுதி பற்றிய
விளக்கம்.
முன்னொரு போதுமில்லாத வகையில், உயர் நீதிமன்றம் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றில் தீர்ப்பு வழங்கியது. மூவர் அடங்கிய நீதிமன்றில் 2:1 என்ற வகையில் பெரும்பான்மை நீதியரசர்கள் தீர்ப்பை வழங்கினர்.
இந்த வழக் கை பார் ப் போம் :- தடுப் புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் தடுப்புக் காவலில் இருந்தபோது இறந்தார்.
23. அப்படியானால் பிரஜைகளின் அடிப்படை உரிமைகள் பாதிக்கும் சட்ட விதிகள் பிரசுரிக்கப்படாமை அடிப்படை உரிமை மீறல் அல்லவா? வேறு வகையில் கூறினால் இவ்வாறான ஒரு நிலைமை அடிப்படை உரிமை விண்ணப்பத்திற்கு ஒரு உந்துகோலாக அமையாதா?
24. உறுப்புரை 15 (6)ன கீழ், நடமாடும் சுதந்திரம், தனது வசிப்பிடத்தைத் தெரிவு செய்யும் சுதந்திரம் என்பன நாட்டின் பொருளாதாரத்தின் பெயரில் வரையறைக்குட்படுத்தப்படுலாம். உறுப்புரை 15 (7) உறுப்புரைகள் 12, 13 (1) மற்றும் 14 என்பவற்றை, தேசிய பாதுகாப்பு, பொதுக் கட்டுப்பாடு மற்றும் பொது சுகாதாரம் அல்லது நன்நடத்தையைப் பாதுகாத்தலின் பெயரில் வரையறைக்குட்படுத்துகின்றது.
25. (öpülg Goli n. 7
183

Page 99
மனைவியின் மனுவை இறந்தவரின் சார்பில்" சட்ட உதவி ஆணைகுழு தாக்கல் செய்தது.
உயர் நீதிமன்றம் இதனை ஏற்றுக் கொண்டது. இத்தீர்ப்பு பெரும் பாராட்டுதலைப் பெற்றது. பொது மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்து மேம்படுத்துவதில் நீதிமன்றத்தின் துணிகரமான நடவடிக்கை என்று பாராட்டப்பட்டது.
இந்த மனு, மேல் விசாரணைக்கு எடுக்கப்படலாமா? என்பது பற்றி உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட தினத்தன்று மனுதாரரின் சட்டதரணி மனுவின் தலையங்கத்தில் திருத்தம் ஒன்று செய்ய அனுமதி கோரினார்.
அவரின் திருத்தம் இதுதான் “இறந்தவரின் சட்டரீதியான பிரதிநிதியாக அவரின் மனைவி சார்பில்' சட்டத்தரணி இறந்தவரின் மனைவிக் கும் பராயமடையாத பிள்ளைக் கும் நஷ ட ஈடு கோருவதற்காகவே மேற்படி திருத்தத்திற்கு அனுமதி கோரினார். நீதிமன்றம் திருத்தத்தை அனுமதித்தது.
பிரதிவாதிகளின் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதம்.
(அ) மனுவைத் தாக்கல் செய்வதற்கு மனுதாரருக்கு தகுதி இல்லை.
(ஆ) மனு காலம் தாழ்த்தித் திருத்தம் செய்யப்பட்டு தாக்கல்
செய்யப்பட்டது.
உறுப்புரை 17, 126(2) ஆகியவற்றுக்கு வியாக்கியானம் அளிக்கும்போது அவ்வாக்கியங்கள் சொற்றொகுதிகளின் தூய்மையான இலக்கணக் கருத்தை கொண்டே கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு வியாக்கியானம் அளித்தால் எவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டதோ அவரே மனுவை தாக்கல் செய்து வழக்கை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாடு தெளிவாகும். தமது வாதத்துக்கு ஆதாரமாக
26. கணவன் 12.6.2000ம் திகதி கைது செய்யப்பட்டார். 17, 6, 2000ம் திகதி நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். பின்னர் களுத்துறை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். தாம் பயாகல பொலிஎயில் தடுத்துவைக்கப்பட்ட போது கடுமையாக தாக்கப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வாக்கு மூலம் அளித்தார். 18, 6, 2000 வழங்கிய வாக்கு மூலத்தில் தமது தாயும் சகோதரியும் தம்மை சிறைச்சாலையில் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது என தெரிவித்தார். மறுநாள் மனுதாரரின் மாமன் முறையானவர் சிறைச்சாலையில் அவரை பார்க்க வந்த போது அவரை மகசின் சிறைச்சாலைக்கு மாற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. தடுத்து வைக்கப்பட்டவர் 20, 6, 2000ம் திகதி இறந்து விட்டாரென பயாகல பொலிஸ் 21.6.2000 திகதி அறிவித்தது.
184

சோமாவதி எதிர் வீரசிங்க வழக்கின் தீர்ப்பை" காட்டினர். இவ்வழக்கில் தடுத்து வைக்கப்பட்டவரின் சார்பில் மனைவி அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்யமுடியாதென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மனைவிக்கு அத்தகுதிப்பாடு இல்லையென்பதாலேயே நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது.
இறந்தவரின் மனைவி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் உரிமை சார்ந்த" அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. நீதிமன்றம் சோமாவதியின் வழக்குக்கும் இந்த வழக்குக்குமிடையே காணப்பட்ட சிறப்பான வேற்றுமையை தெளிவுப்படுத்தியது. இவ்வழக்கில் தடுத்துவைக்கப்பட்டவர் தடுப்புக்காவலில் இறந்தமை தான் அந்த வேற்றுமை.
உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானமானது: “.தடுத்துவைக்கப்பட்டவர் இறந்தமையால் உரிமை தானாகவே முடிந்துவிட்டது என்றோ உரிமை செல்லுபடியற்றதாகி விட்டது என்றோ கொள்ளமுடியாது. இறந்தவர் தடுப்புக் காவலில் இருந்தபோது விளைவிக்கப்பட்ட உடற் காயங்களின் காரணமாகவே இறந்துள்ளார். காயம் விளைவிக்கப்பட்டமை அடிப்படை உரிமை மீறலாகும். சித்திரவதைக்கு உள்ளானவர் உயிர்தப்பி வாழும் சூழ்நிலையில் அவருக்கு நீதி கிடைக்கின்றது. சித்திரவதைக்கு உள்ளானவர் இறந்தால் அவருக்கு நீதி மறுக்கப்படலாம் என்பதை கவனத்திற்கொண்டே மனைவி மனுத் தாக் கல் செய்யலாம் என அனுமதிக் கசின் றோம் ." இவ்வியாக்கியானம் அளிக்கப்பட்டிருக்கவில்லையாயின் அநீதியாகும். ஆகையால் தான் அரசியலமைப்பின் உறுப்புரைகளுக்கு வியாக்கியானம் அளிக்கும் போது சொற்களுக்கான இலக்கண கருத்தை மட்டும் கவனத்திற்கெடுத்து ஆழமாகப் பார்க்கவேண்டும்.”
“.ஒரு நபரின் மரணத்துக்கும் அவரின் அடிப்படை உரிமை மீறப்பட்ட தொடர் நடவடிக்கைகளுக்கும் ஒரு சிறிய தொடர்பு இருந்தாலே போதும் அந் நபருக்கு சட்ட ரீதியான உறவுள்ள ஒருவர் மனுவை தாக்கல் செய்வது 126(2) இன் கீழ் அனுமதிக்கப்படுகின்றது.” பிரதிவாதிகளின் இரண்டாவது வாதம் காலம் தாழ்த்தி மனு திருத்தம் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் முதன்மை மனு உரிய காலத்துக்குள் தாக்கல் செய்யப்பட்டமையால்,
27. 1999 / 2 / SLRI 21
28. பெரும்பான்மை - நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தீர்ப்பினை வாசித்தார் பிரதம நீதியரசரும் ஏற்றுக் கொண்டார். நிதியரசர் எதிரிசூரியா ஏற்றுக்கொள்ளவில்லை
185

Page 100
மேற் கொள்ளப்பட்ட திருத்தமும் அக் காலத்துக் குள்ளேயே செய்யப்பட்டதாக கொள்ள வேண்டும்.
இந்த வழக்கினை பற்றி ஆராயும் போது ஆரம்பத்தில் நீதியரசர்கள் 2:1 என்ற பெரும்பான்மையில் தீர்ப்பு அளித்தார்களல்லவா? நீதியரசர் எதிரிசூரிய அவர்கள் பிரதிவாதிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனைகளை ஏற்றுக் கொண்டார். அவரின் விளக்கத்தை பார்ப்போம். முதலாவது, மனு உரிய காலத்துக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அரசியலமைப்பின் உறுப்புரை 126 இன் கீழ் மனு தாக்கல் செய்யப்பட்ட திகதி 18-07-2000 ஆகும். யாரின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதோ அவர் இறந்துவிட்டார். அவர் இறந்த படியால் இப்போது நீதிமன்றத்தின் விசாரணைக்காக மனு ஒன்று இருப்பதாக கொள்ள முடியாது. எனவே பூர்வாங்க ஆட்சேபனை ஏற்றுக் கொள்ளப்பட்டு மனு நிராகரிக்கப்பட வேண்டும். திருத்தப்பட்ட மனு பின்னர் 25-09-2000இல் தாக்கல் செய்யப்பட்டது. வேறு ஆளே மனுவைத் தாக்கல் செய்தார். இறந்தவரின் மனைவி சட்டரீதியான பிரதிநிதியாக மனுவை தாக்கல் செய்தார். இம்மனு 13-25-2000 புதிய மனுவாக தாக்கல் செய்யப்படுகிறது. இது காலம் தாழ்த்தியே செய்யப்பட்ட மனுவாகும்.
மனுதாரர் மனு தாக்கல் செய்ய தகுதி உண்டா? என்கிற விடயத்தில் நீதியரசர் எதிரிசூரிய அவர்களின் விளக்கத்தை பார்ப்போம். அரசியலமைப்பின் உறுப்புரை 126 (2) பின்வருமாறு மொழிகின்றது "யாராயினும் ஒரு நபர். தானே அல்லது ஒரு சட்டத்தரணி மூலமாக. உயர் நீதிமன்றத்துக்கு மனுவொன்றை சமர்ப்பிக் கலாம்’ இவ் வாக்கியங்கள் புலப் படுத்தும் அர்த்தம் தெளிவானது. அரசியலமைப்பின் ஏற்பாடுகளில் பொருத்தமின்மைகள் ஏதாவது இருக்குமாயின், அவற்றை உருவாக்கிய பாராளுமன்றமே திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எனினும் இறந்தவரின் உரிமைகள் அவரின் சார்பில் சட்டரீதியாக அவரின் மனைவிக்கு மாற்றப்படலாமா? என்கின்ற அம்சம் பற்றி நீதியரசர் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. -
இவ் வழக்கின் தீர்ப்பானது பல சுவாரசியமான சட்ட வியாக்கியானங்களைக் கொணர்ந்துள்ளது. சோமாவதி வழக்கிலிருந்து இவ்வழக்கு வேறுபட்டது. இவ்வழக்கில் தடுத்து வைக்கப்பட்டவர் பொலிஸ் பாதுகாப்பில் இறந்து விட்டார்.
அவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதனாலேயே இறந்தார். சித்திரவதை அடிப்படை உரிமை மீறலாகும்.
186

இத்தீர்ப்பானது பின்வரும் வினாக்களை உருவாக்கியுள்ளது. 0 தடுத்து வைக்கப்பட்டவர் தடுப்புகாவலில் சித்திரவதைக்குள்ளாகி
இறந்தால் மட்டுமே - இத்தீர்ப்பு பொருத்தமானதாக அமையுமா? 9 அப்படியானால் "தகுதி" என்ற சட்ட அம்சம் சோமவதி வழக்கின்
தீர்ப்புப் படி ஒரு பொது விதியாக கொள்ளப்படலாமா?
• அவ்வாறெனில் - மனைவி தாக்கல் செய்தால் மட்டும் இவ்வழக்கு விதிவிலக்காக அமையுமா? 0 அரசியலமைப்பில் மொழியப்பட்ட 'சட்டரீதியாக நலன் பேணும்
எவரேனும்” எனும் பதத்துக்கு பொருள் கோடல் எவ்வாறு? 0 இச்செற்றொடர் இறந்தவரில் தங்கி வாழ்பவர்களை மட்டும்
உள்ளடக்குமா? e இறந்தவரின் சார்பில் அவரின் சட்டரீதியான உரித்தாளர்கள் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்ய முடியுமா? 9 இவ்வழக்கின் தீர்ப்பின் மூலக்கருத்து “சித்திரவதை வழக்குகளுக்கு
மட்டும் பொருத்தமானதா? 9 அதற்கப்பால் பொருத்தமற்றதா?
இவ்வழக்கின் விசேட தன்மை காரணமாக "தகுதி" என்கின்ற சட்ட அம்சத்துக்கு நீதிமன்றம் கொடுத்த விளக்கம் விரிவானதாகும். இவ்வாறு விரிவுபடுத்தப்பட்ட விளக்கம் நீதி வழுவாதிருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது.
5. உறுப்புரை(11)இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்.
2002 ஆண்டு காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகள் கவனத்துக்குரியவை. இவை இரண்டும் பொலிஸ் பாதுகாப்பிலிருக்கும் போது பாலியல் வல்லுறவுக் குட்படுத்தப்பட்டமை தொடர்பான வழக்குகளாகும். நாட்டின் பாதுகாப்பு படைகள் மத்தியில் அரக்கத்தனம் எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளது என்பதை இவ்வழக்கு விசாரணைகள் படம் பிடித்துக் கட்டுகிறன.
வழக்கொன்றை பார்ப்போம்:
பெர்லிசாரின் வீதித் தடைமுகாமொன்றுக்கு? அருகாமையில் (கொழும்பில்) பாலியல் வல்லுறவுக்குட்பட்டதாகப் பெண்ணொருத்தி குற்றம் சாட்டுகிறார். முதலாவது பிரதிவாதி தனது வீட்டுக்கு
29. வேலு அரச தேவி எதிர் ரீ கமால் பிரியந்த பிரேமதிலக ரிசேவ்பொலிஸ், உயர்
நீதிமன்ற விண்ணப்ப இல 401/2002 உயர் நீதிமன்ற அறிக்கை 24.01, 2002
187

Page 101
அதிகாலை 3.00 மணியளவில் வந்தார் எனவும் மருதானை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு தன்னை பணித்தார் எனவும் அவர் பணித்தவாறு அவருடன் பொலிஸ் நிலையத்துக்கு வரும் வழியில் தம்மை பலாத்காரமாக வீதித் தடைமுகாமொன்றுக்கு அருகில் உள்ள ஒர் இடத்துக்கு கூட்டிச் சென்று தமது சகாக்களுடன் சேர்ந்து தம்மை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் எனவும் அப்பெண்மணி மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இவ் வழக்கு விசாரணையின் போது முதல் மூன்று பிரதிவாதிகளுக்கும்" எதிராக சட்டமா அதிபர் குற்றவியல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக அரச சட்டத்தரணி தெரிவித்தார். அடிப்படை உரிமை வழக்குளில் பிரதிவாதிகள் சார்பில் சட்டமா அதிபர் ஆஜராவதில்லை என்பது வழமையான நடைமுறையாகும்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு : குழுவொன்றினால் மனுதாரர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை வைத்திய அறிக்கைகள் மூலம் நிரூபிக்கப்பட்டது. மனுதாரரின் சுதந்திரம் சட்டவிரோதமாக மறுக்கப்பட்டது. நிறைவேற்று (பாதுகாப்பு படையினர்) துறையினரால் மனுதாரரின் அடிப்படை உரிமைகள் (உறுப்புரை 11, 13 (1)) பறிக்கப்பட்டுள்ளன. மனுதாரருக்கு அரசு நட்ட ஈடாக ரூபா. 150,000 வழங்க வேண்டும். அரசியலமைப்பு உறுப்புரை 11 இன் கீழ் உரிமைகள் மறுக்கப்பட்டது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தமையால் இத்தீர்ப்பில் விஷேட அம்சம் ஒன்று உண்டு. பாலியல் வல்லுறவு சித்திரவதைக்குச் சமமானது என்பதே அந்த விசேட அம்சமாகும்.
இரண்டாவது வழக்கை பார்ப்போம்:
வழக்கில் 27 வயது நிரம்பிய தமிழ் பெண்ணொருத்தி சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார். இவ்வழக்கில் வெளிப்படுத்தப்பட்ட சகிக்கமுடியாத வக்கிரத்தனம் கவனத்தை ஈர்க்கிறது. மானிட கெளரவம்" குழி தோண்டி புதைக்கப்பட்டதற்கு இவ்வழக்கு சான்றாகும். இப் பெண் பொலிஸ் குழு ஒன்றினால் கைது செய்யப்பட்டு நீள்கொழும்பு பொலிஸ் நிலையத்துக்கு கூட்டிச் செல்லப்பட்டார்.
30 பிரதிவாதிகளுக்கு எதிராக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது பற்றி
அறிவதற்கு உத்தியோக பூர்வமான செய்தி எதுவும் இல்லை.
31. யோகலிங்கம் விஜிதா எதிர் விஜயசேகர ரிசேவ் சப் இன்ஸ்பெக்டர் நீர் கொழும்பு பொலிஸ் உயர்நீதிமன்ற விண்ணப்ப இல 186/2001 (அ.உ) அறிக்கை 23.5.2002
188

(1) பொலிசார் சிவில் உடையில் வந்தனர் (2) மாலை 6.30 மணியளவில் கராஜ் ஒன்றில் கை கால் கட்டப்பட்ட நிலையில் விடப்பட்டார். இரவு 10.00 மணிவரை கராஜினுள் தடுத்து வைக்கப்பட்டார். இக்காலப்பகுதிக்குள் பொலிசார் அப்பெண்னை கடுமையாக விசாரித்தனர். அவள் ஒரு தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரி என குற்றம் சாட்டினர். அவளின் முழங்கால்கள், மார்பு, கீழ்வயிற்றுப்பகுதி, முதுகு ஆகிய இடங்களில் பொல்லால் பலமாக தாக்கினர். அவள் தாங்கொணா வேதனைக்கு உள்ளானாள். அதன் பின் அவளை நீர்கொழும்பு பொலிஸ் நிலைய அறை ஒன்றுக்குள் விட்டனர். மீண்டும் அவளை சித்திரவதை செய்தனர். பொலித்தீன் பையொன்றில் மிளகாய்த் தூளைப் போட்டு அதனை பெற்றோலில் நனைத்து அவளின் முகத்தை பொலித்தீன் பையால் மூடினர். அவள் முச்சு திணறினாள். அவளின், கால் நகங்களில் குண்டுசிகளை ஏற்றினர். அவளின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கினர். பொல், வயர் கொண்டு தாக்கினர். அவள் வேதனை தாங்காது கீழே விழுந்தாள். பொலிசார் சப்பாத்து கால்களால் ஏறி மிதித்தனர். கைகளை மேலே கட்டி அவளை தொங்க விட்டனர். அந்தரத்தில் தொங்கிய அவளை தாக்கினர். சில ஆவணங்களைக் காட்டி கையொப்பமிடுமாறு மிரட்டினர். அவள் மறுத்ததால் அவளை வாங்கொன்றில் படுக்கவைத்தனர். அவளது கால்கள் இரண்டையும் இழுத்து அகலமாக்கினர். அவளது பெண்ணுறுப்புக்குள் மிளகாய்த்துாள் பூசிய வாழைக்காயைத் திணித்தனர். 15 நிமிடத்துக்கு இவ்வாறு சித்திரவதை செய்தனர். சித்திரவதையை தாங்க முடியாது இறுதியில் அவள் ஆவணத்தில் கையொப்பமிட்டாள். அவளை வவுனியாவின் அனுமதிச்சீட்டு வழங்கும் பகுதிக்கு கூட்டிச் சென்றனர். அங்கு புலி உறுப்பினர்களை காட்டித்தருமாறு மிரட்டினர். அவள் மறுக்கவே இரக்கமற்ற முறையில் தாக்கினர்.
1ஆம் 2ஆம் 9ஆம் பிரதிவாதிகள்? சார்பில் பூர்வாங்க ஆட்சேபனையாக முன் வைக்கப்பட்ட வாதம்: 1. மனு காலம் தாழ்த்தி தாக்கல் செய்யப்பட்டது. 2. பயங்கரவாத விசாரணைப் பிரிவில் அவள் தடுப்புக் காவலில் இருக்கும் போது அவளின் சட்டத்தரணி அவளைப் பர்வையிட்டு பேசினார். ஆகையால் அவள் குறிப்பிட்ட காலத்துக்குள் மனுவை தாக்கல் செய்திருக்க வேண்டும்.
32. 1ம் பிரதிவாதி, றிசேவ் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர், 2ம் பிரதிவாதி தலைமைக் காரியாலய இன்ஸ்பெக்டர், 9ம் பிரதிவாதி, பொலிஸ் இன்ஸ்பெக்டர், நீர் கொழும்பு பொலிஸ் நிலையம்.
189

Page 102
3ஆம் பிரதிவாதியின் சார்பில் முன் வைக்கப்பட்ட வாதம்:
1. மனுதாரரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது அவளின்
சட்டத்தரணி அவளின் சார்பில் நீதிமன்றில் தோன்றினார்
2. அத்தினத்தில் இருந்து 1 மாத காலத்துக்குள் மனு தாக்கல்
செய்யப்பட்டிருக்க வேண்டும்
இரண்டு ஆட்சேபனைகளும் ஒரு அடிப்படையை கொண்டிருந்தன. அதாவது அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் மனு உரிய காலப்பகுதிக்குள் தாக்கல் செய்யப்படவில்லை என்பதேயாகும்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
பழைய இரண்டு வழக்குகளின் தீர்ப்புகளை குறிப்பிட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மனுதாரர் தடுப்புக் காவலில் இருக்கும்போது சட்டத்தரணி அவரை சந்தித்தார். பின்னர் நீதவான் நீதிமன்றில் ஆஜரானார். எனினும் மனுதாரர் சுதந்திரமாகச் செயற்படும் நிலையில் இருக்கவில்லை. சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை பெற்ற பின்னரே சுதந்திரமாக செயற்படும் மனோநிலையில் இருந்தார். எனவே மனு "காலம் தாழ்த்தப்பட்டது” என்ற ஆட்சேபனை நிராகரிக்கப்படுகிறது. பொலிசாரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையும், பிரதிப் பொலிஸ் மா அதிபரால் பிறப்பிக்கப்பட்ட கைதுக்கானதும் தடுப்புக்காவலுக்குமான கட்டளையும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளன. கைதுக்கும் தடுப்புக் காவலுக்குமான காரணங்களை பிரதிவாதிகள் நியாயபூர்வமாக சமர்ப்பிக்கவில்லை.
மனுதாரரின் குற்றச்சாட்டுகள் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. மனுதாரர் மனோநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் மனநோய் வைத்திய நிபுணரின் அறிக்கை கூறுகின்றது. பெண் நோயியல் நிபுணரின் அறிக்கையும் மனுதாரரின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கின்றது.
மனுதாரர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கடும் சித்திர வதைக்குள்ளாக்கப்பட்டார் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கின்றது. நட்டஈடாக ரூ 250,000/- வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ரூ150,000/- பிரதிவாதிகளின் சொந்தப்பணத்திலிருந்து செலுத்தப்பட வேண்டுமென்றும் மிகுதி 100,000/- அரசால் செலுத்தப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்டது.
190

6. மனச்சாட்சிக்கான உரிமை
அன்ஜலின் ரோசனா எதிர் நாரன்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கவனத்திற் கொள்ளத்தக்கது. பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது நடைபெற்ற சித்திரவதை தொடர்பான தீர்ப்பில் உயர் நீதிமன்றம் மனசாட்சிக்கான உரிமை என்கின்ற அம்சத்தையும் கருத்தில் எடுத்துள்ளது.
மனுதாரரின் குற்றச்சாட்டுகள்.
(1) சித்திரவதை,
(2) சட்டவிரோதகைது,
(3) சட்டவிரோத தடுப்புக் காவல்
நாரன்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது. தமது வீட்டில் பணியாளாக வேலை செய்த மனுதாரர் தங்க கைக்கடிகாரத்தை களவாடி விட்டார் என முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டாளரின் முறைப்பாட்டை அடுத்து மனுதாரர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
உயர் நீதிமன்ற தீர்ப்பு
பொலிசார் கைது செய்து 2 நாட்களுக்கு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். 2 நாட்களுக்கு பின்னரே நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர் என்பதை சாட்சியம் நிரூபிக்கிறது. பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டபோது மனுதாரர் சித்திரவதைக்குள்ளாக்கபட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள உடற் காயங்களையும் நீதவானுக்கு காட்டினார். சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும் சமர்பிக்கப்பட்டது. தட்டையான பொருள் ஒன்றினால் தாக்கியமையால் ஏற்பட்டுள்ள காயங்கள் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்டவை என அறிக்கை கூறியது.
மனுதாரரின் குற்றச்சாட்டுகளை வைத்திய அறிக்கையும் மனுதாரரின் தாய், தந்தை, சகோதரி, அயல்வீட்டுக்காரரின் சத்தியக் கூற்றுகளும் நிரூபிக்கின்றன.
33. உயர் நீதிமன்றம் விண்ணப்ப இல 1/2001 (அ.உ) உயர் நீதிமன்ற
அறிக்கை 02/ 08/ 2002
191

Page 103
இவ்வழக்கில் 1ஆம் பிரதிவாதி சார்பில் முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனையைப் பார்ப்போம். 1. சத்தியகூற்று அறிக்கையில் குறைபாடு உண்டு 2. சத்திய கூற்று வாசகம்: “உண்மையாகவும் நேர்மையாகவும் சத்தியமாகவும் சத்தியம் செய்து பிரகடனப் படுத்துவதாவது- நான் தான் குறிப்பிட்ட பிரகடனத்தை வெளிப்படுத்துகிறேன்” என்று கூறுகிறது. 3. சத்திய அறிக்கை முடிவில் வரும் பந்தியானது "நான் பிரகடனத்தை வாசித்து விளங்கி சத்தியம் செய்து 31.12.2000 ஆம் திகதியில் ஒப்பமிடுகிறேன்” என்பதாகும். 4. ஒருவர் சத்தியம் செய்பவராகவும், பிரகடனம் செய்பவராகவும்
இருக்க முடியாது. 5. தாம் சத்தியம் செய்த பின் தம்மை பிரகடனப்படுத்துபவராக
கூறுவது முரண்பாடானதாகும். 6. சத்திய அறிக்கை முடிவுப் பந்தி சத்திய ஆணையாளரின்
வாசகத்தை கொண்டிருக்கும். 7. இங்கு மனுதாரரே முடிவுப் பந்தியில் நான்’ என்று குறிப்பிடுகிறார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
சிவில் நடைமுறைக்கோவை 181, 438 (இல 2-1889 இல் திருத்தப்பட்ட வாறு) இன் பிரகாரம் சத்தியக் கூற்றை செய்பவர் சத்தியம் செய்து வெளிப்படுத்துவார் என கூறப்பட்டாலும், அவரைப் பிரகடனப்படுத்துபவர் என கூறுவது தவறல்ல.
".சத்திய கூற்றை வெளிப்படுத்துபவர் தாம் சத்தியக் கூற்றை முறைப் படி செய்வதாக விசுவாசமாக நம் பரிக் கொண்டே வெளிப்படுத்துகிறார். எனினும் வெளிப்படுத்துகை மட்டுமே வலுவுள்ள சத்திய கூற்றை உருவாக்கமுடியாது. அதே நேரம் சத்தியம் செய்து வெளிப்படுத்தும் ஒரு சத்திய கூற்றானது 'பிரகடனப்படுத்துகிறேன்” என்ற பதத்தை சேர்ப்பதன் மூலம் வலுவிழக்கமாட்டாது. எனவே மனுதாரர் “பிரகடனப்படுத்துபவர்’ என கூறியிருப்பதால் சத்திய ஆணையை அது செல்லுபடியற்றதாக்கவில்லை.”
சத்தியகூற்றின் முடிவுப்பந்தியில் குறைபாடுண்டு. ஆனால் சத்திய பிரமாண ஆணையாளர் தமக்கு முன்னிலையில் மனுதாரர் ஒப்பமிட்டுள்ளார் என சான்றுபடுத்துவதால் சத்திய கூற்று அவர் முன்னிலையில் ஒப்பமிடப்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. "..எனவே சத்திய கூற்று செல்லுபடியானதாகும். சத்திய கூற்றில் தவறுள்ளது, அதனை திருத்தப் போகிறோம் என மனுதாரர் தரப்பு கோரியிருந்தால் அதற்கு அனுமதித்திருப்போம் என உயர் நீதிமன்றம் மேலும் கூறியது.
192

இவ்வழக்கில் மனச்சாட்சிக்கான உரிமை என்னும் அம்சம் பின்வருமாறு உயர் நீதிமன்றத்தால் கூறப்படுகின்றது.
ஒருவர் சத்தியம் செய்து வெளிப்படுத்துவது தான் சத்தியக் கூற்று என்று கருதிவிடமுடியாது. அவர் தாம் சத்தியம் செய்வதை மனச்சாட்சி ரீதியாக ஏற்றுக்கொள்ளவில்லை எனில் அவரின் சத்திய கூற்று உண்மையான சத்தியக் கூற்றாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இங்கு மனுதாரர் தாம் மனச்சாட்சிப்படி விசுவாசமாக சத்திய கூற்று செய்வதாக நம்பினார்."
7. சித்திரவதை
பாலியல் வல்லுறவு வழக்குகள் ஆராயப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக சித்திரவதை வழக்குகளும் ஆராயப்பட்டுள்ளன.
ரோகன சந்திரகுமார W பெலிய கொட பொலிஸ் பொறுப்பதிகாரி வழக்கை பார்போம்.
இவ்வழக்கில் தாம் சித்திரவதைக்குள்ளானதாகவும் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகவும்" மனுதாரர் முறையிட்டுள்ளார். உயர் நீதிமன்றம் உறுப்புரை 11, 13(1)இன் கீழ் வழக்கை தொடர்ந்து நடாத்த அனுமதியளித்தது.
1ஆம், 3ஆம், 4ஆம், பிரதிவாதிகளால் முன்வைக்கபப்ட்ட வாதங்கள்
1. மனுதாரரின் உடற் காயங்களுக்கான காரணம் அவர்
உயரத்திலிருந்து வீழ்ந்தமையாகும். 2. நாம் கைது செய்ய வரும் போது எங்களிடமிருந்து தப்பும்
எண்ணத்தில் ஒடிய போதே வீழ்ந்தார்.
34. உறுப்புரை 10 (அரசியலமைப்பு) ல் கூறப்பட்ட கருத்துக்களை உயர் நீதிமன்றம் கவனத்திற்கெடுத்ததா என்பது பற்றி தெளிவில்லை. உறுப்புரை 10 - சிந்திப்பதற்கான சுதந்திரம், மனச்சாட்சிப்படி நடப்பதற்கான சுதந்திரம், தான் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம், என்பனவற்றை உறுதிப்படுத்துகின்றது.
35. உயர் நீதிமன்ற விண்ணப்ப இல 681/2000 (அ.உ) உயர் நீதிமன்ற
அறிக்கை 5.6.2002
36. 2.11.2000ம் திகதி 1ம் 3ம் 4ம் பிரதிவாதிகள் ஆட்டோவில் வந்து தன்னைக் கைது செய்ததாக மனுதாரர் தெரிவித்தார். அதன் பின் பொலிஸ் ஜீப்பில் ஏற்றி கண்களைக் கட்டினார்கள். பேலியாகொட பொலிஸ் நிலையத்துக்கும், பின்னர் மீகாவத்த பொலிஸ் நிலையத்துக்கும் கூட்டிச் சென்றார்கள் செல்லும் போது வழியில் வாகனத்தின் ஆசனத்தின் கீழ் பகுதியில் படுக்குமாறு கூறினர். மீகாவத்தை பொலிஸ் நிலையத்தில் நிர்வாணமாக்கி தலைகீழாக தொங்கவிட்டு பட்டன பொல்லுகளால் பலமாக அடித்தனர். இதன் காரணமாக வலது காலில் காயமேற்பட்டது. திரும்பவும் போலியாகொட பொலிஸ் நிலையத்துக்கு 03.11.2000 அன்று கூட்டிச் சென்றனர்.
1οα

Page 104
நீதிமன்றத்தின் தீர்ப்பு 1, 1 ஆம் பிரதிவாதியின் குறிப்புப் புத்தகத்தில் மனுதாரர்
வீழ்ந்தமை பற்றி ஏதுமில்லை 2. பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் குறிப்பு புத்தகத்தில் தாம் மனுதாரரின் காலில் பட்டன் பொல்லால் அடித்தாகவும், மனுதாரரை மடக்கிப்பிடித்து பின்னர் அவரின் கையிலிருந்த கைக்குண்டைப் பறிப்பதற்காகவே அடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மனுதாரரின் வலது முழங்கால் சில்லு பாதிக்கப்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கை கூறுகிறது. மனுதாரர் விழுந்து காயம் ஏற்பட்டிருந்தால் அவரை மடக்கிப் பிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. நிகழ்தகவின் அடிப்படையில் முழங்கால் காயம் 1ஆம் பிரதிவாதியினாலேயே ஏற்பட்டது தெளிவாகின்றது. எனினும் 13 (1) இன் கீழ் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டதாக ஏற்றுக் கொள்ளமுடியாது. கைது செய்யும்போது அதற்கான காரணம் மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டதனால் 13 (1) மீறப்பட்டதாக ஏற்றுக் கொள்ளமுடியாது.
நில் றுாக் W வவுனியா இராணுவ பொலிஸ் கட்டளையிடும் அதிகாரி" வழக்கைப் பார்ப்போம் :- மகளின் சார்பில் தாய் மனுத்தாக்கல் செய்கிறார். மனுதாரரின் முறைப்பாடு:-
தமது மகளான நிலுசா கேமாலியை சித்திரவதைக்குள்ளாக்கி
மனிதாபிமானமற்ற, தரக்குறைவான முறையில் கேவலமாக நடத்தியமைக்காக மகளின் அடிப்படை உரிமைகளை பிரதிவாதிகள் மீறிவிட்டனர்.
37. உ. நீ விண்ணப்பம் இல. 691/2000, உ. நீ குறிப்புகள் 04.06.2002
38. தனது மகள் இராணுவத்தில் லான்ஸ் கோப்ரல் ஆக கடமையாற்றினார் என மனுதாரர் தெரிவித்தார். மதவாச்சி இராணுவ முகாமில் இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டாள் எனவும் தாம் 8.12.2000ம் திகதி அனுராதபுரம் இராணுவமுகாமுக்கு சென்ற போது தனது மகளை மதவாச்சி முகாமுக்கு அனுப்பியதாக கூறினார்கள். அவளிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு அங்கு அனுப்பியதாக கூறினார்கள். மதவாச்சி முகாமில் சந்திக்க முடியவில்லை. அவர் மீண்டும் அவருடைய சகோதரி மைத்துனர் சகிதம் அனுரதபுர முகாமுக்கு சென்றார். அங்கே மகளை சந்தித்தனர். மதவாச்சிமுகாமில் 3456ம் பிரதிவாதிகள் தம்மை கடுமையாக அடித்து தாக்கியதாக மகள் நிலுசா தெரிவித்தாள். யன்னலொன்றுடன் இணைத்துக் கட்டி சப்பாத்துக்கால்களால் உதைத்ததாக தெரிவித்தாள். 9.12.2000ம் திகதி 1ம் பிரதிவாதி ஒரு வாக்கு மூலத்தைக் காட்டி அதில் கையொப்பமிடுமாறு மிரட்டினார். மகள் மறுத்தாள் 1ம் பிரதிவாதி மகளின் கால்கள் கைகள் முதுகு பகுதிகளில் இரும்புக் கம்பியால் தாக்கினார். கூரான ஆயுதமொன்றால் கைகளை தாக்கினார். இராணுவ வீரர்களுக்கு கொடுக்கப்படும் கடுமையான பயிற்ச்சிகளை செய்யுமாறும் பணித்தனர் பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள்.
194

நீதிமன்றத்தின் தீர்ப்பும் விளக்கமும்
கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் கேமாலியை வைத்திய நிபுணர் பார்வையிட்டுள்ளனர். மனுவில் கூறப்பட்ட முறைப்பாடான சித்திரவதை பற்றி வைத்திய அறிக்கை நிரூபிக்கின்றது. இச்சித்திரவதை மதவாச்சி முகாமில் நிகழ்ந்துள்ளது.
நிலுசா இழைத்த குற்றம் என்னவென்று பிரதிவாதிகள் நிலுசாவை கைது செய்யும்போது தெரிவிக்கவில்லை. உறுப்புரை 11இன் பிரகாரம் மனுதாரரின் உரிமையை பிரதிவாதிகள் மீறிவிட்டனர்.
மனுதாரருக்கு ரூ25000 நட்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்குச் செலவாக ரூ5000 செலுத்தவும் உத்தரவிட்டது.
டொன் சிறிபாலா V பொலீஸ் சப் இன் ஸ்பெக்டர் நந்தன விஜயசிங்க வழக்கைப்” பார்ப்போம்.
முறைப்பாட்டாளர் டொன் சிறிபாலா சமய தொழிலாளியாக வேலை செய்தார். அவர் மதுகம பொலிஸ் நிலைய உத்தியோகத்தரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டார். பொலிஸ் நிலையத்தில் அவரின் உடைகளை அகற்றி கண்களைக்கட்டி இரும்புக்கம்பியால் தாக்கினர். கட்டிலொன்றின் முன்னோரத்தில் உட்காரவைத்து பலமாகத் தாக்கினர். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்திய அறிக்கைகளின் படி அவருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டதாக தெரியவந்தது. அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கை எலும்பு முறிந்தபடியால் உலோக தகடுகள் பொருத்தப்பட்டன.
மனுதாரரை கைது செய்யும் போது அவர் திமிறி ஒட முயன்றதாலேயே அவரை மடக் குவதற்கு U6) is பிரயோகிக்கப்பட்டபோது காயங்கள் ஏற்பட்டதாக பிரதிவாதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு
மனுதாரருக்கு ஏற்பட்ட காயங்கள் முழுவதும் கைது செய்யும்
வேளையில் ஏற்பட்டிருக்க முடியாது. அவர் சித் திரவதைக் குள்ளாக்கப்பட்டார் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.
39. உயர் நீதிமன்ற விண்ணப்ப இல 213/2001 (அ.உ) உயர்நீதிமன்ற அறிக்கை
3.15.2OO2
195

Page 105
8. அவசரகால சட்ட விதிகள்
மாணிக் கம் V திருக் கோவில் அதிரடிப் படை முகாம் பொறுப்பதிகாரி வழக்கைப்" பார்ப்போம்.
மனுதாரரின் மனு:-
தாம் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகவும் , தடுத்துவைக்கப்பட்டதாகவும், பொலிஸ் பாதுகாப்பிலிருக்கும் போது" கடுமையாக தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மனுதாரரின் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதம் :-
கைது செய்யப்பட்டு 3 மாதங்களுக்குப் பின்னரே பொலிஸ்காரர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள்.
2 ஆவது பிரதிவாதி தரப்பில் கூறப்பட்டது.
தடுப்புக்காவலில் இருக்கும்போது மனதாரர் தாக்கப்படவில்லை. மனுதாரர் தாமே தமக்கு காயங்களை விளைவித்துள்ளார். தடுப்புக் காவலிருந்து வெளியேறுவதற்காகவே இவ்வாறு தெரிவித்தார். .
உயர் நீதிமன்றத்தின் விளக்கமும் திரப்பும்
1. மனுதாரரின் கைது சட்டவிரோதமானதல்ல, அவர் கைது செய்யப்படுவதற்கான காரணங்கள் அவருக்கு தெரிவிக்கப்பட்டன.
40. உயர் நீதிமன்ற விண்ணப்ப இல 09/2002 (அ.உ) உயர்நீதிமன்ற குறிப்புகள்
16.09.2OO2
41. மனுதாரர், திருக்கோவில் அதிரடிப்படை முகாமைச் சோதித்த அதிகாரி 7.2.2001ம் திகதி தம்மை கைது செயததாக மனுவில் தெரிவித்தார். கைது செய்து அம்பாறை அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி (2ம் பிரதிவாதி)யிடம் கையளித்தார். 7.5.2001 திகதி வரை அம்பாறை முகாமில் தடுத்து வைத்தனர். அம்பாறை முகாமில் 92.2001 இலிருந்து 7.5.2001 வரை விசாரித்தனர். விசாரிக்கும் போது கைகளில் விலங்கிட்டு, தடிகளால் தாக்கி, சிகரெட்டால் உடலில் சுட்டு எரிக்காயங்களை ஏற்படுத்தினர். இரு தடவைகள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். தாம் அம்பாறை முகாமில் தடுத்து வைக்கப்பட்டபோது கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதாக மனுதாரர் 2ம் தடவை நீதவானிடம் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவானுக்கு முறையிட்டார். நீதவானின் கட்டளைப்படி சட்ட வைத்திய அதிகாரி தம்மை 7.5.2001ம் திகதி பரிசோதித்ததாக மனுதாரர் தெரிவித்தார்.
196

2. மனுதாரர் 90 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இதனை நியாயப்படுத்த 2ஆவது பிரதிவாதி 19(2) அவசரகால சட்டவிதிகள், 2000/1 விதியின் கீழுள்ள பிரிவினையும் ஆதாரம் காட்டுகின்றார்.
3. உறுப்புரை 19(2) யாரையாவது தடுத்துவைத்திருப்பதற்கு அதிகாரம் வழங்குகின்றது. உறுப்புரை(18) ஆகக் கூடுதலாக 90 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கு அதிகாரமளிக்கிறது. ஆனால் ஒரு சந்தேக நபர் கண்டிப்பாக 90 நாட்களுக்கு தடுத்து வைக்கவேண்டும் என்பது சட்டவிதியல்ல. உறுப்புரை 19 இன் கீழ் ஒரு சந்தேக நபரை தடுத்து வைப்பது மேலதிக விசா ரணைக்காக மட்டுமே ஆகும். விசாரணை இயன்ற மட்டில் தாமதமின்றி விரைவாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். விசாரணை முடிவில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். அன்றேல் அவரை விடுதலை செய்ய வேண்டும்.
4. இரண்டாவது பிரதிவாதி மனுதாரரை தேவையற்ற முறையில்,
போதிய காரணமின்றி தடுப்புக்காவலில் வைத்துள்ளார்.
5. இதனால் 13(2) இல் உத்தரவாதப் படுத்தப்பட்ட அடிப்படை
உரிமைகள் மீற்பபட்டுள்ளன.
6. மனுதாரர் தாமே தமக்கு காயங்களை விளைவித்தார் என பிரதிவாதி சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை நீதிமன்றம் நிராகரிக்கப்படுகிறது. இரண்டாவது பிரதிவாதியின் மேற்பார்வையின் கீழ் மனுதாரர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும். எரிகாயங்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும். கூறப்படும் மனுதாரரின் குற்றச் சாட் டு மருத் துவ அத காரி அறிக் கை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அபேரத்ன பண்டா V கீர்த்தி கஜநாயக சிஐடி பணிப்பாளர் மற்றும் ஏனையவர்கள்* வழக்கைப் பார்ப்போம்.
மனுதாரர் அரசாங்க (சிவில்) உத்தியோகத்தர். பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமுக்கு பொறுப்பதிகாரி. முகாமுக்குள் தடுத்து வைக்கப்பட்டு இருந்தவர்கள் 3 மாத புனர் வாழ்வு நிகழ்ச்சி திட்டம் முடிவடைந்தபடியால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என பொறுப்பதிகாரியைக் கோரினர். இதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாக பொறுப்பதிகாரி உறுதியளித்தார் எனினும் முகாமுக்குள்ளிருந்தோர்
42. உயர் நீதிமன்ற விண்ணப்ப இல 653/2000 (அ.உ) உயர்நீதிமன்ற குறிப்புகள்
O2.08.20O2
197

Page 106
தம்மை விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. பிந்துனுவெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும், இராணுவமும் கலவரத்தை தணித்து அமைதியை ஏற்படுத்துவதற்காக விஜயம் செய்தனர். நிலைமை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இராணுவம் வெளியேறியது. பொலிசார் அன்றிரவு காவல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மறுநாள் காலை 7.30 மணியளவில் காடையர் கூட்டமொன்று முகாமுக்குள் இருந்தவர்களுக்கும் பொறுப்பதிகாரிக்கும் எதிரான கோசங்களை கத்திக்கொண்டு முகாமுக்கு முன்னால் கூடியது. காலை 8.15 மணியளவில் 2000 பேர் கொண்ட அக்கும்பலானது ஆயுதங்கள் சகிதம் (பொல்லு, வாள், கோடாலி. துப்பாக்கி ) முகாமுக்குள் அத்துமீறி நுழைந்து உள்ளிருந்தோரைத் தாக்கியது. இச்செயலை தடுத்து நிறுத்த பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை. தாக்குதல் ஆரம்பித்து சொற்ப நேரத்தில் முகாமிலிருந்த 24 பேர் கொடுரமான முறையில் கொல்லப்பட்டனர். 26.10.2002 ம் திகதி 1 ஆம் ,2ஆம் ,3ஆம் பிரதிவாதிகள் இச் சம்பவம் பற்றி பொறுப்பதிகாரியை விசாரணை செய்தனர். பின்னர் சி.ஐ.டி ஜிப்பில் பொறுப்பதிகாரியை ஏற்றிகொண்டு சி.ஐ.டி 4ஆம் மாடிக்கு கூட்டிச் சென்றனர். அங்கு மீண்டும் அவரின் வாக்கு மூலத்தை பதிவு செய்தனர். அவரை தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்தனர் 21.03.2001இல் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
3ஆம் பிரதிவாதி தமது குறிப்புப் புத்தகத்தில் மனுதாரரை கைது செய்தமைக்கான காரணங்களை குறித்து வைத்தார்.
சிங்கள தமிழ் இனங்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்த மனுதாரர் முனைந்தார் என்றும் இதன் மூலம் அவசரகால சட்டவிதிகள் 24(1) (3) 26 (ய (உஉ)) ஆகியவற்றை மீறியுள்ளார் என்றும் குறிப்பெழுதியுள்ளார். எனினும் மனுதாரரை பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்துக்கு கூட்டிச் செல்லவில்லை. மாறாக கொழும்புக்கு கூட்டிச் சென்றுள்ளனர்.
பிரதிவாதிகளின் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதம்
மேற்படி விதிகளை மீறியதால் மனுதாரர் கைதுசெய்யப்பட வேண்டியவர் எனவும் தமது கடமைகளை செய்ய தவறிவிட்டாரென்றும் அவர் பொலிஸ் நடவடிக்கை எடுக்காதது சட்டவிரோதமானது, என தெரிந்திருந்தும் பொலிசாரை கொண்டு கலவரத்தை அடக்க தவறி விட்டார் எனவும் இதனால் பொறுப்பதிகாரி குற்றம் இழைத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
198

உயர்நீதிமன்ற விளக்கமும் தீர்ப்பும்
ஒரு பொறுப்பதிகாரியின் உத்தியோக பூர்வ கடமை முகாமை நிர்வகப் பது LDL (6 (3LD. முகாமரின் பாதுகாப்பும் , முகாமுக்குள்ளிருந்தோரின் பாதுகாப்பும் அவரின் கடமைக்கு உட்பட்டதல்ல. முகாமில் பொலிஸ் நிலைய பிரிவு ஒன்றும் இயங்கி வந்தது. முகாமின் பாதுகாப்புப் பொறுப்பு பண்டாரவளை பொலிசைச் சார்ந்தது. பொலிசுக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் மனுதாரருக்கு இல்லை. எவ்வாறு அவர் பொலிசாருக்கு கட்டளை இடுவது? எனினும் கும்பலின் கோரச் செயலை தடுத்து நிறுத்துமாறு பொலிசாரை மன்றாடிக் கேட்டார். அவர் ஆயுதம் தாங்கிய உத்தியோகத்தரல்ல. அவரின் உயிருக்குக் கூட ஓரளவு ஆபத்து இருந்தும் கலைந்து செல்லுமாறு கும்பலிடம் கேட்டார். முகாமுக்குள் இருந்தோருக்கு தீங்கிழைக்க வேண்டாம் என மன்றாடினார். இரண்டாம் பிரதிவாதி மனுதாரரை கைது செய்வதற்கான காரணங்களை குறிப்பெழுதியுள்ளார். நீதிமன்றத்தில் வேறு காரணங்களை கூறுகின்றார்.
நம்பத் தகுந்த தகவலின் அடிப்படையில் அல்லது நியாயமான சந்தேகத்தின் அடிப்படையிலேயே ஒருவரை கைது செய்ய முடியும். வெறுமனே விசாரணைக்காக ஒருவரை கைது செய்ய முடியாது. கைது செய்த பின்னர் அவருக்கு எதிராக சாட்சியங்களை தேடுவது சரியல்ல.
அவசர கால சட்டவிதி 18(1) இன் கீழ் கைது செய்யப்பட்டவர் 18(2) இன் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். கைது செய்யப்பட்டு 24 மணித்தியாலயங்களுக்குள் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டவர் கையளிக்கப்படவேண்டும்.
அவசர கால சட்ட விதி 19(1) இன் பிரயோகத்தால் குற்றவியல் நடைமுறைக் கோவையின் 36, 37, 38 பிரிவுகள் செயலற்றுப் போகின்றன.
எனினும் அவரகால சட்ட விதி 18இன் கீழ் கைது செய்யப்பட்டவர் குறிப்பிட்ட காலத்திற்குள் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
199

Page 107
6. சி.ஐ.டி யினர் அவ்வாறு செய்ய தவறி விட்டனர்
7. சி.ஐ.டி யினர் மனுதாரரை பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில்
கையளிக்க தவறிவிட்டனர்.
8. பண்டாரவளை நீதவான் முன்னிலையில் மனுதாரரை ஆஜர் செய்வதை தடுக்கும் காரணிகள் ஏதும் இருக்குமானால் சி.ஐ.டி. அவற்றை தெரிவித்து இருந்தால் சி.ஐ.டி. யின் செயலை நியாயப்படுத்தக் கூடியதாக இருந்திருக்கும்.
9. அவசரகால சட்ட விதி 18 இன் கீழ் முறையாக கைது செய்யப்பட்டவர் மாத்திரம் சட்ட விதி(19)இன் கீழ் தடுத்து வைக்கப்படலாம். விதியை மீறியோ அல்லது குற்றம் சோடிக்கப்பட்ட முறையிலோ கைது செய்ய்பட்ட ஒருவரை அவசரகால சட்ட விதி 19(2) இன் கீழ் தடுத்து வைக்கமுடியாது.
10. மனுதாரருக்கு எதிரான ஒரு தடயம் பிரதிவாதியிடம் இருக்குமானால் அது மனுதாரரிடம் பெற்ற முறைப்பாடு மாத்திரமே. அந்த முறைப்பாடு மனுதாரர் குற்றச்செயல் புரிநதுள்ளார் என்பதற்கு போதுமான ஆதாரமல்ல.
11. இழைத்ததாக கூறப்படும் குற்றங்களை விசாரிப்பதற்காகவே ஒருவரை தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கு அவசரகால சட்ட விதி 19(2) அதிகாரமளிக்கிறது. எந்த குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டாரோ, அதனை விசாரிப்பதற்குத் தான் தடுத்து வைக்கப்பட முடியும், வேறு குற்றங்களை விசாரிப்பதற்கல்ல.
9. முடிவுரை
2001 ஆண்டு காலப் பகுதிக்குள் பல சிறப்பான தீர்ப்புகள் அளிக் கப்பட்டன. உறுப் புரை 12(1) இன் கீழ் தீர்ப்புகள் வழங்கப்பட்டமைக்கு மேலாக சிறப்பான தீர்ப்புகள் அளிக்கப்பட்டன. தடுப்பு காவலில் இறந்தவரின் மனைவிக்கு கணவரின் சட்டரீதியான பிரதிநிதியாக மனுதாக்கல் செய்ய அனுமதித்தமை அடிப்படை உரிமைகள் நியாயாதிக்க பரப்புக்குள் மிகச் சிறந்த தீர்ப்பாக கருதப்படுகின்றது அரசியலமைப்பின் உத்தரவாதப்படுத்தப்பட்ட

அடிப்படை உரிமைகளை பாதுகாத்தல், மேம்படுத்துதல் என்கின்ற சிறந்த அம்சங் கள் எந்த நோக்கத் திற்காக அரசியலமைப் பரில் உள்ளடக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை உயர் நீதிமன்றம் பேணிப் பாதுகாப்பது வரவேற்கத் தக்கதாகும். வேறு பல நீதித் தீர்ப்புகளையும் அவதானிக்க முடியும, சிவில் சுதந்திரங்களை பாதிக்கும் சட்டங்களுக்கான பொருள் கோடலில் உயர் நீதிமன்றம் புதிய எல்லைகளை வகுக்க விளைகின்றது. எமது நாட்டுச் சட்டங்களில் “கடுமையானது" எனக் கருதப்படும் சட்டங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன. பயங்கரவாத தடைச்சட்டம் அவ்வாறானதொரு சட்டமாகும். எனவே பிரஜைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அவ்வாறான சட்டங்களுக்கு சிறந்த பொருள் கோடல் அளிப்பது உயர் நீதி மன்றத்தை சார்ந்ததாகும். அளிக்கப்பட்ட விளக்கங்கள் நீதித்துறையில் ஏற்பட்டுள்ள புதிய சிந்தனையை காட்டுகின்றன.
பொலிஸ் பாதுகாப்பில் புரியப்பட்ட பாலியல் வல்லுறவுகள் பெண்களின் கெளரவம், மானம், ஆகியவை எவ்வளவு தூரம் மதிக்கப் படுகின்றன என்பதை படம்பிடித்துக் காட்டுகின்றன. பொலிஸ் வீதித் தடைக்கு அருகாமையில் பெண்ணொருத்தி பாலியல் வல்லுறவுக்குட் படுத்தப்பட்டமை இலங்கையில் பெண்களின் பாதுகாப்பு எவ்வாறு இருக்கின்றது என்பது பற்றிய கவனத்தை ஈர்த்துள்ளது.
பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக் கப்பட்டவர்கள் சித்திரவதைக்குள்ளான சம்பவங்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். சமுதாயம் இவர்களை கடுமையாக சாட வேண்டும். பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக் காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பொருத்தமான இடங்களில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும். கூறப்பட்ட சம்பவங்கள் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வக்கிர மனநிலையை அறியமுடிகிறது.
மனித உரிமைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை பாதுகாப்புப் பிரிவினர்களுக்கு கற்பிப்பது இன்றியமையாததாகும். அதுமட்டுமல்ல பெண்கள், சிறுவர்கள் போன்ற சமுதாயத்திலுள்ள பலவீனமானவர்கள் மீது இரக்கம் காட்டும் பக்குவம் உருவாக வேண்டும். சாதாரண மக்களை வெறுப்புடன் பார்க்கும் பார்வையை அகற்றுவதற்கு மக்களுக்கும் பாதுகாப்புப் பிரிவினர்களுக்கும் இடையில் நெருங்கிய உறவினைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.
Nያ8ረ ck O
201

Page 108
V
மறியற்காரர்களுக்கான உரிமைகள்
எச்.ஜி.தர்மதாச"
1. முன்னுரை
மறியற்சாலைகள் பன்னெடுங் காலமாக இருந்து வந்துள்ளன. விவிலிய நூல் மறியற்சாலைகள் பற்றியும் மறியற்காரர்கள் பற்றியும் மறியற்சாலைக் காவலாளிகள் பற்றியும் குறிப்பிடுகின்றது. ஹெறொட் மன்னன் பப்திஸ்த ஜோன் அவர்களை மறியலில் வைத்திருந்து பின்னர் மறியலிலேயே சிரச்சேதம் செய்ததாகத் தெரிகிறது. (மத்தேயு 14). ஜூத மதத் தலைவர்கள் யேசுநாதரை றோம மகாதேசாதிபதி
சட்டத்தரணி, முன்னைநாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் தலைமையதிபதி, ஆசிய குற்றத்தடுப்பு நிறுவக சர்வதேச பணிப்பாளர். பயிலுனர் சட்டத்தரணி திருறிஷாந்த உடவத்தவும் இலங்கைச் சட்டக்கல்லூரி இறுதி ஆண்டு மாணவி செல்வி S.A.TA. சுரவீரவும் ஆராய்ச்சி உதவியாளர்களாக இக்கட்டுரை தயாரிப்பில் உதவினர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அறிக்கைகளைக் கிடைக்கச் செய்தமைக்காகவும் கொழும்பு மறியற்சாலையில் எமது ஆராய்ச்சிப் பணியாளர்களுக்கு அனுமதிவழங்கியமைக்காகவும் பதில் மறியற்சாலைகள் ஆணையாள் தலைமையதிபதிக்கு நான் நன்றியறிதலுடையவனாக இருக்கின்றேன்
2O2

பைலேற்றின் மறியற்சாலைக்கு அனுப்பிவைத்தனர். பெளத்தமத நூல்களும் (அங்குத்தர நிகாய) மற்றும் இந்துமத மகாபாரதம், இராமாயணம் என்பனவும் மறியலில் வைப்பது பற்றிக் குறிப்பிடுகின்றன. இங்கிலாந்தின் சாதாரண மற்றும் மதச் சார்பான அதிகாரிகள் மறியற் சாலைகளை வைத் திருந்தனர். புராதன இலங்கையில் மறியற் சாலைகள் இருந்ததாக வரலாற்றுச் சான்று உள்ளது. விஜயனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் குவேனி மறியலில் வைத்ததாக மகாவம்சம் கூறுகிறது. றொபேர்ட் நொக்ஸ் என்பவர் தமது ‘இலங்கையின் வரலாற்றியல் உறவு’ என்ற நூலில் ‘மகா கிறகெ’ பற்றியும் வேத்தியல் கிராமங்களைப் பற்றியும், தம் போன்றோரை 17ஆம் நூற்றாண்டு கண்டிய இராச்சியத்தில் மறியற்காரர்களாகத் தடுத்து வைக்கப்பட்டமை பற்றிக் குறிப்பிடுகின்றார். Iஆம் பாகத்தில் 11 ஆம் அத்தியாயத்தில், அவர் அரசரின் மறியற் காரர்கள் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “அல்லாமலும், அவர் பல மறியற்காரர்களை வைத்திருந்தார்; அவர்களைச் சங்கிலியில் கட்டி வைத்திருந்தார். சிலரைப் பொது மறியற்சாலையில் வைத்திருந்தார்; சிலர் மகா பிரபுக்களின் கட்டுக்காவலுக்குப் பாரப்படுத்தப்பட்டிருந்தனர்.”
எவ்வாறாயினும், தற்கால மறியற்சாலை, பிரதானமாகத் தண்டிக்கும் முறையாக தவறாளர்களை மறியற்சாலையில் வைத்திருத்தல் மற்றும் மறியற்காரர்களின் புனர்வாழ்வு என்பன அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட புதிய கருத்துக்களாகும். 19ஆம் நூற்றாண்டுக்கு முன்னர், குற்றப் பனங்கள் விதித்தல், உடல் ரீதியாகத் தண்டனை விதித்தல், உறுப்புச் சேதஞ் செய்தல், மரண தண்டனை மற்றும் நாடு கடத்தல் என்பன பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் தண்டனை முறைகளாகும். பெரும் எண்ணிக்கையான தவறுகளைச்செய்தவர்களையும் மரண தண்டணைக் கைதிகளையும் எதிர்பார்த்து ஆட்களைத் தடுத்து வைக்கும் இடங்களாக மறியற்சாலைகள் விளங்கின. ஒருசில குறிப்பிட்ட தவறுகளைப் புரிந்துள்ள ஆட்கள் மட்டுமே மறியற்சாலையில் தண்டனைத் தீர்ப்பை அனுபவிப்பதற்குக் குற்றத்தீர்ப்பளிக்கப்படுகின்றனர். குற்றவியல் தவறாளர்களைக் கையாளுவதற்கான கட்டாயமான தண்டனை உபாயமாக மறியலில் வைப்பது இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இதுவே மேற்கத்திய உலகின் பிரதான நிலைமையாகும்.
1. சூ டைட்டஸ் ரீட், குற்றவியல் நீதி, புளோறிடா அரச பல்கலைக்கழகம்(1996)
9ig5. 10 Liai.324-325
203

Page 109
20ஆம் நூற்றாண்டின் முதல் அரைவாசிக் காலம் வரை, மறியற்காரர்கள் ஒரு சில உரிமைகளைக் கொண்டவர்கள் அல்லது எவ்வித உரிமையையுமே கொண்டிராதவர்கள் எனக் கருதப்பட்டனர். 1891ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளிலுள்ள சமஷ்டி நீதிமன்றம், குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளி, தான் புரிந்த குற்றத்தின் விளைவாக, தனது சுதந்திரத்தை மாத்திரம் இழக்கின்றான் என்பது மட்டுமல்லாமல் தனது சொந்த உரிமைகளையும் இழந்துவிடுகின்றான் என வெளிப்படுத்தியது. அப்போதைக்கு அவன் ‘அரசின் அடிமையாகக் கருதப்படுகிறான்'
1940ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்காவிலுள்ள நீதிமன்றங்கள் மறியற்காரர்களின் உரிமைகள் தொடர்பிலான தமது போக்கை மாற்றிக்கொண்டனர். “மறியற்காரர் ஒருவர் சட்டத்தினால் வெளிப்படையாக அல்லது அவசியமான உட் கிடை மூலம் அவரிடமிருந்து பறித்தெடுக் கப்பட்டவை தவிர்ந்த, சாதாரண பிரஜைக்குள்ள மற்றெல்லா உரிமைகளையும், கொண்டவராக இருக்கின்றார். சட்டம் அவருக்குள்ள உரிமையைப் பறித்தெடுத்து அவரதும் ஏனைய மறியற்காரர்களினதும் ஒழுங்கமைதிக்காக சேவக மற்றும் ஒழுக்காற்று அவதானிப்புக் கடமையை விதிக்கின்றது. அதேவேளையில் சட்ட விரோத செயற்பாட்டுக்கெதிராக அவருக்குள்ள சொந்தப் பாதுகாப்பை மறுக்கவில்லை.” என சமஷ்டி நீதிமன்றம் 1944ல் வெளிப்படுத்தியது. அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் மற்றொரு அதிமுக்கிய தீர்ப்பில், “நிறுவன ரீதியான சுற்றாடலின் தேவைகளையும் அவசியத் தையும் பொறுத்து அவருக் குள் ள உரிமைகள் குறைக்கப்படலாமாயினும், மறியற்காரர் ஒருவர் குற்றமொன்றுக்காக மறியற்சாலையில் அடைத்து வைத்திருக்கும்போது அவருக்குள்ள அரசியலமைப்புப் பாதுகாப்புக் கள் முழுக் க முழுக் கப் பறிக் கப்பட்டனவாகா, இந் நாட்டின் அரசியலமைப்புக் கும் மறியற்சாலைகளுக்குமிடையே இரும்புத் திரை எதுவும் கிடையாது.”* என நீதியரசர் வைட அவர்கள் கூறினார். இங்கு குறிப்பீடு செய்யப்பட்ட உரிமைகள் அமெரிக்க அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட உரிமைகளாகும். எவ்வாறாயினும், மிகவும் முந்திய காலங்களில், மறியற்சாலை அதிகாரிகளின் கைகளில் மரணத்தையோ அல்லது பாரதூரமான உடற்காயத்தையோ தழுவாமல் மறியற்காரர்களைப்
2. றவ்ரி)வின் எதிர் பொதுநலவரசு 62வா(21கிறாட்) 790, 796(1871) 3. கொவ்(f)வின் எதிர் றெயிச்சார்ட் 143 F2d 443 4. ஆல்ப் எதிர் மக்டொனல்(1974) 41L Ed, 2d 935
204

பாதுகாப்பதற்கு அவசியமானால் மாத்திரம், நீதிமன்றங்கள் அதில் தலையிட்டன. இந்திய உயர் நீதிமன்றம், மிகவும் சமீப கால வழக்கான சுனில் பத்ரா I எதிர் டில்லி நிருவாகம்(1980) 3 உநீவ.488 என்ற வழக் கில் , மறியற் காரர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நியாயாதிக்கமும் அதில் தலையிடுவதற்கான கடமையும் நீதிமன்றங்களுக்கு உண்டு எனக் கூறியது. உரிமைமீறல் இல்லாமல், தண்டனைத் தீர்ப்புகள் நிறைவேற்றப்படுவதனை உறுதிப்படுத்துவதற்கும் வன்முறையோ மறியற்காரரின் ஆளுமை மீறலோ இல்லாமல் மறியற் காரர்களின் சொந்தச் சுதந்திரங்களை நிலை பெறச் செய்வதற்கும் நீதிபதிகளுக்குக் கடமை இருக்கின்ற காரணத்தினால், நீதிபதிகளே மறியற்காரர்களது உரிமைகளின் காவலர்கள் என நீதிமன்றம் மேலும் கூறியது. “மனுதாரர் ஒரு கொடுங்கோண்மைக் குற்றவாளியாக இருக்கலாம்; அவர் சார்ந்துள்ள கும்பலுக்குக் கருணை காட்டவே முடியாது. ஆனால் அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதங்கள் எமது ஜனநாயக அமைப்பில் ஏதேனும் அர்த்தத்தை அல்லது பெறுமதியைக் கொண்டிருக்க வேண்டுமானால், எமது அரசியலமைப்பினால் உத்தரவாதமளிக்கப்பட்ட பாதுகாப்பு அவருக்கு மறுக்கப்படலாகாதென்பது அத்தியாவசியமானதாகும்.’ என அமல் சுதத் சில்வா எதிர் கொடித்துவக்கு (1987) 2 119 என்ற வழக்கில் இலங்கை உயர் நீதிமன்றம் கூறியது.
2. சர்வதேச சாதனங்கள்
1948ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்திலும் 1966ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சமவாயத்திலும் தரப்பட்ட கோட்பாடுகளுள் சில மறியற்காரர்களின் உரிமைகள் மீது கணிசமானளவு தாக்கத்தைக் கொண்டுள்ளன. இந்தச் சர்வதேச சாசனங்கள், குற்றஞ்சாட்டப்பட்டு குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டோர் உட்பட, அனைத்து மனிதர்களினதும் கெளரவத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டனவாகும். இவற்றுடன் மேலதிகமாக, இந்தச் சாதனங்கள் அத்தகைய ஆட்களின் பாதுகாப்புக்கான குறிப்பான ஏற்பாடுகளை உள்ளடக்கியுள்ளன. இவற்றில் நீதியான விளக்கத்துக்கான உரிமை, குற்றமற்றவர் பற்றிய ஊகம், எந்தத் தண்டனைத் தீர்ப்புக்கெதிராகவும் மேன்முறையீடு செய்யும் உரிமை என்பன உள்ளடங்கும். இவர்கள் சித்திரவதை மற்றும் வேறு
205

Page 110
கொடுரமான, மனிதாபிமானமற்ற மற்றும் இழிவுபடுத்தும் துன்புறுத்தலுக்கு அல்லது தண்டனைக்கு ஆளாகாமல் பாதுகாப் பளிக்கப்படுவதோடு யதேச்சையாகக் கைது செய்யப்படுவதிலிருந்து அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்படுவதிலிருந்து விடுபடுவதற்கான சுதந்திரம் கொண்டவராகவும் இருப்பர். அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்திலும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சமவாயத்திலும் தடுத்துவைக்கப்பட்டோருக்கு அல்லது மறியற்காரர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பரந்த பாதுகாப்புகள், குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தவறாளர்களைத் துன்புறுத்தல் தொடர்பிலான 30 ஐ.நா. சாசனங்களில் கூறப்பட்டுள்ளன. இச்சாசனங்களுட் சில பல்புடை ஒப்பந்தங்களாகும்; ஏனையவை பொதுப் பேரவையினாலும் அதன் துணைநிலைக் குழுக்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்களாகும். பின்னைய சாசனங்கள் அரசுகளைக் கட்டுப்படுத்தாத போதிலும் தேசிய சட்டவாக்கத்தில் பரந்த மனித உரிமைகளையும் தராதரங்களையும், உத்தர வாதங்களையும் பொருள்கோடல் செய்து அமுல்படுத்துவதற்கு பயனுள்ளவையாகும். இலங்கை குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சமவாயத்தை 1980ல் ஏற்றுக்கொண்டது.
குற்றக் கட்டுப்பாடு மற்றும் தவறாளர்களைத் துன்புறுத்தல் மீதான ஐ.நா.சாசனங்கள் ஆறு பகுதிகளாக வகுப்பாக்கஞ் செய்யப்பட்டுள்ளன: அவை வருமாறு: 1. மறியற்சாலை நிலைமைகள் பற்றிய சாசனங்கள் 2. சித்திரவதையையும் துன்புறுத்தலையும் தடைசெய்யும் சாசனங்கள் 3. யதேச்சையாகத் துக்கிலிடுவதைத் தடுக்கும் சாசனங்கள் 4. சட்டத்தரணிகளையும் நீதித்துறை நடைமுறைகளையும் அணுகுவதை
ஆதரிக்கும் சாசனங்கள் 5. மறியற் தண்டனைக்கு மாற்றான வழிவகைகளை ஆதரிக்கும்
சாசனங்கள் - 6. சிறுவர் குற்றவாளிகள் தொடர்பில் ஏற்புடைய கையாளுகையை
ஊக்குவிக்கும் சாசனங்கள்
முதலாவது பகுதியில் மிகவும் முக்கியமான சாசனம், 1955ஆம் ஆண்டில் ஜெனீவாவில் நடைபெற்ற, குற்றத்தைத் தடுத்தலும் தவறாளர்களைக் கையாளுதலும் பற்றிய முதலாவது ஐ.நா. காங்கிர சினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மறியற்காரர்களைக் கையாளுவதற்கான ஆகக் குறைந்த தராதர விதிகளாகும். 1957ஆம் ஆண்டில் பொருளாதார, சமூகப் பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இவ்விதிகள் மறியற் காரர்களை வைத்திருப்பதற்கு ஏற்றுக் கொள்ளப்படற்பாலதான ஆகக்குறைந்த தராதரங்களைக் குறிப்பிடுகின்றன. சகல மறியற்
206

காரர்களும் வைத்திருக்கப்பட வேண்டிய நிலைமைகளுக்கான ஆகக் குறைந்த தேவைப்பாடுகளை எடுத்துக் காட்டும் விரிவான வழிகாட்டு நெறிகளை இவை கொண்டுள்ளன. இவ்விதிகள், தவறாகத் துன்புறுத்தப் படுதலுக்கெதிரான, அதிலும் குறிப்பாக தண்டனை விதிக்கும் நிறுவனங்களில் ஒழுக் காற்றை வலியுறுத்துவது தொடர்பிலும் அடக்குமுறைச் சாசனங்களைப் பயன்படுத்துவது தொடர்பிலும் ஏற்பாடு செய்கின்றன.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது மறியற்சாலையில் உள்ள ஆட்களுக்கு மனித உரிமைகள் அனைத்துலகப் பிரகடனத்தினதும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சமவாயத் தினதும் பொதுக் கோட்பாடுகளைப் பிரயோகிப்பதற்கான முக்கிய வழிகாட்டு நெறிகளை ஏற்பாடு செய்கின்ற, 1988ஆம் ஆண்டில் ஐ.நா.பொதுப் பேரவையினால் பிரகடனப்படுத்தப்பட்ட, ஏதேனும் வகைப்பட்ட தடுப்புக் காவலின் அல்லது மறியலின் கீழ் உள்ள அனைவரதும் பாதுகாப்புக்கான கோட்பாட்டுத் தொகுதி, முதலாவது பகுதியின் கீழுள்ள மற்றொரு முக்கிய சாசனமாகும். தடுத்து வைத்திருக்கப்படுபவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவசியமான வழிவகைகளை இது கொண்டுள்ளது.
இரண்டாவது பகுதியைப் பொறுத்தவரை, 1975ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுப் பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, சித்திரவதை, வேறு கொடுரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவுபடுத்தும் துன்புறுத்தலுக்கு அல்லது தண்டனைக்கு உள்ளாவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பது தொடர்பான பிரகடனம், மிகமுக்கியமான சாசனமாகும். இப்பிரகடனத்தின் ஏற்பாடுகள், 1984ஆம் ஆண்டில், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவுபடுத்தும் துன்புறுத்தல் அல்லது தண்டனை என்பவற்றுக்கெதிரான சமவாயத்தின் மூலம் சர்வதேச சட்டவலு கொடுக்கப்பட்டன. இலங்கை இச்சமவாயத்தை 1994ஆம் ஆண்டில் ஏற்று அங்கீகரித்தது. சித்திரவதை மற்றும் துன்புறுத்தப்படுதல் என்பன மீதான தடை வழக்காற்றுச் சர்வதேச சட்டத்தின் இலக்காக வந்துள்ளது. சமவாயத்தின் கீழ் தாபிக்கப்பட்ட சித்திரவதைக்கெதிரான குழு, அரச திறத்தவர்களால் சமவாயம் நடைமுறைப்படுத்தப்படுவதனை மேற்பார்வை செய்கின்றதென்பதுடன் அதன் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட சித்திரவதை பற்றிய குற்றச் சாட்டுக்களைத் தீர்த்துவைக்கவும் நாடுகின்றது. இரண்டாவது பகுதியின் கீழ் மறியற்காரர்களுக்கு ஏற்புடைத்தான மற்றொரு சாசனம், 1985ஆம் ஆண்டில் ஐ.நா.பொதுப் பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, குற்றத்துக்கும் அதிகாரத் துஷ்பிரயோகத்துக்கும் பலியானவர்களுக்கான
2O7

Page 111
நீதியின் அடிப்படைக் கோட்பாடுகள் பற்றிய பிரகடனமாகும். இப்பிரகடனம், தொன்னிலை மீட்பு அத்துடன் அல்லது நட்டஈடு உட்பட, நிவாரணங்களை வழங்கவேண்டும் எனவும் உத்தியோகபூர்வ துஷபிரயோகத்துக்குப் பலியானவர்களுக்கு அவசிய பொருள் ரீதியான, மருத்துவ, உளவியல்சார் மற்றும் சமூக உதவி வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தை அணுகுவதற்கான வசதியையும் கொடுக்க வேண்டும் எனவும் அரசுகளை வேண்டி நிற்கின்றது. மரணதண்டனை எதிர்நோக்கி இருப் போருக் குள் ள உரிமை களைப் பாதுகாப்பதற்கும் உத்தரவாதமளிப்பதற்கும் காப்பதற்குமான பிரகடனமும் இந்தப் பகுதிக்குள் சேர்க்கப்படலாம்.
மூன்றாம் பகுதியின் கீழான சாசனங்கள் - அதாவது காணாமற் போதல்கள் யதேச்சையான மரண தண்டனைகள் பற்றியவை - உறவடிப்படையில் புதியனவே. சட்டத்துக்குப் புறம்பாக, யதேச்சையாக மற்றும் சுருக்க முறையான மரணதண்டனைகளை வினைத்திறமையாகத் தடுப்பதற்குமி, புலனாய்வு செய்வதற்குமான கோட்பாடுகள் 1989ஆம் ஆண்டில் ஐ.நா. பொருளாதார மற்றும் சமூகப் பேரவையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வலியுறுத்தப்பட்ட காணாமல் போதலிலிருந்து சகலரையும் பாதுகாப்பது மீதான பிரகடனம் 1992ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுப் பேரவையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நாலாம் பகுதிக்குள் அடங்கும் சட்டத்தரணிகளையும் நீதித்துறை நடைமுறைகளையும் அணுகுவதனை ஆதரிக்கும் சாசனங்கள் தடுத்து வைக்கப்பட்ட மற்றும் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட ஆட்களுக்குக் குறிப்பாக இயைபானவையாகும். சட்ட ஆலோசகர்களின் உதவி கட்டுக் காவலிலுள்ள ஆட்களின் மனித உரிமைகளைப் பேணுவதற்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இது குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சமவாயத்தின் 14ஆம் உறுப்புரையில் கூறப்பட்டுள்ளது. மறியற்காரர்களைக் கையாளுவதற்கான ஆகக் குறைந்த தராதர விதிகள், தடுத்துவைக்கப்பட்ட ஆட்கள் தமது சட்ட ஆலோசர் களை தங்கு தடையின்றி அணுகவேணி டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. 1990 ஆம் ஆண்டில் குற்றத்தடுப்பும் தவறாளர்களைக் கையாளுதலும் மீதான 8ஆவது ஐ.நா.காங்கிரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, சட்டத்தரணிகளின் பங்கு மீதான அடிப்படைக் கோட்பாடுகள், 1985ஆம் ஆண்டில் குற்றத்தடுப்பும் தவறாளர்களைக் கையாளுதலும் மீதான ஐ.நா.காங்கிரசினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீதித்துறைச் சுதந்திரம் மீதான அடிப்படைக் கோட்பாடுகள் என்பன இயைபான வேறு சாசனங்களாகும். தடுப்புக் காவலில் உள்ளவர்களின் வழக்குகள், முறையற்ற செல்வாக்குக்குட்படாது, சட்ட
208

விதிக்கிணங்க முடிவு செய்யப்படுகின்றனவா என்பதை உறுதிப் படுத்துவதற்கு ஐ. நா. வைப் பொறுத்தவரை நீதிச் சுதந்திரம் முக்கியமானதாகும்.
ஐந்தாவது பகுதியின் கீழ் உள்ள சாசனங்கள், குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட மற்றும் குற்றத் தீர்ப்பளிக்கப்படாத மறியற்காரர்களுக்கு மறியற் தண்டனைக்குப் பதிலான மாற்று வழிகளை அல்லது கட்டுக்காப்பற்ற வழிவகைகளை ஊக்கப்படுத்துகின்றது. “விளக்கத்தை எதிர்பார்த்திருப்போர் கட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட வேண்டு மென்பது பொதுவிதியாக இருத்தலாகாது; ஆனால் அவரை விடுதலை செய்வது விளக்கத்துக்குத் தோற்றுவார் என்பற்கமைந்ததாக இருக்கலாம்.” என குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சமவாயத்தின் உறுப்புரை 9(3) கூறுகின்றது. 1990ஆம் ஆண்டு டிசம்பரில் பொதுப் பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, கட்டுக்காப்பற்ற வழிவகைகளுக்கான ஆகக் குறைந்த தராதர விதிகள் (டோக்கியோ விதிகள்) இவ்வேற்பாட்டைப் பொருள் கோடல் செய்ய நாடுவதுடன் இவ்வேற்பாட்டுக்குப் பயனும் கொடுக்கின்றன. டோக்கியோ விதிகள், "கட்டுக்காப்பற்ற வழிவகைகள்” என்ற சொல்லமைப்பை, தவறொன்றுக் காகச் சந்தேகிக்கப்படும், குற்றஞ் சாட்டப்பட்ட அல்லது குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட ஆள் ஒருவரை மறியற் தண்டனையை உள்ளடக் காத குறித்த சில நிபந்தனைகளுக்கு அல்லது கடப்பாடுகளுக்கு குற்றவியல் நீதி நிருவாக முறையின் எக்கட்டத்திலும் அமைந்தொழுகுமாறு தேவைப்படுத்தும் தகுதிவாய்ந்த அதிகாரியினாலான ஏதேனும் முடிவு என வரைவிலக்கணஞ் செய்கின்றன. பெரும்பாலான அரசுகள் குற்றவியல் தவறுகளுக்காக மறியற் தண்டனையை பிரதான தண்டனை வகையாகப் பயன்படுத்துவதனால், இவ்விதிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாகும். மறியற்காரர்களின் உரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்வதற்கும் மறுப்பதற்கும் பங்களிப்புச் செய்யும் காரணி கண் மூடித்தனமாக தடுப்புக் காவலில் வைப்பதற்கும் தண்டிப்பதற்கும் மறியற் தண்டனையைப் பயன்படுத்துவதாகும். ஆனால் மறியற்சாலைகளில் இடநெருக்கடி ஏற்படுவதனைத் தடுப்பதற்கு மறியற்சாலைக்கு வெளியே பெருந்தொகையான மறியற்காரர்களை வைத்திருப்பதற்கான வழிவகைகளை அரசுகள் நாடவேண்டியது மிக முக்கியமானதாகும்.
மேலே ஒன்று முதல் ஐந்து வரையான பகுதிகளின் கீழ் கலந்தாராயப்பட்ட சாசனங்கள் முதியோர் மற்றும் சிறுவர் குற்றவாளிகள் இரு சாராருக்கும் பொருந்துவதாகும். ஆனால் ஆறாவது பகுதி பிரத்தியேகமாக சிறுவர் தவறாளர்களுடன் தொடர்புபட்டதாகும். 1985ஆம்
209

Page 112
ஆண்டில் பொதுப் பேரவையானது, பெயிஜிங் வீதிகள் எனவும் அறியப்படும், சிறுவர் தவறாளர்களின் நீதி நிருவாகத்துக்கான ஆகக் குறைந்த தராதர விதிகளை ஏற்றுக்கொண்டது. பெயிஜிங் விதிகளை வியாக்கியானஞ் செய்யும் இருவேறு சாசனங்கள் 1990ல் பொதுப் பேரவையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவை,(றியாட் வழிகாட்டு நெறிகள்) எனப்படும் சிறுவர் குற்றத்தைத் தடுப்பதற்கான ஐக்கிய நாட்டு வழிகாட்டு நெறிகள்) எனப்படும் சிறுவர் குற்றத்தைத் தடுப்பதற்கான ஐக்கிய நாட்டு வழிகாட்டு நெறிகள் என்பனவும் தமது சுதந்திரம் பறிக்கப்பட்ட சிறுவர் குற்றவாளிகளின் பாதுகாப்புக்கான ஐக்கிய நாடுகள் விதிகள் என்பனவும் ஆகும். இந்தச் சாசனங்கள் பிள்ளையின் உரிமைகள் மீதான சமவாயத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க சிறுவர் தவறாளர்களின் சிறந்த கவனத்துடன் கூடிய கையாளுக்கு ஏற்பாடுசெய்யும் கருத்துடன் பிரகடனப்படுத்தப்பட்டன. இவ்விதிகள் ஏதேனும் பின்னரான குற்றவியல் நடத்தையை குறைக்குமுகமாக அல்லது தவிர்க்குமுகமாக சிறுவள் தவறாளர்களின் சீர்திருத்தத்தை நோக்காகக் கொண்டனவாகும்.
3. மறியற்காரர்களுக்குள்ள உரிமைகளும் தேசிய
சட்டவாக்கமும்
ஐக்கிய நாடுகளின் சாசனங்களை வெற்றிகரமாக அமுல்படுத்துவது தேசிய அரசாங்கங்களினால் எடுக் கப்படும் முயற்சிகளைப் பொறுத்ததாகும். இலக்குகளையும் வழிகாட்டு நெறிகளையும் சமவாயங்களையும் தேசிய சட்டத்துக்குள் கூட்டிணைப்பது இம்முயற்சிகளின் முக்கிய பகுதியாகும். குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சமவாயத்தில் கையொப்பமிட்ட நாடு என்ற வகையில், இலங்கை இவ்வுரிமைகளுட் சிலவற்றை குடியரசின் அரசியலமைப்பில் கூட்டிணைத்துள்ளது; உறுப்புரை 10- சிந்தனை, மனச்சாட்சி மற்றும் மதச் சுதந்திரம், உறுப்புரை 11 - சித்திரவதைக்கு ஆளாகாமல் இருப்பதற்குள்ள சுதந்திரம், 12 - சமத்துவ உரிமை, உறுப்புரை 13 - யதேச்சையாகக் கைதுசெய்தல், தடுத்துவைத்தல் மற்றும் தண்டிக்கப்படுதல் என்பவற்றுக்கெதிரான சுதந்திரம், உறுப்புரை 14 - பேச்சுச் சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், தொழிற் சுதந்திரம், இடம் பெயர்தல் சுதந்திரம் முதலியன. அரசியலமைப்பின் 10,11,12 மற்றும் 13 ஆகிய உறுப்புரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், மறியற்காரர்கள் உட்பட, எல்லா ஆட்களுக்கும்
210

பொருந்துவனவாகும். எவ்வாறாயினும், 14ஆம் உறுப்புரையின் கீழான உரிமைகள் சட்டத்தினாலும் மறியற்காரர் என்ற அவரது அந்தஸ்தின் விளைவாக எழும் ஏனைய அவசிய உட்கிடைகளினாலும் விதித் துரைக்கப்பட்ட அத்தகைய மட்டுப்பாடுகளுக்கமைவாக, மறியற் காரர்களுக்கு ஏற்புடையனவாகும்.
1997ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க, பிணைச் சட்டம் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சமவாயத்தின் 9(3)ஆம் உறுப்புரைக்கிணங்கவும் கட்டுக்காவல் சாராத வழிவகைகளுக்கான ஐ.நா. ஆகக்குறைந்த தராதர விதிகளுக்கிணங்கவும் விளக்கத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆட்களை விடுவிப்பதற்கான சட்டங்களை உருவாக்கியுள்ளது. பிணை வழங்கப்படுவதே சட்ட ஏற்பாடுகளின் நடைமுறைக்கான வழிகாட்டு நெறி எனவும் அது மறுக்கப்படுதல் விதிவிலக்கெனவும் சட்டம் வெளிப்படுத்தியது.
1999ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க, சமூக அடிப்படைத் திருத்தங்கள் சட்டம், மறியற் தண்டனைத் தீர்ப்புக்குப் பதிலாக, சமுதாய அடிப்படையிலான சீர்திருத்தக் கட்டளைகள் நீதிமன்றத்தினால் வழங்கப்படுவதற்கு ஏற்பாடு செய்கின்ற மற்றொரு முக்கிய நியதிச் 3. Lt Off (Jib.
சர்வதேசச் சமவாயத்துக்குப் பயன் கொடுக்கும் மற்றொரு முக்கியமான தேசிய சட்டம், 1994ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க, சித்திரவதை மற்றும் ஏனைய கொடுரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான துன்புறுத்தலுக்கு அல்லது தண்டனைக்கு எதிரான சமவாயச் சட்டமாகும். இச்சட்டத்தின் கீழ் சித்திரவதை மறியற்றண்டனை மூலம் தண்டிக்கப்படற்பாலதான தவறாக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் கூட்டிணைக்கப்பட்டதுடன் மேலதிகமானதாகும்.
இலங்கையிலுள்ள மறியற்சாலைகளின் நிருவாகத்தை ஆளும் சட்டங்கள் 1878ஆம் ஆண்டின் மறியற்சாலைகள் கட்டளைச் சட்டத்திலும் மறியற் சாலை விதிகளிலும் (துணைநிலைச் சட்டவாக்கம்) அடங்கியுள்ளன. 1878ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டுப் பின்னர் சில தடவைகள் மாத்திரம் திருத்தப்பட்ட மறியற்சாலைக் கட்டளைச் சட்டத்திலும் அக்கட்டளைச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட மறியற்சாலை விதிகளிலும் ஐ.நா. ஆகக் குறைந்த தராதர விதிகள் அடங்கி யிருக்கவேண்டும் என ஒருவர் எதிர்பார்க்க முடியாது. எவ்வாறாயினும், ஐ.நா.ஆகக் குறைந்த தராதர விதிகளின் கீழ் விதித்துரைக்கப்பட்ட பெரும் பாலான தராதரங்களை இலங்கை கொண்டிருப்பது அதிஷ்டவசமானதே. பிரித்தானிய குடியேற்ற நாட்டு ஆட்சியாளர்கள்
211

Page 113
இலங்கையில் மறியற்சாலைக் கட்டளைச் சட்டத்தை அறிமுகப்படுத்திய காலத்தில், பல புரட்சிகரமான மறியற்சாலைச் சீர்திருத்தங்கள் இடம்பெற்று, விதிகளில் பல மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டமையே, இதற்குப் பிரதான காரணமாகும். 19ஆம் நூற்றாண்டில் ஐ. இராச்சியத்திலும், ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் இடம்பெற்ற மறியற்சாலைச் சீர்திருத்தங்கள் ஈற்றில் ஐ.நா. ஆகக்குறைந்த தராதரவிதிகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வழிகோலின. இக்கால கட்டத்தில் இவ்விதிகள் ஐ.நா.விலும் பல மேற்கத்திய நாடுகளிலும் இலங்கை போன்ற, குடியேற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. எமது மறியற்சாலை ஒழுங்கு விதிகள் ஐ.நா.ஆகக்குறைந்த தராதர விதிகளுடன் எந்த அளவுக்கு ஒத்துப்போகும் என்பதைக் காட்டுவதற்கு ஒரு சில உதாரணங்கள் தரப்படலாம்.
ஐ.நா. ஆகக் குறைந்த தராதர விதிகளின் 8ஆம் விதி மறியற்காரர்களின் பகுதிகளைப் பிரிப்பதில் அவதானிக்கப்பட வேண்டிய ஆகக்குறைந்த தராதரத்தைக் குறிப்பிடுகின்றது. 177ஆம் 178ஆம் மறியற்சாலை விதிகள் ஐ.நா. ஆகக்குறைந்த தராதர விதிகளின் 8ஆம் விதியை ஒத்ததாகும். இதே போன்று மறியற்காரர்களின் சொந்தச் சுகாதாரம் தொடர்பில் மறியற்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 70ஆம் பிரிவும் மறியற்சாலை விதிகளின் 157 மற்றும் 160 ஆகிய விதிகளும் ஐ.நா.ஆகக்குறைந்த தராதர விதிகளின் 15 மற்றும் 16 ஆகிய விதிகளை ஒத்ததாகும். ஐ.நா.ஆகக்குறைந்த தராதர விதிகளின் 20ஆம் விதி "மறியற்காரர் ஒவ்வொருவருக்கும் நிருவாகத்தினால் வழமையான நேரங்களில், சுகாதாரத்துக்கும் பலத்துக்கும் போதிய போஷாக்கும், முழுமையான தரமும், நன்கு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதுமான உணவு வழங்கப்படுதல் வேண்டும்." எனக் கூறுகிறது. 222ஆம் மறியற்சாலை விதி “ஒவ்வொரு மறியற்காரருக்கும் போதிய அளவிலான சாதாரண, போஷாக்குள்ள உணவு வழங்கப்படுதல் வேண்டும்” எனக் கூறுகின்றது. மேலும், மறியற்சாலை விதி 55, "மருத்துவ அலுவலர் தகுந்த தரத்தில் உள்ள உணவா எனக் கண்டறிவதற்காக, மறியற்காரர்களுக்கு வழங்கப்படும் உணவை அன்றாடம் பரிசோதித்தல் வேண்டும் எனவும் தனது நாளேட்டில் அவர் அவதானிக்கக்கூடிய தரத்திலான அல்லது அளவிலான ஏதேனும் குறைபாடு பற்றிப் பதிதல் வேண்டும்" எனவும் கூறுகின்றது. மறியற் சாலை அத்தியட்சகர் மறியற்காரர்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களை அடிக்கடி பரிசோதித்து, அவர்களின் பயன்பாட்டுக்கென வழங்கப்பட்ட வெவ்வேறு
212

வகைப்பட்ட உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் நேரடியாக அவதானித்துத் தம்மைத் திருப்திப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும் என மறியற்சாலை விதி 25 கூறுகிறது.
ஐ.நா. ஆகக் குறைந்த தராதர விதிகளில் தரப்பட்டுள்ள தராதரங்களுட் பல மறியற்சாலை நியதிச் சட்டங்களுக்குள் ஏற்கனவே கூட்டிணைக்கப்பட்டபோதிலும், சில தவிர்த்து விடப்பட்டுள்ளன. இவற்றில் மகப்பேற்றுக்கு முந்திய மற்றும் மகப்பேற்றுக்குப் பிந்திய கவனிப்புக்கும் பராமரிப்புக்கான வசதிகள் அடங்கும். மறியற் சாலைகளில் பிரசவிக்கப்படும் குழந்தைகளின் பராமரிப்புக்கான தகுதிபெற்ற பணியாளர்களுடனான குழந்தைகள் நலம் பேண் மனைக்கும், கைத்தொழில் ரீதியான ஊறுபாட்டுக்காக மறியற்காரர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கும், ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
இலங்கையின் தேசியச் சட்டம் மறியற்காரர்களின் நிருவாகம் தொடர்பாகவும் மறியற்காரர்களைக் கையாளுதல் தொடர்பாகவும் சர்வதேச தராதரங்களுடன் பெருமளவு ஒத்துப் போனாலும்கூட, இத்துறை யில் இன்னமும் எவ்வளவோ செய்யவேண்டியுள்ளது. உதாரணமாக, இலங்கை, மறியற்காரர்கள் வீட்டுக்கும் வேலைக்கும் சென்று மீண்டும் மறியற் சாலைகளுக்குத் திரும்பிவருவதற்கான முறையான சட்ட அமைப்பைக் கொண்டிருக்கவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்நிகழ்ச்சித் திட்டங்கள் 1926ஆம்ஆண்டின் குற்றத்தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் ஒரு பிரிவின் கீழும் நிமித்த நிருவாகப் பணிப்புகளின் கீழும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளன. இந்நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முறையான சட்ட அமைப்பு இல்லாமையினால், அரசியல்வாதிகள் யதேச்சையாக நிருவாக ஒழுங்கு விதிகளைப் புறக்கணிக்கத் தலைப்பட்டனர். 1997ஆம் ஆண்டுக்குப் பின்னர், பொறுப்பான அமைச்சர் அத்தகைய விடுதலைகளுக்குச் சாதகமாக இல்லாத காரணத்தினால், உரிமத்தின் பேரில் மறியற்காரர்களை விடுவிக்கும் நிகழ்ச்சித் திட்டம் பூரணமாக இடைநிறுத்தப்பட்டது.
(2002ஆம் ஆண்டுவரை மறியற்சாலைகளுக்குப் பொறுப்பான அமைச்சாக இருந்த) நீதி அமைச்சினால், தேசிய மற்றும் சர்வதேச அபிவிருத்திகளுக்கிணங்க மறியற்சாலைச் சட்டம் முழுவதையும் மீட்ப தற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இம்மீளாய்வு முடிவடையும் தறுவாயில் மறியற்சாலைகள் என்னும் விடயம் 2002ஆம் ஆண்டில் புதிதாகத் தாபிக்கப்பட்ட உள்ளக விவகார அமைச்சுக்குக் குறித்தொதுக்கப் பட்டதோடு இந்தக் கருத் திட்டமும் கைவிடப்பட்டது; இது தொடர்பான ஆவணங்கள் நீதி அமைச்சின் எங்கோ ஒரு மூலையில் தேங்கிக் கிடக்கக் கூடும்.
213

Page 114
4. இலங்கையிலி மறியற் காரரின் உரிமைகள்
தொடர்பிலான தற்போதைய நிலைமை.
1948ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் அடைந்தபோது, பெரும்பாலான மறியற்சாலைகள் அப்போதே 75ஆண்டுகள் பழமை வாய்ந்தனவாக இருந்த போதிலும், பிரித்தானியர்களிடமிருந்து நன்கு தாபிக்கப்பட்ட மறியற்சாலைகள் முறையைக் கொண்டிருந்தன. சுதந்திரம் பெற்றது முதல், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களில் மறியற் சாலைகள் மிகவும் குறைந்த முக்கியத்துவத்தையே பெற்றன. இன்றும் மறியற்சாலைகள் தொடர்ந்தும் அதே முக்கியத்துவம் குறைந்த இடத்தையே வகிக்கின்றன. கடந்த சில தசாப்தங்களாக பொலிஸ் சேவையும் நீதிமன்ற முறைமையும் பரந்துபட்ட சீர்திருத்தங்களை அடைந்தபோதிலும், மறியற்சாலை அமைப்பில் எவ்வித சீர்திருத்தத்தையும் அடையவில்லை. பெரும்பாலான மறியற்சாலைகள் நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்தவை. மூன்று பிரதான மறியற்சாலைகளாவன - வெலிக்கடை, போகம்பரை மற்றும் மகர என்பன. - 125 வருடங்கள் பழமை வாய்ந்தவை. செங்கல்லும் சுண்ணமும் மணலும் கொண்டும் மரத்தாலான தரைகளைக் கொண்டும் கட்டப்பட்ட பல்மாடிக் கட்டிடங்கள் தாங்கக்கூடியளவு தாக்குப் பிடித்துள்ளன; தற்போதைய தேவைகளைப் பூர்த்திசெய்ய இனிமேல் இவற்றால் முடியாது.
இன்று மறியற்சாலை நிருவாகம் முகம் கொடுக்க வேண்டி மிகவும் பாரதூரமான பிரச்சினை கடும் இடநெருக்கடியாகும். நிதிப் பற்றாக்குறையினால் இது மேலும் மோசமாகி உள்ளது. பொலன்னறுவை, மொனறாகலை மற்றும் குருவிட்ட ஆகிய இடங்களில் சமீப காலங்களில் சேர்த்துக் கொள்ளப்பட்ட வசதிகள் உட்பட, நாடுபூராவும் 7,641 மறியற்காரர்களுக்கு அதிகார பூர்வ இடவசதி காணப்படுகிறது. வெளிவிடப்படாத மறியற்சாலை புள்ளிவிவரங்களின் படி 2002ஆம் ஆண்டின்போது, மறியற்காரர்களின் அன்றாடச் சராசரி எண்ணிக்கை 18,000 ஆகும். இது சராசரியாக 135% இடநெருக்கடி மட்டமாகும்.
குற்றத்தீர்ப்பளிக்கப்பட்ட மற்றும் விளக்கமறியல் மறியற் காரர்களின் தொகைகளைப் பார்க்கும் போது இப்பிரச்சினை மேலும் மோசமானதாகி விடுகிறது. மொத்தமாக, 18,000 மறியற்காரர்களில் சுமார் 8,000 பேர் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட மறியற்காரர்களாவர்; 10,000 பேர் விளக்கமறியலில் உள்ளவர்களாவர். குற்றத் தீர்ப்பளிக்
214

கப்பட்ட மறியற்காரர்களின் அதிகாரமளிக்கப்பட்ட தொகை 5,500 ஆகும்; இதே போன்று விளக்கமறியற்காரர் தொகை 2,200 ஆகும். இங்கும் 45% குற்றத் தர்ப்பளிக்கப் பட்ட மறியற் காரர்களும் 345% விளக்கமறியற்காரர்களும் மிகையாகவுள்ளனர்.
ஐ.நா. ஆகக்குறைந்த தராதர விதிகள் மீறப்படும் அளவுக்கும் மறியற்காரர்களின் உரிமைகள் பறித்தெடுக்கப்படும் அளவுக்கும் மறியற்சாலைகளில் இட நெருக்கடி விசுவரூபமெடுத்துள்ளது. மறியற் காரர்கள் அனைவருக்கும் போதிய இடவசதி இல்லாதது மாத்திரம் பிரச்சினையல்ல; போதியளவு நீர், சுகாதார மற்றும் பொழுதுபோக்கு வசதிகள், படுக்கை, கோப்பைகள், பானம் அருந்தும் கோப்பைகள், துவாய்கள் மற்றும் உடை என்பன கூடப் பற்றாக்குறையாகவே உள்ளன. மறியற்காரர்களின் மனித உரிமைகளைப் பொறுத்தவரை, கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக சர்வதேச வெளிவாரிக் கண்காணிப்பு முறை இலங்கைக்குக் கிடைத்து வந்துள்ளமை அதிஷ்டகரமானதே. 1991ஆம் ஆண்டு தொடக்கம் செஞ்சிலுவைச் சங்க சர்வதேச குழுவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கிரமமான அடிப்படையில் இலங்கையின் மறியற் சாலைகளுக்கு விஜயம் செய்து தமது அவதானிப்புரைகளை அரசாங்கத்துக்கு அறிக்கை செய்தனர். செஞ்சிலுவைச் சங்கக் குழு உறுப்பினர்கள் மறியற்சாலையின் எப்பாகத்துக்கும் சென்று, மறியற் சாலை உத்தியோகத்தர்களின் தலையீடு இல்லாமல், மறியற் காரர்களுடன் தனிமையில் பேசுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 2002ஆம் ஆண்டில் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் மகர, போகம்பரை (கண்டி), புதிய மகசீன், குருவிட்ட, அனுராதபுரம், தங்காலை, பதுளை, மாத்தறை, மட்டக்களப்பு, பொலனறுவை மறியற்சாலைகளுக்கும் வெலிக்கடை பெண் மறியற்சாலைக்கும் விஜயம் செய்தனர்.
5. தடுப்புக்காவல் நிலைமைகள் மீதான ஆராய்ச்சிக்
குழுவின் அவதானிப்புரைகள்
கட்டுரை ஆசிரியரும் இரு ஆராய்ச்சி உதவியாளர்களும் மறியற்சாலைகளுக்கு விஜயம் செய்து மறியற்சாலை அதிகாரிகளையும் மறியற்காரர்களையும் அவர்கள் தடுத்துவைக்கும் நிலைமை பற்றிக் கேட்டறிந்தனர். செஞ்சிலுவைச் சங்க அறிக்கைகளையும் ஆராய்ச்சிக் குழு கவனத்துக்கெடுத்தது.
25

Page 115
5.1 விளக்கமறியல் மறியற்காரர்கள்
நாட்டின் தலையாய தண்டனை நிறுவனமான வெலிக்கடை மறியற்சாலைக்கு 2003 பெப்ரவரியில் ஆராய்ச்சிக் குழு விஜயம் செய்தபோது அங்குள்ள நிலைமைகள், அதிலும் குறிப்பாக விளக்கமறியல் பகுதிகளிலுள்ள நிலைமைகள் மிகவும் மோசமாகக் காணப்பட்டன. மறியற்சாலை சட்டப்படி 1,500 மறியற்காரர்களை மாத்திரம் கொள்ளக் கூடியதாகும்; ஆனால் அங்கு 4000பேர் காணப்பட்டனர். முதன் முதலாகத் தவறு புரிந்து குற்றத் தீர்ப்பளிக் கப் பட்டவர்களுக்கென உருவாக்கப்பட்ட வெலிக்கடைச் சிறைச்சாலையில் பெருந்தொகையினரான விளக்கமறியல் மறியற்காரர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் "எல்-மண்டபம்” என அறியப்படும் மூன்று மாடிக் கட்டிடத்தில் உள்ளனர். இதில் தங்கியிருப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்டோர் தொகை 307ஆகும். ஆனால் அதிகாரிகள் தந்த தகவல்களின்படி 2002ஆம் ஆண்டு முழுவதும் சராசரியாக 1,400 விளக்கமறியற்காரர்கள் மறித்து வைக்கப்பட்டிருந்தனர். இது 450% இடநெருக்கடி மட்டமாகும். ஆராய்ச்சிக் குழுவின் விஜயத்தின் போது, அது பகற் காலமாக இருந்தபடியால், அதில் தங்கியிருந்தோர் செய்வதற்கு எதுவும் இல்லாமல் தரையில் படுத்திருந்தனர். கட்டிடத்தின் நிலைமையோ மிகவும் மோசமானதாகும். மழை காலங்களில் கூரை ஒழுகுவதனால் தரை முழுவதும் நனைந்து காணப்படுகிறது. சுவர்கள் அழுக்கேறி அவற்றின் மீதுள்ள தீந்தையைக் காணமுடியாது. சுவரின் மேற்பூச்சு உடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் முடிவுக் கோடியில் நிலத்தளம் நனைந்து வழுக்குவதாகவும் அழுக்காகவும் காணப்படுகிறது. மின்சாரக் கம்பிகள் பல இடங்களில் பிய்ந்து தொங்குகின்றன; சில இடங்களில் வெறும் கம்பிகள் காணப்படுகின்றன; இதனால் தீ மற்றும் மின்னொழுக்கு ஏற்படும் அபாயமுண்டு.
முழுக் கட்டிடத்துக்கும் போதியளவு காற்றோட்ட வசதி இல்லாத காரணத்தினால் மூச்சுத் திணறும் நிலை ஏற்படுகின்றது. மறியற்சாலைச் சிற்றறைகளில் காணப்படும் யன்னல்கள் என்ற போர்வையிலான சிறு துவாரங்கள் போதியளவு தூய காற்றை உள்வர விடுவதில்லை. இந்நிலைமை இடநெருக்கடி காரணமாக மேலும் மோசமாகி விடுகிறது. வியர்வை வடியும் மனித உடல்களின் துர்நாற்றமும் வெப்பமும் அசுத்தமான சூழலும் அருவருப்புத் தருகின்றன. மூட்டுப்பூச்சி, கரப்பொத்தான் பூச்சிகள் இல்லாத இடமேயில்லை. மாதத்தில் பல தடவைகள் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுவதாக அதிகாரிகள்
216

குழுவினருக்குத் தெரிவித்தபோதிலும், ஒழுங்காக இது நடை பெறுவதில்லை எனவும் மூட்டுப்பூச்சிகள், கரப்பொத்தான்கள் ஏனைய பூச்சிகள் மலிந்துள்ளன எனவும் மறியற்காரர்கள் தெரிவித்தனர்.
தாம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிற்றறைகளில் மின்சார பல்புகள் கிடையாதெனவும் அவை விறாந்தைகளில் மாத்திரம் காணப்படுகின்றன எனவும் இதன் காரணமாக இருண்ட அறைகளில்தான் இரவு முழுவதையும் கழிக்க வேண்டியுள்ளதெனவும் மறியற்காரர்கள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், 'எல் - மண்டபத்திலுள்ள மறியற்காரர்கள் கடுமையான இடநெருக்கடி காரணமாக அறைகளில் பூட் டி வைக்கப் படுவதில்லை எனவும் பெருந் தொகையான மறியற்காரர்கள் விறாந்தைகளில் படுக்கின்றனர் எனவும் அதிகாரிகள், குழுவினருக்குத் தெரிவித்தனர்.
குடிப்பதற்கும் உடலைக் கழுவுவதற்கும் நீர் பற்றாக் குறையாக இருப்பதாக மறியற்காரர்கள் முறைப்பாடு செய்தனர். ஒவ்வொரு நாளும் குழாய் நீர் மிகவும் குறுகிய காலத்துக்குக் கிடைப்பதால் மறியற்காரர்கள் பிளாத்திக்கு கொள்கலன்களில் நீரைச் சேகரித்து வைக்கவேண்டியுள்ளது. குளிப்பு வசதிகளோ அரிது. ஒவ்வொரு மறியற்காரரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கொரு தடவை குளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்த போதிலும், ஒரு வாரத்துக்கொரு தடவை மாத்திரம் குளிப்பதாகவும் அதற்குக் கூட தண்ணிர் போதியளவு இல்லை எனவும் மறியற்காரர்கள் குழுவுக்குத் தெரிவித்தனர். மலசலசுட தண்ணி போதியளவு இல்லை எனவும் மறியற்காரர்கள் குழுவுக்குத் தெரிவித்தனர். மலசல கூட வசதிகள் முழுக்க முழுக்க பற்றாக் குறையே. 1,400இற்கு மேற்பட்ட மறியற்காரர்களுக்கு எட்டு மலசல கூடங்கள் மாத்திரமே உள்ளன. இதன்படி பார்த்தால் 175 பேருக்கு ஒரு மலசலகூடம். விளக்க மறியலில் உள்ளவர்கள் மயிர் வெட்டிக் கொள்ளவோ சவரம் செய்து கொள்ளவோ போதிய வசதிகள் இல்லாதவர்கள். பலருக்கு நீண்ட முடியும் தாடி மீசையும் காணப்படுகின்றது. மறியற் காரர்கள் பாதுகாப்புக் காரணங் களுக் காக சவரக் கத் தரிகள் பயன் படுத் த அனுமதிக்கப்படுவதில்லை எனவும் பெருந்தொகையான மறியற்காரர்களை சிகையலங்கார வேலையாட்கள் சமாளிக்க முடிவதில்லை எனவும் ஆராய்ச்சிக் குழுவுக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெலிக் கடை மறியற் சாலையிலுள்ள விளக்கமறியலில் உள்ளவர்களுக்கு வெகு குறைந்த படுக்கை வசதியே வழங்கப்படுகிறது. சில மறியற்காரர்களுக்கு பிளாத்திக்குப் பாய்கள் கொடுத்திருப்பதையும், சிலர் சாக்குகளில் படுத்திருப்பதையும் சிலர் வெறும் சீமெந்துத் தரையில் படுத்திருப்பதையும் குழுவினர் அவதானித்தனர். விளக்கமறியலில் உள்ள
217

Page 116
எந்த மறியற் காரருக்கும் தலையணையோ படுக் கைவிரிப்போ வழங்கப்படவில்லை. உடை மற்றொரு பற்றாக்குறையான விடயமாகும். பெரும்பாலான விளக்கமறியற்காரர்களுக்கு முறையான உடைகள் கிடையாது. சிலர் அழுக் கடைந்த, கிழிந்த கந்தைகளை உடுத்திருந்தனர். இத்தகைய நிலைமைகளில் மறியற்காரர்களை வைத்திருப்பது தரக் குறைவானதும் இம்சைப்படுத்துவதானதுமாகும். மறியற்சாலைகள் கட்டளைச் சட்டமும் அதன் கீழான விதிகளும் விளக்கமறியலில் உள்ள மறியற்காரர்கள் தமக்குவேண்டிய உடை, படுக்கை மற்றும் வேறு தேவைகளைப் பிரத்தியேகமாகப் பெற்றுக் கொள்வதற்குள்ள உரிமையைப் பிரயோகிப்பதற்கு ஏற்பாடு செய்த போதிலும், வெகு சிறு தொகையினரே இவ்வுரிமையைப் பிரயோகிக்கக் கூடியவர்களாக உள்ளனர். "குற்றத் தீர்ப்பளிக்கப்படாத மறியற்காரர்கள் தமக்குப் போதிய உடையோ அல்லது படுக்கையோ வழங்க முடியாதவராக இருக்கின்றவிடத்து. கண் காணிப்பாளர், மறியற்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 61ஆம் பிரிவின்கீழ் குடியியல் மறியற்காரருக்கு இதையொத்த நிலைமைகளில் வழங்கப்படக் கூடியவாறான அத்தகைய உடையை அல்லது படுக்கை வசதியை வழங்குதல் வேண்டும்.” என மறியற்சாலை விதி 191 கூறுகிறது. எவ்வாறாயினும், அத்தகைய நோக்கங்களுக்காக நிதிகள் கிடைக்காத காரணத்தினால் இத்தகைய சட்ட ஏற்பாட்டுடன் இணங்கமுடியாதுள்ளது என மறியற் சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்
விளக்க மறியலில் இருப்பவர்களுக்கு பொழுதுபோக்கு வசதிகள் கிடைப்பதில்லை. நாள் பூராவும் அவர்கள் "எல்-மண்டபத்துக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கின்றனர். கரம் அல்லது "ட்றாவ்ட்” போன்ற உள்ளக விளையாட்டு வசதியும் இல்லை. 1400 மறியற்காரர்களுக்கு ஒரு தொலைக்காட்சிப் பெட்டி உண்டு. மத்தியில் இயக்கப்படும் வானொலி முறைமை இருப்பதாக உத்தியோகத்தர்கள் குழுவுக்குத் தெரிவித்தனர். எவ்வாறாயினும் ஒலிபெருக்கிகள் சரிவர இயங்காமையினால் எதுவும் கேட்பதில்லை என மறியற்காரர்கள் முறைப்பாடு செய்தனர்.
5.2 குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட மறியற்காரர்கள்
குற்றத்திர்ப்பளிக்கப்பட்ட மறியற் காரர்கள் வெலிக் கடை சிறைச்சாலையில் 'சப் எல் பக்கம்' என அறியப்படும் மூன்று மாடிக் கட்டிடத்தில் நான்கு புயங்களில் காணப்படும் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இங்கும் கூட, கட்டிடங்கள் 125வருடங்கள் பழமை வாய்ந்தனவாகும். அவை செங்கட்டிகளும் சுண்ணமும் மணலும் கொண்ட
218

மரப்பலகைத் தளங்களுடன் கட்டப்பட்டனவாகும். கட்டிடத்தின் உட்பக்கம் இருள்படிந்ததாகக் காணப்படுகிறது. சூரியவெளிச்சம் அதற்குள் செல்வதேயில்லை. நிலத் தளம் நீர்கசியும் குளிர் நிலமாகக் காணப்படுகிறது. பதிவேடுகளின்படி பெரும்பாலான சிற்றறைகளில் ஐவருக்கு மேற்பட்ட மறியற்காரர்கள் இரவில் பூட்டிவைக்கப்படுவதாக ஆராய்ச்சிக்குழு அவதானித்தது. மறியற்சாலையின் சிற்றறையின் தள இடப்பரப்பு 54சதுர அடியாக இருக்கும்போது, அங்கு பாரிய இட நெருக்கடி காணப்படுகின்றது. விளக்கமறியல் கைதிகளைக் காட்டிலும் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட மறியற்காரர்கள் மாலை 6 மணிமுதல் காலை 6மணி வரை மாத்திரம் மறியற்சாலை அறைகளில் முடங்கிக் கிடக்க வேண்டி யுள்ளது. பகலில் அவர்கள் வேலைத் தளங்களுக்குச் சென்று விடுகின்றனர்.
வெலிக்கடை மறியற்சாலையிலுள்ள குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட மறியற்காரர்களுக்கும் படுக்கை, உடை, நீர், பொழுதுபோக்கு வசதி போன்ற குறைபாடுகள் உள்ளன. "குற்றத்தீர்ப்பளிக்கப்பட்ட ஒவ்வொரு மறியற்காரருக்கும், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வகையைச் சார்ந்தும் இவ்விதிகளுக்கான I ஆம் அட்டவணையில் விதிக்கப்பட்ட அளவுகளுக்கிணங்கியும் முறையே உடையும் உபகரணமும் வழங்கப்படுதலும் அவற்றை அவர்கள் அணியுமாறும் பயன்படுத்துமாறும் கட்டாயப்படுத்தலும் வேண்டும்.” என மறியற்சாலை விதி 223(1) கூறுகின்றது.
ஒவ்வொரு மறியற்காரருக்கும் பின்வரும் பொருட்கள் வழங்கப்பட வேண்டுமென அட்டவணை கூறுகின்றது
காற்சட்டைகள், வெள்ளை 3 மேற்சட்டைகள், வெள்ளை 3 கம்பளி 1
1.
கைத் துவாய்
தலையணையும் உறையும் 1 எவ்வாறாயினும், பெரும் எண்ணிக்கையினரான மறியற்சாலைகள் கந்தையாகிப் போய் அழுக்கேறிய உடைகளையும் ஒரு சிறு தொகை யினர் நல்ல துணியினாலான துப்புரவான வெள்ளை உடைகளையும் அணிந்திருப்பதையும் அவதானிக்க முடிந்தது. நிதிப் பற்றாக்குறை காரணமாக எல்லா மறியற்காரர்களுக்கும் ஆடைகள் வழங்குவது இயலாத காரியம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அன்றாடம் பெரும் எண்ணிக்கையானவர்களான குறுங்காலக் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட மறியற்காரர்கள் அனுமதிக்கப்படுவதால், மறியற்சாலையை விட்டு வெளியேறியவர்கள் அணிந்த ஆடைகளைக் கழுவாமலே இவர்களுக்குக்
219

Page 117
கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாக வேண்டியுள்ளது என அவர்கள் கூறினர். உத்தியோக பூர்வ மறியற்காரர் வகுப்பின் பற்றாக்குறை காரணமாக, மறியற்சாலை வகைக்கு இசைந்தொழுகும் வண்ணம் அமைந்த உடைகளை வீடுகளிலிருந்து கொண்டு வர வசதியுள்ளவர்கள் கொண்டு வருவதற்கும் உத்தியோகபூர்வ மற்ற முறையில் அதிகாரிகள் அனுமதித்திருந்தனர். நீண்டகால மறியற்காரருள் ஒரு சிலருக்கு மட்டுமே படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டன. பல வருடங்களாக எந்த மறியற்காரருக்கும் வெள்ளைத் துவாய்கள் வழங்கப்படவில்லை. பெரும் எண்ணிக்கையான மறியற் காரர்களுக்கு தலையணையோ உறைகளோ வழங்கப்படவில்லை.
மறியற்காரர்களுக்குப் போதியளவு உணவு வழங்கப்பட்ட போதும், அது சரிவரச் சமைக்கப்படாத காரணத்தினால், அதன் தரம் மிகவும் குறைவானதாக இருக்கின்றது. மறியற்சாலை உத்தியோகத்தர்களின் மேற்பார்வையின் கீழ் மறியற்காரர்களே தமது உணவைச் சமைத்துக் கொள்ளுகின்றனர். இவர்களிடையே திறமைமிக்க சமையற்காரர் கிடையாது. குசினிச் சுற்றாடல் துப்புரவற்றதாகும். குசினிக் குப்பை கூளத்தினால் வடிகான்கள் அடைத்துள்ளன; எங்கு பார்த்தாலும் ஈக்கள் ஏராளமாகக் காணப்பட்டன. சில உணவுப் பொருட்கள் குசினியைச் சென்றடைந்த பின்னர் காணாமற் போவதாக சில மறியற்காரர்கள் முறைப்பாடு செய்தனர். இவை எல்லாவற்றின் காரணமாகவும் தேகாரோக்கியமான உணவுகள் மறியற்காரர்களுக்குக் கிடைப்பதில்லை. வெலிக் கடை மறியற் சாலையிலுள்ள மறியற் காரர்கள் பற்றாக் குறையாகவுள்ள மருத்துவ வசதிகள் பற்றி முறைப்பாடு செய்தனர். ஒரு நாளில் இரண்டு மணித்தியாலங்களுக்கு மாத்திரம் ஒரு மருத்துவ அலுவலர் பிரசன்னமாவதாகவும், ஒருசிலரை மாத்திரம் அவர் பார்க்கக் கூடியதாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர். மறியற்சாலை விதிகள் 40 வரை, மறியற் சாலை மருத்துவ அலுவலர் தொடர்பாகக் காணப்பட்டாலும், அவ்விதிகள் கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரியவில்லை; வெலிக்கடை மறியற்சாலையில் நிரந்தர மருத்துவ அலுவலர் எவரும் இல்லை.
வெலிக்கடை மறியற்சாலைகளிலுள்ள குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட மறியற்காரர்கள் போதியளவு மலசலகூட வசதிகள் இல்லாமையினால் பெருஞ்சிரமத்துக்கு ஆளாகின்றனர். பெரும்பாலான மலசல கூடங்கள் துப்புரவற்றவை; நன்கு பராமரிக்கப்படாதவையாக இருக்கின்றன. மறியற்காரர்கள் மலங் கழிக்க மிக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்தனர். சில மறியற்காரர்கள் பொலிதீன்
22O

பைகளைப் பயன்படுத்தி மலங்கழித்து விட்டு அவற்றை மலசல கூடங்களில் போடுவதனால் அது அவற்றை அடைத்து விடுவதாகத் தெரிவித்தனர். மேலும் இரவில் மறியற்காரர்கள் சிற்றறைகளில் வைத்துப் பூட்டப்படும்போது, அங்கு மலசலகூட வசதிகள் கிடைப்பதில்லை. அவர்கள் ஒரு வாளியைப் பயன்படுத்துகின்றனர்; அது அச்சிற்றறைக்குள் மறுநாள் காலைவரை காணப்படும். 54 சதுரஅடி கொண்ட சிறு கூட்டுக்குள் ஐந்து அல்லது ஆறு மறியற்காரர்களுடன், இந்நிலைமை மிகவும் இழிவுபடுத்துவதும் சஞ்சலம் விளைவிப்பதுமாகும்.
குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட மறியற் காரர்களுக்கு பொழுது போக்குவதற்கோ விளையாட்டுக்களுக்கோ ஒருசில வசதிகளே உள்ளன. 2,500 பேர் வரையுள்ள முழு மறியற்காரர்களுக்கும் மூன்று கரப்பந்தாட்ட இடங்கள் மாத்திரம் உள்ளன. இவை வார இறுதிநாட்களிலும் விடுமுறை நாட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. 'கரம் பலகைகள் ‘ட்றாவ்ட் பலகைகள் ஒரு சில உண்டு. மறியற் காரர்களுக்கு பொதுத் தொலைக்காட்சி வசதிகள் உண்டு; ஆனால் இவை போதாது.
5.3 சர்வதேச செஞ்சிலுவைச் குழுவினரால் செய்யப்பட்ட
அவதானிப்புரைகள்
கடந்த பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர் இலங்கையிலுள்ள மறியற் சாலைகளுக்குச் சென்று பார்வையிட்டு வந்தனர். மறியற்காரர்களின் நிலைமையைக் கண்டறிவதற்காகவும் அவர்கள் நடத்தப்படும் விதம் பற்றித் தெரிந்து கொள்வதற்காகவும், இலங்கை அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பேரில், செஞ்சிலுவைச் சங்க உத்தியோகத்தர்களுக்கு நாட்டிலுள்ள எல்லா மறியற்சாலைகளுக்கும் விஜயம் செய்வதற்கான தங்கு தடையற்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மறியற்சாலை அதிகாரிகளின் சமூகத்தில் இல்லாமல், தனிப்பட மறியற்காரர்களுடன் உரையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சர்வதேச அங்கீகாரம் பெற்ற வெளிவாரிக் கண்காணிப்பு முறை மூலம் இந்நாட்டின் மறியற்காரர்கள் நடத்தப்படும் தராதரத்தை இலங்கை அரசாங்கம், பாரபட்சமின்றி, மதிப்பீடுசெய்ய இயலச் செய்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உத்தியோகத்தர்கள் ஆககுறைந்தது ஒரு தடவையேனும் நாட்டிலுள்ள ஒவ்வொரு மறியற்சாலைக்கும் விஜயம்செய்து பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அந்தரங்கமான அறிக் கையைச் சமர்ப்பித்துள்ளனர். இந்த
221

Page 118
அறிக்கைகளைப் பார்வையிடுவதற்கு என்னை அனுமதித்ததற்காக மறியற்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு நான் நன்றியுடையவனாக இருக்கின்றேன்.
2002 செப்ரெம்பர் 19ஆம் திகதி சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உத்தியோகத்தர்கள் போகம்பரை மறியற்சாலைக்கு(கண்டி) தமது வருடாந்த விஜயத்தை மேற்கொண்டு தமது அறிக் கையை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்குச் சமர்ப்பித்தனர். குறித்த சில மறியற் சாலை உத்தியோகத்தர்கள் பல வருடகாலமாக மறியற்காரர்களைத் துன்புறுத்துவதாக அறிக்கை கூறியது. இதுபற்றி சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உத்தியோகத்தர் ஆணையாளர் நாயகத்துக்கு மே 1999, செப்டெம்பர் 2000 மற்றும் ஒக்டோபர் 2001 இலும் அறிக்கையிட்டனர். 2002 செப்ரெம்பரில் தாம் விஜயம்செய்த போது போதைவஸ்துக் களுக்காகவும் ஏனைய தடுக் கப்பட்ட பொருட்களுக்காகவும் தேடும் சாக்கில் சில மறியற்சாலைக் காவலர்கள் நடந்து கொண்ட கொடூரமான விதம் பற்றித் தெரியவந்தது எனக் கூறினர். மறியற் சாலை உணவின் தரம் பற்றி முறைப்பாடு செய்ததற்காகத் தாம் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாக மறியற்காரர் தெரிவித்ததாக அறிக்கை மேலும் தெரிவித்தது. இரண்டு மறியற்காரர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாக மறியற்காரர்கள் தெரிவித்ததாக அறிக்கை மேலும் தெரிவித்தது. இரண்டு மறியற்காரர்கள் அடித்துத் துன்புறுத்தப் பட்டதற்கு அடையாளமாக அவர்கள் உடலில் தழும்புகளைக் கண்டதாகவும் மேலிடத்துக்குத் தெரிவித்தால் தமக்குத் தான் துன்பம் என்ற காரணத்தால் மறியற் காரர்கள் தெரிவிக்கவில்லையெனவும் விஜயம் செய்தவர்கள் அறிக்கையிட்டனர். எவ்வாறாயினும் மறியற்காரர்களைத் துன்புறுத்தா திருப்பதற்காக தமது உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி ஒழுக்காற்றை நிலைநாட்ட புதிய கண்காணிப்பாளர்கள் எடுத்த முயற்சிகளுக்காக செஞ்சிலுவைச் சங்கம் அதன் பாராட்டைத் தெரிவித்தது.
போகம்பரை மறியற்சாலையைப் பொறுத்தவரை, சில பராமரிப்பு வேலைகள் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மறியற்சாலையின் வயது காரணமாகவும் பராமரிப்பு இன்மையாலும் சீர் குலைந்த நிலையில் கட்டிடம் உள்ளது. குசினி நிலைமை மிகவும் மோசம் என செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர் சுட்டிக் காட்டினர். காற்றோட்ட வசதி இல்லாமையினால் குசினி வெப்பமாகவும் புகை மண்டியும் காணப்பட்டது. அல்லாமலும் குசினியின் கீழ்த் தரை உடைந்தும் குண்டும் குழியுமாக இருந்த காரணத்தால், அழுக்குநீரும் உணவும் தேங்கி அசுத்தமான சூழலை உருவாக்கியது.
222

மறியற்சாலையின் ஒரு விசேட பிரிவில் மறியற்காரர்கள் 30 நிமிட நேரமே வெளியில் உலாவ அனுமதிக்கப்பட்டதனை சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் அவதானித்தனர். இது ஐ.நா. ஆகக்குறைந்த தராதர விதிகளின் 21ஆம் விதியின் மீறுகையாகும். 2002 ஆகஸ்டில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் கொழும்பிலுள்ள புதிய மகசீன் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தனர். இட நெருக்கடி, மறியற்காரர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், மருத்துவ வசதிகள் மற்றும் உடைகள் வழங்குதல் ஆகிய விடயங்கள்பற்றி செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் பிரஸ்தாபித்தனர். ‘இலங்கையிலுள்ள பெரும்பான்மையான மறியற்சாலைகளில் போன்று இங்கும் இடநெருக்கடி ஒரு முக்கிய பிரச்சினையாகும்’ என அறிவித்ததாகத் தெரிவித்தது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இரு தமிழ் க் கைதிகள் தனியான ஒரு பிரிவில் சிங் கள மறியற்காரர்களுடன் சேர்த்து அடைத்து வைத்திருப்படுவதனால் தமது நிலைமை பயம் நிறைந்ததாகவும் பாதுகாப்பற்றதாகவும் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உறுப்பினாாகளிடம் தெரிவித்தனர். சங்க உறுப்பினர்களின் விஜயத்துக்கு ஒரு மாதம் முன்னராக சிங்கள மறியற்காரக் கும்பலினால் தாக்கப் படுவதிலிருந்து தாம் மயிரிழையில் தப்பிப்பிளைத்ததாக அவர்கள் கூறினர். இவ்விடயம் பற்றி அவர்கள் ஆணையாளர் நாயகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து, தம்மை உடனடியாக மீண்டும் களுத்துறை மறியற்சாலைக்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டனர். சுகாதார நிலைமையைப் பொறுத்தவரை மறியற்சாலையின் மலசலகூடத்தின் ஒரு பகுதி எப்போதுமே அடைத்துக் காணப்பட்டது. அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக முறைப்பாடுகள் பெறப்பட்டன. உடையும் பற்றாக் குறையே. குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட மறியற்காரர்கள் ஒரு தொகுதி உடையையே பெறுவதாகவும் மாற்றுடை கிடைப்பதில்லை எனவும் கூறினர்.
2002 ஜூலை 31இல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர் குருவிட்ட விளக்க மறியற் சாலைக்கு விஜயம் செய்து தமது அறிக்கையில் இட நெருக்கடிப் பிரச்சினை பற்றிப் பின்வருமாறு பிரஸ் தாபித்தனர். -
"மறியற்காரர்கள் தொகை இம்முறை 173ஆக அதிகரித்துள்ளது. பெண்கள் பகுதி ஒருபுறமிருக்க, எல்லாப் பகுதிகளிலும் இட நெருக்கடி காணப்படுகிறது. ஏ மற்றும் பீ பகுதிகளில் மறியற்காரர்கள் மலசலசுடப் பகுதிகளிலும் நீர்த்தாங்கிகளுக்கு மேலும் படுக்கவேண்டிய நிலை காணப்படுகிறது. ஈ பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இரவில் படுத்துறங்கும்போது எந்தப் பக்கமும் புரள்வதற்குக் கூட முடியாதென மறியற்காரர்கள் முறைப்பாடு செய்கின்றனர்."
223

Page 119
"சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒரு மறியற்காரருக்கு ஆகக்குறைந்த அளவாக 2 சதுர மீற்றர்களை விதந்துரைக்கின்றது. ஆனால் இங்கு ஒரு கூண்டில் கிடைக்கும் இட வசதி 0.52 சதுர மீட்டர் களாகும். சராசரி கிடைக்கக்கூடிய இடவசதி மறியற்காரருக்கு 1 சதுரமீட்டரிலும் குறைவாகவே உள்ளது.”
"இடநெருக்கடி மிகுதியும் பலர் கூண்டுகளுக்குள் அடைபட்டுக் கிடப்பதால் வெளியிடப்படும் வெப்பமும் சரும நோய்கள் பரவுவதற்கு முக்கிய காரணங்களாகும். பெரும்பாலான ஆண் மறியற்காரர்களுக்கு இடுப்புப் பகுதிகளில் வெப்பச்சொறி நோய் பரவி உள்ளதைக் காண முடிந்தது"
மேற்படி அவதானிப்புரைகள் இலங்கையில் மறியற்காரர்களின் இடவசதி தொடர்பான ஆகக் குறைந்த தராதரங்கள் அவதானிக்கப் படுவதில்லை என்பதனை காண்பிப்பதற்குப் போதுமானவையாகும். இந்த மேற்படி நிலைமை மறியற்காரர்களை நடத்தும் விதம் பற்றிய ஆகக்குறைந்த தராதர விதிகளின் 10ஆம் விதியில் ஆக்கப்பட்ட ஏற்பாடுகளின் நோக்கில் மதிப்பிடப்பட முடியும்:
"மறியற்காரர்களின் பயன்பாட்டுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட போதிய இடவசதிகள் குறிப்பாக படுக்கை இடவசதி, கால நிலைமைகள் குறிப்பாக தேவைப்படும் காற்றின் அளவு, போதிய தளப்பரப்பு, வெளிச்சமிடல், வெப்பமூட்டல் மற்றும் காற்றோட்ட வசதி என்பவற்றுக்கும் போதிய கவனஞ்செலுத்தி சுகாதாரத் தேவைப்பாடுகள் எல்லாவற்றையும் பூர்த்திசெய்யவேண்டும்."
சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் குருவிட்ட விளக்க மறியற் சாலையில் மறியற் காரர்களுக்கு போதிய குளிப்பு நீர் வசதியின்மை அடைத்த மற்றும் மேற்பாயும் மலசலகூடங்கள் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகள் இன்மை பற்றி கருத்துரை செய்தனர்.
2002 ஒக்டோபர் 1ஆம் திகதி சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் நாட்டின் தெற்கிலுள்ள தங்காலை மறியற் சாலைக்கு விஜயம் செயப் தனர் . மறியற் காரர்கள் சில மறியற் சாலை உத்தியோகத்தர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்து மறியற்சாலையின் பொறுப்பைத் தாமே ஏற்றுக்கொண்ட பாரதூரமான கலவரத்தின்பின்னர் மூன்று மாதங்கள் கழித்து இவர்களின் விஜயம் இடம் பெற்றது. இத்தகைய கலவரத்துக்கு முக்கிய காரணம் நீரின் பற்றாக்குறையும், கடுமையான இட நெருக்கடியும், தரக்குறைவான உணவும், நீதித்துறைத் தாமதமும் மறியற்காரர்களின் முறைப் பாடுகளைக் கவனிக்காமையுமே ஆகும். கலவரத்தின் பின்னர்
224

1றியற்காரர்கள் ஏனைய இடங்களுக்கு மாற்றப்படடனர்; (அங்கும் பிரச்சினை கூடியதால்) செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர் விஜயம்செய்த வேளையில் பலர் திரும்பி வந்துள்ளனர். மறியற்காரர்களுக்கும் Iறியற்சாலை அதிகாரிகளுக்குமிடையேயான முறுகல்நிலை தொடர்ந்தும் காணப்பட்டது. Soi Do?) det
பத்து மறியற்காரர்கள் பூசா மறியற்சாலையிலிருந்து தங்காலை மறியற்சாலைக்குத் திருப்பி அனுப்பப்பட்டபோது செப்டெம்பர் 26ஆம் திகதி நான்கு மறியற்சாலை அதிகாரிகளினால் மரப்பொல்லுகளால் தாக்கப்பட்டதாக தம்மிடம் முறைப்பாடு செய்ததாக செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர் தெரிவித்தனர். தாக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டதாகவும் இனியும் தாக்கப்படுவர் என அச்சுறுத்தப் பட்டதாகவும் கூறப்பட்டது. இச்சம்பவம் நடைபெற்ற ஒரு வாரத்தின் பின்னர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர் விஜயம் செய்தபோது, தாக்கப்பட்ட மறியற்காரர்களின் தோள்பகுதியிலும் பின்புறத்திலும் காயங்கள் மற்றும் தழும்புகள் காணப்பட்டதாக செஞ்சிலுவைச்சங்க தெரிவித்தது. அதேவாரத்தில், அடுத்தடுத்து இரு இரவுகளில் மறியற்சாலை உத்தியோகத்தர்கள் மதுபோதையில் எழுப்பித் தம்மைத் தொந்தரவு செய்ததாகவும் பல விளக்கமறியற்காரர்கள் தெரிவித்தனர். ஆண்டின் அக்காலத்தில் கம்பாந்தோட்டை மாவட்டம் முழுவதும் நிலவிய கடும் வரட்சி காரணமாக ஒரு பரவலான பிரச்சினை என ஏற்றுக்கொண்ட போதிலும், தங்காலை மறியற்சாலையில் நீர் பெறுவது பெரும் பிரச்சினை எனச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் அறிக்கையிட்டனர். மறியற்காரர்கள் வாரத்துக்கொரு தடவையே குளிக்கமுடியும் எனவும் மறியற்காரர்கள் தமது கைகளிலும் கால்களிலும் இடுப்பிலும் ஒழுங்காகக் குளிக்காத காரணத்தால் சொறிகள் ஏற்பட்டுள்ளதெனவும் தெரிவித்தனர். நீர்காவு வண்டிகள் மூலம் நீர் விநியோகிக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக மறியற்சாலை அத்தியட்சகர் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களுக்குத் தெரிவித்தார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் நீர்கொழும்புபள்ளன்சேனவிலுள்ள சிறுவர் தவறாளர்களுக்கான சீர் திருத்த நிலையத்துக்கும் விஜயம் செய்தனர். இங்கும் பிரச்சினையாக இருப்பது இட நெருக்கடி என்பதை உணர்ந்தனர். இரவில் இடநெருக்கடி காரணமாகப் பெருஞ் சிரமங்கள் ஏற்படுவதாக மறியற்காரர்கள் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களுக்குத் தெரிவித்தனர். கட்டிடங்கள் பழுதுபார்க்கப் படவேண்டும் எனவும் மலசலகூடங்கள் அடைத்துக் காணப்படுவதாகவும் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் அவதானித்தனர்.
225

Page 120
2002ஆம் ஆண்டில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் மாத்தறை மறியற்சாலை, பொலனறுவை மறியற்சாலை, மட்டக்களப்பு மறியற்சாலை ஆகியவற்றுக்கும் விஜயம் செய்தனர். இங்கு இட நெருக்கடிப் பிரச்சினை இல்லாதபடியால், இச் சிறைச்சாலைகள் தொடர்பாக எவ்வித பாதகமான அவதானிப்புரைகளையும் செய்யவில்லை. அவர்கள் விஜயம் மேற்கொண்ட சமயத்தில் பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மறியற்சாலைகள் குறைந்தளவு எண்ணிக்கையான ஆட்களையே கொண்டிருந்தன. மாத்தறையில் இரு மாடிக் கட்டிடம் கட்டப்பட்ட காரணத்தினால் மாத்தறை மறியற்சாலையில் இட நெருக்கடி இல்லாதிருந்தது.
மறியற்காரர்களுக்கு வரவேற்கத்தக்க வாழ்வு நிலைமைகள் காணப்படுவதில்லை என்பதனால் மனத் தளர்வு அடைந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர், 2002ஜூனில், பிரச்சினைகளை எடுத்துக் காட்டுவதற்காகவும் தீவுகளுக்கான வழிவகைகளைக் காண்பதற்காகவும் மறியற்சாலைத் திணைக்களத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கென "இலங்கை மறியற் சாலைகளில் வாழ்வு நிலைமைகள்" என்ற கருத்தரங்கொன்றை நடாத்தினர். ஜெனிவாவைச் சேர்ந்த நீர் மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள் இக்கருத்தரங்கை நடாத்தினர். இதன் தொடர் பணியாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இந் நிறுவனங்களில் நீர் மற்றும் சுகாதார வசதிகள் பற்றி ஆலோசனை வழங்குவதற்க்ாக 2002 ஒக்டோபரில் ஜெனீவாவைச் சேர்ந்த நீர் மற்றும் சுகாதார நிபுணரான திரு.அன்ட்றே செளடானின் சேவைகளைப் பெற்றுக்கொண்டது.
6. முடிவுரை
மேற்படி ஆய்விலிருந்து பாரதூரமான இடநெருக்கடியே இலங்கையில் மறியற்காரர்களின் பல உரிமைகள் பறித்தெடுக்கப் படுவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. பல தசாப்தங்களாக இட நெருக்கடி மோசமாகிக் கொண்டே போகிறது. ஒவ்வோராண்டும் மறியற்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் நிருவாக அறிக்கை மறியற்காரர்களின் தொகை அதிகரிப்பினால் மோசமாகும் நிலைமை பற்றியே குறிப்பிடுகின்றது. இந்நிலைமை கடந்த 12வருட காலமாக மேலும் மோசமாகியுள்ளது. வடக்கு-கிழக்கு யுத்தமும் மறியற்காரர் தொகையை 1000 முதல் 1500 வரை உயர்த்தியுள்ளது. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நீதிமன்றங்கள் அல்லது பொலிஸ் இல்லாதபடியால், மறியற் சாலையிலேயே அவர்களைத் தடுத்து
226

வைக்கவேண்டியுள்ளது. 1990ஆம் ஆண்டில் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட விளக்க மறியற்காரர்கள் தொகை நாடு பூராவும் 1,009ஆக இருக்க, உண்மையில் சராசரியாக 6,222பேர் மறியற் சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டனர். இது 516.7% வீத இடநெருக்கடி மட்டமாகும். 2001ஆம் ஆண்டில் அன்றாடச் சராசரியாக 8,596 விளக்க மறியற்காரர்கள் காணப்பட்டனர். இது 1990ஆம் ஆண்டின் தொகையை விட 2,374 பேர் கூடவாகும். இதன்படி பார்க்கும்போது 1990ஆம் ஆண்டுக்கும் 2001ஆம் ஆண்டுக்குமிடையே 600 பேருக்கு மேலதிக இடவசதி தேவைப்பட்டது. 2001ஆம் ஆண்டில் விளக்க மறியற் காரர்களிடையே 435% இடநெருக்கடி மட்டம் காணப்பட்டது. இந்நிலையே மாற்றமின்றி 2002ஆம் ஆண்டு முழுவதும் நிலவியது.
பல வருடங்களாகக் குற்றத் தீர்ப்பளிக்கப்படட மறியற்காரர்கள் இட நெருக்கடிப் பிரச்சினையை எதிர் நோக்கவில்லை. அதிகார மளிக்கப்பட்ட இட வசதி 5,500பேர் சராசரியாக இருந்து வந்துள்ளனர். எவ்வாறாயினும் விளக்கமறியற்காரர்களின் இடநெருக்கடி காரணமாக அவர்கள் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் மறியற் சாலைக்குள்ளும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஒருவருக்கெனக் கருதப்பட்ட கூண்டுக்குள் ஐந்து பேருக்கு மேல் இருக்க நேரிட்டது. 1996ஆம் ஆண்டு தொடக்கம் 2001ஆம் ஆண்டு வரை இட நெருக்கடிப் பிரச்சினை மோசமாயிற்று. 1996ஆம் ஆண்டில் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட மறியற்காரர்களின் அன்றாடச் சராசரி 5,511ஆக உயர்ந்தது. 2001இல் இத்தொகை 8,439ஆகும். இது 1996ஆம் ஆண்டின் தொகைகளைவிட 2,928 அல்லது 53% அதிகரிப்பாகும். இத்தகைய அதிகரிப்புக்குப் பிரதான காரணம் இக்காலப் பகுதியின்போது விசேட மன்னிப்பு முறைகளும் மறியற்காரர்களை உத்தரவின் பேரில் விடுதலை செய்யும் முறையும் இடைநிறுத்தப்பட்டமையாகும்.
ஆகவே, 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டுவரை மறியற் காரர்களின் அன்றாடச் சராசரி எண் ணிக் கையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு காணப்பட்டது. 1996ஆம் ஆண்டில் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட மற்றும் விளக்க மறியற்காரர்கள் ஆகிய இரு சாராரினதும் அன்றாடச் சராசரி 11,972ஆக இருந்தது. 2001ஆம் ஆண்டில் இத்தொகை 18, 132 ஆக இருந்தது. இது 51% அதிகரிப்பாகும். ஐந்து ஆண்டுகளில், அங்கீகரிக்கப்பட்ட இடவசதியான 7,100 கொண்ட தொகையுடன் ஒப்பிடும்போது 2001ஆம் ஆண்டு முடிவில் இட நெருக்கடி மட்டம் 255% இற்கும் மேற்பட்டதாகும். இந்நிலைமை 2002ஆம் ஆண்டு முழுவதும் நிலவியது.
227

Page 121
ஒன்றில் மறியற் சாலைகளுக்குள் அனுமதிக்கப்படுவோர் தொகையைக் குறைப்பதற்கு அல்லது அதிகரித்து வரும் எண்ணிக்கை யினருக்கு வேண்டிய இடவசதிக் காகப் புதிய கட்டிடங்களைக் கட்டுவதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக் கப்பட்டாலொழிய, மறியற்சாலைகளில் மறியற்காரர்கள் அனுபவிக்கும் துன்பத்தையும் அடிப்படை உரிமைகளின் மீறலையும் தவிர்க்க முடியாது. பணம் படைத்த அமெரிக்கா போன்ற செல்வந்த நாடுகளில் கூட புதிய மறியற்சாலைக் கட்டடிடங்களைக் கட்டுவதென்பது பெருஞ்செலவை ஏற்படுத்தும் விடயமாக இருந்து வந்துள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை நன்னடத்தைப் பாதுகாவல் மற்றும் சமூக அடிப்படைச் சீர்திருத்தக் கட்டளைகள் போன்ற கட்டுக்காப்பற்ற தண்டனைத் தீர்ப்புகளின் பயன்பாட்டை விஸ்தரிப்பதே மிகவும் பொருத்தமான யுக்தியாகும். பொருத்தமான மறியற்காரர்கள் சுதந்திரமாகச் சென்று வேலை பார்த்துத் திரும்பி வரும் கட்டளையின் கீழ் வெளிவிடப்படுதல் சாலச் சிறந்த வழியாகும்.
விளக்க மறியற்காரர்களின் தொகையைக் குறைப்பதற்காக, பிணையில் விடும் முறை பெரிதும் பயன்படுத்தப்படுவதற்குக் கவனஞ் செலுத்தப்படுதல் அவசியம். 1997ஆம் ஆண்டு நவம்பரில் புதிய பிணைச் சட்டம் கொண்டுவரப்பட்ட காலந்தொட்டு, விளக்க மறியற்காரர்களின் வருடாந்த அனுமதித் தொகையும் அன்றாடச் சராசரித் தொகையும் கணிசமானளவு கூடியுள்ளன. உதாரணமாக, 1997-1999 காலப்பகுதியில் வருடாந்தம் அனுமதிக்கப்பட்டோர் தொகை வருமாறு
1997 71,350 1998 76,930 1999 77,374
இவ்வாண்டுகளில் காணப்பட்ட விளக்க மறியற்காரர்களின் அன்றாடச் சராசரி வருமாறு :
1997 6,702 1998 7,530 1999 7,960
இவ்வாறு அதிகரித்துக்கொண்டு போகும் போக்கு 2000, 2001 மற்றும் 2002ஆம் ஆண்டுகளிலும் தொடர்ந்தது. உதாரணமாக 2001 செப்ரெம்பர் 30ஆம் திகதி 8,439 விளக்க மறியற்காரர்கள் இருந்தனர். 2003 ஏப்ரல் 15ஆம் திகதி 9,244 பேர் இருந்தனர். ஆழமான ஆய்வு மேற்கொள்ளாமல் இவ்வதிகரிப்புக்கும் புதிய பிணைச் சட்டத்துக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா எனக்கூற முடியாது.
228

மறியற்சாலைகளிலுள்ள பல குறைபாடுகளுக்கு இடநெருக்கடி ஒரு காரணமாக இருந்தால், ஏனைய பிரச்சினைகளுக்குக் காரணம் நிதிப் பற்றாக்குறையே. மறியற்சாலைகளுக்கு அரசாங்கச் செல வினத்தில் மிகவும் குறைந்தளவு முன்னுரிமையே கொடுக்கப்படுகின்றது. கிடைக்கக்கூடிய நிதிகள் பெரும்பாலும் நியதிச் சட்டத்தினால் குறித்துரைக்கப்பட்ட ஆகக் குறைந்த உபகரணத்தையேனும் மறியற்காரர் களுக்கு வழங்குவதற்குப் போதாததாகும். உடுப்பு, படுக்கை, மற்றும் குவளைகள், கோப்பைகள், வாளிகள் ஆகியன நிதிப்பற்றாக்குறை காரணமாகப் போதியளவு வழங்கப்படுவதில்லை. கட்டிடங்களின் சீரழிந்த நிலைமையும் திருப்திகரமற்ற சமையல், மலசலகூட மற்றும் குளிப்பு வசதிகளும் நிதிப் பற்றாக்குறையையே எடுத்துக் காட்டுகின்றன. பெரும்பாலான மறியற்சாலைக் கண்காணிப்பாளர்கள் இட நெருக்கடியுடன் சேர்த்துப் பார்க்கும்போது நிதிப் பற்றாக்குறை பாரிய பிரச்சினை என சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களுக்குத் தெரிவித்தனர்.
மறியற்சாலை அதிகாரிகள் மறியற்காரர்களைத் தாக்குவது மட்டுமல்லாமல் அவர்களைத் துன்புறுத்தும் சம்பவங்கள் குறைவாக இருந்தபோதிலும், அவை மன்னிக்கப்படக்கூடியனவல்ல. அவைபற்றிக் கூடிய கவனஞ்செலுத்தப்பட வேண்டும். முகாமைத்துவத்தினர் குற்றம் புரிபவர்களைக் கண்டு பிடித்துத் தண்டிப்பதற்கும் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாதவண்ணம் தடுப்பதற்கும் வேண்டிய ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுக்கவேண்டும். இது தொடர்பாக, மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு பயிற்சி நெறிகளும் கருத்தரங்குகளும் பயிற்சிப் பட்டறைகளும் பல்வேறு தரத்தையும் சார்ந்த மறியற்சாலை அதிகாரிகளுக்காக 2002ஆம் ஆண்டில் நடாத்தப்பட்டன. அத்தகைய பயிற்சி, மறியற்காரர்களின் கட்டுக் காவலர்கள் என்ற தமக்குள்ள பங்கை மறியற்சாலை அதிகாரிகள் நன்கு விளங்கிக் கொள்ளுவதற்கும், மறியற் தண்டனை காரணமாக மட்டுப்படுத்தப்பட்டன தவிர்ந்த, மனித உரிமைகள் எல்லாவற்றையும் ஏனைய பிரஜைகளைப் போன்று அனுபவிப்பதற்கு மறியற்காரர்கள் உரித்துடையவர்களெனத் தெரிந்து கொள்ளுவதற்கும் உதவும்.
மறியற்காரர்களை மனிதாபிமானமற்ற நிலைமைகளின் கீழ் அடைத்து வைத்திருப்பது கொடூரமானதும் வழமைக்கு மாறானதுமான தண்டனையாகும் என்பது பற்றிய அதிகாரிகள் கூடிய கரிசனை செலுத்த வேண்டும். அரசியல் யாப்புக்கு முரணான முறையில் மறியற்சாலையை நடத்துவதற்கு நிதிகளின் பற்றாக்குறையை ஒரு சாட்டாகச் சொல்ல (ԼՔԼԶԱ IIT35l.
229

Page 122
இறுதியாக, மறியற்காரர்களை நடத்துவது தொடர்பாக சேர் வின்ஸ்டன் சேர்ச்சில் அவர்கள் தெரிவித்த கருத்து இந்த அத்தியாயத்துக்கு ஒரு பொருத்தமான முடிவுரையாக அமைகிறது. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஐக்கிய நாடுகளினால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு பல ஆண்டுகள் முன்னர் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்:
"குற்றத்தையும் குற்றவாளிகளையும் அரசு எவ்வாறு கையாளுகிறது என்பது எந்த நாட்டினதும் நாகரிகத்தை எடுத்துக் காட்டும் கண்ணாடி போன்றதாகும். குற்றஞ்சாட்டப்பட்டவரின் உரிமைகள், அதிலும் அரசுக்கெதிராகக் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளியின் உரிமைகள் பாரபட்சமற்ற வகையில் அங்கீகரிக்கப்பட வேண்டும். தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் சிந்தனைப் போக்கையும் அவர்களின் புனர்வாழ்வுச் செய்முறையைக் கண்டுணருவதிலும், ஒவ்வொரு மனிதன் உள்ளத்திலும் புதையல் உண்டு என்பதிலும் ஆழமான நம்பிக்கை வைத்தல் அவசியமாகும். இவையே ஒரு நாட்டின் நல்ல அம்சமும் பண்பும் ஆகும்."
影
O
※

அட்டவணை 1
2002 ஆம் ஆண்டு மார்கழி 31 இல் இலங்கையால்
கையொப்பமிடப்பட்ட, பின்னுறுதிப்படுத்தப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட பயங்கரவாதம் மீதான சர்வதேச சமவாயங்களும், மனித உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகள் சமவாயங்களும்“
N響ど *N。
※
இன அழிப்புக் குற்றத்துக்கான தண்டனையும் தடுத்தலும் பற்றிய சமவாயம், 1950 புரட்டாதி 12 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேசக் கட்டுறுத்து. 1980 ஆணி 11 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேசக் கட்டுறுத்து, 1980 ஆனி 11 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பெண்களுக்கெதிரான அனைத்து வடிவிலான பாரபட்சங்கள் பற்றிய சமவாயம். 1981 ஐப்பசி 5 இல் பின்னுறுதிப் படுத்தப்பட்டது.
ஓர் அரசினுடைய ஓர் ஒப்பந்தத்திற்கான சம்மதம் அவ்வரசின் பிரதிநிதியினுடைய கையொப்பத்தினால் வெளிப்படுத்தப்படுகின்றது. அச்சந்தர்ப்பத்தில் அவ்வொப்பந்தமானது அத்தகைய கையொப்பம் இச் சம்மதத்தை உறுதி செய்வதாக அதற்கான ஏற்பாட்டைக் கொண்டிருத்தல் வேண்டும். பல சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தரப்பினர் ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தில் சம்மதம் தெரிவித்திருக்க அல்லது அவ்வொப்பந்த சரத்தைத் தயாரிக்கும்போது நடைபெறும் வேச்சுவார்த்தைகளின்போது சம்மதத்தைத் தெரிவித்திருப்பார். இத்தகைய சந்தர்ப்பங்களில் கையொப்பம் மட்டும் போதாது. சம்மதத்தைக் குறிக்கும் முகமாக மற்றொரு நடவடிக்கை தேவைப்படுகின்றது. இதனைப் பின்னுறுதிப்படுத்தல் என்பர். இந்த அணுகுமுறையைப் பின்பற்றும் ஒப்பந்தங்கள், கையொப்பமானது ஒப்பந்தத்தின் வாசகத்தை உறுதி செய்வதாகக் கருதப்படும். பின்னுறுதிப்படுத்தலுக்கு மற்றொரு நோக்கமும் உண்டு சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் ஒப்பந்தத்திற்குக் கட்டுப்படுகின்றார்களா இல்லையா என்பதைத் தெளிவாக்க இதனால் இவ்வரசாங்கங்களுக்கு மற்றொரு சந்தர்ப்பமும் வழங்கப்படுகின்றது. ஆரம்பப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட அரசாங்கங்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் ஒப்பந்தத்தோடு சம்பந்தப்பட்ட தரப்பினராக விரும்பும்போது அதனை ஒப்பந்தத்தை ஏற்பதாகக் கூறுவதன் மூலம் செய்து கொள்ளலலாம். ஓர் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுச் சம்பந்தப்படும் பொழுது கையெழுத்திட்டோ அல்லது பின்னுறுதிப்படுத்தியோ சம்பந்தப்படும் பிற தரப்பினர் போன்று இவ்வொப்பந்தத்தின் கீழ் சகல உரிமைகளையும் பொறுப்புக்களையும் கொண்டு விளங்கும்.
231

Page 123
洪
s
அனைத்து வடிவிலான இனப் பாரபட்சத்தினை அகற்றுதல் பற்றிய சர்வதேச சமவாயம். 1982 மாசி 18 இல் ஏற்றுக்கொள்ளப்ட்டது. இன ஒதுக்கல் குற்றத்திற்கான (Crime of Apartheid) தண்டனையும் ஒடுக்கு முறையும் பற்றிய சர்வதேசக் கட்டுறுத்து. 1982 மாசி 18 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இராஜ தந்திர முகவர்கள் உள்ளிட்ட சர்வதேசரீதியாகப் பாதுகாக்கப்பட்ட நபர்களுக்கெதிரான குற்றங்களின் தண்டனையும், தடுத்து வைத்தலும், 1991 மாசி 27 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம். 1991 ஆடி 12 இல் பின்னுறுதிப்படுத்தப்பட்டது. சித்திரவதை மற்றும் ஏனைய கொடுரமான மனிதாபிமானமற்ற அல்லது தரக்குறைவான நடத்துகை அல்லது தண்டனைக்கு எதிரான சமவாயம். 1994 தை 3 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேசக் கட்டுறுத்துக்கான விருப்புரிமைப் பின்னேற்பாடு 1. 1997 ஐப்பசி 3 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலை ஒடுக்குவதற்கான சர்வதேச சமவாயம். 1999 பங்குனி 23 இல் பின்னுறுதிப்படுத்தப்பட்டது. ஆயுதப் பிணக்குகளில் ஈடுபடும் சிறுவர்கள் பற்றிய சிறுவர் உரிமைகள் மீதான சமவாயத்துக்கான விருப்புரிமைப் பின்னேடு. 2000 புரட்டாதி 6 இல் பின்னுறுதிப்படுத்தப்பட்டது. பணயக் கைதிகளாக வைத்திருப்பதற்கு எதிரான சர்வதேச சமவாயம். 2000 புரட்டாதி 6 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கரையோரப் போக்குவரத்துப் பாதுகாப்புக்கு (Safety of Maritime Navigation) எதிரான சட்டரீதியற்ற நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கான சமவாயம். 2000 புரட்டாதி 6 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கலைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச சமவாயம். 2000 மார்கழி 15 இல் ஒப்பமிடப்பட்டது. ஆட்களை விசேடமாக பெண்கள் மற்றும் சிறுவர்களைக் கடத்துதலைத் தடைசெய்தல், கட்டுப்படுத்தல், தண்டனை வழங்கல் ஆகியவற்றுக்கான பின்னேற்பாடு - சர்வதேச ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்துக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் பிற்சேர்க்கை 2000 மார்கழி 15 ஒப்பமிடப்பட்டது. சிறுவர்களை விற்றல், சிறுவர் விபச்சாரம், ஆபாசப்படம் எடுத்தல் மீதான சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்துக் கான விருப்புரிமைப் பின்னேடு. 2002 வைகாசி 8 இல் ஒப்பமிடப்பட்டது.
232

IỆTITITITŲ9œ09
IỆTIITEITĮ9q309 IỆTITITITŲ9œ009
IỆTITITŪTŲ9œ009 I@-T-ITTRITŲ9œ09
IỆTITITITŲ9q309 IỆTITITITŲ99809
ഢയ9g് m@09 unig) (JOE
0ç6 I ’60’ZO ţg6I (IỆTITIT KẾoĝ9)|$) qITm III(90ī£ (1,99£1ņ09T19) Q909|(99) stos@ |#O 096 || 'f70’90096] qiTnIII(90ī£ qım siūē TnIITIÐ 6ZO 1961-90-60 SZ6I QITnIRSJĘ (Q9@@ırı9) qıígầTrẻ) qỊ109@1(99) gầgioso@qrqsē 9ZO
Z96 I ’90' L I- -çZ6|| q In 111090]+? (ų9@Inligig) gắqÍıĮį].{?Q9țiloso)) @Ł Tổ(9qÍ 199Ų199ĐỊ119II nų,09Tl8IO
096 || 'f70’SZIZ6] qiTnII (90]+? (Q971&F) 10909@log)ŲTI FIRSTĒĢ@JI 199ų9œīsfā’ qIı,9€ 9IO I ç6 I #0. gz Iz6I qımı Rogī£ (SuɔxɔOIS ? SJòuuuusu L) IĜInfo ssqissioo@qoftē, çLO Z96 E '80' S.ZIz6I QITnIII(90ī£ (qırmı]{}f(o[9) J109ŲTā 199ĝoẾoĐIỆ] © IIO | 66 || ' | | '67Iz6I qımıf(90ī£ (qırmıler(9Ų9) ĶĒrmīto gýgjofc09@qoft® OŁO I Ç6s ^{20’ SZIz6I qımı R901.8 €9)-lÇır]đi@ Jigo 199Ųnɑ909199)8O 096 | '60’Z0Oz6I qıfını Rogī£ (Q9-ig) IỆTnIo gïgî@joo@ qoftā,LO
096 I ’0 I '976I 6 I QITm III(90ī£ (Q9Ựillos 9$q}(09) Q99ĒJisīļ09TI Q9Ų9ÍNo 1,939||Tīgi IỆTnIo1,9€)9C) 0Ç6 I ’60’ LZ6I 6I q.TnII(90ī£ (Q9ğilsig)gồq}(09) IĜInso gặqİGİ09@ qoftā,SO I Ç6|| '0's '806I 6 I QITnIR90ī£ (ų93?-1909T19) Q99ĒJITĻ09TI Q9|(90&†7O
取9因
Inī£ ĝ@rısıĻĢIẾIGĒ Ļ9ŲıĮrnrı(g)·os@ (also
00TKTLLL SLL LLYz LLLLLLL LLTLL HYYY0CKYYLYYK LCLLLMK
II 10090919TIK?

Page 124
IỆTITIIT-TIŲ9œ009
Ç66 || 'f70, †7Z8Ç6 I QITnIII(90ī£ ||9,010909099, Qosjiloño) 199ų9œILTnastooftog,TZLIĞg)g'(ÒTIC)
966 || ' | [ 'f7Z896] qiTn||Rogī£ 1,9€/gl/1$$rı III19II n-109łęSJƏJeļe3S 986 I’OI, LŨ LS6|| almı[90]ae (1,9€IĘKŁOSISIĜI@ qsīgām qosqğıįsto) kosnĉè qğqjusaeg £66 [ 'f7'0' | 0ZS6I (KỂTirissosog)?) qımı 190ī£ fırılaeos@ırı so paesi £66 || 'f7'0" | 0IgőI qımı Roglo sợInsīgā dī£ ț7Ç6 || 'f70’90+1961 qımı 190ī£ (qırmıler(9079) qi109@ftog, og gjogo spostē 1091 og Notos@@@ıfıO TIẾ09@1@qsmẹ
ZL6|| ‘Z ] ` £ I676I qımı Rogī£ GIỌ9Ų-ā 1991??I$$isT19) qıÍTIg) fjoll-Tiup oqogħġg)rī£)ņķī)&
896 || 'f70’096ț76I (1@TITITIĶĒĢ@@) gırmıf(9qip !oosilosoofi) FII|In|I90909199) qi@g9się glogg-i-Iqpiggdì)
986 I ’0 I o LZ6f6] qimlI90ī£ FIIII?I?IIII 199ų9q13.109@ftog, 696 I ’90’8 I8ț6I (IẾTIŢIIIĜ@@@) qımı Rogio
(Qosjilosooĝo@9) Qoqofteg) stoß 199ų9æ-sœqIı,9€. 996 I 20. I o Sf6I (KŘTITIŴ@@) qımı 19ơī£ (1,9œlgœrio) osgoriog, kong 966 || ' | I ‘ SI876 I qırmı'Rogī o Gl(09ų-ā HIJIos@ITI 1091 og Notos@@@H(Norgồì& gif@qiążę19999F16
096|| ‘ț70, €0Lf6] qirn||Rogie (uoŋɔədsus Inoqers)10.909$ Ilog)ŲTI Q9ğiloso) 096 I ’60’0||976] qimi Rooi o qī£§@@ 199ų9œfosfīņs-a ĝisę Z96 I '80° ÇZ8£6] qimi Rogī£ 109IIIII–IIIĘto) 1,9€IĘlíTIŲ9ų91ļoh II (gig,0909199) qisąjai1,9€IĘ1109ĢĒR99) 696 I '90'8 I 9961 (NoTITIŴ@@) qismı Rogie (og-sœ) IỆrnito @@@@@@@qystę 096|| ‘Z ] `OZSɛ6] qimi sodī£ (1,9±1,9T19) Qoqofteg) điệp gogg, og
0[[O 80IO 90 I O Ɛ0IO 00IO
66O
86O
96O S6O
06Ɔ 68O
/80 [8O 08O
£9Ɔ 8SO Çț7O

·s–1·Ìrıņ@@@rı IIĘITIĜsols i Q91@ 8z lf ligi 6961
6+61 gırnı:Rogī£ 1.19ųọ9&o) 109IIIIIIII|$)) HIJITMEIỆITI199ų9œq?GIIĞITIO) Q9ĝoẾ09 Io soffin
·s?--Iriņos Ģ@rı IIĘITIĞ199Ųı Ọ9@ 8z Golgi 696 I
·6H6i gırnı:Rogī£ LIGŲ980) 1991 TIITIĶĒ9) KỂTILIŲJillíriIII.909€Œ œŒ œŒqğin
·s-ı-āriņqĒĢ9)rı sıĻĢIÕIGĒ199Ųı Ọ9© 8z Goldi 696 I
6+61 qımı 190ī£ IIIIoļņ9839) (uoŋɛJOĻIəUuV)109||Gog|GĖRos@@@TITI!!! 1.909€GI@o@909 ĝi qg-in-ıQąłto-ngo-ō Qgrīņos ‘Q9@@rımı forniosig)·ąggs-iaggirnuo 1,908||1(9@@@@@ -109TIQofnftē, Q9Q9ī£
· @-ızınıņgặgsg)rı sıĘIȚIĜņ9Țı Ç9@ 8z loIIGI 6G6I (6+6\ q1199-1&offsı IIIIo.jpg&o) 1091133?IĠĠoẾ9)ETJIsso
quoqoqogiqoq909 ĝi 199ų1932-109TIȚIẾfnftē,qig) !pq) gjạihsım 191n Igig) o qī£)?@@@ -109GimloQ9|$ $ 1,9%
·ņ9ægirniroong —ızıp ısıldırılığų9ơı -Izırıņĝoĝ0fırısım 1@19ŲTQ91|19Ųnogorgio9@
£66|| 'f7'0' | 0 ț766 || ' [ 0' L I
000Z" ZO’ [ I 9 L6|| ' | I ’9|| SL6|| '80' L l ț7 L6|| ‘#70’97 986 I '90’8|| 866 || ' | I o LZ
ç96Į qımı Rogī£ 1,9æIÐ ÍTIŲ9ų9ų9F| ||||9||09ĝiloso) 9/6) isoqosoqo oloogstē, 1991,09|[nī£9ŲIođì 1091€@$r[9]$$@TIGI018) 1090099ffornlstogiae (OTI) 199ĝoĝ109TLIKÉQ19,1,119||09ĝiLoĝio) ‘POSTĚ çL61 IỆmito qğqjaloog) qqsstē 199||GooĶĒJI@s@ 09ğiloso) I L6I q.TnIstoglo 1,9€Œgis (1) ||||9||09ĝiloso) OL6] qirnuftsgiae gırniso IIgs 109@1(99) sắqjsco@ofosfē [96] qimustegiae qi@@@@ 199ų9€ (1099) so osêsī£ 096] qimIII(ggl o FIIIII?IÊLTI Qosqo || $£ şç5] qimli(90ī£ (Q909R99) qisŪgigi Q9Ụiloslo) qī£TITIÚLTI
09 IC)
†7ț7 IO 8£IO SɛIO 19 IO 9 IIC) ŞI IO | [[O

Page 125
அட்டவணை III
இலங்கையினால் பின்னுதிப்படுத்தப்படாத சில மனித உரிமைச் சாசனங்கள்.
M費/ ※ܵ
குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேசக் கட்டுறுத்துக்கான விருப்புரிமைப் பின்னேடு II மனிதத்தன்மைக்கு எதிரான குற்றங்கள் மற்றும் யுத்தக் குற்றங்களுக்கான பிரயோகத் தன்மையற்ற சட்டரீதியான வரையறைகள் பற்றிய சமவாயம் கட்டாய ஊழியத்தினை ஒழித்தல் தொடர்பான ஐ.எல்.ஒ (ILO) 3FD6D] Tu JLD (96). 105) மேலே கூறப்பட்ட உறுப்புரை 21 தொடர்பான பிரகடனம் (அரச தரப்பொன்று இன்னொன்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் புகார்கள் தொடர்பானது) மேலே கூறப்பட்ட உறுப்புரை 22 தொடர்பான பிரகடனம் (தனி நபர்களினால் மேற்கொள்ளப்படும் புகார்கள் தொடர்பானது) சமூகப் பாதுகாப்பின் ஆகக் குறைந்த நியமங்கள் தொடர்பான ஐ.எல்.ஒ (ILO) சமவாயம் (இல.102) புலம் பெயர் தொழிலாளர்களைப் பராமரித்தல் மற்றும் சம சந்தர்ப்பத்தை மேம்படுத்தல் மற்றும் மோசமான நிலைமைகளில் உள்ள புலப் பெயர்வாளர்கள் தொடர்பான ஐ.எல்.ஒ (ILO) சமவாயம் (இல. 143) தொழிற் கொள்கை தொடர்பான ஐ.எல்.ஒ (ILO) சமவாயம் (இல. 122) கிராம தொழிலாளர்களின் நிறுவனங்கள் மற்றும் சமூக, பொருளாதார அபிவிருத்தியில் அவர்களின் பங்கு தொடர்பான ஐ.எல்.ஒ (ILO)
FLD6DJIT u JL D (9,6). 141) பொதுத்துறைச் சேவையில் தொழில் நிலைமைகளை நிர்ணயிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் ஒழங்கமைப்பதற்கான பாதுகாத்தல் உரிமை தொடர்பான ஐ.எல்.ஒ (ILO) சமவாயம் (இல. 151) அகதிகளின் நிலைமை தொடர்பான சமவாயம் 1951 1951 அகதிகள் சமவாயத்திற்கான பின்னேடு 1967 சர்வதேச ஆயுதப் பிணக்குகளால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புடன் (பின்னேடு 1) தொடர்பு படுத்துகின்ற 1949 ஆவணி 12 ஆம் திகதி ஜெனிவா சமவாயத்துக்கு மேலதிகமான பின்னேடு. சர்வதேச ரீதியில் அல்லாத ஆயுதப் பிணக்குகளால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புடன் (பின்னேடு 1) தொடர்பு படுகின்ற 1949 ஆவணி 12 ஆம் திகதி ஜெனிவா சமவாயத்துக்கு மேலதிகமான பின்னேடு. சர்வதேச ரீதியில் அல்லாத ஆயுதப் பிணக்குகளால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புடன் (பின்னேடு II) தொடர்பு படுத்துகின்ற 1949 ஆவணி 12 ஆம் திகதி ஜெனிவா சமவாயத்துக்கு மேலதிகமான பின்னேடு.
236

அட்டவணை IV
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை.
முன்னுரை
இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசு அரசாங்கத்தினதும் (இதன் பின்னர் இது அரசாங்கம் என அழைக்கப்படும்) தமிழ் ஈழ விடுதலைப் புலிகளினதும் (இதன் பின்னர் இது விடுதலைப் புலிகள் என அழைக்கப்படும்) முழுமையான நோக்கம் இலங்கையில் தொடர்கின்ற இன மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதேயாகும்.
அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் (இதன் பின்னர் தரப்புக்கள் என அழைக்கப்படும்) பகைமையை முடிவுக்குக் கொண்டு வருதல் மோதலால் பாதிக்கப்பட்ட எல்லா குடிமக்களினதும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தல் என்பவற்றின் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொள்கின்றனர். மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதை நிலையான தீவொன்றை நோக்கி மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஏற்ற சாதகமான நேர்நிலையொன்றை உருவாக்குவதற்குரிய ஒரு வழியாகவும் தரப்பினர்கள் காண்கின்றனர்.
மோதலில் நேரடியாகச் சம்பந்தப்படாத வட்டத்தினரும் அதன் விளைவுகளால் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் தரப்புக்களும் ஏற்றுக் கொள்கின்றன. முஸ்லிம்களைப் பொறுத்தளவில் இந்நிலையே காணப்படுகின்றது. ஆகவே குடிமக்களது பாதுகாப்புப் பற்றிய இவ்வுடன் படிக்கையின் முன்னேற்பாடுகள் இங்கு சார்ந்தோர் அனைவருக்கும் பொருந்தும்.
மேற்கூறியவை தொடர்பாகப் போர் நிறுத்தமொன்றுக்கு உடன்படவும் இவ்வுடன்படிக்கையின் நன்னொழுங்குகளுக்கு ஊறுவிளைவிக்கின்ற அல்லது அதன் மெய்பொருளை மீறுகின்ற நடத்தைகளைத் தவிர்த்துக் கொள்ளவும் கீழ்வரும் உறுப்புரைகளில் சுட்டப்பட்டுள்ள நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை அமுல்படுத்தவும் தரப்புக்கள் உடன்பட்டுள்ளன.
237

Page 126
உறுப்புரை 1: போர் நிறுத்தத்தின் முறைமைகள்
தமது இராணுவங்களுக்கிடையில் பின்வரும் முறைகளில்
போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்த தரப்புக்கள் உடன் பட்டுள்ளனர்.
1.1.
அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான கூட்டு உடன்பாட்டுப் போர் நிறுத்தமொன்று உறுப்புரை 4.2 இற்கு இணங்க நோர்வே வெளி விவகார அமைச்சரினால் அறிவிக்கப்படும் ஒரு தினத்தில் செயற்பாட்டுக்கு வரும். இத்தினம் இதன் பின்னால் - நாள் என அழைக்கப்படும்.
இராணுவ நடவடிக்கைகள்.
1.2
1.3
1.4
எந்தத் தரப்பும் எந்த வகையான இராணுவத் தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடலாகாது. அனைத்து இராணுவச் செயற்பாட்டினதும் முழுமையான நிறுத்தம் இத்தால் வேண்டப்படுகின்றது. இது பின்வருவன போன்ற செயல்களை உள்ளடக்கும். ஆனால் அவற்றுக்கு மாத்திரம் மட்டுப்பட்டதாக அமையாது. அ) நேரடியான அல்லது மறைமுகமான ஆயுதங்களால் சுடுதல், ஆயுதந்தாங்கிய தாக்குதல்கள், மறைந்திருந்து செய்யப்படும் தாக்குதல், கொலைகள், ஆட்கடத்தல்கள், குடிமக்களது அல்லது இராணுவத்தினது சொத்துக்களை அழித்தல், நாசகாரச் செயல்கள், தற்கொலைத் தாக்குதல்கள், ஆழமாக ஊடுருவும் படையணிச் செயற்பாடுகள். ஆ) வான் தாக்குதல்கள். இ) கடற்படைத் தாக்குதல் நடவடிக்கைகள்.
இலங்கையின் ஆயுதப் படைகள் விடுதலைப் புலிகளின் படைப் பிரிவிற்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இலங்கையின் இறைமையையும் பிரதேச ஒருமைட்பாட்டையும் காக்கின்ற தமது சட்டபழர்வமான பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும்.
முன்னணிப் பாதுகாப்பு அமைவிடங்கள் நிறுவப்பட்டுள்ள இடங்களில் அரசாங்கத்தின் ஆயுதப் படைகளும் விடுதலைப் புலிகளின் யுத்த அணிகளும் ஆகக் குறைந்தது அறுநூறு (600) மீட்டர்கள் கொண்ட பிரிவினை வலயமொன்றைப் பேணும் வகையில் தத்தமது தரை நிலைமைகளைக் கடைப்பிடிப்பள். எனினும் ஒவ்வொரு தரப்புக்கும் தமது பாதுகாப்புப் பகுதியிலிருந்து நூறு (100) மீட்டர்கள் வரையான தூரத்திற்குள் அவர்களுக்கிடையெ நானுாறு (400) மீட்டர்கள்
238

1.5
1.6
.7
1.8
1.9
குறைவான தூரம் இருக்கும் வகையில் நடமாடும் உரிமை உண்டு. ஏற்கனவே இருக்கும் நிலைகள் நானுாறு (400) மீட்டர்களை வி
நெருக்கமாக இருக்கும் இடங்களில் அப்படியான நடமாடும் உரிமை பொருந்தி வராது. இந்நிலையில் தமது ஆளணிகளுக்கு இடையில் முடிந்தளவு தூரத்தைப் பேணுவதற்கு தரப்புக்கள் உடன்படுகின்றன.
அமைவிடங்கள் தெளிவாக நிறுவப்படாத பிரதேசங்களில் அரசாங்கத்தினாலும் விடுதலைப் புலிகளாலும் தத்தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ள பிரதேசங்களைப் பொறுத்தமட்டில் 2001 டிசம்பர் 24ஆம் நாளன்று இருந்த நிலையே உறுப்புரை 1.6 இல் தரப்பட்டுள்ள எல்லை தொடர்ந்தும் செல்லுபடியாகும்.
தரப்புக்கள் சர்ச்சைக்குரிய எல்லாப் பாதுகாப்பு அமைவிடங்கள் தொடர்பாகவும் இலங்கை கண்காணிப்புக் குழுவுக்குத் (SLMM) தகவல்களை வழங்க வேண்டும். உறுப்புரை 3 ஐப் பார்க்க. ஆகப் பிந்தியது D-நாள் + 30 நாட்களுக்குள் எல்லைக் கோடுகளை வரைவதற்கு கண்காணிப்புக் குழு தரப்புக்களுக்கு உதவும்.
தரப்புக்கள் அடுத்த தரப்பின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்திற்குள் படைகளையோ வெடி பொருட்களையோ இராணுவ உபகரணங்களையோ நகர்த்தக் கூடாது.
ஆகப் பிந்தியது D-நாள் + 30 நாட்களுக்குள் தமிழ்த் துணைப் படைகளின் ஆயுதங்கள் அரசாங்கத்தினால் களையப்படும். இந்த அணிகளின் ஆட்களை அரசாங்க ஆயுதப் படைகளின் கட்டளைக்கும் ஒழுக்கலாற்றுக் கட்டமைப்புக்கும் கீழ் ஒன்றிணைத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அப் பால் சேவையிலமர்த்த அரசாங்கம் முன்வர வேண்டும்.
உறுப்புரை 1.4 மற்றும் உறுப்புரை 1.5 ஆகியவற்றில் தரப்பட்டுள்ளபடி தரப்புக்களின் படைகள் ஆரம்பத்தில் தத்தமது கட்டுப்பாடுகளின் கீழுள்ள பிரதேசங்களிலேயே தங்கியிருக்கும்.
1.10 D-நாள் + 60 நாட்கள் முதல் ஆயுதந் தரிக்காத அரசாங்கப்
படையினர் யாழ்ப்பாணம் - கண்டி பாதையைப் (ஏ9) பயன்படுத்தி யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்கும் இடையில் கட்டுப்பாடின்றிச்
239

Page 127
சென்றுவர அனுமதிக்கப்படுவர். இதற்கான முறைமைகள் கண் காணிப்புக் குழுவின் உதவியோடு தரப் புக் களால் தீர்மானிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு தனிப் போராளியும் அவரது பிரதேசத் தளபதியின் சிபாரிசின் பேரில் ஆயுதமின்றி சிவில் உடையில் அடுத்த தரப்பின் 35 L (6 L) U T L Lọ 60Í கரீழுள்ள பகுதிகளில் வசிக் கும் குடும்பத்தினர்களையும் நண்பர்களையும் தரிசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என தரப்புக்கள் உடன்படுகின்றன. அத்தகைய விஜயங்கள் ஒவ்வொரு இரண்டாம் மாதத்திலும் ஆறு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும். மிகக் குறுகிய பொருத்தமான பாதையினுாடாக பிரயாணம் செய்வதற்கு எடுக்கும் நேரம் இதில் அடங்காது. இந்நோக்கத்திற்காக யாழ்ப்பாணம் - கண்டி பாதையைப் பயன்படுத்துவதற்கு விடுதலைப் புலிகள் வசதி செய்து கொடுப்பர். குறித்த இராணுவப் பிரதேசங்களுக்குள் நுழைதல் தொடர்பாக அனுமதி மறுக் கும் உரிமை தரப்புக்களுக்குண்டு.
1.12 D-நாள் முதல் தனிப்பட்ட போராளிகள் இரண்டு மாதக்
1.13
கட்டுப்பாட்டுக்குப் புறம்பாக தமது நெருங்கிய குடும்பத்தினரை (அதாவது கணவன் அல்லது மனைவி, பிள்ளைகள், பாட்டன், பாட்டி, பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள்) திருமணங்கள் அல்லது ஈமச்சடங்குகள் தொடர்பாக தரிசிப்பதற்கு ஆயுதமின்றி சிவில் உடைகளில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என தரப்புக்கள் உடன்படுகின்றன. குறித்த இராணுவப் பிரதேசங்களில் நுழைவதைத் தடுக்கும் உரிமை இங்கும் செல்லுபடியாகும்.
D-நாள் + 30 நாட்கள் முதல் அரசியல் வேலைகளுக்காக வடக்கிலும் கிழக்கிலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் சுதந்திரமாக நடமாட ஐம்பது (50) ஆயுதம் தரிக்காத விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்படும். Dநாள் + 60 நாட்கள் முதல் மேலதிகமாக 100 ஆயுதம் தரிக்காத விடுதலைப் புலி உறுப்பினர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவர். D-நாள் + 90 நாட்களில் ஆயுதம் தரிக்காத விடுதலைப் புலி உறுப்பினர்கள் அனைவரும் வடக்கு மற்றும்
240

கிழக்கில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவர். விடுதலைப் புலி உறுப்பினர்கள் அடையாளப் பத்திரங்களை தம்முடன் கொண்டு செல்லல் வேண்டும். குறித்த இராணுவப் பிரதேசங்களில் நுழைவதற்கு அனுமதி மறுக்கும் உரிமை அரசாங்கத்திற்கு உண்டு.
உறுப்புரை 2 : இயல்பு நிலையை மீளச் செய்வதற்கான நடவடிக்கைகள்.
இலங்கையில் வசிப்பவர்கள் அனைவருக்கும் இயல்பு நிலையை மீட்டுக் கொடுக்கும் நோக்குடன் பின்வரும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை தரப்புக்கள் மேற்கொள்ளும். 2.1 சர்வதேச சட்டத்தின்படி குடிமக்களுக்கு எதிராக சித்திரவதை, அச்சுறுத்தல், கடத்திச் செல்லுதல், பணம் பறித்தல் மற்றும் தொல்லை கொடுத்தல் என்பன உட்பட சகல எதிர்ப்பு நடவடிக்கைகளையும் தரப்புக்கள் தவிர்ந்துக் கொள்ளும்.
2.2 கலாசார அல்லது சமய உணர்வுகளை புண்படுத்தக்கூடிய செயப் கைகளில் ஈடுபடுவதலிருந்தும் கருத்துக் களைப் பரப்புவதிலிருந்தும் தரப்புக்கள் தவிர்ந்துகொள்ளும். ஏதேனும் ஒரு தரப்பின் படைகள் தற்போது தம்வசம் வைத்துள்ள வழிபாட்டுத் தலங்கள் (கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் புனிதத்தலங்கள் முதலியன) D-நாள் + 30 நாட்களில் காலி செய்யப்பட்டு பொதுமக்கள் அணுகக் கூடியனவாக மாற்றப்படுதல் வேண்டும். பொதுமக்களால் அணுகப்படக் கூடியனவாக அவை இல்லாதபோதிலும்கூட. ஒவ்வொரு தரப்பினதும் ‘உயர் பாதுகாப்பு வலயங்களில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்களிலிருந்து எல்லா ஆயுதப் படையினரும் வெளியேறுவதோடு சிவிலியன் வேலையாட்களைக் கொண்டு நல்ல முறையில் அவை பேணப்பட வேண்டும்
2.3 இவ்வுடன்படிக்கை செயற்பாட்டுக்கு வரும் நாள் தொடக்கம் ஒவ்வொரு தரப்பினராலும் கைப்பற்றப்பட்டுள்ள பாடசாலைக் கட்டடங்கள் காலி செய்யப்பட்டு உரிய பயன்பாட்டுக்காகத் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கை ஆகப் பிந்தியது D-நாள் + 160ஆம் நாளில் பூர்த்தியார்ப்ப வேண்டும்.
24

Page 128
2.4
2.5
2.6
2.7
2.8
2.9
ஏனைய எல்லாப் பொதுக் கட்டடங்களையும் அவற்றின் கருதப்பட்ட பயன்பாட்டுக்காகத் திருப்பி ஒப்படைப்பதைக் காட்டும் கால அட்டவணையொன்று தரப்புக்களால் வரையப்பட்டு ஆகப் பிந்தியது D-நாள் + 30ஆம் நாளில் வெளியிடப்பட வேண்டும்.
பொதுமக்களைத் தொல்லைப்படுத்துவதைத் தவிர்க்கும் வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கோடு பாதுகாப்பு நடவடிக் கைகள் பற்றியும் - குறிப்பாக சனத்தொகை அடர்த்தியாகவுள்ள நகரங்களிலும் பட்டணங்களிலும் சோதனை நிலையங்களை நிறுவுதல் பற்றியும் தரப்புக்கள் மீள் பரிசீலனை செய்தல் வேண்டும். இத்தகைய திட்டங்கள் D-நாள் + 60 நாட்களில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
பின்னிணைப்பு A இல் குறிப்பிட்டுள்ளதற்கு ஏற்ப விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களை நோக்கியும் அங்கிருந்தும் இராணுவத் தொடர்பற்ற பொருட்கள் தடையின்றிக் கொண்டு செல்லப்படுவதைத் தரப்புக்கள் உறுதிப்படுத்தல் வேண்டும். சந்தைக் கேள்விக்கு ஏற்ப அளவுகள் தீர்மானிக்கப்படும். இராணுவத் தொடர்பற்ற பொருட்களின் மீதான எஞ்சியுள்ள கட்டுப்பாடுகளைப் படிப்படியாக நீக்கும் நோக்கோடு அரசாங்கம் இவ்விடயத்தைச் சீரான முறையில் மறுபரிசீலனை செய்தல் வேண்டும்.
பொருட்கள் கொண்டுசெல்லப்படுவதையும் குடிமக்களின் நடமாட்டத்தையும் வசதிப்படுத்தும் நோக்கோடு பின்னிணைப்பு B இல் குறிக்கப்பட்டுள்ள அமைவிடங்களில் தத்தமது கட்டுப்பாட்டு எல்லைகளில் சோதனை நிலையங்களை நிறுவுவதற்குத் தரப்புக்கள் உடன்படுகின்றன.
D-நாள் + 10ம் நாள் முதல் திருகோணமலை - ஹபரண பாதை பிரயாணிகள் போக்குவரத்துக்காக 24 மணி நேர அடிப்படையில் திறந்து வைக் கப்படுவதை உறுதிப் படுத் துவதற்கான நடவடிக்கைகளைத் தரப்புக்கள் மேற்கொள்ள வேண்டும்.
மட்டக்களப்புப் பாதையில் ரயில் சேவையை வெலிகந்த வரை நீடிப்பதற்குத் தரப்புக்கள் வசதிசெய்து கொடுத்தல் வேண்டும்.
242

2.10 பொருட்களினதும் பிரயாணிகளினதும் இராணுவத் தொடர்பற்ற போக்குவரத்துக்காக கண்டி - யாழ்ப்பாணப் பாதையை (ஏ9) தரப்புக்கள் திறந்துவிட வேண்டும். D-நாள் + 30ம் நாளிற்குப் பிந்தாமல் இது குறித்த செயல் முறைமைகளை நோர்வே அரசாங்கத்தின் உதவியொடு தரப்புக்கள் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.
2.11 Dநாள் தொடக்கம் மீன்பிடித் தொழில் தொடர்பான கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும். D-நாள் + 90 நாட்களில் பின்வரும் விதிவிலக்குகளுக்கு அமைய இரவு பகல் மீன்பிடித்தல் தொடர்பான சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்படும். (1) கரையோரத்திலுள்ள பாதுகாப்புப் படைகளின் முகாம்களிலிருந்து பக்கவாட்டில் கரையோரம் நெடுகே ஒவ்வொரு பக்கத்திலும் 1 கடல் மைல் தூரத்துக்கும் கடலை நோக்கிய திசையில் 2 கடல் மைல்கள் தூரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்தல் அனுமதிக்கப்பட மாட்டாது. (ii) கரையோரம் வழியே உள்ள துறைமுகங்கள், துறைமுகங்களை அணுகும் வழிகள், குடாக்கள், களப்புகள் என்பவற்றில் மீன்பிடித்தல் அனுமதிக்கப்பட மாட்டாது.
2.12 பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தேடுதல் நடவடிக்கைகளும் கைதுசெய்தல்களும் இடம்பெறக் கூடாது எனத் தரப்புக்கள் உடன்படுகின்றன. குற்றவியல் ஒழுங்கு முறை விதிகளுக்கு அமைய உரிய சட்டச் செயன்முறைகளின் கீழேயே ஆட்கள் கைது செய்யப்படுவர்.
2.13 தடுப்புக் காவலில் உள்ளோரின் குடும்ப அங்கத்தவர்கள் தடுப்புக் காவலில் உள்ளோரை அணுகுவதற்கு D-நாள் + 30 நாட்களுக்குள் இடமளிக்கத் தரப்புக்கள் உடன்படுகின்றன.
உறுப்புரை 3 : கண்காணிப்புக் குழு.
இந்த உடன்படிக்கையின் விதிகளும் நிபந்தனைகளும் மீறப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படின் அவை பற்றி விசாரிப்பதற்காகச் சர்வதேச கண்காணிப்புக் குழுவொன்றை உருவாக்க தரப்புக்கள் உடன்பட்டுள்ளன. இரு தரப்புக்களும் தத்தமது பக்கங்களால் தோற்றுவிக்கப்படும் எந்த விதமான முரண்பாடுகளையும் தீர்த்து வைப்பதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும். இக்குழுவானது பின்வரும் முறைகளில் இவ்வுடன் படிக்கையின் மூலம் உடன்பட்டுள்ள பொறுப்புக்கள் நிறைவேற்றப்படுதல் பற்றித் தளக் கண்காணிப்பு மூலம் சர்வதேச உண்மையறிதல்களை மேற்கொள்ளும்.
243

Page 129
3.1
3.2
3.3
3.4
3
5
3.6
3.7
இக்கண்காணிப்புக் குழுவின் பெயர் இலங்கை கண்காணிப்புக் (d5(g (Sri Lanka Monitoring Mission) 6T66 Lugb|T3b 9(535(5lb. 9565 பின்னர் இது கண்காணிப்புக் குழு என அழைக்கப்படும்.
தரப்புக்களின் அங்கீகாரத்துக்கு அமைய நோர்வே அரசாங்கம் (இதன் பின்னர் இது நோர்வே அரசு என அழைக்கப்படும்) கண்காணிப்புக் குழுவின் தலைவரை நியமிக்கும். (இதன் பின்னர் இவள் HoM ஆக அழைக்கப்படுவார்). இந்த உடன்படிக்கையை வியாக்கியானம் செய்யும் விடயத்தில் இவருக்கே இறுதி அதிகாரம் இருக்கும்.
கண்காணிப்புக் குழு தரப்புக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதோடு நோர்வே அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.
கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் தினத்தைக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் தீர்மானிப்பார்.
கண்காணிப்புக் குழுவானது நோர்டிக் (Nordic) நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும்.
கண்காணிப்புக் குழுத் தலைவர் பொருத்தமெனக் கருதும் யாதேனுமோர் இடத்தில் கண் காணிப் புக் குழு தனது தலைமையகத்தை அமைத்துக்கொள்ளும். அரசாங்கத்துடனும் விடுதலைப் புலிகளுடனும் தொடர்பு கொள்வதற்காக முறையே கொழும்பிலும் வன்னியிலும் ஒவ்வொரு அலுவலகம் நிறுவப்படும். யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கண்காணிப்புக் குழு தன் பிரசன்னத்தைப் பேணி வரும்.
யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களில் ஒவ்வோர் உள்ளுர் கண்காணிப்புக் கமிட்டி அமைக்கப்படும். ஒவ்வொரு கமிட்டியிலும் 5 உறுப்பினர் இருப்பர். இவர்களில் இருவர் அரசாங்கத்தாலும் இருவர் விடுதலைப் புலிகளாலும் நியமிக்கப்படுவதோடு ஒருவர் கண்காணிப்புக் குழுத் தலைவரால் நியமிக்கப்படும் சர்வதேசக் கண்காணிப்பாளராக இருப்பார். சர்வதேசக் கண்காணிப்பாளரே கமிட்டிக் குத் தலைமை தாங்குவார். அரசாங்கத்தினதும் விடுதலைப் புலிகளினதும் நியமனத்துக்கு உரியவர்களாக ஒய்வுபெற்ற நீதிபதிகள், பகிரங்க சேவை ஊழியர்கள், சமயத் தலைவர்கள் அல்லது அவர்கள் போன்ற சிலர் பிரஜைகளிலிருந்து தெரிவு செய்யப்படலாம்.
244

3.8
3.9
3.10
3.12
3.3
இக்கமிட்டிகள் கண்காணிப்புக் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் தரத்திலேயே சேவையாற்றும் தத்தமது மாவட்டங்களில் இவ்வுடன்படிக்கையை அமுல்படுத்துவது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாகப் பொதுவான புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் அவை பற்றி இக் கமிட்டிகள் கலந்துரையாடும். குறிப்பாக இவ்வுடன்படிக்கையை அமுல்படுத்துவது தொடர்பாக மிகக் குறுகிய மட்டங்களில் எழும் சச்சரவுகளைத் தீர்த்து வைக்க இவை முயற்சிக்கும். கண் காணிப்புக் குழுவின் எல்லா உறுப்பினர்களுக்கும் பொருத்தமான பாதுகாப்பை வழங்கும் பொறுப்பினைத் தரப்புக்கள் ஏற்றுக்கொள்ளும். கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் தம் பணிகளை நிறைவேற்றும் விடயத்தில் அவர் களது சுதந்திரமான நடமாட்டத்தை உறுதிப்படுத்தத் தரப்புக்கள் உடன்படுகின்றன. உடன்படிக்கை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றஞ் சாட்டப்படும் இடங்களுக்கு உடனடியாகச் செல்லும் நுழைவுரிமை கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். மேற் சொன்ன ஆறு கமிட்டிகளினதும் உள்ளுர் அங்கத்தவர்களுக்கு அவ்வாறான பிரதேசங்களுக்குச் செல்லக்கூடிய பரந்தளவான நுழைவுரிமையை வழங்கவும் தரப்புக்கள் உடன்படுகின்றன. உறுப்புரை 3.7 ஐப்
Tidb35.
உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள எந்தவொரு தரப்பினாலும் செய்யப்படும் புகார்கள் பற்றி உடனடியாக நடவடிக்கை எடுப்பதும் அவை பற்றி விசாரித்து அப்புகார்கள் தொடர்பாக எழக்கூடிய சச்சரவுகளைத் தீர்த்துக் கொள்வதற்குத் தரப்புக்களுக்கு உதவுவதும் கண்காணிப்புக் குழுவின் பொறுப்பாகும். முடிந்தளவில் குறுகிய மட்டங்களிலேயே சச்சரவுகளைத் தீர்த்துக் கொள்ளும் நோக்குடன் அரசாங்க ஆயுதப் படைகளின் தளபதிகளுக்கும் விடுதலைப் புலிகளின் பிரதேசத் தலைவர்களுக்கும் இடையில் தொடர்பாடல் பேணப்படுவதோடு இதன்மூலம் மோதல் வலயங்களிலேயே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.
கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் பற்றிய வழிகாட்டல்கள் பிறிதான ஆவணமொன்றின் மூலம் நிறுவப்படும்.
245

Page 130
உறுப் புரை 4 : உடன் படிக் கை அமுலுக்கு வருதலும் திருத்தங்களும் முடிவுக்கு வருதலும்.
4.1 ஒவ்வொரு தரப்பும் தாம் இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுவதாகத் தம் விருப்பத்தை நோர்வே நாட்டு வெளியுறவு அமைச்சருக்குக் கடிதம் மூலம் அறிவிக்க வேண்டும். இக்கடிதம் அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினாலும் விடுதலைப்புலிகளின் சார்பில் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களாலும் கைச்சாத்திடப்படும். இவ்வுடன்படிக்கை ஒவ்வொரு தரப்பினாலும் கையெழுத்திடப்பட்டு மேற்குறித்த கடிதத்தினுள் அடக்கப்படும்.
4.2 நோர்வே நாட்டு வெளியுறவு அமைச்சரினால் அறிவிக்கப்படும் ஒரு
தினத்தில் இவ்வுடன்படிக்கை அமுலுக்கு வரும்.
4.3 இரு தரப்புக்களினதும் பரஸ்பர உடன்பாட்டுக்கு அமைய இவ்வுடன்படிக்கை திருத்தப்பட முடியும். அத்தகைய திருத்தங்கள் நோர்வே அரசுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட வேண்டும்.
4.4 எந்தவொரு தரப்பும் இதனை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றிய அறிவித்தலை நோர்வே அரசுக்குக் கொடுக்கும் வரையில் இவ்வுடன் படிக்கை செயற்பாட்டில் இருக்கும். அத்தகைய அறிவித்தலானது முடிவுறும் திகதிக்கு பதினான்கு (14) நாட்களுக்கு முன்னதாகக் கொடுக்கப்பட வேண்டும்.
பின்னிணைப்புக்கள் பின்னிணைப்பு - A : பொருட்களின் பட்டியல் பின்னிணைப்பு - B : சோதனை நிலையங்கள்
பின்னிணைப்பு -
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகளின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை நோக்கியும் அவற் றிலிருந்தும் இராணுவத் தொடர்பற்ற பொருட்களின் நகள்வையும் அப்பகுதிகளில் உள்ள குடிமக்களை இப்பொருட்களை தடையின்றி அடைவதையும் உறுதி செய்வதற்குத் தரப்புக்கள் உடன்படுகின்றன. உடன்படிக்கையின் உறுப்புரை 2.6இற்குள் அடங்காத இராணுவத் தொடர்பற்ற பொருட்களின் கீழே பட்டியல்படுத்தப்பட்டுள்ளன:
246

※
இராணுவத் தொடர்பற்ற ஆயுதங்கள்/படைக்கலங்கள் வெடிபொருட்கள்
தொலைக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள்
முள்ளுக் கம்பி
இருவிரியிகள்/ தொலைகாட்டிகள்
திசையறிகருவிகள்
பென்லைட் பற்றரிகள் டீசல், பெற்றோல், சீமெந்து, இரும்புக் கோல்கள் என்பன பின்வரும் ஒழுங்கு முறைகளுக் கும் அளவுகளுக் கும் sẽĐị 60) LD u_i đ5 கட்டுப்படுத்தப்படும்.
டீசல் மற்றும் பெற்றோல்
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் இருக்கும் வாகனங்கள், ஊர்வு இயந்திரங்கள், மோட்டர் சைக்கிள்கள் என்பவற்றை அரசாங்க அதிபர்கள் பதிவு செய்வர். பின்வரும் மதிப்பீட்டின் படி வாரந்தோறும் தேவைப்படும் டீசல் மற்றும் பெற்றோல் என்பவற்றின் அளவை அரசாங்க அதிபர் கணிப்பீடு செய்வார்.
ட்ரக்குகள் மற்றும் பஸ்கள் - வாரத்திற்கு 250 லீற்றர்கள் நான்கு சக்கர ஊர்வு இயந்திரங்கள் - வாரத்திற்கு 310 லீற்றர்கள் இரண்டு சக்கர ஊர்வு இயந்திரங்கள் - வாரத்திற்கு 40 லீற்றர்கள பெற்றோல் வாகனங்கள் - வாரத்திற்கு 30 லீற்றர்கள் மோட்டர் சைக்கிள்கள் - வாரத்திற்கு 7 லீற்றர்கள மீன்பிடிப் படகுகள் - வாரத்திற்கு 400 லீற்றர்கள்
சீமெந்து
அரசாங்கச் சொத்துக்கள், பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு நிறுவனங்கள், அரசாங்கத்தினாலும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்களாலும் சமூகத்தின் செல்வம் மிக்க அங்கத்தினர்களாலும் நடைமுறைப்படுத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் முதலியவற்றின் புனருத் தாரணம் மற்றும் புனர் நிர்மாணம் என்பவற்றுக்காகத் தேவைப்படும் சீமெந்து, அரசாங்க அதிபர்களினால் வழங்கப்படும் உத்தரவுப் பத்திரங்களின் கீழ் உரிய நிறுவனங்களால் நேரடியாகத் தருவிக்கப்படும். அத்தகைய செய்திட்டங்களின் திட்டமிடப்பட்ட மற்றும் அறிவிக்கப்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில் அவற்றுக்காக மாதாந்தம் அனுமதிக்கப்பட வேண்டிய அளவை அரசாங்க அதிபர் வரையறை செய்வார்.
247

Page 131
தேவைப் படும் சீமெந்து வர்த்தக ரீதியில் கூட்டுறவு நிலையங்களினுடாகக் கிடைக்குமாறு செய்யப்படும். இந்நோக்கத்திற்கான மாதாந்த இறக்குமதி முதல் மாதத்தில் 5000 பைகளாக இருப்பதோடு அதன் பின்பு மாதத்திற்கு 10,000 பைகளாக இருக்கும். கூட்டுறவு நிலையங்களினுாடாக தனிப்பட்ட முறையில் செய்யப்படும் விற்பனைகள் பதிவு செய்யப்படுவதொடு அவை ஒரு குடும்பத்திற்கு 25 பைகளாக மட்டுப்படுத்தப்படும்.
இரும்புக் கோல்கள்
கட்டட நிர்மாணத் தேவைகளுக்கான இரும்புக் கோல்கள் அரசாங்க அதிபரினால் வாங்கப்படும் உத்தரவுப் பத்திரத்தின் கீழ் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளுக்குக் கொண்டுவரப்படும்.
மேற்படி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான வாய்ப்புக்களை மதிப்பீடு செய்வதற்காக மாதாந்த மீள் மதிப்பீடொன்று செய்யப்படும்.
பின்னிணைப்பு - B
உறுப்புரை 2.7 இல் உடன்பட்ட சோதனை நிலையங்கள் பின்வருமாறு:
- LᏝ60ᏈI0ᏰiᎢ
- பட்டிருப்பூர் - களுதாவெளி வள்ளத் துறை - அம்பலந்தீவு வள்ளத் துறை - மாமுனை வள்ளத் துறை - வவுணத்தீவு - சந்திவெலி படகுத் துறை - கரும்பாலம் - சித்தாண்டி படகுத் துறை - கிரான் பாலம் - கிண்ணியடி படகுத் துறை - வாழைச்சேனை
- மாங்கேணி
- மகிந்தபுரம்
- மூதூர்
- உயிலங்குளம்
- ஓமந்தை
248

வழக்குகளின் பட்டோலை
உள்ளுரில் புலம் பெயர்ந்த ஆட்கள் : மனித உரிமைகள்
பற்றிய முக்கியமான சில பிரச்சினைகள்.
* ஆறுமுகம் வடிவேலு எதிர் பொறுப்பதிகாரி சிதம்பரப்புரம் அகதி முகாம் பொலிஸ் நிலையம் வவுனியா மற்றும் ஏனையோர் உ. நீ விண்ணப்ப இல. 44/2002 உ. நீ. குறிப்பறிக்கை 05.09.2002.
ஆளொருவருக்கான கீர்த்தி * முறியாணி சில்வா எதிர் இத்தமல்கொட மற்றும் ஏனைய ஆறு பேர் உ. நீ அ. உ. விண்ணட்ப இல. 471/2002 உ. நீ குறிப்பறிக்கை 10.12.2002.
சோமாவதி எதிர் வீரசிங்க மற்றும் ஏனையோர் (1990) 2 இ. ச. அ. 12.
米
* வேலு அரசதேவி எதிர் எச். பி. கமல் பிரேமதிலக மற்றும் ஏனைய ஐந்து பேர். உ. நீ அ. உ. விண்ணப்ப இல. 401/2001 உ. நீ. குறிப்பறிக்கை 23.05.2002.
* யோகலிங்கம் விஜிதா எதிர் விஜேசேகர மற்றும் ஏனைய எட்டு டேன். உ. நீ அ. உ. விண்ணப்ப இல. 186/2001 உ. நீ குறிப்பறிக்கை 24.01.2002.
* இலங்கையின் பெண்களின் அந்தஸ்து முக்கியமான சில
அம்சங்கள் பற்றிய மீளாய்வு,
* யோகலிங்கம் விஜிதா எதிர் விஜேசேகர, ஒதுக்குப்படை உப பொலிஸ் பரிசோதகள், பொலிஸ் நிலையம், நாரஹென்பிட்டி மற்றும் ஏனையோர் உ. நீ. விண்ணப்ப இல, 186/2001 உ. நீ. குறிப்பறிக்கை 23.08.2002.
* அஞ்சலீன் ரொஷானா மைக்கல் எதிர் செல் வின் சலே, பொறுப்பதிகாரி (குற்றவியல்) பொலிஸ் நிலையம், நாரஹென்பிட்டி மற்றும் ஏனையோர். உ. நீ விண்ண்ப்ப இல. 1/2002 உ. நீ குறிப்பறிக்கை 02.08.2002.
கருத்துச் சுதந்திரமும் ஊடகச் சுதந்திரமும் * ஆர். பி. விஜேசிறி எதிர் சட்டத்துறை தலைமையதிபதி (1980)
2 . 9F. •ol. 317 * இலங்கைச் ஜனநாயக சோசலிச குடியரசு எதிர் பி. ஏ. பந்துல
பத்மகுமார, மேல் நீதிமன்ற வழக்கு இல, 7580/95டீ. * இலங்கைச் ஜனநாயக சோசலிச குடியரசு எதிர் சிங்ஹ திஸ்ஸ
மிகார ரணதுங்க, மேல் நீதிமன்ற வழக்கு இல. 7397/95டீ.
249

Page 132
N零/ ^2\,
N/ M'.
x贸/ 13N
N, ベ拳N
டீ சூசாவின் விதப்புரை பற்றிய விடயம், 18 புசஅ 41. கலுகல்ல தொடர்பாக 39 புசஅ 294,
ஹேவமான்ன எதிர் மனிக் டீ சில்வா மற்றும் இன்னுமொருவர் (1983) 1 இ. ச. அ. 1.
கருமினிகே திலகரத்ன பற்றியது (1991) 1 இ. ச. அ. 134.
மனித உரிமைகளின் நீதித்துறைப் பாதுகாப்பு
米 {
<
w
/
2ir
米
{
S.
محبر
*
N響/ a's
குணரத்ன எதிர் றுரீ லங்கா டெலிகொம் (1993) 1 இ.ச.அ. 109.
பிரேமச்சந்திர எதிர் மேஜர் மொன்டேகு ஜயவிக்ரம (1994) 2 இ.ச.அ. 90.
குணரத்ன எதிர் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (1996) 1 இ.ச.அ. 315, பிரியங்கனி எதிர் நாணயக்கார (1996) 1 இ.ச.அ. 399.
வில்லியம் சில்வா எதிர் வழிராணி பண்டாரநாயக்க (1997) 1 இ.ச.அ. 92.
ஆறுமுகம் வடிவேலு எதிர் பொறுப்பதிகாரி, சிதம்பரப்புரம் அகதிகள் முகாம் பொலிஸ் நிலையம் வவுனியா உ. நீ விண்ணப்பம் இல. 44/2002 (அ.உ) உநீ. குறிப்பறிக்கை 05.09.2002.
முறியாணி சில்வா எதிர் பொறுப்பதிகாரி பாயாகல பொலிஸ் நிலையம் மற்றும் ஏனையோர் உநீ. (அ.உ) விண்ணப்பம் 471/ 2000 உநீ. குறிப்பறிக்கை 10.12.2002.
புளோர் கெயார் கீளினிங் சேர்விசஸ் (பிறைவேட்) லிமிட்டெட் எதிர் ருகுணு பல்கலைக்கழகம் மற்றும் ஏனையோர் உநீ விண்ணப்பம் இல, 285/2001 (அ.உ) உநீ. குறிப்பறிக்கை 09.05.2002. ஈபர்ட் சில்வா டுவரிங் கம்பனி லிமிட்டெட் மற்றும் இன்னொருவர் எதிர் எயார் லங்கா லிமிட்டெட் மற்றும் ஏனையோர் உநீ விண்ணப்ப இல, 548/96, (அ.உ) உநீ. குறிப்பறிக்கை 27.06.2002. சாம் சமரசேகர அன்ட் கம்பனி லிமிட்டெட் எதிர் கண்டி மாநகர சபை, உ. நீ விண்ணப்பம் இல. 53/2000 (அ. உ.) உ. நீ. குறிப்பறிக்கை 25.06.2002. கே. எஸ். ஜயசிங்க எதிர் தேசிய கடற்றொழில், கடற் பொறியியல் நிறுவகம் (தே. க. க. பொ. நி.) மற்றும் ஏனையோர் உ. நீ விண்ணப்பம் 692/200 (அ. உ) உ. நீ. குறிப்பறிக்கை 20.03.2002.
250

MAYA
{
※
g
N
豊/
sis
சோமபால பட்டிவிதான எதிர் மத்திய வங்கியின் பணச் சபை மற்றும் ஏனையோர் உ. நீ விண்ணப்பம் 565/2001 (அ. உ.) உ. நீ. குறிப்பறிக்கை 30.04.2002.
டபிள்யூ. ஆர். ஆர். ராபேல் மற்றும் இன்னொருவர் தேசிய சேமிப்பு வங்கி உ. நீ விண்ணப்பம் இல. 531/2000 (அ. உ.) உ. நீ குறிப்பறிக்கை 30.04.2002.
கமகே உபசேன எதிர் ரிச்சர்ட் பத்திரன, கல்வி அமைச்சர் மற்றும் ஏனையோர் உ. நீ. விண்ணப்பம் 50/99 (அ. உ) உ. நீ குறிப்பறிக்கை 31.05.2002.
என். டீ. ஜே. நாரங்கொட மற்றும் ஏனையோர் எதிர் பீ. எல். வீ. டீ கொடிதுவக்கு, பொலிஸ்ப் பரிசோதகள் தலைமையதிபதி மற்றும் ஏனையோர் உ. நீ விண்ணப்பம் 397/2000 (அ. உ.) உ. நீ குறிப்பறிக்கை 11.02.2002.
தயாரத்ன மற்றும் ஏனையோர் எதிர் தேசிய சேமிப்பு வங்கி மற்றும் ஏனையோர் உ. நீ விண்ணப்பம் 452/2001 (அ. உ) உ. நீ. குறிப்பறிக்கை 05.09.2002.
யூ. பீ. ராசபுத்ர மற்றும் ஏனையோர் எதிர் இலங்கை வங்கி மற்றும் ஏனையோர் உ. நீ விண்ணப்ப இல. 381/01, உ. நீ குறிப்பறிக்கை 16.09.2002. வேயங்கொடை டெக்ஸ்டைல் மில்ஸ் லிமிட்டெட் எதிர் அநுருத்த ரத்வத்த மின்சக்தி, நீட்பாசன அமைச்சர் மற்றும் ஏனையோர் உ. நீ விண்ணப்ப இல. 404/99 (அ. உ) உ. நீ குறிப்பறிக்கை. 08:01.2002. கொழும்பு தெற்கு கூட்டுறவுச் சங்கம், எதிர் அநுருத்த ரத்வத்த, மின்சக்தி, நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் ஏனையோர் உ. நீ விண்ணப்ப இல. 698/98, (அ. உ) உ. நீ. குறிப்பறிக்கை. 25.03.2002. விமல் வீரசிங்க எதிர் கலாநிதி எஸ். ஏ. கே. கமகே, பணிப்பாளர், பொது மருத்துவமனை, கேகாலை மற்றும் ஏனையோர் உ. நீ விண்ணப்ப இல. 682/2001, (அ. உ) உ. நீ குறிப்பறிக்கை. 1909.2002. எல். எம். பெர்னாண்டோ எதிர் ஆர். ஏ. ஏ. ரணவீர, செயலாளர், கலாசார, மத அலுவல்கள் அமைச்சு மற்றும் ஏனையோர் உ நீ விண்ணப்ப இல. 46/99 (அ. உ.) உ. நீ குறிப்பறிக்கை. 24.05.2002. ஜகத் சொலமன் டயஸ் எதிர் செயலாளர், பாதுகாப்பு அமைச்சு, உ. நீ விண்ணப்ப இல. 604/2001 (அ. உ) உ. நீ. குறிப்பறிக்கை. 05.09.2002:
25

Page 133
WM 米
ஆறுமுகம வடிவேலு எதிர் பொறுப்பதிகாரி, சிதம்பரப்புரம் அகதி முகாம், பொலிஸ் நிலையம், வவுனியா உ. நீ விண்ணப்ப இல. 44/2002 (அ. உ.) உ. நீ. குறிப்பறிக்கை. 05.09.2002.
வேலு அரசதேவி எதிர் எச். பி கமால் பிரியந்த பிரேமதிலக ஒ. பொ. கொ. பொலிஸ்படை மற்றும் ஏனையோர் உ. நீ விண்ணப்ப இல. 401/2001 உ. நீ. குறிப்பறிக்கை. 24.01.2002.
யோகலிங்கம் விஜிதா எதிர் விஜேசேகர ஒ. பொ. ப. நீகொழும்பு பொலிஸ் நிலையம் மற்றும் ஏனையோர், உ. நீ விண்ணப்ப இல. 186/2001 உ. நீ. (அ. உ) உ. நீ. குறிப்பறிக்கை. 23.05.2002.
அஞ்சலீன் ரொஷானா எதிர் பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையம், நாரஹென்பிட்டி மற்றும் ஏனையோர், உ. நீ விண்ணப்ப இல. 1/2001 (அ. உ) உ. நீ. குறிப்பறிக்கை. 02.08.2002.
ரோஹன சந்திரகுமார எதிர் பொறுப்பதிகாரி, விசேட புலனாய்வுப் பிரிவு, பேலியாகொட பொலிஸ் நிலையம், மற்றும் ஏனையோர், உ. நீ விண்ணப்ப இல. 681/2000 உ. நீ. (அ. உ) உ. நீ குறிப்பறிக்கை. 05.06.2002.
நிலருக் இஹலகத்ரிகே எதிள் ஏவுநர் அலுவலர், இலங்கை இராணுவ பொலிஸ் படைப்பிரிவு, வவுனியா உ. நீ விண்ணப்ப இல. 691/ 2000 உ. நீ. குறிப்பறிக்கை. 04.06.2002
டொன் சிறிபால எதிர் உ. பொ. ப. நந்தன விஜேசிங்க, மத்துகாமம் பொலிஸ் நிலையம் மற்றும் ஏனையோர் உ. நீ விண்ணப்ப இல. 213/2001 (அ. உ) உ. நீ. குறிப்பறிக்கை 31.05.2002.
மாணிக்கம் தவராசா எதிர் பொறுப்பதிகாரி, எஸ்ரிஎவ், முகாம், திருக்கோவில் மற்றும் ஏனையோர் உ. நீ. விண்ணப்ப இல. 09/ 2002 உ. நீ. குறிப்பறிக்கை. 16.09.2002.
அபேரத்ன பண்டா எதிர் கீர்த்தி கஜநாயக, பணிப்பாளர் கு. பு ப. மற்றும் ஏனையோர். உ. நீ விண்ணப்ப இல. 653/2000 உ. நீ. குறிப்பறிக்கை. 02.08.2002.
மறியற்காரர்களின் உரிமைகள்.
米 N
S4
My
مه /N
v zis
వ4 N
ரூபின் எதிர் பொதுநலவாயம், 62 வீஏ (21 Grat) 790, 796 (1871) கொபின் எதிர் ரைச்சர்ட் 143 F 2d, 443, வூல்வ் எதிர் மக்டொனல் 1974) 41 இ. பதிப்பு 2d 935 சுனில் பத்ரா (I) எதிர் டில்லி நிர்வாகம் (1980) 3 எஸ்.சீ.சீ 488 அமல் சுதத் சில்வா எதிர் கொடித்துவக்கு (1987) 2 இ. ச. அ. 119.
252


Page 134


Page 135
இலங் Lo Gofg5 20 Lńfl6ODLI
2O
இந்த அறிக்கையானது 2 உரிமைகள் தொடர்பான நிகழ் ஆங்கில மூல அறிக்கையின்
இவ்வறிக்கையில், உள்ளூ மனித உரிமைகள் பற்றிய ஆளொருவருக்குள்ள கீர்த்தி அந்தஸ்து - முக்கியமான சில இலங்கையில் ஆயுதப் போர சிறுவர் : இவ்வாண்டின் மீள சுதந்திரமும் ஊடகச் சுதந்திர நீதிப்பாதுகாப்பு, மறியற்காரர்க விடயங்கள் ஆராயப்பட்டுள்ள யிலுள்ள மனித உரிமைகள் இ
கல்லாக அமையும்.
சட்டத்திற்கும் சமூகத்தி 3, கின்சி ரெறஸ்
இலங்
தொலைபேசி : 94பெ(f) க்ஸ் : 9 மின் அஞ்சல் : Istadminே Goligottb : www.la
ISBN 955
PRINTED BY UNIE ARTS (PVT) LTD., C
 

OOD E5 3 Dகளின் நிலை O3
003 இல் இடம் பெற்ற மனித வுகளை விபரமாக அடக்கியுள்ள தமிழாக்கமாக உள்ளது.
நரில் புலம் பெயர்ந்த ஆட்கள், சில பிரதான பிரச்சனைகள், , இலங்கையில் பெண்களின் அம்சங்கள் பற்றிய மீளாய்வு, ாட்டத்தினால் பாதிக்கப்பட்ட ாாய்வு, கருத்து வெளியீட்டுச் மும், மனித உரிமைகளுக்கான 5ளுக்கான உரிமைகள் ஆகிய ாது. இவ்வறிக்கை இலங்கை யக்கத்தின் ஒரு முக்கிய மைல்
|ற்குமான அறநிலையம் , கொழும்பு - 08
605.
1-2-684.845 / 69 1228
4-1-2-686843 — Dsltnet.lk/ listOeurekalk wandsocietytrust.org
9062-82-4
KOLOMBO.-13. TEL : 2330195, 2478118